Thursday, November 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 378

கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !

கங்கை நதி சுத்தம் செய்யப்பட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்த படங்கள் உண்மையா?

ங்கை நதியை சுத்தம் செய்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது என்று தென் இந்தியாவில் சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

#5YearChallenge மற்றும் #10YearChallenge என்ற ஹாஷ்டாகுடன் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படமானது பகிரப்பட்டுள்ளது. கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அந்த சமூக ஊடக பகிர்வு கூறுகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனும் அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். கங்கை நதியின் மாற்றத்தை பாருங்கள். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போதும், 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் போது எப்படி உள்ளது என்று பாருங்கள் என்கிறது ட்வீட்.

ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.

கங்கையின் நிலை என்ன?

கங்கை நதியை சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை என்கிறது பாராளுமன்ற நிலைக் குழுவின் கடந்தாண்டு அறிக்கை.

கங்கையை சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய பசுமை ஆணையமும் அரசை குற்றஞ்சாட்டி உள்ளது.

கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

தங்கத்தின் வழிபாட்டிற்கு காரணம் என்ன ? பொருளாதாரம் கற்போம் – 10

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 10

இந்த பாகத்தில் மூலதனத்தின் தோற்றம், புராதனத் திரட்சி, வாணிப ஊக்கக் கொள்கை போன்றவைகளை நூலாசிரியர் அறிமுகப் படுத்துகிறார். முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் மூலதனம் எப்படி வந்தது? சிக்கனமாக வாழ்ந்து செல்வத்தை சேமித்துத்தான் தொழிலை துவங்கினார்களா? இல்லை  என்றால் எப்படி என்று பதிலளிக்கிறார் ஆசிரியர். ஒரு நாட்டின் செல்வச் செழிப்பு அந்நாட்டில் இருக்கும் உலோகத்தின் மதிப்பிலா இல்லை அன்னிய நாடுகளோடு செய்யும் வர்த்தகத்திலா என்பதெல்லாம் ஆரம்ப கால முதலாளித்துவ அறிஞர்கள் புரிந்து கொண்டதை இப்பாகம் விளக்குகிறது. சுருங்கச் சொன்னால் முதலாளித்துவத்தின் தோற்றம் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றினூடாகவா இல்லை சில தனிநபர்களின் மேலான பண்புகளினாலா என்ற கேள்விக்கு விடையளிக்கிறது. கட்டுரையின் முடிவில் உள்ள வீட்டுப் பாட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலுங்கள்!

– வினவு

தங்க வழிபாடும் விஞ்ஞான ஆராய்ச்சியும் : வாணிப ஊக்கக் கொள்கையினர் !

அ.அனிக்கின்

ரோப்பியர்கள் இந்தியாவின் வாசனைத் திரவியங்களைத் தேடிப்புறப்பட்டதன் விளைவாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தங்கம், வெள்ளியின் மீது வைத்திருந்த அடக்க முடியாத ஆசையினால் அமெரிக்காவை வென்றனர்; அந்த நாட்டின் எல்லாப் பகுதிகளையும் நன்கு ஆராய்ந்தனர். பூகோள ரீதியான மாபெரும் கண்டு பிடிப்புகள் வர்த்தக மூலதனத்தின் வளர்ச்சியோடு இணைக்கப்பட்டிருந்தன; அவை தம் பங்குக்கு இந்த மூலதனத்தின் எதிர்கால வளர்ச்சியை அதிகமாக ஊக்குவித்தன. வரலாற்றுரீதியாக வர்த்தக மூலதனமே மூலதனத்தின் ஆரம்ப வடிவம். இந்த வடிவத்திலிருந்துதான் தொழில்துறை மூலதனம் வளர்ச்சியடைந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை (பதினெட்டாம் நூற்றாண்டிலும் அதிக அளவில்) பொருளாதாரக் கொள்கையிலும் பொருளாதாரச் சிந்தனையிலும் வாணிப ஊக்கக் கொள்கையே முக்கியமான போக்காக இருந்தது. அதைச் சுருக்கிப் பின்வருமாறு சொல்லலாம்: பொருளாதாரக் கொள்கை – விலையுயர்ந்த உலோகங்களை மிகவும் அதிகமான அளவுக்குத் திரட்டி நாட்டிலும் அரசாங்கக் கருவூலத்திலும் குவித்து வைப்பது; தத்துவம் – செலாவணியின் (வர்த்தகம் மற்றும் பணப் புழக்கத்தின்) செயல் எல்லையில் பொருளாதார விதிகளைத் தேடுதல்.

படிக்க:
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !

”உலோகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் துணிய வேண்டும்” என்றார் கதே. தங்கம் என்ற போலிக் கடவுளை வழிபடுவது முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக் காலம் முழுவதிலும் இருந்தது; முதலாளித்துவ வாழ்க்கை முறை, சிந்தனையில் அது இணைந்த பகுதியாக இருந்தது. எனினும் வர்த்தக மூலதனம் மேலோங்கியிருந்த காலத்தில் இந்த தெய்வத்தின் பிரகாசம் மிக அதிகமாக இருந்தது. வாங்குவதும் அதிக விலைக்கு விற்பதும் வர்த்தக மூலதனத்தின் கொள்கை. வாங்கிய விலைக்கும் விற்பனை செய்த விலைக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த மஞ்சள்நிற உலோகத்தின் வடிவத்தில் வைத்திருந்தனர். இந்த வித்தியாசம் உற்பத்தியின் மூலமாக, உழைப்பின் மூலமாக மட்டுமே ஏற்பட முடியும் என்பது இன்னும் ஒருவருக்கும் தோன்றவில்லை. வெளி நாட்டில் வாங்கியதைக் காட்டிலும் அதிகமான அளவில் வெளிநாட்டில் விற்பனை செய்வது – இதுவே வாணிப ஊக்கக் கொள்கையின் அரசு ஞானத்தின் உச்சம் எனக் கூறலாம். அரசாங்கத்தை நடத்தியவர்களும், அவர்களுக்காகச் சிந்தனை செய்து எழுதியவர்களும் இந்த வித்தியாசத்தை வெளிநாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்குள் வருகின்ற தங்கம் (அல்லது வெள்ளி) வடிவத்தில்தான் மறுபடியும் பார்த்தார்கள். நாட்டில் ஏராளமான பணம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

புராதனத் திரட்சி

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

வாணிப ஊக்கக் கொள்கை முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முந்திய வரலாறு என்பது போல புராதனத் திரட்சி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் முந்திய வரலாறு ஆகும். புராதனத் திரட்சி என்ற சொற்றொடரை ஆடம்ஸ்மித் உருவாக்கினார் எனத் தோன்றுகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள பல உற் பத்திப் பிரிவுகளின் வளர்ச்சியின் மூலமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைகின்ற நிலையை மூலதனத்தின் புராதனத் திரட்சி ஏற்படுத்தியது என்று அவர் எழுதினார் (அதை ”சென்ற காலத்திய திரட்சி” என்று கூறினார்).

மார்க்ஸ் ”புராதனத் திரட்சி என்று சொல்லப்படுவது” என்று எழுதினார். ஏனென்றால் ஸ்மித் காலம் முதல் இந்தச் சொற்றொடர் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் வேரூன்றியிருந்ததோடு, முதலாளி வர்க்கத்தினர் இதற்கு ஒரு விசேஷமான, நன்னெறி சார்ந்த பொருளையும் கற்பித்து வந்தனர்.

புராதனத் திரட்சியின் மொத்தப் போக்கின் விளைவாகத்தான் சமூகத்தில் முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று வர்க்கங்கள் பிரிந்தன. ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் புராதனத் திரட்சியின் மொத்த நிகழ்வையும் ஒரு வனப்புமிக்க வாழ்க்கையாகச் சித்திரிக்கின்றனர். வெகு காலத்துக்கு முன்பு சுறுசுறுப்பானவர்கள் – குறிப்பாக புத்திசாலித்தனம், சிக்கனம் ஆகியவற்றைக் கடைப்பிடித்த உயர்ந்தவர்கள் – ஒரு பக்கத்தில் இருந்தார்கள்; மறுபக்கத்தில் தங்களிடமிருந்தவற்றையும் இன்னும் மற்றவற்றையும் ஊதாரித்தனமாகச் செலவழித்த சோம்பேறிகளான கீழ்மக்கள் இருந்தார்கள்… முதலில் சொல்லப்பட்டவர்கள் செல்வத்தைக் குவித்தனர்; பின்னால் சொல்லப்பட்டவர்கள் எல்லாவற்றையும் இழந்தனர்; அவர்களிடம் விற்பனை செய்வதற்குத் தங்கள் உடம்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த வசீகரமான வாழ்க்கையில் அறமும் நீதியும் ஆட்சி புரிகிறது; உழைப்புக்கு வெகுமதியும் சோம்பேறித்தனத்துக்கும் ஊதாரித்தனத்துக்கும் தண்டனையும் தரப்படுகிறது.

பலாத்கார, மோசடி வழிகளில்தான் புராதன திரட்சி நடந்தேறியது.

இதைக் காட்டிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று இருக்க முடியாது. மூலதனத்தின் புராதனத் திரட்சி என்பது ஒரு உண்மையான வரலாற்றுப் போக்காக இருந்தது. ஆனால் அது மூர்க்கத்தனமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது. அதில் ஒடுக்குமுறையும் பலாத்காரமும் மோசடியும் கையாளப்பட்டன.

இது மனிதனுடைய தீய நோக்கத்தினால், ”ஆதியிலிருந்தே” அவன் பலாத்காரத்தைச் சார்ந்திருப்பவன் என்பதன் காரணமாக ஏற்பட்ட விளைவு அல்ல. புராதனத் திரட்சியின்போது ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு முதலாளித்துவத்துக்கு மாறுகின்ற புறவய வரலாற்று விதி இயங்கத் தொடங்கியிருந்தது. இந்தப் போக்கு சமூகத்தின் பொருளாதார வரலாற்று வளர்ச்சியை ஊக்குவித்தபடியால் அது சாராம்சத்தில் முற்போக்கானதாகும். புராதனத் திரட்சி நடைபெற்ற காலம் ஒப்புநோக்கில் உற்பத்தி வேகமாகப் பெருகிய காலம், ஆலைத்தொழில் நகரங்களும் வர்த்தக நகரங்களும் வளர்ச்சியடைந்த காலம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்த காலம், ஆயிரம் வருடங்களாகத் தேங்கிக் கிடந்த பிறகு நுண்கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்ந்த மறுமலர்ச்சிக் காலம்.

இந்தக் காலத்தில் பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகள் வீழ்ச்சியடைந்து அவைகளின் இடத்தில் புதிய, முதலாளித்துவ உறவுகள் ஏற்பட்டு வந்த காரணத்தால் விஞ்ஞானமும் கலாச்சாரமும் வேகமாக வளர்ச்சி அடைய முடிந்தது. கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் அழிக்கப்படும் பொழுது, அரை நிலப்பிரபுத்துவ, அரை சுதந்திரமான நில உடைமையாளர்கள் நகரங்களிலும் கிராமப்பகுதிகளிலும் பாட்டாளி வர்க்கத்தினராக மாற்றப்படும் பொழுது அந்த வாழ்க்கையில் வனப்பு ஏது? பணம் சேர்ப்பதையே மதமாகக் கொண்ட முதலாளித்துவச் சுரண்டல்காரர்களின் வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வனப்புமிக்க வாழ்க்கையைப் பற்றிப் பேச முடியுமா?

காலனிகளைத் தேடிய பயணம் – கொலம்பஸ்

பதினாறாம் நூற்றாண்டில் சில ஐரோப்பிய நாடுகளில் – இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலமான – முடியாட்சியைக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட தேசிய அரசுகள் வளர்ச்சியடைந்தன. பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தில் மன்னர்கள் முரண்டு செய்த பிரபுக்களைத் தோற்கடித்து அவர்களை அடக்கி விட்டார்கள். நிலப்பிரபுத்துவ காலத்தில் பிரபுக்கள் வைத்திருந்த ஆயுதந்தாங்கிய படைகளும் பரிவாரங்களும் கலைக்கப்பட்டன; அவர்களுக்கு இப்பொழுது “வேலையில்லாத நிலை” ஏற்பட்டது. அவர்கள் விவசாயத் தொழிலாளிகளாக மாற விரும்பவில்லை என்றால் இராணுவத்தில் அல்லது கடற் படையில் சேர்ந்து, அமெரிக்கா அல்லது கிழக்கிந்தியத் தீவுகளில் இருக்கும் கற்பனையையும் மிஞ்சிய செல்வங்களைத் தேடிக் காலனிகளுக்குப் புறப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களாக மாறியிருந்தால் அவர்கள் நிலவுடமையாளர்களைப் பணக்காரர்களாக்கியிருப்பார்கள்; வெளிநாட்டுக்குப் போனதன் மூலம் அவர்கள் வியாபாரிகளை, தோட்டச் சொந்தக்காரர்களை, கப்பல் முதலாளிகளைப் பணக்காரர்களாக்கினார்கள். அவர்களில் சிலர் ”ஏணியில் மேலே ஏறிச் சென்றனர்”; அதிகமாகப் பணம் சேர்த்துக் கொண்டு தாங்களே வியாபாரிகளாக அல்லது தோட்டச் சொந்தக்காரர்களாக மாறினார்கள். இன்னும் சிலர் கடலில் கொள்ளையடித்தும் நேரடியாகவே திருடியும் அதிகமான பணத்தைச் சேர்த்தார்கள்.

அரசர்கள் பிரபுக்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கைத்தொழில், வர்த்தக முதலாளிகளும் நகரவாசிகளும் அரசர்களை ஆதரித்தனர், நேசசக்திகளாகத் துணை புரிந்தனர். இந்தப் போராட்டத்தின் போது நகரங்கள் அரசர்களுக்குப் பணமும் ஆயுதங்களும் சிலசமயங்களில் நபர்களையும் கொடுத்து உதவி செய்தன. பொருளாதார வாழ்க்கையின் மையம் நகரங்களுக்கு மாறியதனால் நிலப்பிரபுக்களின் அதிகாரமும் செல்வாக்கும் இற்றுப் போனது. உதவி செய்த முதலாளிகள் தங்கள் பங்குக்கு நிலப்பிரபுக்கள், ”சாதாரண மக்கள்’ ‘, அந்நியப் போட்டியாளர்கள் ஆகியோருக்கு எதிராகத் தங்களுடைய நலன்களை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்று கோரினர். அரசும் இந்த ஆதரவைக் கொடுத்தது. வர்த்தகக் கம்பெனிகளும் கைத்தொழில் குழுக்களும் அரசர்களிடமிருந்து பலவிதமான சிறப்பு உரிமைகளையும் ஏகபோக உரிமைகளையும் பெற்றன. ஏழை மக்கள் உற்பத்தியாளர்களிடம் வேலை செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கின்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. வேலை செய்யவில்லையென்றால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும். அதிகபட்சக் கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. வாணிப ஊக்கக் கருத்தினரின் பொருளாதாரக் கொள்கை நகர முதலாளிகளின், குறிப்பாக வர்த்தக முதலாளிகளின் நலன்களுக்கு ஆதரவாகப் பின்பற்றப்பட்டது. வாணிப நிறுவனங்களின் வளர்ச்சி பல சமயங்களில் பிரபுக்களின் நலன்களுக்கும் சாதகமாக இருந்தது. ஏனென்றால் அவர்களுடைய வருமானங்கள் ஏதாவதொரு வகையில் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டிருந்தன.

எல்லாத் தொழில் முயற்சிக்கும் ஆதாரமாக, திருப்புமுனையாகப் பணம் இருக்கிறது. அதை வைத்திருப்பவர் மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கு அல்லது மறுபடியும் விற்பனை செய்வதற்குப் பண்டங்களை வாங்குவதற்காக அதை உபயோகிக்கிறார்; தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்க அதை உபயோகிக்கிறார். அப்பொழுது அது பண மூலதனமாக மாறுகிறது. இந்த உண்மையே வாணிப் ஊக்கக் கொள்கையின் அடிப்படை; அதன் நோக்கமும் சாராம்சமும் நாட்டுக்குள் பணத்தை – விலையுயர்ந்த உலோகங்களைக் கவர்ந்திழுப்பதாகும்.

படிக்க:
♦ அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !

வாணிப ஊக்கக் கொள்கையின் ஆரம்பகாலத்தில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பூர்வீகமாக இருந்தன. அந்நிய நாட்டு வியாபாரிகள் தங்கள் பொருள்களின் விற்பனையில் கிடைத்திருப்பதை அந்த நாட்டுக்குள்ளாகவே செலவழித்துவிட வேண்டும் என்று கட்டாயம் செய்யப்பட்டனர். அவர்கள் அப்படிச் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக விசேஷமான ”மேற்பார்வையாளர்கள்” நியமிக்கப்பட்டனர். அவர்கள் சில சமயங்களில் மாறுவேடமணிந்து வருவதுமுண்டு. தங்கம் மற்றும் வெள்ளியை ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டது.

பின்னர், அதாவது பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய அரசுகள் இன்னும் ஆக்கபூர்வமான, வளைந்து கொடுக்கக்கூடிய கொள்கைக்கு மாறின. ஒரு நாட்டுக்குள் பணத்தைக் கவர்ந்திழுப்பதற்கு மிகவும் நம்பிக்கையான வழி ஏற்றுமதிப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதும் இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதுமே என்பதை ஆட்சி செய்தவர்களும் அவர்களுடைய ஆலோசகர்களும் உணர்ந்து கொண்டனர். எனவே அரசு தொழிலுற்பத்தியை ஊக்குவிக்க ஆரம்பித்தது, உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தியது, அவற்றுக்கு உதவியளித்தது.

வாணிப ஊக்கக் கொள்கையில் ஏற்பட்ட இரண்டு கட்டங்களும் அதன் பொருளாதாரக் கொள்கையின் வளர்ச்சியில் இரண்டு கட்டங்களோடு ஒத்து வருவதைக் காணலாம். ஆரம்பகால வாணிப ஊக்கக் கொள்கை-அதற்குப் பணவியல் முறை என்றும் பெயருண்டு – நாட்டுக்குள் பணத்தை வைத்திருப்பதற்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளை விளக்கியதற்கு அப்பால் போகவில்லை. வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கை நாட்டின் செல்வ வளத்தின் தோற்றுவாய்களைப் பூர்வீகத் திரட்சியில் பார்க்கவில்லை; அந்நிய வர்த்தகத்தின் வளர்ச்சியிலும், சாதகமான வர்த்தக சமநிலையிலும் (இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருக்க வேண்டும் எனப்படுவது) அதைப் பார்த்தது. தனக்கு முந்தியவர்கள் ”நிர்வாக நடவடிக்கைகளில் காட்டிய தீவிரத்தை” அது அங்கீகரிக்கவில்லை. வளர்ச்சியடைந்த வாணிப ஊக்கக் கொள்கைவாதிகள், அரசின் தலையீடு அவர்களின் கருத்துப்படி இயற்கைச் சட்டத்தோடு பொருந்தியிருந்தால் மட்டுமே அதை அங்கீகரித்தார்கள். இயற்கைச் சட்டத் தத்துவஞானம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான செல்வாக்கைப் பெற்றிருந்தது. இந்த விஞ்ஞானமே இயற்கைச் சட்டக் கருத்துக்களின் சுற்று வட்டத்துக்குள் வளர்ச்சி அடைந்தது என்றும் ஓரளவுக்குச் சொல்லலாம்.

அரிஸ்டாட்டில் மற்றும் ஏனைய பண்டைக்கால சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட இயற்கைச் சட்டக் கருத்துக்கள் புதிய யுகத்தில் புதிய உள்ளடக்கத்தைப் பெற்றன. இயற்கைச் சட்டத் தத்துவஞானிகள் கருத்தளவான “மனிதனின் இயற்கை”, அவனுடைய ”இயற்கையான” உரிமைகள் ஆகியவற்றிலிருந்து தங்களுடைய கொள்கைகளைப் பெற்றுக் கொண்டார்கள். மத்திய காலத்தில் இருந்த மதச் சர்வாதிகார ஆட்சி, மதச் சார்பற்ற சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றோடு இந்த உரிமைகள் அதிகமான அளவுக்கு முரண்பட்டிருந்தபடியால், இயற்கைச் சட்டத் தத்துவம் முக்கியமான முற்போக்குக் கூறுகளைக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த மனிதாபிமானிகள் இயற்கைச் சட்டக் கருத்து நிலையை ஏற்றுக்கொண்டனர்.

