இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மறைமுகமாகவும், அதன் பின்னர் நேரிடையாகவும் வளரத் தொடங்குகிறது. இவ்வளர்ச்சி எதிர்ப்பின்றி நடைபெற்றுவிடவில்லை.
பூலித்தேவர் கதை
வெவ்வேறு காலங்களில் எட்டயபுரத்தாரும், கட்டபொம்மன் முன்னோரும், சிவகிரி வன்னியரும், வடகரைச் சின்னணைஞ்சாத் தேவரும் நவாபையும், அவர்களது வசூல் குத்தகைதாரர்களான ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நின்றனர். ஆனால் அவர்களிடையேயிருந்த உட்பூசல்கள் காரணமாக எல்லோரும் ஒன்று சேரவில்லை. 1795-ல் பூலித்தேவர் முடிந்த அளவுக்குப் பாளையக்காரர்களை ஒன்று திரட்டி வரிகொடா இயக்கம் நடத்தினார். அவரை அடக்காமல் தென்பாண்டி மண்டலத்துப் பாளையங்களை அடக்க முடியாதென்று கண்ட ஆங்கிலேயர்கள் கர்னல் ஹீரான், மாபூஸ்கான். கம்மந்தான் கான்சாகிப் என்ற மூன்று தளபதிகளின் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.
சிறிய படையோடு நெற்கட்டான்செவல் கோட்டையிலும், மலையரண்களிலும் புகுந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது விரைவாகப் பாய்ந்து பெரும் படையைத் தாக்கிய பூலித்தேவரை அவர்களால் அடக்க முடியவில்லை . அவரது திண்மையும், வீரமும் மற்றப் பாளையக்காரர்களையும், மக்களையும் கவர்ந்தது. அவருக்கு ஆதரவு திரண்டது. அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் அனைவரையும், ஓரணியில் இணைக்க முயன்றார். முடிவில் ஐதர் அலியோடு தொடர்பு கொண்டு தென்னாடு முழுவதிலும் ஆங்கில எதிர்ப்புப் போரை விஸ்தரிக்க முயன்றார். ஆனால் எதிர்ப்பு அணியிலேயே பல பிளவுகள் ஏற்பட்டதால் இதனை அவரால் சாதிக்க முடியவில்லை . ஆனால் இம் முயற்சியால் உயிர்விட்ட பூலித்தேவர் விடுதலை வேட்கைக்கும், வீரத் தியாகத்துக்கும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.
அவரது வரலாறு ஆங்கில ஆசிரியர்களது நூல்கள் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் அவரைக் கலகக்காரராகவும், கொள்ளைக்காரராகவுமே சித்திரிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைப்பற்றிய தனி நாட்டுப்பாடல்களும், ஒரு ஒயில் பாட்டும், சிந்துப் பாடலும் வழங்கி வருகின்றன. அவை இன்னும் முழுமையாக அச்சாகவில்லை. சிற்சில பாடல்களே வெளியாகியுள்ளன. அவை சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
இப்போரில் ஆங்கிலப் படையின் தளபதி யூசப் கான் என்பவன், அவன் இந்துவாக இருந்து, ஒரு முஸ்ஸீம் வணிகனால் அபிமான புத்திரனாக வளர்க்கப்பட்டான். அவன் நவாபின் படையில் சிப்பாயாகச் சேர்ந்து தனது வீரத்தாலும், திறமையாலும் தளவாயாக உயர்ந்தான். பரங்கிமலையிலும், சதுரங்கப்பட்டணத்திலும் காலூன்றியிருந்த டச்சுக்காரர்களின் கோட்டைகளைப் பிடிக்க ஆங்கிலேயருக்குத் துணை செய்தான். அவனது போர்த் திறமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டு கம்மந்தானாக (Commander) நியமித்தனர். தென்னாட்டை அடக்க அவனையே அனுப்பி வைத்தார்கள். பல ஆண்டுகள் முயன்று அவன் தென்னாட்டுப் பாளையங்களை அடக்கினான்.
முக்கியமாகப் பூலித் தேவரது வலிமையை ஒடுக்கினான். பல கொடுமைகள் செய்து ஆங்கிலேயர் ஆட்சியைத் தென்னாட்டில் நிறுவினான். ஆனால் ஆங்கிலேயர் நவாபின் விருப்பப்படி அவனை நவாபின் படைக்கு அனுப்பிவிட முடிவு செய்தனர். இவ்வாறு அவனது செல்வாக்கைக் குறைத்துவிட அவர்கள் முயன்றனர். ஆனால் பாளையக்காரர்களின் வீரவுணர்வைக் கண்ட அவன் தென்னாட்டில் சுயேச்சை அரசை நிறுவ எண்ணி மதுரையில் முடிசூட்டிக் கொண்டான்.
நவாபும், ஆங்கிலேயரும் அவனை ஒழித்து விட எண்ணினர். அவன் ஏற்கனவே ஆங்கிலேயரின் கையாளாகத் தென்னாட்டின் பாளையக்காரர்களை விரோதித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்கு இருபுறமும் இடி தோன்றியது. ஏககாலத்தில் சிவகங்கையையும் ஆங்கிலேயரையும் எதிர்த்தான். சிவகங்கையின் மன்னன் ஆங்கிலேயர்களோடு சேர்த்து கொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த போரில் கான்சாகிப் தோற்றான். சூழ்ச்சியால் அவன் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். கடைசிக் காலத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த கான்சாகிப், தனது முற்காலத்துச் செயல்களால் தென்னாட்டுப் பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயருக்கு எதிரான முன்னணியை உருவாக்க முடியவில்லை. அவனது செயல்களின் விளைவால் அவன் அழிந்தான்.
அவனது வரலாறு ஆங்கிலேய ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. S.C.ஹில், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களிலும் மதுரை, திருநெல்வேலி, கெஜட்டியர்களிலும் அவனது வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அவனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து ‘கான்சாகிப் சண்டை’ என்ற நாட்டுப் பாடலில் வெளியாகிறது. இது போன்ற சில நாட்டுப் பாடல்கள் மதுரை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. அவை அச்சாகவில்லை. அவையனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
கட்டபொம்மு
வீரபாண்டிய கட்டபொம்மன்
கான்சாகிபுவின் மரணம், திப்புவின் தோல்வி, ஆர்க்காட்டு நவாப்பின் வீழ்ச்சி இவற்றின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டில் நேரடி ஆட்சியை மேற்கொண்டது. தமிழ்நாட்டுப் பாளையங்களின் சில ஆதிக்க உரிமையைக் கட்டுப்படுத்தி வரி வசூலிக்க நிலங்களை செட்டில்மெண்டு செய்தனர்.
இந்த செட்டில்மெண்டு மூலம் பணிந்து விட்ட பாளையக் காரர்களுக்கு, தங்களிடம் பணியாத பாளையக்காரர்களின் நிலங்களைப் பிடுங்கி வழங்கினர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சிப் பாளைய நிலங்கள் உள்ள அருங்குளம் சுப்பலபுரம் என்ற கிராமங்களை எட்டயபுரத்தாருக்கு வழங்கினர். கட்டபொம்மு ஆங்கிலேயரின் உரிமையை எதிர்த்தான். அவர்களுக்கு வரி செலுத்தவும் மறுத்தான். இதன் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரியும்.
தென்னாட்டில் சிவகெங்கை மருதுவைத் தவிர மற்ற எல்லாப் பாளையக்காரர்களும், ஆங்கிலேயரின் நவீனப்படை வலிமைக்கு அடி பணிந்து விட்டனர். மேற்கு வட்டகைப் பாளையக்காரர்களும் கிழக்கு வட்டகை நாயக்கர் பாளையங்களும், சேதுபதி முதலிய பெரிய பாளையக்காரர்களும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டனர். ஆயினும் கட்டபொம்மு ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான். அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். மண் கோட்டையிலிருந்து வாளும், வில்லும் கொண்டு சிறிய படையோடு, பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும் படையை எதிர்த்துப் போராடினான் கட்டபொம்மன். முதற் போரில் தளபதி காலின்ஸ் இறந்தான். கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் இறந்தான். முற்றுகை உடைந்தது.
வெள்ளையர் படை, சிதறியது. 1799-ல் மறுபடியும் பெரும் படையோடு மேஜர் பேனர் மேன் கோட்டையைத் தாக்கினான். கோட்டை பிடிபட்டது. ஆனால் வெள்ளையர் படைக்குப் பெருஞ் சேதம் ஏற்பட்டது. ஆயினும் வெள்ளையர் வென்றனர். கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டான். பாஞ்சாலங்குறிச்சி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வீர கட்டபொம்மனது தியாகம் சுற்றிலுமுள்ள மக்கள் மனத்தில் வீர உணர்வை எழுப்பியது. மக்கள் படை திரண்டது. பாளையங்கோட்டைச் சிறையிலிருந்த ஊமைத்துரையும், அவனது உறவினரும் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டனர். ஏழு நாட்களில் கோட்டை மறுபடியும் கட்டப்பட்டது. வெள்ளையர் எதிர்ப்பு அணி சுற்றிலும் பரவியது. தூத்துக்குடி துறைமுகத்தை ஊமையன் படை கைப்பற்றியது. வெள்ளையர் கலங்கினர். பெரும் படையோடு வெள்ளையர் தளபதி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினான். ஊமையன் தப்பியோடிச் சிவகங்கைக்குச் சென்றான்.
மருது சகோதரர்கள்
சிவகங்கையில் ஆண்ட பெரிய மருது அரச வம்சத்தினன் அல்லன், வெள்ளையரை எதிர்த்து நின்ற சிவகங்கை மன்னன் முத்துவடுகநாதன் ஆட்சியை மருதுவிடம் ஒப்படைத்தான். அவனது விதவை வேலு நாச்சியார் அவனை மணந்து கொண்டாள். இவ்வாறு அவன் பாளையக்காரனானான். அரசியல் திறமை மிக்க தனது தம்பி சின்ன மருதுவின் துணையோடும். மக்கள் ஆதரவோடும் அவன் சுயேச்சையாக நாட்டைக் காத்து வந்தான். பலமுறை அவனை வெள்ளையர் பயமுறுத்தி வந்தனர். அவன் பணியவில்லை. வெள்ளையர்களை எதிர்த்து நிற்கும் பாளையங்களுக்கு அவன் உதவியளித்து வந்தான். அவனோடு சேர்ந்து போராடவே ஊமைத்துரை சிவகங்கை சென்றான். அவனைத் தங்களிடம் ஒப்படைத்து விடும்படி வெள்ளையர்கள் கேட்டார்கள். மருது உடன்படவில்லை. இதனையே சாக்காக வைத்துக்கொண்டு, தங்களை எதிர்த்து நிற்கும் கடைசிப் பாளையக்காரனான மருதுவை ஒழித்துவிட வெள்ளையர்கள் முடிவு செய்தார்கள்.
கர்னல் வெல்ஷ் என்ற தளபதி பெரும் படையோடு சிவகங்கையைத் தாக்கினான். பல போர்களுக்கு அப்புறமும் மருதுவை வெல்ல முடியவில்லை. மருது முத்து வடுகன் நேர் பரம்பரையைச் சேர்ந்தவனல்லன் என்றும், பரம்பரைப் பாளையக்காரர்களின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவனல்லன் என்றும் கூறி முத்து வடுகனின் தாயாதி உறவினன் ஒருவனை பாளையக்காரனாக்கி தேவர் சாதியினரை மருதுவின் பக்கமிருந்து பிரித்தனர். இச் சூழ்ச்சிக்கு இரையான தேவர்கள் வெள்ளையருக்கு ஆதரவாகத் திரண்டனர். இவ்வாறு மருதுவின் அணியைப் பிளவு செய்து மருதுவைப் பலவீனப்படுத்தினர். கடைசியில் மருது பிடிபட்டான். சின்ன மருதுவும் ஊமையனும் பிடிபட்டனர். மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு ஓய்ந்தது.
இவ்வரலாறு அனைத்தும் ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவ்வீரர்கள் பிடிவாதமும் மூர்க்க குணமும் உடைய கலகக்காரர்களாகவே அவர்களால் வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது மானிடப் பண்புகளும் வீரத்தன்மையும் அவர்கள் மக்கள் பால் பெற்றிருந்த நன்மதிப்பையும் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
ஆனால் மக்களுடைய படைப்புகளான நாட்டுக் கதைப் பாடல்கள் இவ்வீரர்களின் சிறப்பான பண்புகளைப் போற்றிப் பாடுகின்றன. அவர்களது வீரச் செயல்களைப் பற்றிக் கூறி நாம் பெருமை கொள்ளச் செய்கின்றன. மருதுவைப் பற்றிய பாடல்களில் இரண்டு ‘ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ்’ தொடரில் சென்னை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளன, கட்டபொம்மன் கதைப் பாடலை என்னுடைய ஆராய்ச்சியோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள் : இன்னும் பல பாடல்கள் ஏட்டிலேயே புதைந்து கிடக்கின்றன. அவையாவும் திரட்டி வெளியிடப்படவேண்டும்.
பெண்கள் உடை அணிவதும் போராட்டம் ! அதை உதறி தள்ளுவதும் போராட்டம் ! என்ன வினோதமான புதிர்! இது புதிர் மட்டுமல்ல, சமூகத்தில் நீடிக்கும் நிதர்சனமான உண்மையும் கூட. ஆடை நாகரீகத்தின் குறியீடு எனும் அதே வேளையில் ஆடையில் கடைபிடிக்கப்படும் பாலின, வர்க்க, சாதிய, இன பாகுபாடுகள் நம்மை மேலும் மேலும் அச்சுறுத்துகின்றன.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஆடையை பற்றிய புரிதல் கட்டாயம் தேவை . நாம் நாடு, கலாச்சாரம், மரபுகளை பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது லண்டனின் தாம்சன் ரியூடர்ஸ் அமைப்பின் (Thomsan Reuters Foundation) அறிக்கையில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இடம்பெற்ற 193 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்று காரணிகளின் (கலாச்சார மரபுகள், பாலியல் வன்முறை, ஆள் கடத்தல்) அடிப்படையிலான தரப்பட்டியலில் இந்தியா கீழிருந்து 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெண்களைத் ‘தாயாகப்’ போற்றும் நாடு, பெண்களைப் பாதுகாக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை. குற்றமிழைத்தவனை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளியாக்கும் போக்கு இந்தியாவில் பெருமளவில் நீடிப்பதாலும், அதனை அங்கீகரிக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் நிரம்பி வடிவதாலும் தான்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு காரணம், பெண்ணின் ஆடைதான் என சொல்பவர்களின் வாய், ஆணின் பார்வையிலும் சிந்தனையிலும் இருக்கும் கோளாறைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது? இங்கே பாதிப்புக்குட்பட்டவர்கள் மீது தான் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண் என்ன ஆடை உடுத்தியிருந்தாள்? எத்தனை மணிக்கு அங்கு சென்றாள்? அந்த நேரத்தில் அங்கு அவளுக்கு என்ன வேலை? என்பது போன்ற கேள்விகள் பெண்களிடம் கேட்கப்படுகிறது.
இந்த ஆணாதிக்கச் சமூகத்தால் வழங்கப்பட்டிருக்கும் “என்ன இருந்தாலும் ஆம்பள” என்ற தனிச் சலுகையை, துஷ்பிரயோகம் செய்பவர்களின் ஆதிக்க மனநிலையை கேள்வி கேட்காமல், அம்மனநிலையை அறிந்து அதனை மாற்றி அமைக்க முற்படாமல், பலரும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே பொறுப்பை சுமத்துகிறார்கள். பெண்கள் அணியும் ஆடைகள், அவர்கள் வெளியே செல்லும் நேரம், செல்லும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. இது சரியான பார்வையாகுமா?
சிதைக்கப்பட்ட சிறுமி ஆசிபா
கடந்த 2017-ம் ஆண்டு அண்டை வீட்டில் வாழ்ந்த துஷ்யந்த் எனும் கிரிமினலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினி என்ன ஆபாசமான ஆடை அணிந்திருந்தாள் ? கடந்த 2018-ம் ஆண்டு, காஷ்மீரில் கோவிலில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட ஆசிபா எனும் 8 வயது சிறுமி என்ன ஆபாசமான ஆடை அணிந்திருத்தாள் ?
சென்னை அயனாவரம் குடியிருப்பு ஒன்றில் காது கேளாத 11 வயதுச் சிறுமியை, 15 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது நினைவிருக்கலாம். அவள் என்ன உடை அணிந்திருந்தாள் ? இந்தச் சிறுமிகள் எல்லாம் பட்டப்பகலில் வெவ்வேறு இடங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். எனவே நிகழும் பாலியல் வன்கொடுமைகள் எல்லாம், ஆடையாலோ, இடத்தாலோ, நேரத்தாலோ நிகழவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது.
இந்திய மரபுகளை ‘ஆக்கிரமிக்கும்’ மேற்கத்திய ஆடைக் கலாச்சார தாக்கங்கள்தான் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாகவும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. மேற்கத்திய ஆடைகளின் வாசமே படாத இந்தியாவின் கிராமப்புறங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனில், பிரச்சினை எங்கிருக்கிறது ?
ஒரு சமூகமாக பெண்களை நாம் பார்க்கும் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது. அதாவது, பெண்ணின் உடல் பாலியல் பண்டமாகவே பார்க்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடுதான் நடைபெறும் பாலியல் வன்முறைகள் அனைத்துமே.
இயற்கை ஆண் ,பெண் இருவரையும் சமாகத்தான் படைத்தது. அதன் பின் உண்டான சமூக மாற்றங்கள், பாலினம், மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை படைக்கின்றன. இவற்றில் முதன்மையாகத் தோன்றியது பாலின பாகுபாடு.
பெண்களுக்கென்றே சில விதிமுறைகளையும், புறக்கணிப்பையும் ஒடுக்குமுறைகளையும் காலம்காலமாக வெவ்வேறு வடிவங்களில் சமூகம் வகுத்து வைத்திருக்கிறது. பெண் என்ற காரணத்தினாலேயே மனித இனத்தின் கிட்டத்தட்ட சரிபாதி பேர் ஒடுக்கப்படுகின்றன. அதனால் தான் பெண்கள் பாதுகாப்பு என தனியாகப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களின் பாதுகாப்புப் பற்றி பேசுவதில்லையே என அங்கலாய்ப்பவர்களுக்கு, இப்போது காரணம் புரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.
ஆடை குறித்த வரலாற்றை இதற்கு முன்னர் பல பதிவுகளில் பார்த்தோம். அதில் இரு விதமான போராட்டங்கள் சமூகத்தில் நடந்து வருவதைப் பற்றி பார்த்திருக்கிறோம். ஆடை உடுத்துவதற்கான போராட்டமும், ஆடை சுதந்திரத்தைக் கோருவதற்கான போராட்டமும் தான் அவை.
உதாரணமாக, பிரா அணிவதும் அணியாததும் எங்களது உரிமை என்று பெண்கள் முன்னெடுத்த போராட்டம், தமக்கு வசதியான ஆடையை தாமே முடிவெடுத்து உடுத்தும் சுதந்திரத்துக்கான போராட்டம். அதே சமயத்தில், ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம் பெண்களை அவர்களது மத நம்பிக்கையான பர்தா அணிவதைத் தடை செய்வதற்கு எதிரான போராட்டம், ஆடை உடுத்தும் உரிமைக்கான போராட்டம்.
வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தனியாக நிர்பந்திக்கப்படவில்லை. மாறாக குறிப்பான சமூகத்தைப் பீடித்திருக்கும் சாதி, மத, இனம் சார்ந்த சட்டங்களும், சமூக விதிமுறைகளும் இயல்பாகவே பெண்களை அடிமைப்படுத்துகின்றன என்பதே எதார்த்தம்.
000
இந்தியாவில் மதம் , இனம் , வர்க்கம் , சாதி ஆகியவை வகுக்கும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும், கற்பிதங்களும் குறித்துப் பார்த்தோம். இது ஒருவகையான ஒடுக்குமுறை என்றால், பழைமையிலிருந்து பெண்களை விடுவிக்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நவீன முதலாளித்துவமோ, வேறுவகையில் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.
“என்ன முதலாளித்துவமா?” என்றால் “ஆம், அதே முதலாளித்துவம் தான்” என்பதே பதில். பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், அழகுடன் இருந்தால் மட்டுமே வாழத் தகுதி உடையவள் என்பதாகவும் வரையறுத்திருப்பதோடு அதனை பொதுப்புத்தியிலும் தொடர்ந்து பதிய வைக்கிறது. அதை விட இன்னும் ஒருபடி மேலே போய், எது அழகு என்பதையும், எப்படி அழகு என்பதையும், அதை யாருக்காக செய்கிறோம், என எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் ஜாம்பவனாக முதலாளித்துவம் இருக்கிறது.
பெண் எப்படி இருந்தால் அழகு என்பதற்கு முதலாளித்துவம் சிலபல வரையறைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. “ஸிரோ சைஸ் ஹிப், அளவான மார்பு, ஹை – ஹீல்ஸ், ஸ்ட்ரெயிட்டனிங் ஹேர்”, இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒன்றாக “வெள்ளை நிறம்” என அழகுக்கான வரையறைகளை வகுத்துள்ளது.
இயல்பாக இருந்த உலகம் இப்போது எதை அழகு என்று சொல்லுகிறது ?. மேலாதிக்கம் செலுத்தும் நாட்டின் நிறம், உருவ அமைப்பு, மேட்டுக்குடி வர்க்க பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே “அழகு” வரையறுக்கப்பட்டு, அது உலகம் முழுவதும் பரப்பபடுகிறது.
உதாரணமாக மேற்கத்திய பெண்களின் நிறத்தையும், உடல் அமைப்பையும் வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கா பெண்களின் “அழகை” வரையறைப்பது எவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும் ?
இயற்கையாகவே மேற்கத்திய சமூகத்திய பெண்கள் வெள்ளை நிறத்தவர்களாக இருக்கின்றனர். நீண்ட நாட்களாக அங்கு நீடிக்கும் முதலாளித்துவ சமூகம் அழகு எனக் கற்பிதப்ப்படுத்தியிருக்கும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்
ஆனால், ஆப்பிரிக்க பெண்கள் இயற்கையாகவே கருப்பு நிறத்தைக் கொண்டவர்கள். பின் தங்கிய உற்பத்திமுறை இயற்கையாகவே கோரும் அதிக உடலுழைப்பின் காரணமாக அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் அகன்ற தோள்பட்டை, தடிமனான உடல்வாகு ஆகியவை கொண்டிருக்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட இதனை ஒத்த நிலைமைதான். எனில் மேற்கத்திய இயல்பை ‘அழகு’ என இந்தியாவில் சித்தரித்து அந்த ”அழகின்” அளவிற்கு இல்லாதவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படத் தக்கவர்களாக சித்தரிக்கிறது முதலாளித்துவம். இது நாகரீக சமூகம் நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரும் தீண்டாமை உணர்வு ஆகும். சாதி, மத பேதம் பார்க்காத ‘முற்போக்கு’ ஆண்களிலும் கூட பலர் இந்தத் தீண்டாமையைக் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள்.
இங்கு நாடு, எல்லைகள் கடந்து இயங்கும் ஒரு முதலாளித்துவ சந்தைதான் அழகைத் தீர்மானிக்கிறது. அது பெண் உடலை ஒரு பாலியல் பண்டமாகவே மாற்றிக்கொண்டும் இருக்கிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி, அந்தப் போகப் பொருளாக்கும் செலவையும் பெண்களையே செய்ய வைத்து, அவர்களை பாலினரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டுகிறது.
பொருளாதாரத் தளத்தில் முதலாளித்துவம் ஏற்படுத்தும் பாலியல் சுரண்டலை, அதன் பக்கபலமாக நின்று, கலாச்சார ரீதியாக சமூகத்தின் பொதுக்கருத்தாக்கும் பணியை திரைப்படங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, பெண்களை வெறும் பாலியல் பண்டமாகவும், அழகுப் பதுமைகளாவும் காட்டுவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவின் பொதுமொழியாக இருந்திருக்கிறது. சமீபத்தில் ஒருசில மாற்றுச் சிந்தனையாளர்களின் படங்கள் அந்தக் கட்டமைப்பை உடைக்கின்றன என்ற போதிலும், பெரும்பான்மையான சினிமாக்கள் பெண்களை பாலியல் பண்டமாகத்தான் காட்டுகின்றன.
பாலிவுட்டில், மதர் இந்தியா (Mother India), சூப்பர் 30 (Super 30) என பல்வேறு படங்களில் இனவெறி மற்றும் வகுப்புவாத – சாதிய பாகுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. இங்கு தமிழ் சீனிமாவும் விதிவிலக்கு அல்ல.
பெண்களின் உடலை வெறும் பாலியல் சார்ந்த பண்டமாகவும், பெண்களைப் பலவீனமானவர்களாகவும், பெண் என்ற அடையாளத்தை அவமானப்படுத்தலின் சின்னமாகவும் காட்டுவதில் உலகம் முழுவதிலும் உள்ள சினிமாக்கள் ஒரே தாழ்ந்த தரத்தில்தான் இருக்கின்றன.
ஒரு பெண்ணின் உடையை ஆண்களுக்கு அணிவதை ஒரு கேலிக்கூத்தாக, இழிவானதாகச் சித்தரிப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் வந்த டாக்டர் திரைப்படத்தில் கூட ஒரு விளையாட்டில், ஆண் தோல்வியுற்றால் நைட்டி அணிந்து கோமதி என்ற பெயருடன் பூ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதன் மூலம் பெண்ணின் ஆடை அவமானத்திற்குரியதாகவும், அவள் அடையாளங்களை தோல்வியின் சின்னங்களாகவும் சொல்லப்படுகிறது.
இயக்குனர் சங்கரின் படங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவரது சிவாஜி எனும் படத்தில் கதாநாயகனின் நிறம் கருப்பாக இருந்தாலும் அது அழகு என்று காட்டுவதும் பெண்ணின் கருப்பு நிறம் கேலிக்கூத்தக்கப்படுவதையும் காணலாம். அங்கவை, சங்கவை என்ற இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் சங்கர் அவமானப்படுத்தியிருப்பது தமிழகத்தின் பெரும்பான்மைப் பெண்களைத்தான்.
இதே போன்று “ஐ ” படத்தில் கதாநாயகி கருப்பாக இருக்கும் பொது அந்த கதாநாயகன் அவளை பார்க்காமல் ஒதுக்குவதும் பின் பேர்னஸ் கிரீம் போட்டவுடன் கதாநாயகி வெள்ளையானதும் அவர்களுக்கு காதல் மலர்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பதன் நோக்கம் தான் என்ன ? இது நிறத் தீண்டாமை தானே !
தமிழ் சமூகத்தில் கருப்பின் அர்த்தம் தான் என்ன ? கருப்பு நிறங்களின் சங்கமம், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிறம், நீதியின் நிறம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், எதார்த்தத்தில் கருப்பு எதன் வெளிப்பாடாக கட்டமைக்கப்படுகிறது ?
கருப்பு ஆடையை நல்ல நிகழ்ச்சிக்கு அணியக் கூடாது. ஏன் என்றால் அபசகுனமாம். அப்படியானால் கருத்த நிறத்தையுடையவன் ? கருப்பு நிறத்தை சிறுமைப்படுத்தும் திரைப்படங்கள் நம் மனதில் எதைக் கட்டமைக்க விரும்புகின்றன? இச்சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நிறத்தை தாழ்வானதாக சித்தரிப்பதன் மூலம் இந்தச் சமூகத்தின் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை கட்டமைக்கின்றன. இவற்றின் வெற்றிதான் பார்ப்பனியத்தின் வெற்றியை நீடிக்கச் செய்கிறது.
ஆனால் கருப்பு நிறத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்திலோ அப்படி ஒரு நிலைமை இன்றுவரை ஏற்படவில்லை. ஆனால், பெரும்பான்மை வெள்ளை நிறத்தவர் வாழும் அமெரிக்காவில், இத்தகைய போக்கிற்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன.
அமெரிக்காவில், கடந்த 2015-ம் ஆண்டில், வழக்கறிஞராக இருந்து செயல்பாட்டாளரான மாறிய ஏப்ரல் ரெய்ன் என்பவர் டிவிட்டரில், “#OscarsSoWhite” என்ற ஹாஷ்டேக் மூலம் அங்கிருக்கும் வெள்ளை நிற வெறியை எல்லோரின் கவனத்திற்கும் கொண்டு வந்தார். கடந்த 2016-ம் ஆண்டுக்கு ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டபோது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிறந்த நடிப்புக்கான அனைத்து 20 பரிந்துரைகளும் வெள்ளை நடிகர்களுக்கே வழங்கப்பட்டது. அதை அம்பலப்படுத்தி ஏப்ரல் ரெய்ன் கிளப்பிய விவாதம் , உண்மையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
இதே போல, ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் தனது மூன்று கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்தற்கு அவர் கூறிய காரணங்களும் ஹாலிவுட்டில் நீடிக்கும் வெள்ளை மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. “கோல்டன் குளோப்ஸ் விருதிற்கான தேர்தெடுக்கும் குழுவில் பன்முகத்தன்மை இல்லாமை மற்றும் கறுப்பின உறுப்பினர்கள் ஜூரியில் இல்லாததன் காரணமாக அந்த விருது அதன் பொலிவையும் மதிப்பையும் இழந்துவிட்டது” என்றார்.
