Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 473

போலீசின் கொட்டத்தை அடக்கிய வேலூர் தரைக்கடை வியாபாரிகள் !

0

 

தரைக்கடை காய்கறி வியாபாரம் (வினவு கோப்புப் படம்)

வெயில் மழை பாராது தலைச்சுமையாகவும், ரோட்டோரமாகவும் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி மற்றும்  தரைக்கடை வியாபாரிகளிடம் உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து ரவுடிகளும்  போலீசு ரவுடிகளும் அன்றாட மாமூல் என்ற பெயரில் வழிப்பறி செய்வதென்பது தமிழகம் அறிந்த ஒன்று. போலீசு  சீருடையில், போலீசின் ரோந்து வாகனத்தில் வந்து கடைக்கு எதிரே நிறுத்தி நிர்ணயித்துள்ள மாமூலை வாங்கிச்செல்லும் காட்சிகள் சினிமாவில் மட்டுமல்ல; அன்றாடம் நாம் கடந்துபோகும் கடைவீதியில் காணக் கிடைக்கும் காட்சிகளுள் ஒன்றுதான்.

இந்தக் காட்சிகளை கண்டிராதவர்கள் எவரேனும் இருந்தால், இரவு பத்து மணிக்கு மேல் ஏதேனும் ஒரு தள்ளுவண்டி கடையருகில் நின்று பாருங்கள். “பத்து பொட்டலம் இட்லியக் கட்டு! இல்லேன்னா கடையக் கட்டு!” என்று சிங்கம் பட ரேஞ்சுக்கு மிரட்டும் போலீசின் அலப்பறைகளை காணும் பாக்கியம் கிட்டும்.

இந்த வரிசையில் இது வேலூர் போலீசின் கதை. அச்சு பிசகாமல் மேலே சொன்ன அத்தனை கொடுமைகளையும் அனுபவித்து வந்தனர் வேலூர் நகரிலுள்ள தரைக்கடை வியாபாரிகள். போலீசின் தொடர் அட்டூழியங்களால் கொதித்திருந்த அவ்வியாபாரிகள், அப்பகுதியில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வழிகாட்டுதலில்,  “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம்” என்ற பெயரில் சங்கமாக ஒன்று திரண்டனர். சங்கம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே, மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் மற்றும் அடுக்கம்பாறை என வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சங்கக்கிளைகள் விரிவடைந்தன.

சங்கம் தொடங்கி தமது மாமூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததோடு, தமது அத்துமீறல்களையும் சங்கம் தட்டிக்கேட்டதால், ஆத்திரமுற்ற போலீசு அவ்வியாபாரிகளை பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக வன்மத்தோடு காத்திருந்தது.

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவர் வேலூருக்கு வருவதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.  கடந்த  03.05.2018 அன்று அடுக்கம்பாறையில் செயல்படும் சாலையோரக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திடீரென்று வந்து மிரட்டியது, கணியம்பாடி போலீசு. சிறிது நேரம்கூட அவகாசம் கொடுக்காமல் வியாபாரிகளை விரட்டியது. முதல்நாளே சொல்லியிருந்தால் கடை போடாமலிருந்திருக்கலாம் என்று வியாபாரிகள் தங்களுக்குத் தாங்களே புலம்பிக்கொண்டு கடைவிரித்திருந்த பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ”என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நீ இன்னும் கடையை எடுக்கல…” என்று கெட்டவார்த்தைகளால் திட்டியபடியே சங்கத்தின் கிளைச் செயலர் தோழர் முருகனை குறிவைத்துத் தாக்கினார் கணியம்பாடி போலீசு ஆய்வாளர் பாண்டியன்.

”கடையை அகற்றிக் கொண்டிருக்கும் போதே அடிக்கிறீயே! நீ என்ன போலீசா? ரவுடியா?” என நேருக்கு நேர் எதிர்த்துக் கேட்டனர், சக வியாபாரிகள். எதிர்த்துக் கேட்டவர்களையும் பெண்கள் என்றும் பாராமல் தாக்கத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் பாண்டியன். பரபரப்பான நகரின் மையப்பகுதியில் போலீசின் இந்த அத்துமீறலை கண்ட பொதுமக்களும் குவியத் தொடங்கினர். போலீசின் அடாவடித்தனத்தை அங்கேயே கண்டித்தனர். தர்ம அடி வாங்க நேரிடும் என்ற பயத்தில், அங்கிருந்து ஓடிவிட்டார் இன்ஸ்பெக்டர் பாண்டியன். தாக்கப்பட்ட முருகனை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு திரண்ட மக்கள்.

இன்ஸ்பெக்டர் பாண்டியனை கைது செய்யக்கோரி, ”பாண்டியன் போலீசா? ரவுடியா?” எனக் கேள்வியெழுப்பும் சுவரொட்டிகளை வேலூர் நகர் முழுவதும் ஒட்டியது, பு.ஜ.தொ.மு. அச்சுவரொட்டிகளைத் தேடித் தேடி கிழித்த இன்ஸ்பெக்டர் பாண்டியன், ”என்னைக் கண்டித்தே போஸ்டர் போடுறீங்களா! உங்கள பாக்குற வகையில பாத்துக்குறேன்!” என்று சங்க முன்னணியாளர்களை மிரட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், “இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனது போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, காட்டன் சூதாட்ட கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு மாமூல் வசூலித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்” என்றும் அம்பலப்படுத்தியிருந்தது.

தினகரனில் வெளியான செய்தி

இந்த செய்தி ஆதாரங்களோடு, தோழர் முருகனையும், பெண்களையும் தாக்கிய இன்ஸ்பெக்டர் பாண்டியன் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் போலீசு துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களிடம் மனு அளித்தனர் வியாபாரிகள்.

”தரைக்கடை வியாபாரிகள்தானே” என்றத் திமிரில் ஆட்டம் போட்ட பாண்டியன், அவ்வியாபாரிகளின் விடாப்பிடியானப் போராட்டத்தை கண்டு பதற வேண்டியதாயிற்று. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்து,  சேதாரத்தின் அளவை குறைத்துக்கொள்ளும் பொருட்டு அ.தி.மு.க., பா.ம.க.வைச் சேர்ந்த பிரமுகர்களின் மூலமாக முருகனிடம் பேரம் பேச தூது விட்டார்.  முகத்திலறைந்தாற் போல பதிலளித்து திருப்பியனுப்பினார் தோழர் முருகன்.

போலீசின் தொடர் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். குறைந்தபட்சம், உடனடியாக பாண்டியனை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நிற்கின்றனர், அவ்வியாபாரிகள்.

இது வேலூர் நகரத்தோடு முடிந்துவிட்ட பிரச்சினையுமில்லை; சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர் பாண்டியன் கொஞ்சம் எல்லை மீறிவிட்டார் என்றளவில் சுருக்கிவிடக்கூடியதுமில்லை; தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரச்சினை இது.

தெருவோரம் கடை விரிக்கும் இவர்கள் யார்? இதற்கு முன்னர் இவர்கள் எங்கிருந்தார்கள்? நீரின்றி வெடித்துக் கிடக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். வேலூர் தோல்பட்டறை ஆலைக்கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கைவிட்டு ஓடி வந்தவர்கள். நம்பியிருந்த நெசவும் கைத்தொழிலும் கைவிட்டதால் கால்வயிற்றுக் கஞ்சிக்காக நகரத்திற்குத் துரத்தப்பட்டவர்கள்.

தெருவோரம் கடை போடுவது ஆக்கிரமிப்பு; சட்டவிரோதம் என்று பீதியூட்டுவதன் மூலம் வியாபாரிகளை பணியவைக்கிறது போலீசு. வியாபாரிகளும், ரோட்ல கடை போடுவது தப்புதானே என்று தார்மீகரீதியில் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதிலிருந்துதான், இவர்களை பகைத்துக்கொண்டால் கால் வயித்துக் கஞ்சிக்கும் வழியில்லாமல் போய்விடும் என்று அஞ்சி, போலீசு – ரவுடிகளுக்கு மாமூல் கொடுக்கின்றனர்.

வியாபாரிகளின் இத்தகையக் குற்றவுணர்ச்சியைத்தான் தான் அதிகாரம் செலுத்துவதற்கான நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறது, போலீசு. முதலில், ரோட்டில் கடை போடுவது சட்டவிரோதம் என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து வியாபாரிகள் விடுபட வேண்டும். உண்மையில், தள்ளுவண்டி வியாபாரி தொடங்கி குட்கா வியாபாரி வரையில் கைநீட்டும் போலீசின் நடவடிக்கைகளல்லவா சட்டவிரோமானவை.

ரோட்டில் கடை போடுவதென்பது, வியாபாரிகளின் வாழ்வுரிமை. அவர்களை நடுத்தெருவுக்கு இழுத்துவந்து விட்டதே இந்த அரசுதான். சொந்த மண்ணில் வாழவும் விடாமல், பிழைப்பு தேடி வந்த இடத்தில் பிழைக்கவும் விடாமல் விரட்டும் இந்த அரசையும் அதன் அடியாளான போலீசையும் இனியும் சகித்து வாழ்வதில் அர்த்தமில்லை.

போலீசின் அத்துமீறல்களையும் அட்டூழியங்களையும் காணும் இடத்திலேயே, அந்தக் கணத்திலேயே கணக்குத் தீர்த்துக்கொள்வதைத் தவிர, காரிய சாத்தியமான வழியேதுமில்லை.

வேலூர் தரைக்கடை வியாபாரிகளின் போராட்டம் உணர்த்தும் செய்தி இதுவொன்றுதான்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.

காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!

11

“காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்?” காஷ்மீரிகளுக்கு இந்தியாவின் எல்லைகளைக் காக்கும் படைகளின்மேல் எந்த மரியாதையும் இல்லையே, ஏன்? கொல்லப்படும் போராளிகளின் இறுதி ஊர்வலங்களுக்கு லட்சக்கணக்கான காஷ்மீரிகள் கூடுகிறார்களே, ஏன்? இந்தக் கேள்விகளுக்கு ஆசிஃபாவின் முறிக்கப்பட்ட முதுகெலும்பும், குனான் போஷ்புராவில் வழிந்தோடிய குருதி வெள்ளமும் பதிலளித்துள்ளன. ஆனாலும், பார்ப்பன தேசியத்தில் ஊறிய இந்தியப் பொதுப்புத்திக்கு இந்தப் பதில்கள் புரிவதில்லை. காஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள காஷ்மீரின் முந்தைய ஆட்சியாளர்களையும் புரிந்து கொள்வது அவசியம்.

அந்த வகையில் கவுண்டர்கரண்ட்ஸ் இணையதளத்தில் எம்.ஜே அஸ்லம் எழுதிவரும் கட்டுரைத் தொடர் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். கீழ்வரும் பகுதி அத்தொடரில் காஷ்மீரை ஆண்ட டோக்ரா மன்னர்களின் வாழ்க்கைக் குறித்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

***

காஷ்மீர் என்றென்றைக்கும் பாரத தேசத்தின் பகுதியாகவும் இந்து மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது என்பதுதான் சங்கிகள் கூறிவரும் கதை.

ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங் டோக்ரா, 16-03-1846 அன்று கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இழிபுகழ் பெற்ற அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மீரை விலைக்கு வாங்கினார். மலைச் சிகரங்களும், பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன் அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. அன்றைய காஷ்மீரின் மக்கள் தொகையைக் கணக்கிட்டால், தலையொன்றுக்கு ஏழேகால் ரூபாய்க்கு வாங்கிப் போட்டிருக்கிறார் குலாப் சிங் டோக்ரா. அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரால் தனது கல்லாப் பெட்டிக்கு எந்தப் பயனுமில்லை என்பதே ஆங்கிலேயக் கும்பினியரின் கணக்காக இருந்திருக்கிறது.

குலாப் சிங்கின் ஆட்சி 1846-ல் இருந்து 57 வரை நடந்தது. அதன் பின் ரன்பீர் சிங் (1857-1885), பிரதாப் சிங் (1885-1925), இறுதியாக ஹரிசிங் (1925-1947) என ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்த டோக்ராக்களின் ஆட்சியில், விவசாயிகளான இசுலாமிய மக்கள் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்தனர். மக்களைத் துன்புறுத்திய நேரம் போக மிஞ்சிய நேரங்களில் டோக்ராக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரத்தைப் பார்ப்போம்.

சமஸ்தான மன்னர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு அருவெறுப்பானது என்பதற்கு ஜூனாகட் மன்னன் மகபத்கான் ரசூலுக்கு நாய்களின் மீதிருந்த காதலை உதாரணமாகச் சொல்வார்கள். அவர் 800 நாய்களை வைத்திருந்தார். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணியாளர்களை நியமித்து சம்பளம் கொடுத்தாராம். நாய்களுக்காக மிகுந்த பொருட்செலவில் திருமணங்கள் நடத்துவது ஜூனாகட் மன்னரின் வழக்கம். அப்படி ஒரு “கல்யாணத்திற்கு” வைசிராய் இர்வின் பிரபுவுக்கே அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை இர்வின் பிரபு “நாகரீகமாக” மறுத்து விட்டார் என்பது தனிக் கதை.

பிரதாப் சிங்

ஆனால், காஷ்மீரின் டோக்ராக்கள் மற்றைய சமஸ்தானாதிபதிகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர்.

