மீறிவந்தால் நிம்மதியாக செல்லமுடியாது | கொலைகாரன் அகர்வால் | மருது
ஸ்டெர்லைட் அகர்வாலை அனுமதித்தால் மக்கள் திருப்பி அனுப்புவார்கள்! | தோழர் புவன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மீறிவந்தால் நிம்மதியாக செல்லமுடியாது | கொலைகாரன் அகர்வால் | மருது
ஸ்டெர்லைட் அகர்வாலை அனுமதித்தால் மக்கள் திருப்பி அனுப்புவார்கள்! | தோழர் புவன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தூத்துக்குடி மக்களை படுகொலை குற்றவாளி ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சென்னை வருகையைக் கண்டித்து மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், எஸ்.டி.பி.ஐ கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழர் விடுதலை கழகம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் இணைந்து கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி
அனில் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது! | வெற்றிச்செல்வன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அண்மையில் 2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720/720-க்கு பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருந்தார். அம்மாணவனின் வெற்றியை “ஆளப்போறான் தமிழன்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டாடியது தமிழ் முரசு நாளிதழ். “நீட் தேர்வில் முதலிடம் பிடித்து பிரபஞ்சத்தை திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டு மாணவன் பிரபஞ்சன்” என்பது போன்ற இடுகைகளையும் பெருமிதத்துடன் சமூக ஊடகங்களில் பலர் பகிர்வதைப் பார்க்க முடிந்தது.
பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்மாணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார். மேலும், “மருத்துவப் படிப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய தி.மு.க.விற்கு நீட் முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நீட் தேர்வை எதிர்க்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்கூட தங்களது அறிக்கைகளில் பிரபஞ்சனை பாராட்டிவிட்டுத்தான் நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி பேசியுள்ளனர். இது நம்மையும் அறியாமல் பாசிசக் கும்பல் தோற்றுவிக்கும் மாயையில் நீட் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதாகவே அமைந்துள்ளது.
பிரஞ்சனை வாழ்த்துவதும் அனிதாவை தூற்றுவதும் ஒன்று!
நீட் தேர்விற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று பலரும் பிரபஞ்சனைப் பாராட்டுகிறார்கள். அம்மாணவனைப் பாராட்டுவது அவர்களது தனியுரிமை. ஆனால், பிரபஞ்சனைப் பாராட்டுவதன் மூலம் “நீட் தேர்வையும் தாண்டி தமிழனால் சாதிக்க முடியும்” அல்லது “மருத்துவம் படிப்பதற்கு நீட் ஒரு தடையில்லை” என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது. இத்தகைய பொதுக்கருத்தை திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புணர்வை நீர்த்துப் போகச் செய்கிறது பா.ஜ.க. கும்பல். இவற்றுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
அனிதா உள்ளிட்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் மேல். இவ்வாறு தங்களது மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசம் கொள்வதைவிட, இரங்கல் தெரிவிப்பதும் நம்மை நாமே தேற்றிக்கொள்வதும் மட்டுமே நடந்துவருவது அவலமானது.
படிக்க: ‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?
இந்த பிரபஞ்சன் யார்? விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மேல ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன். தாய், தந்தை இருவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். 10ஆம் வகுப்பு வரை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்துவிட்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர். மேலும், அதே நிறுவனத்தின் துணை நிறுவனமான “வேலம்மாள் நெக்சஸ்” என்ற நீட் மற்றும் ஐ.ஐ.டி. பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.
நீட் தேர்வில் தான் வெற்றி பெற்றது குறித்து ஊடகங்களுக்கு பிரபஞ்சன் கொடுத்த பேட்டியில், “நீட் தேர்வைப் போன்ற கிராண்ட் டெஸ்ட் என்ற தேர்வை 50-க்கும் மேற்பட்ட முறை எழுதியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் எவ்வாறு கேள்வி கேட்பார்கள், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றதோடு, நீட் தேர்வுக்கான பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படித்திருக்கிறார். இதுவே பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பெற முடிந்ததற்கு காரணம்.
