டிசம்பர் 25 : கீழ்வெண்மணி தியாகியர் நினைவு தினம்
கீழ்வெண்மணி
ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு !
வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!
கருத்துப்படம் : மு. துரை
நாள்:24.12.2020
அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களின் ஏக்கம் தீரும் நாள் எந்நாளோ அன்றே பெரியாரின் ஏக்கமும் தீரும்! தீரும்!
தந்தை பெரியாரின் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2020
பத்திரிகை செய்தி
தன் வாழ்நாளின் இறுதி தருணம் வரை பார்ப்பனல்லாதோரின் இழிவை நீக்க தனியொரு இயக்கமாக சுழன்றவர் தான் பெரியார். கருவறையில் நிலவும் தீண்டாமை இழிவை போக்க இயலாத நிலையில் நம்மை விட்டு பிரிந்தார்.
அர்ச்சகர் வாரிசுரிமை ஒழிப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் ஆகியவை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன. இருந்த போதிலும் ஆகமம், ஐதீகம், பாராம்பரியம் என அரசியலமைப்பு சட்டம் வளைக்கப்பட்டு பார்ப்பனர் அல்லோதோரின் பூசை செய்யும் சட்ட உரிமைகள் நெறிக்கப்பட்டன. அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் பார்ப்பன அர்ச்சகர்களின் எடுபிடிகளாகவோ, பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட கோயில்களின் அர்ச்சகராகவோ இருந்து வாழ்க்கையை நடத்தும் அவலமே பல்லாண்டுகளாக தொடர்கின்றது.
கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப்படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 207 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கோயில்களின் கருவறைகளை பக்தர்களை போல நாங்களும் பெரும் வலியுடன் வேடிக்கையே பார்க்க இயலும். ஆகம பயிற்சி பெற்றும் நாங்கள் நுழைந்து பூசை செய்வதை எது தடுக்கிறது? எங்களுடைய பிறப்பிலான சாதி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எங்களை அர்ச்சகர்களாக அரசால் நியமிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் தீர்ப்பு வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.
தமிழ்நாட்டில் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் இறந்துவிட்டனர் மீதமுள்ள 205 மாணவர்களில் 2 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
படிக்க :
♦ வாடிவாசல் திறந்தோம் – கருவறையும் திறப்போம் !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி !
மதுரை பாடசாலையில் படித்த மாரிச்சாமி என்கின்ற மாணவருக்கு தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அடுத்தது நாகமலை புதுக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் தியாகராஜன் என்கின்ற மாணவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
சமுக நீதி கோலோச்சிய தமிழகத்தில் 203 மாணவர்களுக்கு இன்னமும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் அருங்காட்சியப் பொருளாய் நாங்கள் ஆகிவிடும் நிலையே உள்ளது.
இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
128, கோகுலம் இல்லம், அரச மரத் தெரு, திருவண்ணாமலை
தொடர்புக்கு : 90474 00485.
23/12/2020
அன்பார்ந்த புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு,
செவ்வணக்கம்!
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. தனிப் பிரதி வேண்டுவோர், இதழின் விலை ரூ.20.00 + அஞ்சல் செலவு ரூ.5.00 சேர்த்து மொத்தம் ரூ. 25.00-ஐ எமது G-pay account (G Pay-94446 32561)-க்குச் செலுத்தி, அத்தகவலை, அஞ்சல் குறியீட்டு எண்ணை உள்ளடக்கிய முழுமையான முகவரியுடன் எமது வாட்ஸ்-அப் எண்ணுக்கு (94446 32561) அனுப்பி வைக்கக் கோருகிறோம்.
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
♠ தலையங்கம் : கார்ப்பரேட் நிர்பர்
♠ 7.5% இட ஒதுக்கீடு: புண்ணுக்கு புனுகாகிவிடக் கூடாது!
♠ “எனது பாவ்லோஸ் தனி ஒருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!”
♠ பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு: நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல்!
♠ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
♠ குவாட் கூட்டணி: சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு!
♠ எது அபாயகரமானது ? கரோனாவா? ஆர்.எஸ்.எஸ்.-ன் அவதூறா?
♠ குற்றவியல் சட்டத்திருத்தம் : மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு!
♠ போராட்டங்களின் நோக்கம்
♠ யார் தேசவிரோதி?
♠ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
“இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒரு உரை” (குருசேவின் இரகசிய உரையை இப்படித்தான் பிரிட்டனின் “டெலிகிராப்” நாளிதழ் அன்று அழைத்தது) முழுக்க முழுக்க பொய்யும் புரட்டுமானதா?
குருசேவின் அந்த “புகழ்பெற்ற” உரைக்குப் பின்னர், “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா – ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி – கொடுங்கோலன் என்று நாங்கள் சொன்னபோதெல்லாம் மறுத்தீர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்றெல்லாம் இடதுசாரிகளை நிலைகுலையச் செய்து கொண்டிருந்தனர் முதலாளித்துவவாதிகளும், “நடுநிலைவாதிகளும்”.
ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு 1956-ம் ஆண்டு ஃபிப்ரவரி 25-ல் ஒரு இரகசிய உரையில் ஸ்டாலின் பற்றி குருசேவ் அடுக்கடுக்கான அவதூறுகளைக் கூறினார் குருசேவ். ஸ்டாலினுடைய வாழ்நாளிலேயே முதலாளித்துவ நாடுகள் பல்வேறு அவதூறுகளை பரப்புரை செய்தாலும், நடைமுறையில் அப்படியான அவதூறுகளுக்கு ஸ்டாலினும் அவர் தலைமையில் இரசிய மக்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இதனால் அடுத்தடுத்த காலங்களின் மக்கி மண்ணாகி இருக்க வேண்டிய முதலாளித்துவவாதிகளின் பொய்ப் பரப்புரைகளுக்கு, ஸ்டாலினுடன் இருந்த குருசேவின் பொய்கள் தாங்கி நிற்கும் ஆதாரமாய் மாறி நின்றன. இதனைப் பயன்படுத்தி தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதன் மூலம், சோசலிச வெறுப்புணர்வையும் வளர்த்து பரப்புரையும் செய்தார்கள்.
குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்தும், கடிதப் போக்குவரத்துகளில் இருந்தும் தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர். இந்நூலை தமிழில் செ.நடேசன் அவர்கள் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார்.
படிக்க :
♦ ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
இந்த நூலில் இருந்து, ”ஸ்டாலின் ட்ராட்ஸ்கியர்கள் குறித்து தவறான நிலைப்பாடு எடுத்ததாக” குருசேவ் சொல்லும் குற்றச்சாட்டை குரோவர் அம்பலப்படுத்தும் பகுதியை மட்டும் இங்கு வழங்குகிறோம்.
000
டிராட்ஸ்கியர்கள்
குருச்சேவ் :
நாம் டிராட்ஸ்கியர்களின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். மிக நீண்ட வரலாற்றுக் காலத்துக்குப் பின்பான இப்போது டிராட்ஸ்கீயர்களுடனான சண்டைப்பற்றி முழு அமைதியோடு உணர்ச்சிவசப்படாமல், போதுமான குறிக்கோளோடு இந்த விஷயத்தை பேசி ஆய்வு செய்யலாம். இவ்வளவு காலத்திற்குப் பிறகும் டிராஸ்கியைச் சுற்றியிருந்தவர்கள் எந்தவகையிலும் முதலாளித்துவ சார்ந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களைக் காண முடியவில்லை . அவர்களில் ஒருபகுதியினர் கட்சி சிந்தனையாளர்கள்; மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி தொழிலாளர்களிடமிருந்து பணியமர்த்தப்பட்டவர்கள். புரட்சிக்குப்பின் டிராட்ஸ்கியர்களோடு சேர்ந்த பல தனிநபர்களின் பெயர்களை கூறலாம். ஆனாலும், அதே தனிநபர்கள் புரட்சிக்கு முன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும் இந்த மாபெரும் புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைத்தபோதும் அவர்கள் டிராட்ஸ்கியசத்திலிருந்து வெளியேறி லெனினிய நிலைகளுக்குத் திரும்பியவர்கள். தொழிலாளர் இயக்கங்களில் பாடுபட்டவர்கள். இத்தகையவர்களை நிர்மூலம் செய்தது தேவைதானா?
1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக்குழு பிளீனத்தில் டிராட்ஸ்கியர்களைப் பற்றி ஸ்டாலின் – மார்ச் 3
மார்ச் 5-இல் பிளீனத்தின் நிறைவுரையில் ஸ்டாலின்:
“ஆனால், இங்கே ஒருகேள்வி எழுகிறது. ஜெர்மனிய, ஜப்பானிய ஏஜண்டுகளான டிராட்ஸ்கியர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறிகின்ற நடைமுறைப் பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது? இதன்பொருள் உண்மையான டிராட்ஸ்கியர்களை மட்டுமல்லாமல், டிராட்ஸ்கியர்களை நோக்கி சிலநேரங்களில் ஊசலாடியவர்களையுமா? அதன்பின் நீண்டநாட்களுக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகி வந்தவர்களையுமா? முன்னொரு காலத்தில் நீண்டதெருக்களில் டிராட்ஸ்கிய ஏஜண்டுகளாக அழிவுவேலைகளில் ஈடுபட்டு, அதன்பின் டிராட்ஸ்கியர்களைவிட்டு நீங்கியவர்களையும் கூடவா? அத்தகைய குரல்கள் ஏதோ ஒருவிதத்தில் இந்தப் பிளீனத்தில் கேட்டன. அத்தகைய பொருள்விளக்கத்தை நாம் தீர்மானத்தில் பரிசீலிக்கவேண்டுமா? இல்லை. நாம் அதை சரியானது என்று கருதமுடியாது.
இந்தப் பிரச்சனையில், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஒரு தனிப்பட்ட, மாறுபட்டதான அணுகுமுறை இருந்தாக வேண்டும். நீங்கள் எல்லோரையும் ஒரே அளவுகோலில் அளந்து விடக் கூடாது. அத்தகைய துல்லியமற்ற பொதுப்படையான அணுகுமுறை உண்மையான டிராட்ஸ்கிய அழிவுசக்திகளுக்கும், உளவாளிகளுக்கும் எதிரான நமது போராட்டங்களுக்குத் தீங்குகளை மட்டுமே விளைவிக்கும்.
நமது பொறுப்பு மிக்க தோழர்களிடையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்னாள் டிராட்ஸ்கியர்கள் உள்ளார்கள். அவர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகியதோடு, டிராட்ஸ்கியத்தை எதிர்த்து இப்போது போராடுகிறார்கள். டிராட்ஸ்கியத்தை நோக்கி ஒருபோதும் அலைபாயாத நமது மதிப்புக்குரிய சில தோழர்களைவிட சிறப்பாக அதைவிட நல்லமுறையில் போராடிவருகிறார்கள். இப்படியான தோழர்களை இப்போது இழிவாகப் பேசுவது முட்டாள்தனமானது.
நமது தோழர்கள் தத்துவார்த்தரீதியாக எப்போதும் டிராட்ஸ்கியத்தை எதிர்த்து வருபவர்களாக இருந்தாலும், தனிப்பட்ட டிராட்ஸ்கியர்களுடன் சொந்தத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட, தங்கள் கிராமங்களில் டிராட்ஸ்கியர்கள் இருப்பது தெரிய வந்தபோது அதை ஒழிக்க அவர்கள் தாமதித்ததில்லை. இருந்தாலும் டிராட்ஸ்கியர்களுடனான தனிப்பட்ட தங்களது நட்புறவுகளை அவர்கள் இன்னமும் துண்டித்துக் கொள்ளாமலிருப்பது நல்லதல்ல. ஆனால், இத்தகைய தோழர்களை – டிராட்ஸ்கியத்துடன் ஒட்டுமொத்தமாக சேர்ப்பது சிறு சிறுபிள்ளைத்தனமானது”
– Ibid, pp.43-4
1937 பிப்ரவரி – மார்ச் பிளீனத்தில் ஸ்டாலின் முன்வைத்ததை குருச்சேவ் தன் சொந்த வார்த்தைகளால் எப்படி வெளிபடுத்தினார் என்பதை மிகச்சரியாக நினைவு கூர்வோம்:
எல்லாவற்றுக்கும் அப்பால், டிராட்ஸ்கியைச் சுற்றியிருந்த மக்களின் பாரம்பரியம் எந்தவகையிலும் முதலாளித்துவ சமூகம் என்று எந்தவழியிலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களில் ஒருப்பகுதியினர் கட்சியின் அறிவுத்துறை சார்ந்தவர்கள். குறிப்பிட்ட பகுதியினர் தொழிலாளர்களிடமிருந்து நியமிக்கப்பட்டவர்கள். நாம் பல தனிமனிதர்களை அவர்கள் காலத்தில் டிராட்ஸ்கியர்களுடன் சேர்ந்தவர்கள் என்று பெயர் குறிப்பிடலாம். ஆனால், அதே தனிமனிதர்கள் புரட்சிக்குமுன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும், இந்த மாபெரும் புரட்சியின் வெற்றிகளை ஒருங்கிணைத்தபோதும் தொழிலாளர் இயக்கங்களில் தங்களை தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர்கள். அவர்களில் பலர் டிராட்ஸ்கியத்துடன் முறித்துக்கொண்டு லெனினிய நிலைக்குத் திரும்பினார்கள்’ (மேலே பார்க்க)
1930-களில், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் டிராட்ஸ்கியர்கள் என்ற பிரச்சனை திரும்பவந்தது என்பதை இங்கு பரிசீலிப்பது வசதியாக இருக்கும் என்று ‘இரகசிய உரையின் ஒருபகுதியில் குருச்சேவ்:
1927-ல் 15-ஆவது கட்சிக் காங்கிரஸ் நிகழ்வில் வெறும் 4,000 வாக்குகள்தான் எதிர்த்தரப்பான டிராட்ஸ்கிய- ஜியானோவீவியர்களுக்குக் கிடைத்தது. அப்போது 7,24,000 பேர் கட்சி தரப்பு நிலைபாட்டில் இருந்தனர் என்பதை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். 15-ஆவது கட்சி காங்கிரஸுக்கும், பிப்ரவரி – மார்ச் கட்சி பிளீனத்துக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளில் டிராட்ஸ்கியர்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர். பல முன்னாள் டிராட்ஸ்கியர்கள் தங்கள் சிந்தனைகளை, தங்கள் முந்தைய பார்வைகளை மாற்றிக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் சோசலிச கட்டுமானத்துக்கு வேலை செய்தார்கள். சோசலிச வெற்றியின் சூழல் நிலவும் நாட்டில் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைக்க அடிப்படை இல்லை என்பது தெளிவாகிறது”
1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக் குழு பிளீனத்தில் ஸ்டாலின் :
1927-இல் நமது கட்சியில் டிராட்ஸ்கியர்கள் பற்றி நடைபெற்ற விவாதங்களை மனதில் நினைவுகூருங்கள். அந்த நேரத்தில் இருந்த 8,54,000 கட்சி உறுப்பினர்களில் 7,30,000 பேர் வாக்களித்தார்கள் . அவர்களில் 7,24,000 பேர் போல்ஷ்விக்குகளுக்கு ஆதரவாக , டிராட்ஸ்கியத்துக்கு எதிராக வாக்களித்தனர். 4,000 கட்சி உறுப்பினர்கள் அல்லது ஒரு சதவீதத்தில் பாதியினர் டிராட்ஸ்கியர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது 2,600 கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி நின்றனர். இந்த எண்ணிக்கையிலும் பலர் இப்போது டிராட்ஸ்கியத்தின்மீது அவநம்பிக்கை கொண்டு அதைவிட்டு விலகிவிட்டனர்: மேலும் டிராட்ஸ்கிய சக்திகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற கருத்துக்கு நீங்கள் வந்தீர்கள் என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
J.V. Stalin, Mattering Bolshevism. NY; Workers Library Publishers. 1937, pp. 59-60. At http://www.marx2mao.com/Stalin/MB37.html (Emphasis added in both cases-GF)
ஸ்டாலினுடைய இந்தப் பேச்சிலிருந்து குருச்சேவ் மிக நன்றாக நகலெடுத்திருக்கிறார்!
