Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 321

இத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 27

டோக்ளியாட்டி

ஜூன் 30-யும் 6 மாட்டியோட்டி, நெருக்கடியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவை இரண்டிலும் ஒத்த அம்சங்கள் இருப்பதைக் காணலாம். இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட எதிர்ப்பாளர்கள் மாட்டியோட்டியும் சில பாசிஸ்டுத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். பாசிசத்தின் கீழ் அணி திரட்டப்பட்ட குட்டி பூர்ஷுவா அணிகளிடையே ஊசலாட்டங்கள் நிலவின; மாட்டியோட்டி காலத்தில் படை அணி திரட்டல் உத்தரவுகளுக்கு மக்கள் கீழ்ப்படியவில்லை: ஜூன் 30-ல் பழுப்புச் சட்டையினர் பெரும் அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால் இப்படை கலைக்கப்பட்டு, மறுசீரமைவு செய்யப்பட்டது.

இத்தாலியில் இதர பல கட்சிகள் இருந்தன, இவை அவென்டைன் கட்சிகள் 7 என அழைக்கப்பட்டன. ஊசலாட்டமான இந்தக் கட்சிகள் வாயிலாக வெகுஜனங்களின் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. இத்தகைய சில அம்சங்கள் ஜெர்மனியிலும் காணப்பட்டன. ஆனால் அவை பிரதான அம்சங்களாக இருக்கவில்லை. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியே ஜெர்மனியைப் பொறுத்தவரையில் பிரதான அம்சமாகும். பழுப்புச் சட்டை இயக்கம், ஆலைத் தொழிலாளர் அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் போன்றவை சிதைந்து போயிருந்தன.

இங்கும் நெருக்கடி இத்தாலியில் நடைபெற்றது போன்ற அதே பாதையில் சென்றது. சமூக ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும், கத்தோலிக்க உணர்ச்சியைத் தட்டியெழுப்புவதற்கும் முயற்சி நடைபெற்றது. இத்தாலியில் மாட்டியோட்டி காலத்தில் இருந்தது போன்ற ஒரு சூழ்நிலை ஜெர்மனியில் நிலவிற்று. ஆனால் ஜெர்மனியில் இது இன்னமும் தொடக்க கட்டத்திலேயே இருந்தது; இத்தாலியிலோ இது பிரதானமான கட்டத்தை அடைந்திருந்தது. ஜெர்மனியில் வெகுஜனங்கள் ஏற்கெனவே பாசிஸ்டு அமைப்புகளுக்குள் வந்துவிட்டனர்; இத்தாலியிலோ பெரும் பகுதியினர் பழைய அமைப்புகளுக்கு வெளியே இருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் புதிய அமைப்புகளுக்குள் கொண்டுவரப்படவில்லை.

(அர்ப்பினதி) leandro-arpinati .

இத்தாலியில் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்டத்திலிருந்து நகர்ந்து இன்றைய கட்டத்துக்கு வருவோமானால் வெகுஜனங்களின் அதிருப்தி தீவிரமடைந்து, பாசிஸ்டு அமைப்புகளில் உட்பகைப் போராட்டங்களாக அது பிரதிபலிப்பதைக் காணலாம். அங்கு எதிர்ப்பு மேன்மேலும் வலுத்து வருகிறது; அது முன்போன்ற வடிவத்தில் இல்லை. மாறாக, பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது.

இது சம்பந்தமாக, அண்மைய அர்ப்பினதி விவகாரத்தை 8 எடுத்துக் கொள்வோம். இந்த எதிர்ப்பு இயக்கம் முந்தைய எதிர்ப்பு இயக்கங்களை விடவும் தீவிரமானது. பாசிஸ்டுக் கட்சியின் வேலைத் திட்டங்களிலிருந்து மாறுபட்ட அரசாங்க வேலைத் திட்டங்களை எவரும் – சாலாவோ அல்லது கியாம்பாலியோ – இதுவரை முன்வைக்கவில்லை. எதிர்ப்பு இயக்கம் மாகாணக் கட்சி அமைப்புகளுக்குள்ளேயேதான் நடைபெற்று வருகிறது. ஆனால் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு அர்ப்பினதி ஒரு வேறுபட்ட திட்டத்தை முன்வைக்கிறார். பாசிஸ்டு அமைப்புகளுக்குள் நடைபெற்றுவரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டம் இது. இன்று இந்தத் தலைவர்கள் வெகுஜனங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால் 1924-ம் ஆண்டிலோ அல்லது 1925-ம் ஆண்டிலோ பழைய தலைவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த நெருக்கடிகள் இன்று ஆழமான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.

இத்தாலியில் பாசிசத்துக்கு அடித்தளமாக, கொத்தளமாக விளங்கிய எமிலியாவைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவாக்களின் அதிருப்தியை அர்ப்பினதி பிரதிபலிக்கிறார். குத்தகை தொகை அதிகரிப்பு, சிறு நிலவுடைமை சிதைவு, பண்ணைப் பொருள்களின் விலைகள் வீழ்ச்சி, பெரிய நிலச்சுவான்தார்களின் போட்டி முதலியவை குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர பூர்ஷுவாக்களின் அதிருப்திக்கு காரணம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

6. 1934 ஜூன் 30ல் நாஜிக்கட்சியில் இருந்த தனது எதிரிகளை ஹிட்லர் அழித்தார். இந்த ரத்தக் களறியின் பிரதான பலிகடாக்கள் எஸ்.ஏ.யின் தலைவர்கள் எர்னஸ்ட் ரோஹிமும் மற்றவர்களும்.

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti)

7. அவென்டைன் கட்சிகள் : கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

ரோம் நகருக்கு வெளியே வீசப்பட்டிருந்த கியாசோமோ மாட்டியோட்டி உடலை சுமந்து வரும் போலீசார்.

எனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவியிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் – நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.

படிக்க:
#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !

வாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.

8. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !

7

ந்துத்துவ சாதி-மத வெறியை ஊட்டி வட மாநிலங்களில் வெகு விரைவாக வளர்ந்து விட்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, தமிழகத்தில் மட்டும் இன்னும் வளரமுடியவில்லை. அதற்காக மக்களிடம் இருக்கும் இயல்பான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை தனது பக்கம் இழுத்துக் கொள்ள கோவிலை ஒரு களமாகப் பயன்படுத்த முடிவு செய்த சங்க பரிவாரத்திற்கு, தமிழகத்தில் அரசு சார்பில் இந்து அறநிலையத் துறையின் கையில் கோவில்கள் இருப்பது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது. அதனை முறியடிக்க “கோவில்களை மீட்போம்” என்ற பெயரில் ஒரு இயக்கம் எடுத்து நடத்தி வருகிறது. இது ஒரு சதித்திட்டமென்பது ஊரறியும்.

இது நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென தாமிரபரணி புஷ்கரம் என்று 160 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழா என இல்லாத ஒன்றை களமிறக்கியது சங்கபரிவாரம். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, அத்தி வரதரைக் களமிறக்கினார்கள். இந்திய அளவில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து, அத்திவரதர் நிகழ்வு மூலம் தமிழக பக்தர்களையும் தன் பக்கம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடுத்ததாக, 24-07-2019 அன்று முதல் வைகைப் பெருவிழா என்ற பெயரில், சாமியார்கள் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளது, ஆர்.எஸ்.எஸ்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது, இசுலாமியர்களும், கிருத்தவர்களும் அவ்விழாவை தமது சொந்த ஊரின் விழாவாகக் கொண்டாடுவதும், கோரிப்பாளையம் தர்காவின் சந்தனக் கூடு திருவிழாவில் இந்துக்கள் கலந்து கொள்வதும் மதுரை நகரின் இயல்பான மரபு.

அந்த மரபைக் காப்பாற்ற, சங்க பரிவாரத்தின் சதிகளை முறியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்குமாறு செய்துள்ளனர் தமிழ் மக்கள். அதன் தொகுப்பை கீழே தருகிறோம்.

*****

தாமிரபரணியைத் தொடா்ந்து வைகை பெரு விழா என்ற பெயாில் அகில பாரத துறவியா்கள் சங்கம் ஜுலை 12 முதல் ஆகஸ்டு 25 வரை மதுரையில் மாநாடு நடத்த உள்ளது.

வைகை நதியின் பெயரில் மதவாத அரசியலை நுழைத்து மதுரை மக்களை பிளவுபடுத்தும் முயற்சி இது. நதி என்பது மக்களின் சொத்து. அதை மத அடிப்படைவாதிகள் துறவியா்கள், ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது.

ஏற்கனவே வைகை சுற்று சூழல் சீா்கேட்டால் மாசுபட்டு நாசமாகிக் கிடக்கையில், அகில பாரத துறவியா்கள் சங்கம் நடத்தும் மாநாடு அதை மேலும் நாசமாக்கவே உதவும். அதோடு அது மதசாா்பின்மைக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கும் எதிரானது என்பதால் துறவியா்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது, என்று மக்கள் உாிமை பாதுகாப்புமையம், மக்கள் சிவில் உாிமைக்கழகம், திராவிடர் கழகம், திமுக வழக்கறிஞா் அணி, சமநீதி வழக்கறிஞா்கள் சங்கம், உள்ளிட்ட பல அமைப்பினரும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ஆனந்த் :

எலேய் மதுரக்காரன்டான்னு சவுண்டு வுட்டா பத்தாதுடே. இந்த அரடவுசர் பயலுக உள்ள வரவே உடாம போராடுங்கடே, என் மதுர மக்கா. மதுர வீரன் சாமியும், கருப்பனும், முருகனும் சூலாயியும், முனியாண்டியும் அய்யனாரும் ஆத்தா மீனாட்சியும் நம்மள காரித்துப்புவாங்கடே. #SaveVAIGAIfromRSS

பாண்டியன் பெரியையா பொறியாளன் :

கங்கை நதியை மாசு படுத்தியவர்கள் இப்போது வைகை நோக்கி வருகிறார்கள். தமிழ் நதியால் பயிர் விளையும். காவி நதியால் உயிர் பிரியும். எச்சரிக்கை தமிழர்களே! #SaveVAIGAIfromRSS

ரவிசங்கர் :

சமத்துவ விழாவான மதுரை சித்திரை திருவிழாவை சனாதன விழாவாக மாற்றும் முயற்சியில் வைகை மாதா விழா, வைகை பெருவிழா என்னும் புது வடிவம் கொடுத்து RSS காவிகும்பல் மாற்ற முயற்சிகிறது. #SaveVAIGAIfromRSS

வெங்கட் :

RSS நடத்தும் வைகை பெருவிழாவிற்கு தயவு செய்து அனுமதி கொடுக்காதீர்கள், ஏனென்றால் இவர்கள் கங்கையை சுத்தமா வச்சிக்கிட்ட லட்சணம் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தெரியும். #SaveVAIGAIfromRSS

கிசான் :

வைகையில் மட்டுமல்ல, இது காவிரி, தாமிரபரணி ஆறுகளிலும் நடக்கிறது. ஆகையால அனைத்து நதிகளையும் ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து காப்பாற்றுங்கள் ! #SaveVAIGAIfromRSS

உதயகுமார்:

இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. அதை மதத்தின் பெயரால் கைப்பற்றி மூடத்தனத்தைப் பரப்பி மக்களை காட்டுமிராண்டிகளாக மாற்றும் முயற்சியில் RSS இறங்கியிருக்கிறது.#SaveVAIGAIfromRSS #savevaigai

இங்கர்சால் சே :

செல்லூர் ராஜீ போன்ற விஞ்ஞானிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட மதுரை சங்கீகளினால் அசிக்கப்பட போகிறது.. #SaveVAIGAIfromRSS

மதுரை மன்னன்:

இதுதான் வைகை… இதுதான் மதுரை… இதுதான் தமிழ்நாடு…. பூஜை பண்றேன்னு கண்ட குப்பைகளையும் கொண்டுவந்து கொட்டாம இருந்தாலே போதும் #SaveVaigai

தமிழை விரும்பும் தேவன் :

ஐயர்வால்…. வந்தோமா தட்ல விழுந்த அஞ்சு… பத்த பொறுக்குனோமானு போகனும்….. 40 வருசத்துக்கு முன்னாடி இந்து இஸ்லாமியர் வேறுபாடே கிடையாது… உங்க பரதேசி கூட்டம் வந்த பின்னாடி தான் பிரிச்சு வச்சு விளையாட பாக்குறீங்க….. இதெல்லாம் புரியும் போது தெரியும்… #SaveVAIGAIfromRSS

கவிதா :

வைகை எங்களது (தமிழர்களின்) கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளம். நாங்கள் இந்தக் காவிக் கும்பல் எங்களது கலாச்சாரத்தை சீரழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS

ராஜ் :

தமிழர்கள் பாசிசத்திற்கும், சங்கியிசத்திற்கும் எதிரானாவர்கள். நாங்கள் ஒருபோதும் இந்துத்துவக் கும்பல் எங்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்கமாட்டோம். கங்கை ஆற்றை காவிகள் அசுத்தப்படுத்தியதிப் போல எங்கள் (வைகை) ஆற்றை அவர்கள் அசுத்தப்படுத்த அனுமதியோம். #SaveVAIGAIfromRSS

தமிழ்நந்தி :

சிவனாக நினைத்து கொண்டு மண்டை ஓடு எலும்பு துண்டுகளோடு சுற்றும் அகோரி! இதுவும் ஒரு வித மூளை பிசகின உதாரணம். கடைசி வரை சிவனையும் காணமுடியாத ஊனக் கண்ணோடு செத்துப் போவது இந்த அகோரிகள் இயல்பு! வடமாநிலங்களுக்கே உரிய சிவன் சாபம் இது! #SaveVAIGAIfromRSS

தமிழ்பித்தன் :

அழகர் இறங்கும் ஆற்றில் அகோரிகளுக்கு என்ன வேலை???? #GetOutRSs #SaveVAIGAIfromRSS

பிரபாகரன் குருசாமி :

ஆடிப்பெருக்கு எந்த ஆற்றுக்கு தொடர்புகொண்ட திருவிழா என்றுகூட தெரியாத இந்த RSS தீவிரவாதிகளிடம் இருந்து வைகை நதியையும் தமிழ் பண்பாட்டையும்காப்பாற்ற வேண்டும். #SaveVAIGAIfromRSS

ஸ்டாலின் ஈ.பி

தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத காவிகள் நம் தமிழரின் தொன்மையான சொத்துக்களுள் ஒன்றான வைகையை மாசுபடுத்த அனுமதிக்கலாமா? அவர்கள் காவி வர்ணம் பூச நம் வைகை என்ன வாரனாசியா? வடக்கானே உங்கள் கலாச்சாரம் உங்களோடு. எங்கள் வைகை எங்களோடு. ஆதலால் நீ ஓடு #SaveVAIGAIfromRSS

கவிதா :

நாங்கள் வைகையை இப்படிக் காண விரும்பவில்லை. #SaveVAIGAIfromRSS

அஷோக் குமார் தவமணி :

காலங்காலமாக, தமிழர்கள் தங்களது குலதெய்வங்களுக்கு கால்நடைகளை பலி கொடுத்து, தங்களது குல வாரிசுகளுக்கு அதனைக் கறி செய்து பகிர்ந்து உண்பர். தற்போது இந்த வழக்கம் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பலால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது., நாம் அவர்களை வைகைத் திருவிழாவை நடத்த அனுமதித்தோம் என்றால், அவர்கள் நாளை இவ்வழக்கத்தை (கெடா வெட்டும்) நிறுத்தச் சொல்லி நமக்கு உத்தரவிடுவார்கள். #SaveVAIGAIfromRSS

விவேகானந்தன் :

காவி பாஜக வைகை நதியை தேசிய நிர்க் கொள்கையின் கீழ் தனியார்மயப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன் மீதான விவாதத்தைத் திசை திருப்ப, தற்போது காவிக் கும்பல் வைகை திருவிழாவை நடத்தவிருக்கிறது.#SaveVAIGAIfromRSS

அருண் காளிராஜா :

கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தைக் குறித்து நினைவுபடுத்திப் பாருங்கள். நமது அன்பிற்குரிய சுயமோகி மோடி தனது பெயர் பொறித்த உடுப்பை ஏலத்தில் விட்டு அத்தொகையையும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு தானமளித்தார். ஏதாவது ஒரு சங்கியாவது தைரியமிருந்தால், இன்றுவரைக்கு என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது எனச் சொல்லட்டும். பின்னர் வைகை திருவிழாவுக்கு வரட்டும்.

