ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உத்தரப் பிரதேசம் முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியர் திரிப்தா தியாகி என்பவர் முஸ்லீம் மாணவர் ஒருவரை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை வரிசையாக வரவழைத்து, தாக்க சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆசிரியர், “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி”என்று கூறுவதும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த முஸ்லீம் மாணவர் கணக்கு வாய்ப்பாட்டை ஒழுங்காக சொல்லாததே, ஆசிரியர் இந்த கொடூர தாக்குதலை தொடுக்க சொன்னதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், “இஸ்லாமிய மாணவர்களின் தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளின் படிப்பில் கவனம் கொடுக்கமாட்டார்கள்” என இஸ்லாமியர்கள் மீதான தனது மத வெறுப்பை அந்த ஆசிரியர் மாணவர்களிடம் கக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளியில் தனது பிள்ளைக்கு பாதுகாப்பில்லை என அஞ்சிய முஸ்லீம் மாணவனின் தந்தை, இனி பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கும், ஆசிரியரின் தூண்டுதலால் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் என்ன மாதிரியான மனநிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்று பார்க்க வேண்டும்.
தாக்கப்பட்ட மாணவனுக்கு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால், இத்தனை நாட்களாக ஒரே வகுப்பில் படித்து வந்த தனது நண்பர்களே தன்னை தாக்குகிறார்களே என்ற அச்ச உணர்வும், அடித்த மாணவர்களுக்கு இனி இஸ்லாமியர்களை கண்டாலே தாக்க வேண்டும் என்ற மத வெறுப்புணர்வும் ஒருசேர ஏற்பட்டிருக்கும்.
இந்த மனநிலையைத்தான் நாடுமுழுவதும் காவி பயங்கரவாதிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். சமீபத்தில் மும்பை இரயிலில் பயணித்த மூன்று அப்பாவிகள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தின் குமார் சௌத்ரி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதேபோல், கடந்த வாரம் மும்பை பந்தரா இரயில் நிலையத்தில் இந்து பெண் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் இந்துத்துவ குண்டர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதற்கு ஆசிரியர் திரிப்தா தியாகி போன்று காவிகளால் மதவெறி உணர்வூட்டப்பட்ட பலநூறு காவிக் குண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே நம்மை அச்சுறுத்தும் எதார்த்தமாக உள்ளது.
சிறுபான்மையினர்களுக்கு எதிரான இந்த ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க இந்துத்துவ கும்பலை அனைத்து துறைகளில் இருந்தும் விரட்டியடிக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை தடை செய் என்று முழக்கவேண்டும்!
புதிய ஜனநாயகம்
26.08.2023

25.08.2023
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023-க்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!
கார்ப்பரேட் திட்டங்களை எதிர்க்காமல் பாசிச எதிர்ப்பு போராட்டம்
இலக்கை அடையாது!
பத்திரிகை செய்தி
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களில் ஒன்றான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023)-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கையெழுத்திடாத ரவி, இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023-ஆனது கார்ப்பரேட்டுகள் தமிழ்நாட்டின் நீர் வளத்தையும் நிலவளத்தையும் கொள்ளையடிப்பதற்கான சட்டமாகும்.
பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை எனப் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று அரசு கருதினால் ஒருங்கிணைத்து கையகப்படுத்திக்கொள்வதற்கு அரசுக்கு இந்தப் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்பு விதிகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை சுக்குநூறாக உடைத்தெறிந்து கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் திட்டமே இது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்த போதும், அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் கார்ப்பரேட் நலனே முக்கியம் என்று தமிழ்நாடு அரசு, இச்சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
படிக்க: நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!
கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் என்றால் திமுக அரசும் ஆளுநரும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
இனி இந்த சட்டத்தின் மூலம் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத மற்றும் கார்ப்பரேட் திட்டங்கள் இனி தமிழ்நாட்டில் தங்கு தடை இன்றி நடைபெறும். மக்கள் விரோத, இயற்கை விரோத இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
பாசிச பாஜக விரும்பக்கூடிய எல்லா கார்ப்பரேட் திட்டங்களையும் திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றிவிட்டு தான் பாஜகவுக்கு மாற்று என்று சொல்வது நகைக்கத்தக்கதாகும்.
பா.ஜ.க – ஆர். எஸ் .எஸ் செயல்பாடுகளை எதிர்ப்பது மட்டுமல்ல பாசிச எதிர்ப்பு ; ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்பதே உண்மையான பாசிச எதிர்ப்பு. வேண்டாம் பிஜேபி ! வேண்டும் ஜனநாயகம் என்றால் பாசிச பாஜகவின் காவி கார்ப்பரேட் திட்டங்கள் வேண்டாம் என்பதே ஆகும். அதற்கான போராட்டங்களை தமிழ்நாடு முன்னெடுப்பதே பாசிச பாஜகவை ஒழிப்பதற்கு சரியான வழியாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
ஜூன் மாதத்தில் 3 சதவிகிதமாக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் ஜூலை 13-ஆம் தேதியில் 4.8 சதவிகிதமாக அதிகரித்தது. ஜூலை 19-ஆம் தேதியன்று 5.2 சதவிகிதமாக உயர்ந்தது. தக்காளி, பருப்பு வகைகள், தானியங்களின் விலை உயர்வு காரணமாக இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் இந்த ஆண்டு மே மாதத்தில் 4.25 சதவிகிதமாக இருந்தது. இது ஜூனில் 4.81 ஆக உயர்ந்துள்ளது. இதைப்போலவே மொத்த பணவீக்கம் மே மாதத்தில் 3.48 சதவிகிதத்தில் இருந்து ஜூனில் 4.12 சதவிகிதமாக உயர்ந்தது.
2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் தொடர்பான மதிப்பீடுகளை மாற்றியமைத்த வகையில் இந்த பணவீக்கம் என்றால், உண்மையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது மிக மோசமானதாகும்.
ஜூனில் தக்காளியின் விலை 300 மடங்கு அதிகரித்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் அரிசியின் விலை சராசரியாக 10 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சாதாரண ஏழை மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் 40 ரூபாய் அரிசி வகைகள் அனைத்தும் ரூ.10-12 வரை விலை உயர்ந்துள்ளன. சில்லறை வர்த்தகத்தில் இவற்றின் விலை மேலும் அதிகமாக உள்ளது.
சமையல் எண்ணெயின் விலை உயர்வு என்பது மிக அதிகமானதாகும். நமது நாட்டின் சமையல் எண்ணெய் தேவையின் பெரும்பகுதி, 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.
கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆளி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை உள்நாட்டிலேயே உற்பத்தியானாலும் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வேறுபாடுகள் காரணமாகவும் வணிக முறைகள் காரணமாகவும் இந்த விலை பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. கடலை எண்ணெய் மொத்த விற்பனையில் ரூ.162 இருந்தாலும் நடைமுறையில் அது ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதைப் போலவே மற்ற சமையல் எண்ணெய்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் கோல்டு வின்னர் சூரிய காந்தி எண்ணெய் ரூ.140, நடுத்தரக் குடும்பங்கள் பயன்படுத்தும் இதயம் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.500, தேங்காய் எண்ணெய் ரூ.300 வரை விற்கப்படுகின்றன. மிகவும் மலிவான எண்ணெய் என்று கருதப்பட்ட பாமாயில் ரூ.90 வரை விற்கப்படுகிறது.
படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!
இதைப்போலவே பருப்பு வகைகளின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.95 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு தற்போது ரூ.130-150 வரை விற்கப்படுகிறது. இதைபோலவே உளுத்தம் பருப்பு ரூ.130 ஆக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த நிலைமை நீடித்தால் துவரம் பருப்பு ரூ.200 வரை விலை உயர்வதற்கான அபாயம் உள்ளது.
இந்த விலையேற்றம் அக்டோபர் மாதம்வரை நீடிக்கும் என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இத்துடன், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அன்றாடம் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு உருளை விலை போன்றவையும் மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த விலையேற்றங்கள் அனைத்து வகையிலும் உழைக்கும் மக்களை பட்டினிச்சாவுகளுக்குத் தள்ளி வருகிறது.
செயற்கைப் பேரிடர்
போதிய அளவில் மழை பெய்யாமை, வெப்ப அலை வீச்சு அல்லது மிகையான புயல், பெரு மழை, வெள்ளம் போன்றவை விவசாயத்தை பெரிதும் பாதித்துள்ளன; இத்துடன் ரஷ்ய-உக்ரைன் போரும் விலையேற்றத்திற்கு காரணம் என்றெல்லாம் ஆளும் பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து பேசிவருகிறது. மேலும் உணவுப் பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கின்றனர் என்றும் சிறுவியாபாரிகளைக் குற்றஞ்சாட்டி வருகிறது.
ஆனால், இயற்கைச் சீற்றங்களால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட உணவுப் பொருள்கள் பற்றாக்குறை மட்டுமே தற்போதைய விலையேற்றத்திற்கு காரணமல்ல. மாறாக, பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்தையும் சிறுதொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றையும் மேம்படுத்துவது என்ற பெயரில், அத்தொழில்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு திறந்துவிட்டதுதான் இந்த பெரும் நெருக்கடிக்குக் காரணமாகும்.
அறுவடைக் காலங்களான ஜனவரி-மே வரை உணவு தானியங்களின் விலையைக் குறைத்து விவசாயிகளிடம் குறைந்த விலையில் தானியங்களைக் கொள்ளையடிப்பதும், அதன் பின்னர் ஜூன் முதல் அக்டோபர் வரையில் அதிக விலைவைத்து விற்பதும் காலங்காலமாக கமிசன் மண்டிகளும் தரகு முதலாளிகளும் கூட்டு வைத்து நடத்தி வந்த கொள்ளையாகும்.
உள்ளூர் மற்றும் வட்டார அளவில் நடந்து வந்த இந்த வர்த்தகக் கொள்ளைக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, கார்ப்பரேட்டுகளைப் புகுத்தி, ஆன்லைன் வர்த்தகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு தானியங்களைப் படுவேகமாக கொள்முதல் செய்யவும் அவற்றை அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையின் மூலம் விலையுயர்த்திக் கொள்ளையடிக்கவும் அனுமதிக்கப்பட்டன.
ஆகையால், இந்த விலையேற்றம் என்பது கார்ப்பரேட் கொள்ளையின் விளைவாகும். அதிலும் குறிப்பாக, 2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். உணவுப் பொருட்களின் விலையுயர்வு மட்டுமின்றி, இக்கொள்கைகள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரும் பேரழிவை நோக்கி இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் அடிமை பா.ஜ.க. அரசு
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை, உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை அரசால் தலையிட்டுத் தடுக்க முடியும். ஆனால், தனியார்மயம் கொண்டுவரப்பட்ட பின்னர், அரசு சந்தையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற உலக வங்கியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. 2014 வரையில் மன்மோகன் ஆட்சியில் கூட சில கட்டுப்பாடுகளை அரசினால் விதிக்க முடிந்தது. ஆனால், மோடியின் புதிய இந்தியாவிலோ பெயரளவிலான கட்டுப்பாடுகளை கூட விதிக்காமல் வேடிக்கைப் பார்க்கும் நிலைக்கு மொத்த நாடும் தள்ளப்பட்டுள்ளது.
