கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?
ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது.
லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!
லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன.
ஒரு ஊடகவியல் மாணவனின் மனக் குமுறல்!
தன்னுடன் இரத்தமும் சதையுமாக பழகிய ஒருவர் இறக்கும் வரை, லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை மருத்துவ வசதியின்றி இறந்துபோனதை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே அணுகும் வகையில் அவர் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். இதில் நாம் யாரை முதன்மையாக குற்றம் சாட்டவேண்டும்?
டெல்லி ஜி 20 உச்சி மாநாடு: பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை!
ஜி 20 மாநாட்டின் உண்மைத் தன்மையைப் பற்றி எழுதாத ஊடகங்கள், ஜி 20 மாநாடு மோடியால்தான் வெற்றி பெற்றது, மோடி தலைமைதான் என்று நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதி பாசிச கும்பலுக்கு சொம்படிக்கின்றன.
கொலைகார வேதாந்தாவும் பாசிச பா.ஜ.க-வும் கூட்டு – அம்பலப்படுத்திய ஓ.சி.சி.ஆர்.பி அறிக்கை
வேதாந்தாவின் துணை நிறுவனத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வுக்கு ரூ. 43.5 கோடி நிதி வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தாக்கல் செய்துள்ள பங்களிப்பு அறிக்கை (contribution reports) கூறுகிறது.
கார்ப்பரேட்களால் விழுங்கப்படும் பாரம்பரிய மருத்துவம்!
சித்த மருத்துவத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டால் பல மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை நவீன அறிவியலின் துணைகொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்.
அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!
பா.ஜ.க ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் அனைத்து மதத்தினருக்கும் ‘பொதுவான’ சில தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அசாமில் பலதார மணம் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழலில் உலக சாதனை படைக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி!
ஊழலில் உடைபடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி பிம்பத்துடன் சேர்த்து கார்ப்பரேட் கொள்ளைகளை உள்ளடக்கிய பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த போலி ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் அம்பலப்படுத்துவோம்!
பீமா கோரேகான் பொய் வழக்கின் ஐந்து ஆண்டுகள் நிறைவு!
மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணைய வில்லை. மாறாக பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்ததில்தான் இவர்கள் ஒன்று இணைகிறார்கள்.
G20 மாநாடு: ஏழ்மையையும் வறுமையையும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது!
ஏழ்மையும் வறுமையும் பசியும் பிணியும் தான் இந்தியாவின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எத்தனை கோடி செலவு செய்தும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!
முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்
இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்த நாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.
கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
ஆகஸ்ட் 17 அன்று ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சந்திரயான் -3 கொண்டாட்டமும் தேசபக்தியும்
ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!
ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்த திமுக அரசு, தற்போது பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.
























