“டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும். சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.
பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன. பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன. ஆண்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம். பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு’’
மேற்படி முத்தை உதிர்த்தவர் மார்க்கெட் போன பழைய காமெடி நடிகர் கே. பாக்கியராஜ்.
***
டாஸ்மாக் சரக்கால் குடலுக்கு என்ன நேர்கிறதோ அதே தான் நமது சினிமாக்காரர்களால் மூளைக்கும் நேர்கின்றது. கவனிக்க… நமக்கு சினிமாவின் மீது எந்த வாய்க்கா வரப்புத் தகறாரும் இல்லை – சினிமாக்காரர்கள் தான். குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள்.
சினிமாவில் நடித்து விட்டோம்; திரையில் நமது முகம் தெரிந்து விட்டது; கோணங்கி சேட்டைகளுக்கு மக்களும் கை தட்டி விட்டார்கள்; நடித்ததில் நாலைந்து படம் வசூலித்தும் விட்டது – இவ்வளவு போதும். நமது நடிகர்களுக்கு தலையில் கொம்பு முளைத்து கொம்பைச் சுற்றி ஒளிவட்டமும் தோன்றி விடுகின்றது. அதன் பின் பூமிக்கு மேல் வானத்திற்கு கீழ் உள்ள சகலத்தைப் பற்றியும் கருத்து சொல்லும் துணிவு வந்து விடுகின்றது.
அதில் மார்க்கெட் போன பழைய பூட்டகேசுகளின் இம்சை ஒரு தனி ரகம்; அதிலும் குறிப்பாக மார்க்கெட்டும் போய் தொழிலில் உருப்படாத வாரிசும் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். அப்பேர்பட்ட ஆசாமிகளிடம் மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் விளைவு மேலே உள்ளதைப் போல் தான் இருக்கும்.
பெண்கள் தவறு செய்தால் அது தவறு – ஆண்கள் தவறு செய்தால் அது தவறல்ல என்கிற இந்த உயரிய கோட்பாட்டை பாக்கியராஜ் பேசும் போது யாரும் குறுக்கிடவில்லை. சொல்லப் போனால் பாக்கியராஜ் பொதுபுத்தியில் என்ன உள்ளதோ அதைத் தான் பேசியிருக்கிறார். மேலும், “கள்ளக்காதலால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி” குறித்த செய்திகளை தினத்தந்தியில் படித்து உள்ளபடியே அச்சமடைந்துள்ளார். எனவே தான் அந்த கொலைகளில் இன்னொரு “ஆண்” தொடர்பு இருப்பதை பார்க்க மறந்து விட்டிருக்கிறார்.
மேலும், இதே கள்ளக்காதல் விவகாரங்களுக்காக ஆண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் செய்திகளும் பாக்கியராஜ் படிக்கும் அதே தினத்தந்தியில் வரத்தான் செய்கின்றன. பிரச்சினை என்னவென்றால் அந்த செய்திகளையெல்லாம் அவரது கண்கள் பார்த்திருக்கும்; ஆனால், மூளை பார்க்க மறுக்கின்றது.
பாலியல் தொடர்பாக நடக்கும் குற்றங்களில் பெண்கள் ஈடுபட்டிருப்பதை பார்த்து கலவரமடையும் பாக்கியராஜ், அதே குற்றங்களில் ஈடுபடும் ஆண்களைப் பார்த்து ஏன் அச்சப்படவில்லை? அல்லது, ஆண்கள் பாலியல் ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது ஏன் அவருக்கு உறுத்தலாக இல்லை?
இந்த சிந்தனைகள் எல்லாம் பெண்களை சக உயிர்களாக பார்க்காமல், வெறுமனே ஆண்டு அனுபவிக்கும் உடைமையாக, பொருளாக, சொத்தாக பார்க்க பயிற்றுவித்துள்ள பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இருந்தே எழுகின்றன. அதிலும், சினிமாக்காரன் என்பதால் இந்த திமிர் கொஞ்சம் தூக்கலாகத் தான் இருக்கும். இந்தியாவின் சினிமாத்துறை என்பது பாலியல் ரீதியிலான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கோலோச்சும் இடம். “பெண்களின் ஒழுங்கீனம்” தோற்றுவிக்கும் அச்சத்தை விட அவர்களும் தன்னைப் போன்றே (பல சந்தர்பங்களில் தன்னை விட மேம்பட்ட ரீதியிலும்) சிந்திக்கத் தெரிந்த ஒரு சக உயிரினம் என்பதே பாக்கியராஜைப் போல் சினிமாத்துறையில் குப்பை கொட்டிய பழம் பெருச்சாளிகளுக்கு உள்ளூர கலவரத்தை உண்டாக்க கூடியது.
பார்ப்பனியம் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சித்தாந்தம் என்பது நமக்குத் தெரியும் – அது சாதி வாரியாக மட்டும் மனிதர்களை பிளவு படுத்தவில்லை, பாலியல் ரீதியாகவும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்றது. அதுவே இந்திய சமூகத்தின் ஆன்மாவாக உறைந்து கெட்டிதட்டிப் போயுள்ளது. பாக்கியராஜ் போன்ற தமிழ் சினிமா ‘படைப்பாளிகள்’ பார்ப்பனிய பொதுபுத்தி என்கிற நாட்டு சரக்கை ராவாக அடித்து விட்டு மேடையேறினால், இப்படி நாற்றமடிக்கும் வாந்தி தானே எடுத்தாக வேண்டும்?
***
தில்லி பெண் நிர்பயாவை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கபபட்டனர். குற்றவாளிகள் போலீசாரிடம் பிடிபட்ட போது இவ்வாறு சொன்னார்கள் : “ நாங்கள் முதலில் சீண்டினோம், அந்தப் பெண் முரண்டு பிடித்தாள். அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வன்புணர்வு செய்து கொன்று போட்டோம்”. பாலியல் தூண்டுதலை விட அந்த குற்றவாளிகளுக்கு தங்களுடைய “ஆண்” திமிரை ஒரு பெண் உரசி விட்டாள் என்பது பிரதானமாக இருந்திருக்கிறது.
அந்த குற்றவாளிகளின் வாழ்க்கை வரலாற்றில் அந்த குறிப்பிட்ட இரவு நிகழாமல் போயிருந்தால் ஒருவேளை அவர்கள் “படைப்பாளிகள்” ஆகியிருக்க கூடும்; யார் கண்டது, சினிமாவில் ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகவும் ஆகியிருக்க கூடும்.
பெண்களை இழிவு படுத்துவது பார்ப்பனிய சித்தாந்தம் என்றால், அந்த மலத்தின் மேல் சீனி தூவி கடை விரிப்பதுதான் பாக்கியராஜ் போன்ற படைப்பாளிகளின் படைப்பியக்கத்தின் சாரம். தொடர்ந்து நாற்றமடிக்கும் இந்த அசிங்கத்தோடு புழங்கிக் கொண்டிருப்பதும், சினிமாக்காரன் என்றால் என்னத்தையும் பேசலாம் என்கிற ஒரு துர்பாக்கிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாலும் தான் இவ்வாறான மேடைப் பேச்சுகளை நாம் கேட்டுத் தொலைய வேண்டியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் தவறு நடக்க காரணம் என்று பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். பாக்கியராஜும் கோவை மாவட்டம்தான். நாளைப் பின்னே அங்கே போய் வரத் தானே வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் பாக்கியராஜின் இந்த தத்துவார்த்த கருத்தை குறித்து அவர் அடுத்த முறை கோவை செல்லும் போது நேரில் சந்தித்து ‘விளக்கம்’ கேட்க வேண்டும்.
“கேன்சர் (புற்றுநோயை) 100% குணப்படுத்தலாம். யாராவது தேவையானவர்களுக்கு உதவும் அதிகம் ஷேர் செய்யவும்”.
வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வு முடிவுகள் (வதந்திகளை) பலரும் நம்புவதோடு பரப்பியும் வருகின்றனர்.
“கேன்சர் என்பது நோயே இல்லை”
“சர்க்கரை வியாதி என்பது நோயே இல்லை”
“ரத்த அழுத்தம் என்பது நோயே இல்லை”
“பிராய்லர் கறி கோழி கறி சாப்பிட கூடாது. ஏனெனில் அவற்றுக்கு ஹார்மோன் ஊசிகள் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஹார்மோன் ஊசிகள் பெண் குழந்தைகளை சிறு வயதிலேயே பூப்படைய வைக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் அண்டிபயாடிக் ரேசிஸ்டன்ஸ் தீர்க்க முடியாத தொற்று நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.”
– என உடல் நலப் பிரச்சினைகள் அனைத்திற்குமான ஆய்வு முடிவுகளும் ஆலோசனைகளும் தினம்தினம் நம்மை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக வந்து சேர்கின்றன.
இன்றைய முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் உருவாக்கியிருக்கும் பணியிட நெருக்கடிகள், வாழ்வியல் நெருக்கடிகள், சூழலியல் நெருக்கடிகள் மற்றும் உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடல்நல பிரச்சினைகளும் குறைபாடுகளும் (தொற்றா நோய்கள்) அதிகரித்து வருகின்றன.
அதே முதலாளித்துவ சமூகத்தின் இலாப வெறியின் காரணமாக உடல்நலமும் ஆரோக்கியமான நல்வாழ்வும் பரந்துபட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அதில் குறிப்பாக நடுத்தர வர்க்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் மேற்சொன்ன வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் ஆய்வு முடிவுகள் (வதந்திகளை) பலரும் நம்புவதோடு பரப்பியும் வருகின்றனர்.
இது ஒருபுறமென்றால் அறிவியல் ஆய்விதழ்களில் தினம்தினம் உடல்நலம் சார்ந்த அறிவியல் ஆய்வுகளும், ஆலோசனைகளும் வெளியாகி வருகின்றன.
நடுத்தர வர்க்கம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது.
”முழு தானியங்களை உட்கொண்டு வந்தால் புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.”
”காபி குடிப்பது மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.” – என வெளியாகும் அறிவியல் ஆய்வு முடிவுகளை நம்பலாமா?
அரைக்காணி (1/160) அளவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும், அறிவியல் அடிப்படையற்ற வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப முடியாது; சரிதான். அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளை முழுமையாக நம்பலாமா?
நம்பமுடியாது, அவையும் அரைக்கால் (1/8) அளவு உண்மைகளை கொண்டே எழுதப்படுகின்றன என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்கிறதா?
எல்லா அறிவியல் ஆய்வுகளும் சமமானவையோ சம நம்பகத்தன்மையை கொண்டவையோ அல்ல. ஒவ்வொரு ஆய்வையும் நூற்றுக்கணக்கான முறைகளில் வடிவமைக்க முடியும். ஒவ்வொரு ஆய்வு முறையும் தன்னளவிலான வெவ்வேறு வகையான வரம்புகளைக் கொண்டுள்ளன.
ஆய்வுமுறைகளின் முதன்மையான வகைகள் :
உடல்நல ஆய்வுகளை முதன்மையாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் முதலாவது அவதானிப்பு முறை ஆய்வு (Observational Studies), இரண்டாவது பரிசோதனை முறையிலான ஆய்வு (Experimental Studies).
அவதானிப்பு முறை ஆய்வில் அறிவியலாளர்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை கண்காணித்து அதன் தரவுகளை சேகரிப்பார்கள்.
உதாரணமாக,
”சென்னை மக்களிடம் சுத்தரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யின் (Refined oil) நுகர்வுப் படிவம் / பாங்கு”
”யாரெல்லாம் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள விழைகின்றனர்”
ஆனால் இந்த அவதானிப்பு முறை ஆய்வில் ஆய்வாளர்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்கில் எந்த இடையூறும் குறுக்கீடும் செய்வதில்லை.
அவதானிப்பு முறை ஆய்வு வகையை மேலும் நான்கு அடிப்படை வகைகளாக பிரிக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பான பகுதியில் உள்ள மக்களில் இருந்து சீரற்ற முறையில் மாதிரிகளை தேர்ந்தெடுத்து தரவுகளை தொகுப்பது. வெவ்வேறு சமூகப் பின்னணி (வர்க்கப் பின்னணி) வெவ்வேறு உடல் பாங்கு (ஒல்லி-குண்டு) வெவ்வேறு சுகாதாரம் பற்றிய உணர்வு மட்டம் போன்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கி ஆய்வுக்கு மாதிரிகளை தெரிவு செய்வது சீரற்ற மாதிரிகள் (Randomised samples) எனப்படுகிறது.
உதாரணமாக தமிழகத்தில் எத்தனை சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதில் ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரம் என்ன, வயது வாரியாக விகிதம் எவ்வளவு என்று புள்ளியியல் முறையில் முடிவுக்கு வருவது.
2 மக்கட்தொகுதி ஆய்வு (Cohort studies)
இதுவும் குறுக்குவெட்டு கணக்கீடு போன்றதுதான். ஆனால் குறிப்பிட்ட பகுதி மக்களை குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பது.
உதாரணமாக சென்னையில் உள்ள மக்களிலிருந்து சீரற்ற முறையில் தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளை தொடர்ந்து 10 ஆண்டுகள் கண்காணித்து அவர்களது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பதிவு செய்வது. அதில் எத்தனை பேருக்கு சர்க்கரை வியாதி உருவாகியுள்ளது என்று கண்டறிவது.
3 நிகழ்விளைவு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு அல்லது பின்னோக்கிய ஆய்வு (Case control studies OR Retrospective studies)
இந்த ஆய்வுமுறையை முடிவை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு ஆய்வு செய்வது என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, இது ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வின் குறிப்பான விளைவில் இருந்து அதன் காரணத்தை பின்னோக்கி ஆய்வு செய்யும் முறையாகும்.
உதாரணமாக சென்னையில் உள்ள சீரற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் குழு, சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குழு ஆகிய இரண்டு குழுவினரிடையே கடந்த பத்தாண்டுகளாக அவர்களுடைய வாழ்வியல் முறை, உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம் இன்னபிற தரவுகளை பெற்று ஆவணப்படுத்துவது. அதிலிருந்து ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் சர்க்கரை நோய் வந்தது என்ற முடிவுக்கு வருவது.
இதில் குறிப்பான உணவு (அ) வாழ்வியல் முறை சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறை அதிகரிக்கும் என்றோ அல்லது குறைக்கும் என்றோ, சர்க்கரை நோய் வராமலிருக்க உதவிபுரியும் என்றோ முடிவுகளை முன்வைப்பர்.
4 மருத்துவ அறிக்கைகள் உடல்நல அறிக்கைகள் (Case reports)
ஒரு குறிப்பிட்ட நோயாளி அல்லது ஒரு குறிப்பிட்ட மருத்துவருடைய நோயாளி தொகுப்பின் அல்லது ஒரு குறிப்பிட்ட நோயுடைய நோயாளி தொகுப்பின் மருத்துவ அறிக்கைகள் இதில் சேரும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட மருந்தை எடுத்துக்கொள்ளும் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை தொடர்ந்து உட்கொள்ளும் அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு முறையை (diet) தொடர்ந்து பின்பற்றும் ஒருவருடைய உடல்நல அறிக்கை.
அவதானிப்பு முறை ஆய்வுகளின் வரம்புகள் :
ஒரு அவதானிப்பு ஆய்வு முறையிலான ஆய்வு குறிப்பான வாழ்வியல் (அ) உணவு முறை, குறிப்பான நோய் (அ) உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது என்று மட்டுமே சொல்லும். காரணம் விளைவு என்ற முறையில் அது ஆய்வு முடிவை முன்வைப்பதில்லை. அதாவது அந்த குறிப்பான நோய் அல்லது உடல்நல குறைபாடு என்ற விளைவிற்கு குறிப்பான உணவு அல்லது வாழ்வியல் முறைதான் காரணி என்று திட்டவட்டமாக முன்வைக்காது.
அந்த குறிப்பான விளைவுகள் ஏற்படுவதற்கு மரபுத்தொடர்பு, சமூக பொருளாதார பண்பாடு கலாச்சாரம் சூழலியல் சார்ந்த பிற காரணிகளும் இருக்கக்கூடும். வறுமை, சுகாதாரம் பற்றிய அக்கறையின்மை, கலாச்சார நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சமூக பொருளாதார மற்றும் சமூக கலாச்சார அழுத்தங்கள் போன்ற இன்ன பிற காரணிகளை அவதானிப்பு ஆய்வுகள் கணக்கில் கொள்வதில்லை. இவை குழப்பமான காரணிகள் (confounding factors) அல்லது காரணம் விளைவு இரண்டுடனும் தொடர்புடைய கணிப்பதற்கு கடினமான மாறிகள் (difficult to predict variables) எனப்படுகின்றன.
உதாரணமாக, 1991-ம் ஆண்டு புதிய இங்கிலாந்து மருத்துவ ஆய்விதழில் (New England journal of medicine) ஒரு ஆய்வு முடிவு வெளியானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் இறப்பு சான்றிதழ்களை கொண்டும் உறவினர்களிடம் பெறப்பட்ட தகவல்களில் இருந்தும் ஆய்வு செய்யப்பட்டது. வலது கை பழக்கமுடையவர்களை விட இடது கை பழக்கம் உடையவர்களின் இறப்பு விகிதம் அதிகமென அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது. வலது கை பழக்கம் உடையோரின் சராசரி ஆயுள் 75 ஆண்டுகளாகவும், இடது கை பழக்கமுடையோரின் சராசரி ஆயுள் 66 ஆண்டுகளாகவும் இருந்ததுள்ளது. ஆனால் குறிப்பான சமூக கலாச்சார பின்னணியை இந்த ஆய்வு கணக்கில் கொள்ளத் தவறி விட்டது.
