Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 112

காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

0

கிட்டத்தட்ட 23 லட்சம் பாலஸ்தீன மக்களை உள்ளடக்கிய காசா பகுதியில் தோராயமாக 50,000 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 150 பிரசவங்கள் அங்கு நடைபெறுகின்றன.

இஸ்ரேல் மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டதால் செல்ஃபோன் ஒளியைப் பயன்படுத்தி பிரசவம் பார்க்க வேண்டிய நிலைக்கு காசாவில் உள்ள மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், தான் செல்ஃபோன் ஒளியைப் பயன்படுத்தி இரண்டு பெண்களுக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்ததாகவும், தனது கைகளைக் கழுவக்கூட மருத்துவமனையில் போதுமான நீர் இல்லை என்றும் என்.பி.ஆர் (NPR) என்னும் அமெரிக்க சுதந்திர ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

மின்சாரம் மட்டுமல்ல, தண்ணீர், மருந்துகள், எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

காசாவுக்குத் தேவையான நீரில் 30 விழுக்காட்டை இஸ்ரேல் வழங்கி வந்தது. மீதமுள்ள நீர் தேவை கடல் நீரை சுத்திகரிப்பதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இஸ்ரேல், தான் வழங்கி வந்த நீரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடல் நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளையும் நிறுத்திவிட்டது. தண்ணீரை மறுத்து நீர் என்பதை ஒரு பேரழிவு ஆயுதமாக இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது.


படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!


உலக சுகாதார நிறுவனம், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீர் கிணறுகள், கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை இயக்க போதுமான மின்சாரம் இல்லை என்றும், கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் தெருக்களில் குவிந்துள்ளதாகவும் அக்டோபர் 12-ஆம் தேதி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் ஆறு நீர் கிணறுகள், மூன்று நீர் உந்து நிலையங்கள், ஒரு நீர்த்தேக்கம் மற்றும் 11 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்யும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை ஆகியவை சேதமடைந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதி பாலஸ்தீன மக்கள் அதிக உப்புக் கலந்த நீரைக் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீரை பேரழிவு ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இஸ்ரேலின் இந்த கொடூரத்தை வாட்டர் ஜஸ்டிஸ் (Water Justice) என்ற அமைப்பு தொடர்ந்து ஆவணப்படுத்தியுள்ளது.

மேற்குக் கரையில் (West Bank) உள்ள குடியிருப்புகளில் வாழும் 6,50,000 சட்டவிரோத இஸ்ரேலிய குடியேறிகளுக்கு, அங்குள்ள 30 இலட்சம் பாலஸ்தீனியர்களுக்கு ஒதுக்கப்படுவதை விட ஆறு மடங்கு அதிக தண்ணீர் ஒதுக்கப்படுகிறது. மேற்குக் கரையில் வாழும் இஸ்ரேலிய குடியேறிகளுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 700 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதே வேளையில், பாலஸ்தீன மக்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 10 – 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான குறைந்தபட்சம் 100 லிட்டர் / நபர் / நாள் என்ற பரிந்துரையைவிட இது மிகவும் குறைவானது.

கோடைக்காலத்தில் சட்டவிரோத யூத குடியேறிகளின் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாலஸ்தீனியர்களுக்கான நீர் விநியோகத்தை இஸ்ரேல் 50 விழுக்காடு வரை குறைக்கிறது. மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 2,00,000 பாலஸ்தீனியர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால், யூத குடியேறிகளுக்கு தனிப்பட்ட பயன்பாடு, நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள், பண்ணைகள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு போதுமான நீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது.


படிக்க: இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!


நாஜிக்கள் போலந்தை ஆக்கிரமித்தபோது, கெட்டோ மயமாக்கப்பட்ட வார்சா பகுதிக்கு தண்ணீர், மருந்து, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கிடைக்காமல் செய்தனர். அதையேதான் இஸ்ரேல் தற்போது காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்குச் செய்து வருகிறது.

இஸ்ரேலின் வழிமுறைகள் மட்டும் நாஜிக்களை ஒத்திருக்கவில்லை; அவர்களின் சொல்லாட்சியும் கூட நாஜிக்களைப் போலத்தான் உள்ளது. நாஜிக்கள் யூதர்களை விலங்குகள் என்று கூறினார்கள். அதையேதான் இஸ்ரேலிய அரசும் கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் “நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும்” என்று கூறியுள்ளார்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!

யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசின் வரைமுறையற்ற தாக்குதல்கள் மீண்டும் 1948 பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் நாக்பா படுகொலை கொடூரத்தை மனிதாபிமான சிந்தனையுள்ள அனைவருக்கும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டது. 1948-இல் ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் குடும்பம் குடும்பமாக யூத இனவெறி பயங்கரவாதிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். இதுதான் நாக்பா படுகொலை எனப்பட்டது.

இன்றும் அதே திமிரோடும், ஈவிரக்கமின்றியும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான உளவியல் தயாரிப்புகள் இஸ்ரேலில் மட்டும் உருவாக்கப்படவில்லை.

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிக்கி ஹேலி, அக்டோபர் 10 அன்று பாக்ஸ் நியூஸ் ஊடகத்தில் பேசுகையில், “ஹமாஸ் தாக்குதல் என்பது இஸ்ரேலின் மீது மட்டுமல்ல; அது அமெரிக்காவின் மீதான தாக்குதலாகும்” அறிவித்தார். அப்போது “நெதன்யாகு, அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுங்கள், ஒட்டுமொத்தமாக அழித்து விடுங்கள்… ஒட்டுமொத்தமாக அழித்து விடுங்கள்” என்று வெறியோடு கூச்சலிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் அக்டோபர் 7 ம் தேதியை செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு ஒப்பிட்டனர். இது மதரீதியாக வெறுப்புணர்வை ஊட்டுவதன்றி வேறில்லை.


படிக்க: இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!


அமெரிக்காவின் செனட் உறுப்பினர் லிண்ட்சி கிரஹாம், அக்டோபர் 11-ஆம் தேதியன்று அதே பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில், “நாங்கள் இங்கு மதப்போரில் இருக்கிறோம். நாங்கள் உங்களின் வசிப்பிடங்களை தரைமட்டமாக்குவோம்” என்று வெறியூட்டினார்.

நெதன்யாகுவின் லிகுத் கட்சி உறுப்பினர் ஏரியல் கால்நெர் “தற்சமயம் ஒரே ஒரு இலக்குதான், அது நாக்பா. இந்த நாக்பா 1948 நாக்பாவை ஒன்றுமில்லாததாக்கிவிடும்” என்று கொலைவெறியோடு பேசியுள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யாவவ் காலண்ட் “நாங்கள் மனித மிருகங்களோடு போரிட்டுக் கொண்டிருக்கிறோம், ஆகவே, அதற்கு தகுந்த முறையில் நாங்கள் செயல்படுவோம்” என்றார். மேலும் “அங்கு மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவும் இனி இருக்காது. அனைத்தும் மூடப்படும்” என்று அறிவித்தார்.

இவையெல்லாம் ஒரு சில சான்றுகளே. இது ஹமாஸின் மீதான தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் என்று அறிவித்துவிட்டுத்தான் ஒரு இன அழிப்புப்போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இனவெறியையும், மதவெறியையும் தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதுவும் ஒளிவுமறைவாக நடக்கவில்லை.


படிக்க: இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!


இந்தியாவின் பிரதமர் பாசிஸ்ட் நரேந்திர மோடியோ, இந்தியாவின் நீண்டகால வெளியுறவு கொள்கையை ஒரு நொடியில் தகர்த்தெறிந்துவிட்டு இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட் செய்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், உலகம் முழுக்க உள்ள வலதுசாரி பாசிச பயங்கரவாதிகளும் யூத இனவெறி இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம். அதற்கேற்ப  வலதுசாரி பாசிச பயங்கரவாத கூட்டிணைவை சாத்தியமாக்கியுள்ளார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நாளை இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான இனப்படுகொலையை நடத்துவதற்கு வலதுசாரி பயங்கரவாதிகள் உலகளவில் ஒன்றிணைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது சுரண்டலுக்கான கொடுங்கோன்மை நிலைநாட்டப்படும்.

விரைவாக நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போரை, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான போரை உலகளவில் கட்டியமைக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கொட்டும் மழையிலும் “FREE PALESTINE” | பேரணி | சென்னை

வெயிலிலும் கொட்டும் மழையிலும் குழந்தைகள், இளம்பெண்கள், தாய்மார்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கில் “FREE PALESTINE” உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான முழக்கங்களோடு நேற்றைய தினம் (அக்டோபர் 29) மே 17 இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னையில் நடைபெற்ற பேரணி, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் பாசிச மோடிக்கு எதிரான மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.

முழக்கங்களை மக்களே உருவாக்கினார்கள், அவர்களே முழக்கமிட்டார்கள், அவர்களே மற்றவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் உணர்ச்சி மழையாய் பொழிந்தது. அதன் முன் மழையெல்லாம் தூசாகிப் போனது. கொட்டும் மழையிலும் கூட உறுதியான முழக்கங்களை அவர்கள் தளர விடவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் மக்கள் பேரணியாகச் சென்றனர். மக்கள் பங்கெடுப்புக்கு இப்பேரணி ஒரு எடுத்துக்காட்டு.

உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், மேல் தட்டு நடுத்தர வர்க்கம் என அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள் “SAVE PALESTINE” என்று. அப்பாவி குழந்தைகள், மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற இரக்கத்தின்பால் மட்டுமல்ல; பாலஸ்தீனத்தின் தேசிய இன உரிமைக்காகவும் இனப்படுகொலையாளி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் தங்களுடைய அரசியலை முன்வைத்த கூட்டம் அது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் உரையாற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை உணர்வுப்பூர்வமாக முன் வைத்தனர்.

மக்களைத் திரட்ட முடியாது, மக்கள் வர மாட்டார்கள் என்ற அவநம்பிக்கைக்கு மாற்றாக சரியான கோரிக்கைக்கு சரியான நேரத்தில் மக்களைத் திரட்ட முடியும் என்பதை அறிவிக்கும் கூட்டமாகவே அது இருந்தது.

இந்த பேரணியையும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்த மே 17 இயக்கத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

பாலஸ்தீனத்தை ஆதரித்துப் பாடிய ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு தோழர் தீரன்

பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக முழக்கமிடும் மக்கள்

பேரணியின் முழு காணொளி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!

காசா மீது கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 26 இரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தொடங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலைக்கு முற்று முழு ஆதரவளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் உலக அளவில் மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 27 அன்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (Grand Central Station) இஸ்ரேலை எதிர்த்து அமெரிக்க யூதர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையமே ஸ்தம்பித்ததையடுத்து நியூ யார்க் போலீசு 200-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது.

அக்டோபர் 28 அன்று இஸ்தான்புல்லில் மக்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக பாசிஸ்டான துருக்கி அதிபர் எர்துவான், “இஸ்ரேல் 22 நாட்களாக பகிரங்கமாகப் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. அதற்கு எதிர்வினையாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் மேற்கத்திய தலைவர்கள் இஸ்ரேலை போர்நிறுத்தத்திற்கு கூட அழைக்காமல் இருக்கிறார்கள்” என்று பாலஸ்தீன கொடிகளை அசைத்த பல இலட்சக் கணக்கான துருக்கி மக்கள் முன்பு உரையாற்றினார்.

அக்டோபர் 28 அன்று லண்டனில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மக்கள் பாலஸ்தீன மக்களை ஆதரித்தும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரியும் பேரணி சென்றனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!

காசாவில் பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்யத் துவங்கியதிலிருந்து இஸ்ரேலின் இனப்படுகொலையை மறைத்து பாலஸ்தீனத்திற்கு எதிராக போலிச் செய்திகளை சமூக ஊடகத்தில் பரப்புவதற்கு சமூக ஊடக பிரபலங்களுக்கு இஸ்ரேலின் ‘டிஜிட்டல் ஆர்மி’ பணம் கொடுத்து வருவது அம்பலமாகியுள்ளது.  இதற்காக சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தி வரும் கணக்குகளுக்கு (Media Influencers) இஸ்ரேல் அரசு சார்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மற்றும்  மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்கள் (screen shot) வெளியாகியுள்ளன.

காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டு பாலஸ்தீனர்களின் வீடுகள், அவர்கள் பாதுகாப்பு தேடி தஞ்சம்  புகுந்த மருத்துவமனைகள், தேவாலயங்கள், மசூதிகள், ஆம்புலன்ஸ் என அனைத்து இடங்களிலும் குண்டுகளை வீசி அழித்து வருகிறது. மேலும் அங்கு வாழும் பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசியமான உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள், மருத்துவப் பொருட்களைத் தடுத்து சர்வதேச விதிகளை மீறி, இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேல் தனது போர் குற்றங்களையும் இனப்படுகொலையையும் மறைத்து உலக மக்களின் அனுதாபங்களைத் தனது பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவும், தனது பயங்கரவாதத்தை நியாயப்படுத்திக் கொள்வதற்கும் போலி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக, உலகளவில்  சமூக ஊடகத்தில் அதிக செல்வாக்கு செலுத்தி வரும் நபர்களை அணுகி அவர்கள் மூலம் பல போலி செய்திகளை பரப்பிவருகிறது. அப்படி போலிப் பிரச்சாரத்திற்காக அணுகும் நோக்குடன் அனுப்பப்பட்ட  மின்னஞ்சல்களில் ஒன்று கசிந்துள்ளது.

இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன்  எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும்  பல பிரபலங்கள்  ஏற்கனவே இப்போலிப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.


படிக்க: இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை


ஹமாஸை பயங்கரவாதிகளாகவும், இஸ்ரேலில் 40  குழந்தைகளின் தலையை கொய்து ஹமாஸ் அமைப்பினர் கொலை  செய்துள்ளனர் என்றும் போர் துவங்கிய போது பொய் பிரச்சாரத்தை பரப்பியது இவர்கள்தான்.

