Saturday, July 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 216

சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !

டந்த ஜனவரி மாதம் ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, கொரோனா காலத்தின் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை ரூ.8500 பணம் கேட்டு பில் அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம். கல்லூரி திறக்காமலேயே மாணவர்கள் மீது கட்டணம் கொள்ளையடிப்பதை கண்டித்து அன்றேப் தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள் மாணவர்கள்.

அதன் பிறகு, பல்கலைக்கழகத்தின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை மட்டும், தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் ஃபெயில் செய்துள்ளார். இதை கண்டித்தும் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள். அந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு வெளியில் இருந்து பெரும் ஆதாரவு அதிகரிக்கவே பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் விடைத்தாளைத் திருத்தி மதிப்பெண்னை வெளியிடுகிறோம் என்று இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

படிக்க :
♦ சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !
♦ சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

அதன்பின், மாணவர்கள் வேலூரில் அகழாய்வு பணிக்கு சென்றுவிட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்தனர். கடந்த இரண்டு வாரமாக மதிப்பெண் வெளியிடுவது பற்றி பல்கலைக் கழத்தில் கேட்டு வருகின்றனர். ஆனால், நிர்வாகம் மாணவர்களை அலைய விடுகிறதே தவிர எந்த பதிலையும் மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜன்

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழைமை (16.3.21) அன்று நீண்ட நேரம் காத்திருந்த பிறகு தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை சந்தித்து பேசினர்.  “எங்களது மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி INTERNAL, மற்றும் EXTERNAL என பிரித்து நோட்டிஸ் போர்டில் போடுங்கள்” என்று மாணவர்கள் கேட்டதற்கு, மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் சௌந்தரராஜன். “உன் இஷ்ட மயிருக்கெல்லாம் பண்ண முடியாது, எழவெடுத்தவனுங்களா, பொறுக்கி ரௌடிங்களா வெளியப் போங்கடா” எனவும் கூடுதலான தகாத வார்த்தைகளாலும் மாணவர்களை திட்டியுள்ளார். உடனிருந்த மாணவியிடம் பாலியல் துன்புறித்தலில் ஈடுபட்டுள்ளார். அதை எதிர்த்து கேட்ட மாணவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

மாணவர்களை அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழகத்தின் பதிவாளரோ ஒருமுறை மாணவர்களை சந்தித்து, “மார்க் தானே.. போடச் சொல்கிறேன்”, என்று அலட்சியமான பதிலைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இது பாலியல்ரீதியிலான துன்புறுத்தல் என்பதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. மேலும் தொடர்ந்து மாணவர்களை பல்வேறு வகையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

போராடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட புகார் கடிதம்

இந்நிலையில், 17.3.21 புதன்கிழமை அன்று இரவு தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜனை காப்பாற்ற, முன் தேதியிட்டுப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதே புகார் கடிதம் தயாரித்துள்ளது நிர்வாகம். காப் பஞ்சாயத்து நடத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம் என போராடும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். அதில் வந்து உங்கள் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளது நிர்வாகம். “இந்த கமிட்டியே ஒரு மோசடியானது என கருதுகிறோம், எனவே கமிட்டிக்கு வரும்படி எங்களுக்கு முறையாகக் கடிதம் கொடுங்கள், நாங்கள் கமிட்டிக்கு வருவதை பற்றி பரிசீலித்து சொல்கிறோம்” என்று கூறியுள்ளனர் மாணவர்கள்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் தராமல், போராடும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தொடர்பு கொண்டு கமிட்டிக்கு வரும்படி அச்சுறுத்தல் செய்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், “எனது மகள் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் வயதையும் திறனையும் பெற்றிருப்பவள், எதுவாக இருப்பினும் அவளிடம் பேசுங்கள்” என்று நிர்வாகம் சார்பாக தொடர்பு கொண்டவரிடம் பதில் கூறியுள்ளனர்.

காணொலியை தரவிறக்கம் செய்ய

போராடும் மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு துணைப்போகும் பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தற்போதுப் போராடும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதேபோல், கடந்த செப்டம்பர், 2019-ம் வருடம், பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் நடத்தியதற்காகவும், பல்வேறு பிரச்சனைகளுக்குப் போராடியதற்காகவும், சென்னை ஆளுநரின் பரிந்துரையின் பெயரில் மாணவர் கிருபா மோகன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்ததன.

போராட்ட களத்தில் இருக்கும் தொல்லியல் துறை மாணவர்கள்

தற்போது, கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை ஒடுக்குகிறது பல்கலைக் கழக நிர்வாகம். மாணவர்களின் போராடும் உரிமையைப் பறிக்கும் விதமாக தொடர்ந்து செயல்படும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மற்ற கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகள் தோள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வினவு செய்தியாளர்

ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !

“இந்தியாவில் நிலவும் சகிக்க முடியாத ஏற்றத்தாழ்வுள்ள சமூகம் நீடிக்குமானால் ஒரு முதலாளித்துவ அமைப்புக் கூட வெடித்து சிதறிவிடும்” என்கிறார் ஆக்ஸ்பாம் இந்தியா தலைமை செயல் அதிகாரி அமிதாப் பெகர்.  ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் ”அசமத்துவம் பற்றிய அறிக்கை 2020” குறித்த விவாதத்தில் பத்திரிகையாளர் சன்ஜீக்தா பாசுவிடம் தெரிவித்த கருத்துக்கள் நேசனல் ஹெரால்டு இணையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறோம்.

000

சஞ்சுக்தா பாசு : பிரதமர் மோடி தனது பாராளுமன்ற உரையில் “செல்வங்களை சேர்ப்பவர்களையும் மற்றும் பெரும் செல்வந்தர்களாக இருப்பவர்களையும் அவர்கள் சொத்துகளை குவித்துக் கொள்கிறார்கள் என்பதற்காகவே குறை சொல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

அமிதாப் பெஹர் : எங்களது அறிக்கைகள் முகேஷ் அம்பானி போன்ற பில்லியனர்கள் பற்றி நிறைய பேசியிருக்கின்றன. நமக்கு தனிப்பட்ட முறையில் எந்த பில்லியனர்கள் மீதும் பிரச்சனைகள் இல்லை.

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!

அம்பானியும், அதானியும் தன்னளவில் ஒரு நல்ல மனிதராக இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் நமக்கு தேலையில்லை. ஆனால் நமது குற்றச்சாட்டு  மோசமான ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பைப் பற்றியதுதான். இவ்வாறு உழைக்கும் மக்கள் குமுறும்போதும் மோடியின் மன்கிபாத் சமூக அக்கறையோடு செயல்படுபவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிப்பதை கவனிக்காமல் விடமுடியாது.

இந்த நாட்டில் மொத்த சமூகமே சேர்ந்து செல்வத்தை உற்பத்தி செய்யும்போது, உற்பத்தியாகும் செல்வங்கள் அதற்க்கேற்றவாறு எப்படிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது? நாம் இருக்கும் இந்த அமைப்பில் உற்பத்தியாகும் மொத்த செல்வங்கள் நாட்டு வளங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அதிக சதவீதத்தில் குறைந்த அளவே இருக்கக் கூடிய மேல்மட்ட பணக்காரர்களுக்கு சென்று சேருகிறது.

உதாரணமாக, நமதுப் பொருளாதாரம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வளர்கின்றது என்று வைத்துக் கொண்டால் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கக் கூடிய மேல்மட்டப் பணக்காரர்களுக்கு 800-900 மில்லியன் அளவுக்கு அதன் பங்கை எடுத்துக் கொள்கின்றனர். மீதி இருக்கும் இந்த நாட்டின் 99 சதவிகித மக்கள் மிச்சம் மீதியாக இருக்கும் வெறும் 100 மில்லியன் டாலர்களையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

000

சஞ்சுக்தா பாசு : பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சேகர்குப்தா பிரதமரின் பேச்சை ஆதரித்து எழுதியிருந்தார்.  இந்தியா இன்னமும் செல்வ நிலையில் வளர வேண்டியுள்ளது. ஏனெனில், செல்வம் இல்லையெனில் நம்மிடம் இருக்கும் வறுமையைதான் சம்மாகப் பங்கு போட வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்தார்.

அமிதாப் பெஹர் : இங்கு அடிப்படையான கேள்வியே செல்வம் எப்படிப் பங்கிடப்பட வேண்டும் என்பதுதான். வறுமையைச் சம்மாகப் பங்கிடவேண்டும் என்பதுதான் நோக்கம் என்ற அவரது பார்வையை நான் ஏற்கவில்லை. 24 சதவீத இந்திய மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3,000-ற்கும் குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு தனிநபரால் ரூ.90 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை எப்படி அனுமதிப்பது?

உண்மையான பிரச்சனை என்னவெனில் உழைப்புக்கு எவ்வளவு மதிப்பளிக்கப்படுகிறது? மூலதனத்திற்கு எவ்வளவு மதிப்பளிக்கப்படுகிறது? என்பதுதான். மூலதனம் போடுவதாக சொல்லும் சிலர் 90 சதவீதம் பலனைப் பெறுகின்ற போது, அங்கே தனது உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த அளவு ஊதியமும் எப்போதாவது தரப்படும் போனஸ் போன்றவைதான் சரியான விகிதாச்சாரமா?

அதனால், நாம் பேசிக் கொண்டிருப்பது ஒரு நியாயமான விநியோக அமைப்புக்குதானே தவிர எல்லோரையும் ஏழைகளாக்குவது என்ற கற்பனையான கருத்துக்களுக்கல்ல.

000

சஞ்சுக்தா பாசு : அப்படியானால் சுதந்திர சந்தைப் பொருளாதாரம்தான் பிரச்சனை என்கிறீர்களா?

அமிதாப் பெஹர் : பல்வேறு வகைப்பட்ட “சுதந்திர சந்தைகள்” நிலவுகின்றன. ‘சுதந்திர சந்தைகளின்’ புனித்தலமாகக் கருதப்படும் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum -WEF) பங்கேற்கும் மிகப் பெரிய பில்லியனர்கள் கூட இந்த ஏற்றத்தாழ்வான சமசீரற்ற அமைப்பை சரி செய்ய வேண்டியிருக்கிற தேவை இருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். ‘பங்குதாரர் மூலதனத்திலிருந்து’ ‘பங்கேற்பாளர் மூலதனத்திற்கு’ மாறவேண்டிய தேவையை வலியுறுத்துகிறார்கள்.

உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரே, நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காலம் முடிந்துவிட்டதாக சொல்கிறார். அமெரிக்காவில் ‘சுதந்திர சந்தை’ நிலவுகின்றனர். ஆனாலும், அங்கும் கூட வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு இயக்கங்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அந்த சமயத்தில், நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். வால்ஸ்டிரீட் அருகே அமெரிக்க மக்கள் “1:99 பொருளாதாரம் கதைக்குதவாது” என்ற முழக்க அட்டைகளைப் பிடித்திருப்பதைப் பார்த்தேன். IMF நிறுவனமும் ‘பெருமளவிலான சமச்சீரற்ற தன்மை இருக்கக் கூடாது’ என்கிறது.

நீடிக்க முடியாத அளவிற்கு சமமின்மையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அது சமூக ரீதியிலான அமைதியின்மையை வெளிப்படுத்துகிறது. உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த வேளையில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக குறைந்தபட்ச உணவுத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது தரவரிசையில் முதல் 10 இடத்திலிருக்கும் பில்லியனர்கள் கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்த சந்தைப் பொருளாதார வகையாலும் நியாயப்படுத்த முடியாது.

இன்றைய பொருளாதார நடவடிக்கைகள் மூலம் செல்வம் படைத்தவர்கள் மேலும் மேலும் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும்போது மோசமான நிலையில் வாழும் மக்களின் நிலையோ மேலும் மேலும் அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது அல்லது மாற்றமே இல்லாமல் இருக்கிறது.

79 நாடுகளில் 295 தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டோம். அதில் சர்வதேச பொருளாதார வல்லுநர்களான ஜெயதி கோஷ், ஜெப்ரி சாக்ஸ் மற்றும் கேப்ரிஒயல் சக்மன் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் எல்லோரும், “நிலவுகின்ற இந்த தன்மையான பொருளாதாரம் அனுமதிக்கக் கூடியதல்ல. மேலும் இவை உலகிற்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியதாகும்” என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

000

சஞ்சுக்தா பாசு : ‘நீடிக்க முடியாத’ சமசீரற்ற தன்மை என்று கூறுகையில் அதன் பொருள் என்ன ? பெரும் பணக்காரர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

அமிதாப் பெஹர் : தனிப்பட்டரீதியில், என்னைப் பொறுத்தவரை இது அறவுணர்வு குறித்த கேள்வி. பத்து ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் வறுமைப் பற்றிய கணக்கீடுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், சமீபத்திய கணக்கீடுகளைப் பார்க்கும்போது 20-22 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வதாகத் தெரிகிறது. அதுவும்கூட கல்வி, சுகாதாரம், இருப்பிடம் மற்றும் பல வாழ்வாதாரங்களை வைத்துக் கணிக்கப்பட்ட பலகோணங்களிலான வறுமைக்கோடு குறித்த கணக்கீடு என்று சொல்லமுடியாது.

15 ஆண்டுகளுக்கு முன் அர்ஜீன் சென்குப்தா கமிட்டி அறிக்கை (முறைசாரா தொழிலாளர்களின் வாழ்விடங்களில் வேலை மற்றும் முன்னேற்றம் பற்றிய நிலைமைகள் பற்றி) கூறியதென்ன?  இந்தியாவில் 83 கோடியே 60 லட்சம் மக்களின் தனிநபர் நுகர்வு ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேம்பட்ட உலகத்தை படைப்பதற்காக சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கிறதாம். ஆனால், அவர்கள் உருவாக்க விரும்பும் மேம்பட்ட உலகம் இப்படித்தான் காட்சியளிக்குமா? இது ஒரு சமூக அல்லது அரசியல் ரீதியான கேள்வியும் கூட. இப்படிப்பட்ட இந்த அமைப்பு இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தையும், நீடித்த சமூகப் பதட்டத்தையும் மற்றும் உள்நாட்டு குழப்பங்ளையும் உருவாக்கவிருக்கிறது. இந்த அரசியல் அமைப்பு மட்டுமல்ல,  நிலவுகின்றப் பொருளாதார அமைப்பு முறையும் கூட முற்றிலும் சிதைந்துவிடும்.

தீவிர இடதுசாரி சிந்தனையுள்ள சில நண்பர்கள் “இந்த சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய அறிக்கைகள் எல்லாம் உண்மையில் நிலவுகின்ற தங்களின் அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துப் போகக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை எச்சரிக்கை செய்யத்தான் உதவி செய்வதோடு, அதன் கொதிநிலையை தணியச் செய்வதற்குமே உதவும். சமச்சீரற்ற சமூக அமைப்பு இருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றும் ஆனால் மிக அதிகமான சமனற்ற சமூக அமைப்பு கூடாது என்றும் நாங்கள் கூறுவதாக எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த அமைப்பை இந்த பூமியினாலேயே தாங்கிக் கொள்ள முடியாது. உத்ரகாண்ட் மாநிலம், சமோலியில் சமீபத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு, சுற்றுச் சூழல் சமநிலைக்கு எதிரான பாகாசுர வளர்ச்சித் திட்டங்களின் விளைவுதானே.

000

சஞ்சுக்தா பாசு :  ஏற்றத்தாழ்வான சமசீரற்ற வளர்ச்சி ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி சிந்தித்தீர்களா? பாலினம் சாதி மற்றும் மத சிறுபான்மையினர் இவர்களுக்குள்ளும்

அமிதாப் பெஹர் : இந்த அறிக்கையில், நீங்கள் சொல்லக் கூடிய அந்த வகை மக்கள் பிரிவினரை பற்றி தனித்தனியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், சமூகத்தின் மிக பலவீனமான நிலையிலுள்ள அந்த மக்கள் நிச்சயமாக மற்ற எல்லோரை காட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற முடிவுக்கு எளிமையாக வந்தடைய முடியும்.

முசுலீம்கள் அனைத்து சமூக பொருளாதாரக் குறியீடுகளிலும் பின் தங்கியிருக்கிறார்கள் என்று சச்சார் கமிட்டி அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், இந்தப் பெருந்தொற்றில் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.  எங்களது அறிக்கைப்படி அமெரிக்காவில் வெள்ளை இன அமெரிக்கர்களின் மரண விகிதத்தின் அளவிற்கு கறுப்பின மக்களின் மரண விகிதம் இருந்திருக்குமானால் 22,000 கறுப்பின மக்களைக் கொடூரமான சாவிலிருந்து மீட்டிருக்க முடியும்.

பிரேசிலில் வசிக்கும் ஆப்பிரிக்க சந்ததியினர், வெள்ளைநிற சந்ததியினரை காட்டிலும் 40 மடங்கு அதிகமாக கொரோனாவிற்கு பலியாகியிருக்கிறார்கள். சமமின்மையைப் பொருத்தவரையில் பாலின மற்றும் இன ரீதியான பரிமாணம் தெளிவாக இருக்கிறது.

000

சஞ்சுக்தா பாசு : இந்த அமைப்புப் படுகுழியில் சிக்கி இருப்பதாக சொல்கிறீர்கள்? இதை யார் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

அமிதாப் பெஹர் : மிகப்பெரும் பணக்காரர்கள் மற்றும் இந்த அரசு ஆகியோருக்கு இன்றைக்கு நிலவுகின்ற அபாயமான நெருக்கடிளை இயன்றளவு அப்படியே பிரதிபலித்துக் காட்டுவதன் மூலம் விழித்தெழச் செய்வதற்கான முயற்சிதான் இந்த அறிக்கை.  மிகப் பெரும் பணக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நியாயமான வரிகளை முழுமையாக கட்ட வேண்டும்.

வரி நியாய வலைப்பின்னல்’ என்ற அமைப்பின் ஒரு அறிக்கைபடி, உலக நாடுகளுக்கு வரியாக வர வேண்டிய வருமானம் கிட்டத்தட்ட 427 பில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பின் காரணமாக இழக்கப்படுவதாகக் கூறுகிறது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் என்ற பெயரில் நாட்டின் வருமானத்தை சூறையாடிக்கொண்டு வரி ஏய்ப்பு செய்வதற்காக புதிய புதிய வழிமுறைகளைக் கையாள்கின்றன.

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களிடம் வசூல் செய்வதற்கான இன்னமும் திறன் வாய்ந்த வரி வசூல் அமைப்பை அரசு கொண்டிருக்க வேண்டும்.   பெரும் பணக்காரர்களிடம் “கோவிட் உப வரி” கட்டாயம் வசூலிக்க வேண்டும். அர்ஜென்டினா இதைச் செய்திருக்கிறது.

முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடி காலகட்டம் இது. மேலும் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கியிருப்பதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் – ஐ.எல்.ஓ. (ILO) எச்சரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் செல்வம் சேர்த்திருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும். வரி வசூலைக் கட்டாயமாக்க வேண்டும்.

தமது மூலாதாரங்களை எந்தந்த துறைகளில் அரசு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது. சமச்சீரான வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டுமானால் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள், இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

கல்வி, சுகாதாரம் ஆகியற்றுவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதன் பலனாக மிக அதிக அளவில் அங்கு சமத்துவம் காணப்படுகிறது. இதற்கு மாறாக இந்தியா, சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்குவதில் உலக நாடுகளில் கடைக் கோடியிலிருக்கும் நாடுகளில் 4-வது நாடாக விளங்குகிறது. கல்வி, சுகாதாரம் இரண்டுக்கும் சேர்த்தே மொத்த ஜி.டி.பி.(GDP)யில் 5-6 சதவிதத்திற்கு மேல் ஒதுக்கீடு செய்ய முடியாமல் இருக்கிறது.

நமது நாட்டு மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையை உத்திரவாதபடுத்த நாம்  “குறைந்தபட்ச ஊதியம்” என்பதிலிருந்து “வாழ்வதற்கான ஊதியம்” என்ற கட்டத்துக்குள் போகவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இந்த நாட்டின் உண்மையான நிலையை கொரோனா வைரஸ் பெருந்தொற்று அம்பலப்படுத்தியது.

இந்த நாட்டின் தொழிலாளர்கள் பெருமளவு முறைசாராத் தொழில்களில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லை. அவர்கள், தங்கள் சொந்த கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கின்ற அவலத்தை நாம் பார்த்தோம். நம்மால் ஏன் இன்னும் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்போ வேலை உத்திரவாதமோ உறுதிபடுத்தி தரமுடியவில்லை ?

000

சஞ்சுக்தா பாசு : இம்மாதிரியான மாற்றங்களை உருவாக்கி முன்மாதிரியாக நடந்து கொண்ட நாடுகள் இருக்கின்றனவா?

அமிதாப் பெஹர் : குறிப்பாக, என்னால் சொல்ல முடியாது என்றாலும், நியுசிலாந்தைப் பாருங்கள். “வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை” என்றழைப்பதை  “நலவாழ்வுக்கான நிதிநிலை அறிக்கை”  என்று குறிப்பிடுகின்றனர். பில்லியனர்களை மட்டும் கணக்கில் கொண்டு போடப்படும் பட்ஜெட்டாக இல்லாமல், ஒவ்வொரு குடிமகனின் நலனையும் மையப்பொருளாக வைத்து பட்ஜெட் போடப்படுவது ஒரு அடிப்படையான மாறுதல் ஆகும். பூடானில் ஜிடிபி(GDP) இலக்கை அடைய அவர்கள் ஓடுவதில்லை. மொத்த மக்களின் மகிழ்ச்சிக் குறியீட்டு இலக்கை (Happiness Index) எட்டுவதை நோக்கமாகக் கொண்டு வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கின்றனர்.

அர்ஜென்டினாவில் பெரும்பணக்காரர்களுக்கு அதிகபட்ச வரிவிதிப்பு செய்யப்படுகிறது. தென்கொரியாவும், வியட்நாமும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குப் போராடுவதையே தங்களின் திட்டங்களின் மையமாக வைத்துள்ளார்கள். இந்த பிரச்சனை குறித்து விழிப்படைந்த நாடுகள் இருக்கின்றன. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

000

படிக்க :
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
♦ நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !

சஞ்சுக்தா பாசு : இந்தியா விழித்துக் கொண்டதா?

அமிதாப் பெஹர் : உண்மையை சொல்வதென்றால், இந்த அரசாங்கத்திலோ அல்லது இதற்கு முன்னால் இருந்த அரசங்கங்களிடமோ இதற்கான எந்த நிகழ்ச்சி நிரலையும் பார்க்க முடியவில்லை. இன்றைய இந்தியாவில் இருக்கும் சமமின்மையின் அளவு, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த அளவிற்கு உச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி.

“1990 வரை இந்தியா நிதானமாக வறுமையை குறைத்துக் கொண்டு வந்தது. ஆனால், தாராளமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இடைவெளி விரிவடைந்துக் கொண்டே போகிறது” என்கிறார் தாமஸ் பிக்கெட்டி.

000


தமிழாக்கம் : மணிவேல்
மூலக்கட்டுரை : National Herald

தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !

1

ந்து ராஷ்டிரத்தின் சோதனைக்கூடமாக மாறியுள்ள உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது. காஸியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் தாகத்துக்கு தண்ணீர் குடிப்பதற்காக நுழைந்த ஒரு முசுலீம் சிறுவனை அடித்து துன்புறுத்தி அதை வீடியோவாக சமூக ஊடகங்களில் குதூகலத்துடன் பகிர்ந்துள்ளது இந்துத்துவ வெறி கும்பல்.

2021 மார்ச் 12-ம் தேதி நடந்துள்ள இந்த கொடூர நிகழ்வு குறித்த வீடியோவில், இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில், தான் செய்த ‘குற்றம்’ என்ன என்பதைக்கூட அறியாமல் விழிக்கும் அந்த சிறுவனை, அடித்து கீழே தள்ளி மிதிக்கிறான் ஒருவன். இந்து ஏக்தா சங்கம் என பெயரிடப்பட்ட இந்துத்துவ வெறுப்புக் குற்றங்களை நடைமுறைப்படுத்தும் ஓர் அமைப்பைச் சேர்ந்த சிருங்கி யாதவ் என்பனின் டிவிட்டர் கணக்கில் பெருமிதத்தோடு, இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலானது.

படிக்க :
♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !
♦ கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !

ஒரு சிறுவனை தாக்குவதை ‘வீரச்செயல்’ என குறிப்பிட்டு பகிர்ந்துள்ள சிருங்கி யாதவ், சிறுவனின் பிறப்புறுப்பில் தாக்குவதை, ‘ஒரு முசுலீம் ஆண், “ஆண்மை நீக்கம்” செய்யப்பட்டான்’ எனக் கூறியுள்ளதாக த வயர் இணையதளம் கூறுகிறது. இதே நபர், மற்றொரு வீடியோ ஒன்றில் , கத்தி முனையில் ஒரு முசுலீம் சிறுவனிடம் ‘இந்துக்களின் வாழ்வை அழிக்க வங்கதேசத்திலிருந்து வந்தவன்’ எனக் கூறுவதையும் இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.

வெறுப்பை பரப்பும் இந்த வீடியோவுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இந்த கணக்கு நீக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேச போலீசிடம் நடவடிக்கை கோரி பலரும் முறையிட்ட நிலையில், சிருங்கி யாதவ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

மீண்டும் தலை தூக்கியிருக்கும் வெறுப்பு குற்றங்களில் சமீபத்திய ஒன்றாக இது கடந்துபோகக்கூடும். ஆனால், இதுபோன்ற வெறுப்பு குற்றங்களின் பின்னணியை, தொடர்புடைய வன்முறையாளர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வறிந்து கூறியுள்ளது த வயர் இணையதளம்.

நீக்கப்பட்ட சிருங்கி யாதவின் கணக்கில் முசுலீம் சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் புகழ்ந்து பகிரப்பட்டுள்ளன. ஒரு பதிவில் ‘எதிரிகளின் ரத்த ஆறு’ என குறிப்பிடப்பட்டு நரசிங் ஆனந்த் சரஸ்வதி, முசுலீம்கள் தீவிரவாதிகள், இந்து ராஷ்டிரம் வாழ்க என்ற ஹேஷ்டேக்-உடன் பகிரப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், விருப்பமுள்ள இந்து சகோதரர்களுக்கு ஆயுதமளிக்க தயார் என அறைகூவல் விடுக்கிறார். ‘நாம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கூட முடியவில்லை. முசுலீம்கள் உயிரோடு எரிக்கப்படும்வரை இது நடக்காது’ என அந்தப் பதிவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் த வயர் கூறுகிறது.

சிருங்கி யாதவ்

முசுலீம்களுக்கு எதிரான கொலை குற்றத்தை தூண்டும் இத்தகைய பதிவுகளோடு, நரசிங் ஆனந்த் சரஸ்வதி என்ற மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கொலைவெறி சாமியார் ஒருவரின் படங்கள், வீடியோ பதிவுகள் போன்றவற்றையும் சிருங்கி பகிர்ந்துள்ளான். சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. முசுலீம்களுக்கு எதிரான பல கலவரங்களுக்கு பின்னணியாக இருந்த கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களுடன் நரசிங் ஆனந்த சரஸ்வதி நெருக்கமாக உள்ளவர்.

கோயிலுக்கு நுழைந்த காரணத்தால் சிறுவன் அடித்து துன்புறுத்தப்பட்ட அதே கோயில், நரசிங் ஆனந்த சரஸ்வதி தலைமை பூசாரியாக உள்ளார். முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், பல மதக் கலவரங்களை உருவாக்கியதில் இழிபுகழ் பெற்றது. இந்த நபர்தான் சிருங்கி போன்ற இந்துத்துவ அடியாட்களால் குரு என விளிக்கப்படுகிறார்.

நரசிங் ஆனந்த்

டெல்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரங்கேறிய கலவரத்தில் முசுலீம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குத் தொடர்ச்சியாக நரசிங் ஆனந்த் அழைப்பு விடுத்தை த வயர் உள்ளிட்ட இணையதளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன. நரசிங் ஆனந்தின் அழைப்பை ஏற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த இணையதளம் ஆதாரத்தோடு கூறுகிறது.

டிசம்பர் 25, 2019-ம் ஆண்டு ஜந்தர் மந்தரின் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் முசுலீம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுங்கள் என நரசிங் ஆனந்த அழைப்பு விடுக்கிறார். இந்த வீடியோவை டெல்லி கலவரத்தில் தொடர்புடைய அங்கித் திவாரி என்ற ஆர். எஸ். எஸ்-ஐச் சேர்ந்த நபர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். அதுபோல, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளிலும் கல் வீசி எறிந்த வைரலான வீடியோ ஒன்றிலும் உள்ள ராகினி திவாரி, தனது குரு என நரசிங் ஆனந்தை குறிப்பிடுகிறார்.

வெறுப்பு கக்கும் இந்த நரசிங் ஆனந்தின் பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் பரவி உள்ளன. மேலும் நியூஸ் நேஷன், சுதர்ஷன் டிவி, ஆஜ் தக் போன்ற இந்துத்துவ ஆதரவு ஊடகங்களில் தொடர்ச்சியாக இவருடைய வெறுப்பு பேச்சுகள் ‘விவாதம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றன.  இவருடைய பேச்சுக்களை வெட்டி, ஒட்டி பல லட்சம் பேருக்கு பரப்பும் பணியை பல இந்துத்துவ வெறும் குழுக்கள் யூ ட்யூப்பில் செய்து வருகின்றன.

பாஜகவால் பதவியில் அமரவைக்கப்பட்ட அப்துல்கலாமைக் கூட இந்த நபர் ஜிகாதிகள் என்கிறார். அனைத்து முசுலீம்களும் இவருக்கு ஜிகாதிகள் தானாம். சமீபத்திய நியூஸ் ஸ்டேட் டிவி ஒன்றின் விவாத்தின் போது ‘இறைதூதர் முகமதுவை முதல் முசுலீம் தீவிரவாதி’ எனக் குறிப்பிட்டு இந்த நபர் பேசியதாக த வயர் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

டெல்லி கலவரத்தின் பின்னணியை த வயர் இணையதளம் வெளிக்கொண்டுவந்தபோது, நரசிங் ஆனந்த், த வயர் பணியாளர்களை ஜிகாதிகள் எனவும் வளைகுடா நாடுகளால் இணையதளத்துக்கு நிதி கிடைப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுபோன்ற முசுலீம்களுக்கு எதிரான இனப் படுகொலையை வெறுப்பை கக்கும் நபர்களை ஒளிபரப்பக்கூடாது என மத்திய தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்துக்கும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கும் நீதி மற்றும் அமைதிக்காக குடிமக்கள் அமைப்பு எழுதியிருந்தது.

படிக்க :
♦ உபி கலவரத்தில் முசுலீம்கள் இல்லை – ஒரு சீக்கியப் பெண்
♦ ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்

ஆனால், நரசிங் ஆனந்த், சிருங்கி யாதவ் போன்றோரின் வெறுப்பு குற்றங்களால் ஆட்சிக்கு வந்திருக்கும் மத்தியில் ஆளும் அரசு அவற்றுக்கு எதிரான ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கப்போவதில்லை. இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் கூடமாக பாஜக ஏக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மாறவில்லை. அதற்கான களம் பல பத்தாண்டுகளாக தயார் செய்யப்பட்டு வந்தது.

இப்போது, தங்களுடைய காலம் வந்தபின் இந்துத்துவ இனப் படுகொலையாளர்கள் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம், இன்னொரு தேர்தல் வெற்றி, ஆழமாக வேரூன்றி இருக்கும் இவர்களை அகற்றிவிடாது.


அனிதா
நன்றி : The Wire

கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி || கருத்துப்படம்

கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி !

காவி கார்ப்பரேட் பாசிசத்தின் – இரண்டாம் அலை பேண்டமிக் !

 

கருத்துப்படம் : மு. துரை

தேர்தல் ஆணையத்தின் நேர்மை || தோழர் வெற்றிவேல் செழியன் உரை || காணொலி

தேர்தல் ஆணையத்தின் நேர்மை || தோழர் வெற்றிவேல் செழியன் உரை !

000

போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம் || தோழர் வெற்றிவேல் செழியன்

 

மக்கள் அதிகாரம்

 

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை ! || கருத்துப்படம்

பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர் !

– மோடி புகழாரம்

சிலிண்டர், பெட்ரோல் விலையை உயர்த்தி குடிமக்களை சாகடிக்காதே என்கிறேன்!

 “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே”  என்கிறார்!

தங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு என்கிறார்கள் விவசாயிகள் !

 “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது” என்கிறார் !

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை!

கருத்துப்படம் :

 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள், தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கும், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது குறித்தும் பதிலளிக்கிறார்.

தேர்தல் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

000

தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலுமா?


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !

காலங்காலமாக பாஜகவை புறக்கணித்து வந்த வாக்காளர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் செய்வதன் மூலம் பாஜக கட்சியை நாட்டின் கடைகோடி வரை கொண்டு போய் சேர்ப்பதற்கான வேலைகளை அமித்ஷா – மோடி இணை செய்துவருகிறது.

ஆனால் 40 ஆண்டுகள் ஆன இந்த கட்சியில் இன்னமும் கட்சி அமைப்பின் நிர்வாகத்தில் தொன்மையான வரணாஸ்ரம சனாதனத்தை அப்படியே பின்பற்றி வருகிறது என்பதை கடந்த 2018-ம் ஆண்டு தி பிரிண்ட் இணையதளம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

தி பிரிண்ட் பத்திரிகை வெளியிட்ட இந்த ஆய்வு ஆகஸ்ட், 2018-ம் ஆண்டு வரையிலுமான நிலைமைதான் என்றாலும், பாஜக-வின் நிலைமையை இன்றளவும் பிரதிபலிக்கக் கூடியதாகவே இருப்பதால், அவ்வாய்வுக் கட்டுரையை சுருக்கி இங்கே தருகிறோம்.

பாஜகவில் வர்ணாசிரம சாதிய படிநிலையின் படி, உயர்சாதியினரின் ஆதிக்கமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல், பிற்பட்ட சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் அவர்களது ‘சாதிய படிநிலைக்கு’ உரிய இடங்களையே வழங்கி வந்திருக்கிறது பாஜக.

படிக்க :
♦ இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !
♦ சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?

இந்தியாவை சித்பவன் பார்ப்பனர்களின் சாம்ராஜ்யமாக மாற்றி ‘அவர்களின் பொற்காலத்தை’ மீட்டெடுக்க கனவுகளோடு களத்தில் சகல தகிடுதத்தங்களையும் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாராளுமன்றப் பிரிவான பாஜக-வின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது மிக அவசியமாகும்.

அதனடிப்படையில், மிக ஆழமாக அந்த கட்சியின் அமைப்பு நிர்வாகத்தில் சாதிய விவரங்களை ஆராய வேண்டியிருக்கிறது.

தலைமை தாங்குவது உயர்சாதி வெறியர்கள் :

தேசிய அளவில் கட்சி நிர்வாகிகளில் நான்கில் மூன்று பங்கு உயர்சாதியினரின் ஆதிக்கமே உள்ளது. அதன் தேசிய செயற்குழுவில் 60 சதம் பேர் பொதுப்பட்டியலில் உள்ள சாதியினரே. நாடு முழுவதும் மாநில தலைவர்களில் 65 சதம் இடத்தை பொதுப்பட்டியலில் உள்ள சாதியினர்தான் ஆக்கிரமித்திருக்கின்றனர்.

இதற்கு கீழ் உள்ள பதவிகளிலும் பெரும்பான்மையான தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர்தான் உள்ளனர். நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள் பதவிகளிலும் 65 சதம் பேர் பொதுப்பட்டியலில் உள்ள உயர்சாதியினரே ஆவர்.

தலைமைப் பதவி எப்போதும் ‘தலையில் பிறந்த’ பார்ப்பன சாதியினருக்கே என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தாங்கித் தான் இயங்குகிறது பாஜக.

சட்டையை உரித்தாலும் பாம்பு பாம்புதான்

பாஜகவை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் விரோதமான கட்சி என்பதுதான் அதன் துவக்க கால அடையாளம். ஆனால் பாஜக ‘பார்ப்பன – பனியா’ உயர்சாதியினருக்கான கட்சி என்ற தனது உண்மையான தன்மையை மறைத்துக் கொள்ள சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் பல இடங்களில் பாஜகவை நாட ஆரம்பித்தனர். கீழே உள்ள பொறுப்புகளில் பெயரளவிற்காவது பல சாதியினரையும் அனுமதித்தாலும் அதன் உயர்மட்ட அமைப்புகளில் இன்னும் தீண்டாமைதான் கோலோச்சுகிறது.

தலித் மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை பாஜக அங்கொன்றும் இங்கொன்றுமாக நரித்தனமாக பயன்படுத்திக் கொள்ள அவர்களை நிர்வாகப் பதவிகளில் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு தேசிய நிர்வாகிகளில் சிறுபான்மையினர் (முசுலீம், புத்தமதம், கிறிஸ்தவம்) இரண்டு பேர்தான் இருக்கின்றனர்.

பாஜகவின் நிர்வாகிகள் பட்டியலையே எடுப்போம்.

தேசிய நிர்வாகிகள்- 50 பேர். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் – 97பேர். மாநிலங்கள்-29 யூனியன் பிரதேசங்கள் 7 ஆக மொத்தம் – 36 மாநில தலைவர்கள். அதோடு 24 மாநிலங்களில் மாவட்டத்தலைவர்கள்-752 பேர்

வடகிழக்கிந்திய மாநிலங்கள் அஸ்ஸாம், திரிபுரா தவிர அடிப்படையில் பழங்குடியின மக்களே ஆதிக்கத்தில் இருப்பதால் மாநில நிர்வாகிகள் பட்டியலிலும் இந்த சமூக நிலைமைகள் எதிரொலிக்கவே செய்யும் என்பதால் ஆய்வுக்கு இவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சாதி வகைபடுத்துதல் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட சாதியின் நிலையை அடிப்படையாக கொண்டு செய்யப்படுகிறது. முஸ்லீம்கள் புத்த மதத்தினர் மற்றும் கிறித்துவர்கள் சிறுபான்மையினர் என்ற வகையில் சேர்க்கப்படுகிறார்கள்.

பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி! பஞ்சாபியருக்கு அநீதி

சீக்கியர்களை சிறுபான்மையினராக வகை பிரிக்கவில்லை. பாஜகவில் அதிகமான அளவில் சீக்கியர்கள் பதவிகள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது பஞ்சாப் மாநில பாஜக கட்சிஅமைப்பில் மட்டும்தான். அங்கே அவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் இந்த நிலைமை. ஆனால் பஞ்சாபுக்கு வெளியே பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலில் ஒரே ஒரு சீக்கியரும்,  தேசிய செயற்குழுவில் ஒரே ஒருவரும், மத்தியபிரதேசம், சட்டிஸ்கரில் ம்ாநிலங்களில் தலா ஒரு மாவட்ட அளவிலான பதவிகளிலும் மட்டுமே சீக்கியர்கள் உள்ளனர்.

ஆனால் பார்ப்பனர்கள் பனியாக்கள் எடுத்துக் கொண்டோமெனில், மக்கள் தொகையில் அரிதாக இருக்கும் அவர்களுக்கு கட்சிதான் அதிகார மையம்.

இந்த ஆய்வு நடத்தப்பட்ட விதம் :

தேசிய பொறுப்பாளர் மற்றும் தேசிய செயற்குழு பட்டியலும் பாஜக கட்சியின் இணைய தளத்தில் எடுக்கப்பட்டவை.

தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலில் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர்கள், இணை பொதுச் செயலர்கள், தேசிய செயலர்கள், தேசிய செய்தி தொடர்பாளர் மற்றும் துணை இணை அமைப்புகளின் (மோர்ச்சா) தலைவர்கள் ஆகியோர் அடங்குவர். தேசிய செயற்குழுவில், மாநில தலைவர்களும் உறுப்பினர்களே. மாவட்டத் தலைவர்கள் பற்றிய விபரங்கள் கட்சியின் மாநில இணையத் தளங்களில் காணக் கிடைக்கும்.

படிக்க :
♦ சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
♦ உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

மாவட்ட தலைவர்கள் எண்ணிக்கை, சில மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களை விட, அதிகமாக இருக்கும். மாவட்டங்கள் பெரிதாக இருந்தால் தலைவர் பதவிகள் ஒன்றுக்கு அதிகமாக இருக்கும். சாதிய அளவீடுகள் முடிந்த அளவு துல்லியமாக தரப்படுகிறது. சாதியை அடையாளப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால், சில திருத்தங்கள் இருக்கலாம்.

இனி நிர்வாகிகள் பொறுப்பாளர்களில் பாஜக-வின் சமூக நீதியை பார்ப்போம்.

தேசிய நிர்வாகிகள் மொத்தம் 50 பேர்.
பார்ப்பனர்கள் – 17 பேர்
பிற உயர்சாதியினர் – 21 பேர்
மொத்தத்தில் 50க்கு 38 பேர் உயர்சாதியினர்.

மீதி உள்ள 12 பதவிகள்தான் பிற சாதியினருக்கு பிரிக்கப்பட்டுள்ளது. அதில்,
இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் – 4 பேர்
தாழ்த்தப்பட்ட சாதியினர் – 3 பேர்
மலைவாழ் பழங்குடியினர் – 2 பேர்
முஸ்லீம்கள் – 2 பேர்
சீக்கியர்கள் – 1 நபர்

பாஜகவின் அதிஉயர்மட்ட முடிவுகள் எடுக்கும் தேசிய நிர்வாகிகள் அமைப்பில் மிக மோசமான அளவிலே தான் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.

தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கான 3 பிரதிநிதிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டோருக்காக பாஜக நடத்தும் அமைப்பின் தலைவர். அதே போல,  மலைவாழ் பழங்குடியின மக்களை எடுத்துக்கொண்டால் இது இன்னும் மோசம். இருக்கும் 2 பேரில் ஒருவர் கட்சியில் மலைவாழ் பழங்குடியினருக்கான பிரிவின் தலைவர். இன்னொருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி துருவா. இவரின் சாதி நிலை பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அவரது சாதிய நிலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.

ஆக மொத்தத்தில் இருக்கும் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் 76 சதம் பேர் உயர்சாதியினர்தான். 8 சதம் பேர் இதர பிற்பட்டுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். வெறும்  6 சதம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள்.

தேசிய செயற்குழுவிலும் இதே நிலைதான். மொத்த உறுப்பினர்கள் – 97 பேர். அதில்,
பார்ப்பனர்கள் – 29 பேர்
உயர்சாதியினர் – 37 பேர்
இதர பிற்படுத்தப்பட்டோர் – 18 பேர்
தாழ்த்தப்பட்டோர் – 7 பேர்
சிறுபான்மையினர் – 3 பேர்
சீக்கியர்கள் – 1 நபர்
மலைவாழ் பழங்குடியினர் – 1 நபர்

அதாவது மொத்தம் 97 நிர்வாகிகளில் 66 பேர் உயர்சாதியினர். உயர்சாதியினர் 69 சத பதவிகளை ஆக்ரமித்துள்ளனர். 27 சதம் பேர் மட்டுமே மற்ற சாதிகளிலிருந்து வந்துள்ளனர்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 36. கடந்த 2018-ம் ஆண்டுவரையில் இதில் தலைவர் பொறுப்புகளில் ஒருவர் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் மட்டும்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவர் பொறுப்பில் உட்கார வைத்திருக்கிறது பாஜக.

மொத்தமுள்ள 36 பேரில்,  (2018 நிலவரம்)
பார்ப்பனர் – 7 பேர்
பிற உயர்சாதியினர் – 17 பேர்
பழங்குடி மலைவாழ்பிரிவு – 6 பேர்
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 5 பேர்
முஸ்லீம் – 1 நபர்

மொத்த்த்தில் இருக்கும் 36 பதவிகளில் 24 பேர். அதாவது 69 சதம் பேர் உயர்சாதியினர் தான். மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களில் கூட இதேநிலை நீடிக்கிறது. மாவட்ட அளவிலான 752 பதவிகளில் 65 சத பதவிகளில் இருப்பது உயர்சாதியினர்தான்.

மொத்தமுள்ள 752 பதவிகளில் 746 மாவட்ட தலைவர்களின் விவரங்கள் உள்ளன. அதில் 487 பேர் உயர்சாதியினர். அதாவது 65 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர். 25 சதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) / பிற்படுத்தப்பட்டோர் (BC) / மிகபிற்படுத்தப்பட்டோர் (MBC). தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் 4 சத அளவுக்குதான் பிரதிநிதித்துவம். சிறுபானமை மதத்தினருக்கோ 2 சதவீதம்தான்.

மக்கள்தொகையில் ஒவ்வொரு சாதியும் இருக்கும் அளவுக்கு ஈடானதாக கட்சியில் அதன் பிரதிநிதித்துவம் இல்லைஎன்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அதற்கு பதில் பார்ப்பன பனியா மற்றும் உயர்சாதியினருக்கு, அவர்கள் மக்கள் தொகையில் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி தலித் மக்கள் 16.6 சதம்; மலைவாழ் பழங்குடியினர் 8.6 சதம்; முஸ்லிம்கள் 14 சதம் என தரவுகள் கூறுகின்றன. மற்ற சாதியினருக்கான சரியான விவரங்கள் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2007-ல் எடுத்த கணக்கெடுப்பு படி இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்(ஓபிசி) 41 சதம் பேர் உள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில் மாநில வாரியாக பாஜக கட்சித் தலைமையில் உள்ள சாதிய பிரிவினையை விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். மூலக் கட்டுரைக்கான இணைப்பு கீழே கட்டுரை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும் நாம் அவர்களது சித்தாந்தத்தில் இருந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும் எனினும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.


நன்றி : தி பிரிண்ட்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மணிவேல்

இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்

0

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் இந்தியாவை ஒரு தேர்தல் எதேச்சதிகார நாடாக அறிவித்துள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியை எதேச்சதிகார ஆளும் கட்சியாக கடந்த ஆண்டு வரையறுத்தது.

ஜனநாயகத்தின் கருத்தியல் மற்றும் அளவிடும் அமைப்பான வி-டெம் அறிக்கையை ஸ்வீடனின் துணை வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ரைட்பெர்க் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் காணப்படும் எதேச்சதிகாரத்தை நோக்கிய சரிவு, தற்போது உலகம் முழுவதும் சர்வாதிகாரமயமாக்கப்படும் இந்த ‘மூன்றாம் அலையில்’ ஜனநாயகத்தில் இருந்து சரிவு ஏற்பட்ட நாடுகளின் நடைமுறையை ஒத்திருப்பதாகவும் ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் முதலில் குறைக்கப்பட்டு பிறகு, மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

கடந்த ஆண்டு, இந்தியா மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் பல தரவுகளுடன், 2019 முதல் இந்தியாவின் நிலை “தேர்தல் எதேச்சதிகார நாடாக”  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. மோடிக்கு முன்னர் இந்திய அரசு தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

படிக்க :
♦ சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?
♦ டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்

இந்த அம்சத்தில், இந்தியா இப்போது பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடான பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை விடவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் வி- டெம் அறிக்கை கூறுகிறது.

“பொதுவாக, இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம் விமர்சகர்களை மவுனமாக்குவதற்கு தேசத்துரோகம், அவதூறு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக, பாஜக ஆட்சியைப் பிடித்தபின் 7,000-க்கும் மேற்பட்டோர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்கள்.” என்கிறது ஆய்வறிக்கை.

அரசாங்கம் பொது சமூகத்தை கட்டுப்படுத்துவதாகவும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டமான Foreign Contributions Regulation Act – FCRA -ஐ பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்துத்துவாவுடன் தொடர்புடைய சிவில் சமூக அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை.

2019-ம் ஆண்டும் திருத்தப்பட்ட சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கை ஆய்ந்தறிந்து கூறுகிறது.

“கல்வி புலத்தில் எழும் மாற்றுக் கருத்துகளை மவுனமாக்குவதற்கும் உபா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை பல்கலைக் கழகங்களும் அதிகாரிகளும் தண்டித்துள்ளனர்” என்கிறது வி-டெம் ஆய்வு.

“எதேச்சதிகாரம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கான ஒரு முக்கியமான வெளிப்பாட்டு தன்மையை ஆய்வு கண்டறிந்துள்ளது. கல்வி புலம் மற்றும் சிவில் சமூகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முதலில் ஊடகங்களை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றின் மூலம் பிரிவினையைத் தூண்டி அரசியல் எதிரிகளை அவமதிக்கவும் அரசாங்க இயந்திரங்கள் உதவியுடன் தவறான தகவல்களை பரப்புவதும் நடைபெற்றது. இத்தனை தூரம் கடந்த பிறகே, ஜனநாயகத்தின் அடிப்படைகளான தேர்தல் மற்றும் பிற அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த முடியும். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்கிறது அறிக்கை.

கடந்த 10 ஆண்டுகளில் தாராளமய ஜனநாயக நாடுகளின் உலகளாவிய வீழ்ச்சி வேகமடைந்துள்ளதாகவும் , குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம், மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 2020-ம் ஆண்டிலும் இது தொடர்ந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில், ஜனநாயகமயமாக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் (16) குறைந்து, உலக மக்கள் தொகையில் வெறும் 4 விழுக்காடாக மட்டுமே உள்ளது எனவும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவைத் தவிர, மற்ற ஜி 20 நாடுகளான பிரேசில், துருக்கி ஆகியவையும் ஜனநாயகத்தில் சரிவைக்கண்ட முதல் 10 நாடுகளில் அடங்கும்.

படிக்க :
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

கடந்த வாரம், அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை இந்தியாவை பகுதி அளவு சுதந்திர நாடாக குறைத்துள்ளது.

நரேந்திர மோடி 2014-ல் பிரதமரானதிலிருந்து மனித உரிமை அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தம், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கும்பல் வன்முறைகள் உள்ளிட்ட பெருந்தொகையான தாக்குதல்களால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மோசமடைந்துள்ளன என்கிறது அறிக்கை. 2019-ல் தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் தேர்வுபெற்றதும் ஜனநாயகச் சரிவு துரிதப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஒருபுறம் அரசாங்கத்தின் கொடூர ஆளுகையில் நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. இந்த கொடூர ஒடுக்குமுறை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல்களின் மூலமாகவே அமல்படுத்தப்படுகிறது. பாசிஸ்ட்டுகள் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட பிறகும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் கவிழ்த்து, குதிரை பேரங்கள் மூலம் ஆட்சியமைப்பது ஆகியவை நம் கண் முன்னேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதனையே தரவுகளோடு சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

அனிதா
நன்றி: ஸ்க்ரால்

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்

நூல் அறிமுகம்  –  இறுதிப் பகுதி  :  அமெரிக்க மக்களின் வரலாறு

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1
படிக்க : நூல அறிமுகம் – பாகம் 2

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 3

1850-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பி பர்ஸ் ” நமது எல்லையை தொடர்ந்து விஸ்தரிப்பது தீய செயல் என்ற கோழைத்தனவாதங்கள் நம்மை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்திவிட அனுமதிக்கமாட்டேன். செயலற்று தேங்கி மந்தமாகிக் கிடக்கும் ஆசியாவின் உடலுக்கு உயிரோட்டமுள்ள அசைவுகள் ஏற்படுத்துவது அமெரிக்காவின் கடமையாகும்.” என்ற புதிய கோட்பாட்டை அறிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானது; இதன் விளைவாக அமெரிக்க முதலாளிகளுக்கு வெளிச் சந்தை உடனடியாக தேவைப்பட்டது. உள்நாட்டு நெருக்கடிகளை தணிய வைப்பதற்கு வெளிநாட்டுப் போர்கள் தேவைப்பட்டன.