அமெரிக்காவில் இடது கை பழக்கமுடைய குழந்தைகளை வலுக்கட்டாயமாக வலதுகை பழக்கத்திற்கு மாற்றிய வழக்கம் இருந்துள்ளது (நமது நாட்டிலும் இப்பழக்கம் உள்ளது). அதனால் சிறு வயதில் இயற்கையாக இடது கை பழக்கமுடைய பலரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் வலதுகை பழக்கம் உடையவர்களாக இந்த ஆய்வின்போது ஆகிவிட்டிருந்தனர். அவர்களை வலது கை வழக்குடையோராக ஆய்வு கணக்கில் எடுத்து தவறிழைத்திருந்தது.
பரிசோதனை முறை ஆய்வுகள் :
பரிசோதனை முறையிலான ஆய்வில் ஆய்வாளர்கள் நிகழ்ச்சிப் போக்கில் இடையீடும் குறுக்கீடும் செய்வதன் மூலம் அதன் விளைவுகளை தொகுத்துப் பரிசீலித்து முடிவுக்கு வருகின்றனர். இதற்கு அவர்கள் புள்ளியியல் முறையை பின்பற்றுகின்றனர்.
பரிசோதனை முறை ஆய்வுகள் இரண்டு அடிப்படை வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1 சீரற்ற (தொடர்பின்றி எடுக்கப்பட்ட) கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் (Randomized controlled trials)
சீரற்ற மாதிரிகளைக் கொண்டு இரண்டு குழுக்களை உருவாக்குவது. இரண்டு குழுக்களிலும் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் சமமட்டத்திலுள்ள மாதிரிகள் (மனிதர்கள்) குழுக்கள் அமைக்கப்படும். அதில் ஒரு குழுவினருக்கு ஆய்விற்கு உட்பட்ட மருந்தை அல்லது உணவுப் பொருளை கொடுப்பது. மற்றொரு குழுவிற்கு கொடுக்காமல் வைப்பது. இரு குழுவிலும் ஏற்படும் விளைவுகளை கண்காணித்து தரவுகளை சேகரிப்பது. இந்த முறை சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை எனப்படுகிறது (Randomised controlled trials). இதற்கு புள்ளியியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதே சோதனையை யாருக்கு ஆய்வுக்கு உட்பட்ட மருந்து அல்லது உணவுப்பொருள் கொடுக்கப்பட்டது யாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கே தெரியாமல் வைப்பது மறைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை (Blinded randomised controlled trials) எனப்படுகிறது.
இந்த முறை வேறெந்த புறக்காரணிகளின் தாக்கமும் இன்றி குறிப்பான ஆய்வுக்குரிய மருந்து அல்லது உணவுப் பொருளின் விளைவாக தான் குறிப்பான உடல்நலக் குறைபாடு அல்லது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது. அதாவது காரணம் – விளைவுக்கிடையிலான தொடர்பை சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது. இதன் காரணமாக அவதானிப்பு முறை ஆய்வுகளை விட பரிசோதனை முறையான ஆய்வுகள் அதிக நம்பகத்தன்மை கொண்டதாகும்.
இந்த மறைக்கப்பட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளே (Blinded randomised controlled trials) நவீன மருத்துவத்தில் மருந்துகளை சோதிப்பதற்கு (Clinical Trails) பயன்படுத்தப்படுகின்றன.
2 குறையளவான சோதனைகள் (Quasi-experiment)
இந்த ஆய்வு முறை அவதானிப்பு மற்றும் பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கக்கூடிய ஒருவகையான ஆய்வுமுறை குறையளவிலான சோதனை முறை என்று பெயர்.
ஒரு குறிப்பிட்ட மருந்தையோ உணவையோ, எடுத்துக் கொள்ளும் முன் எடுத்துக்கொண்ட பின் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்து ஆய்வு செய்வது.
ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட முன்னும் பின்னும் குடிப்பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். அதன் அருகாமையில் இருக்கக்கூடிய மதுவிலக்கு அமல்படுத்தப்படாத ஊர் அல்லது மாநிலத்துடன் ஒப்பீடு செய்வது. இவை குறையளவான ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இவற்றிலிருந்து சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால் சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் கூட அறுதியான இறுதியான முடிவுகள் அல்ல.
முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகள் அல்லது பகுப்பாய்வுகள் (systematic reviews)
ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது சமூக குழுவின் அனுபவம்,
ஒரு குறிப்பான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை முடிவு என்பதை தாண்டி ஒரு குறிப்பான கேள்விக்கு வெவ்வேறு சூழல்களில் அமைப்புகள், சோதனைகளில் இருந்து வரக்கூடிய தரவுகளை தொகுத்து ஆய்வு செய்யக் கூடிய முறை முறைப்படுத்தப்பட்ட மதிப்பாய்வு எனப்படுகிறது.
பல்வேறு வகையான ஆய்வுகளில் இருந்தும், அவதானிப்பு ஆய்வுகளிலிருந்து பரிசோதனை ஆய்வுகள் வரை தரவுகளை எடுத்து மதிப்பாய்வு செய்து அதிலிருந்து முடிவை எட்டுகிறது இந்த பகுப்பாய்வுமுறை. அதனால்ஆய்வுக்கட்டுரை முடிவுகளில் உயர்ந்த நம்பகத் தன்மை உடையதும் மதிப்புடையதும் முறைப்படுத்தப்பட்ட பகுப்பாய்வு முடிவுகளே ஆகும். மேற்சொன்ன ஆய்வு முறைகளில் ஆய்வுத் தரவுகள், சான்றாதாரங்கள் அனைத்திற்கும் தலையாயது முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகள் (The king of all evidence: systematic reviews) என்றால் அது மிகையல்ல.
எந்த ஆய்வாளருக்கும் பக்கச் சார்புகள், முன்முடிவுகள் இருக்கக்கூடும். மதிப்பாய்வுகள் செய்வோர் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதற்கு ஒரே பிரச்சினைக்குரிய கேள்வி – ஆய்வுத் தலைப்பு – வெவ்வேறு நபர்களால் மதிப்பாய்வுகள் செய்யப்பட்டு பரஸ்பர மற்றும் வெளிப்படையான குறுக்கு சரிபார்ப்புகள் செய்வதன் மூலம் தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் மதிப்பாய்வு செய்பவர்களுக்கு உள்ள பக்கச் சார்புகள், முன்முடிவுகள் விலக்கம் செய்யப்படுகின்றன. இவ்வகையான மதிப்பாய்விற்குப் பின் வெளியாகும் முடிவுகளே மிகத் துல்லியமானவை.
எல்லா முறைப்படுத்தபட்ட மதிப்பாய்வுகளும் சமமானவையல்ல. அவற்றுக்கும் வெவ்வேறு முறையியல்கள் உள்ளன. (Not all the systematic reviews are created equally either). மேலும் மதிப்பாய்வுகள் என்பது துவக்கப் புள்ளி மட்டுமே. கிடைக்கப் பெறும் தரவுகள் நமது சூழலுக்கு பொருந்தலாம் அல்லது பொருந்தாமலும் போகலாம். அதனால் அவற்றை நமது சொந்த சூழலுக்கு பொருத்திப் பகுப்பாய்வு செய்தே இறுதி முடிவுக்கு வரமுடியும்.
அதனால் இனி “……என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது” – என்ற செய்திப்பதத்தைக் கண்டால், பின்பற்றப்பட்ட குறிப்பான ஆய்வுமுறை என்ன, அதன் வரம்புகள் என்னென்ன என்பதையும் ஆய்வு முடிவுரையில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளையும் அதிக கவனம் கொடுத்து படிக்க வேண்டும், எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
மேலும், ஆய்வுகளுக்கு நிதி அளிப்பதன் மூலமும், லாபியின் மூலமும் ஆய்வு முறையும், ஆய்வு முடிவுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஆய்வோ அல்லது மதிப்பாய்வோ யாரால் எதற்காக செய்யப்படுகிறது அதன் பொருளாதாரப் புரவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். இல்லையெனில் அரைக்கால் அளவு உண்மை கொண்ட குறையளவான அறிவியல் (Quasi-Science) நம்மை ஏமாற்றி மயக்கத்தில் ஆழ்த்தி வீழ்த்தி விடலாம்.
சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்யாதது ஏன்? “காவி பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !” என தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கண்டன கூட்டங்கள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரிக்கு அருகில் உள்ள கஜாமலை பேருந்து நிறுத்தத்தில் 26.11.2019 அன்று பு.மா.இ.மு மாவட்ட பொருளாளர் தோழர் சுரேஷ் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அவரது தலைமை உரையில் “இது தற்கொலை அல்ல கொலை எனவும் இதற்கு காரணமானவர்களை அரசு தண்டிக்காது நாம் தான் வீதியில் தண்டிக்க வேண்டும்” எனவும் கூறினார்.
தோழர் தமிழ் அருண்
மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாநில துணை செயலாளர் தோழர் தமிழ் அருண் பேசுகையில் “ஐ.ஐ.டி இன்று பார்ப்பனர்களின் கூடாரமாக மாறியுள்ளது. RSS, BJP இன்று எல்லா துறைகளிலும்; எல்லா கல்லூரிகளிலும் ஆட்டம் போடுகிறது. மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக பு.மா.இ.மு நடத்தும் போராட்டத்திற்கு எமது அமைப்பு துணை நிற்கும்” என்றார்.
தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர் தோழர் கபிலன் பேசுகையில் “பார்ப்பனர்களின் சதியினால்தான் பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி நமக்கு தெரியபடுத்துவது என்னவென்றால் ரோகித் வெமுலா, முத்துகிருஷ்ணன் படுகொலை… என எல்லாமே முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன், சிறுபான்மையினர் யாரும் படிக்க கூடாது; அவ்வாறு படிக்க வந்தால் கொலை செய்யப்படுவார்கள் என்பதுதான்.
தோழர் கபிலன்
ஐ.ஐ.டி.-யில் மாட்டுகறி சாப்பிட்டதால் சூரஜ் என்கிற மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். அன்று “பார்ப்பனர்களை தவிர பிற சாதியினர் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்” எனும் மனுநீதி; இன்று அது நவீன முறையில் நடைமுறையாகி வருகிறது. புதிய கல்விக் கொள்கையும் பார்ப்பன மனுநீதியைத்தான் அமல்படுத்துகிறது. இந்த மனுநீதிதான் மாணவர்களை படுகொலை செய்கிறது. இதனை எதிர்த்து நிற்கும் பு.மா.இ.மு அமைப்புடன் தமிழ் புலிகள் கட்சி எப்போதும் துணை நிற்கும்” என்றார்.
இறுதியாக கண்டன உறையாற்றிய பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் “இந்தியாவிலேயே மிக பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றுதான் ஐ.ஐ.டி. அங்கு படிப்பவர்களுக்கு அரசு அதிக செலவு செய்கிறது. நமது கல்லூரிகளில் இல்லாத, நாம் பார்க்காத வசதிகள் பலவும் அங்கு உண்டு. படிப்பதற்கு உதவிதொகை உண்டு. அப்படிப்பட்ட ஐ.ஐ.டியில் படிப்பது, ஆசிரியர்களாக வேலைபார்ப்பது பார்ப்பனர்களே. இட ஒதுக்கீட்டை தாண்டி இன்று அங்கு 96% பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். நீண்ட காலமாக அதை அக்கிரகாரமாக, அவர்கள் மாற்றியுள்ள நிலையில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் உள்ளே சென்றால் வெறுப்பாக பார்க்கின்றனர்.
ஆனால் அங்கு படிக்கும் பார்ப்பனர்கள் பெரிய அறிவு படைத்தவர்கள் அல்ல. அவர்களை தவிர யாறு அங்கு சென்றாலும் தற்கொலை செய்வார்கள் என்று முன்னால் பேராசிரியர் வசந்தா கந்தசாமி சொல்கிறார். இந்த பார்ப்பன கூடாரத்தில் நுழைந்த பாத்திமாவை டார்ச்சர் பன்னி சாவடித்துள்ளனர். அவரது தாய், வட மாநிலங்களை விட தமிழகம்தான் பாதுகாப்பானது என்று எண்ணித்தான் சேர்த்தோம் என்கிறார். அந்த தாய்க்கு நாம் என்ன பதில் சொல்ல போகிறோம்.
ஹைதராபத்தில் ரோகித் வெமுலா, மும்பையிலே மருத்துவர் பாயல், டெல்லியிலே முத்துகிருஷ்ணன் என இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை நடந்துள்ளது. இதில் ஒரு பார்ப்பன மாணவர் கூட கிடையாது. உயர் கல்வி நிலையங்களை பார்ப்பன அக்கிரகாரமாக இந்தியா முழுவதும் மாற்றியுள்ளனர். அதன் வடிவம்தான் இன்று மோடி அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என ஏழை மாணவர்களை படிக்க விடாமல் செய்யப் போகிறது. நீட் தேர்வு அதைத்தான் உருவாக்கியுள்ளது. முழுக்க அரசு பள்ளிகளை அழித்து, தனியார் பள்ளிகளை உருவாக்கி கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி வகுக்கிறது. ஒரு பக்கம் கார்ப்பரேட் கொள்ளை. மற்றொரு பக்கம் திருவள்ளுவருக்கு காவி, பொறியியல் படிப்பில் பகவத்கீதை, கல்லூரியிலேயே சாகா பயிற்சி என காவிகளின் பிடி இருகுறுகிறது.
இன்று வரை பத்மநாபனை கைது செய்யாதது ஏன்? பார்ப்பான் என்பதை தவிர வேறென்ன. இந்த பார்ப்பன பாசிசத்தை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தீர்வாகாது. வாழ முடியாத சூழலில் நமக்கு ஏது வாழ்க்கை. போராட்டத்தினால்தான் இதனை மாற்றி அமைக்க முடியும். “4 மாடு தனித்தனியாக செல்லும்போது சிங்கம் மிரட்டும். ஒருநாள் 4 மாடு ஒன்றாய் சேரும். அன்று சிங்கத்தை விரட்டும்…” அமைப்பாய் திரண்டு போராடுவோம்” என்றார்.
இந்த கூட்டத்தில் தோழர் சுரேஷ், ம.க.இ.க கலைகுழு தோழர் லதா கல்வி, இடஒதுக்கீடு சம்மந்தமான பாடல்கள் பாடினர். இறுதியாக கல்லூரி மாணவர் தமிழ் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை, கண்டனக் கூட்டம் நடத்த தர்மபுரி போலீசு தடை !
கடந்த 8-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி.-யில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டார். இது அவருடைய பெற்றோர் மட்டுமல்ல அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது தற்கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன்தான் காரணம் என்று தனது செல்போன் குறிப்பில் ஃபாத்திமா எழுதி வைத்துள்ளார். அப்படியிருக்க பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அதாவது, கடந்த எட்டாம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை ஏறக்குறைய 17 நாட்கள் கடந்தும் இன்று வரை சுதர்சனை போலீசு கைது செய்யவில்லை.
இதனைக் கண்டித்து, ஐ.ஐ.டி ஆசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தர்மபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் 26-11-2019 அன்று மாலை கண்டன கூட்டம் நடத்துவதற்கு தர்மபுரி B1 போலீசு நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் ஆய்வாளர் இல்லை என்று போலீசு நிலையத்தில், மனுவைக் கூட வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பின் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவரோ மீண்டும் B1 போலீசு நிலையத்திற்கே மனுவை அனுப்பினார். அங்கு போலீசு ஆய்வாளர் மனுவைக் கூட படிக்காமல், உங்களுக்கு அனுமதி கிடையாது என்று அராஜகமாகக் கூறி தெருமுனைக் கூட்டத்திற்கு தடை போட்டிருக்கிறார்.
தர்மபுரி போலீசு தொடர்ந்து பல போராட்டங்களுக்கு அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்குவதில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் போலீசு, அதை காலில் போட்டு மிதிக்கிறது. குறிப்பாக தருமபுரி போலீசு ஆய்வாளர் திரு. ரத்தனகுமார்; “என்ன தொடர்ந்து மனு கொடுக்கிறீங்க… ரிமாண்ட் பண்ணிருவேன்.. பாக்குறியா.. ” என்று மிரட்டுகிறார்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை – பேச்சுரிமையை மறுத்துவிட்டு போராடுபவர்களை ஒடுக்கும் தருமபுரி போலீசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இந்த அடக்குமுறையை அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் கண்டிக்குமாறும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கோருகிறோம்.
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : 63845 69228.
மார்மன்டேல் என்பவர் தம்முடைய நினைவுக் குறிப்புகளில் கெனேயின் ஆளுமையைப் பற்றி பல சுவாரசியமான செய்திகளை எழுதியிருக்கிறார். 1757-ம் வருடத்திலேயே கெனே “நிகரப் பொருளைப் பற்றிய குறுக்கு நெடுக்கான கோடுகளைத்” தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதை அவருடைய புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். கெனே மற்றும் அவருடைய சீடர்களின் புத்தகங்களில் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்ற, பொருள் விளக்கம் கொடுக்கப்படுகின்ற பொருளாதார அட்டவணை எனப்படுவது இதுவே. வர்ணனைகள் பலவிதமாக இருந்த போதிலும் அட்டவணை என்பது ஒன்று தான். விவசாயத்தினால் படைக்கப்படுகின்ற தேசத்தின் மொத்த மற்றும் நிகரப் பொருள் அதன் இயற்கையான வடிவத்திலும் பணவியல் வடிவத்திலும் கெனே பிரிவினை செய்திருந்த சமூகத்தின் மூன்று வர்க்கங்களுக்கிடையிலும் எப்படிச் செலாவணியாயிற்று என்பதைப் புள்ளியியல் உதாரணங்களின் மூலமாகவும் வரைகோடுகளின் மூலமாகவும் எடுத்துக்காட்டும் அட்டவணையே அது.
