Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 284

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 09.12.2019

பத்திரிகை செய்தி

♦ குடியுரிமை திருத்தச் சட்டம்,2019(CITIZENSHIP AMENDMENT BILL,2019) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NATIONAL REGISTER OF CITIZENS) அரசியல் சட்டம் பிரிவு 15(1)& 14- மற்றும் மத,இனச் சார்பின்மைக்கு எதிரானது!

♦ ஈழத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது மனித குல விரோத,மனித உரிமை பறிப்பு நடவடிக்கை!

♦ குடியுரிமை திருத்தச் சட்டம்,2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு! இந்தியாவை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்கு!

இன்று 09.12.2019-ல் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 பாஜக அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்குப் பொருந்தாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 – அரசியல் சட்ட விரோதமானது

1. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 5 – 11 குடியுரிமை தொடர்பாகப் பேசுகிறது. இதன்படி பிரிட்டிஷ் இந்தியாவின் மக்களுக்கு, இந்திய அரசுச் சட்டம், 1935-ன்படி குடியுரிமை வழங்க வேண்டும். பாகிஸ்தான், வங்காளதேசம் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கங்கள்தான். எனவே பிரிவினையின் போதும், பின்பும் வந்த மக்களுக்கு பிரிட்டிஷ் இந்தியா குடியுரிமை பெற்றவர்கள் என்று கருதியே குடியுரிமை வழங்க வேண்டும்.

2. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அடிப்படையில் எவரையும் அரசு பாகுபடுத்தக் கூடாது என்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – மோடி – அமித்சா அரசின் சட்டம் இசுலாமியர்களை மத அடிப்படையிலும், ஈழத் தமிழர்களை இன அடிப்படையிலும் பிரிவினை செய்கிறது. எனவே அரசியல் சட்டப்படி புதிய குடியுரிமைச் சட்டம் செல்லாது.

3. குடியுரிமை என்பது அனைத்து உரிமைகளின் தாய் உரிமை போன்றது. குடியுரிமை இல்லையேல் எந்த உரிமையும் பெறமுடியாது. எனவே குடியுரிமை மறுக்கப்படும் மக்களுக்கு கருத்துரிமை, வழிபாட்டுரிமை, சுரண்டலுக்கெதிரான உரிமை, அரசுத் திட்டங்கள், வேலை வாய்ப்பு, குழந்தைகள் படிப்பு, வங்கிக் கணக்கு என எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் நாடு முழுவதும் பல கோடி மக்கள் சட்டவிரோத குடியேறிகளாக அறிவிக்கப்பட்டு ஜெர்மனியில் யூத, அமெரிக்காவில் கறுப்பின ஆப்ரிக்க அடிமை மக்கள் போல வதை முகாம்களில் அடைக்கப்படுவர். இவர்கள் சூடு வைக்கப்பட்ட அடிமைகள் போல, அடையாளம் இடப்பட்ட மக்களாக, எவ்வித உரிமையும் அற்றவர்களாக, அரசின் மூர்க்கமான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர்.

4. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். எனவே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும்.

படிக்க:
முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !
♦ தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

5. ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்?

6. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதேன்?

7. மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசின் இந்த நடவடிக்கை இசுலாமிய – தமிழர் விரோத வெறுப்பரசியலே. இந்து ஓட்டு வங்கியை மையமாகக் கொண்டது. அதிமுக இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். புதிய சட்டத்தை அனைத்துக் கட்சிகள், மக்கள் நிராகரிக்க வேண்டும்.

8. புதிய சட்டம் அமலாவது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும். நாகரீக நாடு என்ற நிலை மாறி காட்டுமிராண்டி நாடாக கருதப்படும். மொத்தத்தில் இந்நடவடிக்கை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே.

சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !

0

தெலுங்கானா காவல்துறையின் புனையப்பட்ட திரைக்கதையில் உருவான முந்தைய என்கவுண்டர்கள்

ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்களையும் தெலுங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை (06-12-2019) அதிகாலை, ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொன்ற செய்தி, நாடு முழுவதும் பரபரப்புக்குள்ளானது. “குற்றம் புனரமைப்பு” விசாரணைக்காக சந்தேக நபர்களான அரீஃப், சிவா, நவீன் மற்றும் சென்னகேஷவுலு ஆகியோரை காவல்துறையினர் குற்ற சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவித்தன. அப்போது அவர்கள் “காவல்துறையைத் தாக்கிவிட்டு தப்பிக்க” முயன்றதாகவும்  “தற்காப்புக்காக” காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா.

கழுகுப் பார்வை கொண்ட பலருக்கு, இந்த ‘என்கவுண்டர்’ முந்தைய இரண்டு சம்பவங்களுடன் முற்றிலும் ஒத்திருந்தது: ஒன்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த  ஆந்திர மாநிலத்தில் நடத்தப்பட்டது; இரண்டாவது 2015-ம் ஆண்டு தெலுங்கானா உருவானதும் நடத்தப்பட்டது.

2008 டிசம்பரில், வாரங்கலில் இரண்டு பொறியியல் மாணவர்கள் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஆந்திர அரசு போலீசார் சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மோதலில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. தற்போதைய கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கைக் கையாளும் சைபராபாத் காவல்துறைத் தலைவர் வி.சி. சஜ்ஜனர்,  குற்றம் சாட்டப்பட்ட இந்த மூன்று பேரும் கொல்லப்பட்டபோது வாரங்கலில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

காவல்துறை தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டுகளால் தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2015-ல், தெலுங்கானா மாநிலம் உருவான பின்னர், தல்க்ரீக் கல்பா-இ-இஸ்லாம் (டிஜிஐ) உறுப்பினரான விகாருதீன் அகமது மற்றும் நான்கு பேரை நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு ‘என்கவுண்டரில்’ போலீசார் கொன்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கை என்னவென்றால், வாரங்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகளான ஐந்து பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, காவல்துறையினரை தாக்கி, ஆயுதங்களை பறிக்க முயன்றதாகக்கூறி, என்கவுண்டர் செய்யப்பட்டனர். காவல்துறையினர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பயங்கரவாத வழக்குகளில் கைதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

படிக்க :
♦ ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு
♦ ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

சிறுநீர் கழிக்க வாகனத்தை நிறுத்துமாறு விகாருதீன் கேட்டுக் கொண்டதாகவும் ஐந்து கைதிகள்  ஒரு போலீசைத் “தாக்கி” ஆயுதத்தை பறித்தபோது  மற்ற போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொன்றதாகவும் சொல்லப்பட்டது.

என்கவுன்டர் காட்சியின் புகைப்படங்கள் ஆண்கள் கைவிலங்கு மற்றும் சங்கிலியால் கட்டப்பட்ட்டிருந்ததைக் காட்டின. மேலும் விகாருதீனின் தந்தை, இப்படிப்பட்ட நிலையில்போலீசாரிடமிருந்து ஆயுதத்தை அவர்கள் எப்படி பறித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். எழுத்தாளர் வரவர ராவும் இந்தக் கொலை குறித்து கேள்வி எழுப்பினார், இது “முன் திட்டமிடப்பட்டதாகும்” என்று கூறினார்.  இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன், இரண்டு சிமி செயற்பாட்டாளர்கள் இரண்டு போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த  ‘என்கவுண்டர்’ என அறிக்கைகள் தெரிவித்தன.

மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் என கூறப்படுபவர்களின் என்கவுண்டர்கள்:

தெலுங்கானா உருவான ஒரு வருடம் கழித்து, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்களைக் கையாள்வதற்கு விரைவாக அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு ‘என்கவுண்டர்கள்’, அரசு கடைப்பிடித்துவரும் அணுகுமுறையைக் காட்டியது.

ஜூன் 2015-ல், தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே 19 வயது விவேக் கோடமகுண்ட்லா மற்றும் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

விவேக்கின் தந்தை, தனது மகனை என்கவுன்டருக்கு முன்பு காவல்துறையினரால் பிடித்து, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறினார். மாவோயிஸ்ட் தியாகிகள் பெற்றோர் சங்கம் என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் உறுப்பினர், மூவரும் “போலி என்கவுண்டரில்” கொல்லப்பட்டதாகக் கூறினார். “அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களின் கைகள் முறுக்கப்பட்டன, மேலும் அவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. மாவோயிஸ்டாக இருந்தாலும் ஒரு சிறுவனை சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? ” என்று ஒரு உறுப்பினர் கேட்டார்.

வரவர ராவ்

சில மாதங்களுக்குப் பிறகு, 2015 செப்டம்பரில், மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படும் ஸ்ருதி என்ற மஹிதா (23) மற்றும் வித்யாசாகர் ரெட்டி என்ற சாகர் (32) ஆகியோர் ஒரு மோதலில் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்  அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவர ராவ், என்கவுண்டரை ‘போலி’ எனக்கூறியதோடு, காவல்துறையினர் “கொடூரமாக சித்திரவதை செய்து” இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இது மாவோயிஸ்டுகள் எதிர்காலத்தில் நடத்தப்படவிருக்கும் ‘போலி என்கவுண்டர்களுக்கான’ வார்ப்புருவாக மாறும் என கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்தன. காவல்துறையினர் முதலில் அவர்களைக் கைது செய்து, கொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அவர்கள் சித்ரவதை செய்தது என அவர்கள் கூறினர்.

பழங்குடிகள் மற்றும் லம்பாதாக்களின் கொலைகள்:

டிசம்பர் 2017-ல், தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் எட்டு ‘நக்சலைட்டுகள்’ போலீசாரால் கொல்லப்பட்டனர், அவர்கள் அனைவரும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கிலும், நக்சலைட்டுகள்  சுட்டதற்கு திருப்பிச் சுட்டதாக போலீசு கூறியது. அதை தொடர்புடைய குடும்பங்கள் மறுத்தன.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதித்தபோது புல்லட் துளைகள் எதுவும் இல்லை என சில குடும்பங்கள் கூறியதாக என்று தி வயரின் சுகன்ய சாந்தாவின் கள செய்தி அறிக்கை சொன்னது. உடல்கள் மற்றும் முகங்கள் தாடைகள் உட்பட பல இடங்களில் வாயு செலுத்தப்பட்டதும் பல இடங்கள் உடைக்கப்பட்டிருந்ததையும் அந்த அறிக்கை பதிவு செய்திருந்தது. எட்டு பேரை காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அவர்கள் குடும்பத்தினர் கூறினர்.

மற்றொரு போலி என்கவுண்டரின் மிக சமீபத்திய வழக்கில், அதே போன்ற புனைவே வெளிப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், தெலுங்கானா காவல்துறை, சிபிஐ (எம்.எல்) புதிய ஜனநாயகத்தின் ஆயுதமேந்திய எதிர்ப்பு பிரிவின் “பகுதி தளபதி” என்று கூறப்படும் பழங்குடியான லிங்கண்ணாவைக் கொன்றது. லிங்கண்ணா உண்மையில் பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடிய ஒரு செயல்பாட்டாளர் என அவரது மகன் ஹரி அந்த சமயத்தில் தி நியூஸ் மினிட்டிடம் கூறியிருந்தார்.

படிக்க :
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
♦ சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

இந்த சம்பவத்திலும், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள காட்டில் லிங்கண்ணாவையும் மற்ற ஏழு மாவோயிஸ்டுகளையும் சுற்றி வளைத்ததாக போலீசார் கூறினர். பதிலடி கொடுக்கும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் போலீசார் கூறினர். காவல்துறையின் கூற்றுக்களை மனித உரிமை அமைப்புகள் சந்தேகித்தன. லிங்கண்ணாவின் உடலில் அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினார்.

மாவோயிஸ்டாக இருந்து போலீசு உளவாளியாக மாறிய நயீம் கொலை:

இவற்றில் மிகுந்த பரபரப்பான ‘என்கவுண்டர்’ என்பது 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் மாவோயிஸ்டாக இருந்து போலீசு உளவாளியாக மாறிய முகமது நயீமுதீன் கொல்லப்பட்டதுதான். 1993-ல் ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ். வியாஸைக் கொன்ற கும்பலில் இருந்த  நயீம், அதே ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

2000-ம் ஆண்டில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், நயீம் காவல்துறையினருக்கு ஒரு தகவலாளியாக ஆனார். அவருடைய முன்னாள் தோழர்கள் பலரைக் கொல்ல அவர்களுக்கு உதவினார். (அவர் மிரட்டி பணம் பறித்ததில் ஈடுபட்டதால் மக்கள் போர் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்). பின்னர்  அவர் ரவுடியாக மாறினார். அவர் மீது பல கொலை மற்றும் மிரட்டல் வழக்குகள் இருந்தன.  அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் மீது 20 கொலை உள்ளிட்ட 100 கிரிமினல் வழக்குகள் இருந்தன.

அவர் கொல்லப்பட்ட பின்னர், பல அரசியல்வாதிகள் பற்றிய “பல ரகசியங்களை” அறிந்திருந்ததால் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. அவர்களில் சிலருக்கு நிலத்தை அபகரிக்க நயீம் உதவியதாகக் கூறப்படுகிறது. சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் காணாமல் போன ஒரு இணைப்பு அவர் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறியிருந்தார். குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டாலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மக்களின் தூண்டப்பட்ட உணர்ச்சிகளின் பேரிலும் அரசியல்வாதிகளுக்காகவும் தன்னுடைய சுய வன்மத்தை தணித்துக்கொள்ளவும் கொலைவெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது தெலுங்கானா போலீசு.


செய்திக் கட்டுரை: அம்ரித்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: தி வயர்.

வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

கேள்வி : //வெங்காய விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? இது போன்ற நிலைமைகளில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?//

இளம்பரிதி

ன்புள்ள இளம்பரிதி,

இன்றைய நிலையில் இந்தியாவெங்கும் உள்ள நகரங்களில் வெங்காயத்தின் சராசரி விலை ஒரு கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது. சில நகரங்களில் 150, 200 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தமிழக நிலவரப்படி மக்கள் ரூ100 முதல் 150 ரூபாய் வரை வெங்காயத்தை வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. பல உணவகங்களில் வெங்காயம் இல்லாமலோ; குறைத்தோ உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆம்லேட்டுக்கான வெங்காயத்தில் கூட அதற்குப்பதில் முட்டைக்கோசு இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. அன்றாட உணவிலும், சமையலிலும் வெங்காயம் என்பது இந்திய மக்களின் அத்தியாவசிய காய் ஆகும். வட இந்தியாவில் வெங்காயமும், உருளைக் கிழங்கும் ஒவ்வொரு வேளை சமையலிலும் இடம் பெறுகின்றன.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வழமைக்கும் அதிகமாய் மழை பொழிந்திருக்கிறது. இதனால் காரிஃப் பருவ வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்திருக்கிறது. ஈரம் இல்லாத தரமான வெங்காயத்தின் சாகுபடி குறைவாக இருப்பதால் சந்தையின் தேவைக்கு ஏற்ப வெங்காயங்கள் அனுப்பப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இந்தியாவில் வெங்காய உற்பத்தி, சேமிப்பு, விநியோகத்திற்கான மையப்படுத்தப்பட்ட திட்டம் இல்லை. இதன் முதல் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். வெங்காயம் விலை உயர்ந்தாலும் அவர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இரண்டாவது பாதிப்பு மக்களுக்கு; வருடத்தில் சில மாதங்களாவது இத்தகைய வெங்காய விலை உயர்வை சந்திக்க வேண்டிய துயரம் அவர்களுக்கு!

மையப்படுத்தப்பட்ட திட்டம் என்றால் என்ன?

இந்தியாவிற்கு அன்றாடம் எவ்வளவு வெங்காயம் தேவைப்படுகிறது? மாதம், காலாண்டிற்கு எத்தனை டன் தேவைப்படுகிறது என புள்ளிவிவரங்களை வைத்து ஆய்வு செய்து இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அடுத்து நாடு முழுவதும் எங்கே அதிகம் விளைகிறது, எங்கே குறைவாக விளைகிறது அவற்றின் குறைந்தபட்ச தூர விநியோகம் எப்படி சாத்தியம் என்பதை திட்டமிடவேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் சாகுபடிக்கும் திட்டமிடவேண்டும்.

அடுத்து வருடந்தோறும் மழை பெய்யும் மாதங்களில் வெங்காயத்தை காப்பாற்ற என்ன செய்வது என ஆராய வேண்டும். முன்கூட்டியே மழை பொழிவையோ அதன் சராசரியையோ குறைந்தபட்சமாவது கணித்துக் கொண்டு சாகுபடி நாட்களை திட்டமிட வேண்டும். மேலும் நாடெங்கும் பிராந்திய அளவில் வெங்காயத்தை சேமிக்கும் கிட்டங்கிகளை அமைத்து அவற்றில் குறைந்த பட்ச இருப்பை ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும்.

மழை பொழிந்து வெங்காய வரத்து குறையும் நாட்களை ஈடு செய்யும் விதத்தில் இந்த சேமிப்பு இருக்க வேண்டும்.

படிக்க:
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
♦ பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

விவசாயிகளுக்கும், வாங்கும் மக்களுக்கும் விலை ஒரு சீராக இருக்கும் வண்ணம் இந்த மையத்திட்டமிடலை உருவாக்கிட வேண்டும். இதைத் தாண்டி வெங்காயம் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதற்கான திட்டமும், அதிகம் உற்பத்தியாகும் போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருக்க வேண்டும். ஏற்றுமதியே செய்ய முடியவில்லை என்றால் உபரி வெங்காய இருப்பிலிருந்து கூழ், ஊறுகாய் வகைகள், வேதியல் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் திட்டமும் இருக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் அனைத்தையும் ஒருங்கிணைத்து திட்டமிடும் போது நிச்சயம் வெங்காயத்தின் விலையையும், அளிப்பையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இன்றை அரசாங்கங்களோ விவசாயத்தை தலை முழுகி, விவசாயிகளை கண்டு கொள்ளாமல் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பொருளாதார திட்டமிடலை மட்டும் செய்கிறது. மெட்ரோ ரயில்கள், புல்லட் ரயில்கள், எட்டு வழிச்சாலைகள், பிறகு தனியார் மயம், தாராளமயம் என்று விவசாயத்தை நலிவடையச் செய்யும் பாதையில் பயணிக்கும் அரசாங்கம் எப்படி வெங்காயத்தை மக்களுக்கு அளிக்க முடியும்? அதனால்தான் “நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தைச் சேர்ந்தவள்” என்று மறைமுகமாக வெங்காய விலை உயர்வு தனக்கு ஒரு பிரச்சினை இல்லை என்று ஒரு நிதியமைச்சரால் பேச முடிகிறது!

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை..எப்படித்தான் தடுப்பது?//

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

நமது நாட்டில் சமூகரீதியான அளவான குடிப்பழக்கம் இல்லை. குடிவெறியும், அதற்கு அடிமையாகும் வண்ணமும் மதுக்கடைகள் அரசால் நடத்தப்பட்டு மக்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். அன்றாட வருமானத்தில் பாதியை டாஸ்மாக்கில் கொட்டுகிறார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்ல பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் டாஸ்மாக் கடைகள் காரணமாக இருக்கின்றன. எனவே இவை தயவு தாட்சண்யமின்றி மூடப்பட வேண்டும்.

ஆபாச இணைய தளங்கள் ஆண்ட்ராய்டு காலத்தில் அனைவரும் பார்க்க கூடிய விதத்தில் இருக்கின்றது. இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதே நேரம் இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாமலும் இருக்கிறது. அதன் பொருட்டு ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பும், யதார்த்தமான காமத்தை அதீதமான காமவெறியாக மாற்றும் அதன் பரிணாமங்களை மக்களுக்கு விளக்கும் வண்ணம் சுகாதாரத் துறை வெகு மக்களுக்கான கவுன்சிலிங், பிரச்சாரம் செய்ய வேண்டும். நமது தளத்தில் ஒரு ஆபாசப்பட நடிகையின் பார்வையில் அப்படங்கள் எப்படி கொடூரமாக எடுக்கப்படுகின்றன, அது பார்ப்போரிடையே என்ன வகையான மாயையை, நோயை உருவாக்குகின்றன என்ற ஒரு தொடர் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகள், வீடியோக்கள் சமூக ஆர்வலர்களால் அதிகம் படைக்கப்பட வேண்டும்.

பார்ப்பனிய சமூக வழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் ஒரு பெண்ணை உடமையாக பார்க்கும் நடத்தை பொதுவில் ஆண்களின் ஆளுமையின் ஒரு அங்கமாக இருக்கிறது. இதுவே காதலிகளை கொலை செய்வது, ஆசீட் வீசுவது, எரிப்பது போன்ற கொடூரங்களை நடப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது. இதற்கு தோதாக காதல் என்பதே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் க(கொ)லையென சினிமாக்கள் போதிக்கின்றன.

எனவே காதல், பாலியல், பெண் உடல், ஆண் – பெண் சமத்துவம் போன்ற தலைப்புகளில் பள்ளி இறுதி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டாய பாடமாகவோ, கவுன்சிலிங்காகவோ நடத்தப்பட வேண்டும். பெண்ணை இழிவு படுத்தும் இலக்கியங்கள், சினிமாக்கள், ஊடக செய்திகள், ஊடக நெறிமுறைகள் அனைத்தும் சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி கல்லூரி மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் விதவிதமான போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களை தடை செய்வதோடு அதை விற்போரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்தும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் கட்டாயமக்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் வன்முறை செய்வதில் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது.

படிக்க:
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016
♦ போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்

பெண் மாணவர்கள், இளைய பெண்கள் அனைவருக்கும் தற்காப்புப் பயிற்சிகளை பள்ளி கல்லூரி காலத்தில் கட்டாயமான உடற்பயிற்சியாக மாற்ற வேண்டும். ஒரு பெண் தன்னை சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காத்துக் கொள்ளும் வண்ணம் களப்பயிற்சிகளும், கருத்து ரீதியான கவுன்சிலிங்குகளும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

பாலியல் வழக்குகளை பத்தோடு பதினொன்றாய் எடுக்கும், உண்மையில் எடுக்காமல் அலைக்கழிக்கும் போலீசுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, அவர்கள் கடமையில் தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள், தண்டனைகள் அளிக்கப்படும் வண்ணம் காவல் துறை மாற்றப்பட வேண்டும். காவல் துறையிலேயே பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் எண்ணிலடங்காது. இதற்கும் கடுமையான சட்டமும், துறை ரீதியான கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒரு வார்டு அளவில் அந்த பகுதியின் காவல் துறை குறித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்கள் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் வண்ணம் மாதக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் காத்திரமான விசயங்களுக்கு காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுவில் மக்களுக்கு காவல் துறை மீது ஒரு பயம் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். இல்லை, மக்கள் மீது காவல்துறைக்கு பயம் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சரியாக பயணிக்கும்.

பாலியல் வழக்குகள் குறித்த சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய நீதித்துறையின் செயல்பாட்டை துரிதமாகவம், மக்கள் நம்பும் விதமாகவும் செயல்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பெண்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் வண்ணம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஏற்கனவே ஏட்டில் இருக்கும் விசாகா கமிட்டியின் கட்டமைப்பையையும், அதிகாரத்தையும் அதிகமாக்கி அதை உருப்படியான கமிட்டியாக மாற்ற வேண்டும்.

இறுதியாக நாளொன்றுக்கு பதினைந்து மணிநேரம் வேலை பார்த்தே ஆகவேண்டும் என்ற மறுகாலனியாக்க வாழ்க்கையை மாற்ற வேண்டும். எட்டு மணி நேரம் வேலை, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் சமூகப் பொழுது போக்கு என்பது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் இத்தகைய கடுமுழைப்பு தொழிலாளிகள்தான் தமது வேலை நிமித்தம் இயல்பாக போதை, மது போன்றவற்றை நாட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இவை அனைத்தையும் செய்ய முடிந்தால் பாலியல் வன்முறைகளை தடுக்கும் வழிகளை சமூகம் கண்டறியும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

குற்றமும் தண்டனையும்

ரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். தி. நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் கோபத்தில் துடிக்கிறது. மீடியா துடிப்புடன் போலீஸ் கமிஷனரை மொய்க்கிறது. இரண்டு நாள் அங்கே தேடுகிறோம், இங்கே தேடுகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார். மூன்றாம் நாள் பிரெஸ் மீட் வைத்து இரண்டு கைதிகளை மீடியா முன் நிறுத்துகிறார்கள். ‘இவன் அகில் அஹமத், அவன் முகமது குர்ஷித். இவர்கள் ராயப்பேட்டையில் வசிக்கிறார்கள். அகில் ஒரு பைக் மெக்கானிக், முகமது ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை செய்கிறான். இவர்கள் இருவர்தான் லஸ்கர் உதவியுடன் இந்த செயலை செய்தவர்கள்,’ என்று அறிவிக்கிறார்கள்.

இப்போது உங்கள் மனதில் என்ன ஓடும்? அப்பாடா, கதை முடிந்தது. குற்றவாளிகள், அதாவது தீவிரவாதிகள், சிக்கி விட்டார்கள். அடுத்ததாக அவர்களை நடுத்தெருவில் தூக்கில் போடு… அல்லது துப்பாக்கியில் சுட்டு தள்ளு என்றெல்லாம் கூச்சல்கள் ஆரம்பிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு பெரும் எதிர்ப்புகள் உருவாகும்.

ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். இந்த அகில் குர்ஷித் இருவரும் உண்மையிலேயே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களா? என்ற கேள்வியை யாருமே கேட்க மாட்டோம். மீடியா மற்றும் அரசாங்க அழுத்தம் தாங்காமல் போலீசே இரண்டு பேரை ‘பிடித்து’ வந்து இவன்தான் குற்றவாளி என்று காட்ட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம், என்ற கேள்வியை யாராவது யோசித்திருப்போமா?

அது எப்படி யாரையோ பிடித்து தீவிரவாதி என்று காட்ட முடியும், என்று கேட்கலாம். யாரையோ காட்ட முடியாது. ஆனால் மொக்கை குற்றங்களுக்கு மாட்டியவர்கள் அல்லது வேறு ஒரு குற்றத்தில் நிரூபணம் ஆகாதவர்கள் என்று யாரையாவது பார்த்து மாட்டி விடலாம்.

ஷாஹித் ஆஸ்மி வழக்கு இந்த விஷயத்தில் முக்கியமானது. மும்பையை சேர்ந்த ஆஸ்மி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் 13 வயதில் தீவிரவாதம் கற்க போனவன், அங்கே கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களை தாள முடியாமல் 14 வயதில் அங்கிருந்து ஓடி வந்து விட்டான். அதற்குப் பின் மும்பை குண்டு வெடிப்பில் அவனையும் ஒரு குற்றவாளியாக போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏழு ஆண்டுகள் திஹார் ஜெயிலில் கழித்தான். பின்னர் குற்றம் நிரூபணமாகாமல் விடுதலை ஆன ஆஸ்மி, சட்டக்கல்லூரி சேர்ந்து படித்து தன்னைப்போலவே தீவிரவாத குற்றங்களில் கைதான அப்பாவிகளுக்காக ஆஜராக துவங்கினார். 2008 மும்பை தாக்குதலில் கைதான ஃபஹீம் அன்சாரிக்காக ஆஜராகும் பொழுது, ‘தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, வெறியர்களால் சுடப்பட்டு தன் அலுவலக வாசலிலேயே இறந்தார். ஆனால் ஃபஹீம் அன்சாரி எந்தக்குற்றமும் நிரூபணமாகாமல் பின்னர் விடுதலை ஆனான்.

அதாவது என்ன சொல்ல வருகிறேன்? கையில் கிடைத்தவர்களை கண்டமேனிக்கு கைது செய்வது பரவலாகவே இங்கே நடக்கிறது. குறிப்பாக அதிக சமூக அழுத்தம் கொண்ட வழக்குகளில் இது நிறையவே நடக்க சாத்தியக்கூறு இருக்கிறது.

படிக்க:
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
♦ ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்

தில்லியின் ஆருஷி வழக்கு நமக்கெல்லாம் நினைவிருக்கும். இளவயதான பள்ளி மாணவி ஆருஷி தன் படுக்கை அறையிலேயே கழுத்து அறுபட்டு இறந்த செய்தி தில்லியையே உலுக்கியது. இதற்கு முன் எப்போதும் இல்லாத மீடியா வெளிச்சம் இந்த வழக்கின் மேல் விழவே, போலீஸ் மீது பெரும் அழுத்தம் சேர்ந்தது. அவர்கள் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்த ஹேம்ராஜ் என்ற நடுத்தர வயது வேலையாள்தான் குற்றவாளி என்று அறிவித்தார்கள். ஹேம்ராஜுக்கும் ஆருஷிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது என்றும் போலீஸ் சொன்னது. வசதியாக கொலை நடந்த தினத்தில் இருந்து ஹேம்ராஜ் காணவில்லை. எனவே அவன்தான் கொன்று போட்டு ஓடிப்போய் விட்டான் என்று அறிவிக்க முடிந்தது. ஆனால் என்ன அசௌகரியம்; இரண்டு நாள் கழித்து ஹேம்ராஜின் அழுகிய சடலம் ஆருஷி வீட்டின் மொட்டை மாடியிலேயே கிடைத்தது. ஆருஷி கொலையுண்ட அதே நாள் ஹேம்ராஜும் கொல்லப்பட்டு இருக்கிறான்! இப்போது வழக்கின் திசை மாறியது. போலீஸ் மேல் மேலும் அழுத்தம் சேர்ந்து கொண்டது. அடுத்து யார் கிடைப்பார்கள் என்று பார்த்தார்கள். ஆருஷியின் அம்மா, அப்பா சேர்ந்துதான் கொன்று போட்டிருக்கிறார்கள் என்று போலீஸ் அறிவித்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். ஆருஷி-ஹேம்ராஜ் தொடர்பு தெரிய வந்து, அதைப் பொறுக்க இயலாமல் குடி போதையில் அப்பா கொன்று விட்டிருக்கிறார்; என்று கேஸை மூடியது போலீஸ். பற்பல ஆண்டுகள் அம்மா அப்பா இருவரும் சிறைவாசம் செய்து, பின்னர் வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று இருவர் மேலும் வழக்குக்கு முகாந்திரமே இல்லை என்று கேஸ் தள்ளுபடி ஆனது. இருவரும் விடுதலை ஆனார்கள்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி

2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகிய எஸ்.ஏ.ஆர். ஜீலானி தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர். சிறைவாசம் அனுபவித்து தூக்கு தண்டனை வரை போனார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரம் ஏதுமின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை ஆனார்.

நான் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் போதும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் குற்ற வழக்குகளுக்கு conviction rate, அதாவது குற்றம் நிரூபணமாகும் சதவிகிதம் 46 சதம். இதன் அர்த்தம் என்னவென்றால் நூறு பேர் மேல் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயகிறார்கள் என்றால் அதில் 54 பேர் கண்டிப்பாக நிரபராதிகள்தான். அவர்கள் எப்படி நிரபராதிகள் ஆவார்கள்? ஏமாற்றி, சாட்சிகளை திரித்து வெளியே வருபவர்களாகவும் கூட இருக்கலாம் அல்லவா என்று நாம் கேட்கலாம். சரி, வெளியே வருபவர்களில் பாதி பேர் இப்படி வழக்கை திரித்து வெளியே வருபவர்கள் என்றே கூட வைத்துக்கொண்டாலும் 27 சதவிகிதம் பேர் முழுக்க முழுக்க நிரபராதிகள். குற்றவியல் ஆய்வின் கடைசி அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று லட்சம் கைதிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்கள். இவர்களை undertrials என்று சொல்வார்கள். மேலே சொன்ன நமது குறைக்கப்பட்ட கணக்கின்படி பார்த்தாலும் கூட தற்போது மொத்தம் 81,000 நிரபராதிகள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது நாம் சொல்வது என்ன? கீழ் கோர்ட், நடு கோர்ட், மேல் கோர்ட் என்று போகிறவர்கள் கணக்கே இவ்வளவு என்றால் சும்மா கைதாகி வெறுமனே எஃப்.ஐ.ஆர். போடப்படுகிறவர்களில் எத்தனை அப்பாவிகள் இருப்பார்கள் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகிறேன்.

அது ஒரு புறம் இருக்க, நம் போலீஸ் லாக்கப்பில் குற்றத்தை ‘ஒப்புக்கொள்ளும்’ நிர்பந்தம் நிறைய பேருக்கு ஏற்பட்டு விடுகிறது. நாமே பார்த்திருப்போம். இந்த ‘பாத்ரூமில் வழுக்கி’ விழும் விஷயம் நிறைய நடக்கிறது. அடிதாங்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறைய வழக்குகள் பார்த்திருக்கிறோம். லாக்கப் அடி போல அர்த்தமற்ற, வீணான புலனாய்வு உலகிலேயே கிடையாது. என்னையே நாலு முறை சும்மா கன்னத்தில் அறைந்தாலே நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்க்க சதி செய்ததே நான்தான், பின் லேடன் அல்ல என்று வாக்குமூலம் கொடுத்து விடுவேன். அந்த அளவுக்கு பலவீனமான விஷயம் அது.

படிக்க:
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !
♦ மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !

ஆனால் சினிமாவில் போலீஸ் ஹீரோ லாக்கப்பில் அடிப்பதை பார்த்து விசில் அடிக்கும் லெவலில்தான் நாமெல்லாம் இருக்கிறோம். போலீஸ் சித்ரவதை புலன்விசாரணையை துரிதப்படுத்தவோ அல்லது குற்றங்களை குறைக்கவோ உதவுவதாக எந்த புள்ளி விபரமும் உலகில் இதுவரை இல்லை. சொல்லப் போனால் பஞ்சத்துக்கு பிக் பாக்கெட் அடித்தவர்களை தொழில் முறை குற்றவாளிகளாக உருமாற்றம் செய்யவே இந்த சித்ரவதைகள் உதவுகின்றன. அதுவுமின்றி மெக்சிகோ நாட்டை வைத்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் லாக்கப் சித்ரவதைகள் ஒட்டு மொத்தமாக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகின்றன என்று வாதிடுகின்றது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நாம் பார்த்தோம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாவற்றிலும் பாதிக்கப்படுவது யார் என்றால் பரம ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி / இனத்தவர்தான். பணக்காரர்களோ அல்லது மேட்டுக்குடி சாதியினரோ இல்லை.

உதாரணத்துக்கு தி. நகர் குண்டு வெடிப்பை எடுத்துக்கொள்வோம். மூன்றாம் நாள் போலீஸ் இரண்டு பேரை கைது செய்து முன் நிறுத்துகிறது: ஒருவன் பெயர் ராமசேஷன், இரண்டாமவன் சடகோபன். ராமசேஷன் இன்போசிஸ்சில் வேலை செய்கிறான். சடகோபன் ஒரு ஆடிட்டர்.

டிவியில் இந்த செய்தியைப் பார்த்து உங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும்? கமிஷனரைப் பார்த்து ‘இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு?’ என்பீர்கள் அல்லவா? ஆனால் யோசித்துப் பாருங்கள் இந்த இரண்டு பெயர்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆக்குவது எது? அந்தக் கைதிகளின் சாதியா? அல்லது அவர்களின் வேலையா? படிப்பா?

பிராமணர்கள் நிறைய கொலைகளில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் உ.பி.-யில் நடந்த உன்னாவ் வன்புணர்வு சம்பவத்தில் அந்தப்பெண்ணை எரித்துப் போட்டதாக கைதானவர்கள் எல்லாருமே பிராமணர்கள்தான். இந்தியாவின் முதல் அரசியல் கொலையை செய்து காட்டியது ஒரு பிராமணன்தான்.

ஆனால் போலீசுக்கு தெரியும், ஆடிட்டர் சடகோபனை உங்கள் முன் நிறுத்த முடியாது என்று. எனவே அகில் அகமதுவை நிறுத்துகிறார்கள். இந்தியா முழுக்க ஆதிவாசிகள், தலித்துகள் முஸ்லிம்கள் மற்றும் பரம ஏழைகள் மட்டுமே இந்த போலீஸ் அட்டூழியத்துக்கு ஆளாகிறார்கள். யோசித்துப்பாருங்கள்: சிதம்பரம், அமித் ஷா போன்றோர் எல்லாம் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் மேல் போலீஸ் சுண்டு விரல் கூட வைத்திருக்காது. சொல்லப்போனால் அமித் ஷா சம்பந்தப்பட்டிருந்த இர்ஷத் ஜஹான் என்கவுண்டர் ஒரு போலி என்பதும் அந்தப்பெண் தீவிரவாதி இல்லை என்பதும் சந்தேகமற நிரூபணமான ஒன்று. ஆனால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் ஷா எந்த வழக்கும் இன்றி இப்போது உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

ஆனால் படிப்பறிவு குறைவான ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதி மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிரூபணத்துக்கு காத்திருக்கும் கைதிகளில் 30 சதவிகிதம் பேர் எழுத்தறிவற்றவர்கள். Undertrials எனப்படும் இந்த கைதிகளில் 55 சதவிகிதம் பேர் தலித், ஆதிவாசி மற்றும் முஸ்லிம்கள். இவர்கள் எந்த சட்டஅறிவும் பண வசதியுமின்றி தொடர்ந்து சிறையில் வாடுகிறார்கள்.

அப்படி இருந்தும் இவர்களின் சராசரி conviction rate வெறும் 15% மட்டுமே அதாவது தற்போது சிறையில் வாடும் undertrial முஸ்லிம், தலித் ஆதிவாசிகளில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.

படிக்க:
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

மொத்தத்தில் சொல்ல வந்தது இதுதான் :

♦ போலீஸ் ஒருவரை கைது செய்து விட்டார்கள் என்பதாலேயே அவர்கள் குற்றம் புரிந்தவர் என்று ஆகி விட மாட்டார்கள்.

♦ லாக்கப் சித்திரவதைகளை, என்கவுன்டர்களை ஆதரிப்பது ஒரு சமூகமாக நம்மை பின்னுக்கு தள்ளவே செய்யும். ஒரு கோப எதிர்வினையில் ‘அவனை நடுத்தெருவில தூக்குல போடு,’ என்று கூச்சலிடலாம். அது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் உண்மையிலேயே அப்படி நடுத்தெருவில் தூக்கிலிட துவங்கும் பொழுது, ஒரு சமூகமாக நாம் ஆயிரம் வருடம் பின்னே போகிறோம்.

♦ கண்ணுக்குக் கண் என்ற ஹமுராபி நீதி முறை 5000 வருடத்துக்கு முந்தைய சமூகங்களுக்கு சரியாக இருக்கலாம். 21-ம் நூற்றாண்டில் நவீன சமூகமாக கட்டமைக்க விரும்புபவர்களுக்கு சரியா என்று யோசித்துக் கொள்ளலாம்.

இன்றைக்கும் கூட நடுத்தெருவில் தூக்கில் போடும், கல்லடித்து சாவடிக்கும் தேசங்கள் இருக்கின்றன. சமூகப்பொருளாதார ரீதியாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள். அதே சமயம் ஒரு சீரியல் கில்லர் சைக்கோவுக்கும் கூட சட்டரீதியான பாதுகாப்பு கொடுத்து, அவன் மேல் ஒரு சுண்டு விரல் படாமல் வழக்கை நடத்தி முடித்து தண்டனை கொடுக்கும் தேசங்கள் இருக்கின்றன. அந்த தேசங்கள் சமூகப்பொருளாதார ரீதியாக எங்கே இருக்கின்றன என்று பாருங்கள்.

பின்னர், நாம் எந்த நாடுகளின் வரிசையில் சேர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நன்றி : Sridhar Subramaniam
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

சொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி !

க்கன் சக்கிலியனுக்கு 1935 -ல், பிரிட்டிஷ் அரசு வழங்கிய 2.8 ஏக்கர் நிலத்திற்கு, வரிகட்டச் சொல்லி நோட்டீஸ் ஒன்று வந்து சேர்ந்திருந்தது. நோட்டீசைப் படித்த, பேரன் பழனிசாமிக்கு ‌அதிர்ச்சியாக இருந்தது. இந்த நோட்டீஸ் வரும்வரை பழனிசாமிக்கு இப்படி ஒரு நிலமிருப்பதே தெரியாது.

வரிகட்டுவதற்கு நிலம் தொடர்பான ஆவணங்களை தேடியெடுக்க ஆரம்பித்த பழனிசாமிக்கு போதும்.. போதும் என்றாகிவிட்டது. இறுதியில் பல்வேறு தோழமைகளின் உதவியுடன் ஆவணங்களை தேடி சேகரித்தார்.

மேட்டுப்பாளையம் நகர எல்லைக்குள் இருக்கும் அந்த நிலம் சுமார் 2.8 ஏக்கர் பரப்புடையது. அதன் விலைமதிப்பு சுமார் 5 கோடிக்கு மேல் தேறும்.

இந்த நிலவிசயத்தை அறிந்த புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், பழனிசாமியை லாட்ஜ்க்கு அழைத்து, ஒரு பெட்டியை திறந்த காட்டி- “இந்த பணக்கட்டுகள் முழுவதையும் எடுத்துக்கொள்‌. கையெழுத்துப்போட்டுக்கொடு” எனக் கேட்டனர்.

அவர் இறங்கிவரவில்லை; இன்னொரு பெட்டியையும் எடுத்துக் கொடுத்தனர், அப்போதும் இறங்கிவரவில்லை. எதற்கும் அசையாத போது, மிரட்டத் தொடங்கினார்கள். பழனிசாமி சிரித்துக்கொண்டே படியிறங்கி வந்துவிட்டார்.

ஆவணங்கள் முழுமையாக சேகரித்த பழனிசாமி தலித் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்ட அந்த நிலம், தலித் மக்களுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு குழுவாகச் சென்றார்.

வீடோ, நிலமோ இல்லாதவர்களாகப் பார்த்துப் பார்த்து தேர்வுசெய்து 105 பேர்களை பட்டியலிட்டார். ஒரு விடுமுறைநாளில் பட்டியலில் இருப்பவர்களையெல்லாம் அழைத்துவந்து ஒரு குடும்பத்திற்கு (1.1/2 ) ஒன்றரை செண்ட் ‌வீதம் 2.8 ஏக்கர் நிலத்தையும் பிரித்துக் கொடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அவர்கள் தோழர் பழனிசாமி மற்றும் அவரது துணைவியார் வெண்ணிலா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிதார்.

அந்த நிலத்திலிருந்து தனக்கென ஒரு செண்டைகூட எடுத்துக்கொள்ளவில்லை சிலர் வற்புறுத்தியபோது இப்போது நான் குடியிருக்கும் 1 1/4 செண்டே போதுமானது நிலமில்லாதவர்களுக்குத்தான் நிலம் என்று புன்னகையோடு கடந்துபோனார்.

எனக்கும் ஒரு செண்ட் நிலம் வேண்டும் ,நான் பழனிச்சாமியின் பேசவேண்டும் என்று அவரது சகோதரி என்னிடம் கேட்டார், பழனிசாமியிடம் பேசினேன். ஒரு விதவை என்ற முறையில் உதவலாம் என்றேன்.

“நான் குடியிருக்கும் இடத்தில் ஒரு பங்கான 1.1/4 செண்ட் சகோதரி பெயரில்தான் இருக்கிறது அதுபோதுமானது. சகோதரி என்பதற்காக, நிலத்தை கொடுக்கமுடியாது “நிலம் இல்லாதவர்களுக்கு தான் இடம் என்ற கொள்கையிலிருந்து மாற முடியாது’’” என்று சொல்லிவிட்டார்.

படிக்க:
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
♦ தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

இது, முரட்டுக் கொள்கை. கொள்கையில் நெகிழ்வுத் தன்மை வேண்டும் என வாதாடினேன் ஆனால் தோற்றுப்போனேன். நிலம் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை குடிசைகூடபோடமுடியாத நிலையில் பலர் அந்த பட்டியலில் இருந்தனர் அவர்களுக்கு குடிசைபோட சிறு சிறு உதவிகளையும் சேர்த்தே செய்தார்.

அதன் பிறகு நிலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. நிலத்தை அரசே எடுக்கவைத்தார் அந்த நிலத்தில் அதே 105 தலித் குடும்பங்களுக்கு பட்டாவும் பெற்றுக் கொடுத்தார் யு.ஆர்.பழனிசாமி!

யு.ஆர். பழனிசாமி தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார்

நன்றி : Vvellingiri Vvgiri
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

0

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆய்வு மாணவர்கள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் Category – B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்று முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை கண்டித்து 5.12.2019 அன்று பல்கலைக்கழக முழுநேர முனைவர்பட்ட ஆய்வு மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது. அதன் பெயரில் Category – B என்ற தொலைத்தூரக்கல்வி முறையை 2008-ல் உருவாக்கி, அதன் பெயரிலும் முனைவர் ஆய்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாரதியார் பல்கலைக்கழகத்தில் மற்றும் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளிலோ நிரந்தர பணியில் இல்லாத ஆசிரியர்கள் நாட்டின் எங்கோ ஓர் இடத்தில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டி முனைவர்பட்ட ஆய்வினை நடத்தலாம்.

பல்கலைக்கழக முழுநேர முனைவர்பட்ட ஆய்விற்கு வழங்கும் சான்றிதழையே அவர்களுக்கும் வழங்கிக் கொண்டிருந்தது. இந்த முறை 2009 UGC விதிமுறைகளுக்கு எதிரானது. கூடுதலாக இந்த சான்றிதழ் நாட்டின் உயர்கல்வியின் தரத்தினை சீர்குலைக்கும் வகையிலும் மற்றும் முழுநேர ஆய்வு மாணவர்களின் வேலைவாய்ப்பினை கேள்விக் குறியாக்கியுள்ளது என்றும் 2015-ல் முழுநேர ஆய்வு மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி அந்த தொலைத்தூரக்கல்வி சான்றிதழில் “Under External mode” என்று குறிப்பிட்டு வேறுபடுத்தி காட்டியது.

படிக்க:
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

ஆனால், தற்போது சிண்டிகேட் கமிட்டி மீண்டும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட Category – B என்ற பிரிவில் 2015-க்கு முன் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் “Under External mode” என்ற குறியீட்டை நீக்கி முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும், Category – B யில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்க முடிவெடுத்து அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த முடிவானது தற்போதுள்ள முனைவர்பட்ட ஆய்வு மாணவர்களை சீற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்து கடிதத்தின் வாயிலாக 300-க்கும் மேற்பட்டோர் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் 05.12.2019 அன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கோவை.

கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !

சென்னை மாநகரத்தின் குறியீடான எல்.ஐ.சி கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ளதுதான் ஜி.பி ரோடு. இது 4 மற்றும் 2 சக்கர வாகனங்களை மெருகூட்டி அழகுபடுத்தும் கடைகள் நிறைந்த பகுதி.

சுமார் 1 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதியில் சிறியதும் பெரியதுமான 2500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தென்னிந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னை, ஒரகடம், படப்பையைச் சுற்றி உற்பத்திச் செய்யப்படும் அனைத்து ரக கார்களும் பியூட்டி பார்லருக்கு படையெடுக்கும் புதுமணத் தம்பதிகள் போல, தங்களை அலங்கரித்துக் கொண்டு சாலைப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

நாம் அந்தச் சாலையில் நுழைந்தபோது, காரின் கலரைப் போலவே தங்களின் முடிகளை கலர்  அடித்துக்கொண்டு போகும் வரும் கார்களை கைபோட்டு மடக்கி, “இங்கே வாங்க சார்” என்று கார்களை இழுத்துக் கொண்டிருந்தனர், மெக்கானிக் மற்றும் கார் மேக்கப் வித்தை தெரிந்த அந்த இளைஞர்கள்.

காதர் என்ற இளைஞர் மாருதி இன்டிகா காரின் டேஷ் போர்டில் ஸ்பீக்கர் செட்டும் புது வைபரும் மாட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

காதர்

“காலையிலிருந்து வேலையே இல்லாமல் இப்பதான் சின்ன வேலை வந்திருக்கு. இந்த நேரத்துல வந்துட்டீங்களே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, என் ஃபிரெண்டுகிட்டே ஒப்படைச்சிட்டு வர்றேன். இந்த வேலைய செஞ்சிகிட்டே ஒங்ககிட்ட பேச முடியாது” என்று சென்றவர், சிறிது நேரத்தில் சிரித்த முகத்துடன் நம்முன் ஆஜரானார்.

“சார் நான் 10-வதுதான் படிச்சிருக்கேன். ஆட்டோ மொபைல் பத்தி நான் என்ன சொல்ல போறேன். இந்த எடத்துக்கு 15 வயசுல வேலைக்கு வந்தேன். எனக்கு இப்போ 30 வயசாகுது. 20 கடைகள் இருந்த இந்த ரோட்டுல இப்ப 2000 கடைகளுக்குமேல வந்துருச்சி. டெய்லி இங்கே 300 பேருக்கு மேல வேலைக்கு வர்றாங்க. அதுக்கு மேல 500 பசங்க சீசனுக்கு மட்டும் வந்து போறாங்க.

மழைக்காலமுன்னா வைபர், பல்ப், மிதியடி மாட்டுறதுன்னு புதுசா வேலை வரும். வெயில் காலமுன்னா கண்ணாடிக்கு சன் ஸ்கிரீன் ஒட்டுறது, ஏசி ரிப்பேர் பண்றதுன்னு சில வேலை வரும். மத்தபடி வருசம் ஃபுல்லா சின்ன சின்ன ரிப்பேர்னு வண்டிங்க வரும். பவர் லாக் வேலை செய்யல, ஸ்டீரியோ நாய்ஸ் வருது, டோர் கிரிப் இல்ல – திடீர்னு ஜாம் ஆகுதுன்னு வருவாங்க.

படிக்க:
உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !
♦ சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

இங்கே பேசிக் மாடல் காருங்கதான் நெறைய வரும். மிட் ரேஞ்ச், பிரிமியம் காருங்க கொஞ்சம்தான் வரும். டாப் என்ட் காருங்கள்லாம் இந்த மார்கெட்டுக்கு வராது. அதெல்லாம் பல கோடி ரூபாய் வெலை. சின்ன ஸ்பேர் மாத்தனுமுன்னாலும் ஒரிஜினல்தான் போடுவாங்க. அங்கதான் சர்வீசும் பண்ணுவாங்க.

மெர்சிடிஸ், பென்ஸ், வால்வோ, பி.எம்.டபிள்யூ, லெக்சஸ், டெஸ்லா, இன்பினிடி, ஆடி, லேன்ட்ரோவர், ஜாகுவார்… இப்படி 50 லட்சம் முதல் 1 1/2 கோடி ரூபாய் உள்ள காருங்கல்லாம் நாங்க சாலையில பார்ப்பதோடு சரி. இங்கே வருவதெல்லாம் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ள வண்டிகள் மட்டுமே.

பிலாலுதீன்

பவர் ஸ்டியரிங்க், பார்க்கிங் சென்சார், ஏர் பேக், ஆன்டி பிரேக் கிட், அல்லாய் வீல், சன் ரூப், மூன் ரூப், ரியல் ஏசி, ரிமோட் ட்ரங்க் ஓப்பனர், ரிமோட் ஃபியூல் லிட் ஓப்பனர் என்று கோடி ரூபாய் விலையுள்ள காரில் உள்ள வசதிகளை நாங்கள் 10 லட்சம் விலையுள்ள பிரிமியம் கார்களுக்கு செய்து கொடுப்போம். அவரவர் வசதியைப் பொருத்து, எக்ஸ்ட்ராவா 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை செலவு செய்து அவங்களுக்கு விருப்பமான டாப் என்ட் கார் வசதிகளை உருவாக்கிக் கொடுப்போம். வேலையைப் பொருத்து 1 வாரம் முதல் 1 மாதம் நேரம் புடிக்கும்.

பணக்கார கல்லூரி மாணவர்கள், தங்கள் கார்களை ஸ்போர்ட்ஸ் கார்களாக மாற்றித்தரச் சொல்லி வருவார்கள். அதையும் செய்வோம். ஆல்ஃபா ரோமியோ, மார்கன் ரோட் ஸ்டாரிலிருந்து பெர்ராரி வரை… கொடுக்கும் பணத்துக்குத் தகுந்த மாதிரி ஆல்டர் செய்வோம்.

நிறைய பேர் பேசிக் மாடல்களில் பிரிமியம் வசதிகளை செய்துதரச் சொல்லிக் கேட்பார்கள். குறைந்தது 50 ரூபாயிலிருந்து 2 லட்சம் வரை செலவு செய்து அவர்கள் விருப்பப்படி மாட்டிக் கொடுப்போம்.

சாலைக்குள் நுழையும் கார்களை, தங்கள் விசிட்டிங் கார்டுகளை காண்பித்து, அன்போடு வழிமறித்து அழைத்துச் செல்லும் ‘மார்கெட்டிங் ரெப்ரெசன்டேட்டிவ்’. ஒரு கார் கிடைத்துவிட்டால், அப்போது அவர்கள் காரை அழகுபடுத்தும் கலைஞர்கள்.

ரொனால்ட் கியூட், மாருதி பிராங்கோ, ஆல்டோ, செல்ரியோ, ஹூண்டாய் டன்ரோ. இதை ரெனால்ட் கேப்டன், போர்ட் குகா, ஹோண்டா பியார், டயோட்டா குவாலிஸ், மகிந்த்ரா XUV இந்த கார்களில் உள்ள வசதிகளைக் காட்டி அதே மாதிரி கேட்பார்கள். சிலர் ஸ்டியரிங், டேஷ் போர்ட், பவர் டோர், லெக் ரூம், ஸ்டீரியோ, ஊஃபர் இவற்றில் வெரைட்டி கேட்பார்கள். 4 லட்ச ரூபாய் காரை 10 லட்சம் ரூபாய் காராக மாற்ற அதிகபட்சம் 1 லட்சம் செலவு செய்வார்கள். காரணம் கேட்டா, என் பையன் விரும்புறான், பொண்ணு விரும்புறா, என்ன செய்யிறது; செலவோடு செலவா இதையும் செய்ய வேண்டியிருக்கு என்பார்கள்.

இங்கே வரும் வாடிக்கையாளர்களில் கரைவேட்டிக் கட்டிய அரசியல்வாதிகள்தான் அதிகம். அதை விட்டா கொஞ்சம் பிசினஸ் மேன், சில உயரதிகாரிகள் வருவார்கள்” என்றார்.

கார் உரிமையாளர்.

நாம் அவரிடம் “IT ஊழியர்கள் வரமாட்டார்களா, அவர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்களே” என்றோம்.

அதற்கு அவர், “அதெல்லாம் 5 வருசத்துக்கும் முன்னே, இப்போ புதுசா யாரும் வர்றதில்ல. அப்படியே வந்தாலும் இன்டிகேட்டர், வைபர், சீட் கவர் மாத்துறதுனு சிம்பிளா முடிச்சிட்டுப் போவாங்க. ஏன் சார்… புது கார் வாங்கலியான்னு கேட்டா, அதற்கு ஒரு சிரி சிரிப்பாங்க.

இப்படி வர்றவங்க வேலை ரொம்ப குறைஞ்சி போச்சு. சில நாளு காலை டீ, பன்னு சாப்பிடக்கூட வேலை வராது. இருந்தாலும் இந்த வேலைய விட்டு எங்கேயும் போக முடியாது. எங்களுக்கு வேற வேலை எதுவும் தெரியாது” என்றார்.

***

டிரைவர் ராமன், தாம்பரம்

கார் ஓட்டுநர் ராமன்

கால் டாக்சி டிரைவராத்தான் இந்த வண்டியை ஓட்டுறேன். 4 மணி நேரம் ஓட்டுனா 350 ரூபா கூலி கொடுப்பாங்க. எக்ஸ்ட்ரா ஹவருக்கு 70 ரூபா. அதுல சில பேருதான் சாப்பாடு, டீன்னு வாங்கிக் கொடுப்பாங்க. கால் டிரைவருன்னா திடீர் டிரைவர்தானே, நாமதான் எல்லாம் பாத்துக்கணும், அவங்க பொறுப்பு இல்ல.

டூர் சவாரி, கோயில் குளம், திருவிழா, வீட்டு விசேசம் இப்படி ஏதாவது சவாரி வந்தா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் பார்ப்போம். மத்தபடி லோக்கல்ல ஓட்டுனா வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். என்ன பண்றது.

***

எங்கப்பா அஜித் ரசிகர், அதான் அஜித் பேர வச்சிட்டாரு. அப்பா, அண்ணா எல்லோரும் இந்தத் தெருவுலதான் இதே வேலை செய்யிறோம்.

அஜீத்

நான் 10 வயசுலேயே இந்த வேலைக்கு வந்துட்டேன். சரியா படிக்கல. ஆனா, வேலைய நல்லா கத்துகிட்டேன். இப்போ வேலை எதுவும் இல்ல. முன்ன தினமும் 3 வண்டி வேலை பார்ப்பேன். ஒரு நாளைக்கு 1500 கூட கெடைக்கும். இன்னைக்கு காலையிலேயே வந்தேன், பகல் 12 மணியாகுது. இந்த ஒரு வேலைதான் வந்தது. 300 ரூபா கெடைக்கும். ஃபுல் சீட் கவர் மாத்தணும், சாயாங்காலம் ஆயிடும். அடுத்த வேலை எப்ப வருமுன்னு தெரியாது.

எலக்ட்ரிக், டிங்கரிங், பெயிண்டிங்க் எல்லா வேலையும் தெரியும், எனக்கே இதுதான் நிலைமை.

***

கார் கண்ணாடிகளுக்கு சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டும் தொழிலாளி.
சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டும் தொழிலாளியின் தற்காலிக நடைபாதைக் கடை.
எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு, கூட்ட நெரிசலில் திணறிய ஜி.பி சாலை தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

மேலும் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

இந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 02

னால் அவனது பொய்க் கால்களில் இராணுவப் பாங்கான பூட்சுகள் லாவகமாக அணிவிக்கப்பட்டுத் தரையில் கிடந்தன. அவற்றின் கீழ் முனைகள் படுக்கைக்கு அடியிலிருந்து துருத்திக் கொண்டிருந்தன. அங்கே ஒளிர்ந்திருக்கும் ஒரு மனிதனுடைய கால்கள் போல் காணப்பட்டன அவை. அந்தக் கணத்தில் என்னுடைய பார்வை குழப்பமடைந்ததாகத் தென்பட்டது போலும். ஏனெனில் விமானி என்னைப் பார்த்து, தந்திரமும் மனநிறைவும் ததும்பும் புன்னகையுடன் கேட்டான்:

“நீங்கள் இதை முன்பு கவனிக்கவில்லையா என்ன?”

“இப்படி இருக்கும் என்ற எண்ணமே எனக்கு உண்டாகவில்லை.”

“ரொம்ப நல்லது! இதற்காக நன்றி! உங்களுக்கு ஒருவரும் இதைப் பற்றிச் சொல்லாததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் ரெஜிமென்டில் எத்தனை தேர்ந்த விமானிகள் இருக்கிறார்களோ அத்தனை தம்பட்டமடிப்போரும் இருக்கிறார்கள். ஒரு புதிய ஆளிடம், அதுவும் “பிராவ்தா” செய்தித் தாளிலிருந்து வந்திருப்பவரிடம் இத்தகைய அபூர்வத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாமல் எப்படி விட்டுவிட்டார்கள்?”

“ஆனால் இது கண்டறியாத சேதியாயிற்றே. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தைச் செலுத்துவதும் போரிடுவதும் நம்பவே முடியாத அருஞ்செயல் அல்லவா! விமானப் படை வரலாறு இம்மாதிரி நிகழ்ச்சியை இதுவரை அறிந்ததே இல்லையே.”

விமானி களிப்புடன் சீழ்க்கை அடித்தான்.

“விமானப் படை வரலாறு ஒன்றாவது! அது எத்தனையோ விஷயங்களை அறியவில்லை, இந்தப் போரில் சோவியத் விமானிகளிடமிருந்து தெரிந்து கொண்டது. தவிர இதிலே என்ன நலம் இருக்கிறது? மெய்யாகச் சொல்லுகிறேன், நம்புங்கள்: இந்தப் பொய்க்கால்களோடு இன்றி நிஜக் கால்களுடன் எனக்கு விமானம் ஓட்டுவதே எனக்கு எவ்வளவோ அதிக மனநிறைவு அளித்திருக்கும். ஆனால் என்ன செய்வது? நிலைமைகள் அப்படி வந்து சேர்ந்துகொண்டனவே” என்று விமானி பெருமூச்சு விட்டான். “ஆனால் ஒன்று. சரியாகச் சொல்வதானால் இத்தகைய உதாரணங்களை விமானப்படை வரலாறு முன்பே அறிந்திருக்கிறது” என்றான்.

விமானி கைபெட்டிக்குள் தேடி ஏதோ ஒரு பத்திரிக்கைத் துணுக்கை அதற்குள்ளிருந்து எடுத்தான். அது ஒரேடியாக நைந்து மடிப்புகளில் விட்டுப் போய் ஸெல்லோ பேன் காகிதத்தில் ஜாக்கிரதையாக ஒட்டப்பட்டிருந்தது. ஒரு பாதம் இல்லாமல் விமானம் ஓட்டிய ஒரு விமானியைப் பற்றி அதில் வருணிக்கப்பட்டிருந்தது.

“என்னவாயினும் அந்த விமானியின் ஒரு கால்தான் ஊனமாயிருந்ததே. தவிர அவன் ஓட்டியது சண்டை விமானம் அல்ல, ஏதோ பழங்கால ‘பர்மான்’ விமானம் தானே.”

“ஆனால் நான் சோவியத் விமானி என்பதை மறந்து விட்டீர்களே. நான் பெருமையடித்துக் கொள்கிறேன் என்று நினைக்காதீர்கள். இவை என் சொற்கள் அல்ல. இவற்றை ஒரு காலத்தில் என்னிடம் சொன்னவர் நல்ல, உண்மையான மனிதர்” (’உண்மையான’ என்ற சொல்லை அவன் சிறப்பாக அழுத்தினான்). “அவர் இப்போது காலமாகி விட்டார்.”

விமானியின் துடியான அகன்ற முகத்தில் அன்பு கனிந்த சோகம் பரவியது. விழிகள் பரிவுடன் தெளிந்த ஒளி வீசின. முகம் திடீரெனப் பத்து வயசு அதிக இளமை அடைந்து, சிறுவனது போல ஆயிற்று. ஒரு நிமிடம் முன்பு நடுவயதினனாகத் தோற்றமளித்த அவனுக்கு உண்மையில் வயது இருபத்திரண்டு, இருபத்து மூன்றுக்கு மேல் இராது என நான் உணர்ந்தேன்.

“என்ன, எப்பொழுது, எங்கே என்று யாரேனும் கேட்கத் தொடங்கும் போது சாதாரணமாக என்னால் சகிக்க முடிவதில்லை….. ஆனால் இப்போது எல்லாம் சட்டென நினைவுக்கு வந்துவிட்டன… நீங்கள் இங்கே வெளி ஆள். நாளையே நாம் பிரிந்திடுவோம், அப்புறம் சந்திப்பது சந்தேகந்தான்…. என் கால்கள் பற்றிய கதையைச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா?” என்றான் விமானி.

அவன் படுக்கையில் உட்கார்ந்து, கம்பளியை மோவாய் வரை இழுத்துப் போர்த்துக் கொண்டு கதை சொல்லலானான். உடனிருப்பவனை அறவே மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போலச் சொல்லிக் கொண்டு போனான் அவன். எனினும் சுவையாக, விளக்கமாக விவரித்தான். அவனுக்கு நுண் மதியும் தெளிவான நினைவாற்றலும் நல்ல, பெரிய இருதயமும் இருப்பதை உணர முடிந்தது. நான் கேட்பது முக்கியமானது, அபூர்வமானது, அப்புறம் இதை மறுபடி ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது என்பதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன்.

“மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப்பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்புடன் மேஜைமேல் கிடந்தது ஒரு நோட்டுப் பத்தகம். அதை எடுத்துக் கொண்டு விமானியின் கதையை அதில் குறித்துக் கொள்ளலானேன்.

இந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டுவிட்டது. எனவே முடிந்தவரை விரிவாகவே அதைக் குறித்துக் கொள்ள முயன்றேன். ஒரு நோட்டுப் புத்தகத்தை எழுதி முடித்த பின் இன்னொரு நோட்டுப் புத்தகத்தைத் தேடி எடுத்து அதையும் எழுதி நிறைத்தேன். நிலவறையின் குறுகிய வாயிலுக்கு வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியதை நான் கவனிக்கவே இல்லை. “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனைச் சேர்ந்த மூன்று ஜெர்மன் விமானங்களை வீழ்த்திய பின், தான் முழு மதிப்புள்ள விமானி என மீண்டும் உணர்ந்த நாள் வரை தன் கதையைச் சொல்லி முடித்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

“அட, நாம் வேகுநேரம் அரட்டையடித்துக் கொண்டிருந்து விட்டோம். எனக்கு நாளைக்குக் காலையிலிருந்து பறப்பு நடத்தியாக வேண்டும்” என்று ஒரு வாக்கியத்தை அரைகுறையாக நிறுத்திவிட்டு அவன் கூறினான். “பேசித் துளைத்துவிட்டேன் அல்லவா நான் உங்களை! மன்னித்துக் கொள்ளுங்கள். இப்போது உறங்குவோம்” என்றான்.

”ஓல்கா விஷயம் என்ன ஆயிற்று? அவள் உங்களுக்கு என்ன பதில் எழுதினாள்?” என்று கேட்டுவிட்டு உடனே நினைவுபடுத்திக் கொண்டு “ஆனால் இந்தக் கேள்வி உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அப்படியானால் பதில் சொல்ல வேண்டாம்” என்றேன். “பிடிக்காதிருப்பானேன்?” என்று அவன் புன்னகை செய்தான். “ஓல்காவும் நானும் பெரிய விசித்திர பேர்வழிகள். கேளுங்கள். அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லாம் தெரிந்திருக்கிறது. என் நண்பன் அந்திரெய் தெக்தியாரென்கோ உடனேயே அவளுக்கு எழுதிவிட்டானாம் – முதலில் விபத்தைப் பற்றியும் அப்புறம் என் கால்கள் வெட்டி அகற்றப்பட்டதைப் பற்றியும். நான் இதை எதனாலோ மறைக்கிறேன் என்பதைக் கண்டு இதைப் பற்றிச் சொல்வது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ஆகவே ஒன்றும் அறியாதவள் போல நடித்து வந்தாள். இப்படியாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்திருக்கிறோம், எதற்காகவோ தெரியவில்லை. அவளைப் பார்க்க விரும்புகிறீர்களா?”

விளக்குத் திரியைப் பெரிதாக்கி, அதைப் படுக்கைத் தலைமாட்டில் தொங்கிய நிழல் படங்களின் பக்கத்தில் கொண்டு போனான். அவற்றில் ஒரு படம் தேர்ச்சியற்ற போழுது போக்குப் படப்பிடிப்பாளனால் எடுக்கப்பட்டது. அது அனேகமாக முழுவதும் மங்கித் தேய்ந்து போயிருந்தது. கோடைகாலப் புல் தரையில் பூக்கள் நடுவே கவலையின்றி முறுவலித்துக் கொண்டிருந்த பெண்ணின் வடிவத்தை அந்தப் படத்தில் காண்பது கடினமாக இருந்தது. இன்னொரு படத்தில் ஜூனியர் லெப்டினன்ட் எஞ்சினீயரின் சீருடை அணிந்து அதே மங்கை காணப்பட்டாள். அவளுடைய அறிவு படர்ந்த மெலிந்த முகத்தில் ஒரு முனைப்பாடும் கண்டிப்பும் தென்பட்டன. அவள் மிகச் சிறியவளாக இருந்தமையால் இராணுவச் சீருடை அணிந்த அழகிய பதினாறு வயதுப் பையன் போல் காணப்பட்டாள். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தப் பையனின் கண்களில் களைப்பும் பிள்ளைத்தனத்துக்கும் மாறாக கூர்ந்த பார்வையும் இருந்ததுதான்.

”உங்களுக்கு இவளைப் பிடித்திருக்கிறதா?” –

“ஆமாம்” என்று மனப் பூர்வமாகச் சொன்னேன்.

“எனக்குந்தான்” என்று நல்லியல்புடன் புன்னகை செய்தான் விமானி.

“ஸ்த்ருச்கோவோ? இப்போது எங்கே இருக்கிறான் அவன்?”

“எனக்குத் தெரியாது. போன குளிர் காலத்தில் விலீக்கியெ லூக்கி என்னும் இடத்திலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது.

“டாங்கி வீரன்……. அவன் பெயர் என்ன?..”

“கிரிகோரிய் க்வோஸ்தியேவா? அவன் இப்போது மேஜர். ப்ரோஹவ்க்கா என்னும் இடத்திற்கு அருகே நடந்த புகழ்பெற்ற போரிலும் அப்புறம் இங்கே, கூர்ஸ்க்ப் பிரதேசத்தில் டாங்கிப் படைகளை பிளந்து ஊடுருவவும் நடவடிக்கைகளிலும் அவன் கலந்து கொண்டான். அக்கம் பக்கத்தில் போரிடுகிறோம், ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. அவன் டாங்கி ரெஜிமெண்ட் கமாண்டர். இப்போது ஏனோ பேசாதிருக்கிறான். அதனால் பரவாயில்லை. கட்டாயம் சந்திப்போம், உயிரோடிருப்போம். நாம் வாழ வேண்டாமா, ஊம்?…. நல்லது, தூங்குவோம், தூங்குவோம். விடிந்துவிட்டது.”

விளக்கை ஊதி அணைத்தான். அரையிருள் சூழ்ந்தது. மங்கிய புலல்போதின் வெளிச்சம் அதைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைக்க தொடங்கிற்று. கொசுக்கள் ரீங்காரம் செய்தன. இந்த அருமையான காட்டு இருப்பிடத்தில் இருந்த ஒரே அசௌகரியம் கொசுக்கள் தாம்.

“உங்களைப் பற்றிப் ‘பிராவ்தா’வில் எழுத மிகவும் விரும்புகிறேன்” என்றேன்.

“அதற்கென்ன , எழுதுங்களேன்” என்று விசேஷ உற்சாகமின்றி இசைந்தான் விமானி. நிமிட நேரத்திற்கெல்லாம் தூக்கக் குரலில் சொன்னான்: “அல்லது ஒரு வேளை வேண்டாமோ? ஹிட்லரின் பிரசார மந்திரி கோயபல்ஸ் கையில் கிடைக்கும், அவன் பிரமாதமாகக் கதை அளக்கத் தொடங்கி விடுவான் – ருஷ்யப் படைகளில் கால்களற்றவர்கள் கூடப் போராடுகிறார்கள், அப்படி இப்படி என்று…… பாசிஸ்டுகள் இப்படிப் கயிறு திரிப்பதில் படு சூரர்கள் ஆயிற்றே.”

மறு நொடியிலேயே அவன் ரசமாய்க் குறட்டை விடத் தொடங்கிவிட்டான். எனக்கோ தூக்கம் வரவில்லை. எதிர்பாராத இந்தச் சுயசரிதை தனது எளிமையாலும் மாண்பாலும் என்னைப் பரவசப்படுத்திவிட்டது. இதன் கதாநாயகன் தானே அருகில் படுத்துறங்கினான், பனித்துளிகள் படிந்தப் பொய்க்கால்கள் புலரத் தொடங்கியிருந்த பகலின் வெள்ளொளியில் துலக்கமாகத் தென்பட்டவாறு தரையில் கிடந்தன. இல்லாவிட்டால் நான் கேட்பது எல்லாம் நல்ல கட்டுக்கதை என எனக்குத் தோன்றியிருக்கும்……..

அதன் பிறகு நான் அலெக்ஸேய் மெரேஸ்யெவைச் சந்திக்கவில்லை. ஆனால் அர்யோல் நகருக்கு அருகிலேயே இந்த விமானியின் அசாதாரணமான கதையை நான் குறித்துக் கொண்டிருந்த இரண்டு நோட்டுப் புத்தகங்களை போர்க் காலத்தில் செல்ல நேர்ந்த இடங்களுக்கெல்லாம் உடன் கொண்டு சென்றேன். சண்டை நடந்து கொண்டிருக்கையிலும், பின்னர் நாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்த போதும் அவனைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நான் எத்தனையோ தடவை முயன்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எழுதியது அவனுடைய வாழ்க்கையின் வண்ணமற்ற வெறும் நிழலாகவே எனக்குப்பட்டது. எனவே அப்புறம் பார்க்கலாம் என்று இருந்து விட்டேன்.

படிக்க :
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

கடைசியாக நியூரம்பெர்கில் நடந்த சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தின் அமர்வுகளில் நான் உடனிருந்தேன். கெர்மன் கோயெரிங்கின் விசாரணை முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. “ஜெர்மனியின் இரண்டாவது நாஜி” கோயெரிங் எழுத்து மூலமான சாட்சியங்களின் கனத்தைத் தாள மாட்டாமல் பேசத் தொடங்கினான். சோவியத் வழக்குரைஞரின் கேள்விகள் அவனைத் திக்கு முக்காட வைத்தன. அதுவரை தோல்வியை அறியாத பாசிச அரக்கச் சைனியம், சோவியத் நாட்டின் எல்லையற்ற அகல் பரப்பில் சோவியத் சைனியத்தின் தாக்குதல்களால் எப்படிக் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைந்து தகர்ந்து சிதறிப் போயிற்று என்பதை அவன் விருப்பமின்றியே, பற்களைக் கடித்துக் கொண்டு விசாரணை மன்றத்துக்கு விவரித்தான். தனது கட்சியை நியாயப்படுத்துவதற்காக கோயெரிங்க் மங்கியவிழிகளை வானை நோக்கி நிமிர்ந்து விழிகளை வானை நோக்கி நிமிர்ந்து, “ஆண்டவன் சித்தம் அவ்வாறு இருந்தது” என்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது நண்பரும் திருச்சியில் இருந்த போது இரவு சிற்றுண்டிக்காக ஒரே உணவகத்திற்குச் (வீட்டு மெஸ்) செல்வது வழக்கம். ”என்னங்க தினமும் சாம்பாரில் கத்தரிக்காயை போடுகிறீர்கள்? வேறு காய்கறியே கிடையாதா?” என்று கேட்ட போது ”கத்தரிக்காய் இல்லாமல் எப்படி சாம்பார் வைக்க முடியும்?” என எதிர் கேள்வி போட்டார். அது போல வெங்காயம் இல்லாமல் சமையலா என்பதுதான் இன்று நமது இல்லத்தரசிகளின் கேள்வி.

திருச்சி ஓட்டல்களில் பரங்கியோ, பூசணியோ இல்லாத சாம்பாரைப் பார்ப்பது அரிது. கத்தரிக்காயை கரப்பான் என்கின்றனர் ஒரு சாரார். ஆனால் அது சர்வரோக நிவாரணி என்கின்றனர் மற்றொரு சாரார். அது கரப்பானோ இல்லை சர்வரோக நிவாரணியோ, எதுவாக இருந்தால் நமக்கென்ன? ருசிக்கிறதா, உடலுக்கு ஒத்துக் கொள்கிறதா, அணைகட்டி அமுக்குவதுதான் நமக்குத் தெரிந்த உண்மை.

திருச்சியின் மற்றுமொரு சுவாரசியமான உணவு வெங்காய சமோசா. சமோசா என்றாலே உள்ளே உருளைக் கிழங்கு இருக்கும். ஆனால் திருச்சி சமோசாவை உரித்துப் பார்த்தால் வெங்காயம் மட்டுமே இருக்கும். மாலை நேரங்களில் சந்துக்கு சந்து தள்ளுவண்டிகளில் இந்த மொறு மொறு வெங்காய சமோசா சக்கை போடு போடும். ருசி இல்லாமல் சக்கை போடு போட முடியுமா என்ன?

பக்கோடா வகையறாக்களிலேயே ஆகச் சிறந்தது எது என்றால் அது வெங்காய பக்கோடாதான். நீளவாக்கில் உதிரி உதிரியாக வெங்காயத்தை நறுக்கி மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு மொறு மொறு என வறுத்து எடுத்தால் அடுத்த நொடியே அனைத்தும் காலியாகும். இதுதான் வெங்காய பக்கோடாவின் சிறப்பு. மோடி சொன்னது போல ஒரு வேளை பட்டதாரிகள் பக்கோடா போட்டால் அதில் கண்டிப்பாக வெங்காய பக்கோடா இருந்தால் நீங்கள் மோடியைக் காப்பாற்ற முடியும்.

பூண்டுக் குழம்பையும், பூண்டு ஊறுகாயையும் சுவைத்தவர்களுக்குத் தெரியும் அவற்றை நினைத்தாலே பாவ்லோவின் கட்டுப்படுத்தப்படாத அனிச்சைச் செயலாய் நாவில் எச்சில் ஊறும் என்பது. வெங்காய தயிர் பச்சடி மட்டும் இருந்தால் போதும் ஒரு கிலோ பிரியாணியும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகும்.

இரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ளவும், இதயம் என்றும் பழுதின்றி இயங்கவும், பூண்டு மற்றும் வெங்காயம் மிகவும் அவசியம்; பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குட் பை சொல்லுங்கள் என்கின்றனர் அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய அலோபதி மருத்துவர்கள் வரை.

மூக்கிலிருந்து பொலபொலவென எரிச்சலோடு நீர் கொட்டுகிறதா? அடிக்கடி சளி தும்மல் பிரச்சனையா? அல்லியம் சிபா மூன்று உருண்டைகளை வாயில் போட்டுப்பாருங்கள். சற்று நேரத்தில் இவை எல்லாம் காணாமல் போகும். கையில் கைக்குட்டையும் தேவைப்படாது. அல்லியம் சிபா வெங்காயச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து.

இப்படி உலகமே கொண்டாடும் வெங்காயத்தை “நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை; அதனால் விலை உயர்வு ஒரு பொருட்டே இல்லை. நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள்“ என்கிறார் நிர்மலா சீதாராமன்.

உடல் ஏற்றுக் கொள்கிறதா, ருசி பிடிக்கிறதா என்பதைப் பொருத்து ஒரு பொருளை ஒருவர் விரும்பி உண்பதும், வெறுத்து ஒதுக்குவதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிடக் கூடாது என யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால், “நானோ எனது குடும்பமோ வெங்காயம் சாப்பிடுவதில்லை” என்று நிர்மலா சீதாராமன்  சொல்வதன் பொருள் என்ன? வெங்காயம் சாப்பிடுபவன் இழிவானவன். சாப்பிடாத நாங்கள் உயர்வானவர்கள். அதனால்தான் அவரது பேச்சில் ஆணவம் தொனிக்கிறது. தான் விரும்பாத ஒரு பொருளை மற்றொருவர் சாப்பிடும் போது அவரை ஏளமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வையின் வெளிப்பாடு இது.

தனிப்பட்ட முறையில் அவருக்கு வெங்காயத்தின் ருசி பிடிக்கவில்லை, உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவரது கூற்றை ஏற்கலாம். ஏன் அவரது குடும்பமே பூண்டு, வெங்காயத்தை சாப்பிடுவதில்லை? அந்தக் குடும்பத்தில் ஒருவருக்குக்கூடவா பூண்டு, வெங்காய ருசி பிடிக்கவில்லை அல்லது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை?

“இதுவரை வெங்காயத்தின் ருசியையே பார்த்ததில்லை, வெங்காயம் பயன்படுத்தாத எனக்கு அதன் விலையைப் பற்றி எப்படித் தெரியும்?” என நிர்மலாவுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்வினி சௌபே. நிர்மலா சீதாராமன் ஒரு பார்ப்பனர் என்பது ஊரறிந்த ஒன்று. கன்யாகுப்ஜ பார்ப்பனர்களில் பத்து பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவுதான் சௌபே பார்ப்பனர்கள். இந்த இருவரின் கூற்றிலிருந்து தெரிவது என்ன? பார்ப்பனர்கள் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்பதுதான்.

நிர்மலாவின் ஆணவப் பேச்சுக்கு நெட்டிசன்கள் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் இது பற்றி நிர்மலா கவலைப்படப் போவதில்லை. காரணம் அவர் ஒரு சனாதனி. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் வெங்காயம் பூண்டு சாப்பிடக் கூடாது என்கிறது பார்ப்பன இந்து மத சாஸ்திரங்கள்.

படிக்க:
நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன. வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது.

மீறி சாப்பிட்டால் என்னவாகும்? வேதம் ஓதாத பார்ப்பானும், ஆசாரத்தை கைவிடும் பார்ப்பானும், பூஜை காரியங்களை கைவிடும் பார்ப்பானும், சாப்பிடத்தகாததை சாப்பிடும் பார்ப்பானும் செத்துத் தொலைவார்கள் என்கிறது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூலான மனு தரும சாஸ்திரம். (மனு:5-4)

வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள். (out caste). (மனு: 5-5, 6). அதாவது வெங்காயம், பூண்டு சாப்பிடும் பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மையை இழந்து விடுகிறார்கள். பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே! இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களது தருமத்தை அதாவது பார்ப்பனியத்தைக் காப்பதில் தெளிவாகத்தான் இருக்கின்றனர். அதனால்தான் வெங்காய விலை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

ஊரான்

 

ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்

திகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்திய அளவில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகவே திகழ்கிறது. தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களை இன்று காலையில் ஐதராபாத் போலீசு சுட்டுக் கொன்றது.

முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள் என பலரும் இந்தப் போலி என்கவுண்டரை எதிர்த்து தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கின்றனர். அவற்றில் சில இதோ…

Mohana Dharshiny

வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கான நீதி அந்தப் பெண்ணின் சமூக அந்தஸ்தில் தங்கியிருக்கிறது. அதே போலவே குற்றவாளிக்கான தண்டனையும் அவரின் சமூக அந்தஸ்தில் தான் இருக்கிறது. கேட்க நாதியற்ற அப்பாவிகள் எனில் உடனே தண்டனை கிடைத்துவிடும்.

கத்துவா சிறுமி கோயிலில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட போது , குற்றவாளியைக் காப்பாற்ற போராட்டம் செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடிய வக்கீலை மிரட்டவும் செய்தபோது இதே நீதி எங்கே இருந்தது? அரசும் நீதிமன்றமும் வர்க்கச் சார்பற்றது என்பது தான் பெரிய பித்தலாட்டம்.

பிரியங்கா கொலையின் குற்றவாளிகளுக்காக அவர்கள் பெற்றோரே வக்கீல் வைத்து வாதாடப் போவதில்லை என்று கூறி விட்டார்கள். அதற்கான வசதியும் அவர்களிடம் இல்லை. ஆகவே என்கவுண்டர் மூலம் நீதியை நிலைநாட்டி விட்டார்கள்.

இதே துப்பாக்கிகள் தான் தூத்துக்குடியில் தமது வாழ்விற்காக போராடிய மக்களை நோக்கியும் நீண்டது. போலீஸ் துப்பாக்கிகளும் வர்க்க சார்புள்ளது தான்….
மறந்துவிடாதீர்கள்.

Sukirtha Rani

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சகோதரியின் உண்மையான பெயரையும் ஐதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து எரிக்கப்பட்ட கால்நடை மருத்துவச் சகோதரியின் உண்மையான பெயரையும் குறிப்பிடாமல் எல்லாரும் கவனமாய்த் தவிர்ப்பதற்கும், பாலியல் வல்லுறவு செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டி சிறுவள்ளூர் சகோதரியின் உண்மையான பெயரைத் தவிர்க்காமல் வெளிப்படையாக எல்லாரும் குறிப்பிடுவதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்.  – சாதியும் வர்க்கமும்.

படிக்க :
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

Raja Rajendran

ஐயா திடீர் என்கவுண்டர் (மனிதநேய) ஆதரவாளர்களே….. ஆமாம் அதிகாரவர்க்கமும், போலீசும் சொல்வதுதான் உண்மை, அவர்கள் பிடித்துவிட்டால் அவர்கள்தான் குற்றவாளிகள் எனில்;

1.) சோராபுதீன் என்கவுண்டர் படி அவர்கள் அனைவரும் நாட்டை அழிக்க வந்த தீவிரவாதிகள், இப்படிக்கு குஜராத் காவல்துறை !
2.) சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நாலு மாவோயிஸ்ட்கள் எங்கள் மாநிலத்தை அழிக்க மாபெரும் சதித்திட்டம் தீட்டியவர்கள், இப்படிக்கு கேரளக் காவல்துறை !
3.) 27 தமிழகத் தொழிலாளர்கள் மட்டுமே ஆந்திராவில் செம்மரம் வெட்டி வளத்தைச் சூறையாடுபவர்கள், எனவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சரி, இப்படிக்கு ஆந்திரக் காவல்துறை !
4.) ராம்குமார் கரண்ட் கம்பியை கவ்வி விளையாடித்தான் தற்கொலை செய்துக்கொண்டான் இப்படிக்கு தமிழகக் காவல்துறை !
5.) கலவரம் செய்ய ஆயுதங்கள், கற்களுடன் வந்ததால்தான் தூத்துகுடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் இப்படிக்கு காவல்துறை சொன்னதாய் ரஜினிகாந்த் !
இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அறம் போற்றுங்கள். சங்கிகளுடன் கலந்தோமென்று ஆனந்தக் கூத்தாடுங்கள் !!!

Villavan Ramadoss

எப்படியோ பணம் இல்லாதவன் குற்றம் செய்தாலாவது உடனடி நியாயம் கிடைக்குது இல்ல, அதை நினைத்து சந்தோஷப்படலாமே?

பணக்காரன் எங்க பொண்ணுங்களை ரேப் பண்ணினா பரவாயில்லைன்னு அதுக்கு இன்னொரு அர்த்தம் வருமே, அதுக்கு எப்படிங்க சந்தோஷப்பட முடியுது உங்களால??

Rajan Radhamanalan

பொள்ளாச்சி ரேப்பிஸ்டுகளுக்கு என்னாச்சு., ஆசிரம சாமியார்களுக்கு என்னாச்சு வகையறா கேள்விகள் எழுகின்றன. வாஸ்தவம் தான். இந்த நாட்ல இப்பிடி வர்க்கத்துக்கு ஒரு நியாயம், சாதிக்கு ஒரு தர்மம்னு இருக்கறதும்; இந்த பேதத்த பொது சமூகம் கமுக்கமா மென்னு முழுங்கி கடந்து போறதும் தான் உண்மைல சகிக்க முடியாத அயோக்கியத்தனங்கள்.

இதோட எதிர்விளைவா ஒடுக்கப்படுற வர்க்கத்துலருந்து எழுந்து வர்ற கிரிமினல்கள் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாத வகைல தகவமைஞ்சு வருவாங்க. அப்ப மட்டும் லபோதிபோனு கதறிப் பிரயோசனம் இல்லை. இப்பிடியே போச்சுனா இந்த சமூகத்தோட ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் பவாரியா கொள்ளைக் கூட்டம் மாதிரிதான் ஆகப்போகுது.

ஆனா இதுல பெரிய வருத்தமே., இந்த வழக்குல டிரையல் நடத்தி வேற யாருக்கும் தொடர்பில்லை., இவனுக மட்டும் தான் செஞ்சுருக்கானுக உறுதியான பின்னாடி கொல்றதுதான் கொஞ்சமாவது அர்த்தமுள்ளதுனு கூட புரியாத அளவுக்கு சனம் மக்குக் கூட்டமா இருக்கறதுதான்.

அவனவன் சூத்துல சூடு படாத வரைக்கும் இந்த இன்ஸ்டண்ட் ஜஸ்டிஸ் பார்க்க மசாலா படம் மாதிரி ஜாலியாதான் இருக்கும். எஞ்சாய் பண்ணுங்க!

Villavan Ramadoss

டேய், போலீசுக்கு பூ தூவி வரவேற்கிற புண்ணியவானுங்களா..

இதே துணிச்சல்ல ரேப் பண்ணப்பட்டு கொல்லப்பட்ட தலித், முஸ்லீம் இல்லை வேற ஏழை பொண்ணுங்களுக்கும் இதே மாதிரி நீதி வேண்டும்ன்னு ஸ்டேஷன் பக்கம் போயிராதீங்க. நேரம் நல்லா இருந்தா மேட்டுப்பாளையம் ட்ரீட்மெண்ட் கிடைக்கும் இல்லைன்னா தூத்துக்குடி ட்ரீட்மெண்ட்தான்.

அன்சாரி முஹம்மது

மத்திய காங்கிரஸ் ஆட்சிலேயே அந்த ரெண்டு குஜராத்தி தீவிரவாதிகளையும் என்கௌண்டர் பண்ணியிருந்தா இந்த நாட்டையும் காப்பாத்தி இருக்கலாம்!

தங்க.செங்கதிர் செங்கதிர்

போலி மோதல் கொலையை முன்னின்று நடத்திய போலீசு அதிகாரி.

காவல்துறையினரின் போலி மோதல் கொலையை ஆதரிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல், சிலர் ஆகா…ஓகோ…என காவல்துறையினரின் இந்த மோசமான செயலை சிலாகித்துப் பேசுகிறார்கள். நிகழ்விடத்தில் சிலர் மலர்தூவி காவல்துறையினரை கொண்டாடியிருக்கிறார்கள்.!

ஒவ்வொரு போலி மோதல் கொலைகளின் போதும் காவல்துறையினர் சொல்லும் கதை வசனங்கள் இராஜேஸ்குமாரின் திகில் நாவலையே மிஞ்சுபவை.!

இப்போது அந்த நால்வருக்கு எதிராக நீண்ட காவல்துறையினரின் துப்பாக்கிகள் நாளை மனித உரிமை போராடும் போராளிகளுக்கு எதிராக நீளாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்போதும் எதிர் முகாம் அரசியலில் நிற்கும் மனிதகுல விரோதிகள் அதை ஆதரித்து நிற்பார்கள்.

ஒருநாள் அவர்களுக்கு எதிராகவும் அத்துப்பாக்கிகள் சுழலும்.!
நீதிமன்ற அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் காவல்துறையினரின் இச்செயல் வரவேற்கத்தக்கது அல்ல

Vijayabaskar S

கூட்டு வன்புணர்வு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கும்போது
அந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் சட்டத்திற்குப் புறம்பாக, அராஜகமாக, நீதிமன்றத்திற்கு வெளியே, ஜனநாயகம் மாண்புகளுக்கு அப்பாற்பட்டு, குற்ற விசாரணைகளுக்கு அப்பாற்பட்டு, “என்கவுண்டர் என்ற பெயரில் கொலை” செய்யும்போது அந்தக் கொலையை வரவேற்கும் அதே நபர்கள் தான் இஸ்லாமிய நாடுகளில் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தரப்படும் தண்டனைகளை காட்டுமிராண்டித்தனம், அராஜகம், ‘இஸ்லாமியர்களே இப்படித்தான்” என்று சொல்லுவார்கள்.

இஸ்லாமிய நாடுகளின் சட்டத்தை கண்டிப்பவர்களின் காதல் ஜனநாயகத்தின் மீதானது அல்ல. மாறாக அது இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் வந்தது.

பொது இடத்தில் குற்றவாளிகளை தண்டிக்கும் இஸ்லாமிய நாடுகளை கண்டிக்கும் நபர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எனில்
இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் என்கவுண்டர் கொலைகளையும் கண்டிக்கவேண்டும். இரண்டிற்கும் பாரிய வேறுபாடு இல்லை.

ஆனால் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் கொலைத்தண்டனையை கண்டிப்பவர்கள் இந்தியாவில் நடக்கும் என்கவுண்டர் கொலையை கண்டிப்பதில்லை. இந்த முரண் ஜனநாயக அடிப்படையில் வந்ததல்ல. இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் வருகிறது.

இதற்கு தமிழக அல்லது இந்திய உதாரணம் இன்னொன்று தருகிறேன். இப்படி இப்படியான அராஜக என்கவுன்டர் கொலைகளை ஆதரிப்பவர்கள் தலித் மக்கள் மீது வன்முறை செலுத்தப்படும் போது, அந்தக் குற்றவாளிகளை இப்படி தண்டிக்கவேண்டும் என்று ஒருபோதும் சொல்வதில்லை. நம் கண்முன்னே சில நாட்களுக்கு முன்னர் 17 உயிர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுள்ளன.

அந்தக் கொலையாளியை, அந்தக் கொலைக்கு காரணமானவனை என்கவுண்டர் செய்ய வேண்டும் என எவரும் சொல்வதில்லை. இந்த முரணும் ஜனநாயகத்தின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக தலித் மக்களின் மீதான காழ்ப்புணர்வில் வருகிறது.

சு.விஜயபாஸ்கர்.

Saravanakarthikeyan Chinnadurai

என்கவுண்டர் என்பது அரச பயங்கரவாதம். மக்கள் ஆதரவு இருப்பதாலேயே அரச பயங்கரவாதம் நியாயம் ஆகிடாது. அரசுக்குத் தேவை ஒரு தீர்வு அல்லது ஒரு பிம்பம்; அதற்காக என்கவுண்டர்கள் நிகழ்த்தும். நாம் case by case தேர்ந்தெடுத்து அதை ஆதரித்தும் எதிர்த்தும் கொண்டிருக்க முடியாது. அதுதான் இதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல்.

இன்று தெலுங்கானா அரசுக்குத் தேவை வருங்காலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குற்றம் செய்வோரிடையே பயத்தை ஏற்படுத்துவது, சட்டத்தைக் கையிலெடுத்தேனும் இது உடனடி நீதிபரிபாலனம் செய்யும் அரசு என்ற பிம்பம் ஏற்படுத்துவது. அதனால் இந்த என்கவுண்டர். தமிழக அரசுக்குச் சென்ற ஆண்டு தேவைப்பட்டது போராட்டம் செய்வோரிடையே பயத்தை விதைப்பது, செல்வாக்கு மிகுந்த ஒரு கார்ப்பரேட்டுக்கு ஆதரவாய்ச் செயல்படுவது. அதனால் தூத்துக்குடியில் சுட்டார்கள். அது சரியா? ஹைதராபாத்தை ஆதரித்து விட்டு தூத்துக்குடியை எப்படித் தடுப்பீர்கள்? துப்பாக்கி யாரைச் சுட்டாலும் சுடும் என்பது தான் இதில் சோகமான யதார்த்தம். அதனால் துப்பாக்கியை மொத்தமாய்ப் பொத்தி வைப்பதே வழி.

நீதி விசாரணை என்பதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணராத ஒரு மொண்ணைச் சமூகம் உருவாகுமளவு அரசும், நீதித்துறையும் இங்கே கேடுகெட்டதனமாய் நீதி விசாரணைகள் நடத்தி வந்திருப்பதும் மிகத் தெளிவாய்த் தெரிகிறது.

படிக்க :
♦ அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !
♦ தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்

Arivazhagan Kaivalyam

தெலுங்கானா மருத்துவர் படுகொலையில் தொடர்புடையதாக சொல்லப்படும் 4 பேரையும் அரச படுகொலை செய்தாகி விட்டது. தெலுங்கானா காவல்துறைக்கு சமூக இணைய ஊடகங்களில் துவங்கி காட்சி ஊடகங்கள் வரை விழா எடுக்கும் படலம் துவங்கி விட்டது.

சரி, இந்த நால்வரில் ஒருவன் அப்பாவி இளைஞன், வழக்கமாக நமது இந்தியக் காவல்துறை நடைமுறையான பொய் வழக்கில் அகப்பட்டவன், வழக்கமான கனவுகளோடு வாழ்க்கையை எதிர்கொண்ட ஒரு எளிய குடும்பத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொள்வோம். அவனது குரலும், அந்தக் குடும்பத்தின் கண்ணீரும் நமது கும்பல் மனநிலையில் உரைக்காது.

இந்தியாவில் காவல்துறைக்கென்று தனியாக ஒரு குற்றப் பின்புலம் இருக்கிறது. வலியவன் அல்லது அதிகார வல்லமை கொண்டவனுக்கு ஒரு நீதி, எளிய குரலற்றவர்களுக்கு ஒரு நீதி என்று அது தேசமெங்கும் நிரவிக் கிடக்கிறது.

இந்தப் படுகொலைக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்கலாம். ஒரு Criminal Network இந்த நிகழ்வின் பின்புலத்தில் காவல்துறையின் ஆசிகளோடு இயங்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பின்புலத்தைக் காப்பாற்றும் முயற்சியாகக் கூட இந்த அரச படுகொலை அவசர அவசரமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

அந்த மருத்துவரின் கண்கள் என் குழந்தையின் கண்களைப் போல அன்பு தோய்ந்த அற்புதமான கண்கள். உடலைத் தாண்டி அந்தக் கண்களில் மிதக்கும் கனவுகளை மனித உயிர்களின் பரிதவிப்புகளை என்னால் உங்களை விட அதிகமாக உணர முடியும். அந்தக் குழந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டும். ஆனால் அந்த நீதி வெறும் உணர்ச்சிக் குவியல்களால் நிரப்பப்பட்ட வழக்கமான “அரசபடுகொலை” நீதியல்ல.

நீதி என்பது தண்டனை அல்ல, நீதி என்பது ஒரு சமூகம் தனது நாகரீகத்தை நோக்கிய பயணத்தை நிகழ்த்தும் பாதை. அந்தப் பாதையில் தான் நமது குழந்தைகள் நடக்கப் போகிறார்கள். நாம் ஆபத்தான பாதைகளை உணர்வின் முள் வேலிகளால் தற்காலிகமாக அடைத்து விட்டு நீதி வழங்கி விட்டதாக வெற்றுக் கூச்சல் இடுகிறோம்.

Arul Ezhilan

சமூகத்தில் அடவடியாக நடந்து கொள்வதையும், பெண்களை அடிப்பது உதைப்பது, காதலிக்கச் சொல்லி நிர்பந்திப்பது, தனக்கு கிடைக்கா விட்டால் ஆசிட் ஊத்தி சிதைப்பது என ஆண் சமூக விரோதியாக வாழ்வதை ஆண்மை என்கிறது இந்திய குடும்ப அமைப்பு. அடங்கிச் செல்வதையும் பெண் என்றால் கட்டுப்பெட்டியாக சுருங்கி அடங்கி வாழ வேண்டும் என்பதை பெண்மை என்கிறது இந்திய சமூக, சாதி, குடும்ப அமைப்பு யாரோசில கிரிமினல்களை சாகச பாணியில் கொன்று விட்டு குடும்பம் என்னும் அயோக்கியத்தனமான ஜனநாயகமற்ற நிறுவனம் தன்னை புனிதமாக்கிக் கொள்கிறது.

Sugumaran Govindarasu

ஐதராபாத்தில் போலி மோதலில் நால்வர் கொல்லப்பட்டது சட்டவிரோதம். தேசிய மனித உரிமைகள் ஆணையப் பரிந்துரைப்படி போலீசார் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தண்டனை வழங்கும் அதிகாரம் போலீசுக்குக் கிடையாது.

Vathsala Nagendran

பூக்காரி,வேலக்காரி,மீன்காரி எனும் இந்தியா என்கவுண்டரைக் கொண்டாடுகிறது !
பூக்காரம்மா,வேலக்காரம்மா, மீன்காரம்மாக்களுக்கான இந்தியா அரியலூர் நந்தினி/ஆசிஃபாக்களுக்கான நியாயம் தேடி குறைந்தபட்சம் மாவுக்கட்டோ, கரண்ட் வயர்ல கடிபடுறதோ கூட நடக்காம தான் கெடக்குது !

Veldurai Rajkumar

கொலைகளை கொண்டாடும் இச்சமூக உளவியலை எண்ணி சற்று அச்சமாக இருக்கிறது.

Villavan Ramadoss

அப்போ செத்தவனோட ஜாதிதான் தண்டனையை தீர்மானிக்குதுன்னு சொல்றேளா?

இல்ல கொன்னவனோட ஜாதியும் சேர்ந்தே தீர்மானிக்குதுன்னு சொல்றேன்.

Anas Sulthana

ரோஜா பூ தூவி போலீசை வரவேற்கும் உள்ளூர் மக்கள்.

இன்ஸ்டன்டா ஒரு குற்றத்திற்கு மரணம் தண்டனை தரணும்னா இங்கு யாரும் உயிரோடவே இருக்க முடியாது.
என்கவுண்டர் ஒருபோதும் இங்கு குற்றத்தை குறைத்ததாக வரலாறு இல்லை..

பாலியல் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், ஆணாதிக்கம் மனோபாவத்தை உடைப்பது போன்ற சமூக தேவையை பற்றி விவாதிக்க ஆரம்பியுங்கள். அதைவிட்டு நாலு பேரை கொன்றால் இனி பாலியல் வன்க்கொடுமையே நடக்காது பயப்படுவார்கள் என்று போலி பிம்பத்தை உருவாக்க வேண்டாம்..

அதுமட்டும் அல்ல… இது எளியவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற இன்ஸ்டன்ட் நீதி.. இது வலிமைமிக்க பொள்ளாச்சி கயவான்களுக்கு பொருந்தாது என்பத்தையும் யோசியுங்கள்..

Durai Arun

‘பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!’ – தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ஆம், இப்படித்தான் இவர்களை கொல்ல வேண்டும் இது தானே சரியான தீர்ப்பு என்று எல்லோரும் நினைக்க தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் இந்த சட்ட முறை, நீதித்துறை மூலமாக உரிய தண்டனை குற்றவாளிக்கு கிடைக்காது என்ற மன நிலையை உருவாக்கியது எவ்வளவு பெரிய தவறு. சரி ஹைதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது போல பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் கொலை செய்யப்படுவார்களா ???

உன்னாவில் 23 வயது இளம்பெண்- பிஜேபி எம்.எல்.ஏ மற்றும் குற்றவாளிகளால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் . அந்த எம்.எல்.ஏ வும் மற்றும் இதர குற்றவாளிகள் எப்போது சுட்டுக்கொல்லப்படுவார்கள்?????

நிர்பயா வழக்கு தொடர்புடையவர்கள் ஏன் என்கவுண்டர் செய்யப்படவில்லை ?? நாணல் போல வளைவது தான் சட்டமா ???

மனிதி தெரசா

இதெல்லாம் கொண்டாடிக்கிட்டு திரியனுமா ? இதான் கேள்வி.. உண்மையாலும் ரேப் பன்னா கூட தீர்ப்பு இவ்வளவு சீக்கிரம் கொடுக்குற அளவுக்கு இந்த நாட்டுக்கு அதிகாரம் இருக்கா.! அந்த ரேப் பண்ண பொண்ணோட குடும்பம் நொந்து போகாம இந்த நாட்டு சட்டம் எந்த ரேப் கேசுக்கு தீர்ப்பு கொடுத்துருக்கு..

சுட்டு கொல்லப்பட்ட அத்தனை பேரும் ஒருவேளை சம்பந்தபடுத்தி கொல்லப்பட்ட மனிதர்களா இருக்கலாம்.. இந்த மாதிரியான என்கவுண்டர் கண்டிப்பாக இவ்வளவு சீக்கிரம் செய்யகூடிய ஒன்னு இல்ல.. நியாயம் இருந்தா சட்டம் சமமா தீர்ப்பு வழங்கட்டும்..

அதான் நீதீமன்றம் என்னத்துக்கு இருக்கு.. இவங்க இஷ்ட மயிருக்கு ஹீரோயிசம் காட்டுறதுக்கா.. இதெல்லாம் கொலைங்க.. இத போய் கொண்டாடிக்கிட்டு இருக்குறதே தப்பு.!

எல்லாருக்கும் சட்டம் சமமா இருந்தா இத சட்டம் பண்ணாது.. இந்த என்கவுண்டர் எல்லாம் உண்மையாக மனித உரிமை மீறலே.. அதும் அந்த பொண்ணு கொல்லப்பட்ட இடத்திலே கொன்னுருகாங்க..இது என்ன படமா..ஹீரோயிசம் காட்ட..! முறைப்படி தானே தண்டனை கொடுத்துருக்கனும்..

#ஜனநாயகம் தழைந்தோங்கட்டும்
என்கவுண்டர்கள் ஒழிக்கப்பட வேண்டும்..

Jawahar Dra

என்கௌண்டரில் பெண் மருத்துவரை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்து எரித்த நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்:- செய்தி

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆனால் சட்டப்படி. இந்த என்கௌண்டரை ஆதரிப்போருக்கு சில கேள்விகள்.

சிறுமிகளின் பாலியல் கொடுமைகளை நீலப்படமாக பார்ப்போர் எத்தனை பேர் தெரியுமா? இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எத்தனை இடத்தில் இருக்கின்றனர்? இவர்களுக்கும் இந்த நால்வருக்கும் என்ன வித்தியாசம்?

நித்தியானந்தா பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது என்பதற்கு மத பாதுகாப்பா? அப்படியானால் இனிமேல் நோய்க் கிருமியை ஒழிக்காமல் நோயாளிகளைக் கொன்றுவிடலாம் அல்லவா? பெண் குழந்தைகளுக்கு Good touch, Bad touch சொல்லித்தரச் சொல்லும் நாம் ஏன் இன்னும் ஆண் குழந்தைகளிடம் பெண், ஆண் சமத்துவம் சொல்லிக் கொடுக்கத் தயாரில்லை?

ஏன் சில இடங்கள் Don’t touch இடங்கள் என்பதை சொல்வதே இல்லையே? சரி இனி கோர்ட் எதற்கு? வக்கில் எதற்கு? நீதிபதி எதற்கு? உன் மதம் பெண்ணை எவ்வளவு கேவலமாக ஒரு பண்டமாக வைத்துள்ளதே? பெண் – ஆணின் பாலியல் விருப்பத்திற்கு இணங்கியாக வேண்டும் என்றுதானே சொல்கின்றன????

இக்குற்றங்கள் மட்டுமல்ல எந்தக் குற்றம் இருக்க கூடாது என்றால் சமூக மாற்றம்தான் தேவை..

படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
♦ கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

Muthukumar Jayaraman

கேள்வி: ‘உங்கள் வீட்டு பெண்ணுக்கு இது போன்று நடந்தால் இந்த என்கவுன்டரை எதிர்ப்பீர்களா?’

பதில்: ‘உங்கள் வீட்டு ஆண் ஒரு வேளை பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு இது போன்று விசாரணை இல்லாமல் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டால் இப்படித்தான் ஆர்ப்பரிப்பீர்களா?’

விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பின்பு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் எண்ணற்றவை.

Rajkumar Sellampillai

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக்கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா கொலையில் குற்றவாளிகள் அதே இடத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட செய்தி பரவலாக பாராட்டைப் பெற்றுவருகிறது.

நிதானமான சிந்தனைகள் வருவதற்கு முன் நமக்கும் இது ஒருவிதமான ஆறுதலையும் பழிவாங்கிய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
‘என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் ‘என்று மகளை பறிகொடுத்த தந்தை கூறுவதை அதே உணர்வுடன் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இது சரியான முறையான தீர்வு அல்ல. ஏனெனில்

  1. இந்த மாதிரியான குற்றங்களில் குற்றவாளிகளின் பின்னணியைப் பொறுத்துதான் என்கவுண்டர்கள் நடக்கின்றன.
  2. கைது செய்யப்பட்டவர்கள் இப்படி கொல்லப்படும்போது உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா ? அல்லது இவர்கள் மட்டும்தானா ? என்ற உண்மைகள் வெளிவருவதில்லை.
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்கவுண்டர்களால் தீர்க்கப்பட முடியாதது.

இதேபோல உத்தரப் பிரதேசத்தில் உனாவ் மாவட்டத்தில் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்து வழக்குநடத்திக் கொண்டிருந்தார் . அப்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டார் . இன்னொரு பெண் வழக்கு நடத்துவதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து எரிக்கப்பட்டுள்ளார். 90 சதவீத தீக்காயங்களோடு அவர் இப்போது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் மட்டுமா
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூட யாரும் என்கவுண்டர் செய்யப்படவில்லை.

எனவே இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வு சட்டத்தை சரியாக , விரைவாக , சமமாக ,முறையாக , குறித்த கால வரையறைக்குள் முடிக்க வேண்டும் . அதிகபட்ச தண்டனையை ஒரேமாதிரி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான்.

அதைவிட முக்கியமானது அவன் ஆம்பளைங்க .. அவன் அப்படித்தான் இருப்பான் என்று பேசுகிற மூளைகளுக்கு முதலில் மருத்துவம் செய்ய வேண்டும் .
– வழக்கறிஞர் அருள்மொழி,
திராவிடர் கழகம்.

Asif Meeran

பொதுப்புத்தி எப்போதும் உடனடி நீதியையே வேண்டுகிறது. வன்புணர்வு செய்தவனை விசாரணையின்றி நடுவீதியில் சுட்டுக் கொல்வதை ஆரவாரமாக வரவேற்குமளவுக்கு நம் தேசத்தின் நீதித்துறையும் காவல் துறையும் செயலற்றுப் போயிருக்கின்றன என்பதே உண்மை.

உடனடித் தீர்வுகளின் மேல் நம்பிக்கை வைக்குமளவுக்கு நம்மைத் தள்ளியிருப்பது வரம் போலத் தோன்றினாலும் அது மிகப் பெரும் சாபம். காவல் துறையின் கையில் விசாரணையின்றி சட்டத்தை ஒப்படைப்பது போன்ற பெருங்கொடுமை வேறில்லை.

சட்டம் கடுமையாக்கப்பட்டு நீதி வழங்கல் விரைவாக்கப்படாதவரை காவல் துறை விசாரணையின்றி சுட்டுக் கொல்வதை ஆரவாரம் செய்து வரவேற்கும் கூட்டதோடு கோவிந்தா போடும் அசட்டு மனநிலையே எஞ்சும்.

இதையெல்லாம் யோசிக்கும்போதும் கூடவே எப்போதும் அறிவுசார்ந்து மட்டுமே எப்போதும் இயங்க முடியாது என்பதும் புலனாகிறது.

Prince Ennares Periyar

மக்கள் வன்முறையை விரும்புகிறார்கள். எனவே தான் பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வாக குற்றவாளிகளை தூக்கிலிடவோ, கூட்டாக அடித்துக் கொலை செய்யவோ, குறியறுக்கவோ, கொலை செய்யவோ பரிந்துரைத்தால் அந்த யோசனையை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெண்களுக்கான சம உரிமைக்கும், ஆணாதிக்கம் – பெண் வெறுப்புக்கெதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படுதலை ஒழிக்கவும் ஆண்களுக்கு விழிப்புணர்வூட்ட நினைத்தால் மக்கள் அதை விரும்புவதில்லை.
– தஸ்லிமா நஸ்ரின்


முகநூல் தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களை போலி மோதலில் சுட்டுக் கொன்றிருக்கிறது ஹைதராபாத் போலீசு. வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண் கால்நடை மருத்துவர் ரெட்டி எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் விவசாயக் கூலிகள். அவர்களது குடும்பத்தினரது நேர்காணலை பிபிசி விரிவாக பதிவு செய்திருக்கிறது. தங்களது மகன் குற்றம் புரிந்திருந்தால் அவனை தூக்கிலிடட்டும் என்கிறார் ஒரு தந்தை.

இப்படி இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் என்ன பிரச்சினை? மாவோயிஸ்டுகளை போலி மோதலில் கொன்று இழிபுகழ் அடைந்திருக்கும் தெலுங்கானா போலீசு இப்போது நடுத்தர வர்க்கத்தினை திருப்திபடுத்த இந்த போலி மோதலைக் கொன்றிருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உண்மையிலயே அந்தக் குற்றம் செய்திருப்பின் அவர்கள் பால் இரக்கம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிக்காமல் போலீசாரால் சுட்டுக் கொன்றிருப்பது என்ன நியாயம்?

இதே நியாயத்தை கீழ்க்கண்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் வழங்குவார்களா? என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவார்களா? நாளையே நீரவ் மோடியும், மல்லையாவும், நித்தியானந்தாவும் இந்தியாவில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் போது தப்பிச் செல்ல முயன்றார்கள் என்று சுட்டுக் கொல்லப்படுவார்களா? இந்தப் போலீசும், நீதிமன்றமும் யாருக்கானது?

“நான்கு பேரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் நீதியா? நீதிமன்றத்தை மூடிவிட்டு இதுபோன்ற என்கவுண்டர்களை பார்க்க வேண்டுமா? ஒருபுறம் ஆதித்யநாத் ஒரு மாநிலத்தையே ஆள்கிறார், நித்தியானந்தா புதிய நாட்டை அறிவிக்கிறார், மறுபுறம் உன்னாவில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர் மீது தீ வைக்கப்படுகிறது. அவரை போன்ற எண்ணற்றவர்களின் குடும்பத்தினர் நீதிக்காக போராடி வருகின்றனர். என்கவுன்டர்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த சட்டத்துறை பேராசிரியரான கல்பனா.

உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சி சொல்லச் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணை பிணையில் வந்த குற்றவாளிகள் எரித்து கொல்ல முயன்றார்கள். அப்பெண் 90% தீக்காயம் அடைந்துள்ளார் – இது சமீபத்திய செய்தி. இந்தக் குற்றவாளிகளை, ஆஷிபாவைக் கொன்ற குற்றவாளிகளை, அந்தக் கோவில் பூசாரியை, உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை, 

அரியலூரில் நந்தினி என்ற சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டனை,

சென்னையில் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, தனது தாயையும் கொலை செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட துஷ்வந்தை,

சென்னை எர்ணாவூர் மீனவக்குடியிருப்பை சேர்ந்த 3 வயது சிறுமி ரித்திகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சேகரை,

சேலத்தில் தலித் சிறுமி ராஜலெட்சுமியை சாதி ஆணவத்தால் வன்கொடுமை செய்ய முயன்று தலையை வெட்டிக்கொன்ற பா.ம.க கட்சியில் இருந்த கொடூரனை,

பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய கொடூரர்களை, அ.தி.மு.க பின்னணி உள்ள குற்றவாளிகளை,

பல பெண்கள் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார்கள் ராம் ரஹீமை, ஆசாரம் பாபுவை, நித்தியானந்தாவை

இவர்களையெல்லாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்வார்களா? இன்னும் இர்ஷத் ஜஹான் வழக்கில் போலி மோதலில் ஈடுபட்ட போலீசார், பா.ஜ.க.வினரை என்கவுண்டர் செய்வதில் என்ன தயக்கம்?

ஐ.ஐ.டி.யில் மூன்று பேரை அடையாளம் காட்டி விட்டு வாழ முடியாமல் செத்துப் போனார் பாத்திமா. அவர்கள் மீது கைது நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா? அல்லது இனிமேலும் எடுக்கப்படுமா?

என்கவுண்ட்டரும் கூட வர்க்கம் பார்த்துதான் பாயும் என்பது வரலாறு.

இன்றைய கேள்வி!

ஹைதராபாத் போலி என்கவுண்டர் பற்றி உங்கள் கருத்து என்ன?

♦ ஆதரிக்கிறேன்
♦ எதிர்க்கிறேன்
♦ குழப்பத்தில் இருக்கிறேன்

டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூப்பில் :

வாக்களிக்க !

ஃபேஸ்புக்கில் :

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

கத் சிங் தூக்கு மேடை ஏறும்போதும் கையில் பகவத் கீதையை வைத்திருந்ததாக இந்த வாரம் வெளிவந்திருக்கும் விஜயபாரதம் இதழ் கூறுகிறது. இது பகத் சிங்கை மிகவும் இழிவுபடுத்தும் செயல். பகத் சிங் கடவுள் நம்பிக்கையற்றவர். ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என புத்தகம் எழுதியவர்.

1931 மார்ச் 23ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் பகத் சிங். அவரைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்தவர், லாகூர் சிறையின் வார்டனான சரத் சிங். அவரிடம்தான் தான் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கேட்பார் பகத் சிங். அவர் கேட்ட பெரும்பாலான புத்தகங்கள், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட மார்க்சிய, லெனினிய நூல்கள். கார்ல் லெய்ப்னெச்டின் மிலிட்டரிஸம், லெனினின் லெஃப்ட் விங் கம்யுனிஸம், ரஸ்ஸலின் வை மென் ஃபைட் மற்றும் உப்டன் சின்க்ளேரின் நாவலான தி ஸ்பை உள்ளிட்ட மார்க்சிய நூல்களைத்தான் பகத் சிங் சிறைக்கு வரவழைத்துப் படித்தார்.

அவரைத் தூக்குமேடைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக, வாகே குருவை வணங்கும்படி சரத் சிங் சொன்னபோது, “எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், பல முறை ஏழைகளின் துயரங்களுக்கு காரணமாக இருக்கிறார் என்று கடவுளை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால் தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக்கேட்கிறான் இந்த கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.

பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக, அவரது கடைசி விருப்பத்தை கேட்டறிய அவரது வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை சந்தித்தார். பிராண்நாத் மேத்தாவைப் பார்த்த பகத் சிங், புன்னகைத்தபடியே தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தை கொண்டு வந்தாரா என்று கேட்டார்.

அந்த புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே வழக்கறிஞருக்கு புத்தகம் கேட்டு தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்து போய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், நாட்டிற்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”

படிக்க:
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

மேத்தா சென்ற பிறகு பகத் சிங்கிடம் வந்த அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பாக அவர்கள் தூக்கிலிடப்படபோவதாக தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.

அப்போது பகத் சிங் The Revolutionary Lenin புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார். அந்த அதிகாரியிடம் சிரித்தபடி பகத் சிங் கேட்டது இதுதான்: “ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?”

பகத் சிங் தூக்கிலிடப்படும்போது அவரது கையில் எந்தப் புத்தகமும் இல்லை. கைகள் கட்டப்பட்டிருந்தன. தன்னை விடுவிக்க உண்மையிலேயே முயற்சிகளை மேற்கொண்ட ஜவஹர்லால் நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் நன்றி தெரிவிக்கும்படி சொன்னார் பகத் சிங்.

இதுதான் நடந்தது. இதைவிடுத்து, கையில் கீதை வைத்திருந்தார் என்று கூறி பகத் சிங்கை இழிவு செய்வது anti- nationalகளின் வேலை.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

பகத்சிங் – ஆர்.எஸ்.எஸ்-ன் அவதூறு!

disclaimer

நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?

‘வெங்காயம் சாப்பிடுவதில்லை’ :
நிர்மலாவின் பார்ப்பன சாதி பெருமைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு !

ந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை ரூ. 150 முதல் ரூ. 250 வரை ஏறியுள்ளது. இந்த விலை உயர்வு நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே.

அமைச்சர் பதவிக்குரிய கண்ணியமில்லாத நிர்மலா சீதாராமன், ‘நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்ளாத குடும்பம் என்னுடையது’ என தனது பார்ப்பன சாதிபெருமை குறித்து சிலாகித்தார்.  இந்திய வரலாறு காணாதவகையில், எந்தவொரு நிதியமைச்சரும் அளித்திராத ’சாதிய’விளக்கம் இதுவாகத்தான் இருக்கும்.

’ஏழைகளின் காய்கறி’ என சொல்லப்பட்டும் வெங்காயத்தை 99% இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். மீதியுள்ளவர்களின் பிரதிநிதியாக மட்டுமே பதில் சொல்லியிருக்கும் நிர்மலா, நிதியமைச்சராகியிருப்பது காலக்கொடுமை.

நிர்மலாவின் ஆணவப் பேச்சு, சமூக ஊடகங்களில் பலரும் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

“வெங்காயம் சாப்பிடுவதும் தவிர்ப்பதும் தனிமனித ருசி. அதை நகைச்சுவையாகத்தான் நிதி அமைச்சர் சொன்னதாக யாரும் சப்பைக்கட்டு கட்ட முடியாது. சிரித்துக் கொண்டே பேசும் நிலையிலா பொருளாதாரம் இருக்கிறது?

வெங்காயம் பற்றிய இப்பேச்சின் உள் ஒரு மிகப் பெரிய திமிர் தொனிக்கிறது. யாரும் நிரந்தரமாய் மேலேயே இருந்ததில்லை. இன்றைய ஆணவம் நாளைய கேவலத்தின் முன்னறிவிப்பு தான். இன்னும் பேசட்டும். நுணல்கள்.” எனத் தெரிவித்துள்ளார் மருத்துவர் ருத்ரன்.

தயாளன்: வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பார்ப்பனர்கள் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் மண்ணுக்கு கீழே விளையும் எதையும் அவர்கள் உட்கொள்ள மாட்டார்கள். அந்த உணவுப் பொருட்கள் பன்றிக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் உரியவை என்று கருதுகிறார்கள். ஆனால் உருளைக் கிழங்கும் கேரட்டும் அவர்களுக்கு இந்த வகையில் வராது … – பண்பாட்டு அசைவுகளில் தொ.ப.

நிர்மலா சீதாராமன் சொல்லும் உணவு அரசியல் வெறும் விலை குறித்தது அல்ல. அது இந்திய சாதிய அரசியல்.

நாச்சியாள்சுகந்தி: சாதிய திமிரைத் தன் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நிமிடத்துக்கு நிமிடம் காண்பித்துக்கொண்டிருக்கும் நபர் தான் நிர்மலா சீதாராமன் என்னும் மனிதநேயம் துளியுமற்ற ஒரு பிறவி.

மீனவர்கள் கொல்லப்பட்டபோது ராமேஸ்வரம் வந்த நிர்மலா பேசிய ஒவ்வொரு பேச்சும் சொல்லும் அத்துணை ஆணவம். செய்தியாளர்களை அவரைப் போல் யாரும் அத்தனை எளிதாக அவமானப்படுத்தியதில்லை.

படிக்க :
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !
திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

‘நான் வெங்காயம் பூண்டு சாப்பிடாத குடியில் பிறந்தவள். அதனால் எனக்கு வெங்காய விலை பற்றி எனக்குத் தெரியாது’ என்று கூறுவதெல்லாம் திமிர்த்தனம் மட்டுமில்லை. எப்போதும் சாதியத்திமிரை தூக்கிச் சுமக்கும் அகம்பாவம்.

மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குக் கேட்டு வெற்றிபெறாத போதே இந்த அகம்பாவம். மக்களை சந்தித்திருந்தால்…?

கவின்மலர்:  அண்மையில் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டு சொந்தக்காரரின் மகளைப் பார்த்தேன். அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். அன்றுதான் மும்பையில் இருந்து வந்ததாகச் சொன்னார். ஆகவே அவருக்கு தமிழ் தெரியாதோ என எண்ணிக்கொண்டு ‘Do you know Tamil?’ என்று கேட்டேன். ‘ what? I am a Tamil Brahmin’ என்றார் பதறி.

எங்காவது வேறு சாதியினர் இப்படி ‘I am a Tamil _______ என்று சொல்லிப் பார்த்திருக்கிறோமா?

இதுல என்ன பெருமை… எருமை? என்று கேட்கத் தோன்றியது. ஒரு மொழி தெரியுமா எனக் கேட்டால் எவராவது தன் சாதியையும் சேர்த்துச் சொல்வது வேறு சாதியில் கிடையாது.

நான் வெங்காயம் பூண்டு பயன்படுத்தாததால் அவற்றின் விலையேற்றம் பற்றி அதிகம் கவலைப்படாத குடும்பத்திலிருந்து வந்தவள் – நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாராமன்.

“நான் பாப்பாத்தி. என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது” – சட்டமன்றத்தில் ஜெயலலிதா.

இப்படிப்பட்டவங்களை எல்லாம் பெண்ணியம் என்கிற பெயரில் எல்லாம் ஆதரிப்பவர்களைப் பார்த்தால்தான் வியப்பாக இருக்கிறது.

ராம் கோபால்:  நான் வெங்காயம் அவ்வளவாக உபயோகிப்பதில்லை. எங்கள் பரம்பரையில் நாங்கள் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதில்லை. அதனால் எனக்கு கவலையில்லை, என நமது நாட்டு நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீத்தாரமன் பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவரின் கேள்விக்கு போகிற போக்கில் ஒரு பதிலுக்கு கமெண்ட் செய்துள்ளார்.

கிட்டதட்ட இந்த மனிநிலையில்தான் அரசுப் பள்ளிகளின் மத்திய உணவில் வெங்காயம் கூடாது என்று அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனமும் சொல்கிறது. எனக்குத் தெரிய இந்திய நாட்டில் ஒரே ஒரு வெங்காயத்தை வைத்து கூட நீர் சோறு தின்று வாழும் மக்கள் தான் ஏராளம்.

ராஜசங்கீதன்: நான் மூளை சாப்பிடுவதில்லை. அதனால் மூளை வளர்ச்சி பற்றிய கவலை இல்லை! – நிர்மூலம்

மதிவாணன்: வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பம் என பார்ப்பன பெருமை பேசும் நிதியமைச்சர் நிர்மலா அரசியல் சட்ட அரசமைப்புக்கு நேர்ந்த களங்கம்.

சின்னையா ராஜசேகர்: நிர்மலா சீத்தாராமன் வெங்காய விலை உயர்வை பற்றி பதிலளிக்கையில் நாங்க வெங்காயம் சாப்பிடாத பரம்பரையிலிருந்து வந்தவர்கள். ஆகவே எனக்கு கவலையில்லை என்று சொன்னதாக தவறாக பலர் சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். உண்மையில் அவர் அப்படி சொல்லியிருந்தால் அறிவுகெட்ட பார்ப்பனிய சாதி திமிர் வார்த்தைகள் என சொல்லிட்டு போகலாம். ஆனால் அவர் சொன்னது ஆழ்ந்த சாதிய மன நிலை கொண்ட சாதிப்பெருமையை நிலை நாட்டும் கூற்று. வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டபோது வெங்காய விலை உயர்வுக்கான காரணங்களை சொல்லி அதற்கான நடவடிக்கைகளையும் சொன்ன அவர் தமது பரம்பரை வெங்காயம் சாப்பிடுவதில்லை என்பதையும் குறித்ததுதான் ஆபத்தான விடயம். இது வெறும் முட்டாள் தனமான பேச்சில்லை. பார்ப்பனிய சிந்தனையின் நுணுக்கமான வெளிப்பாடு.

பாலாஜி தியாகராஜன்: அன்றாட உணவுகளுக்கு வெறும் வெங்காயத்தை மட்டுமே கடித்துக் கொண்டு உணவருந்தும் ஏழை, எளிய மக்கள் பெரும்பான்மையானவர்களை, சூத்திர மக்களின் உணவென்பதற்காகவே வெங்காயத்தை வெறுக்கும் பார்ப்பன கூட்டத்தை சேர்ந்தவொருவர் ஆள நேர்ந்தால் எதைச் சொல்வாரோ அதைத்தான் நிர்மலா சீத்தாராமன் சொல்லியிருக்கிறார். அது நிர்மலா சீத்தாராமன் என்ற தனியொருவரின் திமிரல்ல, ஒட்டுமொத்த பார்ப்பன கூட்டத்திற்கே உரிய திமிர். #BarbaricAgraharamBehaviour

கருணாகரசு: உப்புப்போட்டு சோறு திங்கிற குடும்பத்திலிருந்தாவது வந்திருக்கிங்களா “மேடம்”?

முகநூலில் கண்டனங்கள் எழுந்ததுபோல, ட்விட்டரில் நிர்மலாவுக்கென்றே உருவாக்கப்பட்ட #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்டானது.

காளி: வெங்காயம் கிலோ ரூ. 250–க்கு விற்கிறது. பாஜகவில் உள்ள பெரும்பாலான பார்ப்பன – பனியா கும்பலை அது எப்படி பாதிக்கும்?

ரித்தேஷ் ராஜ்: என்னுடைய நுண்ணறிவு குறைவாக உள்ளது, ஏனெனில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பாஜக ஆதரவாளர்கள்.

பன் ஸ்டார்: நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றிய கவலை இல்லை, ஏனெனில் அவர் எகானமி கிளாஸில் பயணிப்பதில்லை.

கவுரவ்: எனக்கு பொருளாதாரம் தெரியாது என்பதால், எனக்கு பொருளாதாரத்தைப் பற்றி கவலையில்லை.

அனா: வெங்காய விலை ஏற்றம் குறித்து பேசும்போதும் நிதியமைச்சர் நிர்மலா வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வெங்காய விலை உயர்ந்தபோது, ஸ்மிருதி  இரானி வெங்காயத்தை உண்டார். பாஜக ஆட்சியில் மில்லேனியல்கள் ஏன் வெங்காயத்தை உண்ண நினைக்கிறார்கள்?

மாங்காய் மனிதன்:  நீங்கள் வெங்காயத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. இந்த விசயத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு ஏதாவது செய்யுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள். உங்கள் ஆணவம் தேசத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது.

விவேக் திவாரி: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டார். எனவே, அவர் குடிமக்கள்  எந்த விலையில் வாங்குகிறார்கள் என்று கவலைப்படவில்லை. வெங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் ரொட்டி மட்டுமே உண்டு  வாழும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா?

நாட்டு மக்கள் வறுமையில் வாடியபோது, ஆடம்பரத்தில் ஊறி திளைத்த மேரி அண்டோனேட் என்ற பிரெஞ்சு ராணியிடம் மக்கள் உண்ண ரொட்டி இல்லாமல் தவிக்கிறார்கள் என்றபோது, அவர்களை கேக் வாங்கி சாப்பிடச் சொல்லுங்கள் என மமதையுடன் பதிலளித்தார். அதற்குப் பின் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ராணி கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

மேரி ஆண்டோனேட்டின் மமதைக்கு நிகரானது, நிர்மலா சீதாராமனின் சாதி திமிர் பேச்சு.

தொகுப்பு : அனிதா


இதையும் பாருங்க :

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

கார்ல் மார்க்ஸின் மூலதன நூல் வெளியாகி ஏறக்குறைய 150 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. உலக அளவில் அதிக அளவில் அச்சாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ”மூலதன நூல் இன்றைய சூழலுக்கு பொருந்தாது; அது காலாவதியாகி விட்டது” என்று முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும் காலத்தைக் கடந்து இன்றளவும் மூலதன நூல் தொழிலாளி காலத்தைக் கடந்து இன்றளவும் மூலதன நூல் தொழிலாளி வர்க்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளி பாய்ச்சி வருகிறது.

ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் பிரசுரமாகிவிட்டது. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் தோழர்களில் பெரும்பான்மையினர் இல்லங்களில் மூலதன நூல் அலங்கரித்து வந்தாலும், நூலை முழுமையாகப் படித்து முடித்தவர்கள் மிகச் சிலரே. ”இரண்டு பக்கம் படித்தேன், அதற்கு மேல் தொடர முடியவில்லை, அல்லது படித்தேன், ஆனால் புரியவில்லை” என்று பலர் சொல்லக் கேள்விபடுகிறோம். காரல் மார்க்ஸூம் தன்னுடைய முதல் ஜெர்மன் பதிப்புக்கு முன்னுரை எழுதியபோது முதல் அத்தியாயமான சரக்குகளின் பகுப்பாய்வைப் புரிந்து கொள்வதில் வாசகர்களுக்குச் சிரமம் இருக்கலாம் என்பதைப் பதிவு செய்து உள்ளார். ஆனால் அதைப் புரிந்து கொண்டுவிட்டால் மூலதன நூலை முழுமையாகப் படிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை என்பதை தெளிவுபடக் கூறி உள்ளார். பிரெஞ்சுப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் பிரெஞ்சு வாசகர்களை மனதில் கொண்டு அவர் கூறுவது இதோ, ”விஞ்ஞானத்துக்கு ராஜ பாட்டை ஏதுமில்லை; அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை அடைகிற வாய்ப்புண்டு”.

மார்க்ஸின் மூலதனம் மூன்று தொகுதிகளும் வெளிவரக் காரணமாயிருந்த ஃபிரடெரிக் எங்கெல்சும் தன் பங்கிற்கு மூலதனத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி வாசகர்களின் ஆர்வத்தை தூண்டி வந்தார். அவருடைய சுருக்கமான மூலதன உரை முழுமையடையவில்லை. ஆனாலும் ஜெர்மன், ஃப்ரெஞ்ஃசு ஆங்கில மற்றும் ருசிய மொழி சஞ்சிரிகைகளுக்கு அவர் எழுதிய மூலதன நூல் பற்றிய கட்டுரைகள் வாசகர்களின் ஆர்வத்தை மிகவும் தூண்டின.

தமிழ் வாசகர்களிடையே மூலதன நூல் வாசிப்பை அவசர அவசியமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இந்த ”மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்” என்ற நூல். (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து…)

புவிஈர்ப்பு விதி என்பது புறநிலையானது. அதனை நாம் மாற்றிடவே அல்லது மீறிடவே முடியாது. அதனைப் பற்றிய அறிவை மனிதன் பெற்றதனால், விமானங்களையும், புவி ஈர்ப்பு விசையை கடந்து செல்லக்கூடிய ராக்கெட்டுகளையும் உருவாக்கி அனுப்ப முடிகிறது. இது போன்றே புறநிலையான சமூக வளர்ச்சியின் விதியை தவிர்த்திடவோ, மீறிடவோ முடியாது. இவ்விதிகளை அறிந்த மனிதன் சமூக மாற்றத்தை விரைவுபடுத்தலாம். மார்க்சியம் இந்த விதியை அறிந்து செயல்படுவதற்குத் தேவையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

மார்க்சியம் என்பது தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இம்மூன்றும் தம்முள் உள்ளிணைப்பைப் பெற்றதாக இருக்கிறது. இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் அரசியல் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

… முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாகக் குறைநுகர்வே என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இப்படிச் சொல்பவர்களில் சிலர் மார்க்சிய பொருளாதார அறிஞராக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். தோழர் த.ஜீவானந்தம் 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மிகை உற்பத்தியே காரணம் என்று மார்க்சிய முதலாசிரியர்களின் வழியில் நின்று விளக்கியிருக்கிறார். முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உள்முரணின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி வளர்ச்சியடைந்த சமூகவழிப்பட்ட உற்பத்திக்கு தனிச்சொத்துடைமைக்கான உற்பத்தி உறவுகள் பொருத்தமற்றுப் போவதையும், அதன் தொடர்ச்சியாக சமூகப் புரட்சி ஏற்படுவதையும் மார்க்ஸிய நூல்கள் நமக்குத் தெளிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த விளக்கத்தில் காணப்படும் முரணை தவிர்க்க முடியுமா? என்ற முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சின் ”மூலதனம்” நூலை படித்தாராய்கின்றனர். சமூக மாற்றத்திற்குப் போராடுகின்ற பலர் இதன் அவசியத்தைப் பற்றியப் போதிய அறிவு பெறாமையினால், முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய சமூக மாற்றம் என்ற சொல்லோடு மார்க்சியத்தைச் சுருக்கிப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சமூகத்தைப் பற்றிய விஞ்ஞான புரிதலுக்கும், அதனைப் புரட்சிகரமாக மாற்றுவதற்கும் தேவைப்படுகின்ற மார்க்சிய வழிபட்ட அரசியல் பொருளாதார அறிவைப் பெறுவதற்கு மார்க்சின் ”மூலதனம்” நூலைப் படிக்க வேண்டும். ”மூலதனம்” நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார். இந்த சுருக்கத்தை மட்டும் படித்தால் ”மூலதனம்” நூல் முழுமையையும் அறிந்து கொண்டதாகாது. முழுமையாக நூலை படிப்பதற்குத் துணைபுரியும் வகையில் அனைத்து அத்தியாயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனைப் புரிந்து இந்நூலின் துணையோடு மார்க்சின் ”மூலதனம்” நூலைப் படித்து நிறைவு செய்ய வேண்டும். ( அ.கா.ஈஸ்வரன் எழுதியுள்ள நூலுக்கான மதிப்புரையிலிருந்து…)

எல்லா விஞ்ஞான நூலுக்கும் இருக்கிற பிரச்சினை மூலதன நூலுக்கும் உண்டு. அதாவது மார்க்ஸ் கையாளும் சில கலைச் சொற்களின் தத்துவ விஞ்ஞான உள்ளடக்கம் மக்கள் புரிகிற முறையில் சொல்லப்படவேண்டும். அப்படி சொல்லவில்லையானால் அந்தச்சொல் பிதற்றலாகி மக்கள் மனதில் தைக்காது. அந்தவகையில் மார்க்ஸ் கையாளும் தத்துவ விஞ்ஞான உள்ளடக்கம் கொண்ட கலைச் சொற்களை புரியவைக்க எடுத்த முயற்சியில் நண்பர் ஜீவா எழுதிய நூல் வெற்றி பெற்றுள்ளது எனலாம். சரக்கு, மதிப்பு, உபரிமதிப்பு, சரக்குகளின் மாய்மாலம் போன்ற கலைச் சொற்களின் உள்ளடக்கம் புரியும்பொழுதுதான் மூலதன நூலின் சிறப்பினை ஒருவர் உணர முடியும். இந்நூல் அந்தக் கடினத்தை எளிமையாகக் கூற முயற்சித்திருக்கிறது.

இன்று மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதியுள்ளார் என்ற தகவல் தெரியாதவர்கள் உலகநாடுகளிலே மிகக் குறைவானவர்களே. அதேநேரம் அந்த நூல் என்ன சொல்லுகிறது என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகிறவர்களே 99 சதம் இருப்பர். அப்படிச் சொல்ல நேர்கிற நிலைமையை மாற்றுகிற முறையில் நண்பர் ஜீவா எழுதிய நூல் அமைந்துள்ளது என்பதே இந்த சிறிய நூலின் அடுத்த சிறப்பாகும்.

பொருளாதாரப் பிரச்சினைகளை அலசுகிறபொழுது முதலீடு, கூலி, விலை, லாபம், நட்டம் என்பது மட்டுமே கண்ணில்படும். அது ஏதோ ஜடப்பொருள்களுக்கிடையே உள்ள உறவாக தோன்றுமே தவிர முரண்பாடுகளை உருவாக்கும் மானுட உறவாக இருப்பது பார்வையில் படாது.

சரக்குற்பத்தியில் இருக்கும் முரண்படும் வர்க்க உறவைப் பார்க்க வைத்தது மார்க்சின் மூலதன நூலே. மூலதன நூல் பரவுவதற்கு முன்காலத்தில் கஜானாவில் திரண்டு கிடக்கும் தங்கம் வெள்ளி இவைகளின் அளவு, ஆயுத பலம் இவை இரண்டுமே ஒரு நாட்டின் வல்லமைக்கு அடையாளமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகவும் இருந்தது.

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு

இன்று ”மானுட வளர்ச்சிக் குறியீட்டெண்”, ”மானுட மகிழ்ச்சிக் குறியீட்டெண்”, ”வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திறன்”, ”தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வை கணக்கிடும் முறை” இவைகளோடு பொருளாதார வளர்ச்சியை இணைத்துக் கூறும் முறைகள் வந்துவிட்டன. இவைகளைப் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களாகக் கொள்ளும் நிலை எய்தக் காரணம் மூலதனம் என்ற நூலின் தாக்கம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முயன்ற சோவியத் மறைந்தாலும் அது உருவாக்கிய மார்க்சிய அணுகுமுறையின் ஒரு முக்கிய அம்சம் பரவலாகிவிட்டது என்பதன் அடையாளமே இந்த அளவுகோல்கள். (வே.மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள நூலுக்கான மதிப்புரையிலிருந்து…)

நூல் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
ஆசிரியர் : த.ஜீவானந்தம், B.com, MBA.

வெளியீடு : சுருதி வெளியீட்டகம்,
எண்:123, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை – 600 011.
தொலைபேசி எண் : 94440 09990
மின்னஞ்சல் :jeeva1953@yahoo.com

பக்கங்கள்: 156
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

மரங்களே எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 12

மரங்களுடன் விடைபெறுதல்

ரங்கள் சரிவில் நன்கு நிமிர்ந்து நிற்கின்றன. இவை எங்கும் போய்விடவில்லை, இவற்றால் எங்கும் ஓட முடியாது, ஏனெனில் எங்களுக்காகக் காத்திருக்கின்றன.

இந்த மரங்கள் எங்களுடைய நண்பர்கள்.

நாங்கள் பிப்ரவரியில் இவற்றை நட்டோம். பெற்றோர்கள் நல்ல நாற்றுகளைக் கொண்டு வந்தனர், நாற்பது குழிகளைத் தோண்ட பயனீர்கள் உதவினர், நாற்பத்து ஒன்றாவது குழியை நானே தோண்டினேன். நாங்கள் கவனமாக நாற்றுக்களை நட்டோம்..

“யார் எந்த மரத்தை நட்டது என்று எப்படி அறிவது! இவற்றிற்குப் பெயரிடலாமே” என்றான் தேன்கோ.

ஒவ்வொரு மரத்தையும் யார், எப்போது நட்டது என்ற விஷயங்கள் எழுதிய சிறு இரும்பு வில்லையை ஒவ்வொருவரும் மரங்களில் கட்டித் தொங்க விட்டனர்.

அன்றாடம் சாதாரணமாக பெரும் இடைவேளையின் போது எங்கள் பூங்காவிற்கு வந்து மரங்களைப் பராமரிப்போம்; மண்ணைக் கொத்துவோம், தண்ணீர் ஊற்றுவோம். இவற்றைத் தடவிக் கொடுத்து, பேசவும், முதல் இலைகள் எப்போது வருகின்றன என்று கவனிக்கவும் வந்தோம்.

ஒரு முறை மழை பெய்த போது பூங்காவிற்கு சென்று எங்கள் மரங்களைப் பார்க்க முடியவில்லை. அவற்றிற்கு – யாராவது எதாவது தீங்கு செய்திருந்தால் என்ன செய்வது என்று குழந்தைகள் கவலைப்பட்டனர்.

“சரி, நம் மரங்கள் எப்படியிருக்கின்றன என்று பார்க்க மூவரை அனுப்பலாம்” என்றேன் நான்.

தாத்தோ, கோத்தே, இலிக்கோ ஆகிய மூவரையும் அனுப்பினோம். சிறுவர்கள் திரும்பி வந்து மரங்கள் நன்றாக இருப்பதாயும் எங்களுக்கு வாழ்த்து சொல்வதாயும் தெரிவித்தனர்.

இம்மரங்களில் முதல் இலைகள் தோன்றிய போது குழந்தைகள் பேரானந்தமடைந்தனர். லாலி காலையில் பள்ளிக்கு வந்த போது பூங்காவிற்கு சென்று இதை கவனித்து வந்தாள். எனவே மூன்றாவதாக இருந்த உழைப்பு பாடத்தை முதலுக்கு கொண்டு வந்து உடனே குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் வழி பூராவும் லாலியை நோக்கிக் கேள்வி கேட்ட வண்ணமிருந்தனர்:

“எனது மரத்திலும் முதல் இலைகள் வந்து விட்டனவா? நீ பார்த்தாயா?”

“ஒருவேளை எனது மரம் காய்க்காவிடில் என்ன செய்வது?” என்று சிலர் கவலைப்பட்டனர்.

…இன்று மீண்டும் எங்கள் மரங்களைச் சந்தித்தோம். குழந்தைகள் அவற்றுடன் பேசுகின்றனர், இலைகளைத் தடவித் தருகின்றனர், மண்ணைக் கொத்துகின்றனர்.

“சரி, நீ எப்படியிருக்கிறாய்?” என்று லாலி தன் மரத்திடம் கேட்கிறாள். இங்கு வளர பிடித்துள்ளதா? உன்னருகே இயாவின் மரம் உள்ளது, வலதுபுறம் கோத்தேயின் மரம்…. ஓ, உனக்கு எல்லோரையும் தெரியுமா? இன்று பள்ளியில் கல்வியாண்டின் கடைசி தினம் தெரியுமா? நீ பயப்படாதே, நான் உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன், என் வீடு பக்கத்தில்தான். உன் நண்பர்களுக்கும் உதவுவேன்!..”

படிக்க :
தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

என் வகுப்புக் குழந்தைகள் தம் மரங்களுடன் பேசக் கற்றுக் கொண்டு விட்டனர். தன் மகிழ்ச்சி, ஏமாற்றம், எண்ணங்கள், கனவுகள் எல்லாவற்றையும் இவற்றிற்குச் சொல்லலாம். நூலைக் கூடப் படித்துக் காட்டலாம். நல்ல கதைகளும் கவிதைகளும் எல்லோருக்கும் – மரங்களுக்கும் கூட – பிடிக்கும்.

குழந்தைகள் தங்கள் மரங்களுடன் பேசும்படி நான் ஊக்குவிக்கிறேன்; என் மரத்துடன் பேசுகிறேன், மற்றவற்றைத் தடவித் தருகிறேன்.

“குழந்தைகளே, உங்களுடைய மரங்களை நேசியுங்கள். அவை உயிருள்ளவை, உங்கள் பேச்சை அவை கேட்கின்றன, அவை உங்களுக்காக எப்போதும் காத்திருக்கும். இயற்கைக்கு மனித அன்பும் அக்கறையும் வேண்டுமே தவிர இதன் அழகைப் பற்றிய பாராட்டுதல்கள் வேண்டாம். நீங்கள் நிரந்தர அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தினால் உங்கள் மரங்கள் விரைவாக, சுதந்திரமாக வளரும், அழகாகும் என்று உறுதி கூறுகிறேன். யாராவது இவற்றை மறந்தால், அவை நோய்வாய்ப்படும், வேர்களும் தண்டுகளும் அழுகும். என்ன செய்யலாம் தெரியுமா? நீங்கள் வெகு தொலைவில் இருந்து, உங்களால் அடிக்கடி வர முடியாமல் இருந்தால் அங்கே வளரும் மற்ற மரங்களை, இவற்றின் சகோதர, சகோதரி மரங்களைப் பராமரித்து அன்பு காட்டுங்கள்! காற்று உங்கள் அன்பைப் பற்றிச் செய்தி சொல்லும், உங்கள் மரங்கள் எப்போதும் நோய்வாய்ப்படாது.

ஏனெனில் இந்த சின்னஞ் சிறு மரங்களுக்குப் பெரிய இதயங்கள்; இவை உங்களை நேசிக்கின்றன, உங்கள் ஒவ்வொருவரையும் அன்பானவனாக, பரந்த மனப்பாங்குள்ளவனாகப் பார்க்க விரும்புகின்றன. இப்போது உங்களைப் போன்றே இவை, சிறியவை. ஆனால் இவை விரைவில் உங்களை விட விரைவாக வளரும். ஏன் தெரியுமா? இந்தச் சிறு வில்லைகளோடு உங்களுடைய தனித்துவத்தையும் உயர்த்திக் காட்டுவதற்காக! 20 – 30 ஆண்டுகள் கழித்து இங்கு வந்து இத்தோப்பில் இளைப்பாறுங்கள் உங்கள் மரங்களின் மீது சாய்ந்தபடி (இப்போது இவற்றின் மீது சாயக் கூடாது) வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததைப் பற்றிக் கூறுங்கள்!” மரங்களைப் பராமரிக்கவும், இவற்றைக் கண்டு நேசிக்கவும் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவும் நாங்கள் இங்கு வந்த போது இவ்வாறு நான் என் வகுப்புக் குழந்தைகளிடம் கூறினேன்.

“ஏன் நம் மரங்களுக்காக நாம் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது!” என்று கோத்தே திடீரெனக் கேட்கிறான். அவன் லேலா அருகில் நின்றபடி அவள் தன் மரத்துடன் பேசுவதைக் கேட்கிறான்.

“நடத்தலாமே!” என்று நான் ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் உடனேயே இதைப் பற்றிப் பேசுகின்றனர்:

“கலை நிகழ்ச்சி நடத்துவோமா!”

“நடத்துவோம்!”

“மரங்களே, எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா?”

“எப்படித் துவங்குவது?”

“பாடலிலிருந்து!”

மரங்களின் நடுவே நான் மட்டும் இருக்க, குழந்தைகள் சற்றுத் தள்ளிச் சரிவில் உள்ளனர். குழந்தைகள் சந்தோஷமான பாட்டைப் பாடுகின்றனர், சிலர் கவிதைகளை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர். நானும் மரங்களும் கை தட்டுகிறோம்…

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!