தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா
அன்றைக்கு சோசலிசம் பற்றி கற்பான வாதத்திற்கு மாற்றாக சோசலிச சமூகத்திற்கு மாற வேண்டுமானால் அதற்குரிய அறிவியல் பூர்வமான வழிமுறைகளை மார்க்சிய ஆசான்கள் நிலைநாட்டினார்கள். அதைப்போல இன்றைக்கு மா.லெ-விற்கு எதிரான அனைத்து வகையான நடைமுறைகளை களைந்து பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட அமைப்பாக அறிவித்திருக்கும் மக்கள் அதிகாரம் சரியான வழியில் பயணிப்பதற்கான திசையை காட்டுவதாக இருக்கின்றது.
கலைப்புவாதிகளின் ஊளைச் சத்தம் நம் செவிகளில் மங்கிய ஒலியில் கேட்கிறது. நாங்கள் தான் பெருபான்மை, நாங்கள் தான் பெரும்பான்மை என சொல்லி கொள்ளட்டும். அந்த உரிமையை பறிக்க நமக்கு அதிகாரமில்லை.
மகத்தான நவம்பர் 7, 1917 சோசலிசப் புரட்சிக்கு சில மாதங்கள் வரை சோவியத்தின் மத்தியில் போல்ஷ்விக்களும் சிறுபான்மை தான். ஆனால் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்கு தான் புரட்சியை சாதித்தார்கள்.
அப்படிப்பட்ட போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!
விருதையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் முதல் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா ஆற்றிய உரையின் காணொலியை பதிவிடுகிறோம்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
“ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவது உறுதி” என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரியணை ஏறியவுடன், ‘எதார்தத்தை’ புரிந்துகொண்டு “முடிந்த அளவிற்கு முயற்சிப்போம், சட்டப் போராட்டத்தைத் தொடருவோம்” என்று மாற்றிப் பேசியது.
எப்படியும் தி.மு.க. நீட் தேர்வை இரத்துசெய்துவிடும் என்று தொடக்கத்தில், பலர் நம்பினார்கள். ஆனால் நீட் தேர்வும் சட்டப் போராட்டமும் ஒருசேர தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது முடிந்தபாடில்லை. அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. சட்டப் போராட்டத்தை மூர்க்கமாக நடத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் மட்டுமே ஒருக்காலமும் நீட்டை இரத்து செய்ய முடியாது. இதை நாம் சொல்லவில்லை சட்டப் போராட்ட அனுபவமே போதிக்கிறது!
000
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று மோடி அரசு அறிவித்தது. “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும்” என்று அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். நீட்டை இரத்துசெய்வோம் எனச் சொல்லிவிட்டு இப்படிப் பேசுகிறாரே என விமர்சனம் எழுந்தபோது, “நாங்கள் என்ன 24 மணிநேரத்தில் நீட்டை இரத்துசெய்வோம் என்றா வாக்கு கொடுத்தோம்” என்று பேசினார்.
படிக்க :
♦ நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
♦ நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இது ஒருபுறமிருக்க, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பித்தது. நீட் தேர்வும் ஏ.கே.ராஜன் அறிக்கை வெளியாவதும் ஒரே காலத்தில் நடக்கிறது.
முந்தைய அ.தி.மு.க. அரசைப் போல சட்ட மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நீட் தேர்வை முறியடித்துவிட முடியாது என்ற அனுபவத்திலிருந்துதான் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆய்வுக் குழுவை அமைத்தது தி.மு.க. அரசு.
பின்னர், நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பே தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார். நீட்டுக்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு முகம்கொடுக்கும் வகையில், அடுத்தநாளே சட்டமன்றத்தில் பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு தனிச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 1-ம் தேதி (2021) நீட் தேர்வின் மூலம் சமூகநீதி பறிபோகின்றது, எனவே நீட்டை இரத்துசெய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மேற்குவங்கம், கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை இணைத்து கடிதம் எழுதினார் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மாதக்கணக்கில் நிலுவையில் வைத்துக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிர்ப்புகள் எழத் தொடங்கியது.
4 மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்றுவரை மசோதா குடியரசுத் தலைவரின் அலுவலகத்தை சென்று சேரவில்லை தமிழக சட்டப்பேரவைக்கும் திருப்பி அனுப்பப்படவில்லை. கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஒருமுறையும் நவம்பர் 27-ம் தேதி மற்றொருமுறையும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநரை நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றும் அசையவில்லை.
கடந்த ஆட்சியில் நடந்ததைப் போலவே தேர்வு நடந்த அன்றைய நாளும் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து மாணவர்களின் தற்‘கொலை’ செய்திகளை நிரப்பியது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது போராட்டக்களமாக மாறும் தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எந்த பெரிய கள எதிர்ப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது.
எடப்பாடி ஆட்சிக் காலத்தில், நீட்டுக்கு எதிராகப் போராடிய பெரும்பாலான ஜனநாயக சக்திகள் தி.மு.க.வின் சட்டப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள்.
அ.தி.மு.க.வின் “சடங்குத்தனமான சட்டப் போராட்டத்தை” ஒப்பிடும்போது தி.மு.க. நடத்துகின்ற “உணர்வுப்பூர்வமான சட்டப் போராட்டம்” நீட் தேர்வை இரத்துசெய்யப் போதுமானது என்ற மயக்கம் நம்மவர்களை பீடித்திருந்தது. இதனால், அநீதியான நீட் தேர்வு இந்தமுறையும் நம் மாணவர்களின் குருதியைக் குடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
000
நீட் தேர்வு ‘இனிதே’ முடிந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றனர்.
டிசம்பர் 28-ம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, ராஷ்டிரபதி பவனிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவரின் இல்லத்தில் காத்திருந்தனர். கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்தார் அமித்ஷா. ஆனால் அவர்களை அலைக்கழித்த அமித்ஷா, கிட்டத்தட்ட 10 நாட்கள் காத்திருந்தும் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை; சந்திக்க முடியாதது குறித்து தெரிவிக்கப்படவும் இல்லை.
இதுகுறித்து டி.ஆர்.பாலு பேசும்போது, “அமித்ஷாவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” என்றார். “மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது ஜனநாயக விரோதம்” என்றார் மு.க.ஸ்டாலின்.
நிலைமை இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் போதுதான், ஜனவரி 05-ம் தேதி நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் துவக்க நாளில், ஆர்.என்.ரவியை தங்களது கொள்கைப் பிரகடன அறிக்கையை “ஆளுநர் உரையாக” வாசிக்கவைத்தது தி.மு.க. அதில் “நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என அரசு உறுதியாக உள்ளது” என ஆர்.என்.ரவி முழங்கினார். தி.மு.க. ஆதரவு ஊடகங்களும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் “சம்பிரதாய” ஆளுநர் உரையை, ‘தமிழ்நாட்டு ஆளுநரை தி.மு.க. பணியச் செய்துவிட்டது போல’ மிகைப்படுத்திக் காட்டி, “பார்த்தீர்களா, தி.மு.க.வின் பராக்கிரமத்தை” என சிலாகித்தார்கள்.
அதே சட்டமன்றக் கூட்டத்தொடரில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் எனவும் ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் தெரிவித்து ஆளுநரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள் வி.சி.க.வினர்.
அதேநாளில், மூன்றாவது முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக 7 நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் காத்திருந்தனர். அன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டி.ஆர்.பாலு, “அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்றார்.
அடுத்ததாக, ஆளுநருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனவரி 08-ம் தேதி மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது தி.மு.க. அதில் அமித்ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பதையும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநரையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட்டை இரத்து செய்வது குறித்து பேசும்போது, “சட்டப்போராட்டம் தொடரும்” என்று சொல்லி தீர்மானத்தை முடித்துக் கொண்டார்கள்.
இங்கே நாம் ஒரு விசயத்தைப் பரிசீலிக்க வேண்டும். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வுக்குழு அறிக்கை; சட்டமசோதா; அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்; ஆளுநர், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தல் என பல வழிகளில் மூர்க்கமான சட்ட வழி போராட்டங்கள் நடத்தியாயிற்று. இனியும் சட்டப் போராட்டத் தொடர்கதையா?..

“சட்டப்போராட்ட வழிமுறைகள் குறித்து வல்லுநர்களை ஆலோசித்து அடுத்தகட்ட முடிவெடுப்போம்” என்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக்கூட மதிக்காத பாசிஸ்டுகளிடம்போய் சட்டப்போராட்டம் நடத்துவதன் மூலம் நம்மால் எதை சாதித்துவிட முடியும். இதுவரை 13 மாணவர்களை பலிவாங்கியிருக்கிறது இந்த சட்டப்போராட்டப் பாதை. இன்னும் சட்டப் போராட்டப் பாதைக்கு எத்தனை பேரை பலி கொடுக்கப்போகிறோம்? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? அனிதா இறந்தபோது துடித்துப் போர்க்கோலம் பூண்ட தமிழகம், இப்போது எங்கே?
சட்டவழியில் தி.மு.க. எடுக்கும் முயற்சிகளுக்கு அமித்ஷாவும், பாசிஸ்டு படையணியின் உளவாளி ஆர்.என்.ரவியும் முட்டுக்கட்டை போடுவதும் அவமதிப்பதும், தி.மு.க. என்ற ஒரு கட்சிக்கான அவமானம் அல்ல. தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டின் இறையாண்மையை இழிவுபடுத்துவதாகும். இனியும் சட்டப் போராட்டப் பாதையை மட்டுமே தொடருவோம் என்பதற்கு, இந்த இழிவுகளை மேலும் சுமப்போம் என்பதே பொருள்.
தற்போது நீட் விசயத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, த.வா.க. போன்ற கட்சிகளின் அழுத்தம், இன்றளவும் கருத்தியல்ரீதியாக தமிழக மக்கள் நீட்டை வெறுப்பது, தொடர்ச்சியாக தேர்வுகளின்போது மாணவர் தற்கொலைகள் நடைபெறுவது ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த சட்டப்போராட்ட முயற்சிகளைக்கூட தி.மு.க. எடுத்திருக்கிறது.
படிக்க :
♦ நீட் மரணங்கள் : தமிழ்நாடு அரசின் சட்டம் தீர்வைத் தருமா ?
♦ நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!
ஆனால் இந்த நிலைகூட இப்படியே தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. திமுக-வைப் பொறுத்தவரையில் தன்னுடைய ஆட்சியை பிரச்சினை இல்லாமல் ஓட்டுவதற்கு உட்பட்டதுதான் அனைத்தும்.
நீட்டைப் போலவே, “புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்” என ஆரம்பத்தில் முழங்கியது தி.மு.க. பின்னர் “அதில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்வோம்” என தாளம் மாறிப்பேசினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “எட்டுவழிச் சாலையை நிராகரிப்போம்” என்று பேசினார்கள், “நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை” என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோபித்துக் கொண்டவுடன் “வாருங்கள் ஒத்துழைக்கிறோம்” என வரிந்துகட்டிக் கொண்டு பதில் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு என்ற கிராமத்தில், மக்களை விரட்டியடித்துவிட்டு, சிப்காட்டின் மூலம் ‘வளர்ச்சியை’க் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகள் சட்டப்போராட்டப் பாதையில் தி.மு.க.வை நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதை கைவிட்டுவிட்டு களப்போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, டெல்லிச் சலோ பாதையில் போராட்டங்கள் முன்னேற வேண்டும். தமிழ்நாட்டிற்கே உரிய சிறப்பு அதுதான்!

துலிபா
ஆன்லைன் தேர்வு கேட்டு போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமற்றதா?
கொரோனா தொற்று – லாக்டவுன் காரணமாக 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரினர். இவற்றுக்கு தீர்வாக அரசு ஆன்லைன் மூலமாக வகுப்புகள், தேர்வுகள் நடத்த அனுமதி அளித்தது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் இந்த அறிவிப்பை தங்களின் கட்டணக் கொள்ளைக்கான வாய்ப்பாக பயன்படுத்தின அல்லது அத்தனியார் நிறுவனங்களின் நலனில் இருந்து அரசு இந்த அறிவிப்பை விடுத்தது என்றுகூட சொல்லலாம்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்ல செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வினாத்தாளை ஆன்லைனில் அனுப்பி, மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுத அனுமதித்தன. மாணவர்களும் மகிழ்ச்சியாக ஆன்லைனில் தேர்வுகளை எழுதினர்.
2021 லாக்டவுனிற்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. ஆகவே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்தன. ஓரளவுக்கு கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. அரசு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாகத்தான் நடக்கும் (ஆஃப்லைனில்) என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.
படிக்க :
♦ தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
♦ NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, சென்னை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் அரசின் அறிவிப்புக்கு எதிராக போராடத் தொடங்கினர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தியது போல், செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில்தான் நடத்த வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.
