Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 286

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கரூரில் புமாஇமு ஆர்ப்பாட்டம்

0

”ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்யாதது ஏன் ? காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்!”  என்ற தலைப்பில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கடந்த நவம்பர்-26 அன்று கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் குணசேகரன், வழக்கறிஞர் ஜெகதீசன், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர் தனபால் மற்றும் பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

படிக்க :
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !
வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி


புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்.
தொடர்புக்கு : 96298 86351.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் !

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மில்ட்டன் மற்றும் பார்வேந்தன் ஆஜர் !

மாவட்ட ஆட்சியர் திரு. வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை சட்ட ஆலோசகர் சத்தியபிரியா ஆகியோரின் கூட்டுச் சதியே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று சாட்சியம்!

டந்த ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின்பொழுது துப்பாக்கி சூட்டிற்கு பிறகு வழக்கு தொடுத்தவர்களை அழைத்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து வருகிறது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஜிம்ராஜ் மில்ட்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. பார்வேந்தன் மற்றும் வழக்கறிஞர் பாவேந்தன் ஆகியோர் துப்பாக்கி சூட்டிற்கு அடுத்தநாளே (23.05.2018) சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்ட உதவி செய்யவும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை முறையான பிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவு பெற்றனர். அதன்பிறகும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்டவர்களுக்கு தொடர்ந்து பல வழக்குகளை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திரு. ஜிம்ராஜ் மில்ட்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் திரு. பார்வேந்தன் 15.11.2019 அன்று ஆணையம் முன்பு ஆஜரானார்கள். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஹரிராகவன், வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆணையத்தின் முன்பாக சாட்சியம் அளித்த பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த, வழக்கறிஞர் மில்ட்டன் கூறியதாவது,

வழக்கறிஞர் மில்ட்டன் மற்றும் வழக்கறிஞர் பார்வேந்தன் (வலது).

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின்பொழுது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடமும், நண்பர்களிடமும் நேரடியாகத் தெரிந்து கொண்டதன் மூலமும், வழக்கு ஆவணங்கள், உண்மையறியும் குழு அறிக்கைகள், முதல் தகவல் அறிக்கைகள், காவல் அடைப்பு அறிக்கைகள், அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மூலமும் 22.05.2018 அன்று காவல்துறை எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதை எங்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. அவையாவன

(i) 22.05.2018 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை. இது நன்கு திட்டமிட்டு, உரிய முன் தயாரிப்புகளுடன், முதல்நாளே “ஸ்னைப்பர்” – குறிபார்த்து சுடும் வகையிலான காவலர்கள் திட்டமிட்டு அமர்த்தப்பட்டுள்ளனர்.

(ii) துப்பாக்கிச்சூட்டில் பலியான அனைவரும் தலை மற்றும் மார்பு பகுதிகளில் மட்டுமே குறிவைக்கப்பட்டு, ஒரே தோட்டாவினால் குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே இது பச்சையான படுகொலை.

(iii) ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடும் மக்களை அச்சுறுத்தி பணிய வைக்கவும், பொதுமக்கள் மத்தியில் போராடும் மக்களை வன்முறையாளர்களாகவும், கலவரக்காரர்களாகவும் சித்தரிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்குவதன் மூலம் இனி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடுவது பற்றி சிந்திக்கவே கூடாது என்ற வகையில் இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

படிக்க:
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் ! – அரங்கக் கூட்டம்
♦ தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

(iv) ஸ்டெர்லைட் ஆலையுடன், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூட்டுச்சதி செய்துள்ளனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் திரு. வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மகேந்திரன் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையின் பணியாளர்களைப் போல செயல்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா, முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேந்திரன், சிப்காட் காவல் ஆய்வாளர் திரு.ஹரிஹரன் மற்றும் துணை வட்டாசியர் திரு.சேகர் ஆகியோர்களின் 20.05.2018 முதல் 25.05.2018 வரையிலான கைபேசி அழைப்புகளின் பதிவுகளை ஆராய்ந்து, மேற்படி நபர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கினால் இவர்களுக்கிடையேயான சதியினை அம்பலமாகும்.

ஆணையத்தின் முன் சமர்பித்த ஆவணம்.

இந்த உண்மையை புரிந்து கொள்ள ஆணையத்தின் முன்பாக எமது தரப்பு சான்றாவணங்களாக சுமார் 400 பக்கங்கள் கொண்ட 62 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். மேற்படி ஆவணங்கள் யாவும் பல்வேறு வழக்குகளில் என்னாலும், வேறு சில வழக்கறிர்களாலும் ஆவணங்களாக தாக்கல் செய்யப்பட்டவை.

எனவே மாண்புமிகு இவ்வாணையம்,

(i) அரசு எந்திரத்தை பயன்படுத்தி தனியார் ஆலையான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு நிராயுதபாணிகளாக, அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி, பொய் வழக்கு, தடுப்புக்காவல் என அதிகார துஷ்பிரயோகம் செய்த மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.மகேந்திரன், ஸ்டெர்லைட் ஆலை சட்ட ஆலோசகர் சத்திய பிரியா, காவல்துறை டி. ஐ. ஜி, உதவி கலெக்டர், தாசில்தார், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது கூட்டுச்சதி மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நடந்துவரும் விசாரணையை இடையூறு செய்யாத வண்ணம், தடுக்கும் பொருட்டு மேற்சொன்ன அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

(ii) ஸ்டெர்லைட் ஆலையின் பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொண்ட 5 காவல் ஆய்வாளர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கை விசாரணையை கால வரையறை தீர்மானித்து விரைந்து முடிக்க வேண்டும். அந்த ஐந்து அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காவல்துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை, அரசு அதிகாரிகளை ஊழல்படுத்தி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாமல் முடக்கிய குற்றம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது ஒரு விரிவான விசாரணை நடத்தி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் என்ன நோக்கத்திற்காக பல்வேறு அரசுத் துறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறும்.

(iii) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றி ஆலையை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுக்க, கொடுக்க அதிகார துஷ்பிரயோக, சட்ட விரோத செயல்களும் அதிகரிக்கும். அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய இந்த நிறுவனங்கள் தனி ஒரு ஆளாக செயல்படும் போக்கு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

(iv) ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல காவல்துறைக்கு சில கட்டுப்பாடுகளை; சட்டங்களை இயற்றவேண்டும். போராட்டக்காரர்களால் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டால் காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு, தடியடி, துப்பாக்கி சூடு என்று நடத்தி கூட்டத்தைக் கலைக்கலாம் என்று தற்போது இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல்களை திருத்தி உடமைகளுக்கு சேதம் வரும் வேளைகளில் துப்பாக்கிச்சூடு, உயிர்ச்சேதம் வருவதை தடுப்பதற்கு ஏற்றவகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். கொடும் ஆயுதங்களை கொண்டு தாக்கி உயிருக்கு சேதம் விளைவிக்கும் கும்பல்களை தவிர மற்றவர்களிடம் காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை முற்றிலும் தடை செய்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.

– ஆகிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற அமைதியான முறையில் குடும்பத்துடன் போராடிய மக்களை ஸ்டெர்லைட் ஆலையுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, சதிசெய்து கொடூரமான முறையில் “ஸ்னைப்பர்” மூலம் சுட்டுக் கொலை செய்த காவலர்கள், பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்படவும், உரிமைக்காக போராடிய மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சாட்சிமளித்துள்ளோம்” என்றார்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

அன்பே இதுவரை மறைத்து வைத்த உண்மையை சொல்லி விட தீர்மானித்துவிட்டேன் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 08a

“நன்றி, சீனியர் லெப்டினன்ட்! அற்புதமான தாக்கு, பாராட்டுகிறேன். என்னைக் காப்பாற்றினாய். ஆமாம், தரை வரையில் அந்த விமானத்தைப் பின்பற்றிச் சென்றேன். அது தரையில் மோதிச் சிதறியதைப் பார்த்தேன்…. நீ வோத்கா குடிப்பது உண்டா? என் இருப்பிடத்துக்கு வா. ஒரு லிட்டர் உனக்காக வைத்திருப்பேன். நல்லது, நன்றி. உன் கையைப் பற்றிக் குலுக்குகிறேன். கட்டாயம் வா!” என்றது அந்தக் குரல்.

மெரேஸ்யெவ் டெலிபோன் குழாயை வைத்தான். அன்று அனுபவித்தவற்றால் அவன் ஒரேயடியாகக் களைத்துப் போயிருந்தான். நிற்பதே அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கூடிய விரைவில் தன் நிலவறையை அடைந்து, பொய்க்கால்களைக் கழற்றி எறிந்து விட்டு கட்டிலில் உடலைக் கிடத்துவது பற்றியே எண்ணமிட்டது அவன் மனம். டெலிபோன் அருகே அசட்டுப் பிசட்டென்று தயங்கி நின்று விட்டு அவன் வாயில் பக்கம் மெதுவாக நகர்ந்தான்.

“எங்கே போகின்றீர்கள்?” என்று வழி மறித்தார் கமாண்டர். மெரேஸ்யெவின் கையைப் பற்றி, தமது வறண்ட சிறு கையால் வலி உண்டாகும் படி பலமாக இறுக்கிக் குலுக்கினார். “ஊம், உங்களுக்கு என்ன சொல்வது? சபாஷ்! என் ரெஜிமென்டில் இப்பேர்ப்பட்ட ஆட்கள் இருப்பது குறித்துப் பெருமை கொள்கிறேன்…… இன்னும் என்ன சொல்வது? நன்றி… உங்கள் நண்பன் பெத்ரோவ் மட்டும் என்ன, மோசமானவனா? மற்றவர்களுந்தாம்… ஆகா, இம்மாதிரி மக்கள் இருக்கும் போது தோல்வி அடைய மாட்டோம்!”

இவ்வாறு கூறி இன்னும் ஒரு முறை மெரேஸ்யெவின் கையை வலிக்கும் படி இறுகப் பிடித்துக் குலுக்கினார்.

மெரேஸ்யெவ் நிலவறையை அடைந்தபோது இரவாகி விட்டது. ஆனால் அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தலையணையை திருப்பி வைத்துக் கொண்டான். ஆயிரம் வரை எண்ணிவிட்டுத் தலைகீழாக ஒன்று வரை எண்ணினான். தனது நண்பர்களில் ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் குலப் பெயர் உள்ளவர்களை நினைவுப்படுத்திக் கொண்டான், பிறகு ருஷ்ய நெடுங்கணக்குப் படி வரிசையாக ஒவ்வோர் எழுத்திலும் ஆரம்பிக்கும் குலப்பெயர் உள்ளவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டான். புகைவிளக்கின் மங்கிய சுவாலையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டான். தூக்கம் வருவதற்காகக் கையாளப்படும் இந்த யுக்திகள் எத்தனையோ தடவை சோதித்து அறியப்பட்டவை. எனினும் இன்று அவனிடம் அவை பயன் விளைவிக்கவில்லை.

அவன் கண்களை மூட வேண்டியதுதான் தாமதம், அறிமுகமான உருவங்கள் ஒருபோது துலக்கமாகவும் மறுபோது மங்கிய மூட்டத்திலிருந்து பிரித்தறிய கடினமாயிருக்கும் படி தெளிவின்றியும் அவன் முன் தோன்றி மறையலாயின: வெள்ளிக் கேசம் பிடறி போல் இலங்க, கவலையுடன் பார்த்தார் மிஹாய்லா தாத்தா. “பசுவினுடையது போன்ற” இமை மயிர் கொண்ட அந்திரேய் தெக்தியாரென்கோ நல்லியல்புடன் கண் ஜாடை காட்டினான். வஸீலிய் வஸீலியெவிச் யாருக்கோ சூடாகக் கொடுத்தவாறு, நரையயோடிய தலையைக் கோபத்துடன் அசைத்தார். முகச் சுருக்கங்கள் எல்லாம் களி துலங்கும் படி குறுநகை செய்தார் முதிய ஸ்னைப்பர். கமிஸார் வரபியோவின் மெழுகு முகம் தலையணையின் வெள்ளைப் பின்னணியிலிருந்து அறிவு சுடரும் விழிகளால் அலெக்ஸேயை நோக்கியது.

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !
சங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி !

உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கும், நகைச்சுவை விழிகள் அவை, எல்லாவற்றையும் புரிந்து கொள்பவை அவை. ஸீனாவின் தழல்நிறக் கூந்தல் காற்றில் பறந்தவாறு தோன்றி மறைந்தது. துடியான சிறு மேனியான பயிற்சி ஆசிரியன் நவூமவ், புன்னகைத்தான், அனுதாபமும் பரிவும் தோன்ற கண் சிமிட்டினான். நட்பு நிறைந்த எத்தனையோ இனிய முகங்கள் இருளிலிருந்து புன்னகையுடன் அவனை நோக்கின, நினைவுகளை எழுப்பின, ஏற்கனவே தளும்பத் தளும்ப நிறைந்திருந்த இதயத்தை இதமான அன்பால் நிறைத்தன. நட்பார்ந்த இந்த முகங்கள் நடுவே உதித்து, உடனே அவற்றை மறைத்து விட்டது ஒல்காவின் முகம். இராணுவ உடுப்பு அணிந்த இளநங்கையின் தசை பிடிப்பு அற்ற முகம். களைத்த, பெரிய விழிகளால் நோக்கியது அது. தான் ஒரு போதும் கண்டிராத கோலத்தில் தன் முன்னே ஓல்கா நிற்பது போன்று அவ்வளவு தெளிவாக அந்த முகத்தைப் பார்த்தான் அலெக்ஸேய். இந்தத் தோற்றம் மெய்யானதே போல இருந்ததால் அலெக்ஸேய் சிறிது எழுந்திருக்கக் கூடச் செய்தான்.

