Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 838

“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!

vote-012வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், “அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்”எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், “அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்டதாக’’ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.  குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.

ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது.  இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், “அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட” உண்மையைப் போட்டு உடைத்தனர்.  மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்து விடவில்லை.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் “இந்து’மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை இம்மாநிலங்களில் நடத்தி வருகிறது.  இப்படி முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசை காட்டிக் கடத்தப்படும் பெண்கள், மதம் மாற்றப்படுவதோடு, தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு இறக்கி விடப்படுவதாகவும்; போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் பீதியூட்டி வருகின்றன.

இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்து மதவெறி அமைப்பு, “வடக்கு கர்நாடகாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூன்று இந்துப் பெண்கள் முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசைகாட்டி கடத்தப்படுவதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 30,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும்” கூறி வருகிறது.  எவ்வித ஆதாரமுமற்ற இந்த நச்சுப் பிரச்சாரத்தைப் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கி வெளியிட்டு வருகின்றன.  இந்த இந்து மதவெறி அமைப்பு முசுலீம் இளைஞர்களைப் “பாலியல் ஓநாய்கள்’என வசை பாடுவதோடு, இந்தக் கடத்தலைத் தடுக்க “ராணாராகினி’என்ற அமைப்பைக் கட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

இந்துப் பெண்களைத் திருமண ஆசைகாட்டி மயக்குவதற்காக முசுலீம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும்; இதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும்; இந்தப் பணத்தைக் கொண்டு அந்த இளைஞர்கள் விதவிதமாக ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான “பைக்’’குளில் சுற்றி வந்து இந்துப் பெண்களை மயக்குவதாகவும் கதைவிடும் இந்து மதவெறி அமைப்புகள், இந்தக் கட்டுக்கதைக்கு “காதல் புனிதப் போர்'(ஃணிதிஞு  ஒடிடச்ஞீ) என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளன.  முசுலீம்கள் இதனை ஓர் இயக்கமாக நடத்தி வருவதாகவும், இந்தக் காதல் புனிதப் போருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் திகிலூட்டி வருகின்றன.

ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வரும் தீவிரவாதிகளைக் கண்டு மட்டுமல்ல, கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் முசுலீம் இளைஞர்களைக் கண்டும் இந்துக்கள் பயப்பட வேண்டும் என்பதுதான் இந்த விஷமப் பிரச்சாரத்தின் நோக்கம்.  இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் சமுதாயம் பற்றி பரப்பிவரும் பல்வேறு கட்டுக் கதைகள்-அவதூறுகளில் இதுவும் ஒன்று என அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.

கேரளாவில் பதனம்திட்டா என்ற நகரில் உள்ள செயிண்ட் ஜான் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்த இரு மாணவிகள், ஷஹான் ஷா, சிராஜுதீன் என்ற இரு முசுலீம் இளைஞர்களைக் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டனர். அந்த இரு மாணவிகளும் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பிரச்சினை கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் அடுத்த வாய்தாவின் பொழுது அவ்விரு பெண்களும்,”தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக’பல்டியடித்து புதிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்குமூலத்தைப் பிடித்துக்கொண்ட கேரள உயர்நீதி மன்றம், “லவ் ஜிகாத் என்றொரு அமைப்பு நிஜமாகவே உள்ளதா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்குத் தொடர்புண்டா?”என்பது உள்ளிட்ட எட்டு கேள்விகளை எழுப்பி, இது பற்றி தீர விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.  இந்த எட்டு கேள்விகளுக்கும் இல்லை என்று பதிலளித்த கேரள போலீசார், மறுபுறமோ கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கலப்புத் திருமணங்களும், மதமாற்றங்களும் நடந்து வருவதால், இது பற்றி இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையைப் பிடித்துக் கொண்ட பத்திரிகைகள் “லவ் ஜிகாத்’பற்றி ஊதிப் பெருக்கிப் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டன.

தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், “தனது மகள் சில்ஜாராஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் காணவில்லை; அவர் கேரளாவிலுள்ள மதரசா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்; எனவே, தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்”எனக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இவ்வழக்கு விசாரணையின்பொழுது சில்ஜாராஜ்,”தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; தான் விரும்பியே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக” வாக்குமூலம் அளித்தார்.  எனினும் கர்நாடகா உயர்நீதி மன்றம் அப்பெண்ணிண் விருப்பத்துக்கு மாறாக, சில்ஜாராஜை அவரது பெற்றோரோடு போகுமாறு கட்டளையிட்டது.  சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, “இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது”என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, “லவ் ஜிகாத்’பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.

போலீசார் தமது அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் 404 பெண்கள் காணாமல் போயிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 332 பெண்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 57 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதலனோடு வெளியேறிப் போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் போலீசாரின் அறிக்கையில் காதலனோடு வெளியேறிப் போன பெண்களுள் ஒருசிலர் இந்து மதத்தைச் சேராதவர்கள்; அதே சமயம், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்து வாலிபர்களோடு வெளியேறிப் போன வழக்குகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகா போலீசாரின் இந்த அறிக்கை “லவ் ஜிகாத்’என்ற இந்து மதவெறிக் கும்பலின் நச்சுப் பிரச்சாரத்தை மறுத்துவிட்ட போதிலும், கர்நாடகா உயர்நீதி மன்றம் சில்ஜாராஜைத் தனது காதல் கணவனோடு போவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  கர்நாடகா பா.ஜ.க. அரசாங்கமோ லவ் ஜிகாத் பற்றி விசாரிக்குமாறு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பிரச்சாரத்தின் சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறது.

உத்திரப் பிரதேச மாநில அரசுக்கும் லதா சிங் என்பவருக்கும் இடையே உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கொன்றில், “வயதுக்கு வந்த ஒருவர் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை” ஆதரித்து அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்களின் நடத்தை “நீதியை” நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனமான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை.  வடக்கு கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் முசுலீம் மாணவர்கள் வகுப்பறைகளில் தனித்தனியாக அமரும் அளவிற்கு, அப்பகுதியில்  மதப்பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் ஆர்.எஸ்.எஸ். சார்பான நடத்தை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்?  இந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல், மதமாற்றத் தடைச் சட்டம் போல், காதல் திருமணத் தடைச் சட்டம், கலப்புத் திருமணத் தடைச் சட்டம் போன்றவற்றையும் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால்கூட ஆச்சரியப்பட முடியாது!

-புதிய ஜனநாயகம், டிசம்பர், 2009

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

38

vote-012ந்தியா என்றொரு நாடும், ஒரிசா என்றொரு மாநிலமும்  தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே, தற்போதைய  தென் ஒரிசாவிலிருக்கும் அந்த தாழ்ந்த, தட்டையான மலைத்தொடர், டோங்ரியா கோண்டு இன மக்களின் தாயகமாக விளங்கி வருகின்றது. மலைகள் கோண்டு இன மக்களைக் கவனித்துக் கொண்டன. அம்மக்கள் மலைகளைக் கவனித்துக் கொண்டனர். அவற்றை வாழும் தெய்வங்களாய் வழிபட்டனர்.  இம்மலைகள் அதில் புதைந்திருக்கும் பாக்சைட் கனிம வளத்திற்காக தற்போது விற்கப்பட்டுவிட்டன.  கோண்டு மக்களைப் பொறுத்தவரையில், இச்செயல் கடவுளை விற்பதற்குச் சமமானது. கடவுள் ராமனாகவோ, அல்லாவாகவோ அல்லது ஏசு கிருஸ்துவாகவோ இருந்தால் ”அந்தக் கடவுள் என்ன விலைக்குப் போயிருப்பார்? ” என்று கேட்கின்றார்கள் அம்மக்கள்.

ஒருவேளை, அந்த கோண்டு மக்கள் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டுமோ! ஏனென்றால், அவர்களது  பிரபஞ்ச நியதியின் கடவுளாகிய நியம் ராஜாவின் உறைவிடமான நியம்கிரி மலை, வேதாந்தா (அறிவின் எல்லையை உபதேசிக்கும்  இந்துத் தத்துவயியலின் ஒரு கிளை) என்ற பெயர் தாங்கிய கம்பெனியிடம் அல்லவோ விற்கப்பட்டிருக்கிறது! வேதாந்தா- உலகத்தின் மிகப்பெரும் சுரங்கத் தொழில் நிறுவனங்களில் ஒன்று. லண்டனில், முன்னர் ஈரான் மன்னருக்குச் சொந்தமாயிருந்த மாளிகையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமானது அந்நிறுவனம். இன்று ஒரிசாவைச் சுற்றி வளைத்து வருகின்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேதாந்தாவும் ஒன்று.

தட்டையான உச்சிகளைக் கொண்ட இம்மலைகள் அழிக்கப்பட்டால், அவற்றைப் போர்த்தியிருக்கும் பசுமையான காடுகளும் சேர்த்து அழிக்கப்படும். அவற்றிலிருந்து ஊற்றெடுத்து வழிந்து, சமவெளிகளை வளப்படுத்தும்  சுனைகளும், ஆறுகளும் அழியும்.  டோங்ரியா கோண்டு இன மக்களும் அழிந்துபடுவார்கள். இதே வகையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கும், இந்தியாவின் காடுகளடர்ந்த இதயப் பகுதியில், அதனைத் தாயகமாய் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களும் அழிக்கப்படுவார்கள்.

நெரிசலும், புகைநாற்றமும் மண்டிய நமது நகரங்களில் வாழும்  சிலர் இப்படிப் பேசுகிறார்கள், “அதனால் என்ன? முன்னேற்றத்துக்கான விலையை யாராவது கொடுத்துத்தானே ஆகவேண்டும்.” சிலர் இப்படிக்கூடப் பேசுகிறார்கள், “இதையெல்லாம் நாம் சந்திக்கத்தான் வேண்டும். இந்த சனங்களுடைய காலம் முடிந்து விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எந்த வளர்ந்த நாட்டை வேண்டுமானாலும் பாருங்கள். எல்லோருக்கும் இப்படி ஒரு ‘கடந்த காலம்’ இருக்கத்தான் செய்கிறது.”  என்கிறார்கள். உண்மைதான், அவர்களுக்கெல்லாம் அப்படி ஒரு கடந்த காலம் இருக்கத்தான் செய்கிறது. “அப்படியானால், அத்தகையதொரு கடந்த காலம் ஏன் ‘நமக்கு’ மட்டும் இருக்கக் கூடாது? ” என்பது அவர்களின் கேள்வி.

இத்தகைய சிந்தனைப் போக்கின் அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் காட்டு வேட்டை (Operation Green Hunt) எனும் போர்; மத்திய இந்தியாவின் காடுகளைத் தமது தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘மாவோயிஸ்ட்‘ கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் போர். மாவோயிஸ்டுகள் மட்டும்தான் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா என்ன?  நிலமற்றவர்கள், தலித் மக்கள், வீடற்றவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், நெசவாளர்கள் என நாடு முழுவதும் ஒரு பெரும் போராட்டக் களமே விரிந்து கிடக்கிறது.

மக்களுடைய நிலங்களையும், இயற்கை வளங்களையும் மொத்தமாக முதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொள்வதற்கு வழிவகை செய்யும் கொள்கைகள் உள்ளிட்ட எல்லா அநீதிகளின் உருத்திரண்ட வடிவமாக, தங்களை நசுக்குவதற்கு உருண்டு வந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான அநீதித் தேரின் சக்கரங்களைத் தடுத்து நிறுத்த  அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், மிகப்பெரிய அபாயமென்று மாவோயிஸ்டுகளை மட்டுமே குறி வைத்திருக்கிறது அரசாங்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிலைமைகள் இன்றைய அளவுக்கு மோசமானதாக இல்லாதிருந்த ஒரு சூழலில், ‘தனிப்பெரும் உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்‘ என்று மாவோயிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்  பிரதமர் மன்மோகன் சிங். அவர் பேசியவற்றிலேயே இந்தக் கருத்துதான் மிகப் பிரபலமானதாகவும், மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதாகவும் இருக்கக்கூடும். ஜனவரி 6, 2009 அன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள் சந்திப்பின்போது, மாவோயிஸ்டுகள் ஒன்றும் அத்தனை பலம் பொருந்தியவர்களல்ல என்று அவர் தெரிவித்த கருத்துக்கு, முந்தைய கூற்றிக்குக் கிடைத்த அளவிலான முரட்டுக் கவர்ச்சி என்ன காரணத்தினாலோ கிடைக்கவில்லை. ஜூன் 18, 2009 அன்று நாடாளுமன்றத்தில் பேசியபோது, அவர் தனது அரசின் உண்மையான கவலையை வெளியிட்டார்; “இயற்கை தாதுவளம் மிக்க பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமேயானால், நிச்சயமாக முதலீடுகளுக்கான சூழ்நிலை அதனால் பாதிக்கப்படும்”.

மாவோயிஸ்டுகள் என்பவர்கள் யார்? அவர்கள் தடைசெய்யப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இன் உறுப்பினர்கள்; 1967-இல் நக்சல்பாரி எழுச்சியை வழிநடத்தி, பின்னர் இந்திய அரசால் அழித்தொழிக்கப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இன் வழி வந்த பல்வேறு பிரிவினரில், ஒரு பிரிவினர். இந்திய சமூகத்தின் உள்ளார்ந்த, கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டுமானால், அது இந்திய அரசை வன்முறையாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். முன்னர் பீகார் மற்றும் ஜார்கண்டில் மாவோயிச கம்யூனிச மையமாகவும்1, ஆந்திராவில் மக்கள் யுத்தக் குழுவாகவும் அவர்கள் இயங்கியபோது, மாவோயிஸ்டுகள் மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றிருந்தார்கள். (2004-இல் தற்காலிகமாக அவர்கள் மீதான தடை நீக்கப்பட்ட போது, வாரங்கல்லில் நடைபெற்ற அவர்களது பேரணியில் 15 இலட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள்).

எனினும் ஆந்திரத்தில் அவர்களது செயல்பாடு பின்னர் மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. தங்களது உறுதியான ஆதரவாளர்களில் சிலரையே கடுமையான விமரிசகர்களாக மாற்றும் அளவிற்கு ஒரு வன்முறைப் பாரம்பரியத்தை அவர்கள் விட்டுச்சென்றார்கள். ஆந்திர போலிசும் மாவோயிஸ்டுகளும் நடத்திய கட்டுப்படுத்த முடியாத கொலைகள் மற்றும் போட்டிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் யுத்தக் குழு நிர்மூலமாக்கப்பட்டது. உயிர்  பிழைத்தவர்கள் ஆந்திராவிலிருந்து சத்தீஸ்கருக்கு தப்பியோடினார்கள். அடர்ந்த காடுகளின் இதயப் பகுதியில், ஏற்கெனவே பல பத்தாண்டுகளாக அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த தங்களது தோழர்களோடு இணைந்து கொண்டார்கள்.

காடுகளில் உள்ள மாவோயிஸ்டு இயக்கத்தின் உண்மையான இயல்பு குறித்த நேரடி அனுபவம்  “வெளியாட்கள்” பலருக்கும் கிடையாது. சமீபத்தில், ‘ஓபன் மேகசின்’ எனும் பத்திரிகையில், மாவோயிஸ்டு உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் கணபதியுடனான நேர்காணல் ஒன்று வெளிவந்தது. ‘மாவோயிஸ்டு கட்சி என்பது எவ்வகை வேறுபாட்டையும் அனுமதிக்க மறுக்கின்ற,  அதிகாரத்துவப் போக்குடைய, மன்னிக்கும் சுபாவமே இல்லாத கட்சி’ என்று கருதுபவர்களின் மனதை மாற்றும் வகையில் அந்தப் பேட்டி அமைந்திருக்கவில்லை. ஒரு வேளை, மாவோயிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவார்களேயானால், இந்தியச் சமூக அமைப்பில் சாதிப்பிளவுகள் தோற்றுவித்திருக்கும்  கிறுக்குத்தனமான பன்முகத்தன்மையைக் கையாளும் வல்லமை அவர்களுக்கு இருக்கும்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் விதத்திலான எதையும் தோழர் கணபதி அப்பேட்டியில் கூறவில்லை.

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பை போகிறபோக்கில் அங்கீகரித்து அவர் பேசிய முறையானது, மாவோயிஸ்டுகள் மீது பெரிதும் அனுதாபம் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பைக் கூடச் சில்லிடச் செய்வதாக இருந்தது. தாங்கள் தொடுத்த போரில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த கொடூரமான வழிமுறைகள் மட்டுமல்ல இதற்குக் காரணம்;  தான் எந்த இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக புலிகள் இயக்கம் கூறிக் கொண்டதோ,  எந்த மக்கள் விசயத்தில் அது கொஞ்சமாவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமோ, அந்த தமிழ் மக்கள் மீது இறங்கிய பேரழிவின் துயரமிருக்கிறதே, அதுவும்தான் தோழர் கணபதியின் பேச்சு தோற்றுவித்த நடுக்கத்துக்குக் காரணம்.

தற்போது, மத்திய இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் கொரில்லாப் படை என்பது அநேகமாக, பரம ஏழைகளும் பட்டினியின் கோரப் பிடியில் தவித்துக் கொண்டிருப்பவர்களுமான பழங்குடி மக்களால் ஆன படையாகும். பஞ்சம் பட்டினி என்றவுடனேயே நமது மனக்கண் முன் தோன்றுகின்ற,  சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளின் பட்டினி நிலையுடன் ஒப்பிடத்தக்க நிலை அது.

சொல்லிக் கொள்ளப்படும் இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்து அறுபதாண்டுகளுக்குப் பின்னரும், கல்வி, மருத்துவம் அல்லது சட்டப்படியான நிவாரணங்கள் என எதுவுமே கிடைக்கப்பெறாத மக்கள் அவர்கள். பல்லாண்டுகளாக அவர்கள் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டவர்கள்; கந்து வட்டிக்காரர்களாலும், சிறு வியாபாரிகளாலும்  தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்; போலிசும், வனத்துறை அதிகாரிகளும் தமது உரிமை போல் கருதி பழங்குடிப் பெண்களை வல்லுறவு கொண்டனர்.  அப்பழங்குடி மக்கள் தம் கண்ணியத்தை சிறிதளவேனும் மீளப்பெற்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களுடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து, அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய மாவோயிஸ்டு கட்சியின் அணிகள்தான்.

இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

உங்கள் பகுதிகளை ‘வளர்க்க‘த்தான் நாங்கள் விரும்புகிறோம் என்று அரசாங்கம் சொல்வதை நம்புவதற்கு அவர்கள் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். தாண்டேவாடாவின்2 காடுகளுக்குக் குறுக்கே  தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்டுவருகின்ற, விமான ஓடுபாதைக்கு நிகரான மழமழப்பான அகலமான நெடுஞ்சாலைகள்,  தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு நடத்திச் செல்வதற்காகத்தான் அமைக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் நிலங்களுக்காகப் போராடத் தவறினால், தாம் முற்றாக அழித்தொழிக்கப்படுவோம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அதனால்தான், அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்திருக்கின்றார்கள்.

மாவோயிஸ்டு இயக்கத்தின் சித்தாந்தவாதிகள் இந்திய அரசைத் தூக்கி எறிவது என்ற தங்களது அறுதி இலக்குக்காகத்தான் போராடுகிறார்கள் என்றபோதிலும், தற்போதைய நிலையில் கந்தல் அணிந்த,  அரைப் பட்டினி நிலையில் உள்ள தமது படையும், ஒரு ரயிலையோ பேருந்தையோ ஒரு சிறு நகரத்தையோ கண்ணால் கூடப் பார்த்திராத அதன் கணிசமான சிப்பாய்களும், தாங்கள் உயிர் வாழ்வதற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாவோயிஸ்டுகளும் அறிந்தே இருக்கிறார்கள்.

2008 ஆம் ஆண்டில், இந்திய திட்டக்  கமிசனால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று “தீவிரவாதிகளால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள்” என்ற தலைப்பில்  ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. “நக்சல்பாரி (மாவோயிஸ்டு) இயக்கம் என்பது நிலமற்ற, ஏழை விவசாயிகள், பழங்குடியினர் மத்தியில், உறுதியான அடித்தளத்தைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் என அங்கீகரிக்கப்பட வேண்டும்.  அதன் தோற்றமும் வளர்ச்சியும், அதன் அங்கமாய் உள்ள மக்களின் சமூக வாழ்நிலை மற்றும் அனுபவங்களின் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும். அரசின் கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையிலான பாரிய இடைவெளி என்பது மேற்கூறிய நிலைமைக்கான காரணக் கூறுகளில் ஒன்றாக இருக்கின்றது. ‘வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது’  என்பது இவ்வியக்கத்தின் அறிவிக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையாக இருந்த போதிலும், அதன் அன்றாட நடைமுறைகளின் வெளிப்பாடுகளில், இது சமூக நீதி, சமத்துவம், பாதுகாப்பு மற்றும் தல மட்ட முன்னேற்றத்திற்கான போராட்டம் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.” என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.  ’தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்’ எனும் கூற்றிலிருந்து இந்த அறிக்கை வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது!

இது மாவோயிஸ்டு கிளர்ச்சியையே கவர்ச்சிச் செய்தியாகக் எடுத்துக் கொண்டிருக்கும் ’மாவோயிஸ்டு வாரம்’! எனவே, ‘பல்லாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிகளின் திரட்சியே இப்பிரச்சினையின் ஆணிவேராக இருக்கிறது’ என்ற கருத்தை ஒப்புக்கொள்வதற்கு, கொழுத்த கோடீசுவரக் கோமான் முதல் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீரும் நாளிதழின்  குரூர மனம் படைத்த ஆசிரியர் வரை, அனைவருமே தயாராக இருப்பது போலத் தோன்றுகின்றனர். ஆனால், பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்குப் பதிலாக – அதுதான் அவர்களது நோக்கம் எனும் பட்சத்தில்  இந்த 21-ஆம் நூற்றாண்டின் தங்க வேட்டையை அவர்கள்  தடுத்து நிறுத்த வேண்டிவரும் – விவாதத்தை முற்றிலும் வேறு திசையை நோக்கித் திருப்பும் முயற்சிக்கிறார்கள்; புனிதமான ஆவேசம் பீறிட மாவோயிஸ்டு ‘பயங்கரவாதத்துக்கு‘ எதிராகக் குமுறி வெடிக்கிறார்கள்.  ஆனால், இவையெல்லாமே அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விவகாரமாகத்தான் அமைந்திருக்கிறது.

ஆயுதமே தீர்வு என்று துணிந்து களத்தில் நிற்பவர்கள், நாள் முழுதும் செய்தித்தாள் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அமர்ந்திருக்கவில்லை; அல்லது தொலைக்காட்சி காமெராக்களுக்காக அவர்கள் ’நடிக்கவும்’ இல்லை. அல்லது “வன்முறை நல்லதா, கெட்டதா? என்ற அன்றைய அறவியல் கேள்விக்கான பதிலை எஸ்.எம்.எஸ் செய்யச்சொல்லி கருத்துக் கணிப்பும் நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நீதி பெறும் தகுதி படைத்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இத்தகைய அபாயகரமான கூட்டத்திடமிருந்து, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெற்ற தனது மேன்மையான குடிமக்களைக் காப்பாற்றும் பொருட்டுத்தான், அரசு அவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றது.  இப்போரில் வெல்வதற்கு மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள் பிடிக்கலாம் என ஆரூடமும் சொல்கின்றது.  கொஞ்சம் விசித்திரமாகத் தெரியவில்லை? 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகும்  பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராகவே இருந்தது… சீனத்துடன் பேசுவதற்கும் தயாராய் இருக்கின்றது. ஆனால், ஏழைகளுக்கு எதிரான யுத்தம் என்று வரும்போது மட்டும் அதன் அணுகுமுறை மூர்க்கத்தனமானதாக மாறி விடுகின்றது.

வேட்டை நாய்கள், கருநாகங்கள், தேள்கள் என இன மரபுச் சின்னங்களைத் தம் பெயர்களாக சூட்டிக் கொண்ட சிறப்புக் காவல் படைகள், கொலை செய்யும் உரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏற்கெனவே அக்காடுகளைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன; அது போதாதாம். சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் படைகளும், கொடூரத்துக்குப் பெயர் போன நாகா பட்டாலியனும் தொலை தூர வனாந்தர கிராமங்களில் மனச்சாட்சியற்ற மிருகத்தனமான கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன; அதுவும் போதாதாம். தாண்டேவாடாவின் காடுகள் நெடுக கொலை, பாலியல் வன்முறை, குடியிருப்புகளைத் தீயிடுதல் எனத் தனது அட்டூழியங்களால் மூன்று இலட்சம் மக்களை வீடற்றவர்களாக்கி ஓடச் செய்திருக்கும் சல்வா ஜுடூம்3 என்ற ‘மக்கள் சேனை’க்கு ஆயுதத்தையும் ஆதரவையும் அரசாங்கமே வழங்கி வருகிறது; அதுவும் போதாதாம். தற்போது, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையையும், ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினரையும் களத்திலிறக்க முடிவு செய்திருக்கிறது அரசு. பிலாஸ்பூரில் (9 கிராமங்களை அப்புறப்படுத்தி) படைத் தலைமையகத்தையும், ராஜ்நந்த்காவுனில் (7 கிராமங்களை அப்புறப்படுத்தி) விமானத் தளத்தையும் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.  இம்முடிவுகளெல்லாம் முன்னமே எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகவே தெரிகின்றது. சர்வேக்கள் நடத்தி முடிக்கப் பட்டிருக்கின்றன; குறிப்பான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் போர், இப்போதல்ல, கொஞ்ச காலமாகவே நெருங்கி, நெருங்கி வந்துகொண்டே இருந்திருக்கிறது. சுவாரசியமாக இல்லை? இப்போது இந்திய விமானப்படையின் இராணுவ ஹெலிகாப்டர்களுக்கு ’தற்காப்பின் பொருட்டு சுடுவதற்கான உரிமையை’- எந்த உரிமையைப் பரம  ஏழைகளான தனது குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசு மறுக்கிறதோ அந்த உரிமையை – அரசு வழங்கி விட்டது.

அவர்கள் யாரை நோக்கிச்  சுடப் போகிறார்கள்?  காட்டிற்குள் தலைதெறிக்கப் பயந்தோடும் ஒரு சாதாரண மனிதனிடமிருந்து ஒரு மாவோயிஸ்டை பாதுகாப்புப் படை எங்ஙனம் இனம் பிரித்துக் கண்டுபிடிக்கும்? பல நூற்றாண்டுகளாய் வில்லும் அம்பும் ஏந்தி வாழும் பழங்குடி மக்கள், இப்போதும் அவற்றை ஏந்தி நடப்பார்களாயின் அவர்களும் மாவோயிஸ்டுகளாகக் கணக்கில் கொள்ளப்படுவார்களா? ஆயுதம் ஏந்திப் போரிடாத மாவோயிஸ்டு அனுதாபிகளும் கூட  சுட்டுத்தள்ளப்பட வேண்டிய இலக்குகளில் அடங்குவார்களா?  நான் தாண்டேவாடா சென்றிருந்தபோது, தனது ‘பசங்களால்’ கொல்லப்பட்ட 19 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களைக் காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் காட்டினார். “இவர்கள் மாவோயிஸ்டுகள்தான் என்று  நான் மற்றவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்” என்று கேட்டேன். “பாருங்க மேடம், இவுங்க கிட்ட மலேரியா மாத்திரை, டெட்டால் பாட்டில் எல்லாம் இருந்துச்சு… இதெல்லாம் வெளியில இருந்து வந்த விசயங்களில்லையா?” என்றார்.

