டார்ஜிலிங் டீயில் பிணவாடை!
மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் டீயை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் சட்டவிரோதமான முறையில் மூடப்படுவதால், கடந்த ஓராண்டுக்குள் 150 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால், அதனால் ஏற்பட்ட கொடிய நோயால் மாண்டு போனார்கள்.
இந்திய இராணுவத்தின் தேசப்பக்தி பனாமாவிலா ? சியாச்சினிலா ?
நமது தலைநகரில் மட்டும் சுமார் 300 அயல்நாட்டு ஆயுத கம்பெனிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் நேரடியாகவும் IPCL போன்ற இடைத்தரகு நிறுவனங்களின் மூலமும் லாபியிங் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு
"உரிமைக் கோரப்படாத நிதி" என்ற பெயரில் அப்பாவி தொழிலாளர்களின் பி.எஃப். நிதியைத் திருடும் மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்போம்!
தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ?
சுற்றத்தினர் துரத்தியவுடன் நோயின் கவனிப்பின்றி காது, மூக்கு, பிறப்புறுப்பில் ஏராளமாக புழு வைத்து, சீழ் வடிந்து எங்கு செல்வது என்று தெரியாமல்,ரோட்டில் மாண்டவர்கள் ஏராளம்.
தருமபுரி தங்கமயில் மோசடி – மக்கள் நேரடி நடவடிக்கை !
தங்கமயில், மலபார், ஏ.வி.ஆர் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள், "செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை", "தங்கமான மனசு, தங்கமான ஜுவல்லர்ஸ்", "தங்கம் வாங்க, தங்க மயிலுக்கு வாங்க" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை பிரச்சாரம் செய்தும், நடிகர்-நடிகைளை வைத்து விளம்பரங்கள் செய்தும் மக்களை ஏமாற்றி கவர்ந்திழுக்கின்றன.
தேர்தல் என்பது பணநாயகமே – ரிசர்வ் வங்கி ஒப்புதல் !
அந்த அறுபதாயிரம் கோடி ஐந்து மாநிலங்களுக்கு என்றால் அதில் தமிழகத்தின் பங்கு சுமாராக 15,000 கோடியாக வைப்போம். அதில் அதிகபட்சம் இன்னும் தேர்தல் முடிவதற்குள் ஒரு நூறு கோடி பிடிப்பதாக வைத்துக் கொண்டாலும் மீதியை ஒன்றும் செய்ய முடியாது.
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன?
கொலைகார ராம்கி நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
மருத்துவக் கழிவு ஆலையை மூடாமல் 200 ஏக்கர் பரப்பளவில் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டும் புதிய நிறுவனத்திற்கு அரசே ஆதரவாக இருந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உ ரைக்கிறது.
அம்மாவின் வந்தனோபசார கடைசி ஆட்டம் !
தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறதென்றால், பிடுங்கப்பட்ட வரிப் பணமும், வாங்கப்பட்ட கடனும் கரைந்து போனதற்குக் காரணம் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கமிசன் மற்றும் கொள்ளை.
காட்ஸ் ஒப்பந்தம் :அரசுக் கல்வியை ஒழிக்கும் மோடி ! பாகம் – 2
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.
டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசத்துரோக வழக்கு
போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. பொய்வழக்கு, சிறை என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
மோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்
ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன.

























