Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 183

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 1
கிறித்தவர்கள், முசுலீம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய நான்காந்தர குடிமக்களாக, உள்நாட்டு ஏதிலிகளாக மாற்றுவது; மனு நீதியின் படி ஆண்களை மகிழ்விப்பதற்காகவே படைக்கப்பட்ட பிறவிகளாக, பார்ப்பன ஆணாதிக்கத்திற்கு அடிமைச் சேவை செய்பவர்களாக பெண்களை நடத்துவது; விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை, தேவைகளை தேசத்திற்கு எதிரானதாகவும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை தேச நலனாகவும் முன்னிறுத்துவது; உழைக்கும் மக்களின் நலன்களைப் பேசக் கூடிய புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகளை அழித்தொழிப்பது; இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பன பாசிச அமைப்பு சொல்லும் ‘இந்துராஷ்டிரம்’. நாம் சொல்லும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
இத்தகைய இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிலைநாட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னேறிவருகிறது என்பதுதான் இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பேரபாயம். உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள்தான் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகள், பாசிசக் கொடுங்கோன்மைக்கான முன்மாதிரிகள் என்று நாம் சொல்லிவந்தோம். ஆனால், அவை பழைய செய்திகளாகிவிட்டன. இன்று கர்நாடகா, திரிபுரா, அசாம் என பல புதிய சோதனைச் சாலைகளையும் உண்டாக்கியிருக்கிறது சங்கப் பரிவார கும்பல்.
சமீபத்தில், கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டம், தொடர்ந்து அம்மாநிலத்தில் கிறித்துவ வழிபாட்டுத்தலங்கள் காவி குண்டர்களால் தாக்கப்படுவது; அசாமில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அரசால், செப்டம்பர் மாதம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் ஏழை இசுலாமிய மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி 800 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைத்ததோடு, இருவரை சுட்டுக் கொன்றது; திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட பாசிச கொலைவெறி தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து விசுவ ஹிந்து பரிஷத் பேரணியின் போது இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தீவைப்பு சம்பவங்கள் என அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எல்லா இடங்களிலும் நிகழ்த்தும் வழமையான நிகழ்வுகளாகவோ, பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களாகவோ பார்க்க முடியாது. இவையாவும் இம்மாநிலங்களில் உள்ளூர வேர்விட்டிருக்கும் காவி பயங்கரவாதத்தின் வெளிப்படைத் தோற்றங்களே!
குஜராத், உத்தரப்பிரதேசம் போல கர்நாடகா, திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களும் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறியிருக்கிறது என்று நாம் சொல்வதற்கான பொருள், இம்மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பன-இந்துமதவெறியின் செல்வாக்கின் கீழ் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.
படிக்க :
கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !
000
1993 முதல் 25 ஆண்டுகாலம் சி.பி.எம். கட்சியின் கோட்டையாக இருந்த திரிபுராவில் எவ்வாறு ஒரே தேர்தலில் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது? 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க, 2018-ல் 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2013-ல் 1.5 சதவீதமாக இருந்த வாக்குகள் 2018-ல் 42.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் திரிபுராவில், 222 இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 217 இடங்களில் பா.ஜ.க.வே வெற்றி பெற்றிருக்கிறது.
அசாமில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, 29.5 சதவீத வாக்குகளுடன் 2016-ல் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து 123 இடங்களில் 86-ல் வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க மட்டும் 60 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களால் பா.ஜ.க தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 2021 தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 33.2 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 11 இடங்களை பா.ஜ.க இழந்திருந்தாலும், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே மேற்கண்ட வாக்கு சதவிகிதம் உறுதிசெய்கிறது.
தென்னிந்தியாவிலேயே பா.ஜ.க நேரடியாக ஆளும் மாநிலம் என்றால் அது கர்நாடகம்தான். இங்கு 2008 சட்டமன்றத் தேர்தலில், 33.6 சதவீத வாக்குகளுடன் 110 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களை இழந்து 104 இடங்களில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்கு சதவிகிதம் 36.2 ஆக அதிகரித்திருக்கிறது.
பற்றி எரியும் திரிபுரா
கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு அதிகரித்துள்ள வாக்கு சதவிகிதம் என்பது அம்மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு மக்கள் அடித்தளம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இந்த அடித்தளம் தேர்தலில் வெற்றி பெற்று உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அரசியல் சூழல், வரலாறு, மக்களின் பண்பாடு உள்ளிட்ட தனிச்சிறப்பான நிலைமைகளுக்கேற்ப பல ஆண்டுகள் மக்களிடம் வேலைசெய்து உருவாக்கிய இந்துத்துவ செல்வாக்கின் விளைவே தேர்தல் வெற்றி. சந்தர்ப்பவாத கூட்டணிகள், பிற கட்சியினரை மிரட்டிப் பணியவைப்பது, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கவர்ச்சிவாத பிரச்சாரங்கள் போன்றவையெல்லாம் இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்திக் கொண்டவை மட்டுமே.
சான்றாக, தமிழகத்தில் அடிமை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அவர்களது ஓட்டுகளையும் தனக்கு அறுவடை செய்துகொண்டாலும் நாகர்கோயில், கோயம்பத்தூர் (தெற்கு), மொடக்குறிச்சி, திருநெல்வேலி என கீழே தான் வேலைசெய்து செல்வாக்கு பெற்ற தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க.வால் வெற்றிபெற முடிந்தது. அ.தி.மு.க.வின் ஓட்டுகள் கூடுதலாக அவர்களுக்கு உதவியவை மட்டுமே.
எனவே “தமிழகத்தில் அ.தி.மு.க. இல்லாவிட்டால் பா.ஜ.க. ஒரு சீட்டு கூட வெற்றி பெற்றிருக்காது; பிற மாநிலங்களிலும் சந்தர்ப்பவாத கூட்டுகள், பொய் வாக்குறுதிகள், குதிரை பேரங்களை நடத்துவது போன்றவற்றின் மூலம் மட்டுமே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது, மற்றபடி அதற்கு செல்வாக்கு இல்லை” என்பது போன்ற கருத்துக்கள் எதார்த்தத்தை காண மறுப்பதும் பாசிஸ்டுகளைப் பற்றிய மிகவும் கொச்சையான புரிதலுமாகும்.
கர்நாடகா, திரிபுரா, அசாம் போன்ற மாநிலங்களை கவ்வியிருக்கும் இந்துராஷ்டிர அபாயத்தை புரிந்துகொள்ளவும் இந்தியாவை காவி-கார்ப்பரேட் பாசிசத்திடமிருந்து விடுவிக்கவும் விரும்புவோர் அனைவரும் ‘தகிடுதத்தங்கள் மூலம் மட்டுமே பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது’ என்ற அப்பாவித்தனமான புரிதலையும் சட்டமன்ற-நாடாளுமன்ற தேர்தல்களில் ‘சாத்தியமான மாற்று’களை ஆதரிப்பதன் மூலமே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தோற்கடித்துவிடலாம் என ‘மேற்’பார்வை பார்ப்பதையும் விடுத்து ‘கீழே’ (மக்கள் மன்றத்தில்) நடக்கும் மாற்றங்களை கண் திறந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
000
கர்நாடகா: காவி பயங்கரவாதத்தின் தென்னிந்திய நுழைவாயில்!
இதுவரை இல்லாத வகையில், கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் மேல் பயங்கரவாத தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்கிறார்கள் என கிறித்தவர்களும் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என முசுலீம்களும் பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா ஆகிய சங்கப் பரிவார மதவெறி அமைப்புகளால் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
கடந்த நவம்பர் 30 – அன்று கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பேலூர் பகுதியில், நடைபெற்றுக் கொண்டிருந்த கிறித்துவ ஜெபக் கூட்டத்தை பாதியில் நிறுத்தி அங்கிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளார்கள். கோலார் மாவட்டம் சீனிவாசபுரத்திலும் சர்ச்சுக்குள் புகுந்து பைபிள் புத்தகங்களைப் தீயிட்டு எரித்துள்ளது காவி குண்டர்படை. கடந்த மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கிறித்துவ பள்ளிக்குள் நுழைந்து அவர்களின் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு தேவாலயத்திலும் வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கே கிறித்தவர்கள் அச்சமுறும் நிலைமைதான் உள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், “நீங்கள் வழிபாடு நடத்தாதீர்கள். எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது” என்று வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ்.இன் அடியாள் படையாக நடந்துகொள்கிறது போலீசு.
உண்மை கண்டறியும் குழு ஒன்றின் அறிக்கையின் படி, கிறித்தவர்கள் மீதான தாக்குதல் அதிகம் நடைபெறும் இந்திய மாநிலங்களில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம்வரை நாடு முழுவதும் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட 305 மதவெறித்தாக்குதல்களில் 66 சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்திலும் 47 சத்தீஸ்கரிலும் 32 கர்நாடகத்திலும் நடைபெற்றிருக்கிறது.
முசுலீம் மக்கள் மத்தியிலும் பெரும் அச்சம் நிலவுகிறது. தங்களது மத அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தாலேயே பலர் காவி குண்டர்களால் அநியாயமாக தாக்கப்படுகிறார்கள். பாகல்கோட் மாவட்டத்தில், தனியார் டியூசன் செண்டர் ஒன்றிற்கு குல்லா அணிந்து வந்த இரண்டு முசுலீம் மாணவர்கள் 15 பேர் கொண்ட மதவெறி கும்பலால் கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். முசுலீம்களின் கடைகளும் தாக்கப்படுகின்றன.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் வரிசையில், கர்நாடகாவிலும் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பா.ஜ.க. அரசு. இவையெல்லாம் கர்நாடகா இன்னொரு உத்தரப் பிரதேசமாக மாறி வருவதை எடுத்துக் காட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்-ன் விளைநிலமான கர்நாடக பார்ப்பன கும்பல்
கர்நாடகாவில், ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு விதை துர்கவாகினி, பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, பசுப் பாதுகாப்புப் படை, பா.ஜ.க. என பல்வேறு பெயர்களில் கிளை பரப்பி விருட்சமாய் வளர்வதற்கான வளமான அடித்தளமாய் இருந்தவர்கள் தென் கர்நாடகாவின் மங்களூரு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்களே.
மகாராஷ்டிரத்தில் ஆர்.எ.ஸ்.எஸ். தோன்றுவதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள் என்றால், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கு காரணமானவர்கள் கொங்கனி பேசும் கவுட் சரஸ்வத் பார்ப்பனர்கள், சித்ரபூர் சரஸ்வத் பார்ப்பனர்கள், துளு பேசும் சிவாலி பார்ப்பனர்கள் மற்றும் கன்னடம் பேசும் ஹவ்யாக் பார்ப்பனர்களாவர். இவர்கள் பார்ப்பன மேலாதிக்கத்திலும், செழிப்பான வேத காலத்திலும் விருப்பம் கொண்டிருந்ததால் இயல்பாகவே இந்துராஷ்டிரத் திட்டம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் நீரோட்டத்தில் இரண்டறக் கலந்தனர். ஆர்.எஸ்.எஸ் உருவாவதற்கு முன்பே ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் மற்றும் அகில இந்திய இந்து மகா சபா ஆகியவற்றைக் கர்நாடகாவில் உருவாக்கியவர்களும் இவர்களே.
கிறித்தவ மிஷனரிகள் ஆங்கிலக் கல்வி என்ற பெயரில் மதமாற்றம் செய்கின்றன என்பதற்கு எதிராக பிரம்ம சமாஜ் உருவாக்கப்பட்டது. மதமாற்றம் என்பது முழு உண்மையல்ல. பார்ப்பனர்கள்கூட கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள். உண்மை என்னவென்றால், 1860-களில் ஆங்கில கிறித்துவ மிஷனரிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (பில்லவர்கள்) ஆங்கிலக் கல்விக் கொடுத்தன. இதனால் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிகளில் பார்ப்பனர்களுக்கு சமமாக தாழ்த்தப்பட்டவர்களும் பணியாற்றினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பார்ப்பன மேலாதிக்க வெறியின் விளைவாகவே கர்நாடகாவில் பிரம்ம சமாஜ் உருவாக்கப்பட்டது, “இந்துக்கள் கிறித்துவ மிஷனரிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது” என்று பிரச்சாரமும் செய்தது.
படிக்க :
மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
1925-ல் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடக பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களாயினர். கர்நாடாகவில் முதல் ஷாகா பெலகாவில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மங்களூருவில் உருவாக்கப்பட்டது. சரஸ்வத் பார்ப்பனர்களின் நிதி உதவியால் உருவாக்கப்பட்ட கனரா பள்ளிதான் ஆர்.எ.ஸ்.எஸ்-ன் அலுவலகமாக இருந்தது. இப்பள்ளியில் ஆங்கிலக் கல்வியோடு வேத கலாச்சாரமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
1970-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி நிறுவனமான “வித்யா பாரதி” தற்போது 2,000 பள்ளிகள்; 30 இலட்சம் மாணவர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், 1951-இல் ஷாகாக்கள் இருந்தாலும் ஜன சங்கம் தொடங்கப்பட்ட பிறகும் பரந்துபட்ட மக்களிடம் செல்வாக்கு இல்லாத, பார்ப்பனர்களின் அமைப்பாக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். இருந்தது.
பரந்த மக்கள் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் பார்ப்பனரல்லாத மக்களை சாதியைத் தாண்டி ‘இந்துக்களாக’ திரட்டுவதற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு இராமன் என்ற கதாநாயகனும் முசுலீம் என்ற வில்லனும் தேவைப்பட்டார்கள். இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் அமைப்பு வடிவங்களையும் கையிலெடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
(தொடரும்)