டிராட்ஸ்கியர்களின் குற்ற உணர்வு பற்றி சுலோப்டலோல்:
டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் 1930-களில் வெளிநாடுகளில் அரசியலோடு இணைந்த நடவடிக்கைகளில் பிரச்சாரம் மட்டுமே செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அனால் அது அவ்வாறு இல்லை. டிராட்ஸ்கியர்கள் வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்கள். ஜெர்மன் இராணுவ புலனாய்வுத்துறையான (The Abwehr)’அப்வெஹ்ர்’ உடன் தொடர்புகொண்டிருந்த நபர்களைப் பயன்படுத்தி அவர்கள் 1937-ல் பார்சிலோனா குடியரசுக்கு எதிரான வன்முறை கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள். பிரான்சு, ஜெர்மனி சிறப்புப் புலனாய்வு சேவையில் இருந்த டிராட்ஸ்கிய வட்டங்கள், அந்த நாடுகளில் உள்ள சோவியத் யூனியனை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிக்கொடுக்கும் செய்திகள் வந்தன. 1937-ல் பார்சிலோனா வன்முறைக் கிளர்ச்சியில் டிராட்ஸ்கியத் தலைவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் நமக்கு ஸ்சுல்ஸே – பாய்ஸன் மூலம் தெரிவிக்கப்பட்டது …. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தகவலை நமக்கு தந்தார் என அவர் மீது கெஸ்டாபோ குற்றம் சாட்டினார். இது ஹிட்லரின் நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுத்தந்தது.
மற்ற எடுத்துக்காட்டுக்கள்:
1941-இல் பாரிஸில் தமது வசிப்பிடங்களில் மறைந்திருந்த நமது பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை டிராட்ஸ்கியர்கள் தங்கள் அப்வெஹ்ர்’ உறவுகளைப் பயன்படுத்தி தேடினார்கள். இதை வஸிலெவ்ஸ்கி நமக்கு தெரிவித்தார். அவர் 1940 இல் கோமிண்டர்னின் செயற்குழுவில் கலந்து கொள்ளும் உரிமை கொண்ட பதவியில் நியமிக்கப்பட்டவர்.
English translation from Gen. Sudplatov, The Intelligence Service and the Kremlin, Moscow 1996.p 58:
சுடப்லடோவ் கருத்தை சரிபார்க்கும் நாஜி இராணுவ நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட பத்தி : ஆங்கில மொழியாக்கம்:
குற்றம்சாட்டப்பட்டவர் 1938-களின் துவக்கத்தில் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின் போது, பார்ஸிலோனாவின் எல்லையில் அலுவலகப்பொறுப்பில் இருந்தார். அவர் சிவப்பு அரசுக்கு எதிரான உள்ளூர் கலகக்காரர் என்பதை உணர்ந்து ஜெர்மனியின் இரகசிய சேவையில் ஒத்துழைக்க தயாரானர். இந்தச் செய்தி போலினிட்ஸ் தகவலுடன் அவரால் பாரிஸிலுள்ள சோவியத் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
(இந்த போலினிட்ஸ் என்பவர் ஜி செல்லாவான் போலினிட்ஸ். அண்மையில் ‘சிவப்பு இசைக்குழுவில் -Rote wanelle- நாஜிகளுக்கு எதிரான சோவியத் உளவுவேலையில் நியமிக்கப்பட்டவர். அவர் யுனைடெட் பிரஸ்ஸுக்காக வேலை செய்தார். அவர் இந்த அறிக்கையை சோவியத் தூதரக அஞ்சல் பையில் திணித்தார்” Shareen Blair Brysac, Resistung Hitler. Mildred Harnack and the Red Orchestra. Oxford University Press, 2000,p.237)
நூல் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்
ஆசிரியர் : குரோவர் ஃபர்
தமிழாக்கம் : செ.நடேசன்
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
விலை : ரூ.500
தொடர்பு : 94866 41586
வேளாண் சட்ட திருத்தங்களை மத்திய அரசு கைவிட கோரி டெல்லி போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம் என்கிற தலைப்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (20/12/2020) மாலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் போராடிவரும் பஞ்சாப் அரியானா விவசாயிகளின் போராட்ட குணத்தையும் அதில் உயிர் நீத்த தியாகிகளின் தீரத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் முதலில் அவர்களுக்கு “வீர வணக்கம்” நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது.
படிக்க :
♦ பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !
மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி, தனது தலைமை உரையுடன் கூட்டத்தை துவங்கி வைத்தார். இந்த வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் அரியானா விவசாயிகள் குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் சாரை சாரையாக ஊர்வலமாக வந்து எப்படி இவ்வளவு தீரத்துடன் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர் என்பதை பார்க்கும் போது ஒரே வியப்பாக உள்ளது. இது போன்ற போராட்டங்கள் தான் நாடு முழுவதும் நடக்க வேண்டும். அதற்கு பஞ்சாப் அரியானா விவசாயிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தன் தலைமையுரையில் கூறினார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது, இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; ஏனென்றால் மன்னர்கள் காலத்தில் தன் படைகளை எல்லாம் எல்லையில் குவித்து வைத்து தன்னுடைய பலத்தை காட்டி மக்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்வார்கள். அதுபோலத்தான் இந்த கார்ப்பரேட் காவி மோடி அரசு டெல்லி எல்லைப்பகுதியில் ராணுவத் துருப்புகளை நிறுத்திவைத்து அங்கு போராடி வரும் விவசாயிகளை மிரட்டும் விதமாக நடந்து கொண்டது ஆனால் அங்கு விவசாயிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறினர். இந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை நாங்கள் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் இப்போராட்டம் ஒன்று வெல்லும் இல்லையேல் இங்கே மடிந்து சாவோம் என உறுதியுடன் போராடி வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து பல கலைஞர்கள் இந்த மத்திய அரசிடம் வாங்கிய சக்ரா, சாகித்திய அகடாமி போன்ற விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர் இது பெரும் அவலம் என்பதை புரிந்து கொண்ட சாகித்திய அகடாமி விருதை திரும்ப பெற எங்களுக்கு உரிமை இல்லை என கூறி வருகின்றனர்.
இப்போராட்டத்திற்காக தன்னுடைய சிறைத்துறை டிஜிபி பதவியை துறந்த லக்மிந்தர் சிங் ஜாகர் முதல் பிஎச்டி பட்டம் படித்த இளைஞர்கள் வரை அவர்கள் கூறுவது ஒன்றுதான்; ”முதலில் நாங்கள் விவசாயிகள் விவசாயிகளின் பிள்ளைகள் பின்புதான் காவலர்கள் அதிகாரிகள்” என வர்க்கப் பார்வையுடன் பதாகைகளை ஏந்திக் கொண்டு இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆர் எஸ் எஸ் சங்கிகளுக்கும் ஊடகங்களுக்கும் மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
பஞ்சாப் அரியானா விவசாயிகள் போன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், ஒரே வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான் இந்த கார்ப்பரேட் காவி அரசை நாம் வீழ்த்த முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.
இறுதியாக மக்கள் அதிகாரம் மதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றி உரையாற்றினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நாடு முழுவதுமுள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.
வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தொடங்கிய விவசாயிகளின் இந்தப் போராட்டமானது, தற்போது அதானி குழுமத்தின் பொருட்களை புறக்கணிப்போம் என்ற தனியார்மய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்துள்ளது.
இப்படி சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாஜக, போராட்டத்திற்கு பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாக போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத பழைய படங்களை தற்போது நடந்துவரும் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டு வருகிறது.
படிக்க :
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
♦ அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !
போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்தினை அறிவித்தார்கள் விவசாயிகள். அன்றைய தினத்தில் எடுக்கப்பட்டது என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
அப்படி பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தில், ‘தெருவின் நாலா புறமும் காய்கறி பழங்கள் சிதறியிருப்பதை’ நாம் பார்க்க முடியும். இது விவசாயிகள் அறிவித்திருந்த பாரத் பந்த் அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், விவசாயிகளின் பாரத் பந்திற்கு வியாபாரிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கோபத்தினால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாபாரிகள் மீது நடத்திய வன்முறை வெறியாட்டம் என்றும் இப்புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பப்பட்டது.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புஷ்பேந்திரகுல்ஷ்ரேத் என்பவர், “கல்வியறிவற்றவர்களே (விவசாயிகளே) இதுதான் உங்கள் பாரத் பந்தா? ஏழைகளின் உணவினை வீணாக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால், எந்தளவிற்கு கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தினை பகிர்ந்த மேலும் சிலர், “விவசாயிகள் என்ற போர்வையில் பாரத் பந்திற்கு அழைப்புவிடுத்த துரோகிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்கள். இது முகநூலிலும், ட்விட்டரிலும் அதிகளவில் பரப்பப்பட்டு, விவசாயிகள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை அதிகளவில் தூண்டியது.
உண்மையில் இது டிசம்பர் 8 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்ற உண்மை நிலவரத்தை ஆல்ட் நியூஸ் டாட் இன் (Alt news.in) என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து பார்க்கலாம்.
இது மே 5, 2020 அன்று அதாவது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெளிவாகியுள்ளது. இதற்கு ஒரு ஆதாரம், காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழு உறுப்பினரான சுரேந்திர ராஜ்புத் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கையில், அரசாங்கத்தின் முழு பாதுகாப்புடன் சாராயக் கடை இயங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி பழங்களை விற்ற வியாபாரிகள் மீது அரசு தனது வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துள்ளது” என்று இந்த புகைப்படத்தை மே 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.
दारू की दुकान पुलिस संरक्षण में खोली जा रही है और सब्ज़ी की दुकान तोड़ी जा रही हैं। वाह रे शासन वाह। pic.twitter.com/6JOazeRdJJ
— Surendra Rajput (@ssrajputINC) May 5, 2020
இரண்டாவது ஆதாரம், இந்தப் படத்திலுள்ள ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டில், WB என்று குறிப்பிட்டுள்ளது. கடைகளின் பெயர் பலகைகளிலும் வங்காள மொழியில் எழுதப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இதுகுறித்த ஒரு பதிவும் வங்காள மொழியில் பகிரப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் புகைப்படத்திற்கும் தற்போது டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.
இது போன்று போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத பழைய படங்களை போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் என்று பகிரப்பட்டு வருகிறது.
இதில், முதல் புகைப்படத்தில் ஒருவர் வாகனம் ஒன்றினை சேதப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. இது பாரத் பந்த் அன்று நடத்தப்பட்ட வன்முறை என்ற பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 10, 2018 அன்று தி அவுட்லுக் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் இப்புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் நபர் ஜன் அதிகார் கட்சியின் ஆதரவாளர் என்றும் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து அக்கட்சி நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் உண்மை தெரியவருகிறது.
இரண்டாவது புகைப்படத்தில் கொடியுடன் இருக்கும் இருவர், இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தாக்கும்படியான காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படமும் 2018 ஆம் ஆண்டு அதே அவுட்லுக் இணையத்தில் வெளியானது. எரிவாயு விலைவாசி உயர்வு மற்றும் பணமதிப்பு இழப்பை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது புவனேஷ்வரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்களில், பிரதான சாலை ஒன்றில் வாகனத்தை மறித்து கற்களையும் தடியையும் கொண்டு தாக்கும் காட்சியைப் பார்க்கலாம். இந்தப் படமும் 2018 ஆம் ஆண்டு ஜன் அதிகார் கட்சியின் ஆதரவாளர்கள், எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து பாட்னாவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். எனவே இதற்கும் தற்போது நடந்துவரும் விவசாயப் போராட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவாக நிரூபணமாகிறது.
நான்காவது படத்தில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சியினை காணமுடியும். ஆனால் இது ஜூலை 27, 2018 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வேலை நிறுத்தப்போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அப்போது டி.என்.ஏ என்ற இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஐந்து படங்களையும் பாஜக தலைவரான கபில் மிஸ்ராவால் ஆதரிக்கப்படும் இணையதளமான Kreately-யில் கட்டுரையாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையை சம்பந்த் சரஸ்வத் என்பவர் எழுதியிருக்கிறார். அதில், “பாரத் பந்த் என்பதே தேச விரோதம். பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தவர்களையும், அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு நான் அவமானப்படுகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.
படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !
இப்படி விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது. விஷயங்களை தவறாக சித்தரிப்பது, மாற்று கருத்துக்களை விமர்சிப்பது, பேச்சு – எழுத்து சுதந்திரத்தினை ட்ரோல்கள் மூலம் ஒடுக்குவது என்பதனை ஒரு வழக்கமாகவே செய்து வருகிறது.
தீவிர வலதுசாரி குழுக்கள், ஆளும் பாஜக அரசுக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறது? என்பதையும் எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு மாய அலையை சமூக ஊடகங்களில் உண்டாக்கி வருகிறது? என்பதையும், எப்படி பல ட்விட்டர் கணக்குகள் பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன? என்பதையும் இந்தச் செயலை செய்வதற்காக இளைஞர்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும், ”நான் ஒரு ட்ரோல்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், பத்திரிக்கையாளருமான சுவாதி சதுர்வேதி நன்றாக விளக்கியிருப்பார்.
