பணம் மதிப்பு நீக்கமா ? சட்டபூர்வக் கொள்ளையா ? ஐ.ஐ.டியில் APSC பிரச்சாரம்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பறி போகிறது சேலம் உருக்காலை ! – ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் !
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க முனைகின்ற அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக 22-12-2016 மாலை 5 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பு.ஜ.தொ.மு- சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் –...
மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது! தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.
மோடி வித்தை : விவசாயிகள் தலையில் இறங்கிய இரட்டை இடி !
ஆடிப் பட்டத்தில் விளைந்த தானியங்களை விற்கவும் முடியாமல், தை பட்ட விதைப்பைத் தொடங்குவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாமல் செயற்கையான நெருக்கடிக்குள் விவசாயிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !
சிறு தொழில், சிறு வணிகத்தை நவீனப்படுத்துவது என்ற போர்வையில் அவர்கள் மீதான வரி விதிப்புகளை விரிவாக்கவும் அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது, மோடி அரசு.
தோழர் கோட்டை நினைவேந்தல் பொதுக்கூட்டம்
வ.உ.சி மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் பிள்ளைகளை பார்த்து உங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே என்று கவலைப்படவில்லை. "இந்த அடிமை இந்தியாவில் உங்களை விட்டு விட்டு சாகப்போகிறேனே" என்றுதான் கவலைப்பட்டார், இன்று இந்தியாவை காப்பாற்ற ஒரே வழி வர்க்க போராட்டம் தான்.
மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?
வருமான வரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மோடி அரசு கருப்புப் பணக் கும்பலிடம் சரணடைந்துவிட்டதைக் காட்டுகிறது.
சேலம் உருக்காலையை பறிக்கும் மோடி அரசு ! ஓசூர் ஆர்ப்பாட்டம்
உருக்காலை தனியார்மயம் என்பது ஏதோ சேலத்து மக்களின் பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உழைத்து வாழும் கோடானக் கோடி மக்களுக்கும் இடையிலான பிரச்சனை!
மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !
பணமற்ற பொருளாதாரம் கருப்புப் பணத்தை, ஊழலை ஒழிக்காது. மாறாக, பொதுமக்களை, சிறு வணிகர்களைப் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாப வேட்டைக்கான தீனியாக மாற்றும்.
என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !
ஒட்டுமொத்த விவசாயமே கழுத்தறுபட்ட கோழியைப் போல் துடித்துக் கொண்டிருக்கும் போது பாரம்பரிய விவசாய முறைகள் மட்டும் விவசாயிகளைக் காக்குமா?
கழிப்பறைய கட்டாம கையெழுத்து எதுக்கு ஆபிசர் ?
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லை. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.
சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
ஒரு பொதுத்துறை நிறுவனம்; ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தில் நிற்கும் நிறுவனம்; மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையில் உயர்ந்த நிறுவனம்.
கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ? கொதித்தெழு – போராடு !
கத்தை கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவை அன்றாடம் செய்தி தாள்களில் வந்து சந்தி சிரிக்கிறது. இதனை மாற்றி தருவதற்கு பல்வேறு ஏஜெண்டுகள் உள்ளனர். இதில் வங்கிகள் கருப்பு பண முதலைகளின் புரோக்கர்களாகவே மாறியுள்ளது.
ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!
ஸ்விஸ் வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள்.
நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.

