பாகம் – 2

அப்பு

மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, வடக்கு மலையம்பாக்கம் என்ற ஊரில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு வரை தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரையில் பெயர் குறிப்பிட விரும்பாத கல்வி நலன்விரும்பிகளின் முன்முயற்சியால் தான் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர், கம்ப்யூட்டர், புரோஜெக்டர், ஸ்பிக்கர் பாக்ஸ் போன்றவை அனைத்தும் இத்தகைய நலன் விரும்பிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகம் மட்டும் அல்லாமல் தமிழ், கணிதம், ஆங்கிலம் பயிற்சிகளுக்கு தேவையான நூல்கள் பிரதி (ஜெராக்ஸ்) எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வகுப்பறைகளில் புரோஜெக்டர் உள்ளது.
இந்த பள்ளியில் ஆண்களுக்கு 2 கழிவறைகள் மற்றும் பெண்களுக்கு 2 கழிவறைகள் என மொத்தம் 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கவேயில்லை. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 350 மாணவர்களுக்கும் சேர்த்து நான்கு கழிப்பறைதான் இருக்கிறது.
படிக்க :
அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?
கல்வி நலன் விரும்பி ஒருவரின் உதவியுடன் பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர பேருந்து ஏற்பாடு செய்து தினமும் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் தினமும் 2 கி.மீ நடந்து வர வேண்டிய சிரமம் மாணவர்களுக்கு இல்லாமல் உள்ளது. மேலும், இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2013-ம் ஆண்டு முதல் 90%-க்கு கீழ் குறையாமல் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பெறுகின்றனர். தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதன் காரணமாக 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளிக்கு 2011-ம் ஆண்டு கட்டிடம் கட்ட அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை ஏற்கெனவே பல பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அரசு ஒதுக்கிய நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர். ஆனால் சுமார் 20 செண்ட் அளவிலான மாட்டுப்பண்ணை மட்டும் அகற்றப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு 5 செண்ட் அளவிலான பள்ளி நிலம் அருகில் உள்ள கோயிலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
பள்ளி திறந்து செயல்பட ஆரம்பித்த பிறகும் மாட்டுப்பண்ணை அகற்றப்படவில்லை. பள்ளிக்கு புரவலர்களாக இருந்து வரும் ஆர்வலர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தால் அரசானது 27.6.21 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
பள்ளி வளாகத்திற்கு முன்னால் விளையாட்டு மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் மழை பெய்யும் போது எல்லாம் 3 அடிக்கு தண்ணீர் தேங்கிவிடுகிறது. மழை விட்ட பிறகும் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி விடுகிறது. தற்போது 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீரை கொரோனா ஊரடங்கால் அப்புறப்படுத்தாமல் அப்படியே ஒன்றரை மாதமாக விட்டுவிட்டனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பள்ளி திறக்கப்படுவதால் கிராமப் பஞ்சாயத்து சார்பாக தண்ணீர் 3 நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீரை எப்படி தேங்கவிடாமல் தடுப்பது என்பது பற்றி நிரந்தர தீர்வாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றிய அக்கறையும் அரசுக்கு இல்லை. மண்ணைப் போட்டு அந்த விளையாட்டு மைதானத்தை மேடாக்குவது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும். ஆனால் அதற்கு பணம் செலவழிக்க அரசு தயாராக இல்லை.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் நிறைவடையவில்லை. முகப்பு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் குடிகாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு, பள்ளி வளாகத்தில், மதுபாட்டில்களும், குடிகாரர்கள் விட்டுச் செல்லும் மீந்து போன உணவுப்பொருட்களும் ஆங்காங்கி சிதறிக் கிடக்கின்றன.
அரசு செய்துதர வேண்டிய பல்வேறு அவசியப் பணிகளை சமூக ஆர்வலர்கள் தங்கள் முயற்சியால் நிறைவேற்றிவந்த போதும், விளையாட்டு மைதானத்தை சீர்செய்தல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட அதிக செலவு கோரும் பணிகளைக் கூட அரசு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.
தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகள் அங்குள்ள ஆசிரியர்கள், முன்னால் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்களின் முன்முயற்சியால் தான் இயங்கிவருகின்றன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய அரசோ எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது.

அமீர்

SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தோழர்கள் மகத்தான வெற்றி!

SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர்கள் மகத்தான வெற்றி !
SRF மணலி தொழிலாளர்களை வாழ்த்துகிறோம் !
31.01.2021 அன்று நடந்து முடிந்த SRF மணலி பொதுத் தொழிலாளர் சங்கத் தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையை ஏற்றுக் கொண்ட எமது NDLF – தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் 5 பேரை மகத்தான வெற்றி பெறச் செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகள், அச்சுறுத்தல்களையும் மீறி நமது அணிக்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து தொழிலாளர்கள் தங்களது மிகப் பெரிய நம்பிக்கையை பதிவு செய்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தோழர் பா. விஜயகுமார் (முன்னாள் பொருளாளர், பு.ஜ.தொ.மு) அவர்கள் வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கையானது, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏனைய மூன்று வேட்பாளர்களது ஓட்டுக்களின் கூட்டு எண்ணிக்கையை விட 52 ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது. நீண்ட காலம் இந்த சங்கத்தின் தலைவராக இருந்த திரு. சுப.தங்கராசுவுக்கு 65 ஓட்டுகளும், பு.ஜ.தொ.மு-வின் ஏகபோக உரிமையாளராக கூறிக்கொண்ட சீர்குலைவுவாதிகள் அணியிலிருந்து போட்டியிட்ட திரு. சுதேஷ்குமாருக்கு 32 ஓட்டுக்களும்தான் கிடைத்தன.
படிக்க :
ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
துணைத் தலைவராக போட்டியிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளரும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் & டெக்னீசியன்கள் சங்கத்தின் நிறுவன பொதுச் செயலாளருமான தோழர் சி.வெற்றிவேல் செழியன் நான்குமுனைப் போட்டியில் 140 ஓட்டுகள் பெற்று வெற்றிவாகை சூடினார். சீர்குலைவுவாதிகள் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. பார்த்தசாரதி வெறும் 38 ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.
சீர்குலைவுவாதிகளது சீடராகவும், 4 முறை பொதுச்செயலாளராகவும் இருந்த திரு. பி.ஆர். சங்கர் வெறும் 48 ஓட்டுகள் பெற்று நமது முன்னணி தோழர் வி. தேவராஜ் அவர்களிடம் தோற்றுப்போனார்.
சீர்குலைவுவாதிகளின் இன்னொரு முக்கியப் புள்ளியான முன்னாள் மாநில துணைத்தலைவர்) திரு. சதீஷ் வெறும் 48 ஓட்டுகள் வாங்கி எமது தோழர் பொ.பிரகாஷ் அவர்களிடம் மண்ணைக் கவ்வினார். நான்குமுனைப் போட்டியில் இன்னொரு முன்னணி தோழரான எம்.எஸ்.ஆனந்த் முதன்முதலாக போட்டியிட்ட தேர்தலில்) 3-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்று இணைச்செயலாளராக வென்றார்.
நமது அணி தோழர்கள் சீர்குலைவுவாதிகளை விட அதிகபட்சம் 5 மடங்கு ஓட்டுகளைப் பெற்று, நாம்தான் புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு – வின் உண்மையான வாரிசுகள் என்பதை நிலைநாட்டியுள்ளனர். இது நமது தலைமைக்கும், அரசியல் – அமைப்பு உறுதிக்கும் கிடைத்த வெற்றி.
கடந்த ஜனவரி 2021 முதலாகவே தொழிற்சங்கத்தின் மீதும், தொழிலாளர்கள் மீதும் நிர்வாகம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அப்போது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த சீர்குலைவுவாதிகளது சீடரும், தலைவர் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் வடசென்னை தொழிற்சங்க முகமாக இருந்தவரும் சங்கத்தின் உரிமைகளை நிர்வாகத்துக்கு பலியிட்டனர்.
நமது அணி தோழர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்தது. முகநூலில் லைக் போட்டவருக்கு சஸ்பென்சன் கொடுக்கின்ற அளவுக்கு அடக்குமுறை தலைவிரித்தாடியது. எதிர்பார்ப்புகள் நிராசையானது. சங்கத்தலைமை வெறும் பொம்மையாக இருந்தது. இந்த தருணத்தில் சீர்குலைவுவாதிகள் நம்மீது அவதூறுகளை பொழிந்து கொண்டிருந்தனர்.
ஆனாலும், இந்த அவதூறுகளை புறந்தள்ளிய தொழிலாளர்கள் நிர்வாகத்தை எதிர்க்கொள்வதற்கு பொருத்தமான அரசியல் – அமைப்பு ஆளுமை கொண்ட அணி நமது அணிதான் என்பதை தொழிலாளர்கள் மிகச்சரியாக உணர்ந்துள்ளனர். இந்த உணர்தல் மற்றும் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றென்றும் உண்மையானவர்களாக இருப்போம் என்பதை தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.
இந்த வெற்றி தொழிலாளர்களது வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த வர்க்க ஒற்றுமையை கூட்டாக பேணிப்பாதுகாக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு
தொடர்புக்கு : 8056386294

மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா

தமாற்றம் என்கிற வார்த்தையைக் கொண்டுவந்து ஊடகங்களில் திணித்து ஒரு கலவரத்தை நிகழ்த்த இன்றைக்கு சில தமிழக இந்துத்துவாதிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அணுவளவிற்கான வாய்ப்பு கிடைத்தாலும் அதனை அணுகுண்டாக்கி வெடித்து அதனால் வீழ்ந்த பிணங்களின் மீதேறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்கள் தான் இந்துத்துவவாதிகள்.
மறதி என்பது மனிதனின் இயல்பு என்பதால், ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும், அதே தேதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஏதாவது ஒரு பதிவையாவது எழுதி, அதனை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன்.
1965-ம் ஆண்டு, தன்னுடைய 24-வது வயதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசாவின் மனோகர்பூர் என்கிற பழங்குடி கிராமத்திற்கு வந்தார் கிரகாம் ஸ்டெயின்ஸ். அங்கிருக்கும் தொழுநோய் மருத்துவமனையை கவனித்துக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டார். காதலித்து மணமுடித்து மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் ஒரு மகளுடனும் அந்த பழங்குடி கிராமத்திலேயே மக்களுக்காக வாழ்ந்து வந்தார் கிரகாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கிராமத்திற்கு பயணித்து, அங்கேயே தங்கி தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று ஆண்டுதோறும் ஏராளமானோர் பயனடைந்துவந்தனர்.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
1999-ல் ஃபாதர் கிரகாமும் அவரது இரு மகன்களும் ஒரு காருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கே 50 பேருக்கும் மேற்பட்டோரைக் கொண்டு ஒரு கும்பல் வந்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் வெளிப்புற கதவுகளையும் மூடி பூட்டுப் போட்டது அக்கும்பல். பின்னர், கிரகாம் இருக்கும் காரைச் சுற்றி அக்கும்பல் நின்றது. அவர்கள் ஒவ்வொரின் கையிலும் வாளும் கோடாரியும் இருந்தன. அந்த ஆயுதங்களை வைத்து அந்த காரை அடித்து உள்ளே இருக்கும் கிரகாமையும் அவரது மகன்களையும் மிரட்டினர். உள்ளே என்ன செய்வதென்றே பயந்து கதறிக்கொண்டிருந்த மகன்களைக் காப்பாற்று வழிதெரியாமல், காருக்கு வெளியே இருக்கும் கும்பல் என்னதான் செய்யப்போகிறதோ என்ற பதட்டத்தில் கிரகாமும் இருந்தார்.
அந்த காரின் மீது ஊற்றுவதற்காகவே கொண்டுவந்திருந்த எரிபொருளை அக்கும்பல் ஊற்றியது. அதன்பின்னர், அந்த காரின் மீது நெருப்பைப் பற்றவைத்தது அக்கும்பல். அந்த கார் முழுமையாக பற்றி எரிவதைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தது அக்கும்பல். காரிலிருந்து கிரகாம் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த கார் எரிந்து முற்றிலும் சாம்பலாகும் வரையிலும் அதனைச் சுற்றியே அக்கும்பல் நின்று கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தது.
மிக வசதியான ஒரு நாட்டில் பிறந்து, ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தும், அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கிற ஒரு கிராமத்தில் ஏழை மக்களுக்காக சேவை செய்ய வந்த ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்துவிட்டு, தன்னுடைய கோரப்பசியைத் தீர்த்துக்கொண்டதும் அங்கிருந்து அக்கும்பல் கிளம்பியது.
ஏழைகளை ஏமாற்றி கிருத்துவ மதத்திற்கு மாற்றுவதாக குற்றஞ்சாட்டித்தான் அவர்களைக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டவர்கள் தைரியமாகவே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தனர். அத்தனை பெரிய கும்பல் திட்டமிட்டு செய்த இவ்வளவு பெரிய குற்றத்திற்கு டாரா சிங் ஒரே ஒருவனுக்கு மட்டும் தான் தண்டனையே கிடைத்தது. அவன் அக்கொடூரக் கொலையை நிகழ்த்துவதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் கூட பாஜகவுக்காக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்து ஓட்டுக்கேட்டவன். பஜ்ரங் தளத்தில் இருந்தவன்.
“டாரா சிங்குக்கும் பாஜகவிற்கு உள்ள தொடர்பு ஊரறிந்த ஒன்றுதான். அந்த சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் அனைத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் கலந்துகொள்ளும் அளவுக்கு அவன் அதன் அங்கமாகவே இருந்தான்” என்றார் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லலித் தாஸ்.
ஆனால், அவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என்றும் அவன் தனியாக ஒருவனே திட்டமிட்டு, ஒருவனே அந்த காரை மடக்கி, ஒருவனே அந்த காருக்கு தீவைத்து, கொலை செய்ததாக தீர்ப்பு எழுதப்பட்டு, அவனுக்கு மேலுள்ள மிகப்பெரிய கொலைகாரர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் விட மிகக்கொடுமை என்னவென்றால், அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் கூட ஆயுள் தண்டனையாக பின்னர் குறைக்கப்பட்டுவிட்டது. அதுகூட பரவாயில்லை. ஆனால், அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள் இருக்கிறதே, அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
“கிரகாம் ஸ்டெயின்சும் அவரது இரு குழந்தைகளும் கொல்லப்பட்டதற்கு, அவர்கள் ஏழைகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததும் அதற்காகவே அவர்களுக்கு பாடம் புகட்டவே குற்றவாளி இவ்வாறு செய்ததாகவும் தெரியவருகிறது. அதனை கருத்தில்கொண்டு, அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டையாக குறைக்கிறோம்… ஒருவரின் மத நம்பிக்கையில் தலையிட்டு, அவரை மதமாற்றம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்..” என்றெல்லாம் விரிவாக மதமாற்றத்தையே அதிகமாகக் கண்டித்து ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது.
ஒருவேளை சோத்துக்காக மதம் மாறினால் என்ன? தொட்டால் தீட்டு, அருகே வராதே, படிக்காதே, வேலைக்குப் போகாதே என்று தள்ளிவைக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ஒருவேளை சோறும் வேலையும் வாழ்க்கையும் கிடைக்கிறதென்றால் மதம் மாறினால் கூட தவறில்லை தானே.
‘தேசம்… தேசம்’ என்று பேசிக்கொண்டே காசுக்கும் பெரிய வேலைக்குமாக ஆசைப்பட்டு அமெரிக்காவிற்கு போய், தேசம் மாறும் தேசபக்த(?) இந்துத்துவாதிகள் இல்லையா? காசுக்காக தேசம் மாறலாம், ஆனால் ஒருவேளை சோத்துக்காக மதம் மாறக்கூடாதா என்ன?
இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டாய மதமாற்றம் நடந்ததாக சொன்னது அந்த குற்றவாளி மட்டும்தான். அது வேறெந்த வடிவத்தில் நிரூபிக்கப்படாத ஒரு வாதம் தான்.
இந்த தீர்ப்பை எழுதியவர் வேறு யாருமல்ல… அச்சு அசல் தமிழரான முன்னாள் நீதிபதியும், ஓய்வுக்குப்பின்னர் கேரளாவின் கவர்னராக பதவிகிடைத்தவருமான சதாசிவம் தான்.
சரி, ஏழைகளை மதமாற்றம் செய்ததால் தான் கொலை செய்தோம் என்று சொன்னார்களே அந்த கொலைகாரர்கள், ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்சைக் கொன்ற பின்னர், அந்த கிராமத்தின் ஏழ்மையை அவர்கள் போக்கிவிட்டார்களா?
இல்லை. இல்லவே இல்லை.
அந்த கிராமம் முன்பைவிடவும் மிகக்கொடூரமான ஏழ்மை நிலையில் தான் இருக்கிறது. அங்கே இருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தின் கட்டிடம் வெறுமனே ஒரு பெயர்ப்பலகையுடன் கூடிய பாழடைந்த கட்டிடமாகத் தான் இருக்கிறது. அந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
தன்னுடைய வாழ்க்கையையே அந்த கிராமத்தில் வாழமுடிவுசெய்திருந்த கிரகாமின் மனைவியும் மகளும் அந்த கிராமத்தைவிட்டே வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கே சென்றுவிட்டனர்.
படிக்க :
தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆனால், யார் இலாபமடைந்திருக்கிறார்கள்?
ஃபாதர் கிரகாம் கொல்லப்பட்ட போது, பஜ்ரங்தளத்தின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சிங், 2019-ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டு, வென்று, இன்று மத்திய அமைச்சராக இருக்கிறார்.
ஒரு குடும்பத்தை உயிரோடு கொளுத்தியவர்களும், அவர்களின் கொள்கையும், இயக்கங்களும் இன்றும் நம்மிடையே வெட்கமில்லாமல் ஓட்டுக்கேட்டு, வெற்றிபெற்று, ஆட்சியையும் பிடித்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நினைக்கும்போது தான் ஒவ்வொரு ஜனவரி 22-ம் தேதியும் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது.
இவர்கள் அண்டா திருடர்கள் மட்டுமல்ல… அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவுபெற்ற விசக்கிருமிகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது…
முகநூலில் : சிந்தன் இ. பா.
disclaimer

தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!

30-01-2022
பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை : தமிழ்நாட்டில்  மதக்கலவரம் செய்ய முயலும்
பாஜக குண்டர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய்!
பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடைசெய்!
பத்திரிகை செய்தி
ஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு  நீதிபதியிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தன்னை மதமாற்றக் கூறி கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் அப்பள்ளி விடுதியின் பெண் காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்மாணவி சித்திகொடுமைக்கு அஞ்சிதான் தற்கொலை செய்துகொண்டார் என்பது போன்ற தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் விசாரணையின் முடிவில்தான் உண்மை வெளிவரும்.
ஆனால், லாவண்யாவின் சித்தி மற்றும் அப்பாவை தூண்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதால்தான் அம்மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று மதக்கலவரத்தை தூண்டி மெல்ல மெல்ல நாடுமுழுதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்து சிறுபான்மை மக்களை வதைக்க சதித் திட்டம் தீட்டிவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தி அப்பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும், கிருத்துவப் பள்ளிகளை மூட கோரிக்கை வைத்து திமுக அரசு ஓர் இந்துவிரோத அரசு என்று பேசிவருகிறார்கள் பிஜேபி –  ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.
படிக்க :
அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மேலும், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறதென்று பொய்யான புகார் கொடுக்க திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பட்டி மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அப்பகுதி மக்கள்” இந்து – கிருத்துவ மக்களாகிய தாங்கள் ஒற்றுமையாக வாழ்வதாகவும் அதை சீர்குலைக்க பிஜேபி-யினர் முயற்சி செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் வதந்தி பரப்பினார்கள் என்று கூறி கைது செய்த திமுக அரசு, இங்கே வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்ட முயலும் பிஜேபியினர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது.
ஆக, காவி பாசிசம் ஒரு சிறு துரும்பை கூட பயன்படுத்தி தன்னை நிலைநாட்ட முயன்றுவரும் நிலையில் திமுக அரசு பாசிச சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து மெல்ல மெல்ல பாசிசம் அரங்கேறவே வழிவகுத்து வருகிறது என்பதைத்தான் நாம் கண்டுவருகிறோம்.
திமுகவையோ, இந்த அரசு கட்டமைப்பையோ நம்பி காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதுதான் நாம் சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் கொட்டடி கொலைகள் மற்றும், கொரோனா கட்டுபாடு என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போலிசின் அடக்குமுறை முதலியவை நமக்கு உணர்த்துகின்றன.
ஆகவே, டெல்லி விவசாயிகள் போல் வீதியில் இறங்கி போராடுவதன் மூலம்தான் பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியும், பாசிச நடவடிக்கைகளை முறியடிக்கவும் முடியும் என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