தற்போது பாஜக-வின் இத்தகைய சமூக வலைத்தளக் கணக்குகள் தங்களது உரிமைகளுக்காக போராடிக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாசிஸ்டுகளின் ஆட்சிக்கு என்றும் கோயபல்ஸ்கள் தான் ஆதாரமாக இருந்துள்ளனர். இன்று அந்த வேலையை சமூக வலைத்தளங்கள் மூலம் கூலிப்படையை அமர்த்தி செய்து வருகிறது பாஜக !
ஷர்மி
நன்றி : Alt News
நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT), தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணி நியமன மற்றும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு முடிவு செய்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் ஐஐடி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பேராசிரியர் வி.ராம் கோபால்ராவ் (இயக்குனர், ஐஐடி டெல்லி), அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு, ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்களின்போது பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு நடைமுறையை முற்றிலும் ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது.
உலகில் உள்ள மற்ற முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக சீர்மிகு செயல்பாடு தேவைப்படுவதாகவும், உலகத்தரம் வாய்ந்த கல்வி, ஆய்வுப்பணிகள், ஆசிரியப்பணி ஆகியவற்றை சிறப்பாக நிறைவேற்ற இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது பொருத்தமில்லாதது என்கிறது கோபால்ராவ் அறிக்கை.
மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பிரிவு 4-ன்படி இட ஒதுக்கீடு இல்லாத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில், ஐஐடி- ஐஐஎம் ஆகியவற்றையும் சேர்த்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் இருந்து ஐஐடி நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தக் கமிட்டி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எதிராக தனது பரிந்துரையை கொடுத்திருக்கிறது.
இப்பரிந்துரையின் அறிக்கையில், திட்டம் இரண்டில் பேராசிரியர் அடுக்கு ஒன்று மற்றும் அடுக்கு இரண்டு பதவிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறது. தொடர்ந்து வரும் குறிப்புகளில் மிக தந்திரமாக உதவிப் பேராசிரியர், பேராசிரியர் பதவிகளுக்கு ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஒரு ஆண்டுக்குள் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் நிரப்பப்படவில்லை என்றால், நிரப்பப்படாத காலியிடங்களை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்வது, (carry forward of backlog vacancies) என்ற நடைமுறையை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடும் இந்தப் பரிந்துரை உருவாக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடி இன தேசிய ஆணையத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும். சம்மந்தப்பட்ட அமைச்சகங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற இப்போது உள்ள நடைமுறைகளை அப்பட்டமாக நிராகரிக்கும் வகையில் இந்த பரிந்துரை அமைந்துள்ளது.
பரிந்துரையின் மூன்றாவது பிரிவு தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவர்கள் முனைவர் பட்டப் படிப்புகளில் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுவதை உறுதி செய்வதாகக் கூறினாலும், அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதை தடை செய்யும் மறைமுக நோக்கத்தோடு இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யும் தேர்வு இருக்குமாம்.
தகுதி – தகுதி என்று இவர்கள் ஓலமிடுவதன் நோக்கம் ஏகலைவன் கட்டை விரலை காவு வாங்கிய கதைதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணாசிரமக் கொடுமைகளை அரங்கேற்றி, அடித்தள உழைக்கும் மக்கள் கல்வியை கற்க விடாமல் தடுத்து நிறுத்திய பார்ப்பனியம் மீண்டும் புதிய வடிவம் எடுக்கிறது. போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறித்தெடுக்கிறது.
பார்ப்பன உயர்சாதியினர் தவிர மற்றவர்கள் எவரும் படிக்கக் கூடாது என்ற மனுநீதி கோட்பாட்டை, மீண்டும் தகுதி, திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின்னே மிகவும் தந்திரமாக அரங்கேற்றும் சதித் திட்டத்தை உள்ளடக்கியதுதான் இந்த பரிந்துரை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிலுள்ள 23 ஐஐடி-களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 9.2% தாழ்த்தப்பட்ட மாணவர்கள், 2.1% மலைவாழ் இன மாணவர்கள்; இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டின் அளவை கூட இது எட்டவில்லை. கான்பூர் ஐஐடியில் அனுமதிக்கப்பட்ட மலைவாழ் மாணவர்கள் 0.5%, பார்ப்பனர்களின் கோட்டையான சென்னையில் 4% விழுக்காடு (ஆதாரம்: இந்திய கல்வி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய கடிதம்).
படிக்க :
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது
♦ அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து
இந்திய உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளவர்கள் யார்? பலன் அடைபவர்கள் யார்? என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகிறது.
உலகில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் சோதனை செய்து லண்டன் டைம்ஸ் ஏடு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. 290-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள், ஒரு கோடிக்கும் மேலான மாணவர்கள் உள்ளடக்கிய உயர் கல்வி அமைப்பு கொண்ட இந்திய நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி தரவரிசையில் ஒரே ஒரு ஐஐடி நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவுமில்லை
“தகுதி – திறமை” என்று கொக்கரிக்கும் மெத்தப் படித்த பார்ப்பன அறிவுஜீவிகள், கல்வித்தரத்தை வளர்த்த இலட்சணத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டது லண்டன் ஏடு வெளியிட்ட ஆய்வறிக்கை.
ஐஐடி நிறுவனத்தில் ஒரு தொழில்நுட்பவியலாளரை உருவாக்க மக்கள் வரிப்பணம் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது. நுழைவுத் தேர்வில் முதல் வரிசையில் தேர்ச்சி பெற்று ஐஐடி நிறுவனத்தில் சிறப்பாக பட்டம் பெற்று, அமெரிக்க விசா கிடைத்து, சுக போகங்களில் திளைக்க சொர்க்கபுரி செல்லும் வண்ணக் கனவுகளோடு “தகுதி – திறமை படைத்த அம்பிகள்” பறந்து விடுகின்றனர்.
சமூகத்தின் விளிம்பில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவன் உயர்கல்வி வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசு நடத்துகின்ற அத்தனை போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
பல்வேறு தடைக்கற்களை தாண்டி உயர்கல்வியில் இடம்பிடிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஐஐடி நிறுவனங்களில் கோலோச்சி வருகின்ற பார்ப்பன உயர்ஜாதி கும்பல் காட்டுகின்ற பாகுபாட்டின் காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
நமது நாட்டில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் காட்டப்படும் பாகுபாட்டின் காரணமாக, தலித் மாணவர்கள் மீது வெறுப்பை உமிழும் பார்ப்பனக் கும்பலின் சாதி வெறியின் விளைவாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 27 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னை ஐஐடி முதலிடம் வகிக்கிறது. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்து, வர்ணாசிரம வெறிபிடித்த சனாதான கும்பல் சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொடூரமாக பழிவாங்கியது.
சக மனிதர்களும் நம்மைப்போல் மனிதர்களே, அவர்களும் நம்மைப் போல் செயல்திறனும் வாழ்க்கை வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்ற சனநாயக உணர்வை இன்றைய கல்வி உருவாக்கவில்லை.
நாடெங்கிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இட ஒதுக்கீட்டு சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் இந்த பரிந்துரை, கார்ப்பரேட் நலன் காக்கும் இந்துத்துவப் பாசிச மோடி அரசின் மிகப்பெரிய சதித் திட்டமாகும்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்காமல் அவர்களது கல்வி -வேலைவாய்ப்பு உரிமைகளில் மிகப்பெரிய தாக்குதலை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு தொடுத்துள்ளது.
இரணியன்
ஆயிரம் ஆயிரமாய் அணிவகுத்து இந்திய தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ட்ராக்டர் வாகனங்களில் அணி அணியாய் விவசாயிகள் டெல்லியை நோக்கி போர்ப்பரணி பாடி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண்மை திருத்த சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று மிகப்பெரும் அச்ச உணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உலகமயத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகளின் தலையில் பேரிடியாக இந்த சட்டம் அமைந்துள்ளது.
உலகமயம் – தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளால் விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இடுபொருள்கள் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த அரசு மானியங்கள் அளவை குறைப்பது, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது. இவற்றின் விளைவாக விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.
கடன் நெருக்கடி, வேலையின்மை, பட்டினிச் சாவுகள் – இதுவே இன்றைய கிராமங்களின் அவல வாழ்வு. கடன் நெருக்கடி தாங்காமல் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019-ல் மட்டும் 10 ஆயிரத்து 281 விவசாயிகளின் தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளன. 30 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
மூன்று வேளாண்மை அவசரச் சட்டங்களை 2020, ஜூன் மாதம் மோடி அரசு பிறப்பித்தது. 1955 ஆண்டு உருவாக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களை செய்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டம் யாருடைய நலனுக்காக? இந்த சட்டத்தால் ஆதாயம் அடையப் போவது யார்? இந்திய விவசாயத்தில் வேளாண் சட்டங்கள் 2020 அமுல்படுத்துவதால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?
விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு சட்டம்) 2020.
இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்படுகிறது என்று கூறப்படுகிறது. விவசாய உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல விலையை பெறுவார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது.
இந்தச் சட்டங்கள் தனியார் முதலீடுகளை கொண்டுவரும் என்கிறது மோடி அரசு. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் விவசாயத்தை மொத்தமாக ஒப்படைப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் இச்சட்டம். சட்டம் நாடாளுமன்ற அவையில் நிறைவேறுவதற்கு முன்பாகவே மோடியின் பேரன்பை பெற்ற கார்ப்பரேட் முதலாளி அதானி குழுமம் உணவு கொள்முதல் நிலையங்களை பிரம்மாண்டமான முறையில் கட்டி அமைத்ததன் மர்மம் என்ன?
அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்திய விவசாயத்தை காவு கொடுக்க கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசு முடிவு செய்துவிட்டது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளின் பின்னே அம்பானி, அதானி கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கொள்ளைக் கும்பலின் நலன் ஒளிந்திருக்கிறது.
வயலில் பயிர்கள் வளரும் நிலையிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை தீர்மானித்து விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தானியங்களை அறுவடை செய்து கொள்ளும். ஆனால் அதைவிட பலமடங்கு கொள்ளை லாபத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்றுக் கொள்ளும்.
நிலம் மட்டுமே விவசாயிகளிடம் இருக்கும். நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரங்களை, எந்த பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட்டுகளே தீர்மானிக்கும். விவசாய கருவிகள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவெடுக்கும். தீர்மானிக்கப்பட்ட விலைப்படி, உற்பத்தியும் கணக்கிட்டு, செலவுகளை கழித்துக்கொண்டு மீதி உள்ளதை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கும்.
உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுகின்ற பொழுது, அதற்கான காலம், விலை, விளைபொருட்களின் தரம் இவற்றை பற்றி மூன்றாவது நபர் சான்றிதழ் வழங்குவார்கள். தரம் இல்லை என்று உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மறுப்பதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.
இயற்கையின் சீற்றங்கள் – வறட்சி, வெள்ளம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொறுப்பேற்காது. அரசாங்கம் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழங்காது. தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் உற்பத்திப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்துவது நடக்கும்; தரசான்றிதழ் வழங்கினால் மட்டுமே நிறுவனங்கள் கொள்முதல் செய்யும்.
உற்பத்திப் பொருட்களை குறைவாக மதிப்பிட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்கள். விவசாயிகள் நஷ்டம் அடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வாங்கிய முன் தொகைக்கு ஈடு செய்ய இயலாமல் தங்களது வாழ்வாதாரமான நிலங்களை இழந்து நிற்கும் கொடுமைக்கு தள்ளப்படுவார்கள்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப் படுத்துதல்) சட்டம்2020
உற்பத்திப் பொருளை வாங்குவதிலும் விற்பதிலும் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை இந்த சட்டம் வழங்குவதாக மோடி அரசு கூறுகிறது. இலாபகரமான விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். உற்பத்திப் பொருள் விற்பனை தடை இல்லாமல் நடைபெறும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தும்போது ஒரு சில வினாடிகளில் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ளவருக்கு இங்குள்ள விளைபொருள் உரிமையாகும்.
மின்னணு வர்த்தகத்தின் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளூரில் சேமிப்புக் கிடங்கை வைத்துவிட்டு ஆன்லைன் மூலமாக பிற நாடுகளுக்கு விற்று விடுவார்கள். தொடர்ந்து பொருள்கள் ஏற்றுமதி ஆகிவிடும்.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், மண்ணின் மைந்தர்களுக்கு கையளவு உணவு பொருள் கூட கிடைக்காமல் போகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்களை பல மடங்கு விலை ஏற்றி கொள்ளை அடிப்பார்கள். இதன் விளைவாக உணவு பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் நிகழ இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற வர்த்தக சுதந்திரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இந்தியா, ஒரே விவசாயம், ஒரே சந்தை; இந்த லட்சியத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது மோடி அரசு.
நாட்டின் செல்வவளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது போதாதென்று மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அவர்களது கரங்களில் ஒப்படைக்கும் ஏற்பாடுதான் இந்த புதிய வேளாண் சட்டங்கள்.
எதிர்காலத்தில்
சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளுக்கும், மக்களை விழிப்புறச் செய்வதற்கும் விவசாயிகளின் போராட்டம்
துவக்க உரையாக அமைந்துள்ளது. இந்தத் துவக்க உரையைத் தொடர்ந்து முடிவுரையை இந்திய பாட்டாளி வர்க்கம் விரைவில் எழுதி முடிக்கும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
60 சதவீதத்துக்கும் மேலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இந்திய அரசின் கணக்குப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை 86 விழுக்காடு, பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு, இந்திய வேளாண்மை துறையின் கணக்கெடுப்பின்படி குறு விவசாயிகள் ஒன்னேகால் ஏக்கர் முதல் 2 -1/2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். சிறிய விவசாயிகள் இரண்டரை ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் நிலத்தைசொந்தமாக வைத்துள்ளனர். நடுத்தர விவசாயிகள் பத்து ஏக்கரில் இருந்து 25 ஏக்கர் வரை வைத்து உள்ளனர். விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையில் 86 விழுக்காடு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களும் அனைத்து விவசாயிகளையும், கூலி ஏழை உழவர்களையும், ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக் கூடியது. இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். விவசாயிகளுடைய ஒவ்வொரு வருமானமும் கணக்கிடப்பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
படிக்க :
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!
