மேட்டுக்குடிகளின் குளியல் தொட்டியின் வழுவழுப்புகளுக்காக சிதைக்கப்பட்ட ஒரு மத்திய கிழக்கு நகரத்தில் ஒரு குளியல்!
அகத்தின் அன்பை வெளிப்படுத்தும் ரோஜாக்கொத்தின் சுகமான முட்கள் அல்ல இவை, இலாபவெறிப் போரில் அகதிகளாக்கப்பட்டவர்களின் வருகையைத் தடுக்க வன்மத்தின் உச்சகட்டமாகப் போடப்பட்ட தடுப்புவேலியின் முட்கள்.
“நீங்கள் பருகவிருக்கும் பானம் மிகவும் சூடாக உள்ளது” என்ற காபிக் கோப்பையின் எச்சரிக்கை இந்த மக்களுக்குத் தேவையில்லை. அவர்கள் தாம் பெறத் தவிக்கும் தண்ணீரின் சூட்டை ஏற்கெனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பனியில் வழுக்கிச் செல்லும் ஆனந்தத்திற்குத் துணை புரியும் ஊன்றுக்கோல் அல்ல. ஏகாதிபத்தியங்களின் போர் வெறிக்கு கால்களைப் பலிகொடுத்த சிறுவர்களின் வாழ்க்கைக்குத் துணைபுரியும் ஊன்றுகோல்.
கலைத்துப் போட்டு மீண்டும் கட்டி ஆடும் ஆட்டம் அல்ல இது ! கலைக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் எழுப்ப கொடுக்கப்படும் இளமைப் பலி !
உற்சாகத்தின் கூத்தாடுதல் அல்ல, கொலைக்களத்தின் கூப்பாடு !
ஓவியக் கலையின் சாட்சியமா இது ? இல்லை, ஓயாத போரின் சாட்சியம் இது !
மேற்குலகின் மேட்டுக்குடி குழந்தைகளின் ரசிக்கத்தக்க இடர்பாடற்ற தூக்கம் – இடர்பாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இக்குழந்தையின் தூக்கத்தின் விளைபலன்தான்..
புத்தகங்கள் தூக்கவேண்டிய கையில் புல்லட் கூடுகள்!
மனித இன நாகரிகத்தின் உயர்ந்தகட்டமான காதலின் நாகரீக வெளிப்பாடு ஒருபுறம் – போரின் கொடுமையில் தண்ணீரையே விலங்கினத்தைப் போலக் குடிக்க வேண்டிய அநாகரீக நிலை இன்னொருபுறம்.
கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வாக ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் நுட்பங்களை பின்பற்ற அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சொன்னார். இந்தியாவின் விவசாயத் துறையை முந்தைய அடிப்படை நிலைக்கு திரும்ப கொண்டு செல்லும் எனவும் அவர் பேசினார்.
‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிர மாநிலம், விதார்பாவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர். தமிழக வேளாண் இதழ்கள் இவரை ஹீரோவாக்கியுள்ளன. இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்கள் குறிப்பாக, மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம், வேப்பிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரம், வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மருந்து ஆகியவற்றை தயாரிக்கலாம் என்பதே பாலேக்கர் முன்வைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம். செயற்கை வேதிப்பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் இவர்.
சுபாஷ் பாலேக்கர்.
தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக அரசு சூளுரைத்த நிலையில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட்டை அடுத்த இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் பயிர் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, காற்றில் உள்ள நைட்ரஜன் மூலம் மண்ணை வளமாக்கும். அதோடு, விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும்” என சொல்லப்பட்டது.
தமிழகத்தில்கூட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த போதிய அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதுவும் அரசிடம் உள்ளதா என்பதும் தெளிவில்லாமலேயே உள்ளது.
‘வேதிப்பொருட்கள்’ என்ற பதம் இயற்கை விவசாயத்தை மிகைப்படுத்த பொதுவில் வைக்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஆனால், இது அடிப்படை வேதியியல் செயல்முறைகள் மீதான அலட்சியத்தின் அறிகுறியாகவும் மாறியுள்ளது.
நவீன வேளாண் தொழிற்நுட்பங்களுக்கு சாத்தியமான மாற்றாக ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை இதுநாள் வரை ஆய்வுத் துறையினர் கவனத்தில் கொள்ளவே இல்லை என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். “இது அந்த அளவுக்கு திறன்படைத்தது எனில், பசுமை புரட்சி என்ற ஒன்று ஏற்பட்டே இருக்காது. ஏனெனில் பசுமை புரட்சிக்கு முன்பாக, ஏதோ ஒரு வகையில் இயற்கை விவசாயத்தை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்துகொண்டிருந்தனர்” என்கிறார் ஒரு அறிவியலாளர்.
“எப்படியாயினும், அனைத்து அறிவியல் பகுப்பாய்வுகள் எதிர்திசையையே சுட்டிக்காட்டுகின்றன. இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் குறைகிறது என்பதே அது. உற்பத்தித்திறன் குறையும்போது எப்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்?” என வினவுகிறார் அவர்.
இயற்கை விவசாயத்தின் உற்பத்தித் திறன், மண்வளம், செடிகளின் நிலையில், விவசாயிகளின் வருமானம் குறித்த குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை. இந்த நிலையில், மெத்தப் படித்த நிர்மலா சீதாராமன் எந்த வகையில் இந்தத் திட்டத்தை சொன்னார் என்பது கேள்விக்குறியதாகிறது. பட்ஜெட் உரையில் அறிவிக்கிறார் எனில், அந்தத் திட்டத்துக்கு பின்புலமாக அமைந்த ஆய்வறிக்கைகள், ஆதாரங்கள், புள்ளி விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
பட்ஜெட்டுக்கு சிறிது காலங்களுக்கு முன்னதாக ஏப்ரல்- ஜூன் மாதத்தில் நிதி ஆயோக், ICAR மற்றும் NAARM ஆகியவற்றிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வொன்றை செய்யுமாறு பணித்துள்ளது. அந்த ஆய்வு முடியும் முன்பே, நிர்மலா சீதாராமன் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்கிறார்.
இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் ஒருவர், “இந்த ஆய்வு இரண்டு பிரிவுகளாக செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் சமூக பொருளாதார தாக்கம் மற்றும் மண் வளம், செடி மாதிரி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பகுப்பாய்வு செய்ய உள்ளோம். அவர்களிடம் வருமானம் குறித்தும் உற்பத்தியின் தரம் எப்படி மாறியுள்ளது, உற்பத்தி அளவு எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் கேட்டுள்ளோம். இதை சரிபார்ப்பதற்கு போதிய நேரம் தரப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார்.
இரண்டாவது பகுதி ஆய்வில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலத்தின் மண் மற்றும் செடிகளை வேதியியல் சோதனைகளுக்கு உட்படுத்த சேகரித்துள்ளதாக கூறுகிறது.
“அதிலும்கூட ஒரு பருவத்துக்கு பிந்தைய நிலங்களில்தான் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க முடிகிறது. ஆனால், ஒரே ஒரு பருவத்தை வைத்து சோதனை முடிவுகளை பொதுவானதாக்க முடியாது” என்கிறார் ஒரு ஆய்வாளர்.
மாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம், வெல்லம் மற்றும் பருப்பு மாவுகளை சேர்த்து செய்யப்படும் பயிர் ஊக்கியில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன, மண் மற்றும் செடியின் தேவைகளை எப்படி அது பூர்த்தி செய்யும் என்பது குறித்து குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியாது என்கிறார்.
“நாங்கள் நிதி ஆயோக்கிடம் முறையான ஆய்வுகளை முடிக்க எப்படியும் இரண்டாண்டுகளாவது வேண்டும் என்று கூறினோம். இந்த குறுகிய காலத்தில் எந்தவித தாக்கத்தையும் காண முடியாது. ஆறு மாதத்துக்குள் ஆய்வை முடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமான தகவல்களைத் தர இந்தக் காலம் போதாது” என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என சொல்லிக்கொண்டாலும் அது ஜீரோ பட்ஜெட் விவசாயமல்ல; வழக்கமான விவசாய முறையைக்காட்டிலும் 30-40% செலவு குறைவானது எனவும் முதல் இரண்டு வருடங்களில் உற்பத்தி அளவு 20-30% குறையும். ஆனால், அடுத்த ஆண்டு வழக்கமான நிலைக்கு வரும் என சொல்கிறார்கள். அது பற்றி ஆய்வாளர்கள் உறுதியளிக்கவில்லை. அதற்கு நீண்ட கால ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பிறகு எப்படி இயற்கை விவசாயிகளின் வருமானம் பெருகியுள்ளதாக சிலர் கூறிக்கொள்கிறார்கள். ‘இயற்கை’ முறையில் விளைவிக்கப்பட்டது என்கிற முத்திரைதான் காரணம் என்கிறார்கள் அவர்கள். வழக்கமான விலையைக் காட்டிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாகக் கூறும் பொருட்களின் விலை 30-40% அதிகம்.
ஒட்டுமொத்தமாக, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை நாடு முழுவதிலும் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாது என நிபுணர்கள் சொல்கிறார்கள். “உற்பத்தி திறன் குறைவதால், பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும். அதோடு, இதுபோன்ற உற்பத்திக்கு ஏற்ற வளர்ச்சியடைந்த, நிலையை உணர்ந்த சந்தை நமக்குத் தேவை. அது நம்மிடம் இல்லை” என்கிறார் ஒரு நிபுணர்.
ஆக, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. கூடுதலாக, மாட்டு மூளை சங்க பரிவாரங்களின் ‘பழங்கால’ விவசாய பாரம்பரியத்தை முன்னெடுக்கவும் பயன்படுகிறது. மாட்டு மூத்திரம் கேன்சரை உள்ளிட்ட மனித நோய்களுக்கு மருந்தாகும் என நம்பும் சங்கிகள், மாட்டுச்சாணத்தை நிலத்தில் போட்டு இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து வியப்பு கொள்ள முடியவில்லை.
கட்டுரை: கபீர்அகர்வால்
தமிழாக்கம் : அனிதா நன்றி : thewire.in
கோவலனைப் பாருங்கள். பெரிய கோடீஸ்வரனின் ஒரே பிள்ளை. அவன் ஏன் இரவில் புறப்பட்டு ஒருவருக்கும் தெரியாது மதுரைக்குச் செல்ல வேண்டும்? பொருள் தேட தந்தையைக் கேட்டால் கொடுக்க மாட்டாரா? அல்லது கண்ணகி மாமன் மாமியுடன் சண்டை போட்டுக் கொண்டாளா? ஒரு சமயம் கண்ணகி கூறுகிறாள் தோழியிடம், “நான் அழுதேனென்று என் மாமியிடம் கூறாதே. கூறினால் மனைவிக்கு வேண்டியதைக் கொண்டு கொடுத்து முகங்கோணாது வைத்து வாழத் தெரியாத நீயும் ஓர் ஆண்மகனா? என்று என் நாயகனைக் கோபிப்பாள் மாமி” என்று கூறுகின்றாள். இதனால் கண்ணகிக்கு மாமியிடம் சண்டையல்ல; அன்புடன் வாழ்ந்தவர்கள் எனத் தெரிகிறது. பின் ஏன் கோவலன் மதுரை சென்றான்? தந்தை பொருளால் வாழுகின்றான் என்று தன்னை உலகம் பழிக்குமெனக் கருதியேதான். மேலும் கோவலனுக்கு மணமான உடனேயே, பெற்றோர் இவர்களை தனியே வைத்து விடுகின்றனர். ஏன்? வேறுபடு திருவின் வீறு பெறக் காணவே. தந்தையின் பணத்தால் வாழுதலைப் பழியெனக் கருதினர் தமிழ் மக்கள். ஒருவேளை தந்தை இறந்தால், மீதி வைத்து விட்டுப் போனால் – அது மக்களைச் சாரும். ஆனால், இக்காலத்தே போல் தந்தை இருக்கும்போதே “பாகத்தைப் பிரி” எனச் சண்டை பிடிப்பது அன்று கிடையாது.
கலியாணம் செய்தபின் மனைவியிடத்து அன்பைச் செலுத்து என்பது ஆரியர் கொள்கை. காரணம் என்ன? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தமிழர்களைப் போல் வாழ்க்கையில் இன்பம் பெற வாழ்க்கைக்கு ஒரு கூட்டாளியே மனைவி எனக் கருதினார்களில்லை. தமிழன், ஒரு பெண்ணிடத்து முதலில் அன்பு செலுத்தியதன்றி, அவளை மணக்க விரும்பினானில்லை. பெண்ணும் அது போலவே .
ஒரு தமிழன் ஒரு பெண்ணை முதன் முதல் பார்த்த காலையில் ஐயப்படுவான். ஏன்? இருவரும் ஒருவரையொருவர் அறியாவிடத்து, அன்பு உண்டாகிறது! கம்பரும், இராமனைத் தெருவில் கண்ட அளவில் சீதைக்கு முன்பு அன்பு உண்டாகிறது. பின் ஐயப்படுகிறாள் என்று தெரிவிக்கின்றார். இராமனுக்கும் அவ்வாறே ஐயம் தோன்றுகிறது. ஐயம் நிகழ்வது அவசியம். அது இயல்பானதே. ஆனால் வால்மீகி, இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்ததாகவே தெரிவிக்கவில்லை. ஏன்? ஆரியருக்கு அன்பு செலுத்திய பிறகு மணம் செய்யும் வழக்கமில்லை. இந்த ஐயம் ஆணுக்கு மட்டுமல்ல; பெண்ணுக்கும் உண்டாகும்.
ஆனால், தொல்காப்பியத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், “ஆணுக்கு மட்டுந்தான் அறிவிருக்கின்றது” என்று கூறுகின்றார். ஆனால், தமிழ் மகனாகிய சேக்கிழாரோ, பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் மனைவியும் முதன் முதல் சந்தித்த காலத்து, இருவருக்கும் ஐயம் தோன்றியதாகத் தெரிவிக்கின்றார். இதுதான் சிறந்தது. பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்பதே தமிழன் வழக்கம். ‘சிறந்துழி ஐயம் சிறந்ததென்ப’ என்றார் தொல்காப்பியர். ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் இவள் விபச்சாரியா? கற்புடையவளா? எனச் சந்தேகித்தால் அங்கே அன்பு திகழ இடமில்லை . அவருக்குத் தகுந்த ஐயம் தோன்றலாகாது. பாலைக்கண்ட ஒருவன் இது பசுவின் பாலா? அன்றிப் பன்றியின் பாலா? என்று நினைப்பானானால் பின்னர் அப்பாலைச் சாப்பிட முடியுமா? எனவே மேலதாய் வந்தவிடத்து, அதாவது சிறந்ததாய் வந்தவிடத்துத்தான் அன்பு செல்லும். இதைத்தான் ”சிறந்துழி ஐயம்” என்றார் தொல்காப்பியர். இதையுணராத நச்சினார்க்கினியர், சிறந்த ஆண்மகனிடத்துத்தான் ஐயம் தோன்றுமென அறியாது கூறினார்.
நிற்க, தன் மகள் ஒருவனைக் காதலித்தால், பெற்றோர் அவள் விருப்பத்திற்கிணங்குவர்; இன்றேல் அப்பெண் உயிரை விடுவாளே தவிர வேறோர் ஆடவனை மனதில் நினையாள். ஆடவனும் அப்படியே. எனவே இரண்டிடத்தும் சமமாய் ஒத்த காதலாய் இருக்க வேண்டும். இருந்தால்தான், வாழ்க்கை செவ்வனே நடைபெறும். காதலர் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டாலும் பெற்றோர் சம்மதம் பெற்றே மணப்பர். சம்மதம் கிடைக்காவிட்டால் பல வழியிலும் பெற முயல்வர். இத்திருமணம் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே நடைபெறும். இவ்வழக்கை இன்னும் தமிழ்நாட்டில் காணலாம். சில சமயம் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தராவிடில், இருவரும் ஒருவருக்குத் தெரியாது வீட்டை நீங்கிச் செல்வதுமுண்டு. அப்படித் தன் பெண் சென்று விட்டால், அப்பெண்ணின் தாய், எங்கு மணமகன் வீட்டில் திருமணம் நடந்துவிடுமோ என்று வருந்துவாள். பின்னர் அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து மணம் முடிப்பார்.
அக்காலத்தில் எங்கும் – ஏன்? இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே கூடத் தரகர்கள் கிடையாது. இடைக்காலச் சைவம் கூட இதில் சிறிது மாறுபட்டது. ஆனால், முன்பு இறைவனுக்கும் உயிர்க்கும் நேரே தொடர்பு இருந்து வந்ததேயொழிய இடையில் யாருமில்லை. இந்தத் தொடர்பு போல் இருவர் காதலும் தூய்மையானது.
”பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்ற நச்சினார்க்கினியர், பார்ப்பனத் தோழன் உண்டென்று கூறுகிறார். இது தவறு. இன்று மணச்சடங்கு செய்ய வரும் பார்ப்பனன் தோழனா? கிடைத்தவற்றையெல்லாம் அடித்துக் கொண்டல்லவா போகிறான்?
நிற்க, காதலரிருவரும் ஒருவரையொருவர் விரும்பிய அன்றே மணம் நடந்து விடுகின்றது. ஆனால் இவர்கள் மணத்தினை உலகறியச் செய்யவே, பழி நீங்கவே, சில சடங்குகள் வகுத்தனர். அதுதான் “காரணம்” என்பது. இப்பழைய முறைகளில் இன்னும் சில நம்மிடையே இருந்து வருகின்றன.
தான் தேடிய பொருளால், தன் முயற்சியால் இல்லறம் நடைபெற வேண்டுமெனத் தமிழன் விரும்பியது போல விருந்து புறந்தருதல், அதாவது விருந்தினரை உபசரித்தலும் தமிழனின் சிறந்த குணமாகும்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 13
கிரிகோரிய் க்யோஸ்தியேவ் ஜூன் மாத நடுவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறினான்.
இதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அவனும் அலெக்ஸேயும் விரிவாகப் பேசிக் கொண்டார்கள். இருவரும் துன்பத்தில் தோழர்கள், இருவருடைய சொந்த விவகாரங்களும் ஒரே மாதிரியாகச் சிக்கலான நிலைமையில் இருக்கின்றன என்பது குறித்து இருவருமே உள்ளுற மகிழ்ச்சிகூட அடைந்தார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் வழக்கமாக நடப்பது போல இருவரும் தங்கள் அச்சங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி ஒருவருக்கொருவர் விவரித்தார்கள். தங்கள் ஐயப்பாடுகளை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்களது தன்மானம் இடந்தரவில்லை. ஆதலால் தமக்குள்ளேயே அவற்றை வைத்துக் கொண்டு மருகவேண்டியிருந்தது. இது அவர்களுக்கு இருமடங்கு அதிகக் கடினமாயிருந்தது. இப்போது அந்த ஐயப்பாடுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒருவருக்கொருவர் சொல்லி ஆற்றிக் கொண்டார்கள் அவர்கள். தங்கள் காதலிகளின் நிழற்படங்களை ஒருவருக்கொருவர் காட்டினார்கள்.
அன்யூத்தா, க்யோஸ்தியேவை எப்படி வரவேற்றாள், அவனது விகாரமான முகத்தைப் பற்றி என்ன நினைத்தாள், அவர்கள் விவகாரம் எப்படி முடிந்தது என்பதை எல்லாம் மெரேஸ்யெவுக்கு அவன் எழுதுவதாக ஒப்பந்தமாயிற்று. க்யோஸ்தியேவ் விஷயம் நல்லபடியாக முடிந்தால் ஓல்காவுக்குத் தன்னைப் பற்றி எல்லாவற்றையும் எழுதிவிடுவது என்றும், இன்னும் பலவீனமாக, பெரும்பாலும் படுத்த படுக்கையாயிருந்த தாயாருக்குக் கலவர மூட்டுவதில்லை என ஓல்காவிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வது என்றும் மெரேஸ்யெவ் அப்போதே தீர்மானித்துக் கொண்டான்.
க்யோஸ்தியேவ் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாளை இந்தக் காரணத்தால்தான் இருவரும் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். பதற்றத்தால் இருவரும் சந்தடி செய்யாமல் எழுந்து ஆளோடிக்கு வருவார்கள். க்யோஸ்தியேவ் கண்ணாடி முன் நின்றுகொண்டு காயத் தழும்புகளைத் தடவித் தேய்த்துக் கொள்வான். மெரேஸ்யெவ் ஓசைப் படாமல் இருக்கும் பொருட்டுக் கவைக்கோல்களின் நுனியில் துணியைச் சுற்றிக் கொண்டு அதிகப்படி முறை நடைபழகுவான்.
காலைப் பத்து மணிக்குக் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா க்யோஸ்தியேவைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக அவனிடம் தந்திரப் புன்னகையுடன் தெரிவித்தாள். அவன் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு துள்ளி எழுந்தான். தழும்புகள் முன்னிலும் துலக்கமாகத் தெரியும் படி அவன் முகம் கன்றிச் சிவந்திருந்தது. மளமளவென்று சாமான்களைத் திரட்டலானான்.
அவனுடைய பதற்றத்தையும் பரபரப்பையும் பார்த்து முறுவல் செய்தவாறு, “அருமையான பெண், ரொம்பப் பொறுப்புள்ளவள்” என்று கூறினாள்….
வார்டுக்காரர்கள் எல்லோரும் – ஏக்கம் பிடித்த மேஜரும் மெரேஸ்யெவும் புதிதாக வந்திருந்த நோயாளிகளும்- க்யோஸ்தியேவ் தெருவில் வருவதை எதிர்பார்த்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார்கள்.
“வருகிறான்!” என்று கிசுகிசுத்தான் மெரேஸ்யெவ். கனத்த ஓக் மர வெளிவாயிற் கதவு மெதுவாகத் திறந்திருந்தது. அதிலிருந்து இருவர் வெளிப்பட்டார்கள். ஒருத்தி, கறுப்பு ஸ்கர்ட்டும் வெள்ளை பிளவுஸும் அணிந்த, சதைப் பிடிப்புள்ள பெண். அவள் தொப்பி அணியவில்லை. அவளது கேசம் பகட்டின்றி வாரி விடப்பட்டிருந்தது. மற்றவன் இளம் படை வீரன். அவன் க்யோஸ்தியேவ் என்பதை மெரேஸ்யெவ் கூட முதல் பார்வையில் கண்டு கொள்ள முடியவில்லை. ஒரு கையில் பெட்டியையும் மறு கையில் மேல் கோட்டையும் எடுத்துக் கொண்டு மீள்விசையும் உறுதியுமாக அனாயாசமாக அவன் நடந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சி உண்டாயிற்று. தனது பலத்தைச் சோதித்துப் பார்த்து, வெகு தூரம் நடக்கும் வாய்ப்பினால் களிப்படைந்து க்யோஸ்தியேவ் வாயில் படிகளில் ஓடக்கூட இல்லை, லாவகமாக வழுகிச் சென்றான் போலும். தனது துணைவிக்குக் கைலாகு கொடுத்து நடத்திச் சென்றான். இருவரும் நாற்பத்து இரண்டாம் வார்டு ஜன்னலை நெருங்கியவாறு ஆற்றோரச் சாலையில் நடந்தார்கள். லேசாகத் தூறிய பெருத்த பொன் மழைத் துளிகள் அவர்கள் மேல் தெறித்தன.
அவர்களைக் கண்டு அலெக்ஸேயின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து பொங்கிற்று. எல்லாம் நலமாகத் தீர்ந்துவிட்டது. அந்தப் பெண்ணின் முகத்தில் ஒளிவு மறைவின்மையும் எளிமையும் இனிமையும் ததும்புவது காரணம் இன்றி அல்ல. இத்தகைய பெண் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள். ஆமாம், இம்மாதிரிப் பெண்கள் துன்பத்துக்கு உள்ளான மனிதனை அருவருத்து ஒதுக்க மாட்டார்கள்.
அவர்கள் ஜன்னலுக்கு நேராக வந்து சற்று நின்று நிமிர்ந்து பார்த்தார்கள். மழையால் மெருகூட்டப்பட்டிருந்த கரையோரக் கைப்பிடிச் சுவர் அருகே நின்றார்கள் அவர்கள். மெதுவாக வீழ்ந்த மழைத்துளிகள் இட்ட கோணலான பளிச்சிடும் கோடுகள் அவர்களுக்குப் பின்னணியாக விளங்கின. க்யோஸ்தியேவின் முகத்தில் குழப்பமும் கடுகடுப்பும் கலவரமும் காணப்பட்டதையும் அவனுடைய அன்யூத்தா எதனாலோ கவலையும் கலக்கமும் கொண்டிருப்பதையும் அலெக்ஸேய் அப்போது கவனித்தான். அன்யூத்தாவின் கை க்யோஸ்தியேவின் கையில் தளர்வாகவே கோக்கப்பட்டிருந்தது. அவளது நிலை கிளர்ச்சியையும் தயக்கத்தையும் காட்டியது. இதோ அவள் கையை உருவிக் கொண்டு ஓடிப் போய்விடுவாள் போலிருந்தது அவளது தோற்றம்…
அன்று எஞ்சிய நேரமெல்லாம் அலெக்ஸேய் கலவரமுற்றிருந்தான். மாலையில் அவன் நடைப் பயிற்சிகூடச் செய்யவில்லை. எல்லோருக்கும் முன்னதாகவே உறங்குவதாகப் படுத்துக் கொண்டான். ஆனால் வார்டில் மற்றவர்கள் யாவரும் உறங்கி நெடு நேரம் சென்ற பின்னரும் அவனுடைய கட்டில் வில்கம்பிகள் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன.
மறுநாள் காலை மருத்துவத்தாதி வாயில் நிலையில் கால் வைத்ததுமே தனக்கு ஏதேனும் கடிதம் வந்திருக்கின்றதா என்று கேட்டான். கடிதம் இல்லை. அலெக்ஸேய் சுரத்தில்லாமல் முகங்கை கழுவிக் கொண்டான், உற்சாகமின்றி உணவு கொண்டான். ஆனால் வழக்கத்தைவிட அதிகமாக நடந்தான். முந்தைய நாளைய பலவீனத்திற்காகத் தன்னைத் தண்டிக்கும் பொருட்டு அதிகப் படியாகப் பதினைந்து தடவை நடந்து முந்திய நாள் விட்ட குறையைப் பூர்த்தி செய்தான். எதிர்பாராத இந்தச் சாதனை எல்லாக் கலவரத்தையும் அவனுக்கு மறக்கடித்து விட்டது. கவைக்கோல்களின் உதவியால், மிகவும் கலைத்து விடாமல் விட்டாற்றியாக நடக்க தன்னால் முடியும் என நிரூபித்து விட்டான். ஆளோடியின் நீளமான ஐம்பது மீட்டரை நடைகளின் எண்ணிக்கையான நாற்பத்தைந்தால் பெருக்கினால் இரண்டாயிரத்து இரு நூற்று ஐம்பது மீட்டர், அதாவது இரண்டே கால் கிலோ மீட்டர் ஆயிற்று. இது கணிசமான தூரம், நிச்சயமாக!
தினப்படி பயிற்சியைக் காலையில் இருபத்து மூன்று, மாலையில் இருபத்து மூன்று, ஆக நாற்பத்து ஆறு நடைகள் ஆக்குவது என்றும் மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பொழுது கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்ப்பது என்றும் மெரேஸ்யெவ் முடிவு செய்தான். இது இருண்ட எண்ணங்களிலிருந்து அவன் மனத்தை வேறுபுறம் திருப்பியது, உற்சாகம் ஊட்டியது, செயல்புரியச் சித்தமான மனநிலையை ஏற்படுத்தியது. மாலையில் அவன் பெருத்த மன எழுச்சியுடன் நடை பழகத் தொடங்கியவன், முப்பது நடைகள் போய் வந்ததைக் கவனிக்கக் கூட இல்லை. அந்தக் கணத்தில் உடையறைக்காரி அவனை நிறுத்தி ஒரு கடிதத்தை கொடுத்தாள்.