28.01.2022
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
பத்திரிகை செய்தி
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
டந்த 28.01.2022 தேதியன்று எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது. எமது அமைப்பின் கடந்த காலத் தவறுகளை உணர்ந்து களைந்து கொண்டும், புதிய அரசியல் நிலைமைகளுக்கு ஏற்பவும் கொள்கை அறிக்கையை இந்த மாநாடு வகுத்துள்ளது.
அரசுக் கட்டமைப்பின் அனைத்துத் துறைகளும் அவற்றுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்ற முடியாமல் தீராத, மீள முடியாத, கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, தோற்றுப்போய் மக்களுக்கு எதிர்நிலைச் சக்தியாக மாறிவிட்டது. அதை உடனடியாக அகற்றிவிட்டு, அதற்கு ஒரே மாற்று மக்கள் அதிகாரமே என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் எமது அமைப்பு தொடங்கப்பட்டது. எமது அமைப்பின் முதல் போராட்டக் கோரிக்கையாக “மூடு டாஸ்மாக்கை!’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும் வீச்சாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். தியாகி சசிபெருமாள் டாஸ்மாக்கை மூடுவதற்கான போராட்டத்தில் உயிர் நீத்தார். அதன் தொடர்ச்சியாக, மக்கள் அதிகாரம் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை உடைப்பு போராட்டம் பற்றிப் பரவியது.
படிக்க :
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
காவிரி நதிநீர் பிரச்சினை, ஊழல் ராணி ஜெயாவின் பெயரையும் படத்தையும் அரசு அலுவலகங்களிலிருந்து அகற்றக்கோரும் போராட்டம், விவசாயிகளின் தற்கொலைக்கு எதிரான போராட்டம், நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளைக் கண்டித்த போராட்டம், மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம் – என தமிழகத்தின் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வழக்கு, சிறை, சித்திரவதை – என பல்வேறு இன்னல்களையும் தாங்கி மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடி வந்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட எமது தோழர் ஜெயராமன் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படிப்பட்ட போர்க்குணமும் தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட அமைப்பாக, உழைக்கும் மக்களின் பேராதரவுடன் எமது அமைப்பு செல்வாக்குடன் வளர்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு எமது அமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவுவாதம், பிளவுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய அணிகள், முதலாளித்துவக் கருத்துக்களால் புரையோடிப்போன தலைமைக் குழுவில் இருந்த மூவரை வெளியேற்றினர். இதனைப் பரிசீலித்ததில், எமது கொள்கையில் தவறுகள் இருப்பதை உணர்ந்தோம். தோற்றுப்போன கட்டமைப்பிற்கு மாற்றாக எந்த ஒரு தீர்வையும் முன்வைக்காமல் அதற்குள்ளேயே தீர்வை தேடுவதாக மக்கள் அதிகாரத்தின் கொள்கை இருக்கிறது என்பதை உணர்ந்தோம். மேலும், எமது அமைப்பின் செங்கொடியில் கம்யூனிச இயக்க வரலாற்றில் இல்லாத வகையில், போராட்டத்தையும் ஒற்றுமையையும் உணர்த்தும் கரமானது கறுப்பு நிறத்திலும், வலது திசையை நோக்கியும் இருந்தது. இது முதலாளித்துவ அடையாள அரசியலை மறைமுகமாக உணர்த்தும் வகையில் உள்ளதை உணர்ந்தோம்.
நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று உரைத்தவர்களும், கம்யூனிச அமைப்பின் உயிர்நாடியான ஜனநாயக மத்தியத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்பவர்களும் தலைமைப் பொறுப்பிலே வீற்றிருந்தனர். மேலும், செயலூக்கமிக்க தோழர்களின் வர்க்க உணர்வை வற்றச் செய்யும் வகையில் எமது அமைப்பில் இருந்த இது போன்ற சில தவறுகள் அமைந்திருந்தன என்பதை மக்களின்முன் வெளிப்படையாக சுயவிமர்சனமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனாலேயே தலைமைக் குழுவானது அணிகளிடமும் மக்களிடமும் தனிமைப்பட்டு அதிகாரத்துவம், தாராளவாதம், சந்தர்ப்பவாதம், தலைக்கனம் போன்றவற்றில் மூழ்கிப் போனது. மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிய பின்னரும்கூட, அமைப்பு விதிகள்கூட வகுக்காத அளவுக்கு தனிநபர் பிரபலவாதம் எனும் புதைசேற்றில் தலைமைக்குழு மூழ்கி சுகம் கண்டது. எளிமையான வாழ்வினை அடிப்படையாகக் கொண்டிருந்த நக்சல்பாரி கம்யூனிச இயக்கப் பாரம்பரியத்தில் உருவான எமது அமைப்பில் எவ்விதப் பரிசீலனைக்கும் உட்படாத தலைவர்கள் உருவாயினர். இத்தலைவர்களுக்கு ஏற்றபடியான சந்தர்ப்பவாதமான சலுகை, சந்தர்ப்பவாதமான பரிசீலனை ஆகியவற்றையும் மேற்கொண்டுள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக ஏற்கிறோம். பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து வைக்கப்படும் தீர்வுகள் அனைத்தும் ஆளும் வர்க்கத் தீர்வுகளே என்பதை பெரும் இழப்புகளோடு வரலாறு எமக்கு மீண்டும் கற்றுக் கொடுத்துள்ளது.
படிக்க :
மக்கள் அதிகாரம் கோவை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் – முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மேற்கண்ட அனைத்து தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கையும் அமைப்பு விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையால் வழிகாட்டப்படும் ஓர் அமைப்பாக மக்கள் அதிகாரம் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பானது, கம்யூனிச இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் என்பதை மக்கள் அதிகாரத்தின் முதலாவது மாநாடு பெருத்த வரவேற்புடன் ஏற்றுக் கொண்டது.
அண்மைக் காலமாக, மோடி கும்பலால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்துவெறி (பார்ப்பன) பாசிசம் ஒருபுறமும், கார்ப்பரேட்டு முதலாளிகளின் பாசிசம் மறுபுறமும் நாடெங்கும் வேகமாக அரங்கேறி வருகின்றன. அச்சுறுத்திவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி உழைக்கும் மக்களின் ஜனநாயகக் குடியரசை நிறுவ வேண்டிய தேவையானது இன்று உழைக்கும் மக்களின் அவசர, அவசியக் கடமையாகியுள்ளது.
இதனடிப்படையில், “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!’’ – ஆகிய முழக்கங்களை முன்வைத்து செயல்படும் அமைப்பாக எமது மக்கள் அதிகாரம் செயல்படும். அதற்கேற்ற வகையில் கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகள் முன்வைக்கப்பட்டு அவை ஒரு மனதாக இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளைகள், வட்டங்கள், மண்டலங்கள் – என அனைத்து நிலைகளுக்கும் உட்கட்சி தேர்தல் ஜனநாயகப் பூர்வமாக நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு இந்த முதலாவது மாநில மாநாடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இம்மாநாட்டில், இடது திசையை நோக்கிய வலது கரத்தை உடைய அமைப்பின் செங்கொடி பெண் தோழர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.
மேலும், இம்மாநில மாநாட்டில், மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாநிலச் செயலாளராக தோழர் வெற்றிவேல் செழியனும் மாநில இணைச் செயலாளராக தோழர் குருசாமியும் மாநிலப் பொருளாளராக தோழர் அமிர்தாவும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சிவா, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தெரிவு செய்யப்பட்ட மாநிலச் செயலாளர் ஏற்புரை வழங்கினார். மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றை மாநாடு ஒருமனதாக நிறைவேற்றியது. நன்றியுரைக்குப் பின்னர் மாநாடு நிறைவு பெற்றது.
படிக்க :
மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மக்கள் அதிகாரம் – முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மாநாட்டுப் பிரதிநிதிகள், “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!’’ – என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,


தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி

ரியலூர் கிறித்துவ பள்ளியில் படித்த மாணவியின் தற்கொலை விவகாரத்தை மதமாற்ற விவகாரமாக சித்தரித்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த விவகாரத்தில் பொய்களைப் பரப்பி, எடிட் செய்யப்பட்ட வாக்குமூலக் காணொலி மூலம் ஒரு மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்திருக்கிறது பாஜக.

அந்த மாணவி பேசிய முழுக் காணொலியும் வெளியான பின்னர்தான் மதமாற்றம் என்னும் பெயரில் கலவரம் செய்ய பாஜக செய்த முயற்சிகள் அம்பலமாகின. ஆனால் அதற்கு முன்னரே இது பற்றிய பொய்யான செய்தியை இந்திய அளவில் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி ஒரு கருத்துருவாக்கத்தை செய்திருக்கிறது பாஜக கும்பல்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக சங்க பரிவாரக் கும்பலின் திட்டத்தை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் துணைவேந்தன். பாருங்கள் ! பகிருங்கள் !

 

“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”