என்ன வகைப்பட்ட போராய் நடக்கப்போகிறது இந்தக் காட்டு வேட்டை? அது எப்பொழுதேனும் நமக்குத் தெரிய வருமா? காட்டுக்குள்ளிருந்து செய்திகளெதுவும் வெளிவருவதில்லை. மேற்கு வங்கத்தின் லால்கர் ஏற்கெனவே சுற்றிவளைத்துத் துண்டிக்கப்பட்டு விட்டது. யாரேனும் உள்ளே செல்ல முயன்றால், அடித்து உதைத்துக் கைது செய்யப்படுகின்றார்கள். அப்புறம் வழக்கம்போல மாவோயிஸ்டுகள் எனப் பட்டம் சூட்டப்படுகிறார்கள். தாண்டேவாடாவில் ஹிமான்ஷு குமார் என்பவரால் நடத்தப்படும் வன்வாசி சேத்னா ஆஸ்ரம் எனும் காந்திய ஆசிரமம், சில மணி நேரங்களில் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.  அந்த ஆசிரமம்தான் போர்க்களப் பகுதி துவங்குமிடத்துக்கு முன்னால் அமைந்திருந்த ஒரே ஒரு நடுநிலைப் புகலிடம். இப்பகுதிக்கு வேலை செய்ய வரும் பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல் வீரர்கள், ஆய்வாளர்கள், உண்மை அறியும் குழுவினர் ஆகியோர் தங்கிச் செல்வதற்கு எஞ்சியிருந்த ஒரே இடம்.

தனிடையே, இந்தியாவின் ஆளும் நிறுவனம், தனது சர்வ வல்லமை பொருந்திய ஆயுதத்தைக் களமிறக்கியிருக்கின்றது. ஆளும் நிறுவனங்களின் உடன்படுக்கை ஊடகங்கள், இதுகாறும் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்த இசுலாமிய பயங்கரவாதம் குறித்த புனையப்பட்டதும், ஆதாரமற்றதும், வெறியைக் கிளப்பும் தன்மையதுமான கதைகளை ஒரே இரவில் மாற்றி, அதே ரகத்தைச் சார்ந்த ‘சிவப்பு பயங்கரவாதம்’ குறித்த கதைகளை வழங்கத் தொடங்கின. சகிக்கவொண்ணாத இந்தக் கூச்சல்களுக்கிடையே, சிறு ஓசையும்கூடத்  தப்பிக் கசிந்துவிடாத வகையில், போர்க்களப் பகுதி, அமைதியின் வலையால் சுற்றி வளைத்து இறுக்கப்படுகின்றது. ‘இலங்கை வழித் தீர்வு’ தான் அவர்களது திட்டம் போலும்! புலிகளுக்கு எதிரான போரில், “இலங்கை அரசு இழைத்திருக்கும் போர்க்குற்றங்களைப் பற்றிய ஒரு சர்வதேச விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையை ஐரோப்பிய அரசுகள்  ஐ.நாவில் முன் வைத்தபோது, அதற்கு இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டதே, அது நிச்சயமாகக் காரணமின்றி செய்யப்பட்டதல்ல.

இந்தத் திசையில் செய்யப்படும் முதல் காய்நகர்த்தலாக “நீ எங்களோடு இல்லை என்றால் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறாய்” என, ஜார்ஜ் புஷ்ஷின் எளிய இருமைக் கோட்பாட்டின் அடிப்படையிலான  தீவிரமானதொரு பிரச்சாரம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நாடெங்கும் நடைபெறும் எண்ணற்ற வடிவங்களிலான எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் ‘மாவோயிஸ்டு பிரச்சினை’ என்று வேண்டுமென்றே குறுக்கப் படுகின்றன. இவ்வாறு வேண்டுமென்றே அதீதமாய்க் காட்டப்படும் மாவோயிஸ்டு அபாயம் தனது இராணுவமயமாக்கலை நியாயப்படுத்திக் கொள்ள அரசுக்கு உதவுகிறது. (இப்பிரச்சாரம் நிச்சயமாய் மாவோயிஸ்டுகளுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்கவில்லை. தன் மீது இத்தகைய தனிப்பட்ட கவனம் குவிக்கப்படுவது குறித்து எந்தக் கட்சிதான் அதிருப்தி கொள்ளும்?) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் இந்தப் பொய்மையைத் திரைகிழிப்பதில் நமது சக்தியனைத்தும் உறிஞ்சப்படுகையில், அரசு இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது இராணுவ நடவடிக்கையின் வீச்சிற்குள்  நூற்றுக்கணக்கான பிற எதிர்ப்பு இயக்கங்களையும் வளைத்து இழுத்து, அவர்கள் மீதும்  ‘மாவோயிஸ்டு அனுதாபிகள்’ என முத்திரை குத்தி துடைத்தெறியும்.

எதிர்காலம் என்று குறிப்பிட்டு நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது.  நந்திகிராமிலும், சிங்கூரிலும் மேற்கு வங்க அரசு இதைத்தான் செய்ய முயன்றது, ஆனால் தோற்றுவிட்டது. தற்போது லால்கரில், போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி என்ற அமைப்பினர், மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டிருந்த போதிலும், தனித்தவொரு மக்கள் இயக்கமாகவே செயல்படுகின்றனர். எனினும், இவ்வமைப்பு மாவோயிஸ்டு அமைப்பினரின் வெளிப்படையான பிரிவு என்றே அழைக்கப்படுகின்றது. தற்போது கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பின் தலைவர் சத்ரதார் மகாத்தோ, மாவோயிஸ்டு தலைவர் என்று வேண்டுமென்றே அழைக்கப்படுகிறார். மாவோயிஸ்டுகளுக்கு கூரியர் வேலை பார்த்தார் என அற்பமான சோடிக்கப்பட்ட காரணத்துக்காக இரண்டு ஆண்டுகளை சிறையில் கழித்த மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னின் கதையை நாம் அறிவோம். வெளிச்சம் முழுவதும் காட்டு வேட்டையின் மீது பாய்ச்சப்பட்டு, கவனம் இங்கே குவிக்கப்பட்டிருக்கும் சூழலில், போர் நடைபெறும் இந்தக் களத்துக்கு வெளியே, வெகு தொலைவில், நாட்டின் ஏனைய பகுதிகளில், ஏழைகள், தொழிலாளர்கள், நிலமற்றவர்கள் ஆகியோர் மீதான தாக்குதலும், யாருடைய நிலங்களையெல்லாம் ‘பொதுத் தேவைக்காக’ அபகரிக்க அரசு விரும்புகிறதோ, அவர்கள் மீதான தாக்குதலும் தீவிரமடையும். அவர்களுடைய துன்பம் அதிகரிப்பது மட்டுமல்ல, அவர்களுடைய கதறல்களும் முறையீடுகளும் எந்தச் செவியிலும் நுழைய முடியாமல் கேட்பாரின்றி அவிந்தே போகும். .

போர் தொடங்கி விட்டால், மற்றெல்லாப் போர்களையும் போலவே, தனக்குப் பொருத்தமானதொரு இயக்கத்தையும், நியாயங்களையும், தனக்கே உரித்தானதொரு பொருளியலையும் கூட அது வளர்த்துக் கொள்ளும். போகப்போக, இந்தப் போர் என்பது மீண்டு வரவே முடியாத ஒரு வாழ்க்கை முறையாகவும் மாறும். ஈவிரக்கமற்ற கொலைக்கருவியான ராணுவத்தைப் போலவே போலீசும் நடந்துகொள்ளவேண்டுமென இந்தப் போர் எதிர்பார்க்கும். ஊழல் மலிந்த, ஊதிப் பருத்த நிர்வாக எந்திரமான போலிசைப்போலவே துணை ராணுவப் படைகளும் மாறிவிடும் என்பதும் எதிர்பார்க்கப்படவேண்டும். நாகலாந்திலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும்  இப்படித்தான் நடந்ததென்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவின் ‘இதயப் பகுதியில்‘ போரிடவிருக்கும் பாதுகாப்புப்படையினருக்கு, தாங்கள் யாரை எதிர்த்துப் போர் நடத்துகிறார்களோ, அந்த மக்களின் பரிதாபத்திற்குரிய நிலைமையிலிருந்து தங்களது நிலைமை பெரிதும் வேறுபட்டதல்ல என்ற உண்மை வெகு விரைவிலேயே புரிந்து விடும். காலப்போக்கில் மக்களையும், அவர்களின் மீது சட்டத்தை நிலைநாட்டும் படையினரையும் பிரித்துக் காட்டுகின்ற தடுப்புச்சுவர் முழுவதிலும் ஓட்டைகள் விழுந்து விடும். துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும் வாங்கப்படும், விற்கப்படும். சொல்லப்போனால் இது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் போரில் கொல்லப்படுபவர்கள் யாராக இருப்பினும் – பாதுகாப்புப் படையினராயினும்,  மாவோயிஸ்டுகளாயினும், சண்டையில் ஈடுபடாத குடிமக்களாக இருப்பினும் – பணக்காரர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போரில் மடிபவர்கள் அனைவரும் ஏழைகளாகவே இருப்பர். அதே நேரத்தில், இந்தப் போர் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்று யாரேனும் எண்ணிக் கொண்டிருப்பார்களாயின், அவர்கள் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளட்டும்.  இந்தப் போரின் கோரப்பசி விழுங்கப்போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கப் போவது நிச்சயம்.

ந்த அலையைத் தடுக்கவும், போரை நிறுத்தவும், என்ன செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்க, நாடெங்கிலும் உள்ள பல்வேறு மனித உரிமைக் குழுக்கள்,  சென்ற வாரம் தில்லியில் தொடர்ச்சியான பல கூட்டங்களை நடத்தின. அனைவரும் அறிந்த ஆந்திர மாநில மனித உரிமை செயல் வீரரான முனைவர் பாலகோபால் அங்கே இல்லாமல் போனதால் ஏற்பட்ட வலியை நாம் அனைவருமே உணரமுடிந்தது. நமது சமகால அரசியல் சிந்தனையாளர்களிடையே துணிவும் அறிவுக்கூர்மையும் படைத்தவர்களில் ஒருவரான அவரது தேவை நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கும் இந்தத் தருணத்தில், அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.4. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் காலமாகிவிட்டார்.

இருந்த போதிலும், இந்தியாவின் குடிமை உரிமைச் சமூகத்தைச் சார்ந்த மனித உரிமை செயல் வீரர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் அங்கே ஆற்றிய உரைகளில் வெளிப்பட்ட தொலைநோக்கையும், ஆழத்தையும், அனுபவத்தையும், சான்றாண்மையையும், அரசியல் கூர்மையையும், அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் வெளிப்பட்ட உண்மையான மனிதநேயத்தையும் கேட்டிருந்தால், நிச்சயமாக பாலகோபால் நிம்மதி கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். இவர்களெல்லோரும் தலைநகரில் கூடிய இந்த நிகழ்வு, நமது தொலைக்காட்சி நிலையங்களில் ஒளியுமிழ் விளக்குகளுக்கு அப்பால், செய்தி ஊடகங்களின் கொட்டுச்சத்தம் கிளப்பும் பரபரப்பிற்கு அப்பால், இந்தியாவின் நடுத்தர வர்க்கங்களுக்குள்ளேயும் ஒரு மனித இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டின. “பயங்கரவாதத்திற்கு உகந்ததான  ஒரு அறிவுத்துறைச் சூழலை உருவாக்குகிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் இவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை. அக்குற்றச்சாட்டு அச்சுறுத்தும் நோக்கில் உரைக்கப்பட்டதாயிருப்பின், அதன் விளைவென்னவோ நேர் எதிரானதாகவே இருந்தது.

அங்கு உரையாற்றியோர் தாராளவாத ஜனநாயகச் சிந்தனை முதல் தீவிர இடதுசாரி சிந்தனை வரையிலான பல்வேறு பட்ட கருத்துக்களையும் பிரதிபலித்தனர். அங்கே பேசியவர்களில் யாரும் தம்மை மாவோயிஸ்டு என்று அழைத்துக் கொள்ளவில்லையெனினும், “அரசு வன்முறைக்கு எதிராகத் தம்மைக் தற்காத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு” என்பதைக் கொள்கையளவில் யாரும் எதிர்க்கவில்லை. மாவோயிஸ்டு வன்முறை,  அவர்களது ’மக்கள் நீதிமன்றங்கள்’ வழங்கும் அதிரடித் தீர்ப்புகள், ஆயுதப் போராட்டத்தில் தவிர்க்கவியலாமல் ஊடுருவும் அதிகாரத்துவத்தால் ஆயுதமற்றோர் ஒடுக்கப்படுதல் என்பனவற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தமது உடன்பாடின்மையை வெளிப்படுத்திய அதே நேரத்தில், சாமானிய மக்களுக்கு இந்திய நீதிமன்றங்கள் எட்டாக்கனியாக இருக்கின்ற காரணத்தினால்தான் மக்கள் நீதிமன்றங்கள் நீடிக்க முடிகின்றன என்பதையும், இன்று இந்தியாவின் இதயத்தில் வெடித்திருக்கும் இந்த ஆயுதப் போராட்டம் என்பது அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டு, பற்றிக்கொள்ள ஏதுமின்றித் தவிக்கும் மக்களின் இறுதித் தெரிவே அன்றி, முதல் தெரிவு அல்ல என்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.

எனவே நிலவுகின்ற சூழ்நிலைகள் ஒரு போருக்கு நிகரானவையாக ஏற்கெனவே காட்சியளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில தனித்த மோசமான வன்முறை நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு நியாய விசாரம் செய்து, அவற்றிலிருந்து எளிய அறம் சார்ந்த முடிவுகளுக்கு வருவதில் உள்ள அபாயங்களைப் பேச்சாளர்கள் அனைவரும் உணர்ந்தே இருந்தனர். அரசமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையையும், அதை எதிர்த்த ஆயுத வன்முறையையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து நீண்ட காலம் முன்பே எல்லோரும் விடுபட்டு விட்டனர். சொல்லப்போனால், ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், இந்தச் சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் அநீதியின் பால் கவனம் செலுத்துமாறு இந்த நாட்டின் ஆளும் நிறுவனங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததற்காக மாவோயிஸ்டுகளுக்கு நன்றி சொல்லும் அளவுக்குச் சென்றார்.

ஆந்திர மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் குறுகிய செயல்பாட்டு காலகட்டத்தில், ஒரு மனித உரிமைச் செயல்வீரராக தான் பணியாற்றிய அனுபவங்களை ஹரகோபால் பகிர்ந்து கொண்டார். ஆந்திரத்தின் இரத்தக்களறியான காலங்களில்  மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும், குஜராத்தில் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிசத் தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல் 2002-ஆம் ஆண்டின் ஒரு சில நாட்களில்  கொன்றொழித்தோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்ற உண்மையை, அவர் தமது பேச்சினூடாகக் கூறிச் சென்றார்.

லால்கர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற போர்ப் பகுதிகளிலிருந்து வந்திருந்தோர், போலிசு அடக்குமுறைகள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் ஊழல்கள் பற்றி விவரித்ததுடன், சில சமயங்களில் போலிசார், நேரடியாக சுரங்க நிறுவன அதிகாரிகளிடமிருந்தே ஆணைகளைப் பெற்று செயல்படுத்துவதாகவும் கூறினர். நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து (Aid agencies)  காசுவாங்கிக் கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் முன்னேற்றத்திற்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள சில அரசு சாரா நிறுவனங்கள் ஆற்றுகின்ற சந்தேகத்திற்கிடமான, கேடான பாத்திரத்தை சிலர் விவரித்தனர்.

செயல் வீரர்களோ சாமானிய மக்களோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள் என்பது பற்றித்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். வேறு எதனை விடவும் இதுதான் மக்களை ஆயுதம் ஏந்துமாறும், மாவோயிஸ்டுகளுடன் இணைந்து கொள்ளுமாறும் பிடித்துத் தள்ளிவிடுகிறது என்று கூறினார்கள்.. ‘வளர்ச்சித் திட்டங்கள்‘ என்ற பெயரில் அப்புறப்படுத்தப்பட்ட ஐந்து கோடி மக்களில், ஒரு சிறு பகுதியளவு மக்களை வேறு இடங்களில் மீள் குடியமர்த்துவதற்குக் கூடத் தன்னால் முடியவில்லை என்று கைவிரித்த இந்த அரசாங்கத்தால், 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக (பணக்காரர்களின் உள்நாட்டு வரியில்லா சொர்க்கங்கள்) மட்டும், 1,40,000 ஹெக்டேர்கள் வளமான நிலத்தை எப்படி திடீரென்று இனங்கண்டு தொழிலதிபர்களுக்கு வழங்க முடிந்ததென அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

“தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகத்தான், ‘பொதுத் தேவைக்கு’ என்ற பெயரில், அரசாங்கம் மக்களிடமிருந்து பலவந்தமாக நிலங்களை அபகரிக்கின்றது என்பது நன்கு தெரிந்திருந்தும்,  ‘நிலக் கையகப்படுத்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘பொதுத் தேவை‘ என்ற சொல்லை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், என்ன வகை நீதியைக் கடைப்பிடிக்கிறது?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். ‘அரசின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும்‘ 5  என்று அரசாங்கம் கூறும்போது, அதன் பொருள் காவல் நிலையங்கள் முறையாகக் கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதாக மட்டுமே ஏன் இருக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.

பள்ளிகளல்ல, மருத்துவமனைகளல்ல, வீட்டு வசதியல்ல, சுத்தமான குடிநீர் அல்ல, வனம்சார் விளை பொருளுக்கு நியாய விலை அல்ல,  குறைந்தபட்சம் போலிசு பயமின்றி நிம்மதியாய் வாழ விடுவதும் அல்ல, மக்களுடைய சிரமங்களைக் குறைத்து வாழ்க்கையைச் சற்றே எளிதாக்க உதவும் எதுவும் அல்ல… ‘அரசின் அதிகாரம்‘ என்பதற்கு ‘நீதி’ என்று ஒருபோதும் பொருள் கொள்ள முடிவதில்லையே அது ஏன், என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஒரு காலம் இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று சொல்லலாம்.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த ‘வளர்ச்சி‘யின் மாதிரி (model) குறித்து இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வோர் அப்போதெல்லாம் விவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்றோ அந்த வளர்ச்சி ‘மாதிரி’ முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதில் மறு பேச்சுக்கே இடமில்லை. காந்தியவாதிகள் முதல் மாவோயிஸ்டுகள் வரை அனைவருமே இதில் உடன்படுகின்றார்கள். இதனைத் தகர்த்தெறியும் திறன் வாய்ந்த வழி எது என்பது மட்டுமே தற்போதைய கேள்வி.

எனது நண்பருடைய பழைய கல்லூரி நண்பரொருவர், கார்ப்பரேட் உலகத்தின் ஒரு பெரும்புள்ளி,  தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு உலகத்தை அறிந்துகொள்ளும் தேவையில்லாத ஆர்வத்தில், இத்தகையதொரு கூட்டத்திற்கு வந்திருந்தார். ஃபேப் இந்தியா 6 குர்தாவுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாலும், அவர் விலைமதிப்பு மிக்கவர் என்பதை அவரது தோற்றமும் வாசமும் காட்டிக் கொடுக்கவே செய்தன. சற்று நேரத்தில் அவர் இருப்புக் கொள்ளாமல் என் பக்கம் சாய்ந்து கிசுகிசுத்தார்: “கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று யாராவது இவர்களிடம் சொல்ல வேண்டும். இவர்களால் இந்த ஆட்டத்தில் ஜெயிக்கவே முடியாது. எதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே இவர்களுக்குப் புரியவில்லை. எவ்வளவு பணம் இதில் இறக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? இதில் பணம் போட்டிருக்கும் கம்பெனிகளால் அமைச்சர்கள், ஊடக முதலாளிகள், கொள்கை வகுப்பாளர்கள்.. என்று யாரையும் விலைக்கு வாங்க முடியும். தங்களுக்கான சொந்த அரசு சாரா நிறுவனங்களையும், கூலிப் படைகளையும் பராமரிக்க முடியும். அவர்களால் மொத்த அரசாங்கங்களையே விலைக்கு வாங்க முடியும். அவ்வளவு ஏன், அவர்கள் மாவோயிஸ்டுகளையே கூட  விலை பேசக்கூடியவர்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் நல்ல மனிதர்களாகத் தெரிகிறார்கள். இப்படி ஆகாத காரியத்துக்கு மூச்சைக் கொடுப்பதற்கு பதிலாக, இவர்கள் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தைக் கவனிக்கலாம் ” என்றார்.

மக்கள் காட்டுமிராண்டித்தனமாக  ஒடுக்கப்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வேறு என்ன ‘உருப்படியான‘ வேலையை அவர்கள் தெரிவு செய்ய முடியும்? அவ்வாறு தெரிவு செய்வதற்குத்தான் மக்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, தற்கொலை செய்து கொள்வதைத் தவிர?  கடன் சுழலில் சிக்கிய பல விவசாயிகள் அதைத்தானே தெரிவு செய்தார்கள்?

(நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படும் ஏழை மக்கள், எதிர்த்துப் போராடவேண்டும் என்று சிந்திப்பதற்குப் பதிலாக, தற்கொலை செய்து மடிந்து விடுவார்களேயானால் அதுதான், இந்தியாவின் ஆளும் நிறுவனங்களுக்கும், ஊடகங்களில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கும் பிடித்தமானதாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா அப்படித் தோன்றுகிறது?)

த்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மக்கள் – அவர்களில் சிலர் மாவோயிஸ்டுகள், பலர் மாவோயிஸ்டுகள் அல்ல – அரும்பாடுபட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் ஆக்கிரமிப்பைக் கடந்த சில ஆண்டுகளாய் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ’காட்டு வேட்டை’ நடவடிக்கை அவர்களது போராட்டத்தின் தன்மையை எப்படி மாற்றப் போகிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. எதிர்த்துப் போராடும் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் சக்தி எது என்பதுதான் கேள்வி.

வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால், உள்ளூர் மக்களுடனான மோதல்கள் பலவற்றிலும் சுரங்கத்தொழில் நிறுவனங்களே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது ஒரு உண்மை. போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுத்தள்ளுங்கள், அநேகமாக எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களின் கடந்தகாலமும்  ஈவிரக்கமற்றதுதான். கார்ப்பரேட் முதலாளிகள் குரூரமானவர்கள், களம் பல கண்டு இறுகி உரமேறியவர்கள்.  “உயிரைக் கூடத் தருவோம், ஒருபோதும் எமது நிலத்தைத் தர மாட்டோம்”  என்று மக்கள் எழுப்பும் முழக்கம், குண்டு வீச்சைத் தாங்கும் கூடாரத்தின் மீது விழும் மழைத் தூறல் போல, அவர்கள் மீது பட்டுத் தெறிக்கிறது. இந்த முழக்கங்களையெல்லாம் பல காலமாக அவர்கள் கேட்டிருக்கிறார்கள் – ஆயிரக்கணக்கான மொழிகளில், நூற்றுக்கணக்கான நாடுகளில்.

தற்போது இந்தியாவில் வந்திறங்கிய நாள் முதல் விமான நிலையங்களின் முதல் வகுப்பு ஓய்வறைகளில்தான் அவர்களில் பல பேர் இன்னமும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதுவகைகளுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். சோம்பல் மிகுந்த மிருகங்களைப் போல மெதுவாகக் கண்களை இமைக்கிறார்கள். தாங்கள் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)- அவற்றில் சில 2005 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டவை – உண்மையான பணமாக உருமாறும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். விமான நிலைய ஓய்வறையிலேயே நான்காண்டுகளைத் தள்ளுவது என்பது, மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மனிதனைக்கூட சோதிக்கின்ற அளவுக்கான தாமதம் அல்லவா?  ஜனநாயக நடைமுறை கோருகின்ற விரிவான ஆனால் பொருளற்ற சடங்குகள்: மக்கள் கருத்தறிதல்(சில நேரங்களில் இது மோசடியாக நடத்தப்படுவது), சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகள் (சில நேரங்களில் இவை போலியானவை), பல்வேறு அமைச்சகங்களிடம் பெற வேண்டிய ஒப்புதல்கள் (பெரும்பாலும் இவை விலைக்கு வாங்கப்படுபவை), நீண்ட காலமாய் இழுத்துக் கொண்டு கிடக்கும் நீதிமன்ற வழக்குகள். போலி ஜனநாயகம்தான், இருந்தாலும் கூட காலத்தைத் தின்று விடுகிறதே. காலம் என்றால் வெறும் காலமல்ல, அதுதானே பணம்.

நாம் பேசிக் கொண்டிருக்கும் பணத்தின் அளவு என்ன தெரியுமா? விரைவில் வெளிவர இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தங்களது நூலில்(Out of This Earth: East India Adivasis and the Aluminium Cartel) சமரேந்திர தாஸ் மற்றும் பெலிக்ஸ் பெடல் ஆகியோர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட் இருப்பின் மதிப்பு 2.27 டிரில்லியன் டாலர்கள் (இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் போல இது இரண்டு மடங்குக்கும் அதிகம்) எனக் குறிப்பிட்டுள்ளனர். அது 2004 ஆண்டின் விலை நிலவரம். பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) இதிலிருந்து அதிகாரப்பூர்வமாக, 7% க்கும் குறைவான தொகையைத்தான் ராயல்டியாக அரசாங்கம் பெறவிருக்கிறது.  ஒரு சுரங்கத் தொழில் நிறுவனம் நன்கு அறிமுகமானதாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில், தாதுப் பொருள் வெட்டியெடுக்கப்படாமல் மலைக்குள் இருக்கும்போதே, அநேகமாக அது முன்பேரச் சந்தையில் விலைபேசப் பட்டிருக்கும். அதாவது, பழங்குடி மக்களைப் பொருத்தவரை வாழும் தெய்வமாகவும், அவர்களது வாழ்க்கைக்கும் நம்பிக்கைக்குமான ஊற்றுமூலமாகவும், இந்தப் பிராந்தியத்தினுடைய சூழலின் ஆரோக்கியத்துக்கு ஆணிவேராகவும் திகழும் இம்மலைகள், கார்ப்பரேட் முதலாளிகளைப் பொருத்தவரை மிகவும் மலிவான தாதுப்பொருள் கிடங்குகள் – அவ்வளவுதான். கிடங்கு என்றால் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விரும்பியவுடன் எளிதாக எடுக்கத் தக்கதாய் இருக்க வேண்டும், அல்லவா? கார்ப்பரேட் முதலாளிகளுடைய கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், மலைக்குள்ளிருந்து பாக்சைட் வெளியில் வந்தே தீரவேண்டும்.  சுதந்திரச் சந்தையின் அவசரத் தேவைகளும், நிர்ப்பந்தங்களும்  அப்படிப்பட்டவை ஆயிற்றே!

இது ஒரிசாவிலுள்ள பாக்சைட் கனிமத்தின் கதை மட்டும்தான்.  இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும், யுரேனியம், சுண்ணாம்புக்கல்,  டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். அவற்றோடு, கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) அங்கமாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு எஃகு மற்றும் சிமெண்டுத் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் மற்றும் பிற உள் கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இவ்வேட்டையின் பிரம்மாண்டத்தையும், முதல் போட்டிருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கோட்டுச் சித்திரத்தை வழங்கும்.

