Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 807

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டம்

கனிமொழியை பிணையில் எடுப்பதற்காக ராம் ஜேத்மாலினி போன்ற காஸ்ட்லியான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த தி.மு.க சமச்சீர் கல்விக்காக அத்தகைய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து போராடவில்லை என்பது மட்டுமல்ல பாசிச ஜெயா திமிருடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும் அதைப்பற்றி காமா, சோமா என்று ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு அடங்கிப்போனார்கள் இந்த சூராதி சூரர்கள். மக்களிடம் அதைப்பற்றி விளக்கி அம்பலப்படுத்த வேண்டும் என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்நிலையில் தேர்தலை புறக்கணிக்கின்ற ம.க.இ.கவும் அதன் சார்பு அமைப்புகளான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இரண்டும் தமிழகம் முழுவதும் பெற்றோர்களை அணிதிரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் போராடி வருகிறது. விருதாசலத்தில் இலவச கல்வி உரிமைக்கான மாநாட்டை நடத்தியதோடு சென்னை முதல் மதுரை வரை பல ஊர்களில் ஆர்பாட்டங்களை நட்ந்திருக்கிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இரத்து செய்த அ.தி.மு.க அரசின் மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகித்த ம.உ.பா.மை அடுத்து இந்த தடை உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்வதையும் எதிர் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.

இப்படி மக்கள் களத்திலும், சட்ட முனையிலும் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது புரட்சிகர அமைப்புகள். இங்கே சில ஊர்களில் நடந்த போராட்டத்தை படங்களாக பதிவு செய்கிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

தூத்துக்குடி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

திருச்சி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

தருமபுரி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

விருத்தாசலம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

கோவை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

மதுரை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

சேத்தியாதோப்பு

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

திருவண்ணாமலை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

சென்னை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

_________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – ரிபோர்ட்!

சமச்சீர் கல்வி இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை அணிதிரட்டி விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடுகிறது. இந்த போராட்டம் தற்போது கடலூர் மாவட்டம், கோவை என்று பரவி வருகிறது. இதை ஒட்டி விருத்தாசலத்தில் பெற்றோர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், அரசியல் சட்டப்படி கல்வி என்பது எப்படி நமது உரிமையாக உள்ளது, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகள் நூதனக் கொள்ளை, பகிரங்க கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. சாரமாக தனியார் கல்வியின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று எழுதியிருக்கும் இந்த முக்கியமான கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்! நன்றி

இலவசக் கல்வி நமது உரிமை

விருத்தாசலம் நகரில் இலவச கல்வி உரிமை மாநாடு கடந்த மே மாதம் செவ்வாய் (24-05-2011) அன்று நடைபெற்றது.  மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் திரு .செந்தாமரைக்கந்தன் வரவேற்புரை வழங்கி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு வை வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அவரது பேச்சிலிருந்து:

மக்கான கல்வி உரிமை நாம் கேட்கின்றோம். எட்டாவது வரை இலவசக்கல்வி என்று கல்வி உரிமைக்கான சட்டதிருத்தம் செய்யப்பட்டது. அப்பொழுது எட்டாவது வரை கல்வியை இலவசமாகக்கொடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கெல்லாம் மத்திய அரசு அறிக்கை அனுப்பியது.ஆனால் இங்கே என்ன நடந்தது?  அரசுப்பள்ளிகளில் மட்டும் இலவசக்கல்வி – தரமற்றக் கல்வி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் கொடுத்துதான் கல்வி என்ற நிலைமைதான் இன்னும் இருந்து வருகிறது. இலவசக்கல்வி இன்னும் வழங்கப்படவில்லை.”

“ஆனால், ஏழைகளுக்குப் பிச்சை போடுவதுபோல், ஒவ்வொரு பள்ளியிலும் 25%ஒதுக்கிவிட்டு அதில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக அவர்கள் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு வரை  ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும். அந்தக்கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்று ஒரு ஒப்பந்தம் வந்துள்ளது, நாம் இப்போது என்ன கேட்கிறோம் என்றால்இலவசக்கல்வி என்பது நமது உரிமை.அதாவது பன்னிரெண்டாவது வரை இலசவசக்கல்வியை அரசு கொடுக்க வேண்டும்.  ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் இலவசக்கல்வியை வழங்கவேண்டும். அதாவது, மற்ற இலவசங்களை வழங்குகின்ற அரசு ஏன் இலவசக்கல்வியை தரக்கூடாது? என்று கேட்பது நமது உரிமை. அதைத்தான் நாம் நமது மாநாட்டிலே இப்போது வலியுறுத்திக் கூறுகிறோம்.”

“அடுத்ததாக, இந்த கல்வி கட்டணத்துகாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவிப்பு வந்தது. அதை தனியார் பள்ளிகள் செயல்படுத்தாமல்  அளவுக்கு மீறி பணம் வாங்கினார்கள். ஒன்றுக்கு மூன்று  பங்கு பணம் வாங்கினார்கள். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பெற்றோர் சேர்ந்து போராட்டம் செய்தபிறகுதான் இந்தக்கட்ட்டணக் கொள்ளையை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த முடிந்தது, அதன்பிறகு, பெற்றோர்கள் ஒன்றுகூடி மனித உரிமை பாதுகாப்ப்பு மையத்தின் மூலம் கட்டணக்கொள்ளையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கட்டணங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதை பெற்றோர் பார்க்குமளவுக்கு ஆர்வம், ஈடுபாடு  ஏற்படுத்தினார்கள்.”

” அதன்பிறகு பெற்றோர்கள் தனித்தனியாக கூடுதல் கட்டணம் வாங்குகிறீர்களே என்று நிர்வாகத்தினரிடம் கேட்க ஆரம்பித்தார்கள். தனித்தனியாக கேட்க ஆரம்பித்தபின் நிர்வாகத்தினரிடம் ஏளனத்தையும் அலட்சியத்தையும் சந்திக்க நேரிட்டது. அதன்பின் பெற்றோர்கள் ஒன்றுகூடி சங்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று வந்தார்கள். அதன்பிறகு, பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு முற்றுகை போராட்டம் கூட மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.”

“அப்பொழுது அந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் வந்து சில உறுதிமொழிகளை தந்தார்கள். அதாவது கூடுதல் கட்டணம் நீங்கள் கொடுக்க வேண்டாம்.  அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மட்டும்தான் செலுத்த வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். மாணவர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்கள்.  பள்ளி தகவல் பலகையில் இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த உத்தரவிடுகிறேன் என்று உத்தரவு வழங்கினார்கள்.”

“ஒரு சில பள்ளிகள் மட்டும் ஓரிரு நாட்கள் வைத்துவிட்டு எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு பெற்றோர் சங்கம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக என்னையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தார்கள். பெற்றோர் சங்கம்  மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து அந்த கூடுதல் கட்டணம், கட்டணக் கொள்ளையை எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம்.  சில பல போராட்டங்களை நடத்தினோம். இருந்தும் கூடுதல் கட்டணம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.”

“கட்டணக்கொள்ளையை வைத்து வியாபாரம் செய்ய  ஆரம்பித்தார்கள். மாணவர்கள் கூப்பிட்டு மிரட்டுவது, பெற்றோரிடம் பணம் வாங்கிவரச் சொல்வது, அவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற தொல்லைகளை எல்லாம் கொடுத்தார்கள். இருந்தும் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினோம். இதற்கும் பிறகும் கூட அவர்கள் திருந்தவில்லை.  தற்போது பள்ளி திறக்காத நிலையிலும் நீதியரசர் ரவிராஜ பாண்டியன் அறிக்கை வெளிவராத நிலையிலே அதிகமாக கட்ட வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். பெற்றோருக்கும் நோட்டிசு அனுப்புகிறார்கள்.”

“இதற்கெல்லாம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், பல பெற்றோர் மனத் திடம் இல்லாமல், நமது குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ இந்த பள்ளிகள் என்று பயப்பட்டு செலுத்திவிடுகிறார்கள். அந்த உணர்வை போக்கும் வகையிலே நாங்கள் போராடுகிறோம். இருந்தாலும் சரி செய்ய முடியவில்லை.  நீங்களெல்லாம் செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். கோயமுத்தூரில் சங்கீதா என்ற பெண் யூகேஜி படிக்கும் தனது மகனுக்கு தனியார் பள்ளி கேட்டகட்டணம் கட்டி படிக்க வைக்கமுடியவில்லை என்று மனமொடிந்து தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மரண வாக்குமூலத்தில் கூடுதல் பணம் கேட்டார்கள், என்னால் கட்டமுடியவில்லை அதனால் உயிரை மாய்த்துக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பெற்றோர்களை பொறுத்தவரை நீங்கள் உறுதியாக இருந்தால் நாம் நமக்குரிய உரிமைகளை பெற முடியும். ”

“அந்த அளவிலே, இலவசக்கல்வி என்பது நமது நீண்டகால கோரிக்கை அதற்கு இப்போதிருந்தே அடித்தளம் அமைத்து போராட வேண்டிய சூழ்நிலை. அதற்குள்ளே, தனியார் பள்ளிகளெல்லாம் கொள்ளைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். அதை முறியடிக்க பெற்றோர்கள் ஒன்று கூடவேண்டும். கூடுதல் கட்டணம் கட்டமாட்டோமென்று உறுதியாகக்கூற வெண்டும். சென்ற ஆண்டு கூடுதல் கட்டண்ம் வசூலித்த பள்ளிகளுக்கெல்லாம் அதைக் கழித்துக் கொண்டு  இந்த ஆண்டு அறிவிப்பு வந்த பிறகு வசூலிக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கியிருக்கிறது மெட்ரிகுலேசன் ஆய்வாளர்கள் சங்கம்.”

“அதேபோல், இந்த பெற்றோர் சங்கத்தை வளர்க்க வேண்டுமென்று கடந்த ஒரு மாதகாலமாக ஒவ்வொரு பெற்றோர் வீட்டிற்கும் தெருத்தெருவாக சென்றும் நிலைமையை எடுத்துக்கூறி பயப்படவேண்டாம் அச்சப்படவேண்டாம் என்று கூறி உறுப்பினராக சேர்த்து வருகிறோம். ஏறக்குறைய ஆயிரம் பெற்றோர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் அந்தப்பணி தொடரும். போராட ஆரம்பித்தால்தான், உரிமைகளை கேட்க ஆரம்பித்தால்தான் பள்ளிகள் நிர்வாகம் கட்டுப்படும். எவ்வளவு கேட்டாலும் கட்டிவிடலாம், குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் உரிமைகளைப் பெற முடியாது. நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும். அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. நாம் பள்ளிகளிடம் போராடவில்லை. அரசு தரமான கல்வியைக் கொடு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கல்வியைக் கொடுக்க வேண்டுமென்று நாம் கேட்கின்றோம். தனியார் கட்டணக் கொள்ளைக்கெதிராக அரசிடம் தான் நாம் போராடுகிறோம்.”

“அரசு கூடுதல் கட்டணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். சரியான நடவடிக்கை எடுத்தால்தான் தனியார் பள்ளிகள் அடங்கி ஒழுங்காக அரசுக் கட்டணத்தை வாங்குவார்கள். நாங்கள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களோடு ஒன்றுபடுங்கள். போராடுங்கள். உங்கள் குழந்தைகளை பள்ளியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதற்கெல்லாம் கட்டாயக்கல்வி சட்டத்திலே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள், ஒன்று சேர்ந்து போராடுவோம். தனியார் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என்றுக்கேட்டுக்கொள்கிறேன். “

________________________________________________________

அடுத்து கருத்துரை வழங்க வந்தார் சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினரான கல்வியாளர் திரு..சீ.ராஜகோபாலன் அவர்கள்.

கோவையைச் சேர்ந்த சங்கீதா, தன் குழந்தைக்கு கல்வி கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கத்திலே தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,  இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிசம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் பேசலாம் என்றார். அஞ்சலி செலுத்தப்பட்டபின் தன் கருத்துரையை தொடங்கினார். அவர் பேச்சிலிருந்து,

”1964-ஆம் ஆண்டு இலவசக் கல்வி, அனைவருக்கும் கல்வி தொடங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. ஆனால்  1978-ல் கட்டணக் கல்வியைக் கொண்டுவந்தார்கள். அப்போழுது ஒரு கட்டுரை நான் எழுதியிருந்தேன். அதை அரைப்பக்கமாக  வெளியிட்டிருந்தார்கள். நான் அதிலே எடுத்துச் சொன்னேன்.  நீங்கள் கட்டணக் கல்வியை அனுமதித்துவிட்ட காரணத்தாலே  இலவசக் கல்வி மறைந்து விடும். அதுமட்டுமல்ல, தமிழ் தமிழ்நாட்டைவிட்டு ஓடிவிடும்.  தமிழை முதன்மையாக எடுத்துப்படிப்பது கூட நின்றுவிடும் என்று எழுதியிருந்தேன்.”

“இன்றைக்கு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட கழக பள்ளிகளிலோ அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ இலவசக்கல்வி கற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இன்று அவர்களின் பிள்ளைகளின் அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணக் கல்விக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் நீங்கள் அனைவரும். இப்பொழுது அரசு அதிகாரிகளெல்லாம் மிகக் கெட்டிக்காரர்கள். எப்போதுமே திசை திருப்புவதிலேயே மகாக் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.”

“அந்த வகையிலேதான் இப்பொழுது என்ன செய்தார்களென்றால் சமச்சீர் கல்வி, அடுத்தது கட்டண நிர்ணயம் என்று சொன்னார்கள். இந்த இரண்டுமே திசை திருப்பும் முயற்சியே என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இலவசக் கல்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால், இலவசக் கல்வி வேண்டாம்,அதற்கு பதிலாக சமச்சீர் கல்வி என்று நமது கோரிக்கையையே மாற்றி விட்டார்கள். இன்றைக்கு இலவசக் கல்வி பற்றி பேசவேயில்லை. இலவசக் கல்வி நமது உரிமை. இலவசக் கல்விக்கு பதில்  குறைந்த கட்டணம் கொடுத்தால் போதும் என்று நாம் அவல நிலைக்கு வந்திருக்கிறோமென்றால் இதை மாற்றிய அரசை என்னவென்று சொல்வது? நமது கோரிக்கையே அர்த்தமில்லாமல் எங்கேயோ திருக்கப்பட்டுவிட்டது.அரசு பள்ளிகளால் ஏன் தரமான கல்வியைத் தரமுடியவில்லை? ”

அதைத்தொடர்ந்து அவர் அரசு எவ்வாறு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை ஒழித்து விட்டு தனியார் பள்ளிகளை ஊக்குவித்தது  என்றும்,தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் பற்றியும் சமச்சீர்கல்வி பற்றியும்  விரிவாகப் பேசினார். இலவசக் கல்வியே நமது முடிவான கோரிக்கை, அதுவரை கட்டணக் கல்வி என்பது தற்காலிகமானது என்றும் அவர் பேச்சு தெளிவுப்படுத்தியது.  (அவரது கருத்துரையை தனி இடுகையாக வெளியிடுகிறோம்.)

_________________________________________________________________

டுத்து பேசிய  ராமனாதன், முன்னாள் எம்பி அவர்கள் பேச்சிலிருந்து,

“அந்த காலத்தில் எம்எல்ஏ  மகனும் சரி அவரின் வாகன ஓட்டியின் மகனும் சரி ஒரே பள்ளியில் ஒரே பாடத்தை தான் படித்தனர். அரசு, அரசு பள்ளிகளை மேம்படுத்த நிறைய முயற்ச்சிகள் எடுக்கும், நிறைய நிதி ஒதுக்கும்.அப்பொழுதெல்லாம் இவ்வளவு தனியார் பள்ளிகள் இல்லை. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.”

அவரைத்தொடர்ந்து பேசிய ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ “தனியார்மயக் கொள்ளைதான் – அரசாங்கத்தின் கொள்கை” என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சிலிருந்து,

ருணாநிதி ஆட்சியானாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியானாலும் சரி, எனக்கு இவ்ளோதான் கட்டணம். பில்லு போட்டு இவ்வளவு கட்டணம்,பில்லு போடாமல் இவ்ளோ கட்டணம,  கட்டவில்லையா, டிசியை வாங்கிட்டு போய்டு, மாணவர்களை நிற்க வைப்பது என்று பல அராஜகங்கள். விருத்தாசலம் மாவட்டத்தில் மட்டும் 30 தனியார் பள்ளிகள் உள்ளது. தினந்தோறும் இந்தப் பிரச்சினை இருந்துகிட்டே இருக்கு. தமிழக அரசு சட்டம் போட்டு நீதியரசரை நியமிச்சு கட்டணம் போட்டும் தனியார் பள்ளி முதலாளிகள் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். சுப்ரீம் கோர்ட்  அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தோத்துப்போய் விட்ட்டார்கள்.”

“அப்படியும் அவர்கள், அரசு சொல்வதைக் கேட்ட மாட்டோம் என்கிறார்களென்றால் அப்படியும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றால் என்னவென்று சொல்லுவது. தனியார் முதலாளிகளின் கொள்கைதான் அரசின் கொள்கைகள். கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமையாக, வாழும் உரிமையாக அரசியல் சாசன ஷரத்து இருபத்தியொன்று ஏழு  கூறுகிறது. 16 வயது வரை கல்வி பெறும் உரிமை உள்ளது.  கருத்துரிமை, பேச்சுரிமை, தொழிற்சங்க உரிமை என்று எப்படி சொல்லுவோமோ அது போல கல்வி உரிமையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடலாம்.  இந்த சட்டம் என்னுடைய உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் இந்த நீதிமன்றம் என்னுடைய உரிமையை நிலைநாட்டவில்லையென்றால் நாமேதான் களத்தில் இறங்கி போராடவேண்டும்.”