பாரிசில் உள்ள உலக ஏற்றத்தாழ்வுகள் ஆய்வகம்1 உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளைக் குறித்த புள்ளிவிவரங்களுக்கு முதன்மையான ஊற்றாகத் திகழ்கிறது. உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் தரவுகளைக் கவனமாகத் தொகுத்துத் தருகிறது அந்த ஆய்வகம்.
உலகம், நாடு, நாட்டுக்குள் வெவ்வேறு பகுதிகள் ஆகிய பல்வேறு மட்டங்களில் வருமானம், சொத்து ஆகிய இரண்டு வகையான ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய தகவல்கள் அந்த ஆய்வகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
அண்மைக் காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு உயர்ந்திருப்பதை நம்மில் பலர் ஏற்கெனவே அறிவோம். இருப்பினும் அண்மையில் வெளியான உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை-2022 2 பல புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய வல்லரசுகளின் ஆளுகையில் உலகின் பெரும்பகுதி இருந்தபோது உலகில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒப்பான அளவு இப்போது மீண்டும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதை மேற்படி அறிக்கை காட்டுகிறது. இந்த நிலைமை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிற்று; கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் வெகுவேகமாக வளர்ந்தது.
படிக்க :
இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
வருமானம், சொத்து ஆகிய இரண்டிலும் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றைப் பொருத்தவரை இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு வெளியிடும் தரவுகளின் தரம் மிகமோசமாக உள்ளது; ஆகவே அண்மைக் காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் எப்படி மாறியுள்ளன என்பதைக் கணிப்பது சிக்கலான செயலாக உள்ளது; இருப்பினும், ஏற்றத்தாழ்வுகள் மிகமோசமாக இருப்பதால் அவை நன்கு புலப்படுகின்றன.
இக்கட்டான தகவல்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை மறைக்க இந்திய அரசு முனைகிறது; தரவுகளை முறைகேடான வகையில் மாற்றத் தலைப்படுகிறது. 2017-18 ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் செலவுகள் குறித்த அளவையின்3 முடிவுகளை வெளியிட அரசு மறுக்கிறது.
முறைசார் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உண்மை நிலையை விட அதிகமாக இருப்பதைப் போலக் காட்டுவதற்கென அது தொடர்பான இயல் வரையறைகளைத் (definitions) தன் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்கிறது.
அரசின் இப்படிப்பட்ட முயற்சிகளையும் மீறிச் சில பொருளாதாரப் போக்குகள் தவிர்க்க முடியாமல் வெளிப்படுகின்றன: 2020-இல் இந்திய மக்களில் [பொருளாதாரத்தில்] கீழ் நிலையில் உள்ள பாதிப் பேரின் வருமானம் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 13 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது; நாட்டின் மொத்த வருமானத்தில் 57 விழுக்காடு மேல் நிலையில் உள்ள பத்து விழுக்காட்டினருக்குக் கிடைத்தது. மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் [கொழுத்த பணக்காரர்கள்] மட்டும் நாட்டின் மொத்த வருமானத்தில் 22 விழுக்காட்டினைக் கைப்பற்றிக்கொண்டனர்.
சொத்துப் பங்கீடு [மேற்கண்ட] வருமானப் பங்கீட்டை விட மோசமாக உள்ளது. உலகளவில் கடந்த சில பத்தாண்டுகளில் நிலைமை மோசமாகியுள்ளதை நாம் ஏற்கெனவே அறிவோம்: உலகச் சொத்து வளர்ச்சியில் ஏறக்குறைய நாற்பது விழுக்காட்டினை மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் கைப்பற்றிக் கொண்டார்கள்.
1995 – 2001 காலக்கட்டத்தில் உலகளவில் முதல் 52 பணக்காரர்களின் சொத்து ஆண்டுதோறும் சுமார் பத்து விழுக்காடு உயர்ந்தது. அந்த 52 பேரில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரும் உள்ளனர்.
சொத்து ஏற்றத்தாழ்வு இந்தியாவில் [உலக அளவை விட] இன்னும் கடுமையாக உள்ளது: கீழ்நிலையிலுள்ள பாதி இந்தியர்களின் மொத்தச் சொத்து வெறும் ஆறு விழுக்காடாகவும் மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினரின் சொத்து நாட்டின் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகவும் உள்ளன. நாட்டின் மொத்தச் சொத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மேல்நிலையிலுள்ள பத்து விழுக்காட்டு இந்தியரிடம் சேர்ந்துள்ளது.
பெருந்தொற்று உலகை முடக்கியுள்ள கடந்த இரண்டு ஆண்டுகள் உலகின் கொழுத்த பணக்காரர்களுக்கு மிக மகிழ்ச்சியான காலமாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் குறித்து ஆக்ச்பாம்4 என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இதைக் காட்டுகிறது.
உலகளவில் மேல்நிலையிலுள்ள பத்துப் பணக்காரர்களின் சொத்து இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மீதி 99 விழுக்காட்டு மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது. மிக, மிக அதிகமாகச் சொத்துச் சேர்த்தவர்களில் கௌதம் அதானி முன்னணியில் உள்ளார்: பெருந்தொற்றுக் காலத்தில் அவருடைய சொத்து எட்டு மடங்கு உயர்ந்தது!
இந்தியாவின் துறைமுகங்களை நிர்வகித்தல், அனல் மின்னுற்பத்தி, மின் பகிர்மானச் சந்தையைக் கட்டுப்படுத்துதல், எரிவளி வழங்கல், தனியார் வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட பல முனைகளில் அதானியின் நிறுவனங்கள் மிகப் பெரியவையாக வளர்ந்துள்ளன. அதானிக்கு அரசுடன் உள்ள தொடர்புகள் இதற்கு உறுதுணையாக விளங்குகின்றன.
மேற்கண்ட கட்டுமானங்கள் அவற்றின் முதன்மை காரணமாக ஒரு காலத்தில் பொதுத் துறையாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
தனிச் சொத்து உயர உயர பொதுச் சொத்துகள் அருகுகின்றன. பொதுச் சொத்துகளின் இயக்கத்தில் கிடைக்கும் வருமானத்தை மக்கள் நலனுக்குச் செலவிட விரும்பும் அரசுகளுக்கு இது கசப்பான நிலைமை.
இந்தியாவைப் பொருத்தவரை, நாட்டின் வருமானத்தில் தனியார் பங்கு 1980-இல் 290 விழுக்காடாக இருந்தது; 2020-இல் அது 555 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. உலகளவில் வரலாறு கண்டிராத வேகங்களில் இதுவும் ஒன்று!
வேறு பல குறியீடுகளிலும் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் மோசமாகி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்கு 18 விழுக்காடாக உள்ளது; உலகச் சராசரி இதைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது; இருப்பினும் இந்தியப் பெண்களின் நிலைமை மிகமோசமாக இருப்பதை அறிந்தவர்களுக்கு மேற்கண்ட புள்ளிவிவரம் வியப்பளிக்காது.
இயற்கைச் சூழலைக் கெடுக்கும் செயற்பாடுகளிலும் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. சூழல் கேட்டினை அளக்கும் குறியீடுகளில் ஒன்று கரிய வெளியீடு (carbon emissions). இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 2,200 கிலோ கரியத்தை வெளியிடுகிறோம்.
ஆனால், மக்கள் தொகையும் ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்த இந்தியாவில் இத்தகைய சராசரிகள் உண்மையை மறைக்கின்றன: பொருளாதாரத்தில் கீழ்நிலையிலுள்ள பாதி இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 1,000 கிலோ கரியத்தை வெளியிடுகின்றனர்.
மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 32,000 கிலோ கரிய வெளியீட்டுக்குக் காரணிகளாக உள்ளார்கள்; இது அமெரிக்க மக்களில் கீழ்நிலையிலுள்ள பாதிப் பேருடைய வெளியீட்டை விட மூன்று மடங்கும். ஐரோப்பியரில் கீழ்நிலையிலுள்ள பாதிப் பேருடைய கரிய வெளியீட்டை விட ஆறு மடங்கும் அதிகம்!
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
இந்தியத் திட்டக் கொள்கைகளை வகுப்போர் கரிய ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துப் பேசுவதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ஏற்றத்தாழ்வுகள் மக்களைக் கொல்வதோடு நில்லாமல் இயற்கையையும் அழித்தொழிக்கின்றன.
ஏற்றத்தாழ்வுகள் பல முனைகளில் நிலவுகின்றன: பாலினப் பாகுபாடுகள் (பெண்களுடைய நிலைமை மிக மோசமாக இருத்தல்), சாதி – மதப் பாகுபாடுகள் போன்றவை வறுமையின் கொடுமைகளை மேலும் மோசமாக்குகின்றன.
அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் உழலும் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இத்தகைய நாடுகள் உண்மையான வளர்ச்சி அடைவதில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.
ஆகவே, உண்மையான வளர்ச்சி வேண்டுமெனில் அரசின் திட்டக் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் தேவை.
மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:
1. Paris-based World Inequality Lab
2. World Inequality Report 2022
3. national consumer expenditure survey
4. Oxfam

கட்டுரையாளர் : ஜெயதி கோஷ் (மேம்பாட்டுக்கான பொருளாதார வல்லுநர்)
தமிழாக்கம் : இராமகிருட்டிணன்
மூலக் கட்டுரை : தி வயர்

அனைத்து நீதிமன்றங்களிலும் மீண்டும் நேரடி விசாரணை நடத்த வேண்டும் || மக்கள் அதிகாரம்

