Sunday, May 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 343

கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை

கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா..

தெய்வநம்பிக்கை போலத்தான்
தேர்தல் நம்பிக்கையும்.
அதற்கு சக்தி உண்டா?
என்பதல்ல விசயம்,
சந்தேகப்படாமல்
அதை நம்ப வேண்டும்
என்பதே நிர்பந்தம்!

உன் தாத்தா நம்பினார்..
பாட்டி நம்பினார்
உன் அப்பா நம்பினார்
உன் அம்மா நம்பினார்..
ஆகவே நீயும் நம்பு

வாயில் அலகு குத்தி
வயிற்றில் ஊசி குத்தி
விரதமிருந்து
தீ மிதித்து..
எவ்வளவுக்கு எவ்வளவு
வருத்திக் கொள்கிறாயோ
அவ்வளவுக்கு அவ்வளவு
நல்லது நடக்கும்..
இந்த நம்பிக்கை
தெய்வத்திடமும் வேண்டும்
தேர்தலிடமும் வேண்டும்
அதுதான் முக்கியம்.

தெய்வத்தையும்
நீ கண்டுபிடிக்கவில்லை
தேர்தலையும்
நீ கண்டுபிடிக்கவில்லை
வந்தால் பார்த்துக்கொள்!
தந்தால் வாங்கிக்கொள்!
ஆஹா..  என்ன ஒரு தெய்வம்…
என்ன ஒரு தேர்தல்…
என்று உருகுவதைத் தவிர
உனக்கு வேறு உரிமையும் இல்லை.

ஏன்? எதற்கு?
எதிர்த்துக் கேள்வி கேட்டால்
சாமி கண்ணைக் குத்தும்
ஜனநாயகம்
உன்னைக் குத்தும்

தெய்வ குத்தமாகிவிடும்!
யாரும் வாக்கை விற்றுவிடாதிர்கள்!
தேசத்தையே விற்பதற்காகத்தான்
தேர்தலே நடக்கிறது!

தனித்தனியாக தேவையில்லை,
மொத்தமாக
சாமி பெயருக்கே அர்ச்சனை
ஓட்டுப் பெட்டியில் தட்சணை!

தலைக்குள் இருந்து
எதையும் தீர்மானிக்கும்
சிந்தனை அவசியத்திற்கு
இங்கு இடமில்லை,
தலையெழுத்தையே
தீர்மானிக்கும்
தேர்தல் தெய்வங்களைப் பாருங்கள்
அதோ.. வீதி உலா வருகின்றன,

மோடி குதிக்கிறார்..
ராகுல் நடக்கிறார்..
பன்னீர் சிரிக்கிறார்..
எடப்பாடி முறைக்கிறார்..
ஸ்டாலின் தெறிக்கிறார்..
அடடா.. எத்தனை பாவங்கள்
எத்தனை பரவசங்கள்..
இதைவிட வேறென்ன வேண்டும்?

தீபாராதனையைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள் !
தேர்தலைப் பார்த்து
சின்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் !


இனி எந்தக் கவலையும்
இல்லை
ஏனெனில்
தேர்தலுக்கு பிறகு கவலைப்பட
ஆளே இருக்கப் போவதில்லை
தெய்வங்கள் விட்டுவைத்தால்தானே!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு

அண்ணாமலை பல்கலை : மாணவர் போராட்டம் வெற்றி | விடுதி கட்டண உயர்வு ரத்து !

0

ண்ணாமலை பல்கலைக்கழக விடுதிக் கட்டணத்தை திடீரென உயர்த்தியது நிர்வாகம். இதனைத் தொடர்ந்து மாணவர்கள், கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மானவர்களின் கோரிக்கையை தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தியது நிர்வாகம்.

இதனைத் தொடர்ந்து, தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காத நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர் மாணவர்கள். இரவு பகல் பாராது போராட்டம் தொடர்ந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து சில பேராசிரியர்கள் பிஸ்கட், தண்ணீர் கேன் என வாங்கித் தந்து போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தனர்.

முதலில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித் தன்மையை அறிந்து, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. அதற்கான உத்தரவை விடுதி அறிவிப்பு பலகையில் ஒட்டி விடுகிறோம் என்று துணைவேந்தர் முருகேசன் உறுதியளித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டத்தின் வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டது. மேலும் “நமது இன்றைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. ஆனால் நமக்குள் கனன்று கொண்டிருக்கும் போராட்டத் தீ என்றும் நிலைத்திருக்க வேண்டும். அது மக்களின் பொது பிரச்சினை என வரும் போது பற்றிப் பரவவேண்டும்” என்று மாணவர்களிடம் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த வகையில் இப்போராட்டத்தின் இறுதியில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, மாணவர்களின் சார்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை

0

ப்பிரிக்க கொம்பு நாடுகள் கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள தீபகற்ப நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளாகும்.  சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் எத்தியோப்பா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.

பருவநிலை மாறுபாட்டால் பசுமையாக இருந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி 80 சதவீதம் விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்கள் இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள், கடந்த பல வருடங்களாக கடுமையான தொடர்வறட்சி நிலவிவருவதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இப்போது இன்னொரு இடியை இந்த மக்களின் மேல் இறக்கியுள்ளது.

உயிர்காக்க உதவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது அமெரிக்கா. இதற்கென ஆண்டு பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். டிரம்ப் தலைமையிலான கார்ப்பரேட் அரசு, அப்படி ஒதுக்க இருக்கும் நிதியிலிருந்து 24% சதவீத நிதியை 2020-ம் ஆண்டு பட்ஜெட்டிலிருந்து இரத்து செய்வதற்கான திட்டம் ஒன்றை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.

காய்ந்து கிடக்கும் நதிப் படுகையில் தங்களது ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்லும் எத்தியோப்பிய பெண்கள்

கொம்பு நாடுகள் வரவிருக்கும் சில மாதங்களில் முன்னெப்போதும் கண்டிராத பசிக்கொடுமை, பஞ்சத்தை எதிர் நோக்கியிருக்கிறதென்றும், ஏற்கெனவே விவசாயம் பொய்த்துப் போயிருந்த நிலையில், கூடுதலாக 30% இழப்புக்களும் ஏற்படும் என அண்மையில் வெளிவந்துள்ள வறட்சிகளை முன்னெச்சரிக்கும் அமைப்புக்களின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதி மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நலிவடைந்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகக் கூறுகிறார் கத்தோலிக்க நிவாரண சேவை மையத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிக்கான மண்டல இயக்குனர் மாட் டேவிஸ். இந்த நிலையில் இம்மக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர்.

அமெரிக்க டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல இலட்சக்கணக்கான மக்களைப் புறக்கணித்து வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும் என அஞ்சுவதாகக் கூறுகிறார் மாட் டேவிஸ். ஏற்கெனவே உலகத்தின் மிகவும் வறுமையான நாடுகளாக ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் அறியப்பட்டுள்ளன. தொடர் வறட்சி, நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகிறது.

படிக்க :
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்
♦ சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

1990-களிலிருந்தே பாரிய அளவிலான பருவ நிலை மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன இந்நாடுகள். சுட்டெரிக்கும் வெயில் அல்லது தொடர் மழை வெள்ளம் அல்லது பஞ்சம் என்ற நிலைதான் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.

நான்கு குழந்தைகளின் தாயான பிர்ஹான், எத்தியோப்பிய நாட்டில், டைக்ரே மாகாணம் ஹாவ்சென் மாவட்டத்தில் வசித்து வருகிறார். பருவநிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவேயில்லை, எனவே விவசாயம் தொடர்ந்து பொய்த்து வருகிறது. ஒருவேளை பயிர்கள் வளரும் பட்சத்தில் வெள்ளம் வந்து அவற்றை அழித்துவிடுகிறது.

அமெரிக்க நிதியின் மூலம் உணவு கிடைக்கப்பெறும் 15 இலட்சம் மக்களில் பிர்ஹானும் ஒருவர்.  அமெரிக்க உதவிகள் கிடைக்காதபட்சத்தில் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுவதுதான் ஒரே வழி, ஆனால் எங்கு போவதென்றே தெரியவில்லை என்கிறார் பிர்ஹான்.

2018-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைத்திருக்க வேண்டிய பருவ மழையில், 55 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் தெரியவரும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கும் டிரம்ப் அரசு, உலகம் முழுவதும் தனது ஏகாதிபத்திய செல்வாக்கை நிலைநிறுத்தி, குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க ஏழை நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டியதோடன்றி, அந்நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, இப்போது அவர்களை சவக்குழிக்கு அனுப்பவும் தயாராகி விட்டது.

நான்கு குழந்தைகளின் தாயான பிர்ஹான், நிவாரணப் பொருட்கள் வாங்கச் செல்வதற்கு தயாராக இருக்கிறார். அமெரிக்க நிதி உதவி பெறும் பல இலட்சக்கணக்கானோரில் பிர்ஹானும் ஒருவர்

என்னுடைய விவசாய நிலங்கள் வறட்சியால் பொய்த்துப் போனதால், நிவாரணம் கிடைக்கிறது. இங்குள்ள எல்லோருமே என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள்தான் – பிர்ஹான்

நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் குடிப்பெயர்ச்சி அல்லது மற்ற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி இடம்மாறும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் – பிர்டுக்கான் ஜெடிஃபா – பசிக்கு உணவு என்ற சேவை நிறுவனத்தின் ஊழியர்

உலக சுகாதார நிறுவனத்தின்படி, தொடர் பஞ்சம் நிலவும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில், அதிக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது மற்றும் உணவு பற்றாக்குறை நிலவுவதுதான் இதற்கு பிரதான காரணமாகிறது

வறட்சியினால் பாதிக்கப்பட்ட சுமார் 15 இலட்சம் எத்தியோப்பிய மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காகப் பதிவு செய்யும் எத்தியோப்பிய மக்கள்.

2016-ம் ஆண்டு முதல் அதிநவீன மின்னணு சாதனங்களின் உதவியோடு 99% உணவுப்பொருட்கள் சரியான நபர்களுக்கு வழங்கப்படுகின்றன.

உணவுப் பங்கீட்டு மையமொன்றில், அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய கோதுமை மூட்டைகளை அவிழ்க்கிறார் ஒரு பெண். தங்கள் உணவுத்தேவைகளை தங்கள் நிலங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளும் சக்திபடைத்த எத்தியோப்பிய மக்கள், பருவநிலையில் ஏற்படும் மாற்றத்தால், அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் – மாட் டேவிஸ்

நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பட்டாணி, கோதுமை, சமையல் எண்ணெய் வழங்கப்படுகின்றன.

நிவாரணப் பொருட்களை, தன்னுடைய கழுதையின் முதுகில் சுமத்திச் செல்கிறார் ஒரு பெண். வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழிவிலிருந்து காப்பது இந்த நிவாரணப் பொருட்கள். அமெரிக்கா இதற்கான நிதியை இரத்து செய்தால் நிலைமை என்னவாகுமோ?

அடிப்படை உணவுத்தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், பொருளாதாரத் தேவைகள் வெகுவாக நிவர்த்தி செய்யப்பட்டு, தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராகிறார் பிர்ஹான்

என்னுடைய மூத்த மகளுக்கு சவுதியில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பது விருப்பம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஒருவேளை இந்த முறையும் விவசாயம் பொய்த்து விட்டால், குடிபெயருவதைத் தவிர வேறு வழியேயில்லை – ஃபெபெடு மெஹாரி

ரேஷனில் கிடைக்கப்பட்ட கோதுமை மூட்டைகளை ஒட்டகத்தின் முதுகிலேற்றி, தனது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிக்கச் சென்று கொண்டிருக்கும் இளைஞர். கடந்த வருடம் பெய்திருக்க வேண்டிய மழையில் 55% சதவீதம் குறைந்து போனது இவர்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது

எத்தியோப்பாவின் பெரும்பாலான மக்கள், பஞ்சகாலங்களில் தங்களின் கால்நடைகளையே பெருமளவில் நம்பியிருக்கின்றனர். தொடர்  வறட்சியால், ஒன்று இவைகள் அழிகின்றன அல்லது இவர்களுக்கு உணவாகின்றன


கட்டுரையாளர் : Will Baxter
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

உலகத்திலே பெரிய சிலை பட்டேலு | கோவன் பாடல் | காணொளி

“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! ” திருச்சி மாநாட்டில் தோழர் கோவன் பாடிய ”உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…” பாடல் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, காணொளியாக தற்போது வெளியிடப்படுகிறது.

“கோழிய வெட்டித் தின்னா அது சிக்கன் பார்ட்டி..
ஆட்ட வெட்டித் தின்னா அது மட்டன் பார்ட்டி..
கேக்க வெட்டித் தின்னா அது பர்த்டே பார்ட்டி..
நாட்டையே வெட்டித் தின்னா அது பாரதிய ஜனதா பார்ட்டி..

உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…
அதுக்குள்ளே போயி ஒழியப் பாக்குது ரஃபேலு…
இது பக்கா லோக்கலு… வரப் போகுது தேர்தலு…  (முழுப் பாடலையும் காண)

பாருங்கள் ! பகிருங்கள் !

பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto

2

மோடியை முன்னிறுத்தி பாஜக வெளியிட்ட 2014-ம் ஆண்டின் ’பளபள’ தேர்தல் அறிக்கை, வெற்று காகிதமாகிவிட்ட நிலையில், ‘ராமர் கோயில் கட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் 2019 மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக.  இதுகுறித்த கருத்துக்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.  பாஜக தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் #sanghifesto என்ற பெயரில் பாஜக கும்பலின் போட்டோஷாப் பாணியில் கிண்டல் பதிவுகள் வைரலாக பரவின.

சந்திரமோகன்

பாஜகவின் தேர்தல் அறிக்கை படிக்கவில்லை எனக் கவலைப்படுபவர்கள் கவனத்திற்கு !கவலைப்பட வேண்டாம்! நான் முழுக்க படித்துவிட்டேன் !
உங்கள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம்!
முதல் படத்தில் ” சங்கல்ப் பத்ரா ” என்ற பெயரில் இருப்பது தேர்தல் அறிக்கை!
இரண்டாம் படத்தில் இருப்பது தான், அறிக்கையின் மொத்த சரக்கும்!
மோடியின் லாலிபாப் குச்சி மிட்டாய் தேர்தல் அறிக்கை!

வினோத். எஸ்

பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பார்வை…

2014 :

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டுவோம்.

2019

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டுவோம்.

2024

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டுவோம்.

2224

  • எல்லோருக்கும் கழிப்பறை.
  • எல்லோருக்கும் வீடு.
  • எல்லோருக்கும் மின்சாரம்.
  • எல்லோருக்கும் கேஸ் இணைப்பு.
  • ராமர் கோயில் கட்டிட்டே இருக்கிறோம்.

நரேன் ராஜகோபாலன்

பாஜக தேர்தல் அறிக்கையில் மூன்று அம்சங்கள் கவலை அளிக்கின்றன.

1 ) ஆர்ட்டிக்கிள் 370 கஷ்மீரிலிருந்து நீக்கப்படும் என்றொரு வாக்குறுதி. இதை கஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளும் எதிர்க்கின்றன. மெஹபூபா முப்தி ஒரு படி மேலே போய், ஆர்டிக்கிள் 370 நீக்கப்பட்டால், கஷ்மீர் இந்திய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என்று சொல்லி இருக்கிறார். இது ஒரு தெளிவான கேம் ப்ளான். படித்த வடக்கத்திய முட்டாள்களே, கஷ்மீருக்கு மட்டுமென்ன சிறப்பு சலுகை என்று திட்டிக் கொண்டிருப்பதை revalidate செய்யும் திட்டம். இது ஒரு complex subject. சுருக்கமாய் இந்து பெரும்பான்மை இருக்கும் நாட்டில், மாநிலங்களில், இஸ்லாமிய பெரும்பான்மை இருக்கும் ஒரே மாநிலம் ஜம்மு & கஷ்மீர் தான். அதனால் தான் அரசியல் அமைப்பு சட்டம் அந்த சிறப்பு சலுகையினை வழங்கி இருக்கிறது. அந்த அடிப்படைகள் ஒரு நாளும் இந்துத்துவ அடிப்படைவாத கும்பலுக்கு மண்டையில் ஏறாததால் தான் இந்த அறிவிப்பு. ஆக பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்கு இப்போதே கஷ்மீரில் காலி.

2 ) உள்நாட்டு கட்டமைப்புக்கு 100 இலட்சம் கோடிகள் செலவிடப்படும் என்று சொல்லப் பட்டு இருக்கிறது. ஏற்கனவே IL&FS சிக்கலில் முக்கால்வாசி திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. PPP (Public Private Partnership) மாடல் குழப்பத்தில் இருக்கிறது. இதில் எங்கிருந்து 100 இலட்சம் கோடிகள் வரும் என்று தெளிவான பார்வைகள் இல்லை. பாஜக அரசின் ஒரு சில உருப்படியான அமைச்சகத்தில் முக்கியமானது நிதின் கட்கரி கையாண்ட உள்கட்டமைப்பு அமைச்சகம். ஒழுங்காய் வேலை பார்த்து இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். ஆனால் ஆண்டு கணக்கில் 20,000 கோடிகளை கடந்த ஐந்தாண்டில் தாண்டவில்லை. 20,000 கோடியிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளில் 100 இலட்சம் கோடிகள் செலவு என்பது exponential jump. காங்கிரசின் NYAYக்கான செலவு வருடத்துக்கு 3.6 இலட்சம் கோடிகள். இதுவே எங்கிருந்து வருமென்பது தான் சங்கீ பொருளாதார நிபுணர்களின் கேள்வி. 3.6 இலட்சமே வராது என்றால், 100 இலட்சம் கோடிகள் எங்கிருந்து வரும்?

3 ) 2022-ல் விவசாய வருவாய் இரடிப்பாகும். 2014-லிலும் இந்த வாக்குறுதி இருந்தது. ஐந்தாண்டுகளில் விவசாயத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை பொறுத்து தான் 2019-24க்குள் இது நிறைவேற்றப்படுமா என்று சொல்ல முடியும். ஐந்தாண்டு விவசாய ட்ராக் ரெக்கார்டு பாஜக-விற்கு படு கேவலமாக இருக்கிறது. மேற்கில் மூன்று மாநில தோல்விக்கான மிக முக்கியமான காரணம் – விவசாயத்தின் சீர்குலைவுதான். அடிப்படை விலை உச்சபட்ச உயர்வு 150% தரப்படும் என்று சொன்னதே கேள்விக்குறியாகி, விவசாயிகளை கட்டாயமாக காப்பீடு எடுக்கச் சொல்லி, அதிலும் தனியார், அரசு காப்பீடு நிறுவனங்கள் சம்பாதித்ததுதான் மோடியின் ட்ராக் ரெக்கார்டு. ஐந்தாண்டுகளில் இந்தியாவில் விவசாயம் சீரழிந்து இருக்கிறது. ஒருவேளை, சீரழிந்த (அ) சீரழிக்கப்பட்டு கீழே விழுந்திருக்கும் விவசாய வருமானத்தினை தான் மோடி 2022க்குள் இரடிப்பாக்குவேன் என்று சொல்லி இருப்பார் என்றால், அது சாத்தியம் தான். 100ரூ சம்பாதித்து கொண்டு இருந்த ஆளை, 25 ரூபாய்க்கு தள்ளி விட்டு, மூன்றாண்டுகளில் 50ரூ வருமென்று சொல்வதில் சிக்கல் என்ன இருக்கிறது?

மற்றபடி ராமர் கோவில் கட்டுவதில் ஆரம்பித்து, ஒரே மக்கள், ஒரே தேசம் வரை பலவும் ‘ரீபிரிண்ட்’ மட்டுமே. 2014-ல் மோடி ஒரு challenger. 2019-ல் மோடி ஒரு incumbent. இரண்டையும் மக்கள் பார்க்கும் பார்வைக்கு ஏகப்பட்ட வித்தியாசமிருக்கிறது. மக்களுக்கு எது நடந்தது, எது நடக்குமென்று தெரியும். மக்கள் முட்டாள்கள் அல்ல.

பாரதி செல்வா

ராமருக்கு சிலை வைக்கப்படும்..🤔🙄

சதீஸ் செல்லதுரை

ராமர் சிலைக்கு பின் வயிறு வலிக்க சிரிக்க வைத்த பாஜகவின் வாக்குறுதி பரிதாபங்களில் டாப்பு இது.

ரவி நாயர்

பாஜக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். உள்ளே இருப்பது இதுதான்…நமோ, நமோ, நமோ, நமோ, நமோ, நமோ……

அர்ஃபா கானும் ஷெர்வானி

கோயிலுக்கும் காஷ்மீரிருக்கும் திரும்பியிருக்கிறது பாஜக, உள் எதிரி, வெளி எதிரியா? பாஜகவின் தேர்தல் அறிக்கை அக்கட்சி பயத்துடன் தேர்தலை சந்திக்க இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தைக்கூட, அது மீண்டும் நீட்டிக்கவில்லை?  பாஜகவை தேர்ந்தெடுத்தால், நீங்கள் கவலை, பயம், இரக்கமற்ற தேசியவாதத்தை தேர்ந்தெடுப்பதாகவே பொருள்.

தேவ் ப்ரமோத்

23 வருடங்களாக பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கும் பொதுவான ஒரு விசயம்….

சம்பத் குமார்

சங்கிகளின் தேர்தல் அறிக்கை: இந்தியாவைச் சுற்றி ‘இந்தியப் பெர்ஞ்சுவர்’ கட்டப்படும்.

வெற்றிச்செல்வன்

சீனப்பட்டாசுகளை இந்தியாவிலேயே தயாரிக்க மேக் இன் இந்தியா திட்டத்தில் சீன கம்பெனிகளுக்கு சிறப்பு மானியம்!

ஒவ்வொரு இந்து குடும்பத்துக்கும் மாதம் 7 லிட்டர் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவை கிண்டல் செய்யும் பதிவு நிஜமா எனக் கேட்டிகிறார் இந்த பதிவர்.

மன் கி பாத் என்பது இதுதானாம்!

செங்கோட்டைக்கு காவி வண்ணம் பூசப்படுமாம்!

பிரதமருக்காக ஒரு நாள் என்பது 28 மணி நேரமாக மாற்றியமைக்கப்படும்!

சவுக்கிதார்களை கண்காணிக்க சுப்ரமணிய சாமி தலைமையில் ‘பிராமணாள் கண்காணிப்பு கமிட்டி’ அமைக்கப்படும்!

சங்கல்ப் பத்திரமா ? மண்ட பத்திரமா?

ஒரு ரூபாய்க்கு நாப்கின், ஆட்சியில் இருக்கும்போது 28% ஜி.எஸ்.டி.

ஐந்தாம் வகுப்பில் நீட் தீர்வு!


தொகுப்பு:
அனிதா

ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

1

கலையரசன்
  இது ஒரு ஜெர்மன் கதை:

♦ அரசியல் படுகொலைகள்.
♦ இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளை களையெடுத்தல்.
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்.
♦ ஏக பிரதிநிதி உரிமை கோரல்.
♦ தேசியவாத கொள்கை உடன்பாடு கொண்ட பிற இயக்கங்கள் மீதான தடை.
♦ ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை.

இவை இருபதுகளில், முப்பதுகளில் ஜெர்மன் வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள் அல்லது சம்பவங்கள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப்படவில்லை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். “அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்” மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, “இனத் துரோகிகளை களையெடுப்பது” அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.

நாஜிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்துதான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.

Freikorps எனும் கூலிப்படை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தபடியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி – தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.

ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப்பட்ட படியால், OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப்பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் “அமைப்புக் குழு”. தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.

அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே (Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப்படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, “துரோகிகளுக்கு மரணதண்டனை” என்பதுதான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.

1921 – 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350-க்கும் மேற்பட்ட “எதிரிகள்” அல்லது “துரோகிகள்” OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.

மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்.

அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர் (Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்தபடியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப்பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலி பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட “துரோகிகளில்” முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.

ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரித்தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்தபடியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.

பெமே நீதிமன்றம்.

இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் போலீசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் போலீஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து போலீசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.

இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஜிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் “தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்” என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப்பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், “மாவீரர்களின்” சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். “தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்” புகழாரம் சூட்டினார்.

முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.

ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஜிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.

ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஜிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஜிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஜிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். நாஜிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.

“நீளமான கத்திகளின் இரவு” (Nacht der langen Messer, 30 June – 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப்பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப்பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.

ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.

நாஜிகள் அல்லாத ஏனைய வலதுசாரி – தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில்தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும்தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகத்தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்.

படிக்க:
சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் !
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஜிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஜி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

இது ஒரு ஜெர்மன் கதை.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

பொள்ளாச்சி கொடூரத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள், கோவை துடியலூரில் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது தமிழகம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் இத்தகைய பாலியல் வன்முறைக்கு யார் காரணம் ? கடந்த 2018-ம் ஆண்டின் இறுதியில் சில மாதங்களாக நடந்த மீ டூ இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிக்கப்படும் ஊடகங்களில்தான், மிகவும் அதிகமான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்கள்தான் முதலில் இவ்விசயத்தை துணிந்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து சினிமா உள்ளிட்டு பல்வேறு துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அம்பலப்படுத்தினர்.