அதோடு, கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசு என்ன சொல்கிறது,  தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டுபாடியாகவில்லை என்று கட்டணம் நிர்ணயிக்கிறது. உலகில் 135 நாடுகளில் தாய்மொழிக்கல்விதான். அய்யா ராசகோபாலன் சொன்னது போல இன்றைய பல அறிஞர்கள் தாய்மொழியில் கல்வி கற்றவ்ர்கள்தான்.நமது தண்ணீரை ஒரு லிட்டருக்கு 12 காசு கொடுத்து வாங்கி விட்டு அதை  கொகோகோலா 18 ரூபாய்க்கு நம்மிடம் விற்கிறான். நம்முடைய இயற்கை வளம், இரும்புத்தாது தனியார் முதலாளிகளுக்கு 27 ரூபாய்க்கு விற்கிறான்.  நம்முடைய காடுகள், மலைகள், பாக்சைட் தாது அனைத்தையும் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டான். இந்த வளங்கள் ஒருநாள் வற்றிவிடும். எண்ணெய் வளத்தை எடுத்தால் தீர்ந்துவிடும், கோலார் தங்கவயலில் தங்கம் தீர்ந்துபோகிறது.”

“ஆனால், இந்த கல்வி எனும் சுரங்கம் வற்றாது. 120 கோடி இந்திய மக்கள் தொகையில் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். எல்கேஜி போய் ப்ரிகேஜு அதற்கு 20000 ரூபாய். பிரிகேஜியில் என்ன செய்யும்? குழந்தை சாப்பிடும், தூங்கும், வீட்டுக்கு வந்துவிடும்?அதற்கு எதுக்கு இருபதாயிரம் ரூபாய்? மருத்துவக்கல்லூரிக்கு ஒரு மாணவனுக்கு எட்டாயிரம் பீஸ். எல்கேஜிக்கு 20000 ரூபாய்? இலவச டீவி தருகிறேன், வாசிங் மெஷின் தருகிறேன், லேப்டாப் தருகிறேன் என்று சொல்கிறவர்கள் ஏன் இலவசக் கல்வியை தருவதில்லை? எதிர்க்கட்சிகளும் ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்? ஒரு எல்கேஜி சீட்ட்டுக்கு அநியாயக் கொள்ளையாக இருபதாயிரம் ரூபாய் வாங்குகிறார்களே? பெற்றோர்களும் எப்படியாவது படித்து தம்பிள்ளைகள் மேலே வந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.”

ஒரு கடையில் கிரைண்டர் வாங்குகிறோம் மிக்சி வாங்குகிறோம். ஒரு கடையில் மூவாயிரம் சொல்கிறான். ஒரு கடையில் இரண்டாயிரத்து எண்ணூறு என்கிறான். உடனே அவனிடம் இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் கிரைண்டரை மூவாயிரம் என்கிறாயே என்று சண்டை போடுகிறோம். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவோம் என்கிறோம். நான் பெரிய அதிகாரி என்கிறோம். ஆனால், இங்கிருக்கும் நந்தினி ஸ்கூலில் கோவிந்தராஜன் கமிட்டியில் போட்ட கட்டணத்தை தாண்டி அதிகமாக கேட்கிறார்கள்,  யூனிபார்முக்குத் தனியாக வாங்குகிறார்களே, எத்தனைப் பெற்றோர்கள் கட்டணத்துக்கு கூடுதலாக வாங்குகிறார்கள் என்று கேட்கிறார்கள்? ஏன் கேட்காமலிருக்கிறார்கள்?”

“நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்றும் ஒளிவு மறைவு கிடையாது. பயம், தயக்கம், அறியாமை. அதைப் போக்குவதற்கு பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்., பல சுவரொட்டிகள், பல முழக்கங்கள். நமக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி உரிமை இருக்கிறது. அனைத்து மக்களும் வீதியில் இறங்கி கேட்க வேண்டும். கட்டணத்தை குறைக்குமாறு 15  ஊரில் போராட்டம் செய்தால் அடுத்த ஊரில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து கேட்பார்கள்.  இவையெல்லாம் பின்னிப் பிணைந்தது. ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பள்ளியை முற்றுகையிட்டு கூடுதல் கட்டணம் வாங்குவதை தடுத்தி நிறுத்தினால் இதைப்பார்த்து மற்ற பள்ளிகளிலும் மக்கள் போராடுவார்கள். நாங்கள் போராடி வெற்று பெற்று ஆய்வாளர்  பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணத்தை நோட்டீஸ் போர்ட்டில் போட உத்தரவிட்டார்.”

“கூடுதலாக கட்டாவிட்டால் உங்கள் பிள்ளைகளை பெயிலாக்க முடியாது. தேர்வை நிறுத்தி வைக்க முடியாது. கோயமுத்தூரில் 15ஆயிரம் கட்டணத்தை கட்ட முடியாமல் தீக்குளித்து  தற்கொலை செய்துக்கொண்டதாக ஒரு தாய் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோயமுத்தூரிலுள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யவும், தற்கொலைக்கு  தூண்டியதாக அந்த பள்ளி முதலாளி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

மேலும் வழக்குரைஞர் ராஜூ பேசும் போது வீடுவீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்து பெற்றோர் சங்கத்தில் சேர்த்ததை பற்றியும் பேசினார். சிலரிடம்  இரண்டரை மணிநேரம் கூட பேசி ஆரம்பத்தில் 15 உறுப்பினர்களோடு ஆரம்பித்த சங்கம் இன்று ஆயிரம் பெற்றோர்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

_________________________________________________

அவரைத்தொடர்ந்து வழக்குரைஞர் மீனாட்சி பேசினார். விருத்தாசலம் பகுதியில் இன்று எழுந்த தீப்பொறி நாடு முழுக்க பரவட்டும் என்ற வாழ்த்தோடு தனது உரையைத் தொடங்கினார்.

நமது அரசியலமைப்புப் பிரிவுகளின் படி கல்வி எப்படி நமது வாழ்வுரிமைகளின் கீழ் வருகிறது என்பதை தெளிவாக விளக்கினார். அவரது உரையிலிருந்து,

“ தமிழ்நாட்டின் அனைத்துப் பெற்றோரின் மனசிலும்  ஆழமாக பதிந்திருந்திருக்கும் பெயர் எதுவென்றால் ரவிராஜபாண்டியன். ஏனெனில், அவர்தான் நமது குழந்தைகளில் படிப்புக்கு பள்ளிக்கட்டணத்தை நியமிக்கப் போகிறவர். நமது ஆதங்கத்துக்கும், வெற்றிக்கும் ஒரே காரணமாக இருக்கப்போகிறவர் இப்போது அவர்தான். அனைவருக்கும் இலவசக் கல்வி சாத்தியமா? நமது ஊரில் எங்கும் சாத்தியமாக இல்லை. இந்தியாவைத் தவிர மக்கள் தொகை அதிகமாக கொண்டநாடுகளில் கூட கல்வி இலவசம். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட கல்வி இலவச உரிமை.”

1947- இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுப்பினர். 1947-ல் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வருகிறது. அந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் ஷரத்து 26 என்ன சொல்கிறதென்றால், இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது உரிமையாகும். அதுவும் குறிப்பாக குறைந்த பட்சம் 6 முதல் 14 வயது அடிப்படை கல்வி உரிமையாக்கபட வேண்டும். அது கட்டாயமாகக் கொடுக்கப்படவேண்டும், அன்று  இந்தியா இட்ட கையெழுத்தில் நம் அனைவருக்கும் கல்வி என்பது இலவச உரிமையாக்கப்பட்டுள்ளது.”

“நமது அரசியலமைப்புச் சட்டம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பிரிவுகள், பகுதி 3 மற்றும் பகுதி 4.  பகுதி 3 நமது அடிப்படை உரிமைகளை தருகிறது. அடிப்படை உரிமைகள். பகுதி நான்கில் வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளது. இன்று நமக்கெல்லாம் கல்வி இலவச உரிமையாக இருக்கிறதென்றால் அதற்கு ஒரு பெண் காரணம். அவருடைய பெயர் மோனிக் ஜெயின்.  அவர் கர்நாடகத்தின் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேருகிறார். அவரை 60000 ருபாய் கட்டச்சொல்கிறார்கள். அரசாங்கத்திலோ ஏழாயிரம் ரூபாய். ஆனால், மேனேஜ்மெண்ட்டில் 60000 ரூபாய்.  ”கல்வி எனது அடிப்படை உரிமை, ஷரத்து 21 எனக்கு அந்த வாக்குறுதியைத் தருகிறது.” அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். அதில் நான் சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய உரிமை அடங்கியிருக்கிறது.  அந்த ஷரத்துக்குள் எனது கல்வியுரிமை அடங்கியிருக்கிறது என்று வழக்குத் தொடுத்தார்.”

“வழக்கு அவருக்குச் சாதகமாக முடிகிறது. ஆனால், அதற்குள் அவர் படிக்கவேண்டிய காலம் முடிகிறது. படிக்கமுடியவில்லை. ஆனாலும் கூட ஒரு பெண் எழுப்பிய ஒரு குரல் நமக்கு அடிப்படை உரிமையை வழங்கியிருக்கிறது என்று சொன்னால் நாம் எல்லோரும் எழுப்பும் இந்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.”

“1973- இல் தனியார் கல்வி முதலாளிகள் ஐந்து பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். ஷரத்து 19 1 டி என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அது எனக்கு வியாபாரம் செய்யும் உரிமையை தருகிறது, அதனால் கல்விக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அதைத் தடுக்கலாமா என்று கேட்கிறார்கள். அதில் தனியார் கல்வி முதலாளிகளின் கோரிக்கை என்னவென்றால் “ நீங்கள் அனைவருக்கும் இலவசக் கல்வியை தரச் சொல்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதைப் பொறுத்துத் தீர்ப்பு வழங்கவேண்டும்” என்பதுதான். அப்போது ஷரத்து 45ஐ உச்சநீதிமன்றம் கவனிக்கிறது. இந்த ஷரத்துப்படி 6 வயதிலிருந்து 16 வயது வரை கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.  ஆக, முழுக்க முழுக்க கல்வி என்பது  நம்முடைய உரிமையில் கைவைக்க நீதிமன்றத்துக்கும் கிடையாது.”

” உலக வங்கியால்  நாடாளுமன்றங்களும்  கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனுடைய தாக்கம் அரசுத்துறைகளிலும் நீதிமன்றங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, தனியார் கல்வி நிறுவனங்களும் காசு பார்க்கட்டும் என்று சொல்கிறது. அதுதான் தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் இலவசமாக கல்வியைக் கொடுத்தால் போதும், மீதி 75 சதவீதத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நான்கு வகையான பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், நான்கு வகையான மார்க் என்று இருக்கிறது. இவையனைத்தையும் ஒன்றாக்கி பரிசீலித்து ஒரு பாடத்திட்டமாக்கி இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அதை தடுத்தி நிறுத்தியிருப்பதை நாம் எதிர்த்து போராட வேண்டும்.தடுத்து நிறுத்த வேண்டும். ”.

_____________________________________________________

டுத்துப் பேசியவர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் கணேசன் அவர்கள். பெற்றோர்கள் ஒன்று திரண்டு போரடவேண்டிய அவசியத்தை மிகவும் அருமையாக உணர்த்தினார். அவர் பேசியதிலிருந்து,

“இன்று அனைத்து பெற்றோர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பது என்னவென்றால் பள்ளியின் கட்டணம்தான்.ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் பள்ளிகளைத் தேடிசெல்ல வேண்டியிருக்கும். இப்போது, புற்றீசல் போல பல்கிப் பெருகிக் கிடக்கின்றன்.  இந்த விருத்தாசலத்தின் சந்து பொந்துகளில் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வாடகைக்குக் கூட இடங்களை எடுத்து பள்ளிகளை நடத்துக்கிறார்கள். பள்ளிகளுக்கென்று வரையறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை வசதிகளைக்க்கூட கணக்கிலெடுக்காமல் இன்று பள்ளிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன.”

“நான் கஞ்சி குடித்தாவது பத்து பாத்திரம் நடத்தியாவது என் பிள்ளையை படிக்க வைப்பேன். என்னைப்போல் என் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துதான் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றன்ர். இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் என்ன நடந்ததென்றால், இந்த நியாயமான கோரிக்கை நம் உரிமையாகிய இலவசக் கல்வியை தனியார் பள்ளிகளின் சட்டையைப் பிடித்து ”என்பிள்ளைக்கு கல்வி கொடுறா  நாயே ” என்றுஉரிமையோடு கேட்பதற்கு பதிலாக அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.”

” ஒரு விஷயத்தைச் சொன்னால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு குழந்தையை எல்கேஜியில் சேர்க்க பொதுவாக எவ்வளவு செலவாகும்? கிராமப்புறங்களாக இருந்தால் மூன்றாயிரம். ஓரளவு வசதியாக இருந்தால் ஆறாயிரம். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு லட்சம்  செலவு ஆகிறது. வேலம்மாள் இண்டர்நேசனல் ஸ்கூல், சென்னை பப்ளிக் ஸ்கூல், எஸ்பிஓஏ இன்னும் நிறைய இருக்கிறது அங்கெல்லாம் இந்த நிலைமைதான். இந்த நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் எல்லாம் வறண்ட மாவட்டங்கள். ஆனால், அங்கே போனால் ஒரே கார்களாகத்தான் நின்றுகொண்டிருக்கும், ஏனெனில் அங்கிருக்கும் பள்ளிகளில்தான் எல்லா ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளெல்லாம் படிக்கிறார்கள்.”

“அங்கெல்லாம் பிள்ளைகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள். படிக்க வைத்து அனுப்புவதில்லை. அங்கு எதைக்கேட்டாலும் விலையேறிப் போய்த்தான் கிடக்கிறது.  இன்னொரு செய்தி, ஒரு பள்ளிக்கூடத்தில் 5000 பிள்ளைகள். அவர்கள் அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள். ”என் பிள்ளை இந்த பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறது” என்று பெற்றோர் எழுதுவது போல. ”கோவிந்தராசன் கமிட்டி ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது, இந்த பள்ளிக்கூடத்தை ஐந்தாயிரம் கொடுத்து நடத்தமுடியாது. என் பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்காது. அதனால் தயவு செய்து கோவிந்தராஜன் கமிட்டி என் பிள்ளைக்கு பீசை கொஞ்சம் உயர்த்திக்கொடுக்கவும் “ என்று பிள்ளைகள் மூலம் ஃபார்ம் கொடுத்து அனுப்புகிறார்கள்.”

“எவ்வளவு நூதனமாகச் சிந்திக்கிறார்கள், பாருங்கள்,  நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா இப்படி? இந்த அயோக்கியப் பயலை நடுத்தெருவில் தூக்கிபோட்டு மிதிக்க நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?  எதுவும் முடியாமல் பெற்றோர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனைக் கமிட்டிப் போட்டாலும் எதுவும் தீரவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? தனியார் கல்வியை அனுமதித்தவர்கள்தானே! இதனால் எத்தனைப்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? அனைவரும் ஒன்றாகத் திரண்டு போராட வேண்டும். ”.

___________________________________________________

தற்குப் பின்னர். மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1: இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை குறைத்துக் கொள்ளவும், மேலும் கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2: அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு எல்கெஜி, யூகேஜி முதல் இலவசமாக வழங்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி  அடிப்படை உரிமையான 6 முதல் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை மட்டுமே உத்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட நீதியரசர் ரவிராஜப்பாண்டியன் கமிட்டியை ரத்து செய்ய இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழ்நாடு அரசு இவ்வாண்டு சேர்க்கைக்காக  கோவை பிரேஸ் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து உயிரழந்த சங்கீதா மரணத்துக்கு காரணமான பள்ளி முதலாளியை கைது செய்து அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டுமென ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. மேலும் சங்கீதாவின் குடும்பத்துக்கு  உரிய இழப்பீடு வழங்கவும்,  யூகேஜி படிக்கும் அவரது மகனின் கல்வி கட்டணம் முழுவதையும்  தமிழக அரசே ஏற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தின் சமச்சீர் கல்வி கட்டணத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக பாடத்திட்டத்தையே நிறுத்தி வைத்து முந்தைய பாடத்திட்டமே செல்லுமென சொல்லியிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்தவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: சமூக சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மனிதாபிமானமும் உடைய தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கவும், ஆங்கில வழிக் கல்வியையும் தனியார்மய பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டுமென பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாகக்  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8: அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை  அரசு பொறுப்பில் இலவசமாக வழங்கத் தடையாக உள்ள தனியார் மயத்தை எதிர்த்து போராட பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பெற்றோர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை

நாடுகிறார்களென்றும், தனியார் பள்ளிகளின் அராஜகத்தைப்பற்றியும்,  பெற்றோர் சங்கத்தில் சேர்ந்தபின்னர் மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகையின் பலன்களை பற்றியும் தகவல்கள் தெரிவித்தனர். இறுதியில் பெற்றோர்கள் அனைவரும் தாம் ஒன்றாக இணைந்து போராடுவதில்தான் தமது பிள்ளைகளின்  கல்விக்கான தீர்வு இருக்கிறது என்பதையும் உணர்ந்துக்கொண்டதாக அந்த கலந்துரையாடல் இருந்தது.  இறுதியில் பெற்றோர் சங்கத்தின் பொருளாளர் க.வீரகாந்தி நன்றியுரை வழங்க கூட்டம் முடிவடைந்தது. தனியார் மய பள்ளிகளுக்கெதிராக விருத்தாசலத்தில் எழுந்த இந்த தீப்பொறி நாடெங்கும் பரவட்டும்.