அப்புறம் துக்கமாவது வருவதாவது! இன்பம் ததும்பும் ஆற்றல் அவனுக்குள் ஊற்றெடுத்துப் பெருகியது. அலெக்ஸேய் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, விளக்கைப் பொருத்தினான். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தை கிழித்தான். பென்சில் நுனியைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டு எழுதத் தொடங்கினான்.

மளமளவென்று பெருகிய எண்ணங்களை அதே விரைவில் எழுத்தில் வடிக்க இயலாதவனாய், கிறுக்கித் தள்ளினான் அவன்: “என் அன்பே! இன்று நான் மூன்று ஜெர்மன் விமானங்களை சுட்டு வீழ்த்தினேன். ஆனால் முக்கியமான விஷயம் இது அல்ல. என்னுடைய சில தோழர்கள் அனேகமாக நாள் தோறும் இவ்வாறு செய்கிறார்கள். உன்னிடம் இதைப் பற்றி நான் பெருமையடித்துக் கொள்ள மாட்டேன்…… தூரத்தில் இருந்து கொண்டு என் நெஞ்சினில் வாழும் இனியவளே! பதினெட்டு மாதங்களுக்கு எனக்கு நேர்ந்ததை எல்லாம் உனக்கு விவரிக்க இன்று நான் விரும்புகின்றேன், இன்று அதற்கு நான் உரிமை பெற்று விட்டேன். இந்தச் சேதியை நான் உன்னிடமிருந்து இதுவரை மறைத்து வைத்திருந்தேன். அதற்காகப் பச்சாதாபப்படுகிறேன், மிகவும் வருந்துகின்றேன். இன்று தான் சொல்லி விடுவதென்று முடிவாகத் தீர்மானித்துவிட்டேன்…..”

« நாவல் முடிவுற்றது »

நாவலாசிரியரின் பின்னுரை தொடரும் …

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல | காணொளி

வெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல !

ன்றாடங்காட்சிகளை மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தையும் வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் கருத்து.

* கால் கிலோ வெங்காயம் 18 ரூபா.. 20 ரூபா..ய் விக்குது அதுவும் 3 வெங்காயம் தான் நிக்கும்…  அத வச்சி 4 பேர் இருக்குற குடும்பத்துக்கு குழம்பு வைக்க முடியுமா?

* விக்கிற விலைவாசியில காய் – கறி வாங்க முடியாம அல்லாடுறோம்…. இப்ப  வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது…

* குடிகார புருசன்கள வச்சிகிட்டு வாழ்க்கைய ஓட்டிகிட்டிருக்கோம். நாளொன்னுக்கு நூறு ரூபா இல்லாம ஒன்னுமே பன்ன முடியாது. இதுல வெங்காய விலையே நூறு ரூபாய்க்கு வித்தா என்ன பன்றது?

பாருங்கள் ! பகிருங்கள் !

இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

சிய சோசலிச புரட்சியின் 102-ம் ஆண்டை ஒட்டி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மொத்த இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் லதா.

“மூனு ரூபா பார்லே ஜி வாங்க முடியல …
முப்பது ரூபா பனியன் ஜட்டி போணி ஆகல …”
– பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்தும் கோவனின் பாடல்.

“எழில்மிகு காஷ்மீரிலே என்ன நடக்குது தெரியல …
மண்ணின் சொர்க்கமே இருண்டு கெடக்கு .. மர்மம் விலகல …”
– காஷ்மீர் மக்கள் வாழ்வின் சோகத்தை பாடலாக வெளிப்படுத்துகிறார் தோழர் லதா…

“இரும்பு குழம்பாகி பாய்லரிலே கொதித்திடும் ..
கை உரையும் தாண்டி சூடு விரலெல்லாம் வெந்திடும் …”
தொழிலாளர்களின் வேலைநிலை அவலத்தை பாடலால் விவரிக்கிறார் தோழர் கோவன்..

பாருங்கள் ! பகிருங்கள் !

ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி

ரசியல் சாசன நிபுணரும் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஏ.ஜி. நூரனி எழுதியுள்ள இந்தப் புத்தகம் உண்மையிலேயே அட்டகாசமான தொகுப்பு.

இந்தியாவில் தற்போது மிகச் சக்திவாய்ந்த அமைப்பாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் துவக்கம் முதல் தற்போது வரையிலான வளர்ச்சியை படிப்படியாக விளக்குகிறார் நூரனி.

இந்தியாவின் கடந்த கால வரலாற்றை, அதிலிருந்த மகத்தான மனிதர்களான புத்தர், அசோகர், அக்பர், நேரு, காந்தி போன்ற மகத்தான மனிதர்களை அழிக்க முயல்வது ஏன் என விளக்குகிறார் நூரனி.

ஆர்.எஸ்.எஸ். ஏன் ஏற்படுத்தப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்.-ன் 19-ம் நூற்றாண்டுப் பாரம்பரியம், பிரிட்டிஷாருடன் இணக்கம், ஐரோப்பிய பாசிஸ்டுகளுடன் ஈர்ப்பு, இந்து மகாசபாவைக் கைப்பற்றும் சாவர்க்கர், சுதந்திரத்தின் போது அந்த அமைப்பு என்ன செய்தது, காந்தி கொலையில் பங்கு, ஆர்.எஸ்.எஸ் மீதான தடைகள், ஜனசங்கத்தின் உருவாக்கம், நெருக்கடி நிலை காலகட்டத்தில் அதன் செயல்பாடு, அதன் வன்முறை, அதன் துணை அமைப்புகள் என விரிவாக விவரிக்கிறார் நூரனி.

“தற்போது அபாயத்தில் இருப்பது இந்தியக் கனவல்ல; இந்தியாவின் ஆன்மா” என்று குறிப்பிடும் ஏ.ஜி. நூரனியின் இந்தப் புத்தகம் சமகால இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள முக்கியமான ஒரு கருவி.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

ஏகப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் 547 பக்கங்களைக் கொண்டது. லெஃப்ட் வேர்ட் வெளியீடு.

1500 ரூபாய்க்கு முதலில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது 521 ரூபாய்க்கு அமெஸானில் கிடைக்கிறது. Don’t miss it!!

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … ?

லகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த நகர்ப்புறம் சார்ந்த, வறுமைக்கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள். கிறித்தவர் என்பது போல இசுலாமியர் என்பது போல ‘இந்து’ என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியான மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து அடையாளம் குறித்து சில பேராசிரியர்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. (நூலின் முன்னுரையிலிருந்து)

‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

இந்து என்ற சொல், இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை. இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்தச் சொல்லுக்கான ”மரியாதை’ என்ன என்று கேட்டால். ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்’ என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே “வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ, நாம் பிழைத்தோம்” என்று சொல்கிறார். ‘இந்து’ என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும் தான். எப்படியென்றால் அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக் காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள். 1799-ல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ் – காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுதுதான் Hindu என்ற சொல் முதன் முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. இந்தச் சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது. (நூலிலிருந்து பக்.5)

பகுத்தறிவு வாதத்தால் தான் கோயில்கள் பாழடைந்து போய்விட்டன என்று சொல்கிறார்களே?

பகுத்தறிவு வாதத்தால் என்றல்ல. அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது திராவிட இயக்கம் வந்தபிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்ற குற்றச்சாட்டைத்தான். நாத்திகத்தோடு திராவிட இயக்கம் வந்தது 1925-க்குப் பிறகுதான். அதற்கு முன்னாலே பாழ்பட்ட கோயில்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு? இரண்டாவது. பார்ப்பனர் கையில் இருந்த – பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்கள் எல்லாம் பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருந்த – கோயில்கள்தானே தவிர எந்த ஊரிலாவது சாதாரண அம்மன் கோயில், சுடலை கோயில், இசக்கி கோயில் காத்தவராயன் கோயில் பாழ்பட்டுப் போகிறதா? எனில் எந்த ஆன்மீகம் பாழ்பட்டுப் போயிருக்கிறது? யாருடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறது?

பெருவாரியான மக்களுடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறதனால் தானே காத்தவராயன் கோயிலோ, சுடலை கோயிலோ, பொன்னியம்மன் கோயிலோ அழியாமல் அப்படியே இருக்கிறது. சுஜாதாகூட ஒருமுறை எழுதியிருந்தார்,  நவதிருப்பதியை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து,  அவை வாழ்ந்த காலத்தை நினைத்துப்பார்த்து விட்டு ‘அப்பொழுதெல்லாம் திராவிட இயக்கம் இல்லை’ என்று. திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெரும்பாலான கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதற்கான காரணம், பிராமணர்கள் புதிய அதிகார மையத்தைத் தேடி அந்தக் கோயில்களை எல்லாம் கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள். 19-ம் நூற்றாண்டில் நீதிபதி முத்துச்சாமி ஐயரோ, எஸ்.எஸ். வாசனோ தங்கள் கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்ததற்கு திராவிட இயக்கமா காரணம்? திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னாலேயே இவர்கள் நகரத்திற்கு புதிய அதிகாரங்களையும், பொருள் வளத்தையும் தேடித்தான் கோயில்களைக் கைவிட்டு விட்டு வந்தார்கள். (நூலிலிருந்து பக்.17)

இந்துத் தலைவர்களிடையே ‘தலித்’ பற்றியதான பார்வை தற்பொழுது மாறியிருக்கிறதா ?

இல்லை. அவர்கள் மாறியதாகக் காட்டுகிறார்கள். இன்னும் இந்துத் தலைவர்களிடையே கூட சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார், ‘அம்பேத்காரை பின்பற்றும் மக்கள்’ என்கிறார். வெளிப்படையாகப் பெயர் சொல்லக்கூட அவருக்கு மனமில்லை. இவர்கள் சுத்தமாக இல்லையென்று ஒரு காலத்திலே சொன்னார்கள். இப்பொழுது எதிர்ப்பு வந்துவிட்டதால் அதை விட்டுவிட்டார்கள். யாருடைய சுத்தம் பற்றி யார் பேசுவது? அழுக்குகளை உரமாக்கி அழகான பயிர்களை உருவாக்கும் மனிதன் அசுத்தமானவன். மடாதிபதி சுத்தமானவரா? அசுத்தம் என்பது உடல்  உழைப்பை மதிக்காத அதை சுரண்டி வாழுபவரின் பேச்சாகும். ‘திரௌபதி சுத்தமாக இருந்தா ஆபத்திலே கிருஷ்ணனைக் கூப்பிட்டாள். கூப்பிட்டவுடன் உதவிக்கு அவர் வரவில்லையா’ என்று கேட்கிறார்களே வைணவர்கள். இந்தக் கேள்விக்கு சங்கராச்சாரியார் பதில் சொல்வாரா? நூற்றுக்கு இருபது பேராக இருக்கிற தலித் மக்கள் மதம் மாறிப்போய் விடவும் கூடாது. இருக்கிற இடத்திலே ‘இந்து’ என்ற பெயரோடு தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பார்ப்பனர்களின் ஆன்மிக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பங்காரு அடிகளார் போலப் புதிய நெறிகளைக் கண்டுபிடிக்கக் கூடாது. இதுதான் அவரது எண்ணமாகும்.

படிக்க :
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

ஏதேனும் ஒரு காரணம் பற்றி தங்களுடைய ஆன்மீக அதிகாரத்தையும் மறைமுகமான அரசியல் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதுமட்டுமல்ல. இப்பொழுது அந்த ‘கிறிஸ்தவர் இசுலாமியராக அல்லாத இந்து’ என்கிற அரசியல் சட்டம் சொல்கிற வார்த்தையை ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால் ‘இந்து’ என்னும், பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர் தெய்வங்களை நிம்மதியாக வணங்கிவிட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும், மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். (நூலிலிருந்து பக்.20)

நூல் : நான் இந்துவல்ல நீங்கள் … ?
ஆசிரியர் : தொ. பரமசிவன்

வெளியீடு : மணி பதிப்பகம்,
29-ஏ, யாதவர் கிழக்குத் தெரு,
பாளையங்கோட்டை.

பக்கங்கள்: 20
விலை: ரூ 11.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | sixthsense publications | periyarbooks

குழந்தைகளை மதிப்பிட மதிப்பெண் அட்டவணைகளா தேவை ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 10

பெற்றோர்களுக்கு பாக்கெட்டுகள்

னால் தம் குழந்தைகள் பள்ளியில் எப்படிப் படிக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளப் பெற்றோர்களுக்கு உரிமையுண்டு. குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, குழந்தைக்கு உதவி புரிவது பற்றி நாம் அவர்களுக்கு உபயோகரமான ஆலோசனைகளைத் தர வேண்டும். எங்களுடைய பாக்கெட்டுகளின் நோக்கம் இதுதான், இவற்றை ஒட்டுவதில்தான் குழந்தைகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். “லாலி, உனது பாக்கெட்டைக் கொண்டு வா!”