பல்வேறு கல்வியாளர்களும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி, தேர்வு எழுதினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும், மாணவர்கள் படிக்காமல், புத்தகங்களை பார்த்தோ, அருகில் உட்கார்ந்துக் கொண்டு விவாதித்தோ எழுதுகின்றனர். ஆகவே நேரிடையாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனினும் மாணவர் போராட்டாங்களின் விளைவு, அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்த முறையும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அறிவிப்பு கொடுத்தது.
மாணவர்கள் மகிழ்ச்சியாக வரவேற்று தேர்வுக்கு தயாராகின்றனர். பல மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை வைத்து பார்த்து எழுதுவது, ஒன்றாக உட்கார்ந்து விவாதித்து எழுதுவது, வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொண்டு பதில் எழுதுவது என்றெல்லாம் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
கல்வியாளர்கள் சொல்வதுபோல் இத்தகைய ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு முறை மாணவர்களின் கற்றல் திறனை குறைத்துவிடும், இந்நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரியளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒன்றிரண்டு தலைமுறையே கல்வியறிவற்றவர்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
அனைவருக்குமான கல்வி மறுப்பும், ஆளும் வர்க்கத்தின் நோக்கமும்:
இதற்கு பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் நலன், கல்வி என்பதை சரக்காக மாற்றி கொள்ளையடிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தில் அனைவருக்கும் கல்வியை கொடுப்பது, சமூகத்தை முன்னேற்ற வேண்டுமென்பதற்கோ, ஏழை, உழைக்கும் வர்க்கங்களை சார்ந்த குழந்தைகளுக்கும் கல்வியறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
ஆளும் வர்க்கங்களின் உற்பத்திக்கு, பல்துறை அறிவு பெற்றவர்கள் தேவைப்படுவதற்கு ஏற்ப, அவர்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு, குறைந்த கூலிக் கொடுப்பதற்கு, சமூகத்தில் இருந்து அவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்வதற்கு கல்வி, பயிற்சி பெற்ற வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் தேவைப்படுகிறது.
அத்தகைய சூழல் எப்பொழுதும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மிகவும் அவசியமாகும். ஆனால் அவற்றின் தேவையைவிட, மிதமிஞ்சிய வகையில் சமூகத்தில் வேலையில்லா ரிசர்வ் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இவர்கள் இந்த உற்பத்தி முறைக்கு தேவையற்றவர்களாக, சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களாக, பெரும் சுமையாக ஆளும் வர்க்கங்கள் கருதுகின்றன.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் உள்ள வாக்கியத்தை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். “ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் அளவு மீறிவிட்டன, தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாத படி அளவுமீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன, முதலாளித்துவ சொத்துடைமை நிலவுவதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவ சமூக உறவுகள் குறுகலாகியிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும்…”
ஆகவே அனைவருக்கும் கல்வி என்ற அவசியம் கூட இன்றைய ஆளும் வர்க்கங்களுக்கு தேவையில்லாததாக மாறி வருகிறது. இவற்றின் விளைவு இலவச கல்வி, அனைவருக்கும் கல்வி போன்றவைக் கூட தேவையற்றதாகின்றன. ரிசர்வ் பட்டாளம் கூட மிதமிஞ்சி அவர்கள் வாழத்தகுதி இல்லாதவர்களாக்கப்பட்டு வருகிறார்கள். முறையான கல்வி இல்லை, வேலையின்மை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்மை, மனசோர்வு, தனிமை உணர்வு, சாராயம், கஞ்சா போதை (கஞ்சா மிக வேகமாக பரவி வருகின்றது.), செல்பேசியில் மூழ்குவது என்கிற நிலைக்கு குறிப்பிட்ட பிரிவு மாணவ – இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இவர்களை ‘வேண்டாத சதைப் பிண்டமாக, வெட்டியெறிய வேண்டியவர்களாக’ ஆளும் வர்க்கம் கருதுகிறது.
ஆன்லைன் தேர்வும், மாணவர்களின் மனநிலையும்:
ஆன்லைன் தேர்வுக்காக மாணவர்களின் போராட்டம், ஆளும் வர்க்கத்தின் நலனில் இருந்து இன்றைய சமூக சூழலில் இளைஞர்கள், மாணவர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம். இத்தகைய சூழலில் மாணவர்களின் மனநிலையை பரிசீலிப்போம்.
மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகங்களை பார்த்து எழுத வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர், திட்டமிடுகின்றனர். யாரும் கண்காணிக்கவில்லை என்றாலும், சுய ஒழுக்கத்துடன் படித்து தேர்வை எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. அதைவிட முக்கியமான விசயம், மாணவர்களிடம் எந்த ஓரு குற்றவுணர்வோ, தாம் செய்வது தவறு என்ற உணர்வோ கடுகளவுக்கூட இல்லை.
இது இன்று மட்டும் நடக்கவில்லை, ‘பிட்’ அடிப்பது, வினாத்தாளை மாற்றிக்கொண்டு எழுதுவது, புத்தகத்தை ரகசியமாக வைத்துக்கொண்டு எழுதுவது, காப்பி அடிப்பது போன்றவை நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அப்பொழுதுக்கூட குற்றவுணர்வு, தவறானவைதான் என்கிற எண்ணங்கள் இருந்தன. அத்தகைய எந்த குற்றவுணர்வுமின்றி இன்றோ மகிழ்ச்சியாக, உற்சாகமாக திட்டமிட்டு புத்தகங்களை பார்த்து ஆன்லைனில் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்களிடம் சுய ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டதா, இத்தகைய மாணவர்கள் நாளை சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? சமூகம் சீரழிந்து விடாத? என்றெல்லாம் கேள்விகளும், ஆதகங்களும் வெளிப்படாமல் இல்லை. இத்தகைய கேள்விகளுக்கு மாணவர்கள் சார்பாக நாம் பதிலளிப்போம். ஒன்றும் குடி முழுகிப்போய்விடாது என்று.
இந்த சமூகம் மாணவர்களுக்கு எதை கற்றுத்தந்ததோ அதையே திருப்பி அளிக்கின்றனரே தவிர, வேறோன்றுமில்லை. இங்கு குற்றவாளி இந்த சமூகமும், இத்தகைய நிலைக்கு காரணமான ஆளும் வர்க்கமும்தான். மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல.
வேலையின்மை, நம்பிக்கையற்ற எதிர்காலம், போட்டி, பொறாமை, சீரழிவு, வறுமை இவற்றை தோற்றுவித்தது ஆளும் முதலாளித்துவ வர்க்கம். அதையே இச்சமூகத்திற்கு எதிர்வினையாற்றுகின்றனர்.
சுயநலமாக வாழ வேண்டும், தன்னுடைய நலனுக்காக எதையும் செய்யலாம், வேலை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற தமக்கு முன்னிற்பவரின் காலையும் வாரலாம், மற்றவர்களை சுரண்டலாம், அடக்கலாம், ஒடுக்கலாம் போன்றவற்றையே இந்த முதலாளித்துவ சமூகம் கற்றுத்தருகிறது.
போட்டி தேர்வுகளில் 1000 இடங்களுக்கு, 10 லட்சம் பேர் போட்டி. இதில் தான் 1000-த்தில் ஒரு இடத்தை பெற்றுவிட வேண்டும், வேலை கிடைக்காமல் போகிறவர்களைப் பற்றி எந்த கவலையும் தேவையில்லை. இதைதானே இளைஞர்களுக்கு இச்சமூகம் கற்றுத்தருகிறது.
இவைதான் இந்தச் சமூகத்தின் பண்பாடாக, ஒழுக்கமாக, விழுமியமாக இருக்கும்போது, மாணவர்கள், இளைஞர்கள் மட்டும் தேர்வுகளை சுய ஒழுக்கத்துடன் எழுத வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். அப்படியென்றால் இவற்றை ஆதரிக்கிறீர்களா என்று விதண்டாவாதமாக எதிர்வாதம் புரியக்கூடாது.
படிக்க :
♦ பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !
♦ காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
இச்சமூகத்திலும் குறைந்தப்பட்சம் நியாய உணர்வோடு வாழ்பவர்களில் சாதாரண உழைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு மற்றவர்களை சுரண்டுவதற்கு வாய்ப்பு இல்லையென்பதால் அல்ல, இவர்களின் யாதார்த்தமான வாழ்க்கை இதர ஒடுக்கும் மக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவதால்.
கல்விமுறையும், சமூகமும் மாணவர்களுக்கு “சமூக நலன், மக்கள் நலன், தேச நலன்” போன்றவற்றை என்று பிரதானப்படுத்துகிறதோ, அத்தகைய பண்பாட்டில் வளர்ந்து வரும் சமூகத்தில் மாணவர்களை யாரும் வெளியிலிருந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
அத்தகைய பண்பாடு, சுரண்டலை மையமாகக் கொண்டுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் கொஞ்சம் கூட இவை சாத்தியமில்லை. ஆகவே பாட்டாளி வர்க்கம் தன்னை ஆளும் வர்க்கமாக அமைத்துக்கொள்ளும் சமூகத்தில், சோசலிச உற்பத்தி முறையில் சமூக, தேசிய நலனை பிரதானப் படுத்தும் பண்பாடு தழைத்தோங்கும்.
ஆகவே, இத்தகைய சீரழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது ஆளும் வர்க்கங்களே தவிர, மாணவர்களோ, இளைஞர்களோ அல்ல! இன்றைய சீரழிந்த சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டங்களின் ஊடாகத்தான் சமூக உணர்வையே மாணவர்கள் பெறுவார்கள். அத்தகைய பணியை முன்னெடுப்போம்.

கந்தசாமி
கும்பல் மனோபாவமே சங்கிகளின் பலம் || சம்சுதீன் ஹீரா
அந்தக் காணொளியை ஷாட் பை ஷாட்டாக மனதுக்குள் ஓட்டிப்பாருங்கள்.
கல்லூரிக்குள் அந்த மாணவி நுழையும்போதே அவளுக்கு உளவியல் நெருக்கடி கொடுத்து அச்சுறுத்த முடிவெடுத்து விடுகிறது மாணவர்கள் போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கிக் கும்பல்.
உள்ளே வரும்போதே இந்தக்கும்பலைக் கண்டுகொண்ட மாணவி இவர்களின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு எதற்கும் தயாராகவே வருகிறாள்.
அவள் வண்டியை நிறுத்தும்போதே கும்பல் பெருந்தொண்டையில் கத்த ஆரம்பிக்கிறது.
வண்டியை நிறுத்தி இறங்கிவரும் அவள் நடையில் துளி தயக்கமில்லை, கண்களில் துளி அச்சமில்லை. அவர்களைக் கடந்து செல்லும் மாணவியை நோக்கி கும்பலாகக் கோசமிடுகிறார்கள். மிரட்டும் தொனியில் கூச்சலிடுகிறார்கள்.
படிக்க :
♦ ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
♦ உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
உங்கள் கும்பலால், உங்கள் கூச்சலால் என்னை ஒரு துளிகூட அச்சப்படுத்த முடியாது என்பதைப்போல நிதானமாக அந்தக்கும்பலை எதிர்கொண்டு நின்று எதிர்முழக்கமிடுகிறாள்.
பயந்து விடுவாள் அல்லது ஓடுங்கிப்போய்விடுவாள் எனக் கருதிய கும்பல் அவளின் ஆக்ரோஷமான எதிர்வினையைக் கண்டு தடுமாறுகிறது. அவள் எதைக்குறித்தும் கவலையின்றி போய்க்கொண்டே இருந்தாள்.
அவளது தைரியம் ஏற்படுத்திய சேதத்தை சரிக்கட்ட கும்பலில் முன்னால் நின்றிருந்த ஒருவன் காவித்துணியோடு அவளை நோக்கி ஓடுகிறான். அவனைத்தொடர்ந்து இன்னும் சிலர் ஓடுகிறார்கள். விரட்டினால் பயந்து ஓடுவாள் என்றுதான் அவன் கணக்குப்போட்டிருப்பான்.
பின்னால் இந்தக்கும்பல் விரட்டி வருகிறது என்ற பதட்டமோ படபடப்போ துளியுமின்றி அவள் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறாள். முதலில் ஓடிவந்தவன் அவளை மிக அருகில் பார்க்கிறான். துளியும் அச்சமில்லாத அந்த முகத்தைப் பார்த்து அஞ்சுகிறான். மற்றவர்கள் வந்து சேரும் வரை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கிறான். கும்பல் சேர்ந்த பிறகுதான் அவனுக்கு தைரியம் வருகிறது. அதற்குப்பின்புதான் கோசம் போடுகிறான்.
பதிலுக்கு முழங்கிக்கொண்டே அவள் முன்னேறிச் செல்கிறாள். ஒரு கேமரா ஓடிவந்து அவளை ஓவரேக் செய்து முகத்தை நோக்கி நிற்கிறது. ‘புர்கா என் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது’ என்கிற பொருளில் நிதானமாக அதே நேரம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தாள். என்ன செய்வதென்று புரியாத கும்பல் கூச்சலிட்டுக்கொண்டு அங்கேயே நின்றுபோகிறது. அவள் கல்லூரிக்குள் நுழைகிறாள்.