வேளாண் திருத்த சட்டங்கள் அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாநில உரிமைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை அமல்படுத்தும் மோடி கும்பலுக்கு கணக்கின்றி நிதி ஆதாரத்தையும் நன்கொடைகளையும் வாரி வழங்குகின்றன கார்ப்பரேட் அம்பானி, அதானி கும்பல். அதற்கு நன்றிக் கடனாக விவசாயத்தை முற்றிலுமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது என்பதே மோடி அரசு கொண்டுவந்திருக்கும் இச்சட்டங்களின் நோக்கம்.
ஆட்சியாளர்கள் தங்களது அகண்ட பாரத கனவை நிறைவேற்ற, மாநில உரிமைகளைப் பறித்து, ஒரே நாடு என்கின்ற ஒற்றை இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோம் நகர் பற்றி எரிகின்ற பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அலங்காரங்களோடு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்கிறார். உறைய வைக்கும் கடும் குளிரிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். கார்ப்பரேட் நிறுவனங்கள் வீசி எறியும் எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு சில ஊடகங்கள் மாபெரும் விவசாயிகளுடைய எழுச்சியை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
டெல்லி தலைநகரை அதிர வைத்துக் கொண்டிருக்கும் போராட்டம், பஞ்சாப், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டம் மட்டுமல்ல, இந்திய துணை கண்டத்தின் அனைத்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்கான போராட்டம். அனைத்து மாநில விவசாயிகளும் ஓரணியில் போராட்டக் களத்தில் நின்றால், ஆட்சியாளர்களின் ஆணவத்தை அடக்கி வெற்றியை நோக்கி இந்தப் போராட்டம் செல்லும்.
வரலாற்றின் திசையை மாற்றும் வல்லமை கொண்டவர்கள் இந்திய விவசாயிகள்.
டெல்லி தலைநகர் இதுவரை கண்டும் கேட்டிராத போராட்டக் களத்தை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இறுமாப்போடு இருக்கும் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்கிறது விவசாயிகளின் போராட்டம். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் பாசிஸ்டுகள் படு தோல்வி அடைவது திண்ணம்.
எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளுக்கும், மக்களை விழிப்புறச் செய்வதற்கும் விவசாயிகளின் போராட்டம் துவக்க உரையாக அமைந்துள்ளது. இந்தத் துவக்க உரையைத் தொடர்ந்து முடிவுரையை இந்திய பாட்டாளி வர்க்கம் விரைவில் எழுதி முடிக்கும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
இரணியன்
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து விவசாயிகளை சாகடிக்கும் மோடி அரசுக்கு எதிராக எனது கோபத்தையும், வலிமையையும் வெளிப்படுத்த என்னையே தியாகம் செய்கிறேன் – சீக்கிய மதகுரு பாபா ராம் சிங்
வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !
வீழட்டும் கார்ப்பரேட் காவி மோடி அரசு !!
பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி – என்.ஆர்.சி – கும்பல் படுகொலை
– இது மோடி இந்தியா
மெரினா எழுச்சி – ஷாகின் பாக் – டெல்லி சலோ
– இது மக்கள் இந்தியா
நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம், ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் இன்னும் மாறவில்லை. அவர்களது பேச்சில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.
– போராட்டக் களத்தில் ஒரு விவசாயி
ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்ட சிறையில் 2016-ம் ஆண்டில் 18 வயதாகும் அஜய் என்பவரிடம் ”நீ எந்த சாதியை சேர்ந்தவன்” என்று கேட்டு அவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் அவருக்கான வேலைகளை ஒதுக்குகிறார் சிறைக் காவலர். சிறையிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும், வார்டின் வராண்டாவை துடைக்க வேண்டும், தண்ணீர் சேமித்தல் மற்றும் தோட்டக்கலை போன்ற பிற வேலைகளுக்கு உதவ வேண்டும். அவரது பணி விடியற்காலையில் தொடங்கி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரை தொடரும். “இது ஒவ்வொரு புதிய கைதியும் செய்ய வேண்டிய ஒன்றல்ல. கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அவ்வேலைகளை செய்தனர்” என்று கூறுகிறார் அஜய்.
மேலும் அவர், “ஒருநாள் சிறை வார்டில் கழிப்பறைகள் இரவு முழுவதும் நிரம்பி வழிந்தது. சிறை அதிகாரிகள் அதை சுத்தம் செய்ய வெளியிலிருந்து யாரையும் அழைக்கவில்லை. அவர்கள், நீதான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றனர். இந்த வேலை எனக்கு தெரியாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் மெல்லிய மற்றும் இளமையான யாரும் இங்கு இல்லை என்று கூறி செப்டிக் டேங்கின் உள்ளே இறங்க சொன்னார்கள். நான் கீழே இறக்கி தொட்டி மூடியை திறந்து மனித மலத்தின் உள்ளே சென்றேன். துர்நாற்றத்தால் இறந்து விடுவேன் என நினைத்து அலறித் துடித்தேன். மற்ற கைதிகளிடம் சொல்லி என்னை வெளியே இழுக்கச் சொன்னார் ஒரு சிறை காவலர். இச்சம்பவம் மிகவும் வேதனையளித்தது” என்கிறார் அஜய்.
படிக்க :
♦ சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
♦ ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !
மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை செய்யும் சட்டம் 2013-ம் ஆண்டில் திருத்தப்பட்ட பிறகு சிறை அதிகாரிகள் அஜய்யைச் செய்யுமாறு நிர்பந்தித்தது கிரிமினல் குற்றமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான சிறை கையேடுகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை சிறைச்சாலை சட்டம்-1894 ஐ அடிப்படையாக கொண்டுள்ளது. அதன்படி, பிராமணர் மற்றும் உயர்சாதி இந்து கைதி சமையல்காரராக வேலை செய்யும் தகுதியுடையவர் ஆகிறார்.
கோவா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநில சிறைகளில் சாதி அடிப்படையிலான தொழில்கள் இருந்தன. 2010 முதல் 2017-ம் ஆண்டுக்கு இடையில் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல வழக்குகளை எதிர்கொண்ட லலிதா என்ற பெண் கைதி பைக்குல்லா பெண்கள் சிறையில், எழுதப்படாத சிறை நடைமுறை இருந்ததாக கூறுகிறார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு மீதான வழக்கில் கைதான பிரக்யா தாகூருடன் லலிதாவும் இருந்துள்ளார்.
பிரக்யா கைது செய்யப்பட்டதும் சிறைச்சாலையிலும், சிறை அதிகாரிகளிடமும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். அவருக்கென ”வி.ஐ.பி செல்” என அழைக்கப்படும் மூன்று அறைகளை உடைய தனி அறை ஒதுக்கப்படுகிறது. புதிதாக சமைத்த வீட்டு உணவு விடியற்காலையில் சிறைச்சாலையை அடையும். ”ஜாட்” எனும் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பெண் அவரது மெய்க் காப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு உள்ளூர் தலித் பெண் அவரது கழிப்பறையை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டார் என்று கூறினார் லலிதா.
இந்த பிரக்யாதான் 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு போபால் தொகுதியில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத பெண் ‘சாமியார்’ தான் சமீபத்தில், தங்களை சூத்திரர்கள் என்று அழைப்பதை பல சூத்திரர்கள் தவறாக நினைக்கிறார்கள். அவர்களிடம் போதுமான புரிதல் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், ஒரு சத்திரியரையோ, பிராமணரையோ, வைசியரையோ அப்படி வர்ணங்களின் அடிப்படையில் அழைத்தால் அவர்கள் தவறாக நினைப்பதில்லை என்றும் சூத்திரர்கள் மட்டும்தான் தவறாக நினைப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பிரக்யா கூறுவதைத் தான் அதாவது மனுநீதியைத் தானே இந்திய சிறைச்சாலைகள் இன்று நடைமுறைப்படுத்துகின்றன.
சிறைச்சாலை சாதிப் படிநிலைக்கு தமிழக சிறைச்சாலையும் விதிவிலக்கல்ல. 1994-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் குடும்ப சண்டை ஒன்று வன்முறையாக மாறியது. அந்த கொலைக்காரத் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேரில் செல்வம் என்ற 20 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்படுகிறார். அவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்வம் குற்றவாளி என நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. அந்த சமயம் சிறையில் தேவர்கள், நாடார்கள், பள்ளர்கள் என்று கைதிகள் சாதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனித்தனி அறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்கிறார் செல்வம்.
படிக்க :
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?
♦ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
மேலும் அவர், ”தேவர்கள் இருக்கும் சிறை கேண்டீன், நூலகம், மருத்துவமனைக்கு அருகில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதற்கு அருகில் நாடார் சமூகத்தை சேர்ந்த கைதிகள் இருந்தனர். தொலைத்தூரத்தில் கடைசியாக பள்ளர் சமூகத்தை சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டனர்” என்று கூறினார்.
”இந்திய அரசு சிறைக்கு வெளியே பிரிவினை மற்றும் பாகுபாட்டை நியாயப்படுத்த முடியுமா? அப்படியானால் சிறைகளில் மட்டும் இது எப்படி நியாயமானது?” என்று கேள்வி எழுப்புகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆர்.அழகுமணி.
மக்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்கும் மனுஸ்மிருதியை தீயிட்டு எரித்தார் அம்பேத்கர். அதை மீண்டும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு நிறைவேற்றத் துடிக்கிறது பாசிச மோடி கும்பல். ஆட்சி நாற்காலி முதல் சிறைச்சாலை வரை சாதியால் கட்டமைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த சாதிய கட்டமைப்பைத் தகர்க்க பார்ப்பனியத்தையும் அதைக் கட்டிக்காக்கும் சங்க பரிவாரக் கும்பலையும் ஒழிக்காமல் சாத்தியமில்லை.
மேகலை
நன்றி : The Wire
வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து குஜராத் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி அரசு.
கடந்த டிசம்பர் 6 அன்று மோடி பிறந்த மண்ணாகிய குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்பாய் அம்பாலியா, யாக்கூப் குராஜி, ஜயேஷ் பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைத்து, குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டத்தில் டெல்லி சலோ போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.
கிட்டத்தட்ட அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது குஜராத் மாநில அரசு. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க குஜராத் விவசாயிகளும் விரும்புவதாகவும், மாநில அரசு அதனைத் தடுப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார் அம்பாலியா.
படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
குஜராத் விவசாய சங்கத் தலைவர்களின் அழைப்புகள், வாட்சப் போன்றவற்றை போலீசு தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், அவர்களை சந்திக்க வருபவர்களையும் கண்காணிப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் ஒரு பிரபல விவசாய சங்கத் தலைவர் தெரிவித்திருக்கிறார்,
கடந்த டிசம்பர் 11 அன்று டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை போலீசு கைது செய்து எவ்வித அடிப்படைக் குற்றச்சாட்டும் இல்லாமல், அன்று இரவு முழுக்க சிறையில் அடைத்து வைத்தது என்கிறார், மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான யாக்கப் குராஜி.
அவரை விடுவிக்கக் கோரி பிற விவசாயிகள் போராடத் துவங்கிய பின்னர், அவரது குடும்பத்தினரை அழைத்து கேள்விகளால் துளைத்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில்தான் அவரை விடுவித்தது போலீசு.
கடந்த 15-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் பெரிய மின் உற்பத்தி நிலையத் துவக்க விழாவில் பேசிய மோடி, இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களது பிரச்சினைகளை கவனிக்கும் என்றும் கூறி, தேசம் ஒரு வரலாற்று முன்னெடுப்பை எடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள், விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து விவசாய சங்கத் தலைவர் அம்பாலியாவுடன் பேசியது கீழே சுருக்கித் தரப்பட்டுள்ளது.
முதலில், போலீசின் கண்ணில் சிக்காமல் எப்படித் தப்பினீர்கள் ?
டிசம்பர் 6 அன்று அகமதாபாத்தில் குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதி என்ற பெயரில் நடைபெற்ற எங்களது சந்திப்பை குஜராத் அரசு எப்படியோ கண்டுபிடித்து விட்டது. அந்த சந்திப்பில் “கிசான் சம்சாத்” நிகழ்ச்சியை டிசம்பர் 11 அன்று நடத்த வேண்டும் என அறிவித்திருந்தோம்.
அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னர், குஜராத் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அனுமதியளிக்கப்படவில்லை. எங்களது திட்டம் கிசான் சன்சத் நிகழ்ச்சியை நடத்திவிட்டு அங்கிருந்து 2000 விவசாயிகளும் தொழிலாளர்களும் பேரணியாக டெல்லி நோக்கிச் செல்வதுதான். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி மட்டும் பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் எங்களுக்கு அனுமதி தரவில்லை.
இவை அனைத்துக்கும் மேலாக, போலீசு, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யத் துவங்கியது.
இது தெரிந்தவுடன், நான் துவாரகாவில் இருக்கு எனது வீட்டிலிருந்து கிளம்பி, ஜுனாகர் பகுதிக்கு சென்றுவிட்டேன். எனது அலைபேசியை அணைத்து விட்டேன்., ஜுனாகர் பகுதிக்குச் சென்ற உடன் சிறிது நேரம் எனது போனை ஆன் செய்தேன். அதையும் உடனடியாகக் கண்டுபிடித்து தொடர்ச்சியாக என்ன அழைத்தது போலீசு. அங்கிருந்து செல்லக் கூடாது என்றும் என்னிடம் கூறியது.
ஆனால் நான் எனது தொலைபேசியை அணைத்துவிட்டேன். எனக்கு போலீசு எவ்வழியே என்னைப் பிடிக்க வருவார்கள் என்பது தெரியுமாதலால் அதற்கு எதிர்த் திசைஇல் பயணித்தேன். கட்ச்-க்கு சென்று அங்கிருந்து காந்திநகர் சென்றேன். போலீசு என்னைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்து நான் தப்பி வந்துவிட்டேன்.
ஜுனாகரில் மாறுவேடம் அணிய முடிவெடுத்தேன். எனது முடியை மாற்றிக் கொண்டேன். பாரம்பரியமான வேட்டியையே நான் அணிவேன். ஆனால் இரண்டு ஜீன்ஸ் மற்றும் சட்டைகளை வாங்கி அவற்றை அணிந்து கொண்டேன். எனது காரை மற்றொருவருக்குக் கொடுத்துவிட்டு, நான் மற்றொரு காரை மாற்றிக் கொண்டேன். டிசம்பர் 12 அன்று உதய்பூரை அடைந்தேன்.
