Sunday, May 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 357

சர்வம் தாளமயம் : மயிலை லஸ்கார்னரிலிருந்து காசிமேட்டின் கஷ்டங்களைப் பேசுகிறது !

ணிரத்னம் படங்கள் மிகுந்த தொழில்நுட்ப நேர்த்தியோடு எடுக்கப்படுபவை. சினிமா கற்றுக்கொள்ள விரும்புகிற பாலகர்களுக்கு நிறைய அடிப்படை பாடங்களை கற்றுத்தரக்கூடியவை. ஆனால் கருத்துரீயிதில் அவை விஷவாயு பரப்புகிற டாக்ஸிக் குப்பைகள்.

ராஜீவ் மேனன்

மக்கள் விரோத அரசியல் கருத்துகளை பாலிஷாக பளபளப்பான காகிதங்களில் சுற்றிக்கொடுப்பதில் ­கைதேர்ந்தவர் மணிரத்னம். ரோஜா, இருவர், உயி­ரே படங்கள் நல்ல உதாரணம். கடைசியாக வெளியான செக்க சிவந்த வானம் வரை அவருடைய சில்மிஷங்களுக்கு குறைவேயில்லை. போகிறது… அவருடைய சிந்தனைப் பள்ளியில் இருந்து உருவாகி வந்தவர் ராஜீவ் மேனன். அவர் முற்போக்கான தலித் வாழ்வியல் படத்தை இயக்கியிருக்கிறார். அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

சமகாலத்தில் தலித் அரசியல் நன்கு விற்கிற பண்டமாக மாறியிருக்கிறது. நிறைய தலித் படங்கள் வருவதும் நல்லதுதானே… உறுதிபட நல்லதுதான். அது என்ன மாதிரியான அரசியலை, விவாதங்களை, பார்வைகளை கருத்தியலை முன்வைக்கிறது, கடத்துகிறது என்பதில்தான் இருக்கிறது ஆபத்து. ஒரு கதை யாருடைய பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது என்பதிலிருந்தே ஒரு படம் பேச விரும்புகிற செய்தியும் அது கடத்த விரும்புகிற அரசியலும் நிர்ணயிக்கப்படுகிறது.

சேரிப்பையன் சபாவில் கச்சேரி பண்ண ஆசைப்படுகிற கதையை… நீங்கள் சபாவில் நின்று கொண்டு சொல்வதற்கும் சேரியில் நின்று கொண்டு சொல்வதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. அதுதான் சர்வம் தாள மயத்தின் சிக்கலே. அது மைலாப்பூர் லஸ்கார்னரில் நின்று கொண்டு காசிமேட்டுக்காரனின் கஷ்டங்களைப் பேசுகிறது.

படிக்க:
♦ இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
♦ வாசகனின் காசு மட்டும் வேண்டும் … அவனது கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா ?

நந்தனார் கதையை நவீன வடிவில் மீளுருவாக்கம் செய்கிற முயற்சியாகவே சர்வம் தாள மயம் படத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நந்தனார் என்கிற நாயன்மாரின் கதை ஒரளவு எல்லோருக்குமே பரிச்சயமாகத்தானிருக்கும். தெரிந்தவர்கள் அடுத்த பாராவிற்கு… கொஞ்சம் பெரிய கதை. தாழ்த்தப்பட்ட புலயர் குலத்தில் பிறந்து சிவபெருமானை அறிந்து பக்தியில் விழுந்து, அதற்காக சேவை செய்து புகழ்பெற்றவர் நந்தனார்… திருப்பூன்கூரின் கோயில் வாசலில் நின்று சிவலோகநாதரை தரிசனம் செய்ய முயல… நந்தி மறைத்து நிற்க… அதை விலக்கி சிவன் காட்சி அளிக்கிறார்.

அடுத்து தில்லையில் சிவபெருமானை தரிசிக்க விரும்புகிறார். ஆனால் அதை நாளை நாளை என தள்ளிப்போட்டு… திருநாளை போவார் என்கிற பெயரே வந்து விடுகிறது. ஒருவழியாக தில்லைக்கு கிளம்புகிற நந்தனாரால் பிறப்பு காரணமாக ஊருக்குள் நுழைய முடியாமல் போகவே ஊரையே சுற்றி சுற்றி வலம் வந்து வழிபட்டு குத்துயிரும் குலையுயிருமாக ஆகிறார். கடைசியில் சிவபெருமானே கனவில் தோன்றி வேள்வித்தீயில் குளித்தால் நீயும் பிரமாணன் ஆகிவிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். சிதம்பரத்தில் இருக்கிற பிரமாணர்கள் எல்லாம் சேர்ந்து வேள்வித்தீ அமைத்து அதில் மூழ்கி குளித்து சுத்தமான பிரமாணனாக ஆக முடிவெடுக்கிறார். அந்த ஊர் ஐயர்களே சேர்ந்து வேள்வித்தீ மூட்டி நீதிபதிகளாக நிற்க நந்தனார் தீயில் இறங்கி தன்னை பிராமணனாக மாற்றிக் கொண்டு இறுதியில் கோயிலுக்குள் நுழைகிறார். எவ்வளவு விஷமத்தனமான கதை இது.

அதே கதைதான் சர்வம் தாள மயத்திலும். இங்கே எதிர்பாராமல் பிரபலமான மிருதங்க வித்துவான் குறித்து தெரிந்து கொள்ளும் தலித் நாயகன் அவர் மேல் பக்தியாகி வழிபடத் தொடங்குகிறான். தானும் அவர் போல ஆக விரும்புகிறான். நந்தனாருக்கு நந்தி போல அவருடைய சிஷ்யன் குறுக்கே நிற்கிறான். அவனை விலக்கி கோயிலில் காட்சி தருகிறார் வித்துவான் (இடுப்பில் துண்டோடு கைகட்டி குனிந்து கோயில் வாசலில் பீட்டர் நிற்கிற காட்சியும்.. அதைத் தொடர்ந்து வித்துவானே வெளியே வந்து அவனுக்கு திருநீரு கொடுத்து சிஷ்யனாக சேர்த்துக் கொள்ளும் காட்சி!). இது திருப்பூன்கூர் எபிசோட்.

நாயகனுக்கு சபாவில் கச்சேரி பண்ணுகிற ஆசை வருகிறது (தில்லை தரிசன ஆசை). கடவுள் சோதனைகள் வைக்கிறார். வித்துவானே நாயகனை விரட்டுகிறார். அதனால் அவன் ஊரையெல்லாம் சுற்றிச்சுற்றி வருகிறான். அடுத்து வித்துவானே மனம் நெகிழ்ந்து அவனிடம் மீண்டும் வந்து கடினமான பயிற்சி கொடுத்து தயார் படுத்துகிறார் (கனவில் காட்சி தருதல்). அதாவது கர்நாடக சங்கீத போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற. அந்த வேள்வித்தீயில் குளித்து தன்னை சுத்தமானவன் என நிரூபித்து இறுதியில் பிரமாண வித்துவானுகளுக்கு இணையாக மிருதங்கம் வாசித்து… பிராமண ஜட்ஜ்களால் போற்றப்பட்டு… பிராமணர்கள் நிறைந்த சபாவில் வாசித்து சாதனை படைக்க படம் முடிகிறது.

படத்தின் முதல் பாதி வரை நாயகன் பச்சிளம் பாலகன். உலகம் அறியாதவன். உலகில் சிறந்த இசை கர்நாடக இசைதான் என நம்புகிறான். ஆனால் இரண்டாம் பாதியில் இந்தியாவை சுற்றுகிறான். ஏராளமான இசைகளை கற்றுத் தேர்கிறான். ஆனாலும் அவனுக்கு கர்நாடக இசைதான் அல்டிமேட் என்பதாக இருப்பதுதான் படத்தின் அடிப்படை.

தலித்கள் போராடி முன்னேறி நெருப்பில் வெந்து மேலே வந்துவிட்டால் அவர்களும் பிரமாணர்களைப் போல மேன்மையான இடத்தை அடையலாம் என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். கரெக்ட்டுதானே என்று தோன்றக்கூடும். பாரதியார், இராமானுஜர் கூட சேரிப்பையன்களுக்கு பூணூலை மாட்டிவிட்டு அவர்களையும் உயர்வானவர்களாக மாற்றிவிட்டதாக கதைகள் உண்டு. அதன் நவீன வடிவம்தான் இந்த ச.தா.ம. ‘அதாவது பாருங்க நாங்க எவ்ளோ முற்போக்கானவர்களாக மாறிவிட்டோம், எவ்ளோ கீழ இறங்கி வந்துட்டோம்’ என்பதுதான் படம் சொல்லும் செய்தியாக இருக்கிறதே தவிர இசையில் உயர்வு தாழ்வில்லை என்பதல்ல!

அதாவது தலித்தாக இருப்பதும், பறைவாசிப்பதும் கீழானது. மிருதங்கம் வாசியுங்கள்… பிரமாணர்களிடம் மார்க் எடுங்கள் உங்கள் தரம் உயரும் என்பதாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். டி.எம்.கிருஷ்ணா கூட அடிக்கடி இப்படி சில சேட்டைகள் செய்வதுண்டு. சேரியில் போய் கர்நாடக சங்கீதம் பாடிக்கொண்டிருப்பார். இந்தப் படமும் அதே பாணியில் ஒரு அரசியலையே முன்னெடுக்கிறது.

பார்ப்பனீயத்துக்கோ அவர்களுடைய ஆதிகாலத்து சடங்குகளுக்கோ எந்த பங்கமும் வந்துவிடாமல் பேலன்ஸ்டான பார்வையில் எலைட்டான ஒரு முற்போக்கு அரசியலை முன்னெடுக்கிறார் ராஜீவ் மேனன். படத்தில் போட்டியில் அமர்ந்திருக்கும் நீதிபதிகள்… ”சேரிலருந்து வந்த பையன் எப்படி வாசிக்கிறான் பாரு” என்று ஒரு இடத்தில் வசனம் பேசுகிறார்கள். அதுதான் ஒட்டுமொத்த படத்தின் குரல். சரி தன் பேரிலிருந்தே மேனனை அகற்றிக்கொள்ள விரும்பாதவரல்லவா ராஜீவ்…

நன்றி : அதிஷா
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

கழிவுகளை மனிதனே அகற்றுகையில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதலிடம் !