ஆகையால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற பா.ஜ.க. அரசின் கொள்கைதான் இந்த நெருக்கடி தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகும். ஒருவேளை, இந்த விலையேற்றத்தால் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு பாதிப்பு என்றால் மட்டுமே மோடி அரசு சந்தையில் தலையிடும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில், கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலையேற்றத்தைச் சமாளிக்க இந்திய உணவுக் கழகம் 25 லட்சம் டன் கோதுமையை ஆன்லைன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்தது. இதில் 3 லட்சம் டன் மட்டுமே அரசுக்கு ஒதுக்கப்பட்டது. இது ஏழை மக்களுக்கு அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 29.50 ரூபாய்க்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஜூன் 18-ஆம் தேதி, இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உணவு தானியங்களை மாநில அரசுகள் ஏலம் எடுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் எதிர்ப்பைக் காட்டியபோதும், இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் தானியங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் விற்பனை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது, மோடி அரசு. தற்போது இந்திய உணவுக் கழகத்தில் 7.25 கோடி டன் உணவுதானியங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றை மாநில அரசுகளுக்கு சந்தை விலையில் கொடுத்தால் கூட பெருமளவு மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். பற்றாக்குறையை ஈடுசெய்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. இப்போது மட்டுமல்ல, பெருந்தொற்று காலத்தில் கூட இந்திய உணவுக் கழகத்தில் இருப்பில் இருந்த தானியங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்ததே அன்றி, மாநில அரசுகளுக்கோ, மக்களுக்கோ கொடுக்க முன்வரவில்லை.
ஊற்றி மூடப்பட்டுவரும் பொதுவிநியோக முறை
பொதுவிநியோக முறை என்பது நாட்டு மக்களுக்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதன்கீழ் மேற்கொள்ளப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியம் என்பது ஒன்றிய அரசின் முதல் ஐந்து செலவினங்களில் ஒன்றாகும். இத்திட்டமானது விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் தானியங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை பொதுமக்களுக்கு மலிவான விலையில் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். விவசாயிகளுக்கான மானியங்கள், பயிர்க்கடன்கள், இந்திய உணவுக் கழகம், ரேசன் கடைகள் உள்ளிட்டவை இந்த பொதுவிநியோக முறையின் கீழ் வருபவையாகும்.
தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வரத் தொடங்கிய பின்னர், பொதுவிநியோக முறைக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன. உண்மையில், தனியார்மயத்தின் விளைவாக விவசாயத்தை விட்டு விவசாயிகள் விரட்டப்பட்டு வருவது, மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களுக்கான மானியங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ உணவுப் பொருட்களுக்கான மானியங்களை ஒப்பீட்டளவில் குறைத்து வந்தது.
படிக்க: அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?
இந்நிலையில், 2014-இல் மோடி-நிர்மலா சீதாராமன் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பொதுவிநியோகத்திட்டத்தை ஒழிப்பது என்பது ஒரு புதிய பாய்ச்சலுக்குச் சென்றது. நாடு தழுவிய அளவில் ஐந்தாண்டு திட்டங்களைப் போட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் முறை கைவிடப்பட்டது; அதற்கான கொள்கை வகுக்கும் திட்டக் கமிசனும் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் “நிதி ஆயோக்” என்ற பொருளாதார பயங்கரவாத அமைப்பு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோகத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் படுவேகமாக மாற்றப்பட்டன. இந்திய உணவுக் கழகத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்க திறந்துவிடப்பட்டது. ரேசன் கடைகளை (பொதுவிநியோக முறையை) ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு மானியங்களை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன; ஸ்மார்ட் கார்டுகள் கொண்டுவரப்பட்டன.
2004 ஆம் ஆண்டில், வாஜ்பாய் ஆட்சி காலம் நிறைவடையும்போது, பொதுவிநியோக முறையில் நிறைய தானியங்கள் வீணாக்கப்படுகின்றன (47 சதவிகித தானியம் விரையமாகிறது) என்று கார்ப்பரேட் ஊடகங்களாலும் அரசினாலும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம் “திறமையின்மை” மற்றும் “திருட்டு” என்று கூறி உணவுப் பொருளில் அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றனர் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். இதன் அடிப்படையில்தான், மோடி அரசு ரேசன் கார்டுடன் ஆதாரை இணைத்தது.
ஆனால், “திருட்டு” மற்றும் “திறமையின்மை” என்ற பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்று கேள்வி கேட்பதற்கு இன்று ஆள் இல்லை. சில்லறை உணவுப் பொருள் விற்பனையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுவிட்ட நிலையில், அரசுக் கொள்முதலின் பெரும்பகுதி கார்ப்பரேட்டுகளிடம் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆதார் அங்கீகரிப்புப் பிழைகள், ஸ்மார்ட் கார்டு அங்கீகரிப்புப் பிழைகள் காரணமாக பல ஆயிரம் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. இதற்கெல்லாம், பா.ஜ.க. அரசு எந்தவகையிலும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை.
இதுமட்டுமல்ல, இந்திய உணவுக் கழகம் அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே கொள்முதல் செய்யும் வகையில் சுருக்கப்பட்டதால், பொதுவிநியோக முறையும் அரிசி-கோதுமை வழங்குவது என்ற அளவில் சுருங்கிவிட்டது.
நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் புரதச் சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாட்டில் இருக்கும் போது, இந்த நடவடிக்கைகளானது மக்களை நிரந்தர ஊட்டச்சத்து குறைபாடு நிலைக்குத் தள்ளியுள்ளது. இதுமட்டுமின்றி, பன்முகப்பட்ட வறியநிலை என்பது கிராமப்புறங்களில் 32.75 சதவிகிதமாகவும் நகரங்களில் 8.8 சதவிகிதமாகவும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.
000
2022-23 நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை என்று கணக்குக் காட்டப்பட்டவை எல்லாம், பொதுவிநியோக முறையை வலுப்படுத்தும், உணவுப் பொருட்களுக்கு மானியங்களை வழங்கும் நோக்கத்திலானவை அல்ல. மாறாக, கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளம் ஆகியவற்றில் ரூ.20 இலட்சம் கோடி கடன் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது; இவை அனைத்தும் இத்துறைகளிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை மேம்படுத்தும் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொடர்பான கடன்களாகும்.
ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து 32 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது ஒன்றிய அரசு. நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஒதுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு புறந்தள்ளிவிட்டது. மேலும், பிரதம மந்திரியின் மதிய உணவு திட்டத்திற்கான நிதியை சென்ற ஆண்டைவிட 9.37 சதவிகிதம் குறைத்துள்ளது. மொத்த உணவு மானியம் 2022-23-இல் முந்தைய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.2,06,831.09 கோடியிலிருந்து ரூ.1,97,350 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில், பொதுவிநியோகத் திட்டம், மானியங்கள் அனைத்தும் அதன் அந்திமக்காலத்தை அடைந்துவிட்டன. ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களையும் நகர்ப்புற ஏழை உழைக்கும் மக்களையும் ஓட்டாண்டிகளாக்கி, அவர்களை நிராதரவாக கைவிடும் திட்டமும் நாட்டை மிகப்பெரும் பஞ்சம் பட்டினியில் தள்ளிவிடும் சதித்திட்டத்தையும் பா.ஜ.க. அசுர வேகமாக அரங்கேற்றி வருகிறது.
மக்களின் மாநிலங்களின் உயிரைக் குடிக்கும் ஜி.எஸ்.டி.
ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி., அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே சிறுதொழில், குறுந்தொழில் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகர்கள், சிறுவணிகர்களை பெரிதும் அழித்துள்ளது. இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.யின் சர்வாதிகார பாணியிலான கட்டாயமாக்கப்பட்ட முறைப்படுத்துதல் மற்றும் திட்டமிடப்படாத பெருந்தொற்று ஊரடங்கு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
2022-23 நிதியாண்டில் மட்டும் சுமார் 10,655 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (2021-22 இல் 6,222, 2020-21 இல் 175, 2019-20 இல் 400) அதிகரித்த எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில், ஏப்ரல் மாதத்தின் மாதாந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் அளவு தொடர்பான அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டது. முந்தைய ஆண்டு ஏப்ரல் மாத வரி வருவாயுடன் ஒப்பிடும்போது இப்போது 12 சதவிகிதம் (19 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளதாகவும் சென்ற மாத வரிவருவாயுடன் ஒப்பிடும்போது 17.5 சதவிகிதம் (ரூ.27 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதை “எளிமையான அரசாங்கம், திறமையான நிர்வாகத்”தின் விளைவு என அலங்கார வார்த்தை ஜாலங்களுடன் அறிக்கையில் விளக்கியிருந்தது.
ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தியபோது, மறைமுக வரிக்கான மாற்றாக இது இருக்கும் என்று ஜி.எஸ்.டி. ஆதரவாளர்கள் பலரும் ஆரவாரமாக ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சாதாரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வரிவருவாயில் குறிப்பிட்ட சதவிகித உயர்வு இருக்கும் என்பதுடன் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மேலும், ஒரு அம்சத்தை ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. ஜி.எஸ்.டி.யில் இருந்து பெறப்படும் வரவுகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் மாநிலங்களுக்கு ஈடு செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்து ஜூன் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனுடன் ஒப்பிட்டு, ஜி.எஸ்.டி.யின் இப்புதிய ஆட்சியின் கீழ் வரிகளின் வருவாயில் 14 சதவிகித வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரிவிகிதங்களை தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒன்றிய அரசால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில், எந்தவொரு மாநில அரசும் அதில் தலையிட்டு தங்களுக்கு இணக்கமான வரிவிகிதங்களைக் கொண்டுவரமுடியாது. இந்த முறையால் மாநில அரசுகள் கிட்டதட்ட ஒன்றிய அரசின் பிணைக் கைதிகளாக இருக்கின்றன. அதாவது, ஜி.எஸ்.டி. வரிவருவாய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி. சர்வாதிகாரம் தொடங்கிய 2018-19 முழு நிதியாண்டில் இருந்து இந்த 2022-23 முழு நிதியாண்டு மட்டுமே தடையில்லாமல் வரி வருவாய் உயர்ந்து வந்த ஆண்டாகும். இடையில் இரண்டு நிதியாண்டு காலங்களில்தான் கொரோனா பெருந்தொற்றினால் சந்தைகள் நிலை குலைந்து போயின. உற்பத்தி மற்றும் விநியோகம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த காலங்களில் வரிவருவாய் நிலையான உயர்வை அடையவில்லை.
வரி உயர்த்தப்படுவதானது தனித்த ஒரு நிகழ்வாக சுருங்கிவிடுவதில்லை. வரி அதிகரிப்பு என்பது பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகி, பணவீக்கத்தை அதிகரிக்கிறது. இதுதான் முதலாளித்துவ சந்தை விதியாகும்.
எரிபொருள் விலை உயர்வின் கோரமுகம்
ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படாத இரண்டு துறைகள் எனில் அவை பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உருளை மற்றும் மதுபானங்கள் ஆகிய இரண்டு துறைகள்தான்.
இதில் அதானி, அம்பானி ஆகியோர் பெட்ரோல், டீசல், எரிவாயுகளில் முதலீடு செய்து கொள்ளையடிப்பதற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையுயர்வை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது மோடி அரசு.
2016 ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62, இன்று சுமார் ரூ.97. இதைப்போலவே, டீசல் விலை ரூ.55, இன்று அதன் விலை சுமார் ரூ.90. ஏறக்குறைய இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகிதம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதைப்போலவே, 2015 பிப்ரவரி 1-ஆம் தேதி நிலவரப்படி மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.600. இன்று அதன் விலை ரூ.1,118.50.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த காலத்தில், ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த பாஹல் திட்டம் (PAHAL Scheme – நேரடி பயன்பெரும் திட்டம்) இரண்டு முறை திருத்தப்பட்டது. இதன் நோக்கமே, சமையல் எரிவாயுக்கான மானியத்தை வெட்டுவதுதான். இதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் இருந்து சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மட்டும் ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் பெட்ரோலியத் துறை செயலர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் இந்த விலையுயர்வு தொடர்ந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணிகளில் முக்கியமானதாகும்.
மோடியின் புதிய இந்தியா
பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை என்று தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டாலும் இது நாட்டின் பொதுவான நிலைமை அல்ல. கர்நாடக மாநிலத்தில், கர்நாடகப் பெண்களுக்கு மட்டுமே இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அன்றாட செலவினங்கள் அதிகரித்துள்ளன. மதுரை, சென்னை, திருச்சி, கோவை, ஒசூர் போன்ற பெருநகரங்களில் வாழும் சாதாரண மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை பேருந்துக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கட்டணம் ஒரு அத்தியாவசிய கட்டணமாக உள்ளது.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல சிறு தொழில்கள் அழிந்துபோயின. போக்குவரத்தைச் சீர்படுத்துவது, சுகாதாரத்தைப் பேணுவது என்ற பெயரில் சாலையோரக் கடைகள், தெருக் கடைகள் அனைத்தும் அன்றாடம் நெருக்கடியை சந்திக்கின்றன.
இத்துடன், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை உழைக்கும் மக்கள் நகரத்தின் மையப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வேலைவாய்ப்புக்காக பெருநகரங்களைச் சார்ந்து வாழும் மக்கள் அன்றாடப் பயணம் செய்வதற்கு நிர்பந்திக்கப் படுகின்றனர். தொடர்ச்சியாக வீட்டு வாடகைக் கட்டணங்கள் உயர்த்தப்படுவது, குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு அதிக செலவழிக்க வேண்டியிருப்பது போன்றவையெல்லாம் நகரவாழ்க்கையை பெரும் சிரமத்திற்குத் தள்ளியுள்ளது.
2014-இல் மோடி ஆட்சிக்கு வந்து வாக்களித்த எந்தத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போடப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளும் ஏமாற்று நடவடிக்கைகள் என ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது.
ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நெருக்கடியில் இருந்த சிறுதொழில்கள் பல அழிந்துவிட்டன. இச்சூழலில் 2018 இறுதியில் வாகன உற்பத்தித் துறையில் தொடங்கிய பின்னடைவானது மொத்தப் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. 2019-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி-நிர்மலா கும்பல், கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியது. 2020 கொரோனா பெருந்தொற்றை ஒட்டி ஊரடங்கு காலத்தில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகள் வழக்கப்பட்டன. இத்துடன், பணப்பரிவர்த்தனைகளை குறைத்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்களைக் கொண்டுவருவதற்கு இந்தப் பெருந்தொற்று நெருக்கடி பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
இன்னொருபுறம், பா.ஜ.க.வின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பட்டிதொட்டி எங்கும் ஆன்லைன் விற்பனையின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது. சிறிய கிராமங்களில்கூட டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற வகையில் விற்பனைக் கடைகள் உருவாகிவிட்டன. நாட்டின் பல்வேறு நகரங்கள், சிற்றூர்களிலும் சங்கிலித் தொடர் டீ கடைகளான “டீ டைம்”, “கருப்பட்டி காபி” போன்ற கார்ப்பரேட் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடாக கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆண்கள் அழகு நிலையம், பெண்கள் அழகு நிலையங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. சமூகத்தின் உயர் நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கு உரிய பொருளாதாரங்கள் மட்டுமே முன் தள்ளப்படுகின்றன.
குறிப்பாக, டிஜிட்டல் வடிவிலான கல்வி, ஆன்லைன் கல்வி பலமடங்கு அதிகரித்துள்ளது. முதல் வகுப்பில் இருந்தே ஆன்லைன் கல்வி முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் செல்போன் விற்பனையும் டிஜிட்டலுக்காக மக்கள் செலவிடும் அளவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன. பைஜூஸ் என்பது இப்படி உருவாகி மக்களின் சொத்தை சூறையாடிய ஒரு கார்ப்பரேட் ஸ்டார்ட் அப் நிறுவனம்தான்.
ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்றவை எல்லாம் இன்று குப்புறக் கவிழ்ந்து கிடக்கின்றன. பல நாடுகளுக்கு ஓடி ஓடி அந்நிய மூலதனத்தை ஈர்த்த மோடியால், இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
மோடி ஆட்சிக்கு வரும் போது, 2013-இல் அதானியின் மூலதனம் 26 கோடி டாலராக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் 1,123 கோடி டாலராக 43.2 மடங்கு அதிகரித்தது. அதாவது, 4320 சதவிகிதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதைப்போலவே, அம்பானி 2014-இல் 180 கோடி டாலருடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 41வது இடத்தில் இருந்தார். 2019-இல் 540 கோடி டாலருடன் இவரை 9வது இடத்திற்கு உயர்த்தினார் மோடி. 2023-இல் இவர் 820 கோடி டாலருடன் இந்தியாவில் முதல் பணக்காரராக இருக்கிறார்.
மோடி குறிப்பிடும் புதிய இந்தியா என்பது இதுதான். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வது என்று குறிப்பிட்டு வந்ததன் பொருளும் இதுதான். தற்போது கார்ப்பரேட் கும்பல் 2034-இல் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டும் என்று முழங்கிவருகின்றன. மோடியின் இந்த புதிய இந்தியா, ஏழைகளுக்கும் அடிப்படை உழைக்கும் மக்களுக்கும் சுடுகாடாகவே அமையும்.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிரம் என்பது அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் வகையிலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாசிசமாகும். இது மதச் சிறுபான்மை மக்கள், தலித்துகளுக்கு மட்டுமல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான பாசிசமாகும்.
உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி, அவர்களில் பெரும்பகுதியினரை அழித்து உருவாக்கும் புதிய இந்தியாதான், இந்துராஷ்டிர இந்தியாவாகும். ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிரத்திற்கு எதிரான போராட்டம் என்பது அதன் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்.
![]()
தங்கம்
விருது வேண்டுமா!
‘சொரணையில்லை‘ என்று எழுதிக் கொடு!!
இந்து ராஸ்டிர நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோகும் நாடாளுமன்ற நிலைக்குழு!
‘சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு’ கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார அமைப்புகள் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கான நடைமுறைகள் குறித்து சில பரிந்துரைகளை மாநிலங்களவைக்கு அளித்துள்ளது.
அதில் சாகித்ய அகாடமி விருது போன்ற விருதுகளுக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைப் பரிந்துரைக்கும்போது, “அரசியல் காரணங்களுக்காக அந்த விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதில்லை” என்ற வாக்குறுதிகளை பெற வேண்டும் என்றும் அதை மீறி விருதுகளைத் திருப்பி அளித்தால், வேறு எந்த விருதுகளுக்கும் அந்த கலைஞரையோ, எழுத்தாளரையோ பரிசீலிக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள கலை, கலாச்சார அகாடமிகள் அரசியல் சார்பற்றவையாம்; அதனால் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை பெறும் போது அரசியல் காரணங்களுக்காக விருதைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டுமென இந்தக் குழு கூறுகிறது.
“ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரமாக சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை அரசியல் காரணத்திற்காக திருப்பித் தருவது நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது” என்றும் புலம்பியுள்ளது நாடாளுமன்ற நிலை குழு.
படிக்க: ரஜினிக்கு பால்கே விருது !! தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்
தமிழ் எழுத்தாளர்கள் பலரும் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளர் இமயம், “இது போன்ற நிபந்தனைகள் எழுத்தாளர்களை அவமானப்படுத்துபவை; ஒரு எழுத்தாளன் எழுத்துக்காக வாழ்ந்த வாழ்க்கையையும் சமூகத்தின் மேலிருக்கும் அக்கறையையும் அவமானப்படுத்தும் நிபந்தனை இது; எழுத்தை அங்கீகரித்து விருதைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை; விருதை ஏற்பது, ஏற்காதது, திருப்பி அளிப்பது ஆகியவை எழுத்தாளனின் முடிவு” என்று கண்டித்துள்ளார்.
பாஜகவின் இந்துராஷ்டிர அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இந்தியாவில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளைப் பெற்ற பலர் இந்த காட்டுமிராண்டிகளால் தாங்கள் கௌரவிக்கப் பட்டத்தையே அவமானமாக கருதுகின்றனர்.
தனது வாழ்வின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் இத்தகைய விருதுகளைத் தூக்கி வீசத் துணிகின்ற கலைஞர்கள் எழுத்தாளர்களால் சங்கிகளுக்கு ஏற்படும் அவமானத்தை ‘தேசத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாக’ சித்தரிகிறது நாடாளுமன்ற நிலைக்குழு. அதனால் அரசியல் அற்ற கலைஞர்களுக்குத் தான் இத்தகைய விருதுகளை பரிந்துரைக்க வேண்டும் என்கிறது.
நிலவுகின்ற அரசியல் சமூக காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?
மக்களைப் பற்றி துளியும் அக்கறையற்ற, பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன், மாலன் போன்ற சனாதனவாதிகளாலும் இளையராஜா, குஷ்பூ போன்ற பாசிச அடிவருடிகளாலும் தான் அப்படி இருக்க முடியும்; அவர்களைப் போன்ற சங்கிகளுக்கு விருதுகளைக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துவது தான் இதன் பொருள்.
2015-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்புர்கி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்சாரே, தபோல்கர் ஆகியோர் சங் பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக சாகித்ய அகாதமி எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டித்து 39 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர்.
படிக்க: பத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி !
2019-ஆம் ஆண்டு CAA-NPR-NRC யை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, புதுச்சேரி பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் 4 மாணவர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் தங்கப்பதக்கத்தையும் பட்டங்களையும் பெற மாட்டோம் எனப் புறக்கணித்தனர். மேலும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
சமீபத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், பாலியல் குற்றவாளியுமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய தொடர் போராட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்தனர்.
இப்படி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக அறிவுத் துறையினரும், கலைஞர்களும், வீரர் வீராங்கனைகளும், மாணவர்களும் தங்களது உயரிய விருதுகளையே துச்சமாக தூக்கி எறிந்து போராடுவது சர்வதேச அளவில் சங்கிகளுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
இப்படியெல்லாம் தான் அம்பலப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாசிச பாஜக அரசு உள்ளது. ஆகவே விருதுகளைத் திருப்பித் தருவது, ‘தேசத்தை அவமதிக்கும் செயல்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் மூலம் தேசவெறிக் கூச்சலிடுகிறது.
“விருதைத் திருப்பி அளிக்க மாட்டேன்” என வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே விருது வழங்குவதென்ற கொள்கை முடிவுகளை எடுக்க கலாச்சார அமைப்புகளை நிர்பந்திக்கிறது.
இனி பாசிச அடிவருடிகளுக்கானதாக சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள் இதன்மூலம் மாற்றப்பட இருக்கிறது.
இந்த பாசிசக் கும்பல்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, அவர்களின் ரத்தக்கறை படிந்த கைகளிலிருந்து விருது வாங்கினால் உணர்ச்சிகள் அற்ற செத்த பிணத்திற்கு சமமாவோம். “கலையும் இலக்கியமும் மக்களுக்கானதே” என்று உயிர்த்துடிப்புடன் இயங்குவது தான் கலைஞர்கள் எழுத்தாளர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.
![]()
பாரி
ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாசகர் கேள்வி:
கடந்த ஜூலை மாத இதழில், “பாசிசக் கும்பலின் தோல்விமுகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்” என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பாகத்தில், “தோல்வி முகம்” என்று அழைத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. “வளர்ச்சி” என்ற முகமூடி கழன்றுபோனதும், பா.ஜ.க. தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றத் தவறியதும்தான் “தோல்வி முகம்” என்று விவரிக்கப்படுகிறதா? அப்படியானால், 2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியிலேயே பா.ஜ.க. தோல்வி முகத்தை அடைந்திருந்ததா? எனினும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றிபெற்றது எப்படி? – சற்று விளக்கவும்!
000
“வளர்ச்சி நாயகன் மோடி”, “குஜராத் மாடல் வளர்ச்சி”, “கருப்புப் பணத்தை மீட்போம்” என்றெல்லாம் 2014 தேர்தலின்போது முழங்கியது பா.ஜ.க கும்பல். இவை அனைத்தும் தோல்வியை தழுவிவிட்டன. ஆனால், அந்த பொருளில் பா.ஜ.க. தோல்விமுகம் என்று நாம் குறிப்பிடவில்லை. தான் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற முடிந்தது.
பா.ஜ.க.விற்கு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வெல்லாம் கிடையாது. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் ‘இலவச அரசியலாக’ வரையறுப்பது, அதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவது தவறு என்ற கண்ணோட்டம் பா.ஜ.க.வின் அரசியல் அடிப்படைகளில் ஒன்றாகும்.
கருப்புப் பணத்தில் திளைப்பது அதன் இரத்தத்தில் ஊறிப்போன கொள்கையாகும். வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகச் சொன்ன பா.ஜ.க, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி வாங்குவதற்கு ஏற்ப தேர்தல் பத்திரங்கள் முறையைத் திருத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை கட்சிக்கு நன்கொடையாகச் சுருட்டிக்கொண்டது. (2018-2022 ஆண்டுகளில் மொத்த வரவில் 9,208 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த தொகையில், பா.ஜ.க. மட்டும் 5,270 கோடி ரூபாய் – 57 சதவிகிதம் – நன்கொடையாகப் பெற்றுள்ளது)
படிக்க: மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்விட்டரில் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கிகள்!
நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் கருப்புப் பணக் கொள்ளையர்களை இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து அவர்களைப் பாதுகாத்தது மோடி அரசு. இதனால், மக்கள் மத்தியில் மோடி அரசின் உண்மை முகம் கிழியத் தொடங்கியது.
ஆகையால், ஒரு பாசிசக் கட்சிக்கே உரிய வகையில் பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவே அது செயல்பட்டு வருகிறது. மற்றொருபுறம், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கார்ப்பரேட் வர்க்கங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்து வருகிறது; மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது; சிறுபான்மையினரை இரண்டாம்தரக் குடிமக்களாக்கி வருகிறது. இதுபோன்ற பா.ஜ.க.வின் பாசிசப் போக்குகள் 2014-இல் அது ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தொடரும் போக்காகும்.
மேலே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எல்லாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அம்பலப்படுத்தப்பட்டவைதான். இருப்பினும் பாசிச பா.ஜ.க. அப்போது தோல்வி முகத்தை அடையவில்லை; 2019-இல் பா.ஜ.க. கூட்டணி அதுவே எதிர்ப்பார்க்காத அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
அப்படியெனில், 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். பரிவாரக் கும்பல்கள் மற்றும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என்று பொருளா? பா.ஜ.க.வின் ஐந்தாண்டு காலத்தில், மக்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று கருதிவிட முடியுமா? இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.
பா.ஜ.க.வின் இந்த ஆட்சிக் காலத்தில் பசு குண்டர்களின் கும்பல் படுகொலை வன்முறைகளுக்கு பெஹ்லூக்கான், அக்லக் போன்றவர்களே சாட்சி; முற்போக்காளர்களை காவிக் குண்டர்களை வைத்துக் கொல்வதற்கு கௌரி லங்கேஷ் ஒரு சாட்சி; உயர்கல்வியில் இருந்து தலித் மாணவர்கள் விரட்டியடிக்கப்படும் போக்கிற்கு ரோகித் வெமுலா தற்கொலை ஒரு சாட்சி; நீட் தேர்வு ஏழை மாணவர்களை வஞ்சிக்கிறது என்பதற்கு அனிதா ஒரு சாட்சி; கார்ப்பரேட் திட்டங்களை எதிர்க்கும் மக்களுக்கு துப்பாக்கிச்சூடே பதில் என்பதற்கு ஸ்டெர்லைட் ஒரு சாட்சி; மோடியின் டிஜிட்டல்மயமாக்கத்திற்கு பணமதிப்பழிப்பு படுகொலைகளே சாட்சி.
இவை மட்டுமா, ஜி.எஸ்.டி., பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா, பாரத்மாலா, சாகர்மாலா என மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்த திட்டங்கள்தான் எத்தனை எத்தனை.
2017-இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி அரசை பணியவைத்தது. ஜி.எஸ்.டி.க்கு எதிராக மோடியின் குஜராத்திலேயே 10 இலட்சத்திற்கும் மேலான வியாபாரிகள், வணிகர்கள், சிறுதொழில்முனைவோர் மிகப்பெரும் போராட்டங்களில் இறங்கினர். இப்படி மோடிக்கும் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கும் எதிராக பல்வேறு பிரிவு மக்களிடம் அதிருப்திகளும் எதிர்ப்புகளும் கிளம்ப ஆரம்பித்தன.
2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்டோமொபைல் துறையில் நெருக்கடி ஏற்பட்டு பெருமளவில் பொருளாதார மந்தம் நாட்டை தாக்கியது.
ரஃபேல் ஊழல் மோடி ஆட்சியின் உத்தம வேடத்தை அம்பலப்படுத்தியது. பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களாக இருந்த யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோர் பிரஷாந்த் பூசனுடன் இணைந்து இந்த ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
படிக்க: புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!
உச்சபட்சமாக, பா.ஜ.க.விற்கு எதிரான மக்களின் உணர்வுகளை மடைமாற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.யிலேயே மோடிக்கு எதிராக கட்காரி அல்லது ஆதித்யநாத்தை முன்னிறுத்துவதற்கான முயற்சிகளும் தொடங்கியிருந்தன. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக்கூட அடுத்து பா.ஜ.க. ஆட்சி அமையும் என்ற உறுதியான நம்பிக்கை அன்று இல்லை.
இருப்பினும், 2019-இல் மோடி தலைமையில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
ஊரறிந்த திருடனுக்கு வெற்றி, எப்படி?
மக்களிடம் மிகப்பெரும் அளவுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைந்தது, ஏன்?
பா.ஜ.க.வின் தேர்தல் முறைகேடுகள், மின்னணு வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்தது ஆகியவைதான் இதற்கு காரணம் என்று சிலர் தெரிவித்தனர். இது உண்மையல்ல. பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு முறைகேடுகள் நடந்திருந்தாலும், தென்மாநிலங்களில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்தது எப்படி நடந்தது என்று இவர்கள் விளக்குவதில்லை. அதிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஒரு சீட்டு மட்டுமே பெற முடிந்தது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டது மட்டுமே பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணம் அல்ல. தேர்தல் வெற்றியை அது மட்டுமே தீர்மானித்துவிடாது. இவற்றை எல்லாம் விட முக்கியமான காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். அதுதான் “அரசியல் களம்”.
பா.ஜ.க.வை தொடர்ந்து தேர்தல் களத்தில் அம்பலப்படுத்துவது பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு அவசியமானது, அடிப்படையானது எனினும், அது பா.ஜ.க.வின் தோல்வியைத் தீர்மானிக்கும் காரணி அல்ல. இவ்வளவு இருந்தாலும் அரசியல் ரீதியாக பா.ஜ.க.விற்கு தோல்விமுகம் உருவாகவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உருவாகாமல் இருந்தது என்று பலரும் குறிப்பிடுவது அதில் ஒரு அம்சமாகும். அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உருவாகியிருந்தாலும், அதனால் மட்டுமே பா.ஜ.க.வை தேர்தலில் தோற்கடித்திருக்க முடியாது.
வெற்றிமுகத்தில் பா.ஜ.க. இருப்பதற்கு அது தொடர்ச்சியாக ஆகப் பெரும்பான்மை மக்களிடம் தனது நற்பெயரை தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. துருக்கியில் எர்டோகனை எடுத்துக் கொள்ளலாம். ஆகப் பெரும்பான்மை மக்களிடம் அவர் நற்பெயரைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் டிரம்ப், பிரேசிலின் பொல்சனாரோ போன்றவர்களும் எர்டோகன் போன்றவர்களே. ஆனால், அவர்கள் தோல்வியடைந்தனர்.
தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்களை ஒரு மாற்றாக முன்னிறுத்திக் கொள்வது, அத்துடன், ஆளும்கட்சி தோல்விமுகம் அடைந்திருப்பது ஆகிய இரண்டும் எந்த அளவிற்கு பொருத்தமாக அமைகிறதோ, அப்போதுதான் ஆளுங்கட்சியினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீசியடிக்கப்படுகின்றனர்.
ஆகப் பெரும்பான்மை மக்களிடம் பா.ஜ.க. மீது அதிருப்தி வளர்ந்துவந்திருந்தாலும், “வலிமையான தலைவர்”, “தேசத்தின் பாதுகாவலர்” என்று மோடி மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்படவில்லை. புல்வாமா தாக்குதல், அதைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ ஆகியவை பெரும்பான்மை மக்களின் தேசிய உணர்வைத் தூண்டியது. மற்றொருபக்கம், பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு வளர்ந்துவந்த அதிருப்தியை ஆழப்படுத்தி அதை தனது வெற்றிமுகமாக்கிக் கொள்ளும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியோ அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியோ தயாராக இல்லை. இவையே பா.ஜ.க. 2019 தேர்தலில் மீண்டும் வெல்லமுடிந்ததற்கான காரணங்களாகும்.
“மோடி அலைக்கு” சவால் எழுந்த காலம்
2019 தேர்தலை பா.ஜ.க. வெற்றிமுகத்தோடு எதிர்க்கொண்டது. இந்த வெற்றிமுகத்தோடு தனது இந்துத்துவ, கார்ப்பரேட் திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. 2019 ஜூன் மாதத்தில் முத்தலாக் தடை விதிப்பு; ஆகஸ்டு மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, செப்டம்பர் மாதத்தில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வீட்டுச் சிறை; நவம்பர் மாதத்தில் பாபர் மசூதி நிலம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது – என அடுத்தடுத்த பல நடவடிக்கைகள் மூலமாக ஏறித்தாக்கி வந்தது.
இருப்பினும், அதுவரை மக்கள் போராட்டங்கள் தொடங்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் மோடி அரசுக்கு நேரடியாக சவால்விட்ட போராட்டமாயினும் அது தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மட்டுமே பிரதிபலித்தது. நாடு தழுவியதொரு மக்கள் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்நிலையில்தான், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை பெரிய அளவிலான எதிர்ப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு எதிராக வெகுமக்கள் போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
நாடெங்கும் இஸ்லாமியப் பெண்கள் ஷாகின்பாக் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டங்களுக்கு மக்களின் பல்வேறு பிரிவினர் மத்தியில் இருந்து ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இப்போராட்டங்கள் வெற்றிமுகத்தில் இருந்த பா.ஜ.க.வின் வேகத்தை தடுத்து நிறுத்திய நிகழ்வாகும்.
டெல்லிச் சலோ விவசாயிகள் எழுச்சி + ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி = பா.ஜ.க தோல்வி முகத்தின் தொடக்கம்
பா.ஜ.க.வோ ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கும்பலோ தமது தோல்விமுகத்தை உணரவில்லை. அதுவரை கும்பல் வன்முறைகளில் ஈடுபட்டு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்துவந்த இந்த கும்பல்கள், நேரடியாக ஜனநாயகமாகப் போராடிய மாணவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. 2020 ஜனவரி மாதத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றியது. இது நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களைப் போராட்டக் களத்திற்கு இழுத்துவந்தது.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் டெல்லி மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று, பா.ஜ.க.விற்கு தோல்வியைக் கொடுத்தது.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர்.க்கு எதிராக அமைதியாகப் போராடிய மக்கள் மீது மார்ச் மாதத்தில் யோகி ஆதித்யநாத் கும்பல் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. டெல்லியில், போலீசைக் கொண்டு பெரும் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. டெல்லியில் மட்டும் 53 அப்பாவி மக்கள் இந்துத்துவக் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது ஆதித்யநாத் அரசு. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கெதிராக எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். கொரோனா வைரஸ் பரவும் வரை தனது தேர்தல் ஆதாயத்திற்காக அதனைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், திடீர் ஊரடங்கை அறிவித்து பல இலட்சக்கணக்கான மக்களை நடைப்பிணங்களாக்கியது, மோடி அரசு. கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளியது. இந்த திடீர் ஊரடங்கால் சொல்லொணா துயரத்திற்கு உள்ளான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆங்காங்கே கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். அதன்பிறகுதான் மோடி அரசு இரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.
இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இஸ்லாமிய மக்களின் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட அனைத்து இந்துமதவெறியர்களும் விடுவிக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் புதிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்பட்டது. இராமர் கோவிலைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார் மோடி. பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் “புல்டோசர் ராஜ்” என்ற பயங்கரவாதத்தை உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் கும்பல் அரங்கேற்றத் தொடங்கியது. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கும்பல் பல்வேறு வகைகளில் தமது இந்துத்துவத் திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், அவ்வப்போது சில வெற்றிகளைப் பெற்றாலும் பா.ஜ.க. கும்பலின் தோல்விமுகத்தை இவை தடுக்கவில்லை. பா.ஜ.க.விற்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வுக்கு உரமூட்டின.
இந்த நிலையில், அந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில் குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளிடம் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதன் உச்சகட்டமாக, அந்த ஆண்டு இறுதியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் “டெல்லி சலோ” முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் விவசாயிகளும் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பங்கேற்றனர். நாடு முழுவதிலும் இருக்கும் பல்வேறு விவசாயிகள், பொதுமக்கள் இந்தப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைக் கொடுத்துவந்தனர். உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.
பல்வேறு சதிகள், அடக்குமுறைகளை முறியடித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது இன்னுயிரை ஈந்து, ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் சட்டரீதியான வெற்றியையும் பெற்றது. பாசிச மோடி அரசைப் பணியவைத்த விவசாயிகளின் இந்த வீரஞ்செறிந்தப் போராட்டம்தான் பா.ஜ.க.வை தோல்வி முகத்தை நோக்கித் திருப்பியது; பாசிசக் கும்பலுக்கு ஒரு வலுவான அடியைக் கொடுத்தது.
இந்தப் போராட்டம் நடந்த இதே காலகட்டத்தில் தொடர்ந்து மோடி அரசின் முகம் கிழியத் தொடங்கியது. இரண்டாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் கொத்துக்கொத்தாக வடமாநிலங்களில் மக்கள் இறந்த நிகழ்வுகள் உலகத்தையே அதிர வைத்தன. இவையெல்லாம், உத்தரப் பிரதேசத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், அதனைத் தொடர்ந்து நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் மண்ணைக்கவ்வின. இது, பா.ஜ.க.வின் தோல்விமுகத்தைத் தீவிரப்படுத்தியது. மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்தது.
“வலிமையான தலைவரில்”இருந்து “தோல்வியுற்ற பிரதமராக”…
அன்று தொடங்கிய தோல்விமுகம் தொடர்ந்து பா.ஜ.க.விற்கு தோல்விகளாகவே அமைந்து வருகின்றன. இச்சூழலில், காங்கிரசு தன்னை வலுப்படுத்திக் கொள்ள பாரத்ஜோடா யாத்திரை நடத்தியது; பிகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகி, ஜே.டி.எஸ். கூட்டணியில் இணைந்ததன் மூலம் பிகாரில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்தது போன்றவையெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.
இத்துடன், அண்மையில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வி மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. பாங்கு ஓதத் தடை, ஹிஜாப்புக்குத் தடை, ஹலால் உணவுகளுக்குத் தடை, லவ் ஜிகாத் எதிர்ப்பு, பசுப்பாதுகாப்பு குண்டர்களின் கும்பல் வன்முறைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களை ஒடுக்கியது சங்கப் பரிவாரக் கும்பல். ஆனால், அவை அனைத்தும் பா.ஜ.க.விற்கு எதிராக திரும்பியதை கர்நாடகத்தில் பார்த்தோம்.
தொடக்கத்தில், என்.ஐ.ஏ.வின் சோதனை நடவடிக்கைகளைக் கண்டு மக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சியானது இன்று இல்லை. என்.ஐ.ஏ. என்பது மோடி அரசின் ஏவல்படை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். பி.எஃப்.ஐ மீதான தடைக்கு எதிராக நாடுமுழுவதும் நடந்த போராட்டங்கள், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எள்ளி நகையாடின.
தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் உயிர்நாடியான நடவடிக்கைகளில் ஒன்றான, பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக சொன்னவுடன், பா.ஜ.க.விற்கு எதிராக இந்துக்களில் பல பிரிவினரே போர்க்கொடி தூக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், பொதுசிவில் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமலே இருந்துவிட்டது மோடி-அமித்ஷா கும்பல்.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த டெல்லிச் சலோ விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் குக்கி பழங்குடியினர் மீது ஏவிவரும் தாக்குதலுக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெறும் போராட்டங்கள் முக்கியமானவை.
தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்முவை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்ததற்குப் பின், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பழங்குடி மக்களின் கணிசமான ஓட்டுக்களை வேட்டையாடும் திட்டம் இருந்தது. மணிப்பூர் வன்முறைக்கெதிரான பழங்குடி மக்களின் போராட்டங்கள் அக்கும்பலின் கனவிற்கு தீ வைத்துள்ளன. குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பசுவளைய மாநிலங்களில் பழங்குடி அமைப்புகளும் விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்துள்ளன.
மணிப்பூரில் மேய்தி இனவெறியர்களால் குக்கிகள் மீது ஏவப்பட்ட வன்முறை மிசோரமில் சிறுபான்மையாக உள்ள மேய்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மிசோரமின் பழங்குடியின மக்கள் மத்தியில் வேலைசெய்யக்கூடிய சில போராளிக்குழுக்கள் மேய்திகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பல மேய்திகள் மாநிலத்தைவிட்டு புலம்பெயர்ந்துவருகிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மிசோரம் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ள இருப்பதால் அங்குள்ள பா.ஜ.க. கூட்டணி அரசாங்கத்துக்கு இச்சூழல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் தனது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருவதை மோடி அரசு வாய்பொத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. அண்மையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்கு சீனா ஸ்டேபிள் விசா வழங்கியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா தனது பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது. இப்பகுதியை “ஜாங்னான்” என்று அழைக்கிறது. ஆகவேதான் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியாவின் இறையாண்மையை மறுதலிக்கும்வகையில் ஸ்டேபிள் விசா வழங்கிவருகிறது.
இந்தியாவின் நிலம் சீனாவிடம் பறிபோய்க் கொண்டிருக்கும்போது மோடி அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை பா.ஜ.க.வால் எதிர்க்கொள்ளமுடியவில்லை.
அருணாச்சலப் பிரதேசம் மட்டுமின்றி, மணிப்பூர் வன்முறை, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி என “எதற்கும் வாய்திறக்காத பிரதமர்” என்று சமூக ஊடகங்களும் பத்திரிகைகளும் கடுமையாக விமர்சிக்கின்றன. “கல்லுளி மங்கன்”, “வெளிநாடுகளிலேயே கிடையாய் கிடப்பவர்” என மன்மோகன் சிங் மீதும், ராகுல், சோனியா மீதும் பா.ஜ.க.வினர் வைத்த விமர்சனங்கள் இன்று அப்படியே மோடிமீது எழுப்பப்படுகின்றன. 2012-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கை “செயல்திறனற்றவர் (underachiever) என்று குறிப்பிட்டு டைம் பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டது. இன்று மோடிக்கும் அதேநிலைதான். “தோல்வியுற்ற பிரதமர்” (failed Prime Minister) என்ற முழக்கம் மோடியை முன்வைத்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பிரபலமாகிவருகிறது.
2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியிலேயே மோடியின் வளர்ச்சி முகம் கழற்றி வீசப்பட்ட நிலையில், 2019 தேர்தலில் பா.ஜ.க.விற்கு கைகொடுத்த நாட்டின் ஒரே “செயல்திறனுள்ள தலைவர்”, “வலிமையான தலைவர்” போன்ற பிம்பங்களும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.
000
பா.ஜ.க.வின் காவி-கார்ப்பரேட் நடவடிக்கைகளும் மோடியின் பிம்பமும் மக்கள் போராட்டங்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பா.ஜ.க. தோல்வி முகத்திற்கு சென்றுள்ள இந்த பின்னணியில்தான், காங்கிரஸ் தன்னை ஒரு மாற்றுத் தலைமையாக மீள்கட்டமைப்பு செய்துவருகிறது. ‘பப்பு’ என்று பா.ஜ.க. கும்பலால் கேலிசெய்யப்பட்ட ராகுலை ஒரு தலைவராக தூக்கிநிறுத்தும் முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. “காங்கிரசு இல்லாத இந்தியா” என்று சொல்லி இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றியது பா.ஜ.க. எதற்கெடுத்தாலும் நேரு குடும்பம்தான் நாட்டை கெடுத்தது என்று சொல்லியது. ஆனால், இன்று, காங்கிரசுடன் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலைமை உருவாகிவிட்டது.
பா.ஜ.க. கும்பலுக்கு இது அரசியல் ரீதியான தோல்விமுகம். இனி இதை எந்த மூடுதிரையிட்டும் மறைக்க முடியாது.
அதேவேளையில், பா.ஜ.க.விற்கு அமைப்பு ரீதியான பலம் குறைந்துவிடவில்லை. அரசின் பல்வேறு மட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அரங்கேறி உள்ளது. காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள், சட்டங்கள், விதிமுறைகள், மரபுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது பாசிசம் மீண்டெழுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன.
மேலும், அரசியல் ரீதியான தோல்விமுகத்தை பா.ஜ.க. ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெற்றிமுகமாக மாற்றிக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் ஊழல், பிழைப்புவாதம், கோஷ்டி சண்டை, கார்ப்பரேட் சேவை எதிலும் பிற கட்சிகள் பா.ஜ.க.விற்கு சளைத்தவையல்ல.
![]()
மகேஷ்
சோத்துக்கு வழியில்ல.. இதுல ஆண்ட சாதி பெருமை
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato), ஊபர் (Uber), ஓலா (Ola) போன்ற இணையவழி நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இது போன்ற சட்டம் கடந்த ஜூலை 24 தேதி ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த “ராஜஸ்தான் இணையவழி அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நல்வாழ்வு) சட்டம் 2023” நிறைவேற்றியதன் மூலம் கிக் தொழிலாளர்களுக்கான சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது.
ஆனால் தொழிலாளர் வர்க்கத்திற்கான எந்த ஒரு சிறு உரிமையையும் ஆளும் வர்க்கம் தனது சொந்த விருப்பார்வத்துடன் வழங்கிவிடவில்லை. வரலாறு நெடுகிலும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களால் தான் தற்போதுள்ள உரிமைகள் பெறப்பட்டுள்ளன. அதே போல் இந்த கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம் என்ற சட்டமும், இந்தியா முழுவதும் கிக் தொழிலாளர்களின் அமைப்பாக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக இயற்றப்பெற்றதாகும். ஆனால் இந்த சட்டத்தை கிக் தொழிலாளர்களுக்காக முழு நிவாரணமாக கருதக்கூடாது. ஏனெனில் இந்த சட்டம் கிக் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் உற்பத்தி சார்ந்த மரபான தொழிலாளர் அமைப்புகள் சமகாலத்தில் எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளையும் இந்தச் சட்டம் கணக்கில் கொள்ளவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ராஜஸ்தான் மாநில அரசால் இயற்றப்பட்ட இந்த சட்டம் ஊபர், ஓலா போன்றவற்றில் சவாரிப் பகிர்வு செய்யும் தொழிலாளர்கள், ஸ்விக்கி, சொமேடோ போன்றவற்றில் உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், பிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றில் பொருட்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், மேலும் சுகாதாரம், தங்கும் விடுதி ஆகிய சேவைத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஊடக சேவைத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவரையும் உள்ளடக்குவதாக இருக்கிறது. ஆனால், இந்த தொழிலாளர்களுக்கான அமைப்பாக ஒரு “முத்தரப்பு நலவாரியம்” (tripartite welfare board) அமைப்பதாக சொல்கிறது. இந்த முத்தரப்பு நலவாரியத்தில் மாநில அரசின் பிரதிநிதிகள், குடிமை சமூக பணியாளர்கள், தொழிலாளர்கள், இணையவழி நிறுவனங்கள் ஆகியோர் அங்கம் வகிப்பர். இந்த முத்தரப்பு நலவாரியத்தில் தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தி கடுமையாக ஒடுக்கப்படும் என்பது நமக்கு சொல்லாமலே விளங்கும்.
கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கிக் தொழிலாளர்களை இணையவழி நிறுவனங்கள் “தொழிலாளர்கள்” என்று வகை படுத்துவதில்லை. அவர்களை சவாரிக்காரர்கள் (Raiders), பயனர்கள் (Users), சுயாதீனமான ஒப்பந்தக்காரர்கள், பங்குதாரர்கள் (Partners) என்ற பெயரில் வகைப்படுத்துகின்றன. இதனால் இவர்கள் நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களின் வரையறைக்குள் வருவதில்லை. இவ்வாறு தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குமான நேரடியான உறவிற்கு வெளியே தள்ளப்படுகிறார்கள் கிக் தொழிலாளர்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. கிக் தொழிலாளர்களை தொழிலாளர் நலச் சட்டங்களுக்குள் கொண்டு வராமல் அவர்களுக்கென வாரியம் அமைப்பது, அதன் மூலமாக தொழிலாளர்கள் மற்றும் இணையவழி நிறுவனங்களை பதிவு செய்வது, இவற்றிக்கு இடையிலான இணக்கத்தை கண்காணிப்பது, காப்பீடு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வகுப்பதை மேற்பார்வை செய்வது என்று அளவில் குறுக்கிக் கொள்வது தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் செய்யாது.
“நிதி அயோக்”ன் 2022 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டு 2.35 கோடியை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவும் கூட குறைமதிப்பீடாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
குறைவான ஊதியம், தன்னிச்சையாக தொழிலாளர்களது வேலைக் கணக்குகளை முடக்குதல், தன்னிச்சையாக வேலைக்கான விதிமுறைகளை மாற்றுதல், தொழிலாளர்கள் மீது நிறுவனங்களின் முழுமையான அதிகாரம் இவையெல்லாம் கிக் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினைகளாக இருக்கும் போது எப்படி சிறிய சமூகப் பாதுகாப்பு உரிமைகள் தீர்வாக இருக்க முடியும்?
’தங்களது வேலை நேரத்தை தாங்களே வடிவமைக்கும் தேர்வுச் சுதந்திரம் மற்றும் நிலையாக கணிசமான ஊதியம்’ போன்ற பெரும்பான்மையான இணையவழி நிறுவனங்களின் வாக்குறுதி கிக் தொழிலாளர்களை ஆரம்பத்தில் ஈர்ப்பதாக இருக்கிறது. ஆனால், சிறிய காலத்திலே யதார்த்த நிலை இந்த வாக்குறுதிகளுக்கு மாறானதாக இருப்பதைத் தொழிலாளர்கள் தங்களது பணியின் ஊடாக அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்கிறார்கள்.
படிக்க: ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
கிக் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 14 மணிநேரம், வாரத்தில் ஆறு நாள் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதிக மதிப்பீட்டு புள்ளிகள் வாங்கினால் தான் அடுத்தடுத்து வேலைகள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் அதற்காக மிகுந்த நெருக்கடியில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள். ஒரு மாதத்திற்கு 5 ஆர்டர்களை எடுக்காமல் விட்டாலே தொழிலாளர்களின் வேலை கணக்கு முடக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்விக்கி, சொமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்யாவிட்டால் மதிப்பீட்டு புள்ளிகள் குறையும் என்பதால் வேகமாக செல்லும் போது அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்குகின்றனர்; சிலர் மரணம் அடைகின்றனர். ஆனால் விபத்துகளில் சிக்குவதால், உடல்நலக் குறைவால், வீட்டுச் சூழ்நிலையால் ஆர்டர்களை எடுக்காமல் விடும் தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுகின்றனர்.
மேலும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் அளவுகளின் குறைந்தபட்ச வரம்பை தன்னிச்சையாக மாற்றுகின்றன. கிக் தொழிலாளர்களின் தலையாயப் பிரச்சினையாக இருப்பது, Multiple Rating System தான். இதன்படி தொழிலாளர்களின் செயல்திறன் பல்வேறு முறைகளில் இருந்து மதிப்பீடு செய்யப்படுகிறது. நுகர்வோரால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பீட்டு புள்ளிகள் (Customer’s Rating என்னும் இந்த மதிப்பீடு எதற்காக இருக்கிறது, இது எப்படி தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை பாதிக்கிறது என்று பெரும்பாலான நுகர்வோர்களுக்கு தெரியாது), தொழிலாளர்கள் நிறுவனங்களின் எத்தனை அழைப்புகளுக்கு பதிலளிக்கிறார்கள் என்ற மதிப்பீடு (Response Rating), குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை வேலைகளை ரத்து செய்கிறார்கள் (Cancellation Rating) என்ற கணக்கு – என பல்முனைகளில் இருந்து மதிப்பீடு செய்யப்படுவதால் தொழிலாளர்கள் எப்போதும் நெருக்கடியிலே அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இடைத்தரகர்களை ஒழிப்பதாக இந்த இணையவழி நிறுவனங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால் பல நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து 15 முதல் 25 சதவிகிதம் வரை கமிஷன் அடிக்கின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத பிற கட்டணங்கள் தொழிலாளர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்கின்றன. பல்வேறு காரணங்களைச் சொல்லி தொழிலாளர்களின் காப்பீட்டுத் தொகைக்கான கோரிக்கைகளையும் ரத்து செய்கின்றன இந்த நிறுவனங்கள்.
இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் கிக் தொழிலாளர்களுக்கு முத்தரப்பு நலவாரியம் அமைப்பது என்பது எந்த வகையிலும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. மேலும், ஸ்விக்கி, சொமேடோ, ஊபர், ஓலா போன்ற இணையவழி நிறுவனங்கள் பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஈர்ப்பு மையமாக இருப்பதையும், கிக் தொழிலாளர்கள் பட்டாளம் வளர்ந்து வருவதாக இருப்பதையும் கணக்கில் கொண்டு, பெருமளவிலான தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி தான் இந்த பன்னாட்டு மூலதனத்தின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியும் என்பது சொல்லாமலே விளங்கும். அமைப்பாக்கப்பட்ட கிக் தொழிலாளர்களின் போராட்டங்களால்தான் இந்த சட்டம் இயற்றப்பட்து என்பதை அரசியல் ரீதியான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு மேலும் தொழிலாளர் வர்க்கத்திற்கான உரிமைகளை வென்றெடுக்கும் பரந்த அளவிலான போராட்டங்களை நடத்த வேண்டும்.
![]()
சீனிச்சாமி
சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள்! | தோழர் தீரன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமீப காலமாக சாதிய வன்கொடுமைக்கு எதிரான திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் ரசிகர்களும் இப்படங்களுக்கு சரியான அங்கீகாரத்தையும் விமர்சனங்களையும் தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கர்ணன் பரியேறும் பெருமாள் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்-இன் படைப்பான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29-ஆம் அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பாகவே இசை வெளியீட்டு விழாவில் மாரி பேசியது சர்ச்சையானது.
“அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் மாரி செல்வராஜ் சாதி வெறியைத் தூண்டுகிறார். தேவர்மகன் திரைப்படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரம் தாழ்த்தப்பட்டவராக காட்சிப்படுத்தப்படவில்லை; அவர் ஆதிக்க சாதினரை போலத்தான் காட்சிப்படுத்தப்பட்டார். மாரி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்” என்று தங்கள் தரப்பு நியாயங்களை கூறி மாரிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர்.
“மேலும் ஒருபடி மேலே போய் தென்தமிழகத்தில் மாமன்னன் திரைப்படத்தை ஓடவிடமாட்டோம்! திரையரங்குகளை முற்றுக்கையிடுவோம்” என்று ஆதிக்க சாதிவெறியர்கள் ஆர்ப்பரித்தார்கள். இதற்கு பதிலடியாக “இந்த சம்பவத்திற்கு முன்பாகவே தேவர்மகன் படத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு அவரது கண்டனத்தை மாரி செல்வராஜ் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். கமல்ஹாசன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட தக்கசமயமாக இசை வெளியீட்டு விழாவைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று இன்னொரு தரப்பினர் தங்களது நிலைப்பாட்டினை முன்நிறுத்தி தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் சண்டைப்போட்டுக் கொண்டார்கள்.
படிக்க: ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்| தோழர் மருது
இசைவெளியீட்டு விழாவில் மாரி பேசிய “இந்த நிலை மாறனும்” என்ற வசனத்தை வைத்து கிண்டல் கேலி செய்து வந்தனர்.
“இரயில் நிலையகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றால் கூட கவுண்டர்ல கேட்கனும்” என்று பதிவிட்டு அதன்கீழ் “இந்த நிலை மாறனும் சார்” என்று தொடர்ந்து மாரியை கீழ்தானமாக சித்தரித்து சாதிய வன்மத்தை உமிழ்ந்தார்கள்…
மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பகத்பாசில் ஆதிக்கசாதி வெறியனான ”ரத்னவேல்” என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். தனது சுயநலத்திற்காக எதையும் செய்யும் கொடூரனாககவும், தான் வளர்த்த நாய் ஒரு தாழ்த்தப்பட்டவர் வளர்த்த நாயிடம் தோல்வியுற்றதால் அதை அடித்தே கொல்லும் மனிதத்தன்மை அற்றவனாகவும் அக்கதாப்பாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பகத்பாசில் நடித்த ரத்னவேல் கதாபாத்திரத்தை mash up ஆக எடிட் செய்து சாதிப் பெருமை பேசும் பாடல்களோடு பொறுத்தி trend செய்துவருகிறார்கள் சாதிவெறியர்கள். இவ்வாறு செய்துவிட்டு “பாவம் மாரி” என்று ஏளனமாக சிரித்தனர். இந்த ரத்னவேல் கதாப்பாத்திரத்தைத் தூக்கிப்பிடித்து பேசுவதை ஏதோ மாரியை இழிவுபடுத்துவதற்காக ட்ரெண்ட் செய்யப்படும் ஒன்றாக கருதக்கூடாது.
தாங்களும் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்திற்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல; தாங்களும் சாதிவெறியின் பிரதிபலிப்புதான் என்று எண்ணுவதன் வெளிப்பாடு தான் அது.
இவ்வாறு சாதிவெறியை வெளிப்படுத்தும் காணொளிகளைப் பரப்பும் வகையில் இளைஞர்கள் இருப்பதென்பதை ஒட்டுமொத்த சமூகத்திற்குமான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.
மேலும் இவர்கள் மாரியை “சொரியாசிஸ் தாக்கப்பட்டான்”, “சொந்த காசுல சூனியம் வைத்துக்கொண்டான்”, “மாரியின் கதறல்” போன்ற மீம்ஸ் போட்டு தங்களின் சாதிவெறியைத் தீர்த்துக்கொள்ள இந்த விடயத்தை பயன்படுத்திக்கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
படிக்க: நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!
மாரி செல்வராஜ் அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் சாதிவெறியை தூண்டுகிறார் என்று கதறிய சாதிவெறி சங்கிகளுக்கு ஒரு கேள்வி.
சாதி ஆதிக்கம் குறைந்து விட்டதாக பேசப்படும் இந்த காலகட்டத்திலேயே சாதி வெறியனாக நடித்த ஒருவரின் கதாபாத்திரத்தை ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராகத் தூக்கிப்பிடித்து வன்மங்கள் கக்கப்படும்போது 1992-ஆம் ஆண்டில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படம் தலித் மக்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக, பொது புத்தியாக சமூகத்துக்கு எதிரான ஒரு செயல் அம்பலமாகும் போது அதை எதிர்க்காமல் அமைதியாக இருக்கிறோம் என்பதன் பொருள் நாமும் அதை ஏற்றுக் கொண்டோம் என்பதே. இதற்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வினையாற்றினர். ஆனால், அது மட்டும் போதாது. சாதி குறித்தான விவாதங்கள் மாணவர் – இளைஞர் மத்தியில் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.
எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.
ஆனால் தற்போது ஏன் அதிகமாக பேசப்படுகிறது? இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்தேறிவரும் சாதிய வன்கொடுமைகள் மற்றும் மணிப்பூரில் நடக்கும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சாதிவெறியர்களுக்கு ஒரு புதிய தெம்பைத் தந்துள்ளது.
மேலும், இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இன் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்பதுதான்.
ஆகவே தோழர்களே இந்த சங்பரிவார கும்பல்களை கருவருத்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.
மதக்கலவரத்தை தூண்ட முடியாமல் போனதால் அடுத்த நகர்வாக சாதி வெறியைத் தூண்டிவிடுவதுதான் சங்கப்பரிவார கும்பலின் நோக்கம். அதற்கு எதிராக தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்.
![]()
சிவா
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும்
– தோழர் ஆதீர்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் அமைந்திருக்கும் அசோகா பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பா.ஜ.க வெற்றி பெற்ற 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் சப்யசாச்சி தாஸ் (Sabyasachi Das) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். ஜூலை 25 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதவிப் பேராசிரியர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு பாசிச பா.ஜ.க கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தரும் தாஸ் எப்போது ராஜினாமா செய்வார் என்பதற்காகக் காத்திருந்ததைப் போல், ஆகஸ்ட் 14 அன்று அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆகஸ்ட் 1 அன்றே தனக்கும் இந்த ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரைக் கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
உதவிப் பேராசிரியர் தாஸ் “உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” (Democratic Backsliding in the World’s Largest Democracy) என்ற பெயரில் 50 பக்க ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகள் மற்றும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முடிவான தொகுதிகளை அவர் ஆராய்ந்தார்.
ஆராய்வதற்கு மெக்ராரி சோதனை (McCrary test) எனப்படும் புள்ளிவிவர சோதனை முறையை தாஸ் பயன்படுத்தினார். பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகளில், அதாவது இருவருக்கும் 50 சதவிகித வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளில், பா.ஜ.க அதிக அளவில் வென்றுள்ளதை அவர் கவனித்தார். மேலும், இத்தொகுதிகள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ளவை என்பதையும் அவர் ஆவணப் படுத்தினார்.
இத்தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். ஒன்று, தேர்தலில் முறைகேடு நடந்திருக்க வேண்டும். மற்றொன்று, கடும் போட்டியை முறியடிக்கும் விதத்தில் பா.ஜ.க தீவிரமாகப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.
படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!
வெற்றிக்கு பா.ஜ.க-வின் பிரச்சாரம் தான் காரணமா என்பதை அறிய, தாஸ் வளரும் சமூகங்களுக்கான மையம் (Centre for Developing Societies) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான தேசிய தேர்தல் கணக்கெடுப்பை (National Election Survey) நோக்கித் திரும்புகிறார். கணக்கெடுப்பின் தரவுகளோ நெருக்கமான போட்டி நிலவிய தொகுதிகளில் பா.ஜ.க-வை விட எதிர்க்கட்சிகள் களத்தில் கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.
பா.ஜ.க-வின் பிரச்சாரம் வெற்றிக்குக் காரணமில்லை என்று முடிவு செய்கிறார். அடுத்ததாக முறைகேடு எந்தெந்த விதங்களில் நடைபெற்று இருக்கலாம் என்று தாஸ் ஆய்வு செய்கிறார். அதில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தாஸ் கூறுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியை ஒப்பிடுகிறார். ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளுடன் ஒப்பிடும்போது தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதை அவர் காண்கிறார். மேலும், முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் இந்த நிகழ்வு அதிகம் நடந்திருப்பதைக் கவனிக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், அடுத்தடுத்த தேர்தல்களில் புதிய வாக்காளர்கள் இணையும்போது அத்தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; ஆனால் குறைந்திருக்கிறது. குறைந்ததற்கான காரணம் முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.
2019 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் “பதிவான வாக்குகள் (voter turnout/votes polled) மற்றும் எண்ணப்பட்ட வாக்குகள் (votes counted)” என இரண்டு தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது. அதை தி குயின்ட் பத்திரிகை ஆய்வு செய்து, 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையை தனது ஆய்வுக்காக தாஸ் பயன்படுத்திக் கொள்கிறார். தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் ஒன்றோடொன்று மிகப்பெரிய அளவில் வேறுபட்டன.
இக்காரணங்களால் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். தேர்தல் முறைகேடு தேர்தல் ஆணையத்தின் துணையின்றி நடக்க முடியாது. எனவே, இவரது ஆய்வு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
படிக்க: ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!
இந்த ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் உதவிப் பேராசிரியர் தாஸ் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். உதவிப் பேராசிரியர் தாஸ் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, ஆங்கிலம் மற்றும் படைப்பாற்றல் துறைகளும் உதவிப் பேராசிரியர் தாஸ்-க்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தி பல ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளன.
பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்தின் மீதான காவிகளின் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அசோகா பல்கலைக்கழகம் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று அரசியல் துறை பேராசிரியாராக இருந்த பிரதாப் பானு மேத்தா (Pratap Bhanu Mehta) ராஜினாமா செய்தார். பாசிச பா.ஜ.க அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பேசியும் எழுதியும் வந்ததால் மேத்தாவுக்கு மறைமுகமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதைக் கண்டிக்கும் விதமாக அப்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை மார்ச் 18, 2021 அன்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நடவடிக்கைக்கு இடதுசாரி மற்றும் ஜனநாயக சிந்தனை கொண்ட பேராசிரியர்கள் பெருந்தடையாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட பேராசிரியர்களின் ஆய்வுகள் பாசிஸ்டுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. காவி பயங்கரவாத கும்பலால் இதனை சகித்துக் கொள்ள முடிவதில்லை.
எனவே, அறிவுத்துறையினரை தங்களுக்கு அடிபணிய வைக்கும் வேலைகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் அறிவுத்துறையினர் ஒழித்துக்கட்டப்படுகிறார்கள். ஒரு சிலர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றும் சிலரோ ‘அரசுக்கு எதிராக சதி செய்தனர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
![]()
பொம்மி
ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்திலிருந்த தக்காளி விலை ரூ.300, 200, 150-லிருந்து குறைந்து தற்போது ரூ.50 ரூபாய் வரை சரிந்துள்ளது. இருப்பினும் இப்போதும் அடிப்படை உழைக்கும் மக்கள் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு தக்காளியின் விலை குறையவில்லை. தக்காளி எப்போது முன்பிருந்த விலையான ரூ.15, 20க்கு விற்கப்படும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், தக்காளிவின் விலை பழைய நிலைக்கு சரிந்தாலும் நம்மால் நிம்மதிகொள்ள முடியாது. இந்த மறுகாலனியாக்க காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருட்களின் விலை உயர்வதை தவிர்க்க முடியாது.
தக்காளி விலையுயர்வுக்கு என்ன காரணம்?
தற்போது ஏற்பட்டுள்ள இந்த தக்காளி விலை உயர்வால் சாதாரண உழைக்கும் மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், தள்ளு வண்டியில் உணவை விற்பனை செய்வோர், சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்திருப்போர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பலர் தக்காளி பயன்படுத்தி சமைப்பதையே நிறுத்திவிட்டனர்.
இந்த திடீர் விலை உயர்வுக்கு மோசமான வானிலை ஒரு காரணமாக கூறப்பட்டது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மோசமான வானிலை நிலவியதன் காரணமாகவும் வட மாநிலங்களில் கனமழையால் தக்காளி உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகியதாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 60 முதல் 80 லோடுகள் 30 ஆக குறைந்ததுதான் விலையேற்றத்திற்கு காரணம் என்று பேசப்பட்டது.
ஆனால், இவையெல்லாம் அடிப்படையான காரணங்கள் இல்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு, நாட்டின் சுயத்தேவையை நோக்கமாக கொண்ட பாரம்பரிய விவசாயமுறையை அழித்து வெறும் லாபத்திற்காக மட்டும் பயிரிடும் விவசாயமுறை விவசாயத்துறையில் கொண்டுவரப்பட்டதே முக்கியமான காரணம்.
1990களில் கொண்டு வரப்பட்ட உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு சந்தையின் முடிவே அரசின் கொள்கை முடிவானது. இந்த கொள்கையின் அடிப்படையில் ஆட்டோமொபைல் துறையில் மலிவு விலையில் கார், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்னணு துறையில் சகல வசதிகளும் கொண்ட செல்போன், கணினி ஆகியவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன. ஆனால், விவசாயத்துறையில் எதிர்மறையாக நடந்தது. அடிப்படையான உணவு பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எட்டாக்கனியாகியது.
படிக்க: விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்
இதுபோன்ற விலை உயர்வு எப்போதாவது ஒருமுறை வரும் என்ற நிலை மாறி, உலகமயமாக்கலுக்கு பிறகு விலைவாசி உயர்வு என்பது நிரந்தரமான நிகழ்ச்சி போக்காக மாறியது.
சான்றாக, வானிலை இயக்கத்தை கண்காணித்து புயல் மழை வருவதற்கு முன் எச்சரிக்கை செய்யப்படுகிறது. அதேப்போல புதிய வகை நோய் பரவுகிறது என்றால் அதற்கும் எச்சரிக்கை விடப்படுகிறது. கணினியில் உலகையே கண்காணிக்கும் போது தக்காளி விளைச்சலை கண்காணித்து முறைப்படுத்த முடியாதா? முடியும், ஆனால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. இதன் பொருள், மாநிலம் அல்லது நாட்டின் உழைக்கும் மக்கள் நலனில் இருந்து பொருளாதார கொள்கை திட்டமிடப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படுவதே.
விவசாயதுறையை அரசு முதன்மைப்படுத்தி செயல்படக்கூடாது என கோரும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் விளைவுதான் விலைவாசி உயர்வு. அது வேலையில்லா திண்டாட்டத்தை ஒருங்கே கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காய் கனிகள், சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையுயர்வு என தேச அளவிலும் சர்வதேச அளவிலும் விலையேற்றம் என்ற பெயரில் மக்களின் சேமிப்பும் வாழ்க்கையும் சூறையாடப்படுகிறது.
பலரை சுரண்டி வெகு சிலர் சொகுசாக வாழ்வதை அடிப்படையாய் கொண்டிருப்பதை போல, விலையுயர்விலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் முதலாளித்துவம் உயிர் வாழ்கிறது!
கார்ப்பரேட் நலனே அரசின் கொள்கை முடிவு:
வருடத்தில் எல்லா காலங்களிலும் அல்லது எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை இருப்பதில்லை. அப்படியானால் இதனைத் கணக்கில் கொண்டு, காய்கறி பழங்களை பாதுகாத்து முறைப்படுத்த அரசிடம் பெயரளவிற்கு கூட திட்டம் இல்லை.
மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அவர்களது உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தியான பொருட்களை எடுத்துச் செல்லவும் நான்கு, ஆறு மற்றும் எட்டு வழி சாலைகள், துறைமுகம் – விமான நிலையம் விரிவாக்கம் என பல லட்சம் கோடிகளை முதலாளிகளின் நலனுக்கு அரசு வாரி இறைக்கிறது. ஆனால், தக்காளி மற்றும் இதர காய் கனிகள் விளைச்சல் அதிகமாக இருக்கும் போது அதனை குளிர் பதன கிடங்குகள் அமைத்து பாதுகாக்கவும் பிற அடிப்படை வசதிகளை செய்து தரவும் திட்டமிட்டே மறுக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!
அடுத்தது இடைத்தரகர்கள் கொள்ளையால்தான் விலையுயர்வு என சொல்வோர்கள் நம் நாட்டின் வணிக கட்டமைப்பை புரிந்து கொள்ளாதவர்கள். சிறு கடை, சிறு வணிகம், தரைக்கடை, தள்ளு வண்டி வியாபாரங்களானது மாநகர் முதல் சிறு நகரம், கிராமப்புறம் வரை நடைபெறுகிறது. சிறு வணிகம் நீடிக்கும் வரை இடைதரகர்கள் வணிக சங்கிலியில் நீடிக்கத்தான் செய்வார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம் – சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான். ஆனால், விலைவாசி உயர்வுக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் என்று பிரச்சாரத்திற்கு பின்னால் கார்ப்பரேட்களின் நலனுக்காக திட்டமிட்டே விவசாயம் அழிக்கப்படுவது மூடி மறைக்கப்படுகிறது.
மேலும், தக்காளி விலை உயர்வுக்கு மாநில அரசு மாற்றாக முன்வைத்த திட்டங்களும் பிரச்சினையை தீர்க்கவில்லை. அப்படியானால் அரசு என்ன செய்ய வேண்டும்? போர்க்கால அடிப்படையில் “வெளிமாநிலங்களிலிருந்து தனியார் வியாபாரிகள் – சங்கிலி தொடர் கார்ப்பரேட் நிறுவனங்கள் யாரும் தக்காளியை கொள்முதல் செய்யகூடாது” என உத்தரவிட்டு, அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் கொடுக்கலாம் அல்லவா? ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து மக்கள் போராடினால் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநிலத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களை ஒடுக்குகிறது. இங்கே சில நூறு அல்லது ஆயிரம் வியாபாரிகளிடம், “நிலைமை சீரடையும் வரை ஒத்துழைப்பு தாருங்கள்” என ஏன் உத்தரவிட முடியாது? ஆனால், அரசு அதை செய்யாது. மக்கள் நலனில் அக்கறை கொள்ள கூடாது என்பதே அரசின் கொள்கை முடிவு.
இதனை மக்கள் ஆழமாக புரிந்துகொள்ளாததின் விளைவுதான் விலையுயர்வு குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மக்களிடம் கேள்வி எழுப்பினால், “அரசாங்கம் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்” என்கின்றனர். அரசியல் ரீதியில் சொல்வதென்றால், “அரசு என்பது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கருவி என்பதை மக்கள் உணராத வரை அரசியலில் மக்கள் முட்டாளாக்கப்படுவதை தடுக்க முடியாது” என்ற ஆசான் லெனின் கூற்றையே நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வை கட்டுபடுத்தும்:
முதலாளித்துவத்தில் மற்ற பண்டங்களை போலவே உழைப்பு சக்தியும் பண்டமான பிறகு அதற்குரிய விலை கொடுக்கப்படுவதில்லை. ஆலைகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். கார்மென்ட்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 அல்லது ரூ.9,000 மட்டுமே ஊதியமாக தரப்படுகிறது. ஆக பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உழைப்பு சக்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
உழைப்பு சக்தி மிக மிக மலிவான விலையில் கிடைக்கும் படியான சமூக நிலையை தொடர்ந்து பராமரிப்பதும் விலைவாசி உயர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் மார்க்ஸ் கூறுகையில், “தேவையும் (Demand) அளிப்பும் (Supply) ஒன்றின் ஏற்ற இறக்கத்தை இன்னொன்றின் ஏற்ற இறக்கத்தின் மூலமும், ஒரு விலையுயர்வு ஒரு வீழ்ச்சியின் மூலமும், ஒரு வீழ்ச்சி ஒரு விலையுயர்வின் மூலமும் ஈடுசெய்து கொள்கிறது. தேவையையும் அளிப்பையும் தொடர்ந்து சமன் செய்ய அன்றாடம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இம்மாதிரியான முதலாளித்துவ பொருளுதார கொள்கையின் விளைவு இன்றைய உலகமயமாக்கலுக்கு பொருந்துவதை பார்க்கிறோம். இதன் விளைவாய், இன்னும் சில மாதங்களில் தக்காளி விலை குறையும், ஆனால் வேறொரு பொருளின் விலை உயரும்.
முடிவே இல்லாமல் சுழலும் இந்த விஷ சுழற்சி மக்களை இதுபோன்ற அநீதிக்கு பழக்கப்படுத்தி சிந்திக்க முடியாத அளவிற்கு சலிப்படைய செய்யும். இதை நோக்கமாகக் கொண்டதே, அரசின் திட்டமிடல் மற்றும் கொள்கை முடிவு. விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு கும்பலுக்கான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்படும் ஆட்சியின் இத்தகைய பொருளாதார கொள்கை இப்படிப்பட்ட விலை உயர்வை தினந்தினம் கொண்டுவரும்.
ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்களின் அடியாள் படையான அரசையும் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமைக்கப்படும் சோசலிச சமூகம் – அதன் திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் கட்டுப்படுத்தும். ஏனெனில் தனியார் லாபம் என ஏதுமன்றி நாட்டு மக்களின் நலனே பாட்டாளி வர்க்க அரசின் கொள்கை முடிவு!
![]()
ஆ.கா.சிவா
காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க!
– தோழர் ஆ.கா.சிவா
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!