இன்றளவும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆக்கிரமிப்புச் செய்யத் தயாராக இருக்கும் அமெரிக்க கொள்கைகளின் துவக்கத்தை வரலாற்று பூர்வமாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். பொதுவான முதலாளித்துவத்தின் இலாபவெறியை பின்வருமாறு எடுத்துரைக்கிறார் மார்க்ஸ்.

இயற்கை வெற்றிடத்தை வெறுப்பது போல் மூலதனம் லாபமின்மையை வெறுக்கிறது.லாபம் 10 சதம் கிடைக்கும் என்றால் அது எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யும். லாபம் 20% கிடைக்கும் என்றால் அதன் ஆர்வம் தூண்டப்படும். 50 சதம் கிடைக்குமென்றால் வலிய திமிராய் நடந்து கொள்ளும். நூறு சதம் லாபம் கிடைக்கும் என்றால் எல்லா மனித விழுமியங்களை துவம்சம் செய்ய அது தயாராகி விடும். 300 சதம் கிடைக்கும் என்றால் குறுகுறுப்பு இல்லாமல் எத்தகைய குற்றத்தையும் அது செய்யும். (மூலதனம் – முதல் பாகம் – காரல் மார்க்ஸ்)

இலாப வெறி தலைக்கேறிய நிலையில் அமெரிக்க முதலாளித்துவம் ஆக்கிரமிப்புப் போர்களைத் துவக்கியது.

படிக்க :
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !
♦ படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

புதிய எல்லையை நோக்கி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்கள்

புதிய எல்லையை நோக்கி என்ற முழக்கத்தின் கீழ் அர்ஜென்டினா, நிகராகுவா, ஜப்பான், உருகுவே, சீனா, அங்கோலா என்று அமெரிக்காவின் லாபவெறி படையெடுப்புப் பட்டியல் நீண்டுகொண்டே சொல்கிறது. பிலிப்பைன்ஸை அமெரிக்கா கைப்பற்றி தனது அடிமை நாடாக கொண்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படும் வளம் கொழிக்கும் பூமி அமெரிக்காவில் எங்கும் கிடையாது. நெல், காப்பி, கரும்பு, தேங்காய், புகையிலை, சணல் அபரிமிதமாக விளையும் செழிப்பான பூமி அது. உலகம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கு தேவையான மரச் சாமான்களை பிலிப்பைன்ஸ் அளிக்கமுடியும். இயற்கை வளங்களைச் சூறையாட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா அடுத்தடுத்து நிகழ்த்தியது.

பல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் இரு நகரங்கள் மீது முதன்முதலாக அணுகுண்டு வீசி மிகப்பெரும் மனித குல நாசத்தை செய்தது. மூலதனத்தின் வெறியாட்டம் இன்றளவும் அடங்கவில்லை. இந்த வெறியாட்டத்தை வரலாற்றில் ஒரு குட்டி நாடு திருப்பியடித்து அதிரச் செய்து.

அசாத்தியமான வெற்றி – வியட்நாம் போர்

உலக வரலாற்றில் மிகவும் செல்வந்த நாடு ஒரு சக்திவாய்ந்த தேசம்; ஒரு சிறிய நாட்டின் புரட்சிகர இயக்கத்தை ஒடுக்குவதற்காக 1964-1972 ஆண்டுகளில் அணுகுண்டை தவிர மற்ற அனைத்து வகை கொடூரமான ராணுவ முறைகளைக் கையாண்டும், அதிகபட்ச கொலைவெறியோடு படுகொலைகளை நடத்தியும் வியட்நாமை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனால் ஹோ சி மின் தலைமையின் கீழ் வியட்நாம் மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீரமும் கொண்ட போராட்டத்தின் முன்பு நிற்க முடியாமல் தோல்வியுற்று பின்வாங்கியது.

உலகின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. குண்டுவெடிப்பின் போது ஒரு சிறுமி கதறிக் கொண்டு ஓடிவரும் புகைப்படம், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் ஆத்திரத்தை அமெரிக்காவிற்கு எதிராகக் கிளப்பியது. மேலும் வியட்நாம் மக்களின் உறுதியான எதிர்ப்புப் போரில் அமெரிக்க வீரர்கள் எக்கச்சக்கமாகப் பலியாகினர். இதன் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் ஏகாதிபத்தியவாதிகள் இதுவரை கண்டிராத யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். தங்களது சொந்த மண்ணிலே அமெரிக்க மேலாதிக்க வாதிகள் இத்தகைய எதிர்ப்புகளை சந்தித்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டு அதன் கோர முகத்தை அகில உலகம் கண்டு காரி உமிழ்ந்தது. இந்த வரலாற்று விவரங்கள் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனநாயகத்தின் துரோகத்தை பற்றி மக்களுக்கு யார் சொல்வார்கள் ? “ (Who will tell the people? Betrayal of American Democracy) என்ற நூலில் இது குறித்து வில்லியம் கிரயேடர் விரிவாக விளக்கியுள்ளார். சோவியத்து பூச்சாண்டியை காட்டி பயங்கரமான மிதமிஞ்சிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு ஏராளமான பணத்தை பாதுகாப்புத்துறைக்கு பாய விட்டது. அமெரிக்க வாழ்வில் இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆயுத ஏவுகணைகள் உடன் உருவாக்க 150 கோடி டாலர் செலவிடப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்த 150 கோடி டாலரை வைத்துக்கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு 5 ஆண்டுகால நோய்த்தடுப்பு திட்டத்திற்கு செலவு செய்திருந்தால் 50 லட்சம் மரணங்களை தடுத்திருக்க முடியும்.

ஈராக் மக்களின் அழுகுரல்

அமெரிக்கா வளைகுடா நாட்டின் எண்ணெய் வயல்களை, எண்ணெய் வர்த்தகத்தை கையகப்படுத்துவதற்காக அடாவடியாக ஈராக்கின் மீது போர் தொடுத்த வரலாற்று சூழ்நிலை இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் வீழ்ச்சியின் துவக்கமாக ஈராக் மக்களின் அழுகுரல் உலகமெங்கும் உரக்கக் கேட்கிறது. யுத்தத்திற்கு எதிராக மாணவர்கள், மனிதநேயம் உள்ள அமெரிக்க மக்கள் யுத்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல்கள், இந்த நூலின் வாயிலாக நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

“தேசபக்தி – பின்னே ஒளிந்திருக்கும் வர்க்க நலன் “

தேசபக்தி – தேச நலன் என்ற போர்வைக்குள் எவ்வாறு வர்க்க நலன் ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுகிறார். “யுத்தம் தொடுக்க வெகுசிலர் முடிவெடுக்கின்றனர். அந்த யுத்தத்தின் விளைவாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்படுதல் அல்லது ஊனமுறுதலில் எதேனும் தேசநலன் இருக்கிறதா? யாருடைய நலனுக்காக இதைச் செய்கிறோம்? என குடிமக்கள் கேட்கக் கூடாதா? வரலாற்றை கற்க தொடங்கியதும் என்னை ஒரு விஷயம் கடுமையாக பாதித்தது. விசுவாசம், உறுதி மொழிகள் மூலமும் தேசிய கீதங்கள் இசைத்தல், தேசிய கொடிகளை அசைத்தல் மூலமும், வாய்ச்சவடால் உரைகள் மூலமும் குழந்தைப் பருவத்திலேயே புதிய உத்வேகம் ஆழமாகப் பதிய வைக்கப்படுவது என்னை மிகவும் பாதித்தது. நமது மனங்களில் இருந்து எல்லைகளைத் துடைத்து எறிந்துவிட்டால் உலகமெங்கிலும் இருக்கும் குழந்தைகள் நமது குழந்தைகள் போன்றவர்களே!”

படிக்க :
♦ பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்

“ஒரு விரிந்த சிந்தனையை மேற்கொண்டு சிந்திக்கத் துவங்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கத் துவங்கினால், வியட்னாமில் ‘நாபாம்’ குண்டுகளை வீச மாட்டோம்; ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட மாட்டோம். எங்கும் யுத்தங்களை தொடங்க மாட்டோம். ஏனென்றால் யுத்தங்கள், நமது காலத்தின் யுத்தங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாகவே இருக்கின்றன” என்று அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிரான தனது மனிதநேயக் குரலை இந்நூலாசிரியர் அழுத்தமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பொய்களும் – புரட்டுகளும் – பேராசையும் – மமதையும் – அறியாமையும் – உணர்ச்சியற்ற குணமும் – சுயநலமும் – குரூரமும் – பழிவாங்குதலும் – அநீதியும் – லஞ்ச லாவண்யமும் – சுரண்டலும் நிரம்பிய காவியம் ஆகிவிட்டது அமெரிக்காவின் வரலாறு. அமெரிக்க செல்வச் செழிப்பு, வலிமை ஆகியவற்றுடன் மனித உணர்ச்சியற்ற தன்மை; சுயநலம் ஆகியவை இணைந்து இருப்பதுதான் மனிதகுல அனுபவத்தின் மிகப்பெரும் பேரழிவு ஆயுதம் (Weapon of Mass Destruction) என்பதை அமெரிக்கா அனுபவத்தின் மூலம் மனித குலம் கற்றுக் கொண்டுள்ளது.( புஷ்பா எம் பார்க்கவா இந்து நாளிதழ் 26-6-03)

அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி, “அடாவடி அரசுகள் உலக விவகாரங்களில் வன்முறையின் ஆளுமை” (Noam Chomsky – Rougue states-Rule of force in World affairs) என்ற விரிவான நூலை வெளியிட்டார். லட்சக்கணக்கான பழங்குடி மக்களை கொலை செய்தது; அவர்களது நிலங்களை திருடியது. லட்சோப லட்ச கருப்பின மக்களை ஆப்பிரிக்காவில் பிடித்துவந்து அடிமையாகி; ஈவிரக்கமில்லாமல் அவர்களது உழைப்பைச் சுரண்டியது; இனப்படுகொலை செய்தது. மனிதநேயமற்ற கொடூரங்கள் இவையே அமெரிக்காவின் அடித்தளம் என்பதை நோம் சோம்ஸ்கி இந்நூலில் நிறுவியுள்ளார். “அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கதிரவன் அஸ்தமித்து விடும். நிச்சயம் இது நடந்தே தீரும்; நோம் சோம்ஸ்கியின் இந்தநூல் நீடித்து நிலைக்கும்” என எழுத்தாளர் அருந்ததிராய் உறுதிபடக் கூறுகிறார்.

அமெரிக்காவைப் பற்றி இதுவரை வெளிவந்த நூல்களிலே முற்றிலும் மாறுபட்டதாக “அமெரிக்க மக்களின் வரலாறு” என்ற இந்த நூல் திகழ்கிறது. அமெரிக்க மக்களின் –  அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் – அமெரிக்க ஜனநாயக சக்திகளின் – போர்க்குணமிக்க போராட்ட மரபை புதிய கோணத்தில் இந்த நூல் நமக்கு விளக்குகிறது. சிறந்த வரலாற்று அறிஞரும் பேராசிரியருமான ஹாவார்ட் ஜின் அமெரிக்கா பற்றிய ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்கியுள்ளார்.

“ஆழ்ந்த தூக்கத்திற்கு பின் எழும்
சிங்கங்களை போல் எழுங்கள்!
வெல்லப்பட முடியாத எண்ணிக்கையில் எழுங்கள்!
உங்கள் விலங்குகளை தரையில் அடித்து பனித்துளி போல் உடையுங்கள்!
நீங்கள் தூங்கும்போது விலங்கிடப்பட்டவர்கள்!
நீங்கள் பலர்; அவர்களோ வெகு சிலர்.”