அதே போல, தஹ்யாபாய் கஜேரா மற்றொரு விவசாய சங்கத் தலைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். போலீசு அவரது வீட்டு முன்வாசலில் இருக்கையில், தனது மகனின் உதவியுடன் பின்வாசல் வழியாகத் தப்பிவிட்டார். அவரது மகன் அவரை அருகில் உள்ள பேருந்துநிலையத்தில் விரைவாக க் கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளார். அங்கிருந்து உதய்பூருக்கு ரகசியமாக பேருந்து ஏறி வந்தார் தஹ்யாபாய்.
குஜராத்தில் 16 விவசாய சங்கத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசின் துரத்தலைத் தாண்டி வருவதற்கான பலம் அனைவரிடமும் இதேபோல கிடையாது. எங்களில் வெகு சிலரால் மட்டுமே இப்படிச் செய்ய முடிந்தது. எங்களைத் தவிர இதுவரை வெளியேற முடிந்தவர்கள் சுமார் 150 பேர் குஜராத்தை விட்டு வெளிவர முடிந்திருக்கிறது. எங்களில் சிலர் டெல்லி – ஜெய்ப்பூர் எல்லையில் இருக்கிறோம்; வேறு சிலர் சிங்கு எல்லையில் இருக்கிறார்கள்.
குஜராத விவசாயிகள் எப்போதிருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்?
குஜராத் விவசயிகள் முதல் நாளிலிருந்தே இந்த சட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து வருகின்றனர். அது வரைவாக இருக்கையிலும் அதனை நாங்கள் கண்டித்தோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் கண்டித்தோம். ஆனால் எங்களில் யாரும் எங்களது கண்டங்களை ஒன்றிணைந்து அறிவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு முந்தைய நாளில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என குஜராத் வியாபாரிகளுக்கு அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து 144 தடையுத்தரவை பிறப்பித்தது குஜராத் அரசு. இவையனைத்தும் ஒரு அச்சமிக்க சூழலை உருவாக்குவதற்காகவே போடப்பட்டது.
குஜராத் அரசு ஏன் நீங்கள் டெல்லி போராட்டக் களத்திற்குச் செல்வதை விரும்பவில்லை ?
அவர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்பதைக் கூறுகிறேன். அவர்கள் இயற்றிய புதிய சட்டங்களை அவர்கள் எந்த அளவிற்குப் புகழ்ந்து போற்றுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களிடம் இச்சட்டங்களை ஏற்கச் செய்ய முயற்சிக்கிறார்கள். தற்போது இந்தச் சட்டங்கள் பாராட்டப்படுவது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர், பயிர் காப்பீட்டு திட்டத்தை அவர்கள் கொண்டுவந்த போதும் அச்சட்டத்தையும் புகழ்ந்து போற்றினார்கள்.
ஆனால் இன்று குஜராத்தில், அந்த மொத்த திட்டமும் மிகப்பெரிய தோல்வி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
காப்பீட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஊழல்மிக்கவை இந்தத் திட்டம் பிரதமந்திரியின் கனவுத்திட்டம் என்று வேறு அழைக்கப்பட்டது. பின்னர் ஏன் அது குஜராத்தில் நிறுத்திவைக்கப்பட்டது? நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.
படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!
குஜராத்தில் இருந்து எத்தனை விவசாயிகள், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கிறார்கள்?
மேலும் சுமார் 200 பேர் தற்போது கிளம்பி டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களும் நான் ரகசியமாக கிளம்பியதைப் போல கிளம்புவார்கள். இப்போதைய நிலையில் குஜராத்தில் நீங்கள் டெல்லிக்குப் போகிறேன் என்று கூட சொல்ல முடியாது. குஜராத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தான் நீங்கள் இது குறித்திப் பேச முடியும். இதுதான் குஜராத் மாடல். எங்களது அனைத்து தொலைபேசிகளும், வாட்சப் உடையாடல்களும், எங்களது வாகனங்களும், அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.
இன்று (15-12-2020) பிரதம மந்திரி கட்ச் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்கிறாரே, அவர்களை சந்தித்து அவர்களது பயத்தைப் போக்குவதற்குச் சந்திக்கிறாரா ?
கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, கட்ச் பகுதி வர்த்தகத்துக்குச் சுதந்திரமான இடமாக மாறியது. இச்சமயத்தில், பல சர்தார்கள் கட்ச் பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்தார்கள். கட்ச் பகுதியில் உள்ள சர்தார்கள் அனைவரும் வர்த்தகர்களே தவிர விவசாயிகள் அல்ல. கட்ச் பகுதியிம் மண் விவசாயம் செய்யும் அளவிற்கு வளமான மண் அல்ல.
பாஜகவின் நடைமுறைத் தந்திரம் எப்போதுமே, தங்களது மொழியைப் பேசும் நபர்களிடம் பேசுவதுதான். அவர்கள் சந்திக்கும் விவசாயிகள் அதைச் செயுவார்கள். அதற்காக பாஜகவில் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் விவசாயிகள் இல்லை என்ரு ஆகிவிடாது. பாஜகவிலும் அவர்களது கட்சியின் சித்தாந்தத்தை நம்பும் விவசாயிகள் இருக்கிறார்கள்.
கட்டுரையாளர் : பவன்ஜோத் கவுர்
தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : The Wire
எரிவாயு சிலிண்டர் விலை நேற்று (15-12-2020) ரூ. 50 ஏற்றப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திலேயே இது இரண்டாவது முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, டிசம்பர் மாதம் 2-ம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ. 50-ஐ உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.
இனி எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டுமெனில் சுளையாக ரூ.710-ஐ எடுத்து வைக்க வேண்டும். ரூ.100 உயர்வு என்பது நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் மாற்றமாகத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும், சாதாரண மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக நடுத்தரவர்க்கத்தினரைப் பாதிக்கும் அதேவேளையில், விலைவாசி உயர்வு மூலம் சகல வர்க்கத்தினருக்குமான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
படிக்க :
♦ பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !
♦ இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆளும் அரசாங்கம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு சில பைசாக்கள் உயர்த்தினாலும், நாடெங்கும் நடைபெறும் போராட்டங்கள், இன்று அன்றாடம் விலை உயர்வு நடைபெறும் போது நடக்கவில்லையே ஏன் ?
எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 கூடினாலும், பெருவாரியானவர்களுக்கு அது மிகப்பெரும் பாதிப்பாகத் தெரிந்துவந்த நிலையில் ஒரே மாதத்தில் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்ட பிறகும் வெறும் முனங்கல்களோடு கடந்து போகிறதே ஏன்?
ஏனெனில் இவை அனைத்தும் நமக்கு இயல்பாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இயல்பாக்கல் என்பது பாஜகவின் ஆட்சிக் காலத்தில் கையாளப்படும் நடைமுறையல்ல. மாறாக காங்கிரஸ் காலத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகும்.
பெட்ரோல், டீசல் விற்பனை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ள முக்கியமான பாத்திரத்தைக் கருதிதான், பெட்ரோல், டீசல் விலையின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடும், மானியமும் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக நாடெங்கும் சரக்குப் போக்குவரத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்தவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதன் பின்னர், தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளின்படி இதனை சந்தையின் கட்டுப்பாட்டில், அதாவது பெட்ரோல் டீசல் சுத்திகரிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட்டது காங்கிரஸ் கட்சி.
கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் – சேவைத் துறையிலிருந்து இலாபம்சார்ந்த துறையாக – அரசின் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட துறையாக மாற்றி சந்தையின் கைகளில் விடவேண்டும் என்பதுதான், தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் அடிப்படை.
இந்த வகையில் மானிய விலையில் விற்கப்பட்டு வந்த பெட்ரொல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர் துவங்கி ரேசன் பொருட்கள் வரை அனைத்துக்கும் அளிக்கப்பட்டு வரும் மானியத்தை படிப்படியாக நிறுத்தி ஒளித்துக்கட்டும் வேலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியும், தற்போது மோடி ஆட்சியும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன.
இதற்கான அடித்தளமிட்ட திட்டங்கள்தான் ஆதார் மற்றும் ஜன்தன் யோஜனா. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற வகையில், மானிய விலையில் கொடுக்கப்படும் எரிவாயு சிலிண்டர், ரேசன் பொருட்கள், ஆகியவற்றை முழு விலை கொடுத்துவிட்டு வாங்கினால், உங்களது வங்கிக் கணக்கிற்கு மானியத்திற்கான தொகை வந்துவிடும்.. இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள் தொல்லை கிடையாது என்றெல்லாம் விளம்பரம் செய்தும், ஆதார் இல்லையெனில் ரேசன் பொருட்கள் கிடையாது என மிரட்டியும், மானிய ஒழிப்பை படிப்படியாக நடைமுறைப்படுத்தின காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள்.
மக்களை முதலில் சந்தை விலை கொடுத்து வாங்கச் செய்வது – அதாவது சந்தை விலைக்கு வாங்குவதற்கு மக்களின் சிந்தனையை பழக்கப்படுத்துவது – என்பதை வெற்றிகரமாகச் செய்து முடித்த பிறகு, வங்கியில் போடப்படும் மானியத்தையும் படிப்படியாக ஒழித்துக் கட்டுவது என்ற வகையில் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது பாஜக.
தற்போதைய விலை உயர்வை மிகத் தெளிவாக “மானியமில்லா” எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு எனப் போடுவதன் மூலம், மானியமுள்ள எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது போன்ற தோற்றத்தை அரசும் ஊடகங்களும் ஏற்படுத்துகின்றன.
நடைமுறையில் மானியமுள்ள எரிவாயு சிலிண்டர்களை வாங்குபவர்கள், மானியமில்லா எரிவாயு சிலிண்டருக்கான விலையைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். அப்படி வாங்கிய பின்னர் மானியத்தொகையை அரசு அவர்களது வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்திவிடும் என்று சொல்லப்பட்டது. அதற்காகத்தான் ஆதாரோடு எரிவாயு இணைப்பு பெறுவது இணைக்கப்பட்டது. ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது ?
கடந்த மாதத் துவக்கத்தில் 610 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு நடுத்தரவர்க்கத்தவருக்கு அவரது அக்கவுண்டில் அரசால் போடப்பட்ட மானியத்தொகை ரூ. 23.95. அவர் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் ரூ. 660 கொடுத்து வாங்கிய சிலிண்டருக்கும் அவருக்கு வங்கியில் அரசால் போடப்பட்ட மானியத் தொகை ரூ.23.95. இதுதான் மானிய விலை சிலிண்டரின் இலட்சணம்.
மானியமில்லா சிலிண்டருக்கும், மானிய விலை சிலிண்டருக்கும் உள்ள விலை வித்தியாசம் ரூ. 23.95. மானியமில்லா சிலிண்டரின் விலை உயரும் ஆனால் மானியம் மட்டும் உயராது. இதுதான் எதார்த்தம். இங்கே மானியம் என்று எதுவும் அளிக்கப்படவில்லை; படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல் விலை, டீசல் விலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சர்வதேச சந்தையில் ஏறினாலும், இறங்கினாலும் உள்ளூர் சந்தையில் ஏறுவது மட்டுமே பிரதானமாக நடக்கிறது.
படிக்க :
♦ ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
♦ உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?
தொழில் வளர்ச்சிக்காகவும், விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும், இழிவானதாகவும் சித்தரித்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதிலும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அனைத்தும் அரசுக்கு ஏற்படும் சுமைகள் என்பது போலவும் திட்டமிட்டு ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.
அதன் விளைவுதான், பாஜகவின் முந்தைய ஆட்சிக்காலத்தில், எரிவாயு சிலிண்டர் மானியத்தை தாமாக முன்வந்து கைவிடும்படி மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல்வேறு நடுத்தரவர்க்க “கனவான்கள்” தாமாக முன்வந்து கைவிட்டனர். பாவம் அடிமட்ட ஏழையான அம்பானி கூட தனக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை கைவிட்டார் தெரியுமா ?
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கும் மானியங்கள் அனைத்தும், வளர்ச்சிக்கானவையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
பெட்ரோல் விலை – டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு , ரேசன் கடை மானியம் ரத்து ஆகியவை சிறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வை படிப்படியாக முடக்குகின்றன. அவர்களை வாழமுடியாத நிலைக்குத் தள்ளுகின்றன.
இவை அனைத்தும் படிப்படியாக, நமக்கு இயல்பானதாக, மாற்றப்பட்டு அமல்படுத்தப்படும் போது எவ்வித எதிர்ப்பும் இன்றி மேற்கண்ட வர்க்கப் பிரிவினர் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த மானியங்கள் ஒழிக்கப்படுவதன் மூலமும், அரசாங்கத்தால் அதிகரிக்கப்படும் பெட்ரோல் டீசல் கலால் வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள் மூலமும் கிடைக்கும் பணத்தால் ஆதாயம் அடையப் போவது ஆத்மநிர்பார் மூலமும் இன்னபிற அரசு மானியங்கள் மூலமும், வரிவிலக்குகள் மூலமும் பயனடையும் கார்ப்பரேட்டுகள் தான்.
இப்போது புரிகிறதா ? வறுமைக் குறியீட்டில் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுக்கு அருகாமையில் இருக்கும் அதே நிலையில், அம்பானிகளும் அதானிகளும் செல்வச் செழிப்பில் அமெரிக்காவிற்குப் போட்டியாக இருப்பதன் ரகசியம் என்னவென்று ?
சரண்
முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எனக் கடந்த ஏழெட்டு மாதங்களில் விதவிதமான ஊரடங்குகளை இந்திய மக்கள் அனுபவிக்க நேர்ந்த பிறகும் கரோனா நோய்த் தொற்றை மத்திய, மாநில அரசுகளால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. நவம்பர் மாத மத்தியில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 இலட்சத்தைத் தாண்டியும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு இதுவரை இந்திய அரசு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அதேசமயத்தில் இந்நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவந்த மாதங்களில்கூட, இந்தியாவில் இந்நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்றுதான் மட்டையடியாகக் கூறி வந்தன மத்திய, மாநில அரசுகள்.
அதேசமயத்தில், இந்நோய்த் தொற்றின் பரவும் வேகம் அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல், மே மாதங்களில், அப்பரவலுக்குக் காரணம், ‘‘கரோனா ஜிகாத்’’ என்றொரு கண்டுபிடிப்பை அவிழ்த்துவிட்டன சங்கப் பரிவார அமைப்புகள். சங்கிகள் முஸ்லிம் வெறுப்பு திரியைப் பற்ற வைத்தவுடன், அதற்குக் கை, கால், மூக்கு வைத்து எழுதத் தொடங்கின ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள். குறிப்பாக, தமிழகத்தில் தினமணியும், தினமலரும் சங்கிகளே தோற்றுப்போகும் வண்ணம் கரோனா பரவலை முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி எழுதின. ‘‘இதை (கரோனா பரவலை) மதப் பிரச்சினை ஆக்கக்கூடாதெனக் கூறி அடக்கி வாசிக்க முயலுவது ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்’’ என ‘‘மன்னிக்க முடியாத குற்றம்!’’ எனத் தலைப்பிட்டுத் தலையங்கமே தீட்டியது, தினமணி. (தினமணி, 04.04.2020)
இந்திய முஸ்லிம்கள் மீது இப்படியொரு அபாண்டமான பழியைச் சுமத்துவதற்கு சங்கிகளுக்கும் தினமலம்களுக்கும் கையில் கிடைத்த சாக்கு, தலைநகர் டெல்லி−நிஜாமுதின் பகுதியில் மார்ச் 13 முதல் 15−ம் தேதி வரை நடந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பினரின் மாநாடு.
முஸ்லிம் மதம் சார்ந்த இம்மாநாடு அரசுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக நடந்த மாநாடு அல்ல. இம்மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல்வேறு முஸ்லிம் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து கலந்துகொள்வார்கள் என்பதும் அரசுக்குத் தெரியும். அப்படி வந்தவர்களுக்கு விசா அளித்து, விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை நடத்தி முடித்து அம்மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளித்ததும் மைய அரசுதான். மேலும், மாநாடு முடிந்த பிறகு, மாநாட்டுப் பிரதிநிதிகள் முஸ்லிம்கள் மத்தியில் மதப் பிரச்சாரம் செய்வதற்காக இந்தியாவெங்கும் பயணிப்பார்கள் என்பதும் மைய அரசிற்குத் தெரியும்.
இம்மாநாட்டின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்குவதற்கு முன்பே, அதாவது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே கரோனா உலக அளவில் பரவக்கூடிய எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துவிட்டது. அதற்கடுத்த பிப்ரவரி மாதத்திலேயே எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரசு கட்சியின் ராகுல் காந்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினார். இம்மாநாட்டை அனுமதிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு மோடி அரசிற்குப் போதிய கால அவகாசம் இருந்தும், மாநாடு குறித்து மட்டுமின்றி, இந்தியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவரது அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, கரோனா நோய்க் கிருமியை இறக்குமதி செய்யும் அபாயம் கொண்ட சர்வதேச விமானப் போக்குவரத்துகூட மார்ச் 23 அன்றுதான் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
மோடி அரசு இப்படி அலட்சியமாக இருந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மத்தியப் பிரதேச காங்கிரசு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும், தனது தனிப்பட்ட புகழுக்காக அமெரிக்க அதிபர் டிரம்பை அழைத்து வந்து குஜராத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு விழா நடத்துவதற்கும்தான் முன்னுரிமை கொடுத்து வந்தது மோடி அரசு.
இம்மாநாடு தொடங்கிய நாளன்றுதான் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளன்றுதான் இத்தடையுத்தரவு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது எனத் திருத்தப்பட்டது. அதற்கடுத்த பத்து நாட்களில் மக்கள் ஊரடங்கு, நாடு தழுவிய ஊரடங்கு, பொதுப் போக்குவரத்துக்குத் தடை என மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இந்தப் பத்து நாட்களில் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர். மாநாடு நடந்த பள்ளிவாசலிலேயே தங்கியருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊரடங்கின் காரணமாகத் தமது சொந்த ஊருக்கும், நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டனர்.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய முஸ்லிம்களுள் பலருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும்; மசூதியிலேயே தங்க நேரிட்ட பலருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு இந்தப் பின்னணிதான் காரணம். இதில் தனக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை எனக் கையைக் கழுவிவிட்டு, முழுப் பழியையும் முஸ்லிம்கள் மீது போட்டது மைய அரசு. தனது தவறுக்கு யாரையாவது பலிகிடா ஆக்க வேண்டும் என்ற தந்திரத்தையும் தாண்டி, மோடி அரசின் முஸ்லிம் வெறுப்பு அரசியல்தான், கரோனா ஜிகாத் என்ற இந்த அவதூறுக்கு அடிப்படையாகும்.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகுதான் உ.பி. முதல்வர் ஆதித்யநாத், தனது படை பரிவாரங்கள் சூழ அயோத்திக்கு வந்து ராமர் சிலையை இடமாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டார். இந்தியாவில் கரோனா அறிகுறி கொண்ட நோயாளிகள் கண்டறியப்பட்ட சமயத்தில்தான், பிப்ரவரி 21 அன்று ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமான கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்லாயிரக்கணக்கான இந்துக்களையும் வெளிநாட்டவர்களையும் திரட்டிவந்து மகா சிவராத்திரி களியாட்டத்தை நடத்தினார். மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் மார்ச் 13 அன்று அமிர்தபுரியில் நூற்றுக்கணக்கானரைத் திரட்டி சன்னியாசம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். ம.பி. காங்கிரசு அரசைக் கவிழ்த்த வெற்றியை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கொண்டாடினார் பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சௌஹான். இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.−ம், தேசிய ஊடகங்களும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டின் மீது மட்டும் பழியைப் போடுவதற்குக் காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கரோனா பரவலுக்கும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கும் முடிச்சுப் போட்டு, இந்திய முஸ்லிம்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்ற தீவிரத்தோடு ஆர்.எஸ்.எஸ். அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதென்றால், அம்மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள், மருத்துவ ஊழியர்களைத் தாக்குகிறார்கள் எனத் தம் பங்குக்கு பா.ஜ.க. அரசுகள் முஸ்லிம்கள் மீது பழிபோட்டன. தனிப்பட்டவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகள் இந்திய முஸ்லிம்கள் மீதான களங்கமாக மாற்றப்பட்டன.
மேலும், அம்மாநாட்டில் கலந்துகொண்ட உள்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம், வெளிநாட்டவர் சட்டம் மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டம் உள்ளிட்டுப் பல்வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் பல மாநிலங்களில் 209 வழக்குகள் தொடுக்கப்பட்டன. தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு தனிமைச் சிகிச்சையில் இருந்துவந்த ஆறு முஸ்லிம்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது, உ.பி. அரசு. தப்லீக் ஜமாஅத் தலைவர் மௌலானா முகம்மது ஸாத் மீது கொலைக் குற்றமாகாத மரண வழக்கு (culbable homicide)ப் பதிவு செய்யப்பட்டது. தப்லீக் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டன. இவற்றின் மூலம் ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறுகளுக்குச் சட்டபூர்வத் தகுதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த அவதூறுகளும், பழி தூற்றலும், வழக்குகளும் இந்திய முஸ்லிம்களுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. குறிப்பாக, உ.பி. மீரட் நகரிலுள்ள வாலண்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை முஸ்லிம் நோயாளிகளுக்கு மட்டும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கி, விளம்பரம் வெளியிட்டது. காரணம், முஸ்லிம்களை கரோனா குண்டுகள் என ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரச்சாரம். இதேபோன்று இராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை முஸ்லிம் நோயாளிகளுக்கு வாட்ஸ் அப் வழியாக மருத்துவ ஆலோசனை கொடுக்க மறுத்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தனது கிராமத்திற்குத் திரும்பிய ஒரு முஸ்லிம் தன்னார்வலர் இந்த அவதூறுகளின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இவை, பானைச் சோற்றுக்குப் பதம் போன்றவை.
மேலும், தப்லீக் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பென்றும், அதில் கலந்துகொண்டவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தப்லீக் ஜமாஅத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றும், இந்துக்களை மதம் மாற்றும் நோக்கத்தோடுதான் இம்மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது என்றும் இந்த அவதூறு பிரச்சாரம் அருவெறுக்கத்தக்க அளவில் உச்சத்தைத் தொட்டது.
தினசரிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பொது ஊடகங்களிலும்; முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்ட இந்த அவதூறுகளின், பல்வேறு மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளின் இன்றைய நிலை என்ன?
தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட 29 வெளிநாட்டவர்கள் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆறு முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த மும்பய் உயர்நீதி மன்றத்தின் அவுரங்காபாத் கிளை, அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துவிட்டதோடு, ‘‘அரசியல்ரீதியில் இயங்கும் அரசாங்கம் பெருந்தோற்றோ, பேரழிவோ ஏற்படும் காலங்களில் பலிகிடாக்களைத் தேடுகிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலிகிடா ஆக்கப்பட்டதற்கான வாய்ப்பிருப்பதைச் சூழ்நிலைகள் மூலம் அறிய முடிகிறது’’ எனத் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான நீதிபதி டி.வி. நளவாடே, ‘‘இந்த வெளிநாட்டு முஸ்லிம்கள்தான் இந்தியாவில் கரோனா பரவியதற்குக் காரணம் என்றொரு பிரச்சாரத்தை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் நடத்த முயன்றிருப்பது, அவர்களை மதரீதியாகத் துன்புறுத்தும் கொடுமையாகும்’’ எனக் குறிப்பிட்டதோடு, ‘‘தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவர் மீதும் வழக்குப் போடும் இந்த முடிவானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக விடப்பட்டிருக்கும் மறைமுகமான எச்சரிக்கையாகும்’’ என இவ்வழக்கின் பின்னுள்ள மோடி அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
‘‘இந்த வழக்குகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்திய முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக எதற்காகவும் எந்தவொரு வடிவிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன’’ என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார், நீதிபதி டி.வி.நளவாடே.
இவ்வழக்கை விசாரித்த அமர்வைச் சேர்ந்த மற்றொரு நீதிபதி ஸேவ்லிகர் நீதிபதி டி.வி.நளவாடேயின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தீர்ப்பின் செயல்பாட்டுப் பகுதியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
‘‘தப்லீக் ஜமாஅத் அமைப்பு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு அல்ல. அம்மதத்தைச் சீர்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் இயக்கம்’’ எனக் குறிப்பிட்டுள்ள அந்த உத்தரவு, ‘‘வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும்கூட, அம்மாநாட்டில் கலந்துகொண்ட எந்தவொரு தன்னார்வலரும் மாற்று மதத்தினரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை’’ எனத் தெரிவித்து, தப்லீக் ஜமாஅத் மீது புனையப்பட்ட மத மாற்றம் குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டது.
ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவதேவி கோவிலுக்கு வழிபடுவதற்காக வந்த இந்துக்கள் திடீர் ஊரடங்கின் காரணமாகத் தமது ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அக்கோவிலிலேயே தங்கிவிட்டதைக் கண்ணியமாகக் குறிப்பிட்ட ஊடகங்கள், தப்லீக் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்ததை, மசூதிகளில் வெளிநாட்டு முஸ்லிம்கள் பதுங்கியிருப்பதாகவும் ஒளிந்திருப்பதாகவும் குறிப்பிட்டு அவதூறு செய்தன. அதனை மறுத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, ‘‘அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவுகள் 25, 20, மற்றும் 21−இன்படி, சட்டப்படியான விசா பெற்று இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தமது மதக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
மும்பய் உயர்நீதி மன்றம் மட்டுமல்ல, இது போன்றதொரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ‘‘தப்லீக் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறைப்படுத்தியது அநீதியானது’’ எனக் குறிப்பிட்டதோடு, ‘‘இந்தியாவில் கரோனா பரவலுக்கு அவர்கள் காரணமல்ல’’ எனத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள்!
♦ முஸ்லீம்கள் மீதான தாக்குதலைத் தடுக்கச் சட்டம் : குஜராத் முசுலீம்களின் எதிர்பார்ப்பு
கர்நாடகா உயர்நீதி மன்றம் ஒன்பது வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது. தம் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த 44 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பூர்வாங்க ஆதாரமில்லை எனக் கூறித் தள்ளுபடி செய்துவிட்டது அந்நீதிமன்றம்.
மும்பய், சென்னை, டெல்லி, கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் அளித்திருக்கும் இத்தீர்ப்புகள் கரோனா பரவலை முகாந்திரமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., அதன் கைத்தடி ஊடகங்கள் மற்றும் மோடி அரசு ஆகியவை இணைந்து முஸ்லிம்கள் மீது ஓர் அவதூறுப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளன என்பதை நிரூபித்திருக்கும் அதேசமயம், மதரீதியான அவதூறையும், அடக்குமுறைகளையும் (persecution) ஏவிவிட்ட அக்கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்தவொரு நீதிமன்றமும் பரிந்துரைக்கவில்லை. முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்திருக்கலாம், ஆனால், குற்றவாளிகளுக்குச் சலுகை காட்டப்பட்டிருக்கிறது என்பதும்தான் உண்மை.
பின்குறிப்பு :
கரோனா பரவல் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை காரணமாக இந்த ஆண்டு தீபாவளி நாளன்று டெல்லி உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, அதுவும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த உத்தரவுகளெல்லாம் தீபாவளி நாளன்று கழிப்பறை காகிதமாகின. இந்துக்களின் இந்த அலட்சியம், பொறுப்பற்றதனம் குறித்து தினமணியோ, தினமலரோ மன்னிக்க முடியாத குற்றம் எனத் தலையங்கம் தீட்ட முன்வருமா? அப்படி யாராவது எழுதினால், அவர்களை ஆர்.எஸ்.எஸ். கும்பல் சும்மாவிட்டுவிடுமா?
அறிவுமதி
பாட்டாளி வர்க்கக் கட்சியை பற்றியும், அதன் அமைப்பு கோட்பாடுகளை பற்றியும் தெளிவான சித்திரத்தை இந்நூல் நமக்கு வழங்குகிறது.
அரசியல் கட்சி என்றால் என்ன? என்ற முதல் கட்டுரையிலிருந்து, உட்கட்சி செயல்பாடுகளின் வழிகாட்டுதல்கள் வரை 7 தலைப்புகளில், கட்சி அமைப்பைப் பற்றி ஒரு சிறந்த பார்வை கொண்ட வழிகாட்டுதல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
புராதன பொதுவுடமை சமூகம் சிதறுண்டு போன காலம் முதல் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்களின் போராட்டம் என்பது நிரந்தர நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. வர்க்கங்களாக பிளவுபட்டுள்ள, சமூக அமைப்பில் ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்கள் மோதிக்கொள்வது, வர்க்கப் போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவது தவிர்க்க இயலாதது. இத்தகைய வர்க்கப் போராட்டங்கள் கூர்மை அடைந்து புரட்சிகரமான சமுதாய மாற்றத்தில் முடிந்துள்ளது.
புரட்சிகரமான கட்சியானது தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு எல்லா வகைகளிலும் தயார் செய்வதாகும், பாட்டாளி வர்க்க கட்சி புரட்சியை நடத்த போதுமான வீரம், திடம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னால் நிற்கும் முன்னணிப் படையாக செயல்படும். அது சர்வதேச கட்சியாக செயல்படும்.
வர்க்கப் போராட்டத்தின் விளைவும் வெளிப்பாடும்தான் அரசியல் கட்சிகளின் தோற்றம். ஒரு வர்க்கத்தில் உள்ள செயல்திறன் உள்ள பிரதிநிதிகள் உணர்வுபூர்வமாக கூடி, கோட்பாட்டின் அடிப்படையில் கொள்கைகளையும் இலட்சியங்களை வென்று, சமூக மாற்றத்தை புரட்சியின் மூலம் சாதிப்பதற்காக கட்சி உருவாக்கப்படுகிறது. வர்க்கங்களின் விரிவான லட்சிய ரீதியான போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஆகியோரின் தத்துவ வெளிச்சத்தில் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சர்வதேச, ரஷிய தொழிலாளர் இயக்கங்களின் அனுபவங்களை கணக்கில் கொண்டு புரட்சிகரமான தொழிலாளர் கட்சிக்கு மாபெரும் தலைவர் லெனின் ஆக்கபூர்வமான வடிவத்தைக் கொடுத்தார்.
புரட்சிகரமான கட்சியானது தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு எல்லா வகைகளிலும் தயார் செய்வதாகும், பாட்டாளி வர்க்க கட்சி புரட்சியை நடத்த போதுமான செயல்திட்டமும் அதற்கான நடைமுறையும் கொண்டதாக இருக்கும். மக்களுடன் இணைந்து அவர்களுக்கு முன்னால் நிற்கும் முன்னணிப் படையாக செயல்படும். அது சர்வதேச கட்சியாக செயல்படும்.
அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு, அமைப்பு என்பதைத் தவிர பாட்டாளி வர்க்கத்துக்கு வேறு எந்த ஆயுதமும் இல்லை என்றார் லெனின்.
கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சியடைந்த பிரிவாகும், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை ஆகும். முன்னணி படையின் வலிமை, அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமானதாகும் என்று திட்டவட்டமாக வரையறுத்தார் லெனின்.
சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டு விடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.
“உழைக்கும் மக்களுக்கு அவர்களுக்கென ஒரு கட்சி தேவையா?” என்ற கட்டுரை ஸ்தாபன கோட்பாடு பற்றி தெளிவான புரிதலை உருவாக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்திற்கு சுதந்திரமான கட்சி தேவை என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டுமானால் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு கட்சி தேவை என்பதை புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
தேவையான அரசியல் தலைமை வானிலிருந்து விழுவதில்லை, அல்லது எவரும் தானமாக அளிப்பது இல்லை, முதலாளித்துவ வர்க்கத்தை சமாளிக்க வேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் அரசியல் தலைவர்களை உருவாக்கிக் கொண்டு தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும். அத்தகைய தலைமை எந்த விதத்திலும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு குறைந்ததாக இருந்துவிடக்கூடாது என்று லெனின் கூறுகிறார்.
கட்சியின் ஒற்றுமை நிலவுவதற்கு திட்டம் மற்றும் தந்திரோபாயங்கள் ஆகியவற்றில் உடன்பாடு அவசியமாகும், தத்துவார்த்த ஒற்றுமை மட்டும் கட்சி போர்க்குணத்துடன் செயல்பட போதாது. அமைப்புரீதியான ஒற்றுமை அவசியமானது.
புதிய கட்சி எவரை உறுப்பினராக சேர்க்கும்? என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை, ஊழியர்களின் கட்டமைப்பு வாழ்க்கையைப் பற்றி தெளிவான பார்வையை நமக்கு வழங்குகிறது. நம்மை நாமே முன்னணிப் படை என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, மற்றவர்கள் நம்மை முன்னணிப் படை என சொல்லும் வகையில் நமது நடவடிக்கை அமைய வேண்டும். நாம் முன்னே செல்வதை மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டு விடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை. தோல்விகள், பின்னடைவுகள், தவறுகள், உழைக்கும் மக்கள் கட்சியின் குறைபாடுகள் ஆகிய தீங்குகள் எதனால் ஏற்படுகின்றன? கட்சி கட்டுக்கோப்பு இல்லாமல் இருப்பதும், மார்க்சிய லெனினிய சிந்தனையின் மீது உறுதியான நம்பிக்கையற்றவர்கள், புரட்சிகர கருத்துக்கள் இல்லாதவர்கள், கட்டுப்பாடு இல்லாதவர்கள் கட்சியில் அங்கம் வகிப்பதும், அத்தகைய நபர்கள் சில சமயங்களில் கட்சிக்கு எதிராக இருப்பதும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட காரணமாக இருக்கிறது.
கட்சி தனது உறுப்பினர்களின் தரம், தூய்மை ஆகியவற்றின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு கண்காணிப்பை செய்து வருகிறது என்பதைப் பொருத்து, அமைப்பின் தரம் உயரும். போராடும் சக்தி பெருகும், அப்போதுதான் கட்சி மக்களின் தலைவனாக செல்வாக்கை செலுத்த முடியும்.
உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான், கட்சி சிறப்பாக இருக்கும் என்றும், கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியவர் அனைவரும் உறுப்பினர் ஆகலாம் என்றும் சந்தர்ப்பவாதிகள் கூறினர். ஆனால், கொள்கை கோட்பாடுகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள், தன்னல மறுப்பாளர்கள், சுய லாபத்தை மறுப்பவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார்.
கட்சி நடத்தும் போராட்டத்தின் வெற்றி கட்சி உறுப்பினர்களின் தூய்மையை பொறுத்தே அமைகிறது. புதிதாக கட்சி அமைப்பில் சேருபவர்கள் உடைய கல்வியறிவு பற்றி கட்சி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் கட்சி அமைப்பை ஒரு ஒழுங்கற்ற, இணைந்து செயல்படாத, உட்கட்சி ஒற்றுமை இல்லாத அமைப்பாக மாற்றிவிடும். மாறாக மத்தியத்துவம் மட்டுமே பின்பற்றபடுமானால் கட்சி மக்களிடம் இருந்து விலகிப் போய்விடும். குறிப்பிட்ட குழுவின் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். தங்களது அனுபவத்தையும், அறிவையும் கட்சி அணிகள் அளிக்க முடியாது.
பொதுவுடமைக் கட்சி புரட்சிகர மாற்றத்திற்காக போராடும் கட்சி, மாற்றத்தை வேகமாக கொண்டுவர இளைஞர்கள் தேவை. இளைஞர்களை வென்றெடுப்பது கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “நாம் எதிர்காலத்தின் கட்சி, வருங்காலம் இளைஞர்கள் உடையது, நாம் புதுமையைப் புகுத்தும் கட்சியினர். இளைஞர்கள் புதுமையைப் பெரும் ஆர்வத்துடன் பின்பற்றுவார்கள்,” என்றார் மாமேதை லெனின்.
மார்க்சிய லெனினிய கட்சியின் வழிகாட்டியாக இருப்பது ஜனநாயக மத்தியத்துவம். ஜனநாயக மத்தியத்துவம் என்பது அமைப்பு ரீதியான கொள்கை ஆகும். கட்சியின் உயிர்மூச்சு என்பது இரண்டு அமைப்பியல் கொள்கைகளைக் கொண்டது; உட்கட்சி ஜனநாயகம், மத்தியபடுத்தப்பட்ட தலைமை.
முழுமையான சுதந்திரமான விவாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட கூட்டு முடிவுகளின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். செயலில் ஒற்றுமை, விமர்சன சுதந்திரம் ஆகியவற்றை இணைக்கும் கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம். இதன் முறையில் விவாத சுதந்திரம்- விமர்சன சுதந்திரம்- செயல் ஒற்றுமை உடன் இணைக்கப்படுகின்றன.
படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ கட்சி நிறுவனக் கோட்பாடுகள்
கீழ்அமைப்புகள் மேல் அமைப்புகளை தேர்வு செய்கின்றன, மேல் அமைப்புகளுக்கு கட்டுப்படுகின்றன, பெரும்பான்மையோர் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். விவாதிப்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை சாத்தியமில்லை.
மத்தியத்துவம் இல்லாத ஜனநாயகம் கட்சி அமைப்பை ஒரு ஒழுங்கற்ற, இணைந்து செயல்படாத, உட்கட்சி ஒற்றுமை இல்லாத அமைப்பாக மாற்றிவிடும். மாறாக மத்தியத்துவம் மட்டுமே பின்பற்றபடுமானால் கட்சி மக்களிடம் இருந்து விலகிப் போய்விடும். குறிப்பிட்ட குழுவின் ஆதிக்க சக்தியாக மாறிவிடும். தங்களது அனுபவத்தையும், அறிவையும் கட்சி அணிகள் அளிக்க முடியாது.
சோவியத் யூனியன், மற்றும் உலக நாடுகளின் பொதுவுடமை இயக்கத்தின் அனுபவங்கள் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே மார்க்சிய லெனினிய கட்சியை கட்டமுடியும் என்று நிரூபணமாகியுள்ளது.
உலகின் பல நாடுகளில் இயங்கும் பொதுவுடமை கட்சிகளின் ஸ்தாபன அமைப்பு பற்றி இந்த நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமே மார்க்சிய லெனினிய தத்துவ ஞானம். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகளின் தலைமையில் சமத்துவ விடியலை காண்பதற்கு வலிமையான போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க கட்சி அமைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
சோர்வை அகற்றி, புத்துணர்வு பெற்று சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் ஊக்கமுடன் களமாட, கட்சி ஸ்தாபன கோட்பாடுகள் பற்றி தெளிவான புரிதல், முன் எப்போதையும்விட இப்போது தேவையாக இருக்கிறது. அறிந்த விஷயங்களாக இருந்தபோதும் மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு அவசியமாகிறது. கட்சியைப் பற்றிய புரிதலை உருவாக்க இந்த நூல் பெரிதும் பயன்படும்.
நூல் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை
பதிப்பகம் : அலைகள் வெளியீட்டகம்
ஆசிரியர் : ஏ. ஷாஜின்
தமிழில்: வி. என். ராகவன்
விலை : ரூ. 30
இணையதளத்தில் வாங்க இங்கே அழுத்தவும்
நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
‘‘தனிமனித சுதந்திரம் இவ்வாறு நசுக்கப்பட்டால், உச்ச நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருக்காகவும் நிற்கும்’’
− இப்படியொரு தார்மீக ஆவேசத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரும் அதன் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்காலப் பிணை வழங்கிய உத்தரவில் வெளிப்படுத்தினார்.
அர்னாப் கோஸ்வாமியைப் பற்றித் தெரியாத அரசியல் நோக்கர்கள் யாரும் இருக்க முடியாது. அர்னாபை அறிந்திராதவர்களுக்கு அவரைப் பற்றி ஒரே வரியில் கூற வேண்டுமானால், அர்னாப் ஊடகத் துறையில் இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ். பேர்வழி, மோடி விசுவாசி. தமிழகத்திற்கு பாண்டே போல, அவர் ‘‘தேசிய’’ பாண்டே. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே எட்டிக்காயாகக் கருதிவரும் பிரதமர் மோடியைக்கூட நேர்காணல் செய்யும் அருளாசி கிடைக்கப் பெற்றவர். அவர் நடத்திவரும் ரிபப்ளிக் டி.வி.யை பாரதிய ஜனதா கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்றே சொல்லலாம்.
மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா − காங்கிரசு கூட்டணி அரசு அர்னாபைக் கடந்த நவம்பர் 4 அன்று கைது செய்தது. பிணை மனுக்களை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் பொதுவான நடைமுறை. ஆனால், அர்னாப் தரப்பு விசாரணை நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டுப் பிணை மனுவை மும்பய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அம்மனுவைக் காலதாமதம் எதுவுமின்றி நவம்பர் 9 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பய் உயர் நீதிமன்ற அமர்வு, ‘‘விசாரணை நீதிமன்றத்திலேயே பிணை மனு தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு மாற்று வழி இருக்கிறது. எனவே, அர்னாப் பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அம்மனு தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குள் அதனை விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.
இதனையடுத்து அர்னாப் தாக்கல் செய்த பிணை மனுவை அலிபாக் விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டியலிட்ட நிலையில், மற்றொரு பிணை மனுவை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தார் அர்னாப். கீழமை நீதிமன்றத்தில் பிணை மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது மரபு கிடையாது. மேலும், விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பிணை மறுக்கப்பட்ட நிலையில்தான் உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
ஆனால், உச்ச நீதிமன்றமோ இந்தப் பொது மரபை புறந்தள்ளவிட்டு, அர்னாப் தாக்கல் செய்த பிணை மனுவை அவசர வழக்குப் போல பாவித்து நவம்பர் 11 அன்றே விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, அன்றே அவருக்கு இடைக்காலப் பிணையும் வழங்கி உத்தரவிட்டது. ‘‘நாங்கள் இந்த வழக்கில் இன்று தலையிடாவிட்டால், அழிவுப் பாதையின் மேல் நடந்திருப்போம்’’ என இந்த அவசரத்திற்கு விளக்கமும் அளித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட். மேலும், தனது உத்தரவில் ‘‘அர்னாப் கோஸ்வாமியை போலிசு விசாரணைக்கு அனுப்புவது அவசியமா?’’ என்றும் கேள்வி எழுப்பினார், அவர்.
உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாகத் தலையிட வேண்டிய அளவிற்கு அர்னாப் கோஸ்வாமியின் கைது, அவ்வளவு முக்கியத்துவமிக்க வழக்கு கிடையாது. அர்னாப், தனது தொழில் நிமித்தமாக, அதாவது தனது பேச்சு மற்றும் எழுத்திற்காகக் கைது செய்யப்படவில்லை. மாறாக, அன்வாய் நாயக் என்பவரைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அர்னாப் கைது செய்யப்பட்டார்.
