நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி || Live Blog
நக்சல்பாரி புரட்சியாளர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர், மூத்த தோழர் கதிரவன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (13.07.2026) காலை 11:30 மணியளவில் மறைந்தார்.
தோழரின் பங்களிப்பு குறித்த செய்திகளும் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு குறித்த செய்திகளும் இந்த live blog-இல்...
சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு: விஜய் அரசின் கார்ப்பரேட் சேவை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், மக்களின் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, த.வெ.க. அரசு கார்ப்பரேட் கும்பலுக்காகத் தீவிரமாகச் சேவை செய்யும் அரசுதான் என்பதையும் மக்களுக்கான அரசு இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை!
கிழியும் முகமூடி: ‘மாற்று’ அரசியல் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் சேவை!
https://youtu.be/LtcS8X1VPpI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்: பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!
விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.
ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்
இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு
இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை…. கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு
அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
நாடாளுமன்றக் குதிரை பேரமும் பா.ஜ.க-வின் பாசிச சதித்திட்டமும்!
2029 நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களான தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. அதற்காகத்தான் தன் குதிரை பேர அரசியலை உக்கிரப்படுத்தியுள்ளது, பா.ஜ.க.
அணுக்கனிம சுரங்க நீட்டிப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடம்!
அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.
இஸ்லாமியர்களின் இட-ஒதுக்கீட்டைப் பறிக்கும் தீர்ப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடத்தை திரைகிழிப்போம்!
16 ஜூலை 2026 தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம்
த.வெ.க. ஆட்சி: தமிழை ஒழிப்பதில் பரிணாம வளர்ச்சி!
தனது அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்று விஜய் போடும் வேடம் கலைகிறது. பிழைக்க ஒரு கொள்கை, மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற வேறொரு கொள்கை என்று வாழும் விஜய், அதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும் முயல்கிறார்.
மேற்குவங்கம்: நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிக் குறைப்பு!
மேற்குவங்கத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைத்த பிறகு சங்கிக் கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் வணிகக் கடைகள் மீது இந்துத்துவக் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். தான் நிறுவத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிதிக் குறைப்பும் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | மதுரை அரங்கக் கூட்டம்
மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஜூன் 29 அன்று மதுரை மாட்டுத்தாவணி அருகே ராமசுப்பு அரங்கத்தில் “தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை வழி எது?” அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
கீழடி அறிக்கையைப் புதைத்துவிட இந்தியத் தொல்லியல்துறை சதி!
ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும். இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும்.
சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி
சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி
https://youtu.be/or1zah1nFG4
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
























