பிக் பாஸ் : இனி அரசின் நேரடி கண்காணிப்பில் உங்கள் கணினிகள் !
“நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? ”
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் மோடி அமித்ஷா கும்பலின் கூட்டாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி சட்டத்தின் ஆட்சி எதுவும் கிடையாது, காவி பயங்கரவாதம் தான் ஆட்சி புரியும் என்பதை பறைசாற்றியிருக்கிறது தீர்ப்பு
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.
கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?
கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
தற்காலிகத் தீர்வாக, "பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது" என்பது வேறு. அதையே "நிரந்தரத் தீர்வாக நம்புவது" என்பது வேறு.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.
முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் நீதித்துறையில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பகிர்கிறார்
முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு
கவிதை சொல்லும் போலீசு, துப்புரவுப் பணியாளரின் பிறந்தநாள் கொண்டாடும் போலீசுகள் எல்லாம் பத்திரிகைகளின் ஊதிப் பெருக்கல்தான். உண்மையான போலீசுகள் தூத்துக்குடியில் துப்பாக்கியோடும், மெரினாவில் குண்டாந்தடிகளோடும், இன்று கோயம்பேட்டின் பார்த்திபனாகவுமே இருக்கிறார்கள்
முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
மணவாழ்க்கைக்கு வெளியே உள்ள உறவு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. உண்மை என்ன?
தஞ்சை : புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் பல இடங்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு சென்றுருக்கின்றனர் மத்தியக் குழுவினர். புகைப்படங்களைப் பார்ப்பதை டில்லியில் இருந்தே செய்திருக்கலாமே ?
இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?
ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?
இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவில் வளரும் புதிய சாதி !
இந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார்.
கட்டுரையாளர் சொல்வது போல மேட்டுக்குடி சாதியான இந்தப் பிரிவு குடும்பங்களின் எண்ணிக்கை 4 லட்சம் ...
ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !
பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி.
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!
