பண நெருக்கடி காரணமாக 2018−இல் தற்கொலை செய்து கொண்ட அன்வாய் நாயக், தனது தற்கொலைக் குறிப்பில் அர்னாப் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அர்னாப் கோஸ்வாமி நடத்திவரும் ரிபப்ளிக் டி.வி. நிறுவனம், தனக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய 83 இலட்சம் ரூபாயைத் தர மறுப்பதையும் அன்வாய் நாயக் தனது தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்ட இவ்வழக்கை, அன்வாய் நாயக்கின் மனைவி மறுவிசாரணை செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்ததாக மகாராஷ்டிரா போலிசு விளக்கமளித்தது. இதற்காக அர்னாபைக் கைது செய்திருக்க வேண்டியதில்லை என விமர்சித்துள்ள ஊடகங்கள்கூட, அர்னாப் கைது செய்யப்பட்டதைக் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் குறிப்பிடவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., சிவசேனாவிற்கு இடையே சமீபகாலமாக நடந்துவரும் மோதலுக்கும் அர்னாபின் கைதுக்கும் தொடர்புண்டு. அதனால்தான் அர்னாப் கைது செய்யப்பட்டவுடனேயே மோடி அரசின் அமைச்சர்கள் இந்தக் கைது அவசர நிலை காலத்தை நினைவுபடுத்துவதாகக் கொதித்துப் போனார்கள். அர்னாப் கைது செய்யப்பட்டது சிவசேனா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றபோதும், அதற்காக உச்ச நீதிமன்றம் இவ்வளவு பதட்டமடைந்திருக்க தேவையில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே, அப்படி இவ்விவகாரத்தில் நடந்துகொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இதே அவசரத்தை, ஆவேசத்தை எத்துணையோ மனித உரிமைப் போராளிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் மோடி அரசால் பழிதீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு தேசியப் பாதுகாப்புச் சட்டம், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டபோது காட்டியதில்லை.
அர்னாபுக்கு நீதி – மற்றவர்களுக்கு அநீதி
இழி புகழ்பெற்ற பீமாகோரேகான் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி செய்தார்கள், மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், நகர்ப்புற நக்சல்கள் என்பன அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள். ‘‘இந்த 16 பேரில் ஒருவரைத் தவிர, மற்றவர் யாரும் இந்த வழக்கோடு தொடர்புடைய எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி செய்தார்கள், இவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டுக்களுக்கு, இவ்வழக்கை நடத்திவரும் தேசியப் புலனாய்வு முகமை இதுவரை எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மேலும், குற்றப்பத்திரிகையிலும்கூட கொலைச் சதி பற்றிய குறிப்புகள் இல்லை’’ எனச் சுட்டிக் காட்டுகிறார்கள் குற்றஞ்சுமத்தப்பட்டோரின் வழக்குரைஞர்கள்.
எல்கர் பரிஷத் மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய இரண்டு முன்னாள் நீதிபதிகளுள் ஒருவரான பி.பி.சாவந்த், ‘‘இம்மாநாடு மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்று. இம்மாநாட்டிற்கு அணிதிரட்டி நடத்திய நீதிபதிகளான எங்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, இம்மாநாட்டோடு தொடர்பற்றவர்களைக் கைது செய்திருப்பது மோடி அரசின் நோக்கம் வேறு என்பதைக் காட்டுகிறது’’ என இந்தக் கைது நடவடிக்கையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஆகஸ்டு 2018−இல் கைது நடவடிக்கையைத் தொடங்கியது மோடி அரசு. அந்நடவடிக்கை இன்று வரை முற்றுப் பெறவில்லை. இவ்வழக்கில் 16−ஆவது குற்றவாளியாக 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமியை கடந்த அக்டோபரில் கைது செய்தது, தேசியப் புலனாய்வு முகமை. கடந்த ஏப்ரலில், கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவந்த நிலையைக்கூடப் பொருட்படுத்தாது, பேராசிரியரும் மனித உரிமைப் போராளியுமான ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார். அம்பேத்கரின் பேரனாக அறியப்படும் ஆனந்தை அம்பேத்கர் பிறந்த நாளன்று (ஏப்ரல் 14 அன்று) கைது செய்திருப்பதன் மூலம், தாழ்த்தப்பட்டோரின் உணர்வுகளை அவமதித்திருக்கிறது, மோடி அரசு.
புத்தக வெளியீட்டாளர் சுதிர் தவாலே, வழக்குரைஞர்கள் சுரேந்திர காட்லிங், சமூகச் செயற்பாட்டாளர்கள் ரோனா வில்சன் மற்றும் மகேஷ் ரௌத், கல்வியாளர் ஷோமா சென் ஆகியோர் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. வழக்குரைஞர்கள் அருண் ஃபெரேரியா, சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வெர்னான் கன்சல்வ்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. புரட்சிகர கவிஞர் வரவர ராவ், பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டும் ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இவர்களுள் பலர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிக்கிறது. அவர்களுக்கு எளிதில் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற மோடி அரசின் தீய உள்நோக்கம் காரணமாகவே இக்கருப்புச் சட்டம் அவர்கள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனை − காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு அக்கூட்டணி அரசு முன்வந்தவுடனேயே, இந்த வழக்கை மகாராஷ்டிரா போலிசிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்குத் தன்னிச்சையாக மாற்றியது, மோடி அரசு. இவர்களைச் சுதந்திர மனிதர்களாக வெளியே விட்டுவிடக் கூடாது, விசாரணை என்ற போர்வையில் இவர்களைச் சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர, வழக்கை மாற்றியதற்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது.
படிக்க :
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி !
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
அர்னாப் கோஸ்வாமி பத்திரிகையாளர் என்ற போர்வையில் உலாவரும் இந்து மதவெறி பாசிஸ்டு. மோடி அரசை நத்திப் பிழைப்பவன். அதேசமயம் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என இன்னமும் நீதிமன்றங்களால் பிணை வழங்கப்படாமல் சிறையில் வாடும் இவர்களோ தொழிலாளர்களின், தாழ்த்தப்பட்டோரின், பழங்குடியினரின் சமூக உரிமைகளுக்காகவும், உழைக்கும் மக்களின் வாழ்வாதார, ஜனநாயக உரிமைகளுக்காகவும் நீண்ட காலமாகப் போராடி வருபவர்கள். இவர்களுள் பலர் சர்வதேச அளவில் மதிக்கப்படும் அறிவுத் துறையினர்.
இவர்களுள் ஐம்பத்தொன்பது வயதான சுதா பரத்வாஜ் இருதய மற்றும் சர்க்கரை நோயாளி; எண்பது வயதைத் தாண்டிய வரவர ராவ் இருதய நோயாளி மட்டுமின்றி, சமீபத்தில் கரோனா நோய்த் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர். அவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதோடு, ஞாபக மறதி நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. எண்பத்து நான்கு வயதான ஸ்டேன் சுவாமி பர்கின்ஸன் எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்.
இவர்களின் கல்வித் தகுதி, சமூகத் தகுதி, சமூகத்திற்கு இவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு, இந்தக் கைதின் பின்னணி ஆகியவையெல்லாம் உச்ச நீதிமன்றமும் மும்பய் உயர் நீதிமன்றமும் அறியாதவையல்ல. ஆனாலும், இவர்களுள் ஒருவருக்குக்கூட மும்பய் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ இதுநாள் வரையிலும் பிணை வழங்க முன்வரவில்லை.
மருத்துவக் காரணங்களுக்காகத் தனக்கு இடைக்காலப் பிணை வழங்குமாறு சுதா பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ‘‘நீங்கள் இடைக்காலப் பிணை அல்லாமல், வழக்கமான பிணையே கேட்கலாம். அதற்குத் தகுதி வாய்ந்த காரணங்கள் உள்ளன’’ எனத் தேனொழுகக் கூறிவிட்டு, அவர் கேட்ட இடைக்காலப் பிணையைக்கூட வழங்காமல், ‘‘இந்த மனுவைத் திரும்பப் பெறுங்கள், இல்லையென்றால் தள்ளுபடி செய்துவிடுவோம்’’ எனக் கூறி, அவரைக் கைகழுவியது.
இதே மருத்துவக் காரணங்களை முன்வைத்து அவர் மும்பய் உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த வழக்கில், சிறை மருத்துவர்களே அவரை நன்கு கவனித்துக் கொள்வதாகத் தேசியப் புலனாய்வு முகமை கூறிய காரணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அவருக்குப் பிணை வழங்க மறுத்தது அந்நீதிமன்றம்.
இருதய நோய், சிறுநீரகக் கோளாறு, ஞாபக மறதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுத் தொடர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் வரவர ராவிற்கும் இதுவரை பிணை வழங்கப்படவில்லை. அவரை ஒரு பதினைந்து நாட்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்குக்கூட மும்பய் உயர் நீதிமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
தங்களுக்கு ஒரு போர்வை வேண்டுமென்றால்கூட, நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டியிருக்கிறது எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், இப்போராளிகள். குறிப்பாக, பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்டேன் சுவாமியால் ஒரு குவளை நீரைக்கூடக் கையால் எடுத்துப் பருக முடியாது. அதனால் தனக்கு உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா) வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கக் கால அவகாசம் கேட்டிருக்கிறது விசாரணை நீதிமன்றம்.
இப்போராளிகளுக்குப் பிணை வழங்க மறுப்பது மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவைப்படும் உரிய மருத்துவ சிகிச்சையை, உரிய காலத்தில் வழங்க மறுத்து இழுத்தடிப்பதெல்லாம் அவர்களின் தனிமனித உரிமையை மறுப்பது மட்டுமல்ல, அவர்களின் உயிர்வாழும் உரிமையையும் மறுப்பதாகும். மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டு மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் சாய்பாபாவை அரசும் நீதிமன்றமும் கைகோர்த்துக்கொண்டு சிறுகச்சிறுகச் சாகடிப்பது நம் கண்முன்தான் அரங்கேறி வருகிறது. அப்படிப்பட்டதொரு அபாயம் இப்போராளிகள் மீது விசாரணை நிலையிலேயே திணிக்கப்படுகிறது.
பத்திரிகையாளர் அர்னாபிற்குப் பிணை வழங்க சட்டம், மரபுகளை மீறிய உச்ச நீதிமன்றம், கேரளாவைச் சேர்ந்த ஆழிமுகம் என்ற இணையதளப் பத்திரிக்கையைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் கப்பனின் பிணை மனு வழக்கில் சட்டவாதக் கண்ணாடியை மாட்டிக் கொண்டது. உ.பி. மாநிலம், ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பனை முஸ்லிம் தீவிரவாதியைப் போல முத்திரை குத்தி வருகிறது ஆதித்யநாத் அரசு. அதன் காரணமாகவே, அவருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்றும், உ.பி. மாநிலத்தில் சாதி, மத மோதல்களைத் தூண்டிவிடும் நோக்கில் அவர் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றிருக்கிறார் என்றும் குற்றஞ்சுமத்தி, அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது.
அர்னாபின் பிணை மனு மீதான வழக்கில் மகாராஷ்டிரா அரசின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், அவருக்குத் தன்னிச்சையாகவும் தடாலடியாகவும் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், சித்திக் கப்பன் பிணை கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, உ.பி. மாநில அரசும் உ.பி. மாநில போலிசும் பதில் மனு தாக்கல் செய்யக் கூறி, அவ்வழக்கை ஒத்தி வைத்துவிட்டது.
மோடியின் பழிதீர்க்கும் ஆயுதம் − உபா சட்டம்
இவையனைத்தும் ஊடக வெளிச்சம் பட்ட வழக்குகள். இவையன்றி, நீதியும் கிடைக்காமல், பிணையும் கிடைக்காமல், தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தையும் தாண்டும். எடுத்துக்காட்டாக, 2014 தொடங்கி 2016 முடியவுள்ள மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,700 வழக்குகள் உபா சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன. 2016 முதல் 2018 முடியவுள்ள இரண்டு ஆண்டுகளில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 3,005 வழக்குகள் பதியப்பட்டு, 3,974 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 2018−க்குப் பின் உபா சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 93 சதவீத வழக்குகள் இன்னமும் நீதிமன்ற விசாரணையில், நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது, தேசியக் குற்ற ஆவணத் துறை.
மோடி அரசு 2019−ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கொண்டுவந்த திருத்தங்களின்படி, அமைப்புகளை மட்டுமின்றித் தனிநபர்களைக்கூடத் தீவிரவாதியாக முத்திரை குத்தி உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். சில விதிவிலக்குகள் இருந்தாலும், இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்குப் பிணை கிடைப்பதும் எளிதான ஒன்றல்ல. குறிப்பாக, சில தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாதவாறு இச்சட்டத்தில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், பிணை வழங்காமலேயே நீண்ட நாட்களுக்கு அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். விசாரணையையே தண்டனையாக்கும் சதித்தனம் இச்சட்டத்தில் உள்ளார்ந்து உள்ளது. இந்த அடிப்படையில்தான் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முற்போக்கு அறிவுத்துறையினரை மட்டுமல்ல, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்கள், இளைஞர்களையும் இந்து மதவெறி அரசுகள் இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தண்டித்து வருகின்றன.
படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !
♦ இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
இந்த அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தவர்களை, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சட்டபூர்வமாக அமைதிவழியில் போராடியவர்களை, ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்ததைக் கண்டித்தவர்களை மட்டுமல்ல, ஒரு பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரைக்கூட விட்டுவைக்காமல், இந்து மதவெறி ஆட்சியாளர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் எனில், இந்த அடக்குமுறைக்கு நீதிமன்றங்களும் ஒத்தூதி வருகின்றன எனில், இந்திய மக்கள் அவசரநிலைக் காலத்தை விஞ்சக்கூடிய அபாய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கருத முடியும்.
இந்திய நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க.வின் அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் கைக்கூலியாகச் செயல்பட்டு வருவதைப் பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளே அம்பலப்படுத்தியுள்ளன. பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலாவரும் இந்து மதவெறி பாசிஸ்டு அர்னாபுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தடாலடி பிணை அக்கைக்கூலித்தனத்தின் இன்னுமொரு உதாரணம்.
அர்னாபிற்குப் பிணை வழங்கிய நீதிபதி சந்திரசூட், ‘‘இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்திய ஜனநாயகம் அசாதாரண வலுவோடு இருப்பதாக’’க் குறிப்பிட்டார். ஆனால், மோடி அரசோ இது வெற்று வாய்ஜாலம் என்பதை அத்தீர்ப்பின் மை காய்வதற்குள்ளாகவே அம்பலப்படுத்திவிட்டது. அர்னாபிற்கு அவசர கதியில் பிணை வழங்கியதை நையாண்டி செய்த குணால் கம்ரா என்ற மேடை நகைச்சுவையாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது, மைய அரசு.
மோடி அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீதும், அவரது அரசின் சட்டங்களை எதிர்ப்பவர்கள் மீதும் உபா, தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடிய சட்டங்கள் பாய்கின்றன. இதற்கு ஒத்தூதும் நீதிமன்றங்களை விமர்சிப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் ஏவிவிடப்படுகிறது. எனில், இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்வதற்கு ஏதேனும் பொருள் இருக்க முடியுமா?
குப்பன்
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்