ஜன்னல் குறட்டில் சாய்ந்து கொண்டு மெரேஸ்யெவ் உறையைப் பிரித்தான். அது க்யோஸ்தியேவ் முந்தைய இரயில் நிலையத்தில் எழுதியிருந்த கடிதம். இந்த விரிவான கடிதத்தைப் படிக்கப் படிக்க அலெக்ஸேயேவின் முகத்தில் மேலும் மேலும் ஏக்கம் ததும்பலாயிற்று. அன்யூத்தா தாங்கள் நினைத்தபடியே அருமையான பெண் என்றும் அவளைக் காட்டிலும் அழகானவள் மாஸ்கோவில் ஒரு வேளை இருக்க மாட்டாள் என்றும், சொந்தக்காரன் போலத் தன்னை அவள் வரவேற்றதாகவும் தனக்கு அவள் முன்னிலும் அதிகமாகப் பிடித்துவிட்டாள் என்றும் எழுதியிருந்தான் க்யோஸ்தியேவ்.
“… ஆனால் நீயும் நானும் சர்ச்சை செய்த விஷயம் நாம் நினைத்த மாதிரியே ஆயிற்று. இவள் நல்லவள். என்னிடம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை, தோற்றத்திலும் எதையும் காட்டவில்லை. எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. ஆனால் நான் குருடன் அல்லவே. எனது பாழாய்ப்போகிற முகரக்கட்டை அவளுக்கு திகில் ஊட்டுவதைக் கண்டேன். எல்லாம் சாதாரணமாகவே இருப்பது போலிருக்கும். ஆனால் சட்டென்று கண்ணோட்டுவேன்: அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் வெட்கமோ, அச்சமோ, பரிதாபமோ, ஏதோ ஒன்று புலப்படும்… அவள் தனியாக இருக்கிறாள். பெற்றோர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். கெளரவமான குடும்பம் என்பது தெரிகிறது. எனக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தாள். ஆனால் தேநீர்ப் பாத்திரத்தில் என் பிரதி பிம்பத்தைப் பார்த்துப் பெருமூச்செறிந்த வண்ணமாக இருந்தாள். சுருங்கச் சொன்னால் நம்மால் முடியாது என்று உணர்ந்தேன்.
நான் அவளிடம் இப்படி இப்படி என்று விண்டு சொல்லியேவிட்டேன். ‘என் தோற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காண்கிறேன். அதற்கென்ன, சரிதானே. உங்களைப் புரிந்து கொள்கிறேன். எனக்கு மனத்தாங்கல் ஏற்படவில்லை’ என்றேன். அவள் கண்ணீர் பெருக்கினாள். ‘அழாதீர்கள். நீங்கள் நல்ல பெண். எவனும் உங்கள் மீது காதல் கொள்வான். வாழ்க்கையை நீங்கள் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றேன். அப்புறம் சொன்னேன்: ‘நான் எப்பேர்பட்ட அழகன் என்பதை இப்போது நீங்கள் பார்த்துவிட்டீர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் என் படைப் பிரிவுக்குப் போகிறேன். முகவரியை எழுதி அனுப்புகிறேன். எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிடவில்லை என்றால் எழுதுங்கள். அந்தச் சமயத்தில் விமானத்தாக்கு அபாய அறிவிப்பு ஒலித்தது. அவள் வெளியே போனாள். அந்தச் சந்தடியில் நான் மெதுவாக நழுவி நேரே ரெஜிமெண்ட் அலுவலகம் சென்றேன். போகிற போக்கிலேயே நியமனப் பத்திரம் பெற்றுக் கொண்டேன் எல்லாம் நலம். பிரயாணச் சீட்டு பையில் இருக்கிறது. போகிறேன். ஆனால் ஒரு விஷயம். அலெக்ஸேய், இப்போது நான் அவள் மேல் முன்னிலும் அதிகக் காதல் கொண்டு விட்டேன். அவள் இல்லாமல் எப்படி வாழ்வேனோ தெரியவில்லை.”
அலெக்ஸேய் நண்பனின் கடிதத்தைப் படித்தான். தன் வருங்காலத்தை ஒரு பார்வை பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. அவன் விஷயத்திலும் இப்படியே நேரும் போலும். ஓல்கா அவனை அருவருத்து ஒதுக்க மாட்டாள், முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள். பெருந்தன்மையுடன் புன்னகை செய்வாள், அருவருப்பை உள்ளடக்கிக் கொண்டு கொஞ்சி வருடுவாள்.
“இல்லை, இல்லை, வேண்டாம்! வேண்டாம்!” என்று உரக்கக் கூவினான் அலெக்ஸேய்.
விரைவாகக் கெந்தி நடந்து வார்டுக்குப் போய் மேஜை அருகே அமர்ந்து ஓல்காவுக்கு மளமளவென்று ஒரு கடிதம் எழுதினான். சுருக்கமான, விவகாரரீதியான, உணர்ச்சியற்ற கடிதம்: நம் உறவைப் பற்றி வெகுவாகச் சிந்தித்தேன். காத்திருப்பது உனக்குக் கடினமாயிருக்கும். யுத்தம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ? ஆண்டுகள் கழிந்து விடும், இளமை போய் விடும். யுத்தமோ, நிலையற்ற விஷயம் – எதிர்பார்ப்பு வீணாகவே முடியலாம். திடீரென நான் கொல்லப்படலாம். நீ எனக்கு மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும். அல்லது இன்னும் மோசமானது நிகழலாம்: நான் அங்கவீனம் அடையலாம். அப்போது நீ அங்கவீனனின் மனைவியாக நேரிடும். எதற்காக? இளமையை வீணாக்கி விடாதே. விரைவில் என்னை மறந்து விடு. எனக்கு நீ பதில் கூட எழுதாமல் இருக்கலாம். நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன். எவ்வளவு தான் கஷ்டமாயிருந்தாலும் நான் உன்னைப் புரிந்து கொள்வேன். இவ்வாறு செய்வதே மேலாயிருக்கும்….
குஜராத் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 விழுக்காடு. ஆனால், அவர்கள் சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு பிரதிநிதி கூடக் கிடையாது. இந்து ராஷ்டிரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். அதுவா பிரச்சனை? மக்களின் சிந்தனை திருத்தியமைக்கப்பட்டு விட்டது. “கடந்த 17 ஆண்டுகளில் மக்கள் சிந்திக்கும் முறையையே அவர்கள் மாற்றி விட்டார்கள். அதன் விளைவுதான் இந்தத் தேர்தல் வெற்றி” என்கிறார், 2002 குஜராத் படுகொலையில் தப்பிப் பிழைத்த ஷரீப் மலேக்.
அனைவரது நம்பிக்கையையும் பெறுவது (சப் கா விஸ்வாஸ்) தனது நோக்கம் என்றும், தனது அரசின் கீழ் சாதி, மத அடிப்படையில் எவருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படாது என்றும் மோடி சொல்கிறார். ஆனால், குஜராத் முஸ்லீம்கள் யாரும் நம்பவில்லை. குஜராத்தில் எங்களுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் நாடு முழுவதும் நடக்கப் போகிறது என்கிறார் மலேக்.
”இந்து ராஷ்டிரத்தின் ஹல்வாத் நகரம் உங்களை வரவேற்கிறது விஷ்வ இந்து பரிஷத்-பங்ரங்தள்” என குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை.
குஜராத்தில் நடந்தது நாடு முழுவதும் நடக்காதா என்ன?… 2002-ல் என்ன நடந்தது என்பதை நாடு மறந்துவிட்டதா? ஏற்கனவே இது மே.வங்கத்தில் நடக்கத் தொடங்கிவிட்டது. வேண்டுமானால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கு முன்மாதிரிதான் குஜராத்” என்று சொல்கிறார் 2002-ல் நரோதா காம் கொலைக்களத்திலிருந்து உயிர் தப்பிய இம்தியாஸ் குரேஷி.
2002-ல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன. அல்ப சங்கியா அதிகார் மஞ்ச் என்ற குஜராத்தை சேர்ந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, அந்த மாநிலமே எங்ஙனம் மதரீதியாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது.
இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சிறு அளவிலான கலவரங்கள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் குஜராத்தில் மதக் கலவரமே நடப்பதில்லை என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தையும் இந்த உத்தியின் மூலம் வெளியுலகிற்குக் காட்ட முடிகிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவரங்களின்படி 1998 முதல் 2016 வரையிலான காலத்தில் குஜராத்தில் 35,568 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. 2014-ம் ஆண்டு மட்டும் 164 கலவரங்களில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கலவரங்கள் நடைபெற்ற இடங்கள் எல்லாம் 2002 படுகொலையின்போது அமைதியாக இருந்தவை என்பதும், சமூக ஊடகங்கள்தான் மதத் துவேசத்தைப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கவை.
இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். முன்னர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வசித்து வந்த முஸ்லீம்கள் இப்போது நகரின் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் ஒதுக்கப்பட்டு விட்டனர். நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் வசதி படைத்த முஸ்லீம்கள்கூடக் குடியேற முடியாது. நகருக்கு வெளியே உள்ள ஜுகாபுரா போன்ற சேரிப்பகுதிகளில் குடியேறும்படி பணக்கார முஸ்லீம்களும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளில் சிலவற்றைப் பார்ப்போம். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு தனது சொத்தை விற்க விரும்பினால், அதற்கு மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று ஒரு சட்டம் அமலில் இருப்பது இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் மட்டும்தான்.
மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளுக்கு மத்தியில் ”சிட்டிசன் நகர்” குடியிருப்புகள்.
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வாடகைக்குக் குடியிருக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களை வீட்டின் உரிமையாளர்கள் வெளியேற்றுவதைத் தடுக்கும் பொருட்டும், அவர்களது வீடு, மனைகளைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும் ஒரு சட்டம் 1991-ல் இயற்றப்பட்டிருந்தது. 2012-ம் ஆண்டில் அந்த சட்டத்தில் மோடி அரசு கொண்டு வந்த திருத்தம், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொத்தை விற்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது.
இந்தச் சட்டம் கலவரம் பாதித்த பகுதிகளுக்கானது என்பதால், அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற விரும்பிய முஸ்லீம்கள்தான் இதனால் பாதிக்கப்பட்டனர். நகரின் மையப்பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்த முஸ்லீம்கள், 2002 கலவரத்துக்குப் பின் நகருக்கு வெளியே உள்ள பாதுகாப்பான ஜுகாபுரா, ஜமால்பூர் ஆகிய பகுதிகளுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்தச் சட்டத் திருத்தத்தின் காரணமாக நகரின் மையப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே குடியிருந்த சொந்த வீடுகளை விற்கவும் முடியவில்லை. முஸ்லீம்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்களை ஏதிலிகளாக மாற்றியது மோடியின் சதித்தனமான இந்தச் சட்டத்திருத்தம்.
2012-ல் மைய அரசு சிறுபான்மை சமூகத்தின் மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை அவர்களுக்கு வழங்குவதில்லை என்று அன்றைய மோடி அரசு முடிவெடுத்தது. இதற்கு மோடி அரசு அளித்த விளக்கம் வக்கிரமானது. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இந்தச் சலுகையின் காரணமாகப் பெரும்பான்மை சமூகத்தினர் ஆத்திரம் கொள்வார்கள் என்றும், பெரும்பான்மையினரின் கோபத்திலிருந்து சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைத் தவிர்ப்பதாகவும் விளக்கமளித்தது மோடி அரசு.
2002 இனப்படுகொலையின் காரணமாக நிவாரண முகாம்களில் வசித்து வந்த முஸ்லீம்களுக்கு நிரந்தரக் குடியிருப்புப் பகுதியை ஒதுக்குவதாகக் கூறி, அவர்களை அகமதாபாத் நகரத்தின் குப்பைக் கிடங்கிற்கு அருகில் குடியேற்றியது அன்றைய மோடி அரசு. குப்பை மேட்டின் காம்பவுண்டு சுவரை ஒட்டி சாக்குகளாலும் தார்பாலின்களாலும் உருவாக்கப்பட்ட குடிசைகள், மண் சாலைகள், திறந்த சாக்கடை, குடிநீர் இல்லை என்ற அவலங்கள் நிறைந்த, மனிதர்களே வாழமுடியாத அந்தப் பகுதிக்குச் சூட்டப்பட்டிருந்த பெயர் சிட்டிசன்ஸ் நகர்.
“குப்பைகளின் வாடை தோலைத் துளைத்துக் கொண்டு உடலுக்குள் செல்கிறது” என்கிறார் அந்தக் குப்பை மேட்டின் ஓரத்தில் குடியிருக்கும் கடூனப்பா என்ற பெண். அவர் நரோதா பாட்டியா தாக்குதலில் உயிர் தப்பியவர். அந்தக் குடியிருப்பின் பெரும்பாலான மக்கள் நுரையீரல் நோயால் அவதிப்படுகிறார்கள்.
மோடி, அமித் ஷா விடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். என் படத்தைப் போட்டு முகவரியைப் போட்டு உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். வேண்டுமானால் என்னைச் சுடட்டும். எனக்கொன்றும் பயமில்லை. மிருகங்கள்கூட வாழமுடியாத சூழலில் அவர்கள் எங்களை வைத்திருக்கிறார்கள். எங்களைக் கொல்லாமல் விட்டிருக்கிறார்கள், – அவ்வளவுதான். எங்கள் மீதான அவர்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தோம்?” என்று கேட்கிறார் கடூனப்பா.
முகலாயர்கள் நம் நாட்டைச் சூறையாடினார்கள். கோயில்களை இடித்தார்கள் என்று தங்கள் முஸ்லீம் வெறுப்புக்கு காரணம் சொல்கிறார்கள். இவர்களுடைய வரலாறும் ஒரு நாள் எழுதப்படும். முகலாயர் வரலாற்றைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் போன்றதாகத்தான் இவர்களுடைய வரலாறும் இருக்கும்” என்கிறார் குரேஷி.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இந்திய மோட்டார் வாகனச் சந்தை கடும் தேக்கத்தை எதிர்நோக்கி உள்ளது. வாகனச் சந்தை எதிர் கொள்ளும் நெருக்கடி, பிற தொழில்களுக்கும் மெல்ல மெல்ல பரவி ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது. இதன் விளைவாக உற்பத்தி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். உற்பத்தி ஆலைகளில் நடந்து வரும் வேலையிழப்புகளை விட, உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிறு பட்டறைகளில் ஏற்பட்டு வரும் வேலை இழப்பு பன்மடங்கு அதிகம். சில இலட்சம் வேலைகளை இப்போதைய பொருளாதார காவு வாங்கியுள்ளது.
நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மோட்டார் வாகனச் சீர்திருத்தங்களில் துவங்கி இதர எண்ணற்ற காரணங்களை முதலாளிய பொருளாதார அறிஞர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். தி வயர் இணைய தளத்தில் வெளியாகி உள்ள இந்தக் கட்டுரை வேறு ஒரு கோணத்தை முன் வைக்கிறது.
”கார்கள் தாமாக விற்றுப் போவதில்லை; அவற்றுக்கு கிடைத்து வந்த கடனுதவி தான் கார்களை விற்றது” என்கிறார் மும்பையைச் சேர்ந்த மாருதி கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த சந்தை மேலாளரான ஆர்.விஜயராகவன். மேலும், “இன்றைய நிலையில் கடனுதவி கிடைப்பதில் சிக்கல் என்பதால் தான் கார்களும் விற்பனை ஆவதில்லை” என்கிறார். அதே நிறுவனத்தின் பொது மேலாளர் கார்புரே, “முன்பெல்லாம் ஒவ்வொரு நாளும் 15-ல் இருந்து 20 கார்கள் விற்பனை ஆகும். இப்போதெல்லாம் 3-ல் இருந்து 5 கார்கள் விற்றாலே பெரிய விசயமாக இருக்கிறது” என்கிறார்.
இது அந்த குறிப்பிட்ட விற்பனை நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் கார்கள் விற்பனையில் 20.55 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இந்த விற்பனைத் தேக்கம் சுமார் 19 ஆண்டுகளில் காணாத ஒரு சூழலாகும். கடந்த ஜூலை மாதம் ஏறத்தாழ 30 சதவீத அளவுக்கு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பூர்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் இந்தியச் சந்தையின் வீழ்ச்சி என்றால் இன்னொரு புறம் சீனச் சந்தையும் வீழ்ச்சியில் உள்ளது. மற்றொருபுறம் கடுமையான புகை உமிழ்வு கட்டுப்பாடுகளால் மின்வாகனங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி. ஏற்கெனவே பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள் மின்வாகன உற்பத்தியில் ஈடுபட அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு நிறைய செலவிடவும் வேண்டும் – எனினும், விற்பனை வீழ்ச்சியின் விளைவாக அவ்வாறான ஆராய்ச்சிப் பணிகளும் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.
சீனாவின் வாகனச் சந்தையின் தேக்கத்திற்கு காரணமாக கடுமையாக்கப்பட்டுள்ள புகை உமிழ்வு கட்டுப்பாட்டு சட்டங்களையே பெரும்பாலான சந்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில் அதோடு சேர்த்து வேறு சில காரணிகளும் உள்ளன. இந்திய நுகர்பொருள் சந்தை 2016-ம் ஆண்டு மோடி அறிவித்த இழிபுகழ் பெற்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் துவங்கி வீழ்ச்சிப் பாதையில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. இந்தியப் பொருளாதாரத்தை சவப்பெட்டியினுள் கிடத்தி அதன் மேல் மூடியைச் சாத்தியது.
இதைத் தொடர்ந்து விவசாயப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஊரகப்பகுதிகளில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இறுதியாக வங்கியில்லா நிதிநிறுவனங்களின் வீழ்ச்சி, சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து இறக்கியுள்ளது. வங்கியல்லாத நிதிநிறுவனங்களிலேயே மிக முக்கியமானது ஐ.எல். & எப்.எஸ். இந்நிறுவனம் தான் அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட்டுகளின் பல்வேறு உள்கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வந்தது. ஐ.எல். & எஃப்.எஸ். வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்கடன் வழங்கி வந்த டி.ஹெச்.எப்.எல். செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. டி.ஹெச்.எப்.எல். செய்த மோசடி ஊடகங்களில் பரபரப்பான விவாதப் பொருளான நிலையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கணக்கு விவரங்களைக் கேட்டு மத்திய ரிசர்வ் வங்கி நெருக்கடி கொடுத்தது.
ஒருபுறம் தமது கணக்குப் புத்தகங்களை உடனடியாக “சுத்தமாக்க” வேண்டிய கட்டாயமும் இன்னொரு புறம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் துவங்கி மோடி அரசு பொருளாதாரத்தின் மீது நடத்திய “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகளால்” ஏற்பட்டு வந்த பணப்புழக்கமின்மையும் (liquidity crisis) வங்கியல்லாத நிதிநிறுவனங்களை நெருக்கிப் பிடித்தன. எனவே, இந்நிறுவனங்கள் தமது கடன் கொடுக்கும் ”வெறியை” கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உருவானது.
இந்தியாவில் விற்பனையாகும் வர்த்தக கார்களில் (மஞ்சள் போர்டு) சுமார் 55-60 சதவீதம் வங்கியல்லாத நிதிநிறுனவங்களின் கடனுதவி வழங்கி வந்தன. அதே போல் தனியார் நுகர்வோர்களுக்கான கார்களில் (வெள்ளை போர்டு) 30 சதவீதமும், இரு சக்கர வாகனங்களில் 65 சதவீதத்திற்கும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களே நிதி உதவி செய்து வந்தன.
உற்பத்தியான கார்கள் தேங்கி நிற்பதால் ஏற்படும் பராமரிப்பு செலவுகளைக் கட்டுப்படுத்த மாருதி, டாடா, ஹூண்டாய், மகிந்திரா போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் சில உற்பத்தி ஆலைகளையே மூடி விடுவது என்கிற முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன.
வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் பாதிக்கும் மேல் குறைந்துள்ள நிலையில் வங்கிகளோ தங்களது கணக்குப் புத்தகங்களை “சுத்தமாக” வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கடன் பெறும் நுகர்வோரை முடிந்த வரை சலித்து கழித்துக் கட்டுகின்றன. இதன் விளைவாக புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த சூழல் எப்போது விடியும் என பல்வேறு முதலாளிய சந்தை நிபுணர்களும் வெவ்வேறு விதமான ஆருடங்களைச் சொல்லி வருகின்றனர். ஆனால், சிக்கல் என்னவென்றால் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு அதன் அடித்தளத்தில் இருந்தே ஆட்டம் கண்டுள்ளது என்பது தான். இதைத் தீர்ப்பதற்கான யோசனையோ விருப்பமோ ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதால் கூடிய விரையில் விடிவு ஏற்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தனது சமீபத்திய ட்வீட் ஒன்றில் ராகுல் காந்தி இவ்வாறாக கூறியிருந்தார் “தூரத்தில் தெரிவது வெளிச்சப் புள்ளியல்ல – அது வெகு வேகமாக நெருங்கி வரும் பொருளாதார நெருக்கடி என்கிற ட்ரெயினின் முக விளக்கு” – அரிதான சந்தர்ப்பங்களில் காங்கிரசுப் பெருச்சாளிகளும் உண்மையைப் பேசி விடுகின்றனர்.
அரசியல் சட்டப் பிரிவு 19 வழங்கும் கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள், போலீசின் அதிகாரம் குடிமக்களின் கருத்துரிமையை காட்டிலும் மேலானது என்ற கோணத்தில்தான் சமீபகாலமாகத் தீர்ப்புகளை வழங்குகின்றன.
ஹைட்ரோ கார்பன் போன்ற வளர்ச்சித் திட்டங்களை ஆதரித்துக் கருத்து தெரிவிப்பதோடு நில்லாமல், அதனை எதிர்த்துக் கருத்து தெரிவிப்போரை நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்களாகவும் சித்தரித்து சில நீதிபதிகள் கருத்து கூறுகின்றனர். ஒரு மாற்றுக் கருத்து என்ற முறையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துரிமையைக்கூட நிராகரிக்கின்றனர். தூத்துக்குடி தியாகிகள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததை அப்படியே வழிமொழிகின்றனர்.
பழனி கோயிலில் மோப்ப நாய் பாதுகாப்பு எனச் சமீபத்தில் வந்த செய்தியை விமர்சனம் செய்து பகுத்தறிவாளரான ஒரு பெண் தனது முகநூலில் எழுதியதைத் தொடர்ந்து, அவருக்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் மீது இந்து முன்னணியினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. அவர் முன் பிணை மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 66-ஏ பிரிவில் போலீசார் அந்த வழக்கைப் பதிவு செய்திருப்பதே செல்லாது என்று வழக்கறிஞர் கூறியதைக் கணக்கில் கொள்ளவே இல்லை. மாறாக, அந்தப் பெண் முப்பது நாட்களுக்கு பழனி கோயில் வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வதாக இருந்தால், முன்பிணை வழங்குவதாகக் கூறியிருக்கிறார்.
முன்பிணைக்கான நிபந்தனையையே தண்டனையாக மாற்றும் இந்த அணுகுமுறையே சட்டவிரோதமானது என்பது ஒருபுறமிருக்க, இந்த நிபந்தனை மதச்சார்பின்மைக்கு எதிரானது எனக் கூறி அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் நிபந்தனையை ஏற்க மறுத்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதியும் இல்லாத குற்றப் பிரிவில் வழக்கு தொடுத்த போலீசைக் கண்டிக்கவில்லை. மாறாக, பிணைக்கான நிபந்தனையையே தண்டனையாக மாற்றும் அதே கண்ணோட்டத்தில், பழனி மலை மேல் இருக்கும் காவல் நிலையத்தில் அன்றாடம் சென்று கையெழுத்திட்டால் முன்பிணை தருவதாகக் கூறியிருக்கிறார். பெரியாரை எதிர்த்த காரணத்துக்காக எச்.ராஜாவை என்ன பாடு படுத்தினீர்கள் என்றும் வெளிப்படையாகவே நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்.
எச். ராஜாவுக்கு ஒரு மாத காலத்திற்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால்தான் முன்பிணை தருவோம் என்று கூறினால், அது எப்படித் தவறாகுமோ, அப்படித்தான் நீங்கள் ஒரு பகுத்தறிவாளருக்கு விதிக்கும் நிபந்தனையும் தவறானது, அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்று வழக்கறிஞர் வாதிட்டதைத் தொடர்ந்து, அந்த நிபந்தனையை நீதிமன்றம் கைவிட்டு இருக்கிறது.
தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் மென்மேலும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் இவற்றை எதிர்த்துப் போராடுகிற மக்கள் இயக்கங்களுக்கு எதிராகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் பாரதிய ஜனதாவைக் காலூன்ற வைப்பதற்கான முயற்சியுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. இது நீதித்துறையில் தோன்றி வரும் ஒரு புதிய இயல்பு நிலை.
வடமாநிலங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற கும்பல் தாக்குதல்கள் மற்றும் பசுக் குண்டர்களின் கொலைகள் எங்ஙனம் ஒரு புதிய இயல்பு நிலையாக மாற்றப்பட்டிருக்கின்றனவோ, அது போலத் தமிழகத்தில் இந்தப் புதிய இயல்புநிலை உருவாக்கப்படுகிறது.
இது குறித்து வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் அதிருப்தியும் குமுறலும் இருந்த போதிலும், இதனை எதிர்த்து நிற்காமல், போராடிக் களைத்தவர்களைப் போல பலர் மவுனம் சாதிக்கின்றனர். பாசிசம் இந்த மவுனத்தின் மீதுதான் மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அந்நூல்களில் உள்ள முன்னுரைகளை தோழர்கள் அவசியம் படிக்க வேண்டும். மற்ற பகுதிகளை மெதுவாகப் படிக்கலாம்.
கம்யூனியம் தொடர்பான வேறு முக்கியமான நூல்களின் PDF உங்களுக்குத் தேவையானால் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – திருச்சி சார்பாக தேசிய கல்விக்கொள்கை 2019 பற்றிய அரங்க கூட்டம் கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரா. மன்சூர் தலைமையுரையில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையைக்காட்டிலும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பயங்கரமானது என்றும் மாநில உரிமைகள் மீட்டெடுக்கப் படவேண்டும் என்றும் அரசுக் கல்லூரிகளே சுயநிதிக்கல்லூரிகளாக மாறும்போது அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள் தங்களுக்கு வரும் பேராபத்தை உணராமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் .
இக்கூட்டத்தில் இந்திய மொழிப் பன்மைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்துப் பேசிய பேரா. மதிவாணன் இந்த வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் மாநில மொழிகளை புறந்தள்ளி விட்டு ஒரே பண்பாட்டு மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரத் துடிப்பதை அம்பலப்படுத்தினார். அடுத்து பேசிய பேரா.அய்யம்பிள்ளை வரைவு அறிக்கை CII, FICII, NASSCOM போன்ற பெருமுதலாளிகளுடைய சங்கங்களின் பரிந்துரைகளை வழிமொழிவதாகவே உள்ளது எனவும் அடித்தட்டு மக்களுக்கு கல்வியை மறுப்பதையே தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது என விபரங்களுடன் விளக்கினார்.
1 of 8
அடுத்து பேசிய முனைவர் ரமேஷ் உயர்கல்வியை சர்வதேசியமயமாக்குதல் என்ற பெயரில் இந்தியா பெருமுதலாளிகள் / நிதிமூலதனங்களிடம் தாரைவார்ப்பதற்காக மோடி அரசு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அம்பலப்படுத்தி பேசினார் . பேரா.கருணானந்தன் எங்கள் மாநில மக்கள் எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எந்த மொழியில் படிக்க வேண்டும்? என்று தீர்மானிக்க நீ யார்? என்ற கேள்வி எழுப்பினார். இப்போது இந்தியாவில் நவீன தேவாசுரப் போர் நிகழ்கிறது. அது கல்விக் கொள்கையிலும் வெளிப்படுகிறது. தமிழகம் போன்ற கல்வியில் முன்னேறிய மாநிலங்களின் கல்வியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்து குலக்கல்வி என்ற பேராபத்தில் தள்ள முயலும் இந்த முயற்சியை அனைவரும் இணைந்து தடுத்தாக வேண்டும். எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் இந்தப் போரில் வெல்லப் போவது நாம் தான் என எழுச்சியுரையாற்றினார்.
பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2019-ஐ முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக பேரா.மருதை நன்றியுரை கூறியதுடன் கூட்டம் நிறைவடைந்தது.
தகவல்: பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
திருச்சி.
