கிருஷ்ணகிரி: ஆதியன் பழங்குடியினருக்கு 25 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்!
"ஆதியன் பழங்குடியினர் (ST) சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராடுகிறோம்" என அம்மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஓசூர் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள்!
ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 5
இயற்கைச் சுற்றுச்சூழல் - மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் கூட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலமாக, நமது நிலத்தையும் இயற்கையையும் பண்பாட்டையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென இந்த “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மக்களுக்குத் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 4
வரலாற்று காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை இயங்கி வரும் தமிழ்நாட்டின் தொன்மையான மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராக அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும் என “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 2
சாதி, மத மறுப்பு மணம்புரியும் பண்பாட்டை வளர்த்தெடுப்பதை ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், புரட்சிகர - ஜனநாயக சக்திகள் டிசம்பர் 28-ஆம் தேதியை சாதி, மத மறுப்பு மணங்களுக்கான நாளாகக் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 1
அதிகார வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் சாதிவெறி, மதவெறியில் மூழ்கித் திளைப்பதால், சட்டங்கள் இயற்றுவது மட்டும் தீர்வல்ல. தலித் மக்கள் மீதான வன்முறைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக களப் போராட்டங்கள் மட்டுமின்றி, அவை, பண்பாட்டுப் போராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி, மதம், இனம், மொழி கடந்த பண்பாட்டை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் தீர்மானங்கள் | தீர்மானம் 3
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கிறது. இனிவரும் எந்த ஆட்சியும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர அனுமதிக்கக் கூடாது, அதற்காக புரட்சிகர - ஜனநாயக சக்திகளும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பர் என இப்பெருவிழா அறிவிக்கிறது.
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 1
https://youtube.com/live/fUo1E8yj2uE
***
🔴LIVE: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அமர்வு 2
https://youtube.com/live/KbNexiVVoJs
நேரலையைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நாங்குநேரி ஆதிக்கச் சாதி வெறியாட்டம்: மக்களை கூறுபோடும் கூலிப்படைகள் | களச்செய்தி
திட்டமிட்டு முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு அக்கும்பல் வந்ததுள்ளது. மேலும் சரியாக ஏழை, எளிய உழைக்கும் மக்களைப் பார்த்தே அவர்களின் அரிவாள் வீசப்பட்டுள்ளது. இது சாதிவெறியினால் நடத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர் எவரையும் வெட்டவில்லை. அவர்கள் கொண்டு வந்த அரிவாளுக்கும் சாதி தெரிந்திருக்கிறது.
கேள்வி பதில்: காதல் – ஆணவப் படுகொலைகள் – சாதி எதிர்ப்பு திரைப்படங்கள்
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை! அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மாடக்கோட்டை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கு!
நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவில்லையென்றால் தொடர் போராட்டம் நடத்த மாடக்கோட்டை மக்கள், மக்கள் அதிகாரக் கழகம், ஆதிதிராவிட நலச் சங்கம் மற்றும் பிற ஜனநாயக சக்திகள் தயாராகி வருகின்றனர்.
சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி | வெளியீடு
இந்நூல் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சியை புரிந்துகொள்வதற்கு உதவுவதோடு, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு மாற்றுப் பண்பாட்டை நிறுவுவதற்கான தூண்டுதலாகவும் அமையும். | வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹30 | தொடர்புக்கு: 99623 66321
விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
விவசாயிகளின் விதை மீதான
உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
https://youtu.be/VBtqHsTXpow
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





