லாலி என்னருகே வந்து பாக்கெட்டின் உள்ளே இருப்பதை எடுக்கிறாள் (மொத்தம் 23 தாள்கள்): இரண்டு கையெழுத்து மாதிரிகள், அவளே உருவாக்கிய இரண்டு கதைகள், வாசகத்தில் சேர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அடங்கிய மூன்று பயிற்சிகள், அவளே உருவாக்கிய கணக்குகள், வரைகணிதப் படங்கள், ஐந்து ஓவியங்கள், இரண்டு ஒட்டுப் படங்கள், “தாய் மொழிப் பாடங்களில் நான் என்ன கற்றுக் கொண்டேன்”, “எனக்குக் கணிதத்தில் என்ன தெரியும்” என்ற தலைப்புகளில் நான்கு பக்கங்களில் குறிப்புகள்.

பார்த்து விட்டு ஆமோதிக்கிறேன்.

“இதோ உன் சான்றிதழ்!” என்று டைப் செய்யப்பட்டு நானும், பாடப் பிரிவுத் தலைமையாளரும் கையொப்பமிட்ட தாளைத் தருகிறேன். அதில் பின்வருமாறு எழுதப் பட்டுள்ளது:

“லாலி அன்பான, உழைப்பார்வமுள்ள சிறுமி. நண்பர்கள் இவளை விரும்புகின்றனர். இவள்தான் வகுப்பில் மருத்துவத் தாதி. நீக்கா விரலை அறுத்துக் கொண்ட போது லாலிதான் அயோடின் தடவிக் கட்டுப் போட்டாள்.

லாலி சுவாரசியமாகப் பேசுவாள். இவளால் கோர்வையாகப் பேச முடியும் என்றாலும் வார்த்தைகள், வாக்கியங்களுக்கு இடையில் “ஆஆஆ” என்று கூறுவதைத் தவிர்த்தால் நன்றாயிருக்கும்.

பல கவிதைகள் இவளுக்குத் தெரியும். பாவனை நயத்தோடு இவள் கவிதை வாசிப்பது நண்பர்களுக்குப் பிடிக்கும்.

முழு வார்த்தைகளாகப் படிக்கிறாள், படிப்பதைப் புரிந்து கொள்கிறாள். இவள் ஏற்கெனவே நான்கு புத்தகங்களைப் படித்து முடித்துள்ளது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி.

அழகாக எழுதுகிறாள், எழுத்துகளுக்கு இடையில் சீரான இடைவெளி விட்டால் இன்னமும் சிறப்பாயிருக்கும்.

எழுத்து மூலம் தன் எண்ணங்களை வெளியிட இவளுக்குத் தெரியும். “வசந்தம் அழைக்கிறது” எனும் இவளுடைய கதையை வகுப்பில் வாசித்தோம். நண்பர்கள் கூறிய ஆலோசனைகள் லாலிக்கு நினைவில் இருக்கின்றன.

கணக்குகளைப் போடக் கற்றுக் கொண்டிருக்கிறாள். வரை கணித வடிவங்களை நன்கு வரைகிறாள்.

ருஷ்ய மொழி இவளுக்குப் பிடித்துள்ளது. வாக்கியங்களை அமைக்க இவளால் முடியும், கவிதைகள், பழமொழிகள், விடுகதைகள் மீது விருப்பம் உண்டு. ருஷ்ய மொழி உச்சரிப்பின் மீது கவனம் செலுத்தினால் நல்லது.

இவள் வரைந்த ஓவியங்களும் உழைப்புப் பாடத்தில் செய்த பொருட்களும் வகுப்புக் கண்காட்சியில் வைக்கப் பட்டுள்ளன; இவை அனைவருக்கும் பிடிக்கும். லாலி இசை நாடகத்தில் பங்கேற்பவள்.

அவள் விரைவாகப் படிக்க கற்றுக் கொண்டால் நன்றாயிருக்கும். கோடை விடுமுறையில் 6-7 குழந்தை நூல்களைப் படிக்க வேண்டும். எழுதிப் பழகினால் நேர்த்தியாக எழுதவரும்.

லாலி! நீ முதல் வகுப்பிற்கு மாறிச் செல்வது குறித்து பாராட்டுதல்கள்! முக்கிய விஷயங்கள் உன்னை எதிர் நோக்கியுள்ளன!”

இந்த விவரங்களடங்கிய தாளை பாக்கெட்டில் போடுகிறேன். இது அழகாகக் காட்சி தருகிறது: மேலே மலர்களும், சிரிக்கும் சூரியனும் வரையப்பட்டுள்ளன, “அன்புப் பெற்றோர்களுக்கு – லாலியிடமிருந்து” என்று வண்ணப் பேனாக்களால் எழுதப்பட்டுள்ளது.

“பாக்கெட்டை ஒட்டலாம்… வாஹ்தாங், உனது பாக்கெட்டைக் கொண்டு வா!”

வாஹ்தாங்கின் பாக்கெட்டில் 19 தாள்கள் உள்ளன. உள்ளேயுள்ள எல்லாவற்றையும் பார்க்கிறேன்.

“நான் உன்னிடத்தில் இருந்தால் இந்த எழுத்துகளை மாற்றி எழுதுவேன். உன்னால் அழகாக எழுத முடியுமே.”

அவனைப் பற்றிய விவரங்களடங்கிய தாளைத் தருகிறேன். இதில் ஆலோசனைகள் உள்ளன: முழு வார்த்தைகளாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், எழுதும்போது கவனமாக இருக்க வேண்டும், எழுத்துகளை விட்டு விடக் கூடாது, நண்பர்களுடன் வாய்ச் சண்டை போடக் கூடாது.

“தாம்ரோ, உனது பாக்கெட்டைக் கொண்டு வா!” அவளுடைய பாக்கெட்டில் 26 தாள்கள் உள்ளன.

நர்சரிப் பள்ளியிலுள்ள குழந்தைகளின்பால் இவள் எவ்வளவு அக்கறை காட்டினாள் என்று நன்னடத்தைச் சான்றிதழில் எழுதப்பட்டுள்ளது.

“பாக்கெட்டின் மீது எழுதப்பட்டுள்ளதில் பிழையைப் பார்க்கிறேன். இதைக் கண்டுபிடித்து, திருத்து!”

இவ்வாறாக ஒவ்வொருவரும் தம் பாக்கெட்டுடன் என்னிடம் வருகின்றனர்.

“உங்களது பாக்கெட்டுகளை டெஸ்குகளின் மீது வைத்துச் செல்லுங்கள். உங்கள் பெற்றோர்களை உங்கள் இடங்களில் உட்கார வைப்பீர்கள். நீங்கள் தயாரித்துள்ள அதிசயங்களை அவர்களே பார்ப்பார்கள்.”

இந்தப் பாக்கெட்டுகளை குழந்தைகள் கடந்த இரண்டு வாரங்களாகத் தயாரித்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு தனிப் பாடவேளையின் போது இவர்கள் விசேஷமாக இதற்கென எழுதினார்கள், உருவாக்கினார்கள், படைத்தார்கள், வரைந்தார்கள், ஒட்டினார்கள், தேர்ந்தெடுத்தார்கள், இவற்றைத் தத்தம் பாக்கெட்டுகளில் போட்டார்கள். பல குழந்தைகள் இடைவேளையின் போது வெளியே கூடப் போகாமல் டெஸ்கிலிருந்து பாக்கெட்டை எடுத்து அதில் மூழ்கிப் போனதைப் பார்த்தேன். இதை அவர்கள் அக்கறையோடும் உற்சாகத்தோடும் செய்தார்கள். இது தம் பெற்றோர்களுக்கான பரிசு ஆயிற்றே: “எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார்த்தீர்களா! நான் எப்படிப்பட்டவன் பார்த்தீர்களா!”

பாக்கெட்டுகள் ஏன் ரகசியமானவை தெரியுமா? ஏனெனில் பெற்றோர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைத் தர குழந்தைகளுக்குப் பிடிக்கும். எனவே தான் இவை ரகசியமானவை என்று வகுப்பில் கூறுகிறோம், ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளில் தலை சிறந்தவற்றையும் ஆசிரியர் தரும் சான்றிதழையும் இப்பாக்கெட்டுகளில் போட்டு ஒட்டுகின்றனர்.

பெற்றோர்கள் இந்தப் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?

இதைத் திறப்பார்கள். எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் பின்வருமாறு செய்ய வேண்டும்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி குழந்தை தயாரித்துள்ள ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்க்க வேண்டும், சான்றிதழை யாராவது ஒருவர் எல்லோருக்கும் கேட்கும்படி படிக்க வேண்டும். பழைய பாக்கெட்டை பத்திரமாக வைத்து – இரண்டையும், இரண்டின் உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நன்றாயிருக்கும். பின் குழந்தை அவர்களுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தந்துள்ளான், எப்படி எழுதுகிறான், எந்த மாதிரியான கணக்குகளைப் போடுகிறான், எந்தக் கவிதைகள் தெரியும், எப்படி வரைகிறான், பொதுவில் எப்படி வளர்ந்து வருகிறான் என்பதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும்.

படிக்க :
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

அவன் இன்னமும் அதிகம் தெரிந்து கொள்ள, விரைவாக முன்னேறி, சிறப்பானவனாக இருக்க, உற்சாகமானவனாக, அன்பானவனாக, உழைப்பார்வம் உள்ளவனாக வளர அவனுக்கு எப்படி உதவுவது என்று பேச வேண்டும். குழந்தை ஏதாவது தப்பு செய்திருந்தால் இந்தக் குடும்ப ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு போதும் குழந்தையைத் திட்டக் கூடாது. இவையெல்லாவற்றையும் குழந்தை பெரும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தயாரித்திருக்கிறான், தற்போது தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று இவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மறுநாள் தந்தை இந்த பாக்கெட்டை தன் வேலையிடத்திற்கு எடுத்துச் சென்று, “எனது மகன் எப்படிப்பட்டவன், பாருங்கள்” என்று தன் நண்பர்களிடம் கூற விரும்பலாம். தாயும் இதே மாதிரி ஆசைப்படலாம். வீட்டிற்கு யாராவது வரும் போதும், அண்டை அயலாருக்கும் பாக்கெட்டைக் காட்டி எங்கள் பள்ளிச் சிறுவன் எங்களை எப்படி சந்தோஷப்படுத்தியுள்ளான் பாருங்கள்” என்று பெற்றோர்கள் கூறலாம். பின்னர் முதல் பாக்கெட்டைப் போன்றே இதையும் ஒரு பத்திரமான இடத்தில் வைத்து பேணிக் காப்பார்கள். இவற்றோடு குழந்தையின் எதிர்காலப் பரிசுகளும் சேரும்.

பெற்றோர்களுக்கான வெளிப்படையான வகுப்புகள் பலவற்றை நான் நடத்தியிருக்கிறேன், குழந்தைகள் எப்படி, என்ன பயிலுகின்றனர் என்று இவர்கள் வந்து பார்த்துள்ளனர். தம் குழந்தையைப் பார்த்திருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் முக்கிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் அடிக்கடி கூட்டாகக் கலந்தாலோசித்திருக்கிறோம். படிப்பு சொல்லித் தருவதிலும் குழந்தை வளர்ப்பிலும் கூட்டு முயற்சிகளைப் பற்றிப் பேசியிருக்கின்றோம். பெற்றோர்களுக்கான விரிவுரைகளில் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பைப் பற்றிய சிபாரிசுகளை வழங்கியிருக்கிறேன். குழந்தைகளுடன் கலந்து பழகுவதன் சிறப்பியல்புகளைப் பற்றிக் கூறியிருக்கிறேன்.

இன்று பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தடிமனான பாக்கெட்டுகளும் சான்றிதழ்களும், நாங்கள் பள்ளியில் எப்படி வாழ்ந்தோம், குழந்தைகள் எப்படி வளர்ந்தனர், என்ன கற்றுக் கொண்டுள்ளனர், எதில் முன்னேறியுள்ளனர், எப்படிப்பட்ட விருப்பங்கள் தோன்றுகின்றன என்பதையெல்லாம் பற்றிய எங்களது அறிக்கையாகும்.

இன்று பெற்றோர்கள் கூட்டத்தில் “அன்புள்ள பெற்றோர்களே! ஒருவேளை இந்த பாக்கெட்டுகளைத் திறக்க வேண்டாமோ? மதிப்பெண் அட்டவணைகள் பெற விரும்புகின்றீர்களா? நான் இவற்றைத் தயார் செய்யட்டுமா?” என்று நான் கூறினால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்று எனக்கு என் அனுபவத்திலிருந்து தெரியும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம் ! மதுரை கண்டன கூட்டம் !

0

“சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை! ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் ப‌த்மநாபனை கைது செய்யாதது ஏன்? காவிகளின் பிடியிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களை மீட்போம்!” – என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் புரட்சிகர மாணவர்‍ இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் இணைந்து 25.11.2019 அன்று கண்டனத் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு பு.மா.இ.மு-வின் தோழர் ரவி தலைமை தாங்கினார்.

அவர் தன்னுடைய தலைமையுரையில், “பாத்திமா ஒரு முஸ்லீம் மாணவி, இந்துக்களுக்கு பிரச்சினை எனும் போது மவுனமாக இருக்கும் தமிழ்நாட்டு எதிர்கட்சிகள் முஸ்லீம் என்றவுடன் ஓட்டு வங்கிக்காக எல்லோரும் இதை கையில் எடுத்து போராட ஆரம்பித்து விடுகின்றனர்” என்று இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கும் விதத்தில் பாஜக பரிவாரங்கள் பேசுகின்றனர். இப்படி பேசும் இவர்கள் அனிதா மரணத்தின் போது எங்கே போயிருந்தனர். அனிதா ஒரு இந்து மாணவிதானே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் எத்தனையோ பேர் தொடர்ச்சியாக ஐஐடி-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் அதில் ஒரு பார்ப்பன உயர் சாதி மாணவரும் இல்லாததன் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியதோடு ஐஐடி என்பது ஒரு பார்ப்பன அக்ரஹாரத்தை போல ‘அவாள்’ வைத்ததுதான் சட்டம் என்பதாகத்தான் செயல்பட்டு வருகிறது. இந்த பார்ப்பன பாசிசத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த கூட்டம்” என்று பேசினார்.