மூன்றாவது டோக்ரா மன்னரான பிரதாப் சிங்கின் ஆட்சிக்காலத்தில் மன்னர் கக்கூசு போன வகையில் ஏராளமாக செலவாகியிருக்கிறது. மன்னருக்கு ஆயி வந்தவுடன் மூன்று பணியாளர்கள் தயாராகி விடுவார்கள். அதில் இரண்டு பணியாளர்கள் விலை உயர்ந்த முப்பத்தாறாம் நெம்பர் மஸ்லின் துணியைச் (chatees ki malmal) சுருட்டித் தயாராக வைத்துக் கொள்வார்கள். மன்னர் முக்கி வெளிக்கிப் போனவுடன் இரண்டு பணியாளர்களும், மன்னருக்கு புட்டத்தின் பின்னும் முன்னும் நின்றபடி, மஸ்லின் துணியை மன்னரின் கனமான துடைகளுக்கு இடையே, மிகவும் ஜாக்கிரதையான முறையில் ரம்பம் இழுப்பது போன்ற முறையில் மென்மையாக அசைத்து மலத் துவாரத்தைத் துடைக்க வேண்டும். டைமிங் மிகவும் முக்கியம். மூன்றாவது பணியாளர் வெள்ளி லோட்டாவில் “மிகச் சரியான இலக்கில்” தண்ணீரை ஊற்ற வேண்டும். தாமதமாகி புட்டத்திலும் விரைக் கொட்டைகளிலும் பீ அப்பி விட்டால்…? வேறென்ன, கடுமையான தண்டனைதான்.

முக்கி மலத்தை வெளியே வரவைப்பது, அதில் வெற்றி பெற்றபின், தண்ணீர் படுவதற்கு ஏற்ற முறையில் முன்புறம் குனிந்துக் கொள்வது போன்ற கடினமான பணிகளை மாட்சிமை தங்கிய மன்னரே செய்து கொள்வார்.

மேற்படி மஸ்லின் துணி மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அது பீ துடைத்தத் துணியாக இருந்தபோதிலும், அதனை ராஜ சன்மானமாக பணியாளர்கள் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பீ துடைக்க இறக்குமதி செய்யப்பட்ட மஸ்லின் துணிகளை அப்போதைய தலைமை அமைச்சர் மன்னருக்கே தெரியாமல் ஆட்டையப் போட்டுள்ளார். திருடிய துணியை அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. நிச்சயமாக சட்டை தைத்துப் போட்டிருக்க முடியாது. மன்னர் கண்டுபிடித்து விடுவார். மன்னரைப் போல் அதைப் பயன்படுத்தும் உரிமை அமைச்சருக்கு இருக்க வாய்ப்பில்லை. கருவாட்டைக் களவாண்ட பாப்பாத்தியின் கதைதான்.

மன்னர் அடிக்கடி ஆய் போனால்தானே நிறைய மஸ்லின் துணிகளை ஆட்டையப் போட முடியும்? இதற்காகவே தலைமை அமைச்சர் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார். மன்னர் குடிக்கும் பாலில் கொப்பறை விதைப் பொடியைக் கலந்து விடுவாராம். அது கடுமையாக பேதியைத் தூண்டக் கூடியது. மன்னர் எந்த நேரமும் கக்கூசிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டதால் அரசாங்கம் நிறைய மஸ்லின் துணிகளை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளது. ஒருபக்கம் பயன்படுத்தப்படாத மஸ்லின் துணிகளை அமைச்சர் பிளாக்கில் ஓட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பீ துடைத்த துணிகளோடு பணியாளர்கள் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

அல்லக்கை அலுவலர்களைக் கொண்ட மன்னர் பிரதாப் சிங்கின் கிரிக்கெட் அணி.

ஒரு முறை மன்னர் பிரதாப் சிங்குக்கு கிரிக்கெட் விளையாடும் ஆசை உண்டானது. தனது அல்லக்கைகள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு ஒரு அணியை உண்டாக்கி அதற்குத் தன்னையே தலைவராகவும் நியமித்துக் கொண்டார். காஷ்மீரில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் அணியுடன் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டி நடக்கும் நாளும் வந்தது. தலையில் பொன்னாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய தலைப்பாகையுடனும், மன்னருக்கான அலங்கார உடையுடனும், கழுத்தில் பல லட்சம் பெருமானமுள்ள நகைகளுடனும் களத்தில் இறங்கினார் மன்னர்.

மன்னர் சற்றுக் குள்ளமானவர் என்பதால், மேற்படி அலங்காரத்தோடும் கையில் கிரிக்கெட் மட்டையுடனும் இறங்கிய உருவத்தைப் பார்த்து, போட்டியைப் பார்க்க வந்தவர்கள் சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட்டனர். சிரித்தால் வாயைத் தாங்கிக் கொண்டிருக்கும் தலை துண்டிக்கப்பட்டு விடுமே! போட்டி துவங்கியது. அனைத்து ஏற்பாடுகளுடனும் மைதானத்துக்கு வந்திருக்கிறார் மன்னர். கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மட்டை பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற விசயம் மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

எதிரணியில் இருந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்கோ தர்ம சங்கடம். வேறு வழியின்றி குழந்தைக்கு பந்து போடுவதைப் போல, அல்லது லட்டுவைத் தூக்கிப் போடுவது போல மிக மெதுவாக மன்னருக்குப் பந்து ‘வீசினர்’. அதையும் அடிக்கத் தெரியாமல் ஒவ்வொரு பந்துக்கும் கிளீன் போல்டு ஆனார் மன்னர். மன்னரை அவுட்டாக்குவது ராஜத்துரோக குற்றமல்லவா? அவர் அவுட்டாகும் ஒவ்வொரு பந்தையும் “நோ பால்” என அறிவித்துக் கொண்டிருந்தார் அம்பயர். நோ பாலுக்கு ஒரு ரன் உண்டல்லவா? எனவே மன்னரின் அணி தொடர்ந்து ரன்களாக குவித்துக் கொண்டிருந்தது. இவ்வாறாக நடந்த போட்டியின் இறுதியில் யார் வென்றது என்பதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

பிரதாப் சிங் இப்படி என்றால், காஷ்மீரை விலைக்கு வாங்கிய அவருடைய பாட்டனார் குலாப் சிங் பணவெறி பிடித்தவர். குலாப் சிங்கை யார் வேண்டுமானாலும் சுலபமாகப் பார்த்து விடலாம். மக்கள் யாராவது அவரிடம் மனுக் கொடுக்க விரும்பினால், ஒரு கையில் மனுவையும் இன்னொரு கையில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு “மகாராஜா… மனு” என்று உரக்கக் கத்த வேண்டும். பசித்த கழுகைப் போல் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் என்ன விசயம் என்றே கேட்பார் குலாப் சிங். இப்படி ஒருமுறை பணத்தைப் பறிக்க குலாப் சிங் பாய்ந்தபோது மனுவுடன் வந்தவர் சட்டென்று கையை மூடிக் கொண்டிருக்கிறார். தனது பிரச்சினையைக் கேட்டால்தான் காசு கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் அந்த ஒற்றை ரூபாய்க்காக பொறுமையாக உட்கார்ந்து அவரது பிரச்சினைக்கு காது கொடுத்திருக்கிறார் குலாப் சிங்.

ஹரிசிங்

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஒப்பந்தம் போட்ட கடைசி டோக்ரா மன்னனான ஹரிசிங் ஒரு பெண் பித்தன். நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் வீச்சுடன் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர் அடிக்கடி பாரிசுக்கும் லண்டனுக்கும் சென்று கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. வெள்ளை விலைமாதர்களைத் தேடி ஐரோப்பாவுக்கு அலைந்ததுதான் மாட்சிமை தாங்கிய மன்னரின் நிர்வாக நடவடிக்கையாக இருந்திருக்கிறது.

1921-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு விலைமாதுவுக்கு 1.50 லட்சம் பவுண்டுக்கு காசோலை கொடுத்து வில்லங்கத்தில் சிக்கி போலீசில் மாட்டிக் கொண்டார் ஹரிசிங். நீதிமன்றத்தில் ஹரிசிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தன் கட்சிக்காரரைப் பற்றிச் சொல்லும்போது, அவர் ஒரு ஏழை துர்ப்பாக்கியசாலி என்றும் அவர்மீது கருணை வைத்து விடுவித்து விடுமாறும் கோரினாராம்.

ஹரிசிங் மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத தந்தக் கோபுர வாசி. அவரை சுற்றியிருந்தவர்கள் அனைவரும் துதிபாடிகள். மன்னர் அடிக்கடி ஐரோப்பாவுக்கு போய்விடுவார். ஆகையால், பண்டிட், டோக்ரா அதிகாரிகள் குடிமக்களான இசுலாமிய மக்களை விரும்பியபடியெல்லாம் சுரண்டியிருக்கின்றனர்.

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறதா?

சாக்கியன்

அக்லக் முதல் ஆசிஃபா வரை ஒரே சட்டம்தான் ! கருத்துப்படம்

2

ஒரே நாடு… ஒரே சட்டம்…

அக்லக் முதல் ஆசிஃபா வரை, ஹரேன் பாண்ட்யா முதல் லோயா வரை அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

கவர்னர் தாத்தாவின் அறிக்கைக்கு தடை – பு.மா.இ.மு. வழக்கு வெற்றி !

6

ருப்புக்கோட்டை – நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் அமைத்த சட்டவிரோதமான சந்தானம் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தாக்கல் செய்த இந்த பொதுநல வழக்கில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் அவசரம் அவசரமாக கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பு, காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் போட்ட ஐவர் குழு, அதை தொடர்ந்து ஆளுநர் நியமித்த சந்தானம் குழு, பிறகு ஐவர் குழுவை ஆளுநர் கலைத்தது, இதற்கு இணையாக தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை.. என அடுத்தடுத்து நடந்த கேலிக்கூத்துகளைப் பார்த்த அனைவருக்கும் இந்த சிவகாசி ஜெயலட்சுமி விவகாரத்தில் எண்ணற்ற மாணவிகள் சிதைக்கப்பட்டிருப்பர் என்பது புரியாமல் இல்லை. ஊடகங்களும் இதனை எழுதத்தான் செய்தன.

அதே நேரத்தில், ஆளுநர், துணைவேந்தர், அரசு, போலீசு மற்றும் தரகர்கள் ஆகியோர் இணைந்த இந்த கிரிமினல் கூட்டணி, விசாரணை என்ற பெயரில் சாட்சியங்களை அழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இதனைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகத்தான் மேற்சொன்ன வழக்கு தொடுக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வரும் இந்த வழக்கை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு, மாணவிகளை பலியாக்க முயன்ற – நிர்மலா தேவி வழக்கினை பெண் டி.ஐ.ஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, அதனை சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை செய்யவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் பெண் வழக்கறிஞர்களை உள்ளடக்கி – “பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்” கீழ் புகார் குழு அமைக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிகள் பெயர் விபரங்களை வெளியிட்ட தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமி மற்றும் அருப்புக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில் உள்ள போதே

  • சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் அறிக்கையினை Status Report ஆக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • காமராஜர் பல்கலை. இப்பிரச்சினையில் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டியின் விசாரணையை தடை செய்ய வேண்டும்.
  • தேவாங்கர் கல்லூரி செயலர் ராமசாமி, அருப்புக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை இடைக்கால நிவாரணமாக கோரப்பட்டது. இவ்வழக்கு 03.05.2018 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு கவர்னருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. வழக்கு 23.05.2018 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

இதற்கிடையில், சந்தானம் கமிட்டி தனது விசாரணை அறிக்கையினை 15.05.2018 அன்று கவர்னரிடம் வழங்குவதாக செய்தி வெளியானது. எனவே ஏற்கனவே கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டியின் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், அதன் அறிக்கையினை வெளியிடக்கூடாது என்ற அவசரக் கோரிக்கை 10.05.2018 காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குற்றவியல் விசாரணையில் கவர்னர் சட்டவிரோதமாக தலையிடுகிறார். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நபரை நீதிபதியே குறிப்பான உத்தரவின்றி விசாரிக்க முடியாது, சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் மனு போட்டு அனுமதி பெற்றுத்தான் நிர்மலாதேவி உள்ளிட்ட நபர்களை விசாரணை செய்தது, ஆனால் எவ்வித உத்தரவுமின்றி கவர்னர் நியமித்த அதிகாரி சந்தானம், ஜெயிலுக்குள்ளேயே சென்று நிர்மலாதேவியை விசாரணை செய்தது, உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. இப்பிரச்சினையில் உண்மையான குற்றவாளிகள் யார்? இதற்கு முன் இது போன்று பாதிக்கப்பட்டவர் விபரம் என்ன? இனிமேல் இதுபோன்று நடக்கவிடாமல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்ற வகையில் விசாரணை அமைய வேண்டும். அதனை உயர்நீதிமன்றம் கண்காணிப்பது மிக அவசியம் என்றும் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

தமிழக அரசின் வழக்குரைஞரும், காமராசர் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞரும் ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி வாதிட்டனர்.