சங்கிக் கும்பலின் வீரத்தின் சூத்திரமே இதுதான். இந்த கும்பல் மனோபாவம் மட்டுமே அவர்களின் பலம். இதுவரை சங்கிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்ட எல்லா கலவரங்களையும் பரிசீலித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் பெரும் கும்பலாக இருக்கும். அல்லது அரசின்/ காவல்துறையின் பரிபூரண ஆசி இருக்கும்.
குஜராத்தில் ஐம்பது குடும்பங்கள் வாழும் மொஹல்லாவை நாசமாக்க ஐந்தாயிரம் பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. முன்னூறு குடும்பங்கள் வாழும் மொஹல்லாவுக்குள் பத்தாயிரம் சங்கிகள் நுழைந்தார்கள் என்பதெல்லாம் ஆவணமாக இருக்கிறது.
கோவை நவம்பர் கலவரத்தில் போலீசின் துணை மட்டும் இல்லையென்றால் சங்கிகள் உதை சாப்பிட்டுவிட்டு ஓடியிருப்பார்கள். எப்போதுமே சாதாரண இந்து மக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனியர்களைப்போல, பெரும் கும்பலுக்குள் ஒளிந்துகொள்வது, காவல்துறைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது இதுவே அவர்களின் சூத்திரம்.
படிக்க :
♦ கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
♦ தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
இன்னும் வேறெங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றா கேட்கிறீர்கள்?
‘இந்தச்சூழலில் அந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கோசம் போடலாமா?’ என்று உங்கள் நட்புப் பட்டியலில் ஒளிந்திருக்கும் சில சைலண்ட் சங்கிகள் லேசாகப் பேசிக்கொண்டிருக்கும் பாருங்கள்.
அந்த இடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பது தாக்குதல் கோஷம், அல்லாஹு அக்பர் என்பது தற்காப்புக் கோஷம். இருபது முப்பதுபேர் கொண்ட கும்பல் தாக்குதல் நிலையெடுத்து முழங்கிய கோசத்தையும் ஒற்றைப் பெண்ணாய் அதை எதிர்கொண்டு தற்காப்பு நிலையெடுத்த மாணவியின் கோசத்தையும் சமப்படுத்தி வெளிப்படும் மெல்லிய லிபரல் குரல்கள் அந்த கும்பலை விட ஆபத்தானது.
ஒரு வெறிக்கும்பலைத் தன்னந்தனியாய் எதிர்கொள்ளும் ஒரு இஸ்லாமிய மாணவியிடமிருந்து அவளுக்கு நம்பிக்கையூட்டுகிற, தைரியமூட்டுகிற அந்த ஒற்றை முழக்கத்தைப் பறித்துவிட்டு வேறெதை நாம் மாற்றாகக் கொடுக்கப்போகிறோம்
முகநூலில் : Samus Deen Heera
மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்
ஊடகச் செய்தி
08-02-2022
தமிழ்நாடு அரசே! மதக் கலவரத்தைத் தூண்ட முனைந்துவரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்!
தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றிடு!!
ஆர்ப்பாட்டம்
வணக்கம். அரியலூர் மாணவியின் தற்கொலையைத் தொடர்ந்து மத வன்முறையைத் தூண்ட முனைந்து வரும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யவும் தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தி பிப்ரவரி 8 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 4:00 மணி அளவில் வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியா, தமிழக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்தன.
இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் சதிஸ்குமார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொதுச்செயலாளர் மொய்தீன் அப்துல் காதர், மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைவர் வெற்றிவேல் செழியன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புச் செயலாளர் மகிழன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன் ஆகியோர் உரையாற்றினர்.
இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விசயத்தில் பாசக, வி.எச்.பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் மத வன்முறையைத் தூண்டி வருகின்றன.
படிக்க :
♦ தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
♦ அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
குறிப்பாக, அந்த மாணவியிடம் இருந்து பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 45 விநாடி காணொளி ஒன்றை சனவரி 20 அன்று மதியம் 3:47 மணிக்கு பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். பாசக தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தபோதும் இது போன்ற ஒரு முக்கிய காணொளியைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் அரசியல் பரப்புரைக்கான பொருளாக சமூக ஊடகங்களில் வெளியிட்டது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
”மதமாற்றம் தமிழகத்திலே வேகமாகப் பரவுகின்ற விசச் செடி” என்று பாசக தலைவர் அண்ணாமலை செய்தியறிக்கை வெளியிட்டார். கிறித்தவ மிசனரிகளுக்கு எதிராக மாணவியின் தற்கொலையைத் திருப்பிவிடும் முயற்சியில் பாசக தலைவர் தொடங்கி அதன் முக்கியத் தலைவர்களான எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், மனோஜ், குஷ்பூ உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, சனவரி 23 ஆம் நாள் கோவை மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சேலத்திலும் ஒரு கிறித்தவ பள்ளி மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்றுள்ளனர்.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் கிறித்தவ வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது காவிக் கும்பல் அங்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் ஊடகங்களில் தெரிய வந்த நிகழ்வுகள். இன்னும் வெளியே அதிகம் அறியப்படாமல் கிறித்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல் ஆகியவை நடந்து வருகின்றது.
இந்நிலையில் சனவரி 27 அன்று மாணவியிடம் இருந்து பெறப்பட்ட முழுமையான காணொளியை தமிழக காவல்துறை வெளியிட்டது. அதில் அவர் தன்னை யாரும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்று தெளிவாகச் சொல்வது அனைத்துச் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
மொத்தத்தில், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் பயன்படுத்தி மதச்சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறித்தவர்களுக்கு எதிரான வெறுப்புப் பரப்புரையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பாக பாசகவினர் இதைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.
மாணவியின் அடையாளம், முகவரி, பெயர், அகவை வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் பெயர் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது சிறார் நீதிச்சட்டம், 2015 இன் பிரிவு 74(1) இன் கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை அறியாமலும் அறிய முற்படாமலும் அதைப் பொறுப்புடன் காவல் துறையிடம் ஒப்படைக்காமலும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு கலவர அரசியலுக்கு முனைந்தது பொறுப்பற்ற, உள்நோக்கம் நிறைந்த செயலாகும். பாசக தலைவர் அண்ணாமலை மீது பிரிவு 153, 505 (1) (b), பிரிவு (505) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் சமூக நீதி, பல்வேறு சமயத்தவரிடம் இருக்கும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் நோக்கில் பொய்ச் செய்தியைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயலும் பாசக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாசக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்துள்ள அமைப்புகள் இணைந்து மாநில காவல் தலைமை இயக்குநரிடம் கடந்த 29-1-2022 அன்று புகார் மனுவைக் கொடுத்தனர். மேலும் திருச்சி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளரிடம் இதை ஒத்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்தே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
காவிப் பாசிஸ்டுகள் இந்தியாவின் தலைநகரில் இருந்தபடி இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவழிப்புக்கு அறைகூவல் விடுகின்றனர். மும்பை மாதிரி, குசராத் மாதிரி, முசாபர் நகர் மாதிரி, தில்லி மாதிரி என வகைவகையாக மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை சங் பரிவார அமைப்புகள் நிகழ்த்தி வந்துள்ளன. இப்போது கர்நாடகாவில் பரிசோதித்து பார்த்த , கிறித்தவர்களுக்கு எதிரான மங்களூர் மாதிரி என்ற ஒன்றை தமிழ்நாட்டில் செய்து பார்க்க துடிக்கின்றனர். அதன் பகுதியாக எல்லா முனையில் இருந்தும் மத மாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
படிக்க :
♦ மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
♦ மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்
வெறுப்பு பேச்சுகள் சிறுபான்மையினருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறைக்கு களத்தை தயார்ப்படுத்துகின்றன. மக்களின் மனங்களில் வன்முறை வெறியாட்டத்திற்கான ஏற்பை ஏற்படுத்துகின்றன. ஆனால, அவை பெரும்பாலும் கண்காணிப்புக்கும் கட்டுபடுத்தலுக்கும் உள்ளாவதில்லை. மேலும், அரசு இயந்திரம் குறிப்பாக நீதித்துறை, காவல் துறையிலும் பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை ஆழ வேரூன்றி உள்ளது. இந்த மெய்நிலையும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் செய்து விடுகிறது.
காவிப் பாசிஸ்டுகளின் கையில் ஒன்றிய அரசின் அதிகாரம் இருக்கும் நிலையில், கடந்த ஏழரை ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு சிறிதும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைக் தடுக்கவும் பாதிக்கப்படு்வோருக்கு நீதி மற்றும் இழப்பீட்டை உறுதி செய்யவும் வழிவகுக்கும் சட்ட முன்வடிவு ஒன்று (( Prevention of Communal and Targetted Violence (Access to Justice and Reparations) Bil 2011 ) கடந்த 2011 இல் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவே இல்லை.
இன்றைய அவசர, அபாயகரமான நிலையைக் கருத்தில் கொண்டு அத்தகைய சட்டம் ஒன்றை மாநில அளவில் இயற்ற வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் மத வன்முறை தடுப்புச் சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக கோருகிறோம்.
இப்படிக்கு,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி.
தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…
இதுநாள் வரை, ‘இந்தியக் குடியரசில்’ இருப்பதாக காட்டிக்கொண்ட பெயரளவிலான மதச் சார்பின்மை, மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற கோட்பாடுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டுவிட்டது.
இனிமேல் இந்த அரசை ‘இந்தியக் குடியரசு’ என்று அழைக்கத் தேவையில்லை, இந்து ராஷ்டிரக் குடியரசு என்றே அழைக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மொத்த அரசுக் கட்டமைப்பையும் காவிமயமாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இதற்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள ‘குடியரசு’ தின நிகழ்ச்சிகளே சாட்சியம்!
வழக்கமாக டெல்லியில் நடைபெறும் ‘குடியரசு’ தின அணிவகுப்பில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களும் பங்குபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரம், வரலாற்றை பிரதிபளிக்கச் செய்வதே இதன் நோக்கம்.
படிக்க :
♦ புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்
♦ புதிய ஜனநாயகம் வெளியீடுகள் : கொரோனா || காவி கார்ப்பரேட் பாசிசம்
மோடி ஆட்சியின் கீழ், இந்த ஆண்டு நடைபெற்ற 73-வது குடியரசு தின அணிவகுப்பிலோ மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களே அனுமதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பெரும்பாலனவை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுடையது.
தென்னிந்தியாவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நுழைவாயிலாக உள்ள கர்நாடகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்த்தியை, மத்திய அரசின் தேர்வர் குழு கீழ்த்தரமான பல காரணங்களைச் சொல்லி புறக்கணித்தது.
முதன்மையாக, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை ஊர்தியின் முகப்பிலே வைத்த காரணத்தால்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. “வ.உ.சி. ஒரு வணிகர்தானே. அவரை எப்படி விடுதலைப் போராளியாக கருதுவது?” என்று தேர்வர் குழு கருத்து தெரிவித்ததாம். ஆனால் பாரதி சிலையை ஏற்றுக் கொண்டார்களாம். பாரதி வெள்ளையனை எதிர்த்து ஆயுதமேந்திய கதை நமக்குத்தான் தெரியவில்லை.
மற்றபடி, “சுதேசியமே, சுயராஜ்ஜியத்தின் பாதை” என்று போராடிய வ.உ.சி.யை, நாட்டை அந்நியனுக்கு கூட்டிக் கொடுக்கும் மறுகாலனியாக்க எட்டப்பர்கள் வெறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
இதே போல கேரளாவில், பார்ப்பன மதத்தை நிறுவனமயப்படுத்திய ஆதி சங்கரனை சேர்க்காததால், சாதி எதிர்ப்பு சீர்த்திருத்தவாதி நாராயண குரு இடம்பெற்ற ஊர்த்தியை தேர்வர் குழு ஏற்கவில்லை.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் மட்டுல்ல. தங்களது காவி-கார்ப்பரேட் சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காரணத்தால்தான் இவை முதன்மையாக நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமாக இருந்தாலும் “கோதான் நியாய் யோஜனா” என்ற பெயரில் கோமாதாவின் (பசு) பயன்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சதீஷ்கர் ஊர்திக்கு அனுமதியளிக்கப்பட்டது, அதற்குச் சான்று.
உத்தரப் பிரதேச அரசின் ஊர்தியில் காசி விசுவநாதர் கோயிலும் கர்நாடக அரசின் ஊர்தியில் அனுமனும் இடம்பெற்றிருந்தது, ‘குடியரசு’ தின அணிவகுப்பை கோயில் திருவிழாவைப் போல காட்சிப்படுத்தியது. தங்களது சித்தாந்தத்திற்கு உகந்தவைகளை காட்சிப்படுத்தியதும் தொந்தரவானதை நிராகரித்ததும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் அராஜகச் செயல் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.