மிழ்நாட்டில் கடந்த 03-01-2022 முதல்  நீதிமன்றங்களுக்குள் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் செல்வதற்கு தடை விதித்தும், உயர் நீதிமன்றங்களிலும்,  கீழமை நீதிமன்றங்களிலும் காணொலி மூலம் மட்டுமே  வழக்கு விசாரணை  நடைபெறும் என்றும், வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்க நூலகங்கள், நீதிமன்ற வளாகங்களில் செயல்படும் கேன்டீன்களும் மூடப்படும் என்றும், குறிப்பிட்டு 02-01-2022-ம் தேதி இரவில் திடீரென்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.
கொரோனா முதல் அலையின்போது அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே நீதிமன்றங்களை முடக்கி, அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பும் நீதிமன்றங்களை முழுமையாக செயல்பட விடாமல் தொடர்ந்து முடக்கி வைத்துவிட்டு, கடந்த இருமாதங்களாக மட்டுமே கீழமை நீதிமன்றங்களை இயல்பாக செயல்பட அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனாலும் காணொலி விசாரணை, நேரடி விசாரணை என்று இரு வடிவத்திலும் உயர்நீதி மன்றத்தில்  விசாரணை நடை பெற்று வந்தது. வழக்கறிஞர் சங்கங்களின் கோரிக்கைகள், அழுத்தங்கள், போராட்டங்களின் பின்பே இயல்பு நிலைக்கு வந்தடைந்துள்ளது நீதிமன்றங்களும், நீதிமன்ற வழாகங்களும்.
முடக்கப்பட்ட காலகட்டத்தில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், நீதிமன்றத்தின் இயக்கத்தை சார்ந்து தொழில் புரிபவர்கள் ஆகியோர்  அனுபவித்த துன்பங்கள் சொல்லிமாளாது.
தற்பொழுதும் நீதிமன்றங்களை முடக்கி வைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு முன்பு அரசிடமோ, வழக்கறிஞர் சங்கங்களிடமோ கலந்து ஆலோசித்ததாக தனது அறிவிப்பில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை.
படிக்க :
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்
நீண்ட  கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் நீதிமன்றங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கியதும் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் எழுத்தர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. (காணொலி விசாரணை என்பது நடைமுறையில் கீழமை நீதிமன்றங்களை முழுமையாக முடக்கி வைப்பதுதான்)
நீதிமன்றங்களை முடக்கி வைக்கும் அளவிற்கு  நீதிமன்றங்களில் ஆபத்தான சூழல் நிலவுகின்றது என்பதை எந்தத் தரவுகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வந்தடைந்துள்ளது என்பதை தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு வெளியில் ஒரு சில சிறிய கட்டுப்பாடுகளுடன் தமிழகமே இயல்பாக  இயங்கி வருகின்றது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனாலும் நீதிமன்றங்கள் திறப்பதைப் பற்றி உயர்நீதிமன்றம் வாய் திறக்கவில்லை.
காணொலி விசாரணை என்பது எந்த வகையிலும் சாத்தியம் இல்லை என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால நடைமுறை நிரூபித்து விட்டது.  அதன்பின்பும் காணொலி விசாரணை என்று அறிவித்திருப்பது கீழமை நீதிமன்றங்கள் நடை பெற்றுவரும் முறை என்ன என்பதை அறிந்து கொள்ளாததாலா? அல்லது மக்களை பற்றிய அக்கறை துளியளவும் இல்லாமல்  ஆணவத்தினாலா?
மக்கள் வரி பணத்தில் மக்களுக்காக  உருவாக்கப்பட்ட நீதி மன்றங்களுக்குள்  மக்கள் நுளைய எத்தனை எளிதாக தடை விதிக்கிறார்கள் நீதிபதிகள்!
ஏற்கனவே தமிழக உயர் நீதிமன்றங்களில் பொதுமக்கள் செல்வதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது, தேவைக்கு ஏற்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவு, நீதிபதிகள் விரும்பினால் மட்டுமே விசாரணை நடத்துவது, நீதிபதிகள் விடுப்பு, பணியில் இருக்கும் நீதிபதிகளில் பலரும் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கும், சலுகைகளுக்கும் உண்மையாக வேலை செய்யாமல் ஏமாற்றி வருவது, பள்ளிக்கூடங்களை விட கூடுதலான விடுமுறை நாட்கள்,  சட்டங்களின் சந்து பொந்துக்குள் வழக்கறிஞர்கள் நுழைந்து  வாய்தா வாங்குவது போன்றவற்றால் குறித்த நேரத்தில் வழக்காடிகளுக்கு நிவாரணமும், நியாயமும் கிடைக்காது என்பதை நீதிபதிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளதால், தற்போதைய முடக்கத்தால் கூடுதலாக வழக்காடிகள் எதுவும் இழக்கப்போவதில்லை என்ற முடிவிற்க்கு நீதிபதிகள் வந்திருக்கக்கூடும்.
ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் மட்டுமே நீதிமன்றங்கள் நடத்த முடியாமல், வழக்குகள் தேங்கிவிட்டதாகவும், வழக்காடிகள் துன்பம் அடைவதாகவும் தொடர்ந்து பொய் பரப்பி வருகின்றனர் நீதிபதிகள். ஜனநாயகத்தை பற்றி வகுப்பெடுக்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணி புரியும் ஊழியர்களை மாண்புடன் நடத்துவதில்லை என்பது தனிக்கதை.
ஊழல்,  அதிகார முறைகேடுகள்  நிறைந்த இந்த நீதிமன்றங்களில் பல ஆண்டுகள்  விடாப்பிடியான சட்டப்போராட்டத்தின் மூலம் தங்கள் வழக்குகளில் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்த வழக்காடிகளின் நிலை,  நீதிமன்றங்கள் மூலம் மாதா மாதம் பராமரிப்பு பெற்று வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நிலை, இழப்பீடு வழக்கில் இறுதி நிலையில் இருக்கும் வழக்குகள் இன்னும் ஏராளம்.  இந்த முடக்கத்தால் முடங்கிக் கிடப்பது பற்றி  நீதிபதிகள் என்ன கருதுகிறார்கள்?
வழக்கறிஞர்களை ஒடுக்க நினைப்பதும், ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறை காரணம் காட்டி ஒட்டு மொத்த வழக்கறிஞர்களையும் குற்றவாளிகளாக சித்தரிப்பதும், வழக்காடிகளை அடிமைகளாகவே நடத்த நினைப்பதும்,
அரசு இயந்திரத்தை தன் சொந்த நலனுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பவற்றை பற்றியே எந்த நேரமும் சிந்திப்பதாக இருக்கும்  நீதிபதிகளுக்கு மக்கள் படும் துயரம் கண்ணில் தென்பட வாய்ப்பில்லை.
கீழமை நீதிமன்றங்களை பொறுத்தவரை  காணொளி விசாரணை என்பதால் நீதி மன்றங்களில் நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் பொதுவாக நாள் முழுவதும் வேலை இருக்காது. இந்த நீதிமன்ற முடக்கமானது கீழமை நீதிமன்றத்தை பொறுத்தவரை  நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கிடைத்திருக்கும்  ஓய்வு என்றே கூறவேண்டும். ஓய்வுடன் கூடிய, ஊதியம் கிடைப்பதால் தான்  வழக்காடிகள் நிலை  பற்றியும், வருமானமின்றி தவிக்கும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள்  பற்றியும் நினைப்பதற்கு நேரமில்லாமல்  தங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று மட்டுமே நீதிபதிகளால் சிந்திக்க தோன்றுகின்றது. நீதிபதிகளிடம் நெருக்கமாக  இருப்பவர்கள் நீதிமன்ற ஊழியர்கள். வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் எப்பொழுதுமே நீதிபதிகளை
இடைவெளியுடன் அணுகும் நிலையில் தான் நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல பத்தாயிரத்தில் ஆரம்பித்து பல லட்சங்களைக் கட்டணமாகப் பெறும்,  சாமானியர்களால் நெருங்க இயலாத வழக்கறிஞர்களால் இந்த சூழலால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலும். ஆனால் சில ஆயிரங்கள் கட்டணமாக பெறும் ஏழை, நடுத்தர மக்கள் எளிதில் அணுகக்கூடிய வழக்கறிஞர்களால் இந்த சூழலால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தாங்கிப்பிடிப்பது கடும் சவாலானது.
மேலும்  உயர் நீதிமன்றங்களிலோ, கீழமை நீதிமன்றங்களிலோ அன்றாடம் நீதிமன்ற அலுவலங்களுக்குள் சென்று, எந்த சூழலிலும் பணி  செய்ய மனமின்றி பணிபுரிந்து வரும் நீதிமன்ற ஊழியர்களுடன் போராடி பணி புரிந்து (நகல் எடுப்பது, வழக்குகளை எண்ணிடுவதற்காக பார்வையிட வைப்பது உள்ளிட்ட) அதன் மூலம் தினமும் நூறு, இருநூறு, ஐநூறு என்று  வருமானம் ஈட்டி வரும் இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள் இன்று வருமானமின்றி தவித்து வருகின்றனர்.  இளம் வழக்கறிஞராக தொழிலை துவங்கி இன்று நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் ஆகப்பெரும்பாலான நீதிபதிகளுக்கு ஆரம்ப காலத்தில் அந்த நாளின் டீயையும், ஒரு வேளை உணவையும் உத்தரவாதப்படுத்தியதும் மேல் குறிப்பிட்டுள்ள இந்தப் பணிதான்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய கட்டணம் பெற்றுக்கொண்டு வழக்கு நடத்தக்கூடிய வழக்கறிஞர்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க இயலாமல் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுவிட்டால் அதனால் ஏழை, நடுத்தர வழக்காடிகள் நீதிமன்ற படி ஏற முடியுமா?
வழக்கறிஞர் தொழில்செய்து கொண்டே வழக்கறிஞர்களால் வேறு தொழில் செய்ய தடை உள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி நீதிமன்ற வளாகங்களை, நீதிமன்றங்களைக் கைப்பற்றி வைத்துக்கொள்ள முயலுகின்றனர், நீதிபதிகள். நீதிமன்றங்களில் தாங்கள்தான் மன்னர்கள் என்பதை வழக்கறிஞர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் நீதிமன்ற வளாகங்களில்  நடைமுறைபடுத்தி வருகின்றனர் நீதிபதிகள்.
பொதுவாகவே நீதிபதிகளுக்கு எதிராக பொதுமக்களோ, அரசியல் கட்சிகளோ தங்கள் எதிர்ப்பை நேரடியாக தெரிவிப்பது இல்லை.
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கைகளில் கறை படிந்துள்ளதாலும் நீதிபதிகளின் தயவு அவர்களுக்கு  தேவைபடுவதாலும், அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, மக்கள் விரோத திட்டங்களை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதாலும் அரசும், அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தை பற்றி வாய் திறப்பதில்லை.
நீதிமன்றத்தை விமர்சிக்கும் தனிநபர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டி அச்சுறுத்தப்படுகின்றனர். நீதிபதிகளை எதிர்த்து தைரியமாக போராடுவது வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமே, வழக்கறிஞர்கள் போராடுவதாலேயே நீதி பரிபாலனம் கெட்டுவிட்டதாக நீண்டகாலமாக மிகப்பெரிய பொய்யை பிரச்சாரம் செய்துவருகின்றனர் நீதிபதிகள்.
வழக்கறிஞர்களாலேயே நீதி பரிபாலனம் கெட்டுவிட்டதாக கூறிவரும் நீதிபதிகள் சக நீதிபதிகள் செய்யும் ஊழல், லஞ்சம், பாலியல் குற்றங்கள் பற்றி வாய்திறப்பதில்லை.   இந்தியவிலேயே முதல் முறையாக தமிழக வழக்கறிஞர்கள் சுமார் 500 பேர் மதுரையில் ஒன்று கூடி பேரணி நடத்தி மதுரை உயர்நீதி மன்ற வாசலில் ஊழல் செய்த நீதிபதிகள் பெயர்களை வெளியிட்டு, ஊழல் நீதிபதிகள் மீது தமிழக ஆளுனரிடம் புகார் கொடுத்த வரலாறு தமிழக வழக்கறிஞர்களுக்கு உண்டு.
இந்த வரலாற்று நிகழ்விற்கு முன்னணியாக இருந்த  வழக்கறிஞர்களை குறிவைத்து இந்திய வழக்கறிஞர் குழுமத்தையும், தமிழக வழக்கறிஞர் குழுமத்தையும் கைப்பாவையாக பயன்படுத்தி சதி செய்து அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து  நீதிபதிகள் ‘சிஸ்டத்தை’ காப்பாற்றியதை எப்படி மறக்க முடியும்?
வழக்கறிஞர் குழுமத்தை தங்கள் கைப்பாவையாக பயன்படுத்தி சட்டத் திருத்தத்தின் மூலம் வழக்கறிஞர்களை தங்கள் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர  நீதிபதிகள்  எடுத்த முயற்சி நீண்ட போராட்டத்திற்கு பின்பு முறியடிக்கப்பட்டது.
இன்றும் வழக்கறிஞர் குழுமத்தை பயன்படுத்தி தவறு செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பது என்ற பெயரில் வழக்கறிஞர் சங்கங்களை அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர், உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் வழக்கறிஞர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் நீதிபதிகளுக்கு குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, வழக்கறிஞர்களை தங்கள் கட்டிப்பாட்டிற்குள் வைத்து ரசிப்பதற்க்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கொரோனா. இந்த சந்தர்ப்பத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்து விடுவார்களா என்ன?
நீதிமன்றம் அத்தியாவசியமாக இயங்க வேண்டிய ஒன்று என்பதை நீதிபதிகள் உணர வேண்டுமானால் பொதுமக்கள் ஏனைய அரசு அதிகாரிகளுக்கு எதிராக பேசுவது, போராடுவது போல நீதிமன்றங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு என்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சாமல் வெளிப்படையாக பேசவேண்டும், போராட வேண்டும்.
அரசையும், அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் எதிர்த்து பேசும் போதும், போராடும் போதும் எதிர்த்து பேசுபவர்கள் மீதும், போராடுபவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்படுவதில்லையா? சிறையில் அடைக்கப்படுவதில்லையா?
படிக்க :
13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !
வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC !
இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாமல்தானே தினமும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன?
நீதிமன்றங்கள் மக்களுக்கானது, நீதிபதிகளுக்கானது அல்ல என்பதை !
நீதிபதிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்கள் என்பதை !
லஞ்சம், பாலியல் புகார் உள்ளிட்ட, நீதிபதிகள் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் விசாரணை நடைபெறும் முறை, விசாரணையின் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை!
நீதிமன்றத்தில், வழக்காடிகளை நீதிபதிகள் அடிமைகளாக நடத்தக்கூடாது, ஒருமையில் பேசக்கூடாது என்பதை!
நீதிபதிகள் மன்னர்களுமல்ல.. மக்கள் அடிமைகளுமல்ல என்பதை!
– நீதிபதிகளுக்கு அவ்வப்போது மக்கள் உணர்த்தத் தவறியதன் விளைவு இன்று நீதிமன்றத்தை தங்கள் விருப்பம்போல் அடைத்து வைக்கலாம், முடக்கி வைக்கலாம் என்ற நிலைக்கு வந்தடைந்திருக்கிறார்கள் நீதிபதிகள்!
சுதந்திரமான நீதித்துறை என்பதற்காக மக்களிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்ட நீதிமன்றங்களால் மக்களுக்கு விசுவாசமாக செயல்பட முடிகின்றதா? இது  சர்வாதிகாரம் இல்லையா? இந்த, நீதிமன்ற நடவடிக்கையில் ஜனநாயகத்தின் கூறுகள் கண்ணில் தென்படுகின்றதா?
எனவே உடனடியாக நீதிமன்றத்தை திறக்க போராடுவோம், அதன் வழியாக நீதிமன்ற சர்வாதிகாரத்திற்க்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!

PP Letter head25.01.2022
பத்திரிகைச் செய்தி
க்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் திருவாரூர், வேதாரண்யம் கிளை முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
வேதாரண்யம் கிளை:
25.01.2022 அன்று தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வேதாரண்யம் கிளை மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது.
தேர்தல் அலுவலராக நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தோழர் தங்க. சண்முகசுந்தரம் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக தோழர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளராக தோழர் வெங்கடேசன், பொருளாளராக தோழர் ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை சார்பாக செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஏற்புரையும், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

This slideshow requires JavaScript.