என்ற கவிஞர் ஷெல்லியின் கவிதை வரிகளோடு இந்த நூலை நிறைவு செய்துள்ளார் ஹாவாட் ஜின்.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசை எதிர்த்த போராட்டப் பேரலை அமெரிக்க மண்ணில் விரைவில் உருவாகும். அமெரிக்க உழைக்கும் மக்கள் சமத்துவ விடியலுக்கான போராட்ட திசைவழியில் வெற்றி பெறுவார்கள். இந்த சிறப்பான நூலை சிந்தன் புக்ஸ் நிறுவனத்தார் தமிழில் வெளியிட்டுள்ளனர்; இந்த அற்புதமான நூலை மொழியாக்கம் செய்த மாதவ் உள்ளிட்ட குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தியாவில் சமூக மாற்றத்திற்காக போராடும் சமத்துவ போராளிகள்; ஜனநாயக சக்திகள் இந்த நூலை படித்துப் பயன்பெற வேண்டும். மொழிபெயர்ப்பில் சில குறைகள் இருந்தாலும் இந்த நூல் நிகழ் காலத்தின் தேவைகளில் ஒன்றாகும்.

(முற்றும்)

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்

0

பாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்

1870-ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது படையினரால் சிறை பிடிக்கப் பட்டிருந்தார். அன்று பிரஷியன் என அழைக்கப்பட்ட ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரை சுற்றி வளைத்தன. மன்னராட்சி சரணடைந்த படியால், செப்டம்பர் 4-ம் தேதி குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. அதற்கு பாரிஸ் உழைக்கும் வர்க்க மக்களின் அழுத்தமும் ஒரு காரணம்.

ஜெர்மன் படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருந்த பாரிஸ் நகரில் பல மாத கால பட்டினிக்கு பின்னர் தொழிலாளர்கள் புதிய குடியரசை ஒரு ஜனநாயகக் கம்யூனாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆனால் அதுகுறித்து பூர்ஷுவா குடியரசு அக்கறைப் படவில்லை . 22 ஜனவரி நடந்த தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் கடுமையாக அடக்கப் பட்டது.

28 ஜனவரி, பிரான்சின் குடியரசும் ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது. பிரெஞ்சுப் படையினரிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. ஆனால் தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த பாரிஸ் இராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தது.

படிக்க :
♦ மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
♦ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்

18 மார்ச், வெர்சேய் நகரில் இருந்து இயங்கிய பிரெஞ்சு பூர்ஷுவா அரசு தனது இராணுவத்தை அனுப்பி பாரிஸ் பிரிவின் ஆயுதங்களை களையுமாறு உத்தரவிட்டது. ஆனால் அங்கு ஒரு மோதல் நிலையை எதிர்கொண்ட படையினர் பாரிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்தனர். அந்தக் கணத்தில் இருந்து ஆயுதமேந்திய தொழிலாளர்கள் பாரிஸ் நகரின் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டனர்.

வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். சர்வதேச சோஷலிச இயக்கங்களை பொறுத்த வரையில், பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள். இதைத் தான் கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்று சொன்னார். அதாவது உண்மையான பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த சிறுபான்மையினரின் ஆட்சிக்கு மாறாக, பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

பாரிஸ் கம்யூன் ஒரு குறுகிய காலம் மட்டுமே நீடித்த போதிலும் அன்று அது பல முற்போக்கான திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. உதாரணத்திற்கு இரவு வேலைகளும், சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதும் இரத்து செய்யப் பட்டன. கல்வித்துறையில் கத்தோலிக்க திருச் சபை கொண்டிருந்த இரும்புப் பிடி துண்டிக்கப் பட்டது. அத்துடன் பெண்களும் கம்யூன் உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.

அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் கம்யூன் நிர்வாகத்தை நடத்தினார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அகற்றப் படலாம். மேலும் அவர்களது வேலைக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு சமமான ஊதியம் வழங்கப் பட்டது. போலிஸ், இராணுவம் இல்லாதொழிக்கப் பட்டு, ஆயுதபாணிகளான மக்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

கம்யூன் நிர்வாகம் குறித்து கார்ல் மார்க்ஸ் எழுதியதாவது:
” மூன்று அல்லது ஆறு வருடங்களுக்கொரு தடவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தவும், அடக்குவதற்கும் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரை அனுப்பலாம் என்பதற்குப் பதிலாக, பொதுவான வாக்குரிமை கம்யூன் ஒருங்கமைத்த மக்களுக்கு சேவையாற்றும்.”

பழைய முதலாளித்துவ அரசை அகற்றி விட்டு அதனை உழைக்கும் வர்க்கத்தின் தன்னாட்சி அதிகாரமாக மாற்றியமைப்பதில் கம்யூன் மிகப் பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும் அது இந்த விடயத்தில் நீண்ட தூரம் செல்லாத படியால், அதுவே வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகியது. உதாரணத்திற்கு முதலாளித்துவ பணப் பரிவர்த்தனையை நிறுத்தும் நோக்கில் தேசிய வங்கியை கம்யூன் பொறுப்பெடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல, கம்யூன் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

அவர்கள் எந்த விதத் தடையும் இல்லாமல் கம்யூனைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட முடிந்தது. அதே நேரம் கம்யூன் தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தனர். அங்கே வாழ்ந்த விவசாயிகள் அவர்களது கூட்டாளிகள் என்பது மட்டுமல்லாது ஒரே ஆளும் வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே, யுத்த சூழ்நிலை நிலவிய போதிலும் ஜெர்மன், பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையிலான பகைமையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தன. இல்லாவிட்டால் அவர்களுக்கு பொதுவான வர்க்க எதிரியான பாரிஸ் கம்யூன் இலகுவாக தோற்கடிக்க முடியாது எனக் கண்டு கொண்டனர். வேர்செயில் இருந்த பிரெஞ்சு அரசு புதிய இராணுவத்தை உருவாக்குவதற்கு உதவியாக, அதுவரை காலமும் ஜெர்மன் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் படையினர் ஜெர்மன் சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டனர்.

மே மாதம் 21 ம் தேதி, கம்யூன் கட்டுப்பாட்டில் இருந்த பாரிஸ் நகரைக் கைப்பற்றுவதற்காக புதிய பிரெஞ்சு இராணுவம் படையெடுத்து வந்தது. அப்போதும் பாரிஸ் நகரை சுற்றிவளைத்து நின்று கொண்டிருந்த ஜெர்மன் படையினர், அவர்களுக்கு வழிவிட்டனர். அடுத்து வந்த எட்டு நாட்களும், கம்யூன்வாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரெஞ்சுப் படையினர் ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.

1871ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி, பாரிஸ் கம்யூன் ஒரு துயர முடிவுக்கு வந்தது. அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, பாரிஸ் கம்யூன் இருந்தமைக்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டன. இன்று எஞ்சியிருப்பது நிராயுதபாணிகளான கம்யூன்வாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய ஒரு மதில் சுவர் மாத்திரமே. அந்த இடம் இன்றும் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது.

கலையரசன்
நன்றி : கலையகம்

disclaimer

கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !

பாஜக என்றாலே குற்றக் கும்பல் என்று பொருள்படும் வகையில்தான் அந்தக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுமே இருக்கின்றன. நிதி மோசடி தொடங்கி, பாலியல் வன்முறை வரை அனைத்து விதமான குற்றங்களையும் செய்தவர்கள்தான் அந்தக் கட்சியில் குடி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக அமைச்சர்கள் 6 பேர் தங்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்படுவதற்குத் தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் அவலமும் நடந்திருக்கிறது.

கர்நாடக பாஜக-விற்கென்றே ஒரு தனி பாரம்பரியம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கர்நாடக சட்டமன்றத்திலேயே அமர்ந்து கொண்டு தனது மொபைலில் ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தற்போதைய முதல்வரான எடியூரப்பா தொடர்பான பாலியல் புகார்கள் சந்தி சிரிக்கத் துவங்கின. கடந்த 2020-ம் ஆண்டில் காவிரி நீர் திறப்பு விழாவில் நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவுடன் எடியூரப்பா நடந்து கொண்டது முதல், சமீபத்தில் எடியூரப்பா வீட்டிலேயே எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை கைவசம் வைத்து சிலர் மிரட்டுவதால்தான், எடியூரப்பா சம்பந்தம் இல்லாத நபர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருப்பதாக அவரது கட்சியின் பிரமுகர்களே கூறியிருப்பது வரை அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில், கர்நாடகா பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் முலாலி என்பவர், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட 19 பேரின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் அறிவித்தார். அந்த வீடியோக்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு போலீசு கோரியது. இதைக் கேள்விபட்டு பயந்து அலறிப்போன பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர், தாங்கள் தொடர்புடைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது என பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவும் பெற்றனர்.

பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.

பாஜக ஒரு கட்சியே அல்ல, அது குற்றக் கும்பலின் கூடாரம். பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் கொலைகார கிரிமினல்களைக் கொண்டே கட்சியைக் கட்டியமைத்து, கலவரம் செய்து பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் பாஜகவை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிவதுதான் காலத்தின் அவசியமாக இருக்கிறது !

கருத்துப்படம் :

கருத்துப்படம் : மு.துரை

தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

PP Letter headன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓட்டு கேட்பதும் ஓட்டுப்போடுவதும் வியாபாரமானது!
உரிமையெல்லாம் குப்பைக்குப் போனது!
இம் என்றால் சிறை, ஏனென்றால் துப்பாக்கிச் சூடு!
இனியும் தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு?

நாடாளுமன்றம் முதல் ஊராட்சி மன்றம் வரை
எல்லாமே கார்ப்பரேட்டுகள் கையில்!
எதை மாற்றப் போகிறாய் நீ வைக்கும் மையில்?

கிராம சபை தீர்மானத்தை
கலெக்டர் ரத்து செய்யலாம்!
சட்டமன்ற தீர்மானத்தை
கவர்னர் செல்லாக் காசாக்கலாம்!

மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு,
நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல்?

சீமான்-கமலஹாசன்-சரத்குமார்-டிடிவி:
எல்லாமே ஓரணி, பா.ஜ.க.தான் பின்னணி!

தமிழகத்துக்கு ஒரு மாதத்தில் ஒரே கட்ட ‘ஜனநாயகம்’
மேற்கு வங்கத்துக்கு ரெண்டு மாத எட்டு கட்ட ‘ஜனநாயகம்’
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடும் தேர்தல் கமிசன்,
பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலின் ஏஜெண்டே!

ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் வாங்குவதையும்
கள்ள ஓட்டையும் தடுக்க முடியாது;
கண்டெய்னர் பணத்துக்குக் கணக்கு சொல்லமுடியாது!
நேத்துவரைக்கும் லஞ்சம் வாங்குன அதிகாரி
இன்னைக்கு நேர்மையான தேர்தல் அதிகாரியாம்!
நம்பாதே, நம்பாதே, இது நேர்மையான தேர்தல் என்று நம்பாதே!

மீத்தேன், சாகர் மாலா, எட்டுவழிச் சாலை;
ஜி.எஸ்.டி., நீட், புதிய கல்விக் கொள்கை;
வேளாண் சட்டத் திருத்தம்,
தொழிலாளர் சட்டத் திருத்தம்,
மின்சார சட்டத் திருத்தங்கள்…
எதையும் தடுக்க முடியாதென்றால், தேர்தல் எதற்கு?

கோடீசுவரர்கள், கிரிமினல்களின் கூடாரமாய்
சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு
கங்காணிகளாய் கலெக்டர்கள், அதிகாரிகள்!
நீதியை விலைபேசும் நீதிபதிகள்!
வல்லுறவு – கொலை – வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு!
அரசும் சமூகமும் அழுகி நாறுது!
அதற்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகிறது!

சென்னையிலே அரசாங்கம், டெல்லியிலே அதிகாரம்!
பார்ப்பன மயமாக்கமே தேசியக் கலாச்சாரம்!
இதற்கு சட்டமன்றத் தேர்தல் ஒரு அரிதாரம்!
காவிதான் கொள்கை என்றான பிறகு
தேர்தல் எதற்கு, வாக்கு எதற்கு?

போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு!
மக்கள் அதிகாரத்தைக் கட்டி எழுப்பு!

அம்பானி, அதானி சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்!
கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி,
மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும்
தனியார்மயத்தை ஒழித்து பொது உடமையாக்குவோம்!
வளர்ச்சி என்ற பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட
சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும்
கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கான
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

 

பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !

ந்தியா போன்ற சாதிய சமூகத்தில், நவீன தொழிற்துறையில் ஆணாதிக்கமும் சாதியும் மூலதனமும் ஒன்றிணைந்து பெண்களின் மீது செலுத்தும் ஆதிக்கம் மிக நுட்பமானதாக இருக்கிறது. பெண்களின் விடுதலை குறித்துப் பேசும் பலரும், உழைக்கும் பெண்கள் மீதான ஆணாதிக்க சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டலைப் பற்றிப் பேசுவதில்லை.

கடந்த ஜனவரி 1-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நாச்சி அப்பேரல்ஸ் என்னும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இளம் பெண் செயஸ்ரீ என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், அதே தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்த தங்கதுரை, செயஸ்ரீக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் சம்பவம் நடந்த அன்று தங்கராஜும் அவரது உறுவினர் ஜெகநாதனும் சேர்ந்து செயஸ்ரீயை கொலை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த செய்தி எந்த ஒரு தேசிய ஊடகங்களிலும் பேசப்படவில்லை.

