Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 376

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

ங்களால் இதை நம்ப முடிகிறதா? உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், தன் இளமைக் காலத்தில், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னால், அது எவ்வளவு பழமையானதாக உங்களுக்குத் தோன்றும்.

இன்றைய உலகின் அனைத்து நவீனக் கருவிகளையும் கைக்கொண்டிருக்கும் நீங்கள், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த, அந்தப் பூட்டனின் சாதனையை ஒரு ஏளனச் சிரிப்புடனே பார்ப்பீர்கள். அவரிடம் என்ன இருந்திருக்கும்? கணணி இல்லை. மொபைல் போன் இல்லை. எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமே!

அந்தக் காலத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்? அப்படியான ஒரு காலத்தில், கிட்டத்தட்ட நூற்றி நான்கு வருடத்திற்கு முன்னர், 1915-ம் ஆண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்னும் ஒருவர், வெறும் கணிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, விண்வெளிபற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். அப்போது, அவரிடம் கணணி இருக்கவில்லை. கால்குலேட்டர் இருக்கவில்லை தொலைக்காட்சியும் இருக்கவில்லை. இன்றுபோல உடனுக்குடன் சொல்லிவிடக்கூடிய மீடியாக்களும் இல்லை. தன் மூளையில் விண்வெளிபற்றிய எண்ணங்களைப் படமாகச் சித்தரித்துக் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கோட்பாடு உருவாக்கினார்.

விண்வெளியிலிருக்கும் அதி எடைகொண்ட பொருளானது அந்த விண்வெளியில் ஒரு குழியை உருவாக்கும் என்றார். அதுவே, எல்லையில்லா எடைகொண்டு அந்தப் பொருள் இருந்துவிட்டால், ஏற்படும் குழியானது, ஒருமைப் புள்ளியொன்றை அடையும் வரை ஆழமாகிச் செல்லும். அந்தக் குழியிலிருந்து ஒளிகூடத் தப்பிச்செல்ல முடியாது என்றார்.

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழியை நாம் உருவாக்க வேண்டுமென்றால், எங்கே உருவாக்க முடியும்? பூமியின் மண் தரையில் ஒரு குழியை உருவாக்க முடியும். எந்தவொரு திடமான பொருளிலும், ஏதோவொரு விதத்தில் நம்மால் குழியை உருவாக்கிவிட முடியும். கடல் நீரில் ஒரு குழியை உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? அதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

ஆனால், ஒரு கப்பலைக் கடலில் விடும்போது, அது நிற்குமிடத்தில், அதன் எடைக்கேற்பத் தண்ணீர் குழிகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். தண்ணீரில் நம்மால் குழியை உருவாக்க முடியுமா? முடியுமென்றுதானே தோன்றுகிறது. கப்பல்களின் எடை அதிகரிப்புக்கு ஏற்ப அது ஏற்படுத்தும் குழியும் ஆழமாக இருக்கும். இதே அடிப்படையில், விண்வெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

இப்படி அவர் சொன்னதை எவராலும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் பார்ப்பது வானம். வானத்தில் நட்சத்திரங்கள். அப்படி இப்படியென்று நினைத்துக் கொண்டிருக்கையில், அங்கே வானம் என்ற ஒன்று இல்லை. இருப்பது, இரப்பர் பாய்போன்ற ஒன்றுதான். அந்தப் பாயிலேயே, நட்சத்திரம் போன்றவை இருக்கின்றன. அவை, அந்தப் பாயில் பெருங்குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

“என்ன, விண்வெளியில் குழியா? அது எப்படிச் சாத்தியம்? பூமியில் குழி இருப்பது சரி. ஏன் கடலில் கப்பல் குழி ஏற்படுத்துகிறது என்பதும் சரிதான். ஆனால், விண்வெளியில் குழியை எப்படி ஏற்படுத்த முடியும்? இவரென்ன இரப்பர் பாய், மென் சவ்வு, அது இது என்று சொல்கிறாரே! எந்தப் பாயையும் நாம் காணவில்லையே!” என்று சொல்லி திகைத்து நின்றது உலகம்.

அத்துடன் ஐன்ஸ்டைன் சொன்ன இன்னொன்றையும் கேட்டு அறிவியல் உலகமே பதைத்துப் போனது. 350 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கொண்டிருந்த ஒன்றை இல்லையென்று சொல்கிறாரே இவர் என்று தடுமாறியது.

படிக்க:
ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் – ஒரு எளிய விளக்கம்
♦ கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

1680-ம் ஆண்டளவுகளில், ஐசாக் நியூட்டனால் புவியீர்ப்புவிசைக்கான புரட்சிகரக் கருதுகோள் வெளியிடப்பட்டது. அந்தக் கருதுகோளையே மாற்றிச் சொன்னார் ஐன்ஸ்டைன். ஐசாக் நியூட்டன் சொல்லியிருந்த புவியீர்ப்புவிசைபற்றிய கோட்பாட்டையே நம்பிவந்தவர்களுக்கு, ஐன்ஸ்டைன் தடைக்கல் போட்டார். மேலே சொன்னதுபோல, அதி எடைகொண்ட ஒவ்வொரு பொருளும் விண்வெளியில் ஏற்படுத்தும் குழிவே, அப்பொருளை நோக்கிய ஈர்ப்பை உருவாக்குகிறது என்றார்.

உதாரணமாகப் பூமியானது, விண்வெளியில் ஏற்படுத்தியிருக்கும் குழிவின் வளைவுக்குள் அகப்பட்டுக்கொண்ட சந்திரன், அந்தக் குழியினுள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே பூமிக்கும், சந்திரனுக்குமான ஈர்ப்புக்கான காரணம். இதுபோலவே, சூரியன் ஏற்படுத்தியிருக்கும் பெருங்குழியில், பூமி உட்பட ஏனைய ஏழு கோள்களும் அகப்பட்டபடி சூரியனைச் சுற்றுகின்றன. நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைக்கு மாற்றாக ஐன்ஸ்டைன் முன்வைத்ததை, ஏற்க முடியாமலும், விலக்க முடியாமலும் தவித்தது உலகம்.

காலம் செல்லச் செல்ல ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புக் கோட்பாடு சரியெனப் புரிந்துகொண்டது உலகம். அதன் நீட்சியாக ஐன்ஸ்டைன் சொல்லியிருந்ததுதான் கருந்துளைகான வித்தாகியது. கருந்துளைக்கு எல்லையில்லா அதியீர்ப்பு உண்டு என்பதால், அது விண்வெளியில் நினைக்கவே முடியாத ஆழம்வரை பெருங்குழியை ஏற்படுத்தும். அந்தக் குழியின் முடிவு, ஒற்றைப் பரிமாணமுள்ள ஒருமைப்புள்ளியாக இருக்கும் என்றார்.

கருந்துளைபற்றி இவ்வளவு விவரமாக விளக்கிச் சொன்னாரேயொழிய, அவர் இருக்கும்வரை அப்படியானதொன்று உண்மையில் இருக்கிறது என்பதை நிறுவவே முடியவில்லை. ஒருகட்டத்தில் கருந்துளை என்ற ஒன்று இல்லையென்ற சந்தேகம்கூட அவருக்குத் தோன்றியது. ஆனால், இன்று நூற்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

இதுவரை அப்படியானதொன்று இருக்கிறது என்று அடித்துச் சொன்னாலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அதைக் கண்டுபிடித்து, அதன் உருவத்தையும் படமெடுத்திருக்கிறோம். மனித குலத்தின் மாபெரும் சாதனை அது.

எப்படி அதைக் கண்டுபிடித்தோம்? அது இன்றைய விஞ்ஞானிகளின் அற்புதமான புரட்சிச் சிந்தனையால் சாத்தியமாயிற்று. எப்படி?

உலகிலேயே மிகப்பெரிய காணொளிப்பெட்டியை (Television) துபாய் மோலில் வைத்திருக்கிறார்கள். அது ஒரேயொரு காணொளிப் பெட்டியாக இருந்தாலும். சற்றே உற்று நோக்கினால், ஆயிரம் சிறிய காணொளிப் பெட்டிகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்று தெரியவரும். அதாவது ஆயிரம் சிறிய காணொளிப்பெட்டிகள் சேர்ந்து ஒரு மிகப்பெரிய காணொளிப்பெட்டியாக மாறியிருக்கிறது. இதுபோன்ற பெரிய திரைகளை நீங்களும் விழாக்களில் கண்டிருப்பீர்கள்.

‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ அமைந்துள்ள பகுதியை சுட்டும் படம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்திலும் ஒன்று சொல்வார்கள். பல நுண்ணுயிரிகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்தான் மனிதன் என்னும் ஒரு உயிர் என்பார்கள். இவற்றைச் சரியாக நீங்கள் புரிந்துகொண்டால் போதும். கருந்துளையைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். அதாவது 55 மில்லியன் ஒளி வருட தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கருந்துளையைப் பார்ப்பதென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் எந்தத் தொலைநோக்கியாலும் சாத்தியமேயில்லாதது. அதற்குப் பூமியளவு பெரிய தொலைநோக்கி தேவைப்படும். அப்படியொரு தொலைநோக்கியையை நான் மேலே சொன்ன உத்தி முறையால் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தொலைநோக்கிதான் ‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ (Event Horizon Telescope – EHT). இது உலகின் பல இடங்களில் பரந்துபட்டுள்ள எட்டு மிகப்பெரிய தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் தொலைநோக்கி.

நிகழ்வெல்லைத் தொலைநோக்கிகள் பற்றிப் பலர் பலவிதமான கட்டுரைகள் எழுதிவிட்டதால், பொதுவானவற்றைத் தவிர்த்து, உங்கள் சந்தேகங்களுக்கான விடைகளை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.

நீண்டு பரந்திருக்கும் மெரினாக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கு யாருமே இல்லை. நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். உங்கள் கையில் இருக்கும் கடுகை எடுத்து மணல் பரப்பில் வையுங்கள். சற்றுத் தள்ளிச் சென்று கடுகைப் பாருங்கள். அப்போது கடுகு உங்களுக்குத் தெரிகிறதென்றே வைத்த்துக் கொள்வோம். நூறு மீட்டர் தொலைவுக்குச் சென்று பாருங்கள் . இப்போது கடுகு தெரியுமா? இன்னும் சற்றுத் தொலைவாக, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள். இப்போது கடுகைப் பார்க்க முயல்வதென்னும்போதே உங்களுக்குச் சிரிப்பு வரும்.

இதுவே 13000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்றால், அங்கு கடுகில்லை, மெரினா கடற்கரைகூட இல்லை, சென்னையே தெரியாதல்லவா? ஆனால், பதின்மூன்றாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து, ஒரு கடுகை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்தது கடுகல்ல, இராட்சசன். 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் இராட்சசன். ’மெஸ்ஸியர் 87’ (Messier 87. சுருக்கமாக M87) என்னும் உடுத்திரளின் கருவாக அமைந்திருக்கும் கருங்குழியே அந்த இராட்சசன்.

அது என்ன இராட்சசக் கருங்குழி? சாதாரனமாகப் பல மில்லியன் கருங்குழிகள் நம் பால்வெளி உடுத்திரளிலேயே நிறைந்திருக்கின்றன. அவையெல்லாம் ‘சூசூ டிவி’ பார்க்கும் குட்டிப் பாப்பாக்கள். பெரிய நட்சத்திரங்கள் இறந்து உருவாகும் குழந்தைகள். ஒரு பேச்சுக்கு, நம் சூரியன் இறந்து கருங்குழியானால் (சூரியன் கருங்குழி ஆகாது. அதற்கான போதிய எடை அதற்கு இல்லை), வெறும் 3கிமீ அளவுள்ள கருங்குழியாகவே இருக்கும்.

இதுபோன்ற சாதாரணப் பால் குடிகள் நிறைந்ததுதான் பால்வெளி. அவற்றையெல்லாம் பார்க்கவே முடியாது. சில கிலோமீட்டர் அளவுள்ள கருந்துளைகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. கருப்பானாலும் களையாயிருப்பது இராட்சச கருங்குழிகள் மட்டுமே. ஒவ்வொரு உடுத்திரளும் (Galaxy), தன் மையக்கருவாக ஒரு இராட்சச கருங்குழியைக் கொண்டிருக்கும். அப்படியான ஒன்றைத்தான், M87 உடுத்திரளின் மத்தியில் நாம் கண்டிருக்கிறோம்.

M87 இன் மையக் கருங்குழியானது, சூரிய எடையைப்போல் ஆறரை பில்லியன் மடங்கு பெரியது. அதன் விட்டம் 20 பில்லியன் கிலோமீட்டர்கள். அதைச் சுற்றிவரும் ஒளித்துகள்களுடன் சேர்த்து, 100 பில்லியன் கிலோமீட்டர் விட்டம் கொண்டது. இதுவே, 550 பில்லியன் பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால், ஒரு கடுகை 13000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்பது போன்று தெரிகிறது. இப்போது சொல்லுங்கள். இவ்வளவு தூரத்திலிருந்து எடுக்கப்படும் படம், எப்படித் துல்லியமாகத் தெரியும்? இந்தளவு துல்லியத்தைப் பெறுவதற்கே எவ்வளவு மெனக்கெடல்? அதுமட்டுமல்ல.

“இப்படியான துல்லியமற்ற படத்தை எடுத்துவிட்டா இப்படித் துள்ளுகிறார்கள்?” என்று சிலர் எள்ளி நகைக்கிறார்கள். உங்கள் வீட்டில் சுழன்று கொண்டிருக்கும் காற்றாடியைத் (Fan) துல்லியமாகப் படமெடுத்துத் தரும்படி சொன்னால், அந்தக் காற்றாடி சுழலாமல் இருக்கும்போது படமெடுத்துத் தருவீர்கள். அதுவே, காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போது படமெடுத்திருந்தால், துல்லியமாகத் தெரிந்திருக்குமா? இல்லையல்லவா? ‘என்னிடம் வேகமாக அசையும் பொருட்களைப் படமெடுக்கக்கூடிய நவீன கமெரா இருக்கிறது. அதனால். காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போதே நிலையான படத்தை என்னால் எடுக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட வேகம் வரைதான் முடியும்.

M87 கருங்குழியானது, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எப்படி நிலையான கருங்குழியாகப் படமெடுக்க முடியும்? இதுவரை நாம் பார்த்திருந்த கருங்குழிகளின் படங்கள் அனைத்துமே கணணியால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள். அவை நிலையாக இருக்கக்கூடியதாகக் கருதும் கருங்குழியின் படங்கள். ஆனால், இப்போது பெறப்பட்டது நிஜமான கருங்குழி. பாலே நடனமாடும் பெண்போல அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் கருங்குழி.

சந்திர கிரகணத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மறைக்கப்பட்ட நிலையில் கருமையாகப் பார்ப்பது சூரியனின் நிழல்தான் என்றாலும், உண்மையில் அங்கு தெரிவது சந்திரன்தான். இந்த நிலையை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், இனி நான் சொல்லப் போவதையும் புரிந்து கொள்வீர்கள். ஒரு கரிய நிறப் பொருளை உங்களால் படமெடுக்கவே முடியாது. அதற்கு அந்தப் பொருளிலிருந்து ஒளி வரவேண்டும். எந்த ஒளியையும் வெளியே விடாத கருங்குழியை எப்படிப் படமெடுக்க முடியும்? M87 கருங்குழியின் நிழலானது, அதன் நிகழ்வு எல்லையில் (Event horizon) விழும்போது பெறப்பட்ட தோற்றத்தையே நாம் படம் பிடித்திருக்கிறோம்.

இதுவும் ஒருவகை நிழல்தான். ஆனாலும், அங்கு தெரிவது என்னவோ கருங்குழியின் தோற்றம்தான். அதிர்ஸ்டவசமாக M87-ஐத் தூசுத் துணிக்கைகளும், வாயுத் துகள்களும் சூழ்ந்திருக்கின்றன. அங்கிருக்கும் அதிவெப்பத்தினால் அவை ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. M87-ன் ஈர்ப்பினால் வளைக்கப்பட்ட காலவெளியின் (Space time) ஊடாக, அந்த ஒளிரும் துகள்களும் நெருப்பு வளையமாகச் சுற்றுகின்றன. அதுவே, M87 ஐக் கண்டுபிடிக்கவும், படமெடுக்கவும் நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கின்றது.

இவையெல்லாவற்றையும் சாத்தியமாக்கியது நிகழ்வெல்லைத் தொலைநோக்கித் திட்டம்தான். இன்றுவரை உலகின் மிக முக்கியமான எட்டுத் தொலைநோக்கிகளை ஒன்றுசேர்த்து இந்த நிகழ்வெல்லைத் தொலைநோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். அதன் துல்லியத்தை மேலும் அதிகரிக்கலாம். அதிகரிக்கவும் வேண்டும். இவற்றுடன் மேலும் சில தொலைநோக்கிகளை இணைந்தால், வானியல் ஆராய்ச்சியில் பல மைல் கற்களைத் தொட்டுவிடலாம். இன்னும் நாம் பார்த்துத் தெளிவடைய வேண்டிய பொருட்கள் விண்வெளியில் நிறையவே உண்டு.

குவேசார்கள், பல்சார்கள் என்று பலவகை விண் பொருட்கள் ஜாலம் காட்டியபடி இருக்கின்றன. அதிகம் ஏன், வோர்ம் ஹோல்களகூட இருக்கின்றனவா என்று பார்த்துவிடலாம். ஆனாலும், கருங்குழிகள்பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். நம் சொந்தப் பால்வெளியின் மையக் கருங்குழி பற்றியும் அறிய வேண்டும். பதினாறு வருடங்களாகச் சஜிட்டாரியஸ் A வழியாக அந்தக் கருங்குழியைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அங்கு பல நட்சத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை வித்தியாசமான முறையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து, அந்த இடம் ஒரு இராட்சசக் கருங்குழியெனக் கணித்துள்ளார்கள். அதுவே பால்வெளியின் மையமும்கூட. அந்தக் கருங்குழியைச் சுற்றும் S2 என்னும் நட்சத்திரம் அந்தக் கருங்குழியின் ஈர்ப்பினால் கவரப்பட்டு, அதை 2.5% ஒளியின் வேகத்தில் நெருங்கிக் கொண்டு செல்வதை அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும், என்றாவது ஒருநாள் அந்த S2 நட்சத்திரம், கருங்குழியின் நிகழ்வு எல்லையைத் தொடும்போது வானவேடிக்கைகள் நிகழலாம். அப்போது இதுபோன்ற நெருப்பு வளையம் அங்கும் தோன்றலாம்.

இறுதியாக ஒன்று. 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் கருங்குழியை நாம் இன்று பார்க்கிறோம் என்றால், அது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்னிருந்த கருங்குழியின் படமாகத்தான் இருக்கும். அங்கிருந்து ஒளி, பூமியை வந்தடைய 55 மில்லியன் வருடங்கள் தேவை. அதனால், அந்தக் கருங்குழி இன்று இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்வியெல்லாம் கேட்டு நாம் குழம்பிவிடத் தேவையில்லை. பிரபஞ்ச விதியின் அடிப்படையே அதுதான். அனைத்தும் இறந்தகாலம்தான். நாம் எதையும் நிகழ்காலத்தில் பார்ப்பதில்லை. உங்கள் அருகிலிருக்கும் மனைவியைக்கூட. ஒளி உங்களை வந்தடைய எடுக்கும் நேரத்தின் அளவான காலத்தை இழந்தே நாம் எதையும் பார்க்கிறோம்.

படிக்க:
செயற்கை முளையம் : தோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

இப்போது அது அங்கே இருக்கிறதா என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்தால், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் இப்போது இருக்கின்றனவா என்பதை உங்கள் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவே முடியாது. அதைத் தெரிந்து கொள்பவர்கள் உங்களுக்குப் பின்னர் வரும் சந்ததியினராக மட்டுமே இருக்கும். காரணம், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன. அம்மி மிதித்த பின் நாம் பார்க்கும் அருந்ததி நட்சத்திரம்கூட அங்கு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவே தெரியாது.

இயற்பியலில் ஆழமாகச் சென்று சிந்திக்கும்போது, வாழ்க்கையின் சுவாரஷ்யங்களும், பயமுறுத்தல்களும் நம்மைவிட்டு நழுவிப் போய்விடும். இவற்றையெல்லாம் ஒரு அறிவாகப் பார்த்துவிட்டு விலகிவிடலாம். இயற்பியல் அவ்வளவு வலிமைமிக்க உண்மைகளைச் சொல்லக்கூடியது. நாம் நம்பும் உண்மைகளே, உண்மைகள் இல்லை என்று நிரூபிக்கக்கூடியது. அதனால், அவற்றைப் பற்றி ஒருவர் விளக்கும்போது, அதைக் கேட்டுவிட்டு, ‘வாவ்!’ என்ற ஆச்சரியத்துடன் நகர்ந்துவிடுங்கள். அதையே தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள்.

இனி… 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் வந்தது நீங்கள் நினைப்பது போன்று ஒளியல்ல. முதலில் நீங்கள் நினைக்கும் ஒளியென்பது ஏழு வர்ணங்களைக் கொண்ட, ‘காணும் ஒளிக்கற்றைதான்’ (Visible Spectrum). இது ஒரு ஒளியலையின் நூறில் ஒரு பங்குகூட இல்லாதது. 99 சதவீதமான ஒளியை நாம் கண்ணால் காணமுடியாது. அவை, காமா ஒளிக்கற்றை, எக்ஸ் ஒளிக்கற்றை, ஊதா கடந்த ஒளிக்கற்றை, இன்பிரா சிகப்பு ஒளிக்கற்ரை, மைக்ரோ அலை, வானொலி அலை, நெடு வானொலி அலையெனப் பலவகைகளில் நீண்டுகொண்டே போகின்றது.

இதில், வானொலி அலைகளைப் பயன்படுத்தியே நாம் தொலைநோக்கிகளால் நெடுந்தூரமிருக்கும் பொருட்களைப் பார்க்கிறோம். இவையே பின்னர் கணணிகள் மூலம் படங்களாக மாற்றிக் கொள்ளப்படுகின்றன. வானொலி அலைகள் அதிக அலைநீளம் கொண்டவை என்பதால், நெடுந்தூரம் பயனிக்கக் கூடியவை. M87 ஐயும் இந்த அலைகள் மூலமே கண்டுகொண்டோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Raj Siva

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

“ஜாலியன் வாலாபாக் அருகில் உள்ள எங்கள் வீட்டில் நான் அமர்ந்து இருந்தேன்.  திடீரென துப்பாக்கிகள் சுடும் சத்தங்கள் கேட்டன. அஞ்சிப் பதறி எழுந்தேன். என் கணவர் அங்கேதான் சென்று இருந்தார். பயம் நெஞ்சைக் கவ்வியது. ஓரிரு மணி நேரத்திற்குப் பின் சில பெண்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றேன். போகும் வழியெங்கும் சாலையில் பலர் இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பலர், உதவி கேட்டு அலறினர். அங்கே ஜாலியன் வாலாபாக்கில் குவியல் குவியலாக பிணங்கள் இருந்தன. ஒரு குவியலின் அருகே என் கணவரின் உடல் கிடைத்தது. நான் இரத்தக் களறியில் பிணங்களுக்கு நடுவே தாண்டிச் செல்ல வேண்டிருந்தது.”