இது பல்தேசிய இனங்களின் தனித்த பண்பாடு, வரலாற்று அடையாளங்களை துடைத்தொழித்து இந்தியாவை “ஒரே நாடு, ஒரே பண்பாடு” என்ற அடிப்படையில், இந்து ராஷ்டிரமாக கட்டியமைக்க முயலுவதன் வெளிப்பாடு. தேசிய இனங்களுக்கு செலுத்தபட்ட அவமரியாதை!
புதிய ஜனநாயகம்
நடுநிலைவாதம் – லிபரல்வாதம் என்பது என்ன? || ராஜசங்கீதன்
அறிவுஜீவித்தனம் என நம்பிக்கொள்ளும் முரட்டு முட்டாள்தனம்தான் லிபரல்வாதம். சமீபத்திய ஹிஜாப் பிரச்சினையில் ஒரு லிபரல் அறிவுஜீவி (வார்த்தை விரயம்) ‘ஹிஜாப்பும் தவறுதான் ஆனால்’ என ஒரு பதிவு எழுதி இருக்கிறார். இவர் சார்ந்த கூட்டத்துக்குக் குட்டையை குழப்பும் வேலை தவிர வேறு எதுவும் இருந்ததில்லை.
‘தலித் தலைவர்கள் தொடங்கி இலங்கை விவகாரம் வரை இவர்களின் இணையக் குழப்பங்கள் கழகத்துக்குதான் கெட்ட பெயர் பெற்றுத் தருகிறது என முதல்வர் ஸ்டாலினே கடிந்து கொண்டிருப்பதால் இஸ்லாமியர் பக்கம் வந்து குதறி வைத்திருக்கின்றனர்.
இந்த ‘I love you but as a friend’ ரக நட்ட நடுத்தனம் சரியா?
‘யூனிபார்ம்கள் போடச் சொல்வதே எல்லாரும் ஒன்று போல் இருக்கத்தான். அப்படி இருக்க ஹிஜாப் என்ன நியாயம்’ என்கிற கேள்வி சரியாகவே தோன்றக் கூடிய கேள்வி. ஆனால் சரியான கேள்வி அல்ல.
படிக்க :
♦ பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !
♦ மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
கடவுள் நம்பிக்கையைப் பெரியார் எதிர்த்தார். அதற்குக் காரணமாக மதம் இருந்தது. பார்ப்பனியம் இருந்தது. பெண்ணடிமைத்தனம் இருந்தது. ஆணாதிக்கம் இருந்தது. ஆனால் அவர்தான் ஆலய நுழைவுக்கும் போராடினார்.
இன்றும் பாஜக, ‘நாத்திகர்களுக்கு ஏன் கருவறை பற்றி கவலை’ எனக் கூவும். இதுவும் பார்ப்பதற்கு சரியாகவே தோன்றக் கூடிய கேள்விதான். ஆனால் சரியானது அல்ல.
இத்தகைய பைனரிக் கேள்விகளை பார்ப்பன ஆதிக்க வெறிக் கூட்டம்தான் செய்து வந்தது. ‘இஸ்லாமியர்களுக்கு நாடு உண்டு, இந்துக்களுக்கு வேண்டாமா?’, ‘சிறுபான்மையினருக்கு அதிகம் அக்கறை காட்டுவது மதச்சார்பின்மை அல்ல’ என்பதெல்லாம் பைனரி தன்மையுடன் உருவாக்கப்பட்ட, பார்த்ததும் சரியெனத் தோன்ற வைக்கக் கூடிய கருத்தாடல்கள். இவற்றைப் போல்தான் ‘ஹிஜாப்புக்கு ஆதரவானவர்கள் இல்லை. ஆனால்’ என்கிற பத்திகளும்.
சீருடை முறைக்கு வரலாற்றில் எந்த அரசும் காரணமாக இருக்கவில்லை. 1552-ம் ஆண்டில் பிரிட்டனில் க்ரைஸ்ட் ஹாஸ்பிட்டல் முதலிய தொண்டு நிறுவனப் பள்ளிகள்தாம் சீருடை வழக்கத்தை அறிமுகப்படுத்தின. பெரும்பாலும் அவை ஏழைகள், அநாதைகள் முதலிய குழந்தைகளையே பள்ளியில் சேர்த்தன. எனவே அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடக் கூடாது என்பதற்கும் தொண்டுக்கான அடையாளமாகவும்தான் சீருடை உருவானது.
சீருடையின் முக்கியத்துவத்துக்காக போராடி உயிரை விடத் தயாராக இருக்கும் சங்கிகள், அந்தச் சீருடை முறைக்கே கிறிஸ்துவத் தொண்டு நிறுவனம்தான் தொடக்கம் எனத் தெரிந்தால் யார் தொண்டையைக் கடிப்பார்களோ?
அடையாளமாக சீருடை மாறியதன் விளைவாகத்தான் கல்வித்தளங்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அது வந்தது. காலவோட்டத்தில் மேலாண்மை பொறுப்புகளுக்கு சீருடை விலக்கு அளிக்கப்பட்டு, பிறகு அது பிற நிலைகளுக்கும் தொடர்ந்து, சீருடை என்கிற வழக்கம் இன்று நிறுவனங்களில் இல்லாமல் போய்விட்டது. எனினும் formals-தான் அணிய வேண்டும் என்பது போன்ற வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
அடையாளமாகத் தொடங்கிய சீருடை வழக்கம் அடுத்து ஒரு முக்கியமான இடத்தை அடைந்தது. Conformity! ஒரு இடத்தில் இருக்கும் விதிகளுக்கு அடிபணிந்து போகும் தன்மை. அதாவது விதி என்பதாலேயே அது எத்தகையதாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம்! இந்த இடத்தில்தான் ஆதிக்கம்-அடக்குமுறை என்பதற்கான ஆரம்பப் புள்ளி உருவாக்கப்படுகிறது. அரசின் ஆதிக்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக கேள்வி எழுப்பாமல் அடங்கிப் போகும் தன்மை குடும்பத்தைத் தாண்டி உருவாக்கப்படுவது முதலில் பள்ளிகளில்தான்.
எனவேதான் பள்ளி மாணவர்கள் சீருடையை ‘Tuck In’ செய்யாமல் செல்வதையும் தலையைக் கலைத்துக் கொள்வதையும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான புரட்சி நடவடிக்கையாக மேற்கொள்ளும் உளநிலை மாணவர்களிடம் உருவாகிறது. எத்தகைய ஒடுக்குமுறை, ஆதிக்கம், நிர்பந்தம் இருந்தாலும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கை இருந்தே தீரும்.
‘அனைவரும் ஒன்று என்பதற்கே சீருடை. பிறகு ஏன் ஹிஜாப்’ என்கின்றனர் சங்கிகள். ‘சரிதானே’ என லிபரல்கள் ஆமோதிக்கின்றனர். லிபரல்கள் பாவம், அறிவில்லாதவர்கள். சங்கிகளோ அறிவை நிராகரிப்பவர்கள். மேற்கண்ட அறிவுஜீவித்தனத்துக்கு இரையாகக் கூடிய வெகுமக்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்.
சாதிக் கயிறு பழக்கம் எங்கிருக்கிறது, கல்வித்தளத்தில்தானே? திருநீறு, குங்குமம் வைக்காத ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் உண்டா? பள்ளிப் பாடங்களில் எத்தனை இந்து மதக் கடவுளர் பாடல்களும் கலாசாரமும் இருக்கின்றன? திருவாசகம், கம்ப ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன் கதைகள் என எத்தனை எத்தனை? சிறுபான்மையினருக்கு ஒப்புக்கென ஒரு ஒரு சீறாப்புராணம், ஒரு இயேசு காவியம் இருக்கும்.
படிக்க :
♦ உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
♦ இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!
கடவுள் நம்பிக்கை மறுப்பு இருக்கலாம். ஆனால் எல்லா கடவுள் நம்பிக்கை மறுப்பும் ஒன்றல்ல. ஆதிக்கம் செலுத்தும் கடவுள் நம்பிக்கைக்கு, பிற கடவுளர் நம்பிக்கை எதிர்ப்பு ஆதரவாகவே நிற்கும்
எனவே எதுவும் பொதுவாக இருக்க முடியாது. நடுநிலையாகவும் யோசிக்க முடியாது. குறிப்பாக உரிமை என வரும்போது!
சமூகமே சமமற்று இருக்கும்போது நீதியில் சமத்துவம் எப்படி இருக்க முடியும்?
கல்வியே ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்போது கல்வித்தளத்தில் எப்படி நடுநிலை இருக்க முடியும்?
வழிபாட்டுத் தலமே தகர்க்கப்பட்ட நாட்டில் வழிபாட்டு உரிமை மட்டும் எப்படி நேர்கோட்டில் இருக்க முடியும்?
பார்ப்பனியம் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலத்தில் பொதுத்தன்மை யாருக்கு ஆதரவாக சென்று முடியும்? பாசிசத்துக்கான பல்லக்கு தூக்கிகள்தான் மேலே சொன்ன பைனரித்தன்மையும் நடுநிலையும்.
எச்சரிக்கை.. எச்சரிக்கை!
முகநூலில் : ராஜசங்கீதன்
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்
புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்மாதம் புதிதாக சந்தா கொடுத்து வாசகர்களான அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இந்த மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள் :
♣ பத்திரிகை செய்தி : மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
♣ தலையங்கம் : இந்தியக் குடியரசில் இருந்து இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி
♣ மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க-வும் காங்கிரசும் ஓரணி !
♣ ‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம் !
♣ “ட்ரேட்ஸ்” : காவி பாசிசத்தின் இணையப் படை !
♣ கர்நாடகா, திரிபுரா, அசாம்: பற்றிப் படந்து வரும் ‘இந்து ராஷ்டிர பேரபாயம்’! பாகம் 2
♣ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
♣ நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது !
♣ கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
♣ ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும் ?
♣ பத்திரிகை செய்தி : பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை : தமிழ்நாட்டில் மதக்கலவர செய்ய முயலும் பாஜக குண்டர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய் ! பிஜேபி- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை தடை செய் !
♣ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
♣ சங்கபரிவாரத்தின் அடுத்தகட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்!
♣ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள் போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம் !!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
உடையில் மத அடையாளம் மட்டுமேதான் உள்ளதா? சாதி அடையாளம் இல்லையா? அடிப்படையில் உடை என்பது தனி மனிதர்களின் விருப்பம் சார்ந்தது. ஆண் ஆனாலும் பெண் ஆனாலும், அதைத் தாண்டி பேச வேண்டும் எனில், வாழும் பிரதேசம், தட்பவெப்பம், அதாவது குளிர் பிரதேசம், வெப்பப் பிரதேசம், இரண்டுக்கும் பொதுவான நிலையில் உள்ள பிரதேசங்கள் என இயற்கை சார்ந்து மனிதர்கள் தேர்வு செய்யும் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டு விசயங்களில் அடங்குபவைதான் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள்.
இவை அடிப்படைத் தேவைகள் என்பதை தாண்டி காலப்போக்கில் மத அடையாளம் சார்ந்த விஷயங்களாகவும் மாறின. இந்தியாவில் இந்த அடிப்படை தேவைகள் சாதி அடையாளத்துடன் கூடிய பயன்பாட்டு விசயங்களாகவும் மாறி இருப்பதை மறுக்க முடியாது. இன்ன உணவு, இன்ன உடை, இன்ன இருப்பிடம் இன்ன மதத்துக்கு உரியது என்பதையும் தாண்டி இன்ன சாதிக்கு உரியது என்று அடையாள முத்திரை இடப்பட்டிருப்பது உண்மைதானே?
இதை விரிவாக பேச முடியும். முலைவரியில் இருந்து பேசலாம். அது வெறும் உடை சார்ந்த விசயமா? மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி மதத்துடன் மட்டுமே அடையாளம் காணப்படுவது இல்லையே? அதற்குள் மத அடையாளத்தையும் தாண்டி சாதி அடையாளம் இல்லையா? மனிதர்கள் வசிக்கும் பகுதி எல்லாமே மனித வாழிடங்கள் என்ற பொதுவான வரையறைக்குள் வந்துவிடும் எனில் அக்ரஹராமும் சேரியும் மசூதி தெருவும் ஒன்றுதானா? வாழிடம் மட்டுமே எனில் சமத்துவபுரத்துக்கு அவசியம் வந்தது ஏன்? சாதி ஒழிப்பே நோக்கம் எனில் சமத்துவ புரங்களில் கணக்கெடுத்தால் உண்மை என்னவென்று தெரியும்.
படிக்க :
♦ மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
♦ வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
ஹிஜாப்?
ஹிஜாப் அணிகின்ற இசுலாமிய பெண்கள் இருக்கின்றார்கள், அணியாத இசுலாமிய பெண்களும் இருக்கின்றார்கள். இசுலாமிய குடும்பங்களில் இருந்து தொடங்குகிறது இந்த ஹிஜாப் அணிவதா வேண்டாமா என்பது.
உண்மையில் இது இஸ்லாமியப் பெண்களின் தனிப்பட்ட உரிமை மட்டுமேதானா? இஸ்லாமிய ஆண்களின் தலையீடோ கட்டாயமோ இதில் இல்லையா என்ற கேள்வி உள்ளது. விளக்கி சொல்லலாமா? ஒரு இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிவது அவளது தனிப்பட்ட உரிமை அல்லது சவுகர்யம் சார்ந்தது மட்டுமேதானா? இதில் பெண்ணின் தந்தை அல்லது தாய், திருமணம் ஆன பின் கணவன் ஆகியோரின் தலையீடு இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
மத நம்பிக்கை உள்ள கணவன் மனைவியரிடையே கூட சரியான புரிதல் இருக்கும்பட்சத்தில் ஹிஜாப் அணிவது பெண்ணின் விருப்பத்திற்கு விட்டுவிடும் கணவர்களை என்னால் காட்ட முடியும். அணிவதும் அணியாமல் இருப்பதும் அவள் விருப்பம், அவள் சவுகர்யம் சார்ந்த தனிப்பட்ட விசயம் என்று அதில் தலையிடாமல் இருக்கும் கணவர்கள் உள்ளார்கள்.
அதிகம் பேசப்படாத உண்மை என்னவென்றால், வெயில் கொளுத்தும் ஊர்களில், குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் காற்றுப்புகாத புர்கா, ஹிஜாப் அணிவது பெண்ணுக்கு எத்தனை சவுகர்ய குறைச்சல் அல்லது அறிவார்ந்த செயலா என்பதுதான்.
இது ஒரு குறிப்பிட்ட மதத்தை அல்லது மத கலாச்சார எல்லையையும் தாண்டிய, பொதுவாக பெண்களின் மனநிலை அல்லது உரிமை சார்ந்த விடயம் எனில் உடையின் வடிவத்தையும் எந்த மாதிரி உடையை எங்கே அணிந்து கொள்வது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மதங்களையும் சாதிகளையும் தாண்டி பொதுவான தளத்தில் பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு பொருள்தான்.
சேலை என்பது பொதுவான உடை எனில் மடிசார் என்பது சாதியை அடையாளப்படுத்தும் உடை இல்லையா? ஹிஜாப் மதம் சார்ந்தது. கிறித்துவ மத அடையாளங்களுடன் கூடிய உடை இல்லையா? நீ இதை அணியாதே என்று யாருக்கு யார் உத்தரவு போட முடியும்?
உடை என்பதை பொது வெளியில் அணிகின்ற ஒரு கண்ணியமான ஆடை என்ற குறைந்தபட்ச புரிதலுடன்தான் என்னால் வரையறுக்க முடியும். இந்த குறைந்தபட்ச வரையறைக்குள்ளும் கூட பொருந்துகின்ற மத அடையாளங்களுடன் அல்லது எந்த ஒரு மத அடையாளமும் இல்லாமலும் இருக்கின்ற ஆடைகளை அணிந்துகொண்டுதான் இந்திய பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொதுவெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றோம் என்பதையும் அதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் வழங்கி இருக்கின்றது என்பதையும் வலுவாக சொல்ல வேண்டியுள்ளது.
மதசார்புள்ள நாடுகளிலும் கூட அங்கே வாழ்கின்ற மத சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் உடையை தேர்வு செய்யும் உரிமை வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது எனில் மதச்சார்பற்ற இந்திய சமூகத்தில் எந்த ஒரு மதத்தினரும் தமக்கான உடையை தான் சார்ந்துள்ள மத அடையாளத்துடன் தேர்வு செய்யும் உரிமை மட்டுமல்ல, எந்த அடையாளமும் இல்லாமலே தேர்வு செய்யும் உரிமையும் வேண்டும் என்பதே நியாயம்.
படிக்க :
♦ குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
♦ டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!
இப்போது கர்நாடகத்தில் நடப்பது இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரம் அல்லது இஸ்லாமிய மதத்தில் உள்ள நம்பிக்கைகளை ஆக்கப்பூர்வமான கேள்விக்கு அல்லது விவாதத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை அல்ல. இது இந்திய வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நடத்திவரும் மதவெறி அரசியலின் பகுதி.
காலங்காலமாக இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்தே வந்துள்ளார்கள், இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது எனில், இப்போது கிளப்பிவிடப் பட்டுள்ள ஹிஜாப் விசயத்தை இஸ்லாமிய பெண்களின் உரிமை சார்ந்த விசயமாக பார்ப்பது அறிவுக்கு உகந்தது அல்ல, அப்படியான அணுகுமுறை இந்துத்துவா சக்திகளுக்கே உதவும். ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் கூட, பிரச்சினை கிளப்பிவிடப் பட்டுள்ள இந்த இரண்டொரு நாட்களில் பிற சமூக மாணவர்கள் இதுவரை இல்லாத வழக்கமாக திடீரென காவித்துண்டு அணிந்து வந்தது அவரவர் விருப்பத்தின் பேரிலா அல்லது இந்துத்துவா வலதுசாரி இயக்கங்களின் தூண்டுதலின் பேரிலா என்ற கேள்வியை எழுப்பினால் உண்மையும் பின்னணியும் புரியும்.
நான் முதலில் குறிப்பிட்டது போல, உணவு உடை இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள், இந்திய சமூகத்தில் மத சாதி அடையாளங்களுடன் உள்ளன என்பதிலும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதிலும் எனக்கு ஐயமில்லை. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயம் அல்ல.

முகநூல் : மு இக்பால் அகமது
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பகம் அரசியல் ரீதியாக தொடர்ந்து முக்கியமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கை, எல்லா இடங்களிலுமே காணாமல் போன நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செழியனிடமிருந்த ஒரு பிரதியைப் பெற்று, அதனைப் பதிப்பித்தார் செந்தில்நாதன். தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அந்தப் பதிப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இப்போது மீண்டும் ஒரு முக்கியமான பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது ஆழி. இந்தியாவில் மாநில சுயாட்சி குறித்தும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் உள்ள உறவுகள் குறித்தும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் நிலவும் நிலைமையை மேம்படுத்துதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது பி.வி. ராஜமன்னார் குழு. அந்தக் குழு அளித்த பரிந்துரைகள், அது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதையொட்டி நடந்த விவாதங்கள் இந்தப் புத்தகத்தில் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1969ல் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தில்லிக்கு சென்ற மு. கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “மாநில சுயாட்சி குறித்து அறிந்து விரிவான அறிக்கையை வழங்கக்கூடிய அளவில் ஒரு குழுவை அமைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
♦ நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
இதற்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி. ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தி, பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினரிடம் கேள்வித் தாளை அனுப்பி பதிலைப் பெற்று தனது அறிக்கையை தொகுத்தது. இந்த அறிக்கை 1971 மே 27ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இந்தப் பரிந்துரைகள் செழியன், முரசொலி மாறன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த அறிக்கையில் சாத்தியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இது தொடர்பான தீர்மானம் 1974 ஏப்ரலில் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டது.
இதற்குப் பிறகு, முதலமைச்சர் மு. கருணாநிதி நீண்ட உரையை ஆற்றினார். இதற்குப் பிறகு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அவ்வப்போது குறுக்கிட்டு, முதலமைச்சர் பதிலளித்தார். இவையனைத்தும் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்திற்கு ஒரு அணிந்துரையை கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அந்த அணிந்துரையில், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மாநில அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து ஒரு விரிவான பட்டியலைத் தந்திருக்கிறார். இது தொடர்பாக தமிழில் வெளியான புத்தகங்களின் பட்டியலையும் தந்திருக்கிறார். அந்த வகையில் மிக முக்கியமான கட்டுரை அது.
இதற்கான அறிமுகவுரையை ஆழி செந்தில்நாதன் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு விரிவான நூலின் சாரத்தை மிகக் கச்சிதமாகத் தொகுத்து அந்த அறிமுகவுரையில் தந்திருக்கிறார் செந்தில்நாதன்.
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இதுபோன்ற தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பல ஆணையங்களின் பரிந்துரைகள் புத்தகமாகக் கிடைக்கும்போது, அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். அரசியல் விவாதங்களில் ஆர்வமுடையோர், பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
1974 : மாநில சுயாட்சி
வெளியீடு: ஆழி பதிப்பகம், 5, கலைஞர் கருணாநிதி சாலை,
காவேரி ரங்கன் நகர், சாலி கிராமம், சென்னை – 93.
விலை: ரூ. 1000/-
நூல் வாங்க : 97150 89690
முகநூலில் அறிமுகம் : K.Muralidharan
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
03.02.2022
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின்,
பாசிச மோடி அரசின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
பத்திரிகை செய்தி
ஆட்டுக்கு தாடியும் மாநிலத்திற்கு ஆளுநரும் தேவையில்லாத ஒன்று என்றார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட்டுக்கு எதிராக தமிழகமே ஓரணியில் திரள்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி, கிருஷ்ணசாமி போன்ற எதிரிகள் மற்றும் துரோகிகளை தவிர வேறு யாரும் வெளிப்படையாக நீட்டுக்கு ஆதரவாக பேச முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் போராடி வந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
படிக்க :
♦ ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
♦ ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
அதன் மீது நீட் தேர்வு, மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு முடியும் வரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஆளுநர் ரவி, தற்பொழுது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்ற ஒரு கருத்தை கூறி சட்ட மசோதாவை அனுப்பியுள்ளார்.
மக்களால், மக்களே தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஆட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களை ஆளுநர் மூலம் இணை ஆட்சி நடத்துவது தான் பாசிச மோடி அரசின் நோக்கம். அதையே இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி மாநில அரசுகளை செயல்படாமல் செய்தும் வருகின்றனர்.
நீட் தேர்வினால் தற்கொலை செய்து இறந்துபோனவர்கள் பலர், தங்கள் மருத்துவ கனவை கைவிட்டோர் ஏராளம். இப்படி மாணவர்களின் மருத்துவக் கனவை சூறையாடிய நீட்டுக்கு ஆதரவாக தான் ஒன்றிய அரசும் ஆளுநரும் செயல்படுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும் ஒன்றை, மாநில சட்டமன்றம் எதிர்க்கும் ஒன்றை ஆளுநரால் திணிக்க முடியும் என்றால் இதற்குப் பெயர்தான் மானங்கெட்ட மக்களாட்சியா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் உரிமையையும் மறுக்கும் ஒரு நபருக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்காக கொடுக்க வேண்டும்?
முன்னாள் போலீஸ் அதிகாரியான ரவி, ஆளுநராக இருந்து தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக காவல் கொட்டடியில் அடைக்கப் பார்க்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தமிழகத்தில் அலைஅலையாய் எழ வேண்டும். அந்த நீட் எதிர்ப்பு அலையில் ஆளுநர் ரவி மட்டுமல்ல, பாசிச மோடி அரசின் கொட்டமும் ஒடுக்கப்பட வேண்டும்.
தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.
கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய வரலாறு || குறுந்தொடர் பாகம்-2
கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 2
நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமயமாக்குதல்
பார்ப்பனரல்லாதோரை ‘இந்து’ வளையத்திற்குள் கொண்டுவருவதற்காக நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனமயமாக்குவது என்ற உத்தியைக் கையாண்டது ஆர்.எஸ்.எஸ்.
தமிழகத்தில், கிராமப்புற காவல் தெய்வமான முனியப்பனை முனீஸ்வரனாக்கியது, மழை தெய்வமான மாரியம்மனை சக்தியின் வடிவமாக்கியது, குறிஞ்சி நில கடவுளான முருகனை ஷண்முகனாக்கி பார்ப்பனமயமாக்கியது போன்று கர்நாடக மக்களின் நாட்டார் தெய்வங்களையும் பார்ப்பனமயாக்கியது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல்.
கர்நாடகாவில், நாட்டார் தெய்வங்களின் வரலாறு வாய்வழிக் கதைகளாக ஆண்டுக்கொருமுறை நடைபெறும் திருவிழாவின் போது சொல்லப்படும். இத்திருவிழாவின் போது கோழிகள், விலங்குகள் பலியிடப்படுவது வழக்கமாக இருந்தது. திருவிழா நேரம் மட்டுமின்றி நாட்டார் தெய்வங்களின் வரலாற்றை வயல்களில் வேலை செய்யும் போதும் பெண்கள் பாடுவர்.
படிக்க :
♦ மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
♦ தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
1920-களில் கர்நாடக நிலவுடைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் வேலை தேடி பெரும்பகுதி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் 1974-ல் கொண்டுவரப்பட்ட நிலவுடைமைச் சீர்த்திருத்தச் சட்டங்களாலும் பெரும் பண்ணைகள் படிப்படியாக மறைந்து சிறு நிலவுடைமையாளர்கள் அதிகம் தோன்றினார்கள். அவர்களிடம் விவசாயம் செய்வதற்கு போதிய பண வசதி இல்லாததால் 1970-களுக்குப் பிறகு விவசாயம் நலிவடைந்ததோடு நாட்டார் தெய்வ வழிபாடும் மெல்ல குறையத் தொடங்கியது. இந்த காலத்தை பார்ப்பனக் கும்பல் பயன்படுத்திக் கொண்டது.
000
தெய்வ வழிபாடு (தெய்வ ஆராதனா) நடைபெற்ற இடங்களை தெய்வங்களின் உறைவிடம் (தெய்வ சனா) என்று சொல்லி கோயில் கட்டி பட்டா போட்டதோடு, அவற்றிற்கு பார்ப்பனர்களே பூசாரிகளாகவும் ஆயினர். கர்நாடக நாட்டார் தெய்வமான பூடா சிவன் விஷ்ணுவின் அவதாரமாக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒரு முறை நடந்த வழிபாடு தினமும் நடைபெற ஆரம்பித்தது. கோழிகள், விலங்குகள் பலியிடப்பட்டு விருந்து நடைபெறுவது நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் சிவனை வழிபட நினைத்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நந்தனை சிதம்பரம் தீட்சித பார்ப்பன கும்பல் கோயிலுக்குள்ளேயே எரித்து “நந்தனார்” ஆக்கியது போல், கோயிலுக்குள் நுழைந்த ‘குற்றத்திற்காக’ பார்ப்பனர்களால் கொலை செய்யப்பட்ட கோரக தான்யா என்ற பழங்குடியை தெய்வமாக்கி வழிபட்டனர் பழங்குடி மக்கள். இன்று கோரக தான்யாவை கோரகஜ்ஜா என்று சிவனின் மறு உருவமாக்கி பார்ப்பனியத்திற்குள் செரித்துள்ளத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
மொகவீரர் என்ற மீனவ மக்களின் தெய்வமான பொப்பாரியாவையும் பார்ப்பன கும்பல் விட்டுவைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு முன் பொப்பாரியாவை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பொப்பாரியா தெய்வத்தை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனனின் மகன் பாப்ருவாகனனின் மறு அவதாரமாக்கி பார்ப்பனியத்திற்குள் வலைத்துப் போட்டுவிட்டார்கள். இதற்கேற்ப பொப்பாரியா அர்ஜூனனுக்கும் கேரள அரசி பிரமிளாவுக்கும் பிறந்தவன் என்ற திரைக்கதை, வசனங்களையும் உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.
இவ்வாறு நாட்டார் தெய்வங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டாலும் பார்ப்பனக் கடவுள்களுக்குரிய வேத அல்லது பார்ப்பன சடங்குகளின்படி வழிபாடு நடத்தப்படாமல் தீண்டாமையுடன்தான் நடத்தப்படுகின்றன என்பது தனிக்கதை.
‘பசுப் பாதுகாப்பு படை’ எனும் பேரில் பாசிச படை
1952-இல் ஜன சங்கம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் நடவடிக்கையாக பசு பாதுகாப்பைக் கையிலெடுத்தது ஆர்.எஸ்.எஸ். உடுப்பியில் 1952 ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியை “பசுக் கொலை எதிர்ப்பு நாளாக” அறிவித்தது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் “தேசிய பசு வாரம்” என்ற ஒன்றை உருவாக்கி பரப்பியது ஆர்.எஸ்.எஸ். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, துர்கா வாகினி, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்க பரிவார அமைப்புகள் “கிராமங்கள் தோறும் பசுப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தன. அதே போல் தட்சன கன்னடா எனும் தென் பகுதியில் பசுப் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
‘பசுவைக் கொல்வதற்கு எதிராக’ என்ற பெயரில் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. “வேத காலத்திலிருந்து ஒரு மனிதன் இன்னொருவனைக் கொன்றிருக்கிறான். ஒருபோதும் பசுவைக் கொன்றதில்லை. நாம் ஒருவரைக் கட்டாயம் கொல்லலாம். நமது சொந்த சகோதரனையும் கொல்லலாம். ஆனால் நாம் பசுவை மட்டும் கொல்லக்கூடாது” என்று மறைமுகமாக முசுலீம்களுக்கு எதிராக கொலைவெறியூட்டப்பட்டது.
இவைகளுக்கு பின்னர், ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டவாறே உ.பி-யில் நடப்பது போல் முசுலீம்கள் மீதான கும்பல் தாக்குதல்கள் அரங்கேறத் தொடங்கின. 1950-களில், உடுப்பி மாவட்டத்தில் ஹஜ்ஜபா, ஹாசனப்பா என்ற இரு முசுலீம்கள் பசுவைக் கடத்தினார்கள் என்று பொது இடத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும், அந்நியர்கள் என்றும் ‘இந்தியாவிற்கு பழக்கமில்லாத’ மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றும் முசுலீம்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். உருவாவதற்கு முன்பிருந்தே கர்நாடகாவில் முசுலீம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றிருக்கின்றன. 1933-இல் இந்து மகா சபா மாநாட்டில் சிறப்புப் பேச்சாளரான ஆ.ஜி.பிடே, “முசுலீம்கள் தேச விரோதிகள், முசுலீம்களின் கிலாபத் இயக்கம் தேச விரோத இயக்கம்” என்று பேசியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பிறகு கேசரி இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1933-இல் தொடங்கி இன்று வரை முசுலீம்களை ‘தேச விரோதிகள்’ என்று சித்தரிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியும் கலவர யாத்திரைகளும்
நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமயமாக்கியதோடு தன்னுடைய பார்ப்பனப் பண்பாட்டை – விநாயகர் சதுர்த்தியை – தேசியமயமாக்குவதன் மூலமும் பார்ப்பனரல்லாத மக்களிடம் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டது ஆர்.எ.ஸ்.எஸ். மகாராஷ்டிராவில் ‘இந்துக்களை’ இந்துத்துவமயப்படுத்த விநாயகர் வழிபாட்டை திலகர் கையிலெடுத்தார். கர்நாடாகவிலும் விநாயகர் வழிபாட்டைக் கையிலெடுக்கவும் அதன் மூலம் கலவர ஊர்வலங்களை நடத்தவும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களைத் தூண்டியவர் கோல்வால்கர்.
1960-களுக்கு முன்பு வரை கர்நாடகாவில் விநாயகர் வழிபாடே இல்லை. 1960-களில்தான் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தப்பட்டது. இதற்கு முன்பு மருத்துவரான டோன்ஸ் மாதவா ஆனந்த் பாயால் தொடங்கப்பட்ட கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியிலும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான சாந்தி நிகேதன் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விநாயகர் உருவச்சிலை இருந்தது. தொடக்கத்தில் விநாயகர் வழிபாட்டை செய்தவர்கள் கவுட் சரஸ்வத் பார்ப்பனர்களே. இதர ‘இந்து’க்களான சூத்திரர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டதில்லை. விநாயகர் சதுர்த்தியின் 25-வது ஆண்டு விழாவின் போது, கர்நாடகாவின் அனைத்தரப்பு மக்களையும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குள் ஈர்த்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.
கர்நாடகாவில் மதவெறியை மூட்டிய ‘இராம ஜென்ம பூமி’
விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து ஆர்.எஸ்.எஸ்-க்கு கர்நாடகாவில் மிகப் பரந்த அளவில் மக்கள் அடித்தளத்தை உருவாக்கியது இராம ஜென்ம பூமி இயக்கம்தான். 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அத்வானியின் இரத யாத்திரையும் இராம ஜென்ம பூமி இயக்கமும் இராமனை ‘இந்து இந்தியா’வின் கதாநாயகனாக்கியது என்றால் மிகையல்ல. இராமஜென்ம பூமி இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக கர்நாடகாவில் “ஸ்ரீ ராம் ஜென்ம பூமி முக்தி யக்ன சமிதி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். 1992 ஆம் ஆண்டு இராம ஜென்ம பூமியின் கடைசிக் காட்சியான பாபர் மசூதி இடிக்கும் வரை தனது முழு பலத்துடன் தீவிரமாக மக்கள் மத்தியில் செயல்பட்டது.
இந்தியா முழுவதும் நடந்தது போல் கர்நாடகாவிலும் பாபர் மசூதியிருந்த இடத்தில் இராமருக்கு கோயில் கட்டுவதற்காக வீட்டுக்கு வீடு செங்கல் வழங்க சொல்லி ‘கர சேவை’ இயக்கத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல். அவ்வாறு செங்கல் பெறும்போது ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூசைகள் நடத்திய பிறகே செங்கல் பெறப்பட்டது. இவ்வாறு பூசை நடத்தி செங்கலைப் பெறுவது என்பது உளவியல் ரீதியாக மக்களை இந்துத்துவத்திற்கு வென்றெடுப்பதற்கான நடவடிக்கையாக அமைந்தது.
இராம ஜென்ம பூமி இயக்கம் தொடங்கப்பட்ட அதே காலத்தில்தான் இராமாயணமும் மகாபாரதமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் இராமன் யார் என்று அறியா மக்களுக்கும் அவன் தெய்வீக அவதாரமாக, இந்துக்களின் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டான். இராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு முன்பு வரை தென் கடற்கரை பகுதியான மங்களூருவில் மட்டுமே இருந்த ஆர்.எஸ்.எஸ். அதன் பிறகு பெங்களூருவிலும் பரவத் தொடங்கியது.
‘லவ் ஜிகாத்’ எனும் நச்சுப் பிரச்சாரம்
இந்துக்களின் மத்தியின் முசுலீம் எதிர்ப்புணர்வை உருவாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். கையிலெடுத்த மற்றொரு நச்சுப் பிரச்சாரம்தான் ‘லவ் ஜிகாத்’. கடந்த 2005-லிருந்துதான் லவ் ஜிகாத் என்ற சொல்வழக்கு கர்நாடகாவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. முசுலீம் ஆண்கள் இந்துப் பெண்களைக் கவர்ந்து (ல்வ் ஜிகாத் செய்து) மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் சங்கிகள் வெறியூட்டினர்.
2008 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது ஊற்றிய பெட்ரோலுக்கு தீ வைத்த கதையாக அமைந்தது. ‘லவ் ஜிகாத் கர்நாடகாவின் பற்றியெரியும் பிரச்சனையாகியது. 2009, 2012 ஆம் ஆண்டுகளில், ‘லவ் ஜிகாத்திற்கு எதிராக’ என்ற பெயரில் பப்களில் இருந்த பெண்களின் உடைகளைக் கிழித்து கடுமையாகத் தாக்கியது காவி குண்டர் படை. 2009-இல், இந்து பெண் ஒருவர் முசுலீம் இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ‘லவ் ஜிகாத்’ பற்றி விசாரிப்பதற்கு சி.பி.சி.ஜ.டி. விசாரணையே நடத்தப்பட்டது என்பதுதான் கொடுமையின் உச்சம்.
1998 ஆம் ஆண்டு சுரத்கால் என்ற பகுதியில் முசுலீம் இளைஞர் இந்துப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக கலவரம் நடந்தது. அதே போல், அனிதா என்ற இந்து பெண் முசுலீம் இளைஞரை திருமணம் செய்து கொண்டதற்காக, அவர்களை கார் விபத்தில் கொலை செய்தான் சங்க பரிவார கும்பலைச் சேர்ந்த மோகன்.
***
படிக்க :
♦ கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
♦ கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றுவதற்கு முன்புவரை முசுலீம்களும் இதர மதத்தினரும் நட்புறவாகத்தான் இருந்தனர். கறிக்கடைக் காதருக்கும் மீனவ மொகவீர சமூகத்தினருக்குமான நட்புறவை காதல் கதையாக கொண்டாடிய சுவைமிக்க வரலாறு கர்நாடகாவிற்கு உண்டு. கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய பிறகோ மதத்தின் பெயரால் அந்த வரலாற்று ரீதியான நட்புறவு இருகூறாக பிளக்கப்பட்டது. முசுலீம்களை அந்நியர்களாக சித்தரிக்கும் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாக வெற்றிபெற்றது.
1968 ஆம் ஆண்டு சுரத்கல்லில் நடைபெற்ற கலவரம்தான் அதிகார மாற்றத்திற்கு (1947- போலி சுதந்திரம்) பிறகு கர்நாடகாவில் நடைபெற்ற முதல் இந்து-முசுலீம் கலவரமாகும். இதைத் தொடர்ந்து, மங்களூர் துறைமுகத்தில் மீனவர்களிடையே கலவரம் வெடித்தது. முசுலீம் வெறுப்புணர்வும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களான சரஸ்வத் பார்ப்பனர்கள் மீன்பிடித் தொழிலில் இறங்கியதுமே இக்கலவரத்திற்கு அடிப்படை. இதில் 6 முசுலீம்களும் 2 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மொகவீர சமூகத்தினர் பார்ப்பனர்களின் அடியாட்களாக செயல்பட்டனர்.
1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு கர்நாடகத்தில் கலவரங்கள் தொடர்கதையாயின. 2006 ஆம் ஆண்டு முசுலீம்களுக்கு எதிரான கலவரமும் 2008 ஆம் ஆண்டு கிறித்தவர்களுக்கு எதிரான கலவரமும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கர்நாடக மக்களை காவிமயமாக்குவதில் பாசிஸ்ட்டுகள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பதையே கர்நாடகாவில் நடைபெற்ற ஒவ்வொரு மதவெறிக் கலவரங்களும் நமக்குக் காட்டுகின்றன. தென்னிந்தியாவில் ‘இந்துராஷ்டிரத்தின்’ முதல் களமாக கர்நாடகா மாறியிருக்கிறது.
(தொடரும்…)

அப்பு
சுபாஷ் சந்திர போஸ் – ஒரு நுணுக்கமான பார்வை !
சாவர்க்கரின் அரசியலுக்கும் இந்து மகாசபாவிற்கும் எதிரான வலுவான பார்வையை போஸ் கொண்டிருந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த விவரணை எல்லாம் இன்றைய அரசியல் சூழலின் நிகழ்ச்சிநிரலால் உருத் திரிக்கப்பட்டவையாகவும் இருந்துவருகின்றன.
சாவர்க்கருக்கும் போஸிற்கும் இடையிலான உறவு மிகமிக சிறு வேறுபாடுகளைக் கொண்டது மட்டுமல்ல, அரசியலில் வேறுபாடு இருந்த போதிலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து நடந்துகொண்டனர் என்று புதிய தகவல் கூறுகிறது.
பின்னணி வரலாறு
மே 1937 ல் சாவர்க்கர் விடுதலையான போது சுபாஷ் சந்திரபோஸ் ஓராண்டு சிறைவாசம் மற்றும் வீட்டுக்காவலை அனுபவித்துவிட்டு டல்ஹவுசியில் உடல்நிலை தேறிவந்தார். ஐரோப்பியாவிற்கு நாடுகடத்தப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வருவதற்காக இந்திய அரசாங்க உத்தரவுகளை மறுத்து 1936, ஏப்ரலில் போஸ் இந்தியா வந்தார். எதிர்பார்த்தப்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக அவர் 1937, மார்ச் மாதத்தில் விடுதலையானார். அவர் சாவர்க்கர் பொதுவாழ்க்கைக்கு திரும்பி வந்ததை வரவேற்று ஒரு செய்தி வெளியிட்டார். சாவர்க்கர் காங்கிரசில் சேருவார் அவர் என்று நம்பினார். எனினும் சாவர்க்கர் அந்த ஆண்டின் இறுதியில் இந்து மகாசபாவை ஒரு தேசிய அரசியல் சக்தியாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு அதில் இணைந்தார்.
படிக்க :
♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
♦ வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
1938-ல் போஸ் காங்கிரசில் சேர்ந்ததால் சிறிய வார்த்தை போர்களை தவிர அவர்களுடைய பாதைகள் நேருக்குநேர் குறுக்கீடாகவில்லை. வர இருக்கின்ற எந்த ஒரு வட்ட மேசை மாநாட்டிலும் காங்கிரசுதான் இந்தியாவை பிரதநிதிப்படுத்தும் என்று போஸ் உறுதிபட கூறியபோது, சாவர்க்கர் அதை எதிர்த்தார். அதிகபட்சமான இந்து தொகுதிகளை முந்தய தேர்தல்களில் காங்கிரசு வெற்றிபெற்றிருந்த போதிலும் முற்றிலும் இந்துக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி அது போட்டியிட்டதில்லை என்பதை குறிப்பிட்டு இந்து மகாசபைமட்டும்தான் இந்துக்களை பிரதிநிதித்துவபடுத்த முடியும் என்று சாவர்க்கர் வாதிட்டார்.
போஸ் காந்திய தலைமையிலான காங்கிரசுடன் முரண்பட்டு புதிய ஒரு மாற்று தேசிய இயக்கத்தை தனது அனைத்திந்திய ஃபார்வடு ஃப்ளாக் என்ற கட்சி மூலம் அடைய முயல்கையில் வெவ்வேறான அரசியல் பார்வைகளோடு அவர்கள் இருவரும் (போஸ், சாவர்க்கர்) தனித்தனி தளங்களில் இயங்கினர்.
அரசியல் மோதல்
ஏகே ஃபஸ்ஸுல் ஹக் அரசாங்கத்தின் மதவாத அரசியலுக்கு எதிராக சாவர்க்கர் மாகாண இந்து மகா சபையை பலப்படுத்த 1939, டிசம்பரில் வந்தபோது, அவர்களின் அரசியல்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. சுபாசும் காங்கிரசு கட்சியில் அந்த மாகாண சட்டசபையின் உறுப்பினரான அவருடைய மூத்த சகோதரர் சரத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து இறக்க தங்களுடைய சொந்தவழியில் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் காந்தியின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டன. காந்தி, ஜிடி பிர்லா மற்றும் ஹக் அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நளினி ரஞ்சன் சர்கார் அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டார்.
போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது. போஸின் விமர்சனம், மகாசபை அணுகுமுறையுடன் உள்ள வேறுபாட்டை காட்டி மத பிரச்சினையை ஒட்டிய விசயத்தில் அவருடைய அணுகுமுறையை பிரதிபலித்தது. எல்லா முஸ்லீம்களையும் ஒன்றாக சேர வைப்பதன் மூலம், மத வேற்றுமைகளை கோடிட்டு காட்டி இந்து மகாசபா இந்திய தேசியத்திற்கு கணக்கிடமுடியாத தீமையை செய்துவருகிறது என்று பார்வர்டு பிளாக் இதழ் வாதிட்டது.
முகம்மத் அலி ஜின்னாவும் அவருடைய கூட்டத்தாரும் பரந்த இந்திய முஸ்லீம் மக்களில் ஒரு சிறு பிரிவினர் மட்டும்தான். மற்றும் அந்த பரந்தபட்ட மக்கள் கூட்டம் படிப்படியாக பொறுப்பான ஒரு தேசிய உணர்வு பெற்றுவருகிறது என்று குறிப்பிட்ட அந்த இதழ், இந்தியா உருவாவதற்கான தேசியவாத முஸ்லீம்களின் பங்கை கண்டுங்காணாமல் விடுவதன் மூலம் சாவர்க்கருக்கு நாம் அனுகூலம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டது.

சிறு ‘மோதல்களை’ விட மிகமிக சிறு வேறுபாடே இருவருக்கும் இடையில் இருந்தது.
அவர்களுக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் ஆச்சர்யமூட்டும் வகையில் போஸ் இந்து மகாசபையுடன் கல்கத்தா மாநகராட்சி கழகத்திற்கு 1940-ல் நடந்த தேர்தலில் கூட்டுவைத்தார். இந்த ஒரு அத்தியாயம் அவருடைய நிலையான வாழ்க்கை வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டதாகவே இன்றும் உள்ளது.
இருப்பினும் இந்த கூட்டு நீடிக்கவில்லை மற்றும் தேர்தல் நடப்பதற்கு முன்னரே கூட எரிச்சலூட்டி ஷியாமா பிரசாத் முகர்ஜியால் தலைமை தாங்கப்பட்ட அந்த உறவு நிறுத்தப்பட்டது.
இப்போது வரை விடைகாணாமல் தொடர்ந்து வந்த கேள்வி என்னவென்றால், போஸை போன்ற இடது சாரி என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒருவர், ஏன் மதவாத இந்து மகாசபா போன்ற ஒரு மத அமைப்புடன் கூட்டணி வைத்திருந்தார்?
பார்வர்டு பிளாக் இதழில் போஸ் கையெழுத்திட்ட ஒரு தலையங்கத்தில் மற்ற விவகாரங்களில் வேறுபாடு நீடித்தாலும் உள் விவகார நிர்வாகத்தில் ஆதரவு கேட்டு குறிப்பாக இந்து மகாசபா மற்றும் முஸ்லீம் லீக் அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்ததாக விவரித்தார்.
இந்து மகாசபா முதலில் பதில் அளிக்க நேர்ந்தது. இந்து மகாசபாவில் உள்ள தேசியவாத ஆதரவு சக்திகளை அவருடன் கூட்டணி சேரவைத்தற்காக பாராட்டிய அதே நேரத்தில் மத அடிப்படைவாத சக்திகளை அவர் குற்றஞ்சாட்டினார். அவர்கள் காங்கிரசை அழிப்பதற்காக அதனுடன் எந்த உடன்பாடும் ஏற்படுத்த கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்தனர்.
போஸ் குறிப்பிட்ட ஒரு உடன்பாடு என்பது ஒரு வலுவான ஒற்றுமைதான். அது வரும்காலங்களில் மதவாத சக்தி அல்லாமல் தேசியவாத வெற்றியை உறுதிபடுத்தும் என்பதுதான். இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக ஒன்று சேரவேண்டிய அவசியம் இருந்தது.
அந்த கூட்டணி முறிவுக்கு பின்னர், அதிருப்தி அடைந்த சந்திர போஸ் தான் உள்ளபடியே மகா சபாவை எதிர்க்கவில்லை, காங்கிரசை அப்புறப்படுத்த நினைக்கும் அதன் பேராசையைத்தான் எதிர்ப்பதாக தெளிவுபடுத்தினார்.
பார்வடு ப்ளாக் இதழில் அவர் எழுதினார், “இந்து மகாசபா ஒரு அரசியல் பாத்திரத்தை ஆற்றுவதற்கும் வங்கத்தின் அரசியல் தலைமைக்காக அல்லது குறைந்தபட்சம் வங்கத்தின் இந்துக்களுக்காக பாத்திரம் ஆற்றுவதற்கும் முன்வந்துள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டில் உள்ள தேசியவாதத்தின் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். உண்மையான இந்து மகாசபாவுடன் நமக்கு எந்த வாக்குவாதமோ சண்டையோ அல்ல. ஆனால் காங்கிரசை வங்கத்தின் பொதுவாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த விரும்பும் இந்துமகா சபா-வின் அரசியல் தான் எங்களுக்கு பிரச்சினை. காங்கிரசை அப்புறப்படுத்தும் நோக்கிற்காக ஏற்கனவே எங்களுக்கு எதிரான தாக்குதல் நிலை எடுத்துள்ளது. அந்த ஒரு சண்டை தவிர்க்கமுடியாதது. இந்த சண்டை இப்போதுதான் தொடங்கியுள்ளது’’
1940 ஜூலையில் அவர் சிறைபடுத்தப்படுவதற்கு கொஞ்சம் முன்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பரந்துவிரிந்த தேசிய இயக்கத்தை தோற்றுவிப்பதற்காக போஸ் அவர்கள் சாவர்க்கரையும், ஜின்னாவையும் சந்தித்தார். ஆனால் அவருக்கு இருவரிடமும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்திய போராட்டம் என்ற அவருடைய புத்தகத்தின் இரண்டாவது பகுதியில், ஜின்னா அவர்கள் பிரிட்டிஷ் உதவியுடன் எப்படி பாகிஸ்தான் பிரிவினை திட்டத்தை வெளிப்படுத்துவது என்று மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நிலையில் சாவர்க்கர் சர்வதேச சூழ்நிலைகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவராகவும் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதன் மூலம் இந்துக்கள் எப்படி ராணுவ பயிற்சி எடுப்பது என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்று எழுதினார்.
அந்த இரு தலைவர்களுடனான நீண்ட விவாதங்கள் முஸ்லீம் லீக் அல்லது இந்து மகாசபாவிடமிருந்து, அவருடைய திட்டமான தேச எழுச்சியை எதிர்பாக்கமுடியாது என்ற முடிவுக்கு போஸ் அவர்களை கொண்டுவந்தது. .
தற்செயலாக, தேர்தல் கூட்டு சாத்திய எல்லைக்குள் இருப்பதற்கு முன்பு மற்றும் போஸ் அப்போதும் சாவர்க்கர் அரசியலின் மீது விமர்சனம் கொண்டிருக்கின்ற பொழுதும் எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட டிசம்பர் 30, 1939 பார்வடு பிளாக் இதழ் கட்டுரை சாவர்க்கர் குறுங்குழுவாத அரசியலுக்கு சென்றது குறித்து வருந்தி புலம்பியது. இருப்பினும் அது வியக்கத்தக்க வகையில் அவர் மீது உயர்ந்த மதிப்பை கொண்டிருந்தது.
மற்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க, அந்த இதழ், “இந்திய போராட்ட களத்திற்கு கொண்டுவரப்பட்ட அந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டின் சுதேசி இயக்கம் கண்ட பெரும் ஆளுமைகளில் சாவர்க்கரும் ஒருவர்” என்று அந்த இதழ் குறிப்பிட்டது.