நூலாசிரியர் பேராசிரியர் த.செயராமன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர். பேரழிவைத் தரும் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துப்பரவலும், களப் போராட்டங்களும் நடத்திவரும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் இன்னுமொரு கருவியாக மீத்தேன் அகதிகள் என்ற இந்நூல் வெளிவருகிறது.
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், மக்கள் அகதிகளாக வெளியேறித்தான் ஆக வேண்டும். அப்படி வெளியேறும் தமிழர்கள் தங்கள் தாயகத்துக்குத் திரும்பவே முடியாது என்ற உண்மையை உணர்த்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம்.
இந்திய அரசு விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுகிறது. சில்லறை வர்த்தகத்திலிருந்து சிறுவணிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மொத்த வணிகம் முழுமையாகப் பறிபோய்விட்டது. பெருந்தொழில்கள் தமிழர்களிடம் இல்லை. குறுந்தொழில்கள் முடக்கப்பட்டு வருகின்றன. கடலிலிருந்தும், கடற்கரையிலிருந்தும் மீனவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களால் தமிழக மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, தங்கள் வாழ்விடத்தைவிட்டுத் துரத்தியடிக்கப்படும் நிலையை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.
தமிழர்களின் தாயகப் பகுதியைச் சூறையாட இந்திய, பன்னாட்டுப் பெரு முதலாளிகள் போட்டியிடுகிறார்கள். தமிழர் தாயகத்தை இந்திய அரசு ஏலம்விடுகிறது. தமிழ் மக்களின் தன்தீர்மானிப்பு (Self-Determination) உரிமையையும், இயற்கை வளங்கள் மீதான இறையாண்மையையும் (Soveriengnty over Natural Resources) தமிழர்கள் அறிவிக்க வேண்டியக் காலக்கட்டம் இது. அதற்கான புரிதலை உருவாக்குவதற்கான முயற்சிகளுள் இந்நூல் வெளியீடும் ஒன்று. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)
காவிரிப்படுகையில் பல அழிவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் எல்லாம் மிகக் கொடுமையானது எண்ணெய் – எரிவாயு எடுப்பு. கண்ணுக்குத் தெரியாத வண்ணம் கருவையே அழிக்கும் வேலையை எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எண்ணெய் – எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலுமாக வாழும் மக்களிடமிருந்தும், தாவர, உயிர் வர்க்கங்களிடமிருந்தும் பறிமுதல் செய்யும் வேலையை எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றை அரசுகள் விசாரித்து பல குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறிந்தன. அந்த எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அபராதங்கள் வசூலிக்கப்பட்டன. நிலத்தடி நீர் எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களால் பாழாக்கப்படுவது என்பது பல்வேறு நாடுகளில் நடத்திருக்கிறது. அது உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது தடுத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதாலேயே எரிவாயுத் திட்டங்கள் மக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. எண்ணெய் – எரிவாயு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படையும் என்ற உண்மையைப் பல நாடுகள் அரசுகள், அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன. இந்தியாவில் அரசு இதை ஏற்கிறதா? எந்த எண்ணெய் – எரிவாயு நிறுவனமாவது தங்களால் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதையும், அப்படி மாசுபடுத்தியிருக்கிறோம் என்றும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? எங்கள் பகுதி நிலத்தடி நீர் தன் தன்மையை இழந்துவிட்டது என்று கூறி ஓ.என்.ஜி.சி., போன்ற எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களை மக்கள் எதிர்த்துப் போராடும்போது, எந்த மாவட்ட ஆட்சியராவது மக்கள் பக்கம் நின்று, அந்த நீர் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுத்ததுண்டா ?
நிலத்தடி நீர் பாதித்துவிட்டது என்று மக்கள் போராடும்போது, அதை அப்போதைக்கு அடக்கும் விதத்தில், நீரை பரிசோதனைக்கு அனுப்பப்போவதாகக் கூறுவதும், பின்னர் நீர் எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று ரிப்போர்ட் வந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறுவதும் வாடிக்கை. நீர் கெட்டுப் போகவில்லை என்றால் ஒரு குவளை நீரைக் குடித்துக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்கும்போது அதிகாரிகளின் முகம் பேயறைந்தது போல மாறிப்போவதும் நாம் கண்ட ஒன்றுதான்.
இதில் கவலைப்படக் கூடிய ஒன்று, நீராய்வு செய்து அறிக்கை தரும் வாட்டர் போர்டு, அந்த நீர் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று அதிகாரபூர்வமாகப் பச்சையாகப் பொய் கூறுவதைத் தண்டிக்கப்போவது யார்? அப்படி அறிக்கை தரும் அதிகாரிகளாவது குறிப்பிடப்படும் இடங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒரு குவளை குடித்துக் காட்டுவார்களா? எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களுக்குச் சார்பாக அரசு அதிகாரிகள் நடந்துகொள்வதும் பாதிப்புகளை மறைப்பதும் சமூக விரோதச் செயல்பாடுகள் அல்லவா? (நூலிலிருந்து பக்.145-146)
பிரச்சினையின் தன்மையை உணர வேண்டும்
காவிரி டெல்டா பகுதிகளை அழிக்க வரும் மீத்தேன் திட்டம்
தமிழக மக்கள் பிரச்சினையின் முழு வடிவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் சூழலியல் பிரச்சினை அல்ல; அல்லது மீத்தேன் எடுப்பு என்பதால், வாழ்வாதாரங்கள் அழிப்பு என்ற பொருளியல் பிரச்சினை மட்டும் அல்ல; மீத்தேன் எடுப்பில் பயன்படுத்தப்படும் நீரியில் விரிசல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் 634 இரசாயனங்களால் உருவாகும் நோய்கள் – கோளாறுகள் பற்றிய உடலியல் – உயிரியல் பிரச்சினைகள் மட்டுமல்ல; குறுவிவசாயிகள், விவசாயிகள் நிலமிழந்து உதிரித் தொழிலாளர்களாக மாறிப் போவார்கள்; விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புத் தளத்தை இழந்து போவார்கள்; ஊதியம் அற்றுப் போவார்கள் என்ற பொருளியல் பிரச்சினை மட்டுமல்ல.
ஒரு தேசிய இனம், தன் வரலாற்றுத் தாயகத்தை இழந்துவிட்டு, நெருக்கடிகளுக்கு உள்ளாகி, வாழ வழிதேடி, அகதிகளாகப் பயணிக்க இருக்கிறது. அவர்கள் வாழும் பிரதேசம் இரசாயனக் கலவைகளால் நச்சுக்காடாகி, அந்த மக்கள் சமூகமே நோய்கொண்ட சமூகமாக மாற இருக்கிறது. நோய் கொண்ட சமூகமாக மாறும் நிலையைத் தவிர்க்க, தமிழர்கள் தங்கள் பூர்வீகத் தாயகத்தை விட்டுக் கட்டாயமாக வெளியேற வேண்டியச் சூழலை எதிர் நோக்கி இருக்கிறது. (நூலிலிருந்து பக்.171)
மீத்தேன் அகதிகள்:
மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், தாயகப்பகுதியை விட்டு வெளியேறும் மக்களை, “மீத்தேன் அகதிகள்” என்று குறிப்பிடுகிறோம். ஏனைய அகதிகளுக்கும், மீத்தேன் அகதிகளுக்கும் வேறுபாடு உண்டு.
ஈழத்திலிருந்து பெருவாரியாகத் தமிழ் மக்கள் 1983 முதல் வெளியேறினார்கள். அவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி, படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் நிகழ்த்தி, உயிர் அச்சத்தை உருவாக்கி, சிங்களக் காடையர்களும், சிங்களப் படையினரும் தமிழர் தாயகத்தை விட்டு விரட்டியடித்தார்கள். ஆயுதம் தாங்கிய தாக்குதலால் ஈழ மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். அவர்களுடைய தமிழீழத் தாயகப் பகுதியை சிங்களர்கள் கைப்பற்றிக் குடியேறினார்கள்.
வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக தமிழக நிலப்பரப்பில் நீரை வெளியேற்றி நீரற்றுப் போகச்செய்து, வாழ்நிலத்தை நச்சுக்காடாகவும், பாலை நிலமாகவும் மாற்றி, வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது. (நூலிலிருந்து பக்.165-166)
நூல் : மீத்தேன் அகதிகள் ஆசிரியர் : பேராசிரியர் த. செயராமன்
வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு, 19/2, சேந்தங்குடி வடக்குத்தெரு, ஆனதாண்டவபுரம் சாலை,
மயிலாடுதுறை – 609 001. தொலைபேசி எண் : 04364 – 227484. மின்னஞ்சல் : jeyaramanvaralaru@gmail.com
நூல்கள் பெற:புத்தகச் சோலை, பெரியார் மாளிகை, 44-மகாதானத் தெரு, மயிலாடுதுறை – 609 001. தொலைபேசி எண் : 04364 – 228634. மின்னஞ்சல் : pcpd.periyar@gmail.com
முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 16
குடும்பத்திற்கும் பள்ளிக்கும் இடையிலான தொடர்புகள்
அடுத்த திங்கட்கிழமையிலிருந்து கூடுதல் பள்ளி நேரத்திற்கு மாறுவோம். குழந்தைகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தோம். ஒவ்வொரு குழுவிற்கும் பெயர் (“ரோஜா”, “மல்லிகை“) கூடக் கண்டுபிடித்தாகி விட்டது. இன்று வகுப்பறையில் பெற்றோர்களும் உதவியாசிரியர்களும் கூடுவார்கள், இக்குழுக்களில் என்ன செய்வது என்று கூட்டாக விவாதிப்போம்.
வகுப்பறையையும் தாழ்வாரத்தையும் ஒழுங்குபடுத்தி பலவற்றை மாற்றியமைத்ததில் பெற்றோர்கள் காட்டிய அக்கறை, ஆர்வம் குறித்து எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி.
தாழ்வாரத்தில் ஜன்னல்களில் ரோஜாப் பூ வண்ணத்தில் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன, நன்கு வசதியான சூழல் உடனேயே ஏற்பட்டது.
வளர்ப்புப் பணி ஒரு சமுதாயப் பணியாகும், இதை ஒளிவு மறைவின்றிச் செய்ய வேண்டும். நான் மருத்துவரோ, பொறியியலரோ, பிட்டரோ, திராட்சை பயிரிடும் விவசாயியோ அல்ல. நான் ஆசிரியன், குழந்தைகளை வளர்ப்பவன். எனது துறை மிகச் சிக்கலானது, மிகவும் பொறுப்புள்ளது.
தரையில் வைக்கோலால் செய்யப்பட்ட விரிப்பும் கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தன, கம்பளத்தில் குழந்தைகள் குட்டிக்கரணம் போட்டு விளையாடுகின்றனர்.
சுவரில் மின்சாரக் கணக்கு அட்டவணை தொங்கியது. இதில் கூட்டலாம், கழிக்கலாம், சிறிது நாட்களுக்குப் பின் பெருக்கலாம், வகுக்கலாம்.
ஜன்னலருகே மீன்தொட்டி உள்ளது. இதில் மீன்களும் நத்தைகளும் நீந்துகின்றன, நீர்ப்பாசி வளருகிறது.
வீடு, கட்டிடங்களைக் கட்டி விளையாடத் தேவையான விளையாட்டுப் பொருட்களும் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் பல சாமான்களுமாக ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் சேர்ந்துள்ளன. இவற்றை வைப்பதற்காக ஜன்னலருகே காலியான இடத்தில் அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வகுப்பறையிலும் தாழ்வாரத்திலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாகத் தோன்றும் போதெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். ”பெற்றோர்களுக்கு நன்றி சொல்வோம்” என்று ஒவ்வொரு முறையும் சொல்வேன்; பின் சாக்பீசால் தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் கீழ்வருமாறு எழுதுவேன்:
எங்கள் தாழ்வாரத்தை திரைச் சீலைகளால் அழகுபடுத்தியதற்காக அவ்தன்தீல் மாமாவிற்கு நன்றி!
அல்லது:
மீன்தொட்டி கொண்டு வந்ததற்காக கேத்தினோ அத்தைக்கு நன்றி!
அல்லது:
வாஹ்தாங் மாமா, நீங்கள் மிக அன்பானவர் ! உங்களுக்கு நன்றி!
பெற்றோர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கையில் நான் இப்போது பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிச் சிந்திக்கிறேன்.
சில சமயங்களில் இத்தொடர்பு எவ்வளவு மெல்லியதாக, உறுதியற்று இருக்கிறது! சில சமயங்களில் இரு தரப்புகளிலுமாக இது எப்படி இழுக்கப்படுகிறது! குழந்தைகள் பள்ளியில் எப்படிப் படிக்கின்றனர், எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது தொடர்பான விவரங்களைப் பெற்றோர்கள் பெறுவதற்காக சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாட்களையும் நேரத்தையும் முடிவு செய்து அறிவிப்பார்கள். வேறு சிலரோ குழந்தைக்கு புத்தி சொல்லவும், படிப்பில் துணை புரியவும் உதவுமாறு பெற்றோர்களைக் கோருவார், குழந்தைகளின் செயல்களைப் பற்றிப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதுவார், குழந்தையின் நாட்குறிப்பில் அதிருப்தியான, அச்சுறுத்தும் குறிப்புகளை எழுதுவார். வேறு சில ஆசிரியர்கள், குடும்பத்தில் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் கூட்டங்களிலும் விரிவுரைகளிலும் பெற்றோர்களுக்குப் போதனை செய்வார்.
எனவே, பள்ளியைப் பொறுத்தமட்டில் இது குழந்தைகளின் நடத்தை, கல்வி பற்றிப் பெற்றோர்களுக்கு அறிவிக்க மட்டுமே செய்கிறது, எப்படி வளர்க்க வேண்டுமென ஆலோசனை கூற மட்டுமே செய்கிறது என்றாகிறது. அதுவும் குழந்தை ஏதாவது தப்பு செய்தால் மட்டுமே இதற்கான அவசியம் ஏற்படுகிறது. தம் குழந்தைகளைப் பற்றிய வசவுகளைக் கேட்கும் பொருட்டு ஆசிரியர்களிடம் செல்ல அம்மாக்கள் எவ்வளவு தூரம் தயங்குகின்றனர், தந்தைமார்களோ இச்சந்திப்புகளை எப்படி உறுதியோடு தவிர்க்கின்றனர் பாருங்கள், தாம் ஒரு தடவை கூட பள்ளி வாசல்படியை மிதித்ததில்லை, பள்ளி எங்கேயுள்ளது என்று கூடத் தெரியாது – தம் மகன் எவ்வளவு நல்லவன் – என்றெல்லாம் சில அம்மாக்களுக்கு எவ்வளவு பெருமிதம்!
பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன? பள்ளிக்குத் தேவையான துரிதமான வளர்ப்பு உதவியை அளிப்பதும், குழந்தையின் விஷயத்தில் பலவீனமான பள்ளியின் நிலையை வலுப்படுத்துவதுமா இதன் உட்பொருள்?
இந்நிலவரத்தைக் கண்டு யாரும் வியப்படைய வேண்டாம். ஆறு வயதுச் சிறுவனின் தாய் வெட்கத்தால் முகம் சிவக்க ஆசிரியையின் முன் நின்று அவனது குறைகளைக் கேட்கிறாள்: “உங்கள் சிறுவன் கவனக் குறைவானவன், மேசைக்குப் பின் நாற்காலியில் உட்காரத் தெரியவில்லை. மோசமாக எழுதுகிறான். சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. அவனுக்கு ஓடிக் குதித்துக் கொண்டிருப்பதே போதும். அவனை சரியாக வளர்ப்பதன் மீது பெரும் கவனம் செலுத்த வேண்டும்”. சிறுவன் அருகேயே நிற்கிறான், ஏதோ விஷயம் சரியில்லை என அவனுக்குப் புரிகிறது, தாயோ “நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள். சிறுவனின் மனதில் ஆசிரியை முதல் எதிரியாகிறாள்.
ஒருவேளை இங்கு ஆசிரியை, பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்பு எனும் புனிதமான கோட்பாட்டை நிறைவேற்றினாளோ! சரி, அப்படியெனில் அத்தாய் வீடு திரும்பியதும் எப்படி நடந்து கொள்கிறாள் என்று பார்ப்போம். ஏனெனில் ஆரம்பத்திலேயே குழந்தையை சரியான பாதையில் திருப்ப வேண்டுமே! இன்றே அவன் பள்ளியில் கவனக் குறைவாக இருந்தால், குறும்பு செய்தால், படிக்காவிட்டால், சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும்? ஆறு வயதுக் குழந்தையின் அனுபவமேயில்லாத பெற்றோர்கள் தம் முதல் குழந்தையை வளர்க்கும் போது என்ன செய்வார்கள்? “இது மாதிரி இனி செய்யக் கூடாது” என்று தந்தை விரலை ஆட்டி அச்சுறுத்துவார். தாய் கிட்டத்தட்ட தன் மகனை வலுக்கட்டாயமாக மேசை முன் அமர்த்தி எழுதப் படிக்கச் சொல்வாள். பாட்டி கூட கதவின் முன் நின்றுகொண்டு “படித்து முடிக்கும்வரை விளையாட வெளியே விடமாட்டேன்” என்பாள். குழந்தையோ, இவையெல்லாம் பெரியவர்களின் சதியென எண்ணி வருந்துவான்.
“ஏன் அவனை இரண்டாவது பெஞ்சில் உட்கார வைத்தீர்கள்? ஏன் நீங்கள் அவனிடம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை? ஏன் அவனிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வதில்லை? ஏன்?…” உண்மையிலேயே நான் அக்குழந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறேனா என்ற சந்தேகம் தோன்றுகிறது.
இச்சிறுவனின் விஷயத்தில் பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தகவல் ரீதியான, கட்டளை பிறப்பிக்கும் தொடர்பு என்ன செய்தது? குழந்தை வளர்ப்பில் குடும்பம் மற்றும் பள்ளியின் முயற்சிகளை இது ஒன்றிணைத்ததா? இல்லை.
பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையே வெறும் தொடர்பு மட்டும் போதாது. முழுமையான வளர்ப்பு, குழந்தையின்பாலான சர்வாம்ச அணுகுமுறை தேவை. எவ்வொரு குழந்தையையும் சுற்றி மனிதாபிமான பள்ளிச் சூழலை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொது அக்கறையில் இந்த முழுமை பிரதிபலிக்க வேண்டும், இது இச்சூழலை ஏற்படுத்துவதில் பள்ளியின் முக்கியப் பாத்திரத்தைக் குறிக்க வேண்டும்.
வளர்ப்பின் முழுமைக்கு வழிகோலும் இப்படிப்பட்ட தொடர்பை எப்படி நிறைவேற்றுவது? ஒருவேளை இதே லட்சியத்தைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான என் சக ஆசிரியர்கள் தம் நடைமுறையில் பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான செயல்பூர்வமான தொடர்புக்கான பல சுவாரசியமான வழிகளைக் கண்டுபிடித்திருக்கலாம். எனது ஞானத்தை செழுமைப்படுத்த இவர்களின் அனுபவம் தேவை. தற்போது நான் கீழ்வரும் “முது மொழியைப்” பின்பற்றுகிறேன்:
பள்ளியில் வளர்ப்புப் பணியைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதில் எந்த அளவிற்குக் குடும்பம் ஈடுபாடு கொள்கிறதோ அந்த அளவிற்குத்தான் பள்ளி, குடும்ப வளர்ப்பின் முழுமையும், குடும்ப வளர்ப்பின் போக்கையும் நிர்ணயிப்பதில் பள்ளியின் முக்கியப் பாத்திரமும் பொறுத்துள்ளன.
பெற்றோர்களுக்காக ஒரு சில வெளிப்படையான பாடங்களை நடத்தி, பின் இவற்றைப் பற்றி இவர்களுடன் சேர்ந்து விவாதிக்கலாமா? குழந்தைகளுக்குப் பாடம் நடக்கும் போது இப்பாடங்களுக்கு பெற்றோர்கள் வர அனுமதிக்கலாமா? அனுமதிக்கலாம். அது மட்டுமல்ல, இதைச் செய்ய வேண்டியது அவசியமும் கூட. சக ஆசிரியர்களை மட்டுமல்ல, குறிப்பாக பெற்றோர்களை இப்பாடங்களுக்கு அழைக்க வேண்டும். கல்வி சொல்லிக் கொடுப்பதும் குழந்தை வளர்ப்பும் எவ்வளவு கடினமானது, சிக்கலானது என்று அவர்கள் உணரட்டும். இது அவசியமாகும். ஆறு வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் தாம் பள்ளியில் மிகவும் இளைய பெற்றோர்கள், இவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு அனுபவம் மிகக் குறைவே.
ஆனால் வியப்பு என்னவெனில், குழந்தை வளர்ப்பும் கல்வி போதிப்பதும் இவர்களுக்கு எளிய காரியமாகப்படுகின்றன. ஏன் இப்படித் தெரிகிறது? மாபெரும் ருஷ்ய ஆசிரியர் கான்ஸ் தன்தீன் திமீத்ரியெவிச் உஷின்ஸ்கி இதில் நமக்கு உதவுகிறார். குழந்தை வளர்ப்புக் கலைக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு என்றார் இவர். அதாவது கிட்டத்தட்ட அனைவருக்கும் இது தெரிந்த, புரிந்த விஷயமாக, ஒரு சிலருக்கு எளிய காரியமாகக் கூடத் தோன்றும். அவர்கள் தத்துவரீதியாகவும் நடைமுறையிலும் எவ்வளவுக்கெவ்வளவு இதைப் பற்றிக் குறைவாக அறிந்திருக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு இது புரியக் கூடியதாயும் எளிதானதாயும் தோன்றும்.
இது தவறு என்று என் வகுப்புச் சிறுவர் சிறுமியரின் பெற்றோர்களுக்கு எப்படி உணர்த்துவது? நான் இவர்களை வகுப்புகளுக்கு அழைக்கப் போகிறேன்: “வாருங்கள், பாருங்கள், பின்னர் கலந்து பேசுவோம்”. அவர்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்குமோ அப்போது வகுப்பில் வந்து அமர நான் அனுமதி தருவேன். குழந்தைகளின் பாலான மனிதாபிமான அணுகுமுறைக் கோட்பாடுகளை நான் எப்படி நிறைவேற்றுகிறேன், எப்படிப்பட்ட முறைகளையும் வழிகளையும் பின்பற்றுகிறேன், ஒவ்வொரு குழந்தையுடனும் நான் எப்படிக் கலந்து பழகுகிறேன் என்று அவர்கள் பார்க்கட்டும். முக்கியமானது என்னவெனில், தங்கள் குழந்தை எப்படிப் படிக்கிறான், சமவயதுக் குழந்தைகளுடன் வகுப்பில் எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொள்ளட்டும்.
அப்போது தான் தம் குழந்தையின் வளர்ச்சி பற்றிய உண்மையான கருத்து பெற்றோர்களுக்கு உருவாகும், ஆசிரியரின் மீது நம்பிக்கை வரும். சில சமயங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? அந்த “அதிகாரத் தொனியுள்ள” தாய் என்னை ஒவ்வொரு நாளும் சந்தித்து தன் மகனுக்காக விசேஷ சலுகைகளைக் கோருகிறாள்: “ஏன் அவனை இரண்டாவது பெஞ்சில் உட்கார வைத்தீர்கள்? ஏன் நீங்கள் அவனிடம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை? ஏன் அவனிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வதில்லை? ஏன்?…” உண்மையிலேயே நான் அக்குழந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறேனா என்ற சந்தேகம் தோன்றுகிறது. விஷயத்தை வேறு விதமாக எடுத்துச் சொல்லவே பயப்படுகிறேன். ஒவ்வொரு தாய், தந்தை, பாட்டி, தாத்தாவின் நம்பிக்கையும் எனக்கு மிக மிக அவசியம். சின்ன விஷயங்களுக்காக மிக முக்கியமானவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்பாமலிருக்கவும் ஏதோ ஒவ்வொரு குழந்தைக்கும் என்னாலியன்ற அனைத்தையும் தராமல் இருக்கிறேனோ என்று என்னை நானே வருத்திக்கொள்ளாமல் இருக்கவும் இந்த நம்பிக்கை எனக்கு உதவும்.
வளர்ப்புப் பணி ஒரு சமுதாயப் பணியாகும். இதை ஒளிவு மறைவின்றிச் செய்ய வேண்டும். நான் மருத்துவரோ, பொறியியலரோ, பிட்டரோ, திராட்சை பயிரிடும் விவசாயியோ அல்ல. நான் ஆசிரியன், குழந்தைகளை வளர்ப்பவன். எனது துறை மிகச் சிக்கலானது, மிகவும் பொறுப்புள்ளது. ஆசிரியனும் குழந்தை வளர்ப்பாளனுமாகிய நான் எல்லோருக்கும் அவசியமானவன். குழந்தையின் முதல் ஆசிரியனாகிய என்னோடு கலந்து பேசாமல், எனது வகுப்புகளில் இல்லாமல் வேறு எங்கு இந்த இளம் பெற்றோர்கள், தமது முதல் குழந்தைகளை நவீன முறையில் வளர்ப்பதன் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள முடியும்?
என் வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்களை நோக்கி “என் வகுப்புகளுக்கு தயவு செய்து வந்து பாருங்கள்” என்று அழைப்பு விடுக்கும்போது, இவர்களின் முன், சமுதாயத்தின் முன், எனது அர்ப்பணிப்பையும் ஆசிரியர் திறமையையும் காட்டுவதாக உறுதி ஏற்கிறேன்.
எனது வகுப்புகளுக்கு வரும் பெற்றோர்களுடன் நான் எளிதாக ஒரு பொது மொழியைக் கண்டுபிடிக்க முடியும், குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கருத்தொருமித்த திட்டத்தைத் தீட்ட முடியும் என்று அனுபவம் காட்டுகிறது.
நான் இன்னமும் ஒரு படி முன் செல்லத் தீர்மானித்தேன் – தம் குழந்தைகளைப் பள்ளியில் வளர்க்க வருமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.
புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம்.
இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் என்றும் பா.ஜ.க. வினர் பலரும் பலமுறை கூறிவிட்டனர்.
தமிழகத்தின் எதிர்ப்பினை நசுக்குவது எப்படி என்பது பாரதிய ஜனதா கட்சியின் கவலை மட்டுமல்ல, மொத்த ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் கவலையும் கூட. எனவேதான், தமிழக அரசின் நிர்வாகம் முற்றுமுழுதாக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்கள், தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீசு ஆட்சியின் கொடூரத்தை அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள். டெல்டா மாவட்டக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் எதிரி நாட்டின் மீது படையெடுப்பதைப் போல நுழைகின்றனர். மக்களை நெருங்கவிடாமல் விரட்டியடித்து விட்டு, விளைநிலங்களில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படுகின்றன. பச்சைப் பயிர்களை அழித்து கெயில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இந்த போலீசு நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் சித்தரிக்கப்படுகின்றனர். தூத்துக்குடி போராட்டத்திற்குப் பிறகு இந்த ஒடுக்குமுறை தீவிரமடைந்திருக்கிறது.
தூத்துக்குடி படுகொலையை நினைவுபடுத்தாதே!
தூத்துக்குடி தியாகிகளுக்கான முதலாண்டு நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பை எந்த ஊரிலும் போலீசார் அனுமதிக்கவில்லை. “தூத்துக்குடி சம்பவத்தை நினைவுபடுத்தி, பொதுமக்கள் அந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்குத் தூண்டக்கூடிய வகையில் தாங்கள் நடத்தும் கூட்டம் அமைய உள்ளதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே, அனுமதி மறுக்கப்படுகிறது.” என்று கூறி, திருவாரூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி அரங்கக் கூட்டத்தை போலீசார் தடை செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு போலீசு விதித்திருந்த தடையை மீறி மக்கள் அதிகாரம் சென்னையில் நடத்திய நினைவேந்தல். (கோப்புப் படம்)
தூத்துக்குடியில் அரங்கக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பாத்திமா பாபு மற்றும் பிற அமைப்பினருக்கு விசித்திரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கூட்டத்தில் 250 பார்வையாளர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும், பார்வையாளர்களின் அடையாள அட்டையைச் சோதித்த பின்னரே காவல்துறையினர் அவர்களை உள்ளே விடுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளை உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமசபைக் கூட்டங்கள் முயன்றபோது, அத்தகைய கிராமசபைக் கூட்டங்களை நடத்த விடாமல், போலீசு துணையுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டனர்.
மக்கள் அதிகாரம் சார்பில் வேதாரணியத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, அந்த வட்டாரம் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களையும் போலீசே அழித்துள்ளது. சமீபத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கும்பகோணத்தில் நடத்தவிருந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மாநாட்டுக்கும் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
கூடங்குளத்தில் அணுக்கழிவை பராமரிப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அரசின் முயற்சிக்கு எதிராகக் கருத்துருவாக்கம் செய்வார் என்ற காரணத்துக்காக முன்கூட்டியே
சுப. உதயகுமாரனைத் தடுப்புக்காவலில் கைது செய்வதற்கான சட்ட விரோதமான முயற்சியில் காவல்துறை வெளிப்படையாகவே ஈடுபட்டது.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடும் இடங்களிலெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், இவ்விசயத்தில் தமிழகம் தனிச் சிறப்பாகக் குறி வைக்கப்படுகிறது.
கோலாரின் கைவிடப்பட்ட சுரங்கத்தில் அணுக்கழிவை வைக்கலாம் என முடிவு செய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வைத்தனர். ஆனால், இங்கோ இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறுவதே தேசத்துரோக குற்றமாகச் சித்தரித்து முடக்கப்படுகிறது.
மும்பை நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அம்மாநில விவசாயிகள் எதிர்ப்பதால், அத்திட்டம் ஓராண்டாகத் தடைபட்டு நிற்கிறது. இங்கே ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் சிறிய அளவு எதிர்ப்புக்கூட கொடூரமான முறையில் நசுக்கப்படுகிறது.
கருத்துரிமையை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் ஜூலை 17 அன்று நடத்திய தமிழகச் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்.
போராடும் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் போன்றோர் பொதுக்கூட்டம், அரங்குக் கூட்டம், ஆர்ப்பாட்டம் முதலான எந்த வடிவத்திலும் தமது கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. உரிமை மறுக்கப்பட்ட நிலையே இயல்பான நிலையாக மாற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு மறுப்பதற்கான காரணங்கள் சட்டத்துக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று போலீசார் கடுகளவும் கவலைப்படுவதில்லை.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தபோது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, பெரியார் சிலை உடைப்பு ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பில் அனுமதி கேட்டபோது, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று எழுத்துப் பூர்வமாக காவல்துறை பதிலளித்தது. அதேபோல, தேர்தலின்போது நடைபெற்ற பொன்பரப்பி சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தேர்தல் நடத்தை விதி என்ற பொய்க் காரணம் சொல்லியே அனுமதி மறுக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் கருத்து வெளியிடலாமா? கூடாதா?, என்னவிதமான கருத்தை வெளியிடலாம் என்று பரிசீலித்து, அதன் அடிப்படையில் அனுமதி மறுப்பதாக எழுதிக் கொடுப்பது சட்டவிரோதமானதாயிற்றே என்றுகூட யோசிக்க முடியாத அளவுக்குச் சட்டவிரோதமான அனைத்தும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இயல்பானவையாகவும் சட்டபூர்வமானவையாகவும் மாறிவிட்டன.
அரசையும் இந்து அமைப்புகளையும் எதிர்த்தால் அனுமதி இல்லை என்கிறது போலீசு!
வேறு பல அனுமதி மறுப்புக் கடிதங்கள், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்ற முன்முடிவோடு போலீசு அணுகுவதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.
மக்கள் அதிகாரம், திருச்சி கிளை, கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களைத் தேசியப் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை நிராகரித்து, காவல் உதவி ஆணையர் அளித்திருக்கும் பதில் இது : “தங்கள் அமைப்பின் செயல்பாடானது நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசாங்கம் பொதுமக்களுக்காக செயல்படுத்தும் அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் தடுக்கவும் சீர்குலைக்கவும் எடுக்கும் முயற்சியாகவும், மக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகின்ற செயல்பாடாகவும் தெரிகிறது. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.”
பள்ளி, கல்லூரி மாணவர்களை ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு எதிராகத் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக தெரிவதால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு எதிரான கூட்டத்துக்கு நன்னிலத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.
கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்! மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கிப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்த கோவை மாநகர காவல்துறை, குறிப்பிட்ட கட்சியையும் இந்து அமைப்புகளையும் நேரடியாகத் தாக்கிப் பேசக்கூடும் என்பதாலும், அரசுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் இந்து மக்களுக்கு எதிராகவும் தரக்குறைவாகப் பேசக்கூடாது என்பதாலும் அனுமதி மறுப்பதாக கூறுகிறது.
மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க. அ.தி.மு.க. அணிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்குப் புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்குப் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
போராடுவோரை அச்சுறுத்தும் பொய்வழக்கு எனும் ஆயுதம்!
யாரை ஒடுக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறதோ, அவர்கள் மீது ஒவ்வொரு பொதுக்கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தின் போதும் போலீசார் பொய் வழக்குகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்ற போதிலும், இந்தப் பொய் வழக்குகளையே காரணம் காட்டி, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பதை ஒரு உத்தியாகத் திட்டமிட்டே கையாள்கின்றனர்.
தமிழக போலீசால் போடப்பட்டுள்ள பல்வேறு பொய்வழக்குகளைச் சந்தித்துவரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பச்சைத் தமிழகம் மாநிலத் தலைவர் சுப.உதயகுமார்.
சென்ற ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது அது தொடர்பாகப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, தங்கள் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாலும் தங்கள் அமைப்பினர் மீது பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்குப் பதிலளித்தது திருச்சி மாநகர காவல்துறை.
யார் மீதும் என்னவிதமான பொய்வழக்கையும் போலீசார் பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், யாரையெல்லாம் முடக்கவேண்டும் என்று அரசு கருதுகிறதோ, அவர்கள் மீதெல்லாம் அடுக்கடுக்காகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது போலீசு.
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது டாஸ்மாக் ஊழியரைக் கடப்பாரையால் அடித்துக் கொல்ல முயன்றதாகப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மீது குறைந்தபட்சம் 27 பொய் வழக்குகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, துண்டறிக்கை விநியோகிப்பது போன்ற சாதாரணமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் தோழர்கள் மீது பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள், பேருந்துகளைக் கல்வீசித் தாக்கினார்கள், போலீசைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்று பலவிதமான பொய்வழக்குகள் பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகின்றன.
திருச்சி நகரில் 8 வழிச் சாலைக்கு எதிராக ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டிக்காக, நகரின் வெவ்வேறு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கரூரில் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தோழர்களின் மீது அலுவலகத்தில் சட்டவிரோதமாகக் கூடி அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிக்கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோத்தகிரி நகரில் செவிலியர் போராட்டத்தை ஆதரித்தும், பொதுக் கழிவறை கட்டித்தர மறுக்கும் நகராட்சி நிர்வாகத்தை விமர்சித்தும், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தும், ஈஷா மையத்திற்கு மோடியின் வருகையை கண்டித்தும், பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்தும் மக்கள் அதிகாரம் சார்பில் ஒட்டப்பட்ட ஒவ்வொரு சுவரொட்டிக்கும் அமைப்பாளர் ஆனந்தராஜ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும் நாட்டு மக்களை ஜனநாயகப் பாதையில் இருந்து நக்சல்பாரி பாதையில் கொண்டு செல்லத் தூண்டுகின்ற வகையில் என்ற வாக்கியம் தொடர்பே இல்லாமல் வேண்டுமென்றே செருகப்பட்டிருக்கிறது.
காவிரித் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி அமைதியான முறையில் நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீதும், அதில் பங்கேற்ற முன்னணியாளர்கள் மீதும் ராஜத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் வேறொரு வழக்குக்காக வேல்முருகன் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவர இருந்த போது, இந்த ராஜத்துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
இதே போல திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பேசியதையொட்டி கைது செய்யப்பட்டபோது, பிணையில் வர முடியாமல் அடுத்தடுத்த பொய் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் பேராசிரியர் ஜெயராமனும் இவ்வாறு அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
போராடும் மக்கள் முதல் சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் வரை அனைவர் மீதும் சரஞ்சரமாகப் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. இந்தப் பொய்வழக்குகள் எதையும் போலீசார் நிரூபிக்கப் போவதில்லை. இருந்த போதிலும், வழக்கில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் வேலைக்குப் போக முடியாது. பிழைப்பைக் கெடுத்து நீதிமன்றத்துக்கு அலைய வைப்பதன் வாயிலாக, ‘சுடுபால் குடித்த பூனையைப் போல’, இனிமேல் எந்தப் பொதுப்பிரச்சினைக்கும் போராடக்கூடாது என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளுவதுதான் போலீசின் நோக்கம்.
போலீசு சொல்வதே அரசமைப்புச் சட்டம்!
குடிதண்ணீர் முதல் சாலை வரை எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை போலீஸ்தான் கையாள்கிறது. போலீஸ்தான் அரசின் ஒரே முகம் என்பது தெளிவாக நிறுவப்பட்டு விட்டது. அரசமைப்பு சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எதற்கும் உட்படாமல், போலீசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டம் என்ற நிலைமை நடைமுறையில் வந்துவிட்டது.
கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டம். இக்கூட்டத்தில் அணுக்கழிவு மையத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப் பொதுமக்கள் முயன்றதை அதிகார வர்க்கம் அடாவடித்தனமாகத் தடுத்து நிறுத்தியது.
சமீபத்தில் சென்னையில் நீர்நிலை ஒன்றை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைத் தடுத்து காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குச் சமூக ஊடகங்களில் பரவலாக கண்டனம் எழுந்த காரணத்தினால் வேறு வழியின்றி விடுவித்திருக்கின்றனர்.
துண்டறிக்கை விநியோகிப்பதென்பது ஒரு கருத்துரிமை. இப்போதெல்லாம் துண்டறிக்கை விநியோகித்தால் அனுமதி வாங்கினீர்களா? என்று கேட்டு போலீசார் கைது செய்கின்றனர். அப்படி எந்தச் சட்டமும் கிடையாது என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினால், மேலிடத்து உத்தரவு என்று சமாளிக்கின்றனர். பிறகு தேசத்துரோகம், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் என்று ஏதேனும் ஒரு பொய்வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்புகின்றனர்.
போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது. பொதுநலனுக்காகப் பேசுவோரையும் போராடுவோரையும் கிரிமினல் குற்றவாளிகளாக நடத்துகிறது எடப்பாடி அரசு.
போலீசின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்களில் முறையிட்டு நிவாரணம் பெறுவது இயலாத காரியம் என்பதைப் பலரும் அனுபவத்தில் உணர்ந்து வருகின்றனர். அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் எதையும் பாசிஸ்டுகள் மதிப்பதில்லை என்ற போதிலும், அவர்களைப் பாதுகாக்கும் திசையிலேயே இந்நிறுவனங்கள் இயங்குகின்றன.
மக்கள் தம் வாழ்வாதாரங்களையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், தடைகளை மீறி நமது கருத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரத்தையும் போராடும் உரிமையையும் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு வாழ்வுரிமைப் பிரச்சினைக்காகவும் நாம் பேசவே முடியாத சூழ்நிலை நிரந்தரமாகிவிடும். இதனை முறியடிப்பதுதான் போராடும் மக்கள் மற்றும் இயக்கங்கள் அனைவரின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
வணக்கம், நான் இப்போது உங்களுக்கு ஒரு சவால் விடப் போகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தார் அல்லது உறவினர் யாருடனேனும், இரண்டு நிமிடங்கள் பேசுங்கள் அதில் ஆங்கில வார்த்தையே வரக்கூடாது. நிச்சயமாக அவர்களால் அப்படி ஆங்கில வார்த்தையே கலக்காமல் பேச முடியாது. “நான் தமிழ் பற்றுள்ளவன் தமிழன்” என வெளியில் கூறிக் கொள்கிறோமே ஒழிய, நாம் தமிழை சரியாக பேசுவதேயில்லை. என்னடா, அறிவியல் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் இப்படி தமிழைப் பற்றிப் பேசுகிறாரே என எண்ணுகிறீர்களா?
அல்சர் மற்றும் கேஸ் ஆகிய வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இது இரண்டும் ஆங்கில சொற்கள். இந்த இரண்டு சொற்களும் பலபேர் வாழ்க்கையில் அதீதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய ஒரு காணொளிதான் இது.
நான்கு நாட்களுக்கு முன்பு, ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொண்டிருக்கும்போது, சார் எனக்கு அதிகம் மருந்துகள் கொடுக்காதீர்கள். எனக்கு வயிற்றுப் புண் அதாவது அல்சர் உள்ளது எனக் கூறினார்.
நான் அவரை நோக்கி அப்படியா? உங்களுக்கு என்ன செய்கிறது எனக் கேட்டேன், அதற்கு அவர் எனக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருக்கும் எனக் கூறினார். அப்படியென்றால், நீங்கள் ‘எனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்றுதானே கூற வேண்டும். ஏன், அல்சர் என கூறுகிறீர்கள் என வினவினேன். அதற்கு அவர் ‘எரிச்சலாகவும், அடிக்கடி ஏப்பம் வருவது போலவும் இருந்தால் அது அல்சராக இருக்கலாம்’ என, எனது மருத்துவர் கூறியுள்ளார் என்றார்.
உங்களது மருத்துவர், அது அல்சர் ஆக இருக்கலாம் என்றுதானே கூறி உள்ளார். அல்சர்தான் என நீங்கள் எப்படி உறுதியாக கூறினீர்கள், என நான் மறுபடியும் அவரைக் கேட்டேன்.
உங்களுக்கு உங்களது வாய் வழியாக டியூபை செலுத்தி பரிசோதிக்கப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என கேட்டேன்.
அதற்கு அவர் இல்லை எனக் கூறினார்.
அப்படி பரிசோதித்துப் பார்த்தால்தான் உண்மையில் அல்சர் உள்ளதா, இல்லையா என தெரிய வரும். பரிசோதிக்காமலேயே எப்படி உங்களுக்கு அல்சர் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள், எனக் கேள்வி எழுப்பிய பின்னர்தான் அவர் தெளிவடைந்தார்.
