கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
அறிவுசார் சொத்துரிமை மனித உயிர்களைக் குடித்து ஏகபோகங்களின் இலாபத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. இப்படி தடுப்பூசி உற்பத்தியை அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் ஏகபோகங்கள் கட்டுப்படுத்துவதால்தான் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையினாலும், தடுப்பூசியின் அதிகப்படியான விலையினாலும் பேரழிவுகளை சந்திக்கின்றன.
“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன. நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன.
சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தை இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.
RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனாநில்’ மருந்து கொரோனாவைக் குணப்படுத்துகிறது என்று அறிவித்து அதற்கான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் அறிவியல் முறைபடி இல்லை என்று ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.
மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்
தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.
கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !
தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்காமல், கோ.மூத்திரம், கோ.சாணம் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வடமாநிலங்களில் விற்பனை செய்து வரும் பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பசுப் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிச குண்டர்களைத் தடை செய்யாமல் அவர்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்து மக்களைக் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது;
இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்
அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் அளவு ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000-ஆக அதிகரித்தள்ளது. அதனால் விளையும் உயிர்பலிகளின் அளவு 1.7 சதவீதத்திற்கு குறையாமல் இருந்தால் நாம் ஒரு நாளைக்கு 6,800 அளவுக்கு பலிகளை எதிர்பார்க்கலாமா?
சமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் !
டெல்லி பல்கலைக் கழகத்தில் ஓ.பி.சி இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்தவும் பட்டியலின் / பழங்குடியினருக்கு எதிரானப் பாகுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் இடைவிடாமல் ஆரம்பக்கட்டத்தில் போராடிய சிலரில் ஹனி பாபு ஒருவராக இருந்தார்.
அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !
நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !
கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !
இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ, இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ, அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.
கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.
இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு
மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.
கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு
ஜீன் 2020, உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்
செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம்.
‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.”
