0

ழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இந்தியா முழுவதும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய மோசமான பணியில் ஈடுபடுகையில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த பிப்ரவரி 12, 2019 அன்று பாராளுமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சமூகநலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரைக்குமான ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துகையில் 144 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று அதாவலே தெரிவித்துள்ளார். இந்த மரணங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள உத்தரப் பிரதேசத்தில் சுமார் 71 பேர் மரணமடைந்துள்ளனர்.

கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி ஆகிய மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் கழிவகற்றும் பணியில் மனிதர்களை பணிக்கமர்த்தியவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை என்றும் அதாவலே தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களை பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறியதற்கு இரண்டு வாரங்களுக்கும் முன்புதான், தமிழகத்தில் இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் செப்டிக் டேங்கை சுத்தம் செய்கையில் மூச்சுத் திணறி மரணமடைந்தனர்.

“தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள 8 மாநகரங்களில் மட்டும் சுமார் 3000 பேர் கழிவை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடுத்தப்படுகின்றனர்” என்கிறார் சஃபாய் கரம்சாரி அந்தோலன் என்ற நாடுதழுவிய துப்புரவுப் பணியாளர்களுக்கான தன்னார்வ தொண்டு அமைப்பின் தமிழகத் தலைவர் சாமுவேல் வேளாங்கண்ணி.

இந்தக் கணக்கெடுப்பு இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ஆனால் இன்றுவரை தமிழக அரசு கழிவுகளை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை எடுக்கவே இல்லை. கழிவுகளை மனிதனே அள்ளுதல் தடைச்சட்ட விதிகளின்படி அரசு இந்த கணக்கெடுப்பை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் எடுக்கவில்லை.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
♦ மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

மேலும் இங்கு நிலவும் சாதிய அடிப்படையிலான வேலைப் பிரிவினை குறித்து சுட்டிக் காட்டிய அவர், இங்கு தலித்துகள் மட்டுமே கழிவுகளை அகற்றும் பணியில் இருத்தி வைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார். “அவர்கள் வேறு வேலை தேடினாலும், அவர்களுக்கு அவ்வேலைகள் மறுக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன” என்கிறார்.

மேலும், “இத்தொழிலாளர்கள் தங்களை கழிவுகளை மனிதன் அகற்றுவதற்கான தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள தாமாகவே விண்ணப்பப் படிவங்களை நிரப்பித் தந்தாலும், அரசு அதிகாரிகள் அதனை எடுத்துக் கொள்வதில்லை.” என்கிறார்.

“இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சில பலன்களை இத்தொழிலாளர்கள் பெற முடியும். அவ்வாறு பதிவு செய்யும் கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத் தொகையாக ரூ.40,000 அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். மேலும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அவர்களது குடும்பத்தினர் பிற வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான ஆதரவு போன்ற நலன்களைப் பெற முடியும்” என்கிறார் சாமுவேல்.

கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க மாற்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. தஞ்சை மாவட்டதின் கும்பகோணம் நகராட்சி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், இப்பணியைச் செய்வதற்கு இயந்திரங்களை உபயோகிக்கிறது. செயல்முறைப்படுத்தத் தொடங்கியது முதல் கடந்த 8 மாதங்களாக இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது என்கிறார் நகராட்சி கமிசனர் உமா மகேஸ்வரி. “தற்போது ஒரு இயந்திரம் மட்டுமே உள்ளது. மாதத்திற்கு சராசரியாக 250 சாக்கடைக் குழிகளை சுத்தம் செய்கிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு இந்த இயந்திரத்தை இயக்குவதற்குப் பழகிக் கொடுத்து விட்டதால், அவர்கள் வாழ்வாதாரம் இழப்பது என்ற பேச்சுக்கும் இடமில்லை.” என்கிறார்.

கும்பகோணம் நகராட்சியைப் போன்ற முயற்சிகள் வெகு குறைவானதாகவே இருக்கின்றன. சாக்கடைக் குழிகள், செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியில் அரசாங்கத் துறைகளைத் தவிர தனியார்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் முழுக்க முழுக்க மனிதர்களையே இப்பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

மிக அதிகமான மரணங்கள் தனியார் குடியிருப்புகள், அடுக்குமாடிக் கட்டிடங்களில் சுத்தம் செய்கையில்தான் நிகழ்கின்றன என்ற கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்டுகிறார் சாமுவேல்.  தனியாரைப் பொறுத்தவரையில், கழிவகற்றும் லாரியின் மூலமாக சுத்தம் செய்வதா, மனிதர்களை உபயோகிப்பதா என தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் மனிதர்களையே தெரிவு செய்கிறார்கள். ஏனெனில் எது செலவு குறைவானதாக இருக்கிறதோ அதையே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

“ஒரு செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய லாரி மூலமாக எடுத்தால் ரூ.5000 வரை செலவாகிறது. ஆனால் மனிதர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தும் போது வெறும் ரூ.1000 – ரூ.1500 வரையில்தான் செலவாகும். ஆகவே பணியமர்த்துபவர்கள் செலவை கணக்கில் கொண்டு சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள்” என்கிறார் சாமுவேல்.

இத்தகைய வேலையில் மனிதர்களை ஈடுபடுத்துவது குற்றம் என்பதை குறிப்பான குடியிருப்பு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தெரிந்து வைத்துள்ளனரா என்ற கேள்விக்கு, கிட்டத்தட்ட இல்லை என்கிறார் சாமுவேல். ”இத்தகைய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது தண்டிக்கத்தக்க பெரும் குற்றம். ஆனால் இவ்வாறு சட்டத்தை மீறுவதன் விளைவுகளை அவர்கள் அறியவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்கிறார்

ஒரு மனிதரை சாக்கடை அல்லது செப்டிக் டேங்குகளில் கழிவகற்றும் பணிகளில் ஈடுபடுத்துகையில் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், ஒருவர் சுத்தம் செய்கையில் அவருக்கு உதவியாக கூடுதலாக 3 பேர், இதய செயல்பாட்டை தூண்டுவதற்கான கருவி, உடனிருப்பவரில் ஒருவருக்காவது முதலுதவி கொடுப்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும். இவையனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், இவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

“இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இது இத்தொழிலாளர்களை இத்தொழிலிலிருந்து வெளியில் கொண்டுவர ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு வெறுமனே இழப்பீடு தருவதைவிட அவர்களது மரணத்தைத் தடுப்பதற்கான, அவர்களை இந்நிலையிலிருந்து வெளியே கொண்டுவருவதறகான வேலைகளைச் செய்ய வேண்டும்” என்கிறார் சாமுவேல்.


கட்டுரையாளர்  : மேகா காவிரி
தமிழாக்கம்  : நந்தன்

நன்றி  : தி நியூஸ் மினிட்

 

மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

மிழ்நாட்டின் சத்துணவுத் திட்டத்தில் அக்ஷய பாத்ரா என்ற அமைப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அந்த அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் திவ்யா சத்யராஜ் குங்குமச் சிமிழ் கல்வி – வேலை வாய்ப்பு இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் இதைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அமைப்பு, வரும் 2019 ஜூனிலிருந்து தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப் போவதாக திவ்யா அந்தப் பேட்டியில் தெரிவிக்கிறார்.

தமிழக அரசு உண்மையிலேயே இதற்கு அனுமதி அளித்திருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப் பேட்டியில் உள்ள தகவல்களின் அடிப்படையில்தான் இந்தப் பதிவு.

அக்ஷய பாத்ரா என்ற அமைப்பு இஸ்கான் எனப்படும் இன்டர்நேஷனல் கிருஷ்ணா கான்சியஸ்நஸ் என்ற இந்து cult-ன் துணை அமைப்பு. இந்த அமைப்பு ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இந்தப் பணியைச் செய்துவருகிறது. ஆனால் அங்கு அக்ஷய பாத்ராவால் வழங்கப்படும் உணவு மோசமானதாக இருப்பதாக கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

படிக்க:
ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !
♦ சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

இந்தியாவில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, ஒதிஷா போன்ற பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் மதிய உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் முட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அக்ஷய பாத்ரா அமைப்பு உணவில் பூண்டு, வெங்காயம் இல்லாமல் உணவை பரிந்துரை செய்யும் ஒரு அமைப்பு. சத்துணவு வழங்க இந்த அமைப்பை அனுமதிக்கலாமா?

திவ்யா சத்யராஜ் தமிழக சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு செய்திருப்பதாகவும் கூறுகிறார். அந்த ஆய்வு முடிவு என்னவென்று தெரியவில்லை. பூண்டு, வெங்காயம் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதுதான் அந்த ஆய்வு முடிவா?

சத்துனவில் முட்டை வழங்கப்படும் மாநிலங்களின் விவரம்

தவிர, அந்தக் கட்டுரையில் போகிறபோக்கில் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. அதாவது, 12 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அகஷ்ய பாத்ராதான் உலகின் மிகப் பெரிய சத்துணவுத் திட்டம் என்கிறது கட்டுரை. அப்படியல்ல. 1982 ஜூலை 1 -ஆம் தேதி இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதே, சுமார் 56 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கியது தமிழக அரசு.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவை அரசுதான் தரவேண்டும்.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

நூல் அறிமுகம் : ஆட்சியில் இந்துத்துவம்

பா.ஜ.க.வின் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் (2001) வெளியான நூல். பதினெட்டு ஆண்டுகள் கடந்திருந்தாலும், மிதவாதி வாஜ்பாயி ஆட்சிகாலத்திலேயே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாசிசக் கருத்துக்களை விதைப்பதற்கு எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களின் வழியே எடுத்துரைக்கிறார், நூலாசிரியர்.

… இந்துத்துவத்திற்கும் பாசிசத்திற்குமான ஒப்புமைகள் தற்செயலானவை அல்ல என்பதை வெளிப்படுத்தும் கட்டுரை ஒன்றையும் இந்துத்துவ ஆட்சியை ஆய்வு செய்கிற கட்டுரைகளுடன் ‘இணைத்துத் தனி நூலாக வெளியிடலாம் என முடிவுசெய்தோம். அதுவே இந்த ‘ஆட்சியில் இந்துத்துவம்’, இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வின் இரண்டாம் பாகம்.

ஆட்சியில் அமர்ந்துள்ள இந்துத்துவம் தனது கவனத்தைக் குவித்துச் செயற்படுத்துகிற ஒரு துறை கல்வி. தேசிய அளவிலான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எதுவுமின்றிப் புதிய கல்விக் கொள்கைகளை அறிவித்து நிறைவேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ‘கடுமையான எதிர்ப்புகளும் மாற்றுக் கருத்துக்களும் நாடெங்கிலும் உருவாகியுள்ளன. அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரிய – மாணவ அமைப்பினர் எனப் பலரும் இவற்றை எதிர்த்துள்ளனர். இவை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தனது திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது நடுவண் அரசு. இப்படி அறிவியலாளர்கள் எல்லாம் கடுமையாக அறிக்கை கண்டனங்களையும் விடுத்துள்ளனரே, அவர்களைக் கூப்பிட்டுப் பேசித்தான் பார்ப்போமே என இந்துத்துவவாதிகளிடையே மென்மையானவராகத் தோற்றம் காட்டுபவரும், பிரதமர் பொறுப்பில் இருப்பவருமான வாஜ்பேயியும் கூடச் சிரத்தை காட்டவில்லை.

சீனாவையும் பாகிஸ்தானையும் பிரதான எதிரிகளாக நிறுத்தி அமெரிக்காவுடன் அணுக்கம் காட்டுகிற வெளியுறவுக் கொள்கை, ஒரு பக்கம் சுதேசியம் பேசிக் கொண்டே மிகப் பெரிய அளவில் பொருளாதாரத் திறப்பையும், தனியார்மயத்தையும் மேற்கொள்கிற பொருளாதாரக் கொள்கை, பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவியல், இவற்றின் விளைவான ஊழல் – ஆகியவற்றிற்கும் இந்துத்துவக் கோட்பாடுகளுக்குமான உறவுகளும் சிந்திக்கத் தக்கன. சனநாயக அடிப்படைகளில் இவர்களுக்குள்ள நம்பிக்கையின்மையும் அதிகாரக் குவியலில் இவர்களுக்குள்ள நம்பிக்கையுமே இத்தகைய நடைமுறைகள் பலவற்றிற்கு அடிப்படைகளாக உள்ளன, சனநாயக நெறிமுறைகளும் நிறுவனங்களும் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த முன்னுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது தென் ஆப்ரிக்காவில் உள்ள தர்பனில் வரும் செப்டம்பரில் (2001) நடைபெற உள்ள ‘இன வாதத்திற்கு எதிரான உலக மாநாட்டில்’ இன வேறுபடுத்தல்களுக்கு இணையாகச் சாதிய வேறுபடுத்தல்களையும் இணைத்து விவாதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தலித் இயக்கங்கள் வைத்துக் கொண்டுள்ளன. இந்துத்துவ அரசு இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. இத்தகைய விவாதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என முடக்குவதில் குறியாய் இருக்கிறது. சொல்கிற காரணம்: சாதியும் தீண்டாமையும் ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாம். ‘ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’ என்ற வாதத்தை இந்துத்துவவாதிகள் தொடர்ந்து முன் வைத்து வருவதும் சிந்திக்கத் தக்கது.

படிக்க:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !

பல்கலைக் கழகங்கள் நடத்தும் கருத்தரங்குகளில் வெளிநாட்டு ஆய்வாளர்கள் பங்கு பெறுவார்களேயானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும், பக்கத்து நாடுகளிலுள்ள ஆய்வறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள் என்றால் அவர்கள் வருகைக்குச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். வெளிநாட்டார்கள் யாரும் உங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் அவர்கள் முறையான விசா முதலிய பயண ஆவணங்களை வைத்திருந்தாலுங்கூட அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் இந்துத்துவ அரசு நாளொரு ஆணைகள் பிறப்பித்து வருகிறது. எல்லாவற்றிலும் அந்நிய
முதலீடுகளுக்குக் கதவை அகல விரிக்கும் இவர்கள் அந்நியப் பத்திரிகைகள், அந்நிய ஆய்வாளர்கள் ஆகியோரைக் கண்டு அஞ்சுதல் என்பது குறித்தும் நாம் சிந்தித்தல் அவசியம். (முன்னுரையிலிருந்து நூலாசிரியர் அ.மார்க்ஸ்)

… ICHR இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற குரோவரின் பெயர் பரவலாக அறியப்பட்டது, விசுவ இந்து பரிசத் ராம ஜன்ம பூமிப் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதுதான். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்கிற பரிசத்தின் கருத்தை ஒரு வரலாற்று ஆசிரியர் என்கிற பெயரில் ஆதரித்தார் குரோவர். 1994-ல் உலகத் தொல்லியல் மாநாடு (WAC) புதுடெல்லியில் நடைபெற்றபோது இதற்காக அவர் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், மே 98-ல் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற கையோடு பி.எல்.குரோவர் ICHR ன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உலகத் தொல்லியல் மாநாடுகளிலும், இந்திய வரலாற்றுக் கழக மாநாடுகளிலும் வகுப்புவாதத்திற்கு எதிரான தீர்மானங்களை எதிர்ப்பது குரோவரின் முக்கிய பணி.

எடுத்துக்காட்டாகக் குரோஷியாவில் உலகத் தொல்லியல் மாநாடு நடைபெற்றபோது (1998) ‘வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்கேற்ற வகையில் தொல்லியல் சான்றுகளைத் திருத்தக்கூடாது’ என்கிற தீர்மானத்தை மாநாட்டில் நிறைவேற்றியபோது அதை எதிர்த்து பி.பி.லால் உள்ளிட்ட சில இந்துத்துவச் சார்பான வரலாற்றாசிரியர்களை அழைத்துக் கொண்டு வெளி நடப்புச் செய்தார் குரோவர். அண்ணாமலை நகரில் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் கழக மாநாட்டில் (1984) வகுப்புவாதத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது அதையும் குரோவர் எதிர்த்தார். மான்ட்ரலில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் (ஆக, 2000) இவ்வாறு ஒரு கருத்தரங்கத்தையே குழப்பியவர் இவர் (ப்ரன்ட்லைன், டிசம்பர், 2000). – இவ்விருவர் தவிர இன்னொரு மோசமான நியமனத்தையும் செய்தார் ஜோஷி. NCERT- யின் கல்வித் துறைகளில் பணி நியமனங்கள் செய்வதற்கான தேர்வுக் குழுவில் கே.ஜி. ரஸ்தோகி என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவருடைய சுயசரிதை 1998-ல் வெளிவந்தது. இந்நூலை அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குச் சமர்ப்பித்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தவர் இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.சி.சுதர்சன். தான் ‘பிரச்சாரக்’ ஆகப்பணியாற்றிய காலங்களையும் அப்போது வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதையும் விலாவாரியாக அதில் அவர் விவரித்துள்ளார். ஒரு சம்பவம்: புரண் கலியார் என்னுமிடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஓர் அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி இந்துத்துவ வெறிக் கும்பல் வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை என்பதைக் கண்டு கொண்ட ரஸ்தோகி,

“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்க வந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சினைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போனார்கள்” (சுயசரிதை பக் 46)

என்றெழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் இது போலப் பல அபத்தங்களும் அக்கிரமங்களும் நிரம்பிய ஒரு நூலை எழுதியவனுக்குத் தான் கல்வியாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கொடுத்தார் ஜோஷி. (நூலிலிருந்து பக்.47-48)

நூல்: ஆட்சியில் இந்துத்துவம்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு: அடையாளம் பதிப்பகம்,
எச்15, 193, இரண்டாம் தளம், கருப்பூர் ரோடு, புத்தாநந்தம், திருச்சி – 621 310.
தொலைபேசி: 04332 73444

பக்கங்கள்: 160
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: udumalai

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் !

வச்ச குறி தப்பாது!
படம்: பிரபு ராஜேந்திரன்

♣ ♣ ♣

காய்ந்த மரத்தில் பிஞ்சுக் கால்கள்!
படம்: பிரபு ராஜேந்திரன்

♣ ♣ ♣

அலைகளோடு போட்டியிடும் மழலைகள்!
படம்: பிரபு ராஜேந்திரன்

♣ ♣ ♣

நாம் சிறார்களாக இருந்த போது கண்ட பல விதமான விளையாட்டுக்களும் இதுபோன்ற வியாபார வண்டிகளும் உலகமயமாக்கலில் மருவி விட்ட தருணத்தில்… இது நம்மை நமது பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் என நினைக்கிறேன்…
படம்: ஆனந்த்

♣ ♣ ♣

சறுக்கல் விளையாட்டில் மட்டும்தான், வாழ்க்கையில் அல்ல!
இடம் : காஞ்சிபுரம்.
படம்: பிரியா

♣ ♣ ♣

ஏற்றத்தாழ்வு எடையினால் வரலாம். செல்வத்தினால் வரக்கூடாது!
இடம் : காஞ்சிபுரம்
படம்: பிரியா

♣ ♣ ♣

சறுக்கலில் ஏன் தேங்கல்?
இடம் : காஞ்சிபுரம்
படம்: பிரியா

♣ ♣ ♣

தலைகீழாக பார்த்தாலும் அதே உலகம்தான்!
இடம் : காஞ்சிபுரம்
படம்: பிரியா

♣ ♣ ♣

பிஞ்சுக் கைகளுக்கு உரமேற்றும் இரும்புக் கம்பிகள்!
இடம் : காஞ்சிபுரம்
படம்: பிரியா

♣ ♣ ♣

நானும் பறக்கிறேன்!
இடம் : காஞ்சிபுரம்
படம்: பிரியா

♣ ♣ ♣

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?

தொகுப்பு:


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம் !

0

டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் போதிய பேராசிரியர்கள் இன்றியும் முறையான ஆய்வகங்கள் இன்றியும் செயல்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து மாணவர்கள் 18-02-2019 அன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் அருகாமையிலுள்ள கிராமப்புறங்களிலிருந்து வருகைதரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்.

காலையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு முன்வராமல் போலீசைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்க முனைந்தது கல்லூரி நிர்வாகம். கல்லூரி முதல்வரின் மிரட்டல் மற்றும் போலீசின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் உள்ளிருப்புப் போராட்டத்தை மாணவர்கள் உறுதியுடன் தொடர்ந்தனர்.

மூன்று மணிநேரத்திற்கும் மேல் நீடித்த மாணவர்களின் உறுதியானப் போராட்டத்தைக் கண்டு மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார் கல்லூரி முதல்வர்.

வாக்குறுதியளித்தபடி ஒருவார காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் எமது போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர், மாணவர்கள்.

படிக்க:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி என்றில்லை; தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை. பல கல்லூரிகளில் முதல்வர் பணியிடமே காலியாகத்தான் கிடக்கிறது. தமது கல்விச் சூழலை பாதுகாத்துக் கொள்வதற்கே மாணவர்கள் ஒன்றுதிரண்டு உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையே இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.

தகவல்:
புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி,
கடலூர்.
தொடர்புக்கு: 97888 08110.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !

செல்வாக்கில்லாத மாநிலங்களில் தனது அடித்தளத்தை குறுக்கு வழியில் உருவாக்க நினைக்கிறது பாஜக. ஊடகங்களின் ஆதரவு, மாநிலக் கட்சிகளை மிரட்டுவது, அதிகார வர்க்கம் – ஆளுநரைக் கொண்டு குறுக்கீடு செய்வது, நீதிமன்றங்கள் என பல வழிவகைகளில் தமது அடித்தளத்தை உருவாக்க இந்துத்துவ பரிவாரங்கள் முயல்கின்றன. புதுச்சேரியில் இவர்கள் எடுத்த தடி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருந்தாலும் உண்மையில் ஆள்வது கிரண்பேடிதான். தானின்றி சிறு துரும்பும் அசையாது என்பதை ஆரம்பம் முதலே அவர் மேற்கொண்டு வருகிறார். நாராயணசாமியும் பழம் பெருச்சாளி என்றாலும் கிரண்பேடியை சமாளிக்க முடியவில்லை. பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும், அவற்றின் பெயரை பாஜக-விற்கு கொண்டு செல்வதுமே கிரண்பேடியின் திட்டம்.

பாண்டிச்சேரி முதல்வர் தர்ணா

பொறுத்துப் பார்த்த நாராயணசாமி கடந்த 13-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தை செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தருகின்றனர். கிரண்பேடியோ மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதால் கொழுப்பெடுத்து திமிராக பேசுகிறார். நாராயணசாமியை காக்கை யோகா செய்கிறது என்று டிவிட்டரில் படம் போடுகிறார். வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் அமைச்சரவையை கிண்டல் செய்யும் விதமாக மாளிகை வளாகத்தினுள்ளே சைக்கிள் பயிற்சி செய்கிறார். ஆளுநர் மாளிகை முழுவதும் துணை நிலை இராணுவம், போலீசைக் குவித்து மிரட்டுகிறார்.

இந்தியாவின் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பதற்கு கிரண்பேடியின் தர்பாரே ஒரு எடுப்பான சான்று.

இனி கருத்துக் கணிப்பிற்கான கேள்வி :

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன?

♠ கிரண்பேடியின் திமிர்
♠ நாராயணசாமியின் தவறு
♠ காங்கிரசின் தேர்தல் நாடகம்
♠ ஆளுநரை ஏவிவிடும் பாஜக

வாக்களியுங்கள் !

(இரண்டு தெரிவுகள் தேர்ந்தெடுக்கலாம்)

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன?

இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?

மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் புத்தளம் சேரக்குழி பிரதேசத்தில் கொழும்பு குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக, புத்தளம் பிரதேச மக்கள் பெப் 13,14,15-ம் திகதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் சில மர்ம கொள்கலன்கள் குப்பை போடப்படுவதற்காக கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கிறது.

கொழும்பு குப்பைகள் மட்டுமல்லாமல், சிங்கப்பூருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூர் உட்பட இன்னும் 62 நாடுகளின் மருத்துவ மற்றும் இலத்திரனிய கழிவுகளை புத்தளம் களப்பிற்கு 200 M தூரத்தில் களஞ்சியப்படுத்த இருப்பதாக பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புத்தளத்தைக் காப்போம் – இலங்கையில் தொடரும் போராட்டங்கள் !

கட்டுமானப்பணிகள் நடைபெற்ற போதே, சிறிய மழை ஒன்றிற்கு அந்த இடத்திலிருந்து சேற்றுத் தண்ணீர் வழிந்தோடி களப்பு பிரதேச கடல் செந்நிறமாக காட்சியளித்தது.
இந்த கழிவு நீர் வழிந்தோடி களப்பில் கலந்தால், இதனால் ஏற்படும் விபரீதங்களை இட்டு அப்பிரதேச மக்கள் பெரும் பீதியடைந்திருக்கிறார்கள்.

*இலங்கையின் இரண்டாவது பெரிய உப்பளத்தை கொண்டிருக்கும் புத்தளம் களப்பு பிரதேசமானது மீன்பிடி, இறால் வளர்ப்பு என சுமார் 5000 குடும்பங்கள் வேலையிழந்து அநாதரவாக வேண்டிய நிலை ஏற்படலாம்.

*சிங்கப்பூர் ஓர் உலக சந்தை. மருத்துவமும் அங்கே வியாபாரச் சந்தையே. உலகெங்கிலுமிருந்து அறுவை சிகிச்சை உட்பட நவீன மருத்துவத்திற்காக சிங்கப்பூர் வரும் மக்களின் தொகை அதிகம். அந்த மருத்துவ கழிவுகளை களப்பை அண்டிய பிரதேசங்களில் தேக்கி வைப்பதானது புத்தளத்திற்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைவாழ் மக்களினதும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஆகும்.

படிக்க:
♦ இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

*உலகெங்கிலுமுள்ள விசித்திர நோய்களுக்கான கிருமிகளை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக இலங்கைக்கு இறக்குமதி செய்கிறார்.
இதனால் களப்பு பிரதேசத்திலுள்ள மீன்கள் தொற்றுக்குள்ளாகும். உப்பளங்கள் நஞ்சாகும். இவை முழு இலங்கையினரதும் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகும்.

* ஏற்கனவே , நுரைச்சோலை அனல் மின் நிலையம் காரணமாக கற்பிட்டி , நுரைசோலை பெண்களின் உடலில் மெர்க்குரி எனும் நஞ்சினால் பாதிக்கப்ட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த நஞ்சினால் கருச்சிதைவுகள் அதிகளவில் நடைபெறுவதாகவும் முன்னெப்போதையும் விட புற்றுநோய் , சுவாச நோய்கள், கருச்சிதைவுகள் அதிகரித்திருப்பதாகவும் பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

*இவ்வாறான நிலைமையில் அமைச்சர் சம்பிக ரணவக பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் , கொழும்பில் முஸ்லீம் மக்களே வியாபார நோக்கத்திற்காக அதிகம் வாழுகின்றனர். அப்படியிருந்தும் புத்தளம் மக்கள் இந்த குப்பை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று இனவாதம் கக்கும் விதத்தில் பேசியிருந்தார்.

* சமீபத்தில் புத்தளம் பிரதேச ஆர்ப்பாட்டத்தில் இனவாதத்திற்கு தூபம் போடும் விதமாக சிலர் சம்பிக வின் புகைப்படம் தாங்கிய பதாகைக்கு செருப்பால் அடித்தும் உதைத்தும் காணொளி ஒன்றை பதிவேற்றியிருந்தனர். அது ஊடகவியலாளர் இர்பான் என்பவரின் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு cleanputtalam உட்பட 26 பேரினால் பகிரப்பட்டிருக்கிறது. மேலும் புத்தளத்தான்டா என்று சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

*குப்பை கொண்டுவரும் கண்ட்ரைனர்களை கொளுத்துவோம் என்று பலர் பதிவேற்றுகின்றனர். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமாக கோசங்கள் புத்தளம் முஸ்லீம்களை மேலும் தனிமைப்படுத்தி இது அந்தப் பிரதேசத்திற்கான பிரச்சினை என்பதாக காட்டமட்டுமே துணை போகும்.

*மேலும் புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் சமீபத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பதுடன் இணைத்து போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண இஸ்லாமிய சிவில் சமூகத்தை தீவிரவாதிகளாக கட்டமைக்கும் அபாயத்தை போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக அத்தியாவசியமானதாகும். முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கி போராட்டத்தை தனிமைப்படுத்த இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் முனையலாம், அப்படி நடந்தால் அது புத்தளம் பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள முஸ்லீம் சமூகத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாகும்.

*முஸ்லீம் புத்திஜீவிகள் , சமூக ஆர்வலர்கள் இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தமது போராட்ட நடவடிக்கைகளின் நியாயத்தையும் அது முழு இலங்கைக்குமான் ஆபத்து என்பதையும் சிங்கள மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களின் துணையுடன் இந்த நோக்கங்களை வென்றெடுக்க போராடுவதும்தான் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள உதவுமே ஒழிய , சிறுபிள்ளைத்தனமான இவ்வாறான நடவடிக்கைகள் புத்தளம் மக்களை தனிமைப்படுத்திவிடும் அபாயத்தை உணருங்கள்.

*முழு இலங்கை மக்களின் இருப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிரான இந்த குப்பை திட்டத்தை நிறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம். #CleanPuttalam

நன்றி: முகநூலில் : மோகனதர்ஷினி

மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !

1

வேலைவாய்ப்புகள் குறித்து திருவாளர் மோடியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது, “பக்கோடா விற்றுப் பிழைப்பதற்கென்ன…” என்று கேட்டார். சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டியளித்த தமிழிசையிடம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவது குறித்து கேட்ட போது, தங்களுடைய அரசு லட்சக்கணக்கானவர்களுக்கு முத்ரா கடனுதவித் திட்டத்தின் அடிப்படையில் கடன் வழங்கி எல்லோரையும் முதலாளிகளாகவே ஆக்கி விட்டோம் என்றார். தமிழிசையின் கூற்றுப்படி இன்றைக்கு நாட்டில் எல்லோருமே முதலாளிகள் – ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்கள் ஆகிவிடுவதைப் போல மோடி எல்லோரையும் முதலாளிகள் ஆக்கி விட்டாராம்.

மோடியின் இந்தியா பல விதங்களில் வேறுபட்டது. வேலைவாய்ப்பின்மை நிலவுவதை எப்படி அறிந்து கொள்வீர்கள்? புள்ளியியல் துறை வெளியிடும் தரவுகளைக் கொண்டு. புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்ட விவரங்கள் மோடிக்கு உவப்பானதாக இல்லாத காரணத்தால் அத்துறையின் உயரதிகாரிகள் இருவர் பதவி விலகினர்.

மோடி வாக்களித்த கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் எங்கே என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.

எனினும், த வயர் இணையதளத்தில் வெளியான இந்தக் கட்டுரை அரசு வெளியிட்டுள்ள பிற புள்ளி விவரங்களைக் கொண்டு உண்மையை கண்டறிய முயல்கிறது. தொழிலாளர் துறையின் 2015-16 ஆண்டுக்கான அறிக்கை மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring of the Indian Economy (CMIE)) போன்ற அமைப்புகள் நடத்திய கள ஆய்வு முடிவுகள் மற்றும், தொழிலாளர் வைப்பு நிதியம் வெளிட்டுள்ள விவரங்கள் மற்றும் முத்ரா கடன் தொடர்பாக கிடைக்கும் தகவல்களைக் கொண்டு வேலை வாய்ப்பு நிலவரத்தை ஆராய்கிறது இந்தக் கட்டுரை. மேலும், சமீபத்தில் மத்திய புள்ளியியல் துறை எடுத்த தேசிய மாதிரி சர்வேயின் அறிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்த தகவல்களையும் கட்டுரையாளர் பயன்படுத்திக் கொள்கிறார்.

படிக்க:
வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !

தேசிய மாதிரி சர்வேயின் படி, 1977-78 ஆண்டில் இருந்து 2011-12 -ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலை வாய்ப்பின்மை 2.6 சதவீதத்தை கடந்ததில்லை. ஆனால், 2017-18 காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரிகளில் சேரும் (Gross Enrollment Ratio) கடந்த 2010 -ம் ஆண்டில் இருந்து 2016 -ம் ஆண்டு வரையிலான ஆறாண்டு காலத்தில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறது தேசிய மாதிரி சர்வே.

மேலும் பட்டப்படிப்பு முடித்த பின் வேலை தேடி அலுத்துப் போனவர்கள் சில ஆண்டுகள் கழித்து வேலை தேடும் முயற்சியையே நிறுத்தி விட்டார்கள் என்கிறது தேசிய மாதிரி சர்வேயின் முடிவுகள். இதன் காரணமாக வேலைகளுக்கு போட்டியிடுவோரின் சதவீதம் 2004-05 ஆண்டில் 43 சதவீதமாக இருந்து, 2017-18 ஆண்டில் 36.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த அதே காலகட்டத்தில், வேலை கிடைக்காமல் விரக்தியில் வேலை தேடும் முயற்சியைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையோ கிடுகிடுவென அதிகரித்துள்ளது. படித்த பட்டதாரிகளை விட படிக்காதவர்கள், கூலித் தொழிலாளிகள், விவசாயக் கூலிகள் உள்ளிட்ட பிரிவினர் மேலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது மேற்படி சர்வேயின்படி தெரிய வந்துள்ளது.

ஒருபக்கம் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை தமது அரசு உருவாக்கியிருப்பதாகவும், அதை விளக்கிச் சொல்வதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இல்லை என்று பாஜக பரிவாரங்கள் கூசாமல் பச்சையாக புளுகி வருகின்றனர்.

இன்னொரு பக்கமோ, பதினைந்து வயதைக் கடந்தவர்களில் படிக்காதவர்கள், வேலையில் இல்லாதவர்கள் மற்றும் வேலைக்கான பயிற்சியிலும் இல்லாதவர்கள் (NEET – not in education, employment or training) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போல் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியும் கடந்த பல வருடங்களாக 12 கோடி என்கிற அளவிலேயே தேங்கி நிற்கிறது. 2011-12 காலப் பகுதிக்குப் பின் ஆண்டு தோறும் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் சராசரியாக 24 லட்சம். எனினும் இதே காலப்பகுதியில் புதிதாக வேலைச் சந்தைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம்.

வேலை வாய்ப்பில்லாதோரின் எண்ணிக்கை 2011-12 -க்கு முன் ஒரு கோடியில் இருந்து அதன் பின் ஒருகோடியே அறுபத்தைந்து லட்சமாக அதிகரித்துள்ளது – இந்த எண்ணிக்கையானது வருடந்தோரும் வேலையில்லாதோர் பட்டாளத்தில் புதிதாக சேர்பவர்களுடையது என்பதைக் கணக்கில் கொண்டால் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 8 கோடி பேர் வேலையற்றோர் பட்டியலில் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது.

இதில் நாம் கவனிக்கத்தக்க மற்றொரு செய்தியும் உள்ளது. அதாவது, 2004-05ல் இருந்து 2011-12 காலப் பகுதி வரை விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வருடம் தோரும் வீழ்ச்சியடைந்துள்ளது – அதாவது கிராமப்புற சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்து சேவைத் துறைகளில் தொழிலாளிகளாகச் சேர்ந்துள்ளனர். அந்தக் காலப்பகுதியில் 15-29 வயதுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் விவசாயத் துறை வேலைகளில் ஈடுபடுவது 8.68 கோடியில் இருந்து 6.09 கோடியாக சரிந்துள்ளது. ஆனால் 2011-12க்குப் பின், 8.48 கோடியாக அதிகரித்துள்ளது.

அதாவது விவசாயத்தில் பிழைக்க முடியாது என்கிற நிலையில் நகர்புறங்களுக்கு வந்த கூலி விவசாயிகள் மற்றும் சிறு குறு விவசாயிகள், இங்கும் வேலை நெருக்கடி தோன்றியதால் மீண்டும் வேறு வழியின்றி கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

அதே சமயத்தில் 2011-12 காலப் பகுதியில் 5.89 கோடியாக இருந்த உற்பத்தித் துறை வேலைகள் 2015-16 ஆண்டுகளில் 4.83 கோடியாக சரிந்துள்ளது. அதாவது 1.06 கோடியாக உற்பத்தித் துறை வேலைகள் அப்படியே ஆவியாகியுள்ளது. உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை வங்கிக் கடன்கள் பெறுவதில் சுணக்கம், உற்பத்தி சரிவு உள்ளிட்ட பிற புள்ளி விவரங்களும் உறுதிப் படுத்துகின்றன. இப்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது – உற்பத்தித் துறை வீழ்ச்சியடைந்துள்ள அதே காலகட்டத்தில் தான் பதினைந்து வயதுக்கு மேற்பட்ட, கல்வியை முடித்த, வேலையில் இல்லாத பயிற்சியில் இல்லாதவர்களின் (NEET) எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது (2017-18 ஆண்டு வாக்கில் இவர்களின் எண்ணிக்கை 11.56 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகின்றது).

இந்த விவரங்கள் அனைத்தும் “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை தெளிவாக காட்டுகின்றன. வேலையற்றோர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மறுபுறம் சிறு அளவிலான கலவரங்களும், சாதி, மத, இன பேதங்களும் அதிகரித்து வருகின்றன.

தனது கையாலாகாத் தனத்தால் உருவாகியுள்ள வேலையற்றோரின் பெரும் பட்டாளத்தை தனது கேடான பாசிச நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைகிறது இந்துத்துவ கும்பல். வேலையின்மைக்கு இந்த பாசிஸ்டுகளே காரணம் என்பதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும், இந்துத்துவ கும்பலை மக்களிடம் அம்பலடுத்துவதும் உடனடிக் கடமைகளாக நம் முன் நிற்கின்றன.


சாக்கியன்

கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !

கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் ஆதி, சரவணன், கணேசன், சந்தன குமார், கருப்பசாமி ஆகியோரை கடந்த 14.02.19 அன்று அதிகாலை 1.30 மணியளவில் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு போனது இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட போலீசைக் கொண்ட டீம்.   அதிகாலை நேரத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்த தம்மை நோக்கிக் குரைத்த நாய்களை சட்டை செய்யாமல் கடத்திச் செல்வதில் குறியாக இருந்தனர் போலீசார்.

காரணம் கேட்ட போது தோழர் கணேசனைத் தவிர மற்ற அனைவருக்கும் சொல்லப்பட்ட காரணம், டி.எஸ்.பி உங்களோடு பேச வேண்டும் என்கிறார் என்பதுதான். கணேசன் வீட்டுக்குள் புகுந்த போலீசாரிடம் அவர் சம்மன் அனுப்பினீர்களா? வாரண்ட் இருக்கிறதா? என போலீசாரிடம் தமக்கு அரசியல் சாசனம் சட்டப்படி வழங்கியுள்ள உரிமைகளைக் கேட்டார். அதற்கு சட்டத்தை மதிக்கிற போலீசு, “உம்மேல ஒரு பொம்பள கேஸ் கொடுத்திருக்கா. வா ஸ்டேசனுக்கு” என்று அடித்து இழுத்துச் சென்றனர்.

வலிப்பு நோயால் உடல் நலிவுற்று மருத்துவம் எடுத்துக் கொண்டிருந்த தோழர் சரவணனை போலீசு கடத்திய போது, அவரது மருந்துகளைக் கூட எடுத்துவர அனுமதிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் வலிப்பு வரலாம் என்ற நிலையில், நாக்கு கடிபடாமல் இருக்க பற்களுக்கு இடையில் சிறு துண்டை (துணியை) வைத்துக் கொண்டால் காயம் படாமல் இருக்கும் என்று அதை எடுத்துவரக் கேட்ட போது அதை மறுத்தார் ஆய்வாளர் ராமகிருஷ்ணன். அச்சிறு துண்டு அளவில் கூட அவரிடம் மனிதாபிமானம் இல்லை. சரவணனின் மனைவி அவருக்கு உடம்பு சரியில்லை என்றபோது கூட நக்கலாக நாங்க பாத்துக்கிறோம் என்றார் அவர்.

போலீசின் அராஜகத்தை அனுபவத்தின் மூலம் கண்ட அவர் மனைவி உடனே கோபமாக, “நீங்க என்னத்த பார்ப்பீங்கன்னு எனக்குத் தெரியாது?. உங்க லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே. இத மாதிரித்தான் விசாரிச்சுட்டு அனுப்பிடறோம்ன்னு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்ததுக்கு அப்புறமா கூட்டிட்டு போனீங்க. என்.எஸ்.ஏ-வுல போட்டீங்க. நாலு மாசம் கழிச்சுத்தான் வந்தாங்க. உங்கள நம்பி அனுப்ப முடியாது” என சரவணன் கையைப் பிடித்துக் கொண்டார். என்ன நீ ஓவரா பேசுற எனக் கூறி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அவரை தள்ளி விட்டார்.  வீட்டுக்குள்ளிருந்து மெயின் கேட்டிற்கு சரவணனை இழுத்து வந்த போலீசு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பூட்டப்பட்டிருந்த மெயின் கேட்டில் நிறுத்தி ஏறி வெளியே குதி என்றார். நாமறிந்து திருடன் மட்டுமே சுவரேறி குதிப்பான். போலீசு என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கும் ஏன் அவ்வாறு தோன்றுகிறது ?

ஏறிக் குதிக்க மறுத்திருக்கிறார் சரவணன். சாவி கொண்டு வந்து திறந்தபின் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். பின்னாலேயே அவரது மனைவி மருந்து பாட்டில்கள் செருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.

போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம், “நான் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆகியிருக்கிறேன். மருந்து எடுத்துக் கொள்ளவில்லையானால் எனக்கு வலிப்பு வந்து விடும்” என்று சரவணன் கூற, “எந்தப் பக்கம் வரும்” என்று இஸ்பெக்டர் கேட்டார். “வலது பக்கம் வரும்” என்று சரவணன் கூற, “எனக்கு இடது பக்கம் வரும், போய் உக்காரு” என்று நக்கலாகவும் திமிராகவும் கூறியிருக்கிறார். தொழில்முறை கொலைகாரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கும். பாசிஸ்டுகளுக்கு அடியாள் வேலை பார்க்கும் இந்த அதிகார வர்க்க போலீசுக்கு அது இருக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. சரவணன் மனைவியின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் மருந்து அவரிடம் சேர்ந்தது.

படிக்க:
♦ எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !
♦ எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !

தோழர் ஆதி கால் ஒடிந்து சிகிச்சைக்குப் பிறகு சரியாக நடக்க முடியாமல் இருப்பவர். டி.எஸ்.பி யை காலையில் வந்து பார்க்கிறேன். கால் வலியால் தற்போது என்னால் வர முடியாது எனக் கூறிய போது, கட்டாயம் இப்போதே வர வேண்டும் எனக் கூறி, நடக்க முடியாத அவரை இழுத்துக் கொண்டு போனது போலீசு.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெயர் விலாசத்தை பதிவு செய்து கொண்டு ஐவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள். எங்கே எனக் கேட்ட போது மேற்கு காவல் நிலையம் என்று போலீசு சொன்னது. ஆனால் வண்டி அதையும் தாண்டிச் சென்றது. அப்போது நாலாட்டின் புதூர் என்றது. மேற்கு காவல்நிலையம் என்று கூறிவிட்டு ஏன் நாலாட்டின் புதூர் அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு மௌனமே பதிலாக கிடைத்தது. நாலாட்டின்புதூர் காவல்நிலையத்துக்கு சென்று வெளி கேட்டை பூட்டி விட்டு உள்ளே சென்று உறங்கியது போலீசு. குளிரும் கொசுக்கடியும் ஐவரையும் உறங்க விடவில்லை.

காலை 10 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வந்து அவரது அறைக்குள் சென்றார். ஒரு பென்ச் போடப்பட்டு ஐவரும் அதில் அமர வைக்கப்பட்டனர். டீ வந்தது பிஸ்கட் கொண்டு வராததற்கு கான்ஸ்டபிளைக் கடிந்து கொண்டார். டீ குடிங்க என்று அனுசரணையாகக் கூறினார்.

“ஒண்ணுமில்லை டி.எஸ்.பி வருவார், உங்க கிட்ட பேசுவார் அவ்வளவுதான்.”

“அதுக்காக எங்களை ஏன் நைட் 1.30 மணிக்கு இழுத்துட்டு வந்தீங்க”

“இழுத்துக்கிட்டு வரல அழைச்சிக்கிட்டு வந்தோம்.”

“அழைச்சிக்கிட்டு வற்றவங்க தான் கதவை உடைச்சிக்கொண்டு வருவாங்களா? சட்டையை கிழிப்பாங்களா? அடிப்பாங்களா? மருந்து எடுக்கக் கூட விடல சின்ன டவல் கூட எடுக்க விடல”

“சில நேரங்களில அப்படித்தான் நடந்துக்க வேண்டியதிருக்கு. சட்டமே அப்படித்தான் இருக்கு.”

“சட்டத்துல அப்படி எங்க சொல்லியிருக்குது?”

“உதாரணத்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்துறதுக்கு சில விதிமுறைகள் இருக்குன்னு சட்டம் சொல்லுது. ஆனால் தேவைப்பட்டால் அந்த விதிமுறைகளை மீறலாம்னு சட்டமே சொல்லுது.” என்று அவருடைய புதுமையான சட்ட விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது டி.எஸ்.பி ஜெபராஜ் உள்ளே வந்தார். வந்து ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டார். பெயரையும் செய்யும் வேலையையும் கேட்டுக் கொண்டார்.

“நீங்க யாரு, எப்படி இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது. அதான் உங்களை நேரில் பார்த்து பேசலாம்னு வரச் சொன்னேன். பாருங்க என்னோட சர்வீஸ்ல பிளாக் மார்க் ஒண்ணும் கிடையாது. ஆனா இப்போ உங்களால வந்திடுச்சு. ஏன் மக்கள் அதிகாரத்துல இருக்கிறவங்க மேல கேஸ் போடமாட்டேங்குறீங்கன்னு மேலே இருந்து என்னைக் கேக்குறாங்க”

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து என்.எஸ்.ஏ-வில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள்

“கேஸ் போடலையா? வழக்கு போட்டு, சிறைக்கு போயிருக்கோம். என்.எஸ்.ஏ போட்டிருக்கீங்க.”

“அது வேற. மே 22-க்கு தூத்துக்குடிக்கு கோவில்பட்டியில இருந்துதான் ஆள திரட்டிட்டு போயிருக்கீங்க”

“சார்.. ஸ்டெர்லைட் போராட்டம் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் இல்லை. அது தூத்துக்குடி மக்களின் போராட்டம். நாங்க அதுல கலந்துகிட்டோம். கால்ல அடிபடாம இருந்திருந்தா நான் முன்னாடி போய் அன்னைக்கே செத்திருப்பேன்.”

“ஃபாக்டரி இல்லாம நாடு எப்படி முன்னேறும். உதாரணத்துக்கு டிராக்டர் இல்லாம இப்போ உழுதா எல்லோருக்கும் சோறு கெடைக்குமா?”

“சார், இயந்திரங்களுக்கோ தொழிற்சாலைகளுக்கோ நாங்க எதிரி இல்லை. ஒரு முதலாளி லாபம் சம்பாதிக்க ஒரு லட்சம் பேரை சாகடிக்கிறானே, அந்த கார்ப்பரேட் முதலாளிகளைத்தான் எதிர்க்கிறோம். மக்களோடு நிற்கிறோம்.”

“இப்போ நான் சேலன்ச் பண்றேன். எத்தனை பேரு கோவில்பட்டியில உங்க பின்னாடி வர்றான்னு பார்க்கிறேன். உங்கள தூங்க விடாம ’காப்பாத்துங்க காப்பாத்துங்க’ன்னு உங்க பின்னாலேயே சுத்திட்டிருக்காங்களா?”

படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !

“சார், எங்க அஞ்சு பேர நம்பி கோவில்பட்டியில் பத்துபேரு கூட வரமாட்டாங்கன்னு சொல்றீங்க. அப்புறம் தூத்துக்குடியில் எப்படி ஒரு அம்பது தோழர்கள் பின்னாடி தூத்துக்குடியில ஒரு லட்சம் பேர் வந்தாங்கன்னு சொன்னீங்க, நீங்கதான் அதுக்கு காரணம்னு எங்கள சொன்னீங்க ?”

“இல்லை, நான் சொல்லல.”

“யார் சொன்னது?”

“அப்படி ஒரு கருத்து இருக்குது.”

“யாரு அந்தக் கருத்த பரப்புறா?”

“பாருங்க, எல்லோரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழதான். சட்டத்துக்கு கீழதான். இன்னைக்கு யாரு ஆட்சில இருக்காங்களோ அவங்கதான் சட்டத்தை போடுறாங்க. அதனால் அவங்களுக்கு, அவங்க உத்தரவுக்கு கீழ்படிய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்குது. தனிப்பட்ட முறையில உங்களோட எந்தப் பகையும் எனக்கு இல்லை. எனக்கு மேல இருந்து பிரஷர்.”

“சார், ஒன்னு சொல்றோம். இந்த சீட்டுல இப்ப எஸ்.பி. முரளி ரம்பா உட்கார்ந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாரு. மேலே இருந்து மேல இருந்துன்னு சொன்னா அதத்தான் நாங்க சொல்றோம். மேல இருக்குறது கார்பரேட் காவி பாசிசக் கூட்டணி. அங்க இருந்து உத்தரவு வருது. நீங்க உங்க அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்குறீங்க.”

“அப்படியில்லை.. அப்படின்னா மரியாதையா உங்கள கூப்பிட்டு பேசிட்டிருக்க மாட்டேன்.”

“கூப்பிட்டுப் பேசல, சட்ட விரோதமா எங்கள இழுத்திட்டு வந்திருக்கிறீங்க.”

“நான் உங்களுக்கு சம்மன் அனுப்பினேனே”

“இல்லை, வரல”

“ஓ வரலியா, டெக்னிகல் ஃபால்டா இருக்கும்”

“அது எப்படி சார் எங்களுக்கு மட்டும் டெக்னிகல் ஃபால்டாகும். நைட்ல 1.30 மணிக்கு அடிச்சு சட்டைய கிழிச்சு கூட்டி வந்திருக்காங்க.”

“ஓ.. எனக்குத் தெரியாது. காலையிலதான் கூட்டி வரச் சொன்னேன். சாரி”

“மருந்து கூட எடுத்துக்க விடாம இந்த இன்ஸ்பெக்டர்தான் நைட்டு பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்தாரு.”

“ஓ,  நான் பொறுப்பேத்துக்கிட்டு சாரி கேக்கிறேன்.”

போன் ஒலித்தது.. பேசி விட்டு வைத்தார்.

“எஸ்பி தான் பேசுறார். எப்பவும் 10 மணிக்கு மேலதான் பேசுவார் இன்னைக்கு 7.30 மணிக்கே அடிச்சுட்டார். ஸ்பீக்கர்ல போட்டிருப்பேன், நாகரீகமா இருக்காதுன்னுதான் போடல. என்னாச்சுன்னு கேட்டார். சொன்னேன். நான் விட்றலாம்னு தான் பார்த்தேன்.  அவர்தான் செக்சன் 110 போடச் சொல்றாரு. இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களா.. மேல இருந்து பிரஷர்னு.

“நா இங்கே வந்ததுல இருந்து, பல ரவுடிகள் கிட்ட பேசுறேன். சிபிஐ, சிபிஎம் கிட்ட பேசியிருக்கிறேன். அவங்கல்லாம் அப்படியே மேலோட்டமா பேசுறாங்க. நீங்கதான் உணர்ச்சிவசப்படுறீங்க.”

“உணர்ச்சிவசப் படல சார். நாங்க கொலை பண்ணல, கொள்ளையடிக்கல, யார் தாலியையும் அக்கல, கந்து வட்டிக்கு விடல, மாமூல் வாங்கல, புரோக்கர் வேலை பார்க்கல, சாராயம் காய்ச்சல, விபச்சாரம் பண்ணல, மக்களுக்காக நேர்மையா நிக்கிறோம். தொடர்ந்து நிப்போம்.”

நைச்சியமாய் பேசி அழைத்து வந்து மிரட்டிய சம்பவங்கள் உண்டு. ஆனால் கட்டாயப்படுத்திக் கூட்டி வந்து நைச்சியமாய் பேசி வளைக்கப் பார்ப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. இதில் மிரட்டலும் உள்ளே பொதிந்திருப்பதை உணர முடிகிறது. சட்ட விரோதமாக கஸ்டடியில் அடைத்து வைத்து நைச்சியமாய் பேசுவது. ரகரகமாய் புதுப்புது பெயர்களை வைத்துக் கொண்டு மக்களை சாகடிக்கும் மோடி எடப்பாடி கும்பலின் திட்டங்களுக்கும், மேற்படி சதி திட்டத்திற்கும் வேறுபாடில்லை. மக்களோடு தொடர்ந்து நிற்பவர்களை எந்த சதித்தனமும் வீழ்த்த முடியாது. மேற்படி தோழர்கள் ஐவரும் இன்னும் நெஞ்சுரத்துடன் பணிகளைத் தொடர்கின்றனர். காவி கார்பரேட் பாசிச அதிகாரத்தால் மக்கள் அதிகாரத்தை வீழ்த்த முடியாது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவில்பட்டி.

கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !

ன்று வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் சாலையோரத்தில் காத்திருக்கிறார்கள் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

காலை 8 மணி. இருபதுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சென்னை, கிண்டி மடுவங்கரை பாலத்திற்கு அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள். அருகில் சென்றதும், நம்மை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறார்கள். என்ன வேலை சார் என்று அரைகுறை தமிழில் ஒரு குரல். பெயர் ரஜேஷ். அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

ரஜேஷ் (வலதுபக்கம் உள்ளவர்)

“நான் இங்கே வந்து 8 வருஷம் ஆச்சு சார்… இவங்களெல்லாம் (அருகில் உள்ளவர்களைக் காட்டி) 1 வருஷந்தான் ஆகுது. எங்கள மாதிரி கிட்டதட்ட 300, 400 பேரு இந்த ஏரியாவுல உள்ள மெஸ்ல தங்கி இருக்காங்க. (ஒடிசாக்காரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை மெஸ் என்றுதான் அழைக்கிறார்கள்) எங்க மாநிலக்காரர் ஒருவர் ஒரு இடத்த வாடகைக்கு எடுத்து எங்களுக்காகவே மெஸ் நடத்தி வருகிறார். அங்கேயே நாங்களும் தங்கிக்குவோம். தங்குறதுக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கும் வாரத்துக்கு 500 ரூபா. வேலைக்கு யாரும் கூப்பிடாதப்ப, காலையில 10 மணிக்கே சொல்லிட்டோமுன்ன பகல் சாப்பாடும் கொடுப்பாங்க.

500 ரூபாய்க்கு சாப்பாடும் தங்குறதுக்கு இடமுமான்னு ஆச்சர்யப்படாதீங்க. இங்கே உள்ள பணக்காரங்க நெறைய பேரு ரேசன் அரிசி வாங்குறதில்ல. அவங்களோட கார்டுக்கு அரிசி வாங்கி தமிழ்காரங்க விக்கிறாங்க. கிலோ 4, 5 ரூபாதான். அப்புறம் என்ன, ஒரு ரூம்லேயே 10, 12 பேர் தங்கிப்போம், இது போதாதா!

இங்க இருக்க மாதிரி எங்க ஊர்ல தொழில் எதுவுமில்ல. அரிசி, பருப்பு… இப்படி விவசாயம் மட்டும்தான் செய்யிறோம். அப்படி விவசாயம் பாக்க எங்களுக்கு நிலமும் ஏதுமில்ல. எங்கேயாவது போயி பொழைக்கலாமுன்னுதான் இங்கே வந்திருக்கோம்.

கம்பெனி வேலை, வீட்டு வேலைகளுக்கு லோடிங், அன்லோடிங், அப்புறம் ஹெல்பர் வேலைகளுக்கு போவோம். வேலைக்கு ஏத்த மாதிரி 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைக்கும். எந்த வேலைக்கு கூட்டிகிட்டு போறாங்களோ அத முடிக்கிறதுக்குத்தான் இந்த சம்பளம். நாள் கணக்கோ மணி கணக்கோ பார்க்க முடியாது. எங்க ஊர்ல இதுகூட கிடையாது.

ஒரு நாளு 600 ரூபா கூலி பேசி ஒருத்தர் வேலைக்குக் கூட்டி போனாரு. வேலை முடிச்ச பிறகு சம்பளம் கேட்டா, 400 ரூபாய எடுத்து நீட்டினாரு. 600 ரூபா தர்றதா பேசினீங்களே என்று சொன்னதுதான், “போடா… ***மவனேன்னு” (அதை மட்டும் தெளிவாகப் பேசுகிறார்) கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்.

வருஷத்துக்கு ரெண்டு தடவதான் ஊருக்கு போகமுடியும். கொஞ்ச நாளுகூட அங்கே இருக்க முடியாது, தமிழ்நாட்டுக்கே திரும்பி வந்து விடுவோம். வீட்டுக்கு பணம் அனுப்பனுமுன்னா, சேத்துவச்ச பணத்த, கூட வேலை செய்யும் ஒருவரிடம் கொடுப்போம். ஊரில் இருக்கும் அவரோட சொந்தக்காரர் ஆயிரத்துக்கு 20 ரூபாய் கமிஷன் எடுத்துகிட்டு எங்க வீட்டிற்கே கொண்டு போயி கொடுத்துவிடுவார். முன்ன எல்லாம் 50 ரூபாயாயிருந்த இந்த கமிஷன், நெட் ஒர்க் டீம் அதிகமா ஆனதுனால இப்ப 20 ரூபாயா கொறைஞ்சிருச்சு என்றார்.”

ரஜேஷிடம் பேசிக்கொண்டே அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தோம். பகல் 10.30 மணி. அந்த சிறிய அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நெருக்கியடித்துப் படுத்திருக்கிறார்கள். அன்று அவர்களுக்கு வேலையில்லை.

அங்கிருந்து திரும்பி வரும்போது, எங்களையே கவனித்துக் கொண்டிருந்த வேன் ஓட்டுநர் கூறினார்: “இன்ன வேலைன்னு இல்ல சார்! இவங்கள கூட்டிப் போயி எந்த வேலைய வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம்; கிட்னியை எடுத்துகிட்டு விட்டாக்கூட கேக்க நாதியில்லை…” என்றார்.

அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டோம், காட்சிகள் மறைந்துவிட்டது. ஆனாலும், எங்கேயோ ஓரிடத்தில், ஐந்தாறு தொழிலாளிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம், வேன் ஓட்டுநரின் அந்த மெல்லிய வார்த்தைகள் பேரிரைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !

டக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட், காவி பாசிசம் எதிர்த்து நில் ! என்ற முழக்கத்தில் 23-02-2019 சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு திருச்சி உழவர் சந்தை திடலில் நடக்க இருந்த மாநாட்டிற்கு திருச்சி மாநகர காவல்துறை வழக்கம் போல் தனது அதிகார சட்ட வரம்புகளை மீறி கருத்துரிமையை மறுத்தது. போலீசாரின் உத்தரவிற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு 13-02-2019 அன்று போலீசாரின் உத்தரவை ரத்து செய்து மாநாட்டிற்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (15-02-2019) திருச்சி காவல்துறை ஆணையரிடம் தீர்ப்பு நகலை கொடுத்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கோரினோம். காவல்துறையும் அனுமதி வழங்குகிறோம் எனக் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பொது மக்கள் ஆதரவுடன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறையினர் பொய் வழக்கு போடுவது, பிரச்சாரத்தை தடுப்பது, மாநாடு போஸ்டரை கிழிப்பது என செய்து வருகின்றனர். கருத்துரிமையைத் தடுக்கும், நீதிமன்ற உத்தரவை மீறும், அத்தகைய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !

ணக்கம் !

“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!” என்ற முழக்கத்தை முன்வைத்து, 2019 பிப் 23 சனிக்கிழமையன்று திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். அனைத்திந்திய அளவில் எழுத்தாளர்கள், அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தாங்கள் நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரோடு மாநாட்டிற்கு வருகை தரவேண்டும் என உரிமையுடன் அழைக்கிறோம்.

ஏற்கெனவே, மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தப்பட்ட “மூடு டாஸ்மாக்கை” மற்றும் “விவசாயியை வாழவிடு” ஆகிய இரு மாநாடுகளுக்கும் நன்கொடையும் ஆலோசனைகளும் அளித்தது மட்டுமின்றி, பலர் நேரிலும் வருகை தந்து ஆதரவு அளித்துள்ளீர்கள். தொடர்ந்து எமது நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவளித்து வருகிறீர்கள். இந்த மாநாட்டிற்கும் உங்கள் பேராதரவை எதிர்நோக்குகிறோம்.

இன்றைக்கு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விமரிசிப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்வதும், அமைதி வழியில் போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தமிழகத்தில் சகஜமாகி வருகிறது. ஸ்டெர்லைட், மின்கோபுரம் அமைத்தல், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா ஆகிய கார்ப்பரேட் நலத்திட்டங்களை யார் எதிர்த்தாலும் அவர்கள் மீது தேசத்துரோகி இந்து விரோதி என பாஜக வினர் முத்திரை குத்துகின்றனர். உடனே, போலீசு அவர்கள் மீது பாய்கிறது. துண்டறிக்கை, ஓவியம், பாடல், வாட்ஸ் அப் என எந்த வடிவத்தில் பார்ப்பன பாசிஸ்டுகளை விமரிசித்தாலும், அவர்கள் போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.

அரசமைப்பு சட்டத்தை திருத்தாமலேயே இந்து ராஷ்டிரத்தை நிறுவுகின்ற திசையில் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது மோடி அரசு. எல்லா துறைகளிலும் மாநிலத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., சி.ஏ.ஜி., சி.வி.சி. முதல் இராணுவம், போலீசு, நீதித்துறை வரையிலான அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். ஆல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அரசு எந்திரமே பாசிசத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் பசுக்குண்டர்கள் முதல் சனாதன் சன்ஸ்தா வரையிலான பலவகையான பாசிசக் கொலைப்படைகள் பெருகியிருக்கின்றன. முஸ்லீம்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரான கொலைவெறித் தாக்குதல்கள் சகஜமானவையாக மாறி வருகின்றன.

2019 தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அரசமைப்பிலும் சமூக சூழலிலும் காவி பாசிசம் ஏற்படுத்தியிருக்கும் மேற்சொன்ன அபாயகரமான மாற்றங்கள் அகன்றுவிடப் போவதில்லை. ஏனென்றால், பன்னாட்டு நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளும் காவி பாசிசத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன. இந்தப் புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகவே இம்மாநாட்டை நடத்துகிறோம்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்
மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

எமது மாநாடுகளுக்கும் போராட்டங்களுக்குமான நிதியை உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதே எமது வழக்கமான நடைமுறை. ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் அவ்வாறு திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. நெடிய நீதிமன்ற போராட்டத்திற்குப் பிறகு இந்த மாநாட்டுக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். குறுகிய கால அவகாசத்தில் இம்மாநாட்டை நடத்தவேண்டியிருப்பதால், உங்கள் ஆதரவையும் நன்கொடையையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

மாநாட்டு நிதி அனுப்ப வேண்டிய முகவரி:

C. VETRIVEL CHEZHIYAN,
SB A/C NO:62432032779,
STATE BANK OF INDIA,
POZHICHALUR BRANCH,
CHENNAI.
IFSC: SBIN0021334

நன்றி !


தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321

தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்

காதலோ, காதலர் தினமோ … முதலாளித்துவத்துக்கு அனைத்துமே பணம்தான்..

மிகையில் சிஃப்ட்கி, துருக்கி.

காதல் ஒரு பொக்கிசம் என்பதை முதலாளித்துவ மூளை நம்ப மறுக்கும்போது …

எலெனா ஓஸ்பினா, கொலம்பியா.

காதலர் தினம் இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி
இந்தியாவின் மதவாதக் கும்பல்கள் ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் எழுப்புகின்றன.

சௌனக் சம்வத்சர், இந்தியா.

அனைத்து வகையான இனவாதங்களையும் விட வலிமையானது காதல் !

ஃபாடி அபு ஹாசன், நார்வே.

தேவை போர் அல்ல ! காதல் !

அலி ஜம்ஷிடிஃபர், பிரான்ஸ்.

காதல் தோட்டா !

பீட்டே க்ரெய்னர், ஆஸ்திரேலியா.

எல்லைகளிலும் முகாம்களிலும் முதலாளித்துவத்தின் முட்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் இதயம் !

ஓசாமா ஹஜ்ஜாஜ் – ஜோர்டன்.

முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது
மனித குலத்தின் மீதான காதல்தான்..

முகமது ரிஃபாய், ஜோர்டன்.

நன்றி : Cartoon Movement


இதையும் பாருங்க:
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

சேலம் ஆட்சியர் ரோகிணியின் மறுபக்கம் !

சேலம் ஆட்சியரின் மறுபக்கம் !

டங்களில் பெரிதாகப் பேசப்படும் சேலம் ஆட்சியர் ரோகிணி சமூக வலைத்தளத்தைப் பொறுத்தவரை ஒரு கோமாளி போலச் சித்தரிக்கப்படுகிறார். அவர் எங்குச் சென்றாலும் தன்னுடன் ஒரு புகைப்படக் கலைஞர், கூடவே நான்கு ஐந்து அதிகாரிகள், வேடிக்கை பார்க்க சில மக்கள் என ஒரு விளம்பர பிரியையாக வலம் வருகிறார்.

சேலம் ஆட்சியர் ரோகிணி

இப்படி இருக்கும் ரோகிணி உண்மையில் இந்த விளம்பரத்தோடு நிற்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பதுதான் உண்மை. உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்ற ஒரு சொலவடை தமிழில் உள்ளது.

மக்களின் பாதுகாவலர் போலத் தன்னை வெளிக்காட்டி கொள்ளும் ரோகிணி, உண்மையில் விஷம் கக்கும் பாம்பு என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்த செய்தி. அதில் ஆசிரியர்களுடன் சேர்ந்து சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடிகள் என்று பல அமைப்புகளும் கலந்து கொண்டன.

மற்ற மாவட்டங்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கன்வாடி மற்றும் சத்துணவு பிரிவில் இருந்து ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஆட்சியரிடம் இருந்து இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிரட்டல். போராட்டத்தில் கலந்து கொண்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர் என்ற வகையில் மிரட்டல் சென்று உள்ளது.

படிக்க:
திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !

ஆனால் ஆசிரியர்களுக்கு இந்த மிரட்டல் செல்லவில்லை, காரணம் ஆசிரியர்களிடம் இந்த மிரட்டல் செல்லுபடி ஆகாது என்பதும், அதே நேரத்தில் தனக்கு எதிராகத் திரும்பும் என்பதும் ரோகிணிக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் உறுதியாக இந்த மிரட்டலுக்குப் பணிவார்கள், காரணம் இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், அது மட்டுமல்லாது இவர்களுக்குக் கொடுக்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் கூட அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இங்குக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் கொடுக்கும் போராடும் உரிமையை ஒரு மாவட்ட ஆட்சியரால் எளிதாகத் தட்டி பறித்து விட முடியும் என்ற நிலையில்தான் நமது ஜனநாயகம் உள்ளது.

கோப்புப் படம்

இத்தோடு இந்த விசியம் நின்று விடவில்லை. இன்றைய தினம்வரை அங்கன்வாடி பணியாளர்களுக்கு இந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் கூறிய தகவல்படி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர் அமைப்புகளுக்கும் ஊதியம் கொடுக்கப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று மிரட்ட தெரிந்த ரோகிணிக்கு, பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தை வாங்கித் தரும் துப்பு இல்லை. அதிகாரத்தில் தாழ்ந்தவனை எட்டி உதைப்பதும், அதிகாரம் மிக்கவனின் காலை நக்கி பிழைப்பதும்தான் ஜனநாயகம்!!

நன்றி : முகநூலில் சக்திவேல்