உண்மையில் எனக்கு கேஸ் பிரச்சினை உள்ளது, அல்சர் பிரச்சினை உள்ளது, வயிற்று வலி உள்ளது என பல பேர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. அவர்களை எண்டோஸ்கோபி செய்து பார்த்தால் உண்மையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் தென்படாது. அவர்களது வயிற்றில் சுரக்கும் அமிலமும் இயல்பாகத்தான் இருக்கும், அவர்களுக்கு அல்சர் பிரச்சினையும் இருக்காது. இதன் பொருள் இல்லாத ஒரு நோய் தனக்கு இருப்பதாக பலபேர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
பலபேர் தனக்கு அல்சர் இருப்பதை பெருமையாகவும், பரம்பரை சொத்து போலவும் வெளியில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மை கிடையாது, இப்படி ஒரு நோயும் கிடையாது. இதை நாங்கள் ஆங்கிலத்தில் functional dyspepsia எனக் கூறுவோம். இதன் பொருள் வயிற்றில் ஏப்பம் வருவது போலவும், வயிறு வலிப்பது போலவும் நமக்குத் தென்படும். இது ஒரு விதமான மன நோய். நமக்கு இந்த பிரச்சினை இருக்கிறது, என நாம் திரும்பத் திரும்ப எண்ணுவதாலேயே, இந்த பிரச்சினை நமக்கு நீடிக்கிறது. இந்த அசிடிட்டி பிரச்சினை மனநோய் என்பதை நாம் உணர்ந்து கொண்டோமேயானால், நாம் மாத்திரைகள் சாப்பிடாமலேயே இருக்கலாம்.
உண்மையிலேயே ஒருவருக்கு அல்சர் இருக்கிறது, அவருக்கு எத்தனை நாட்கள் மருத்துவம் தேவைப்படும் என்றால்? குறைந்தது நான்கு வாரம், அதிகபட்சம் ஒரு ஐந்து, ஆறு வாரங்கள் தேவைப்படும். அல்சர் என்பதன் பொருள் குடல்புண் அல்லவா? ஒருவருக்கு கை அல்லது கால்களில் புண் ஏற்படுகிறது என்றால், அது எத்தனை நாட்களில் சரியாகும்? குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அதிகபட்சம் ஒரு மாதம். ஆனால், எப்படியும் அது சரியாகிவிடும்தானே. ஐந்து வருடமாக இந்த புண் இருக்கிறது என யாரேனும் கூறி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிடையாதல்லவா.
அதே போல்தான் நம் குடலிலும் புண்ணானது ஏற்பட்டால், அது சரியாகித்தான் தீரும் என்பதே இயற்கையின் விதி, குணமாகாத புண் என ஒன்று கிடையாது. உங்களில் பலபேர் பல வருடங்களாக, அசிடிட்டி மாத்திரை எடுத்துக்கொண்டுதான் வருகிறீர்கள் அல்லவா? ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? அசிடிட்டி அல்லது அல்சர் என்பது பிறவி நோயா? இல்லை அல்லவா. போன வருடம் எனக்கு அல்சர் இருந்தது. இரண்டு மாதங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். குணமாகி விட்டது என்றால், அது சரியான வாதம்.
இதற்கு மாறாக அதை பிறவிநோய் போல் எண்ணுவது தவறு. ஒருவருக்கு அல்சர் என்றால் அதற்கான மருத்துவம் சிலருக்கு ஒருவாரம் தேவைப்படும், இன்னும் சிலருக்கு இரண்டு வாரங்கள் அதிகபட்சம் நான்கு மாதங்களைத் தாண்டி தேவைப்படாது.
ஆனால், உங்களில் பலபேர் பல வருடங்களாக இந்த மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் அல்லவா? இது ஒரு மன நோயாக மாறி, நீங்கள் அதைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்றால் அல்சர், அதிகப்படியான பொதுவான நோய் கிடையாதா எனக் கேட்டால் கிடையாது.
நான் ஒரு இருதய நோய் மருத்துவர். எனது நோயாளிகளுக்கு நான் தேவையான மருந்து, மாத்திரைகளை எழுதுவேன். ஆனால், பல மருத்துவர்கள் மருந்து மாத்திரைகள் எழுதும்போது, இந்த அசிடிட்டி மாத்திரையும் சேர்த்து எழுதுகிறார்கள். அது தவறு, இது தேவையான ஒன்றே கிடையாது. மிகவும் குறைவான நபர்களுக்குதான், இந்த மாத்திரைகள் உண்டால் அசிடிட்டி ஏற்படும். என்னுடைய நோயாளிகளின் மருந்து சீட்டுகளை வாங்கி பார்த்தீர்களென்றால், பல பேருடைய சீட்டுகளில் இந்த ஆசிடிட்டி மாத்திரைகள் இருக்காது. அப்படியும் சில பேர் அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டு வந்தார்கள் என்றால்.? அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு மாத்திரைகள் எழுதித் தருவேன். அது ஏற்படாமலிருக்க மாத்திரைகளை நான் ஒருபோதும் நிரந்தரமாக பரிந்துரைக்க மாட்டேன்.
சரி இந்த மாத்திரைகள் சாப்பிடுவது தேவையற்றது என்றாலும், அதை நான் உட்கொண்டு கொள்கிறேன். இதனால் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என நீங்கள் கேட்டீர்கள் என்றால், அது தவறு.
இந்த மாத்திரைகளினால் பாதிப்பு உண்டா? என்றால் உண்டு. நம் உடலில் தாதுப்பொருட்களையும், வைட்டமின்களையும் உள்ளிழுக்கும் தன்மையை இந்த அசிடிட்டி மாத்திரைகள் குறைக்கிறது. இதனால் பல பேருக்கு எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள் பல பேருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணம், அவர்கள் பல வருடங்களாக இந்த அசிடிட்டி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டதுதான். அடுத்ததாக இந்த மாத்திரைகள் உட்கொள்வதால் பல பேருக்கு நெஞ்சில் சளி பிடிக்கிறது. நிமோனியா என நாம் கூறுவோம். இன்னும் பெரிய தீங்கு என்னவென்றால் இதனால் நமது கிட்னியும் பாதிப்படைகிறது, உப்புச் சத்தை அதிகமாக ஏற்படுத்தி, நமது கிட்னி பாதிப்படையச் செய்கிறது.
இப்படி பிரச்சினைகள் இருக்கும்போது, இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவது என்பது நல்ல வழிமுறை கிடையாது. தேவைப்பட்டால் உட்கொள்ள வேண்டும். குணமடைந்தவுடன் குறிப்பிட்ட காலவரைக்குள், அதை நாம் நிறுத்தவும் வேண்டும். ஆனால், பலபேர் மனரீதியாக இந்த மாத்திரையை நிறுத்தினால், எனக்கு அசிடிட்டி ஏற்படும் என நம்புகிறீர்கள். இப்படி நம்புவது மனநோய் என்பதைத்தான் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். சரி இது அல்சர் இல்லை, அசிடிட்டி இல்லை எனில், படுத்தால் அடிக்கடி ஏப்பம் வருவதும், நெஞ்சு எரிச்சலாக இருப்பதும் எதனால் ?
அதற்கான விடையை இப்போது பார்ப்போம். உணவுக்குழாய் வழியாக செல்கிறோம் உணவு இரைப்பையில் தங்கி சிறிது சிறிதாக குடலுக்குள் தள்ளப்படும். இரைப்பையில் தான் அமிலம் இருக்கிறது, சுரக்கிறது இரைப்பையில் அமிலம் இருக்கிறது என்பது உண்மை. எனக்கு அமிலம் அதிகமாக சுரக்கிறது என்பது உண்மை கிடையாது. மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டோர்க்கு தான் இவ்வாறு சுரக்கும். உணவானது உணவுக் குழாய் வழியாக, இரைப்பையை நோக்கித்தான் வரும் ஆனால் கீழிருந்து மேல் ஏறாது. உணவுக் குழாய்க்கும், இரைப்பைக்கும் நடுவில் வால்வு போன்ற ஒரு செயல்பாடு இருக்கும். நாம் தலைகீழாக நின்றாலும், உணவானது இரைப்பையிலிருந்து மேல் சென்று மீண்டும் இரைப்பைக்கு வந்து தங்கிவிடும்.
நான் மேலே குறிப்பிட்ட அந்த வால்வு செயல்பாடு சரியாக இல்லை என்றால். இரைப்பையில் சுரக்கும் அமிலம் ஆனது, உணவுக் குழாய்க்கு மேலெழும்பி, நமக்கு நெஞ்சில் ஒரு வகையான எரிச்சலை ஏற்படுத்தும். இதனால்தான் ஒருவருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்றும் கூறலாம். இந்த உணவுக் குழாய், இருதயத்துக்கு பின்னால் உள்ளது. இருதயம் பாதிப்பு அடைந்தால் வரும் எரிச்சலும், இந்த உணவுக் குழாயில் ஏற்படும் எரிச்சலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது இருதய பாதிப்பினாலும் வரலாம் என மக்கள் எண்ணுவதே இல்லை. எனக்கு அசிடிட்டி உள்ளது கேஸ் பிரச்சினை உள்ளது என்றுதான் பல பேரும் எண்ணிக் கொள்கிறார்கள். இதை உணராத பட்சம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்றாக இது போய் முடியும்.
இயல்பான நெஞ்செரிச்சலை, நாம் ஜி.இ.ஆர்.டி என அழைப்போம். இதன் பொருள் நமது வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேல் எழுவதனால் ஏற்படும் எரிச்சல் எனலாம். அல்சரை விட, இதுதான் மிகவும் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நமக்குத் தெரிந்ததுதான்.
முதலாவதாக, நாம் வயிறு முட்ட சாப்பிடுகிறோம் என்றால் இரைப்பை நிரம்பி அமிலம் மேலே வரும். எனவே அரைவயிறு உண்ண வேண்டும். இரண்டாவதாக, நாம் முன்பு கூறியது போல இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் இருக்கக் கூடிய வால்வின் செயல்பாடை தடுப்பது, புகைப்பிடிக்கும் பழக்கம்தான். எனவே புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக, மதுப் பழக்கமும் இந்த வேல்வின் செயல்பாட்டைத் தடுக்கும், அமிலத்தையும் அதிகமாக சுரக்கச் செய்யும். அதேபோல் உணவு உண்டவுடன் உடனே படுக்க கூடாது, நம் படுப்பதினால் அந்த வேல்வின் செயல்பாடு குறைவாக இருந்தால் அமிலம் மேலே வரும். எனவே உணவு உண்ட உடன் குறைந்தது ஒரு மணி நேரம் நேராக உட்கார வேண்டும்.
எந்த மாதிரியான உணவு உட்கொண்டால், இந்த அசிடிட்டி பிரச்சினை அதிகமாகிறது அல்லது குறைகிறது என்பதை நாமே, நம் அனுபவத்தின் மூலம் யூகிக்க முடியும். ஆனால், முக்கியமானது என்னவென்றால் அரிசி அதாவது கார்போஹைட்ரேட்டை நாம் தவிர்க்க வேண்டும். நாம் மூன்று வேளையும் அரிசியே உட்கொண்டு வருகிறோம். இந்த அரிசி அசிடிட்டியை கூட்டுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே நான் முந்தைய வீடியோக்களில் கூறியுள்ளது போல அரிசி உணவைத் தவிர்த்து சரிவிகித உணவுக்கு மாறுங்கள்.
ஏப்பம் நெஞ்செரிச்சல் வருவதைத்தான் அஜீரணம் என பல பேர் கூறுகிறார்கள். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் அரை வயிறு உணவு உண்ண வேண்டும். அதேபோல், மது பழக்கம், புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை மட்டுமே நாம் உணவாக அடுத்த 5 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை அரிசி, கோதுமை உணவுகளை அதிகம் குறைத்துக் கொள்ளலாம்.
வயிற்றில் வலி ஏற்படும் போதெல்லாம் கட்டித் தயிரை அதிகம் சேர்க்கலாம். இதை செய்தால் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் இந்த பிரச்சினை முழுவதுமாக சரியாகிவிடும். அப்படி இல்லையென்றால் மருத்துவரை அணுகலாம். அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து நீங்கள் மருந்து மாத்திரையும் உட்கொண்டும் மாதக்கணக்கிற்கு மேல், இது குணமடையாமல் அப்படியே உள்ளது என்றால், நீங்கள் வயிறு மற்றும் குடல் நிபுணரான மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
சரிவிகித உணவுக்கு மாறுவதால் நீரிழிவு நோய் குறைகிறது, ரத்தக் கொதிப்பு குறைகிறது, இது எல்லாவற்றுக்கும் முதலாக இந்த நெஞ்செரிச்சல் குறைகிறது. இதன் மூலம் நான் கூற வருவது, எனக்கு அல்சர் பிரச்சனை உள்ளது என தேவையில்லாமல் நாம் கூற வேண்டாம். அதேபோல் சார் எனக்கு அங்கங்க கேஸ் பிடிக்கும், குத்தி விட்டால் உடனே ஏப்பம் வந்து சரியாகிவிடும், என கூறுவதெல்லாம் நாமாகக் கற்பனை செய்து கொண்டதுதான். கேஸ் என்றால் உணவுக் குழாயில் இருக்கும் அல்லது நுரையீரலில் இருக்கும் வேறு எங்கும் இருக்காது. நாம் இறந்து போனால் மட்டுமே உடலின் மற்ற பாகங்களில் கேஸ் உருவாகும்.
எனவே கேஸ், அல்சர் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளதோ, அதை அப்படியே தமிழில் கூறிப் பாருங்கள். உங்களுக்கு பாதி நோய் இல்லாமல் போய்விடும், இருந்தாலும் வைத்தியம் பார்ப்பதற்கு அது எளிதாக இருக்கும்.
அல்சர் என்பது மிகவும் குறைவான நபருக்குத்தான் இருக்கும். அப்படி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள், அதிகபட்சம் ஒரு மாதங்களில் குணப்படுத்தக்கூடிய ஒன்று. நமக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம். சரிவிகித உணவுக்கு மாறுவதன் மூலமும் இதை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எனவே இந்த மருந்து, மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதினால், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் நமக்கு ஏற்படும் என்பதை உணர்ந்து நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.