காமராஜர் பல்கலைக் கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமிருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. துணைவேந்தர் நியமித்த குழுவை ஆளுநர் கலைத்துவிட்டதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. இப்போது கவர்னர் சட்டப்படி செயல்படுவதாக இருவரும் வாதிடுவது கேலிக்கூத்து என்று பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

நீண்ட வாதுரைக்குப் பின்னர் வழக்கினை விடுமுறைகாலம் முடிந்த பின்னர், ஜூன் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இதற்கிடையில் கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டி விசாரணை அறிக்கையினை வெளியிடக்கூடாது, “சீல்” செய்த கவரில் வைத்திருக்க வேண்டும், இவ்வழக்கின் உரிய உத்தரவுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையினை முடிவு செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டனர்.

கல்வித்துறையே கலவித்துறையாகவும், கல்லாத்துறையாகவும் மாற்றப்பட்டிருப்பதன் ஒரு வெளிப்பாடுதான் நிர்மலாதேவி விவகாரம். SAVE MKU என்ற அமைப்பில் கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரோடு இணைந்து இவ்விசயத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போராடி வருகிறது. இவ்வழக்கு அப்போராட்டத்தின் ஒரு பகுதி.

ஒன்றிரண்டு சிறிய மீன்களைக் காவு கொடுத்து விவகாரத்தை மூடிவிடுவதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பிரச்சினை குறித்து பேசும் பல்கலைக்கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் கிரிமினல் கும்பலை அடையாளம் காட்டுவதற்கே கூட மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து விடாப்பிடியாகப் போராட வேண்டும்.

நீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் இந்த இடைக்காலத் தீர்ப்பு என்பது அப்படி ஒரு போராட்டத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு.

தகவல்:

வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !

பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் !
பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம் !!

ந்திய ‘‘ஜனநாயகம்” பாதுகாப்பான நான்கு தூண்களின் மீது நிற்கிறது என்ற பொய்மை, அதன் மீது நம்பிக்கை கொண்டவர்களே பயந்து அலறும் விதத்தில் மிக வேகமாக நொறுங்கிச் சரிந்து வருகிறது.

இந்திய ‘‘ஜனநாயகத்தை” வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாகச் சித்தரிக்கப்பட்டுவரும் நீதித்துறை, அந்தச் சித்தரிப்புக்கு நேரெதிரான திசையில் வெகு வேகமாக நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அறிவுத்துறையினரும் அரசியல் கட்சிகளும் ‘‘நீதிமன்றத்தை மதிக்கிறோம்” என்ற அவர்களுக்கேயுரிய சம்பிரதாயச் சொற்றொடரைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையின் வெளிப்பாடுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் ‘‘இம்பீச்மென்ட் மோஷன்” எனப்படும் பதவி நீக்கத் தீர்மானம்.

இதற்கு முன் நீதிபதிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானங்கள் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பானவை. தற்போதைய தீர்மானத்திலும் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இருப்பினும், ‘‘தீபக் மிஸ்ரா தலைமையிலான ஒரு நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் முழுவதையும் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக்கொண்டு, மோடி அரசுக்குத் துணை நிற்கிறது” என்பதே தற்போதைய தீர்மானத்தின் மையப்பொருள்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ‘‘ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று பிரகடனம் செய்தபோது, அது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத நிகழ்வு என்று அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.

இந்நடவடிக்கை தீபக் மிஸ்ராவுக்கும் மோடி அரசுக்கும் அரசியல்ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், இருவருமே சமரசத்துக்கு இறங்கி வரவில்லை.

மருத்துவக் கல்லூரி ஊழலில் சி.பி.ஐ.-இடம் கையும் களவுமாகச் சிக்கியிருக்கும் தீபக் மிஸ்ராவும், லோயா வழக்கில் ஆதாரபூர்வமாக சிக்கியிருக்கும் மோடி- அமித் ஷா கும்பலும் ஒருவரையொருவர் காப்பாற்றியாக வேண்டும் என்ற நிலையில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர்.

வாரிசுரிமை, சாதி, அரசு ஆதரவு, ஊழல் போன்ற தகுதிகளால் பதவியைப் பெற்றிருக்கும் நீதிபதிகளோ, மோடி கூட்டணிக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே, நான்கு மூத்த நீதிபதிகளின் குமுறல் ‘‘பரபரப்பு செய்தி” என்ற அளவுக்கு மேல் பாரிய விளைவு எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கப்பட்டதை நான்கு நீதிபதிகள் வெளிப்படையாகவே விமரிசித்ததால், அந்த வழக்கை தனது தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றிக்கொண்டார் தலைமை நீதிபதி.

லோயாவின் மரணம் நிகழ்ந்த சூழல் குறித்து எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமலேயே ‘‘மரணத்தில் சந்தேகப்பட ஏதுமில்லை” என்று தீர்ப்பு வழங்கியது இந்த அமர்வு. அதுமட்டுமல்ல, மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மனுதாரர்கள் ‘‘நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக” அவர்களை எச்சரித்தது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளிலிருந்து மூத்த நீதிபதிகள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகின்றனர் என்பதும், அரசுக்குச் சாதகமான தீர்ப்பு வருவதை உத்திரவாதம் செய்யும் விதத்தில் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு மட்டுமே அவை ஒதுக்கப்படுகின்றன என்பதும் தீபக் மிஸ்ரா மீது கூறப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு.

தீபக் மிஸ்ராவால் இதுவரை நியமிக்கப்பட்ட 7 அரசியல் சட்ட அமர்வுகளிலும் அவர் இருக்கிறார். ஒன்றில் கூட கொலீஜியத்தின் மற்ற நான்கு நீதிபதிகள் இல்லை. மற்ற பல மூத்த நீதிபதிகளும் ஓரங்கட்டப்பட்டு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஒதுக்கப்படுகின்றன.

செல்லமேஸ்வர் அமர்வு விசாரித்து வந்த ஆதார் வழக்கிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ரஞ்சன் கோகோய் விசாரித்து வந்த சி.பி.ஐ. இயக்குநர் நியமன வழக்கு அவரிடமிருந்து மாற்றப்பட்டது.

பாபர் மசூதி வழக்கிலும் மற்ற மூத்த நீதிபதிகள் விலக்கப்பட்டனர். மோடிக்கு எதிரான சகாரா-பிர்லா ஊழல் வழக்கு, பா.ஜ.க.-வினருக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டிருக்கும் அருண் மிஸ்ரா அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. குட்கா வழக்கைப் போல மறுக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தும், அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து மோடியைக் காப்பாற்றினார் அருண் மிஸ்ரா.

வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பயன்படுத்தும் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்து ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கையும் தானே விசாரித்த தீபக் மிஸ்ரா, ‘‘தலைமை நீதிபதி அரசமைப்பு சட்டத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால், சட்டப்படி அவர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்று தீர்ப்புக் கூறி, நிர்வாகி என்ற முறையில் தான் செலுத்திவரும் சர்வாதிகாரத்தை, தன்னுடைய தீர்ப்பின் வழியாகவே சட்டபூர்வமானதாக மாற்றிக்கொண்டார்.

‘‘சட்டப்படிச் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்” என்று நகைக்கத்தக்க முறையில் தனது நல்லொழுக்கத்துக்கு சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமை நீதிபதி, மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் இலஞ்சம் வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுபவர்.

யாரும் தனக்குத்தானே நீதிபதியாக முடியாது என்ற இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறி, தனக்கெதிரான வழக்கைத் தானே விசாரித்துத் தள்ளுபடி செய்தவர், அவ்வழக்கு பிற நீதிபதிகளிடம் விசாரணைக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, தனது உத்தரவின் தேதியைத் திருத்தி போர்ஜரி செய்தவர்.

தானொரு நிலமில்லாத ஏழை பிராமணன் என்று பொய் சத்தியம் செய்து ஒரிசா அரசிடமிருந்து இலவச நிலம் வாங்கி, பிறகு மோசடி நிரூபிக்கப்பட்டு பிடிபட்டவர். அந்தக் குற்றத்தை மறைத்து நீதிபதி பதவியைக் கைப்பற்றியவர். மேற்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆளான தீபக் மிஸ்ராவைத்தான் உத்தமர் மோடியின் அரசு பாதுகாக்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியத்தால் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டவருமான உத்தர்கண்ட் தலைமை நீதிபதி மாத்யூ ஜோசப்பின் பெயரை நிராகரித்திருக்கிறது மோடி அரசு. ஏனெனில், அவர் உத்தர்கண்டில் மோடி அரசுத்தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததைத் தனது தீர்ப்பின் மூலம் ரத்து செய்தவர்.

கோபால் சுப்பிரமணியத்தை நீதிபதியாக விடாமல் தடுத்ததில் தொடங்கி இஷ்ரத் ஜகான் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் படேலை ராஜினாமாவுக்குத் தள்ளியது வரை நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக வாயிற்புறம் வழியே நுழைந்து நீதித்துறையைக் கைப்பற்றும் வாய்ப்பு தவறிப் போனதால், கொல்லைப்புறம் வழியே நீதித்துறைக்குள் நுழைகிறது மோடி அரசு.

நீதிபதி பதவியில் அமர்ந்திருக்கும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகளும், பதவி வேட்டைக்காரர்களும் கொல்லைப்புறக் கதவைத் திறந்து பார்ப்பன பாசிசத்தை வரவேற்கிறார்கள்.

இதற்கு நன்றிக்கடனாக, ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மான நோட்டீசை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது” என்று நிராகரிக்கிறார் வெங்கையா நாயுடு. நாயுடுவின் முடிவை எதிர்ப்பதாயின், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும்.

‘‘அந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தீபக் மிஸ்ராவுக்கு உண்டு” என்று கூறும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், ‘‘தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறித்துவிடுமென்று” கவலைப்படுகிறார்.

‘‘தலையை வேண்டுமானால் சீவி விடலாம். ஆனால், அது நீதித்துறையைப் பிடித்தாட்டும் தலைவலிக்கு மருந்தாகுமா?” என்று பதவி நீக்க தீர்மானம் குறித்து கேள்வி எழுப்புகிறார் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.

நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பு மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இது மறுக்கமுடியாத நிரூபணம். நெருங்கி வரும் பாசிசத்துக்கும் இது முன்னறிவிப்பு.

-புதிய ஜனநாயகம், மே 2018

அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

குட்கா தனித்ததொரு பொருள் அல்ல. பாக்கு, புகையிலை, காசிக்கட்டி, மெழுகு, நீர்ச் சுண்ணாம்பு ஆகிய பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூட்டுப் பொருள்.

குட்கா தயாரிக்கப் பயன்படும் பொருட்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், அவை குறைவான தீமை கொண்டவை, தவிர்க்க வேண்டியவை, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை எனப் பல்வேறு விதமாக உள்ளன. ஆனால், அவையெல்லாம் ஒன்று சேர்ந்து குட்காவாக உருவெடுக்கும்போது, அபாயகரமான போதைப் பொருளாக மாறிவிடுகிறது.

தமிழகத்தின் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., போலீசு டி.ஜி.பி. ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரைத் தனித்தனியாக மதிப்பிடும்போது, ஒவ்வொருவரும் குட்காவின் மூலப்பொருட்களைப் போன்று தனித்தனியான குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

ஆளுநர் புரோகித் பெண் பித்தராக அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறாரே தவிர, அவர் மீது கைநீட்டிக் காசு வாங்கினார் என்ற ஊழல் குற்றச்சாட்டு இதுவரை வரவில்லை.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு அப்பால், வேறு அசிங்கமான குற்றச்சாட்டுக்கள் இதுவரை இல்லை.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இரத்தத்திலேயே ஆதிக்க மனோபாவம் ஊற்றெடுப்பதைக் காண முடிகிறது. நியாயமான ஊதியம் கேட்டுப் போராடிய இரக்கத்துக்குரிய அரசு செவிலியர்களை, ஊதியம் போதவில்லை என்றால், வேறு வேலைக்குச் செல்லுங்கள் என ஏகடியம் செய்த பண்பாளர் அவர்.

இந்தத் தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து தமிழகத்தை ஆளுவது தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

*****

ன்று தமிழகத்தை ஆண்டுவரும் அ.தி.மு.க. அரசு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகி நிற்கிறது. ஊழல், தமிழக மக்களின் நலன்களை கார்ப்பரேட் கும்பலுக்கும் இந்து மதவெறியர்களுக்கும் அடமானம் வைப்பது எனச் செயல்பட்டு, தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கும் இந்த அரசை இன்று தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிக் கொண்டிருப்பவை இரண்டு சக்திகள்தான்.

ஒன்று பிரதமர் மோடியும் அவரது அரசின் ஏஜெண்டாகத் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும். இரண்டாவது சென்னை உயர் நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும்.

அ.தி.மு.க. அரசு ஊழலற்ற அரசு என நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மறுபுறம், அ.தி.மு.க. அரசோ நிர்மலா தேவி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அம்ரேஷ் பூஜாரியை நியமித்து, மோடிக்கும் புரோகித்துக்கும் நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கிறது.

மேலும், ஆளுநரால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தானம் கமிசனின் சட்டப்பூர்வத் தகுதி குறித்து வாய்திறக்கவும் மறுக்கிறது.

சிவகாசி ஜெயலெட்சுமி விவகாரம் தமிழக போலீசுத் துறையின் ஆபாசங்களை அம்பலப்படுத்தியதென்றால், நிர்மலா தேவி விவகாரம் உயர்கல்வித் துறையில் காணப்படும் அசிங்கங்களையும் வக்கிரங்களையும் அம்பலப்படுத்துகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைச்செல்வன் தொடங்கி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவரின் தனிச் செயலர் ராஜகோபால் வரை பல பெரிய மனிதர்களின் பெயர்கள் நிர்மலா தேவி விவகாரத்தில் அடிபடுகின்றன.

ஆனால், இது தொடர்பாக விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி.யும், சந்தானம் விசாரணையும் உண்மைகளை வெளிக்கொண்டு வரப் போவதில்லை. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூன்று புரோக்கர்களையும் பலிகொடுத்துவிட்டு, வக்கிரம் பிடித்த பெரிய மனிதர்களைத் தப்பவைப்பதே அதன் நோக்கம் எனத் தெரிகிறது.

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் எனச் சொல்வது உண்டு. அ.தி.மு.க. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமோ நீதிமன்றமாக இருக்கிறது.

குட்கா வழக்கு, ஓ.பி.எஸ். உள்ளிட்டு 11 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரித் தொடரப்பட்ட வழக்கு, தமிழகச் சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட சொத்துக்குவிப்பு குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகிய மூன்றிலும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்புகள் ஒரு சட்டவிரோத சிறுபான்மை ஆட்சி தொடருவதை உத்திரவாதப்படுத்தியிருக்கின்றன.

*****

குட்கா வழக்கில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், குட்கா ஊழலை ஊத்தி மூடிவிட முயன்ற அ.தி.மு.க. அரசு மீதோ, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் மீதோ எந்தவொரு விமர்சனத்தையும் கண்டனத்தையும் அத்தீர்ப்பு பதிவு செய்யவில்லை. மாறாக, எடப்பாடி அரசிடம் நயந்துபோய் தன்னிலை விளக்கமளித்திருக்கிறது.

‘‘வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கும் எங்கள் தீர்ப்பு, மாநில போலீசு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இதுவரை நடத்திவந்த விசாரணையின் மீது எந்தக் கடுமையான குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அந்த விசாரணையில் மாநில அரசைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலையீடு செய்தார்கள் என்றும் கூறவில்லை.”

விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருப்பது மாநில அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகக் கருத இடமேயில்லை என்றவாறெல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்டு, எடப்பாடி அரசைக் குளிப்பாட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை

அ.தி.மு.க. அரசு குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை 2013 ஆண்டே தமிழ்நாட்டில் தடை செய்துவிட்ட நிலையில், 2015 ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை செங்குன்றம் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் சென்னை போலீசார் ரெய்டு நடத்தி பல கோடி ரூபாய் பெறுமான குட்கா பாக்கெட்டுகளையும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். எனினும், இவ்விவகாரத்தில் ரெய்டுக்கு அப்பால் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் போலீசு அதிகாரிகளின் தலையீட்டால், அந்த ரெய்டு அத்தோடு ஊத்தி மூடப்பட்டது.

இதன் பிறகுதான், 2016 ஆண்டு ஜூலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதே ஆலையில் சோதனை நடத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசு கமிசனர், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு யார் யாருக்கு எவ்வளவு மாதாந்திர மாமூல் கொடுக்கப்பட்டது எனக் குறித்து வைக்கப்பட்டிருந்த ஆவணத்தைக் கைப்பற்றியது.

மாதிரிப் படம்

இதன் அடிப்படையில் வருமான வரித்துறை சுகாதாரத் துறை அமைச்சர், முன்னாள் சென்னை போலீசு கமிசனர் இருவர் உள்ளிட்டுப் பல்வேறு நிலைகளில் 39.91 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்ட அறிக்கையை ஆதாரங்களுடன் அப்போது தலைமைச் செயலராக இருந்த ராம்மோகன ராவிடமும், போலீசு டி.ஜி.பி. அசோக்குமாரிடமும் அளித்தது.

ராம்மோகன ராவ் இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமுக்கிவிட, டி.ஜி.பி. அசோக்குமார் குட்கா இலஞ்சம் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து, அதனை முதலமைச்சர் ஜெயாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு, கிரிமினல் ஜெயா கும்பலால் அவர் மிரட்டப்பட்டுப் பதவி விலக வைக்கப்பட்டார். அசோக்குமாருடன் இணைந்து புலன் விசாரணை நடத்திவந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம், உப்பு சப்பில்லாத பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.

‘‘குட்கா முதலாளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்கினார்” என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையிலேயே, டி.கே.ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியதோடு, அவரை போலீசு தலைமை இயக்குநராகவும் அமர்த்தி அழகு பார்த்தது, எடப்பாடி அரசு.

ராம மோகன ராவ் – கிரிஜா வைத்தியநாதன்

இதனிடையே தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் அளித்தார்.

காணாமல் போனதாகக் கூறப்படும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மாநில இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இவ்விசாரணையின் கண்காணிப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்கொடியை நியமித்தது. எனினும், ஜெயக்கொடி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளே தூக்கியடிக்கப்பட்டார்.

இதேபோல, இவ்வழக்கில் கூடுதலாக அக்கறை செலுத்தி வந்த ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் மஞ்சுநாதாவும் அப்பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர், போலீசு கமிசனர் ஆகியோர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டு வருமான வரித்துறை அறிக்கை அளித்திருந்தபோதும், இலஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர் பெயரையோ, உயர் போலீசு அதிகாரிகள் பெயரையோ குறிப்பிடாமல் மொன்னையான முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்து நீதிமன்றத்திடம் அளித்திருக்கிறது. இந்த ஊழல் விவகாரம் அம்பலமாகி இரண்டு வருடங்கள் முடிந்த பிறகும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயாவும் கூட குட்கா ஊழல் வழக்கை ஊத்திமூடிவிடவே முயன்றார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பத்திரிகைகள் வாயிலாக அம்பலமாகிவிட்ட பிறகும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அ.தி.மு.க. அரசின் மீதோ, போலீசு துறையின் மீதோ எவ்விதமான கண்டனமும் செய்யாமல் நயந்து தீர்ப்பு அளித்திருப்பது இலஞ்சம் வாங்குவதைவிடக் கேவலமானது.

இத்தீர்ப்பு வந்தவுடனேயே கோவை நகரம் சூலூர் பகுதியில் இயங்கி வந்த குட்கா ஆலைக்குள் புகுந்து 15 மணி நேர சோதனையை நடத்தியது, கோவை போலீசு. குட்கா ஊழல் தொடர்பான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழிப்பதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பத்திரிகைகளும் அம்பலப்படுத்துகின்றன.

இது உண்மையாகவும் இருக்கக்கூடும். அதேசமயம், இந்த ஊழல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படாமல் சி.பி.ஐ. கைக்குக் கிடைத்திருந்தால்கூட, ஒன்றும் குடிமுழுகிப் போயிருக்காது. ஏனென்றால், இன்று சி.பி.ஐ., மோடி கும்பலின் கூண்டுக்கிளியாகத்தான் செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிடப் போவதில்லை. மாறாக, எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசையும், அ.தி.மு.க. என்ற கிரிமினல் கூட்டத்தையும் தனது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுவரும் மோடி கும்பலுக்கு இந்த ஊழல் வழக்கு இன்னுமொரு துருப்புச் சீட்டாகவே பயன்படும்.

*****

தமிழகச் சட்டமன்றத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் ஜெயாவின் படத்தை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ‘‘சட்டமன்றத்தினுள் யாருடைய படத்தை வைப்பது எனத் தீர்மானிக்கும் சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் தலையிட விரும்பவில்லை என்று மட்டும் கூறி தள்ளுபடி செய்யவில்லை.”

ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் படத்தை வைப்பதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லாததால், நாங்கள் சபாநாயகருக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் தர முடியாது என்றும் கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது, இந்திரா பானர்ஜி அமர்வு. சட்டம் இல்லை என்பதொரு நொண்டிச்சாக்கு.

குட்கா உழல் விவகாரம் குறித்த பத்திரிக்கை செய்திகளை காண்பித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் திமுக-வினர்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் சட்டத்தை மீறி அனைத்துவிதமான சலுகைகளையும் பார்ப்பன ஜெயாவிற்கு வாரி வழங்கியவர்கள்தான் மாண்புமிகு நீதிபதிகள். குறிப்பாக, ஜெயா இறக்கும் வரையிலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்காமல் ஜெயாவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி வந்த உச்ச நீதிமன்றம், அவர் இறந்துபோனதையே காரணமாகக் கூறி, சொத்துக்குவிப்பு குற்றத்திலிருந்தே அவரை விடுதலை செய்துவிட்டது.

2017, பிப்ரவரியில் நடந்த எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்த சபாநாயகர் தனபாலின் உத்தரவை ரத்து செய்யக் கோரும் வழக்கு.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யக் கோரும் வழக்கு, எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரும் வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது மட்டுமல்ல, இன்று தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள எடப்பாடி அரசின் தலையெழுத்தையே தீர்மானிக்கக்கூடியவை.

இவற்றுள் ஓ.பி.எஸ். அணி தொடர்பான வழக்கில் மட்டும் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிட்டு, மற்ற வழக்குகளை ஊறப் போட்டு வைத்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த பாரபட்சம் மற்றும் தாமதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தவுடனேயே, நாங்கள் மனசாட்சிப்படி தீர்ப்பளித்திருப்பதாக சென்டிமென்ட் வசனத்தை எடுத்துவிட்டார், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

ஊழல் பேர்வழிகளின் சட்டவிரோத ஆட்சி தொடருவதை உத்திரவாதப்படுத்தியிருக்கும் இந்த மனசாட்சி, குட்காவைவிட அபாயகரமானது அல்லவா!

தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை, அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தவுடனேயே பறித்த சபாநாயகர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை மன்னித்திருப்பது பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது.

இந்த உண்மையைப் பார்க்க மறுத்திருக்கும் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸின் மனசாட்சி, சபாநாயகர் முடிவெடுக்காத விடயங்களில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது என்ற சந்துக்குள் புகுந்துகொண்டு, இந்தச் சட்டவிரோத சிறுபான்மை அரசைக் காப்பாற்றிவிட்டது.

உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசின் கேடயமாகச் செயல்படுகிறது. எடப்பாடியோ ஊழல் குற்றஞ்சுமத்தப்பட்ட டி.ஜி.பி.யையும் அமைச்சரையும் பதவியிலிருந்து நீக்காமல் காப்பாற்றுகிறார். டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் செயல்படும் போலீசு படையோ மக்களின் போராட்டங்களை ஒடுக்கி, அவர்களின் ஆத்திரத்திலிருந்து இந்த அரசைக் காப்பாற்றுகிறது.

எடப்பாடி அரசிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர். எடப்பாடி அரசோ ஆளுநரின் களிவெறியாட்ட லீலைகள் அம்பலமாகிவிடாமல் காப்பாற்றுகிறது. இந்த பாண்டவர்களைக் காப்பாற்றும் கிருஷ்ணா பரமாத்மா பாத்திரத்தை மோடி அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, காவிரி உரிமையை மறுப்பது, டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவது, தமிழகத்தை இராணுவமயமாக்குவது உள்ளிட்ட இந்து மதவெறி, கார்ப்பரேட் சார்பு திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணிப்பதற்கு எடப்பாடி அரசைக் காப்பாற்றித் தொடரச் செய்வது மோடி கும்பலுக்கு அவசியமாக இருக்கிறது.

அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் கைத்தடியாகச் செயல்படுகிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

-திப்பு

-புதிய ஜனநாயகம், மே 2018

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி ! காவிரி கூட்டத்திற்குத் தடை !!

காவிரி உரிமைக்காக 10.05.2018 அன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது மாநகர காவல்துறை.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், மோடி அரசும் கூட்டு சேர்ந்து அடுத்தடுத்து தமிழகத்துக்கு எதிராக அநீதி இழைத்து வருகிறது. உலகுக்கே உணவளித்த டெல்டா உழவர்களை தண்ணீருக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இப்பொதுக்கூட்டத்தை எவ்வாறேனும் தடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்த காவல்துறை, 23 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தந்து  விளக்கம் கேட்டது. உதாரணத்திற்கு சில:

  1. கலை நிகழ்ச்சியில் பாடப்பட இருக்கும் பாடல்களில் பாடல் வரிகள் விவரம் தெரிவிக்கவும்.
  2. எவ்வளவு நபர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்? ஆண்கள் மற்றும் பெண்களின் தோராய எண்ணிக்கை எவ்வளவு? அவர்களது பெயர்கள் மற்றும் முகவரியினை தெரிவிக்கவும்.
  3. வெளிமாவட்டங்களிலிருந்து எவ்வளவு பேர் (ஆண், பெண்) எத்தனை வாகனங்களில் வந்து கலந்துகொள்வார்கள்? அவ்வாறு வரும் நபர்களில் முக்கிய பிரதிநிதிகளின் பெயர், முகவரி தெரிவிக்கவும் மற்றும் அவ்வாறு வரும் வாகனங்களின் பதிவு எண் என்ன? எந்த மாதிரியான வாகனங்கள் என்கிற விவரம் தெரிவிக்கவும்.

இவை ஜனநாயக விரோதமானது என்றாலும் பதிலளிக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பொதுகூட்டத்துக்கு அனுமதி மறுப்பார்கள் என்பதால் ஒரு பதிலை தயாரித்து ஒப்படைத்தோம். அதன் பிறகும் பதிலளிக்காமல்  கடைசி நேரத்தில் 08.05.18 இரவு 10 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் அளித்தது காவல்துறை.

அதில், “கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான, முழுமையான பதில் அளிக்கப்படவில்லை. தங்கள் அமைப்பால் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. தாங்கள் அனுமதி கோரியுள்ள பொதுக்கூட்டத்தின் கோரிக்கையான ‘காவிரி உரிமைப் பற்றிய விளக்கம்’ சம்மந்தமாக மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. தங்கள் அமைப்பின் மீது பதியப்பட்ட வழக்குகளில் இருந்து தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக தாங்கள் கோரியுள்ளபடி பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வந்ததற்காக 3 கல்லூரி மாணவிகளை கொளுத்திய அந்த கட்சியின் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக சொல்லி எமக்கு பேச்சுரிமை மறுக்கப்படுகிறது.

போலீசு பாதுகாப்போடு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால் ஓட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்கள் கிரிமினல் குற்றவழக்கு பின்னணியுடன் இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்க அனுமதி வழங்குவது எப்படி? சொத்துக் குவிப்பு வழக்கின் A1 குற்றவாளி ஜெயாவை, அவர் குற்றவாளி எனத்தெரிந்த பின்பும் 3 முறை ஆட்சியில் அமர்த்தி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க துணைபோனது எப்படி? தற்போது, அந்த கிரிமினல் குற்றவாளியின் புகைப்படத்தை சட்டசபையில் திறப்பதற்கும், மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கும் அனுமதி வழங்கியது எப்படி? ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?

இந்த அடிமைக் கும்பல் ஆட்சியில் நீடிப்பதே சட்டவிரோதம். இந்த சட்டவிரோத கும்பல்தான் போராடுபவர்களினால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிறது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது என நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

இந்த சட்டவிரோத ஆட்சியை தக்க வைக்கவே தமிழகத்தின் உரிமைகளை காவிகளின் காலடியில் அடகுவைக்கிறது அடிமை எடப்பாடி கும்பல். தான் அடிமையானதோடு மட்டுமல்லாமல் தன்மானத்திலும், சுயமரியாதையிலும், சமூக நீதியிலும் முன்மாதிரியாகத் திகழும்  தமிழகத்தையும் சேர்த்து அடிமையாக்க எத்தனிக்கிறது. மோடி – உச்ச நீதிமன்ற கூட்டுச்சதியின் மூலம் தமிழகத்தின் உரிமைகளை பறித்துவிட்டு, அதை எதிர்த்துப் பேசவும், போராடவும் தடைவிதிப்பது பாசிச ஆட்சியின் வருகையை உணர்த்துகிறது.

ஜல்லிக்கட்டில் டெல்லியை பணிய வைத்தோம். ஆனால், காவிரி, நீட், கெயில், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்… என அனைத்திலும் டெல்லியிடம் தமிழகத்தை மண்டியிடு என நிர்ப்பந்திக்கிறது ஒரு எடுபிடி கும்பல். நாம் என்ன செய்யப் போகிறோம்?

தகவல்:
மக்கள் அதிகாரம் – திருச்சி
9445475157.

சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுப்போம் – பு.மா.இ.மு. கருத்தரங்கம்

0

ழல் – பாலியல் சீரழிவு  – நிர்மலாதேவி – என சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், நீட் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மோடி அரசின் அறிவிப்பு என உயர்கல்வி மீதான மோடி அரசின் தொடர் தாக்குதல்களை கண்டிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

வருகிற மே.13 அன்று மாலை.5 மணியளவில் சென்னை சி.ஐ.டி.காலனி, கவிக்கோ மன்றத்தில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் ’’கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி’’ என்ற நூலை வெளியிடப்போவதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்பாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோடி அரசால் திணிக்கப்பட்ட நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி உரிமையை பறித்து மாணவி அனிதாவை கொன்றது. இன்று வெளிமாநில தேர்வு மையம், சோதனை, கட்டுப்பாடு என்ற பெயரில் சி.பி.எஸ்.இ வாரியம் செய்த சித்திரவதையால் மூன்று பெற்றோர்கள் நெஞ்சு வெடித்து செத்திருக்கிறார்கள். “நீட் தேர்வை ரத்து செய்” என்று ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் மக்களும் ஓராண்டாக போராடி வருகிறோம். இதையெல்லாம் மயி…க்கு சமமாகக் கூட மதிக்காத மோடி அரசு தமிழக மாணவர்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி இழைக்கிறது. தகுதி திறமையின் பெயரால் நடக்கும் இந்த நீட் தேர்வு என்பதே ஒரு பயங்கரவாதம்.

இன்னொரு பக்கம், அருப்புக்கேட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி 4 மாணவிகளை உயர் அதிகாரிகளின் காமவெறிக்கு பலியாக்க முயன்ற விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வசமாக சிக்கிக்கொண்ட ஆளுநரோ துணைவேந்தர் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக தானே ஒரு விசாரணைக்குழு அமைத்திருக்கிறார். பி.ஜே.பி-யின் அடிமையான அ.தி.மு.க. அரசின் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார்கள்.

‘இது பத்தாண்டுகள் கதை’ என்று ஆளுநர் மாளிகை, உயரதிகாரிகள் தொடர்பு பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் நிர்மலா தேவி. சூரப்புலிகள் சந்தானம் குழுவும், சி.பி.சி.ஐ.டி யும் நிர்மலா, முருகன், கருப்பச்சாமி என மூன்று பேரை மட்டும் குற்றவாளியாக்கி வழக்கை ஊத்தி மூடப்பார்க்கிறது. குற்றவாளிகளே விசாரணை கமிசன் அமைத்தால் வேறு என்ன நடக்கும்?

தமிழகத்திலுள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு RSS காரர்களை துணைவேந்தர்களாக நியமித்துள்ளார் ஆளுநர். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகியவைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தர அடிப்படையிலான தன்னாட்சி வழங்கியுள்ளது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

இதன் விளைவு, புதிய பாடதிட்டங்கள், பாடப்பிரிவுகள், துறைகளை ஆரம்பிக்கவும், பேராசிரியர் தேர்வுகள், மாணவர் சேர்க்கைக்கும் UGC ன் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. இப்பல்கலைக்கழகங்கள் சந்தையின் தேவையையொட்டி புதிய படிப்புகளையும், திறன் படிப்புகளையும் சுயநிதி முறையில் (self financing mode) வழங்கலாம். வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம்.

பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படும். நிதி சுமையை சமாளிக்க கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும். இடஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படும், கல்வி உதவித்தொகைகள் நிறுத்தப்படும். கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் அண்ணா பலகலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகும். ஏறத்தாழ அரசு பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கையே தர அடிப்படையிலான தன்னாட்சியாகும்.

இலஞ்ச-ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றச்சாட்டுகள், தனியார்மயம் என ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையுமே கிரிமினல்மயமாகி மாணவ சமுதாயத்திற்கு எதிரானதாக மாறியுள்ளதையே இதெல்லாம் காட்டுகின்றன. உயர்கல்வி சீரழிக்கபப்டுவதற்கு மூல காரணமான கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம். அனைவருக்கும் தரமான – இலவச கல்வி கிடைக்க மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப்போம்! வாரீர்!” என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


”கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி”

நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்

 

நாள்: மே.13  நேரம்: மாலை.5 மணி,
இடம்: கவிக்கோ மன்றம், சி.ஐ.டி காலனி,சென்னை.
( மியூசிக் அகாடமி அருகில் )

 


நிகழ்ச்சி நிரல்:

தலைமை;

தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

கருத்துரை;

திரு.பேரா ப.சிவக்குமார்,
மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.

திரு.பேரா அ.கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி.

திரு.பேரா அ.சீனிவாசன்,
தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு.

திரு.பேரா ஜெ.அமலநாதன்,
பொருளாதாரவியல் துறைத்தலைவர்,
புனித சவேரியர் கல்லூரி,நெல்லை.

திருமதி.பேரா சி.சாந்தி, சென்னை.

நன்றி உரை;

தோழர்.வா.சாரதி,
மாவட்ட செயலாளர், பு.மா.இ.மு. சென்னை.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல்,
சென்னை -95, 94451 12675

ஹாலிவுட் காமெராவும் அமெரிக்க பீரங்கியும் !

1

ஹாலிவுட் பணம் சம்பாதிப்பதற்கு அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன், உதவுகிறது. பதிலுக்கு, அமெரிக்காவின் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது ஹாலிவுட்.

இந்த கூட்டணியின் தயவில் முதல் படம் 1927 -ம் ஆண்டு வெளிவந்த “விங்ஸ்” (Wings). இது ஒரு விருது பெற்ற திரைப்படம். அன்று முதல் அமெரிக்க இராணுவம், ஹாலிவுட்டைப் பயன்படுத்தி தனது இழிபெயரைக் காப்பாற்றும் விதமாக 1800 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. பதிலுக்கு ஹாலிவுட் அமெரிக்க இராணுவத்தின் போர்த் தளவாடங்களை திரைப்படத்தில் பயன்படுத்தி பெரும் பணத்தை ஈட்டியிருக்கிறது.

“லோன் சர்வைவர், கேப்டன் பிலிப்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், மார்வெல் – டிசி – எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோ வரிசைப் படங்கள் (‘Lone Survivor,’ ‘Captain Philips,’ ‘Transformers’ and Marvel DC and X-Men) அனைத்து படங்களிலும் அமெரிக்க இராணுவத்தின் தளவாடங்களை பயன்படுத்துவதற்கு பென்டகன் சம்மதித்திருக்கிறது. பதிலுக்கு இராணுவத்திற்கு ஒளிவட்டம் போட ஹாலிவுட் சம்மதித்திருக்கின்றது. இவையெல்லாம் சமீபத்திய சான்றுகள்.

ஹாலிவுட் இராணுவ சாகசப்படம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

அமெரிக்க அரசு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இராணுவத்துடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி இராணுவம்தான் திரைக்கதையின் இறுதி வடிவத்தை அங்கீகரிக்க வேண்டும். பதிலுக்கு பல கோடி கோடி டாலர் செலவு பிடிக்கும் அமெரிக்க இராணுவத் தளவாடங்களை பயன்படுத்துவதற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் படம் பிடிப்பதற்கும் தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்க இராணுவம் உதவும்.

“எங்களை சிறுமைப்படுத்தும் எதையும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம்” என கடற்படையின் தகவல் தொடர்பு இயக்குநர் கேப்டன் ரஸ்ஸல் கூன்ஸ், வெளிப்படையாகவே அல்ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவிக்கிறார்.

“நாங்கள் கூறும் திரைக்கதை திருத்தங்களை தயாரிப்பாளர்கள் ஏற்கும் பட்சத்தில் அவர்களோடு ஒப்பந்தம் போடுவோம். இல்லை என்றால் அவர்கள் தமது சொந்த படத்தை சுதந்திரமாக எடுக்கலாம் – எங்களது இராணுவ தளவாட உதவி இல்லாமல்!” என்கிறார் ஹாலிவுட்டோடு பேச்சுவார்த்தை நடத்தும் இராணுவப்பிரிவின் தலைவர் பில் ஸ்ட்ரப்.

அதாவது நாட்டுமக்களின் பணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது நலனுக்கு பயன்படுத்துவதாகவும் இதைச் சொல்லலாம். ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல. அமெரிக்க மக்கள் தேசவெறி பிடித்து இராணுவத்தை ஆதரிக்க வேண்டும். இது மட்டுமே பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரும்புகிற விசயம்.

ஹாலிவுட் – இராணுவக் கூட்டணியின் அபாயம் என்ன?

பிரம்மாண்டமான பொழுதுபோக்கு ரசனையை திறமையுடன் உருவாக்கும் ஹாலிவுட், அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்குகிறது. “அயர்ன் மேன், எக்ஸ்-மென், டிரான்ஸ்பார்மர்ஸ், ஜுராசிக் பார்க்” (Iron Man,’ ‘X-Men,’ ‘Transformers’ or ‘Jurassic Park III’) போன்ற படங்களில் ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக அமெரிக்க இராணுவம் பங்கேற்பதில்லை. அமெரிக்க மக்களை குறிப்பாக இளைஞர்களிடம் உளவியல் ரீதியாக இராணுவத்தை வழிபடும் மனநிலையை உருவாக்குகிறார்கள். இத்தகைய அப்பட்டமான வெறி யதார்த்த உலகில் பெரும் அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

“கட்ஸ் அன்டு குளோரி” நூலின் ஆசிரியர் லாரன்ஸ் சூயிட், அல் – ஜசீராவிடம் கூறுவதைக் கேளுங்கள் (Lawrence Suid, author of “Guts and Glory”): “வியட்நாம் போரின் வரலாற்றை வகுப்பறையில் நான் பாடமாக நடத்தும்போது, நாம் எதற்காக வியட்நாமில் சிக்கிக் கொண்டோம் என்பதை என்னால் விளக்க முடியவில்லை. என்னால் விவரங்களையும், தேதிகளையும் கூற முடிந்தது. ஆனால் ஏன் என்ற கேள்விக்கு விடை கூற இயலவில்லை. திரைத்துறைப் படிப்பை முடித்து பட்டம் வாங்கும்போதுதான் நான் யோசித்துப்பார்த்தேன்.

ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல.

தங்கள் நாடு ஒரு போரில் தோற்றிருப்பதாக அமெரிக்க மக்கள் ஒருபோதும் எந்த திரைப்படத்திலும் பார்த்ததே இல்லை என்ற உண்மை திடீரென்று அப்போதுதான் எனக்கு உரைத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்சன், “நம்மால் வியட்நாமிற்கு சென்று வெல்ல முடியும்” என்று கூறிய போது, அமெரிக்க மக்கள் அவரை நம்பினார்கள். ஏனெனில் 50 வருடங்களாக அவர்கள் பார்த்த எல்லா சினிமாக்களிலும் அமெரிக்கா ஜெயிப்பதை மட்டுமே அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அமெரிக்க மூளையில் ஹாலிவுட் தடுப்பூசி

சூயிட் கூறுவது போல, தலைமுறை தலைமுறையாக அமெரிக்க மக்கள், இரண்டாம் உலகப் போரில் போது நார்மண்டி கடற்கரையில் இறங்கும் “தி லாங்கஸ்ட் டே” (‘The Longest Day’) திரைப்படத்தின் நாயகன் ஜான் வெயின் போன்றவர்களின் சாகசத்தை மட்டுமே பார்த்து வருகிறார்கள். அமெரிக்கா என்றாலே இரக்க குணம் கொண்ட நாயகன் என்ற பிம்பம் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. சந்தேகம் என்பதே அவர்கள் சிந்தனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு அமெரிக்கர்களின் மூளையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அமெரிக்க இராணுவத்தின் சாகசங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இப்படி இராணுவத்தை விமர்சனமற்று விதந்தோதுவதால்தான் ஹாலிவுட்டின் பெருவெற்றிப் படங்கள் அமெரிக்க மக்களின் மனநிலையை மாற்றி, 2003 இராக் போர் போன்ற ஆக்கிரமிப்புகளை ஆதரிக்க வைக்கின்றன. இராக் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் உளவியல் சூழலை உருவாக்கிய படங்கள்தான், ஸ்பில் பெர்க் இயக்கத்தில் வெளியான “சேவிங் பிரைவேட் ரியான்(1998)” (‘Saving Private Ryan’), ஜெர்டி பிரக்ஹெய்மர் தயாரித்த “பிளாக் ஹாவ்க் டவுண் (2001) (‘Black Hawk Down’)” போன்றவை. இத்தகைய படைப்பாளிகளைத்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது பெரும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக கருதுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் தனது கொள்கை பிரச்சாரத்திற்காக டாம் கூரூஸின் பெருவெற்றி படமான “டாப் கன் (1986)”-ஐ (Top Gun ) ஆதரித்தது மற்றுமொரு சான்று. ப்ரூக் ஹைமரை தயாரிப்பாளராகக் கொண்ட இப்படம்தான் ஹாலிவுட் – அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு ஒரு மைல் கல் எனலாம். அதே நேரம் போர் எதிர்ப்பு படங்களான “அப்போகலிப்ஸ் நவ், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட்” (‘Apocalypse Now,’ ‘Platoon’ and ‘Full Metal Jacket,’) போன்றவை வியட்நாம் போரில் சிக்கிய அமெரிக்காவின் நெருக்கடியை சித்தரித்ததால் இராணுவம் இப்படங்களை கடுமையாக எதிர்த்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அமெரிக்க ஆதிக்கத்தை கொடியசைத்து கொண்டாடும் ரீகனுடைய அரசியலின் திரை வடிவம்தான் டாப் கன் திரைப்படம். பனிப்போர் காலகட்டத்தில், வியத்நாம் தோல்வியால் துவண்டிருந்த அமெரிக்க மனத்துக்கு போடப்பட்ட முறிவு மருந்துதான் டாப் கன் திரைப்படம்.

அமெரிக்க இராணுவத்தின் பெரிய அளவிலான உதவி இல்லாமல் “டாப் கன்” திரைப்படத்தை தயாரித்திருக்கவே முடியாது. அதனால்தான் இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய இத்திரைப்படம் இராணுவம் குறித்த மக்களின் ஆதரவை பெருமளவு உயர்த்தியது. அதன் விளைவாகவே 1991 வளைகுடா ஆக்கிரமிப்பு போரின் போது 85 சதவீத மக்கள் இராணுவத்தை ஆதரித்தார்கள்.

“டாப் கன்” காலத்திலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரச்சார எந்திரம், 72 சதவீத மக்களின் ஆதரவைப் பெறுவதை சாத்தியமாக்கியிருக்கிறது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் 12%, ஊடகங்களில் 24%, தேவாலயங்கள் 40% மட்டுமே இராணுவத்தை ஆதரிக்கின்றனர் என்ற நிலையில் பொது மக்களின் ஆதரவு இவை அனைத்தையும் விட அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

சித்திரவதைக்கு ஆதரவான சி.ஐ.ஏ. திரைப்படம்

இப்படியான போர் ஆதரவு வேலைகளை ஏதோ பாதுகாப்பு அமைச்சகம்தான் செய்கிறது என்பதல்ல. அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ-வும் தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவும் வரலாற்றை திரிப்பதற்காகவும் இதைச் செய்கிறது.

சான்றாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சார்லி வில்சனின் போர் (charlie wilson’s war, 2007) என்ற பொய்களால் நிரம்பிய திரைப்படத்தைப் பயன்படுத்தி, ஆப்கான் முஜாகிதீன்களுடன் தான் கொண்டிருந்த கடந்த கால உறவை மறைத்துக் கொண்டு, மாவீரர்களாகத் அமெரிக்காவை சித்தரித்துக் கொண்டது சிஐஏ.

அதே போல சி.ஐ.ஏ உதவியுடன் 2012-ம் ஆண்டில் வெளிவந்த “சீரோ டார்க் தர்ட்டி” (‘Zero Dark Thirty’) என்ற படம், வரலாற்றை திரித்ததோடு, கைதிகளைச் சித்திரவதை செய்வதுதான் அவர்களிடமிருந்து தகவல்களைக் கறப்பதற்கான வழி என்று அமெரிக்க மக்களை நம்ப வைத்தது.

இந்தப் படத்தின் மூல வடிவம் 2001 முதல் 2010 வரை ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடர். “24” என்று பெயரிடப்பட்ட இந்த தொடருக்கும் சி.ஐ.ஏ-தான் உதவி செய்தது. எம்மி விருது பெற்ற “ஹோம்லாண்ட்” (‘Homeland,’) நிகழ்ச்சியும் சி.ஐ.ஏ புகழ் பாடியதோடு, சித்திரவதைகளையும் ஆதரித்தது. சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்ற “ஆர்கோ”வின் கதையே (Argo – 2012) சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணியை அம்பலமாக்குவதுதான். இருப்பினும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுடனும் கூட்டு வைத்துக்கொண்டு, தங்களைப் பற்றிய வரலாற்று உண்மைகளை திரித்ததன் வாயிலாக சிஐஏ தனது இமேஜை பாதுகாத்துக் கொண்டது.

அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயர்ந்த ஜனநாயக நாடு என்றால், அதன் இராணுவமும், உளவுத் துறையும் எதன் பொருட்டு தனது குடிமக்களை திசை திருப்ப வேண்டும்? கலையின் பெயரால் உண்மைகளை ஏன் திரிக்க வேண்டும்? இதற்கான விடை தெரிந்ததுதான். அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயரிய ஜனநாயகம் என்று அமெரிக்க மக்களை நம்ப வைக்க வேண்டுமானால், இந்த பொய் பித்தலாட்டம் கலை கிராபிக்ஸ் எல்லாம் இருந்தால் மட்டும்தான் முடியும்!

வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த பல படங்கள் சங்கடமான பல உண்மைகளைப் புலனாய்வு செய்து வெளியே கொண்டு வந்தன. “அப்போகலிப்ஸ் நவ், கமிங் ஹோம், தி டீர் ஹன்டர், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட், மற்றும் பார்ன் ஆன் தி ஃபோர்த் ஜூலை (‘Apocalypse Now,’ ‘Coming Home,’ ‘The Deer Hunter,’ ‘Platoon,’ ‘Full Metal Jacket’ and ‘Born on the Fourth of July,’) போன்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியின்றி தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பூக்கத்தை அழிக்கும் அமெரிக்க அதிகார வர்க்கமும் ஆதிக்கவெறி பிடித்த இராணுவ எந்திரமும் சேர்ந்து ஹாலிவுட்டின் கலையாக்க முயற்சிகளை தொட்டிலிலேயே மென்னியை நெறித்து விடுகின்றன. திரைப்படத் தயாரிப்பு தொழில் மேலும் மேலும் கார்ப்பரேட் மயமாகி வரும் இன்றைய நிலையில், குறைவான தயாரிப்பு செலவில் தனது படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது இயக்குநர்களுக்கு மாபெரும் சவாலாக மாறி வருகிறது.

இராக், ஆப்கன் போர் எதிர்ப்பு படங்கள் ஏன் இல்லை?

வியட்நாம் போருக்குப் பின் வெளிவந்த விமரிசன பூர்வமான திரைப்படங்கள் எதுவும் இராக் படையெடுப்பின் தோல்விக்குப் பின்னர் வரவில்லை. ஆப்கான் புதைகுழியில் மீளமுடியாமல் அமெரிக்கா சிக்கியிருப்பது குறித்தும் ஹாலிவுட் படங்கள் எதுவும் வரவில்லை.

பாதுகாப்புத்துறையால் அங்கீகரிக்கப்பட்டவையும், பொய்களின் அடிப்படையிலான தேசபக்தியால் மூளையை நிரப்புபவையும், போர் ஆதரவு குப்பைகளுமான “அமெரிக்கன் ஸ்நைப்பர் மற்றும் லோன் சர்வைவ்வர் (‘American Sniper’ and ‘Lone Survivor’) போன்ற படங்களைத்தான் கண்டோம்.

சிறந்த திரைப்படத்துக்கான விருதினைப் பெற்ற 2008 இல் வெளியான “தி ஹர்ட் லாக்கர் (‘The Hurt Locker’) என்ற திரைப்படம் ஒரு விதிவிலக்கு. மெசபடோமியாவில் (இராக்கில்) அமெரிக்கா நடத்திய தோல்வியுற்ற போர் குறித்த அசிங்கமான உண்மைகளை தைரியமாக சித்தரித்த அந்த திரைப்படம் பாதுகாப்புத் துறையின் உதவி இல்லாமல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ தொழிற் குழுமத்தின் செல்வாக்கிற்கு தெரிந்தோ தெரியாமலோ ஆட்படுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி அதிபர் ஐசன்ஹோவர் அமெரிக்கர்களை முன்பு ஒரு முறை எச்சரித்திருந்தார்.

ஐசன்ஹோவர் தனது தொலைநோக்கான அந்த எச்சரிக்கையில் இராணுவ தொழிற்குழுமம் என்பதுடன் கேளிக்கை என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில் பாதுகாப்புத்துறை – சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணிதான் அமெரிக்க மக்களை அறிவே இல்லாத இராணுவ வெறி பிடித்த முட்டாள்களாக மாற்றியிருக்கிறது.

முடிவே இல்லாத ஒரு போர் ஆதரவு வெறிப்பிரச்சார சுழலில் அமெரிக்கா சிக்கியிருக்கிறது. பாதுகாப்புத்துறை – சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணி அமெரிக்க மக்களை இராணுவ வெறியர்களாக மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய அரசிடமிருந்தும் பொழுதுபோக்கு சாதனங்களிடமிருந்தும் மென்மேலும் இராணுவ சாகசத்தை எதிர்பார்க்கிறார்கள். அலசி துவைத்து காயப்போட்டு மீண்டும் மீண்டும் எத்தனை முறை அதே சரக்கையே கடை விரித்தாலும் பார்த்து மயங்கத் தயாராக இருக்கிறார்கள்.

வருங்காலத்தில் அமெரிக்கா நடத்தவிருக்கும் தோல்வியுறும் போர்களை மென்மேலும் அதிகமாக கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கும், உலகம் முழுவதும் பலகோடி மக்களின் மரணத்திற்கு உடந்தையாக இருப்பதற்கும் அமெரிக்க மக்களைப் பக்குவப்படுதுவதற்கு இராணுவ – சி.ஐ.ஏ. – ஹாலிவுட் பிரச்சாரக் கூட்டணி உத்திரவாதமளிக்கிறது.

மைக்கேல் மெக்காஃப்ரே, ரசியா டுடேயில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

மேலும் :

The Pentagon & Hollywood’s successful and deadly propaganda alliance

பட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் !

டசென்னை பழைய வண்ணாரப் பேட்டை, தெருவுக்கு தெரு மக்கள் சிறு தொழிலில் தினக்கூலி வேலையில் மூழ்கி வாழ்கிறார்கள். அவர்களின் பணிச் சூழலும் உழைப்பின் கடுமையும் பார்ப்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது.

ஏழைக் குழந்தைகள் முதல் தொழிலாளிகள் வரை விரும்பி சாப்பிடும் பட்டர் பிஸ்கட்டுகள் இங்கு மணக்க மணக்க சுடச்சுட தயாராகிறது. அந்த பிஸ்கட் அடுமனையை நீங்களும் பாருங்கள்…

நெய் பிஸ்கட், கிரீம் பிஸ்கட், சால்ட் பிஸ்கட், ராகி பிஸ்கட், முந்திரி பிஸ்கட், எள்ளு பிஸ்கட் என்று முப்பதுக்கும் மேற்பட்ட வகைவகையான பிஸ்கட்டுகள்.

இங்கு இருக்கும் தொழிலாளிகள் பத்து ஆண்டுகள் முதல் அறுபது ஆண்டுகள் வரை தொழில் அனுபவம் உடையவர்கள். பத்து பதினைந்து வயதில் தொழிலில் நுழையும் உழைப்பாளிகளின் குழந்தைகள். அறுபது வயதான பின்னும் அதே சுறுசுறுப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எடுபிடி வேலை செய்யும் ஹெல்பர்களாக இத்தொழிலுக்கு வருபவர்கள் முதலில் பிஸ்கட் காலி தட்டுகள், டின்களை அடுக்கி வைப்பவர்களாகவும் போகப்போக பிஸ்கட் மாவு மிக்சிங் கலையில் வல்லுநர்களாகிறார்கள். பின்னர் பிஸ்கட் அச்சு வடிப்பதில் கைதேர்ந்தவர்களாகவும் கடைசியில் ஓவன் ஆபரேட்டர்களாகவும் தொழிலில் உச்சத்தை தொடுகிறார்கள்.

இருநூறு டிகிரி உள்வெப்பத்தில் வைக்கப்படும் பதமான மாவு அடுத்த கால் மணிநேரத்தில் மொறு மொறு பிஸ்கட்டுகளாக உருமாறி, மணக்க மணக்க வெளியே வருகிறது.

பிஸ்கட் தயாரிப்பையும் அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் விளக்குகின்றனர் கேளுங்கள்…

பிஸ்கட்டுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் தரமான மைதா மற்றும் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் வனஸ்பதி. “குழைந்தைகள் பண்டம் என்பதால் இப்பொருட்களை நாங்கள் மிகவும் கவனமாக தயார் செய்வோம்.

இங்கு தயார் ஆகும் பிஸ்கட்டுகள் மறுநாளே கடைக்கு சென்று விடும். அதிகபட்சமாக ஒரு வாரத்தில் விற்றுத்தீர்ந்து விடும். மீண்டும் புது பிஸ்கட்டுகள் தான் உங்களுக்கு கிடைக்கும். ஓல்டு ஸ்டாக் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இரண்டு நாளைக்கு ஒருமுறை நாங்கள் சில்லைறை கடைகளுக்கு சரக்கு போட்டுக்கொண்டே இருப்போம். அதனால் குழந்தைகளுக்கு இதனை நீங்கள் நம்பிக் கொடுக்கலாம்.

ஆனால் பிராண்டு பெயர்களில் வரும் குட்டே , மில்க் பிக்கி, பிளாக் மேஜிக், மேரி பிஸ்கட் அனைத்தும் குறைந்தது பத்து நாட்களுக்கு பிறகு தான் தயாரிப்பில் இருந்து வெளியே வருகிறது. அந்த பிஸ்கட் விற்று தீருவதற்கு குறைந்தது ஒரு மாதமாகும்.

அதன் பேக்கிங் கண்ணை பறிக்கும் வண்ணம், குழந்தைகளின் மனசை தூண்டுகிறது. அதற்காக டி.வி. விளம்பரம், நடிகைகள் விளம்பரம் என்று பணத்தை கொட்டுகிறார்கள்.
கொடுக்கும் பிஸ்கட்டை எடை குறைத்து கொடுத்து விளம்பர செலவை சாதுர்யமாக எடுத்து விடுகிறார்கள்.

உதாரணத்திற்கு பத்து ரூபாய்க்கு எங்கள் பட்டர் பிஸ்கடின் எடை 120 கிராம் இருக்கும். ஆனால் அதே பத்து ரூபாய்க்கு அவர்கள் எழுபது கிராம் பிஸ்கட் தான் கொடுப்பார்கள்.
அதில் அளவுக்கு அதிகமாக கோக்கோ பவுடரும் மற்றும் சர்க்கரை பாகும் சேர்த்து குழந்தைகளின் நாக்கை தூண்டுகிறார்கள்.

இன்னும் ஒவ்வொரு பிராண்டு பிஸ்கட்டும் அவர்களுடைய தனிப்பட்ட பார்முலா என்று பல ரகசிய கலவைகளை சேர்க்கிறார்கள். அதனுடைய ரகசியம் யாருக்கும் தெரியாது.

குழந்தைகள் இப்பொழுது சோற்றையும், காய்கறியையும் வேப்பங்காயாக ஒதுக்கும் ரகசியம் அந்த தனிப்பட்ட பார்முலா தான்.

நாங்கள் இப்பொழுது பிராண்டு பிஸ்கட்டோடு மார்க்கெட்டில் நிற்க முடியாமல் குறைந்த முதலீட்டைக்கொண்டு தள்ளாடுகிறோம். இருந்தாலும் சோர்ந்து விடாமல் தொழிலை காப்பாற்ற புதுப்புது வியாபார உத்திகளை கையாளுகிறோம்.

இப்பொழுது “ஜார் பிஸ்கட்டுகள்” அறிமுகப்படுத்துகிறோம். தினமும் பழைய கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைத்துவிட்டு வருவதற்கு பதில் இப்பொழுது ஒவ்வொரு முறையும் பிஸ்கட்டுடன் புது ஜார்களில் கொடுக்கிறோம்.

சரக்கு தீரும் வரை பளபளப்பாக இருப்பதால் போட்டியில் நிற்க முடிகிறது. ஆனால், எப்படியும் நாங்கள் பிழைக்கக் கூடாது என்று மோடி புதுபுது உத்திகளை கொண்டு எங்களை போண்டியாக்குகிறார்.

ஜி.எஸ்.டி., ரூபாய் நோட்டு செல்லாது என்று பல ரூபத்தில் எங்களை தாக்குகிறார்கள். அவர் இந்த நாட்டு பிரதமர் என்று சொல்லிக்கிகொண்டு கார்ப்பரேட்டுகளின் சேல்ஸ் ரெப்பாக வேலை செய்கிறார். என்ன செய்வது..” என சொல்லிக்கொண்டே சிரிக்கிறார்.

– வினவு புகைப்பட செய்தியாளர்.

மோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை !

“காவிரி உரிமை : குப்புறத்தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

 

இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல்

காதல், திருமணம் குறித்த கனவுகள், கற்பனைகள் இல்லாத இளைஞர்கள் இல்லை. இந்த கனவுகள், ஆசைகளைத் தாண்டி இரு பாலரையும் இணைக்கும் இந்த சமூக நிகழ்வு நம் நாட்டில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

சமீபத்தில் சென்னை வடபழனி அருகே கோவில் பூசாரி ஒருவர், தனது குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டை மறைக்க மனைவியை கொலை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு டில்லி ரியான் பள்ளியில், தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை ஒத்தி வைக்க ஒரு 11-ம் வகுப்பு மாணவன், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை குத்திக் கொன்றான். கடன் சுமை காரணமாக ஆசை மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார் ஒரு வணிகர்.

காதலை எடுத்துக் கொண்டால் சாதி, மத காரணங்களுக்காக நடக்கும் ஆணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கணக்கே இல்லை. இளைய பருவத்தை தாண்டினால் வாழ்க்கை நெருக்கடிகள் தோற்றுவிக்கும் மனச்சோர்வில் பதட்டமும் வன்முறையும் கொலைகளும் நமது சமூகத்தை பிடித்து ஆட்டுகின்றன.

உறவுகள், நட்பு, அலுவலகச் சூழல் எதுவும் நமது மக்களை உற்சாகப்படுத்தி அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதுவாக இல்லை. தனிமைப்படும் மக்களோ ஏதாவது ஒருகணத்தில் தவறிப் போகின்றனர்.

சினிமாவும், தொலைக்காட்சிகளும், விளம்பரங்களும் ஒரு மாய உலகைக் காட்டிக் கொண்டே நம்மை தூண்டில் போட்டு பிடிக்கின்றன. வீடு, பொருட்கள், இன்னும் பிற வசதிகளை நோக்கி ஓடும் நம் மக்களுக்கு அது முடிவே இல்லாத ஒரு மாய ஓட்டம் என்பது புரிவதே இல்லை.

உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் இதயத்தை மீட்பது எப்படி? முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

இதயத்தை மீட்பது எப்படி ? – புதிய கலாச்சாரம் மே 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இதயத்தை மீட்பது எப்படி ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
  • சினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி
  • சீதை
  • பிள்ளை வளர்ப்பு : ஒரு குடும்ப வன்முறை!
  • சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
  • சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
  • மற்றுமொரு ஐடி காதல் கதை…
  • ‘ஐயர்’ பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
  • ஆணி இறங்காத சுவர் – ஒரு அனுபவம்!
  • அழகு – சில குறிப்புக்கள் !
  • உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?
  • கெளரவம்

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் ரத்து !

“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று திருச்சி உறையூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு, கடைசி நேரத்தில் போலீசு அனுமதி மறுப்பு.

இதன் காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

*****

காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!

பொதுக்கூட்டம்

நாள் : மே – 10. மாலை 6:00 மணி
இடம் : பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகில், உறையூர், திருச்சி.

தலைமை :

தோழர்.செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

கண்டன உரை:
  • திரு. மு. அப்பாவு, மாநில தணிக்கைக்குழு உறுப்பினர், தி.மு.க.
  • தோழர். நாகை மாலி, மாவட்டச் செயலாளர். சி.பி.எம். நாகை.
  • தோழர். இந்திரஜித், மாநில குழு உறுப்பினர், சி.பி.ஐ.
  • திரு. புண்ணிய மூர்த்தி, மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.
  • திரு. ம.ப. சின்னத்துரை, மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம். திருச்சி.
  • தோழர். அறிவழகன், தலைவர், சேம்பர் செங்கல் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்.
  • அன்பில் திரு.ரவிக்குமார், மாவட்டச் செயலாளர். சமூக நீதிப்பேரவை, திருச்சி மாவட்டம்.
  • தோழர்.மணியரசன், விவசாயி, மக்கள் அதிகாரம், செம்பரை, லால்குடி.
சிறப்புரை:
  • தோழர். ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு.
  • தோழர். காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

*****

தகவல் :
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

திருச்சி-94454 75157,
மணப்பாறை-98431 30911,
கரூர்-97913 01097.

காவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை !

“காவிரி உரிமை : குப்புறத்தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

நிர்மலா தேவி : சந்தானம் விசாரிப்பாரா, சாட்சிகளைக் கலைப்பாரா ?

0

துரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு (SAVE MKU COALITION) சார்பாக ஊழலை ஒழிப்போம்! உயர்கல்வியைக் காப்போம்!
என்ற முழக்கத்தின் கீழ் மதுரை கே.கே.நகர், நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 04.05.2018 அன்று மாலை அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

ம.கா.ப.க.பா கூட்டமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் பெ. விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். “தெ.பொ.மீ.,மு.வ.,வ.சுப. மாணிக்கம் போன்ற அறிஞர்கள் அமர்ந்து கண்ணும் கருத்துமாக வளர்த்த இந்தப் பல்கலைக் கழகம் இன்று கிரிமினல்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து பல்கலையை மீட்கிற பொறுப்பும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கிறது” என்று கூறினார்.

தலைமை ஏற்றுப் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் . சீனிவாசன் பேசும்போது, ”பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருந்தினர் மாளிகையில் நிர்மலா தேவியை தங்க வைத்ததற்கு யார் பொறுப்பு? பல்கலைக் கழகத்தின் தலைவராக இருக்கும் துணை வேந்தருக்குத் தெரியாமல் இது நடக்குமா? அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பேராசிரியர் அ. சீனிவாசன்

ஒரு பல்கலைக் கழகம் இப்படி பாலியல் பிரச்சினையில் சிக்கிச் சீரழியும் நிலையில் நாம் யாரை நம்பி நம் பிள்ளைகளை அனுப்புவது? நாங்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் இணைந்து போராடி பல்கலைக் கழகத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ம.கா.பல்கலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் பேசியதாவது:

சி.பி.சி.ஐ.டி.க்கு சில கேள்விகள்

”நிர்மலா தேவி கூறிய அந்த உயர் அதிகாரிகள் யார்? துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், டீன் மற்றும் இயக்குனர்கள் தானே. அவர்களை எல்லாம் இதுவரை ஏன் விசாரிக்கவில்லை? பல்கலைக் கழக வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன. அவற்றை ஏன் ஆய்வு செய்யவில்லை? சி.பி.சி.ஐ.டி.விசாரணை கண்துடைப்பு நாடகம். நிர்மலா தேவி, முருகன், கருப்பையாவை வைத்து வழக்கை முடித்துவிடலாம் என்று முயற்சி நடக்கிறது.

சாப்பாடு முதல் அனைத்து ஏற்பாடுகளையும் மனித வள மேம்பாட்டு மைய இயக்குனர் கலைச்செல்வன் தான் பார்த்துக்கொள்கிறார், அதற்கு ஆதாரம் இருக்கிறது. அப்படியானால் சி.பி.சி.ஐ.டி.விசாரணை என்ன ஒழுங்கில் நடக்கும்? பேராசிரியர் சீனிவாசனைக் கூலிப் படை வைத்துத் தாக்கிய வழக்கிலிருந்து கல்யாணி மதிவாணன் மற்றும் 4 பேரை காவல்துறை நீக்கியது போல இந்த மூன்று பேரை மட்டும் வைத்து வழக்கை முடிக்க முயற்சி நடந்து வருகிறது.”

கவர்னர் விசாரணை கமிசன் அமைக்க சட்டப்படி அதிகாரம் இல்லை :

”பல்கலைக் கழக விதிமுறைகளிலோ, தனியார் கல்லூரி விதிமுறைகளிலோ இடமில்லை. கவர்னர், மாநில அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படுகிறவர். வேறு தனிப்பட்ட அதிகாரம் மாநிலத்திற்குள் அவருக்கு இல்லை. விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. சந்தானம் சிறைக்குள் போய் விசாரணை நடத்துகிறார். நீதிமன்ற காவலில் உள்ள ஒருவரை விசாரிக்க வேண்டுமானால் மாவட்ட நீதிபதியிடம் அனுமதிபெற வேண்டும். சந்தானம் எந்த அனுமதியும் பெறாமல் எப்படி விசாரிக்கிறார். அவர் சாட்சிகளைக் கலைக்க மாட்டாரா?

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்

கடந்த 10 ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதி இல்லாதவர்களை கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்கின்றனர். குற்ற வழக்கில் சிக்கியவர்கள் துணை வேந்தர்களாக வந்தால் எப்படி இருக்கும்? மதுரை காமராசர் பல்கலை துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பெயரால் வழக்குப்போடப்பட்டு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தலைமை நீதிபதியிடம் உள்ளது.

தேடுதல் குழு உறுப்பினர்கள் அர்சத் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர்  கடைசி நேரத்தில் சென்னை கவர்னர் மாளிகை அருகில் உள்ள ‘லெமன் டிரீ’ ஓட்டலில் கன்வீனர் முருகதாஸ் தங்களை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக உயர் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தாக்கல் செய்துள்ளனர். முறைகேடாகப் பதவிக்கு வந்தவர்கள் முறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு பேராசிரியர்களையும் மாணவியர்களையும் கிரிமினல்களையும் பயன்படுத்துகின்றனர். இது மதுரையின் பிரச்சினை. எல்லோரும் இணைந்து போராடவேண்டும்.”

ம.கா.பல்கலை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலாளரும், மதுரைக் கல்லூரியின் மேனாள் முதல்வருமான பேராசிரியர் இரா.முரளி பேசியது:-

”பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு பயனில்லை. மக்களை முற்றுகையிட வேண்டும். உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் நடக்கும் சீரழிவுகளைத் தட்டிக் கேட்க முன்வாருங்கள். போராட வாருங்களென்று மக்களைத் திரட்ட வேண்டும். அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்ற போது அந்தப் பல்கலையின் வரவேற்பு அறையில் 30-க்கும் மேற்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். அவர்கள்  அனைவரும் நோபல் பரிசு பெற்றவர்கள். அந்தப் பல்கலையில் படித்தவர்கள்.

பேராசிரியர் இரா.முரளி

ம.கா. பல்கலையில் யாருடைய படத்தை வைப்பது? அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமது உயர்கல்வியின் தரம் பாதாளத்தில் இருப்பது தெரிகிறது.

நிர்மலா தேவி விவகாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்த உடன் பரபரப்பு காணப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் பல்கலை உயர் அதிகாரிகள் என்று நிர்மலா தேவி கூறியுள்ளார். பல்கலை உயர் அதிகாரிகள் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், டீன் மற்றும் இயக்குனர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாயில் கூட்டம் போட்டு பேசிய சங்க நிர்வாகிகளை இட மாற்றம் செய்துள்ளனர்.

இது அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கை. பல்கலைக் கழகத்தின் மாண்பினைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் நிர்வாகம் மிரட்டுகிறது. பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் உள்ள முன்னாள் பேராசிரியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டுகிறார்கள். அடியாள் ரேஞ்சுக்கு அவர்களது நடவடிக்கை போகிறது. நாம் நடத்துகிற இந்தக் கூட்டத்தைக் கண்டித்து நலம் விரும்பிகள் என்ற பெயராலே சுவரொட்டி ஒட்டுகிறார்கள். இதைப் பார்க்கிற மக்கள் அவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பைப்பின் அரங்கக் கூட்டத்தைக் கண்டித்து நலம் விரும்பிகள் என்ற பெயராலே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

மதுரை காமராசர் பல்கலையை மட்டும் பாதுகாத்தால் போதாது. தமிழ் நாட்டில் உயர் கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர் இந்தப் பல்கலைக் கழகம் நமது தாய் வீடு போன்றது. எவ்வளவு பேருடைய உழைப்பின் பலனாய் விளைந்தது. மீனாட்சி கோவிலைப் போன்றது. வைகையை மட்டும் சுத்தப்படுத்தினால் போதாது ம.கா.பல்கலையையும் சுத்தப்படுத்த வேண்டும்”.

சிறப்புரை ஆற்றிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது,

”மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பாலியல், ஊழல், முறைகேடு சீரழிவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அந்த நான்கு மாணவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மதுரை பல்கலைக் கழகம் மட்டும் அல்ல. அனைத்துப் பல்கலைக் கழகங்களும் முடை நற்றம் வீசுகின்றன. இவற்றை எதிர்த்துப் போராடினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன் அனுமதி இன்றி தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் அச்சுறுத்துகிறது.

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

வெளிப்படையாக பேசாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பேராசிரியர்கள் ஏன் பேட்டி கொடுக்கக் கூடாது? பல்கலைக் கழகங்களை விட நீதிமன்றங்கள் முக்கியமானது. விசாரணை அமர்வுகளை அமைப்பதில் வெளியாட்களின் தலையீடு உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த வெளியாட்கள் யார் ? இங்கே உயர் அதிகாரிகள் யார்?

குஜராத்தில் சோராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷா குற்றவாளி. அந்த வழக்கை  விசாரித்த நீதிபதி லோயா மிரட்டப்படுகிறார். தலைமை நீதிபதி மொகித் ஷா லோயாவிடம் 100 கோடி பேரம் பேசுகிறார். அதற்கு சம்மதிக்காத லோயா மர்மமான முறையில் இறக்கிறார். அவர் மாரடைப்பு வந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் சொல்கின்றனர். கேரவன் பத்திரிக்கை இதைப் பற்றி எழுதுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் அது கொலை அல்ல என்று பேட்டி கொடுக்கின்றனர். பேராசிரியர்கள் மட்டும் ஏன் பேட்டி கொடுக்கக் கூடாது? 30/12/2017 -ல் அமித் ஷா விடுதலை செய்யப்படுகிறார். சி.பி.ஐ. மேல் முறையீடு செய்யவில்லை. சிறப்புப் புலனாய்வு கோரி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர். வழக்கு மும்பையிலிருந்து டெல்லிக்குச் செல்கிறது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தானே முன்வந்து எடுத்து அதைத் தள்ளுபடி செய்கிறார். தலைமை நீதிபதியே அப்படி இருக்கிறார்.

பல்கலைக் கழகங்கள் இவ்வாறு சீர்கேடு அடைந்து இருப்பதற்கு காரணம் கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டதுதான். தெ.பொ.மீ., மு.வ., லட்சுமண சாமி முதலியார்., மால்கம் ஆதிசேசையா., நே.து.சு., போன்றவர்கள் இருந்தபோது ஊழல் இல்லை. தலைமைச் செயலாளர் முதல் கல்வி அமைச்சர்கள் வரை அவர்களைத் தேடிப் போய்ப் பார்ப்பார்கள்.

ஆனால் இன்றைக்கு துணைவேந்தர்களாக இருப்பவர்கள் கீழ் நிலை அதிகாரிகளின் காலடியில் காத்துக் கிடக்கின்றனர். இதைத் தான் மார்க்ஸ் முதலாளித்துவத்தில் புனிதம் கெட்டுவிட்டது என்று சொன்னார்.

ஆளுனர் புரோகித் மீது குற்றத்தின் நிழல் படிந்துள்ளது. அவரே விசாரணைக் கமிசன் அமைக்கக்கூடாது. “No man can be a judge to his own cause” என்று சொல்வார்கள். நான் நீதிபதியாகப் பணியாற்றிய போது என் மனைவி வேலைசெய்த இடத்திலிருந்து வந்த வழக்கை நான் விசாரிக்கவில்லை.

பேராசிரியர் அ. சீனிவாசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 17.05.2014 அன்று தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான செய்தி

அது போல் எனது மருத்துவர் தொடர்பான வழக்கு வந்தபோதும் நான் வேறு அமர்வுக்கு அனுப்பி விட்டேன். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அருணாசலப் பிரதேச முதல்வர் இறப்பு தொடர்பாக அவரது மனைவி தலைமை  நீதிபதி கேஹருக்கு கடிதம் எழுதினார். அவர் மீது குற்றத்தின் நிழல் படிந்திருந்தது. அவர் அந்த வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என்று ஏ.பி.ஷா குறிப்பிடுகிறார். இது புரோகித்துக்கு முற்றிலும் பொருந்தும்.

தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஒரு வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில்  நடந்த லஞ்ச ஊழல் தொடர்பாக, ஒரிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குத்தூஸிடமிருந்து ரூ.2 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவழக்கில் தீபக் மிஸ்ரா சம்பந்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதை தள்ளுபடி செய்து அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தார். தற்போது தீபக் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தீர்மானம் தாக்கல் செய்தனர். அதனை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தள்ளுபடி செய்தார். ஆனால் ஹாதியா வழக்கில் தேவை இல்லாமல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுகிறது.

2009ல் இலங்கையில் இனப் படுகொலை நடந்த போது இலங்கை அரசு உள் நாட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. தமிழக சட்ட மன்றத்தில் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வினோதமான தீர்ப்பை வழங்கியுது. சசி கலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும்  குன்ஹா தீர்ப்பையும் ஜெயலலிதாவுக்கு மட்டும் குமாரசாமி தீர்ப்பையும் வழங்கியது.

நீதித் துறையே சீரழிந்தும் காவி மயமாகியும் வரும்போது பல்கலைக் கழகங்களும் உயர் கல்வித் துறையும் அவ்வாறு மாறுவதில் வியப்பு என்ன இருக்கிறது? நீதித் துறையின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. அவசர கால நிலைமையை விட தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. நீதிபதி கிருஷ்ண பட் மீதான பாலியல் குற்றச்சாட்டு, நீதிபதிகளுக்கு விடப்படும் மிரட்டல், நீதிபதிகள் ஜோசப் குரியன், பால் வசந்த குமார் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் போன்றவர்களுக்கு அவர்கள் காவிக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதாலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

அதுபோலத்தான் தமிழ் நாட்டிலும் சட்டப் பல்கலைக்கு ஆந்திராவிலிருந்தும் அண்ணா பல்கலைக்குக் கர்நாடகாவிலிருந்தும், இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவிலிருந்தும் காவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா கவர்னர் சண்முக நாதன் ஆர்.எஸ்.எஸ்.காரர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநர்களின் அதிகாரம் பற்றி அம்பேத்கரின் கருத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிற குடியரசுத் தலைவருக்கே நம்முடைய அரசமைப்பில் அதிகாரம் இல்லை என்கிறபோது அவரால் நியமிக்கப்படுகிற கவர்னருக்கு ஏது அதிகாரம் என்பதுதான். சி.பி.ஐ.விசாரணை மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. சென்னை உயர்  நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கை சி.பி.ஐ. பல ஆண்டுகளாக விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ம.கா.பல்கலைப் பிரச்சினையில் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

தீர்வு என்ன?

மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு மாணவர்கள்தான் முன் நின்று போராட வேண்டும். அதன் பிறகு தான் ஆசிரியர்கள், பொது மக்கள். மக்களுக்கு பணி செய்யத்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனரே தவிர நீதிபதிகளுக்காக மக்கள் இல்லை. அதுபோலத்தான் ஆசிரியர்களும். மாணவர்கள் சங்கமாகத் திரள வேண்டும். ஏற்கனவே மாணவர் சங்கம் இருந்தது. இப்போது இல்லை.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19 (1) சி சங்கம் வைக்கும் உரிமையைத் தருகிறது. இது மாணவர்களுக்கான அடிப்படை உரிமை. அதற்காகப் போராட வேண்டும். வாக்குரிமை வயது வரம்பு 21 ஆக இருந்தது தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது எதனால்? அவர்களுக்கு அரசியல் சமூக புறச்சூழலைப் புரிந்துகொள்ளும் திறன் 18 வயதில் வந்துவிடுகிறது என்பதனால்தான்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழப் படுகொலைக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மணவர்களால் முன்னெடுக்கப்பட்டதுதானே! ”ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த தவறிவிட்டனர்.” என்று பேராசிரியர் சிவகுமார் கூறியது சரிதான். மாணவர்களைஅரசியல்படுத்த வேண்டும்.” இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் பேசினார்.

கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி  நிறைவாக, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை துணை வேந்தர், பதிவாளர் பணி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

கூட்டமைப்பின் பொருளாளர் ஆய்வாளர் .ஜெகன்னாதன், உயர்கல்வித் துறையில் சாதியும் மதமும் புகுந்துள்ளது வெட்கக் கேடானது என்ற தனது கருத்தைப் பதிவு செய்தார்.

கூட்டத்தில் 350 பேர்வரை கலந்துகொண்டனர். முன்னாள், இன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், தொழிசங்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு இட்துசாரி, புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்கள், இசுலாமியர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஊடகங்கள் நீதிபதியை பேட்டிகண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
தொடர்புக்கு : 94434 71003.