பிரபஞ்சன் மட்டுமல்ல, நீட் தேர்ச்சியில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்களைப் பெற்றதாகக் கூறப்படும் தமிழ்நாட்டு மாணவர்களான கவுஸ்டவ் பவுரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகியோரும் பிரபஞ்சனைப் போல தனியார் பயிற்சி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் பயிற்சிப் பெற்றவர்கள்தான். ஆகவே நீட் என்பது லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வாய்ப்பிருக்கிற மாணவர்களுக்கு மட்டுமே ‘வரப்பிரசாதம்’ என்பதே உண்மை. அதனால்தான் பிரபஞ்சன் “நீட் மிகவும் நல்ல தேர்வு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் அவசியம்” என்று பேட்டி கொடுக்கிறார்.
12ஆம் வகுப்பில் 1176\1200 எடுத்தபோதும், பிரபஞ்சன் போன்ற மாணவர்களுக்கு இருக்கும் “தகுதி” – அதாவது அரசு வேலைசெய்யும் பெற்றோர், சி.பி.எஸ்.சி.யில் படிக்கவும் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து நீட் பயிற்சி பெற குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இல்லாத காரணத்தால்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
இத்தகைய ‘தகுதி’யை முன்வைக்கும் நீட் தேர்வை நாம் நியாயப்படுத்துகிறோமா. பிரபஞ்சனுக்கு வாழ்த்துச் சொல்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்கிறார்கள்!
படிக்க: நீட் என்னும் அயோக்கியத்தனம்
இன்னும் சொல்லப்போனால், லட்சக்கணக்கான அனிதாக்களின் மருத்துக்கல்வி கனவை பறித்தெடுப்பதன் மூலம்தான் பிரபஞ்சன்கள் முதலிடம் பெறுகிறார்கள். இது தனிப்பட்ட ஒரு மாணவன் மீது காழ்ப்புகொண்டு முன்வைக்கும் வாதமல்ல; ஒரு சமூகப் பிரச்சினை! நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாருக்கானது என்பது பற்றிய பிரச்சினை.
பொத்தாம் பொதுவாக இது தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு எதிரானது என்பதல்ல பிரச்சினை. சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையை நீட் தேர்வு பறித்துள்ளது என்பதுதான் பிரச்சினை. ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் முடிவுகளும் இதை நமக்கு துலக்கமாகக் காட்டுகின்றன.
நீட் முன்வைக்கும் ‘தகுதி’: மீண்டும் அம்பலமானது!
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கின்ற அரசுப் பள்ளி மாணவர்களது நீட் தேர்வு பங்கேற்பும், தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய 12,997 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 3,982 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுகூட தமிழ்நாடு அரசு வழங்கிவரும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு கிடைத்த பலனாகும். இந்த தேர்ச்சியும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில், 12,840 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 4,447 மாணவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இதிலும்கூட வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடுவதில்லை. அரசுக் கல்லூரிகள் கிடைக்கப்பெறாத பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தங்களது கனவுகளை தலைமுழுகுகின்றனர்.
பின், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் முன்னேறிவருவது யார்? இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த 39 மாணவர்களிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஆய்வானது இந்த கேள்விக்கு பதில் வழங்குகிறது.
இந்த ஆய்வானாது நீட் தேர்வு பிரபஞ்சன் போன்ற மேட்டுக்குடி வகையறாக்களுக்கானதுதான் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த ஆய்வின்படி, பிரபஞ்சனையும் சேர்த்து மொத்தம் 29 மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மேலும், 39 மாணவர்களில் 38 மாணவர்கள் நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஒருவர் தனியாகப் பயிற்சி பெறவில்லையென்றாலும் டெல்லியின் புகழ்பெற்ற தனியார் பள்ளியொன்றில் படித்தவர்.
இந்த 39 மாணவர்களும், டெல்லி, புனே, சென்னை, கொல்கத்தா, நாக்பூர், கோட்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற பெரும் நகரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள். பணக்காரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். சாதிரீதியாகவும் இவர்களில் 29 மாணவர்கள் பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள், 8 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், 2 மாணவர்கள் மட்டுமே பட்டியலின வகுப்பையும் சார்ந்தவர்கள்.
நீட் பறிப்பது மருத்துவக் கல்வியை மட்டுமல்ல!