வேடிக்கை பார்ப்பவன் :

இந்துத்துவக் குண்டர்களே ! தமிழ் மண்ணை விட்டு வெளியேறுங்கள்! #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

மதுரை மதச்சார்பின்மையின் மண். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா அமைதியான முறையில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைதியை அழித்து விநாயகர் ஊர்வலத்தைப் போல நிலைமையை மோசமாக்க நினைக்கிறது. #SaveVAIGAIfromRSS

பிரபு விஜயன் :

வைகை ஆறு மதச்சார்பின்மையின் அடையாளம். வைகையில் தமிழ்ச் சமூகத்தால் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஒருங்கிணைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் தற்போது மதக் கலவரங்களைத் தூண்டும் நோக்குடன் வைகை பெருவிழா மற்றும் முட்டாள்தனமான பிற பசுப் பாதுகாப்பு மாநாடுகள் நடத்தவிருக்கிறது. #SaveVAIGAIfromRSS

ஸ்ரீசந்தர் :

ஆர்.எஸ்.எஸ். கும்பல் கங்கை நதியை அழித்தது போல நமது வைகை நதியையும் நமது தமிழ் பாரம்பரியத்தையும், வைகைப் பெருவிழா என்னும் பெயரில் அழிக்கத் திட்டமிடுகிறது. #SaveVAIGAIfromRSS

சபரி ராம்:

நியூட்ரினோ திட்டத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமல்படுத்துவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் வைகையின் ஊற்றுமூலத்தை அழித்துவிட்டு, இங்கு வைகைப் பெருவிழாவை மதுரையில் நடத்தவிருக்கிறது. தமிழர்களாகிய நாங்கள், வைகையை காவிமயமாக்குவதன் மூலம் இப்பிரச்சினையை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் போடும் இந்த தூண்டிலில் நாங்கள் சிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

வைகை ஆற்றங்கரையில் இருக்கும் 2500 ஆண்டு பழமை வாய்ந்த கீழடி அகழ்வாய்வில் எந்த ஒரு மதத்தின் குறியீடுகளும், மதம் சம்பந்தப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை. தங்களது சித்தாந்தத்தை தமிழகத்தில் நிலைநாட்ட முடியாத கையறுநிலையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கடுப்படைந்திருக்கிறது. அவர்கள் தற்போது அதனை அழிக்க வருகிறார்கள். #SaveVAIGAIfromRSS

சாமானியனின் சவுக்கு:

#SaveVAIGAIfromRSS மதுரை அழகர் மீனாட்சிக்கு போட்டியாக காவிக்கும்பல்களின் வைகைமாதாவா..? விரட்டியடிப்போம் வைகைகரையிலிருந்து காவிகளை.. #SaveVAIGAIfromRSS

பிரபு :

ஜுனிதா :

என்னடா இதெல்லாம்? வைகையை காக்க நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பேசவோ இல்ல வைகை தாய் பெற்றெடுத்த கீழடி நாகரிகத்தை பற்றி பேசவோ ஒரு நிகழ்வு கூட நிகழ்ச்சி நிரல்ல காணோம். #savevaigaifromRSS

அப்துல் பஷீத் :

நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்து வைகை நீர்த்தேக்கத்தை உடைக்கத் துடிக்கும் காவி கும்பல் வைகைக்கு விழா நடத்துகிறதாம். தமிழரின் வரலாற்றுப் பெருவிழாவான சித்திரைத் திருவிழாவை, வைகையின் வரலாற்றை காவிமயப்படுத்த 12 நாள் வைகைப் பெருவிழாவை காவிகள் துவக்கியுள்ளனர். #SaveVAIGAIfromRSS

நா. தனசேகரன் :

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழிக்கத் துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.! வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS

அசோக்குமார் தவமணி :

வைகை நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்த நாகரீகம். இவ்விரண்டும் திராவிட நாகரீங்களாக அடையாளங் காணப்பட்டதை ஆரிய இந்துத்துவவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். வைகை நாகரீகத்தை ஒழித்துக்கட்டி பண்டைய தமிழ் வரலாற்றை திருப்பி எழுத மதுரைக்கு வருகிறது. #SaveVAIGAIfromRSS

பிரபு :

அரவிந்தன் :

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழித்தாள துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.!வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS

ஸ்ரீதர் :

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு அத்தி வரதரை போல் மறைந்து இருந்த சங்கி கூட்டத்துக்கு இப்போ வைகைல என்ன வேலை?? #SaveVaigaiFromRSS

ஹைதம் :

அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டனர். இப்போது வைகையைக் குறி வைக்கின்றனர். சங்கிகள் நமது நதிகளை அழித்துவிட அனுமதிக்காதீர்கள்.. #SaveVAIGAIfromRSS

இசை :

வைகைக்கும் இந்த மதவாத காட்டுமிராண்டி கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு தமிழகத்தை RSS தீவிரவாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் முதலமைச்சர் @EPSTamilNadu தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள எத்தனை பேக்கரி டீலிங்குகள்! #SaveVAIGAIfromRSS

சாமானியனின் சவுக்கு :

இந்த வருடம் இல்லை என்றாலும் இன்னும் இரண்டு வருடங்களில் வைகை நதியை இந்த கும்பல் ஆக்கிரமிக்கும் இதை கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு கொடுறமாக இருக்கிறது என்று இதை செய்லபடுத்த தான் வைகை பெருவிழா என இந்துதுவ விழா நடத்துகிறது #SaveVaigaiFromRSS

ஜெய்குமார் :

வைகைப் பெருவிழாவா? வைகைக்கு மூடுவிழாவா? நேற்று தாமிரபரணியில் புஷ்கரம்.. இன்று வைகைக்கு பெருவிழாவாம். தமிழர்களின் வரலாற்றை காவிகும்பல் திருட நினைக்கிறது. முறியடிப்போம். #SaveVAIGAIfromRSS

வெங்கட் :

மதுரைக்கார இஸ்லாமியரும் கூடி சேர்ந்து கொண்டாடுற அழகர் திருவிழாதான் ‘வைகை பெருவிழா’. வயித்துலயிருந்த இஸ்லாமிய சிசுவயும் வயித்தக் கிழிச்சு கொன்ன வடநாட்டு காட்டுமிராண்டி சாமியார் கூட்டம் நடத்தனும் நினைக்குறது ‘காட்டுமிராண்டி பெருவிழா’. #SaveVAIGAIfromRSS

மனோ கிட்டு:

வைகையை அழிக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதிகொடுத்துவிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலம் வைகையை குறுக்கி இருபுறமும் சாலை அமைக்கவிட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் கும்பல் வைகைப்பெருவிழா கொண்டாடுவது நாடகமே.. #savevaigaifromRSS

எரிசினக் கொற்றவை :

காவிரி அனில் அகர்வாலுக்கு, தாமிரபரணி கொக்ககோலாவிற்கு, வகையை யாருக்கு விற்க வைகை பெருவிழான்னு ஏமாத்துற? #SaveVAIGAIfromRSS

அசோக் குமார் தவமணி :

பிரிட்டிஷாரின் காலை நக்கியவர்களே (சங்கிகளே), தமிழ்தேசத்தை விட்டு விலகிநில்லுங்கள்… #SaveVAIGAIfromRSS

சரண் குமார் :

காவிக் கும்பல் மிகச் சிறப்பாக தனது திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. தமிழக அரசும் அதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது. முதலில் தாமிரபரணி புஷ்கரம், அடுத்து அத்திவரதர், தற்போது வைகைப் பெருவிழா. #SaveVAIGAIfromRSS

கார்த்திக் :

இந்துத்துவக் குண்டர்களே, தமிழ் மண்ணை விட்டு வெளியேருங்கள் ! #SaveVAIGAIfromRSS

உங்கள் கார்த்திக் :

வைகை என் ஆறு.. அந்தியனே வெளியேறு.. #SaveVaigaiFromRSS


தொகுப்பு : நந்தன்

நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

ரலாற்று காலம் தொட்டு அடர்ந்த வனங்களிலும், உயர்ந்த மலைமுகடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களுக்கு வன நிலங்களின் மீது உரிமை அளிக்கும் சட்டம் 2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நிறைவேற்றப் பட்டது. அப்படியானால் இதுகாறும் வனம் தொடர்பான சட்டங்களே இல்லை என்ற அர்த்தமல்ல.

1846-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முதலாவது வனச் சட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்நிய ஆட்சியின் போதும் அதனை தொடர்ந்து நாட்டின் விடுதலைக்கு பின் மீண்டும் பல வனச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தபோதிலும் பாரம்பரியமான பழங்குடி மக்களை வனநிலங்களிலிருந்து அந்நியப்படுத்துவதில் மட்டும் வேறுபாடுகளே இல்லை.

நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும். இக்காரியத்தை தான் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து வனச்சட்டங்களும் அட்சரம் பிசகாமல் செய்து வந்தன.

தலைமுறை தலைமுறையாக வனங்களோடு வாழ்ந்த ஆதிவாசி மக்கள் மீது அதிரடியான தாக்குதல்களைத் தொடுத்தன. சொந்த மண்ணில் இவர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். ஆடு, மாடுகள், கோழிகள் வளர்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளில் பச்சைமலையில் ஒரு ஆதிவாசி குடும்பத்துக்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதுடன் குழியையும் பறித்த கதையாக இம்மக்களது நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்த வனத்துறை காடுகள் அழிப்பு, மரங்களை வெட்டுவது, சந்தன மரக்கடத்தல் என பொய்யான காரணங்களை இட்டுக்கட்டி, இம்மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் – புனையப்பட்ட பொய்வழக்குகள் ஏராளம்! ஏராளம்! இதன் உச்சகட்டமே சித்தேரி மலையில் வாச்சாத்தி கிராம மக்கள் மீது இவர்கள் நடத்திய பேய் நர்த்தனம். அதுபோலவே, வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களை நீதிபதி சதாசிவா விசாரணை கமிஷன் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும், உடையையும் தவிரத் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடிச் சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர். மன்னர்கள் ஆண்ட காலத்திலும் வரிவசூல் செய்தார்களே தவிர, அம்மக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கவில்லை

1757 ஜனவரி 2 கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் ராபர்ட் கிளைவ் வங்கத்தை கைப்பற்றிய நாள். படிப்படியாக இங்கிலாந்தின் காலனியாக இந்தியா மாற்றப்பட்டது. இந்த நிலையில், “இங்கிலாந்து மன்னரின் கப்பற்படைக்கு தேவையான வலுமிக்க தேக்கு மரங்களை இந்தியாவிருந்து அனுப்ப வாய்ப்புள்ளதா” என ஆராயுமாறு 1805-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கட்டளையிட்டது. 1806-ல் காலனிய அரசில் முதன்முறையாக கேப்டன் வாட்சன் எனும் போலீஸ் அதிகாரி வனத்துறை அதிகாரியாக பெரும் அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டான். 1854-ம் ஆண்டு அரசின் முதல் வனக்கொள்கை அறிவிக்கப்பட்டது. 1855-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந் தேதி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசி பிரபுவால் விஞ்ஞான பூர்வமாக வனத்தை நிர்வகிப்பதற்கான சட்டம் (Charter) வெளியிடப்பட்டது.

படிக்க:
நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்
♦ மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

பழங்குடி மக்கள் காட்டைத் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு, காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1854-ம் ஆண்டு வனக்கொள்கை அதை வெளிப்படுத்தியது. சென்னை ராஜதானியில் 1856-ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865 மே 1-ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் மரங்கள் அடர்ந்த பகுதியையும் அல்லது புதர் மண்டிய பகுதியையும் வனப்பகுதியாக அறிவித்து அரசுக்கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வழிவகை செய்தது.

காலனிய அரசு, பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். எந்த அளவுக்கு இதில் அரசு ஆர்வம் காட்டியது என்பதற்கு, 1885-ல் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 10,789 ஏக்கர் நிலப்பரப்பில் 331 காப்பித்தோட்டங்கள் இருந்தன என்றால் நாடு முழுவதும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

காட்டையே தங்களது தாய்வீடாகவும், கடவுளாகவும் பாவித்த மக்கள், காடுகள் தங்கள் கண் முன்னே வெட்டி அழிக்கப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டனர். சட்டமும், நிர்வாக ஏற்பாடுகளும், வனத்துறை அதிகாரிகளும் அம்மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

வனத்துறையினரின் கொடுமைகள் – வனத்துறை அதிகாரிகளின் தயவிலேதான் வனத்தினுள் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு கிட்டதட்ட அடிமை நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

காயப்பட்ட மனிதன் கிளர்ந்தெழுவது இயற்கை என்பதற்கேற்ப – ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஆதிவாசி மக்கள் வெடித்தெழுவதும் – இழந்த நிலங்களையும் – வாழ்க்கையையும் மீட்பதும் நிச்சயம்.

ஆதிவாசிகள் தங்களின் நில உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், பிரிட்டிஷாரின் ஏஜெண்டுகளாக இருந்து வரிவசூலில் ஈடுபட்ட ஜமீன்தார், ஜாகீர்தார்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

செங்கொடி இயக்கத்தலைவர்களின் தலைமையில் மகாராஷ்ட்ராவில் ‘வார்லிகள்’ எழுச்சி, மேற்கு வங்கத்தில் சந்தால் எழுச்சி, திரிபுராவில் மன்னர்களை எதிர்த்து எழுச்சி, பீகாரில் பிர்சா முண்டா தலைமையில் பெரும் போராட்டம், தமிழகத்தில் ஜமீன்தார் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம், வனத்துறை அதிகாரிகளின் அத்து மீறல்களை எதிர்த்தும், வரிக்கொடுமைக் கெதிராகவும், கந்துவட்டிக் கொடுமைக்கெதிராகவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. (நூலிலிருந்து…)

நூல் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

ஆசிரியர் : பெ. சண்முகம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 15.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 11

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பின்வரும் சுவாரசியமான நிகழ்ச்சி நடைபெற்றது. ஜார்ஜிய மொழிப் பாட வேளையில் கடைசி பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்தன. இது மூன்றாவது பாடவேளையாக இருந்தது. நாங்கள் வார்த்தைகளின் பகுப்பாய்வில் மூழ்கியிருந்தோம். நான் குழந்தைகளை நோக்கி ஒலிகளை “விட்டெறிய”, அவர்கள் “பிடித்தனர்”. திடீரெனப் பார்த்தால் வோவா கண்களை மூடியபடி ஒலிகளை “பிடிக்காமல்” மேசையில் சாய்ந்திருந்தான்.

“அவன் தூங்கி விட்டான்!” என்று வோவாவைச் சுட்டிக் காட்டியபடி தாம்ரிக்கோ கூறினாள்.

குழந்தைகள் சிரித்தனர். சத்தம் போட வேண்டாமெனக் குழந்தைகளிடம் சொல்லி விட்டு நான் வோவாவை நெருங்கினேன். அவன் கவலையின்றி உறங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் முன் வரை அவன் சுறுசுறுப்பாகச் சிரித்துக் கொண்டிருந்தான், மகிழ்ச்சியோடிருந்தான். மகிழ்ச்சியாலும் களைப்பேற்படலாம், சிறிதே கண்ணயர விருப்பமேற்படும். நான் என்ன செய்வது? சிறுவனை எழுப்பி, பாடவேளையில் தூங்கக் கூடாது என்று விளக்குவதா?

“குழந்தைகளே, ஒருவன் தூங்கும் போது இடையூறு செய்யக் கூடாது, ஏனெனில் தூக்கத்தின் போது மனிதன் தான் இழந்த சக்திகளை மீட்கிறான். எனவே, வோவாவை எழுப்பிவிடாதபடி அமைதியாகப் பாடம் படிப்போம் வாருங்கள்!” என்றேன் நான்.

நான் குரலைத் தாழ்த்தியபடி அவர்களை நோக்கி ஒலியலைகளை விட்டெறியத் துவங்கினேன்.

குழந்தைகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அவர்கள் திடீரெனப் பெரும் அக்கறையுள்ளவர்களாக, மென்மையானவர்களாக மாறினர். ஒவ்வொருமுறை பதில் சொன்ன பிறகும், எங்கே வோவாவை எழுப்பி விட்டோமோ என்று அவனைப் பார்த்தார்கள். இடைவேளை வந்ததும் அரவமின்றி மெதுவாகத் தாழ்வாரத்திற்கு வந்தார்கள், யார் நாற்காலியை நகர்த்தினாலும் உரக்கப் பேசினாலும் அவர்களைக் கண்டிப்போடு பார்த்தனர்.

சில சமயங்களில் குழந்தைகள் களைத்துள்ளதைப் பார்த்ததும் இவர்களில் சிலர் கொட்டாவி விட்டனர், சோம்பல் முறித்தனர்- நான் அவர்களுக்கு தலையைக் குனிந்து, வசதியாக உட்காரும்படியும் கண்களை மூடிக் கொண்டு கதை கேட்கும்படியும் முன்மொழிவேன். கதையை மிக மெதுவான, சாந்தப்படுத்தும் குரலில் நான் சொல்வேன். முழு நிசப்தம் நிலவும், குழந்தைகள் ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்தபடிக் கண்ணயர்வார்கள். இப்படிப்பட்ட ஐந்து நிமிட ஓய்விற்குப் பின் அவர்கள் இழந்த சக்தியை விரைவாக மீட்டதையும் பின் முன் போன்றே மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பாடங்களைத் தொடர்ந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த அனுபவம் எதைக் காட்டுகிறது? ஆறு வயதுக் குழந்தைகள் பள்ளி வாழ்க்கைக்குப் பழகுவது கடினமானது என்பதை ஒருவேளை இது காட்டுகிறதோ? இவர்களுடைய மூளை அறிவைப் பெறத் தயார். ஆனால் உட்கார்ந்த நிலையில் உடல் பலம் செலவாவதால் இவற்றை மீட்க விசேஷ வழிகள் தேவைப்படுகின்றன. மினி-பாடவேளைகள், வெவ்வேறுவிதமான வகுப்பு, பள்ளி இடைவேளைகள் போன்றவை குழந்தைகளின் களைப்பை அகற்றி இது ஏற்படாது செய்யும் வழிகளாகத்தான் என் நடைமுறையில் வந்தன.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
♦ இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

விரைவில் மினி-பாடவேளைகள் தேவையிருக்காது என்று எண்ணுகிறேன். இவை பள்ளிக் கல்விக்குப் பழக்கப்படும் வாய்ப்பை குழந்தைகளுக்கு அளித்தன, பாடவேளையின் நேரத்தை மதிப்பிட எனக்குச் சொல்லித் தந்தன.

மனச்சாட்சியைத் தட்டியெழுப்பு

பத்து நிமிடப் பள்ளி இடைவேளைகளின் போது எனக்கு எப்போதும் வேலையிருக்கும். இந்தச் சமயங்களில் நான் அடுத்த பாடவேளைக்குத் தேவையானவற்றைக் கரும் பலகையில் எழுதுவேன், உதவி செய்யும் குழந்தைகளுடன் சேர்ந்து பாடத்திற்குத் தேவையானவற்றை எல்லா பெஞ்சுகளுக்கும் பகிர்ந்து அளிப்பேன், மீன் தொட்டியையும் பூந்தொட்டிகளையும் பராமரிக்க குழந்தைகளுக்கு உதவுவேன்.

ஆனால் இதைவிட முக்கியமான ஒரு வேலை உண்டு. இதன் உட்பொருளை முன் கூட்டியே கணிக்க முடியாது. அதாவது குழந்தைகளுக்கு நடுவராக இருக்க வேண்டும், அவர்களிடையே தோன்றும் பூசல்களைத் தீர்க்க வேண்டும், அவர்களோடு கலந்து பழக வேண்டும், உறவு முறைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

இதோ இப்போது இதற்கு அவசியமேற்பட்டுள்ளது. இலிக்கோ, கோச்சா, எலேனா, நீக்கா ஆகியோர் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

“நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள்?”

“இவை கடினமானவையா?”

“இவை என்ன என்று எனக்குத் தெரியும்.”

இலிக்கோவும் கோச்சாவும் சிவிங்கத்தையும் மிட்டாயையும் பகிர்ந்து கொண்டனர். இலிக்கோ மிட்டாயை உடனே வாயில் போட்டுக் கொண்டான், கோச்சா தன் சிவிங்கத்தைச் சிறுமிகளுடன் பகிர்ந்தபடி எனக்கும் நீட்டினான்.

“நன்றி!” என்றபடியே சிவிங்கத்தை வாங்கி மென்றேன். “மிகச் சுவையாக உள்ளது!”

“மிட்டாயும் சுவையாக உள்ளது!” என்கிறான் இலிக்கோ. “உங்களுக்கு வேண்டுமா?”

“நன்றி, வேண்டாம், என்னிடம் சிவிங்கம் உள்ளது.”

“ஆனால் மிட்டாய் சிறந்தது!” என்கிறான் இலிக்கோ, வாயிலிருந்து எஞ்சிய , துண்டை எடுத்து என் வாயருகே நீட்டுகிறான். “சாப்பிட்டுப் பாருங்கள்!” நான் விருப்பத்தோடு வாயைத் திறக்கிறேன்.

“நன்றி, இலிக்கோ! உண்மையிலேயே சுவையான சாக்லேட்.”

இது சுகாதாரக் கேடானது என்று சொல்லாதீர்கள்! இது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வளர்ப்புப் பணிக்கு ஏற்றது: குழந்தைகள் தமக்கு விருப்பமான தின்பண்டங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள, என்னோடு நட்பு கொள்ள முயல்கின்றனர், இதற்காக ரொட்டித் துண்டை, திராட்சைக் குலையை, இன்ன பிறவற்றை நீட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன் சூரிக்கோ தாழ்வாரத்தில் என் கையில் ஒரு சாக்லேட்டைத் திணித்தான்.

“உனக்கு இருக்கிறதா?” என்றேன் நான்.

“எனக்கு வேண்டாம், இது உங்களுக்கு.”

சாக்லேட் வழவழவென்று இருந்தது. எனக்குத் தருவதா, தானே சாப்பிடுவதா என்று இதை கையில் வைத்தபடி அவன் நீண்ட நேரம் யோசித்தது எனக்கு நன்கு புரிந்தது.

“வா, பகிர்ந்து கொள்ளலாம்!” என்றேன் நான்.

“சரி!” என்று மகிழ்ந்தான் சூரிக்கோ.

நாங்கள் சாக்லேட்டைப் பகிர்ந்து கொண்டோம். பின் எங்களைச் சுற்றிலும் இருந்தவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம்…..

இப்படிப்பட்ட சம்பவங்களும் பள்ளியில் நடப்பதுண்டு: யாராவது கண்ணாடியை உடைப்பார்கள், புத்தகத்தைக் கிழிப்பார்கள், யாராவது யாரையாவது அடிப்பார்கள். இருவர், மூவர் அல்லது அதற்கும் அதிகமானோர் அங்கிருந்தால் அவர்கள் உடனே பரஸ்பரம் மற்றவர் மீது குற்றஞ்சாட்டத் துவங்கி தம்மை நியாயப்படுத்தத் துவங்குவார்கள். உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல – அவ்வளவுதான். பெரியவர்கள் யார் குற்றவாளியென குழந்தைகளிடம் பெரிதும் தீவிரமாயும் கண்டிப்புடனும் விசாரித்து, ஒரு சாரர் சொல்வதை நம்பாமல் மறு சாரார் சொல்வதை நம்பி “குற்றம்” புரிந்தவருக்கு புத்திமதி சொல்வதும் தண்டிப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை.

தண்டிக்கப்பட்டவன் தவறிழைக்காதவனாக இருந்தால் என்ன செய்வது? அவனது “குற்றத்திற்காக” சொல்லப்பட்ட புத்திமதி அல்லது கொடுக்கப்பட்ட தண்டனை தன் காரியத்தைச் செய்யும், குழந்தையை எச்சரித்து அவன் இனி தவறிழைக்காதவாறு பார்த்துக் கொள்ளும் என்று நம்ப முடியுமா? இப்படி மட்டும் இருந்தால் இது ஆசிரியரியலில் குழந்தைகளின் சகலவிதக் குறும்புகளுக்கும் ஒரு சஞ்சீவி மருந்தாகத் திகழும். செய்யப் போகும் குறும்புகளுக்காக முன்கூட்டியே எல்லோரையும் தண்டித்து விட்டால் கண்டிப்பாக புத்திமதிகளைக் கூறிவிட்டால் எல்லா குழப்பங்களுக்கும் என்றென்றைக்குமாக ஒரு முடிவு கட்டி விடலாம். தான் தப்பு செய்யவில்லை என்று கருதும் ஒரு குழந்தையைக் குற்றஞ்சாட்டுவது ஆசிரியரியலில் தீய செயலாகும்.

இது இக்குழந்தையை எதிர்காலத்தில் தவறுகள் செய்யாமல் காப்பாற்றாது, ஆனால் தன்னை நம்பாத பெரியவர்கள், நண்பர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். தப்பு செய்தவனைத் தேடாமல், அவன் முன்னிலையில், அவன் பங்கேற்போடு ஒழுங்கை நிலை நாட்டி, நடந்ததை மதிப்பிடுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். தப்பு செய்தவர்களைத் தேடி கண்டிக்காமல் விடுவதன் மூலம் அவர்கள் மீண்டும் இதே மாதிரி செய்ய ஊக்கம் தருகிறோம் என்று யாராவது மறுப்புத் தெரிவிக்கக் கூடும். இல்லை, நான் இப்படிக் கருதவில்லை. இது குழந்தையின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும், செய்யும் காரியங்களுக்கான பொறுப்புணர்வை ஏற்படுத்தும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !

0

டந்த வாரத்தில் தொழிலாளர் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகளின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது…

♠ ♠ ♠ 

பணிபுரியும் பெண்களும் மாதவிடாயும்

பிபிசி-யில் வந்த இரண்டு கட்டுரைகள் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாதவிடாய் குறித்து பேசியுள்ளன. முதல் கட்டுரை மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக மாதவிடாய் வருவதை தவிர்க்கும் பொருட்டு, தங்களுடைய கர்ப்பப்பையை அகற்றிக் கொள்வது குறித்து பேசுகிறது.

மாதத்தின் இரண்டு, மூன்று நாட்கள் மாதவிடாய் காரணமாக பணிக்கு வரும் பெண்கள் விடுப்பு எடுத்து கொள்வதால் ஒப்பந்ததாரர்கள் அவர்களை பணிக்கு அமர்த்துவதில்லை என்கிற காரணத்தால், இப்படி வலுக்கட்டாயமாக பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறது அந்தக் கட்டுரை.

மற்றொரு கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு உரிமம் பெறாத மருந்துகளை நிர்வாகம் தருவதாக கூறுகிறது.

இந்தக் கட்டுரைகளில் இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் பணிபுரியும் பெண்களுக்குள்ள உரிமையாக மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு தருவது அரசுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசுக்கு அத்தகைய கரிசனங்கள் எதுவும் இல்லை.

தனி நபர் மசோதாவாக இது நிறைவேற்றப்பட்டால் மிகுந்த பயனளிக்கும் என நிதி ஆயோக் பரிந்துரைத்தது. ஆனால், அத்தகைய மசோதாக்கள் எப்போதாவது நிறைவேற்றப்படுவதால், இதுபோன்ற கொள்கையை சட்டமாக இயற்றுவதற்கு இன்னும் காலம் பிடிக்கலாம். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா போன்ற தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சினை குறித்து பல ஆண்டுகளாக பேசி வருகின்றன.

♠ ♠ ♠ 

வேலைவாய்ப்பின்மை வளர்கிறது !

தி இந்து -வில் வெளியான தொழிலாளர் குறித்த பருவ கணக்கெடுப்பு குறித்த கட்டுரையில் தொழிலாளர் பங்கேற்பு குறைந்து கொண்டே வருவதும் வேலைவாய்ப்பின்மையும்; தகுதிக்கு குறைவான பணியைச் செய்வதும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

2012 முதல் 2018 வரை தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.2 மில்லியனாக சரிவைக் கண்டுள்ளது. இதில் ஊதியம் இல்லாத குடும்பத் தொழிலாளர்களும் சுயதொழில் புரிவோரும் அடக்கம்.

அதுபோல, பாலின வேறுபாடும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. “பெண்களின் தொழிலாளர் ஆற்றல் பங்கேற்பு விகிதம்” கடுமையான சரிவைக் கண்டுள்ளது. வேலைவாய்ப்பை அணுக இயலாத காரணத்தாலும், தொழிலாளர் பங்கேற்பிலிருந்து விலக்கப்படுவதாலும் அவர்கள் கடுமையான இழப்புக்கு ஆளாகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது பல்வேறு ஆய்வுகளில் பட்டவர்த்தனமாக தெரிந்த விசயம்தான் எனிலும், பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடியது என்பதால் தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்த போதிய தொலைநோக்கு திட்டங்கள் இல்லாதவரை, இந்தப் பிரச்சினை பேரழிவாகவே அமையும். அல்லது ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்.

♠ ♠ ♠ 

இந்தியாவின் முறைசாரா தொழிலாளர் நிலை…

ல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு கொடுத்த வெவ்வேறு அறிக்கைகளில் முறைசாரா தொழிலாளர்களின் நிலையை கண்டறிய முடியாத நிலையில் அரசு உள்ளதை பிஸினஸ் டுடே கட்டுரை அலசியிருக்கிறது. சில அறிக்கைகளில் 85% என்றும் சில அறிக்கைகளில் 90% மேல் எனவும் முரண்பாடான விவரங்கள் அளிக்கப்படுவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது.

கல்லூரிகளின் எண்ணிக்கை அல்லது துறைமுகங்களை எண்ணுவதைக் காட்டிலும், முறைசாரா தொழிலாளர்களை எண்ணுவது சற்று குறைவான சவாலானது என்றபோதிலும் துல்லியமான தரவுகளை சேகரிக்காததை ஒரு முறையாகவே செய்து வருகிறது அரசு.

“அவர்களுக்கு விடுப்பு கிடையாது. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. மருத்துவ வசதியோ சமூக பாதுகாப்பு உதவியோ இல்லை. அவர்களுடைய வேலை நேரத்திற்கு வரம்பு இல்லை. சம்பளமும் மிகக் குறைவு. முறைசாரா பணியாளர்களின் சமூக பாதுகாப்பு சட்டம் 2008 -இல் கொண்டு வந்த பிறகும் கூட வெறும் 5-6% பேர் மட்டுமே சமூக பாதுகாப்பு உதவிகளைப் பெறுகின்றனர்” என்கிறார் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் சி.கே. சஜிநாராயணன். பாஜக-வின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் இதற்காக மோடி அரசாங்கத்தைத்தான் எதிர்த்துப் போராட வேண்டும். மற்றபடி இவர்களின் தொழிலாளர் நலன் வெறும் உதட்டளவில் மட்டும்தான்.

♠ ♠ ♠ 

இராஜஸ்தானில் தொழிலாளர் திட்டங்களில் உள்ள முறைகேடுகள்..

ராஜஸ்தானில் நலத்திட்டங்கள் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்த நிலையில் உச்சநீதிமன்றம் சமூக தணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து தி இந்து -வில் வெளியான செய்தி, “33% கட்டட தொழிலாளர்களுக்கான நலத்திட்டத்தின் பயனாளிகளில், அந்தத் துறையில் பணியாற்றியவர்கள் எவரும் இல்லை” என்கிறது. இ-மித்ரா மையங்களில் இந்தப் பதிவுகள் நடந்தன. இதில் தொடர்புடைய சில மையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு தொழிலாளர் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதுபோல, கட்டுமான திட்டங்களின் மூலம் மாநில அரசு வசூலிக்க வேண்டிய செஸ் வரியும் வசூலிக்கப்படவில்லை. இந்த வரி கட்டட தொழிலாளர்கள் உதவி திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடியது.

படிக்க:
மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

♠ ♠ ♠ 

தெலுங்கானாவின் பருத்தி வேளாண் துறையில் குழந்தை தொழிலாளர்கள் !

தெலுங்கானா மாநில அரசும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து பருத்தி விநியோகம் – தேவை குறித்து நடத்திய இரண்டாண்டு கால ஆய்வில், பல்வேறு மாவாட்டங்களில் பருத்தி வேளாண் தொழிலில் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடு கண்டறியப்பட்டதாக லைவ் மிண்ட் – இல் வெளியான செய்தி கூறுகிறது.

தொழிலாளர் இணை ஆணையரின் மேற்கோளின்படி, பருத்தி வேளாண் தொழில் 50% தொழிலாளர்கள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

♠ ♠ ♠ 

காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்பு !

காஞ்சிபுரத்தில் மரம் வெட்டும் ஆலையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய இருபதுக்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையில் உரிமையாளரிடம் இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்காக இவர்கள் கொத்தடிமைகளாக அங்கே பணியாற்றியுள்ளனர்.

தமிழக அரசின் வருவாய் துறையும் கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பும் இந்த மீட்புப் பணியைச் செய்துள்ள நிலையில், ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது அடியாட்களிடமிருந்து தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

ரூ. 375 குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு பதிலாக அரசு 2 ரூபாய் உயர்த்த உள்ளது !

தொழிலாளர் அமைச்சக குழு பரிந்துரைத்த ரூ. 375 குறைந்தபட்ச ஊதிய திட்டத்துக்கு பதிலாக, மத்திய அமைச்சரவை தற்போதைய குறைந்த பட்ச ஊதியத்திலிருந்து 2 ரூபாயை உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கிறது. இனி நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 178 கிடைக்கும்.

“நாகாலாந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முன்மொழியப்பட்ட தொகையைவிட குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், இந்த அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் உதவாது” என லைவ் மிண்ட்- க்கு அளித்த பேட்டியில் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான ஊதிய தளம் இந்தியாவில் சமத்துவமின்மையையும் ஏழ்மையையும் குறைக்கும் என பொருளாதார ஆய்வு 2018 கூறியிருந்த நிலையில், 2 ரூபாயை உயர்த்தி ஏழ்மையை ஒழிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

♠ ♠ ♠ 

‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகம் தழுவிய வேலைநிறுத்தம் !

ங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிபிசி செய்தியின்படி, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த அமேசான் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள ஜெர்மனியில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் தொழிலாளர் ஆறு மணி நேர வேலை நிறுத்தத்துக்கு திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தில், வாரம் முழுமைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். தங்களுடைய போராட்டத்துக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கோரியுள்ள தொழிலாளர்கள். அதன் ஒரு பகுதியாக அமேசானை புறக்கணிக்கும்படி கோரியுள்ளனர்.

அமேசான் நிறுவனம் சமீபத்தில் விலைக்கு வாங்கிய Whole Foods என்ற மளிகை விற்பனை சங்கிலியில் பணியாற்றும் தொழிலாளர்கள், அமேசானின் வருகைக்குப் பிறகு தங்களுடைய நிலைமை மோசமாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். கார்டியனின் வெளியான செய்தியின்படி, அமேசான் தொடர்பான மாற்றங்களில் ஒன்றாக ஆட்குறைப்பு வழக்கமாகிவிட்டதாக Whole Foods தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 15 டாலர் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தியதை அடுத்து, முழுநேர தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை 40 மணியிலிருந்து 35 முதல் 37 மணி நேரமாகக் குறைந்துள்ளனர். இதனால் சம்பள உயர்வு ஏறக்குறைய இல்லாததாக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

கலைமதி

மேலும் வாசிக்க :

♦ The Life of Labour: Amazon Workers Strike on ‘Prime Day’; Irregularities in Rajasthan’s Schemes 

நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் !

0

ற்போது அறுபத்தி ஒன்பது வயதாகும் ராஜ், தனது 58 -வது வயதில் முதன் முறையாக மூச்சுத்திணறல் பிரச்சினையை எதிர்கொண்டார். முதலில் சாதாரண மூச்சுத்திணறல் என்று கருதப்பட்ட இந்தப் பிரச்சினை பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease) என கண்டறியப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக, தனது 17 வயதில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 60 சிகரெட்டுகள் புகைத்தவர் ராஜ்.

“எனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து ஏதோவொரு சுவாச நோய் என்பதை அனுமானித்தேன். ஆனால் அது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்பது முதலில் தெரியாது. அதே போல் இந்த நோய் எந்தளவுக்கு முற்றிப் போகும் என்பதும், குணப்படுத்தவே முடியாத ஒன்று என்பதும் முதலில் எனக்குத் தெரியாது” என்கிறார் ராஜ்.

புகைப்பழக்கம் ராஜின் நோய்க்கான பிரதான காரணம். முன்பு வசதியாக வாழ்ந்து வந்த ராஜ், தற்போது ஒரு சிறிய வீட்டின் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அவரது மகன் மற்றும் மருமகளின் தயவில் அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

சதா நேரமும் செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரத்தின் துணையோடு சுவாசித்து வரும் ராஜின் நடமாட்டம் பெரிதும் குறைந்து போய் விட்டது. உடலில் சேரும் கரியமில வாயுவை வெளியேற்றும் ஆற்றலை அவரது நுரையீரல் இழந்து விட்டதால் எலும்புகள் வலுவிழந்து போயுள்ளன. குணப்படுத்தவே முடியாத இந்த நோய் மெல்ல மெல்ல அவரது உடலை உருக்குலைத்து உயிரைப் பறிக்கவுள்ளது – அவரைப் பொறுத்தவரை அவரது எஞ்சிய நாட்கள் நரகம்.

*****

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் கொல்லப்படுகின்றனர் என்கிறது இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை. நோயாளிகளுக்கு மட்டுமின்றி ஆரம்ப நிலை மருத்துவர்களுமே இந்நோயை சாதாரண மூச்சுத்திணறல் என்றே கருதுகின்றனர். புகைப்பழக்கம் இந்நோய்க்கான ஒரு காரணம் என்றாலும், காற்று மாசுபாடு பிரதான காரணம் என்று தெரிய வந்துள்ளது. அறியப்பட்ட நோயாளிகளில் சுமார் 53 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டின் விளைவாகவே இந்நோய் ஏற்பட்டுள்ளது.

காற்றுமாசு எனும் போது தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை போன்ற சுற்றுப்புற காரணங்களோடு விறகு மற்றும் சாண வறட்டிகள் கொண்டு எரிக்கப்படும் அடுப்பின் புகையும் இந்நோய்க்கு பங்களிக்கிறது.

கடந்த 2017 -ம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் (1990 துவங்கி) சுற்றுப்புற துகள் மாசுபாடு (ambient particulate pollution) 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 58 மைக்ரோ கிராமில் இருந்து 53 மைக்ரோ கிராமாக துகள் மாசுபாட்டின் அளவை சீனா குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே மாசுபாட்டின் சராசரி அளவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்பதை கவனிக்க வேண்டும் – ஏனெனில், மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் நச்சுத் துகள்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.

இது தவிற சுமார் 26.6 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்துவதாகச் சொல்கிறது உலக சுகாதார மையத்தின் 2018 -ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை. புகையிலையால் ஏற்படும் மரணங்களில் 48 சதவீதம் இதய நோயின் விளைவாகவும், 23 சதவீதம் நாள்பட்ட சுவாசக் கோளாறுகளின் விளைவாகவும் ஏற்படுகின்றன. பீடி, சுருட்டு, சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான புகை வஸ்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 15 -ல் இருந்து 69 வயது வரையிலானவர்களிடையே 1998 – 2010 காலகட்டத்தில் சுமார் 27 சதவீதம் புகைக்கும் பழக்கம் குறைந்துள்ளது. ஆனால், இதில் சிகரெட்டை மட்டும் தனியே எடுத்துக் கொண்டால் 15 -ல் இருந்து 29 வயதினரிடையே நான்குமடங்கு புகைப்பழக்கம் அதிகரித்துள்ளது.

*****

நோய் உருவாவதற்கான புறக்காரணிகள் மற்றும் தனிப்பட்ட தீய பழக்கங்கள் அதிகரித்து வருவது ஒரு புறம் என்றால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் மரணங்கள் அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது. ராஜ் விசயத்தையே எடுத்துக் கொள்வோம். அவர் முதன் முதலில், 2006 -ம் ஆண்டு, மூச்சுத் திணறல் மற்றும் தொடர் இருமல் வந்த போது இதய நிபுணரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். முதலில் அவருக்கு வந்தது இதயம் சம்பந்தப்பட்ட சுவாசக் கோளாறாக இருக்கலாம் என்றே நினைத்துள்ளனர்.


அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து அவருக்கு திடீரென இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. இந்த முறை பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே அவருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் தினசரி 60 சிகரெட்டுகள் வரை புகைத்தவருக்கு ஏற்பட்டிருப்பது நுரையீரல் தொடர்பான நோய் என்பதைக் கண்டறியவே இரண்டாண்டுகள் ஆகியுள்ளது. இத்தனைக்கும் ராஜ் படித்தவர், மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.

“நமது 25 வயதின் போது தான் நுரையீரல் அதன் உச்சகட்ட ஆற்றலோடு இயங்கும். அந்த சமயம் ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும் போதும் நான்கிலிருந்து ஆறு லிட்டர் காற்றை உள்ளிழுக்கிறோம். பின்னர் வருடம் செல்லச் செல்ல இந்த திறன் குறைகிறது. 25 மில்லியில் இருந்து 30 மில்லி அளவுக்கு ஆண்டு தோறும் குறைந்து வருகின்றது. இதே புகைபிடிப்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 80 மில்லியில் இருந்து 90 மில்லி அளவுக்கு ஆற்றல் குறைகின்றது” என்கிறார் பெங்களூருவில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சந்திர சேகர். புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் 45 வயதாகும் போது அவரது நுரையீரலுக்கு 75 வயதாகி விடுகிறது (75 வயதுக்கான ஆற்றலோடு செயல்படுகிறது).

படிக்க:
♦ புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

பெரும்பாலான நோயாளிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை திடீரென்று ஏற்பட்டதாக கருதிக் கொள்கின்றனர். மருத்துவர்களும் இந்த நோயைக் கண்டறியத் தவறுவதற்கு என்ன காரணம்?

♣ பெரும்பாலும் இந்நோயின் அறிகுறிகளை சாதாரண ஆஸ்துமா பிரச்சினை என்று முடிவு கட்டி விடுவது.

♣ நுரையீரலின் உள்ளிழுக்கும் திறன் மற்றும் வெளித் தள்ளும் திறனை கண்டறியும் ஸ்பைரோமெட்ரி சோதனை வசதி இந்தியாவில் பரவலாக இல்லாதிருப்பது.

♣ பெரும்பாலான மருத்துவர்கள் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கே இந்நோய் வரும் என நினைப்பது.

♣ ஆஸ்துமாவுக்கான சிகிச்சையைத் துவங்கி விடுவது.

♣ நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் இதயம் பாதிக்கப்படும். இதயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அந்த பிரச்சினைக்கான மூல காரணம் நுரையீரலில் இருப்பதை கவனிக்கத் தவறுவது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட பழக்க வழக்கங்களை முறைப்படுத்திக் கொள்வதும், புகை போன்ற தீய பழக்கங்களை கைவிடுவதும் அவசியம். மறுபுறம், சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை தடுப்பது தனிநபர்களின் கைகளில் இல்லை.

ஆலை மாசுபாடு, அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த நாட்களிலும், எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கூடத் தெரியாமல் லட்சக்கணக்கான இந்தியர்கள் மரணிக்கும் கொடுமை முடிவு கட்டப்பட வேண்டும்.


சாக்கியன்
மேலும் விரிவான வாசிப்புக்கு: ஸ்க்ரால்

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்

0

“மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ”, என்கிற முழக்கத்தை முன்வைத்து 25.7.2019 மாலை 5.30 மணிக்கு மதுரையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து அரங்க கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வருக..!

மதுரையில் அரங்கக் கூட்டம்

நாள் : 25 ஜூலை, 2019 வியாழக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி (பி.டி.ஆர் தேனீர் கடை அருகில்), மதுரை

தலைமை :

தோழர் சினேகா, பு.மா.இ.மு., மதுரை

உரைகள் :

திரு சிவா, ஆசிரியர், மதுரை.

திரு சரவணன், ஆசிரியர், மதுரை,

பேராசிரியர் அ. சீனிவாசன், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு., தமிழ்நாடு.

நன்றியுரை :

தோழர் ஆனந்த், பு.மா.இ.மு., மதுரை.

மோடி அரசு திணிக்கும் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்….!

*****

‘தேசிய கல்விக் கொள்கையை’ இது நம் நாட்டின் பெரும்பான்மை மாணவர்களுக்கான கல்விக் கொள்கையல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் நாசகாரக் கொள்கை.

அன்று இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் கட்டியமைத்த போராட்டம்தான் இந்தி ஆதிக்கத்தை ஒழித்தது.

இன்று, கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனுக்காக மோடி அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைப்போம். வரைவு அறிக்கையை மொத்தமாக நிராகரிப்போம். எந்த வடிவத்தில் வந்தாலும் மோதி வீழ்த்துவோம். இதற்கு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஓர் அமைப்பாகத் திரள்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே !

3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான பொதுத் தேர்வாம்! இது ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் சதித்திட்டம்!

3 – வது முதலே தச்சு வேலை, தோட்ட வேலை, கட்டிட வேலை, பானை செய்தல் போன்ற தொழில்கள் ஒரு படிப்பாக கற்றுத்தரப்படுமாம்! காசு இல்லாதவனுக்கு கல்வி எதற்கு என்கிறார் மோடி!

ஆரம்பக் கல்வி முதலே மும்மொழி திட்டம் கட் டாயமாம்! தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தேசிய இனங்களின் மொழியை ஒழித்துக்கட்ட இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு!

முன்பருவக் கல்வி முதல் (அங்கன்வாடி) மாணவர்களுக்கு பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீதா உபதேசம் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டுமாம்! இது அறிவியலுக்கு புறம்பாக, பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் மூடத்தனம்!

பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!

தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு – இது மாநிலங்களின் கல்வி உரிமைக்கு வைக்கும் வேட்டு!

யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை கலைத்துவிட்டு, உயர் கல்வி ஆணையம், ஆராய்ச்சி கல்விக்கான அறக்கட்டளை, உயர்க்கல்வி நிதிக்கான குழு ஆகியவை கள் உருவாக்கப்படுமாம். ஒட்டுமொத்த உயர்க் கல்வியையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் மெகா திட்டம்!

மருத்துவ கல்விக்கு மட்டுமல்ல, கலை அறிவியல் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வாம்! ஏழைகளுக்கு இனி உயர்க் கல்வி இல்லை – இது மோடி அரசு உருவாக்கும் புதிய மனுநீதி!

‘இந்தியாவில் படியுங்கள்’ மோடி அரசின் புதிய திட்டம். ஆனால் ஏழைகள் படிக்கக் கூடாது இது தான் சர்வதேச முதலாளிகளின் சட்டம்.

மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு தாராள அனுமதி! அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தனியார்மயம். சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைப் பறிப்பு.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் தன்னாட்சியாம்! இட ஒதுக்கீடு – சமூக நீதி பறிப்பு, மாணவர் சங்கம் ஆசிரியர் சங்கங்கள் அமைக்கத் தடை!

ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு நிரந்தர வேலை, சம்பளம், ஓய்வூதியம் என்பதெல்லாம் இனி இல்லை. அனைவரும் தற்காலிக ஊழியர்கள். திறமை அடிப்படையில் வேலை நீட்டிப்பு, சம்பளம்.

இதுதான் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை – 2019.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
மதுரை, தொடர்புக்கு : 82200 60452.

பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 26

டோக்ளியாட்டி

பாசிச நிறுவனங்கள் சம்பந்தமான நமது கொள்கை குறித்த ஒரு பிரச்சினையை இப்போது ஆராய்வோம்.

பாசிசத்தில் எழுந்துள்ள நெருக்கடிகளையும், அவற்றின் அம்சங்களையும், இதனால் நாம் பணியாற்றுவதற்குக் கிட்டக்கூடிய வாய்ப்புகளையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். பாசிஸ்டுக் கட்சி இன்னமும் சர்வாதிபத்தியக் கட்சியாக ஆவதற்கு முன்னர் இந்த நெருக்கடிகள் குறிப்பிட்ட சில அம்சங்களைக் கொண்டிருந்தன. பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும், அது கடைப்பிடித்த மூர்க்கத்தனமான முதலாளித்துவக் கொள்கையை எதிர்த்து குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதரப் பூர்ஷுவாக்கள் போராடினர். ஆனால் இந்தச் சக்திகள் மக்களது நலன்களை முன்னிட்டு இவ்வாறு செய்ததாகக் கருதிவிடக் கூடாது. கட்சிக்குத் தலைமை ஏற்பதில் பேரார்வம் கொண்ட குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்த அணியினரின் அதிருப்தியை போர்னியும் பதோவனியும் 4 பிரதிபலித்து வந்தனர்.

இந்தப் போராட்டம் ஸ்தாபனத்துக்கு எதிர் அணியில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்திற்று; அரசுடனும் மோதலை ஏற்படுத்திற்று. எனினும் பாட்டாளி வர்க்கம் ஆதிக்க நிலையில் இல்லாத, குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதரப் பூர்ஷுவாக்களும் பரந்த அளவில் உள்ள அரசியல் மேடைகளில் அல்லாமல் ஒரு தலைவரை உச்சிமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் ஸ்தாபன ரீதியில் ஒழுங்கமைக்கப்படாத பாட்டாளி வர்க்கம் நிரம்பியுள்ள நேப்பள்ஸ் போன்ற சில இடங்களில் அந்தப் பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இவர்கள் பேசி வந்தார்கள். இத்தகைய அம்சம் சில சமயங்களில் இதர இடங்களிலும் காணப்பட்டது. மிலானில் தலைதூக்கிய, கியாம்பயோலிசத்தை 5 இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் அரை – குற்றவாளிகளையும், ஸ்தாபனரீதியில் அணி திரட்டப்படாத பாட்டாளி வர்க்கத்தையும், படை அணிகளில் இருந்த பழைய ஸ்குவாட்ரிஸ்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தங்கள் சொந்த நலன்களைப் பூர்த்தி செய்து கொள்ள பழைய பாணியில் அமைந்த பயிற்சிப் படை வீரர்களது நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இவர்கள் விரும்பினர். ஆனால் மிலானில் தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தினர் ஏராளமானோர் இருந்தனர். இதனை மனத்திற்வைத்து கியாம்பயோலி தொழிலாளர்கள் பெரிதும் அக்கறை கொண்ட பிரச்சினைகளையும் எழுப்பினர்; தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆரம்பத்தில் நேபள்ஸில் காணப்பட்டது போன்ற சில அம்சங்களைக் கொண்டிருந்த இந்த எதிர்ப்பு இயக்கம் பெரிய தொழில்துறை நகரத்தில் மாறுபட்டதொரு இயல்பைப் பெற்றது. கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் தொழிற்சங்கத் தன்மையைக் கொண்டிருந்தது என்பது தெள்ளத் தெளிவு.

ஆனால் பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு, இந்த நெருக்கடிகள் ஆகியவற்றின் இயல்பு பாசிஸ்டுக் கட்சி ஏக சர்வாதிபத்தியக் கட்சியின் தன்மையைப் பெற்றபோது மாற்றமடைந்தது. அப்போது வெகுஜனங்களை ஸ்தாபனரீதியில் ஒருங்கு திரட்டவும், ஓரளவு பாசிச சார்புள்ள துணைப் படைகளையும் ராணுவ, பிரசார எந்திரத்தையும், தொழிற்சங்கங்களையும் தோற்றுவிக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !

நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் இப்போது வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவையாக மாறிவருவதைப் பார்க்கிறோம். 1930-ம் ஆண்டிலிருந்து தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்த சக்திகள் பல கிளர்ச்சிகளை நடத்தி வந்திருக்கின்றன. படை வீரர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். முதலாளிகளை எதிர்த்துப் பாசிஸ்டுகள் பகிரங்க ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றனர்; தொழிற்சாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். 1930-ல் மிலானில் முதலாளிகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிகள் பாசிஸ்டுகள் ஆரம்பித்தவையே ஆகும்.

பதோவனி (Aurelio_Padovani)

இதுதான் இன்று காணப்படும் அம்சம்; நமக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியைவிட மக்கள் படையில் (மக்கள் படை எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது). குறிப்பாக இளம் பாசிஸ்டுகளிடையே இந்த அம்சம் வலுவானதாக இருப்பதைக் காணலாம். இளம் பாசிஸ்டுகளிடையே ஏற்பட்ட எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் கடந்த ஆண்டுகளில் இடையறாது வளர்ந்து வந்திருக்கின்றன. இது இந்த அமைப்பின் இயல்பிலிருந்து நேரடியாகத் தோன்றும் விளைவாகும்; இந்த இயல்பு ஏற்கெனவே கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. வெகுஜனங்கள் அவர்களது சொந்த உடனடி நலன்கள் பொருட்டு எளிதாக அணிதிரட்டப்படுகின்றனர்; ஸ்தாபனத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். இளைஞர் நிறுவனங்களுக்குள் நடைபெறும் இந்தக் கிளர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; முக்கியமாக நாம் செயலாற்றுவதற்கான ஒரு பரந்த களத்தை அவை அளிக்கின்றன.

இன்று நடைபெறும் கிளர்ச்சிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் கடந்த காலத்தில் நடைபெற்றவற்றுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நெருக்கடிகளின் தன்மை பற்றி ஓர் ஆழமான ஆய்வு தேவை; குட்டி பூர்ஷுவா சக்திகள் செயல்படுவதை வெளிப்படையாகக் காணுவது எப்போதுமே சிரமம். ஆனால் இன்று இந்த இயக்கங்களின் இயல்பை மிக எளிதாக உய்த்துணர முடிகிறது.

உதாரணமாக, இங்கு ஜெர்மனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இரண்டு வகையான சர்வாதிகாரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், ஒற்றுமைகளையும் இந்த ஒப்பீடு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இரண்டு பாசிசங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று எப்போதுமே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே ஒரு விரிந்து பரந்த வெகுஜன இயக்கமாக வெற்றி கண்டுவிட்டது என்பது இதிலுள்ள அடிப்படையான வேறுபாடாகும். ஜனநாயகரீதியில் தேர்தல்கள் மூலம் அது அதிகாரத்தை வென்றது. இந்த ஜனநாயகம் வரையறைக்குட்பட்ட ஜனநாயகம் என்பதிலும், வன்முறைகளால் அதன் எல்லைகள் மேலும் குறுக்கப்பட்டன என்பதிலும் ஐயமில்லை; இவ்விதமெல்லாம் இருப்பினும் ஜெர்மன் பாசிசம் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது. இது முதல் வேறுபாட்டு அம்சமாகும்.

போர்னி (cesare-forni).

அடுத்து இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் குட்டி பூர்ஷுவா, மத்திய தர பூர்ஷுவா வர்க்கத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும் மட்டுமன்றி வேலையில்லாதோர் ஏராளமானோரையும் தன் அணிகளில் கொண்டிருந்தது; அவர்கள் மூலம் சில தொழிலாளர் பிரிவினரிடமும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளிடமும் தனது செல்வாக்கை பரப்பியிருந்தது.

இதனால்தான் ஜெர்மன் பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் உடனடியாக இதர இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. பெரிய பூர்ஷுவாக்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதர பூர்ஷுவாக்களும் கிளர்ந்தெழுவது சாதாரணமாக பாசிசத்தில் காணப்படும் அம்சமாகும். ஆனால் ஜெர்மனியில் இந்தக் கிளர்ச்சிகள் மிக வலுவாக உள்ளன. அவை ஆலைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி அவதிப்படுபவர்கள், விவசாயிகள் போன்றோரின் அதிருப்தியை வெளியிடுகின்றன. இவர்கள் எல்லோரும் பாசிசம் ஏராளமான பிரச்சினைகளுக்கு, முக்கியமாக பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் என்று நம்பி அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால் பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர்.

இந்த நிகழ்வுப் போக்கு இத்தாலியில் ஒரு வரையறைக்குட்பட்ட அளவிலேயே காணப்படுகிறது. பாசிச அமைப்புகளில் தொழிலாளர்கள், விவசாயிகளின் அதிருப்தி சமீப காலமாகத்தான் வெளிப்பட்டு வருகிறது.  கடந்த காலத்தில் வெகுஜனங்கள் பழைய ஸ்தாபன அமைப்புகளின் கட்டுக்கோப்புக்குள் இருந்து வந்தனர். ஆனால் இன்று பாசிஸ்டுக் கட்சியின் சர்வாதிபத்திய அமைப்புக்குள்ளும் அதன் இதர இணை அமைப்புக்குள்ளும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

(தொடரும்)

(முகப்புப்படம் : நேபள்ஸில் முசோலினியுடன் அயுரிலியோ பதோவனி.)

அடிக்குறிப்புகள் :

4. நேபள்ஸிலும் கம்பானியாவிலும் பாசிஸ்டுக் கட்சியின், பாசிஸ்டு மக்கள் படையின் யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க தலைவராக அயுரிலியோ பதோவனி இருந்தார். “சகஜமாக்கப்பட வேண்டுமென்பவர்களுக்கும்”, “இணக்கத்தை விரும்பாதவர்களுக்கும்” ஏற்பட்ட மோதலில் அவர் வீழ்ச்சியடைந்தார். தேசியவாதிகளோடு இணைவது என்பது பாசிசத்தின் “புரட்சிகரத்” தன்மைக்கு துரோகம் செய்வதாகும் என்று பதோவனி நம்பினார். அவருடைய மன்னராட்சிக்கு எதிரான, பூர்ஷுவாக்களுக்கு எதிரான அறிவிப்புகள் புதிய ஆட்சிக்கு அவரைப் பாதகமானவராக்கியது. மாட்டியோட்டி நெருக்கடியின் போது, பி.என்.எப்பில் மீண்டும் சேரும்படி பதோவனியை பரினாஸ்ஸி கேட்டுக் கொண்டார், பதோவனி மறுத்துவிட்டார்.

5. 1919-ல் பாஸ்சி இட்டாலியானி கம்பாட்டிமென்டோவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மிலான் மாநில பி.என்.எப்பின் தலைவருமான மரியோ கியாம்பயோலியின் ஆசை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக தொழிற்சாலைகளில் கட்சிக் குழுக்கள் அமைக்க வேண்டுமென்பதாகும்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 14

நான்கு வருணங்கள், மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது. சமுதாய நடவடிக்கைகளிலும் அது கையாளப்படுகிறது. நான்கு வருணங்கள் இந்த நாட்டில் என்றுமிருந்ததில்லையென்பதை நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். தமிழ் ஆசிரியர்களில் சிலர், ஸ்மிருதியை, அதாவது நான்கு வருண பேதத்தைப் புகுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய பாகுபாட்டைத் தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை.

சமஸ்கிருத அறிஞர்கள் (ஆரியர்கள்) சுதேச மன்னர்களின் மந்திரிகளாக வந்த பிறகோ அல்லது ஆதிக்கம் கைப்பற்றிய பிறகோதான் பூணூல் அணிந்து கொண்டு தங்களைப் பிராமணர்கள் என்றும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்றும் கூறிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இதனால் சமுதாயக் கட்டுப்பாடு அதிகரிக்கலாயிற்று. சமஸ்கிருதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற விரும்புகிறவர்களைச் சமூகம் ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தது.

சென்ற நூற்றாண்டில் இடதுசாரிகளுக்குள்ளும் வலதுசாரிகளுக்குள்ளும் சண்டை ஏற்பட்டது.

பழைய கோட்பாட்டில் பற்றுடையவர்கள் எல்லாரும் பள்ளர் – பறையர் என்ற 18 ஜாதியினர்களாக வகுத்துக் கொண்டு ஒரு பகுதியினர்களாக விளங்கினார்கள்.

தங்களைப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம் இடதுசாரிகளாக வகுத்துக் கொண்டனர்.

இடதுசாரிகள் வெறுக்கப்பட்டு வந்தார்கள். மேற்படி வருணத்தில் போய்ச் சேர்ந்த தமிழர்கள் கூட வெறுக்கப்பட்டு வந்தார்கள். கோயில்களில் கூட அவர்களுக்கு இடமில்லை.

ஆனால் இன்று பார்ப்பதென்ன? நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே சட்டமாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதனால் தமிழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக்கொண்டால், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தில் சிலர் பூவைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆகவே இந்நாட்டில் மக்களிடையே சரியான ஒற்றுமையும் ஐக்கிய மனோபாவமும் ஏற்பட வேண்டுமானால், தென்னிந்தியக் கலையைச் சரியானபடி உணர்ந்து கொள்வதினால்தான் முடியும்.

”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்துவிட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

”இந் நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திராவிடர்கள் தாம்; ஆரியர்கள் என்பவர்கள் இந்நாட்டில் குடியேறினார்கள் என்று சொல்லுவதே தவறு; இது உண்மையான சரித்திரமல்ல; இந்திய மக்களைப் பிரித்து வைக்க வெள்ளைக்காரரால் செய்யப்பட்ட பொய்ச்சரிதங்கள்” என்று கூறுவர் நமது காங்கிரஸ் சரித்திர ஞானிகள்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் – பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் – திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் – திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.

சென்ற 5-2-41 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறோம்.

நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர் 16-9-26-ல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபாத்தியாயினி. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதா மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்புச் செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் – ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில் பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறிப்பிட்டு விட்டனர்.

இந்நாட்டில் ஆரியர் – திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான். இந்தத் தீர்ப்பு காலநிலையை ஆதாரமாகக் கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவைக் கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் அமைந்திருக்க வேண்டும்.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டுமென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய தேவ ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர் – திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 10

லெக்ஸேய் விந்தையான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

பயிற்சி செய்வதன் மூலம் கால்கள் இன்றியே விமானம் ஓட்டக் கற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது முதல், வாழ்வு வேட்கையும் செயல் ஆர்வமும் அவனை ஆட்கொண்டுவிட்டன.

இப்போது அவனுக்கு வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. சண்டை விமானி வேலைக்குத் திரும்புவதே அது. கால்கள் விளங்காத நிலையில் பிடிவாதத்துடன் அவன் ஊர்ந்து தன்னவர்களை அடைந்தானோ, அதே பிடிவாதத்துடன் இந்தக் குறிக்கோளை அடைய முயலலானான்.

விமானமோட்டும் தொழில்நுட்பத்தை அறிந்த எவனுக்கும் இந்தச் சேதி நம்ப முடியாததாகப்பட்டிருக்கும். ஆனால் இது மனிதத் திறனின் எல்லைக்கு உட்பட்டதுதான். இந்த நோக்கத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முடியும் என அவன் உறுதி பூண்டான். தனது திட்டத்தை செயல்படுத்துவதில் முனைந்தான் அலெக்ஸேய். தனக்கே வியப்பூட்டிய சடங்குப் பற்றுடன் மருத்துவர்கள் குறித்த சிகிச்சை முறைகளை தவறாது கடைப்பிடித்தான், குறித்த அளவு மருந்துகளை உட்கொண்டான். சில வேளைகளில் பசியே இராது. எனினும் அவன் அதிகப்படி உணவை உண்டே தீர்ப்பான். என்ன நேர்ந்தாலும் சரியே, குறித்த மணிநேரம் உறங்கி விடுவது என்று திட்டப்படுத்திக் கொண்டான். செயலூக்கமும் துடிப்பும் கொண்ட அவனது இயல்பு பகல் தூக்கத்தை நெடுங்காலம் எதிர்த்தது. ஆயினும் அவன் பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உறங்கும் வழக்கத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டான்.

சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மருந்து உண்பதற்கும் தன்னைப் பழக்கிக் கொள்வது கடினம் அல்ல. உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. மெரேஸ்யேவ் முன்பு வழக்கமாகச் செய்துவந்த உடற்பயிற்சி, கால்களை இழந்து கட்டிலோடு கட்டிலாகக் கிடந்த மனிதனுக்கு ஏற்றதாக இல்லை. தனக்கு ஏற்ற உடற்பயிற்சியை அவனே கற்பனை செய்து அமைத்துக் கொண்டான். முழு மணி நேரம் வளைவதும் நிமிர்வதும் விலாவில் கைகளை ஊன்றியவாறு உடலை முறுக்குவதும் முள்ளெலும்புகள் கடகடக்கும்படி தலையை இரு மருங்கும் உற்சாகமாகத் திரும்புவதுமாக இருப்பான்.

கால்களிலிருந்து கட்டுக்கள் அகற்றப்பட்டு, கட்டிலின் எல்லைக்குள் அதிக அங்க அசைவுக்கு வாய்ப்பு கிடைத்ததும் அலெக்ஸேய் உடற்பயிற்சியை இன்னும் சிக்கலாக்கிக் கொண்டான். கட்டில் விளிம்பின் அடியே வெட்டுண்ட கால்களைப் புகுத்திக் கொண்டு இடுப்பில் கைகளை ஊன்றியவாறு மெதுவாக வளையவும் நிமிரவும் தொடங்கினான். தடவைக்குத் தடவை வேகத்தைக் குறைத்து “வளைதலின்” எண்ணிக்கையை அதிகப்படுத்தினான். பின்பு கால்களுக்கேற்ற பயிற்சித் தொடரை முறைப்படுத்திக் கொண்டான். கட்டிலில் நிமிர்ந்து படுத்துக் கால்களைத் தன் பக்கம் இழுத்து வளைப்பான், பின்பு நேராக்கி முன்னே வீசிப் போடுவான். முதல் தடவை இந்தப் பயிற்சியைச் செய்தபோது எத்தகைய பிரம்மாண்டமான, ஒரு வேளை சமாளிக்கவே முடியாத இடர்பாடுகள் தன்னை எதிர்நோக்கி இருக்கின்றன என்பதை உடனே கண்டு கொண்டான். கணைக்கால்வரை வெட்டுண்டிருந்த கால்களை இழுக்கையில் அவை சுரீரென்று வலித்தன. அங்க அசைவுகள் கூச்சமுள்ளவையாகவும் ஒரு சீரற்றும் இருந்தன. இறக்கை அல்லது வால் பழுதடைந்த விமானத்தை ஓட்டுவது போலவே இந்த இயக்கங்களைக் கணிப்பது கஷ்டமாயிருந்தது. தான் அறியாமலே தன்னை விமானத்துடன் ஒப்பிட்டுப்பார்த்த மெரேஸ்யேவ், ஆதர்சக் கணக்குப் பொருத்தம் உள்ள மனித உடல் அமைப்பு அனைத்தும் தன் சரீரத்தில் சிதைந்து போயிருக்கிறது என்றும், தனது உடல் இன்னும் சிதைந்து போயிருக்கிறது என்றும், தனது உடல் இன்னும் முழுதாகவும் வலுவுள்ளதாகவும் இருப்பினும் குழந்தைப் பருவம் முதல் பயிற்சியால் உருவாக்கப்பட்ட முந்தைய இயக்க ஒருங்கிசைவை அது இனி ஒருபோதும் பெறாது என்றும் புரிந்து கொண்டான்.

கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கிற்று. எனினும் மெரேஸ்யெவ் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை முந்திய நாளைவிட ஒரு நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான். இவை பயங்கரமான நிமிடங்கள். அந்த நிமிடங்களில் கண்ணீர் தானாகவே விழிகளிலிருந்து பெருகும். தன்வசமற்ற முனகலை அடக்கிக் கொள்வதற்காக உதட்டை இரத்தம் வரும் வரை கடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆயினும் அவன் தொடக்கத்தில் நாள்தோறும் ஒருமுறையும் பின்பு இரண்டு முறைகளும் உடற்பயிற்சி செய்யத் தன்னை நிர்ப்பந்தமாகப் பழக்கிக் கொண்டான். தடவைக்குத் தடவை பயிற்சி நேரத்தையும் அதிகரித்துக் கொண்டு போனான். இத்தகைய ஒவ்வொரு உடற்பயிற்சிக்குப் பிறகும் அவன் தொய்ந்து போய்த் தலையணையில் விழுந்து, மறுபடி இந்தப் பயிற்சிகளைச் செய்யத் தனக்கு இயலுமா என்று கவலையுடன் சிந்திப்பான். ஆனால் குறித்த நேரம் வந்ததும் அவன் மீண்டும் பயிற்சியில் முனைந்து விடுவான்.

மெரேஸ்யெவின் எண்ணங்கள் யாவும் கால்களையே மையமாகக் கொண்டு சுழன்றன. சில வேளைகளில் மறதி காரணமாகப் பாதங்கள் வலிப்பதாக உணர்வான், கிடக்கையை மாற்றிக் கொள்வான். பாதங்கள் இல்லை என்ற நினைவு அப்புறந்தான் அவனுக்கு வரும். ஏதோ நரம்புச் சீர்கேடு காரணமாக அவனுடைய வெட்டுண்ட காற்பகுதிகள் நெடுங் காலம்வரை உடலோடு சேர்ந்து உயிர்த்திருந்தன; திடீரென அவற்றில் அரிப்பு எடுக்கும், ஈரப் பருவ நிலையில் உளைச்சல் உண்டாகும், வலி கூட ஏற்படும். கால்களைப் பற்றியே ஓயாது சிந்தித்தமையால், தான் உடல் நலத்துடன் விரைந்து நடப்பது போலக் கனவில் அவனுக்கு அடிக்கடி மனத் தோற்றம் உண்டாகும். விமானத்தாக்கு அபாய அறிவிப்பைக் கேட்டு விமானத்தை நோக்கிக் குதிகால் பிட்டத்தில் அடிக்க ஓடுவது போலவும், ஓடுகிற ஓட்டத்திலேயே இறக்கை மேல் பாய்ந்து தாவி அறைக்குள் புகுந்து இருக்கையில் அமர்ந்து சுக்கான்களைக் கால்களால் சரி பார்ப்பது போலவும் இதற்கிடையே யூரா எஞ்சின் மேலிருந்து மூடியை அகற்றுவது போலவும் ஒரு சமயம் தோன்றும். மறு சமயம் தானும் ஒல்காவும் பூத்துக் குலுங்கும் ஸ்தெப்பி வெளியில் கைகோர்த்துக் கொண்டு வெறுங்காலுடன் பாய்ந்து ஓடுவது போலவும் ஈரிப்பும் வெதுவெதுப்பும் உள்ள தரையின் கொஞ்சலான வருடலை உணர்வது போலவும் தோன்றும். எவ்வளவு நன்றாயிருக்கும் இந்தப் பிரமை! தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டதும் தனக்குக் கால்கள் இல்லை என்பதைக் உணர்கையில் எத்தகைய ஏக்கம் நெஞ்சைக் கவ்விக்கொள்ளும்!