படிக்க :
♦ உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

செயஸ்ரீ கொல்லப்பட்டதை சாதாரண கொலையாக மட்டும் கடந்து போகமுடியாது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் பெண்கள் அதிகமாக வேலை செய்யும் ஜவுளி தொழிற்சாலைகளில் அடிக்கடி நடக்கக்கூடியதாக இருக்கிறது.

பெண்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கும், இந்த ஆலைகளின் நிர்வாகங்கள், பெண்களின் பாதுகாப்புக்கு எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. செயஸ்ரீ படுகொலையிலும் அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறது நாச்சி அப்பேரல்ஸ் நிறுவனம்.

சர்வதேச அளவிலான ஏற்றுமதிக்காக உள்ளூர் பெண்களின், குறிப்பாக கிராமப்புற பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

செயஸ்ரீ படுகொலை தொடர்பாக, தமிழ்நாடு ஜவுளி மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம், ஆசிய ஊதிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து சமர்பித்த உண்மையறியும் குழுவின் அறிக்கையில், செயஸ்ரீ தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தை சேர்ந்த செயஸ்ரீ, நாச்சி அப்பேரல்ஸில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து வேலை செய்து வருகிறார். முதுகலை படிப்பு படித்து வந்த செயஸ்ரீ தனது படிப்பு செலவுக்காக இரவு நேர சிஃப்டில் (4.30pm – 1am) பணியாற்றிவந்தார்.

தனது வேலைப் பொறுப்பாளரான தங்கதுரை மீது வேலை நிமித்தமாக புகார் கொடுத்ததில் இருந்து தொடர்ந்து செயஸ்ரீயை சாதிய ரீதியில் சாடியும், பாலியல் துன்புறுத்தல் செய்தும் மிரட்டியுள்ளார் தங்கதுரை.

இது பற்றி ஆலையில் பணிபுரியும், பெயர் கூற விரும்பாத நபர்கள் சிலர் ஒருமித்த குரலில் சொல்வது, “தலித் பெண் என்பதால்தான் செயஸ்ரீ கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்பதுதான். தங்கதுரை தங்களையுமே சாதியரீதியில் இழிவுபடுத்துவார் என்பதையும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

1980-ள் வரை தலித் மக்கள் ஜவுளி ஆலைகளில் வேலைசெய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் துப்புரவு பணிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கான தேவை அதிகமான போது, தலித் மக்களை குறைந்த கூலிக்கு வேலையில் சேர்த்துகொண்டனர். ஆனால், நிர்வாகம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு ஆதிக்க சாதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மறுகாலனியாக்கத்தின் தாக்கத்தால் விவசாய பொய்த்துப் போன நிலையில் மதுரை, தேனி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரும் குறிப்பாக நிலமற்ற தலித்துகள் திண்டுக்கல், திருப்பூர் போன்ற ஜவுளித்துறை நகரங்களை நோக்கி அடிமாட்டுக் கூலிக்குப் பணிபுரிய அனுப்பப்பட்டனர்.

ஜவுளித்துறை நிறுவனங்களில் ஆட்களைச் சேர்த்து விடுவதையே தொழிலாகச் செய்து வரும் தரகு நிறுவனங்களும், தரகர்களும் பெண்களின் பெற்றோரிடம் துவக்கத்திலேயே, உங்கள் மகள் ஓடிப்போனால் ஆலை நிர்வாகம் பொறுப்பல்ல” என்று ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

படிக்க :
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

உற்பத்தியின் உலகமயமாக்கல், பெருமளவில் பெண்களை ஆலைக்கு குறிப்பாக ஜவுளி ஆலைகளுக்கு மலிவு விலை தொழிலாளர்களாக இழுத்துவந்திருக்கிறது. ஜவுளி ஆலைகளில் பெருமளவில் பெண்கள் வேலை செய்தாலும், நிர்வாகம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படி அழைத்து வரப்படும் பெண்கள் அடிமாட்டுக் கூலிக்குப் பணியமர்த்தப்படுகிறார்கள். காரணம், எவ்வளவு வேலைகளைக் கொடுத்தாலும் செய்துவிடுகிறார்கள் என்பதோடு, அடிக்கடி விடுமுறை எடுப்பது என்பது போன்ற தொல்லை கிடையாது என்பதுதான்.

உழைப்புச் சுரண்டல் ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் சாதியரீதியான ஏற்றத்தாழ்வு மிகவும் உக்கிரமாகவும் இங்கு நிலவுகிறது. சூப்பர்வைசர்களை எதிர்த்துப் பேசினாலோ, பாலியல் வக்கிரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலோ, சாதிய ரீதியான வசைபாடுகளும் தொடர்ந்து சொல்ல முடியாத அளவிற்கு பாலியல் துன்புறுத்தல்களும்தான் தண்டனை.

இந்த தொடர்ச்சியான துன்புறுத்தலில் மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் இழப்பீடு கொடுத்து முடித்துவிடுகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே, 62 ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் 90% பேர் தலித் அல்லது புலம்பெயர் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Fabric of Slavery” என்று கடந்த 2016 ஆண்டு வெளிவந்த அறிக்கை, 2,286 பெண் தொழிலாளர்களை நேர்காணல் செய்தது. இந்த அறிக்கை தயார் செயவதற்காக, பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற Focus Group Discussion என்னும் விவாதக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், “பெண் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யுமிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் செய்வதே இல்லை. அவர்களுடன் வேலை செய்யும் பெண்களிடம் மட்டுமே சொல்கிறார்கள்” என்பது தெரியவந்தது.

இந்த ஆய்வுக்கு மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்ட 743 ஆலைகளில், 64 ஆலைகளில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின். 743 ஆலைகளில் வெரும் 10 ஆலைகளில் மட்டுமே முறையான தொழிற்சங்கங்கள் இருக்கின். அதாவது 94% ஆலைகளில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த அமைப்புகளும் இல்லை என்பதே நிதர்சனம்.

சொல்லிக்கொள்ளப்படும் நவீனமயமான உலகம் என்பது அதன் சமூக பிற்போக்குதனங்களை சூழலுக்கு ஏற்றாற்போல தகவமைத்து எடுத்துக்கொள்கிறது. தொழிற்சாலைகளில் இன்னும் சாதி உக்கிரமாகவே இருக்கிறது. அது குறிப்பாக தலித் பெண்களை வேட்டையாடுவதாக இருக்கிறது.

சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெண்கள் எப்படி வெவ்வேறு நிலைகளில் ஒடுக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தியாவின் ஜவுளித்துறை உழைப்புச் சந்தை ஒரு சான்று. பெண்களை பணியிடங்களில் நடக்கும் இத்தகைய சாதிய, பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றுதிரட்டி போராடுவதற்கான அமைப்புகள் இல்லை.

முதலாளித்துவம் பேசும் பெண் விடுதலை என்பது முழுக்க முழுக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண்களை மூழ்கச் செய்வதற்கு இடையூறாக இருக்கும் சமூகக் கலாச்சார தடைகளை உடைப்பதைப் பற்றியதாகவே இருக்கிறதே ஒழிய, மலிவான கூலிக்கும் பாலியல் வன்முறைக்கும் பலியாகும் பெண்களுக்கான விடுதலை குறித்துப் பேசுவதாக இல்லை.

பெண் விடுதலை, பெண்ணியம் என்று பொதுவாக பேசும்போது, உழைக்கும் பெண்களின் மீதான மூலதனத்தின் ஆதிக்கம் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனாலே, இது வெரும் மகளிர் தினமல்ல, சர்வதேச உழைக்கும் மகளிர் தினமென்று திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி மூலதனத்தின் உழைப்புக் கொட்டடிகளில் வதைக்கப்படும் போது பெண்களுக்கான விடுதலை பற்றி பேசாமல் இருக்கும் எந்த பெண்ணியமும் உயிரற்றதே.


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : Caravan magazine

யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

த்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் மீண்டும் செய்தியில் பேசு பொருளாகியுள்ளது. இந்த முறை 50 வயது மதிக்கத்தக்க அவனிஷ் குமார் சர்மா எனும் விவசாயி பட்ட பகலில் கொலை செய்யப்பட்ட நிகழ்வை ஒட்டியே பேசுபொருளாக மாறியுள்ளது ஹத்ரஸ். ஹ்ரைச் மாவட்டத்தில் வசிக்கும் கவுரவ் ஷர்மா 5 பேருடன் இணைந்து அவனிஷ் குமார் ஷர்மாவை உரிமம் பெறாத துப்பாக்கிகளால் பலமுறை சுட்டு கொலை செய்துள்ளான்.

கடந்த 2018-ம் ஆண்டு தன் 23 வயது மகளை பாலியல் சீண்டல் செய்த கவுரவ் ஷர்மாவிற்கு எதிராக அவனிஷ் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்த காணத்தினால்தான் இந்தக் கொலை நடந்திருப்பதாக இறந்தவரின் சகோதரரான சுபாஷ் சந்திர ஷர்மா, தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அந்த 5 குற்றவாளிகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லவரத்தை தூண்டுதல், கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தைத் தூண்டுதல், ள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

அந்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பியிருப்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்க கூடும். ஆனால், இந்த வழக்குகளில் போலிசு நடவடிக்கை எடுக்காமலிருப்பது இன்னும் மிகுந்த நெருடலுக்கு உரியதாக இருக்கிறது. வ்னிஷ் ஷர்மாவை வழக்கை வாபஸ் வாங்குமாறு பலமுறை கவுரவ் ஷர்மா மிரட்டிதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

அவனிஷின் மகள் அந்த கொடூரமான நிகழ்வை விவரித்தும் இதற்கு நீதி கேட்டும் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைராலானபோது, மூத்த போலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவரை கைது செய்தனர். எங்கள் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்ய முடியாவிட்டாலும், முதன்மை குற்றவாளி கவுரவ் ஷர்மா கைதுசெய்யப்படுவதுதான் என் தந்தையின் மரணத்திற்கான நீதியை உறுதிபடுத்துவதாக இருக்கும் என்றார், அந்த 23 வயது பெண்.

படிக்க:
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
♦ ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

தி வயர் இணையதளத்திடம், பாலியல் தொல்லைகளை தான் எதிர்கொண்ட 2018 –ம் ஆண்டு காலத்தில் மனம் சோர்ந்து தளர்ந்து போயிருந்ததாக அப்பெண் கூறினார். ‘’என் தந்தை ஒருவர்தான் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் மற்ற தந்தைகளை போன்றவர் அல்ல. அவர் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் போல்பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான தனது மகளுக்காக போராட பயப்படவோ, வெட்கப்படவோ இல்லை. அவருடைய நடவடிக்கை எனக்கு நம்பிக்கை அளித்தது. அதனை தொடர்ந்து வழக்கு தொடுக்க நான் முன்வந்தேன்.’’

கவுரவ் ஷர்மாவும், அந்த 23 வயது பெண்ணும் ஒரு சில அண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக சில செய்திதாள் செய்தி வெளியிட்ட சமயத்தில் அந்த பெண்ணின் உறவினர் அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அந்தக் குற்றவாளி விருப்பம் தெரிவித்திருந்தான். ஆனால், அப்பெண்ணின் குடும்பத்துக்கும், அப்பெண்ணுக்குமே விருப்பம் இல்லை . மறுப்பு தெரிவித்த பிறகும் அவனுடைய பாலியல் தொல்லைகள் தொடர்ந்தன”, என்றார்.

‘’என்னை முகநூலில் அவனுடைய நண்பராகுமாறு கேட்டு முதன்முதலாக தொடங்கினான். நான் மறுத்தபோது என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போது அவன் சிறைக்கு அனுப்பபட்டான். வெகு விரைவில் வெளியே வந்தான். அதே ஆண்டு அவன் அந்த வழக்கை வாபஸ்வாங்குமாறு வற்புறுத்தினான்’’ என்று நினைவு கூர்கிறார் அந்த 23 வயது பெண்.

2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இதச பிரிவுகள் 452 (காயம் ஏற்படுத்துவற்கு தயாரிப்போடு வந்து அத்துமீறி நுழைதல், தாக்குதல் அல்லது வன்முறை பிரயோகம் , 354 ( ஒரு பெண்ணின் மாண்பை கெடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஒரு குற்ற செயல்) மேலும் 506 ( கிரிமினல்தனமான மிரட்டல்). குற்றம் நிரூபிக்கப்பட்டால் 354 பிரிவு இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும். பிரிவுகள் 506 மற்றும் 452 ஆகியவை 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும்.)

ஒரு மாதம் சிறையில் இருந்த கவுரவ் ஷர்மா நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்க பிணையில் விடுவிக்கப்பட்டான்.

தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் உடலை தூக்கிச் செல்லும் பாதிக்கப்பட்ட பெண்

அவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது, அவனுக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது, என்கிறார் அந்த பெண். ‘’ 2019-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அவன் என் தந்தை விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டு அவரை தாக்க முயற்சித்தான். அவன் மீண்டும் ஒரு முறை வழக்கை வாபஸ் வாங்க கூறி மிரட்டினான். என் அப்பா தப்பித்துவிட்டார்.’’ என்றார் அவர்.

அச்சமயத்தில் அவர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். அந்த நகலை தி வயர் இணையதளத்தால் பெற முடிந்தது. அவனிஷ் குமார் ஷர்மா கொடுத்த புகாரில் ‘’அவன் [கவரவ் ஷர்மா] என்னை கொல்வதற்கு துரத்திக்கொண்டு ஓடி வந்தான். தயவு செய்து விசாரணை செய்யுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும், புகார் கொடுக்கப்பட்டிருந்த சசானி காவல் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு தி வயர் இணைய தளம் இதுகுறித்து கேட்டபோது, ‘’2019 லிருந்து அப்படி ஒரு புகார் அங்கே பதிவு செய்யப்படவில்லை என்றார். 2018-ல் மட்டுமே அந்த பையன் சிறைக்கு ஒரு மாதம் சென்றிருந்த வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் கூறிய அவர், அந்த கொலைக்கு பிறகு பாதிக்கப்பட்டவரின் வீட்டருகே காவலர்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர் என்றார். தொடர் அச்சுறுத்தலில் இருந்த போதும் ஏன் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது என்று தி வயர் ஆசிரியர் கேட்டதற்கு, ‘’அப்படி ஏதும் தாமதம் இல்லை’’ என்று போலீசு கூறியுள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பல மாதங்களாக கவ்ரவ் ஷர்மாவிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. அந்த குற்றவாளிக்கு 2020 ல் திருமணம் ஆகி அதன் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தபோது அவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். 23 வயதான அந்த பெண் நினைவு கூர்கிறாள், ’’அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது, இனி இது போல் நடந்துகொள்ள மாட்டான் என்று நான் நினைத்தேன். அவனுக்கு ஒரு ஒரு மகளும் பிறந்துவிட்டது. எனவே இனி வேறு ஒருவருடைய மகளுக்கு அவன் தொல்லை கொடுக்க மாட்டான் என்று நினைத்தேன். ஆனால் நான் அவ்வாறு நினைத்தது தவறாகிவிட்டது.’’

மார்ச் 1 அன்று என்ன நிகழ்ந்தது.?

கொலை நடப்பதற்கு முன்பு, மார்ச் 1 அன்று காலை நேரத்தில் 23 வயதான அந்த பெண்ணும் அவளுடைய மூத்த சகோதரியும் அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கே, அவர்கள் கவ்ரவ் ஷர்மாவின் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் எதிர்பாராத விதமாக எதிர்கொள்ள நேர்ந்தது.‘’ அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கக் கூறி மிரட்டினர், என்னை கெட்ட வார்த்தையால் திட்டினர். இறுதியாக நான் என்னை விடுங்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் இனி இங்கு வன்முறைதான் தீர்வு என்றனர். இதன் பொருள் என்னவென்றால், ஏற்கெனவே நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட ஒரு செயல் தான் அந்தக் கொலை’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த பெண்.

அந்த வாய் சண்டை அந்த கோயிலிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பாதிக்கப்பட்டவரின் விவசாய நிலத்திற்கு அருகில் நிகழ்ந்தது. ‘’எனது அப்பா தலையிட்டு அமைதியான முறையில் அவர்களை செல்லவிடுங்கள் என்று கேட்டபோது, கவ்ரவ் ஷர்மாவின் மனைவி உன்னை கொன்று விடுவேன், வழக்கை வாபஸ்பெறவில்லை என்றால் சுட்டுகொன்று விடுவேன் என்றாள்,’’ என்று நினைவுகூர்கிறார் அந்த இளம் பெண்.

படிக்க :
♦ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அந்த விவசாய நிலத்திலிருந்து 200 மீட்டர் தூரம் கூட இருக்காத அவருடை வீட்டிற்கு தன் மகள்களை செல்லுமாறும், சென்று கதவை உட்புறமாக கவனமாக பூட்டிக்கொள்ளுமாறும் அவனிஷ் கேட்டுக்கொள்கிறார். அவர் தனது நிலத்தில் வேலை செய்வதை தொடர்ந்தார். நானும் என் சகோதரியும் எனது அப்பாவிற்கு மதிய உணவு எடுத்து சென்ற போது, கவ்ரவ் ஷர்மா மீண்டும் 11.30 மணிக்கு அழைத்து வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அவர் எங்களிடம் சொன்னார். அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிடவில்லை.’’ என்று அந்த பெண் கூறினார்.

சுமார் மதியம் ஒரு மணிக்கு அந்த இளம் பெண் சசானி காவல் நிலையத்தில் உள்ள தர்மேந்திரா என்ற நம்பகமான போலிசு அதிகாரியை அழைத்தார். அந்த காவல் நிலையம் அந்த கிராமத்திலிருந்து 7-8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவர், பாதிக்கப்பட்டவர்களின் அந்த இடத்தை அடைய நேரம் ஆகும் என்பதால் 112 அவசர எண்ணை அழைக்குமாறு கூறினார்.

‘’கவ்ரவ் ஷர்மா வந்து எங்களை மிரட்டினால் 112 எண்ணை அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வந்து போது எந்த ஒரு எண்ணிற்கும் தொடர்புகொள்ளும் ஒரு நிலையில் நான் இல்லை.’’ என்று தி வயரிடம் கூறினாள், அந்த பெண்.

மாலை 3.30 மணிக்கு கவ்ரவ் ஷர்மாவும் மற்ற 5 பேரும் ஒரு காரில் வந்தனர். அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவனிஷ்ஷூம் மற்ற தொழிலாளர்களும் வேலை செய்துகொண்டிருந்த நிலத்தை நோக்கி வந்தனர். ‘’அவர்கள் வந்து மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் முகமாக பிஸ்டல் துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டனர். அவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். அவர்களுடைய இலக்கு என் அப்பா. அவர்கள் என் அப்பாவை பலமுறை சுடும் போது, நான் அருகில் உள்ள குழாய் கிணற்றில் ஒளிந்துகொண்டேன். அவர் நிலை குலைந்து கீழே விழுந்த பிறகு அவர்களில் ஒருவன் அவரின் இறப்பை உறுதிசெய்கிற வகையில் மிக அருகில் சென்று சுட்டான். நான் அங்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் பார்த்தேன். நான் அச்சத்தில் உறைந்திருந்தேன்.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த 23 வயது பெண்.

அப்போது அங்கே இருந்த என் அம்மாவை நோக்கி ஒரு புல்லட் குண்டு வந்தது. அதில் என் அம்மா தப்பினாள். வந்த 6 பேரில் 4 பேர் கவ்ரவ் ஷர்மா, லலித் ஷர்மா, நிகித் ஷர்மா, மற்றும் ரோகித் ஷர்மாஎனக்கு அடையாளம் தெரியும் என்று அந்த பெண் கூறினாள்.

துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, ஒரு கூட்டம் கூடியது, போலிசும் வந்தது. கொலையுண்ட நபர் முதலில் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துசெல்லப்பட்டார். அங்கு, இறந்து கொண்டுவரப்பட்டதாக அறிக்கப்பட்டது.

குடும்பத்தின் ஆதாரமானவர் :

அவனிஷ் குமார் ஷர்மாவுக்கு இரு சகோதர்களும், நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவர்கள் யாரும் கிராமத்தில் இல்லை. ‘’எனது பெரியப்பாவும், சித்தப்பாக்களும் கிராமத்திற்கு வெளியே வசிக்கின்றனர். என்னுடய அப்பாதான் குடும்ப வாழ்வின் முழு ஆதாரம். எங்களுக்கு நிலம் இருப்பது உண்மை. ஆனால், அவரின்றி என் அம்மாவாலோ அல்லது என்னாலோ அங்கே வேலை செய்யமுடியாது. இப்போது, எங்களையும், வீட்டையும் காப்பதற்கு யாரும் இல்லை.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கண்ணீர் மல்க கூறினார் அந்த பெண்.

அந்த பெண்ணின் பெரியப்பா சுபாஷ் சந்திர ஷர்மாவின் கூற்றுப்படி, கவ்ரவ் ஷர்மா அரசியல் செல்வாக்குள்ளவன், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர். ‘’ அவன் திரும்ப திரும்ப என் இளைய சகோதரனை அச்சுறுத்தியுள்ளான். கடந்த இரு ஆண்டுகளில் அவரை அவன் பத்திற்கும் மேற்பட்ட முறை அழைத்து மிரட்டியுள்ளான்.’’ என்றார், அவர். கவ்ரவ் ஷர்மாவின் ஒரு மூத்த உறவினரும் அவனிஷ் குமாரை அழைத்து வழக்கை திறும்ப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் என் தம்பியிடம்,‘’கவ்ரவ் ஒரு இளம்வயது பையன். அவன் முன்கோபி என்பதனால் அதுபோன்ற ஏதாவது செய்திருப்பான். அதை பெரிதுபடுத்தாமல் விட்டுட்டு போ.’’ என்று கூறியதாக தி வயர் இணையதளத்திடம் கூறினார்.

கவ்ரவ் ஷர்மாவை போலிசு உடனே கைது செய்யவில்லை என்றால் அவன் நேபாள் சென்று தப்பிவிடுவான் என்று சுபாஷ்சர்மா கவலை தெரிவித்தார்.

அந்த பெண்ணின் தாய், ராஜ்குமாரி ஷர்மா பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கூறினார். ‘’எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். போலிசு பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டதும், அவர்கள் என் கணவரைக் கொன்றது போல், மீண்டும் என் மகளுக்கு தொல்லை தருவார்கள். போலிசு வழக்கம் போல் சம்பவம் நடந்துமுடிந்த பின்னர்தான் வருவார்கள்’’ என்று தி வயரிடம் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் முன்னணி களமாக உத்திர பிரதேசம்.

2020 செப்டம்பரில், 19 வயது தலித் பெண், ஹத்ரஸ் மாவட்டம் பூல்கார்கி கிராமத்தை சேர்ந்த நான்கு ஆதிக்க சாதிவெறியர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒரு வழக்கு நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண்ணை அவருடைய பெற்றோரின் ஒப்புதலின்றி விரைந்து எரியூட்டியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்று உறுதியாக மறுத்தது ஆகிய இரு காரணங்களுக்காக உபி போலிசு மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

பின்னர் டிசம்பர் மாதத்தில் அந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ, தனது குற்றப் பத்திரிகையில் அந்தப் பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று கூறியது.

தேசிய குற்ற ஆவண மையத்தால் சேகரிக்கப்ட்ட 2019 ஆம் ஆண்டிற்கான தகவல்களின் படி நாட்டில் 2018-ம் ஆண்டில் 3,78,277 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2019-ம் ஆண்டில் 4,05,861 குற்ற வழக்குகளாக அதிகரித்துள்ளது. இதில் உபியில் மட்டும் 59,853 வழக்குகள் பதிவாகி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் .பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 41,550 என்ற எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா 37,144 என்ற எண்ணிக்கையிலும் அடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் சதவீதம் 76% ஆக இருந்த போதிலும் தண்டனை கிடைக்கப்பெறும் சதவீதம் 27.8%-ல் நிற்கிறது.

‘’போலிசு விரும்பினால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். அவர்கள் அதற்கு தகுந்தவாறு செய்வதற்கு போதுமான நிலையில் உள்ளனர்’’ என்கிறார் சீமா மிஸ்ரா. இவர் சமூகசட்ட அமைப்பை நடத்தும் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். இந்த அமைப்பின் மூலம் சட்ட முன்முயற்சிகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துவருகிறார். ஜார்கண்ட் ராஞ்சியில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்திவருகிறார். மேலும் லக்னோவில் பெண்களின் உரிமைகளுக்கான குழுவைச் செயல்படுத்துகிற ஒரு பெண்ணியவாதியாவும இருக்கிறார் சீமா மிஸ்ரா.

‘’அவர்களின் (போலீசின்) பெண்வெறுப்பு நடவடிக்கை காரணமாகத்தான் பிரச்சினை தோன்றுகிறது. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக வழக்கம் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இது நாடு முழுதும் நடக்கிறது. ஆனால், உபியில் அதிகம். தங்களது செயலற்ற தன்மைக்கு அல்லது தங்களின் செயலுக்கு போலீசே பொறுப்பேற்க வேண்டும். ’’ என்று தி வயர் தளத்திடம் கூறினார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு பற்றி பேசுகையில், பிணையில் வெளிவந்த பிறகு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கவ்ரவ் ஷர்மா தொல்லை கொடுத்துள்ளான். அந்த பிணை ரத்துசெய்யப்பட்டு அவன் சிறைக்கு அனுப்ப ப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.


தமிழாக்கம் : முத்துகுமார்.
நன்றி : தி வயர்