எல்லாவற்றையும் தாண்டி நீட் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாப்பது தொடர்பானது, மக்கள் நலன் மீது அக்கறைகொண்ட மருத்துவர்களை உருவாக்குவது தொடர்பானது.
இன்று நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டதாக தமிழ்நாடு விளங்குவதற்கும், சமூக ரீதியாக பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொண்டுபோய் சேர்ந்த தமிழ்நாட்டின் மக்கள் நல அரசுக் கொள்கைக்கும் தொடர்பிருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவக் கல்வியை தேர்வுசெய்த கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உழைப்பினால்தான் இன்று தமிழ்நாட்டில் பெரும்பான்மை கிராமப்புறங்களிலும் ஆரம்ப சுகாதார சேவை கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா? தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு செங்கலை நகர்த்தும் வகையிலாவது இவர்களின் செயல்பாடு இருக்குமா? நிச்சயமாக இருக்கப்போவதில்லை.
நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களின் கொள்ளைக்கானது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என்ற கொள்கையை கைவிட்டுவிட்டு 90களுக்கு பின்பு தனியார்மய – தாராளமயக் கொள்கையை பின்பற்றத் தொடங்கியுள்ள இந்திய அரசு, அரசு மருத்துவக் கட்டமைப்பை ஒழித்துக்கட்ட மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒருபகுதிதான் நீட் தேர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நீட் தேர்வு என்பதை தவிர்க்க முடியாது, அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரே தீர்வு என்பது இன்று ஏறத்தாழ அனைத்து நடுத்தர வர்க்கப் பெற்றோர்களது கருத்தாகவும் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள்கூட, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘வேறு வழியில்லை’ என்பதுதான் அவர்களது கருத்தாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டமும் முடிவில்லாத தொடர்கதையாகச் சென்றுகொண்டிருக்கிறது. 2017இல் அனிதா மரணத்தை ஒட்டி நடைபெற்ற மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைப் போல, மீண்டும் ஒரு மாணவர் எழுச்சி திட்டமிட்டு கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த கையறுநிலையை முடிவுக்கு கொண்டுவரும்.
![]()
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்
”மணிப்பூரில் மே 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தக் கலவரம் தவிர்த்திருக்கப்படக்கூடியது. அரசு உடந்தையாக இருப்பதால்தான் இத்தனை நாட்களாகத் தொடர்கிறது” என்று மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) கூறியுள்ளார். மணிப்பூர் பிரச்சினை குறித்து இந்தியா டுடே பத்திரிகையில் எழுதியுள்ள அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.
“முற்றிலும் இன-வகுப்புவாத கலவரமாகத் தொடங்கிய மணிப்பூர் வன்முறையை ’நார்கோ பயங்கரவாதிகளுக்கு’ (போதைப்பொருள் கும்பல்களுக்கு) எதிரான அரசின் போராக’ சித்தரிக்க முதல்வர் முயற்சி செய்தார். இதன்மூலம் இந்தக் கலவரத்துக்கு அரசும் உடந்தையாக இருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது” என்று ஹாவோகிப் தனது இந்தியா டுடே கட்டுரையில் எழுதியுள்ளார்.
”இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரத்தில் உள்ள குக்கி – ஜோ குடியிருப்புகளைத் தாக்கி எரிப்பதில் தீவிரமாகச் செயல்படும் மைதேயி வன்முறை குழுக்களுக்கு உதவுவதற்காக அரசுப் படைகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தவே ’நார்கோ பயங்கரவாதிகள்’ கதையாடல் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று பாவோலியன்லால் ஹாக்கிப் எழுதியுள்ளார்.
”இந்த இன வன்முறை, பழங்குடி குக்கி – சோ மக்களால் இத்தகைய கடுமையான அநீதிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராகக் கருதப்படுகிறது; அதே நேரத்தில் மைதேயி பிரிவினர் இதைப் பழங்குடி நிலத்தை உரிமை கோருவதற்கான போராகப் பார்க்கிறார்கள்” என்று ஹவோகிப் மேலும் கூறியுள்ளார்.
படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!
“மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இந்தக் குழுக்கள் குக்கி இன மக்களைத் துடைத்தெறிவதற்காகச் செயல்படும் குழுக்கள். ஒரு பக்கச்சார்பான அரசாங்கம் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும். மணிப்பூரில் இதுபோன்ற பாரபட்சம் எப்போதும் ஓரளவு இருந்தபோதிலும், தற்போதைய முதல்வரின் கீழ் அது அதிகரித்தது” என்றும் ஹாக்கிப் எழுதியுள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாதம் ஹாக்கிப் உள்ளிட்ட மணிப்பூரின் 10 பழங்குடி எம்.எல்.ஏ-கள் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதினர். கடிதம் எழுதிய 10 பேரில் 7 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். அதில் அவர்கள், பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுவதாகவும், ஆளும் மாநில பா.ஜ.க அரசாங்கத்தால் மறைமுகமாக ஆதரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் குக்கி மக்கள் பெரும்பான்மை வகிக்கும் மாவட்டங்களுக்குத் தனி நிர்வாகத்திற்கான உரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தனர். அக்கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பிரேன் சிங், ”மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!
நார்கோ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளதாகக் கூறும் முதல்வர் பிரேன் சிங்கின் யோக்கியதையை முன்னாள் மணிப்பூர் போலீசு அதிகாரியான தௌனோஜம் பிருந்தாவின் (Thounaojam Brinda) நீதிமன்ற ஆவணம் அம்பலப்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டிருந்த போதைப்பொருள் கும்பலின் தலைவரைக் (drug lord) காவலில் இருந்து விடுவிக்க பிரேன் சிங்கிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் அந்த ஆவணத்தில் கூறியிருந்தார். மேலும், பிரேன் சிங் அரசு தனக்கு வழங்கிய வீரதீர செயலுக்கான மாநில போலீஸ் பதக்கத்தை அவர் திருப்பி அளித்துவிட்டார்.
ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது. இதற்கான கருவியாக குக்கி மற்றும் மைதேயி மக்களுக்கு இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டது. மேலும், குக்கி மக்களைக் கொன்று குவிக்கும் மைதேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்டவை. இதன்மூலம், மணிப்பூர் கலவரம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலால்தான் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.
மணிப்பூரில் ஆட்சி புரியும் பாசிச பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே கலவரத்திற்கு பா.ஜ.க தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இனிமேலும் இந்த காவி கும்பலால் தனது கைகளில் இரத்தம் படிந்திருப்பதை மறைக்க முடியாது.
![]()
பொம்மி
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
பற்றி ஏரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! என்ற தலைப்பில் மெய்தி இன வெறியர்களால் குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருவாரூர் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் முரளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட மக்கள் அதிகாரம், இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், SDPI, மே 17 இயக்கம், M.C.ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்ட உரையாற்றினார். 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இறுதியாக, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரத்தன் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத் அவர்கள் கண்டனம் உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் மணிப்பூர் நிரூபிக்கிறது என்றார்.
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க போராடுவோம்!
தகவல்:
மக்கள் அதிகாரம், திருவாரூர் மாவட்டம்
000
பற்றி எரியும் மணிப்பூர்; பற்றவைத்தது காவி;
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தடை செய்! |கோவையில் ஆர்ப்பாட்டம்

பாதிக்கபட்ட மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக கோவை மக்களிடம் பிரச்சாரம் செய்து, மக்களுடன் இணைந்து கண்டனம் தெரிவிக்கபட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை- 94889 02202
000
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | விருதாச்சலத்தில் ஆர்ப்பாட்டம்
விருதாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக (21.07.2023) மாலை 5:30 மணி அளவில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மோடி அரசை பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் தோழர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மோகன்ராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ராஜேந்திரன், சி.பி.ஐ.எம்.எல் மற்றும் தோழர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை என்று ஆர்ப்பாட்டம் முழங்கியது.
தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம்.
பற்றி எரிகிறது மணிப்பூர் – கவர்மண்ட் வேடிக்கை பாக்குது! – கொந்தளிக்கும் மக்கள்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இந்தியாவையே உலுக்கிய கொடூரச் செயல்தான் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த மனித தன்மையற்ற கொடூர சம்பவம். இந்த சம்பவமானது கடந்த மே நான்காம் தேதி மணிப்பூர் கலவரம் தொடங்கிய நாளன்று நிகழ்ந்தேறியது. தற்போது இந்த கொடூர சம்பவமானது 77 நாட்கள் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரச் செயலை நிகழ்த்திய மெய்தி இனவெறியர்கள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கைக்கூலிகள்.