மேலும், “ஒரே அச்சில் உண்மையான கதாநாயகர்கள் உருவாக்கப்பட, மகாராஷ்டிரத்தின் இந்த துணிகர மனிதனின் மொத்த வாழ்க்கை பயணம் தவிர்க்க இயலாமல் வாழ்க்கை நெடுக துன்பங்கள் இணைந்த பயணங்களுடன் கொடுங்கனவு மற்றும் சாதனைகள் கொண்ட பரபரப்பூட்டும் நீண்ட கதைகள் கொண்ட ஒன்றாகும். 25 ஆண்டுகளுக்கான தொடர் சிறைவாசத்திற்கு பிறகு அவர் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுதலையான போது எல்லாருடைய பார்வையும் அவர் மீது இருந்தது. ஒரு சாதாரண மனிதன் இந்த அடக்குமுறையால் முழுமையாக பிழியப்பட்டிருப்பான். ஆனால், சாவர்க்கர் நிலைத்து நின்றார். இயற்கையின் உண்மையான வெகுமதியை (அறிவாற்றலும் ஆற்றல் மிகுந்த பண்புகளையும்) முழுமையாக பாதிக்கப்படாதவாறு திரும்ப கொண்டுவந்தார். என்ன ஒரு வியக்கத்தக்க வகையில் ஊக்கத்தை அவர் கொண்டிருந்தார்! ஆனால் பாவம் என்ன செயவது!
மிக அருமையான கொடையை காங்கிரசால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேசிய நலனுக்காக சிறப்பாக்குவதற்கு பதிலாக அவர் இந்து மகாசபா என்ற பதாகையை சுற்றுவதையும் மத கீத மத்தையும் தேர்வு செய்திருக்கிறார். சாவர்க்கர் நாட்டில் தீமை விளைவிக்கும் முஸ்லீம் மதவாத வளர்ச்சியை கண்டு எரிச்சலூட்டப்பட்டிருக்கிறார். அது சந்தேகத்திற்கிடமின்றி இன்றய இந்திய அரசியலில் அதிர்ச்சியும் கோபமும் அடையச்செய்கின்ற ஒரு அபாயகரமான இன்றய நிகழ்வு. ஆனால் அவருடைய பெரிய கொடுமைகளுக்கான அவருடைய தீர்வு என்பது சந்தேகத்திற்கிடமின்றி விரக்தி அடைந்த ஒன்று. நாட்டை இரு போர் முகாம்களாக பிளவுபடுத்தி இவ்வாறு எதிர்காலத்தில் ரத்த ஆறு ஓடுவதற்கான ஒன்றை தயாரிப்பது நடைமுறைக்கு உகந்ததோ அறிவு பூர்வமான ஒன்றோ அல்ல.’’ என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த இதழ்.
இந்த வார்த்தைகளை போஸ் அவரே எழுதவில்லை என்றாலும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் இந்த இடதுசாரி இதழில் எழுதப்பட்டது என்று கருதமுடியாது.
படிக்க :
♦ ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !
சாவர்க்கரின் புகழ் வார்த்தைகள்
சாவர்க்கரும் கூட, எங்கெல்லாம் போஸ் குறித்து பொதுவெளியில் பேசுகிறாரோ அங்கெல்லாம் அவரைப் பற்றி புகழ்ந்துரைப்பார். இந்தியாவை விட்டு போஸ் சென்ற கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு பிப்ரவரி 23, 1941 அன்று அவருடைய பாதுகாப்பிற்காக கவலையை வெளிப்படுத்தி கடைபிடிக்கப்பட்ட, ‘அனைத்திந்திய சுபாஷ் தினம்’ அமைப்பாளர்களுக்கு சாவர்க்கர் ஒரு செய்தியை அனுப்பினார். “அவர் எங்கிருந்தாலும், தேசத்தின் நல்விருப்பமும் இரக்கமும் நன்றியுணர்வும் அவருக்கான ஆறுதலாகவும், ஊக்கமாகவும் அமையட்டும்”என்று அதில் குறிப்பிட்டார்.
மறுபடியும், 1969ல் ராஷ்ட்ரிய சுயம் சேவக்கின் முதன்மை பத்திரிகையான ஆர்கனைசரில் அவருடைய இறுதிகாலகட்ட நேர்க்காணல் ஒன்றில் இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்த நான்கு முதன்மை காரணிகளாக சாவர்க்கரால் பட்டியலிடப்பட்டவற்றில், மூன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் சுபாஷ் சந்திரபோசுடன் தொடர்புடையவையாக இருந்தது.
சாவர்க்கரின் கூற்றுப்படி, “இந்திய விடுதலைக்குப் பங்காற்றிய பல காரணிகள் இருக்கின்றன. இந்துஸ்தானத்திற்கு காங்கிரஸ் மட்டுமே விடுதலை பெற்றுத்தந்தது என்று கற்பனை செய்துகொள்வது தவறானது ஆகும். அதே போல் ஒத்துழையாமை இயக்கம், கைராட்டினம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கமே நமது நாட்டிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரத்தை பின்வாங்கவைத்தது என்று நினைப்பதும் முட்டாள்தனத்திற்கு இணையானது. பல ஆற்றல் மிக்க உறுதியான சக்திகள்தான் இறுதியாக விடுதலையை உறுதிசெய்தன.
முதலாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக சார்ந்திருந்த ராணுவத்திடம் இந்திய அரசியல் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாவதாக, இந்திய கப்பல் படை கலகம் மற்றும் விமானப்படை அச்சுறுத்தல், மூன்றாவதாக, ஐஎன்ஏ மற்றும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரமிக்க பாத்திரம். நான்காவதாக, 1857-ல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம். அது பிரிட்டிஷ் அரசை உலுக்கியது. ஐந்தாவது, காங்கிரசிலும் மற்ற குழுக்களிலும் கட்சிகளிலிருந்தும் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற தியாகம்’’
கட்டுரையாளர் : சந்திரச்சுர் கோஷ் – The Print
மொழியாக்கம் : முத்துக்குமார்
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனம் திறந்த மடல் !
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு,
வணக்கம்.. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம்
( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்கார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் தன் புகைப்படங்களையோ, பெயரையோ குறிப்பிட்டு செய்தி வெளியிடக்கூடாதென கோரிக்கை வைத்து தொடர்ந்த வழக்கு அது.
நீதிமன்றத்தில் முருகன் IPS தொடர்ந்த மனுவிற்கு Writ Petition எண் கொடுக்கப்படவில்லை. வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அந்த மனுவை நீதிமன்ற எண் -10-ல் விசாரணைக்கு எடுத்த நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு, மனுதாரர் என்னவெல்லாம் கேட்டிருந்தாரோ அதையே உத்தரவாக பிறப்பித்தது.
படிக்க :
♦ போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?
♦ நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
ஒருவேளை சட்டத்தில் அதற்கு இடமிருக்கலாம்.. நீதிபதிகளுக்கு அப்படி பிறப்பிக்க அதிகாரம் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம். அது சரி அல்லது தவறென்று நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு விநோதம் இருந்தது ! என்ன தெரியுமா ?
நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு 10-09-2018-ம் தேதியன்று இணைந்து பிறப்பித்த உத்தரவு, அது ஒன்று மட்டுமே..
அன்றைய தேதியில் நீதிமன்ற எண் -10-ல் பிறப்பிக்கப்பட்ட மீதி அனைத்து உத்தரவுகளையும் நீதியரசர் கல்யாண சுந்தரம் மட்டுமே பிறப்பித்திருந்தார்.
ஆச்சர்யமாக உள்ளது தானே..
அதெப்படி ஒரே நீதிமன்ற விசாரணை அமர்வில் ஒரே ஒரு மனுவுக்கு மட்டும் இரண்டு நீதிபதிகள் இணைந்து உத்தரவை பிறப்பித்தனர் என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. கொஞ்சம் ஆழமாக தேடிய பின்னர் தான் தெரியவந்தது.
10-09-2018 -ம் தேதியில் இருந்து -14-09-2018 வரை அதாவது நான்கு தினங்கள் நீதியரசர் ஹுலுவாடி ரமேஷ் விடுப்பு என்று தெரியவந்தது. அதாவது விடுமுறையில் இருந்தார். ஆனாலும்,, அவரது பெயரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெறும் Serial Number மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த ஒரு மனுவிற்கு.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மனுதாரர் முருகன் IPS மீது CBCID வழக்கு பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே முருகன் IPS மீது CBCID வழக்கை பதிவு செய்து விட்டது. அதிகாரம் மிக்க மனிதர்கள் நீதித்துறையில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை இந்த சம்பவம் உருவாக்க வாய்ப்பிருக்கிறது தானே !?
ஆம்.. அந்த எண்ணத்தை சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கியது. 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக இருந்த செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சந்திப்பில் நான்கு நீதியரசர்களும் கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை. தலைமை நீதிபதியுடன் பேசித் தீர்வு காண நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்களை இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து விட்டன என சொல்லி எழுந்து செல்கிறார்கள்.

அப்படி அவர்கள் கூறிவிட்டு சென்ற 9 மாதங்களுக்கு பிறகு தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து, நீதித்துறை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு பேராபத்து, தயவு செய்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என மக்களை நோக்கி கைகூப்பிய பிறகு என்ன செய்வது ?
பின்னர், ஏதோ ஒரு வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் விடுமுறையில் இருந்தபடியே உத்தரவு பிறப்பித்த விஷயம் வெளியில் வந்து விட்டது. அதன் பிறகு, கொலிஜியம் கவனத்திற்கு சென்றதாக கருதுகிறேன். சில நாட்களில் அவரை மத்திய பிரதேச நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து விட்டது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் எத்தனையோ சிறப்பான நல்ல தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர்.
மிகுந்த வருத்தத்துடன் எழுதுகிறேன். சமீப காலத்தில் 160 ஆண்டு காலம் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிஜேபி என்ற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு, விருப்பத்திற்கு ஏற்றவாறு சாதகமான தீர்ப்புக்களை வழங்குகிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலும், 2018- ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்று மக்களிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் வார்த்தைகளின் படி, நேர்மையான இந்திய குடிமகன் என்ற உரிமையிலும் உங்களுக்கு சிலவற்றை தெரியப்படுத்தும் கடமை எனக்கிருக்கிறது.
24-01-2018-ம் தேதியன்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஷயம் சர்ச்சையானது. தமிழகத்தில் இருக்கும் “நாம் தமிழர்” என்ற கட்சியின் நிர்வாகிகள் காஞ்சி மடத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மடத்தின் மேலாளர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் இளங்கோ என்பவர் மனு தாக்கல் செய்கிறார்.
நீதியரசர் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் 06-12-2021- ம் தேதியன்று உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது. அதில்..
தமிழக அரசின் குறிப்பாணை எண். 3584/70-4 தேதி 23.11.1970 -ன் படி உள்ளாட்சி அமைப்புக்கள், அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிலையங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினார்.
தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கம் பாடல் தானே தவிர, பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார். சன்யாசிகள் குறித்து மிக உயர்வான கருத்துகளையும் கூட அந்த உத்தரவில் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் பதிவு செய்திருந்தார்.

ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நான்கு தினங்களில் அதாவது
06-12-2021- ம் தேதியன்று எழுந்து நிற்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.. 10-12-21-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கப்படும் தருணத்தில் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது.
இந்த விஷயம் பார்ப்பதற்கு கொஞ்சம் லேசானது போல தெரியலாம். ஆனால்,,
நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஒரு விதமான மோதல் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறேன்.
மதுரையில் இருக்கும் மாரிதாஸ் என்ற நபர் Maridhas Answers என்ற Youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவருடைய ஒரே நோக்கம் இலக்கு எல்லாம் திமுக என்ற கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடு வீழ்த்துவது மட்டுமே. ஆட்சியில் இருந்தாலும்-இல்லாவிட்டாலும் திமுகவை மட்டுமே திட்டி வீடியோ போடுவார். அரசியல் ரீதியாக அவரது வீடியோக்கள் பிஜேபிக்கு ஆதரவானவை. அது அவரது நிலைப்பாடு. தவறொன்றும் இல்லை.
ஆனால்,, கடந்த 2021-டிசம்பர் மாதம் 10-ம் தேதி குன்னூரில் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் ராவத் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகிறது.
அது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவொன்றை போடுகிறார். அது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
போலீசார் கைது செய்கின்றனர்.
கொரோனா தொற்றின் முதலாம் அலை பரவல் தொடங்கியபோது தப்லிக் ஜமாஅத் அமைப்பினர் தான் பரவலுக்கு காரணம் என்று அவர் பேசிய வீடியோ குறித்து கொடுக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்படுகிறார். மாரிதாஸின் கைதை கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் செயல், என தமிழக பிஜேபியினர் பெரும் அரசியல் யுத்தத்தையே நடத்தி வந்தனர். பிஜேபியின் பல தேசியத்தலைவர்கள் கூட மாரிதாஸின் கைதை கண்டித்தனர். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
சம்பந்தப்பட்ட நபர் முழுக்க முழுக்க பிஜேபியின் அரசியலுக்கு உதவக்கூடியவர்.
ஆனால், விஷயம் அதுவல்ல.. தன் மீது போடப்பட்ட FIR – களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் இரண்டு மனுவும் நீதிபதி ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் முன்பே விசாரணைக்கு வந்தது. மனு தாக்கல் செய்த சில தினங்களில் பதிவு செய்யப்பட்ட FIR –களை ரத்து செய்ய வேண்டுமென்று உத்தரவை பிறப்பிக்கிறது நீதிமன்றம். அந்த உத்தரவு சட்டப்படியே கூட பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