திருவாரூர் கிளை:
25.01.2022 அன்று, தோழர் தங்க.சண்முக சுந்தரம் தலைமையில் திருவாரூர் கிளை மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது.
தேர்தல் அலுவலராக பங்கேற்ற தோழர் சாந்தகுமார் நெறிப்படுத்தலின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக தோழர் தங்க. சண்முகசுந்தரம், இணைச் செயலாளராக தோழர் ஆசாத், பொருளாளராக தோழர் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை சார்பாக செயலாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம் ஏற்புரையும், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்போம்!
♦ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முழக்கமிட்டு, மக்கள் அதிகார கிளைகளை பல கிராமங்களில் கட்டியமைக்கவும், இலட்சகணக்கான மக்களைத் திரட்டவும், உழைக்கும் மக்களின் விடுதலையை சாதிக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.
தோழமையுடன்,

கிளைச் செயலாளர்கள்,
தோழர் தங்க. சண்முகசுந்தரம்,
தோழர் கிருஷ்ணமூர்த்தி,
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

இந்தியக் குடியரசா ? இந்துராஷ்டிரக் குடியரசா ? || கருத்துப்படம்

ந்தியக் குடியரசா ? இந்துராஷ்டிரக் குடியரசா ? என்று சந்தேகம் எழும் அளவிற்கு இந்துத்துவ அடையாளங்களைக் கொண்டு குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்தியுள்ளது ஒன்றிய மோடி அரசு.

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் சளையாமல் போரிட்ட போராளிகளின் அணிவகுப்பு வாகனத்தை புறக்கணித்துவிட்டு, சாமியார்கள் மற்றும் புராணக் கட்டுக்கதைகளை பிரதானப் படுத்தக்கூடிய அலங்கார ஊர்திகளை அனுமதித்துள்ளது காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

கருத்துப்படம்: வேலன்

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும்
வ.உ.சி வாழ்ந்த காலம் 1872 முதல் 1936 வரை; இறக்கும்போது அவர் வயது 64.
இந்தியாவின் இயல்பான, சுயமான வளர்ச்சிக்கான சுதேசிக் கொள்கைக்காக முன்னோடிச் செயல்பாட்டை ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதற்கான அடித்தளத்தை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் கால் ஊன்றாத 1900-களின் தொடக்கத்திலேயே இட்டவர், விதை ஊன்றியவர், அன்றைக்கு யாராலும் கற்பனை செய்தும் இயலாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொருளாதார அடித்தளத்தை அசைத்துக் காட்டியவர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு பொருளாதார தளத்தில் பெரும் சவாலாக விளங்கி அச்சுறுத்தியவர் வ.உ.சி.
வ.உ.சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே, வணிகக் காரணங்களுக்காக அல்ல. அவர் அன்றைய நாளில் புகழ்பெற்ற வழக்கறிஞர், வருவாய்க்கு குறைவில்லை. வருவாயில் பெரும்பகுதியை பிறர்க்கு தானமாக கொடுத்த வள்ளல், எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் அவர்களின் வழக்குகளுக்கு வாதாடிய பெருந்தகை. காசுபணம் அவருக்கு ஒரு பொருட்டாக இருந்தது இல்லை.
வழக்கறிஞர் ஆன அவர், உயர்ந்த அந்தஸ்து பொருந்திய இரண்டாம் நிலை ப்ளீடர் பதவியை துச்சமாக மதித்து வெளியேறினார்.
படிக்க :
ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
1906 அக்டோபர் 4 அன்று கப்பல் வாங்கப்பட்டது, 16 அன்று சுதேசி ஸ்டீமர் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் வயது 34 மட்டுமே!
அவருக்கு முன் சுமார் 20 கப்பல் கம்பெனிகள் இயங்கத்தான் செய்தன. ஆனால் அவை அனைத்தும் வணிக நோக்கில் ஆனவை. அரசியல் சார்பு இல்லாதவை. இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி ஒழித்துக்கட்டியது.
சுதேசி கப்பல் கம்பெனியின் இலட்சியங்கள் : தற்சார்பு, சுயதொழில் வளர்ச்சி, அந்நிய பொருட்களையும் வணிகத்தையும் புறக்கணிப்பது ஆகிய இலக்குகளை அடைவது ஆகியவை மட்டுமே.
1906 அக்டோபர் 4 அன்று  விவேகபானுவில் அவர் எழுதினார் : “நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொண்டதற்கு எதுவாக இருந்ததும், நமது சுதேசத்து பொருட்களை எல்லாம் அந்நிய நாட்டார் கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரங்களை எல்லாம் அந்நிய நாடுகளுக்கு கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், அந்நிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாக கைக்கொண்டு இருந்த கப்பல் தொழிலை நம்மிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது ஒன்றே ஆதலால், நாம் அதி சீக்கிரமாகவும் அத்தியாவசியமாகவும் கைக்கொள்ளதக்கதும் கைக்கொள்ள வேண்டுவதும் ஆன தொழில் கப்பல்கள் நடத்துவது மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததே…”
அன்றைய நிலையில் 2 கப்பல்கள், 2 லாஞ்சுகள், வேலைக்கு மூலதனம் ஆகிய மூலதன செலவு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய். கம்பெனியின் ஒரு பங்கு ரூபாய் 25 வீதம் 40,000 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
எஸ்.எஸ். லாவோ கப்பல் 1907 ஜூன் 11 அன்றும், எஸ்.எஸ். காலியா 1907 மே 16 அன்றும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன.
கப்பல்கள் வந்து சேர்ந்த பின் தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் “சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிவிட்டோம், பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. …அடுத்து பருத்தி வணிகம், அதை நாம் கைப்பற்றுவது மிக எளிது…” என்று தனது அடுத்த திட்டத்தையும் அறிவித்துள்ளார் வ.உ.சி!
பிரிட்டிஷாரின் ஒரே கொள்கை இந்தியாவில் உள்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதும் இலாபத்தை கடல் கடந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் என இருந்தபோது, அதே இலாபத்துக்கு வ.உ.சி.யால் பேராபத்து விளைகின்றது, அவரை அகற்றாமல் தமது காலனியாதிக்க வணிகத்தை ஓரடியும் நகர்த்த முடியாது என்ற மிகப்பெரிய எச்சரிக்கை உணர்வுதான் அவருக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான கொடுமைகள், தடங்கலுக்கும், பின் தொடர்ந்த சிறைக்கொடுமைகளுக்கும் காரணம்.
1908-இல் அவர் பேசினார் : “அயல்நாட்டவரால் நடத்தப்படுகின்ற நிர்வாகம் சுதேசிகளின் பயன்கருதிச் செயல்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நீண்ட காலத்திற்கு அரசாங்கம் ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்தால், இந்நாடு கட்டாயமாகப் பாதிக்கப்படும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றது. அதன் உண்மையான வளங்களை மீட்பதற்கு மூன்று வழிகள் உள்ளன : 1. சுதேசியம் 2. புறக்கணிப்பு 3. தொழிற்சாலை”.
அன்றைய திருநெல்வேலி கலெக்டர் எம்.எம். வின்ச், வ.உ.சி.யின் இப்பேச்சை “பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மானப்பிரச்சினை” என்று பதிவு செய்தார்.
1908 பிப்ரவரி 27 கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. மார்ச் 6 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் முழு வேலைநிறுத்தம் நடந்தது. மக்களிடம் இருந்து திரட்டிய நிதி, தன் சொந்த பணம், மனைவி மீனாட்சியம்மாளின் நகையை அடகு வைத்து கிடைத்த பணம், கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உணவு அளித்தவர் வ.உ.சி.
அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியை மூடிவிடுமாறு வ.உ.சி.க்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
அவரது கம்பெனியின் கூட்டாளிகள் பலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு விலைபோனது, பிரிட்டிஷ் நிர்வாகம் தன் மிருகபல அதிகாரத்தைப் பயன்படுத்தி சுதேசி கப்பல் கம்பெனிக்கு நட்டத்தை விளைவித்தது. கடன், ஊழியர்கள் செய்த ஊழல் ஆகியவை ஒன்றிணைந்து வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தை ஒழித்தன.
கொண்ட கொள்கையில் உறுதியும் நாட்டின் நலன் குறித்தே சிந்தித்தும் வந்த வ.உ.சி., தன்  வாழ்நாளில் 57 மாதங்கள், 22 நாட்கள் கொடுஞ்சிறையில் வாழ்ந்தார். அது கம்பீரம் மிக்க வீர வரலாறு.
40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் வ.உ.சி மட்டுமே. “மிக ஆபத்தான மனிதன்” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் ஆவணங்களில் இவரை குறித்து வைத்தது.
***
இவை யாவும் நடந்த காலம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்துகொண்டு இருந்த காலம் என்பதை புரிந்து கொண்டால்தான் வ.உ.சி.யின் சிந்தனை முதிர்ச்சி, துணிச்சல், முன்னெடுப்பு, போராட்ட குணம் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும். 1915-ம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு திரும்புகின்றார். அதற்கு முன்பாகவே 12.3.1908 முதல் 24.12.1912 வரை 57 மாதங்கள், 22 நாட்கள், அதாவது நான்கே முக்கால் வருடங்கள் பிரிட்டிஷாரின் சிறையில் கற்பனைக்கு எட்டாத கொடுமைகளை அனுபவித்தார். முப்பத்து ஐந்தரை வயதில் சிறைக்கு சென்றவர் நாற்பதேகால் வயதில் விடுதலை ஆகின்றார்.
வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை:
பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் விசாரணைக்கைதியாக
கோயம்புத்தூர் சிறையில் 30 மாதங்கள் : கடுங்காவல் / நாடுகடத்தல் தண்டனைக் கைதியாக 9.7.1908 முதல் 12.12.1910 வரை.
கேரளா கண்ணனூர் சிறையில் 24 மாதங்கள், 22 நாட்கள் கடுங்காவல் / தண்டனைக் கைதியாக. இங்கிருந்துதான் விடுதலை ஆனார்.
தனது 35-வது வயதில் சிறை செல்கின்றார், 40-வது வயதில் வெளியே வருகின்றார்.
(தகவல்கள் உதவி : கப்பலோட்டிய கதை, குருசாமி மயில்வாகனன், நீந்தும் மீன்கள் வெளியீடு)
***
வ.உ.சி அவர்களின் வாழ்க்கையை ஒப்பீடு செய்தால்
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது 1885இல்.
வ உ சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது 1907இல்.
காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். 1915இல்தான் இந்தியாவுக்கு வருகின்றார். 1921இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகின்றார்.
ஜவஹர்லால் நேரு பிறப்பு 1889. 1905-07 காலகட்டத்தில் அவர் இங்கிலாந்தில் படித்துக்கொண்டு இருந்தார். 1912இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக பதிவு செய்கின்றார். 1912இல்தான் முதல்முறையாக பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
ராஜாஜி பிறப்பு 1878. 1906இல் அவர் வயது 28. 1906இல் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றார், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொள்கின்றார்.
வல்லபாய் படேல் : 1911இல் 36 வயது இவருக்கு. லண்டன் சென்று படிக்கின்றார். திரும்பி வந்து அஹமதாபாத்தில் வக்கீல் தொழில்தான் செய்து கொண்டு இருந்தார். ன்ற காந்தியை இவர் முதல் முறையாக சந்தித்தது 1917இல் தான்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்: 1905,6, 7 காலகட்டத்தில் அவர் படித்துக்கொண்டு இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ்: பிறப்பு 1897. 1906இல் படித்துக்கொண்டு இருந்தார்.
காமராஜர் பிறந்தது1903இல்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் (1888-1975): 1906இல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்.
பிற்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆன ஆர் வெங்கட்ராமன் பிறந்ததது 1910இல்.
***
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
கோழைகள், துரோகிகளின் வரலாறு என்ன சொல்கின்றது?
காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்ட வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளான நாதுராம் கோட்சே உள்ளிட்டவர்களின் சித்தாந்த தந்தை தாமோதர் சாவர்க்கர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பின் அங்கிருந்து கொண்டு, “மாட்சிமைதங்கிய பிரிட்டிஷ் மகாராணி தன்னை விடுதலை செய்தால் சகல அரசியல் செயல்பாடுகளில் இருந்தும் தான் விலகி விடுவதாகவும், தன்னைப்போல ஒரு விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு தான் நடந்து கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்” பிரிட்டிஷ் அரசிக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதிக்கொண்டு மண்டியிட்டு கிடந்த கேவலமிகு வரலாறுதான் சாவர்க்கரின் வரலாறு.
1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்திமிக்க வீரர்கள் இரண்டு பேரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்து காட்டிக்கொடுத்த அவமானமிக்க வரலாற்றுக்கு சொந்தமானவர் அடல் பிகாரி வாஜ்பேய்.
ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் கைக்கூலிகளாக, அடிமையாக வாழ்வதே ஆனந்தம் என்று முடிவு செய்த கோழைகளுக்கும், இல்லாத ரயில் நிலையத்தில் டீ ஆற்றிக்கொண்டு இருந்ததாகவும், டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்தில் டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்ததாகவும், இமெயில் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இமெயில் அனுப்பியதாகவும் அள்ளிவிடும் அண்டப்புளுகர்களுக்கும், தன்னிகரில்லா விடுதலை போரராட்ட வீரரும் சுதேசிப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தன் சொத்துக்களை இழந்து கப்பல் கம்பெனியை நிறுவியவரும் வேறு எவரும் சந்தித்திடாத வெஞ்சிறைக் கொடுமைகளை அனுபவித்த தியாகியும் ஆன வ.உ.சி.யின், அவரைப் போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?
உதவிய நூல்:  கப்பலோட்டிய கதை (குருசாமி மயில்வாகனன்)
***