_________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், விருத்தாசலத்திலிருந்து..

____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,

சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமீபத்தில் அதை சட்டமாக்கியும் முடித்துவிட்டார்கள். அமைச்சரவை உத்தரவு வந்த போதே மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் போராடியதோடு சட்டப் போராட்டத்தையும் கையிலெடுத்தது.

இதே நேரத்தில் சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சமச்சீர் கல்விக்காக தி.மு.க அரசு அச்சிட்ட நூல்களை அழிக்க கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். வெளியே சி.பி.எம் கட்சி ஜெயா வீட்டில் தனது எம்.எல்.ஏக்களோடு கூருப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அக்கட்சியின் மாநில செயலர் பாசிச ஜெயாவை மயிலிறகால் வருடிக் கொண்டிருந்தார். அதாவது அம்மா பாத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.

ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர் அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று

வழக்கறிஞர் சியாம் சுந்தர் என்பவரும், திமுகவின் முன்னாள் கூடுதல் அடிஷனல் அட்கவேட் ஜெனரல் வில்சன் ஒரு மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதாடினார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அது சார்ந்த கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம் சார்பில் ம.உ.பா.மையத்தின் இளம் வழக்கறிஞர்கள் விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். ம.உ.பா.மை சார்பாக வழக்கறிஞர்கள் காந்தி, புருஷோத்தமன், மோகன், தியாகு ஆஜராகினர். மேலும் ஒரு வழக்கறிஞர் படையே இதற்காக தீவிரமாக வேலை செய்து வந்தது.

இன்று நடந்த விவாதத்தில் நமது வழக்கறிஞர்கள் பாசிச ஜெயா அரசின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக நிரூபித்தார்கள். முக்கியமாக 15ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும், அதற்குள் பழைய பாடத்திட்டம் அச்சடிக்கப்படும் என்ற அரசின் வாதத்தை பொய் என்று நிரூபித்தார்கள். அதன்படி பழைய பாடத்திட்டம் அச்சடிப்பதற்காக அரசு, அச்சக உரிமையாளர்களோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்கள். அதில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நூல்களை வழங்கினால் போதுமென்று அரசு கோரியிருந்ததை சுட்டிக்காட்டி வாதாடினார்கள்.

ஆக பதினைந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும், நூல்கள் கிடைக்கும் என்று பொய்யுரைப்பதை நிரூபித்தார்கள். மேலும் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஏன் தரமல்ல என்பது குறித்து இதுவரை அரசு ஒரு விசயத்தை கூட சொல்லவில்லை, விளக்கமளிக்கவில்லை என்பதையும் வாதிட்டார்கள். 200 கோடி ரூபாய் செலவிட்டு அச்சிடப்பட்ட நூல்களையும், அந்த திட்டத்திற்கான பிரயத்தனத்தையும் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். மேலும் இதில் ஜெயா அரசி காழ்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி வேறு காரணமில்லை என்றும் பேசினார்கள்.

இன்று இந்த வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்சில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னால் நடந்தது. இறுதியில் நீதிபதிகள் சமச்சீர் கல்வியை ரத்து செய்த புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் 200கோடியை செலவழித்து விட்டு தற்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த காரணமுமில்லை என்பதையும், அரசின் உள்நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வழக்கை ஒத்திவைத்தார்கள்.

தற்போது தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே ஆக வேண்டும். பாசிச ஜெயா அரசு இதற்காக உடனே உச்சநீதிமன்றம் சென்று இந்த இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கும். அதற்கென்று பெரிய வழக்கறிஞர்களை  நியமித்து, பெரிய செலவில் வாதாடும். எனினும் இந்த இடைக்காலத் தடை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

மேலும் ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. சமச்சீர் கல்வி வேண்டுமென பலர் வழக்குப் போட்டதை ஒன்றாக இணைத்தே உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. எனினும் ம.உ.பா.மை சார்ந்த மனுதான் விரிவாகவும், ஆதாரப் பூர்வாகமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் செல்லும் என்ற நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. மக்கள் அரங்கிலும் சரி, சட்ட அரங்கிலும் சரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ம.க.இ.க அமைப்புகள் தயாராகின்றன.

தி.மு.க போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில் ம.க.இ.க இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பாசிச ஜெயாவுக்கு நாங்கள்தான் உண்மையான எதிரிகள், அதனால் எங்களது போராட்டமும் தொடரும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

21

ஜெயலலிதாமிழக சட்டசபையில் கடந்த புதன்கிழமையன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணையத்திலும், தமிழ்தேசிய ஆர்வலர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதுவுமே நடக்காத நிலையில் இந்த அளவுக்காவது தீர்மானம் போட்டிருக்கும் ஜெயாவை பாராட்ட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.

தீர்மானத்தை ஆதரித்த திமுக கடைசியில் விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்படாத காரணத்தால் வெளிநடப்பு செய்தது. மறுநாள் சட்டசபையில் கச்சத்தீவை மீட்பதற்காக தாம் நடத்தும் சட்டப் போராட்டத்தில் வருவாய்த்துறையையும் ஒரு வாதியாக சேர்க்க உச்சநீதி மன்றத்திடமும் கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.

வருவாய்த்துறையிடம் ஆதாரமாக உள்ள 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது என்றும், அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்றால் கச்சத்தீவை அது குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார் ஜெயா.

1974- இல் தமிழக முதல்வராக கருணாநிதி இருக்கும் போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உரிமை உள்ள கச்சத்தீவு மத்தியில் இருந்த காங்கிரசு அரசால் தாரை வார்க்கப்பட்டது. அப்போதே இதுபற்றிய கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லித் தப்பியவர்தான் கருணாநிதி எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா, அஞ்சலக அரசியல் நடத்தியதாக கருணாநிதியின் பிரதமருக்கான கடிதங்களை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. முல்லைப் பெரியாறு துவங்கி காவிரிப் பிரச்சினை வரை அனைத்தையுமே தீர்க்க‌ முந்தைய‌ திமுக‌ அர‌சு எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை என‌க் குற்ற‌ம் சாட்டினார் விஜ‌ய‌காந்த். தமிழ் சமூகத்தை அழித்த பெருமையும் திமுக விற்கே உண்டு என்றும் குற்றம்சாட்டிய அவர் கலைஞரின் 4 மணிநேர உண்ணாவிரதம் என்ற நாடகத்தையும் கிண்டல் செய்தார். இத‌னைய‌டுத்துதான் முதல் நாளில் திமுக சட்டசபையில் இருந்து வெளியேறிய‌து.

தில்லியில் சென்று முகாமிட்டு ம‌ற்ற‌ மாநில‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளைக் கூட்டி பேசி ம‌த்திய‌ அர‌சுக்கு அழுத்த‌ம் த‌ர‌ வேண்டும் என்கிறார் நெடுமாற‌ன். இல‌ங்கை மீதான‌ பொருளாதார‌த் த‌டைவிதிக்க‌ கோரி இந்திய‌ அர‌சை ஐ.நா.விட‌ம் வ‌லியுறுத்த‌க் கோரும் தீர்மான‌த்தையும், முள்வேலி முகாமிலிருக்கும் ம‌க்க‌ளுக்கு நிவார‌ண‌ம் அளிக்க‌ வ‌லியுறுத்தும் தீர்மான‌மும் ந‌ம்பிக்கை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என்கிறார் வைகோ. ச‌க‌ல‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் இதுபோல‌ பாலைவ‌ன‌த்துச் சோலையாக‌ இத்தீர்மான‌த்தை பார்க்கின்ற‌ன‌ர்.

மத்திய அரசை வலியுறுத்தும் இத்தீர்மானத்தில் கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசையும் மாநில அரசையும் 2008 இல் பிரதிவாதியாக அன்று வாதியாக இருந்த ஜெயா சேர்த்திருக்கிறார். இன்று அவர்தான் பிரதிவாதி, வாதியும் அவர்தான். இந்த கேலிக்கூத்துக்கு மத்தியிலும் வருவாய்த்துறையையும் வாதியாக சேர்க்கச் சொல்லவும் அவர் தயங்கவில்லை. இதற்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை அல்லது ஒரு நாடு தனிநபருடன் போடும் பரஸ்பர ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் அறுபதுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் கூட வெற்றி கண்டிருக்காது. அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றிருந்தால் நாம் அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தைக் கூட ஒரு ரிட் போட்டு தூக்கி எறிந்திருக்கலேமே?

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பிறகு குறிப்பாக 90 களுக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் வெற்றி பெற முடியாது என்பது நம்மை விட ஜெயாவுக்கு நன்றாகத் தெரியும். கச்சத்தீவு மீதான நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது சரியல்ல என்பதுதானே வாதம். அப்படியானால் நமது நாட்டில் இன்று அமுலாகிக் கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கூட நமது நாட்டுச் சட்டம் செல்லுபடியாகாதே அதற்கு எதிராக ஜெயாவோ கருணாநிதியோ பேச முன் வருவார்களா ? மாட்டார்கள். மாறாக, நான்தான் நோக்கியாவை கொண்டு வந்தேன், எனது ஆட்சிக் காலத்தில்தான் ஹூண்டாய் கம்பெனிக்கு நிலம் ஒதுக்கினோம் என்றெல்லாம் கூறி தாங்கள் நாட்டு மக்களது இறையாண்மையை விற்றதையே தொழில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றெல்லாம் பீற்றித் திரிந்த்தை அனைவரும் அறிவார்கள்.

கச்சத்தீவை மீட்க மற்ற மாநில அரசியல்கட்சி தலைவர்களோடு பேசி மத்திய அரசுக்கு எதிராக போராடி அழுத்தம் தர ஜெயாவுக்கு ஐடியா கொடுக்கிறார் மாவீரன். யாருக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தேவையாக இருக்கிறது என்பதை குறைந்தபட்சமாக பரிசீலித்தாலே இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இத்தீவில் மீனவர்களுக்கான பயன்பாட்டைத் தாண்டி எதாவது பொருளாதார கனிம வளம் இருக்கிறதா ? இல்லை இந்த இடம் ஏதாவது ராணுவரீதியில் கேந்திரமான இடமா ? என்பதை பரிசீலித்தால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது. இதில் மீனவர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவதால்தானே அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஒருவேளை கச்சத்தீவில் மட்டும் எண்ணையும், இரும்புத் தாதும் அளப்பறிய அளவில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினை என்றோ ஃபைசல் செய்யப்பட்டிருக்கும். தமிழக மீனவர்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் போது இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக கட்சிகளும், அரசும் ஏன் கருதப்போகிறது? கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்றால் அது தமிழக மக்களை அணிதிரட்டி மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதன் மூலமே செய்ய முடியும். அதற்கு தயாரில்லாத கட்சிகள் இப்படி வெத்து சவடால் அடிப்பதையே ஈழ ஆதரவாளர்கள் கொண்டாடினால் அதை என்னவென்று சொல்ல?

பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரக் கப்பல்களில் பிடிக்கப்படும் மீனை நமது மீனவர்களுக்கு கிடைக்கச் செய்வதையா அரசு செய்கிறது? இல்லை. கடலின் மீதான மீனவர்களின் உரிமையாக இருக்கட்டும், நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் 90 களுக்குப் பிறகு அரசு வெளிப்படையாக வேறு மாதிரிதானே நடந்து கொள்கிறது. அதில் கருணாநிதி ஆட்சிக்கும் ஜெயா ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் வந்துவிட முடியும். இப்போது கூட காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடித அரசியலைத்தானே ஜெயாவும் பின்பற்றி இருக்கிறார்.

ஆனால் இதே ஜெயாதான் கச்சத்தீவு பிரச்சினையில் ஸ்வரண்சிங் இடம் கருணாநிதி வருத்தம் மட்டும்தான் தெரிவித்தார், எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்கள் மீது பன்னாட்டு முதலாளிகளுக்காக மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் போர் நடத்தி அவர்களை உள்நாட்டில் அகதிகளாக ஓட விட்டிருக்கும் மன்மோகன்சிங் அரசு இலங்கை முள்வேலி முகாமை பற்றி அக்கறை கொள்ள வாய்ப்பில்லை. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில் தான் ஒன்றும் சொல்ல முடியாது என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்ல முடியும். மேலும் அரசின் கொள்கை முடிவு, அது உள்நாடாக இருந்தாலே தலையிடாத நீதிமன்றமா இன்று அயல்நாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் முடிவு செய்துவிடும்?

மேலும் ஜமீன்தாரி ஒழிப்புக்கு முன்னர் இருந்த வருவாய்த்துறையின் ஆவணங்களை முன்வைப்பது என்பதே இந்த வழக்கினை நீர்த்துப் போக வைப்பதற்கான வழிமுறைதான். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் பலவும் பின்னால் சட்டமாக வாய்ப்புள்ளதால் இதுபற்றி எதிரான தீர்ப்புதான் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை என்பது  ஒருபுறமிருக்க உள்நாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் மீட்டு வரைமுறைப்படுத்த வேண்டிய போராட்டம் உள்நாட்டில் கிளம்ப வாய்ப்புள்ளதையும் அவர்களை அறிவார்கள். கருணாநிதியின் கடித அரசியலை மிஞ்சி இந்த சட்டமன்றத் தீர்மான அரசியலுக்கு எந்த பலனுமில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுத்தான் கச்சத்தீவை கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதமெல்லாம் எடுபடாது. 1994 ல் சொந்த நாட்டில் பொதுத்துறை நவரத்னாக்களை தனியாருக்கு விற்க வழிவகை செய்ய காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நரசிம்மராவ் அரசு பிறகுதான் அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரிய போதும் அன்றைய நாடாளுமன்றம் வாக்கெடுப்பில்லாத விவாதங்களை மாத்திரம்தான் அனுமதித்தது. இதற்கு பிறகும் கச்சத்தீவை ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தில் பேசிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் எடுபடாது.

_________________________________________________

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?

தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.

கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.

இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.

கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

ஆனால் இவர்களுத தீர்மானங்கள், கருத்துக்களால் வரலாறு நிர்ணயிக்கப்படுவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலில் போர் என்றால் மரணங்கள் சகஜம்தான் எனத் தெரிவித்த அம்மையார் உடனடியாக ஈழத்தாயாக அவதாரம் எடுத்து 16 சீட் கிடைத்தவுடன் கொடை நாடு போய் ஓய்வெடுக்கத் துவங்கினார். முள்ளிவாய்க்காலுக்காக இன்றுவரை கூட ஒரு அறிக்கை கூட எதிர்த்து வெளியிடாதவர்தான் ஜெயா. எல்லா ஜனநாயக இயக்கங்களுக்கும் எதிரான அவர் அன்று தனி ஈழத்தைக் கூட ஆதரித்தார். அவருக்காக பல தமிழ் தேசிய அமைப்புகளும் பிரச்சாரம் செய்தனர்.

அதன்பிறகு பிரச்சாரம் செய்யப் போனவர்கள் மாத்திரம் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அம்மையார் அறிக்கைப் போர் மாத்திரம் நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாது போன காலத்தில் வந்த அவரது அறிக்கையை விட சட்டசபைத் தீர்மானம் கடினமானது அல்ல என நன்றாகப் புரிந்த பிறகும் இதாவது நடக்கிறதே என்பது போராட முடியாமல் துவண்டு போகின்றவர்கள் மற்றும் போராட முடியாதவர்களின் வாதம்.

உத்தரவாதமான எதிர்காலத்தை தங்களது வாழ்க்கை நடைமுறையில் வர்க்க நலனில் இருந்து பெறுபவர்கள் முள்வேலி முகாமை அதற்குள் இருக்கும் மனிதர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு சட்டசபைத் தீர்மானமே பெரிய சாதனைதான். இதனை இணையத்திலும், செய்தித்தாளிலும் படிப்பதற்காக நேரம் ஒதுக்கியதே அவர்கள் செய்த மாபெரும் தியாகமாகத்தான் அவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு  இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது. இது ஜெயா போன்ற பாசிஸ்டுகளுக்கு புரியுமென்பதால்தான் அவர்கள் இதுபோன்ற நடக்க முடியாத விசயங்களுக்காக போராடுவது போல போராடுகிறார்கள். சீமான், நெடுமாறன், வைகோ, ருத்ரகுமாரன் என நீளும் ஒரு தமிழ்தேசிய பட்டியலே தனக்குப் பின்னால் திரளும் எனத் தெரிந்துதான் ஈழத்தாய் இரண்டாம் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்களது சரணாகதி அரசியலுக்கு பொருத்தமாக அட்டைக்கத்தியை இடுப்பில் சொருகியபடி புரட்சித்தலைவி உலா வருகிறார். புறநானூற்று தாயை கண்ட திருப்தியில் புளங்காகிதம் அடைகிறது நடுத்தர வர்க்கம்.

