Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 181

நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் !  | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! 
மக்கள் உயிர் என்ன கிள்ளு கீரையா ?
தமிழக அரசே !  சிறப்பு சட்டம் எப்போது ?
தூத்துக்குடி துறைமுகத்தின் கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதால் தூத்துக்குடி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லமுடியவில்லை. மீனவர்கள் வேலையில்லாமல் வறுமையிலும், கடனிலும் சிக்கி தவிக்கிறார்கள். இதை பயன்படுத்தி நாசகார ஸ்டெர்லைட்டுக்கு  எதிராகப் போராடாமால் இருக்க வீட்டுக்கு வீடு தலா ரூ.2000 பணம், பொருட்கள்  கொடுத்து மீனவர்களை பிளவுப்படுத்த முயற்சி செய்தனர் நாசகார ஸ்டெர்லைட் கைகூலிகள். இதை மீனவ மக்கள் அமைவரும் ஒன்றுகூடி முறியடித்தனர்.
கடந்த மார்ச் 28-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம் கைக்கூலிகளை வைத்து பாத்திமா நகர் மக்களை பிளவுப்படுத்துகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. மக்கள் ஒன்றுகூடி அந்த கைக்கூலிகளை கண்டித்து போலீசிடம் புகார் கொடுத்தனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தனி, தனியாக புகார் மனு கொடுத்தனர்.
மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆத்திரத்தை தூண்டும் இந்த நடவடிக்கை எதிராக எத்தனை முறையோ போலீசிடம் புகார் தெரிவித்தும், ஸ்டெர்லைட் கைக்கூலிகளுக்கு எதிராக வழக்குகள் பதியவில்லை. ஏன் என்று கேட்டால்  போலிசிடமிருந்து மழுப்பலான பதில்களே வருகின்றன.
படிக்க :
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
15 உயிர்கள் சுட்டு கொன்று பலர் தங்களது உடல் உறுப்புகளை இழந்து உள்ளார்கள். உலக நாடுகளே இந்த கொடூரக் கொலைகளை கண்டித்த பிறகும் கொலைகார ஸ்டெர்லைட்டுக்காக வேலை செய்த போலீசு அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை? ஏன் ஒரு வழக்கு கூட பதியவில்லை ?
ஏன் என்று கேட்டால் ? சட்டம் தன் கடமை செய்யும் ! மக்களே பொறுமையாக இருங்கள் !  அது கடந்த காலம், இப்போ நிலைமை வேறு தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் வந்தாச்சு, புதிய காவல் கண்காணிப்பாளர் வந்தாச்சு! ஏன் புதிய ஆட்சியே வந்தாச்சு என்று  வக்கலாத்து வாங்கும் நீதி அரசர்களே ? இதற்கு பதில் சொல்லுங்கள் ?

This slideshow requires JavaScript.

கொரோனா காலம் ஆக்சிஜன் பற்றாகுறை என்று நாடகமாடி உச்சநீதிமன்றத்தின் மூலமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி ஆலையை திறப்பதற்கான ஆணையை ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. அதே சமயத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் எதையும் மதிக்காமல் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து, தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் நாங்கள் எல்லோரும் ஓரணிதான் என்பதை நிரூபித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்த  ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியை செய்ய முடியவில்லை ! ஆனால் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு  ஒன்றிய அரசு புனிதர் பட்டம் கொடுக்கிறது. தினகரன் உட்பட அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் வந்தன.
இப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தில் என்ன வேலை நடந்துகொண்டிருக்கிறது ? ஒரு வேலையும் கிடையாது! தினமும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்குள் ஆட்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று வரை யார் அனுமதி கொடுத்தது ?
பணம் பலம் படைத்த ஸ்டெர்லைட் நிறுவனம் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் முறியடித்து வருகிறார்கள்.
நான் ஆட்சிக்கு வந்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தமாக மூட சிறப்பு சட்டம் இயற்றுவேன் ! துப்பாக்கிச்சூட்டில் இறந்த தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைப்பேன் ! 15 பேரை சுட்டு கொன்ற போலிசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என வாக்குறுதியளித்து வெற்றிபெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வரை ஒரு வழக்குகூட போடவில்லையே ஏன் ?
மக்கள் உயிர் என்ன கிள்ளு கீரையா ? தமிழக அரசே !  சிறப்பு சட்டம் எப்போது ?
தூத்துக்குடி மக்களின் மூன்று கோரிக்கைகள் :
1. சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்ற வேண்டும் !
2. 15 தியாகிகளுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் !
3. மக்களை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்!
இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தூத்துக்குடி மக்கள் போராட்டம் ஓயாது !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் போராட்டத்தை தவிர வேறெந்த விடிவும்  இல்லை!


மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605

தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் காவி பாசிஸ்ட்டுகள் !

து பெரியார் மண். தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காலூன்ற முடியாது” என்று தமிழக அறிவுத்துறையினரும் முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனிய சித்தாந்தத்தை எதிர்த்து போராடிவந்த தமிழ்நாட்டைப் பற்றி, நாம் இவ்வாறு கருதிக் கொள்ள நியாயம் உண்டுதான்.
ஆனால், இவ்வாறு பேசுவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளைப் பற்றி குறைமதிப்பிடவும் நமது செயலின்மையை மறைத்துக் கொள்ளவுமே பயன்பட்டு வருகிறது என்பது அபாயமான போக்கு. நமது அசட்டைத்தனத்தின் மீதுதான் பாசிசம் மெல்ல வளர்ந்து வருகிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தமிழகத்தில், அண்மைக் காலமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, சற்று பரிசீலனை உணர்ச்சியோடு மீள்பார்வை பார்ப்பது அவசியம்.
000
தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்ட தருணம் பார்த்து கழுகு போல் காத்திருந்த பா.ஜ.க-விற்கு கிடைத்த அரிய வாய்ப்புதான் அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை. கடந்த ஜனவரி 19-ம் தேதியன்று, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்ற கிறித்துவ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார்.
படிக்க :
‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !
தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !
லாவண்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கட்டாய மதமாற்றத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தனது கேடான மதவெறி நோக்கத்திற்கு மாணவியின் மரணத்தை துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
தனது தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என லாவண்யா பேசுவதைப் போன்ற ஒரு காணொளியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பகிர்ந்ததும் விசயம் பற்றிக் கொள்கிறது. பா.ஜ.க உள்ளிட்டு விஷ்வ இந்து பரிஷித் (வி.எச்.பி), இந்து முன்னணி, அகில பாரதிய வித்யா பரிஷித் (ஏ.பி.வி.பி) போன்ற சங்க பரிவார அமைப்புகள் அனைத்தும் இணைந்துகொண்டு “கிறித்துவப் பள்ளியை மூடவேண்டும்; தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை, கோவை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஜெப வீடு மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மாணவி லாவண்யாவின் பெற்றோரை தங்களது நோக்கத்திற்கேற்றபடி வளைத்துக் கொண்டது காவி கும்பலுக்கு சாதகமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு அம்மாணவியின் பிணத்தைக் கூட மருத்துவமனையிலிருந்து வாங்காமல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேலும் லாவண்யாவின் அப்பா முருகானந்தம் தன் மகள் மதமாற்றத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசு நிலையத்தில் புகாரளித்ததோடு, சிபிசிஐடி விசாரணைக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், இதற்கு முன்பு ஜனவரி 15-ம் தேதியன்று போலீசு நிலையத்தில் அளித்த புகாரில் “மதமாற்றம்” என்று குறிப்பிடப்படவில்லை என்பதிலிருந்து காவி கும்பலின் காய் நகர்த்தல்களை புரிந்துகொள்ள முடியும். அச்சாதாரண குடும்பத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுக்க வைக்க, காசை வாரியிறைத்துள்ளது பா.ஜ.க.
உண்மையில், தனது சித்திக் கொடுமையாலும் விடுதிக் காப்பாளர் கொடுத்த அதிகப்படியான வேலைச் சுமையாலுமே அம்மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பின்பு தெரியவந்தது. முன்னர் அண்ணாமலை பரப்பிய காணொளியில், “உன்னை மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தினார்களா” என மாணவியை கேள்வி கேட்பவர் வி.எச்.பி-யைச் சேர்ந்த முத்துவேல் என்றும் அக்காணொளியை தங்கள் நோக்கத்திற்கேற்ப வெட்டி பரப்பியுள்ளார்கள் என்றும் அம்பலமாகியது. மேலும் மாவட்ட நீதிபதிக்கு மாணவி லாவண்யா கொடுத்த வாக்கு மூலத்திலும் மதமாற்றம் காரணமில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரங்களெல்லாம் கிடைத்த பின்னர் ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.
கோவையில், “காந்தி நினைவு நாளில் இந்துமதவெறியை முறியடிக்க சூளுரைப்போம்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி.
ஆனால், இம்முயற்சியில் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் முழு தோல்வியடைந்துவிட்டதாக கருத முடியாது. தமிழகத்தில் தங்கள் காவி பாசிச நிகழ்ச்சி நிரலை செயலாக்குவதற்கு வாய்த்த மிகச்சிறந்த கருவியாக மாணவி லாவண்யாவின் தற்கொலையை மாற்றப் பார்த்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அதற்காக அவர்களின் தேசிய தலைமைகளே நேரடியாக கவனம் கொடுத்தன.
மாணவி தற்கொலையை விசாரிக்க தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவே தலையிட்டு விசாரணைக் குழு அமைத்தார். “லாவண்யாவிற்கு நீதி வேண்டும் (Justice For Lavanya)” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நாடு முழுவதும் இச்சம்பவத்தை பேசு பொருளாக்கியது காவி கும்பல். டெல்லியில் பழைய தமிழ்நாடு இல்லம் ஏ.பி.வி.பியினரால் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லமும் முற்றுகைக்குள்ளானது. மேலும் சிம்லா, ஜம்மு, கோரக்பூர், போபால் என நாட்டின் பல இடங்களிலும் இதை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது ஏ.பி.வி.பி.
இச்சம்பவத்தை தேசிய அளவில் கொண்டு சென்று தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கப் பார்த்தனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம், மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை பாசிஸ்டுகள் விரும்பிய திசைக்கு இந்த வழக்கை கொண்டுசெல்ல உதவி செய்தன என்பதைத்தான். விளைவு, தங்களின் கைப்பாவையான சி.பி.ஐ விசாரணைக்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மாரிதாஸுக்கு தேச பக்தர் விருது கொடுத்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணையின்போது அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது முக்கியமானது.
கட்டாய மதமாற்றம் என்ற பொய்ப் பிரச்சாரங்களோடு ஆர்ப்பாட்டம், தேவாலயங்கள் மீது தாக்குதல் என லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தை கலவரக்காடாக்க ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. முயற்சி செய்ததைப் பற்றி கண்டிக்காத நீதிபதி, மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் என்பதற்கான நிரூபணங்கள் இல்லை என்று பொதுவெளியில் பேட்டியளித்த தஞ்சாவூர் எஸ்.பி. ரவளிப் பிரியாவைக் கண்டித்தார். மாணவியின் மரணத்திற்கு அவரது சித்திக் கொடுமை காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில், முன்னர் லாவண்யா சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் குழந்தை பாதுகாப்பு மையத்தை தொடர்புகொண்டார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “இது விசாரணையை சீர்குலைக்கும் நடவடிக்கை” என கண்டித்தார்.
ஆனால், வழக்கு விசாரணையில் மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என்பதுபோல – ஒரு சங்கபரிவார உறுப்பினரே பேசுவது போல – பேசினார். “சீரியஸ் மென்” என்ற இந்தி திரைப்படம், “கல்யாண அகதிகள்” என்ற தமிழ்த் திரைப்படம் ஆகியவற்றில் நடக்கும் கிறித்துவ மதமாற்றத்தைச் சுட்டிக்காட்டி, “இதுபோன்ற படங்கள், குறிப்பாக தமிழ் படங்கள் சற்று மிகைப்படுத்தலானவை என்றாலும் உண்மையில் சமூகத்தில் அவ்வாறு நிகழ்கின்றன” என்கிறார். மேலும் “மைக்கல்பட்டி” என்ற பெயர் அந்த ஊருக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் யாராவது ஆய்வு செய்யலாம் என்றும் பேசியிருக்கிறார்.
ஆபத்தை முன்னுணர்ந்த தி.மு.க அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. “மாணவியின் மரணத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள். தமிழக போலிசுத் துறைக்கு போதிய வாய்ப்புத் தராமல் சி.பி.ஐ-க்கு மாற்றுவது சரியில்லை என தமிழக போலீசுத்துறை தன் வாதத்தை முன்வைத்தது. “இதை கவுரவப் பிரச்சினையாக பார்க்காதீர்கள்” என்று வாயை அடைத்தது உச்சநீதிமன்றம்.
“வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியதானது பா.ஜ.க.வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என்று அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. வெளிப்படையாகவே மதமாற்றம் என்ற பொய் – நச்சுப் பிரச்சாரத்தை வைத்து தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்துக் கொண்டிருந்தாலும் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினரை கைதுசெய்து சிறையிலடைக்க தி.மு.க அரசு துணியவில்லை. நீதித்துறை காவிகளின் கைப்பாவையாக செயல்படுவதைப் பற்றி தவறியும் அறிவுத்துறையினரிடையே பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை.
000
நீதித்துறை மட்டுமல்ல, போலீசுத்துறையிலும் காவிகள் ஊடுருவியிருப்பதற்கு சமீபத்தில் கோவையில் நடைபெற்ற சம்பவம் சிறந்த சான்று. காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதியன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில், “கோவை மக்கள் ஒற்றுமை மேடை” என்ற அமைப்பின் சார்பில் சி.பி.எம், த.பெ.தி.க, வி.சி.க உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்போடு “இந்து மதவெறிக்கு எதிராக மக்களை திரட்ட உறுதியேற்போம்” என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புகுந்த கோவை போலீசார், “இந்து மதவெறியர்களால் காந்தி கொல்லப்பட்டார்” என்ற வாசகம் பொறித்த பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்றுள்ளனர். இவ்விசயத்தில் கூட்டத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட, பின்னர் அவ்வாசகத்தில் ‘இந்து’ என்ற சொல்லை மட்டும் மறைத்துவிட்டு கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.பி.எம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் “கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தி நினைவு நாளில்” என்று உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கியபோது ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, “கோட்சே” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று கலாட்டா செய்துள்ளார். நாடறிந்த உண்மை, காவிகளின் மனதை கலங்கடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக போலீசால் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
ஆனால், இதே காலத்தில்தான் “கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட ட்விட் குறித்து சிலிர்ப்போடு விவாதம் நடந்து கொண்டிருந்தது.
000
தாங்கள் அடித்தளம் கொண்டுள்ள இடங்களில் பாசிச ரவுடித்தனங்களில் ஈடுபடுவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் வழமையான முறை. இப்பாசிச ரவுடித்தனத்தின் தீவர வடிவம்தான் வடமாநிலங்களில் நடைபெறும் கும்பல் படுகொலைகள். தமிழகத்தில் தற்போது கும்பல் படுகொலைகள் அளவுக்கு போகவில்லை என்றாலும் பாசிஸ்டு ரவுடித்தனம் புதிய இயல்பாக மாறி வருகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
மோடி பஞ்சாப் சென்றபோது, ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ ஏற்பட்டுவிட்டதாக நாடெங்கும் பா.ஜ.க போராடியது. தமிழகத்தின் பல்லடம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது, மோடியை விமர்சித்ததாக கூறி தள்ளுவண்டி பழ வியாபாரியான முத்துசாமியை போலீசு கண்முன்னேயே மயங்கி சரியும்வரை பா.ஜ.க.வினர் கொடூரமாக தாக்கினர். இந்நிகழ்வை பாசிஸ்டு ரவுடித்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. லாவண்வா பிரச்சினையில் ராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் தேவாலாயங்களை சேதப்படுத்தியதும் அதையொத்ததுதான்.
லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றமே காரணம் என்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்த ஏ.பி.வி.பி. அமைப்பினர். தமிழக அரசுக்கு எதிராக உருவ பொம்மையை கொளுத்தும் காட்சி.
உ.பி லக்கிம்பூர் – கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக மோடி உருவ பொம்மையை எரித்து விவசாய சங்கத்தினர் போராடியபோது மயிலாடுதுறையில், “மோடி உருவ பொம்மையை எரித்தால், பதிலுக்கு நாங்கள் லெனின் உருவ பொம்மையை கொளுத்துவோம்” என்று பா.ஜ.க.வினர் தகராறு செய்ததை நாம் மறந்திருக்க முடியாது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலின்போது மதுரை மேலூர் பகுதியில் பர்தா அணிந்து வாக்கு செலுத்த வந்த முஸ்லீம் பெண்ணை, பர்தாவை கழட்டச் சொல்லி மிரட்டியிருக்கிறான் பா.ஜ.க பூத் ஏஜெண்ட் ஒருவன். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மட்டுமே.
000
காவி பாசிஸ்டுகள் தமிழகத்தில் காலூன்றுவதற்கான முயற்சிகளை முன்பைக் காட்டிலும் தீவிரமாக செய்து வருகிறார்கள்; மெல்ல மெல்ல வளர்ந்தும் வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான ஒரு சக்தி என்ற வகையில் ஜனநாயக சக்திகள் ஆதரித்த தி.மு.க, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் செயல்பாடுகளை தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை; வாய்ப்பேச்சைத் தவிர.
தடுக்கவில்லை என்பதைத் தாண்டி, பாசிசத்தின் வளர்ச்சிக்கு துணை செய்துகொண்டிருக்கிறது தி.மு.க. இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கைகளே அதற்கு சிறந்த சான்று. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான ராமசுப்ரமணியத்தை அறநிலையத்துறை உயர்நிலைக்குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக நியமித்துள்ளது தி.மு.க அரசு.
பொதுவெளியில் பா.ஜ.க என்ற கட்சியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தாலும் தன்னை எப்போதும் “ஆர்.எஸ்.எஸ்.காரன்” என்று பெருமையொடு சொல்லிக் கொள்பவர். ஊடக நேர்காணல் ஒன்றில், “இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த தன்னார்வலர்கள்தான் தேவை” என்று பேசியவர். அறநிலையத்துறை பொறுப்பை வைத்துக் கொண்டிருக்கும் இவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். மேலும், தில்லைக் கோயில் பிரச்சினையில், “தில்லைக் கோயில் தீட்சிதர்களின் சொத்துதான், அப்பெண்ணை சிற்றம்பலத்திலிருந்து வெளியெற்றியது சரிதான்” என்றும் பேசி வருபவர். இவருக்குத்தான் திராவிடத்தை கொள்கையாக அறிவித்துக் கொண்ட தி.மு.க பொறுப்பு கொடுத்திருக்கிறது.
000
ஜக்கி வாசுதேவுக்கு போட்டியாக இந்த முறை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் விடிய விடிய கச்சேரி ஏற்பாடு செய்த சேகர் பாபுவின் நடவடிக்கை அடுத்த சமீபத்திய சான்று. காபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின். கலந்துகொண்ட பக்தர்களுக்கு ருத்ராட்சமும் தீர்த்தமும் இலவசமாம்.
படிக்க :
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
சேகர் பாபுவின் அறிவிப்பை கூட்டணியிலிருக்கும் வி.சி.க, சி.பி.எம். கட்சியினரே எதிர்த்தனர். “ஆன்மிகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானது” என்று வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டித்தார். தி.க தலைவர் வீரமணி, சி.பி.எம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
000
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் இனி எதிர்கட்சி நாங்கள்தான். எதற்கெடுத்தாலும் தி.மு.க பா.ஜ.க.வை விமர்சித்து வருகிறது. நாங்களும் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். இது சித்தாந்த ரீதியான போராட்டம்” என்றார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
உண்மைதான். சித்தாந்த ரீதியாக பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வருகிறார்கள். தி.மு.க அதற்கு பலியாகிறதே தவிர, ஈடுகொடுக்கவில்லை. சித்தாந்த ரீதியிலும் நடைமுறையிலும் காவி பாசிச அபாயம் வேர்விட்டு வளருவதை தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டுமானால் தமிழக புரட்சிகர – ஜனநாயக சக்திகளே தீவிரமாக செயல்பட வேண்டும். மாறாக, ‘பொற்கால ஆட்சி’ மயக்கத்தில் மிதந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை நக்கலடிப்பது அபாயமான போக்காகும்.