“சற்று நேரத்திற்கு பின் லாலா சுந்தர்தாஸின் பிள்ளைகள் இருவரும் வந்தனர். என் கணவரின் உடலை எடுத்துச் செல்ல ஒரு கட்டில் எடுத்து வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டேன். இரு பையன்களும் போய்விட்டனர். அந்தப் பெண்களையும் அனுப்பிவிட்டேன். அப்போது மாலை எட்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.  ஊரடங்குச் சட்டத்திற்கு அஞ்சி யாரும் வீட்டிற்கு வெளியே தலை காட்டவில்லை.  அங்கேயே நின்று கொண்டு இருந்தேன். எதிர்பார்த்தபடி, காத்திருந்தபடி, அழுதபடி…”

“எட்டரை மணி இருக்கும்.  ஒரு சர்தார்ஜி அங்கு வந்தார்.  இன்னும் சில மனிதர்கள் வந்தனர்.  பிணங்களுக்கு இடையே எதையோ அல்லது யாரையோ தேடினர். என் கணவரின் உடலை ஏதேனும் ஒரு உலர்ந்த இடத்தில் வைக்க உதவுமாறு அந்த சர்தார்ஜியிடம் கேட்டேன். அவர் உடல் கிடந்த இடத்தில் ஒரே இரத்தச் சகதியாக இருந்தது. உடலின் தலைப்பகுதியை சர்தார் தூக்கினார். நான் கால்களை பிடித்து தூக்கினேன். அங்கிருந்த மரக்கட்டைகள் மீது உடலை கிடத்தினோம்.”

“இரவு பத்துமணி. லாலா சுந்தர்தாஸின் மகன்களை காணவில்லை. எழுந்து கட்ரா ஆப்லோவாவின் திசையில் செல்லத் துவங்கினேன். அங்கே டாக்கூர் துவாராவில் உள்ள மாணவர்களிடம் உதவி கேட்க நினைத்தேன். சில அடிகள்தான் சென்று இருப்பேன்.  ஒரு வீட்டின் ஜன்னல் வழியே ” எங்கே போகிறாய்?” என ஒருவர் கேட்டார்.  கணவரின் உடலை அகற்ற உதவி கேட்டுப் போவதைப் பற்றி அவரிடம் கூறினேன். “எட்டு மணிக்கு மேல் யாரும் வரமாட்டார்களே!” என அவர் கூறினார்.  சற்று தூரத்தில் ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்த சில பெரியவர்களிடம் என் நிலைமையை கூறி உதவி கேட்டேன்.  “பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  இங்கே யாருக்கும் குண்டு வாங்கிச் சாக விருப்பம் இல்லை” என்றனர்.”

“திரும்பி வந்து கணவரின் உடலருகே அமர்ந்தேன்.  ஒரு சிறிய மூங்கில் பிளாச்சு கிடைத்தது. அதை வைத்து நாய்களை விரட்டியபடி இரவு முழுவதையும் கழித்தேன்.  அருகில் சிலர் வலி தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தனர்.  ஒரு எருமை மாடும் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.  பன்னிரெண்டு வயது பையன் ஒருவன் வேதனையில், “என்னை விட்டு போய்விடாதீர்கள்” என கத்திக் கொண்டு இருந்தான்.  குளிருக்காக என் துப்பட்டாவை எடுத்து அவன் மேல் போர்த்தினேன்.  தண்ணீர் கேட்டான்.  அங்கு ஏது தண்ணீர்?”

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !

“இரவு நகர்ந்தது.  ஓலங்கள் தற்போது அவ்வளவாக இல்லை.  மணிக்கொருமுறை பெரிய கடிகாரத்தின் ‘டண், டண்’ ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.  இரண்டு மணி இருக்கும்.  குண்டு காயம் பட்ட ஒருவர், பிணங்களுக்கு அடியில் மாட்டிக் கொண்டுவிட்ட தனது காலை வெளியே எடுக்க உதவும் படி கேட்டார்.  சூல்தான் கிராமத்தை சேர்ந்தவராம்.  இரத்தம் தோய்ந்த அவரது உடையை பற்றிக் கொண்டு கால்களை மேலே தூக்கிவிட்டேன்.  அதற்குப் பின் காலை ஐந்தரை மணிவரை வேறு யாரும் அங்கே வரவில்லை.

ஆறு மணி சுமாருக்கு லாலா சுந்தர்தாஸும் அவரது பையன்களும் வந்தனர். உடன் எங்கள் தெருவைச் சேர்ந்த சிலர் ஒரு கட்டிலை எடுத்து வந்திருந்தனர். என் கணவரின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தோம். திடலில் இன்னும் பலர் தம் உறவினர்களை தேடிக் கொண்டு உள்ளனர். இரவு முழுவதையும் நான் அங்கே கழித்தேன். என்னுள் எழுந்த உணர்ச்சிகளை விவரிக்க இயலாது. என்னைச் சுற்றிலும் குவியல் குவியலாய் பிணங்கள். அவற்றில் சிலர் அறியாச் சிறுவர்கள். இரவு முழுவதும் அந்த தண்ணியில்லாக் காட்டில் நாய்களின் குரைப்பொலியும், கழுதைகளின் கத்தல்களும், உயிருக்குப் போராடியவர்களின் மரண ஓலங்களும் தவிர வேறு ஏதும் இல்லை. அந்த இரவை எப்படி கழித்தேன் என்பது எனக்குத் தெரியும். கடவுளுக்குத் தெரியும்…”

-ரத்தன் தேவி
(ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தன் கணவரை இழந்தவர்.)

***

ப்படித்தான் அது தொடங்கியது.

லாப வெறி பிடித்த ஏகாதிபத்தியங்கள், உலகை பங்கு போட்டுக் கொள்ள உலக யுத்ததில் ஈடுபட்டன. முதலாம் உலக யுத்தம்.  ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனக்காக யுத்தம் செய்ய தனது காலனி நாடுகளை மேலும் அதிகமாக சூறையாடியது.

இந்திய இளைஞர்கள் இலட்சக்கணக்கானோரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கட்டாயப் படுத்தி இராணுவத்தில் சேர்த்து யுத்தத்திற்கு அனுப்பியது.

தனது யுத்த தேவைகளுக்காக, ‘யுத்த நிதி’ என்ற பெயரில் மாபெரும் வழிப்பறிக் கொள்ளையை நடத்தியது.  யுத்த காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் அள்ளிச்சென்ற பணம் பத்துகோடி பவுன் தொகைக்கும் மேலானது.

விளைந்த தானியங்களை அள்ளிச் சென்றது.  இதனால் கடும் விலைவாசி உயர்வு. மருத்துவ வசதிகள் போதாததால், காலரா, மலேரியா, இன்புளூயன்சா போன்ற நோய்கள் பரவின. யுத்த காலத்தில் மட்டும் கொள்ளை நோய்களால், ஒன்றரை கோடி இந்தியர்கள் மாண்டுள்ளனர்.

பிரிட்டிஷ் அரசோ மேலும் மேலும் சுரண்டியது. எதிர்த்தவர்களை சிறப்பு அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றி, கைது செய்து சிறையில் அடைத்தது. மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர்.

1917, நவம்பர் 7.  ரஷ்யாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது.  உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தது.  இந்திய மக்களும் ரஷ்யப் புரட்சியால் உந்தப்பட்டனர். மக்களின் போராட்டங்கள் தீவிரமாகின.

யுத்தகால கருப்புச் சட்டங்கள் மக்கள் மீது பாய்ந்தன. நவம்பர் 11- 1918-ல் உலக யுத்தம் முடிவுற்ற போது, ‘சுயராஜ்ஜியம் கிடைக்கும்’ என்று மக்கள் நம்பினர். ஆனால், மார்ச் 10 – 1919 அன்று, ‘தீவிரவாத நடவடிக்கைகள் சட்டம்’ என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியது பிரிட்டிஷ் அரசு.  பிரிட்டிஷ் நீதிபதி சர். ஸிட்னி ஆர்தர் டைலர் ரெளலட் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளே அந்தக் கருப்புச் சட்டம்.  தலைவரின் பெயரால் ‘ரெளலட் சட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்ய முடியும், கைது செய்யப்பட்டவர்களை விசாரணையே செய்யாமல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடியும்.

யுத்தகால காலனிய சுரண்டல்களால், கொதித்துப் போய் இருந்த மக்களுக்கு, ‘சுயராச்சியம் கிடைக்கும்’ என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்ததெல்லாம் இந்த அடக்குறை கருப்புச் சட்டம்தான்.

கொதித்துப் போன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  மார்ச் 30 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்த அறைகூவியது காங்கிரசு கட்சி.

அந்நாளில் பஞ்சாப் மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னர் ஆக இருந்தவர், சர்.மைக்கேல் பிரான்ஸிஸ் ஓ’டையர்.  அடக்குமுறைகளுக்கு பெயர் போன, கொடூரமான ஒரு அராஜகப் பேர்வழி அவர்.

மார்ச் 29-1919 அமிர்தசரஸ் நகரின் ஜாலியன்வாலா பாக் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அமிர்தசரஸ் மக்களின் மரியாதைக்குரிய தலைவர்களான வழக்கறிஞர். முனைவர். சைஃபூதீன் கிச்லூ மற்றும் மருத்துவர். சத்யபால் ஆகியோர் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எழுச்சி உரை ஆற்றுகிறார்கள்.

அன்று இரவு, மரு. சத்யபால் பொது நிகழ்சிகளில் பேசக்கூடாது என அவருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடுகிறது அரசு. மார்ச் 30 -1919. பொது வேலை நிறுத்தம் நாடெங்கிலும் முழு வெற்றி பெறுகிறது.

டில்லியில் அன்று காலை நடந்த போராட்டப் பேரணியை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியது பிரிட்டிஷ் அரசு. 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அன்று மாலையே, துப்பாக்கிச் சூட்டை கண்டித்து டில்லியில் கண்டனக் கூட்டம் திரு.ஸ்ரத்தானந்தா தலைமையில் நடத்தப் பட்டது.  கூட்டம் முடிந்ததும், மக்கள் பேரணியாக சென்றனர். சாந்தினி செளக் பகுதியில் பேரணியை வழிமறித்தது ஏகாதிபத்தியப் படை. மக்கள் கலைய மறுத்து எதிர்த்து நின்றனர். பிரச்சினையை பெரிதாக்க விரும்பாத இராணுவம் திரும்பிச் சென்றது.

ஜாலியன்வாலா பாக் திடலில், வழக்கறிஞர் சைஃபூதின் கிச்லூ தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கிச்லூவுக்கும் வாய்ப்பூட்டு போடுகிறது அரசு.

டில்லி துப்பாக்கிச் சூடு நாடெங்கும் மக்களை கொதித்தெழச் செய்தது.  குறிப்பாக பஞ்சாப் மக்கள் கொதி நிலையின் உச்சத்தில் இருந்தனர்.

மார்ச் 31-1919. டில்லியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ஏப்ரல் 2-1919. ஜாலியன்வாலா பாக்கில் காங்கிரசு பேச்சாளர் சத்யதேவ் உரையாற்றுகிறார். அஹிம்சை முறையில் போராட வலியுறுத்துகிறார்.

ஏப்ரல் 5-1919. மறு நாள் ஏப்ரல் 6 அன்று நடக்க இருந்த இரண்டாவது பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க பிரிட்டிஷ் கைக்கூலிகளை ஏவி விடுகிறார் லெப். கவர்னர் சர். மைக்கேல் ஓ’டையர். பஞ்சாபில் நுழைய காந்திக்கு தடை விதிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் துணை கண்காணிப்பாளரும், மறுநாள் நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க பிரிட்டிஷ் அடிவருடிகளைத் தூண்டி விடுகிறார்.  நகரம் முழுவதும் ‘மறு நாள் போராட்டம்’ ரத்து செய்யப்பட்டதாக செய்தி பரவுகிறது.  உடனே, இளைஞர்கள் பலர் திரண்டு, வீடு வீடாகச் சென்று ‘மறு நாள் போராட்டம் நடப்பது உறுதி, துரோகிகளின் புரளியை நம்பவேண்டாம்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

படிக்க:
♦ என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !
♦ பகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. !

ஏப்ரல் 6 – 1919. பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெறுகிறது.  ஒரு சின்னஞ்சிறிய கடை கூட திறக்கப் படவில்லை.  எங்கும் எந்த ஒரு தொழிலும் நடக்கவில்லை.

மாலையில், ஜாலியன் வாலா பாக்கில் பொதுக் கூட்டம்.  ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளம்.  உரைகள், கவிதைகள் எல்லாம் போக மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

1) ரவுலட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

2) சத்யபால், கிச்லூ மீதான வாய்ப்பூட்டு இரத்து செய்யப் பட வேண்டும்.

3) தொடரும் சத்யாகிரகப் போராட்டங்களுக்காக குழு ஒன்று உருவாக்க வேண்டும்.

கூட்டத் தலைவர், வழக்கறிஞர் பதர்-உல்-இஸ்லாம் அலிகான், அகிம்சையை வலியுறுத்தி பேசுகிறார்.

ஏப்ரல் 7-1919. லாகூர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் லெப். கவர்னர் சர். மைக்கேல் ஓ’டையர், ‘கலகம் விளைவிக்கும்’ தலைவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என அச்சுறுத்துகிறார்.

ஏப்ரல் 8-1919. அமிர்தசரஸ் துணைக் கண்காணிப்பாளர், நிலைமை மோசமடைந்து வருவதாகவும், கூடுதல் படைகளை அமிர்தசரசிற்கு அனுப்பும் படியும் மைக்கேல் ஓ’டையர் -க்கு கடிதம் எழுதுகிறார்.

ஏப்ரல் 9-1919. இராமநவமி திருவிழா. இந்துக்களின் இந்த விழாவில் பல்லாயிரம் இசுலாமிய மக்கள் கலந்து கொள்கின்றனர். திருவிழா ஊர்வலத்திலும் அனைத்து மத மக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர். இந்த ஒற்றுமை பற்றிய செய்தி மைக்கேல் ஓ’டையர் -க்கு போகிறது.  ஒற்றுமை அவரை பீதி கொள்ளச் செய்கிறது.

ஏப்ரல் 10-1919. துணைக் கண்காணிப்பாளர் அழைப்பின் பெயரில், அவரைக் காண சத்யபாலும், கிச்லூவும் செல்கின்றனர். மைக்கேல் ஓ’டையரின் ஆணைப்படி அவர்கள் இருவரையும் கைது செய்து தர்மசாலாவில் சிறை வைக்கின்றனர்.

கொதித்துப் போன மக்கள் துணைக் கண்காணிப்பாளர் பங்களாவையும், நீதிமன்றத்தையும் நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.  ஊர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

எல்லா இடங்களிலும் தயாராக இருந்தது வெள்ளை போலீசு.  போலீசு படையும், அவர்களின் குதிரைப் படையும் மக்களின்மீது தாக்குதல் தொடுக்கின்றன.

மக்களின் உணர்வு நிலை மாறிக் கொண்டே இருந்தது.  தம் தலைவர்களை விடுவிக்க முடியாத கோபம் ஒருபுறம்.  போலீசு தாக்குதலில் தம் மண்டைகள் உடைவது மறுபுறம் என கொதித்துப் போய் இருந்தனர்.

அப்பொழுதும், அகிம்சையை பின்பற்றி அமைதியாக அடிபட்ட தம் தோழர்களை அழைத்துக் கொண்டு ஹால்பஜார் நோக்கிச் சென்றனர். அப்பொழுது, நகரெங்கும் சாலைத் தடையரண்களை வெள்ளை அரசு அமைத்து வரும் செய்தி வந்தது. எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்த்தது போல் ஆனது.

கொதித்துக் கொண்டிருந்த மக்கள் அப்பொழுதும் வன்முறையைத் தவிர்க்க, கேரேஜ் பாலம் என்ற நடை பாலம் நோக்கி பயணப்பட்டனர். இப்பொழுது மக்களின் கைகளில் கம்புகள் இருந்தன. பாலத்தின் ஒருபுறம் அடக்குமுறைக்கு ஆளான மக்கள்.  மறுபுறம் துணைக் கண்காணிப்பாளர் இர்விங்-உடன் ஆயுதம் தாங்கிய படைப் பிரிவு.

வழக்கறிஞர்கள் ஸலாரியாவும் மக்புல் மஹ்மூத்தும் இரண்டு தரப்பிலும் இருந்த இறுக்கத்தை தளர்த்தப் படாத பாடு பட்டனர். அவர்களின் முயற்சிகளுக்கு நாட்டுப் பற்றாளர்கள் கட்டுப்பட்டனர்.  ஆனால், ஏகாதிபத்தியப் படைகளின் நோக்கம் வேறு.

மக்கள் கூட்டத்தில் இருந்து கற்களும் கழிகளும் வீசப்பட்டதாகக் கூறி, போலீசு சுட்டுத் தள்ளியது. இருபது நாட்டுப் பற்றாளர்கள் இன்னுயிர் ஈத்தனர்.  பலர் படுகாயம் அடைந்தனர். காயம்பட்டவர்களை மருத்துவ நிலையம் கொண்டு செல்ல முயன்றார் மக்பூல்.

நாட்டுப் பற்றாளர்களுக்கு உதவிகள் ஏதும் செய்யக் கூடாதெனற உத்தரவை முன்னரே போட்டிருந்தார் ஆங்கில அதிகாரி பலோமர். மருத்துவ உதவி கூட ஏதும் நாட்டுப் பற்றாளர்களுக்கு கிடைக்கவில்லை. மக்களின் சினம் எல்லை தாண்டியது.

சிலர் தந்தி நிலையத்தை முற்றுகை இட்டனர். ஆனால், இரயில் நிலையத்தில் இருந்த படைப்பிரிவு தந்தி நிலையம் வந்ததால், தந்தி அதிகாரி உயிர் தப்பினார். அதேநேரம், இரயில் நிலையம் சென்றது வேறு ஒரு மக்கள் குழு. நிலைய சூப்பரிண்டெண்டண்ட் எப்படியோ தப்பி விட்டார்.  ஆனால், ஒரு வெள்ளை கார்ட் பலியானார்.

நேஷனல் வங்கியில் மூன்று பேர் மரணம் தழுவினர்.  வங்கிக் கட்டிடமும், அதன் சேமிப்புக் கிடஙகும் (ஜவுளி ஆடைகள் சேமிப்புக் கிடங்கு) தீக்கிரையாகின. அல்லையன்ஸ் வங்கி மேலாளர் கொல்லப்பட்டார்.  வங்கியின் பணக் காப்பகம் சூறையாடப்பட்டது. சார்ட்டர்ட் வங்கியும் தாக்குதலுக்கு ஆளானது.  ஆனால், உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏதுமில்லை.

ஷேர்வுட் என்ற கன்னியாஸ்திரி, ஒரு குறுகிய தெருவில் தாக்கப்பட்டார்.  அவரை ஒரு குடும்பம் பாதுகாத்து, பின்னர் மருத்துவ நிலையம் சேர்த்தது. அமைதியாக போராடிய மக்கள் மீது, வன்முறை ஏவி, அவர்களை வன்முறையாளர்களாக்கியது அரசு.

வெள்ளையர் வன்முறையில் இருபது நாட்டுப் பற்றாளர்களும், மக்களின் எதிர் வன்முறையில் 4 வெள்ளையரும் பலியாகினர்.

வன்முறையில் மக்கள் ஈடுபட்டதாக கூறி, மக்கள் மீது அரச வன்முறையை ஏவுவது, ஆண்டாண்டு காலமாக அரசு பயன்படுத்தும் தந்திரம்தான்.  தாமிரபரணி, பரமக்குடி, லால்கர் முதல் தூத்துக்குடி வரை, அரசை பொறுத்தவரை தம் உரிமைக்காக போராடும் மக்கள் தானே வன்முறையாளர்கள்.

ஏப்ரல் 11-1919. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய நான்கு பேருக்கு மேல் உடன் செல்லக் கூடாது. ஒரு பிணத்திற்கும், இன்னொரு பிணத்திற்கும் இடையில் 15 நிமிட இடைவெளி வேண்டும். அடக்கங்களை மதியம் இரண்டு மணிக்குள் முடிக்க வேண்டும். இரண்டு மணிக்கு விசில் ஊதப்படும் போது, கூட்டம் கலைந்து விட வேண்டும். மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.

எந்த ஒரு இடத்திலும் நான்கு பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது. மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும். இவை துணை கண்காணிப்பாளரின் உத்தரவுகள்.

அன்று மாலை, ஜலந்தர் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டயர் அமிர்தசரசின் பொறுப்பை ஏற்றார்.

ஏப்ரல் 12-1919. நகர் முழுவதும் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. நகரம் விமானங்கள் மூலம் கண்காணிக்கப் பட்டது. மக்களை மிரட்ட ஜெனரல் டயர் தன் படைகளுடன் நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தினார்.  ஓரிடத்தில் மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  ஆனாலும் எதிர்ப்பு என்பது பெரிய அளவில் இல்லை.

அதே நேரம், எந்தத் தொழிலும் நடக்கவில்லை. எந்தக் கடையும் திறக்கவில்லை.  வெற்றி கிட்டும்வரை பொது வேலை நிறுத்தம்தான் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

ஏப்ரல் 13-1919. அன்று பஞ்சாபியரின் புத்தாண்டான பைசாகி திருவிழா.  இந்து, முசுலீம், சீக்கியர் என அனைவரும் ஒரே தட்டில் உண்டு, ஒரே குவளையில் நீர் அருந்தும் திருநாள். பல்லாயிரக்கணக்கில் மக்கள் பொற்கோவிலில் கூடினர்.

இன்றும், ஜெனரல் டயர் மிரட்டல் இராணுவ அணிவகுப்பை நடத்தினார். அணிவகுப்புக்கு பின்னர், ‘நான்கு பேருக்கு மேல் மக்கள் கூட்டம் கூடுவது குற்றம், மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்’ என்று தமுக்கடித்து அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.

சற்று நேரத்தில், காலி தகர டப்பாக்களை அடித்தபடி இளைஞர் கூட்டம் வீதிகளில் இறங்கியது. மாலை 4.30 மணிக்கு ஜாலியன்வாலா பாக்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களை அறை கூவினர். திட்டமிட்டபடி சரியான நேரத்தில் ஜாலியன்வாலா பாக்கில் கூட்டம் துவங்கியது.

சற்று நேரத்தில் அங்கே டயரும் இராணுவமும் நுழைந்தனர். துப்பாக்கிகள் சீறின. சில ஆயிரம் பேர் செத்துப் போனார்கள். பல ஆயிரம் பேர் படுகாயம் அடந்தனர். தோட்டாக்கள் தீரும் வரை பத்து பதினைந்து நிமிடங்கள் சுட்டுத் தள்ளிவிட்டு, கிளம்பிச் சென்றனர் டயரும் இராணுவத்தினரும்.

*****

இந்த படுகொலையை அஞ்சி, நடுங்கி ஒடுங்கிவிடவில்லை பஞ்சாப் மக்கள். பொது வேலை நிறுத்தம் தொடர்ந்தது. கடையை திறக்க மறுத்த வணிகர்களை அடித்து உதைத்து, வீதிகள் வழியே புழுக்களைப் போல ஊர்ந்து போக வைத்தான் வெள்ளையன்.

தொழில்கள் ஏதும் நடக்கவில்லை. கம்பத்தில் கட்டி சவுக்கால் அடித்தான். பணியவில்லை பஞ்சாப். விலங்குகள் போல இரும்புக் கூண்டுகளில் அடைத்தான். பள்ளி மாணவர்களை பல மைல் தூரம் நடக்க வைத்து, தன் யூனியன்  ஜாக் கொடியை வணங்க வைத்தான்.

குடிநீரையும் மின்சாரத்தையும் நிறுத்தினான். குஜ்ரன்வாலா வயல்களில் உழைத்துக் கொண்டு இருந்த விவசாயிகள் இருபது பேரை காரணம் ஏதும் இன்றி சுட்டுக் கொன்றான். குஜ்ரன்வாலா, காசூர், லாகூரில் விமானங்கள் மூலம் குண்டு வீசி மக்களைக் கொன்றான். பஞ்சாப் பணியவில்லை.

இந்தக் காலகட்டம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிடம் இருந்து பஞ்சாப் துண்டிக்கப் பட்டு இருந்தது. பஞ்சாப் செய்திகள் வெளியே கசிந்த போது, நாடே பதறித் துடித்தது. பஞ்சாப் படுகொலை பற்றி விசாரிக்க குழு அமைத்தது காங்கிரசு கட்சி.

படிக்க:
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

“லெப்.கவர்னர் மைக்கேல் ஓ’டையரும், ஜெனரல் டயரும்தான் குற்றவாளிகள்” என ஆணித்தரமாக கூறியது காங்கிரசு குழு அறிக்கை. ஹாண்டர் பிரபு தலைமையில் குழு அமைத்து விசாரித்தது பிரிட்டிஷ் அரசு.

“ஓ’டையர் குற்றமற்றவர்.  ஆனால், ஜெனரல் டயர் குற்றவாளி” என்றது ஹண்டர் குழு. ஹண்டர் குழு அறிக்கையை ஏற்று, ஜெனரல் டயரை பதவி விலகக் கோரியது பிரிட்டிஷ் மக்களவை (House of Commons). ஆனால், அரசரவையோ (House of Lords) ஜெனரல் டயர் மீது நடவடிக்கை கூடாது என தடை போட்டது. மேலும் அந்த கசாப்புக் கடைக் காரனை, ‘இங்கிலாந்தின் மாவீரன்’ என்றும் கொண்டாடியது.

இதோ, நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்காக 10-04-2019 அன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர்.

உத்தம் சிங்கையும் பகத்சிங்கையும் உருவாக்கியது அன்றைய ஜாலியன் வாலா பாக்  படுகொலை. அதன் நூறாம் ஆண்டு நிறைவில் நாம் பல நூறு பகத் சிங்-களாய் எழுந்து நிற்போம் !


தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

ன் அம்பேத்கர், அவர் சிலைகளில் குடியிருப்பதில்லை, பௌத்த மடாலய சடங்குகளின் மலர்களின் வாசனையில் அவர் வசிப்பதில்லை..

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

சங் பரிவார கும்பலிடம் தலித் அரசியலின் பெயரில் சரணடையும் கும்பலின் வீட்டு வரவேற்பறையில் வரவேற்கும் படங்களில் அவர் வாழ்வதில்லை..

தங்களுடைய சுயநல வர்க்க நோக்கத்திற்காக, ஆளும் வர்க்கத்திற்கு மக்களை காட்டி கொடுப்பதற்கே, தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு செருப்பை உருவாக்கி, அதற்கும் பொருந்தும்படி மக்களின் கால்களை வெட்டி சுகம் காணும் கயவர்களிடம் கண்டிப்பாக இல்லை..

சொந்த வர்க்க நலன்களுக்காக வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் என்.ஜி.ஓ கும்பல்களில் பிரச்சார நிகழ்ச்சி நிரலில் அவர் கிஞ்சித்தும் இருப்பதில்லை…

படிக்க :
♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !
♦ மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !

அவர் நேர்மையில் குடியிருக்கிறார், தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கி கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னை பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

உரிமையோடு அவரோடு முரண்படும் வெளியை உருவாக்கித் தந்த, அவர் கைநீட்டி எனக்கு கைகாட்டிய பாதை இடது அரசியல் பாதைதான்…

அதை மறுக்கும் எவரொருவரும் அரசியல் பகையாளியே…

நன்றி : ஃபேஸ்புக்கில் மகிழ்நன் பா.ம

சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 9


காட்சி : 13

இடம் : வீதி
உறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்

(பட்டர்களைத் தூது அனுப்புவது)

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிக மிக முக்கியமானது ; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம்.

பாலச்சந்திரப்பட்டர் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கறை இல்லையா என்ன ?

கேசவப்பட்டர் : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லையா? எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா?

பாலச்சந்திரப்பட்டர் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா?

சிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே … உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

கேசவப்பட்டர் : பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங்கள்?

சிட்னீஸ் : பொற்காலம் தோன்றப் போகிறது. உங்கள் பேருதவியால்.

பாலச்சந்திரப்பட்டர் : தோன்றாமல் என்ன?

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே! மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில், அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே!

பாலச்சந்திரப்பட்டர் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ்? அவர்கள் சாஸ்திரத்தை தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.

சிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா? இப்படிப்பட்ட காரியத்துக்கா?

கேசவப்பட்டர் : சமயம், சந்தர்ப்பம், தயவு , தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ?! தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ – முப்பிரிவினரான எமக்கு தேவதாப்ரீதிதான் முக்கியமான கடமை.

பாலச்சந்திரப்பட்டர் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம்? சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும்? வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா? வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப் பற்றிப் பேசலாம்.

சிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே.

கேசவப்ப்பட்டர் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ்? நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா? சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான் இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும், காசிவாசி காகப்பட்டரிடமிருந்து அவ்வளவுதானே?

சிட்னீஸ் : அவ்வளவுதான்.

கேசவப்பட்டர்: செல்கிறோம் காசி நோக்கி..

சிட்னீஸ் : சென்று கூறுங்கள் – காகப்பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஓட்ட அரும்பாடுபட்ட வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்களெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்’ என்று பலர் பலவிதமாகப் பேசிய போதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்தூளாக்கி மராட்டியத்தை மற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.

கேசவப்பட்டர் : சொல்கிறோம். சொல்கிறோம்… சொல்லாமலா இருப்போம்.

சிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே! உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.

கேசவப்பட்டர் : தாராளமாக! பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.

பாலச்சந்திரப்பட்டர் : கூறவேண்டும் கேசவப்பட்டரே ! சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.

கேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே! நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால்தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.

சிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.

(சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)

கேசவப்பட்டர் : ஒய், புறப்படும் புறப்படும்! என்ன ஒய் அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கிறீர்?

பாலச்சந்திரப்பட்டர்: முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்குப் போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு நாம் பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஒய்! யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா .

கேசவப்பட்டர் : ஏன் ஒய்! போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம் சொல்லிவிடுவது தானே?

பாலச்சந்திரப்பட்டர் : மந்த புத்தி ஒய், உமக்கு போக இஷ்டமில்லேன்னா வேறு ஏவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால்தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய காகப்பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஒய் காகப் பட்டரிடம் சென்று கூறுவோம் மராட்டியத்தின் நிலையை .. மட்டம் தட்டுவோம், இந்த மாவீரர்களை …

கேசவப்பட்டர் : ஒய்! நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.

பாலச்சந்திரப்பட்டர்: ஆமாம் அவனிடம் சொன்னேன். அசடு ஒய் நீர்… சொன்னால்?

கேசவப்பட்டர் : அப்படி என்றால்?

பாலச்சந்திரப்பட்டர் : ராஜ்யம்… பூஜ்யம் ஒய்! பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச் செய்கிறேன். வாரும்.

(போகிறார்கள்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! என்ற திருச்சி மாநாட்டின் அறைகூவலையொட்டி நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பாக 11.04.19 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு நெல்லை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் செ.முருகன் தலைமை வகித்தார். தோழர் அன்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். சி.ராஜூ சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தோழர் முருகன் தனது தலைமையுரையில், கார்ப்பரேட் – காவி பாசிசம் மிக கொடூரமான ஆபத்து எனவும், எனவே அதை முறியடிக்க எந்த தடைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். விவசாயிகளின் பிரச்சினையை ஏறிட்டும் பார்க்காத அதிகாரிகள், தாமிரபரணியில் கோக் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க ஒத்துழைப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் தொடர்ந்து தென்மாவட்டங்களில் நிலவி வரும் அரசின் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்த அடக்குமுறைகளையெல்லாம் முறியடிக்கும் வல்லமை இந்த மண்ணிற்கு உண்டு, ஏனெனில் சுதந்திரப் போரின் பல தியாகிகளை இந்த மண் ஈன்றெடுத்துள்ளது. அந்த வழியில் நாமும் பயணிப்போம் என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் சி.ராஜூ கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கு தேர்தல் பயன்படாது. அரசின் எல்லா நிர்வாக அமைப்புகளையும் பாசிஸ்டுகள் கைப்பற்றிக் கொண்ட சூழலில் மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்பதை நிறுவிப் பேசினார். கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு அதிகார வர்க்கம் எப்படி கிரிமினல் கும்பலைப் போல கைக்கூலியாக வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பேசினார்.

அதிகார வர்க்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருப்பி அழைக்கவும் முடியாது. அரசின் கொள்கைகளை மக்கள் முடிவு செய்ய முடியாது. இவற்றிற்கெல்லாம் தேர்தல் வைப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். ஆக மிகக் கொடூரமான கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் வீழ்த்துவதற்கான களத்தில் முன்னே நிற்பதற்கு மக்கள் அதிகாரம் தயாராக உள்ளது. பின்தொடர மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை முடித்தார்.

தோழர் ராஜு உரை :

 

இறுதியாக, ம.க.இ.க கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் வந்திருந்தவர்களுக்கு அரசியல் உணர்வூட்டின. நிகழ்ச்சி முடிந்த பின்னரும் புதிதாக வந்த நிறைய பேர் ஆர்வத்தோடு வந்து பேசிச் சென்றனர்.

காவல்துறை அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் இரண்டு வாய்தா வாங்கி இறுதியாக நான்கு நாட்களுக்கு முன்புதான் அனுமதி கிடைத்தது. அதுவும் 2 மணி நேரம் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவு. நகர் முழுக்க ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தேர்தலைக் காரணம் காட்டி போலீசால் மொத்தமாக கிழிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

இத்தனை ஒடுக்குமுறைகளையும் கடந்து நெல்லை மக்களின் திரளான பங்கேற்போடும் ஆர்வத்தோடும் பொதுக்கூட்டம் சிறப்புற நடந்து முடிந்தது. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து நிற்பதற்கான உறுதியை பொதுக்கூட்டம் வந்திருந்தவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மிகையில்லை.

லால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

தலைமையுரையாற்றிய தோழர் செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பேசுகையில்; “கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை வாழவிடாமல் மக்கள் மீது கொடுரமான முறையில் தாக்குதலை நடத்துகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசு நடத்திய படுகொலை, நாடு முழுவதும் RSS – BJP-யின் தாக்குதலை முறியடிக்க நாம் ஒண்றிணைய வேண்டும். தேர்தலில் ஓட்டு போடுவது மூலம் இதற்கு  தீர்வுகாண முடியாது. மக்களை திரட்டி போராடி வீழ்த்த வேண்டும்…” என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ஞா. ராஜா, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  பேசுகையில்; “பிராச்சாரத்தின் போது கிடைத்த மக்களின் பாதிப்புகளை, அனுபவங்களை தொகுத்து கூறினார். சிறுவணிகர்கள் GST -யின் பாதிப்புகளையும், மாதம் மாத கணக்கு வழக்கு முடிக்க ஏற்படும் சிரமங்களை எடுத்து விளக்கினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவசாய மக்களின் கடுகு டப்பா சேமிப்பையும் பறித்துவிட்டது, விவசாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு சென்று விட்டார். பல இடங்களில் மக்கள் இந்த மோடி ஆட்சி ஒழிய வேண்டும்.” என மக்களின் உணர்வுகளை கோவமாக எடுத்துரைத்தார்.

அதன் பின் செம்பரை மக்கள் அதிகாரம் தோழர்  மணியரசு பேசுகையில்; “மக்கள் அதிகாரம் தொண்டர்கள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுகின்றனர்.எங்கள் பகுதியில் வாய்க்கல் தூர்வாரியது, ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து போராடியது. மேலும் விவசாயிகளுக்கு பக்க பலமாக உள்ள ஒரே அமைப்பு என்று கூறினார். மக்கள் அதிகாரம் தேர்தல் இயக்கம் அல்ல, அது மக்களுக்கானது இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

அவரைத் தொடர்ந்து வி.சி.க லால்குடி சட்டமன்ற ஒன்றிய செயலாளர் தோழர் மரிய கமல் அவரது உரையில்; “மோடி அரசு மக்களை சாதிரீதியாகவும், இனரீதியாகவும், மொழிரீதியாகவும் நம்மை பிரித்து ஆளுகிறது. இதனை முறியடிக்க மக்களிடம் நாம் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். பணமதிப்பு நீக்கம்  நள்ளிரவில் யாரையும் கேட்காமல் சர்வாதிகாரமாக செயல்படுத்துகிறார். இதுவே அவரது பாசிச நடவடிக்கைக்கு சான்று. மீண்டும் நாம் ஒரு சுதந்திர போரை தொடங்க நேரம் வந்துவிட்டது” என்றார்.

அதன் பின் பேசிய திராவிடர் கழகம் தலைமை நிலைய சொற்பொழிவாளர் புவாளூர்  தோழர் பூவை புலிகேசி தனது உரையில்; “நமது மக்களின் மூளையில் RSS சித்தாந்தம் புகுத்தப்பட்டுள்ளது. பரிவார சிந்தனைகளை நாம் மக்கள் மூளைகளில் இருந்து நாம் அகற்ற வேண்டும். மோடி ஒருகால் தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் நாம் தேர்தலில் பங்கேற்கவே முடியாது. நீட்-குலக்கல்வி முறை கொண்டு வந்து திணிக்கிறார்கள்.இதனை முறியடிக்க இணைந்து பணியாற்றுவோம்” என்று எழுச்சி உரையாற்றினார்.

அதன் பின் CPI மாநில குழு உறுப்பினர் தோழர் அயிலை சிவசூரியன் அவரது உரையில்; “RSS கொள்கையை அமுல்படுத்துவதற்கும், கார்ப்பரேட் நலனை தூக்கி பிடிப்பதே இந்த பாசிச கோமாளியின் ஆட்சி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய வருமானம் இரட்டிப்பு, கட்டுபடியான விலை, வறட்சியை தடுப்போம் என்று அறிவித்தார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

மாறாக காவிரியில் துரோகம், விவசாயிகள் தற்கொலை விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை” என்று விவசாயிகளின் அவலங்களை எடுத்துரைத்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  சி.ராஜூ தனது உரையில்;

“நாடு முழுக்க தேர்தலில் ஓட்டு போடுங்கள் என்று பிராச்சாரம் செய்கின்றனர். ஒரு விரல் புரட்சி செய்தால் பெட்ரோல் விலை, கல்விகட்டனம் குறைந்து விடுமா? என்ன மாற்றம் நடந்துவிடும் என்று என்னை ஓட்டு போடச் சொல்கிறாய். திறந்த வெளி சிறைசாலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எந்தவித உத்திரவாதமற்ற வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். நம்மை ஓட்டு போடு என்று சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நமது பிரச்சனையை இந்த அரசு தீர்க்காது, இந்த கட்டமைப்புக்குள் பாலியல் பிரச்சனை, வேலையின்மை, ஸ்டெர்லைட் ஆலை, ஹட்ரோகார்பன், மீத்தேன் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. இவ்வனைத்து பிரச்சனையையும் அரசே முன்னின்று செய்கிறது. மாற்று அமைப்பு முறையை உறுவாக்குவதே தீர்வு” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் ம.க.இ.க  கலைக் குழு தோழர்கள்  எழுச்சிகரமான புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தினர். கூட்டத்தின் இறுதியில் அரசியல் ஆர்வலர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள் நிகழ்ச்சியை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். விவசாய மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டும் இந்த நிகழ்வு அமைந்தது. இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் திருநாவுக்கரசு நன்றி உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


மக்கள் அதிகாரம்,
திருச்சி,
தொடர்புக்கு: 94454 75157.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !

9

னக்கு நினைவு தெரிந்து எந்த இந்திய பிரதமரும் ஹிட்லர், முசோலினி, இடி அமீன், காலிகூலா போன்ற கொடூர சர்வாதிகாரிகளோடு ஒப்பிடப்பட்டதில்லை. இன்று மோடி அப்படி ஒப்பிடப்படுகையில் அதனை பாஜக ஆதரவாளர்களாலேயே மறுக்க முடிவதில்லை என்பதுதான் விஷேசம். தரித்திரத்தின் பிரதிநிதியாக உள்ள மோடியின் ஆட்சிக்கு இந்த கட்டமைப்பிலேயே உள்ள கோளாறுகள் மற்றும் இந்துத்துவ வெறி ஆகியவைதான் காரணம் என்றாலும் அதில் மோடியின் தனிப்பட்ட பண்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. மதங்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இத்தகைய கோளாறான ஆளுமை கொண்ட நபர்களின் தேவை வரலாறு நெடுக இருந்திருக்கிறது.

மோடி ஒரு நிர்வாகத் திறனற்ற அரைவேக்காடு; சுயமாக எதையும் திட்டமிடத்தெரியாத மூடர், மேக்கப் வெறிபிடித்த மேனாமினுக்கி என்பதையெல்லாம் கடந்து அவரைக் குறித்து அச்சம்கொள்ள வேறு அபாயகரமான அம்சங்களும் இருக்கின்றன. சில கேள்விகளில் இருந்து மோடியின் ஆளுமையை பரிசீலிப்பது இங்கே பொருத்தமாக இருக்கும். (இவை மோடி பற்றிய உளவியல் மதிப்பீடு அல்ல, அப்படி செய்யவும் கூடாது. இது அவரது செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும்போது உருவாகும் அபிப்ராயங்கள் மட்டுமே. இவை முழுக்க உண்மையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஒருவேளை அவர் இதைவிட மோசமாகவும் இருக்கலாம். 100% சரியான அபிப்ராயங்கள் உலகில் இருக்க முடியாது என்பதை மனதில் வைத்து வாசிப்பைத் தொடரவும்)

மோடியின் தனிப்பட்ட வாழ்வு, இளமைக்காலம் ஆகியவை ஏன் இரகசியமாக இருக்கிறது? எல்லா பெரிய தலைவர்களின் வரலாறும் அதற்கான சாட்சிகளும் சுலபமாக கிடைக்கும்போது மோடியின் ஒளிவட்டத்துக்கு முந்தைய காலம் ஏன் அணுக இயலாததாக இருக்கிறது?

அவர் ஏன் திரும்பத் திரும்ப தன்னை டீ விற்றவன் என்றே அடையாளப்படுத்த வேண்டும்?

ஏன் மோடி எந்த விவகாரத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதில்லை?

அவருக்கு நண்பர்கள் என யாராவது இருப்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? அவர் குறித்த தேவசாட்சியங்கள் யாவும் ஒரு பக்தனுக்கே உரிய பரவசத்தோடு இருக்கின்றனவே ஒழிய ஒரு இயல்பான சாமானியனை காட்டும் தரவுகளை எப்போதேனும் நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா?

படிக்க:
♦ தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை
♦ என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி ?

எல்லாம் வல்ல சூப்பர்மேனாக காட்டப்படும் மோடி ஏன் பள்ளி கல்லூரி மாணவர்களோடு மட்டும் உரையாடுகிறார்? வாழ்நாளில் தேர்வு என்று ஒன்றை எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லாத மோடி எப்படித் தேர்வு எழுதுவது என புத்தகம் எழுதுகிறார். ஆனால், பல்லாயிரம் கோடி முதலீட்டில் தம்மை சிறந்த நிர்வாகி என காட்டிக்கொள்ளும் அவர், ஏன் அது குறித்து எதையும் பேசுவதோ எழுதுவதோ இல்லை?

அவர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் விவாதங்களில் பெருமளவு பங்கேற்றதில்லை, அதேதான் நாடாளுமன்றத்திலும். அவருக்கு மிகவும் வேண்டிய ஊடக ஆட்களை மட்டுமே ஓரிரு முறை சந்தித்திருக்கிறார். அவையும் மோடியின் ஆட்களால் முன்பே தயாரிக்கப்பட்டு கேட்க வைக்கப்பட்ட கேள்விகள். அவரது சமீபத்திய ஓரிரு பேட்டிகளை பாருங்கள். பதட்டம், மனனம் செய்த பதில்களை நினைவுபடுத்துபவனின் உடல்மொழி ஆகியவற்றை காண இயலும். குறுக்குக் கேள்விகளை அனேகமாக நீங்கள் கண்டிருக்கவே முடியாது.

கேள்விகள் மீது ஏன் இந்த முதியவருக்கு இவ்வளவு பயம்? ஜெயாவுக்கும் கேள்விகள் மீது வெறுப்பு இருந்தது, அவர் அதே வெறுப்போடு அந்த கேள்விகளை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்விகளை கண்டு அஞ்சி ஓடியதில்லை. அப்படியானால் மோடிக்கு இருக்கும் பிரத்தியேக சிக்கல் என்ன?

மோடி மேடைகளில் பொளந்து கட்டும் முன்பு வெளிப்படுத்திய உணர்வுகளை கவனித்ததுண்டா? அதீத இறுக்கமும் இயல்பின்மையும் அவர் உடல்மொழிகளில் வெளிப்படும். அவர் மேடைகளில் காட்சியளித்த பெரும்பாலான தருணங்களில் அருகிலிருப்போருடன் இயல்பான உரையாடலை மேற்கொண்டதில்லை. ஏன்?

ஆனால் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் நடிகைகள் அருகே இருக்கையில் அவர் வெளிப்படுத்தும் பரவசம் உச்சகட்ட பாமரத்தனத்தை கொண்டிருக்கும். உண்மையில் இயல்பான மோடியை அத்தகைய தருணங்களில் மட்டுமே பார்த்திருக்க முடியும். ஏன்?

மோடி தன் மீதே நம்பிக்கையற்றவராக இருக்கிறார்..

தமது பால்யம் மற்றும் இளமைக்காலம் குறித்த நிஜத்தை மோடியே நினைத்துப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான் பிரச்சினையின் ஆரம்பம். தான் பார்த்து ரசிக்க விரும்புகிற மோடியின் பிம்பத்துக்கு பழைய மோடியின் பிம்பம் இடையூறாக இருக்கும் என அவர் கருதியிருக்கலாம் அல்லது பொதுப் பார்வையிலேயே அவர் பால்யம் பாடாவதியானதாக இருந்திருக்க வேண்டும். முதலாவது காரணம் சரியென்றால் மோடிக்கு சுயமரியாதை குறைவாக இருக்கிறது. இரண்டாவது காரணம் சரியெனில் அவர் மோசமான நடத்தை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இரண்டுமே ஒரு தலைவருக்கு இருந்தால் அது ஆபத்தானதுதான்.

அவர் தமது பழைய வரலாற்றை பகிர விரும்பாத இயல்புடையவராக இருக்க முடியாதா என கேள்வி எழுப்புவோர் அவர் ஏன் போகுமிடமெல்லாம் தன்னை டீ விற்றவன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள வேண்டும் எனும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ ஒரு சமயத்தில் டீ விற்ற ஒரு நிகழ்வைத்தவிர வேறெதுவும் அவர் வாழ்வில் சொல்லிக் கொள்ளும்படியாக நிகழவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். (சிறுவனாக இருக்கும்போது முதலைகள் நிறைந்த சர்மிஷ்டா ஏரியை நீந்திக்கடந்து ஒரு கோயில் கொடியை மாற்றிவிட்டு வந்தார் எனும் திகைப்பூட்டும் வடையை அவரது அவரது சுயசரிதையை எழுதிய ஏண்டி மோரோ சுட்டிருக்கிறார் (நரேந்திர மோடி – எ பொலிட்டிக்கல் பயோகிராஃபி புத்தகத்தில்))

படிக்க:
♦ நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?
♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !

இவரது தன்னம்பிக்கையின்மையை வெறும் தனி மனித பலவீனம் என சுருக்கி புரிந்துகொள்ள வேண்டுமா என்றால் அதுவும் முடியாது. அவர் தமது மனைவியையும், வேறொரு பெண்ணையும் அராஜகமான முறையில் உளவு பார்த்திருக்கிறார். மனைவியை பேட்டி எடுக்க முயன்ற ஊடக நிருபர் ஒருவரை அவரே நேரடியாக அழைத்து எச்சரித்திருக்கிறார். ஒருவேளை மோடி அதிகாரத்தை இழந்தால் அவர் வேறெங்கேயெல்லாம் தன் வரலாற்றை மறைத்திருக்கிறார் என்பது அம்பலமாகலாம். இவற்றைக்கொண்டு நாம் அனுமானிக்கையில் “மோடி தன் ஒரிஜினல் முகத்தைக் கண்டு அவமானப்படுகிறார் அல்லது பயப்படுகிறார்” என்பது தெரிகிறது.

அவருக்கு இரக்கமோ நன்றியுணர்வோ எப்போதும் இருந்ததில்லை ..

மோடியின் பேச்சுக்களை தொகுத்துப் பாருங்கள். அவர் எப்போதும் தன்னை வளர்த்தவர்கள் பற்றி பேசியதில்லை. அவரது பேசுபொருள் அவராக மட்டுமே இருந்திருக்கிறார். மோடி அடித்துவிடுவார் என பாகிஸ்தான் பயப்படுவதாக சொல்வார், என் அதிருஷ்ட்டத்தால் பெட்ரோல் விலை குறைந்ததாக இருக்கட்டுமே என்றிருக்கிறார், என்னை கொல்ல முயல்கிறார்கள் என சீன் போட்டிருக்கிறார், அவரது தேசபக்தி பீத்தல்கள்கூட என்னிடம் இருந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும் எனும் மறைபொருளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கிறது. தன் மண்டையை மட்டுமே நேசிக்கும் சினிமா பிரபலங்கள்கூட தமது இரக்க உணர்வையும், குற்ற உணர்வையும், நன்றியுணர்வையும் காட்டிய தருணங்கள் இருந்திருக்கின்றன (எம்.ஜி.ஆர், ஜெ).

ஆனால் மோடியிடம் அது வெளிப்பட்டதே இல்லை. குஜராத் கலவரம் பற்றிய பேட்டியில் அவர் சொன்ன நாய்க்குட்டி உதாரணம் (நாய் சாவுக்கு கார் ஓனர் எப்படி பொறுப்பாவான் எனும் நக்கல்தான் அதில் வெளிப்பட்டது), ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என அப்போது பேசினார், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மறுநாள் இந்தியாவே பீதியில் உறைந்து தெருக்களில் அலைந்தபோது ஜப்பானில் அந்த திகிலை விவரித்து வெடித்து சிரித்தார் மோடி (காசு இருக்கும் ஆனா கல்யாணம் பண்ண முடியாது என்றார்), புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு தமது விளம்பர ஷூட்டிங்கில் இருந்தார். அவரது வெறித்தனமான வேட்டைகளில் ஒன்றான டீமானிடைசேஷன் பற்றி பேசும்போதுகூட (சமீபத்திய ஐந்து மாநில தேர்தலின்போது) வீட்டில் சாவு விழுந்தால் அதைப்பற்றியே எவ்வளவு நாள் பேசுவீர்கள் என்று சொன்னார்.

அம்மா செண்டிமெண்ட் இந்தியாவில் விற்பனையாகும் சரக்கு என்பதை சினிமா பார்த்து அவர் அறிந்துகொண்டிருக்கக்கூடும். அதனால் அம்மாவை வைத்து சில காட்சிகளில் மட்டும் அவர் நடிக்கிறார். மற்றபடி அப்பா அண்ணன்களைப் பற்றிக்கூட அவர் பகிர்ந்துகொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர் நண்பர்கள், அவரை அரசியலில் வளர்த்தவர்கள் என யாரையுமே அவர் குறிப்பிட்டதில்லை, குறிப்பிடவிட்டதும் இல்லை. வெறிபிடித்தது போல தன் பெயரையே உச்சரித்து தன் முகத்தையே ரசித்துக்கொண்டிருக்கும் விநோத ஜீவன்தான் மோடி (தன் பெயரை தன் வாயாலேயே அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் தலைவர் மோடியாகத்தான் இருக்கும்).

அடிமைகளின் மஹாராஜா, மஹாராஜாக்களின் அடிமை ..

மோடியிடம் ஒரு மிதமிஞ்சிய பகட்டையும் திமிரையும் நீங்கள் வெளிப்படையாகக் காணமுடியும். அவர் பயன்படுத்தும் பேனாவின் விலையே ஒன்றேகால் லட்சம், அந்த செய்தியை அவர் குஜராத் முதல்வராக இருக்கும்போதே வர அனுமதித்தார். தின்னும் சோறு முதல் அணியும் சட்டைவரை ஒவ்வொன்றின் பெறுமதியும் ஆயிரக்கணக்கான மக்கள் மாதக்கணக்கில் வயிறார சாப்பிடப் போதுமானவை. இவை குறித்து வெளிவரும் செய்திகளை அவர் மறுக்கவும் முயன்றதில்லை. தேர்தல் அல்லாத காலங்களில் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் அவர் அருகாமையில் இருப்போரை கண்டுகொள்ளாமல் மிதப்பாக நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரபலமானவை (பாரிக்கர் ராணுவ அமைச்சரான பிறகு கோவா முதல்வராக இருந்தவர் மற்றும் உடல் சவால் கொண்ட கவர்னர் ஒருவரது வணக்கத்தை அலட்சியம் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரசித்தம்).

மறுபக்கம் ட்ரம்ப் போன்ற மேலைநாட்டு தலைவர்களிடமும் சினிமா பிரபலங்களிடமும் அவர் காட்டும் பணிவும் பரவசமும் நேர் எதிரானவை. தமது மஹாராஜா முகத்தை அவர் முகேஷ் அம்பானியிடமும் அவர் மனைவியிடமும் காட்டாமல் இருப்பது அவ்வளவு இயல்பாக இருக்கிறது. அவரது இந்த இரண்டு முகமுமே பாசாங்கற்றவை. அதனாலேயே அவற்றை ஆபத்தானதாக கருத வேண்டியிருக்கிறது.

எழைத்தாயின் மகனல்ல, கோழைத்தனத்தின் மகன் ..

எல்லா சர்வாதிகாரிகளும் அடிப்படையில் கோழைகள்தான், என்ன பிரச்சினையென்றால் அவர்கள் அந்த முகத்தை மறைத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் மக்களை முச்சந்தியில் நிறுத்திவிடும். மோடி ஒரு முழுவேக்காட்டு கோழை என்பது பிரத்தியேக ஆதாரங்கள் தேவைப்படாத உண்மை. எதிர்பாராத கேள்வியை கண்டு தண்ணீரை குடித்துவிட்டு ஓடி ஒளிந்த விவகாரம் (கரண் தப்பார் பேட்டி) ஒன்றே போதும், அவர் வீரத்தின் லட்சணத்தை அறிய. மேலும் சில தரவுகள் வேண்டுமென்றால் அவர் பள்ளி கல்லூரி பிள்ளைகளிடம் மட்டும் பொளப்பதை சொல்லலாம். கோழைகள்தான் தமது பராக்கிரமங்களை குழந்தைகளிடம் மட்டும் காட்ட முயல்வார்கள். பெரியவர்கள் ஏதேனும் கேள்விகேட்டு தம்மை அம்பலப்படுத்தலாம் எனும் பயம்தான் காரணம். அதனால்தான் கோழை காமவெறியர்கள் சிறார்களிடம் மட்டும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

மோடியின் பேச்சில் அனேகமாக அழிப்பேன், ஒழிப்பேன் எனும் பதங்களே இருக்கும். காரணம் அவர் தன்னை ஒரு வீரன் என தனக்கே நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உண்மையில், வீரர்களும் தன்னை வீரன் என நம்புபவர்களும் மற்றும் தமது கோழைத்தனத்தைப்பற்றி கவலைப்படாதவர்களும் தன்னை வீரன் என நிரூபிக்க மெனக்கெடுவதில்லை.

ஒப்பனை + ஒத்திகையில்லாமல் மோடி இல்லை ..

மோடியில் முகத்துக்கான ஒப்பனைக்கே நாடு இதுவரை பலகோடி ரூபாய்களை செலவிட்டிருக்கும். பிரான்ஸ் பிரதமரின் மனைவிக்கு மாதம் 20 லட்சம் ரூபாய் ஒப்பனைக்கே செலவாகிறதாம். மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரது மனைவியின் இளமைக்கான ஊசிகளுக்கு மட்டுமே இரண்டரை கோடி செலவானதாக சொல்லப்பட்டது (பிரதமரின் மனைவி திருத்தமாக இருக்க வேண்டுமில்லையா என அதற்கு அவர் நியாயம் சொன்னார்). ஆகவே மோடியின் பல கோடி ‘ஃபேர் அண்ட் லவ்லி’ செலவை சட்டப்பூர்வமாக குறைசொல்ல இயலாது. ஆனால் மோடி தமது பர்சனாலிட்டிக்கே மேக்கப் போடவேண்டிய நிலையில் இருக்கிறார்.

அவருக்கு தமது சொந்த முகத்தைக் காட்ட இஷ்டமில்லை, காட்ட விரும்பும் முகத்துக்கான எந்த தகுதிகளும் இல்லை. கோழை எனும் முகத்தைக் காட்ட முடியாது. மதவெறி முகம் யாவாரத்துக்கு ஒத்துவராது. அவர் தன்னை ஒரு மாவீரன் எனவும் மலையை உடைத்து மயிரைப் பிளப்பவர் எனவும் காட்டிக்கொள்ள விரும்புகிறார். நீங்கள் சூப்பர் மேனாக இருக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். சூப்பர் மேனாக நடிக்க கடுமையான ஒத்திகை தேவைப்படும். ஆர்.எஸ்.எஸ்-காரன் என்றைக்கு உழைத்தான்? ஆகவே ஒத்திகை எனும் தேர்வைத்தான் அவர் எடுத்தாக வேண்டும். அவர் போட்ட எல்லா சீன்களுக்கும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. டீமோ அழுகை (என்னை உயிரோடு கொளுத்துங்கள்), ராணுவ பஜனை என எல்லாமே போதிய ஒத்திகையோடு நடத்தப்பட்ட அரங்கேற்றங்களே. அவர் லைவில் அறிவித்ததாக சொல்லப்படும் டீமோ அறிவிப்பே முன்னதாக படம்பிடிக்கப்பட்டதாக இருக்கலாம் என துறைசார் வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்தார்கள்.

படிக்க:
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
♦ மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

இப்படி சகல அம்சத்திலும் நஞ்சான ஒரு மனிதர் எதையும் உருப்படியாக செய்ய முடியாது. நிஜ முகத்தை மறைக்க வேண்டும்; காட்ட விரும்பும் முகத்துக்கு பயிற்சி எடுத்தாக வேண்டும். தம் முதலாளிகள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டாகவேண்டும். தனக்கு கீழிருப்பவன் பேச்சை கேட்கவே கூடாது. அடுத்தவர்கள் கேள்விகளை கண்டுகொள்ளாமல் ஓட வேண்டும்; ஓடும்போதே வீரனைப்போல கத்தி சீன் போட வேண்டும். இதற்கெல்லாம் இடையிடையே வேண்டியவர்களையும் வேண்டாதவர்களையும் கண்காணிக்க வேண்டும். சுருங்கச்சொன்னால் இருப்பதை மறைக்க வேண்டும் இல்லாததை காட்ட வேண்டும். கடவுளால் மட்டுமே ஆகிற காரியத்தை மோடி செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அவரால் தவறுதலாகக்கூட நல்லது செய்ய முடியாது.

மோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். ‘டெலிபிராம்டரை’ வைத்துக்கொண்டு சொந்தமாக பேசுவதுபோல பேசுவதற்கு ஒரு அபார திறமை தேவை. பல்லாண்டு பயிற்சியின் வாயிலாக அதனை அவர் கைக்கொண்டிருக்கிறார். தனக்குள்ளே விழித்திருக்கும் அடிப்படைவாத மிருகம் ஆதாரப்பூர்வமாக வெளிப்படாதபடிக்கு பூட்டிவைத்திருக்க அவரால் முடிந்திருக்கிறது. பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார். இந்தியாவில் புனிதப்படுத்தப்பட்ட எல்லா அமைப்புக்கள் மீதும் மூச்சா போய், நம்மை மூக்கை பொத்திக்கொள்ள வைத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த உருப்படியான திறமையும் இல்லாத ஒரு சப்பை மனிதனும் பெரிய உயரங்களைத் தொடலாம் எனும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

இப்படியான ஒரு ஆளுமை எப்படி தொடர்ந்து வெற்றி பெறமுடிகிறது என தர்க்கப் பூர்வமாக நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். அதற்கான பதில், போதுமான பணத்தை செலவிட்டால் ஒரு கழுதையைக்கூட மோடி லெவலுக்கு உங்களால் உயர்த்த இயலும் (ஆனால் எவ்வளவு செலவிட்டாலும் கழுதையின் நற்பண்புகளை மோடியிடம் நீங்கள் வெளிக்கொணர இயலாது). இன்றைய தொழில் நுட்பத்தில் பொதுக்கருத்தைக்கூட ஒருவரால் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே மோடியின் எழுச்சி ஒன்றும் அதிசயமல்ல.

வில்லவன் இராமதாஸ்

பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 16

அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ்
அ.அனிக்கின்

கொலம்பசுக்குத் தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்த விவரம் தெரியாமலிருந்தது என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் அவர் இந்தியாவுக்குக் கடற்பாதையைக் கண்டுபிடிக்கின்ற நோக்கத்தோடு புறப்பட்டாரே தவிர, ஒரு புதிய கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு அல்ல.

பெட்டி அவர் காலத்திய பொருளாதார நிபுணர்களைப் போல குறிப்பிட்ட நோக்கங்களோடு சில சமயங்களில் பணத்துக்காக-பிரசுரங்களை எழுதினார். அவர் தன்னைப் பற்றி ”அரசியல் கணிதத்தை ” (புள்ளியியல்) கண்டுபிடித்ததாக மட்டுமே சொல்லிக் கொண்டார். அவருடைய சம காலத்தவர்களும் இதையே அவருடைய முக்கியமான சாதனையாகக் கருதினார்கள். உண்மை என்னவென்றால் அவர் வேறு முக்கியமானவற்றையும் எழுதினார். மதிப்பு, நில வாரம், கூலி, உழைப்புப் பிரிவினை, பணம் ஆகியவற்றைப் பற்றி அவர் அங்கங்கே தற்செயலாகச் சொல்லிச் சென்ற கருத்துக்கள் அரசியல் பொருளாதார விஞ்ஞானத்தின் அடிப்படையாக ஆயின. இந்தப் புதிய கொலம்பஸ் கண்டுபிடித்த உண்மையான “பொருளாதார அமெரிக்கா” இது.

கிறிடோபர் கொலம்பஸ்

பெட்டி முதலாவதாக எழுதிய கருத்தாழமிக்க பொருளாதார நூல் வரிகள், பங்களிப்புகளைப் பற்றி ஒரு ஆய்வுரை என்பதாகும். இது 1662 -ம் வருடத்தில் வெளியிடப்பட்டது. ஒருவேளை அவருடைய முக்கியமான புத்தகம் இது என்று கூடச் சொல்லலாம். புதிய அரசாங்கம் வரிகளை விதிப்பதன் மூலம் அதனுடைய வருமானத்தை எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும் (அவர் நேரடியாகப் பங்கு கொண்டு அல்லது அவருடைய மேற்பார்வையில் இது நடைபெற வேண்டும் என்று அவர் விரும்பினார்) என்பதை எடுத்துக் கூறும் பொழுது, அவர் தம்முடைய பொருளாதாரக் கருத்துக்களையும் மிக முழுமையாக விளக்கினார்.

இப்பொழுது அவர் ஒரு காலத்தில் மருத்துவராக இருந்ததை அநேகமாக மறந்துவிட்டார். அவர் எப்பொழுதாவது தமக்கு அபூர்வமாகக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அல்லது விஞ்ஞானிகளாக இருந்த தமது பழைய நண்பர்களைச் சந்திக்கும் பொழுது மட்டுமே கணிதம், இயக்கியல், கப்பல் கட்டுதல் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவார். அவருடைய ஆராய்ச்சிக் கூர்மையுடைய, சுறுசுறுப்பான மூளை மென்மேலும் அதிகமாகப் பொருளாதாரத்தையும் அரசியலையும் நோக்கித் திரும்பியது.

திட்டங்கள், செயல் திட்டங்கள் வரிச் சீர்திருத்தம், புள்ளியியல் இலாகாவைத் தொடங்குவது, வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வது போன்ற ஆலோசனைகளைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அவருடைய ஆய்வுரையில் இடம் பெற்றன. இவற்றைத் தவிரவும் பல கருத்துக்களை அப்புத்தகத்தில் எழுதியிருந்தார். 18-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான பொருளாதாரப் புத்தகம் ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்பதைப் போல, 17-ம் நூற்றாண்டில் பெட்டியின் ஆய்வுரை மிக முக்கியமான பொருளாதாரப் புத்தகமாக இருந்தது.

இரு நூறு வருடங்களுக்குப் பிறகு கார்ல் மார்க்ஸ் பெட்டியின் ஆய்வுரையைப் பற்றி பின்வருமாறு எழுதினார்: “இப்புத்தகத்தில் அவர் உண்மையில் பண்டங்களின் மதிப்பை அவற்றில் அடங்கியிருக்கும் உழைப்பின் அளவின் மூலம் நிர்ணயிக்கிறார்.” (1)  “உபரி மதிப்பை நிர்ணயிப்பது மதிப்பை நிர்ணயிப்பதைச் சார்ந்திருக்கிறது.” (2) மேலே கூறப்பட்டிருக்கும் வார்த்தைகள் அந்த ஆங்கிலச் சிந்தனையாளரின் விஞ்ஞான சாதனையின் சாராம்சத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றன, அவருடைய வாதத்தின் போக்கைத் தொடர்வது சுவாரசியமானதாகும்.

புதிய, முதலாளித்துவ யுகத்தின் மனிதனுக்குரிய கூர்மையான அறிவோடு அவர் முதலில் எழுப்பும் பிரச்சினை அடிப்படையில் உபரி மதிப்பைப் பற்றியதாகும். “…. நாம் முன்னர் குறிப்பிட்ட வட்டி என்று சொல்லப்படுகின்ற பணத்தின் வாடகை, வீடுகள், நிலத்தின் வாடகை ஆகியவற்றின் மர்மமான தன்மையை விளக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.” (3) 17 -ம் நூற்றாண்டில் மனிதனுடைய உழைப்பு உபயோகிக்கப்படுகின்ற முக்கியமான பொருளாக நிலம் இன்னும் இருந்தது. எனவே பெட்டியைப் பொறுத்த வரை, உபரி மதிப்பு என்பதை நில வாரத்தின் வடிவத்தில் தான் எப்போதும் காண்கிறார்.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?
♦ பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?

அது தொழில் துறையில் கிடைக்கும் லாபத்தையும் மறைத்துக்கொள்கிறது. அவர் வாரத்திலிருந்தே வட்டியையும் பெறுகிறார். பெட்டி வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பற்றி அநேகமாக அக்கறை காட்டவில்லை. இது அவர் காலத்திய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டுகிறது. வாரத்தின் மர்மமான தன்மையைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதும் சுவாரசியமானதாகும். அது ஒரு மாபெரும் விஞ்ஞானப் பிரச்சினை, அந்த நிகழ்வின் வெளித்தோற்றம் உள்ளே இருப்பதை மறைக்கிறது என்று அவர் உணர்கிறார். இதற்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுவது வழக்கம்.

ஒரு நபர் (இவர் இது வரை கணிதப் பாடபுத்தகங்களின் கதாநாயகராக இருந்தார்; இனிமேல் பொருளாதார ஆய்வுரைகளுக்கும் கதாநாயகராகப் போகிறார்) தானிய உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருடைய உற்பத்திப் பொருளில் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் விதைப்பதற்கென்று ஒதுக்கப்படும். இன்னொரு பகுதி அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் (அதைக் கொடுத்துப் பரி வர்த்தனை செய்வதும் இதில் அடங்கும்) செலவழிக்கப்படும்; “மீதமிருக்கின்ற தானியம் நிலத்துக்கு அந்த வருடத்துக்கு உண்மையான, இயற்கையான வாரமாகும்.” இங்கே உற்பத்திப் பொருள், அதன் மதிப்பும் அதை உற்பத்தி செய்த உழைப்பும் மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1) செலவழிந்து போன உற்பத்திச் சாதனங்களின் இடத்தை நிரப்புகின்ற பொருளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பகுதி; இங்கே விதைகள்;(4)

2) அந்த நபர், அவர் குடும்பத்தின் தேவைகளுக்கு அவசியமான பகுதி;

3) உபரி அல்லது நிகர வருமானம். கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் பகுதி மார்க்ஸ் கூறிய உபரி உற்பத்திப் பொருள் மற்றும் உபரி மதிப்புடன் பொருந்துகிறது.