படிக்க:
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ராமலிங்கம் பேசும்போது “பாத்திமா மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி -யில் மட்டும் 58 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எல்லாரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்தான். ஒரு பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர்கள் கூட கிடையாது. இது மட்டுமல்ல இம்மாணவியின் தற்கொலை குறிப்பில் சுதர்சன பத்மநாபன்தான் தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்று தெளிவாக உள்ள நிலையில் அவர் மேல் ஒரு வழ‌க்கு கூட பதிவு செய்து விசாரிக்கவில்லை எனும்போது, பார்ப்பன பாசிசம் எந்த அளவிற்கு நம் நாட்டில் ஊடுருவியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இது ஐஐடி-யில் மட்டுமல்ல இனி நாடு முழுவதும் நடைபெறப் போகிறது. புதிய கல்வி கொள்கை என்று இவர்கள் கொண்டுவருவதில் மூன்றாம் வகுப்பு முதல் பொது தேர்வு வைக்கும் முறையை கொண்டுவருகிறார்கள். ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட பொது தேர்வு தரும் மன‌ அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன நிலை வரும்? இனி நம் குழந்தைகள் பொது தேர்வில் தோல்வி அடைந்தோ அல்லது பயந்தோ படிப்பில் இருந்து விலகி விட வேண்டும். கல்வி மற்றும் நிர்வாக வேலையில் உயர்சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இதற்கு நல்ல ஒரு உதாரணம் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உயர்சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதை சொல்லலாம்” என்று நடைபெறுவது பார்ப்பன பாசிசமே என்று உணர்த்தும் விதமாக பேசினார்.

அடுத்ததாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன் தன்னுடைய உரையில் “பாத்திமாவின் மரணம் தமிழ்நாட்டில் வாழும் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. அவருடைய தாய் “கும்பல் கொலைகள் நடக்கும் வட நாட்டிற்கு தன்னுடைய மகளை அனுப்புவதற்கு பயந்து தமிழ்நாடுதான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானது என்றுதான் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்தோம்” என்கிறார்.

அதே போல் பார்ப்பன உயர்சாதினர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவர்கள் மீது வழக்கோ, விசாரணையோ இருக்காது என்பது சொல்லப்படாத நடைமுறையாக இருக்கிறது. எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் கைது செய்யப்படுவதில்லை. தற்போது சுதர்சன பத்மானாபனும் ஒரு விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை. ஆனால் நம்மை போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவிலுள்ள மக்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது?

சமீபத்தில் ஊமச்சிகுளத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கில் சம்பந்தபட்ட இளைஞர்களை கைது செய்ததோடு இல்லாமல் விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்ப பெண்களை எல்லாம் இரண்டு நாட்களாக எந்த ஆவணமும் இல்லாமல் லாக்கப்பில் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. ஆனால் இவர்களுக்கு சுதர்சம் பத்மனாபனையோ அல்லது எச்.ராஜாவையோ கைது செய்ய தைரியமிருக்கா?” என்று கண்டன உரையாற்றினார்.

படிக்க:
♦ காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !
♦ முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

“இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சுதர்சன பத்மனாபனை நாம் பேராசிரியர் என்று அழைக்க கூடாது அவரை குற்றவாளி என்றுதான் அழைக்க வேண்டும். பாத்திமாவே கடைசியாக இருக்கட்டும். இன்னொரு பாத்திமாவை நாம் பறிகொடுத்து விடகூடாது. அதற்கான உத்திரவாதத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும் மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.” என அப்துல் கலாம் ஆட்டோ சங்க ஆலோச‌கர் திரு ராஜேஷ் கோரிக்கை வைத்தார்.

மதுரை காமராஜர் பல்கலையின் முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் தோழர் சீனிவாசன் பேசும்போது “பாத்திமா சாதாரணமான மாணவி கிடையாது. ஐஐடி -யில் சேர்வதற்காக நடைபெறும் நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தளவிற்கு திறமை வாய்ந்த மாணவி ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? மேலும் அதில் சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரை ஏன் இதுவரை கைது செய்து விசாரணை செய்யவில்லை? மேலும், கல்வி நிலையங்களில் மதம் மற்றும் சாதி பாகுபாடு நிலவுவது பலதரப்பட்ட கலாச்சார மக்கள் வாழும் நாட்டிற்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும். இந்தியா முழுவதும் அரசு கல்லூரி பேராசிரியர் அல்லது துணைவேந்தர் ஆக வேண்டும் என்றால் பல கோடிகள் கொடுத்துத்தான் அந்த பதவிக்கு வரமுடியும். இதுதான் நடைமுறையாக உள்ளது. இதை தடுக்காத வரை இப்படிப்பட்ட மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது” என்று பேசினார்.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில செயலாளர் தோழர் முரளி பேசும் போது ஐஐடி-யின் தரத்தை கேள்விக்குட்படுத்தினார். “ஐஐடி சில கண்டுபிடிப்புகளை செய்துள்ளது உண்மைதான். ஆனால் அவை பத்தாண்டுகளுக்கு முன்புதான். நேரு இத்தகைய தொழில் நுட்பக் கல்வி, எதிர்கால இந்தியா வல்லரசாவதற்குத் தேவை என்று கருதினார். ஆனால் அவர் தற்போதைய ஐஐடி-யின் போக்கை பார்த்தால் மிகவும் வருத்தப்படுவார். தொழில்நுட்ப திறமையை கற்றுக் கொடுக்கும் ஐஐடி ஒருபோதும் தம் மாணவர்களை சமூக பிரச்சினைகளை கையாளும் அளவிற்கு ஆளுமைகளாக உருவாக்குவதில்லை. அங்கே உள்ளே அவ்வளவு சாதாரணமாக யாரும் சென்று விட முடியாது. இரவு முழுவதும் ஏதாவது ஒரு தேர்வு என்று இயந்திரங்களை போல மாணவர்களை பிழிந்தெடுப்பதுதான் ஐஐடி-யின் போக்கு” எனவே இத்தகைய கல்வி முறையில் இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க முடியாது. எனவே ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களை சமூக நோக்க கல்வி நிறுவனங்களாக மாற்றுவதே தீர்வு என்று பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் காளிதாஸ் அவர்கள் பேசும் போது “உலகமெங்கும் வரலாறு சொல்வது என்னவென்றால் அறிவுஜீவிகள் அனைவரும் தங்கள் காலத்தின் ஆளும் வர்க்க தத்துவத்திற்கு முட்டு கொடுத்து பேசினார்கள் என்றால் அவர்கள் வானளாவ புகழப்படுவார்கள். இல்லையேல் அவர்கள் கொல்லப்படுவார்கள். கலிலியோ தொடங்கி கெப்ளர், புருனே, ஐன்ஸ்டீன் மற்றும் கல்புர்கி, பன்சாரே, ரோகித்வெமுலா, மாணவி அனிதா மற்றும் தற்போது பாத்திமா வரை இதுதான் நடக்கிறது” என்று நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ‌ வர்க்க சித்தாந்தத்தின் கொலை வரலாறுகளை பட்டியலிட்டு பொதுமக்களின் ஜனரஞ்சகமான மொழியில் தன்னுடைய அனுபவ செரிவோடு உரையாற்றினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஆசை “நாம் சாதரண வகுப்பை சேர்ந்த ஏழை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை பற்றியே எவ்வளவு நாள்தான் பேசிகொண்டிருப்பது. இதற்குத் தீர்வுதான் என்ன? அனைத்து வகுப்பை சேர்ந்தவர்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்தார்கள் ஆனால் அவாள்கள் மட்டுமே கோலோச்சும் ஐஐடி அக்கிரகாரங்களில் இட ஒதுக்கீடு முறையே அமுல்படுத்தப் படவில்லை என்பது தற்போதைய தகவல்களின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அதே சமயம் உயர்சாதியினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு, சிறு தடை கூட இல்லாமல் பின்பற்றப்படுகிறது. எனில் இந்த நாடும் அரசும் உயர் சாதியினருக்கானது மட்டும்தானா? இந்த நிலையை இந்த அரசுக்கட்டமைப்பில் மாற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பி, இத்தகைய சூழலை முறியடிக்க நாம் அனைவரும் சாதி கடந்து, மதம் கடந்து ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மக்கள் உணரும் விதத்தில் உரையாற்றினார்.

சுற்றி இருந்த வணிகர்கள், மக்கள் என பலபேர் இந்க்த கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தது, அச்சுறுத்தும் பார்ப்பன பாசிசத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

இறுதியாக பு.மா.இ.மு-வின் தோழர் ஆனந்த் நன்றியுரையாற்றினார். கூட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை.

சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

18

நாம் தமிழர் கட்சி தம்பிமார்கள் எது நிகழக் கூடாது என்று முப்பாட்டன் மாயோனை வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்தே விட்டது. அண்ணன் சீமான் ஏற்கனவே போட்டுடைத்த ஃபர்னிச்சர்களான அ.க 74, ஆமைக் கறி, அரிசிக் கப்பல், ஆமை ஓட்டுப் படகு வரிசையில் பொட்டு அம்மானையும் புதிய ஃபர்னிச்சராக சேர்த்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல் பல அரியவகை கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போது புதிதாக தெறித்து விழுந்துள்ள அடேங்கப்பா வகை தத்துவங்களுக்கு முட்டுக் கொடுத்து களமாட தம்பிமார்கள் முகநூல் நோக்கி விரைந்துள்ளனர்.

அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும் தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.

தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன் அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.

***

வ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :

“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட  சம்பவம் அருமையானது.

தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்‌ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.

படிக்க:
♦ பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
♦ நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !

“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும்  “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற  வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு  சுவாரசியமூட்டுகின்றன.

மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.

குறிப்பு: யாராது சம்பந்தப்பட்ட தம்பியிடம் பைக்குகளுக்கெல்லாம் சுங்கம் வசூலிப்பதில்லை என்பதைச் சொல்லி விரைப்பாய் உயர்த்தி வைத்துள்ள அவரது தோள்களை தளர்த்தச் சொல்வது நல்லது. தொடர்ந்து தோளை உயர்த்தியே வைப்பதால் ஸ்பாண்டிலிட்டிஸ் வர வாய்ப்புள்ளது.

***

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார். அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.

இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு. இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள் வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார். போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.

அண்ணன் சீமான் சொல்லும் சம்பவங்கள் உண்மை என்று “உளப்பூர்வமாகவே” நம்பித் தான் இதையெல்லாம் ஊகிக்கின்றோம். மேலும் தொடர்வோம்,

அதே கூட்டத்தில் சீமான் சொல்கிறார்:

“சுற்றிலும் ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்தன் சாப்பிடுறேன். பின்னாடி ஒருவர் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார். என்னடா எழுதறான் என்று முதல் நாள் விட்டுட்டேன். இரண்டாவது நாள் அதை வாங்கிப் பார்த்தேன். ‘இந்த சம்பலைத் இரண்டு முறை தொட்டார். இந்த கூட்டை முழுக்க சாப்பிட்டார், இந்த கறியை தொடவில்லை. சாம்பார் ஊற்றிக் கொண்டார்’. என்று எழுதிக் கொண்டிருந்தார். ஏனப்பா இதை எழுதுகிறாய் என்று கேட்டேன். இல்லைங்க தலைவருக்கு அனுப்பனும்னு சொன்னார்”

இதில் பல குறியீடுகள் உள்ளதை நீங்களே கவனித்திருப்பீர்கள். போர் உச்சத்தில் இருந்த போது, புலிகள் களத்தில் பின்டைவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது – சீமான் எந்த சம்பலை தொட்டார், எந்த ஊறுகாயை ருசித்தார், எந்த சாம்பாரை மோந்து பார்த்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு புலிப் போராளியை டெபுடேசனில் டியூட்டி  போட்டுள்ளனரோ என்றே தோன்றுகிறது. இதை வக்கிரம் என்போர் அண்ணன் சீமானிடம் அன்பாக கேட்டுப் பாருங்கள். தாளித்து விடுவார்.

விருந்தோம்பல் என்னவோ பிரமாதமாகத் தான் உள்ளது – ஆனால், இப்படி எத்தனை பருக்கை உள்ளே போனது எத்தனை பருக்கை சிதறிப் போனது என்பதை கணக்கெடுப்பதெல்லாம் போராளி வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் திடுக்கென்று இருக்கிறது. இதில் உச்சகட்டமாக மறு நாள் காலை அண்ணன் கொல்லைக்கு போவதற்கு புலிப் போராளிகள் பாடிகார்டாய் போய் வந்ததாக அண்ணன் அடித்து விட்டாலும் அதை நம்புவதற்கு நாதக தம்பிமார்கள் தயாராகவே இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணன் சீமான் ஆய் போன கதைகளை இன்னும் சொல்லவில்லை – சொல்லி இருந்தால் அதை ஜீரணிக்கும் நிலையில் நாமும் இல்லை.

படிக்க:
♦ புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
♦ மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

மற்றொரு விசயமும் உள்ளது. சுற்றிலும் ஷெல் அடித்தார்கள், பத்து ஷெல்லுக்கு ஒன்று எனக் கணக்கு வைத்தாலும் நாள்தோறும் சில பத்து பேராவது மாண்டு போயிருக்க வேண்டும். பலருக்கு கை வேறாய் கால் வேறாய் உடல் சிதைந்து போயிருக்க வேண்டும் – இத்தனை களேபரத்துக்கும் இடையில் ஒரு ஜீவன் ரவுண்டு கட்டி ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறது என்றால் அது சாதாரண ஜீவனாக இருக்க முடியுமா? பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என இகலோக கர்மாக்கள் அனைத்தையும் சம்சார சாகரத்தையும் கடந்த ஒரு பரஜீவனாகத் தான் இருக்க வேண்டும்; அதைத்தான் ஆதிசங்கரனின் அத்வைதம் பரமாத்மா என்கிறது. சுத்த தமிழில் பம்முற ஆத்துமா என்றும் சொல்லலாம்.

இதில் ஒரே ஒரு விசயம் மட்டும் தான் நெருடலாக உள்ளது. அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான், சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

அடுத்த கூட்டத்தில் அதை விளக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

– சாக்கியன்

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினை !

ர் எழுத்தாளர் எதிரெதிர் கருத்துகளைப் பேசுகிற இரண்டு புத்தகங்களை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதுகிறார். இரண்டுமே பெரிய அளவில் கவனம் ஈர்க்கின்றன. இப்படியெல்லாம் நடப்பது மிக அரிது. தமிழில் அரசியல் சார்பு எழுத்துகளில் இப்படி நிகழ்வது உண்டு. உதாரணங்கள் தேவையில்லை. ஆனால் இது ஆங்கில நூல். எழுத்தாளரின் பெயர் நிர் எயல் (Nir Eyal). தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துகளில் கில்லாடி. கேமிங் மற்றும் விளம்பரத்துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். கன்ஸ்யூமர் சைக்கலாஜி பயின்றவர். இவருடைய முதல் நூல் Hooked: How to Build Habit-Forming Products.

எப்படியெல்லாம் இணையத்தில் வித்தியாசமான வலைத்தளங்களை, சமூகவலைத்தள பக்கங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர்வது என்பதைப்பற்றிய கையேடுதான் இந்த நூல். நம் இணையதளத்துக்குள் வருகிற ஒருவரை எப்படி எல்லாம் தூண்டில் போட்டு பாயைப்போட்டுப் படுக்கவைக்கலாம் என்பதன் சூட்சமங்களை விரிவாகப் பேசும் நூல் இது. சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், எஸ்ஈஓ, இணையதள வடிவமைப்பாளர்களுக்கெல்லாம் மிகப்பிடித்த சூப்பர் ஹிட் இது. வெளியான ஆண்டு 2014.

நான்காண்டுகளுக்குப் பிறகு 2018ல் தன் அடுத்த நூலை எழுதினார் நிர். நூலின் பெயர் “Indistractable: How to Control Your Attention and Choose Your Life”. இது முந்தைய நூலுக்கு நேர் எதிரான கருத்துக்களை பேசுகிறது.

இணையதளங்களும் சமூகவலைத்தளங்களும் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் நாம் எந்த அளவுக்கு கவனச்சிதறலை எதிர்கொள்கிறோம் என்பதுதான் இந்த நூலின் கருத்து! நான் முதலில் வாசித்தது இன்டிஸ்ட்ராக்டிபிளைதான். அதற்குப்பிறகுதான் தேடிப்பிடித்து Hooked -ஐ வாசித்தேன். இரண்டுமே மிக எளிமையான அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான நூல்கள். வாய்ப்பிருப்பவர்கள் படிக்கலாம்.

ஏன் அப்படி ஒரு நூலை 2014-ல் எழுதிய நிர், அதற்கு நேர் எதிரான இன்னொரு நூலை நான்காண்டுகளுக்குப் பிறகு 2018-ல் எழுதவேண்டும்?

படிக்க:
♦ காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !
♦ பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் !

நிர்ரே சமூகவலைத்தளங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டார்.

ஒருநாள் நிர்ரின் சிறிய மகள் அவரோடு உரையாடிக்கொண்டிருந்திருக்கிறார். பேசும்போது அவ்வப்போது தன் மொபைலை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே உரையாடுகிறார் நிர். அவருடைய மகள் ஏதோ கதையை சொல்லிக்கொண்டிருக்க, அதில் கவனமில்லாமல் போனை பார்த்துக்கொண்டிருந்ததால், மகளுக்கு கோபம் வர ஆரம்பித்திருக்கிறது. மகள் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி எதையோ கேட்க இவர் எதையோ உளறியிருக்கிறார். மகளுக்கு கோபம் உச்சத்திற்கே சென்றுவிட்டது. இதனால் வாரக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறார் மகள். நிர்ருக்கு அப்போதுதான் உரைத்திருக்கிறது தனக்கே இவர்கள் விபூதி அடித்தது. தானே சமூகவலைத்தளங்களுக்கும் மொபைலுக்கும் அடிமையாகிவிட்டோம் என்பது!

கொஞ்ச கொஞ்சமாக தன்னுடைய இந்த மோசமான பழக்கத்தை ஆராயத்தொடங்குகிறார். ஏன் உரையாடல்களின் போது போனை எடுத்து நோண்டுகிறோம்… ஏன் நம்மால் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களை, மெசேஞ்சர்களை பார்க்காமல் இருக்கமுடிவதில்லை என்கிற தேடலில் உருவானதுதான் நிர்ரின் இரண்டாவது நூலான இன்டிஸ்ட்ராக்டிபிள். இணையத்திற்கு அடிமைபட்டிருக்கிறோம் என நினைப்பவர்களுக்கு இந்த நூலை நிச்சயம் பரிந்துரைப்பேன். நிச்சயம் ஓரளவு உதவும்.

நிர் மட்டுமல்ல நம் எல்லோருக்குமே இது சகஜமாகிவிட்டது. உரையாடல்களின் போது எதிரில் இருப்பவரை அவமதிப்பதைப்போல மொபைலை எடுத்து விரல் தேய்த்துக்கொண்டிருப்பது இன்று வழக்கமாகிவிட்டது. நம்மிடம் பேசும்போது யாராவது அப்படி செய்தால்தான் நமக்கு கடுப்பாகும். ஆனால் நாமும் அதையே ஏன் செய்கிறோம்?

உரையாடல்களின் போது மட்டும் அல்ல, திரைப்படம் பார்க்கும்போது, புத்தகம் வாசிக்கும்போது, முக்கியமான சந்திப்புகளின் போது என அன்றாட வாழ்வில் இந்த இணைய இடையீடுகள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இந்த இடையீடுகள் நம் வாழ்க்கையில் நேரடியாகவே பாதிப்புகளை உண்டாக்கவும் தொடங்கிவிட்டன. நமக்கு பிடித்தமானவர்களோடு பேசும்போது மட்டுமல்ல காதலிக்கும் போது, கலவியின் போது, படிக்கும்போது, எழுதும்போது, சாப்பிடும்போது என கவனச்சிதறல் நம் வாழ்வில் அங்கமாகிவிட்டத. எதையுமே முழுமையாக உணர்ந்து செய்கிற உணர்வுகளை இழந்துவிட்டோம்! அது தரும் மகிழ்ச்சியை மறந்துவிட்டோம்.

இடையீடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வோம். ‘ஆமாங்க பேஸ்புக்கால படிக்க முடியல, வாட்ஸப்பால சிந்திக்க முடியல’ என்பது சகஜமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நிர் இரண்டு விதமான மனிதர்களை பற்றிச் சொல்கிறார். Blamers and Shamers. ப்ளேமர்ஸ் என்பவர்கள் காலில் முள் குத்திவிட்டது என்பவர்கள். ஷேமர்ஸ் முள்ளில் காலை வைத்துவிட்டேன் என்று சொல்பவர்கள்.

ப்ளேமர்ஸ் ‘சமூகவலைதளங்களால்தான் தனக்கு கவனச்சிதறல் உண்டாகிறது’ என மொத்த குற்றத்தையும் பேஸ்புக் மீது போடுகிறவர்கள். ஷேமர்ஸ் ”நான் சமூகவலைதளங்களுக்கு அடிமையாக இருப்பதால் கவனச்சிதறல் ஏற்படுகிறது” என அப்ரூவர் ஆகிறவர்கள். இதில் நாம் எல்லோருமே முதல்வகைதான் என்கிறார் நிர். முதலில் அந்த மனநிலையை உடைத்தெறியவும் சொல்கிறார். இதை உணர்ந்துவிட்டாலே நீங்கள் பாதி திருந்திவிட்டீர்கள் என்கிறார். காரணம் நம்மை உள்ளிருந்து ஊக்குவிக்கும் Internal Triggers எது என்பது தெரிந்தால்தான் இதை சரிசெய்ய முடியும். மேலும் நான்கு வழிகளை பரிந்துரைக்கிறார் நிர்.

வழி 1 – Mastering the internal triggers

நாம் ஒரு செயலை செய்யும்போது அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல், செல்போனை தேடுகிற உணர்வு ஏன் எழுகிறது? அந்த உணர்வுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வது. தனிமை, சோகம், சோர்வு, ஊக்கத்திற்கான ஏக்கம், போர் அடிப்பது, FOMO (Fear of missing out) ­என இந்த உள்ளிருந்து தூண்டும் சாத்தானுக்கு பல பெயர்களைப் பட்டியலிடுகிறார் நிர். நூலில் Distraction Tracker என்கிற விஷயத்தை நமக்கு அறிமுகப்படுத்தவும் செய்கிறார். எப்போதெல்லாம் நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது என்பதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள சொல்கிறார். போதைப்பழக்கத்திலிருந்து வெளியேறுதலுக்கு இணையான மிகுந்த உழைப்பையும் நீடித்த மனப்போராட்டங்களையும் கோரக்கூடியது இது!

நிர் எயல் (Nir Eyal)

வழி 2 – Make time for Traction

Distraction என்கிற சொல்லுக்கு எதிரான சொல் Traction என்கிறார் நிர். ட்ராக்‌ஷன் என்பது ஒரு செயலை செய்கிற உந்துவிசை. அதை கண்டறிவது முக்கியம் என்கிறார் நிர். அடுத்து எந்த செயல்களை எல்லாம் கவனச்சிதறல் இல்லாமல் செய்யவேண்டும் என்கிற பட்டியலையும் அதற்கென நேரத்தையும் திட்டமிடுவது முக்கியம் என்கிறார். நம்மிடம் அப்படிப்பட்ட பட்டியல் எதுவுமே எப்போதும் இருந்ததில்லை. வாழ்க்கையில் எதுவெல்லாம் கவனச்சிதறல் இன்றி செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் என்பது தெரியாமல் எதை கவனமாக செய்யப்போகிறோம்!

வழி 3 – Hack Back the external triggers

இணைய போதைக்கு தீர்வு சொல்கிற எல்லோருமே அதிலிருந்து மொத்தமாக வெளியேறவே சொல்வதை பார்த்திருக்கலாம். ஆனால் நிர் அதற்கு நேர்மாறாக… முள்ளை முள்ளால் எடுக்க வலியுறுத்துகிறார். இணையம் உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காமல் இணையத்தை உங்களுக்கேற்றபடி மாற்றுங்கள் என்கிறார். சமூகவலைத்தளங்களுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்துங்கள் என்கிறார். Extrenal triggers களை உங்களுக்கு ஏற்றபடி உருவாக்குதல் முக்கியம். செல்போனின் கின்கினி ஒலியோசை அடித்தால்தானே மூளை துடிக்கிறது. அந்த கின்கினியை ஜிம்முக்கு போகும் நேரம், புத்தகம் படிக்கும் நேரம், மீட்டிங் நேரம் என உங்களுடைய நல்ல வேலைகளை நினைவூட்டும் விஷயமாக மாற்றப் பரிந்துரைக்கிறார். இணையத்திற்கு நாம் சேவை செய்யாமல், நம் வேலைகளுக்கு உற்ற துணையாக இணையத்தை மாற்றுங்கள் என்கிறார்!

படிக்க:
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

வழி 4 – Prevent Distraction with Pacts

நமக்குநாமே சில உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு செயலாற்ற வற்புறுத்துகிறார். இரவு பத்து மணிக்கு மேல் நிர் தன் வீட்டில் இன்டர்நெட் தானாகவே ஆப் ஆகிவிடும்படி செட் செய்து வைத்திருக்கிறார். அவர் நினைத்தால் ஆன் பண்ணிக்கொள்ள முடியும்தான் என்றாலும், வலிந்து சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அதை பின்பற்றுகிறார். இதை Effort pact என்கிறார், போலவே நண்பர்களோடு குடும்பத்தோடு பேசும்போது போனை எடுத்து நோண்டும் பழக்கத்தை தவிர்க்க தனக்குத்தானே அபராதம் விதிக்கிற முறையையும் பின்பற்றுகிறார். கடைசியாக Identity pact என்கிற விஷயத்தையும் சொல்கிறார். அது நம்மை நாமே இணைய அடிமைத்தனத்திற்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டு செயல்படுவது.

***

ப்படி பலவழிகளை சொன்னாலும் அடிப்படையில் அவர் முன்வைப்பது, சுயக்கட்டுப்பாடுதான். “கடவுள் திடீரெனத் தோன்றி உனக்கு ஒரு சூப்பர் பவர் வழங்குகிறேன் என்று சொன்னால் நான் கவனசிதறல் இல்லாத மனிதனாக இருக்கவேண்டும் என்றுதான் கேட்பேன், காரணம் 21ம் நூற்றாண்டில் அதுதான் மிகக்கடினமான ஒன்று… அப்படி கவனச்சிதறல் இல்லாதவன்தான் சூப்பர்மேன்… ஏன் என்றால் கவனச்சிதறலை கவனிக்காமல் போனால் சீக்கிரமே நம்மை இணையம் முழுவதுமாக விழுங்கிவிடும், ஏன் இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் தெரியுமா அதற்கென திட்டம் போட்டுக்கொடுத்தவனே நான்தான்” என்றும் எச்சரிக்கிறார்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Athisha Vinod. 

மருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் !

நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண ஏழைகளின் பிள்ளைகளை மருத்துவக் கல்வியில் நுழையவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்த மோடி அரசு, தற்போது மருத்துவ உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்ட இதர  பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாரிசுகள் நுழைய முடியாதபடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய  பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மட்டும் அனுமதிக்கிறது. இது அப்பட்டமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் மருத்துவ உயர்கல்வியைப் படிக்கச் செய்வதறகான சதியே என்பதை அம்பலப்படுத்தி பேசுகிறார் மருத்துவர் எழிலன்.

பாருங்கள் ! நண்பர்களுடன் பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்

காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் ! கடலூர் கண்டன கூட்டம் !

0

“சென்னை ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா தற்கொலை!
RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்யாதது ஏன்?
காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்!”

என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கண்டனக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 26.11.2019 அன்று கடலூர், மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில், மாலை 05:00 மணி அளவில் கண்டன தெருமுனைகூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புமாஇமு தோழர் பால்ராஜ் தலைமை வகித்தார், அவர் தனது தலைமையுரையில் ;

“இன்று உயர்கல்வி நிறுவனங்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு கீழே செயலாற்றி வருகிறது. இங்கே ஆர்.எஸ்.எஸ் சார்புடைய அதிகாரிகளை நியமித்து உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க கூடிய வேலைகளை முன்னெடுத்து வருகிறது மோடி கும்பல்.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை பாடமாக கொண்டுவரப்பட்டது. பகவத் கீதை என்பது நான்கு வர்ணம், நாலாயிரம் சாதி என்று கூறுவதும்; இந்த ஏற்றத்தாழ்வுகள் எந்த வகையிலுமே சமநிலைக்கு வரக் கூடாது என்பதை உயர்த்திப் பிடிப்பதும் தான் அதன் சாரம்.

தனது அண்ணன், தம்பி.., யாராக இருந்தாலும் கொலை செய்யலாம் என்பதை ஊக்குவிக்கும் பகவத்கீதையை; அறிவியலுக்கு எதிராக உள்ளதை பாடமாக திணிக்க ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி – சங்பரிவார் கும்பல் முயன்று வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி.-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தது. அப்போது தமிழகம் முழுக்க மாணவர்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடி மோடி கும்பலின் மூக்கை உடைத்தனர்.

மாணவன் தனது கல்வி உரிமை சார்ந்தும், சமூக அக்கறை என்ற அடிப்படையிலும் தனது போராட்டங்களை முன்னெடுத்து போராடியதால்; அம்பேத்கரிய – பெரியாரிய கருத்துக்களை மாணவர்களிடம் பேசுவதாலும், அதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனிய அடிவருடி ஆளுநரின் நேரடி தலையிட்டால். சட்டவிதிகளை மீறி மாணவர் கிருபா மோகன் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இப்படி உயர்கல்வி நிறுவனங்களில் முற்போக்குக் கருத்துக்களை பேசுவதோ, மாணவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி எழுப்புவதை, போராடுவதை கண்டு அஞ்சி நடுங்க கூடிய இந்த பார்ப்பன கும்பல் சதித்தனமாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் கண்டு அஞ்ச கூடிய அம்பேத்கர், பெரியார், மார்க்சியக் கருத்துக்களை இளந்தலைமுறையினர் நாம் படிக்க வேண்டும். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்…” என உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினார். அதில்;

“ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு பெரும் கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய, பாலியல் குற்றவாளியை கைது செய்யக்கூடாது என்று தேசிய கொடியை தூக்கிக் கொண்டு போராடினார்கள். இவர்களிடம் எத்தகைய ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும்?

அதுதான் இன்று சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமாவிற்கு நடந்துள்ளது. தமிழகத்தில் பெரியார் – கடவுள் இல்லவே இல்லை என்ற எதிர்ப்பு இயக்கமானது – பகுத்தறிவு சிந்தனைகள் காவிகளிடமிருந்து தமிழக மக்களை பாதுகாத்து வந்தது. அதற்கு மாறாக தற்போது மக்களை காவு வாங்க துடிக்கும் சாதி, மத கருத்துக்களை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி கும்பல் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. தற்போது அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டியுள்லது. அத்தகைய போராட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் களத்தில் முன்நின்று போராட வேண்டும்.” என்று பேசினார்.

அதற்கடுத்தபடியாக அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தோழர் மணிவாசகம் பேசுகையில்;

“இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 71-வது ஆண்டு தினம், சுதந்திர நாடு என்று இவர்கள் சொல்வதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொல்லக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இன்று இருக்கிறதா?

இந்த நாட்டில் ஆகப் பெரும்பான்மையான உழைக்கின்ற வர்க்க பின்னணியிலுள்ள குறிப்பாக தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படிக்கவே கூடாது என்று சொல்வதுதான் இவர்கள் சொல்லக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமாக உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.-யில் முதல் மதிப்பெண் எடுத்த பாத்திமா லத்தீப் என்ற மாணவியை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் “இன்டர்னல் மார்க் போட மாட்டேன்..” என்று மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டி உள்ளார். இந்திய நாட்டில் பாப்பானுக்கு ஒரு நீதியும், பொதுமக்களுக்கு ஒரு நீதியும் இங்கு நிலைநாட்டப் படுகிறது. எடுத்துக்காட்டாக போக்குவரத்து காவல்துறை, தமிழக காவல்துறை ஹெல்மெட் போடவில்லை என்றால் நம்மளை விரட்டி விரட்டி பிடிக்கின்றனர். சில சமயங்களில் உயிரும் போகிறது ஆனால் அதே தமிழகத்தில் சட்டை இல்லை, தலையில் ஹெல்மெட் இல்லை, மண்டையில் ஒரு குடுமி மட்டும் இருக்கிறது. அவர்களைப் பார்த்து போலீஸ் கும்பிடு போடுகிறார்கள். இதுதான் இவர்கள் சொல்லக்கூடிய அரசியல் சட்டம், நீதி, ஜனநாயகம்.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள், தினக்கூலிக்கு அன்றாடம் ஓடாய் தேய்ந்து உழைக்கின்ற மக்களுக்கு மதிப்பில்லாமல் உள்ளது. இங்கே அரசியல் சட்டம் என்பது பார்ப்பனியமும், மனுஸ்மிருதிதான். அண்ணாமலை பல்கலை கழகத்தை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் பின்னணியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு தரக்கூடிய சலுகைகள் அனைத்தும் இந்த ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திடீரென விடுதிக் கட்டண உயர்வு, தேர்வு கட்டண உயர்வால் மாணவர்கள் அவதிப்படும் நிலையே உள்ளது.

இன்று மாணவர்களை திண்டாட்ட நிலைக்கு தள்ளுகிறார்கள் நிர்வாகத்தில் பேராசிரியர்களும் நிர்வாகமும் எக்ஸாம் பீஸ் கட்ட வக்கில்லை என்றால் ஏன் படிக்க வரீங்க என இழிவாக பேசுகிறார்கள். இதனை சகித்துக் கொண்டுதான் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்று வருகிறோம். இது என்னுடைய நேரடி அனுபவம். ஆளுகின்ற மோடி, எடப்பாடி அரசுகள் கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்தோடு இந்த அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. நாம் வீதியில் இறங்காமல் தீர்வுகாண முடியாது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு அவரது கண்டன உரையில்;

“மோடி அரசு நீட் தேர்வு மூலம் மாணவி அனிதாவின் மருத்துவ கனவை அழித்தது மாணவி பாத்திமாவிற்கும் அதே நிலைதான். பாத்திமாவின் தாயார் கதறுகிறார் தமிழக மக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

தமிழக வரலாறு நெடுக்க பார்ப்பன எதிர்ப்பானது பெரியார், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் என போராட்டங்கள் நடத்தியதன் விளைவால் பகுத்தறிவு பூர்வமான சிந்தனை உருவாக்கியது. ஆனால் இன்று சிதம்பரத்தில் தன் மகனுக்கு பிறந்தநாள் என்பதால், அர்ச்சனை செய்யச் சொன்ன அரசு செவிலியரை கன்னத்தில் அறைந்திருக்கிறான் தீக்ஷிதர் தர்ஷன். இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை, ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பான்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் இந்துமத கோவில்களில் சிற்பக்கலை என்ற பெயரில் ஆபாசமாக உள்ள சிலைகளை அசிங்கம் என்று சொன்னதற்காக பிஜேபி அடிவருடி, சங்கப் பரிவார கும்பலால் நெருக்கடிகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாக்கப்படுகிறார். இந்த நாட்டில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான பார்ப்பனர்கள்தான் நாட்டை ஆள வேண்டும். ஆனால் 98% உழைக்கின்ற வர்க்க பிள்ளைகளோ படிப்பதற்கு கூட உரிமை கிடையாது என்ற நிலையை நிறுவப் பார்க்கிறது பார்ப்பனியம். பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் மோடி அரசையும், இந்த அரசு கட்டமைப்பையும் எதிர்த்து போராடாமல் நமக்கான உரிமையை பெறமுடியாது.” என பேசினார்.

இவர்களைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் மா. மணியரசன் உரையாற்றினார் அதில்;

“ஐஐடி மாணவி பாத்திமாவை பார்ப்பனிய வெறி தான் கொலை செய்திருக்கிறது. ஐஐடி நிர்வாகம் அதற்கு காரணமான பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு, நீதிமன்றம் ஆகியவை இந்த கொலை குற்றவாளிகளை பாதுகாக்கிறது. இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி? பொது மக்களுக்கு ஒரு நீதி? என்ற வகையில் தான் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஏனென்றால் எஸ்.வி. சேகர், பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய போதும், H. ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய போதும், சிதம்பரம் தீட்சிதர் தர்ஷன் கோவிலுக்கு வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தபோதும் இதில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்கள் இவர்களை பாதுகாத்து ஜாமினில் வெளியில் விடுகிறது. ஆனால் இதுபோன்ற தவறை சாமானியர் செய்திருந்தால் இந்த சட்டமும் நீதியும் என்ன செய்திருக்கும்.

இந்த படுகொலைகள் தமிழகத்திலுள்ள மட்டுமல்ல இந்திய முழுமைக்கும் உள்ள கான்பூர், கௌஹாத்தி, டெல்லி, கரக்பூர், ஹைதராபாத், மும்பை போன்று நாடெங்கும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிளும் நடைபெருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 53 மாணவர்களை கொலை செய்திருக்கிறது பார்ப்பனியம்.

சென்னை ஐஐடி நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் பேராசிரியர் நியமனம் கூட பார்ப்பனர்களை கூடுதலாக நியமித்து சட்டவிதிகளை மீறி இருக்கிறது. அதுகுறித்த அரசின் புள்ளி விவரம் பின்வருமாறு:

பேராசிரியர்கள் நியமனம்:
SC _ 03
ST _ 00
BC, MBC _ 00
FC _ 209

இணைப் பேராசிரியர்கள் நியமனம்:
SC – 03
ST – 00
BC, MBC – 00
FC – 88

துணைப் பேராசிரியர் நியமனம்:
SC – 04
ST – 01
BC, MBC – 07
FC – 165

மொத்த பணியிடம் = 480
பார்ப்பனர்கள் = 467

இவ்வாறு சென்னை ஐஐடி நிறுவனம் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு இயங்குகிறது, இதில் சமூகநீதி என்பது எந்தவகையிலும் நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இதன் விளைவுதான் பாத்திமா தற்கொலை, மாணவர் சுராஜ் மீது மத வெறி தாக்குதல், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை என பல்வேறு பார்ப்பன அடக்குமுறைகள் தொடர்ந்து வருகிறது.

அதுமட்டுமலல் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இனி அனைத்தும் காசிருந்தால் பெறமுடியும் என்ற வகையில் மோடி அரசு கொண்டுவரத்துடிக்கும் தேசிய கல்வி கொள்கை மீண்டும் மனு தர்மத்தை நிலை நிறுத்துவதாக இருக்கிறது.

உதாரணமாக மருத்துவத்துறையில் நீட் தேர்வை திணித்தனர், அதைக் கொடுவரும் போது அது ‘ஊழலை ஒழிக்கும், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வாய்ப்பை உருவாக்கும்’, என்றெல்லாம் பேசினார்கள் பிஜேபி தலைவர்கள். ஆனால் நடந்தது என்ன ஏழை மற்றும் தமிழ்வழி படித்த மாணவர்கள் மருத்துவக் கனவை நினைத்துகூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கட்டணக் கொள்ளைக்கும் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. உதாரனமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிக்க ஆண்டுக் கட்டனம் ரூபாய் 13,640 மறும் BDS படிக்க ரூபாய் 11,640 என அறிவித்துள்ளது.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2014-ல் அரசு பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு தற்போது மருத்துவத்திற்கான ஆண்டு கட்டணம் 5 லட்சத்து 54 ஆயிரம். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் 50,000; ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 60,000; தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் 30,000 என மருத்துவக்கல்லூரிகள் தங்களது விருப்பத்திற்கு கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்கின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்த தாக்குதலாக, மோடியின் தேசிய கல்விக் கொள்கை ஏற்றத்தாழ்வான கல்வி முறையை உருவாக்க போகிறது. பார்ப்பனியம் சமநிலையை என்றுமே ஏற்காது. அதன் விளைவுகளாக தான் இன்று நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள். இது புதிது அல்ல ஆனால் தற்போது அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே மகாபாரதம், ராமாயணம் புராணக் கட்டுகதைகளில் ஏகலைவன், சம்புகன் போன்றவர்கள் அறிவுத்திறன், ஆற்றல் உள்ளவர்களை பார்ப்பனியம் எப்படி அன்று கொலை செய்ததோ? அதன் நீட்சிதான் இன்று ரோகித் வெமுலா, அனிதா, முத்துகிருஷ்ணன், பாத்திமா போன்றவர்கள்.

ஆகையால் இந்த பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஆர்எஸ்எஸ், பிஜேபி, சங்க பரிவார கும்பலை வீழ்த்த வேண்டும். இதனை தேர்தல் முறையில் நின்று நாம் வீழ்த்த முடியாது.

சமத்துவமான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கிய ரஷிய சோசலிசப் புரட்சியை போன்று இந்தியாவிற்கான ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும். இதற்கு மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான அதிகாரத்தையும்; சமத்துவமான வாழ்க்கையையும் கட்டியமைக்க முடியும்.” என்ற வகையில் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக புமாஇமு தோழர் பூங்குழலி தனது நன்றியுரையில்; “ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி வேண்டுமானால், பார்ப்பன பேராசிரியரை கூண்டில் ஏற்ற தமிழ்மக்கள் பெரியார் வழியில் நின்று போராட வேண்டும். பெரியார் – அம்பேத்கரின் கருத்துகளை இளந்தலைமுறை இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். பார்ப்பன மனுதர்மம் சொல்லக்கூடிய இந்துத்துவா கருத்துகளை தகர்த்தெறிய இதுதான் நம்மிடம் உள்ள ஆயுதம்” என நன்றி உரையாற்றினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

ண்ணூர், சென்னை பெருநகருக்கு 20 கிலோமீட்டர் (12 மைல்) தூரத்தில், கொசஸ்தலையாறு, வங்காள விரிகுடா, சிற்றோடை சூழ அமைந்திருக்கிறது.
சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து, தண்ணீரையும் வழங்குவதால் எண்ணூர் சிற்றோடை மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. கடல் நீரில் இருந்து உள்ளூர் நீர்நிலைகளை இந்த சிற்றோடை பிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், நல்ல நீரில், உப்பு நீர் புகாமல் இருக்க தடுப்பாகவும் செயல்படுகிறது.

எண்ணூர் கடல் அருகே காணப்படும் அனல்மின் நிலைய கோபுரங்கள். “முன்னொரு காலத்தில் ஏராளமான மீன்களைப் பிடிப்போம். வஞ்சரம், வவ்வால், தூண்டில், பாறை, காரை போன்ற பல வகையான மீன்கள் பிடிப்போம். ஆனால் அந்த நிலைமை இப்பொழுது இல்லை” என்கிறார் நெட்டுக்குப்பம் மீனவ நலவாரியத்தைச் சேர்ந்த ராஜி .

இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில்தான் கடந்த 20 ஆண்டுகளாக, வடசென்னை அனல்மின் நிலையம், இ.ஐ.டி பாரி (EID parry), கோரமண்டல் சிமெண்ட் மற்றும் கோத்தாரி உரக் கம்பெனி போன்ற தொழிற்சாலைகள் வேகமாக முளைத்தன. மேற்கூறிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளால் எண்ணூர் சிற்றோடை பெரிதும் நஞ்சாகியுள்ளது.

நிலக்கரி ஆலையிலிருந்து வெளியேறும் வெப்பமான, மாசுபட்ட நீரைப் போலவே, அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலும் சிற்றோடையில் கொட்டப்படுகிறது. இந்த தொழிற்சாலைகள், சிற்றோடையை சாம்பல் கொட்டும் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டதால், சுற்றுச்சூழலும் மீனவர்களின் வாழ்க்கையும் பெரிதும் பாதுப்பிற்குள்ளாகியுள்ளன.

சாம்பலை சட்டவிரோதமாக கொட்டுவதை அனல்மின் நிலையம் நிறுத்தாவிட்டால், மின் நிலையத்தை மூட வேண்டும் என இரண்டாண்டுகளுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எண்ணூர் சிற்றோடையும், கடலும் சந்திக்கும் இடத்தில்தான் நிலக்கரி ஆலையிலிருந்து சாம்பல் கொட்டப்படுகிறது. மேலும், இங்கு கொட்டப்படும் சுடுநீரால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், சுவாசிப்பதற்கும் தேவையான வெப்பநிலை மாற்றம் அடைகிறது.

தொழிற்சாலைகளால் பறிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. கடலுக்கு மிக அருகிலேயே வாழ்ந்தாலும் தங்களால் மீன் பிடி தொழிலை செய்ய முடிவதில்லை என்றும் தங்களது குடும்பத்தை பராமரிக்க முடிவதில்லை” என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுநீர், சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல், எண்ணூர் மக்களின் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

“ஆண்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்புகையில் நாங்கள் வலையைப் பிரித்து மீன்களை வகைப் பிரிப்போம். பின்னர் கூட்டாக சேர்ந்து மீன்களை சுத்தம் செய்வோம். ஆனால், இன்று மீன்பிடி தொழில் இல்லை; எங்களுக்கு வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. முன்னெல்லாம், கடற்கரையிலேயே வலையை விரித்து மீன் பிடிப்போம். ஆனால் இப்பொழுது அப்படியில்லை” என்கிறார் வெண்ணிலா.

மீன்பிடி தொழிலை சார்ந்திருக்கும் சின்னராஜா (வயது 55), தனது குடும்பத்தின் பசியை போக்க முடியவில்லை என வருத்தப்படுகிறார். அவர், “நீங்களே பாருங்கள் அந்த ஆலையில் இருந்து அமோனியா வெளியாகி, நீரில் கலக்கிறது. இந்த நச்சுப்பட்ட நீரில் எப்படி மீன்கள் வளரும். அதையும் மீறி வளர்கின்ற மீன்களின் சுவையும் இந்த அமோனியாவால் மாறிபோய்விட்டது. இப்படி நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. நாங்கள் எங்கள் வாழ்வதாரத்தையே இழந்துவிட்டோம்” என்கிறார்.

“எங்கள் பகுதியில் முதல்முதலில் வந்த தொழிற்சாலையால் எங்கள் ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் தற்போது வேலை இல்லை. எங்கள் நெட்டுக்குப்பம் பகுதியில் 100 இளைஞர்களுக்கு மேல் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் வேலையில்லை” என்கிறார் ராஜி.

மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆலைகளில் இருந்து தீப்பொறி கலவை, காற்றோடு காற்றாக கலக்கிறது. “யாராலும் இங்கு வசிக்க முடியாது. இந்த நச்சு கலந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு பல் பிரச்சினை உள்ளது. மேலும், இந்த தண்ணீருக்குள் கால்களை வைத்து சிறிது நேரம் நின்றாலே, கால்கள் உப்பிவிடும். இப்படியிருக்கையில், மீன்கள் எப்படி வாழும்?” என்கிறார் ராஜி.

சிவப்புப் புழுக்களை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் ஒருவகையில் மீன்கள் வளருவதற்கு தடையாக உள்ளது. மீன்களுக்கு உணவாக இருக்கும் சிவப்புப் புழுக்கள், தினசரி 500 கிலோகிராம் வேட்டையாடப்பட்டு, இறால் வளர்ப்புப் பண்ணைக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது என்கிறார் ராஜி. “இது குறித்து நாங்கள் வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு, இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்” என்கிறார் அவர்.

இப்பகுதியில் நில அரிப்பு பிரச்சினையால், மீனவர்களின் வீடுகள் இடிந்து விழுகின்ற சூழல் உள்ளது. “சுனாமியாலும், சமீபத்தில் வந்த சூறாவளியாலும் நாங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளானோம். கடற்கரையைச் சுற்றியிருப்பதால், எப்போது என்ன ஆகும் என்ற பயம் இருந்துக் கொண்டே இருக்கிறது” என்கிறார் வெண்ணிலா.

படிக்க:
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

“கார்ப்பரேட் சமூக கடமை என்ற பெயரில் மீனவர்களுக்கு பாத்திரங்கள், ஐஸ் பெட்டி, டீசல் படகுகளுக்கு இன்ஜின் முதலியவற்றைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவை எதும் மீனவர்களுக்கு வந்து சேருவதில்லை” என்கிறார் மகாலட்சுமி.

ராஜி, “அந்த நிதியும் மீன்வளத்துறையிடம் இருந்து வருவதுதான், ஆனால் எங்கள் கைகளுக்கு அந்த தொகை சேருவதில்லை.” என்கிறார்.

தனது சிறு வயதை நினைவுக்கூறும் மகாலட்சுமி, “முன்னெல்லாம், 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக சென்று மீன்பிடித்து வந்து, கைநிறைய மீன்களை கொடுப்பார்கள். இங்கு பக்கத்தில் வயதான பாட்டி ஒருவர் கடை வைத்திருப்பார். அவரிடம் நாங்கள் மீன்களை கொடுத்துவிட்டு, கொட்டாங்குச்சி அல்வாவும், வேகவைத்த மரவள்ளிக்கிழங்கும் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்பொழுது நாங்கள், 200 – 300 ரூபாய் கொடுத்து மீன் வாங்குகிறோம். நிலைமை பெரிதும் மாறிவிட்டது” என்கிறார் அவர்.

நிலக்கரி சாம்பலில் ஆர்செனிக், போரான், காட்மியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. அவை மீன்களுக்குள் செல்வதால், இனப்பெருக்கம் செய்யும் திறன் மீன்களுக்கு குன்றிவிடுகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆற்றின் வாயிலிலிருந்து சாம்பலை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூர்வாரும் இயந்திரம் வாங்கப்பட்டது. “தூர்வாருவதற்கு பத்து ஆட்கள் நியமிக்கப்பட்டனர். எங்களை சமாளிக்கும் பொருட்டு அந்த இயந்திரத்தை ஒருமுறை மட்டுமே இயக்கினார்கள். மறுநாளில் இருந்து அவர்கள் அங்கே எந்த வேலையையும் செய்யாமல் சிலைப் போல் அமர்ந்திருப்பார்கள்” என்கிறார் ராஜி.

சிமெண்ட் தொழிற்சாலைக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தார், பெயர் சொல்ல விரும்பாத 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர். அவர், “தொழிற்சாலைக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாததாகிவிட்டது. அங்கு அவர்கள் தண்ணீர் குழாயையும், உள்ளூர் மக்களுக்காக சிறிய கிளீனிக் ஒன்றையும் கட்டியுள்ளனர். அந்த கிளீனிக்குக்கு சிகிச்சைக்காக வரும் உள்ளூர் மக்களிடமிருந்து பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுவார்கள். நாங்கள் அந்த மருத்துவரை பத்து ரூபாய் டாக்டர் என்றுதான் அழைப்போம்” என்கிறார்.

“ஆலையில் இருந்து வெளியாகும் அமோனியாவால், என் கணவர் கடுமையான மூச்சு திணறலாலும், என் பேரக்குழந்தை தோல் பிரச்சினையாலும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்பொழுது என்னுடன் இல்லை” என்கிறார் கண்ணில் பெருகும் கண்ணீரைத் துடைத்தபடியே.

“நாங்கள், ராயபுரம் சந்தையில் இருந்து மீன்களை வாங்கி வந்து அதன் விலையில் இருந்து மூன்று மடங்கு விலையை கூட்டி விற்கிறோம். எங்களது அவல நிலையை பாருங்கள். நாங்கள் மீனவர்கள் ஆனால் எங்களால் தினசரி மீன்கள் சாப்பிட முடிவதில்லை. அதேபோல், 15 வருடங்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த மீன்கள் தற்போது இல்லை. சில மீன் வகைகளை நாங்கள் மறந்தேவிட்டோம். முன்பு உப்பு தேய்த்த மீன்களே மிக சுவையாக இருக்கும். ஆனால், இப்பொழுது அப்படி இல்லை” என்கிறார் வெண்ணிலா.

நெட்டுக்குப்பம் பகுதி மீனவர்கள் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கிறார்கள். “கழிவு நீரை திறந்துவிடுகின்ற இடத்தில் கருப்புக் கொடியை கட்ட திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு காவல்துறையினரின் அனுமதி வேண்டும். இதைமட்டும் செய்துவிட்டோமானால், அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்கிறார் ராஜி நம்பிக்கையுடன்.


கட்டுரை, படங்கள் : சாரதா பாலசுப்பிரமணியன்
தமிழில் : ஷர்மி
நன்றிஅல்ஜசீரா. 

ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே பறந்து வந்தேன் !