ஆனால், இத்தகைய படிப்பறிவும், சமூகத் தகுதியும் இல்லாத லட்சக்கணக்கான பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் எங்கேயும் பதியப்படுவதில்லை. ஏனெனில், நடைமுறையில், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே குற்றவாளிகளைப் பாதுகாத்து நிற்கிறது. பொள்ளாச்சி கொடூரத்தை எடுத்துக் கொண்டால், எஸ்.பி முதல் ஆய்வாளர் வரை அனைவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக களமாடுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக நடந்த இந்தப் பாலியல் கொடூரத்தில், அதிமுக தலைவர்கள் முதல் அதிகார வர்க்கம் வரை அனைவருக்கும் பங்கிருக்கிறது.

இந்தக் குற்றக்கும்பலைக் காப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டும் விதமாக புகாரளித்த பெண்ணின் அடையாளத்தை போலீசே வெளியிட்டது. அதன் பின் தமிழக உள்துறை செயலர் அப்பெண்ணின் அடையாளத்தை அரசாணையில் வெளியிடுகிறார். இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் அபராதத்தோடு தனது கடமையை முடித்துக் கொண்டது நீதிமன்றம்.

படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

நீதிபதி கங்குலியாக இருக்கட்டும், துறவி என்ற பெயரில் களியாட்டம் போடும் நித்தியானந்தாவாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் தம்மை கேட்பார் இல்லை என்றே கருதுகிறார்கள். சரியாகச் சொல்வதானால், அத்தகைய அதிகாரமும், சட்ட பூர்வ நிறுவனங்களின் பாதுகாப்பும் கொண்டோரே இத்தகைய கயமைத்தனத்தைத் துணிந்து செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக் கட்சிகளும் மதவெறி அமைப்புகளும் கூட இத்தகைய பாலியல் வன்முறையின் போது தமது சமூகப் பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. பல சமயங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே துணிந்து குரல் கொடுக்கின்றன. அதை முன்னர் கதுவாவில் பார்த்திருக்கிறோம். இப்போது பொள்ளாச்சியிலும் கண்கூடாகப் பார்க்கிறோம்…

பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 20) எமது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

” பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • நூல் விமர்சனம்: சூனியப் புள்ளியில் பெண்
  • பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
  • #MeToo: இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல, வதைக்கப்பட்ட கதை !
  • ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
  • பாலியல் குற்றங்கள்: பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
  • படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு: கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளே ஆட்சியாளர்களாக…!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மாணவர்கள் எதிர்க்கிறார்கள் செளகிதார்கள் பாதுகாக்கிறார்கள்!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: புதிய சட்டங்கள் குற்றங்களைக் குறைக்குமா ?
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சாதிச் சங்கங்கள்!
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: நுகர்ந்தபின் வீசியெறியும் பண்டங்களா பெண்கள் ?
  • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பிரச்சினை ஃபேஸ்புக்கிலா சமூகத்திலா?
  • பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

மது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு முழுவதும்
மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்து விட்ட நிலையில், ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப் போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்தியாக மாறிவிட்டது.

ஆளை மாற்றும் தேர்தலால் என்ன பயன் ?

நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு நிர்வாக அமைப்புக்கும் வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும் நிர்வாக அரசியல் அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை.

கொள்கைகளை தீர்மானிப்பதிலும், அதை அமல்படுத்துவதிலும், மக்களின் கையில் அதிகாரம் இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம். ஆனால் நமது நாட்டின் தேர்தல்களோ மக்களை மென்மேலும் அதிகாரம் அற்றவர்களாக மாற்றி வருகிறது. யோசித்துப் பாருங்கள். வாக்காளர்களில் ஆகப்பெரும்பான்மையினர் ஏழைகள். ஆனால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் யார் ?

தொழிலதிபர்கள், மணல் கொள்ளையர்கள், சுயநிதிக் கல்லூரி அதிபர்கள் போன்ற கோடீசுவரர்கள்தான். இந்தத் தொழிலதிபர்கள் ஆளுக்கொரு கட்சியையும் வைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

தொழிலாளியின் உழைப்பை விலைக்கு வாங்குவது போல, இவர்கள் நம்முடைய வாக்கையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். பொதுச் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள். பிறகு சொத்தைப் பாதுகாக்க மீண்டும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள். பெரும்பான்மையான வேட்பாளர்களுக்கு தேர்தல் என்பது அரசியல் நடவடிக்கை அல்ல, அது ஒரு பிசினஸ் நடவடிக்கை.

“சாதி, மதம், பணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது சட்டவிரோதம்” என்று தேர்தல் விதிகள் சொல்கின்றன. ஆனால் இந்த மூன்றையும் வைத்துத்தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். மொத்த கார்ப்பரேட் நன்கொடையில் 80% சுருட்டிக்கொள்ளும் பாஜக, கட்சிகளையே மொத்தமாக விலை பேசுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வெளிப்படையாக மதவெறியைத் தூண்டுகிறார். பாஜக கலவரம் நடத்தித்தான் ஆட்சிக்கே வருகிறது. சாதிக்கட்சிகளோ வெளிப்படையாகவே சாதி வெறியைத் தூண்டி ஓட்டுக் கேட்கின்றன. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. நடுநிலை என்று சொல்லிக்கொண்டு மோடியின் கையாளாகவே செயல்படுகிறது. மொத்தத்தில் எல்லா விதிமுறைகளையும், அரசமைப்பு சட்டத்தையும் மீறித்தான் இந்தத் தேர்தலே நடக்கிறது. தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பும் தோற்றுவிட்டது என்பதே உண்மை .

மொத்த அரசுக் கட்டமைப்புமே  தோற்றுவிட்டது!

நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் மட்டும்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம் என்று பார்ப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்களான அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவை. அவை எப்படி இருக்கின்றன ?

அரசியல்வாதி தவறு செய்தாலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியவர்கள் என்று சொல்லப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் சட்டத்தை மீறுவதற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆற்றுமணலைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் மணற்கொள்ளையர்களுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறார்கள். பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே அந்தக் குற்றங்களில் ஈடுபடுவதுடன், வல்லுறவு குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.

படிக்க:
♦ அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !
தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு !

குற்றத்தை வெளியே கொண்டு வந்த பத்திரிகையாளர் மீது குற்ற விசாரணை நடத்துகிறார்கள். ஸ்டெர்லைட் முதல் எண்ணெய்க் கிணறுகள் வரை எல்லா சுற்றுச்சூழல் விதி மீறல்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்தான் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

நீதிமன்றங்களில் கீழிருந்து மேல் வரை நீதி விலை பேசப்படுகிறது. மோடி ஆட்சியில் எல்லா இந்துத்துவ பயங்கரவாதிகளும் வரிசையாக விடுதலை செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களே குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள்.

சிபிஐ, வருவாய்த்துறை ஆகிய அனைத்துமே குற்றங்களுக்கு துணை நிற்கும் துறைகளாகவும், திருடியவனிடம் பங்கு வாங்கும் துறைகளாகவுமே இயங்குகின்றன. ஊடகங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளே கட்டுப்படுத்துவதால் அவை கண்முன்னால் நடக்கும் அநீதிகளை மறைக்கின்றன. மோடி அரசின் ஊதுகுழல்களாக செயல்படுகின்றன.

இதனை மீறி உண்மையைப் பேசமுயன்ற பத்திரிகையாளர்கள், சட்டத்தை அமல்படுத்த முனைந்த அதிகாரிகள், லஞ்சம் வாங்க மறுத்த நீதிபதிகள் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்லது நீதிபதி லோயாவைப் போல மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலின் சீரழிவுகளை மேற்கூறிய அனைத்தோடும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதை விடுத்து அரசியல்வாதி மட்டும்தான் வில்லன் என்றும் அவர்களைத் திருத்தி விட்டால், இந்த தேர்தலையும் ஜனநாயகத்தையும் திருத்திவிட முடியும் என்ற மாயையையும் ஆளும் வர்க்கங்கள் பரப்புகின்றன.

ஜனநாயகம் அற்ற தேர்தல்!

இந்தத் தேர்தலில் ஜனநாயகம் கிடையாது. இந்தத் தேர்தல் முறை மூலம் அதனை சாதிக்க முடியாது என்று கூறுகிறோம். நேர்மையான சிலர் வந்து இதனைத் திருத்திவிட முடியாது என்று கூறுகிறோம். நேர்மையானவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று 40, 50 ஆண்டுகளாக பலரும் பேசி வருகிறார்கள். மோடி கூட நேர்மையாளர் என்று சொல்லிக் கொண்டுதான் ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் நடப்பதென்ன ? தேர்தல் கட்சிகள் கோடீசுவரர்களுக்குதான் சீட் கொடுக்கிறது. 2004-ல் 32% எம்.பி-க்கள் கோடீசுவரர்கள். 2014-ல் இந்த எண்ணிக்கை 82% ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏன் என்று யோசிக்க வேண்டாமா? ஏனென்றால் அம்பானியும் அதானியும் அவர்களைச் சார்ந்த பணமுதலைகளும் மென்மேலும் சொத்துச் சேர்ப்பதற்கு ஏற்பத்தான் நாட்டின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

மோடியின் ஆட்சிக்காலத்தில், இந்திய மக்கட்தொகையில் 65 கோடிப்பேருடைய சொத்துக்கு நிகரான சொத்து 9 முதலாளிகளிடம் சேர்ந்திருக்கிறது. “ஜனநாயகத்தில் அம்பானியாக இருந்தாலும் அன்றாடங்காய்ச்சியாக இருந்தாலும் ஆளுக்கு ஒரு ஓட்டுதான்” என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த 9 பேர்தான் 65 கோடிப்பேரின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள்.

”ஸ்டெர்லைட் வேண்டாம்” என்று தூத்துக்குடி மாவட்டமே முழங்கியது. ஆனால் அனில் அகர்வால் என்ற ஒரு முதலாளிக்காக 14 பேரைக் கொன்று பல நூறு பேரை சிறையில் அடைத்தது போலீசு. இதைப்போல ஓராயிரம் எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

இந்த அரசுக் கட்டமைப்பை இயக்குவது உலக முதலாளித்துவக் கட்டமைப்பு, பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காக, அவர்களுடைய உத்தரவுக்கு ஏற்பத்தான் இந்த அரசுக் கட்டமைப்பு வேலை செய்கிறது. முதலாளிகளுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கி விட்டு, அந்த வருமானத்தை ஈடுகட்டுவதற்காக அரசாங்கமே சாராயம் விற்கிறது. ரியல் எஸ்டேட் முதலைகளின் லாபத்துக்காகத்தான் விவசாயிகளின் வயிற்றிலடித்து ஆற்றுமணல் கொள்ளையிடப்படுகிறது. லஞ்சம் ஊழல் என்பது தனியாக வளர்வதில்லை. தனியார்மய – தாராளமயக் கொள்கைதான் அதனைப் பெரிதும் வளர்த்திருக்கிறது. ஆகவே, இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வி என்பதை தனியார்மயக் கொள்கையின் தோல்வியுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

சமீப காலமாக நடைபெறும் மக்கள் போராட்டங்களின் கோரிக்கைகளைப் பாருங்கள். எட்டு வழி சாலைக்காக நிலத்தைப் பிடுங்காதே, பொதுத்துறையை விற்காதே, பி.எஃப் பணத்தைத் திருடாதே, நூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியைக் கொடு, வேலையை விட்டு நீக்காதே – எல்லா கோரிக்கைகளின் பொருளும் ஒன்றுதான். “அரசே எங்களை வழிப்பறி செய்யாதே” என்பதுதான்.

இன்றைய அரசுக் கட்டமைப்பில் மக்கள்நல அரசு சாத்தியமில்லை!

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தியது மட்டுமின்றி அதனை எதிர்த்துப் போராடுவோர் மீது தடுப்புக்காவல் சட்டங்களை ஏவி ஒடுக்கிய காங்கிரஸ் கட்சி, அத்தகைய சட்டங்களைத் திருத்துவதாகவும், மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகவும், வெறுப்பரசியலை தண்டிக்க தனிச் சட்டம் இயற்றுவதாகவும் வாக்குறுதி அளிக்க நேர்ந்திருப்பதற்கு காரணம் மக்களின் போராட்டங்கள்தான்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலுமா? இந்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தை கண்காணிக்கும் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிப்பதையோ மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக பற்றாக்குறை பட்ஜெட் போடுவதையோ அனுமதிப்பதில்லை.