அரசைப் பொறுத்தவரை அது மனிதனின் இயற்கையான உரிமைகளை-இவற்றில் தனிச் சொத்துரிமையும் பாதுகாப்பும் அடங்கும்-உத்தரவாதம் செய்யக் கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்று இந்தத் தத்துவஞானிகளும் அவர்களைப் பின் தொடர்ந்த வாணிப ஊக்கக் கொள்கை யின் தத்துவாசிரியர்களும் கருதினார்கள். முதலாளித்துவச் செல்வத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தக் கொள்கைகளின் சமூக அர்த்தமாகும்.

பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இயற்கைச் சட்டத்துக்கும் உள்ள தொடர்பு பிற்காலத்தில் வாணிப ஊக்கக் கொள்கையிலிருந்து மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தோடு ஏற்பட்டது. ஏனென்றால் மூலச் சிறப்புடைய மரபினரின் (இங்கிலாந்தில் ஆடம் ஸ்மித்தைப் பின்பற்றியவர்களும் பிரான்சில் பிஸியோகிராட்டுகள் என அழைக்கப்பட்டவர்களும்) வளச்சிக் கட்டத்தின் போது முதலாளி வர்க்கத்துக்கு முன்பிருந்த மாதிரி அரசாங்கப் பாதுகாப்பு தேவைப்படவில்லை; மேலும் அது பொருளாதாரத்தில் அதிகமான அரசுத் தலையீட்டை எதிர்த்தது.

(தொடரும்…)

 

  • கேள்விகள்:
  1. இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடிக்கப்பட்டதற்கு வர்த்தக மூலதனம் காரணம் – ஏன்?
  2. 15 – 18 நூற்றாண்டுகளில் நிலவிய வாணிக ஊக்கக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
  3. முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக் காலத்தில் தங்கத்தை வழிபடும் போக்கு இருந்ததற்கு காரணம் என்ன?
  4. புராதனத் திரட்சி என்று கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகளாக நூலாசிரியர் கூறுவது எவை?
  5. புராதானத் திரட்சி ஒரு மூர்க்கமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது என்று நூலாசிரியர் கூறுவதை விளக்குக!
  6. சொத்து, அதிகாரமிழந்த நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ சமூக அமைப்பில் தங்களது நிலையை எப்படி மாற்றிக் கொண்டனர்? சான்றுடன் விளக்குக!
  7. 17 – 18-ம் நூற்றாண்டுகளில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் இருக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய அரசுகள் புரிந்து கொண்டதற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !

1
Newspaper Carriers (Work disgraces) by Georg Scholz. 1921. Courtesy Wikipedia

னிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? நல்லவர்களா, கெட்டவர்களா? இந்தக் கேள்விக்கு கருப்பு வெள்ளையாக பதில் சொல்ல முடியாதல்லவா? எனினும், இதற்கான பதிலைத் தேடி வரலாறு நெடுகிலும் தத்துவஞானிகளும், மெய்ஞானிகளும் கடும் முயற்சிகளைச் செய்துள்ளனர். மார்க்சியத்தை பொறுத்த வரை சமூகச் சூழலும், வர்க்க பின்னணியும் ஒரு நபரின் ஆளுமையை தீர்மானிக்கிறது. நவீன மருத்துவத் துறை சார்ந்த உளவியல் நிபுணர்களும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதர்களின் நடத்தை குறித்த முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உளவியல் துறையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கீழ்கண்ட பத்து முடிவுகள் கிட்டியுள்ளன.

இந்த ஆய்வுகள் உடல்ரீதியாகவும், சமூக நடைமுறை ரீதியாகவும் இருக்கின்றன. சில ஆய்வுகள் சர்வே அடிப்படையிலும், சில ஆய்வுகள் பாவனை, பிரதிபலிப்பு, வினை மாற்றம் இன்ன பிற முறைகளிலும் இருக்கின்றன. எனினும் இந்த ஆய்வு முடிவுகளின் உண்மைகைள நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியமானது. அதை உளவியல் மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மட்டும் முடிவு செய்வது சாத்தியமில்லை. மருத்துவம் மனித குலத்தின் உடலியல் வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து கூறுகிறது. சமூகவியல் வரலாற்றை அறியும் போதுதான் ஒரு தனிநபர் ஏன் இப்படி நடக்கிறார் என்பதை கண்டறிய முடியும்.

மனிதர்களின் நடத்தைகள் கூட வர்க்க ரீதியாக வேறு வேறு காரணங்களால் பிரிந்திருக்கிறது. அன்பு, பாசம், தாய்மை, நட்பு ஆகிய உணர்ச்சிகள் கூட ஒரே  மாதிரியாக அனைவரிடமும் இருப்பதில்லை. தனது மனைவியின் கால் புண்ணாகியது என்று வருந்தும் ஒரு அமெரிக்க அதிபர், ஆப்கானில் கொல்லப்படும் அப்பாவி மக்கள் குறித்து மூடு அவுட் ஆக மாட்டார். ஆய்வு முடிவுகளின் கீழ் எமது கருத்துக்கள் தனியே பச்சை வண்ணத்தில் தரப்பட்டுள்ளன.

  1. மனிதர்கள் சிறுபான்மையினரையும், பாதிப்புக்கு உள்ளானவர்களையும் மனிதத் தன்மையோடு அணுகுவதில்லை. மாணவர் குழு ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் மூளை நரம்பு மண்டலத்தை ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆய்வின் போது வீடற்றவர்கள், போதை அடிமைகள் போன்றோரின் புகைப்படங்களைக் காட்டிய போது சக மனிதர்களைக் குறித்து சிந்திக்கும் மூளையின் பகுதி செயலற்று இருந்துள்ளது. அதே போல் இளைஞர்கள் முதியவர்களையும், அரபு மக்களின் குடியேற்றங்களை எதிர்ப்பவர்கள் இசுலாமியர்களையும் மனித தன்மையோடு கருதவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், வேறு பிரதேசங்களையும் எதிர் பாலினங்களைச் சேர்ந்தவர்களையும் சக மனிதர்களாக கருதாத போக்கு இளம் வயதிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது.

சிறு வயதில் இருந்து யாரெல்லாம் கெட்டவர்கள் என்ற படிமம் நமது சூழலால் நம்மிடம் பதியப்படுகிறது. அந்தக் கால ஆனந்த விகடன் உருவாக்கிய பட்டி டிராயர், கைலி, பட்டை பெல்ட், மீசை, கிருதா வைத்த தோற்றம் உள்ளவர்களை ரவுடிகள் என்று நேற்றைய தலைமுறை நினைத்து வந்தது. இன்று கோட்டு சூட்டு போட்ட கிரிமினல்களே அதிகம் இருந்தாலும் மேற்கண்ட வகையிலான தோற்றம் கொண்டவர்களை ரவுடிகள், வன்முறை கொண்டவர்கள் என்று நம்புவது ஆழ்மனதில் இருக்கத்தான் செய்கிறது. முசுலீம்கள், தலித் மக்கள், வேறு தேசிய இனத்தவர், பெண்கள் குறித்த பல்வேறு ஸ்டீரியோ டைப் பொதுப்புத்திகளின் தோற்றுவாய் இப்படித்தான் உண்மை என்று நம்பப்படுகிறது.

  1. மற்றவர்களின் துன்பத்தில் இன்பமடையும் போக்கு (Schadenfreude) நான்கு வயதிலேயே துவங்கி விடுவதாக கூறுகிறது, 2013 -ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. குறிப்பிட்ட ஒரு மனிதர் துன்பத்துக்கு ஆளாக வேண்டியவர் தான் என்கிற மதிப்பீட்டுக்கு வரும் குழந்தை அவருக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு இரசிக்கின்றது. மேலும், சமீபத்தில் நடந்த இன்னொரு ஆய்வின் படி ஆறு வயதுக் குழந்தைகள் ”கெட்டவர்கள்” தாக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புவது தெரிய வந்துள்ளது.

இன்றைய நகர வாழ்க்கையின் முதன்மை அம்சமே போட்டிகள் நிறைந்த உலகில் மற்றவரை முந்தி ஓட வேண்டும் என்பதே. இந்தப் போட்டிகளோடு பார்ப்பனிய சமூகத்தின் பிற்போக்கும், சாதி-மத-பாலியல் வெறுப்புக் கருத்துக்களும் இணையும் போது ஒரு நபர் தனது எதிர்த்தரப்பினரான குழுவைச் சேர்ந்தவர் துன்பமடைய வேண்டும் என்று விரும்புகிறார். இது நேர்மறையான முற்போக்கு கருத்து உள்ளவர்களுக்கும் வேறு மாதிரி இருக்கும். சான்றாக மோடிக்கோ, பாண்டேவுக்கோ ஏதாவது கெட்டது நடந்தா நல்லா இருக்குமே என்று நமக்குத் தோன்றாதா என்ன?

  1. மனிதர்கள் தலைவிதியை நம்புகின்றனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு துயரத்திலிருக்கும் தனது சக மனிதனின் நிலை அவனது தலைவிதி என்று மக்கள் நம்புவதை 1966 -ல் அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மெல்வின் லெர்னர் மற்றும் கரோலின் சிம்மன்ஸ் நடத்திய ஆய்வு நிரூபித்தது. அவர் நடத்திய ஆய்வின் போது பார்வையாளர்களுக்கு எதிரே ஒரு பெண்ணை அமர வைத்து சில கேள்விகள் கேட்டனர். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒருமுறை மின்னதிர்ச்சி (குறைந்த அளவில்) வழங்கப்பட்டது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதை மீண்டும் பார்க்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் நடந்த வேறு சில ஆராய்ச்சிகளில், பல்வேறு நோய்களுக்கும் வறுமைக்கும் ஆளானவர்களின் தலைவிதியே அவர்களின் நிலைமைக்கு காரணம் என்று நம்புவது தங்களுடைய நல்ல நிலைமைக்கான (பொருளாதார ரீதியில்) நியாயப்படுத்தலாக மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

நெடுங்காலமாக மக்கள் வறுமை, நோய், இயற்கை அழிவு ஆகியவற்றை அந்தந்த மக்களின் தலைவிதி என்றே நம்பி வந்துள்ளனர். நவீன சமூகத்தில் இந்த தலைவிதி வேறு விதமான வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சாதி, மதம், பாலியல் போன்றவைகளே வறுமை, தொழிலுக்கான தலைவிதி என்று நம்பியவர் இன்றும் கூட அந்த நம்பிக்கைகளை வைத்துள்ளார். கூடுதலாக நவீன முதலாளித்துவ உலகில் ஏழ்மை என்பது ஒருவர் நன்றாக படிக்கவில்லை, கடினமாக உழைக்கவில்லை, கலாச்சாரம் – நாகரீகம் இல்லை போன்ற காரணங்களால் இருப்பதாக நடுத்தர வர்க்கம் நம்புகிறது. அப்படி அந்த வர்க்கத்தின் நம்பிக்கையை  பல்வேறு சமூக நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

பணக்காரர்களைப் பொறுத்த வரை தாம் சேர்த்த பணம் என்பது சாதாரண மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக தனது ‘உழைப்பினால்’ கிடைத்த பலன் என்றும், அப்படி உழைக்க இயலாத சோம்பேறிகளே ஏழை – பணக்காரன் என்று இருமை பேசுவதாக கூறுவார்கள்.

  1. மனிதர்களுக்கு கடிவாளமிட்ட பார்வையும் இறுமாப்பும் உள்ளது. ஒருவரின் கருத்து நமக்கு உவப்பானதில்லை என்றால் அதை தரவு ரீதியாக மறுத்துப் பேச வேண்டும் என்று மனிதர்கள் நினைப்பதில்லை.
    1979 -ல் நடந்த ஒரு ஆய்வின் போது தங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர் கொண்டிருப்பது தனது சொந்த அடையாளத்துக்கே ஆபத்தானது என்று மனிதர்கள் கருதுவது தெரிய வந்தது. மேலும், நாம் கொண்டிருக்கும் கருத்து மட்டுமே சரியானது என்கிற அதீத நம்பிக்கையும் மனிதர்களிடையே உள்ளது. எனவே பிறருடைய கருத்தைக் கேட்பதற்கும் தமது சொந்த அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் மனிதர்கள் முன்வருவதில்லை என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

கடிவாளமிட்ட பார்வை – இறுமாப்பிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒடுக்குமுறை செய்பவர்கள் ஒடுக்கப்படுபவர்களின் கருத்தை எந்தக் காலத்திலும் கேட்பதில்லை. கூடவே ஒடுக்கப்படும் மக்கள் பேசுவதையோ, போராடுவதையோ அடக்கித்தான் அவர்கள் தமது அதிகாரத்தை அமல்படுத்துகிறார்கள். இந்த வகையிலான நபர்களுக்கு கருத்து ரீதியான உரையாடல் என்பது என்னவென்றே தெரியாது.

ஒடுக்கப்படும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் யதார்த்தத்தில் ஒடுக்குபவரின் அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கூட கேட்க முடியாத நிலையில் மனதளவிலாவது ஒடுக்கபவர்கள் ஒழிய வேண்டும் என்று விரும்புவார்கள். ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே தமது கருத்து சரி என நிரூபிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். அதனால் இவர்களும் ஒடுக்கும் கருத்துடையோரின் கருத்துக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இப்படி கடிவாளத்திற்கே இரு துருவக் காரணங்கள் இருக்கின்றன.

  1. 2014 -ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஆய்வு ஒன்றின் போது, அதில் பங்கேற்றவர்களில் 67 சதவீத ஆண்களும், 25 சதவீத பெண்களும் அமைதியான உரையால் சிந்தனையில் நேரம் செலவழிப்பதை காட்டிலும் மின்னதிர்ச்சிக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதே மேல் என கருதுவது தெரியவந்தது.

இந்த ஆய்வின் பின்னணி தெரியவில்லை. பொதுவில் சிலநேரம் நமக்கு நம்மை சுயவதை செய்து கொள்வதாக கற்பனை செய்வதில் விருப்பம் வரலாம். வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பும் தற்கொலை ஒரு தீவிர மன அழுத்தத்தாலோ அல்லது திடீரென ஒரு முடிவாகவோ கூட வரலாம். சுயவதை என்பது புறநிலை வாழ்வோடு போராட முடியாத கோபத்தை இப்படி தன்வதையால் ஆற்றுப்படுத்தும் உடலின் ஒரு செயற்பாடு. போதை பொருள் மூலம் வரும் மயக்கம் ஒரு இன்பமாக, எந்தக் கவலை இல்லாமலும் இருப்பதான நிலையாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு இலட்சிய சமூகத்தில் அப்படி எந்தக் கவலையும் இல்லாத வகையில் ஒரு சமூக அமைப்பு  இருக்கும் போது நாம் இயல்பாகவே மகிழ்ச்சியாக நமது கடமைகளில் கவனம் செலுத்தலாம் அல்லவா!

  1. மனிதர்கள் தகுதியற்றவர்களாகவும் அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவேளை மனிதர்களின் பிற்போக்கு சிந்தனைகளும், இறுமாப்பும் கொஞ்சம் மனிதத் தன்மையோடும், சுய மதீப்பீட்டுடனும் வெளிப்படும் போது கூட மோசமாக இருக்காது. ஆனால், தமது தகுதி மற்றும் யோக்கியதைகளைக் குறித்து அதீதமான மதிப்பீடுகளை மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள். இதில் இருப்பதிலேயே திறமைக் குறைவோடு இருக்கும் மனிதர்களே தங்களைக் குறித்து அதீத மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றனர். ஆக கீழ்மையான குணம் கொண்டிருப்பவர்களே தங்களை அதி உயர்வான நியாயவான் எனக் கருதிக் கொள்கின்றனர். குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் மிக கொடிய கிரிமினல்கள் கூட தங்களை சாதாரண மக்களைக் காட்டிலும் கருணை மிக்கவர்களாகவும், நேர்மையானவர்களாக கருதிக் கொள்கின்றனர்.

எதிர்மறையான கருத்துக்களா தோற்றமளிக்கும் இந்த ஆய்வின் முடிவுகளை உற்று நோக்கினால் அது அப்படி இல்லை என அறியலாம். வர்க்க ரீதியாகவே மக்கள் பிரிந்திருக்கிறார்கள். அம்பானியின் மகனோ, அமித்ஷாவின் மகனோ தமது சொந்த திறமை – தகுதி காரணமாக பெரும் நிறுவனங்களில் சிஇஓ-களாக பணியாற்றவில்லை. அது பில்லியனர் மற்றும் கட்சி தலைவரின் மகன் என்ற வாய்ப்பினால் வருவது. இத்தகைய நபர்கள் தமது தகுதி யோக்கியதை குறித்து அதீதமான மதிப்பீடு இருப்பதில் ஆச்சரியமில்லை. இதை துக்ளக் சோ, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்றோரிடமும் காணலாம். எடப்பாடி, ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின், விஷால் போன்ற தமிழக சான்றுகளிடமும் காணலாம்.

மறு புறம் ஆளும் வர்க்கத்தின் வடிவமைப்பில் வாழும் நடுத்தர வர்க்கமும் இத்தகைய அதீத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் முதலாளி போல வசதியான வாழ்வை கனவில் கொண்டிருக்கும் இந்த வர்க்கம் அதற்கேற்றாற் போல இன்றைய பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு அதுவே தமது அறிவின் மேதமை என்று நினைக்கிறது. சாதி மத பாலியல் ஏற்றத்தாழ்வுகளை முதலீடாக்கி இந்தியாவின் மக்களை வடிவமைத்திருக்கும் பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் இங்கே வறுமையில் இருப்போரும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் மேற்கண்ட அதீத நம்பிக்கைளையும், ரவுடிகளாக இருப்போர் தமக்கும் அறவிழுமியங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

அதிகமாக நீடிக்கும் தாழ்வு மனப்பான்மை இத்தகைய ஸ்டீரியோ டைப்பான உள்ளீடற்ற அகந்தையை வளர்த்துக் கொள்கிறது. மோடிக்கு கூட நிறைய தாழ்வு மனப்பான்மை இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அல்பத்தனமாக அவர் செல்ஃபி எடுப்பதும், தப்பும் தவறுமாக வரலாறு, இதர விவரங்களை கூறுவதும், மானிட்டரை  பார்த்து படித்து விட்டு இன்ஸ்டெண்ட்டாக பேசுவதான பாவனையாகட்டும் அத்தனையும் ஒரு பாசிஸ்டுக்கே உரிய தாழ்வு மனப்பான்மைதான்.

சாதாரண மக்கள் கூட தமது இருப்பை மறந்து தமது பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு சாதி, மத அடிப்படையில் சில கற்பனை விழுமியங்களை வைத்துக் கொள்கின்றனர். ஏழை வன்னியர், ஏழை பறையரை தாழ்வாக நினைக்கிறார். வன்முறை செய்யும் கூலிப்படைகளிடமும் கூட இந்த எண்ணம் இருக்கிறது. “அண்ணன் மது, மாது தொட மாட்டாரு, ரேப் பண்ணினாலும் கொலை செய்ய மாட்டாரு, கை காலை முறிப்பாரே ஒழிய கொலை செய்ய மாட்டாரு, பெண்கள் – குழந்தைகள் தவிர மற்றவர்களை கொலை செய்வாரு” என்று ஏகப்பட்ட மேதமைக் கருத்துக்கள் ரவுடி உலகில் வலம் வருகின்றன. தமிழ் சினிமாவிலும் இதை நிறையக் காணலாம். நிருபயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டோரும் கூட இப்படித்தான் தம்மைக் கருதுகின்றனர்.

  1. மனிதர்கள் போலித்தனமான விழுமியங்களைக் (moral hypocrites) கொண்டவர்கள். பிறருடைய தவறுகளைக் குறித்து அதீதமாக கூச்சலிடுபவர்கள் தங்களுடைய சொந்த தவறுகள் என்று வரும் போது அடக்கியே வாசிக்கின்றனர். தனக்குப் பழக்கமானவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் கெட்ட பண்புகளே காரணம் என்று சொல்லும் ஒருவர், அதே போன்ற ஒரு சூழலில் அதே போன்ற ஒரு தவறைத் தானும் செய்யும் போது அதற்கு தனது கெட்ட பண்புகளே காரணம் என்று சொல்லிக் கொள்வதில்லை (actor-observer asymmetry). தன்னோடு பழகும் ஒருவரின் நடத்தைகளில் எவற்றையெல்லாம் சுயநலமானது என்று ஒருவர் வகைப்படுத்துகிறாரோ அதே போன்ற காரியங்களை இவர் மற்றவரிடம் பழகும் போது வெளிப்படுத்துகிறார்; எனினும், தனது நடத்தையை சுயநலம் என்று வகைப்படுத்துவதில்லை. ஒரு காரியத்தை தனக்குப் பழக்கமில்லாதவர்கள் செய்யும் போது அதில் உள்ள தவறுகளை சரியாக அடையாளம் காட்டுவது – அதே காரியத்தை தானோ தனக்குச் சார்ந்தவர்களோ செய்யும் போது கண்டும் காணாமலும் விடுவது என்கிற இந்த இரட்டை நிலைப்பாட்டின் காரணமாகவே ”சமூகம் கெட்டு விட்டது” என்று பழியை சமூகத்தின் மேல் சாட்டுகின்றனர்.

