மக்கள் அதிகாரக் கழகம்
தொகுதி மறுவரையறை சட்டம் 2026: தென் மாநிலங்களின் உரிமைகளை ஒழித்துக் கட்டும் சட்டத்திற்கு முடிவு கட்டுவோம்!
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு விளக்கி இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் உடனடி கடமை என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
சாதிய வன்மத்தால் பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட போலீசு!
நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | மானாமதுரை | பிரசுரம்
2026 சட்டமன்றத் தேர்தல்:
மானாமதுரை சிப்காடில் உள்ளமருத்துவக் கழிவு சுத்திகரிப்புநச்சு ஆலையை அகற்று!
ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த 16 போலீசு குற்றவாளிகளைக் கைது செய்!
டாஸ்மாக்கை மூடு!
வேண்டும் ஜனநாயகம்
அன்பார்ந்த மானாமதுரை...
யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்து! | தெருமுனைக் கூட்டம்
நாள்: 06.04.2026 திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை
கிருஷ்ணகிரி: அம்பேத்கர் சிலையை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வீராணகுப்பத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு சாதிவெறியர்கள் அவமதித்துள்ளனர். இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறியாட்டம்: உண்மை அறியும் குழு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறி, கொலைவெறியாட்டம் உண்மை அறியும் குழு அறிக்கை
இப்பகுதியில் சாதி பெயரை அழித்ததற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எந்த பகையும் மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இது நேர்மறையான அம்சம். இந்த நேர்மறையான அம்சத்தை ஜனநாயக, புரட்சிகர சக்திகள் வளர்த்தெடுக்க வேண்டும்.
சேலம் தேக்கம்பட்டி: குடிநீர் கேட்டுப் போராடிய அருந்ததியர் மக்கள் மீது வழக்குப் பதிவு!
ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை முற்றிலும் அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மக்களின் அடிப்படை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யாமல் அலட்சியம் செய்யும் அரசு அதிகாரிகளை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.
கோவை: சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! | இ-போஸ்டர்
நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும்
மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்!
சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில்...
‘சுதந்திர இந்தியாவில்’ புறக்கணிக்கப்படும் கிருஷ்ணகிரி மலை கிராமங்கள்!
அடிப்படையான குடிநீர் கூடக் கிடைக்காத நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடிப் பம்புகளின் மூலமே கிராம மக்கள் தங்களுக்கான குடிநீரை பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பம்புகளும் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து போயுள்ளன. ஓர் அடிப் பம்பில் கைப்பிடி கூட இல்லாததால் இரும்பு கம்பியை செருகி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறார்கள்.
நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: நீதி வேண்டி தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!
“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மக்கள் எதிர்ப்பை மீறி கல்லாங்காடு சிப்காட்டிற்கு சாலை அமைக்கும் திட்டம்
மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.
மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!
சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி: ஆதியன் பழங்குடியினருக்கு 25 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்!
"ஆதியன் பழங்குடியினர் (ST) சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராடுகிறோம்" என அம்மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஓசூர் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள்!
ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.