அதேபோல், இத்தனைக் காலமாக இந்து வெறியர்களுக்கு உடந்தையாக இருந்து வரும் இந்த அரசமைப்பின் உறுப்புகள், வெறுப்பரசியல் வன்முறைக்கு எதிரான சட்டத்தை வைத்து இந்து வெறியர்களைத் தண்டிக்கவும் போவதில்லை. தீண்டாமைக் குற்றத்துக்கு எதிரான சட்டங்கள் எவ்வளவு கடுமையாக்கப்பட்ட போதும், அதன் காரணமாகவே சாதிவெறியர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பதைப் போன்றதே இதுவும்.

உண்மை நிலை இவ்வாறிருக்க புதிய தாராளவாதக் கொள்கைக்கும், இந்த அரசுக்கட்டமைப்புக்கும் உட்பட்டே வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. கார்ப்பரேட் கொள்ளையையும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறையையும் கடுகளவும் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதையே தனது கொள்கையாகக் கொண்ட பாசிச பாஜக-வோ இந்த வாக்குறுதிகள் ஆபத்தானவை என்று எச்சரிக்கிறது.

அதிகரித்துவரும் மக்கள்  பிரச்சினைகளுக்கு தேர்தல் தீர்வு அல்ல!

தேர்தல் என்ற வரம்புக் குள்ளேயே யோசித்துப் பழகிவிட்ட காரணத்தினால் இது மட்டுமே தீர்வு என்று தோன்றக்கூடும். ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போடுவதை மக்களே காலம் காலமாக செய்து வருகிறார்கள். அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முறியடிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும்.

பாரதிய ஜனதாவைப் போல எதிர்க்கட்சிகளெல்லாம் பார்ப்பன பாசிசக் கட்சிகள் அல்ல என்பது உண்மை தான். ஆனால் இவர்கள் அதை எதிர்த்துப் போராடியதும் இல்லை. காங்கிரஸ் என்பது மிதவாத இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்தும் கட்சி. அவர்கள் ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் இந்து பயங்கரவாதிகளை தண்டிக்கவோ, அந்த அமைப்புகளை முடக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எப்போதுமே தேர்தல் ஒரு உடனடித் தீர்வு போன்ற மயக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன ? தேர்தல் என்பது ஒருநாள் விவகாரம். மீதி 5 ஆண்டுகளும் எல்லா பிரச்சினைகளுக்காகவும் நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரங்கள் மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தியவை தேர்தல்கள் அல்ல. சிங்கூர் முதல் தூத்துக்குடி வரையிலான மக்கள் போராட்டங்கள்தான் இதனை சாதித்திருக்கின்றன.

ஆகவே, தனித்தனியான சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே வழங்கிவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அனைத்துப் போராட்டங்களும் மக்கள் அதிகாரத்தை நிறுவுகின்ற அரசியலை நோக்கியதாக இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்பு நெருக்கடிக்கான தீர்வாக ஒருபுறம் கார்ப்பரேட் – காவி பாசிசம் ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படுகிறது. மறுபுறம் அதற்கு மாற்றாக இந்தக் கட்டமைப்புக்குள்ளே மனித முகம் கொண்ட உலகமயத்தை அமல்படுத்திவிட முடியும் என்று எதிர்க் கட்சிகள் நம்பிக்கையூட்டுகின்றன.

தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கு வெளியே, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை. ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் பாசிச அபாயத்தை முறியடிக்கும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 99623 66321

விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !

0

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணத்தை, ஏப்ரல் முதல் வாரத்தில் உயர்த்தி உத்தரவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது நிர்வாகம். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக துணை வேந்தர் கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அவர் குறிப்பிட்டவாறு கட்டணத்தைக் குறைக்கவில்லை. கடந்த 3 நாட்களாக நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள், நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (08-04-2019) தொடங்கிய இப்போராட்டம், நேற்று இரவும் தொடர்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

உயர்த்தப்பட்ட கட்டணத்தை எதிர்த்து இரவிலும் தங்களது போரட்டத்தைத் தொடர்ந்து  வருகின்றனர். விடுதி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாது, மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட விடுதி வைப்பு தொகை ரூ.5000-ஐ திரும்ப வழங்க வேண்டும், SC-ST மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்து வைத்து போராடி வருகின்றனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !

“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !”என வாசகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று, ஜெயகர் என்ற வாசகர் ஒருவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் வழங்கக் கோரி பணம் செலுத்தி இருந்தார்.

அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு போர்னோ : இருளில் சிக்கும் இளமை மற்றும் அம்பானியின் அடகுப் பொருளா மாணவர்கள் ? ஆகிய இரு தலைப்பிலான புதிய கலாச்சாரம் வெளியீடுகளில் ஒவ்வொரு தலைப்பிலும் 50 படிகள் வீதம் 100 புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போதைய சூழலில் தமிழகம் முழுக்கவே கல்லூரி மற்றும் பல்கலைக் கழக வளாகங்கள் அனைத்து, புறக்காவல் நிலையங்களாக மாறியுள்ள சூழலில் ஒரு நூலை மாணவர்களுக்கு வழங்குவது கூட போராட்டமாக உள்ளது. இந்த சூழலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் கூட விதிவிலக்கில்லை. அப்படியான சூழலில்.

மாணவர்கள் வகுப்பு முடிந்து வரும் நேரம் வரை காத்திருந்து தோழர்கள் இந்த புத்தகங்களை வினியோகித்தனர். ஒரு சில மாணவர்கள் ஆரம்பத்தில் ஏதோ புத்தம் கொடுக்கிறார்கள் என கருதி, “உள்ள வகுப்பு பாடங்களையே படிக்க நேரம் இல்லை.. இதில் இது என்ன புத்தகம்…?” என கேட்டனர்.

அதன் பின்னர் அவர்களிடம் இந்த நூலின் உள்ளடக்கம் பற்றி சொன்னதும் அவர்களாகவே எங்களுக்கு கொடுங்கள் என கேட்டு வாங்கிச் சென்றனர். அதிலும் தங்கள் பல்கலைக் கழகத்தை தேர்ந்தெடுத்து “இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது…” என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதில் மாணவர்களைப் போலவே மாணவிகளும் கேட்டு வாங்கி தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசிக்கு தொடர்பு கொள்கிறோம் என ஆர்வத்துடன் தெரிவித்து சென்றனர்.

இம்மாதம் மீண்டும் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் 100 புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்…

மாணவர்களை பாடத்திட்டத்தைத் தாண்டி எதையும் படிக்கவிடாது தடுப்பது, பாடங்களைக் கூட பணம் சம்பாதிக்கும் வேலைக்காக மட்டும் படிக்க வேண்டும் என்ற நச்சு சூழலை ஏற்படுத்திவிட்டு, அவர்களை குறை கூறுவது மட்டும் நியாமா ? என்ற கேள்வி பொது வெளியில் எழுப்பப்ப வேண்டியது நம் அனைவரின் கடமை.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளை தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

மெல்லக் கொல்லும் சர்க்கரை | மருத்துவர் அர்சத் அகமத்

“எப்படி சார், என்ன நல்லா மெலிஞ்சி போயிட்டீங்க?”.

“ஒன்னுமில்லை கொஞ்சம் சுகர்  இருக்கு அதுதான்… தம்பி கொஞ்சம் சீனி கொறச்சி டீ ஒன்று….”

“என்ன ஒங்களுக்கும் இந்த வயசில சீனி வருத்தமா?” இது நமது வாழ்வில் தினமும் கேட்கின்ற, சாதாரணமாக கேட்கின்ற உரையாடல்கள். ஒவ்வொரு நாளும் இப்படியான நிறைய உரையாடல்களை நாம் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். சர்க்கரை அல்லது  டயபடிக்( diabetic) என்பது  சமூகத்தில் ஒரு கௌரவ சொல்லாக மாறியிருக்கிறது, இது சமூகத்தை விட்டும் பிரிக்க முடியாத, வாழ்வின் அங்கமாக மாறிவிட்டிருக்கிறது.

மிக அண்மைய தரவுகளின் அடிப்படையில் நம்மில் மூவரில் ஒருவர் இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது மிக  கவலை தரும் செய்தியாக இருக்கிறது. சிலவேளைகளில் இதை வாசிக்கின்ற நாமோ, அல்லது  நமது உறவினர்கள், நண்பர்களில் குறைந்தது ஒருவரோ இந்த நோயாளியாக  இருப்பதை யாரும்  மறுப்பதிற்கில்லை.

டயபடிக், பொதுவாக சர்க்கரை வியாதி என்பதாக அறியப்பட்டாலும் அது இந்த நோயின் சரியான விளக்கத்தை வழங்குவதாக இல்லை. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பது இந்த வியாதி ஏற்படுவது சீனியினால் என்று. அதனால் அவர்கள் சீனியைத் தவிர்த்து, அனைத்து வகையான ஏனைய மாவுப்பொருட்களை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் தவறான ஒரு உணவு பழக்கத்துக்கும், கட்டுப்படுத்த முடியாத நோய் நிலைமைக்கும் இட்டுச் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.

டயபடிக் , நமது உடலில் ஏற்படுகின்ற ஒரு குணப்படுத்த முடியாத நீண்ட கால பிரச்சினைகளை  ஏற்படுத்தும் நோய் நிலைமை. இது உடலில் சாதரணமாக பேண வேண்டிய சீனியின் அளவை விட மேலதிக அளவில் சீனி பேணப்படுவதால் ஏற்படுகின்றது. அதாவது மாவுப்பொருள் (carbohydrates) உணவுச் சமன்பாட்டில் உடலில் ஏற்படுகின்ற ஒரு மாற்ற நிலை. இதனால் குருதியில் பேணப்பட வேண்டிய சீனியின் அளவு தாறுமாறாக அதிகரித்து செல்லுவதுதான் இந்த நோயின் ஆபத்தாக  இருக்கிறது.

இந்த டயபடிக் பற்றி  அறிந்து கொள்வதற்கு முன்னால்  சில  அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் தினமும் உட்கொள்கின்ற உணவு வகைகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

படிக்க:
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

1. Carbohydrates எனப்படும் மாவுப்பொருட்கள் :   நமது உணவின் பெரும்பகுதி இதுவாகவே இருக்கின்றது. சோறு, மாவு, கடலை, சீனி, இனிப்பு வகைகள், பழச்சாறு, தானியங்கள், பருப்பு, கிழங்கு வகை என்பன இதில் அடங்கும்.

2. Protein எனப்படும் புரத உணவுகள் – பெரும்பாலும் மாமிச உணவுகள் இதில் அடங்குகின்றன. இறைச்சி, மீன், முட்டை, பால் போன்ற உணவுகள்.

3. Lipid எனப்படும் கொழுப்பு வகைகள் – இதில் எண்ணை வகைகள், பட்டர், மீன், இறைச்சி,முட்டை  கொழுப்புக்கள் என்பவை அடங்குகின்றன.

4. ஏனயவை Vitamin & Minerals   – விட்டமின்களும் கனியுப்புக்களும் – இவைகள் மரக்கறி, பழங்கள் மற்றும் கீரைகள், தானியங்கள், நீர், அதுபோல் இறைச்சி, மீன் முட்டை போன்றவற்றில் மிகச் சிறிய அளவுகளில் காணப்படுகின்றது.

நாம் உட்கொள்கின்ற இந்த உணவுகள் எல்லாமே நமக்கு அன்றாட தொழிற்பாட்டுக்கு தேவையான சக்தியைப் பிறப்பிப்பதோடு போக எஞ்சிய மீதி சேமிப்பாக சேர்த்து வைக்கப்படுகின்றது.

ஆனால் நாம் அதிகம் பேசுகின்ற இந்த டயபடிக் என்பது முற்றிலும் 1-ம் வகை சார்ந்த  மாவுப்பொருள்களின் தொழிற்பாட்டிலயே  தங்கியுள்ளது. நாம் நமது உணவில் எடுத்துக்கொள்கின்ற எந்த மாவுப்பொருளும் உடலுக்குள் சென்றதும் அவை சீனியாக மாற்றப்படுகின்றன. இது பல்வேறுபட்ட சிக்கலான படிமுறைகள்  ஊடாக நடைபெறுகின்றது.