கம்யூனிஸ்டு கட்சிகளில் இருப்போர் விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது குறித்து ஆசான் மாவோ கூறிய கருத்துக்கள் இந்த ஆய்வு முடிவை புரிந்து கொள்ள உதவும். கூடுதலாக ஒரு நபர் தனது வாழ்க்கை தனது சொந்த திறமையினால் கிடைத்தது என்று வர்க்க சமூகம் எண்ண வைக்கிறது. சோசலிச சமூகத்தில் ஒரு நபர் தனது வாழ்க்கையை இந்த சமூகம் கொடுத்தது என நினைக்கிறார். இந்த இரண்டு சமூகப் பிரிவில் வரும் மனிதர்களின் ஈகோவும் ஒன்று அல்ல. எந்த பதவி அல்லது உறவில் இருந்தாலும் தனது உரிமைகள் – கடமைகள் – விதிகள் அனைத்தும் மக்களின் கண்காணிப்புக்கு உட்பட்ட ஜனநாயக முறைகளில் இருக்கும் போது எந்த நபரும் தனது தவறு குறித்து சுயவிமர்சனம் செய்வது பிரச்சினை இல்லை.

மாறாக இன்றைய சமூகத்தில் அப்படியான ஜனநாயக முறைகளும், நிறுவனங்களும் இல்லை. இருப்பதெல்லாம் மக்களுக்கு உரிமையற்ற போலி ஜனநாயக நிறுவனங்களே. அதனால்தான் ஒரு குடும்பத்தில் அப்பா எனும் நபர் பார்ப்பனியத்தின் தந்தை வழி ஆணாதிக்க அதிகாரத்தைக் கொண்டு வாரிசுகளை அடக்கி ஒடுக்குகிறார். அதன் தவறுகளை மற்றொரு தந்தை கூறினால் கூட காது கொடுத்து கேட்க மாட்டார். இதை போலீசு, நீதிபதி, கலெக்டர், ஹெச்.ராஜா, மோடி என விரித்துப் பார்த்தால் இவர்களது திமிருக்கும் மற்றவரின் கருத்துக்களைத் தட்டிக் கழிக்கும் அலட்சியத்திற்கும், தவறுகளை ஒப்புக் கொள்ளாமலும், தவறே செய்யாத மக்களை குற்றவாளிகள் எனக் கூறுவதற்குமான காரணங்களை, இணைப்பை அறியலாம்.

  1. மனிதர்கள் இயல்பாகவே இணைய பொறுக்கித்தனத்திற்கு (Internet Troll) ஏதுவானவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஒரு பாதுகாப்பான முகமூடியை வழங்குவதால் மெய் உலகில் சாதுவானவர்களாக அறியப்படுகின்றவர்களும் கூட மெய் நிகர் உலகினுள் நுழையும் போது தங்களது குரூரங்களை இயல்பாக அரங்கேற்றுகின்றனர்.

தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதற்கோ தேவையோ வாய்ப்போ இல்லை. போயஸ் தோட்டத்தின் அதிகாரத்தை யாரும் தட்டிக் கேட்க முடியாது எனும் போது அங்கே ஜெயலலிதா யாரையெல்லாம் அடித்தார், உதைத்தார் என்று அறிய முடியாது. அறிந்தாலும் அதை பொது வெளியில் பேசி தண்டிக்க முடியாது.

எனவே இன்றைய ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பின் சாதகங்களை அனுபவிப்போர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தண்டிக்க முடியாது எனும் போது அவர்கள் இணைய பொறுக்கித்த்தனத்தில் ஈடுபவது வியப்பல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ட்ரோல்கள் முன்னணியாக செயல்படுவதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம். மறுபுறம் பார்ப்பனியம் தோற்றுவித்த சாதி, மத, பாலியல் ஆதிக்க எண்ணங்களும் இணையத்தில் அரங்கேறுவதை புரிந்து கொள்ளலாம். சேலம் வினுப்பிரியாவின்  படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக மாற்றிய நபரின் செய்கை அதற்கோர் சான்று.

  1. சைக்கோத்தனமான குணங்களைக் கொண்டுள்ள திறமையற்ற தலைவர்களையே மனிதர்கள் விரும்புகின்றனர். டான் மெக் ஆடம்ஸ் என்கிற உளவியல் நிபுணர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து நடத்திய ஆய்வின் இறுதியில் இந்த தீர்மானத்திற்கு வருகிறார்.
    அந்த் ஆய்வின் முடிவுகளை நியூ யார்க்கில் உள்ள நிதி நிறுவனங்களுடைய தலைமைச் செயல் அலுவலர்கள் மீது பொருத்திப் பார்த்த போது, பெரும்பாலும் நிறுவனங்களின் தலைமைப் பதவியை அடைகின்றவர்களுக்கு முடிவெடுக்கும் அறிவுத்திறனை விட சைக்கோத்தனமான சிந்தனைப் போக்குகளே மிகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

சைக்கோ என்பதை விட வில்லனாக பேசுபவர்களை மக்கள் ஏன் ரசிக்கிறார்கள் என்று பார்க்கலாம். அதிபர் ட்ரம்ப் முதலாளித்துவத்தின் தீவிரமான ஆதரவாளர் என்பதை தனியே விளக்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளையின தொழிலாளிகளிடம் வேலை இழப்பு பற்றி பேசும் போது அதற்கு காரணமான சீனாவை ஒழிப்பேன் என்று கூறுகிறார். கூடவே அமெரிக்காவின் அமைதியான – அதாவது ஜாலியான – வாழ்வில் திகில் காட்சிகளை கொண்டு வரும் முஸ்லீம் பயங்கரவாதிகளை ஒழிப்பேன், விசாக்கள் கொடுக்க மாட்டேன் என்று கூறும் போதும் மக்கள் ரசிக்கிறார்கள்.

சரி, ட்ரம்ப் உண்மையிலேயே அமெரிக்க முதலாளிகளை பகைத்துக் கொண்டு வெளிநாட்டு உற்பத்திகளை ஒழிக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போன்று சவுதி அரச குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் ஆதரிப்பவரும் இவர்தான். பத்திரிகையாளர் ஒருவரைக் கொன்ற சவுதி அரச குடும்பத்தைக் காப்பாற்றுவதும் அமெரிக்க அரசுதான். இந்தியாவில் பால் தாக்கரே கூட அவரது மராட்டிய மாநிலத்தில் இத்தகைய வில்லன் பேச்சுக்களை பேசியவர்தான். ஆனால் அதை மராட்டிய இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சினை என்ற முகாந்திரத்தில் பேசினார். முசுலீம்கள், தமிழர்கள் மீதான வன்மம் அப்படித்தான் அவரால் பற்ற வைக்கப்பட்டது.

பொருளதாரப் பிரச்சினைகளின் போது இத்தகைய இன – மத – நிறவெறிப் பேச்சுக்கள் மக்களை திசை திருப்பும் வண்ணம் கிளப்புகின்றன. இதில் யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களை மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் இறுதியில் இந்த வில்லத்தனத்தை மக்கள் புரிந்து கொள்ளும் போது பழைய வில்லன்கள் காலாவதியாகிறார்கள். புதிய வில்லன்கள் வருகிறார்கள். இன்று மோடி முதல் உலகம் முழுவதும் புற்றீசல் போல உருவாகியுள்ள நாஜிக் கட்சிகளும் அப்படித்தான்.

  1. இறுதியாக, எதிர்மறையான ஆளுமைகளைக் கொண்டவர்களின் மீது ஒரு இயல்பான ஈர்ப்பு ஏற்படுவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.

எதிர்மறையான ஆளுமைகள் மீதான ஈர்ப்பு மீது ஒருவிதமான பரபரப்பு மட்டுமே. அமைதியான வாழ்வில் அமைதியாக சென்று கொண்டிருக்கும் மக்கள் ஏதோ ஒரு அளவில் இத்தகைய எதிர்மறைகளை கண்டு வியக்கிறார்கள். வியத்தலின் காரணமாக வரும் ஈர்ப்பு பற்றாக ஆக வேண்டுமென்பதில்லை.

இலக்கியவாதிகள் சிலர் நாடறிந்த அரசியல் கட்சிகள், தலைவர்களை கண்ணியமாக பேசுவார்கள். ஆனால் சாதாரண மக்கள், தொழிலாளிகளை எழுத்தில் இல்லாத கெட்டாத வார்த்தைகளில் பேசுவார்கள். அல்லது ஆபாச வார்த்தைகளை, கட்டுப்படே இல்லாமல் பாலியல் விசயங்களை எல்லாரும் பேசுவார்கள். கேட்பவர்களும் இவர் பெரிய கலகக்காரர் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் தொடை நடுங்கிகள் என்பதுதான் உண்மை. எனவே எதிர்மறை ஆளுமை ஈர்ப்பு என்பது நேரடி பொருளில் புரிந்து கொள்ளத் தேவையில்லை.

*****

மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்டவை. இவற்றின் முடிவுகள் மக்களிடையே இருக்கும் பிற்போக்கான கருத்துக்கள், முடிவெடுக்கும் தன்மை, தலைவர்களின் மீதான நம்பிக்கை போன்றவற்றுக்கான காரணங்கள் சிலவற்றை முன்வைக்கின்றன. குறிப்பிட்ட சமூகச்சூழலில் உருவாகும் மக்களின் பண்புகள், கருத்துக்கள், நம்பிக்கை அனைத்தும் அதே சூழலின் பாதிப்போடுதான் இருக்கும் என்பது ஒரு உண்மை. மேற்கண்ட முடிவுகளை வெறுமனே முடிவுகள், திட்டவட்டமான போக்குகள், மக்கள் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று முடிவு செய்து கொள்வது தவறு. மாறாக அந்த முடிவுகளுக்கான சமூகக் காரணங்களைத் தேடினால் நாம் இன்னும் தெளிவாக இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ உலகின் நிச்சயமின்மை மனிதர்களின் அற விழுமியங்களை மிகப் பாரிய அளவில் பதித்துள்ளது. வேலையிழப்பு, வேலையின்மை, பிழைப்புக்காக அதீத உழைப்பு, வேலையைத் தக்க வைத்துக் கொள்ள கழுத்தறுப்புப் போட்டி, சமூக பாதுகாப்பின்மை, இவற்றின் விளைவாய் ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் மற்றும் உடல் ரீதியான நோய்கள் என ஒரு தனிமனிதனைச் சுற்றிலும் அபாயகரமான சூழல் வளர்ந்து வருகிறது. முதலாளித்துவ சமூகம் தோற்றுவித்துள்ள பிழைப்புக்கான போராட்டம் தனி மனிதர்களிடமிருந்து சக மனிதர்களை நேசிக்கும் பண்பினை மறக்கச் செய்து வருகிறது.

இவற்றைக் கொண்டு மொத்தமாக மனித சமூகமே சீரழிந்து விட்டதாக முடிவு செய்து விட முடியுமா?

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த நாட்களில் பகலென்றும் இரவென்றும் பாராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மெரீனா கடற்கரையில் குவிந்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக குவிந்த அந்தப் போராட்டத்தின் போது ஒரு பாலியல் அத்துமீறல் இல்லை, திருட்டு இல்லை.காரணம் ஒரு பொதுநோக்கத்திற்கான இந்தப் போராட்ட ஒன்று கூடல் மக்களிடையே இருக்கும் நல்லெண்ணங்களை, விழுமியங்களை குறிப்பிட்ட சூழலில் உயர்ந்த அளவில் வெளியே கொண்டு வருகிறது. இந்த போராட்டச் சூழல் முடிந்து மக்கள் வழமையான வாழ்விற்கு திரும்பும் போது அவர்களிடையே இருக்கும் பிற்போக்கான கருத்துக்கள் வெளியே வரலாம். கூடவே புதிய முற்போக்கு கருத்துக்களை அவர்கள் எண்ணிப் பார்க்கும் வழக்கத்தினையும் துவங்கியிருக்கலாம்.

மெரினாவில் கூடியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றியோ, தமிழர் பாரம்பரியம், பெருமைகள் உள்ளிட்ட இன்னபிற பிரச்சினைகள் குறித்து முழுவதும் தெரிந்திருக்காது. தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான பார்ப்பனிய இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து வீழ்த்துவது என்கிற அரசியலும் மக்களை அங்கே இணைத்திருக்கிறது. மோடி அரசின் தொடர் தாக்குதலுக்கான எதிர்விளைவாகவும் இதை நாம் கொள்ளலாம். ஜல்லிக்கட்டு என்கிற வடிவத்தை எடுத்த போராட்டத்தில் மக்கள் ஒரு புதிய நடைமுறையை மேற்கொண்டு தமது நிலையை கொஞ்சம் மாற்றுகிறார்கள்.

யார் நல்லவர், கெட்டவர் என்பதை முடிவு செய்வதை பொதுமைப்படுத்துவதை விட குறிப்பான சூழலில் பரிசீலிக்கலாம். பொதுவாக பரிசீலிக்கும் போது கூட இத்தகைய தனித்தனி அம்சங்களிலிருந்து முழுமையை நோக்கி ஆய்வு செய்யலாம்.

கட்டுரையின் துவக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகள் அச்சுறுத்தக் கூடியவையே என்றாலும் அது முதலாளித்துவ சமூக அமைப்பு ஒரு தனி மனிதனிடம் உண்டாக்கியிருக்கும் சீரழிவுகள் தாம். இந்த குறிப்பிட்ட சமூக அமைப்பு மாறும் போதோ அல்லது மாற்றுவதற்கான போராட்டத் தருணங்களிலோ ஒரு நபர் தன்னை வேறு விதமாக ஒரு சமூக மனிதராக, சமூகம் குறித்து அக்கறைப்படுபவராக வெளிப்படுத்திக் கொள்கிறார், உணர்கிறார்.

அப்போது தனிப்பட்ட உணர்ச்சிகளை சமூக உணர்வு செல்வாக்கு செலுத்துகிறது. அந்த சமூக உணர்வில் ஒருவன்/ள் தொடர்ந்து தோய்ந்து நிற்கும் போது மெல்ல மெல்ல தனிப்பட்ட உணர்ச்சிகளும் ஆற்றுப்படுத்தப்பட்டு அவன்/அவள் பக்குவமடைகிறார்கள். அதன் பின் அவனது தனிப்பட்ட சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் “நல்லவைகளாக” ஆகின்றன. ஏனெனில் அவை தனித்துவமாக இருந்தாலும் அவற்றின் தோற்றுவாய் ஒரு சமூகம் என்பதால்!


சாக்கியன்
கட்டுரை ஆதாரம்: The bad news on human nature, in 10 findings from psychology

திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை !

இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்திக் கொள்ளும் மாணவர்கள்.

ரசுப் பள்ளி என்ற தலைப்பில் வாசகர் துன்மதி குமரவேல் அனுப்பிய படங்கள் இவை. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை எனக் காரணம் காட்டி படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற எத்தனையோ அரசுப் பள்ளிகள் நமக்கு தெரியமலேயே இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

படிக்க:
கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !

இப்பள்ளிகள் பல அந்தந்த ஊர்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்களின் முன்முயற்சியால் சிறப்பாக நடக்கின்றன. அலங்காரங்கள் ஏதுமின்றி அழகாக செயல்படும் பள்ளிகளை நாம் முதலில் பார்வையிட வேண்டும்.இங்கே நாம் பார்ப்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளின் புரட்டு சாதனைகளை விளம்பரங்களாக திணிப்பார்கள். அரசுப் பள்ளிகளின் சாதனையை நாம்தான் பரப்ப வேண்டும்.

திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – பசுமையாக இருக்கிறது.
பள்ளிக்கு ஆர்வத்தோடு வரும் மாணவர்கள்.
இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்தும் மாணவர்கள். குறைவான மாணவர்கள் இருந்தாலும் அணிவகுப்பின் நேர்த்திக்கு குறைவில்லை!
“நீ ஏன் அந்த மாணவியுடன் பேசினாய்” என்று ஆண் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கின்றன தனியார் பள்ளிகள். ஆனால், ஆண் – பெண் பேதமின்றி அருகருகே உட்கார வைத்து சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்கிறது அரசுப் பள்ளிகள்.
ஏழெட்டு பேர் பைக்குகளில் சாகசம் காட்டுவது, வானத்திலிருந்து பாதுகாப்பாக கடலில் விழுவது என ’சாகசங்களுக்காக’ பல கோடி ரூபாய்கள் செலவு செய்து கோட்டைகளில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. மறுபுறம், கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள்.
நீங்கள் நினைவுகூறும் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…
இன்றைய செய்தி, அறிவிப்புகள், பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் காலை வணக்க நிகழ்வில் உண்டு. பங்கேற்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பும் உண்டு.

படங்கள்: துன்மதி குமரவேல்

நீங்களும் புகைப்படம் அனுப்ப வேண்டுமா? அடுத்த வாரம் விளையாடும் குழந்தைகள் எனும் தலைப்பில் படமெடுத்து அனுப்புங்கள்! விவரங்களுக்கு இணைப்பை அழுத்துங்கள்!

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து கோடியில் சங்கிகளின் கண்காட்சி !

ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைமையும், துக்ளக் குருமூர்த்தி சூப்பர் தலைமையும் இணைந்து,10-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி 2019, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னையில் நடத்தின. சென்னை தாம்பரம் வேளச்சேரி சாலையில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள குருநானக் கல்லூரி வளாகத்திற்குள் 400 கடைகளை உள்ளடக்கியது இக்கண்காட்சி. அப்பட்டமான பிற்போக்கு சிந்தனை – பண்பாடுகளை முன்னிறுத்தும் இக்கண்காட்சிக்கு அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வரிசையில் இலவச விளம்பரங்களை அளித்தன.

ஜீவராசிகளை பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியரை வணங்குதல், பெண்மையை போற்றுதல், சுற்றுச்சூழலை பராமரித்தல், நாட்டுப்பற்று வளர்த்தல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், என்ற தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. தலைப்புக்கள் இப்படி இருந்தாலும் ஒவ்வொன்றிலும் இந்துத்துவாவின் மறைமுக பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் அப்பட்டமாக இருந்தன.

மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழகத்தின் சாதிய அமைப்புகள் அனைத்தும் அங்கு கடை போட்டன. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு வேளாளர், ராஜ கம்பளத்தார், மறவர், வெள்ளாள முதலியார், கவுண்டர், வன்னியர், இன்னும் தமிழகத்தின் பல சாதி அமைப்புகளும் தங்களுடைய சாதிய பராக்கிரமங்களை பல்வேறு மாடல்களில் கடைவிரித்தன.

(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )

இந்நிகழ்ச்சியை காண நாம் சென்றபோது அங்கு கண்டகாட்சி நம்மை திடுக்கிட வைத்தது. நடைபயில ஆரம்பிக்கும் பள்ளி குழந்தைகள் இருந்து பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை ஏறக்குறைய கூட்டத்தில் பாதிப்பேர் பள்ளி சீருடையில் வந்திருந்தனர். உயர்ஜாதி கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் கேன்டீனில் வாங்கிய டில்லி அப்பளத்தை கடித்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர். வயதான மாமிகளும் கறுப்பு சூத்திரர்களும் ஆன்மீகத்தை தேடி இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர்.

நவராத்திரி பூஜை, ஸ்ரீ கிருஷ்ண சம்ஸ்கார யோகா, பாரதிய சம்ஸ்கார, பரதமுனிவர் நடனம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், திருவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மங்கள தீர்த்தம், கலச யாத்திரை என்று தெருகோடி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் மொத்தம் ஆன்மீக மற்றும் சேவை நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. அறிவியல், சுதந்திரம், பண்பாடு, என்று வார்த்தைகளைத்தூவி பல்வேறு பார்ப்பன, ஆதிக்க சாதிய பெருமைகள் ஒலி, ஒளி காட்சியாக ஓடிக்கொண்டிருந்தன.

கார்ப்பரேட் சாமியா ரவிசங்கரின் வாழும் கலை மகாமித்தியங்கள், ஜக்கி வாசுதேவ் ஈஷா  யோகா வகைப்பட்ட சூட்சுமங்கள், மாதா அமிர்தானந்தமயி-யின் சென்டிமெண்ட் கட்டிப்பிடி வைத்தியங்கள், ஆர்.எஸ்.எஸ்.-ன் பழங்குடி அமைப்பான வனவாசி சேவா கேந்திராவின் காட்டுக்குள்ளே இந்துத்துவா…. இந்தப் பெரிய கம்பெனிகளோடு  சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபா, ஸ்ரீ பூர்ண மகா மேரு டிரஸ்ட், பிரணவ ஆசிரமம், இந்து தர்மா வித்யாபீடம், சம்ஸ்கிருத பாரதி, ஸ்ரீ ஓம்காரம் இறை பணி மன்றம், இப்படி பல நூறு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சில்லறை அமைப்புகள் தமிழகத்தின் பலமூலைகளிலிருந்து வந்து இந்துத்துவ பார்ப்பனியத்தின் மகிமையை மணம் பரப்பின. கூடவே யோகக்கலையை இரண்டு வினாடியில் கற்றுக் கொள்வது எப்படி? உடலின் அனைத்து உபாதைகளையும் மூச்சுப் பயிற்சியில் தீர்த்துக்கொள்வது எப்படி? என்று பாடம் எடுத்தனர்.

ஞானோதயம் யோகா, உடல் பாதுகாப்பு உயர்தவம், ஆனந்தம், இறைநிலை, முக்தி அடைவது எப்படி? அதற்கு தேவைப்படும் காலம் பணம் எவ்வளவு என்று விளக்கம் கொடுத்தனர். அஸ்வினி யோகி என்ற பெண் தொண்டர், தன் உடலை வளைத்து நிகழ்த்தும் யோகக்கலையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து வழவழ தாள்களில் விநியோகித்தனர்.

பழந்திருக்கோயில்களில் திருப்பணி சங்கம், தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு என்று திடீர் அமைப்பினர் நமது பாரம்பரியமான திருக்கோயில் கோபுரத்தில் காவி கொடியை பறக்கவிட வேண்டும், கிராமப்புறங்களில் கோயில் இல்லாத இடங்களில் திருக்கோயில்களில் கட்டித்தர வேண்டும் அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும், ஒவ்வொருவரும் நம் குலதெய்வ கோயிலை மீட்போம், இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இந்து சாம்ராஜ்யம் படைத்திடுவோம், என்று இவர்கள் தினுசு தினுசாக பயமுறுத்தினர். இந்த இந்து திருக்கோயில் கூட்டமைப்புகள் எந்த அரசியல் சார்ந்தது இல்லை என்று பல கலர்களில் பிரசுரம் வினியோகித்து பேசிப்பார்த்தால் தங்களை அப்பட்டமான அம்பி சங்கிகளாக காட்டிக் கொண்டனர். ஐயரு மரு வெச்சு மாறு வேசத்துல வந்து பேசுறாராம்.

கண்ணன் வழி நடப்போம் காமதேனுவாக பசுக்களை பேணி பராமரிப்போம், ‘அர்ஜென்ட் டு சேவ் கவ்ஸ்’, இலாபகரமாக கோசாலை ஒரு வழிகாட்டி, பஞ்சகவ்விய பொருட்கள் தயாரிப்பு முறைகள், வாஸ்து தோஷம் நீக்கி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் கோமதி சக்கரம், கோமாதா பசுவின் சக்தி இந்த கோமதி சக்கரத்தில் உள்ளதால் புண்ணியம் கிடைக்கும்,அயோத்தியா, மதுரா, ஹரிதுவார், காசி, காஞ்சி, துவாரகை போன்ற ஏழு சாஸ்திரங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று வந்திருக்கும் மக்களை  கவர இன்ஸ்டன்ட் ஆன்மீக பலன்களை அள்ளி விட்டனர். இரண்டே நிமிடத்தில் மாகி நூடில்ஸ் போல, ப்ரூ காஃபி போல இரண்டே மணிநேரத்தில் இந்தக் கண்காட்சியில் சுற்றினால் நமது நனவிலி மனதில் இந்துத்துவம் வேராய் நுழைவது உறுதி.

தயாரிக்க தேவையான பொருட்கள் கோமூத்திரம் 2 லிட்டர், இதே மாதிரி ஷாம்பு தயாரிக்க தேவையான கோமூத்திரம், கோமூத்திரத்தில் உள்ள தாதுப் பொருட்கள், பசு பாதுகாப்பு மற்றும் பசு பொருள் தயாரிப்பு பயிற்சி ஆலோசனை மையம் என்று கண்காட்சியில் மூத்திரத்தை ஏமாந்தவர்களின் தலையில் கட்டினர்.

அடுத்து பியூர் பிரேயர் செய்வது எப்படி? தன்வந்திரி ஹோமம், நவ சண்டி ஹோமம், சுத்த புருஷ ஹோமம் செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொள்ள ஶ்ரீ யூ ட்யூப் சேனலை இலவசமாக பாருங்கள்! அதில், சபரிமலை உட்பட பல கோயில்களில் ஐதீகங்கள் உடைக்கலாமா? இந்து தெய்வங்கள் அவமானப் படுத்தலாமா? சங்க இலக்கியங்களும் இதிகாசங்களும் திருமுறைகளும் வேதங்களும் சிதைக்கலாமா? இந்து ஆலயங்கள் சூறையாடப்படலாமா? இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் மோசடி நடக்கலாமா? ஆசை காட்டி அச்சுறுத்தி ஏமாற்றி அப்பாவி இந்துக்கள் மதம் மாற்றபடலாமா?

நம் தாய்மொழி அழிவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா ? இந்து வேறு தமிழ் வேறு என்பது சரியா? விடை காண ஶ்ரீ யூ ட்யூப் டிவி சேனலில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், என்று போவோரை வழி மறித்தனர்.

அடுத்த கடையில், நவகிரக ஸ்தலங்களைப் பார்க்க விரும்புவோர் கீழே உள்ள எண்ணுக்கு அழைக்கவும் என்றனர். அடுத்தக் கடையில் 10 நாளில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது எப்படி? கட்டணமும் இல்லை! சமஸ்கிருத மொழியில் முன் அனுபவமும் தேவை இல்லை! என்றனர்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் விடுவதாக இல்லை. சுவாமி விவேகானந்தா ‘ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் எஜிகேசன். அவைல் டேக்ஸ் எக்ஸம்சன்‘ கடைகள். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் ஆலய திருப்பணிக்கு கைங்கரியம் கொடுங்கள் 10,000 வழங்குபவர் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று சொல்லும் கடைகள்.

யாருமே அறியாத சிவரகசியம்! இன்புற வாழ மனிதனுக்கு அறிவு போதாது! இந்த தத்துவமும் அடங்கிய 10 சிடி, சிறப்பு சலுகை ஆயிரம் ரூபாய் இல்லை, வெறும் 400 ரூபாய்! என அழைக்கும் கடைகள். ஸ்ரீ லட்சுமி இயற்கை மூலிகை ஒரு மண்டலம், 48 நாட்கள் அருந்தி வர கிடைக்கும் பயன்கள்! அவற்றை ருசி பார்க்க சாம்பிள் கொடுக்கும் கடைகள்.

அகில உலக இந்து சேவா சேனாவில் இந்து திருக்கோயில் இறைப்பணி, சித்த மருத்துவம், தற்காப்பு, பாரம்பரிய கலைகள், இயற்கை வாழ்வியல், சட்ட விழிப்புணர்வு, மனித உரிமை பெற அனைத்து இந்து சமூகத்தை சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் இறை பக்தர்கள் அனைவரும் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அகில உலக இந்து சேவா சேனாவில் இணைந்து இறைத்தொண்டு புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம். உடனே அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்! என்று அழைக்கும் கடைகள்.

ஓம் நமோ நாராயணி ஸ்ரீ நாராயணி பீடம். ஸ்ரீ நாராயணி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்… இப்படிக்கு ஸ்ரீநாராயணி பக்த சபா. என்று அறிவிக்கும் கடைகள். கோயில் இறைவன் கோயில் இறைப்பணி செய்ய கீழ்கண்ட வங்கிகளில் காணிக்கை செலுத்துங்கள். இப்படிக்கு பழந்திருக்கோயில்கள் திருப்பணி சங்கம், சிவாலயங்களில் விளக்கு ஏற்றும் குழு.. என்று முகவரி கொடுக்கும் கடைகள்.

இவ்வளவு நாளும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கைலாச நாதர் கோயில் திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்! அதன் மூலம் அவர்களைத் தங்கள் அடியாளாக பயன்படுத்துவதுதான்! அதை கறுப்பு சூத்திரர்களிடமிருந்து மறைக்க இந்த கண்கட்டு வித்தை. ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் தங்களை மறைக்க முகத்தில் மரு ஒட்டியிருந்தாலும் வழக்கம்போல் தங்கள் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்!

கண்காட்சியை சுற்றி வந்த நாம் நமக்கும் ஒரு கடை வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கண்காட்சி நிர்வாகியிடம் பணிவாக பிட்டுப் போட்டோம். அவர் நீங்கள் எந்த ஊர் என்று விசாரித்து சரி உங்கள் பெயரில் ட்ரஸ்ட் பதிவு பண்ணியிருக்கீறீர்களா? அது இருந்தால் இங்கு நுழையலாம் அப்படி வந்துவிட்டால் கடைக்கு வாடகை கிடையாது. மொத்தமும் இலவசமாக கிடைக்கும். கடையில் வேலைச் செய்யும் இருவருக்கு தினமும் சாப்பாடும் இலவசம். அப்படி இல்லையென்றால் நீங்கள் குறைந்தது ஏதாவது தர்ம காரியங்கள் செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவாரப்பணி போல் கோயில் பராமரிக்கும் பணி இப்படி ஏதாவது செய்திருந்து அதற்கு போட்டோ அல்லது ஏதாவது அதற்கு அத்தாட்சி (விளம்பரம் நகல்) இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நீங்கள் மொத்தமாக வெறும் 5,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், இப்போதே அதற்கான அப்ளிகேஷன் கொடுத்தால்தான் அடுத்த கண்காட்சியில் இடம் கிடைக்கும்.

நாங்களும் உங்களைப்பற்றி முழுமையாக விசாரித்து தான் (உள்ளூர் சங்கிகளின் அத்தாட்சி கடிதம் அவசியம்) முடிவெடுப்போம். ஏனென்றால் போன ஆண்டு கண்காட்சி நடத்துவதற்கு எங்களுக்கு ஆன செலவு வெறும் இரண்டரைகோடி (ரூபாய்) தான் இந்த ஆண்டு செலவு ஐந்து கோடி ஆகி விட்டது! நாங்களும் சமாளிக்க வேண்டும் இல்லையா? எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர்வாள்தான் செய்கிறாள்.

எதுவும் இங்கு மறைவாக கிடையாது. எல்லாவற்றுக்கும் ப்ளக்ஸ் அடித்து இங்கு வைத்திருக்கிறோம் பாருங்கோ… என்றார். என் போன் நம்பர் இதுதான் மேற்கொண்டு பேசுவோம் என்றார். சரி என்று நாமும் விடைபெற்றோம்!

வெளியில் அந்த பிளக்ஸ் பேனரைத் தேடினோம். உண்மையாகவே இருந்தது. ஆனால், அந்த கணக்கு உண்மையா என்று தெரியாது! அப்படியே அங்கு நிறுத்தியிருந்த பல ரதங்களை பார்த்து பிரமித்தோம். நாம் வீட்டு வாசலில் நாம் செருப்பு விடுவதுபோல் ஒவ்வொரு சாமியாரும் அவர்கள் வந்ததற்கு அடையாளமாக ஒரு ரதத்தை நிறுத்தியிருந்தனர். அதில் அமர்ந்திருந்த அந்த ரத ஓட்டுனரிடம் (டிரைவர்) பேச்சுக் கொடுத்தோம். ஒருவருக்கும் தமிழ் புரியவில்லை. இந்தி, தெலுங்கு என்று பல பாஷைகளில் நம்மை விசாரித்தனர். கடைசியில் தெலுங்குக்காரர் நம்மிடம் மாட்டினார். பேசினோம்.

ஈ வண்டி ஏ மாடல்? ஈ வண்டி அந்தும் பெநத்த மாடல் எய்சர். ஈ வண்டி டப்பு எந்த தேலுசா? 10 லேக்ஸ்! அன்னி ஈ டேகரேசன் 20 லேக்ஸ்! மா ஊரு தெலுங்கானா. ஈ வண்டி ஆ கவமெண்ட் சப்ளை சேசின்னு.. மா க்கூட கவர்மர்ன்ட் ஸ்டாப். என்று பாதி ஆங்கிலத்தில் கலந்து நமக்கு புரிய வைத்தார்.

ஒரு ரதத்திற்கு இருபது இலட்சம் செலவழிக்கும் இந்த காவி பண்ணையார்கள் மக்களிடம் உண்டியலில் காசு வசூலித்து கட்சி நடத்தும் கம்யூனிஸ்களைப் பார்த்து, கிண்டல் செய்வதற்கு ஒரு அடிப்படை நியாயம் இருக்கிறதல்லவா! மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டினோம்.

வரும் வழியில் பல காட்சிகள் மனதில் ஒடின! கண்காட்சியில் பசு புனிதம் பற்றி விளக்கி காட்சிக்கு வைத்திருந்த பல படங்களில் நாட்டில் வாழும் மொத்த சூத்திரர்களையும் பசு மாதாவின் ரத்தத்தைக் குடிக்கும் அசுரர்கள் போல் காட்சிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கண்காட்சியின் அஜெண்டா நமக்கு தெளிவாக புரிந்தது. அவர்கள் கொண்டையை வழக்கம் போல் ஆன்மீகம், சேவைக் கண்காட்சி என்ற வார்த்தைகளைக் கொண்டு மறைக்கிறார்கள்.

எடப்பாடியின் ஆட்சியில் எட்டுத் திக்கும் சங்கிகள் வளர்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியை முற்போக்கு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து மக்களை அணிதிரட்டி மூடுவதற்கு வழி உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் சாதா இந்துக்கள் சங்கி இந்துக்களாக மாற்றப்படுவார்கள், எச்சரிக்கை!

அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மதுரையில் எதிர்வரும் பிப்ரவரி 08, 2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணியளவில் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்த கண்டனக் கூட்டம், மதுரை மாநகர், கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் …

  • பீமா கோரேகன் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்! வழக்கை ரத்து செய்!
  • ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்யாதே!
  • பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!
  • அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!

கண்டனக் கூட்டம்

இடம் : கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை.
நேரம் : பிப்ரவரி 08, 2019, வெள்ளிக் கிழமை , மாலை 05.00 மணி

நிகழ்ச்சி நிரல்

தலைமை  : பேராசிரியர் முரளி
வரவேற்புரை : பேரா.கிருஷ்ணசாமி

உரை :

எழுத்தாளர் லிபி ஆரண்யா
வழக்கறிஞர்.நாகை.திருவள்ளுவன்
எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்

நன்றியுரை: பேரா.சீனிவாசன்

*****

நண்பர்களே,

பீமா கொரேகான் வழக்கில், பிப். 2, 2019 அன்று அதிகாலையில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டு, தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்.12-க்குப் பின் மீண்டும் கைதாக வாய்ப்புள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரும் பீமா கொரேகான் வழக்கில், ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பீமா கொரேகான் நிகழ்வு : 1818, ஜனவரி 1 அன்று மகாராட்டிர மாநிலம் பீமா கொரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர் 31, 2017 அன்று நூற்றுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்களை உள்ளடங்கிய எல்கர் பரிசத்(Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி. பி. சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான தலித் மக்களும் – முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கொரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக, சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் ஜன 1, 2018 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர் எஸ் எஸ் – பாஜக-வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.

இந்தக் கைதுகள் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. பீமா கொரேகான் போன்ற பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட பேராசிரியர் சாய்பாபா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார். வழக்கு, கைதின் வதை குறித்து பேரா. ஆனந்தின் வார்த்தைகளைக் கேளுங்கள்…

“என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிற நிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும்.  பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்து கொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.

படிக்க:
♦ இந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன்.  என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் ஆடம்பரமான வாழ்க்கை எனக்கு எளிதாகவே கிடைத்திருக்கும்.

இருப்பினும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் மட்டும் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான்.

எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.

இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.

இப்போது பீமா கோரேகன் வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது துயரத்தைத் தருகிறது. இது போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை.

நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியைச்  சொல்லும்.

எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் …  உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மேற்கண்டவாறு ஓர் உருக்கமான, எதார்த்தமான கடிதத்தை நாட்டு மக்களின் பார்வைக்கு முன்வைத்துள்ளார். அறிவுத்துறை சார்ந்த உரிமை செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்து அச்சமின்றி ஓர் அடி முன் வைப்போம். வாருங்கள் நண்பர்களே !

இவண்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), தொடர்புக்கு : 94438 52788
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்(PRPC), தொடர்புக்கு : 73393 26807

ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?

சின்னத்தம்பி என்று பேர்வைக்கப்பட்ட யானை இன்னும் உயிரோடிருப்பதால் ஒருவாரமாக லைவிலும் நம் டைம்லைன்களிலும் விடாப்பிடியாக பொறுமையாக யாருக்கும் தொந்தரவின்றி நடந்துகொண்டேயிருக்கிறான். இல்லையென்றால் சின்னத்தம்பிக்கான கவன ஆயுள் ஒன்றரை நாள்தான்.

பொதுவாக இப்படியெல்லாம் ஆவதில்லை. தன் வழித்தடங்களை இழந்துவிட்ட சின்னத்தம்பிகள் தண்டவாளங்களில் சிக்கியோ ரயில்மோதியோ, மின்வேலிகளைத் தீண்டியோ மரணிப்பதுதான் வழக்கம். கோவைப்பகுதியில் அப்படி தன் குட்டிகளோடு மரணித்த எத்தனையோ சின்னத்தம்பிகளின் கதைகள் உண்டு.

பேர்தான் பேருயிர்… ஆனால் மிகமிக அவமானகரமான மரணங்கள்தான் நம்முடைய யானைகளுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சின்னதம்பிக்கு அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சிலநாள்களாக மனம் பதைபதைக்கிறது.

கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

பிரதமர் தொடங்கி முதலமைச்சர் வரை ஆதரவு திரட்டி காடுகளை வளைத்துப்போட்டு ஆன்மிகம் வளர்க்கிற ஜக்கி காருண்யா மாதிரியான பெரியதம்பிகளின் மெகா ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்காமல் விட்டால் இன்னும் பல சின்னத்தம்பிகளும் இப்படி திக்குத்தெரியாது நாட்டில் அலைய நேரிடும். போலவே, எல்லா சின்னத்தம்பிகளுக்கும் இப்படி பிழைத்திருக்கும் வாய்ப்புகளும் அமையாது.

வன ஆக்கிரமிப்புகள் பற்றியும், யானை வழித்தடங்கள் குறித்தும், காட்டுயிர் குறித்த சிந்தனைகள் குறித்தெல்லாம் நிறைய நிறைய உரையாடுவதற்கான வாய்ப்பை சின்னத்தம்பி உருவாக்கியிருக்கிறான். ஆனால், சின்னத்தம்பியும் இன்னுமொரு டிக்டொக் வைரல் வீடியோவாகவே நம்மிடம் கடந்துசெல்கிறான். காட்டுயிர்களுக்கான வாழ்விட உரிமை குறித்த விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.

அது எப்படி பெருவணிக நிறுவனங்களின் மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24 மணிநேரமும் நம்மால் பேச முடிகிறது?

நன்றி : முகநூலில்  Athisha


“தீராத வலியும்,வேதனையும்!”

