மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!
தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!
"இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் போலீசு கூட்டறிக்கையில் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச இனவெறி நடவடிக்கையாகும்.
பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!
பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.
இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!
பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.
ஓஷன்கேட் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தும், ஊடகங்களின் ஒப்பாரியும்!
கோடீஸ்வர முதலாளிகள் தங்கள் ஆழ்கடல் இன்பச் சுற்றுலாவின்போது செத்துப்போன துயரத்தை நம் மீது திணிக்கும் இந்த ஊடகங்கள் ஏதும் துனிஷிய புலம்பெயர் தொழிலாளர்களின் சாவு குறித்து சீண்டுவதில்லை.
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்திய கலெக்டர்!
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கிறார் மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா. நகராட்சி ஆணையர் ராஜேஷ் ஷாஹி அளித்துள்ள விளக்கத்தில் “எல்லோரும் ஒன்றைச் செய்யும் போது நாம் மட்டும் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் கையை மடக்கி ‘துவஜ்’ செய்தோம். இதில் தவறு இருப்பதாக நாங்கள் உணரவில்லை" என்றார்.
ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!
“பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று பல்கலைக்கழகம் விளக்கம் கேட்கிறது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும்.
கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்போகும் திராவிட மாடல் அரசாங்கம்!
ஒன்றிய பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வர முயற்சி செய்து, விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தால் முறியடிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமான வழியில் கார்ப்பரேட் நெல் கொள்முதல் நிலையம் என்ற பெயரில் திராவிட மாடல் அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
மாநிலங்களுக்கு அரிசி கோதுமையை வழங்க எப்.சி.ஐ-க்குத் தடை!
2022-2023 ஆம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தி 135 மில்லியன் டன். இது சென்ற ஆண்டு உற்பத்தியை விட 6 மில்லியன் டன் அதிக உற்பத்தியாகும். உற்பத்தி அதிகரித்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லை என்று காரணம் கூறுகிறது மோடி அரசு.
செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!
நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ்: விவாகரத்து உரிமைக்காகப் போராடும் பெண்கள்!
கணவன்-மனைவி தங்களுடைய திருமண வாழ்வை முறித்துக் கொள்ள நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அரசாங்கமே மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு அந்நாட்டு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!
உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது.
“இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?”: அல் ஜசீரா ஆவணப்படத்திற்குத் தடை!
‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை.
ஏகாதிபத்திய போர்களினால் அகதிகளாக இடம்பெயரும் மக்கள்!
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் - உள்நாட்டுப் போர் - காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான்.
