சீனியாக மாற்றும் செயற்பாடு வாயில் தொடங்கி இரைப்பை, குடல், ஈரல், மண்ணீரல் என நீண்டு கொண்டு செல்கின்றது. இவ்வாறு பல படிமுறை மாற்றம் பெற்ற மாவுப்பொருட்கள் இறுதியில் சீனியாக மாற்றப்பட்டவுடன் இரத்தத்தில் கலக்கப்பட்டு உடல் முழுவதும்  எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்போது இரத்தத்தில் உள்ள சீனி (Glucose) ஆனது  Pancreas எனப்படும் மண்ணீரலினால் சுரக்கப்படும் இன்சுலின் ஹோர்மோன்  இந்த சீனியை, இந்த குளுக்கோசை, நமது உடல் கலங்களுக்கும் (Cells), ஈரலுக்குள்ளும் (Liver)  உட்புகுத்துகின்ற வேலையை செய்கின்றது.  உட்புகுந்த இந்த  சீனி  மாத்திரமே நமக்கு தேவையான சக்தியை பிறப்பிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

இந்த தொழிற்பாடுதான் நமது இரத்தத்தில் சீனியின் அளவை ஒரு சீராக வைத்திருக்க உதவுகின்றது. இதற்கு எதிர்மாற்றமான நிலையே டயபடிக் எனப்படுகின்றது. இதன் போது நமக்கு தேவையான இன்சுலின் சுரக்கப்படாமல் போகின்றது அல்லது சுரக்கப்படுகின்ற இன்சுலின் தரமற்றதாக, பயன்பாட்டில் குறைவுடையதாக அல்லது சொற்ப அளவானதாக சுரக்கப்படுகின்றது. இதனால் குளுகோசின் அளவு இரத்தத்தில் கட்டுப்பாட்டிலில்லாமல் அதிகரிக்கின்றது.

இந்த டயபடிக் என்பது மிக மோசமானதொரு நோய் நிலைமையாகும். சில மருத்துவ பேரறிஞர்களின் கருத்துக்களின்படி இது ( கன்சர் ) புற்றுநோயை விட கொடியதொரு நோயாக கருதப்படுகிறது. மெல்ல மெல்ல கொல்லும் கொடிய நோய் என்றால் கூட அது மிகையாகாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமூகம் மிகவும் பராக்கற்ற அல்லது அதிகம் கவனம் செலுத்தாத, பயப்படாத நோயாகவும்  இதுவே காணப்படுகிறது.  யாராவது ஒருவர்  டயபடிக்  நோயாளியாக அடையாளப்படுத்தப்பட்டால்  இனி வாழ் நாள் முழுவதும் அந்நோயுடனே அவர் possible மரணிக்க வேண்டிய ஒரு துர்பாக்கியமிக்க நிலைமைக்கு ஆளகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

டயபடிக் ஏன் எற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஒற்றைக் காரணம் இல்லாவிட்டாலும் இது பல்வேறு காரணிகளினால் ஏற்படுகிறது. பரம்பரையில் தாய் தகப்பனுக்கு அல்லது உறவுகளுக்கு உள்ள போது ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவுள்ளது. அதுபோலவே கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள், போதியளவு உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை என  இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.

டயபடிக் ஏற்படாமல் தடுப்பது எப்படி?, ஏற்பட்டால் நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவது எப்படி? என்பதுதான் இப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற மிகப் பெரிய சவால். டயபடிக் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறையை குழந்தை கர்ப்பத்தில் தரித்த காலத்திருந்து தாயின் உணவுப் பழக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.

கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் தங்களது உணவில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான சாப்பாடுகள், சீனி, சுவையுப்புக்கள், நிறமூட்டிகள் கொண்ட உணவுகளை முற்றாகத் தவிர்ந்து போசாக்கான மரக்கறிகள், பழம், பால், மீன், முட்டை என தேகாரோக்கியம் உள்ள உணவுகளில் அதிகம் கவனம் செலுத்துதல் வேண்டும். அது போல் மன இறுக்கம், மன உளைச்சல் போன்ற உள நிலைமைகளிலிருந்து விடுபட்டு போதுமான தூக்கம், மன அமைதி போன்றவற்றில் கவனம் செலுத்துதல் மிக முக்கியமானதாகும்.

இதன் மூலம் தங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் டயபடிக் இருந்து பாதுகாப்பதோடு, தங்களது குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் ஏற்படும் இந்த நிலைமையையும் பாதுகாக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுதல், இரண்டு வருடங்களுக்காவது தாய்ப்பால் ஊட்டுதல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு டயபடிக்  ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக நவீன ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

உணவுப் பழக்கம், அடுத்த முக்கியமான காரணியாகும். குழந்தைகளும், பெரியவர்களும், அதிகளவான இனிப்புப் பண்டங்கள், மாவுப்பொருட்கள், சுவையூட்டிகள், போத்தலில் அடைக்கப்பட்ட , பதப்படுத்தப்பட்ட உணவுகளை இயலுமானவரை தவிர்த்தல் மிக முக்கியமாகும். நாம் எதைச் சாப்பிடுகிறோமோ எதைக் குடிக்கிறோமோ அதுவே நமக்கு தேகாரோக்கியம் மிக்கதாகவோ அல்லது நோய்க்காரணியாகவோ மாறிவிடுகின்றது என்பது தான் இதில் உள்ள  இரகசியம்.

சீனியின் பாவனையை எப்படி நாம் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோமோ அதுபோலவே மாவுப்பொருட்களை(சோறு, கிழங்கு, மாவுப் பண்டங்களை) இயலுமானவரை குறைத்துக் கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். மாவுப் பொருட்கள் என்கின்ற போது அது பிஸ்கட், சோற் ஈட்ஸ், பேக்கரி உணவுப் பண்டங்கள், என விரிந்து செல்கின்ற பட்டியலை கொண்டிருக்கிறது. இந்த மாப்பொருட்களை குறைத்துக் கொள்வதனால் நமது இன்சுலின் தேவைகளை குறைத்துக் கொள்ளலாம். அதுபோலவே சீனியின் அளவையும் இறுதியில் குறைத்துக் கொள்ளலாம்.

அளவான, தொடர்ச்சியான உடற்பயிற்சி நமது உடலின் குருதி அளவை குறைத்துக் கொள்ள உதவும் மிக முக்கிய காரணியாக இருக்கின்றது. உடற்பயிற்சி என்பது   ஜிம் அல்லது விளையாட்டு மைதானத்திற்கு சென்றுதான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒரு தப்பான கணிப்பீடாக உள்ளது. சாதாரணமாக உடல் வியர்த்துக் கொள்கின்ற அளவுக்கு நடைப்பயிற்சியோ, உடல் உழைப்போ, வீட்டு வேலையோ, தொடர்ச்சியாக தினமும் செய்யக்கூடியதாக இருத்தல் கூட நல்ல  உடற்பயிற்சிதான்.

படிக்க:
அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம் !
♦ நம் உணவு முறையில் எது நல்லது ? எது கெட்டது ? – கேள்வி பதில் !

உதாரணமாக கடைகளுக்கு, வணகஸ்தலங்களுக்கு நடந்து செல்லுதல், வீட்டைச் சுத்தப்படுத்தல், சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தல், இயலுமானவரை மோட்டார் வாகனங்களை தவிர்த்து சைக்கிள்களை பயன்படுத்தல், நீண்ட நேரம்  உட்கார்ந்து இருப்பதை தவிர்த்தல், இப்படி பற்பல வகைகளில் உடற்பயிற்சி செய்து கொள்ள முடியும்.

அடுத்ததாக இன்சுலின் தொழிற்பாட்டை, உற்பத்தியைக் கூட்டுதல், இதற்கு நோன்பிருத்தல் (intermittent fasting), பசி வந்தால் மட்டுமே சாப்பிடுதல், இடை உணவுகளை  இயன்ற வரை தவிர்த்தல்,  மன அழுத்தத்தை இல்லாமல் செய்தல் என்பன மிகவும் அதிகம் பயனுடையவையாக இருக்கின்றன. நமது மூதாதையர்களின் நல்ல பண்புகளான அதிகாலையில் விழித்தெழுவதும், நேரகாலத்தோடு தூங்கச் செல்வதும்  உடலின் எதிர்ப்புச் சக்தியை, நோய் எதிர்ப்பு வீரியத்தை  அதிகரிக்க உதவும்  என நவீன விஞ்ஞானமும் உறுதி செய்கிறது.

டயபடிக்   ஏற்கனவே வந்துவிட்டாலும் வராவிட்டாலும், இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை முற்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தை மாவுப்பொருட்கள்  அதிகம் கொண்ட உணவிலிருந்து மாற்றி அதிக புரதம், மரக்கறி போன்ற உணவுகளை உட்கொள்ள பழகிக் கொள்ளல் நலம்.  வயிறு முட்ட உண்பதை தவிர்த்துக் கொள்ளல், வயிற்றை எப்பொழுதும் ஓரளவு காலியாக வைத்திருத்தல்,  அளவான உடற்பயிற்சி செய்தல், என்பன  எல்லோருக்கும் நன்மை தரும் விஷயங்களாக இருக்கின்றன.

டயபடிக் உள்ளவர்கள்  தொடர்ச்சியாக வைத்திய ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் குருதியில் உள்ள சீனியை கட்டுப்படுத்திக் கொள்ளல், உரிய காலங்களில் கண்களை, இதயத்தை, நரம்புத் தொகுதிகளை, சிறுநீரகங்களை சீராக பரிசோதனை செய்தல், குருதியில் கொழுப்பின்  (Cholesterol) அளவை உரிய முறையில் கட்டுப்பாட்டில் வைத்தல் என்பன மிக அவசியமாகும்.

டயபடிக் என்பது வெறும் சீனியின் அளவு மாத்திரமல்ல அது கண்களை குருடாக்கும், கால்களை முடமாக்கும், சிறுநீரகங்களை (Kidney) பழுதாக்கும், அதுபோல் உடலை இழைத்து நோயாளியாக்கி முடக்கி விடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குருதியில் தொடர்ச்சியாக அதிகரித்த சீனியினால்  உடல் அவயங்கள் எல்லாவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும்  என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக கண்பார்வை வீச்சு குறைவடைதல், இரவுப் பார்வை குறைபாடு, கண் மங்கமாகுதல், என விரிந்து இறுதியில் கண் குருடாகுதல் என்பதில் இதன் பாதிப்பு  முடிவடைகின்றது. அதுபோல இரத்த குழாய்களில் அதிகளவான கொழுப்பு படிவதால் அவைகள் அடைபட்டு குருதியோட்டம் தடைபடுவதலால் மாரடைப்பு, நெஞ்சுவலி, பாரிசவாதம், காயங்கள் ஆறாத்தன்மை அதனால் அவயங்களை இழத்தல் என நீண்டு செல்லும் இந்தப் பட்டியல் இறுதியில் கிட்னி பெய்லியர் எனும் நிலையில் முடிவடைகிறது.

குருதியில் அதிகரிக்கின்ற சீனியின் அளவு ஆரம்பத்தில் எந்தவிதமாக நோய் அறிகுறிகளையும் தென்படுத்தாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் நிறையப்பேர் தங்களுக்கு டயபடிக் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு பல வருடங்கள் கடந்து சென்று விடுகின்றது. சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் முற்றி இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த பிறகுதான்  தெரிய வந்த சம்பவங்கள் நிறையவே  இருக்கின்றன.

இந்த நோயின் ஆரம்பக்குறிகளாக அதிக தாகம், பசி, அதிகளவு சிறுநீர் வெளியேறல், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழித்தல், உடல் இளைத்துப் போகுதல், தகுதியான காரணமில்லாமல் உடல் நிறை குறைதல் என இந்தப் பட்டியல் நீட்சியடைகின்றது. ஆகையால் 40 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும், விஷேடமாக குடும்பத்தில் டயபடிக்  உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்களது குருதியில் சீனியின் அளவை பரிசோதித்து கொள்வது மிக நன்று.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் இது குறித்து கவனம் எடுப்பதோடு நமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வூட்டுவதும் நம் கடமைகளில் உள்ளதுமாகும். அதுபோல் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை புரிந்து நமது உணவுப் பழக்கத்தில் உடனடி மாற்றம் கொண்டுவருவதும் அவசியத் தேவையாக உள்ளது.

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம் !

மக்கள் அதிகாரம் தோழர் வைத்திலிங்கம் மீது கொலைவெறித் தாக்குதல்!
அறந்தாங்கி உதவி ஆய்வாளர் பிரபுவின் சாதிவெறி ரவுடித்தனம்!

டந்த 3.4.2019 அன்று மாலை தனது இரு சக்கர வாகனம் களவு போனது தொடர்பான புகார் மனு குறித்து விசாரிக்க அறந்தாங்கி காவல் நிலையம் சென்றுள்ளார் தோழர் வைத்திலிங்கம்.

அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபு மிக அலட்சியமாக பதிலளித்ததோடு மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார். ஏன் மரியாதைக் குறைவாகப் பேசுகிறீர்கள் என கேட்டவுடனேயே ஓங்கி அறைந்து, கொட்டடிக்கு இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார் உதவி ஆய்வாளர் பிரபு. இதில் ஒரு பல் உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கி இருக்கிறது.

விடாமல் தாக்கியதுடன் சாதியைக் கேட்டுள்ளார், சொல்ல மறுத்தவுடன் மேலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். வலி தாங்க முடியாமல்தான் ஒரு எஸ்.சி என கூறியவுடன் பள்ளனா? பறையனா? எனக் கேட்டுத் தாக்கியுள்ளார். இத்தாக்குதல் நடக்கும் போது அங்கிருந்த திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், வழக்கறிஞர் தோழர் அலாவுதீனுக்குத் தகவல் தர, அலாவுதீன் காவல் நிலையம் வந்து உதவி ஆய்வாளர் பிரபுவை எச்சரித்து அழைத்து வந்துள்ளார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான தோழர் வைத்திலிங்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஆயினும் போலீசு மருத்துவர்களிடம் பேசி மருத்துவத்தைத் தடுத்து புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். அங்கும் அவரை மருத்துவமனையில் சேர்க்க விடாமல் தடுத்துவிட்டனர்.

இவ்வளவு அக்கிரமத்தையும் செய்துவிட்டு நடந்ததை பொதுவெளிக்குக் கொண்டு சென்றாலோ புகார் செய்தாலோ பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவோம், என மிரட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதற்கு பதிலாக குற்றவாளி எஸ்.ஐ பிரபுவின் ரௌடித்தனத்தையும், தீண்டாமைக் குற்றத்தையும் டி.எஸ்.பி மூடி மறைக்கும் செயலிலேயே குறியாக இருக்கிறார்.

படிக்க:
கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !
♦ சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !

காவல் நிலைய காமிரா பதிவுகள், மருத்துவமனை ஆவணங்கள் இவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், உழைப்பாளிகள் ஆகியோரின் இயல்பான வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலே காவல்துறைதான் என்பது பல்லாயிரக்கணக்கான சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குற்றக்கும்பலுக்கு அடியாளாக இருப்பதும் காவல்துறைதான்.

தோழர் வைத்திலிங்கத்தைத் தாக்கிய எஸ்.ஐ பிரபு, அவருக்கு உடந்தையாக இருப்போர், மருத்துவ உதவி மறுத்த மருத்துவர்கள் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய அநீதி கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் போராடுவதன் மூலமே காவல்துறை அராஜகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


தகவல் :
மக்கள் அதிகாரம்
பட்டுக்கோட்டை,
தொடர்புக்கு : 75026 07819

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! – நெல்லையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!
நாள் : 11.04.2019 வியாழக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : அரசு சித்த மருத்துவ கல்லூரி எதிரில், பாளையங்கோட்டை.
 
தலைமை:
 
தோழர் செ. முருகன்
மக்கள் அதிகாரம், நெல்லை
 
உரைவீச்சு:
 
ப. செந்தில்குமார் B.A.B.L
வழக்குரைஞர், திருநெல்வேலி
 
திரு J.B. வெனிஸ்
செயலாளர், கோவளம் – குமரி சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்
 
சிறப்புரை:
 
தோழர் சி. ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
 

ம.க.இ.க. கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் ! அனைவரும் வாரீர்!!


மக்கள் அதிகாரம்,
நெல்லை
தொடர்புக்கு: 75989 87316

சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

4

ளம் தம்பதியினர், ஐந்து விடலைப் பருவ மாணவர்கள், வீடு திரும்பும் திருநங்கை, சுனாமியால் பிழைத்து பெந்தகோஸ்தே பிரச்சாரம் செய்யும் நபர் என நான்கு கிளைக் கதைகள். நான்கையும் பிணைத்து செல்கிறது மையக் கதை. இரண்டு கதைகளில் காமமும், ஒன்றில் மூன்றாம் பாலினமும், நான்காவதில் மதமும் கதையின் கருத்தாக உணர்த்தப்படுகின்றன. எனினும் முதன்மையாக காமமே பேசப்படுகிறது.

விடலை மாணவர்கள் பலான படம் பார்க்கத் துவங்குகிறார்கள். அதில் ஒருவனது அம்மாவே நாயகியாக படத்தில் வருகிறாள். ஆத்திரத்தில் டிவியை உடைத்து விட்டு அம்மாவைக் கொல்ல விரைகிறான் அவன். படியில் ஏறும் போது தவறுதலாக அவன் வயிற்றிலேயே குத்திக் கொள்கிறான். அலறும் அம்மா ஆட்டோவில் மகனைக் காப்பாற்ற விரைகிறாள். அவனுக்கு ஒன்றுமில்லை என்று தேறுதல் சொல்கிறாள். மகனோ “போடி தே…முண்டை” என்று திட்டுகிறான். கடைசிக் காட்சியில் காமப் படங்கள் குறித்த தத்துவத்தை தாய் உபதேசிக்கிறாள்.

”இலட்சம் பேர் அந்தப் படங்களை பார்க்கும் போது நான்கு பேர் நடிக்கத்தான் செய்வார்கள், அது எனக்குத் தொழில், நான் மாரியம்மனாகவும் நடித்திருக்கிறேன். பலான படத்தில் விரும்பித்தான் நடித்தேன்” என்கிறாள். இவையெல்லாம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அல்லது இத்திரைக்கதையை உருவாக்கிய நான்கு மேதைகளின் கருத்துக்கள் (மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சேகர், தியாகராஜன் குமாரராஜா).

உடைந்த டி.வியைப் பார்த்தால் அப்பா உதைப்பார் என அந்த மாணவனும் மற்ற நண்பர்களும் ஒரு சேட்டு வீட்டில் பணம் திருடுகிறார்கள். அங்கே ஒரு ஏலியன்ஸ் ஜீவராசியை நம்மூர் சேட்டுப் பெண் தோற்றத்தில் சந்திக்கிறார்கள். சேட்டுப் பெண்ணும் இந்த உலகில் அனைத்தும் ஒன்று. நம்மில் வேறுபாடு இல்லை என்பது போல உபதேசிக்கிறாள்.

போர்னோ உலகின் கொடூர அனுபவங்களை அறியாத அம்மாஞ்சியாக இயக்குநர் இருக்கிறாரா? இல்லை செக்ஸ் பிரச்சினைகளை துணிந்து பேசும் கலகக்காரராக காட்டிக் கொள்ள வெட்டிக் கெத்து காட்டுகிறாரா தெரியவில்லை. பலான படங்களிலோ இல்லை ஃபோர்னோ படங்களிலோ நடிப்பவர்களின் அவலக் கதைகள் ஏராளமிருக்கின்றன. அவர்கள் எவரும் அதை விரும்பி ஏற்று நடிப்பது இல்லை.

இலட்சம் பேர், நான்கு பேர் தியரியைப் பொருத்தினால் பொள்ளாச்சி வீடியோக்களை இலட்சம் பேர் பார்க்கும்போது நான்கு பொறுக்கிகள் அப்படி வீடியோ எடுக்க வேண்டியது கடமையாகிறது. குடிக்கிறவன் திருந்தி விட்டால் டாஸ்மாக் தானே மூடப்படும் என்பது போன்ற ஆபத்தான கிழட்டு உபதேசம் இது.

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்ட முகில் – வேம்பு கதையை எடுத்துக் கொள்வோம். திடீரென்று தனது கல்லூரியில் படித்த முன்னாள் காதலனை வரச்சொல்லி உறவு கொள்கிறாள் வேம்பு. அப்போது அந்த முன்னாள் காதலன் இறந்து போகிறான். இது தெரியவர முகில் மனைவியை கடிந்து கொள்வதோடு விசயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என பிணத்தை எங்காவது தெரியாமல் போட்டுவிட முனைகிறான். வேம்புவும் அவனோடு ஜீப்பில் பிணத்தோடு சுற்றுகிறாள்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

வேம்புவின் அந்த திடீர் உறவு எப்படி நடந்தது? பின்னர், அவளை உறவு கொள்ளச் சொல்லி மிரட்டும் இன்ஸ்பெக்டரிடம் முடியாது என்று கதறி அழுகிறாள் வேம்பு. இடையில் கணவனோடு விவாதம் வரும்போது காதலனோடு உறவு எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்கிறாள். அது ஒரு விபத்து போலவும் சித்தரிக்கிறாள். அந்த உறவு திடீரென்று நடந்திருந்தாலும் தனது கணவனோடு சிந்தையில் பிரிவதை அவள் என்றோ ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த மெல்ல மெல்லவான மாற்றத்தின் தர்க்க விளைவே இந்த உறவு மீறல். காமம் என்பது திடீரென்று மீறலையோ, முரண்களையோ ஏற்படுத்திவிடும் ஒன்றல்ல. பாலுறவு நிகழ்ச்சிப் போக்கின் பரிணாமத்திற்கேற்பவே அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

வாழ்வில் இத்தகைய பாலியல் மீறல் திடீரென்று நடந்து விடும்போது அதை பெரிதுபடுத்துவதில் பொருள் இல்லை என்பதாக இந்த கிளைக்கதை உணர்த்துகிறது. கடைசிக் காட்சியில் வேம்புவும் முகிலும் சிரித்தவாறு நடக்கிறார்கள். வேம்புவின் பாத்திரம் அவ்வளவாக ‘வில்லத்த்தனமானதல்ல’ என்பதற்காகவே கடைசிக் காட்சிகளில் அவள் அழுது தீர்க்கிறாள். தன்னுடம்பை காப்பாற்ற கதறுகிறாள். கணவனோ அவளை பிளாக்மெயில் செய்யும் போலீசுக்கு அளிக்க தயார் செய்கிறான். ஒரேடியாக கள்ள உறவு சரிதான் என்று போயிருந்தால் நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை கிளற முடியாது என்று இயக்குநர் இங்கே தடுமாறியிருக்கிறார்.

அதே நேரம் காம மீறலை பெரிதுபடுத்தக் கூடாது என்பது புண்ணுக்கு புணுகு போடும் வேலை. காமமோ காதலோ, இருபால் உறவில் ஜனநாயகம் இருப்பதற்கேற்ப நாகரிகமாகவோ அநாகரிகமாகவோ நடக்கிறது. கணவனை விவாகரத்து செய்து காதலனை மணப்பது அநாகரிகமான ஒன்றல்ல. இத்தகைய வெளிப்படைத் தன்மை குறித்து பேசாமல் படுக்கையறையின் திரைமறைவில் பேசுவதால் இந்த கிளைக்கதையும் கிளுகிளுப்பை ஊட்டி விட்டு இறுதியில் ஷகிலா ‘காவியங்கள்’ கூறும் உபதேசமாய் முடிந்து போகிறது.

படிக்க:
தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

இந்த கிளைக்கதையில் முகில் ஆங்காங்கே இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப கருத்து கந்தசாமியாக அரசியல் பேசுகிறான் – அதுவும் அபத்தமாய்!

சாதி, மதம், தேசிய இனம் மூன்றின் பற்றும் ஒன்றுதான், ஒன்று சிறியது மற்றது பெரியது என்பதால் வேறுபாடு இல்லை. இது சரி என்றால் அது சரி, இது தவறு என்றால் அது தவறு என்று வாதிடுகிறான் முகில். இயக்குநரின் தத்துவ ஆராய்ச்சிப்படி மூன்றும் ஒருவகையில் குழு நலனோடு தொடர்புடையது. தன்னுடைய குழு உயர்ந்தது, மற்ற குழு தாழ்ந்தது என்ற அடிப்படையில் இவை மூன்றும் ஒன்றே என வாதிடுகிறார்.

இந்த கருத்தில் பாதி உண்மை இருப்பினும் அடிப்படையிலேயே மிகத்தவறான வாதமிது. பாதி உண்மைகள் முழுப் பொய்யை விட ஆபத்தானவை. சாதியோ மதமோ அகமணமுறையை கண்டிப்பான விதியாய் வைத்திருக்கிறது. அதன் வழி பெண்ணை சாதி மத குழுக்களின் கௌரவமாய் பணயம் வைத்து வேற்று குழுக்களோடு சண்டை போடுகிறது. தேவையெனில் மாற்று இன ஆணை மட்டுமல்ல, தன் இனப் பெண்ணையே பலி கொடுக்கவும் தயாராக இருக்கிறது.

(இடமிருந்து) : தியாகராஜன் குமாரராஜா, நீலன் சேகர், நலன் குமாரசாமி மற்றும் மிஷ்கின்.

தேசிய இனத்தின் பற்று இப்படிப்பட்டதல்ல. ஜனநாயக வழிப்பட்ட பரிமாண வளர்ச்சியிலேதான் தேசிய இனத்தின் உருவாக்கம் வரலாற்றில் நிகழ்ந்தது. இன்று ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தால் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதால், அது வர்க்க ரீதியாக வல்லரசு எதிர்ப்பையும் கொண்டிருக்கிறது.

