மணப்பாறை – தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தர்ணா போராட்டம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 15-03-2017 அன்று காலை 10-00 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டது என வாய்மொழி உத்தரவு மூலம் காவல் துறை தடுத்தனர். இதனால் தடையை மீறி ஆர்பாட்டமாக மாற்றி நடப்பட்டது.
ஷாப்பிங் மால்களுக்காக தரைக்கடை வணிகர்களை அழிக்கும் வேலூர் மாநகராட்சி
சாதாரண வியாபாரிகளுக்கு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன் சாலைகளை மறித்து நிற்கும் வாகனங்களை தடுக்காமல் அவற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி !
சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகளின் ''பெட்ரோல் டெக்'' மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். எனக் கூவிக் கூவி அழைக்கிறார்.
மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !
இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், போலீசு – நீதிமன்றம் – முதலாளிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்கத் தீவிரமாக முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது.
ஹைட்ரோ கார்பன் சிறப்புக் கட்டுரை : மோடி ஏவிவிடும் பேரழிவு !
நீரும் சூழலும் நஞ்சாவது குறித்து எதிர்ப்புகள் இருந்த போதிலும், தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அந்த எதிர்ப்புகளை எரிவாயுக் கம்பெனிகள் முடக்கி விடுகின்றன.
சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு...
கம்பெனிய எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி, வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியில் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர்.
மாருதி தொழிலாளிகளை பாதுகாப்போம் ! களச்செய்திகள்
துப்பாக்கி சூட்டுக்கு மீனவர் பலி, காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி, கொக்கே கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி ! தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு இந்தியாவே பலி !
நெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி
நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் எழுப்பும் கேள்வி, அறிவியலின் நம்பகத்தன்மையைப் பற்றியதல்ல. அறிவியலாளர்கள், வல்லுநர்கள், பொறியாளர்கள் எனப்படுவோரின் நம்பகத்தன்மை பற்றியது. சுருங்கக் கூறின் இந்த அரசமைப்பின் நம்பகத்தன்மை பற்றியது.
தாவுத் இப்ராகிமை தப்பவிட்ட மோடி அரசு !
கனானியுடனான தாவூத் இப்ராகிம் தொடர்பு குறித்த தகவல்கள், இந்த ஆண்டு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டிருந்தன. காரணம் இருவருக்குமிடையிலான உறவை நிறுவும் ஆதாரங்களை அமெரிக்க அரசால் இந்தியாவிடமிருந்து வாங்க முடியவில்லை
அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் – பாகம் 2
அருணாச்சல பிரதேசத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள், அவற்றின் பின்விளைவுகள் மற்றும் அதனால் ஆதாயம் அடைந்த தரப்பு யார் என அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் சித்திரம் என்ன?
மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !
முதலாளித்துவ ஆதரவு பொருளாதார நிபுணர்கள் பலரும் சென்ற காலாண்டின் வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில் நிர்வாண பேரரசர் முழு மேக்கப்பில் ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள் மோடியின் அரசவைக் கோமாளிகள்.
நெடுவாசல் விவசாயிகளை ஆதரித்து சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் போராட்டம் !
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 07-03.2017 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரி (சென்னை ஓவியக் கல்லூரி) மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
புற்று நோயாளிகளைக் கொல்லும் இங்கிலாந்தின் மருந்து நிறுவனங்கள்
இங்கிலாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை 100 இலிருந்து 1000 விழுக்காடு வரை எகிறிவிட்டதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.
நெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !
கார்ப்பரேட் முதலாளிகளில் 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி.
அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் – பாகம் 1
ஒருபுறம் பரிவார அமைப்புகளின் வலைப்பின்னல் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் பாரதிய ஜனதாவைக் களமிறக்கி அதற்குத் தெரிந்த அரசியல் தரகு வேலைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்து பாசிச அரசியலின் மிக நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு சிறிய அத்தியாயம் தான் கலிகோ புல்.

