பொருளாதார அட்டவணையைப் பற்றிய நவீன அணுகுமுறையைப் பற்றிப் பொதுவான முறையில் தெரிந்துகொள்வதற்காக இங்கே சோவியத் பேரவையாளர் வி.நெம்ச்சினோவின் கருத்தை மேற்கோள் காட்டுவோம். அவர் எழுதிய பொருளாதார கணித முறைகளும் மாதிரிகளும் என்ற புத்தகத்துக்கு லெனின் பரிசு கொடுக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
“18-ம் நூற்றாண்டில், பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் வைகறைப் பொழுதில்…. பிரான்சுவா கெனே… மனிதனுடைய சிந்தனையின் சிறப்பு மிக்க பாய்ச்சலான தமது பொருளாதார அட்டவணையைத் தயாரித்தார். 1758-ம் வருடத்தில் அந்த அட்டவணை தயாரிக்கப்பட்டு இருநூறு வருடங்கள் முடிவடைந்திருந்தன; ஆனால் அவற்றில் அடங்கியிருந்த கருத்துக்கள் மங்கிவிடாதது மட்டுமல்ல, அவை மேலும் அதிகமான மதிப்பைப் பெற்றிருக்கின்றன… கெனேயின் அட்டவணையை நவீன பொருளாதார வார்த்தைகளில் வர்ணிப்பதென்றால், அது பேரியல் பொருளாதார ஆராய்ச்சியின் முதல் முயற்சியென்று கூறலாம்; அந்த ஆராய்ச்சியில் மொத்த சமூக உற்பத்திப் பொருள் என்ற கருதுகோள் நடு நாயகமான இடத்தைப் பெற்றிருந்தது…. அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றில் பொருளாயத மதிப்புக்களின் இயற்கையான (பண்ட) மற்றும் பணவியல் நீரோட்டங்களைப் பற்றித் தயாரிக்கப்பட்ட முதல் பேரியல் பொருளாதார அமைப்பே கெனேயின் பொருளாதார அட்டவணை. அதில் அடங்கியிருக்கும் கருத்துக்கள் கருவடிவத்திலுள்ள எதிர்காலப் பொருளாதார மாதிரிகளாகும். குறிப்பாகக் கார்ல் மார்க்ஸ் தன்னுடைய விரிவாக்கமடைந்த புனருற்பத்தி அமைப்பைத் தயாரித்த பொழுது, கெனேயின் சிறப்புமிக்க பணியைப் பாராட்டினார்……”(1)
கெனே-யின் பொருளாதார அட்டவணை (நன்றி : விக்கிபீடியா)
இந்த மேற்கோள்களில் அடங்கிய பொதுவான கருத்துக்கள் வாசகருக்குப் புரியக்கூடியவையே; ஆனால் விவரங்களை இன்னும் தெளிவாகச் சொல்லுவது ஒருவேளை அவசியமாக இருக்கும். பேரியல் பொருளாதார ஆராய்ச்சி என்பது மொத்தமான பொருளாதார நிகழ்வுகளையும் (சமூகப் பொருள், தேசிய வருமானம், மூலதன முதலீடு) அவற்றோடு தொடர்புள்ள பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஆராய்வதாகும். நுண்ணியல் பொருளாதார ஆய்வு இதற்கு எதிரிடையானதாகும். அது பண்டம், மதிப்பு, விலை இதரவைகளின் இனங்களையும் பிரச்சினைகளையும் ஆராய்கிறது; தனிப்பட்ட மூலதனச் செலாவணியையும் ஆராய்கிறது. கெனேயின் பேரியல் பொருளாதார மாதிரி என்பது சமூகப் பொருளின் புனருற்பத்தி மற்றும் செலாவணியைப் பற்றிய கற்பனையான அமைப்பாகும்; அது குறிப்பிட்ட சில அனுமானங்களையும் கருதுகோள்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னுடைய சிறப்புமிக்க புனருற்பத்தி அமைப்புக்களைத் தயாரித்த பொழுது பயன்படுத்திய முக்கியமான ஆதாரங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று.
1863-ம் வருடம் ஜுலை 6-ம் தேதியன்று எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் இந்தத் துறையில் தாம் செய்திருக்கும் ஆராய்ச்சிகளை விளக்கிக் கூறிய பிறகு ஒரு எண்ணியல் மற்றும் வரைபட உதாரணத்தின் உருவரையைத் தருகிறார்: மொத்த உற்பத்திப் பொருள் என்பது எப்படி நிலையான மூலதனம் (மூலப் பொருட்கள், எரிபொருள், இயந்திரங்கள்), மாறுபடும் மூலதனம் (தொழிலாளர்களின் கூலி) மற்றும் உபரி மதிப்பைச் செலவிடுவதன் மூலம் ஏற்படுகிறது. பொருளின் உருவாக்கம் சமூக உற்பத்தியின் இரண்டு வெவ்வேறான உட்பிரிவுகளில் நடைபெறுகிறது: இயந்திரம், மூலப் பொருள்கள் முதலியனவற்றை உற்பத்தி செய்தல் முதல் பிரிவு, நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்தல் – இரண்டாம் பிரிவு.(2)
மார்க்ஸ் எந்த அளவுக்குக் கெனேயின் கருத்துக்களால் ஊக்குவிக்கப்பட்டார் என்பதை இந்தக் கடிதத்தில் தன்னுடைய அமைப்பைப் பற்றி எழுதிய பிறகு அவர் பொருளாதார அட்டவணையை – அல்லது அதன் சாராம்சம் என்று சொல்லுவது இன்னும் பொருத்தம் – எழுதியிருக்கிறார் என் பதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மார்க்சின் அமைப்பு இந்த முதல் வடிவத்திலும் கூட கெனேயின் அட்டவணையிலிருந்து நிச்சயமாக அதிகமான அளவுக்கு வேறுபட்டிருந்தது; உபரி மதிப்பின் உண்மையான தோற்றுவாய் கூலி உழைப்பை முதலாளிகள் சுரண்டுவது என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. ஆனால் கெனேயின் புத்தகம் மிக முக்கியமான ஒரு கருத்தின் முளையைக் கொண்டிருந்தது என்பதுதான் இங்கே முக்கியமாகும். சில பொருளாதார அளவு விகிதங்களைப் பின்பற்றினால் மட்டுமே புனருற்பத்தி, அதன் கைவரப்பெறுதல் ஆகிய நிகழ்வுப் போக்குகள் எந்த இடையீடும் இல்லாமல் நடைபெற முடியும் என்பதே அது.
வி. நெம்ச்சினோவ்
கெனே தன்னுடைய அட்டவணையிலும் மார்க்ஸ் தன்னுடைய முதல் அமைப்பிலும், உற்பத்தியும் கைவரப்பெறுதலும் ஒவ்வொரு வருடமும் அதே பரிமாணங்களில், குவிப்பும் விரிவுபடுத்தலும் இல்லாமல் நடைபெறுகின்ற சாதாரணப் புனருற்பத்தியிலிருந்து தொடங்கினார்கள். இது சாதாரணமானவைகளிலிருந்து பன்முகமானவைகளுக்கு, குறிப்பிட்டவற்றிலிருந்து அதிகம் பொதுவானவற்றை நோக்கிச் செல்லுகின்ற இயல்பான முன்னேற்றமாகும். ஐன்ஸ்டைன் சடத்துவம் சார்ந்த இயக்கங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய குறிப்பிட்ட சார்பு நிலைத் தத்துவத்தை முதலில் உருவாக்கினார்; பிறகு அதிலிருந்து பொதுச்சார்பு நிலைத் தத்துவத்தை விளக்கும் வகையில் முன்னேறிச் சென்றார்.
மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலின் இரண்டாம் புத்தகத்தை மார்க்சின் மரணத்துக்குப் பிறகு எங்கெல்ஸ் வெளியிட்டார். இப்புத்தகத்தில் மார்க்ஸ் சாதாரண புனருற்பத்தித் தத்துவத்தை வளர்த்துச் சென்று விரிவடைந்த புனருற்பத்தித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைத்தார். விரிவடைந்த புனருற்பத்தி என்பது குவித்தலும் உற்பத்தியின் அளவில் அதிகரிப்பும் சேர்ந்த புனருற்பத்தியாகும். வி. லெனின் எழுதிய மிக முக்கியமான சில புத்தகங்களிலும் இந்தப் பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன.
நவீன பொருளாதாரத்தின் மொழியில் சொல்வதென்றால், பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற தேசிய பொருளாதார அளவு விகிதங்களின் பிரச்சினையே கெனே ஈடுபட்டிருந்த முக்கியமான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையைச் சொல்வதே அது இன்று எவ்வளவு முக்கியமானதாகவும் அதிகமான அளவுக்குப் பேசப்படக் கூடியதாகவும் இருக்கிறது என்பதை ஒருவருக்கு நினைவுபடுத்துவதற்குப் போதுமானதாகும். இன்று சோவியத் யூனியனிலும் மற்ற நாடுகளிலும் பொருளாதாரத்தின் பல துறைகளிலும் இடையுள்ள உறவுகளின் இணைப்புக்குரிய அட்டவணைகளுக்கு ஆதாரமாக இருப்பவை கெனேயின் கருத்துக்கள் என்று ஒருவர் கூற முடியும். இந்த அட்டவணைகள் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள இடைஉறவுகளைப் பிரதிபலிக்கின்றன, பொருளாதார நிர்வாகத்தில் மென்மேலும் அதிகமான பாத்திரத்தை வகிக்கின்றன.
சமீப காலத்தில் மார்க்சியம் அல்லாத அரசியல் பொருளாதாரத்தில் கெனே மீது அக்கறை வளர்ந்திருக்கிறது. பொருளாதார அட்டவணையின் இருநூறாவது ஆண்டுவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தன்னுடைய தேசிய மேதைகளில் கெனேயும் ஒருவர் என்பதை பிரான்ஸ் அங்கீகரித்துக் கொண்டது.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) வி. நெம்ச்சினோவ், பொருளாதார கணித முறைகளும் மாதிரிகளும், மாஸ்கோ , 1965, பக்கங்கள் 175, 177 (ருஷ்ய மொழியில் எழுதப்பட்டது).
(2) இந்தக் கடிதத்தில் மனிதன் உயிரோடிருக்கத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வது முதலாவது உட்பிரிவைச் சேர்ந்ததென்று மார்க்ஸ் இன்னும் கருதுகிறார். மார்க்ஸ் ”பிஸியோகிராட்டுகளைப் பின்பற்றுகிற மாதிரி” அப்படிச் செய்கிறார் என்று வி. நெம்ச்சினோவ் எழுதுகிறார்.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் !
அரங்கக்கூட்டம்
நாள் : 30.11.2019, சனிக்கிழமை மாலை 4:30 முதல் 7:30 மணி
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.
உரையாற்றுபவர்கள் :
திரு து.அரிபரந்தாமன்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
பேராசிரியர் அ. கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி.
திரு ஆளூர் ஷாநவாஸ்,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
***
பாபர் மசூதி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றை கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு முன்கூட்டியே அனுப்பினால் அதற்கான விளக்கங்களோடு உரையை தர உதவியாக இருக்கும்.
வாட்ஸ் அப் எண் : 94446 12142.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம். தொடர்புக்கு : 91768 01656.
‘பயங்கரவாத நிதியுதவி’ தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்துவரும் நிறுவனத்திடமிருந்து ‘பயங்கரவாத ஒழிப்பு புகழ்’ பாஜக, பெரிய அளவிலான நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவரும் மாஃபியா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியுமான இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சியிடமிருந்து சொத்துக்களை வாங்கியது தொடர்பாக ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிட். நிறுவனத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிறுவனம் பாஜகவுக்கு நிதியளித்திருப்பதாக, அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தகவலில் தெரிவித்துள்ளது.
இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி.
நெருக்கடி நிலையில் இருக்கும் திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர். கே. டபிஸ்யூ, 2014 – 15 ஆண்டில் பாஜக -வுக்கு ரூ. 10 கோடி நிதியளித்துள்ளது. இந்த விசயத்தை கோப்ரா போஸ்டு, கடந்த ஜனவரி 2019-ல் வெளியே கொண்டுவந்தது.
பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டுகிற பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து பாஜக தொடர்ந்து பெரிய அளவிலான நிதியை பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமும் ஆர்.கே. டபிள்யூ கொடுத்ததைவிட பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக நிதியை கொடுக்கவில்லை.
தற்போது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சர்ச்சைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மற்றொரு விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். 2014- 15 ஆண்டில் மோடி அரசாங்கம், முன்பின் தெரியாதவர்கள் அரசியல் செல்வாக்கு செலுத்தும் தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், ஆர்.கே. டபிஸ்யூவின் நன்கொடை வெளிச்சத்துக்கே வந்திருக்காது.
இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஞ்சித் பிந்த்ரா, நிழல் உலகத்தின் சார்பாக ஒப்பந்தங்களை பேசியதாக அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர். பிந்த்ரா, மிர்ச்சிக்கும்; நிறுவனங்களுக்குமிடையே முகவராகவும் தரகராகவும் செயல்பட்டதாக அமலாக்கத்துறை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அதுமட்டுமல்ல..
மிர்ச்சியின் சொத்துக்களை வாங்கியதாக அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனமான சன்பிளிங்க் ரியல் எஸ்டேட் , ஒரு பொதுவான இயக்குனர் வழியாக வேறொரு நிறுவனத்தின் மூலம் பாஜகவுக்கு ரூ. 2 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது.
சன்பிளிங்க் இயக்குனரான மெகுல் அனில் பவிஷி, ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும் உள்ளார். தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்த அறிக்கையில் 2014-15 ஆண்டில் ஸ்கில் ரியால்டர்ஸிடமிருந்து ரூ. 2 கோடி நிதி பெற்றுள்ளது.
தீவிரவாதிகளிடம் தேர்தல் நிதி வாங்கும் ‘உத்தமர்கள்’தான் இந்த பாஜக கும்பல்.
ஆர்.கே. டபிள்யூ டெவலர்ப்பர்ஸ் இயக்குனர் பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா, தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார். 2016-17-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு தர்ஷன் ரூ. 7.5 கோடியை வழங்கியுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் நரோன்ஹாவும் விசாரணையில் உள்ளார்.
ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் நிறுவனம் மிர்ச்சியின் சொத்துக்களை விற்க உதவியதாகவும், இதற்காக பிந்த்ரா ரூ. 30 கோடியை கமிஷனாக பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. நடிகர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவையும் ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் உடனான உடன்பாடுகளுக்காக அமலாக்கத்துறை விசாரித்தது. ஆர்.கே. டபிள்யூ நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளில் இருந்த எசென்ஷியல் ஆஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்தில் ஷில்பாவும் ஒரு இயக்குனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, இக்பால் மிர்ச்சி விசயம், சர்ச்சைக்குரியதாக இருந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரஃபுல் பட்டேலுக்கு சொந்தமான மில்லேனியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கும், சன்பிளிங்க் நிறுவனத்துக்கும் மிர்ச்சியுடன் சொத்து பரிவர்த்தனை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணை சொன்னது.
மகாராஷ்டிர தேர்தலுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு, பிரஃபுல் பட்டேலை விசாரித்ததோடு, பிந்த்ரா உள்ளிட்ட இருவரை கைது செய்தது. பிரஃபுல் பட்டேல் தான் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக மறுத்துள்ளார். மிர்ச்சியின் சொத்துக்களை சன்பிளிங் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மில்லேனியம் டெவலப்பர்ஸ் பிரைவேர் லிமிடெட் நிறுவனங்கள் விற்றது தொடர்பாக மிர்ச்சியின் மைத்துனரான முக்தார் மேமனிடம் அமலாக்கத்துறை விசாரித்தது.
சன்பிளிங்க் நிறுவனத்துக்கு ரூ. 2,186 கோடியை கடன் கொடுத்தது தொடர்பாக கடந்த மாதம் டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் பதினான்கு கிளைகளில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. இந்த பணம் துபாய்க்கு அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது. மிர்ச்சிக்கு சன்பிளிங்கிற்கும் இடையே சொத்து பரிமாற்ற பேச்சுவார்த்தை நடத்தியை பிந்த்ரா ஒப்புக்கொண்டதாக பெயர் சொல்ல விரும்பாத அமலாக்கத்துறை அதிகாரி கூறியதாக பிஸினஸ் டுடே செய்தி வெளியிட்டிருந்தது.
பிரஃபுல் பட்டேலுக்கு எதிராக அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக :
மகாராஷ்டிரத்தில் தனது கடைசி பிரச்சார பயணத்தில் பேசிய பிரதமர் மோடி, மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை என்றார்.
“மும்பை குண்டு குண்டுவெடிப்பின் காயங்களை எங்களால் மறக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய அரசாங்கம் நீதி செய்யவில்லை, அத்தகைய நிலைப்பாட்டிற்கான காரணம் இப்போதுதான் தெரியவருகிறது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்குப் பதிலாக, அதிகாரத்தில் இருந்தவர்கள் மிர்ச்சி வியாபாரத்தில் ஈடுபட்டனர்” என அவர் வெடித்தார்.
மிர்ச்சியுடனான நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் ‘தேசத்துரோகத்திற்குக் குறைவானதல்ல’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளியானது. பிரஃபுல் பட்டேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக அமித் ஷாவின் பேச்சை மேற்கோள் காட்டிய கட்டுரைகள் TOI இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், TOI யில் வெளியான கட்டுரை pressreader.com வழியாக இன்னும் கிடைக்கிறது.
இந்த வழக்கில் பிந்த்ராவைத் தவிர, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஹாரூன் யூசுப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடக செய்திகளின்படி, பிந்த்ரா நில ஒப்பந்தத்தின் தரகராக செயல்பட்டார், அதே நேரத்தில் யூசுப் பணத்தை ஒரு அறக்கட்டளைக்கு மாற்றி ஒப்பந்தத்திற்கு வசதி செய்தார்.