ஒருகாலத்தில் தண்ட காரண்யா என அழைக்கப்பட்ட இக்காடு, மேற்கு வங்கத்தில் தொடங்கி ஜார்க்கண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், மற்றும் ஆந்திர – மகாராட்டிர மாநிலங்களின் சில பகுதிகள் எனப் படர்ந்து விரிகின்றது. இது காலங்காலமாய் இந்தியாவின் கோடிக்கணக்கான பழங்குடி மக்களுக்குத் தாயகம். இப்போதெல்லாம் இந்தப் பகுதியை ’சிவப்புத் தாழ்வாரம்’ அல்லது ’மாவோயிஸ்டுத் தாழ்வாரம்’ (Maoist corridor)என செய்தி ஊடகங்கள் அழைக்கத் துவங்கியுள்ளன. இதனை ‘எம்.ஒ.யு.-யிஸ்ட் தாழ்வாரம்’ (MoUist corridor -புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பிரதேசம்) என்று அழைப்பதே சாலப் பொருந்தும். ஏனென்றால் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 5-வது பிரிவு பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்போ, நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றக் கூடாது என்ற வாக்குறுதியோ ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. அரசியல் சட்டம் பார்க்க அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக, ஒரு திரைச்சீலையாக, ஒரு அவசர முகப்பூச்சாகத்தான்  அப்பிரிவு இடம் பெற்றிருக்கின்றது எனத் தோன்றுகிறது.

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஊர் பேர் தெரியாத நிறுவனங்கள் முதல், உலகின் மாபெரும் சுரங்க மற்றும் இரும்பு நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா வரை  அனைவரும் பழங்குடி மக்களின் தாயகத்தை அபகரித்துக் கொள்வதற்குப் போட்டி போட்டுக் கொண்டு பாய்கின்றனர்.

ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு நதியின் மீதும், காட்டின் பசும்புற்திட்டுகள் மீதும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது. கற்பனைக்கு எட்டாத அளவிலான ஒரு சமூக மற்றும் சூழலியல் மாறாட்டத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆயினும், இவற்றில் பெரும்பாலானவை இரகசியங்கள். இவை குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாது.

உலகின் ஆகப் பரிசுத்தமானதொரு காட்டையும், அதனைச் சார்ந்த சூழலமைப்பையும், அதில் வாழும் மக்களையும் சேர்த்து அழிப்பதற்குத் தீட்டப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் குறித்து, கோபன் ஹேகனில் நடைபெறவிருக்கும் தட்ப வெப்ப மாற்றம் குறித்த மாநாட்டில் விவாதிக்கக் கூடும் என்று நான்  ஒருக்காலும் நினைக்கவில்லை. நமது 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள், மாவோயிஸ்டு வன்முறை குறித்த மயிர்க்கூச்செரியும் கதைகளுக்காக அலைந்து திரிகின்றனர். உண்மையான கதை கிடைக்காவிடில் ஒரு கட்டுக்கதையைத் தயாரிக்கின்றனர். ஆனால், கதையின் இந்தப் பக்கம் குறித்து அவர்களுக்கு சிறிதும் நாட்டம் இருப்பதாய் தெரியவில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

அவர்களை பக்திப் பரவசத்துக்கு ஆளாக்கியிருக்கும் ‘வளர்ச்சியாளர் குழுவினர்’ (development lobby), சுரங்கத் தொழிலின் வளர்ச்சியானது,  மொத்த உள்நாட்டு உற்பத்தியை கற்பனைக்கெட்டாத வேகத்தில் முடுக்கி விடுமென்றும், வெளியேற்றப்படும் மக்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பை வாரி வழங்குமென்றும் கூறி வருகிறார்களே, அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் நாசம் தோற்றுவிக்க இருக்கும் படுபயங்கரமான பேரழிவின் ‘விலை மதிப்பை’ இவர்கள் தங்கள் கணக்கில் சேர்ப்பதில்லை. அவர்கள் முன்வைக்கும் குறுகிய வரம்புகளுக்கு உட்பட்டே பார்த்தாலும் கூட இந்தக் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி சுரங்கக் கம்பெனிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய் விடும். அரசாங்க கஜானாவுக்கு வருவதோ 10% க்கும் குறைவான தொகை தான். வெள்ளமென வெளியேற்றப்படும் மக்கள் கூட்டத்தில், ஒரு சிறு துளிக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும்.  அவர்களும் அடிமைக் கூலியை ஈட்டுவதற்காக, கவுரவமற்ற முதுகெலும்பை முறிக்கும் வேலைகளையே செய்ய வேண்டியிருக்கும். வெறி கொண்டு பொங்கும் இந்தப் பேராசைக்கு வளைந்து கொடுத்ததன் மூலம், நமது சுற்றுச்சூழலை பலி கொடுத்து, பிற நாடுகளின் பொருளாதாரங்களுக்குத்தான் நாம் வலிமை சேர்க்கின்றோம்.

புரளும் பணத்தின் அளவு இத்தனை பிரம்மாண்டமாக இருக்கும்போது, இதில் ஆதாயம் பெறும் பங்குதாரர்களை அடையாளம் காண்பது அத்தனை எளிதல்லவே. சொந்த ஜெட் விமானத்தில் மிதக்கும் சுரங்கக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரியில் தொடங்கி, மாதம் இரண்டாயிரம் ரூபாய் காசு வாங்கிக்கொண்டு, தம் சொந்த மக்களையே வல்லுறவுக்கு ஆளாக்கி, கொலை செய்து, கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தி சுரங்க வேலை தொடங்குவதற்கு இடத்தை காலி செய்து கொடுக்கின்ற, மக்கள் படையின் (சல்வா ஜுடும்) பழங்குடி இன சிறப்பு காவல் அதிகாரிகள் வரை – முதல் நிலை, இடை நிலை, கடை நிலை எனப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப் பங்குதாரர்களின் உலகம்.

இவர்கள் ஒவ்வொருவரும் தமது நலனையும், தாம் பெறும் ஆதாயங்களையும் பிரகடனம் செய்யத்தேவையில்லை. பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, தமது நலன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் அனைவரும் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றார்கள். எந்த அரசியல் கட்சி, எந்தெந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசியல்வாதிகள், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள், எந்தெந்த சிறப்பு ஆலோசகர்கள், எந்தெந்த போலிசு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தக் கொள்ளையில் நேரடிப் பங்கு இருக்கிறது, அல்லது  மறைமுகப் பங்கு இருக்கிறது என்பதை நாம் எப்படி, எந்தக் காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்? மாவோயிஸ்டுகளின் சமீபத்திய ‘அட்டூழியம்‘ குறித்த சூடான செய்தியை வெளியிடும் எந்தெந்த பத்திரிகைகள், ‘களத்திலிருந்து நேரடியாகச் செய்தி வழங்குகின்ற‘ – அல்லது தெளிவாகச் சொன்னால், களத்திலிருந்து  செய்தி வழங்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்ற, இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், களத்திலிருந்து அப்பட்டமாகப் புளுகுகின்ற – எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தக் கொள்ளையின் பங்குதாரர்கள் என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் பன்மடங்கு அதிகமான தொகையை, பல்லாயிரம் கோடி டாலர்களை இரகசியமாக ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருக்கின்றார்களே இந்தியக் குடிமகன்கள்… அந்தப் பணத்தின் ரிஷிமூலம் எது?  எங்கிருந்து வந்தது? சென்ற பொதுத்தேர்தலில் செலவிடப்பட்ட 2 பில்லியன் டாலர் பணம் எங்கிருந்து வந்தது? அல்லது  தேர்தலுக்கு முந்தைய ’கவரேஜுக்கான பேக்கேஜ்களை’ ’மேல் நிலை’, ’கீழ் நிலை’ மற்றும் ’நேரலை’ என்று வகை பிரித்து, ஊடகங்களுக்கு அரசியல்வாதிகளும், கட்சிகளும்  அள்ளிக்கொடுத்ததைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதியிருந்தாரே7, அந்த கோடிக்கணக்கான ரூபாய்கள்தான் எங்கிருந்து வந்தன? (குத்துக்கல்லைப் போல அமர்ந்திருக்கும் ஒரு விளங்காத ‘ஸ்டுடியோ விருந்தினரை’க் குடைந்தெடுக்கும் தொலைக்காட்சி செய்தியாளர், ‘மாவோயிஸ்டுகள் ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது? ஏன் மைய நீரோட்டத்துக்கு வர மறுக்கிறார்கள்?‘ என்று காட்டுக் கூச்சலாகக் கேள்வி எழுப்புவதை அடுத்தமுறை தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும்போது, தவறாமல் அந்தத் தொலைக்காட்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள், ‘ஏனெனில் உங்களுடைய ரேட்டுகள் அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை‘ என்று.)

லன்களின் முரண்  (conflict of interest) குறித்தும், நெருக்கமானவர்கள்  அடையும் ஆதாயங்கள் (cronyism) குறித்தும் ஏராளமான கேள்விகள் பதிலளிக்கப்படாமலேயே  கிடக்கின்றன. இன்றைய ‘காட்டு வேட்டை’ நடவடிக்கையின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், கார்ப்பரேட் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியபோது, பல்வேறு சுரங்க நிறுவனங்களுக்காக வாதாடியவர் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? வேதாந்தா நிறுவனத்தில் நிர்வாகம் சாரா இயக்குனர் என்ற பதவியில் இருந்த சிதம்பரம்,  2004-ஆம் ஆண்டில் அவர் நிதியமைச்சராகப் பதவி ஏற்ற நாளில்தான் அந்த இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடனே வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அவர் அளித்த அனுமதிகளில் முதன்மையானது ‘டிவின்ஸ்டார் ஹோல்டிங்ஸ்’ என்ற மொரிசியஸ் கம்பெனிக்கு வழங்கிய அனுமதிதான் என்பதிலிருந்தும், அந்தக் கம்பெனி வாங்கிய பங்குகள் வேதாந்தா குழுமத்தின் அங்கமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பங்குகளே என்ற உண்மையிலிருந்தும் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக ஒரிசாவைச் சேர்ந்த மனித உரிமை செயல் வீரர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து, “அந்நிறுவனம் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச்சூழலை நாசப்படுத்தியதாகவும், மனித உரிமைகளை மீறியதாகவும் வேதாந்தாவின் மீது குற்றம் சாட்டி, நார்வே நாட்டின் ஓய்வூதிய நிதியம் கூட,  அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதையும் சான்றாக எடுத்துக் காட்டினார்கள். உடனே, “வேதாந்தாவுக்கு பதில், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட்டின் பெயருக்கு உரிமத்தை மாற்றிவிடலாம்” என்று நீதிபதி கபாடியா  பரிந்துரைத்தாரே,  இந்த உண்மையிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அது மட்டுமல்ல, “நானும்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கிறேன்” என்று சர்வ அலட்சியமாக நீதிபதி நாற்காலியில் அமர்ந்தவாறே அவர் அறிவிக்கவும் செய்தார். உச்சநீதி மன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவே “சுரங்கம் தோண்டுவது, காடுகளையும், நீர் வளங்களையும், சுற்றுச்சூழலையும் ஆயிரக்கணக்கான பழங்குடியினரின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் அழிக்கும். எனவே அதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும்” எனத் தெளிவாக அறிக்கை கொடுத்திருந்தும், அந்த அறிக்கையின் கூற்றுகளை மறுப்புக் கூறாமலேயே, காடுகளை அழித்து சுரங்கம் தோண்டிக் கொள்ள ஸ்டெர்லைட்டுக்கு பெருந்தன்மையாக அவர் அனுமதி அளித்தார்.

டாடாக்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில  நாட்களிலேயே, 2005 ஆம் ஆண்டில், தாண்டேவாடாவில் ‘தன்னெழுச்சியான’ மக்கள் படை என்ற பெயரில், மூர்க்கத்தனமாக மக்களை விரட்டியடித்து அவர்களது நிலங்களைக் கைப்பற்றித் தரும் ‘சல்வா ஜூடும்’ படை முறையாக துவக்கி வைக்கப்பட்டதே, பஸ்தாரில் கானகப் போருக்கான பயிற்சிப் பள்ளியும் அதே நாட்களில்  தொடங்கி வைக்கப்பட்டதே, இந்த உண்மைகளிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

இரு வாரங்களுக்கு முன்பு, அக்டோபர் 12 அன்று, தாண்டேவாடாவின்  லோஹந்தி குடாவில் அமையவிருக்கும் டாடா இரும்பு உருக்காலை நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டபூர்வ நடைமுறையான ’மக்கள் கருத்தறிதல்’ என்ற நிகழ்ச்சிக்கு, பஸ்தாரை  சேர்ந்த இரண்டு கிராமங்களிலிருந்து 50 பழங்குடி மக்கள் அரசாங்க ஜீப்புகளில் கொண்டுவந்து இறக்கப்பட்டு, யாரும் நுழைந்துவிட முடியாமல் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே, சிறியதொரு அறையில் அந்தப் பழங்குடி மக்களைப் பார்வையாளர்களாக வைத்தே கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதே (மக்கள் கருத்தறிதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அறிவிக்கப் பட்டது. பஸ்தார் மக்கள் அளித்த ஒத்துழைப்புக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்) இந்த உண்மையிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

மாவோயிஸ்டுகளை ‘தனிப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அபாயம்‘ என்று பிரதமர் கூறத் தொடங்கிய தருணம் முதற்கொண்டே (அவர்களை ஒழித்துக் கட்ட அரசு தயாராகி விட்டது என்ற சமிக்ஞை கிடைத்ததுமே) இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பல சுரங்கத் தொழில் நிறுவனங்களின் பங்கு விலைகள் வானளாவ ஏறினவே, இந்த உண்மையிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

சுரங்க நிறுவனங்களுக்கு  இந்தப் போர், அவசரமாக, அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. தங்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளனைத்தையும் இதுகாறும் எதிர்த்து நின்று எப்படியோ தாக்குப்பிடித்து வந்த பழங்குடி மக்களை, இந்தப் போரின் விளைவாக வெடிக்கவிருக்கும் வன்முறையின் தாக்கம், அவர்களது வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்குமானால், சுரங்க நிறுவனங்கள்தான் அதனால் ஆதாயமடைபவர்களாக இருப்பர். விளைவு இப்படித்தான் இருக்குமா, அல்லது இது மாவோயிஸ்டு அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘மாய எதிரி’ என்ற தனது கட்டுரையில் இதே வாதத்தை திருப்பிப் போடும்மேற்கு வங்க முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர்  அசோக் மித்ரா, மாவோயிஸ்டுகள் நிகழ்த்தும் ’பயங்கரமான தொடர் கொலைகள்’, கொரில்லாப் போர்முறை பாடப் புத்தகங்களிலிருந்து அவர்கள் கற்றிருக்கும் இலக்கண வகைப்பட்ட தந்திரங்களே என்று வாதிடுகின்றார். “அவர்கள் ஒரு கொரில்லா ராணுவத்தைக் கட்டிப் பயிற்சியளித்திருக்கிறார்கள் என்றும், அது தற்போது இந்திய அரசை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும், மாவோயிஸ்டுகளின் ‘வெறியாட்டம்’, என்பது, இந்திய அரசை ஆத்திரமூட்டுவதற்காகத் தெரிந்தே செய்யப்படும் முயற்சிதான் என்றும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் நிரம்பிய இந்திய அரசு, பல கொடூரங்களை நிகழ்த்துமென்றும், அச்செயல்கள் பழங்குடியினரின் கோபத்தைக் கிளறுமென்று மாவோயிஸ்டுகள் நம்புவதாகவும், அந்தக் கோபத்தை அறுவடை செய்து அதனை ஒரு ஆயுத எழுச்சியாக உருமாற்றலாம் என்று மாவேயிஸ்டுகள் நம்புவதாகவும் கூறுகிறார்.

மாவோயிஸ்டுகள் குறித்து பல்வேறு இடதுசாரிப் பிரிவினரும், தொடர்ந்து கூறிவரும் ‘சாகச வாதம்’ எனும் குற்றச்சாட்டுத்தான் இது. ‘தம்மை அதிகாரத்தில் அமர்த்தும் ஒரு புரட்சியைக் கொண்டு வருவதற்காக, தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மக்களின் மீதே ஒரு அழிவைத் தருவிக்க மாவோயிஸ்டு கொள்கையாளர்கள் தயங்குவதில்லை’ என்று கூறுகிறது இக்குற்றச்சாட்டு. அசோக் மித்ரா, ஒரு பழைய கம்யூனிஸ்டு. மேற்கு வங்கத்தில்  ’60 – ’70 களில் நக்சல்பாரி எழுச்சியின்போது, அதனை வெளியிலிருந்து நெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்புப் பெற்றிருந்த அவரது கருத்துக்களை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது. அதே வேளையில், அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் பழங்குடி மக்கள் தமக்கென ஒரு நீண்ட, நெடிய வீரஞ்செறிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாரம்பரியம் மாவோயிசம் பிறப்பதற்கும் முந்தையது  என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சில நடுத்தர வர்க்க மாவோயிஸ்டு கொள்கையாளர்களால் ஆட்டுவிக்கப்படக் கூடிய மூளையில்லாத தலையாட்டி பொம்மைகளாக பழங்குடி மக்களை மதிப்பிடுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கும்.

ஒருவேளை டாக்டர் மிஸ்ரா லால்கர் நிலைமையிலிருந்து பேசுகிறார் போலும். அங்கே இதுவரையில் கனிம வள இருப்பு  குறித்த பேச்சு ஏதும் அடிபடவில்லை. (ஒன்றை நாம் மறந்து விடலாகாது – தற்போது லால்கரில் தோன்றிய எழுச்சி ஜிண்டால் இரும்பு ஆலையைத் துவக்கி வைக்க முதல்வர் வருகை தந்ததையொட்டித்தான் பற்றிக் கொண்டது; இரும்பு உருக்காலை ஒரு இடத்தில் இருக்கும்போது, இரும்புக் கனிவளம் வெகுதொலைவிலா இருக்கக் கூடும்?)  மக்களை வாட்டி வதைக்கும் வறுமையும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.எம். கட்சி ஆண்டு வரும் மேற்கு வங்கத்தில், பல பத்தாண்டுகளாய் போலிசிடமும், மார்க்சிஸ்டு கட்சியின் ஆயுதந்தாங்கிய கும்பலான ஹர்மத்களிடம்8 அவர்கள் பட்ட துயரங்களும்தான் மக்களின் கோபத்துக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

“ஆயிரக்கணக்கான  போலிசுக்காரர்களும், துணை ராணுவத் துருப்புகளும்  லால்கரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”என்ற கேள்வியையே எழுப்பாமலிருப்பதென்றும், மாவோயிஸ்டு ‘சாகச வாதம்‘ குறித்தசூத்திரத்தை ஏற்றுக்கொள்வதென்றும் ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் கூட, இது முழுச் சித்திரத்தின் ஒரு மிகச்சிறிய பகுதியாகவே இருக்கும்.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்தியாவின் அதிசயிக்கத்தக்க ‘வளர்ச்சிக்’கதையின் பதாகையைத் தாங்கி வந்த கப்பல் தரை தட்டி விட்டது. பாரிய சமூக, சுற்றுச்சூழல் சீர்குலைவை அது விலையாகக் கொடுத்துள்ளது. இப்போது ஆறுகள் வற்றுகின்றன, காடுகள் மறைகின்றன, நிலத்தடி நீர்மட்டம் இறங்குகிறது, தமக்கு இழைக்கப்பட்டிருப்பது என்ன என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டதால், விதைத்த வினைகளுக்கான அறுவடைக் காலம் துவங்கி விட்டது. நாடெங்கிலும் கலகங்கள் வெடிக்கின்றன. மக்கள் தமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் விட்டுக் கொடுக்க மறுத்து ஆவேசமாகக் கிளர்ச்சி செய்கிறார்கள். இனியும் அவர்கள் பொய் வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. பத்து சதவீத வளர்ச்சி விகிதமும், ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று ஒத்து வராதவையாக தீடீரென்று தோன்றத் தொடங்குகிறது.

அந்த தட்டை உச்சி மலைகளுக்கு உள்ளிருந்து பாக்சைட்டை வெளியே எடுக்க வேண்டுமென்றால், காடுகளின் மடியறுத்து இரும்புக் கனிகளை வெட்டியெடுக்க வேண்டுமென்றால், இந்தியாவின் 85 சதவீத மக்களை அவர் தம் மண்ணிலிருந்து பிய்த்து நகரத்துக்குள் பிடித்துத் தள்ளவேண்டுமென்றால் (அந்தக் காட்சியைத்தான் காண விரும்புவதாய்ச் சொல்கிறார், சிதம்பரம்)9, இந்தியா ஒரு போலிசு ராஜ்யமாக வேண்டும். அரசு தன்னை ராணுவமயமாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய இராணுவமயமாக்கத்தை அரசு நியாயப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒரு எதிரியைக் காட்டவேண்டும்.  அந்த எதிரிதான் மாவோயிஸ்டுகள். இந்து அடிப்படைவாதிகளுக்கு முசுலிம்கள் எப்படியோ, அப்படித்தான் கார்ப்பரேட் அடிப்படைவாதிகளுக்கு மாவோயிஸ்டுகளும்… (அடிப்படைவாதிகளிடையேயான சகோதரத்துவம் என்று ஏதேனும் நிலவுகிறதோ? அதனால்தான் சிதம்பரத்தை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக உச்சி மோந்து பாராட்டியிருக்கின்றதோ?)

அரை இராணுவப் படைகள், ராஜ்நந்காவுனில் விமான தளம், பிலாஸ்பூரில் படைத் தலைமையகம், துணை ராணுவப் படைகள்,  சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், சத்தீஸ்கரின் பொதுப் பாதுகாப்பு சிறப்புச் சட்டம், ‘காட்டு வேட்டை’ நடவடிக்கை .. என்பன போன்ற இந்த எல்லா ஏற்பாடுகளும், சில ஆயிரம் மாவோயிஸ்டுகளை காட்டிலிருந்து துடைத்தெறிவதற்காக மட்டும்தான் என்று எண்ணுவது மாபெரும் பிழையாகும். பல விதமான விளக்கப்படும் இந்தக் ‘காட்டு வேட்டை’ நடவடிக்கை எனும் நிகழ்ச்சிப்போக்கில், சிதம்பரம் இதன் அடுத்த படியை நோக்கி முன் நகர்ந்து ‘பொத்தானை‘ அழுத்தி போரை வெளிப்படையாக அறிவித்தாலும் சரி,  அறிவிக்காவிட்டாலும் சரி, இந்தச் சூழலில் முளை விடக் காத்திருக்கும் ஒரு  ‘அவசர நிலைக் காலத்தை‘ நான் அவதானிக்கிறேன். (ஒரு சிறிய கணிதக் கேள்வி: ஒரு சின்னஞ்சிறு காஷ்மீர் பள்ளத்தாக்கைக் கட்டுக்குள் வைக்க ஆறு லட்சம் சிப்பாய்கள் தேவைப்படுகிறார்கள் என்றால், அடுக்கடுக்காய் அதிகரித்துச் செல்லும் பல நூறு இலட்சம் மக்களின் கோபத்தை எதிர்கொண்டு கட்டுப்படுத்த எத்தனை சிப்பாய்கள் தேவைப்படுவார்கள்?)

சமீபத்தில்  கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தலைவர் கோபட் காந்தியை நார்கோ அனாலிசிஸ்10 செய்வதை விடுத்து, அவருடன் பேச முற்படுவது நல்ல யோசனையாக இருக்கும்.

இதனிடையே, இவ்வாண்டின் இறுதியில் கோபன் ஹேகனில் நடக்கவுள்ள தட்பவெப்ப மாற்றம் குறித்த மாநாட்டிற்குச் செல்லவிருக்கும் யாரேனும் ஒருவர்,  கேட்கத்தகுதியான இந்த ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பீர்களா: பாக்சைட் அந்த மலையிலேயே கிடந்துவிட்டுப்போகட்டுமே, அதை விட்டு வைக்க இயலாதா?

(31 அக்டோபர், 2009  கார்டியன்  இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம்)

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

1. மாவோயிச கம்யூனிச மையம், மக்கள் யுத்தக் குழு என இரு வேறு அமைப்புகளாக இயங்கி வந்த இவ்வமைப்புகள், 2004-இல் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) என ஒரு கட்சியாக இணைந்தனர்.

2. தாண்டேவாடா – சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, பழங்குடியினர் அதிகம் வாழும் பின் தங்கிய மாவட்டம்.

3. சல்வா ஜுடூம் – 2005-இல் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக, பழங்குடியினரைக் கொண்டே சத்தீஸ்கர் அரசு உருவாக்கிய கூலிப்படை.

4. முனைவர் பாலகோபால் 08.10.2009 அன்று மரணமடைந்தார்.

5. லால்கர் முதலான பகுதிகளில் அரசு அதிகாரிகளை செயல்பட விடாமல் மக்கள் விரட்டியடித்தபோது, அரசு இந்த வாதத்தை முன் வைத்தது.

6. ஃபேப் இந்தியா – மேட்டுக் குடியினர் அணியும் ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனம்.

7. 2009- ம் ஆண்டு, மகாராட்டிர மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகள் குறித்து செய்திகள் வெளியிடுவதற்கு, பல்வேறு பெயர்களில் கட்டணங்கள் வசூலித்ததை பத்திரிகையாளர் சாய்நாத் அம்பலப்படுத்தினார்.

8. ஹர்மத் வாஹினி – மேற்கு வங்கத்தில் உள்ள சி.பி.எம் கட்சியின் குண்டர் படை.

9. “இந்தியாவின் 85 சதவிகிதம் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ வேண்டும் என்பதே தமது கனவு” என தெஹல்கா ஏட்டிற்கான ஒரு பேட்டியில் ப. சிதம்பரம் தெரிவித்தார். (தெஹல்கா மே 31, 2008)

10. நார்கோ அனாலிசிஸ் – கைதிகளை விசாரிப்பதற்கு, போதை மருந்தை வலுக்கட்டாயமாக உட்செலுத்தி, அவர்களைப் பேச வைக்க போலிசு பயன்படுத்தும் முறை. இவ்வழிமுறை பல உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!

77

vote-012கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக; பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அநாயசமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி. அவளே எனக்கு அழகி.

இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெறிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!

“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.

“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.

பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேநீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.

தேநீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.

“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.

“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.

“பாண்டிச்சேரிங்க”

“என்ன விசயமா?”

“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”

“தங்கறதெல்லாம்?”

“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.

சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள்தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நண்பர்கள்தான் இருந்தனர். அதில் கோபால் மிக  நெருங்கிய நண்பன்.

அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் களைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்

“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்

“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை

“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வெண்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.

“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.

“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்

“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.

“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீய வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரதுக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..”  வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…

“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்..

கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.

பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.

“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெறிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.

எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு  மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.

அங்கே விவசாயம்தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணிதான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தேதான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீண் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.

“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்”  தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.

ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும்தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள்தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தாதான். அதற்குப் பின் ஒரு இரண்டு  வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.

என் பெரியப்பாவின் மகள்தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்காதான் எனக்கு அம்மா.

“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கையால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பாதான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.

ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.

பன்னிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவுதற்கு எவரும்  வருவதில்லை.

போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வருடம் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நண்பர்களே கவனித்துக் கொண்டனர். அவரின் காரியங்களும் கூட நண்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.

எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள்தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள்தான் அவரது சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னையறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.

வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தறியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.

பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.

அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.

மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.

முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?

ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின் அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.

“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள்தான் அவை.

“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”

“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது.  அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.

“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.

“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்ப எங்க இருக்காங்க?”

“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியேபடலியா?”மௌனமாக இருந்தேன்.

“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”

“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”

“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டுதான் வருவேன்”

“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”

“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸுல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”

“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.

நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.

“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”

டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயணிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.

இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.

“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”

“வெவசாயமெல்லாம்?”

“அதெல்லாம் ஓய்ஞ்சி போயி பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”

“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”

“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரணும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹூம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”

இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுண்ணாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காரை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது மாறி விட்டது.

“சரி போலாம் கோபாலு”

“ஏண்டா உள்ளெ போகலியா”

“போயி?”

அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில்தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பறை நோக்கி நடந்தோம்.

சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..

“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.

“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”

“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோணி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.

“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”

“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”

அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம்தான்.

அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.

“சரி போலாம்” என்றவாறே வெளியில் வந்தேன்.

பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,

“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன  பொடியனெல்லாம் போடா வாடான்னுதான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்கவே கெடைக்காது.”

பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.

கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கேதான் தங்கியிருந்தேன்.

இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரைதான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள்தான் புழுத்து நாறுகிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!

vote-012புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் “ஜுமெரா பாம்” எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் – எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரக சமஷ்டி கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “துபாய் வேர்ல்ட்” என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. நகீல் என்ற அரசின் துணை நிறுவனம் இத்திட்டத்திற்கான கடன் பத்திரங்களை “சுகுக் பாண்டுகள்” என்ற பெயரில் 2004-இல் வெளியிட்டது. அது 2009-இல் முதிர்வடைவதால் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டும். ஆனால், நகீல் நிறுவனத்தால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை.

துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4,00,000 கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இந்தச் செய்தி பரவி, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதும் தடதடவென ஆரம்பித்து விட்டது சரிவு. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அவசரமாக திரும்ப எடுத்துச் செல்லத் தொடங்கின. முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும்போது மீண்டும் சரிவு ஏற்பட்டது.

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ரஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால், வீட்டுமனைத் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையில் துபாய் அதிக அழுத்தம் கொடுத்தது. கொளுத்தும் வெய்யிலில் பாலைவனத்தின் நடுவேயுள்ள முகாம்களில் வாழும் ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்தேர்ச்சி பெற்று அதிக சம்பளம் வாங்கி நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடும்பத்தோடு வாழும் நடுத்தர வர்க்கத்தினர், கோடானுகோடிகளை முதலீடு செய்துள்ள உலகின் பணக்கார வர்த்தகர்கள் எனப் பல்வேறு பிரிவு வெளிநாட்டவர்கள் துபாயில் குடியேறியுள்ளனர். துபாயின் மொத்த மக்கள்தொகையில் இவர்கள் ஏறத்தாழ 80 சதவீதம். துபாயில் கட்டப்படும் ஆடம்பர வீடுகளை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்று அரசு ஆசை காட்டியது. இதனால் நடுத்தர வர்க்கமும் பெரும் வர்த்தகர்களும் உல்லாசிகளும் இத்தகைய புதிய ஆடம்பர வீடுகளை வாங்கப் போட்டி போட்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கியில் கடன் வாங்கியாவது வீடு வாங்க முண்டியடித்தனர்.

கடல் நடுவே பேரீச்சை மர வடிவில், உலக வரைபட வடிவில் என்றெல்லாம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தரும் திட்டங்களை பன்னாட்டுக் கட்டுமானக் கம்பெனிகள் அறிவித்தன. கட்டடங்களை எழுப்பும் முன்னரே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். நம்ம ஊரில் தேக்குப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ஒரு மோசடித் திட்டத்தை அறிவித்து, இதோ உங்கள் தேக்கு கன்று வளர்ந்து வருகிறது என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி ஏய்த்ததைப் போலத்தான், வெறும் கட்டடப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை வீட்டுக்காகப் பலரும் பணத்தைக் கட்டினர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்கிக் கட்டினர்.

“இன்றைய உலகில் வீட்டுமனை-கட்டடத் தொழிலில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. வீடுகளின் விலை குறைந்ததாக வரலாறில்லை” என்ற பங்குச்சந்தை சோதிடர்கள் கூறும் அருள்வாக்கை பலரும் நம்பினர். பங்குச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டு வீட்டுமனை விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்த அனைத்துலக ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோடிகோடியாகக் கொள்ளையடித்த பிறகு, உண்மை மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. முதலீடு செய்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வரப்போகும் வீழ்ச்சியை அறிந்து முன்கூட்டியே தமது முதலீடுகளை திரும்ப எடுத்துச் சென்றன. இதனால், கடன் சுமை அதிகரித்து துபாய் வேர்ல்டு என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் திவாலாகியது.

எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.

மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து செய்யப்படும். ஒரு மாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக் கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்துதான் கடனை அடைக்க வேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டைவிட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு, எவரிடமும் விற்க முடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்திமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.

“இருப்பினும் இது தற்காலிக நெருக்கடிதான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டு விட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்”என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக் கூடாது. மீறினால், இலட்சக்கணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.

இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.

லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.

கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.

–          புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இலக்கிய அறிமுகம் 2 – எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர்

5

இலக்கிய அறிமுகம் – 2 – எர்னெஸ்ட்டோ கார்டெனல் மார்ட்டினெஸ் (Ernesto Cardenal Martinez)

vote-0121925 சனவரி 20ஆம் நாளிற் பிறந்த கார்டெனால் வசதி படைத்த குடும்பத்திற் பிறந்தவர். அவர் முதலில் தனது தாய் நாட்டிலும் பின்பு மெக்சிகோவிலும், நியுயார்க்கிலும் இலக்கியத்துறையில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சொமோஸாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக 1954இல் நடந்த கிளர்ச்சியில் பங்கு பற்றினார். அதன் தோல்வியின் பின்பு அமெரிக்கா சென்று கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தார்.

மெக்சிகோவில் சில காலம் வாழ்ந்ததன் பின்பு நாடு திரும்பித் தனது ஊரான கிரானேடாவில் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். சொலன்டினாமே தீவில் சன்டினிஸ்ட்டா இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. அங்கிருந்து அவர்கள் 1977இல் ராணுவ முகாம் ஒன்றின் மீது தொடுத்த தாக்குதலால் முழுத்தீவுகளுமே சொமோசாவின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டன.

அண்டை நாடான கொஸ்ட்டரீக்காவுக்குத் தப்பிச் சென்ற கார்டெனெல் 19 யூலை 1979இல் சான்டினிஸ்ட்டா, நாட்டை விடுதலை செய்ததை ஒட்டி நாடு திரும்பினார். அப்போது முதல் அமெரிக்கா உருவாக்கிய உள்நாட்டுப் போரின் விளைவான பொருளாதாரக் காரணங்களால் பண்பாட்டு அமைச்சு மூடப்படும் வரை, பண்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார்.

கருத்து வேறுபாடுகளால் 1994இல் சான்டினிஸ்ட்டா அமைப்பினின்று விலகிய போதும் தன்னை ஒரு இடதுசாரியாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளார். 1983ஆம் ஆண்டு சான்டினிஸ்ட்டா அமைச்சரவையினின்று விலகும்படி போப்பாண்டவர் இட்ட ஆணையை ஏற்க மறுத்த கார்டெனல் தொடர்ந்தும் பாதிரியாராக இருக்க இயலாது போயிற்று.

இலக்கிய விருதுகள் பல பெற்ற கார்டெனெல் 2005ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டு அதைப் பெறாமை அவருக்கு ஒரு தகுதியாகக் கூட இருக்கலாம். ஏனெனில் அவர் சிலரது கருத்தில் லத்தின் அமெரிக்காவில் வாழும் அதி முக்கியமான கவிஞராவார்.

பிறர் அவரது கருத்துக்களுடன் முரண்படுகின்றனரேயன்றி அவரது கவித்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. அறியப்பட்ட அவரது பதினான்கு கவிதைத் தொகுதிகட்கும் மேலாக எழுதப்படிக்கத் தெரியாத ஒரு சமூகமாயிருந்த சொலன்டினாமோ தீவு மக்கள் மத்தியிலிருந்து, பல வயதுகளையுமுடைய புரட்சிக் கவிஞர்களை உருவாக்கியமை அவரது சமூக நோக்கிற்கு ஒரு வலிய சான்றாகும்.

அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. எனினும் அவை ஏகப்பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. ஒரு கவிஞராகவும் அரசியற் சிந்தனையாளராகவும் அவர் நிக்கராஹூவாவிலும் லத்தின் அமெரிக்காவிலும் மிக முக்கியமான ஒருவராகவே கொள்ளப்படுகிறார்.

——————————

எர்னெஸ்ட்டோவின் கவிதைகள்

57வது தோத்திரம்

சட்டத்தினதும் ஒழுங்கினதும் காவலர்களே
உங்களது சட்டம் ஒரு வர்க்கத்தினரின் சார்பானதில்லையா?
தனியார் உடைமை காக்க குடிசார் சட்டம்
ஒடுக்கப்பட்டோரை வதைக்கக் குற்றச் சட்டம்

நீங்கள் கூறுஞ் சுதந்திரம் மூலதனத்தின் சுதந்திரம்
உங்கள் ‘சுதந்திர உலகம்’ சுதந்திரமான சுரண்டல்
உங்கள் சட்டம் துப்பாக்கியின் சட்டம், உங்கள் ஒழுங்கு ஒரு காடு
பொலிசார் உங்களுடையோர்
நீதவான்கள் உங்களுடையோர்

சிறைகளிலே பெருங்காணிக்காரரோ வங்கி உரிமையாளர்களோ இல்லை
முதலாளிகள் தம் தாயின் கருப்பையிலேயே தவறாகிப் போகிறார்கள்
பிறந்த நாள் முதலே வர்க்க முற்சாய்வுடையோராகிறார்கள்
புடையன் பாம்பு விஷச்சுரப்பியுடன் பிறக்கிறது
பெரிய சுறா மனிதரைத்தின்னவே பிறக்கிறது

ஓ தேவனே இந்த நிலைமைக்கு ஒரு முடிவு கட்டும்
ஆளுங் கும்பலின் பற்களைப் பிடுங்கும்
மலசல கூடத்து நீர்போல அவர்களைக் கழுவித் தள்ளும்
பூச்சிக்கொல்லியின் கீழுள்ள புல்போல அவர்கள் வதங்கட்டும்

புரட்சி வரும்போது அவர்களே புழுக்கள்^ ஆவார்கள்
அவர்கள் உடலின் உயிர் கலகங்களில்ல, நோய்க்கிருமிகள்
புதிய மனிதரின் கையில் அழிய வேண்டிய விகாரங்கள்
முட்களை விதைக்கு முன் உழவுயந்திரங்கள் அவர்களைக் களையட்டும்

விசேசமாக ஒதுக்கப்பட்ட மன்றங்களில்
மக்கள் களிப்பை அனுபவிக்கட்டும்
தனியார் கம்பெனிகளை அவர்கள் தம் உடைமையாக்குவர்
மக்கள் நீதிமன்றங்களில் நியாயமானோர் மகிழ்வு பெறுவர்

பெரும் நகரச் சதுக்கங்களில் நாம்
புரட்சியின் ஆண்டு நிறைவுகளைக் கொண்டாடுவோம்
இருக்குங் கடவுள் பாட்டாளிகட்குரியவர்

———–
^புழுக்கள்: கியூபாவின் புரட்சியையடுத்து வெளியேறி அமெரிக்காவுக்கு ஓடியவர்களைக் குறிக்கும் சொல்

__________________________________________

மார்க்கச்சுக்களின் விலை

புரட்சி பற்றி என் மருமகள் ஒருத்தி முறைப்படுகிறாள்
ஏனெனில் மார்க்கச்சுக்களின் விலை அதிகம்
எனக்கு முலைகள் கொண்டிருந்து பழக்கமில்லை
ஆனாலுங் கச்சுக்கள் இல்லாமல் முலைகள் சமாளிக்கும் என நினைக்கிறேன்

என் நண்பன் ரஃபாயெல் கொர்டோவா
எஸ்கிபுலாஸ் கிராமத்தின் அருகே வாழ்கிறான்
வீதி வழியே பல மரண ஊர்வலங்கள் சிறிய சவப்பெட்டிகளுடன்
ஒவ்வொரு மத்தியானமும் நாலு, ஐந்து, எட்டு மரண ஊர்வலங்கள் என்று
எனக்கு சொல்லியிருக்கிறான்.
முதியோர் இவ்வளவுக்கு அடிக்கடி மரிப்பதில்லை
சில காலம் முன்பு எஸ்கிபுலானின் பிரேதப் பெட்டிக் கடைக்காரன்
அவனிடம் வந்தான்
“வைத்தியரே எனக்கு உங்களிடம் உதவி வேண்டும்
எனக்கு இப்போது மரணங்கள் இல்லை”
முன்னாட்களில் மலிவான மார்க்கச்சைகளிருந்தன
இப்போது எஸ்கிபுலாஸீல் மரண ஊர்வலங்கள் மிகக் குறைவு
நீயே சொல்லு எது பரவாயில்லை?

_________________________________________

5வது தோத்திரம்

ஓ தேவனே என் சொற்களைக் கேளும்
என் முனகல்களைக் கேளும்
என் ஆட்சேபத்தைக் கேளும்
ஏனெனில் நீர் சர்வாதிகாரிகளுடன் சினேகமான கடவுளோ
அவர்களது அரசியலை ஆதரிப்பவரோ
அவர்களது பிரசாராத்தாற் பாதிக்கப்பட்டவரோ அல்ல,
நீர் சண்டியர்களுடன் இணங்குபவரும் அல்ல

அவர்களது பேச்சுக்களிலோ
பத்திரிகை அறிக்கைகளிலோ நேர்மை இல்லை
யுத்த உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே
தம் உரைகளிற் சமாதானம் பற்றிப் பேசுகின்றனர்
சமாதான மாநாடுகளிற் பேசிக்கொண்டே
இரகசியமாகப் போருக்கு ஆயத்தமாகின்றனர்
இரவிரவாக அவர்களது பொய் சொல்லும் வானொலி இரையும்
அவர்களது மேசைகள் மீது பாதகத் திட்டங்களும்
கொடிய நடவடிக்கைகளும் அடுக்கப்பட்டுள்ளன
ஆயினும் நீர் என்னை அவர்களின் திட்டங்களினின்று காப்பீர்
அவர்கள் துப்பாக்கி வாய்களாற் பேசுவர்
அவர்களது ஒளிரும் நாக்குகள் துப்பாக்கிச் சனியன்கள்

ஓ தேவனே அவர்களை அழியும்
அவர்களது அரசியலை முறியடியும்
அவர்களது அறிக்கைகளைக் குழப்பும்
அவர்களது வேலைத்திட்டத்தை கவிழும்
எச்சரிக்கைச் சங்கின் வேளையில் நீர் என்னுடனிருப்பீர்
குண்டு விழும் நாளில் நீர் என் புகலிடமாயிருப்பீர்
அவர்களது பொய்யான விளம்பரங்களையும்
அரசியற் பிரச்சாரத்தையும் நம்பாதவர்களை ஆசீர்வதிப்பீர்
கவச வாகனங்கள் போன்று
உம் அன்பினாற் சூழுவீர்.

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

“சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”

vote-012புதுச்சேரி – செம்பியப்பாளையத்தில் கடந்த பத்தாண்டுகளாக சுமார் 300 ஆண்-பெண் தொழிலாளர்களின் உழைப்பில் இயங்கி வருகிறது பவர் அண்டு அபிராமி சோப்ஸ் நிறுவனம். தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நசுக்கியும் சுரண்டியும், அரசின் சலுகைகள் – மானியங்கள் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தும் இன்று சென்னை, காரைக்கால், வடக்கே சில்வாசா எனப் பல இடங்களில் கிளைகளைப் பரப்பி வளர்ச்சியடைந்துள்ளது.

இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பணியாற்றிய எந்தத் தொழிலாளிக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படவில்லை. உற்பத்தி அடிப்படையிலான முறையான ஊதியமும், ஊதிய உயர்வும், சீருடையும் வழங்கப்படுவதில்லை. உரிமைகளைக் கேட்டால் திருட்டுப் பட்டம் கட்டி பணிநீக்கம் செய்வது, விடுப்பெடுத்தால் வாரக்கணக்கில் வாயிலில் நிறுத்தி அவமானப்படுத்துவது, அடியாட்களை வைத்து மிரட்டுவது – என அடக்குமுறையை ஆலை நிர்வாகம் கட்டவிழ்த்து விடுகிறது. அதேசமயம், விளம்பரத்துக்காக சினிமா கழிசடை நடிகை தமன்னாவுக்கு பல கோடிகளை வாரியிறைக்கிறது.

சட்டபூர்வ உரிமைகளைக்கூட காலில் போட்டு மிதித்து, கொத்தடிமைத்தனத்தை ஏவிவரும் பவர் அண்டு அபிராமி சோப்ஸ் நிர்வாகத்தின் அட்டூழியத்தை எதிர்த்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை நடத்தினர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, உடனிருந்து வழிகாட்டி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதையடுத்து, தொழிலாளர்கள் இச்சங்கத்தில் திரண்டனர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக,  இரு மாதங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து பூர்வமாக நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. ஆனாலும் அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்தது. தொழிலாளர் துறையிடம் சங்கத்தின் சார்பில் முறையிடுவதைக் கண்டு ஆத்திரமடைந்து 8 தொழிலாளர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரணை நடத்தி மிரட்டியது. ரவுடிகளை ஏவி முன்னணியாளர்களை அச்சுறுத்திப் பார்த்தது. தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையால் இவையாவும் பிசுபிசுத்துப் போயின. ஆத்திரமடைந்த நிர்வாகம் கடந்த நவம்பரில், தனக்கே உரித்தான வர்க்க வெறியுடன் முன்னணியாளர்கள் 6 பேரைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது. கொதிப்படைந்த தொழிலாளர்கள் 9.11.09 முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சுற்றுவட்டார உழைக்கும் மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. தலைமையிலான இந்துஸ்தான் யுனிலீவர் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதற்கிடையே, பொய்யான காரணங்களைக் கூறி உயர்நீதி மன்றத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களை ஆலைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகம் தடையாணை வாங்கியது. உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக முடித்துக் கொண்ட தொழிலாளர்கள், 26.11.09 அன்று ஆலை மேலாளரின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு, பொய்க் காரணம் கூறி தடையாணை பெற்றதையும், ஆலை விளம்பரப் பலகையில் தடையாணைக்கு மாறாக அனைத்துத் தொழிலாளர்களும் ஆலைக்கு வெளியேதான் போராட வேண்டும் என்று அறிவிப்பு செய்ததையும் பற்றி கேள்வி எழுப்பினர்.

ஆலை வாயிலில் குவிக்கப்பட்டிருந்த போலீசு, இதுதான் சந்தர்ப்பம் என்று தொழிலாளர்களைச் சுற்றிவளைத்து தடியடித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆலை மேலாளரைத் தொழிலாளர்கள் தாக்கியதாகவும், அதனால் கூட்டத்தைக் கலைத்ததாகவும் நியாயவாதம் பேசி நிர்வாகத்துக்கு விசுவாசமாக வாலாட்டுகிறது போலீசு.

போலீசின் வெறியாட்டத்தை எதிர்த்து பவர் சோப்ஸ் தொழிலாளர்கள் உடனடியாக இவ்வட்டாரமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, 27.11.09 அன்று வில்லியனூர் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முதலாளித்துவச் சுரண்டலுக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக, விண்ணதிரும் முழக்கங்களுடன் வர்க்க உணர்வோடு பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு நடத்திய இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னணியாளர்களும் இந்துஸ்தான் யுனிலீவர், மெடிமிக்ஸ், லியோ பாஸ்ட்னர்ஸ், கோத்ரெஜ் சாராலீ முதலான ஆலைகளைச் சேர்ந்த தொழிற்சங்க முன்னோடிகளும் கண்டன உரையாற்றினர்.

புதுவை மாநிலத்தை மறுகாலனியாக்கத்தின் வேட்டைக்காடாக்கிவரும் ஆட்சியாளர்களையும், அரசின் ஆதரவோடு சட்டபூர்வ உரிமைகளைப் பறித்து தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளையும், அவர்களின் விசுவாச ஏவல்படையாகச் செயல்படும் போலீசையும் தோலுரித்துக் காட்டி, உழைக்கும் மக்களை இம்மறுகாலனியச் சூறையாடலுக்கு எதிராகப் போராட அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. பவர் சோப்ஸ் தொழிலாளர்கள் புதிய உற்சாகத்தோடு அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

–   புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

79

vote-0122009 ஜனவரி 29 அன்று காலை 10.45 – லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ”இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்… எரிந்து கொண்டிருக்கிறார்” என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான்  நினைத்தேன்.

என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ”அங்கே என்ன இருக்கு?” என்றேன். ”நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது” என்றார். ”நீ உடனே அந்த பேப்பரை எடு”என்று சொல்லி விட்டு நானும் அங்கே சென்றேன்.

அந்த இளைஞர் விழுந்து கிடந்த இடத்தில் கரும்படலம் பரவியிருந்தது. இருபத்தைந்து லிட்டர் தண்ணீர் பிடிக்கக் கூடிய வெள்ளை நிற கேன் ஒன்று அங்கே காலியாகக் கிடந்தது. எரிந்து கிடக்கும் அந்த மனிதர் தன் மேல் ஊற்றுவதற்கான பெட்ரோலை  அந்த வெள்ளை நிற கேனில்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். போலிசார் அவரோடு சேர்ந்து அந்தக் கேனையும் எடுத்துச் சென்றனர். முதலில் அவர் குப்புற விழுந்து கிடந்ததாக நினைவு. போலீசார் வந்து கூட்டத்தை விலக்கி விட்டு எரிந்து கிடந்த அந்த இளைஞரின் அருகே அமர்ந்து வாக்குமூலம் பெறும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். குடும்ப பிரச்சனையா? காதல் தோல்வியா? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தனர். முழுக்க கருகி கரிக்கட்டையாகிக் கிடந்த அந்த இளைஞனோ ”யோவ் அதான் எரிஞ்சுட்டேன்ல தூக்கிட்டுப் போய்யா” என்று ஈனஸ்வரத்தில் வெறுப்போடு முனகிக் கொண்டிருந்தான். காக்கிச் சட்டைகள் கைபிசைந்து நின்றார்கள். பிறகு முத்துக்கமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை அருகிலேயே செய்வதறியாது யோசித்துக் கொண்டிருந்தேன்.

முத்துகுமாரின் கடிதம் – வாசிக்க படத்தின் மேல் சொடுக்கவும்

அப்புறம்தான் அந்தக் கடிதத்தை நான் வாசித்த போது அந்த நேரத்தில் இந்த மரணமும் அவர் எழுதி வைத்துள்ள மரணசாசனமும் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். உடனடியாக அக்கடிதத்தை ஸ்கேன் செய்வதற்காக வெளியில் வந்தேன். சாலையின் சந்திப்பில் இருந்த கடையில் ஸ்கேன் செய்து அக்கடிதத்தின் ஜெராக்ஸ் நகலை ஒரு முக்கியமான ஊடகவியலாளருக்கும் கொடுத்தேன்.  என்னுடன் இருந்த பத்திரிகை நண்பர் ஒருவர் அங்கிருந்த படியே முக்கியமான சில முக்கிய பிரமுகர்களுக்கு அக்கடிதத்தின் முக்கியத்துவம் உள்ள வரிகளை வாசித்துக் காட்டத் துவங்கினார். அவர் வாசித்துக் காட்டிய அந்த பிரமுகர்கள் அனைவருமே ஈழத் தமிழர் போராட்டங்களை வழி நடத்தியவர்கள். ஈழப் போராட்டத்திற்கு தாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தோற்றத்தையும் உருவாக்கியிருந்தார்கள்.

“உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.”

”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” என்ற வரிகளை வாசித்துக் காட்டி விட்டு, அத்தோடு நிற்காமல் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் கடிதத்தை வாசித்துக் காட்டி “இதை விடக் கூடாது, ஈழத் தமிழ் மக்கள் மீதான போரை முன்னெடுக்கும் இந்தியாவுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டவும், போர் நிறுத்தம் கோரவும் வந்து வாய்த்திருக்கும் அரிய தருணம் இது. ஒரு மாபெரும் எழுச்சியையும் மக்கள் திரள் போராட்டங்களையும் தூண்டி விடும் சாத்தியங்களை இக்கடிதம் கொண்டிருக்கிறது. ஆகவே நாம் போராட்டங்களைத் தூண்டி விட வேண்டும்” என்று சொன்னேன்.

நான் தொலைபேசியில் வாசிப்பதைக் கேட்ட சில நண்பர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு அப்படியே அலுவலக வேலைகளைப் போட்டு விட்டு ஒன்று கூடினோம். கடிதத்தை முதலில் டைப் செய்து சில இணையதளங்களில் சில மணிநேரங்களில் வெளியிட முடிவு செய்தோம்.

முத்துக்குமாரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே நெடுமாறன், வைகோ, வெள்ளையன் ஆகியோர் முத்துக்குமாரின் உடலருகே இருந்தனர். அங்கு எடுத்துச் செல்லப்பட்ட முக்கால் மணிநேரத்திற்குள் முத்துக்குமார் இறந்து போனார். பொதுவாக அறுபது சத தீக்காயம் அடைகிறவர்கள் கூட இரண்டு நாள் உயிரோடு இருந்துதான் மரணிப்பார்கள். ஆனால் முத்துக்குமார் எரிந்து ஒரு மணிநேரம் கூட உயிரோடு இருக்க வில்லை. ஏனென்றால் அவரது உடலில் எரிந்த தீ நின்று எரிந்த தீ. அது உடலை மட்டுமல்ல இதயத்தை கடுமையாக பாதித்தபடியால் உடனடியாக உயிர் போகும்படியாயிற்று.

சாவது என்று முடிவெடுத்து அதை ஒரு உண்மையான வீரனாக செய்து முடித்தவன் முத்துக்குமார். பொதுவாக தற்கொலையை அமல்படுத்துவது கண நேர முடிவு என்பார்கள். அந்தக் கணத்தில் சிந்தனை தடுமாற்றம் ஏற்பட்டால் அவர் அந்த முடிவைக் கைவிட நேரும். ஆனால் முத்துக்குமார் செத்தே தீருவது என்ற முடிவோடும், யாரும் தன்னைக் காப்பாற்றி விடக் கூடாது என்பதிலும் உறுதியாக நின்றான். தான் பலியாகி தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஒரு எழுச்சியை உருவாக்குவது; தனது மரணத்திற்கான சாசன வாக்குமூலம் ஒன்றை எழுதுவது என்பதும்தான் முத்துக்குமாரின் இறுதித் திட்டம்.

உண்மையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி எது என்று யாராவது கேட்டால் மரணசாசனத்தை விட அவர் செத்துப் போவதென்று முடிவெடுத்த அந்த தருணம். ஆம். அந்தக் காலத்தில் இங்குள்ள ஆட்சியாளர்கள் ஈழ மக்களுக்காக ஏதாவது செய்து விட மாட்டார்களா? என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருந்தது. எங்கே ஈழம் என்கிற இழவு வீடு நம் சந்தோசத்தை பிடுங்கி பதவியைப் பறித்து விடுமோ என்று பதறினார் கருணாநிதி. அந்த பயம்தான் கருணாநிதியை அசிங்கமான பல நாடகங்களை அரங்கேற்றத் தூண்டியது. கருணாநிதி மட்டுமல்ல ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என எல்லோருமே கருணாநிதிக்கு இணையான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஊடகங்களுக்கோ, ஆளும் வர்க்கங்களுக்கோ, தமிழார்வலர்களுக்கோ, கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ, நடிகை, நடிகர்களுகோ யாருக்குமே ஈழ மக்களின் கண்ணீர் பற்றிய அக்கறை இல்லை. போரால் கொல்லப்பட்ட மக்களின் கொடூரப் படங்கள் முதலில் இணையதளங்களில் மட்டுமே வெளியாகின . ஜெயா, கலைஞர், சன் என எந்தத் தொலைக்காட்சிகளும் போர் குறித்தும் தமிழ் மக்கள் கொல்லபடுவது குறித்தும் ஒரு வார்த்தை கூட வாயே திறக்கவில்லை. ஊடகங்களின் மௌனம், கருணாநிதியின் நாடகம், ஜெயலலிதாவின் பொறுப்பற்ற பேச்சுக்கள் என மக்கள், ஈழம் தொடர்பாக அருவறுப்படைந்திருந்தார்கள்.

இந்த அருவறுப்பு மக்களிடம் இருந்தது என்று சொல்வதை விட தமிழார்வலர்கள், முற்போக்குச் சக்திகள், அறிவுஜீவிகள் மத்தியில் அதிகம் இருந்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திடமும் இருந்தது கழிவிரக்கமும்,கையாலாகாத்தனமும் மட்டுமே. இந்த இரண்டு உண்மைகளையும் புரிந்து கொண்ட முத்துக்குமார் தன் உடலை முதல் முதலாக பலீபிடத்தின் மீது வைத்தான். தானே பலியானான் அதுதான் தீக்குளிப்பின் வரலாற்றுத் தருணம்.

சரி சம்பவத்திற்கு வருவோம். கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண அங்கே கொஞ்சம் இளைஞர்கள் கூழுமியிருந்தனர். அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மீது இளைஞர்கள் கோபத்தைக் காட்டினார்கள். அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முத்துக்குமார் தொடர்பாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் எனது பத்திரிகை நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு முக்கியமான தலைவரிடம் பேசியதைக் கூறினார். அதன்படி  முத்துக்குமாரின் உடலை கொளத்தூருக்குக் கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க தீர்மானித்திருப்பதை அறிந்தேன்.

இந்த செய்தி எனக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்தத் தலைவரிடம் பேசும் போது ‘‘முத்துக்குமாரின் உடலை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் முன்னால் வைத்தி நீதி கேட்க வேண்டும்’”’ என்றிருக்கிறார். அவர் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிருக்கிறார். இப்போதோ அவர் சொன்ன பதில் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் அவரிடம் உணர்ச்சிவசப்பட்டு ‘‘முத்துக்குமாரின் உடலை சட்டக் கல்லூரி மாணவர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் ஒப்படைத்து விடுவதுதானே சரி. வேண்டுமென்றால் நீங்கள் பின்னால் இருந்து அவர்களுக்கு வழிகாட்டலாம் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார். அவர் என் நண்பருக்கு உருப்படியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

பல பிரமுகர்களிடம் பேசிய போதும் முழுமையான விபரங்களையோ, என்ன செய்யப் போகிறார்கள் என்பதையோ மறுத்து விட்ட்னர். நானும் எனது நண்பரும் கொளத்தூருக்குக் கிளம்பினோம், அங்கே ஒரு பந்தலின் கீழ் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சாயங்காலம் 6.45 மணி இருக்கும். அப்போது சுமார் முப்பது பேர் அங்கு குழுமியிருந்தனர்.

அப்போதே தலைவர்கள் மீதாதன நம்பிக்கை தகர்ந்து விட்டது. நாங்கள் எங்கள் கைகளில் இருந்த பணத்தைப் போட்டு முத்துக்குமாரின் கடிதத்தை நம்மால் முடிந்தவரை மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் கொண்டு செல்வோம் என்று இரவோடு இரவாக பிரதி எடுத்தோம். முத்துக்குமாரின் செய்தியை மாணவர்களிடமும்  வழக்கறிஞர்களிடமும் கொண்டு சென்று சம்பவ இடத்திற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இது போன்ற எண்ணம் ஏராளமான இளைஞர்களுக்கு இருந்த படியால் அவர்களும் இது போன்ற போராட்டங்களை தூண்டி விடும் வேலைகளில் இறங்கினார்கள். கிளர்ச்சியை நம்பும் ஒருவன் என்ன செய்வானோ அதை நேர்மையாகச் செய்தோம்.

ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனம் குறித்து திருமாவளவனின், ராமதாஸின், வைகோவின், நெடுமாறனின் ஆதரவாளர்கள் இன்று வரை மௌனம் சாதிக்கிறார்கள்.

அப்பந்தலின் வலது புறமாக உள்வாங்கியிருந்த ஒரு வீட்டினுள் முக்கியஸ்தர்கள் அமர்ந்து ஆலோசனை நடத்தினார்கள்….நடத்தினார்கள்… நடத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள்? முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள், என்பது குறித்த கேள்விகள் அந்த இரவே பலருக்கும் எழுந்தது.

ஆனால் அந்தக் கேள்வியை கேட்கும் துணிச்சலோ, இவர்களுக்கு மாற்றாக முத்துக்குமாரின் விருப்பங்களை நிறைவேற்றும் மாற்று அரசியல் தலைமையோ அங்கு இல்லை. தலைமையற்ற இந்த கையறு நிலைதான் வைகோவையும், நெடுமாறனையும், திருமாவளவனையும் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தின் அதாரிட்டிகளாக தாங்களே அந்த உரிமையை எடுத்துக் கொள்ள வைத்தது. ஆனால் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவருமே முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் இவர்களுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் வேக வேகமாக முத்துக்குமாரின் சடலத்தை புதைக்கத் திட்டமிட்டவர்கள், எழுந்து வரும் எதிர்ப்பை சமாளித்து எப்படியாவது சவ அடக்கத்தை நடத்தி முடித்து விடுவது என்று காய் நகர்த்தினார்கள். முத்துக்குமாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் அவரது உடலை அடக்கம் செய்யாமல் ஈழப் போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இதுதான் முத்துக்குமார் சொல்கிற போராட்டத்தை கூர்மையாக்குதல். இரண்டாவது அவர் சுட்டிக் காட்டுகிற சட்டக்கல்லூரி மாணவர்கள். அவர்களிடமும், தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்த வழக்கறிஞர்களிடமும் முத்துக்குமாரின் உடலை ஒப்படைத்திருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளின் முதிர்ந்த வடிவமாக இன்னொரு கோரிக்கையும் அங்கு முன் வைக்கப்பட்டது. முத்துக்குமாரின் உடலை தமிழகம் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு சென்று தூத்துக்குடியில் இருக்கிற அவனது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.  (இவர்களோ முத்துக்குமாரின் அஸ்தியை ஒரு அம்பாஸ்டர் காரில் கொண்டு சென்று கடலில் கரைத்தார்கள். அது யாருக்கும் தெரியாமல் போனது.)

மறு நாள் எப்படியாவது உடலை புதைத்து விட வேண்டும் என்பதுதான் அங்கிருந்த நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமா, ஆகியோரின் முடிவு. முத்துக்குமாரின் விருப்பத்தை மீறி, அங்கு குழுமியிருந்த ஏராளமான உணர்வாளர்களின் விருப்பத்தையும் மீறி அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் மாணவர்களும், வழக்கறிஞர்களும் வந்து நிலைமை சிக்கலான பின் அவர்கள் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டார்கள். தலைவர்கள் அவசரப்படுவதன் நோக்கமென்ன? ஒரு தன்னெழுச்சியான கிளர்ச்சி பிறந்து அது கையை விட்டுப் போய்விட்டால், ஈழத்திற்கான போராளிகள் என்ற வேடம் கலைந்து விடும் என்ற அச்சமே. தேர்தல் வழியில் அதிகார வர்க்க முறையில் இந்திய அரசின் ஒப்புதலோடுதான் ஈழத்தில் தலையிட முடியும் என்ற அடிமைத்தனமாக சிந்தனையும் யதார்த்தமும் அவர்களை இயக்கின.

அதனால்தான் “உண்ணாவிரதம், மனுகொடுப்பது என சம்பிரதாய போராட்டங்களை தூக்கி எரிந்து களம் காணுங்கள்” என்று அறைகூவல் விட்ட முத்துக்குமாரின் விருப்பத்திற்கு மாறாக முத்துக்குமாரின் உடலை உடனே புதைப்பதில் அக்கறை காட்டினார்கள். முத்துக்குமாரின் உடலை வைத்து கிளர்ச்சியை உருவாக்கும் அளவுக்கு மாணவர்களிடம் அரசியலோ, தலைமையோ இல்லாத சூழல். ஆதலால் தலைவர்கள் முத்துக்குமாரின் வீரச்சாவை ஒட்டி இயல்பாக எழும் ஈழ ஆதரவு கொந்தளிப்புகளை மீண்டும் மீண்டும் சடங்காக மாற்றுவதன் மூலம் அந்த சடங்கிற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த கருணாநிதிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

சந்தர்ப்பவாதிகளிடம் எப்படித் தோற்றோம்?

சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரு எதிர்ப்பியக்கத்தை கட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஒரு உதாரணம். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக வைத்துக் கொண்டே ஈழப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக போராடுவதாக நாடகமாடினார் டாக்டர் இராமதாஸ். அதனால்தான் ”யாரும் யாரையும் திட்டக் கூடாது, துண்டறிக்கை வெளியிடக் கூடாது, கொடும்பாவி கொளுத்தக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, பந்த் நடந்தால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும்” என்றெல்லாம்  பேசி ஈழப் போராட்டங்களுக்கு ஆப்பு வைத்தார் ராமதாஸ்.

இப்படி ஈழத் தமிழினத்திற்காக போராட வந்த தைலாபுரத்து நாயகன் கடைசியில் போயஸ் கார்டனில் போய் கூட்டு வைத்தார். அந்தக் கூட்டு காங்கிரஸ், திமுகவின் கூட்டணிக்கு முன்னால் தோல்வியுற்ற பின்பு இப்போது மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர தூது விடுகிறார் இந்த தமிழினப் போராளி.

சாதாரதண போராட்ட வடிவங்களையே தவிர்க்கச் சொல்லும் தமிழினப் போராளிகளின் காலத்தில்தான் முத்துக்குமார் ” உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! ” என்று ஒடுக்கபப்டும் மக்கள் குறித்து சரியாகவே உணர்த்தி விட்டுச் செல்கிறான்.

திருமா அப்போது திமுகவோடும் கருணாநிதியோடும் அனுசரணையோடு இருந்தார். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் பதவியை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். தா.பாண்டியன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் முடிவில் இருந்தார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த நெடுமாறனோ ஜெயலலிதா கூட்டணியின் ஆதரவாளராக இருந்தார். திருமா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், இவர்களுடன் இல.கணேசன் உள்ளிட இந்துத்துவ சக்திகள். இந்த இந்துத்துவ சக்திகளையும் தமிழார்வலர்களையும் இணைக்கும் புள்ளியாய் நெடுமாறன். இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை.

இவர்கள்தான் ஈழப் போருக்கு எதிராக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்று களம் கண்டவர்கள். புலிகளும் தங்களின் தமிழக ஆதரவாளர்களாக நம்பியது இவர்களைத்தான். ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனமோ கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட எல்லா ஒட்டுண்ணி துரோகிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்து எழுச்சிக்கான புதிய பாதையைக் கோரி நின்றது. ஆனால் உணர்வு கொண்டு எழும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் முத்துக்குமாரை கொண்டு போய் வெகு வேகமாக புதைத்ததன்  மூலம் இவர்கள் துரோகம் செய்தது முத்துக்குமாருக்கு மட்டுமல்ல ஈழத்தை ஒரு கருவியாகக் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் எழுச்சியையும் பாழ் படுத்து தமிழ் மக்களுக்கும் சேர்த்தே இவர்கள் துரோகம் செய்தார்கள். அந்த மரணசானத்தை வைகோவோ, திருமாவளனோ, ராமதாஸோ மேடையில் கடைசி வரை வாசிக்கவே இல்லை.

ஏனென்றால் அதை வாசித்தால் கருணாநிதி மனம் புண்படும் என்று திருமாவளவன் நினைத்தார், சோனியாவின் மனம் புண்படும் கூட்டணிக்கு குடைச்சல் வரும் என்று இராமதாஸ் நினைத்தார், ஜெயலலிதாவின் மனம் புண்படும் என்று வைகோ நினைத்தார், உண்மையிலேயே தமிழகத்தில் கிளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடுமோ என நெடுமாறன் நினைத்தார். அத்தனை பேரும் சேர்ந்து முத்துக்குமாரை ஊத்தி மூடினார்கள்.

”உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.” என்று முத்துக்குமார் எச்சரித்தது கருணாநிதியை…. ஆமாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திருடி அதை வைத்து பதவிக்கு வந்த சந்தர்ப்பவாதியான கருணா குறித்த எச்சரிக்கைதான் அது. ஆனால் ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் துரோகத்தை மட்டுமே பேசிய இவர்கள் முத்துக்குமாருக்குச் செய்த துரோகத்தை நாம் என்ன பெயரிட்டு அழைப்பது? முத்துக்குமார் சொன்ன சுயநலமிகள் என்ற வார்த்தை இவர்களுக்கு எவ்வளவு கச்சிதமாக கடைசியில் பொருந்திப் போயிற்று….

முப்பதாம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து அவரது பாட்டி உள்ளிட்ட சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் போய் நாங்கள் பேசினோம். ஆனால் அவர்களிடம் பேச விடாமல் எங்களை தடுத்தார்கள் சிலர், அவர்கள் நிலத் தரகர்கள் சங்க நிர்வாகிகள். அவர்கள் நாடார் என்கிற சாதியின் அடிப்படையில் முத்துக்குமாரின் உறவினர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். கடைசியில் முத்துக்குமாரின் உடலை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முடியாமல் ஊர்வலமாக கொண்டு சென்று புதைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.  ஒரு பக்கம் கருணாநிதி போலீசின் கொடூரமான அடக்குமுறை, இன்னொரு பக்கம் சந்தர்ப்பவாத ஓட்டுண்ணி அரசியல் தலைவர்கள் என மாணவர்களும் இளைஞர்களும் அவர்களால் தாக்கப்படும் சூழலும் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தது.

ஜனவரி 31&ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு மேல் முத்துக்குமாரின் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்ட போது பெரும் உணர்ச்சி நெருப்பும் மக்கள் வெள்ளமும் அந்த இடத்தை நிறைவித்திருந்தது. சாலையெங்கும் மக்கள் வெள்ளம். அவனது உடலை எடுத்துச் செல்ல ஊர்வலம் புறப்பட்ட போது தன்னெழுச்சியாக ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டிருந்தார்கள். வீதியெங்கும் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். வட இந்திய மார்வாடிப் பெண்கள் தண்ணீரும் மோரும் கொடுத்தார்கள். பலரும் தங்களின் வீடுகளுக்கு முன்னே வாசலில் நின்றபடி மெழுகுவர்த்தி ஏந்தி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவர்கள் எல்லாம் யார் திருமாவின் தொண்டர்களா? அல்லது வைகோவின் ரத்தத்தின் ரத்தங்களா? அல்லது இராமதாஸின் கைப்பிள்ளைகளா? இல்லையே? பொது மக்கள்………… எங்கோ நடக்கும் ஒரு பிரச்சினையைப் பார்த்து பொறுக்க முடியாமல் தன்னை எரித்துக் கொண்ட ஒரு தியாகிக்கு வணக்கமாவது செலுத்துவோம் என்று வீதிக்கு வந்தவர்கள்.

உண்மையில் இவர்கள் உட்பட, நாங்கள் உட்பட அனைவருமே தமிழகத்தில் நாம் எதிர்பாத்த எழுச்சி ஏற்பட்டு விட்டது என்றே நம்பினோம். அது உண்மையும் கூட. எழுச்சிக்கான கருவியைத்தான் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சடலமல்ல. மாறாக தமிழக மக்களை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய ஆயுதம் அது. ஒரு எழுச்சியை ஏற்படுத்த வல்ல எல்லா சாத்தியங்களோடும்தான் முத்துக்குமார் மரணித்திருக்கிறான். ஆனால் எழுச்சிக்கான மிகச் சிறந்த கருவியாக இருந்த………….. இனி எப்போதும் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பில்லாத முத்துக்குமாரை இவர்கள் வீணடித்து விட்டார்கள் என்கிற கோபம் எல்லோருக்குமே அந்த இடத்தில் இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் நீளமான ஊர்வலப்பாதை எங்கிலும் மக்கள் வெள்ளம். இறுதிவரை நாங்கள் சோர்ந்து போகவில்லை. மக்களும் சோர்ந்து போகவில்லை. சுடுகாட்டை ஊர்வலம் நெருங்கிய போது தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் காலவரையற்று இழுத்து மூடியது கருணாநிதி அரசு. இந்தச் செய்தி மாணவர்களுக்கு எட்டியதும்  சினமடைந்த அவர்கள் முத்துக்குமாரின் உடலோடு சாலையிலேயே அமர்ந்தனர். உடலை திருப்பி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டுக்குக் கொண்டு செல்வோம் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார்கள். ஆனால் அப்போது மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைத்தவர்கள் யார் தெரியுமா?

“நான் ராஜபட்சேவை நேரில் பார்த்தால் கொல்வேன்” என்று சொல்லி விட்டு பின்னர் கொழும்புவிற்குச் சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி பொன்னாடை போர்த்தி பரிசும் வாங்கி சிரித்துப்பேசி வந்துவிட்டு… இப்போது மீண்டும் இனப்படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா, அந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்தான் மாணவர்களைக் கடுமையாக அங்கே தாக்கினார்கள். அவர்கள்தான் முத்துக்குமாரின் உடலை தரதரவென இழுத்துச் சென்று புதைத்தார்கள். ஆனால் முத்துக்குமாரின் உடல் எரிந்த சுடுகாட்டில் போடப்பட்டிருந்த மேடையில் எல்லா சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னால் முதல் ஆளாக மேடையில் ஏறி நின்றார் உலகத் தமிழர்களின் உள்ளூர்க் காவலன் திருமாவளவன்.

இப்படித்தான் முத்துக்குமார் மூட்டிய தீயை ராமாதாசும், வைகோவும், திருமாவும், நெடுமாறனும் சேர்ந்தே நீரூற்றி அணைத்தனர். கருணாநிதியோ அதை மணல் மூடி புதைத்தார். முத்துக்குமார் இன்று ஒரு நினைவாக மட்டுமே வேதனை கலந்த நினைவாக மட்டுமே நம்மிடம் இருக்கிறான். இவ்விதமாய் அந்த நாடகம் நள்ளிரவு ஒரு மணிவரை நீண்டது. சுடுகாட்டில் எரிந்த நெருப்பை விட கனதியான தீயொன்று எங்கள் உள்ளங்களின் எரியத் துவங்கியது அன்றுதான்.

முத்துக்குமாரின் மரண சாசனம் ஒரு அப்பாவியான புலி ஆதரவாளரின் கோணத்தில்  முக்கியமாக ஈழமக்களின் துயரங்களை நினைத்து எழுதப்பட்டதுதான். அந்தக்கடிதம் அரசியல் தொலைநோக்கில் எழுதப்பட்டத்தல்ல. ஆனால் தமிழகத்தின் இயலாமை குறித்து உணர்ச்சிப் பிழம்பாய் எழுதப்பட்டது. அதில் கருணாநிதி, ஜெயாவைத் தாண்டி மற்ற தலைவர்களின் சந்தர்ப்பவாதங்கள் குறித்து இல்லை. எல்லோரையும் போல முத்துக்குமாரும் அவர்களை நம்பியிருக்கக்கூடும். முத்துக்குமாரை விடுங்கள், புலிகளும் கூட தேர்தல் முடிவு வரை இவர்களைத்தானே நம்பினார்கள். இன்று முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் துரோகிகளின் பட்டியலை முழுமையாக உணர்ந்திருப்பார். ஈழத்திற்கான வீழ்ச்சியை அறிவுப்பூர்வமாக பரிசீலிக்க முனைந்திருப்பார். ஆயினும் இன்று அவர் இல்லை. ஆனால் தமிழார்வலர்களும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்களாவது முத்துக்குமாருக்குப் பதில் அந்த சுயபரிசீலனையை செய்வார்களா?

மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி அதிகாலை அங்கிருந்து கலைந்து சென்றோம். முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்து ஒரு வருடம் ஓடிக்கழிந்து விட்டது. இப்போது மறுபடியும் இவர்கள் முத்துக்குமாரின் நினைவைப் போற்றுவதாக அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். ஊர்வலங்கள், மலர்க் கோபுரம், என முத்துக்குமாரை நினைவு படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு……….

………………………………………………………………………………………………………………………………………………………………………………
vote-012

தொடர்புடைய பதிவுகள்


மாபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!

47

சாங்குயிங் என்ற நகரம், சீனாவின் மேற்கேயுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தைச் சேர்ந்த லீ குயாங் என்பவர், சீன “கம்யூனிஸ்ட்”கட்சியின் செல்வாக்குமிக்க அதிகாரி. அவர் ஒரு பெரும் தொழிலதிபர்; கோடீசுவரர். வீட்டுமனைத் தொழிலிலும் நகரின் வாடகைக் கார் போக்குவரத்திலும் அவர்தான் ஏகபோக அதிபர். இது தவிர, ஏராளமான சூதாட்ட-சாராய-களிவெறியாட்ட-

விபச்சார விடுதிகளையும் போதைமருந்து வியாபாரத்தையும் சட்டவிரோதமாக அவர் நடத்தி வந்தார். நவீன ஆயுதங்களைக் கொண்ட குண்டர் படையையும் அவர் வைத்திருந்தார். எனவே, சாங்குயிங் நகரில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர்தான் இந்நகரின் “ஞானத் தந்தை’’!

நான்காண்டுகளுக்கு முன்பு, இந்நகரைச் சேர்ந்த ஹூவாங் கோபி என்ற 47 வயதான பெண்மணி, தன்னுடைய வீட்டுமனையை இவருக்குத் தர மறுத்தார். விளைவு? அவரின் கண் முன்பாகவே அவரது கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது வீடு நாசமாக்கப்பட்டது. குற்றுயிராக அவர் தெருவில் வீசியெறிப்பட்டார். இக்கொடுஞ்செயலைப் பற்றி அவர் போலீசில் புகார் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், லீ-யின் வானளாவிய அதிகாரத்தை எதிர்த்து அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ, போலீசோ எதுவும் செய்ய மறுத்தன. ஹூவாங் கோபியின் துயரமும் லீ-யின் கொட்டமும் ஏதோ விதிவிலக்கான சம்பவம் அல்ல. சீனா முழுவதும் நடந்துவரும் கம்யூனிசப் போர்வையணிந்த தனியார் முதலாளிகளின் அட்டூழியங்களுக்கும் பயங்கரத்துக்கும் ஒரு உதாரணம்தான் இந்தச் சம்பவம்.

சாங்குயிங் நகர “கம்யூனிஸ்ட்”கட்சியின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள போ ஷிலாய் என்பவர், கட்சித் தலைமையின் ஆதரவுடன் லீ கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து கடந்த ஜூலை 21-ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், நீதிபதிகள்- என அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். லீ உள்ளிட்டு, பல மாஃபியா குண்டர் படைகளுக்குப் புரவலனாக இருந்த அந்நகரத்தின் போலீசு கமிசனர், விபச்சார-சூதாட்ட விடுதிகளையும் போதை மருந்து வியாபாரத்தையும்  நடத்தி வந்த இந்நகரின் “ஞானத் தாய்” ஷி காய்பிங் – என 31 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, 1500 அரசு அதிகாரிகள், 250 போலீசு அதிகாரிகள், மூன்று கோடீசுவரர்கள், 70 குண்டர் படைத் தலைவர்கள் எனப் பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இக்கும்பல் நடத்திவந்த ஆயுத தொழிற்சாலை அம்பலப்பட்டு, ஏராளமான ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. உலக மகா கோடீசுவரர்கள் பயன்படுத்தும் ஃபிராரி, லம்போர்கினிஸ், பென்ட்லேஸ் முதலான கார்களுடன் உல்லாசமாகத் திரிந்த இக்கும்பலின்  ஆடம்பர வெளிநாட்டு சொகுசு கார்கள், 65 -க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு ஆயுள் தண்டனையும், மாஃபியா குண்டர் படைத் தலைவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கு எதிரான இந்நடவடிக்கை தொடங்கியதும், வேறு சில நகரங்களிலும் இதேபோன்று கைதுகள் நடந்து, அதில் சிலருக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இக்கிரிமினல் கும்பல் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாட்சியமளிக்க வந்த ஹூவாங் கோபியைப் போலவே 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் இக்கிரிமினல் கும்பலால் ஏற்பட்ட கொடுமைகளை வாய்விட்டு அழுது சாட்சியமளித்துள்ளனர். “இந்தக் குண்டர்கள் பட்டப்பகலில் பலரை வெட்டிக் கொன்றனர். பலரைப் படுகாயப்படுத்தினர். போலீசில் புகார் செய்தால் மீண்டும் தாக்கி எச்சரித்துப் பயபீதியை உருவாக்கினர். சீனாவின் குயிங் வம்ச கொடுங்கோலாட்சியில் கூட இத்தகைய கேள்விமுறையற்ற அட்டூழியங்கள் நடந்ததில்லை”என்று வேதனையுடன் புலம்பினார், நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வந்த ஒரு சீனத் தொழிலாளி.

“இது 10 சதவீத கமிசன் வாங்கும் ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சி. இரகசிய உலகப் பேர்வழிகள் அரசியல் பலத்தோடு அரசு எந்திரத்தையே தமது காலடியில் கொண்டுவந்து விட்டனர். இலஞ்ச ஊழலே இன்று “கம்யூனிஸ்ட்”கட்சியை அச்சுறுத்தும் பெரிய நோயாக மாறிவிட்டது”என்று சீழ்பிடித்து நாறும் சீனாவைப் பற்றி விவரிக்கிறார் பூ யோங்ஜியான் என்ற பேராசிரியர். உண்மைதான்! கடந்த செப்டம்பரில் சீன “கம்யூனிஸ்ட்”கட்சியின் விரிவாக்கப்பட்ட பிளீனத்தில், கட்சியில் புரையோடிப் போய்விட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுமாறு கட்சித் தலைமையே அறைகூவல் விடுக்குமளவுக்கு, அக்கட்சியும் அதன் முதலாளித்துவ ஆட்சியும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது.

உலகமயமாக்கத்தின் கீழ் எந்தளவுக்கு அரசு ஆதரவோடு தனியார் முதலாளித்துவம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவுக்கு ஊழலும் கிரிமினல் குற்றங்களும் தீவிரமாகின்றன. கடந்த 2000-வது ஆண்டில் சாங்குயிங் நகரில் விரைவான தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்பூங்காக்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உருவாகத் தொடங்கியதும், அதே வேகத்தில் ஊழலும் கிரிமினல் குற்றங்களும் பெருகத் தொடங்கின.

முதலாளித்துவத்தை ஒழிக்காமல், இக்கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் மரணதண்டனை முதல் கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம், தீவிரமாகிவரும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் ஒழித்துவிட முயற்சிக்கிறது சீன முதலாளித்துவ அரசு. கடந்த ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடு சீனாதான். இப்படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்ட போதிலும் ஊழலும் கிரிமினல் குற்றங்களும் குறையவில்லை. மாறாக, மேலும் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. ஏனென்றால்,முதலாளித்துவமும் கிரிமினல் குற்றக் கும்பல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

மகத்தான சீனப் புரட்சியின் 60-வது ஆண்டுவிழாவை உலகெங்குமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள் கொண்டாடிவரும் இத்தருணத்தில், சீன நாடானது முதலாளித்துவத்தின் எல்லா கடைகோடி கழிசடைத்தனங்களையும் கொண்டு சீரழிந்து நிற்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக அந்நாடு பின்பற்றிவரும் முதலாளித்துவம், இன்று அந்நாட்டையே அச்சுறுத்தும் அபாயமாக மாறி, நாட்டையும் மக்களையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. சீரழிந்த சீனா, இன்னுமொரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியை எதிர்நோக்கி நிற்கிறது.

_____________________________________

–   புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010
_____________________________________

குடியரசு தினம் ஜாக்கிரதை !

18

துரை – சண்முகம் கவிதைகள்

  1. ’குடியரசு’ தயார்!
  2. எதிரி

1.  ’குடியரசு’ தயார்!

vote-012கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட
தேசிய கீதம் தயார்…
மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு
தேசியக் கொடி தயார்…

அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு
வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்…

அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு
இந்தியக் ’குடியரசை’ தெருவில் நிறுத்த கலைஞர் தயார்…

இந்திய இறையாண்மையின் வசூலை மறந்து
இலவசமாக நடித்துக் காட்ட ஜெயலலிதா தயார்…
குணச்சித்திர வேடத்தில் ’குடியரசை’ காப்பாற்ற
சோனியா தயார்…

அறிமுக வில்லன் ராகுல்காந்தி
அடவு கட்டி இந்திய தேசியம் ஆடத்தயார்…
பங்குச் சந்தையின் சண்டைக்காட்சியில்
ப.சிதம்பரம் கலக்கத் தயார்…

ஆடையைக் குறைத்துக்காட்ட திரைப்படம் தயார்…
ஆயுதக் கவர்ச்சிகாட்ட முப்படை தயார்…

கழனிகள் இழந்தவர் கண்டுகளிக்க
அலங்கார வண்டியில் பச்சைவயல்கள் பார்வைக்குத் தயார்…

கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…

எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ

நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!

———————————————————————–

2. எதிரி

கடற்கரையோரம்
குடியரசு தின அணிவகுப்புக்காக நின்றிருந்த
பீரங்கியைப் பார்த்துவிட்டு
பேரன் கேட்டான்;

இது எதுக்கு தாத்தா?

எதிரிங்களைச் சுட.

எதிரிங்கன்னா?

பாகிஸ்தான் மாதிரி
நம்மளோட சண்டைக்கு வந்து
நாட்டை புடிக்கப் பார்க்குறவங்கதான்.

நாட்டை புடிச்சு
என்ன பண்ணுவாங்க?

பேரனின் கேள்விகள் விரிவடைய
ஊன்றிக் கொள்ள
வார்த்தைகளைத் தேடினார் தாத்தா.

என்ன பண்ணுவாங்கன்னா…
அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு
நம்பளையே அடிமையாக்கி
ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..

பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து
பேரனின் கேள்விகள் முடிந்துவிடும்
என எதிர்பார்த்தார் தாத்தா.

ஆராய்ச்சிப் பார்வையுடன்
அடுத்து கேட்டான் பேரன்,
அப்படீன்னா…
”எங்கிருந்தோ வந்து
நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…

நோக்கியா யாரு தாத்தா…
பீரங்கி அவனையெல்லாம் சுடாதா?

பேரன் கேட்டதும்
பீரங்கியால்  சுட்டது போல்
என்ன செய்வதென்று புரியாமல்
தடுமாறிப் போனார் தாத்தா.

தடுமாறுவது தாத்தா மட்டுமா?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் !!

111

இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதுவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப நாட்களாக அலுவலக சுற்றுப்பயணமாக வட இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதிலும் கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்க வேண்டியாகிவிட்டபடியால், ஒரு பேயிங் கெஸ்ட் அக்காமடேஷனில் தங்கியிருக்கிறேன். என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர்கள் – ஒருவன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் – ஒருவன் உத்திர பிரதேசம் – ஒருவன் நம்ம ஊர், கும்பகோணம்.

வந்த நாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அனேகமாக நான் அறைக்கு பீஃப் பிரியாணி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட இரண்டாவது நாளிலிருந்தே கொஞ்சம் முறைப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராகுல் (ம.பி காரன்) எங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து புதிதாக திரைக்கு வந்துள்ள 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்துக்கு டிக்கெட் வாங்கி வந்துவிட்டான். நான் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தி ஒரு எழவும் புரியாது என்று சொல்லிப்பார்த்தேன் – விடவில்லை.

அதிலும் நம்ம கும்பகோணத்தான் ஒரு பார்ப்பான், இந்தி கற்று விடவேண்டும் என்று கடும் முனைப்புடன் இருக்கிறவன். மற்ற இருவருமாக சேர்ந்து இவனிடம் இந்தி படம் பார்த்தால் ஓரளவு இந்தி பேசக் கற்றுக் கொண்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. ம்ம்… சொல்ல மறந்து விட்டேன் – அவர்களும் பார்ப்பனர்கள்தான். ஒருத்தன் காயஸ்த் பார்ப்பான், இன்னொருவன் வேறு ஏதோவொரு பார்ப்பான்..  என்னதான் பார்ப்பான்களாயிருந்தாலும், இவர்களுக்குள் ஒரு க்ளியரான டிமார்கேஷன் (பிரிவு) இருக்கும் – அதாவது நம்ம கும்பகோணத்தானுக்கும் வடக்கத்தியானுகளுக்கும். இதுல எவன் எவனை ஒதுக்கறான் என்று எனக்கு இதுவரை புரியவரவில்லை.

கிடக்கட்டும். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் நம்மாளு என்னைப் போட்டு நச்சியெடுத்து சம்மதிக்க வைத்துவிட்டான். படத்தைப் பற்றி நிறைய விமர்சனக் கட்டுரைகள் தமிழில் கூட வந்திருக்கின்றன.. கதை என்று பார்த்தால்…. ஹீரோ ரான்ச்சோ ஒரு புத்திசாலி  (ஆமிர்கான்) கல்லூரி மாணவன்(!). கூட்டாளிகளாக இன்னும் இரண்டு மாணவர்கள் – ஒரு மேல் நடுத்தர வர்க்க முசுலீம்(மாதவன்), ஒரு கீழ்நடுத்தரவர்க்க இந்து (பேரு தெரியலை).

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள் – ஆமிர் பொறியியலை அதன் உண்மையான அர்த்தத்தில் கற்க விரும்புபவன் – நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டத்தின் மேல் விமரிசனம் கொண்டவன். மாதவன் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட மாணவன் – அப்பாவின் கட்டாயத்துக்கு பொறியியல் கற்க வந்துள்ளவன். அந்த இன்னொருவன், வீட்டில் பொருளாதார நெருக்கடி – எப்படியோ படித்து ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற கட்டாயத்துக்கு பொறியியல் கற்க வந்துள்ளவன்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கல்லூரி நாட்களில் லூட்டியடிக்கிறார்கள். இப்படியாக வாத்தியார்களையும், கல்லூரி தாளாளரையும் கடுப்படித்து படித்து முடிக்கிறார்கள் – மாதவன் படித்து முடித்தவுடன் பொறியியல் துறையை விடுத்து தனக்கு விருப்பமான புகைப்படக்கலையை தேர்ந்தெடுக்கிறான் – ஆமிரின் ஆலோசனை. இன்னொரு மாணவனுக்கு கேம்ப்பஸ்ஸில் வேலை கிடைக்கிறது – ஆமீரின் உதவி+ஊக்கம்+etc. கதாநாயகியின் அக்காள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள் – உபயம் ஆமிர் ( அதாவது பிரசவ கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார் – ஹீரோவாச்சே, சும்மாவா?).

படம் நெடுக வரும் இன்னொரு பாத்திரம் – ராமலிங்கம் எனும் மாணவன். இந்த பாத்திரப் படைப்பைப் பற்றித்தான் எனது நெருடல் –
இவன் வரும் காட்சிகளை நான்(ங்கள்) காணவேண்டும் என்பதற்காகவே ராகுல் தனது கைக்காசைப் போட்டு டிக்கெட் வாங்கி வந்திருக்கிறான் என்பது எனது அனுமானம். இந்த ராமலிங்கம் போன்ற ஒரு பாத்திரத்தை நாமும் கூட நமது கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். “ஏய் இது என்னோட டிபனாக்கும் – இது என்னோட பேனாவாக்கும் – இது என்னோட டிராப்ட்டராக்கும் – தொடாதே!” இந்த மாதிரி ஒரு அல்பை கேரக்டர்.

படித்து முடிக்கும் சமயத்தில் வரும் ஒரு ஆசிரியர் தின விழாவில், கல்லூரி தாளாளரை இம்ப்ரெஸ் செய்ய ராமலிங்கம் லைப்ரரியன் உதவியுடன் ஒரு இந்தி உரையை தயாரிக்கிறான் – அதில் வரும் ஏதோவொரு வார்த்தையை மாற்றி “பலாத்கார்” என்று வரும்படி ஆமிர் செய்து விடுகிறான். ஏன்? ஏனென்றால் இந்த கேரக்டர் ஒரு அல்பையாச்சே. அந்த விழாவில் எல்லோர் முன்னிலையிலும் உரையை படித்து கடும் அவமானத்துக்குள்ளாகும் ராமலிங்கம், இந்த மூன்று நண்பர்களிடமும் வந்து, இன்னும் பத்து ஆண்டுகளில் தான் சொந்த வாழ்க்கையில் ஒரு உயர் நிலைக்கு வந்தபின் இவர்களை வந்து சந்திப்பதாக சவால் விட்டுச் செல்கிறான். முதல் காட்சியே பத்தாண்டு கழித்து ராமலிங்கம் இவர்களை சந்திக்க வருவதிலிருந்துதான் படம் ஆரம்பிக்கிறது. இவர்களில் ரான்ச்சோ(ஆமிர்) எங்கேயிருக்கிறான் என்று எவருக்கும் தெரியவில்லை – அவனைத் தேடிப்போகும் இடைவெளியில் ஃப்ளேஷ்பேக்காகத்தான் மொத்த கதையும் விரிகிறது.

ராமலிங்கம் தன்னை கல்லூரி முதலாண்டு முதல் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதும்  “I am Chattar Ramalingam born in Uganda, studied in Pondicherry” என்றே சொல்கிறான். ராமலிங்கம் எனும் கதாபாத்திரம் – தெளிவாக தமிழர்களின் உருவகமாகவே படத்தில் காட்டப்படுகிறது. அவன் தட்டுத்தடுமாறி இந்தி கற்றுக்கொள்ள முயல்கிறான் – இடையிடையே ஆங்கில வார்த்தைகள் போட்டு பேசுகிறான். MTI – அதாவது மதர் டங் இன்ப்ளுயன்ஸ் என்பார்களல்லவா, தாய்மொழி பாதிப்புடன் பிற மொழிபேசுவது போலவே, தென்னாட்டு பாதிப்புடன் (accent) இந்தி பேசுகிறான். மொத்த திரையரங்கும் கைகொட்டிச் சிரிக்கிறது – ராகுல் எனது மற்றும் கும்பகோணத்தானின் முகபாவத்தை ஓரக்கண்ணில் கவனிப்பது தெரிந்தது.

ராமலிங்கம் கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வும் கூட கச்சிதமாக தமிழர்களை நினைவுக்குக் கொண்டுவரும் படியான ஒரு தேர்வு. தில்லியில் வடகிழக்கிலிருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் இடம் பெயர்ந்து வரும் மக்களை இங்கே வடநாட்டினர் “சிங்க்கீஸ்” (சைனீஸ் என்பதன் சுருக்கம்) என்றே விளித்து கிண்டல் செய்கிறார்கள். அவர்களை இந்தியர்களாகவே வடக்கில் கருவதில்லை. அதே போல் தமிழர்களையும் அவர்கள் இந்தியர்களாக கருதுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் வட இந்தியர்கள் என்று குறிப்பது ஊடகங்களை மட்டுமல்ல – இங்கே சாதாரணமாக என்னோடு பழகுபவர்களும் கூட இதே போன்ற அணுகுமுறையை கையாளுவதைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பிரதிபலிக்கும் விதமாகவே ராமலிங்கம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது தான் உகாண்டாவில் பிறந்ததாக சொல்கிறான். வேறு சில இடத்திலும் இது அழுத்தமாக புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கதாபாத்திரம்  கோமாளித்தனமாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…ம்ம்ம்ம்.. ஒரு விதமான காமெடி வில்லன் போல!

பரீட்சையில் தான் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக பரீட்சைக்கு முந்தைய இரவு ஹாஸ்டலில் உள்ள அறைகளில் மற்ற மாணவர்கள் அறியாமல் செக்ஸ் புத்தகத்தை வைக்கிறான். ஹீரோ கல்வித் திட்டத்தைப் பற்றி வகுப்பில் ஆசிரியரிடம் விமர்சித்துப் பேசுகிறான், அதற்கு ஆசிரியர் அந்த மாணவனை(ஹீரோவை) கன்னாபின்னாவென்று திட்டுகிறார் – மற்ற மாணவர்களெல்லாம்  அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் மட்டும் சத்தம் போட்டு சிரிப்பது போலவும், எகத்தாளமாக திரும்பி பார்க்கிறான்.

பொதுவாக நான் படிக்கும் காலத்தில் என்னைப் பொறுத்தளவில், முதல் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, தலையை எண்ணை போட்டு படிய வாரிக்கொண்டு, சட்டையில் காலர்பட்டன் நெக்பட்டனெல்லாம் போட்டுக் கொண்டு, ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திரிக் கொட்டைத் தனமாக தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை வாந்தியெடுக்கும் மாணவனைக் கண்டாலே பிடிக்காது. எட்டி உதைக்கலாமா என்று கூட தோன்றும். இந்த ராமலிங்கம் கதாபாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது.  ராமலிங்கம்  ஒரு கோழை, காரியவாதி, சுயநலவாதி, துரோகி, இங்கிதம் தெரியாவன் (ராமலிங்கம் அடிக்கடி குசுவிடுவது போல காட்சிகள் உள்ளது) என்பதை மிக முயன்று நிறுவியுள்ளனர். இங்கே ராமலிங்கம் என்பது ஒரு கதாபாத்திரமாக அல்ல – தமிழர்களின் ஒரு குறியீடாகவே இருக்கிறது.

எப்படி?

பொதுவில் இங்கே (வடக்கில்) தமிழர்கள் காரியவாதிகள் என்றும் எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போலவும் ஒரு கருத்து உள்ளது. ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் – அந்தக் கருத்தின் உருவகமாக ராமலிங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவில் தெற்கத்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) உலகமயமாக்கலின் பின் உருவான ஐ.டி துறை, ஐ.டி சேவைத் துறை போன்றவைகளில் அதிகளவு வேலைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனும் குமைச்சல் வடக்கில் இயல்பாகவே இருக்கிறது. அதற்குக் உண்மையான காரணம் அவர்களை விட ஒப்பீட்டு ரீதியில் ( BIMARU மாநிலங்கள் சில ஆப்ரிக்க நாடுகளை விட படு கேவலமான முறையில் உள்ளது) கல்வித்துறைக் கட்டமைப்புகள் இங்கே வலுவாக இருப்பதாகும். ஆனால், வடக்கில் சாதாரணர்களிடையே ஏதோ தமிழர்கள் தந்திரமாக (அவர்களுக்கு தென்னிந்தியா என்றாலே அது தமிழ்நாடு தான்) தமது வேலைகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் கதையில் ஒரு ட்விஸ்ட்.. அதாவது ஆமிர் உண்மையான ரான்ச்சோ அல்ல. ரான்ச்சோ என்பது ஒரு பெரிய பண்ணையாரின் பையன். ஆமிர் அந்த கிராமத்தில் நன்றாக படிக்கும் ஏழை மாணவன் என்பதால், ரான்சோவின் பேரில் பொறியியல் படித்து பட்டத்தை ரான்சோவுக்கு கொடுத்துவிட வேண்டும் எனும் ஏற்பாட்டில் தான் படிக்கவே வருகிறான் (இது இன்னொரு நெருடல்). போலவே படித்து முடித்ததும் பட்டத்தை உண்மையான ரான்ச்சோவிடம் கொடுத்துவிட்டு ஒரு ஒதுக்குப் புறமான கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும் ஒரு விஞ்ஞானியாகவும் (!?) வாழ்ந்து வரும் ஆமிரின் உண்மையான பெயர் – ஃபுங்செக் வாங்க்டூ. இவரிடம் சில முக்கியமான பேட்டண்டுகள் இருக்கிறது. வாங்க்டூவிடம் ஒரு ஒப்பந்தம் போடும் வேலையாகத் தான் ராமலிங்கம் இந்தியா வருகிறான் – ஆனால் வாங்க்டூதான் ஆமிர் என்று தெரியாது. அந்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை.

ஆமிரை கிராமத்தில் பொடியன்கள் மத்தியில் வைத்துப் பார்க்கும் ராமலிங்கம் முதலில் அவனைக் கேவலமாக பேசிவிடுகிறான்.. பிறகு அவனே தான் சந்திக்க வேண்டிய வாங்க்டூ என்று தெரியவரும் போது இதுவரை தான் பேசியதெல்லாம் சும்மா தமாஷுக்காக என்றும் ஆமிர்தான் ஜெயித்து விட்டதாகவும் சொல்லி குழைகிறான். உச்சகட்டமாக தனது பேண்ட்டை கழட்டி ஜட்டியுடன் திரும்பி நின்று “நீ தான் பெரியாளு” என்பது போன்று ஏதோ இந்தியில் சொல்கிறான். ஆமிரும் மற்ற இரு நண்பர்களும் கேலியாக சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் – ராமலிங்கம் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டே துரத்துகிறான் – காட்சி உறைந்து படம் முடிகிறது..

இந்த இறுதிக் காட்சி “தமிழர்கள் தமது காரியம் நடக்க வேண்டுமானால் எந்தளவுக்கும் இறங்கிப் போக தயங்காத சுயநலவாதிகள்” என்று வடநாட்டான் நம்மேல் கொண்டிருக்கும் கருத்தின் உருவகம்.

“ஆப்கோ ஹிந்தி மாலும்ஹேனா?”

“Sorry I dont know hindi”

என்று எனக்கும் ராகுலுக்கும் ஆரம்பத்தில் நடந்த அந்த உரையாடலைத் தொடர்ந்தே என்னை ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த உயிரினத்தைப் பார்ப்பது போலவே பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆக, நான் ராமலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதும், ராமலிங்கத்தின் கோமாளித்தனங்களைப் பார்த்து கூட்டம் கைகொட்டிச் சிரிப்பதை பார்க்க வேண்டும் என்பதும்தான் அவன் நோக்கம். படம் நெடுக இடையிடையே அவன் என்னை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. நானாவது பரவாயில்லை – ஹிந்தியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டவன். ஹிந்தி தெரியாது என்று பெருமையாகவே சொல்லிக் கொள்பவன். ஆனால் சங்கரனின்( கும்பகோணம்) நிலையோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் தட்டுத்தடுமாறி ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பவன் – அவனுடைய பட்லர் இந்தியை தினப்படி அவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந்தப் படமோ அதில் உச்சகட்டமாகிவிட்டது.

திரையரங்கை விட்டு வெளியே வந்து நான் தனியே போய் தம்மடிக்க நின்றேன். சங்கரன் உர்ரென்று வந்து பக்கத்தில் நின்றான். “நீங்க வேணா பாருங்க பாஸு.. சீக்கிரமா நல்லா இந்தி பேசக் கத்துக்குவேன்” என்றான். “கத்துக்கிட்டு?” என்றேன்… ஒன்றும் பதில் சொல்லவில்லை.

மொழியின் மேல் எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது -நான் மொழிவெறியனுமல்ல- ஆனால் அது திணிக்கப்படுவதுதான் எரிச்சலூட்டுகிறது. எனது இந்தப் பயணத்தில் தில்லியின் சில பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது.. அதிலும் குறிப்பாக கால்காஜி பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். கூலி வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களான அவர்களிடம் பழகிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தையும் காட்டுகிறது.

வடநாட்டைச் சேர்ந்த, மற்றும் பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பிற உழைக்கும் மக்கள் தமது வர்க்கத்தவரான தமிழர்களின் மேல் மொழிக் காழ்ப்பைக் காட்டுவதில்லை. இயல்பாக இவர்களும் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். புதிதாக வந்து சேரும் இந்தி பேசத்தெரியாத தமிழர்களுக்கும் மற்ற உழைக்கும் வடநாட்டினர் உதவியாகவே இருக்கிறார்கள். வேலைக்கான போட்டி மட்டுமே அவர்களிடம் நிலவுகிறாதேயொழிய தமிழன் எனும் காரணத்துக்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை -நடைபாதைகளின் ஒரே பகுதியை அவர்கள் தமக்குள் சச்சரவில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் மேல்தர வர்க்கங்களிடையே இயல்பாகவே மதராஸிகள் மேல் வெறுப்பு இருக்கிறது. அவர்கள் வேலைகளை நாம் அபகரித்துக் கொள்கிறோம் எனும் பொறாமை இருக்கிறது. இயல்பாக இந்த குமுறல்களெல்லாம் அவர்களுக்கு சரியான கல்விக்கட்டமைப்பை உறுதி செய்து தராத அரசின் மேல் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் குமுறல்களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மேலான வெறுப்பாக மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சின்ன உதாரணம் தான்.

உடன் வேலை செய்யும் வேறு தென்னாட்டவர்களிடம் பேசும் போது இதே போன்ற கள்ளப்பரப்புரை தொடர்ந்து நடந்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துவரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் சமீபத்திய உலகளாவிய பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் மேலும் சீர்குலைவை நோக்கி சென்று வரும் நிலையில், மக்களின் கோபம் தம்மேல் திரும்பிவிடாமல் தடுத்து வைக்க இது போன்ற படங்களும் ஆளும் வர்க்கத்துக்கு கணிசமாக சேவை செய்கின்றன. பிராந்திய பகைமைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அளவுக்குள் வளருவதை ஆளும் வர்க்கம் எப்போதுமே விரும்பத்தான் செய்யும்.ஆனால், இந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலை ஒரு நாள் ஏற்படும் போது – அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கையான இந்தியா எனும் இந்த ஏற்பாடு சிதைந்து போகத்தான் செய்யும். கூடவே உழைக்கும் மக்களின் இயல்மான இந்தியா பிறக்கவும் கூடுமென்று கருதுகிறேன்.

கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!

vote-012இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத “இயற்கைப் பெரும் பேரழிவுகளை” உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக் காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் கொட்டித் தீர்த்த பேய் மழைகளும் வெள்ளப் பெருக்குகளும், பயபீதியும் நாசமும் விளைவித்த பெருங்கடற் சீற்றங்கள் – கடல்மட்ட உயர்வுகள், இவற்றோடு பல நாடுகளின் விவசாயத்தின் தலைகுப்புற வீழ்ச்சிகள். இத்தகைய நிகழ்வுகள் உலகின் ஏதோ சில பகுதிகளில் மட்டும், எப்போதோ ஒரு சில தடவைகள், தன்னியல்பாக வரக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் என்று இனியும் கருதிவிட முடியாது. இத்தகைய பேரழிவுகள் மிகப் பெரும்பாலும் உலகின் தட்ப-வெப்பநிலை மாற்றங்களால் தூண்டிவிடப்பட்டவை என்று அறிவியல்பூர்வமாக இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த வான்கோள்களில் பூமி மட்டுமே வாழும் வான்கோளாக அறியப்பட்டுள்ளது. அதாவது தாவரங்களும் விலங்குகளும் உயிரினங்களாக வாழும் இயற்கைச் சூழல் வாக்கப் பெற்ற வான்கோள் பூமி மட்டுமே. வட, தென் துருவங்களில் உள்ள பனிப்படலங்கள், பூமியின் சுழற்சி, புவிஈர்ப்பு சக்தி, பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலம், அதில் நிலவும் காற்றழுத்த மாறுபாடுகள் போன்ற காரணங்களால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓரளவு சீரான தட்ப-வெப்ப நிலை ஏற்பட்டு, உயிரினங்கள் தோன்றவும், நீடிக்கவும் ஏற்றதான இயற்கைச் சூழல் நிலவி வருகிறது.

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெருகிவரும் எரிசக்தி இயந்திரங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் ஆகியவை வெளியேற்றி வரும் கரிம வாயுக்களால் உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே வந்து, இதுவரை மனித இன வரலாறு காணாதவாறு இப்பூவுலகையே பேரழிவின் விளிம்புக்குத் தள்ளும் பேராபத்தை விளைவித்திருக்கிறது.

இதனால், வட,தென் துருவங்களில் உள்ள பனிமலைகள் பிளந்து பாளங்களாகி, உருகும் பனி ஆறுகளாக மிதக்கத் தொடங்கிவிட்டன. அதனால் கடல் மட்டம் உயர்ந்து, பசிபிக் மாகடலில் பல தீவுத் திட்டுகள் மூழ்கிப் போய்விட்டன. இப்படியே போனால் நமது நாட்டுக்குத் தென்மேற்கில் உள்ள மாலத்தீவுக் கூட்டங்களும், நமது நாட்டிலேயே உள்ள சுந்தரவனக் காடுகளும் கடலில் மூழ்கிப் போகும்.

எப்போதாவது நிகழக்கூடியதாக இருந்த தீயாய் எரிக்கும் எல்-நினோ என்ற கடும் வறட்சி நிகழ்வுகள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மூன்று முறையும் நீண்ட நெடியதாகவும் வந்துவிட்டது. அதேசமயம் உலகின் வேறு பல நாடுகள் வெள்ளக் காடுகளாகி, பல பத்து இலட்சம் மக்கள் வீடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வீசியெறியப்படுகின்றனர். நுண்ணுயிரிகள் – கிருமிகள் பலவும் (நீடித்த வெப்பநிலை பருவகாலத்தில்) பல்கிப் பெருகிப் புதுப்புது கொள்ளை நோய்களைப் பரப்பி, தம் பங்கிற்கு ஏராளமான உயிர்களைப் பலிவாங்குகின்றன.

பனிமலைகள் உருகுவது பெரும் தொடர் நிகழ்வுப் போக்குகளைத் தொடங்கி நடத்துகிறது. பனிப் படலங்களின் பரப்பு தொடர்ந்து குறைவதாலும், கடல்பரப்பு அதிகரிப்பதாலும், பூமியின் மீது விழும் சூரிய வெப்பத்தைத் திருப்பி அனுப்பும் அளவும் குறைந்து, புவி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருவப் பகுதிகளின் நிரந்தரப் பனிப் பாளங்களில் பல கோடி டன் அளவுக்கு கரிம வாயுக்களான கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு, குளோரோஃபுளோரோ கார்பன் ஆகிய பசுமைக் குடில் வாயுக்கள் புதைந்து கிடக்கின்றன.

பனிப் பாளங்கள் உருகும்போது அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்பட்டு, வளி மண்டலத்தில் ஏற்கெனவே உள்ள பசுமைக் குடில் வாயுக்களின் அடுக்கை மேலும் பருமனாக்கி, பசுமைக் குடில் பாதிப்பை மேலும் கூடுதலாக்கி விடும். சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை ஓசோன் மண்டலத்தைப் போல வடிகட்டுவது அல்லது தடுப்பதற்கு மாறாக, அதை இந்த கரிம வாயுக்கள் உள்வாங்கிக் கொண்டு வளி மண்டலத்தையும் புவியையும் மேலும் வெப்பமடையச் செய்வதைத்தான் பசுமைக் குடில் பாதிப்பு என்கிறார்கள்.

உலகளாவிய வெப்பநிலை மேலும் 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால், உலகிலுள்ள காடுகள் அழிந்து சிதைந்து கரிமவாயுக்களைக் கக்கத் தொடங்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ, இன்று வெள்ளிக் கிரகம் எப்படி இருக்கிறதோ, அப்படி பூமி எங்கும் வெப்பமும் புகை மண்டலமும் நீராவியுமாகவே இருக்கும். மனிதர்களோடு எல்லா உயிரினங்களும் உயிர்வாழ்வதே சாத்தியமற்றதாகி விடும்.

இது வெறும் அனுமானம் அல்ல. பருவகால மாற்றம் பற்றிய நாடுகளுக்கிடையிலான குழுவின் தலைவராகிய ஆர்.கே. பச்சௌரி அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் பின்வருமாறு கூறுகிறார்: தற்போதைய அளவு மட்டத்தில் தேசங்கள் பசுமைக்குடில் கரிம வாயுக்களை வெளியிடுமானால், 2015-ஆம் ஆண்டே உலகின் சராசரி வெப்ப அளவு பொறுத்துக் கொள்ள முடியாத அதன் விளிம்பு முனையைத் தாண்டி விடும். பிறகு திரும்பவும் மாற்றமுடியாத பருவகால மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.

இப்பூவுலகைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளும் அளவிற்கு புவியை வெப்பமடையச் செய்ததற்கு யார் யார் காரணமாக இருந்திருக்கிறார்கள்? பேரழிவு என்ற நிலையிலிருந்து இப்பூவுலகைக் காப்பதற்கான முயற்சியில் யார், யார் ஈடுபட்டிருக்கிறார்கள்? அதற்குத் தடையாக யார் யார் நிற்கிறார்கள்? புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான அறிவியல்பூர்வமான – ஆக்கப்பூர்வமான வழிவகைகள் தாம் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் மட்டும் தொடக்கப்பள்ளி மாணவர் முதல் கற்றுத் தேர்ந்த அறிவுஜீவிகளில் பலருக்கும் தெரியவில்லை. உலகின் எல்லா நாடுகளும் தேசங்களும் மோட்டார் வாகனங்களும், குளிர்பதனப் பெட்டிகளும், தொழிற்சலைகளில் உற்பத்தியாகும் பொருட்களைப் பாவிக்கும் எல்லா மனிதர்களும் புவி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்; வீட்டுக்கொரு மரம் வளர்ப்பது முதல் போக்குவரத்துக்கு மிதிவண்டிகளைப் பாவிப்பது வரையிலான தனிமனித முயற்சிகள் மூலம் புவி வெப்பமடைவதைத் தடுத்துவிட முடியும் என்று பாமரத்தனமான பிரச்சாரங்களில் மக்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர்.

நமது நாட்டிலுள்ள இந்தியா டுடே செய்தி ஊடகம்தான் முதன்மையான அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய ஆதரவு நிலை கொண்டது. உலகிலேயே மிக அதிக அளவு கரிம வாயுக்களை வெளியேற்றிப் புவிவெப்ப மடையச் செய்யும் அமெரிக்காதான், புவி வெப்பமடைவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நிற்கிறது என்பதற்காக, அமெரிக்காதான் இப்பூவுலகின் முதன்மையான எதிரி என்று அடையாளங்காட்டுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, ருசியா, சௌதி அரேபியா, இத்தாலி, சீனா, இந்தியா ஆகிய 12 நாடுகளை, உலகின் மிக மோசமான கொடூரன்கள் என்று அது வரிசைப்படுத்தியிருக்கிறது.

உலக மக்கட் தொகையில் 4.73 சதவீதத்தைக் கொண்ட அமெரிக்க வல்லரசு, உலகளாவிய அளவில் 26 சதவீத கார்பன்-டை-ஆக்சைடையும் 20 சதவீத மீதேன் வாயுவையும் நச்சுக் கழிவாக வெளியேற்றி முதலிடம் வகிக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் ரசியாவும் அதற்கடுத்த நிலையில் உள்ளன. உலக மக்கட் தொகையில் 24 சதவீதத்தைக் கொண்ட தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கின்றன. மொத்த எரிசக்தியில் முக்கால் பங்கை விழுங்கும் இந்நாடுகளிலிருந்துதான் 75 சதவீத கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது. அதேசமயம், ஏழை நாடுகள் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் கடைசி வரிசையில்தான் இருக்கின்றன.

கரிம வாயுக்களை வெளியேற்றுவதையும், புவி வெப்பமடைவதையும் தடுப்பதற்காக 1992 முதல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தட்ப-வெப்ப நிலை மாற்றம் பற்றிய மாநாட்டுக் கட்டமைப்பு சார்பாக உலகின் பல்வேறு நகரங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் உயர்மட்ட கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடந்திருக்கின்றன.

பொதுவான, ஆனால் வெவ்வேறான பொறுப்புகள் – கடமைகளை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தை 1992-இல் தட்ப-வெப்ப நிலை பற்றிய ஐ.நா. மன்றத்தின் கட்டமைப்பு நிறைவேற்றியது. புவி தட்பவெப்ப நிலை சீர்குலைந்து போவதற்கான வரலாற்று வழிக் காரணகர்த்தாக்களாக உள்ள முன்னேறிய தொழில்மயமான நாடுகள்தாம் கரிம வாயுக்கள் வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்நாடுகள் தமது பொருளுற்பத்தி மற்றும் நுகர்வுமுறைகளை மிகவும் தீவிரமான வேகத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். வளரும் நாடுகள் தட்ப-வெப்ப நிலைக்குச் சாதகமானதாகத் தமது வளர்ச்சிப் பாதையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஏழை நாடுகள் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருப்பதால், சீரான உலக தட்பவெப்ப நிலையை நிலைநாட்டுவதற்கான தமது பங்கை ஆற்றுவதற்கு வளர்ந்த நாடுகள் தேவையான தொழில்நுட்பங்களும் நிதி உதவிகளும் செய்தாக வேண்டும். இவை சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், கடந்த 18 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவே இல்லை; வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது.

1997-ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நிறைவேற்றப்பட்ட கியோட்டோ உடன்படிக்கையின்படி, 1990 ஆண்டு தாம் வெளியேற்றிய கரிம வாயுக்களின் அளவைவிட 5 சதவீத அளவுக்கு வளரும் நாடுகள் 2005-2012 ஆகிய ஏழாண்டுகளில் குறைத்துக் கொள்ள வேண்டும்; தட்பவெப்ப நிலையில் பாதகம் ஏற்படுத்துவதை வளரும் நாடுகள் தவிர்ப்பதற்கு வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி செய்ய வேண்டும்; இவற்றோடு ஐரோப்பிய சமூகம் மற்றும் 37 வளர்ந்த தொழில்மயமான நாடுகளும் குறைத்துக் கொள்ள வேண்டிய கரிமவாயுக்கள் வெளியேற்ற அளவையும் கியோட்டோ உடன்படிக்கை சட்டபூர்வமாக வலியுறுத்தியது. உலகின் பெரும்பாலான நாடுகள் முதற்கட்ட இலக்கை நிறைவேற்றாதது மட்டுமல்ல, கீழே தள்ளிய குதிரை குழியையும் பறித்ததைப் போல, 1992-இல் நடந்த முதல் மாநாட்டிற்குப் பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் கரிம வாயுக்கள் வெளியேற்றும் அளவை 30 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.

இப்பூவுலகின் முதன்மை எதிரியான அமெரிக்காவோ, கியோட்டோ உடன்படிக்கையை இன்னமும் ஏற்க மறுப்பதோடு, அதற்குக் குழிபறிக்கும் வேலையிலும் தானே முன் நிற்கிறது. கறுப்பினத் தலைவர் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானதை ‘உலக சமுகமே’ கொண்டாடியது. ஆப்கானில் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் போரைத் தொடர்வதற்கு மேலும் படை அனுப்பும் ஒபாமா, கியோட்டோ உடன்படிக்கையை நிராகரிப்பதிலும் உறுதியாக நிற்கிறார். கியோட்டோ உடன்படிக்கையின்படி 2012-2016 ஆகிய இரண்டாவது அமலாக்கக் கட்டத்தில் உலக நாடுகளின் கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவை வரையறுப்பதற்காக நடந்த கோபன்ஹேகன் மாநாட்டில், அந்நோக்கம் நிறைவேறாமல் தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் அமெரிக்காவின் பாரக் ஒபாமாதான். தன் பங்கிற்கு அமெரிக்கா, 2005-ஆம் ஆண்டு தான் வெளியேற்றிய  கரிம வாயுக்களின் கனஅளவில் 17 சதவீதத்தை  2020-இல் குறைத்துக் கொள்ளும் என்று ஒபாமா அறிவித்துள்ளார். இது 1990-இல் அமெரிக்கா வெளியேற்றிய அளவில் வெறும் 4 சதவீதம்தான். இதுவும் கூட, ஏற்கெனவே கியோட்டோ உடன்படிக்கையை 95 – 0 என்ற விகிதத்தில் நிராகரித்த அமெரிக்க செனட்டால் ஏற்றுக் கொள்ளப்படாமல், நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு.

இந்தியாவை விடத் தலைக்கு 18 மடங்கு அதிகமாகக் கரிம வாயுக்களை வெளியேற்றும் அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் நேரானது – எளிமையானது. தற்போதைய நிலை நீடித்திருப்பதற்காக ஆண்டுக்கு முன்னூறு மில்லியன் டாலர் செலவழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகளின் கும்பல்கள் பலவும் தயாராக உள்ளன. இவற்றில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இருபத்திரண்டை ஆட்டிப் படைக்கும் நிலக்கரி முதலாளியக் கும்பல்கள், முன்னாள் அதிபர்களான புஷ் குடும்பத்துக்கு நெருக்கமான எரிசக்தி எண்ணெ முதலாளியக் கும்பல்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் – நெடுஞ்சாலை முதலாளியக் கும்பல்கள் அடங்கும். அமெரிக்கா மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகள்தாம் உலகின் தட்பவெப்ப நிலையையும் தலைவிதியையும் தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளார்கள்.

கியோட்டோ உடன்படிக்கையின் 2-வது கட்ட அமலாக்கத்தை, உலக நாடுகளின் கரிமவாயு வெளியேற்ற இலக்கை தீர்மானிப்பதற்காக, 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் நாள், கோபன்ஹேகன் மாநாட்டில் 192 நாடுகளின் பெருந்தலைகளும், அவர்களின் எடுபிடிகளும் கலந்து கொண்டனர். இம்மாநாடு ஒரு துன்பவியல் நகைச்சுவை நாடகமாகவே நடந்து முடிந்திருக்கிறது. அலுவல் நாட்களில் எல்லாம் கேளிக்கை, விருந்து, அரட்டை என்று போக்கிவிட்டு, இறுதிநாளில் அவசர அவசரமாக சில தீர்மானங்களை நிறைவேற்றும் நான்காம் தர சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களின் கேலிக்கூத்துகளைப் போலவே கோபன்ஹேகன் மாநாடும் நடந்துள்ளது.

தாம் வாழும் உலகம் பேரழிவை எதிர்கொண்டிருந்தபோதும், தமது சோந்த நாட்டு ஏகாதிபத்திய ஏகபோக முதலாளியக் கும்பல்களின் கொள்ளை இலாப வெறிக்குத் துணை நிற்பது ஒன்றையே கருத்தில் வைத்து, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஏழை நாடுகளின் கதறல்களுக்குச் சிறிதும் செவிமடுக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கியோட்டோ உடன்படிக்கையை கிழித்தெறிந்தார்கள். மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் தோல்வியில் முடிவுற்றபிறகு, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு நாடுகள், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய தமது நான்கு பெரும் தரகு முதலாளிய நாடுகளோடு இரகசிய – சதி உடன்படிக்கை போட்டுக் கொண்டு, புவி வெப்பமடைவதைத் தடுக்கும் இலக்கு – உறுதி, சட்டபூர்வ உடன்படிக்கை எதனையும் நிறைவேற்றாமல், வெறுமனே அரசியல் கூட்டறிக்கையை நிறைவேற்றிவிட்டுக் கலைந்தனர்.

–   புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் !!

34

vote-012நாங்கள் போலிக்கம்யூனிஸ்டு என்றைழைப்பவர்களில் முதன்மையானவர்கள் சி.பி.எம் கட்சியினர். கம்யூனிசத்தின் பெயரில் திரிபுவாதக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்தக் கட்சியிலிருந்துதான் மார்க்சிய லெனினிய கட்சி பிரிந்து வந்தது. இன்றைக்கு வலது, இடது இரண்டு கம்யூ. கட்சிகளும் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டன. எது உண்மையான கம்யூனிசம் என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு முன் எவரெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகள் என்பதை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

அவர்களோ எங்களை தீவிரவாதிகளென்றும் சி.ஐ.ஏவின் கைக்கூலிகளென்றும் தனிமைப்படுத்த முனைந்தனர். இந்தப் பின்னணியில்தான் சந்திப்பு தோழர் செல்வப்பெருமாளுக்கும், எமது தோழர்களுக்கும் இடையே இணையத்தில் தீவிரமான  கருத்துப் போராட்டம் நடந்து வந்தது.

பொதுவில் சி.பி.எம் கட்சி தமது அணிகளுக்கு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் முதலான இதழ்களை படிக்கக்கூடாது, ம.க.இ.கவினரோடு சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவிக்காத விதிமுறைகளை கட்டளையிட்டிருக்கிறது. இதை ஊக்குவித்தால் தமது அணிகள் ம.க.இ.கவினரால் வென்றெடுக்கப்படுவார்கள் என தலைமை பயந்தது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் எமது தோழர்கள் அசுரன், ஏகலைவன், கேடயம் உள்ளிட்டு பலர் தீவிரமாக இயங்கிவந்த நேரம். இப்படி கூட்டம் கூட்டமாக ம.க.இ.கவினர் இறங்குவதைக் கண்டு கதிகலங்கிய சி.பி.எம் தலைமையின் ஆசிர்வாதத்தோடு இதை எதிர் கொள்ள களமிறங்கினார் செல்வபெருமாள். அவர் சென்னை சி.பி.எம் அலுவலகத்தின் முக்கிய ஊழியராக பணியாற்றிக்கொண்டு இணையத்திலும் பங்கேற்றார்.

அவர் எழுதிய இடுகைகளில் பெரும்பாலானவை ம.க.இ.கவை அம்பலப்படுத்துவதற்காக எழுதப்பட்டதுதான். தோழர்கள் போலிக் கம்யூனிஸ்டுகளை விமரிசித்து எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் எதிர்ப் பதிவு போடுவார் செல்வபெருமாள். பின்னூட்டமிட்டு விவாதிப்பார். இது கணிசமான காலம் நடந்து வந்தது.

தொடர்ந்து தோழர்கள் எழுப்பிய மையமான கேள்விகள், விமரிசனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் பதட்டமடைந்த செல்வபெருமாள் பின்னர் அவதூறு செய்வதாக தனது எதிர் விமரிசனங்களை மாற்றிக் கொண்டார். ம.க.இ.க இரகசிய கட்சியென்றும், தீவிரவாதிகளென்றும், அமெரிக்க அடிவருடிகளென்றும் அவை நீண்டன. இறுதியில் இனவாதிகளின் பார்ப்பனத் தலைமை என்ற அவதூறையும் கடன் வாங்கிக் கொண்டார். இவ்வளவுக்கும் சி.பி.எம்மில்தான் தம்மை பார்ப்பனர்கள் என்ற அறிவித்துக் கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

ம.க.இ.கவின் அரசியல் சார்ந்த கட்சித் திட்டத்தை வாங்கி அவர்பாட்டுக்கு விமரிசனமென்று நிறைய எழுதினார். அந்த திட்டத்தை ஏதோ பயங்கரமாக கண்டுபிடித்தது போல பறைசாற்றிக் கொண்டார். சித்தாந்த விவாதத்தில் சோர்வுற்ற அவரது சிந்தனை இப்படி எளிதான விசமப் பிரச்சாரங்களில் நிலை கொண்டது.

முக்கியமாக இங்கே குறிப்பிட விரும்பியது பொதுவில் சி.பி.எம் கட்சியினர் அவர்களை விமரிசிக்காமல் மற்ற எதனையும் எவ்வளவு தீவிரமாக விமரிசித்தாலும் நட்பு கொள்ளவே விரும்புவார்கள். கம்யூனிசத்தையும், மார்க்சிய ஆசான்களையும் தீவிரமாக திட்டிக் கொண்டே சி.பி.எம்மை மட்டும் திட்டாமல் இருந்தால் கூட அவர்களுக்கு பிரச்சினை இல்லை. எமது தோழர்கள் தொடர்ந்து சி.பி.எம்மை தீவிரமாக அம்பலப்படுத்தியதுதான் அவருக்கும் பிரச்சினையாக இருந்தது.

வினவு ஆரம்பித்த போது ஆரம்பத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை, டாக்டர் ருத்ரன் கட்டுரை போன்றவற்றுக்கு பாராட்டி பின்னூட்டமிட்ட செல்வபெருமாள், பின்னர் சி.பி.எம்மை விமரிசித்து புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரைகளை வெளியிட்ட போது ஆத்திரம் கொண்டார். அடுத்து வினவை வசைமாறி பொழிந்து கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தார். கூடுதலாக வினவு பெருவாரியான வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டது அவருக்கு துக்கத்தை கொடுத்திருக்கும்.

செல்வபெருமாளுடன் நடந்த இந்த விவாதத்தின் அனுபவம் என்ன? நடுத்தர வயது, கட்சியின் முழுநேர ஊழியர், பொருளாதார ரீதியாக கட்சியை சார்ந்திருப்பது, தனது இருப்புக்காக கட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பது முதலிய பிரச்சினைகளால் அவரை வென்றெடுப்பது என்பது நிச்சயம் சாத்தியமில்லை. ஆனால் ஒரு சி.பி.எம் தோழர் எமது விமரிசனங்களால் என்ன வகை அணுகுமுறையை கையாள்வார் என்பதை தோழர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

காங்கிரசின் கூஜாவாக சென்ற ஆட்சியின் போது மாறிவிட்ட போலிக்கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரத்திற்கும் மாறி மாறி காவடி தூக்குவது என்ற சூழ்நிலையில் அந்தக் கட்சிகளில் இருக்கும் நேர்மையான அணிகளை புரட்சிகர கட்சிகள் வென்றெடுப்பது காலத்தின் கட்டாயாம். அந்த ஒன்றுக்காகவே நாங்கள் தொடர்ந்து சி.பி.எம்மின் சந்த்தர்ப்பவாதங்களை விமரிசிக்க விரும்புகிறோம். மேலும் நேர்மறையில் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஒரு சமகாலப் பிரச்சினையில் எத்தகைய நிலைபாட்டை எடுப்பார்கள் என்பதை விளக்குவதற்காகவும் போலிகளின் நிலைபாட்டை விமரிசிக்க வேண்டியிருக்கிறது.

சமரசங்களும், சரணடைதலும் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட சூழ்நிலையில் சி.பி.எம் கட்சியின் சந்தர்ப்பவாதம் அதன் அணிகளை ஊழல்படுத்துவதற்கு கூடுதல் பங்காற்றுகிறது. எமது தொடர்ந்த போராட்டத்தால் பல அருமையான தோழர்கள் சி.பி.எம் கட்சியிலிருந்து எம்மோடு இணைந்திருக்கின்றனர். ஒரு வேளை செல்வபெருமாள் இருந்திருந்தால் அது நடந்திருக்குமா, தெரியவில்லை.

எனினும் ம.க.இ.கவைக் கண்டால் தூரவிலகு என்பதை கடைபிடிக்கும் கட்சியில் எமது தோழர்களோடு இத்தனைகாலம் அது தவறென்றாலும் தொடர்ந்து விவாதித்த தோழர் செல்வபெருமாள் மறைவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரை விடுத்து பதிவுலகில் இருக்கும் மற்ற சி.பி.எம் ஆதரவாளர்கள் எம்முடன் விவாதிப்பதை விரும்புவதில்லை. அந்த இடம் வெற்றிடமாகத்தான் இருக்குமோ என்பதும் தெரியவில்லை.

தோழர் செல்வபெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
vote-012

தொடர்புடைய பதிவுகள்

சனிக்கிழைமை கவிதைகள்

5

……………………………………………………………………………….

என்ன செய்யப்போகிறோம்?

vote-012விரிந்து கிடந்தது வானம்
வீசியது இளங் குளிர்காற்று
உதயனின் வெக்கை தணிக்க
வெண்குடை பிடித்தன மேகங்கள்
கூடிக் களித்து கலந்து கறைந்தன
கார்கொண்ட மேகத்திரள்கள்
பொழிந்த எள்ளு கொள்ளு… பேத்திகளை
மடியில் கிடத்தித் திளைத்தனள்
பூமித்தாய்.
அப்பா, என்னே வாசம் இதுவென்றாள்
என் மகள்
மகளின் ரசனை கண்டு மகிழ்ந்தேன்.. ஆனால்,
கேட்பாரற்றுக் கிடந்த கறந்த பசு
தன் வயிற்றெரிச்சலை
ஒரு வாரத்தில் வெளிப்படுத்தியபோது
அந்த நாற்றத்தை நுகர மரத்த என் மூக்கைப்
பெரிதுபடுத்தாத நான்
மகளொடு சேர்ந்து மண்மணத்தை
நுகர்ந்து மகிழ முடியாத மூக்கை
அறுத்தெரிந்தால் என்னவென்று
ஒருகணம் எண்ணினேன்..
வாழ்க ஐ.டி.சி

விரிந்து கிடந்தது வானம்
பரந்து கிடந்தது பூமி
வீசியது இளங் குளிர்காற்று
விரித்த பெரும் பச்சைக் கம்பளத்தில்
விருந்துண்டன ஆநிரைக் கூட்டம்.

அதில் அப்போதுதான் பிறந்திருந்த
பச்சிளங் கன்றொன்று
துள்ளிக் குதித்தாடிய அழகில்
கணம் எனை மறந்தேன்.
பட்டாம் பூச்சி என் முதத்தை
மொய்த்துப் பறந்தது
அறுகிவிட்ட சிட்டுகள் இரண்டு
சீழ்க்கையிட்டுப் பறந்தன
வானில் அம்பெனப் பறந்து வந்த
கொக்குக் கூட்டம்
ஆநிரையோடு பகிர்ந்துண்ண அமர்ந்தது
துள்ளிக் குதித்தது பச்சிளங்கன்று
என்னே சுதந்திர வாழ்க்கை இதுவென
இயற்கையில் கறைந்தேன்.

உலுக்கியது என்னை ஓங்கியதொரு குரல்
சனியன் கயித்த அறுத்துகிட்டு
பயித்த மேயப் போவுது
என்ற வசவு தொடர்ந்தது.
நடுகல்லில் பூட்டிய நீண்ட கயிறு தளர
விளை நிலத்தை நெருங்கிவிட்ட பசு
அடிபட்ட வேதனையில் அரற்றியது
நிலத்தில் விலக்கி நட்ட கருங்கற்கள்
விளையவில்லையே …
போட்டிக்கு நாணலும், தட்டையும்,
தருப்பைப் புல்லுமல்லவா மண்டுகிறது
தின்ன என் சுணை நாக்கே அறுபடுதே
பச்சையெல்லாம் பச்சையல்லடா முண்டமே
நிலமெங்கே, வரப்பெங்கே,
மேச்சத் தரைதான் எங்கே ..
உனக்கும் சோறில்லை
எனக்கும் உணவில்லை.. என
ஓ..வென்றழுதது.
குற்ற உணர்ச்சி என் நெஞ்சைப் பிளந்தது
துள்ளிய என் மனம் துவண்டு படுத்தது

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு
நாய்க்கு சங்கிலி குதிரைக்குக் கடிவாளம்
குருவிக்குக் கூண்டு
இல்லை இல்லை
இவற்றுக்குச் சுதந்திரம் இல்லை
இயற்கையில் பிறந்து இயற்கையில் வளர்ந்து
செயற்கையால் இயற்கையை
ஆள்பவனாய்ப் பரிணமித்த
மனிதன்தான் சுதந்திரமானவனோ..
எனத் தொடர்ந்த என் எண்ண ஓட்டத்தை
மறித்தது ஒரு மனக்குரல்.
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
என்றது அந்த செயற்கையின் சூத்திரம்.
இல்லையா..?!

மனதில் விசாரம் குடிகொண்ட வேளையில்
என்காதில் மோகனமாய்த் தொடங்கிய இசை
மூர்க்கமாய்த் தொடர்ந்தபோது
முத்தாய்ப்பாய்ச் சொன்ன இரு சொற்கள்
என் செவிப்பறை கிழித்தன ..
துமீ வித்யா  துமீ தர்மா.
புரிந்தது.. எல்லாம் புரிந்தது.

குதிரைக்குக் கடிவாளம் குதிரை பூட்டுவதில்லையே
மனிதனே கூட
துள்ளித் திரியும் கன்றுக்கு
மூக்கணாங்கயிறு பூட்டுவதில்லையே
ஆனால்.. குழவிஒன்று கல்லில்இறங்குமுன்பே
சுடுகோலால் குறியிட்டுக் கருத்திருக்கும்
தொப்புள் கொடியாய் கழுத்தை சுற்றிய
சுறுக்குக் கயிறு கண்ணில் தோன்றி மறைந்தது
பெற்றெடுத்து .. கிருஷ்ணன் என்றும்
கண்ணன் என்றும் கருப்பன் என்றும் பெயர்சூட்டுமுன்பே
அதற்குப் பெயர் சூட்டப் பட்டுவிட்டது
இன்ன சாதி இன்ன மதமென்று.

இதை மீறிய ஆய்ந்தறிதல் இல்லை
இதை மீறிய வாழ்நெறியும் இல்லை
இட்டபடி நட என
காலித் தராசை கையில் பிடித்து
சமன் காட்டித் திரிகிறது இந்திய நீதி

அடுத்தவன் மூக்கைத் தொடாத வரைதான்
உனக்குச் சுதந்திரம் என
மெத்தப் படித்தவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
இந்த மூக்கு இந்தியாவின் குறுக்கு நெடுக்காய்
நீண்டுகிடக்கிறதே .. கட்டிய கையைப் பிரிக்கமுடியாமல்
இதை என்ன செய்ய?

–          அனாமதேயன்.

குறிப்பு: எனக்குக் கவிதை எழுதத் தெரியவில்லை.. ஆனால் இதுபற்றி எழுதவேண்டும்போல் இருந்தது.  எனவே என் சமீபத்திய மனப் பதிவுகளைத் திரட்டி, என்னை வதைத்த வந்தே மாதரம்மற்றும் லவ் ஜிகாத்விசயத்தைக் கருவாக்கி ஒரு பெரும் சித்திரம் வரைந்துவிட்டேன்.  அதில் அவுட் ஆஃப் போக்கசில் வைக்க வேண்டியதையும், ஃபோக்கஸ் பண்ணவேண்டியதையும் படிப்பவரின் பார்வைக்கு விடுகிறேன்.

——————————–

பசியோடிருப்பவனின் அழைப்பு

மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக்கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல்நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்து போகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்

-சித்தாந்தன்

——————————————————–

பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்

(இன்னுமின்னும் அறியாத சேதிகள்
அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)

நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து
எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைளிலிருந்து
எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாதவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பபட்டுக்கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப்போலவே ஒருத்தி
தன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்
தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்.
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.

முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணிவெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?
__________________________________
(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009

–          தீபச்செல்வன்

————————————-

வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?

அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும்
எதுவுமே மாறாது என்று
அவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
என்றாலும்
அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால்
அதை வீணாக்கக் கூடாது என்று
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை எப்படிப் பயன்படுத்துவது என்று
சொல்ல மாட்டார்கள்.
பயன்படுத்தத் தெரியவில்லை என்று
உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும்
எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும்படியுமே
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை விடவும்,
எவரேன் பயன்படுத்த மாட்டார;
என்று அறியும் எவரும்
அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால்
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று
ஆராயத் தொடங்கினேன்.

சில கேள்விகளுக்குச்
சரியான ஒரு மறுமொழி மட்டுமே உண்டு.
சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்றுமேயில்லை.
சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன.
வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது
எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன.
அந்தக் கடதாசியில் உள்ள
சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள்
பெருக்கல் அடையாளம் இடுவதோ
இலக்கம் எதையாவது எழுதுவதோதான்
சரியான மறுமொழி என்று சொல்கிற பலர்
எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை.
சொல்லுகிறவர்கள் ஆளுக்காள்
வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.
எனவே
அவற்றை விடச் சரியான
வேறு மறுமொழிகளும் உள்ளன என்று
உறுதியாக நம்புகிறேன்.
வரிசையில் நின்று
உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற
அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ?
எனவே தான்
வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லுகிறேன்.
தெரிவு உங்களுடையது.

தாள் சதுரமாக இருந்தால்
அதை மடித்துக்
காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை
என்று பலவுஞ் செய்யலாம்.
சற்று நீள் சதுரமாக இருந்தால்
ராக்கெட் செய்து வீசி விளையாடலாம்.
இன்னும் நீளம் என்றால்
நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம்.
தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம்.
கெட்டியான பற்களும்
வாயில் உமிழ்நீரும் இருந்தால்
வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி
ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம்.
தெருவிற் கிடக்கும்
கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து
ஓரமாகப் போடப் பாவிக்கலாம்.
ஆனால் தேர்தல் அதிகாரிகள்
அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்.
வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது.
கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம்.
கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம்.
ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது.
கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி.
அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம்.
நேரமிருந்தால்
எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம்.
அல்லது தாளுக்குக் குறுக்காகப்
பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல்
அடையாளம் ஒன்றை இடலாம்.
ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம்.
நீளமாக ஒரு கவிதை எழுதலாம்.
வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது
படிக்கும் வாய்ப்புண்டு.

பட்டியலில் உள்ள எதுவுமே
உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல
அக் கடதாசியைப் பயன்படுத்த
எத்தனையோ வழிகள் உள்ளன.
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்தும்
தெரிவு நிச்சயமாக உங்களுடையது.

– சி. சிவசேகரம் –

—————————————

சான்றோர் கூற்று

பெரிய நீதிவான் சொன்னார்
பிறகு பெரிய பாதிரியார் சொன்னார்,
பிறகு பேராசிரியரும் அல்லவா சொல்லுகிறார்,
“பழைய பிழையைச் செய்யாதீர்
புறக்கணித்து உங்கள் வாக்குக்களை வீணாக்காதீர்”
என்று
பழைய பிழை எது?
வஞ்சகர் என்று தெரிந்தும் வாக்களித்ததா?
தெரிந்தால் எவருக்கும் அளிக்காமல் விட்டதா?
குறுக்குக் கேள்வி கேட்காதீர்
பேராசிரியரும் பெரிய பாதிரியும் நீதவானும்
தெரியாமலா சொல்கிறார்கள். தகைமைசால்
பேரறிஞர்மாரெல்லாம் ‘பேசாப் பொருளைப்
பேசவுந் துணிவதற்கு’
நீங்கள் யார்?
படிப்புண்டா? பட்டமுண்டா?
பதவியெதுந் தானுண்டா? – இல்லை
பத்திரிகை எசமானர் ஆசிகளேன் உமக்குண்டா?
போடென்று சொல்லுகிற பெரியோர்கள் எல்லோரும்
யாருக்குப் போடென்றோ
எதை நம்பிப் போடென்றோ
ஏன் சொல்ல மாட்டார்கள்?

இருட்டு அறைகளுக்குள் இரகசியமாய் முடிவெடுத்து
அஞ்சுங் கெட்டு அறிவுந்தான் கெட்டொழிந்தோர்
ஆலோசனையெல்லாம் அம்பலத்தில் சொல்லி வைத்து
ஊர் சிரிக்கத் தங்களது
பேர் கெட்டுப் போவதற்குப்
பெரியோர் விரும்புவரோ?
பெரிய நீதவான் சொன்னார்,
பெரிய பாதிரியார் சொன்னார்,
பேராசிரியருஞ் சொன்னார். போதாதா?
எனவே,
குறுக்குக் கேள்விகளை உரக்கவே கேட்காதீர்
பதில் கிடைக்கப் போவதில்லை
உரிய பதிலை நீங்களே உணருங்கள்.

– பரதேசிப் பாவாணர்

———————————–

பிரிந்த தோழிக்கு…

கையசைத்து கணவனை
வழியனுப்பிய பிறகு
கதவுகள் தாழிட்டால்,
நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சிகளாய்
விளையாண்ட பொழுதுகள்
மனதுக்குள் வந்தமரும்.

குடைகள் நம்மிடம்
இருந்த போதும்
நனைந்து கொண்டே
வீட்டுக்கு சென்ற நாட்கள்,
ஜன்னல் வழியாக
மழை பார்க்கும் போதெல்லாம்,
கிழிந்த குடைக்குள்
இறங்கும் நீர்த்துளியாய்
நினைவுகளிள் வழிந்திடும்.

உன் பிறந்த நாளொன்றுக்கு
அழகிய தோடுகள் இரண்டு
அணிந்து வந்தாய்,
அதுபற்றி நான் கேட்க
அப்பா பட்ட கஷ்டம் பற்றி
அழுதே தீர்த்து விட்டாய்,
நிறைய நகையணிந்து,
மணக்கோலத்தில் ஒருநாள்
நான் நின்ற போது
நீ அழுத நிமிடங்கள்தான்
நினைவில் வந்தது.

நம் கனவு இல்லம் பற்றி
விளையாட்டாய்
நீ வரைந்த கோடுகள்தான்
நிஜத்தில் இப்பொழுது
என் வீடாய் நீண்டுகிடக்கிறது.
ஆனால்,
சமையலறை ஒன்றை தவிர
மற்ற அறைகளில்
அதிகம் எனக்கு வேலையில்லை.

உன் கண்ணில் ஒருநாள்
தூசு விழுந்த போது
உதடு குவித்து
ஊதி எடுத்த நிமிடங்கள்,
வீடு  முழுவதும்
படிந்திருக்கும் தூசியை – நான்
கூட்டிப் பெருக்கும் போது,
உடன் வந்து ஒரு
உண்மை சொல்லும்,
இவை எளிதில் அகற்ற கூடிய
தூசியல்ல என்று.

பிரிந்த
தோழியே..
பிறகு,
நீயொரு நாள்
வயதுக்கு வந்துவிட்டாய்
அதுபோலவே
நானும் ஒருநாள்.

அத்தோடு
நம் பள்ளிப் பயணங்களும்
பாதியில் நின்றன…
கழட்டி விடப்பட்ட
இரயில் பெட்டிகளாய்.

எல்லாம் இருக்கட்டும்,
நாம் இருவரும்
கைகோர்த்து நெடுந்தூரம்
நடந்த நாட்கள்
எவ்வளவு சுகமானவை
சுதந்திரம் கொண்டவை.

இப்பொழுது – நீ
எங்கே
எப்படி இருக்கிறாய் என்று
எனக்கு தெரியாது.
ஆனால்.
நானும் இருக்கிறேன்
என் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக…
என் மாமனார் – மாமியாருக்கு
நல்ல மருமகளாக…
என் கொளுந்தனாருக்கு
நல்ல அண்ணியாக…
என் கணவருக்கு
நல்ல மனைவியாக…
மொத்தத்தில்
என் சுயம் தொலைத்த
வாழ்க்கையொன்றில் ஒட்டியபடி.

என்ன விழிக்கிறாய்,
அதற்கான நிகழ்வுகள்
என்னிடம் நிறைய உண்டு.

இதோ
இன்று கூட,
தெலுங்கானா பிரச்சனை முதல்
ருச்சிகா வழக்கு வரை
சுடும் வார்த்தைகளால் விளக்கிய,
முகம் தெரியா
சகோதரனொருவன்,
“சமூக மாற்றத்திற்கானது
இந்த இதழ்
வாய்ப்பு இருந்தால்
வாங்கி படியுங்கள்” என்று
என்னை பார்க்க,
மௌனமாய் நின்ற நான்…
‘வீட்டில் ஆள் இல்லையென்றே’
அனுப்பி வைத்தேன்.

–          முகிலன்

குறிப்பு : சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் “புதிய ஜனநாயகம்” இதழ் விற்க சென்ற போது, ஒரு வீதியில் குறைந்தபட்சம் நான்கைந்து பெண்களிடமாவது  இயல்பாய் இப்பதில் வரும். அப்பதில்களின் விளைவே இக்கவிதை.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

8MM (1999) திரை விமர்சனம் – பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!

வேறு யாருக்கும் தெரியாமல், உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா? அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.

எனினும், இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்லிவிட இயலாது. கைபேசிகள் எனப்படுபவையே கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.

ஷகீலாக்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் தேவநாதன்களின் காலத்தில் நுழைந்து விட்டோம். தொலைக்காட்சிகளில் கூட சீரியல்களின் நடிப்பு திகட்டிப்போய், அவற்றின் இடத்தை ரியாலிடி ஷோக்கள் மெல்ல ஆக்கிரமித்து வரும் காலம் இது. ஒரு மனிதன் அடுத்தவன் வீட்டுக்கதவின் சாவித்துவாரத்தில் கண் வைத்துப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதும் பொது ஒழுக்க நெறியே போய்விட்டதென்று கூறிவிட முடியாது. அதேநேரத்தில் சாவித்துவாரத்தில் காமெராவை வைத்துப் படம் பிடித்து, அதை மொத்த சமூகமும் உட்கார்ந்து பார்க்கும் புதிய ரசனை வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. இந்த இரசனையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கலைக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான்- ரியாலிட்டி ஷோ.

காதல், படுக்கையறைக் காட்சிகள், அடிதடி, கொலை ஆகியவற்றை நடிப்பில் பார்த்துப் பார்த்துத் திகட்டிப் போன ஒரு மனிதன்,  ஒரு பாலியல் உறவை, வல்லுறவை, சித்திரவதையை, கொலையை உண்மையாகவே நிகழ்த்தி, அதனை ரியாலிட்டி ஷோவாகப் படம் பிடித்துப் பார்க்க முடியாதா? என்று ஏங்குகிறான். இப்படிக்கூட ஒரு மனிதன் சிந்திக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், முடியும் என்று கூறும் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கதையின் களம் – வேறெந்த நாடு, அமெரிக்காதான்.

8 எம்.எம்: ஆங்கிலத் திரைப்பட விமரிசனம்!

1995இல் வெளிவந்த எட்டு மில்லி மீட்டர் திரைப்படச்சுருள் என்பதைக் குறிக்கும் 8 எம்.எம் ஹாலிவுட் திரைப்படத்தை ஜோயல் ஷூமேக்கர் இயக்க நிக்கோலஸ் கேஜ் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

கதைச் சுருக்கம்: பணக்காரச் சீமாட்டியான திருமதி கிறிஸ்டியானியின் கணவர் முதுமை காரணமாக இறக்கிறார். மரணத்துக்குப் பின் அவரது இரகசிய லாக்கரை உடைத்துப் பார்த்த போது வழமையான ஒரு கோடீசுவரனுக்கே உரிய பத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றோடு, அந்த லாக்கரில் ஒரு திரைப்படச்சுருளும் இருக்கிறது. வயது முதிர்ந்த அந்தச் சீமாட்டி, படச்சுருளைத் திரையிட்டுப் பார்க்கிறாள். அந்தப் படத்தில் உள்ளாடைகளுடன் இருக்கும் ஒரு பதின்வயது இளம் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த மனிதன். இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அந்தச் சீமாட்டி.

அந்தப்படத்தில் வரும் கொலை உண்மையாய் இருந்துவிடக்கூடாதே என்று அவள் பதறுகிறாள். அந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறாள். இப்படி ஒரு படத்தை தனது கணவன் எதற்காக இரகசிய லாக்கரில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளை நிம்மதி இழக்கச் செய்கிறது. இது குறித்து புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். அதற்காக டாம் வெல்லஸ் எனும் தனியார் துப்பறிவாளன் நியமிக்கப்படுகிறான்.

ஸ்னஃப் என்று அழைக்கப்படும் பாலியல் கொடூரக் கொலைகளை சித்தரிக்கும் இத்தகைய படங்களெல்லாம் வெறும் நடிப்பு என்றும், இது ஒரு நகர்ப்புறத்து மாயை என்றும் சொல்கிறான் துப்பறிவாளன் வெல்லஸ். சீமாட்டி திருப்தியடையவில்லை. எனவே, உண்மையைக் கண்டுபிடிப்பதாக வாக்கு கொடுக்கிறான்.

முதலில் படத்தில் இருக்கும் பெண் யாரென்பதை காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கிறான். அவளது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணின் தாயார் -ஜானட்- என்பளைச் சந்திக்கிறான். தனது மகள் மேரி ஆனி மாத்தீவ்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் (கடிதம் எழுதிவைத்துவிட்டு) வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறுகிறாள் தாய். அந்தக் கடிதத்தில் தான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாக மாறப்போவதாகவும், அதற்காகத் தனது காதலுடனுன் சேர்ந்து முயற்சி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாள் மேரி ஆனி. வெல்லஸ் அந்தக் காதலனை கண்டுபிடிக்கிறான். அவர்கள் காதல் அப்போதே உதிர்ந்து போய்விட்டதையும், ஆனி மட்டும் தனியாக ஹாலிவுட் சென்றதையும் அறிகிறான்.

கனவுகளைச் சுமந்தவாறு வாழ்க்கையைத் தொலைப்பதற்கு ஆண்டுதோறும்  கோடம்பாக்கத்திற்கு வருபவர்களே பல்லாயிரம் பேர். ஹாலிவுட் என்பது உலகத்துக்கே கோடம்பாக்கம். எனில், அதை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல அதன் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த மாய உலகத்தில் ஆனியைத் தேடுவது எங்கனம்? கன்யாஸ்தீரிகள் இல்லமொன்றில் ஆனி ஒரு மாதம் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே இருந்த அவளது உடமைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவளுடைய டைரியில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவளது தடத்தை பின்தொடர்கிறான்.

அந்தப்படம் 92ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கும் வெல்லஸ், அதே ஆண்டில் இறந்து போன சீமாட்டியின் கணவனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் சீமாட்டியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறான். இதிலிருந்து அந்தப்படம் சீமாட்டியின் கணவனுக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஹாலிவுட்டில் போர்னோ கடை ஒன்றில் (ஆபாக புத்தகங்கள், சி.டிக்கள் விற்கும் கடை) வேலை செய்யும் மாக்ஸ் கலிபோர்னியா என்ற இளைஞனைப் பிடித்து, அவன் உதவியுடன் ஹாலிவுட்டிற்குள் இயங்கும் அந்த இரகசிய உலகத்தில் நுழைகின்றான் வெல்லஸ். ஆபாசப்படங்கள், புத்தகங்கள், பணத்திற்கேற்ப நம்பகத்தன்மை கூடும் கொடூர ஆபாசப்படங்கள், கடைகள், தரகர்கள், விலைமாதர்கள் என அந்த இருண்ட உலகம் விரிகிறது. இனி நீ பார்க்கவிருக்கும் காட்சிகளை உன் கண்களிலிருந்து இனி அகற்றவே முடியாது என்று கூறி வக்கிரப் பாலுறவின் உலகத்துக்குள் வெல்லஸை அழைத்துப் போகிறான் மாக்ஸ். சித்திரவதை செக்ஸ், சாட்டையடி செக்ஸ், குழந்தைகள் செக்ஸ் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத வக்கிரங்களின் உலகம் விரிகிறது. இயல்பான மனநிலையில் நுழையும் எவரையும் விரைவிலேயே வெறி கொண்டவர்களாக மாற்றும் இந்த உலகில்தான் ஆனி சிக்கியிருக்கிறாள் என்பது தெளிவாகிவிட்டது.

செலிபிரிட்டி பிலிம்ஸ் எனும் உப்புமா கம்பெனியின் முதலாளி எடிபோலி என்பவனே ஆனிக்கு நட்சத்திர ஆசை காட்டி ஏமாற்றியிருப்பதை பல முயற்சிகளுக்குப் பிறகு வெல்லஸ் தெரிந்து கொள்கிறான். அவனை வைத்து கொடூர ஆபாசப்படங்களை இயக்கும் வெல்வெட், அந்தப்படங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் மெஷின் ஆகியோரையும் வெல்லஸ் புலனாய்வின் மூலம் அறிகிறான். உண்மையான பாலியல் வல்லுறவையும் உண்மையான கொலையையும் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி படத்தைத் தயாரிப்பதற்கு இவர்களிடம்தான் சீமாட்டியின் கணவன் பணம் கொடுத்திருக்கிறான். இந்தக் கும்பல் ஆனியை ஏமாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் கொலை செய்திருக்கிறது என்பதை வெல்லஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கு ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் இறங்குகிறான். இயக்குநர் வெல்வெட்டை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பலான படம் ஒன்று எடுக்கவேண்டுமென கேட்கிறான்.

இதற்குள் வெல்லஸ் தங்களது கொலைப்படத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை அந்த கயவர் கும்பல் புரிந்து கொள்கிறது. வெல்லஸை அழைத்து வந்த அந்த இளைஞனைச் சித்திரவதை செய்து, வெல்லஸிடம் இருக்கும் படச் சுருளையும் கைப்பற்றித் தீ வைத்து அழிக்கிறது. அந்த இளைஞனும் கொலை செய்யப்படுகிறான். கடுமையாக தாக்கப்பட்ட வெல்லஸ்,  அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். சீமாட்டியைத் தொடர்பு கொண்டு, அவளிடம் உண்மைகளை கூறி, அடுத்த நாளே நாம் போலீசிடம் போக வேண்டும் என்று சொல்கிறான்.

ஆனால் சீமாட்டியோ அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது கணவனின் வக்கிர வெறிக்காக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஒரு கவரில் வெல்லசுக்கான ஊதியம், இன்னொரு கவரில் கொல்லப்பட்ட பெண் மேரி ஆனியின் தாய்க்குச் சேர்ப்பதற்கான நிவாரணத்தொகை. “எங்களை மறப்பதற்கு முயற்சி செய்” என்று மட்டும் அந்தக் கவரின் மேல் எழுதியிருக்கிறாள் அந்தச் சீமாட்டி.

கைவசம் இருந்த ஆதாரமான படச்சுருள் எரிக்கப்பட்டு, அதை பார்த்த ஒரே சாட்சியான சீமாட்டியும் இறந்திருக்கும் நிலையில் வெல்லஸ் செய்வதறியாது திகைக்கிறான். அதே சமயம் இத்தகைய படுபாதகச்செயலை சாதாரண சினிமா படம் போல எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்திருக்கும் அந்த மூவர் கும்பலை விட்டுவிடவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களை கொல்வதென முடிவு செய்து அதற்கு ஆனியின் தாய் ஜேனட்டிடம் ஒப்புதல் பெறுகிறான்.  அந்தப் படத்தின், அதாவது அந்தக் கொலையின், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகன் ஆகிய மூவரையும் தனித்தனியே கொல்கிறான் வெல்லஸ்.

ந்த இரகசிய உலகத்துக்குள் காலடி வைத்த கணத்திலிருந்து ஒரே ஒரு கேள்விதான் வெல்லஸை துன்புறுத்துகிறது. இவ்வளவு கொடூரமாக, வக்கிரமாக, இரக்கமற்றவர்களாக சில மனிதர்கள் இருக்க முடியுமா- என்பதுதான் அந்தக் கேள்வி. நம்பமுடியாததாகவும் அதே நேரத்தில் மறுக்க முடியாததாகவும் இருக்கும் இந்த எதார்த்தம், உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாமலும், பொய் என்று நிராகரிக்க முடியாமலும், முன்னும் பின்னும் அலைக்கழித்து, இரம்பம் போல இரசிகனையும் அறுக்கிறது.

படத்தின் இறுதியில், மேரி ஆனியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, கொல்லும் அந்தத் திரைப்படத்தின் நடிகனான மெஷினை, வெல்லெஸ் கொலை செய்யும் காட்சி இப்படி அமைந்திருக்கிறது.  கொலை செய்வதற்கு முன், அவனது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், அவனுடைய மூகமூடியைப் பிய்த்தெறிகிறான் வெல்லெஸ்.

ஒரு திரைப்படத்துக்காக யாரோ ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கு போதை ஊசி போட்டு, அவளைத் துடிக்கத் துடிக்க வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, மெல்ல, நிதானமாகக் கொலை செய்த அந்த மெஷினிடம் “ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்” என்று பதிலளிக்கிறான் மெஷின்.

முகமூடி இல்லாத மெஷினை வெல்லெஸ்  நிதானமாக வெறித்துப் பார்க்கிறான். வழுக்கை விழுந்த, கண்ணாடி அணிந்த ஒரு சராசரி மனிதன். அவன் உண்மைப் பெயர் ஜார்ஜ். வெல்லெஸுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மெஷின், அவனிடம் ஏளனமாகக் கேட்கிறான், எப்படி எதிர்பார்த்தாய்? ஒரு மிருகம் போல இருப்பேன் என்றா?

0000

ரு கிரிமினல் குற்றத்தைத் கண்டுபிடிக்கும் புலனாய்வாளனின் பின்னால்தான் இத்திரைக்கதையே செல்கிறது என்ற போதிலும், ஒரு துப்பறியும் படம் தோற்றுவிக்கும் திகில் உணர்ச்சியை இது நம்மிடம் தோற்றுவிக்கவில்லை. மாறாக இப்படம் சித்தரிக்கும் உலகமும் அதன் மனிதர்களும்தான் நம்மைத் திகிலில் உறைய வைக்கின்றனர்..

பாலியல் வல்லுறவு, கொலை, பிணத்தைப் புணர்தல், வயிற்றைக் கிழித்து கருவை சிதைத்தல்.. என வன்முறையின் காணச்சகியாத கோரங்களையெல்லாம் சமீப காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். போஸ்னியாவின் வக்கிரங்களுக்குக் காரணம் மதவெறி-நிறவெறி; இலங்கையில் இனவெறி; குஜராத்தில் மதவெறி. பல்லாயிரம் பேரைப் பலி கொண்ட இத்தகைய வன்முறைகளைக் காட்டிலும், மேரி ஆனியைச் சிறுகச் சிறுகக் கொலை செய்த அந்த வன்முறையைக் காட்டிலும், நம்முடைய இரத்ததைச் சில்லிட வைப்பது, ஏன் செய்தாய், என்ற கேள்விக்கு மெஷின் கூறும் பதில்: ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. செய்தேன்.

அந்தப் பதில் திமிர்த்தனமாகக் கூறப்பட்ட பதில் அல்ல. யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த தனது செயலை மனிதத்தன்மையற்ற செயலாக அவன் கருதவே இல்லை. எனவேதான்,  தன்னுடைய செயலுக்காக சக மனிதனுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமோ, ஏதோ ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமோ இருப்பதாகக் கூட அவன் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்திருந்தது, செய்தேன். என்பதை அவன் வெகு இயல்பாகக் கூறுகிறான். அவனுடைய பதிலில் காணப்படும் இந்த இயல்புத் தன்மைதான் மனிதர்கள் என்ற முறையில் நம்மைக் குலைநடுங்கச் செய்கிறது.

செத்துப்போன அந்தக் கோடீசுவரன், இலட்சக்கணக்கில் செலவு செய்து இப்படி ஒரு கொடூரத்தைப் படமெடுக்கச் செய்திருக்கிறானே, ஏன் செய்தான்? அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறார்கள். மற்றப்படி கசக்கி எறியப்பட்ட அந்தப் பெண்கள் மீது அவர்களுக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

ஏன் முஸ்லிம்களைக் கொன்றோம் என்று குஜராத் வன்முறையாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த வன்முறையாளர்களின் பதிலைக் கேட்கும்போதோ ரத்தம் சில்லிடுகிறது.

எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தவிர தனது செயலுக்கு வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்பதாக ஒரு மனிதனின் விழுமியங்கள் மாறுவதென்பது, வெறும் பாலியல் வேட்கை அல்லது வெறி தொடர்பான பிரச்சினை அல்ல. பாலியல் வேட்கை தோற்றுவிக்கும் பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.

அரசியல் சமூக வாழ்வின் வெவ்வெறு தளங்களில் வெவ்வேறு விதமாக இந்த மாற்றம் துரிதகதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முறுக்கிப்பிழிந்த பின் ஒதுக்கித் தள்ளப்படும் சக்கையாகவும், பல் குத்தியபின் விட்டெயெறியப்படும் குச்சியாகவும் தொழிலாளர்களைக் கருதுகின்ற முதலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்கு அந்தத் தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட எந்தப் பகையுணர்ச்சியும் கிடையாது. அதேபோல, வீசியெறியப்பட்ட அந்தத் தொழிலாளிகளுக்கு என்ன நேரும் என்று சிந்திக்கும் இரக்கமும் அவர்களுக்குக் கிடையாது. பல்லைக் குத்தியபின் குச்சியை வீசியெறிவது என்ற ஏற்பாடு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே.

நுகர்ந்துவிட்டுத் தூர எறியும் பண்டமாக மட்டுமே சக மனிதனையும் கருதப் பயிற்றுவிக்கும் இந்தச் சமூக அமைப்பின் முலையில் ஞானப்பால் குடித்து வளரும் மனிதன், மெஷினைப் போலப பேசுவது வியப்புக்குரியதல்ல.

யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இதிலிருந்து வேறுபட்ட  பல சந்தர்ப்பங்களில்,  பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்?

இது எளிமைப் படுத்தலோ, பொதுமைப்படுத்தலோ அல்ல. தனது விருப்பங்கள், தெரிவுகள், செயல்கள் ஆகியவை சக மனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கு, தான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற கருத்து, துவக்கத்தில்  ஒரு ஆணவம் போலத்தான் வெளிப்படுகிறது.  அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து அவனுடைய இயல்பாகவும், பண்பாடாகவுமே மாறும்போது அந்த மனிதன் மெஷின் ஆகிவிடுகிறான்.

எனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்கு முகமூடி தேவைப்பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக் கிழவனுக்கு ஒரு லாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது.

சில நூறு பக்தர்களுக்குப் பிடிக்காது என்று கருதி எந்தக் காட்சியை மறைப்பதற்கு தேவநாதன் முயன்றானோ, அந்தக் காட்சி பல ஆயிரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான எதார்த்தக் காட்சியாக (Reality show) இருந்திருக்கிறது என்ற உண்மை, இப்போது தேவநாதனுக்குப் புரிந்திருக்கும்.

தான் முகமூடி அணிந்து நடித்த போதிலும், தன்னுடைய படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகமூடி அணிவதில்லை என்ற உண்மை மெஷின் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் முகமூடி கிழிக்கப்பட்ட மறுகணமே வெல்லஸிடம் ஏளனமாக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் மெஷின்: என்ன எதிர்பார்த்தாய்? ஒரு கொடிய மிருகம் போல இருப்பேன் என்றா?

என்ன எதிர்பார்த்தீர்கள், ஹாலிவுட் திரைப்பபட விமரிசனத்தையா? காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா? காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வேறுபாடு? காஞ்சிபுரம் அமெரிக்காவில் இல்லை என்பதைத் தவிர.

–          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. புவனேசுவரி தலைமையில் தொண்டைமான் குருபூஜை!
  2. செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டி விழா!
  3. துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்!
  4. தினமலர்: வருணாசிரமத்தின் மலிவுப் பதிப்பு!
  5. 1984 சீக்கியர் படுகொலை: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…
  6. 8 எம்.எம். ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்: பாலியல் வக்கிரங்கள் – ஹாலிவுட் முதல் காஞ்சிபுரம் வரை!
  7. தில்லி சிதம்பரம் முதல் தில்லைச் சிதம்பரம் வரை… மூலதனத்தின் இராமயணம்!
  8. வெண்மணிச் சரிதம்
  9. சிறுகதை: மட்டப் பலகை
  10. காலனிச் சத்தங்கள் – கவிதை
  11. முகத்தை மூடிக்கொள்கின்ற குழந்தை – கவிதை

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்