________________________________

• வசந்தன்
________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
இந்துவாக பிறந்துவிட்டேன் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று முடிவெடுத்து புத்த மதத்திற்கு மாறும் அம்பேத்கர்

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3

அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?

அம்பேத்கர் மஹர்எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். மஹர்பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனது உணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார். புலால் உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் ஆராய்ந்தார். பஞ்சமா பாதகங்களைச் செய்யாதேஎன்று உபதேசித்தால், மக்கள் கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்கு அவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.

புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்க வைப்பதன் மூம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச் செயல்படும் திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக அவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலே இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்ட அமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவே கருதப்படுகிறது என்பது எப்படி நினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்தது அவரல்லவா? எனவே அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.

– ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.

”தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய். காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.

ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.

‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை. இந்து – முசுலீம் சண்டையை தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.

சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.

இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.

கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.

”நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் –  நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.

மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.

இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது, வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர். ”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சமாக நாடகமாடினார். பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.

ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.

1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.

அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பௌத்தத்திற்கு மதம் மாறிய அம்பேத்கர்

அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம்  இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார். கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.

கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும்  – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார். அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம்  என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.

அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.

அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.

மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.

இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர். சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவம் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர். கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான். தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.

”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார். இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

– தொடரும்

பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!

கேள்வி :

சமச்சீர் கல்வியை பற்றி தங்கள் கருத்தென்ன? சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்? தங்கள் தளத்தில் கல்வி சார்ந்த கட்டுரைகள் வருவது மிக குறைவாக உள்ளதேன்?

– சீனிவாசன்

கேள்வி :
ஐயா, சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

– பாலச்சந்தர்

அன்புள்ள சீனிவாசன், பாலச்சந்தர்,

சமச்சீர் கல்வி குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒரு தொகுப்பான பார்வையை அளிக்குமென்பதால் அதையே எமது பதிலாக அளிக்கிறோம். வினவில் கல்வி குறித்து அதிகம் கட்டுரைகள் வரவில்லை என்பது உண்மைதான். எதிர்காலத்தில் அதைக் களைந்து கொண்டு போதிய கட்டுரைகள் வெளியிடுகிறோம். நன்றி

– வினவு

__________________________________________________

மச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் முகமாக, கடந்த கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அதற்கான பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டு, பாட நூல்களும் அச்சாகி விநியோகிக்கத் தயாராக உள்ள நிலையில், புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டங்களே பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.

200 கோடி ரூபா செலவில் ஏற்கெனவே அச்சாகியுள்ள பொதுப் பாடத்திட்டத்திற்கான பாடநூல்களைக் குப்பையைப் போல ஒதுக்கிவிட்ட அ.தி.முக. அரசு, பழைய பாடத்திட்டத்தின்படி இனிதான் பாடநூல்களை அச்சிடப் போகிறது. இதற்கு 100 கோடி ரூபாக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஜெயா, அதிரடியாகச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவிட்டதால், ஒருபுறம் 200 கோடி ரூபாக்கும் மேலான மக்களின் வரிப்பணம் பாழாகிவிட்டது. இன்னொருபுறமோ, பள்ளி தொடங்கும்பொழுதே  மாணவர்கள் பாடநூல்கள் கிடைக்காமல் திண்டாடப் போகிறார்கள். எப்பேர்பட்ட நிர்வாகத் திறன்!

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தனியார் பள்ளிக் கொள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கிறார்கள். “சமச்சீர் கல்வி என்ற சொற்றொடரைக் கேட்டவுடன், தமிழகம் கல்வியில் இருண்டு விடுமோ என்ற அச்சம் எங்களை வாட்டிய வேளையில், வாராது வந்த மாமணிபோல் இறைவனால் அனுப்பப்பட்ட விடிவெள்ளி தாங்களே!” என அக்கும்பல் ஜெயாவைப் பாராட்டி விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.

“பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து சிறந்த பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்விமுறை, கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனத் தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக வைத்து வரும் வாதங்களையே அரசின் நிலைப்பாடாக உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் அறிவித்திருக்கிறார்.

சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியை மறுபடியும் நடைமுறை படுத்தக்கோரி மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய மறியல் போராட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிக்கல்வியில், அரசு பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடத்திட்டம்  என நான்கு வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வேறுபட்ட பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருவதால், ஒரே சீரான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்ததைத்தான், நாட்டின் ஆகப்பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து வருவதைப் போன்ற பொதுப் பாடத்திட்ட முறையைத்தான் கடந்த தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வந்தது.

2006-இல் தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், “சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரலாமா, வேண்டாமா?” என்பது குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில், கல்வியாளர்கள் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஜார்ஜ் ஆகியோரையும் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பல்வேறு பாடத்திட்டங்களையும், கர்நாடகம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் பாடத்திட்டங்களையும் ஆராந்து, சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக 109 பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.

இப்பரிந்துரைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, முத்துக்குமரன் அறிக்கையின்படி பொது பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் முனையவில்லை. மாறாக, இதனை நடைமுறைப்படுத்துவதை இழுத்தடிக்கும் முகமாக விஜயகுமார் கமிட்டியை அமைத்தது. மேலும், தனது கட்சியையும்  கூட்டணி கட்சியான காங்கிரசையும் சேர்ந்த பலரும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளாக இருந்துவருவதாலும் இப்பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட பல சமரசங்களைச் செய்து கொண்டு, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டது, தி.மு.க. அரசு.

முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி, தமிழகப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறுஆவுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டம் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் நிறை, குறை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் குறைகள் நீக்கப்பட்டு, புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை பொதுக்கல்வி வாரியம் அங்கீகரித்த பிறகே பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், இப்பொதுப் பாடத்திட்டத்தை ஆதரிக்கும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, இச்சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து தோற்றுப் போனார்கள். அவ்விரு நீதிமன்றங்களும் இது மாநில அரசின் உரிமை என்று இச்சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன.  அப்போதெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் முடங்கிக் கிடந்தது, ஜெயா கும்பல். இப்பொழுதோ, மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அ.தி.மு.க. அரசும் இதனையெல்லாம் மறைத்துவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டனர் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி, இது தரம் குறைந்த பாடத்திட்டம் என்ற அவதூறைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

இப்பொது பாடத்திட்டத்தில் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை ஒரு சுற்றறிக்கையின் மூலம் நீக்கிவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டு முதலே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு முடிய நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்றுதான் கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பொதுப் பாடத்திட்டம் தரம் குறைவாக இருப்பதாகக் கூச்சல் போடும் அ.தி.மு.க. கும்பலோ, “கருணாநிதி இயற்றிய செம்மொழி தமிழ் பற்றிய பாடலும், அவரைப் பற்றிய குறிப்புகளும் இப்பொதுப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை‘‘த் தவிர, வேறெந்த குறைகளையோ, பிழைகளையோ இதுவரை சுட்டிக் காட்டவில்லை.

இப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்பது முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.

பொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.

புதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை போல சமச்சீர் கல்வித் திட்டமும் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், இத்திட்டத்தை ஜெயா நிறுத்தி வைத்துவிட்டார் என இப்பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. சனாதன தர்மத்தையும், தனியார்மயம் – தாராளமயத்தையும் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடிக்காது; அவர் சமச்சீர் கல்வித் திட்டத்தை காலவரையற்று நிறுத்தி வைத்துவிட்டதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பள்ளிக் கல்வி தொடர்பாக விடுத்துள்ள இன்னொரு அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது.

சமச்சீர் கல்வி
கோவையில் ஒரு தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை கண்டித்து பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் (மே 2011)

தனியார் ஆங்கிலப் பள்ளிக் கல்வி முதலாளிகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை அரசால் கட்டுப்படுத்தப்படுமா எனப் பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், “தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை; கட்டண நிர்ணயக் குழுவுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனப் பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்” என அறிவித்திருக்கிறார், ஜெயா. வாராது வந்த மாமணி என ஜெயாவைத் தனியார் பள்ளி முதலாளிகள் புகழுவதற்கு இதைவிட வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?

மைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம், “இச்சட்டப்படி ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், பள்ளியின் ஒழுக்கமே கெட்டுவிடும்; எனவே, பெற்றோர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, தமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத் தனிப்பட்ட பள்ளியொன்றின் கருத்தாகப் பார்க்க முடியாது. ஏழைகளின் கல்வியுரிமை குறித்த தனியார் பள்ளி முதலாளிகளின் பொதுக்கருத்து இதுதான். தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் “தரம், ஒழுக்கம்” எனக் கூச்சல் போடுவதன் பின்னே, ஏழை மக்களுக்கு எதிரான வெறுப்புதான் மறைந்திருக்கிறது.

“சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை” என அறிவித்து, அக்கல்வித் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்திவிடும் முயற்சியில் ஜெயா இறங்கியிருக்க, சி.பி.எம்., “சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக” அறிக்கைவிட்டு, ஜெயாவின் சதித்தனத்தை மூடிமறைத்துவிட முயலுகிறது. ஏழைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவதைவிட, ஜெயாவிற்கு விசுவாசமாக இருப்பதில்தான் சி.பி.எம்.-க்கு எவ்வளவு அக்கறை! சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து கருத்தரங்குகளிலும் ஊடகங்களிலும் வலியுறுத்தி வந்த பிரபல கல்வியாளர்களும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் இப்போது பாசிச ஜெயாவின் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டதோடு முடங்கிப் போய்விட்டனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்திய ராமதாசும் போலி கம்யூனிஸ்டுகளும் எவ்விதப் போராட்டமுமின்றி வாய்மூடிக் கிடக்கின்றனர்.

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நிறுத்தப்படுவதால், வாதங்களையும் எதிர்வாதங்களையும் மக்கள் புரிந்து கொண்டு போராட கையில் கிடைத்த ஆயுதமாக இக்கல்வித் திட்டம் மாறிவிட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே உழைக்கும் மக்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் போராடத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை பார்ப்பன-பாசிச ஜெயா கும்பலுக்கும் தனியார்மயம்-தாராளமயத்துக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை.

______________________________________

– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011
______________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்!

133
சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
மொதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்
சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
முதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்

சென்னை தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்புகையில் வெளியே சாலையில் டிராபிக் ஜாம்! ஜாம் என்றால் வாகனங்கள் என்று நினைத்துவிடாதீர்கள்! இது மனிதர்கள் நீண்ட க்யூ வரிசையில் நிற்பதால் ஏற்பட்ட ஜாம். வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலையை அடைத்துவிட்டு வெள்ளையும் சொள்ளையுமாக நீண்ட வரிசையில் சீமான்களும், சீமாட்டிகளும் திவ்யமாக நிற்பதற்கு என்ன காரணம்? எட்டிப் பார்த்தால் திருப்பதி தேவஸ்தான கோவிலின் சென்னை பிரான்ஞ்ச் முன்னால்தான் இந்த கூட்டம். திருப்பதியைத்தான் கெடுத்தார்கள் என்று பார்த்தால் இப்போது சென்னையிலுமா?

ஜெயாவின் நகர உலாவுக்காக நிறுத்தப்படும் டிராபிக்கை வைத்து ஹிந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் மிஸ்டர் கோபக்கார அம்பிகள் இதை கண்டு கொள்ளாமல் போகும் மர்மம் என்ன? மிஸ்டர் வெங்கடாசலபதியின் பவரும், பந்தாவும் அந்த அளவுக்கு பக்தகோடிகளை கட்டிப் போட்டிருக்கிறதோ?

தமிழகத்தில் இருக்கும் பெரிய கோவில்களில் ஒரு ஐம்பது சதவீதம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும். பல ஏக்கர் பரப்பளவில் மலைக்குன்று போல ஆக்கிரமித்திருக்கும் அந்த சிவன் கோவில்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். கற்பாறையோ, மலையோ இல்லாத தஞ்சை மாவட்டத்தில் தொலைவிலிருந்து சிகரங்களை கொண்டு வந்து கோவில் கட்டி எத்தனை பேர் குடியை அழித்தார்களோ தெரியவில்லை. ஆனால் இப்படி மனித உழைப்பை, இரத்தத்தை உறிஞ்சி வீற்றிருக்கும் இந்தக் கோவில்களில் மக்கள் கூட்டத்தை என்றுமே பார்க்க இயலாது. வௌவால்களும், காணிக்கைக்கு வழியில்லாமல் சிவனே என்று காலத்தை ஓட்டும் டுபாக்கூர் ஐயர்களையும் தவிர ஒரு காக்கா குஞ்சைக் கூட அங்கே காண இயலாது.

இப்படி இந்தியாவில் பல கோவில்களும், கடவுளர்களும் கஞ்சி குடிப்பதற்கே காய்ஞ்சி போயிருக்கையில், வெங்கி மட்டும் ஒய்யாரமாக ஸ்காட்சு குடித்து வருகிறார். பக்தர்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை கடவுள் ஏன் படைத்தான் என்று நாத்திகர்கள் இனியும் கேட்க முடியாது போலும். கடவுளர்களிலேயே இப்படி அப்பட்டமான கார்ப்பரேட் முதலாளிகள், ஏதுமில்லாத அனாதைகள் என்று வந்துவிட்ட போது நாம் எப்படிப் பிரச்சாரம் செய்வது?

இந்தியாவின் கருப்புப் பணம் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பது இருக்கட்டும். இங்கேயே அந்தக் கருப்புப் பணம் திருட்டு முதலாளி பக்தர்களால் திருப்பதிக்கு வாரி வழங்கப்படுவதை யாரும் கண்டு கொள்ளவில்லையே? திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம் போடுபவன் பரலோகம் போவான் என்று சும்மானாச்சும் எழதிக்கூட வைக்க வில்லையே? அல்லது திருப்பதிக்கு பணம் தருபவன் அதை கணக்கு காண்பிக்க வேண்டும் என்று சொன்னால் அடுத்த கணமே மிஸ்டர் வெங்கட் லிபர்டி தியேட்டர் வாசலில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது உறுதி.

சாலையோரம் இருக்கும் தொந்திப் பிள்ளையாரையெல்லாம் போகிற போக்கில் விஷ் பண்ணிவிட்டு கன்னத்தில் ரெண்டு போட்டுக் கொள்ளும் காரியவாத பக்தர்கள் திருப்பதியில் மட்டும் கால்கடுக்க நிற்கிறார்கள். வார இறுதி நாட்களில் சராசரிரியாக ஒரு இலட்சம் பக்தர்கள் வந்து சேவித்து விட்டு செல்கிறார்களாம். அதிலும் மிஸ்டர் வெங்கட்டை பார்ப்பதற்கு பணத்திற்கேற்ற தரிசன முறை வைத்திருக்கிறார்கள். இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். ரூ.300 கட்டணத்தில் கும்பிட விரும்புவர்கள் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். திவ்ய தரிசனம் செய்பவர்கள் ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டுமாம்.

இப்படி வேலை வெட்டி இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் சும்மா நின்று பொழுதை விரயமாக்கும் விசயம் உலகில் எங்காவது உண்டா? இந்த பக்தர்கள் இதே நேரத்தில் ராஜஸ்தானில் புல் வளர்க்கும் திட்டத்தில் உழைப்பைச் செலவிட்டால் தார் பாலைவனம் சோலைவனம் ஆகுமே? இதில் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் வரிசையில் நிற்கும் போது தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையாம். அதற்காக இனி அந்த வரிசை கம்பார்ட்மெண்டுகளில் தாய்ப்பாலுக்கென்று தனியறை கட்டப் போகிறார்களாம். ஒரு வேளை அந்ந கியூ வரிசை நெரிசலில் யாராவது மண்டையை போட்டுவிட்டால் வைகுண்டத்துக்கு ஷார்ட் கட்டாக அங்கேயே சுடுகாட்டையும் ஏற்பாடு செய்வார்களோ? இதையெல்லாம் சுருக்கென்று தட்டிக் கேட்க பெரியாரில்லையே?

சரி, இனி தலைப்பில் உள்ள கொடூரமான சம்பவத்திற்கு வருவோம்.

மாலை முரசில் வந்த செய்தி இது. ஆந்திரா, பிரகாசம் மாவட்டம் பெஸ்டவாரிபேட்டையைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படிப்பவள், பெற்றோரோடு ஏதோ சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். பேருந்து நிலையம் வந்தவள் அங்கு இருந்த திருப்பதி பஸ்ஸில் ஏறி வெங்கட் வசிக்கும் ஊருக்கு வந்துவிட்டாள்.

திருப்பதியில் தகவல்மையம் அருகே என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை, திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர் டில்லி பாபு என்ற ஐம்பது வயதுக்காரன் அழைத்துச் செல்கிறான். வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் அவளது நிராதாரவான நிலையை புரிந்து கொண்டு ஒரு ஓட்டலில் டிபன் வாங்கிக் கொடுக்கிறான்.  பின்பு தேவஸ்தான செக்யூரிட்டிகள் ஓய்வு எடுக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து அதாவது கொடூரமாக கற்பழித்து விடுகிறான்.

பின்பு அந்தச் சிறுமி அங்கிருந்து எப்படியோ தப்பித்து வெளியே வருகிறாள். அங்கு ஒரு ஏட்டு விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதை அறிகிறார். பிறகு அந்தச் சிறுமி போலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பெற்றோரும் அழைக்கப்பட்டு ஒப்படைக்கப்படுகிறாள். போலிசாரும் வழக்கு பதிவு செய்து  மிஸ்டர் வெங்கட்டின் செக்யூரிட்டி டில்லி பாபுவை கைது செய்கிறார்கள். அவனது வேலையும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.

இதனால் மிஸ்டர் வெங்கட்டின் இமேஜூக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக இரண்டு இலட்சம் ரூபாயை அந்த சிறுமிக்கு வழங்குகிறார்கள். மேலும் அவளது பெற்றோருக்கு திருப்பதி கோவிலில் ஒரு கடையை ஒதுக்கி வியாபாரம் செய்வதற்காக கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்

திருப்பதியில் கற்பழிக்ப்பட்டால் இவ்வளவு சன்மானம் கிடைக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. என்ன இருந்தாலும் பணக்காரக் கடவுள் இல்லையா?

டில்லி பாபு யார்? லார்டு லபக்தாஸ் பெயரால் அவரது சொத்துக்களையும், கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு செக்யூரிட்டி. வழிதவறி வந்த ஒரு பச்சப்புள்ளயை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஒரு பாதுகாவலன் கொடூரமாக கற்பழித்திருக்கிறான் என்றால்? அந்த கற்பழிப்பை தடுத்து நிறுத்த வக்கில்லாத மிஸ்டர் வெங்கட் அந்த நேரத்தில் என்ன மயிரா பிடுங்கிக் கொண்டிருந்தார்? இதில் உலகளந்த பெருமாள், உக்காந்து முழுங்குன திருமால் என்ற பில்டப் வேறு.

ஒருவேளை மிஸ்டர் வெங்கட் தனது ஒன்னுவிட்ட மைனர் அவதாரம் புகழ் கிருஷ்ணன், கோகுலத்தில் செய்த லீலையாக நினைத்து மகிழ்ந்திருப்பாரோ? பிட்டுப் படம் பார்ப்பவனெல்லாம் எப்படியைய்யா கடவுளாக இருக்க முடியும்? ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வத்தல் வெங்காயங்களில் முக்கியமான காத்தலை டூட்டியாகக் கொண்டிருக்கும் இந்த வெங்கட்டின் கோவிலிலேயே இப்படி கொடுமைகள் நடக்கிறது என்றால் இந்த பரம்பொருள்தான் உலகைக் காத்து இரட்சிப்பாரோ?

ஒன்று கடவுள் பவர் உள்ளவர் என்றால் இந்த கொடுமையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளே தள்ளப்பட வேண்டும். ஏனெனில் இங்கே குற்றமிழைத்திருப்பது மிஸ்டர் வெங்கட்டின் பாடிகார்டுகளில் ஒருவன். சீதையை தொட்டுக்கூட துன்புறுத்தாத இராவணனுக்காக இலங்கையையே எரித்த ராமன், திரௌபதி கூந்தலையும், சேலையையும் இழந்தாள் என்பதற்கு கௌரவர்களது நாட்டை பூண்டோடு அழித்த கிருஷ்ணன் இன்னபிற அவதார அம்பிகளெல்லாம் இப்போது எங்கே போனார்கள்?

அந்த 14 வயதுச் சிறுமி ஒரு ஏழை என்பதால் கண்டுகொள்ளவில்லையா? இல்லை தேவநாதன் போன்ற மன்மதன்களெல்லாம் காமபூஜை செய்யும் நாட்டில் ஒரு செக்யூரிட்டி கற்பழிப்பையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது என்ற சங்கோஜமா? என்ன எழவாக இருந்தாலும் மிஸ்டர் வெங்கட் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் குற்ற வழக்கில் உள்ளே போகவேண்டும்.

டில்லிபாபுவை சஸ்பெண்ட் செய்தும் இரண்டு இலட்சம் ரூபாயை வீசியும் வாயை அடைக்க முயன்ற தேவஸ்தான அதிகாரிகள் முதலில் திருப்பதி வெங்கட்டை கைது செய்திருக்க வேண்டும். “நானே கடவுள், நானே மனிதன், நானே டில்லி பாபு, நானே செக்யூரிட்டி, நானே கற்பழிப்பு” என்ற கீதை லாஜிக்படியும் அந்த ஆளை கைது செய்திருக்க வேண்டும். சோத்தில் உப்பைப் போட்டு சாப்பிடும் சுரணையுள்ள பக்தர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது பக்தி என்பது காலணாவுக்குக்கூட அருகதை இல்லாத வெத்து வேட்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் வீட்டில் சண்டையிட்டுவிட்டு பஸ்ஸேரும் பிள்ளைகள் யாரும் திருப்பதிக்கு சென்று விடாதீர்கள். ஏதாவது கோவில் இல்லாத ஊருக்குச் சென்று விடுங்கள். குறைந்தபட்சம் மானமாவது மிஞ்சும்.

சென்னை ஹூண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

7

ந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக கார்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு பிரபலமானது. ஏற்கனவே தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக சி.பி.எம் சார்ந்த சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக தமிழக வளங்கள் நிலம், மின்சாரம், குடிநீர், அனைத்தும் மலிவான விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மூலதனத்தில் லாபத்தை எடுத்துச் செல்லும் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர்களை சுரண்டுவதில் எப்போதும் கண் கொத்திப் பாம்பாய் இருக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் தென்கொரியாவைச் சேர்ந்த முதலாளிகளே அதிகம். அங்கேயும் தொழிலாளர் ஒடுக்குமுறை அப்படியே பின்பற்றப்படுகிறது.

மேலும் ஹூண்டாய் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு நிரந்த தொழிலாளிகளுக்கு இருக்கும் சம்பளமோ, இதர உரிமைகளோ இருக்காது. இவர்களின்றி உற்பத்தி இல்லை எனுமளவுக்கு எண்ணிக்கை அதிகம்.

அதில் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 1,800 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். உற்பத்தியின் முக்கியமான பிரிவுகளில் இவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் நான்கைந்து ஆண்டுகளாய் வேலை பார்த்தாலும் சம்பளம் என்பது நான்காயிரத்து எண்ணூறு மட்டும்தான். அதில் பல்வேறு பிடித்தங்கள் போக நான்காயிரம் மட்டுமே கிடைக்கும். ஐந்து இலட்சத்திற்கு காரை விற்கும் ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளிக்கு நான்காயிரம் ரூபாயை மட்டும் கொடுக்கிறது என்றால் இதன் சுரண்டல் அளவை விவரிக்கத் தேவையில்லை. இந்த சம்பளத்தை வைத்து இன்றைய விலைவாசியில் எப்படி குடும்பம் நடத்த இயலும்?

மேலும் இந்த தொழிலாளிகளுக்கு உணவு கூட நிர்வாகம் கொடுப்பதில்லை. சில போராட்டங்களுக்கு பிறகுதான் மதிய உணவு மட்டும் வழங்குகிறார்கள். அதற்கும் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்கள். தீபாவளி போனஸ் இவர்களுக்கு இல்லை. அதுவும் மே மாத இறுதியில் ஒரு மாத சம்பளத்தை மட்டும் முன்பணமாக கொடுத்து விட்டு பின்பு சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள்.

5,6 வருடம் வேலை பார்த்தாலும் இன்க்ரிமெண்ட் என்பது ரூ.250 அல்லது ரூ.300 மட்டும்தான். இவையும் கூட தொழிலாளர்கள் ஓரிரு முறை வேலை நிறுத்தம் செய்த பிறகே அளித்திருக்கிறார்கள். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து டி.வி.எஸ் நிறுவனம் ஒரு தொழிலாளிக்கு என்று எவ்வளவு பணம் வாங்குகிறது என்பது தொழிலாளிகள் அனைவருக்கும் தெரியாத இரகசியமாகும்.

ஹூண்டாய் ஆலையில் ஒரு ஷிப்ட்டிற்கு 250 முதல் 350 கார்கள் உற்பத்தியாகின்றன. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள். வருடத்திற்கு நான்கு இலட்சத்திற்கு அதிகமான கார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தையைக் கொண்டிருக்கும் ஹூண்டாய் நிறுவனம் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதை வாசகர்கள் கணித்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கு அந்த காரை உற்பத்தி செய்ய தனது உடலுழைப்பை அளிக்கும் தொழிலாளிக்கு உணவு இல்லை, மருத்துவ வசதி இல்லை, பண்டிகை நாட்களில் போனஸ் இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை. இந்த ஒப்பந்த தொழிலாளிகளில் முப்பது சதவீதம்பேர் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்தும், ஏனையோர் தமிழகம் முழுவதும் இருந்து வந்து வேலை செய்கிறார்கள். இவர்களில் பிளஸ் 2, டிகிரி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், முதுகலை படித்தவர்கள் உண்டு.

இத்தனை நாளும் இந்தக் கோரிக்கைகளுக்காக ஓரிரு முறை போராடினாலும் நிர்வாகம் அதை தட்டிக் கழித்து வந்தது. அதன் விளைவாக இன்று ஜூன் 8 புதன்கிழமை அன்று தொழிலாளிகள் அனைவரும் திரண்டு வந்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஹூண்டாய் ஆலை முன்புறம் அனைவரும் காலை முதல் தண்ணீர் பாக்கெட்டுகள் தவிர வேறு எதுவுமின்றி போராடி வருகிறார்கள். டி.வி.எஸ் முதலாளிகள் காலையில் வந்து பார்த்து விட்டு “ஆகட்டும் பாக்கலாம், ஒரு மூன்று மாதம் டைம் கொடுங்கள்” என்று இழுத்தடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

தொழிலாளிகளது வேலை நிறுத்தத்தினால் லைன் நின்று அதாவது உற்பத்தி முடங்கி விட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சுரண்டும் ஹூண்டாய் நிறுவனம் தற்போது கையைப் பிசைந்து வருகிறது. தொழிலாளிகளது கோரிக்கை சம்பளம் ரூ,10,000, உணவக வசதி, எட்டு சதவீத போனஸ் ஆகியவையாகும். இந்த முறை இதை அடையும் வரை போராடுவதாக சொல்லுகிறார்கள். ஆனாலும் இவர்கள் தற்போது எந்த சங்கத்திலும் அணிதிரண்டு போராடவில்லை. தன்னிச்சையாகவே போராடுகிறார்கள். இவர்களது எண்ணிக்கைதான் இவர்களது பலம். அதைக் கண்டுதான் நிர்வாகம் பயப்படுகிறது.

ஆலையில் இருக்கும் சி.பி.எம் சார்ந்த சி.ஐ.டி.யு சங்கமும் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் போராடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையே என்று சட்டவாதம் பேசுகிறது. தொழிலாளர் போராட்டத்தை நிறுத்துவதற்கு இவர்களும் முயல்வதாக தொழிலாளிகள் கூறுகிறார்கள். ஏற்கனவே ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் சிறை, கைது என்று சென்றிருந்த படியால் நிரந்தரத் தொழிலாளிகள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை. இதுதான் சி.பி.எம் உருவாக்கியிருக்கும் தொழிற்சங்கவாதம்.

பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்திருக்கும் நேரம் இந்த அப்பாவித் தொழிலாளிகளது போராட்டம் மிருகத்தனமாக ஒடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாமரம் வீசும் வேலையில் தி.மு.க, அ.தி.மு.க என்று வேறுபாடு இல்லை.

ஆயினும் இத்தகைய பாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் இனியும் அடங்க மாட்டோம் என்று உறுதியாயிருக்கும் தொழிலாளிகள் இன்றில்லை என்றாலும் என்றாவது தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பார்கள்.

தற்போது இரு ஷிப்டுகள் முடங்கிய நிலையில் மூன்றாவது ஷிப்ட்டுக்கு தொழிலாளிகள் செல்வார்கள் என்று தெரிகிறது. நிர்வாகம் இந்தக் கோரிக்கை குறித்து வரும் 13-ம் தேதி பேசுவதாக வாக்களித்திருக்கிறதாம். மேலும் போராடிய தொழிலாளிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், அதே நேரம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகளுக்கு சம்பளப் பிடித்தம் உண்டு என்றும் கூறியிருக்கிறது. இதையெல்லாம் எழுத்துப்பூர்வமாக தொழிலாளிகள் பெற்றிருக்கிறார்கள்.

சுமார் 2000 தொழிலாளிகள் வேலை நிறுத்தம் என்பதால் அஞ்சிய நிர்வாகம் தற்போது ஆசுவாசப்பட்டிருக்கும். தொழிலாளிகள் ஒரு அரசியல் சக்தியாக எழாதவரை முதலாளிகள் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனினும் தங்களது பலத்தினால் உற்பத்தியை முடக்கும் வல்லமையை அவர்கள் உணரும் பட்சத்தில் இந்த கோரிக்கைகளை அவர்கள் வென்று காட்டுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

போராடும் தொழிலாளிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

_____________________________________________________________

– வினவு செய்தியாளர், ஹூண்டாய் ஆலையிலிருந்து
_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!

23
ஹசாரேவா, ராம்தேவா - யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!
பாபா ராம்தேவ் - அண்ணா ஹசாரே (படம் thehindu.com)

ண்ணா ஹசாரேவின் பின் திரண்டுள்ள மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்குப் போராட்டம் என்பதெல்லம் வெறும் நேரப்போக்கிற்காக மெழுகுவர்த்தியோடு நடத்தப்படும் பேஷன் பெரேடு தான் என்று முன்பு சொன்ன போது நம்பாதவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?

ராம்லீலா மைதானத்தில் கருப்புப்பண விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த கார்பொரேட் பரதேசி ராம்தேவின் பக்தர்களை போலீசு அப்புறப்படுத்தியதைக் கண்டித்து அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் நேற்று (6/6/2011) நடந்த ஜன்லோக்பால் முன்வரைவுக் கமிட்டிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த முன்வரைவை ஒழுங்கு செய்வதற்காகக் கூடும் கமிட்டிக் கூட்டங்களை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அப்படிச் செய்யாவிட்டால் எதிர்வரும் கூட்டங்களையும் கூட புறக்கணிப்போம் என்றும் அண்ணாவின் குழுவிலிருக்கும் சாந்தி பூஷன் அறிவித்துள்ளார்.

முதலில் ராம்தேவ் விவகாரம் கருப்புப் பணம் சம்பந்தப்பட்டது – இவர்கள் செல்வதோ ஊழல் எதிர்ப்புக்கான ஒரு சட்ட முன்வரைவை ஒழுங்கு செய்யும் கூட்டம். அதற்காக இதைப் புறக்கணிக்க வேண்டிய தேவை எங்கேயிருந்து எழுந்தது? நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு கோரிக்கையை முன்வைத்து அந்த அலோசனைக் கூட்டத்தை இவர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அதன் மேல் இவர்களுக்கே இருக்கும் உண்மையான அக்கறை குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், இவர்களின் புறக்கணிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கபில் சிபல், அண்ணாவின் குழுவில் இருப்பவர்கள் தங்களை திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதாகவும், இது போன்ற வரைமுறை மீறிய பேச்சுகள் குழுவின் நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க ஏதுவானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். மட்டுமல்லாமல், அண்ணாவின் குழுவினர் வராமல் போனாலும் கூட தாங்களே ஜூன் 30-க்குள் இந்த சட்ட முன்வரைவை இறுதி செய்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

இது போன்ற கூத்துகளுக்கு அடிப்படையாய் இருப்பது இவர்களுக்குள் நிலவும் ஜனநாயகமற்ற தன்மையும் என்.ஜி.ஓ அரசியலின் ஆன்மாவாக இருக்கும் துரோகத்தனமும் கைக்கூலித்தனமும் தான். அண்ணாவோடு மேடையிலிருந்த ராம்தேவ், தன்னையும் ஜன்லோக்பால் வரைவுக் கமிட்டியில் இணைத்துக் கொள்ளாததை அப்போதே எதிர்த்திருந்தார். மேலும் அவரே சாந்தி பூஷனை சேர்த்துக் கொண்டதைப் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தார். அப்போது ஊடகங்களில் அண்ணாவுக்குக் கிடைத்திருந்த ஸ்டார் அந்தஸ்தையும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே அவருக்கு ஊடகங்களால் ஏற்பட்டிருந்த நற்பெயரையும் கணக்கில் கொண்டு உடனேயே தனது விமரிசனத்தை வாபஸ் பெற்றிருந்தார்.

அப்போது ராம்தேவுக்கு உண்டான பொறாமையும் காய்ச்சலும் தான் அவரைத் தன்னிச்சையாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் அமரச் செய்தது. எங்கே இந்தப் பய குறுக்கே புகுந்து தான் ஐந்து நாட்கள் சோறு தண்ணியில்லாமல் டிராமா போட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரை அபேஸ் பண்ணி விடுவானோ என்று அஞ்சியதாலேயே அண்ணா ஹசாரே ராம்தேவை ஆதரித்திருந்தார். இவர்களுக்கு யார் பெரியவர் என்கிற குத்துபிடி சண்டை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் ஊடக ஒளியில் கனஜோராக நடந்து வந்தது.