தேசியவாத காங்கிரசை ‘தேச துரோகி’யாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர்களாகவும் பேசிய டெல்லி சாணக்கியர்கள் மோடி – அமித் ஷா, அதே கட்சியுடன் கள்ளக்கூட்டு வைத்து அதிகாலையில் ‘அதிரடி’யாக ஆட்சியமைத்திருக்கிறார்கள் மகாராஷ்டிரத்தில். குற்றவாளியுடனும் கூட்டு, குற்றம்சாட்டப்பட்டவனுடனும் கூட்டு! ஆக, டெல்லி சாணக்கியர்களுக்கு நீதி – நியாயம் – அறம் -மானம் – சூடு -சுரணை என எதுவுமே இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
( டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அமைப்புகள் சரிகட்ட செய்த தொடர் முயற்சிகளின் முரண்பாடுகளும் மழுப்பல்களும் )
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1927 டிசம்பர் 25 அன்று மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன்?
மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட நாள் :
88 (இப்போது 89) ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 25, 1927 அன்று, தலித்துகளின் சுய மரியாதை இயக்கத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான கொங்கனில் உள்ள ஒரு சிறிய நகரம் / கிராமம், மஹாத் வரலாறு படைத்தது.
“மனு ஸ்மிருதி தஹான் தின்”. டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க நடத்தப்பட்ட இறுதிச்சடங்கில் சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தையும், தலித்துகள் மற்றும் மிலேச்சர்களுக்கு (பெண்களை உள்ளடக்கியது) எதிரான வெறுப்பு மற்றும் கொடுமை ஆகியவற்றின் எழுத்து மூலங்கள் (மனு ஸ்மிருதி) பகிரங்கமாக கொளுத்தப்பட்டது.
மகாத் (சாவதர்) பொதுக்குளத்தில் தலித்துகள் (தீண்டத்தகாதவர்கள்) நீர் அருந்தும் உரிமைக்காக மகாத் சத்தியாக்கிரகம் (அமைதியான கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் பொது குளத்தின் நீரை பயன்படுத்துவதை முந்தைய ஆட்சியரது ஆணை அங்கீகரித்தது. இருப்பினும், இந்த வசதியை ஒடுக்கப்பட்டவர்கள் அடைவதற்கான நிலைமைகளை சாதி மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் தடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்திலிருந்து தண்ணீரை எடுப்பதை எதிர்த்து சாதி பார்ப்பனர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தடையாணையைப் பெற்றிருந்தனர்!
எதிர்ப்பை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக சாதி இந்துக்களால் கற்பனைக்கெட்டாத ஒரு வகையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. திட்டமிட்ட அந்த கூட்டத்தை நடத்த ஒரு பொது இடத்தை பெறுவதை தடுப்பதும் இதில் அடங்கும். இறுதியாக, ஒரு நல்லுள்ளம் படைத்த உள்ளூர் முஸ்லீம் திரு. ஃபத்தேகன் இடத்தை வழங்கி போராட்டத்தை நடத்த உதவி செய்தார். கிராமத்தில் சாதி இந்துக்களின் எதிர்ப்பு இருப்பதால் உணவு, தண்ணீர் மற்றும் பிற பொருட்களுக்கான ஏற்பாடுகள் அமைப்பாளர்களால் மிக கவனத்துடன் செய்ய வேண்டியிருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களால் எடுக்கப்பட்ட ஒரு உறுதிமொழி பின்வருவனவற்றை உறுதிப்படுத்தியது:
1. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை நான் நம்பவில்லை.
2. சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை.
3. தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்.
4. உணவு மற்றும் குடிநீர் குறித்து யாரிடமும் குறைந்த அளவு எல்லா இந்துக்களிடையேயும் எந்த வேறுபாட்டையும் நான் பின்பற்ற மாட்டேன்.
5. கோயில்கள், நீர் நிலைகள், பள்ளிகள் மற்றும் பிற வசதிகளை பெறுவதற்கு தீண்டத்தகாதவர்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து அனைத்து வகையான நாசவேலைகளையும் ஆர்ப்பாட்டம் நடந்த வந்த இடத்தில் டாக்டர் அம்பேத்கர் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் பம்பாயிலிருந்து சாலை பயணத்திற்கு பதிலாக “பத்மாவதி” படகில் (நீண்ட தூரம் இருந்தபோதிலும்) தஸ்கான் துறைமுகம் வழியாக வந்தார். இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு உத்தி. ஏனென்றால், பேருந்து உரிமையாளர்கள் ஒருவேளை புறக்கணித்தால் மகாத்திற்கு வெறுமனே ஐந்து மைல் தூரம் தலைவர்கள் நடந்து செல்ல முடியும்.
டாக்டர் அம்பேத்கர், ஆன்மாவை உலுக்கக்கூடிய உரை நிகழ்த்திய பந்தலின் முன்னால் மனு ஸ்மிருதியை எரிப்பதற்காக வேள்வி (pyre) ஒன்று உருவாக்கப்பட்டது. அதை ஆறு பேர் இரண்டு நாட்களாக உருவாக்கினர். ஆறு அங்குல ஆழமும் ஒன்றரை அடி சதுரமும் குழி தோண்டப்பட்டு சந்தன மரக்கட்டை துண்டுகளால் நிரப்பப்பட்டது.
அதன் நான்கு மூலைகளிலும், மூன்று பக்கங்களிலும் கீழ்கண்ட சொற்களை கொண்ட பதாகைகளைத் தாங்கி கம்பங்கள் அமைக்கப்பட்டன.
1. “மனு ஸ்மிருதி சி தஹான் பூமி”, அதாவது மனு ஸ்மிருதிக்கான தகனம்.
2. தீண்டாமையை அழியுங்கள்.
3. பார்ப்பனியத்தை அடக்கம் செய்யுங்கள்.
டிசம்பர் 25, 1927 அன்று மாலை, மாநாட்டில் அம்பேத்கரின் பார்ப்பன நண்பரான கங்காதர் நீல்காந்த் சஹஸ்த்ரபுதே முதலாவதாகவும், பின்னர் தீண்டத்தகாதவர்களின் தலைவரான பி.என்.ராஜபோஜ் இரண்டாவதாகவும் மனு ஸ்மிருதியை எரிப்பதற்கான தீர்மானத்தை முன்னெடுத்தனர். அதன்பிறகு, மனு ஸ்மிருதி என்ற நூல் வேள்வியில் எரிக்கப்பட்டது. கங்காதர் மற்றும் ஐந்து- ஆறு தலித் சாதுக்கள் இதை செய்து முடித்தனர். பந்தலில் வைக்கப்பட்ட ஒரே புகைப்படம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடையது மட்டுமே. அதாவது டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு காந்தி மீதான மாயை இன்னும் தெளியவில்லை என்பதை இது காட்டுகிறது.
குடிநீர் அல்லது கோயில் நுழைவுக்கான உரிமையை பெறுவதோ அல்லது சம பந்திக்கான தடைகளை அகற்றுவதோ மட்டுமல்ல சமூகத்தில் சமத்துவமின்மையை ஆதரிக்கும் வர்ணாசிரம முறையை நொறுக்குவதே இயக்கத்தின் நோக்கம் என்று அம்பேத்கர் தன்னுடைய தலைமை உரையில் கூறினார். பின்னர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும்; பிரெஞ்சு புரட்சிகர கவுன்சில் விவரித்த மனித உரிமைகள் சாசனத்தின் முதன்மையான அம்சங்களையும் கூட்டத்தாரிடம் அம்பேத்கர் விளக்கினார். ரோம் ஆளும் வர்க்கமான பாட்ரீசியன்களுக்கு எதிராக ரோம் குடிமக்களான பிளேபியர்களின் கிளர்ச்சி எவ்வாறு தோல்வியடைந்தது என்பதை குறிப்பிட்டு தற்காலிக மற்றும் அரைகுறையான தீர்வுகளைத் தேடுவதிலுள்ள ஆபத்தை அவர் சுட்டிக்காட்டினார். சமுதாயத்தை ஆளும் (பாட்ரீசியன்) மற்றும் ஆளப்படும் (பிளேபியன்) வர்க்கங்களாக பிரிக்கும் முறையை ஒழிப்பதற்கு பதிலாக தங்களது விருப்பப்படி ஒரு அதிகாரியை பெற மட்டுமே பிளேபியர்கள் முயன்றனர் என்பது தான் அவர்களில் தோல்விக்கு காரணம் என்று அம்பேத்கர் விளக்கினார்.
சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட மனு ஸ்மிருதி ஆதரிக்கவில்லை என்பதை அதை படித்ததன் மூலம் உறுதியானது என்று பிப்ரவரி 3, 1928, பஹிஷ்கிருத் பாரதத்தின் (அவரது சொந்த செய்தித்தாள்) இதழில் அவர் விளக்கினார்.
சாதிகளுக்கு (வருணங்களுக்கு) இடையிலான திருமணங்களைத் தடை செய்வதில் தான் தீண்டாமையின் வேர் உள்ளது எனவே அதை நாம் முறிக்க வேண்டும் என்று அந்த வரலாற்று உரையில் அம்பேத்கர் கூறினார். இந்த “சமூகப் புரட்சி” அமைதியாக நடைபெறவும், சாஸ்திரங்களை நிராகரிக்கவும், நீதிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவும் உயர் வருணப் பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவரது தரப்பிலிருந்து சிக்கல் எதுவும் வராது என்றும் உறுதியளித்தார். நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சமத்துவ பிரகடனம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மனு ஸ்மிருதியின் நகல் எரிக்கப்பட்டது.
இயக்க குறிக்கோளின் திட்டவட்டமான விரிவாக்கத்தை இங்கே ஒருவர் காண்கிறார். சமத்துவத்தின் இறுதி குறிக்கோள் மற்றும் வருண அமைப்பை ஒழித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், மகாத் குளத்திலிருந்து உடனடி குடிநீர் வழங்கும் திட்டம் ஒரு அடையாள போராட்டமாகவும், சுயமரியாதைக்கான தொடர்ச்சியான போராட்டத்தின் தொடக்கத்தையும் முன்னிலைப்படுத்தியது.
டாக்டர் அம்பேத்கருடைய உரையின் மற்ற முதன்மையான அம்சங்கள்:
“… வருண அமைப்பு இருக்கும் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகிறது… ஜப்பானின் சாமுராய்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருந்த அதே பற்று பிராமணர்களுக்கு இல்லை. எனவே சமூக சமத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் நலனுக்காக ஜப்பானின் சாமுராய்கள் செய்ததைப் போல அவர்கள் தங்கள் சிறப்பு சமூக சலுகைகளை விட்டுக்கொடுப்பார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது.
பிராமணரல்லாத வர்க்கத்தினரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது. பிராமணரல்லாத மராட்டியர்கள் மற்றும் பிற வகுப்பினர் அதிகார பீடத்திலிருப்பவர்களுக்கும் அதிகாரமற்றவர்களுக்கும் இடையில் உள்ளனர். அதிகாரத்திலுள்ளவர்கள் எப்போதாவது தாராள மற்றும் தியாக சிந்தனை கொண்டவர்களாக இருக்கக்கூடும். அதே சமயத்தில் இலட்சியவாதமாகவும் கொள்கை ரீதியானவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் தங்கள் சொந்த நலனுக்காவது அவர்கள் ஒரு சமூகப் புரட்சியை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இடையில் உள்ள வர்க்கம் எந்த கொள்கைகளுக்கும் தாராளமாகவோ அல்லது உறுதியாகவோ இருக்க முடியாது.
எனவே அவர்கள் பார்ப்பனர்களுடன் சமத்துவத்தை அடைவதற்குப் பதிலாக தீண்டத்தகாதவர்களிடமிருந்து தங்களை விலக்கி கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வர்க்கம் ஒரு சமூகப் புரட்சிக்கான அதன் விருப்பத்தில் பலவீனமாக உள்ளது… .. இந்த பெரிய சமூக நோக்கத்தை அடைய நாம் பிறந்தவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருத வேண்டும். அதற்கான மதத்தகுதியைப் (religious merit) பெற முயற்சிப்போம். தவிர, இந்த வேலை (ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டுவருவது) நமது நலனுக்கானது எனவே நமது பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது நமது கடமையாகும்.
உயர் சாதி நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஊடகத்தின் ஒரு பிரிவில் கடுமையான எதிர்வினை இருந்தது. டாக்டர் அம்பேத்கரை ஒரு செய்தித்தாள் “பீமாசுரா” என்று அழைத்தது. சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் எழுதிய பல்வேறு கட்டுரைகளில் மனு ஸ்மிருதியை எரித்ததற்கான நியாயத்தை எடுத்துரைத்தார். மனு ஸ்மிருதியைப் படித்ததன் மூலம் சமூக சமத்துவம் என்ற கருத்தை தொலைதூரத்தில் கூட அது ஆதரிக்கவில்லை என்பது எனக்கு உறுதியானது என்று பிப்ரவரி 3, 1928 பஹிஷ்கிருத் பாரதத்தின் (Bahishkrit Bharat – அவரது சொந்த செய்தித்தாள்) இதழில் விளக்கினார்.
ஒன்றை எரிப்பது அது குறிப்பிடுகின்ற கருத்தை எதிர்த்து பதிவு செய்வதாகும். இதன் மூலம், தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளாத நபர் வெட்கப்படுவார் என்று ஒருவர் எதிர்பார்ப்பார். மனு ஸ்மிருதியை மதிக்கும் எவரும் தீண்டத்தகாதவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்ட முடியும் என்று எதிர்பார்ப்பது பயனற்றது என்று அவர் மேலும் கூறினார். மனு ஸ்மிருதியை எரிப்பதை காந்தி முன்மொழிந்த அந்நிய நாட்டு துணியை எரிப்பதுடன் ஒப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டங்கள் ஒரு கட்டுரையை எரித்தே ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை உணர்த்தின. மனு ஸ்மிருதி தகன் என்பதும் இதுதான்.
இதற்கிடையில், பொதுக்குளத்திலிருந்து குடிநீர் பெறுவதற்காக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் கண்டிக்க, ஒருபுறம் அரசாங்கம் / பிரிட்டிஷ் கலெக்டர் மறுபுறம் உயர் சாதி நலன்களை எதிர்கொள்ளும் சங்கடத்தை டாக்டர் அம்பேத்கர் விளக்கினார்.
சத்தியாக்கிரகம் பாதியில் ’ஏன் நின்றது’ என்ற தலைப்பில் 1928 பிப்ரவரி 3 ஆம் தேதி பஹிஷ்கிருத் பாரத் இதழில் அம்பேத்கர் எழுதினார்:
“சாதி இந்துக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தீண்டத்தகாதவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இரண்டில் ஒருவரை மட்டுமே அவர்கள் தாக்க முடியும். இருவரையும் ஒரே நேரத்தில் தாக்கும் வலிமை இன்று அவர்களுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. தீண்டத்தகாதவர்கள் மனிதர்கள் என்ற நியாயமான உரிமைகளை ஒப்புக்கொள்ள சாதி இந்துக்கள் மறுத்தபோது, தங்கள் சொந்த முயற்சியால், அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவது புத்திசாலித்தனம் என்று நாங்கள் நினைத்தோம்.
…… சாதி இந்துக்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்திற்கும் தீண்டத்தகாதவர்களால் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகத்திற்கும் உலக அளவு வேறுபாடு இருக்கிறது. சாதி இந்துக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கும்போது அவர்களுக்கு சமூக ஆதரவு [சாதி இந்துக்களது] இருக்கிறது… தீண்டத்தகாதவர்கள் ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கும்போது அனைத்து சாதி இந்துக்களும் எங்களுக்கு எதிராக அணிவகுக்கப்படுகிறார்கள். ”
தீண்டத்தகாத மக்களின் கிளர்ச்சி மகாத் பொது குளத்தின் உரிமை தொடர்பானது மட்டும் இல்லை என்பதை அம்பேத்கர் மேலும் அவதானித்தார். தீண்டத்தகாதவர்கள் தங்களுக்கான பெரிய இலக்குகளை அடைவதற்காகவே இது தொடங்கப்பட்டது. இது நீடித்திருக்க முடியுமா என்பதற்கான பதில், சத்தியாகிரகத்தினால் ஏற்பட்ட இழப்பு மர்றும் காயத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளது. மஹாத்தில் ஒரு சத்தியாக்கிரகத்தால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள முடியாது என்பதை மக்கள் நினைத்திருந்தால் மீண்டும் ஒருபோதும் அவர்கள் மற்றொரு சத்தியாக்கிரகத்தில் சேர மாட்டார்கள். இந்த கேள்வியை எடைபோட வேண்டியிருந்தது.
இதில் தனித்து நிற்பது என்னவென்றால், வெளிப்படையான பகுத்தறிவு, போராட்டத்தின் திட்டமிட்ட துல்லியமான அணுகுமுறை மற்றும் அதை நடத்திக் காட்டுவதற்கான விருப்பம். அதை மழுங்கடிக்கவோ அல்லது குழப்பவோ யாராலும் முடியாது. சத்தியாக்கிரகத்தை திரும்ப பெறுவது தீண்டத்தகாத தலைவர்களை கேலி செய்வதற்கான வாய்ப்பை சாதி-இந்துக்களுக்கு அளித்து விடுமோ என்ற அச்சத்திற்கு வெறுமனே அவர்களின் பராட்டுக்களை பெறுவதற்காக சத்தியாக்கிரகத்தை தொடங்கவில்லை என்று அம்பேத்கர் பதிலளித்தார்,.
குறிப்புகள்:
The Social Context of an Ideology, Ambedkar’s Social and Political Thought, MS Gore, Sage Publications
முதன்முதலில் ஜனவரி 26, 2016 அன்று இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. (சமத்துவத்தை நோக்கி: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை டிசம்பர் 25, 1927 அன்று பகிரங்கமாக எரித்தது ஏன்?) அதை மீண்டும் டிசம்பர் 24, 2017 அன்று சப்ரங் இந்தியா தளம் வெளியிட்ட கட்டுரையை இங்கு தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம்.
ரானா அயூப், தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர். தற்போது மும்பையிலும் டெல்லியிலும் வசிக்கும் ஒரு எழுத்தாளர். சுதந்திர பத்திரிகையாளர். 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராகவும் அரசியல் பகுப்பாய்வாளராகவும் பல புகழ்பெற்ற கட்டுரைகளின் ஆசிரியர். அவரது புலனாய்வுக் கட்டுரைகளின் ”அம்பலப்படுத்துதல்” காரணமாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா 2010 ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். (நூலிலிருந்து…)
”புனைகதைகளைவிட உண்மை விசித்திரமானதாக இருந்திடும். ஏனெனில், புனைகதைகள் சாத்தியக்கூறுகளுக்கு இணங்கத்தான் செல்லமுடியும், ஆனால் உண்மை அப்படியல்ல’ என்கிறார் மார்க ட்வெயின். ஆயினும், உண்மையின் தன்மை உலகம் முழுதும் உள்ள தத்துவஞானிகளை, அனைத்துக் காலங்களிலும் ஒரு குலுக்கு குலுக்கியே வந்திருக்கிறது. ‘ஹோலி கிரெய்ல்’, போன்று, அது பல்வேறு காலங்களிலும், பல்வேறு நபர்களால் பல்வேறு விதத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது. உண்மையைக் கண்டறிந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள், மிகக் கடினமான சோதனைகளுடன் தங்கள் சொந்த மனசாட்சி அவர்களுக்கு வழிகாட்டுவதைத் தவிர, வேறெவரிடமிருந்தும் உதவிகள் வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிராமல், தன்வழியே விழிப்புடன் சென்றுதான் ஆக வேண்டும்.
2002-ல் குஜராத்தில் நடைபெற்ற; மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளின் உண்மை வடிவங்கள் மற்றும் நடைபெற்ற என்கவுண்டர்கள் வாசகர்களை மிகவும் உலுக்கிவிடும். இதன் ஆசிரியரின் கூற்றுப்படி, இந்தப் புத்தகம் ஆசிரியரின் ரகசிய கேமரா மற்றும் ரகசிய மைக்ரோபோன் ஆகியவற்றுடன் அவர் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் மூலமாக குஜராத்தில் நடந்த கலவரங்களின் பின்னணியிலிருந்த ஆழமான அம்சங்களை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையானவைகளா, அல்லது நிகழ்வுகளின் இயற்கைத் தோற்றம் மட்டுமா என்பது வாசகர்களின் முடிவுக்கே விடப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியர் தான் சந்தித்த நபர்களிடம் மேற்கொண்ட உரையாடல்களைத் தொகுத்து வாசகர்கள் ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் தந்திருக்கிறார்.
… மும்பையில் 1992 டிசம்பர் – 1993 ஜனவரி ஆகிய மாதங்களுக்கு இடையே நடைபெற்ற கலவரங்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆணையம் சேகரித்த கசப்பான அனுபவங்களுடன், அத்தகைய கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்ற உணர்ச்சியே இல்லாது இருக்கும் அரசுகளைப் பார்க்கும் போது, ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாக உய்த்துணர முடிகிறது.
… இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானவைதான் என ஒருவரால் உறுதி செய்யப்பட முடியாமல் இருக்கலாம். ஆனால், தான் உண்மை என்று நம்புகின்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்காக, அதில் ஈடுபட்டிருந்தவர்களின் வேஷத்தைக் கலைப்பதற்காக ஆசிரியர் காட்டியுள்ள துணிவு மற்றும் உணர்வு பூர்வமான ஈடுபாடு ஆகியவற்றை எவரொருவரும் போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆட்சியாளர்களிடம் அதிகரித்து வரும் நேர்மையின்மை, சூழ்ச்சிகள் மற்றும் அரசியல் சதிவேலைகளுக்கு எதிராக, புலனாய்வு இதழியலின் கீழ் வேண்டிய வீரத்துடனும், துணிவுடனும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள். (பி.என். ஸ்ரீகிருஷ்ணா எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து…)
குஜராத்தில் நடைபெற்ற என்கவுண்டர்கள் அனைத்தும் மிகவும் கேவலமான வடிவங்களிலேயே அமைந்திருந்தன. சமீர்கான் பர்தான், சாதிக் ஜமால், இஸ்ரத் ஜகான், ஜாவேத் என்கிற பிரனேஷ் பிள்ளை , சொராபுதீன், துளசி ராம் பிரஜிபதி – இவைகள் நாட்டின் உயர் மட்ட அளவிலான நீதிமன்றங்களால் (அதாவது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களால்) மேற்பார்வைக்கு உள்ளாக்கப்பட்ட குஜராத்தை சேர்ந்த என்கவுண்டர் வழக்குகளாகும். இவற்றைச் சுருக்கமாகப் பார்த்தாலே, இவை அனைத்தும் மிகவும் கவனத்துடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என்பதைத் தெரிந்துகொள்ள போதுமானவைகளாகும். இவற்றில் மிகவும் முக்கியமான வழக்கு ஒன்றைக் குறித்து 2011 டிசம்பரில் தெகல்காவில் நான் எழுதியிருந்ததாவது:
நூலாசிரியர் ரானா அயூப்.
ஆயினும், குஜராத் போலி என்கவுண்டர்களில் மிகவும் சங்கடத்தை அளித்த விஷயங்கள் என்னவெனில், அவை தொடர்பாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களும், கொல்லப்பட்டவர்கள் குறித்து அவிழ்த்து விடப்பட்ட பழிதூற்றல்களுமாகும். இவ்வாறு போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே லஸ்கர்-இ-தொய்பா (LeT-Lashkar-e-Toiba) பயங்கரவாதிகள் என்று பகிரங்கமாக முத்திரையிடப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே முதலமைச்சர் நரேந்திர மோடியையும், அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானியையும் மற்றும் பிரவீன் தொகாடியா, ஜெய்தீப் பட்டேல் போன்ற அதிதீவிர இந்துத்துவாவாதிகளையும் கொல்வதற்காக வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டன.
2002 குஜராத் மதக் கலவரங்களை அடுத்து, மாநிலம் மதரீதியாகக் கூர்மையாகப் பிளவுபட்டிருந்த சமயத்தில், இத்தகைய பிரச்சாரங்கள் எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றியது போல் வேகமாகப் பரவின. பயங்கரவாதத் தாக்குதல்களில் நாட்டில் எங்குமே முஸ்லீம் பையன்கள் பங்கேற்கவில்லை என்ற போதிலும், அவர்கள் அனைவரும் ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தப்பட்டார்கள், முஸ்லீம் சமூகத்தினர் அனைவருமே தேச விரோதிகள் என்ற கரியைப் பூசினார்கள். அதன் மூலம் மோடியை “இந்து இதய மாமன்னன்” (Hindu Hriday Samrat) -ஆக உயர்த்திப்பிடித்தார்கள். இவர் ‘இந்து எதிரிகளுக்கு ‘ ஒரு பாடம் கற்பிப்பதில் வல்லவராக மட்டுமல்லாமல், தொடர்ந்து ஜிகாதிக் குழுக்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை பெற்றவர் என்று போற்றப்பட்டார். (நூலிலிருந்து பக்.39-40)
… அடுத்த நாள் காலை நான் தில்லி போய்ச் சேர்ந்தேன். நேரடியாக தெகல்கா அலுவலகத்திற்குப் போனேன். மோடியுடனான பதிவின் “காணொலிக் காட்சியை என் மடிக் கணினிக்கு மாற்றினேன். தருண் அவரது அறையிலிருந்தார். ஷோமாவும் அவருடன் சேர்ந்து கொண்டார். நான் அவர்களிடம் அந்த காணொலியைக் காட்டினேன்.
… ”என்னை ஏன் திரும்ப அழைத்தீர்கள்?” என்று நான் கேட்டேன். “அவரது அலுவலகத்திலிருந்து ஒருசில நாட்களில் என்னைத் திரும்பவும் அழைப்பார்கள். நான் அவரை மீண்டும் சந்திக்கலாம்.”
“இங்கே பார் ரானா, தெகல்கா, பங்காரு லக்ஷ்மண் தொடர்பாக ரகசியப் பதிவினை (ஸ்டிங்) மேற்கொண்ட பின்னர், அவர்கள் நம் அலுவலகத்தை மூடிவிட்டார்கள். மோடி, நாட்டின் மிகவும் வலுவானவராகவும், பிரதமராக இருக்கிறார். நான் அவர் மீது கை வைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவாம்.”
என்னால் அவர்களின் கூற்றுக்கு இணக்கமாகப் போக முடியவில்லை. ஒட்டுமொத்த ரகசியப்பதிவும் ஆபத்தானதில்லையா? ஆயினும் ஆனால் அவர்கள் எனது ஒவ்வொரு வாதத்திற்கும் ‘இல்லை’, ‘இல்லை ‘ என்றே கூர்மையாகப் பதில் கூறினர்.
… இரு நாட்கள் கழித்து, நான் யூனினார் சிம் கார்டை என் போனிலிருந்து வெளியே எடுத்து, அதனை நசுக்கி, குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டேன். போனையும் அவ்வாறே செய்துவிட்டேன். அன்றிலிருந்து மைதிலி முழுவதுமாக இல்லாது போனாள். புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என்று ஆசிரியர் முடிவெடுத்தார்.
அன்றிலிருந்து நான் அமைதியாக இருந்தேன். இன்றுவரை. (நூலிலிருந்து பக்.205)
நூல் : குஜராத் கோப்புகள் (மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்) ஆசிரியர் : ரானா அயூப் தமிழில் : ச. வீரமணி
வெளியீடு : பாரதி புத்தகாலயம், எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924. மின்னஞ்சல்: thamizhbooks@.com
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 09
மாபெரும் ருஷ்ய எழுத்தாளா லேவ் டால்ஸ்டாய் கண்டுபிடித்த மூன்று விதிகள் இப்படிப்பட்ட நிலையின் சாரத்தை விளக்குகின்றன.
முதல் விதி: ”ஆசிரியர் எப்போதுமே தன்னையறியாமல் தனக்கு மிகவும் வசதியாக பாடம் சொல்லித் தரும் முறையைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்”. தன்னையறியாமலேயே இதைச் செய்வது பரவாயில்லை, இதை மன்னித்து விடலாம். ஆனால் அவர் வேண்டுமென்றே, பகுத்தறிவுடன் இதைச் செய்ய முற்பட்டால் இதை அவருடைய தொழில் துரோகம் என்று கூறலாம்.
இரண்டாவது விதி: “பாடம் சொல்லித் தரும் முறை ஆசிரியருக்கு எவ்வளவுக் கெவ்வளவு வசதியானதோ அவ்வளவுக்கவ்வளவு அது மாணவர்களுக்கு வசதிக் குறைவானது”. எந்த முறைகளில் ஆசிரியரின் உழைப்பு எளிதாக்கப்படுவதால் குழந்தைகள் “இம்சிக்கப்படுவார்களோ” அவற்றை சகல விதங்களிலும் தவிர்க்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, இதிலிருந்து மீளும் வழியைத் தேட வேண்டும். லேவ் டால்ஸ்டாயின் மூன்றாவது விதி இதைப் பற்றிக் கூறுகிறது. இதை நான் ”முதுமொழியாக” ஏற்கிறேன்:
“எந்தப் பாட முறையில் மாணவர்களுக்குத் திருப்தியோ அந்தப் பாடமுறை தான் சரியானது.”
தன் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் இல்லாமல் பாடம் சொல்லித் தருவதென ஆசிரியர் முடிவு செய்யும் போது அவர் இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டும். ஒன்று, குழந்தைகள் முன் உள்ள தனது புனிதமான கடமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது ஆசிரியர் வேலைக்காலம் என்றழைக்கப்படும் பல ஆண்டுகளை அமைதியாக வேலை செய்து கழிக்க வேண்டும். புதிய, ஆக்கப்பூர்வமான பாதையைத் தேர்ந்தெடுத்த, ஒவ்வொரு குழந்தையின் மனதையும் தொடும் வழியைத் தேடும் ஆசிரியர் புத்திசாலியான, அறிவுத் தாகமுள்ள குழந்தைகளின் புதிய தலைமுறையைக் கண்டு உற்சாகமடைவார். தன் கைகளில் தடியேந்திய ஆசிரியரோ ஒவ்வொரு ஆசிரியர் கூட்டத்திலும், “என்ன குழந்தைகள், ஒன்றும் செய்ய விரும்புவதில்லை, படிக்க ஆசைப்படுவதில்லை! ஆறு வயதுக் குழந்தைகள் கூட, அவர்களைப் பார்த்துக் கத்தாவிடில், அச்சுறுத்தாவிடில் பாடங்களில் அமைதியாக உட்காருவதில்லை” என்று சலித்துக் கொள்வார்.
இந்த இரண்டாவது ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்ததும் தன் ஆறு வயதுக் குழந்தைகளைப் பார்த்துப் பின்வருமாறு சொல்லுவார்: “எனக்கு விளையாட்டுத் தனம் பிடிக்காது! யார் நன்றாகப் படிக்கவில்லையோ, யார் சரியாக கவனிக்கவில்லையோ அவர்களுக்கு பெயில் மதிப்பெண் போடுவேன். பெயில் மதிப்பெண் என்றால் என்ன தெரியுமா? தெரிந்து கொள்வீர்கள்! எங்கே, இப்போது கைகளைக் கட்டிக் கொண்டு கேளுங்கள்!”
முதல் ஆசிரியரோ நிச்சயமாக இப்படியெல்லாம் ஒரு போதும் சொல்ல மாட்டார். “குழந்தைகளே, எங்கே எனக்கு சிரித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்! எனக்கு உங்கள் சிரிப்பு பிடிக்கும். தயவு செய்து சிரியுங்கள்! சரி, இப்போது சொல்லுங்கள், எது உங்களுக்குப் பிடிக்கும் – கதையா, கவிதையா? சரி, கதை சொல்வேன். வசதியாக உட்காருங்கள்! ஒரு ஊரில்…” என்று இவர் கூறுவார். இந்த ஆசிரியர் குழந்தைகளின் மனதைத் தொட மிகக் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்: இங்கே தன் கல்வி போதனை முறையியலையும் குழந்தை வளர்ப்பு முறையையும் தன்னைத் தானேயும் அன்றாடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுடன் கலந்து பழகி மகிழ்ச்சியைத் தருவதற்காக இதைச் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்யும் போது, வகுப்பறையில் எப்படி ஒழுங்கைப் பேணிக்காப்பது, “தடியின்றி”, மதிப்பெண்கள் இன்றி குழந்தைகளை எப்படி சாந்தப்படுத்துவது எனும் கேள்வி எழுகிறதா? குழந்தைகளுக்கு ஏதோ நல்லதைக் கூற விரும்புகிறோம், எதையாவது சொல்லித் தர வருகிறோம், அவர்களோ சத்தம் போடுகின்றனர்… “அமைதியாக இருங்கள்!” என்று கூறுகிறோம், அவர்கள் கேட்கவில்லை. என்ன செய்வது? நன்கு சத்தமாகக் கத்துவதா, விரலை ஆட்டி பய முறுத்துவதா, நடத்தை மோசம் என்று எழுதப் போவதாகக் கூறுவதா? அப்போது எல்லாம் அடங்கி, அமைதி நிலவுமா? இங்கே உறுதியான பதிலைத் தருவதோ நேரடியான சிபாரிசுகளைக் கூறுவதோ எவ்வளவு கடினம் தெரியுமா! ஏனெனில் கட்டுப்பாட்டைப் பற்றிய பிரச்சினையே அதிகாரத் தொனியிலான கல்வி முறையில் தான் வருகிறது. அதிகாரத் தொனியில் குழந்தைகளை வளர்த்து, படிப்பு சொல்லித் தரும் போது அடிக்கடி குரலை உயர்த்த நேரிடுகிறது:
“ஏ! உன்னால் வாயை மூட முடியுமா முடியாதா?” ஆனால் குழந்தைகள் நடந்தவற்றை ஒரே நிமிடத்தில் மறந்து விட்டு, அதிக சுவாரசியமான காரியத்தில் ஈடுபடுவதற்காக இந்த அதிகார வலையிலிருந்து மீண்டும் விடுபட முயன்றால், வகுப்பில் ஆசிரியர் எவ்வளவு தடவை தான் மிரட்ட முடியும், திட்ட முடியும்? எனவே, இப்படி ஒழுங்கை நிலை நாட்டும் முறைகளை விட்டு விட்டுக் குழந்தைகளின் பாலான உறவு முறைகளை மாற்றலாம்; கல்வி போதித்தல், குழந்தை வளர்ப்பு முறைகளை மாற்றலாம், வகுப்பில் பொதுவில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த முயலலாம்.
இவை எல்லாவற்றையும் தான் லேவ் டால்ஸ்டாய் “பள்ளியின் ஆன்மா” என்றார், இவருடைய கருத்துப்படி இது தான் “கல்வியின் சாரம், வெற்றி”. “இந்த ஆன்மா ஒரு சில விதிகளுக்கும் ஆசிரியரின் தீய செல்வாக்கிற்கும் உட்பட்டது, அதாவது இந்த ஆன்மாவை அழிக்காமலிருக்க ஆசிரியர் ஒரு சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பள்ளியின் ஆன்மா எப்போதும் மாணவர்களின் சிந்தனையில் ஆசிரியரின் தலையீட்டிற்கு தலை கீழ் விகிதத்திலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்திலும், பாட நேரத்திற்கு தலை கீழ் விகிதத்திலும் இருக்கும், இத்தியாதி.
இந்த பள்ளியின் ஆன்மா என்பது ஒரு மாணவனிடமிருந்து இன்னொரு மாணவனுக்கு விரைவில் செல்வது, ஆசிரியருக்கும் கூடச் செல்வது, அனேகமாகக் குரலொலிகளிலும் கண்களிலும் இயக்கங்களிலும் போட்டியின் உக்கிரத்திலும் வெளிப்படுவது; இது ஏதோ ஒரு பெரும் உணர்வு, அவசியம், விலை மதிப்பற்ற ஒரு விஷயம், எனவே, ஒவ்வொரு ஆசிரியரின் லட்சியமாக இருக்க வேண்டியது. உமிழ் நீர் உணவு செரிக்க அவசியம், ஆனால் உணவு இல்லாத போது இது தேவையற்றதாய், அசிங்கமானதாய் இருக்கும். அதே போல் உணர்ச்சிகரமான புதிய ஆன்மா வகுப்பிற்கு வெளியே சலிப்பானது, விரும்பத்தகாதது, ஆனால் மூளைக்கான உணவை கிரகிக்க அவசியமானது” என்று டால்ஸ்டாய் எழுதினார்.
குழந்தைகளுடனான உறவில் இந்த மன நிலையை நிலை நாட்டினால் வகுப்பில் ஒழுங்கு முறை பற்றிய பிரச்சினை முற்றிலும் வேறு விதமாக நிற்கும்: “இந்தப் புத்தூக்கம் பாடமாக இருந்தால் இதை விட சிறந்தது வேறெதுவும் வேண்டாம். இந்தப் புத்தூக்கம் வேறு ஒரு விஷயமாக மாறினால், இதை சரிவர வழிநடத்தாத ஆசிரியர் தான் குற்றவாளி. இந்தப் புத்தூக்கத்திற்குத் தொடர்ந்து உணவளித்து, படிப்படியாக ஊக்குவிப்பது தான் ஆசிரியரின் கடமை…”.
சரி, ஆறு வயதுக் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் வேண்டுமா இல்லையா?
இல்லை, குழந்தைகளுக்கு இவை தேவையில்லை. ஏனெனில் இவை இவர்களின் அறிவுத் தாகத்திற்கு இடையூறாக உள்ளது, பள்ளியில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக வாழத் தொந்தரவாக உள்ளது.
ஆசிரியர்களுக்கு மதிப்பெண்கள் வேண்டுமா? தமக்குத் தேவையா இல்லையா என்று என் சக ஆசிரியர்களே தீர்மானிக்கட்டும். என்னைப் பொறுத்தமட்டில், குழந்தைகளுடன் நான் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் மகிழ்ச்சியடைய இவை இடையூறாக இருக்கும்.
இப்படியெனில், தம் குழந்தைகள் எப்படிப் படிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பெற்றோர்களுக்கு மதிப்பெண்கள் தேவையோ?
ஒளிவு மறைவின்றிச் சொல்வேன்: தம் குழந்தைகள் எப்படிப் படிக்கின்றனர் என்பது பற்றிய மதிப்பெண்களைப் பெற்றோர்களுக்குத் தருவது நல்லதல்ல. இந்த மதிப்பெண்களை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? வெறும் மதிப்பெண்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனரா, படிக்கவில்லையா என்பது குறித்து திட்டவட்டமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை.
உதாரணமாக, கணிதப் பாடத்தில் “பெயில்” என்றால் இவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? பத்துக்குள் கூட்ட குழந்தைக்குத் தெரியாது, “கடைக்கு எட்டு கூடை ஆப்பிள்கள் வந்தன, சில கூடைகள் விற்றுப் போயின, மூன்று கூடைகள் எஞ்சியுள்ளன. எவ்வளவு கூடைகள் விற்றுப் போயின?” என்பது போன்ற கணக்குகளைப் போடும் போது பிழை செய்கிறான் என்றெல்லாம் இந்த மதிப்பெண் பெற்றோர்களுக்கு விளக்குமா என்ன? “கணக்கில் முதல் கூட்டும் எண் எங்கே, இரண்டாவது கூட்டும் எண் எங்கே, மொத்தம் எவ்வளவு?” என்ற ஆசிரியரின் கேள்விகளுக்கு ஏன் இன்று குழந்தை பதில் சொல்லவில்லை என்பதை இந்த மதிப்பெண் விளக்குமா? குழந்தைக்கு எப்படி உதவுவது என்று இந்த மதிப்பெண் பெற்றோர்களுக்கு ஆலோசனை கூறுமா? மதிப்பெண்களால் இப்படிப் பேச முடியாது.
ஆனால் இவை உள்ளவற்றை மிகைப்படுத்திச் சொல்ல வல்லவை: “குழந்தையை கவனி! அவன் ஒன்றையும் சொல்ல விரும்பவில்லை!” நல்ல, உயர்ந்த மதிப்பெண்கள் பெரும் மகிழ்ச்சியைத் தருமென்று நினைக்கின்றீர்களா? பல சமயங்களில் இவை பெற்றோர்களை சாந்தப்படுத்தி குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெரும் சுய திருப்தியை ஏற்படுத்தும்: “இவன் எவ்வளவு புத்திசாலி! நன்றாகப் படிக்கிறான், எனவே நமது உதவி இவனுக்குத் தேவையே இல்லை!”
இப்போது ஒரு வருத்தம் தரத்தக்க சந்தர்ப்பத்தை நினைத்துப் பார்ப்போம். குழந்தைக்கு உடல் நலமில்லை. அப்போது ஆசிரியரைக் கூப்பிட மாட்டோம், மாறாக மருத்துவரை அழைத்து குழந்தையின் உடல் நலத்தைப் பரிசீலிக்கச் சொல்வோம். மருத்துவர் தொண்டையைப் பார்த்து விட்டு, நாக்கைப் பரிசோதித்து விட்டு, நுரையீரலை காதுக் குழாய் மூலம் கேட்டு விட்டு, ஜுரத்தை அளந்து விட்டு, பின் குழந்தையின் உடல் நிலைக்கு “பெயில் மதிப்பெண்” போட்டு விட்டுப் போகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அம்மா இந்த மதிப்பெண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்? இதை மாத்திரையாக உள்ளுக்குள் விழுங்க முடியாது, தைலமாக உடலின் மீது பூச முடியாது. “குழந்தைக்கு உடல் நிலை மோசம்! அவனுக்கு உதவ வேண்டும்!” என்று மட்டுமே இந்த பெயில் மதிப்பெண் கத்துகிறது. குழந்தையின் மோசமான உடல் நிலை பற்றிய இந்த மதிப்பீடு பெற்றோர்களை சரியான சிகிச்சைப் பாதைக்கு அழைத்துச் செல்லுமா? நிச்சயமாக இப்படிப்பட்ட உத்தரவாதம் கிடையாது.
எனவே உடல் நலம் சரியில்லாத குழந்தையின் பெற்றோர்களுக்கு பெயில் மதிப்பெண் தருவது பெரிதும் ஆபத்தானது. இது எல்லோருக்கும் புரியக் கூடியது, எனவே உடல் நலத்தைப் பற்றி மதிப்பெண்களின் மூலம் அறிய யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள். நோய்வாய்ப்பட்ட குழந்தையை பரிசீலித்த பின் நல்ல, அன்பான டாக்டர் குழந்தைக்கு என்ன நோய், இதற்கான காரணங்கள் என்ன, சிக்கலின்றி விரைவில் குணமடைய என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்களுக்கு விளக்குவார். இந்த டாக்டர் தன் பையிலிருந்து சீட்டை எடுத்து மருந்து எழுதுவார்,
இதை எப்படி, எவ்வளவு முறை சாப்பிடவேண்டும் என்று விளக்கிச் சொல்லுவார்.
கணிதப் பாடத்தில் பெயில் மதிப்பெண் பெற்ற குழந்தையின் பெற்றோர்களிடம் யார் வந்து, வீட்டில் என்ன, எப்படி சொல்லித் தர வேண்டும் என்று விளக்குவார்? பெற்றோர்கள் மந்திரவாதி – ஆசிரியர்களாக மாற வேண்டும்; இவர்களின் ஒரே வழி எப்போதும் போல் பொழுதுபோக்கு இன்பங்களைத் தடை செய்வதாகும். மந்திரவாதி-மருத்துவரின் மருந்துகள் மனிதனின் உடல் நலத்திற்கு எப்படி ஆபத்தானவையோ அதே போல் மந்திரவாதி – ஆசிரியரின் வழிகளும் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகும். சில சமயங்களில் இந்த இரண்டு துறைகளிலுமே எல்லாம் நன்றாக முடியும் – குழந்தை வளர்ப்பு முறை சரியான தாகப்படும், மருந்தும் நோயைக் குணப்படுத்தக் கூடும். ஆனால் இது தற்செய்லானது, ஒரு நியதியல்ல.
எனவே, பள்ளியின் ஆன்மாவைக் குலைக்காமல் இருக்க குழந்தைகளின் படிப்பைப் பற்றிய எவ்வித மதிப்பெண்களையும் பெற்றோர்களுக்குத் தராமலிருப்பதே நல்லது.
“சசிகலாவை முதல்வராக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க. அந்த யுனிவர்சிட்டி ஹால்ல எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கு. அப்ப ஓபிஎஸ்ஸ போய் நீங்க எல்லா ஏற்பாடையும் கொஞ்சம் சூப்பர்வைஸ் பண்ணுங்க.. எல்லாம் துப்புறவா இருக்கான்னு பாருங்கன்னு சொன்ன பின்ன அவர் என்கிட்டே வந்தார். ‘சார் இந்த மாதிரில்லாம் சொல்றாங்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை’ன்னார். நான் அவர்ட்ட பேசின முறையை உங்க கிட்டே சொல்ல முடியாது. நான் சொன்னேன் நீங்கெல்லாம் ஆம்பிள்ளையா ஏன் இருக்கீங்க தெரியலேன்னு கேட்டேன். என்ன சார் பண்ணாலாம்ன்னு கேட்டார், நான் சொன்னேன் போய் அந்த சமாதில உக்காருங்க ஏதாவது வழி பிறக்கும்னேன்” – திருச்சியில் நடந்த துக்ளக் விழாவில் குருமூர்த்தி.
இவ்வாறாக தாக்கி தகர்க்கப்பட்டது ஆண்ட பரம்பரை திமிர். “ஆண்ட பரம்பரை” என்று அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதே எப்போது கடப்பாரையைத் தூக்கச் சொல்லி அவாளிடம் இருந்து உத்தரவு வந்தாலும் தூக்க வேண்டும். அதைக் கொண்டு கட்டிடத்தை இடிக்கச் சொன்னாலும் சரி, சாக்கடைக்கு அடைப்பு எடுக்கச் சொன்னாலும் சரி, இசுலாமியர் தலித்துகளின் மார்பில் இறக்கச் சொன்னாலும் சரி – கேள்வியே கேட்காமல் அதை செய்ய வேண்டும். ஏன் எதற்கு என்கிற கேள்விகளை கேட்டாலோ அப்படியான கேள்விகளை வாய்மூடி மூளையில் சிந்தித்தாலோ “ஆண்ட பரம்பரை – சத்திரிய” பதவி பறிக்கப்பட்டு விடும் என்பது தான் பார்ப்பனியம்.
ஓபிஎஸ்-ஐ பார்த்து “நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா” என்று தான் கேட்டதாக குருமூர்த்தி சொன்னது சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் காட்டுத்தீயாக பரவியது. அதற்கு விளக்கமளித்துள்ள குருமூர்த்தி, தனக்கு ஓபிஎஸ்-ன் மேல் தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை உண்டென்றும், அந்த சந்தர்பத்தில் அதிமுகவினரெல்லாம் சசிகலா காலில் விழுந்து கொண்டிருந்ததைத் தான் குறிப்பிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அதாவது ஓபிஎஸ்-ஐ மட்டும் அல்ல, மொத்த அதிமுகவையும் “நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளையா” என தான் கேட்டதாக விளக்கமளித்துள்ளார் குருமூர்த்தி.
இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள திமுக உடன்பிறப்புகள், #ஓபிஎஸ்நீங்கஆம்பளையா எனும் ஹேஷ்டேக் ஒன்றின் கீழ் அவரையும் ஆண்ட பரம்பரைகளையும் கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவரின் அரசியல் கையாலாகாத்தனத்தையும், அரசியல் ஓட்டாண்டித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் விமர்சிப்பது வேறு அதையே அவரது பாலியல் ஆற்றலுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது வேறு. இரண்டாவது வகை ரசக் குறைவானது. மட்டுமின்றி “ஆம்பிள்ளைத்தனம்” கொண்டவர்கள் தான் அரசியலில் சாதிக்கவும் ஆண்ட பரம்பரையாகவும் இருக்க முடியும் என்பதை மறைமுகமாக சுட்டுகின்றது. ஏன் ஆண்ட பரம்பரையில் திருநங்கைகள் இருக்க கூடாதா? எனவே இந்த ரசக் குறைவான விமர்சனங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
நிற்க.
“நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா?” என்று குருமூர்த்தி ஓபிஎஸ்-ஐ பார்த்து கேட்ட பின் தான் அவர் “என்ன செய்யலாம் சார்?” என்று வினவியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதிலிருந்து ஒருசில விசயங்கள் தெளிவாகின்றது. ஒன்று, ஓபிஎஸ்-க்கு ஆண்டபரம்பரையாக மீசை முறுக்கவும் அரசியலில் பிழைத்துக் கிடக்கவும் ‘ஆம்பிள்ளையாக’ இருக்க வேண்டிய தேவை இல்லை என்கிற தத்துவார்த்த புரிதல் இருந்திருக்க வேண்டும்; அல்லது, செருப்பால் அடித்தாலும் பரவாயில்லை – கருப்பட்டி கிடைத்தால் போதும் என்கிற உன்னத மனநிலைக்கு அவரை புரட்சித் தலைவி அம்மா பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். அதிமுக என்கிற கட்சியின் நதிமூலம் ரிஷிமூலத்தை அறிந்தவர்களுக்கு இரண்டாவது காரணம் தான் சரியானது என்பதில் சந்தேகம் எழாது.
குருமூர்த்தியின் விளக்கத்தில் மொத்த அதிமுகவையும் ஆண்மையற்றவர்கள் என்று கூறியுள்ளார். முன்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து கட்சியில் இருந்த டிடிவி ஆதவாளர்களை நீக்க சில மாதங்களை எடுத்துக் கொண்ட போதும் இதே போல் ஓபிஎஸ்-ஐயும் ஈ.பி.எஸ்ஸையும் “ஆண்மையற்றவர்கள்” என குருமூர்த்தி விமர்சித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போதும் சரி இப்போதும் சரி அதிமுகவினர் ஒருவித மோன நிலையில் அமர்ந்து விடுகின்றனர்.
குருமூர்த்தியின் விளக்கத்தில் நாம் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். சசிகலாவின் காலில் விழுந்து கிடந்ததால் தான் “நீங்களெல்லாம் ஆம்பிள்ளையா?” எனத் தான் கேட்டதாக விளக்கமளித்துள்ளார். இதே போல் முன்னர் ஜெயாவின் காலில் விழுந்து கிடந்த போது அதிமுகவினரை நோக்கி “நீங்கள் எல்லாம் ஆம்பிள்ளையா?” என அவர் கேட்டதில்லை.
ஏன்?
காலில் விழுவதாக இருந்தாலும் கூட ஒரு பாப்பாத்தியின் காலில் விழுவதுதான் ஆண்ட பரம்பரைகளின் ஆண்மைக்கு அழகு என்பது குருமூர்த்தியாரின் சித்தம். அதே ஒரு சூத்திரச்சியின் காலில் விழுந்த உடன் ஆண்மை போய் விடுவதாக அவர் கருதுகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இவ்வாறாக “அண்டர் த பெல்ட் அட்டாக்கின்” மூலம் ஆண்ட பரம்பரை பெருமை வீழ்த்தப்பட்டிருப்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை – ஏனெனில், அது அரசியல் ரீதியில் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அதே நேரம் வருத்தமும் இல்லை – ஏனெனில், இதெல்லாம் ‘ஆண்ட’ பரம்பரைகளுக்குத் தேவை தான்.
இத்தனைக்கும் சமீபத்தில் அமெரிக்கா சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது சிங்கப்பூர் புகழ் மகன் ஓபிஆர் இருவரும் பூம்பூம் மாட்டுக்காரன் வேடம் போட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில பல விருதுகளைப் பெற்றுத் திரும்பியிருந்தனர். “பண்பின் சிகரம்”, “வீரத் தமிழன்” “மகாத்மா காந்தி மெடாலியன் ஆப் எக்சலன்ஸ்” “தங்கத் தமிழ்மகன்” “ரெய்சிங் ஸ்டார்” என விருதுகளின் வரிசையில் நவம்பர் 14-ம் தேதியை “ஓபிஎஸ் தினமாக” அறிவித்திருந்தது அமெரிக்க வாழ் இந்திய கரகாட்ட கோஷ்டி ஒன்று.
இத்தனை பேரும் புகழும் பெற்ற ஓபிஎஸ்-ஐ பார்த்து குருமூர்த்தி என்கிற பார்ப்பான் “நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளையா?” என்று கேட்டதன் மூலம் ஒன்று தெளிவாகின்றது. நடந்து கொண்டிருப்பது பார்ப்பனர்களின் காலம். இதில் பார்ப்பான் வகுத்ததே சட்டம். அதுவே நீதி, அறம் எல்லாம் – என்று பார்ப்பனர்கள் நம்புகின்றனர். பார்ப்பனர்களைப் போலவே அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஓபிஎஸ் ஈபிஎஸ் போன்ற சூத்திரர்களும் நம்புகின்றனர்.
***
டெயில் பீஸ் : தெற்கத்திய ஆண்ட பரம்பரையினரின் பட்டாப்பட்டியை குருமூர்த்தி உறுவிய அதே நேரம் வடக்கத்திய ஆண்ட பரம்பரையின் பட்டாப்பட்டியும் பறிபோன மற்றொரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது.
சத்தியம் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் சமரசம் என்பவர் அன்புமணி குறித்து இவ்வாறு தெரிவித்தார் : “டயர் நக்கின்னு சொன்ன அன்புமணிய அதே டயருக்கு பின்னாலே ஓடிவர வச்சாரு (எடப்பாடி) இல்லே?”.
எப்படி தெற்கத்திய ஆண்ட பரம்பரைகள் குருமூர்த்தி விசயத்தில் வாலைச் சுருட்டி தொடையிடுக்கில் சொருகிக் கொண்டு பம்மிக் கிடக்கின்றனரோ அதே போல் வடதமிழ்நாட்டு ஷத்திரிய பரம்பரையும் அதிமுகவுக்கு எதிராக வாயைத் திறக்காமல் இதுவரை மவுனம் காத்து வருகின்றனர்.
***
கதையின் நீதி : சத்திரிய பெருமை எல்லாம் ஹெச் ராஜா குறிப்பிடும் ஹைக்கோர்ட்டு தான் என்பதை அவர்களே உணர்ந்துள்ளனர். பொறுக்கித் தின்ன வேண்டும் என்றால் சூடு சொரணை இருக்க கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பதுதான் ‘ஆண்ட’ சாதி மனநிலை.
திப்பு சுல்தான் பிறந்தநாளையொட்டி, கடந்த நவம்பர் – 24 அன்று சென்னையில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ?
ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் சங்க பரிவாரங்கள் தொடர்ச்சியாக செய்து வரும் பிரச்சாரம், முசுலீம்கள் அன்னியர்கள் என்பதுதான். நம்மை அரவணைத்துப் பேசுபவன் அன்னியனா ? நம்மைக் கண்டாலே தீட்டு என ஒதுக்குபவன் அன்னியனா ? என்ற கேள்வியை முன் வைத்துப் பேசினார் ஆ. ராசா !
பாருங்கள் ! பகிருங்கள் !
வரலாற்றில் வெறுப்பை விதைக்கும் காவிகள்
அன்று முதல் இன்றுவரை பார்ப்பனியத்தால் திரிக்கப்பட்டு வந்த இந்திய சமூக வரலாறு குறித்து ஆதாரப் பூர்வமான வாதங்களை முன் வைத்துப் பேசினார் திருச்சி சிவா !
1993 முதல் 2019-வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் பாதாள சாக்கடைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கையில் பலியான தொழிலாளர்களில் 50 சதவீதத்தினர் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பல குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே கிடைத்துள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.
சாக்கடையை தூர் வாரும் போது பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை 2014-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
ஆனால் பல்வேறு மாநிலங்களின் தகவல்களின்படி, 1993 முதல் சாக்கடை தூர்வாரும் போது 20 மாநிலங்களில் 814 பேர் இறந்துவிட்டதாகவும் அவற்றில் 455 தொழிலாளார்களின் குடும்பத்தினருக்கு மட்டும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் சஃபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) RTI கேள்விக்கு அதிகாரபூர்வமாக ஒரு பதிலளித்துள்ளது.
இருப்பினும், சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிர்பலிகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை. மேலும் தொடர்ந்து கூடுதல் தகவல்களுக்காக மாநில அரசாங்கங்களை NCSK கேட்கிறது. நாடு முழுவதும் சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிர்பலிகளை கண்காணிப்பதும் தொடர்பான தரவுகளை சேகரிப்பதும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (Ministry of Social Justice and Empowerment) கீழ் செயல்படும் இந்த அமைப்பின் பொறுப்புகளாகும்.
1993 முதல் சாக்கடை தூர்வாரும் போது பலியான அனைத்து தொழிலாளார்களின் குடும்பங்களையும் அடையாளம் கண்டு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்கவும் சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் (Safai Karamchari Andolan) எதிர் இந்திய அரசாங்கம் வழக்கில் மார்ச் 27, 2014 அன்று மைய அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கு பதிலாக ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம் அல்லது ரூ. 2 லட்சம் கூட வழங்கப்பட்டுள்ளது என்று தி வயருக்கு கிடைத்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை ஒப்படைக்கும் பொறுப்பு ஒப்பந்தக்காரர், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில அரசாங்க அதிகாரிகளிடம் உள்ளது.
சாக்கடையில் மூச்சுத் திணறலால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (206) தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன என்று ஆணையம் வழங்கிய தரவுகள் கூறுகிறது. ஆனால் அவற்றில் 162 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்குவதில் குறிப்பாக குஜராத்தின் நிலைமை மோசமானதாக இருக்கிறது. இதுவரை 156 பலிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 30% அதாவது 53 குடும்பங்களுக்கு மட்டுமே 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மொத்தம் 78 உயிரிழப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 30 விழுக்காடு அதாவது 23 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது,
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க முழு இழப்பீடும் வழங்குமாறு மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்று NCSK அதிகாரி ஒருவர் கூறினார். தொடர்ந்து NCSK-ன் தலைவர் மன்ஹர் ஜாலாவை வயர் தொடர்பு கொண்டதில் அவர் பதிலளிக்கவில்லை.
ஜூலை 2019 வரை, நாட்டின் தலைநகரில் மொத்தம் 49 இறப்புகள் பதிவாகி அவற்றில் 28 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் கிடைத்துள்ளது. ஆனால் டெல்லியில் இதுவரை 64 பேர் பலியாகியிருப்பதாகவும் அதில் 46 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2019 செப்டம்பரில் ஜலா கூறியிருந்தார். .
இழப்பீடு விவரம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் டெல்லியில் மட்டுமே 38 துப்புரவுத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் என்பதிலிருந்து சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிரிழப்புகளை நாம் மதிப்பிட முடியும்.
மற்ற மாநிலங்களைப் பார்த்தால், ஹரியானாவில் 70 பேர் இறந்துள்ளனர். அதில் 51 குடும்பங்களுக்கு மட்டுமே ரூ. 10 லட்சம் கிடைத்துள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில், இதுபோன்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73 ஆகும். இதில் 64 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாக்கடை தூர்வாரும் போது இதுவரை மொத்தம் 25 பேர் இறந்துள்ளனர். ஆனால் இதுவரை யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.
மத்திய பிரதேசத்தில் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ள மொத்தம் ஏழு வழக்குகள் அனைத்திலும் முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பலியான 35 தொழிலாளர்களில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானில், கையால் மலமள்ளும் 38 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எட்டு பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் கிடைத்துள்ளது.
இதேபோல், தெலுங்கானாவில் 4, திரிபுராவில் 2, உத்தரகாண்டில் 6 மற்றும் மேற்கு வங்காளத்தில் 18 என சாக்கடை தூர்வாரும் போது தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். பதிவாகியுள்ளதில் முறையே 2, 0, 1 மற்றும் 13 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு சிறு தொகை இழப்பீடாக வழங்கிய பின்னர் இந்த விடயம் ஒதுக்கித் தள்ளப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற வழக்குகளை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.
“தன்னுடைய ஆணை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதை நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு அது தெரியாதா? நடப்பது சரியல்ல என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூறுகின்றன… அத்தகைய ஆணையை (கருத்தை) யாரும் பின்பற்ற மாட்டார்கள். நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை அளிக்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமானவர்களில் ஒரு நபர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று சஃபாய் கரம்ச்சாரி அந்தோலனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெஸ்வாடா வில்சன் தி வயரிடம் கூறினார்.
இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாது என்பதை மைய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கையால் மலமள்ளும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நபர்களின் மீதான வழக்கைப் பற்றியோ அல்லது தண்டனை குறித்தோ எந்த தகவலும் இல்லை என்று மக்களவை உரையாடலின் போது அரசாங்கம் கூறியுள்ளது.
அண்மையில், சாக்கடை தூர்வாரும் போது தொழிலாளர்கள் பலியான போது மைய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. “எந்த நாட்டிலும், நச்சு வாயு குழிக்குள் மக்கள் அனுப்பப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து வரை கையினால் கழிவகற்றும் நபர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாக்கடைப் பணிகளின் போது ஏற்படும் பலிகள் பற்றிய தரவுகளை ஒப்பிடுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மாநிலங்கள், செய்தித்தாள்கள் அல்லது பிற மூலங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தரவுகளை NCSK ஒருங்கிணைக்கிறது.
நான்கு செய்தித்தாள்களுக்கு ஆணையம் சந்தா செலுத்தியுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். அதனடிப்படையில் தகவல்கள் தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவிக்கப்படும். அந்த செய்தித்தாள்களில் தெரிவிக்கப்படாத சாக்கடைப்பணிகள் தொடர்பான மரணங்கள் குறித்து ஆணையம் அறியாமல் உள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1993 முதல் சாக்கடைகளை தூர் வாரும் போது மொத்தம் 814 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை 1,870 என்று சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் கூறுகிறது. சாக்கடை பணியின் போது 1,096 பேர் இறந்ததற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சகத்திற்கு அளித்துள்ளதாகவும் வில்சன் கூறினார்.
குறைந்தபட்ச அதிகாரங்களே NCSK யிடம் உள்ளன:
விதிகளின்படி கண்காணிப்பது மற்றும் வழிமுறைகளை வழங்குவதற்கான பொறுப்பு மட்டுமே NCSK-க்கு உள்ளது. அதன் வழிமுறைகளை செயல்படுத்தும் அதிகாரம் அதற்கு இல்லை. சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கிறது.
ஆகஸ்ட் 12, 1994-ல் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மூன்று ஆண்டுகள் மட்டுமே செயல்படுவதற்கு NCSK அமைக்கப்பட்டது. இருப்பினும், பல முறை சட்ட திருத்தங்கள் மூலம் அதன் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, இது ஒரு சட்டபூர்வமற்ற (பராளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமையில்லா) நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
சாக்கடைகளை கையால் தூர் வாருவதை, கையால் மலமள்ளுதல் தடுப்பு சட்டம் 2013 தடை செய்கிறது. தேவைப்பட்டால், 27 விதிகளை பின்பற்றப்பட வேண்டும் – சாக்கடைக்குள் நுழைய ஒரு பொறியியலாளரின் அனுமதியையும், விபத்து ஏற்பட்டால் தொழிலாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அருகில் அவசர ஊர்தி இருப்பதையும் இந்த விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.
சாக்கடையை தூர் வாரும் போது பின்பற்ற வேண்டிய விதிகளில் சிறப்பு உடை, ஆக்ஸிஜன் உருளை, மாஸ்க், முழங்கால் வரை காலுறைகள் மற்றும் பாதுகாப்பு பெல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும், அவசரகாலத்தில் ஆம்புலன்ஸிற்கு முதலில் தெரிவிப்பதும் அடங்கும். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் அரசாங்கமோ தனியார் நிறுவனங்களோ இந்த விதிகளை பின்பற்றுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கட்டுரையாளர் : தீரஜ் மிஸ்ரா
தமிழாக்கம் :சுகுமார் நன்றி :தி வயர்.
செப்டம்பர் மற்றும் நவம்பர் 2019 காலச்சுவடு இதழ்களில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மீதும் வடமொழி மீதும் கீழடி ஆய்வுகளின் அடிப்படையில் சில கருத்துகளைக் கூறுகின்றார். இந்தக் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் மிகவும் வருந்துவதாக அதன் பொறுப்பாசிரியர் நவம்பர் 2019 இதழில் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இந்தக் குறிப்பு இன்னொரு செய்தியையும் சொல்லாமல் சொல்கிறது. அதாவது, பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரை அறிவுபூர்வமானது. எதிர்வினைகள் உணர்ச்சிபூர்வமானது.
இந்த இடத்தில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன….
1. செப்டம்பர் 2019 இதழில் பக்.20 இல் ஒரு இடத்தில் வேதங்கள் எழுதப்பட்டது சமஸ்கிருதத்தில் என்கிறார். அதே பக்கத்தில் வேதங்கள் வாய்வழியாக வந்தது என்கிறார். ( உலக மொழிகள் அனைத்தும் வாய்வழியாகத் தான் வந்தன என்று அறிஞர்கள் செப்புவர் ) அப்படியானால் வேதச்சொற்களுக்கு பொருள் கூறும் “யாஷ்கநிருத்தம்” முன்னுரையில் குத்சர் என்ற ரிஷியானவர் மிகப் பழங்காலத்திலேயே வேதச்சொற்களுக்கு பொருள் இல்லை என்று கூறியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது ? வெறுமனே இப்படி கேள்வி எழுப்புபவர்களை “அறிவிலி”கள் என்று சாடுவது அறிவுபூர்வமானதா ?,
பி.ஏ.கிருஷ்ணன்
2. பிராகிருதம் சமஸ்கிருதம் இரண்டும் வேத சமஸ்கிருதத்தின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்று பிரசவம் பார்த்த மருத்துவர் போல கூறுகிறாரே, அப்படியானால் தமிழில் உள்ள தண்டியலங்காரம் நூலில் “இவ்வாற்றான் தமிழ்ச்சொல்லெல்லாம் “பிராகிருத” மெனப்படும்” என்று குறிப்பிட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லுவார் ?
3. அறிவியல் கண்ணோட்டம் இன்றி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பேசுகின்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களுக்கு அறிவியல்பூர்வமாகச் செய்திகளைச் சொல்லுகின்றோம் என்று வருபவரும் அதே தன்மையில் பேசுவது எந்த வகையில் நியாயமானது ?
இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை. ( உதாரணமாக ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழியை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட கிரந்தத்திற்கும் பின்னர் 500, 600 ஆண்டுகள் கழித்து வடஇந்தியாவில் உருவாக்கப்பட்ட தேவநாகரி எழுத்து வடிவத்திற்கும் உள்ள காலஇடைவெளி போன்றவை ) 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பல தமிழ் கல்வெட்டுகளை தன்னுடைய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அதேபோல சமஸ்கிருத கல்வெட்டுகளையும் காட்டியிருப்பார் என்று ஆவலுடன் நாம் பார்த்தால் ஒன்றையும் காணோம். கி.பி.150 வாக்கில் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருத கல்வெட்டைக் குறிப்பிடுகின்றார். மற்ற கல்வெட்டுகள் அழகிலும் அலங்காரத்திலும் மிகப் பிரமாதம் என்று சொல்லுகின்ற இவர் அவற்றையும் எடுத்துக்காட்டலாம் அல்லவா? வருகின்ற காலச்சுவடு இதழ்களில் அய்யா அவர்கள் குறிப்பிடுகின்ற பழங்காலத்து அழகிய சமஸ்கிருத கல்வெட்டுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ( அப்படியான கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்று கல்வெட்டு அறிஞர்கள் கூறியுள்ள செய்தியை அய்யா பொய்யாக்க வேண்டும். )
1 of 5
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
குறிப்பு : மிக விரிவாக எழுத வேண்டிய கட்டுரை ஒன்றுக்கான செய்தியை முகநூல் நண்பர்களுக்காக மிக மிக சுருக்கமாக எழுதியுள்ளேன்.
***
“கீழடி” ஆய்வுக்கு உதவியாக தமிழக இந்திய எழுத்துகளின் வரலாற்றைக் கூறும் நூல்களின் PDF வடிவம் உங்களுக்காக…..
நண்பர்களே….
சென்ற பதிவைச் (22.11.2019) சுருக்கமாக எழுதியதால் எழுத்துப் பற்றிய வரலாற்று நூல்களையும் அவற்றின் கருத்துகளையும் உங்களுக்கு விரிவாகச் சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. தமிழில் இன்று எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆசிரிய பெரு மக்களும் சென்ற பதிவை பெரியளவில் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இது இத்துறைச் சார்ந்து நண்பர்கள் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. எனவே இது சார்ந்து சிந்திப்பதற்கு துணையாக இந்திய, தமிழ்நாட்டு எழுத்து வரலாற்றை ஆராய்ச்சியுடனும் ஆதாரத்துடனும் விளக்கும் சில நூல்களை நீங்கள் தரவிறக்கம் செய்து கொண்டு வாசிப்பதற்கு வசதியாக இணையதள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
இதில்
1. அசோகன் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்.
2. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பிராமி எழுத்துகளின் வரலாறு.
3. கிரந்த எழுத்துகளின் வரலாறு.
4. வட்டெழுத்துகளின் வரலாறு.
இவ்வாறான எழுத்து வரலாற்று செய்திகளை எத்தகையவருக்கும் எளிதாகப் புரியும்படியான நூல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
1 of 11
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இதில் ஒரு நூல் ஆங்கிலத்தில் உள்ளது. தென்னிந்தியாவின் எழுத்து வரலாற்றை 1878 இல் முதன்முதலாக ஆராய்ந்த நூல் இதுதான் என்பது குறி்ப்பிடத்தக்கது.
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 07
பகைவர்கள் முழு வேகத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் எதிரெதிராகப் பாய்ந்து வந்தார்கள்.
“லா-5″-ம் “போக்கே-வூல்ப்-190”-ம் விரைவு மிக்க விமானங்கள். ஒலியின் வேகத்தைவிட விரைவாக ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள் பகைவர்கள்.
