Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 228

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர் 26

அனைவரும் பங்கேற்று வரலாறு படைப்போம் !
மக்கள் உழைப்பையும் நாட்டின் வளங்களையும் சூறையாடும் கார்ப்பரேட் -காவி பாசத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் !

அன்பார்ந்த தொழிலாளர்களே!

விலைமதிக்க இயலாத இரயில்வே குத்தகைக்கு, BSNL, LIC பொதுத்துறை பங்குகள் விற்பனை, மொத்தமாக தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, சுற்றுசூழல் திருத்தச் சட்டம், ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக கிரிமினல் சட்டங்களில் திருத்தங்கள் என கொரானா நெருக்கடியிலே தினமொரு திருத்தங்கள் செய்து மொத்த நாட்டு மக்களையும் அடக்கி, ஒடுக்கி மக்களின் பல நூறாண்டு உழைப்பையும் நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்துக்கொண்டிருகிறது, காவி பாசிஸ்டுகளின் தலைமையிலான மத்திய அரசு.

தொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தம்: இதன் மூலம் பணிநிரந்தரமில்லாமல் அற்பக் கூலிக்கு வரம்பில்லாமல் உழைப்பை சுரண்டுவதை உத்திரவாதம் செய்கிறது. நீம், FTE, அப்ரண்டீஸ், காண்ட்ராக்ட் என தொழிலாளர்களின் உழைப்பை சுரண்ட பல திட்டங்கள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

புதிய வேளாண் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவும் சிறு – குறு விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவும் வழிவகுக்கிறது. நாட்டின் சந்தைவாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்த முடியும் எனக் கூறும் அரசு 74 ஆண்டுகளில் அதனை ஏன் செய்யவில்லை என்ற மக்களின் கேள்வியிலிருந்தே விவசாயிகள் பக்கம் அரசு இல்லை என்பது விளங்கிவிடும். விளைபொருளுக்கு பொருத்தமான விலை வழங்காமல் சந்தைவாய்ப்பு என அரசு கூறுவது நட்டாற்றில் விவசாயிகளை இறக்கிவிடுவதாகும்.

பொதுத்துறைகள் தனியார்மயம் : மக்களின் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடப்படுகிறது. பல லட்சம் கோடி மதிப்புள்ள 74 ஆண்டுகளில் வளர்க்கப்பட்ட பொதுத்துறைகள் அற்பத்தொகைக்கு குத்தகை, பங்கு விற்பனை என்பது உலகிலேயே மிகப்பெரிய ஊழல், மோசடி என்றால் மிகையில்லை.

சுற்றுசூழல் திருத்தச் சட்டங்கள் (ElA) : இயற்கை வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதில் இருக்கககூடிய கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை பாலைவனமாக்கவும் மக்கள் கேள்வி கேட்கும் உரிமையையும் பறித்துவிடுகிறது.

புதிய கல்விக் கொள்கை (NEP) : 3, 5, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் என வடிகட்டுவதும் பள்ளியிலே தொழிற்கல்வி என்பது மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து குறைந்த கூலிக்கு வேலையாட்களை தயார்படுத்தவே எத்தணிப்பதாகும்.

கிரிமினல் சட்டங்களில் திருத்தம் : இந்த அரசு கார்ப்பரேட் கொள்ளை துணைபோகிறது, மற்றொரு கிழக்கிந்திய கம்பெனியாட்சி என்று யாரேனும் விமர்ச்சித்தால் விசாரணையின்றி, பிணை கூட இல்லாமல் சிறையிலடைக்கவே சட்டதிருத்தங்கள் நடக்கின்றது.

அயோத்தியில் ராமர் கோவில், 3 ஆயிரம் கோடியில் படேலுக்கு சிலை என இந்த ஆட்சி ஏதோ இந்துக்களின் நலனுக்கான ஆட்சி என்று ஒரு தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக மோடி தலைமையிலான ஆட்சி தொடங்கியதிலிருந்து பணமதிப்பு நீக்கம், GST வரிக்கொள்கை முதல் புதிய வேளாண் சட்ட திருத்தங்கள் வரை இந்நாட்டில் ஆகப் பெரும்பான்மையான இந்துக்களை நாடோடிகளாக மாற்றியிருக்கிறது. இன்றளவில் சிறு-குறு தொழில்முனைவோர், விவசாயிகளை தற்கொலைக்கும் தள்ளியிருக்கிறது. இந்நாட்டின் பெரும்பான்மை இந்து மக்களையே காவு கேட்கும் இந்த ஆட்சியை நீடிப்பதற்கான காரணம் என்ன கேள்வியிலிருந்து தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றி அமைக்கமுடியும்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடிக்க கொண்டு வந்ததுதான் புதிய தாராளவாதக் கொள்கையாகும். இது தற்போது காட், காட்ஸ் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளை சூறையாடிக்கொண்டிருக்கிறது.

இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அதிக உற்பத்தி, குறைந்த கூலி கொள்கையால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்ததால் சர்வதேச அரங்கில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவத்தை மீட்கவும் ஈடுகட்டுவதற்காகவும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பல் கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஏற்ப அதாவது, குச்சியின் அசைவுக்கு ஆடும் குரங்கைப் போல மத்தியில் ஆளும் BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை சர்வதேச கார்ப்பரேட் கொள்ளைக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வில்லை எனில் BJP ஆட்சி செய்ய இயலாது. கோடிக்கணக்கான இந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பலுக்கு கொள்ளையடிக்க வசதியாக விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் , இயற்கைவளங்கள், பொதுத்துறைகள் தொடர்புடைய சட்டங்களை எல்லாம் திருத்திக் கொண்டிருக்கிறது, BJP தலைமையிலான மத்திய அரசு.

மற்றொரு பக்கம், BJP தனது கார்ப்பரேட் சேவையை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் குடியுரிமை சட்ட திருத்தம், பாகிஸ்தான் தீவிரவாதம், சீனா ஊடுருவல், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அன்னியக் கைக்கூலிகள், வங்கதேச அகதிகள் ஊடுருவல் என்று பல வழிகளில் ஆட்சியை தக்கவைக்க மக்களிடையே விரோத மனப்பான்மையையும், முரண்பாட்டையும் விசவிதைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது.

உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!

உதாரணமாக : இந்த புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்திய பிறகு இந்த நாட்டின் ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது. குடிநீர் கூட விலை கொடுத்து வாங்கவேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. மேலும் இந்தப் பொருளாதாரக் கொள்கை அடுத்த 25 ஆண்டுகள் நீடித்தால் இந் நாட்டு மக்கள் உணவுக்கும் சுகாதாரத்திற்கும் அல்லாடும் நிலைமை வந்து நிற்கும். உள்நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டு ஏற்படும் பற்றாக்குறைக்கு உள்நாட்டுக் குழப்பங்கள் தான் ஏற்படும். பார்ப்பன ஆர்எஸ்எஸ் பிஜேபி தலைமையானது இந்த நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்க்க ஒருபோதும் தயாராக இருக்காது. காரணம் என்னவென்றால் மனுதர்ம விதிகளின்படி உழைக்கும் மக்கள் (சூத்திரன்) பட்டினியில் உள்நாட்டிலே அகதியாக அலைவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வடமாநில மக்கள் 10 கோடி பேர் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தானே ஆட்சி செய்து வருகிறார்கள் .

மேலும், ஒக்கி புயல், கஜா புயலுக்கு BJP தலைமையிலான அரசு தமிழக மக்களைக் காப்பாற்ற தேவையான எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதுபோல தற்போது மழை வெள்ளத்தால் நெருக்கடி ஆகும்பொழுது மக்களை உதவ இந்த அரசு தயாராக இல்லை.

கொரானா வைரஸ் : மருத்துவம், சுகாதாரத்துறைக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் போதிய ஆய்வுகள் குறித்த விவரங்கள் இல்லாமல் கைதட்டவும் விளக்கேற்றவும் சொன்னதன் மூலம் அம்பலப்பட்டது, மோடி தலைமையிலான மத்திய அரசு. மற்றொரு பக்கம் கார்ப்பரேட் கம்பெனிகள் பல ஆயிரம் தொழிலாளர்கள் வைத்துக்கொண்டு ஆலைகளை இயக்கி கொள்ளையடிக்கவும் நிபந்தனைகளை தளர்த்திவிட்டிருகிறது. இது மொத்ததில் தோல்வியடைந்து, அம்பலப்பட்டு எதிர்நிலைக்கு சென்றுவிட்ட அதிகார கட்டமைப்பாகும்.

இது கார்ப்பரேட் நலனுக்கான அரசு என்பது அம்பலமாகிவிட்டது !
பொதுமக்கள் நலனில் அக்கரையில்லை என்பதும் தெளிவாகிவிட்டது !

தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு-குறு தொழில்முனைவோர் என அனைவரும் பங்கேற்போம்!
நாட்டின் சட்டங்கள், திட்டங்கள் வகுப்பதில் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென முழங்குவோம்!
மக்களையும் நாட்டையும் சூறையாடும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் !

மத்திய அரசே!
💥 மக்கள் விரோத சட்ட திருத்தங்களை திணிக்காதே!
💥கார்ப்பரேட் கொள்ளைக்கு இயற்கை வளங்களையும் பொதுத்துறைகளையும் திறந்துவிடாதே!
💥 மக்களின் வாழும் உரிமைகளை பறிக்காதே!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784

உட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல ! இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 10

பாகம் – 9

V. உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி?

தோழர்களே! இப்பொழுது பிரச்சினை மிகத் தெளிவாயிருக்கிறது. உட்கட்சிப் போராட்டத்தை சரியாகவும் பொருத்தமாகவும் நடத்துவது எப்படி என்பதே பிரச்சினை.

இந்த பிரச்சினையில், சோவியத் யூனியன், இன்னும் இதர பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நிரம்ப அனுபவமிருக்கிறது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அப்படியேதான். லெனினும் ஸ்டாலினும் பல கட்டளைகள் விடுத்திருந்தனர்; நமது கட்சியின் மத்தியக் கமிட்டியும் அதேமாதிரி செய்திருக்கிறது. இந்த அனுபவங்களையும், கட்டளைகளையும் நமது தோழர்கள் கவனமாக கற்றறிய வேண்டும்; கட்சியைக் கட்டுவது பற்றிய பிரச்சினைக்கு வரும் பொழுது அவை விவாதிக்கப்படும். இன்று நான் அவற்றை எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்ட அனுபவத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட விசயங்களை தோழர்களின் கவனத்திற்கு இன்று நான் கொண்டு வருகிறேன்.

முதலாவதாக, உட்கட்சிப் போராட்டம் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், பொறுப்புமிக்கதுமான விசயம் என்று தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; மிகக் கண்டிப்பானதும், பொறுப்புமிக்கதுமான, மனோபாவத்துடன் நாம் அதை நடத்த வேண்டும்: அதை எப்பொழுதுமே அஜாக்கிரதையாக நடத்தக் கூடாது. உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், முதலாவதாக கட்சியின் சரியான கொள்கையை, கட்சியின் நலனுக்கு பாடுபடும் தன்னலமற்ற நிலை, இன்னும் சிறந்த வேலை செய்தால் மற்ற தோழர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் உதவி புரியவும், பிரச்சினைகளைப் பற்றி மேலும் சிறந்த போதம் பெறுவதற்கும் ஆன கொள்கையை பரிபூரணமாக அமல் நடத்த வேண்டும். முறைப்படுத்திய ஆராய்ச்சி, கல்வி முதலியவற்றின் மூலம் தாமே விசயங்களை பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தெளிவு பெற வேண்டும். அதே சமயத்தில், முறைப்படுத்திய, நன்கு தயாரிக்கப்பட்ட, நன்கு வழிகாட்டப்பட்ட உட்கட்சி போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

முதலாவதாக, தான் சரியான கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும்தான், மற்றவர்களின் தவறுகளைத் திருத்த முடியும் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் சரியாக நடந்து கொள்வதின் மூலம்தான் மற்றவர்களின் தவறான நடத்தையைத் திருத்த முடியும். “மற்றவர்களை திருத்துவதற்கு முன்பு முதலில் ஒருவர் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பது” முதுமொழி.

தான் ஊசலாடாமல் இருந்தால்தான் ஊசலாடுபவர்கள், ஊசலாட்டத்திலிருந்து மீள்வதற்கு உதவ முடியும்.

தான் சரியான கோட்பாடுகள், தத்துவம் கொண்டு, கவசமிட்டிருந்தால்தான், மற்றவர்களுடைய தவறான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் திருத்த முடியும்.

தனக்கு கோட்பாட்டுப் பிரச்சினைகளில் தெளிவான போதமிருந்தால்தான், மற்றவர் குழப்பத்தைத் தெளிவுபடுத்த உதவ முடியும். குறிப்பான பிரச்சினைகளில் நிறைய யதார்த்தமான புள்ளி விவரங்களை தான் சேகரித்திருந்தால், அந்த பிரச்சினைகளை முறைப்படுத்தி கற்றறிந்திருந்தால்தான் மற்ற தோழர்களுக்கும், கட்சிக்கும் உதவிகரமாக இருக்க முடியும்.

ஒரு தோழர் இதைச் செய்யத் தவறினால் முதலிடத்தில் அவரே சரியான கொள்கையை கைக் கொள்ளத் தயாராயில்லையென்றால், சரியான கோட்பாடுகளை கசடறக் கற்றறியவில்லையென்றால், கோட்பாட்டின்படி யதார்த்த நிலைமையை அவர் பரிசீலனை செய்யவில்லையென்றால், முறைப்படுத்தி பிரச்சினைகளை ஆராய்ந்தறியவில்லையென்றால் அல்லது அவருக்கு ஏதும் விசேஷ குறைபாடு இருந்தாலும் சில விசயங்களைப்பற்றி அவருக்கே போதிய அளவுக்கு தெளிவு இல்லாவிட்டாலும், உட்கட்சிப் போராட்டத்தில் பிறரிடமுள்ள தவறை திருத்த முடியாது. இவையெல்லாம் இருந்தும், மண்டைக் கனத்துடன் போராட்டத்தை நடத்துவதில் பிடிவாதம் பிடிப்பார்களானால், முடிவாக அது தவறில்தான் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எதார்த்தமான அசைக்கமுடியாத விசயங்கள் மட்டுமே, நடைமுறையில் பரிசோதிக்கப்பட்ட அனுபவம் மட்டுமே, உண்மை மட்டுமே எல்லாவற்றையும் வெல்லும்.

நமது சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும், கட்சியின் அமைப்பும், ஒருமைப்பாடு, கட்டுப்பாடு, கௌரவம் முதலியவற்றிற்கு தீங்கு தேடுவதற்கோ அல்லது அதன் வேலைக்கு இடுக்கண் தேடுவதற்கோ நடத்தப்படுவதன்று. அதற்கு மாறாக கட்சி அமைப்பையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தவும், அதன் கட்டுப்பாட்டையும் கௌரவத்தையும் உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும்தான் அவை நடத்தப்படுகின்றன. ஆதலின் உட்கட்சிப் போராட்டம் தன்னிச்சையான போக்கிலே போகவும் அதிதீவிர ஜனநாயக வாதத்திற்கு கொண்டு செல்லவும் விடக்கூடாது; கட்சிக்குள் குடும்பத் தலைவன் தோரணையும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதமும் சரி இரண்டுக்குமே இடமில்லை. கட்சிக்குள் நிலவும் அசாதாரண நிலைமையின் இரண்டு அதி தீவிர பிரதிபலிப்புகள் இவை.

கட்சியின்பாலும், புரட்சியின்பாலும் மாபெரும் பொறுப்புணர்ச்சியுடன் உட்கட்சிப் போராட்டம் நடத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில், கட்சிக்குள் மாறுபட்ட சித்தாந்தம், கோட்பாடுகளுக்குள் நிகழும் போராட்டமாகும். கட்சியில் வேறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகளுக்குள் எழும் எதிர்ப்பை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெளிவான வரையறுப்பு வகுப்பது இன்றியமையாத அவசியங்கொண்டதாகும். ஆனால் அமைப்பு, போராட்ட வடிவம், பேசும் தோரணை, விமர்சிக்கும் விதம் முதலிய விசயங்களில் கூடுமான வரையில் எதிர்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்; விசயங்களை அமைதியான முறையில் வாதம் செய்யவும் விவாதிக்கவும் தன்னாலியன்ற வரை முயல வேண்டும். அமைப்பு நடவடிக்கைகள் எடுக்காமலிருக்க, அமைப்பு முடிவுகள் எடுக்காமலிருக்க ஆனமட்டும் முயல வேண்டும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், சித்தாந்தத்திலும், கோட்பாட்டிலும் ஐக்கியம் ஏற்படுத்த நாணயமான, மனம்திறந்த உருப்படியான, ஆராய்ச்சி பூர்வ மனோபாவம் காட்டுவதற்கு தோழர்கள் முயலவேண்டும். வேறு வழியில்லை என்ற சந்தர்ப்பங்களில்தான், அத்தியாவசியம் என்று கருதும் பொழுதுதான், நாம் போர்க்குணமிக்க போராட்ட வடிவங்களை கடைப்பிடிக்கக் கூடும்: அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்தலாம். எல்லா கட்சி அமைப்புகளுமே, குறிப்பிட்ட வரையறைக்குள் திருந்தாமல் தவறு செய்து வரும் ஒரு கட்சி அங்கத்தினர் மீது அமைப்பு முடிவு எடுப்பதற்கு பரிபூரண உரிமை உண்டு. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கட்சிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுப்பதும், அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்துவதும் முற்றிலும அவசியமாகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் பேதா பேதம் பார்க்காமலும், தன்னிச்சையாகவும் அமல்படுத்தக் கூடாது.

கட்சி அமைப்புகள் தோழர்களுக்கு மிதமிஞ்சிய தண்டனை விதிப்பதனால் மட்டுமே கட்சிக் கட்டுப்பாடு நிலைநாட்டக் கூடியதன்று. கட்சிக் கட்டுப்பாடு, கட்சி ஐக்கியம் முதலியவற்றை நிலைநாட்டுவதென்பது பிரதானமாக தோழர்களை தண்டிப்பதில் அடங்கியிருக்கவில்லை. (இந்த முறையில்தான் அவை நிலைநாட்டப்பட வேண்டுமெனில்,  கட்சியில் நெருக்கடியிருக்கிறது என்பதையே அது காட்டும்). அதற்குப் பதிலாக அது சித்தாந்த ரீதியாகவும், கோட்பாடு பூர்வமாகவும் உள்ள யதார்த்த ஒற்றுமையிலும், பெருவாரியான கட்சி அங்கத்தினர்கள் உணர்விலும் அடங்கியிருக்கிறது. இறுதியாக நாம் சித்தாந்தம் பற்றியும், கோட்பாடு பற்றியும் முற்றிலும் தெளிவு பெற்று விட்டோமானால், அவசியம் ஏற்படும் பொழுது அமைப்பு முடிவுகள் எடுப்பதென்பது நமக்கு வெகு சுலபமாகும். கட்சி அங்கத்தினரை நீக்குவதற்கும், தானாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கும் ஒரு நிமிடம் கூட பிடிக்காது.

மாறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் சம்பந்தமாக தோழர்கள் காட்டும் பிடிவாதம், எதிர்ப்பு, முன்வைக்கும் வாதங்கள் முதலியன கட்சி அமைப்பிற்கும், பெரும்பான்மைக்கு, மேல்கமிட்டிக்கு கீழ்படிவதிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். இல்லையென்றால் கட்சி ஐக்கியம், நடைமுறை ஒற்றுமை ஆகிய எதுவுமே இருக்கமுடியாது. தோழர்கள் கோட்பாட்டிற்கு பிடிவாதம் பிடிப்பதினால், எப்பொழுதுமே கட்சியை அமைப்பு ரீதியாக எதிர்க்கவோ, பெரும்பான்மையையும் உயர்மட்ட தோழர்களையும் மீறவோ, சுயேச்சையான நடவடிக்கைகளில் இறங்கவோ கூடாது. அது கட்சியின் அடிப்படை கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கு நாம் கைக்கொள்ள வேண்டிய சரியான முறை பின்வருமாறு:

கோட்பாடு, சித்தாந்தங்கள் சம்பந்தப்பட்ட வரையில் போராடும் பொழுது போர்க்குணம் இருக்க வேண்டும்; அமைப்பு, போராட்ட வடிவம் சம்பந்தப்பட்டமட்டில் போர்க்குணம் எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். பல தோழர்கள் தவறு செய்வதற்கு காரணமென்னவென்றால், ஒரு புறத்தில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக போராட்டமோ, தெளிவாக வரையறுக்கப்பட்ட வேறுபாடோ இருப்பதில்லை; மறுபுறத்தில் அமைப்பு, போராட்ட வடிவம் சம்பந்தமாகவும் மிதமிஞ்சிய போராட்டம் நடக்கிறது. தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை விவாதிக்கின்றனர்; ஒருவருக்கொருவர் முகங்கொடுத்துப் பேச முடியாமற் போகும் அளவிற்கு சண்டையிடுகின்றனர். அவர்களுக்குள் பெரும் வெறுப்பு தோன்றிற்று; ஆனால் அதிலுள்ள விரோதம் என்னவென்றால் அவர்களுக்குள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெட்டத் தெளிவாக வரையறுப்பு எதுவுமேயில்லை.

மூன்றாவதாக கட்சி, அமைப்பு அல்லது தோழர்கள் வேலை பற்றி செய்யப்படும் விமர்சனம் பொருத்தமானதாகவும், சீராக அமைந்ததாகவும் இருக்க வேண்டும். போல்ஷ்விக் சுயவிமர்சனம், போல்ஷ்விக் அளவுகோலுக்குத் தக்கபடிதான் நடத்தப்படும். மிதமிஞ்சிய விமர்சனம், மற்றவர் குற்றங்குறைகளை மிகைப்படுத்திக் கூறுவது, பேதாபேதமின்றி திட்டுவது எல்லாம் தவறானது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவு உயர்ந்தது என்று அர்த்தமல்ல; அதற்கு மாறாக உட்கட்சிப் போராட்டம் முறையான வரம்புக்குள் நடத்தப்பட வேண்டும். பொருத்தமான அளவுக்குத்தான் நடத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சுவதும் சரி, குறைவதும் சரி, இரண்டுமே விரும்பதக்கதல்ல.

மற்றவர்களுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டும் பொழுதும் விமர்சிக்கும் பொழுதும், தோழர்கள் கேந்திரமான விசயங்களை கிரகித்துக் கொண்டு , முக்கியமான பிரச்சினைகளை வலியுறுத்த வேண்டும். பிரச்சினைகளை மற்றவர்களுக்கு தோழர்கள் முறைப்படியும் தெளிவுடனும் விளக்க வேண்டும். அவ்வகையிலேயே பிரச்சினைகளைத் தீர்க்கலாம். மற்றவர்களுடைய பல்வேறு தவறுகளையும் உண்மையாகத் தோன்றுகிற விசயங்களையும் தோழர்கள் இங்கு ஒன்று அங்கு ஒன்றுமாக எடுத்து கூறி, அவர்களை சும்மா அம்பலப்படுத்தக் கூடாது. நீங்கள் வேண்டுமென்றே குற்றங்கள் காண்கிறீர்கள், தாக்குகிறீர்கள், அடி கொடுக்கிறர்கள் என்று மற்றவர்கள் எண்ணுவதற்கும் இடமளிக்கும்.

ஒரு தோழரை சீர்தூக்கி பார்க்கும் பொழுதும், விமர்சிக்கும் பொழுதும், அவருடைய குற்றங்குறைகளை மட்டும், ஏதோ அவ்வளவு தான் என்பது போல் சுட்டிக்காட்டக்  கூடாது. அவருடைய சாதனைகளுக்கும், பாராட்டுவதற்குரிய கலைகளுக்கும், நல்ல குணாம்சங்களுக்கும், அவருடைய கருத்துக்களில் சரியான கருத்துக்களுக்கும் கூட மதிப்பு கொடுக்க வேண்டும். அவருடைய கருத்தில் ஒரு பகுதி, அது மிகச் சிறிய பகுதியேயாயினும் கூட சரியானதாயிருந்தால் அதை அவருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும். அதைச் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால்தான், அவரைப் பற்றி பூரணமான நிர்ணயிப்பும் விமர்சனமும் செய்ய முடியும்; தன்னை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு உதவமுடியும்; அவருக்கு உணர்த்த முடியும்.

உட்கட்சிப் போராட்டத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய முறை இதுதான்; “அளவுக்கு மிஞ்சுதல், குறைதல்” முறைக்கு மாறாக பொருத்தமான விமர்சனம்; பொருத்தமான மனோபாவம் பொருத்தமான வரைமுறையைக் கைக்கொள்ளுவதாகும்.

(தொடரும்)

பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்

பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் திண்ணும் மோடி அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறார் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் சி.கே மதிவாணன்.

கடந்த 17.11.2020 அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெள்ளையன் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பி.எஸ்.என்.எல் – என்.எஃப்.டி.ஈ (BSNL – NFTE) அமைப்பின் தலைவர் சி.கே. மதிவாணன் தற்போது தொலைதொடர்பு நிறுவனங்களை மத்திய அரசு எவ்வகையில் கபளீகரம் செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

பாருங்கள் ! பகிருங்கள் !

இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

தை உன்னால் புரிந்துக்கொள்ள முடியாது, நீ இன்னும் சிறுவன்தான். அதனால் உன் வேலையை பார்”, நான் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்ந்த சொற்றொடர்கள். இவை பெரும்பாலும் அரசியல் அல்லது மதம் சார்ந்த உரையாடல்களின்போது வெளிவரும். மதமும் அரசியலும் நமது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை.

நான் பள்ளிக்கூடத்தில் படித்த உன்னதமான உலகத்தைப் போன்றுதான், உண்மையான நமது உலகமும் இருக்குமென நினைத்து வளர்ந்தேன். வட்டார, மாநில, மத்திய அரசுகள், சுமூகமாக இயங்கி கொண்டிருப்பதாகவும், அது புத்தகத்தின்படி மக்களுக்காக இயங்குவதாகவும் நம்பினேன்.

அது உண்மையென்று நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா!

இரண்டாம் முறை மன்மோகன் சிங் பிரதமரான போதுதான் மெய்-உலக அரசியலுக்கான அறிமுகம் எனக்கு கிடைத்தது. எனது பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த பல்வேறு மோசடிகளைப் பற்றி பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது.

உன்னதமான அரசியல் குறித்த எனது எண்ணக் குமிழி வெடித்த தருணம் அதுதான். அப்போதிலிருந்து அரசியலைப் பற்றி யார் எதைப் பேசினாலும் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது சுற்றிலும் ஒருமித்த கருத்துதான் வெளிவந்தது – அது, காங்கிரஸ் ஊழல் அரசியல்வாதிகள் நிறைந்த கட்சி, மன்மோகன் சிங் ஒரு காந்தி குடும்பக் கைப்பாவையே என்பது போன்ற கருத்துகள்தான் அவை.

இந்த கூற்றின் உண்மைத் தன்மையைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படாத அளவிற்கு இதனை நான் பல நேரங்களில் பல இடங்களில் கேட்டிருக்கிறேன்.. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நேர்மை கொண்ட மனிதர் என்று தற்போது நான் நம்பும் சிலர் மீது எனக்கு அந்த சமயத்தில் மரியாதையே இல்லை! ஏனெனில் என்னால் அந்த அளவிற்குத் தான் விசயங்களைப் பார்க்கமுடிந்தது.

‘எல்லா அரசியல்வாதிகளும் ஊழலில் ஊறிப்போயிருந்தால், நம் நாட்டிற்கு யார்தான் தலைவராக வருவார்?’ என்று எனது தாயிடம் நான் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.

இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றிய தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் பேச்சினூடாக நம் அனைவருக்கும் இதற்கான பதில் வந்தது. நரேந்திர மோடியின் அபார வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செலுத்தியதில் ஒன்று அவரது பேச்சுத்திறன்தான் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இது ராகுல் காந்தியிடம் இல்லை.

நம்மைக் கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்திய அழகான வார்த்தைகளாலும், அவரது வசீகரத்தாலும் நாம் அனைவரும் கவர்ந்து இழுக்கப்பட்டோம். அவர் நம்மை நண்பர்களே, சகோதர சகோதரிகளே என்றுதான் அழைத்தார். அவர் நம்பகமானவர்தான் என்றும் அவரது பேச்சைக் கேட்டு பின்பற்றினால் நாம் விரும்பும் அனைத்தும் நமக்கு கிடைக்குமெனவும் அவர் நம்மை உணரவைத்தார்.

கிரேக்கப் புராணங்களில், ”தங்களது கவர்ச்சிகரமான பாடல், இசையால் ‘மாலுமிகளைக் கவர்ந்திழுத்து கப்பலை விபத்துக்குள்ளாக்கும் சைரன் என்ற ஆபத்தான உயிரினத்தையே நமது பிரதமர் தற்போது எனக்கு நினைவுபடுத்துகிறார்.

“ஆப் கி பார், மோடி சர்க்கார்” என்ற சொல்லை அனைவரின் உதடும் உச்சரித்தது. இறுதியாக “அச்சே தின்” (நல்ல நாளுக்காக) முழு இந்தியாவும் காத்திருந்தது. ஒருமுறை பள்ளியில் நடந்த கட்டுரை போட்டியில், அரசியலுடன் துளியும் சம்பந்தமில்லாத ஒரு தலைப்பில் எனது கட்டுரையின் இறுதியில் “ஆப் கி பார், மோடி சர்க்கார்” என்ற வாசகத்தை எழுதினேன். (பரிசு வெல்வதற்கு எந்த ஒருவகையிலும் அது உதவி புரியவில்லை)

தேசத்தின்மீது மோடி ஏற்படுத்திய விளைவு இதுவே.

♦♦♦

படிக்க :
♦ சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான் !

மே 26, 2014 அன்று நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமராக பதவியேற்றபோது, நம் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வெற்றிகளில் ஒன்றின் பின்னணியில் அது புதியதொரு யுகத்திற்குக் கட்டியம் கூறியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் மீட்கப்பட முடியாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் புதிய தலைவரிடமிருந்து சிறந்த விஷயங்களை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

அந்த சிறுவன், ஏமாற்றமடைந்தானா?

முதல் பதவி காலம் சர்ச்சையில் சிக்கியது, அப்போதும் அவரைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மாறவில்லை. உண்மையில் அது அதிகரித்தது. அதே நேரத்தில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மற்றும் தலித்துகள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் அதிகரித்தது. குறிப்பாக முஸ்லீம்கள் குறி வைக்கப்பட்டனர்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால், நாட்டிலுள்ள முஸ்லீம் குடிமக்களை கும்பல் படுகொலை செய்வது அதிகரித்தது.  இந்தியாவை பாஜக எந்த திசை நோக்கி நகர்த்தி செல்கிறதென என்னை உட்பட அவரது (மோடி) ஆதரவாளர்கள் சிலர் கேள்வி கேட்கத் தொடங்கிய முதல் தருணம் இதுதான். மத நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்க, தனியொரு பிரிவினர் எதிர்க்கும் ஒரே காரணத்திற்காக, மக்கள் என்ன சாப்பிட வேண்டும் – சாப்பிடக் கூடாதென ஆணையிடுவது ஜனநாயக விரோதமானது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது, வன்முறை மற்றும் இன கலவரங்கள் அதிகரிப்பதற்கே வித்திட்டது. 2015 முதல் 2019 செப்டம்பர் மாதங்களுக்கிடையில் கும்பல் படுகொலையில் 113 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை 2019-ஆம் ஆண்டில் குயிண்ட் இணையத்தளம் வெளியிட்டது.

மோடியும், பாஜகவும் ஜிங்கோயிசம் (Jingoism)  மற்றும் பின்புலம் தொடர்பான மற்றும் சம்பந்தமற்ற கேள்விகள் (Whataboutery) மூலம் வெகுஜனங்களை அணிதிரட்டவும், ஓட்டு வங்கியைப் பராமரிக்கவும் செய்தனர். ஜிங்கோயிசம் என்பது “தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான அடாவடி கொள்கைகளின் வடிவத்திலான தீவிர தேசியவாதமாகும். அதே, ஒரு குற்றச்சாட்டை அல்லது மாற்று கருத்தை, எதிர் குற்றச்சாட்டு அல்லது தொடர்பில்லாத விஷயங்கள் மூலம் திசைத்திருப்பும் நுட்பமே  ‘Whataboutery’. (வாட்டபோட்டரி – வடக்கு அயர்லாந்து பிரச்சினைகளின் அரசியல் விவாதத்தின் போது முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்களின் தோற்றம் பற்றிய விவாதங்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது).

இந்த சூழ்ச்சி முறையுடன், ஆளும் கட்சி பயன்படுத்த விரும்பும் மற்றொரு உத்தி ‘நாம்’ எதிர் ‘அவர்கள்’ என்பதுதான். உங்களையும் உங்களது சித்தாந்தத்தையும் மக்கள் பின்பற்றுவதற்கான விரைவான ஒரே வழி ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதாகும். அப்படியொரு எதிரி இல்லையென்றால், மக்கள்தொகையில் ஒரு பகுதியினரை அரக்கர்களாக்கி அவர்களை “தேச நலனின்” எதிரிகளாக சித்தரிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

இன்று பல இந்தியர்களுக்கு முக்கிய எதிரி, இடதுசாரிகள் மற்றும் தாராளவாதிகள் தான். அவர்களுக்கு கடந்த 2014 ஆண்டிலிருந்து ஆயிரம் புனைப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டு மந்தை மனநிலை, பழமைவாத வலதுசாரிகளின் குருட்டு நம்பிக்கைக்கு இணங்காத, தலைவரை கேள்வி கேட்கும் தைரியம் உள்ளவர்கள் எவரும் தேச விரோதி என போற்றப்படுவர். கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் தூற்றப்பட்டனர். பின்னர் பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு செல்லுமாறு மிரட்டப்பட்டனர்.

பாஜக-வின் இந்துராஷ்டிரிய சித்தாந்தம் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கையும் (RSS) எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டனர், மிரட்டப்பட்டனர், கைது செய்யப்பட்டனர், கடுமையாகத் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். அப்பேர்ப்பட்ட குற்றவாளிகளை இந்த அரசாங்கம் ஆதரவளித்து பாதுகாத்து வருகிறது. அவர்களில் சிலரை சம்பளப் பட்டியலில் கூட வைத்திருக்கிறது. தங்களது பேச்சுரிமையையும், அடிப்படை பகுத்தறிவு சிந்தனையையும் பயன்படுத்தி நம் நாட்டின் பிரதமரை கேள்வி கேட்பவர்களைத் தேடி அச்சுறுத்துகிறது பாஜகவின் ஐ.டி. பிரிவு.

இப்போது நான் எழுதும் இந்த கட்டுரை வெளியானதும் என்மீது கட்டவீழ்த்துவிடப்படும் வெறுப்பினை வியப்புடன் எதிர்பார்க்கிறேன்.

அரசாங்கத்தின் மிகப்பெரிய தவறு, அது உந்தித்தள்ளும் வெறுப்புப் பிரச்சாரமோ, மற்றவர்களையும் அதனை முன்னெடுக்க கற்றுக் கொடுப்பதோ அல்லது நமது தொண்டைக்குழியில் இந்துத்துவாவை திணிக்கப்படுவதோ அல்ல. என்னை பொறுத்தவரை, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமைதி வழியில் எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலையே அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறென நான் நினைக்கிறேன்.

ஜாமியா மிலியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கவிழ்ப்பதற்கு முக்கியப் பங்களிப்பு செய்த அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்ற மிகப்பெரிய போராட்ட இயக்கத்தைத் தூண்டுவதற்கு உதவின.

இவ்விவகாரங்கள் பல இடங்களுக்கு விரைவாக பகிரப்பட்டன. இது இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் நிறுவனங்களை முறையாக அழிக்க செயல்பட்டுவரும் ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சியின் மீது தாங்கள் வைத்திருந்த விசுவாசத்தை மறுபரிசீலனை செய்ய பலருக்கும் வழிவகுத்தது.

படிக்க :
♦ பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

தேசிய பாரம்பரியத்தைக் கண்டு பெருமைப்படுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த தலைவர்தான், பகத்சிங் போன்ற சுதந்திரப் போராளிகள் செய்ததைப் போல செய்ய துணிந்தவர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பவர்களை சிறையிலடைக்க சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்(ஊபா) போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துபவர்.

பிரதமரின் விசிறியாக இருப்பவர்கள் அமர்ந்து கவனிக்க – கொரோனா போன்ற பெருந்தொற்று சமயத்திலும்கூட பெண் செயற்பாட்டாளரை அவர் கர்ப்பிணி என்றும் பாராமல், ஜாமீன் மறுத்து சிறையில் அடைத்ததில் இருந்து, பட்டப்பகலில் டெல்லி போலீசார் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆயுதங்களை வைத்து கலவரம் செய்த கலவரக்காரர்களை விடுவித்தது போன்ற – எண்ணற்ற சம்பவங்கள் பல உள்ளன.

இவை அனைத்தும் நம் நாட்டில் நடந்து வரும் தவறுகளையும், முழு அமைப்பும் நிர்வாகமும் எவ்வாறு உடைக்கப்படுகின்றன என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதனை அக்கறையின்மையுடன் பார்த்து வருகிறோம். “பக்ரே கி அம்மா”வில் (Bakre Ki Amma) கவுரவ் காட் மிகச் சரியாக சித்தரித்துள்ளதைப்  போல நாம் மற்றவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாத உணர்ச்சியற்றவர்கள் ஆகிவிட்டோம்.

அரசாங்கத்திற்கு எதிராக கோபம் அதிகரித்து வரும் நிலையிலும், பாஜக ஆட்சியை ஆதரிக்கும் (எனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட) பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகையவர்கள் தொடுக்கும் பொதுவான வாதங்கள் ரிஷிமூலம் தேடி கேள்விகேட்கும் வழிமுறைகளிலும் சம்பந்தமற்றவைகளைக் கோர்த்துக் கேள்வி கேட்பதிலும் உள்ளன. குறிப்பாக ‘காங்கிரஸ் பல ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஆதரித்து வந்தது. அப்படியிருக்க பாஜக ஏன் பெரும்பான்மையினரை ஆதரிக்கக் கூடாது?’ என கூச்சலிடுகின்றனர்.

ஒரு தவறான செயலுக்கு எதிரான மற்றொரு தவறான செயல் என்றும் சரியானதாக மாறாது, எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக வெறுத்த அதே மக்கள்தான், இப்போது பாஜக-வை நேசிக்கிறார்கள். பல தசாப்தங்களாக காங்கிரஸ் செய்துவரும் தவறுகளை தற்போது பாஜக மீண்டும் மீண்டும் பெரிய அளவில் செய்து வருவது தவறுகளை சரி செய்யாது.

ஒருபுறம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தன்னையும் தனது கொள்கைகளையும்  எதிர்த்து கறுப்புக் கொடியும், கோஷங்களையும் எழுப்பியவர்களிடம், “நீங்கள் சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், அதைச் சொல்வதற்கான உங்களது உரிமையை நான் மரணிக்கும் வரை பாதுகாப்பேன்” என்று கூறினார். ஆனால் மறுபுறம், தற்போதைய பிரதமரோ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கருத்து வேறுபாடுகளை நசுக்கவும், அரசாங்கத்தையும் தனது கொள்கையையும் கேள்விக் கேட்கும் அனைவரையும் அச்சுறுத்தி ஒடுக்கி வருகிறார்.

பெரும் தொற்றுநோய் மீதான அரசின் மோசமான நிர்வாகத்திலிருந்து தொடங்க வேண்டாம், ‘கோடி மீடியா’ (Godi Media) (மக்களின் முக்கியமான பிரச்சினையிலிருந்து அவர்களை திசைத்திருப்ப பாஜக செய்யும் உத்திகளில் ஒன்று), சீனா நேபாளத்துடன் அதிகரித்துவரும் எல்லைப் பதட்டங்கள், பல்லாண்டுகளாக போலீசின் வெறிதனத்திற்கெதிராக போராடி வரும் செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்ததில் இருந்து இது தொடங்குகிறது.

துளியளவேனும் உங்களிடம் இரக்கமிருந்தால், கடந்த காலத்தில் கற்பிக்கப்பட்ட ஒரு சார்புத் தன்மையை திரும்பிப் பார்க்க விரும்பினால், நமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களின் பட்டியல் முடிவுறாமல் நீண்டுக்கொண்டே போவதை பார்ப்பீர்கள்.

உங்களில் அரசியலற்றவர்களாக இருப்பவர்களுக்கு, நீங்களும் பிரச்சினையின் ஒரு பகுதிதான். நீங்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை. இந்தப் போராட்டம் சமத்துவத்திற்காக மட்டுமல்ல, நமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காவும்தான்.


கட்டுரையாளர் : நமீத் பாண்டே
தமிழாக்கம் : வெண்பா
செய்தி ஆதாரம் : The Wire

“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

இன்றைய அமெரிக்காவில் வலதுசாரி மாற்று (Alt-Right) அமைப்பினரை எரிச்சலூட்டினால், நீங்கள் அதிரடி இராணுவக் குழுவின் அச்சுறுத்தலுக்கு ஆளாவீர்கள்!

(07-11-2020 தேதியிட்ட தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டில், “Annoy the Alt-Right in the U.S. today, and you could get ‘swatted” என்ற தலைப்பில் விநாயக் சதுர்வேதி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

★★★

அமெரிக்காவில் “ஸ்வாட்டிங்” (SWATTING) என்பது ஒரு புதிய டிஜிட்டல் காலத்திய குற்றமாகும். இதில் ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பாளர், ஒரு போலி வன்முறைக் குற்றத்தைப்  பற்றி போலீசில் புகார் செய்கிறார் என்றால், உடனே ஒரு சிறப்பு ஆயுதந்தரித்த தந்திரோபாயக் குழு ஸ்வாட் ( Special Weapons and Tactics team – SWAT ) என அழைக்கப்படும் இராணுவமயமாக்கப்பட்ட பிரிவின் வருகையை அது வெளிப்படுத்தும்.

ரு வாரங்களுக்கு முன்பு எனது 84 வயதான தந்தையுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ஷெரிப் (sheriff – அமெரிக்க உள்ளாட்சிப் பகுதி ஒன்றின் சட்ட அமலாக்க அதிகாரி) என்று கூறிக்கொண்டு வேறொரு தொலைபேசி வழியாக யாரோ ஒருவர் அழைப்பதாகவும், இயல்புக்கு மாறான கேள்விகளைக் கேட்கிறார் என்றும் கூறினார். அந்த எண் ‘தனியார் அழைப்பாளர்’ என்று தொலைபேசியில் பட்டியலிடப்பட்டதால், இது ஒரு குறும்புத்தனமான அழைப்பு என்று எனது தந்தை கருதியிருக்கிறார். பின்னர், “வீட்டுக்கு வெளியே நிறைய போலீசார் உள்ளனர்” என்று பின்னணியில் எனது தாயார் சொல்வதைக் கேட்டேன்.

எனது தந்தை என்னைத் திரும்ப அழைப்பதாகக் கூறிவிட்டு, வீட்டின் முன் பக்கக் கதவைத் திறந்ததும், தாழ்வாரத்தில் பல அதிரடி இராணுவக் குழுவினர் அவரை நோக்கி அதிநவீன ஆயுதங்களுடன் கதவருகே நிற்பதைக் கண்டார். அவர் அந்த நேரத்தில் கதவைத் திறந்திருக்காவிட்டால், அதிரடி இராணுவக் குழுவினர் கதவை உடைத்திருக்கக் கூடும்.

எனது தாயார் ஒரு நபரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை யாரோ ஒருவர் கண்டதாக, ஷெரிப் அலுவலகத்திற்கு “ஜூம்” தொலைபேசி அழைப்பில் ஒரு செய்தி வந்ததாம்.  அதைத் தொடர்ந்து ஸ்வாட் குழுவின் அதிகாரிகள் எனது வீட்டைச் சோதனையிட்டார்கள். பின்னர், அவர்களுக்கு வந்தது ஒரு தவறான தகவல் என்பதை உணர்ந்தார்கள்.

எனது பெற்றோர் ‘குற்றவாளிகளாகிவிட்டார்கள்’. ஸ்வாட்டிங் என்பது அமெரிக்காவில் ஒரு புதிய டிஜிட்டல் காலத்தியக் குற்றமாகும். இதில் ஒரு அநாமதேய அழைப்பாளர் ஒரு போலி வன்முறைக் குற்றத்தைப் பற்றி போலீசில் புகார் அளிக்கிறார் என்றால், உடனே, சிறப்பு ஆயுதந்தரித்த தந்திரோபாயக் குழு (ஸ்வாட்) என அழைக்கப்படும் இராணுவமயமாக்கப்பட்ட குழுவினது வருகையை அது வெளிப்படுத்துகிறது.

இந்தக் குறிப்பிட்ட அநாமதேய தொலைபேசி அழைப்பானது, ஐரோப்பாவின் பிரான்சிலுள்ள இன்டர்போல் (INTERPOL) தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இன்டர்போல் போலீசார், மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பணிப் போலீசாரைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் ஷெரிப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதாகவும் அங்கிருந்த போலீசு துணையதிகாரி ஒருவர் எனது பெற்றோரிடம் விளக்கியுள்ளார். உண்மை என்னவென்றால், எனது தாயாரின் பெயரும் சரியான வீட்டு முகவரியும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று அரைகுறையாகக்கூட அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை.

ஆரம்ப இலக்குகள்

ஆன்லைன் ஆபாச விளையாட்டுக் (கேமிங்) கலாச்சாரத்தை விமர்சிக்கும் பெண்ணியவாதிகளும், மாற்று ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி மேம்படுத்தும் பெண்களுமே ஆரம்ப காலத்தில் “ஸ்வாட்டிங்”கால் பாதிக்கப்பட்டவர்களில் சிலராவர். ஆனால் இந்த நிகழ்ச்சிப் போக்கானது, எனது தாயாரைப் போல மூத்த குடிமக்கள் உள்ளிட்டு, யாரையும் குற்றவாளிகள் என்று குறிவைப்பதாக வளர்ந்துவிட்டது.

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் (F.B.I. -எஃப்.பி.ஐ.) கூற்றுப்படி, 2008-ஆம் ஆண்டில் அரசாங்கம் இந்த நிகழ்ச்சிப் போக்கை அதிகாரப் பூர்வமாகக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் ஸ்வாட்டிங் வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இப்போது 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனது தாயார் ஏன் தனிச்சிறப்பாகக் குறிவைக்கப்பட்டார் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை.

எனது பெற்றோர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியானது, வெள்ளை நிறவெறி மேலாதிக்கக் குழுக்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர், அவர் உறுப்பினராக உள்ள நவ-நாஜி அமைப்பின் செய்தி மடலை எங்கள் வகுப்பில் காட்டிய நிகழ்வு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

ஸ்வாட்டிங் என்பது வலதுசாரி மாற்று (Alt-Right) அமைப்பினரால் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் தந்திரமாகும். (வலதுசாரி உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சட்ட அமலாக்க நிறுவனங்களில் சேருவதற்கு இது உதவப் போவதில்லை.) புலம்பெயர்ந்தோர் மீதான எதிர்ப்பு உணர்வுகள், வெள்ளை இனவெறி ஆகியவற்றின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் அவற்றுக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

படிக்க :
♦ அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !

♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

தொழில்நுட்ப அரங்கில் பணியாற்றும் ஒரு நண்பருடன் நான் இதைப் பற்றி விவாதித்தபோது, ஆன்லைன் விளையாட்டுகளின் பெண்ணிய வடிவமைப்பாளரான கரோலின் சிண்டர்ஸ்-இன் கட்டுரையை நான் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதன்படி, “அந்த நேரத்தில் இணையம் எனது தாயாரின் வீட்டிற்கு ஒரு ஸ்வாட் குழுவை அனுப்பியது” – என்ற தலைப்பில், 2015-இல் கரோலின் சிண்டர்ஸ் எழுதிய கட்டுரையை நான் படித்தேன்.

எனது நண்பர் ஏன் அதை பரிந்துரைத்தார் என்று உடனடியாக எனக்குப் புரிந்தது. சிண்டர்ஸ்-இன் தாயார் என்பதைத் தவிர, இந்த விவரங்கள் மிகவும் ஒத்ததாக இருக்கின்றன. ஒரு வன்முறைக் குற்றம் நடந்துள்ளதாகவும், அப்பகுதியில் மக்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ள நிலைமை உள்ளதாகவும் ஒரு தொலைபேசி அழைப்பாளர் கூறியிருக்கிறார். அத்தொலைபேசி அழைப்பாளர் உள்ளூர் போலீசைத் தொடர்பு கொண்டார்; ஆனால், எனது அம்மாவின் விசயத்தில் அது இன்டர்போல் போலீசைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதாவது, ஒரு ஸ்வாட் குழு அவர்களின் வீடுகளுக்கு வந்தது.

ஸ்வாட்டிங் சம்பவத்திற்கு சற்று முன்பு, இணையவழி விளையாட்டுக் (கேமிங்) கலாச்சாரத்தில் நிலவும் ஆணாதிக்க – பெண்ணின வெறுப்பாளர்கள் பற்றி அவர் கட்டுரை எழுதியபோது, இணைய வழியாகத் தொல்லைதரும் பிரச்சாரத்தால் அவர் பாதிக்கப்பட்டார். எனது விசயத்தில், இது இன்னுமொரு ஒத்திசைவாக இருந்தது.

ஏனெனில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், நானும் இத்தகைய இணையவழி அநாமதேய துன்புறுத்தலுக்கு ஆளானேன். இதைப் பற்றி நான் ஒரு போலீசு புலனாய்வாளரிடம் பேசியபோது, என்னைக் குறிவைத்து தாக்க விரும்பும் யாரையாவது எனக்குத் தெரியுமா என்று போலீசார் கேட்டார்கள்.

இதுவொருபுறமிருக்க, எனது பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு தொல்லைக்கு ஆளாவதென்பது இப்போது முதன்முறையாக நடப்பதல்ல. 1991-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான் பட்டதாரி மாணவனாக இருந்தபோது, எனது பெற்றோருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்து தேசியவாதம் தொடர்பான தலைப்புகளில் நான் கட்டுரை எழுதுவதை நிறுத்துமாறு அந்த அழைப்புகள் கூறின.

மிக அண்மைக் காலங்களில்கூட, எனது எழுத்துக்கள் காரணமாக எனது பெற்றோருக்குத் தொடர்ந்து அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பின் தலைவர் ஒருவர் எனது குடும்பம் – அதாவது, எனது பெற்றோர், எனது மாமியார், மாமனார் என்று நீட்டிக்கப்பட்ட எனது குடும்பம் – குறித்து விசாரணை நடத்தியதாக என்னிடம் கூறினார். பின்னர், அவர் தனது அமைப்பின் கருப்புப் பட்டியலில் ஒருங்கே திரட்டி வைத்துள்ள அறிஞர்களின் விவரத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர்களின் குறிக்கோளானது, மார்க்சியம், பெண்ணியம், கீழ்நிலை மக்கள், விமர்சனக் கோட்பாடுகள் – ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாகும். ஆனால், அடிப்படையில் இவை எனக்கு ஆர்வமுள்ள துறைகளாகும்.

எங்கும் விரவியுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பமானது, உலகின் எந்தவொரு போலீசு நிறுவனத்திற்கும் அநாமதேயத் தொலைபேசி அழைப்புகளை அனுமதிக்கிறது. அது, ஒரு போலீசு நடவடிக்கையைத் தொடங்குவதை எளிதாக்குகிறது. சமீபத்திய பத்தாண்டுகளில், சட்ட அமலாக்கத்தின் இராணுவமயமாக்கல்தான் ஸ்வாட் குழுக்கள் என்பதும், சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களின் வீட்டு வாசல்களில் இந்த ஸ்வாட் குழுவானது அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்று அச்சுறுத்தும் என்பதும், இந்த அநாமதேயத் தொலைபேசி அழைப்பாளர்களுக்குத் தெரியும்.

போலீசுத் துறையானது முடுக்கிவிடப்படும்போது, போலீசுக்கு தெரிந்தது ஒரு வழி மட்டும் தான். இந்த அநாமதேய அழைப்பாளர்களுக்கு போலீசாரை எவ்வாறு தூண்டுவது என்பதும் தெரியும்.

ஸ்வாட்டிங் நடவடிக்கையானது, சில சமயங்களில் அப்பாவி நபர்களைக் கொல்வதற்கு வழி வகுக்கிறது என்பதை இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பாளர்கள் முழுமையாக அறிந்தவர்கள்தான். இருப்பினும், இந்த அநாமதேய தொலைபேசி அழைப்புகள் குறிப்பிடுவது போல யாராவது உண்மையிலேயே சுட்டுக் கொல்லப்படாவிட்டால், சட்ட அமலாக்க நிறுவனங்களின் மேலதிக விசாரணைக்கு இத்தகைய ஸ்வாட்டிங் தொலைபேசி அழைப்புகளுக்கு முன்னுரிமை தருவதில்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள். பெரும்பாலும் இத்தகைய ஸ்வாட் அதிரடி குழுவின் நடவடிக்கைகள் மரணங்களை விளைவிப்பதில்லை. எனவே, அநாமதேய அழைப்பாளர்களைப் பொறுத்தவரை மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்குமான ஒரு சிறந்த வடிவம் ஸ்வாட்டிங் ஆகும்.

தற்போதைய ஸ்வாட்டிங் அல்லது அதற்கு முந்தைய துன்புறுத்தல்களானது, எனது எழுத்துக்களுடன் தொடர்புடையவை என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதை நான் முழுமையாக அறிவேன். இதேபோன்ற ஆதாரங்கள் சிண்டர்ஸ் விவகாரத்திலும் இல்லை. எனினும், எல்லாவற்றுக்கும் மேலான பிரச்சினை இதுதான்.

அமெரிக்காவில் போலீசுத் துறைகளுடன் பணிபுரியும் ஒரு இணையப் பாதுகாப்பு நிபுணரை நான் தொடர்பு கொண்டபோது, இதுவரை நடந்த அனைத்து விவரங்களையும் அவரிடம் நான் தெரிவித்த போது அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். எங்களது உரையாடலின் போது, மேலதிக தகவல்கள் அல்லது வழிவகைகளுக்காக தனது தரவுத்தளங்கள் வாயிலாக அவர் தேடினார். நன்கு திட்டமிடப்பட்டதும், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களும் உள்ளிட்டு, ஆன்லைன் ட்ரோலிங்-கும் எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களும் இப்போது அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார்.

ஆனால் ஸ்வாட்டிங் என்பது வேறுபட்டதொரு உத்தரவின் விரிவாக்கம் ஆகும். அதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய வேறு ஏதேனும் சாத்தியப்பாடுகளைப் பற்றி விவரிக்குமாறு அவர் என்னிடம் கேட்டார். எனக்கு நேர்ந்த ஸ்வாட்டிங் சம்பவத்திற்குப் பின்னர் மட்டுமே, நான் கருத்தில் கொள்ளத் தொடங்கிய இதர பிற தற்செயலான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன என்பதை நான் சுட்டிக் காட்டினேன்.

பேய்த்தனமாகத் தொல்லை கொடுத்தல் (Spectral harassment)

அறிவுத்துறையைச் சார்ந்தவரும் இந்துத்துவாவின் நிறுவனர்களில் ஒருவருமான வி.டி. சாவர்க்கர் (விநாயக் தாமோதர் சாவர்க்கர்) குறித்து 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோசலிசப் பத்திரிகையான ஜேகோபின் (Jacobin)-னுக்கு நான் ஒரு நேர்காணல் கொடுத்தேன் என்று அப்போது அவரிடம் விளக்கினேன்.

ஒருவர் இந்துவாக இருப்பதற்கான சாவர்க்கரின் வாதத்தில், வன்முறை என்பது மையப் பொருளாக உள்ளது என்று நான் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். எனது வாதத்தை முன்வைத்து இந்திய ஊடகங்களும் நாளேடுகளின் கட்டுரைகளும் விவாதிக்கும் அளவுக்கு ஓரளவுக்கு இந்த நேர்காணல் கவனத்தைப் பெற்றது. அதன் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே, எனக்கு முதலாவது அநாமதேய இணைய துன்புறுத்தல் நிகழ்வானது தொடங்கியது.

“வன்முறையே இந்து நயநாகரிகம்” (“violence as Hindu civility”) எனும் சாவர்க்கரின் விளக்கம் குறித்து கோட்பாட்டளவிலான ஒரு கட்டுரையை நான் வெளியிட்ட பின்னர், இந்த ஸ்வாட்டிங் விவகாரம் தொடங்கியது. இதே தலைப்பில் ஒரு நேர்காணலை இடதுசாரி இணையப் பத்திரிகையான கவுன்டர் கரண்ட்ஸ்(Countercurrents)-க்கு அளித்தேன். அதைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியாவில் சில கருத்துரையாளர்கள் தேசிய பத்திரிகைகளில் இதைப் பற்றி எழுதினர்.

இந்த நேர்காணல்களைப் பற்றி நான் குறிப்பிட்டவுடன், அந்த இணையப் பாதுகாப்பு நிபுணர் அவற்றைத் தொடர்பில்லாத நிகழ்வுகள் என நிராகரிப்பார் என்று நான் கருதினேன். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவரது மதிப்பீட்டின்படி, “இது சீரற்றதாக இருப்பதற்கு, பெரும் எண்ணிக்கையிலான தரவு அம்சங்கள் உள்ளன.” அதேவேளையில், நான் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் நபரான சாவர்க்கரைப் பற்றி எழுதுகிறேன் என்பதையோ, இந்த ஒத்திசைவான தற்செயல் நிகழ்வுகளையோ பொதுவில் ஒரு இணையப் பாதுகாப்பு நிபுணர் தனது முதன்மையான பணியில் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள மாட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

படிக்க :
♦தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

முகமற்ற, பெயரில்லாத, கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிகளால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு ஒரு பேய்த்தனமான இயல்பு உள்ளது. வெறுமனே தொல்லைப்படுத்தும் இத்தகைய செயல்கள், இன்றைய அமெரிக்காவில் நிச்சயமாக சாத்தியமானதுதான்.

ஒருவேளை, சாவர்க்கரை இந்திய தேசத்தின் “Ghost father” என்று நான் அடையாளம் காட்டியதன் விளைவுகளாக இவை இருக்கலாம்.

ஆயினும்கூட, தனிப்பட்ட முறையில் எனக்கு இது புரியாத புதிராக இருக்கிறது. சாவர்க்கருடைய சீடர்களில் ஒருவரால் எனக்கு பெயரிடப்பட்டதை எனது பெற்றோர் மூலம் அறிந்த பிறகு, அந்த நாள் முதல் நான் சாவர்க்கர் மீது ஆர்வம் காட்டினேன். அந்தச் சீடர், நூற்றுக்கணக்கான இதர ஆண் குழந்தைகளுக்கும் இதே பெயரைச் சூட்டியுள்ளார்.

சாவர்க்கரின் படைப்புகளை நான் ஆழ்ந்த அக்கறையுடன் பாவிக்கிறேன். ஏனெனில், அவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தார். சாவர்க்கரின் கருத்துக்களுடன் அடிப்படையிலேயே உடன்படவில்லை என்றாலும், இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் என்று நான் வாதிட்டேன். அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும். அவர் செல்வாக்குச் செலுத்தி, வடிவமைக்கவும் உதவி செய்த இந்தியா என்ற கருத்தாக்கத்தையும் விளக்க இயலும்.

முடிவாக, இத்தகைய தொல்லைப்படுத்தலானது, கண்ணுக்குத் தெரியாத வலதுசாரிகளது  கைவரிசையின் தடயங்களைக் கொண்டிருக்கிறது. இந்த வலதுசாரிகள் அறிவார்ந்த விவாதத்தில் ஒருபோதும் ஆர்வம் காட்டாமாட்டார்கள்.

★★★

 சொற்பொருள் விளக்கம்:

  • Alt-Right என்பது Alternative Right என்பதன் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. வலதுசாரி மாற்று என்ற இந்த இயக்கம், அமெரிக்காவின் அதிதீவிர வலதுசாரி மற்றும் வெள்ளை நிறவெறி தேசியவாதத்துடன் தொடர்புடைய இயக்கமாகும்.
  • இண்டர்போல் – INTERPOL – International Criminal Police Organization – உலகின் மிகப் பெரிய போலீசு அமைப்பான இதில் 194 நாடுகள் இணைந்துள்ளன. நாடு கடந்த குற்றங்கள், பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், ஆபாசப் படமெடுத்துப் பரப்புதல், போதை மருந்து கடத்தல், அரசியல் ஊழல் குற்றங்கள், வங்கி – பங்குச்சந்தைக் குற்றங்கள், காப்புரிமைச் சட்ட மீறல் முதலானவற்றைக் கண்காணித்து தடுக்கும் பணியில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் இந்த அமைப்பு ஒத்துழைத்து ஒருங்கிணைக்கும்.
  • ஆன்லைன் ட்ரோலிங் – இணையத்தின் வழியாக உள்நோக்கத்துடன் ஒருவரை அல்லது குழுவை இழிவுபடுத்துவது, எரிச்சலூட்டுவது, அச்சுறுத்துவது, ஆத்திரமூட்டுவது, நையாண்டி செய்வது.

கட்டுரையாளரைப் பற்றி…

விநாயக் சதுர்வேதி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வின் கல்லூரியில் வரலாற்றுத்துறை இணை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர், வி.டி. சாவர்க்கரின் அறிவுசார் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.

✼ ★ ✼


கட்டுரையாளர் : விநாயக் சதுர்வேதி
தமிழாக்கம் : நவீன்குமார்
செய்தி ஆதாரம் : The Hindu

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

சென்னை – சைதை மார்க்கெட் வியாபாரிகளிடம் ஒரு நேரடி ரிப்போர்ட் –  பாகம் 1

கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, வேலையிழப்பு என பல இன்னல்களோடு இந்த தீபாவளியை சந்தித்திருக்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். ஊரடங்கால் வேலையிழப்பு மட்டுமல்லாமல், சிறு தொழில்கள், ஆட்டோ சவாரி ஆகியவற்றில் ஏற்பட்ட நலிவு ஆகியவை இந்த தீபாவளியை கலையிழந்த தீபாவளியாக்கியிருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை, கலைஞர் கருணாநிதி பொன் விழா வளைவிற்குள் உள்ள மார்க்கெட் பகுதி சிறுவியாபாரிகள், தங்களின் தீபாவளி வியாபார அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்கள்

வெங்கடேசன், வயது 58 – காய்கறி வியாபாரி

கொரானாவால் 70% வியாபாரம் கெடையாது. ஜனங்க அங்கங்க காய்கறி வாங்கிக்கிறாங்க யாரும் மார்க்கெட்டுக்கு வர்றது கிடையாது. போன தீபாவளிக்கு 15,000 – 20,000 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணேன். இந்தவாட்டி 2,000 – 3,000-க்கு தான் வியாபாரமாச்சு. சரக்கும் அதிகமா எடுக்குறது கெடையாது. விக்கவிக்க ஒரு மூட்டை ரெண்டு மூட்டைன்னு எடுக்குறதுதான். முன்னலாம் 5 மூட்டை 6 மூட்டைன்னு எடுத்துட்டு வருவேன். இப்போ ஒரு மூட்டை விக்கிறதுக்கே ஒரு வாரம் ஆயிடுது.  இந்த மார்க்கெட்டுல ஞாயித்துக்கிழமைன்னா நிக்க முடியாத அளவுக்கு ஜனங்க வரும். அப்போ ஒரு நாளைக்கு மூவாயிரம் நாலாயிரத்துக்கு சரக்கு விக்கும். இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க.

கடையில ஒரு ஆள வேலைக்கு வைச்சோம்னா 500 ரூவா சம்பளம் கொடுக்கனும். வியாபாரம் நல்லா போச்சுனாதான வருமானம் வரும், அதுல இருந்து கடையாளுக்கு சம்பளம் கொடுக்க முடியும். வியாபாரம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?

0o0o0

சுரேஷ், வயது 45 – தெருவோர துணிக்கடை வைத்திருப்பவர்

இந்த தீபாவளி ரொம்ப மோசம்மா. கொழந்தைகளுக்கு ஒரு நல்லதையும் வாங்கி கொடுக்கல. 20-25 வருஷமா இந்த வியாபாரம் பண்ணிட்டுவர்றோம். இந்த கொரானா வந்து எங்க பொழப்ப கெடுத்திருச்சி. வீட்டுல இருந்த நக நட்டு வித்துதான் வயித்த கழுவிகிட்டு இருந்தோம். லாக்டவுன் முடிஞ்சி இப்போ மழக்காலம் வந்திருச்சு. வாரத்துக்கு ஒருநாளு தான் கடைய போடமுடியுது. முன்னல்லாம் தீபாவளிக்கு 20,000 ரூவாக்கு சரக்கு வாங்கிப்போடுவோம்; 10,000-க்கு விக்கும். இப்போ ரெண்டாயிரம் மூவாயிரம் கெடைக்கிறதே கஷ்டமாயிருக்கு.

0o0o0

சாரதி, வயது 53 – காய்கறி வியாபாரி

வண்டி ஒன்னு கருப்பு பிளக்ஸ் போட்டு மூடியிருக்கு பாரு.. அது என்னோட கடதான். மூடி ஒன்றரை மாசமாகுது. பொழப்பில்லாம உட்காந்துட்டு இருக்கேன். கொரானா வந்ததுலருந்து எந்தப் பண்டிகையும் இல்ல. (அடகுக் கடையையும், நகைக் கடையையும் சுட்டிக்காட்டி) இவனுங்களுக்குதான் கொண்டாட்டமே! ரெண்டு மூணு வருஷம் பொறுத்துக்கூட இந்த பொருள (நகை) விக்கலாம். ஆனா தக்காளிய இன்னிக்கு வாங்கி மறுநாளு விக்கமுடியுமா? இதான் நிலம.

போன மாசமே சிறுகுறு தொழிலாளிகளுக்கு பணத்த போடுறன்னு சொன்னாங்க. இதுவரைக்கு எந்த பேங்குல கொடுத்துருக்காங்க? தெருவோர வியாபாரிகளுக்கு கவர்மெண்டு கைக்குடுத்தாதான் ஓரளவுக்கு நடுத்தர மக்கள் சமாளிக்க முடியும். சிறு வியாபாரிகளுக்கு லோன் குடுக்குறன்னு சொல்றானுங்க பேங்குல போயி கேட்டா அப்படியொரு ஸ்கீமே இல்லன்றா. பணம் இருக்குறவனுக்கு கோடிக்கணக்குல கடன குடுக்குறான். அவன் பணத்த கட்டாம ஓடிடுறான். கடன் வாங்குற பெரிய பணக்காரனுங்கதான் ஏமாத்துறான்; நடுத்தர மக்கள் யாரும் ஏமாத்தமாட்டான். ஏமாத்துறவன எங்க புடிக்கிறாங்க. நடுத்தர மக்களா இருந்தா அதிகாரிகளுக்கு கொஞ்சம் பயப்புடுவாங்க.

கொரோனா காலத்துல குடுத்த கடன கேட்கக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுச்சி. ஆனா இங்க இன்னம்மா நடக்குது? வட்டியோட சேர்த்து மொத்தமா கொள்ளையடிக்கிறாங்க. வயித்தெரிச்சலா இருக்கு.

0o0o0

பூபால், வயது 45 – பழக்கடை வியாபாரி

போனவாட்டி தீபாவளில நல்லா வியாபாரம் ஆச்சு, இந்தவாட்டி கம்மிதான். முன்னாடிலாம் ஞாயித்துக்கிழமைல நல்ல வியாபாரமாகும். இப்போ சுத்தமா இல்ல. பண்டிகை டைம்லலா இந்த இடத்துல நிக்கவே முடியாது. இப்போ பாருங்க வெறிச்சோடி கெடக்கு. ரோட்டுல கடை வச்சிருக்குறவங்களுக்கு எல்லாம் நிவாரணம் கிடைக்கல. பெரிய கடை வச்சிருக்குறவங்களுக்குதான் நிவாரணம்லாம்.

0o0o0

ஸ்ரீதர், வயது 52 – துணிக்கடை முதலாளி

கொரோனாவால வியாபாரம் இல்ல. எங்களோட வியாபாரம்லா மிடில் கிளாஸ் – லோ கிளாஸ் மக்கள நம்பித்தான் இருக்குது. மக்களுக்கு வருமானம் இருந்தாதான துணிய எடுக்க வருவாங்க. அவங்கவங்க சாப்பாடுக்கே வழியில்ல இதுல துணியெடுக்குறதா முக்கியம்? ஜி.எஸ்.டி-ல பாதி வியாபாரம் போச்சு. கொரோனா வந்து முழுசா போச்சு. பஜாருக்கு வர ஜனங்க, வந்து பாத்துட்டு துணிய வாங்க கடைக்குள்ள வரமாட்றாங்க. ரெகுலர் கஸ்டமர் இருக்குறதுனால தான் இங்க உக்காந்துட்டு இருக்கோம். இல்லன்னா எங்களுக்கு இங்க வேலையே கிடையாது.

***


வினவு புகைப்பட செய்தியாளர்கள்

 

INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

1

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவக் கல்வி மேற்படிப்புக்கான நீட் -பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் 11 கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து, அவற்றுக்கு மட்டும் தனியாக INI – CET (Institute of National Importance – Combined Entrance Test ) எனும் சிறப்பு நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது மத்திய அரசு.

கடந்த நவம்பர் 16 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் 11 மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அடிப்படையில் தனியான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூர், பாட்னா, ரிஷிகேஷ், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், பாண்டிச்சேரி ஜிப்மர், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.எர். மருத்துவக் கல்லூரி, பெங்களூரு நிம்ஹான்ஸ் ஆகிய மருத்துவக் கல்லூரிகள் தான் இந்த “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்”

படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

இந்தக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு போட்டியிடும் மாணவர்கள் கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்த நீட்-பி.ஜி தேர்வுகளை இனி எழுத வேண்டியதில்லை. இந்த “தனிச்சிறப்புக்” கல்லூரிகளுக்கு என ஏற்பாடு செய்யப்படும் இந்த பொதுவான நுழைவுத்தேர்வை எழுதி அதில் தேறினால்தான் இக்கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்படுவர்.

இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகும். இதற்கு முன்னால், நீட் – பி.ஜி தேர்வு மட்டும் எழுதினால் போதும். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இந்தக் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர முடியும். ஆனால் தற்போது இந்த 11 கல்லூரிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் “இனி-செட்” தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய சூழலில், ஒருவேளை இக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத பட்சத்தில் பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர, நீட் – பிஜியும் எழுதவேண்டும். இது மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு பெரும் மன சுமையாக அமையும்.

மருத்துவக் கல்வியில் தமிழகம் பின்பற்றி வந்த இட ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் சாதித்த மத்திய அரசு, தற்போது இந்த  “தனிச்சிறப்பான கல்லூரிகளில்” எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு ”இனி-செட்” நுழைவுத் தேர்வில் உள் ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய தேர்வுமுறை குறித்துப் பேசியுள்ள சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மத்திய அரசு கூறும்  “தேசிய முக்கியத்துவம்  வாய்ந்த” கல்லூரிகளின் தர நிர்ணயம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மருத்துவக் கொள்கை-2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியா முழுவதும் மொத்தம் 11 கல்லூரிகள்தான் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அத்தகைய கல்லூரிகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகள்தான். அப்படியிருக்கையில் எந்த அடிப்படையைக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது? எந்த அடிப்படையில் மாநில அரசின் கீழ் உள்ள சிறந்த கல்லூரிகளுக்கு அந்த  அந்தஸ்த்து வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவர் இரவீந்திரநாத் .

தரமான தேர்வுமுறை என்று முட்டுக்கொடுக்கப்பட்ட நீட் தேர்வுமுறையிலிருந்து  “தனிச்சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு”  விலக்கு அளிக்க முடியும்போது, நீட் தேர்விலிருந்து தமிழகம் உள்ளிட்ட குறிப்பான மாநில அரசுகள் கேட்ட நீட் தேர்வு விலக்கை வழங்க முடியாதா ?

இவர்கள் குறிப்பிடும் “தனிச்சிறப்பான” மருத்துவமனைகளும், மருத்துவக் கல்லூரிகளும் செய்திருக்கும் சாதனைகளை விட மருத்துவத்துறை ஆய்விலும், சிறப்பான மருத்துவம் வழங்குவதிலும்  சாதனை படைத்த தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இச்சமயத்தில், எடப்பாடியோ “இனி செட்” தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்குமாறு மோடியிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு முறைக்கு “தரமானது”, “தனிச்சிறப்பானது” என இதுவரை முட்டுக் கொடுத்த கூட்டம் இப்போது  பதிலளிக்கப் போவதில்லை.  நீட் தேர்வு மாநில உரிமைகளையும், போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டையும் பறிப்பதற்கானதுதான் என்பது அந்தக் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும்.

நயவஞ்சகமாக நம் கல்வி உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி மற்றும் தமிழக அடிமை எடப்பாடி அரசுகளுக்கு எதிராக ”நீட்டையும் புதிய கல்விக் கொள்கையையும் ஒழித்துக்கட்டு” எனும் குரல் வீதிகளில் ஒலிக்கும் போதுதான் இக்கும்பலின் கொட்டம் அடங்கும் !


சரண்
செய்தி ஆதாரம் :
தினகரன்

கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கின், முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் தாண்டி இந்திய கோடிசுவரர்கள் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.

UBS மற்றும் PWC வெளியிட்டுள்ள 2020-ன் Billionaires Insights அறிக்கையின் படி, ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு 35% அதிகரித்து 423 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

2009 முதல் ஜூலை 31, 2020 வரை  இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு  90% அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா, சீனா , ஜெர்மனி , ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து உலகளவில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்திய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு ரஷ்யாவின் கோடிசுவரர்களை விட வேகமாக அதிகரித்துள்ளதாக UBS – PwC அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின் படி 2009-ல் இருந்து இன்றுவரை ரசிய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு  80% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
♦ பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

Forbes வெளியிட்ட 2020-ன் India Rich List படி, இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஒருவருடத்தில்  73 % உயர்ந்து,  கிட்டத்தட்ட 89 பில்லியன் (₹6.52 லட்சம் கோடி) டாலர்களை எட்டியுள்ளது. இது இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கெளதம் அதானியை ($25.2 பில்லியன்) விட மூன்று மடங்கு அதிகம். இதனால் தொடர்ந்து 13-வது வருடமாக, முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும்பணக்காரராக இருக்கிறார். இவர்களை தொடர்ந்து  HCL நிறுவனர் ஷிவ் நாடார், தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் Serum Institute of India நிறுவனர் சைரஸ் பூனாவாலா, Biocon நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா ஆகியோரும் அந்த பட்டியலில் உள்ளனர்.

Bloomberg Billionaires Index-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானிதான் உலகளவில் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலிலுள்ள ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒரே நபர்.

இந்தியா மோசமான பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்லும் வேளையில்,  முரண்பாடாக “ஒரு சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைந்துள்ளது” என்று Forbes தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, மக்கள் தொகையில் 1% இருக்கும்  இந்திய பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 42.5% வைத்திருக்கின்றனர். ஆனால் அடிமட்டத்திலுள்ள 50% மக்களிடம் வெறும் 2.8 % சொத்துக்கள் தான் உள்ளது என Oxfam report-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 10 % இருக்கும் பெரும்பணக்காரர்களிடம், நாட்டின் மொத்த செல்வத்தில் 74.3 % இருக்கும் நிலையில், 90% மக்களிடம் 25.7% மட்டுமே உள்ளது.

“அம்பானியின் நிறுவனங்கள் (குறிப்பாக ஜியோ) வளர்ந்துள்ளதால், அம்பானியின் தனிப்பட்ட சொத்துகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது” என்று JNU பல்கலைகழகத்தின் Centre of Economic Studies and Planning – ன் தலைவர் ஜெயதி கோஷ் கூறியுள்ளார்.

₹1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் வைத்துள்ள செல்வந்தர்களின்  பட்டியலை ஆகஸ்டு 31, 2020 அன்று The Hurun India வெளியிட்டது. அம்பானி, இந்துஜா சகோதரர்கள்(SP இந்துஜா மற்றும் அவரின் மூன்று சகோதரர்கள்) – இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹ 1.43 லட்சம் கோடி, HCL ஷிவ் நாடார் (₹ 1.41 லட்சம் கோடி), ஆகியோர் பெயர்களும் 824 பெரும்பணக்கார இந்தியர்களின் பட்டியலில் உள்ளது.

2019-ல் $140 பில்லியன் (₹10.29 லட்சம் கோடி ) ஆக இருந்த இந்த 828 நபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 2020-ல் $821 பில்லியன் ( ₹ 60.59 லட்சம் கோடி ) உயர்ந்துள்ளது. இதில் பெரும்பங்கு, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையேற்றத்தால்  உருவானது.

கோவிட்-19 நிவாரணங்களுக்காக இந்தியாவின் 9 பில்லியனர்கள் 541 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது உலகளவில் வழங்கப்பட்ட நன்கொடைகளில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியானது என்று  “BloombergQuint” கூறுகிறது.

முகேஷ் அம்பானியின் RIL நிறுவனம் ₹500 கோடியை PM CARES-க்கும், தலா ₹ 5 கோடியை மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தின் CM FUNDS-க்கும் வழங்கியுள்ளது. இதனை தவிர்த்து,  RIL, மும்பையிலுள்ள Seven Hills மருத்துவமனையின் கொரோனா  பிரிவுக்கு நூறு படுக்கைகள் வழங்கியுள்ளது.

படிக்க :
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

Forbes வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, கோவிட்- 19 நிவாரணமாக $132 மில்லியன் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஜாக் டோர்சே மற்றும் பில் கேட்ஸ்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நன்கொடையாளராக ஆகியுள்ளார்.

உலகளவில் பில்லியனர்கள் $7.2 பில்லியன் டாலரை கொரோனா வைரஸ் நிவாரணமாக வழங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியின் UBS வெளியிட்ட அறிக்கை படி , உலகளவில் மொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2017-ன் இறுதியில் $8.9 டிரில்லியனாக இருந்தது ஜூலை 2020-ல் $10.2 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. 2017-ல் 2,158 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 என அதிகரித்துள்ளது.

USB-ன் Global family office department- ன் தலைவர் ஜோசப் ஸ்டாட்லர் “கோவிட் -19 நெருக்கடி சூழலிலும்  கோடிசுவரர்கள் மிகவும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதாவது இந்த நெருக்கடி சூழலில்  இருந்து வெறுமனெ மீண்டு எழுவது மட்டுமின்றி பங்கு சந்தையில் ஏற்பட்ட உயர்வால் அவர்கள் மேலெழுந்தும் இருக்கிறார்கள்.

UBS அறிக்கையின் படி “பெரும்பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாவது முதலாளித்துவம் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படவில்லை என்பதற்கான அறிகுறி” என்று High Pay Centre- ன் executive director – ஆன Luke Hilyard , Guardian பத்திரிகையில் கூறியுள்ளார்.

0o0o0


தமிழாக்கம் : தேவா  
நன்றி :
The Wire

குறிப்பு :
பெரும்பணக்காரர்கள் கொரோனாவில் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளபிரபுக்களாக நம் முன்னே வலம் வருகிறார்கள். அவர்கள் அள்ளி வீசும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. யாரிடமிருந்து எடுத்து யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்துதான் இது யாருக்கான அரசு என்பதைப் புரிந்து கொள்ள முடியும் !

ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

1

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 5 (இறுதி)

பாகம் 4 : விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள்

1848-1849-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானத்தைப் பயில்வதோடு நின்றுவிடவில்லை. 1864-ல் மார்க்ஸ் ”சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அதைப் பத்தாண்டுக் காலத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். அதன் விவகாரங்களில் எங்கெல்சும் தீவிரமாகப் பங்கு கொண்டார். மார்க்சின் கருத்துப்படி அந்தச் சர்வதேச சங்கம் எல்லா நாட்டுப் பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்தியது; தொழிலாளர் இயக்கத்தை வளர்த்ததில் அது ஆற்றிய பணி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது. 1870-80-ம் ஆண்டுகளில் அந்தச் சங்கம் மூடப்பட்ட பின்னரும் கூட மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய, ஒற்றுமை ஏற்படுத்தும் பணி முடிந்துவிடவில்லை . மாறாக, தொழிலாளர் இயக்கத்தின் அறிவுத்துறைத் தலைவர்கள் என்ற வகையிலே அவர்களின் முக்கியத்துவம், இயக்கம் இடையறாது எந்த அளவுக்கு வளர்ந்ததோ அந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ந்தது.

மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே போல் தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீரவேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.

படிக்க :
♦ மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் ரசிய மொழி தெரியும்; ரசிய நூல்களைப் படித்தார்கள். இருவருமே ரசிய விசயத்தில் உற்சாகத்துடன் அக்கறை காட்டி வந்தார்கள், ரசியப் புரட்சி இயக்கத்தை அனுதாபத்துடன் கவனித்து வந்தார்கள், ரசியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். சோசலிஸ்டுகளாக ஆவதற்குமுன் அவ்விருவரும் ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள். எனவே, அரசியல் கொடுங்கோன்மையின்மீது பகைமை கொள்ளும் ஜனநாயக உணர்ச்சி அவ்விருவரிடமும் மிகவும் பலமாக இருந்தது. இந்த நேரடியான அரசியல் உணர்ச்சியும் அரசியல் கொடுங்கோன்மைக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த தத்துவரீதியான அறிவும், அதோடு வாழ்க்கையில் அவர்கள் பெற்றிருந்த வளமிக்க அனுபவமும் சேர்ந்து மார்க்சையும் எங்கெல்சையும் குறிப்பாக அரசியல் வழியில் அசாதாரண நுண்ணுணர்வுடன் செயல்படுவோராக்கின. அதனால்தான், மிகப் பலம்வாய்ந்த ஜாரிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில ரசியப் புரட்சியாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் இவ்விரு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த புரட்சியாளர்களின் இதயத்திலே அனுதாபமிக்க எதிரொலியைக் கிளப்பியது.

மறுபுறத்தில், கானல் நீர் போன்ற பொருளாதார அனுகூலங்களை உத்தேசித்து, ரசிய சோசலிஸ்டுகளின் மிக உடனடியான, முக்கியமான இலட்சியமாகிய அரசியல் சுதந்திரம் போராடிப் பெறுவது எனும் இலட்சியத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் போக்கு அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டாக்கியது இயல்புதான்; அது சமுதாயப் புரட்சி என்ற மகத்தான இலட்சியத்துக்கு நேரடியாகத் துரோகம் புரிவதாகும் என்றுகூட அவர்கள் கருதினார்கள்.

எங்கெல்ஸ்

’பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்’ என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும் பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தவிரவும், ரசியாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்துக்கும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மார்க்கம் எங்கெல்சும் தெளிவாகக் கண்டார்கள்.

யதேச்சாதிகார ரசியா ஐரோப்பியப் பிற்போக்குக்கெல்லாம் எப்போதும் ஓர் அரணாக இருந்து வந்தது. 1870-ல் நடந்த போர் ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே நீண்ட காலத்துக்குப் பிணக்கு ஏற்படுத்திவிட்டது. அந்தப் போரின் விளைவாக ரசியா ஒரு மிக அனுகூலமான சர்வதேச நிலையை வகித்து வந்தது. அதனால் பிற்போக்கான சக்தி என்ற வகையில் யதேச்சாதிகார ரசியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. சுதந்திரமான ரசியாதான், போலிஷ் மக்களையும், ஃபின்னிஷ் மக்களையும், ஜெர்மானியர்களையும், ஆர்மீனியர்களையும், பிற சிறிய இனத்தவர்களையும் ஒடுக்க வேண்டிய தேவையில்லாத ரசியாதான், அல்லது பிரான்சையும் ஜெர்மனியையும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளும்படி எப்பொழுதும் தூண்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாத ரசியாதான், நவீன ஐரோப்பா தன்னை போர்ச் சுமைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும், ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பிற்போக்கு அம்சங்களையும் பலவீனப்படுத்தும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே தான், மேற்கத்திய தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிக்காக ரசியாவில் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படுவதை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் விரும்பினார். அவரது மறைவால் ரசியப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டனர்.

பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட வீரரும் ஆசானும் ஆகிய பிரெடெரிக் எங்கெல்சின் நினைவு என்றென்றும் பசுமையாய் நிலைத்திடுக !

(முற்றும்)

வி.ஐ.லெனின்
(1895 இலையுதிர் காலத்தில் எழுதப் பெற்றது. 1896-ல் “ரபோத்னிக்” (உழைப்பாளி) என்ற திரட்டு, எண் 1-2-ல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது)

கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 9

பாகம் – 8

கோட்பாடு என்றால் என்ன ?

தத்துவத்தின் கோணத்திலிருந்து மட்டுமே அதை அணுகுவதென்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொது விதியே, கோட்பாடு என பொருள்படும். குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட வளர்ச்சி விதிகள் நிர்ணயிக்கின்றன. ஒரே மாதிரியான விசயங்கள் ஒட்டு மொத்தத்தில் ஒரே விதமான வளர்ச்சி விதிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன;

கோட்பாடு என்னும் விசயத்தை நாங்கள் எப்படி பொருள்படுத்துகிறோம் என்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொதுவான விதிகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகவும் ஆராயவும் நாம் கையாளும் முறையென்று அணுகுகிறோம். பிரச்சினைகளின் பரிசீலனை, ஆராய்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும் பொது விதி தவறாக இருக்குமேயானால், நமது நிலை, கண்ணோட்டம், முறை முதலியன தவறாக இருக்குமேயானால், பிரச்சினையை பரிசீலிப்பதிலும், ஆராய்வதிலும் பிழை நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். சில பிரச்சினைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் விதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமேயானால், பின் அந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு நாம் கையாளும் முறையும் நிச்சயம் தவறாகத்தானிருக்கும். அதனால் நாம் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையை லேசாக மதிப்பிடக்கூடாது. கோட்பாட்டில் பிழை ஏற்படுமானால், பின் தனிப்பட்ட தவறுகள் மட்டுமின்றி, முறைப்படி, தீராத தன்மை கொண்ட, தொடர்ச்சியாகப் பல நடைமுறை பிரச்சினைகளை பாதிக்கும் தவறுகள் நேரும்.

கோட்பாடு சம்பந்தப்படாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்ன? முற்றிலும் நடைமுறை தன்மைபடைத்த பிரச்சினைகள் என்ன?

இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினைகளாக, தினசரி அலுவல் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவது என்பது கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை; இதில் நமக்குள் யாருக்கும் வேறுபாடில்லை; மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாகச் ஒன்றுபடுத்துவது என்னும் பணியில் விசேச கவனம் செலுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அமைப்புகள் அதற்கு தலைமை கொடுக்க வேண்டும். இத்தகைய பணியில் இராணுவமும் உதவிபுரிய வேண்டும்; தனது பங்கை செலுத்த வேண்டும்; இவை எல்லாம் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினைகள்; இதில் நமக்குள் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை; அதாவது கோட்பாடு சம்பந்தமாக நமக்குள் மாறுபாடான அபிப்பிராயபேதமில்லை.

ஆனால் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து படையும், இராணுவத்தின் மக்கள் போக்குவரத்து இலாகாவும் தற்காலிகமாக கலைக்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் பொதுமக்கள் அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் அபிப்பிராயங் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து கோஷ்டி கலைக்கப்படக் கூடாது என்று கருத்துக் கொண்டிருக்கிறார்கள்; சில தோழர்கள் ஒரு பொதுமக்கள் அமைப்பு நான்கு இலாக்காக்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று யோசனை கூறுகிறார்கள்; மற்றவர்கள் அதை ஐந்தாகப் பிரிக்க வேண்டுமென்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகளேயாகும். அவை ஒன்றும் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினையன்று.

இன்னுமொரு உதாரணம்: இன்று எதிரியின் பின்னணியில், நமது எதிர்ப்பு யுத்தத்தின் போர்த்தந்திரக் கோட்பாடு, பிரிந்த கொரில்லா யுத்த போர்த்தந்திரமாகும். இந்த விசயத்தில் நமக்குள் அபிப்பிராய வேறுபாடு இல்லையென்றால், அதன் பொருள் போர்த்தந்திரம் பற்றிய கோட்பாட்டில் நமக்குள் அபிப்பிராய பேதமில்லை என்பதேயாகும். ஒரு குறிப்பிட்ட தளபதி, நிலைமையின் நிர்ப்பந்தத்தினால் உந்தப்பட்டு, அல்லது சாதகமான விசேஷ வாய்ப்புகள் காரணமாக அணிவகுத்த யுத்தபோர் நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்; அது வெற்றி அடையலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம். இது தனிப்பட்ட நடைமுறை பிரச்சினை; இதற்கும் கோட்பாடு பிரச்சினைக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை; இம்மாதிரி நடத்தப்படும் போர்கள் ஓரிரண்டு தவறாகவே இருந்தபோதிலும்; இத்தவறுகள் அப்பொழுதும் தனிப்பட்ட தவறுகளேயாகும்;

தளபதி, எதிரியின் அணிகளுக்குப் பின்னால் அணி வகுத்த யுத்தம் நடத்த வேண்டுமென்பதை ஒரு கோட்பாடாகக் கொள்ளாத வரையில் அது தனிப்பட்ட தவறுதானாகும். ஒருவேளை குறிப்பான ஒரு நிலையின் காரணமாக, நன்றாக போராடவும் கூடும். அதனால் இம்மாதிரியான தனிப்பட்ட, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் நாம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம்பிடித்துக் கொண்டும் ஒரு முடிவில்லாத முறையில் வாதித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.

மற்றொரு உதாரணம் : நமது ராணுவம், இன்றுள்ள தயாரிப்புடன் விரோதியின் பலமான ஸ்தானங்களையும், பிரதான நகரங்களையும் கோட்பாட்டின்படியே தாக்கக்கூடாது. இந்த கோட்பாடு பற்றி நமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இல்லையென்றால் விசேஷ நிலைமையை உத்தேசித்து அல்லது விசேஷ அவசியத்தினால் ஒரு முன்னேறிய தாக்குதல் தொடுத்தாலும், எதிரியின் ஒரு ஸ்தானத்தையோ அல்லது நகரத்தையோ கைப்பற்றினாலும், அது கோட்பாடு சம்பந்தப்படாத தனிப்பட்ட நடைமுறை பிரச்சினையேயாகும்.

ஆயினும் இந்த பலமான ஸ்தானத்தை, அந்த நகரத்தை பிடித்து விட்டோம், ஆதலின் விரோதியின் எல்லா பலம் பொருந்திய ஸ்தானங்களையும், நகரங்களையும் உடனே தாக்கத் தொடங்குவோம் என்றால், இங்கு கோட்பாட்டு பிரச்சினை எழுகிறது. உள்நாட்டு யுத்தகால கட்டத்தில் பெரிய நகரங்களின் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டுமென்று நமது தோழர்கள் சிலர் வாதித்தார்கள்; சில பெரிய நகரங்களை தாக்கும்படி செஞ்சேனையை கட்டளையிட்டார்கள்; இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டதாகும்; ஏனெனில் பெரிய நகரங்களை செஞ்சேனை தாக்க வேண்டு மென்னும் கோட்பாட்டில் உள்ள பிடிப்பினால் உந்தப்பட்டுத்தான் பெரிய நகரங்களைத் தாக்கியுள்ளனர். கோட்பாடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடைமுறைப் பிரச்சினையில், கோட்பாடு சம்பந்தமாக நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கோட்பாட்டில் இன்னும் பெரிய நகரங்கள் மீது முன்னேறி தாக்குதல்கள் தொடுக்க கூடாது என்றுதான் நிற்க வேண்டும்.