முகநூலில் : மு இக்பால் அகமது
disclaimer

மக்கள் அதிகாரம் கோவை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!

PP Letter head24.01.2022
முதலாவது கோவை மண்டல மாநாடு தோழர் ராஜன் தலைமையில்
வெற்றிகரமாக நடைபெற்றது.
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது கோவை மண்டல மாநாடு 24.01.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கோவை  மண்டலத்தில் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி  மண்டல குழுவிற்கான தேர்தல், தேர்தல் அலுவலர்களான தோழர்கள் முருகானந்தம், கின்சன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.

கோவை மண்டலத்திற்கு ஐந்து பேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கோவை மண்டலச் செயலாளராக தோழர் சங்கர், மண்டல இணை செயலாளர் தோழர் குமார், மண்டலப் பொருளாராக தோழர் மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கிளைக் தேர்தல் நடைபெற்றது. தோழர் ராஜன் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உடுமலை பகுதி செயலாளராக தோழர் குமார் தேர்வு செய்யப்பட்டார். மேற்கண்ட இரண்டு கிளைகளிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
♦ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,

தோழர் சங்கர்
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202.

மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

PP Letter headபத்திரிகை செய்தி
25.01.2022
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக இனிதே நடந்தேறியது. 25.01.2022 காலை 10 மணிக்கு மக்கள் அதிகாரம் மண்டல மாநாடு பென்னாகரத்தில் தோழர் ராமலிங்கம் தலைமையில் மண்டல மாநாடு நடைப்பெற்றது.
தருமபுரி மண்டல தேர்தலில் தோழர் கோபிநாத் மண்டல செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் ராஜா மண்டல இணைச் செயலாளராகவும். தோழர் செல்வராசு மண்டல பொருளாளராகவும், தோழர் பகத், தோழர் சரவணன் ஆகியோர் மண்டலக் குழு உறுப்பினர்களாகவும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டலத் தேர்தலுக்கு முன், பென்னாகரம் வட்டார தேர்தல் நடைப்பெற்றது. பென்னாகரம் வட்டார செயலாளராக தோழர் அருண், இணைச் செயலாளர் தோழர் சிவா, பொருளாளராக தோழர் சத்தியநாதன் மற்றும் வட்டாரக் குழு தோழர்களாக தோழர் வெங்கடேசன், தோழர் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அஞ்செட்டி வட்டாரக் குழு தேர்தலும் கடந்த 19.01.2022-ம் தேதி நடைப்பெற்றது. வட்டார செயலாளராக தோழர் ராமு, இணைச் செயலாளர் தோழர் சரவணன், பொருளாளர் தோழர் சென்னப்பன், செ. குழு தோழர்களாக தோழர் துரை, தோழர் ரமேஷ் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மண்டல மாநாட்டிற்கு முன்னதாக 10-க்கும் மேற்பட்ட கிளைகளில் மாநாடு நடத்தப்பட்டு, கிளை நிர்வாகிகள் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு மண்டல மாநாடு இறுதியாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் அனைத்துக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை சமரசமில்லாமல் மோதி வீழ்த்துவோம் என நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மாநாட்டு வாழ்த்துரையாக தோழர் சங்கர் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்பு குழு, அவர்களும், தோழர் ரவிசந்திரன் மக்கள் அதிகாரம் அவர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்திப் பேசினர். இறுதியாக தோழர் செல்வராசு அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தோழமையுடன்,

தோழர் கோபிநாத்
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தருமபுரி மண்டலம்
9790138614

பிபின் ராவத்தை விமர்சித்த வழக்கு : முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்தது உயர்நீதிமன்றம் !

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து, “பாசிஸ்டுகளின் கைக்கூலி சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்! எதிரிகள் நம்மை கண்டு பயப்படுவது போல மக்களும் நம்மை கண்டு பயப்பட வேண்டும்! பிபின் ராவத் பொன் மொழிகள் என்று தலைப்பிட்டு மீம் வடிவிலான படத்தை முக நூலில் பதிவிட்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் சிவராஜ பூபதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர், நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இரண்டு வழக்கறிஞர்களின் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு, 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இரு சமூகப் பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டுவது, பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதுதான் இந்தப் பிரிவுகளின் உள்ளடக்கம்.
படிக்க :
பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஷரத்து 19(1)(a) உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504, 505(2) குறிப்பிடும் கூறுகளுக்குள் வழக்குப் பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்து பொருந்தாது என்றும் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவராஜ பூபதியால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
06-01-2022 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பதிவுக்கு வருத்தம் தெரிவிக்க நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு வழக்கு 21-01-2022ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
“இராணுவத்தை கண்டு மக்கள் பயப்பட வேண்டும்”, காஷ்மீரில் இராணுவ ஜீப்பின் முன்னர் இளைஞரை கட்டி வைத்து வீதிகளில் அழைத்து சென்ற இராணுவத்தின் அடாவடியை ஆதரித்து பேசியது, காஷ்மீர் மக்கள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பேசியது, (அப்பொழுதுதான் ராணுவத்தால் திருப்பி சுட முடியும் என்ற கருத்தில்) , CAA சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பேசியது என்று மக்களுக்கு எதிராவே பேசிவந்துள்ளார் பிபின் ராவத்.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வந்த ஒருவர் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பேசி வந்த இராணுவ அதிகாரி. அவர் உயிர் இழந்துவிட்டதாலேயே, அவர் உயிரோடு இருந்த காலங்களில் அவர் தெரிவித்த மக்கள் விரோத கருத்துக்கள் புனிதத்தன்மை பெற்றுவிடுமா?
அவர் உயிரிழந்ததும் அவரை புனிதராக சித்தரித்து பிரச்சாரம் செய்யப்படுவதை,
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்துவரும் காஷ்மீர் மக்ககளின் நிலையிலிருந்தும், CAA சட்டத்தால், அகதிகளாக மாற்றப்படுவோம் என்ற அடிப்படையில் போராடும் மக்களின் நிலையிருந்தும் சிந்திக்கும்
நாட்டுப்பற்றாளர்களால் எப்படி அமைதியாக இருந்து ரசிக்க முடியும்? என்பதையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை மனுதாரருக்கு உறுதி செய்யும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த பதிவில் மன்னிப்பு கேட்கும் அளவு தவறான கருத்து இல்லை என்பதாலும் மன்னிப்பு கேட்க இயலாது என்ற நிலைப்பாடு, மனுதாரருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரபு ராஜதுரை அவர்களால் நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மாரிதாசின் மீது பதியப்பட்ட வழக்கை இரத்து செய்த உத்தரவு இந்த வழக்கிற்கும் அப்படியே பொருந்தும் என்றும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்கள், உயிரிழந்த ஒருவரை பற்றி விமர்சித்திருப்பது அடிப்படை நாகரிகமற்ற செயல் என்றும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் இதை பாதுகாக்காது, ஆனால் வழக்கு பதியப்பட்ட சட்டப்பிரிவுகள் குறிப்பிடும் வரையறைக்குள் இந்த பதிவு வராது என்று தெரிவித்தார்.
மாரிதாஸ் வழக்கை விசாரிக்கும் போது “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா” என்ற மாரிதாஸின் கருத்தையோ மாரிதாசையோ இவ்வாறு விமர்சித்து இதே நீதிபதி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததாக எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. மேலும் மாரிதாசின் பதிவு அரசியலமைப்பு சட்டம் ஷரத்து19(1)(a) குறிப்பிட்டுள்ள வரையறைக்கு உட்பட்டது என்று மாரிதாஸ் வழக்கில் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புகார் கொடுத்த பாஜக மாவட்ட தலைவர் சார்பாக முன்நிலையான வழக்கறிஞர் தனது வாதத்தில், சிவராஜபூபதி போல் பலர் வழக்கறிஞர் என்பதை கேடயமாக பயன்படுத்தி ‘பாரத் நேசனுக்கு’ எதிராக செயல்படுகிறார்கள். இவரைப் பற்றி விசாரித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துகிறேன் என்று நீதிபதியிடம் கூறினார். பாஜகவினரை பொறுத்தவரை நாட்டுப்பற்று என்பது இந்து மத சனாதன தர்மத்தின் மீதான பற்று மட்டுமேயொழிய இந்து மக்கள் மீதான பற்று கூடக் கிடையாது.
வ.உ.சி. உருவம் பதிந்த வாகனத்தை குடியரசு தின அணி வகுப்பிலிருந்து நீக்கியவர்கள் நமது தேசப்பற்றை பற்றி விசாரித்து கண்டறியப் போகிறார்களாம்.
படிக்க :
சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்
ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
நாட்டு விடுதலைக்காக போராடிய வ.உ.சி.யும் வழக்கறிஞர் என்பதும், வெள்ளையனுக்கு போட்டியாக அவர்களது தொழிலை அழிக்க நினைத்து தனது சுதேசி கப்பல் கம்பெனிக்காக தன் சொத்து முழுவதையும் இழந்தது தான் தேசப்பற்று என்பது – இந்திய அரசுக்கு சொந்தமான உள்நாட்டு நிறுவனங்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு எழுதிக்கொடுக்கும் மோடியின் பக்தர்களுக்கு எப்படி தெரியும்!, இரண்டில் எது தேசப்பற்று என்று?
இறுதியாக இந்த முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு பதியப்பட்ட செய்தி அறிந்தது முதல் மண்டியிடாமல் வழக்கு இரத்தானது வரை தோழர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், சக வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வழக்கை எதிர்கொள்ள துணை நின்றது, மேன்மேலும் களத்தில் பணியாற்ற நமக்கு மிகுந்த உற்சாகமூட்டுவதாகவும், காவி-கார்பரேட் மயமான அரசையும், பாசிச பாஜகவையும் களத்தில் எதிர் கொள்வதில் நாங்கள் தனித்து இல்லை என்பதை உணர்த்துவதற்கான மற்றுமொரு தருணமாகவும், சரியான அரசியல் திசையில், அமைப்பாக செயல்படுவதாலேயே இது சாத்தியமாயிற்று என்பதை உணர்த்தும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.