தனக்கு முன்பிருந்த பொருளியலாளர்கள் அனைவரையும் போலவே புவாகில்பேர் தன்னுடைய தத்துவக் கட்டிடத்தைச் செய்முறைக்கு – தான் முன் வைத்த கொள்கையை வலியுறுத்துவதற்கு – உட்படுத்தினார். அவர் தம்முடைய சீர்திருத்தங்களை ஒரே இணைப்பான முறையாக இருந்த அவருடைய தத்துவ ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார். பொருளாதார விஞ்ஞானத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்ற முறையில் அவருடைய பாத்திரத்தை நிர்ணயிப்பது இதுவே.
அவருடைய தர்க்கரீதியான சிந்தனை பெட்டியைப் போலவே இருந்திருக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எது நிர்ணயிக்கிறது என்ற கேள்வியை அவர் கேட்டார்; பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் தேக்கம், நலிவுக்குரிய காரணங்களைப் பற்றி விசேஷமான அக்கறை எடுத்துக் கொண்டார். இந்த இடத்திலிருந்து அவர் ஒரு பொதுவான கேள்வியை நோக்கி முன்னேறினார். தேசியப் பொருளாதாரத்தை இயக்குகின்ற, அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதிகள் எவை?
பொருளாதாரத் தத்துவத்தில் விலைகளின் உருவாக்கத்தையும் அவை மாற்றமடைவதையும் நிர்ணயிக்கும் விதிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்ற ஆசையே அரிஸ்டாட்டில் காலம் முதலாக இருந்திருக்கிறது என்று லெனின் கூறியதை நாம் முன்பே மேற்கோள் காட்டியிருக்கிறோம். நெடுங்காலமாக நடைபெற்று வருகின்ற இந்தத் தேடலுக்கு புவாகில்பேர் தற்சிந்தனை மிக்க கருத்துரையை வழங்கினார்.
நாம் இன்று “உசிதமான விலை உருவாக்கம்” என்று சொல்லக் கூடிய கருத்து நிலையிலிருந்து அவர் இந்தப் பிரச்சினையை அணுகினார். பொருளாதார சமநிலைக்கும் முன்னேற்றத்துக்கும் மிக முக்கியமான நிபந்தனை அளவு விகிதத்திலுள்ள விலைகள் அல்லது சகஜமான விலைகள் என்று அவர் எழுதினார்.
இந்த விலைகள் எப்படிப்பட்டவை? முதலாவதாகவும் முதன்மையாகவும், ஒவ்வொரு துறையிலும் சராசரியாக உற்பத்திச் செலவுகளை ஈடு செய்து, குறிப்பிட்ட அளவு லாபத்துக்கு இடமளித்து நிகர வருமானத்தைக் கொடுக்கின்ற விலைகள் இவை. மேலும் இந்த விலைகள் பண்ட விற்பனை எத்தகைய தடையும் இல்லாமல் நடைபெறுவதற்கும் நுகர்வு செய்வோர் நிலையாக வாங்கிக் கொண்டிருப்பது நீடிப்பதற்கும் உதவுகின்றன. கடைசியாக, இந்த விலைகளின் கீழ் பணம் “அதன் இடத்தில் இருக்கும்”; அது வழங்கீடுகள் செய்வதற்கு உதவியாக இருக்குமே தவிர மக்கள் மீது கொடுங்கோன்மையான ஆதிக்கம் செலுத்தாது.
புவாகில்பேர் விலைகளின் விதியை, அதாவது சாராம்சத்தில் மதிப்பின் விதியைப், பொருளாதாரத்திலுள்ள அளவு விகிதத் தன்மையின் வெளிப்பாடு என்று விளக்கியது அந்தக் காலத்தில் முற்றிலும் புதுமையானதாகவும் துணிச்சலானதாகவும் இருந்தது. அவருடைய தத்துவத்திலுள்ள அடிப்படையான மற்ற கருத்துக்கள் இந்தக் கருத்தோடு சம்பந்தப்பட்டவையாகும். விலைகளை இப்படி அணுகியதும் பொருளாதாரத்தில் ”உசிதமான விலைகளை” ஏற்படுத்துவது எப்படி என்ற கேள்வி இயற்கையாகவே எழுந்தது. இந்த விலை அமைப்பு சுதந்திரமான போட்டி நடைபெறும் பொழுது இயற்கையாகவே வளர்ச்சி அடையும் என்று புவாகில்பேர் கருதினார்.
தானியத்துக்கு சாத்தியமான உச்ச விலைகளை நிர்ணயித்தது போட்டியிடுகின்ற சுதந்திரத்தைப் பிரதானமாக மீறியதாகும் என்று அவர் கருதினார். தானியத்தின் உச்ச விலைகளை ரத்துச் செய்தால் அதன் சந்தை விலைகள் அதிகரிக்கும்; அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் கூடுதலாகும்; தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்களின் தேவை அதிகரிக்கும்; அவற்றின் உற்பத்தி பெருகும். இதரவை, சங்கிலித் தொடர் போன்ற இந்த விளைவுகளினால் எங்கும் “அளவு விகித மான விலைகள்” ஏற்படுவதும் பொருளாதாரம் ஓங்கித் தழைப்பதும் உறுதியாகும்.
Laissez faire, laissez passer (1) என்ற பிரபலமான சொற்றொடரை முதலில் சொன்னது யார் என்பது இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் இச்சொற்றொடர் சுதந்திரமான வர்த்தகத்துக்கும் பொருளாதாரத்தில் அரசு தலையிடாமல் இருப்பதற்கும் பின்பற்றப்படும் பொன் மொழியாயிற்று; அதன் காரணமாக மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கோட்பாடாயிற்று.
இதை முழுமையாகவோ பகுதியாகவோ கூறியதாக பதினான்காம் லுயீயின் காலத்தில் வாழ்ந்த பணக்கார வியாபாரியான பிரான்சுவா லெஜான்ர், மர்கீஸ் ட அர்ஜன்சோன் (1730 -க்களில்), வர்த்தக மேற்பார்வையாளரும் டியுர்கோவின் நண்பருமான வென்சான் குர்னே ஆகியோரைக் கூறுகிறார்கள். புவாகில்பேர் இந்தச் சொற்றொடரைக் கையாளாவிட்டாலும் அதிலடங்கியிருக்கும் கருத்தை மிகத் தெளிவாகச் சொன்னது அவரே. ”இயற்கைச் சக்திகளை இயங்க அனுமதிக்க வேண்டும்…” என்று அவர் எழுதினார்.
Laissez faire, laissez passer என்ற சொற்றொடருக்கு முதலாளித்துவத் தொழில்துறை உரிமையாளரின் தன்னகங்காரமான கருத்தை புவாகில்பேர் கொடுக்கவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பிற்காலத்தில் தான் இந்த அர்த்தம் அதற்கு ஏற்பட்டது. அவருடைய எழுத்தில் இந்தக் கருத்து மனிதாபிமான மற்றும் முக்கியத்துவமான ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கிறது. இயற்கைக்குப் புறம்பான வழிகளில் வருமானத்தைப் பெருக்குவதற்கு முயன்று கொண்டிருந்த பழைய அரசின் பொருளாதாரத்துக்கு மாறுபட்டிருந்த வகையில் அது மனிதாபிமானமுடையது. முதலாளித்துவ வாழ்க்கையை விடுவிப்பதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்ற வகையில் அது முக்கியத்துவமானது. அது எப்படிப்பட்டது என்று காட்டுவதற்காக அதை விடுவிக்க வேண்டியிருந்தது”. (2)
அதே சமயத்தில் புவாகில்பேர் அரசின் பொருளாதாரக் கடமைகளை நிராகரிக்கவில்லை. அவரைப் போல யதார்த்த உணர்வும், செய்முறைத் தன்மையும் கொண்ட ஒருவர் அவ் வாறு நிராகரிப்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாது.
அரசு – குறிப்பாக பொருத்தமான வரி விதிப்புக் கொள்கையின் உதவியோடு- அதிகமான நுகர்வையும் பொருள்களின் விற்பனையையும் நாட்டில் ஊக்குவிக்க முடியும் என்று அவர் அனுமானித்தார். நுகர்வுச் செலவு குறைகிற பொழுது பண்டங்களின் உற்பத்தியும் விற்பனையும் தவிர்க்க முடியாதபடி குறைகிறதென்பதை அவர் உணர்ந்தார். ஏழை மக்களின் ஊதியம் அதிகரித்து அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளும் குறைக்கப்படுகிற பொழுது அது குறையாது; ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வருமானங்களைச் சீக்கிரமாகச் செலவழித்துவிடக் கூடியவர்கள். இதற்கு மாறான வகையில் பணக்காரர்கள் தங்கள் வருமானத்தைச் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்களாதலால் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதிலுள்ள கஷ்டங்கள் தீவிரமடைகின்றன.
இத்தகைய கருத்துவாதப் போக்கு இனி வரப்போகும் நூற்றாண்டுகளில் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியில் முக்கியமானதாகும். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி மற்றும் செல்வத்தின் வளர்ச்சிக்குரிய முக்கியமான காரணிகளைப் பற்றி இரண்டு கருத்துப் போக்குகள் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் தோன்றின. இவை அடிப்படையில் வெவ்வேறானவையாகும். முதலாவது போக்கு, சுருக்கமாகச் சொல்வதென்றால் உற்பத்தியின் வளர்ச்சியை நிர்ணயிப்பது திரட்சியின் அளவு மட்டுமே (அதாவது சேமிப்பும் முதலீடு செய்யப்படும் மூலதனமும்) என்பது. தேவைகளைத் தீர்ப்பதற்குரிய பணவசதியைப் பொறுத்தவரை, இது “தானாகவே ஏற்படும்” என்று கூறப்பட்டது. இந்தக் கருதுகோள் பொதுவான மிகை உற்பத்தியினால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்பதை நிராகரிப் பதற்குத் தர்க்க ரீதியாக இட்டுச் சென்றது. இரண்டாவது போக்கு, அதிகமான விகிதத்தில் உற்பத்தி வளர்ச்சி ஏற்பட நுகர்வுத் தேவை ஒரு காரணியென்று வற்புறுத்தியது. இந்தக் கருத்தின் முன்னோடியாக புவாகில் பேர் ஓரளவுக்கு இருந்தார். முதல் கருத்துக்கு மாறான வகையில் இது பொரு ளாதார நெருக்கடிகளைப் பற்றிய பிரச்சினைக்குத் தர்க்க ரீதியாக இட்டுச் சென்றது.
புவாகில்பேர்
புவாகில்பேர் “நெருக்கடிகளை” (நெருக்கடிகள் முதலாளித்துவ வளர்ச்சியின் பிந்தைய கட்டத்துக்கு மட்டுமே உரியவை என்பதால், இங்கே நெருக்கடிகளைப் போன்ற பொருளாதார நிகழ்வுகள் என்று சொல்லலாம்) மோசமான அரசாங்கக் கொள்கையோடு இணைத்தாரே தவிர, பொருளாதாரத்தின் உள் விதிகளோடு இணைக்கவில்லை என்பது உண்மையே.
சரியான கொள்கையைப் பின்பற்றினால் குறைவான தேவை மற்றும் நெருக்கடிகளைத் தவிர்ப்பது சாத்தியம் என்று அவர் சொல்வதாகக் கருதலாம்.(3) இது எப்படியிருந்த போதிலும் செல்வம், பணம், வரிகளைப் பற்றிய ஆராய்ச்சியுரை என்று அவர் எழுதிய முக்கியமான தத்துவப் புத்தகத்தில் ஒரு பொருளாதார நெருக்கடியில் என்ன நடைபெறுகிறது என்பதை அவர் தெளிவாகவும் தத்ரூபமாகவும் வர்ணிக்கிறார். பொருள்களின் பற்றாக்குறையினால் மக்கள் செத்துப் போகலாம்; அதைப் போலவே பொருள்கள் மிகவும் அதிகமாக இருந்தாலும் மக்கள் செத்துப் போகலாம்! பத்து அல்லது பன்னிரண்டு நபர்களை ஒருவருக்கொருவர் சற்றுத் தள்ளி – மரங்களோடு சேர்த்துச் சங்கிலி போட்டுக் கட்டியிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று எழுதுகிறார். ஒருவரிடம் ஏராளமான உணவு இருக்கிறது; ஆனால் அதைத்தவிர வேறு எதுவுமில்லை.
இன்னொருவரிடம் அதிகமான துணிகளும் இன்னொருவரிடம் அதிகமான குடிநீரும் இதரவைகளும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் பொருள்களைப் பரிவர்த்தனை செய்ய முடியாது. அவர்களைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலிகள்தான் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற வெளிப்புறப் பொருளாதார சக்திகள். இவற்றை மனிதன் புரிந்து கொள்ள முடிவதில்லை. அபரிமிதமான பொருள்களுக்கு மத்தியில் பெருந்துன்பத்தைப் பற்றிய இந்தச் சித்திரம் இருபதாம் நூற்றாண்டை நமக்கு நினைவூட்டுகிறது. ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கின்ற பொழுதே இங்கு பால், கடலில் கொட்டப்படுகிறது; சரக்கு வண்டிகளில் இருக்கும் தானிய மூட்டைகளை வண்டிகளோடு சேர்த்து நெருப்பு வைத்து அழிக்கிறார்கள்.
புவாகில்பேரின் கருத்து நிலை – தத்துவத்திலும் கொள்கையிலும் – வாணிப ஊக்கக் கொள்கையினரின் கருத்துக்களிலிருந்து வேறுபடுகிறது: பெருமளவுக்கு அவர்களுக்கு எதிராகவும் இருக்கிறது. அவர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.
தேசத்தின் செல்வம் பணத்திலிருப்பதாக அவர் கருதவில்லை; அவர் பணத்தையும் பண்டங்களின் வடிவத்திலிருக்கும் உண்மையான செல்வத்தையும் வேறுபடுத்திக் கண்டதோடு பணத்துக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த நிலையிலிருந்து அதைக் கீழே இழுப்பதற்கு முயற்சித்தார். கடைசியாக, அவர் பொருளாதார சுதந்திரத்தை வலியுறுத்தினார். இது வாணிப ஊக்கக் கொள்கையிலிருந்து நேரடியாகவே முறித்துக் கொண்டதாகும்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) “சுதந்திரமான உற்பத்தி, சுதந்திரமான விநியோகம்” என்பது இச்சொற்றொடரின் கருத்தாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மன் அறிஞரான ஒளகுஸ்ட் ஓன்கென், இந்தச் சொற்றொடரின் முற்பகுதி சுதந்திரமானஉற்பத்தியையும், பிற்பகுதி சுதந்திரமான வர்த்தகத்தையும் குறிப்பிடுகிறது என்ற கருத்தை வெளியிட்டார்.
(2)K. Marx, F. Engels, Historisch-kritische Gesamtausgabe, Werke, Schriften, Briefe, Moskau u. a., Abt. I, Bd, 3, S. 575.
