அரசு வேலைகளும் அரசு துறைகளும் அனைத்தும் தனியாருக்கே! “நம்ம ஸ்கூல் திட்டம்” திராவிட மாடலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்!
கவர்ச்சித் திட்டங்கள் மூலம் தனியாரை கமுக்கமாக நுழைக்கும் வேலையை கனகச்சிதமாக திறம்பட திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
பாஜக மோடி ஆட்சியின் எட்டாண்டுகால கார்ப்பரேட் கரசேவை: வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி!
2009-ஆம் ஆண்டில் தனித்தனியான 11 நிறுவனத்தை மட்டுமே வைத்திருந்த அதானி, கடந்த 10 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதிலும், கடந்த 5 வருடத்தில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கப்பட்டுள்ளன.
உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!
‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது
அரசுக்கு எதிராக மங்கோலிய மக்கள் போராட்டம்!
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.
ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!
சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?
தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.
நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!
இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன.
நிக்கோபார் தீவுகளில் வெட்டப்படும் மரங்களுக்கு ஹரியானாவிலும் மத்திய பிரதேசத்திலும் மரம் நடப் போகிறார்களாம்!
பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!
உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும்.
தோழர்களுக்கு பத்து கேள்விகள்!
எதிர் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஆட்சியில் இருந்தால் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை அமல்படுத்தி மக்களை ஒடுக்குவது - இது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!
பெர்சிவல் மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!
அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.
ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்
முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறி வரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம்தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.
குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!
இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவலநிலை!
எனவே ஏழை எளிய மக்களை கல்வியை விட்டு துரத்தியடிக்கும் ஆளும் வர்க்கங்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், தனி தனியாக போராடி கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
