அலெக்ஸேய் மெரேஸ்யெவும் புகழ்பெற்ற “ரிஹ்த்கோ பென்” டிவிஷனைச் சேர்ந்த எவனோ ஒரு தேர்ந்த ஜெர்மன் விமானியும் தலைமோதல் தாக்கு சில கணங்களே நீடிக்கும். அந்த நேரத்திற்குள் மிகத் துடியான ஆள் கூடச் சிகரெட் பொருத்தி விட முடியாது. ஆனால் இந்தச் சில கணங்களில் விமானிக்குத் தேவைப்படும் நரம்பு இறுக்கமும் உள ஆற்றல்கள் எல்லாவற்றின் சோதனையும் தரைப் போர் வீரனுக்கு ஒரு நாள் முழுவதும் சண்டையிடப் போதுமானவை.
முழு வேகத்துடன் ஒன்றன் மீது ஒன்று நேரே பாயும் இரு விரைவுமிக்க விமானங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பகை விமானம் கண்ணெதிரே பெரிதாக்கிக் கொண்டு போகிறது. இதோ அதன் எல்லாப் பகுதிகளுக்கும் சட்டென்று பார்வையில் படுகின்றன. அதன் இறக்கைகளும் உந்துவிசிறியின் பளிச்சிடும் வட்டமும், பீரங்கிகளின் கரும் புள்ளிகளும் புலனாகின்றன. இன்னும் ஒரு கணத்தில் விமானங்கள் மோதிக் கொண்டு, சிறு சிறு சிம்புகளாகச் சிதறிவிடும். விமானத்தையோ மனிதனையோ இந்தச் சிம்புகளைக் கொண்டு ஊகித்தறியவே முடியாது, அவ்வளவு சிறியவையாக இருக்கும் அவை. அந்த நேரத்தில் விமானியின் சித்த அறிவு மட்டுமே அல்ல, அவனது உள ஆற்றல் யாவுமே சோதனைக்கு உள்ளாகின்றன. மனோதிடம் குறைந்தவன், ராட்சத நரம்பு இறுக்கத்தை தாங்க முடியாதவன், வெற்றிக்காக உயிர் வழங்கச் சக்தி அற்றவன், இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டு விசைப் பிடியை தன் பக்கம் இழுப்பான் – தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் மரணச் சூறாவளியின் தாக்கிலிருந்து தப்பும் நோக்கத்துடன். அடுத்த கணமே அவனுடைய விமானம் கிழிந்த வயிறு அல்லது வெட்டுண்ட இறக்கையுடன் கீழே விழும். அவன் தப்பிப் பிழைக்க முடியாது. அனுபவமுள்ள விமானிகள் இதை நன்கு அறிவார்கள். அவர்களில் மிக மிக வீரம் உடையவர்களே தலைமோதல் தாக்கு நடத்தத் தீர்மானிப்பார்கள்.
கிழக்குப் போர்முனையில் ஏற்பட்ட பெருத்த இழப்புகளின் விளைவாக ஜெர்மன் விமானப்படையில் உண்டான பள்ளத்தை இட்டு நிரப்புவதற்காகக் குறுகிய திட்டப்படி விமானப் பறப்புக்கு விரைவில் பயிற்றுவிக்கப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்பட்ட ’கோயெரிங்க் அறைகூவல் வீரர்கள்’ எனப் பெயர் கொண்ட சிறுவர்களில் ஒருவனல்ல தனக்கெதிரே வருபவன் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். “ரிஹ்த்கோபென்” டிவிஷனைச் சேர்ந்த தேர்ந்த விமானி. எத்தனையோ விமானப் போர்களில் அடைந்த வெற்றிகள் அவனது விமானத்தின் மேல் விமான வரையுருக்களின் வடிவில் பொறிக்கப்பட்டிருக்கும். இவன் விலக மாட்டான். மோதலிலிருந்து நழுவ மாட்டான்.
ஒரேயடியாக இறுக்கம் அடைந்திருந்த அலெக்ஸேய்க்கு, தனது விமானத்தினது உந்துவிசிறியின் பளிச்சிடும் அரை வட்டத்திற்கு அப்பால் பகை விமானி அறையின் ஒளிபுகும் முன் சுவரும் அதன் ஊடாகக் குத்திட்டு நோக்கும் இரு மனித விழிகளும் தென்படுவது போல் இருந்தது. அந்த விழிகளில் உக்கிரமான வெறுப்புக் கனல் வீசியது. இது நரம்பு இறுக்கத்தால் உண்டான மாயத் தோற்றமே. எனினும் அலெக்ஸேய் அந்த விழிகளைத் தெளிவாகக் கண்டான். தனது எல்லாத் தசைகளையும் மொத்தமான கட்டியாகும் படி இறுக்கிக் கொண்டு, “அவ்வளவு தான்! எல்லாம் முடிந்தது!” என்று எண்ணினான். நேரே நோக்கியவாறு அதிகரிக்கும் விரைவுடன் எதிரே சென்றான். இல்லை, ஜெர்மானியனும் விலகவில்லை. வாழ்வு தீர்ந்தது!
கணச் சாவுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் அலெக்ஸேய். திடீரென எங்கோ – கைக்கெட்டும் தொலைவில் என்று அலெக்ஸேய்க்குத் தோன்றியது – ஜெர்மானியன் தாக்கு பிடிக்க மாட்டாமல் உயரே கிளம்பினான். அவனது விமானத்தின் நீலவயிறு வெயில் பட்டு மின் வெட்டுப் போல அலெக்ஸேயின் எதிரே பளிச்சிட்டது. அக்கணமே அலெக்ஸேய் எல்லாச் சுடுவிசைகளையும் அழுத்தி மூன்று நெருப்புத் தாரைகளால் அதைத் துளைத்துக் கிழித்துவிட்டான். மறு கணத்தில் அவன் தன் விமானத்தைக் குப்புறச் செலுத்திக் கரணம் அடித்தான். தரை அவன் தலைக்கு மேலே பாய்ந்து செல்கையில் அதன் பின்னணியில் மெதுவாக, தன் வசமின்றிப் பறந்த பகைவிமானத்தைக் கண்ணுற்றான். வெற்றி வெறிக்களிப்பு அவனுக்குள் ஊற்றெடுத்துப் பீறிட்டது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு “ஓல்கா!” என்று கத்தினான். வானில் திடீர் வட்டங்கள் இட்டு, களைப்பூண்டுகள் மண்டிச் சிவந்த தரை மீது ஜெர்மன் விமானம் மோதி வெடித்து அதிலிருந்து கரும் புகைத்தூண் எழும்பும் வரை அதைத் தொடர்ந்து சென்றான்.
அப்புறந்தான் அலெக்ஸேயின் நரம்பு இறுக்கம் தளர்ந்தது. கல்லாகிவிட்ட தசைகள் தொய்ந்தன. அவனுக்குப் பெருங்களைப்பு உண்டாயிற்று. உடனேயே அவன் பார்வை பெட்ரோல் மானியின் எண் வட்டத்தின் மேல் பட்டது. முள் சூனியத்தின் வெகு அருகே நடுங்கியது.
பெட்ரோல் மூன்று நிமிடங்களுக்கே, அதிகமாய்ப் போனால் நான்கு நிமிடங்களுக்கே போதுமாயிருந்தது. நிலையம் சேர்வதற்குக் குறைந்தது பத்து நிமிடங்களாவது பறந்தாக வேண்டும். அதுவும் உயரே கிளம்புவதில் இன்னும் நேரம் செலவிட்டால்…. அடிபட்ட பகை விமானத்தைத் தரைவரை தொடர்ந்ததுதான் தப்பு!…
“சின்னப்பயல், முட்டாள்!” என்று தன்னையே திட்டிக் கொண்டான் அலெக்ஸேய்.
துணிவும் பதற்றமின்மையும் உள்ளவர்களின் மூளை ஆபத்துக் காலத்தில் வேலை செய்வது போலவே அலெக்ஸேயின் மூளையும் கூர்மையாக, தெளிவாகச் சிந்தித்தது. முதன்மையாக முடிந்தவரை அதிக உயரத்திற்குப் போய்விட வேண்டும். ஆனால் வட்டங்கள் இடாமல், மேலே மேலே ஏறுகையிலே விமான நிலையத்தை நெருங்க வேண்டும். நல்லது.
விமானத்தைத் தேவையான செல்திசையில் திருப்பி, தரை விலகிப் போவதையும் படிப்படியாகத் தொடுவானத்தில் மூடுபனி சூல்வதையும் கவனித்தவாறு அவன் தனது கணக்கீட்டை இன்னும் நிதானமாகத் தொடர்ந்தான். எரிபொருள் பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை. பெட்ரோல்மானி சிறிது பிசகுவதாகவே வைத்துக் கொண்டாலும் பெட்ரோல் எப்படியும் போதாது. வழியில் இறங்குவதா? எங்கே? குறுகிய வழி முழுவதையும் அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். தழைமரக் காடுகள், சதுப்பு நிலச் சோலைகள், மேடும் பள்ளமுமான வயல்கள். நீண்டகால அரணைப்புக்கள் இருந்த வட்டாராத்தில் உள்ள இந்த வயல்கள் குறுக்கும் நெருக்கும் எங்கும் தோண்டப்பட்டு, குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட குழிகள் நிறைந்து முட்கம்பிகள் பின்னிக்கிடந்தன.
இல்லை, இறங்கினால் சாவு நிச்சயம்.
பாராஷூட்டின் உதவியால் குதிப்பதா? அது செய்யலாம் இப்போதே கூட! வளைமுகட்டைத் திறக்க வேண்டும், ஒரு வளையம் வர வேண்டும், இயக்கு விசைப் பிடியை முன்னே தள்ள வேண்டும், தாவிக் குதிக்க வேண்டும் – அவ்வளவு தான். ஆனால் விமானம்! லாவகமும் விசையும் உள்ள இந்த அற்புதமான கரும் பறவை! இதன் போர்ப் பண்புகள் இன்று மூன்று முறை அவன் உயிரைக் காப்பாற்றின. விமானம் நேர்த்தியான, வலிய, பெருந்தன்மையும் விசுவாசமும் வாய்ந்த உயிர்ப்பிராணியாக அலெக்ஸேய்க்கு அந்தக் கணத்தில் தோன்றியது. அதை விட்டுவிடுவது துரோகச் செயலாகப்பட்டது. தவிர, முதல் சண்டையிலேயே விமானத்தை கோட்டை விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது விமானத்தை எதிர்பார்த்துச் சேமிப்பில் ஈயோட்டிக் கொண்டிருப்பது, போர்முனையில் நமது பெருவெற்றி உதயமாகியிருக்கும் இந்த மும்முரமான நேரத்தில் செயலற்றுச் சோம்பியிருப்பது, இப்பேர்பட்ட நாட்களில் வெட்டியாக வளையவருவது என்பதை நினைக்கவே அவன் கூசினான்.
“என்னவானாலும் சரி, இப்படி மட்டும் செய்யக் கூடாது” என்று யாரோ முன் வைத்த யோசனையை அருவருப்புடன் நிராகரிப்பவன் போல உரக்கச் சொன்னான் அலெக்ஸேய்.
எஞ்சின் நின்றுவிடும் வரை பறப்பது! அப்புறம்? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
அவன் மேலே பறந்தான். மூவாயிரம், பிறகு நாலாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து சுற்று முற்றும் கண்ணோட்டி எங்கேயானாலும் சிறு சம தரையாவது தென்படுகிறதா என்று பார்த்தான். தொடுவானத்தில் காடு மங்கிய நீலமாகத் தெரியலாயிற்று. அதன் மறுபுறம் இருந்தது விமான நிலையம். அதனை அடைய இன்னும் பதினைந்து கிலோ மீட்டர் பறக்க வேண்டும். பெட்ரோல்மானியின் முள்ளோ, நடுங்கக் காணோம். எல்லைக் குறி திருகாணி மீது அசைவின்றிக் கிடந்தது அது. ஆனாலும் எஞ்சின் இயங்குகின்றது. எதனால் இயங்குகின்றது? இன்னும், உயரே அப்படித் தான்!
உடல் நலமுள்ளவன் இதயத் துடிப்பைக் கவனிப்பதில்லை. அதே போல விமானியின் காது சரியாக இயங்கும் எஞ்சினின் ஒரு சீரான முழக்கத்தை கவனிப்பதில்லை. திடீரென அந்த முழக்கத்தின் தொனி மாறியது. அலெக்ஸேய் இதைச் சட்டென உணர்ந்து கொண்டான். காடு துலக்கமாகத் தென்பட்டது. அதுவரை ஒரு ஏழு கிலோ மீட்டர் பறக்க வேண்டியிருக்கும் இது அதிகமில்லை. ஆனால் எஞ்சினின் இயக்கப்பாங்கு மிக் கெடுதலாக மாறிவிட்டது. எஞ்சின் மட்டும் அல்ல, தனது மூச்சே நின்றுவிடுவது போன்று விமானி இந்த மாற்றத்தை உணர்ந்தான். திடீரென “ச்சிஹ், ச்சிஹ். ச்சிஹ்” என்ற பயங்கர ஓசை. சுரீரென்ற வலி போல அவன் உடல் முழுவதிலும் பரவியது அது.
இல்லை, மோசமில்லை. மறுபடி ஒரு சீராக இயங்குகின்றது. இயங்குகின்றது, இயங்குகின்றது, வெற்றி! இயங்குகின்றது!
காடோ, இதோ வந்துவிட்டது. பிர்ச் மர முடிகளின் மேல் சுருள் சுருளான பசிய நுரை வெயிலில் அசைந்தாடுவது தெரிகிறது. காடு, இனி விமான நிலையம் தவிர வேறு எங்குமே இறங்குவது முடியாது. மற்ற வழிகள் துணிக்கப்பட்டு விட்டன. முன்னே, முன்னே !
“ச்சிஹ், ச்சிஹ்,ச்சிஹ்!”
மறுபடி ஒரு சீரான இயக்கம். எவ்வளவு நேரத்துக்கு? கீழே காடு. மணல் மீது செல்கிறது பாதை, ரெஜிமென்ட் கமாண்டரின் தலை வகிடு போன்று நேராகவும் சமமாகவும். இப்போது விமான நிலையத்துக்கு ஒரு மூன்று கிலோ மீட்டர் தான் இருக்கிறது. கொத்தள சுவர் போன்ற காட்டோரம் அலெக்ஸேய்க்குத் தென்படத் தொடங்கிவிட்டது. அதற்கு அப்பால் இருக்கிறது விமான நிலையம்.
ச்சிஹ், ச்சிஹ், ச்சிஹ்,ச்சிஹ்! திடீரென ஒரே நிசப்தம். விமானப் புறக்கருவிகள் காற்றில் சீழ்கையடிக்கும் ஓசை கூடக் கேட்கும் படி அவ்வளவு அமைதி. இதுதான் முடிவா? தன் உடல் முழுவதும் சில்லிடுவதை அலெக்ஸேய் உணர்ந்தான். குதித்துவிடலாமா? வேண்டாம், இன்னும் கொஞ்சம் போகட்டும்…. விமானம் சாய்வாக கீழிறங்கும் படி வைத்து, காற்று மலை மேலிருந்து வழுகலானான். இந்த வழுகலைக் கூடியவரை அதிகச் சரிவாகச் செய்யவும் அதே சமயம் விமானம் புரண்டு சுழல இடங் கொடாமலிருக்கவும் முயன்றான்.
வானிலே இந்த முழு நிசப்தம் எவ்வளவு பயங்கரம்! சூடுஆறும் எஞ்சின் சடக்கென ஒலிப்பதும், விரைந்த இறக்கம் காரணமாகக் கன்னப்பொருத்துக்களில் இரத்தவோட்டம் விண்விண்ணென்று தெறிப்பதும் காதுகள் நொய்யென்று இரைவதும் கேட்கும் அளவுக்கு நிசப்தம். பிரம்மாண்டமான காந்தத்தால் விமானத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போல அதை எதிர் கொண்டு விரைந்து பாய்ந்தது தரை!
இதோ காட்டோரம். அதற்கு அப்பால் பளிச்சிடுகிறது மரகதப்பச்சைத் துணித்துண்டு போன்ற விமானத் திடல். நேரம் கடந்து விட்டதோ? அரைச் சுற்றில் நின்றுவிட்ட உந்துவிசிறி அலகு தொங்குகிறது. பறக்கையில் அதைப் பார்க்க எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! காடு நெருங்கிவிட்டது. இது தான் இறுதியோ?… அவனுக்கு என்ன நேர்ந்தது, இந்தப் பதினெட்டு மாதங்களாக அவன் மனிதசக்திக்கு மீறிய எத்தகைய கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறான், இவ்வளவுக்குப் பிறகும் அவன் தன் நோக்கத்தை ஈடேற்றுவதில் வெற்றி பெற்று விட்டான். உண்மையான….. ஆமாம், உண்மையான மனிதனாகி விட்டான் என்பதையெல்லாம் ஓல்கா அறியாமலே இருந்துவிடுவாளோ? இந்த நோக்கம் ஈடேறியதுமே இப்படி அசட்டுத்தனமாக நொறுங்கிச் சாக வேண்டியதுதானா?
குதிப்போமா? நேரம் கடந்துவிட்டது! காடு பாய்ந்து வருகிறது, அதன் மரமுடிகள் விரைந்த சூறைக்காற்றில் மொத்தமானப் பச்சைப் பட்டைகளாக ஒன்று கலக்கின்றன. இம்மாதிரி ஒரு காட்சியை அவன் எங்கோ கண்டிக்கிறான். எங்கே? ஆம், அந்த வசந்தத்தில், பயங்கரமான அந்த விபத்தின் போது. அப்போதும் பச்சைப் பட்டைகள் இதே மாதிரி விமான இறக்கைகளுக்கு அடியில் பாய்ந்து வந்தன. கடைசி முயற்சி. இயக்கு விசைப் பிடியைத் தன் பக்கம் இழுக்க வேண்டும்…