சிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் – படங்கள்
ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி மறுப்புக்கொள்கையை எதிர்த்து, இந்தித் திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்திய நாம், மீண்டும் களமிறங்குவோம்.
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !
கர்நாடகாவில் உள்ள அப்பாவி விவசாயிகளை யாரும் தமிழர்களை தாக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தவில்லை. இனவெறி பிடித்த கலவரத்தை தூண்டியே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கை கொண்ட பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கருங்காலிகள்தான் கூலிக்கு ஆள்பிடித்து வந்து இந்த இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள் !
வறுமைக்காக சிறுமிகள் கிழவர்களுடன் உடலை சுரண்ட அனுமதிக்கிற போக்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வாசிங்டனைச் சேர்ந்த சிறுமி, தனக்குத் தெரிந்த 17 வயது சிறுமி 40 வயது ஆண் நபருடன் தன் தேவைகளுக்காக டேட்டிங்கில் ஈடுபவதாக பகிர்ந்திருக்கிறாள்.
காவிரி பிரச்சினை மோடி அரசே முதன்மை குற்றவாளி !
காவிரி பிரச்சினையால் தமிழக கன்னட மக்களிடையே உள்ள பகை அனைந்துவிடாமல் நெருப்பை ஊதிவிடுவதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. எனவே, தேசிய இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !
பசுவைப் பாதுகாப்பதற்குத் தனிச் சட்டமிருக்கும் இந்த நாட்டில், இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டம் கிடையாது.
APSC- invited lecture on New education policy – 2016 held in...
Hindu Rashtra is not merely a Hindu state; it is a state which assures subordination of Indian working masses and Natural resources to sustained exploitation by U.S. imperialists.
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்
மத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். ஜெயலலிதா அரசு பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம்.
சிதம்பரம் : புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பொதுக்கூட்டம்
புதிய கல்விக் கொள்கை 2016! கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக பேரணி-பொதுக்கூட்டம் மாலை 5 மணி செப்டம்பர் 25, 2016 ஞாயிறு போல்நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்
காவிரி – மோடி அரசின் சதியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
காவிரியை வைத்து கன்னட இன பெருமை பேசப்படுகிறது. எப்படி சாதி பெருமை பேசி எந்த நியாயத்தையும் பேச விடாமல் கண்ணை கட்டுகிறார்களோ அது போல் இன பெருமை பேசி தூண்டுவிடுகிறார்கள். இரண்டு மாநிலங்களுக்குள்ளும் காவிரி நீர் மட்டும் பங்கிடப்படவில்லை. பல்வேறு கொடுக்கல் வாங்கல் இருக்கிறது.
செப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம்! செப்டம்பர் – 20 சென்னையில்: காலை 12 மணி இடம்: அண்ணாசாலை தபால்நிலையம் அருகில். மற்றும் விழுப்புரம்/விருத்தாச்சலம்/திருச்சி/கோவை/நெல்லை.
காவிரி : செப்டம்பர் 16 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம் !
பி.ஜே.பி. சங் பரிவார் கும்பல் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராகவும் திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வருகிறது
ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக காங்கிரசு, பி.ஜே.பி அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.
தொழிலாளிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது மோடி அரசு
குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா ப.சிவக்குமார், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு.ரமேஷ் உரைகள்
அவர்கள் வாழ்க்கை நெடுக எத்தனை எச்சரிக்கைகள் !
அழுது கதறும் பிள்ளையை அழைத்துக் கொண்டு இறந்த மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஊருக்கு பல மைல் நடக்கும் ஒடிசாவின் துயரம் கூட, ரயிலில் அடித்துத் தூக்கி எறியப்பட்ட ஒடிசாவின் பிள்ளைகளுக்கு வாய்க்குமா தெரியவில்லை !
காவிரி உரிமை நிலைநாட்ட – டாஸ்மாக்கை இழுத்து மூட – மக்கள் அதிகாரம்
மூடு டாஸ்மாக்கை! நீங்களும் வாங்க…. இந்த சனியனை ஒழிக்க! மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணி – ஆர்ப்பாட்டம் நாள் : 14-09-2016 புதன் பேரணி நேரம்: காலை 10.00 மணி, இடம்: நேரு சிலை அருகில், பொத்தமேட்டுப்பட்டி ஆர்ப்பாட்டம் நேரம்: பகல் 12.00 மணி
இடம்: வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை

