இத்தகைய கனவுகளுக்குப் பின் சில வேளைகளில் அலெக்ஸேய் வெகுவாகக் குன்றிக் குறுகிப் போய்விடுவான். தான் பறக்கப் போவதில்லை, கமிஷினைச் சேர்ந்த இனிய நங்கையுடன் ஸ்தெப்பியில் வெறுங்காலுடன் ஓடவே போவதில்லை என்று அவன் எண்ணலானான். இந்தப் பெண்ணைப் பிரிந்திருந்த காலம் அதிகமாக ஆக அவள் அவனுக்கு முன்னிலும் நெருங்கியவளாகத் தென்படலுற்றாள்.

அனேகமாக ஒவ்வொரு வாரமும் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அலெக்ஸேயை “நடனமாடச்” சொல்லுவாள்.

அதாவது அவன் கைகளைக் கொட்டியவாறு கட்டிலில் துள்ள வேண்டும், அதற்குப் பரிசாக அவள் பள்ளி மாணவனது போன்ற குண்டுகுண்டான, திருத்தமான எழுத்துக்களில் முகவரி தீட்டப்பட்ட உறையை அவனிடம் கொடுப்பாள். இந்தக் கடிதங்கள் நாளாக ஆக அதிக விஸ்தாரமாகிக் கொண்டு போயின. அவற்றில் அதிக உணர்ச்சிப் பெருக்கு காணப்பட்டது. குறுகிய கால, இளமைப்பருவக் காதல், போரினால் இடைமுறிக்கப்பட்ட காதல், ஒல்காவின் உள்ளத்தில் மேலும் மேலும் முதிர்ந்து கனிந்து வருவதை இவ்விஷயங்கள் காட்டின. இந்த வரிகளை அலெக்ஸேய் கலவரத்துடனும் ஏக்கத்துடனும் படித்தான். இவற்றுக்கு இதே உணர்ச்சிகள் மூலம் விடை அளிக்கத் தமக்கு உரிமை இல்லை என்பதை அவன் உணர்ந்தான்.

அவர்கள் பள்ளித் தோழர்கள். ஒருவருக்கொருவர் அன்புக் கவர்ச்சி கொண்டிருந்தார்கள். பெரியவர்களைப் பின்பற்றி இந்தக் கவர்ச்சியை அவர்கள் காதல் என்று அழைத்தார்கள். பிறகு ஆறு ஏழு ஆண்டுகள் அவர்கள் பிரிந்து விட்டார்கள். முதலில் நங்கை தொழிற்பள்ளியில் படிக்கப் போனாள். அப்புறம், அவள் திரும்பி வந்து தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்க்கத் தொடங்கியபோது அலெக்ஸேய் ஊரில் இல்லை. அவன் விமானப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தான். போர் மூள்வதற்கு முன் சிறிது காலத்துக்கு அவர்கள் மீண்டும் சந்தித்துச் சேர்ந்திருந்தார்கள். இந்தச் சந்திப்பை அவனோ, அவளோ தேடிப் பெறவில்லை. வசந்த காலத்தில் ஒரு நாள் மாலை அலெக்ஸேய் தாயாருக்குத் துணையாக நகர்த் தெரு வழியே எங்கோ போய்க் கொண்டிருக்கையில் எதிரே வந்தாள் ஒரு பெண். அவளுடைய வடிவமைந்த கால்களை மட்டுமே அவன் கவனித்திருந்தானே தவிர அவளை உற்றுப் பார்க்கக்கூட இல்லை.

“நீ என்ன, இவளுக்கு முகமன் கூடச் சொல்லவில்லை? இவள் ஓல்கா ஆயிற்றே, மறந்துவிட்டாயா என்ன?” என்றாள் தாயார்.

அலெக்ஸேய் திரும்பிப் பார்த்தான். பெண்ணும் திரும்பி அவர்களைப் பார்த்தாள். அவர்கள் விழிகள் சந்தித்தன. அக்கணமே தன் நெஞ்சு படபடப்பதை உணர்ந்தான். தாயாரை விட்டுவிட்டு, இலைகள் அற்ற பாப்ளர் மரத்தடியில் நடை பாதையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கிப் பாய்ந்தோடினான்.

“நீயா இது?” என்று வியப்புடன் கூவினான். தனக்கு முன் நிற்பவள் ஏதோ தீவாந்திரத்தைக் சேர்ந்த அழகிய விந்தைக் கன்னி போலவும், வசந்தக்காலச் சேறு நிறைந்த தெருவில் அமைதியான மாலை வேளையில் எப்படியோ வந்து விட்டவள் போலவும் அவளை ஏற இறங்க ஆச்சரியத்துடன் நோட்டமிட்டான்.

“அலெக்ஸேயா?” என்று அவன் போலவே வியப்புடனும் நம்பிக்கையுடனுங்கூட வினவினாள் அவள்.

அலெக்ஸேய்க்கு முன் நின்றாள் வடிவான அங்க அமைப்பும் லாவகமும் உள்ள சிறுகூடான மேனி கொண்ட நங்கை. அவளது இனிய உருண்டை முகமும் சிறுவனது போன்று இருந்தது. அவளுடைய மூக்குத் தண்டில் பொன்னிற மச்சங்கள் காணப்பட்டன. மென்மையாகக் கோடிட்டிருந்த தன்னுடைய புருவங்களைச் சற்றே நிமிர்த்தி, கதிர் வீச்சும் பெரிய சாம்பல் நிறக் கண்களால் அவனை நோக்கினாள் அவள். தொழிற்சாலைப் பள்ளியில் அவர்கள் கடைசியாகச் சந்தித்த ஆண்டில் அவள் சிவப்பேறிய உருண்டை முகமும் உறுதியான உடற்கட்டும் உள்ள முரட்டுச் சிறுமியாக இருந்தாள். தகப்பனாரின் சிக்குப்பிடித்த தொழிலாளிக் கோட்டைப் போட்டுக் கொண்டு கைகளை மடித்து விட்டவாறு மிடுக்குடன் வளைய வருவாள். இப்போது அலெக்ஸேய்க்கு முன்னே நின்ற லாவகமும் தளதளப்பும் ஒயிலும் கொண்ட கன்னிக்கும் அந்த சிறுமிக்கும் ஒற்றுமை வெகு சிறிதே காணப்பட்டது.

தாயாரை மறந்துவிட்டு அலெக்ஸேய் அவளையே பாராட்டுடன் நோக்கினான். இந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாகத் தான் அவளை மறக்கவே இல்லை என்றும் இந்தச் சந்திப்பைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது.

“ஆ, இப்போது நீ இப்படிப்பட்டவள் ஆகிவிட்டாயா?” என்று முடிவில் கூறினான்.

“எப்படிப்பட்டவள்?” என்று கணீரென்ற குரலில் கேட்டாள் அவள். அடித்தொண்டையிலிருந்து வந்த அந்தக் குரல் பள்ளி நாட்களில் இருந்ததற்கு முற்றிலும் வேறாயிருந்தது.

அன்னை அவர்கள் இருவர் மீது கண்ணோட்டி விட்டு ஏக்கத்துடன் முறுவலித்துத் தன் வழியே சென்றாள். அவள் உள்ளுணர்வால் விஷயத்தைப் புரிந்து கொண்டாள். அவள் இதனால் வருத்தப்படவில்லை. முதியவர்கள் மூப்பு அடைகிறார்கள், சிறுவர்கள் வளர்கிறார்கள் – இது தானே வாழ்வின் நியமம்!

படிக்க:
விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் !
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! அச்சுநூல்

அலெக்ஸேயும் ஓல்காவும் தங்கள் காதலைப் பற்றி ஒரு முறைகூடப் பேசவில்லை. மாலை வெயிலில் பளிச்சிடும் அமைதி சூழ்ந்த வோல்கா ஆற்றின் கரையில் உலாவி விட்டுத் திரும்புகையில், கழிந்து கொண்டு போகும் விடுமுறை நாட்களை எண்ணிக் கணக்கிட்டு, அலெக்ஸேய் தீர்மானிப்பான் – ஓல்காவிடம் மனம் திறந்து பேசி விடுவது என்று. அடுத்த மாலை வரும். சினிமாவுக்கோ சர்க்கஸுக்கோ, பூங்காவுக்கோ அவர்கள் போவார்கள். எங்கு போனாலும் அலெக்ஸேய்க்கு ஒன்றுதான். அவன் திரையையோ அரங்கையோ உலாவுவோர் கூட்டத்தையோ கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான். ஒல்காவையே நோக்கியவாறு, “இதோ வீடு திரும்பும் வழியில் கட்டாயமாக விஷயத்தை விளக்கிவிடுகிறேன்” என்று எண்ணுவான். ஆனால் வழி முடிந்து விடும், அவனுக்கோ துணிவு வராது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

0

தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்த மசோதாவை, கடந்த திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றியது மத்திய மோடி அரசு. அந்த சட்டத் திருத்தம் குறித்து மக்களவையில் கடும் விவாதம் ஏற்பட்டது.

இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார். இச்சட்டதிருத்தம், பயங்கரவாதியின் மதத்தை பேதப்படுத்தாமல், பயங்கரவாதத்தை ஒழிக்கவே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்திற்கு திமுக ஆதரவு அளித்திருப்பது முற்போக்காளர்கள் மத்தியிலும், முஸ்லீம்கள் மத்தியிலும் விமர்சனத்தை  எழுப்பியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமைச் சட்டம், 2008 – மும்பை 26/11 தாக்குதலைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என அமித் ஷா வாக்குறுதி அளித்திருக்கிறார். இச்சட்டப்படியே முறைகேடு நடக்கு முடியும் போது சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையே?

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமைக்கு சிபிஐ-யை விட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த தேசிய புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரமும் உண்டு. இதற்கு குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்குத் தேவையான போலீசுப் படையை அனுப்பவேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

இந்தச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வழக்குகளில், முக்கியமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்குப் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் மட்டுமே தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முடியும்.

படிக்க:
♦ காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

ஆனால், தற்போதைய புதிய சட்ட திருத்தம் கூடுதல் அதிகாரங்களை தேசிய புலனாய்வு முகமைக்குச் சேர்த்துள்ளது. முதலாவதாக, தேசிய புலனாய்வு முகமைக்கு வெளிநாடுகளில் சென்று விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. இரண்டாவதாக, மத்திய அரசிற்கு, என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரித்து வரும் செசன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றுவதற்கு அதிகாரம் அளிக்கிறது. மூன்றாவதாக, ஏற்கெனவே இருந்த என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உகந்த குற்றங்களின் பட்டியலில் இருக்கும் எட்டுக் குற்றங்களோடு கூடுதலாக நான்கு வகையான குற்றங்களை சேர்த்திருக்கிறது.

முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களோ, அல்லது இந்தியாவின் சொத்துக்களோ பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டால் அதனை விசாரிக்க என்.ஐ.ஏ-வுக்கு முழு அதிகாரத்தையும் அளிக்கிறது.

இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், குறிப்பான வழக்குகளில் பல்வேறு தரப்பில் அனுமதி பெற்று சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் 9 மாதங்கள்வரை ஆவதால், மத்திய அரசின் அனுமதியை மட்டும் பெற்றுக் கொண்டு விசாரணை நடக்கும் செசன்ஸ் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படச் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

மூன்றாவதாக, என்.ஐ.ஏ-வால் விசாரிக்கத் தகுந்த குற்றங்களின் பட்டியலில் புதியதாக பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தல், கள்ள நோட்டு அடித்தல், (இந்திய தண்டனைச் சட்டம் 370, 370A (1860)) ; தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் (ஆயுதச்சட்டம் (1959) பிரிவு 25 [1AA] ; இணையக் குற்றங்கள் (தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 66F) ; வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் (2000) ஆகிய பிரிவுகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் குற்றப்பட்டியல்களில் சேர்த்துள்ளது பாஜக அரசு.

புதிய குற்றப் பிரிவுகளை உள்ளே சேர்த்ததன் மூலம் பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.

குறிப்பாக ஆயுதம் தயாரித்தல் – விற்பனை செய்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளைச் சேர்த்திருப்பதைப் பார்க்கையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ சாத்வி பிரக்யா சிங்கை விடுவித்தது தான் நமது நினைவுக்கு வருகிறது.

இன்று ஆயுதத் தயாரிப்பு, வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து சிக்கியிருப்பது யார்? சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல்கள்தான் இத்தகைய வழக்குகளில் கைதாகியிருக்கின்றனர்.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்களைக் கொன்ற சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல், தற்போது மாநில அரசுகள் அமைத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவின் வளையத்திற்குள் சிக்கியிருக்கின்றன. இந்த சட்டத் திருத்தத்தின் படி இந்தக் கிரிமினல் கும்பல்களை விசாரிக்கும் அதிகாரமும் இனி என்.ஐ.ஏ-விடமே ஒப்படைக்கப் படலாம்.

பின்னர் நடக்கவிருப்பது நாம் அறியாததல்ல. சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் போல இந்தக் கும்பலும் என்.ஐ.ஏ-வின் உதவியுடனும் சிறப்பு நீதிமன்றத்தின் உதவியுடனும் விடுதலை செய்யப்பட்டு, எம்.பி சீட்டோ, எம்.எல்.ஏ. சீட்டோ கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படலாம்.

நாடாளுமன்றத்தில் தனது உரையில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைகள் குறித்தெல்லாம் குரல் எழுப்பிய திமுக-வின் நாடாளுமன்றக் கொறடா ஆ.ராசா அவர்கள், இந்த சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துவது கண்டிக்கத் தக்கது.

அடுத்ததாக இணையக் குற்றப் பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் இந்தப் பிரிவே பொத்தாம் பொதுவாக பின்வருமாறுதான் ஆரம்பிக்கிறது. “with intent to threaten the unity, integrity, security or sovereignty of India” அதாவது “இந்தியாவின் ஒற்றுமைக்கு, ஒருங்கிணைந்த தன்மைக்கு, பாதுகாப்புக்கு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடன்..” இணையத்தில் எழுதினால் இனிமேல் என்.ஐ.ஏ. பிடித்துக் கொண்டுபோய் உள்ளே தள்ளும் என்பதுதான் அதன் பொருள்.

இனி திமுக-வின் ஐ.டி பிரிவினர் திராவிடம் 2.0 என்றோ, இந்தியைப் புறக்கணிப்போம் என்றோ டிவிட்டரிலும், முகநூலிலும் பதிவிட்டாலே போதும், என்.ஐ.ஏ கைது செய்ய முகாந்திரம் இருக்கிறது. ஏனெனில், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த தன்மைக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் இருக்கிறது அல்லவா ?

மோடி அமித்ஷா கும்பல் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறித்து பாசிச ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆ.ராசா நாடாளுமன்றத்தில், “நாட்டில் சிவில் சட்டங்களை தவிர, எல்லா கிரிமினல் சட்டங்களும் மதச்சார்பற்றவைகளாகவே இருக்கின்றன; எனவே, இச்சட்டத்தை மதக் கண்ணோட்டத்தோடு அரசு அணுகக்கூடாது.” என்று பேசியதாக, தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிரிமினல் சட்டங்கள் மதச்சார்பற்றதாக இருக்கலாம். அதனை நடைமுறைப்படுத்தும் இடத்திலும், கண்காணிக்கும் இடத்திலும் காவிக் கிரிமினல் கும்பல் அல்லவா இருக்கிறது?

மேலும் இச்சட்டத்தின் படி ஒருவர் மீது ஐயம் இருந்தாலே போதும் கைது செய்து நெடுங்காலம் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் எப்படி கைது செய்யப்பட்டார், யார் சொல்லி கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் முதல் தகவல் அறிக்கையில் கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விசாரணை மூடுண்ட நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கும் இச்சட்டம் உதவுகிறது. ஒருவர் ஒரு பென்டிரைவ் வைத்திருந்தார் அதில் இந்தியாவிற்கு எதிரான முழக்கம் இருந்தது என்று கூட அவரைக் கைது செய்ய முடியும். இவையெல்லாம் இச்சட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் அம்சங்கள்.

குறிப்பாக முஸ்லீம் மக்களை கேட்பார் கேள்வியின்றி கைது செய்ய இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தடா, பொடா போல இச்சட்டமும் முஸ்லீம்களோடு அரசியல் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து பழிவாங்க பாஜக அரசிற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கூடவே என்.ஐ.ஏ சட்டப்படி பெரும்பாலான வழக்குகளில் அப்பாவிகள்தான் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கிறது. இந்துமதவெறியர்கள் மட்டும் என்.ஐ.ஏ விசாரிக்கும் போது விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே நடப்பது போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அதற்கான சட்டப் பாதுகாப்பை, இந்த சட்டமும் அதன் திருத்தங்களும் தருகின்றன.

இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பேசினாலும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க, பிஎஸ்பி, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இச்சட்ட திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்கின்றன. சிறுபான்மையினருக்கு தமது கட்சிகள் கேடயமாக பாதுகாப்பு அளிக்கும் என இக்கட்சிகள் கூறினாலும் இச்சட்டம் முஸ்லீம்களை குறிவைத்து தாக்குவதையும், இந்துமதவெறிக் குற்றவாளிகளை விடுதலை செய்வதையும் ஏற்கெனவே செய்து வருகிறது.

வாக்கரசியலைத் தாண்டி இச்சட்டத்தின் திருத்தம் மட்டுமல்ல இச்சட்டத்தையே ரத்து செய்யுமாறு போராடுவதற்கு முற்போக்கு அரசியல் உலகம் முயலவேண்டும். ஏனெனில் இச்சட்டத்தின் மூலம் பாஜகவை எதிர்த்து யாரும் பேச முடியாது எனும் நிலையை இச்சட்டத் திருத்தம் ஏற்படுத்துகிறது.


நந்தன்

செய்தி ஆதாரம் :  இந்தியன் எக்ஸ்பிரஸ்

போதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் ! ஆவணப்படம்

0

லியெம் கோலின்ஸ் ஒரு வெற்றியடைந்த விளையாட்டு வீரர்; தோல்வியடைந்த தொழில் முனைவோர். இங்கிலாந்தைச் சேர்ந்த கோலின்ஸ், தடை ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று பல வெற்றிகளைக் குவித்தவர்.

தனது 18 வது வயதில் – 1998-ல் – பள்ளி அளவில் நடந்த 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வென்ற கோலின்ஸ், கடைசியாக தனது 35-வது வயதில் (2014-ம் ஆண்டு) நடந்த யுரோப்பியன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தடகள விளையாட்டு அரங்கில் மிக நீண்ட காலம் தாக்குப் பிடித்து நின்ற கோலின்ஸ், அதே காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் கால் வைத்து பெரும் சரிவையும் சந்தித்தவர்.

லியெம் கோலின்ஸ்

தனது சாதனைகளுக்காகவோ, தோல்விகளுக்காகவோ பெரிதும் அறியப்படாத கோலின்ஸ் 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியான ஒரு ஆவணப்படத்தைத் தொடர்ந்து அட்லாண்டிக்கின் மறுமுனையில் இருக்கும் வட அமெரிக்க கண்டமெங்கும் பரபரப்பாக பேசப்படும் நபராகினார். அல்ஜசீரா தொலைக்காட்சியின் மறைபுலனாய்வுப் பிரிவு வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” (The Dark Side: Secrets of the Sports Dopers) என்கிற ஆவணப்படம் அமெரிக்க விளையாட்டு உலகத்தை மட்டுமின்றி இரசிகர்களையும் திகைக்கச் செய்தது.

“நான் நினைத்தால் சாதாரண மரபணுக்கள் கொண்ட ஒரு விளையாட்டு வீரரை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைக்க முடியும். போதைப் பொருட்கள் பயன்பாட்டை கண்டறியும் அமைப்பின் கண்களில் மிக எளிதாக மண்ணைத் தூவி விடலாம்” என இரகசிய கேமரா முன் சொல்கிறார் மருத்துவர் சாட் ராபர்ட்சன். இவர் கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்தவர். பல்வேறு அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இவரது வாடிக்கையாளர்கள். ஆவணப்படமெங்கும் ஒரு விளையாட்டு வீரர் எப்படி ஊக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளை பரிசோதனைகளில் மாட்டிக் கொள்ளாமல் மீற முடியும் என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

டெக்சாசைச் சேர்ந்த சார்லி ஸ்லை எனும் மருத்துவர் அமெரிக்க கால்பந்தாட்டம் மற்றும் பேஸ்பால் விளையாட்டு வீர்களின் பிரத்யேக “மருத்துவர்”. இவரது சிறப்பு மருந்து டெல்டா 2 எனப்படும் ஊக்க மருந்து. இந்த மருந்தைப் பயன்படுத்தி விளையாட்டில் சாதித்த வீரர்களின் பெயர்களை அனாயசியமாக பட்டியலிடுகிறார் சார்லி. அமெரிக்க கால்பந்தாட்டம், பேஸ்பால் மற்றும் கூடைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவலாக தனியார் கிளப்புகள் மூலம் தொழில்முறைப் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இரசிகர்களின் ஆதரவை இழந்திருந்த அமெரிக்க கால்பந்தாட்டமே ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களின் வரவுக்குப் பின்னர் சூடுபிடிக்கத் துவங்கியது என ஆவணப்படத்தின் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகின்றது.

டிம் மோண்ட்கோமெரி

ஆவணப்படத்தின் இயக்குநர் முதலில் போதை மருந்து உபயோகத்தின் காரணமாய் தடை செய்யப்பட்ட முன்னாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் டிம் மோண்ட்கோமெரியைச் சந்திக்கின்றனர். தனது விளையாட்டு வாழ்வின் உச்சமாக 100 மீட்டர் தூரத்தை 9.78 நொடிகளில் கடந்து உலக சாதனை புரிந்தவர் டிம். ஆனால், பின்னர் அந்தப் போட்டியின் போது அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதும் அவர் தடை செய்யப்பட்டதுடன் அவரது உலக சாதனையும் பறிக்கப்படுகின்றது.

“வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். எனக்கு அந்தப் புகழ் பிடித்திருந்தது; அது வேண்டுமாய் இருந்தது. எனது சிறிய வயதில் பெரியவர்களோடு ஓடி வென்ற அந்த தருணங்கள் மீண்டும் மீண்டும் தேவைப்பட்டது. அதை நான் உணர வேண்டும் என்பதற்காய் ஊக்க மருந்துகளை நாடினேன். பின்னர் பிடிபட்டு தடை செய்யப்பட்டேன்” என்கிறார் டிம். தற்போது போதை உலகில் இருந்து வெளியேறியுள்ள டிம், இளம் வீரர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

டிம் யார் மூலமாக ஊக்க மருந்துகளைப் பெற்றார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவணப்பட இயக்குநர், கோலின்சை தொடர்பு கொண்டு “ஓய்வு பெறும் முன் இறுதியாய் ஒரு முறை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளத் துடிக்கும் வீரர்” என்கிற போர்வையில் போதை மருத்துவர்கள் மற்றும் முகவர்களைச் சந்திக்க வைக்கின்றனர் – இரகசிய கேமராவுடன். முதலில் பகாமஸ் தீவுகளுக்குச் செல்லும் ஆவணப்படக் குழு அங்கே டிம்முக்கு மருந்துகள் சப்ளை செய்த மருத்துவர்களைச் சந்திக்கின்றனர். பின்னர் அங்கிருந்து நூல் பிடித்து கனடாவின் வான்கூவரில் உள்ள சாட் ராபர்ட்சன் மற்றும் டெக்சாசைச் சேர்ந்த சார்லி ஸ்லை ஆகியோரை அடைகின்றனர்.

பகாமஸ் மருத்துவர்களிடம் சொன்ன அதே கதையுடன் இவர்களையும் அணுகுகின்றது ஆவணப்படக் குழு. இரகசிய கேமராவின் முன் இவ்விருவரும் அவிழ்த்து விட்ட உண்மைகள் ஒவ்வொன்றும் அமெரிக்க இரசிகர்களை அணுகுண்டுகளாய்த் தாக்கியுள்ளன. நேரலைக் கட்டணப் (pay per view) போட்டிகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு காசு கட்டி பல மணி நேரங்கள் ஆராவாரித்து கொண்டாடிய வீரர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாய்ப் பொருமினர்.

எனினும், அமெரிக்க விளையாட்டு உலகம் இதில் அதிர்ச்சியடைவதற்கு ஏதுமில்லை என்பதே எதார்த்தம். வென்றே தீர வேண்டும் என்கிற வெறி ஒருபுறம் – அமெச்சூர் போட்டிகளில் எப்பாடுபட்டாவது வெற்றிகளைக் குவித்து விட்டால் தொழில்முறை விளையாட்டு உலகினுள் ஒரு நல்ல இடம் கிடைத்து விடும் என்கிற உத்திரவாதம் மறுபுறம். தொழில்முறை விளையாட்டு உலகிலும் வெற்றி ஒன்றே ஒரு வீரனின் இருப்பையும் வருமானத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான வழி என்கிற நிலை இன்னொரு புறம். இந்த நெருக்கடிகளோடு பண்டைய ரோமானிய கிளாடியேட்டர்களைப் போல் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொள்ள அவர்கள் மிக இயல்பாக ஊக்க மருந்துகளை நாடுகின்றனர்.

ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளும் விளையாட்டு வீரன் வெல்கிறான் – விளையாட்டு தோற்றுப் போகின்றது. இந்த நச்சு சூழலை ஓரளவிற்கு நேர்மையாக படம்பிடித்துக் காட்டுகின்றது அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.


சாக்கியன்
நன்றி: அல்ஜசீரா

முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

0

65 பேர் கொல்லப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

த்தரப் பிரதேச மாநிலத்தில் 2013-ம் ஆண்டு முசுலீம் மக்கள் மீது இந்துத்துவ காவிக் குண்டர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, அகதிகளாக முகாம்களில் குடியேறினர். 65 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் 10 கொலைகள் மட்டுமே வழக்குகளாக பதியப்பட்டு, விசாரணை செய்யப்பட்டன.

2013, செப்டம்பர் 8-ஆம் தேதி, ஷாம்லி மாவட்டத்தில் 65 வயதான இஸ்லாம் காவி குண்டர்களால் துரத்தி படுகொலை செய்யப்பட்ட மசூதி இது…

இந்த 10 கொலை வழக்குகளின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களின் அடிப்படையிலும், பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்ட நிலையில், குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்.

# குற்றப்பத்திரிகையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களான ஐந்து அரசு தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்துக்கு வரவேயில்லை.

# ஆறு அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர். போலீசு தங்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறினர்.

# ஐந்து வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் போலீசு ஒப்படைக்கவில்லை.

# அரசு தரப்பு ஒருபோதும் காவல்துறையினரை குறுக்கு விசாரணை செய்யவில்லை.

# இறுதியில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியமாக மாறினர்.

உண்மையில், 2017 முதல் முசாஃபர் நகர் நீதிமன்றங்கள், இந்தக் கலவரம் தொடர்பான 41 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. முசுலீம்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட மற்ற 40 வழக்குகளிலிருந்தும் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கலவரத்தில் எரிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு வீட்டை பார்க்கும் சிறுவன். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனைத்து வழக்குகளையும் பதிந்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணைகள் அகிலேஷ் ஆட்சியிலும் தற்போதைய பாஜக ஆட்சியிலும் தொடர்ந்தன. ஒரே ஒரு வழக்கில் அமர்வு நீதிமன்றம் முசாமில், முஜாஸ்மின், ஃபர்கான், நதீம், ஜஹாங்கீர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய ஏழு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 2017 ஆகஸ்ட் 27-ம் தேதி, கவால் கிராமத்தில் கவுரவ், சச்சின் ஆகியோரை கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். இதுதான் கலவரத்தை தூண்டியதாக நீதிமன்றம் சொன்னது. அதாவது காவி நீதிமன்றம் முசுலீம்களை மட்டுமே தண்டித்திருக்கிறது.

பத்து கொலை வழக்குகள் என்னென்ன என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வழக்கு விவரங்களை ஆராய்ந்து எழுதியுள்ளதில், நீதிமன்றமும் போலீசும் காவிகளின் கைக்கூலிகளாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு குடும்பமே உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு முதல், நண்பர்கள் வெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டது, ஒரு குடும்பத்தில் தந்தை வாளால் கொல்லப்பட்டது, மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்ட ஒருவர் என பத்து வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 53 பேர், விடுதலை செய்யப்பட்டனர்.

நான்கு கூட்டு வல்லுறவு வழக்குகளும் 26 கலவர வழக்குகளிலும் இதே நீதி தான் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதித்யநாத் தலைமையிலான காவி அரசு, காவி குண்டர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ‘அனைவருக்குமான அரசு’ என்கிற வகையிலும்கூட மேல்முறையீடு செய்யமாட்டோம் என அறிவித்துள்ளது. பிறழ் சாட்சியங்களாக மாறியவர்கள் மீது 344-வது பிரிவின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க:
♦ முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு அதிரடி !
♦ ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

10 வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணையில் தெரியவந்த முக்கியமான விசயங்கள்…

# புகாரில் 69 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 24 பேரின் மீது மட்டுமே விசாரணை நடந்தது.

# ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் கொலை ஆயுதங்கள் குறித்த பதிவு இருந்தபோதும், போலீசு ஐந்து வழக்குகளில் மட்டுமே ஆயுதங்களை கைப்பற்றியது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி புதானாவில் அம்ரோஜ், மெகர்பென், அஜ்மல் ஆகிய மூவர் கொல்லப்பட்ட வழக்கை மூன்றாக பிரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து கொலை ஆயுதமாக அரிவாளை கைப்பற்றியது போலீசு. ஒரு வழக்கில் இது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. இன்னொரு வழக்கில் கொலை ஆயுதத்தில் ரத்தக்கறை இல்லை என்றது. மூன்றாவது வழக்கில் ரத்தக்கறை இல்லாததால் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பவில்லை எனக்கூறியது. இந்த ஆயுதத்தை கைப்பற்றிய போலீசிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

# அசிமுதீன் மற்று ஹலிமா என்ற இணையர் புகானாவில் கொல்லப்பட்ட வழக்கில் போலீசு இரண்டு சாட்சியங்களின் முன்னிலையில் சாட்சியங்களை கைப்பற்றியதாக கூறியது. ஆனால் அவர்கள் இருவரும் எந்தவித சாட்சியங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் வெற்றுத்தாளில் தங்களை போலீசு கையெழுத்து இடச் சொன்னது என்றும் கூறினர்.

இதேபோல, ரோஜுதீன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும் சாட்சியங்கள் போலீசுதான் அனைத்து ஆவணங்களையும் எழுதி கையெழுத்து வாங்கியதாகக் கூறினர்.

# மிராபூரில் ஷாரீக், டிதாவியில் ரோஜுதீன், மிராபூரில் நதீம் கொல்லப்பட்ட வழக்கில் உடல்கூராய்வு செய்த மருத்துவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தன். ஆனால், நீதிமன்றத்தில் மருத்துவர்களிடம், மருத்துவ ஆவணங்கள் உண்மையா இல்லையா என்பது மட்டும் கேட்கப்பட்டது. மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கவில்லை.

# அசிமுதீன், ஹாலிமா கொலை வழக்கில் அரசு தரப்பில் உடல்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. புகாரும் அதன் பின் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் உடல்கள் கைப்பற்ற இடம் குறித்த தகவலும் மட்டும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. வேறு எந்த ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் சொன்னது.

முசாஃபர் நகர் கலவரத்தினால் அகதி முகாம்களில் பலர் தஞ்சமடைந்தனர். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் – கோப்புப் படம்)

இந்த பத்து வழக்குகளில், 65 வயதான இஸ்லாம் கொல்லப்பட்ட வழக்கும் ஒன்று. இஸ்லாமின் மகன் ஸாரிஃப் பதிந்த முதல் தகவல் அறிக்கையில், “ஹர்பால், சுனில், பிரமன் சிங், ஸ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித், குல்தீப், அரவிந்த் ஆகியோர் மதவாத முழக்கங்களை எழுப்பிக்கொண்டு எங்கள் குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கினர். ஸ்ரீபால் கூரான ஆயுதம் கொண்டு என் தந்தையின் தலையில் தாக்கினார். மற்ற ஆறுபேரும் கத்தியால் அவரை தாக்கினர். எங்கள் வீட்டை அவர்கள் கொளுத்தினர். என்னுடைய சகோதரர் தந்தையை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கு விசாரணையின்போது ஸாரிஃப், “என்னுடைய தந்தை கொல்லப்பட்டார், என்னுடைய உறவினர் குல்சார் எழுதிய புகாரில் நான் கையெழுத்து மட்டுமே போட்டேன். குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை” என பிறழ் சாட்சியாக மாறினார். மற்ற மூன்று சாட்சியங்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நடந்த கொலையில் தொடர்பில்லை என்றனர்.

ஒரு தொழிலாளியாக உள்ள ஸாரிஃப், தான் எப்போது புகார் அளித்தோம், எப்போது பிறழ் சாட்சியாக மாறினோம் என்கிற விவரமெல்லாம் நினைவில் இல்லை என்கிறார். நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்டத் தவறிவிட்டார்.

ஆனால், தன்னுடைய தந்தையின் கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களை அப்படியே கூறுகிறார்.

கிராமத்தின் பெரியவர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று பாதுகாத்தனர். வழிபாட்டிடத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்பினோம். நாங்கள் யாரை நம்பினோமோ அதே நபரகள் எங்கள் தந்தையை கொன்றனர். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

“இந்த கிராமத்தைச் சேர்ந்த முசுலீம் குடும்பங்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில் நாங்கள் மட்டுமே இங்கேயே இருந்தோம். கிராமத்தின் பெரியவர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று பாதுகாத்தனர். வழிபாட்டிடத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்பினோம்.

ஆனால், சில மணி நேரத்திலேயே நிலைமை மோசமாவதை உணர்ந்தோம். எங்கள் தந்தை தானே பொறுப்பாளரை அழைத்தார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை உதவிக்கு அழைத்தோம். அவர் இராணுவம் வந்துகொண்டிருப்பதாக சொன்னார். அதற்குள் நாங்கள் யாரை நம்பினோமோ அதே நபரகள் எங்கள் தந்தையை கொன்றனர்” என்கிறார் ஸாரிஃப்.

பிறகு ஏன் நீதிமன்றத்தில் இதைச் சொல்லவில்லை என்கிற கேள்விக்கு ஸாரிஃபின் பதில், “கொலையில் விடுவிக்கப்பட்டவர்கள்தான் கொன்றவர்கள். எங்களுடைய பலவீனத்தின் காரணமாக நாங்கள் சமரசம் செய்துகொண்டோம். எங்களுக்கு திராணி இருந்திருந்தால் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றத்துக்கும் சென்றிருப்போம். ஆனால், எங்களுடைய குடும்பத்துக்கு உணவிடவே எங்களால் முடியவில்லை என்னும்போது, நீதிமன்றத்திடம் நீதி கேட்டு எங்களால் எப்படி போராட முடியும்?”.

படிக்க:
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

இஸ்லாமின் வழக்கில் அவருடைய குடும்பத்தாரின் நிலைமை மட்டும் காரணமில்லை. முரண்பட்ட விசாரணை தகவல்களாலும் குற்றவாளிகள் தப்பினர்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரில் ஐந்து பேர் மீது மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, இஸ்லாம் இறப்பதற்கு முன் போலீசு அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்திருக்கிறது.

“என்னுடைய தந்தை சில மணி நேரம் உயிரோடு இருந்தார். மோசமாக தாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி போலீசிடம் கேட்டார். தன்னை தாக்கியவர்களை அடையாளம் தெரியும் எனவும் சொன்னார். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். ஏனெனில் குற்றவாளிகளை பாதுகாக்கவே போலீசு ஆரம்பம் முதல் முயன்றது” என்கிறார் ஸாரிஃப்.

மோடியை ஆட்சியில் அமர வைக்க காவிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட முசாஃபர்நகர் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கே இல்லை. அவர்களே முன்வந்து பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். எவரும் கொல்லப்படவில்லை, உயிரோடு எரிக்கப்படவில்லை, வல்லுறவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு கலவரமே நடக்கவில்லை என சொல்லக்கூடிய அவலநிலையும் அவர்களுக்கு வரக்கூடும்.


செய்திக்கட்டுரை: Kaunain Sheriff M , Manish Sahu
கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்

0

நைஜீரியாவின் மைதுகுரியை (Maiduguri) சேர்ந்த கோமி காஜேவின் (Komi Kaje) வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்குள் மிக இன்றியமையாத நபர்கள் இருவரை கொன்று விட்டனர் போகோ ஹராம் பயங்கரவாதிகள். அவரது 46 வயதான சகோதரரை பயங்கரவாதிகள் கடந்த 2015, நவம்பரில் சுட்டுக் கொன்றனர்.

”ஏழு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். நான் அங்கு சென்ற போது அவர் இருமுறை தலையில் சுட்டு கொல்லப்பட்டிருந்ததைப் பார்த்தேன்” என்றார் காஜே.

பாரம்பரிய வழக்கப்படி துக்க நாட்கள் கடைபிடிக்கப்பட்டன. காஜே உடைந்துதான் போயிருந்தார். ஆனால் அவரது 35 வயதான ஆண் நண்பர் பீட்டர் ஆடம் அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தார். சனிக்கிழமை காஜேவின் குடும்பத்தினருடன் துக்கம் கடைபிடித்து மதிய உணவையும் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் போகோ ஹராம் மீண்டும் தாக்குதலைத் தொடுத்து காஜேவின் தற்காலிக ஆறுதலை நிரந்தர துக்கமாக்கிவிட்டனர். “அவரது தலையிலும் மார்பிலும் சுட்டனர். அவர் அருகிலிருந்த அகழியில் விழுந்தார். அவரது மூளையை குண்டு தாக்கியது” என்று காஜே கண்ணீருடன் கூறினார்.

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரியில் தற்கொலை கார் குண்டு வெடித்த இடத்தில் மக்கள் கூடுகிறார்கள்

அந்த படுகொலைகளை மறக்க காஜே கடுமையாக முயன்றார். ஆனால் இராணுவ அபாய சங்குகள், துப்பாக்கிச் சூட்டின் சத்தம் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பார்த்தது அவருக்குள் ஒரு கடுமையான மனக்குமுறலை ஏற்படுத்தியது.

புதிய இடத்திற்குச் சென்றால் அவருக்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம் என்று நினைத்த அவரது பெற்றோர் நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிற்கு சென்று சில காலம் தங்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் அது வேலைக்காகாது என்பதை காஜே புரிந்து கொண்டார். “ஏனெனில் போகோ ஹராம் எங்கும் சூழ்ந்திருந்தனர்” என்கிறார் அவர்.

பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம் என்று கருதினார். அதே நேரத்தில் ஆயுதந்தாங்கிய போகோ ஹராம் பயங்கரவாதிகள் பல நகரங்களையும் கிராமங்களையும் இஸ்லாமிய கலிபா (Islamic caliphate) என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தனர். 2009-ம் ஆண்டிலிருந்து 27,000-க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்ததுடன் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது வீடுகளை விட்டு இடப்பெயர்ச்சி செய்திருந்தது போகோ ஹராம்.

போகோ ஹராமை எதிர்த்துச் சண்டை:

போகோ ஹராமை எதிர்த்த போராட்டத்தில் சேர வேண்டும் என்ற கருத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் முன்வைத்த போது கேலி மற்றும் அலட்சியப்போக்கை காஜே எதிர்கொண்ட்டார். “போகோ ஹராமுடன் ஒரு பெண் எப்படி போராட முடியும்?” என்று அவரிடம் கூறப்பட்டது.

காஜேவும் ஃபதியும் பொதுமக்கள் கூட்டுப் படைக்குழுவில் (Civilian Joint Task force) இணைந்தனர். அது போகோ ஹராமினால் பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டது. அது இராணுவத்துடன் இணைந்தும், ஆதரவாகவும் போகோ ஹராமை எதிர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பொதுமக்கள் கூட்டுப் படைக்குழுவில் பெரும்பாலும் ஆண்களே இருந்தனர். ஆனால் பெண்களுக்கென்றே சில குறிப்பான வேலைகளும் இருந்தன.

படிக்க :
♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
♦ ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை

“சண்டைக்கு பலப் பெண்களை போகோ ஹராம் பயன்படுத்திக்கொண்டது. எனவே அதை எதிர்ப்பதற்கான எதிர்-உத்திக்கு பெண்களே தேவைப்பட்டனர்” என்கிறார் காஜே.

சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் இதர பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு போகோ ஹராம் பெண்களை அனுகூலமாக பயன்படுத்திக்கொண்டது.

2011-17 இடைப்பட்ட ஆண்டுகளில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய 338 தாக்குதல்களில் 244 -ல் பெண் தற்கொலை குண்டுதாரிகளையே பயன்படுத்தியதாக அமெரிக்காவின் “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் மையம்” (Combating Terrorism Center) கூறுகிறது. போகோ ஹராம் 2018-ம் ஆண்டில் தற்கொலை தாக்குதல்காரர்களாகப் பயன்படுத்திய 48 குழந்தைகளில் 38 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத மற்றும் இன்னப்பிற [பிற்போக்கு] கலாச்சார காரணங்களுக்காக நைஜீரிய படையினர் பெண்களை சோதனை செய்வது தடுக்கப்பட்டிருந்தது. இது போகோ ஹராமிற்கு தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரியில் உள்ளூர் சந்தையில் நுழைந்த ஒரு பெண்ணை காஜே கோமி சோதனையிடுகிறார்.

அதன் பிறகு பெண்கள், அதிகாலை முதல் அந்தி சாயும் வரை, தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய மைதுகுரியின் (Maiduguri) சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுமக்கள் பகுதிகளுக்குச் சென்று பெண் தற்கொலை குண்டுதாரர்களை தேடுகின்றனர். இதனால் பல பெண் தற்கொலை குண்டுதாரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது கொலைகாரத் தாக்குதல்கள் தோல்வியடைந்தன.

சில சூழ்நிலைகளில், பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுக்க பெண்களை இராணுவம் ஈடுபடுத்துகிறது. இது ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. இதனால் “போகோ ஹராமைப் பற்றி கிசுகிசுப்பவர்கள்” (Gossipers of Boko Haram)” என்ற புனைப்பெயர் அவர்களுக்கு வந்தது.

போகோ ஹராம் குறிப்பிட்ட பகுதியில் தாக்குதல் நடத்த இருக்கிறது என்று இராணுவத்திற்கு துப்பு கிடைத்ததும் கூட்டத்தில் மறையும் பெண் தற்கொலை குண்டுதாரர்களைக் கண்டறிந்து அம்பலப்படுத்த துப்பு கொடுக்கும் பெண்களை பயன்படுத்துகிறது. அரிதான, ஆனால் மிகவும் ஆபத்தான சில சமயங்களில், பெண் போகோ ஹராம் குண்டுதாரர்களை குறிவைத்த இராணுவ நடவடிக்கைகளில் இப்பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கொலை மிரட்டல்கள:

ஆனால் நைஜீரிய பெண்களின் நடவடிக்கைகள் குறித்து எல்லொருமே மகிழ்ச்சியடைவதில்லை. “அக்கம்பக்கத்தினர் எப்பொழுதுமே என்னை கேலி செய்கிறார்கள். ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது” என்று ஃபதி கூறினார்.

படிக்க :
♦ அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !
♦ படக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி !

தூதர்களை அனுப்பி பெண் போராளிகளுக்கு போகோ ஹராம் கொலை மிரட்டல் விடுகிறது. “போகோ ஹராம் பல முறை எனக்கு கொலை மிரட்டல் விட்டிருக்கிறது. இந்த வேலையை விட்டு விடு இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அவர்கள் என்னை எச்சரித்தார்கள். எங்கள் செயல்பாடுகளால் அவர்களது நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் நிறுத்தப் போவதில்லை. ஏனெனில் எனக்காக அல்ல என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் அவர்களுடன் சண்டையிடுகிறேன்” என்கிறார்.

போகோ ஹராமுடைய வன்முறை உச்சத்திலிருந்த போது, அவர்களது ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவி குடிமக்களை கைது செய்தல், சிறையிலடைத்தல் மற்றும் கொலை செய்ததாக இராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. யாருக்கெல்லாம் போகோ ஹராமுடன் தொடர்பிருக்கிறது என்று கண்டறிவதற்கு போதுமான தகவல்கள் இராணுவத்திடம் இல்லை.

ஒன்பது வயது சிறுவர்கள் உட்பட 20,000 பேர்கள் எந்த விதமான சட்டபூர்வமான நடவடிக்கைகள் ஏதுமற்று இரணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் 1,200-க்கும் மேற்பட்ட ஆண்களும் படுகொலை செய்யப்பட்டதாக ஆம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

பலர் மடிந்துவிட்டார்கள்:

சில உள்ளூர்வாசிகளுக்கு போகோ ஹராம் பற்றி தெரிந்தாலும் இராணுவத்திற்கு துப்பு கொடுத்தால் தங்களது குடும்பத்தினரை பயங்கரவாதிகள் கொன்று விடுவார்கள் என்பதால் துப்பு சொல்வதில்லை. அதே நேரத்தில் இந்த தடைக்கற்களை உடைத்து, போகோ ஹராம் பற்றி மதிப்பு மிக்க தகவல்களை இராணுவத்திடம் சொல்லும் பெண்களும் அதே சமூகத்தில் இருக்கிறார்கள்.

போகோ ஹராமிடமிருந்து பெண் போராளிகளுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறுகிறார் இட்ரிஸ் ஃபதி.

”இதனால் பல பெண்கள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்” என்று மைதுகுரி திங்கள் சந்தை வாயில்காப்பாளர்களை ஒருங்கிணைப்பாளரான உமர் ஹபிபா கூறினார். கிளர்ச்சியின் மையமான நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் தற்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர் என்று அவர் கூறினார். அச்சுறுத்தல்கள், திருமணம் மற்றும் சமூகத்தின் அழுத்தம் ஆகியவற்றின் விளைவாக ஏனையோர் பணியிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர் கூறுகிறார்.

இப்பணியில் எப்பொழுதுமே ஆபத்து நிறைந்துள்ளது. தற்கொலை குண்டுதாரர்களின் தாக்குதலின் போது இப்பணியில் ஈடுபடும் பெண்களும் பலியாகக்கூடும். “இப்பணியில் வீரமரணம் எய்தினால் என்னுடைய பெற்றோர்கள் என்னைப்பற்றி பெருமையடைவார்கள் என்று எனக்கு தெரியும்” என்றார் காஜே. முன்பு தன்னார்வலராக இந்தப் பணியைச் செய்து வந்த நிலையில் தற்போது மாநில அரசிடமிருந்து 30 டாலரை மாத ஊதியமாகப் பெறுகிறார். “கடுமையான பணி அழுத்தம் காரணமாக பல பெண்கள் இதிலிருந்து வெளியேறிவிட்டனர்” என்கிறார் காஜே.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்

ராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல் லோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?

தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?

எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்!

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு, பெரும் கற்பனைச் சித்திரமும் ஆகும்.
2. அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியையும் அக்கால ஆரியப் பண்பாடு – பழக்க வழக்கம் முதலிய அவர்களது அன்றைய கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.
3.அது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் என்னும் பெயரால் நாட்டில் வழங்கிவருகின்றன.
4. அவை ஒருவரால் ஏற்பட்டவை அல்ல.
5. ஒரே காலத்தில் உண்டாக்கப்பட்டனவும் அல்ல
6. கோர்வை அற்றது.
7. முன்னுக்குப் பின் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.
8. முன்னுக்குப்பின் பொருத்தமற்ற கற்பனைகள் பல
9. மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல
10. தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல
11. மனித தர்ம ஒழுக்கம் காணவும் முடிவதில்லை .
12. உண்மையான வீரம் காண முடிவதில்லை
13. யுத்த முறையிலும் யுத்த தர்மமோ உண்மையான மனித பலமோ தெய்வீக பலமோ அறிவுக்கேற்ற வில்வித்தை முதலிய ஆயுதப் பயிற்சி பலமோ ஆயுதமோ இருந்ததாகத் தெரிய முடியவில்லை . எல்லாம் பொருத்தமற்ற கற்பனைகளே.
14. அதில் காணப்படும் ஆள்கள் உண்மையாய் இருந்தவர்களாக இருக்க முடியாது.
15. ரிஷிகள் முதலியவர்களும், இருந்த மக்கள் என்று சொல்ல முடியாததாகும்.
16. இராமாயணம் சரித்திரத்திற்குச் சம்பந்தப்பட்டதல்லாதது என்பது மாத்திரமல்லாமல், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சம்பந்தப்படாததே ஆகும்.
17. தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை
18. அதில் கடவுளாகக் காணப்படுபவர்கள் ஒரு வரிடத்திலும் (நடத்தையிலும், பேச்சில், எண்ணத்தில்) கடவுள் தத்துவம் என்பதைச் சிறிதும் காணமுடிவதில்லை.
19. மாமிசம் சாப்பிடுவது, மது அருந்துவது இராமாயணத்தில் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.
20. தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
21. இவர்களது வயதுகளும் வரையறுக்கப்படவில்லை ; வயதுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முரண்பாடு கொண்டதுமாகும்.
22. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு சமயத்தில் இருக்கும் சக்தி, தன்மை மற்றொரு சமயத்தில் காணப்படுவதில்லை.
23. இராமாயணக் காலம் என்பதில் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் இருக்கிறது.
24. வேதங்களுக்குப் பிறகுதான் புராணங்கள் உண்டாகி இருக்க வேண்டும். புராணங்களில் தான் இராமாயணம், பாரதம், கடவுள்கள், அவதாரங்கள் காணப்படுகின்றனவே ஒழிய, வேதத்தில் இல்லை.
25. வேதத்தில் விஷ்ணு ஒரு சாதாரண, மூன்றாந்தர, நாலாந்தர தேவன்
26. சிவனும், பிர்மாவும் வேதத்தில் இல்லை . ருத்திரன் தான் காணப்படுகிறான்.(நூலிலிருந்து பக்.5-7)

படிக்க:
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

இராமாயணம் ஆரிய கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் இலக்கியம்!

ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள்! எப்படியெனில்,

அவர்கள் குறிப்பிடும் காலக்கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம், லட்சம் சதுர்யுகம், கோடி சதுர்யுகம், என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள்.

தாசிகள் கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.

ஆண்களைப் பலாத்காரம் செய்த விபச்சாரிகளையும் பதிவிரதை’லிஸ்டில்’ சேர்த்து விடுவார்கள்.

மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.

10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறு கோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.

இப்படியாக இவை போன்ற ஏராளமான பொய்கள், புனை சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.

இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையை பாரத்தவுடன் இராமனுக்குச் சந்தேகம் உண்டாகிறது. ஏன்? சீதை இதுவரைக் கணவனைவிட்டுப் பிரிந்து சோகத்தால் வாடியவளாகத் தென்படவில்லை. அவள் அணிந்திருந்த ஆடைகளும், ஆபரணங்களும், இராமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது.

சீதையைக் கண்டான்; உன்மீது எனக்கு விருப்பமில்லை என்கிறான். ” நான் எங்கே போவேன்” என்கிறாள் சீதை. ”நீ யாருடனாவது எக்கேடு கெட்டு போ” என்கிறான் ராமன்.

உனக்குத்தான் என் விஷயம் தெரியுமே! ஏன் இராவணனிடமிருந்து மீட்டுவந்தாய்? என்று சீதை இராமனிடம் வாதாடுகிறாள்; சத்தியம் செய்து சீதை தீயில் இறங்க வேண்டும் என்பதாக இறுதியில் சமரசத்துக்கு வருகின்றனர். (நூலிலிருந்து பக்.44-45)

… இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள் ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்? தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூகோலகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனவே, இப்போது பூ தேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்! (நூலின் பின் அட்டையிலிருந்து)

நூல் : இராமாயணக் குறிப்புகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : பெரியார் திராவிடர் கழகம்,
29, இதழியலாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர்,
திருவான்மியூர், சென்னை – 600 041.

பக்கங்கள்: 60
விலை: ரூ 10.00 (முதற் பதிப்பு)

இணையத்தில் வாங்க : periyarbooks | panuval
(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள நூல்கள்தான் இணையத்தில் கிடைக்கின்றன. இப்பதிப்பின் விலை ரூ.30.00)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.