அப்பு

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கான ஒரு திரித்துப் புரட்டப்பட்ட பிரச்சார வாகனம் !
லீனி ரெய்ஃபென்ஸ்டால்-ன் ‘மன உறுதியின் வெற்றி’ (Triumph of the Will) (1935) என்ற ஆவணப்படம், நூரம்பெர்க்கில் நடந்த நாஜிக் கட்சியின் 7 லட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மாநாடு பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம். இது, இதுவரை எடுக்கப்பட்ட ஆவணப்படங்களிலேயே மிகச் சிறந்த ஒன்று என கூறப்படுகிறது. சினிமாவில் மட்டும் இது உயர்ந்த தரம் என்பதல்லாமல் பிரச்சாரத்திலும் உயர் தரம் மிக்கது என போற்றப்படுகிறது. ஆரிய இனமே ஆளப்பிறந்த இனம் என்ற நாஜிக் கொள்கைக்கேற்ப, ஜெர்மானிய ஆரிய இனமே உயர்ந்த இனம் என்கிற ஹிட்லரின் கருத்துக்கு ஏற்ப ஜெர்மானிய ஆரியன் அழகிய, நீல நிறக் கண்கள் கொண்ட, உயரமான வலுமிக்கவன் என சித்தரித்ததோடு, நாஜி ஜெர்மனியின் வெல்லப்பட முடியாத அமைப்பு ஆற்றலையும் படம் பிரச்சாரம் செய்தது.
அடால்ஃப் ஹிட்லர் படத்தைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமின்றி அதன் முழுத் தயாரிப்பாளரும் அவரே. அதுவரை வியாபார படங்களில் ஒரு நடிகையாக நடித்து வந்த ரெய்ஃபென்ஸ்டால், ஹிட்லரின் விருப்பமான இயக்குனர் ஆனதோடு, மூன்றாவது ரீச்சின் மிகப்பெரும் பிரச்சாரகராகவும் ஆகியிருந்தார். 1938-ம் ஆண்டில் 1936-ல் நடந்த ஒலிம்பிக் பற்றிய ஒலிம்பியா என்ற ஆவணப்படத்தை எடுத்திருந்தார். அந்த ஒலிம்பிக்கில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 4 தங்கப் பதக்கங்களை வென்று சர்வாதிகாரியின் ஆரிய மேலான்மை கருத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டார்.
ஆனால், இந்த ஆவணப்படமோ நாஜி ஜெர்மனியின் மேலாண்மையை உலகுக்கே எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்து, பெரும் வரவேற்புப் பெற்றது. இது ரெய்ஃபென்ஸ்டால்-ன் படம் எடுப்பதில் புதுப் புது தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தி, உலகம் முழுதும் நல்ல பெயரையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. இவரைப் படம் எடுப்பதில் ஆற்றல் மிக்க முன்னோடிகளில் ஒருவராக நிலைநிறுத்தியது. இதன்மூலம் ‘குற்றமற்ற’ பிரச்சாரகராக இதுவரை உள்ளார்.
படிக்க :
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
ரெய்ஃபென்ஸ்டாலின் திரைப்படத் திறமையில் பலமடங்கு குறைந்திருப்பினும், பாஜக விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரியில் ஒரு ரெய்ஃபென்ஸ்டால்-ஐ பார்த்திருக்கலாம். தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துடன் பாஜக-வின் விருப்பமான இயக்குனராக அக்னிகோத்ரி ஆகியுள்ளார். படம் கூறும் செய்தியும் அதன் ‘அழகு’ம் அப்படியே பாஜகவோடு ஒத்துப்போகிறது என்பதை மோடியும் அவரது ஆதரவாளர்களும் தரும் ஆதரவு ஆரவாரக் கூச்சலே வெளிப்படுத்துகிறது.
இதற்கு முன் எப்போது ஒரு பிரதமர் வெளிப்படையாக ஒரு திரைப்படத்தை ஆதரித்து, அதை விமர்சிப்பவர்கள்மீது பாய்ந்து குதறியுள்ளார்கள்? பாஜக ஆளும் பல மாநில முதல்வர்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளனர்.
இத்திரைப்படம் 1989-ல் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பண்டிட்டுகளைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியபோது அவர்கள் (பண்டிட்டுகள்) கூட்டங்கூட்டமாக காஷ்மீரிலிருந்து வெளியேறியது பற்றியது. இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறி இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். அப்போது கொல்லப்பட்ட பண்டிட்டுகளின் எண்ணிக்கை பற்றி பல்வேறு குழுவினரும் வெவ்வேறு எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், பண்டிட் சங்கர்ஷ் சமிதி என்கிற பதிக்கப்பட்டோர் சங்க கூற்றுப்படி, 1990 முதல் 2011 வரை கொல்லப்பட்ட பண்டிட்டுகள் 399 பேர்தான். இதில், முதல் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் 7% பேர் கொல்லப்பட்டனர் என்கிறார்கள். அது படிப்படியாகக் கூடி 655 ஆனது என்கிறார்கள். பிறர் கூறுவது 700-லிருந்து 1300-க்கு மேல்.
இந்தப் படம் மேலும் பலர் இறந்ததாகக் கூறி இதற்குக் காரணமானவர்கள் என காங்கிரசு, தாராளவாதிகள், மனித உரிமையாளர்கள், நக்சல் ஆதரவாளர்கள், இசுலாமியர்கள் என குற்றம் சாட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயிருந்தால் நாட்டின் நலிவுகளுக்கு காரணம் என வழமையாக யாரையெல்லாம் பொதுவில் குற்றம் சாட்டுகிறார்களோ அதே பட்டியலைத்தான் இவரும் கூறுகிறார். இவரைப் பொருத்து ஜேஎன்யூ என்றால் நாட்டின் எதிரிகளின் கூடாரம். இவையெல்லாம் எவ்வித தரவுகளும் ஆதாரங்களுமின்றி மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லப்படுகிறது. அக்னிகோத்ரி ராஜீவ் காந்தி மீது குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், அன்று டில்லியில் பாஜக ஆதரவிலான வி.பி.சிங் அரசாங்கம்தான் ஆட்சியில் இருந்தது. பாஜக முழுமையாக ஆதரித்த எமர்ஜென்சி புகழ் ஜக்மோகன் தான் காஷ்மீரில் கவர்னராக இருந்தார். (1996-ல் இதே ஜக்மோகன் பாஜக-வில் இணைந்தார்.) ஜனவரி 1990 முதல் காஷ்மீரில் இவர் வைத்ததுதான் சட்டம் என ஆட்சி செய்தார். ஏனெனில் இவரைக் கேள்வி கேட்க அன்று காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என எதுவுமில்லை.
மேலும், இந்த திரைப்படம் எந்த வரலாற்றுப் பின்புலத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. தவிர பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள், தேசிய மாநாட்டுக் கட்சியினர் உட்பட, கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை முற்றாகப் புறக்கணித்துவிட்டது. அந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை அக்னிகோத்திரி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
இதற்கிடையே 2019-ல் மோடி 370–வது சட்டப் பிரிவுவை நீக்கியதுபோல, முதலிலேயே நீக்கியிருந்தால் இவ்வளவு கொலைகளும், வெளியேற்றமும் நடந்திருக்காது என ஆலோசனைகளையும் படம் முன்வைக்கிறது. எந்த உண்மைத் தரவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வாட்ஸ் ஆப்பில் கோபத்துடன் பதிவர்கள் பதிவு போடுவார்களே அதையே படம் வெள்ளித் திரையில் பேசுகிறது ! கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகப் பெரிதாக ஊதிப் பெருக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, இனப் படுகொலை என்றால் எண்ணிக்கை அதிகமிருக்க வேண்டும் என அக்னிகோத்ரி நினைத்திருப்பார் போலும் !
இது பாஜக-வின் சொந்த உலக கண்ணோட்டத்துடன், தேசத் துரோகிகள் பட்டியலுடன் மிகப் பொருத்தமாகப் பொருந்திப்போகிறது. தேசத் துரோகிகள் என்றால் வேறு யார்? நம்பிக்கைத் துரோகிகள் தான் !
இப்படம் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில், குறிப்பாக இந்திய இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளை ஒரு கடைக்கோடி எல்லைக்கு சென்று கேடாகப் பயன்படுத்துகிறது. இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி. அன்று ஒன்றிய அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சையத்-தின் மகளான மெஹ்பூபா முஃப்தி, பண்டிட்டுகளின் துயரை பாஜக ஆயுதமாக்கியுள்ளது எனக் கூறியது வியப்புக்குறியதல்ல.
அக்னிகோத்ரிக்கு, அவர்மீது பொறாமை கொண்டோர், எதிரிகள் எண்ணிக்கை இத்துடன் நிற்கவில்லை. வியாபார ரீதியாக வெற்றி பெற்ற தனது படத்தை போதுமான அளவு அங்கீகரிக்காத திரைத்துறையினர், ஊடகம், குறிப்பாக திரை விமர்சகர்கள் என அவர் நினைக்கும் எல்லோரையும் போட்டுத் தாக்குகிறார். இதன் பொருள், அகநிலையாக இவர்கள் தன் (அக்னிகோத்ரி) மீது வெறுப்புக் கொண்டுள்ளனர் என்பதே !
அக்னிகோத்ரி தனது கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க உரிமையுண்டு ! ஆனால் அவர் எல்லைமீறி எதிர்க்கிறார். பல விமர்சகர்கள், படம் அதன் பார்வையாளர்களை தன் கருத்துக்கு ஈர்த்து, கட்டிப்போடுகிறது என பாராட்டியும் கூறியுள்ளனர். அதே நேரம் அந்த விமர்சகர்கள் படத்தில் உண்மைத் தன்மையில்லை என்ற குறையை சுட்டிக் காட்டவும் செய்கின்றனர். அக்னிகோத்ரி ஒருமுறை, “உண்மை, உண்மைதான் என யார் சொன்னது” எனக் கூறினார். எனவே அவரது படத்தைப் பற்றிய வம்பு எதைப் பற்றியது என்று அவர் ஆச்சரியப்படலாம். ஆனால் ஐயோ, நம்மில் மற்றவர்கள் உண்மைகள் போன்ற ‘அற்ப’ விஷயங்களைப் பற்றி கவலைப்படுபவர்களாக இருக்கிறோமே !
அக்னிகோத்ரியும் அவரது படமும் உருவாக்கிய சந்தடிகளைப் பற்றி – சில இயல்பானவை, சில செயற்கையாக உருவாக்கப்பட்டவை – சிறிது சொல்ல வேண்டியுள்ளது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மக்கள் மத்தியில் இடம் பெற அவர் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே உள்ளார். அவரது படம் காரணமாகவே அமெரிக்க, ரொடெ தீவு மாநிலம் “காஷ்மீர் இனப்படுகொலையை அங்கீகரித்ததாக” கூறிக் கொண்டார். இதுவே சந்தேகத்திற்குறியது.
இத்திரைப்படம் பார்வையாளர்களை மட்டும்கொண்டு வரவில்லை, தவறான நடத்தைகளையும் கொண்டு வந்துள்ளது. திரையரங்குகளில் தேசியவெறிக் கூச்சல்கள் எழுப்பப்படுவதாக செய்திகள் வருகின்றன.
பிரதமர் முதல் பல மாநில முதல்வர்கள் வரை படத்தை ஆதரிக்கின்றனர். இப்படி மேல்மட்ட ஆதரவு இல்லையென்றாலும் அக்னிகோத்ரி தனது மார்க்கெட்டிங் மற்றும் சுய ஊக்குவிப்பு திறன்களால் சமாளித்திருப்பார்.
படிக்க :
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !
பாஜக ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’-க்கு என்ன மதிப்புள்ளதோ அதனை ஒட்டக் கறக்கப்போகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. டெல்லியில் இருந்த, இப்போதும் இருக்கிற பாஜக அரசாங்கமும் சரி, இப்போது காஷ்மீரில் நடக்கும் ஒன்றிய அரசின் ஆட்சியும் கூட ஏன் பாதிக்கப்பட்ட பண்டிட்களுக்கு ஒருவித நீதியைப் பெற உதவத் தவறிவிட்டன என்ற நியாயமான கேள்விகளை மூழ்கடிப்பதற்கும் இது அவர்களுக்கு உதவும். பெரும்பாலான பண்டிட்டுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலக அளவிலும் வெற்றிகரமாக, நன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் ஒருவித நீதியையும், சிக்கலை ஒருவிதமாக முடிவுக்குக் கொண்டு வரவும் விரும்பலாம். ஆனால் இதுவரை எந்த அரசாங்கமும் இந்த இரண்டையும் வழங்குவதற்கு எந்த விருப்பத்தையும் காட்டவில்லை.
சிக்கல்களின் இந்த நுணுக்கங்கள் அக்னிஹோத்ரிக்கானவை அல்ல. அவரது நோக்கம் ஒரு சில கருத்துக்கள் மற்றும் அவர் வெளிப்படையாக வைத்திருக்கும் பல தப்பெண்ணங்களை மக்கள் மனதில் ஆழப் பதிய வைப்பதாகும். இதில் அவர் வெற்றி பெறுகிறார். அவரது சிறந்தது இன்னும் வரவிருக்கிறது. ஊதிப் பெருக்கப்பட்ட தேசிய வெறித் திரைப்படங்களை உருவாக்கிய மற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான விஷயம். இப்போதிலிருந்து, அது எல்லா வழிகளிலும் அக்னிஹோத்ரி ஆகும்.
கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !

ர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 28 அன்று 20,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்ற செய்தியை சன் நியூஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
மேலும், செய்முறை தேர்வுகளை புறக்கணித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று கர்நாடக கல்வித்துறை (Department for Pre University Education) தெரிவித்துள்ளது. அவர்கள் மற்றவர்களைப் போல Supplementary தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தங்களை “நடுநிலையாளர்கள்” என்று பொதுவில் முன்னிறுத்திக் கொள்ளும் நபர்கள் சிலர், “ஹிஜாப் விவகாரத்திற்காக மாணவர்கள் தேர்வு எழுதாமல் தங்கள் படிப்பை பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம்” என்று அறிவுரை முத்துக்களை உதிர்த்துள்ளார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் “நடுநிலை” ஊடகவியலாளர் திரு.நெல்சன் சேவியர், “இந்திய இஸ்லாமியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்து நீட் தேர்வு எழுதிய மண் இது. எல்லாவற்றையும்விட நம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் முக்கியம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் தங்கள் உரிமை என்று “பிடிவாதம்” பிடிப்பதன் மூலம் தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழித்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படும்படி இருக்கிறது அவரது கருத்து.
படிக்க :
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !
இதை சற்று உற்றுப்பார்த்தால் இன்னொரு அர்த்தமும் இந்த கூற்றில் வெளிப்படுவதை கவனிக்க முடியும்‌. அதாவது, “ஒரு இந்து பெண் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து தாலியை கழற்றிவிட்டு தேர்வு எழுதுகிறார். ஆனால், இஸ்லாமியர்களுக்கு கல்வியின் மகத்துவம் உணர்ந்து ஹிஜாபை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை” என்று பொருள்படும் அர்த்தமும் உள்ளது.
ஆனால், திரு.நெல்சன் சேவியருக்கு நாம் ஒன்றை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். நீட் தேர்வின்போது தாலியை மட்டுமல்ல, கம்மல், மூக்குத்தி உட்பட மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்ன கொடுமைகளும் நடந்தேறியது. ஆனால், பூநூலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இதைத்தான் நாம் பார்ப்பன பாசிசம் என்கிறோம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் குற்றம் சொல்வதன்மூலம் இந்த “நடுநிலையாளர்கள்” சொல்லவருவது ஒன்றுதான், “இன்று தேர்வெழுதுங்கள் நாளை போராடிக் கொள்ளலாம்” என்பதுதான்.
இதன்மூலம் ஹிஜாப் அணியும் உரிமையா? அல்லது கல்வியா? என்ற கேள்வியை இஸ்லாமிய மாணவர்கள் முன்னால் எழுப்பி, பிரச்சினையை திசை திருப்பும் போக்கை இந்த “நடுநிலையாளர்கள்” அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, நாம் ஆணித்தரமாக அறிவிக்க வேண்டியது என்னவென்றால், “பிரச்சினை ஹிஜாப் அணியும் உரிமையா அல்லது கல்வியா? என்பதல்ல. மாறாக பிரச்சினையின்  உண்மையான அம்சம் என்பது காவி – காரப்பரேட் பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் இன்றைய இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகள் வெட்டி சுருக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த காவி –  கார்ப்பரேட் பாசிச ஆட்சியில் இஸ்லாமியர்கள் எப்படி இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்”.
இந்துத்துவத்தின் நிகழ்ச்சிநிரலில் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு பயன்படும் வகையில் கர்நாடகாவில் மத துருவமுனைவாக்கம் (Religious Polarization) செய்ய இஸ்லாமியர்களின் மீதான வன்முறைகள் எந்தளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது விளங்கிவிடும்.
அதற்கு இந்த ஹிஜாப் விவகாரம் பற்றியும் கர்நாடகா மாநிலத்தில் தற்போது வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகள் பற்றியும் சுருக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
000
பசவராஜ் பொம்மையை கர்நாடகாவின் முதல்வராக பாஜக அறிவித்த சில மாதங்களிலே கர்நாடகாவின் பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள், சாலையோரங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் மோடியின் புகைப்படமும் இடம்பெற ஆரம்பித்தன. கூடவே, “புதிய பாரதத்திற்கான புதிய கர்நாடகம்” என்ற வாசகமும் இடம்பெற ஆரம்பித்தது.
இந்த வாசகம் விளக்குவது என்னவென்றால், பாஜகவின் இந்து தேசியவெறிக்காக கர்நாடகா மாநிலத்தின் சுயாட்சி காவு கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.
இது 1970-களில் கர்நாடகாவில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், பிறப்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணி, அதனால் நிலமுடைய ஆதிக்க சாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது போன்ற ஒப்பீட்டளவிலான முற்போக்கு அரசியல் பாதையிலிருந்து முறித்துக்கொண்டு கர்நாடகா இந்துத்துவ அரசியலுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்திருப்பதை எடுத்து காட்டுகிறது. இந்த இந்துத்துவ அரசியல் மிக வேகமாக நடைமுறையில் செயலுக்கு கொண்டுவரபடுவதையும் நாம் கவனிக்க தவறக் கூடாது.
2020-ம் ஆண்டு கர்நாடகாவில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஒரு சமூகத்தின் பிழைப்பாதாரமாக இருக்கும் தொழிலை இது “குற்றமயம்” (Criminalize) ஆக்குகிறது. இது இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் ஒடுக்க போலீசுத்துறைக்கும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கும் காவிக் குண்டர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
“மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு சட்டம்” என்ற சட்டத்தை கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றியதன்மூலம்  குடிமக்களின் மதம் மாறுவதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. இது கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் மதமாற்றத்தை தொழிலாக செய்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தின் விளைவாக வந்த சட்டம்.
படிக்க :
கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
கர்நாடக அரசு மேலும் ஒருபடி மேலே போய் சட்டத்தை மீறுவதற்காகவே தனிச் சட்டத்தை இயற்றுகிறது. பொது இடங்களில் இருக்கும் மதச் சின்னங்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கும் விதமாக, அந்த மதச் சின்னங்கள் இடிக்கப்படுவதில் இருந்து அதைப் பாதுகாக்கும் விதமாக சட்டம் இயற்றியுள்ளது.
ஒருபக்கம், சமூக ஊடகங்களில் பாஜக விமர்சிக்கப்படுவதை கூட சகித்துக் கொள்ள முடியாமல், விமர்சகர்களை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்வது, மற்றொரு பக்கம் கர்நாடகாவை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மீதிருக்கும் குற்றவியல் வழக்குகளை வாபஸ் வாங்குவது என சட்டத்தை இந்துத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது கர்நாடக அரசு.
கர்நாடகாவில் பாஜக அரசு ஊழலுக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பொது கட்டமைப்புக்கான டென்டரில் 40% லஞ்சமாக கேட்கப்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த லஞ்ச ஊழல் பணம் எல்லாம் பாஜகவின் மத்திய மைய அதிகாரத்திற்குதான் போய் சேரும் என்று இந்த “அப்பாவிகளுக்கு” தெரியாதுபோலும். எல்லா அரசாங்கப் பதவிகளும் வேலைகளும் பணத்திற்கான விற்பனை சரக்காக மாற்றும் அளவுக்கு லஞ்ச ஊழல் மலிந்திருக்கிறது.
நிலச் சீர்திருத்த சட்டம் 2020-ன் மூலம் நிலத்தின்‌ மீதான ஊக வியாபாரத்தை பன்மடங்கு பொருக்கி புதிய பணக்காரர்கள் உருவாவதற்கு வழியை திறந்துவிட்டுள்ளது. இந்த புதிய பணக்காரர்கள்தான் கர்நாடகா தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தேர்தலை தாமதப்படுத்துவதன் மூலம் உள்ளாட்சி சனநாயகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டார்கள். கல்வி மருத்துவம் என எல்லாத் துறைகளையும் தீவிரமாக தனியார்மயப் படுத்துகிறார்கள்‌. புதிய கல்விக் கொள்கையை எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல் அமல்படுத்துவதன் மூலம் கல்வியை காவிமயமாக்கி வருகிறார்கள்.
கீழ்மட்ட அளவில் வன்முறை கும்பலை வளர்த்துவிட்டு அந்த கும்பலை சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது, சிறுபான்மையினரின் வியாபாரத்தைப் புறக்கணிக்க சொல்லி பிரச்சாரம் செய்வது, மேலும் இந்த கும்பலை போலீசுத்துறை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாமல் இருப்பது போன்ற போக்குகள் மாநில முழுவதும் தற்போது பரவி வருகிறது.
பள்ளி சத்துணவில் முட்டை போடுவது பற்றி கூட மதத் தலைவர்கள் முடிவெடுப்பது என மதவாதத்தின் வேர் ஆழமாக துளையிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மதவாத நடவடிக்கைகளை எல்லாம் தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக இந்துராஷ்ட்ரத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் அரசியல் கலாச்சார வெளி இப்படி இந்துத்துவத்தின் பிடியில் பலமாக சிக்கியுள்ளது. தென்னிந்தியாவில் இந்துத்துவத்தின் சோதனை சாலையாக கர்நாடக மாநிலம் மாற்றப்பட்டு வருகிறது என்பதற்கான எல்லா ஆதாரங்களும் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஹிஜாப் விவகாரத்தை கர்நாடக அரசும் இந்துத்துவ சக்திகளும் மற்றொரு மத துருவமுனைவாக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டு ஆதாயமடையப் பார்க்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புக்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 31-ம் தேதி அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து “ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை” என்று மனு தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து ஹிஜாப் அணிந்த பெண்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி வற்புறுத்திய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ச் மாதம் 15-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையின்‌ ஒரு பகுதியாக இல்லை” என்று சொல்லி ஹிஜாப் தடையை நிலைநிறுத்தியது.
இதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு தாங்கள் புரிந்து கொண்டபடி தங்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை இல்லை என்பது மட்டுமல்ல, தங்கள் மதத்தின் அத்தியாவசிய நடைமுறை எது என்று தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்ற பொருளில்தான் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாம் வாசிக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு மேல்முறையீட்டு மனுவை  அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
ஒரு சிறுபான்மை மதச் சமூகத்தினரின் உரிமையை வெட்டி குறுக்குவதில் இந்த நாட்டின் எல்லா அரசமைப்பு நிறுவனங்களும் ஒத்திசைவாக செயல்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் இப்போது எந்தவித அமைப்பு துணையும் இல்லாமல் நிராதரவாக நிற்கிறார்கள். அவர்கள் இந்த நிறுவனங்கள்மீது நம்பிக்கை வைக்க எந்த நியாயமும் பிடிபடவில்லை. அதனால்தான் தேர்வைப் புறக்கணித்து தங்கள் உரிமையை பற்றி செய்தியை பொது சமூகத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
இந்த ஹிஜாப் விவகாரத்தை தனித்த ஒன்றாக பார்க்க எந்த அடிப்படையுமில்லை. 370 சட்டசரத்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் துண்டாடப்பட்டது; அங்கே இன்றும் துப்பாக்கி முனையில் மக்களை வைத்திருப்பது; பசுக் குண்டர்களால் இஸ்லாமியர்கள் அன்றாடம் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது; குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முற்பட்டது; அதை எதிர்த்து போராடியவர்களை டெல்லி கலவரத்தை தூண்டிவிட்டு 50 இஸ்லாமியர்களை படுகொலை செய்தது;
படிக்க :
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
லவ் ஜிகாத்; கொரோனா ஜிகாத் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தியது; இஸ்லாமியர்கள் சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் வியாபாரத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எச்சில் ஜிகாத்; புல்லி பாய் ஆப்பின்மூலம் இஸ்லாமிய பெண்களை பொது இணையவெளியில் ஏலம்விட்டது போன்ற எண்ணற்ற வன்முறைகளின் தொடர்ச்சிதான் இந்த ஹிஜாப் தடை.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைப் போல் ஹிஜாப் தடையும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் நீண்ட கால அல்லது குறுகிய கால தேவையின் காரணமாக சங்க பரிவாரத்தால் உருவாக்கி வளர்க்கப்பட்டதுதான். இதன் முதன்மையான நோக்கம் இஸ்லாமியர்களின் மீதான வன்முறைதான். அதனால் இந்த “நடுநிலையாளர்கள்” சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.
அதனை கணக்கில் கொண்டுதான் மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்துப் போராடுகிறார்கள். அதை ஒன்று திரட்டி இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டுப் போக எந்த இடதுசாரி அமைப்பும் இந்திய அளவில் வலிமையாக இல்லை. அதனால்தான் இது தன்னெழுச்சியானப் போராட்டமாக இருக்கிறது. அதற்கு ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே பழியை போட்டு அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் இருப்பதுவே இந்த வரலாற்று கட்டத்தில் இந்த “நடுநிலையாளர்கள்” செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்.
செய்தி ஆதாரம் : thewire, theindiaforum, deccanherald

இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !

இருளர்கள்மீது தொடரும் போலிசின் வெறியாட்டங்கள் :
பொய்வழக்கே, சித்திரவதையே உன்பெயர்தான் போலீசா?
மீபத்தில் ஜெய்பீம் படம் வெளியாகி இருளர் இன மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையையும், போலீஸ் அதிகாரிகளின் திமிரையும், கொடூரத்தையும் அம்பலப்படுத்தியதை நாம் அறிவோம். அதற்குப் பின்னரும் இருளர்கள், நறிக்குரவர்கள் போன்றோரின்மீது தொடுக்கப்படும் சித்திரவதைகளும், வன்கொடுமைகளும் குறைந்தபாடில்லை.
விழுப்புரம் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் ஒன்றில், கடந்த மார்ச் 2-ம் தேதி அதிகாலை கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, சித்தலிங்கமடம் பகுதியில் நீதிபதி சந்துரு குடியிருப்பில் வசித்துவரும் இருளர் இனத்தைச் சேர்ந்த 7 பேர் மீது பொய்வழக்கை புனைந்து அதில் 3 பேரைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. கைது செய்த 3 பேரை மயிலம் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகே ஒரு பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் வைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளனர். மீதம் 4 பேரும் தப்பியோடியதாகக் கூறியது போலீசு.
படிக்க :
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு !
மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
கைது செய்யப்பட்டுள்ள மூவர் திருடியதாகக் கூறப்படுவது அக்டோபர் 2 அதிகாலை 4 மணி. ஆனால், அக்டோபர் 1-ம் தேதி இரவு 7.30 மணிக்கே மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான பாண்டியனின் மனைவி கமலா என்பவருக்கு அக்டோபர் 2 அதிகாலை 2.45 மணிக்கே ஒரு அழைப்பு வருகிறது. அதில் பாண்டியன் ‘போலீசு எங்கள பிடித்து வைத்திருக்காங்க’என்று சொல்வதுடன் துண்டிக்கப்படுகிறது என்கிறார் கமலா. மேலும், தப்பியோடியதாகக் கூறப்பட்ட நால்வர் அடுத்த நாள் (அக்டோபர் 2) மாலை 4 மணி வரை தமது செங்கல் சூளையில்தான் வேலைபார்த்தனர் என்கிறார் சூளையின் உரிமையாளர் முருகன். இதிலிருந்தே இந்த வழக்கு எந்தளவு பொய்யானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பொய் வழக்கை ஒப்புக்கொள்ளச் செய்யவே மூவரையும் இரவு முழுவதும் சித்திரவதை செய்துள்ளது போலீசு.
அன்றைய தினமே (2-ம் தேதி) நீதிபதி சந்துரு குடியிருப்பில் உள்ள சங்கர் என்பவரின் வீட்டில் நுழைந்த இரண்டு போலீசு அதிகாரிகள், சுமார் ரூ.75,000 மதிப்பிலான கம்மல், மாட்டல், எலக்ட்ரானிக் சாதனத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், அக்டோபர் 3-ம் தேதியன்று வெளியான நாளிதழ்களில், கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 2-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உண்டியலை உடைத்து 7 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் பாண்டியன், ராமச்சந்திரன், குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்… கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகிய 4 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் எழுதிக் கொடுத்ததை, அதன் உண்மையை துளியும் சரிபார்க்காமல் அப்படியே வாந்தி எடுத்துள்ளன ஊடகங்கள்.
இந்தக் கைதை கண்டித்து விழுப்புரத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரியும் இப்படி தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டும் வன்கொடுமைகளை கண்டித்தும் 500 மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல கடந்த 26.12.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவனை ‘சந்தேகத்தின் பெயரில்’கைதுசெய்த விருத்தாசலம் போலீசு, அச்சிறுவன் இருளர் இன சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன் அவன் கைகளில் வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், கடையை உடைத்து திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி, அவனை முட்டிபோட வைத்து இரண்டு கால்களிலும் லத்தியால் அடித்து விரல்களை நசுக்கியுள்ளனர். வலி தாங்காமல் கத்திய அஜித்திடம் உன்னை சாகடித்து விடுவோம், ஒழுங்காக திருட்டை ஒப்புக்கொள் என மிரட்டி வழக்குகளை அந்த 14 வயது சிறுவன் மீது போட்டுள்ளனர்.
இதேபோல, 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அருகேயுள்ள தி.கே.மண்டபம் என்ற கிராமத்தில் வசித்து வந்த இருளர் இனத்தைச் சேர்ந்த காசி மற்றும் முருகன் என்ற இருவரையும் போலீஸ் அதிகாரிகள் ‘சந்தேகத்தின் பெயரில்’விசாரணைக்கு அழைத்து சென்று, திருட்டை ஒப்புக் கொள்ளச் சொல்லி கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். “ஏன் என்னை அடிக்கிறிங்க சாமி, நான் எந்த தப்பு பன்ன சாமி, என்னை அடிக்காதிங்க”என்று சொன்ன முருகனை உக்கார வைத்து சாக்கு தைக்கும் கோணி ஊசியை அவரின் ஆசன வாயில் குத்தியுள்ளனர். வலி தாங்காமல் ரத்தம் வருகிறது ஐயா என்று சொன்ன முருகனிடம் “ஒரு விரலால் அழுத்தி பிடித்துக் கொள் ரத்தம் வராது”என்று ஏளனமாக கூறியுள்ளனர்.
இரவு 8 மணிக்குமேல் முருகனின் வீட்டிற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வீட்டிலிருந்த நகை, பணம் என எல்லாவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த முருகனின் இரண்டு மகள்கள் மற்றும் முருகனின் இரண்டு மருமகள்களான வைகேஸ்வரி, லட்சுமி, ராதிகா, கார்த்திகா ஆகிய நான்கு பெண்களையும் வலுகட்டாயமாக வேனில் ஏத்தி அருகேயுள்ள தைல தோப்பிற்கு இரவு 12 மணிக்குமேல் அழைத்து சென்றுள்ளனர் போலீசு அதிகாரிகள்.
நாங்கள் உங்கள் தங்கச்சி மாறி என்று கதறிய 3 மாத கர்ப்பிணி உள்ளிட்ட நால்வரை கிஞ்சித்தும் இரக்கமின்றி அதிகாரிகள் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் இக்கொடூரத்தை நிகழ்த்திய போலீஸ் அதிகாரிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சமீபத்தில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க சொல்லி வலியுறுத்தியுள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் மற்றும் காசியும் அந்த வழக்கிலிருந்து விடுபடாமல் இன்றும் அலைந்து கொண்டு இருக்கின்றன. அந்த பெண்களுக்கான குறைந்தபட்ச நீதியும் இதைவரை கிடைக்கவில்லை. அந்த போலீஸ் அதிகாரிகளோ காக்கி சட்டையோடு இன்றும் பணி செய்து கொண்டுள்ளனர்.
இப்படிச் சொல்லிக் கொண்டேபோகலாம்.
கேட்க நாதியற்றவர்கள் என்பதாலேயே அப்பாவி உழைக்கும் மக்களான இருளர்கள், நரிக்குறவர்கள் போன்றோர் மீது பொய்வழக்குப்போட்டு ஒப்புக்கொள்ள வைப்பதும், அதற்காக அவர்களைச் சித்திரவதை செய்வதும், பெண்களின்மீது பாலியல் வன்முறைகள் ஏவப்படுவதும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
படிக்க :
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
போலீசு நடத்தும் கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள் அம்பலமாகும்போதெல்லாம், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் “ஒரு கூடை நல்ல மீனில் ஒரு அழுகிய மீன்” என்று ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ஆழ்வார்களான அறிவுஜீவிகளும் ஊடகங்களும் கூறுகிறார்கள். போலீசில் நல்லவர்கள் யாருமே இல்லையா என்று நமக்கு வகுப்பெடுக்கிறார்கள். பணிச்சுமை காரணத்தால் போலீசார் சிலர் கடுமையாக நடந்துகொள்வதாகவும் அவர்களுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாகவும் இக்கொடூரச் செயல்களை நியாயப்படுத்துகிறார்கள்.
எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?
மொத்தமாக கிரிமினல்மயமாக இருக்கும் இப்போலீசை கொண்டுதான் இரக்கமற்ற முறையில் மக்களின் போராட்டங்களை ஒடுக்கமுடியும் என்பதால் ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் இவர்களைத் திட்டமிட்டு வளர்த்து வைத்துள்ளனர். அவர்கள் அடி என்றால் அடிப்பதற்கும் கடி என்றால் கடிப்பதற்குமே போலீசு இருக்கிறது. எனவே “ஒருகூடை அழுகிய மீனில் ஒரு நல்ல மீனை”த் தேடுவதும் இத்தகைய ‘நியாயவாதங்களை’நம்புவதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறல்ல.
அகிலன்

பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !

மிழக அரசானது 2022 – 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடிக் கல்வி, முன்மாதிரிப் பள்ளிகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகளை தமிழ்நாட்டில் திறப்பது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டங்களில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டம் மட்டும் பேசு பொருளாகி உள்ளது. அதுவும் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக கொடுக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. மற்ற திட்டங்களை பற்றி பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற சில கல்வியாளர்களை தவிர மற்றவர்கள் யாரும் பேசவில்லை.
மற்றபடி மொத்த பட்ஜெட்டை பற்றியும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆகா ஓகோ என்ற வரவேற்பும் ஆரவாரமும்தான் உள்ளது. எனவே பள்ளிக் கல்வித்து றையில் மேற்கூறிய 5 திட்டங்களின் உண்மையான நோக்கங்களை பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க :
♦ மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !
♦ கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது.
”ஐஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்” என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் இரண்டு நுழைவுத்தேர்வுகளை கடந்து செல்ல வேண்டும். 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் எல்லாம் சேர முயற்சி எடுப்பதில்லை.
இளங்கலை படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் படித்துவிட்டு GATE எனும் தேர்வை எழுதி அதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் வாங்கினால் PG COURSE ஐஐடி போன்ற நிறுவனங்களில் படிக்க முடியும். இந்த முறையை பின்பற்றிதான் நிறைய மாணவர்கள் ஐஐடியில் படிக்கின்றனர்.
இத்தகைய நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்கும்போது இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை படிப்பிற்கான செலவை அரசே ஏற்கும் என்னும் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடையக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் (MIT,CEG,SAP,ACT ) படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்று சொல்லலாமே. அப்படி அறிவித்தால் அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்ற காரணத்தால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் சேராத ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை அளித்துள்ளது திமுக அரசு.
இத்திட்டத்தை அறிவித்ததன் மூலம் திமுகவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லது செய்கிறார்கள் என்ற வெற்று பிம்பம்தான் உருவாகி உள்ளது. அதை தான் அவர்களும் விரும்புகிறார்கள்.
முன் மாதிரிப் பள்ளிகள்
”அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து கல்வி பெறும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன் மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. தற்போது கல்வியில் பின்தங்கியுள்ள 15 மாவட்டங்களில் இந்த முன்மாதிரிப் பள்ளிகள் 125 கோடி செலவில் தொடங்கப்படும்” என்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மாதிரிப் பள்ளி திட்டம் 2018-ம் ஆண்டு அதிமுக அரசு இருக்கும்போதே அறிவிக்கப்பட்டது. அப்போதைய அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்வாகத்தை மேம்படுத்த ரூ.50 இலட்சம் தரும். அப்பள்ளியானது மீதமுள்ள பணத்தை முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதைய திமுக அரசானது ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு நிதி ஒதுக்குவோம் என்பதை சொல்லவில்லை. இத்திட்டத்தில் முக்கியமானது தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியைபெற வேண்டும் என்பதுதான். அதையும் திமுக அரசானது வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற கல்வியாளர்கள் ”மாதிரிப்பள்ளி மற்றும் உயர்கல்வியைத் தொடர தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி என்ற கருத்து அனைத்து குழந்தைகளின் சமமான அணுகுமுறைக்கு எதிரானது. மாதிரிப் பள்ளிகளில் மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கற்றலில் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தையும் விதைக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.
இத்திட்டமானது மாணவர்களின் சமமான அனுகுமுறைக்கு எதிரானது என்றாலும் அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது. பள்ளிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய பொருப்பிலிருந்து அரசானது படிப்படியாக விலகுதல்.
பள்ளிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய அரசானது, தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் குறிப்பிட்ட அளவு பள்ளியை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பள்ளியை முற்றிலுமாக கைவிடுதலில்தான் போய் முடியும்.
இல்லம் தேடிக் கல்வி
தமிழ்நாட்டில் பொதுமுடக்க காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பெற்றோர்களும் பிள்ளைகளை அச்சம் இல்லாமல் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இச்சூழலில் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் கல்வித்திறனை எப்படி மேம்படுத்துவது என்று யோசிக்காமல் மீண்டும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது திமுக அரசு.
இத்திட்டம் தொடங்கிய காலத்தில் இது புதிய கல்விக் கொள்கையின் அங்கம் மற்றும் முறை சார்ந்த கல்வியை ஒழிகும் என்று ஆசிரியர்கள் வைத்த விமர்சனத்தையும், தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மாணவர்களை சென்றடைய வாய்ப்புள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் செயல்பாடு உள்ளது.
அசாம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் காவிமயமாக்குவதற்கு ஓராசிரியர் பள்ளிகள்தான் உதவிகரமாக இருந்தன. அதேபோல் இத்திட்டத்தை இங்கே தொடர்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குச் சாதகமாக அமையும்.
முதலில் இல்லம் தேடிக் கல்வி திட்டமானது பொதுமுடக்க காலத்திற்கு என்று மட்டும் கூறிவிட்டு தற்போது மீண்டும் அறிவிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது புதியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு நைச்சியமாக அமல்படுத்துவதை, பாஜக எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ஐ நைச்சியமாக வளரவிடுவதை இச்சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்
உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் கிளைகள் தமிழ்நாட்டில் திறக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் புதியக் கல்விக் கொள்கையின் அங்கம்தான். கல்வியை வியாபார சரக்காக மாற்றும் நோக்கம்தான்.
அரசுக் கல்லூரிகள் மட்டுமிருந்த சூழலில் படிப்படியாக தனியார் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. தனியார் கல்லூரிகள் தரத்தில் சிறந்தவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் படிப்படியாக விதைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசுக் கல்லூரி என்றாலே பொறுக்கி கல்லூரி என்ற சிந்தனை உருவாக்கப்பட்டது. அரசானது அரசுக் கல்லூரிகளுக்கு படிப்படியாக நிதி ஒதுக்குவதை குறைத்து, நிர்வாகக் கட்டமைப்பையும் ஊழல்மயப்படுத்தி சீரழித்தது.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
மேற்கூறியவாறுதான் கல்வித்துறையில் தனியார்மயம் படிப்படியாக புகுத்தப்பட்டது. அதற்கேற்ப மக்களின் மனநிலையும் படிப்படியாக மாற்றப்பட்டது. இச்சூழலை உருவாக்கிவிட்டுதான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் உள்ளே வருகின்றன.
எனவே இத்திட்டமானது புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு அதை மறைமுகமாக அமல்படுத்தும் திமுக அரசை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மொத்தமாக தொகுத்து பார்க்கும்போது மேற்கூறிய திட்டங்கள் எல்லாம் திமுக அரசின் புதியக் கல்விக்கொள்கையை அமல்படுத்தலையும், கவர்ச்சிவாத அரசியலையும்தான் பட்ஜெட் முன்மொழிகிறது என்று தெரிய வருகிறது. திமுக-விற்கு முற்போக்கு சாயம் பூசுபவர்கள்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
அமீர்

மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! | வீடியோ

மார்ச்-28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் சென்னை ஆவடியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்ட 4 தொகுப்புகள், இன்னும் பிற சட்டத் திருத்தங்கள், வேலையின்மை, வாழ்வாதாரம் இழப்பு, பணமதிப்பழிப்பு, கார்ப்பரேட் நலத் திட்டங்கள் ஆகியவற்றால் தொழிலாளர்களையும் நாட்டின் உழைக்கும் மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர், தோழர் விஜயகுமார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரைகளை இங்கு காணொலிகளாகப் பதிவிடுகிறோம்.

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

எது அபாயகரமானது : வாரிசு அரசியலா? பாசிச அரசியலா?

0
வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. அதை எதிர்த்து போராட வேண்டும் என நடந்து முடிந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தனது திருவாயை மலர்ந்துள்ளார்.
வாரிசு அரசியல் என்பது மோடியின் எஜமானனான அமெரிக்காவின் கென்னடிபுஷ், டிரம்ப் முதல் இந்தியாவின் காங்கிரஸ் திமுக, பாமக, மதிமுக முதல் பாஜக தான் அங்கம் வகிக்கும் தே.ஜ.கூ உள்ளிட்ட பிற ஓட்டுக்கட்சிகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன.
கருத்து சுதந்திரத்தை கிஞ்சித்தும் அனுமதிக்காத பார்ப்பன பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ் – பாஜக-வின் தீவிர உறுப்பினரான மோடி, வாரிசு அரசியல் பற்றி வகுப்பெடுப்பதுதான் சாத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது.
வாரிசு அரசியல் என்பது ஜனநாயக விரோதமானது. பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆனால், ஜனநாயகத்தைப் பற்றி, ஜனநாயகம் எனும் பதத்தையே அகராதியில் இருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பாசிசத்தைப் பற்றிப் பேசுவதுதான் கேலிக்கூத்து.
படிக்க :
உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை !
அதாவது அன்றாடம் அனைத்து வகை அட்டூழியங்களையும் கொடூரமான முறையில் கொலைகளையும் நடத்திவருவது ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் துணை அமைப்புகளும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்புகளில் ஒன்றான சனாதன் சன்ஸ்த்தா என்ற கொலைகார அமைப்பானது, பகுத்தறிவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் பயிற்சி பட்டறைகளையும் இலக்கு வைத்து தாக்கியுள்ளது. தொடர்ந்து தாக்கியும் வருகிறது.
மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தி மகாராஷ்டிரத்தில் பகுத்தறிவு இயக்கங்களையும் நடத்திவந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை சுட்டுக்கொன்றுள்ளது இக்கும்பல். மூடநம்பிக்கை, வகுப்புவாதம் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து போராடிய பன்சாரே, கல்புர்க்கி போன்றவர்களையும் கொன்றுள்ளது சனாதன் சன்ஸ்த்தா என்ற இந்தக் கொலைகார அமைப்பு.
முஸ்லீம் மக்களுக்கு எதிராக யோகியின் அடியாள்படையான இந்து யுகவாகினி நடத்திய மதவெறியை தூண்டும் பிரச்சாரத்தாலும், இதன் தொடர்ச்சியான முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களாலும், வழக்குகளும் ஏராளமாக இன்று வரை நடந்து வருகிறது. யோகியும் இந்து யுவவாகினியின் உறுப்பினர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சுதந்திரமாக இன்றுவரை வலம்வந்து கொண்டு இருக்கின்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் மங்களூரில் சிட்டி சென்டர், ஃபோர்ம் ஃபிசா, பிக்பஜார் போன்ற பல்வேறு மார்க்கெட்களில் எல்லாம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இங்கு பெரும்பான்மையான முஸ்லீம் கடைகளை அப்புறப்படுத்தி பணிய வைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன்மூலம் எப்போதும் முஸ்லீம் வியாபாரிகளை அச்சத்திலேயே வைத்துள்ளனர்.
வி.எச்.பி.யில் உருவாக்கப்பட்ட திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்ட அடியாள்படையான பஜ்ரங் தள் மோடி கொடுத்த தைரியத்தில் கர்வாப்சி என்ற பெயரில் ஜலெளன் மாவட்டத்தில், கிறித்துவ மதத்திற்கு மாறும்படி பிரச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்தி அவதேஷ்குமார் என்பவருக்கு மொட்டையடித்து செருப்பு மாலை போட்டு கழுதைமேல் அமர்த்தி ஊர்வலம் நடத்தி அசிங்கப் படுத்தியுள்ளது.
அவ்வப்போது வகுப்பு வாதத்தை கிளறிவிட்டு முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வாழ்விடத்திலிருந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு முஸ்லீம்கள் அற்றபகுதி என்ற அறிவிப்பு பலகையும் பொருத்தியுள்ளது.
ஆஸ்திரிலேய பாதிரியான கிரகாம் ஸ்டெயின்சையும் அவரது குழந்தைகளையும் கார்க்குள்ளேயே வைத்து உயிரோடு எரித்ததோடு அவர்கள் தப்பவிடாமல் தடுத்து தீயில் முழுமையாக எரியவிட்ட கொலைபாதகப் குண்டர்களைக் கொண்ட அமைப்புதான் இந்த பஜ்ரங் தள்.
மாட்டுக்கறி வைத்து இருப்பதாகக்கூறி பல முஸ்லீம் தலித் மக்களை பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மதவெறிகும்பல் கொடூரமாக தாக்கியதோடு கொலையும் செய்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். மேலும், மாநில அரசுகளை சதித்தனமாக கவிழ்ப்பது, மாநில உரிமைகளை நசுக்குவது, மாநில சுயாட்சிகளை கேள்விக்குள்ளாக்குவது விமர்சிப்பவரகள் எதிர்ப்பவர்களை கொடூரமாக கொலை செய்வது.
குறிப்பாக, தமிழகத்தில் முஸ்லீம் மக்கள்மீது வெறுப்பை மக்களிடம் உருவாக்க முடியவில்லை என்பதால் கிறித்தவர்கள், தலித் மக்கள் மீதான வெறுப்பை கொம்பு சீவிவிடுகிறது. இதன் துவக்கம்தான் தஞ்சாவூர் கிறித்துவப் பள்ளி மாணவியின் தற்கொலை. இவை எல்லாம் எந்த வகையில் ஜனநாயகத்திற்கு எதிராக இல்லை என்பதை மோடிதான் விளக்கம் தர வேண்டும். இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போலதான்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானதுதான், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வெறுப்பு அரசியல் – மதவெறி அரசியல் மூலம் வன்முறையை தூண்டிவிட்டு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றை அன்றாடம் அரங்கேற்றும் ஆபத்தான பாசிச அரசியலை ஒப்பிடும்போது வாரிசு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
வாரிசு அரசியல் அதிகபட்சம் தனது வாரிசுகளை கொண்டு வரும். பாரம்பரிய குடும்ப அரசியலாகவும் மற்றும் அதன்மூலம் தனக்கும் தனது வாரிசுகளுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான சொத்துக்களை சேர்த்துக்கொள்ளும். ஆனால், பாசிச அரசியல் சித்தாந்த அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட அமைப்புகளையும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்ட பாசிச அமைப்புகள் அப்படி அல்ல. சமூகத்தின் ஒரு பகுதியை எதிரியாக சித்தரித்து அவர்கள் மீதான வன்முறையை செலுத்துவதை நியாயப்படுத்தி தன்னால் முயன்றவரை பாசிசத்தை ஏற்கவைக்கும்.
அந்த வகையில் பார்ப்பன பாசிச அமைப்பில் தனது எதிரிகளாக சித்தரிப்பவர்களை கொடூரமாக சித்தரவதை செய்து ஈவிரக்கமற்ற முறையில் உயிரோடு குழந்தைகளை எரிப்பது சிறுபான்மை மக்கள் குறிப்பாக கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து அவர்களின் வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, அவர்கள் வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை மேற்கொள்ளும் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல ஆபத்தானது அல்ல வாரிசு அரசியல்.
ஆபத்தான பார்ப்பன பாசிச அரசியல் அதிகாரத்துக்கு வருவதை தடுத்தாக வேண்டும். இதற்கு பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு அடித்தட்டு மக்களோடு இணைந்து இருப்பது மிக மிக அவசியம், கடமையும் கூட.
படிக்க :
கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !
இதன்மூலம் காவி – கார்ப்பரேட்டு பாசிசத்தை அரசியல் அரங்கில் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங் தள், இந்து யுகவாகினி, சனாதன் சன்ஸ்த்தா போன்ற அமைப்புகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தவதோடு அவற்றை முறியடிக்க வேண்டும். வெறுமனே போலி ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவது போதாது.
பாசிச அரசியலை பெரும்பான்மை இந்து மக்களின் மத்தியில் விதைத்து அவற்றை அங்கீகரிக்கும் மனப்பான்மையை உருவாக்கி சிறுபான்மை மக்கள் ஜனநாயக சக்திகள், கம்யூனிச பற்றாளர்களுக்கு  எதிரான விரோதபோக்கை  வெறுப்பை உருவாக்கி நிலைப்படுத்துவதையே ஒரு இலக்காகக் கொண்டு செயல்படுகிறது பாசிசக் கும்பல்.
ஆகையால்தான் பாசிஸ்டுகளுக்கு எதிராக போராட்டத்தை கட்டமைக்க பகுத்தறிவாளர்களை ஜனநாயக சக்திகளை கம்யூனிச பற்றாளர்களை இலக்கு வைத்து தீர்த்துக்கட்டப்பட்டு வருகின்றனர்.
எனவே, வர்ணாசிரம முறையை அடிப்படையாக கொண்ட பார்ப்பன விரோத பண்புகளை விதைத்து வர்க்க முரண்பாடுகளை புதைக்கும் காவி – கார்ப்பரேட்டுகளின் பாசிசத்தையும் அதன் அதிகாரத்தையும் அகற்றுவதைப் பிரதான பணியாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

கதிரவன்

மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் ! | பாகம் 2

பாசிச மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28,  29, ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சிவா மக்கள் அதிகாரம், வட்டார துணைச் செயலாளர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
தோழர் முருகன் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பென்னாகரம் பொறுப்பாளர் அவர்களும், தோழர் கோவிந்தராஜ் சிபிஐ (ml )லிபெரேஷன். தர்மபுரி மாவட்ட செயலாளர் அவர்களும், தோழர். கருப்பண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பென்னாகரம் தொகுதி செயலாளர் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

மேலும் தோழர் கோபிநாத், மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டல செயலாளர் அவர்கள் கண்டன சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் சுந்தர், 7 வது மைல் கிளை செயலாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
தர்மபுரி மண்டலம்
9790138614
000
பாசிச மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28,  29, ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது
திருவாரூரில் மார்ச் 28 அன்று AITUC, CITU, LPF, SKM, தொழிற்சங்கம் மற்றும் அமைப்புகளின்  ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
மார்ச் 29 அன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், ஆஷா பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பெருந்திரளாக கலந்து கொண்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்குபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், நான்கு தொழிலாளர் நலசட்ட தொகுப்புகளைக் வாபஸ்பெற வேண்டும், நாட்டின் சொத்துக்களான எல்ஐசி, வங்கி, பி.எஸ்.என்.எல், ரயில்வே, தபால்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நகர்ப்புறங்களுக்கு பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தி ஊதியத்தை ரூ.600-ஆக உயர்த்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்து, பி.எஃப் மூலம் குறைந்த பட்ச பென்சன் மாதம் ரூ.6000 வழங்கு அங்கன்வாடி மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்திடு!, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்காதே! டெல்லி விவசாயிகளின் 13 மாத காலப் போராட்டத்தின்போது கோரிக்கைகளை ஏற்ற ஒன்றிய  அரசே, MSP உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று! கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.15,000 உரிய பாதுகாப்பு காப்பீடு வசதிகளும் வழங்கிட வேண்டும், மற்றும் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவத்துறை, மற்ற துறைகளில் பணியாற்றும், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் சிறு குறு நடுத்தர தொழில்களையும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், பாசிச மோடி அரசை கண்டித்தும், சாலைமறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.
திருவாரூர்-6374741279
000
மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுப்போம்!” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் 29.3.2022 அன்று காலை 10 மணியளவில் வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் சுந்தர் (ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டக்குழு செயலாளர் தோழரும், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தோழர் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். பேரணாம்பட்டு பகுதியின்  தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணி தோழர் திலகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் : புதிய தொழிலாளி
000
திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மார்ச் 29  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கமான BPWU / NDLF சங்க தோழர்கள் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் உத்திராபதி தலைமையில் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் : புதிய தொழிலாளி

000

மார்ச் 28, 29 வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மார்ச் 29 அன்று மாலை 5 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டக் குழுக்களது செயலாளருமான தோழர் ம.சரவணன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மணலி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FMTU) அமைப்பின் தலைவர் திரு.அன்பு ராஜாராமன், பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டதும், இளம் தொழிலாளர்கள் பெருமளவு கலந்து கொண்டதும் காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் வீச்சை உணர்த்துவதாக இருந்தது.

This slideshow requires JavaScript.

தகவல் : புதிய தொழிலாளி.
000
தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ! மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததின்  ஒரு  பகுதியாக மார்ச் 29 அன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தொடர் முழக்கங்கள் போடப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
000
30.3.22
பத்திரிகை செய்தி
மார்ச் 28, 29-ம் தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழகத்தில் பரவலாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என்ற வடிவங்களில் தொழிலாளர்கள் தங்களின் உரிமை பறிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது இருபத்தி எட்டாம் தேதி சென்னை முழுவதும் ஒரு அரசு பேருந்து கூட ஓடவில்லை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் தனித்தும் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது.
இதில் எமது அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் திரளாக கலந்துகொண்டு பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களையும்,  பொதுத்துறையை விற்பதையும்  விலை வாசி உயர்விற்கு  எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.
தோழமையுடன்,
வெற்றிவேல்செழியன்,
மாநில போராட்ட ஒருங்கிணைப்பு குழு,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்க்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !

பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்ப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றன. போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே, விலைபோகும் பத்திரிகைகளும் ஊடங்களும் வழக்கம்போலவே தங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நடத்த ஆயத்தமாகிவிட்டன.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களின் பேருந்து நிலையங்கள், சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள், பணிமனைகள் – ஆகியவற்றிலிருந்து பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் ‘அவதிப்படும்’ ‘செய்தியை’ நேரலையாக வழங்கி வருகிறார்கள் செய்தியாளர்கள். மக்கள் ‘அவதிப்படவிருப்பதை’ முன்கூட்டியே அவதானித்து ‘பொறுப்புணர்வுடன்’ அதிகாலை 6 மணிக்கே அங்கே படையெடுத்துவிட்டனர் போலும்.
“70% பேருந்துகள் ஓடவில்லை”, “மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவலம்”, “இயல்புநிலை பாதிப்பு”, “பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்”, “வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டுக்கும் திரும்ப முடியாமல் அவதிப்படும் மக்கள்”, “2-3 மணி நேரத்துக்கும் மேல் காத்துக்கிடக்கும் அவலம்”, “கட்டணக் கொள்ளையடிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்”, “கிடைக்கும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டும் கூரைகளில் ஏறியும் பயணம் செய்யும் அவலம்”, “ஓடும் பேருந்துகளையும் நிறுத்தி அடாவடி செய்யும் தொழிற்சங்கத்தினர்”, “வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்” – இப்படிப் பலவாறாக இடைவெளியின்றி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது இவர்களின் தொழிலாளர் விரோதப் பிரச்சாரம். முதல்வன் திரைப்பட பாணியில் ஒளிபரப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு மக்களில் பெரும்பகுதி பலியாகமல் இருப்பதும் இல்லை.
படிக்க :
மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு
மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
ஆளும் வர்க்கங்களின் கோரச் சுரண்டாலால் மக்கள் பாதிக்கப்படும் எந்தப் பிரச்சனையிலும் ‘அவலம்’ ‘அபாயம்’ போன்ற கடுமையான பதங்களை மறந்தும் பயன்படுத்தாத இந்த ஊடகங்களோ, மக்களும் தொழிலாளர்களும் இத்தகைய வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்களில் ஈடுபடுபடும்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன.
4 மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறுக்கும் நெடுக்குமாக பல்லாயிரம் மைல்களை நடந்தே கடந்தனர். சோறின்றி, தண்ணீரின்றி கிடைக்கும் லாரிகளிலும் கண்டெய்னர்களிலும் மூச்சுத் தினற பயணம் செய்தனர். அவ்வளவு ஏன், சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் மின்சார இரயில், பேருந்து பயணம் என்பதே அன்றாட சாகசத்திற்கு ஒப்பானது. நெரிசலிலும், படியில் தொங்கிக் கொண்டும்தான் தங்கள் அன்றாட வாழ்வைக் கழித்து வருகிறார்கள் மக்கள். வடமாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஒருவர் கால்மேல் ஒருவர் நின்றுகொண்டும், கழிவறைகளிலும், மேற்கூரைகளிலும் பயணித்துக் கொண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் அவலத்தை காணாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லாலாம்.
நாட்டின் பெரும்பாலான கிராமப் பகுதிகளுக்கு ஒழுங்கான சாலை வசதிகளோ, பேருந்து வசதிகளோ, ஏன் மின்சார வசதியோ கூடக் கிடையாது. அவசர மருத்துவத் தேவைக்கும் பிரசவத்திற்கும் கூட நகரத்தை நோக்கிச் செல்ல முடியாமல் அவர்கள் தினம் தினம் அவதியுற்று வருகின்றனர். அவ்வளவு ஏன், சென்னையின் மையப்பகுதியான தரமணிக்கு அருகிலுள்ள கல்லுக்குட்டை என்ற பகுதியைச் சென்று பாருங்கள், குண்டும் குழியுமாக ஒழுங்கான சாலை கூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். பிரசவத்திற்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்துவிடும் அளவுக்கு கொடூரமான பகுதி அது.
இவற்றையெல்லாம் “அபாயம்” “கொடூரம்” “அவலம்” என்று ஒளிபரப்பாத ஊடகங்கள். இன்னும் சொல்லப்போனால் கொரோனா ஊரடங்கின்போது, பலநூறு கி.மீ தொலைவில் உள்ள தனது ஊருக்கு தன் தந்தையுடன் சைக்கிளில் சென்ற சேர்த்த சிறுமியின் “அவலத்தை” கூச்சமேயின்றி “சாதனையாக” ஒளிபரப்பின. இன்று கிடைக்கும் பேருந்துகளில் கூரையில் ஏறிப் பயணிப்பதை ஓடி ஓடிப் படம் பிடிக்கும் தொலைக்காட்சிகள், வடமாநிலங்களில் இவை அன்றாட நிகழ்வாக இருப்பதை மறந்தும் ஒளிபரப்பியதில்லை. மோடி அரசின் பணமதிப்பழிப்பால் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் வீதிகளில் அலைந்து செத்த ‘அவலத்தையும்’ வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்துறந்த விவசாயிகளின் ‘அவலத்தையும்’ இதில் பாதியளவுக்குக் கூட ஒளிபரப்பவில்லை.
மக்களின், தொழிலாளர்களின் நியாயமான வேலை நிறுத்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளை ஒளிபரப்ப வரிந்துகட்டிக் கொண்டுவரும் விலைபோகும் ஊடகங்கள், அதில் கால்வாசியளவுக்குக் கூட மேற்கண்ட ‘அவலங்களை’ ஒளிபரப்பியதில்லை.
மேலும் மார்ச் 28 அன்று காலையிலிருந்து எல்லாத் தொலைக்காட்சிகளும் பேருந்து நிலையங்களில் நின்று மக்கள் ‘அவதிப்படுவதை’ படம்பிடிப்பதைத்தான் ஓடி ஓடிச் செய்கின்றன. மாறாக, போராடும் தொழிலாளர்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளையும் அதன் நியாயத்தன்மையையும் கேட்பதையோ, பேட்டியெடுப்பதையோ, ஒளிபரப்புவதையோ ஒப்புக்குச் செய்வதுடன் முடித்துக் கொண்டன.
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், உரிமைக்காவும் போராடுவதை பெரும்பாலான ஊடகங்கள் செய்தியாகக் வெளியே கொண்டுவருவது கூடக் கிடையாது. நாட்டை பாதிக்கும் அதிமுக்கியமான பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை தங்கள் ‘விவாதக் களத்தில்’ விவாதிப்பதும் கிடையாது. உதாரணமாக திருவண்ணாமலை பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் அமையவுள்ளதை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருவதை இந்த விலைபோகும் ஊடகங்கள் செய்தியாகக் கூட வெளியே கொண்டுவரவில்லை.
ஓடும் பேருந்துகளை நிறுத்தச் சொல்லி தொழிற்சங்கத்தினர் அடாவடியில் ஈடுபடுவதாக சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பெயர்களைக் கூறி இழிவுபடுத்துகின்ற இந்த ஊடகங்கள், கார்ப்பரேட்டுகள், அதிகார வர்க்கம் தவறு செய்யும் போதெல்லாம் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் “ஒரு தனியார் நிறுவனம்” “பிரபல தனியார் நிறுவனம்” என்றும் “அதிகாரி” என்றும் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட்டு அவர்களைக் காப்பாற்றுகின்றன. உதாரணமாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை பெயர் குறிப்பிடாமலேயே பல பத்திரிகைகள் எழுதின. திருவண்ணாமலையில் வன்னிய சாதி வெறியர்கள் அருந்ததியர் குடியிருப்புகளைச் சூறையாடியபோது அதை, “இருபிரிவினரிடையே மோதல்” என்று அயோக்கியத்தனமாக செய்தியை வெளியிட்டு சாதி வெறியர்களுக்குச் சேவை செய்தன. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து துக்ளக் இதழில் வெளியான கேலிச்சித்திரம் நம்மிடையே ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. ஆனால், இதுபோல தொடர்கதையாகிவரும் விலைபோகும் ஊடகங்கள், பத்திரிகைகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் பிரச்சாரங்கள் இயல்பாக சமூகத்தில் பொதுக்கருத்தை உருவாக்கி வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போன்றோர் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடும்போதும் இவ்விலைபோகும் ஊடகங்கள் இதையே செய்தன.
படிக்க :
இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கல்வி கற்க வாய்ப்பற்று குழந்தைத் தொழிலாளிகளாக வேலைக்குச் செல்வதை ஒளிபரப்பத் துப்பில்லாத இந்த ஊடகங்கள், ஜாக்டோ – ஜியோ ஆசிரியர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி ஒரே அடியாக ஒழிந்துவிட்டத்தைப் போன்று கூச்சலிட்டதை நாம் மறந்திருக்க மாட்டோம். “ஆசிரியர்கள் பல பத்தாயிரங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு இன்னும் கேட்கிறார்கள் பாருங்கள்” என்ற பொய்யான கருத்தை வெற்றிகரமாக மக்களின் மனங்களில் விதைத்து, அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செய்து அவர்களின் பாதத்தைக் கழுவிக் குடித்தன.
அவர்களுக்கு நாம் சொல்ல விரும்பவது இதைத்தான். விலைபோகும் ஊடகங்களே! உங்களின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் பிரச்சாரத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஊடகவியலாளர்களே! பத்திரிகையாளர்களே! மக்களின், தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள். பணத்திற்காகவும், டி.ஆர்.பி.க்காவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் உங்களின் ஊடக முதலாளிகள் இடும் உத்திரவுகளை எதிர்த்து நில்லுங்கள்.
அவர்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துதான்.
தீரன்

டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !

பா.ஜ.க. என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர்களின் பொய்களும் புரட்டுகளும், அந்த பொய்-புரட்டுகளை வைத்து அவர்கள் நடத்தும் கலவரங்களும்தான். இவைகளையெல்லாம் நடத்துவதற்கு தோதாக அவர்கள் மிகப்பெரிய தொழில்நுட்ப அணியையே வைத்துள்ளார்கள்.
பா.ஜ.க.வுடைய பொய் பிரச்சாரங்களை நாம் எளிதாக எண்ணிவிட முடியாது. 2013-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தின்போது, ஒரு போலியான வீடியோ பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. சங்கீத் சிங் என்பவரால் பரப்பப்பட்டது. ஆனால் அந்த வீடியோ இரண்டு ஆண்டுகள் பழையது என பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், அதற்குள் அந்த நச்சுப் பிரச்சாரத்தால் தூண்டப்பட்டு நடைபெற்ற கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தார்கள்.
வடமாநிலங்களில் பசுவைக் கடத்துகிறார்கள், மாட்டுக்கறி வைத்துள்ளார்கள் என்று முஸ்லீம்களும் தலித் மக்களும் கும்பல் படுகொலை செய்யப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பராமரிக்கக் கூடிய வாட்சப் வலைப்பின்னல்கள் முக்கிய துணை செய்கிறது. அதன்வழியாக குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான மக்களிடம் பரப்பப்படும் போலி செய்திகள் இந்துமதவெறியூட்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
படிக்க :
டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !
Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் மோடி அரசை விமர்சிப்பவர்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கி துன்புறுத்துவதும் அத்தொழில்நுட்ப அணியின் முக்கியமான பணியாக உள்ளது. பா.ஜ.க.வின் இந்த பின்னணி குறித்து பலரும் ஆய்வு செய்து கட்டுரைகள், நூல்களை வெளியிட்டுள்ளனர். பா.ஜ.க.வின் இணைய துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சுவாதி சதுர்வேதி என்ற பத்திரிகையாளர், பா.ஜ.க இவற்றை எப்படி செய்யமுடிகிறது என இரண்டு ஆண்டுகள் கள ஆய்வு செய்து “நான் ஒரு ட்ரால் – பா.ஜ.க டிஜிட்டல் ராணுவத்தின் இரகசிய உலகத்திற்குள்ளே” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு கட்சிகளும் தொழில்நுட்ப அணியை வைத்திருந்தாலும் அக்கட்சிகளுடையதை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் இணையப் படையோடு ஒப்பிட முடியாது. முதலாவதாக, டிஜிட்டல் உலகின் புதுப்புது தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னேறியது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இரண்டாவது வெறும், கவர்ச்சிவாத பிரச்சாரங்களைச் செய்வதற்காக மட்டும் அவர்கள் இதைப் பயன்படுத்தவில்லை. தங்கள் காவி பாசிச பயங்கரவாத செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த முன்னேறிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றது.
அவ்வாறான முன்னேறிய தொழில்நுட்ப செயலி ஒன்றுதான் டெக் ஃபாக். காவி பாசிஸ்டுகளுடைய ஊடகப் பிரச்சாரத்தில் முக்கியமான பங்குவகிக்ககூடிய இது ஒரு இரகசிய செயலி ஆகும். தற்போது வயர் இணையதளம் இதைப் பற்றி புலனாய்வு செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்ட பிறகுதான் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாசிஸ்டுகளின் கைகளில் சமூக ஊடகங்கள்
மக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளில் முக்கியமானது டெக் ஃபாக் செயலியை கொண்டு டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கின் டிரெண்டிங் பகுதியை கட்டுப்படுத்துவது. பா.ஜ.க.விற்கு ஆதரவான கருத்துகளை டிரெண்ட் செய்வது; பா.ஜ.க.விற்கு எதிராக ஏதாவது பிரச்சினை எழும்போது, அதை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக வேறொன்றை டிரெண்ட் செய்வது; பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை துன்புறுத்த அவர்களை இழிவாக சித்தரித்து டிரெண்ட் செய்வது என பல வகைகளில் டிரெண்டிங் பகுதியை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது.
சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் சங்க பரிவாரத்தினரால் பரப்பப்படும் இந்துமதவெறி நச்சுப் பிரச்சாரத்திற்கு ஒரு சான்று.
டெக் ஃபாக் செயலி தானியங்கு முறையில் வேலைசெய்யக் கூடியதாக உள்ளது. அதாவது இதன் மூலம் தனிநபர்கள் அல்லது குழுக்களின் டுவிட்டுகளை தானாகவே மறுபதிவிட மற்றும் பகிரச் (re-tweet and auto-sharing) செய்ய முடியும். இவற்றை  தானியங்குப்படுத்த டாஸ்கர் (Tasker) போன்ற ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த டாஸ்கர் என்பது தொலைபேசியில் உள்ள பயன்பாடுகளை தானியங்கு படுத்த உதவுகின்ற ஒரு செயலியாகும்.
எனவே, ஒரு டெக் ஃபாக் செயலியை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளைக்கூட தனி ஒரு நபரால் கட்டுப்படுத்த முடியும். இதனால் அவர்கள் உருவாக்கும் இடுக்கைகளை (post) டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் டிரெண்டிங் பகுதியை மிக எளிதாக அடைய வைக்க முடியும்.
2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கொட மாவட்டத்தில் கட்சியின் தொழில்நுட்ப அணியிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உண்மையோ அல்லது பொய்யான ஒன்றோ அதை வைரலாக மாற்றக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது” என பேசினார். அத்தகைய சக்தியை டெக் ஃபாக் போன்ற செயலிகளே வழங்குகின்றன.
பொதுவில் ஒரு செய்தியை டிரெண்டிங் செய்வது என்று மட்டுமில்லாமல், டெக் ஃபாக் செயலியைப் பயன்படுத்தி ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலும் பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும். மேலும் ஒருநபரின் தனிப்பட்ட தரவுகளை திருடவும் முடியும்.
குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து வாட்சப்பில் ஒரு படம் அல்லது வீடியோவை அனுப்புகிறார்கள். அந்த நபர் அப்படம் அல்லது வீடியோவை தரவிறக்கம் செய்தவுடன் அவரின் அலைபேசியில் ஒரு உளவு மென்பொருள் (spyware) நுழைந்து அவரின் வாட்சப் கணக்கை டெக் ஃபாக் செயலியுடன் இணைத்து விடும். அதன்பின், அவரின் தொலைபேசியில் இருக்கும் தொடர்பு பட்டியல் மற்றும் தனிப்பட்ட விவரங்களும் டெக் ஃபாக் செயலியால் திரட்டப்பட்டுவிடும்.
தொடர்ந்து அந்நபரை கண்கானித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை அந்த நபர் தனது அலைபேசியிலிருந்து வாட்சப் செயலியை அழித்துவிட்டாலோ (Uninstall) அல்லது அலைபேசியை மீட்டமைத்தாலோ (ரீசெட் – Reset) அதனை அறிந்துகொண்டு அவரின் செயலற்று போயிருக்கும் வாட்சப் கணக்கை கையகப்படுத்தி, அவரது தொடர்பு பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் தங்களது பொய் பிரச்சார செய்திகளை அனுப்ப முடியும்.
இந்த செய்திகளை பெறுபவர்கள் தனக்கு நெருங்கிய நபர்தான் பகிர்கிறார் என நம்பத் தொடங்குவார். ஆனால் இதைப் பற்றி அக்கணக்கின் உரிமையாளருக்கு ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதன் உரிமையாளருக்கு இதைப் பற்றி எதாவது சந்தேகம் எழுந்து ஆராயத் தொடங்கினால் ஒரு நொடியில் எல்லா தரவுகளும் அழிந்துவிடும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.
மற்ற சமூக ஊடகங்களை போலல்லாமல் வாட்சப்-பை மக்கள் பார்ப்பதில்லை. வாட்சப்-இல் நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மட்டுமே நாம் செய்திகளை பெறுகிறோம் என்பதால் எந்த சந்தேகமுமின்றி மக்கள் நம்புகிறார்கள். மேலும் வாட்சப் நிறுவனம் கொடுப்பதாக சொல்லப்படும் தகவல் பாதுகாப்பு உறுதிப்படும் அதை நம்பி பயன்படுத்துவதற்கு காரணம். இதையெல்லாம் இச்செயலியின் பயன்பாடு பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் கேள்விக் குறியாக்கிவிட்டது.
கருத்துருவாக்கம் செய்வதற்கு டெக் ஃபாக் செயலி பல்வேறுவிதமான முறைகளை வைத்துள்ளது. செய்திக் கட்டுரைகளில் இருக்கும் முக்கியமான சொற்களை மாற்றுவதன் மூலம் கட்டுரையை திரித்து, அதன் இணைப்பை சமூக ஊடகங்களில் பரப்புவது என்பது அதில் ஒரு முறை. சான்றாக, பா.ஜ.க.வை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, அதில் பா.ஜ.க. என்ற சொல்லை காங்கிரஸ் என்று திரித்து பரப்புவது. இதுபற்றி வாசகர்களுக்கு எந்த சந்தேகமும் வராத வகையில் இக்கட்டுரையின் பக்கம் அது இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் வலைதளத்தைப் போலேவே அச்சு அசலாக இருக்கும்.
செய்திகள் மற்றும் தகவல்களின் வழியாகத்தான் மக்கள் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது தகவல்களை அறிந்துகொள்வதில் சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் வகிக்கின்றனர். அந்த சமூக ஊடகங்களை பாசிச சக்திகள் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு மக்களிடையே எது பிரபலமாக இருக்க வேண்டும், மக்கள் எதைப் பற்றி பேச வேண்டும், அவர்களது விருப்பு-வெறுப்புகள் எப்படி அமைய வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இது உண்மையில் நம்மை அச்சுறுத்தக் கூடிய விசயமாகும்.
நிழல் உலக பாசிச குண்டர்களால் ஏவப்படும் வன்முறை!
இந்த டெக் ஃபாக் செயலியுடன் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தரவு தளத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். இந்த தரவுத்தளத்தில் அவர்களால் கண்காணிப்புக்குள்ளாக்கப்படும் நபர்களின் தொழில், வயது, மொழி, மதம், பாலினம், அரசியல் விருப்பம், உடல் பண்புகள் உட்பட அனைத்துவகை அந்தரங்க விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள்.
அவர்கள் துன்புறுத்த இலக்காக வைக்கும் நபர்களின் தனிப்பட்ட விவரங்களை இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்தி முதலில் தெரிந்து கொள்வார்கள். பின் டெக் ஃபாக் செயலியால் நிர்வகிக்கப்படும் பல்வேறு கணக்குகளிலுருந்து தொடர்ந்து அவர்களுக்கு ஆபாசமாக, இழிவுபடுத்தும் நோக்கில் செய்திகளை அனுப்பி சித்திரவதைக்கு உள்ளாக்குவார்கள். இந்த அளவிற்கு கொடூரமாக இருக்கும் என்றால், காவி பாசிஸ்டுகளால் குறிவைக்கப்படுவது ஒரு பெண் பத்திரிகையாளர் எனில், அவரின் மார்பக அளவைப் பற்றிக் கூட துல்லியமாக அறிந்துகொண்டு ஆபாசமாக செய்திகள் அனுப்பி துன்புறுத்துகிறார்கள்.
பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர கனவிற்கு எதிராக உள்ள அனைவரையும் இலக்கு வைத்து தாக்க இந்த தரவுத்தளம் அவர்களுக்கு பயன்படுகிறது. இதுவரை இந்த டெக் ஃபாக் செயலியின் மூலம் பெரும்பாலான முஸ்லீம்கள் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் இணைய வழியில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கி மே மாதம் இறுதிவரையான ஐந்து மாத காலகட்டத்தில் மட்டும் 280 பிரபலமான பெண் பத்திரைக்கையளர்களின் டுவிட்டுகளுக்கு வந்த 46 இலட்சம் பதில்களை ஆராய்ந்ததில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பதில்கள் டெக் ஃபாக் செயலியால் நிர்வகிக்கப்படும் கணக்குகளில் இருந்து வந்தவை மற்றும் அதில் 67 சதவிகித பதில்கள் அவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரிக்கும் நோக்கில் வந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த காஷ்மீரைச் சேர்ந்த மாணவியான ஷேஹ்லா ரஷீத் ஷோரவை இந்த டெக் ஃபாக் செயலியின் மூலமாக சித்திரவதைப் படுத்தியுள்ளது காவி கும்பல். அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்கள், பல்வேறு கணக்குகளைப் பயன்படுத்தி நாள்தோறும் அவருக்கெதிராக இழிவான கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள். இறுதியில் அந்த மாணவி 2018-இல் டுவிட்டரிலிருந்தே வெளியேறிவிட்டார்.
அடுத்து 2020-ம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று, வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் இந்த டெக் ஃபாக் செயலியின் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. டெல்லியில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடிய முஸ்லீம் மக்கள்மீது காவி கும்பலால் வன்முறை ஏவி விடப்பட்டது. இதில் மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முஸ்லீம்களின் வீடுகள், உடைமைகள் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் நடந்த அன்று இந்த போராட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவன் “போராடுபவர்களை தெருக்களில் இருந்து மூன்று நாள்களில் போலீஸ் சுத்தம் செய்யாவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம்” என பகிரங்கமாக கலவரத்திற்கு அறைகூவல் விடுத்தான். இது டெக் ஃபாக் கணக்குகள் மூலமாக பெருமளவில் பரப்பப்பட்டுள்ளது. எனவே டெல்லி கலவரத்திற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைகிறது.
இதேபோல, 2020-ல் நடந்த தப்லீகிக் ஜமாத் மாநாட்டை மையமாக வைத்து முஸ்லீம்கள் ‘கொரோனா ஜிகாத்’ நடத்துகிறார்கள். எச்சில்கள் மூலமாக கொரோனாவை பரப்புகிறார்கள் என கேவலமானதொரு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது சங்கப் பரிவாரக் கும்பல்கள். #தப்லீக் ஜமாத் ஜிஹாத், #தப்லீக் ஜமாத் வைரஸ் போன்ற ஹாஷ்டாக்குகளை 1 இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான டுவிட்டுகளாக டெக் ஃபாக் செயலியை வைத்து பெருக்கியுள்ளார்கள். இந்த நச்சுப் பிரச்சாரம் இணையத்தில் சுமார் எட்டு கோடி பேரைச் சென்றடைந்துள்ளது. அப்போது நாடுமுழுவதும் முஸ்லீம்கள்மீது காவி கும்பல்கள் நடத்திய தாக்குலுக்கு கருத்தியல் ஆதரவாக இது அமைந்தது.
காவிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கூட்டு
டெக் ஃபாக் செயலி போன்ற உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்க பிரசிடெண்ட் சிஸ்டம் மற்றும் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என இரு கார்ப்பரேட் தொழிநுட்ப நிறுவனங்கள் உடந்தையாக இருந்துள்ளன.
பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி எழுதிய “நான் ஒரு ட்ரோல் : பிஜேபி டிஜிட்டல் இராணுவத்தின் இரகசிய உலகத்திற்குள்ளே” என்ற நூல்.
இதில் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என்பது சமூக ஊடகங்களுள் ஒன்றான ஷேர்சாட்டை உருவாக்கிய நிறுவனம் ஆகும். மேலும் இந்தியாவின் 24 பிராந்திய மொழிகளில் செயல்படக்கூடிய ஷேர்சாட் செயலிக்கு டுவிட்டரால் நிதியளிக்கப்படுகிறது. இது 16 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. டுவிட்டர், பேஸ்புக், வாட்சப் போன்ற மற்ற சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரங்கள், பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கு முன்னால் ஷேர்சாட்தான் இவர்களுக்கு சோதித்து பார்க்கும் களமாக உள்ளது.
அடுத்து, பிரசிடெண்ட் சிஸ்டம் என்பது 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய-அமெரிக்க பொது தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது நாக்பூரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தை மையமாக வைத்துக் கொண்டு டெக் ஃபாக் செயலியை இயக்குபவர்களை ‘சமூக ஊடகப் பொறுப்பாளர்கள்’ என்ற பெயரில் பணியமர்த்தி, ஊதியமும் வழங்குகிறது. இதற்கு மேற்பார்வையாளராக பா.ஜ.க.வின் தற்போதைய மகாராஷ்டிர தேர்தல் மேலாளர் தேவங் டேவ் இருக்கிறார்.
இந்த நிறுவனம் 2015 முதல் அரசாங்க ஒப்பந்தங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. 2018-ல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பத்து மாநிலங்களில் இருக்கும் மக்களின் சுகாதார தகவல்களை சேகரித்து, சேமித்து வைக்கும் ஒரு டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. அதாவது ஒரு நிழல் உலக இணையப் படைக்கு அரசின் மூலம் அதிகாரப்பூர்வமாகவே நமது விவரங்கள் சென்றுசேர்கின்றன.
சமூக ஊடக ஜனநாயகம் எனும் மாயை
இந்த டெக் ஃபாக் செயலி இல்லாமல், சட்டப் பூர்வமாகவே சமூக ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு சட்டங்களை கொண்டுவந்துள்ளது மோடி அரசு. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, “சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் 2021” என்ற பெயரில் ஒரு விதியைக் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, சமூக ஊடகங்களில் சட்ட விரோத, தேச விரோத கருத்துகளை முதலில் பதிவிடும் நபரை கண்டுபிடிக்க முடியுமாம். அவர்களுக்கும் அந்த உள்ளடக்கத்தை பகிரும் நபர்களுக்கும் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் இவ்விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விதிமுறைகள் செய்தி வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களையும் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல, 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகின்ற தேசிய இணையவழி குற்றங்கள் புகாரளிக்கும் இணைய முகவரியின் சார்பாக, “இணையத் தன்னார்வலர்கள் திட்டம்” (Cyber Volunteers Program) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ளவர்கள் யாரும் தன்னை இந்த திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களாக பதிவுசெய்துகொண்டு, சமூக ஊடகங்களில் தேச விரோத, சட்ட விரோத கருத்துக்களை பதிவிடுவோரை அரசுக்கு அடையாளம் காட்டலாம் என்று அறிவித்துள்ளார்கள்.
இணைய வழியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச செய்திகளை பரப்புவோர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு இதுபோன்ற ஒழுங்குமுறை விதிகளும் திட்டங்களும் பயன்படும் என்று மோடி அரசு தெரிவிக்கிறது. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதை நம்மால் எப்படி நம்ப முடியாதோ அதைப் போன்றதுதான் இந்த பிரச்சாரங்கள்.
காவிகளின் ஆட்சியில், “சட்ட விரோத – தேச விரோத” என்றால் தங்களுக்கு விரோதமானது என்று பொருள் என்பது ஊரறிந்த உண்மை. எனவே இதுபோன்ற சட்டங்கள் எதற்கு பயன்படப்போகிறது என்பதை நாம் சொல்லாமல் புரிந்துகொள்ளலாம். என்.ஐ.ஏ, ஊஃபா, தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்றவைகளெல்லாம் எந்த ‘தேச விரோத’-‘சட்ட விரோத’ சக்திகளை ஒழித்துக் கட்டிவருகிறதோ, அதைப் போன்ற வேலைகளை இணையவழிகளில் மேற்கொள்வதற்குத்தான் இந்த சட்டங்கள்.
000
டெக் ஃபாக் என்ற ஒரு இரகசிய செயலியை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் விரிந்த அளவில் மதவெறி பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டுசென்று கருத்துருவாக்குகின்றனர். கலவரங்களை மேற்கொள்கின்றனர்.
தங்களுடைய சித்தாந்தத்தை, பயங்கரவாத நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்திவரும் ஜனநாயக சக்திகளை இணையச் சித்திரவதை செய்து, அவர்களை சமூக ஊடகத்தைவிட்டே ஓடவைக்கவும் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.
படிக்க :
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
மற்றொருபுறம், புதுப் புதுச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுவந்து மோடி அரசு மக்களுடைய கருத்துரிமையை பறித்துவருகிறது. தங்களுக்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களை சட்ட ரீதியாகவே ஒடுக்கும் ஏற்பாட்டைச் செய்துவருகிறது. திரிபுராவில், அண்மையில் முசுலீம்களுக்கு எதிராக காவி கும்பல்கள் நிகழ்த்திய வன்முறையைக் கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டர்கள் அனைவர் மீதும் ஊபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்பட்டது அதற்கு சிறந்த சான்று.
இவையெல்லாம் புதியதொரு போக்கை அறிவிக்கின்றன. யார் வேண்டுமானால் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த முடியும் என்ற நிலை புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துரிமையை, விரிந்த அளவில் மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கருவியாக சமூக ஊடகங்கள் பயன்பட்டது. அந்த காலம் முடிவடைந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இதே சமூக ஊடகங்கள் மக்கள் விரோதிகளான பாசிஸ்டுகளுக்கு பயன்படுகிறது. மிகுந்த செல்வாக்கோடு தங்கள் சித்தாந்தத்தை விரிவான மக்களிடம் அவர்களால் கொண்டு செல்ல முடிகிறது.
ஒட்டுமொத்த டிஜிட்டல் உலகும் பாசிஸ்டுகளின் கைப்பாவையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை நேசிப்பதாகவும் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய அனைவரும், இனி சமூக ஊடகங்களில் பதிவு போடுவதன் மூலம் மட்டுமே தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியாது. காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்காக மாபெரும் மக்கள்திரள் எழுச்சி ஒன்றிற்கு தயாராக வேண்டியிருக்கிறது. களத்தில் பாசிசத்தை வீழ்த்தாமல் இனி டுவிட்டரில் பதிவு போடும் ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது.

மதி

நூல் அறிமுகம் : ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை | பொதும்பு வீரணன்

பொதும்பு என்பது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஊர். தோழர் பொதும்பு வீரணன் இந்நூலின் நாயகன். இவர் மூலமே மொத்த சம்பவமும் நகர்கிறது. அவர் எழுதிக் கொடுத்த குறிப்புகள்தான் இந்நூலின் இரத்த நாளங்கள்.
தாழ்த்தப்பட்ட குறவர் சாதியைச் சேர்ந்த தோழர் பொதும்பு வீரணன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். 64 பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலில் 33 பக்கங்களே இவரது குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சாதிய இழிவுகளையும் அதிகார வர்க்கம், போலீசின் அடக்குமுறைகளையும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் உறுதியான போராட்டங்களையும் உள்ளது உள்ளபடி மிகவும் எளிய நடையில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூறுகிறார்.
அன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊர்ச் செல்வந்தர்களின் வீட்டு வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதாவது பணக்காரர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களே அனுப்பி வைப்பார்களாம். அப்படி ஒருநாள் வீரணனை அவ்வூரின் பெரும் பணக்காரரான நாகு சேர்வைக்குச் சொந்தமான கோயிலின் கட்டிட வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
படிக்க :
நூல் அறிமுகம் : நேமிசந்த்ரா எழுதிய “யாத் வஷேம்” | தமிழ் இலக்கியா
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
எப்போதெல்லாம் கூப்பிடுகிறார்களோ, அப்போதெல்லாம் பள்ளியைவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்ல வேண்டும். கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கும்பாபிசேகம் அன்று வாழை இலை சோறுபோட்டு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தனது வயதான தாயை அழைத்துக் கொண்டு எல்லோரையும்போல வீரணனும் இலையைப் பெற்றுக் கொண்டு சாப்பிடச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த நாகு சேர்வை, கொதித்தெழுந்து, “ஏண்டா உனக்கெல்லாம் இலைசோறு கேட்குதா, சட்டிமுட்டி கெடக்கலையா?” என்று சாதிவெறியைக் கக்குகிறார். பிறகு, வேறுவழிதெறியாமல் அவரது தாய் தனது முந்தானையில் சாப்பாட்டை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
சாதிவெறி நிலச்சுவான்தார்களிடம் மட்டுமா இருந்தது; விடுதலைக்காகப் போராடிய அன்றைய காங்கிரசு கட்சிக்காரர்களிடமும் இருந்ததை எள்ளி நகையாடுகிறார் தோழர் வீரணன்.
1943-க்கு முன்பு, நாடே சுதந்திர வேட்கையில் பற்றி எரிந்தபோது, இந்தியாவின் பல்வேறு கிராமங்கள் வரை அந்தத் தீ பரவிக் கொண்டிருந்தது. அதில் பொதும்புக் கிராமம் விதிவிலக்கல்ல.
அந்தக் கிராமத்தில் இருசசேர் பரமசிவம் சேர்வை என்பவர் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மறியல்களில் கலந்துகொள்வார். ஊருக்கு வந்தவுடன் வாசக சாலையில் அமர்ந்து, இன்று என்ன நடந்தது என்று ஆர்வத்துடன் பத்திரிகைச் செய்திகளைப் படித்துக் காட்டுவார். அந்த சமயம் பணம் படைத்தோரும் உயர்சாதிக்காரர்களும் வீட்டிற்குள் அமர்ந்திருக்க, தாழ்த்தப்பட்டோர் வெளியில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் தோழர் வீரணன்,
“… உள்ளே இருப்பவர்கள் (வாசக சாலைக்குள்) வெற்றிலை, பொடி போட்டு மூக்கு சிந்தினால் எங்கள் மேல் விழும். நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. யாரும் நிறுத்தச் சொல்லவும் மாட்டார்கள்.
… …. மறியலுக்கு போவோர்களுக்கு மதுரை கொன்னவாயன் சாலையில் இருந்த செட்டியார் தகர செட்டில் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து சாப்பாடு நடக்கும். ஆனால், வரிசையில் நாங்கள் மூன்று பேரும் (தாழ்த்தப்பட்டோர்) உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. தீட்டுப்பட்டுவிடும்.” என்பார்.
வீரணன் எழுத்தில் சிதறும் வெறுப்பும் கோபமும், நாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களிடம் கூட ஒடுக்கப்பட்ட மக்களை சக மனிதர்களாகப் பார்க்கும் ஜனநாயகப் பண்பற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தத்தை அறைந்து சொல்கிறது.
உள்ளூர் அளவில் நிலச்சுவான்தார்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். கூலி விவசாயிகளுக்கு மொட்டை மரக்காலில் நெல் அளந்து கொடுப்பதை கண்டித்து, நியாயமான கூலியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பெரும் பணக்காரர்களிடமிருந்து நிலத்தை பறிமுதல்செய்து நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு போராட்டத்திலும் வீரணன் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் நெஞ்சுறுதி அளப்பறியது.
நிலச்சுவான்தார்களுக்கு எதிராக, பண்ணையார்களுக்கு எதிராக, பெரும் முதலாளிகளுக்கு எதிராகப் போராடினால் ‘நம்ம அரசாங்கமே’ என்றாலும் சும்மா விட்டுவிடுமா என்ன?
1948 நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டுவிட்டது. நிலச்சுவான்தார்களின் கொடுமைகளுக்கு எதிராக யார்யாரெல்லாம் போராடினார்களோ அவர்களெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். குறிப்பாக கம்யூனிஸ்டுகளை தேடிக் கண்டுபிடித்து, கிராமப்புறங்களில் மக்கள் கூடும் இடங்களில் தண்டனை கொடுத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்படித்தான் தோழர் பொதும்பு வீரணனும் சில தோழர்களும் போலீசாரிடம் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் அனுபவித்த தண்டனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
படிக்க :
நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
சிறைச்சாலையில் ஒரு நாள் வீரணனையும் இன்னும் இரண்டு தோழர்களையும் அழைத்து, அவர்களுக்குத் தண்டனையாக உரலில் நெல் குத்தச் சொல்கிறான், சிறை வார்டன். அதுவும் பூண் இல்லாத உலக்கையால் இடிப்பதற்கு இன்னும் சிரமமாக இருக்கும். காலையில் ஒரு மூட்டையும் மாலையில் ஒரு மூட்டையும் குத்தி முடிக்க வேண்டும் என்பது உத்தரவு. குத்திக் குத்தி கைகளில் கொப்புளம் ஏற்பட்டு ரணமாகிவிடுகிறது. மறுநாளும் வார்டன் அழைக்கிறான். கொப்புளம் வைத்து வீங்கியிருக்கும் தங்களது கைகளைக் காட்டுகிறார்கள், அப்போதும் விடவில்லை. ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்களல்ல, இப்படியாக மூன்று நாட்கள் நடக்கிறது. கைகளால் உலக்கையை இனிமேலும் பிடிக்க முடியாது என்று புண்ணான கையைக் காண்பிக்கிறார்கள். என்னையா எதிர்த்து பேசுகிறாய்? என்று மாட்டை அடிக்கும் குச்சியைக் கொண்டு மயக்கம் வரும் வரை அடித்து நொறுக்குகிறார்கள். மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் நெல் குத்தச் சொல்கிறார்கள்.
இத்தகைய கொடும் நிகழ்வுகள் ஜுலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் எனும் புத்தகத்தை நினைவுபடுத்துகிறது. ஆளும் வர்க்கமும் போலீசும் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை ஒரே மாதிரியாகத்தான் கையாள்கிறார்கள். கம்யூனிஸ்டுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான், தங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பி.சி.ஜோஷி கூறியதை தோழர் வீரணன் பதிவிடுகிறார். “காங்கிரஸ்காரர்கள் ஒரு அடி கொடுத்தால் திருப்பி 10 அடி கொடுங்கள்” என்று.
இன்று நாம் இந்து மதவெறி பாசிச நச்சுச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் தனது வானரப் படைகள்மூலம் நாடு முழுவதும் சாதி, மதக் கலவரங்களை நடத்துகிறது. விவசாயம், தொழில்துறைகளை அழித்துச் சூறையாடுகிறது. தெருவுக்கு தெரு சாகா நடத்தி அடியாட்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு அடி கொடுத்தால் நாம் 100 அடி கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு கம்யூனிஸ்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதும்பு தியாகிகள் இந்நூல் மூலம் உணர்த்தும் பாடம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும் !
நூல் ஆசிரியர் : பொதும்பு வீரணன்
முறைப்படுத்தித் தருபவர் : என்.ராமகிருஷ்ணன்

விலை : ரூ. 60
வெளியீடு : மதுரை புத்தக மையம்,
3/44, பாரதியார் சாலை. தினமணி நகர், மதுரை – 625 018.
செல் : 94869 27364
நூல் அறிமுகம் : வேலன்

மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !

மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள கிளை இணைப்பு சங்கங்களில் ஆலைவாயில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலைவாயில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தனது தலைமை உரையில், “போராடிப் பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும்  கார்ப்பரேட் – பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்படுகிறது என்றும் மேலும் விவசாயம், கல்வி, சிறு-குறு தொழில்களும் பொதுத்துறை நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதை தொழிலாளர் வர்க்கமாக ஒன்றினைந்து முறியடிப்பது நமது வரலாற்று கடமை” என்று பேசி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல் தனது உரையில் “தொழிலாளர் நலச்சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே எந்த ஆலை முதலாளிகளும் சட்டத்தை மதிப்பது கிடையாது. இன்று அந்த சட்டங்கள் நமக்கு ஆதரவாக இல்லை என்றால் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை கோர முடியாது. கடுமையான உழைப்பு சுரண்டலும், அடக்குமுறைகளும் அதிகரிக்கும். தன்மீது இப்படிப்பட்ட அநீதி இழைக்கப்படுகிறது என்பதை கூட தொழிலாளி வர்க்கம் உணராமல் இருக்கின்றனர். சாதி மத உணர்வுகளை மழுங்கச் செய்து தொழிலாளி வர்க்கம் வர்க்க உணர்வை மேம்படுத்திக் கொண்டு தமக்கான அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

This slideshow requires JavaScript.

எமது சங்கத்தின் சிறப்புத் தலைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – முன்னாள் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் தனது கண்டன உரையில், “தொழிலாளர் நலச்சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறு-குறு தொழில்கள், கல்வி-மருத்துவம், இயற்கைவளம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வைக்கப்படுகிறது. நாம் எதை சாப்பிட வேண்டும், நாம் எதை உடுத்த வேண்டும் என காவி கொள்கையில் அவர்கள் தீர்மானிக்கின்றனர். இதை தொழிலாளி வர்க்கம் உணராமல் இருப்பதற்காக சாதி, மத உணர்வுகளை மேலோங்கச் செய்து, காவி சிந்தனை மக்களுக்கு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு சாகா பயிற்சி அளிக்கப்படுகிறது.  கார்ப்பரேட்டுக்கு சேவை செய்வதே காவி அரசின் நோக்கமாக உள்ளது. இவற்றை முறியடிக்கின்ற வகையில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்வது நமது வரலாற்றுக் கடமை. ஆகவே நாடு தழுவிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அகில இந்தியப் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! இதை முன்னெடுத்துச் செல்லும் டி.ஐ  மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்திற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் விண்ணெதிர தொழிலாளர்கள் கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல் :
டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு
000
மார்ச்: 28,29 பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆவடி பேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் சாலை மறியல் செய்யப்பட்டது, இதில் எமது பு.ஜ.தொ.மு  சென்னை, திருவள்ளூர் காஞ்சி மாவட்டம் சார்பாக தொழிலாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
புதிய தொழிலாளி
000
பு.ஜ.தொ.மு. சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் உள்ள டி.பி.ஐ ஆவடி, ஆலையில் மார்ச்:28,29 வேலைநிறுத்தத்தை ஒட்டி இன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, இதில் பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தகவல்:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
டி.பி.ஐ. ஆவடி.
000
மார்ச் 28-29 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில்  பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு  பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு -வின் மாவட்டச் செயலாளரும்,மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.
தமிழ்த் தேசிய குடியரசு இயக்கம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர்.விக்னேசு மற்றும் திராவிடா சிட்டி மூவ்மெண்ட் ( குப்பம் ) அமைப்பைப் சேர்ந்த திரு.அபி கவுடா ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.திரளான தொழிலாளர்களும்,ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
புதிய தொழிலாளி
000
மார்ச் 28 29 பொது வேலைநிறுத்தம் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் மாநிலம் தழுவிய போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் என்று தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் தொழிற்சங்கங்கள் கட்சிகள்  புரட்சிகர அமைப்புகள் என் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை சமயநல்லூர் பகுதியில் விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் கட்சிகள் பெண்கள் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தோழர் லாசர் தலைமையில் நடைபெற்றது. அதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
ம.க.இ.க, தமிழ்நாடு
000
ஒன்றிய மோடி அரசை கண்டித்து! மார்ச் 28,29 அகில இந்திய பொது வேலை நிறுத்ததின்  ஒரு  பகுதியின்   இன்று மறியல் போது நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டோம்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
000
28.03.22 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்துடன் போராட்ட களத்தில் விருதை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதை.

War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !

War on Ukraine :
Russian troops, getout from Ukraine and Crimean Peninsula!
US and NATO forces, getout from Eastern Europe and the Black Sea region!
♦ We shall protest against the war on Ukraine in the race for world hegemony of the U.S. and Russian superpowers!
♦ We shall defeat the war hysteria of U.S. and Western imperialist powers, which is annexing Ukraine and expanding the NATO military alliance in Eastern Europe to besiege and invade Russia.
♦ We shall break the hegemonic frenzy of U.S.-led imperialist powers that has built QUAD and AUKUS war alliances to intensify the rivalry against Russia and China into a nuclear world war.
♦ The US-led NATO alliance has no right on blaming Russia, which has waged wars of aggression on Iraq, Afghanistan, Yugoslavia, Libya and staged coups and proxy wars in other countries, imposed sanctions on Russia, Iran, Venezuela, Cuba and North Korea.
♦ We shall fight for the emancipation of the working people by developing the war between imperialist powers as a just and revolutionary civil war against imperialism, colonialism and hegemony.
♦ We shall expose pacifists (supporters and advocates of peace) the compromising forces who speak out for peace without opposing U.S – the first culprit in provoking the war, the U.S.and Russian superpowers and the hegemonic rivalry of imperialist powers.
♦ The proletariat can not support any side in the war for the domination and plunder of the imperialists! They should not ally the U.S. and Western imperialist powers in the name of opposing the Russia’s war offense!!
♦ Let us break down the oppression of bourgeois – imperialist powers that suppress the struggle for a just war of national liberation and the right to self-determination!
♦ Let us smash the imperalist conspiracies by using self-determination struggles of nationalities as a pawn to establish hegemony! Let us defeat the treachery that seeks to achieve liberation of a nationality by relying on imperialist forces!
♦ We shall fight for the independence and soverginity of the nations of the world and the right of self-determination of nationalities.
Workers of all countries, unite !

New Democracy – March 2022 | Magazine

New Democracy March – 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.
New Democracy (Puthiya Jananayagam) March – 2022
List of Articles Present in this Issue :
♦ The conspiratorial besperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
♦ Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire!
♦ The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra
♦ R.N.Ravi – The hand-picked spy of the fascist invasion
♦ Mekedatu Dam : In racist politics – BJP & Congress are in the same array
♦ 15 workers massacred in Nagaland : ‘Indian unity’ established through military repression !
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
♦ Kashmir : Saffronisation obliterating constitutional freedom
♦ Afghan people starving to death because of US hegemony !
♦ Press Release – Let’s Defeat the Repression of the Foxconn Administration !
♦ War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula! US and NATO forces, getout from Eastern Europe and the Black Sea region!
To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com
To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561
Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com