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 08

ரெஜிமென்ட் கமாண்டர் சட்டைக்கையைத் தாழ்த்தி விட்டுக் கொண்டார். கடிகாரம் இனித் தேவையில்லை. இழைய வாரிவிடப்பட்டிருந்த தலை வகிட்டை இரு கைகளாலும் தடவி விட்டு உணர்ச்சியற்ற கட்டைக் குரலில், “இனி அவ்வளவு தான்” என்றார்.

“நம்பிக்கைக்கே இடமில்லையா?” என்று ஒருவன் கேட்டான்.

“அவ்வளவு தான். பெட்ரோல் தீர்ந்துவிட்டது. எங்காவது இறங்கியிருப்பான் அல்லது குதித்திருப்பான். ஒரு வேளை…. ஊம், ஸ்டிரெச்சரை எடுத்துப் போங்கள்!”

கமாண்டர் மறுபுறம் திரும்பி, மெட்டை இரக்கமின்றிச் சித்ரவதை செய்தவாறு ஏதோ பாட்டைச் சீழ்கை அடிக்கலானார். பெத்ரோவின் தொண்டையில் கொதிக்கும் இறுகிய கட்டி ஒன்று குமிழிப் போலே மேலே வந்து அடைத்துக் கொண்டது. அதனால் அவனுக்கு மூச்சு முட்டியது. விந்தையான இருமல் ஒலி கேட்டது. விமானத் திடலின் நடுவே இன்னும் மௌனமாக நின்று கொண்டிருந்த ஆட்கள் திரும்பிப் பார்த்தவர்கள் அக்கணமே முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள்: காயமடைந்த விமானி ஸ்டிரெச்சரில் கிடந்தவாறு விம்மி அழுதான்.

“இவனை எடுத்துக் கொண்டுபோய்த் தொலையுங்களேன்!” எள்று வேற்றுக் குரலில் கத்திவிட்டு, கூட்டத்திலிருந்து மறுபுறம் திரும்பி, வேகமான காற்றில் போலக் கண்களைச் சுருக்கிக் கொண்டு அப்பால் போய்விட்டார் கமாண்டர்.

ஆட்கள் திடலில் மெதுவாகக் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அதே கணத்தில் ஒரு விமானம் நிழல் போன்ற நிசப்தத்துடன், சக்கரங்களால் பிர்ச் மர முடிகளின் மீது கோடிட்டவாறு காட்டோரத்தின் பின்னிருந்து வெளியே துள்ளி வந்தது. ஏதோ ஆவி போல ஆட்களின் தலைகளுக்கு உயரேயும் தரைக்கு மேலும் வழுகி, அதனால் ஈர்க்கப்பட்டது போன்று மூன்று சக்கரங்களும் ஒரே சமயத்தில் புல்லில் படும் படி இறங்கியது. மந்தமான ஒலியும் பரல்களின் நெறுநெறுப்பும் புற்களின் சரசரப்பும் கேட்டன. இந்த சத்தங்கள் அசாதாரணமாக இருந்தன, ஏனெனில் இயங்கும் எஞ்சினின் இரைச்சல் காரணமாக இந்த ஒலிகளை விமானிகள் ஒரு போதும் கேட்பதில்லை. இவை எல்லாம் சற்றும் எதிர்பாரா விதத்தில் நிகழ்ந்துவிட்டன. ஆதலால் என்ன நடந்தது என்று ஒருவருக்கும் நிச்சயமாகப் புரியக் கூட இல்லை. பார்க்கப் போனால் நடந்தது சர்வ சாதாரணமான விஷயம். ஒரு விமானம் வந்து இறங்கியது. அதாவது “பதினொன்றாவது”. எல்லோரும் அவ்வளவு ஆவலாக எதிர்பார்த்த அதே விமானம்.

“அவன்!” என்று ஒருவன் இயல்புக்கு மாறான வெறித்த குரலில் கத்தினான். பிரமை பிடித்தவர்கள் போல நின்ற ஆட்களை இந்தக் கத்தல் சுயநிலைக்குக் கொண்டுவந்தது.

விமானம் ஓட்டுவதை முடித்து சக்கரங்கள் கிறீச்சிடும்படி பிரேக் போட்டு, விமானத் திடலின் கோடியில், மாலைக் கதிரவனின் இளஞ்செங்கிரணங்களால் ஒளியுறுத்தப்பட்டு வெண் தண்டுகளும் சுருட்டை முடிகளுமாக இளகிய இளம் பிர்ச் மரச் சுவருக்கு எதிரே நின்றது.

இம்முறையும் விமானி அறையிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. ஆட்கள் விமானத்தை நோக்கித் தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறியது. ஏதோ அவலம் நேர்ந்துவிட்டதென்றே முன்னுணர்வு ஏற்பட்டது. ரெஜிமென்ட் கமாண்டர் எல்லோருக்கும் முன்னே ஓடி, இறக்கைமேல் துள்ளி அனாயசமாக ஏறி, வளைமுகட்டைத் திறந்து விமானி அறைக்குள் எட்டிப் பார்த்தார். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தலைகாப்பு இன்றி, மஞ்சு போன்று வெளிறிப் போய் உட்கார்ந்திருந்தான். இரத்தம் செத்துப் பசிய நிறங்கொண்டிருந்த உதடுகளை விரித்துப் புன்னகை செய்தான். அழுத்தக் கடிக்கப்பட்ட கீழுதட்டிலிருந்து இரத்தம் இரண்டுத் தாரைகளாக மேவாயில் வழிந்தது.

“உயிரோடிருக்கிறாயா? காயம்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கர்னல்.

சோர்வுடன் முறுவலித்து, களைப்பினால் செத்துச் சாவடைந்த விழிகளால் அவன் கர்னலை நோக்கினான்.

“இல்லை. சௌக்கியமாயிருக்கிறேன். மட்டுமீறிக் கிலி கொண்டுவிட்டேன் … ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே வந்தேன்” என்றான்.

விமானிகள் ஆரவாரித்தார்கள், வாழ்த்தினார்கள், கைகுலுக்கினார்கள். அலெக்ஸேய் புன்னகையுடன் சொன்னான்:

“அண்ணன்மாரே, இறக்கைகளை முறித்துவிடாதீர்கள் இப்படிச் செய்யலாமா? எல்லோரும் மேலே ஏறி குந்தி விட்டீர்களே….. நான் இதோ இறங்குகிறேன்.”

அந்தச் சமயத்தில், தனக்கு மேலே கவிந்திருந்த இந்தத் தலைகளுக்கு அப்பாலிலிருந்து பழக்கமான, ஆனால் எங்கோ தொலைவிலிருந்து வருவது போல ஈனமாகக் குரல் ஒன்று அவனுக்கு கேட்டது.

“அலெக்ஸேய், அலெக்ஸேய்!” என்று அழைத்தது அது. அக்கணமே அலெக்ஸேய் புத்துயிர் பெற்றுவிட்டான். அவன் துள்ளி எழுந்து, கைகளால் விளிம்பைப் பற்றிக் கொண்டு கனத்த கால்களை வெளியே எடுத்துப் போட்டுத் தரையில் குதித்தவன், ஒருவனை இடித்துத் தள்ளத் தெரிந்தான்.

பெத்ரோவின் முகம் தலையணை போன்று வெளுத்திருந்தது. குழிந்து மங்கியிருந்த விழிகளில் இரண்டுப் பெரியக் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன.

“தம்பீ! நீ உயிரோடிருக்கிறாயா? அட பயலே!” இவ்வாறு கூறி, அலெக்ஸேய் ஸ்டிரெச்சருக்கு முன்னே சிரமத்துடன் முழந்தாள் படியிட்டு, தோழனின் பலமற்றுத் துவண்டு கிடந்த தலையை அணைத்து அவனுடைய நீல விழிகளை விழி பொருந்த நோக்கினான். அவற்றில் துன்பம் படர்ந்திருந்தது, அதே சமயம் மகிழ்ச்சி சுடர்ந்தது.

“உயிரோடு இருக்கிறாயா?”

“நன்றி, அலெக்ஸேய், நீ என்னைக் காப்பாற்றினாய். அருமையானவன் நீ, அலெக்ஸேய், அருமையானவன்…….”

“காயமடைந்தவனை எடுத்துத்தான் போய்த் தொலையுங்களேன்! வாயை அங்காய்த்துக் கொண்டு நிற்கிறீர்களே!” என்று திடீரெனச் சீறினார் கர்னல்.

ரெஜிமென்ட் கமாண்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அவரது சிறுகூடான துடிதுடிப்புள்ள மேனி பளபளப்பான இறுகிய ஜொடுகள் அணிந்த கால்கள் மேல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீல விமானி உடைக்குக் கீழே தெரிந்தன காலணிகள்.

“சீனியர் லெப்டினன்ட் மேரெஸ்யெவ், பறப்பைப் பற்றி அறிக்கை செய்யுங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் உள்ளனவா?”

“உள்ளன, தோழர் கர்னல். இரண்டு ‘போக்கே-வுல்ப்’ விமானங்கள்.”

“சந்தர்ப்பச் சூழ்நிலை?”

“ஒன்று செங்குத்துத் தாக்கில். அது பெத்ரோவின் விமான வாலை ஒட்டிப் பறந்து கொண்டிருந்தது. இரண்டாவது பொதுச் சண்டையிடத்திற்கு வடக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தலைமோதல் தாக்கில் வீழ்த்தப்பட்டது.”

“தெரியும். தரை அவதானிக்கையாள் இப்போது தான் தகவல் தெரிவித்தான்….. நன்றி.”

“சோவியத் யூனியனுக்குத் தொண்டு செய்கிறேன்” என்ற வழக்கமான இராணுவப் பதில் வாக்கியத்தைச் சொல்ல வாயெடுத்தான் அலெக்ஸேய்.

ஆனால், வழக்கமாகக் குற்றங்கண்டு பிடிப்பவரும் விதிகளைக் கறாராக கடைப்பிடிப்பவருமான கமாண்டர் நட்புடன் அளவளாவும் குரலில் அவனை இடை முறித்தார்.

“அருமையான வேலை! நாளைக்கு ஸ்குவாட்ரன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்…. மூன்றாவது ஸ்குவாட்ரனின் கமாண்டர் இன்று தளத்துக்குத் திரும்பவில்லை. அவருக்கு மாற்றாக….” என்றார்.

தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் நடந்து சென்றார்கள். அவருடைய பறப்புகள் முடிந்துவிட்டபடியால் கூடியிருந்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். தலைமை அலுவலகமிருந்த பசிய மேடு நெருங்கிவிட்ட போது அங்கிருந்து அவர்களை எதிர் கொண்டு ஓடிவந்தான் முறை அதிகாரி. வெறுந்தலையும் களிபொங்கும் முகமாக அவன் எதையோ கத்துவதற்கு வாயெடுத்தான். ஆனால் கர்னால் அவனைத் தடுத்து, வறண்ட, கடுமையான குரலில், “தொப்பி இல்லாமல் ஏன் வந்தீர்கள்? நீர் என்ன, இடைவேளையில் பள்ளிப் பையனா?” என்றார்.

“தோழர் கமாண்டர், பேச அனுமதியுங்கள்!” என்று விரைப்பாக நின்று ஒரே மூச்சில் விண்ணப்பித்துக் கொண்டான் லெப்டினன்ட்.

“ஊம்?”

“நமது அருகாமையிலுள்ள “யாக்” விமான ரெஜிமென்ட் கமாண்டர் உங்களை டெலிபோனில் கூப்பிடுகிறார்.”

“ஏன், என்ன விஷயம்?”

கர்னல் விர்ட்டென்று நிலவறைக்குள் பாய்ந்து புகுந்தார்.

“அவர் உன்னைப் பற்றித்தான்…..” என்று அலெக்ஸேயிடம் சொல்லத் தொடங்கினான் முறை அதிகாரி.

ஆனால் கீழிருந்து முழங்கிற்று கமாண்டரின் குரல்: “மெரேஸ்யெவை என்னிடம் அனுப்புங்கள்!”

படிக்க :
மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !
சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !

மெரேஸ்யெவ் அவர் அருகே போய், இராணுவ முறைப்படி கைகளை உடையுடன் சேர்த்து வைத்தவாறு அசையாமல் நின்றான். கர்னல் டெலிபோன் குழாயை உள்ளங்கையால் முடிக் கொண்டு சீறி விழுந்தார்:

“என்ன நீங்கள் என்னைக் காலை வாரி விடுகிறீர்கள்? பக்கத்து ரெஜிமென்ட் கமாண்டர் டெலிபோனில் கேட்டார், ‘உம் பதினொன்றாம் எண் விமானத்தில் பறப்பது யார்?’ என்று. ‘சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்’ என்றேன். ‘அவன் கணக்கில் எத்தனை விமானங்கள் எழுதினாய்?’ என்று கேட்டார். ’இரண்டு’ என்று சொன்னேன். ‘இன்னும் ஒரு விமானம் அவன் கணக்கில் எழுது. என்னை நெருங்கித் துரத்திய ஜெர்மன் விமானத்தை சுட்டு வீழ்த்தினான் அவன். பகை விமானம் தரையில் விழுவதை நானே கண்டேன்’ என்றார். ஊம்? என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? அவரிடமே பேசிக் கொள்ளுங்கள், இந்தாருங்கள். ஹலோ, கேள். சீனியர் லெப்டினன்ட்! மெரேஸ்யெவ் போன் அருகே நிற்கிறார். போனை அவரிடம் கொடுக்கிறேன்.”

பழக்கமற்ற கம்மிய குரல் அலெக்ஸேயின் காதில் இரைந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை