ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!
நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.
ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை
பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!
"அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை."
முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்!
கவர் வாங்கிக் கொண்டு "கவர்" ஸ்டோரிகள் எழுதுவது முதலாளித்துவ பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக 'இன்னதற்கு இன்ன ரேட்' என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப வருடங்களில் பரவலாகி வருகிறது.
துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்
துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.- ஒரு துனிசிய பதிவர்
பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.
புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் !
புனைவை உண்மையான செய்திகளாக வெளியிடும் இந்து போல் அல்லாமல், இராம்-இராசபக்சே தொலைப்பேசி உரையாடலை புனைவு என்றே அடையாளப்படுத்தி வெளியிடுகிறோம்.
துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!
26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்
பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!
மனித உரிமைப் போராளி மரு. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை! விடுதலை கோரி சென்னையில் சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் (HRPC) 90 பேர் கைது
காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !
இந்த பதிவு வினவை நாடு கடத்த விரும்பி பின்னூட்டமிடும், இந்தூஸ்தான் டைம்சில் யாசின் மாலிக்கை தூக்கில் போடச் சொல்லி சாமியாடும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்
இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ!
போராட்டமும், இழப்பும் அன்றாட நிகழ்வாகிப் போன பாலஸ்தீன குடும்பங்களின் அலறல் நமது இதயத்தை உலுக்குகிறது. படங்களை பாருங்கள், இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!
கோவை என்.டி.சி தேர்தல்: “நக்சலைட்டுகளின்” வெற்றிவிழா பொதுக்கூட்டம்!
கோவையில் ஐம்பதுகளுக்கு பிறகு தொழிற்சங்க தரகர்களையே கண்ட அரசும், முதலாளிகளும் இப்போது முதன்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையை எதிர்கொள்ளுகின்றனர்.
வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!
ஒரு அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்திகளின் உதார்களையெல்லாம் சகிக்கும் 'ஐயோ பாவம்' நிலையில் தமிழகம் இருக்கிறது
பனமரத்துல வவ்வாலு ; டாஸ்மாக் இல்லேன்னா திவாலு !!
குவாட்டர் வாரியம் டாஸ்மாக்கின் மகத்துவங்கள் : பொது மக்கள் நலன் கருதி, தமிழக அரசுக்காக வினவு வெளியிடும் இலவச விளம்பரம்.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
சுவாமி அசீமானந்தா எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து காவி பயங்கரவாதிகளை அம்மணமாய் நிறுத்தியுள்ளது.


