தமிழ்வழிக் கல்வியோ, நீதிமன்றத்தில் தமிழோ, அதிகார வர்க்க அலுவல்களில் தமிழைக் கோருவதோ இங்குள்ள தமிழக உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமை. அதனால் அது ஜனநாயக உரிமையும் கூட. தன் சாதிப் பெண் தன் சாதி ஆணைத்தான் மணக்க வேண்டும் என்பது எப்படிப் பார்த்தாலும் ஒரு ஜனநாயக கோரிக்கை அல்ல. லவ் ஜிகாத்தும் அப்படியே. தேசப்பற்றில் இனவாதம் கலக்கும் போது அது உரிமைகளை பேசும் ஜனநாயகத்தை விடுத்து ஒடுக்குவதை பேசும் இனவெறியாக சீரழிந்து போகிறது. எனவே, அனைத்தும் குழு நலனே, ஒன்று சிறியது, மற்றொன்று பெரியது என்று சமப்படுத்தி பார்ப்பது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

எல்லாம் ஒன்று என்ற தத்துவம் ஏலியன்ஸ் பாத்திரத்தின் மூலமும் பேசப்படுகிறது. இந்த இடத்தில் இப்படத்தின் படைப்பாளிகள் அத்வைதத்தை கொண்டு வருகின்றனர். அனைத்து உயிர்களும் ஜீவாத்மாவாக இருப்பினும் இறைவன் எனும் பரமாத்மாவோடு வேறுபட்ட ஒன்றல்ல, இரண்டும் ஒன்றுதான். சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா இருக்கிறது என்று ஆதிசங்கரர் படைத்த அத்வைதம் கூறுகிறது. இரண்டற்ற நிலை எனும் அத்வைதத்தின் படி கயிறாக பார்த்தால் கயிறு, பாம்பாக பார்த்தால் பாம்பு. கள்ள உறவாக பார்த்தால் கள்ள உறவு. மனிதனின் விலங்குணர்ச்சிப்படி பார்த்தால் இயற்கையான காமம்.

இயற்கையின் இயக்கவியலின்படி பார்த்தால் ஒட்டு மொத்த இயற்கையும் அதில் இருக்கின்ற கல், மனிதன், தாய், காதலி, குழந்தை அனைத்தும் ஒன்றுதான். எனினும் இந்த ஒன்று என்பது பல வேறுபாடுகளின் இருத்தல்களாலும் இயக்கங்களாலும், அந்த வேறுபட்ட இயக்கங்களின் உறவுகளாலும் பிணைக்கப்பட்ட ஒன்று. பல்வேறு பொருட்களின் தனித்தனி இயக்கத்தால் முழுமை பெற்ற இயக்கமே இயற்கை. அல்லது தனது இயக்கத்தின் போக்கில் ஒன்றிலிருந்து மற்றொன்றாய் மாறி முன்னதில் இருந்து மாறுபட்டு புதிய தனது தனித்தன்மையை பேணும் முழுமையாக இயற்கை இயங்குகிறது.

எல்லாம் ஒன்று என்பதால் நாம் மலத்தை புசித்து பசியாற்ற முடியாது. அல்லது கல்லையோ, கட்டையையோ தின்று உயிர் வாழ முடியாது. மலையும் நாமும் ஒன்று என மலை உச்சியில் இருந்து குதித்தால் தத்துவப்படி நீங்கள் இறந்து மண்ணோடு மண்ணாக கலந்து போய் இயற்கை ஒன்றே என நிரூபிக்கலாம். அந்த நிரூபித்தலை பார்ப்பதற்கு நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். உங்கள் உயிரின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. பிறகு, அது வேறொரு தனிப் பொருளாக மாறுகிறது.

குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்து மனிதனாக மாறும்போது பாலியல் உறவுகளில் விதிகளோ, தண்டனைகளோ இல்லை. அம்மா மகன், சகோதர உறவு அனைத்தும் இருந்திருக்கின்றது. பிறகு இன்ன தாயின் குழந்தைகள் என அறியப்படும் வளர்ச்சி தோன்றி தாய்வழிச் சமூகம் தோன்றுகிறது. அதன் பின்னர் சொத்துக்களின் தோற்றத்தில் இந்த தந்தைக்கு பிறந்த வாரிசுகள் என வர்க்க சமூகம் தோன்றுகிறது. ஒட்டு மொத்த வரலாற்றில் தனக்கு பிடித்த இணையை காதலிக்கும் காதல் எனும் நாகரீக வளர்ச்சி, வரலாற்றுப் போக்கில் தோன்றுகிறது. பிறகு வர்க்க சமூகம் எனும் தளைகளோடு அந்த காதல் இன்றுவரை தடுமாறுகிறது. ஆணாதிக்க சமூகத்தில் தனது பொருளாதார பாதுகாப்பை முதன்மையாக கருதும் ஒரு பெண்ணுக்கு தெரிவு எனும் சுதந்திரம் முழுமையாக இல்லை. அந்த தளைகள் வெட்டப்படாமல் காதல் முழுமை பெறாது.

இப்படியான புரிதலின்றி ஏலியன்ஸ் பாத்திரத்தின் மூலம் இயக்குநர் அத்வைதம் பேசுகிறார். இந்த உலகமே இருமைகளின் வழி இயங்குகிறது. சமூகவியல் படிபார்த்தால், முதலாளி – தொழிலாளி, ஆதிக்க சாதி – அடக்கப்படும் சாதி, வல்லரசு நாடுகள் – மூன்றாம் உலக நாடுகள் என்றே மக்கள் போராடுகிறார்கள், வாழ்கிறார்கள். இதை எல்லாம் ஒன்று என்று  சமப்படுத்துவதற்கு ஒரு முரட்டு முட்டாள்தனம் வேண்டும்.

ஷில்பா பாத்திரத்தின் மூலம் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடித்ததற்கு கொண்டாடப்படுகிறார். இந்தக்கதையில் திருநங்கை மற்றும் அவள் அவனாய் இருந்த போது பிறந்த குழந்தை ராசுக்குட்டியுடனான உறவு படம் நெடுக உணர்ச்சிகரமாக காட்டப்படுகிறது. திருநங்கையாக மாறுவதற்கு நியாயம் பேசும் ஷில்பாவின் காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கின்றன. ஆனால், இந்த நியாயத்திற்காக ஏழெட்டு ஆண்டுகளாக ஓடிப்போன கணவனுக்காக காத்திருக்கும் ஜோதியின் நியாயம் உரிய அளவுக்கு பேசப்படவில்லை. காத்திருக்கும் ஜோதி குறித்து உறவுப் பெண்கள் புறம் பேசும் அளவுக்கு, ஷில்பா எனும் மாணிக்கம் குற்ற உணர்வு அடையவில்லை. ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்தான் உணர முடியும் என்று ஒரு வரியில் ஷில்பா பேசுவதாக முடித்து விடுகிறார் இயக்குநர். இக்கதையில் ஷில்பாவின் பிரச்சினைகளை விட ஜோதியின் அவலம் அதிகம் என்று நமக்குத் தோன்றுகிறது. விஜய் சேதுபதி எனும் ஆண் நடிகரின் திருநங்கை பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதனாலும் ஜோதிக்கு இங்கு வெளிச்சம் இல்லை.

சமீபகாலமாக திருநங்கைகள் குறித்து  நிறைய படங்கள் பேசினாலும் அனைத்தும் அவர்கள் மீது மனிதாபிமானம் கொள்ளுமாறு ஒரே மாதிரி வருகின்றன. மற்றவர்கள் போல திருநங்கைகள் வாழமுடியவில்லை என்பதன் ஆழமான சித்தரிப்போ, காட்சிகளோ மற்ற படங்களைப் போல இங்கும் இல்லை. இப்படத்திலும் ஏழு ஆண்டுகள் கழித்து வரும் ஒரு திருநங்கையை அந்தக் குடும்பம் ஏற்கிறது என்பது பெரிய பிரச்சினைகள் இன்றி எளிதாகக் காட்டப்படுகிறது.  திருநங்கைகள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதோ, காவல் துறையால் வல்லுறவு கொள்ளப்படுவதோ இவற்றைக் காட்டிலும் அவர்களால் இயல்பாக திருமணம் செய்து வாழ முடியுமா வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை சமூகத்திற்கு உணர்த்துவது இப்படம் கூறும் கோணத்தை விட முக்கியமானது. கைதட்டி காசு பார்த்து வாழும் திருநங்கைகளில் ஓரிருவர் காவல் துறையிலோ, சிவில் சர்வீஸ் துறையிலோ பதவியேற்று நுழையும் காலத்தில் நமது படங்கள் இன்னும் பழைய கிளிஷேவிலேயே சுற்றுகின்றன.

சுனாமியில் ‘ஆண்டவரால்’ காப்பாற்றப்பட்ட அற்புதத்தின் கதை கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ஒரு கவிதை போல வடிக்கப்பட்டிருக்கின்றது. அற்புதங்களால் நம்பிக்கை அடையும் அற்புதம் பிறகு அந்த நம்பிக்கையில் தடுமாறுவதை கச்சிதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். எனினும் இங்கும் முடிவில் சராசரி சினிமாத்தனத்தை கொண்டு வருகிறார். சுரங்கப்பாதையில் சந்திக்கும் திருநங்கையின் கதை அற்புதத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டுகிறது. அவளையும் ஒரு கல்தான் சுனாமியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது என்பதை அறியும் போது தன்னை காப்பாற்றியதும் ஆண்டவரல்ல, கல்தானே என்று அவன் தடுமாறுகிறான்.

படிக்க:
நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

மகனைக் காப்பாற்றாத ஆண்டவரின் கல்லை ஆத்திரத்தில் உடைக்கும் போது ஆண்டவரின் மண்டை உடைபட்டு வைரக்கற்கள் கொட்டுகின்றன. இப்போது மருத்துவமனையில் இருக்கும் காயம்பட்ட மகனை வைரம் தந்து ஆண்டவன் காப்பாறுகிறாரா என்று அற்புதம் மீண்டும் தடுமாறுகிறான். இறுதியில் நம்பிக்கையின் அப்பாவித்தனம் மட்டும் வெள்ளந்தியாக படத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு அழுது அரற்றுவதையே தீர்வாக வைத்திருக்கும் ஆபத்தான பெந்தகோஸ்தே இயக்கம் இங்கே அனுதாபத்துடன் பார்க்கப்படுகிறது. இது தவறு என்றால் மாட்டுக்கறி உண்டால், மாடு வாங்கினால் வெட்டுவோம் எனும் இந்துமதவெறி படமெடுத்து ஆடும் காலத்தில் இத்தகைய கிறித்தவ சான்று காலப் பொருத்தமற்றுப் போகிறது.

குளிர்சாதனப்பெட்டிக்குள் பிணம், டிவி விழுந்து இன்ஸ்பெக்டர் மரணம், நீலப்படம் பார்க்கும் போது அம்மா நடிப்பது, ஆண்டவரின் மண்டையில் வைரம் சிதறுவது என்று பல காட்சிகள் மலிவான சுவராஸ்யத்திற்காக காட்டப்படுகின்றன. இவற்றை தற்செயலான நிகழ்வுகள் ஒரு கதையினை எடுத்துச் செல்வதாக சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். ஆனால் தற்செயலான விபத்துகளுக்கும் தற்செயலான மனித முடிவுகளுக்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. திடீரென எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின்னே ஒரு நீண்ட முனைப்பும், ஆழ்மனதில் அசைபோட்டவாறு சஞ்சலப்படுவதும் இருந்தே தீரும்.

சாரமாக யோசித்தால் இத்திரைப்படம் எவ்வகையிலும் ஒரு ஆழ்ந்த திரை அனுபவத்தை தரவில்லை. காட்சிகளில் மனம் ஒட்டாமல் சிந்தனை எரிச்சலடைகிறது. விடலைப் பருவ சிறுவர்களுக்கு அசைண்ட்மெண்ட் கொடுக்கும் ரவுடியின் காட்சி அப்படியே ஆரண்யகாண்டத்தை நினைவுபடுத்துகிறது. அந்தப்படத்திற்கு பிறகு நெடுங்காலம் அசைபோட்டு எடுக்கப்பட்ட இயக்குநரின் இந்தப்படம் தனது காலநீட்டிப்பிற்கு எந்த நியாயத்தையும் சேர்க்கவில்லை.

படம் நெடுகிலும் மூலம், பௌத்திரம் சுவரொட்டிகளாகட்டும், பாழடைந்த தெருக்கள், வண்ணம் மங்கிய  கட்டிடங்கள், சந்து பொந்துகள் அனைத்தும் பளிச்சிடும் பெயிண்டிங் போல சுத்தபத்தமாக இருக்கின்றன. மலிவான விறுவிறுப்புக்கு பொருத்தமாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை வினாடித்துடிப்பாக இசைக்கிறது. அவ்வகையில் அத்வைதத்திற்கு ஏற்ற வடிவம்தான் .

நமது புதிய இயக்குநர்கள் பலரும் வடிவத்தின் போக்கில் உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள் போலும். சமூக உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாத இத்தகைய கதைகளால் யாருக்கு என்ன பயன்?

இளநம்பி

உங்கள் குழந்தைகளின் புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன !

1

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 4

அமனஷ்வீலி

முதல் ஆசிரியர்

டந்த சில நாட்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் என்னைப் பற்றித்தான் பேசுகின்றனர் என்பதில் சந்தேகமேயில்லை. தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி இல்லாவிட்டாலும், மேற்கூறிய கடிதத்தை அனுப்பிய, செப்டெம்பர் 1-ம் தேதி தன் மாணவனைச் சந்திக்கப் போகும் ஆசிரியரைப் பற்றிப் பேசுகின்றனர். அம்மாவோ அப்பாவோ, தாத்தாவோ பாட்டியோ ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக, குழந்தையைத் தமக்கு எவ்வளவு தெரியுமோ அதைப் பொருத்து, குழந்தை வளர்ப்பைப் பற்றிய தம் கண்ணோட்டத்தின்படிப் பேசுகின்றனர். தான் இதுவரை கண்டிராத தன் முதல் ஆசிரியரைப் பற்றி ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் எவ்வாறெல்லாம் கற்பனை செய்வார்கள் என்று கூறத் தேவையே இல்லை. இவர்கள் ஆசிரியரையும் அவரது குணநலன்களையும் பல்வேறு விதமாக சிந்தித்துப் பார்க்கின்றனர். என் கடிதத்தின் இறுதியில் நான் குழந்தைகளுக்கு ”வண்ணப் பென்சில்களையும் காகிதத்தையும் எடுத்து உன் முதல் ஆசிரியர் எப்படியிருப்பார் என்று வரை” என ஏன்தான் எவ்வித வேண்டுகோளையும் விடுக்கவில்லையோ!

ஒரு சில குடும்பங்களில் ஆசிரியரை, எல்லாவற்றையும் அறிந்த, அன்பான, மென்மையான, குழந்தைகளைப் பெரிதும் விரும்புபவராக பெற்றோர்களும் பெரியவர்களும் சித்தரிக்கின்றனர். இந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் என்னை சர்வ வல்லமை படைத்த அன்பானவனாக வரைந்திருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்ததும் என் பின்னால் சுற்றி வருவர், என், முன் முழங்காலிட்டு நின்றிருப்பார்கள், ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள், தம்மைப் பற்றி மூச்சு விடாமல் சொல்லி, என் மீது உடனேயே அன்பு மழை பொழிந்திருப்பார்கள், ஏனெனில் இப்படிப்பட்ட ஆசிரியரை நேசித்தாக வேண்டுமே. நிச்சயமாக, இதற்கு நான் அத்தகைய அன்பு ஆசிரியருக்குரிய எல்லாத் தன்மைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

பெரியவர்கள் சொல்வதை எல்லாம் யார் கேட்கவில்லையோ, அம்மாவோ பாட்டியோ தருவதையெல்லாம் யார் சாப்பிடவில்லையோ, யார் முரண்டு பிடிக்கின்றார்களோ, சத்தம் போடுகின்றார்களோ, குறும்பு செய்கின்றார்களோ அவர்களையெல்லாம் ஆசிரியர் கடுமையாக தண்டித்து, பள்ளியிலிருந்தே துரத்தி விடுவார், அவர்… இதனிடையே இக்குழந்தைகள் என்னை ஒரு சூனியக்கார கிழவியைப் போல் படம் வரைந்திருப்பார்கள்.

மற்ற சில குடும்பங்களில் பெற்றோர்களும் பெரியவர்களும் ஆசிரியரைப் பற்றிப் பின்வருமாறு கூறுவார்கள்: ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு சிறு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவர் கவனிப்பார், பெரியவர்கள் சொல்வதை எல்லாம் யார் கேட்கவில்லையோ, அம்மாவோ பாட்டியோ தருவதையெல்லாம் யார் சாப்பிடவில்லையோ, யார் முரண்டு பிடிக்கின்றார்களோ, சத்தம் போடுகின்றார்களோ, குறும்பு செய்கின்றார்களோ அவர்களையெல்லாம் ஆசிரியர் கடுமையாக தண்டித்து, பள்ளியிலிருந்தே துரத்தி விடுவார், அவர்… இதனிடையே இக்குழந்தைகள் என்னை ஒரு சூனியக்கார கிழவியைப் போல் படம் வரைந்திருப்பார்கள்.

மறு நாள் பள்ளிக்கு வந்து தன் ஆசிரியரைக் கண்டதும் சூனியக் கிழவியைக் கண்டது போல் பார்த்து, அம்மாவைக் கட்டிப் பிடித்து, ”பள்ளிக்கூடம் வேண்டாம், வீட்டிற்குப் போகலாம்” என்று இதயத்தைக் கரைக்கும் அளவிற்கு கூக்குரலிடுவார்கள். இந்த முதல் ஆசிரியரிடம் உண்மையிலேயே சூனியக் கிழவியின் குணங்கள் இருந்தால் என்ன ஆகும்? குழந்தைக்கு என்ன நேரிடும் என்று சிந்திக்கவே அச்சமாக உள்ளது. அன்பான ஆசிரியரின் மூளையும் பொறுமையும் மட்டுமே குழந்தையின் கனவுகளைக் காப்பாற்றும்.

மற்றும் சில வகையான குடும்பங்களிலோ குழந்தைகளால் ஒன்றுமே வரைய இயலவில்லை. ஆம், சிடுசிடுப்பான ஆசிரியரை எப்படி வரைவது? அவர் கண்ணுக்குத் தெரியாமல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்வார், ஏன் ஒருவேளை குழந்தைகளைச் சாப்பிடக்கூடும். அவர் சர்வவல்லமை படைத்தவர், எல்லாம் அவருக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று கூட அவர் கண்டுபிடித்து விடுவார், எனவே அவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஆசிரியரை குழந்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?

மறுநாள் சிறுவன் உண்மையான ஆசிரியரை வகுப்பறையில் பார்ப்பான், உதடுகளைக் கூட அசைக்காமல் அமைதியாக உட்கார்ந்திருப்பான், எதைப் பற்றியும் மோசமாகக் கூட யோசிக்க மாட்டான். சிடுசிடுப்பான ஆசிரியர், அதுவும் முதல் ஆசிரியர். இப்படிப்பட்டவர் எங்காவது இருக்கின்றாரா? அச்சத்திலிருந்து குழந்தைகளை விடுவிக்க, இவர்களின் சிந்தனைகளை விலங்கிலிருந்து விடுவிக்க, அவர்கள் சுதந்திரமாகப் பேசும்படி செய்ய அன்பான ஒரு ஆசிரியர் தேவை.

ஏன் ஒரு சில குடும்பங்களில் ஆசிரியர் அன்பு மிக்கவராயும் வேறு குடும்பங்களில் சூனியக் கிழவியைப் போன்றும், இன்னும் சில குடும்பங்களில் சிடுசிடுப்பானவராகவும் சித்தரிக்கப்படுகிறார்? இந்த ஆறு வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் அனேகமாக இளைஞர்களாக இருக்க வேண்டும், இவர்களுக்கு எவ்வித சூனியக்காரியையும் சிடுசிடுப்பானவரையும் கண்டு அச்சமில்லையே, ஏன் இவர்கள் தம் குழந்தைகளுக்குப் பயம் காட்டுகின்றனர்? தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் இவர்கள் ஏன் இந்தப் பயங்கர கதாபாத்திரங்களின் உதவியை நாடுகின்றனர்?

குழந்தையை பயமுறுத்துவதன் மூலம் எளிதாக வளர்க்கலாம் என்று ஏன் பெற்றோர்கள் எண்ணுகின்றனர்? மனிதனை வளர்த்து ஆளாக்குவதைப் பற்றிய அரிச்சுவடி கூட இளம் பெற்றோர்களுக்குத் தெரியாது என்று என் அனுபவம் காட்டுகிறது.

ஆம், உண்மையில் அவர்களுக்கு இந்த விஞ்ஞானம் எப்படித் தெரியும்? பள்ளியில் யாரும் அவர்களுக்கு இதை சொல்லித் தரவில்லை, அவர்கள்தான் எதிர்காலப் பெற்றோர்கள் என்பதை யாரும் உணரவில்லை. பள்ளியை முடித்ததுமே அந்த இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், 16 வயது வாலிபர்களும் யுவதிகளும் பெற்றோர்கள் ஆகலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் குழந்தை முரண்டு செய்யாமல் இருப்பதற்காக, குழந்தையை சாந்தப்படுத்துவதற்காக, அங்குமிங்கும் ஓடி, சத்தம் போட்டு விளையாட்டு சாமான்களை உடைக்காமலிருப்பதற்காக சகலவித பயங்கர கதாபாத்திரங்களும் வீட்டிற்குள் வருகின்றன. குழந்தை இத்தகைய பயங்கர கதாபாத்திரங்களைப் பார்த்ததில்லையாதலால் முதல் ஆசிரியரை இவ்வாறு சித்தரிக்கும் வாய்ப்பு தோன்றுகிறது.

லட்சோப லட்சம் வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உயர்கல்விக் கூடங்களில் சகலவித விஞ்ஞானங்களையும் சொல்லித் தந்து இவர்களை முதல்தர நிபுணர்களாகப் பயிற்றுவிக்கின்றனர். ஆனால் இவர்கள் எதிர்காலப் பெற்றோர்கள் என்பதையும் குழந்தை வளர்ப்பு விஞ்ஞானம் இவர்களுக்குத் தேவை என்பதையும் இங்கும் மறந்து விடுகின்றனர். இதில் கற்றுக் கொள்ள ஒன்றுமேயில்லையா, இது அவ்வளவு எளிமையானதா? என்ன ஒரு தவறான கருத்து!

சிடுசிடுப்பான ஆசிரியரை எப்படி வரைவது? அவர் கண்ணுக்குத் தெரியாமல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்வார், ஏன் ஒருவேளை குழந்தைகளைச் சாப்பிடக்கூடும். அவர் சர்வவல்லமை படைத்தவர், எல்லாம் அவருக்குத் தெரியும், உன் மனதில் என்ன உள்ளது என்று கூட அவர் கண்டுபிடித்து விடுவார், எனவே அவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஆசிரியரை குழந்தை எப்படி கற்பனை செய்ய முடியும்?

செப்டெம்பர் 1-ம் தேதிக்கு முதல் நாள் நள்ளிரவு வரை என் மேசை முன் அமர்ந்து நான் எதைப் பற்றி எண்ணுகிறேன்? எல்லா பெரிய வகுப்புகளிலும் பள்ளி மாணவர்கள் தம் கரங்களில் மிக அழகிய புத்தகத்துடன் மிக சுவாரசியமான வகுப்பிற்கு விரைந்து செல்ல வேண்டும்… எல்லா தொழிற் கல்விக்கூடங்கள், உயர்கல்விக் கூடங்களின் மாணவர்களும் இதே போன்ற அழகிய நூலுடன் மிக சுவாரசியமான விரிவுரையைக் கேட்க விரைந்து செல்ல வேண்டும். இந்த நூல்களிலும், சுவாரசியமான பாடங்களிலும் விரிவுரைகளிலும் உள்ள பாடத்திற்கு ”மனிதனை உருவாக்குபவன் மனிதனே” என்று நான் தலைப்பு தருவேன். ஆசிரியர் பயிற்சி எல்லோருக்கும் கட்டாயமான ஒரு பாடமாகிறது, ஏனெனில் குழந்தை வளர்ப்பாளராக இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். இக்கனவு நிறைவேற நீண்ட நாட்களாகுமா? இந்த இடைவெளியைக் குறைக்க எவ்வளவு விருப்பமாயுள்ளது.

பள்ளியில் நான் என்னாலியன்றதைச் செய்வேன்….

குழந்தைகளே, உங்களது புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன! வகுப்பில் இப்புன்முறுவல்களை மழுங்கடிக்கும் உரிமை எனக்கு உண்டா என்ன? அப்பாவோ, அம்மாவோ, பாட்டியோ, தாத்தாவோ என்னைப் பற்றி ஏதாவது சொல்லி உங்களில் யாரையாவது அச்சுறுத்தியிருக்கக் கூடும். இந்தப் பெரியவர்கள் ஏன் இப்படியிருக்கின்றனர்?

படிக்க:
நாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

உங்களுக்கெதிராக என்னையும் கூட்டு சேர்த்துக் கொள்ள முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் ஏமாற்றுவேன். என் அன்புக் குழந்தைகளே, பயப்படாதீர்கள், நான் அச்சுறுத்த மாட்டேன், நான் கொடியவன் அல்ல! நாளை தாமதமின்றி வாருங்கள். உங்களனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்னுடைய வகுப்புடனான கற்பனைப் பேச்சை நான் முடிக்கிறேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் கோப்பில் வைக்கிறேன். இவற்றை நாளை பள்ளிக்கு திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!