பெட்டி மற்றொரு கேள்வியையும் எழுப்புகிறார். ”… ஆங்கில நாணயத்தில் இந்த தானியம் அல்லது வாரத்தின் மதிப்பு என்ன? இன்னொரு நபர் இதே கால அளவுக்குத் தன்னைப் பண உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் அவருக்கு ஏற்படும் செலவுகள் போக மிச்சப் படுகின்ற தொகைக்கு இது சமமானது என்று சொல்வேன். உதாரணமாக, ஒருவர் வெள்ளி கிடைக்கின்ற தேசத்துக்குப் போகட்டும்; அங்கே அதைத் தோண்டி எடுத்து சுத்தப் படுத்தி பணம் மற்றும் இதரவைகளாகச் செய்து தானியத்தை விதைத்திருக்கும் நபர் இருக்கின்ற இடத்துக்கு அதைக் கொண்டுவரட்டும். அந்த நபர் வெள்ளியைத் தோண்டிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான உணவையும் உடைகளையும் இதரவைகளையும் சேகரித்துக்கொள்கிறார். ஒரு நபர் கொண்டுவரும் வெள்ளி மற்றொரு நபர் உற்பத்தி செய்த தானியத்துக்குச் சமமானதாக மதிப்பிடப்பட வேண்டும் மென்று நான் சொல்வேன். வெள்ளியின் அளவு இருபது அவுன்சாகவும் தானியத்தின் அளவு இருபது புஷல் களாகவும் (5) இருந்தால், ஒரு புஷல் தானியத்தின் விலை ஒரு அவுன்ஸ் வெள்ளி என்பது பெறப்படும்.”(6)

இங்கே தானியம், வெள்ளியின் உபரிப் பகுதிகளை மதிப்பின் அடிப்படையில் சமம் என்று சொல்வது, இரண்டின் மொத்த உற்பத்திப் பொருள்களையும் சமமாக ஆக்குவதைப் போன்றதுதான். எல்லா ஒதுக்கீடுகளும் போக மிச்சப்படும் இருபது புஷல் தானியத்துக்கும் விதை, விவசாயியின் வாழ்க்கைத் தேவை ஆகியவைகளையும் சேர்த்து முப்பது புஷல் தானியத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. மேலே குறிப்பிடப்பட்ட இருபது அவுன்ஸ் வெள்ளிக்கும் இது பொருந்தும். வேறொரு பகுதியில் பெட்டி உழைப் பளவை மதிப்புக் கருத்தைக் கலப்பற்ற வடிவத்தில் சொல்லுகிறார். ”ஒரு நபர் ஒரு புஷல் தானியத்தை உற் பத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்கின்ற அதே நேரத்தில், பெரு நாட்டில் பூமியிலிருந்து ஒரு அவுன்ஸ் வெள்ளியை எடுத்து லண்டனுக்குக் கொண்டுவர முடியுமென்றால், ஒன்று மற்றதின் இயற்கையான விலையாகும்.” (7)

இங்கே பெட்டி சாராம்சத்தில் மதிப்பு விதியை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த விதி அதிகச் சிக்கலான வகையில், ஒரு பொதுவான போக்காக மட்டுமே அமுலாகி வருவதை பெட்டி தெரிந்து கொண்டிருக்கிறார். இதைப் பின்வரும் பகுதியில் இது அதிசயிக்கத்தக்க பகுதியே – கூறுகிறார்: ”மதிப்புகளைச் சமானப்படுத்துவதிலும் சம நிலைக்குக் கொணர்வதிலும் இதுவே அடிப்படையானது என்று நான் சொல்வேன். எனினும் இந்த அடிப்படையின் மேற்கட்டுமானம் பல்வகையானதும், மிகவும் சிக்கலானதும் ஆகும் என்று சொல்வேன்…'(8)

ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உற்பத்தியில் செலவிடப்பட்டிருக்கும் உழைப்பு நிர்ணயிக்கிறது. பரிவர்த்தனை மதிப்புக்கும் அதன் உண்மையான சந்தை விலைக்கும் இடையே பல இடைநிலைக் கட்டங்கள் இருக்கின்றன. இவை பண்டத்தின் விலையை நிர்ணயிக்கும் நிகழ்வுப் போக்கை அதிக அளவுக்குச் சிக்கலாக்குகின்றன. பெட்டி அதிசயிக்கத்தக்க நுண்ணறிவோடு விலையை உருவாக்கும் காரணிகள் பலவற்றை மாற்றுப் பண்டங்களின் தாக்கம், புது விதமான பண்டங்கள், புது நடைப்பாளிகள், போலியான செயற்கைப் பொருள்கள், நுகர்வுப் பழக்கங்கள் முதலியனவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றை நவீனப் பொருளாதார நிபுணர்களும் திட்டங்களைத் தயாரிப்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படிக்க:
பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !
♦ ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி

மதிப்பைப் படைத்துத் தருகின்ற சூக்குமமான உழைப்பின் ஆராய்ச்சியை நோக்கி பெட்டி முதல் காலடிகளை எடுத்து வைத்தார். ஏனென்றால் ஸ்தூலமான உழைப்பின் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு ஸ்தூலமான பண்டத்தை, ஒரு பயன் மதிப்பைப் படைக்கிறது. விவசாயியின் உழைப்பு தானியத்தை, நெசவாளியின் உழைப்பு துணியை, இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைப் படைக்கிறது. ஆனால் ஒவ்வொரு வகையான உழைப்பிலும் பொதுவான ஒரு அம்சம் இருக்கிறது; அது எல்லா வகையான உழைப்பையும் ஒப்பிடக் கூடியதாகச் செய்கிறது; எல்லாப் பொருள்களையும் பண்டங்களாக, பரிவர்த்தனை மதிப்புக்களாகச் செய்கிறது. உழைப்பு நேரத்தைச் செலவிடுதல், பொதுவாகத் தொழிலாளியின் உழைப்புச் சக்தியைச் செலவிடுதல் என்பதே அந்தப்பொது அம்சமாகும்.

பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.

பெட்டி பொருளாதார விஞ்ஞானத்தின் ஸ்தாபகர், அதன் முன்னோடி. எனவே அவரிடமிருந்து சம நிலையான, முழுமையான பொருளாதாரத் தத்துவத்தை ஒருவர் எதிர் பார்க்கக் கூடாது. அவர் வாணிப ஊக்கக் கொள்கையில் சிக்கிக் கொண்டிருந்தபடியால், விலையுயர்ந்த உலோகங்களைத் தோண்டி எடுப்பதற்குச் செலவழிக்கப்படும் உழைப்பு, மதிப்பை நேரடியாகவே உருவாக்குகின்ற விசேஷமான ரகத்தைச் சேர்ந்த உழைப்பு என்ற பிரமையை அவர் தன்னிடமிருந்து அகற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த உலோகங்களில் மிகத்தெளிவான முறையில் அடங்கியிருந்த பரிவர்த்தனை மதிப்பை, அந்த மதிப்பின் ஆதாரமாகிய, எக்காலத்துக்கும் உரிய மனிதனின் சூக்குமமான உழைப்பைச் செலவழித்தல் என்பதிலிருந்து பிரிப்பதற்குப் பெட்டியால் முடியவில்லை.

மதிப்பின் அளவை நிர்ணயிப்பது செலவிடப்பட்ட சமூகத்துக்கு அவசியமான உழைப்பு; அந்த உழைப்பு பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட மட்டத்தில் குறியடையாளமாகவும் சராசரியாகவும் இருக்கிறது என்பதை அவர் சிறிது கூட நினைக்கவில்லை. சமூகத்துக்கு அவசியமான உழைப்பைக் காட்டிலும் அதிகமான உழைப்பைச் செலவிட்டால் அந்த உழைப்பு வீணாகிவிடுகிறது; அது மதிப்பைப் படைக்காது. பிற்காலத்தில் இந்த விஞ்ஞானம் அடைந்த வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் பொழுது அவருடைய எழுத்துக்களில் பெரும்பகுதி பலவீன மானதாக அல்லது அடியோடு தவறாகவும் இருக்கிறதென்பதை ஒத்துக்கொள்வது அவசியம். ஆனால் இங்கே எது முக்கியமென்றால், அவர் தன்னுடைய கருத்தில் – உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தில் உறுதியாக நிற்கிறார், பல ஸ்தூலமான பிரச்சினைகளில் அதை வெற்றிகரமாகக் கையாள்கிறார் என்பதே.

அவர் உபரிப் பொருளின் தன்மையை எப்படி விளக்கினார் என்பதை முன்னர் பார்த்தோம். ஆனால் அதில் ஒரு சாதாரணமான பண்ட உற்பத்தியாளர் உதாரண மாகக் காட்டப்படுகிறார். தான் உற்பத்தி செய்த உபரிப் பொருளை அவரே தனக்கு ஒதுக்கீடு செய்து கொள்கிறார். உற்பத்தியில் கணிசமான பகுதி முன்பே கூலி உழைப்பைக் கொண்டு செய்யப்பட்டு வருவதை பெட்டி அவர் காலத்தில் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

உபரிப் பொருள் என்பது தொழிலாளி தனக்காக மட்டும் உற்பத்தி செய்வதல்ல; நில உடைமையாளர்களுக்கும் மூலதனத்தின் சொந்தக்காரர்களுக்காகவும் உற்பத்தி செய்யப்படுகிறது, உண்மையில் அவர்களுக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற முடிவுக்கு அவர் வருவது நிச்சயம். அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்பதைக் கூலியைப் பற்றி அவர் எழுதியுள்ள சிந்தனைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

ஒரு தொழிலாளியின் கூலி வாழ்க்கைக்கு அவசியமான குறைந்தபட்சத் தேவையைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது, அவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதினார். அவன் ”வாழ்க்கைக்கும், உழைப்புக்கும், இனப்பெருக்கத்துக்கும்” அவசியமானதற்கும் அதிகமாக அவன் பெறக் கூடாது. அதே சமயத்தில் தொழிலாளியின் உழைப்பினால் உருவாக்கப்படும் மதிப்பு முற்றிலும் வேறு விதமான பரிமாணத்தைக் கொண்டது, அது எல்லா சமயங்களிலும் கணிசமான அளவுக்குப் பெரியது என்பதை பெட்டி உணர்ந்திருக்கிறார். இந்த வித்தியாசம் தான் உபரி மதிப்பின் தோற்றுவாய்; இது பெட்டியின் எழுத்துக்களில் நில வாரத்தின் வடிவத்தில் தோன்றுகிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) K. Marx, Theories of Surplus-Value, Part 1, Moscow, 1969, p. 355.
(2) Ibid.
(3) W. Petty, The Economic Writings, Vol. 1, Cambridge, 1899,
(4) பெட்டி உற்பத்திச் சாதனங்களின் இதர செலவினங் களை, உதாரணமாக உரம் குதிரை, ஏர், கருக்கறிவாள் ஆகிய வற்றின் தேய்மானத்தைச் சேர்க்காமல் விட்டுவிடுகிறார். இந்தச் செலவுகளைத் தானியத்தைக் கொடுத்து ஈடு செய்ய முடியாது (ஒருவேளை அதனால் தான் பெட்டி இதைச் சேர்க்காது விட்டார் போலும்); மதிப்பைக் கொடுத்தே அவற்றை ஈடுசெய்ய வேண்டும். உதாரணமாக, பத்து வருடங்களுக்குப் பிறகு உழவனுக்குப் புதிய குதிரை வாங்க வேண்டியிருக்கும். எனவே எதிர்காலத்தில் குதிரை வாங்கு வதற்காக அதன் விலையில் ஒரு பகுதியை ஒவ்வொரு வருட அறுவடையிலிருந்தும் அவன் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
(5) புஷல் என்பது தானிய நிறுத்தல் அளவாகும்.
(6) W. Petty, The Economic Writings, Vol. 1, Cambridge, 1899, p. 43.
(7) Ibid., p. 50.
(8) Ibid., p. 44.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?

“…நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள்” என்று தி.மு.க. பேச்சாளர்கள் தங்கள் கட்சியைப் பற்றி மேடையில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். பெரியாரைத் தாக்குப் பிடித்து நின்று, திராவிட இயக்கத்தில் ஊடுருவி – உடைத்து – ஊழலில் ஊறவைத்து, அதனைக் கைப்பற்றியிருக்கும் தமிழகத்துப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள்.

பார்ப்பனர் ஆதிக்கம்ஜெயலலிதாவின் ஊழல் மறைக்கவே முடியாதவாறு நாறும்போதும் சரி, பார்ப்பனப் பொறுக்கித்தனம் அல்லது சங்க பரிவாரத்தின் பாசிசத் தாக்குதல்கள் நியாயப்படுத்தவே முடியாத அளவுக்குத் தலைவிரித்தாடும்போதும் சரி, சம்பவாமி யுகே யுகே என்று பார்ப்பன மேன்மையை காப்பாற்றுவதற்கு அந்தந்த சூழலுக்குப் பொருத்தமான அவதார புருஷர்கள் களமிறங்குகிறார்கள்.

இதன் பச்சையான வடிவம் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. வினருடன் பங்கேற்கின்ற சமூக ஆர்வலர்கள் அல்லது வல்லுநர்கள். நைச்சியமான வடிவம் அறிவுத்துறையினர். ஆண்டாள் விவகாரம் குறித்த காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கு ஒரு சான்று. வளைத்து நெளித்து அது கூறுகின்ற கருத்து இதுதான்.

வைரமுத்து எனப்படுபவர் விளம்பரம் தேடும் ஒரு அரைவேக்காடு. பரபரப்பைக் கிளப்பும் நோக்கத்துக்காக, தெரிந்தேதான் அவர் கட்டுரைக்கு தொடர்பேயில்லாமல் இந்த வாக்கியத்தை நுழைத்திருக்கிறார். பிறரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் தேவதாசிகளுக்கும் தன்னைத்தானே கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்டாளுக்குமிடையிலான வேறுபாடு தெரியாதவர். ஆண்டாள் தேவதாசியே ஆனாலும், கவிஞராகத்தான் அவரைக் காணவேண்டும். அவரால் ஆண்டாளின் கவித்துவப் பரப்பை அணுக முடியவில்லை. வைரமுத்துவுக்கு எதிராக இத்தனை நியாயங்கள் இருந்த போதிலும், பெரும்பான்மைத் தாலிபான்களிடமிருந்து வைரமுத்துவின் கருத்துச் சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – இந்த தலையங்கத்தின் தலைப்பு, ”அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக்கூட்டும் தாலிபானியம்.”

”வைரமுத்து பிரச்சினை முக்கியமில்லை. இந்துக்களை இழிவுபடுத்தியோ, ஒரு சமூகத்தினரை மட்டும் விமரிசித்தோ யாரும் பேசக்கூடாது என்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று திருவல்லிக்கேணியில் கூடிய பூணூல் அணிந்த ஹிந்துக்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். இருந்த போதிலும், காலச்சுவடுவுக்குள் இருக்கும் லிபரல் மனச்சாட்சி அவர்களைப் பார்ப்பனர்கள் என்றோ, பார்ப்பனியம் என்றோ அழைப்பதை அனுமதிக்கவில்லை. எனவேதான், அக்கிரகாரத்தை அடையாளப்படுத்த ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான் என்ற சொல்லை இறக்குமதி செய்கிறது.

படிக்க:
♦ நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !

அப்போதும் தாக்குதல் தாலிபான் மீது இல்லை. தலையை எடுப்பேன், நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் பேசி வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதமி அவார்டு கொடுத்ததைப் போல மதிப்பைக் கூட்டிவிட்டீர்களே என்பதுதான் அவர்களது அங்கலாய்ப்பு.

”கழுதையாகவே இருந்தாலும் அது எங்கள் கடவுள். எங்கள் மத நம்பிக்கை. அதைப் பற்றி எவனும் பேசக்கூடாது” என்கிறது பார்ப்பனக் கும்பல். நாச்சியார் திருமொழியின் கற்பூர வாசனை தெரியாத ஒரு கழுதையை அடித்து, அதைப் பிரபலமாக்கி விட்டீர்களே என்று வருந்துகிறது காலச்சுவடு…. (கார்ப்பரேட் காவி பாசிசம் – நூலின் “பார்ப்பனப் பொறுக்கிகள்” என்னும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

இதைப் போன்ற 29 கட்டுரைகள்… கீழ்கண்ட 9 தலைப்புகளின் கீழ்….

  1. கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்படை
  2. கொள்ளையிடப்படும் பொதுத்துறை வங்கிகள்
  3. விவசாயிகளின் மீதான இரட்டைத் தாக்குதல்
  4. கார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்
  5. பார்ப்பனியத்தின் கோரத்தாண்டவம்
  6. ஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்
  7. ஆர்.எஸ்.எஸ்.–ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்
  8. ஊழல் சட்டப்பூர்வமாகிறது
  9. பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி?

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – “கார்ப்பரேட் காவி பாசிசம்”. இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு ! உடன் வாங்குங்கள்! கார்ப்பரேட் காவி பாசிசம்!

வெளியீடு :
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

பக்கம்: 208
விலை :
100
முதல் பதிப்பு : மார்ச் 2019

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Add to cart

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)



Paypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)




தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

உங்கள் குழந்தைகளுடன் ஆசிரியர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார் ?

0

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 5

அமனஷ்வீலி

ஆசிரியர் வேலையில் நேர ஒதுக்கீடு

செப்டெம்பர் மாதம் பிறக்கும் தருவாயில், கல்வியாண்டு முழுவதற்கும், நான்காண்டு கால ஆரம்பக்கல்வி காலம் முழுவதற்குமான எனது எதிர்காலப் பள்ளி நாட்கள், பாடவேளைகளைக் கணக்கிடுவது, நான் குழந்தைகளுடன் நேரடியாக கலந்து பழகும் நிமிடங்களைக் கூட எண்ணிப் பார்ப்பது என் வழக்கம். இப்பழக்கம் எப்போது, ஏன் தோன்றியது என்று கூட எனக்கு நினைவில்லை. இதனால், நேரப் பற்றாக்குறைக் கவலை என்னை எப்போதுமே ஆட்கொண்டது, ஆசிரியர் வேலைக்கு அர்ப்பணிக்காமல் வெறுமனே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வு என்னிடம் எப்போதுமே நிறைந்திருக்கும்.

நான் சிறுவனாக இருந்த போது கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து அறுவடைக்குப் பிந்திய வயலில் எஞ்சியிருந்த கதிர்களைப் பொறுக்குவது வழக்கம். நாங்கள் ஒவ்வொரு கதிராகப் பொறுக்கினோம், ஆனால் அவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தபோது எவ்வளவு தானியத்தை இழக்க நேரிட்டிருக்கும் என்று பெரியவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

சரி, வீணாகும் நொடிகளையும் நிமிடங்களையும் எப்படி ஒன்று திரட்டுவது?

குழந்தைகள் நிறைந்துள்ள வகுப்பறைகளும் பள்ளித் தாழ்வாரங்களும் கல்வி கற்பிக்கும், அவர்களை வளர்த்து ஆளாக்கும் ஒரு வயல் போன்றும், ஆசிரியர் எனும் இயந்திரம் இடையறாது இவ்வயலில் பாடுபட்டு விதைகளை விதைத்தும் அறுவடை செய்தும் உழைப்பதாயும் சில சமயங்களில் எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் சுவடின்றி மறைந்து போன ஆயிரக்கணக்கான நொடிகளையும் நிமிடங்களையும் மட்டும் மீண்டும் சேகரிக்கவே முடியாது.

கவனக் குறைவான விவசாயி கோதுமையை விதைக்கும் போது விதைகளை கவனமின்றி இடப்புறமும் வலப்புறமும் வாரியிறைப்பதைப் போல், வயல்களுக்கு வெளியிலும் உழுது பண்படுத்தப்படாத நிலத்திலும் இவை விழுவதை கவனிக்காமலிருப்பது போல் கவனக்குறைவான ஆசிரியரும் திரும்பக் கிடைக்காத, விலை மதிப்பற்ற படிப்பு நேரத்தை வலப்புறமும் இடப்புறமுமாகவும் ஜன்னலுக்கு வெளியிலும் வாரியிறைக்கிறார். இந்த மதிப்புமிக்க நொடிகளை ஒன்று திரட்டி சிக்கனமாக, உட்பொருளோடு, கவனமாகச் செலவழித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வித கஷ்டமும் இன்றி நாம் பாடநேரத்தை குறைத்து இடைவேளையை அதிகப்படுத்தலாம். முக்கியமானது என்னவெனில் குழந்தைகளின் உரிய வளர்ச்சி பாதிக்கப்படாது. ஏனெனில் படிப்பு நேரத்தில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பள்ளிச் சிறுவனுக்கும் குறிப்பிட்ட தருணத்தில்தான் வேண்டுமே தவிர, முன்னரோ பின்னரோ அல்ல.

படிப்பு நேரத்தை வீணாக்கக் கூடாது, ஏனெனில் இந்நேரம் நமக்குப் போதாது, இதைப் பெருக்கவோ, தடுத்து நிறுத்தவோ யாராலும் முடியாது.

படிக்க:
மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !
♦ கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !

இச்சிந்தனைகளுடன், நான் ஒரு தாளை எடுத்து அதில் செப்டெம்பர் முதல் மே மாதம் வரையிலான கல்வியாண்டின் காலண்டரை தீட்டுகிறேன். பின், ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு வேலை நாட்கள், எவ்வளவு பாடவேளைகள், எவ்வளவு சனி, ஞாயிற்றுக் கிழமைகள், எவ்வளவு பண்டிகைகள், மற்ற விடுமுறைகள் என்று நிமிடங்களில் கணக்கிடுகிறேன்.

என் நடைமுறையில் நான் நீண்ட நாட்களாக ஐந்து வேலைநாள் வாரத்தையும் 35 நிமிடப் பாடவேளை முறையையும் பின்பற்றி வருகிறேன். சனிக்கிழமைகளில் குழந்தைகள் வீட்டிலிருப்பார்கள், பெற்றோர்கள் விரும்பினால் இவர்களை பள்ளிக்குக் கூட்டிவரலாம். நான் அவர்களுக்காக விளையாட்டுக்களை ஏற்பாடு செய்வேன், உலாவக் கூட்டிச் செல்வேன், கலைக்காட்சி கூடங்களுக்கும் விலங்கியல் பூங்காவிற்கும் சர்க்கசிற்கும் திரைப்படங்களுக்கும் கூட்டிச் செல்வேன். இதனால் பின்வருமாறு நேரம் பங்கிடப்படுகிறது.

ஆசிரியர் வேலையில் நேர ஒதுக்கீடு
ஓராண்டில் பாடங்கள் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை

 

170

 

பூஜ்ஜிய வகுப்பில் பாடங்களின் எண்ணிக்கை

 

680 = 23,800 நிமிடங்கள்

 

1,2,3 வது வகுப்புகள் ஒவ்வொன்றிலும் பாடங்களின் எண்ணிக்கை

 

850 = 29,750 நிமிடங்கள்

 

முதல் நான்காண்டு கால ஆரம்பக் கல்வியில் பாடங்களின் எண்ணிக்கை

 

3,230 = 113,050 நிமிடங்கள்

 

குழந்தைகளுடன் ஆசிரியர் நெருங்கிக் கலந்து பழகும் நேரம் (பாடங்கள், இடைவேளைகள், பாடங்களுக்குப் பின்), பூஜ்ஜிய வகுப்பு

 

32,300 நிமிடங்கள்

 

1,2,3 வது வகுப்புகள் ஒவ்வொன்றிலும் குழந்தைகளுடன் ஆசிரியர் நெருங்கிக் கலந்து பழகும் நேரம் 39,950 நிமிடங்கள்
முதல் நான்காண்டுக் கால ஆரம்பக் கல்வியின் போது குழந்தைகளுடன் ஆசிரியர் நெருங்கிக் கலந்து பழகும் நேரம் 154,700 நிமிடங்கள்

 

கல்வியாண்டு எவ்வளவு பெரியது என்று தோன்றுகிறது அல்லவா! ஆனால் வளரும் மனிதனை மாற்றியமைக்கும் நிகழ்ச்சிப் போக்கு எவ்வளவு சிறு எண்களில் அடங்கி விடுகிறது! 3,230 பள்ளிப் பாடங்களில் குழந்தை உடல் வளர்ச்சியிலும் மூளை வளர்ச்சியிலும் அடையாளம் தெரியாதபடி வளர்ந்து விடுகிறான். இப்பாடங்கள் அதிகமா, குறைவா? இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா?

இங்கே இன்னொரு கணக்கையும் பார்ப்போம். முதல் நான்காண்டு காலக் கல்வியின் போது குழந்தைகளுடன் ஆசிரியர் கலந்து பழகும் நேரத்திற்கும் குழந்தைகளின் நான்காண்டுக் கால வாழ்நாட்களுக்கும் உள்ள விகிதம் என்ன? கணக்குப் போடும் சிறு இயந்திரத்தில் 154,700 என்று போட்டு, அதை நூறால் பெருக்கி, 2,103,380 ஆல் வகுக்கிறேன். … சுமார் 7% என்ற விடை வருகிறது. இவ்வளவு குறைவா? சிறு பள்ளி மாணவனின் வாழ்நாளில் 7% நேரம் மட்டுமே பள்ளிக் கல்விக்குச் செல்கிறது!

எனக்குக் கவலை உண்டாகிறது. ஒருவேளை ஐந்து நாள் பாடத்திற்குப் பதில் ஆறு நாள் பாடம் அவசியமோ! பாட வேளையை 10 நிமிடம் குறைக்க வேண்டாமோ! ஆனால் குழந்தைகளுக்கு வேலை செய்ய உதவ, நன்கு சிந்திக்க உதவ எனக்கு குறுகிய பாடவேளைகள் தேவை.

இப்படியாக, ஆசிரியர் வேலையில் எனக்கு நேரப் பற்றாக்குறை. என்ன செய்வது? வாழ்க்கையை நேசித்து, செய்யும் காரியத்தில் ஈடுபாடுள்ள ஒருவனுக்கு எப்போதுமே நேரம் போதாது. நாளை முதல் நான் கடைப்பிடிக்கப் போகும் உறுதி மொழியை எழுதிக் கொள்கிறேன்:

எனது ஆசிரியர் தொழிலில் நேரப் பற்றாக்குறை இருக்கும் போது, கல்வி மற்றும் வளர்ப்பு சம்பந்தமான மிக சிக்கலான பிரச்சினைகளை ஒரு சில நொடிகளில் தீர்க்கும் கட்டாயத்தை நான் அடிக்கடி சந்திக்க நேரிடும். இப்பிரச்சினைகள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை முழுவதையுமே மாற்றிவிடக் கூடியவை. எனவே நான் இதில் அவசரப்படக் கூடாது, குழந்தையின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பானவன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

0

“மறைமுக பாட திட்டம்” என்கிற சொற்றொடர் 1960-களில் கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த அறிவுஜீவியும், கலாச்சார விமர்சகருமான ஹென்றி கிரோக்ஸ் அதைப் பற்றிச் சொல்லும்போது “வெளிப்படையான பாடத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் நாம் பள்ளிகளில் கற்றுக் கொள்ளும் விசயங்களும்தான் அவை” என்கிறார்.

