Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 143

வீரமரபு பாடல் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu Video Song

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடல் இன்று 11 மணியளவில் வினவு யூடியூபில் வெளியிடப்படும்.

Veera marabu Song | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க

பாருங்கள்! பகிருங்கள்!!

எமது பல்வேறு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தாரீர்… எமது வளர்ச்சிக்கு நன்கொடை தாரீர்!


நீங்கள் நன்கொடை செலுத்துவது எங்கள் பணியை மேலும் வளரச் செய்யும். நன்றி!

NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)

Account Type: Savings

Mobile – (91) 93 8465 9191
Email – vinavu@gmail.com

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | பகுதி 2

மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

000

தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கிறது காவிப்படை! || மே 15 மாநாட்டிற்கு வாரீர்! || மா.முத்துக்குமார்

000

மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்வோம்! || வழக்கறிஞர் இன்குலாப்

000

தமிழ்நாட்டை சுற்றி வளைக்குது பாசிச கும்பல்! | ச.விஜயன்
(குறிப்பு: மே 15 என தேதி மாற்றத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட காணொலி)

000

பாசிசத்திற்கு எதிராக இதுபோன்ற மாநாடுகள் தேவை | முருகானந்தம்
(குறிப்பு: மே 15 என தேதி மாற்றத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட காணொலி)

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!


அறிவிப்பு: மே 10 இன்று காலை 11 மணிக்கு மிகவும் வரைவேற்பை பெற்ற விடுதலைப்போரின் வீரமரபு – கானா பாடல் வினவு தளத்தில் வெளியிடப்படும் பாருங்கள்! பகிருங்கள்!!


‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து வலுத்துவருகிறது. காங்கிரஸை ஒழித்துக்கட்டுவதே நோக்கம் என்று செயல்பட்டுவந்த கெஜ்ரிவால், மம்தா கட்சியினரும் கூட, எதிர்க்கட்சிகளை குறிவைத்து சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் வேட்டை தீவிரமானது, ராகுலின் பதவி நீக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். நிதிஷ் குமாரின் இந்த முயற்சிக்கு மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி பீகாரிலிருந்து தொடங்கட்டும்” என்று மம்தாவும் கருத்து தெரிவித்திருந்தார். ஊடகங்களிலும் “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு நிதிஷ்தான் சரியான ஆள்” என்பது போன்ற விவாதங்கள் எழுந்தன.

ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைந்து, அது பா.ஜ.க.வை வீழ்த்துமளவிற்கு செல்வாக்கு பெறும் என்று வைத்துக் கொண்டாலும், புழுத்து நாறிக்கிடக்கும் போலி ஜனநாயகத் தேர்தல் அமைப்பில் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தும் ‘ஜனநாயகத்துக்கான போர்’ எப்பேற்பட்டதாக இருக்கும் என்பதற்கு, நிதிஷ் பீகாரிலேயே ஒரு முன்னோட்டத்தைக் காட்டியிருக்கிறார்.


படிக்க : தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ


அண்மையில் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, சிறை குற்றவாளிகளில் மன்னிப்புக்கு தகுதியான 27 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பிரபல தாதாவும் முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த் மோகன் என்பவரது பெயர் வெளியாகியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1994 ஆம் ஆண்டு கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த ஜி.கிருஷ்ணய்யா என்பவரை அடியாட்படையை ஏவி படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டவர்தான் இந்த ஆனந்த் மோகன். 2007ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணய்யாவை கொலைசெய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் குறைப்பு செய்யச் சொல்லி ஆனந்த் மோகன் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், அவரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் தற்போது மன்னிப்புக்கு தகுதியானோர் பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் விடுதலையாகக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பீகார் சிறைச் சட்டம் 2012-ன் படி, பணியில் இருந்த அரசு அதிகாரியைக் கொலைசெய்த குற்றவாளிகள் மன்னிப்புக்கு தகுதியானோர் கிடையாது. ஆனால், 24-04-2023 அன்று நிதிஷ் அரசு இச்சட்டத்தை தளர்த்தியது. மறுநாளே மன்னிப்புக்கு தகுதியானோர் பட்டியலில் ஆனந்த் மோகனின் பெயர் வெளிவந்துள்ளது.

ஆனந்த் மோகன் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அச்சமூகத்தின் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கும் உள்ளது. ஆகவே, அவருக்காகவே ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து அவர் விடுதலை செய்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குவங்கியை கவரலாம் என்பது நிதிஷ் குமாரின் திட்டமாக உள்ளது.

ஆனந்த் மோகன் விடுதலைக்குப் பிறகு சிறையில் இருக்கும் மேலும் சில ஆதிக்க சாதி கிரிமினல்களையும் விடுவிக்கக் கோரி சாதி வெறியர்கள் போஸ்டர்

இந்நிலையில்தான் இச்சட்ட திருத்தத்திற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குவங்கியை பாதிக்கும் என்பதால் நேரடியாக ஆனந்த் மோகனின் விடுதலையை எதிர்க்க முடியாவிட்டாலும், நிதிஷ் குமாரின் சட்ட திருத்த நடவடிக்கையை குற்றஞ்சாட்டி வருகிறது.

பீகாரின் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான சுஷில் குமார், “எந்த அடிப்படையில் சிறைச் சட்டம் திருத்தப்பட்டது” என்று கேள்வியெழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் ஐ.டி பிரிவு பொறுப்பாளரான அமித் மாளவியா, “ஆர்.ஜே.டி.யின் மோசமான சூழ்ச்சிகளுக்கு சரணடைந்ததற்காக நிதிஷ் குமார் வெட்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக கிரிமினல் கூடாரத்தின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஒருவர் எப்படி இந்தியாவின் முகமாக முடியும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அமைச்சரான கிரிராஜ் சிங், “ஆனந்த் மோகன் நிதிஷ் அரசுக்கான பலிகடா” என்று தெரிவித்திருந்தார்.

தன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் பா.ஜ.க.வின் போலி வேடத்தை நிதிஷ் குமாரும் அம்பலப்படுத்தியுள்ளார். “இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு சமூகத்தின் மத்தியில் செல்வாக்கு பெற்ற நபராக விளங்கும் ஆனந்த் மோகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிவந்த கட்சி இன்று எதிர்க்கிறது” என்று பா.ஜ.க.வின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

மேலும், ஆனந்த் மோகனின் மகனும் ஆர்.ஜே.டி (ராஷ்டிர ஜனதா தளம்) கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள சேத்தனின் நிச்சயதார்த்தத்திற்கு ஆனந்த் மோகன் பரோலில் வெளிவந்திருந்தபோது, பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காட்டி அம்பலப்படுத்தியுள்ளார்.

2016-இல் ஒன்றிய அரசு கொண்டுவந்த “மாதிரி சிறைக் கையேட்டை” (model prison manual) முன்மாதிரியாகக் கொண்டுதான் பீகார் மாநில சிறைச் சட்டம் 2012-யும் திருத்தியிருக்கிறோம் என்றும் பா.ஜ.க. தேவையில்லாமல் அரசியல் செய்வதாகவும் நிதிஷ் குமார் சாடியுள்ளார்.

ஆனந்த் மோகன் விசயத்தில், நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக ஏறியடித்துப் பேசவும் முடியாமல், கண்டிக்காமல் அமைதியாக இருக்கவும் முடியாமல் தவித்துவருகிறது பா.ஜ.க. ஏற்கெனவே மகனின் திருமணத்திற்காக பரோலில் வந்திருந்த ஆனந்த மோகன், “தான் நன்னடத்தை அடிப்படையிலேயே விடுதலைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், என் விடுதலைக்கு நிதிஷ் குமார் அரசு அழுத்தம் கொடுத்தது என்றெல்லாம் பேசுபவர்கள், பேசுவார்கள்; அவர்கள் எல்லோரும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கும் நிதிஷின் அழுத்தம்தான் காரணம் என்றுகூட பேசுவார்கள்” என்று மறைமுகமாக பா.ஜ.க.வை விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வின் எதிர்ப்பைத் தாண்டி, கொலைசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணய்யா ஒரு தலித் என்பதால் தலித் அமைப்புகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளாலும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை கண்டிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நிதிஷ்குமார்தான் பொருத்தமானவர் என அவருடன் கூடிக் குலாவிய மம்தா, ஆனந்த் மோகனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறைத்துறை சட்டங்களில் திருத்தம் செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. பீகார் அரசின் முடிவு நாடு முழுவதும் தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கிருஷ்ணய்யா ஒரு நேர்மையான அதிகாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை கொலைசெய்த ஆனந்த் மோகனின் விடுதலை அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.

பீகாரின் மஹாபந்தன் கூட்டணியைப் பொறுத்தவரை, அதற்கு ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கணிசமான வாக்குவங்கி உள்ளது. ஆனால் ராஜ்புத் போன்ற முன்னேறிய ஆதிக்க சாதியினரின் வாக்குவங்கியைப் பொறுத்தவரை பா.ஜ.க.விடமே உள்ளது.


படிக்க : பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை


அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையத்தின் கூற்றுப்படி, 2020 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் சீட்டுகளில் 24.5 சதவிகிதம் (110) ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளது. 11.8 சதவிகிதம் பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளது மற்றும் 7.3 சதவிகிதம் பூமிஹாரிகளுக்கு கொடுத்துள்ளது.

தற்போது ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகளை மஹாபந்தன் கூட்டணியே வேட்டையாடுவதற்கு ஆனந்த் மோகன் விடுதலை வழியேற்படுத்தியிருக்கிறது. 90களில், லாலு பிரசாத் யாதவ் மண்டல் கமிஷனை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோரிடையே செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்தபோது, மண்டல் கமிஷனை எதிர்த்து அரசியல்செய்து ராஜ்புத் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளிடையே செல்வாக்குமிக்க தலைவராக உயர்ந்தவர் ஆனந்த் மோகன். பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு சமூகநீதி அரசியலை முன்னெடுப்பதாக வேடமிடும் நிதிஷ்குமாரின் லட்சணம் இது.

ஏற்கெனவே பார்ப்பன-உயர்சாதியினரின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்தவர்தான் நிதிஷ்குமார். நாளை ஓட்டுவங்கிக்காக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. பறித்தெடுப்பதையும் அவர் ஆதரிக்கக் கூடும். பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமல்லவா!

தலையங்கம்
புதிய ஜனநாயகம் – மே 2023

ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது

ல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி, தமிழ்நாட்டை அதன் பின்னேயே சுற்றவைக்கிறார் ஆர்.என்.ரவி. இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கா. தீட்சதர்கள் வீட்டுகளுக்குள் யாராவது போக முடியுமா? வீட்டிற்குள் புகுந்து பார்ப்பன சிறுமிகளை இழுத்துக்கொண்டு வந்து கன்னித்தன்மை பரிசோதனை எல்லாம் நடத்தமுடியுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் – நாங்கள் இருவிரல் பரிசோதனை முறையே எப்போதோ விட்டுவிட்டோம்.. இப்போது அப்படி ஒரு பரிசோதனை முறையே கிடையாது என்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’

“குஜராத் ஸ்டோரி” பெண்கள் மீது காவி கும்பலின் ‘அக்கறை’யின் உண்மை முகம் இது!

கேரளத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தைத் தூண்டிவிட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பயங்கரவாதத்தின் உண்மையை வெளிகொண்டுவந்துள்ளது என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பல் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என அண்மையில் வெளியான தரவுகள் கூறுகின்றன.

வடஇந்தியாவை போல, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எளிதில் கால்பதிக்க முடியாத நிலையே நீடித்துவருகிறது. கேரளத்தில் ஊடுருவ தற்போது பாசிசக் கும்பல் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை கையிலெடுத்திருக்கிறது. இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து-கிறித்துவ பெண்கள், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக இப்படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

படிக்க : மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

ஆனால், இத்தனை ஆயிரம் பெண்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்ததற்கான எந்த அடிப்படை ஆதாரமும் அரசாங்கத்திடமில்லை என்பதிலேயே காவிகளின் பொய் மூட்டை அவிழ்ந்துவிட்டது. இவையன்றி, கல்வி அறிவில் முன்னேற்றம் அடைந்திருக்கும் கேரளத்தில், பெண்களை எளிதில் மூளைசலவை செய்யமுடியாது போன்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி காவிகளின் நச்சுப்பிரச்சாரம் பொதுவெளியில் முறியடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேலை செய்துவரும் காவிகள், இதற்கு முன்னரும் முஸ்லிம் ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீலிக்கண்ணீர் வடித்தது. லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து வருவதாக பிரச்சாரத்தை செய்தது. காவிக் கும்பலின் இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் இதேநேரத்தில், காவிகள் கொண்டாடும் குஜராத் மாநிலத்தின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2022-இல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, குஜராத்தில் மட்டும் 41,621 பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். 2016-இல் 7,105 பெண்களும்; 2017-இல் 7712 பெண்களும்; 2018-இல் 9246 பெண்களும்; 2019-இல் 9268 பெண்களும்; 2020-இல் 8290 பெண்களும் காணவில்லை என தரவுகள் கூறுகிறது.

பணத்துக்காக கடத்தப்படும் பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள்; பல பெண்கள் கூலி அடிமைகளாக்கி, பிற மாநிலங்களில் விற்றுவிடும் கோர சம்பவங்களும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

படிக்க : ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமை குழுவின் உறுப்பினருமான சுதிர் சின்ஹா, “காணாமல் போனவர்கள் குறித்த வழக்கு, கொலை வழக்கைப்போல பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு குழந்தை காணாமல்போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போலீசு அலட்சியம் காட்டுகிறது” என குஜராத் மாநிலத்தின் உண்மை முகத்தைத் தோலுரித்து காட்டுகிறார்.

தற்போது கேரளத்தில் மதப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தி கேரளா ஸ்டோரியை கையில் எடுத்திருக்கும் காவிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மேற்கண்ட தரவே(குஜராத் ஸ்டோரி) துலக்கமான சான்று.

ஆதினி

மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

பா.ஜ.க எம்.பியின் பாலியல் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.. போராட்டத்தின் தீவிரத்தால் பாஜக எம்.பி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – மே 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

மே – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி.பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : ‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

♦ பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

♦ ஸ்டெர்லைடை திறக்கச் சதி: மீண்டும் ‘வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

♦ மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

♦ பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

♦ தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

♦ பாசிசக் கும்பலின் கனவு பலிக்காது! இது தமிழ்நாடு!

♦ பாசிஸ்டுகளை வீழ்த்த சந்தர்ப்பவாத வழிமுறை: எங்கு போய் முடியும்!

♦ ‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

♦ நூல் அறிமுகம்: கார்ப்பரேட் பாசிசக் கொடூரத்தின் நேரடி சாட்சியம்: மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டக் கதை!

♦ பகுதி 3: புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

புதிய ஜனநாயகம்

கால்டுவெல்-ஐ நினைவுகூர்வோம்!

காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி நடைபெறும் இச்சூழலில் தமிழ் மொழியை வைத்து தமிழ்நாட்டை பிடிக்கமுற்படுகிறது பா.ஜ.க. மறுபுறம் தமிழ் அவமதிப்புக்குள்ளாகிறது. ஜீயர் துவங்கி அண்ணாமலை வரை தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டையும், திராவிட இனத்தையும், தமிழ் மொழியையும் தொடர்ந்து ஏளனம் செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சொன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது பிறந்த தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.

1814-இல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்புரைக்காக  தமிழகத்திற்கு வந்தார்.  சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘மிலேச்சரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.

படிக்க : கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும், தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழி ஆராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை  ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது.  அதுவரை,  இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும்,  அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது. 1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல 4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் ஆன்மிகம், பண்பாடு, சாதி மேலாதிக்கம் என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத்  தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

படிக்க : வீரமரபு பாடல் – டீசர் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu – Teaser

திராவிட இயக்கம் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் சாக்கடையில் ஊறிச் சீரழிந்தது.  அதன் ஊழல்களையும் வெற்று முழக்கங்களையும் பித்தலாட்டங்களையும் மட்டும் முன்வைத்து பார்ப்பன ஊடகங்களும் அறிவுத் துறையினரும், திராவிடம் என்பதே மோசடி, இவர்கள் கூறும் வரலாறே கிறித்துவ பாதிரியின் சதியால் உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மரபென்பது வேதத்தை முன்னிலைப்படுத்திய மரபென்றும், கால்டுவெல்லும் திராவிட இயக்கமும் கூறுவது போல பார்ப்பன எதிர்ப்பு மரபென்பது தமிழ்ப் பண்பாட்டிலேயே கிடையாது என்றும் நிலைநாட்டிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனக் கத்தும் தமிழ் இனவாதிகளும், பார்ப்பனர்களின் சதியோடு கைகோர்த்து, தமிழ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வளர்க்கின்றனர்.

வளர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், “பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

புதிய ஜனநாயகம், ஜூன் 2014 (சிறு திருத்தங்களுடன்)

ஆர்.என்.ரவி கைது செய்யப்படுவாரா? || தோழர் மருது

சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.. ஆளுநரின் இதுபோன்ற புனைசுருட்டுக்களை தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்தி வருகிறது. வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என முழங்குவோம்.. பொய் புனைசுருட்டுகளை பேசிவரும் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காசி தெலுங்கு சங்கமம் – தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் பாசிசப்படை!

0

டந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதியின் மானசரோவர் படித்துறையில் காசி தெலுங்கு சங்கமம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீகாசி தெலுங்கு சமிதி ஒரு நாள் மட்டும் நடத்தியுள்ளது. வாரணாசிக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வரும், 12 நாட்கள் நடைபெறும் கங்கா புஷ்கரலு திருவிழாவின் போது நடத்தப்பட்டுள்ளது.

இது, காசிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே உள்ள பண்டைய நாகரிக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை எடுத்துக்காட்டும் விதத்தில் நடத்தப்படுவதாக சங்கிக் கும்பலால் கூறப்பட்டது. இது ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களின் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தை நிறுவுகின்ற சதியாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இத்தகைய பன்முகத்தன்மைகளின் சங்கமம், நாட்டின் எதிர்காலத்துக்கான முழு ஆற்றலையும் உறுதி செய்யும்; தேசியவாத உணர்வையும் மேலோங்க செய்யும்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தெலுங்குமொழி, தெலுங்கு இன மக்கள், ஆந்திரா, தெலுங்கானா என்ற மாநில உணர்வுகளை மட்டுப்படுத்தி ‘இந்து இந்தி இந்தியா’ என்ற இந்துராஷ்டிர நீரோட்டத்தில் கலக்கச் செய்வதே இதன் நோக்கம் என்பதை அவரே உறுதிபடுத்தியுள்ளார்.

படிக்க : காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

இதே யுக்தியைதான் தமிழ்நாட்டிலும் கையாண்டது காவிக் கும்பல். காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகிய பெயர்களில் நிகழ்ச்சியை நடத்தியது. தற்போது காசி தெலுங்கு சங்கமம் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களை குறிவைத்துள்ளது. இவையெல்லாம் காவிக்கும்பலின் தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் நயவஞ்சகத் திட்டமான ‘மிஷன் சவுத்’ திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

வடமாநிலங்களில் பெரும்பாலானவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள காவிக்கும்பல், தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் தென்மாநிலங்களை (தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா) எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்கிறது. மிஷன் சவுத் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டது. மோடி, அமித்ஷா, நட்டா ஆகிய மூவரின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்துவது ஆகும்.

பா.ஜ.க தலைவர்களை பிற மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்களில் வேலை செய்ய இறக்குவது; பிற அரசியல் கட்சி பிரமுகர்களை பேரத்தின் மூலம் தன் கட்சிக்குள் இழுத்துக்கொள்வது; சினிமா பிரபலங்களை முன்னிறுத்துவது போன்ற பல வழிமுறைகளில் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல்.

கர்நாடகாவில் போலீசு அதிகாரியாக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டதும், அ.தி.மு.க கட்சியானது பா.ஜ.க-வின் ஒரு பிரிவாகவே மாறியிருப்பதும், ரஜினிகாந்தை பா.ஜ.க கட்சிக்குள் இழுக்க முயன்றதும், இளையராஜா போன்ற பல சினிமா பிரபலங்கள் சங்கிகளாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வதும் இத்திட்டத்தின் அடிப்படையில்தான்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி கேரள பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதும், பிரிக்கப்படாத ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கிரண் குமார் ரெட்டி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவரான சி.கேசவன் பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதும் இத்திட்டத்தின் அங்கங்களாகும்.

மேற்கூறிய வழிமுறைகளைத் தாண்டி, கலாச்சார, பண்பாட்டு ரீதியாகவும் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல். “ஒரே பாரதம்; உன்னத பாரதம்” என்ற பெயரில் நடத்தப்படும் காசி, சௌராஷ்டிரா சங்கம நிகழ்ச்சிகள் அதன் வெளிப்பாடுதான். ஆனால் தமிழ்நாட்டில் காசி மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் தமிழக மக்கள்  மத்தியில் எடுபடவில்லை.

காசி தமிழ் சங்கமத்தை ஓட்டி பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சாரம் செய்தன. ஆனால், அவை மக்கள் மத்தியில் பேசுபொருளாக கூட ஆகவில்லை.

சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்றும், மதப்பிரச்சார நிகழ்ச்சியை போன்று இருப்பதாகவும் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான கருத்தரங்கமோ, தமிழ் அறிஞர்களோ அங்கு யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

படிக்க : வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!

வரவேற்பு பதாகைகளில் தமிழ் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததை பலரும் விமர்சித்ததோடு, இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் இலட்சணமா என்று பலரும் கலாய்த்து தள்ளினர்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாட்டில் உள்ள 24 இலட்சம் சௌராஷ்டிரா மக்களை கவர்வதற்காக நடத்தப்பட்டது. காசி தமிழ் சங்கமம் அளவுக்கு கூட, இது மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. இந்நிகழ்ச்சிகள் மூலம் தமிழர் நலனுக்காக பாடுபடுகின்ற கட்சி பா.ஜ.க என்ற போலிப்பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது காவிக்கும்பல்.

மேற்கூறியவை மட்டுமல்ல, தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்காக பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் முயற்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் முறியடித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களைப் போல, தென்னிந்தியாவை கைப்பற்ற பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மக்களும் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

பிரவீன்

மே 1 மாநாடு – மே 15-க்கு மாற்றப்பட்டது ஏன்? || தோழர் வெற்றிவேல்செழியன் || வீடியோ

”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்

“சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரைசை கட்டியமைப்போம்!” என்ற தலைப்பின் கீழ்  மே தின பேரணி ஆர்ப்பாட்டம்  ஆவடியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டலம் சார்பாக நடத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் பேரணி தொடங்கியது. பறை இசையுடன் தொடங்கியது பேரணி,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  ஆ.கா சிவா தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி  வடக்கு மண்டல செயலாளர் தோழர் மா சரவணன் அவர்கள் உரையை தொடங்கினார், அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் அமிர்தா அவர்கள் இன்றைய சூழலில் பாசிசம் மக்களை எப்படி பாதிக்கின்றது என்று விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்  தோழர் துணைவேந்தன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள்  தங்களுடைய சமுதாய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்  என்பதை விளக்கிப் பேசினார்.

அடுத்ததாக புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னாள் மாநில பொருளாளர் தோழர் பா விஜயகுமார் தனது உரையில் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று இழந்து வருகிறோம், அதை மீட்டெடுக்க தொழிலாளர் வர்க்கமாக ஓரணியில் திரள வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார். இடையிடையே விண்ணதிர முழக்கங்கள் முழங்கப்பட்டன. இறுதியாக  வடகு மண்டல பொருளாளர் தோழர் ப.சக்தி வேல் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டனர்.

தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

***

”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக; சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” என்ற தலைப்பில் ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம் சார்பாக உசிலம்பட்டியில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

திரிபுரா, நாகலாந்து, மேகலாயா தேர்தல் முடிவுகள்: எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

சென்ற மாதம் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜ.க கட்சியானது சமூகத்தில் அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வெற்றி கேரளாவிலும் எதிரொலிக்கும் என்றும் தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் பெருமிதம் கொண்டார் மோடி. பெரும்பான்மை ஊடகங்களும் “வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க, மோடி அலையால் இது சாத்தியமாயிற்று” என மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடின.

மூன்று மாநிலங்களில் திரிபுராவில் மட்டுமே 32 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. மற்ற இரண்டு மாநிலங்களான நாகலாந்தில் 12 தொகுதிகளிலும், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அம்மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் ஆட்சியில் பங்குபெற்றிருக்கிறது பா.ஜ.க.

நாகலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. மேகாலயாவில் எந்தக் கட்சியும் பெரும்பானமை பெறவில்லை. அம்மாநில ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், மற்றொரு மாநிலக் கட்சியான ஜக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இச்சூழலில், ஆளும் தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மலைப்பகுதி மக்கள் ஜனநாயக் கட்சி (Hill State Peoples’ Democratic Party) ஆகியவற்றின் ஆதரவுடன் தொங்கு சட்டசபை அமைந்திருக்கிறது.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


தேர்தலுக்கு முன்பு வரை தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்துவிட்டு தேர்தலின்போது கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய மக்கள் கட்சியை ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்தது ‘உத்தம’க் கட்சியான பா.ஜ.க. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறின. ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அதிகார வெறியால் பா.ஜ.க.வே கூறிய ஊழல்கட்சிக்கு ஆதரவளித்து, அமைச்சர் பதவியும் பெற்றிருக்கிறது.

இம்மூன்று மாநிலத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம் கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றிகளைக் கூடப் பெறவில்லை. “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் கனவானது வடகிழக்கில் நனவாகி வருகிறது. திரிபுராவில், இத்தேர்தலுக்காக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசுடன் சி.பி.எம் வைத்த கூட்டணியும் பலனில்லாமல் போய்விட்டது. வெறும் 11 தொகுதிகளில்தான் சி.பி.எம் வெற்றி பெற்றிருக்கிறது.

இம்மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “வடகிழக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இம்மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டது. இந்த வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக மத்தியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும். ஆனால், தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர்” என்றார்.

சி.பி.எம்-இன் அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையில், “திரிபுரா மாநிலத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பணத்தை வாரியிறைத்தும், முறைகேடுகள் செய்தும் குறைவான பெரும்பான்மையில்தான் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் மூன்றிலும் ஏதாவது ஒரு வகையில் பாசிஸ்ட்டுகள் ஆட்சி அமைத்திருப்பது குறித்து காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளின் நிலைப்பாடு வெறும் தொகுதி குறித்தும், வாக்குவீதம் குறித்துமானதாகவே இருக்கின்றன.  தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுமளவிற்கு வன்முறை மாடலைக் கட்டவிழ்த்துவிட்ட பிறகும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிப்பதே முதல் இலக்கு என்று கம்யூனிஸ்ட்களை வேட்டையாடும் சூழலில், இக்கட்சிகளின் இத்தகைய நிலைபாடானது யதார்த்தத்தைக் காண மறுக்கும் குருட்டுத்தனமாகும்.

இலவசம்…  ‘வளர்ச்சி’ … இரட்டை நாக்கு – பா.ஜ.க.வின் வெற்றி சூத்திரம்

இலவசங்களால் நாடு கெடுகிறது என்று இலவசங்களைக் கண்டு எரிச்சலடைகிற, அவற்றை ஒழித்துக்கட்டத் துடிக்கிற காவி பாசிசக் கும்பல்தான் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில்  வகைதொகையின்றி பல கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கிறது. இந்த மூன்று மாநிலத் தேர்தல்களிலும் பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. பெண் குழந்தைகளுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி, இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, இரண்டு இலவச எரிவாயு உருளை (சிலிண்டர்), நாகலாந்து கலாச்சார ஆய்வு நிதி 1,000 கோடி ரூபாய், விவசாயிகளுக்கான பிரதமர் நிதி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும், பிறந்த பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள பத்திரம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துத்தான் தேர்தலை எதிர்கொண்டது பாசிசக் கும்பல்.

இலவசத் திட்டங்கள்  மட்டுமின்றி, மோடி அலையும், மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களும்தான் பா.ஜ.கவின் வெற்றிக்குக் காரணம் என்கின்றன ஊடகங்கள்.  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-லிருந்து) வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறியிருப்பதால்தான் பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்கின்றன.  இந்தியாவிற்கே மாடல் என்று முன்னிறுத்தப்படும் குஜராத் மாடலின் யோக்கியதை ஊரறிந்ததுதான். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தபோது, குஜராத் மாநிலத்தில் குடிசைகளை திரையிட்டு மறைத்ததை நாம் அறிவோம்.  இத்தகைய வளார்ச்சி மாடலின் நாயகர்கள் வடகிழக்கில் கொண்டுவந்த வளர்ச்சி என்னவாக இருக்கும்?

வடக்கிழக்கின்  “எட்டு மாநிலங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி” என்று கடந்த 2014-லிருந்து பல்வேறு கட்டுமானத் திட்டங்களை அறிவித்து வருகிறது கார்ப்பரேட்தாசனான மோடி அரசு. ரயில்வே, நான்கு வழிச்சாலைகள், வான் வழிப்போக்குவரத்து, எய்ம்ஸ் மருத்துவமனை என பல திட்டங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசானது வடகிழக்கு மாநிலங்களில் 1,34, 200 கோடி ரூபாய் செலவில் சாலை, ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்திற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள 187  திட்டங்களில்,  45 திட்டங்கள் மட்டுமே கடந்த எட்டு ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளன. மற்ற திட்டங்களில் சில கட்டுமானப் பணியில் உள்ளன, சில இன்னும் தொடங்கப்படாமலும் உள்ளன.

நாகலாந்தில் திமபூர்-கோஹிமா சுங்கச்சாவடிகளுடன் கூடிய நான்குவழிச்சாலைக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைத் திட்டமானது, திமபூர்-கோஹிமா தொடங்கி, இந்திய எல்லையக் கடந்து மியான்மர்-பாங்காங்க் வழியாக தாய்லாந்துடன் சாலைப் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் தொடக்கம்தான் இது.  “ஆசியாவின் சுதந்திர வர்த்தகப்பகுதி” (ASEAN-Free trade area) என்ற அடிப்படையில் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கானதுதான் இத்திட்டம். இதை மூடிமறைத்துவிட்டு வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்காக உள்கட்டுமானங்களை உருவாக்குவதுபோல் கூப்பாடு போடுகின்றன காவிக் கும்பல்கள்.


படிக்க: திரிபுரா காவிமயமான வரலாறு !


காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்ட ரத்தானது காஷ்மீரின் லித்தியத்தை அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல் கொள்ளையிட வழிவகுத்தது போல, வடகிழக்கில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்  வடகிழக்கின் வளங்களை உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கொள்ளையர்கள் சூறையாடுவதற்கானதாக இருக்கும் என்று வடகிழக்கு மக்கள் உணரும் தருணம் வெகு தூரமில்லை.  இமயமலைப் பகுதிகளில் உள்ள இந்த மாநிலங்கள் எதிர்கால “ஜோஷிமத்” போல் சூழலியல் பேரிடர்களை எதிர்கொண்டாலும் ஆச்சரியமில்லை.

வடகிழக்கு மாநிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் போடுவதற்காக இலவச அறிவிப்புகளை  ஒருபுறமும், நரித்தனமான இரட்டை நாக்கு சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை மறுபுறமும் கையாண்டு வருகிறது. இம்மூன்று மாநிலங்களில் நாகலாந்து, மேகாலயா இரண்டும் கிறித்துவர்கள் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு விவசாயம் செழிப்பாக இல்லாததால் மாட்டுக்கறிதான் பிரதான உணவாக, மக்களின் பண்பாடாகவும் இருக்கிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் மாட்டுக்கறி தடைச்சட்டத்தை நிறைவேற்றுகிற, மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய் பரப்பி அப்பாவிகளை கொலை செய்யும் காவி பாசிசக் குண்டர்கள் இம்மாநிலங்களில் மாட்டுக்கறி தடை குறித்து பேசுவதே இல்லை.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் “கிறித்துவ கைக்கூலிகள்”, “பாவாடைகள்” என்று கூச்சலிடுகிற, கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற இக்கும்பல்தான், இம்மாநிலங்களில் வெற்றிபெறுவதற்காக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக கே.ஜே அல்போன்ஸ் என்ற கேரள கிறித்துவரை நியமித்து செயல்பட்டது. இம்மாநிலங்களில் 80 தொகுதிகளுக்கு (மேகலாயா 60, நாகலாந்து 20) 75 தொகுதிகளில் கிறித்தவர்களையும், ஐந்து தொகுதிகளில் இதர இந்து அல்லாதவர்களையும் வேட்பாளாராக நிறுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார், வடகிழக்கு மாநில பா.ஜ.கவின் கூடுதல் ஒருங்கிணைப்பாளரும், தேசிய செயலாளருமான ரிதுராஜ் கிஷோர் சிங்கா.

நாகலாந்தில் நொய்பியூ ரியோ தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்கும்போது, அல்லேலுயா பாடியும், “அரசர்களின் அரசனான, தேவர்களின் தேவனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தால்” என்று கூறிதான் ரியோ முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதேமேடையில் எந்தவித சலனமுமின்றி இயல்பிலேயே இந்துவெறியர்களான அமித்ஷாவும் மோடியும் அமர்ந்திருக்கின்றனர். அதிகாரத்தில் பங்குபெறுவதற்காக எந்தளவிற்கு நரித்தனமாக சந்தர்ப்பவாதத்தில் காவி பாசிஸ்ட்டுகள் ஈடுபடுவர் என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

பாசிசக் கும்பலின் இச்சந்தர்ப்பவாதத்தை வடகிழக்கு மாநிலங்களிலும், ஏனைய இந்திய பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று பா.ஜ.கவிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் முயலவில்லை. அந்த அளவிற்கு, பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை வரும்போது வெற்றிபெறலாம் என்று மாயையில், கனவுலகில் சஞ்சரிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்துராஷ்டிர நீரோட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள்

பா.ஜ.க எதிர்ப்பு அலை உருவாகும் என எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் சூழலில், காவி பாசிஸ்ட்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் வேர்பரப்பி வருகின்றனர். ஒரே நாடு – அது இந்துராஷ்டிரம் என தனது இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது காவி பாசிசக் கும்பல். 2024 நாடாளுமன்ற தேர்தலே இந்துராஷ்டிரத்திற்கான நுழைவுவாயிலாக இருக்கும் சூழலில், இம்மூன்று மாநிலத் தேர்தல்களும், இதர மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் பா.ஜ.க.விற்கு முக்கியமானதாக இருக்கின்றன.  இச்சட்டமன்றத்தேர்தல்களில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெல்வது மட்டுமல்ல, அம்மாநிலங்களில் இந்துராஷ்டிர எதிர்ப்பு மனநிலையை ஒழிக்கவும், இந்துராஷ்டிர ஆதரவு மனநிலையை உருவாக்குவதற்கும் இத்தேர்தல்களை கருவியாக அணுகுகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

ஏற்கனவே, வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், வித்யாலாயாக்கள் ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு கொண்ட பழங்குடியினர்களை இந்துக்களாக மதம்மாற்றி வருகிறது பா.ஜ.க. 2014 மோடி ஆட்சிக்குப் பிறகு பெருமளவில் ஆர்.எஸ்.எஸ் இம்மாநிலங்களில் ஊடுருவி வேலை செய்கிறது. கடந்த 2018-இல் திரிபுராவில் பா.ஜ.க வெற்றி பெற்றதும் இவ்வாறே. தற்பொழுது இம்மூன்று மாநிலங்களில்  பா.ஜ.க வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் செய்த  ‘தன்னலமற்ற’ சேவையால் கனிந்தது என ஒப்புதல் வாக்குமூலமளிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ ஏடான  ஆர்கனைசர்.

குறிப்பாக, நாகலாந்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராளியும், கிறித்துவ எதிர்ப்பு கொண்டவருமான கைதின்லியூ என்பவரின் புகழை தனக்கு சாதகமாக கிறித்துவ எதிர்ப்பு மனநிலைக்கும், இந்துத்துவாவை பரப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது பா.ஜ.க. நாகலாந்தின் பெண் தெய்வங்களை கிருஷ்ணனின் மனைவி ருக்மணி, அர்ஜூனனின் மனைவி என்று பார்ப்பனமயமாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஒரே தேச எதிர்ப்பு வரலாறு கொண்ட வடகிழக்கு மாநிலங்களை  ராமாயண-மகாபாரத காலத்திலிருந்து  இந்தியாவுடன் இருப்பதாக கதைகட்டி வருகிறது.

72 வருடங்களாக,  போலி சுதந்திரத்தையோ, போலி குடியரசு தினத்தையோ கொண்டாடாத வடகிழக்கு மக்களிடம் அதை கொண்டாடுவதற்கான பழக்கத்தை, இந்தியாவின் அங்கம் என்ற மனநிலையை உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்துராஷ்டிர நீரோட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களை ஒன்று கலக்கச் செய்ய இந்து-இந்திய மனநிலை உருவாக்குவது முதன்மையானதாகும். இதை உருவாக்குவதற்காகவும், தனது அடித்தளத்தைப் மேலும் மேலும் பலப்படுத்தவும் இத்தேர்தல் வெற்றிகளை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பயன்படுத்தப் போகிறது.

ஆர். எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சித்தாந்தப் போராட்டமாகும். சட்டப்பூர்வமான வழிகளில் மட்டுமின்றி, சட்டவிரோதமான வழிகளில் அக்கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்கும் வகையிலானதாக நமது போராட்டம் பல்வகைப்பட்டதாக இருக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

அப்பு

அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை

கில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள்.

மேலும்..

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!