Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 462

ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !

ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

*****

முன்னுரை

“ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயை” என்பது பயன்பாட்டில் உள்ள பொருளாதாரத் தரவுகள் திரட்டப்படுவதிலும், பொருள் கொள்ளப்படுவதிலும் உள்ள குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் தவறான புரிதலே. மூன்றாம் உலக நாடுகளின் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள் உலக வருமானத்துக்கு அளிக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும், அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை மிகைப்படுத்துவதும் இதன் முக்கிய விளைவு ஆகும்.

இந்தக் குறைபாடுகளும், உருக்குலைக்கப்பட்ட புரிதல்களும் ஜி.டி.பி, வர்த்தகம், உற்பத்தித் திறன் போன்றவை தொடர்பான புள்ளிவிபரங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, எவ்வாறு விளக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கும், விலை, மதிப்பு, மதிப்புக் கூடுதல் ஆகியவை குறித்த புதிய தாராளவாத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக ஜி.டி.பி, உற்பத்தித் திறன், வர்த்தகம் ஆகியவை தொடர்பான அடிப்படை தரவுகள் பருண்மையானதாகவோ குறைகளற்றதாகவோ இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

இந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான பொருளாதாரவியல் விளக்கங்கள், உலகப் பொருளாதாரத்தில் மதிப்பும் லாபமும் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைப் பற்றி தெளிவுபடுத்துவதை விட அதிகமாக மறைக்கவே செய்கின்றன.

“சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” மூன்று பொருத்தமான உதாரணங்களாக ஐஃபோன், சட்டை, ஒரு கப் காஃபி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொருட்கள் மேலே சொன்ன வாதத்தை விளக்குவதாகவும், உறுதி செய்வதாகவும் உள்ளன. இந்தப் பொருட்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாக இருப்பது அவற்றுக்கும், சர்வதேச உற்பத்தி நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து பொருட்களுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை தெளிவுபடுத்த உதவுகின்றது.

பொருளாதாரவியல் தரவுகள் அல்லாது நமக்குக் கிடைக்கும் பிற தரவுகளும், நமது சொந்த அனுபவங்களும் குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் கடுமையாக உழைத்து பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ஆப்பிள் போன்ற மேற்கத்திய நிறுவனங்களின் லாபத்துக்கு கணிசமான பங்களிப்பு செய்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், பொருளாதாரவியல் தரவுகள் அத்தகைய பங்களிப்புக்கான எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை.

மாறாக, இந்தப் பொருட்களின் விற்பனையில் பெறப்படும் மதிப்பில் பெரும்பகுதியும், ஆப்பிள், ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் அவற்றிலிருந்து அறுவடை செய்யும் லாபங்களும் அந்தப் பொருட்கள் நுகரப்படும் நாட்டில் உருவானது போன்ற தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன. இந்த மூன்று சர்வதேச விற்பனை பண்டங்களும் முதலாளித்துவ உற்பத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள உருமாற்றத்தின் உண்மையான பிரதிநிதிகளாக உள்ளன.

பொருளாதாரவியல் புள்ளிவிவரங்களும் அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விளக்கங்களும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆலை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான சுரண்டல் அடிப்படையிலான உறவுகளை குழப்பி மறைக்கின்றன. இருப்பினும் இந்தச் சுரண்டல் உறவு முற்றிலும் நம் கவனத்திலிருந்து தப்பி விடுவதில்லை.

மாறாக, சர்வதேச அரசியல் பொருளியலின் பயன்பாட்டில் உள்ள கணக்கீடுகளை பீடித்திருக்கும் சுயமுரண்களிலும், விதிவிலக்குகளிலும் அவை வெளிப்படுகின்றன. இத்தகைய சுயமுரண்களும், விதிவிலக்குகளும் உருவத்தை திரித்துக் காட்டும் கண்ணாடியில் உள்ள குறைபாடுகளை போலவே தமது இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கின்றன; இது இந்த உருமாற்றத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்த வேண்டியதை அவசியமாக்குகின்றது. மதிப்பு கைப்பற்றலையும், மதிப்பு கூட்டலையும் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உருமாற்றத்தை சரியாகப் புரிந்து கொண்டால்தான் உள்ளது உள்ளபடியே உலகை புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

பகுதி ஒன்று : ஆப்பிள், டெல் போன்ற நிறுவனங்களின் லாபத்துக்கு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் என்ன பங்களிப்பு செய்கிறார்கள்?

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக் கணினிகளையும், ஆப்பிள் ஐஃபோன்களையும் உற்பத்தி செய்கின்றனர். அவர்களைப் போலவே மூன்றாம் உலக நாடுகளின் கோடிக்கணக்கான குறைகூலி தொழிலாளர்கள் மேற்கத்திய சந்தைகளுக்காக இடைநிலை பொருட்களையும் நுகர்வுப் பொருட்களையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்கின்றனர்.

இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும் பிற முன்னணி மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் லாபத்திலும், வருமானத்திலும் என்ன பங்களிக்கின்றனர்? ஜி.டி.பி, வர்த்தகம் மற்றும் நிதி பாய்ச்சல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களின் படியும், பயன்பாட்டில் உள்ள பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும் அவர்கள் எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை.

அதன் பொருட்களை உற்பத்தி செய்து பொருத்தி தயாரிக்கும் சீன, மலேசிய மற்றும் பிற உற்பத்தி நிலையங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானவை அல்ல. முன்பு வழக்கமாக பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான, அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையிலான சர்வதேச உறவுக்கு மாறாக இப்போது ஆப்பிள் தனது பொருட்களை செய்து வாங்கும் ‘கைக்கு எட்டிய உறவிலான’ உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து லாபம் நாடு கடந்து எடுத்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் பதிவு செய்வதில்லை.

சந்தை பரிமாற்றங்களின் விளைவுகளை மட்டும் பதிவு செய்யும் பொருளாதாரவியல் புள்ளி விவரங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் ஐஃபோனின் இறுதி விற்பனை விலையில் ஒவ்வொரு அமெரிக்க அல்லது சீன நிறுவனம் கைப்பற்றும் பங்கு, அவை ஒவ்வொன்றும் பங்களிக்கும் மதிப்பு கூடுதலுக்கு சமமானது என்று கருதுகின்றன. ஆப்பிள் மற்றும் அதன் பொருட்களை உற்பத்தி செய்து தரும் பல்வேறு உற்பத்தியாளர்களின் லாபங்கள் மீது அந்தப் பரிவர்த்தனைகள் செலுத்தும் தாக்கம் பற்றி எந்த தடயத்தையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஆப்பிளின் லாபத்தில் சீனாவிலிருந்து கிடைக்கும் ஒரே பகுதி ஆப்பிள் பொருட்கள் சீனாவில் விற்கப்படுவதன் மூலம் கிடைப்பது மட்டுமே என்று தோன்றுகிறது.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள்

பொருளாதாரத் தரவுகள் பற்றிய நடப்பில் உள்ள விளக்கத்தின்படி, பொருட்களின் மதிப்பு “சுற்றோட்டத்தில் பெறப்படுவது போல மட்டுமின்றி, அதிலிருந்து உருவாவது போல தோன்றுகிறது”1 (காரல் மார்க்ஸ்). எனவே சீன மற்றும் பிற குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கடத்தப்படும் மதிப்பு, பொருளாதாரத் தரவுகளிலும், பொருளியலாளர்களின் மூளைகளிலும் மாயமாக மறைந்து விடுகிறது.

ஆப்பிள், டெல், மோட்டரோலா, பிற அமெரிக்க, ஐரோப்பிய, தென் கொரிய, ஜப்பானிய நிறுவனங்களின் பொருட்கள் தாய்வானைச் சேர்ந்த ஹோன் ஹாய் பிரிசிசன் இண்டஸ்ட்ரீசின் பிரதான துணை நிறுவனமான ஃபாக்ஸ் கானால் பொருத்தி தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கானின் 10 லட்சம் ஊழியர்கள், “உலகின் நுகர்வு மின்னணு பொருட்களில் 40%-ஐ” உற்பத்தி செய்வதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது2.

தென் சீனாவின் ஷென்செனில் (Shenzhen) உள்ள பதினான்கு தொழிற்சாலைகள் கொண்ட அதன் கட்டமைப்பு 2010-ம் ஆண்டு அதன் பிரம்மாண்டத்திற்காகவும், தொழிலாளர்கள் மத்தியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகளுக்காகவும் உலக அளவில் பேசப்பட்டது. அந்த ஆண்டு ஃபாக்ஸ்கான் ஷென்செனில் அமர்த்தியிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.3 லட்சத்தை எட்டியது. தற்போது சீனாவின் பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி நகர்த்தப்படுவதன் மூலமாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2012-ல் ஹோன் ஹாயின் சேர்மன் டெரி கோவ், தாய்பே உயிரியல் பூங்காவுக்கு சென்றிருந்த போது “மனிதர்களும் விலங்குகள்தான் என்பதால் 10 லட்சம் விலங்குகளை நிர்வகிப்பது எனக்கு தலைவலியை தருகிறது” என்று கூறினார். தொடர்ந்து இந்த “விலங்குகளை” எப்படி நிர்வகிப்பது என்று அறிவுரை சொல்லுமாறு உயிரியல் பூங்கா காப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்தக் கருத்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. ”வான்ட் சைனா டைம்ஸ்” பத்திரிகை, “கோவ் வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பயன்படுத்தியிருக்கலாம். [ஃபாக்ஸ்கானின் பிரம்மாண்டமான சீன ஆலைகளில்] வேலைச் சூழலும், தங்குமிட சூழலும் பராமரிக்கப்படும் நிலைமையில், அதன் சீன ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தாம் விலங்குகள் போல நடத்தப்படுவதாக ஒத்துக் கொள்வார்கள்” என்று எழுதியது3 .

  1. Karl Marx, Capital, vol. 3 (London: Penguin, 1991), 966.
  2. Charles Duhigg and Keith Bradsher, “How U.S. Lost Out on iPhone Work,” New York Times, January 21, 2012, http://nytimes.com.
  3. Foxconn Chairman Likens His Workforce to Animals,” Want China Times, January 21, 2012, http://wantchinatimes.com.

(தொடரும்)

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் ? மனுஷ்யபுத்திரன்

பிக்பாஸை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !

ல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த
பிக்பாஸை இப்போது எல்லோரும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பிக்பாஸ் சீசன் 2-வின் முக்கிய மாற்றம்
எல்லோரும் கண்டுபயந்த பிக்பாஸ்
இப்போது எல்லோரையும் கண்டு
பயப்படுகிறார்

பிக்பாஸ்
எதிரிகள் தன்னைக்கொல்ல வருகிறார்கள்
என்று துர்க்கனவு கண்டு அலறுகிறார்
இது எத்தனையாவது முறை
என்று மக்கள் காது குடைந்தபடி
அதை கவனமின்றி கேட்கிறார்கள்

தான் தந்திரமாக
ஆட்டத்திலிருந்து வெளியேற்றிய
பழைய பங்கேற்பாளர்களை
தேடிப்போகிறார் பிக் பாஸ்
அவர்கள் குறுவாள்களுடன்
பிக்பாஸை கட்டித்தழுவுகிறார்கள்

பிக்பாஸ்
ரகசியக் கதவுகள் வழியாக
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நுழைந்து
தன் அதிகாரத்தை விரிவுபடுத்திக்கொண்டேயிருந்தார்
இப்போது எதிரிகள்
அவரது அறைக்குள் நுழைய
நூறு ரகசிய வழிகளை உண்டாக்கி விட்டனர்

56 இன்ச் ’மார்பன்’

தனது ஆட்டத்தின்
ஒவ்வொரு விதியும்
இப்போது சுலபமாக மாற்றப்படுவதை
பிக்பாஸ் பார்க்கிறார்
அவரது விதியின் திசைகளில்
ஏன் திடீரெனெ காற்று
மாற்றியடிக்கிறது என்று குழம்புகிறார்.

அகன்ற மார்புகளுடன்
உரத்த குரலுடன்
அவர் தன் உத்தரவுகளை
எந்த மறுப்பும் இன்றி
பிறப்பித்துக்கொண்டிருந்தார்
இப்போது முகம் தெரியாதவர்கள்
அவரை வெல்கிறார்கள்
எந்த வெளிச்சமும் இல்லாதவர்களால்
அவர் வழிமறிக்கப்படுகிறார்

பிக்பாஸ் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
வேறு வேறு முகமூடிகள்
அணிந்துவரக் கூடியவர்
தேச பக்த முகமூடி
வளர்ச்சியின் முகமூடி
கடைக்கோடி மனிதனின் முகமூடி
கனவானின் முகமூடி
எதேச்சதிகாரியின் முகமூடி
பரிசுத்தத்தின் முகமூடி
கடவுளின் முகமூடி

பிக்பாஸ் இல்லத்தின் பொழுதுபோக்கே
தினமும் ஒவ்வொருவரும் இந்த முகமூடிகளை
அணிந்து கேலி நாடகங்கள் நடத்துவதுதான்
பிக்பாஸ் தான் எவ்வளவு திட்டமிட்டு தயாரித்த முகமூடிகள்
மாறுவேட போட்டிகளின் ஆடைகளாவதை
அவரால் நம்ப முடியவில்லை

வழக்கம்போல
ஒரு ஆவேசமான பிரசங்கத்தை
நிகழ்த்துவதுதான் எல்லாவற்றையும்
சரி செய்யும் என பிக்பாஸ்
முடிவு செய்கிறார்
பேசத்தொடங்கியதும்
கூட்டத்திலிருந்து ஒரு பெண் கத்துகிறாள்
அவசரத்தில் மறந்துவிட்டீர்கள்
ஜிப்பை ஒழுங்காக போடுங்கள்

பிக்பாஸ் இல்லத்தின்
ஒழுங்கீனங்களை மாற்ற
தியான வகுப்பின்
ஆசிரியராக அமர்கிறார் பிக்பாஸ்
அவர் கண்களை மூடினால்
மக்கள் கண்களை திறந்துகொள்கிறார்கள்
அவர் ஆசனத்தில் அமர்ந்தால்
மக்கள் தலைகீழாக நிற்கிறார்கள்

பிக்பாஸ் இல்லத்தின் அதிருப்தியை சமாளிக்க
சிறப்புச் சலுகையாக
பெட்ரோல் விலையில்
ஒரு பைசா குறைக்கிறார்
பிக்பாஸ்
அதை மணியார்டரில்
அவருக்கே திருப்பியனுப்புகிறார்கள்

பிக்பாஸ் எல்லோர் தலையிலும்
ஒரு ரகசிய கேமிராவை வைத்துவிட்டோம்
என்று நிம்மதியாக இருந்தார்
எல்லாக் கேமிராக்களும்
இப்போது அவர் தலை நோக்கி திரும்பியிருக்கின்றன
அவர் ஒரு பழைய பொய்யை சொல்லும்போது
போரடிக்கிறது
புதியபொய் ஏதேனும் சொல்லுங்களேன்‘ ‘
என்கிறார்கள் செல்லமாக
அவர் ஒருபெயரை தவறாக சொல்கிறார்
ஒரு சம்பவத்தை தவறாக சொல்கிறார்
ஒரு வரலாற்றை தவறாகச் சொல்கிறார்
அவர் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்
தேசமெங்கும்
அலை அலையாக சிரிப்பொலி பரவுகிறது
பிக்பாஸ் இல்லத்தில்
பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் என
பந்தயம் கட்டி விளையாடுகிறார்கள்

பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து
கேலியாக சிரிப்பதை
ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார்
இப்போது பிக் பாஸ் இல்லத்தின்
சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய
கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைகிறார்.

பிக் பாஸ் இல்லத்தில் தான் உருவாக்கிய குழப்பங்களை
தன்னால் இனி ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பது
பிக்பாஸிற்கு இப்போது புரியத்தொடங்கியிருக்கிறது
அது அவரை நிம்மதியற்றவராக்குகிறது
அவர் தனக்குத்தானே ஆகாயத்தில்
ஒரு பறக்கும் விமானத்தில்
தனக்கான பிக்பாஸ் இல்லத்தை உருவாக்குகிறார்
எந்நேரமும் அதிலேயே குடியிருக்கிறார்
ஜன்னலின் வழியே
ஆகாய நீலத்தின் அச்சுறுத்தும்
வெறுமையை காண்கிறார்
தரையிரங்கும்போது
என்ன நடக்கும் என்ற சஞ்சலங்கள்
அவரை ஆட்கொள்கின்றன

பிக்பாஸ் இல்லத்திற்கு
பிக் பாஸ்
முதல்முறை வந்தபோது
அதன் வாசலில் மண்டியிட்டு
மண்ணை முத்தமிட்டார்
அதன்பிறகு
அவர் ஒருபோதும் அந்த வீட்டில் நுழைய
விரும்பியதே இல்லை

இப்போது இந்த சீசன் 2 வின் முடிவில்
அந்த வீட்டின் கதவுகள்
தனக்கு இனி
நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமோ
என்று அவ்வளவு பயப்படுகிறார்

பிக்பாஸ் இல்லத்தில்
சீசன் 2 வில்
பிக்பாஸிற்கு எதிராக
விரிவான ரகசிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன
பிக்பாஸ் இப்போது பாதுகாப்பற்று உணர்வதுபோல
வேறெப்போதும் உணர்ந்ததில்லை.

நன்றி: மனுஷ்யபுத்திரன்

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! திருச்சியில் இன்று மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

தாமிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி,
”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ….
தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018)  புதன்கிழமை மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர் கடைவீதி, திருச்சி

தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதுமில்லை என்றால் இந்தப் பொதுக்கூட்டத்தை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காட்ட முயற்சிக்கிறோம். இணைந்திருங்கள்!

தலைமை:
தோழர் செழியன் (மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி, மக்கள் அதிகாரம்)

கண்டன உரையாற்றுவோர்:
திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ் கட்சி, திருச்சி)
தோழர் செல்வராஜ், BHEL (மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
வழக்கறிஞர் வேலு. குணவேந்தன் (மேலிட நிர்வாக நெறியாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருச்சி)
திரு. ம.ப. சின்னத்துரை (மாவட்ட தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், திருச்சி)
தோழர் தினேஷ் (மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திருச்சி)
தோழர் புதியவன் (மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், திராவிரட் விடுதலைக் கழகம், திருச்சி

சிறப்புரை:
தோழர் காளியப்பன் (மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்)
தோழர் ராஜூ (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்)

அனைவரும் வருக !

தொடர்புக்கு:
திருச்சி: 94454 75157
மணப்பாறை: 98431 30911
கரூர்: 97913 01097

தகவல்: மக்கள் அதிகாரம்

NSA சட்டத்தில் கடையநல்லூர் கலிலூர் ரகுமான் – இரு மகன்கள் | குடும்பத்தினர் நேர்காணல் !

டந்த மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கடந்த மே 25-ம் தேதி இரவு மக்கள் அதிகாரம் தோழர் கலிலூர் ரகுமான் மற்றும் அவரது இரு மகன்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது போலீசு.

கலிலூர் ரகுமான் குடும்பத்தினர் பேட்டிதமிழகம் முழுவதும் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கி விடலாம் என நினைக்கிறது அடிமை எடப்பாடி அரசு.

தோழர் கலிலூர் ரகுமான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடையநல்லூரில், கலிலூர் ரகுமானின் தாயார் ஆயிஷா பீவி, அவரது மனைவி நசீபா பானு மற்றும் அவரது சகோதரர் ரசீத் அலி ஆகியோர் அளித்த நேர்காணல்.

பாருங்கள் பகிருங்கள் !

லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து லாரி உரிமையாளர்கள் 18-06-2018 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளன. 15 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்து துறையும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.   சேவை என்ற அடிப்படையிலும் பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம்தான் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பதால் லாரி வாடகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசுதரப்பில் கொடுக்கப்பட்ட வெற்று வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்டனர். இன்று வரை மத்திய மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை.

திரு ரவிச்சந்திரன் (கோப்புப் படம்)

அதனையொட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் நேற்று (18.6.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக ”அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்” அறிவித்தனர். இதற்கு தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கின்றன. இதனால் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், வினவு இணையதளத்துக்கு தொலைபேசி மூலம்  தெரிவித்தவை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு, தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை கடந்தாண்டு ஜுன் 16 முதல் அமல்படுத்தியது. அதன் பிறகு தங்கள் விருப்பம் போல எண்ணை நிறுவனங்கள் விலையை உயர்த்தி வந்தன. அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.58.32 எனவும், பெட்ரோல் விலை ரூ.68.13 எனவும் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு கடந்த சனியன்று (16.06.2018) டீசல் விலை ரூ.71.25, பெட்ரோல் விலை ரூ.78.18 என உயர்த்தப் பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 147 டாலராக விலை உயர்ந்த போதும்கூட டீசலுக்கு ரூ.64.50 ஆகவே இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 65.74 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் டீசல் விலை ரூ.71.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் எண்ணெய் விலை மளமளவென்று ஏறி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாளுக்கு ஒருமுறைதான் விலையேற்றம் இருந்தது. அதில் பெரிய பாதிப்புகள் இல்லை. லாரியை பொறுத்தவரை வாடகை ஒப்பந்தம் மூலம் நடைபெறுகிறது. எந்த மாநிலங்களுக்கு சரக்கு கொண்டு செல்கிறோம். எவ்வளவு தூரம்,  சென்று-வரும் நாட்கள் இதனை எல்லாம் கணக்கில் கொண்டுதான் வாடகை ஒப்பந்தம் செய்வோம்.

உதாரணமாக டெல்லி சென்று வர ஆறு-ஏழு நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களை கணக்கில் கொண்டுதான் நாங்கள் ஒப்பந்தம் போடுவோம். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் தினந்தோறும் விலை ஏற்றம் செய்தால் நாங்கள் எப்படி ஒப்பந்தம் போடுவது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தினந்தோறும் விலையேற்றத்தின் காரணமாக ஒப்பந்தம் போடுவதற்கு பயமாக இருக்கிறது. காரணம் டீசல் விலையேற்றத்தின் காரணமாக எங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது அதாவது, நாங்கள் ஒரு விலை பேசி பணம் பெற்று விடுகிறோம். விலையேற்றத்தால் எங்களுடைய பணத்திலிருந்துதான் நாங்கள் டீசல் போட வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எங்களுடைய வருவாயில் பெரும் அளவு டீசலுக்கு நாங்கள் செலவிட வேண்டியதாகின்றது. ஓட்டுனர் மற்றும் கிளீனருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மீதமிருக்கும் தொகையை கொண்டு நாங்கள் லாரிகளுக்கு வட்டி கட்டுவதை பார்ப்பதா? அல்லது குடும்பத்தை பார்ப்பதா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? என்று தெரியவில்லை. ஏற்கனவே லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இத்தொழிலுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வரும் இச்சூழலில் இது போன்ற விலை ஏற்றம் எங்களை திக்குமுக்காடச் செய்கிறது.

இரண்டாவது கோரிக்கையாக, பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும்.  ஓரே இந்தியா ஒரே நாடு ஒரே வரி என்றெல்லாம் பேசிக் கொள்ளும் மத்திய அரசு, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரும்போது பெட்ரோல் டீசலை மட்டும் ஏன் கொண்டு வர மறுக்கிறது? அவ்வாறு கொண்டு வந்தால் தங்கள் லாபத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறது.  ஏற்கனவே உற்பத்தி வரியாக மத்திய அரசு 34 சதவீதமும்,  மாநில அரசு 18 சதவீதமும் பிடுங்கிக் கொழுக்கிறது.

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டியதாக இருந்தால் பெட்ரோல் விலை 30 ரூபாயும் டீசல் விலை 20 ரூபாயும் குறையும் என்பதால் அவ்வாறு செய்வதற்கு தயாராக இல்லை. இது முழுக்க முழுக்க எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது

மூன்றாவதாக, இந்தியா முழுவதும் 354 சங்கச் சாவடிகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருபது சதவீதம் முதல் முப்பது சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு சுங்கச் சாவடியையும் கடந்து செல்ல அரைமணி நேரம் ஆகிறது. இதனால் எரிபொருள் வீணாகிறது. இதைப்பற்றி அரசு கண்டுகொள்வதில்லை. எரிபொருள் சிக்கனம் என்று விளம்பரம் செய்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலையே என்றுதான் தோன்றுகிறது.

சுங்க கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வம் முறையாக சாலைகளை பராமரிப்பதில் காட்டுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுகுறித்து கொஞ்சமும் கவலை கொள்வதில்லை.

சுங்கச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்

அதேபோல் இந்தியா முழுவதும் பல்வேறு சுங்க சாவடிகளின் டெண்டர் முடிந்த பிறகும் அவர்கள் அடாவடியாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தை பொருத்தவரை செங்கல்பட்டு, போரூர் உள்ளிட்ட சுங்க சாவடியின் டெண்டர் முடிவடைந்து விட்டது. ஆனால் இன்னும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல சுங்க சாவடியில் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. அந்த விதியை சுங்கச்சாவடிகள் கடைபிடிப்பதே இல்லை. இதைப் போன்று பல சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. எனவேதான் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும். சாலை பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அரசே ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அடாவடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் புதிய மாடல் வண்டிகளுக்கு 90 ஆயிரம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டால் பத்து லட்சத்துக்கான தொகையை மட்டும்தான் தருகிறார்கள். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் தான் பாதிக்கபட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசும் அவர்களுக்கு துணை நிற்கிறது. ஏற்கனவே பல்வேறு சிரமங்களை நாங்கள் அனுபவித்து வரும் நிலையில் இது போன்ற புதிய புதிய பிரச்சனைகள் எங்களை அபாய நிலைக்கு தள்ளி வருகிறது.

இத்தொழிலை நம்பி லட்சக்கனக்கானோர் மறைமுகமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர். குறிப்பாக வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் இதனை நம்பித்தான் இருக்கிறார்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி போன்ற இடங்களில் அதிக அளவில் பாடி பில்டிங் தொழில் மூடப்பட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள். முக்கிய காரணம் இப்போதெல்லாம் வண்டி தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ஈச்சர், வால்வோ, அசோக் லேலாண்ட், பாரத் ஆகிய நிறுவனங்களே பாடிகட்டி வெளியே அனுப்புகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக தரைவழி போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள், நெருக்கடிகள்தான் எங்களை போராட்டத்தை நோக்கித் தள்ளியுள்ளன. ”அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்” என்பார்கள். அதுதான் எங்கள் நிலை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

-வினவு செய்தியாளர்

FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?

13

மீபத்தில் நீயா நானா விவாத காட்சி நறுக்கொன்று முகநூலில் அதிகமாக பகிரப்படுகிறது. அதில் பேசும் பர்தா அணிந்த பெண் ஒருவர் பெரும் வசவுக்கு ஆளாகிறார் (முதியோர்களை காப்பகங்களுக்கு அனுப்புவது சரிதான் என கடுமையாக வாதிடுகிறார் அவர், அதில் தமது மாமியாரைப் பற்றியும் அதிகம் குற்றம் சொல்கிறார்). அந்த விவாதத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை, பார்க்கவும் விரும்பவில்லை.

நீயா நானா விவாதங்கள் பெருமளவு பேசுவோரை உசுப்பேற்றி அதன் மூலம் அவர்களை விவாதத்தில் முரட்டுத்தனமாக பேசவைத்து நடத்தப்படும் வியாபாரம். அங்கே மாமியார்-மருமகள், கணவன் – மனைவி போன்ற ஆபத்தில்லாத (பங்கேற்பாளருக்கு அல்ல, விஜய் டிவிக்கு ஆபத்தில்லாத என்று பொருள்) மற்றும் எளிதில் விற்பனையாகவல்ல தலைப்புக்களே விவாதிக்க தேர்வு செய்யப்படும். ஆகவே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிப்பது அனாவசியம். ஆனால் அந்த பெண்மணி குறித்த எதிர்வினைகள், வசவுகள் ஆகியவை சில கண்ணோட்ட அபாயங்களை அறியத் தருகின்றன.

மாமியார் சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கிறார் எனும் குற்றச்சாட்டை வைத்து அவர் கொடூரமானவராக சித்தரிக்கப்படுகிறார். நான் ஒன்னும் சும்மா முதியோர் இல்லத்துக்கு அனுப்பல, காசு கொடுத்துத்தான் தங்க வைக்கிறேன் என்பது அவர் வாதமாக இருக்கிறது. போகட்டும் சாப்பாட்டுக்கு கணக்கு பார்க்கும் மருமகள் எல்லாம் கொடுமைக்காரி என்றால் நாம் சரிபாதி பெண்களை அந்த பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும். அதில் நமக்கு நெருக்கமான பலரும் இருக்கக்கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை தேவயானிக்கும் அவரது மாமியாருக்கும் நடந்த சண்டை பத்திரிகைகளில் வெளியானது. கிராமத்துப் பெண்மணியான அந்த மாமியாரின் பேட்டி ஒன்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் அவர் தேவயானியின் தம்பியை பற்றி இப்படி குறை சொன்னார் “சட்டி சோறு திம்பான் சார், செய்யிற சாப்பாட்டை டப்பா டப்பாவா போட்டு அவங்க வீட்டுக்கு அனுப்புவா”. இந்த மாமியாரை எப்படி விளங்கிக் கொள்வீர்கள்? சோத்துக்கு கணக்கு பார்க்கும் கொடுமைக்காரி என்றா?!. அது அவரது அறியாமையின் வெளிப்பாடு. ஆனால் அதே வசனம் ஒரு மருமகள் வாயிலிருந்து வரும்போது நமக்குள் இருக்கும் நீதிபதி விழித்துக்கொள்கிறான்.

அதே விவாதத்தில் அந்த பாயம்மா வேறு சில பிரச்சினைகளை சொல்கிறார். பணத்தை இரண்டாம் பட்சமாக பார்க்க முடியாது, அப்படி பார்த்தால் கடன்காரன் அவமானப்படுத்துவதை சகித்துக் கொள்ள நேரிடும் என்கிறார். இதில் மிகைப்படுத்தல் இருக்கலாம். ஆனால் முதியோரை பராமரிப்பதில் பொருளாதாரக் காரணிகள் பெரும் இடைஞ்சலாக இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது குறித்து நம் சிந்தனை போகாமல் சிக்கிய நபரை வில்லியாக்கி நாம் நமது ஆத்திரத்துக்கு வடிகால் தேடுகிறோம் இல்லையா?? அதுதான் பெரிதும் கவலையுற வைக்கிறது. பத்து நிமிட ”செறிவூட்டப்பட்ட” பேச்சைப் பார்த்து நம்மால் ஒரு பெண்மணியை ”கொடுமைக்காரி” என தீர்மானித்து அவருக்கு நரகம்தான் கிடைக்கும் என சபிக்க இயலுமானால், “வெறுமனே விளம்பரத்தையும் மேடைப் பேச்சையும் நம்பி, மோடி போன்ற ஒரு ஆளை சூப்பர்மேன் என நம்பவும் முடியும்”. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பைக்குள் 10 ரூபாய் வர இயலுமானால் அதே வழியில் 100 ரூபாய் போகவும் முடியும் இல்லையா?

இந்த ஒரு நபர் குறித்த நமது எதிர்வினைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இந்திய சமூக அமைப்பில் முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேர்மையாக பார்ப்போம்.

முதல் பெரும் பிரச்சினை நாம் வாழ்வதற்கான பரப்பு (வீட்டின் அளவு) பெருமளவு சுருங்கி விட்டிருக்கிறது. வழக்கமாக கிராமங்களில் முதியவர்கள் கூடுவதற்கு என தனியே இடமிருந்தது. சிறு நகரங்களிலும் அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. நடுத்தர வர்கத்தின் வீடுகளில் அவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இடமிருந்தது. இப்போது வீடுகளின் பரப்பு சுருங்கி பொருட்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே இருக்கும் சிறிய பரப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் தேவையிருப்பதால் அதில் பெரியவர்கள் முன்னுரிமையை இழக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய தேவையற்ற வீடுகளில் பிரச்சினை குறைவாக இருக்கிறது (ஒப்பீட்டளவில்). ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகாது என பல ஆண்டுகளாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இந்த சுமுக சூழலுக்கு பெரிய காரணங்கள் அவசியமில்லை, ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருக்க தேவையான அளவுக்கு அவர்கள் வீடுகளில் இடமிருக்கிறது. எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விடுவார். காரணம் 4,5 பேருக்கு மேல் வசதியாக உட்கார இடமில்லாத வீடு அது.

முதியோர் இல்லம் (மாதிரிப் படம்)

அடுத்து எல்லாவற்றுக்கும் தேவைப்படும் பணம். பிள்ளைகள் கல்வி, வீடு, எதிர்கால சேமிப்பு, நிகழ்கால தேவைகள் என எல்லாமே முரட்டு செலவீனங்களாக இருக்கின்றன. அந்த முன்னுரிமையிலும் பெரியவர்கள்தான் அடிபட்டுப் போகிறார்கள். அறுபத்தைந்து வயதான ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ஒருவர் இப்போது ஆற்றுப்படுத்துனராக பகுதிநேர வேலை செய்கிறார். அவரது பகுதிநேர சம்பளம் முழுதும் தம்பதிகளின் மருந்து செலவுக்கே போதாது. இவரும் முடங்கினால் அந்த சுமையை அவரது மகள் சுமக்க வேண்டும். ஆனால் அவரது பொருளாதாரம் அதை தாங்குமளவுக்கு இல்லை. இவ்வாறான கதைகள் வேறு வேறு வடிவில் பல வீடுகளில் கிடைக்கக்கூடும்.

இருக்கும் முதியவர்களின் ஓய்வுகால செலவுகளைப்போலவே தமது ஓய்வுகாலத்துக்கு என்று சேமிக்க வேண்டிய நெருக்கடியும் மக்களை வதைக்கின்றது. ஓய்வூதியம் இல்லாத ஒருவர் தமது ஓய்வுகாலத்தில் மாதம் ரூ. 30,000 வட்டியாகப் பெற வேண்டுமானால் 50 லட்சத்துக்கு குறையாமல் சேமித்திருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு, அவர்கள் கல்வி ஆகியவை இன்னுமொரு பெரும் செலவு. நீங்கள் பாவிக்கும் சாலை, பயன்படுத்தும் தண்ணீர் என எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. வாகனமும் செல்போனும் இல்லாமல் அன்றாட வாழ்வே சாத்தியமில்லாமல் போய்விட்டது. உங்கள் வருவாயை பிய்த்துத் தின்ன ஏராளமான செலவீனங்கள் காத்திருக்கையில் முதியவர்களை கருணையோடு அணுக அசாத்தியமான இரக்க குணம் வேண்டும். ஆனால் தாராளமயம் யார் மீதும் இரக்கம் கொள்ளாதே, உடனிருப்பவனை உதறிவிட்டு ஓடு, முன்னிருப்பவனை மிதித்துவிட்டு ஓடு என கற்பிக்கிறது. சாப்பாட்டுக்குகூட கணக்கு பார்க்கும் அல்பத்தனம் தாராளமயத்துக்குப் பிறகுதான் அதிகரித்திருக்கிறது.

தாரளமயம் தனியார்மயம் ஆகியவை  மனித மாண்புகளை இரண்டாம்பட்சமாக்கி விட்டன. அது கற்பித்திருக்கும் முதலீட்டு மனோபாவம் எல்லாவற்றிடம் இருந்தும் ஒரு பொருளாதார பலனை எதிர்நோக்கும் இயல்பை மக்களிடம் திணித்திருக்கிறது. மூத்த குடிமக்களின் ஆகப்பெரும் சாபம் இந்த இயல்புதான். அதுவே அவர்களை தேவையற்ற சுமையாக கருத வைக்கிறது. ”எங்கப்பா ஒழுங்கா பணம் சேர்த்து வச்சிருந்தா நான் இப்படி கஷ்டப்பட்டிருப்பேனா” எனும் புலம்பல்களை பல வீடுகளில் சாதாரணமாக கேட்க முடியும். பிள்ளைகளின் படிப்புக்கு கொட்டப்படும் பணத்தை எதிர்காலத்துக்கான முதலீடாக விளம்பரங்கள் காட்டுகின்றன. ஆனால் முதியோரின் ஓய்வுகால தேவைகள் பற்றிய விளம்பரங்களில் அது பிள்ளைகளின் கடமை என்பதாக இருக்கவே இருக்காது. நீ சேர்த்துவைத்தால்தான் உன் ஓய்வுகாலம் மரியாதையாக இருக்கும் என்பதாவே இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன காரணிகளில் எதுவுமே தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதவை. முதியோர் நல்வாழ்வை சிதைக்கும் இன்னும் பல காரணங்களை பட்டியலிட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட நபர்களின் இயல்பின் காரணமாக உருவாகியிருக்காது. வேறு சில சாத்தியங்களை பரிசீலிக்கலாம்,

ஒருவேளை கல்வி என்பது முற்றிலும் அரசின் பொறுப்பாக இருந்திருந்தால்??

பெரும்பான்மை மத்தியதர வர்க்கம் தங்கள் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிக்க முடியும். அது சாத்தியப்பட்டால் முதியோருக்கு செலவிடுவதில் அவர்களுக்கு தயக்கம் குறையக்கூடும்.

ஒருவேளை ரியல் எஸ்டேட் தொழில் ஒரு கருப்புப்பண சொர்க்கமாக இருந்திராவிட்டால்?

நகர்ப்புற வீட்டு விலைகள் கட்டுப்படியாகும் அளவில் இருந்திருக்கும். முதியோர் பயன்பாட்டுக்கென தனிப்பட்ட இடத்தையும் கணக்கில் கொண்டு வீடுவாங்கும் சாத்தியம் மக்களுக்கு கிடைத்திருக்கும். மேலும் பொதுப்பயன்பாட்டுக்கென (பூங்கா போன்ற) உள்ள இடங்கள் அதிகம் திருடப்பட்டிருக்காது. அவற்றையும் முதியவர்கள் பயன்படுத்திக்கொள்ள சாத்தியம் இருந்திருக்கும்.

ஒருவேளை விவசாயத்தை லாபகரமான தொழிலாக வைத்திருக்க அரசு முயற்சி செய்திருந்தால்?

கோடிக்கணக்கான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி அகதிகளாக ஓடிவர அவசியம் இருந்திருக்காது. வயதானவர்கள் ஓரளவு மன நிம்மதியோடும் சுயசார்போடும் தம் வாழ்நாளை கடத்த இயலும்.

ஒருவேளை முதியோர் மருத்துவத்தை அரசு தன் பொறுப்பில் வைத்திருந்து அதனை எளிதில் கிடைக்கும்படி செய்திருந்தால்?

வசதியற்ற குடும்பங்கள் தம் பெற்றோரை பார்த்துக்கொள்வதில் தயக்கம் காட்ட அவசியம் இருந்திருக்காது.

ஒருவேளை ஓய்வுகால சேமிப்புக்கு நியாயமான வட்டி கிடைக்கும் என்றால்?

ஒரு குறிப்பிட்ட அளவான முதியோர்களாவது யாரையும் சாராமல் வழ்ந்திருக்க முடியும்.

இப்படி ஏராளமான “ஒருவேளை” கேள்விகளை அடுக்க இயலும். அவை எல்லாமே அரசு எனும் கட்டமைப்பை நம்பியிருப்பவை. அந்த கட்டமைப்பு ஒரு வட்டிக் கடைக்காரனைப்போல மாறியிருக்கிறது. மனித உயிர்களை மதிக்க விரும்பாத கிரிமினலைப்போல நடந்து கொள்கிறது. இந்த சூழலில் வாழும் மனிதர்கள் தாங்களும் அரசின் அந்த இயல்பை தன்னியல்பாகவோ அல்லது வேறுவழியின்றியோ ஏற்றுக்கொள்ள தலைப்படுகிறார்கள். அத்தகைய மக்கள் கூட்டத்திடம் தனிமனித நல்லியல்புகளை பிரசங்கம் செய்வதும் வலியுறுத்துவதும் கூட ஒரு மோசடிதான். எது எப்படிப் போனாலும் ஆண்டவனை தொழு, நீ செத்தால் சொர்க்கம் உறுதி எனும் மதங்களின் வாதத்துக்கு நிகரானது இது.

ஆனாலும் அந்த ”பாயம்மா” பேசியது தவறில்லையா என கேட்கிறீர்களா?

பாயம்மா மீது எஃப்.ஐ.ஆர் எழுதும் முன்னால் நாம் நீயா நானா நிகழ்ச்சியின் வடிவத்தை விளங்கிக்கொள்வது அவசியம். அது ஒரு கருத்தாடல் களம் அல்ல, சற்றே வித்தியாசமான பேச்சுப் போட்டி அது. அங்கே உங்கள் வாதம் வென்றாக வேண்டும் எனும் விதிதான் வலியுறுத்தப்படும். அவர்கள் உங்கள் உணர்வுகளை தூண்டவல்ல பிரச்சினைகளையே தெரிவுசெய்வார்கள். அப்படி தூண்டிவிட்டு அதனை லாவகமாக எடிட் செய்வதில் நீண்ட அனுபவம் கொண்டது நீயா நானா குழு.

நாம் காணும் 1 மணிநேர காட்சிகள் என்பவை 5 முதல் 6 மணிநேரம்வரை படம் பிடிக்கப்பட்டதன் “தேர்ந்தெடுக்கப்பட்ட” வடிவம். சமயத்தில் நீங்கள் விரும்பாத தரப்பில் கூட உட்காரவைக்கப்படலாம் (டி.வி சான்ஸ், நீங்கள் இழக்க விரும்ப மாட்டீர்கள்). ஆகவே நீங்கள் கேட்ட பாயம்மாவின் குரல் அவரே மிகைப்படுத்திக் கொண்டதாக இருக்கலாம். அல்லது பாயம்மாவை கரித்துக் கொட்டிய எதிர்தரப்பு பெண்மணிகள் இயல்பில் பாயம்மாவை விட கொடுமையான மருமகளாக இருக்கலாம். ஆகவே 10 நிமிட காட்சியை வைத்து ஒருவரை சபிக்க முற்படுவது நமது அரைவேக்காட்டு சிந்தனையின் வெளிப்பாடு.

இன்னொரு அம்சம், அந்த பெண்மணி ஒரு சமூக அமைப்பின் விளைவு, அவரை கிரிமினலாக கருதுவது சரியான முடிவல்ல. அதனை தீர்மானிக்க வேண்டியது அவரது மாமியார் உள்ளிட்ட அவரது குடும்பம்தான். ஒருவேளை அந்த மாமியார் முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருப்பாரேயானால் (மருமகளிடம் இருப்பதைவிட) அதில் நாம் கருத்து சொல்ல ஏதுமில்லை.

உங்கள் குழந்தைகளின் மீது முதலீடு செய்யத் தூண்டும் அதே நிதி நிறுவனங்கள், உங்கள் முதுமைக்கு தனியாக முதலீடு செய்யவும் கோருகின்றன.

நாம் எல்லா செய்திகளையும் ஆராய்ந்து எதிர்வினையாற்றுவதில்லை. நம்பகமான நபர்களையும் ஊடகங்களையும் தெரிவு செய்கிறோம். அவர்கள் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்கிறோம். நீயா நானா நிகழ்ச்சியை நல்ல கருத்தாடல் களம் என நாம் நம்புகிறோம் அதனாலேயே அதில் பேசியதை வைத்து நம்மால் ஒருவரை எளிதில் “லேபிள்” செய்ய முடிகிறது.

மேலும் நாம் சரியான தீர்வுக்கு மெனக்கெடுவதில்லை. எளிமையான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். சரியான தீர்வு என்பது நமது அறிவு உழைப்பு மற்றும் நேரத்தை கேட்கும். உடனடி தீர்வுகள் தேவைப்படும்போது கையில் சிக்கும் ஆட்களை அடித்துவிட்டு ஆறுதல் பட்டுக் கொள்வதைத்தவிர வேறு சாத்தியம் இல்லை.

தர்க்க அறிவை பயன்படுத்தாமல் இப்படி முடிவெடுப்பது என்பது மனிதர்களின் இயல்பான பலவீனமாக இருக்கலாம். ஆனால் அது (அரசு உள்ளிட்ட) மக்கள் விரோத சக்திகளின் ஆயுதமாக இப்போது மாறியிருக்கிறது. நக்சலைட் மற்றும் தீவிரவாத பூச்சாண்டி காட்டி அரசு தம் அழிவுப் பணிகளை செய்கிறது. விஜய் டிவி அந்த பாயம்மாவை வில்லியாக்கி லாபம் பார்ப்பது போல சங்கப்பரிவார அமைப்புகள் முஸ்லீம்கள் எல்லோரையும் வில்லனாக காட்டி லாபம் பார்க்கின்றன.

குழந்தைகளை கடத்துகிறார்கள் என வாட்சப்பில் வதந்தி பரப்பி சுலபமாக பலரை கொல்ல முடியும் சூழல்தான் நம் நாட்டில் இருக்கிறது. ஒரு ஹீரோ வந்தால் சரியாகும்; ஒரு வில்லனை அழித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதெல்லாம் மொக்கை சினிமாத்தனமான நம்பிக்கைகள். தனி மனிதன் திருந்தினால் மாற்றம் வரும் என்பதெல்லாம் சாமியார்கள் மற்றும் என்.ஜி.ஓக்களின் வியாபார ஃபார்முலா.

நீங்கள் அந்த பாயம்மாவை மட்டும் வில்லியாக கருதினால், சங்.பரிவார் மற்றும் வாட்சப் வதந்தி கோஷ்டிக்கு பலியாகும் வாய்ப்பு உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. ஆகவே வெறுமனே சில காட்சிகளை வைத்து உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, பிரச்சினைகளை சமூக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கவும் விவாதிக்கவும் பழகுவோம். இன்றிருக்கும் நெருக்கடியான அரசியல் சூழலில் அதனை உயர்ந்த மானுடப் பண்பு என்றெல்லாம் வரையறுக்க முடியாது… இப்போது அது ஒரு பிழைத்திருப்பதற்கான உத்தி (survival technique).

– வில்லவன் இராமதாஸ்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !

பேரறிவாளன் : தாமதத்தின் வலி மரணத்தை விட கொடூரமானது !

இராஜீவ் கொலை வழக்கில் “சிறு விசாரணை” என்று பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் முடிந்து விட்டன

  புதிய வாழ்க்கை சும்மா கிடைத்து விடாது அதற்குரிய விலையை அவன் கொடுத்தாக வேண்டும் மேலும் அது பெரும் உற்சாகத்தையும், பெரும் துன்பத்தையும் அவனுக்குத் தரும் என்று அவனுக்குத் தெரியாது ஆனால் ஒரு புதிய வாழ்க்கையின் துவக்கம் அது – படிப்படியாக புத்தாக்கமடையும் மனிதனைப் பற்றிய கதை, அவன் தன்னுடைய வாழ்க்கையை மறுவார்ப்பு செய்யும் கதை, ஓர் உலகிலிருந்து மறு உலகிற்கு செல்லும் அறிமுகமில்லா புதிய வாழ்க்கைக்கான அவனது துவக்கம் அது. புதிய கதை ஒன்றின் விசயமாக அது இருக்கலாம். ஆனால் தற்போதைய கதை முடிவுக்கு வந்துவிட்டது.

– ஃபியோடார் தஸ்தோவ்ஸ்கி, குற்றமும் தண்டனையும். 

ராஜீவ் கொலை வழக்கில் ’சிறு விசாரணை’ என்று பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு இன்றோடு 27 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரண்டு சிறிய 9 வோல்ட் மின்கலங்கள் வாங்கிக் கொடுத்ததற்காக அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. பேரறிவாளனின் வாக்குமூலத்தை வெட்டி ஒட்டியதற்காக அவ்வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் மன்னிப்பு கேட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. மரண தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் ஆகின்றன.

பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க தமிழக சட்ட அவை முடிவெடுத்திருப்பதாக ஜெயலலிதா கூறி 4 ஆண்டுகள் ஆகின்றன. “அடுத்த மூன்று நாட்களில் மைய அரசு பதிலளிக்கவில்லை எனில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று அப்போது அவர் கூறினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க மைய அரசிற்கு அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறி 3 ஆண்டுகள் ஆகின்றன. பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பகம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று பேரறிவாளன் முறையிட்டு 7 ஆண்டுகள் ஆகி விட்டன. வழக்கின் மறு விசாரணை அறிக்கையை அளிக்க சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகிறது.

இராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தங்களது தந்தையைக் கொலை செய்த அனைவரையும் மன்னித்து விட்டதாக கூறி மூன்று மாதங்கள் ஆகின்றன. மைய அரசும் விரும்பினால் அனைவரையும் விடுதலை செய்ய தயார் என்று தமிழக அரசு கூறியும் ஒரு மாதம் ஆகிறது. இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தர்க்க ரீதியாக முடிந்திருக்க வேண்டும். ஆயினும், இத்தனை ஆண்டுகள், மாதங்கள், நாட்கள், நொடிகள் என இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு மிகப் பெரிய பத்தியைப் படிக்க நமக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்? அதே போல கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் சந்தித்த பயங்கரம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு கணமாவது சிந்திப்போமா? 27 ஆண்டுகளாக மிகப்பெரிய சிலந்தி வலையொன்றில் சிக்கிக்கொண்ட சிறிய பூச்சியாக அவர் இருக்கிறார்.

80 மற்றும் 90 களில் ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தது. அன்று பல இளைஞர்களுக்கு பிரபாகரன் ஒரு நாயகன். விடுதலைப்புலிகள் தமிழகம் வருவதும் அவர்களது ஆதரவாளர்களின் இடங்களில் தங்குவதும் இயல்பாக இருந்தது. அன்றைய அரசியல் சூழலில் திராவிட இயக்கங்கள் விடுதலைப்புலிகளிடம் நெருக்கமான தொடர்பில் இருந்தன. பேரறிவாளனின் பகுத்தறிவு குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அன்றைய சூழலில் இந்த சார்பு நிலை இயல்பிற்கு முரணானதாக இல்லை. இருப்பினும் அந்த பயங்கரமான சம்பவம் எந்த அரசியல் பின்னணியும்  செல்வாக்கும் இல்லாத ஒரு சாமானிய இளைஞனான பேரறிவாளனின் வாழ்க்கையை பயங்கரமாக தாக்கியது.

தவறான விசாரணை

இராஜீவ்காந்தி

1991 ஆம் ஆண்டு மே 21 அன்று இராஜீவ் காந்தியின் படுகொலை சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டின் பாதுகாப்புக் குறித்து சந்தேகங்களைத் தோற்றுவித்த நிலையில் அதை உறுதிப்படுத்த பல கைது நடவடிக்கைகள் செய்யப்பட்டன. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் பயத்தை தணிக்க எப்படியாவது கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் மைய புலனாய்வு அதிகாரிகள் புலிகளின் ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டனர். சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடையே பேரறிவாளனும் இருந்தார். அப்போது அவர் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு டிப்ளமா பட்டப்படிப்பை முடித்து உயர் கல்வியை தொடர சென்னையில் உள்ள திராவிடர் கழக தலைமையகமான பெரியார் திடலில் தங்கியிருந்தார். ஒரு சிறிய விசாரணைதான் என்று சி.பி.ஐ கூறிய போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது பெற்றோர்களான அற்புதம் அம்மாளும் குயில்தாசனும் அவரை அனுப்பி வைத்தனர். இது நடந்தது ஜூன் 11, 1991. இன்றோடு இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு சமமான காலத்தினை சிறையில் அவர் கழித்துள்ளார்.

நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்த பின்னர் அவர்களில் 41 பேரின் மீது பூந்தமல்லியில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த அரசியல் படுகொலைக்கு முழுக்க விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகிவிட்டனர். வழக்கு தொடங்கும் முன்பே குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர்கள் இறந்துவிட மீதி இருந்த 26  பேர்களுக்கு 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி மரண தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவராசனுக்கு மின்கலங்கள் (பேட்டரி) வாங்கிக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகிவிட நிகழ்வுக்கு நேரடியாக தொடர்பில்லாத அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையை அடிப்படையாக கொண்டால் இந்தியாவின் பாதி மக்கள் சிறையில் தான் இருக்க நேரிடும்.

இன்றுவரை வழக்கு அதன் உண்மையான குற்றவாளிகளை நோக்கி ஒரு அங்குலம் கூட நகரவில்லை. தானு வெடிக்கச் செய்த அந்த வெடிக்குண்டினைத் தயாரித்த நபர் யார் என்று கண்டறிய முடியவில்லை என்று 2005-ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி ஜூனியர் விகடனுக்கும் அதே ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி குமுதத்திற்கும் அளித்த பேட்டியில் புலனாய்வு குழுவிற்கு தலைமை வகித்த கே.இரகோத்தமன் ஒப்புக்கொண்டார். ஆனால் இத்தோல்வியை ஒப்புக்கொள்ள இந்த அரசு இன்னும் மறுக்கிறது.

வி.தியாகராஜன்

சிவராசனுக்கு மின்கலங்கள் வாங்கிக்கொடுத்ததை ஒப்புக்கொண்ட பேரறிவாளன், அதன் பயன்பாடு குறித்தும் இராஜிவ் காந்தியின் படுகொலை குறித்தும் தனக்கு ஏதும் தெரியாது என்று அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பாதியை மட்டுமே பதிவு செய்ததாகவும் மீதியை விட்டுவிட்டதாகவும் புலனாய்வு அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பேரறிவாளனின் பங்கு குறித்து சி.பி.ஐ-க்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் சதியில் அவருக்கு தொடர்பில்லை என்பது இராஜீவ் கொலை விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் உறுதியானது என்று தியாகராஜன் கூறியதாக ’தி ஹிந்து’ பத்திரிகை தெரிவித்தது. சுபா, தாணு மற்றும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது என்று 1991-ம் ஆண்டு மே 7-ம் தேதி புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பொட்டு அம்மனுக்கு சிவராசன் அனுப்பிய தந்தித் தகவலை சான்றாக அவர் கூறினார். வெறுமனே மின்கலங்களை வாங்கிக் கொடுத்தது இராஜீவ் கொலை சதிக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஆகாது என்று அவர் மேலும் கூறியிருந்தார். சதியில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதற்கு அந்த தந்தியே சாட்சியாக இருக்கிறது.

பணியிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பேரறிவாளனுக்காக தியாகராஜன் அளித்த வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் முடியாமல் இருக்கும் ஒரு வழக்கைப் பொறுத்தமட்டில் புலனாய்வு செய்த அதிகாரியின் வாக்குமூலம் இன்னும் ஏற்கத்தக்கதே. அவர் அலுவலகத்தில் இருக்கிறாரா அல்லது ஓய்வு பெற்று விட்டாரா என்பது தேவையில்லாத விடயம். இரண்டு பத்தாண்டுகளாக பல்வேறு கட்டங்களில் இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கில் தியாகராஜனின் வாக்குமூலத்தை நிராகரிப்பது முறையல்ல என்கின்றனர் இந்த வழக்கினை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.

மரண தண்டனை வழங்கிய நீதிபதி, எழுதிய கடிதம்

இந்த சி.பி.ஐ வழக்கு விசாரணை இந்தியக் குற்றவியல் நீதி முறையின் மன்னிக்க முடியாத ஒரு குறைபாட்டை வெளிப்படுத்திருப்பதாக பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.ஜோசப் 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சோனியா காந்திக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

“தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் அவர்களை மன்னித்து விடுகிறோம் என்று நீங்கள் ஜனாதிபதிக்கு எழுதினால் மைய அரசு அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடும். இந்த மனிதாபிமான உதவியை உங்களால் செய்ய முடியும் என்று எனக்குப் படுகிறது. இவர்களுக்குத் தீர்ப்பளித்தவன் என்ற முறையில் இதை உங்களிடம் கண்டிப்பாக தெரிவித்தால்தான் உங்களது கருணையைக் காட்ட முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று அக்கடிதம் கூறியது. காந்தி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு முதன்மை குற்றவாளியான நாதுராம் கோட்சேவின் உடன் பிறந்தவரான கோபால் கோட்ஸே, 1964-ம் ஆண்டு மைய அரசினால் விடுதலை செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுத்தவர்களில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான வி.கே. கிருஷ்ணய்யரும் ஒருவர்.

விசாரணை அதிகாரி, ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி மற்றும் மரண தண்டனை வழங்கிய நீதிபதி என அதில் ஈடுபட்ட அனைவராலும் இந்த வழக்கு விசாரணையின் தன்மை குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அவர்களை மன்னிப்பதற்கு முன் வந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்வது குறித்து மைய அரசு இன்னமும் தயக்கம் காட்டினால் சமாதானமாக இன்னும் வேறு யாரை எதிர்பார்க்கிறது?

வாழ்நாள் சிறை

அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் குடிமை சமுதாயம் என அனைவரும் தங்களது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருந்த போதிலும் நிறுவனரீதியான அநீதிக்கு எதிரான இந்த போராட்டத்தை தனியே நடத்திக் கொண்டிருப்பவர் பேரறிவாளன்.

சிறையில் மின்சார அதிர்ச்சி உள்ளிட்ட எல்லாவகை சித்தரவதைக்கும் அவர் ஆளானார். எந்த மனிதனும் தனிமைச் சிறையில் இருக்கும் போது அனைத்து நம்பிக்கையும் இழப்பது இயல்பு. ஆனால் பேரறிவாளன் சிறையிலேயே பி.சி.ஏ, எம்.சி.ஏ பட்ட படிப்புகள் மற்றும் ஐந்து சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். சிறை நூலக பராமரிப்பிலிருந்து கைதிகளுக்கு உதவி செய்வது வரை நீண்ட போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். மேலும் இந்த வழக்கில் தன்னுடைய குற்றமின்மையை வாதிடுவதற்காக “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” என்ற நூலினையும் எழுதியிருக்கிறார்.

2011-ம் ஆண்டு தூக்குத்தண்டனை முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேரறிவாளன் மற்றும் சிலர் அதை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்கள். இராம் ஜெத்மலானியும் கொலின் கோன்சால்சும் அவர்களுக்காக வாதிட்டனர். தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டதுடன் உச்சநீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக மாற்றியது. ஜெயலலிதா மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு கைதிகளையும் விடுதலை செய்யப் போவதாய் அறிவித்தவுடன் மாநில மற்றும் மைய அரசுகளின் அதிகாரத்தைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு அது வித்திட்டது. மைய அரசின் இணக்கம் இதற்கு அவசியம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இன்று அது மூன்று நபர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு நிலுவையில் இருக்கிறது.

1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு இந்த படுகொலையில் வெளிநாட்டு சதி பற்றி ஆய்வு நடத்த பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்திற்கு சென்னை தடா நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் அதன் பிறகு கண்காணிப்பு ஆணையம் தொடர்ச்சியாக அனுப்பிய ஆவணங்களை தடா நீதிமன்றம் கண்டு கொள்ளவேயில்லை. அந்த ஆவணங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டி பேரறிவாளன் நீதிமன்றத்தை அணுகிய போதும் அது மறுத்துவிட்டது. கண்காணிப்பு ஆணையத்தின் ஆய்வைத் தொடர வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தை பேரறிவாளன் அணுகிய போதும் இது தடா நீதிமன்றம் சம்மந்தப்பட்டிருப்பதால் உச்சநீதிமன்றம் தான் இதில் தலையிட முடியும் என்று நீதிபதி மாலா மறுத்துவிட்டார். இது 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டிய போது கால தாமதம் குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நீதிபதி இரஞ்சன் கோகோய் உடனடியாக அந்த ஆவணங்களைக் கேட்டார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் அதே வேளையில் தண்டனையை நீக்கக்கோரியும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் விண்ணப்பம் ஒன்றை பேரறிவாளன் தாக்கல் செய்தார்.

மும்பை குண்டுவெடிப்புக் குற்றவாளி சஞ்சய் தத்

இந்த இடைப்பட்ட காலத்தில் 1993 ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள புனேவின் எர்வாடா சிறை நிர்வாகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார் பேரறிவாளன். எந்த பதிலும் இல்லாததால் மாநில தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் அங்கும் இதுவரை பதிலில்லை.

257 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில் முறை கேடாக ஆயுதங்களை வாங்கி கொடுத்ததற்காக 1993-ம் ஆண்டில் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். மும்பை தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மைய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட சஞ்சய் தத்திற்கு பரோலும் தண்டனைக் குறைப்பும் விடுதலையும் கிடைத்தது. மைய அரசின் ஒப்புதல் தேவைப்பட வேண்டிய இந்த வழக்கில் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சஞ்சய் தத்தை விடுவித்தது. பேரறிவாளனின் கேள்வியும் அதுதான்: மாநில அதிகார வரம்பில் வரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் அவரது வழக்கு இருக்கையில், மைய அரசு ஏன் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்கிறது?

நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து தன்னுடைய அவலநிலை குறித்த கவன ஈர்ப்பை பேரறிவாளன் பெற்றிருக்கிறார். பொதுவாக, கொடூரமான கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலல்லாமல் பேரறிவாளன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி விட்டார். சிறு விசாரணை என்று அவரை காவல்துறை அழைத்து சென்றபோது அவருக்கு வயது வெறும் 19. நோயுற்ற தனது தந்தையை முதன்முறையாக பரோலில் பார்க்க வந்தபோது அவரின் வயதோ 46.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்

பேரறிவாளனின் பெற்றோர் குறிப்பாக அவரது தாயார் அற்புதம் அம்மாள் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தன்னுடைய மகனின் விடுதலைக்காகவும் மரண தண்டனையை ஒழிக்கவும் போராடியிருக்கிறார். அவரது மகன் கைது செய்யப்பட்டவுடன் புலனாய்வு அலுவலகத்திற்கு நடக்கத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை அவர் ஓயவில்லை. தன்னுடைய மகனின் அறிவுரைகளை சுமக்கும் அவர் ஒருவாரம் கூட தன்னுடைய மகனை சந்திக்காமல் இருந்ததில்லை. மரண தண்டனையை ஒழிக்க தமிழகத்தில் எழுப்பப்படும் குரல் என்று ஒன்று இருந்தால் அது அற்புதம் அம்மாளின் குரல் மட்டுமே. 27 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு வேறு என்ன வேண்டும் என்று அவர் வினவுகிறார்.

மரண தண்டனையை விட தாமதப்படுத்தப்படும் நீதி மிகவும் கொடூரமான தண்டனை. விசாரணையின் வலுவற்ற தன்மை ஏற்படுத்தும் தாமதத்தின் வலி, கொல்லப்படுவதை விட கொடூரமானது. 27 ஆண்டுகள் போதாதா? பேரறிவாளனின் வாழ்க்கை விளையாட்டாய் போய்விட்டதா? இருட்டுச்சிறையில் ஒரு மனிதன் சாவதை நீதி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?  இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதியிருக்கிறார். இந்தியாவின் சிறைகளில் நியாயமான விசரணையின்றி வாடும் ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னம்தான் பேரறிவாளன்.

சஞ்சய் தத் விடுவிக்கப்படுகிறார் பேரறிவாளன் தண்டிக்கப்படுகிறார் எனில் சமூகத்தின் கூட்டு மனசாட்சி உயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தின் பால்தான் இரக்கங்கொள்கிறது. பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட நீதியானது இந்திய அரசு, புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களின் மீது படிந்துள்ள ஒரு கறை. பேரறிவாளனை விடுதலை செய்வதன் மூலம் மட்டுமே இந்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய முடியும்.

நான் மீண்டும் உங்களை தஸ்தோவ்ஸ்கியிடம் அழைத்துச்செல்கிறேன். புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ள பேரறிவாளன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். சமூகம் இதை உறுதி செய்யாவிடில் சமூகம் என்று அழைக்கப்படும் உரிமையை அது இழக்கிறது.

நன்றி – தி வயர் இணையதளத்தில் ஜெயராணி அவர்கள் எழுதிய கட்டுரை
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு

இந்த நகரத்தை இடித்து விடுங்கள் – மனுஷ்ய புத்திரன்

ந்த நகரத்தை இடித்துவிடுங்கள்
இந்த நகரத்தின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்குச் செல்ல
எனக்கு மூன்று மணி நேரமாகிறது
எனக்கு அரைமணி நேரத்தில் போயாக வேண்டும்

இந்த நகரத்தின்
அடுக்கு மாடி குடியிருப்புகளை இடித்துவிடுங்கள்
அரசாங்க கட்டிடங்களை இடித்து விடுங்கள்
பிரமாண்டமான மால்களை இடித்துவிடுங்கள்
எங்கும் நிரம்பியிருக்கும் வணிகக் கட்டிடங்களை இடித்து விடுங்கள்
நட்சத்திர விடுதிகள்
ஆடம்பர உணவகங்கள்
எல்லாவற்றையும் இடித்து விடுங்கள்
நான் இந்த நகரத்தை வேகமாக கடப்பதற்கு
அவை தடையாக இருக்கின்றன

எனக்கு இந்த நகரத்தில்
ஒரு வழிச்சாலைகள் போதாது
எட்டுவழிச்சாலைகள் வேண்டும்
நான் வேகமாக வளரவிரும்பும் மனிதன்
எனவே வேகமாகச் செல்ல விரும்புகிறேன்
அதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும்
இடித்துத்தள்ள விரும்புகிறேன்
வேகமாகச் செல்வதற்கு
தடையாக இருக்கும்
மரங்களை எப்படி வெட்டுவீர்களோ
கிணறுகளை எப்படி மூடுவீர்களோ
ஓடைகளில் எப்படி மண்ணை அள்ளிப்போடுவீர்களோ
மலைகளை எப்படி உடைப்பீர்களோ
அதே போல இந்த நகரத்தின் குறுக்கே இருக்கும்
அத்தனை தடைகளையும்
உடைத்தெறியுங்கள்

’வளர்ச்சி’க்காக அழிக்கப்படும் வனங்களும், வயல்களும்

இந்த நகரத்தின்
ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்குச்செல்ல
எனக்கு மூன்றுமணி நேரமாகிறது
நான் அரைமணி நேரத்தில் செல்ல வேண்டும்
எனக்கு பொறுமையில்லை
என்னால் மெதுவாகச் செல்ல முடியாது
நான் வளர்ச்சியின் மனிதன்
நான் சாலையில் வேகமாகப் போனால்தான்
வேகமாக வளர முடியும்

இந்த நகரம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது
சீக்கிரம் எல்லா தடைகளையும்
அகற்றுங்கள்
நம் வனங்களை மழித்ததுபோல
இந்த நகரத்தையும் மழித்து
வெறும் தார்ச்சாலைகளாக்குங்கள்
நான்கு வழிச்சாலை
எட்டு வழிச்சாலை
பதினாறு வழிச்சாலை
நரகத்திற்குப்போக
இருபத்திநான்கு வழிச்சாலை

நன்றி: மனுஷ்ய புத்திரன்

தருமபுரி : மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரத்துக்கும் அனுமதியில்லை !

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தும்வண்ணமும்  வருகிற 20.06.2018 அன்று மாலை 4 மணியளவில் தருமபுரி நகரில் இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள்

இதையொட்டி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் 18.06.2018 அன்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே மோப்பம் பிடித்து வந்த போலீசு, பிரச்சாரத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி வலுக்கட்டாயமாக தோழர்கள் 7 பேரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

பிரச்சாரம் என்பது இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை. தற்போது போலீசைக் கொண்டு கருத்துரிமை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அடிமை எடப்பாடியின் அரசு. ஜனநாயக ஆட்சி என்பது இங்கு இல்லை. சர்வாதிகார ஆட்சியே இங்கு நடக்கிறது. இதற்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 8148573417

தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கி வருகிறது அரசு. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங் குளம், நியமகிரி, போஸ்கோ ஆலை எதிர்ப்புப் போராட்டம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு என தமிழகம் உட்பட நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

போராடும் மக்களை போலீசு – துணை இராணுவப் படை மூலம் ஒடுக்கும் அரசை ஆதரித்து ஊடகங்களும், தனியார்மய ஆதரவு அறிஞர்கள் பெருமக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வெளிநாட்டு என்.ஜி.வோக்கள், கிறித்தவ நிறுவனங்கள், சீனா – ரசிய நாடுகளின் முகவர்கள் இத்தகைய போராட்டங்களை தூண்டி விடுகிறார்களாம். முட்டாள்களாக இருக்கும் மக்கள் இந்த விசமப் பிரச்சாரங்களை நம்புகிறார்களாம். அடுத்து இடதுசாரி தீவிர அமைப்புக்கள், அமைதி வழி போராட்டங்களை மாற்றி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துமாறு தூண்டுகிறார்களாம். கடைசியில் இத்தகைய சமூகவிரோதிகள் கலவரத்தை நடத்துகிறார்களாம்.

இறுதியில் வன்முறையால் மக்கள் கொல்லப்படுவதோடு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறதாம் இப்போராட்டங்கள். இந்தியாவில் தொழில் முதலீடு வருவது நிற்பதோடு, போராட்டங்களால் மூடப்படும் ஆலைகளால் வேலைவாய்ப்பு குறைந்து பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதாம்.

ஒடிசாவின் நியமகிரி முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை இந்த வாதங்களை எங்கும் கேட்கலாம்.

அதிக வேலைவாய்ப்புள்ள விவசாயத்தை அழிக்காதே என்று காவிரிக்காகவும், கதிராமங்கலம் – நெடுவாசலிலும் போராடினால் அது வளர்ச்சிக்கான போராட்டமாக இவர்கள் பார்ப்பதில்லை. குடிநீர் கெட்டுப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று நியமகிரி, தூத்துக்குடியில் போராடினால் அவை சமூகவிரோதமாம். கேன்சர், பெரும் வியாதிகளால் மரிப்பதை எடுத்துச் சொன்னால் மக்கள் முட்டாள்களாம். இந்த விழிப்புணர்வை பரப்பினால் இடதுசாரி அமைப்புகள் சமூகவிரோதிகளாம்.

உண்மையில் மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, கருப்புப் பண மோசடி, பொதுத்துறை வங்கிகளிடம் கடன் மோசடி போன்ற சமூகவிரோதச் செயல்களை கார்ப்பரேட் முதலாளிகளே செய்கிறார்கள். அவர்களிடமிருந்து பெரும் பணத்தை நன்கொடையாக பெறும் பாஜக, காங்கிரசு மற்றும் உள்ளூர் பெரிய கட்சிகள் அந்த முதலாளிகளுக்கு நேரடியாக அடியாள் வேலை பார்க்கின்றன.

இப்படித்தான் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை அரச பயங்கரவாதத்தால் ஒடுக்குகிறார்கள். ஆனால், அந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என தூத்துக்குடி முதல் நியமகிரி வரை மக்கள் வரலாற்றை மாற்றி வருகிறார்கள்.

அந்தப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை தொகுத்துத் தருகிறது இந்தத் தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

தூத்துக்குடி முதல் நியமகிரி வரை : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! – புதிய கலாச்சாரம் ஜுன் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Payumoney மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும்  தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: வினவு செய்தியாளர்களின் நேரடி அனுபவங்கள்!
  • மரணம் துரத்திய அந்த நள்ளிரவில் …
  • நெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி!
  • மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம்!
  • போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு!
  • இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!
  • நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு!
  • கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்!
  • சத்தீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல்!
  • ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி!
  • சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி!
  • தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !

4

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி நகர மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தைச் சமூக விரோதிகளும் தேசவிரோத சக்திகளும் நடத்திய வன்முறை வெறியாட்டம் என அவதூறு செய்துவருகிறது பார்ப்பன பா.ஜ.க. கும்பல். இன்னொருபுறம் தனக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்திற்கும் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்பது போலவும், இந்த ஆலையைத் தொடங்க அனுமதி கொடுத்தது, அவ்வாலைக்கு விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தது உள்ளிட்ட பாவங்களைச் செய்ததெல்லாம் காங்கிரசு-தி.மு.க. கூட்டணிதான் என்றும் பேசிவருகிறது. மோடி அரசிற்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.விற்கும்கூட இதில் கடுகளவும் பங்கு கிடையாதென்று (துக்ளக், 6.6.2018) நியாயம் பேசித் தன்னை யோக்கியனைப் போலக் காட்டிவருகிறது.

அரைகுறை உண்மையை அவிழ்த்துவிட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பிவிடுவது பாசிஸ்டுகள் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் தந்திரம். அதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலும் விதிவிலக்கானதல்ல. ஏதோவொரு சிதிலமடைந்த கட்டிடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த உண்மையைத் திரித்து, அந்தக் கட்டிடம்தான் ராமர் கோவில் எனச் சாதித்தார்கள். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த காங்கிரசின் குற்றத்தைக் காட்டி, தமது வஞ்சகத்தை மறைக்க முயலுகிறார்கள்.

இப்பொழுது ஸ்டெர்லைட் பிரச்சினையில், ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க அனுமதி கொடுத்தது காங்கிரசு அரசுதான் என்ற உண்மையை மட்டுமே ஊதிப் பெருக்கி, தமக்கும் ஸ்டெர்லைட் குழுமத்திற்கும் ஸ்நான பிராப்திகூடக் கிடையாது எனச் சாதிக்க முயலுகிறார்கள்.

ஆனால், உண்மையோ ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நகமும் சதையும் போல நெருக்கம் இருப்பதையும் அந்த உறவு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருவதையும் எடுத்துக் காட்டுகிறது.

ரூ.5000 கோடி மதிப்புள்ள பொதுச்சொத்த வெறும் ரூ. 551 கோடிக்கு விற்ற ’யோக்கியன்’ வாஜ்பாயி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா குழுமத்தின் முதலாளி அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையிலான உறவிற்கு வாஜ்பாயி காலத்திலேயே வலுவான அடிக்கல் நாட்டப்பட்டது. வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. இவ்விற்பனைக்கு எதிராக அவ்வாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், அவ்வாலை அமைந்திருந்த கோர்பா பகுதி பொதுமக்களும் நடத்திய போராட்டங்களை ஒடுக்கியும், வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியும்தான் அவ்வாலையை அடிமாட்டு விலைக்கு வேதாந்தா குழுமத்திற்கு பட்டா எழுதிக் கொடுத்தார் உத்தமர் வாஜ்பாயி.

பால்கோ ஆலையை, இயந்திரங்கள் மற்றும் ஆலை அமைந்திருந்த நிலம் ஆகியவற்றோடு மட்டும் வாஜ்பாயி அரசு தூக்கிக் கொடுக்கவில்லை. ஆலை விற்கப்பட்ட சமயத்தில் அவ்வாலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ரூ. 90 கோடி பெறுமான உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள், ரூ. 50 கோடி பெறுமான கழித்துக் கட்டப்பட்ட தளவாடங்கள், ரூ. 100 கோடி பெறுமான அலுமினிய உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், ரூ. 70 கோடி பெறுமான ஆலை அலுவலகப் பொருட்கள் மற்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுரங்கங்கள், மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் ’ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்ற கதையாகத் தூக்கிக் கொடுத்தது, வாஜ்பாயி அரசு.

இப்படி வாஜ்பாயி போட்ட கோட்டைத் திருவாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலேயே ’ஹைவேயாக’ மாற்ற முயன்றார். ஒரிசா மாநிலம்-நியம்கிரி வனப் பகுதியில் இயங்கிவந்த வேதாந்தா குழுமத்தின் அலுமினிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டபொழுது, அத்தொழிற்சாலையை குஜராத்தில் அமைத்துக் கொள்ளுமாறு அனில் அகர்வாலுக்குத் தூதுவிட்டார் நரேந்திர மோடி.

அந்தச் சமயத்தில் குஜராத் அரசு நிறுவனமான குஜராத் தாதுப்பொருள் வளர்ச்சிக் கழகம் ஆஷாபுரா குழுமம் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து அலுமினிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையை அமைப்பதற்கு ஒப்பந்தமிட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, ஒரிசாவில் மூடவேண்டியிருந்த வேதாந்தா ஆலையை குஜராத்திற்கு மாற்றுவதற்கு ஏற்ப புதிய ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொள்வதற்கும் மோடி அரசு தயாராக இருந்தது (Hindustan Times, Oct.16, 2010). டாடாவின் நானோ ஆலை போன்று அனில் அகர்வாலின் அலுமினியத் தொழிற்சாலை குஜராத்திற்கு இடம் பெயரவில்லை என்றாலும், மோடிக்கும் அனில் அகர்வாலுக்கும் இடையேயான நெருக்கத்திற்கு எந்தவொரு பங்கமும் வந்துவிடவில்லை.

கடந்த 2014, மே மாத இறுதியில் மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே, உலகமே மோடி அரசிடமிருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இளைஞர்கள் மோடி வேலை வாய்ப்புகளை வாரி வழங்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி, மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார், அனில் அகர்வால்.

மோடி பகவானுக்கு, அனில் அகர்வால் என்ற பக்தனின் வரவேற்பு விளம்பரம்

அனில் அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உடனடியாகவே கைம்மாறு செய்யும் காரியத்தில் மோடி இறங்கினார். குறிப்பாக, முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காமல் பல்வேறு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் விட்டுவந்த முதலைக் கண்ணீரைத் துடைக்கும் முனைப்போடு, ஏற்கெனவே இயங்கிவரும் ஆலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுற்றுப்புறச் சூழல் விதிக்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்தது, மோடி அரசு. இந்த விளக்கத்தால் பயன் அடைந்த நிறுவனங்களுள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று.

“சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்று உருவாக்கப்படும் சிறப்பு தொழிற்பூங்காக்களில் புதிதாகத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கோ அல்லது விரிவாக்கம் செய்து கொள்வதற்கோ பகுதி மக்களின் சம்மதத்தைப் பெறத் தேவையில்லை” என்றவாறு 2006-ம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் விதி வரையறுக்கப்பட்டிருந்தது.

காங்கிரசு கூட்டணி ஆட்சியில் இந்த விதி குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, “இந்த விதி உருவாக்கப்படுவதற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தொழிற்பூங்காக்களுக்கும் இந்த விதி பொருந்துமா?” எனக் கேட்கப்பட்டபொழுது, காங்கிரசு கூட்டணி அரசு, “சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்று உருவாக்கப்பட்டுள்ள சிறப்புத் தொழிற்பூங்காக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும்” என மே 16, 2014 அன்று விளக்கமளித்ததோடு, “மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய பிறகுதான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்து, பதவி விலகிச் செல்லும் முன் காங்கிரசு கூட்டணி அரசு அளித்த இந்த விளக்கம் குறித்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கொண்டிருந்த அதிருப்தியைத் துடைத்துப்போடும் வண்ணம், பா.ஜ.க. கூட்டணி அரசு டிசம்பர் 10, 2014 அன்று, “சுற்றுப்புறச் சூழல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தொழில் பூங்காக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கும் 2006 விதி பொருந்தும்” என விளக்கமளித்து, குறிப்பாணையொன்றை வெளியிட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் வயிற்றில் பாலை வார்த்தது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் பா.ஜ.க. கூட்டணி அரசு வெளியிட்ட இந்தக் குறிப்பாணையை டிசம்பர்,2016-இல் ரத்து செய்தது. ஆனாலும், வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்குத் தான் ஏற்கெனவே சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றுவிட்டதாகக் கூறி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த மறுத்தது. இந்த விரிவாக்கத்தைத்தான் தற்பொழுது தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தடை செய்திருக்கிறது.

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போலவே வேதாந்தா குழுமமும், அதன் முதலாளி அனில் அகர்வாலும் மோடிக்கு மிக நெருக்கமானவராகவே இருந்து வருகிறார். குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு மோடி இலண்டனுக்குச் சென்றிருந்த சமயத்தில், அவரது வருகையை வரவேற்கும் விதமாக இலண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் பலவற்றில் முழுப்பக்க விளம்பரங்கள் வாரித் தெளித்திருந்தார், அனில் அகர்வால்.

அப்பொழுது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து-இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்தில் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார்.

இலண்டனில் இந்தச் சந்திப்பு நடந்த சமயத்தில், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுப்படித் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை வாழ்த்தி அனில் அகர்வால் விளம்பரங்களை வாரி இறைத்தது குறித்தோ, தலைமைச் செயல் அதிகாரிகள் சந்திப்பில் அனில் அகர்வால் கலந்துகொண்டது குறித்தோ அலட்டிக் கொள்ளவேயில்லை. “இதெல்லாம் சகஜமப்பா” என கவுண்டமணி கணக்காக நடந்து கொண்டார், மோடி.

மோடி அரசு மூன்றாம் ஆண்டை நிறைவு செய்ததையொட்டி, தனது இணைய பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த அனில் அகர்வால், “மோடியின் மூன்றாண்டு ஆட்சி, மாற்றங்களும் (Modi-fications) பொருளாதார சீர்திருத்தங்களும், இந்தியாவை நவீனப்படுத்துவதையும் (Modernization to Make in India) குறிக்கிறது” எனப் புகழ்ந்து தள்ளினார்.

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலையை ஐ.நா. மன்றம்கூடக் கண்டிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் உலக அளவில் வெளிப்பட்ட பிறகும்கூட, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஒப்புக்குக்கூட வருத்தம் தெரிவிக்காதவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் நரேந்திர மோடி, மற்றொருவர் அனில் அகர்வால். இப்படுகொலையைக் கண்டித்து இலண்டனில் தனது சொகுசு மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாத அனில் அகர்வால், ஜூன் 2018-இல் இலண்டனுக்கு வருகை தரவிருந்த நரேந்திர மோடியை வரவேற்றுத் தனது சுட்டுரை பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், கடந்த நான்காண்டுகளுக்குள் மோடி அரசு ஒரு இலட்சம் இந்திய கிராமங்களுக்கு இணைய தள இணைப்பைக் கொடுத்திருப்பதாகவும், அந்த டிஜிட்டல் இந்தியா சாதனையில் வேதாந்தா நிறுவனங்களுள் ஒன்றான ஸ்டெர்லைட் டெக் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் அச்சுட்டுரையில் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்.

நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மட்டுமல்ல, தூய்மை இந்தியா, கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, உஜாலா ஆகிய திட்டங்களிலும் வேதாந்தா குழுமம் பங்கு பெற்றிருக்கிறது.

வேதாந்தா நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் மரியாதா இயக்கம், மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைந்து செயல்படும் என்றும், வேதாந்தா நிறுவனத்தின் சுரங்க மற்றும் தொழிற்சாலை அலுவலர்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், வேதாந்தாவின் துத்தநாக நிறுவனம் இராசஸ்தான் மாநில பா.ஜ.க. அரசோடு இணைந்து 30,000 கழிப்பறைகளைக் கட்டி வருவதாகவும் அக்.2014-இல் அறிவித்தார், அனில் அகர்வால்.

கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் இலண்டனுக்குச் சென்ற மைய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, கங்கையுடனும் இந்தியாவுடனும் உணர்ச்சிகரமான பிணைப்புகளைக் கொண்டுள்ள பணக்கார இந்தியத் தொழிலதிபர்களைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும் இந்தத் திட்டத்திற்கு (கங்கையைத் தூய்மைப்படுத்துவது) அனில் அகர்வால் உதவ முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கிலாந்து – இந்திய தலைமைச் செயலதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் முன் வரிசையில் இடமிருந்து 2வதாக அமர்ந்திருக்கும் அனில் அகர்வால் மற்றும் நடுநாயகமாக வீற்றிருக்கும் மோடி

இதற்குப் பதில் அளித்த அனில் அகர்வால், நவீன இந்தியாவை, அதாவது வளமான கலாச்சாரத்துடனும் விழுமியங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தொலைநோக்குடையவர் நிதின் கட்காரி. அவரைத் தமது வீட்டிற்கு விருந்தினராக அழைத்திருப்பதாகவும் ’தி டெலிகிராப்’ நாளேட்டிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

நவீன இந்தியா குறித்த அனில் அகர்வாலின் சொற்களைக் கவனித்துப் பாருங்கள். அவர் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு நெருக்கமாக இருப்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் தன்னளவிலேயே கொண்டிருப்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.

பழைய குண்டு பல்புகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் மின்சாரத்தைச் சேமிக்கும் எல்.ஈ.டி. பல்புகளைப் பொருத்தும் உஜாலா திட்டத்திற்கு அனில் அகர்வாலின் பங்களிப்பை வேண்டி விரும்பிக் கேட்டுப் பெற்றது, பா.ஜ.க. அரசு. உஜாலா திட்டத்திற்கு இங்கிலாந்து அரசின் உதவியைப் பெறும் நோக்கில் மே 2017-இல் இலண்டன் சென்ற மத்திய எரிபொருள் துறை அமைச்சர் பியுஷ் கோயல், உஜாலா திட்டம் பிரிட்டனில் பெரும் தொழில், வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், பிரிட்டனிலிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கிளை பரப்பும் வாய்ப்புகளைக் கொண்ட இந்தத் திட்டத்தை முதலில் இலண்டனில் பதிவு செய்யப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திடமிருந்து தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார்.

நரேந்திர மோடி அரசிற்கும் அனில் அகர்வாலுக்கும் இடையே வேர்விட்டு, விஷவிருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி நகர மக்கள் நடத்திய போராட்டத்தை சமூக விரோத, தேச விரோத, அராஜகச் செயலென்று அவதூறு செய்து, போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட சட்டவிரோதமான, அரசு பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக பா.ஜ.க. கும்பல்.

இந்த நெருக்கத்தின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்து வருகிறார், நரேந்திர மோடி.

இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலையைப் பாதுகாப்பதற்கு தூத்துக்குடிக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளை அனுப்பி வைக்கட்டுமா எனக் கேட்டார், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்த நெருக்கத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியிருக்கிறது, பா.ஜ.க. அடிவருடி எடப்பாடி அரசு.

– திப்பு

கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய செய்திகள்:
1. மார்க்ஸ் 200: தூத்துக்குடியில் வர்க்கப் போராட்டம், எஸ்.வி.ராஜதுரை, உயிர் எழுத்து, ஜூன் 2018.
2. How Modi Government Helped Vedanta’s Sterlite Plant Bypass Environmental Norms, Business Standard, May 24, 2018.
3. Serial Offender, Frontline, June 22.

ராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் ! சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு !

பத்திரிகை செய்தி

17-06-2018

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பி இருந்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

ராஜீவ் கொலையில் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறிவிட்டார். அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு எழுதிய ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், இவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். வழக்கு விசாரணையை மேற்கொண்ட கார்த்திகேயனும் கருணை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். எட்டு கோடி தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் ஒருமித்த குரலில் எழுவரின் விடுதலைக்காகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இத்தனை பேரும் 27 ஆண்டுகள் சிறையில் வாடிய தமிழர்களை விடுவிக்கக் கோரும்போது குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரிக்கிறார். அதற்கு முழுவதும் ஆளும் பாஜகவின் தமிழர் மீதான வெஞ்சினமே காரணமாகும்.

இந்த ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் முக்கியமான விஷயமான, ‘பேட்டரி எதற்காக வாங்க சொல்லப்பட்டது என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறிய அவரின் வாக்குமூலத்தை எழுதாமல் விட்டு விட்டேன் என்று அப்போதைய விசாரணை அதிகாரி தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, தன்னுடைய தவறால், பேரறிவாளன் தண்டனை அனுபவிப்பதை வாக்குமூலமாகவும் தந்துவிட்டார். தண்டனைக்கு அடிப்படையே தகர்ந்துவிட்ட இந்த வழக்கில் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்ட பின்னரும் இவர்களை “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்கியவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் சுதந்திரமாக நடமாட விட முடியாது” என எந்த ஒரு நாகரிக அரசும் அறிவிக்காது. ஆனால் ஆளும் மோடி அரசு இதை சொல்கிறதென்றால் அதற்கு தமிழ் மக்கள் மீதான வெறுப்பே காரணமாகும்.

தமிழகத்தை நாசமாக்கும் மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணு உலை போன்ற  அழிவுத் திட்டங்களைத் திணிப்பதும், தமிழர்களை ஒடுக்க நீட், சம்ஸ்கிருத திணிப்பு என எல்லா வகைகளிலும் வஞ்சிக்கும் மத்தியில் ஆளும் பாஜக கும்பல் காவிரியில் வெளிப்படையாகவே தமிழகத்தை வஞ்சித்தது. இந்தியையும் சமஸ்கிருதத்தையும் ஏற்றுக் கொள்ளாத சுயமரியாதை, பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட தமிழ் மீதான, தமிழர் மீதான வெறுப்பினைத்தான்  தற்போது எழுவர் விடுதலையை மறுப்பதன் மூலம் காட்டியுள்ளது.

காந்தி படுகொலையில் தொடர்புடைய கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவை பதினான்கு ஆண்டுகளிலேயே விடுதலை செய்து விட்டனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆறாண்டு தண்டனை பெற்ற  சினிமா நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டார்.  குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலையில் பங்கெடுத்த அம்மாநில அமைச்சர் மாயா கோட்னானி உட்பட பல குற்றவாளிகள் சட்டப்படியே ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழர் எழுவரை, அதுவும் கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் கம்பிகளுக்குப் பின்னே வாடும் இவர்களை விடுவிக்க மறுக்கும் அநீதியை ஏற்க மறுப்போம்.  இவர்களில் மூவருக்கு அரசு தூக்கிலிட தேதி குறித்தபோது தமிழகமே பொங்கி எழுந்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்தியது. அதன் காரணமாகத்தான் மூவரின் தூக்கு ரத்து செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்கும் மேல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைத்தே நாம் ஜல்லிக்கட்டு உரிமையை சட்டமாக்கினோம். அதே பாதையில் பெருந்திரள் போராட்டம் ஒன்றை நடத்தி டில்லியின் தமிழர் மீதான வெறுப்பினால் முடங்கிப் போகும் எழுவர் விடுதலையை வென்றெடுப்போம்

*****

மக்கள் அதிகாரம்  தோழர் ரவியை கடத்தி பொய் வழக்கு போட புதுப்பட்டிணம் போலீசு திட்டம்.

டந்த 15-06-2018 அன்று காலை 9 மணியளவில் புதுப்பட்டிணம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவியின் வீட்டிற்கு 8க்கும் மேற்பட்ட புதுப்பட்டிணம் போலீசும், உளவுப்பிரிவு போலீசும் சென்றுள்ளனர். அவரது வீட்டில் உள்ளோரிடம் ரவி எங்கே எனக் கேட்டு, வந்தால் ஸ்டேசனுக்கு வரச்சொல் என உத்தரவிட்டு மிரட்டிச் சென்றுள்ளனர்.

ஒரு கொலைக்குற்றவாளியைத் தேடுவது போல போலீசும் அரசும் நடந்து கொள்வது, வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் பிடிக்கச் சொன்ன எஸ்.வி. சேகரை பிடிக்க வக்கில்லை. ஆனால், மக்கள் அதிகாரம் தோழர்களை விரட்டிப் பிடிப்பது தொடர்ந்து வருகிறது. கருப்புச் சட்டங்களைக் கொண்டு மக்கள் அதிகாரம் தோழர்களையும் போராடும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது எடப்பாடி அரசு.

இந்த அரசு யாருக்காக இருக்கிறது என்பதை தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்திலும், சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்திலும் மற்றும் பல்வேறு பிரச்சினைகளிலும், மக்கள் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர். அரசின் நரித் தந்திரங்களையும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்போ, மக்களோ அஞ்சப் போவதில்லை.

தகவல்:
மக்கள் அதிகாரம்

NSA அடக்குமுறை : ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை | இரா. முத்தரசன் | பீட்டர் அல்போன்ஸ்

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாளான எடப்பாடி அரசின் போலீசு, போராடும் மக்களையும், உடன் நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களையும் கைது செய்ய நள்ளிரவில் வீடு வீடாகத் தேடி அலைகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதன் பிறகான அடக்குமுறைகளை ஒரு தனி ’மாடலாக’க் கொண்டு, தமிழகம் முழுவதும் போராடும் மக்களை ஒடுக்க எத்தனிக்கிறது அதிகார வர்க்கம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையும், மக்கள் அதிகாரத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் கண்டித்துப் பேசுகிறார்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரசு கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

பாருங்கள், பகிருங்கள்!

தூத்துக்குடி அடக்கு முறை பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்


அரசுகளின் சதிச் செயல் தோழர் முத்தரசன் கண்டனம்

 

 

தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

1

பாடல் வரிகள் :

ழுவோம் எழுவோம் எழுவோம் எழுவோம்
இனி வீழ்ந்தது போதும் மீண்டு எழுவோம்
போராட்டம் என்பது எம் பிறவியிலே பிறந்தது
இனி வீழ்ந்தது போதும் மீண்டும் எழுந்து வா

உன்னாலே முடியாதென்று உலகிலே இல்லை இல்லை
கால்தீண்டும் தூரம்தானே வெற்றியின் எல்லை எல்லை
விதைகூட மண்ணை கிழித்து வெளியே வரும்
புழுகூட தீண்டிவிட்டால் சீண்டி எழும்
உன்னாலேதான் இம்மண்ணிலே மாற்றம் வரும்
துவளாதே சிதறாதே துருவமாய் ஒன்றாய் சேர்
தோல்விகள் என்பதே வெற்றியின் படிக்கல்லே

உன் கண்முன்னே இருப்பது கண்ணாடி துகள்களடா
அடங்கி நடந்தாலே ஆமை பாதம் தூரமடா
குருதியில் உறுதிகொள் நெஞ்சிலே வீரம் கொள்

லாபம் உனக்கு; சாவு எனக்கா
காப்பர் உனக்கு; கேன்சர் எனக்கா
பதவி உனக்கு; பாடை எனக்கா
சிரிப்பு உனக்கு; சோகம் எனக்கா

சிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா
நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா
புதைந்தது உடலல்ல விதையான வீரமடா

துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை | டி.கே.எஸ்.இளங்கோவன் | விடுதலை ராஜேந்திரன் | பேரா வீ.அரசு

க்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறு பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபடுத்தியிருக்கும் எடப்பாடி அரசு, அடுத்த இரைக்காக அலையும் வேட்டை நாயைப் போல, தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர்களைத் தெருத்தெருவாகத் தேடி அலைகிறது.

நக்சலைட்டுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ். அவசியம் தேவை என்று பேட்டியளிக்கிறார் எச்.ராஜா. பயங்கரவாதிகள் குறித்து ஊடகங்களுக்கு பாடம் நடத்துகிறார், பொன்னார். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்று எகிறிக் குதிக்கிறார், தமிழிசை.

சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொதுமக்களைக் கூட கைது செய்து சிறையிலடைத்திருப்பதன் மூலம், பா.ஜ.க. – எடப்பாடி கும்பலின் நோக்கம் என்னவென்று அம்பலமாகியிருக்கிறது. இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன?

அம்பலப்படுத்துகிறார்கள், டி.கே.எஸ். இளங்கோவன், அமைப்புச் செயலாளர், தி.மு.க.; விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பேராசிரியர் வீ.அரசு, சென்னைப் பல்கலை கழகம் (ஓய்வு).

பாருங்கள், பகிருங்கள்!

துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை | டி.கே.எஸ்.இளங்கோவன்

மக்கள் முட்டாள்கள் அல்ல | பேரா வீ.அரசு

ஸ்டெர்லைட்டை மூடச் சொல்வது தேச விரோதமா | விடுதலை ராஜேந்திரன்