Wednesday, June 17, 2026

1500 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் வீணடிப்பு! 600 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!

ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் காசா பகுதிக்குள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துசெய்திருக்கிறது, அமெரிக்கா.

பேருந்து நிழற்குடையும் இந்திய ஜனநாயகமும்

ஒரு சிறு நிழற்குடைக்காக கோரிக்கை மனுக்களோடு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் மக்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்து இந்த அதிகார வர்க்கம் தங்களுக்கு எத்தனை அந்நியமானது என்பதை புரிந்துகொள்கிறார்கள்.

முனகுவது கூட இனி தேசத்துரோகம்!

பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்! ★ ஜாதி, மதம், இனம் எனும் அடையாள அரசியல், போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலில் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்! ★ லாபவெறி பிடித்த மிகை...

2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவரும் முன்வருவதும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதும் அவர்களது பொறுப்புமிக்கக் கடமை என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு CDRO கருதுகிறது, இல்லையெனில், சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியானது மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும்.

ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது "ஊபா" சட்டத்தை ஏவுகிறது.  

ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!

ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புச் பிரச்சாரத்தை பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன.

ஜீரோ பெர்சண்டைல்: புழுத்து நாறுகிறது நீட் தேர்வின் யோக்கியதை!

இவ்வாண்டு பூஜ்ஜியம் சதமானம் (Zero Percentile), அதாவது இந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வின் கடைசி மதிப்பெண்ணான -40 பெற்ற மாணவனும் விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த அறிவிப்பின் பொருள். அதாவது அனைத்து கேள்விகளுக்கும் தவறாக பதில் அளித்திருக்கும் ஒரு மாணவனும் தகுதியுடையவன் என்று அர்த்தம்.

எம்.எஸ்.சுவாமிநாதன் மரணம்: வருத்தம் தெரிவிப்பதிலும் வர்க்க நலன் இருக்கிறது!

ஒரு வேளாண் விஞ்ஞானி என்ற வகையில், உணவு தானிய உற்பத்திக்கு சுயசார்பான திட்டங்களை முன்வைத்தார் என்றோ, அதில் நேர்ந்துவிட்ட தவறுகளில் தனது பங்கிற்கு வருந்தினார் என்றோ சொல்லி கடந்துவிட முடியாத ஒருவர் தான் சுவாமிநாதன். நவீன அறிவியலை விவசாயத்தில் புகுத்துவதற்கு நாம் எதிரிகள் அல்லர். ஆனால், யாருடைய நலனை முன்னிறுத்துகிறோம் என்பது முதன்மையானது.

போர் என்பது மோதல் அல்ல; போர் என்பது கொள்ளை லாபம் | பேரா.நோம் சாம்ஸ்கி, பேரா.விஜய் பிரசாத்

போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்