இக்கொடூர சம்பவத்திற்கு மணிப்பூர் மாநில போலீசு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது. மூன்று மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் கலவரம் குறித்து பாசிஸ்ட் மோடி வாயைத் திறக்கவில்லை. 77 நாட்கள் பிறகு வெளிவந்த வீடியோவை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல ஜனநாயக சக்திகளும் பல கல்லூரி மாணவர்களும் போராட்ட தொடங்கியுள்ளனர்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் வன்முறைக்குக் காரணமான பாசிச மோடி அரசை எதிர்த்து இன்று (25.07.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாசிச மோடி அரசைப் பதவி விலகுமாறு முழக்கமிட்டனர்.
தகவல்:
வினவு களச்செய்தியாளர்
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | மக்கள் நேர்காணல்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் பெங்களூரு – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், கடந்த 13 ஆண்டுகளாக சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் நகர் எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தது.
இந்த சுங்கச்சாவடி வந்ததிலிருந்து வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது மாதாந்திர அனுமதி சீட்டு (பாஸ்) எடுக்க வேண்டும் என தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பொதுமக்கள் கட்டணம் செலுத்த மறுத்தால் திமிர்த்தனமாகவும், அடாவடியாகவும் நடந்து கொள்கின்றனர்.
மேலும் வேலையாட்கள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து ரவுடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சுங்கச்சாவடியை வேறு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்தது. இந்த நிறுவனம் வந்ததிலிருந்து இந்த சுங்கச்சாவடி பிரச்சனை மீண்டும் அதிகமாகி உள்ளது. இதனைக் கண்டித்து 22/11/2022 அன்று திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் முழு கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என நிறுவனம் ஒப்புக்கொண்டது.
படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை
சுங்கச்சாவடியில் இதற்கு பிறகு கடந்த சில மாதங்களாக மீண்டும் இப்பிரச்சனை தலைதூக்கியது. மீண்டும் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனைக் கண்டித்து சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் வருகின்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர்.
அது தொடர்பாக இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு வார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் மு. சாந்தி தலைமை வகித்தார். சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கோட்டாட்சியர் ஆதார் அட்டையை காட்டி சுங்க கட்டணம் இல்லாமல் உள்ளூர் வாகனங்கள் செல்லலாம் என தெரிவித்தார். இது தவறும் பட்சத்தில் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிப்போம், ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றுவோம் என்றனர் பொதுமக்கள்.
இந்த கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதே காரணம் எனக் கூறி வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்தனர். மேலும் பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டு சுங்கச்சாவடி நிர்வாகம் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வராமல் இருந்ததால், பேச்சுவார்த்தை நிறைவடைந்து வெளியே வந்து வாய்மொழியாக அறிவித்து விட்டு வெளியேற முயற்சித்தனர்.
வாய்வழியாக வந்த எந்த உத்தரவையும் இந்த சுங்கச்சாவடி நிர்வாகம் மதித்ததேயில்லை. எனவே வெளியே வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாகராஜனின் காரை போராட்டக் குழுவினர் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து திட்ட இயக்குனர் மீண்டும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குள் சென்றனர் இதனைத் தொடர்ந்து காரை சிறைப் பிடித்தவர்களிடம் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கார் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து திட்ட இயக்குனர் மற்றும் சுங்கச்சாவடி மேலாளர் புறப்பட்டு சென்றனர்.
படிக்க: பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியில் இருந்து தொடர் முழக்கம் போடப்பட்டது. இது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும், அதிகாரிகளை கோரிக்கைக்கு பணிய வைக்கும் வகையில் அமைந்தது. இதில் எஸ் கே எம், சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் நாகராஜ் மற்றும் தோழர் பரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாலைகளை தனியார்மயப்படுத்தி நாடெங்கும் உள்ள சாலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் அன்றாடம் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். அடிக்கடி வரும் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டங்களால் அவ்வப்போது தீர்வுகள் கிடைத்தாலும், சாலைகளை தனியாரிடமிருந்து அரசு கட்டுப்பாட்டிற்கு வந்தாலொழிய இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

24.07.2023
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட
24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
மக்கள் அதிகாரம் கண்டனம்
2019-ல் கும்பகோணம் மாவட்டம் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்று கூறி நேற்றைய தினம் தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் – இன் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது .தேசிய புலனாய்வு முகமை நடத்திய இந்தச் சோதனையின் போது பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் – க்கு எதிராக செயல்படுபவரை அச்சுறுத்துவதற்காக மட்டுமே.
அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட துறைகள் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே இயங்குகின்றன. 2019 இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்பொழுது 24 இடங்களில் சோதனை செய்வது என்பது தேசிய புலனாய்வு முகமையின் அடுத்த கட்ட சதித்திட்டமாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
மேலும் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

23.07.2023
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றும் சுற்றறிக்கையை
சென்னை உயர்நீதிமன்றம் உடனே திரும்ப பெற வேண்டும்!
பத்திரிகை செய்தி
ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூடாது என்பதற்காகவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் புகார் அளிக்கவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது அநீதியானதாகும். ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல நீதிமன்றங்களிலும் சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது என்பது உள்நோக்கம் உடையதாகும். ஆகவே இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
மணிப்பூர் அன்று ஜூலை 15, 2004 இராணுவத்திற்கு எதிரான நிர்வாண போராட்டம்
இன்று ஆர்.எஸ்.எஸ் – மெய்தி இன வெறியர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம்!

புதிய ஜனநாயகம்
23.07.2023
குஷ்பு, வானதி எங்க போனீங்க | தோழர் அமிர்தா
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மணிப்பூர் குக்கி இன மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்தனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சினை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்று பிரதமருக்கும் நன்கு தெரியும்.
கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வன்முறைக் காணொளி வெளியானதை அடுத்து, 78 நாட்களாக மவுன விரதமிருந்த நமது பிரதமர் வாய் திறந்து பேசிவிட்டார். அவரது கருத்துகளும் உடல்மொழியும் இந்தப் பிரச்சினையை எந்த அளவிற்கு அலட்சியப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அலட்சியப்படுத்திவிட்டது. அவரது உரை குறித்து அனைத்து தரப்பினரும் தத்தமது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதால் அதற்குள் சென்று மீண்டும் நாம் பேச வேண்டியதில்லை.
படிக்க : ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்
எதிர்க்கட்சிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எப்படியும் மணிப்பூர் விசயம் தொடர்பாக வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது. நாடாளுமன்றத்திற்குள்ளே பேசினால், விவாதம் நடத்த வேண்டிவரும் என்றுணர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேட்டியளித்துவிட்டு சபைக்கு வந்தார்.
பிரதமர் மோடியின் இச்செயல், “நாடாளுமன்ற மரபு மீறிய செயல், நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.
குக்கி இன மக்களுக்கு எதிராக அரசு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் திட்டமிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகிறது. அவரது கட்சி ஆளும் மாநில அரசுதான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் விவாதத்திற்குள்ளாகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
ஆகையால், நாடாளுமன்றத்தை ஜூலை 24-ஆம் தேதிவரை ஒத்திவைத்துவிட்டார். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினால், கல்லூரிக்கு ஒருவாரம் விடுமுறை விடுவது போல, எதிர்க்கட்சிகளைக் கலைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு லீவுவிட்டுவிட்டார். இதெல்லாம், மிகவும் பழைய டெகினிக்.
எதிர்க்கட்சிகளோ, “மோடி, உள்ளே வாருங்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ சபை கலைத்துவிட்டு சென்றுவிட்டார்.
“நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்” என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். தற்போதைய நாடாளுமன்ற மரபையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
படிக்க : மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!
அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை.
பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூசன் விசயத்தில் வாய் திறந்தாரா? இல்லை.
எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை.
பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை.
பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.
அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து முடக்கிவிட்டார். நாம் நாட்டை முடக்குவோம்!
புதிய ஜனநாயகம்
22.07.2023