அரசை விமரிசிப்பதில் தான் பின்தங்கி விட்டால் எங்கே தனக்குப் பெயர் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சிய அர்விந்த் கேஜ்ரிவால், தொலைக்காட்சி சேனல்களில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். சாந்தி பூஷனும் தன் பங்குக்கு எந்தக் குறையும் வைக்காமல் இதே போன்ற நாடகத்தை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடத்திக் கொண்டிருக்க, இக்குழுவின் இன்னொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே ‘எனக்கு அழுவாச்சியா வருது.. விடுங்க நான் வூட்டுக்குப் போறேன்’ என்று போன மாதம் தனி டிராக்கில் இன்னொரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

இது தான் இவர்கள் மக்களுக்காக போராடிய லட்சணம். இதே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு குழுவாக இருந்திந்தால் அவர்களுக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டுமே என்கிற குறைந்தபட்ச பயமாவது இருந்திருக்கும். ஆனால், இவர்களோ தன்னிச்சையாக தங்களைத் தாங்களே சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். தங்களை நியமித்துக் கொண்டதிலோ, தமது குழுவிற்குள்ளோ மருந்துக்குக் கூட ஜனநாயகத்தை அனுமதிக்காதவர்கள். அண்ணா ஹசாரே தனது குழுவினரை நியமித்துக் கொண்டதும் ஒரு ஆண்டி மடத்தில் சீனியர் ஆண்டி தனக்கு ஜூனியர்களை நியமித்துக் கொள்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடே இல்லை.

அடுத்து என்.ஜி.ஓ அரசியலுக்கென்றே இருக்கும் ஒரு குணாம்சமான மக்களை அரசியலற்ற மொக்கைகளாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆக்கும் துரோகத்தனமும் இதில் துலக்கமாக வெளிப்படுகிறது. சமீப வருடங்களாக மக்களை அடுத்தத்த ஊழல் செய்திகள் ஒரு சுனாமி போல தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், அவற்றுக்கெல்லாம் ஊற்றுமூலமாய் இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி மக்களின் ஆத்திரமும் கோபமும் திரும்பி விடாமல் போராட்டம் என்பதையே பிக்னிக் சென்று வருவது போன்ற ஒரு இன்பமான நிகழ்வாக மாற்றியமைத்துள்ளது, அண்ணாவின் பின்னேயிருந்து இவை மொத்தத்தையும் இயக்கும் என்.ஜி.ஓ கும்பல்.

இது மக்களின் ஆத்திரத்தையும் இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் அவர்களின் அபிலாஷைகளையும் அவர்கள் மொழியிலேயே பேசி கூட இருந்தே கருவறுக்கும் செயலாகும். இப்போது ஜன்லோக்பால் கமிட்டியினுள் அரசாங்க உறுப்பினர்களுக்கும் அண்ணாவின் குழுவினருக்கும் இடையே எழுந்திருக்கும் முரண்பாடுகளை ஏதோ மக்களுக்கே நடந்து விட்ட துரோகம் போலச் சித்தரித்து ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டம் ஏற்படாமலே போக வைக்கும் வேலையைத் தான் அவர்கள் கவனமாகச் செய்து வருகிறார்கள்.

ஊழலே சட்டபூர்வமாகிவிட்ட ஒரு சூழலில் ஜன்லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை ஒழித்து விடக்கூடிய தீர்வு என்று யாராவது கருதமுடியுமா? ஊழல் என்பது மறுகாலனியாக்கத்தில் கருக்கொண்டிருக்கிறது – ஆனால் இவர்களோ வெறும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் மட்டுமே கடல் அலைகளைக் கைகளால் தடுத்து விட முடியும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், எதார்த்தத்தில் இவர்களின் ஆன்மாவாக இருக்கும் என்.ஜி.ஓ அரசியலோ அதைக் கூட உருப்படியாய் நிறைவேறாமல்  தடுக்கும் வேலையைச் செய்கிறது. அதைத் தான் இவர்களுக்குள் நடக்கும் குத்துபிடி சண்டைகளும் ஈகோ மோதல்களும் மெய்பித்துக் காட்டுகின்றது.

இவர்களுடைய ஓட்டாண்டித்தனங்களை முன்பே வினவில் அம்பலப்படுத்தி எழுதிய போது அறவுணர்ச்சி பொங்க கூத்தாடிய நண்பர்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஊழல் முறைகேடுகளை எதிர்க்கும் உங்களின் நியாயமான கோபத்தையும் உணர்ச்சியையும் இவர்களிடம் தானா நீங்கள் அடகுவைக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்; உண்மையாகப் போராடும் உலகமும் போராட்டக் களங்களும் இவர்களுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்.

_________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயலலிதா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்

தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.

அரசராட்சிக் காலத்தில் இப்படி நடந்ததாகக் கதைகளில் படித்திருக்கிறோம். அதாவது, ஆண்ட முடிமன்னருக்குத் தகுதியான பரம்பரை வாரிசு இல்லாமல் போனால் பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து வீதியில் அனுப்புவார்களாம்; பட்டத்து யானை யாருக்கு மாலை போடுகிறதோ ,அவனையோ, அவளையோ அரசராகவோ, அரசியாகவோ மகுடம் சூட்டி விடுவார்களாம். அதைப்போல, பெரும்பாலான நாட்கள் குளுகுளுமலையின் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு காரணமே இல்லாத திடீர் வாய்ப்பாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்துவிட்டார்கள், தமிழக வாக்காளர்கள்.

கருணாநிதியின் தி.மு.க. போல பரம்பரை அரசியல் வாரிசு இல்லை என்பதற்காக ஜெயலலிதாவின் கழுத்தில் வெற்றிமாலை விழவில்லை. கருணாநிதியின் தயாளு வழி, ராஜாத்தி வழி பரம்பரை அரசியல் வாரிசுகள் மட்டுமில்லை; ஈரோட்டுப் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, சேலம் – வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரம் பொன்முடி, தஞ்சை டி.ஆர்.பாலு, திருச்சி நேரு முதலானவர்களின் பரம்பரை அரசியல் வாரிசுகள், அவர்களின் அடாவடியான சொத்துக் குவிப்பு, அதிகார ஆதிக்கம் ஆகியவற்றைத் தமிழக மக்கள் கண்கூடாகக் கண்டனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் வாரிசுகளுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், அவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள் முதலிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் வேண்டி மத்தியில் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் – பிரணாப் கும்பலுடன் துரோகத்தனமான சமரசங்கள், அடிவருடித்தனங்களைச் செய்தது; சிங்கள பாசிச ராஜபக்சே கும்பலுடன் சேர்ந்து ஈழத் தமிழின அழிப்புப் போரை நடத்தியபோதும், இந்திய அரசு ஈழ இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தொடர்ந்து முயன்று வருவதாக துரோகத்தனமாகப் புளுகியது; இலவசங்களால் தமிழக மக்களை கட்டிப் போட்டுவிட்டு, அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.  இந்தக் குற்றங்களுக்கெல்லாம் தக்க தண்டனை தரவேண்டும் என்று தமிழக மக்கள் வெறுப்புற்று வெதும்பிக் கிடந்தனர். அந்த நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2-ஜி) ஊழல் வெளியானதைப் பயன்படுத்தி உண்மையும் பொய்யும் கலந்து பார்ப்பன ஊடகங்கள் பெருமளவில் நடத்திய அதிரடிப் பிரச்சாரந்தான் கருணாநிதியின் தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அலையாக உருவாகி, அதுவே ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களிடையே தமக்கு எதிராக நிலவிய வெறுப்பையும் எதிர்ப்பு அலையையும் உணராத கருணாநிதியின் தி.மு.க.வுக்கு, எதிர்க்கட்சி தகுதியைக் கூட அளிக்க மறுத்து பெரும்பாலான அமைச்சர்களையும் வீழ்த்தி படுதோல்வி அடையச் செய்து விட்டார்கள், தமிழக மக்கள். அதைவிட முக்கியமாக, “ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரசு எழுச்சி” என்ற பார்ப்பன ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நிராகரித்து, ஈழத்தில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரசையும் அதற்கு மறைமுகத் துரோகத்தனமாக நின்ற இராமதாசு-திருமாவளவன் கட்சிகளையும் அடியோடு சாய்த்து விட்டார்கள்.

தி.மு.க.- காங்கிரசு கூட்டணியின் மீதான வெறுப்பும், எதிர்ப்பு அலையும் வாய்தா ராணியாகவும் கொடநாட்டு உல்லாசவாசியாகவும் உழைக்காமலேயே சதாகாலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு லாட்டரியில் விழுந்த கொழுத்த பரிசாக ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கிறது. இதற்குத் துணைநின்ற பிழைப்புவாதி விஜயகாந்துக்கு எதிர்கட்சித் தகுதி கிடைத்திருக்கிறது. போலி கம்யூனிஸ்டுகள், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்ற உதிரிகளுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர்களையெல்லாம் போயஸ் தோட்டத்து பால்கனிப் பாவை விரைவில் எடுத்து விழுங்கி விடுவார் அல்லது எட்டி உதைத்து விடுவார் என்பது வேறு விடயம்.

இவர்கள் அடைந்துள்ள வெற்றி நேர்மறையிலானதோ, இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதாலோ கிடைத்தவை அல்ல. நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் மக்கள் ஒரு அரசியல் கட்சி அல்லது அணியை நிராகரிப்பதும், அல்லது வேறொரு கட்சியை அல்லது அணியை தெரிந்தெடுத்து ஏற்பதும் எந்த அடிப்படையில் என்பதைப் பார்க்க வேண்டும். தேர்தல்களின்போது தம்மிடம் வாக்குக் கேட்டுவரும் அரசியல் கட்சிகளின் கடந்தகால வரலாறு, அவற்றின் அணிகள் மற்றும் தலைமையின் செயல்பாடுகள், நம்பகத்தன்மை, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் காட்டும் ஜனநாயக, சமூக கண்ணோட்டம், அக்கறை, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள், இவை போன்றவை மீதான மதிப்பீடுகள் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதில்லை.தேர்தலுக்குச் சில காலம் முன்பு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பரபரப்பாகப் பேசப்படும் செய்திகள், தம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கும் பிரச்சினைகள் -ஆகியவற்றுக்கு அப்பால் அரசியல் கட்சிகள் அல்லது அணிகள் பற்றிய தொகுப்பான முழுமையான மதிப்பீடுகள் அடிப்படையில் வாக்களிப்பதில்லை.

மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை, விவசாயத்தின் அழிவு, நகரமயமாக்கம், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவது, தண்ணீர், கல்வி, மருத்துவம் அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது – எனத் தமிழக மக்களுக்கு ஓராயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், காற்றில் சிக்கிய சருகு போல உள்ள அவர்களின் வாழ்க்கையில் ஓட்டுக் கட்சிகளின் ஊழலும் கொள்ளையும், அக்கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களும்தான் உடனடியாகத் தெரிகின்றன. தற்போதைய, முந்தைய ஆட்சிகளில் என்ன நடந்தது என்று மக்களால் தொகுத்துப் பார்க்கத் தெரியாமல், 2ஜி அலைக்கற்றை ஊழல், குடும்ப ஆட்சி, மின்வெட்டு, விலையேற்றம் – என உடனடி நிகழ்வுகளை வைத்து மதிப்பிட்டு முடிவு சேகின்றனர். ஓட்டுக்கட்சிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற பொதுவானதொரு கருத்து மக்களிடம் நிலவிய போதிலும், தற்போதைய, முந்தைய ஆட்சிகள், ஓட்டுக்கட்சிகளுடைய அயோக்கியத்தனங்களையும் தன்மைகளையும் ஒப்பிட்டு இனம் காண்பதற்கான அரசியல் அறிவை மக்கள் பெற்று விடவில்லை.

தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்றால், மாற்றாக வரக்கூடியவர்களின் தகுதி என்ன, பின்னணி என்ன, வரலாறு என்ன என்பது பற்றி ஊடகங்களும் பேசுவதில்லை; ஆளும் கட்சிகளின் குறைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் எல்லாம் புதிதாக வந்தவைபோலவும் அவர்களுக்கென்று முந்தைய வரலாறு, செயல்பாடு எதுவும் இல்லை என்பது போலவும் எழுதுகின்றன.

ஆவணக் காப்பகம் போன்ற தகவல் தொகுப்பும் வசதி வாய்ப்புகள் இருந்தும் ஊடகங்கள் தி.மு.க. ஆட்சியையும், முந்தைய ஜெயா ஆட்சியையும் ஒப்பிட்டுக் காட்டி, அதிலிருந்து உண்மையைக் கூறி மாற்று அரசியல் சக்தியை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அவை பரபரப்புத் தகவல்களை வெளியிடுவதில்தான் குறியாக உள்ளன.

கடந்தகால ஜெயா ஆட்சியின் ஊழல், அதிகாரமுறைகேடுகள், பார்ப்பன பாசிச ஆட்சியின் அட்டூழியங்கள் முதலான அனைத்தையும் அறிந்திருந்தும் ஊடகங்கள் அவற்றைத் தொகுத்துச் சொல்லாது மூடிமறைக்கின்றன. மாறாக, ஜெயலலிதா மாறிவிட்டார் என்று கூறி ஆதரிக்கின்றன; தெரிந்தே மோசடி செய்கின்றன. மக்கள் இரு தரப்பையும் நிராகரித்து விட்டால், இன்றைய அரசியலமைப்பு முறையையே நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.

தி.மு.க.வையும் கருணாநிதியையும் சாடி, எதிர்தரப்புக்கு வாக்களிக்கும்படி நேரடியாகவும் மறைமுகமாவும் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், நேர்மறையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரத் தகுதியானவர்தானா என்று சொல்லவில்லை.

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களும் பிழைப்புவாதிகளும் முதலாளிகளும் வழக்கம்போலத் துதிபாடக் கிளம்பிவிட்டார்கள். ஆட்சி மாறும்போது இப்படியெல்லாம் நடப்பது வாடிக்கையானதுதான் என்றாலும், இப்போது பழைய பிசாசை புதிய அம்மனாகச் சித்தரிக்கும் கோயபல்சு வேலையை அவர்கள் திட்டமிட்டுச் சேது வருகிறார்கள். “ஜெயலலிதா இப்போது மாறிவிட்டார், அவரது ஆட்சி வித்தியாசமான ஆட்சியாக இருக்கும்” என்ற பிரமை தேர்தலுக்கு முன்பே ஊடகங்களால் திட்டமிட்டு ஊட்டப்பட்டன. தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குப் போராட்டமோ, மாற்றுத் திட்டமோ முன்வைக்காத போதிலும், ஜெயாவைத் துதிபாடி மக்களின் கவனத்தை அதை நோக்கிக் குவிப்பது என்று பார்ப்பன ஊடகங்கள் செயல்பட்டன.

“தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்கி ஓட்டுப் போட மாட்டார்கள், பணத்துக்கு ஓட்டுப் போடமாட்டார்கள், எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று இந்த ஊடகங்கள் மக்களைப் போற்றுவதாகக் காட்டிக் கொண்டு அ.தி.மு.க.வுக்குச் சாமரம் வீசுகின்றன. பணபலமிக்க ஆளும் கட்சியான தி.மு.க.தான் பணப்பட்டுவாடா செய்தது, மற்ற கட்சிகள் அப்படிச் செய்யவில்லை என்பதைப் போல எழுதுகின்றன. அதற்காகத் தேர்தல் ஆணையத்தைப் மிகவும் பாராட்டின. முன்பு ஜெயா ஆட்சியிலிருந்தபோது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும், லட்டுக்குள் மூக்குத்தி, கம்மல்களை வைத்து விநியோகித்ததும், இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட முடியாதபடி அராஜகமும் நடந்தது. இப்போதும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை ஜெயா ஆரம்பித்து நடத்தியதும், பொருட்களுக்கு ‘டோக்கன்கள்’ கொடுக்கப்பட்டதும் இப்போது அம்பலத்துக்கு வருகின்றன.

தி.மு.க.வின் இலஞ்ச-ஊழலை அம்பலப்படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டும் ஊடகங்கள், ஜெயா ஆட்சியில் நடந்த இலஞ்ச-ஊழல், கொள்ளைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. ஜெயா மீது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சோத்து சேர்த்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. ராசாவும் தயாநிதியும் சி.பி.ஐ. விசாரணை, வழக்கு காரணமாக பதவியில் இருக்கக்கூடாது என்கிற போது, ஜெயலலிதாவுக்கு மட்டும் அது பொருந்தாதா? இருப்பினும், ஜெயலலிதா கும்பலின் முந்தைய மகாத்மியங்கள் அனைத்தும் ஊடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றன.

“இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001 முதல் 2006 வரையிலான எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்கிறார், ஜெயலலிதா. அவர் தனது முந்தைய ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகச் சித்தரிக்கும் போது, அதன் யோக்கியதையைச் சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமையல்லவா? ஆனால், அவர் மாறிவிட்டார் என்று வானளவுக்குத் தூக்கிக் காட்டுவதோடு, தங்களது பல்வேறு விருப்பங்களையும் நோக்கங்களையும் அதில் ஏற்றிக் கூசாமல் புளுகவும் கிளம்பியிருக்கிறார்கள். “இவர் முந்தைய ஜெயலலிதா இல்லை, என்னேவொரு நிர்வாகத் திறமை, தலைக்கு மேலே ஒளிவட்டம் பாருங்கள்” என்று இந்தக் கோயபல்சுகள் இந்தக் கதாபாத்திரத்தை விளக்கி விளக்கி வியாபாரம் செய்யக் கிளம்பியுள்ளார்கள்.

“தமிழனென்று சோல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்கிற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ‘தினமணி’ பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது” என்று மெய்சிலிர்த்து தலையங்கம் எழுதுகிறது தினமணி. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து, தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சியைச் சாதித்துவிட்டதாக உச்சி முகர்ந்து கொண்டாடுகிறது, தினமணி. அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள். சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருக்கும் என்று தெரிந்த போதிலும், இருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானமிக்க தமிழக மக்கள் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு எதிராகக் குமுறி ஜெயா கும்பலை வெற்றி பெற வைத்து விட்டார்களாம். தி.மு.க.வின் குற்றங்களைப் பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் எழுதுவதில்லை.

“ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றார் என்ற உடனேயே, போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கி விட்டது. இனி தங்களுடைய அட்டகாசங்கள் அடக்கப்படும் என்பதை ரவுடிகள் உணர்ந்துவிட்டது போல நகர்ப்புறங்களில் ஒரு புதிய அமைதி காணப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பைக் காட்டுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி முதல் தினத்திலிருந்தே முறையான திசையில் செல்லத் தொடங்கி இருக்கிறது” என்று கோயபல்சை விஞ்சுமளவுக்குக் கூசாமல் புளுகுகிறார், பார்ப்பன துக்ளக் சோ. சென்னை நகரில் கொட்டமடித்து வந்த சங்கிலிப் பறிப்பு ரவுடிகள், உயிருக்கு அஞ்சி ஆந்திரா பக்கம் ஓடிஒளிந்து விட்டனர் என்று ஒரு கட்டுக்கதையை ஜெயாவே பரப்புகிறார். ஆனால்,சென்னை உட்பட தமிழகமெங்கும் சங்கிலிப் பறிப்புகளும் கொலை, கொள்ளைகளும்‌ அடுத்தடுத்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

“அவரது முகத்தில் எப்போதுமில்லாத புன்னகை – மென்மையான தாய்மையுணர்வுமிக்க தோற்றத்தைக் கொடுக்கிறது. கருணைமிக்க அம்மாவாகக் காட்சியளிக்கிறார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அர்த்தமுள்ளது என்பதை முதல்நாள் தொட்டே நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரத்திற்குப் பதில், வெளிப்படைத்தன்மையும் பதில் கூறும் பொறுப்புணர்வும் இந்த முறை பிரதிபலிக்கிறது” என்று ஜால்ரா போடுகிறது, இந்தியா டுடே. “இது மக்கள் புரட்சி. மக்கள் ஒரு மவுனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்று ஜெயா துதிபாடுகிறது, குமுதம் ரிப்போர்ட்டர்.

சசிகலா கும்பலை மடியில் கட்டிக் கொண்டுள்ள ஜெயலலிதாவின் வெற்றியை, குடும்ப ஆட்சிக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று வெட்கமின்றித் துதிபாடுகின்றனர் போலி கம்யூனிஸ்டுகளான தா.பா.வும் ஜி.ராமகிருஷ்ணனும். ஆட்சிக்கு வந்தவுடனேயே, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் முதற் பணி என்றார், ஜெயலலிதா. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இருதரப்புக்கும் இழுபறி நீடித்தபோது, அ.தி.மு.க. குண்டர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் போலீசுத் துறையில் தலையீடு இருக்காது, அத்துறையானது சுதந்திரமாகச் சேயல்படும் என்று பிரமையூட்டும் கோயபல்சுகளின் பிரச்சாரம் எவ்வளவு பெரிய பொய் என்பதை, ஜெயா ஆட்சியில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த மரியம் பிச்சையின் சாவையொட்டி திருச்சியில் நடந்துள்ள அ.தி.மு.க. குண்டர்களின் ரவுடித்தனம் நிரூபித்துக் காட்டுகிறது.

ஜெயலலிதாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கு ஊகமோ, காத்திருப்போ அவசியமில்லை. தி.மு.க. வின் ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்துப் பெருங்கூச்சல் போட்டே ஆட்சியைப் பிடித்து விட்ட ஜெயா செய்த முதற் காரியம், 1200 கோடி ரூபாய் விரயமாக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு, தானே தகுதியற்றதென்று நிராகரித்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு பழமை வாய்ந்த கல்லூரியை இடிக்க எத்தணித்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் வேறெரு இடத்தில் பூமி பூசையும் போட்ட ஜெயா, இப்போது ஜார்ஜ் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். ஏற்கெனவே அச்சிடப்பட்ட 200 கோடி ரூபாய் பாடப் புத்தகங்களை வீணாக்கி, மேலும் 100 கோடி செலவில் பழைய பாடப் புத்தகங்களை அச்சிட்டு ‘சமச்சீர் கல்வி’யை ஒழிக்கும் நோக்கில் உத்தரவு போட்டுள்ளார். இவற்றையெல்லாம் தனது கோயபல்சு பாணியில் நியாயப்படுத்த வாதம் புரிகிறார். இவையெல்லாம் பார்ப்பன-பாசிச ஜெயா மாறிவிட்டதையா காட்டுகின்றன?
___________________________________

– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011
___________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய ஜனநாயகம் – ஜூன் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜூன் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் ஜூன் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. “போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தூக்கிலிடு!” – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
  2. ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயாபல்சுகள்
  3. மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
    கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தண்டிப்போம்!! – நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மே தின அறைகூவல்
  4. கொலைவாளினை எடு! கொடியோர் செயல் அறு!! – தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிரான போர்!
  5. சமச்சீர் கல்வி ரத்து: சமூக அநீதி!
  6. மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்’டுகள் மண்ணைக் கவ்வியது ஏன்?
  7. கனிமொழி கைது: காங் – சி.பி.ஐ கூட்டணியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது
  8. ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!
  9. தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை புதிய பாதை!
  10. போபால் விஷவாயுப் படுகொலை: மீண்டும் அநீதி!
  11. புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது
  12. சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்
  13. “மதிப்பில்லாத சரக்குகள்!” – வட ஆப்பரிக்காவின் துயரம்!
  14. இந்திய நீதிமன்றங்கள்: கார்ப்பரேட் பயங்கரவாதிகளின் அடியார்கள்!
  15. குஜராத்தின் வளர்ச்சிக்கு பலியாகும் பழங்குடியின மக்கள்!

புதிய ஜனநாயகம் ஜூன் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!

கோவையில் தனியார் பள்ளி ஒன்றின் அதிகமான கட்டணம்  வசூலிக்கும் கொள்ளையால்  சங்கீதா என்றொரு தாய் தற்கொலை செய்துகொண்டார். இந்த கொலைக்குத்  தனியார்மயக் கொள்கைதான்  முழுக்காரணம். இந்த தனியார்மய கொள்ளைக் கூட்டத்திற்க்கெதிராக பெற்றோர்கள் போராட வேண்டும் என்ற நோக்கோடு  மனித உரிமை பாதுகாப்பு மையம்  கோவையில் பெரும் பிரச்சாரம் செய்து வருகிறது.

அதன் அங்கமாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக்   கண்டித்தும் வேடிக்கை  பார்க்கும் தமிழக அரசை கண்டித்தும்   சுவரொட்டி ஒட்டியும்,  துண்டு பிரசுரம் வினியோகித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து கோவை செல்வபுரம் பகுதியில் ஸ்ருஷ்டி வித்யாலய என்ற தனியார்பள்ளி, கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக அந்தப்பகுதி பெற்றோர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு பள்ளியின் அடாவடிபோக்ககை பற்றி கூறினர்.  உடனடியாக பள்ளிகெதிராக பெற்றோர்களை ஒருங்கிணைத்து  பள்ளி முன் 25 /5 /2011 அன்று  முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர்களை மிரட்டும் தொனியில் பேசி, அராஜகமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் HRPC போராட்டத்தின் இறுதியில் பெற்றோர்களிடம் தவறை ஒப்புக்கொண்டு  இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டோம்,  அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் வசுலீப்போம்,  பணம் கட்டுவதற்கு ரசீது தருவோம், அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்போம்,   கட்டணப் பட்டியலை போர்டில் எழுதி வைப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் மீது TC  கொடுப்பது, துன்புறுத்துவது போன்ற  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கமாட்டோம்    என்று கூறி பெற்றோர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

போராட்டத்தில் திரளான பெற்றோர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகள் என்பதால் மனம்போன போக்கில் இனியும் கொள்ளையடிக்க முடியாது என்பதை இந்த போர்க்குணமிக்க போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. கோவை மனித உரிமை பாதுகாப்பு மையமும் தொடர்ச்சியாக இந்தக் கல்விக் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் சங்கீதாவின் மரணம் கோவையில் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதற்கு காரணாமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -

_____________________________________________________________________

– தகவல், படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!

31
பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!
ராம்தேவ்

து ஜனநாயகப் படுகொலை” என்று கூவுகின்றன இந்திய ஊடகங்கள். யோகாசனம் பயிலும் மேன்மக்களுக்கு பாதிப்பு வந்து விட்டதே என்று  கண்ணீர் வடிக்கிறது தினமணி. பாபா ராம்தேவ் ஒரு ஆன்மீக சுப்பிரமணியசுவாமி என்கிற உண்மையை ஒப்புக் கொள்ளும் ஒரு சில ஊடகங்களும் கூட போலீசாரின் நடவடிக்கைகளை பாசிசம் என்கிறார்கள்.

போலீசும் இராணுவமும் இந்தப் போலி ஜனநாயக அமைப்பைக் காக்கும் பாசிசக் கருவிகள் என்பதில் நமக்கும் கூட கருத்து வேறுபாடு இல்லை தான். ஆனால், இந்த மாபெரும் இரசியம் எந்த நேரத்தில் இவர்களுக்கெல்லாம் நினைவுக்கு வருகிறது எந்த நேரத்திலெல்லாம் நினைவுக்கு வரவில்லை என்பதில் இருந்து தான் இவர்கள் எதற்காக அக்கறை கொள்கிறார்கள் என்பதையே விளங்கிக் கொள்ள முடியும்.

அண்ணா ஹாசாரே வாழும் இதே தேசத்தில் தான் ஐரோம் ஷர்மிளாவும் வாழ்கிறார். பாபா ராம்தேவின் உடலில் ஒரு சிறிய கீறல் கூட விழாமல் பத்திரமாக விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள அதே தேசத்தில் தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் மத்திய இந்தியாவெங்கும் அலைந்து திரிகிறார்கள்.

ஒரு கோடீசுவர கார்ப்பொரேட் சாமியாரை ஒன்றுமே செய்யாமல் பத்திரமாக திருப்பியனுப்பியதற்கே காங்கிரசு கட்சித் தலைவரை நோக்கி செருப்பை வீசத் துணிகிறார்கள் அவரது பக்தர்கள். திக்விஜய சிங்கின் வீடு மீது கல்லெறிகிறார்கள். இந்த சில்லுண்டிச் சில்லறை சமாச்சாரத்தையெல்லாம் ஏதோ மாபெரும் மக்கள் கிளார்ச்சி போல் சித்தரிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் அவற்றைப் பெருமை பொங்க விவரிக்கின்றன.

ஆனால், அரை நூற்றாண்டு காலமாக காஷ்மீரத்திலும் வடகிழக்கிலும் இந்தியாவின் கொலைகார இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்து வீதியிலிறங்கிப் போராடி வருவதை மட்டும் இவர்கள் யாரும் போராட்டமாகக் கருதுவதில்லை.

கோழைத்தனம் என்பது சந்தர்பவாதத்தின் உடன்பிறவாச் சகோதரன். அண்ணா ஹாசாரே மற்றும் பாபாராம்தேவின் பின்னே ‘போராளிகளாக’ அவதரித்து அணிதிரண்டு நிற்கும் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கு போராட்டம் என்பது இன்னொரு பொழுதுபோக்கு. அவர்களைப் பொருத்த வரையில் போராட்டம் என்பது தங்களது மனசாட்சியை ஆறுதல் படுத்த அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் உயிருக்கோ உடலுக்கோ உடைமைகளுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு வராமல் தலையைக் காட்டி விட்டுப் போகும் பொழுபோக்கு நிகழ்வு தான்.

அண்ணாவின் பின்னும் பாபா ராம்தேவின் பின்னும் பாதுகாப்பாக நின்று கொண்டு மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்திக் கொண்டு பஜனை பாடுவதையே பயங்கரமான போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ராம் லீலா மைதானத்தில் வைத்து ஒரு சிறிய முன்னுரையை அரசு கொடுத்திருக்கிறது. நாடெங்கும் விவசாயிகள் இழவு வீட்டு சோகத்திலிருந்த போது ஊடகங்கள் ஜெஸ்ஸிகா லாலுக்குக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைப் போல – இப்போது இந்த நடுத்தரவர்க்க அச்சத்தையும் கோழைத்தனத்தையும் டி.ஆர்.பி ரேட்டிங்குகளாக மாற்றிக் கொள்ள கூடுமானவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய இந்தியாவின் கோண்ட் இன மக்களைப் போன்றோ, காஷ்மீரிகளைப் போன்றோ, வடகிழக்கு மக்களைப் போன்றோ, அல்லது நாடெங்கும் தங்கள் வாழ்வுரிமைகளுக்குப் போராடும் உழைக்கும் மக்களைப் போன்றோ ராம்லீலா மைதானத்து மான்கராத்தே வல்லுனர்களுக்கு இந்தப் போராட்டம் என்பது வாழ்வா சாவா போராட்டமன்று. இதோ இந்த மண்குதிரைகளை நம்பி களத்திலிறங்கிய இந்துத்துவ கும்பல் தன்னந்தனியே ரோட்டோரத்தில் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் – சத்தியாகிரமாம்!

வினவில் நாம் இந்த அற்பர்களின் போலித்தனங்களை தோலுரித்துக் காட்டிய போதெல்லாம் தவறாமல் ஆஜராகும் சில அன்பர்கள், ‘யாருமே போராடாமல் இருக்கும் நிலையில் இதுவாவது நடக்கிறதே; தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள்’ என்று உருகுவதைக் கண்டிருக்கிறோம். அந்த உருகல்  உணமையான அறவுணர்ச்சியின் பாற்பட்டதே என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான் – தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் வாழ்வுரிமை இழந்து பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இழந்த தங்கள் வாழ்க்கையை மீட்க நாடெங்கும் போராடியே வருகின்றனர்.

மக்களுக்காகப் போராட வேண்டும் என்கிற உங்கள் உணர்ச்சி உண்மையானதென்றால் நீங்கள் மக்களோடு தான் கைகோர்க்க வேண்டும் – கார்ப்பொரேட் சாமியார்களின் குடுமிக்குள் முகம் புதைத்துக் கொள்ளக் கூடாது. போராடும் மக்களோடு நீங்கள் நிற்கும் போது தான் போராட்டம் என்பது மகிழ்ச்சி என்கிற மார்க்சின் முழக்கத்திற்கான மெய்யான பொருள் என்னவென்பது உங்களுக்கு விளங்கும். அதற்கு நீங்கள் தயாரா?

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!

20

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்! சைதாப்பேட்டை செட்டித்தோப்பைச் சேர்ந்தவர் பாண்டியன்(35). அவரது மனைவி செல்வி(28). இருவருக்கும் மணமாகி இரு குழந்தைகள் மைதீஷ் மற்றும் சந்துரு, முறையே நான்கு மற்றும் ஒன்றரை வயது.  பாண்டியனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. குடியினால் வரும் பிரச்சினைகள் சமயத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதை என்னவென்று சொல்ல?

பாண்டியனின் குடிப்பழக்கத்தால் தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்தபடி இருந்தன. கடந்த சனிக்கிழமையன்று தீக்குளித்து இருவரும் இறந்துவிட்டனர். கூடவே கைக்குழந்தையும் தீயில் கருகி இறந்தது. சிறுவன் மைதீஷை அவனது பாட்டி உணவூட்ட அழைத்துச் சென்றிருந்தபடியால் தப்பித்துவிட்டான்.

இந்த அவலச் செய்தியைக் கேள்விப்பட்டு செட்டித்தொப்புக்குச் சென்றபோது, சிறுவன் மைதீஷ் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் பக்கத்து வீட்டில்  விளையாடிக் கொண்டிருந்தான். செல்வியும் பாண்டியனும் தீக்குளித்து இறந்த வீடு ஒரு பொந்துபோல இருந்தது,  பாண்டியன்  நிரந்தர வேலையில் இல்லை. ஆனால், கிடைக்கும் போது டிரைவர் வேலைக்குச் செல்வார். பத்து நாட்களுக்கு  இரண்டு முறை அல்லது  மூன்று முறை வேலைக்குச்  செல்வார். பணம் கையில் இருக்கும்போது வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை வாங்கி வருவார்.

மீதிநாட்களில், வறுமைதான். அதோடு, குடிக்கப் பணம் கேட்டு செல்வியிடமும் சண்டை போடுவார். செல்வியிடம்  தையல் மெஷின் இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு துணிகள் தைத்து  அந்த வருமானத்தில் செல்வி குடும்பத்தை ஓட்டி வந்தார்.

செல்விக்கு கணவனது குடிப்பழக்கம் பிடிக்கவில்லை. அதை சகித்துக் கொள்ளமுடியாத அளவுக்கு தொல்லைகள் விசுவரூபம் எடுத்து வந்தன. இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்தாலும் அவர்களுக்குள்ளேயே சமாதானமாகி விடுவார்கள்.

சில சமயங்களில், செல்வி கோபித்துக் கொண்டு, மரக்காணத்திலுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிடுவார். சிலநாட்கள் கழித்து, பாண்டியன் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவார். இப்படி குறைந்தது இரு மாதங்களுக்கொரு முறை நடக்கும் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள்.

பாண்டியனின் குடிப்பழக்கமே இதற்குக் காரணம், அதைத் தாண்டி வேறு எந்த பெரிய பிரச்சினைகளும் இல்லையென்று அக்கம் பக்கத்து வீட்டினர் கூறுகிறார்கள்.ஆனால், அன்று என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை., கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு கதவைப் பூட்டிக்கொண்டு இருவரும் தீக்குளித்துவிட்டனர். வெப்பம் தாங்காமல் அருகிலிருந்த குழந்தையும் அந்தத் தீயில் கருகியதாக கூறுகின்றனர்.

பத்திரிகை மற்றும் போலீஸ் செய்தியின் படி செல்வி தீக்குளித்ததாகவும், பாண்டியன் காப்பாற்றப்போய் அவரும் தீக்காயம்பட்டு இறந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இதில் எப்படி சேர்ந்து இறந்தது என்பதற்கு பதில் இல்லை. இந்த துயர சம்பவம் என்னவாக நடந்திருக்கும் என்று நாம் ஊகிக்கத்தான் முடியுமே அன்றி அறுதியிட்டு இன்னதுதான் நடந்தது என்று கூற இயலாது. மேலதிகமாக அன்று என்ன நடந்தது என்று சொல்வதற்கு செல்வி உயிருடன் இல்லை. வேலையற்ற கணவனும், அவனது குடிப்பழக்கமும் அந்த ஏழைக்குடும்பத்தை எப்படி சீர்குலைத்திருக்கும் என்பதை கண்டுபிடிப்பதற்கு துப்பறிவாளர்கள் யாரும் தேவையில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை பாண்டியன் ஒரு மாத வருமானமுள்ள வேலையில் இருந்தார். கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுக்கு உடை எடுத்துக் கொடுத்தும் கொண்டாட்டங்களுக்கும் செலவிட்டுள்ளார். அனைவரிடமும் நன்றாக பழகுவாராம். அவருக்குக் குடிப்பழக்க்கம் உண்டானதிலிருந்து வேலை போயிற்று. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எந்த நிரந்தர வேலையுமில்லாமல் இருந்திருக்கிறார்.

“இங்க குடிக்காதவங்கன்னு யாருமே இல்ல, எல்லாரும்தான் குடிக்கறாங்க. ஒரு சிலதுதான் இந்த மாதிரி. இல்லன்னா, வேலைக்குப் போனமா, குடிச்சுட்டு சோறு துன்னமான்னு இருக்குதுங்க. யாரு வீட்டுலதான் சண்டை இல்ல. எல்லாம் குடிச்சுட்டு பொண்டாட்டிக்கிட்டே சண்டை போடதான் செய்துங்க. அந்த பையனை பொறந்து வளந்ததுலேருந்து பாத்திருக்கேன். என்னமோ, இப்டி பண்ணிக்கிச்சு” என்றார் வயதான அம்மா ஒருவர்.

அது உண்மைதானே, இன்று எவர்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? புள்ளிவிவரங்களைப் பார்த்தால், குடிப்பழக்கம் அதிகரித்திருக்கிறது பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களிலிருந்து சகலரும் குடிக்கிறார்கள். அதைப் பெருமையாக, தகுதிக்குரிய ஒன்றாகவும் கருதுகிறார்கள். வீக்எண்ட் வார விடுமுறை என்றாலே குடித்து விட்டு கொண்டாடுவது என்பது தேசிய பொழுது போக்காக மாறிவருகிறது.

அதற்கு தமிழக அரசின் டாஸ்மாக்குக்கு முக்கிய பங்கிருக்கிறது. டாஸ்மாக்கின் முக்கிய வாடிக்கையாளர்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடிகாரர்கள்தான்.

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே, சாராய விற்பனை ஐந்தாண்டுகளில் இருமடங்காகியிருப்பது நமது தமிழ்நாட்டில்தான் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எந்த பொருளாதார மந்தமும் டாஸ்மாக் விற்பனையை பாதிப்பதில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் 45 கோடியிலிருந்து 60 கோடிகள் வரை  விற்பனைசெய்து சாதனை படைக்கிறது.

இதில் அதிக பாதிப்புக்குள்ளாவது அன்றாடம் உழைத்து வாழ வேண்டியிருக்கும் அடித்தட்டு மக்களும் அவர்களது குடும்பங்களும்தான். நகரமயமாக்கலின் விளைவால் அதிகரிக்கும் உதிரிபாட்டாளி வர்க்கத்தினர் தங்களது உடலுழைப்பை மறக்க குடியையே நாடுகின்றனர். உடல் அலுப்பை மறக்க  குடிக்க ஆரம்பித்து முடிவில் வேலைக்கு செல்ல முடியாமல் குடிபழக்கத்துக்கு  அடிமையாகவே சிலர் மாறிவிடுகின்றனர்

அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டு உழைக்க முடியாத நிலைக்குத் தல்ளப்படுகிறார்கள். முடிவில், படிப்பறிவோ போதிய வேலைவாய்ப்போ இல்லாத இவர்களின் மனைவிகள்தான் குருவித்தலையில் பனங்காய் போல  அனைத்து சுமையையும் சுமக்கிறார்கள். விரக்தியடைந்தவர்கள் சிலர் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறும் நோக்கில்  தற்கொலையை நாடுகிறார்கள், அதற்கு எடுத்துக்காட்டுதான் பாண்டியன், செல்வி மற்றும் அந்தக் கைக்குழந்தையின் மரணம்.

இதுபோல பல மரணங்கள், தற்கொலைகள் நடக்கின்றன. உண்மையில் பார்த்தால் அவையெல்லாம் தமிழக அரசு செய்துவருகின்ற தவணை முறைக் கொலைகளே! மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் தீட்டாமல், பெருக்கெடுத்து ஓடும் நதியாக டாஸ்மாக்கை எல்லா ஊர்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசுதானே இதற்கு பொறுப்பு?

பாண்டியனது வீட்டைவிட்டு தெருமுனைக்கு வந்தபோது ஒரு கோயில் இருந்தது. அந்தக்கோயில் எதிரில் இரட்டை இலை சின்னத்தை ரோஜாப்பூவாலேயே வடிவமைத்திருந்தார்கள். நான் உங்க வீட்டுப்பிள்ளை என்ற பாடல் மைக் செட்டில் பாடிக் கொண்டிருந்தது. அன்று ஜெயலலிதா அம்மா இலவச அரிசியை வழங்குகிறாராம்.

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!
டாஸ்மாக் கடை

இப்படி இலவசமாக வழங்குவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது, இவர்களுக்கு? பாண்டியன்களின் உயிரையும் கூடவே அவர்களது குடும்பத்தினரின் உயிரையும் காவுகேட்டுதான் இன்று இலவசங்கள் வழங்கப்படுகிறது. இந்தப்பக்கம் டாஸ்மாக் மூலமாக சுரண்டி அந்தப்பக்கம் இலவசங்களாக அள்ளிக் கொடுக்கிறார்கள், ஏதோ தங்கள் வீட்டுப் பணத்திலிருந்து  கொடுப்பதுபோல. தாலியைப் அறுத்துவிட்டு லேப்டாப்பும் டிவியும் கொடுப்பது எதற்கு?

மகளிர் காவல் நிலையங்களுக்குச் சென்றால் குடித்துவிட்டு பிரச்சினை செய்யும் கணவர்களைப் பற்றிய புகார்கள்தான் முக்கால்வாசி இருக்கிறது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களோ அல்லது புதுப்பட ரிலீசோ எதுவாயினும் குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் இளைஞர்களைப் பற்றிய செய்திகளே அடுத்த நாள் செய்தித்தாளை ஆக்கிரமிக்கின்றன. இது ஏதோ சேரிக்களில் வாழும் பாண்டியன்கள்தான் இப்படி செய்வதாக எண்ணாதீர்கள்.

பல பன்னாட்டு நிறுவனங்களில், டார்கெட்டை எட்டியதற்கோ அல்லது டீம் அவுட்டிங் என்ற பெயரிலோ வெளியில் எங்காவது ரிசாட்டுக்கு அழைத்துச் சென்று தங்கள் பணியாளர்களுக்கு தண்ணி பார்ட்டி வைப்பதும் ஒரு பெரும் கலாச்சாரமாகவே உள்ளது. கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்த புதியவரானாலும் வெகு எளிதாக,  எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் குடிக்கப் பழகி விடுகிறார்கள். இந்தக் கும்பலில்  குடிக்காமல் இருந்தால் தனித்து விடப்படுவோம் என்பதே இவர்கள் சொல்லிக்கொள்ளும் சாக்கு.  இதனை சோஷியல் ட்ரிங்கிங் என்றும் அடைமொழி கொடுத்து அந்தஸ்து தேடிக் கொள்கிறார்கள்.

தனியார்மயத்தினால் வந்த கலாச்சார சீர்கேடு என்றே இதனைச் சொல்லலாம். குடிப்பழக்கத்தால் வாழ்வையே இழக்கும் அடித்தட்டு மக்களுக்காக மதுக்கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் இணைய வேண்டிய நடுத்தரவர்க்கம்  இப்படி  குடியில் மயங்கி கிடப்பது பெரும் சோகம்தான். இதற்கு நமது கூகிள் பஸ் – ட்விட்டரில் வழிந்தோடும் குடிபுராணமே எடுத்துக்காட்டு.

வெள்ளிக்கிழமை இரவானாலோ அல்லது விடுமுறை தினங்களிலோ வெகு டீசண்டான(!) நமது ட்விட்டர் / பஸ்ஸூலகில் பொங்கி வழிவது டாஸ்மாக்தானே! உள்ளூரோ வெளியூரோ நட்பை துவக்குவதற்கு பாட்டில்தானே பாலமாக இருக்கிறது, அது பிரபலமான இலக்கிய குருஜியாக இருந்தாலும் சரி, இல்லை சினிமா பதிவரானாலும் சரி பதிவுலகம் கூட போதையுலகம்தானே?

ஒன்றும் அறியாத குழந்தையும்கூட  மடிவது மனதை பிசையவில்லையா? ஆரம்பத்தில் அந்த வயதான அம்மா சொன்னது போல, ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள்  குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவனோடு மல்லு கட்டி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களென்றால் நினைத்துப்பாருங்கள். நரகமயமாக அல்லவா இந்த வாழ்க்கை இருக்கிறது?

வல்லரசு நாடென்பது  மக்களின் பிணங்களின் மீது நிற்பதுதான் போலிருக்கிறது. அன்றாடம் குடியினால் பெருகும் இந்தப் பிணங்களைப் பார்த்தாவது உயிருடன் இருக்கின்ற மனிதர்களுக்கு தெளிவு வரவேண்டும். இதை குடிப்பழக்கம் நல்லதல்ல என்ற புத்திமதியால் திருத்திவிட முடியாது. டாஸ்மாக் கடைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அணிதிரண்டு அடித்து நொறுக்கும் போதுதான் இதற்கு காரணமாக அரசை அசைக்க முடியும். செல்வியின் துயரமான தீக்குளிப்பு கோருவது அதைத்தான்.

______________________________________________________________

வினவு செய்தியாளர்
________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?

39
பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
பாபா ராம்தேவ்

“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…

“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு யாரும் மிரண்டு விட வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது சில கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியவுடனேயே அங்கிருந்த மான்கரேத்தே வீரர்கள் குபீர் என்று பாய்ச்சல் காட்டியுள்ளனர். இந்த புறமுதுகுப் போரின் விளைவாய் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தொடைநடுங்கிகள் பின்னங்கால் பிடறியில் பட ஓடிப் போய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம்பட்டுக் கொண்டதையே மாபெரும் படுகொலைச் சம்பவமான ஜாலியன்வாலாபாக்குடன் ஒப்பிடுகிறார்கள். மெழுகுவர்த்தியும் ஊதுவர்த்தியும் ஏந்தி ‘போராடி’ வந்த வீரர்கள், போலீசு காட்டிய சின்ன கவனிப்புக்கே அலறித் துடிக்கிறார்கள். ‘ஐயோ.. இரண்டாம் எமர்ஜென்சி’ என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இரண்டாம் ‘எமர்ஜென்சியை’ எதிர்ப்பது இருக்கட்டும், முதலில் அவர்கள் முதலாம் எமெர்ஜென்சியை எதிர்த்த லட்சணம் என்னவென்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் பரிந்துரைக்கிறோம்.

இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்தி / கேமரா எபெக்ட்?), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த ”முற்றும் துறந்த” சாமியார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாய் சொல்லிக் கொண்டு இந்த கள்ளப்பண சாமியார் தில்லியில் வந்திறங்கிய போது காங்கிரசின் நான்கு காபினெட் மந்திரிகளே நேரில் போய் வரவேற்றனர். உண்மையில் ராம்தேவை அரசு ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவரது ஆசிரமத்தில் ஒரு சி.பி.ஐ ரெய்டு விட்டிருந்தாலே போதும். அது அவர்கள் நோக்கமல்ல.

இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும். கோவிந்தாச்சார்யா, சாத்வி ரிதம்பர போன்ற மார்கெட்டில் விலைபோகாத ஆர்.எஸ்.எஸின் அழுகிய கத்திரிக்காய்கள் சகிதம் மேடையில் அமர்ந்து கொண்டு கருப்புப் பண ஒழிப்பையும் ஊழல் ஒழிப்பையும் ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் நாட்டு மக்கள் அத்தனை பேரையும் மடையர்களாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போது சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது. பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் ‘ராமர் கோயில் + வெடிகுண்டு’ பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது. அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை  ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

காங்கிரசோ இது போன்ற ஆபத்தில்லாத போராட்டங்களை தடவிக் கொடுப்பதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களின் அபிலாஷைகளை ஓரளவுக்கு ஆற்றுப்படுத்த முடியுமா என்று பார்க்கிறது. அதுவும் கூட தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அளவில் இருக்கும் வரையில் தான் அதனால் சகித்துக் கொள்ள முடிகிறது. இப்படி இவர்கள் இருவருமே மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமான திசைவழியில் மடைமாற்றிக் கொள்ள முயல்வதன் ஊடாக எழுந்த சிறிய முரண்பாடு தான் சனி இரவு தில்லி ராம்லீலா மைதானத்தில் வெளிப்பட்டது.

ஆனால், இவர்கள் மட்டுமின்றி பிற ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஊடகங்களும் ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் ஊற்று மூலமாய் இருக்கும் தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். அதன் எதிர்மறை விளைவுகள் யாருக்கு சாதகமான திசைவழியில் செல்ல வேண்டும் என்பதில் தான் இவர்களுக்குள் முரண்பாடு.

இதில் சிவில் சமூகத்தின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அன்னா ஹசாரே கும்பலோ ராம்தேவின் சாமியார் கும்பலோ மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள். அதனாலேயே மக்களுக்கு எந்த வகையிலும் பதிலளிக்கக் கடமைப்படாதவர்கள். மிக அடிப்படையான ஜனநாயகப் பண்பே இல்லாத இவர்கள் முன்வைக்கும் யோசனைகளோ எந்தவகையிலும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதோடு கோமாளித்தனமானமாகவும் இருக்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்க ராம் தேவ் முன்வைக்கும் யோசனைகளெல்லாம் ஏதோ ஷங்கரின் பாடாவதிப் படத்தின் திரைக்கதை போலவே இருக்கிறது. முதலில் உண்ணாவிரதம் இருந்து அயல்நாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வருவார்களாம், அடுத்து அதை அதிகாரிகள் மூலம் ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அறுபதாயிரம் கோடிகள் மேனிக்கு பிரித்துக் கொடுப்பார்களாம். இதில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவதை உறுதி செய்ய அவர்களுக்கு ராம்தேவ் யோகாசனப் பயிற்சிகள் அளிப்பாராம். உள்நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்க ஐம்பது ரூபாய்களுக்கு மேல் இருக்கும் ரூபாய்த் தாள்களை ஒழித்து விடுவார்களாம்.  பிறகு எதிர்காலத்தில் கருப்புப் பணமே தோன்றாமல் இருக்க புதிய நாணயத்தை அறிமுகம் செய்வார்களாம்.

இந்த பித்துக்குளித்தனமான யோசனைகளெல்லாம் நடக்கவே நடக்காது என்பது வேறு யாரைக்காட்டிலும் ராம்தேவுக்குத் தெரியும். ஏனென்றால், அவரிடமுள்ள எல்லா பணத்தையும் ஐம்பது ரூபாய்களாக மாற்றி பதுக்க வேண்டுமென்றால் ஸ்காட்லாண்டில் இருக்கும் அவரது தீவே காணாது.

ஆக, அண்ணா ஹசாரேவும் ராம்தேவும் மக்களை அரசியலற்ற மொக்கைகளாக்கும் ஆளும் வர்க்க நலனையே பிரதிபலிக்கிறார்கள். ஜனநாயகமற்ற இந்த கும்பலின் அரசியல் மோசடிகளை மக்கள் அறிந்து கொள்வதோடு, கருப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் அடிப்படையாக இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி வீழ்த்த முன்வரும் போது தான் உண்மையாகவே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும்.

_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: