Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 217

யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

த்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் மீண்டும் செய்தியில் பேசு பொருளாகியுள்ளது. இந்த முறை 50 வயது மதிக்கத்தக்க அவனிஷ் குமார் சர்மா எனும் விவசாயி பட்ட பகலில் கொலை செய்யப்பட்ட நிகழ்வை ஒட்டியே பேசுபொருளாக மாறியுள்ளது ஹத்ரஸ். ஹ்ரைச் மாவட்டத்தில் வசிக்கும் கவுரவ் ஷர்மா 5 பேருடன் இணைந்து அவனிஷ் குமார் ஷர்மாவை உரிமம் பெறாத துப்பாக்கிகளால் பலமுறை சுட்டு கொலை செய்துள்ளான்.

கடந்த 2018-ம் ஆண்டு தன் 23 வயது மகளை பாலியல் சீண்டல் செய்த கவுரவ் ஷர்மாவிற்கு எதிராக அவனிஷ் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்த காணத்தினால்தான் இந்தக் கொலை நடந்திருப்பதாக இறந்தவரின் சகோதரரான சுபாஷ் சந்திர ஷர்மா, தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அந்த 5 குற்றவாளிகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லவரத்தை தூண்டுதல், கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தைத் தூண்டுதல், ள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

அந்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பியிருப்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்க கூடும். ஆனால், இந்த வழக்குகளில் போலிசு நடவடிக்கை எடுக்காமலிருப்பது இன்னும் மிகுந்த நெருடலுக்கு உரியதாக இருக்கிறது. வ்னிஷ் ஷர்மாவை வழக்கை வாபஸ் வாங்குமாறு பலமுறை கவுரவ் ஷர்மா மிரட்டிதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

அவனிஷின் மகள் அந்த கொடூரமான நிகழ்வை விவரித்தும் இதற்கு நீதி கேட்டும் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைராலானபோது, மூத்த போலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவரை கைது செய்தனர். எங்கள் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்ய முடியாவிட்டாலும், முதன்மை குற்றவாளி கவுரவ் ஷர்மா கைதுசெய்யப்படுவதுதான் என் தந்தையின் மரணத்திற்கான நீதியை உறுதிபடுத்துவதாக இருக்கும் என்றார், அந்த 23 வயது பெண்.

படிக்க:
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
♦ ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

தி வயர் இணையதளத்திடம், பாலியல் தொல்லைகளை தான் எதிர்கொண்ட 2018 –ம் ஆண்டு காலத்தில் மனம் சோர்ந்து தளர்ந்து போயிருந்ததாக அப்பெண் கூறினார். ‘’என் தந்தை ஒருவர்தான் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் மற்ற தந்தைகளை போன்றவர் அல்ல. அவர் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் போல்பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான தனது மகளுக்காக போராட பயப்படவோ, வெட்கப்படவோ இல்லை. அவருடைய நடவடிக்கை எனக்கு நம்பிக்கை அளித்தது. அதனை தொடர்ந்து வழக்கு தொடுக்க நான் முன்வந்தேன்.’’

கவுரவ் ஷர்மாவும், அந்த 23 வயது பெண்ணும் ஒரு சில அண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக சில செய்திதாள் செய்தி வெளியிட்ட சமயத்தில் அந்த பெண்ணின் உறவினர் அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அந்தக் குற்றவாளி விருப்பம் தெரிவித்திருந்தான். ஆனால், அப்பெண்ணின் குடும்பத்துக்கும், அப்பெண்ணுக்குமே விருப்பம் இல்லை . மறுப்பு தெரிவித்த பிறகும் அவனுடைய பாலியல் தொல்லைகள் தொடர்ந்தன”, என்றார்.

‘’என்னை முகநூலில் அவனுடைய நண்பராகுமாறு கேட்டு முதன்முதலாக தொடங்கினான். நான் மறுத்தபோது என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போது அவன் சிறைக்கு அனுப்பபட்டான். வெகு விரைவில் வெளியே வந்தான். அதே ஆண்டு அவன் அந்த வழக்கை வாபஸ்வாங்குமாறு வற்புறுத்தினான்’’ என்று நினைவு கூர்கிறார் அந்த 23 வயது பெண்.

2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இதச பிரிவுகள் 452 (காயம் ஏற்படுத்துவற்கு தயாரிப்போடு வந்து அத்துமீறி நுழைதல், தாக்குதல் அல்லது வன்முறை பிரயோகம் , 354 ( ஒரு பெண்ணின் மாண்பை கெடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஒரு குற்ற செயல்) மேலும் 506 ( கிரிமினல்தனமான மிரட்டல்). குற்றம் நிரூபிக்கப்பட்டால் 354 பிரிவு இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும். பிரிவுகள் 506 மற்றும் 452 ஆகியவை 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும்.)

ஒரு மாதம் சிறையில் இருந்த கவுரவ் ஷர்மா நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்க பிணையில் விடுவிக்கப்பட்டான்.

தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் உடலை தூக்கிச் செல்லும் பாதிக்கப்பட்ட பெண்

அவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது, அவனுக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது, என்கிறார் அந்த பெண். ‘’ 2019-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அவன் என் தந்தை விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டு அவரை தாக்க முயற்சித்தான். அவன் மீண்டும் ஒரு முறை வழக்கை வாபஸ் வாங்க கூறி மிரட்டினான். என் அப்பா தப்பித்துவிட்டார்.’’ என்றார் அவர்.

அச்சமயத்தில் அவர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். அந்த நகலை தி வயர் இணையதளத்தால் பெற முடிந்தது. அவனிஷ் குமார் ஷர்மா கொடுத்த புகாரில் ‘’அவன் [கவரவ் ஷர்மா] என்னை கொல்வதற்கு துரத்திக்கொண்டு ஓடி வந்தான். தயவு செய்து விசாரணை செய்யுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும், புகார் கொடுக்கப்பட்டிருந்த சசானி காவல் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு தி வயர் இணைய தளம் இதுகுறித்து கேட்டபோது, ‘’2019 லிருந்து அப்படி ஒரு புகார் அங்கே பதிவு செய்யப்படவில்லை என்றார். 2018-ல் மட்டுமே அந்த பையன் சிறைக்கு ஒரு மாதம் சென்றிருந்த வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் கூறிய அவர், அந்த கொலைக்கு பிறகு பாதிக்கப்பட்டவரின் வீட்டருகே காவலர்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர் என்றார். தொடர் அச்சுறுத்தலில் இருந்த போதும் ஏன் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது என்று தி வயர் ஆசிரியர் கேட்டதற்கு, ‘’அப்படி ஏதும் தாமதம் இல்லை’’ என்று போலீசு கூறியுள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பல மாதங்களாக கவ்ரவ் ஷர்மாவிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. அந்த குற்றவாளிக்கு 2020 ல் திருமணம் ஆகி அதன் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தபோது அவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். 23 வயதான அந்த பெண் நினைவு கூர்கிறாள், ’’அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது, இனி இது போல் நடந்துகொள்ள மாட்டான் என்று நான் நினைத்தேன். அவனுக்கு ஒரு ஒரு மகளும் பிறந்துவிட்டது. எனவே இனி வேறு ஒருவருடைய மகளுக்கு அவன் தொல்லை கொடுக்க மாட்டான் என்று நினைத்தேன். ஆனால் நான் அவ்வாறு நினைத்தது தவறாகிவிட்டது.’’

மார்ச் 1 அன்று என்ன நிகழ்ந்தது.?

கொலை நடப்பதற்கு முன்பு, மார்ச் 1 அன்று காலை நேரத்தில் 23 வயதான அந்த பெண்ணும் அவளுடைய மூத்த சகோதரியும் அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கே, அவர்கள் கவ்ரவ் ஷர்மாவின் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் எதிர்பாராத விதமாக எதிர்கொள்ள நேர்ந்தது.‘’ அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கக் கூறி மிரட்டினர், என்னை கெட்ட வார்த்தையால் திட்டினர். இறுதியாக நான் என்னை விடுங்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் இனி இங்கு வன்முறைதான் தீர்வு என்றனர். இதன் பொருள் என்னவென்றால், ஏற்கெனவே நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட ஒரு செயல் தான் அந்தக் கொலை’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த பெண்.

அந்த வாய் சண்டை அந்த கோயிலிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பாதிக்கப்பட்டவரின் விவசாய நிலத்திற்கு அருகில் நிகழ்ந்தது. ‘’எனது அப்பா தலையிட்டு அமைதியான முறையில் அவர்களை செல்லவிடுங்கள் என்று கேட்டபோது, கவ்ரவ் ஷர்மாவின் மனைவி உன்னை கொன்று விடுவேன், வழக்கை வாபஸ்பெறவில்லை என்றால் சுட்டுகொன்று விடுவேன் என்றாள்,’’ என்று நினைவுகூர்கிறார் அந்த இளம் பெண்.

படிக்க :
♦ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அந்த விவசாய நிலத்திலிருந்து 200 மீட்டர் தூரம் கூட இருக்காத அவருடை வீட்டிற்கு தன் மகள்களை செல்லுமாறும், சென்று கதவை உட்புறமாக கவனமாக பூட்டிக்கொள்ளுமாறும் அவனிஷ் கேட்டுக்கொள்கிறார். அவர் தனது நிலத்தில் வேலை செய்வதை தொடர்ந்தார். நானும் என் சகோதரியும் எனது அப்பாவிற்கு மதிய உணவு எடுத்து சென்ற போது, கவ்ரவ் ஷர்மா மீண்டும் 11.30 மணிக்கு அழைத்து வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அவர் எங்களிடம் சொன்னார். அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிடவில்லை.’’ என்று அந்த பெண் கூறினார்.

சுமார் மதியம் ஒரு மணிக்கு அந்த இளம் பெண் சசானி காவல் நிலையத்தில் உள்ள தர்மேந்திரா என்ற நம்பகமான போலிசு அதிகாரியை அழைத்தார். அந்த காவல் நிலையம் அந்த கிராமத்திலிருந்து 7-8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவர், பாதிக்கப்பட்டவர்களின் அந்த இடத்தை அடைய நேரம் ஆகும் என்பதால் 112 அவசர எண்ணை அழைக்குமாறு கூறினார்.

‘’கவ்ரவ் ஷர்மா வந்து எங்களை மிரட்டினால் 112 எண்ணை அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வந்து போது எந்த ஒரு எண்ணிற்கும் தொடர்புகொள்ளும் ஒரு நிலையில் நான் இல்லை.’’ என்று தி வயரிடம் கூறினாள், அந்த பெண்.

மாலை 3.30 மணிக்கு கவ்ரவ் ஷர்மாவும் மற்ற 5 பேரும் ஒரு காரில் வந்தனர். அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவனிஷ்ஷூம் மற்ற தொழிலாளர்களும் வேலை செய்துகொண்டிருந்த நிலத்தை நோக்கி வந்தனர். ‘’அவர்கள் வந்து மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் முகமாக பிஸ்டல் துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டனர். அவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். அவர்களுடைய இலக்கு என் அப்பா. அவர்கள் என் அப்பாவை பலமுறை சுடும் போது, நான் அருகில் உள்ள குழாய் கிணற்றில் ஒளிந்துகொண்டேன். அவர் நிலை குலைந்து கீழே விழுந்த பிறகு அவர்களில் ஒருவன் அவரின் இறப்பை உறுதிசெய்கிற வகையில் மிக அருகில் சென்று சுட்டான். நான் அங்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் பார்த்தேன். நான் அச்சத்தில் உறைந்திருந்தேன்.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த 23 வயது பெண்.

அப்போது அங்கே இருந்த என் அம்மாவை நோக்கி ஒரு புல்லட் குண்டு வந்தது. அதில் என் அம்மா தப்பினாள். வந்த 6 பேரில் 4 பேர் கவ்ரவ் ஷர்மா, லலித் ஷர்மா, நிகித் ஷர்மா, மற்றும் ரோகித் ஷர்மாஎனக்கு அடையாளம் தெரியும் என்று அந்த பெண் கூறினாள்.

துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, ஒரு கூட்டம் கூடியது, போலிசும் வந்தது. கொலையுண்ட நபர் முதலில் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துசெல்லப்பட்டார். அங்கு, இறந்து கொண்டுவரப்பட்டதாக அறிக்கப்பட்டது.

குடும்பத்தின் ஆதாரமானவர் :

அவனிஷ் குமார் ஷர்மாவுக்கு இரு சகோதர்களும், நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவர்கள் யாரும் கிராமத்தில் இல்லை. ‘’எனது பெரியப்பாவும், சித்தப்பாக்களும் கிராமத்திற்கு வெளியே வசிக்கின்றனர். என்னுடய அப்பாதான் குடும்ப வாழ்வின் முழு ஆதாரம். எங்களுக்கு நிலம் இருப்பது உண்மை. ஆனால், அவரின்றி என் அம்மாவாலோ அல்லது என்னாலோ அங்கே வேலை செய்யமுடியாது. இப்போது, எங்களையும், வீட்டையும் காப்பதற்கு யாரும் இல்லை.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கண்ணீர் மல்க கூறினார் அந்த பெண்.

அந்த பெண்ணின் பெரியப்பா சுபாஷ் சந்திர ஷர்மாவின் கூற்றுப்படி, கவ்ரவ் ஷர்மா அரசியல் செல்வாக்குள்ளவன், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர். ‘’ அவன் திரும்ப திரும்ப என் இளைய சகோதரனை அச்சுறுத்தியுள்ளான். கடந்த இரு ஆண்டுகளில் அவரை அவன் பத்திற்கும் மேற்பட்ட முறை அழைத்து மிரட்டியுள்ளான்.’’ என்றார், அவர். கவ்ரவ் ஷர்மாவின் ஒரு மூத்த உறவினரும் அவனிஷ் குமாரை அழைத்து வழக்கை திறும்ப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் என் தம்பியிடம்,‘’கவ்ரவ் ஒரு இளம்வயது பையன். அவன் முன்கோபி என்பதனால் அதுபோன்ற ஏதாவது செய்திருப்பான். அதை பெரிதுபடுத்தாமல் விட்டுட்டு போ.’’ என்று கூறியதாக தி வயர் இணையதளத்திடம் கூறினார்.

கவ்ரவ் ஷர்மாவை போலிசு உடனே கைது செய்யவில்லை என்றால் அவன் நேபாள் சென்று தப்பிவிடுவான் என்று சுபாஷ்சர்மா கவலை தெரிவித்தார்.

அந்த பெண்ணின் தாய், ராஜ்குமாரி ஷர்மா பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கூறினார். ‘’எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். போலிசு பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டதும், அவர்கள் என் கணவரைக் கொன்றது போல், மீண்டும் என் மகளுக்கு தொல்லை தருவார்கள். போலிசு வழக்கம் போல் சம்பவம் நடந்துமுடிந்த பின்னர்தான் வருவார்கள்’’ என்று தி வயரிடம் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் முன்னணி களமாக உத்திர பிரதேசம்.

2020 செப்டம்பரில், 19 வயது தலித் பெண், ஹத்ரஸ் மாவட்டம் பூல்கார்கி கிராமத்தை சேர்ந்த நான்கு ஆதிக்க சாதிவெறியர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒரு வழக்கு நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண்ணை அவருடைய பெற்றோரின் ஒப்புதலின்றி விரைந்து எரியூட்டியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்று உறுதியாக மறுத்தது ஆகிய இரு காரணங்களுக்காக உபி போலிசு மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

பின்னர் டிசம்பர் மாதத்தில் அந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ, தனது குற்றப் பத்திரிகையில் அந்தப் பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று கூறியது.

தேசிய குற்ற ஆவண மையத்தால் சேகரிக்கப்ட்ட 2019 ஆம் ஆண்டிற்கான தகவல்களின் படி நாட்டில் 2018-ம் ஆண்டில் 3,78,277 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2019-ம் ஆண்டில் 4,05,861 குற்ற வழக்குகளாக அதிகரித்துள்ளது. இதில் உபியில் மட்டும் 59,853 வழக்குகள் பதிவாகி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் .பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 41,550 என்ற எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா 37,144 என்ற எண்ணிக்கையிலும் அடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் சதவீதம் 76% ஆக இருந்த போதிலும் தண்டனை கிடைக்கப்பெறும் சதவீதம் 27.8%-ல் நிற்கிறது.

‘’போலிசு விரும்பினால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். அவர்கள் அதற்கு தகுந்தவாறு செய்வதற்கு போதுமான நிலையில் உள்ளனர்’’ என்கிறார் சீமா மிஸ்ரா. இவர் சமூகசட்ட அமைப்பை நடத்தும் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். இந்த அமைப்பின் மூலம் சட்ட முன்முயற்சிகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துவருகிறார். ஜார்கண்ட் ராஞ்சியில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்திவருகிறார். மேலும் லக்னோவில் பெண்களின் உரிமைகளுக்கான குழுவைச் செயல்படுத்துகிற ஒரு பெண்ணியவாதியாவும இருக்கிறார் சீமா மிஸ்ரா.

‘’அவர்களின் (போலீசின்) பெண்வெறுப்பு நடவடிக்கை காரணமாகத்தான் பிரச்சினை தோன்றுகிறது. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக வழக்கம் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இது நாடு முழுதும் நடக்கிறது. ஆனால், உபியில் அதிகம். தங்களது செயலற்ற தன்மைக்கு அல்லது தங்களின் செயலுக்கு போலீசே பொறுப்பேற்க வேண்டும். ’’ என்று தி வயர் தளத்திடம் கூறினார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு பற்றி பேசுகையில், பிணையில் வெளிவந்த பிறகு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கவ்ரவ் ஷர்மா தொல்லை கொடுத்துள்ளான். அந்த பிணை ரத்துசெய்யப்பட்டு அவன் சிறைக்கு அனுப்ப ப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.


தமிழாக்கம் : முத்துகுமார்.
நன்றி : தி வயர்

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்

ஒரு புரட்சியின் கொண்டாட்டம்

களிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது சர்வதேச ஆதரவுக்கான நாள் மற்றும் உழைக்கும் பெண்களின் பலம் மற்றும் அமைப்பை மறுபரிசீலனை செய்யும் நாளாகும்.

ஆனால் இது பெண்களுக்கு மட்டும் உரிய சிறப்பு தினம் அல்ல. மார்ச் 8-ஆனது உலகின் அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ரசிய தொழிலாளர்களுக்கும், உலக தொழிலாளர்களுக்கும் நினைவுகூரத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 1917-ம் ஆண்டு இந்த நாளில் மாபெரும் பிப்ரவரி புரட்சி வெடித்தது. பீட்டர்ஸ்பெர்கின் உழைக்கும் பெண்கள்தான் அப்புரட்சியைத் துவங்கினார்கள். அவர்கள்தான் ஜார் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக பதாகைகளை உயர்த்த முடிவு செயதனர். எனவே பெண்கள் தினம் நமக்கு இரட்டை கொண்டாட்டமாகும்.

ஆனால் இது அனைத்து தொழிலாளர்களுக்கான பொது தினம் எனும்பட்சத்தில் ஏன் மகளிர் தினம் என்று அழைக்கிறோம்? பிறகு ஏன் உழைக்கும் பெண்களையும், விவசாயப் பெண்களையும் மையப்படுத்தி சிறப்பு கொண்டாட்டங்களும், கூட்டங்களும் நடத்துகிறோம்? இது உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையையும் ஆதரவையும் மறுதலிக்காதா? இதற்கெல்லாம் விடைகிடைக்க வேண்டுமென்றால் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதையும், அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

ஏன், எப்படி பெண்கள் தினம் உருவாக்கப்பட்டது?

மிகப்பல வருடங்கள் அல்ல, ஒரு பத்து வருடத்திற்கு (1909-10) முன்பாகதான் பெண்களுக்கான சம உரிமை என்ற கேள்வியும் மற்றும் ஆண்களோடு பெண்களும் அரசு நிர்வாகத்தில் சரிசமமாக பங்கெடுக்க முடியுமா? என்பது குறித்தும் காராசாரமான விவாதங்கள் நடத்தப்பட்டன. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம், உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக போராடியது. ஆனால் முதலாளிகள் இவ்வுரிமைகளை ஏற்கத் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் வாக்கினை பலப்படுத்துவதென்பது முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால் அனைத்து நாடுகளிலும் அவர்கள் உழைக்கும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடையாக இருந்தனர்.

வட அமெரிக்க சோசலிஸ்டுக்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய ஓட்டுரிமை கோரிக்கையினை வலியுறுத்தினர். 28.02.1909 அன்று அமெரிக்க பெண் சோசலிஸ்ட்டுக்கள், உழைக்கும் பெண்களுக்கான அரசியல் உரிமை கோரி நாடு முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர். இதுதான் முதல் மகளிர் தினம். எனவே மகளிர் தினத்தினை துவங்கிய பெருமை அமெரிக்க உழைக்கும் மகளிரையே சாரும்.

1910-ம் ஆண்டு நடைபெற்ற உழைக்கும் மகளிரின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், கிளாரா ஜெட்கின் அவர்கள், உலகளவிலான மகளிர் தின ஒருங்கிணைப்பு குறித்த கேள்வியை முன்வைத்தார். அம்மாநாட்டில், ஒவ்வொரு வருடமும், அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், அது ”பெண்களின் ஓட்டுரிமை, சோசலிசத்திற்கான போராட்டத்தில் நமது வலிமையை ஒருங்கிணைக்கும்” என்ற முழக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

அலெக்சாந்த்ரா கொலந்தாய்

இவ்வருடங்களில், ஓட்டுரிமையை விரிவுபடுத்துவது, குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுடையதாக ஆக்குவதென்பது மிக முக்கிய நோக்கமாக இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பே ரஷ்யா தவிர அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளிகள் ஓட்டுரிமை பெற்றிருந்தனர். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில் மகளிரின் பங்களிப்பு அவசியமாயிருந்தது என்பதுதான் முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத நிதர்சனமாக இருந்ததது. ஒவ்வொரு வருடமும் ஆலைகளில், தொழிற்கூடங்களில் வேலையாட்கள், பணிப்பெண்கள் என வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை தமது கைகளால் உருவாக்கினர் என்றாலும் அவர்கள் ஓட்டுரிமையின்றி இருந்தனர்.

போருக்கு முந்தைய வருடங்களில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் அமைதியான குடும்பப் பெண்களைக்கூட அரசியலில் ஆர்வம் காட்டவும், முதலாளித்துவ பொருளாதார கொள்ளைக்கெதிராக உரத்த குரலெழுப்பவும் முந்தித்தள்ளியது. ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ”குடும்பப் பெண்களின் எழுச்சி” அடிக்கடி வெடித்துக் கிளம்பும் நிகழ்வாக அதிகரித்துக்கொண்டே சென்றது.

கடைத்தெருக்களில் கடைகளை உடைப்பதும், முறையற்ற வணிகர்களை மிரட்டுவதும் விலைவாசியை கட்டுப்படுத்த உதவாது என்பதனை உழைக்கும் மகளிர் புரிந்துகொண்டனர். அரசாங்கத்தின் அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும் அதனை சாதிப்பதற்கு உழைக்கும் வர்க்கம் ஓட்டுரிமையை விரிவுபடுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.

உழைக்கும் மகளிருக்கான ஓட்டுரிமையை பெறும் நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மகளிர் தினத்தினை ஒரு போராட்ட வடிவமாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. பொது நோக்கத்திற்கான போராட்டத்திற்கும், சோசலீச பாதாகையின் கீழ் உழைக்கும் மகளிரின் ஒருகிணைப்பினை மறுஆய்வு செய்வதற்கும் உலகளவிலான ஆதரவினை நல்கும் ஒரு நாளாக மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.

முதல் உலக மகளிர் தினம்

சோசலிச பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல், 1911 வருடத்தின் மார்ச் 19 தேதியன்று முதல் உலக மகளிர் தினத்தினை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நாள் பொத்தாம் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. 1848-ம் ஆண்டு மார்ச் 19 அன்று ப்ரஷ்ய மன்னன் ஆயுதமேந்திய மக்களின் போராட்ட வலிமையைக் கண்டு, பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு அஞ்சி பல வாக்குறுதிகளை அளித்தான். பெண்களுக்கான ஓட்டுரிமை போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், இந்த மார்ச் 19 நாளானது ஜெர்மன் பாட்டாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவேதான் இந்த நாளை உகல மகளிர் தின நாளாக தேர்ந்தெடுத்தனர்.

படிக்க :
♦ இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !
♦ “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

ஜனவரி 11-ம் தேதிக்குப் பிறகு ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பெண்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நாளில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வாய்வழிப் பிரச்சாரங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படுத்தினர். பெண்கள் தினத்திற்கு முந்தைய வாரத்தில் “ஜெர்மனியில் பெண்களுக்கான ஓட்டுரிமை” மற்றும் “ஆஸ்திரியாவில் பெண்கள் தினம்” என்ற இரு பத்திரிகைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் “பெண்களும் பாராளுமன்றமும்”, “உழைக்கும் பெண்களும் நகராட்சி நிர்வாகமும்”, “குடும்பப்பெண்களுக்கு அரசியலில் என்ன வேண்டியிருக்கிறது?” மற்றும் பல கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அவைகள் அரசாங்கத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான சம உரிமை குறித்து துல்லியமாக ஆய்வு செய்திருந்தன. மேலும் அனைத்து கட்டுரைகளும் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுள்ளதாக ஆக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்தின.

முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரங்கங்களும் நிரம்பிவழிந்தன. வேறுவழியின்றி ஆண் தொழிலாளர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியது.

உழைக்கும் மகளிர் தங்களுடைய போர்குணத்தை காட்டிய முதல் காட்சியாக இவ்வுலக மகளிர்தினம் நிச்சயமாக அமைந்திருந்தது. மாற்றத்திற்காக ஆண்கள் வீட்டில் குழந்தைகளோடு இருந்தனர் மேலும் அவர்களுடைய மனைவிகள், குறிப்பாக குடும்பப் பெண்களாயிருந்த அவர்கள் கூட்டங்களுக்குச் சென்றனர். 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர். இச்சம்பவத்தில் காவல்துறைக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட மோதல் பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் பிரதிநிதிகளின் உதவியோடு மட்டுமே இரத்தக் களறியாகாமல் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது.

1917-ல் ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் தினப் பேரணி – பிப்ரவரி புரட்சியை பற்ற வைத்த நெருப்புப் பொறி

1913-ம் ஆண்டு உலக மகளிர்தினம் மார்ச் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இத்தினம் உழைக்கும் மகளிரின் போராட்ட தினமாக நிலைபெற்றது.

அக்காலகட்டத்தில் சோசலிச புரட்சி குறித்த மிரட்சி முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆகையால் எந்த முதலாளித்துவ பாராளுமன்றமும் தொழிலாளிகளுக்கு கருணை காட்டவோ, பெண்களின் கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது பரிசீலிக்கவோ முன்வரவில்லை. ஆனால் மகளிர்தினம் இதனை ஓரளவுக்கு சாதித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மகளிர் தினம் வியக்கத்தக்க பலன்களை அளித்தது. இது அரசியல் அறிமுகம் குறைவாகயிருந்த நமது சகோதரிகள் மத்தியில் போராட்ட வழிமுறையை உருவாக்கியது. அவர்களுடைய கவனம் பெண்கள் தின கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள், கைப்பிரதிகள் மற்றும் செய்தித்தாள்களை நோக்கி குவிந்தது.

அரசியல் பின்புலமற்ற பெண்கள்கூட “இது நம்முடைய தினம், உழைக்கும் பெண்களின் திருவிழா“ என்று நினைத்தனர். மேலும் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விரைந்து சென்றனர். ஒவ்வொரு பெண்கள் தினத்திற்குப் பிறகும் ஏராளமான பெண்கள் சோசலீச கட்சியில் இணைந்தனர். மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தன. அரசியல் உணர்வு மேம்பட்டது மேலும் அமைப்புக்கள் முன்னேற்றமடைந்தன.

உலக மகளிர் தினத்தையொட்டி ஜெர்மன் தோழர்கள் இங்கிலாந்து செல்வதும், இங்கிலாந்து தோழர்கள் ஹாலந்து செல்வதும் என பல்வேறு நாடுகளின் கட்சிகள், பேச்சாளர்களைப் பரிமாறிக்கொண்டனர். இவ்வொத்திசைவு, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், உழைக்கும் வர்க்கம் வலுப்பெறுவதற்கும் மற்றும் பாட்டாளிகளின் போராட்ட வலிமையை கூட்டுவதற்கும் வினையாற்றியது.

தீரம் மிக்க மகளிர்தினம், உணர்வு மேம்பாட்டையும், மகளிரை அமைப்பாக்குவதற்கும் உதவியாக இருந்தது. மேலும் உழைக்கும் வர்க்கத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடுபவர்களின் வெற்றிக்கும் அது பங்காற்றியது என்பது தீரம் மிக்க ‘உலக மகளிர் தினத்தின்’ பலன்களாகும்.

ரஷ்யாவில் உழைக்கும் மகளிர் தினம்

ரஷ்ய பெண் தொழிலாளர்கள் முதன்முதலில் 1913-ம் ஆண்டு நடைபெற்ற “உழைக்கும் மகளிர் தினத்தில்“ பங்கெடுத்தனர். இது ஜார் மன்னனின் ஆட்சி உழைப்பாளிகளையும், விவசாயிகளையும் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த கால கட்டமாகும். திறந்தவெளி ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடியாத சூழல் இருந்தபோதும், மகளிர் தினத்தை உலக தினமாக அவர்கள் சிறப்பித்துக்காட்டினர். போல்ஷ்விக் ‘பிராவ்தா’ – மென்ஷ்விக் ‘லூச்’ ஆகிய சட்டபூர்வ உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகள் ‘உலக மகளிர் தினம்’ குறித்த சிறப்புக் கட்டுரைகள், உழைக்கும் மகளிருக்கான இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள், பெபல் மற்றும் ஸெட்கின் போன்ற தோழர்களின் வாழ்த்துக்களை பிரசுரித்தன.

கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்த இருண்ட காலத்திலும், கட்சியின் உழைக்கும் மகளிர் பெட்டோகிராட்டின் கலாஷ்கோவஸ்கி முனையத்தில் “மகளிர் கேள்விகள்“ என்ற ரகசிய பொது மன்றத்தை ஏற்பாடு செய்தனர். ஐந்து கோபெக்குகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டபோதும் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் கட்சியின் உறுப்பினர்கள் உரையாற்றினர். ஆனால் இந்த உயிர்ப்பான ரகசியக் கூட்டத்தின் ஒரு கட்டத்தில் காவல்துறை தலையிட்டு, பல பேச்சாளர்களைக் கைது செய்ததால் முடிக்கப்பட்டது.

ஜார் மன்னரின் கடுமையான ஒடுக்குமுறையின் கீழிருந்த ரஷ்யாவில் “உலக மகளிர் தின“த்தில் திரளாக பெண்கள் கலந்துகொண்டதும், அந்த நாளை அங்கீகரித்த்தும் உலகத் தொழிலாளர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ரஷ்ய எழுச்சியின் விடிவெள்ளியாகவும், ஜார் மன்னனின் சிறைகளும், தூக்குமேடைகளும், தொழிலாளர்களின் போராட்டங்களையும், போராட்ட உணர்வையும் அழிக்கவியலாமல் வலுவிழந்ததையே எடுத்துக்காட்டியது.

படிக்க :
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !

1914-ம் ஆண்டு ரஷ்யாவின் ‘உழைக்கும் மகளிர் தினம்’ மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கைளும்கூட கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. நமது தோழர்கள் ஏற்பாடுகளில் கடும் உழைப்பைச் செலுத்தியபோதும் காவல்துறையின் குறுக்கீட்டால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் ஜார் மன்னனின் சிறைகளுக்கும், பிறகு பலர் கடுங்குளிர் வடக்குபகுதிக்கும் அனுப்பப்பட்டனர். இது ‘உழைக்கும் மகளிருக்கு ஓட்டுரிமை’ என்ற முழக்கத்தை ‘ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிவோம்’ என்ற அறைகூவலாக மாற்றியது.

ஏகாதிபத்திய போரின் தருணத்தில் உழைக்கும் மகளிர் தினம்

முதல் உலகப்போர் மூண்டது. அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கமும் போரின் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. 1915 மற்றும் 1916-ம் ஆண்டுகளில் பிற நாடுகளில் “உழைக்கும் மகளிர்தினம்“ சாத்தியமற்றதாக இருந்தபோதும், போல்ஸ்விக் கட்சியின் கொள்கைகளையுடைய இடதுசாரி பெண் சோசலிஸ்டுகள், மார்ச் 8-ஐ போருக்கு எதிரான உழைக்கும் மகளிரின் ஆர்ப்பாட்டமாக மாற்ற முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி சோசலிச கட்சியிலிருந்த துரோகிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். நடுத்தர கொள்கையுடைய நாடுகளில், முதலாளிகளின் எண்ணங்களுக்கெதிராக உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளிர்தின கூட்டங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில், அத்தருணத்தில் பெண் சோசலிஸ்டுகளுக்கு கடவுச்சீட்டு மறுக்கப்பட்டது.

1915-ல் நார்வே நாட்டில் மட்டுமே ஓரளவு சமாளித்து மகளிர் தினத்தில் உலகளவிளான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதில் இரஷ்யா மற்றும் நடுநிலை நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் ஜார் மன்னராட்சியின் ராணுவ ஒடுக்குமுறைக் கருவிக்கெதிராக, பெண்கள் தின ஒருங்கிணைப்பை இரஷ்யாவில் யோசிக்கக்கூட முடியாக நிலை இருந்தது.

அதன்பிறகு மிகச் சிறப்பான 1917-ம் ஆண்டு பிறந்தது. பசியும், பிணியும், போர் பயிற்சிகளும் பெண் தொழிலாளிகள் மற்றும் விவசாயப் பெண்களின் பொறுமையை உடைத்தெறிந்தன. 1917, மார்ச் 8-ம் நாள் (அன்றைய பிப்ரவரி 23) பெண்கள் தினத்தன்று பெண்கள் மிக தைரியமாக பெட்ரோகிராட் தெருக்களில் கூடினர். அப்பெண்களில் சிலர் தொழிலாளர்கள், சிலர் வீரர்களின் மனைவிகள். அவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ரொட்டி கோரியும் இரானுவத்திலிருந்து தங்களுடைய கணவர்களை திருப்பியனுப்பும்படி முழக்கமிட்டனர். இந்த உச்சகட்ட சூழலில் உழைக்கும் மகளிரின் போராட்டத்தில், ஜார் மன்னரின் பாதுகாப்பு படைகள் வழக்கமான ஒடுக்குமுறையை கையாளமுடியாமல், அலைகடலென திரண்டிருந்த மக்களின் கோபக் கனலை மிரட்சியுடனும் குழப்பத்துடனும் நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

1917-ம் ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக மாறியது. அத்தினத்தில்தான் இரஷ்ய பெண்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தீப்பொறியை உயர்த்தினர். அது உலகம் முழுக்க பற்றியது. பிப்ரவரி புரட்சியின் துவக்க நாளாக அது அமைந்தது.

போருக்கான நமது அழைப்பு

பத்து வருடத்திற்கு முன்பு “உழைக்கும் மகளிர் தினம்” முதன் முதலாக பெண்களுக்கு அரசியல் சமத்துவம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற பிரச்சாரங்களை முன்வைத்து நடத்தப்பட்டது. இரஷ்ய மகளிர் இவ்வுரிமைகளைப் பெற்றனர். சோவியத் குடியரசில் உழைக்கும் பெண்களும், விவசாயிகளும் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமைகளை ஏற்கெனவே வென்றெடுத்துவிட்டதால் அவ்வுரிமைகளுக்காக போராடவேண்டிய தேவை எழவில்லை. இரஷ்ய தொழிலாளர்களும் விவசாய பெண்களும் சம உரிமையுள்ள குடிகளாகிவிட்டனர். அவர்களிடம் ஓட்டுரிமையும், சோவியத் மற்றும் பிற கூட்டுறவு அமைப்புக்களிலும் பங்கெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. மேம்பட்ட வாழ்க்கையை எளிமையாக அடைவதற்கு உதவும் ஆயுதங்களாகிய இவைகளை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.

ஆனால் உரிமைகள் மட்டும் போதாது. அவைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நம்முடைய பலனுக்கானதாக எப்படி ஆக்குவது என்பதை கற்கவேண்டும். இந்த இரண்டு வருட சோவியத் அதிகாரத்தில், நமது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடவில்லை. நாம் கம்யூனிசத்தை அடைவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பழைய இருண்ட மற்றும் அடக்குமுறைகளைக் கொண்ட பழைமையான உலகாலும் சூழப்பட்டுள்ளோம். குடும்பச் சங்கிலி, வீட்டு வேலைகள், விபச்சாரம் போன்றவைகள் இன்னமும் உழைக்கும் பெண்கள் மீது கனத்துக்கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் பெண்களும் விவசாயப் பெண்களும் இவைகளிலிருந்து விடுபட்டு சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால் அது இரஷ்யாவை உண்மையான கம்யூனிச சமூதாயத்தை நோக்கி கொண்டுசெல்வதில் நம்முடைய உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியுமே தவிர வெறும் சட்டத்தால் இயலாது.

இதனை விரைந்து சாத்தியமாக்க நாம் முதலில் இரஷ்ய பொருளாதாரத்தை நேர்நிலைப்படுத்த வேண்டும். இதனைச் சாதிக்க அடிப்படையாக நம்முன் இரண்டு முதன்மைக் கடமைகள் உள்ளன. ஒன்று எஃகுறுதிகொண்ட அரசியல்படுத்தப்பட்ட தொழிலாளர் கட்டமைவை ஏற்படுத்துவது மற்றொன்று போக்குவரத்தை மறுசீரமைப்பு செய்வது. நம்முடைய தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டால் மிகவிரைவில் நீராவி எந்திரங்களைப் பெற்று மீண்டும் இரயில்களை இயக்கலாம். இதன்மூலம் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் அவசியத் தேவையான ரொட்டியையும் விறகினையும் பெறலாம்.

போக்குவரத்தை மீட்பது கம்யூனிச வெற்றியை விரைவுபடுத்துவதாகும். கம்யூனிச வெற்றியுடன் பெண்களின் சமத்துவதும் வென்றெடுக்கப்படுகிறது. எனவே உழைக்கும் பெண்கள், விவசாயப் பெண்கள், தாய்மார்கள், மனைவிகள் மற்றும் சசோதரிகள் அனைவரும் இரயில்வே மற்றும் போக்குவரத்தை மறுசீரமைப்புச் செய்வதில் மற்றும் உணவு, விறகு மற்றும் மூலப்பொருட்களை கொணர்வதில் பாடுபடும் நமது தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பதை இந்த உழைக்கும் மகளிர்தினத்தின் செய்தியாக முன்வைக்கிறோம்.

சென்ற வருட மகளிர் தினத்தின் முழக்கம் “அனைத்தும் செம்படையின் வெற்றிக்கு!“ என்பதாகும். தற்போது நமது உழைக்கும் மகளிரை நம்முடைய உழைப்பாளிகளின் ரத்தம் சிந்தா அணிவகுப்பின் பின்னால் அனிவகுக்க அழைப்பு விடுக்கிறோம். செம்படை ஒருங்கமைக்கப்பட்டதாக, ஒழுங்கமைக்கப்படதாக மற்றும் சுயதியாகம் செய்ய தயாராக இருந்ததால்தான் புற எதிரியை தோற்கடித்தது. தற்போது நமது ‘தொழிலாளர் குடியரசு’ உள்நாட்டு எதிரிகளான போக்குவரத்து இடப்பெயர்வு, பொருளாதார சூழல், பசி, குளிர் மற்றும் நோய்கள் ஆகியவற்றை வெல்லும். “நாம் அனைவரும் தொழிலாளர்களின் இரத்தம் சிந்தா முன்னனியின் வெற்றிக்கே! அனைவரும் அதன் வெற்றிக்கே!“

உழைக்கும் மகளிர் தினத்தின் புதிய இலக்கு

அக்டோபர் புரட்சி நமது பெண்களுக்கு சமத்துவத்தையும், ஆண்களோடு சமமான குடியுரிமைகளையும் வழங்கியது. சில காலத்திற்கு முன்புவரையில் மிகுந்த துரதிஷ்டவசத்திலும், ஒடுக்குமுறையிலும் இருந்த இரஷ்ய பெண் பாட்டாளிகள் தற்போது சோவியத் குடியரசில், பிற நாட்டு தோழர்களுக்கு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் சோவியத் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் அரசியல் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாளித்துவ நாடுகளில் இன்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுபவர்களாகவும், வாய்பற்றவர்களாகவும் இருப்பதால் அங்கு நிலைமை வேறாக உள்ளது. நார்வே, ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் வட அமெரிக்கா போன்ற சில நாடுகளில் போருக்கு முன்பே பெண்கள் குடிமை உரிமை பெற்றனர் என்றாலும் அந்நாடுகளில் உழைக்கும் பெண்களின் குரல் பலவீனமாகவும், உயிர்ப்பின்றியும்தான் இருக்கின்றது.

ஜெர்மனியில், கெய்சர் தூக்கியெறியப்பட்ட பின்பு, சமரசவாதிகள் தலைமையில் முதலாளித்துவ குடியரசு அமைக்கப்பட்டது. அதில் 36 பெண்கள் பாராளுமன்றத்திற்குள் பங்கெடுத்தனர். ஆனால் அதில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இல்லை.

1919-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு பெண் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் யார்? ஒரு நிலச்சுவாந்தாரரும், மேல்தட்டு வர்க்கத்தைச் சோ்ந்த சீமாட்டியும் ஆவார் அவர்.

பிரான்சில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமையளிப்பது தொடர்பான கேள்வி எழுந்தது.

ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பில் உழைக்கும் பெண்களுக்கான இவ்வுரிமைகள் என்ன பலனைத் தரும்? அதிகாரம் முதலாளிகள் கையிலும், சொத்துடைமையாளர்கள் கையிலும் இருக்கும்போது எந்த அரசியல் உரிமையும், உழைக்கும் பெண்களை பழைமையான குடும்ப மற்றும் சமூக அடிமைத்தனத்திலிருந்து மீட்காது. இந்நிலையில் பிரான்சில் உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் போல்ஸ்விக் கருத்துக்கள் மேலோங்கி வருவதால், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் பெயரில் உழைக்கும் வர்க்கத்திற்கு மேலுமொரு பருக்கை தர முடிவு செய்தது.

படிக்க :
♦ வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

திரு.முதலாளி அவர்களே – இது மிகவும் தாமதம் !

அக்டோபர் புரட்சியின் அனுபவம் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் உழைக்கும் பெண்களுக்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே, சோவியத் அதிகாரம் மட்டுமே, முழுமையான நிரந்தரமான சமத்துவத்தை உத்திரவாதப்படுத்த முடியும் என்பதையும், கம்யூனிசத்தின் வெற்றி பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறைச் சங்கிலியை அறுத்தெறியும் என்பதையும் தெளிவுபடுத்தியது. இதற்கு முன்பு உழைக்கும் மகளிர் தினத்தின் இலக்கு முதலாளிகளின் பாராளுமன்றத்திற்கு முன்பு ஓட்டுரிமைக்கான போராட்டமாக இருந்தது. தற்பொழுது உழைக்கும் பெண்களை “மூன்றாம் அகிலத்தின்“ போராட்ட முழக்கங்களை நோக்கி அணி திரட்ட வேண்டிய புதிய இலக்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. முதலாளிகளின் பாராளுமன்றத்தில் உழைப்பைச் செலுத்துவதற்குப் பதிலாக, இரஷ்யாவின் அழைப்பிற்கு செவிசாயுங்கள்“.

“அனைத்து நாடுகளின் உழைக்கும் பெண்களே!
உலகைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த பாட்டாளிவர்க்க முன்னனியை கட்டுவோம்!
முதலாளித்துவ பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்!
சோவியத் அதிகாரத்தை வரவேற்போம்!
உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் பிடித்திருந்த வேற்றுமைகளையும் – ஏற்றத்தாழ்வுகளையும் களைந்தெறிவோம்!
உலக கம்யூனிச வெற்றிக்காக தொழிலாளிகளுடன் இணைந்து போராடுவோம்!“

இந்த அழைப்பு முதலில் புதிய முறையின் முன்னோட்டத்திற்கு மத்தியில் ஒலித்தது. பனிப்போரில் இது கேட்கும் மற்றும் இது பிறநாடுகளின் உழைக்கும் பெண்களின் இதயத்தில் சுருதிமீட்டும். உழைக்கும் பெண்கள் இந்த அழைப்பைக் கேட்டு சரியானதென நம்புவார்கள். சிறிது காலத்திற்கு முன்புவரையில் எப்படியாவது தங்கள் தரப்பிலிருந்து சிலரை பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக அனுப்பிவிட்டால் அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாகவும், மூலதன ஒடுக்குமுறை கடக்கக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிடும் என்று எண்ணியிருந்தனர். தற்பொழுது உண்மை அவர்களுக்குப் புரியும்.

மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித் அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மையிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப்பட்ட “உழைக்கும் மகளிர் தினம்“ இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்டமாக மாறுகிறது.

உடைமை மற்றும் மூலதன அதிகாரம் ஒழிக !
முதலாளித்துவ உலக மரபுகளான – ஏற்றத்தாழ்வு, உரிமையின்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவைகளை விட்டொழிப்போம்!
ஆண் பெண் உழைப்பாளர்களின் உலக ஒற்றுமையை முன்னெடுப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்!
பாட்டாளிவர்க்கத்தின் இருபாலினரும்!

000

கட்டுரை தலைப்பு : உலக மகளிர் தினம்
எழுதியவர் : தோழர் அலெக்சாந்த்ரா கொலந்தாய்
முதல் பதிப்பு : மெழ்துனரோதின்யி தென், 1920
ஆங்கில மொழி பெயர்ப்பு : அலிக்ஸ் ஹோல்ட் 1972
தமிழாக்கம் : ச. மீனாட்சி (சமூக ஆர்வலர்)

disclaimer

டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?

பாசிசம் பற்றி பெரும்பாலான மக்களுக்கு ஏதோ ஒருவகையில் புரிதல் இருக்கலாம்.அது ஒருவகையில் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்து நாட்டில் ஒரு ஒழுங்கு முறையை கொண்டுவரும் என்று நம்பிக்கொண்டிருக்கலாம். கண்முன்னே நடக்கும் சீரழிவான மக்கள் விரோத ஆட்சிகளுக்கு மாற்றானதாகக் கூட மக்கள் நம்பலாம்.

உண்மையில்,

“*பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது என்பது நிதிமூலதனத்தின் ஆகப் படுமோசமான பிற்போக்கான ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட ஆகப்படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்*” என்கிறார் பாசிசத்தை வெற்றிகொண்ட டிமிட்ரோவ்

பாசிசம் என்பது என்ன?

டிமிட்ரோவ் விளக்குகிறார் “*பாஸிஸம் நிதி மூலதனம் தன்னின் அதிகாரமாகும். அது தொழிலாளர் வர்க்கம் புரட்சிகரத்தன்மை கொண்ட விவசாயிகள் படிப்பாளிகள் பகுதிக்கும் எதிரான பயங்கரமான வன்முறை மிக்க பழிதீர்க்கும் ஸ்தாபனமாகும். வெளிநாட்டுக் கொள்கையில் பாஸிஸம் மிகவும் கொடூரமான வடிவத்திலான இனவெறி கொண்டதும் இதர நாடுகள் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பை தூண்டிவிட்டு தூபம் போடுவதுமான சக்தியாகும்.*”.

1920-ல் இத்தாலியில் முசோலினியால் முதன்முதலில் பாசிசம் அரங்கேற்றப்பட்டது. 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. வரலாற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை போல இத்தாலியிலும் மற்றும் பாசிசத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முசோலினியின் அந்தக் கால பாசிசம் இன்று டிஜிட்டல் பாசிசமாக உருமாறியிருக்கிறது.

படிக்க :
♦ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

டிஜிட்டல் பாசிசம் : பெரிமோ லெவி

பெரிமோ லெவி இவர் உலகிலுள்ள பாசிசத்தில் நிபுணத்தவம் பெற்றவர்களில் ஒருவர். இத்தாலியின் யுத ரசாயனவியலறிஞர் ஹோலோகாஸட். இவருக்கு ஜெர்மனியின் நாஜிசம் இத்தாலியின் பாசிசம் ஆகியவற்றில் முதல்நிலை அனுபவம் இருப்பதோடு அவை எவ்வாறு உள்ளிருந்து வேலை செய்யும் என்பதையும் கண்கூடாக பார்த்து அறிந்தவர். அந்த நடைமுறையை சிறந்த நுட்பத்தோடு விளக்குகிறார். பாசிசத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறையை மனிதாபிமான பார்வையில் விளக்குகிறார்.

பெரிமோ லெவி கூறியவற்றுள் முக்கியமான நிகழ்காலத்திற்கும் பொருந்தக்கூடிய செய்தியென்றால் அது ஒவ்வொரு காலமும் அதற்கேயுரிய பாசிசத்தன்மையை பெற்றிருக்கும் என்பதுதான். *பாஸிஸத்தின் வளர்ச்சியும் பாஸிஸ சர்வாதிகாரமும் பலவேறு நாடுகளில் பல்வேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன.அந்தந்த நாட்டு வரலாறு சமுதாயம் பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்கு தக்கபடி தேசிய தனித்தன்மைகளுக்கும் குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச ஸ்தாபனத்தை பொறுத்தும் பாஸிஸம் உருவமெடுக்கிறது.*

பாசிசத்தின் இரு வடிவங்கள் :

1920 மற்றும் 1930-களில் இத்தாலியில் பாஸிஸமாகவும் 1930 மற்றும் 1940-களில் ஜெர்மனியில் நாஜிஸமாகவும் இரு தன்மைகளில் பாசிசம் இருந்த்து.

நாஜிசம்-பாசிசத்தின் மோசமான வடிவம்

டிமிட்ரோவ் விளக்குவதை போல “*ஜெர்மன் வகை பாசிசம் மிகவும் படு மோசமான பிற்போக்கான பாசிச வகையாகும். அது தன்னை தேசிய சோசலிசம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் ஆணவத்துடன் கூறிக்கொள்கிறது. ஹிட்லர் பாசிசம் பூர்ஷுவா தேசியவாதம் மட்டுமல்ல அது கீழ்த்தரமான இனவெறி மிக்கதாகும். அது மத்திய காலத்து காட்டு மிராண்டித்தனமும் கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது*”.

100 ஆண்டுகள் கடந்தபின்னும் இப்போது இணையத்தள வலைத்தள காலத்தில் அதன் வழியாகவும் பாசிசம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது என்று சொன்னால் அதன் அபாயத்தன்மையை மக்களுக்கு விளக்கி எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பாசிச போக்குகளும் ஒரு பாசிச இயக்கத்தின் விஷக்கிருமிகளும் அநேகமாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அக்கால பாசிச சிந்தனையின் கூறுகள் இன்னும் நம்மிடையே இருக்கின்றன.

பாசிசம் அதிகாரத்தை கைப்பற்ற எத்தகைய வழிமுறைகளையும் எந்த வடிவத்தையும் எடுக்க தயங்காது.மக்களின் உரிமைகளுக்காக போராடப் போவதாகவும் ஜனநாயகத்தை காக்க போவதாகவும் நல்லாட்சி தரப்போவதாகவும் வாய்ச்சவடால் அடித்து பேசும் சில சமயங்களில் புரட்சிகர பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களென்று வாய் கூசாமல் பொய்யாய் அடித்து விடும். எனவே பாசிசத்தின் வடிவங்களை திரை கிழிப்பதில் சமரசமின்றி போராடுவது மிக மிக முக்கிய அவசர அவசிய தேவையாகும்.

டிஜிட்டல் பாசிசம் :

எங்கெல்லாம் எண்கள் (0 1) அதாவது binary form-ல் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் படுகிறதோ அவையெல்லாம் டிஜிட்டல் எனப்படுகிறது. இது பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற இரு தனி மதிப்புகள் மட்டுமே கொண்டது ஆகும். (A binary number has only two discrete values — zero or one) எலக்ட்ரானிக்ஸ் மொழியில் சிக்னல் என்றும் சொல்வார்கள். இன்றைக்கு உலகை விரல் நுனிக்கு எளிதாக கொண்டு வந்து நிறுத்துவது இதுதான். நடுத்தர குட்டிமுதலாளி வர்க்கத்தினரை ஆக்ரமித்து இருப்பதும் இதுதான்.  ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரித்தெடுத்து சுற்றிஇருப்பவர்கள் கூட அறியாமல் மூளைச்சலவை செய்து ஆட்கொள்ளும் சக்திபடைத்த்து.இதிலும் ஆளுமை செலுத்த பாசிசம் எடுக்கும் வழிவகைகளை அம்பலபடுத்துவதே பெரிமோ லெவியின் கட்டுரையின் நோக்கம் என்கிறார்.

பாசிசத்தின் கொடூர கொள்கைகள்

நவீன அல்லது டிஜிட்டல் பாசிசம் இன்னமும் கூட ஆரம்பகால பாசிச கோட்பாடுகளின் ஒன்பது அம்ச கொள்கைகள் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

1. மனித உரிமைகள் மனிதாபிமானம் மனிதகெளரவத்தை மற்றும் மனித வாழ்வின் மதிப்பை முற்றிலும் இகழ்ச்சிக்குள்ளாக்குவது கேவலபடுத்துவது

2. மூர்க்கமான மூடத்தனம் நாகரிகமற்றதன்மை நடைமுறையோடு(அ) இயற்கையோடு ஒத்துப்போகாமலிருப்பது.

*பாசிசம் மத்திய காலத்து நிலபிரபுத்துவ காட்டு மிராண்டித்தனமும் கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது.

3.வலதுசாரிகளின் தேசியத்தோடு கூடிய இனம் என்ற முறையில் வெள்ளை இன ஆதிக்கத்தை கொண்டாடுவது

4.வெள்ளைதோல் ஆண் தலைமையை அடிபணிந்து கொண்டாடுவது மற்றும் பெண்ணடிமைத்தனத்தை காக்கும் ஆணாதிக்க மனப்பாண்மையை மேன்மைபடுத்துவது

5.பாசிசம் எப்போதும் மூலதனத்தை காத்து நிற்கும் என்பதால் இயல்பாகவே கார்ப்ரேட்நிறுவனங்களின் பாதுகாவலனாக நிற்கும்

6.விமர்சன நுண்ணறிவுக்கு மேல் ஒத்திசைவான உணர்ச்சியை உயர்த்தி பிடிப்பது. பெரும்பான்மை பலத்தின் மூலம் சமூக அறிவு கண்ணோட்டத்தை ஒடுக்குவது

7.மூர்க்கத்தனமாக ஒன்றுபட்டிருப்பது தங்களுக்கு தாங்களே சலுகைகாட்டுவது மற்றும் தங்களை தவிர மற்றவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது

8.விமர்சனம் மாறுபட்ட கருத்து அறிவுப்புர்வமான சிந்தனை ஆகியவற்றை இகழ்ச்சிக்குள்ளாக்கி பயனற்றதாக்கிவிடுவது

9.அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள் மீது குரூரமான முறையில் வன்முறை தாக்குதலுக்கு வெளிப்படையாகவே அங்கீகாரம் தருவது

இணைய வலைத்தளத்தில் டிஜிட்டல் பாசிசம் மூன்று முக்கிய ஒன்றுக்கொன்று தொடர்புடைய கருவிகள் மூலம் வேலை செய்கிறது.

  1. மிகப்பெரிய போர்அணிவரிசையாக பிரபலபடுத்தப்பட்ட மக்களை கவரக்கூடிய அதேசமயம் இனவெறி கற்பனையான சதி பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் தீவிரமாக பரவசெய்வது வலது சாரி மற்றும் நவ – பாசிச வலைத்தளங்களை அணிஅணியாக ஆன்லைனில் கொண்டுவருவது.
  2. இடைப்பட்டதன்மையுடன் கூடிய வலதுசாரி பொருட்கள் துணிவகைகைள் நினைவுப்பரிசு இசை சம்பந்தப்பட்ட பொருட்கள் இராணுவ கலைப்பொருட்கள் ஆகியவற்றை தரக்கூடிய ஆன்லைன் வணிக வியாபார வலைத்தளங்கள்
  3. ஆன்லைன் விவாத மேடைகள்

முதலில் அப்பாவிகளை போல டிஜிட்டல் பாசிசம் மிக நல்லவிதமான கருத்துக்களை பதிவிட ஆரம்பிக்கும்.தொடர்ந்து மெதுவாக எச்சரிக்கைகள் மற்றும் பொய்செய்திகள் திடுக்கிடும் வதந்திகள் கற்பனையான சதித்திட்டங்கள் உணர்வுகளை தூண்டக்கூடியவகையிலான அதேசமயம் உணர்ச்சிபூர்வமான கதைகள் மற்றும் உண்மைக்கு மாறான செய்திகளை உண்மைகளை போல சொல்வது என்று டிஜிட்டல் பாசிசம் மெதுவாக தனது பதிவுகளில் கொடுக்க ஆரம்பிக்கும்.

இந்த போக்கில் படிப்படியாக தங்களால் தங்கள் வழிக்கு கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை தரும் நபர்களை டிஜிட்டல் பாசிசம். — ‘தங்களது சிந்தனை வளையத்துக்குள் கொண்டுவரமுடியாது என்று அடையாளம் காணப்பட்டவர்களிடமிருந்து’— படிப்படியாக பிரிக்கும் வேலையை செய்வார்கள்.

இந்த தளங்கள் வழியாக டிஜிட்டல் பாசிசம் தங்களிடம் பலியானவர்களுக்கென்று தொடர்ச்சியான தீவிரமான பிரச்சார தாக்குதலை கொண்டு சேர்க்கிறது. இதை அடுத்தடுத்து தொடர்ச்சியாக இடைவெளிக்கு காத்திருக்க வைக்காமல் அடுத்த வலதுசாரி செய்திதாள் வரும்வரை கூட அல்லது அடுத்த பிரச்சாரகரின் பிரச்சாரம் ஒளிபரப்பப்படும்வரை அல்லது அடுத்த ஆயுத பேரணி வரை காத்திருக்க விடாமல் டூவிட்களை நூற்றுக்கணக்கிலும் மெசேஜ்களை மைல் நீளத்திற்கும் தருகிறது.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் முன்பின் தெரியாத நபர்கள் கூட உங்களுக்கு நண்பர்கள் ஆகி தங்களுடைய வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தங்களது பலிஆடுகளாக மாறிப்போனவர்களிடம் ஒரு சிக்கலான பிரச்னை நடக்கிறது என்றோ பேரழிவுக்கு உள்ளாகப் போகிறோம் என்றோ பெரும் ஆபத்து வரப்போகிறது என்றோ ஒரு மாய பிம்பத்தை பயத்தை கட்டுவிக்கிறது. இம்மாதிரியான கற்பனைகள் தவறான பாதைகளை நம்பி செல்வதற்கும் அவர்களை சுற்றி வலதுசாரி வளையத்தை மேலும் மேலும் இறுக்கி தங்களுக்கு முன்பான யதார்த்தமான எந்த உண்மைகளையும் உணரமுடியாதவாறு செய்வதறகும் எளிதாகிறது.

ஏனெனில் ‘உடனடி அழிவுகள் என்பது -நாம் எல்லோரும் நினைப்பது போல உலகம் முழுதும் நடைபெறும் சம்பவங்களால் சீதோஷணநிலைமை மாறுவதால் நமது நாட்டைவிட்டு வளங்கள் கொள்ளைபோவதால் மற்றும் வேலைகளை தனியாருக்கு குத்தகைவிட்டுவிடுவதன் மூலம்தான் வரமுடியும்’ என்பதை பற்றி கவலைப்படாமல் வலதுசாரி பிரச்சாரகர்களின் வாய்வீச்சில் பலியாகி அவர்கள் முன்வைக்கிற எத்தகைய கடுமையான நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். ”நமது தலைவர் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும்” இதுதான்

நிஜங்களை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் டிஜிட்டல் பாசிசம் எல்லா முக்கியமான எதிரிகளையும் உள்ளுக்குள்ளே எழுப்பி பூதாகரமாக்கி அதிலிருந்து வலதுசாரி பயங்கரவாதம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற மாய பிம்பத்தை கட்டுவிக்கிறது.இந்த உத்தி ஆதி பாசிசத்திற்கு மிக முக்கியமானதாக இருந்தது

இன்றைக்கு நாள் முழுதும் (24/7) தினமும் டிஜிட்டல் தளங்களில் எளிதாக கிடைக்கக்கூடியதாக மாறிவிட்டது.

டிஜிட்டல் பாசிசம் எப்போதும் அங்கே இருக்கும் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் தனது எதிரி என கண்டுபிடிக்கப்பட்டவர்களோடு முழுகவனத்துடன் போராட தயாராக இருக்கும்.டிஜிட்டல் பாசிச உலகத்தில் எல்லாமே கறுப்பு வெள்ளை மட்டும்தான். கலர்களுக்கு இடமேயில்லை. எப்போதும் “நாம் எதிரே அவர்கள்”. அதாவது “us-vs.-them” “வெள்ளை இன மக்களுக்கு எதிராக மற்ற நிற மக்கள்”. எதை பிரச்சாரம் செய்தால் எடுபடும் என கணக்கீட்டு பிரச்சார மற்றும் வலதுசாரி ஆன்லைன் பிரச்சார வல்லுநர்கள் இவற்றை ரெட்பில்லிங் என்பார்கள்(redpilling).

மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் வருவதைப்போல உங்களுக்கு வாய்ப்பு என்பது நீலம் அல்லது ரெட்பில் மட்டுமே. நீல உறைக்குள் உங்களை புதைத்துக்கொண்டால் நீங்கள் ஒரு கற்பனையான பொய் உலகத்திற்குள் சஞ்சரிக்கலாம். ரெட் என்றால் உண்மையை பார்க்கச் செய்யும் அல்லது குறைந்த பட்சம் டிஜிட்டல் பாசிசம் வடிவமைத்திருக்கும் மாற்று உண்மைகளையாவது உணரச்செய்யும்.

இதுதான் மக்களின் புராண காலத்திலிருந்ததை போன்ற விருப்பங்களை பிரதிபலித்த மாற்று உண்மைதான் 6-ம் தேதி ஜனவரி 2021-ல் வாஷிங்டன் டி.சி. தலைநகர கட்டிடத்தில் நாம் பார்த்தது இதை இந்த ஒன்று கூட்டப்டட அல்லது மனித கூட்டத்தின் கோபமாக டிஜிட்டல் பாசிசம் வெளிக்காட்டியது. அமெரிக்க தலைநகரத்தை சுற்றிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதை பெரும்பான்மை அமெரிக்க மக்கள் விரும்பில்லை; வலதுசாரி பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றுதான் 81-74 ஆக பிரிந்த செனட், அதிபர் மீது நீக்கல் (impeachment) தீர்மானத்தை அரசியலமைப்பு படி நிறைவேற்றியது அவர்கள் ஏகமனதாகவே வலதுசாரி வேலைத்திட்டத்தை ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது. மௌனமான பெரும்பான்மையின் மாயை அங்கே இருக்கவில்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அவர்களின் பைத்தியக்காரத்தனமான காரண காரியங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார்கள்.

வேலை மற்றும் வேலையிலிருந்து ஓய்வாக இருப்பது ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று அதிகரித்த அளவில் கலக்கும்போது கொரோனா வைரஸ் உலகத்தை பயமுறுத்திய காலகட்டத்தில், வீட்டை அலுவலகமாக ஆக்கிகொள்வது அதிகரித்தபோது, மிகப்பெரிய ஊக்கம் பெறுவதை பார்க்கமுடிந்த்து. அலுவலகம் அல்லது தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து விட்டுக்கு போகும்போது பொழுதுபோக்கு, சமூக வலைத்தளங்கள், ஹாலிவுட் ஆன்லைன் கணினி விளையாட்டுகள் மற்றும் யூ டியூப் ஆகியவற்றை தேடும் மனப்பாங்கு உருவாகுவது எப்போதையும் விட அதிகரித்த அளவில் இருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும்போது பொழுதுபோக்கு சம்பந்தமான செலவு குறைவது மற்றும் பொதுவெளி பழக்கம் குறைவதும் வாடிக்கையான அனுபவமாக பழகிவிடும். உதாரணத்திற்கு இரவு சாப்பிடும்போது செய்திகளை பார்ப்பது தொலைந்துவிடும். சமூக பழக்கவழக்கங்கள் தனிப்பட்ட அந்தரங்கமான இடங்களுக்கு மாறிவிடும். வாடிக்கையான அனுபவங்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்துவிடும்.

படிக்க:
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
♦ இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !

சமூகத்தில் கலந்திருப்பது மற்றும் வீட்டிலிருக்கும் போது மற்றவற்றுக்கு செலவிடும் நேரம் ஆகியவை சுத்தமாக இல்லாமல் போய்விடும். இந்த சமயம்தான் டிஜிட்டல் பாசிசத்திற்கு விலை மதிக்கவொண்ணாத புதிய புதிய கதவுகளை திறந்துவிடும். உண்மைதான். இது எல்லாமே ஒற்றைத்தன்மையை மேலும் அதிகரித்து இறுக்கமாக்கும். ஜெர்மனியின் மைக்கேல் சீமன் இதனை டிஜிட்டல் பழமைவாதம் என்பார். ஒரு பொய்யான செய்தி உருவாகும் உண்மையான முறை என்பது பற்றிய கட்டுரையில் விளக்குகிறார். இந்த பழங்குடியினராக்கும் போக்கு பார்ப்பவர்களை பொதுவான ஜனநாயக நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்கும் வேலையை செய்கிறது. மக்களுக்கிடையிலான உறவு வாக்களிப்பது மற்றும் ஜனநாயகம் பற்றிய கருத்துகள் மேலும் மேலும் சிதையும் போது மாற்றாக டிஜிட்டல் பாசிசத்திற்கு ஏற்ற களனாக அமைகிறது

இது நடக்க தொடங்கியவுடன் டிஜிட்டல் பாசிசம் தனது உண்மையான பாகத்தை மூடி மறைத்திருக்கும் திரைகளை விலக்கி சந்தேகப்படாத மக்கள் தொகையினரிடம் இன்னும் நிறைய பொய்ச் செய்திகளையும் உண்மையை போலவே நம்பக்கூடிய அளவு மாறான செய்திகளையும் அள்ளி விடும். டிஜிட்டல் பாசிசம் மற்றும் தீவர வலதுசாரிகளை, விரிந்த பார்வை மங்கி குறுகிய கண்ணோட்டத்திற்கு பலியானவர்கள், சரித்திரப் பூர்வமாக அணுகும் ஆற்றலை முழுவதும் இழந்து விட்டவர்கள் முழுதுமாக அனுமதித்து, அவர்கள் தங்கள் பிம்பங்களை இருப்பதைவிட பூதாகரமாக ஆக்கி காட்டுவதையும் அப்பாவியாக அங்கீகரித்து கொள்கிறார்கள். இதுக்குமேலே இருக்கவே இருக்கிறது உதிரி குழுக்கள் (Fringe groups). தங்களது சத்தத்தை அதிகப்படுத்திக் காட்ட தவறாக சித்தரிப்பதை பயன்படுத்துவார்கள். சமூக வலைத் தளங்களின் உதவி என்பது ஒரு கொள்கை பிரச்சார பீரங்கியாக செயல்பட அதனால் டிஜிட்டல் பாசிசம் தனது சொந்த, உண்மையான விஷ சுழலின் பரப்பை அதிகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும். செயற்கையாக ஆன்லைனில் வரும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் படைப்புகளையும் கடத்தி உயர்தரமானதாக்கிக் கொள்ள துணைபுரிகிறது.

இப்படி எண்ணிக்கையை உயர தூக்கி பிடிப்பதானது ஏற்கனவே வலதுசாரி பயங்கரவாதிகளால் கொதிநிலைக்கு கொண்டுவரப்பட்டு சுதி ஏற்றப்பட்டிருக்கும் விவாதங்கள் இன்னும் அதிகமான ஒற்றைத்தன்மை மற்றும் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடிய செய்திகளை உள்ளே கொண்டுவருவதன் மூலம் அதிகரிக்கும். ஆன்லைனில் அமைந்திருக்கும் ‘பகிர்’ மற்றும் ‘தொடர்பினை ஏற்படுத்து’ மற்றும் ‘டுவீட்களை’ மறுபடி மறுபடி வெவ்வேறு பெயர்களில் போடுவது ஆகியவை வெறுப்புணர்வை வளர்க்கும் செய்திகளை வெகு தீவிரமாக பரவச்செய்து டிஜிட்டல் பாசிஸ்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள செய்கிறது. இது டிஜிட்டல் பாசிசம் தான் காட்சியளிப்பதைவிட மிக சக்திவாய்ந்த்தாகச் செய்ய வடிவமைக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தால் கருத்துக்கள் சொல்லப்படும் காலத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் கருத்துகளே முழுதுமாக ஆக்ரமித்து இருப்பதை போல ஒரு மாயத்தோற்றத்தை வலதுசாரி பயங்கரவாத உதிரி (fringe) அணிகள் ஏற்படுத்துகிறார்கள். செயல்பட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளில் 5 சதமே இருக்கக்கூடியவர்கள் வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்களுக்கு போடப்படும் லைக்ஸ்-சில் 50 சதத்திற்கு மேல் போட்டுத் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு இல்லாத எண்ணிக்கை அளவை கூட்டி காட்டுவதற்கு அனைத்து வேலைகளையும் டிஜிட்டல் பாசிசம் அரங்கேற்றுகிறது.

ஜெர்மனியிலிருக்கும் ஒரு வலதுசாரி கும்பல் தங்களுக்கு ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துக்கொண்டது. புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் நெருக்கமாக அணுகி சோதனை செய்தபோது அந்த கும்பல் தங்களுக்கு உண்மையில் 40 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதை ஒத்துக்கொள்ள வைத்தார்கள்.

ஒரு பக்கம் பெருங்கூட்டமே வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளை பரப்புவது போல காட்டிக்கொண்டு பாசிக கும்பல்கள் தங்களது உண்மையான குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை மறைத்து கொள்ள மற்றுமொரு வழியாக பயன்படுவது சோசியல் பாட்ஸ் (Social Pots). தானே இயங்கும் நிலையிலுள்ள செய்தி தொடர்பு சமூக ஊடகங்களில் வழமையாக காணப்படுவது தங்களது கடமையாக கொண்டிருப்பது விவாதங்களின் திசைவழி மற்றும் உட்கிடக்கையை மற்றும் வாசகர்களின் எண்ண ஓட்டத்தை செல்வாக்கு செலுத்தி தீவிர வலது பக்கம் தள்ளிக் கொண்டுபோவது.

சோசியல் பாட்ஸ் என்பது சாட்பாட்ஸ்(chat pots) உடன் தொடர்புடையது என்றாலும் குறைந்த அளவு செய்தி பரிமாற்றத்தையே பயன்படுத்துகிறது. சாட்பாட்ஸ் தகவல்கள் ‘டுவீட்டை’ போன்று எளிய அல்லது முன்னமே பின்னப்பட்ட செய்திகளை விநியோகிக்கும்.

தானியங்கி தகவல் தொடர்பைத் தவிர வலதுசாரி பயன்பாட்டாளர்கள் விதவிதமான கணக்குகளை இயக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அது மறுபடியும் தீவிர வலது என்பது உண்மையில் இருப்பதைவிட பெரிதானது என்று கபடத்தனமாக காட்ட முயல்கிறது. அதே சமயம் அனுப்புநரின் உண்மையான அடையாளத்தை மறைக்கச் செய்கிறது. இது தெளிவாக தெரியக்கூடிய எண்ணிக்கையை பல மடங்காக்குவது மட்டுமல்ல மற்றவர்களை இந்த கும்பலில் சேர வற்புறுத்தி ஊக்கப்படுத்துகிறது. இவர்கள் இந்த தொடர்பில் தொடரும்போது ஒன்று அனுதாபம் மூலம் ஒத்த கருத்துள்ளவர்களாகிறார்கள், மற்றும் ஆதரவாளர்களாகிறார்கள். இதில் மோசமான தன்மைகளில் அவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளை மொட்டை கடுதாசி போல அனுப்புவதில் மற்றவர்களுடன் போட்டி போட்டு அதிகளவு செய்கிறார்கள்.

இந்த செய்முறை வலதுசாரி சிந்தனைப் பெட்டியை உருவாக்குகிறது. இது டாக்பைலிங் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான ஆன்லைன் கொடுமைபடுத்துதல் மற்றும் பயமுறுத்தி தொல்லைகொடுக்கும் நடைமுறையாகும். பெரும் எண்ணிக்கையிலான கணக்குகள் வலதுசாரி பதிவுகளை இழிவுபடுத்தும் கருத்துகளோடு வருவதை திடீரென பூர்த்தி செய்யும். எப்போதும் வலதுசாரிகளின் எதிரியை, அதிலும் நன்கு அறிவை வெளிபடுத்தக்கூடியவர்களைக்  குறிவைப்பார்கள். இம்மாதிரியான டாக்பைலிங்-கின் நோக்கமே பாதிக்கப்பட்டவர்களுக்கு பயபீதியை உருவாக்குவது உதவிக்கு யாருமே இல்லாததைப் போன்ற உணர்வைக் கொடுப்பது.

டிஜிட்டல் பாசிசத்தின் தீவிர வலதுசாரிகள் ஆன்லைன் தளங்களை ஒரு யுத்தகளமாக பார்த்தனர். அங்கே அவர்கள் ஒரே ஒரு முழக்கத்தினடிப்படையில் இயங்கினர். அது “உங்களால் முடிந்தால் உங்களது போர்தளத்தை தேர்ந்தெடுங்கள். அந்த ஒன்றில் வெற்றி காணமுடியும் என்பதை உறுதிபடுத்துங்கள்” என்பதுதான். டிஜிட்டல் பாசிசத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று தன்னை ஒரு முன்னணி செயல்பாட்டாளாராக ஆக்கிகொள்வது என்பதுதான். அதனால் கூகுளின் படிப்படியான வழிமுறைகள் அதன் செய்திகளை முதல்நிலைகளில் கொண்டு சென்றுவிடும். கூகுள் முடிவுகளின் முதல்பக்கத்தை மட்டுமே கூகுள் செயற்பாட்டாளர்கள் பார்ப்பார்கள் என்ற முழு அறிதலோடு இதை செய்து முடிக்கிறார்கள்.

அத்தகைய நிலைப்பாடு ஆதிக்கநிலையை அடைந்தவுடன் தீவிர வலதுசாரிகள் தாங்கள் குறிவைத்த பார்வையாளர்களை மிக எளிதாக வசப்படுத்திவிடுவார்கள். இது பாதிக்கப்பட்டவர்களை டிஜிட்டல் பாசிசத்தின் ஆன்லைன் வலைப்பின்னலுக்குள் தீவிரமாக செயல்பட வைக்கக்கூடிய ஆற்றலை பெற உதவுகிறது. இந்த பயணத்தின் ஆரம்பத்தில் இதிலிருக்கும் எல்லா தகவல் தொடர்புகளும் உள்ளர்த்தம் எதுவும் இருப்பது போல தெரியாது.

கூகுளில் தங்கள் தேடலை ஒழுங்காக முடிப்பதில் மிகவும் சுமாரான நிலையிலிருப்பதால் இம்மாதிரியான முடிவுகள் அடிக்கடி வரும். நமது திரையில் காட்டப்படுவது என்னவென்றால் இடைவிடாத தொடர்ச்சியான வெவ்வேறு பொருள் தரக்கூடிய புரியாத வார்த்தைகள் மற்றும் சந்தேகத்தை உருவாக்கும் விவரங்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொய்யான கற்பனை சதித்திட்டங்கள், முடிவில் மூலாதாரமான தவறான தகவல்கள் மற்றும் தவறான வழிக்குக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு தவறான தகவல்கள் விபரங்கள் தான் இவை.

படிப்படியாக அவர்களின் எந்த உள்ளர்த்தமும் இல்லாத, சொல்லப் போனால் குழந்தைத்தனமாக வலைத்தளங்களில் தேட ஆரம்பிப்பதை மனதை மயக்கும் பல்வேறு ஆசைகளைக் காட்டி அதன் மூலம் பலகீனமான சிந்தனை உள்ளவர்களை பலியாடுகளாக மாற்றி தங்களது டிஜிட்டல் பாசிசத்தின் வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

படிக்க:
♦ ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !
♦ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

இந்த ஆட்டத்தில் என்ன நடக்கும் என்றால் பொதுவான கருத்துபரிமாற்றத்திற்கோ மற்றும் பொருள்களையோ தலைப்புகளையோ ஆராயக்கூடிய வார்த்தை பரிமாற்றங்கள் இருக்கவே இருக்காது. அதற்கு பதில் குறிவைக்கப்பட்ட பலியாடு தீவிர வலதுசாரிகளின் கொள்கை சிந்தனை கொண்டு உருவாக்கப்பட்ட வளைவுப்பாதைக்குள் தங்களின் ஆதிக்கத்துக்குள்ளான பொருளாக வருவாரா மாட்டாரா? என்பதுதான் முழு பணியாக இருக்கும்.

அநேகமாக டிஜிட்டல் பாசிசத்தின் மிகப்பெரிய வியப்புக்குரிய வெற்றியாக இருப்பது – இது பழமையான பாசிசத்திலிருந்து மிகவும் வேறுபட்ட – அனுதாபிகளும் ஆதரவாளர்களும் தங்களது ஆன்லைன் தளங்களில் வலதுசாரிகள் சொல்லக்கூடிய கற்பனையான சதிகளையும் தவறான வழிக்கு கொண்டு செல்லக்கூடிய விபரங்களையும் உன்னதமான செய்திகளாக தங்களது ஆன்லைன் தளங்களில் பதிவேற்றி தங்களை தாங்களே உருபெற்றுக்கொள்வதைதான் குறிக்கிறது.

டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக – அதாவது மேலே இருப்பது மற்றும் பின்பற்றுபவர்களை கீழே கொண்ட அமைப்பாக – இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

டிஜிட்டல் பாசிசத்தில், கோயாபல்ஸ் போன்றவர்களுக்கு இங்கு வேலை ஏதும் நிச்சயம் இருக்காது மற்றும் இதற்கு கட்டாயமாக பிரச்சாரம் செய்வதற்காக ஒரு பிரச்சாரத் துறைக்கான அமைச்சகம் தேவைப்படாது. மத்திய ஒழுங்கமைப்பு இங்கு இல்லை. சுற்றி ஒளிவட்டம் இல்லை; கட்சிக்கான இயங்கு இயந்திரம் இல்லை; போர் விளையாட்டுகளுக்கான போர் அணிகளும் இல்லை. இதெல்லாம் பழமையின் சின்னங்களாகி விட்டன. டிஜிட்டல் பாசிசம் நவீன நாஜிசத்தின் வழக்கிலில்லாத சில பாரம்பரிய நிறுவன வடிவங்களை கூட தகர்த்து விட்டு, வலதுசாரி ஆன்லைன் குப்பைகளின் சக்தியால் அவற்றை மாற்றியமைக்கிறது, இது புத்திஜீவிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்காது.

கண்டுபிடிக்கபட முடியாத டிஜிட்டல் பாசிசத்தின் தீவிர வலதுசாரி படைப்பிரிவு ஒரு லிபரல் சமூகத்தை அழித்தொழிப்பதற்காக திறந்தவெளி சமூகத்தின் சட்டப்பூர்வ நிறுவனங்களான ஆன்லைன் தளங்கள் போன்றவற்றை சுற்றி வளைக்கின்றன.

சச்சா போரன் கோகன் சமீபத்தில் சொன்னது, “பேச்சு சுதந்திரம் என்பது அடையக்கூடிய சுதந்திரம் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்”. டிஜிட்டல் பாசிசம் இரண்டையுமே பயன்படுத்தி உள்ளிருந்தே மொத்த சுதந்திரத்தையும் ஒழித்துக்கட்டுகிறது.

“முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பிற்போக்கு நடவடிக்கைகளையும் பாசிசத்தின் வளர்ச்சியையும் அவற்றின் தயாரிப்பு கட்டங்களிலேயே யார் யார் எதிர்த்துப் போராடவில்லையோ அவர்கள் பாசிசத்தின் வெற்றியை தடுக்கும் நிலையில் இருக்கவில்லை.அதற்கு நேர்மாறாக அதன் வெற்றிக்குத்தான் வழிவகை செய்து கொடுக்கிறார்கள்” டிமிட்ரோவ்.-

கட்டுரையாளர்கள் : தாமஸ் க்ளிகவெர் மற்றும் நார்மன் சிம்ஸ்.
சில கூடுதல் தரவுகளுடன் தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : Counter currents

தாமஸ் க்ளிகவ்ர், ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலையில் பணியாற்றுகிறார்.
நார்மன் சிம்ஸ், நியூசிலாந்தில் உள்ள வய்கடோ பல்கலையில் பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார்.

 

CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !

0

த்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பண்டேடரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. காய்கறி விற்பனை செய்து வந்த இவர், தனது 17 வயது மகள், தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்தார் என்பதற்காக, அவருடைய தலையை துண்டித்தார். மட்டுமல்லாமல், துண்டித்த தலையோடு வீதிகளை, சாலைகளைக் கடந்து தனது ஆணாதிக்க சீழ்பிடித்த மனதின் வக்கிரத்தை ‘வீரமாக’ பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, போலீசில் சரணடைந்தார்.

மனிதத்தன்மையற்ற இந்த கொலைவெறி செயலுக்கு பார்ப்பனியத்தில் ஊறிப் போன இந்திய ஆணாதிக்கச் சமூகம் சர்வேஸ் குமாரை கொண்டாடக்கூடும். ஏனெனில் மாண்புமிக்கதாகக் கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே இந்திய ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக திகழும்போது, கடைநிலையில் இருக்கும் சர்வேசின் செயல்கள் அப்படித்தானே பார்க்கப்படும்.

சர்வேஸ் தன்னை மீறி காதலித்த தனது மகளின் தலையை வெட்டினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தாம் விசாரித்துவரும் ஒரு வழக்கில் ஒரு சிறிமியை வல்லுறவுக்குள்ளாக்கிய கயவனையே அச்சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்து அச்சிறுமியின் மாண்பை படுகொலை செய்துள்ளார்.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் மோகித் சுபாஷ் சவான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு 9- ம் வகுப்பு படித்து வந்த 16 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் சொல்கிறார். இதனையடுத்து மோகித் சுபாஷின் தாய் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து சமாதானம் பேசுகிறார். சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் சிறுமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி அளிக்கிறார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்துக்கொள்ள சிறுமி மறுப்பு தெரிவிக்கிறார். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தை என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்ட பஞ்சாயத்தில் சிறுமிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போடப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் மீது கொடுத்த புகாரை சிறுமியின் தரப்பு வாபஸ் பெற்றுக்கொள்கிறது. இதற்காகத்தானே இத்தனை நாடகமும் என்பதுபோல, அவன் சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள தற்போது மறுப்பு தெரிவிக்கிறான். அவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி உச்சநீதிமன்றம்வரை செல்கிறான் அவன். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான், நீதிபதி எஸ்..போப்டே, வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கேள்வியைக் கேட்டார்,நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தயாரா?”.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு

நாங்கள் உங்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப் படுத்தவில்லை. உங்களின் விருப்பத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்” என நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு அவனிடம் மன்றாடுகிறது. நாகரிகமான உலக சமூகம் இந்திய சமூகத்தின் இழிநிலையைப் பார்த்து உச்சுக்கொட்டுகிறது.

பாலியல் வன்கொடுமையாளனுக்கு உச்சநீதிமன்றம் எவ்வளவு பரிவு காட்டுகிறது? இந்தப் பரிவு ஆண் என்பதால் மட்டுமே காட்டப்படும் பரிவு. அல்லது மனுநீதியை தின்று செரித்த மூளையால் காட்டப்படும் பரிவு.

அனைவரும் சமமானவர்களே என்கிற அரசியலமைப்பால் இந்திய நீதித்துறை இயங்கவில்லை; மாறாக பெண்ணின் உடல் மீது ஆண்கள் நிகழ்த்தும் குற்றங்கள் குற்றங்களே அல்ல, அவை ஆண்களின் உரிமை என்கிற மனுநீதியால் இந்திய நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு இந்த வழக்கு மீண்டுமொரு உதாரணம்.

நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)

சமீபகாலமாக தனது அப்பட்டமான ஆணாதிக்க நீதிமன்ற நடவடிக்கைகளால், தன்னை இந்திய ஆணாதிக்க சமூகத்தின் ஏக பிரதிநிதியாய் தலைமை நீதிபதி போப்டே மீண்டும் மீண்டும் பறைச்சாற்றிக் கொள்கிறார். இந்த வழக்கின் சூடு தணிவதற்குள்ளாகவே மற்றுமொரு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடம் வன்முறையாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என சொன்னபோது, மாண்பற்ற தலைமை நீதிபதி இப்படி கேட்டார் : “இரண்டு பேர் கணவன்மனைவியாக வாழும்போது, கணவர் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், அவர்களுக்கிடையில் உடலுறவை ‘பாலியல் வல்லுறவு’ என அழைக்க முடியுமா?”

மேற்கண்ட இரண்டு வழக்குகளுமே கிரிமினல் (திருத்த) சட்டம் 2013-ன் படி கடும் தண்டனைக்குரிய சட்டங்கள். ஆனால், தலைமை நீதிபதி மனு ஸ்மிருதியின் குரலாக ஒலிக்கிறார். கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் குடிகாரனாக, கொடூரனாக இருந்தாலும் அவனுக்கு பணிவிடை செய்து வாழ் என்கிறது மனு நீதியின் அத்தியாயம் 9-ல் உள்ள 78-வது ஸ்லோகம். அந்த மனுவின் குரலைத்தான் நீதிபதி ஒலிக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் மத்தியில் ஆளும் மனுநீதி அரசின் கொடூர வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் பெண்கள் குறித்தும் இப்படித்தான் ஓர் உயரிய முத்தை நீதிபதி பாப்டே உதிர்த்திருந்தார். “பெண்கள் ஏன் போராட்ட களத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் வீடு திரும்புவதை உறுதிபடுத்துங்கள்!” என்றார் போப்டே.

ஆக்ஸ்போம் 2018 ஆய்வின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் 85 விழுக்காடு பெண்கள் வேளாண்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உரிமையை பறிக்கும், நேரிடையாக பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடக்கூடாது என்கிறார் நீதிபதி பாப்டே.

வீதிக்கு வந்து போராடும் உரிமையும்கூட ஆண்களுக்கானது என்கிறார். உலகின் எந்தவொரு போராட்டமும் பெண்களின் பங்களிப்பின்றி நடைபெற்றதில்லை. பெண்களின்றி எந்தப் போராட்டமும் நடைபெறவும் முடியாது. இதை மாண்புமிகுந்த பதவியில் அமர்ந்திருக்கும் நீதிபதி போப்டே அறியாமல் இருக்க முடியாது.

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மகனாலும் காக்கப்பட வேண்டியவர் பெண்கள். ஆதலால் பெண்கள் எப்போதும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்” என்கிறது மனுதரும சாத்திரத்தின், அத்தியாயம் 9 செய்யுள் 3.

ஆக, போப்டே இயங்குவது இந்திய அரசியலமைப்பு நீதியாலா, மனு நீதியாலா? அவரை ஆட்கொண்டிருப்பது மனு நீதியே என தெள்ளத்தெளிவாக புரிகிறது.

தொடர்ச்சியாக தன்னை ஆணாதிக்க மனுநீதியின் பிரதிநிதியாக நிரூபித்துக்கொண்டே வரும் நீதிபதி போப்டேவை பதவி விலகக்கோரி, ஜனநாயக ரீதியாக உரிமை கோரும் பெண்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

படிக்க :
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
♦ அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அமர்ந்துகொண்டு இப்படிப்பட்ட தீர்ப்புகளை, கருத்துகளை பாப்டே கூறுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. இது, “பெண்களுக்கான நீதி இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமையல்ல” என்கிற செய்தியை பிற கீழமை நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவலர்கள் மற்றுமல்லாமல் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அறிவிக்கிறது. பாலியல் வன்கொடுமையாளர்களுக்கே பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து வைப்பது என்பது பாலியல் வன்கொடுமைகளுக்கான லைசன்ஸ் வழங்குவதைப் போன்றது. மேலும் இத்தகைய உரிமத்தை வழங்குவதன் மூலம், பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தவோ, சட்டப்பூர்வமாக்கவோ முடியும்” என பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனி ராஜா, கவிதா கிருஷ்ணன், கமலா பாசின், மீரா சங்கமித்ரா உள்ளிட்டோர் கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

பெண்கள் குடும்ப வன்முறைகளை சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளே இருங்கள், பாலியல் வன்கொடுமை செய்தவனையே திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தக் கொடுமைகளை சகித்துக்கொண்டால், அனைத்துக்கும் மேலாக இருக்கும் அரசு செலுத்தும் வன்முறைகளை உங்களால் சகிக்க முடியும்” இதுதான் தலைமை நீதிபதி உணர்த்தும் செய்தி. பெண்கள் உடைத்து தூக்கியெறிய வேண்டிய செய்தியும் இதுவே.

அனிதா
செய்தி ஆதாரம் : த கார்டியன், த வயர்.

 

செஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி !

செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ளது வழுக்கம்பாறை கிராமம். இங்கு ஊருக்குள் கவுண்டர் சாதியினரும் ஊருக்கு வெளியே இருளர் இன மக்களும் வாழ்ந்து வருகின்றன. இருளர் இன மக்களின் சடலத்தை இடுகாட்டில் புதைப்பதற்கு கவுண்டர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டி, சாலையில் சடலத்தை வைத்து இன்று காலை முதல் இருளர் இன மக்கள் போராடி வருகின்றனர்.

வழுக்கம்பாறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை ஏரிக்கரையில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஜந்து ஆறு தலைமுறைகளாகவே அடக்கம் செய்து வருகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே இருளர் இன மக்கள் இடுகாட்டிற்கு செல்லும் வழியில் கவுண்டர் சாதியை சார்ந்தவர்கள் நிலம் இருப்பதால், “நாங்கள் வழிவிடமாட்டோம். கலெக்டரிடம் மனு கொடுத்து அனுமதி வாங்கிவா, உங்கள் சடலத்தை எங்கள் வழியாக எடுத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பலமுறை பிரச்சினை செய்துள்ளனர். ஒவ்வொருமுறையும் அவர்களுடன் பிரச்சனை செய்துதான் சடலங்களை அடக்கம்செய்து வந்துள்ளனர் இருளர் இன மக்கள்.

படிக்க :
♦ திண்ணியம் – வாயில் மலம் திணித்த ஆதிக்கசாதி வெறியர்கள்
♦ தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !

சடலத்தை எடுத்துச் சென்றால் ஆள்வைத்து அடிப்பது, நான்கு பேர் தான் செல்லவேண்டும் என மிரட்டுவது, இழிவான வகையில் பேசுவது என தொடர்ந்து கவுண்டர் சாதியினர் இருளர் சாதியைச் சேர்ந்தவர்களின் மீது தாக்குதல் தொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (03-03-2021) இறந்த முதிய பெண்மணி ஒருவரின் சடலத்தை அவ்வழியே எடுத்துச் செல்ல முயன்ற போது அனுமதி மறுத்துள்ளனர்.

இருளர் இன மக்களுக்கு என இடுகாட்டை அரசு ஒதுக்காத சூழலில், ஏரிக் கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தில்தான் இம்மக்கள் இறந்தவர்களைப் புதைத்து வந்தனர். இந்நிலையில் ஊர்ப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த நிலம் புறம்போக்கு நிலம் இல்லை என்றும் தாம் பட்டா போட்டிருப்பதாகவும் கூறி அந்த நிலத்திலும் புதைக்க அனுமதி மறுத்துள்ளார்.

தங்களது சமூக மக்களை புதைப்பதற்கு இடுகாட்டுக்குக் உடலைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும்படியும், கவுண்டர் சாதியினரின் பகுதி வழியாகக் கொண்டு சென்றால் தாக்குதல் தொடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி இறந்தவரின் உடலை வைத்து சாலையில் போராட்டம் நடத்தத் துவங்கினர்.

இடுகாடு பிரச்சினை தொடர்பாக பல முறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
“பலமுறை மனு கொடுத்துவிட்டோம். மனு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஏதுவும் நடக்கப்போவதில்லை, சமிபத்திய ஆறு சாவிற்கும் எங்களுக்கு இதே போராட்டம்தான் நடக்குது, இதுக்கு ஒரு முடிவே தெரியல, சாவு இன்று ரோட்டில் அனாதையாக கிடக்கிறது நாங்கள் ஏங்கு சென்று புதைப்போம்?” என்கிறார்கள் இக்கிராமத்து பெண்கள்

“கலெக்டர் வரும் வரை நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம், ஜேசிபி எடுத்து வந்து எங்களுக்கான வழியை ஒதுக்கி நிரவித்தரும் வரை, சுடுகாட்டுக்கான நிலத்தை ஒதுக்கிதரும் வரை நாங்கள் போகமாட்டோம். காலங்காலமாக இதேக் கொடுமையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் இங்கேயேதான் இருப்போம், பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம், எங்களுக்கு வழிவேண்டும், நாங்கள் போவதை யாரும் தடைசெய்யக்கூடாது”என்றார் இறந்தவரின் சகோதரர்.

காலையில் தொடங்கி நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் போலீசு வந்து கலைந்து செல்லும்படி மிரட்டியது. அதற்கு அடிபணியாமல் உறுதியாக நின்று போராடினர் இப்பகுதி மக்கள். இன்று பிற்பகலில் அங்கு வந்த மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருளர் சமூக மக்கள் தங்களுக்கு உடனடியாக இடுகாடு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முறையான பாதை அமைத்துத்தரப்பட வேண்டும் என்றும் கூறினர்.

இடுகாட்டுக்கு இடத்தை ஒதுக்க உடனடியாக ஆவண செய்வதாக உறுதி செய்ததை ஒட்டி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வெறும் வாய்ப் பேச்சு மட்டும் பேசி இடம் ஒதுக்க மறுத்தால் மீண்டும் சாலையில் இறங்கிப் போராட தயங்கமாட்டோம் என்று கூறுகின்றனர் இருளர் இன மக்கள்.

வெறுமனே இடம் ஒதுக்கீடு செய்து இந்தப் பிரச்சினையை தீர்த்து விடுவதோடு தமது கடமையை முடித்துக் கொள்ள விழைகிறது மாவட்ட நிர்வாகம். இடுகாட்டுக்கு செல்லும் பாதையை மறித்து தாக்குதல் தொடுத்த கவுண்டர் சாதி வெறியர்களைக் கைது செய்வதோடு, இடுகாட்டு புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொண்டவரையும்  அதற்குத் துணைநின்ற அதிகார வர்க்கத்தினரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.


வினவு செய்தியாளர்
திருவண்ணாமலை

 

இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !

ந்தியாவின் உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்பட்டுவந்த அனைத்து சலுகைகளையும் மானியங்களையும் படிப்படியாக மோடி அரசு பறித்து வரும் சூழலிலும் தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து பெரும்பான்மை மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்குலக நாடுகளைப் போல நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் கார்பப்ரேட்டுகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடாத சூழலே நிலவுகிறது.

இந்தியாவில் நிலவும் சாதிய அடிப்படையிலான படிநிலையைக் கட்டிக்காக்கும் பார்ப்பனிய கட்டுமானம், பெரும்பான்மையான உழைக்கும் மக்களை நாட்டின் அரசியல் சமூக பொருளாதார நிகழ்வுகளிலிருந்து காலங்காலமாக விலக்கி வைத்திருப்பது இதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் பார்ப்பனியம் உண்டாக்கி வைத்திருக்கும் சாதிய மற்றும் மதரீதியான பிளவுகளைக் காட்டி மக்களின் கோபத்தை முளையிலேயே திசைதிருப்பி கார்ப்பரேட்டுகளின் சுரண்டலைப் பாதுகாக்கிறது இந்துத்துவக் கும்பல்.

1980-களின் இறுதியிலிருந்தே தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது அதிகமானதை தொடர்ந்து நாட்டின் அரசியல் பொருளாதாரத்தின் மீதான முதலாளித்துவ வர்க்கத்தின் பிடிமானம் இறுகியது. படிப்படியாக நாட்டின் அனைத்து துறைகளையும் தனியாரின் கொள்ளைக்கு திறந்து விடும் வகையில் நாட்டின் அரசியல் திசைவழியை மாற்றிக் கொண்டுவந்தது.

படிக்க :
♦ மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் !
♦ பு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!

கடந்த 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அம்பலப்படத் துவங்கிய இந்த தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் படிப்படியாக தீவிரமடையத் துவங்கியது. மக்களின் கோபம் கார்ப்பரேட்டுகள் மீது திரும்பியிருந்த சூழலில், அதனை திசைதிருப்பும் வகையிலும் போராடும் மக்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையிலும் செயல்படக் கூடிய அரசியல் தலைமை ஆளும் வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது.

இந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகவே மோடி தலைமையிலான இந்துத்வா அரசியலின் எழுச்சியை கார்ப்பரேட்டுகள் பின் இருந்து முன் தள்ளின. சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்கும் சோதனைக் களமாக இந்தியாவை இருத்தி வைத்திருக்கிறது இந்துத்துவக் கும்பல்.

புதிய தாராளமய சந்தைகளின் எழுச்சி இந்தியாவில் பன்முகத்தன்மை கொண்ட நுகர்வுத் தன்மையை சிதைவுறச் செய்து நுகர்வுக் கலாச்சார ஒற்றைத்தன்மையை ஸ்தாபித்த்து. பன்முகத்தன்மை கொண்ட நுகர்வு என்பது பல்வேறு சிறு சிறு உள்ளுர் தயாரிப்புகளை ஊக்குவித்தது. ஆனால் நுகர்வுக் கலாச்சார ஒற்றைத்தன்மை, கார்ப்ரேட் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவைகளின் தயாரிப்பு மற்றும் விநியோகத்துறைகளில் தங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு உதவிசெய்தது.

மோடி அரசின் ஆட்சியில் சிறு குறு உற்பத்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதல் உச்சத்தை அடைந்தது. விவசாய நில கையகப்படுத்துதல் சட்டம், பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வங்கித்துறையில் மாற்றம், தொழிலாளர் சட்டங்களில் மாறுதல், வேளாண் சட்டங்கள் என தொடர்ச்சியான தாக்குதல்களை மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளாக காட்டிக் கொள்ளப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் பொதுவெளியில் நடத்தப்பட்டன.

அதுமட்டுமல்ல, இந்திய அரசியல்சாசனம் உறுதிப்படுத்தும் பல்வேறு ஜனநாயக அம்சங்களை விரைவாக அழிப்பது, அரசியல் சட்ட நிறுவன மரபுகளை அலட்சியம் செய்து புறக்கணிப்பது என அரசியல்சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளுமே மறுக்கப்பட்டன, திரிக்கப்பட்டன.

இவை அனைத்துமே அதிகாரத்திலிருக்கும் இந்துத்துவக் கும்பல், இந்தியாவுக்கு கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியத்தின் பல்வேறு கட்டங்களாகும். இவை இந்திய சமூகக் கட்டமைப்பின் அரசியலில் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தை ஆழமாக வேரூன்ற செய்யத் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதற்கான செயல்முறைகளாகும்.

சிறுபான்மையினர், முசுலீம்கள், தலித் மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் மீதான சாதிய மதவெறித் தாக்குதல்கள் மற்றும் குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட வேறு பல வடிவங்களிலான வன்முறை சம்பவங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்துத்துவா கார்ப்பரேட் நட்புறவின் திட்டமிட்ட அதிர்ச்சி வைத்திய நடவடிக்கைகளாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, மக்கள் மீது மோடி அரசு தொடுக்கும் பொருளாதாரரீதியான தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் வகையிலேயே சங்க பரிவார் கும்பலின் மதவாத, சாதிய வன்முறைகள் அமைந்துள்ளன. ராமர் கோவில் விவகாரம் முதல் சி... சட்டம், லவ்ஜிகாத் சட்டம் வரையில் அனைத்தும் பார்ப்பனியம் இந்தியாவில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள எடுத்துக் கொண்ட வழிமுறைகளை அப்படியே பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களாலும், ஐரோப்பிய உழைக்கும் மக்களாலும் வீழ்த்தப்பட்ட ஹிட்லரின் நாஜிசம் மற்றும் முசோலினியின் பாசிசக் கொள்கைகளில் இருந்துதான் தமது கொள்கைகளை வகுத்துச் செயல்பட்டு வருகிறது இந்துத்துவக் கும்பல்.

ஹிட்லரும் முசோலினியும் தமது நாட்டின் உழைக்கும் மக்களைச் சுரண்டவும், ஒட்டுமொத்த உலகையே கொள்ளையடிக்கவும் தங்களது நாஜிச, பாசிச கொள்கைகளை தேச பக்தி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி தமது நாட்டின் நிதியாதிக்கக் கும்பலின் சுரண்டலை தேச முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளாக சித்தரித்து சொந்த நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டியதோடு உலகையும் கொள்ளையடிக்க முனைந்தனர்.

இந்தியாவிலும் நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்ட, தமது இந்துத்துவக் கொள்கைகளை தேச பக்தியாகக் காட்டி, அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கையை தேச முன்னேற்றமாகவும் காட்டி நம்மைச் சுரண்டுகின்றன.

மோடியால் முன்மொழியப்பட்டுள்ள ‘குறைவான அரசாங்கம் அதிகபட்ச ஆளுமை’ என்ற முழக்கம் தாராளமய, உலகமயமாக்கலின் அரசியல் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டு ஏதோ மக்களின் நலனுக்கானது போல கபடத்தனமாக மக்களிடம் காட்டப்படுகிறது.

இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்ன் தேர்தல் அரசியல் பிரிவுதான் பாஜக. ஆர்.எஸ்.எஸ்.-ம் பாஜகவும் 1947-க்குப் பின்னர் சுமார் 50 ஆண்டுகளாக உள்நாட்டு தேசிய பொருளாதாரத்தை உரிமை கொண்டாடி தேர்தல்களில் பிரச்சாரம் செய்துவந்தன.

ஆனால், முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் பெயரால் புதிய தாராளமய திட்டங்களை மட்டுமே அமல்படுத்தியது இந்துத்துவக் கும்பல். இதனை எளிமையாகச் செய்து முடிக்கும் வகையிலேயே நாட்டு மக்களை மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிரித்தே வைத்திருக்கும் வகையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக மத, சாதிய வன்முறைகளை முன்னின்று நடத்தி வருகின்றன.

இன்றைக்கு இந்தியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வன்முறை அராஜகங்கள் எதிர்பாராத விபத்து அல்ல. அவை கொஞ்சநஞ்சம் மீதமிருக்கும் இந்திய ஜனநாயகக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு கொள்கைகளையும் ஒழித்துக்கட்டி விட்டு எதேச்சதிகார இந்துத்துவ முதலாளித்துவத்தை அரசு மற்றும் அரசு நிர்வாக உறுப்புகளிடம் நிலைநிறுத்துவதற்காக முறையாக திட்டுமிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தோடு ஒருங்கிணைந்த எதேச்சதிகார அரசியலுக்கு, நம்பிக்கையற்ற அச்ச உணர்வும் கீழ்படிதலுமுள்ள ஒரு இந்திய சமூகம் அவசியமானது. அதனை உருவாக்கவே இந்துத்துவாவின் அதிர்ச்சி சித்தாந்தம் உதவுகிறது. ஆகவே தற்போது நிலவும் இந்துத்துவ தாக்குதல்களும், வன்முறைகளும் எதிர்பாராத விதமாக திடிரென விபத்து போல வருவதல்ல. இந்துத்துவாகார்ப்பரேட் கும்பலால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்டவையே ஆகும்.

ஆர்.எஸ்.எஸ் பாஜக அவற்றோடு இணைந்த கார்ப்ரேட்களின் அரசியல் பொருளாதார திட்டங்களை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைக்கும் மக்களை தனது வரம்புக்குள் கட்டுபடுத்தி வைத்திருக்க இந்துத்வா சித்தாந்தம் திட்டமிட்டு உருவாக்குபவைதான் இந்த அதிர்ச்சி வைத்தியத் தாக்குதல்கள்.

இந்தியாவின் பொருளாதாரம் என்றுமில்லாத அளவு மோசமான நிலையில் இருப்பதை அறிஞர்கள் எச்சரிக்கையூட்டுகின்றனர். வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் எல்லா காலங்களையும் விட இப்போது உச்சத்தை தொட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

தொழில்துறை உற்பத்தி மிக குறைந்துள்ளது. மோடி எவ்வளவுதான் ஏற்றமும் இறக்குமாக பேசினாலும் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் இறக்கத்திலேயே சரிவடைவதை மறைக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் மூலம் தீவிரமான சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மோடி அரசு மிக மோசமான முறையில் தோற்றுப் போயிருக்கிறது. திட்டமிடப்படாத ஊரடங்கு இந்திய பொருளாதாரத்தில், நாட்டின் உற்பத்தி விநியோகம், தேவை மற்றும் அதற்கேற்ற வழங்கல் ஆகியவற்றை சீர்குலைத்தது.

ஆனால் நாடெங்கும் மக்களின் வாழ்க்கை வறுமை, புலம்பெயர்தல், தொழில்கள் முடங்கி போதல்,பட்டினிச் சாவு ஆகியவற்றால் சிக்கி கொடுமையான முறையில் சீரழிந்து கொண்டிருந்தபோது சில கார்ப்ரேட் நிறுவனங்கள் வருமானத்தை அள்ளி குவித்து வளமாகிக்கொண்டிருந்தன.

கோடிக் கணக்கானவர்களுக்கு துயரமும், ஒரு சிலருக்கு மட்டும் செழிப்பு என்பதே அடிப்படை விதிமுறையாக இருக்கும் முதலாளித்துவத்தை காப்பாற்றவும், நிலைநிறுத்தவும் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவ அரசியலும் இந்தியாவையும் இந்தியர்களையும் பலிபீடத்தில் ஏற்றியிருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான இந்திய அளவிலான போராட்டங்கள், இந்துத்துவ கார்ப்பரேட் நல அரசின் அதிர்ச்சி வைத்தியத் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களாக சமூகத்தில் எழுவது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

இந்துத்வ கோட்பாட்டையும் மோடி அரசையும் தோல்வியை சந்திப்பதை உறுதிபடுத்த இந்தியாவின் தெருக்களில் நடைபெறும் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை அனைத்து தரப்பிலும் பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்கு இதுவே சரியான நேரம்.