சின்ன தம்பி…. காடுகளின் பேருயிரான யானைகளின் வாழ்வு எவ்வளவு பரிதாபத்திற்குரியதாகவும், போராட்டத்திற்குரியதாகவும் மாறியிருக்கிறது என்பதற்கு நம் கண்முன்னே… நிறுத்தப்பட்டிருக்கும் துயர்மிகுந்த சாட்சி. மயக்க ஊசியால் அதன் நினைவை சிதைத்து, பொக்லைனால் தந்தங்களை உடைத்து, கும்கியால் உடலை கிழித்து ஏதோ… அடிமைகளை வதைத்து நாடு கடத்துவதைப் போல, அந்த கம்பீரமான காட்டு யானையை அதன் வாழ்விடத்திலிருந்து அகற்றிய காட்சி, யானைகளுக்கு எதிராக தொடரும் அரக்கத்தனத்தின் நீட்சியாக ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.

அத்தனை கொடூர வதைகளுக்குப் பிறகும், அந்த யானை தன் வாழ்விடம் தேடி தவிப்போடு அலைகிறது. ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி வரும் செய்திகள் பதைபதைக்க வைக்கும் வேளையில் இதே போன்ற முயற்சிக்கு சில ஆண்டுக்கு முன் பரிதாபமாக பலியான மதுக்கரை மகாராஜா நினைவில் வந்து அச்சுறுத்துகிறது. சின்ன தம்பியை அதன் போக்கில் விட்டால் மனிதர்களுக்கு ஆபத்து என்று பதறுகிறார்கள் சிலர். சின்ன தம்பியை அதன் இடத்திலேயே விட்டுவிடுங்கள் என்று கதறுகிறார்கள் சிலர். ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த தமிழகத்திலும் உணர்வுப் போராட்டைத்தை மூட்டியிருக்கிறது சின்ன தம்பி. ஏன் இந்த அவலம்.? இது சின்ன தம்பிக்கு மட்டுமான பிரச்னையா? இல்லை, சின்ன தம்பியால் மட்டுமே வந்த பிரச்னையா?

சூழலியலாளர் சலீம் அலி இவ்வாறு எழுதுகிறார்… ‘மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், ‘ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், ‘யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களோ, பயிர் வயல்களில் நுழைந்துவிட்ட யானைகளை விரட்டியடிக்கிறார்கள். பயிர்கள் நாசமான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வேதனையில் யானைகள் மீது சினம்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. யானைகள் ஒன்றும் பொழுதுபோகாமல் ஊருக்குள் ‘வாக்கிங்’ வரவில்லை.

அவற்றுக்கு உணவு வேண்டும். அத்தனை பெரிய உடலின் முழுமையான இயக்கங்களுக்கு, ஒரு யானைக்கு நாளன்றுக்கு சுமார் 200 கிலோ உணவு தேவைப்படும். அந்த அளவு உணவு காட்டில் கிடைக்காதபோது, அவை நகர்ந்து வேறு இடங்களுக்கு வருகின்றன. இந்த எளிய உண்மையை நாம் தொடர்ந்து மறுத்துவருகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழக வனப்பகுதியில், வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி, அதைக் கறாராக நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள்.

பொதுமக்கள் காடுகளுக்குள் நுழைவது பல அடுக்குகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. துப்பாக்கி உரிமங்கள் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழகக் காடுகளில் ‘வேட்டை’ என்பது கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு, வனவிலங்குகளின் எண்ணிக்கைப் பெருகத் தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தில் வனத்துறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விலங்குகளின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருகவில்லை. ஒரு யானையின் மேய்ச்சலுக்குத் தோராயமாக 2 ஏக்கர் தேவை என்று வைத்துக்கொள்வோம். புதிதாக 300 யானைகள் உருவாகியுள்ளன என்றால், 600 ஏக்கர் தேவை. ஆனால், நம்மிடம் உள்ள காடுகளின் பரப்பளவில் மாற்றம் இல்லை. சொல்லப்போனால், பல இடங்களில் தேயிலை எஸ்டேட், ரியல் எஸ்டேட் என்று அவை அழிக்கப்படுகின்றன.

படிக்க:
கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் நேர்காணல்

இந்த நிலையில், குறைந்த மேய்ச்சல் நிலத்தை அதிக யானைகள் பங்கிட்டுக்கொள்ளும்போது இயல்பாகவே உணவுப் போட்டியும் பற்றாக்குறையும் உருவாகும். இதனால் காட்டில் உணவு உள்ள மற்ற இடங்களைத் தேடி யானைகள் நகர்ந்து செல்கின்றன. அப்படித்தான் காடுகளை ஒட்டியுள்ள ஊர்களுக்கும், பயிர் வயல்களுக்கும் யானைகள் வருகின்றன. அப்படி அவை வருவது, கால் போன போக்கில் வருவது அல்ல.

மேட்டுப்பாளையம் பகுதியில் சமீபத்தில் ஒரு யானை நள்ளிரவில் வந்து நின்றது. விசாரித்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அது யானை வழித்தடமாக இருந்துள்ளது. யானைகளின் ஜீன்களில், அதன் பாரம்பரிய வழித்தடங்களின் பாதைகள் பொதிந்துள்ளன. பல தலைமுறைகளுக்கு முந்தைய வழித்தடத்தைக்கூட ஒரு யானையால் கண்டடைய முடியும். ஆனால், அந்த வழித்தடங்கள் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. காடுகளுக்குள் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்களைக் கட்டி யானைகளின் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் குழம்பிப்போகும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வருவதும் நடக்கிறது.

எப்படி இருப்பினும் இந்த விஷயத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது… யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது என்றால் ஒன்று… அதன் வழித்தடம் மறிக்கப்பட்டதால் வழிமாறி வந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடம் அதன் பாரம்பரிய வழித்தடத்தில் வருகிறது என்று பொருள். அவற்றை அப்படியே விட்டால், அதன்போக்கில் கடந்துசென்று, ஏதோ ஓர் இடத்தில் காட்டுடன் இணைந்துவிடும். மாறாக விரட்டிவிடுகிறேன் என்று வெடி வெடித்து விரட்டினால், வழித்தடம் குழம்பி மேற்கொண்டு அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும்.

இன்று தமிழ்நாட்டில் சுமார் 3,000 யானைகளும், கேரளாவில் சுமார் 2,000 யானைகளும், கர்நாடகாவில் சுமார் 1,500 யானைகளும் உள்ளன. இவை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உணவு கிடைக்கும் இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன; நகர வேண்டும். அதுதான் ஆரோக்கியமான காட்டுக்கு அழகு. இதற்கு இடையூறு செய்யும் வன ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். யானைகளின் பாதுகாப்புக்கு இதுவே முதல்படி!”

இந்த முதல்படியில் அடியை எடுத்து வைக்காமல் சின்ன தம்பியை கும்கியாக மாற்றுவதாலோ… கொடூரமான முறையில் காட்டுக்குள் விரட்டுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது. ஏனென்றால், இது ஒரே ஒரு சின்ன தம்பி யானையின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த யானைகளின் தீராத வலியும் வேதனையும்; கேள்விக்குள்ளாகியிருக்கும் அவற்றின் எதிர்கால வாழ்வும்!

நன்றி : முகநூலில்  M Punniyamoorthy

காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?

0

காந்தி, 1948 ஜனவரி 30-ஆம் தேதி அன்று நாதுராம் கோட்சேவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த படுகொலை நடந்து நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி 3-ஆம் தேதி கோல்வாக்கர் கைது செய்யப்பட்டார். மறுநாள் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அரசின் அறிவிக்கை, ஆர்.எஸ்.எஸ். ஏன் தடை செய்யப்பட்டது என விளக்கியது. “விரும்பத்தகாத மற்றும் மிக மோசமான ஆபத்தான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்” என கூறியது அந்த அறிக்கை. விவரமாக அந்த அமைப்பின் படுபயங்கரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டது.

“ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கலவரம் செய்தல், கொள்ளை, கொலை, வழிப்பறி, சட்டவிரோதமாக ஆயுதங்களை வெடிபொருட்களை சேகரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் தீவிரவாத செயல்களைத் தூண்டுவிதமாக துண்டுச்சீட்டு விநியோகித்து மக்களை கொலை செய்யவும் ஆயுதங்களை சேகரிக்கவும் அரசு, போலீசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியதும் தெரியவந்துள்ளது” என்றது அரசின் அறிவிக்கை.

golwalkar
எம்.எஸ்.கோல்வால்கர்

அரசின் நடவடிக்கைகள் ஆர்.எஸ். எஸ். இருப்புக்கு சவாலாக இருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்சலக் (அகில இந்தியத் தலைவர்)-ஆக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், இந்த நெருக்கடி நிலையிலிருந்து இந்த அமைப்பை காப்பாற்றத் திறமையுடன் காய் நகர்த்தினார். அடுத்த ஆண்டுக்குள் அந்த அமைப்பு பழைய நிலைக்கு வந்தது. இதைச் செய்ய, அறிக்கைகள், விவாதங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான முயற்சிகள் மூலம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கலவையான அணிதிரட்டல்களை பயன்படுத்தினார்.  அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல், இந்த அமைப்பின் இருப்பை தக்கவைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஆர்.எஸ். எஸ். தடைசெய்யப்பட்ட அடுத்த நாள், கோல்வால்கர் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டே அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது” என்றார்.

“அரசு, ஆர்.எஸ்.எஸ்-ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவித்த நிலையில், தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ கலைத்து விடுவதே நல்லது. ஆனால் அதே நேரத்தில் இந்த அமைப்புக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மறுக்கிறோம்” என்றது கோல்வால்கரின் அறிக்கை.

‘ஆர்.எஸ்.எஸ்-சின் ஆரம்ப நாட்கள்’ என்ற நூலில் வால்டர் ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி தம்லே, “இந்த அறிவுத்தல் மற்றும் தடையையும் மீறி, அதிக எண்ணிக்கையிலான சுவயம் சேவக்குகள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) சந்தித்துக் கொள்வதைத் தொடர்ந்தார்கள்” என்று பதிவு செய்திருக்கின்றனர்.  இந்த அமைப்பின் அனைத்து மட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், இளம் உறுப்பினர்கள் அமைப்பின் ரகசிய இயந்திரத்தை கட்டியெழுப்பி, பராமரித்தார்கள் என்கிறது அந்த நூல்.

படிக்க:
♦ ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம்: காவி தீவிரவாதிகள் அறிவிப்பு!
♦ காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

காந்தி படுகொலைக்கான  உடனடி திட்டம் இந்து மகாசபையின் ஒரு பிரிவினரால் தீட்டப்பட்டு,  குற்றம் நடப்பதற்கான சூழலை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றியது சில நாட்களில் தெளிவாக தெரிய வந்தது.

1948 ஜூலை 18-ஆம் தேதியிட்டு, இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி,  உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி படுகொலையில் இந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கை எழுதியிருந்தார்.

காந்தி – கோட்சே

“இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக,  குறிப்பாக அந்த முன்னாள் உறுப்பினர் (கோட்சே) மூலம் நாட்டில் இத்தகைய சூழல் உருவாகி, இந்த சோகம் நடக்க காரணமாகி விட்டது. இந்து மகா சபையில் தீவிரமாக இயங்கிய ஒரு பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டது குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள் அரசுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. நாங்கள் திரட்டிய தகவல்களின்படி, தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட இந்த செயல்பாடுகளை நிறுத்தியிருக்க முடியாது.” என சியாம் பிரசாத்தின் கடிதம் சொன்னது.

ஆர்.எஸ்.எஸ். வன்முறையை தூண்டியதற்கு இவை ஆதாரங்களாக இருந்த போதிலும் ஆர்.எஸ்.எஸ்-சின் உறுப்பினர்களுக்கு காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்பிருந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. எனவே, பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.

பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது, அரசு ஒப்புதல் இல்லாமல் எதையும் அச்சிட்டு வெளியிடக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் கோல்வால்கரும் ஆகஸ்டு மாதம் விடுவிக்கப்பட்டார்.  அதே ஆண்டின் இறுதியில் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் குறித்து கோல்வாக்கருக்கு எழுதினார். அதில், “இந்துக்களை ஒருங்கிணைப்பது அவர்களுக்கு உதவுவது ஒரு விசயம். ஆனால், இவர்களுடைய துன்பங்களுக்காக அப்பாவியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பழிவாங்குகிறேன் என்பது வேறு விசயம்” என்றார் பட்டேல்.

“காங்கிரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நச்சுத்தனமான கருத்துக்களை எந்தவித நாகரிகமும் பாராமல் ஆளுமைகளை அவமதிக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்வது மக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது” எனவும் அந்தக் கடித்ததில் எழுதுகிறார்.

இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் பேச்சு முழுமையும் “மத விசத்தை” பரப்புக் கூடியவை என்கிற பட்டேல், இந்துக்களை கவரவும் அவர்களை பாதுகாக்கவும் இத்தகைய விசத்தை பரப்ப வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

“இதன் விளைவாகத்தான் காந்தியின் மதிப்பில்லா உயிரை தியாகம் செய்து நாடு துயரப்படுகிறது. இப்போது அரசும் மக்களும் ஆர்.எஸ். எஸ்-ஐ எதிர்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காந்திஜியின் கொலையை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன.” (பட்டேலின் உள்ளே இருக்கும் இந்துத்துவம் வெளிப்படுவதை இதில் காணலாம்.)

“இந்த நிலையில் அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ளும் எனக் கருதியது அரசு. ஆனால், பழையபடி அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை தொடர்கிறார்கள் என்றே எனக்கு தகவல் வருகிறது” என்றது பட்டேலின் கடிதம்.

அக்டோபர் மாதம், கோல்வால்கருக்கு விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது. டெல்லிக்குச் சென்று அரசுடன் விவாதித்தார், ஆனால் பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோல்வாக்கார் மீண்டும் கைதுசெய்யப்பட்டார், நாக்பூருக்கு திரும்பினார்.

இந்த இக்கட்டான மற்றும் குழப்பான சூழ்நிலையில், கோல்வாக்கர்  ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்காலத்துக்காக திட்டமிட்டார். ஆர்.எஸ்.எஸ்-ஆதரவாளர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. அதில், “ஆர்.எஸ்.எஸ்-ஐ அரசியல் கட்சியாக மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படும். பக்தியுடனான கலாச்சார பணிகள் எதையும் செய்ய முடியாது என்பதே அந்த யோசனை. இது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்ற கோல்வால்கர், “கலாச்சார பணிகள், அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியோடு இணைந்திருக்கக் கூடாது. எனவே, இந்த யோசனை மக்களுக்கு விருப்பமானது அல்ல என தெரிவிக்கிறேன்” என நிராகரிக்கிறார்.

ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க சத்தியாகிரக போராட்டத்தை டெல்லியில் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கினார் கோல்வாக்கர். இது அவருக்கு கைக் கொடுத்தது. கிட்டத்தட்ட 6000 பேர் அதில் கலந்துகொண்டார்கள் என ஆர். எஸ்.எஸ். கூறுகிறது.  பட்டேலும் அதனுடன் நெருக்கம் காட்டுவதில் ஆர்வமாக இருந்தார்.

அந்த சமயத்தில் அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மத்திய குழு உறுப்பினராக இருந்த ஏக்நாத் ரனாடே-விடம் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்து அக்கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டுமானத்துக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டதாக  ஆண்டர்சன் மற்றும் தம்லே தங்களது நூலில் சுட்டிக் காட்டுகிறார்கள்.  நேருவின் சில கொள்கைகளை எதிர்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பட்டேல் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் என அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அம்மைப்பின் தலைவர் சொன்னதாக நூலாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறிவரும் கருத்துக்கு ஆதாரம் தரும்படி கோல்வால்கர், தொடர்ந்து பட்டேலுக்கு எழுதிக் கொண்டிருந்தார்.  துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த பட்டேலுக்கு அரசிடமிருந்த ஆதாரங்கள் குறித்து தெரியும். ஆனால், ஏன் அவர் அதை கோல்வால்கருக்கோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவிக்கவில்லை என்பது புலனாகவில்லை.

ஆர்.எஸ். எஸ். மீதான பட்டேலின் ஆர்வம், அடுத்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டதில் தெரிந்தது. நேரு வெளிநாட்டில் இருந்த போது, ஆர்.எஸ். எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய அக்கட்சி அனுமதித்தது.  இந்த முடிவு பட்டேலின் ஆதரவாளர்களால் ஆதரிக்கப்பட்டது, நேருவின் ஆதரவாளர்களால் எதிர்க்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து, நேரு நாடு திரும்பியவுடன் ஆர்.எஸ். எஸ்-சிலிருந்து விலகினால் மட்டுமே கட்சியில் சேர முடியும் என்ற திருத்ததுடன் அந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.

ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க அரசு ஒரு நிபந்தனையை விதித்தது. அந்த அமைப்பு தனது கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதே அது. அப்போது கோல்வாக்கர், “இந்த சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமூக, கலச்சார துறைகளில் மட்டுமே இது சேவை செய்யும்” என எழுதினார். அதோடு, அமைப்பின் உறுப்பினர்கள், தனி நபர்களாக எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்றும் தேசிய நலன்களை தவிர்த்து, வன்முறை அல்லது தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் மத, இன வெறுப்பை தூண்டும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

சிறையில் அடைத்த ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சாவர்க்கர் வழி வாரிசுகள், தங்களுடைய தடையை நீக்க இந்திய அரசிடமும் சரணடைந்து ஒரு பம்மாத்து அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். காந்தி கொலையை திட்டமிட்டார்கள், அதை விரும்பினார்கள் என்பதும் இயக்கம் மீதான தடை வந்த பிறகு தடை செய்தவன் காலில் விழுவதும் ஒரு பாசிஸ்டின் குணநலன்கள். மேலும் காங்கிரசின் இந்துத்துவ சார்பும் இந்த பிரச்சினையில் இருக்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரித்த வல்லபாய் பட்டேல் அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்க பாடுபட்டதும், இன்று குஜராத்தில் அவருக்கு மோடி அண்ட் கோ சிலை எழுப்புவதும் நடந்திருக்கிறது. 

மேலும் தடையை நீக்க நாங்கள் அரசியல் கட்சியாக மாற மாட்டோம், காங்கிரசிடம் சேருவோம் என்றெல்லாம் இந்த ‘வீரர்க்ள்’ ஜெயா காரில் விழும் ஓபிஎஸ்-ஐ போல விழுந்திருக்கிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் இந்திராவால் தடை செய்யப் பட்ட போதும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் இதே போன்றதொரு கடிதத்தை இந்திரா காந்திக்கு அனுப்பியிருந்தார். அதில் இந்திராவை காளி, துர்க்கை, பாரதமாதா என்றெல்லாம் புரட்சித் தலைவியை வழிபடும் ஈ.பி.எஸ் போல கவிதை பாடியிருக்கிறார். இப்படி ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு காந்தியை கொலை செய்து அதை ஒட்டிய தடையை ’சாமர்த்தியமாக’ நீக்கி பிறகு இந்திய வரலாற்றில் நாடெங்கும் பார்ப்பனியத்தின் பேரில் கலவரங்களும் படுகொலைகளும் நிகழ்த்தி வருகிறார்கள். இந்த வரலாற்றுக்கு பொருத்தமாகத்தான் காந்தி கொலைக்கு பிறகு இவர்கள் மீதான தடை நீக்கம் நடந்திருக்கிறது.

– வினவு


கட்டுரை : ஹர்தோஷ் சிங் பால்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: கேரவன் 

குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்

4

வில்லவன்
குழந்தைகளை அடித்து வளர்ப்பது குறித்த இருவேறு கருத்துக்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கின்றன. ஆனால் யதார்த்தத்தில் ஆகப்பெரும்பான்மையோரால் அடிக்காமல் பிள்ளைகளை வளர்க்க முடிவதில்லை. பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் என் அறிவுக்கு எட்டியவரை எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கும் வழக்கம் இருக்கிறது. (அதி மேட்டுக்குடி பள்ளிகளில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்) வீடுகளிலும் இதே நிலைதான்.

இன்றைய பெற்றோர்கள் பலரும் அடிவாங்கி வளர்ந்தவர்கள். அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள். ஆகவே அவர்களில் பலர் ஒரு புதிய நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் ”பிள்ளைகளை வேறு யாரும் அடிக்கக்கூடாது” என்பதுதான் அது. இப்படியான குழப்பங்கள் ஆசிரியர்களிடம் இல்லை. அடிக்கக்கூடாதுங்கறது கருத்தளவில் சரிதான், ஆனால் இன்றைய பிள்ளைகளை அடிக்காமல் திருத்த முடியாது எனும் தீர்மானத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பள்ளிகளில் தண்டனை கடுமையாக இருந்த காலத்தில் கல்வித் தரம் சிறப்பாக இருந்ததாக அவர்கள் தீர்மானமாக நம்புகிறார்கள்.