அதாவது, ஒரு கல்விக்கூடத்தின் நோக்கங்களாக வெளிப்படையாக சொல்லப்படாத விசயங்களை வெறுமனே பள்ளிக்குச் செல்லும் அனுபவத்தின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்வதையே மறைமுக பாடத்திட்டம் என்கிறார்கள். மதிப்பீடுகள், அறம் சார்ந்த விசயங்கள், கண்ணோட்டங்கள் உள்ளிட்ட வெளிப்படையாக வகுப்பறையில் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படாத விசயங்களை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

கல்விக் கூடங்களுக்கே மறைமுக பாடதிட்டம் இருக்கும்போது அரசாங்கங்களுக்கும் நிச்சயமாக அது இருக்கத்தான் செய்கிறது.

ஒரு அரசாங்கத்தின் மறைமுக பாடதிட்டம் என்பது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் இருந்து வேறுபட்டது. அது தன்னை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அரசின் தலைவர்களுடைய நடவடிக்கைகளின் ஊடாகவும் மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் செய்திகளின் ஊடாகவும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தலைவர்கள் எதைக் கண்டிக்கிறார்கள் – எதைக் கண்டிப்பதில்லை, எவற்றிற்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுகிறார்கள் என்பதன் மூலமும், முக்கியமாக சமூகத்தின் வலுகுன்றிய பிரிவினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதன் ஊடாகவும் மறைமுகப் பாடத்திட்டம் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

ஒரு அரசாங்கத்தின் மறைமுக பாடத்திட்டம் நீண்ட நாட்களுக்கு மறைமுகமாகவே இருக்காது. ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது அதுவே நாட்டின் நடைமுறை எதார்த்தமாக மாறியிருப்பதோடு, பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

மறைமுகப் பாடத்திட்டம் என்பது பெரும்பாலும் உணர்வுத் தளத்தில், ஆழத்தில் (subconscious) செயல்படக் கூடியதாகும். எனவே நாம் எந்தளவுக்கு அதன் செல்வாக்குக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை. எனவே பல சந்தர்பங்களில் “விசயங்களுக்கு பின்னால் இருக்கும் விசயங்களில்” நாம் எந்தளவுக்கு ஆழ்ந்து போயிருக்கிறோம் என்பதை உணர்வதற்கே நீண்ட காலம் பிடிக்கிறது. பழைய கதை ஒன்றில் சொல்வதைப் போல், காய்ச்சப்படும் தண்ணீர் பாத்திரத்தில் விடப்பட்ட தவளை தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் சமைக்கப்பட்டு விடுவதைப் போல் நாமும் மெல்ல மெல்ல மாற்றப்படுகிறோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்த மறைமுக பாடத் திட்டம் நம்மை எவ்வாறு மாற்றியுள்ளது? நாம் நமக்குள் ஈர்த்துக் கொண்ட மிகப் பெரிய “பாடங்களும்” செய்திகளும் எவையெவை? ஒரு நீர்வீழ்ச்சியைப் போல் நம்மீது கொட்டப்படும் சமூக வலைத்தள கருத்துக்கள் மற்றும் முடிவற்ற பிரேக்கிங் நியூஸ்களையும் ஊடுருவிப் பார்க்கும் போது அவை நமக்கு சில செய்திகளைத் தெரிவித்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

என்ன மாதிரியான செய்திகள்?

ஒரு குறிப்பிட்ட மதம் பிற மதங்களை விட உயர்வானது; அந்த மதத்தைச் சேர்ந்த இந்தியர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மையை கணக்கில் கொள்ளக் கூடாது என அதிகாரத்தில் உள்ளவர்களால் நமக்குச் சொல்லப்படுவதோடு, மதச் சிறுபான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறோம்.

அதே போல் ஏழைகளை விட பணக்காரர்களுடன் தனக்குள்ள சார்பை அதிகாரம் மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. நாம் நல்லவர்கள் தண்டிக்கப்படுவதையும், அயோக்கியர்கள் தப்பிப்பதையும் பார்க்கிறோம். வல்லான்மையே சரியானது என நமக்குச் சொல்லப்படுகின்றது. நமக்குச் சொல்லப்படும் செய்திகள் அனைத்தின் அடியாழத்திலும் விசத்தன்மை கொண்ட நம்மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !
♦ கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை

இந்தச் செய்திதான் மிகக் குறிப்பாக எதிர்க் கருத்துக்களை அடித்து நொறுக்குவதாய் உள்ளது. அதனை சாராம்சமாய் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம் : “எதுவும் தவறில்லை”

யோசித்துப் பாருங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் எதையெல்லாம் முக்கியமானது என்று கருதினோமோ அதையெல்லாம் முக்கியமற்றது என திரும்பத் திரும்ப சொல்லி வந்ந்துள்ளனர். நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது என்ன?

“உண்மை ஒரு பொருட்டல்ல”
“சட்டம் ஒரு பொருட்டல்ல”
“ஏழைகள் ஒரு பொருட்டல்ல”
“ஒற்றுமை ஒரு பொருட்டல்ல”
“கல்வி ஒரு பொருட்டல்ல”

ஆச்சார்யா அடல்

உண்மை ஒரு பொருட்டல்ல : அப்படி இருந்திருந்தால் இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் அரசின் செயல்பாடுகளை தீவிரமாகவும், புறநிலை எதார்த்தங்களோடு பொருத்தியும் விமர்சித்திருக்கும். உண்மையை ஒரு பொருட்டாக கருதியிருந்தால், “கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்” நடத்திய மறைபுலனாய்வில் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள்.

சட்டம் ஒரு பொருட்டல்ல : இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து சில முக்கியமான ஆவணங்கள் களவு போய் விட்டதாகச் சொல்கிறார். அதற்கு சில நாட்கள் கழித்து தான் அப்படிச் சொல்லவில்லை… ஒரு சில ஆவணங்களின் நகல் பிரதிகளே களவு போயின என்று மாற்றிப் பேசுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதன் ஊடாக இந்த நாட்டின் சட்டங்கள் மலிவானதொரு நகைச்சுவை என்பதாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது.

செயல்பாட்டாளரும் அறிவுஜீவியுமான சுதா பரத்வாஜ் போன்றோர் தேசத்தின் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்; மறுபுறம் பாபு பஜ்ரங்கி சுதந்திரமாக நடமாடுகிறார் – இதன் மூலம் சட்டம் ஒரு பொருட்டே அல்ல என்று நம்மிடம் சொல்கிறார்கள்.

படிக்க:
Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
♦ ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !

ஏழைகள் ஒரு பொருட்டல்ல : அப்படி ஏழைகளை ஒரு பொருட்டாக கருதியிருந்தால் அவர்கள் இதயமற்ற முறையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஒரு பேனாவின் கிறுக்கலில் அவர்களின் நிலமும், காடுகளும் அவர்களிடமிருந்து பிடுக்கப்பட்டிருக்காது; மாறாக ஒரு சிலைக்காக செலவிடப்பட்ட 3000 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்பட்டிருக்கும்

ஒற்றுமை ஒரு பொருட்டல்ல : ஏனெனில் தலைநகரை நோக்கி நடத்தப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய விவசாயிகள் ஊர்வலம் குறித்த செய்திகள் மையநீரோட்ட ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. விவசாயிகளின் அந்த ஒற்றுமை ஒரு பொருட்டே அல்ல என்று இந்த ஊடகங்கள் கருதின. கால் நூற்றாண்டுகள் சந்தித்திராத வேலைவாய்ப்பின்மையால் ஏழைகள் வாடும்போது வங்கிகளுக்கு நாமம் போட்ட பணக்காரர்களோ சர்வ சுதந்திரமாக வெளிநாடுகளில் உலாவுகின்றனர். எனில், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கல்வி ஒரு பொருட்டல்ல : கல்வியை அவர்கள் ஒரு பொருட்டாக கருதினார்கள் என்றால், ஏன் அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் அரம்பக் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்?

எதுவுமே ஒரு பொருட்டல்ல.

இப்போது அவர்களின் அக்கறைக்கு உரியதெல்லாம் அவர்களின் மாபெரும் தலைவர் தனது புனிதக் கடமையாக கருதும் தனது பிம்பத்தின் அடிப்படையிலேயே இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். இதை நிறைவேற்றுவதற்காக தேசத்தின் ஒவ்வொரு முடுக்குகளிலும், சுவர்களிலும், செய்தித் தாள்களின் முகப்புகளிலும், பதாகைகளிலும், தொலைக்காட்சி திரைகளிலும், திரை அரங்குகளிலும் அந்த தலைவரின் முகத்தை ஒட்டி வைக்கிறார்கள். ஏனெனில், மக்கள் எந்தத் திசையில் திரும்பினாலும், அவரைப் பார்க்க வேண்டும், அனைத்திலும் பார்க்க வேண்டும், அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் அவரே என்பதை மக்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த போக்குகள் நம் இளைஞர்களின் சிந்தனையில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன?

அவர்கள் வன்முறை பரவாயில்லை என்று கற்றுக் கொள்கின்றனர். ஏனெனில், வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை. வன்முறையாளர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் போது ஒரு மத்திய அமைச்சரே அவர்களுக்கு மலர் மாலையிட்டு வரவேற்கிறார். இளைஞர்கள் கற்பது ஆபத்தானது என்று கருதுகின்றனர்; ஏனெனில், விமர்சனப்பூர்வமாக சிந்திப்பது சிக்கலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திற்கு என்ன நேர்ந்ததெனப் பாருங்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பரிவுடனும், திறமையுடனும் இருக்கத் தேவையில்லை என்று இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர். தலைவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கத் தேவையில்லை. நீதி மறுக்கப்படுவது தவறில்லை; குரல்களையும் உரிமைகளையும் இழந்தவர்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை. ஜோர்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பெரியண்ணனின் அரசாங்கத்தைப் போன்ற குறியீடுகளை நாமும் போட்டுக் கொள்ளலாம்:

“போர் தான் அமைதி”
“அடிமைத்தனம் தான் விடுதலை”
“அறியாமையே வலிமை”

ஏனெனில், ஒரு ஜனநாயகத்தை உண்மையாகவே அழிக்க வேண்டுமென்றால் நிறுவனமயமான அராஜகவாதமும் (institutional anarchy), அறம் சார்ந்த அழிவுவாதமும் (moral nihilism) கட்டவிழ்த்து விடப்படுவது கட்டாயத் தேவைகள் ஆகும். இதுதான் இந்த நாடெங்கும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வருவதைப் பார்க்கிறோம். பழைய மரபுகளை அழித்தொழித்த பின்னர்தான் ஒரு கொடுங்கோலனால் அடக்குமுறைக்கான புத்தம் புதிய முறைகளை உருவாக்கி அதை “புதிய மரபுகளாக” பெயரிட முடியும். இந்த விசயத்தில் அதை “புதிய இந்தியா” என்றும் சொல்லலாம்.

உண்மையில் நாம் இதை விட அறிவார்ந்தவர்கள். ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ்தான் செழிக்க முடியும் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியும். மக்கள் கற்றுக் கொள்ளும் போதுதான் ஜனநாயகம் மலர முடியும். அதிகாரமற்றோருடன் ஒன்றுவதன் மூலம்தான் ஜனநாயகம் வளரும். எந்த நாட்டில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றதோ அங்கேதான் ஜனநாயகம் முன்னேறும். ஜனநாயகத்திற்கு வலுவான நான்காம் தூண் தேவை; அங்கே பத்திரிகையாளர்களுக்கு கடினமான கேள்விகளைக் கேட்கும் உரிமை இருக்க வேண்டும்; அங்கே உண்மைகளும், தரவுகளும் மதிக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஜனநாயகம் என்பது அதன் நிறுவனங்கள் எந்தளவுக்கு வலுவாக உள்ளதோ அந்தளவுக்கு வலுவாக இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் குடிமக்களின் வீரம் மற்றும் பரிவின் ஒட்டுமொத்தமாக இருக்கும்.

எனவே தான் அனைத்தும் முக்கியத்துவமுடையதாகிறது.

“உண்மை முக்கியமானது”
“சட்டம் முக்கியமானது”
“ஏழைகள் முக்கியமானவர்கள்”
“ஒற்றுமை முக்கியமானது”
“கல்வி முக்கியமானது”
“சகல பிரிவு மக்களும் முக்கியமானவர்கள்”

எப்படி ஒரு கல்விக்கூடத்தின் மறைமுக பாடதிட்டத்தில் எல்லா மாணவர்களும் மயங்கி விடுவதில்லையோ, அதே போல் குடிமக்களில் அனைவருமே அரசாங்கத்தின் மறைமுக பாடதிட்டத்திற்கு ஆட்படுவதில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்த மறைமுக பாடதிட்டத்திற்கு ஆட்பட்டவர்கள் எத்தனை பேர் ஆட்படாதவர்கள் எத்தனை பேர் என்பதை நமக்கு உணர்த்தும்.


கட்டுரையாளர் : ரோகித் குமார்
தமிழாக்கம் : சாக்கியன்
நன்றி : தி வயர்

முசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் !

1
“ஆனால், ஏன் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி பன்றி இறைச்சி உண்ணச் செய்தனர்  ?”

ந்த வாரத்தின் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில் சகதியில் மண்டியிட்டு, அடுத்து தனக்கு என்ன நேருமோ என மிரட்சி, பயத்துடன் காணப்பட்ட அந்த முதியவரின் முகம் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்திருக்கும்.

ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் இந்தியா பெற்ற இழி பெருமைகளுல் ஒன்று இந்துத்துவ கும்பல் வன்முறை. பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை பலத்துடன் இந்துத்துவ கும்பல் கொலைவெறியை அரங்கேற்றி வருகிறது. தேர்தல் காலத்தில், இந்துத்துவ கும்பலின் தலைக்கு ஏறும் வெறி, அப்பாவி மக்களை கொன்று கொண்டிருக்கிறது.

சவுகத் அலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருக்கும் சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் ஒன்று எருமை இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்து, அவமானப்படுத்தி துன்புறுத்தியிருக்கிறது. உச்சக்கட்டமாக, முசுலீம் மதத்தில் தடைசெய்யப்பட்ட ‘பன்றி இறைச்சி’யை கட்டாயப்படுத்து வாயில் திணித்து உண்ண வைத்திருக்கிறது.

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள பிஸ்வநாத் சரியாலி பகுதியில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுவதுண்டு. இந்த சந்தையில் உணவகம் வைத்திருக்கிறார் சவுகத் அலி. எருமை இறைச்சி, கோழி இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை கடந்த 40 ஆண்டுகளாக விற்றுக்கொண்டிருக்கிறார் அலி.

முன்னதாக, இந்தக் கடையில் விற்கப்படும் எருமை இறைச்சி தரமானதாக இல்லை என்று கூறி ஒரு நபர் தகராறு செய்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நான்கு ஆட்களுடன் வந்த அந்த நபர், இனிமேல் எருமை இறைச்சியை அங்கே விற்கக்கூடாது என கூறியிருக்கிறார். அப்படியே வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்தாலும், கீழேதான் கொட்ட வேண்டும். விற்பனைக்கு வைக்கக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

அப்போது, தான் கொண்டுவந்திருந்த எருமை இறைச்சியை மறைத்து வைத்திருக்கிறார் அலி. “அன்று பிராய்லர் இறைச்சியும் மீனையும் மட்டுமே பரிமாறினேன்” என்கிறார்.

படிக்க:
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
♦ மாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்

அதே நாள் மாலை 3.30 மணியளவில் திரும்பவும் வந்த அந்த கும்பல், அந்தச் சிறிய கடையில் வைத்திருந்த கறியை கண்டுபிடித்துவிடுகின்றனர்.
அப்போது, “பங்களாதேசி, தே….பயலே, இதை என்ன பாகிஸ்தான் என்று நினைத்தாயா?” என்று கேட்டதாக சொல்கிறார் அலி.

பத்து பேருக்கும் மேல் இருந்த அந்த கும்பல், அதோடு விடவில்லை. கடையில் இருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள். உணவு மேசையை உடைத்ததோடு, பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை அருகில் இருந்த சாக்கடையில் தள்ளியிருக்கிறார்கள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அலி, அங்கிருந்த சந்தை பொறுப்பாளர்களிடம் உதவி கேட்டு ஓடியிருக்கிறார். அவர்களோ இங்கிருந்து வெளியேறுங்கள் என சொல்லிவிட்டனர். “எனவே, நான் அடிக்கப் போகிறார்கள் என்ற பயத்தில் ஓட ஆரம்பித்தேன்.”என்கிறார் அலி

“ஆனாலும், அவர்கள் விடவில்லை. சந்தை பொறுப்பாளர் ஒருவரே அலியை இந்துத்துவ கும்பலிடம் பிடித்து கொடுத்திருக்கிறார். “அவர்கள் என்னை கட்டையால் தாக்கினார்கள், என்னை சந்தையின் ஒரு பகுதியிலிருந்து இழுத்து வந்து அடித்தார்கள்” என கலங்குகிறார் அலி.

மீதியை வீடியோவில் உலகம் பார்த்தது, சகதியில் மண்டியிட்டு, மிரட்சியுடன் பார்க்கும் அலியிடம் அவர்கள், “நீ ஏன் மாட்டிறைச்சி விற்கிறாய்? மாட்டிறைச்சி விற்க உன்னிடம் அனுமதி உள்ளதா? நீ வங்காள தேசத்தை சேர்ந்தவனா? உன் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளதா?” எனக் கேட்டிருகிறார்கள்.

‘உண்மையான’ இந்தியர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தீவிரமாக உள்ள பாஜக அரசு குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணியை செய்து வருகிறது. அலியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் உள்ளது. ஆனால், அவருடைய பெயர் இல்லை. “என்னுடைய தாத்தாவுக்கு தாத்தா இங்கேதான், தாரங் மாவட்டத்தில் பிறந்தார்” என்கிறார் அலியின் சகோதரர் அப்துல் ரகுமான்.

இந்துத்துவ கும்பல் அலியின் மீது நிகழ்த்திய வன்முறை அதோடு முடியவில்லை. அந்த கும்பல் கட்டாயப்படுத்தி பன்றி இறைச்சியை அவருடைய வாயில் திணிக்கிறது. அவர் அதை மறுத்தபோது, அதை விழுங்கும்படி கும்பலின் ஒருவன் மிரட்டுகிறான்.

40 ஆண்டுகாலம் எந்த இடத்தில் மரியாதையான தொழிலைச் செய்தாரோ அதே இடத்தில் அவமானப்பட்டதோடு, உடலளவில் காயம்பட்டிருக்கும் அலி கேட்கிறார், “ஆனால், ஏன் அவர்கள் என்னை பன்றி இறைச்சி உண்ணக் கூறி கட்டாயப்படுத்தினார்கள்? நாங்கள் இந்துக்கள் உண்ணமாட்டார்கள் என எருமை இறைச்சியை மட்டும்தான் விற்கிறோம்”

அலியின் சகோதரர், “என் சகோதரர் தவறு செய்திருந்தால் அவர்கள் போலீசை அழைத்திருக்கலாம். ஆனால், ஏன் பன்றி இறைச்சியை உண்ண வைத்தார்கள்? எல்லோருக்கும் அவரவர்களுடைய ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளது.” என்கிறார்.

மற்ற பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் அல்லாமல், அசாமில் மாட்டை வெட்டுவது தடை செய்யப்படவில்லை. அதோடு, அசாமில் உள்ள சட்டம் பசு, காளை அல்லது எருமை ஆகியவற்றை வேறுபடுத்தியும் பார்க்கவில்லை. காசாப்புக்கு தகுதியானது என மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கிய கால்நடைகளை வெட்டலாம். பொதுவாக, அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

இந்துத்துவ கும்பலின் வெறியாட்டம் சமூக ஊடகங்களில் வைரலான பின்பு, ஒரே ஒருவரை கைது செய்துள்ளது போலீசு. இது மத ரீதியான பிரச்சினை இல்லை எனவும் பூசி மழுப்புகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் இந்துத்துவ சக்திகளின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில் ஆட்சியையும் பிடித்துள்ளது பாஜக. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலின் போதும், இந்துத்துவ கும்பல் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது.

தான் வளர்ந்த இடத்திலேயே தன்னுடைய மதத்தைக் காரணம் காட்டி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை நினைத்து கலங்கி நிற்கிறார் அலி. “என்னுடைய அப்பா 40 ஆண்டு காலம் இந்த உணவகத்தை நடத்தினார். எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. அவர் மக்களுக்கு உணவளித்து இறந்துபோனார்” என்கிறார்.

மீண்டும் அந்த உணவகத்தை நடத்த முடியுமா? “சந்தை பொறுப்பாளர்கள் நடத்தலாம் என்றார்கள். ஆனால், எருமை இறைச்சியை விற்க முடியாது. அது பரவாயில்லை. நான் பிராய்லரும் மீனும் விற்கிறேன்”.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சமூகத்தில் ஆழமாக விதைத்திருக்கும் விச விதைக்கு தேர்தல் மட்டும் முடிவுகட்டுமா ? மீண்டும் ஒரு பாசிச ஆட்சிக்கு நாடு தாங்காது.


கலைமதி
நன்றி: ஸ்க்ரால் 

மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

… … தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட அந்த அச்சுப் பிரதியில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி, இரண்டு சாட்சியங்கள் மற்றும் ஒரு சகாரா அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்டு உறுதி செய்திருந்தனர்.

இதே ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் சிறு சிறு மாற்றங்களோடு இன்னொரு கோப்பிலும் இருந்தன. முதல் ஆவணத்தில் “cash given at  Ahmedabad, Modiji” (அகமதாபாதில் கொடுக்கப்பட்ட ரொக்கப் பணம், மோடிஜி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, பிற ஆவணங்களில் “cash given to CM Gujarat” (குஜராத் சி.எம்-க்கு கொடுக்கப்பட்ட ரொக்கப்பணம்) என்று எழுதப்பட்டிருந்தது.

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரத்தோ ராய்

“அகமதாபாதில் மோடிஜி”க்கு கொடுத்ததாக ரூ.40 கோடி, “மத்திய பிரதேச சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.10 கோடி, “சத்தீஸ்கர்  சி.எம்.”-க்கு கொடுத்ததாக ரூ.4 கோடி, “டெல்லி சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பணப் பட்டுவாடாக்கள் 2013-க்கும் 2014 மார்ச்சுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது குஜராத் முதலமைச்சர் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வராக இருந்தவர் பா.ஜ.க.-வின் சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதலமைச்சர் பா.ஜ.க.-வின் ராமன் சிங், டெல்லி முதல்வராக இருந்தவர் காங்கிரசின் ஷீலா தீட்சித்.

சகாரா நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. ஆனால், சகாரா ஆவணங்கள் மட்டுமின்றி முன்னர் குறிப்பிட்ட பிர்லா ஆவணங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பிர்லா ஆவணங்கள் மீது நடத்திய விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும் சகாராவில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி வருமான வரித்துறை சி.பி.ஐ.-க்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் விஷயம் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இப்படிஊழலை இருட்டடிப்பு செய்த வருமான வரித்துறை அதிகாரி கே.வி.சவுத்ரிக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? … ( “பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது” – கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

இதைப் போன்ற 29 கட்டுரைகள்… கீழ்கண்ட 9 தலைப்புகளின் கீழ்….

  1. கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்படை
  2. கொள்ளையிடப்படும் பொதுத்துறை வங்கிகள்
  3. விவசாயிகளின் மீதான இரட்டைத் தாக்குதல்
  4. கார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்
  5. பார்ப்பனியத்தின் கோரத்தாண்டவம்
  6. ஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்
  7. ஆர்.எஸ்.எஸ்.–ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்
  8. ஊழல் சட்டப்பூர்வமாகிறது
  9. பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி?

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – “கார்ப்பரேட் காவி பாசிசம்”. இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு ! உடன் வாங்குங்கள்! கார்ப்பரேட் காவி பாசிசம்!

வெளியீடு :
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600024.

பக்கம்: 208
விலை :
100
முதல் பதிப்பு : மார்ச் 2019

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Add to cart

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)



Paypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)




தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

சிவாஜி முடிசூட சாத்திரம் அனுமதிக்காதாம் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 8


காட்சி : 12

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதிகள்.

சிவாஜி : மராட்டிய மாவீரர்களே இந்த மண்டலத்தைக் காக்கும் தளபதிகளே நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. வீரம் விழலுக்கிறைத்த நீராகவில்லை.  நமது மனக்கண் முன் தோன்றித் தோன்றி நம்மை ஆவேசமுறச் செய்து மகாராஷ்டிரம் உதயமாகிவிட்டது. சாம்ராஜ்யம் உருவாகிறது. வீரர்காள்! உங்கள் சிருஷ்டி அந்த ராஜ்யம் மங்கிக் கிடந்த மண்டலம் சிங்கங்களாகிய உங்களால் மணிக்கொடியை இனி பறக்கவிடும். மலைக்கு மலை தாவிய நாம், கோட்டைக்குக் கோட்டை குத்து வெட்டு நடத்திவந்த நாம், பரத கண்டத்திலே ஒரு பரந்த ராஜ்யத்தை ஸ்தாபித்து விட்டோம். சாத்பூரா மலைச் சாரல் சச்சரவுக்கு உறைவிடம் என்பது மாறி, செளந்தர்யமான ஒரு சாம்ராஜ்யமாகிவிட்டது.

(வீரர்கள்)

மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே!
மாவீரர் சிவாஜி மகாராஜாவுக்கு ஜே!
சாத்பூரா சாம்ராஜ்யாதிபதிக்கு ஜே!

சிவாஜி : ஆருயிர் தோழர்களே என் ஜெயம் உங்கள் உடைவாளின் விளைவு. என் கீர்த்தி உங்கள் தேகத்திலே உண்டான புண்களிலே பூத்தது . உங்கள் ரத்தமே, மகாராஷ்டிர பூமியைப் புனித பூமியாக்குகிறது. நீங்கள் வாழ அன்னை அருள் புரிவாள். பவானியின் பரிபூரண கடாக்ஷம் உமக்குக் கிடைக்கட்டும்.

தளபதி – 1 : மகராஜ்…

சிவாஜி : அன்பால் அர்சிக்கிறீர்கள், அந்த வார்த்தையை. ஆனால், அந்தப் பட்டத்தை நான் இன்னும் பெறவில்லை.

தளபதி – 1 : பட்டாபிஷேக காரியத்துக்குத் தங்கள் அனுமதியைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்.

தளபதி – 2 : நம் நாட்டுப் பொற்கொல்லர் சித்திர வேலைப்பாடுள்ள சொர்ண சிங்காதனம் தயாரித்துவிட்டார்.

தளபதி – 3 : அரண்மனைக்கு அலங்கார வேலைகள் இரவு பகலாக நடந்தேறி வருகிறது.

தளபதி – 4 : ஆரணங்குகள் வாழ்த்துக் கீதங்களைப் பாடியப்படி உள்ளனர் மகராஜ்.

தளபதி – 1 : கவிவாணர்கள் புதுப்புது கவிதைகளை இயற்றியப்படி உள்ளனர் காவலா.

தளபதி – 2 : சத்திரபதி சிவாஜிக்குப் பொன்னாடையும் நெய்தாகிவிட்டது.

தளபதி – 3 : பொற்குடங்களிலே புனித நீர் நிரப்பி யானைமீது கொண்டு வர ஏற்பாடாகி இருக்கிறது.

தளபதி – 4 : நகரெங்கும் விழாக் கொண்டாட மக்கள் துடிக்கிறார்கள்.

தளபதி – 1 : புகழ்மிக்க நமது படைகள் பூரிப்புடன் பவனிவர தயாராகியுள்ளது.

தளபதி – 2 : பட்டாபிஷேகம் நடைபெறுவது டில்லி பாதுஷாவுக்கும் தெரியும்.

தளபதி – 3 : பரதகண்டம் முழுவதுமே பெருமையடைகிறது. பாழடைந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது கேட்டு, அணைந்து போக இருந்த சுதந்திர விளக்கு சுடர்விட்டெரிய தியாக நெய் ஊற்றி இருப்பது கேட்டு மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே .

சிவாஜி : உன்மைத் தோழர்களே! ஊராரின் உள்ளத்தை நான் அறிவேன். உங்கள் உவகையும் தெரிந்ததே. உங்கள் ஆதரவை அரணாகக் கொண்டுதானே அரசபீடம் ஏறத் துணிந்திருக்கிறேன். போரிலே நான் உங்களில் பலரைக் கடிந்து உரைத்திருப்பேன். மனதில் குறையிருப்பின் பொறுத்திடுக.

தளபதி – 4: மன்னா ! இது என்ன பேச்சு? உமது ஏவலர் நாங்கள். உமது மொழியே எமது வாழ்க்கைக்கு வழி.

சிவாஜி : இந்த சாம்ராஜ்யத்தைக் காண மராட்டியர் காட்டி இருக்கும் வீரம், தியாகம், சேவை, அபாரம். சரித்திரத்திலே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை. உங்கள் சேவைக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

தளபதி – 1: மராட்டிய மன்னர் மன்னனாகி, முடி தரித்து, எம் கண்முன் நின்று, எங்கள் மனதை குளிரச் செய்யுங்கள், மகராஜ். அதுவே கைம்மாறு, வாழ்க்கையில் நாங்கள் எதிர் பார்க்கும் பேறு.

(தளபதிகள் போகிறார்கள் சிட்னீஸ் சோர்ந்த முகத்துடன் வருகிறான்).

சிவாஜி : சிட்னீஸ்! என்ன முகவாட்டம்?

சிட்னீஸ் : ஒன்றுமில்லை. வேலைத் தொந்தரவுதான்.

சிவாஜி : இல்லை, இல்லை விசாரம் இருக்கிறது உனக்கு.

சிட்னீஸ் : பிரமாதமான விசாரமில்லை; சுலபத்திலே போய்விடக் கூடியதுதான்.

சிவாஜி : ஒளியாமல் பேசு. பட்டாபிஷேகம் சம்மந்தமாக ஏதேனும்…

சிட்னீஸ் : ஆமாம்; சிற்சில இடங்களிலே எதிர்ப்பு.

சிவாஜி : யாருடைய எதிர்ப்பு? முன்புதான் நாம் கீறின கோட்டைத் தாண்டாதிருக்க சர்தார்கள் சங்கநாதம் செய்தனர். இப்போது எதிர்ப்பவர் யார்?

சிட்னீஸ் : வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். க்ஷத்திரிய குலமே இப்போது கிடையாதாம்.

சிவாஜி : அதனால் ..

சிட்னீஸ் : ஏதேதோ வகையான பேச்சு எல்லாம் அடிபடுகிறது!

சிவாஜி : யார் இந்த எதிர்ப்புக்கு முக்கியமாக முன்நின்று வேலை செய்பவர்?

சிட்னீஸ் : பல பேர் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. ஆனால் …

சிவாஜி : எதையோ மறைக்கிறாய். வேண்டாம் சிட்னீஸ்! உண்மையைக் கூறு. என் உள்ளம் நோகுமோ என்று பயந்து படுகுழியை மறைக்காதே. யார் இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்குவது?

சிட்னீஸ் : நமது முதலமைச்சர் மோரோபந்த்.

சிவாஜி : மோரோபந்த்…! மோரோ அவரா எதிர்க்கிறார்? என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர்.

சிட்னீஸ் : உம்மிடம் அவருக்கு இப்போதும் வெறுப்பில்லை. சாஸ்திரம் கெடுகிறதாம். வீணான பயம் அவருக்குக் கூட. ஆனால், எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன். எதிர்ப்பு, சந்தேகம், கோபம். எல்லாம் ஒழிந்துவிடும். எல்லா எதிர்ப்புகளும் அடங்கிவிடும். அவருடைய அனுமதி கிடைத்தால், இவர்கள் காட்டும் சாஸ்திரங்களை, சந்தேகங்களை, வாதங்களை அவர் தவிடு பொடியாக்கிவிடுவார். அவ்வளவு திறமைசாலி

சிவாஜி : யார் அந்தத் திறமைசாலி?

சிட்னீஸ் : காகப்பட்டர், காசிவாசி, வேத வேதாந்தத்தின் உபன்யாசகர். வியாக்யானத்திலே அவரை மிஞ்சுபவர் கிடையாது. இன்று இங்கு எதிர்ப்பு செய்பவர்கள் எல்லாம் அவர் வந்து விளக்கம் கூறினதும் வாயை மூடிக் கொள்வர். சந்தேகங்களை சம்ஹரிப்பார். எதிர்ப்புகளைத் துவம்ஸம் செய்வார். அப்படிப்பட்ட காகப்பட்டரையே இந்தப் பட்டாபிஷேகத்தை நடத்திக் கொடுக்க இங்கு வரும்படி தூது அனுப்பத் திட்டம் போட்டுள்ளேன்.

சிவாஜி : அவர் இருக்குமிடம்?

சிட்னீஸ் : காசி

சிவாஜி : காசி க்ஷேத்திரம். கங்கைக் கரை மராட்டிய மண்டலத்திலே இருக்கிறது. அவர் அங்கு இருக்கிறார்.

சிட்னீஸ் : இன்றே புறப்படுகிறார்கள்.

சிவாஜி : தூதுவர்களை, மூன்று பூசுரர்களை அனுப்புகிறேன். அவர்கள் இங்கு எதிர்ப்பு செய்தவர்கள்.

சிவாஜி : சம்மதித்தார்களோ போக?

சிட்னீஸ் : அவர்கள் காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து விட்டால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறுகிறார்கள்.

சிவாஜி : செய்! அனுப்பிப்பார்
(போகிறார்கள்)

(தொடரும்)
நன்றி: Project Madurai
முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !

மார்க்ஸ் பிறந்தார் – 27
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. மூலதனத்தின்தத்துவஞானம் – பாகம் 2

றிதலைப் பற்றிய இயக்கவியல் முறையை மார்க்சுக்கு நெடுங்காலத்துக்கு முன்பே பல தத்துவஞானிகள் வளர்த்துக் கூறினார்கள். “இயக்கவியல்” என்ற சொல் இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் உண்மையான நிகழ்வுப் போக்குகளின் முரண்பாடான தன்மையை, நெகிழ்வுத் தன்மையை, எதிர்நிலைகளின் ஒருமை மற்றும் மோதலின் மூலமாக எளிமையானவற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு மாறிய வளர்ச்சியைக் குறிக்கிறது.

முதல் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகளான ஹெரக்லீடஸ், அனாக்ஸகோரஸ், பார்மெனீடஸ், ஸெனோன், டெமாக்கிரீடஸ், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ திறமை மிக்க இயக்கவியல்வாதிகளாக இருந்தனர். அவர்கள்தான் இயக்கவியலை உணர்வு பூர்வமாகக் கையாளப்படுகின்ற சிந்தனை முறையாக, நம்மைச் சுற்றிலுமுள்ள உலகத்தை அறிவதற்குரிய முறையாக மாற்றினார்கள். அவர்களுடைய மதிநுட்பம் நிறைந்த தத்துவஞானக் கருத்துக்கள் தம்முடைய முக்கியத்துவத்தை, இக்காலத்துக்குத் தம்முடைய ஒட்டுறவை இழக்கவில்லை. பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானிகள் மிக முக்கியமான, சர்வாம்சமான காரண காரிய உறவுகளை உள்ளுணர்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு பிரபஞ்சத்தைப் பற்றிய ஒருங்கிணைந்த சித்திரத்தைத் தந்தார்கள்.

சாக்ரடீஸ்

அவர்கள் விவரங்களின் உலகத்துக்குள் ஆழமாகப் போவதில்லை – இதில்தான் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானத்தின் குறை அடங்கியிருக்கிறது. இதன் காரணமாகவே அத்தத்துவ ஞானம் பிற்காலத்தில் மற்ற கண்ணோட்டங்களுக்கு இடமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் எங்கெல்ஸ் வலியுறுத்தியதைப் போல சில வரையறுக்கப்பட்ட கருத்தமைப்புகளுடன் இயற்கை விஞ்ஞானங்கள் இன்றளவிலும் கூட இவற்றை முழுமையாக அகற்றிவிடவில்லை – ஒப்பிடுகின்ற பொழுது அதன் உயர்வும் இதில் தான் அடங்கியிருக்கிறது.

பண்டைக்காலத் தத்துவஞானம் ஒரு வளர்ச்சியடைந்த, இயக்கவியல் ரீதியில் நெகிழ்ச்சியான கருத்தமைப்புகள் மற்றும் கருத்தினங்கள் என்ற அமைப்பை நமக்குத் தந்திருக்கிறது, உலகத்தை விளக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்த அமைப்பு இன்றும் வெற்றிகரமாக உபயோகிக்கப்படுகிறது. அதன் பிரதிநிதிகள் பல துணிகரமான, மதிநுட்பமிக்க கருதுகோள்களைக் கூறினார்கள்; இவை பிற்காலத்தில் பரிசோதனையின் மூலம் விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டிருக்கின்றன.

பண்டைக்கால கிரேக்கத்துக்குப் பக்கத்தில் மார்க்சுக்கு முந்திய இயக்கவியலின் மற்றொரு வடிவத்தை, மூலச்சிறப்புடைய ஜெர்மன் தத்துவஞானத்தின் இயக்கவியலை – அது இயற்கை விஞ்ஞானத்துக்கு உபயோகமாக இருந்தது – எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். அந்த இயக்கவியல் ஹெகலின் தத்துவஞானத்தில் தன்னுடைய சிகரத்தை எட்டியது.

ஹெகல் ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்ச்சியடைகின்ற, ஒன்றோடொன்று மோதுகின்ற கருத்துக்களின் தற்சிந்தனையான அமைப்பை உருவாக்கினார். அவை இந்த வளர்ச்சியிலும் போராட்டத்திலும் இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் எல்லா நிகழ்வுகளையும் தோற்றுவிக்கின்றன என்று அவர் கூறினார். அவர் யதார்த்தத்தைத் தலைகீழாகத் திருப்பியதைப் போலச் சிந்தித்தார். கருத்துக்கள், கருத்தமைப்புகள் மற்றும் தர்க்க ரீதியான கருத்தினங்கள் உலகத்தைப் பிரதிபலிக்கவில்லை, அவையே உலகத்தைப் படைக்கின்றன என்று கருதினார். இதன் விளைவாக ஹெகல் தன்னுடைய தத்துவஞானத்தை அநேகமாகப் படைப்பின் சிகரமாகவே கருதினார், ஏனென்றால் அது இறுதி நிலையான, தனிமுதலான உண்மையை எட்டுகிறது என்றார்.

ஹெகலியத் தத்துவஞானத்தின் கருத்துமுதல்வாதமும் வரையறைகளும் எப்படி இருந்தாலும் உலகத்தைப் பற்றிய விளக்கத்தில் அது முன்னே எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடியாக இருந்தது.

படிக்க:
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
♦ மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்

ஹெகல் தத்துவஞானம், கலை, இயற்கை விஞ்ஞானத்தில் மனிதனுடைய சாதனைகள் அனைத்தையும் தொகுத்துரைப்பதற்குக் குறிப்பிடத்தக்க முயற்சி செய்தது அவருடைய மிகச் சிறப்பான அம்சமாகும். அவர் இயற்கை, வரலாற்று, ஆன்மிக உலகம் முழுவதையுமே தொடர்ச்சியான மாற்றம், மாற்றியமைக்கப்படுதல் மற்றும் வளர்ச்சி என்ற வடிவத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனை அதே இயக்கவியல் கோட்பாடுகளில் உறைந்திருப்பது அறியப்பட்டது. மனிதகுலச் சிந்தனையின் வரலாற்றில் இத்தகைய கம்பீரமான, அனைத்தையும் தழுவிய அமைப்பு ஒருபோதும் படைக்கப்படவில்லை.

இருக்கின்ற அனைத்துமே எளிமையானவற்றிலிருந்து பல்தொகுதியானவைக்கு, பகுதியிலிருந்து முழுமைக்கு வளர்ச்சியடைந்த பாதையையும் அதன் பொறியமைவையும் வெளிப்படுத்தியது அவருடைய மாபெரும் சாதனையாகும். அவர் இதைச் சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றை நோக்கிய முன்னேற்றத்தின் முறை என்று கூறினார். அது அவருடைய இயக்கவியலின் எல்லா அம்சங்களையும் விதிகளையும் கூறுகளையும் கொண்டிருக்கிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற ஹெகலிய முறையின் உதவியினால் புறப்பொருள் என்பது இடைச்செயல் விளைவினைக் கொண்டது மட்டுமல்ல, அது வரலாற்று ரீதியில் வளர்ச்சியடைந்து, முன்னேற்றமடைந்து கொண்டிருப்பதென்று எடுத்துக்காட்டப்பட்டது.

ஹெகலின் “சுத்தமான” உய்த்துணர்தலில் கருத்தினங்கள் ஒன்றுக்குள்ளிருந்து மற்றொன்று வருவிக்கப்படுகின்றன, இது உலக வரலாற்றின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணையாகச் செல்கிறது. உண்மையான நிலைமை இறையியல் தன்மையுடன் தலைகீழாக்கப்பட்டது, அதன் விளைவாக முழுமையான சிந்தனை என்பது ஹெகலிடம் உண்மையான வரலாற்றைப் படைக்கின்ற செயலாக இருந்தபோதிலும் இந்தச் சிந்தனை முறை வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தின், சமூக நிகழ்வுப் போக்குகள், நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு விஞ்ஞான ரீதியான அணுகுமுறையின் முன்நிபந்தனையைக் கொண்டிருந்தது.

இதற்குப் பிறகு என்ன நடைபெற்றது? ஒருவர் இந்த முறையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை உபயோகிக்கத் தெரிந்திருந்தால் போதும்; அவர் விஞ்ஞானத்தின் ஸ்தூலமான துறைகள் எல்லாவற்றிலுமுள்ள மிகச் சிக்கலான தத்துவ ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி செய்யக் கூடிய அறிவின் வன்மையான ஆயுதத்தைக் கொண்டவராகிறார் என்று தோன்றியது, இல்லையா?

ஆனால் ஹெகலியத் தத்துவஞானத்தின் மாபெரும் சாதனையான இயக்கவியல் உபயோகிக்கப்படாமற் கிடந்தது விசித்திரமே. ஹெகலின் வாழ்நாளிலும் அவர் மரணமடைந்து நெடுங்காலம் வரையிலும் அது எவ்விதத்திலும் உபயோகிக்கப்படவில்லை. ஹெகலிய இயக்கவியல் முறையைக் கையாள்வதற்கு ஒருவர் கூட முயற்சி செய்யவில்லை. அது விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவில்லை, அதை அப்படியே மறந்து விட்டார்கள். ஹெகலிய “டயடோஹிகள்”(5) அலெக்சாந்தர் மாசிடோனின் வாரிசுகளைப் போலவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மகத்தான பாரம்பரியத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அணுவளவு கூட ஒன்றும் தெரிந்திராமல் தமக்கிடையே அற்பமான சச்சரவு செய்து கொண்டார்கள்.

இதன் காரணம் என்ன? அதற்குப் பிரதானமான காரணம் அந்த முறையிலிருந்த குறைகள் எனத் தோன்றுகிறது. சந்ததியினருக்கு விட்டுச் செல்லப்பட்ட வடிவத்தில் அதைப் பயன்படுத்த முடியாது. அது இயக்கமறுப்பியல் சூக்குமக் கருத்தாக்கங்கள் என்ற செயற்கையான, போலியான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டிருந்தது. தனக்குள்ளாகவே தன்னுடைய வளர்ச்சியை முடித்துக் கொண்டிருந்த கருத்து முதல்வாதத் தத்துவஞான அமைப்பின் தேவைகளுக்கு மட்டுமே அது தகுதியாக இருந்தது.

ஹெகல் தன்னுடைய தத்துவஞானத்தில் உலகத்தைத் தலைகீழாகத் திருப்பிவைத்திருந்தார், அது அந்த ஆபத்தான நிலைமையிலேயே நின்று கொண்டிருந்தது, முன்னே போக முடியவில்லை. இப்படி ஆடிக்கொண்டிருக்கும் அடிப்படையின் மீது இயக்கவியல் முறை வளர்ச்சியடைய முடியவில்லை.

தத்துவஞானம் தனிமுதலான கருத்துமுதல்வாதம் என்ற ஹெகலிய அமைப்பை முன்வைத்த பொழுது அது செய்ய வேண்டிய அனைத்தையும் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டது. அது அறியக் கூடிய அனைத்தையும் ஏற்கெனவே அறிந்துவிட்டது. அது சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டது. தனிமுதலான உண்மை அறியப்பட்டுவிட்டது.

பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்வதை நிறுத்திக் கொள்ளலாம். நட்சத்திரங்கள் பிரகாசிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். மனிதகுலம் யுத்தங்களையும் புரட்சிகளையும், ஆர்வங்களையும் அக்கறைகளையும் கைவிட்டு துணிகரமான ஜெர்மானியச் சிந்தனையின் சாதனைகளை நிரந்தரமாகப் போற்றிக் கொண்டு மெய்மறந்திருக்கலாம். இனிமேல் கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை. போவதற்கும் ஒரு இடமுமில்லை. இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனையின் மொத்த வரலாற்று இயக்கத்தின் மகுடமும் இலட்சியமும் ஹெகலியத் தத்துவஞானம்தான்.

இயக்கவியல் முறையை அறிவின் மற்ற துறைகளுக்குக் கையாள்வதைப் பற்றிய பிரச்சினையே பழமைவாத ஹெகலியவாதிகளுக்கு அபச்சாரமாகத் தோன்றியது.

கருத்துமுதல்வாத மேல் ஓட்டைக் கைவிடுகின்ற பிரச்சினை மட்டுமல்ல அது. இயக்கவியலுக்குக் கருத்துமுதல்வாதம் ஏதோ வெளியிலுள்ள ஒன்றல்ல. ஏனென்றால் அந்தக் கருத்து முதல்வாதத்தின் மடியில்தான் இயக்கவியல் வளர்ந்தது. அது தன்னுடைய மரண முத்திரையை இயக்கவியலிடம் விட்டுச் சென்றிருந்தது, அதன் நோய்கள், பலவீனங்களினால் இயக்கவியல் நலிவடைந்தது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, ஹெகலியத் தத்துவஞானம் தனிமுதலான, இறுதியான உண்மைக்கு உரிமை கொண்டாடிய பொழுது அது இயக்கவியலை முரட்டுத்தனமாக நிராகரித்தது. அதன் உரிமைகள் சிந்தனைத் துறைக்கு மட்டுமே குறுக்கப்பட்டிருந்தன. இயற்கை மற்றும் சமூகத்தைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான நிலையில் கூட இயக்கவியலின் சூசகம் மட்டுமே, அக்காலத்திலிருந்த தனிப்பட்ட இயற்கை விஞ்ஞானங்களின் சாதனைகளில் இயக்கவியல் தோற்றமளித்த அளவுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

இது அதற்குரிய தர்க்கவியலைக் கொண்டிருந்தது. பருப்பொருள் அறிதலின் மறு வாழ்நிலை மட்டுமேயானால் (பருப்பொருளை அறிதல் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கவியல் வரை முன்னேறவில்லை) பருப்பொருள் வளர்ச்சியடைந்த இயக்கவியலுக்கு அடிப்படையில் அந்நியப்படுகிறது என்று அர்த்தம், ஆகவே அதில் இயக்கவியலைத் தேடுவதில் பயனில்லை. எனவே மேலும் தத்துவ ரீதியில் தேடலுக்குரிய பாதை அநேகமாக மூடப்பட்டுவிட்டது, சிந்தனை சுய திருப்தியடைந்து ஓய்வெடுத்துக் கொண்டது. ஹெகலினுடைய தத்துவஞான அமைப்பின் எல்லைகளுக்கு அப்பால் இயக்கவியல் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை, அது தன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிட்டது.

“தூய சிந்தனைத்” துறையில் கூட கருத்து முதல்வாதம் ஹெகலிய இயக்கவியல் முறையைப் பாதித்தது. அவருடைய கருத்தினங்களின் முக்காலிகள் பெரும்பாலும் தன்னிச்சையானவை என்பதால் அவை உண்மையான தர்க்கத்துக்கும் கருத்தமைப்புகளின் உள்ளடக்கத்துக்கும் பொருந்தவில்லை. முன்னரே தயாரிக்கப்பட்ட திட்டத்துக்குள் அடக்குவதற்காக ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்துக்கு வலிந்து பெறப்பட்ட மாற்றங்கள் ஏட்டுப்புலமை மற்றும் மாயாவாதத்தை மிகவும் நினைவுபடுத்துகின்ற சொற் பிரயோகங்கள் மற்றும் தந்திரங்களுடன் அதிகமாகக் காணப்பட்டன.

எனினும் ஹெகல் தூய சிந்தனைத் துறையில் மாபெரும் விஷயங்களைச் சாதித்தார் என்றால், முந்திய காலத்தின் தர்க்கம் மற்றும் இயக்க மறுப்பியல் முழுமைக்கும் அநேகமாக விளையாட்டாகவே முடிவு கட்டினார் என்றால், உலக வரலாற்றின் வளர்ச்சி மற்றும் உள் இணைப்புகளைக் (கருத்துமுதல்வாத வடிவத்தில் என்ற போதிலும்) காட்டினார் என்றால், அவர் தொட்ட அறிவின் எல்லாத் துறைகளிலும் ஒரு சகாப்தத்தைப் படைத்தார் என்றால் அவருடைய இயக்கவியல் முறையில் மிகவும் வளமான-ஆனால் உபயோகிக்கப்படாத – வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதே பொருளாகும்.

இயக்கவியல் என்ற வாளை அமைப்பு என்ற உறையிலிருந்து வெளியே எடுத்து அதன் மீதிருந்த கருத்துமுதல்வாதம் என்ற துருவைச் சுத்தப்படுத்தக் கூடிய, கருத்தமைப்புகள் என்ற உடலில்லாத நிழல்களை மட்டும் குத்துவதுடன் நின்றுவிடாமல் பொருளாயத யதார்த்தத்தை, மிகவும் பல்தொகுதியான சமூக மற்றும் இயற்கை நிகழ்வுப் போக்குகளை அறிவதற்கு ஆயுதமாக அதை மாற்றக் கூடிய ஒரு நபர் தேவைப்பட்டார் என்பது இதன் பொருள். அந்த நபர்தான் கார்ல் மார்க்ஸ்.

ஹெகலியவாதத்திலிருந்து மார்க்சியத்துக்கு முன்னேறிய எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதியது முற்றிலும் நியாயமே: “ஹெகலின் தர்க்கவியலிலிருந்து இந்தத் துறையில் ஹெகலின் உண்மையான கண்டுபிடிப்புகளைக் கொண்ட கருவைப் பிரித்தெடுப்பதற்கும் இயக்கவியல் முறையின் மீதுள்ள கருத்துமுதல்வாதப் போர்வைகளை நீக்கி அதன் எளிமையான வடிவமே கருத்தின் பரிணாமத்துக்கு ஒரே சரியான முறை என்பதை நிறுவுவதற்கும் மார்க்ஸ் ஒருவர் மட்டுமே இருந்தார், இன்னும் அவர் ஒருவர்தான் இருக்கிறார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய மார்க்சின் விமர்சனத்துக்கு ஆதாரமான இந்த முறையை உருவாக்கியது அடிப்படையான பொருள்முதல்வாதக் கருதுகோளுக்கு எந்த விதத்திலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.”(6)

படிக்க:
இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை
♦ குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !

ஸ்தூலமான விஞ்ஞான ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையைக் கையாளுதல் என்பதன் பொருள் என்ன? முன்னரே தயாரிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட இயக்கவியல் வடிவங்களை எடுத்துக் கொண்டு அவற்றினுள் தனிப்பட்ட விஞ்ஞானங்களின் பரிசோதனை உள்ளடக்கத்தைப் போடுவதா? ஹெகலின் சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேற்றத்தின் எல்லா முடிச்சுக்களையும் திடீர் மாற்றங்களையும் தொடர்ந்து சென்று அதன் பிறகு பெளதிகம், இரசாயனம், உயிரியல் சமூகவியல் மற்றும் அரசியல் பொருளாதாரத்தை அதனுடன் கறாராகப் பொருந்துகின்ற முறையில் விளக்கிக் கூறுவதா? ஹெகல் எழுதிய தத்துவஞான விஞ்ஞானங்களின் கலைக்களஞ்சியம் என்ற நூலின் சிறப்புச் சொற்கள், கருத்தினங்கள் மற்றும் கருத்தமைப்புகளைச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்து ஆராயப்படுகின்ற யதார்த்தத்தின் நிகழ்வுகளையும் விதிகளையும் இந்த மொழியைப் பேசுமாறு செய்வதற்கு முயற்சிப்பதா? இயக்கவியலின் விதிகளையும் கூறுகளையும் கற்று இயற்கை விஞ்ஞானங்களின் துறையில் அவற்றுக்கு மென்மேலும் புதிய எடுத்துக்காட்டுகளையும் நிரூபணங்களையும் தேடுவதா? ஒரு விஞ்ஞானி இயக்கவியலைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பதே போதும், விஞ்ஞானத்தின் ஸ்தூலமான துறைகளில் மேதா விலாசமான கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு அவை உத்வேகமளிக்கும் என்ற வெகுளித்தனமான நம்பிக்கை இன்றும் கூட உள்ளதே, அதன் ஆதாரம் இதுதானா?

பொருளாதார ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையை உபயோகப்படுத்துகின்ற பிரச்சினையை மார்க்ஸ் முற்றிலும் வேறுவிதமாக அணுகினார். அவர் யதார்த்தத்தின் மீது இயக்கவியல் வடிவங்களைத் திணிப்பதற்கு மறுத்தார். ஹெகல் செய்ததைப் போல முன்னரே தயாரிக்கப்பட்ட இயக்கவியல் அமைப்புகளுக்குள் யதார்த்தத்தைப் பொறுத்துவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை, ஆனால் பொருளாதார நிகழ்வுகள் தோன்றுவதையும் முன்னேற்றமடைவதையும், அவற்றின் போக்குகளையும், ஒரு பொருளாதார அமைப்பு முரண்பாடுகளின் வளர்ச்சியின் மூலமாக முன்னேற்றமடைவதின் உள் தர்க்கத்தையும், அந்த முரண்பாடுகள் தமது சொந்த எதிரிடையாக மாறுவதையும், அதாவது உண்மையில் ஆராயப்படுகின்ற பொருளின் இயக்கவியலே அவர் விருப்புவெறுப்பற்ற முறையில் ஆராய்ச்சி செய்தார்; தன்னுடைய முறை ஹெகலின் முறைக்கு முற்றிலும் எதிரானது என்று மார்க்ஸ் கூறியதற்குக் காரணம் இதுவே.

முதலாளித்துவச் சமூகத்தின் முன்னேற்றத்தின் பொருளாதார விதியைக் கண்டுபிடிப்பது என்னுடைய இறுதியான நோக்கம் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால் மூலதனத்தில் எந்த ஸ்தூலமான சமூகம் சித்திரிக்கப்படுகிறது? அது ஜெர்மனியல்ல, பிரான்ஸ் அல்ல, (மார்க்ஸ் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தைக் குறிப்பிட்ட போதிலும்) இங்கிலாந்தும் அல்ல. அவர் முதலாளித்துவத்தை அதன் கலப்பற்ற வடிவத்தில் சித்திரிக்கிறார். அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவம், அங்கே அது செத்துப் போன, மாற்றமடையாத ஒன்றாகத் தோன்றவில்லை; ஆனால் “மாற்றமடையக் கூடிய, தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்ற அமைப்பாகத்”(7) தோன்றுகிறது.

இந்த அமைப்பைக் கருத்துக்களில் பிரதிநிதித்துவம் செய்வது எப்படி? அதன் அசாதாரணமான சிக்கல் மற்றும் பல் அடுக்கை சிந்தனையில் எடுத்துக் கூறுவது எப்படி? அதன் அம்சங்களின் உள் காரணகாரியத் தன்மையை, அதாவது கட்டமைப்பைச் செயல்படுகின்ற நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் புரிந்து கொள்வது எப்படி? முதலாளித்துவ உறவுகளின் மேல்மட்டத்தில் எல்லோரும் பார்க்கின்ற விதத்தில் தோன்றுவதற்கும் அவற்றின் மறைக்கப்பட்ட சாராம்சத்துக்கும் உள்ள தொடர்பை நிறுவுவது எப்படி? முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மொத்த மனப்போக்கான கட்டுமானத்தைக் கருத்தினங்களின் அமைப்பில் பிரதிபலிப்பது எப்படி?

ஹெகல்

இது மிகக் கடினமான வேலை; குக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையின் உதவியுடன் மார்க்ஸ் இதை நிறைவேற்றினார். இம்முறை ஹெகலிய முறையிலிருந்து நேரடியாகத் தோன்றியபோதிலும், மனிதனில் முடிவடைகின்ற உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் இயற்கை-வரலாற்று நிகழ்வுப் போக்கு கேதேயின் ஃபாவுஸ்டு நாடகத்தில் சித்திரிக்கப்படுகின்ற கண்ணாடி வடிகலத்தில் ஹோமுன்குலஸ் படைக்கப்படுகின்ற மாயாவாத, இரசவாதப் படைப்பிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு இதுவும் வேறுபட்டிருக்கிறது.

முன்பிருந்த ஹெகலைப் போலவே, முதலாளித்துவப் பொருளாதார அமைப்பைத் தத்துவ ரீதியில் மறுபதிப்புச் செய்வதை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி மார்க்சை எதிரிட்டது. இதற்குச் சரியான பதிலளிக்க நம்பகமாக ஏராளமானவை இருந்தன. ஏனென்றால் தவறான முதற் கருதுகோள் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும், ஆடிக் கொண்டிருக்கும் அடிப்படையின் மீது உறுதியான தத்துவ மாளிகையை நிறுவ முடியாது.

அரசியல் பொருளாதாரத்தை மெய்யான, ஸ்தூலமான, உதாரணமாக மக்கள்தொகை, நாடு, அரசு ஆகிய ஏதாவதொன்றிலிருந்து தொடங்குவது மிகவும் இயற்கையானதாகத் தோன்றும். 18ம் நூற்றாண்டுப் பொருளியலாளர்கள் இதைத்தான் செய்தார்கள்.

ஆனால் அரசு என்பது மிகவும் சிக்கலான கருத்தமைப்பு. அரசுப் பொறியமைவு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, அதன் நடவடிக்கையை நிர்ணயிக்கின்ற அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் எவை என்பவற்றைத் தெரிந்து கொள்ளாமல் அரசைப் புரிந்து கொள்ள முடியாது.

அரசிலிருந்து, மக்கள்தொகையிலிருந்து தொடங்குவதென்றால் அது மிகத் தெளிவில்லாத, குழப்பமான மொத்த சித்திரத்தைக் கொடுக்கும்; இன்னும் நுணுக்கமான வரையறுப்புக்களின் மூலமாகவே இக்கருத்தமைப்புகளின் பல்வேறு தனிப்பட்ட அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே அதே பாதையில் மறுபடியும் திரும்பிச் சென்று மக்கள் தொகைக்கு, அரசுக்குப் போக வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தடவை அது குழப்பமான சித்திரமாக இருக்காது, எண்ணற்ற வரையறுப்புக்கள் மற்றும் உறவுகளின் வளமான கூட்டுத் தொகையாக அது இருக்கும்.

ஆகவே ஒருவர் தனிப்பட்ட, தொடக்க நிலையான, சூக்குமமான கருத்தமைப்பிலிருந்து தொடங்க வேண்டும். எந்தக் கருத்தமைப்பிலிருந்து? முதலாளித்துவ உற்பத்தி என்ற ஒருங்கிணைந்த முழு அமைப்பும் இயற்கையாக வளர்ச்சியடைகின்ற முதல் உயிரணு, கரு எது?

மார்க்ஸ் பண்டத்தின் மீது தன்னுடைய கவனத்தைக் குவிக்கிறார். அவர் மூலதனத்தின் முதல் பாராவில் பின்வருமாறு எழுதுகிறார்: “முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுகின்ற சமூகங்களின் செல்வம் ‘பண்டங்களின் மாபெரும் திரட்டாகத் தோன்றுகிறது. அதன் அலகு ஒரு தனிப் பண்டமாகும். ஆகவே நம்முடைய ஆராய்ச்சி பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.”(8)

மார்க்ஸ் மூலதனத்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து, பண்டம், பண்டப் பரிவர்த்தனையிலிருந்து தொடங்குகிறார். இது கற்பனையில் தோன்றவில்லை, அது புலன்களால் அறியப்பட்ட ஒன்று, பொருளாயதமானது. ஒவ்வொருவரும் நாள்தோறும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார், முழுப் பொருளாதார அமைப்பின் எல்லாப் பகுதிகளிலும் இடுக்குகளிலும் அது ஊடுருவியிருக்கிறது, வரலாற்று ரீதியில் அதன் தொடக்க நிலையாக இருக்கிறது.

அதே சமயத்தில் பண்டப் பரிவர்த்தனை முதலாளித்துவ (பண்ட) சமூகத்தின் மிகவும் எளிமையான, மிகச் சாதாரணமான… உறவு, இந்த உறவை நாம் பல கோடித் தடவைகள் சந்திக்கிறோம்.”(9) அது சூக்குமக் கருத்தாக்கம், ஆனால் முதலாளித்துவம் தோன்றிய காலத்திலும் வளர்ச்சியடைந்த காலத்திலும் அதன் மிகப் பொருளாயதமான வாழ்க்கையில் வளர்க்கப்பட்ட சூக்குமக் கருத்தாக்கம். ஹெகலின் சூக்குமக் கருத்தாக்கங்களைப் போல அது வெறும் சிந்தனை நடவடிக்கையின் விளைவு அல்ல. பொருளாயத ரீதியில் இருக்கின்ற அமைப்பின் ஒரு பகுதி என்ற முறையில் அது பொருளாயத ரீதியில் தரப்படுகிறது, ஆகவே இந்த அமைப்பின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவத்தில் அதற்குரிய இடத்தை அது பெற முடியும், பெற வேண்டும்.

பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது? பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த எதிரிடைகளின் போராட்டத்தையும் அதன் விளைவாக சூக்கும உழைப்புக்கும் ஸ்தூலமான உழைப்புக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாட்டையும் மார்க்ஸ் ஆராய்கிறார், இன்னும் அதிகச் சிக்கலான கருத்தாகிய மதிப்பின் எக்காலத்துக்கும் உரிய வடிவத்துக்கு, அதிலிருந்து பணவியல் வடிவத்துக்கு வந்து சேருகிறார். அவருடைய சிந்தனை முன்னரே முடிவு செய்யப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்னே செல்லவில்லை, ஆராயப்படுகின்ற பொருளின் தர்க்கம், இயக்கவியலின் அடிப்படையில் முன்னேறுகிறது. அது பயனுள்ள முடிவுகளை அடைவதற்குத் துல்லியமான காரணம் இதுவே.

மூலதனத்தில் மார்க்சின் முறையை எங்கெல்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ”ஜெர்மானிய இயக்கவியல் முறையை அதன் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் பழைய, மேலெழுந்தவாரியான, வெறும் சொல்லோட்டமுள்ள இயக்கமறுப்பியல் முறையோடு ஒப்பிடும் பொழுது மத்திய காலப் போக்குவரத்துச் சாதனத்தோடு ஒப்பிடுகையில் ரயில்வேயைப் போன்று முன்னது உயர்வானது. இந்த உண்மைக்கு யாரேனும் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் பார்க்க விரும்பினால் அவர் ஆடம் ஸ்மித் அல்லது வேறு அதிகாரபூர்வமான, புகழ் பெற்ற பொருளியலாளர் எவராவது எழுதிய புத்தகத்தை எடுத்துப் படிக்கட்டும், பரிவர்த்தனை மதிப்பும் பயன் மதிப்பும் இந்தக் கனவான்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தன; இந்த இரண்டையும் சரியான முறையில் வேறுபடுத்துவதிலும் அவை ஒவ்வொன்றுக்கும் உரித்தான வரையறுக்கப்பட்ட வடிவத்தை எடுத்துரைப்பதிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பார்க்கட்டும். பிறகு மார்க்ஸ் எழுதிய தெளிவான, எளிமையான விளக்கத்தை அவற்றோடு ஒப்பிடட்டும்.”(10)

முதலாளித்துவ உற்பத்தியின் கட்டமைப்புக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய விதத்தில் ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்கு, ஒரு கருத்தினத்திலிருந்து மற்றொரு கருத்தினத்துக்கு முன்னேறிச் சென்று மார்க்சின் ஒருங்கிணைந்த தத்துவ மாளிகை நிர்மாணிக்கப்படுகிறது. அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு கருத்தினமும் முந்திய கருத்தினத்திலிருந்து அவசியமாகப் பெறப்படுகிறது, அது புதிய உள்ளடக்கத்தைப் பெற்றுச் செழுமையடைந்து நிகழ்வுகளின் பரந்த வட்டத்தை மென்மேலும் அதிகமாக உள்ளடக்குகிறது, அதாவது ஸ்தூலமடைகிறது. பண்டப் பரிவர்த்தனையில் உள்ளுறையாக இருக்கும் ஆரம்ப முரண்பாட்டைப் பற்றிய பகுப்பாய்வு முதலாளித்துவச் சமூகத்தின் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளை-அவற்றின் ஸ்தூலமான வெளிப்பாட்டில்-சுட்டிக்காட்டுவதற்கு இட்டுச் செல்கிறது, ஆகவே இந்தச் சமூகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரமான முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.

விஞ்ஞான அறிதலில் தன்னால் செய்யக் கூடியதை இயக்கவியல் முறை இன்னும் எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது. இயற்கை விஞ்ஞானங்கள் திரட்டப்பட்ட விவரங்களைப் பொது மைப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு, அவற்றை இயக்கவியல் ரீதியில் பரிசீலிப்பதற்கு, ஒரு புதிய கருத்தியல் மற்றும் முறையியல் அமைப்பின் உதவியுடன் வெவ்வேறு துறைகளில் விஞ்ஞானங்களின் உதிரியான சாதனைகளை ஒருங்கிணைப்பதற்கு நிர்ப்பந்தமான அவசியத்தை உணர்கின்றன.

தத்துவச் சிந்தனையின் உயர்மட்டத் துறைகளுக்குள் இயற்கை விஞ்ஞானம் இங்கு தான் நுழைகிறது. சாதிக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையும் திட்டவட்டமான அமைப்பில் ஒழுங்குபடுத்துகின்ற, ஒற்றைத் தத்துவத்தின் சுற்றுவட்டத்துக்குள் அவற்றை விளக்கிக் கூறுகின்ற கடமை தவிர்க்க முடியாதபடி அதை எதிர்நோக்குகிறது. நவீன பெளதிகம், உயிரியல், மற்றும் புறச்சூழல் துறைகளில் இந்தக் கடமை அவசரமாகிவிட்டது என்பது ஏற்கெனவே நாம் அறிந்ததே. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இந்த முறையைத் தவிர இதை நிறைவேற்றுவதற்கு வேறு வழி இல்லை.

ஆராய்ச்சியாளருக்கு இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை ஒரு வலிமையான ஆயுதமாகும். அவர் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு, இசையளவுகளை இழந்து விடாமலிருப்பதற்கு, வழி தவறி முட்டுச் சந்துக்குள் போய்விடாமலிருப்பதற்கு அது உதவி புரிகிறது. பரிசோதனையும் கணித ஆராய்ச்சியும் பிரச்சினையைக் கண்டுபிடிக்காமல் இருக்கின்ற இடங்களில் அதைக் கண்டுபிடிப்பதற்கு அது உதவுகிறது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் ஆராய்ச்சியாளர் தத்துவஞானக் கோட்பாடுகளை அறிந்திருப்பது மட்டும் போதாது, அவர் இந்த முறையில் முழுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

பொதுமைப்படுத்தல்களின் மிக உயர்ந்த மட்டங்களில் உள்ள படைக்கின்ற, தேடுகின்ற, சம்பிரதாயமற்ற சிந்தனை முறைகளை விரித்துரைப்பதற்கு மார்க்சிய-லெனினியத் தத்துவஞானம் அவசியம். தத்துவச் சிந்தனையின் முன்னேற்றத்திற்குப் புதிய சாதனங்களை, பிரபஞ்சத்தின் சாராம்ச, சர்வாம்ச உறவுகளை மென்மேலும் ஆழமான முறையில் ஊடுருவுவதுடன் பொருந்துகின்ற புதிய சிந்தனை முறைகளை அது கண்டுபிடிக்க வேண்டும். மார்க்சியம் முழுவதையும் போலப் பொருள்முதல்வாத இயக்கவியலும் “உயிரில்லாத வறட்டுக் கோட்பாடல்ல… அது நடவடிக்கைக்கு ஜீவனுள்ள வழிகாட்டி” (லெனின்).

*****

மூலதனத்தின் தத்துவஞானத்தைப் பற்றி மேலே எழுதப்பட்டிருப்பவை அனைத்தும் உருவரை மட்டும்தான் என்பது உண்மையே. அறிவார்ந்த நடவடிக்கைக்கு மிகவும் கிளர்ச்சியூட்டுகின்ற, சுவாரசியமான துறை இங்கே இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதுதான் என்னுடைய நோக்கம். இது ஆழம் காண முடியாதது, அதில் ஒருவர் குதிப்பது பயனுள்ளதே. நாம் எவ்வளவு ஆழமாகக் குதிக்கின்றோமோ, அவ்வளவு ஆன்மிக வளத்தை நாம் அடைய முடியும்.

குறிப்புகள்:

(5)“டயடோஹிகள்”(“Diodochi”) – ஹெகலிய மரபின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாக ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர்களை எங்கெல்ஸ் கிண்டலாக இப்படிக் குறிப்பிடுகிறார்.
(6) கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கம் 344.
(7) Karl marx, capital, vol. 1, p. 21.
(8) Karl marx, capital, vol. 1, p. 43.
(9) V.I.Lenin, collected works, Vol. 38, p. 358.
(10) கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1982, பக்கங்கள் 347-48.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986-ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 26 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் – வரலாற்றுத் தொடர்