வடகிழக்கு: பழங்குடியினரிடையே திட்டமிட்டு மத முனைவாக்கத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்!
கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல் பழங்குடியின பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது புதிதல்ல. கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!
அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்கள்.
‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.
குழந்தைத் திருமண ஒழிப்பு: சிறுபான்மையினரை ஒடுக்கும் கருவி!
பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.
சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!
சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.
திருவாரூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய படுகொலை! அன்று நடேச. தமிழார்வன்! இன்று வி.சி.க- வின் கவியரசன்!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாதி, மத மோதலை உருவாக்க ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிஸ்டுகள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள் .இதற்கு திருவாரூர் மாவட்ட காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது.
தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!
திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.
பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!
தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா - கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது துருக்கி!
இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!
உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?
ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!
உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும்.
“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!
பிபிசி “இந்தியா: மோடி மீதான கேள்வி” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.
ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?
மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?
கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!
நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை.
