படிக்க :
♦ முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

அரசின் அதிகார பலம் மற்றும் வலுவான பிரச்சாரம் ஆகியவற்றை மீறி பாசிசம் நாஜிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகியன தோற்றுப்போகும் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

இந்தியாவையும் இந்திய நாட்டு உழைக்கும் மக்களின் எதிர்காலத்தையும் முழுவதுமாக சேதப்படுத்துவதற்கு முன்னால் இந்துத்துவ பாசிசம் மற்றும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் தோல்வியை விரைவுபடுத்தும் விதமாக முற்போக்கு ஜனநாயசக்திகள், விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தினர் மாணவர்கள் இன்னும் பிற சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் ஆகியோர் இணையும் புள்ளியில் எழும்பும் போராட்ட அலையை கட்டியமைத்து தீவிரபடுத்தவேண்டிய தருணம் இது.

மணிவேல்
மூலக் கட்டுரை
: பாபானி சங்கர் நாயக்
நன்றி :
Counter currents

நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

0

மிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. யாருக்கு எத்தனை தொகுதி, எந்தக் கட்சியுடன் கூட்டணி, எந்தக் கட்சிக்கு எதிராக எந்தக் கட்சியை நிறுத்துவது என அன்றாடம் செய்தி ஊடகங்களும் ஆருடம் பார்க்கத் துவங்கிவிட்டன.

இந்தப் பிரச்சாரங்களோடு வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்றும், தேர்தலில் பணம் வாங்காமல் நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானது என்றும் பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. தேர்தல் ஆணையம் துவங்கி ’பொதுநலன் கருதி’ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரை இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டன.

படிக்க :
♦ கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …
♦ பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

தேர்தல் முடிவுகள் வரும்வரை கட்சிகள் பதைபதைக்கும் காலம் எல்லாம் மலையேறி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியில் அமர்வதற்கு முன்னால் எம்.எல்.ஏ.க்களை சொகுசு பங்களாக்களிலும் ரிசார்ட்டுகளிலும் அடைத்து வைக்கும் உன்னத நிலைக்கு இந்திய ஜனநாயகம் கடந்த 7 ஆண்டுகளில் சந்தி சிரித்துவிட்டது.

இன்றைய நிலையில் பாஜக-வைத் தவிர எந்தக் கட்சியுமே எவ்வளவு பெரும்பான்மை பெற்றிருந்தாலும் ஆள முடியாது என்ற நிலையில்தான் நிலைமைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பல மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்து தனது கைகளில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

கடந்த 2014-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் 42 இடங்களை காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 11 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறி “மக்கள் கட்சி” எனும் புதிய கட்சியை துவங்கினார் பெமா காண்டு. அந்த கட்சி பின்னர், பாஜக-விற்கு ஆதரவு என மாறியது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் ஒன்று இருக்கிறது. காங்கிரசும் பாஜக-வும் சம அளவில் தொகுதிகளை வென்று சரிக்கு சமமாக இருக்கும் சூழலில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறவில்லை. 11 சீட்டுகள் மட்டுமே கொண்ட பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்காது. ஆனால், அது நடந்தது. இங்கு பாஜக-வுக்கு எதிராக வாக்களித்த பெரும்பான்மையான அருணாச்சலபிரதேச மக்களின் வாக்குகள் குப்பைத் தொட்டிக்கு வீசப்பட்டன.

மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் 28 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. 21 எம்.எல்.ஏக்களை மட்டுமே பாஜக கொண்டிருந்தது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜன சக்தி, சுயேச்சியுடன் கூட்டணியமைத்து குறைவாக இடங்களை பிடித்திருந்தாலும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

அடுத்தது, மேகாலயாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 21 இடங்களை காங்கிரஸ் வைத்திருந்தது. தேசிய மக்கள் கட்சி 19 இடங்கள் வைத்திருந்தது. வெறும் 2 இடங்களை மட்டுமே பாஜக வைத்திருந்தது. தேசிய மக்கள் கட்சியை விலை பேரத்தால் இணைத்துக் கொண்டு அங்கு ஆட்சியை பிடித்தது பாஜக.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் விலைபேரத்தில் இணைந்து ஆட்சியை பிடித்தது பாஜக.

மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை பெற்றது. 121 ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாஜக 109 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 29 பேரையும் விலைக்கு வாங்கி இரண்டே ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஐக்கிய ஜனதா தளம் 80 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 71 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜக 53 இடங்களை பெற்றிருந்தது. மோடி அமித்ஷா கும்பல் நடத்திய பேரம் படிந்ததும், இரண்டே ஆண்டுகளில் முதல்வர் நிதிஷ்குமார், லல்லுவுடனான தமது கூட்டணியை ரத்து செய்துவிட்டு பதவி விலகினார்.

அதன் பிறகு 53 இடங்களைப் பெற்ற பாஜக-வில் இணைந்து கூட்டணி அமைத்து பாஜக-வின் எடுபிடியாக மாறினார். பாஜகவை வெறுத்து ஒதுக்கிய பீகார் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே பாஜக-வை கூட்டணி ஆட்சியில் பங்கேற்கச் செய்து மக்களுக்கு துரோகம் இழைத்தார் நிதிஷ்குமார்.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களை பெற்றது. பாஜக 25 இடங்களை பெற்றது. தேசிய மாநாடு கட்சி 15 இடங்களை பெற்றது. மக்கள் ஜனநாயக கட்சியுடன் விலைபேரத்தில் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் 2016 ஏப்ரலில் இறந்த பிறகு அவர் மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். முப்தி பாஜகவிற்கு இசைவு கொடுக்காததால், கூட்டணியில் இருந்து விலகியது பாஜக. அதன்பின் முப்தி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. 13 இடங்களை பாஜக பெற்றது. பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி 27 தொகுதிகளை கொண்ட ஆட்சியை அமைத்துள்ளது பாஜக.

இங்கு நடந்த இந்த போங்காட்டம் மிகவும் அருவெறுப்பானது. பொதுவாக ஆளுநர்கள் ஒரு மாநிலத்தில் யாரை ஆட்சியமைக்க அழைப்பார்கள்? யார் எந்தக் கட்சி அதிக இடங்களை வென்றிருக்கிறதோ அந்தக் கட்சியைத் தானே அழைப்பார்கள். எந்த ஊரிலும் இல்லாத நடைமுறையாக குறைவான தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர்.

கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் 104 இடங்களை பாஜக பெற்றது. காங்கிரஸ் 80 இடங்கள் பெற்றது. மதச்சார்பற்ற ஜக்கிய ஜனதா தளம் 37 இடங்கள் பெற்றது. மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளமோ, காங்கிரசோ பாஜக-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அதன் காரணமாக பாஜகவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை. அதன் பின்னர், காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. அடுத்த ஒரு ஆண்டிலேயே 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

புதுச்சேரியில் 2016-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 15 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. திமுக ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. 5 ஆண்டு ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸின் 6 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி நாராயணசாமி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

மக்கள் எந்தக் கட்சிக்கு ‘தாலி கட்டினாலும்’ சரி, குடும்பத்தை நான் தான் நடத்துவேன் என்று கீழ்த்தரமான அரசியலை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது பாஜக. இப்படி மாநிலங்களில் தங்களுக்குச் சாதகமான ஆட்சியை கொல்லைப்புறம் வழியாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை

இத்தகைய ஒரு பேரம் எதுவும் அவசியமில்லாமல் வருமானவரித் துறையை வைத்தே சில பல மாநிலங்களில் ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக. அதில், நமது தமிழகமும் அடக்கம். அடிமை எடப்பாடி அரசு பாஜக-வின் கைப்பாவையாக இருப்பதன் மூலமே இதுவரையில் தமது இருப்பை தக்க வைத்து வந்திருக்கிறது.

ஆனால், இதில் உள்ள ஒரு கொடுமை என்ன தெரியுமா ? திரைமறைவு குதிரை பேரங்கள் தவிர்த்து பிற அனைத்து ஆட்சிக் கவிழ்ப்புகளும் மக்களின் அங்கீகாரம் பெறாத கட்சிகள் அமைக்கும் ஆட்சியும் சட்டப்படிதான் அரங்கேற்றப்படுகின்றன.

இப்படிப்பட்ட மக்கள் விரோதமான – மக்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற நடைமுறைக்குப் பெயர்தான் தேர்தல் ஜனநாயகம். இதை மக்களை ஏய்க்கின்ற போலி ஜனநாயகம் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.


சந்துரு
நன்றி :
தினகரன் 24-2-2021.

அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது நடத்திய பாலியல் வன்முறை குறித்து தலைமைச் செயலரிடம் அளிக்கப்பட்ட புகாரை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நாம் அறிந்ததே.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். பாதுகாப்புக்குப் போன இடத்தில் அங்கிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை சட்டம் ஒழுங்கு குறித்து ’விவாதிக்க’ காரில் ஏறச் சொல்லி ஓடும் காரிலேயே பாலியல்ரீதியில் அத்துமீறியிருக்கிறார் ராஜேஷ்தாஸ்.

இது தொடர்பாக புகாரளிக்கப் போவதாக ஐ.ஜி ஜெயராமனிடம் கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சக எஸ்.பி.களான ஜியாஉல்ஹக், திஷா மிட்டல் மற்றும் அபினவ் ஆகியோர் ராஜேஷ்தாஸ் மீது புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மறுத்த அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு புகாரளிக்க வருவதை நடுவழியில் தடுத்து நிறுத்தி காரின் சாவியைப் பறித்துள்ளார் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன். இதையெல்லாம் மீறிப் போய் தலைமைச் செயலரிடம் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண் உயரதிகாரி.

படிக்க:
♦ சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
♦ பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை பட்டப்பகலில் காரில் வைத்து பாலியல்ரீதியில் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் புகாரளிகக் கூடாது என அவரை மிரட்டவும் செய்வதெனில் எவ்வளவு அதிகாரத் திமிர் இருந்திருக்க வேண்டும்?

ஒரு பெண் உயரதிகாரிக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண பெண் போலீசாரின் நிலைமை என்ன ?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

ஒருவேளை அந்தப் பெண் போலீசு அதிகாரியின் இடத்தில் சாதாரணப் பெண் இருந்திருந்தால் என்னவாகியிருந்திருக்கும்? ராஜேஷ்தாஸின் உத்தரவை சிரமேற்று இடைநிறுத்திய அதே போலீசு, அந்தப் பெண்ணை என்னவேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!

ராஜேஷ் தாஸ்

ஒருவேளை ராஜேஷ்தாஸ் இடத்தில் ஒரு சாதாரண நபர் அந்த இழிவான செயலைச் செய்திருந்தால், கைது செய்கையில் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று செய்தி வந்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் ”பாசி படிந்த” போலீசு நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகால் எலும்பு முறிந்ததாகவாவது செய்தி வந்திருக்கும்.

ஆனால் பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு மட்டுமல்லாமல், அதிகாரவர்க்கத்தில் தமக்கு நெருக்கமாக இருப்பவர்களை வைத்து மிரட்டவும் செய்த ராஜேஷ் தாஸை இன்னும் கைது கூட செய்யாமல் பாதுகாத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.

பாதிக்கப்பட்ட பெண் போலீசு அதிகாரி தலைமைச் செயலரிடம் புகார் கொடுத்ததை ஒட்டி, ‘அதிகபட்ச’ தண்டனையாக ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இதில் வெட்கமே இல்லாமல், பெண்கள் எந்நேரத்திலும் தனியாக பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று விளம்பரம் வேறு.

பொள்ளாச்சி பாலியல் குற்றம் ஊர் முழுவதும் அம்பலமாகி நாடே காறி உமிழ்ந்த பின்னரும் குற்றவாளிகளைப் பாதுகாத்த தமிழக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலின் தலைவனான அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் இதில் சம்பந்தப்பட்டிருந்ததுதான் எடப்பாடி அரசு அந்தக் குற்றக் கும்பலைப் பாதுகாத்ததன் பின்னணியாகும்.

துணை சபாநாயகரின் மகனுக்கும் அவனது கும்பலுக்குமே இவ்வளவு கரிசனம் காட்டப்படும்போது இத்தகைய கிரிமினல் கும்பல்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பச் செய்து பாதுகாத்து வரும் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டும் குறைவாகவா கரிசனம் காட்டப்படும் ?

ஆனால், இங்கு பாதிக்கப்பட்டவரும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்திய சமூகத்தில் அதிகார வர்க்கம் முதல் சாதாரண மக்கள் வரை சாதியைப் போலவே ஆணாதிக்கமும் ஊறிப் போயிருக்கிறது. அதிகார வர்க்கத்தினுள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வும், பாலியல் ஏற்றத் தாழ்வும் உண்டு என்பதை பல வழக்குகள் நமக்குக் காட்டியிருக்கின்றன.

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா மற்றும் அவர் எழுதிய தற்கொலை குறிப்புக் கடிதம்

குறிப்பாக கோகுல்ராஜ் கொலைவழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய முயன்ற டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணித்தது தொடர்பான வழக்கு இதற்கு எடுப்பான உதாரணம். அப்போதைய நாமக்கல் எஸ்.பி செந்தில்குமார்தான் விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரது தந்தை குற்றம்சாட்டியதோடு, விஷ்ணுபிரியாவின் தோழியும் அப்போதைய கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஷ்வரியும் வெளிப்படையாக பேட்டியளித்தார்.

மேலும் விஷ்ணுபிரியா மரணித்த பின்னர் அவர் இருந்த அறைக்குள் சென்று அனைத்து தடயங்களையும் செந்தில்குமார் அழித்துவிட்டார் என்பதும் அம்பலமானது. இவ்வளவு இருந்தும் இந்த வழக்கை விசாரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கைவிட்டது சி.பி..

சி.பி.யிடம் இந்த வழக்க்கை கொடுப்பதற்கு முன்னர், குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி செந்தில்குமாரின் மீதான இந்த வழக்கை சிபி.சி.ஐடியில் பணியாற்றிய அவரது நண்பரிடம் ஒப்படைத்தது தமிழக அரசு. குற்றவாளி ஒருவனின் குற்றத்தை விசாரிக்க அவனது நண்பனையே விசாரணை அதிகாரியாகப் போடும் ‘துணிவு’ கொண்ட ஒரே அரசாங்கம் அடிமை எடப்பாடியின் அரசாங்கமாகத்தான் இருக்க முடியும். இதை எதிர்த்து விஸ்ணுபிரியாவின் தந்தை தொடுத்த வழக்கை முன்னிட்டுதான் இந்த வழக்கு சி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை தற்கொலைக்குத் தள்ளிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி. செந்தில்குமாரையும், தற்போது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸையும் காப்பாற்றுவதற்கே அன்றும் இன்றும் இந்த அதிமுக அரசு முயற்சித்தது.

படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

முன்னதில் அதிகாரவர்க்கத்தில் கோலோச்சும் சாதியமும் ஆணாதிக்கமும் அம்பலப்பட்டது எனில் தற்போதைய சம்பவத்தில் அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் அம்பலப்பட்டு நிற்கிறது. அதோடு இந்த அடிமை அதிமுக அரசு எந்த அளவிற்கு அதிகாரத் திமிரெடுத்த கும்பலுக்கு ஆதரவாக நிற்கிறது என்பது இந்தச் சம்பவத்தில் அம்பலப்பட்டிருக்கிறது.

போலீசு, இராணுவம், நீதித்துறை என அதிகார வர்க்கத்தின் குற்றங்கள் குறித்து விசாரிக்க வழங்கப்படும் தனிச்சிறப்பு விதிவிலக்குகள் அதிகாரவர்க்கப் பிரிவை மக்களுக்கு மேலானதாகவும் அதிகாரத் திமிர் கொண்டதாக மாற்றிவிடுகின்றன.

அதிகார வர்க்கமானது, மக்களை ஒடுக்குவதில் ஆளும்வர்க்கத்திற்கு ஆற்றும் சேவைகளுக்கு பிரதிபலனாகவே இந்தச் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இத் தனிச் சலுகைகள் ஒழிக்கப்படும்போதுதான் அதிகார வர்க்கத்தின் இத்தகைய பாலியல் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் முடிவுக்கு வரும். ஆனால் அது மக்களை சுரண்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த அரசுக் கட்டமைப்பில் சாத்தியமற்ற ஒன்று என்பதுதான் கசப்பான உண்மை!

கர்ணன்
நன்றி :
கலைஞர் செய்திகள்

கோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி

ஊடக அறிக்கை

நாள் : 02.03.2021

னாதிபதி கோட்டாபய தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஒன்றரை வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீட்கப்படவோ சுபீட்சம் நோக்கிக் கொண்டு செல்லப்படவோ இல்லை. அதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களினது விலைகள் மிகவும் உயர்ந்து செல்கின்றன. இவற்றால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள் நெருக்கடிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாகி நிற்கின்றனர். இவற்றை மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பவே கோவிட்-19 தொற்று ஊதிப் பெருப்பித்துக் காட்டப்படுவதுடன், அதன் மறைவில் இராணுவ மயமாக்கலும் முன்னெடுக்கப்படுகிறது.

படிக்க:
இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

அதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் மீது உருவாகி வளர்ந்துவரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்கே தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்கள் மீதான இன ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருமெடுப்பில் ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் இலங்கை முழுவதும் வாழும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும், பேரினவாத ஒடுக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ள தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் பொதுக்கோரிக்கைகளை முன்னிறுத்தி பரந்துபட்ட வெகுஜனப் போராட்டத்தளம் ஒன்றினைத் தோற்றுவிப்பது இன்றைய அவசியமாகி உள்ளது. இத்தகைய வெகுஜன அரசியல் மார்க்கத்தில் பயணிப்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தி நிற்கின்றது.

எமது நாட்டின் பொருளாதாரம் இன்றைய நெருக்கடி நிலையில் வீழ்ச்சியடைந்து உள்ளமைக்கு அடிப்படைக் காரணமாக, எமது தேசிய வளங்களை விருத்தி செய்து, ஒரு சக்திமிக்க தேசிய பொருளாதாரத்தை, கடந்த நாற்பத்து இரண்டு வருடங்களாக ஆட்சியாளர்கள் கட்டி வளர்க்கத் தவறியதுடன், அந்நிய வல்லரசு சக்திகளின் ஆலோசனைக்கு அமைய நாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் பெரும் முதலாளிகளிற்கும் தாரைவார்த்துக் கொடுத்தமை விளங்குகிறது.

இக்காலப்பகுதியில் மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் எல்லோருமே தாராளமயம், தனியார்மயம், உலகமயமாதல் பாதையில் பயணித்ததன் பாரிய விளைவையே இன்று நாடும் மக்களும் அனுபவித்து நிற்கின்றோம். இதே நாசகாரப் பாதையிலிருந்து இன்றைய கோட்டாபய அரசாங்கமும் விலகத் தயாரில்லாத நிலையிலேயே பயணித்து வருகிறது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ vd;gJ வெறும் பெயர்ப்பலகை மட்டுமே. அதனாலேயே இன்று அந்நிய வல்லரசுகளின் ஆடுகளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தவறிய அதேவேளை, நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை நியாயபூர்வமான அடிப்படையில் தீர்வுக்குக் கொண்டு வர மறுத்த ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்த பேரினவாத நிலைநின்று தமிழ், முஸ்லீம், மலையகத் தேசிய இனங்களை ஒடுக்குவதிலும், அவ் ஒடுக்குமுறையைப் போராக மாற்றுவதிலுமே எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளனர். அதனாலேயே கொடிய முப்பது வருடப் போருக்குப் பின்பும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீடித்து வருவதுடன், அதனைத் தீர்வுக்குக் கொண்டு வர எந்த ஆட்சியினரும் தயாராக இல்லாத நிலை தொடர்கிறது.

இதன் அண்மைய எடுத்துக்காட்டாக நியாயமான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, அகிம்சையான முறையில், மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு எதிராகத் தற்போது பொலிசாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நாம் நோக்குகிறோம். இத்தகைய வெகுஜன நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் அச்சுறுதல் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்.

மக்கள் நீண்டகாலமாக முன்வைக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்லியல், வனவளம் ஆகிய பெயர்களில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவித்தல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ஆகிய நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வினை வழங்க வேண்டும்.

அதேவேளை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியில் தீர்வுக்கான பொதுக் கோரிக்கைகளை முன்வைக்காது பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை ஆசனங்களுக்கான வாக்கு வங்கி அரசியலையே தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் அரசியல் தரப்புக்கள் முன்வைத்து வருகின்றன.

முஸ்லீம், மலையகத் தமிழ் அரசியல் தரப்புகளில் சிலர் தம்முள் பிரிந்து நின்று சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முட்டுக் கொடுத்தே வந்துள்ளனர். அதற்கான அண்மைய உதாரணமாக ஜனநாயகத்தின் மீது மண் போடும் இருபதாவது திருத்தத்திற்கு இவர்களில் பலர் வழங்கிய திடீர் ஆதரவைக் குறுப்பிடலாம்.

காலங்காலமாக அத்தியாவசிய தேவைகளான காணி, வீடு உரிமை மறுக்கப்பட்டு, முகவரி அற்ற மக்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதிலும் ஆட்சியாளர்கள் தோட்டக் கம்பனி முதலாளிகளுடன் இணைந்து பெரும் ஏமாற்று இழுத்தடிப்புகளையே முன்னெடுத்து வருகின்றனர். மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்டத் துரையால் மேற்கொள்ளப்படும் அடாவடிகளும், அடக்குமுறைகளும் காலணித்தவ கால துரைத்தனத்தின் தொடர்ச்சியாக இன்றும் இடம்பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதேநேரம் ஆதிக்க மனநிலை கொண்ட தமிழ் அரசியல் தரப்புகள் குறுகிய தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுடன் வாக்கு வங்கி அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் அடிக்கு மேல் அடிவாங்கினாலும், ஏமாற்றுக்களைத் தொடர்ந்தாலும் நீங்களே எங்களின் எசமானர்கள் என்றவாறு இந்திய, அமெரிக்க, மேற்குலகம் மீதான அடிமைத்தன அரசியல் நிலைப்பாட்டினையே தமிழர் தரப்பு தலைமைகள் முன்னெடுத்து வருகின்றன.

பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் அனுபவித்து, இன்றும் அவற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியாது தவிக்கின்ற தமிழ் மக்களை, ஐ.நா. தீர்வு தரும், ஐரோப்பிய ஒன்றியம் தலையிடும், அமெரிக்கா அதற்கு உதவும், இந்தியாவே எமக்கு இரங்கவேண்டும் என்று தொடர்ச்சியாகப் பிழையான வழிகாட்டுதல்கள் மூலம் ஏமாற்றித் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்து வரும் இவர்கள் தமது எசமானர்களை நோக்கி நீங்களே வந்து வடக்கு கிழக்கில் நிலை கொள்ளுங்கள் என்று கேட்கும் துரோகத்தன அரசியலுக்கு செல்லத் தயாராக இருப்பது விசனத்திற்குரியதாகும்.

படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !
♦ பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த வல்லரசும் இலங்கையில் கால் ஊன்றவும் வளங்களைச் சுரண்டவும் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டாம் என்ற குரல் தெற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் ஓங்கி ஒலிக்கும் போதே இலங்கைக்குரிய விடுதலையும் சுதந்திரமும் தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையும் கிடைக்க முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

இவ் அறிக்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

ராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்

PP Letter headபத்திரிகைச் செய்தி

01.03.2021

பெண் மாவட்ட கண்காணிப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் இப்போது வரை கைது செய்யப்படவோ பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, காத்திருப்பு பட்டியலில் அனுப்பப்பட்டு இருக்கிறார்.

இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. ஆனந்த வெங்கடேஷ், இவ்வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, தனக்கு கீழே வேலை செய்த பெண் டி.எஸ்.பியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இந்த  ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் டிஜிபியாக உயர்ந்து இருக்கிறார் என்றால், இந்த கேடுகெட்ட அரசின் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண் எஸ்.பி-ஐ டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் கொடுக்க கூடாது என்று இன்னொரு மாவட்ட எஸ்.பி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் சாவியை எடுத்துக்கொண்டு தடுக்கிறார், மிரட்டுகிறார். பல உயர் அதிகாரிகளின் மிரட்டல்களை மீறித்தான் அந்த பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது வரை டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றி வருகிறார். இந்த லட்சணத்தில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற விளம்பரம்  ஒரு வெட்கக்கேடு!

இப்பிரச்சினை எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெளிக் கொண்டு வரப்படவில்லை என்றால் அந்தப் பெண் எஸ்பியின் கதி என்ன?

ஏற்கெனவே, ஐ.ஜி முருகன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்தார் என்று சீனியர்  எஸ்.பி ஒருவர் அளித்த புகார் என்னவானது?

வாச்சாத்தி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சிதம்பரம் பத்மினி வழக்கு, கோயம்பேட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு என போலீஸ் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எண்ணி மாளாது. காவல் நிலைய கொட்டடிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் சொல்லி மாளாது.

ஒரு நாட்டின் குடிமகன் செய்கின்ற தவறுக்கு எப்படி சட்டப்படி தண்டிப்பதற்கு தடையேதும் இல்லையோ அதைப்போலவே அதிகார வர்க்கத்தினரும் தண்டிக்கப்பட வேண்டும்.  போலீசே,  போலீசின் தவறுகளை விசாரிக்க முடியும் என்ற திமிரின் காரணமாகத்தான் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கடும் சித்திரவதை செய்து கொன்று விட்டு அவர்கள் குடும்பத்தினரையும் சாட்சி சொல்லக் கூடாது என்று மிரட்டவும் முடிகிறது.

சுத்தமான நிலத்தடிநீர் வேண்டும், காற்று வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் முடிகிறது.

படிக்க :
♦ வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
♦ சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-ஐ மிரட்டிய அத்தனை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாது போலீஸின் அக்கிரமங்களுக்கு முடிவுகட்டும் வகையில்   அனைத்து மக்களும் போராட முன்வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் வீதிக்கு வீதி ஜனநாயகம் பற்றியும் ஓட்டுப்போடுவது பற்றியும் வகுப்புகள் எடுக்கப்படும். அதாவது, ஓட்டுப்போடுவது மட்டும்தான் நமது ஒரே ஜனநாயக உரிமை என்பதாக ‘நடுநிலை’பத்திரிகையாளர்கள் துவங்கி முன்னாள், இன்னாள் நடிகர் நடிகைகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நமக்கு வகுப்பெடுப்பார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கம், இந்திய அரசியல் அமைப்பை தனது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு மாற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக, மொத்த அதிகாரங்களையும் ஒற்றை அலுவலகத்தில் குவித்து வருகிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதே சமயத்தில், மாநில அரசுகளின் நிதியாதாரமும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி என்பது ஒப்புக்குக்கூட இல்லாத இன்றைய சூழலில், இந்த சட்டமன்ற தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் வெற்றிபெற்றாலும், அவர்களின் அதிகாரம் என்பது மிகவும் குறுகிய வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. மாநில சுயாட்சியை மீட்க வேண்டும் என வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.

அவ்வளவு ஏன், பாஜக எஜமானர்களுக்கு அடிமையாகச் சேவை செய்யும் எடப்பாடி, ஓ.பி.எஸ். கும்பல் கூட மாநில அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி வரிப் பங்குத் தொகை தராமல் இழுத்தடிக்கப்படுவதைப் பற்றி புலம்பியிருக்கின்றனர்.

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம், மாநில அரசின் வரி விதிப்பு அல்ல. அவற்றின் மீதான வரியை மாநில அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கக் கூடிய அளவுக்கு மாற்றியது. அதன் பிறகு, அவற்றின் மீதான மத்திய அரசின் வரியை அவர்கள் கணிசமாக உயர்த்தினர். கலால் வரி என்பதை “செஸ் வரி”என்று மாற்றினர்.

கலால் வரி என்றால் மாநிலங்களுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும். செஸ் என்று மாற்றினால் அதை மாநிலங்களுக்கு தர வேண்டியதில்லை. எனவே, இதில் மாநிலங்களுக்கு வரக்கூடிய வருவாய் கிடைக்காமல்போனது. அவர்களுக்கு 48 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாயில் 39 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசு விதித்த வரியால், தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மத்திய வரி வருவாயில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கின் அளவு குறைகிறது. வரியில் 41 சதவீதம் அதாவது ரூபாய் 32,849 கோடியை தமிழகத்திற்கு தரவேண்டும். அதை ரூபாய் 23,039 கோடியாக மத்திய அரசு குறைத்துவிட்டது. கூடுதலாக கடன் பெற்று அனைத்து நலத் திட்டங்களையும் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசும் போது தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் கூறுகிறார்.

மாநில அரசுகளின் வருவாயில் கை வைப்பதன் மூலம் மாநில அரசுகளை மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

GST வரியின் பங்கைத்தராமல், மாநிலங்களைக் கூடுதலாக கடன் பெற்றுக்கொள்ளச் சொல்கிறது மத்திய அரசு. திட்டக்கமிசன் கடன் பெறுவதற்குமான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் மீது விதித்துள்ளது. அதாவது, மாநில அரசுகளுக்கு கடன் அதிகமாக வேண்டுமெனில் மத்திய அரசின் கார்ப்பரேட்மய நிகழ்ச்சி நிரலை மாநிலங்களில் அமல்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என நிர்பந்தம் கொடுக்கிறது.

நிதி விவகாரத்தில் மட்டுமல்ல, மற்றெல்லாவற்றிலும் எதேச்சதிகாரத்துடன்தான் நடந்து கொள்கிறது மத்திய பாஜக அரசாங்கம். வேளாண்மை என்பது மாநிலப் பட்டியிலின் கீழ் வருவது. ஆனால், இதை மதிக்காமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது பாஜக கும்பல்.

கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில், பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத வழிமுறைகளில் ஆட்சிக் கவிழ்ப்பை நடைமுறைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை கொல்லைப் புறமாக கைப்பற்றியிருக்கிறது பாஜக. இன்னும் வேறு சில மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற முயன்று தோற்றுப் போயிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எனில் அதனைக் கவிழ்ப்பதற்கும், எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கும் ஏதுவான வகையில் உள்ள இந்த அமைப்பு முறைக்குள் ஜனநாயகம் என்பதும், வாக்களிப்பதன் மூலம் அந்த ஜனநாயகத்தையும் இழந்த உரிமைகளையும் காப்பாற்றிவிட முடியும் என்பதும் அப்பட்டமானக் கட்டுக்கதைகளே.

மாநிலங்களின் நிதி வருவாயை முடக்குவது, அதிகாரங்களை மத்திய அரசுக்கு கொண்டு செல்வது, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவது போன்ற நடைமுறைகள் ஒருபுறமிருக்க, மற்றொருபுறத்தில், ஜனநாயகத்தின் பிற தூண்களாக சொல்லப்படும் அத்தனைத் துறைகளுக்குள்ளும் தமது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற நபர்களின் கைகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் மொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கி வருகிறது.

இந்த அதிகாரங்களின் ஒன்றுகுவிப்பு, மையப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் இந்துத்துவ அரசியலை அமலுக்கு கொண்டுவருவதற்காக மட்டுமல்லாமல், இந்தியா முழுவதையும் கார்ப்பரேட் கொள்ளைக்கான ஒரு ஒருங்கிணைந்த சந்தையாக மாற்றுவதற்குத்தான்.

படிக்க :
♦ பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

♦ ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அத்தனை உரிமைகளையும் பறித்துவிட்டு, மாநிலங்களின் நிதி ஆதாரங்களையும் பறித்துவிட்டு நடத்தப்படும் இந்த மாநில சட்டமன்றத் தேர்தல் என்பது, மத்தியில் ஆளும் பாசிச கும்பலின் ஒடுக்குமுறையை மாநில கட்சிகளின் மூலமாக மக்களின் மீது ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் நடைமுறைப்படுத்தவே நடத்தப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்றாலும் கூட தமிழக மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளும், தமிழக அரசின் நிதியாதாரமும், சுயாட்சியும் வீதியில் இறங்கி நடத்தப்படும் ஜனநாயகத்திற்கானப் போராட்டங்களின் மூலமாகவே சாத்தியப்படுமே ஒழிய, ஓட்டுப் பெட்டியை மட்டும் நம்பி இருந்தோம் எனில், குடிக்க கஞ்சிக்கூட மிஞ்சாது என்பதுதான் எதார்த்தம் !


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : தினகரன் (24/2/21), The Print

நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

0

ரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாத சமூகம் மீண்டும் அதே வரலாற்றை திருப்பி செய்வதற்கு சபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள்.

ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த அதே நிலைமைதான் இன்று இந்தியாவிலும் இலங்கியையிலும் காணப்படுகிறது. ஆனால் நாம் ஐரோப்பியர் வரலாற்றில் இருந்து எந்த பாடத்தை கற்றுக் கொண்டோம்? எதுவும் இல்லை. அந்த அளவுக்குதான் நமது மக்கள் மத்தியில் இது குறித்த தேடுதலும் ஆர்வமும் இருக்கிறது என்பது இங்கு வருத்தத்திற்குறியது.

***

இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்த இனக்கலவரங்கள் பற்றி கேள்விப் பட்டிருப்போம். தமிழ்நாட்டில், கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டக் கலவரத்துக்கு பின்னர், ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மீண்டும் அதுபோன்ற கலவரங்களுக்கு தூண்டி விடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் இது போன்ற நிலைமைதான் இருந்தது என்பதை சொன்னால் நம்பூவீர்களா?

இதே போன்ற இனக் கலவரங்களின் மூலம்தான் ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பதையும் அவர்கள் உள்ளூர் மக்கள் மத்தியில் தமது ஆதரவை பெருக்கிக் கொண்டனர் என்பதையும் நாம் மறந்து விடுகின்றோம்.

படிக்க :
♦ கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

♦ இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் மக்களை இந்துக்கள் முஸ்லிம்கள் என்று இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பது போன்றே, அன்று ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நாஜிகளும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருந்த பாசிச கும்பல்களும் மக்களை கிருஸ்துவர்கள், யூதர்கள் என்று பிளவுபடுத்தி வைத்திருந்தார்கள்.

இன்று சகிப்புதன்மை கொண்ட லிபரலிச நாடாக காட்சியளிக்கும் நெதர்லாந்து கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. நெதர்லாந்திலும் ஜெர்மன் நாஜிகளை பின்பற்றி வந்த என்.எஸ்.பி எனும் ஒரு இனவாத பாசிச கட்சி இயங்கி வந்தது. அன்றும் அவர்கள் யாராலும் கவனிக்கப்படாத ஒரு சிறிய கட்சியாகத்தான் இருந்தனர். யூதர்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்கள் மூலம் டச்சு மக்கள் மத்தியில் ஆதாரவை பெற்றுக்கொள்ள முயன்றனர்.

இருப்பினும் அந்த காலத்திலும் நெதர்லாந்து, சர்வதேச வணிகத்தினால் லாபம் அடைந்து வந்த நாடு என்பதாலும், அதற்கு யூதர்களின் பங்கு இன்றியமையாதது என்பதாலும், டச்சு மக்கள் மத்தியில் இந்த யூதர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் பெரியதாக எடுபடவில்லை.

1940-ஆம் ஆண்டிற்கு பின்னர், அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வருடம் ஜெர்மன் நாஜி இராணுவம் நெதர்லாந்தின் மீது படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது. நெதர்லாந்து அரசாங்கம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஜெர்மன் இராணுவ ஆட்சியாளர்களின் நிர்வாகம் ஏற்பட்டது. அவர்களின் கீழே ஒரு நிழல் அரசாங்கம் இயங்கி வந்தது.

அதைத்தவிர மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. டச்சு அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் சிவில் நிர்வாகத்தை முன்பு போலவே நடத்திக் கொண்டிருந்தனர். அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கின. மக்கள் வழக்கம்போல வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.

டச்சு கிருஸ்துவ முதலாளிகள் மட்டுமல்ல யூதமுதலாளிகள் கூட தமது தொழிலகங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை. சமூகம் இன்றிருப்பதை போன்றுதான் அன்றும் இருந்தது. யூதர்களில் பணக்காரர்களும் இருந்தார்கள், ஏழைகளும் இருந்தார்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் ஒன்று கலந்து வாழ்ந்து வந்தார்கள். யூதர்கள் மதத்தால் வேறுப்பட்டிருந்தாலும், மொழியால் கலாச்சாரத்தால், அவர்களும் டச்சுக்காரர்களாகதான் வாழ்ந்து வந்தனர்.

ஜெர்மன் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கிய டச்சு ஒட்டுக்குழுவான என்.எஸ்.பி கட்சியினர், மக்கள் மத்தியில் ஏற்படும் சிறு சுணக்குகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாக மாற்றி விடுவதற்குக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆம்ஸ்டர்டாம் நகர தெருக்களில் கத்தி பொருட்களுடன் (ஆயுதங்களுடன்) ரோந்து சுற்றிய என்.எஸ்.பி காடையர்கள் (ரவுடிகள்), யூதர்களை கண்டால் அவர்களை சீண்டி வம்புக்கிழுத்து சண்டையிட முயன்றனர்.

என்.எஸ்.பி காடையர்களின் கும்பல் வன்முறையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யூதர்களும் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார்கள். இதனால் இந்த டச்சு – யூத ஆயுதபாணி குழுக்களுக்கு இடையில், அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றன.

ஒருதடவை ஆம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற மோதலில் கடுமையாகக் காயமடைந்த என்.எஸ்.பி முக்கிய பிரமுகர் ஒருவர் அடுத்தநாள் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜெர்மன் ஆட்சியாளர்களும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த டச்சு தினசரி பத்திரிக்கைகளும் யூதர்கள் மீதே பழிபோட்டனர்.

நெதர்லாந்தில் யூத பயங்கரவாதிகளின் அட்டகாரம் அளவுக்கு மிஞ்சி சென்றுவிட்டதென்றும், அவர்களது வன்முறைக்கு ஒரு நிராயுதபாணியான அப்பாவி டச்சு இளைஞன் பலியாகி விட்டானென்றும், செய்தி வெளியிட்டிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாம் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய ஜெர்மன் படையினர் நூற்றுக்கணக்கன யூத இளைஞர்களைக் கைது செய்தனர். 1941-ஆம் ஆண்டு பிப்ரவரி 22,23-ஆம் தேதிகளில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் 20 முதல் 35 வயது வரையிலான 427 யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அன்றைய தினம் நடைபாதையில் கல் பதிக்கும் வேலை செய்து வந்த ஒரு சாதாரண டச்சுத் தொழிலாளி, நூற்றுக்கணக்கான யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை கண்டு கொதித்தெழுந்துள்ளார். தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அந்த தொழிலாளி, இந்த சம்பவம் குறித்து தனது சகதோழர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்கள் இருவரும் கலந்து பேசி, இதற்கு எதிராக நாங்கள் ஒரு நடவடிக்கை  எடுக்க வேண்டுமென்றும் வேலை நிறுத்தப் போராட்டமே சிறந்தது என்றும் தீர்மானித்தனர். தமது முடிவு குறித்து தலைமறைவாக இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் அறிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பீடமூம் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனுமதி கொடுத்தனர். பிப்ரவரி 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைக்கூவல் விடுக்கும் துண்டு பிரசூரங்கள் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டன.

ஆம்ஸ்டர்டாம் நகரில் நூற்றுக்கணக்கான அப்பாவி யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவது நேரில் கண்ட, சாதாரண டச்சு மக்கள் கூட இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்டு கட்சியினரின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

பிப்ரவரி 25-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் எங்குமே டிராம்கள் ஓடவில்லை. பஸ் ஓடவில்லை. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசாங்க ஊழியர்கள் கூட அலுவலகங்களுக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது ஆம்ஸ்டர்டாம் நகரை அன்டியிருந்த கார்லம், வில்ரேல், சான்டம் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியது.

பிப்ரவரி 25,26 ஆகிய இரண்டு நாட்களும் நாடு தழுவிய மக்கள் எழுச்சியாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம், நாஜி ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் நாஜிகள் அதிகாரத்திற்கு வந்த பின்னர், நடந்த முதலும் கடைசியுமான பொது வேலை நிறுத்தம் இதுதான்.

உண்மையில், இப்படியொரு மக்கள் எழுச்சியை நாஜி இராணுவ ஆட்சியாளர்களே எதிர் பார்த்திருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை அவர்களுக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. நெதர்லாந்தை நாஜி படைகள் எதிர்த்த அடுத்த நாளே நெதர்லாந்து கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு விட்டதாலும், அந்த கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் தலைமறைவாக இருந்ததாலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒழுக்குபடுத்துபவர்கள் யாரென்றுக் கண்டுபிடிக்க முடியவில்லை.

படிக்க :
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்
♦ Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

கம்யூனிஸ்ட் கட்சி என்பது பெருமளவு மக்கள் ஆதரவு பெற்றிறாத ஒரு சிறிய கட்சி என்பதாலும் அவர்கள் அந்தக் கட்சியைக் குறைவாக மதிப்பிட்டு இருக்கலாம். ஆனால், தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஒரு பலமான ஆதரவுதளம் இருந்ததையே அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று தெரியாமல் தவித்த ஜெர்மன் பாதுகாப்பு படையினர், கண்டபடி சுட்டத்தில் ஒன்பது பேர் பலியானார்கள். வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியவர்கள் கையில் அகப்பட்டால், அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றார்கள். அத்துடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கைது செய்தனர். அது மட்டுமல்ல, தொழிலாளர்களை நடத்திய முதலாளிகள் மீதும் அழுத்தம் பிரகியோகிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறும் மேலதிகமாக ஒருமாத சம்பளப் பணம் தண்டமாக அரவிடப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. வேலை நிறுத்தம் நடைபெற்ற நகரங்களுக்கு பொருப்பான நகர சபை நிர்வாகம் ஒரு பெரும் தொகை தண்டமாக கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் ஆம்ஸ்டர்டாம் நகர சபை மட்டுமே பதினைந்து மில்லியன் கில்டர்ஸ் தண்டப் பணமாக கட்டியுள்ளது. கில்டன் என்பது யுரோவ் வருவதற்கு முன்பிருந்த நெதர்லாந்து நாட்டின் நாணயமாகும். சம்பந்தப்பட்ட நகர சபைகளின் மேயர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அந்த இடத்தில் நாஜி இராணுவ ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் கைக்கூலிகள் நியமிக்கப்பட்டனர்.

ஜெர்மன் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த ஐரோப்பிய நாடொன்றில் இராணுவ ஆட்சியாளர்களையே நடுக்க வைக்கும் அளவிற்கு, ஒரு மக்கள் எழுச்சியாக மாறிய இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காரணம் ஒரு சாதாரண தொழிலாளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுவும், இந்த தொழிலாளி ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி உறுப்பினர் என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

மனிதக்குல வரலாறு முழுவது சாதாரண உழைக்கும் மக்களே வரலாற்றை மாறி எழுதியுள்ளனர். ஆனால், அவர்களின் பெயர்கள் எந்த ஒரு சரித்திர புத்தகத்திலும் குறிப்பிடப்படுவதில்லை. வில்லம் கிரான் என்ற ஒரு பெயரையுடைய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு தொழிலாளிதான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியவர் என்பதை அன்றைய நாஜி ஆட்சியாளர்கள் ஏதோ ஒருவகையில் கண்டுபிடித்து விட்டார்கள்.

நெதர்லாந்து முழுவதும் வில்லம் கிரானை வலைவீசி தேடிக் கொண்டிருந்த நாஜிப் படையினர் நவம்பர் மாதம் 16-ஆம் தேதியளவில் கைது செய்துள்ளனர். சரியாக, ஒரு வருடத்திற்கு பின்னர் அதாவது, 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி 33-வயதுடைய வில்லம் கிரான் ஒரு இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார். சாவதற்கு முன்னர், அவர் தங்கள் மகளுக்கு எழுதிய கடிதத்திலும் தனது கொள்கைப்பற்றை வெளிபடுத்தியுள்ளார்.

“நான் எனது கொள்கைக்காக மரணிக்கிறேன். அது அர்த்தமற்றதாகி விடாது என்று நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். வில்லம் கிரானின் மரணத்திற்கு பின்னர், அவரது மனைவியும் மகளும் மிகவும் கொடுமையான வறுமைக்குள் வாழ்ந்தனர். இன்று, ஒவ்வொரு வருடமும் நடக்கும் பிப்ரவரி வேலை நிறுத்த நினைவுக் கூறளுக்கு சம்பிரதாயப் பூர்வமாக கலந்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் யாரும் வில்லம் கிரானின் பெயரை உச்சரிப்பதே இல்லை.

அவரது பெயர் நெதர்லாந்து நாட்டில் எந்த ஒரு பாடப் புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு சாதாரண தொழிலாளி, அது மட்டுமல்ல அவர் ஒரு கம்யூனிஸ்ட்.

முகநூலில் : கலையரசன்
(தோழர் கலையரசனின் யூடியூப் காணொலியின் எழுத்துருவாக்கம் )

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி !

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட இயக்கம் சொல்லத்தக்க பெரிய அளவிலான மக்கள் இயக்கங்களை திட்டமிடவில்லை. அநேகமாக காங்கிரஸ் இயக்கம் முடங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.  ஆனால், 1947-ல் தேச விடுதலை, இது எப்படி சாத்தியம் ஆனது?

1939-ல் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்த இந்தப் பேரழிவு, 1945-ல் முடிவுக்கு வந்தது. 20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இந்த உலகப்போரில் தம் உயிரை  ஈந்தனர். போரின் தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு கனவு இருந்தது. அதாவது, ஜெர்மானிய ஹிட்லர், இத்தாலிய முசோலினி, கிழக்கே ஜப்பான் ஆகியோர் இணைந்து ஒரு வேளை சோவியத் யூனியனை அழித்தால் மவுனமாக நாம் அதை அனுமதிப்போம் என்பதே அக்கனவு.

படிக்க :
♦ வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !

♦ The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

1941-ம் ஆண்டு ஜூன்-22 அன்று ஹிட்லர் சோவியத்தின் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், வரலாறு அமெரிக்காவின் கனவை மண்ணாக்கியது. சோவியத் படைகள் ஒருவேளை ஹிட்லரை அழித்திடாமல் இருந்திருந்தால், ஹிட்லர் அமெரிக்காவையும் அழித்திருப்பான் என்பதே உண்மை.

இங்கே, இந்தியாவில் உலகப்போரின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது என தோழர் பசவ புன்னையா பிற்காலத்தில் எழுதினார். கட்சி பாசிச யுத்த எதிர்ப்பு நிலை எடுத்தது. இந்த நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, இன்னும் கூட சற்று நீக்குப்போகுடன், தந்திரோபாயமாக நிலைமையை கையாண்டு இருந்திருக்கலாம் என பின்னாட்களில் கட்சி தன் விமர்சனம் செய்துகொள்ள வேண்டியிருந்தது.

கட்சியின் இந்த நிலைப்பாட்டை, காங்கிரஸின் பெரும் செல்வந்தர்களும் தலைவர்களும் தம் மோசமான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அதே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், பாசிசம் தோல்வி அடைய வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். காரணம், போரின் போக்கும் போரின் முடிவும் இந்தியாவின் விடுதலையை பாதிக்கும் என்பதை அவர்களும் உணர்ந்து இருந்தார்கள்.

குறிப்பாக சோவியத் வெற்றி பெறுவதும் சரி, வீழ்வதும் சரி, அது சோவியத்துடன் நின்று விடப்போவதில்லை, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நலனையும், உலகெங்கும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் இயக்கங்களையும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை, அத்தகைய முற்போக்காளர்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் மக்களும் மட்டுமே அன்று புரிந்து கொண்டு இருந்தனர்.

இப்பின்னணியில்தான் 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு இயக்கம் – Quit India” தொடங்கியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று காந்தியும் பிற தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியால் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி, பிரிட்டிஷ் அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

கூடவே, கம்யூனிஸ்ட்டுக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு ஆகியன குறித்தும் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜோஷி குறிப்பிட்டு, கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறு தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. “…இந்த இரண்டு வருடங்களில் எங்கள் தோழர்கள் நான்கு தோழர்கள் (கேரளாவில் கையூர் தியாகிகள்) பிரிட்டிஷ் ஆட்சியால் தூக்கில் இடப்பட்டார்கள். 400 தோழர்கள் வரை இன்னும் சிறையில் உள்ளனர். 100 தோழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் சர்க்கார் எங்களுக்கு செய்யும் உதவியை பார்த்தீர்களா?” என்று எழுதினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கிரீடத்தின் மிக உயர்ந்த ஜொலிக்கின்ற வைரம் இந்தியாவே என்று சொன்ன பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை, இனிமேலும் நாம் இந்தியாவில் காலம் தள்ள முடியாது என்று புலம்ப வைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு இறுதி நெருக்கடியை கொடுத்தது 1946 கப்பற்படை புரட்சிதான்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று உத்தரபிரதேசம், மதுபங்கா காவல் நிலையம் முற்றுகை, பிகார், வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில்,  பல நூறு மக்களை போலீசும் ராணுவமும் சுட்டுக் கொன்றது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது. இடையில் வந்ததுதான் வங்கப்பஞ்சம், அது அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சரச்சில் திட்டமிட்டு உருவாக்கிய செயற்கையான பஞ்சம். இந்தியாவில் இருந்த, இந்தியாவுக்கு பிற நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று, இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செத்து மடியக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்.

****

1946-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி அன்று, பம்பாயில் பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த இந்திய மாலுமிகள், HMIS தல்வார் என்னும் போர்க்கப்பலில் இருந்து பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஏற்றிப் பறக்கவிட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் மோசமான, கொடூரமான நடத்தையைக் கண்டித்தும் தங்களது பிற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான உணர்வே மேலோங்கி இருந்தது. தொடர்ந்து மேலும், பல கப்பல்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டம் கராச்சி, சென்னை தூத்துக்குடி என இந்தியா எங்கும் பரவியது.

போராடும் மாலுமிகளுக்கு ஆதரவாக, லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்கள் தம் வீடுகளில் சப்பாத்தி, ரொட்டிகளை சுட்டு பழங்களுடன் சுமந்து சென்றுப் போராடும் கப்பற்படை வீரர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ராணுவ வீரர்களை ஏவி, மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். ஆனால், சக வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது. அதிகாரிகளின் உத்தரவை படை வீரர்கள் மீறியதை நவீன காலத்தில் அநேகமாக முதல் முறையாக அங்கேதான் பார்க்க முடிந்தது.

போராடும் வீரர்கள், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டியபோது, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஆதரவு தர மறுத்தனர். கட்டுக்கோப்பான ராணுவ வீரர்கள் தம் உறுதிமொழிக்கு மாறாகப் போராட்டத்தில் இறங்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நாளை விடுதலை பெற்ற இந்தியாவிலும் அவர்கள் இப்படித்தான் அரசை எதிர்த்துப் போராடக்கூடும் என்றும், இதைக் காண 125 வயது வரை வாழ வேண்டுமா என்றும் வெளிப்படையாகவே பேசினார் காந்தி. கம்யூனிஸ்டுகளும் மக்களும் ஆதரிக்க, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் கைவிட, மகத்தான ஒரு புரட்சி சில நாட்களில் கைவிடப்பட்டது.

****

1905-ம் ஆண்டில் சோவியத் புரட்சியை தொடங்கி வைத்த பொட்டெம்கின்னும், 1917-ல் ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீது குண்டு வீசிப் புரட்சி துவங்கியதை அறிவித்த அரோரா என்ற கப்பலும், பிற்காலத்தில் சோவியத் அரசால் பாதுகாக்கப்பட்டன. தல்வார் கப்பல் எங்கே ?

முகநூலில் : இக்பால் அகமது

disclaimer

ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி

மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளை நேற்று வெளியிட்டுள்ளது. மோடி அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வராத ஊடகங்களாக சமூக வலைத்தளங்களும் (அதிலும் ட்ரோல் படையைக் கொண்டு மிரட்டி முடக்குகிறது) பண்பாட்டு ஊடகங்களாக ஓ.டி.டி தளங்களும் இருந்து வருகின்றன.

இந்தியாவை இந்துராஷ்டிரமாகத் துடிக்கும் சங்க பரிவாரத்திற்கு இந்த ஓ.டி.டி தளங்களும் சமூக வலைத்தளங்களும் புதிய தலைவலியாகியிருப்பதை ஒட்டியே அதனையும் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு.

இந்நிலையில் இந்தியாவில் பெயரளவிற்காவது இருந்துவந்த ஜனநாயக விழுமியங்கள் எல்லாம் என்னவாகின ? ஜனநாயகத்தின் முதுகெலும்பாக அறியப்படும் ஊடகங்கள் என்னவாகின ? அறிவுத்துறையினர், செயல்பாட்டாளர்கள் நிலை என்ன ?

இது குறித்து விரிவாக “ஜனநாயகம் சரிகிறதா?” என்ற தலைப்பில் 30 நிமிட காணொலியில் பேசியிருக்கிறார் பேராசிரியர் முரளி அவர்கள். அதில், இந்தியாவில் சமீப காலமாக பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் மீது நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் சர்வதேச அளவில் இந்தியாவின் ஜனநாயக நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
♦ அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவது, கொல்லப்படுவது மற்றும் நேர்மையான ஊடகங்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுகின்றன என்பதையெல்லாம் விரிவாக விவரிக்கிறார்.

உலகளாவிய அளவில் ஒரு நாட்டில் ஜனநாயகம் சீரழிந்து போவதை அடையாளப்படுத்தும் 8 அளவுகோல்களைப் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் பேராசிரியர் முரளி. அவை,

1. ஜனநாயக விதிகள் மறுக்கப்படுதல்
2. எதிர்க் கட்சிகள், அரசியல் எதிரிகளின் உரிமைகள் மறுக்கப்படுதல்
3. வன்முறையைத் தூண்டுதல் / ஆதரித்தல்
4. குடிமை உரிமைகள் மறுப்பு
5. குடிமைச் சுதந்திரத்தை நசுக்கும் சக்திகளை ஆதரித்தல்
6. ஒரு குறிப்பிட்ட சாரரின் மாண்பை உதாசீனப்படுத்தி இழிவுபடுத்துதல்
7. இன அழிப்பிற்கு ஆதரவு தெரிவித்தல்
8. பன்மைத் தன்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்

இவை அனைத்தும் இந்தியாவில் எந்த அளவிற்கு இன்று பரவலாகக் காணப்படுகின்றன என்பதை நாமே ஒப்பிட்டு இன்று இந்தியா எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள இந்தக் காணொலியைப் பாருங்கள் !

 

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

விவசாய விரோத வேளாண் சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தி ‘விவசாயிகள் இல்லாத விவசாயத்தை’ உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வை, உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து ‘பா.ஜ.க இல்லாத பஞ்சாப்பை’ உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள் பஞ்சாப் மக்கள்.

கடந்த பிப்வரரி 14-ம் தேதி நடந்து முடிந்த பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. மொத்தமுள்ள எட்டு மாநகராட்சிகளில் ஏழில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மையாக காங்கிரசே வென்றிருக்கிறது. முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கும், சுயேட்சைகளுக்கும் கிடைத்த அளவுக்குக் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்புச் செய்தி.

பஞ்சாப்பில் சுமார் 40 சதவீத அளவுக்கு இந்துக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நகர்ப்புறங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பெரும்பாலும் பி.ஜே.பி. ஆதரவாளர்களாக இருந்துவந்தனர். ஆனாலும் கூட உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி.யால் அவர்களது வாக்குகளைப் பெற முடியவில்லை.

படிக்க :
♦ டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
♦ தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

காரணம், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, பஞ்சாப் மாநிலம் முழுவதுமே, வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் நடத்தி வரும் இப்போராட்டங்களின் நியாயத்தை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள் என்பதாலும், விவசாயிகளுக்கு ஆதரவான நிலை எடுத்தால்தான் அரசியல்ரீதியாக தாக்குப்பிடிக்க முடியும் என்பதாலும்தான் பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு, மாநில அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றியது.

விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதும், உணவுப் பொருள் சந்தையை அவர்கள் கட்டுப்படுத்துவதும் விவசாயிகளை மட்டுமல்ல வியாபாரிகளையும் ஒழித்துக் கட்டிவிடும் என்ற உண்மையை வியாபாரிகள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான், விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக மோடி விசுவாசிகள், போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகளே அல்ல, அவர்கள் அனைவரும் கமிஷன் ஏஜெண்டுகள் – இடைத்தரகர்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.

இடைத்தரகர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதே ஆட்சியாளர்களின் திட்டம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான், பஞ்சாப்பில் பி.ஜே.பி வாங்கியிருக்கும் அடி.

மக்கள் எந்தளவுக்கு பிஜேபியை வெறுக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக பின்வரும் சம்பவத்தைச் சொல்ல முடியும். குர்தாஸ்பூர் நகராட்சியின் 12-வது வார்டில் பிஜேபி சார்பாக போட்டியிட்ட கிரண் கவுர் என்ற பெண்மணியின் குடும்பத்தினருக்கே 20 ஓட்டுக்கள் உள்ள நிலையில் 9 ஓட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்களே பிஜேபிக்கு ஓட்டு போட விரும்பவில்லை. ஆனால் அவரோ, காங்கிரஸ்காரர்கள் ஓட்டு மெசினைக் கைப்பற்றி ஏமாற்றி விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக் காலமாக சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக்கொண்டும், நகர்ப்புற மேட்டுக்குடி இந்துக்களின் வாக்குகளை வைத்துக் கொண்டும் பஞ்சாப்பில் ஆளும்கட்சி போல அலட்டிக் கொண்டிருந்த பிஜேபி, தனித்து நின்று தேர்தலை சந்தித்த பிறகு நோட்டாவிடம் தோற்றுப்போன தமிழக பிஜேபி போல ஆகியிருக்கிறது.

அரியானா – ஊருக்குள் நுழையத் தடை!

பஞ்சாப் இந்துக்கள்தான் பிஜேபியை வெறுக்கிறார்கள் என்றால், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரியானாவின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. கடந்த முறை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க.தான் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது. அரியானாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாட் சாதியினர் உள்ளிட்ட இந்துக்கள் மத்தியில் இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி, மதவாத அடிப்படையில் தன்வசம் திருப்பி வைத்திருந்த பா.ஜ.க.வுக்கு எதிராகவே இப்போது அவர்கள் திரும்பிவிட்டனர்.

ஜாட் சாதியைச் சேர்ந்தவர்கள் தமது சாதிப் பெருமையைக் காக்கவும், தமது வாக்கு யாருக்கு எனத் தீர்மானிக்கவும் இத்தனை ஆண்டுகளாக காப் அல்லது மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு இவற்றைத் தனக்கு சாதகமாக பி.ஜே.பி பயன்படுத்தி வந்தது. ஆனால், இம்முறை ஜாட்டுகள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். தாங்கள் இந்துக்களாக இருப்பதை விடவும் விவசாயிகள் என்ற வகையில் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகி வருவதையும், அந்தப் பாதிப்புகளுக்குக் காரணமே இப்போது பிஜேபி தான் என்பதையும் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதனால்தான், அடுத்தடுத்து பல்லாயிரம் பேர் பங்கேற்கும் மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டி “வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறு!” என மோடி அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஆளும்கூட்டணியில் உள்ள பிஜேபி-ஜேஜேபி கட்சிக்காரர்களை ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், இவர்களை திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் அழைக்கக் கூடாது என்றும் ஊர்க்கட்டுப்பாடு விதித்து பா.ஜ.க.வினர் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் போராட்டத்தை எதிர்ப்பதாக இருந்தால் ஜேஜேபி கட்சியில் நீடிக்க முடியாது – ஊருக்குள் நடமாட முடியாது என்ற நிலைக்கு பல எம்.எல்.ஏக்கள் வந்திருக்கிறார்கள். இத்தனை நாட்களாக பிஜேபிக்கு ஆதரவாக இருந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மதம் – சாதி ஆகியவற்றைச் சொல்லி தம்மை ஏமாற்றி வந்த பி.ஜே.பி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது – விவசாயிகளுக்கு எதிரானது என்ற உண்மையை மூன்று வேளாண் சட்டங்களும், அவற்றைத் திரும்பப் பெற மறுக்கும் மோடி அரசின் திமிரும் விவசாயிகளுக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தியிருக்கின்றன. மதம் – சாதி ஆகியவற்றுக்கு அப்பால் வர்க்கம் என்ற வகையில் விவசாயிகள் தமது பாதிப்புகளை உணரும் நிலையை பிஜேபி உருவாக்கியிருக்கிறது.

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் கார்ப்பரேட்டுகள் கடிந்து கொள்வார்கள் என்கிறது பி.ஜே.பி; இதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களான விவசாயிகள் பிஜேபியையே வெறுக்கும் நிலையை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பவன், பறிகொடுப்பவன் என இருதரப்புக்குமே ஒருவன் நல்லவனாக இருக்க முடியாது; அவ்வாறு இருப்பதாக நடித்தால் அந்த நாடகம் நீண்ட நாள் நடக்காது என்பதற்கு பிஜேபியே சாட்சி.

புதிய வேளாண் சட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன ?

கார்ப்பரேட்டுகளை ஆதரிப்பதில் பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்? காங்கிரஸ் கொண்டுவரத் திட்டமிட்ட சட்டங்களைத்தானே பிஜேபி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லையா ?

உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய சார்பு நிதியாதிக்கக் குழுமங்களின் ஆணைக்கு இணங்க இந்தியா நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் நரசிம்மராவ் ஆட்சிக் காலம் துவங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய மோடி அரசு வரை ஆட்சி செய்து வருகிறது.

தற்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் அனைத்தும் மேற்கூறிய ஏகாதிபத்திய நிதியாதிக்கக் குழுமங்களால் திணிக்கப்பட்டவையே. ஏகாதிபத்தியங்களின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டு தரகு முதலாளிகள் கிளர்ந்தெழாத வண்ணம், ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்த மக்களைச் சுரண்டத் தக்க வகையில் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றன இந்தச் சட்டங்கள்.

கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக் கட்சிகளான பாஜக காங்கிரஸ் இரண்டுமே இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் தான் தற்போது காங்கிரஸ் பரவாயில்லை என்ற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய மக்கள் விரோத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகையில் எழும் எதிர்ப்புகளை முடக்க காங்கிரஸ் அரசு முயற்சித்தாலும், இறுதியில் மக்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்தது. மக்களை கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து திசை திருப்புவதற்கான தேசிய வெறி அல்லது மதவெறியை மக்கள் மத்தியில் தூண்டும்படியான அமைப்புகள் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.

ஆனால் பாஜக தேர்தல் அரசியலில் எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல் மதவெறி மற்றும் தேசிய வெறியைத் தூண்டி மக்களை திசை திருப்புகின்றன.
இது பாஜகவை தான் எடுத்த நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் வெறுமனே சி.பி.ஐ மட்டும்தான் காங்கிரசின் கைப்பாவையாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் நீதித்துறை துவங்கி அரசின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவி தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இதுதான் தற்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாய நிலைமை. பாஜகவை வீழ்த்த விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில் இந்த கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதன் காரணமாகவே தாம் ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றுகிறது. ஒருவேளை நாளை காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினாலும் இந்தச் சட்டத்தை வேறு வழிகளில் நைச்சியமாக நடைமுறைப்படுத்த காங்கிரசும் எத்தனிக்கலாம். ஏனெனில் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி ஆகியவற்றின் நிர்பந்தமும், உள்நாட்டில் அவர்களின் கட்சிக்கு படியளக்கும் கார்ப்பரேட்டுகளின் நிர்பந்தமும் தான்.

ஆகவே தற்போது பஞ்சாப் அரியானாவில் பாஜக தோல்வியுற்றது வேளாண் சட்ட மசோதாவின் ஒரு பகுதிதான். இந்த கண நேர மகிழ்ச்சியை கொண்டாடிவிட்டு அப்படியே விட்டுவிட முடியாது. தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சியும் மாற்றுக் கருத்து கொண்ட கட்சியல்ல. ஆகவே, உழைக்கும் வர்க்கத்தினரின் – அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினரின் – வர்க்கரீதியான ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் கார்ப்பரேட்டுகளின் அரசாட்சியை ஒழித்துக் கட்டி நமது உரிமைகளைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டது.


தமிழ்ச்சுடர்