இந்நிலையில் சில சமூக ஊடகப் பிரபலங்கள், இஸ்ரேலை அம்பலப்படுத்தியும் உள்ளனர். சாரா வாட்சன் என்பவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தனது டிக் டாக் (TikTok) பக்கத்தில் வீடியோ  வெளியிட்டு இருந்தார். அந்த ஆதரவை  திரும்பப் பெற வேண்டும் என  இஸ்ரேலிய அரசு தன்னை அணுகி வற்புறுத்தியதாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “நீங்கள் நினைப்பது  நடக்காது, என் அறநெறியை உங்களால் விலைக்கு  வாங்க முடியாது” என அவர் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காகவும் ஒரு பெரிய தொகையை பேரம் பேசியதாகவும்  அதையும் தான் மறுத்துவிட்டதாகவும் அவர் வீடியோவில்  தெரிவித்துள்ளார்.

சுலைமான் அகமது என்ற  மற்றொரு சமூக ஊடக பிரபலம், இஸ்ரேல் அரசு சமூக ஊடகத்தில்  செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு ஒவ்வொரு வீடியோவிற்கும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் ($ 1,000) செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.  “இது தகவல்களை கட்டுப்படுத்தி உண்மைகளை திரிப்பதாகும்; அமெரிக்காவைப் போலவே உலகில் உள்ள மக்களுக்கு நீங்கள் (இஸ்ரேலிய அரசு) செய்யும் கொடூரமான விஷயங்களை நியாயப்படுத்துவது” என்று அவர் இஸ்ரேலின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



 

கருக்கா வினோத் அண்ணாமலை ஆள்! | தோழர் மருது

கருங்கா வினோத் அண்ணாமலை ஆள்! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நாளை… | பாலஸ்தீனம் | கவிதை

ன் குண்டு வீசி குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள்?

என் மகளின் கேள்விக்கு
ஒரு தாயாய் நான்
எப்படி பதில் கூறுவேன்!

எப்படிச் சொல்வது?
வியட்நாம்
ஈராக்
சிரியா
ஆப்கானிஸ்தான்
ஈழம்
பாலஸ்தீனம் …
நாளை இங்கேயும்
அந்த குண்டுகள்
விழக்கூடும் மகளே என்று!

எப்படிச் சொல்வது?
கிரிக்கெட் போட்டியை
ரசிப்பது போல்
குண்டுகள் வீசப்படுவதை
குழந்தைகள் கொல்லப்படுவதை
ரசிப்பவர்கள் இங்கேயும்
உண்டு என்று!

எப்படிச் சொல்வது?
இஸ்ரேல்
அமெரிக்க
இந்திய
உலக உழைக்கும் மக்கள்
போரை வெறுக்க
ஆள்பவர்கள் போரை மட்டுமே
விரும்புகிறார்கள் என்று?

ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன்
என் மகளுக்கு ஆணித்தரமாக!
உழைக்கும் மக்களின்
கரங்கள் ஒன்றிணையும் போது
பாசிசத்தின் தலைகள்
மண்ணில் உருளும் என்று!


செங்குரல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!

டிசா மாநிலத்தின் சிஜிமாலி மாவட்டத்தில் கொலைகார வேதாந்தாவின் பாக்சைட் சுரங்க திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக அக்டோபர் 18-ஆம் தேதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் கலாகந்தி மாவட்டம் கெர்பை உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 1500 மக்கள் கலந்துகொண்டனர்.

பெயரளவிலான இந்த கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்டது. போலீசும் துணை ராணுவமும் அனைத்து இடங்களிலும் நிரம்பியிருந்தது. கூட்டம் நடக்கும் இடத்தில் மட்டும் 600 – 700 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டம் நடக்கும் இடத்திற்கு வருவதற்கே ஐந்து சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 20 போலீசார் இருந்தனர்.  கூட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் மின்கம்பிகளை வைத்து அடைத்திருந்தது போலீசு.

ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களை போலீசும் துணை ராணுவமும் மிரட்டி அனுப்பியது. ஆனால், பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு ஆதரவாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்க நுழைக்கப்பட்டிருந்தவர்கள் மட்டும் போலீசின் கண்களுக்குப் புலப்படவில்லை.

வேதாந்தாவால் நுழைக்கப்பட்டவர்களையும் கடந்து மக்கள் தங்கள் எதிர்ப்புகளைk கூட்டத்தில் பதிவு செய்தனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கையோ சுரங்கத் திட்டத்தால் உள்ளூர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றொரு பச்சைப்பொய்யைக் கூறியுள்ளது. மலைச் சரிவுகளில் விளையும் பல்வேறு தினை வகைகள் சுரங்கத்தால் பாதிக்கப்படாது என்ற முடிவுக்கு எப்படி வர முடிந்தது என்று அரசாங்கத்திடம் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கேள்வியெழுப்பினர்.


படிக்க: கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை


மேலும் கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி, ”வேதாந்தாவின் ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டினார்கள்” என்று குற்றம்சாட்டினார். இக்கூட்டத்தில் பலருக்கும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஊடகங்களுக்கும் அதே நிலைதான்! வேதாந்தாவின் லாபவெறிக்காக துணை ராணுவத்தை நிறுத்தி கருத்துக்கேட்பு என்ற நாடகம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனம் வேதாந்தா. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் காலகந்தியில் வேதாந்தாவின் ஆண்டிற்கு 6 மில்லியன் டன் (Million Tonnes Per Annum – MTPA) உற்பத்தி திறன்கொண்ட அலுமினிய சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.  அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட்டை வேதாந்தா பெருமளவு இறக்குமதி செய்து தான் சுத்திகரிக்கிறது.

தற்போது 311 மில்லியன் டன் பாக்சைட் கனிமங்கள் சிஜிமாலியில் இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு 9 டன் பாக்கசைட்டை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறது வேதாந்தா. இத்திட்டத்தில் ₹792 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

சிஜிமாலி பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கருத்துக்கேட்பு கூட்டம் என்ற நாடகம் ’சட்ட’ப்படி அவசியமாகிறது. இதனால் தான் துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தி இப்படியொரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வேதாந்தாவின் கொடிய கரங்கள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் மரண ஓலத்தைத் தவிர வேறு ஏதும் மிஞ்சுவதில்லை. அதற்குச் சிறந்த சான்று ஸ்டர்லைட் ஆலைதான்!


ஹைதர்

செய்தி ஆதாரம்: countercurrents

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! | பாலஸ்தீனம் | கவிதை

சொற்களின் கூட்டுக்குள்
ஓர் மௌனப் பறவை!

தனிமைப் பெருவெளியில் நின்றபடி
பெயர் தெரியாத அப்பறவை
பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது!

துடைத்தெறிய முடியாத துயரம்
அதன் கண்களில்!

நூற்றாண்டு களைப்பைச்
சுமந்திருந்தது அதன் உடல்!
துயரத்தின் நிலத்திலிருந்து
வந்திருக்க வேண்டும் அப்பறவை!

நான் கேட்டபோது
மெல்ல என் காதுகளில்
பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்!

ஈழத்திலிருந்து
என்றது மற்றொரு சமயம்!

பொய் சொல்கிறதா
உற்றுப் பார்த்தேன்!

அதன் சிறகுகளில்
குண்டு துளைத்த
துளைகள் இருந்தன!

அலகின் நுனி பெயர்ந்து
உணவைக் கொத்துவதற்கு
சிரமப்பட்டது!

ஒற்றைக் கால்
சேதமடைந்திருந்தது!

அதிகமாகப் பேசவில்லை
அப்பறவை!

உனக்கு ஏற்பட்ட துயரத்தை நினைத்து வருந்துகிறாயா
எனக் கேட்டேன்!

குண்டு வெடிப்பில்
வேரோடு மரம் சாய்ந்து
தன்னுடைய குஞ்சுகள்
தன்கண் முன்னே
இறந்ததைச் சொல்லுகையில்..

அண்ணாந்து பார்த்து நெஞ்சுக்குழிக்குள் இழுத்து மறைத்தது
கண்களில் வழிந்த துயரத்தை!

நூற்றுக்கணக்கான தாய்மார்கள்
குழந்தைகளை இழந்து
இப்படித்தான் துடித்தார்கள்!

அவர்கள் கதறி வெடித்த சொற்களை
தன்னால் மறக்க இயலாதெனக் கூறிவிட்டு..

தன் மனதில் அடக்கியிருந்த
வேதனை மிக்க அந்த
சொற்களையே கூடாக்கி
அந்த கூட்டில் நுழைந்து
மௌனத்தில் ஆழ்ந்தது
அப்பறவை!


செங்குரல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு என கதறும் ஆளுநர் மாளிகை, பிஜேபி கும்பல்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு என கதறும் ஆளுநர் மாளிகை, பிஜேபி கும்பல்!

க்டோபர் 25 அன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பிரச்சாரத்தை ஆளுநர் மாளிகை மற்றும் பிஜேபி கும்பல் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது.

”கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களால் பொதுவெளியில் ஆளுநருக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது. ஆளுநர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்ற முடியாது” என்று ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளர் கூறியுள்ளார்.

“ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாததால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க வேண்டும் என்று பாஜக-வின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எல்.முருகன் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ரவுடிகளையும், கிரிமினல்களையும் கட்சியில் வைத்திருக்கும் பிஜேபி-க்கு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை பற்றி கவலை என்பதை தமிழ்நாட்டில் யாரும் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.


படிக்க: சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கும் சங்கி ஆர்.என்.ரவி


அதேபோல் தமிழ்நாட்டு மக்களின் நலனை மையப்படுத்திய 20-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களை குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிந்துவிட்டு, கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும், நீட்டுக்கு எதிராகவும் போராடும் மக்களை வாய்மொழித் தாக்குதல் நடத்தி இழிவுபடுத்துகின்ற, சாதி – மத ரீதியாக அவதூறுகளை பரப்பி கலவரத்தை உருவாக்கத் துடிக்கின்ற ஆளுநர்தான் தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதை மக்கள் புரிந்தே வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும் ஆளுநர் ரவிதான் சென்ற இடமெல்லாம் வெறுப்புணர்வை கக்கி வருகிறார்.

ஆனாலும் ஏதாவது காரணத்தை வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிகாரத்தைப் பிடித்து விட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

குறிப்பாக, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை தப்பவிட்டு விட்டதாக ஆளுநர் மாளிகை, அதன் ’எக்ஸ்’ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இது குறித்து பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அவர்கள் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்துவிட்டது. அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் இந்தச் செய்தி வந்துள்ளது” என்று கூறியுள்ளார். போலீசும் ஆளுநர் மாளிகையின் அவதூறை மறுத்துள்ளது. திட்டமிட்ட பொய்யை தெரிந்தே அறிக்கையாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் பிஜேபி கும்பலே வெடிகுண்டு தாக்குதலை நடத்திவிட்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.

இதற்கு முன்பு கமலாலயத்தில் ரவுடி கருக்கா வினோத் குண்டு வீசியபோது அவனை பெயிலில் எடுத்தது பிஜேபி யைச் சார்ந்த வக்கீல்தான் என்று கூறுகின்றனர்.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பிஜேபி கும்பலே சொந்தக் கட்சியினர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி விட்டு, இஸ்லாமியர்கள் செய்ததாகப் பொய்ப்பிரச்சாரம் செய்வது;  கட்சிப் பதவிக்காக தன் வீட்டு வாசலில் தானே குண்டு வீசி விட்டு அவதூறு பரப்பியது; அதன் பின்னர் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. சமீபத்தில் கும்பகோணம் அருகில் பிஜேபி-யைச் சேர்ந்த ஸ்ரீகார்த்திகேயன் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது கையெறி குண்டுகளும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி சசிக்குமார் சொந்தக் காரணங்களுக்காக கொல்லப்பட்டபோது அதைவைத்து இந்துமுன்னணி கும்பல் கலவரம் செய்தது முக்கியமான உதாரணம். இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களை இந்தியா முழுக்க சொல்ல முடியும்.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை என்று கிளப்பிவிட்டோ, பொய்யான அவதூறைப் பரப்பி கலவரம் நடத்தியோ அதிகாரத்தைப் பிடிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அடிப்படையான யுக்தி. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்ப்புணர்வும், விழிப்புணர்வும் சங்கிக் கும்பலுக்கு தடையாகவே உள்ளது. எனவேதான் பாசிச உளவாளி ஆர்.என்.ரவியின் மூலமாக காய் நகர்த்துகிறது.

ஒருக்காலும் தமிழ்நாட்டை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் கைப்பற்றுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. ஓட ஓட விரட்டி அடிப்போம்!


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை

காசா பகுதியில் 2,704 குழந்தைகள், 1,584 பெண்கள் உள்ளிட்ட 6,546 பேரை இஸ்ரேல் இதுவரை கொன்று குவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 24) மட்டும் 350 குழந்தைகள் உட்பட 704 பேரை இஸ்ரேல் ராணுவம்  கொன்றுள்ளது. 17,439 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காசாவில் உள்ள 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை எனவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹிரோஷிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு இணையாக 12 ஆயிரம் டன் வெடிபொருட்களை பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

காசாவில் 22 மருத்துவமனைகளை உடனே காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு போட்டிருக்கிறது. இதனைக் காயம் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான மரண தண்டனை என்று உலக சுகாதார நிறுவனம்  குறிப்பிட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட மோசமான சூழலில் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா குட்டரெஸ், இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மென்மையாகக் கண்டிக்கிறார். ”ஐ.நா தீர்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான தேசத்தை பாலஸ்தீனர்கள் காண வேண்டும். இஸ்ரேல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை” என்று குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கும்  ஹமாசுக்கும் ஒரே நேரத்தில் கோரிக்கை வைக்கிறார். உண்மையில் போரை நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேல். இது என்ன வகை நடுநிலைமை?


படிக்க: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி


எந்த விதமான சர்வதேச விதிகளையும் கடைப்பிடிக்காமல் பாலஸ்தீனியர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். யூத இனவெறி இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக ஆதரித்து ஆயுத உதவி செய்து பின்னால் இருந்து போரை நடத்துகிறது அமெரிக்கா. ஐநா நியாயமாக அமெரிக்காவை கண்டித்திருக்க வேண்டும். இஸ்ரேலின் மீது போர்க்குற்றத்திற்காக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். போரை உடனே நிறுத்துவதற்கு முயன்றிருக்க வேண்டும். அமெரிக்காவைக் கண்டிக்காமல் இஸ்ரேலின் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வருத்தமளிப்பதாக இரட்டை வேடம் போடுகிறார் குட்டரெஸ்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்வது ஐநாவுக்கு தெரியாமலா நடக்கிறது? உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுதும் நடத்திய எல்லா ஆக்கிரமிப்புப் போர்களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு இதுதான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

உலக ஏகாதிபத்திய அமைப்பில் இன்று அமெரிக்காவின் அடியாளாகத்தான் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீதி என்னவோ, அதைத்தான் கொஞ்சம் மாற்றி ஐநாவும் பேசும். குட்டரெஸ் கூறும் சர்வதேச சட்டங்கள் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கேற்பத்தான் நடைமுறைப்படுத்தப்படும். ஒருக்காலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பயன்படுத்தப்படாது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் ஐநா என்ற ஒன்று இருக்காது. இந்த உண்மைகளையெல்லாம் பார்க்காமல் ஐக்கிய நாடுகள் சபை என்பது ஏதோ நடுநிலையான நீதி அமைப்பாக பார்க்கப்படுவது அபாயகரமானது.

இன்றைக்கு உலகில் நடக்கும் பெரும்பாலான ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களே அடிப்படையாக உள்ளது. அமெரிக்க பயங்கரவாதத்தை முறியடிக்காமல் உலக மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பதே வரலாறு உணர்த்தும் உண்மை. உலக மக்களின் முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை துணைநிற்கவா போகிறது. சர்வதேச அளவிலான உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமே அதற்கு தீர்வு காண முடியும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“இந்தியா அல்ல பாரத்” – NCERT-இன் கரசேவை!

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ”இந்தியா” என்ற சொல்லுக்குப் பதிலாக “பாரத்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பரிந்துரைத்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 3 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேசிய பாடத்திட்டத்தில், பள்ளிப் பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள் ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக அண்மையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவானது புதிய பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கான இறுதிக்கட்டப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் தலைவர் ஐசக் “அரசியலமைப்பின் பிரிவு 1(1) ஏற்கனவே, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று கூறுகிறது. பாரதம் என்பது பழைமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாடப்புத்தகங்களில் நமது தோல்வியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முகலாயர்களையும் சுல்தான்களையும் நாம் வெற்றி கொண்ட வரலாறு இடம்பெறவில்லை. எனவே புதிய பாடப்புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிளாசிப் போருக்கு பிறகுதான் பயன்பாட்டிற்கு வந்தது. எனவே தான் ”பாரத்” என்ற பெயரை பாடநூலில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!


பிஜேபி கும்பலின் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைத்திருப்பவும் தனது தோல்வி முகத்தை மூடி மறைக்கவும் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி உருவானதிலிருந்து  “பாரத்” என்ற பெயரை வைத்து ஒரு நிகழ்ச்சிநிரலை கட்டமைத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டில் ”இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் NCERTஇன் இந்தப் பரிந்துரை சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக மதங்களைக் கடந்து சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியாவின் உண்மையான தியாகம் நிறைந்த மரபை ஒழித்துக்கட்டிவிட்டு, சுதந்திரப் போராட்டத்தை மதரீதியான ஒன்றாக கட்டமைக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவார கும்பல். இன்னொரு பக்கம் இந்துக்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் பிரிட்டிஷாருக்கு செய்த அடிவருடி வேலையை மறைக்கப் பார்க்கிறது. இதுதான் புதிய பாடத்திட்டத்துக்கான குழுவின் தலைவர் ஐசக் சொல்வதன் உள்ளடக்கம்.

அரசுக்கட்டமைப்பின் எல்லா அங்கங்களிலும், குறிப்பாக அதிகார வர்க்கத்தின் எல்லா அடுக்குகளிலும் நுழைந்து விட்ட ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எப்படியாவது தன்மீதான மக்களின் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்புகளையும் மடைமாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கேற்ப எந்தவித தடையுமின்றி அரசுக் கட்டமைப்பை வைத்தே நடவடிக்கைகளை முன்நகர்த்துகிறது.

நாம் மக்களின் ஜனநாயகத்துக்கான, வாழ்வுரிமைக்கான போராட்டங்களை நிகழ்ச்சிநிரலுக்கு கொண்டு வருவதன் மூலமே, வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் என்பதை மக்களின் முழக்கமாக மாற்றுவதன் மூலமே பாசிஸ்டுகளை எதிர்கொள்ள முடியும்.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சனாதனம் ஒழிப்போம்!

சனாதனம் ஒழிப்போம்!
ஓட்டம் பிடித்தப் பார்ப்பன கும்பல்
தமிழ்நாடு மாடலை தேசியமயமாக்குவோம்!

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்”. கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் இவை.

ஒரு மாதம் கடந்தும் தற்போதுவரை பத்திரிகைகளில் இதுதான் பேசுபொருளாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், திரைப்பட இயக்குநர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், காவிக் கும்பல் உதயநிதியின் சனாதான எதிர்ப்பு பேச்சை இந்துமக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சாக திரித்துப் பிரச்சாரம் செய்தது. வட இந்தியாவில் ஓரிரு இடங்களில் உதயநிதியின் படத்தை எரித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பார்ப்பன எதிர்ப்பு தேனிகூட்டைக் கலைத்துவிட்ட காவி கும்பல்!

செப்டம்பர் 2-ஆம் தேதி சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி.விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர்” என குறிப்பிட்டு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார். அதைத்தொடர்ந்து அமித்ஷா, மோடி, ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள், சாமியர்கள் என ஒட்டுமொத்த சங்கப் பரிவார கும்பலும் உதயநிதியின் பேச்சை இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சாக திரித்துப் பிரச்சாரம் செய்து உதயநிதியைத் தாக்கத் தொடங்கியது.

அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தான். உதயநிதியின் படத்தை அவன் கத்தியால் குத்தி கிழிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாயின.

மேலும், உதயநிதி ஸ்டாலின் மகாராஷ்டிர மாநிலத்தில் கால் வைக்க முடியாது என மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.


படிக்க: பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியா கூட்டணியின் இரண்டு மிகப் பெரிய  கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் தயாரா?” என்று “இந்தியா” கூட்டணிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா கூட்டணியினர் இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலையும் கொண்டுள்ளார்கள். சனாதன கலாச்சாரத்தை ஒழிக்கும் தீர்மானத்துடன் இந்தியா கூட்டணி வந்துள்ளது” என்றார். மேலும், “சனாதனம் குறித்து யார் பேசினாலும் விடாதீர்கள், தக்க பதிலடி கொடுங்கள்” என தனது அமைச்சர்களை முடுக்கிவிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் எனவும் நாடுமுழுவதும் ஆங்காங்கே சங்கிகளால் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் தன்பங்கிற்கும் உதயநிதிக்கு ‘அறிவுரை’ வழங்கியது.

உதயநிதிக்கு எதிராகவும் “இந்தியா” கூட்டணியில் இருக்கும் மிதவாத பார்ப்பன சித்தாந்தம் கொண்ட கட்சிகளைப் பிரித்து தி.மு.க.வைத் தனிமைப்படுத்துவதற்காகவும் பார்ப்பன கும்பல் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கே எதிராகத் திரும்பத் தொடங்கின.

உதயநிதி ஸ்டாலின், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியதும் வடநாட்டு கொலைகார சாமியார்களுக்கு எதிராக நக்கலாக பதிலடி கொடுத்ததும் தேசிய அளவில் விவாதத்திற்குள்ளாகி உதயநிதியின் கருத்துக்கு வரவேற்பை உருவாக்கியது.

தேசிய அளவிலும் ஊடகங்களிலும் சனாதனம் என்ன சொல்கிறது என்பது பற்றி விவாதிக்கப்படுவதைப் பார்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் அதிர்ச்சியடைந்துவிட்டது. இதுநாள் வரை தாம் உருவாக்கிவைத்திருந்த இந்துமத போதை கலைந்துவிடும் என அஞ்சிய இக்கும்பல் ஒரு கட்டத்தில் தற்காப்பு நிலைக்குச் சென்றுவிட்டது.

“சனாதனத்தை ஒழிப்போம்” என்ற முழக்கம், அவர்கள் இதுநாள்வரைக் கட்டிக்காத்துவந்த, ‘இந்து ஒற்றுமை’யைக் கேள்விக்குள்ளாக்கியதைப் பார்த்து அஞ்சியது. விரைவாக இந்தப் பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைத்திருப்ப வேறு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியது. மோடியின் கர்ஜனையெல்லாம் புஸ்வானமாகிப் போனது.

தமிழ்நாட்டில் திருமாறன் ஜி, கிருஷ்ணசாமி, தினமலர், பா.ஜ.க. போன்ற சங்கிகளைத் தவிர இந்த கும்பலை சீண்டுவாரில்லை. அண்ணாமலை சனாதனத்திற்கு என்னதான் முட்டுக்கொடுத்து பேசினாலும் அவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளாலும், இயக்கங்களாலும் அம்பலப்படுத்தப்பட்டன.

நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத் திறப்புவிழாவில், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அனுமதிக்கப்படாதது போன்ற அண்மைகால நிகழ்வுகள் மூலமாகவும் சனாதனத்தின் உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களின் இண்டு இடுக்குகள், கேலிக்கை நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் சனாதனம் தோலுரிக்கப்பட்டது. அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் வாசிக்கப்பட்டனர். இவையெல்லாம், பார்ப்பன கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

மிதவாத பார்ப்பன கட்சிகளின் பதுங்கல்

நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்க, “இந்தியா” கூட்டணியில் காவிக்கும்பலின் பொய் பிரச்சாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்… நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன், வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறேன்” என்றார். மேலும், “உதயநிதி ஸ்டாலின் ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பது குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை” என்று கூறினார்.

“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார். “சனாதன தர்மம் நித்திய உண்மை – வாழ்க்கையை வாழ்வதற்கான வழி – மனசாட்சி மற்றும் இருப்பைக் குறிக்கிறது… சனாதன தர்மத்துடன் இணைக்கப்பட்டுள்ள நாட்டின் அடித்தளம், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதற்கு எதிராக இழிவான கருத்துகளை வெளியிடும் எவரும் அது எதைக் குறிக்கிறது என்பதை அறியாதவர்” என்று சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.


படிக்க: இந்துராஷ்டிர தர்பார்!


ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “இந்தியாவில் பல்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மொழிகள் உள்ளன. இருந்தாலும் நாங்கள் ஒன்றாக வாழ்வதுதான் எங்களின் அழகு… உதயநிதி அல்லது யாராக இருந்தாலும் சனாதனம் குறித்து கருத்து சொல்லக்கூடாது” என்றார்.

காங்கிரசு தலைவர் ப.சிதம்பரம், சனாதனம் என்பதற்கு தமிழ்நாட்டில் சாதி அடிமைத்தனம், பெண் அடிமைத்தனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. வடமாநிலங்களில் இந்துமதம் என்றே இதற்கு பொருள் கொள்ளப்படுகிறது. ஆதலால், வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பொருளில் தனது அறிவுரையை வழங்கினார். காங்கிரசு கட்சி இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். சனாதனத்தை அம்பலப்படுத்திப் பேசினாலும், தினந்தோறும் அறிக்கை விடும் அதன் தேசியத் தலைவர்கள், தாமாக முன்வைந்து பார்ப்பன கும்பலை அம்பலப்படுத்தவில்லை. சடங்குத்தனமாக சில கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

மொத்தத்தில், பா.ஜ.க. எதிர்ப்புப் பேசும் பல கட்சிகளிடம் பார்ப்பனிய சித்தாந்தம் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் பா.ஜ.க.விற்கு எதிராக சனாதனம் என்பது இழிவானது என்று சொல்வதற்குப் பதிலாக, பா.ஜ.க.வின் கருத்துக்கு பலியாகி, வட இந்திய மக்கள் சனாதனம் என்றால் இந்து என்றுதான் கருதுவதாகக் கூறி ‘தற்காப்பு’ நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இது, சித்தாந்தப் போர்!

சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதிக்கு எதிராக காவிக்கும்பல் தொடுத்த தாக்குதல் என்பது உதயநிதி அல்லது தி.மு.க.-வின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று மட்டுமே பார்க்க முடியாது. உண்மையில், தமிழ்நாட்டிற்கு எதிராக சங்கப் பரிவார கும்பல் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தின் பரிமாணம் முற்றிலும் வேறானது.

கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி, தற்போது “இந்தியா” கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

அப்பொதுக்கூட்டத்திற்கு அடுத்தநாள், தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 12 பேர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பா.ஜ.க கும்பலால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. “தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம், தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது” என்று அறிக்கை விட்டார் அண்ணாமலை.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பா.ஜ.க. கும்பல் பொய் பிரச்சாரம் செய்தது, ஏதோ தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சி மீதான தாக்குதல் அல்ல. தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு சித்தாந்தம், அரசியலுக்கு எதிரான தாக்குதலாகும்.

அதைப்போல, கடந்த ஜூலை மாதம் வடலூரில் வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பத்தாயிரம் ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று அயோக்கியத்தனமாக பேசினார்.

“சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே சாத்திரச்  சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர், அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே” என 200 ஆண்டுகளுக்கு முன்னரே பார்ப்பனியத்தையும் அதன் சித்தாந்தத்தையும் தோலுரித்துக்காட்டிய வள்ளலாருக்கே காவிசாயம் பூசப் பார்த்தார், ரவி.

மேலும், பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டில்தான் சனாதன தர்மம் உருவானது என்றும் இங்கிருந்துதான் சனாதனம் பாரதம் முழுவதும் பரவியது என்றும் பச்சையாக பொய் பேசினார்.

ஏறித்தாக்கித்தான் பாசிசத்தை வீழ்த்த வேண்டும்!

இந்துராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் பார்ப்பன பாசிச பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தமும் அதன் மரபும் சிம்ம சொப்பனமாக உள்ளது. எனவே, தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற தமிழ்நாட்டின் சித்தாந்தத்தை ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வேலை செய்துவருகிறது காவிக்கும்பல். அதற்காக தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றை திரித்து புரட்டுவது, தமிழ்நாட்டிற்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது போன்ற வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

ஆகவே, உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை காவி கும்பல் விஷமத்தனமாக “இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்” என திரித்துப் பிரச்சாரம் செய்தது என்பது வெறும் திசைத்திருப்பல் நடவடிக்கையோ அல்லது திமுக என்ற கட்சியின் மீதான தாக்குதலோ கிடையாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்ததைத் இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட தாக்குதலாகும்.

சனாதனம் என்பது வர்ணாசிரம அடிப்படையில் சாதிக் கட்டமைப்பை கட்டிக்காக்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தான் என்பது வரலாற்று உண்மை. அதை என்ன செய்தாலும் காவிக்கும்பலால் மூடிமறைக்க முடியாது. பா.ஜ.க முன்னெடுக்கும் பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் என்பது பெரும்பான்மையான  மக்களுக்கு எதிரானது. இந்துராஷ்டிரத்தை  கட்டியமைக்க  வேண்டுமானால் சாதிய வருணாசிரமத்தை மீட்டமைக்க வேண்டும். ஆரம்பத்தில் நேரடியாக இதை செய்தால் இடைநிலை சாதியினரின் ஓட்டுக்களை பெற முடியாது என்பதால், “நாமெல்லாம் இந்து, நமக்கு இஸ்லாமியர்கள்தான் எதிரி” எனக் கூறி இஸ்லாமிய வெறுப்பு அரசியலை முன்னெடுத்துவந்தது காவிக்கும்பல்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, சமூக அரசியல் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவியிருக்கும் இன்றைய சூழலில், விஸ்வகர்மா போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகவே வர்ணாசிரமம் அடிப்படையிலான சாதிக்கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. முன்பை விட, தனது பார்ப்பனிய சாதிவெறி சித்தாந்ததைத் மூர்க்கமாக கையிலெடுக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில்தான் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தத்தை வீச்சாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு தற்போது உறுதியாக நின்றதன் மூலம்தான், பார்ப்பன கும்பல் பின்வாங்கியது என்பது அனுபவமாகும். இந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக எதிர்க்காமல், தேர்தலில் நின்று வீழ்த்திவிடலாம் என்று கருதுவதைவிட முட்டாள்தனம் வேறில்லை.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலை எதிர்க்கும் தமிழ்நாட்டின் சித்தாந்தம் என்பது, தமிழ்மொழியின் தொன்மை, சாதி-மத மறுப்பு பண்பாடு, தமிழ்மொழியின் இலக்கண வளம் மற்றும் சித்தர்கள், வள்ளலார், பெரியார் போன்றவர்களால் பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தம்தான் காவிக்கும்பலை தொடைநடுங்கச் செய்கிறது. எனவே, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநிலங்களின் பார்ப்பன எதிர்ப்பு, ஜனநாயக மரபை ஜனநாயக சக்திகளும், இயக்கங்களும் உயர்த்திப்பிடிப்பதன் மூலம்தான் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலை வீழ்த்த முடியும்.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மலையகம் 200

மிழ்நாட்டில் இருந்து மக்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருநூறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்நாள்வரை அவர்கள் அடைந்துவரும் துன்பங்களும் இழந்த உரிமைகளும் தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வமாக பேசப்படவே இல்லை.

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் பல்லாயிரக்கணக்கானோரைக் காவு கொண்டது. பொருளியல் நெருக்கடியில் இருந்து கிராமங்கள் மீள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் காலனிய நாடுகளுக்கு தமிழர்கள் கூலிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின. காபி, இரப்பர், உலகத் தரம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் குடியமர்த்தப்பட்ட அந்த மலைப்பகுதிதான் மலையகம் என்றழைக்கப்படுகிறது.

நகரங்களில் தூய்மைப் பணியாளர்களாகவும், ஆலைத் தொழிலாளர்கள் முதல் வீட்டுப் பணியாளர்களாகவும் இன்று நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

1817 ஆம் ஆண்டில் இந்த இடப்பெயர்வு தொடங்கியது என்றாலும் 1823 இல் நடைபெற்ற இடப்பெயர்வே பொதுவாக கணக்கில் எடுக்கப்பட்டு “மலையகம் 200” என்று அடையாளப்படுத்தப்படுகிறது. உலகத் தமிழர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் “மலையகம் 200” நிகழ்வுகளைத் தமிழர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய கப்பல்களில் நம் மக்கள் எழுப்பிய ஓலமும் மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடந்துசெல்லும் பொழுது பலியானவர்கள் எதிர்கொண்ட தருணங்களும் நமக்குத் தெரியாது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய கதையை உலகமே அறிந்திருக்க, ஆதிலெட்சுமி கப்பல் மூழ்கிய கதையை தமிழர்களாகிய நாமாவது அறிவோமா?

கடல்கடந்து, காடுகடந்து, மலையில் நடந்து இவர்கள் போன கதை என்பது வலி நிரம்பிய ஒரு நீண்ட கதையின் முதல் பாகம் தான்.

பிரிட்டிஷாரால் இவர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்பட்டனர். 1948-ஆம் ஆண்டில் பிரிட்டிஷார், இலங்கையை விட்டு வெளியேறியதும் 10 லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது இலங்கை அரசு. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 90 விழுக்காட்டிற்கு பங்களித்துக் கொண்டிருந்த மக்கள் நாடற்றோர் ஆக்கப்பட்டனர்!

தங்களின் உழைப்பால் நவீன இலங்கையை உருவாக்கிய இம்மக்களின் தலைவிதியை சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் கையில் ஒப்படைத்துவிட்டுப் போனதற்காக பிரிட்டிஷார் பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர்.

இந்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் தனக்கென்ன என்றிருந்தனர்! இந்நிலை இன்றுவரை தொடர்கிறது.

இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக இருந்தவர்கள் இன்று நான்காம் இடத்தில் உள்ளனர். இலங்கையில் இனத் துடைப்புக்கு (ethnic cleansing) ஆளான முதல் சமூகம் மலையக த் தமிழர்கள்தான் (upcountry tamils)!

நாடற்றோர் ஆக்கப்பட்ட அம்மக்களை ஆடு, மாடுகள் போல தங்களுக்கு இடையே பிரித்துக் கொள்ளும் உடன்படிக்கையை இந்தியாவும் இலங்கையும் 1964-ஆம் ஆண்டில் போட்டுக் கொண்டன. 6 தலைமுறையாய் வேர்பிடித்து வாழ்ந்த மக்களைப் பிடுங்கி எறிவதற்கான உடன்படிக்கை அது!

மலையகத் தமிழர்கள்

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது போக இலங்கையில் எஞ்சியவர்கள் இன்றளவும் இரண்டாம் நிலை குடிமக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். உள்நாட்டிலும் கூலித் தொழிலாளர்களாக பல்வேறு மாவட்டங்களில் சிதறடிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததுபோல் இன்றும் லைன் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாடுபட்டு உருவாக்கிய நிலத்தில் அவர்களுக்கு எந்தப் பங்குமில்லை. கல்வி, சுகாதாரத்தில் ஏனைய இனச் சமூகங்களைவிட மிகவும் பின்தங்கியுள்ளனர்.

தாயகம் திரும்பிய தமிழர்கள்

வெறுங்கையோடு போய் பல தலைமுறைகள் இருந்து வளங்கொழிக்கும் தோட்டங்களை உருவாக்கி, பின்னர் வெறுங்கையோடு திருப்பி அனுப்பப்பட்டவர்களைத்தான் தாயகம் திரும்பியோர் (Repatriate) என்கிறோம்!

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களை அவர்தம் உறவுகள் ஏற்க மறுத்தன. ஆடு, மாடுகளைப் போல் பிரித்து கூடலூருக்கும் வால்பாறைக்கும் கொடைக்கானலுக்கும் அனுப்பியதோடு கேரளத்திற்கும் ஆந்திரத்திற்கும் கர்நாடகாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

உடன்படிக்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டதா? வந்தவர்கள் நிலை என்ன? யாரிடமும் பதில் இல்லை என்பதல்ல அவலம். இதுவரை யாரும் இந்தக் கேள்விகளைக் கேட்கவேயில்லை என்பதுதான் அவலம்!

நாடற்ற தமிழர்கள்

1964, 1974 உடன்படிக்கைகளில் இவர்களின் தாய்நாடு எது என்ற தலைவிதியை எழுதினார்கள். 1977, 1981, 1983 இல் தமிழருக்கு எதிராக அரசு ஆதரவுடன் இன வெறியாட்டம் நடத்தப்பட்டது. ஈழ மக்களின் தாயகத்தில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களும்தான்!

1980களில் ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றது. இராணுவப் பிடியில் இருந்து உயிருக்கு அஞ்சி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, மலையகத்தில் இருந்து தப்பிப் பிழைத்து வடக்கு, கிழக்கில் தஞ்சம் புகுந்திருந்த மலையகத் தமிழர்களும்தான்!

எந்த மண்டபம் முகாமில் இருந்து கூலிகளாக கப்பலில் ஏற்றப்பட்டார்களோ அதே மண்டபம் முகாமில் அவர்களின் தலைமுறையினர் நாடற்றோராக தஞ்சம் புகுந்தனர். படகில் வந்தவர்கள் என்ற காரணத்தின் பெயரால் “சட்டவிரோத குடியேறிகள்” என்று இந்திய ஒன்றிய அரசு இவர்கள் மீது முத்திரை குத்தியது.

பிரிட்டிஷார் உருவாக்கிய செயற்கைப் பஞ்சத்தால் தாய்மண்ணை விட்டு வெளியேற நேர்ந்தவர்களின் தலைமுறைகள் இன்று இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும் தமிழகத்தில் தாயகம்திரும்பிய தமிழர்களாகவும் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நாடற்றோராகவும் வாழ்ந்துவருக்கின்றனர்.

நான்காவது பிரிவினராக, உலகின் பல்வேறு நாடுகளில் குடிமக்களாகவும் ஏதிலிகளாகவும் சிதறியுள்ளனர். இவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கோரிக்கைகள்

  • நாடற்றோராகவும் ஏதிலிகளாகவும் முகாம்களுக்கு வெளியேயும் உள்ளேயும் வாழ்ந்துவரும் மலையகத் தமிழ் மக்களைப் பற்றிய ஆய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
  • சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பதை கருத்தில் கொண்டு இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
  • தாயகம் திரும்பியோரது வாழ்நிலையறிய தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்திட வேண்டும்.
  • அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்! தாயகம் திரும்பியோரில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளோருடைய நிலங்களுக்கும் வீட்டு மனைகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
  • மலையகத் தமிழர்கள் ஒரு தனித்த மக்கள் சமூகம் என்று இலங்கை அரசு சட்டவகையில் அங்கீகரிக்க வேண்டும்.
  • இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றி, ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டின் மூலம் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் மலையகத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

மலையகத் தமிழர்கள் பேரினவாத இலங்கை அரசின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். தாயகம் திரும்பியோர் இந்த மண்ணிலும் சிதறடிக்கப்பட்டுள்ளனர். நாடற்றோர் / ஏதிலிகள் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த இருநூறாண்டுக்கால ஓட்டத்தில் ஒரு கூட்டின் பறைவயாகப் புறப்பட்டோர் இப்படி சிதறடிக்கப்பட்ட வரலாறுதான் இந்த மலையகம் 200.

அந்த வரலாற்றின் முகட்டில் நின்றபடி கடந்த காலத்தை வாசித்து, நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு எதிர்காலத்திற்கு அடித்தளம் இடுவோம்! இரு நூறாண்டுகால வரலாற்றை நேர்ப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டுக்கும் உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கும் உண்டு என்று அறிந்தேற்போம்!

2023 அக்டோபர் 22, அன்று கோவையில்  மலையக, தாயகம்திரும்பிய தமிழருக்கான இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திரு. கந்தையா அவர்கள் தலைமையில் “மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு” நடைப்பெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களை சார்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.

மலையக, தாயகம்திரும்பிய தமிழருக்கான இயக்கம்
தொடர்புக்கு : 97511 5566



1500 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் வீணடிப்பு! 600 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு மருத்துவக் கல்வியை அலட்சியப்படுத்தும், மாநில உரிமையை நசுக்கும் பாசிச பிஜேபி அரசின்  கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

”நிகழாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணைய வழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் புறம்பானவை. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்திருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று சாம்பு சரண் குமார் அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.


படிக்க: நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!


இந்த உத்தரவால் நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர் இடங்கள் ஐந்தரை ஆண்டுகளுக்கு காலியாகவே இருக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கெனவே நாடு முழுவதும் 1500 எம்.பி.பி.எஸ் இடங்களை மோடி அரசு நிரப்பாமல் போட்டு வைத்துள்ளது. அத்துடன் இந்த 600 இடங்களும் சேர்த்து 2100-க்கும் அதிகமான இடங்கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு ஏற்கெனவே ஏழை, எளிய மாணவர்கள் எளிதில் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத நிலையை உருவாக்கிவிட்டது. நீட் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  பல லட்சங்கள் செலவிட்டால்தான் மருத்துவப் படிப்பு குறித்த கனவைக் கூட காண முடியும் என்ற நிலை உள்ளது.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


கல்வி, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட விசயங்களில் ஆணையங்களைக் கொண்டு வந்து மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு ஏற்கெனவே பறித்துவிட்டது. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றதால் மாநில அரசுகள் தங்கள் தேவைகளுக்கேற்ப சொந்தமாக முடிவெடுத்து அமல்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உரிமைகளைப் பறித்தது மட்டுமின்றி, தற்போது பல்வேறு விதிமுறைகளைக் காரணம் காட்டி மாணவர்களின் மருத்துவக் கனவை ஈவிரக்கமின்றி குழிதோண்டிப் புதைக்கும் வேலையை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழியாக ஒன்றிய பிஜேபி அரசு செய்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மாநில உரிமைக்கு எதிரானதாகவே உள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வந்து மாநில உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு இன்று மாநில உரிமைகளை அடியோடு பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை வீழ்த்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube