புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.
பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழகம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஆண்டுக்கு ₹20,000 வசூலிக்கிறது. அந்தப் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது? கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. எவ்வித அடிப்படை கட்டமைப்பும் முறையாக இல்லை.
மதுரை: தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரம்! | தோழர் தமிழ்தாசன்
https://youtu.be/jlvGSUaWDDY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
குருதி விதைகள்!
ஈராயிரம் ஆண்டுகள்
பழமையான அந்தக்
கொல்லர் பட்டறையில்
விடிய விடியத் தயாராகின்றன
பட்டாக்கத்திகள்!
இரும்பை உருக்க,
மனுவின் சூழ்ச்சிகரச் சூட்சுமங்களால்,
ஓமகுண்டத்தில்
இரவும் பகலும்
தகதகவென எரிந்து கொண்டிருக்கிறது
சாதியத் தீ!
வேதங்களின்
இரைச்சல்களுக்கு நடுவில்,
சாதியத் தீயில் இழைக்கப்பட்டு,
காவிக் கைப்பிடியுடனும்
ஸ்வஸ்திக் முத்திரையுடனும்,
சுடச்சுடத் தயாராகும்
பட்டாக்கத்திகள் யாவும்
பகிரப்படுகின்றன
சாதிவெறி மூடர்களுக்கு,
காதல் மலர்களைக்
கொய்திட…
கொய்யப்பட்ட பூக்களிலிருந்து
தேனுக்குப் பதிலாய்
வரலாறு நெடுகிலும் வழிந்தோடுகிறது
செங்குருதியாய் —
காதல்!
எனினும்,
பட்டாக்கத்திகளில் படிந்து படிந்து
துருவேறிய,
பல நூறு உயிர்களின்
குருதிப் படிமங்களிலிருந்து,
ஈராயிரம் ஆண்டுகளாய்
அடங்கா அன்பின்
தீபம் ஏந்தி,
தொடர்ந்து முளைத்துக்கொண்டே
இருக்கின்றன
காதலின் விதைகள்!
இஸ்க்ரா
சமூக வலைத்தளங்களில்...
ஒன்றிய மாநில அரசுகளிடம் நிதியைக் கோரி பெறாமல் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து நெருக்கடியினை தீர்க்க முயல்வது என்பது ஏழை எளிய மாணவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலாகும். இது அவர்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகும்.
பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்களை நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்கும் நோக்கத்தில் இச்சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் ஆட்சியில் ஐம்பெரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு இவ்வெளியீடு உதவியாக இருக்கும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வீராணகுப்பத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு சாதிவெறியர்கள் அவமதித்துள்ளனர். இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கரை அவமதித்த சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்பகுதியில் சாதி பெயரை அழித்ததற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். எந்த பகையும் மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இது நேர்மறையான அம்சம். இந்த நேர்மறையான அம்சத்தை ஜனநாயக, புரட்சிகர சக்திகள் வளர்த்தெடுக்க வேண்டும்.
மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் தலித் அமைப்புகளும் லிங்காயத்து அமைப்புகளும் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மான்யா சட்டம் என்ற பெயரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்துதான் கர்நாடக காங்கிரசு அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
புதுக்காலனி பகுதியில் சுமார் பத்து அடி இடைவெளியில் பட்டியல் சமூக மக்களுக்கு என்று தனியொரு அங்கன்வாடி மையமும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கென தனி அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளன. அரசு நடத்தும் அங்கன்வாடியில் இவ்வளவு அப்பட்டமாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.
எத்தனை காதல்களோ... | பாடல் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/BAXmexmsfQw
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.
நீ தான் பகத் சிங் | பாடல் | மக்கள் அதிகாரம் | மீள்பதிவு
https://youtu.be/9E4bdPw_2jM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!

