(3)இந்தப் பிரச்சினை பற்றி புவாகில்பேரின் கருத்துக்கள் அரைகுறையாகவும் முரண்பாடுடைய தாகவும் இருக்கின்றபடியால் பொருளாதாரச் சிந்தனை வரலாற்று ஆசிரியர்கள் அவருடைய பாத்திரத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள். சுதந்திரமான போட்டிச் சூழ்நிலையில் நெருக்கடிகள் ஏற்பட முடியாது என்பது புவாகில்பேரின் கருதுகோளின் பொருள். எனவே “பொருள்களின் சுதந்திரமான பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பில் பொருள்களின் மிகை உற்பத்தி என்ற பொதுவான நிலை ஒரு போதும் இருக்க முடியாது என்று ழான் படீஸ்ட் ஸேய் கூறியதாகச் சொல்லப்படும் பிரபலமான ”சந்தைகளின் விதியை” புவா கில்பேரின் கருத்து (முன்னமேயே கொண்டிருக்கவில்லை யென்றால்) தயாரித்தளித்தது” என்று பிரெஞ்சுப் பொருளியலாளரான அன்ரீ டெனிஸ் எழுதுகிறார் (H, Denis, Histoire de la pensie economique, Paris, 1967, p. 151), ஷம் பீட்டர் இதற்கு மாறான கருத்தைக் கூறுகிறார். புவாகில்பேர் நுகர்வோர் தேவை குறைவதும் மிகை சேமிப்பும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நிலையான தன்மைக்கு ஆபத்தானதாகவும், நெருக்கடிகளுக்கு அது காரணமென்றும் கருதினார்; எனவே அவர் “ஸேயின் விதியைக்” குறை கூறுபவர்களுக்கு, குறிப்பாகக் கெய்ன்சுக்கு ஒரு முன்னோடி என்று வலியுறுத்துகிறார். (3, Schumpeter, History of Economic Arnalysis, p. 285-287).
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
பாசிஸ்டுக் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.
பூர்ஷுவாக்களில் மிகவும் பிற்போக்கான பகுதியினரின் பகிரங்கமான சர்வாதிகாரத்தை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த இத்தாலிய குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவா அணிகளுக்குள் ஏற்பட்ட மோதல்கள், முரண்பாடுகளிலிருந்துதான் பிரதானமாக இந்த நெருக்கடிகள் தலைதூக்கின.
இத்தாலிய பாசிசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை இதர இயக்கங்களுக்கு உதாரணமாக ஜெர்மன் பாசிசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. அங்கெல்லாம் மத்தியதர வர்க்கத்தினர், வேலையில்லாதோர் போன்றோரின் அதிருப்தி நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதில் மிகப் பெரும் பங்காற்றி இருக்கிறது. இத்தாலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இத்தகைய தன்மை கொண்டவை அல்ல. அச்சமயம் உழைக்கும் வெகுஜனப் பகுதியினர் பாசிஸ்டுக் கட்சியில் இடம் பெற்றிருக்கவில்லை.
இத்தாலியில் பாசிஸ்டுக் கட்சியில் கலகக் கொடி தூக்கியவர்கள் ஸ்தல பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளின் குட்டி பூர்ஷுவா தலைவர்களும், பாசிஸ்டு சர்வாதிகாரம் அளவுக்கு மீறி தந்த நிர்ப்பந்தத்துக்கு ஆளான கிராமப்புறக் குட்டி பூர்ஷுவா வெகுஜனப் பகுதியினரும்தான். இதனால் அதிருப்தி பெருகி, ரோம் படையெடுப்புக்குப் பிறகு பாசிசத்தின் உள்ளூர் அமைப்புகளில் பிளவு வெடித்தது.
நம்முடைய முன்னாள் தோழர் பாஸ் குயினி 8 1925-27-ம் வருடங்களில் தோன்றிய நெருக்கடிகளைப் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் இது சம்பந்தமான விவரங்களைக் காணலாம்.
ரோம் பேரணி.
உதாரணமாக ஃபோர்னியை எடுத்துக் கொள்வோம். இவர் யுத்தப் பிற்காலத்தைச் சேர்ந்த கோபாவேசமிக்க ஒரு குட்டி பூர்ஷுவா: கிராமப்புற முதலாளிகளிடமிருந்து கைக்கூலி பெற்றவர். அப்படியிருந்தும் இத்தாலிய அரசியல் வாழ்க்கையில் தமக்கு ஒரு மிகப் பெரும் பங்கு இருப்பதாக மனக்கோட்டைக் கட்டிக் கொண்டவர். சாலா, மிசூரி போன்றோரும் இதே வகையைச் சேர்ந்தவர்களே 9, ஒவ்வொரு பாசிஸ்டு அமைப்பிலும் ஒரு கலகத் தலைவன் இருந்தான். அவன் கிளர்ச்சி செய்யவும் குழப்பம் விளைவிக்கவும் சதி செய்து வந்தான். நெருக்கடிகளைத் தூண்டிவிட்டு வந்தான்.
எனினும் எல்லோரும் இவ்வாறு செய்தார்கள் என்று கூற முடியாது. மிகப்பலர் அரசு எந்திரத்திலும் பூர்ஷுவாக்களின் பொருளாதார எந்திரத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தீர்மானமான வழிகாட்டும் நெறிகளைக் கொண்டிராத காப்பீட்டுக் கழகங்கள் போன்ற பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆவதற்கு பாசிஸ்டுகள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல ஊழல்கள் நடைபெற்றன. பெரிய நிறுவனங்களில் பாசிஸ்டுகளின் பெருமளவிலான ஊடுருவலே இதற்குக் காரணம், அங்கு அவர்கள் மோசடிகள் புரிந்தும், தில்லு முல்லுகள் செய்தும், களவாடியும் பெரிய முதலாளிகள் ஆவதற்கும், பொருளாதாரத் துறையில் முக்கிய பங்கேற்பதற்கும் பெரும் பிரயத்தனம் செய்து வந்தார்கள். இது மிக முக்கியமானது. ஏனென்றால், பாசிஸ்டுக் கட்சி இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிவந்து கொண்டிருப்பதை இது பிரதிபலிக்கிறது.
தனிப்பெரும் கட்சியாக இருந்தும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று விரும்பினால், பாசிசம் இந்தக் கலகப் போக்குக்கு முடிவு கட்டுவது இன்றியமையாததாயிற்று. எனவே, முசோலினி இந்தப் பணியில் முனைந்து ஈடுபட்டார்; பாசிஸ்டுக் கட்சி அணிகளை மாற்றத் தீர்மானித்தார். இந்தச் சமயத்தில்தான் முசோலினி இந்தக் கண்டோட்டத்தை உருவாக்கிக் கொண்டார்; எந்தக் கட்சி அணிகளின் உதவியோடு அதிகாரம் கைப்பற்றப்பட்டதோ அதே அணிகளைக் கொண்டு கட்சி அதிகாரத்தை பாசிஸ்டுக் கட்சி தக்கவைத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.
மிசூரி (Alfredo Misuri)
பழைய அணிகளுக்கு எதிரான போராட்டம் எளிதானதாகவோ, ஒரே மாதிரியானதாகவோ இல்லை. இந்த அணிகள் பல்வேறு குழுக்களுடனும் அடிமட்ட ஊழியர்களுடனும் பின்னிப் பிணைந்திருந்தன. பாசிஸ்டுக் கட்சியின் இயைபைப் பரிசீலித்துப் பார்த்தோமானால், 1927 இல்தான் அணிகளின் உண்மையான மாற்றம் ஏற்பட்டது எனலாம். இப்போது 1919 ஆம் வருட அணிகள் இல்லை. மாறாக கிராமப்புற முதலாளிகளும் தொழிலதிபர்களும், முதலாளிகளின் புதல்வர்களான மாணவர்களும், பூர்ஷுவாக்களின் பொருளாதாரக் கட்டமைப்பில் தலைவர்களாக உயர்ந்த பாசிஸ்டுகளும்தான் இருந்தனர். அணிகளை மாற்றும் இந்தப் பணி 1927 ஆம் ஆண்டில் பூர்த்தியடைந்தது. எனினும் பிரச்சினை மிகவும் கடுமையானதாக இருந்தது. இந்தப் பிரச்சினை குறித்து பாசிஸ்டுக் கட்சியில் உக்கிரமான போராட்டம் நடைபெற்றது. சித்தாந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கட்சியின் பாத்திரம் குறித்த பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஸ்தாபனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கட்சியை யார் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ஏனென்றால் இது சம்பந்தமான போராட்டத்தின் விளைவாக இந்தப் பிரச்சினையில் முற்றிலும் வேறுபட்டதொரு கண்ணோட்டம் உருவாயிற்று.
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
8. பாஸ்குனி ஸ்கான்டினோ டிவின்ஸ்குல்லியின் நாம் டி குயூர்ரேயாக இருந்தார், இப்பொழுது இக்னாஸியோ சிலோனி என்று வழங்கப்படுகிறார். இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டியிலிருந்து 1930 இல் சில்லோனி நீக்கப்பட்டார். 1931 ஜூலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என இவரை பற்றி டோக்ளியாட்டி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சி தரும் தன்மை வாய்ந்ததாக இருக்கலாம்.
சீசாரே போர்னி (Cesare Forni)
9. பாசிஸ்டுக் கட்சியின் பல்வேறு முரண் கூறுகளையுடைய அடித்தளத்திலுள்ள முரண்பாடுகள் ரோம் படையெடுப்பையடுத்து உடனடியாக எதிரும் புதிருமாகச் செயல்படும் போக்குகளை ஏற்படுத்தின. பழைய போக்குடைய தேசியவாதிகள், மன்னராட்சி ஆதரவாளர்கள் ஒரு புறம், கட்சியின் சர்வாதிகாரத்தின் கீழ் அரசு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்பிய குட்டி பூர்ஷுவாக்கள் மறுபுறம் – இவர்களுக்கு இடையே ஜால வித்தைகள் செய்து, இவற்றை ஈடு செய்ய முசோலினி முயன்றார். “சகஜநிலைமை வாதிகளுக்கும்” “வளைந்து கொடுக்காதவர்களுக்கும்” இடையேயான நெருக்கடி 1923 மே மாதம் உச்சகட்டத்தை அடைந்தது. தத்துவார்த்த வேலைத்திட்டம் பற்றி பதப்பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் இந்தத் தகராறுக்கு பின்னால் பல்வேறு பிரிவின் தலைவர்களிடையே இருந்த சுயநல ஆசையும் அவர்களிடையே இருந்த உட்பகையும் வெளிவந்தன. சகஜ நிலை திரும்பவேண்டும் என்பதை அளவுக்கு அதிகமாக அனுமதித்ததாக கருதிய முசோலினி, தற்காலிகமாக வளைந்து கொடுக்காதவர்கள் பக்கம் சாய்ந்தார்.
ஸ்குவாட்ரிஸ்டியில் உயர் மட்டத்தில் இருந்த சீசாரே போர்னியும் ரெய்மோன்டோ சாலாவும் வடமேற்கு இத்தாலியில் உள்ள பெரிய நிலவுடமையாளர்களின் கையாட்களாக (அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு) இருந்தனர். பாசிஸ்டு ஆதரவாளர்களான அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதை எதிர்த்தார்கள். அல்பிரிடோ மிசூரி பெருகியாவில் பி.என்.எப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு பாசிஸ்டு தேசியவாதிகள் இணைப்பு ஏற்பட்டவுடன் அதில் மீண்டும் சேர்ந்தார். பி.என்.எப் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதையும் சாதாரண நிர்வாகப் பணிகளில் தலையிடுவதையும் கண்டித்து 1923 மே 29 இல் மிசூரி ஒரு உரை நிகழ்த்தினார். அதற்கு சில மணி நேரங்கள் கழித்து முசோலினியால் அனுப்பப்பட்ட ரெளடிகளால் அவர் தாக்கப்பட்டார்.
பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் தமிழில் : ரா. ரங்கசாமி பக்கங்கள் : 233 விலை : ரூ. 50.00 வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வில்லவன்புதிய கல்விக்கொள்கை குறித்த உரையாடல்களில் முதலாவதாக இருந்தது இந்தி கட்டாயம் எனும் அம்சம்தான். அது பற்றிய நீண்ட விவாதங்கள் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக தொடர்கின்றன. இந்தி வேண்டாம் என்பதற்கு நீங்கள் என்ன தர்க்கபூர்வமான வாதங்களை வைத்தாலும் இந்தி ஆதரவாளர்கள் அல்லது இந்துத்துவ ஆதரவாளர்கள் வைக்கும் எதிர்வாதம் இவை மூன்று மட்டுமே..
இந்தி படிக்காததால் நம்மவர்களுக்கு வட இந்தியாவில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோகின்றது.
திமுக கட்சிக்காரர்கள் இந்தி படிக்கிறார்கள். நம்மை படிக்க விடாமல் தடுக்கிறார்கள்.
கூடுதலாக ஒரு மொழியைக் கற்பது நல்லதுதானே?
இந்தி ஆதரவு கும்பலை இயக்குவது இவைதான். நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சம் (ஒருவேளை இந்தி படிக்காததால் என் பிள்ளையின் எதிர்கால வாய்ப்பு பறிபோய்விட்டால்?)
தாராளமயம் மக்களிடையே வளர்த்தெடுத்திருக்கும் வயிற்றெரிச்சல் (ஒருவேளை ஹிந்தி படிச்சு பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளை மட்டும் நல்ல வேலைக்கு போய்விட்டால்?)
தாராளமயத்தின் கள்ளக்காதலியான மத அடிப்படைவாதம் வளர்த்திருக்கும் பிறமத எதிர்ப்புணர்வு (கிருஸ்தவ ஆங்கிலம் வேணும் ”நம்ம” மொழி வேணாமோ??)
மதவெறி மற்றும் மிடில்கிளாஸ் வயிற்றெரிச்சல் ஆகியவற்றின் கூட்டுவிளைவுதான் திராவிட / தி.மு.க. வெறுப்பு. அதன் பின்னணியில் ஊழல் மீதான கசப்புணர்வு இருப்பதாக நீங்கள் கருதினால் அது கபடத்தனமானது அல்லது உச்சகட்ட பாமரத்தனமானது. உயர்சாதிகளின் ஊழல் குறித்து இந்திய பொது சமூகத்துக்கு எந்த அசூயையும் இருந்ததில்லை. தங்களை ஒதுக்கிவிட்டு சூத்திரகும்பல் ஒன்றால் ஆளமுடிகிறதே எனும் கடுப்பும் (ஊழலில்) தங்கள் பங்கையும் சேர்த்து அவர்கள் தின்கிறார்களே எனும் பொச்சரிப்புமே பார்ப்பன கும்பலின் தி.மு.க. வெறுப்பை கட்டமைக்கிறது. இந்துமத அடிப்படைவாதத்திற்கு பெரிய வழிகாட்டும் நெறிமுறைகள் கிடையாது. பார்ப்பன நலன் என்பது மட்டுமே அதன் ஆதாரம். ஆகவே அவர்களின் உணர்வை தங்களை இந்து என அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோரும் பற்றிக்கொள்கிறார்கள்.
அதனால்தான் இந்த கும்பலின் வெறுப்பு அ.தி.மு.க.வை அதிகம் அண்டுவதில்லை. அண்ணாதுரை அரசியலுக்கு வெளியே சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது. சினிமா, நாடகம், பேச்சு என பல திறமைகளின் வழியே அவர் வருமானம் பெற வாய்ப்பிருந்தது. அவர் மிக எளிமையாகவே வாழ்ந்தார், கடனோடுதான் செத்தார். இத்தகைய கூடுதல் அடையாளம் ஏதும் காமராஜருக்கு இல்லை. ஆனாலும் எளிமையானவர் என்பதற்கு இலக்கணமாக காமராஜர் மட்டுமே இன்றளவும் வலிந்து திணிக்கப்படுகிறார். ஏன்? காமராஜர் பார்ப்பனர்களின் பங்கில் கைவைக்கவில்லை. அண்ணாதுரை அதோடு மோதினார். யார் எளிமையானவர் என்பதில் தொடங்கி எது நல்ல பாடத்திட்டம் என்பது வரைக்கும் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் விதி அசிங்கமான சுயநலம் கொண்டது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்தி ஆதரவும்.
இதில் நடுத்தர வர்க்கத்தின் பார்வை கொஞ்சம் மாறுபட்டது. அவர்களுக்கும் ஊழல் ஒரு சிக்கலில்லை. இன்னும் சொல்வதானால் ஊழலை ஒரு திறமையாக பார்க்க கற்றுக்கொண்ட கும்பல் இது. நம்மை ஒத்த மனிதர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்களே எனும் வயிற்றெரிச்சல் சில சமயங்களில் அவர்களிடம் ஊழல் எதிர்ப்பாக வெளிப்படுகிறது. அதனை எதிர்கொள்ள வெறுமனே தி.மு.க. எதிர்ப்பை முன்வைக்க முடியாது (மேற்சொன்ன விதிப்படி அ.தி.மு.க.வும் அவர்கள் வெறுப்பு பட்டியலில் வருகிறது). ஆகவேதான் சங்கி கும்பல் வேறு வழியில்லாமல் திராவிட கட்சிகள் எனும் பொதுப்பதத்தை பயன்படுத்துகிறது.
தலைப்புக்கு வரலாம், இன்றைய பள்ளிச்சூழலை பரிசீலித்துப் பார்த்தாலே இந்தி மொழியை ஒரு கூடுதல் பாடமாக வைப்பது நீண்டகால அடிப்படையில் எத்தனை அபத்தமானது என்பதும் குறுகிய கால எல்லைக்குள்ளே அதன் தாக்கம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.
ஆரம்பக்கல்வி ஏற்கனவே அதீத சுமையானதாக இருக்கிறது இப்போது. எல்லா தனியார் பள்ளிகளிலும் இந்தி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. அதனால் இந்தியை உண்மையில் கற்றுக்கொண்ட மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளில் 600-க்கும் மேலான குழந்தைகளோடு தனிப்பட்ட உரையாடலை மேற்கொண்டிருக்கிறேன். மூன்றாயிரத்துக்கும் மேலான பிள்ளைகளோடுதான் தினசரி பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில் இருந்து சொல்வதானால், மூன்றாவது மொழி ஒரு தேவையில்லாத ஆணி. அது உங்கள் பிள்ளைகளின் நேரத்தைக் கொன்று அறிவுத்திறனை மந்தமாக்கும். ஹிந்தி விழுங்கும் நேரத்தை மிச்சப்படுத்தினால் அந்த நேரத்தை ஏனைய பாடங்களுக்கு கொடுக்க இயலும்.
இப்போது தனியார் பள்ளிகளில் வாரம் இரண்டு அல்லது மூன்று பீரியட்கள் மட்டுமே ஹிந்தி வகுப்புக்கு தரப்படுகிறது. அதற்கு தேர்ச்சி கட்டாயமில்லை என்பதால் பெரிய பிரச்சினை இப்போது இல்லை. ஆனால் அதன் தேர்ச்சி கட்டாயம் எனும்போது பாடவேளைகள் அதிகமாகும். இப்போதே கணக்கு மற்றும் அறிவியலில் மாணவர்களின் அடைவுத்திறன் குறைவாக இருக்கிறது. ஆகப்பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை பதில் எழுதவைக்கும் அளவுக்கு தயாரிப்பதையே கல்வி என விளங்கிக்கொண்டிருக்கின்றன. பெற்றோர்களுக்கும் அதுவே போதுமானதாக இருக்கிறது. இந்த அழகில் இந்தி கட்டாயம் எனும் சூழல் வந்தால் அது அறிவியல் புலத்தின் அடைவுத்திறனை இன்னும் சிதைக்கும். உங்கள் பிள்ளை மூளை உண்மையாக வளரவேண்டுமா இல்லை நாள்பட்ட சாணி வறட்டியாவது போன்ற வளர்ச்சி வேண்டுமா என்பது பெற்றோர்கள் முடிவெடுத்தாக வேண்டிய அவசர சூழல் இது.
பள்ளிப் பருவத்திலேயே சில மாணவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்கிறார்களே என நீங்கள் கேள்வி எழுப்பலாம். மிகச்சிலருக்கு அது சாத்தியமாகும்தான். அதில் பெரும்பான்மையோர் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பர் அல்லது அம்மொழியை தனியே கற்றுக்கொள்பவர்களாக இருப்பர். மேலும் எல்லா இடங்களிலும் ஒருசில மாணவர்களுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் கூடுதலாக இருக்கும். சிலருக்கு ஓவியம் சிறப்பாக கைவருவதைப்போன்றதுதான் இது. இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் மாணவர்களுக்கு சாத்தியமாவதை ஒரு அளவீடாக வைத்து அது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பது அபத்தம். இந்தியா எப்போதும் மூன்று சதவிகிதம் மக்களுக்காவே சிந்திக்கும். அதனை நீங்களும் கண்மூடித்தனமாக நம்பி உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு வாய்க்கரிசி போடப்போகிறீர்களா என்பதே எங்கள் கேள்வி.
இந்தி காட்டாயமாகும் சூழல் எப்படியிருக்கும் என்பதை பரிசீலிக்கலாம்,
♦ கூடுதல் பாடவேளைகள் இந்திக்கு பகிரப்படும். இப்போது தமிழை எழுதவே அனேக பள்ளிப் பிள்ளைகள் சிரமப்படுகிறார்கள். அதோடு இந்தி மொழியும் ஒரு அதீத சுமையை மாணவர்களுக்கு உருவாக்கும்.
♦ இதனால் பெரும்பான்மை மாணவர்களின் கற்றல் திறன் இன்னும் சிதையும்.
♦ நம்மில் பலருக்கு இந்தி தெரியாது. ஆகவே அந்த மொழிக்கு ஒரு தனிப்பயிற்சி வைக்க வேண்டும். வழக்கம்போல மற்ற பாடங்களுக்கும் தனிப்பயிற்சி வைப்பீர்கள். ஆகவே நாளொன்றுக்கு 12 மணிநேரத்துக்கும் அதிகமாக ஒரு சராசரி மாணவன் படிப்புக்கு மட்டும் செலவிட வேண்டும். இது அவர்கள் மனநல சமநிலையை குலைக்கும். பிறகு அதுவும் உங்கள் செலவுக்கணக்கில் ஏறும்.
♦ ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு என பொதுத்தேர்வுகள் வரிசை கட்டி வரவிருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் உங்கள் பிள்ளை மூன்று மொழிப்பாடங்கள் மற்றும் ஏனைய அடிப்படைப் பாடங்களில் தேற வேண்டும். மதிப்பெண் வெறி ஏற்றப்பட்ட மத்தியதர வர்க்கத்தை முழு பைத்தியமாக்க இந்த ஒரு அம்சமே போதுமானது.
♦ இந்தி விழுங்கிய நேரம் போக மீதமிருக்கும் நேரம் அறிவியல் கணிதத்திறனை குறைக்கும் ஆகவே உங்கள் பிள்ளைகளின் போட்டித்தேர்வு கனவுகளுக்கு எள்ளும் தண்ணீரும் தெளிக்க வேண்டியதுதான்.
♦ அதே நேரம் ஒரு உ.பி. மாணவனுக்கு இந்தி ஆங்கிலம் என இரண்டே மொழிகள்தான் படிக்க வேண்டியிருக்கும். அதிலும் அவர்கள் பள்ளித் தேர்வு நடத்தும் அழகை உலகமே அறியும். ஆக, இந்தி பெல்ட் உயர்சாதி / பணக்கார மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தி இந்தியா முழுக்க இலகுவாக சிறந்த உயர்கல்வி பெறுவார்கள். முக்கி முக்கி மூன்று மொழிகள் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அடிக்கும் ரவுடி கும்பலில் இடம் கிடைக்கும்.
இன்றைய கல்வித்துறைக்கு தேவைப்படும் சீர்த்திருத்தங்கள் மலையளவு இருக்கின்றன. அவற்றை செய்யவே நமக்கு இன்னும் இருபதாண்டுகள் பிடிக்கும் (அதனை இலக்கு வைத்து செயல்பட்டால் மட்டும்). அதில் பா.ஜ.க.வைப்போல ஒரு சாதியின் நலனுக்கான கட்சி கைவைத்தால் நாம் கற்காலத்துக்குத்தான் போவோம். குறுகிய கால அடிப்படையில் பார்த்தாலும் நீண்டகால அடிப்படையில் பார்த்தாலும் மூன்று மொழிகளை படிப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்று எதுவுமே இல்லை. ஆனால் குறுகிய கால மற்றும் நீண்டகால ஆபத்துக்கள் என் ஏராளமானவற்றை பட்டியலிட இயலும்.
மேலும் அறிவியல்பூர்வமான கல்வி என்பது கற்றல் களத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும். மும்மொழிக்கொள்கை கற்றலை எளிமையாக்காது என்பதை வேலை மெனக்கெட்டு விளக்க அவசியமில்லை. உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா அல்லது அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா என்பதை தீர்மானியுங்கள். கடந்த 15 ஆண்டுகளில் நம் கண்ணெதிரே கல்விச்சூழல் சீரழிந்திருகிறது. அற நோக்கில் பார்த்தாலும் தரம் எனும் கோணத்தில் பார்த்தாலும் இதுதான் நிலைமை. அது முற்றாக சிதையாமல் இருக்க புதிய கல்விக்கொள்கை – மும்மொழிக் கொள்கையை எதிர்த்து களமிறங்குவதே இறுதி வாய்ப்பு.
இதே கல்வி முறைதானே அய்யர் வீட்டு பிள்ளைகளுக்கும் கிடைக்கப்போகிறது என பார்ப்பன தாசர்கள் தட்டை தூக்கிக்கொண்டு வரக்கூடும். அதற்கான பதில்: இது பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான நாடு. அவர்களுக்கு இனாமாக கிடைக்கும் பல விசயங்கள் உங்களுக்கும் எனக்கும் காசு கொடுத்தால்கூட கிடைக்காது. கபாலி கோயிலுக்கு காவல் நிற்கும் போலீஸ்காரர் வார்த்தையில் வெளிப்படும் மரியாதை மாரியம்மன் கோயில் திருவிழாவில் காவல் நிற்கும் போலீசின் வார்த்தையில் வெளிப்படாது. அவர்களால் திறக்க முடியாத கதவுகளே இந்த அதிகார கட்டமைப்பில் இல்லை. இந்திய அரசு எந்திரம் எனும் மிருகம் அவர்களைக் கண்டால் காலை நக்கும் நம்மைக் கண்டால் குரல்வலையை கடிக்கும். இங்கே எல்லோரும் சமம்தான் என நம்புவதே உங்கள் பிள்ளைகளுக்கு இழைக்கும் தீங்குதான். உங்களுக்கான விதிகளை அவர்கள் வகுக்கும்போதே தங்களுக்கான விதிவிலக்குகளையும் அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்.
அப்பட்டமான சுயநலத்தோடு இப்பிரச்சினையை நோக்கினாலும் நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிதான் ஆகவேண்டும். காரணம் அது உங்கள் நேரம், உழைப்பு, பணம் என எல்லாவற்றையும் தின்றுவிட்டு உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை வேறொரு பிரிவு மக்களுக்கு கொடுக்கவிருக்கிறது.
போராடினால் மட்டும் என்னவாகிவிடப்போகிறது என்ற கேள்வி அபத்தமானது. இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பான்மை உரிமைகள் போராட்டத்தின் வழியே நமக்கு கிடைத்தவையே. இன்றளவும் போராட்டங்கள் அதற்கான வலுவை உலகெங்கிலும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியே போராட்டங்களால் பலன் இல்லை என்பவர்கள் வாதப்படி பார்த்தாலும், தன் பிள்ளைகளின் அழிவைத் தடுக்கக்கூட முயலாத பெற்றோர்கள் எனும் அவப்பெயரைக் காட்டிலும் தோற்றுப்போகும் போராட்டம் மேலானதில்லையா?
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்”எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
பசுக்குண்டர்களின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர, பசுவதை தடுப்புச்சட்டத்தில் திருத்தங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது மத்தியப் பிரதேச அரசு.
மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், கடந்த புதன்கிழமை இந்த சட்டத் திருத்த முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின்படி வன்முறையில் ஈடுபடும் பசுக் குண்டர்களுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.25,000 முதல் ரூ. 50,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.
மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்
தொடர்ச்சியான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுக்குண்டர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் மனோஜ் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம், சமூகத்தில் கும்பல் வன்முறைகளை அனுமதிக்க முடியாது என்றும், கும்பல் கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொருத்தமான சட்டப் பிரிவுகளை இயற்றும்படியும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் வன்முறை நடத்தும் கும்பல் வன்முறையாளர்கள் மற்றும் உடைமைகளைச் சேதப்படுத்துபவர்களையும், இச்சட்டத் திருத்தத்தின் கீழ் தண்டிக்க முடியும்.
மேலும் இச்சட்டத் திருத்தத்தின்படி கால்நடைகளை எடுத்துச் செல்லும் நபர்கள், அருகில் உள்ள துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று அதற்கான ஆவணங்களை உடன் கொண்டு செல்லவேண்டும் என்றும் ஸ்ரீவத்சவா கூறினார்.
இது ஒருபுறமிருக்க, மத்தியப் பிரதேசத்தின் கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ், “பெரும்பாலான கால்நடை வணிகர்கள் தங்களுடன் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வதில்லை. அவர்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்கிறார்களா அல்லது மாட்டை வெட்ட எடுத்துச் செல்கிறார்களா என்பது தெரியாததால்தான் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்படுகின்றனர். மாஜிஸ்திரேட்டிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் பசுப் பாதுகாவலர்களைத் திருப்திப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.
அதாவது, இவ்வளவு நாட்களாக இந்தியா முழுவதிலும் நடந்த பசுக்குண்டர்களின் வன்முறைக்கு முறையான ஆவணம் இல்லாததுதான் காரணம் என்பது போலவும், இப்போது ஆவணங்கள் இருந்தால் பசுக்குண்டர்கள் பிரச்சினை ஏதும் செய்யமாட்டார்கள் என்றும் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த அமைச்சர்.
இந்துத்துவக் கும்பலின் நோக்கம் பசுப் புனிதத்தை வைத்து நாட்டைக் கலவர பூமியாக்குவதுதானே ஒழிய, பசுவைப் பாதுகாப்பது அல்ல என்பது நன்கு தெரிந்துமே, மத்தியப் பிரதேசத்தின் காங்கிரசு அமைச்சர், பசுக் குண்டர்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் பசுப் பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் பதவியேற்று இரண்டே மாதத்தில் அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில், பசுவைக் கொன்றதாகக் குற்றச்சாட்டப்பட்ட மூன்று முசுலீம்களை “தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின்” கீழ் கைது செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு.
கடந்த 2007 – முதல் 2016 வரையிலான பாஜக ஆட்சியின் போது பசுவதை தொடர்பான 22 வழக்குகளில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது.
இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்ட பெஹ்லுகான்
மத்தியப் பிரதேசத்தின் கந்துவா பகுதியைச் சேர்ந்த நதீம் குரேஷி அவரது சகோதரர் ஷக்கீல் குரேஷி மற்றும் விவசாயி அசம் கான் ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி மாதம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் பின்னர் மூன்று மாத சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், இந்த மூவரும் தே.பா.சட்டத்தை முறியடித்து வெளியே வந்தனர். ஆனால் அவர்கள் பசுவதைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.
“காங்கிரஸ் ஆட்சிக்குவந்ததும் எங்களுக்கு விடிவு காலம் என்று நினைத்தோம், ஆனால் அதேநிலைமைதான் நீடிக்கிறது” என்கிறார் நதீம் குரேஷி. குரேஷி சகோதரர்கள் முன்னாட்களில் கறி விற்பனையகம் நடத்தி வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், போலீசு அனுமதி பெற்ற கசாப்புக் கடைகளில் பசு மாட்டுக்கறிக்கான தேடுதல் வேட்டையை அவ்வப்போது நடத்தும்.
இத்தேடுதல்வேட்டை பயமுறுத்தக் கூடியதாக இருக்கும் என்கிறார் குரேஷி. “எங்கள் பகுதியான பஸ்தியை சுமார் 500 போலீசார் சுற்றி வளைத்திருப்பார்கள். உங்களால் கேள்விக் கூட கேட்கமுடியாது. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சுற்றி வளைத்திருப்பார்கள். இந்த அச்சுறுத்தல் காரணமாகவே நாங்கள் அத்தொழிலை விட்டுவிட்டு, எருமை மாடுகளை வாங்கி விற்கும் வேலையை செய்து வருகிறோம்” என்கிறார் குரேஷி.
கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கந்துவா பகுதியின் மொகாட் போலீசு நிலையத்திலிருந்து வந்த போலீசார், நதீம் மற்றும் ஷக்கீல் குரேஷியைக் கைது செய்தனர். அருகில் உள்ள கர்களி கிராமத்திலுள்ள ஒரு நிலத்தில் நீளமான கத்தியும், இறந்த பசுவின் உடலும் இருந்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறது போலீசு. ஆனால் குரேஷி சகோதரர்கள் இருவரும் சம்பவம் நடந்த அன்று தாங்கள் கந்துவா பக்தியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாமல், ஒரு விவசாயியையும் இதே வழக்கில் குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது, போலீசு.
ஆட்சிக்கு வந்ததும் இத்தோடு நிற்கவில்லை மத்தியப் பிரதேச காங்கிரசு அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பாஜக ஆட்சியில் பசுக்குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லுகான் மீதும் அவரது இரண்டு மகன்கள் மீதும் தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு.
பெஹ்லுகான் கொலையில், கொலைக் குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல்கள் அனைவரும் ஆதாரமில்லை என்ற மோசடியாக காரணம் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பலியான பெஹ்லுகானின் மீதும் அவரது இருமகன்கள் மீதும் கால்நடைகளைக் கடத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாண்டுகள் பழமையான இந்த வழக்கில் அப்போதைய பாஜக அரசின் நிலைப்பாட்டை அப்படியே எடுத்துக் கொண்டு, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு. பசுக்களை இடம் மாற்றிக் கொண்டு செல்வதற்கான ஆவணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பசுவைக் கடத்துபவர்களாகச் சித்தரிக்கிறது, இந்த அரசு.
”பசுவை வெட்டுவதற்காக (கறிக்காக) யாராவது ரூ. 50,000 கொடுத்து பசுவை வாங்குவார்களா? நாங்கள் பசுவை வாங்கியதற்கான ரசீதைக் கையில் வைத்திருந்தோம். தற்போதைய (காங்கிரஸ்) அரசும் இவ்வாறு நடந்துகொள்வதைக் கண்டு எங்களது கடைசி நம்பிக்கையும் நாங்கள் இழந்துவிட்டோம்” என்கிறார் பெஹ்லுகானின் மகனான இர்ஷத் கான்.
தன்னை அழிக்கக் காத்திருக்கும், நயவஞ்சகக் காவிப் பாம்புகளை வாயில்லா ஜீவனாகச் சித்தரித்து பாலும், தேனும் வார்த்துக் கொடுக்கிறது காங்கிரஸ் கட்சி. இசுலாமியர்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பி இந்துக்களை அணிதிரட்ட முயலும் இந்துத்துவக் கும்பலை அம்பலப்படுத்தாமல், அவர்களுக்கு வால்பிடித்துச் செல்கிறது காங்கிரசு. பசுப்புனிதத்தில் தான் பாஜக-வை விட ஒரு படிமேல் என்று காட்ட முயல்கிறது காங்கிரசுக் கட்சி.
கேள்வி 1: இப்போது என் உறவினர் வருகிறார், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி முடித்து பின் ஸ்டெண்ட் வைக்கப்பட்டது. அவர்கள் கேட்கிறார்கள் இந்த ஸ்டென்ட்டின் ஆயுட்காலம் எவ்வளவு என்று.
விடை : ஆஞ்சியோ பிளாஸ்டி முடிந்தபின் அந்த ஸ்டென்டின் வேலையும் முடிந்து ஆயிற்று. அந்த ஸ்டென்டின் மீது மீண்டும் கொழுப்பானது வந்து அடைபட்டால் என்ன ஆகும்? அதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். அதுவும் சிறிது காலத்திற்குள் வேலை செய்யாமல் போய்விடும். இந்த ஆஞ்சியோபிளாஸ்டியை அடைப்பை நீக்குவதற்குத்தான் செய்கிறோம்.
நீக்கிய பின் மேலும் அடைப்பானது வருமா என்பது நோயாளியின் உடலை பொருத்தே அமையும். நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு என அடைப்பை ஏற்படுத்தக் கூடிய காரணி என்னவோ, அதை நாம் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மீண்டும் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. எந்த நோய் அடைப்பை ஏற்படுத்தும் காரணியாக விளங்கியதோ, அதை நாம் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருந்தால் மீண்டும் மாரடைப்பு நேரிடும்.
இப்போது உங்களுக்கு மூன்று ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள் என்றால், நீங்கள் மீண்டும் புகைப்பிடிப்பதையும் அல்லது நீரிழிவு நோய்க்கான காரணிகளையும் தொடர்கிறீர்கள் என்றால், மீண்டும் உங்களுக்கு அடைப்பு வரலாம். ஏற்கனவே வைக்கப்பட்ட ஸ்டெண்ட்டின் மேலேயும் வரலாம். எனவே, ஸ்டென்ட் எத்தனை நாள் வேலை செய்யும் என்ற கேள்வி அபத்தமான கேள்வி. உள்ளிருக்கும் அடைப்பை நீக்கிய உடன் ஸ்டென்ட்டின் வேலையானது முடிந்தது. இதற்குப் பிறகு அடைப்பு வருமா வராதா என்பது நம் உடலில் உள்ள நோயைப் பொறுத்தது.
கேள்வி 2: சில பேர் பைபாஸ் சர்ஜரி செய்தால் அடுத்த பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் ஆனால், ஆஞ்சியோபிளாஸ்டி செய்தால் அவ்வாறு இல்லை என்றும் சிலபேர் கூறுகிறார்கள். இதற்கு நாம் என்ன விடை கூற வேண்டும்?
விடை : எனது நோயாளிகளில் சிலர் ஆஞ்சியோ பிளாஸ்டியும், மேற்கொண்டுள்ளனர் பைபாஸ் சர்ஜரியும் மேற்கொண்டுள்ளனர். பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை முறையாக பின்தொடராமல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு வந்துள்ளார். அவர்களுக்கு நாங்கள் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்துள்ளோம். அதேபோல் ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்ட நோயாளிகளும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு வந்து பைபாஸ் சர்ஜரியும் செய்துள்ளனர்.
ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், சில பேர் பைபாஸ் சர்ஜரி செய்தால் பத்து வருடத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று மேம்போக்காகக் கூறுகின்றனர். அப்படி எந்தவித உத்தரவாதமும் கிடையாது. மருத்துவத்தைப் பொறுத்தவரை நாம் நம் உடலை எப்படி வைத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உத்தரவாதம் கொடுக்க முடியுமேயன்றி, வேறுவழியில் ஏதும் கொடுக்க முடியாது.
ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொண்ட பின்பு எத்தனைக் காலம் மாத்திரை உண்ண வேண்டும் என்று கேட்கிறார்கள். நோயாளியின் தன்மைக்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். இருதயம் சீராக இயங்குவதற்கும், ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டதற்கும் மருந்துகளானது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு மாத்திரைகள் அதிகமாக இருக்கும், ஒரு வருடத்திற்கு பின்பு மாத்திரைகள் அளவில் குறைந்து விடும்.
நான் முன்னமே கூறியது போல, நம் உடம்பில் உள்ள நோயை கட்டுப்படுத்துவதற்கு தான் மாத்திரைகள் வழங்குகிறோம். நோய் வராமல் இருக்க நாம் மேற்கொண்டு முயற்சிக்க வேண்டும். இந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு ஒரு வருடத்திற்கு மேல் சிறப்பாக இயங்குவார்கள். ஆனால், பிரச்சினை என்னவென்றால் மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். இதுதான் மிகவும் தவறு. உடலானது நன்றாகிவிட்டது என நாம் எண்ணக்கூடாது.
நோயை நாம் கட்டுப்படுத்திதான் வைத்துள்ளோம். அது மீண்டும் வராமல் இருக்க நாம் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றி உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். முடிந்த அளவு நாம் பழைய நிலைமைக்குப் போகாமல் இருக்க வேண்டும். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும். ஆனால், மற்றபடி நாம் ஓடலாம், ஆடலாம், பாடலாம் இயல்பாக இருந்து கொள்ளலாம்.
கேள்வி 3 : நிறைய பேர் கேட்கத் தயங்கும் கேள்வி. இயல்பாக இருக்கலாம் என்றால், மாரடைப்பு வந்த பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பதுதான்?
விடை : ஒருவர் இரண்டு மாடி ஏற முடிகிறது என்றால் அவர் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், வயாகரா போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. காரணம் இருதய நோய் வந்து போனவர்களுக்கு, நைட்ரைட் என்னும் மாத்திரை கொடுப்பார்கள். இதை உட்கொள்ளும் போது வயாகரா உட்கொள்ளக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அப்படித் தேவைப்படும் பட்சத்தில் உங்களது மருத்துவரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், முன்னமே நாம் கூறியது போல் ஒருவர் இரண்டு மாடி மூச்சு வாங்காமல் ஏறமுடிகிறது என்றால், தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம்.
கேள்வி 4 : பல பேர் கூறுகிறார்கள் ஆண்களுக்குத்தான் அதிகமாக மாரடைப்பு வரும் என்று. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படாதா?, அப்படி ஏற்படுவதற்கு என்னென்ன காரணிகள் அவர்களுக்கு உண்டு.
விடை : பெண்களுக்கும் மாரடைப்பானது வரும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடம்பில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கிறது. அது அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது. அதை ஈஸ்ட்ரோஜன் என அழைப்பார்கள். எனவே ஒரு 45 அல்லது 50 வயதைத் தாண்டிவிட்டார்கள் என்றால். அவர்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு உண்டாவதற்கான வாய்ப்புகள் வந்து விடுகிறது.
எனவே அவர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் 35, 40 வயதிலேயே பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் நீரிழிவு நோய். நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றால், அந்த ஹார்மோன்களினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இது நீர்த்துப் போகச் செய்கிறது. நாம் என்ன மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், 35 வயதில் ஒரு ஆணுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்றால். அவரை விட அதே 35 வயதில் உள்ள பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே சிறிய வயதில் நீரிழிவு நோய் வருகிறது என்றால். அதை நாம் கவனமாக கையாள வேண்டும். பெண்களின் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், பி.சி.ஓ.டி முதலியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களைப் போலவே பெண்களும் இப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களுடைய வாழ்க்கைப் போக்கையே இவர்களும் தொடர்கிறார்கள். உடல் உழைப்பின்மை போன்றவற்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளில் இனியும் வேறுபாடு பெரிதாகக் காண முடியாது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்க்கரையானது கூடி பின் குறைந்திருக்கும். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகள் உண்டு. நாம் முன்னரே கூறியது போல் உணவு முறைகளை மாற்றி, மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து நோய்க்குத் தேவையான மருந்துகளை உட்கொண்டு, உடற்பயிற்சியோடு வாழ்ந்து வந்தால், நாம் மாரடைப்பை பெரிதும் தவிர்க்கலாம்.
கேள்வி 6 : பொதுவாக எழக்கூடிய கேள்வி, மாரடைப்பு வந்து சென்றபின், ஈ.சி.ஜி பரிசோதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும், கொலஸ்ட்ரால் பரிசோதனை எப்போது மேற்கொள்ள வேண்டும், எக்கோ எப்போது மேற்கொள்ள வேண்டும் ?
விடை : 6, 12, 18 மாதங்களுக்கு நாம் எக்கோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இ.சி.ஜி நாம் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் நாம் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்தால் போதும். ஏனென்றால், நோயாளி மருந்துகளை உட்கொண்டு கொண்டிருப்பார். எனவே வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்தால் போதுமானது.
கேள்வி 7 : கீலேசன் தெரப்பி (Chelation Therapy), என்ற மருந்து ஊசியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எடுப்பதன் மூலம் பைபாஸ் சர்ஜரி செய்யாமலேயே கொழுப்புகளை கரைக்க முடியும் என நம்ப வைக்கப்படுகிறார்கள் நோயாளிகள். அப்படி ஊசிகள் மூலம் கொழுப்புகளைக் கரைக்க முடியுமா? அது தவறு எனில் எவ்வாறு என்பதை விளக்கவும்.
விடை : இதற்கு பதில் முடியாது என்பதே. அடைப்புகளில் சில பேருக்கு கொழுப்புகள் படிந்திருக்கும். அதே சில பேருக்கு கொழுப்புகள் சேர்ந்து கால்சியமும் படிந்திருக்கும். இந்த கால்சியத்தை நம்மால் சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது.
இவர்கள் ஊசி மூலம் இந்தக் கால்சியத்தை கரைப்பதாக கூறுகிறார்கள் அல்லவா. அது கொழுப்பின் மேல் படிந்திருக்கும் கால்சியம் அல்ல மாறாக ரத்தத்தில் கலந்துள்ள கால்சியத்தைத்தான் இவர்கள் ஊசி மூலம் வெளியேற்றுகிறார்கள். இது கொழுப்பையோ அல்லது கொழுப்புகள் மேல் படிந்துள்ள கால்சியத்தையோ எதையும் நீக்காது. மாறாக, ரத்தத்தில் கலந்துள்ள கால்சியத்தை வெளியேற்றும்.
எனவே 80 ஆயிரம், 90 ஆயிரம் என செலவழித்து, இந்த ஊசியையும் அல்லது சில மருந்துகளை உட்கொண்டு விட்டு நோயினால் திரும்பி வந்த நோயாளிகள்தான் அதிகம். இது ஒரு தவறான நம்பிக்கையை கொடுக்கிறது. நீங்கள் இந்த ஊசி செலுத்திய பிறகு எனது கொழுப்பு அடைப்பு நீங்கியது என யாராவது கூறி நேரில் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் நான் அந்த ஊசி செலுத்தும் மருத்துவர்களிடமே கேட்டு இருக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் அனுப்புங்கள் என்று. இன்றுவரை அவர்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை.
அப்படி என்றால் இந்த ஊசி செலுத்துவது முற்றிலும் தவறா என்றால்? நாம் அப்படிக் கூறிவிட முடியாது. ஏனென்றால், ஒரு ஆய்வு கூறுகிறது இப்படி ஊசி செலுத்துவதனால் நோயாளிக்கு ஏற்படும் வலியானது குறைகிறது என்று. ஆனால் இதை வைத்துக் கொண்டு, நாம் நடைமுறையில் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை உட்கொண்டு குணப்படுத்தும் முறைக்கு நிகராக இதை நாம் பாவிக்கக் கூடாது.
அப்படி யாராவது இந்த ஊசியை செலுத்துங்கள் என கூறினால் அவர்களிடம் நாம் நேராக கேட்க வேண்டும். “எனக்கு உள்ள அடைப்பை ஊசி செலுத்துவதற்கு முன்பு பரிசோதித்துவிட்டு, ஊசி செலுத்திய ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து நான் பரிசோதித்துப் பார்த்தால் அது நீங்கி இருக்குமா?” என்று வினவுங்கள். அவர் ஆமாம், நீங்கும் என்றால் நீங்கள் என்னிடம் வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எனவே இதற்கு பதில் இதுதான். ஏனென்றால், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையைத்தான் நாம் பின்பற்ற முடியும்.
இதற்கு இணையாக மற்றுமொரு சிகிச்சை உள்ளது. ஈ.ஈ.சி.பி எனக் கூறுவார்கள். இது என்னவென்றால் நம் கையில் இரத்தக் கொதிப்பை பரிசோதிக்கக் கட்டப்படும் துணியால், காலையும், தொடையையும் இறுக்க கட்டிக்கொண்டு இரத்தக் கொதிப்பை ஏறவும், இறங்கவும் செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்கள் வலியானது குறையும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. வயது முதிர்ந்தவர் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரியும் இனி மேற்கொள்ள முடியாது என்றால், இதை நாம் பின்பற்றலாம். ஆனால் இதுவுமே கொழுப்பைக் கரைக்க உதவாது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இவற்றை வைத்து கொழுப்பை நீக்கி விடுவேன் என யாரேனும் கூறினால் நம்ப வேண்டாம். ஆனால், ஈ.ஈ.சி.பி-யை வைத்து வலியை குறைத்து விடுவேன் என யாரேனும் கூறினால் பரிசோதித்து பார்க்கலாம்.
கேள்வி 8: நான் அனைத்து விதமான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டேன் எல்லாம் எனக்கு நார்மலாக உள்ளது. எனக்கு மாரடைப்பு வராது அல்லவா ?
விடை : எல்லாவிதமான பரிசோதனையிலும் நார்மலா வந்தது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது இன்றைய நிலைமை. இதை வைத்துக் கொண்டு நமக்கு மாரடைப்பானது ஏற்படாது என நம்மால் பிற்காலத்தை உறுதியாக சொல்ல முடியாது. எனவே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதுதான். ரத்தக்கொதிப்பை நார்மலாக வைத்துக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், நீரிழிவு நோயை கட்டுக்குள் வையுங்கள், புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.
ஒருவர் டிரெட்மில் டெஸ்ட் எடுத்து இருந்து அதில் நார்மலாக காட்டியிருந்தாலும் ஒருவாரம் கழித்து அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உண்டு. நாம் முன்னர் கூறிய வீடியோவை போலத்தான் 30 சதவீதம் அடைப்புள்ளவருக்கு அந்த டெஸ்டில் நார்மலாகத்தான் காட்டும். அதுவே ஜவ்வு கிழிந்து இரத்தக் கட்டி போய் அடைத்தால் அது மாரடைப்பாக மாறும். எனவே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது நம் வாழ்க்கை முறையை மாற்றுங்கள் என்பதுதான்.
இந்த மாரடைப்பு சம்பந்தமான இரண்டு வீடியோக்களும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம் நன்றி வணக்கம்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2017 – 18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு அரசு அறிவித்த லேப்டாப் இன்னும் வழங்கப்படவில்லை. நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டு ஆகியும் லேப்டாப் வழங்கப்படவில்லை.
இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, “உடனே லேப்டாப் வழங்கு !” என்ற கோரிக்கையை முன்வைத்து 200 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு. அதன் பின் மனு அளிக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்காக மாணவர்கள் கூடியிருந்த நிலையில், விழுப்புரம் நகர போலீசு மீகவும் கீழ்தரமாக செயல்பட்டது. மாணவர்களின் கோரிக்கை என்ன என்று கூட தயாராக இல்லாத போலீசு; மாணவர்கள் வந்திருந்த வாகனங்களைத் தேடித் தேடி பஞ்சர் செய்துள்ளது.
அது மட்டுமல்லாது மாணவர் சரவணன் மற்றும் இன்னும் இரண்டு மாணவர்களை தாக்கவும் செய்துள்ளது. சட்டத்தின் காவலாளிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போலிசு சட்ட விரோதமாக ரவுடி கும்பல் போல் செயல்படுகிறது. விழுப்புரம் நகர ‘காவல்துறை’-யின் இத்தகைய செயல்பாடுகளை பு.மா.இ.மு வன்மையாக் கண்டிக்கிறது.
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம், தொடர்புக்கு : 91593 51158.
மீத்தேன் வாயு என்பது நாம் சமையலுக்கு உபயோகிக்கும் இயற்கை எரிவாயு போன்ற வாயுதான். தற்பொழுது உபயோகித்து வரும் படிம எரிபொருள் வாயுக்கள் தீர்ந்து வருகின்றன. இது நீண்ட நாட்களுக்கு இருக்காது. மேலும் எரிவாயுவின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விலையேற்றமும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் வரக்கூடிய காலகட்டத்தில் மீத்தேன் வாயு எரிவாயு பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த மீத்தேன் வாயு பூமிக்கடியில் சில நூறு அடிகள் ஆழத்தில் நிலக்கரி படுகைகளில் அமிழ்ந்து கிடக்கிறது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி வயல்களின் ஊடே மீத்தேன் வாயு இருக்கிறது என்பது சில ஆய்வுகளில் மீது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து மீத்தேனை வெளியில் கொண்டுவர பல்வேறு பணிகளுக்கான திட்ட வரைவுகளை மத்திய அரசு தயார் நிலையில் வைத்துள்ளது… (நூலின் முன்னுரையிலிருந்து…)
மன்னார்குடி பகுதியில் 1970-களில் தொடங்கிய நிலத்தடி ஆய்வில் இந்தப் பகுதியில் ஏராளமான நிலக்கரிப் படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரிப் படிமமாக (19500 மில்லியன் டன்) கூறப்படுகிறது. இந்த நிலக்கரிப் பகுதி ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது… இந்தப் பகுதி மண்ணியல் தன்மை அமெரிக்காவின் வயாமிங் (wyoming) மற்றும் மாண்டேனோ (Montanno) மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள பவுடர் ரிவர் பேஸின் (Powder River Basin) மண்ணியல் தன்மையை ஒத்ததாக மத்திய அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது. (நூலிலிருந்து பக்.5-6)
நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதால் எழும் பிரச்சினைகளில் மூன்று முக்கியமானவை என்று கருதப்படுகிறது. முன்னரே கண்டபடி மீத்தேன் வாயுவை அதைச் சுற்றியுள்ள நீர்தான் அழுத்தி அதன் இடத்தில் இறுத்தி வைத்துள்ளது. மீத்தேன் எடுக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் இந்த நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். இந்த நீர் மிகவும் அதிக அளவில் வரக்கூடியது மட்டுமல்ல; மிக அதிகமான உப்புகள் உள்ள உப்புநீர். புரடுயூஸ்டு வாட்டர் என அழைக்கப்படும் இந்த கழிவு நீர்தான் பெரும் பிரச்சினை. இந்தக் கழிவுநீரில் உள்ள உப்புகளும் தனிமங்களும் மண்வளத்தைப் பாழாக்கக்கூடியவை.
இவை நிலத்தில் சேர்ந்தால் பயிர்கள் தம் வளர்ச்சிக்கான தாது உப்புகள் அடங்கிய நீரை உறிஞ்சுவது சாத்தியமில்லாது போகும் எனத் தெரிகின்றது. வெளியேற்றப்படும் நீர் எவ்வாறு கையாளப்படும் என கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமோ அரசாங்கமோ தெளிவாகக் கூறவில்லை. வெளியேற்றப்படும் நீர் பாலி எத்திலின் பரப்பபட்ட குளங்களில் சேமித்து வைக்கப்படும்; சூரிய ஒளியில் ஆவியாக்கப்படும்; எஞ்சிய உப்புகள் திடக்கழிவு மேலாண்மை முறைபாட்டின்படி கையாளப்படும் என மேம்போக்காகக் கூறப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலை வளாகத்திற்குள்ளேயே இது முழுமையாக நம்பக்கூடிய முறையல்ல. பரந்துபட்ட கிராமப்புறத்தில் இதனை எப்படி பாதுகாப்பது? எப்படி கண்காணிப்பது? எப்படி பராமரிப்பது? என்பதெல்லாம் விடை இல்லாத கேள்விகளாகவே இருக்கின்றன.
இரண்டாவதாக ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக அங்கிருக்கும் நீரை வெளியேற்றும் பொழுது அதற்கும் மேலே உள்ள நீராதாரங்கள் கீழ் நோக்கி இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மன்னார்குடி பகுதியில் சராசரியாக குடிநீர் மற்றும் பாசனத்திற்காக உபயோகப்படுத்தப்படும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் என்பது 200 அடியிலிருந்து 300 அடிவரை உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 500 அடியிலிருந்து 1800 அடி வரை உள்ள நீரை எடுக்கும் பொழுது மேல்மட்ட நீர் ஊற்றுகளாகிய 300 அடி வரை உள்ள நீரூற்றுகள் கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
மூன்றாவதாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நீரியல் கரைசல் (Hydro Fracturing) என்கிற முறை சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மணலுடன் பல்வேறு விதமான வேதிப் பொருட்களைக் கலந்த கரைசலை நிலக்கரிப் படுகையின் அருகே கொண்டு சென்று மிக வேகமான அழுத்தத்துடன் செலுத்துவார்கள். அப்படி உபயோகப்படுத்தக்கூடிய வேதிப்பொருட்கள் மீண்டும் வெளியேற்றக்கூடிய நீருடன் சேர்ந்து வெளியில் வரும். இந்த வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலை கடுமையாகப் பாதிக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் கடுமையான வியாதிகளை ஏற்படுத்தும் என்று கூறி சர்வதேச நாடுகளில் இதற்கு வலுவான எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெறுகின்றன. (நூலிலிருந்து பக்.11-12)
காவிரி டெல்டா என்றால் என்ன? என்பதில் தொடங்கி, மீத்தேன், நிலக்கரிப் படுகை மீத்தேன் என்பது என்ன? இது எவ்வாறு உருவாகின்றது? மீத்தேன் எடுப்பதால் என்ன பாதிப்பு? நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடும்? மீத்தேன் எடுக்கப்படுவது எப்படி? இத்திட்டத்திற்கு எதிராக உள்ள வழக்கின் இன்றைய நிலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது வரையிலான இயல்பாய் எழும் பல்வேறு கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடையளிக்கிறது, இச்சிறுநூல்.
நூல் : காவிரி டெல்டா மீத்தேன் திட்டம் (விளக்க கையேடு) ஆசிரியர் : சேதுராமன், தேவதாஸ், ப.கு.ராஜன்
வெளியீடு : அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086. தொலைபேசி எண்: 044 – 2811 3630.
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 05
தம் கருத்து நிலைகளை, கண்ணோட்டங்களை, தமது சொந்த தனித்துவத்தை என்னிடமில்லாது வேறு யாரிடம் இவர்களால் நிலைநாட்ட முடியும்? என்னுடன் நடத்தும் விவாதங்களில் இல்லாமல் வேறு எதில் இவர்கள் தம் அறிவு வெற்றியின் மகிழ்ச்சியை, உண்மையைக் கண்டறிந்த சந்தோஷத்தை அடைவார்கள்?
ஆறு வயதுக் குழந்தைகளுடனான “அறிவுச் சண்டையில்” வெற்றி பெறுவது அவ்வளவு கடினமா என்ன? ஆனால், “அறிவுச் சண்டையின்றி” இதற்கான தயாரிப்பு முகமாக சலிப்பான தேர்வுகளை முடித்து விட்டு அவர்கள் அன்றாடம் பள்ளியிலிருந்து திரும்புவதால் யாருக்கு என்ன பயன்?
சிக்கலான கணக்குகளைப் போட நான் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவேன். அதே சமயம் நான் “தவறிழைப்பேன்”, பாவனை நயத்தோடு படிக்கச் சொல்லித் தருவேன். பின் அவர்கள் நான் படிக்கும் போது என்னைத் திருத்துவார்கள். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்வேன், பின்னர் அவர்கள் என்னை வெற்றியடையும் போது மகிழட்டும்.
அவர்கள் புதியவற்றை அறிந்து கொள்வதன் மீது ஆர்வம் காட்டுவார்கள். “உங்களுக்கு எந்த மாதிரிக் கணக்குகளைத் தரட்டும்? சிக்கலான, கடினமான கணக்குகளையா, எளிய, சாதாரணமான கணக்குகளையா?” என்று கேட்கையில் “சிக்கலான, மிகச் சிக்கலான கணக்குகளைத் தாருங்கள்” என்று ஒருமித்த குரலில், வீராவேசமாக அவர்களிடமிருந்து பதில் வரும். எல்லோராலும் கணக்குகளைப் போட முடியாவிடில் பரவாயில்லை! ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு எல்லோரையும் உயர்த்தப் பாடுபட வேண்டும். குழந்தை சிந்தனை உலகில் மூழ்குவான், புதியவற்றை அறிய முற்படுவான்.
குழந்தைகளே, நீங்கள் விரைவிலேயே பள்ளி வாழ்க்கையை விரும்பத் துவங்குவீர்களென நம்புகிறேன். நீங்கள் பாடங்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். பாடங்கள் உங்கள் வாழ்க்கையின் உட்பொருளாகும். எனது செல்வாக்கைப் பொறுத்தமட்டில், உங்களது நல்லறிவையும் நுட்பமான மனதையும் நான் நம்புகிறேன். அனேகமாக, நான் எப்படிப்பட்ட ஆசிரியர் என்று உங்கள் மத்தியில் விவாதம் தோன்றக்கூடும்.
“நீங்கள் எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவர்!” என்பாள் மாரிக்கா. “நீங்கள் எங்களுக்கு எப்போதும் எவ்வளவு சிரிப்பு வரவழைக்கின்றீர்கள் தெரியுமா?”
“இல்லை!” என்று அவளுடன் விவாதம் செய்வான் சாஷா. “அவர் மிகவும் புத்திசாலியானவர்.”
“நீங்கள் அனேகமாக நூறுக்கு மேற்பட்ட நூல்களைப் படித்திருப்பீர்கள், அப்படித்தானே?” என்று போன்தோ என்னைக் கேட்பான்.
“நீங்கள் ஏன் தப்பு செய்கின்றீர்கள்? உண்மையிலேயே உங்களுக்கு இந்த எளிய சொற்களை எழுதத் தெரியாதா?” என்று தேன்கோ ஆச்சரியப்படுவான்.
“நீ என்ன, அவர் வேண்டுமென்றே தான் தப்பு செய்கிறார்” என்று என்னைப் பாதுகாப்பான் கோச்சா.
“நீங்கள் வேண்டுமென்றேதான் தவறு செய்கின்றீர்களா? ஏன்?” என்று புரியாமல் கேட்பாள் ஏக்கா.
“நான் விட்டம் என்றால் என்ன என்று சொல்லித் தந்தேனே உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கீகா தம்பட்டம் அடித்துக் கொள்வான்.
“நீ ஒன்றும் அவருக்குச் சொல்லித் தரவில்லை, அவருக்கு எல்லாமே தெரியும்” என்று மாயா மறுப்பாள்.
“அவரும் மனிதர் தானே, அவருக்கு எப்படி எல்லாவற்றையும் அறிந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? இது முடியாது, இல்லையா?” என்று இராக்ளி என்னைக் கேட்பான்.
என் அன்புக் குழந்தைகளே, இப்படிப்பட்ட உங்களுடைய சந்தேகங்களில்தான் உங்கள் கண்களில் என் செல்வாக்கு வளரும். உங்கள் ஆசிரியரும் ஒரு மனிதர், உங்களுக்குத் தேவையானவர் என்பது புரியும். நான் விருப்பமானவராக இருந்தால், அதை விட உயர்ந்த அங்கீகாரம் உங்கள் மத்தியில் எனக்குத் தேவையில்லை.
இப்படிப்பட்ட முறைக்கெதிராக குரல் எழுப்பும் பாரம்பரிய போதனை முறையைப் பொறுத்தவரை, அது கிடக்கட்டும். உங்கள் மீதான நம்பிக்கை எப்போதும் தொடர்ச்சியாக இருக்க எனக்கு உதவும்.
இப்போது, அடுத்த 15 நிமிடப் பாடவேளை துவங்கும் போது நான், கடைசி பெஞ்சில் தாத்தோ அருகே உட்கார்ந்து, கரும்பலகையை மூடியுள்ள திரையை விலக்கி வலது பகுதியைக் காட்ட யாரிடமாவது சொல்வேன். அங்கே பின்வருமாறு வரையப்பட்டிருக்கும் :
“குழந்தைகளே, எனக்கு ஆறு முக்கோணங்கள் தெரிகின்றன!”
“முக்கோணங்கள் அல்ல சதுரங்கள்” என்று உங்களில் யாராவது என்னைத் திருத்தக்கூடும்.
“ஆமாம், ஆமாம், சதுரங்கள்! நான் என்ன சொன்னேன்?… அங்கே ஆறு சதுரங்கள் வரையப்பட்டுள்ளதாக எனக்குப்படுகிறது. சரியா?…”
….5 நிமிட இடைவேளையின் கடைசி நொடிகள். நம் கல்விப் பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும். இன்னுமொரு கட்டத்தை அனேகமாக நாம் கடக்கக் கூடும்.
“மாரிக்கா, மடி மீதிருந்து இறங்கு. சாஷா, நமது மணியை எடுத்து அடி.”
இஸ்லாமியக் குடியரசு நாடான இரானில் ஆட்சி மாற்றத்தையும், அதனின் அரசுக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட நாள் கனவு. அந்நோக்கில்தான் இராக் மீது போர் தொடுத்த கையோடு, இரானை, “ரவுடி நாடு” (Rogue State) என்றும், “தீமையின் அச்சு” (Axis of Evil) என்றும் வசைமாரி பொழிந்து வந்தது.
பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாக இராக் அதிபராக இருந்த சதாம் உசைன் மீது பழி போட்டது போலவே, இரானின் கொமெய்னி அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகக் குற்றஞ்சுமத்திய அமெரிக்கா, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையுத்தரவையும் ஏவியது.
இப்பொருளாதாரத் தடையுத்தரவு அமெரிக்கா எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்காததாலும், இராக்கில் சன்னி முசுலீம் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட உள்நாட்டுக் கலகங்களைச் சமாளிக்க, ஷியா முசுலீம்கள் பெரும்பான்மையாக உள்ள இரானின் தயவு அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டதாலும் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது.
அதனுடன் இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, சீனா ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளும் இணைந்து கொண்டன. இப்பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அதில் இரு தரப்பும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தப்படி, இரானின் அணு உலைகள் அனைத்தும் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, இரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா தன் பங்குக்கு இரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையுத்தரவுகளை விலக்கிக் கொண்டது.
அமெரிக்காவின் தீவிர வலதுசாரிக் கும்பலும் ஏகாதிபத்திய போர்வெறியர்களும் இந்த ஒப்பந்தத்தை, அதன் தொடக்கந்தொட்டே எதிர்த்து வந்தனர். இரானில் அமெரிக்க அடிவருடி ஆட்சியைத் திணிக்க வேண்டுமே தவிர, அந்நாட்டிற்குச் சிறிய சலுகைகூடக் காட்டக்கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.
டிரம்ப் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோதே இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டுமென போர்வெறியைக் கக்கி வந்தார். அவர் அதிபராகி ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, இரானுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகிக் கொள்ளும் முடிவை அறிவித்ததோடு, இரானின் மீது மீண்டும் பொருளாதாரத் தடையுத்தரவுகளையும் திணித்தார்.
கூட்டுச் செயல்பாடுத் திட்ட ஒப்பந்தப்படி இரான் நடந்து வருவதாகச் சர்வதேச அணுசக்திக் கழகம் சான்றளித்திருப்பதை அதிபர் டிரம்ப் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகப் பழி போட்டு, தனது முடிவை நியாயப்படுத்தி வருகிறார். ஆனால், இதை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்துகூட ஒப்புக் கொள்ளவில்லை. இரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் ஜப்பானும், சீனாவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையுத்தரவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க, இரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு, அவ்வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள ஆறு மாதங்கள் அவகாசம் அளித்தது, அமெரிக்கா. இந்தக் கால அவகாசம் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்ததையடுத்து, இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முற்றிலுமாகத் தடை போட்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் வங்கித் துறை செயல்பாடுகள் மற்றும் உலோக ஏற்றுமதிக்கும் தடையுத்தரவை விரிவுபடுத்தியிருக்கிறது.
இரானைப் பொருளாதாரரீதியாக முடக்குவதன் மூலம், உள்நாட்டில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும் கலகத்தையும் தூண்டிவிடுவது எனும் நோக்கில் இப்பொருளாதாரத் தடையுத்தரவைக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்கா, இன்னொருபுறம், இரானை இராணுவரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் போர்விமானக் கப்பல் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களையும் மேற்காசியப் பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிப் படையைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறது. மேலும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாய்களையும் மேற்காசியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது.
இசுரேல் பிரச்சினை, இசுரேல் லெபனான் பிரச்சினை, இராக் மீது அமெரிக்கா நடத்திய போரால் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சன்னி பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றால் உருக்குலைந்து போயிருக்கும் இராக்கின் பொருளாதார நிலை, சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு அந்நாட்டில் நடந்துவரும் உள்நாட்டுப் போர், இவற்றுக்கு அப்பால் ஐ.எஸ். முசுலீம் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என மேற்காசியப் பகுதியே நிரந்தரப் பதட்டத்திலும் போர் அபாயத்திலும் இருந்துவரும் நிலையில், இரானைக் குறிவைத்திருக்கிறது, அமெரிக்கா. இம்முடிவு எரியும் வீட்டின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிவிடும் முட்டாள்தனமும் திமிரும் இரண்டறக் கலந்தது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உலகப் பொருளாதாரம் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீள வழியில்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையுத்தரவும், அமெரிக்காவின் போர் முன்னெடுப்புகளும் உலகப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் எச்சரித்தும்கூட அமெரிக்க அதிபர் டிரம்பும், ஏகாதிபத்திய போர்வெறி கொண்ட அவரது அமைச்சர்களும் எதையும் காதில்போட்டுக் கொள்ளவில்லை. யார் குடி கெட்டாலும் பரவாயில்லை, இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு வருகிறது, அமெரிக்கா.
ஒருபுறம், உள்நாட்டுப் பொருளாதார நலன்களைக் காப்பது என்ற பெயரில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துக்கொண்டே போகும் தேசிய வெறிக் கொள்கை; இன்னொருபுறம் தனது மேலாதிக்க நலன்களை விரிவாக்கிக் கொள்வதற்கு வெனிசுலா, இரான் மீது பொருளாதாரத் தடையுத்தரவுகளை விதிப்பது, எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டிவிடுவது, போர் அச்சுறுத்தல்களில் ஈடுபடுவது என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார், அதிபர் டிரம்ப். அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதில் வெற்றி பெறுவதற்கும் டிரம்பிற்கு இந்தத் தேசிய வெறியும், மேலாதிக்க போர் வெறியும் தேவைப்படுகிறது.
இரான் அதிபர் ஹஸன் ரௌஹானி.
“கூட்டுச் செயல்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள், எதிர்வரும் 60 நாட்களுக்குள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காணவில்லையென்றால், அந்த ஒப்பந்தத்தின் சில விதிகளை அமல்படுத்த முடியாது என்றும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்துக்குப் பயன்பட்டு வரும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிடுவோம்” என்றும் இரான் அரசு எச்சரித்திருக்கிறது.
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அது போலவே, ஜனநாயகத்தைக் கொண்டுவருவது, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது என்ற முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா புகுந்த எந்தவொரு நாடும் அதன் பிறகு உருப்பட்டதில்லை.
எந்த தாலிபான்களை ஒழிப்பது என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்ததோ, இன்று அதே தாலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. லிபிய அதிபர் கடாஃபியைக் கொன்றுவிட்டு, அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த பிறகு அந்நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக, நாடே சுடுகாடாகிவிட்டது. லிபியாவில் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நுழைந்த பிறகுதான், ஐ.எஸ். முசுலீம் தீவிரவாத அமைப்பு உருவானது.
சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்டு நடத்திவரும் உள்நாட்டுப் போரால், அந்நாடே சீர்குலைந்து, இலட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். ஆப்கான், இராக், லிபியா ஆகியவை பழையதையும் இழந்து, புதிதாக எதுவொன்றையும் பெறாமால், திரிசங்கு நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டன.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடையுத்தரவை மீறி, அதனுடன் வர்த்தக உறவை மேற்கொள்வது குறித்துப் பேசிவரும் நிலையில், மோடி அரசோ இவ்விடயத்தில் நெடுஞ்சாண்கிடையாக அமெரிக்காவின் காலடியில் விழுந்துவிட்டது.
இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதிக்குப் பிறகுதான் இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவே சலுகை வழங்கியிருந்தாலும், மோடி அரசு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே இரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைத்துவிட்டது. அதற்கும் முன்பாகவே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. “இந்திய அமெரிக்கா உறவின் நலன் சார்ந்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக” விளக்கம் அளித்திருக்கிறார், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்த்தன்.
இம்முடிவில் இந்தியாவின் நலன் எங்கே இருக்கிறது? இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு உடனடியாகவே 2,500 கோடி ரூபாய்க்கு மேல் நட்டமேற்படும் எனச் செய்திகள் வெளிவருகின்றன. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க வெறி தொடர்ந்து நீடித்தால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரித்து, அதன் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் (ஏற்றுமதி, இறக்குமதிக்கு இடையிலான வேறுபாடு) அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருவதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், அமெரிக்காவிற்குத் தப்பாமல் தாளம் போட்டுவருகிறார், மோடி.
பயங்கரவாதம் என்பது குண்டு வைப்பதும், கொலை செய்வதும் மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதும் பயங்கரவாதம்தான். அந்த வகையில் இரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடையுத்தரவு இரான் மீது மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் பொருளாதார பயங்கரவாதம் ஆகும்.
பாகிஸ்தான் ஏவிவிடும் முசுலீம் தீவிரவாதத்திற்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகப் பெருமை பேசிவரும் மோடி, அமெரிக்கா ஏவிவிட்டிருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்டுக் கிடக்கிறார்.
அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் இந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்தி, அதாவது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தித் தப்பித்துக் கொள்ளலாம் எனத் திட்டமிடுகிறது, மோடி அரசு. அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதத்தைத் தனது வர்க்கநலன் காரணமாக எதிர்த்து நிற்கத் துணிவில்லாத மோடி அரசு, அதிலிருந்து தப்பிக்க விலையேற்றம் என்ற சர்ஜிகல் ஸ்டிரைக்கை மக்கள் மீது ஏவும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது வறட்சி. முழு பொறுப்பையும் பருவநிலை மாற்றத்தின் மீது சுமத்தி விட முடியாது; ஆட்சியாளர்களுக்கு நீர் மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையில்லாததே நாம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியமான காரணம்.
கையில் குடங்களோடு தண்ணீருக்காக அலைவது அன்றாடம் காணும் காட்சியாகிவிட்டது. மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள். அதை ஆவணப்படுத்தியிருக்கின்றன இந்தப் படங்கள்…
ஒரு பழங்குடியின பெண், பல்கார் மாவட்டத்தில் தண்ணீரைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.
நாசிக் மாவட்டத்தில் இகாட்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு வனத்தில் அமைந்துள்ள குளத்தில் தண்ணீர் சேகரிக்கும் பழங்குடிகள்…
டெண்டேல் கிராமத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கிறார் இவர். இந்த ஊரில் லாரிகள் மூலம் விநியோகிக்கும் தண்ணீர் வாரம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.
பால்கர் மாவட்டத்தில் கோசாலி கிராமத்தின் அருகே, பெரிய பிளாஸ்டிக் கூடையில் தண்ணீரை சுமக்கிறார் இந்தப் பெண்.
நாசிக் அருகே, கால்நடைகளுக்காக வறண்ட நிலையில் உள்ள ஒரு கிணற்றில் இருக்கும் நீரை சுறண்டிக் கொண்டிருக்கிறார்கள் சோனாலி கரூட் (24), புஷ்பா கரூட் (49) இருவரும்.
1973 வரை பதிவான தந்தைப் பெரியாரின் பேச்சுக்களை ஆனைமுத்து ஐயா அவர்கள் சுமார் 2,200 பக்கங்களில் 3 தொகுதிகளாக 1974-ல் வெளியிட்டதை நாம் அறிவோம். அந்த 3 தொகுதிகளையும் பலரும் pdf வடிவில் வைத்திருக்கக்கூடும்.
அப்படியில்லாத நண்பர்களும் இந்நுாலை உங்கள் கணிணியில் வாசிப்பதற்கு உதவியாக இந்த 3 நூல்களின் இணைப்பை இங்கே கொடுத்துள்ளேன். இதில் இரண்டாம் தொகுதியில் மட்டும் பக்.952-லிருந்து 1085 வரை விடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, அந்தப் பக்கங்களுடன் கூடிய இரண்டாம் தொகுதியை வைத்துள்ள தோழர்கள் அந்நூலை pdf வடிவில் கொடுக்கும்படிக் கொள்கிறேன்.
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
பழைய அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டு பாசிஸ்டுக் கட்சியால் ஜீரணிக்கப்பட்ட விவரங்களை ஏற்கெனவே பார்த்தோம். 1920-ம் ஆண்டிலும் 1922-ம் ஆண்டிலும் ரொமாக்னாவையும் எமிலியாவையும் சேர்ந்த பெரும்பாலான குடியரசுவாதிகளும், மாஜினியின் குழுக்களும் குடியரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டன. 1923 மே மாதம் தேசியக் கட்சி இணைக்கப்பட்டதைப் பார்த்தோம். இந்த இணைப்பு இரு வகையில் பலன் தந்தது.
ஒருபுறம் ஸ்தாபனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டதை இது குறித்தது. அதே சமயம் பாசிஸ்டுக் கட்சியின் வளர்ச்சிப் பாதையை இது மாற்றமடையவும் செய்தது. இச்சமயத்தில் பாசிஸ்டுக் கட்சி மிக ஆழமான மாறுதல்களுக்கு உள்ளாகி வந்ததையும் காணலாம். கிரேக்கத்தையும் ரோமாபுரியையும் பற்றிக் கூறுப்படுவதை இந்த இரு கட்சிகளுக்கும் கூறலாம். இணைவுக்கு முன்னர் தேசியக் கட்சி மிக சாதாரணமானதாகவே இருந்தது. சில இடங்களில் பாசிஸ்டுகள் தேசியவாதிகளை முரட்டுத்தனமாக நடத்தினர். இவ்வாறு அவர்கள் வெற்றி கொள்ளப்பட்டனர். ஆனால் பிறகோ இதே தேசியவாதிகள் வெற்றியாளர்களாகி விட்டனர்.
பொட்டாய் (giuseppe bottai)
பாசிச சர்வாதிகாரத்தின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு இது மிக முக்கியமானதாகும். தேசியவாதியான ரோக்கோ இந்த சர்வாதிகார ஆட்சியில் சட்ட அமைச்சரானது தற்செயல் நிகழ்ச்சி அல்ல; இதே போன்று மற்றொரு தேசியவாதியான பொட்டாய் 3 பாசிஸ்டு சர்வாதிகார ஆட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக மாறியதும் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அரசு மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் பாசிஸ்டுகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையே ஒரு போராட்டமே நடைபெற்று வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வின் அடிப்படை சாரம் எப்போதும் தேசியக் கட்சியிடமிருந்தே வந்திருக்கிறது. இவ்வாறே அவர்களது தீர்வின் சாராம்சம் எப்போதுமே பிற்போக்கானதாகவும் பூர்ஷுவாக்களுக்குச் சாதகமானதாகவுமே இருந்து வந்திருக்கிறது.
பெனடூஸ் (Beneduce)
நிட்டியின் ஜனநாயகம், லிபரல் ஜனநாயகம், ரேடிக்கல் ஜனநாயகம், சமூக ஜனநாயகம், ஸ்காட்லந்து வினைமுறைகளைப் பின்பற்றும் கூட்டுரிமைக் கழக ஜனநாயகம் முதலான எல்லா வகையான இத்தாலிய ஜனநாயக அமைப்புகளையும் கலைத்தது மூன்றாவது கட்டமாகும். இடித்துத் தகர்த்துத் தூள் தூளாக்கப்பட்ட இந்த இத்தாலிய ஜனநாயகங்களின், யுத்தத்துக்கு முற்பட்ட ஆண்டுகளில் ஜீவித்திருந்த இந்த ஜனநாயகங்களின் பிரதிநிதிகள் இன்று இத்தாலியப் பொருளாதாரத்தின் கேந்திர இடங்களில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம். இப்போது இத்தாலியப் பொருளாதாரத்தில் மிகவும் அதிகாரம் பெற்ற பெயராக விளங்குவது பெனடூஸ் 4 என்பது. இவர் இக்கட்சிகளில் ஒன்றின் தலைவர். அவரைப் போன்ற மற்றவர்களும் இத்தாலியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
செசரே அலெஸாண்டிரி (cesare alessandri)
1923-ல் கிரோண்டே மாக்சிமலிஸ்டுகள் பாசிஸ்டுக் கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். இவர்களின் தலைவர் செசரே அலெஸாண்டிரி 5. 1924-ல் பாப்புலர் கட்சியின் முறை வந்தது. அது பாசிஸ்டுக் கட்சியை ஆதரித்தது மட்டுமன்றி, அதன் ஜோதியில் முற்றிலுமாகக் கலந்து, முழுக்க முழுக்க பாசிஸ்டாகிவிட்டது. 1922 கோடை காலத்திலும், 1925 அக்டோபரிலும் வலதுசாரி லிபரல்களின் முறை வந்தது. சலாண்ட்ரா 6 முதல் கியோலிட்டி கட்சியின் வலதுசாரிப் பிரிவினர் வரை பலரும் பாசிஸ்டுக் கட்சியில் ஐக்கியமாயினர். முடிவாக, 1927-ல் ரிகோலாவும் அவருடைய பரிவாரத்தினரும் 7 வருகிறார்கள். அவர்கள் பாசிஸ்டுக் கட்சியில் நேரடியாகச் சேராவிட்டாலும் ஒரு வகையில் அதனுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டனர்.
இதுவரை நாம் கூறிவந்ததிலிருந்து பழைய அமைப்புகள் உடைத்து நொறுக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களும் ஏனையோரும் எவ்வாறு பாசிஸ்டுக் கட்சியில் இணைக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இத்தகைய நிலைமையில்தான் பிரச்சினை கூர்மை அடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கட்சிக்கு நெருக்கடிகள் ஆரம்பமாயின. இது ஏன்?
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
3. கியூசெப்பி பொட்டாய் (1895-1959) : ஆட்சிக்கு உள்ளார்ந்த தத்துவத்தை ஏற்படுத்துவதில் மிகவும் ஈடுபாடு கொண்ட அறிவாளிகளில் ஒருவர். 1926 முதல் 1929 வரை கார்ப்பரேஷன்களின் துணைச் செயலாளராகவும் கார்ப்பரேஷன்களின் அமைச்சராக 1929-32 வரையிலும் இருந்த இவர், சோஷலிசத்திலிருந்தும் முதலாளித்துவத்திலிருந்தும் குணாம்சத்தில் வேறுபட்ட கதம்ப உருவான பொருளாதார அமைப்பைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆரம்பத்தில் புதிய பொருளாதார ஏற்பாட்டை வியந்து பாராட்டுபவராக இருந்த பொட்டாய், அரசாங்க பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட பொருளாதார ஜனநாயகத்திற்கும் பாசிசத்தின் கீழ் பூர்ஷுவாக்களின் அரசியல் பொருளாதார சர்வாதிகாரத்தின் இரக்கமற்ற யதார்த்தத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டை அவரால் தீர்க்க முடியவில்லை. உற்பத்தியை ஒருவாறு கட்டுப்படுத்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்க அதிகப்படியான “அவசரநிலை” ஏற்படுத்தியபோது அதனை பொட்டாய் எதிர்த்தபோது 1932-ல் முசோலினி, சர்க்காரிலிருந்து அவரை நீக்கினார். பின்பு 1936 முதல் 1943 வரை பொட்டாய் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பாசிசத்தின் உயர் கவுன்சில் கூட்டத்தில் – 1943 ஜூலை 25-ல் – முசோலினிக்கு எதிராக வாக்களித்தார். அந்தக் கூட்டத்தில் ஆட்சி தன்னைத் தானே கலைத்துக் கொண்டது.
4. வால்டர் பெனடூஸ் (1877-1944) பிஸ்ஸோலட்டியின் சமூக சீர்திருத்தவாதக் கட்சியின் உறுப்பினரான இவர் 1921-22-ல் தொழிலாளர் இலாகா அமைச்சராக இருந்தார்; 1925 பாசிஸ்டு ஆட்சியோடு பகிரங்க ஒத்துழைப்பு அளிப்பதென்ற நிலைக்குச் சென்றார். நடைமுறையில் பயனுள்ளவற்றிற்கும் பொதுப் பணிகளுக்கும் நிதி வழங்குவதற்காக பகுதிப் பொதுக் கடன் வழங்கும் நிறுவனங்களை முதலில் இவர் ஏற்படுத்தியிருந்தார். 1933-ல் தொழில் புனரமைப்புக் கழகம் அமைக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்தார்.
5. அலெஸாண்டிரியின் குழு ஆட்சியுடன் இணங்கிப் போக விரும்பியதால் “கிரோண்டே” என்ற பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டது. விரைவில் (1863—?) அலெஸாண்டிரி பெயர் தெரியாமல் போனார்.
அன்டோனியோ சலாண்ட்ரா (Antonio Salandra)
6. அன்டோனியோசலாண்ட்ரா (1853-1931) தீவிர பழைமை விரும்பும் அரசியல்வாதி; அபுலியனின் நிலவுடமை வர்க்கத்தின் பிரதிநிதி, 1914-16-ல் பிரதம மந்திரியாக இருந்தார். இவரும் இவரது அரசியல் ஆலோசகர், வெளியுறவு அமைச்சர் சிட்னி சொன்னிகோவும், இத்தாலி முதல் உலக யுத்தத்தில் தலையிட ரகசியமாக ஏற்பாடு செய்தனர். இந்தத் தலையீட்டிற்கு பலமான மக்கள் எதிர்ப்பு இருந்தது. ஆனால், புத்தகால நிலைமைகளில் அரசின் அடக்குமுறை அதிகாரங்களுக்கு ஆக்கம் கொடுக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று சலாண்ட்ராவும் சொன்னினோவும் பார்த்தனர். 1922 செப்டம்பரில் தன்னை ஒரு “கெளரவ பாசிஸ்டாக” சலாண்ட்ரா பிரகடனப்படுத்திக் கொண்டார்.
7. தொழிலாளர் பிரச்சினைகள் ஆய்வு செய்யும் தேசியக் கழகமும் பிராப்ளமி டெல் லவோரோ என்னும் அதன் இதழும் பொதுத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் முன்னாள் செயலாளர் ரினால்டோ ரிகோலாவால் 1927-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அவ்வாண்டு ஜனவரி 4-ம் தேதி ரிகோலாவும் ஏனைய சீர்திருத்தவாதச் சங்கத் தலைவர்களும் பொது தொழிலாளர் சம்மேளனத்தை கலைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ரினால்டோ ரிகோலா (Rinaldo rigola)
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னால் ரிகோலாவும் அவருடன் சேர்ந்த சில சீர்திருத்தவாதிகளும் மிலானில் சந்தித்து, கார்ப்பரேட்டில் ”சோதனை” வெற்றி பெறுவதற்குத் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் ஒரு செயல்திட்டத்தையும் அளிப்பதாகக் கூறும் ஒரு தஸ்தாவேஜில் கையொப்பமிட்டனர். வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தையும் சோஷலிசத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் தாங்கள் மறுக்கவில்லை என்று அந்தக் குழு கூறிற்று; ஆனால் அதே சமயம் ஆட்சியின் சீர்திருத்தங்களுக்கும் 1926, ஏப்ரல் 3 சட்டம், அப்போது தயாரிக்கப்பட்டு வந்த தொழிலாளர் சாசனம், வேலைத்திட்டத்திற்கும் சாதகமான கணிப்பை அது அளித்தது.
மேலும், சாராம்சத்தில் ஒத்துழைக்கும் தனது நிலையை யதார்த்தம் என்ற பாசாங்குத் தனத்தின் மூலம் நியாயப்படுத்துவதற்கு, கார்ப்பரேட்டிவிசத்திற்கு தாங்கள் இதற்கு முன்னர் காட்டி வந்த எதிர்ப்பு தொழிலாளர் நலன்களுக்கு உகந்ததல்ல என்று இப்போது உணர்வதாக அந்தக்குழு தனது அறிக்கையில் கூறிற்று. சமூக, பொருளாதாரக் கொள்கையின்பால் பாசிசம் கடைப்பிடிக்கும் கண்ணோட்டம்தான் தொழிலாளர்களின் நலன்களை சிறப்பாகப் பாதுகாக்கும் என்று அது மேலும் கூறியது.
முதல் 10 ஆண்டுக் காலம் இவர்களது ஆய்வு வெளியீட்டை ஆட்சி சகித்துக்கொண்டது. ஏனெனில் அதிதீவிரவாதிகளின் தீங்கற்ற ஆக்கபூர்வமான விமர்சனத்தைவிட அவர்களது ஒத்துழைப்புதான் மிகவும் அனுகூலமானது என்பதை ஆட்சி தெரிந்து கொண்டிருந்தது. 1914லிருந்து 1920 வரை மிலானின் சோஷலிஸ்டு மேயராக இருந்த எமிலி கல்டாரா பிராப்ளமி டெல்லவோரோவுக்கு கட்டுரைகள் அளித்து வந்தார்.
பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் தமிழில் : ரா. ரங்கசாமி பக்கங்கள் : 233 விலை : ரூ. 50.00 வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பாணர் எழுதிய ஹர்ஷ சரித்திரத்தைப் படிப்போர், ஹர்ஷரின் வீரத்தை உணர்வர். கனோஜ் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹர்ஷர், ஆறு ஆண்டுகள் வாளை உறையிலிடாது போர் புரிந்த வீரர், எத்தனையோ வெற்றிகள் கண்டவர். அவர் தோற்று தமது உறைவாளை உறையிலிட்டு ஓடியது, திராவிட நாட்டு எல்லையில்தான்! நருமதைக்குத் தெற்கேதான்! இரண்டாம் புலிகேசி எனும் இரணகளச் சூரன் ஹர்ஷனைத் தோற்கடித்தான்.
இங்ஙனம் வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை. ‘வீராதி வீரர்கள்’ வாழ்ந்த போதெல்லாம் திராவிடம் தனி நாடாகவே இருந்தது; தனிச் சிறப்புடனே விளங்கிற்று:
கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று!
ஏன்? திராவிடம் ஆண்டவனின் அவதார புருடர்களை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? அற்புதங்களை, யோகங்களை நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? இல்லை இல்லை ! வீரத்துடன் இருந்தது.
“மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிரலூகமும் கல்லிமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாடு குநிசியும்!
கால்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயூவித் துலாமும் கைபெய ருசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்…” கொண்டு போரிடும் வீர மரபினராகத் திராவிடர் இருந்ததால், அம்பெய்யும் பொறி, கரிய விரலையுடைய குரங்கு போன்ற கடிக்கும் பொறி, கல்லெறியும் கவண், கோட்டை மீதேற முயலும் எதிரி மீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய். அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுதற்கான பாத்திரம். இரும்புக் கம்பிகளைக் காய்ச்சும் உலை, கல்லும் கவணும் வைக்கும் கூடை, கோட்டை மதில்மீது ஏற முயலும் எதிரிமீது மாட்டி வலிக்கும் தூண்டில் போன்ற கருவி, சங்கிலி , எதிரியின் மீது வீசச் சேவல் தலை போன்ற பொறி , அகழியைத் தாண்டி மேலே ஏறும் எதிரியைத் தாக்கிக் கீழே தள்ள இரும்பு உலக்கை அம்புக்கூட்டம், எதிரிகள் மீது தீ வீசும் பொறி, சிற்றம்புகள் எய்யும் யந்திரம், மதின் மேற்புறத்து உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக் குத்தும் ஊசிகள், மதிலில் ஏறினவன் உடலைக் கிழிக்கும் இரும்பாற் செய்த பன்றி உருவுடைய யந்திரம். மூங்கில் போன்ற உருவுடைய இரும்புக் கம்பிகள், கோட்டைக்கு ஆதரவாகப் போடப்படும் பெரிய மரக்கட்டைகள், அவற்றுக்குக் குறுக்கே போடும் உத்திரங்கள், தடி, ஈட்டி, வேல், வாள் வீசும் பொறி முதலியன கொண்டு போரிட்டனர் திராவிடர்.
சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இந்த நெஞ்சை அள்ளும் சேதியைக் காண்பர்.
அன்று திராவிடர், ஆரியர்போல் “அரி அர மாயை” மேக வாயுவாஸ்திரம், சித்து முதலியன ஜாலங்களை, கட்டுக் கதைகளைப் புனைந்து கொண்டு வாழவில்லை. வீரத்தோடு வாழ்ந்தனர். தனித்து நின்று தனிச்சிறப்புப் பெற்றனர்.
திராவிட நாடு இங்ஙனம் இருக்கவில்லை என்று இந்து மகா சபையினர் கூற முடியுமா? அத்தகைய நாடு மீண்டும் தனிநாடானால், பண்டைக் காலத்திற்கேற்ற பொறிகள், போர்க்கருவிகள் கொண்டு தம்மைத் தாம் பாதுகாத்துக் கொண்டதுடன், வடக்கே ஆரியர் ஏற்படுத்திய எந்த வல்லரசுக்கும் தலைவணங்காது வாழ்ந்தது போலவே, இக்காலப் போர்க்கருவிகளான துப்பாக்கி, தோட்டா, பீரங்கி, வேட்டு, டாங்கி, டார்பிடோ, விமானம், வெடிகுண்டு, கப்பல், சப்மெரைன் முதலியன கொண்டு வல்லரசுகளுக்கு இரையாகாமல் வாகை சூடி வாழ முடியாதா என்பதைத்தான் திருப்பாவை பாடும் திவான்பகதூர் யோசித்துப் பார்த்துப் பதில் கூற வேண்டுகிறோம். கூறுவாரா?
திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.
திராவிடம் தனிநாடாகவே இருந்து வந்தது என்பதைச் சரித்திர, இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு நாம் விளக்கினோம். ஆனால், அது திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி போன்றோர்க்கு விளக்கம் தராது!
”ஆரியர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், திராவிடர் இங்கேயே தோன்றினவர் என்றுரைக்கிறார்கள். இதுவும் தவறு” என்று சாஸ்திரியார் மதுரை மாநாட்டிலே கூறினார். அவருக்குத் ததாஸ்து கூறும் பேர்வழிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் சாஸ்திரியாரும் அவரது சீடர்களும் இங்ஙனம் கூறினாலும், அவர்கள் பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடங்களில் படிப்பது, ‘ஆரியர் வெளிநாட்டார் – திராவிடர் பூர்வகுடிகள் – திராவிடரை ஆரியர் தஸ்யூக்கள் என்று இழிவாகக் கூறினர்’ என்பதுதான். சிறு பிள்ளைகள் உள்ளத்திலே இந்த உண்மை இடம்பெறும்போது நரைத்த நடுங்கிகள் வேறுவிதமாக நாவசைப்பது பற்றி நமக்கென்ன கவலை!
“இந்துக்கள் பெருந்தன்மையான, உதாரணமான நோக்கமுள்ளவர்கள்” என்று சாஸ்திரியார் கூறுகிறார். இது உண்மை என்று சேரியை ஒருமுறை கண்ட எவரேனும் ஒப்புக்கொள்ள முடியுமா? கொடுங்கோன்மைக்கு, மக்களை மக்கள் கசக்கிப் பிழிவதற்கு, மிருகத்தனமாக நடத்துவதற்கு, மனுவை விடச் சிறந்த குரு வேறு எங்கும் இராரே, மனு ஆரிய சிரோமணி! ‘இந்து’ பெருந்தன்மை அதிலே தெரிகிறதே தெளிவாக! இன்னமுமா, ஏய்க்கப் பார்ப்பது?
மலத்தை மிதித்துவிட்டால் காலைக் கழுவினாலே போதும்; மனிதனை (ஆதிதிராவிடனை)த் தீண்டிவிட்டால், குளிக்க வேண்டுமே! பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமே பிராமண குலோத்தமர்கள்! இதுதான் தாராளம், பெருந்தன்மை!
இங்ஙனம் வீணுரை நிகழ்த்திக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் நுழைக்க வேண்டாம். மிதிபடும் புழுவும் சில சமயம் கொட்டும் என்று நாம் சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம்.
சனாதனத்துக்கு, வைதீகத்துக்கு புதுத் தத்துவார்த்தப் பொருள் கொடுத்துவிட்டால் போதாது. “என் இராமன் வேறு, என் வர்ணாஸ்ரமம் வேறு” என்று காந்தியார் கூறுவது போல், ‘சனாதனி பல ஜாதி இருக்க வேண்டுமெனக் கூறலாகாது!’ என்று கூறிவிட்டால் போதாது, தாம் உழைப்பதுதான் சனாதனம், வழக்கத்தில் நடைமுறையில் இருப்பது உண்மையான சனாதனமாகாது என்று திவான் பகதூர் சாஸ்திரியார் உள்ளபடி ‘இருதயப் பூர்வமாக! நம்பினால், இன்று முதல் உண்மைக்கு மாறானது என்று அவர் கருதும்படி இருக்கும். சனாதனத்தை அழிக்க முற்படட்டும், அது வீரம்! அது ஆண்மகன் செயல்!
”முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கேட்கத் தொடங்கியதைப் பார்த்துப் பெரியார் இராமசாமி நாயக்கரும் அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களும், தமிழ்நாடு திராவிடநாடு என்றும், அதை வேறு தேசமாகப் பிரித்துவிட வேண்டும், அதிலிருந்து ஆரியர்களை நீக்கிவிட வேண்டும் என்றும் ஆரம்பித்தார்கள்’’ என்று சாஸ்திரியார் கூறுகிறார்.
பாகிஸ்தான் என்பதின் எதிரொலியல்ல, “திராவிடஸ்தான்” என்ற முழக்கம். மூலம் திராவிடஸ்தான் என்ற முழக்கமே! அதன் வடநாட்டுப் பதிப்பே பாகிஸ்தான் என்ற முழக்கம். பாகிஸ்தான், லாகூர் லீக் மாநாட்டில் எழும்பியது 22-3-40-ல். திராவிட நாட்டைத் தனி நாடாக்க வேண்டும் என்பது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு சென்னையில் கூடிய போது பெரியாரின் பேருரையிலிருப்பது. இது 1938 டிசம்பரில்! இந்த ஆண்டு வித்தியாசங் கூடச் சாஸ்தியாருக்குத் தெரியாமற் போனது அதிசயமே!
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8
அலெக்ஸேய் மெரேஸ்யெவும் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து கொண்டு போனான். எல்லோருடைய உள்ளங்களுக்கும் திறவு கோல் தேடிக்காண கமிஸாருக்கு இயன்றது. ஆனால் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அவருக்கு மசிவதாயில்லை. மெரேஸ்யெவுக்கு அறுவை நடந்த பிறகு முதல் நாளே “வீரம் விளைந்தது” என்ற நவீனம் வார்டிற்கு கொண்டு வரப்பட்டது. மற்றவர்கள் அதை உரக்கப் படிக்கத் தொடங்கினார்கள். இது யாருக்காகப் படிக்கப்படுகிறது என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். ஆனால் இது அவனுக்கு வெகுவாக தேறுதல் அளித்து விடவில்லை. இந்த நவீனத்தின் கதாநாயகன் பாவேல் கர்ச்சாகினை அவன் பிள்ளைப் பருவம் முதலே போற்றி வந்தான். அவனது விருப்பத்துக்கு உரிய கதாநாயகர்களில் அவன் ஒருவனாயிருந்தான். “ஆனால் கர்ச்சாகின் விமானி அல்லவே. விமானத்துக்காக ஏங்குவது என்பதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்ன?” என்று இப்போது எண்ணமிட்டான் அலெக்ஸேய்.
ஆக இந்தச் சந்தர்ப்பத்தில் நவீனம் வெற்றி பெறவில்லை. அப்போது கமிஸார் சுற்றி வளைத்துச் செல்லும் நடையை மேற்கொள்ளலானார். பேச்சுவாக்கில் போல ஒரு மனிதனைப் பற்றிப் பிரஸ்தாபித்தார் அவர். திமிர்வாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த கால்களுடன் பெரிய சமூக வேலையை நிறைவேற்ற அந்த மனிதனுக்கு முடிந்ததாம். உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அக்கறை கொண்டவரான ஸ்தெபான் இனாவிச் ஆகா அப்படியா என்று வியந்தார். தம்முடைய வட்டாரத்தில் ஒரு கை இல்லாத மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும், வட்டாரம் பூராவிலும் தலை சிறந்த வைத்தியர் அவர்தாம் என்றும், அவர் குதிரை சவாரி செய்வதாகவும் வேட்டைக்குப் போவதாகவும், ஒற்றைக் கையால் துப்பாக்கிச் சுடுவதாகவும் அணிலின் கண்ணில் குண்டு பாயும் படி குறி பிசகாமல் சுடுகிறார் என்றும் தாமே விவரிக்கத் தொடங்கிவிட்டார்.
அப்புறம் கமிஸார் காலஞ்சென்ற அகாதமீஷியன் வில்லியம்ஸை நினைவு கூர்ந்தார். இயந்திர டிராக்டர் நிலைய வேலைத் தொடர்பில் கமிஸாருக்கு நேர்முகமாகத் தெரியுமாம். பாதி உடம்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மனிதருக்கு ஒரு கை மட்டுமே வழங்கியதாம். அப்படியும் அவர் கல்லூரித் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தாராம், மிகப் பெரிய அளவில் வேலை செய்து வந்தாராம்.
மெரேஸ்யெவ் இந்தக் கதைகளை எல்லாம் கேட்டு வாய்க்குள் நகைத்துக் கொண்டான். சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி, இயல்பிலேயே விமானி. சிறுவனாயிருக்கையில் அவன் முழாம் பழ வயலைக் காவல் காத்துக் கொண்டிருந்தான். வறண்டு வெடிப்புக் கண்ட நிலத்தில் வாடிய இலைகளுக்கு நடுவே கிடந்தன பிரம்மாண்டமான உருண்டைகள், வோல்காப் பிரதேசம் முழுவதிலும் புகழ்பெற்ற தர்பூஸ் பழங்கள் அவை. அலெக்ஸேய் அந்த வயலைக் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் சிறு வெள்ளித் தட்டாம் பூச்சி ஒன்றின் ரீங்காரத்தை முதலில் கேட்டான், பின்பு வெயிலில் இரட்டை இறக்கைகளுடன் அது மினுமினுக்கக் கண்டான். புழுதி நிறைந்த ஸ்தெப்பிக்கு வெகு உயரே ஸ்டாலின் கிராத் நகரை நோக்கிக் காற்றில் மிதந்து சென்றது அது. அந்த நாள் முதலே விமானி ஆக தீர்மானித்து விட்டான் அலெக்ஸேய். இந்தக் கனவு அது முதல் அவனை விடாது பற்றிக் கொண்டது.
இளங்கம்யூனிஸ்ட் சங்கம் அவனை சோவியத் தூரக் கிழக்குக்கு அனுப்பியது. அங்கே தைகா காட்டில் ஆமூர் நதிக் கரையில் இளமை நகரான கம்ஸமோல்ஸ்க்கை நிறுவுவதில் அவன் பங்கு கொண்டான். ஆனால் பறப்புகள் பற்றிய தன் கனவை அவன் தைகாவிலும் விட்டுவிடவில்லை. நகரை நிறுவியவர்களில் தலைசிறந்த விமானத் தொழிலை மேற்கொள்ள விரும்பிய யுவ யுவதியர்களை அவன் கண்டான். அதுவரை வெறும் திட்டங்களில் மட்டுமே நிலவிய அந்த நகரில் அவர்கள் தங்கள் கரங்களால் தங்கள் விமானப் பயிற்சிக் கழகத்தை கட்டினார்கள் என்பதை நம்புவதே கடினம்.
மங்குல் வந்து, மூடுபனி அந்த பிரம்மாண்டமான நிர்மாண இடத்தைச் சூழ்ந்து கொண்டதும் கட்டுமானப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பராக்குகளில் குழுமி, ஜன்னல் கதவுகளைச் சாத்தி விடுவார்கள். வன்மத்துடன் மெல்லிய ரீங்காரமிட்டவாறு காற்றில் படலம் படலாமாகப் பறந்த கொசுக்களையும் மற்றப் பூச்சிகளையும் அப்பால் விரட்டும் பொருட்டுக் கதவுகளுக்கு முன்னே ஈரக்கிளைகளால் புகை மண்டும் நெருப்பை மூட்டுவார்கள்.
அவர்கள் மரங்களை ரம்பங்களால் அறுத்து வீழ்த்தி, அடிக்கட்டைகளை வேரோடு பிடுங்கி அகற்றி, தரையை சமப்படுத்தி, தைகாக் காட்டில் விமான நிலையத்துக்கு இடம் செய்வார்கள்.
உழைப்புக்குப் பின் நிர்மாணத் தொண்டர்கள் இளைப்பாறுகையில் விமானப் பயிற்சிக் கழகத்தினர், கொசுக்களையும் கடி பூச்சிகளையும் நெருங்கவொட்டாது விரட்டும் மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொண்டு, கோடாரிகளையும் பிக்காசிகளையும் ரம்பங்களையும் மண்வெட்டிகளையும் வெடி மருந்தையும் எடுத்துக் கொண்டு அலெக்ஸேயின் தலைமையில் தைகாவுக்குச் செல்வார்கள். அவர்கள் மரங்களை ரம்பங்களால் அறுத்து வீழ்த்தி, அடிக்கட்டைகளை வேரோடு பிடுங்கி அகற்றி, தரையை சமப்படுத்தி, தைகாக் காட்டில் விமான நிலையத்துக்கு இடம் செய்வார்கள். முடிவில் காட்டைத் திருத்தி விமானப்பறப்புத் திடலுக்குச் சில கிலோ மீட்டர் இடத்தைத் தங்கள் கைகளால் செப்பம் செய்துவிட்டார்கள்.
இந்த விமான நிலையத்திலிருந்துதான் அலெக்ஸேய் பயிற்சி விமானத்தில் முதன் முதலாக வானில் கிளம்பினான். அவனது பிள்ளைப் பிராயக் கனவு முடிவில் நனவாயிற்று.
பிறகு அவன் இராணுவ விமானப் பயிற்சிக் கல்லூரியில் பயின்றான், தானே இளைஞர்களுக்கு அதில் பயிற்சி அளித்தான். அப்போதுதான் போர் மூண்டது. கல்லூரி நிர்வாகிகள் அச்சுறுத்தியதைப் பொருட்படுத்தாமல் அலெக்ஸேய் பயிற்சி ஆசிரியன் வேலையை விட்டுவிட்டுப் போரிடும் இராணுவத்தில் சேர்ந்தான். வாழ்க்கையில் அவனுடைய முன்னேற்றம் எல்லாம், அவனது கிளர்ச்சிகளும் மகிழ்வும், அவனது வருங்காலத் திட்டங்களும் நிகழ்கால வாழ்க்கை வெற்றியும் – எல்லாமே விமானப் பறப்புடன் இணைந்திருந்தன….
இவர்கள் என்னடாவென்றால் வில்லியம்ஸைப் பற்றிக் கதைக்கிறார்கள்!