இப்போது பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன். பத்து வயது சிறுமி தன்னை அடித்த ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார் (நான் காணாமல் போக போகிறேன். என்னை $%@ மிஸ் திட்டிவிட்டார் – இதுதான் கடிதம்). கடுமையாக அடித்துவிட்டு அறைக்கு வந்த பின் பயந்து புலம்பிய ஆசிரியர்களை பார்த்ததுண்டு (இனிமே எதுவும் பண்ணக்கூடாது சார். யாரு எக்கேடு கெட்டா என்னன்னு இருக்கணும்).

சென்னிமலை அரசு பள்ளியில் மாணவர்களை அடித்த ஆசிரியையை தண்டிக்கக்கோரி திரண்ட பெற்றோர்கள்.

இதைத்தவிர வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அடிக்கு மட்டுமே அடங்கிப் பழகிய மாணவர்கள் பூஞ்சையான, அடிக்க யோசிக்கும் ஆசிரியர்கள் வரும்போது கட்டுப்பாடற்று குறும்பு செய்கிறார்கள். அடித்தால்தான் இங்கே குப்பை கொட்ட முடியும் எனும் எண்ணத்தை அது வலுப்படுத்துகிறது. அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த டெக்னிக்கும் பள்ளிகளில் இல்லை. ஆரம்பப்பள்ளியில் அடித்து மாணவர்களை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கிறது. அதே மாணவர்கள் மேல் வகுப்புக்களுக்கு வரும்போது அடிப்பது பெருமளவு உதவுவதில்லை.

குழந்தைகளை அடிப்பது எனும் செயலை மூன்று வேறுபட்ட கோணங்களில் நம்மால் விவாதிக்க இயலும்.

• உடல்ரீதியாக தண்டிப்பதை ஏன் நம்மால் தவிர்க்க முடியவில்லை?
• அடிக்காமல் வளர்ப்பது சாத்தியமா?
• அடித்து வளர்ப்பதன் பின்விளைவுகள் என்ன?

உடல்ரீதியான தண்டனைகளே பிள்ளைகளை திருத்தும் எனும் அழுத்தமான நம்பிக்கை நம் சமூகத்தில் இருந்தது. ஆகவே அதனை எந்த குற்ற உணர்வும் இன்றி நாம் செய்து வந்திருக்கிறோம். இப்போது அது தவறோ எனும் சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது. இவை அறிவியல்பூர்வமான தரவுகளை மட்டுமே வைத்து எழுபவை அல்ல. குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாக சுருங்கியிருக்கிறது. அவர்கள் மீது செய்யப்படும் முதலீடு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதீத எதிர்பார்ப்பு மற்றும் அதீத பயம் ஆகியவை மிகை முதலீட்டின் தவிர்க்க முடியாத பக்கவிளைவுகள். பிள்ளைகளை அடிப்பதால் எதிர்பார்த்தது கிடைக்காமல் போய்விடுமோ அல்லது முதலீட்டுக்கு சேதம் வந்துவிடுமோ எனும் அச்சம் வருகிறது (அடிச்சு ஏதாவது ஆயிடுச்சுன்னா? அடிச்சதால கோபப்பட்டு ஏதாவது பண்ணிக்கிட்டான்னா?). கூடுதலாக, அடிப்பது நல்லதல்ல எனும் செய்தியும் அவர்களை அரைகுறையாகவேனும் வந்தடைகிறது.

மிகை முதலீடு, மிகை எதிர்பார்ப்பு ஆகியவை பெற்றோருக்கு கடுமையான பதட்டத்தை உருவாக்குகிறது. முன்பிருந்த இணக்கமான சமூக சூழல் இன்று இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட குழந்தைகள் தெருவில் அதிக நேரம் விளையாடவும் அருகே வசிக்கும் குடும்பத்தவரால் பார்த்துக்கொள்ளப்படவுமான சூழல் இருந்தது. இப்போது பார்த்துக்கொள்வது என்பது முற்று முழுதாக பெற்றோர்களின் சுமை. தெருக்கள் விளையாட உகந்ததாக இல்லாத பாதுகாப்பற்ற இடமாகியிருக்கிறது. ஆகவே சிறார்கள் தமது குறும்பை முழுமையாக வீட்டுக்குள்ளேயே காட்டவேண்டிய நிலை உருவாகிறது. இவை எல்லாம் சேர்ந்து பெற்றோரின் மன அழுத்தத்தை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.

பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன்.

இத்தகைய பெற்றோர்கள் மிக சுலபத்தில் கோபப்பட்டு குழந்தைகளை அடிக்கிறார்கள் (காரணம் அவர்கள்தான் எளிய இலக்கு). மிகச்சிறு வயதிலேயே உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதால் அடிவாங்கினால் மட்டுமே கட்டுக்குள் வரும் பிள்ளைகளை கணிசமாக உருவாக்கி பள்ளிக்கு அனுப்புகிறது நமது சமூகம். இப்படியான பிள்ளைகளை கட்டுப்படுத்த எல்.கே.ஜி. ஆசிரியருக்கு மாற்று வழிகள் இல்லை. ஒருவேளை அவர் மிகைக் குறும்பு குழந்தைகளை மன்னித்து அவகாசம் கொடுத்து திருத்த முற்பட்டால், அந்த குழந்தைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் அந்த ஆசிரியரை தொலைத்துவிடுவார்கள் (மற்ற பிள்ளைகளை முரட்டுத்தனமாக அடிக்கின்ற குழந்தைகள் எல்லா பள்ளிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். யாராவது அடித்தால் நீயும் திருப்பி அடி என பெற்றோர் சொல்லிக்கொடுப்பதால் ஆரம்ப வகுப்புக்களிலேயே சண்டைகள் தீவிரமாகிறது என்கிறார் 21 ஆண்டுகளாக கேஜி வகுப்புகளைக் கையாளும் மூத்த ஆசிரியர் ஒருவர்).

முன்பு குறிப்பிட்ட கடுமையான புறச்சூழல் பெற்றோருக்கு மட்டுமானதல்ல, ஆசிரியர்களும் அவ்வாறான நிலையில்தான் வாழ்கிறார்கள். ஆகவே அவர்களும் நிதானமாக நிர்வகிக்க முடியாதவர்களாகி குழந்தைகளை அடித்து மட்டுமே கையாளும் நிலைக்கு செல்கிறார்கள்.

இதன் விளைவுகள் பலவும் மோசமானவை. முதலில் மாணவர்களை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சிக்கலாகிக்கொண்டே வருகிறது. ஒரு ஆசிரியரின் கண்காணிப்பு இல்லா நிலையில் வகுப்பறைகள் எந்த அசம்பாவிதமும் நிகழலாம் எனும் அளவுக்கு செல்கிறது. ஓடி விளையாடி காயமடைவது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது என்பது மட்டுமின்றி இதில் பங்கேற்காத மாணவர்களும் காயமடைவது நடக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் முரட்டுக்குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். அவர்களை அடித்து ஒழுங்குபடுத்துவது எனும் தற்காலிக தீர்வை ஆசிரியர்கள் கைக்கொள்ளும்போது அவர் தன்னை அறியாமல் மேல் வகுப்புகளின் சூழலை மோசமாக்குகிறார்.

அடிப்பதன் மூலம் நம்மால் பிரச்சினையை ஒத்தி வைக்க மட்டுமே முடியும். அந்த கால இடைவெளியில் அப்பிரச்சினை தீவிரமாகிவிடுகிறது. சகிக்க முடியாத அளவுக்கு குறும்பு (அல்லது வேறு சேட்டைகள்) செய்யும் மாணவர்கள் வீட்டிலும் பள்ளியிலும் நிறைய தண்டனை பெறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அப்படி அடிவாங்கி திருந்திய மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. அப்படி யாரையேனும் பார்த்தவர்களையும் நான் பார்த்ததில்லை.

மேல் வகுப்புகளில் அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த வழிகளும் இருப்பதில்லை. இன்னும் கடுமையாக அடிப்பது மற்றும் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிப்பது இதுமட்டுமே மேல்/உயர்  நிலை வகுப்புக்களில் உள்ள வாய்ப்பு. சமயங்களில் மாணவர்களுக்கு இடையேயான சண்டை பெற்றோர்கள் இடையேயான சண்டையாக மாறுகிறது. பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தும் மாணவர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் தங்களால் வகுப்புகளை கையாளவே முடிவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு ஆண் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் இத்தகைய வேலைகளை எந்த வகைப் பள்ளிகளிலும் செய்ய முடிவதில்லை என்பதே கள நிலவரம்.

படிக்க:
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப் 23

இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்த பின்விளைவுகள். இன்னொரு விளைவு இன்னும் ஆபத்தானது. அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள். சக மாணவர்களிடம் ”கெத்து” காட்டுவதற்காகவே ஆசிரியரை எரிச்சலுக்கு உள்ளாக்கும் மாணவர்கள் பலர் உண்டு. பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் ‘’இங்க வாடா’’ என அழைத்தபோது “என் மேல கைவச்சா காலி” எனும் சினிமா பாட்டை பாடிக்கொண்டு வந்திருக்கிறார். “என்ன சொன்னே?” என கேட்டபோது “சும்மா பாடினேன் சார்” என பதில் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அடித்தாலும் பரவாயில்லை எனும் தயாரிப்போடு செய்யப்படும் ஹீரோயிசம். இப்படியான மாணவர்களிடம் இயல்பாகவே ஒரு குழு சேர்ந்துகொள்கிறது. இவர்கள் மற்ற மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதால் வகுப்பறைக்குள்ளும் பூசல்கள் முளைக்கின்றன.

போய்த் தொலைங்க சனியனுங்களே எனும் விரக்தி நிலைக்கு ஆசிரியர்கள் செல்லும்போது அது கற்கும் ஆர்வமுள்ள மாணவர்களையும் பாதிக்கின்றது. கற்பிக்கும் சூழலை கொண்டுவருவதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருப்பதால் பாடத்திற்கான அவகாசம் குறைகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சராசரி மாணவர்கள்தான். அவர்களால் இந்த சேட்டைக்கார கும்பலிலும் சேர முடியாது; விரைவாக நடத்தப்படும் பாடங்களும் புரியாது. ஒரு வகுப்பறை எல்லா தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் இப்படி அடிவாங்க துணிந்த கட்டுப்படாத மாணவர்கள் மூலம் வகுப்பறையின் சமநிலை குலைகிறது. இத்தகைய மாணவர்களையே பள்ளிகள் அதிகமாக ஆற்றுப்படுத்துனரிடம் அனுப்புகின்றன. நானறிந்தவரை எந்த ஆற்றுப்படுத்துனரும் இப்படியான மாணவர்களிடம் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடிந்ததாக சொல்லவில்லை.

அடிப்பதை சட்டபூர்வமாக தடுத்து அதனை கடுமையாக பின்பற்றினால் என்ன நடக்கும்?

அப்படி பின்பற்றப்படும் இடங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டால் இது உருப்படியான யோசனையா எனும் முடிவுக்கு வரலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு அடிக்கவே அடிக்காத பள்ளி என அறியப்பட்ட பிரீமியம் பள்ளியொன்றில் இப்போது அந்த ”சட்டம்” பயன்பாட்டில் இல்லை. அதில் கறாராக இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிலைப்பதில்லை. அதி மேட்டுக்குடி பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் போகும் வாய்ப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியான பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் வகுப்புப் பாடங்களை எழுதாத மாணவர்களின் நோட்டை வீட்டுக்கு எடுத்துசென்று அவரே எழுதிக்கொண்டு வருகிறார். அடித்து கண்டிக்க முடியவில்லை பள்ளிக்கும் பதில் சொல்ல வேண்டும் எனும் நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு மட்டுமே மிச்சமாக இருக்கிறது. மிக ஆபாசமான கமெண்ட்டுகளை கேட்டுவிட்டு அதை கவனிக்காததுபோல சென்றுவிடுகிறோம் என சில ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் (இந்த நிலை எலீட் பள்ளிகளில் மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான அரசுப்பள்ளி மாணவர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று அவர்கள் ஆசிரியர் வகுப்பில் இருக்கையிலேயே அவரை சுற்றி ஆடிப்பாடுவதை காட்டியது. அப்போதும் ஆசிரியர் அமைதியாக அவர் வேலையை பார்க்கிறார்).

இத்தகைய அதி மேட்டுக்குடி பள்ளிகளில் உள்ள மிகைக் குறும்பு மற்றும் மோசமான நடத்தை கொண்ட மாணவர்களால் பாதிக்கப்படும் மாணவர்களை பாதுகாக்க உருப்படியான எந்த வழியும் இல்லை. அப்படியான பள்ளி ஒன்றில் இருந்து “நல்லா அடிக்கிற” பள்ளியை தேடி வந்து சேர்ந்த மாணவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். இப்போதான் பயமில்லாம பள்ளிக்கு வருகிறேன் என மகிழ்கிறார் அவர் (கெடுவினையாக அங்கேயும் அவர் மகிழ்ச்சி நீடிப்பதற்கான வாய்ப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவு).

அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள்.

மாணவர்கள் அளவுக்கு மீறி குறும்பு செய்வது, விரும்பத்தகாத நடத்தைகள் மற்றும் உடல்ரீதியாக தண்டிப்பது ஆகியவை பல்வேறு காரணிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் விளைவுகள். அதனை ஒற்றைப் பிரச்சினையாக கருதுவதே அறிவீனம். அதனை ஒற்றை சட்டத்தின் மூலம் களைய முனைவது இன்னும் கோமாளித்தனமான முடிவு. மாணவர்கள் தொடர்பான எந்த ஒரு முடிவும் பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடனான விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகே செய்யப்பட வேண்டும். தான்தோன்றித்தனமான முடிவுக்குப்பிறகான கடும் உழைப்புகூட சொதப்பும் என்பதற்கு நமது 11-ம் வகுப்பு புதிய பாடங்கள் ஒரு உதாரணம்.

நீட்டை மனதில் வைத்து பாடங்கள் கடுமையானதாக மாற்றப்பட்டிருக்கிறது. (உயிரியல் பாடம் மொத்தமாக ஆயிரத்து சொச்சம் பக்கங்கள், இயற்பியலில் வாக்கியங்கள் குறைக்கப்பட்டு சமன்பாடுகளும் கணக்கீடுகளும் மிகுந்திருக்கின்றன). ஆனால் அதே நீட் கணிதம் – உயிரியல் – வேதியியல் பாடப் பிரிவின் டிமாண்டை குறைத்திருக்கிறது (சேர்க்கையில் ஏறத்தாழ 30 சதம் வீழ்ச்சி). அக்கவுண்டன்சி, காமர்ஸ் போன்ற பிரிவுகளுக்கு அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் செல்வதால், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் முதல் குரூப்பை நாடுகிறார்கள். அதாவது நன்றாக படிப்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் எளிய பாடமும் சுமாராக படிப்பவர்களுக்கு மிகக்கடுமையான பாடச்சுமையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாட்டால் ஆசிரியர் மாணவர் என இரு தரப்பும் தண்டனை அனுபவிக்கின்றன. போன ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த சிக்கல் பூதாகரமாக வெளிப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மதிப்பெண் தாராளமாக வழங்கப்பட்டு நிலைமை தற்காலிகமாக சமாளிக்கப்பட்டது. இந்த வருடம் +2 தேர்வுகள் நியாயமாக மதிப்பிடப்பட்டால் கணிதம் & அறிவியல் பிரிவில் 60% தேர்ச்சியே அதிகம்.

அரசு பள்ளியொன்றில் மனநல மருத்துவரின் ஆலோசனை.

இப்படித்தான் கல்வி சார்ந்த பல மாற்றங்கள் பயன்பாட்டுக்கு ஆகாததாக செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அடிக்காமல் வளர்ப்பது என்பது இன்றைய பள்ளிச் சூழலில் சாத்தியமே இல்லாதது. காரணம் அதில் பெற்றோர், அரசு, பள்ளி என பல தரப்பும் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகமாக நமது நம்பிக்கை, பழக்கம், அறஉணர்வு ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. இவை எது குறித்தும் கவலைப்படாமல் அதனை ஒரு ஆசிரியரின் கடமை என தள்ளிவிட்டால் நம்மால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக அதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்விச்சூழலை நீங்கள் இன்னும் மோசமாக்குவீர்கள்.

பின்குறிப்பு : ஒரு ஆற்றுப்படுத்துனராக எனது பணி அனுபவத்தின் மூலமும் ஏனைய ஆற்றுப்படுத்துனர்கள் பகிர்ந்தவற்றின் மூலமும் எழுதப்பட்ட கருத்துக்கள் இவை. பெருமளவு மத்திய மற்றும் உயர்மத்தியதர வர்க்க பிள்ளைகள் உள்ள பள்ளிகளின் சூழலில் இருந்து பெறப்பட்ட தரவுகளே இதன் அடிப்படை. வேறு வகையான பள்ளிகளில் சூழல் வேறாக இருக்கலாம். அங்கிருக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிந்துரைகள் முற்றிலும் வேறாக இருக்கலாம். எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடிய சில ஆலோசனைகளும் (பெற்றோர்கள் – ஆசிரியர்களுக்கானவை) இருக்கின்றன. ஆனால், அதற்கு கல்விப் புலத்தில் இருக்கும் ஏனைய பிரச்சினைகளை ஓரளவுக்கு புரிந்துகொள்வது அவசியம். அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றை பார்த்துவிட்டு இதற்கு நாம் என்ன செய்யலாம் எனும் பரிந்துரைகளை விவாதிக்கலாம்.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

சினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் ?

ஐ.டி. ஊழியர்கள் மட்டுமல்ல, மக்களும் கூட சினிமாவில் ஹீரோ ‘கெத்து’ காட்டுவதை விரும்புகின்றனர். இதில் ஐ.டி ஊழியர்களுக்கு அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், மல்டிப்ளக்ஸ் என  கூடுதல் வாய்ப்புகள் உண்டு. வெள்ளித்திரையில் கொடுமை கண்டு பொங்கும் ஹீரோக்களின் ஆக்சன் காட்சிகளை ரசிப்பவர்கள், தாங்கள் பணி நீக்கம் செய்யப்படும்போது ஹாரர் மூவி  (Horror Movie) போல பலிகடா ஆவது ஏன் ? இதோ ஒரு அனுபவம் !

12 ஆண்டுகாலமாக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் எனது ஐ.டி. துறை வாழ்க்கையில் Lay Off என்ற பயங்கரத்தை நேரில் கண்டதில்லை. “அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள், இவரை துரத்தி விட்டார்கள்” என்பது போன்ற இரண்டாம் கட்ட ஆதாரங்களை மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் மதியம் என்னோடு உணவு உண்டவர் இன்று என்னோடு அலுவலகத்தில் இல்லை. இப்போது வீட்டில் இருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். எத்தனை நாள் வீட்டில் இருக்க அவரால் இயலும்? அவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க மனம் பதறுகிறது. திடீரென ஒருவர் எப்படி செல்லாக்காசாக மாறிவிட்டார் என்பதை நம்ப மனமில்லை. பதற்றம் நிறைந்த சூழல்.

ஜனவரி 30-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி எங்களுக்கு மூன்று நாட்கள் கழித்துதான் தெரிந்தது. தெரிந்தவுடன் எனக்குள் பதற்றம். இப்படி கருவேப்பிலை போல் உயிருள்ள ஓர் மனிதனை எப்படி திடீரென குப்பையாக மாற்ற முடிகிறது என்ற கேள்வியும் பதற்றமும் என்னுள் எழுந்தது, என்னால் இயல்பாக இருக்க இயலவில்லை.

நிறுவனங்களின் இலாபவெறி கண்டு வெறுப்படைந்தேன். மனிதத்தன்மையற்ற, நேர்மையற்ற இதுபோன்ற செயல்பாடுகளால் எரிச்சலடைந்தேன். அந்த நபரின் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்து, வரும் பதற்றத்தை கண்டுணர்ந்தேன்.

அந்த நபரோடு, அவர் LayOff  பண்ணப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் எனக்கு அறிமுகம். தான் LayOff பண்ணப்படலாம் என்ற முன்பயம் அவருக்கு இருந்தது.

ஏனெனில், கடந்த இரு  (Performance Rating Cycle) பணி தரநிலைகளில், வேலையில் முன்னேற்றம் தேவை (Need Improvement) என்ற மதிப்பீடு தரப்பட்டு இருந்தது. மேலும் கடந்த ஆண்டிற்கான பணித்தரநிலை மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்து தோல்வியடைந்திருந்தார். எனவே, பணி நீக்கம் இன்றோ நாளையோ என்ற மனநிலையில்தான் அவர் இருந்தார். இது போன்ற சூழலில் அவரை சிலர் (என்னைப் பற்றி அறிமுகம் இருந்த பரஸ்பர நண்பர்கள்)  என்னிடம் அறிமுகப்படுத்தி ஆலோசனை பெற அறிவுறுத்தினர்.

அலுவலகத்தில் அரசியல், தொழிலாளர் நல உரிமை, சட்டங்கள் பற்றி மற்றவர்களிடம் பேசுவதுண்டு. எனவே, அந்த அடிப்படையில் அவர் என்னைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், அதையும் மீறி பணி நீக்கம் செய்யப்பட்டால் அதை எதிர்ப்பது எப்படி என்றும், NDLF, FITE போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர் சங்கங்கள் பற்றியும், கடந்த சில ஆண்டுகளில் பெருநிறுவனங்களை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கதை பற்றியும் எடுத்துச் சொன்னேன். NDLF, FITE   ஆகியவற்றின் தொடர்பு எண்களைத் தந்து அவற்றில் ஏதாவது ஒன்றில் (அவருக்கு எது பிடிக்கிறதோ அதில்) சேரச் சொன்னேன்.

(கோப்புப் படம்)

பணி நீக்கம் செய்யப்படும் சூழல் வருமாயின் அது போன்ற HR உடனான சந்திப்புகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், என்ன சொன்னாலும் “பணிவிலகல் கடிதம் கொடுக்காதே” என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அப்படியே பணி நீக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்தால் அவர்களை (நிறுவனத்தை) பணிநீக்க ஆணையை அனுப்பச் சொல் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். மேலும், இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வாய்ப்புள்ள ஆதாரங்களை திரட்டவும் அறிவுறுத்தினேன்.

இவ்வளவு அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்குப் பின்னரும் ஏன் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் “இவரைப் போன்ற தன்னுரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத அடிமைகள் இருக்கும் வரை” இலாபவெறி பிடித்த, நேர்மையற்ற தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கிள்ளுக்கீரை போன்று நடத்துவது தொடரும் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.

நடந்தது என்னவெனில் பணிநீக்கம் செய்யபடப்போகிற அந்த நாளின் காலையிலே (HR) மனிதவள துறை நிர்வாகியோடு சந்திப்பு உறுதியாகிவிட்டது. அந்த சந்திப்பு பணிநீக்கம் தொடர்பானது என்று அவர்  கணித்துள்ளார். அன்று மதிய உணவை எங்களோடு இணைந்துதான் உண்டார். அப்போது பதற்றத்தில் இருந்தார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எங்களோடு எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. அன்று மாலை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மனிதவள நிர்வாகியுடனான சந்திப்பில் “உங்களை பணி நீக்கம் செய்யப்போகிறோம், நீங்கள் பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிடுங்கள்” என்று மனிதவள நிர்வாகி சொல்லியுள்ளார். அதற்குப் பதிலீடாக மூன்று மாத சம்பளம் தருவோம் என்ற உத்திரவாதத்தை தந்துள்ளனர்.

பணிவிலகல் கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்ட அடுத்த நிமிடம் அவரிடம் இருந்து அடையாள அட்டையைப் (ID Card) பெற்றுக்கொண்டு காவலாளி (Security) துணைகொண்டு அவரை அலுவலக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

(கோப்புப் படம்)

அதன்பின்னர் அவர் அலுவலகம் வராததால் இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை. பின்னர் ஒருவழியாக மூன்றாம் நாள் அவரைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், “இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, NDLF நண்பர்களிடம்  அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள், அவர்களோடு இணைந்தால் வழிபிறக்கும் என்று (Guide) அறிவுறுத்திய போதும், “இன்னும் சில நாட்களில் பதிலீட்டுத் தொகையை (Compensation package) பெற்றுக்கொண்ட பின்னர் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்று சொன்னவரை பணிநீக்கம் செய்யாமல் என்ன செய்வார்கள்?

படிக்க:
TCS : We can Combat layoff!
ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !

என்ன நண்பர்களே, இவரைப் போன்று தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?

உங்களுக்கு சந்தேகம் உண்டா? எனக்கு இல்லை.

உள்ளம் நிறைந்த அன்புடனும்,  நெஞ்சம் நிறைந்த நன்றியுடனும்,

– சு. விஜயபாஸ்கர்
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

சிறுநீரகப் பிரச்சினைக்கான உணவு முறை | மருத்துவர் BRJ கண்ணன்

நாம் இதற்கு முன்பு பேசிய உணவுமுறை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இல்லாதவர்கள் மாரடைப்பு உள்ளவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்குமானது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு முறை.

சிறுநீரக பாதிப்பிற்குப்பின் நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்றால் உடனே அவர் உங்களுக்கு உப்பு சத்து அதிகமாக உள்ளது என்று கூறுவார், அதைத்தொடர்ந்து நீங்கள் மருத்துவர் கூறி விட்டார் என்பதற்காக உணவில் உப்புச் சுவையை குறைத்துக் கொள்வீர்கள் இது தவறான ஒரு செயல்.

நம் உணவில் இருக்கக்கூடிய உப்பானது சோடியம் ஆகும். இந்த உப்பு சத்து இல்லாமல் நமது உடலில் உள்ள எந்த செல்களும் இயங்காது மருத்துவர் கூறிய உப்பானது இந்த உப்பு அல்ல அவர் கூறியது யூரியா கிரியாட்டினின் இந்த வகையான உப்பு. இந்த வகையான உப்பு நம் உடலில் உண்டாகும் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. இந்த வகையான உப்பை நமது சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியவில்லை. ஆகையால் இது நம் ரத்தத்தில் கலக்கிறது இந்த உப்பு சோடியம் வகை ஆகாது.

இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் நம் உணவில் உப்புச் சுவையை சேர்க்காமல் இருப்பது நம் உடலை மேலும் வலுவிழக்கச் செய்யும். இந்த சிறுநீரக நோய்க்கு பல படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். அனைத்து படிநிலைக்கும் பொதுவான ஒரு உணவுப் பழக்கம் ஒன்று கிடையாது. உதாரணத்திற்கு கிரியாட்டினின் அளவு இரண்டு புள்ளியை தாண்டினால் மருத்துவர் உணவில் உப்பு சுவை சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அது எந்த அளவு என்று நாம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இன்னும் விரிவாக கூற வேண்டுமென்றால் சிறுநீரக கோளாறு உள்ள சில பேருக்கு சிறுநீரானது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெளியேறும். அதாவது, உடம்பில் உள்ள சோடியம் அதிக அளவு வெளியேறும். அந்த வகையானவர்கள் உணவில் அதிக உப்பு சுவையை சேர்த்துக் கொள்ள நேரிடும் இது மிகவும் சிக்கலாக தென்படுகிறது அல்லவா. ஆகையால் சிலபேருக்கு உப்பு சுவையை குறைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறுநீரகம் மூலம் சோடியம் அதிகம் வெளியேறும் நபர்களுக்கு உப்புச் சுவையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நாம் எந்த படிநிலையில் உள்ளோம் என்பதைப் பொறுத்து இது மாறுபடும். ஆகையால் பொதுவாக உப்பில்லாமல் உணவை சேர்த்துக் கொள்வது என்பது தவறான செயல். இது முதலில் நாம் தெளிய வேண்டிய ஒன்று.

இரண்டாவது வகையான உப்பு பொட்டாசியம். இதுவும் நம் உடலில் அவசியமான ஒன்றாகும். ஆனால், குறிப்பிட்ட அளவைவிட இது அதிகமாக இருத்தல் கூடாது. பொட்டாசியமானது நம் உடலில் இருந்து வெளியேற இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று, சிறுநீரகம் மூலம் வெளியேறுவது மற்றொன்று மலம் கழிப்பதன் மூலம் வெளியேறுவது. நம் உணவில் பொட்டாசியம் எதிலெல்லாம் அதிக அளவு உள்ளதோ அதை நாம் முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது. முழுதாக பொட்டாசியம் உள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது என்று நாம் கூறவில்லை. உதாரணத்திற்கு காய்கறி, பழங்கள், இளநீர் ஆகியவற்றில் கூட பொட்டாசியம் உள்ளது. இதை நாம் முழுவதும் தவிர்க்கப்போவது கிடையாது. எந்த அளவு என்பதைத்தான் நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மருத்துவர் கூறும் உணவுப் பொருட்களை குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இயல்பாக இருக்கக்கூடியதாகும்.

மலச்சிக்கல் அனைவருக்கும் பொதுவானது எனினும் சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் அது இயல்பான ஒன்றாக அமையும். ஆதலால் மலச்சிக்கல் நீங்க வேண்டும் என எண்ணி வாழைப்பழம் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், அதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே எவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகம் உள்ளது எவற்றில் குறைவு என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ சர்க்கரையின் அறிவியல்

அடுத்ததாக, பாஸ்பரஸ். இதைப்பற்றி பெரிதும் குழம்பிக் கொள்ள வேண்டாம். எந்த வகை உணவுகளில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதோ, அதே உணவுகளில் பாஸ்பரசும் அதே அளவு இருக்கும். நாம் உண்ணும்போது நம் உடலானது இதை எந்த அளவுக்கு உள் வாங்கிக்கொள்ளும் என்பதற்கு ஏற்றவாறு மருத்துவர் நமக்கு மருந்துகளை கொடுப்பார். அவற்றை நாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் பார்க்கவிருப்பது புரதம். பொதுவாக சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. புரதம் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. நாம் அன்றாடம் சொற்ப அளவுதான் உணவில் புரதம் எடுத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, இட்லி – தோசை ஆகியவற்றில் இரண்டு கிராம்தான் புரதம் உள்ளது. அடுத்து அரிசியில் 100 கிராமில் 3 கிராம்தான் புரதம் உள்ளது. சிறுதானியங்கள் 100 கிராமில் 10 கிராம் புரதம் உள்ளது. அசைவ உணவுகளில் இது 25 கிராம் உள்ளது. மாமிச உணவுகளில் அதிக அளவு புரதம் உள்ளது. வெளிநாடுகளில் அவர்களது அன்றாட உணவில் போர்க், முட்டை என மாமிசங்களை சேர்த்துக் கொள்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும்போது புரதம் குறைவாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவது சரிதான். நம்மைப் பொருத்தவரை ஏற்கனவே புரதம் குறைவாக உண்கிறோம் சராசரியாக ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என்ற விகிதத்தில் நம் உடலில் புரதம் சேர வேண்டும்.

ஆனால் நாம் உண்ணும் உணவில் அந்த அளவிற்கு புரதம் இல்லை. ஒரு கை நிறைய பருப்பை உண்டால்தான் அது 40 கிராம் புரதத்தை நம் உடலில் சேர்க்கும். நாம் அவ்வளவு உண்பதில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் என்றால் 60 கிலோ உடலுக்கு 60 கிராம் புரதம் என்பது சராசரியான அளவு. இது இவர்களுக்கு 40 கிராம் என்று குறையும். இந்த 40 கிராம் நம் உடலில் சேர்வது கடினமான ஓர் இலக்கு. இவர்களிடம் இதையும் குறைக்குமாறு அறிவுறுத்துவது சிக்கலை உண்டாக்கும். ஏனென்றால் நாம் ஏற்கனவே குறைவான புரதம்தான் உண்டு வருகிறோம். ஆகவே எந்த அளவிற்கு நம் உடலில் புரதச்சத்து உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறுதான் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பரிசோதித்த பின் சிலருக்கு புரதச் சத்தானது, மேலும் தேவைப்படுவதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நான் மேலே கூறியது போல் ஒரு கிலோ எடைக்கு 1.3 கிராம் புரதம் தேவைப்படலாம்.

ஆனால் சிலர் புரதச் சத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவது தவறான செயலாகும். ஆகையால் சிறுநீரகம் பாதிப்படைந்தவராக இருந்தாலும் சராசரியாக 40 கிராம் புரதம் தேவைப்படுகிறது சிறுநீரக நோய் முற்றிப்போய் டயாலிசிஸ் நிலையில், மேலும் புரதம் தேவைப்படுகிறது. நோய் முற்றிப்போய் இறக்கும் நபர்களுக்கு புரதச்சத்து குறைபாடு முக்கியமான ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, தண்ணீர் எந்த அளவிற்கு உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். சாதாரண மக்களுக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் தன் உடலில் எந்த அளவிற்கு நீர் வெளியேறுகிறதோ அதைவிட 200-300 மில்லி ஏனும் அதிகம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் ஒரு நாளைக்கு அவர் ஒரு லிட்டர், 300 மில்லி தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், முகம், பாதங்கள் வீங்கி, உடலும் நீர்க்கோர்வையால் பருத்து உள்ளதெனில் அவர்கள் குறைவான அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் அவர்கள் உடலில் உள்ள நீரானது வெளியேறும். இவ்வாறு உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் 700 மில்லி தண்ணீர் அருந்தினால் போதுமானது. இதுவும் மருத்துவர் ஆலோசனைப்படி அமைய வேண்டும்.

நாம் கூறியதை தொகுப்பாகக் கூறவேண்டுமெனில் முதலில் உப்பை தேவை இல்லாமல் குறைக்கக் கூடாது. பொட்டாசியம் அளவு சரியாக உட்கொள்ள வேண்டும். பாஸ்பரஸ் நம் உடலில் சேர்வதை கவனமாக கணக்கில் கொள்ள வேண்டும். புரதச்சத்து உணவுகளை தேவை இல்லாமல் குறைக்கவும் கூடாது, அதிகப்படுத்தவும் கூடாது. தண்ணீர் முறையான கணக்கீட்டின்படி பருக வேண்டும். இதுவும் நாம் எந்த நிலையில் அதாவது எந்த படிநிலையில் உள்ளோம் என்பதை பொருத்து அது அமையும்.

அதை உங்கள் மருத்துவரே தீர்மானிப்பார். இந்த ஒட்டுமொத்த கருத்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்

ங்கையில் நூற்றுக்கணக்கான மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதற்கு நேர் திசையில் இருந்த சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து வருவதும் சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கினார் மருத்துவ உதவியாளர் ஆனந்த் குமார். பைசாபத் ஊரை சேர்ந்த ஆனந்த் கவுட் சாதியை சார்ந்தவர்.

ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆனந்த்.

“பார்ப்பனர்கள் மற்றும் சத்ரியர்களின் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும் சாதியாக இருந்திருக்கிறோம். இப்பொழுதே அந்த முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு  எல்லோரும் வெவ்வேறு தொழிலுக்கு போயிட்டு இருக்கோம்” என்றார் ஆனந்த்.

பார்ப்பன – சத்ரியர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சேவகம் செய்வதற்கென ஒரு சாதியை சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்த சமூகம் எந்தளவிற்கு பின் தங்கியுள்ளது என்பதற்கு இதுவே மேலான சாட்சி. அங்கே எந்த சாதியாக இருந்தாலும் தன் சாதியை சொல்லுவதற்கு தயங்குவதே இல்லை. அந்த அளவிற்கு சாதி கட்டமைப்பு இறுக்கமாக இருப்பதை காணமுடிகிறது.

ஆனந்திடம் கும்பமேளா குறித்து கேட்டபோது, “இந்தமுறை சிறப்பாக பண்ணியிருக்காங்க. 108 ஆம்புலன்ஸ் விழாவில் எல்லா இடத்திலயும் நிறுத்தி வச்சிருக்காங்க. எங்க வேலைக்கு சிறப்பு ஊதியமாக ரூ.200 தருவதாக சொன்னார்கள். ஆனால், அது எல்லோருக்கும் கிடைக்கல. எனக்கும் வர்ல. எனக்கு மாத  சம்பளம் ரூ.9500 தர்றாங்க. அதவச்சிதான் எனக்கான செலவை பார்த்துக்கிறேன். இங்க இருக்க எல்லா டிரைவரும் அப்படித்தான் இருக்காங்க.

எங்களுக்கு இந்த இடத்தில் தங்குவதற்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஏன்னு கேட்டா, “இது எமர்ஜென்ஸி வேலை. அதனால நீங்க வண்டியிலேயே படுத்துக்கொள்ளுங்கள்’னு சொல்றாங்க.

திரிவேணி சங்கமத்திற்கு அருகே, கங்கைக் கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்கள்.

சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட செலவுக்கு அந்த 200 ரூபாயில்தான் பாத்துக்கனும்னு சொன்னாங்க. ஆனா அந்த பணம் கொடுக்கமாட்றாங்க. இது எங்களுக்கு சிரமமா இருக்கு. அதேபோல காலையில எழுந்து குளிக்க கொள்ள எந்த வசதியும் இல்ல. பாத்ரூம் கூட போக முடியவில்லை. அங்க போனா அதுக்கு முறையா பக்கெட் இல்ல. அவசரத்துக்கு வரவங்க சின்ன சின்ன பாட்டில்ல தண்ணி எடுத்துட்டு வந்து வேலையை முடிச்சிக்கிறாங்க. அதை ஒழுங்கா சுத்தம் செய்யிறது இல்ல. அப்புறம் எப்படி நாங்க பயன்படுத்த முடியும்?

கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள்: போதிய பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளது.

சுத்தம் செய்ய ஆட்கள் இருக்குன்னு சொல்றாங்க. ஆனால், சுத்தம் செய்யிற மாதிரி தெரியவில்லை. எல்லா இடத்துலயும் சுத்தமில்லாத பாத்ரூமை கயிறு போட்டு கட்டி வைச்சிருப்பாங்க. பார்த்திருப்பீங்க.

பயன்படுத்த இலாயக்கற்ற கழிவறை.

இந்த கும்பமேளாவுல எல்லாத்துக்கும் காசுதான்.  பெரிய பெரிய உணவகங்களுக்கு சுமார் 40 லட்சம் வரை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. இந்த பணத்தை எல்லாம் அரசு அதிகாரி, காண்ட்ராக்டர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.

அரசு 100 ரூபாய் ஒதுக்கினால் அதில் 40 தான் மக்களுக்கு கிடைக்கிறது. மீதி எல்லாம் அவர்களே சுருட்டிக் கொள்கிறார்கள். அதுதான் இங்கே நடக்கிறது. இன்னும் சிலர் கடைகளை காண்ட்ராக்ட் எடுத்து அதிக வாடகைக்கு அவர்கள் விடுகிறார்கள். அரசு வாகனத்தில் அதிகாரி வீட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து குளித்து விட்டு செல்கிறார்கள்”  என்று பொறிந்து தள்ளினார்.

“சரி, இங்க நீங்க வேறு என்னவெல்லாம் பிரச்சனைய சந்திக்கிறீங்க?”

இங்கே வண்டி ஓட்டுறது ரொம்ப சிரமாக இருக்கு. எல்லா இடத்துலேயும் பேரிகார்டர் தடுப்புக்கள் போட்டு வச்சிருக்காங்க. யாருக்காவது உடம்பு முடியலனா அவசரத்துக்கு கொண்டு போயி சேக்க முடியல. இன்னொரு பக்கம்  போலீஸ் பிரச்சனையா இருக்கு. எப்படி போனாலும் இது வி.ஐ.பி போற வழி. அதனால வேறபக்கமா போ’ன்னு என்று திருப்பி அனுப்பிடுறாங்க. இதுவே எங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கு.

கோடிகளில் கொட்டி செய்யப்பட்ட கும்பமேளா ஏற்பாடுகள்.

இங்க டூட்டி போட்டதுல இருந்து உடம்பு முடியலன்னு அதிகமா வந்தது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக வயசானவங்க மற்றும் புதுசா வந்து குளிக்கிறவங்க. பழக்கமில்லாதவர்கள் குளிர் நீரில் இறங்கிடுறாங்க.. அவங்களால குளிர தாக்கு பிடிக்க முடியறதில்ல.  அதேமாதிரி குளிச்ச பின்னாடி ஈரத்துணியோடு இருப்பதால உடல் டெப்ரேச்சர் குறைஞ்சிடுது. அதுவும் இரவு மற்றும் அதிகாலையில்தான்.

போன ஜனவரி 15-ம் தேதி இந்த பிரச்சனையால தூக்கிட்டு வந்த இரண்டு பெண்களை வண்டிக்குள்ளயே வச்சிகிட்டு யமுனா செக்டார்ல 40 நிமிடம் சுத்திக் கொண்டு இருந்தேன். அதுக்கு காரணம் போலீஸ் வண்டிய விடாமா திருப்பி விட்டதாலதான்.

மருத்துவத்தை பொருத்தவரை கோல்டன் ஹவர்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஆனால், அதுகுறித்த கவலையே பாதுகாப்புக்கு இருக்கும் போலீசுக்கு இல்லை” என்றார்.

தெரு விளக்குகள் இல்லா இருண்ட அலகாபாத்தின் வீதிகள்.

இந்த விழாவில் எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தாராளமா செலவு பண்ணியிருக்காங்க. ஆனா அலகாபாத்துல அடிப்படை வசதிகள் இல்லை, தெரு விளக்குகள் இல்ல. எப்பொழுதும் வாகனத்துல பயணிக்கும் நீங்க வெளிச்சம் இல்லாததைப் பற்றி என்ன நெனக்கிறீங்க?

இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம்.  தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும்  குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.

கும்பமேளாவிற்கு வந்த மக்கள் இந்தமுறை சிறப்பாக செய்திருப்பதாக சொல்கிறார்களே.. அடுத்தமுறை யோகி வருவாரா?

நிச்சயம் இல்லை.

“ஏன்?”

இந்த ஆட்சி மீது விவசாயிகளுக்கு நிறைய வெறுப்பு இருக்கிறது. கடன் தள்ளுபடி செய்வதாக சொல்லி செய்யவில்லை. சமீபமாக கடன் வாங்கிய விவசாயிகள் கடனையும் ரத்து செய்யவில்லை. யார் வாங்கிய கடனை சுத்தமாக கட்டவில்லையோ அவர்களுக்கு தள்ளுபடியாகியுள்ளது. அவர்கள் எல்லாம் பெரிய பெரிய பண்ணையார்கள். மூன்று, நான்கு வருஷமா இவர்கள் கடனே கட்டாதவர்கள்.

படிக்க:
யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
குழந்தைகள் உலகில் ஆத்திகம் VS நாத்திகம் – ஓர் அனுபவம் !

“கவ் ரக்‌ஷன் திட்டத்தைப் பற்றி என்ன நெனக்கிறீங்க? எந்த அளவிற்கு அதற்கு ஆதரவு உள்ளது?”

அதுவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. மாடு விற்க முடியவில்லை. எங்க ஊர்லயே நிறைய பேருக்கு பிரச்சனையா இருக்கு. மாட்டை அப்படியே விட்டுவிடவும் மனசு வரல. அதேசமயம் வீட்டிலேயே கட்டி பராமரிக்கவும்  முடியல. நிறைய செலவாகுது. அதனால் மொத்தமாக ஒரு தடுப்பு கட்டி அதில் மாட்டை கட்டிவிடுகிறார்கள். யோகி பசு பாதுகாப்பு மையம் வைப்பதாக சொன்னார். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“ஆண்டி ரோமியோ ஸ்குவாடு இன்னும் இருகிறதா?”

ஆரம்பித்த கொஞ்ச நாள்லயே முடிவுக்கு வந்து விட்டது. காரணம் பொது இடத்தில் அண்ணன் தங்கையாக இருக்கும்பட்சத்தில் அது பிரச்சினையாகி விடுகிறது. அதனால் அது முடிவுக்கு வந்துவிட்டது. இன்னொருபக்கம் காதல் திருமணம் என்பது எங்கள் ஊரில் 10% கூட இருக்காது. கலப்பு திருமணம் சுத்தமாக இல்லை” என்றவரிடம் அடுத்த முறை யோகிக்கு ஓட்டு போடுவீங்களா என்றால்… சிரிக்கிறார்.

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து …


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
பாகம் – 2: கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
பாகம் – 3: கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !

இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !

இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள் !

“வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.

இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாஸன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014-ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.”

நன்றி :முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

*****

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமைப் போராளி அம்மாநில நிகழ்வுகள் குறித்து BBC -க்கு அளித்த பேட்டி பின்வருமாறு :

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய – மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது.

டாக்டர் கார்கா சாட்டர்ஜி

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜி -யுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து.

கேள்வி : தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : மேற்கு வங்கத்தில் இப்போது நடப்பதை புரிந்துகொள்ள, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முகுல் ராய், போன வருடம் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முகுல் ராயும் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில், சில ஐ.பி.எஸ். அதிகாரிகளை சி.பி.ஐ மூலம் கண்காணிக்கும்படி முகுல் ராய் சொல்கிறார்.

இரண்டாவதாக, பிப்ரவரி மாத துவக்கத்தில் தாக்கூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ராஜீவ் குமாரை எதிரி என்பதைப்போல குறிப்பிடுகிறார்.

அடுத்த இரண்டு நாட்களில், அதுவும் ஞாயிற்றுக் கிழமையன்று ராஜீவ் குமாரை விசாரிக்க வருகிறது சி.பி.ஐ.; 40 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு எவ்வித தேடுதல் ஆணையும் இன்றி வருகிறார்கள். இத்தனைக்கும் பிப்ரவரி 12-ஆம் தேதிவரை, தன்னை விசாரிக்கக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து தடை ஆணையைப் பெற்றிருக்கிறார் ராஜீவ் குமார்.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜுவ் குமார்

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்த சாரதா சிட் ஃபண்ட் வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் மாற்றியது. அப்போது மாநில காவல்துறை தன் வசமுள்ள ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், ஐந்தாண்டுகளாக சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும்போது மம்தா பானர்ஜியை குறிவைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இந்த வழக்கு நிச்சயம் தேர்தலுக்கு முன்பாக முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன்பாக சாரதா வழக்கில் பெரிய ஆட்களைக் கைதுசெய்திருக்கிறோம் என்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.

நம் கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கப்படுவதை எதிர்க்கும் ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் இந்த யுத்தத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஒரு குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஐந்தாண்டுகளாக திருணாமூல் தலைவர்களை, அக்கட்சியின் ராஜ்ய சபா தலைவர் உட்பட, அழைத்துச் செல்வது, விசாரிப்பது, துன்புறுத்துவது என்றே செயல்பட்டுவந்தார்கள். இந்த ஐந்து ஆண்டுகளாக திருணாமூலுக்கு எதிராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இவர்கள் நோக்கமாக இருந்தது.

ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முகுல்ராய், பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஆக, சி.பி.ஐ. முழுக்க முழுக்க ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி, ஒரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும்போது, மாநில அரசின் மீது ஊழல் புகார் வந்தால் அதை சி.பி.ஐ. விசாரிக்காது. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் முதல்வரும் அவர் மனைவியும் வியாபம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எந்த விசாரணையும் நடக்கவில்லை.

சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லையென நான் சொல்லவில்லை. ஆனால், மத்திய அரசின் மீது ஊழல் புகார் வந்தால் எந்த அமைப்பிடம் செல்வது? சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தவறு செய்தால் யார் கேட்பது? இதெல்லாம் அரசியல் சாசன சிக்கல்கள்.

சி.பி.ஐ. போன்றவை ஒரு கட்சியின் ஆட்சியே நாடு முழுவதும் இருக்கும் என்ற காங்கிரஸ் காலத்து நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால், மாநிலக் கட்சிகள் அதிகாரத்தையும் வலுவையும் பெற்றிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சூழலும் மாறியிருக்கிறது. ஆகவே சட்டம் – ஒழுங்கு, குற்றம் போன்றவற்றை புலனாய்வு செய்ய மத்திய அமைப்புகள் தேவையா என மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசுகள், மாநில காவல்துறைகளை கைப்பாவையாக பயன்படுத்துமென்றால், மத்திய அமைப்புகளை மத்திய அரசு கைப்பாவையாக பயன்படுத்தாதா? இப்போது நடப்பது என்னவென்றால், மேற்கு வங்கத்தில் ஆட்சியை கலைக்க ஒரு சாக்கைத் தேடுகிறது பா.ஜ.க. ஏனென்றால் அக்கட்சியால் ஜனநாயக ரீதியாக அங்கு ஒருபோதும் வெல்ல முடியாது.

கேள்வி : சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் கூடாது என்றால், பல மாநிலங்களை இணைத்துச் செயல்படும் குற்றங்களை எப்படி விசாரிப்பது?

பதில் : எந்த அமைப்பாக இருந்தாலும் அது அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் வரக்கூடாது. ஆனால், நம்மைப் போன்ற பரந்துபட்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட நாட்டில், எந்த அமைப்பாவது அரசியல் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க முடியுமா? யு.பி.எஸ்.சி, சி.பி.ஐ. போன்றவை விதிப்படி பார்த்தால் சுயாதீனத் தன்மை கொண்டவைதான். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? மத்திய அரசுக்கு கேள்வியே கேட்க முடியாத அதிகாரங்கள் இருக்கும்; ஆனால், மாநில அரசுக்கு அப்படி ஏதும் இருக்காது என்பது எப்படி சரியாக இருக்கும்? உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் தவறுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகளே பேசுகிறார்களே…

கேள்வி : தற்போதைய சூழலை மம்தா தேர்தலுக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என்று சொல்லலாமா?

பதில் : ஒரு அரசியல் தலைவர் அப்படித்தான் செய்வார். இப்போது சி.பி.ஐ. அலுவலகங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சரியா? மாநிலத்தில் யாருக்காவது பாதுகாப்பு வேண்டுமென்றால் மாநில காவல்துறையைத்தானே அணுக வேண்டும்?

மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி ஆதாரங்களை அழிக்கிறார் என மத்திய அரசு குற்றம்சாட்டினால், மாநிலத்தில் இருப்பவர்கள் அதை அரசியல் ரீதியாக பயன்படுத்தத்தான் பார்ப்பார்கள். ஆக, தீர்வு என்பது அரசியல் ரீதியான தீர்வாகத்தான் இருக்க முடியும்.

கேள்வி : மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒடுக்க தன் பதவியைப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் வரும்போது அவர்களது ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் தடுப்பது போன்றவை சரியா?

பதில் : இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பிரசாரம். மற்றொன்று உண்மை. இந்த விவகாரத்தில், எதிர்கட்சியினரின் ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் செய்தார் என்பது பிரசாரம். இரண்டுபேரது ஹெலிகாப்டர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்பதுதான் பரவலாகப் பேசப்படுகிறது. முதலாவதாக அமித்ஷாவின் ஹெலிகாப்டர். அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, பராமரிப்புப் பணி நடந்துவந்த ஏர் ஸ்ட்ரிப்பில் அவர் இறங்க விரும்பினார்.

மம்தா பானர்ஜிகூட அங்கே இறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர் அருகில் உள்ள வேறொரு ஹெலிபேடில்தான் இறங்கினார். அதேபோல, அமித்ஷாவுக்கும் வேறொரு ஹெலிபேடில் இறங்கும்படி சொல்லப்பட்டது. பிறகு, அவர் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி, கூட்டத்தை நடத்திவிட்டுத்தானே சென்றார்.

அவர் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்று பிரசாரம் செய்த தில்லி ஊடகங்கள் அவர் வேறொரு இடத்தில் தரையிறங்கியதை சொல்லினவா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். தில்லி ஊடகங்கள் இயங்கும் விதம் மிக ஆச்சரியகரமானது. அவர்கள் மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறார்கள்.

ஒரே செய்தியை மக்கள் பின்தொடர்ந்து கடைசிவரை செல்வதில்லை என்பதை மனதில்கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளை வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அரக்கர்களை உருவாக்குகிறார்கள்.

யோகி ஆதித்யநாத் விவகாரத்திலும் இதேதான் சொல்லப்பட்டது. வேறொரு இடத்தில் இறங்கி காரில் வரும்படி கூறப்பட்டது. பிரதமரெல்லாம் வந்து செல்லவில்லையா? இவர்கள் ஏன் எப்போதும் ஹெலிகாப்டரில் வருகிறார்கள்? ஏன் சாதாரண விமானங்களைப் பயன்படுத்துவதில்லை? அதில் வந்து, காரில் ஒரு மணி நேரம் – இரண்டு மணி நேரம் பயணம் செய்து, சென்றடைய வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே?

தில்லியிலிருந்து வந்து, ஒரு இரண்டு மணி நேரம்கூட இங்கே செலவழிக்க முடியாது என்றால், வங்க மக்கள் உங்கள் அரசியலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?

பா.ஜ.க. ஆளும் அசாமில், 38 லட்சம் வங்காளிகள் – இவர்களில் 28 லட்சம் பேர் இந்து வங்காளிகள் – பெயர் இந்தியக் குடிமக்களின் தேசிய பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடிமக்கள் இல்லையென ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் வங்காளிகளைக் குறிவைத்து இந்த வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. அங்கே வங்காளிகளுக்காக திருணமூல் காங்கிரஸ் கட்சி பணியாற்றிவருகிறது.

ஆகவே தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களை, எம்.எல்.ஏ, அமைச்சர்களை அசாமின் சில்சோருக்கு அக்கட்சி அனுப்பியது. ஆனால், அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியில் வரக்கூட அனுமதிக்கப்படவில்லை. அப்படியே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இது தொடர்பாக தில்லி ஊடகங்கள் நாள் முழுவதும் எப்போதாவது செய்தி வெளியிட்டனவா? அசாம் தனி நாடா என்று கேள்வியெழுப்பினவா?

அந்தமான் சிறைச்சாலை

வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.

இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாசன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014-ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.

கேள்வி : சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் தற்போதைய ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டால், அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டியதுதானே முறை? அதற்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனை செய்ய வேண்டும்?

பதில் : அவர் குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தால், நீதிமன்றத்தில் அனுமதிபெற்று நடவடிக்கை எடுக்கலாமே, யார் தடுத்தது? இதற்கென குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. உலகில் எங்கெல்லாம் பாசிசம் ஆட்சிசெய்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊழல், உடனடி நீதி ஆகியவற்றை சொல்லித்தான் எல்லா அட்டகாசங்களையும் செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இதைத்தான் செய்கிறார்கள். குடியரசின் அர்த்தம் அதுவல்ல.

கேள்வி : ஆனால், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வரும்போது அவர்களை இவ்வாறு தடுப்பது சரியா?

பதில் : அவர்கள் மத்திய அரசின் காவலர்கள் அல்ல. தில்லி சிறப்பு காவல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி காவல்துறை, அவ்வளவுதான். மத்திய அரசிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் புனிதமானவர்களா, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புனிதமற்றவர்களா? இந்தச் சிந்தனை எப்படி வருகிறது?

கேள்வி : ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் மம்தா சி.பி.ஐ. விசாரணையைக் கோருகிறார். பிறகு வேண்டாம் என்கிறார்…

பதில் : மம்தா பானர்ஜி எதிர்க் கட்சியாக இருக்கும்போது சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்றார். அதைத் தன் அரசியலுக்கு பயன்படுத்த விரும்பினார். இப்போது பா.ஜ.க-வும் அதையே செய்கிறது. யார் வேண்டுமானாலும் இப்படி அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்றால் எதற்காக அப்படி ஒரு அமைப்பு இருக்க வேண்டும்? அது ஒரு அரசியல் அமைப்பு. அந்த அமைப்பை மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசு பயன்படுத்திவருகிறது. அதன் பற்களை உடைக்க வேண்டும். அவ்வளவுதான்.

கேள்வி : இந்தப் பிரச்சனைக்கு எப்படி முடிவு வருமென நினைக்கிறீர்கள்?

பதில் : இரண்டுவிதங்களில் இருக்கலாம். முதலாவதாக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகி, ராஜீவ் குமாரை வாக்குமூலம் அளிக்க உத்தரவிடக் கோரியிருக்கவேண்டும். முன்பே அதைச் செய்திருக்க வேண்டும். ராஜீவ் குமார் சாட்சியங்களை அழித்திருந்தால் அது மிகப் பெரிய குற்றம். ஆனால், அதை வைத்து அரசியல் செய்வது அதைவிட மிகப் பெரிய குற்றம்.

நன்றிபிபிசி தமிழ்

மோடியைக் கொல்ல சதியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி மின்னிதழ் !

புதிய கலாச்சாரம்

ன்முறையை அரங்கேற்றி விட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையை தொடுப்பது, ஹிட்லர் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடிக்கும் அணுகு முறை. இதில் பார்ப்பன பாசிஸ்டுகளும் விதிவிலக்கல்ல.

2018 ஜனவரி 1-ம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200-ம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்கள், மோடியைக் கொலை செய்ய சதி செய்தவர்கள், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜூன் 7-ம் தேதியன்று 5 பேரை கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.

கைது செய்யப்பட்டவர்களில் தலித் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் அனைவரும் இருக்கிறார்கள். முற்போக்கு அறிஞர்களான தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷைக் கொன்ற சங்க பரிவாரத்தினர், அடுத்த கட்டமாக செயற் பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்கள்.

மோடியைக் கொல்லச் சதி எனக் குற்றம் சாட்டி, இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசு தரப்பு கொடுத்த ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகளே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், மோடி ஆதரவு ஊடகங்களும் இந்த அபாண்டத்தை முன் வைத்து கூப்பாடு போடுகிறார்கள். ஜனநாயகத்தின் தூண்கள் என்று கூறப்படும் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக எந்திரம், ஊடகங்கள் ஆகியவை அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள்.

கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியை நம்பி ஏமாந்த இளைஞர்கள், நீட்- தனியார் கல்விக்கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள் என மக்களிடம் அம்பலப்பட்டு வருகிறது மோடி அரசு.

இந்நிலையில்தான் பாஜக.வின் வளர்ச்சி சவடாலையும், பார்ப்பனிய பண்பாட்டு தாக்குதலையும் அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை ஒடுக்க, மோடி அரசு முயல்கிறது. நமது நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொள்ளும் உண்மையையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இந்தத் தொகுப்பு நினைவுபடுத்துகிறது.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
மோடியைக் கொல்ல சதியா ?  – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“மோடியைக் கொல்ல சதியா ? “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
  • ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
  • பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் !
  • ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா சட்டத்தில் கைதா ?
  • மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்
  • அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ் அன்றும் இன்றும்
  • மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
  • ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய்! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !
  • அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
  • தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே! விடுதலை செய்!
  • தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
  • கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
  • மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா?
  • பிணியொன்று நம்மை பீடித்துள்ளது!
  • கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !
  • பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பாஜக பாசிசம் !
  • தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !
  • ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு !! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!

0

தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !

மாணவர்களிடம் சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !

சதி வாய்ந்த நடுத்தர வர்க்கத்தின் மாணவர்கள் உயர்கல்வி கல்லூரிகளில் பொறியியல் படிக்கின்றனர். வசதியற்ற தமிழ் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் கலைப் பாடங்களை படிக்கின்றனர். இம்மாணவர்களைத்தான் பொறுக்கிகளாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. மக்களும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சிறை சென்றனர். முள்ளிவாய்க்கால் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக களமிறங்கி தீவிரமாக போராடியவர்களும் இவர்களே!

அரசியல் ஆர்வமும், சமூக அக்கறையும் இம்மாணவர்களிடம் இயல்பாக இருக்கிறது. அதை அறிந்து வளர்த்து அழகான குடிமக்களாக மாற்றுவது நமது கடமை! வினவு சார்பில் மாதம் ஒரு புதிய கலாச்சாரம் நூல் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 80  பக்கங்களில் அழகிய கட்டமைப்பில் வெறும் 30 ரூபாய்க்கு வெளியிடுகிறோம். இலாப நோக்கமின்றி அடக்கவிலையில்தான் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ் பதிப்பகச் சூழலில் இந்த விலை மலிவான ஒன்று என்பது மிகையல்ல. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படும் இந்நூல்களில் அரசியல், சமூகம், பண்பாடு குறித்த தலைப்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு பொருத்தமான நுகர்வு பண்பாடு, சாதி மதம், கல்வி, சினிமா, காவி அரசியல் போன்ற தலைப்புகளும் உள்ளன.

அரசு கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்நூல்களை இலவசமாக விநியோகிக்க உங்கள் உதவி தேவை! பட்டியலில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்து, எவ்வளவு நூல்கள் விநியோகிக்கப்பட வேண்டுமென்ற எண்ணிக்கையை தெரிவு செய்து நீங்கள் பணம் கட்டலாம்.

பட்டியலில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலம் நூல்களை விநியோகிப்போம். அது குறித்த புகைப்படம், செய்தி வினவு தளத்தில் வெளியாகும். மாதந்தோறும் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் நிரந்தரமாகவும் புத்தகம் அளிக்க முடியும்.

உதவுங்கள்!

 


 

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A