இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!
பேராட்டத்தில் பசும்பால் விலையை லிட்டர் ₹42 ஆகவும், எருமைப்பால் விலையை லிட்டர் ₹51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!
ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!
இந்தோனேசிய அரசின் தத்துவமான பஞ்சசீலம் (Pancasila) என்பதற்கு ஏதுவாக இல்லாத சித்தாந்தங்களை, அதாவது மார்க்சியம் கம்யூனிசம் போன்றவற்றை, பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!
எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!
வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும்.
சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!
இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. அதற்கான கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை!
சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!
ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும்.
ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?
உத்தரகாண்ட் மாநில அரசு 2016-இல் ஒரு பிரமாணப்பத்திரம் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது; ரயில்வேக்கு அல்ல என்று கூறியது. ஆனால் தற்போது அது ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறுகிறது.
மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.
மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!
இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் "ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்" என்று முழங்கி வருகிறது.
பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.
“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!
ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.
‘அவுட் சோர்சிங்’ எனும் நவீன கொத்தடிமை முறை!
“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
