இப்படிப்பட்ட குரல் தமிழ்நாட்டு சினிமாத்துறையிலோ அல்லது பொதுச் சமூகத்திலோ ஒலிக்குமா? கருப்பு நிறத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தில் இக்குரல்கள் எழாதது எதைக் காட்டுகிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
“ஜனநாயக உச்சி மாநாடு” என்ற பெயரில் எதிர்வரும் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் அமெரிக்கா நடத்த இருக்கும் மாநாட்டுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
உயிராதாரமான சொல் என்றால் ஜனநாயகத்தை உயிர் அளவிற்கு நேசிப்பது என்ற பொருளில் புரிந்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை வைத்துத் தான் பிற நாடுகள் மீது போர்தொடுத்து அந்த நாடுகளை கபளீகரம் செய்து, அங்கு தனது பொம்மை அரசாங்கங்களை நிறுவி அந்த நாடுகளைக் கொள்ளையடித்துக் கொழுத்துள்ளது.
அதன் காரணமாகத்தான் “ஜனநாயகம்” அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற பாகிஸ்தான், இந்துத்துவ மோடியின் கீழ் சிக்கியிருக்கும் இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளை அழைத்த அமெரிக்கா சீனாவையும் ரசியாவையும் அழைக்கவில்லை என்பது சர்வதேச அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சீனாவிலும், ரசியாவிலும் ஜனநாயகம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், ஜனநாயகம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவிற்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில கேலிச் சித்திரங்கள் விளக்குகின்றன.
அமெரிக்கா ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்த போது எடுத்த படம் …கந்தலான அமெரிக்க ஜனநாயகத்திற்கு மேற்பூச்சு கொடுக்க முயலும் ஜோ பைடன்அங்கிள் சாம் : வேறு எந்த நாட்டிற்கு ஜனநாயகத்த ஏற்றுமதி பண்ணனும் ? அசிஸ்டண்ட் : உள்நாட்டிலேயே அது கிழிஞ்சிதான் தொங்குது. அத முதல்ல சரி பண்ணப் பாருங்க பாஸ் !“சர்வதேச ஜனநாயகக் காப்பாளனின்” உள்நாட்டு ஜனநாயக யோக்கியதையை “Black Lives Matter” போராட்டம் உலகுக்கே அம்பலப்படுத்தியது..“பயங்கரவாதத்தை” எதிர்த்து “ஜனநாயகத்துக்காக” போராடும் சர்வதேச பயங்கரவாதி அமெரிக்கா !வளர்ந்திருக்கும் கண்காணிப்பு அரசு தான் அமெரிக்காவை இன்று “ஜனநாயகமாக” பராமரித்துக் கொண்டிருக்கிறதுஒரு நாட்டைச் சுரண்டி, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு துண்டு ரொட்டியைப் பிச்சையாகப் போடுவதை கருணை முகமாகக் காட்டுவதுதான் “ஜனநாயகத்தை” நிலைநாட்டுவது.“அமெரிக்கன் ஸ்டைல்” ஜனநாயகத்தின் சமீபத்திய உதாரணம்
கேலிச்சித்திரங்கள் :குளோபல் டைம்ஸ் மற்றும் இணைய வெளியில் எடுக்கப்பட்டவை தொகுப்பு : கர்ணன்
திருச்சியில் கடந்த நவம்பர் 21-ம் தேதியன்று இரவு ஆடு திருடும் கும்பலை விரட்டிப் பிடிக்கச் சென்ற போலீசு சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பூமிநாதனை, ஆடு திருடும் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கும்பலில் சிறுவர்களும் அடங்கும் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலைமையை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இந்த நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேதிரபாபு திருச்சியில் உள்ள பூமிநாதனின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திப் பேசினார். தனது உரையில் பூமிநாதனின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய அவர், இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசுத் துறையினர் கையில் ஆறு புல்லட்டுடன் கூடிய கைத்துப்பக்கியை எடுத்துச் செல்லுமாறும் ஆபத்து ஏற்பட்டால் சுடுமாறும் அதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளது என்றும் “போலீசுக்கே” சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக தோழர்கள் போராட்டத்திலோ, ஆர்ப்பாட்டங்களிலோ கைதாகும் சமயத்தில், சட்டப்படி தமக்கு இருக்கும் உரிமைகள் குறித்து போலீசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினால், “போலீசுக்கே சட்டம் சொல்லித் தர்றியா?” என்று பாய்வார்கள் அதிகாரிகள். அந்த அளவிற்கு சட்டம் தெரிந்த போலீசாருக்கு டிஜிபி சட்டம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
கொள்ளையர்களை துரத்திப் பிடிப்பது போன்ற துணிகரமான சம்பவத்தில் ஒரு போலீசு ஈடுபட்டு, சமூக விரோதிகளால் அந்த அதிகாரி கொல்லப்படும் சமயங்களில் இத்தகைய பேச்சுக்கள் சமூகத்தின் அங்கீகாரத்தை உடனே பெற்றுவிடுகின்றன. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இதனை அறியாதவர் அல்ல. அந்த வகையில் அரசின் ஒடுக்குமுறைக் கருவியான போலீசுக்கு, ஆயுதத்தை தாராளமாக பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை சரியான நேரம் பார்த்து வழங்கியிருக்கிறார் டி.ஜி.பி.
எஸ்.ஐ. தரத்திற்கு மேல் இருக்கும் போலீசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே கைத்துப்பாக்கியை கையாளும் உரிமை இருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழக டிஜிபி அழுத்திக் கூறுவதன் பொருள் என்ன ?
அந்நிகழ்வில் பேசிய டிஜிபி கூடுதலாக அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் போலீசாருக்கு கைத்துப்பாக்கி, ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பிற போலீசாருக்கும் அந்த பயிற்சி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசு நிலையத்தில் கொடூரமாகத் தாக்கி படுகொலையை நிகழ்த்தியது கொரோனா ஊரடங்கு ரோந்து போலீசுதான். மதுரையில் விவேகானந்தக் குமார் எனும் இளைஞரை அடித்துக் கொன்றதும் ரோந்துப் போலீசுதான். இவர்கள் கையில் துப்பாக்கி இல்லாத போதே இத்தனைப் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், இத்தகைய போலீசுகளிடம் கைத்துப்பாக்கியை ஏந்திச் செல்ல அறிவுறுத்துகிறார்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் படுகொலையில் கூட போலீசு நிலையத்தில் போய் அடித்த காட்சியைக் கண்ட சக பெண் போலீசு ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தால் அந்தப் போலீசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இனி அந்தப் பிரச்சினையும் போலீசுக்கு இல்லை. பார்த்த இடத்திலேயே ‘சம்பவம்’ செய்துவிட்டு சர்வ சாதாரணமாக உயிருக்கு ஆபத்து நேர்ந்தது, அதனால் சுட்டேன் என்று கூறிவிட்டு மறுவேலையைப் பார்க்கச் செல்லலாம்.
எல்லாப் போலீசாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லையே என்றோ, உண்மையான கிரிமினல்களை பிடிக்கச் செல்லும் போலீசுக்கு என்ன பாதுகாப்பு என்றோ கேள்வி எழலாம். உண்மையான கிரிமினல்களைப் பிடிக்கச் செல்லும் நேர்மையான போலீசாரின் பாதுகாப்பிற்கு பல வழிகள் உள்ளன. கூடுதலாக போலீசை உடன் அழைத்துப் போகச் சொல்லலாம். பிற போலீசாருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செல்லலாம். சட்டையில் பொருத்தும் கேமராவோடு கூட ரோந்துக்குச் செல்லச் சொல்லலாம். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கையில் ரிவால்வரை எடுத்துக் கொடுப்பது என்பது, போலீசின் அதிகாரத்தை வரம்பற்றதாக்குவதோடு ’நல்ல’ போலீசுகளின் எண்ணிக்கையை ’கெட்ட’ போலீசுகளின் எண்ணிக்கையோடு சேர்த்துவிடும்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் வளர்ந்து வரும் சூழலில் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு கொடுக்கப்படும் மேலதிக சலுகைகள் தான் பாசிஸ்ட்டுகள் அரியணையில் ஏறி அமர துணை புரிகிறது என்பதுதான் வரலாறு. இங்கு டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு அறிவித்துள்ள துப்பாக்கிச் ‘சலுகை’, முற்போக்காளர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரானது என்பது அல்ல பிரச்சினை. போலீசால் கொல்லப்பட்ட மதுரை விவேகாணந்தனோ, ஜெயராஜ் – பென்னிக்சோ யாரும் செயற்பாட்டாளர்களோ போராளிகளோ அல்ல. சாதாரண நடுத்தர்வர்க்கத்தினர் தான் !!
தமிழக டிஜிபி ரோந்து செல்லும் போலீசார் கைய்டில் துப்பாக்கி ஏந்திச் சரியான அணுகுமுறையா ?
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மரணம் குறித்தே ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. மனோகர் மல்கோங்கரின் The Men Who killed Gandhi, தூஷார் காந்தியின் Let’s Kill Gandhi ஆகியவை இதில் மிக முக்கியமானவை. அதிலும் Let’s Kill Gandhi புத்தகம் மிகவும் விரிவானது. இந்த இரண்டையும் படித்துவிட்டாலே, காந்தி கொலைக்கான பின்னணி, சூழல், சம்பந்தப்பட்ட சதிகாரர்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில், காந்தியின் கொலை குறித்து புதிதாகச் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோதம்ராஜு எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் The Murderer The Monarch and The Fakir புத்தகம் தேசப்பிதாவின் கொலை குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.
காந்தி கொலையில் நாதுராம் கோட்ஸே, வி.டி, சாவர்க்கர், ஆப்தே உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் சாவர்க்கர் மட்டும் தப்பித்துவிட மீதமுள்ளவர்கள் தண்டனை பெற்றார்கள்.
ஆனால், இந்தக் கொலையில் வேறு சிலரின் தொடர்பும் இருந்திருக்கிறது. அதில் ஒருவர் ஆல்வாரின் மகாராஜாவான தேஜ் சிங் பிரபாகரும் ஒருவர். காந்தியைக் கொலை செய்யப் பயன்பட்ட ப்ரெட்டா பிஸ்டல், மகாராஜாவின் ஆயுத சேகரிப்பிலிருந்து வந்தது என அப்புவிடம் குறிப்பிடுகிறார் ஒரு மூத்த அதிகாரி.
இதிலிருந்து தன் தேடலை துவங்குகிறார் அப்பு. காந்தி கொலை குறித்த பல்வேறு தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மறுபடியும் புரட்டுகிறார். பிறகு இந்தத் தேடலில் பிரியங்காவும் இணைந்து கொள்கிறார்.
இந்தத் தேடல் முடியும் புள்ளி, வி.டி. சாவர்க்கர். காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆதாரங்கள் இல்லாமல் விடுவிக்கப்பட்டவர் சாவர்க்கர். காந்தி கொலையில் சாவர்க்கருக்கு தத்துவார்த்தரீதியான பங்கிருந்ததே தவிர, நேரடியாக அந்த சதியில் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போதுவரை சாவர்க்கர் ஆதரவாளர்களின் வாதம்.
ஆனால், உண்மையில் அந்த சதித்திட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் பங்கேற்று, முழுமைப்படுத்தியவர் சாவர்க்கர் என்ற முடிவுக்கு இந்தப் புத்தகம் வருகிறது.
தேசத்தந்தை கொல்லப்படுகிறார். அவர் கொல்லப்படுவதற்கான சித்தாந்தத்தை சாவர்க்கர் தருகிறார். அதற்காக நபர்களை ஒருங்கிணைக்கிறார். திட்டம் நிறைவேறிய பிறகு விலகிக்கொள்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த வரலாற்று நூல்களில் விறுவிறுப்பான, அட்டகாசமான புத்தகம் இது. கண்டிப்பாக படியுங்கள்.
நூலின் உட்தலைப்புகள் :
Book I : The Murderer
1. The August Conspiracy 2. The Accidental Breakthrough 3. The Recruit 4. The Beretta Gun that killed Gandhi
Book II : The Monarch
1. The Open Secret 2. Alwar and the Princely Affair 3. The Militarization of the Hindus
Book III : The Fakir
1. Imagined Enemies 2. The Idea of Hindutuva 3. Hindu Khatre Mein Hai 4. The Cult of Godse
மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி நிர்ணயிக்கக் கோரியும் டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது மோடி அரசு நடத்திய அரச வன்முறை வெறியாட்டங்களில் சில.. இங்கே கருத்துப்படங்களாக !
NEW DELHI, OCT 10 (UNI):-PMK Founder President S Ramadoss and his son and Rajya Sabha Member
Anbumani Ramadoss calling on Prime Minister Narendra Modi, in New Delhi on Thursday. UNI PHOTO CH 2 U
சன் நியூஸ் தொலைக்காட்சியில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடத்தப்பட்ட விவாத மேடை நிகழ்ச்சியில் பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு, “வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் தீண்டாமை என்ற ஒன்றைத் தவிர பொருளாதாரரீதியாக எவ்வித வேறுபாடும் இல்லை.” என்று கூறினார்.
அவர் கூறியது 100% உண்மை. வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையிலும் பெரும்பான்மையானோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் பாசிச திட்டங்களான 8 வழிச்சாலை முதல் ஹைட்ரோகார்பன், பாரத் மாலா வரை அனைத்து திட்டங்களிலும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
நாயக்கர், படையாட்சி, வன்னியர், வன்னிய கவுண்டர், பந்தல் வன்னியர், அரசு வன்னியர் இப்படி பல பிரிவுகளாக இருக்கும் இந்த சாதியை ராமதாஸ் மருத்துவராக இருந்தபோது துவங்கி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வன்னியர் சங்கமாக ஒருங்கிணைக்க முயற்சி செய்தனர்.
இந்தச் சாதிகளில் நாயக்கர்கள் படையாட்சிக்கோ, படையாட்சிகள் வன்னிய கவுண்டருக்கோ பெண் கொடுப்பது கிடையாது. ஏனெனில் அதற்குள்ளும் இவர்கள் படிநிலை வைத்திருக்கின்றனர். இந்தத் தீண்டாமையையும் உள்ளடக்கியதுதான் “வன்னியர் ஒற்றுமை”.
000
1987 இட ஒதுக்கீடு போராட்டம், அதைத் தொடர்ந்து பல தேர்தல்களில் மாறி மாறி அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நாறிப் போன பிறகும் ராமதாஸ் எப்படி வன்னியர் மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கிறார்?
ராமதாஸ் தன்னுடைய அரசியல் செல்வாக்கு சரியும் போதெல்லாம் ஒன்றுமில்லாத பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் மட்டுமே உயிர் வாழக் கூடிய ஒரு பிராணி.
2002 ஆம் ஆண்டு செல்வாக்கு சரிந்த நேரத்தில், ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிக்கிறார் என்ற மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டு, பாபா திரைப்பட பெட்டிகள் திருடப்பட்டன, எரிக்கப்பட்டன, தியேட்டர் அதிபர்கள் கடத்தப்பட்டார்கள். அந்த வேலைகளில் முக்கியமாக ஈடுபட்டது இன்றைய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் அன்றைய ராமதாஸின் முக்கிய நம்பிக்கையாக இருந்த வேல்முருகன்.
இப்படிப் பல மொக்கையான காரணங்களை பூதாகரமாக்கித்தான் வன்னியர் சமூகத்தினரின் மீதான தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஆனால் ஒருபோதும், வன்னியர் சாதி மக்களுடைய பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி உரக்கப் பேசியது கிடையாது.
தற்போதும் சீண்ட ஆளின்றி செல்வாக்கு சரிந்திருக்கும் நேரத்தில், ஜெய்பீம் படத்தை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, வன்னியர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து போன ராமதாசுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இதுபோன்ற குறுகிய சாதி ஆதிக்க பிரச்சினையை கிளப்பிவிட்டு தன்னை ஒரு அரசியல் தலைவராக எப்போதும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் வன்னியர் சாதி இளைஞர்களை சாதிவெறியூட்டி கலவரங்களில் ஈடுபடுத்துவதும் ராமதாசு கும்பலின் ஒரு வழக்கமாக இருக்கிறது.
000
வன்னியர் சங்கத்தின், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்பது ராமதாசை பாதுகாப்பதுதான். இதைத் தாண்டி வேறு எதுவும் எப்போதும் இருந்ததில்லை .
வன்னியர் சங்கத்தில் இருப்பவர்கள் ஆகட்டும், பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் ஆகட்டும் அவர்களை ராமதாஸ் எப்படி வைத்திருக்கிறார் என்பதற்கு சில சான்றுகள்.
தற்பொழுது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கக் கூடிய அருள்மொழியின் தம்பி இளங்கோவன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியே போனபோது இளங்கோவனை மிகவும் ஆபாசமாக வசை பாடி போஸ்டர்கள் ஒட்டினார்கள். ஒரு காலத்தில் ராமதாசுக்கு, புரட்சி சாயம் பூசிய தீரனுக்கு இதைவிட மிக மோசமான நிலைமை இருந்தது. தீரன் மீண்டும் பாமகவிற்கு வந்து வந்துவிட்டார்.
தலித் ஒருவரை எப்போதும் பொதுச் செயலாளராக வைத்திருப்பேன் என்று கூறிய ராமதாஸ், தன்னை எவ்வாறு அவமானப்படுத்தினார் என்பதை கண்ணீர் விட்டு அழுதார் தலித் எழில்மலை.
வீரப்பனை வைத்து நாடகம் எடுத்து, வீரப்பன் பெயரைச் சொல்லி வன்னிய இளைஞர்களை சாதிவெறியேற்றி பெரும்பணம் சம்பாதித்த ராமதாஸ் இடம் சென்று “எனக்கும் என் குடும்பத்திற்கும் பணம் கொடுங்கள்” என்று கேட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி துரத்தி அடிக்கப்பட்டார் தைலாபுரத்தில் இருந்து.
ராமதாசுக்காக பல கலவரங்களை செய்து புகழ்பெற்ற காடுவெட்டி குரு, மருத்துவம் பார்க்க வழி இல்லாமல் கிடந்ததும் அதற்காக அவர்கள் குடும்பத்தினர் தைலாபுரத்தில் வாசலில் காத்துக் கிடந்ததும், அவர்களையும் துரத்தியடித்தவர் தான் இந்த ராமதாஸ் .
வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வன்னியர்களை வன்னியர் சங்கம் தண்டிக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் 3 பேரை உயிரோடு எரித்த வன்னியர்களை வன்னியர் சங்கம் கண்டிக்கவில்லை.
வன்னியர் சங்கத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியிலும் கடுமையாக உழைக்கும் யாருக்கும் எப்பொழுதும் எம்எல்ஏ, எம்.பி சீட்டு கிடைப்பதில்லை. மாறாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் பினாமிகளுக்கே சீட் கொடுக்கப்படுகிறது. இது எல்லாம் வன்னியர் சங்கத்தில் இருக்கும் நபர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நபர்களுக்கும் தெரியாதா?
தெரியும். சாதி என்று வந்து விட்டால் எல்லா அநியாயங்களும் அக்கிரமங்களும் புனிதம் ஆகிவிடும் என்பதற்கு ராமதாசு ஒரு எடுத்துக்காட்டு. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்ட நபர்கள் கூட சாதி பாசத்தால் பாமகவிற்கு ஓட்டு போட்டனர், ஓட்டு கேட்டனர்.
ஆர்எஸ்எஸ் எப்படி சித்தாந்த ரீதியாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது இந்த அடிமைகளை உருவாக்கி வருகிறதோ அதே போல ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்கள் சாதி சங்கத்தை அடிமைகளுக்காகவே உருவாக்கி வருகிறார்கள்.
000
ஒதுக்கீடு – உள்ஒதுக்கீடு என்ற ஏமாற்று!
1987 இட ஒதுக்கீடு போராட்டத்தின் விளைவாக, ஏறத்தாழ 108 சாதிகளை ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு
20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் ஏறத்தாழ 15 சதம் வரை அவர்களே அனுபவித்தனர்.
திடீரென்று உள்ஒதுக்கீடு ஒரு பிரச்சினை என்று கூறி ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றார். இது உருவாக்கும் பொழுது சட்டத்தின் முன் நிற்காது தோற்றுவிடும் என்று ராமதாஸ் உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்தாலும் வன்னியர் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அதை உருவாக்கினார்.
இந்த உள் ஒதுக்கீடு கோரிக்கையை கூட முதலில் ராமதாஸ் வைக்கவில்லை. சி.என். ராமமூர்த்தி என்பவர் இது தொடர்பாக பல ஆண்டுகள் வழக்கு நடத்தி அதற்கான தீர்ப்பையும் பெற்றார். அதன்படி உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும் பொழுது ராமமூர்த்தி பெயர் வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே ராமதாஸ் ஒரு நாள் கலவரம் செய்து 10.5 சதவிகிதத்தைப் பெற்றார். அனைத்துத் துறைகளும் தனியார் மயமாகி விட்ட பிறகு ஒதுக்கீடு வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை .
இன்றைக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என ஆனபிறகு அதை வைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சாதியினர் மீதும் தலித்துகள் மீதும் அவதூறு பரப்புவதையே முக்கிய வேலையாக கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ்-ம் வன்னியர் சங்கமும் :
சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தே கிராமங்கள்தோறும் உள்ள வன்னியர் சங்க கிளைகள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பொருளாதாரரீதியாக படிப்படியாக முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறி வரும் பொழுது அவர்கள் இதுவரை தங்கள் பழக்க வழக்கத்தில் இல்லாத பல பார்ப்பனிய சடங்குகளில் மூழ்கிப் போய் கிடக்கின்றார்கள்.
குறிப்பாக, திருமணங்களில் பார்ப்பனர்களை அழைக்கும் வழக்கம் வன்னியர்களுக்கு இல்லை. இப்பொழுது ஏனைய மற்ற சாதிகளைப் போலவே வன்னியர்கள், பார்ப்பனர்களை அழைப்பதை ஒரு முக்கியமான விதி ஆக்கியிருக்கிறார்கள்.
ராமதாஸ் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கொள்ளையடிப்பதற்காகவுமே வன்னியர் சங்கத்தை பார்ப்பனியத்திடம் அடகு வைத்திருக்கிறார் .
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் பாடும் உரிமைக்காகப் போராடிய ஆறுமுகசாமி பிறப்பால் வன்னியர் சாதியை சேர்ந்தவர். அவருடைய தமிழ் பாடும் உரிமைக்காக போராடி அவரை சிற்றம்பல மேடையில் ஏறி பாட வைத்தது நக்சல்பாரி கம்யூனிஸ்ட் அமைப்புகள் தலைமையிலான கூட்டமைப்புதான். இந்தப் போராட்டத்தில் பாமகவின் பங்கு என்ன? பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதும் என்பதைத் தாண்டி என்ன இருக்கிறது?
தன்னுடைய சாதியை இழிவு படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள் என்பதற்காகவும் ராமதாஸ் சொன்னதைக் கேட்கவில்லை என்பதற்காகவும் ராமதாசை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட கலவரங்கள் , போராட்டங்களின் தன்மையோடு வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படக்கூடிய நதிநீர் பிரச்சினை, விவசாய பிரச்சனை, அடிப்படைப் பொருளாதார பிரச்சினைக்கு ராமதாஸ் என்ன செய்தார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் அப்போதுதான் ராமதாஸின் உண்மை முகம் தெரியும்.
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுவதால், பெட்ரோல் விலை உயர்வால், சிலிண்டர் விலை உயர்வால், ஜி.எஸ்.டி.-யால் வன்னியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா?
அதற்கெல்லாம் வெறுமனே ஒரு அறிக்கையோடு நின்றுவிடும் ராமதாசு, ஜெய்பீம் படத்தை வைத்து ஆடுவதற்கு காரணம் என்ன?
மக்கள் பாதிக்கப்படக்கூடிய அடிப்படை பிரச்சினைகளை எதிர்த்துப் போராடினால் அது ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போய் முடியும். ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறிவிட்ட ராமதாசும் அவரது குடும்பமும் இழந்த சொர்க்கத்தை மீட்டு எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தங்கள் தேவைக்காக வன்னியர் சாதி மக்களை அடகு வைக்கிறார்கள். கொம்பு சீவி விடுகிறார்கள். இது எல்லாம் வன்னியர் சங்கத்தினருக்கு தெரிந்த போதும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
பாமகவுடன் கூட்டணி வைக்க 500 கோடி வாங்கினார் என்றும், எங்கையா யாரு கூட எப்ப வேணா கூட்டணி வைப்பார் என்றும், பெருமையாக பேசிக் கொண்டு திரிபவர்களைத் தானே ராமதாஸ் உருவாக்கி இருக்கிறார் .
இது சரியோ அதற்காக போராட வேண்டும் இது நியாயமோ அதற்காக உறுதியாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி எவன் நம் ஜாதியோ அவனுக்காக இருக்கவேண்டும் என்ற இழிவான ஒரு பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன, சாதி சங்கங்கள். இது ஆதிக்க சாதி சங்கங்களின் மட்டுமல்ல தற்போது தலித் சாதி சங்கங்களிலும் பரவி வருகின்றது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் தாங்களும் மன்னர் பரம்பரை ஆதிக்கசாதி பெருமை பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றே இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி.
10.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏற்கெனவே இதுவரை முரண்பாடே ஏற்பட்டிராத சாதிகளுக்குள்ளும் முரண்பாட்டை உருவாக்கி இருக்கிறது ஆர்எஸ்எஸ்.
000
ஜெய்பீம் படத்தில் அக்கினிச்சட்டி காலண்டர் இருக்கின்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அடுத்ததாக குருவின் பெயர் உள்ளது என்றும் அதற்குப் பிறகு வன்னியர்கள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்றும் அதற்கடுத்து வன்னியர்களை மொத்தமாக அவமதித்து விட்டார்கள் என்றும் ஒரு நீண்டகால திட்டத்தோடு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன .
சேலம் தெற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் எம்எல்ஏவான அருள் என்பவர் சேலம் மாவட்டம் முழுவதும் சூர்யாவுடைய திரைப்படத்தை எந்தத் திரையரங்கும் திரையிடக்கூடாது என்று மிரட்டல் கடிதம் அனுப்புகிறார் .
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரான பாலு, ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தால் வன்னியர் மக்களின் உணர்வுகள் ‘வேறு’ மாதிரி இருந்திருக்கும் என்று மிரட்டுகிறார்.
ராமதாஸ் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள காடுவெட்டி குருவின் மருமகன் அக்னி கலசத்தை அவமானப்படுத்தி விட்டார்கள், அது வன்னியர்களின் சின்னம் என்று கூறுகிறார்.
இயக்குனர் வ. கௌதமன் வன்னிய குடியே தமிழகத்தில் மிகப்பெரிய குடி. அதை அவமானப்படுத்துகிறார்கள், திராவிடர்கள் திட்டமிட்டு தமிழ் சாதிகளுக்குள் சண்டையை மூட்டி விடுகிறார்கள் என்று புதுக்கரடி விடுகிறார். சீமானோ, அக்னி கலசத்தை திட்டமிட்டு வைத்ததாக கூறுகிறார்.
வன்னியர் சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்து ஒவ்வொரு வன்னியர்கள் வீட்டிலும் செங்கல், சிமெண்ட், நகையாகவும் பணமாகவும் பெற்ற பல கோடி ரூபாய் வன்னியர் அறக்கட்டளையாக இருந்தது. வன்னியர் அறக்கட்டளையை தற்பொழுது ராமதாஸ் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார். தமிழகத்திலேயே மிகப்பெரிய குடியான வன்னிய குடியை ஏமாற்றிய ராமதாஸ் மீது கவுதமனுக்கு கோபமில்லை .
கௌதமன் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்காக இருந்தாரா ? இல்லை, அவர் அதிகாரவர்க்கத்தின் வன்னியர்களுக்கான நபராகவே இருந்திருக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நாடகம் எடுத்த வ. கௌதமன், பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ராமதாஸ் எதுவும் செய்யாததை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுதான் அவர் யோக்கியதை.
சமீப கால வரலாற்றில் சுமார் 30 ஆண்டுகளுக்குள் நடந்த வரலாற்றிலாவது வன்னியர்களுக்கு ராமதாஸ் ஏதாவது உதவி செய்திருக்கிறாரா ? உபத்திரவம் தான் செய்திருக்கிறார். அதற்கான உதாரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிவிரைவு படை
பழங்குடியின மக்களையும் வன்னியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த காலம் அது. பள்ளி கட்டிடங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் சித்திரவதை செய்வதற்கென்றே தனி இடம் இருந்தது.
அதில் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களையும் பழங்குடியின மக்களையும் கொண்டுவந்து போலீசை சித்திரவதை செய்வார்கள். ஜன்னல்களில் கையை கட்டி போட்டு தண்ணீரை தட்டில் வைப்பார்கள் நாய்போல நக்கித்தான் குடிக்க வேண்டும்.
அங்கே தங்கியிருந்த அதிரடிப்படைக்கு எதிராக , வன்னியர் சாதி மக்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக ஒருநாள்கூட வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியோ போராட்டம் நடத்தியதில்லை.
வீரப்பன் படுகொலை செய்யப்பட்டபோது, இன்றைக்கு வீரப்பனுடைய படத்தை பெருமையாக போட்டுக்கொண்டு திரியும் எந்த வன்னியர் சங்கமும் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. போலீசின் அடக்குமுறைக்கு எதுவும் பேசாமல் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்த வேலையைத்தான் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்தது.
தேவாரத்திற்குப் பிறகு அதிரடிப் படைக்கு பொறுப்பு ஏற்று செயல்பட்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வன்னியரான கோபாலகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி வன்னியர் சாதி மக்களையும் பழங்குடியின மக்களையும் செய்த சித்தரவதைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதனாலேயே வீரப்பன், கோபாலகிருஷ்ணனுக்கு குறிவைத்ததும் கோபாலகிருஷ்ணன் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னம் ஆனதும் அனைவரும் அறிந்ததே.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான தோழர் கொளத்தூர் மணி தன்னுடைய பேட்டியில் , “எங்களுடைய ஊரில் இருந்து இரண்டு பேருந்துகள் நிறைய மக்கள் அதிரடிப்படை வன்னியர்களை சித்திரவதை செய்வது தொடர்பாக தைலாபுரத்தில் சென்று முறையிட்டார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் ராமதாஸ் செய்யவில்லை” என்பதையும் “வன்னியர் என்றாலே அவர்களை கைதுசெய்து அதிரடிப்படை போலீஸார் கடும் சித்திரவதைகள் செய்தனர்” என்பதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைக்கு ஒட்டுமொத்த வன்னியர் மக்களின் அத்தாரிட்டி ஆக தன்னைக் கூறிக்கொள்ளும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் யோக்கியதையை தெரிவிப்பதற்காகவே மேற்கண்ட சில சம்பவங்களை கூறவேண்டி உள்ளது.
000
சூர்யா நடமாட முடியாது என்று கூறும் காடுவெட்டி குருவின் மகனும் மருமகனும் வன்னியர் சொத்துக்களான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றிய ராமதாஸ் வீட்டின் முன் நின்று பேசுவதற்காகவாவது வக்கிருக்கிறதா ? இவர்கள் எல்லோரும் சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் பிராணிகள்.
ராமதாஸ் போல தங்களால் வன்னியர் சாதி மக்களை கொள்ளையடிக்க முடியவில்லையே, அதிகாரத்தை செலுத்த முடியவில்லையே என்பதுதான் இவர்களின் ஏக்கம். அதனால்தான் ராமதாஸுக்கு எதிராக இருந்தாலும் ராமதாஸின் திட்டத்தில் இவர்களெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள்.
வன்னியர் அறக்கட்டளை மூலமாக எத்தனை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து உள்ளார்கள்?
செங்கல்வராய நாயக்கர் என்ற வன்னியர் சாதியைச் சேர்ந்தவர் தன்னுடைய சொத்துக்களை வன்னியர் சாதியை சேர்ந்த ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து போனார். செங்கல்வராய நாயக்கர் ட்ரஸ்டின் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு பாமக முயற்சிசெய்தது, செங்கல்வராய நாயக்கர் டிரஸ்ட்டை ஆய்வு செய்ய வந்த நீதிபதியை கொலை செய்யவும் முயற்சி செய்தது.
அக்னி கலசம் வன்னியர்களின் சின்னமா?
உலகத்தில் எந்த ஒரு ஜாதியும் பிறக்கும்போதே குறிப்பிட்ட சின்னத்தோடு பிறப்பதில்லை. அந்த சாதிக்காக உருவாவதாக, உருவாக்கியதாக சொல்லப்படக்கூடிய கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு சின்னத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த சின்னத்தை கேலி பேசினாலே அது ஒட்டுமொத்த ஜாதியும் இழிவுப்படுத்துவதாக பேசுகிறார்கள்.
அக்கினி கலசம் என்பது வன்னியர்களின் சின்னம் அல்ல . அது மாறாக ராமதாசுடைய வன்னியர் சங்க சின்னம் தான் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைத் தலைவரான திருமால்வளவன் ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவிக்கிறார். 1980-களில் தொடங்கப்பட்ட ஒரு சங்கத்தின் சின்னம் எப்படி ஒட்டுமொத்த வன்னியர்களின் சின்னமாக இருக்க முடியும்?
ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிப் பெருமையைப் பறைசாற்றுவதற்காக பார்ப்பனர்களின் அடிமையாக இருப்பதை நிரூபிப்பதற்காக பல்வேறு புராணங்களையும் கதைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள். அதன்படி புராணம் கொண்ட ஒரே சாதி வன்னியர் சாதிதான் என்ற பெருமையோடு வன்னியர் பெருமை தொடங்குகிறது.
அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தனது நெற்றியில் இருந்த வியர்வையை யாககுண்டத்தில் விட்டு அதிலிருந்து பிறந்தார்கள் வன்னியர்கள் என்ற கட்டுக்கதையை உண்மையாக்க ராமதாசு, கௌதமன் போன்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலுக்கு ஒவ்வாததை புறந்தள்ள வேண்டும் என்பதே மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான விதியாகும். ஆனால் யாககுண்டத்தில் இருந்து பிறந்தார்கள் என்ற ஒரு அறிவியலுக்குப் புறம்பான ஒன்றை அவர்கள் நம்புகிறார்கள் என்றால் அது அவர்களின் உரிமை. ஆனால் அதைத்தான் எல்லோரும் நம்ப வேண்டும் என்று திணிப்பது எவ்விதத்தில் நியாயம்? டி.என்.ஏ டெஸ்ட் செய்தால் தெளிந்துவிடும் நெருப்பிலிருந்து வந்தார்களா இல்லையா என்று?
திண்டுக்கலில் கிறித்துவ வன்னியர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கிறார்கள். அவர்களும் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வந்தார்களா என்ன? விவிலியத்தில், உலகத்தை இயேசு உருவாக்கிய கட்டுக்கதைகளை, கிருத்துவர்கள் நம்பிக் கொண்டிருந்தாலும் அதை கேலிக்குள்ளாக்குபவர்கள் மீது வன்மத்தோடு பாய்வதில்லை. ஏனென்றால் உலகம் ஒரு கோள வடிவமானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற சார்லஸ் டார்வினின் கோட்பாடு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் மருத்துவமனைக்கு தான் சொல்கிறார்கள். கோயிலுக்குத் தூக்கி செல்பவர்களை உலகமே மூட நம்பிக்கையாளர்கள் என்று கேலி பேசிக்கொண்டிருக்கிறது.
இச்சூழலில் நாங்களெல்லாம் யாககுண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று வன்னிய சாதிவெறியர்கள் சொல்வதற்கும், நாங்களெல்லாம் சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருந்து நேரடியாக வந்தோம் என்று தீட்சிதர்கள் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
நாங்கள் பிறப்பிலேயே சிறந்தவர்கள் , மேன்மையானவர்கள் என்ற மூடநம்பிக்கை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன்மூலம் இயல்பிலேயே தங்கள் ஆதிக்கம் நியாயமானதுதான் என்பதை கூறுகிறார்கள்.
000
எதைப்பற்றி யாரும் விமர்சனம் செய்தாலும் எங்கள் இனம், எங்கள் சாதி, எங்கள் மதம் புண்பட்டு விட்டது என்றால் எதைத் தான் பேச முடியும் ? பெருமாள்முருகன் ஒரு கதையை எழுதினார் என்பதற்காக தங்கள் மனம் புண்பட்டதாகச் சொல்லி, கவுண்டர் சாதிவெறியர்கள் மிரட்டி உருட்டி அவரை ஊரைவிட்டே துரத்தினார்கள்.
ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனம் அரசியல் ரீதியாக இருக்கவேண்டுமே, ஒழிய தங்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று பேசுவதாக இருந்தால் யாரும் எதையும் உருவாக்க முடியாது படைக்க முடியாது. அப்படிப்பார்த்தால் வ. கௌதமன் எடுத்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் தொடர்பான நாடகங்கள் போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகச் சொல்லலாமல்லவா ?
தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கு மேல் வன்னியர் சாதி மக்களின் எண்ணிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ராமதாசுக்கு ஓட்டு போடுவதில்லை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் கலவரம் செய்வதற்காக ஒரு கும்பலை உருவாக்கியிருக்கிறார். அதன்மூலம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றியும் பெற்றுள்ளார். ராமதாஸின் இடத்தைப் பெறுவதற்கு தான் அனைத்து சாதிக் கட்சிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
ஜெய் பீம் திரைப்படம் குறித்து அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுதினார். இதுகுறித்து பதில் கடிதம் எழுதியுள்ள அன்புமணி, வில்லனுக்கு பின்புறம் அக்னிசட்டிக்கு பதிலாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அல்லது தீரன் சின்னமலையின் படம் இருந்தால் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். தலித் சாதி மட்டுமல்லாமல், ஏனைய பிற ஆதிக்க சாதிகளுடனும் முரண்பாட்டை உருவாக்கி அதன் மூலம் வன்னியர் சாதி மக்களை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்போடு ராமதாஸ், அன்புமணி கும்பல் தீவிரமாக இறங்கி இருக்கிறது .
10.5 சதவீத சதவிகித உள் ஒதுக்கீடு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு இருந்து மற்ற சாதியினர் உடனான முரண்பாட்டை ராமதாஸ் கும்பல் தொடர்ச்சியாக வளர்த்து வருகிறது.
இதன் மூலம் இழந்த பெருமையை மீட்டுருவாக்கம் செய்ய ராமதாஸ் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக ஆர்.எஸ்.எஸ் தற்பொழுது களமிறங்கி இருக்கிறது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டில் சாதி மதம் இவற்றிலிருந்து பெரும்பான்மையான மக்கள் ஓட்டு போடுவதில்லை. ஆனால் அதை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திலுள்ள தமிழ் இன உரிமைக்கான போராட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகத்தான் தமிழ் நாட்டை அடிமைப்படுத்த முடியும் என்பதில் மோடி ஆர்எஸ்எஸ் கும்பல் தெளிவாகவே இருக்கிறது. அதற்கு ஒரு வாய்ப்பாகவே ஜெய்பீம் படப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
வட மாவட்டங்களிலும் வன்னியர் சங்கம் அசாதாரணமான வளர்ச்சி பெற்றது எவ்வாறு என்பதற்கான பதிலை காடுவெட்டி குரு கொடுக்கிறார். “வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் “, என்று கூறியிருக்கிறார்.
வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பற்றி எழுந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்காக வன்னியர் சங்கத்தை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொண்டது, ஊக்குவித்தது. நக்சல்பாரி இயக்கத்தின் தியாகி தோழர் பாலன் தலைமையில் எங்கெல்லாம் இரட்டைக் குவளை முறை அழித்து ஒழிக்கப்பட்டதோ, சாதி வேற்றுமை களையப்பட்டதோ அங்கெல்லாம் வன்னியர் சங்கம் மூலம் மீண்டும் தீண்டாமைக் கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன, நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
000
இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. நாட்டின் உழைக்கும் மக்களை சுரண்டி ஓட்டாண்டியாக்குகின்ற தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும் அதற்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய நம் முன்னுள்ள கடமை. அதற்குத் தடையாக இருக்கக்கூடிய பார்ப்பனிய இந்து மத வெறியையும் அதற்கு அடிப்படையாக உள்ள சாதி வெறியயும் ஒழித்துக்கட்டுவதும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய பணியாகும்.
2024-ம் ஆண்டு காவி கார்ப்பரேட் பாசிச அரசை நிறுவ வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படும் மோடி – ஆர்.எஸ்.எஸ்.-க்கு தமிழகத்தை கூறுபோட்டாக வேண்டும் என்பது லட்சியம்.
மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காக அவர்களை வர்க்கமாக அணிதிரட்டி காவி கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக நிறுத்துவது என்ற பணியை நாம் தீவிரமாக முன்னெடுக்கா விட்டால், பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் இன ஓர்மையை ஒழித்துக்கட்டி சாதி ரீதியாக பல கூறுகளாக தமிழகத்தை பிரித்து வைக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம் நிறைவேறி விடும் என்பது மட்டும் உண்மை .
வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.
ஐவர் ராஜாக்கள் கதை
பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டைத் தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. கம்பணன் தென் நாட்டில் படையெடுத்தான். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், ‘நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். வித்தவராயன் படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும்போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின்வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டே இருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில் நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள்.
எல்லோரிலும் இளையவனான குலசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்து விட்டால் பாண்டியர் எதிர்ப்பு அடங்கும் என்று கன்னடிய மன்னன் எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை . குலசேகரன், வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டையேறினாள்.
இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 400 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை, கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்து விட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.
ராமப்பய்யன் கதை
திருமலை நாயக்கன், தன்னுடைய காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொணரப் பல போர்களை நடத்தினான். அவனுடைய தளவாய் ராமய்யன் தென் பாண்டி நாடு முழுவதையும் வென்று அடிமைப்படுத்தினான். இராமநாதபுரம் சேதுபதிக்கும், ராமய்யனுக்கும் பல போர்கள் நடந்தன. இப்போரில் இலங்கையிலிருந்து வந்த டச்சுப் போர்க் கப்பல்கள் பங்கு கொண்டன. சடைக்கத் தேவனது மருமகன் வன்னியன் வீரத்தோடு போராடி மாண்டான். இறுதியில் சேதுபதி சிறைப்பட்டான்.
செஞ்சிக் கோட்டை
தண்டனையால் பகைமையை வளர்த்துக் கொள்ளுவதைவிட நட்புரிமையால் சேதுபதியை அணைத்துக் கொள்ள எண்ணி திருமலை நாயக்கன் அவனை விடுதலை செய்து கடற்கரை மண்டலத்தின் அதிபதியாக நியமித்து, ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அளித்து அவனோடு உறவு பூண்டான். இச் சேதுபதியே பிற்காலத்தில் மைசூர் மன்னன் மதுரையைப் பாதுகாக்கப் பெரும் படையோடு சென்று போராடினான். திருமலை நாயக்கனது பெருமையையும், ராமய்யனுடைய வீரத்தையும், சடைக்கனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் போற்றிப் பாடும் நாட்டுப்பாடல் ராமப்பய்யன் அம்மானை.
இரவிக்குட்டிப்பிள்ளை
இதுபோலவே ராமப்பய்யன் தெற்குக் கோடியில் திருவனந்தபுரம் மன்னர்களோடு, பல போர்கள் புரிந்திருக்கிறான். ஆரல்வாய் மொழிக் கோட்டையிலிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும், நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றவும் செய்த முயற்சியே இது. இம் முயற்சியை நிறைவேற்ற ராமய்யன் பெருபடை கொண்டு ஆரல்வாய் மொழியை முற்றுகையிட்டான். மலையாள மன்னன் படை சிதறியோடியதும் இரவிக்குட்டி என்ற இளைஞன் படைகளைச் சேகரித்து பெரும் படையை எதிர்த்துப் போராடினான். அரசனை எதிர்த்து நின்ற எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற பிரபுத்துவத் தலைவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார்கள்.
இரவிக்குட்டிப்பிள்ளைக்கு துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1637லும், 1639லும் நடைபெற்றவை.
தேசிங்குராஜன் கதை
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்?
இலட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்கு ஏற்ப வாகனங்களை மாடுகளுக்கான ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணிகளைத் துவக்கிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் !
கொரோனாவில் மொத்த மாநிலமே கதிகலங்கி நின்றது. மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சுடுகாட்டு பற்றாக்குறை, கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்தது, கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட கொரோனா சடலங்கள் என உத்தரப் பிரதேசத்தின் மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை கொரோனா அம்பலப்படுத்தியது.
கொரோனாவால் மரணமடைந்தவர்களை எடுத்துச் செல்ல வண்டியில்லாமல் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட நிலைமையை சீர்படுத்துவது குறித்து எதுவும் பேசாத யோகி, மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் தருகிறார்.
இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!
“மூன்று வேளாண் சட்டங்களை பெருவாரியான விவசாயிகள் ஏற்றுக் கொண்டார்கள். சிறு பிரிவினர் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை” என்று கடந்த நவம்பர் 19, 2021 அன்று தொலைக்காட்சியில் தோன்றி கூறிய மோடி, 3 வேளாண் சட்டங்களையும் இரத்து செய்வதாக அறிவித்தார்.
3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய மோடி எப்படியெல்லாம் முயற்சித்தார் என்பதை விளக்கும் சில காட்சிகளை இங்கே மாதிரி படங்களாகக் கொடுத்திருக்கிறோம். இதே போன்ற எண்ணற்ற நிகழ்வுகளே மோடியின் முயற்சிகளின் அடையாளங்கள்.
நாடெங்கும் உள்ள மோடியின் அடிமைகள், இந்தச் சட்டம் பின்வாங்கப்பட்டதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கீழ்கண்ட விதத்தில் தங்களுக்கு விவசாய சட்டங்களை ‘புரிய வைக்க’ முயற்சித்த மோடிக்கு விவசாயிகள் தங்களது வழிமுறையில் விரைவில் வர்க்கக் கோபம் என்றால் என்ன என்பதை அறியத் தருவார்கள்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் படிப்படியாக செயல்படத் தொடங்கியிருக்கிறன. நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலுமான பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா காலத்தில் முறையான பள்ளிப்படிப்பைப் பெற முடியாத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான ஆறு மாதகாலத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
‘‘இல்லம் தேடிவரும் கல்வி’’ என்றும் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் மூலம், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாலை ஐந்து முதல் ஏழு மணி வரை குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்கு, பள்ளி செல்லாத காலத்தில் விடுபட்ட பாடங்களை நடத்துவது, தற்போது பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கான இடைவெளியை நிரப்புவது என்பதை நோக்கமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
இத்திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. ஒன்றிய அளவில் இரண்டு ஆசிரியர்கள் மேற்பார்வையிடுவது, கல்வித்துறை அதிகாரிகள் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும், சோதிக்கவும் பொறுப்பேற்பது என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அதிகாரிகளே மாநில அளவில் தலைமை தாங்குவார்கள் எனவும், இத்திட்டத்திற்கென 200 கோடி ரூபாயை மாநில அரசே ஒதுக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரந்தோறும் குறைந்தது ஆறு மணிநேரம் கற்பித்தல் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகள் கொடுக்கவிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய கல்விக்கொள்கையைப் புறவழியாகத் திணித்து பள்ளிக்கல்வியைப் பலவீனப்படுத்தும் திட்டம், ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவ வாய்ப்பளிக்கும் திட்டம் என்ற விமர்சனங்களை மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் இத்திட்டத்தின் மீது முன்வைத்துள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ‘சமூகநீதி’ சான்றிதழ் வழங்கி வந்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் கூட, ‘‘ஆர்.எஸ்.எஸ் அபாயம் கொண்ட திட்டம்’’, ‘‘புதிய கல்விக் கொள்கையைத் துண்டு துண்டாக நடைமுறைபடுத்தும் திட்டம்’’ என்று விமர்சித்திருக்கிறார்.
000
2020 மார்ச் இறுதியில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலம் முதல் 2021 அக்டோபர் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் தமது இயல்பான பள்ளிக்கூட படிப்பை இழந்து விட்டனர். ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்குமே இக்காலகட்டம் பெரிய இழப்பு மட்டுமல்ல, பாடம் பயிலும் மனநிலையில் பெரும் பாதிப்பு, வேலைகளுக்குச் செல்ல வேண்டிய குடும்பச்சூழல் போன்ற நெருக்கடிகள் உருவாகியுள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது.
இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளவும், மாணவர்களை பள்ளிச்சூழலுக்கு மீண்டும் தயார்படுத்தவும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், எதிர்க்கட்சிகளும் இதுநாள் வரை எந்தவிதமான ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லை. அதே நேரத்தில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தொடர்ந்து இப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்து வந்தது.
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலை பரவிய காலகட்டத்தில், 2021 மே மாதம் முதலே, பள்ளி ஆசிரியர்கள் தலைமையில், பட்டதாரி இளைஞர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி, குடியிருப்புப் பகுதிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் திட்டத்தை பு.மா.இ.மு முன்வைத்தது. இதன் மூலம், மாணவர்களை பள்ளிச்சூழலுக்குத் தயார்படுத்த வேண்டுமென வலியுறுத்தியது. சில கல்வியாளர்களும் இப்பிரச்சினை குறித்து பேசியிருக்கின்றனர். அப்போதெல்லாம் காதுகொடுக்காத தமிழக அரசு, நிலைமை சீராகிவிட்ட பின்னர், பள்ளிகள் எல்லாம் திறக்கப்பட்ட பின்னர், இல்லம் தேடி கல்வி இயக்கத்தை அறிவித்திருப்பது எதற்காக?
கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் மாணவர்களுக்கு மேல் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக இவ்வாண்டு வந்துள்ளதாக தமிழக அரசே கூறியிருக்கிறது. அப்படியெனில், மாணவர்களின் கற்றல் இடைவெளியை நிரப்புவதில் ‘அக்கறை’ கொண்ட அரசு செய்ய வேண்டிய உடனடிக் கடமைகள் என்ன?
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஓராசிரியர், ஈராசிரியர் தொடக்கப்பள்ளிகளில், வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருக்க வேண்டும். ஆசிரியர், வகுப்பறைகள், குடிநீர், கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக, தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
பள்ளிக்கல்வியைப் பலவீனப்படுத்தும் வகையில், புதிய கல்விக்கொள்கை அடிப்படையில், பள்ளிக்கு வெளியே தன்னார்வலர் மூலம் கற்பித்தல் முறையைத் திணித்திருக்கிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதாகவும், தமிழகத்திற்கென புதிய கல்விக்கொள்கையை உருவாக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும் சொல்லிக் கொண்டே, கொல்லைப்புற வழியாக புதிய கல்விக்கொள்கையைத் திணிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. அதனால்தான், தி.மு.க.வின் கழக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று சதாசர்வகாலமும் பேசிவரும் பார்ப்பன தினமலர் பத்திரிகை ‘‘புதிய கல்வி கொள்கைக்கு செயல் வடிவம் − இல்லம் தேடி கல்வி’’ என இத்திட்டத்தைப் பாராட்டுகிறது; பா.ஜ.க.வோ திமுக அரசின் இத்திட்டத்தை வரவேற்கிறது.
புதிய ஜனநாயகம் மாத இதழ் சந்தா :
‘‘இல்லம் தேடி கல்வி’’ இயக்க அறிவிப்பு வந்துள்ள அதே நேரத்தில்தான், ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான வித்யா பாரதி, ‘‘கல்வித்துறையில் சேவைபுரியும் ஆர்.எஸ்.எஸ்−ன் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, பாரதிய பண்பாட்டு வகுப்பு என்பது பள்ளியிலும் பொது தளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பாரதிய பண்பாட்டு வகுப்பில், வளரும் நமது குழந்தைகளுக்குத் தேவையான ஹிந்து சமய கதைகள், ஆன்மிக பெரியோர் வரலாறு, ஹிந்து வாழ்வியல் நெறிமுறை, பாரத நாட்டின் வீர வரலாறு, பண்புக் கதைகள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இந்த வகுப்பை தங்கள் பகுதியில் நடத்த ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக சேவை எண்ணம் கொண்ட தன்னார்வலர்கள் தேவை…’’ என்ற அறிவிப்பைச் செய்துள்ளது. இதே வகையிலான தன்னார்வலர்களைத்தான் இல்லம் தேடி கல்வி இயக்கமும் தேடிக் கொண்டிருக்கிறது.
இதனாலேயே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம், காவி கும்பலின் இலக்குப் பகுதிகளான கொங்கு மண்டலம், தென் தமிழகம் ஆகியவற்றில், பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு மனதில் இந்த காவி கும்பல் இந்துமதவெறி நஞ்சை விதைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை திமுக அரசு நன்கு உணர்ந்திருந்தும், காவி கும்பலின் ‘சமூக’ சேவை அமைப்புகளுக்கு இந்தத் திட்டத்தில் இடமில்லை என்று அறிவிக்கவில்லை. இதுதான், ‘‘சமூக நீதி’’, ‘‘மத நல்லிணக்கம்’’, ‘‘பாசிச எதிர்ப்பு’’ பேசி ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் உண்மை முகம்.
இந்தத் திட்டம் மட்டுமல்ல, 3, 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வை, ‘‘கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் குறைபாட்டைக் கண்டறியும் இந்தத் தேர்வு நவம்பர் 12−ம் தேதி நடைபெற உள்ளது’’ என மத்திய அரசு அறிவித்ததை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது திமுக அரசு. ஏற்கெனவே, 2018−19 கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கையை அதிமுக அரசு திணிக்க முயற்சி செய்தபோது, அதைக் கடுமையாகச் சாடியது திமுக. இப்போதோ, ‘அடிமை’ எடப்பாடி வழியில் வீறுநடை போடுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் புதிய கல்விக்கொள்கையை மட்டுமல்ல சமஸ்கிருதத் திணிப்புக்கும் வழிவகை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. பார்ப்பனிய கலை வடிவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கலைவிழாக்களை, ‘கலா உத்சவ் – 2021’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் மட்டத்தில் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் அடிமை அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நடத்தப்படுவது தான் என சில ‘திடீர்’ உடன் பிறப்புக்கள் திமுக−வுக்கு முட்டுக் கொடுக்கக்கூடும்.
புதிய கல்விக்கொள்கையை நிராகரிப்பதாக தமிழக முதல்வர் மேடையில் பேசிவிட்டு இறங்கும் நேரத்திலேயே, அதற்கு எதிரான அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அறிவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், ‘‘தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படவிருப்பதாக’’ தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது எட்டுக் கட்ட பயிற்சி என்றும், அதன் முதல்கட்டம் வருகின்ற நவம்பர் 15 முதல் 7 வரை இணையவழியில் பயிற்சிப் பட்டறை நடக்கவிருப்பதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் தொழிற்கல்வி இணை இயக்குனர் 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தப் பயிற்சியை தில்லியைச் சேர்ந்த கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (Centre for Cultural Resources and Training) அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இந்த கலை மற்றும் கலாச்சாரப் பயிற்சியை நடத்த உத்தரவு போடுகிறது திமுக அரசு.
தொகுப்பாக சொன்னால், காவிகளால் இந்த நாட்டுக்கு ஆபத்து என்றும், தாங்கள்தான் சமூக நீதிக் காவலர்கள் என்றும் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது திமுக. மாணவர் விரோத புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும், மாற்றுக் கல்விக்கொள்கை உருவாக்கவிருப்பதாகவும் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். அதே கட்சி, அதே முதல்வர்தான், இப்போது புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்கள், வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறையை காவி–கார்ப்பரேட் கும்பலுக்குத் திறந்து விடும் ‘கரசேவை’யை, ‘‘கல்வியில் நடக்கும் மாபெரும் புரட்சி’’, ‘‘மறுமலர்ச்சி’’ என வர்ணிக்கிறார் முதலமைச்சர்.
சமூகநீதி, திராவிடம் ஆகியவற்றின் எல்லை எதுவென காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தால், ‘கேப்பையில் நெய் வடியும்’ என சத்தியம் செய்தவர்கள், தி.மு.க.வின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள், தி.மு.க. அரசு கல்வியில் செய்துவரும் ‘கரசேவைக்’ குறித்து மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ்மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியவை. இவை யாவும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டவை. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.
முத்துப்பட்டன் கதை
முத்துப்பட்டன் பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள்.
முத்துப்பட்டன் கதையில் வரும் சம்பவங்கள் சாதிப் பிரிவின் பொய்மையையும், மானிட உயர்வின் மேன்மையையும் போற்றிக் கூறுகிறது. உயர் குலத்தவன் ஒருவன் தனது சாதியினரின் கொடுமைகளை உணர்ந்து உழைப்பாளிகளுள் ஒருவனாக இணைந்து, அவர்கள் குலத்துப் பெண்களை மணம் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்ததை இக்கதை விவரிக்கிறது. இக்கதைத் தலைவன் மானிட உணர்வின் உருவமாகப் பிறருக்காக உயிர் விடும், தியாக மூர்த்தியாக உண்மைக் காதலின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். இக்கதை பரவியுள்ள தென்பாண்டி நாட்டில், மக்கள் இவ்வுயர்ந்த பண்புகளைப் போற்றி, முத்துப்பட்டனைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.
சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ்பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.
நல்லதங்காள் கதை, தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கதை. இக்கதைப் பாத்திரங்கள் சிற்சில பண்புகளுக்குப் பிரதிநிதிகளாக இன்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளார்கள். உதாரணமாக கொடுமைக்காரியான அண்ணியை ‘மூளியலங்காரி’ என்று அழைக்கிறார்கள்.
இக்கதையில் வரும் மூளியலங்காரி, தனது கணவனின் தங்கையைக் கொடுமைப்படுத்தி, அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவள். தங்கையின் மீது அன்பாக இருக்கும் அண்ணனை இன்றும் இக்கதையில் வரும் அண்ணன் பெயரை வைத்தே நல்லண்ணன் என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பஞ்சத்தால் தாய் வீட்டுக்கு வருகிறாள் நல்லதங்காள். தாய் தந்தையர் இல்லை. அண்ணன்தானிருக்கிறான். அவன் மிக நல்லவன். அவளையும், குழந்தைகளையும் பராமரிக்கிறான்.
அவன் வெளியில் சென்றிருக்கும் போது அவனுடைய மனைவி மூளியலங்காரி. குழந்தைகளையும், நல்லதங்காளையும் படாத பாடு படுத்துகிறாள். அண்ணனும், தங்கையும், சிறுவயதில் வளர்த்த செடிகள் மரமாகிப் பழுத்திருக்கின்றன. பழங்களைப் பறிக்கக் கூடாதென்கிறாள் அண்ணி.
தன்னுடைய உழைப்பினால் பயன்தரும் பழத்தைத் தொடக் கூடாது என்று அண்ணி சொல்லுவதை எண்ணி நல்லதங்காள் வருந்துகிறாள். அவளுடைய மான உணர்ச்சியை மூளியலங்காரி புண்படுத்துகிறாள். இதனைத் தாங்க முடியாமல் அவள் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தானும் விழுந்து விடுகிறாள். உண்மையறிந்த நல்லண்ணன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறான்.
இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூத்தாக நடிக்கப்பட்டது. பெண்களுக்குப் பிறந்தகத்தில் சொத்துரிமை யில்லாததால் வரும் அவதிகளை இக்கதை விவரிக்கிறது. உரிமை யற்றவளாக அடிமையிலும் இழிவானவளாக, தான் பிறந்த வீட்டில் தானும் உழைத்து உருவாக்கிய நலன்களில் பங்கில்லாதவளாக உழலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதி நல்லதங்காள். இச்சமூக அமைப்பு முறையில் பலியானவள் நல்லதங்காள்.
சின்ன நாடான் கதை. சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று, அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.
சின்ன நாடான் கதை உண்மையான நிகழ்ச்சி. ஐந்து சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் ஆண்பிள்ளை பிறந்தது. அவன்தான் சின்னநாடான் என்ற குமாரசுவாமி. ஐந்து சகோதரர்களும் பண்ணையார்கள். அவர்கள் அனைவருடைய சொத்துக்களும் இவனையே சேர வேண்டும். பதினாறு வயதில், இவனுக்கு இரண்டு வயதான தங்கள் சகோதரியின் மகளை மணம் செய்து வைத்தார்கள். சகோதரியின் புருஷனுக்கும் ஏராளமான நிலபுலன்கள் உண்டு. குமாரசுவாமி இளைஞனானான். ஐயம் குட்டி என்ற நாவித குல மங்கையைக் காதலித்தான். தைரியமாக அவளோடு கூடி வாழ்ந்தான். அவனது குழந்தை மனைவி பக்குவமடையவில்லை. அதுவரை அவரது தந்தையும், சிறிய தந்தைமாரும் இவ்விஷயம் தெரிந்தும் தெரியாதது போலிருந்து விட்டார்கள்.
குழந்தை மனைவி பெரியவளானவுடன், ஐயம் குட்டியைப் பிரிந்து வந்து மனைவியோடு வாழ அழைத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஐயம்குட்டியே, தன் மனைவியென்றான். இதைப் பொறாது அவர்கள் பலமுறை அவனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். முடியவில்லை . கடைசியில் வஞ்சகத்தால்
அவனைக் கொன்றுவிட்டனர்.
சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது. அதற்காக மகனைக் கொல்லவும் தந்தை துணிந்தான் என்பதையே இக்கதை புலப்படுத்துகிறது.
கௌதலமாடன் கதை
மாதர் மீது ஆண்கள் கொள்ளும் இருவகை உணர்ச்சிகளைக் கௌதல மாடன் கதை சுட்டிக் காட்டுகிறது. இக்கதையில் சாதிக்கும். நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது.
கௌதல மாடன் ஒரு போக்கிரி. அவன் வாழ்ந்த ஊரிலேயே பூவாயி என்னும் சக்கிலியப் பெண்ணும் வசித்து வந்தாள். அவள் கறவை மாடுகள் வைத்து பால், மோர் முதலியன விற்று ஜீவனத்தை நடத்தி வந்தாள். அவள் தாழ்ந்த குலத்தினளாதலால் உயர் சாதியினர் அவளிடம் பால், மோர் முதலியவற்றை வாங்க மாட்டாராதலால் பக்கத்தூரில் உள்ள ஒரு பட்டாணியன் வீட்டிற்குச் சென்று மோர் விற்று வந்தாள். பட்டாணியனும் அவளை ஒரு சகோதரியாகக் கருதி வந்தான்.
ஒரு நாள் மோர் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது கௌதல மாடன் அவளை வழிமறித்து சரச வார்த்தைகள் பேசினான். ஆனால் பூவாயி திரும்பி வருவதாகக் கூறி அந்தச் சமயத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். மறுநாள் தன் பட்டாணிய சகோதரனிடம் முதல் நாள் நடந்ததைக் கூறி வருந்தினாள். பட்டாணியன் அவளோடு உடன் பிறந்தவனல்லன். ஆனால் உடன் பிறந்தவளைப் போன்று அவளை நினைத்திருந்ததனால் அவனது மானிட உணர்வு அவளைக் காப்பாற்றத் தூண்டியது.
தான் அவளுக்கு, அவளது ஊர்வரை துணை வருவதாகக் கூறினான். அவளை முன்னே போகச் சொல்லி அவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். வழியில் கௌதல மாடன் பூவாயியை வழிமறித்து அவளை வலிந்து தழுவ முயன்றான். பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணியன் அதைக் கண்டு, கௌதல மாடன் மேல் பாய்ந்தான். இருவரும் போராடி உயிர்நீத்தனர். தன்னைக் கெடுக்க வந்தவனுக்கும், தன்னைப் பாதுகாக்க வந்தவனுக்கும், உயிர் போக தானே காரணமானதை எண்ணி பட்டாணியன் இடுப்பிலுள்ள கத்தியை உருவி தன் வயிற்றில் குத்திக்கொண்டு இறந்தாள்.
இக்கதை சாதி உணர்வு, மத உணர்வு இவற்றிற்கெல்லாம் மேலாக மானிட உணர்வைப் போற்றுகிறது. அது இந்தச் சாதிக்குத்தான் சொந்தம் என்று இல்லை. ‘குலத்தளவாகுமாம் குணம்!’ என்ற பிற்போக்கான பழமொழியை இக்கதை பொய்யாக்குகிறது. மானிட உணர்வு சாதி கடந்தது. இங்கே பட்டாணியனிடம் அது இருக்கிறது. தன் உடலின்பத்துக்காகத் தன் வலிமையைப் பயன்படுத்துகிறான் கௌதல மாடன். அதற்குக் குறுக்கே வந்த பட்டாணியனை எதிர்த்து மூர்க்கமாகப் போராடி அவனைக் கொன்றான். பட்டாணியன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மானத்தைக் காக்கப் போராடினான். அவனும் உயிர் நீத்தான். பட்டாணியனது வீரம் பிறருக்குப் பயன்பட முனைந்தது. மானிட உணர்வோடு கூடிய வீரம் கிராம மக்களால் போற்றப்படுகிறது.
வெங்கல ராசன் கதை
ஈழ நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக மலையாளத்திலுள்ள முட்டத்திற்கு வெங்கல ராசனும், அவனது இரு பெண்களும் வந்து சேர்ந்தனர். முட்டத்தில் புதிதாகக் கட்டிய கோட்டையினுள் வாழும் குடிமக்களுடன், அவர்களும் வாழ்ந்து வந்தனர். வெங்கல ராசனின் இரு பெண்களும் மிகவும் அழகானவர்கள். வந்திருப்பதோ புதிய இடம். ஆகையால் வெங்கல ராசன் அவர்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. பறக்கை என்பது முட்டத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊராகும். அங்கு தேர்த் திருவிழா நடைபெற்றது. வெங்கல ராசனின் பெண்களும் தேர்பார்க்க ஆசைப்பட்டுத் தகப்பனிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவன் அனுமதி கொடுக்க மறுத்து விட்டான்.
வெங்கலராசன் கதையை விளக்கும் கல்வெட்டு
தேர் பார்க்கும் ஆசையில் சகோதரிகள் இருவரும் தகப்பனுக்குத் தெரியாமல் பறக்கைக்குச் சென்று திருவிழா பார்த்தனர். அவ்விருவரது அழகையும் கண்ட மலையாள ராஜா அவர்களை அடைய ஆசைப்பட்டு இன்னாரென அறிந்து வைத்துக் கொண்டார். திரும்ப சகோதரிகள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மகாராஜாவின் வேலையாள் வெங்கலராசனிடம் அவனது இரு பெண் மக்களையும் மகாராஜாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டதாகக் கூறினார். பின்பே தன் பெண்கள் பறக்கைக்குத் திருவிழா பார்க்கச் சென்றதையறிந்து கொண்டான்.
மலையாள ராஜாவினுடைய பரம்பரையில் ராஜ்யத்திற்கு வாரிசாகும் உரிமை அரசனது சகோதரியின் சந்ததிக்கே உரித்தாகும் என்பதால் அரசர்கள் மணம் செய்து கொள்ளுவதில்லை. அந்தப்புரத்தில் காதற் கிழத்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காதற்கிழத்திகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வாரிசு உரிமை கிடையாது. காதற்கிழத்திகள் அம்மச்சி என்று மதிப்புடன் அழைக்கப்பட்டனர்.
அரசனது பரம்பரை வழக்கத்தை அறிந்த வெங்கலராசன் தன் பெண்களை அரசனது அந்தப்புரக் காதலிகளாக்குவதற்கு விரும்ப வில்லையாதலால் அரசனது விருப்பத்துக்கு உடன்பட முடியாதென மறுத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன் தனது படையை அனுப்பி வெங்கலராசனைப் பணியவைக்க நினைத்தான். படைகள் கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தன. வெங்கல ராசனின் மூத்தமகள், தங்களால் ஒன்று மறியாத குடிமக்களும், மற்றவரும் துன்பப்பட வேண்டாம் எனக் கருதி, துணிவு மிகுந்தவளாதலால் தன் தந்தையிடம் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து விட்டால் அரசன் மனம் மாறித் திரும்பிப் போய் விடுவான் எனக் கூறினாள். அதைக் கேட்ட வெங்கல ராசன் முதலில் பெற்ற பாசத்தால் மனம் கலங்கி மறுத்தானாயினும், மற்றவரின் நன்மையை உத்தேசித்து மகளின் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே வீசியெறிந்தான்.
பெண்களை எதிர்பார்த்து வந்த அரசன் அதில் ஒருத்தியின் தலை துண்டிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தவுடன் மனம் கலங்கி, அத்தலையை ஒரு பல்லக்கில் வைத்து மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வழிபட்டான்.
சமூகக் கதைகள் பற்றிய கருத்து
இரண்டு மாறுபட்ட சமுதாய அமைப்புகளில் வளர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் முரண்பாடுகளை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. மணமுறை பற்றிய வெங்கல ராஜனின் கருத்தும், மலையாள ராஜனின் கருத்தும் மோதிக் கொள்ளுகின்றன. அதன் விளைவு பலவீனமான சமூகத்திற்கு அழிவைத் தருகிறது.
சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே.
இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்ற முடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப் பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளி யெறிப்பட்டன.
தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும் சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.
முன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவிப்பு ! விவசாயிகளின் தொடர்போராட்டத்திற்கு பணிந்தது, பாசிச மோடி அரசு!
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
மோடி அரசு பாராளுமன்றத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி ஓராண்டு நிறைவுறும் நிலையில் இதற்கு எதிரான போராட்டமும் வரும் நவம்பருடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் இன்று (19.11.2021) பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாகவும், குறிப்பாக இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை விளைவிப்பதாக இருந்தாலும் சில விவசாய சங்களுக்கு தங்களால் புரியவைக்க முடியாத காரணத்தால் இந்த சட்டத்தை வாபஸ்பெறுவதாக கூறியுள்ளார், மோடி.
விவசாயிகளின் போராட்டத்தால் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மறைத்துக்கொண்டு தாங்கள் இப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள்தான் என்று நாடகமாடுகிறார், பாசிச மோடி. பிரதமரின் இந்த அறிவிப்பை கூட நம்ப முடியாது என்று சில விவசாய சங்கங்கள் வரும் நவம்பர் 29ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரில் அதிகாரபூர்வமாக சட்டமாக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் பாசிச மோடி அரசை விவசாயிகளின் போராட்டம் பணியவைத்துள்ளது என்பதே உண்மை.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் என்பது இந்திய விவசாயிகள் போராட்டத்தில் முத்திரை பதித்த மாபெரும் போராட்டம். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உபி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும், கொரானா பெருந்தொற்று காலகட்டத்திலும் தனது உயிரை துச்சமாக மதித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தில் இதுவரை 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது இன்னுயிரை ஈந்துள்ளனர். இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகள், அமைப்புகள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் போட்டுள்ளன மத்திய மாநில அரசுகள்.
11 முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சித்து விவசாயிகள் மீதே பழி போட்டு ஈவு இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது ஒன்றிய அரசு.
எதற்கும் பணியாத விவசாயிகள் அம்பானி அதானியின் கிடங்குகளை பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டு போராடினர், பா. ஜ. கட்சியினரை, அமைச்சர்களை விவசாயிகளின் அனுமதியின்றி ஊருக்குள் நுழைய விடாமல் அரியானாவில் பெரும் போராட்டம் நடந்தது. இந்த மூன்று மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது.
பல மாநில அரசுகள் இந்த விவசாயிகளின் ஆதரவாக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றின. இந்த நெருக்கடியை தாங்கமுடியாமல் கார்ப்பரேட் கைக்கூலியாக செயல்படும் பாசிச மோடி அரசு, அடாவடியாக நடந்துகொண்டது. இந்த ஆத்திரத்தில்தான் உபி லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி நசுக்கி கொல்லும் அளவிற்கு தனது ஆத்திரத்தை காட்டியது பாஜக பாசிச கும்பல்.
அரியானாவில் பாஜகவினரை ஊருக்குள், கோயிலுக்குள், நுழைய விடாமல் நடந்துவரும் போராட்டங்கள், நடக்க இருக்கும் மூன்று மாநில் தேர்தல்கள், ஓராண்டு போராட்டம் நிறைவுறும் நிலையில் அடுத்தடுத்த விவசாயிகளின் போராட்ட அறிவிப்புகள் பாசிஸ்ட்டுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதுதான் மோடி அரசு இச்சட்டத்தை திறும்ப பெறுவதாக அறிவித்துள்ளதற்கு காரணம்.
வீரம் செறிந்த தொடர் போராட்டம் மட்டுமே பாசிஸ்டுகளை பணியவைக்கும் என்பதற்கு இப்போராட்டம் ஓர் படிப்பினை.
தேர்தல் மூலம் மட்டுமே பாசிஸ்டுகளை முறியடிக்க முடியும் என்று ஒரு புறமும், தேர்தலையும் ஒரு கருவியாக பயன்படுத்தினால் மட்டுமே பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும் என்று மறுபுறம் கதைப்பதும் தவறானது என்பதை நிரூபிக்கும் படிப்பினை ஆகும். விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும், புதிய புதிய முறைகளிலும் எந்த அளவிற்கு நாம் போராடுகிறோமோ அந்த அளவிற்குதான் வெற்றி கிடைக்கும், முன்னேற முடியும் என்பதை இப்போராட்டம் கற்றுக்கொடுத்துள்ளது.
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்-ற்கு எதிரான போராட்டம், பெட்ரோல் – டீசல், கேஸ் விலைவுயர்வுக்கு எதிரான போராட்டங்கள் உழைக்கும் மக்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தற்போதய இந்த விவசாயிகளின் போராட்ட முறைகள், போராட்ட படிப்பினைகளை வரித்துக்கொண்டு அவற்றை உயர்த்தி பிடிப்போம்!
விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் தியாகத்தையும், போராட்ட வழிமுறைகளையும் உயர்த்தி பிடிப்போம்.!
உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை இரத்தச் சேற்றில் மூழ்கடிக்க காவி பாசிஸ்ட்டுகள் செய்யும் சதி!
பாசிஸ்டுகளின் ஆட்சியில் படுகொலைகளுக்கா பஞ்சம் வேண்டும்! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுச்சியோடு முன்னேறிய போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 2020−ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியையே கலவரக் காடாக்கினார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்தனர்.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்திரப்பிரதேசம் − என இந்துத்துவத்தின் செல்வாக்கு மண்டலங்களையே கிட்டத்தட்ட ஓராண்டாக உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் பாசிஸ்ட்டுகளின் ஆத்திரத்தை தூண்டாமலா இருக்கும்? உ.பி மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் படுகொலை, அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு.
000
கடந்த செப்டம்பர் 25−ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்திலுள்ள சம்பூர்ண நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், விவசாயிகள் போராட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துப் பேசினார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா.
இதைக் கண்டித்து, லக்கிம்பூருக்கு அருகிலுள்ள பகுதியில் அக்டோபர் 3-ஆம் தேதியன்று, மல்யுத்தப் போட்டியைத் துவக்கி வைக்க வந்த அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் அஜய் மிஸ்ரா ஆகியோருக்குக் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
அப்போராட்டத்தில் பங்கேற்று அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீதுதான் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வெறித்தனமாக காரை ஏற்றி 4 விவசாயிகளை நசுக்கி படுகொலை செய்தான். இச்சம்பவத்தில் ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டார்.
‘‘இது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது’’ என ஓட்டுக் கட்சித் தலைவர்களே அதிர்ச்சியடையும் வண்ணம், தாங்கள் தான் செய்தோம் என்று தெரிய வேண்டுமென்பதற்காகவே பட்டப்பகலில் துணிச்சலோடு இப்பச்சைப் படுகொலையை அரங்கேற்றியுள்ளார்கள் காவி பாசிஸ்டுகள்.
இச்சம்பவம் நாட்டிலுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கிய நிலையில் விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் இப்படுகொலைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல்களையும் நடத்தி வருகின்றன.
அனைத்தையும் வெளிப்படையாக நிகழ்த்திவிட்டு, ‘‘ஆதாரம் இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என திமிரோடு பதிலளித்த யோகி ஆதித்யநாத் அரசு, இப்படுகொலைகளை ‘‘துரதிருஷ்டவசமானது’’ எனக் கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கேலி செய்திருக்கிறது.
இந்தப் படுகொலைகளைக் கண்டு நாடே கொந்தளித்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தானே முன்வந்து விசாரிக்கிறது. இப்படுகொலை தொடர்பாக ‘‘உ.பி அரசின் விசாரணை திருப்திகரமாக இல்லை’’ என்று கண்டிப்பது போன்ற தோரணையைக் கொடுக்கிறது. இதற்கு முன்னர், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம், குஜராத் படுகொலை வழக்கு என காவி பாசிஸ்டுகள் நடத்திய எல்லா வன்முறைகளிலும் அவர்களின் கையாளாகச் செயல்பட்டதுதான் இந்த உச்ச நீதிமன்றம் என்பதை நாம் நினைவில் கொண்டே இதனைப் பார்க்க வேண்டும்.
உ.பி-யின் போராடிய விவசாயிகள் மீது பா.ஜ.க. அமைச்சரின் மகன் காரை ஏற்றி நான்கு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக் குற்றவாளி ஆசிஷ் மிஸ்ராவைக் கைது செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் (AISA) கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். போராடிய மாணவிகளின் பிறப்புறுப்புகளில் எட்டி உதைத்து தனது வக்கிரத்தையும் பொறுக்கித்தனத்தையும் காட்டியுள்ளது டெல்லி போலீசு. இப்படி நீதிகேட்டு போராடுபவர்களையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது, காவி ஆட்சி.
அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது தற்போது நடத்தப்பட்டிருக்கும் இந்தப் படுகொலை, பாசிஸ்டுகளின் தற்செயலான தாக்குதல் அல்ல. சுமார் 11 மாதங்களாக போர்க்குணமிக்க வகையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் ‘‘டெல்லி சலோ’’ போராட்டத்தை, இரத்தச் சேற்றில் மூழ்கடித்து, ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் காவி பாசிஸ்டுகள் களமிறங்கியிருக்கிறார்கள் என்பதையே நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் காட்டுகின்றன.
லக்கிம்பூர் படுகொலையின் பின்னணி
லக்கிம்பூர் படுகொலையை காவிகள் முன்னறிவித்து செய்தார்கள் என்பது முக்கியமானது. சம்பூர்ண நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அஜய் மிஸ்ரா ‘‘இங்குள்ள மக்களுக்கு எனது வரலாறு தெரிந்திருக்கும், நான் நினைத்தால் விவசாயிகளின் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைப்பேன்’’ என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துப் பேசினார். அதைத் தொடர்ந்துதான் விவசாயிகள் கோபமுற்று, அஜய் மிஸ்ராவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். அப்போராட்டத்தில்தான், அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா விவசாயிகளை கார் ஏற்றிப் படுகொலை செய்கிறான்.
அஜய் மிஸ்ரா மட்டுமல்ல, அதற்கடுத்த நாள் சமூக வலைதளங்களில் அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள மனோகர் லால் கட்டார், பா.ஜ.க.வின் விவசாயப் பிரிவு கூட்டமொன்றில் பேசிய காணொலி வெளியானது. அதில் ‘‘அரியானாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் 700 முதல் 1,000 தன்னார்வலர்களைத் திரட்டி குழுக்கள் அமைக்க வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் அக்குழுக்களை இறக்கிவிட வேண்டும். இதற்காக கட்டைகளைக் கையிலெடுங்கள். சிறை செல்வது, ஜாமீன் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று தங்களது திட்டத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், அரியானாவில் விவசாயிகள் நடத்திய ஒரு முற்றுகைப் போராட்டத்தின்போது, ‘‘பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்’’ என்று கர்னால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் உத்தரவிட்டதை தற்போது நினைவில் கொள்வோம்.
காவி பாசிஸ்டுகளின் இத்தகைய மிரட்டல் பேச்சுக்களை வெறும் வாய்ச்சவடால்கள் என்றோ, அவர்கள் நடத்தும் தாக்குதல்களை அந்தந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் நிகழ்பவை என்றோ நாம் பார்க்க முடியாது. கடந்த ஆண்டில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களை, குறிப்பாக டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை இந்தப் பாசிசக் கும்பல் வன்முறையை ஏவிவிட்டுக் கலைக்க முயன்றதைப் போலவே விவசாயிகள் போராட்டத்திலும் செய்ய விரும்புகிறார்கள். அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையே நடப்பு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.
விவசாயிகள் போராட்டத்தின் மீதான காவி பாசிஸ்டுகளின் அணுகுமுறை
‘‘காலிஸ்தானிகளின் போராட்டம்’’, ‘‘பாகிஸ்தான் பின்னணி’’, ‘‘மாவோயிஸ்டு தூண்டுதல்’’ என்பது போன்ற தமது வழக்கமான அவதூறு பிரச்சாரங்களையும் தாண்டி விவசாயிகளின் போராட்டம் ‘‘டெல்லிச் சலோ’’ முற்றுகைப் போராட்டமாக வளர்ந்ததையும், உலகம் முழுவதும் கவனம் பெற்ற போராட்டமாக மாறியதையும் காவிகள் எதிர்பார்க்கவில்லை.
கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விவசாயிகள் மக்கள் உறவினர்கள்.
‘குடியரசு’ தினத்தன்று விவசாயிகள் நடத்திய அணிவகுப்பின் போது, தனது ஐந்தாம் படையை அனுப்பி செங்கோட்டையில் கொடியேற்ற வைத்து, ‘‘விவசாயிகள் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள்’’ என்று காவி கும்பல் நடத்திய நாடகமும் அம்பலப்பட்டுப்போனது. விவசாயிகளது போராட்டத்தை தனிமைப்படுத்தி ஒழித்துவிட வேண்டும் என்ற சங்க பரிவாரக் கும்பலின் பல்வேறு முயற்சிகளும் பயனற்றுப் போயின.
மத்தியில் ஆளும் காவி பாசிசக் கும்பலின் நெருக்கடிகளையும் தாண்டி சுமார் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நீடிப்பது மகத்தான விஷயம்தான் என்றபோதும், அப்போராட்டம் தற்போது எதிர்கொண்டிருக்கும் தேக்கநிலையையும் நாம் பரிசீலித்தாக வேண்டும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நீண்ட காலத்திற்கு முன்பே தனியார் கொள்முதலை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் (அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகமாக கொள்முதல் செய்யும் மாநிலங்கள்) போராடும் விவசாயிகளைப் போல நாட்டின் மற்ற மாநில விவசாயிகள் கிளர்ந்தெழவில்லை, விவசாய அமைப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அடையாளப் போராட்டங்களை நடத்துகிறார்கள்.
இச்சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஓர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு விவசாயிகளின் போராட்டத்தை இரத்தச் சகதியில் மூழ்கடிக்கவும், அதன் மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது, காவி பாசிச கும்பல். இந்த நிகழ்ச்சி நிரலின் தொடக்கம்தான் லக்கிம்பூர் தாக்குதல்.
பாசிச மயமாகி வரும் அரசு எந்திரமும்; போராட்டத்தின் மீதான அவற்றின் எதிர்நிலைப் போக்கும்
காவி − கார்ப்பரேட் நலனுக்கான திட்டங்களை உழைக்கும் மக்கள் எதிர்த்துப் போராடும் போதெல்லாம், காவி பாசிஸ்டுகள் தமது சொந்த பலத்தை வைத்து மட்டுமே அப்போராட்டங்களை ஒடுக்குவதில்லை. போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அரசுக் கட்டமைப்புகளை தமது காவி − கார்ப்பரேட் பாசிச நலனுக்கு ஒத்திசைவாக சேவை செய்யக்கூடிய அடியாள் படையாக மாற்றியுள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் போராட்டத்தின் மீது சட்டப்பூர்வமான அடக்குமுறையைச் செலுத்தி, அதை விரைந்து முடித்து வைக்கும் நரித்தனத்தை உச்ச நீதிமன்றம் ஆரம்பம் முதலே செய்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் ஒருகட்டத்தில், அம்பானியின் ஜியோ டவர்களை நொறுக்குவது, ஜியோ சிம்கார்டுகளை எரிப்பது − புறக்கணிப்பது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளைக் கைப்பற்றி கட்டணங்களை ரத்து செய்வது, ஆளும் கட்சித் தலைவர்களின் அலுவலகங்களை முற்றுகையிடுவது என ஆளும் வர்க்கங்களை அச்சமுறச் செய்வதாக மாறியபோது விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கைத்தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ‘‘விவசாயிகள் போராடுவதில் நியாயம் இருக்கிறது’’ என்று கூறி விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல தோரணை காட்டியது உச்ச நீதிமன்றம். போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டி அமைப்பதாகவும், அதனால் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு வேளாண் சட்டங்களையும் இடை நிறுத்தமும் செய்தது.
உச்ச நீதிமன்றம் நியமித்த இப்பேச்சுவார்த்தைக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர்கள் வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்பதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தின. இக்கமிட்டியின் யோக்கியதையைக் கேள்விக்குள்ளாக்கிய விவசாயிகள் அதைப் புறக்கணித்து உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர்.
இன்று, ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலோடு சேர்ந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்தை பகிரங்கமாக எதிர்த்து பேசி வருகிறது உச்ச நீதிமன்றம். சமீபத்தில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அனுமதி கேட்டபோது, ‘‘விவசாயச் சட்டங்களுக்குத்தான் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே, இன்னும் ஏன் போராடுகிறார்கள்?’’ என்று நியாயவாதம் பேசியது உச்ச நீதிமன்றம். மேலும், தலைநகர் டெல்லியின் குரல்வளையை நெறிக்கிறீர்கள், நெடுஞ்சாலைகளையும் முடக்கியுள்ளீர்கள்; அமைதிப் போராட்டமா நடக்கிறது? குடிமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்களது சொத்துக்கள் சேதப்படுத்தப் படுகின்றன’’ என சங்கப் பரிவாரங்களின் குரலில் பேசியிருக்கிறது.
தேசிய மனித உரிமை ஆணையமோ இன்னும் ஒருபடி மேலே சென்று, தொழில்துறை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக பதிலளிக்கக் கோரி டெல்லி, அரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, விவசாயிகள் போராட்டத்தைக் கலைப்பதற்கான முகாந்திரத்தை சட்டரீதியாக உருவாக்கிக் கொடுக்கிறது.
‘‘போக்குவரத்து முடங்கியுள்ளது, நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’’ என நீலிக்கண்ணீர் வடிக்கும் மனித உரிமை ஆணையத்திற்கு, இப்போராட்டத்தில் இதுவரை 605 விவசாயிகள் பலியானதும், விவசாயிகள் மீதான போலீசின் கொடூர தாக்குதல்களும் கண்ணிலேயே படுவதில்லை. கர்னால் தாக்குதல், லக்கிம்பூர் படுகொலைகள் எல்லாம் மனித உரிமை மீறலாகவும் தெரிவதில்லை.
உழைக்கும் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே மோடி அரசைப் பணியவைக்கும்
டெல்லி சலோ − விவசாயிகள் போராட்டம் என்பது தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் நடக்கும் ஒரு முக்கியத்துவமிக்க மக்கள்திரள் போராட்டமாகும். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், மோடி அரசோ இம்மியளவும் இறங்கி வரவில்லை, இந்தக் காவிக் கும்பல் கார்ப்பரேட்டுகளின் தீவிரமான விசுவாசமிக்க அடியாள் படை என்பதால் இனியும் இறங்கிவர வாய்ப்பில்லை.
மக்களிடையே எழும் அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் பரிசீலித்துப் பார்க்கும் ஜனநாயகப் பண்பை நாம் பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்கவும் கூடாது. ஆகவே, ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து பாசிஸ்டுகளுடன் களத்தில் மோதுவதே நாம் செய்ய வேண்டிய பணி.
ஆனால் ‘‘புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்’’ என்ற ஒரே முழக்கத்தின் கீழ் ஒரு சில வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே தீவிரமாக பங்குபெறும் இப்போராட்டத்தினால் இதை நாம் சாதித்துவிட முடியாது. தொழிலாளர் சட்டங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள், நீட் − புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் − ஆசிரியர்கள், மீன்வளச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் மீனவர்கள், பொதுத்துறை தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள், காவி பாசிஸ்டுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் சிறுபான்மையினர் − தாழ்த்தப்ட்ட மக்கள், ஊபா − என்.ஐ.ஏ போன்ற ஆள்தூக்கி கொடுஞ்சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களும் ஓரணியில் திரட்டப்பட வேண்டும்.
‘‘காவி−கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்’’ என்ற பொதுக் கோரிக்கையின் கீழ் அனைவரும் அமைப்புரீதியாகத் திரண்டு போராடுவதே அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவதற்கான பாதை. தனித்தனியாக தமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்ற மக்களிடம் இதை பிரச்சாரமாக எடுத்துச் செல்வது, அவர்களை அணிதிரட்டுவது என்ற மாபெரும் கடமை காவி − கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்கின்ற அனைத்தும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன் நிற்கிறது.