ஸ்தூலமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் பல்வேறு பரிகாரங்கள் இருக்கும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவதற்கு பெரும்பாலும் யதார்த்தத்தில் சாத்தியமான பல்வேறு பாதைகளிருக்கும். இந்தப் பரிகாரங்களும், பாதைகளும், அந்த சமயத்தில் நம்மை எதிர்நோக்கும் நிலைமைக்குத் தக்கவாறு ஒவ்வொன்றும் அதனதன் சாதகபாதக அம்சங்களைக் கொண்டிருக்கும். சில வழிகளும், பாதைகளும் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கக் கூடும்; ஆனால் அதே சமயத்தில் அபாயம் நிறைந்ததாயிருக்கும். அதனால் பாதுகாப்பை உத்தேசித்து அதைக் காட்டிலும் குறைந்த அளவுக்கே சாதகமாகவுள்ள வழியையோ, அல்லது பாதையையோ நாம் பின்பற்றுவது உசிதமாக இருக்கும்.

அதனால் இத்தகைய ஸ்தூலமான, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில், மாறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்தால், அவ்வபிப்பிராயங்கள் கோட்பாடு சம்பந்தப்பட்டவையல்லாத வரையில், சமரசம் செய்து கொள்வதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும், மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் நம்மாலியன்றளவுக்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். “சமரசம் செய்து கொள்வதில் உன் ஆற்றலைக் காட்டு ” அப்பொழுது பிரச்சினைகள் சுமுகமாக முடியும்; பிரச்சினைகள் உடனுக்குடன் தீரும். நாம் எப்பொழுதுமே நமது அபிப்பிராயத்தையே வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது; மற்றவர்களையே விட்டுக் கொடுக்கும்படியும். இணங்கும் படியும் நமது அபிப்பிராயப்படியே காரியங்களைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் தீருவதை காலதாமதப்படுத்தியவர்களாவோம்; வேலையின் முன்னேற்றத்தை தடை செய்தவர்களாவோம்; சச்சரவுகளை வலுக்கச் செய்வோம்; கட்சிக்குள் வீண் வம்பளக்கும் போக்கை பலப்படுத்தியவர்களாவோம்; தோழர்களுக்குள் ஒற்றுமைக்கு இடைஞ்சல் செய்தவர்களாவோம். அதனால்தான் முற்றிலும் நடைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட கட்சி அங்கத்தினர்களுடன் சாத்தியமான எல்லா வகையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது, கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட கொள்கைப் பிரச்சினைகள் என்ன என்பதும், முற்றிலும் நடைமுறை சம்பந்தமான பிரச்சினைகள் என்ன என்பதும் நமக்குத் தெரியும்; அவை போராட்டத்தின் குறிக்கோள், அக்குறிக்கோளை எய்துவதற்கு உகந்த போராட்ட வடிவம், போர்த்தந்திரம், செயல்தந்திரம், நமது பொதுவான நிலை, குறிப்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிலை முதலியவற்றுடன் சம்பந்தப்படாதவை. மேலே கூறியுள்ள உதாரணங்கள் இவ்வகைப்பட்ட பிரச்சினைகளாகும்.

இனி இதுவரை சொன்னதைத் தொகுத்துக் கூறுவோம். கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கான போராட்ட நலனை மனதிற்கொண்டே சகல பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டுமென்பது நமக்கு வழிகாட்டும் பொதுக் கோட்பாடு. இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு எல்லாம் உட்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு முரணான எந்தக் கண்ணோட்டமும், அபிப்பிராயமும், செயலும் எதிர்க்கப்பட வேண்டும். பல்வேறு கோட்பாடுகளும், பெரிய கோட்பாடுகள் எனவும், சிறிய கோட்பாடுகள் எனவும் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. பகுதி முழுமைக்குட்பட்டது;

உடனடி அவசியம், நீண்டகால அவசியத்திற்கு உட்பட்டது சிறிய கோட்பாடுகள், பெரிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவை என்பதே விதி. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் எழும் வேற்றுமை விசயத்தில் ஒத்துப் போவது, சமரசம் செய்து கொள்வது என்பதற்கு இடமேயில்லை; ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு அப்பிரச்சினைகளை பரிபூரணமாக விவாதிக்க வேண்டும். ஆயினும் கோட்பாடு சம்பந்தப்படாத எல்லா பிரச்சினைகளிலும் விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமலும் ஒத்துப் போகாமலும் இருக்கக் கூடாது; ரொம்பவும் வன்மையாகப் போராடவும் வாதிக்கவும் கூடாது; இல்லாவிடில் நமது வேலை தடைபடும். ஐக்கியம் சீர்குலையும்.

உட்கட்சிப் போராட்டத்தில் தன்னுடைய அரசியல் கொள்கை “சரியானதாக” இருக்கும் வரையில், சில அமைப்பு தவறுகளை அவர் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. அல்லது அது இரண்டாந்தர முக்கியத்துவம் கொண்டது தான் என்று ஒரு தோழர் சொல்வதை நான் ஒருமுறை கேள்விப்பட்டேன். அதனால் உட்கட்சிப் போராட்டத்தில் அமைப்புக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வாத பல்வேறு வழிகளிலும் தனது எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதியுண்டு என்று அவர் அபிப்பிராயப்படுகிறார். இத்தகைய வாதமும், கண்ணோட்டமும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில் சரியான அரசியல் கொள்கையும், சரியான அமைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானது என்று அவர் கருதுகிறார். கட்சிக்குள் ஒழுங்கையும் அமைப்பையும் சீர்குலைப்பது, கோட்பாடு விசயத்தில் பெருந்தவறு இழைப்பதாகும் என்று அவருக்குத் தெரியவில்லை. விசேஷமாக இன்று அது பெருந்தவறாகும். கட்சிக்குள் உள்ள ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதென்பது எதிரிக்குச் செய்யும் சிறந்த சேவையாகும்; கட்சியின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகப்பெருந் தீங்கிழைப்பதாகும்; கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறு எத்தவறைக் காட்டிலும் கடுமையான தவறு செய்ததாகும்.

கோட்பாடு சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் சரி வேறு பல பிரச்சினைகளிலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு கோட்பாடு பிரச்சினைகள் கட்சியின் நலனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்கிற அடிப்படையில் ஒப்பிட்டும், பாகுபாடு படுத்தியும் பார்ப்பதற்கும் தோழர்கள் கூடுமான வரையில் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய கோட்பாட்டிற்கு சிறிய கோட்பாடு உட்பட வேண்டும், முழுமைக்கு பகுதி உட்பட வேண்டும். என்னும் விதிப்படி எந்த கோட்பாடுகள் சம்பந்தமாக அடம் பிடிக்கக் கூடாது; தற்காலிகமாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், எந்தக் கோட்பாடு பிரச்சினைகளில் உறுதிகாட்ட வேண்டுமென்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் நாம் முடிவு செய்வோம்.

உட்கட்சி ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் நிலை நிறுத்துவதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவமோ அல்லது அவசரமோ இல்லாத கோட்பாட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட, கட்சியில் உள்ள மற்றவர்களுடன் சில சமயங்களில் தற்காலிகமான  சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரியான கோட்பாட்டுப் பிரச்சினைகளை தற்காலிகமாக நாம் கிளப்பக்கூடாது. அதன் மீது ஓயாமல் விவாதம் நடத்திக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப்பதிலாக அந்தச் சமயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினைகளை நாம் வலியுறுத்த வேண்டும். இது கோட்பாட்டில் சமரசம் செய்து கொண்டதாகாது; நடுவாந்திரப் பாதையாகாது; யதார்த்த செயலில் செய்து கொண்ட சமரசமாகும். மெஜாரிட்டி முடிவுக்கு பணிவதேயாகும்.

மேலே கூறியுள்ளவை கட்சிக்குள் உள்ள கோட்பாடற்ற போராட்ட பிரச்சினைகளாகும். உட்கட்சி கோட்பாடற்ற போராட்டமும், யாந்திரீகமான, மிதமிஞ்சிய போராட்டமும் எதிலிருந்து வருகிறது? அதன் தோற்றுவாய்கள் என்ன? பின்வருவனவற்றிலிருந்து அவை உதிக்கின்றன:

முதலாவதாக, கட்சிக்குள் நமது தோழர்களின் தத்துவப் பயிற்சி பொதுவாக மிகக்குறைவாக இருக்கிறது; பலவிதங்களில் அவர்களது அனுபவம் போதுமானதாக இல்லை. நீண்ட காலத்திற்கு பூரா கட்சியின் மத்தியமும், தலைமையும் யதார்த்தத்தில் உருப்பெற வேயில்லை; இன்று வரை பல்வேறு ஸ்தலங்களில் வெகு சில தலைமைகளும், மத்தியங்களும்தான் உருப்பெற்று இருக்கின்றன.

இரண்டாவதாக, கட்சிக்குள் நிறைய குட்டி பூர்ஷ்வா நபர்கள் இருக்கிறார்கள். குட்டி பூர்ஷ்வாவின் வெறி, ஆவேசம், விவசாய குட்டி பூர்ஷ்வாவின் பழிதீர்க்கும் மனோபாவம் முதலியன உட்கட்சிப் போராட்டத்தை பாதித்துக் கொண்டேதானிருக்கின்றன.

மூன்றாவதாக, கட்சிக்குள் நிலவும் ஜனநாயக வாழ்வு அசாதரணமாயிருக்கிறது. பிரச்சினைகளை ஒருவரோடு ஒருவர் யதார்த்த நோக்குடன் விவாதிக்கும் முறை இன்னும் நிலைநாட்டப்படவில்லை; முரட்டுத்தனமாகவும், தன்மனப் பார்வையுடனும் பிரச்சினைகளை ஆராயும், முடிவுகட்டும் முறை பெருமளவுக்கு இன்னும் இருந்து வருகிறது.

நான்காவதாக, சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் ஊடுருவி விட்டார்கள்; நம் தோழர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் ஒரு சந்தர்ப்பவாத மனோபாவப் போக்கு இருந்து வருகிறது; தாங்கள் எவ்வளவு நல்ல முறையில் “போல்ஷ்விக் ஆகியுள்ளார்” என்பதைக் காட்டுவதற்காக, வலதுசாரியைக் காட்டிலும் “இடதுசாரி” மேலானது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே “இடதுசாரி”யாக இருப்பதற்கு முயலுகின்றனர். தங்கள் சொந்த கௌரவத்தை உயர்த்தும் பொருட்டுமற்றவர்களைத் தாக்குகிறார்கள்.

ஐந்தாவது ட்ராட்ஸ்கிய துரோகிகளும் எதிர்புரட்சிக்காரர்களும் கட்சிக்குள் ரகசியமாக நுழைந்து விட்டார்கள்; உட்கட்சிப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு கட்சியை சீர்குலைக்கப் பார்க்கின்றனர். பெரும்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய துரோகிகள், கட்சிக்கொடியின் மறைவில் சில தோழர்களை வேண்டுமென்றே தாக்குகின்றனர். அதன் பிறகு ஒரு ட்ராட்ஸ்கிய துரோகி தாக்கப்பட்ட தோழரைத் தொடர்பு கொள்வதற்கும், தங்கள் கோஷ்டியில் ஒரு ஒற்றனாக அவரை இழுப்பதற்கும், அனுப்பப்படுவான்.

உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் திரிபுகளின் தோற்றுவாய்கள் இத்தகையவை.

ஆரம்பத்திலிருந்தே நமது கட்சியில் தீவிர சுய விமர்சனமும் , உட்கட்சிப் போராட்டமும் இருந்து வந்திருக்கிறது இது முற்றிலும் அவசியமானது; ரொம்ப நல்லதும் கூட. நமது உட்கட்சிப் போராட்டத்தில் ரொம்ப விசயங்கள் சரியாகவும் பொருத்தமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதனால் நமது கட்சி, உட்கட்சிப் போராட்டத்தில் பலதும் சாதித்திருக்கிறது; கட்சியின் தத்துவப் பயிற்சி நிலையையும் ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். இந்த சுயவிமர்சனங்களும், உட்கட்சிப் போராட்டங்களும்தான் நமது கட்சியை முன்னேற்றப் பாதையில் உந்திச் செல்லும் சக்தியாக விளங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. கட்சிக்கு அவை இன்றியமையாதவை.

ஆயினும் நமது கட்சியின் நீண்ட சரித்திரப் பூர்வமான வளர்ச்சியில் கடந்தகால உட்கட்சிப் போராட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் மறுக்க முடியாது. அதன் விளைவாக உட்கட்சிப் போராட்டம் பெருஞ்சேதம் உண்டாக்கிற்று. அதனால் இன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், கடந்த கால தவறிலிருந்து நாம் பலன் பெற வேண்டும்; வீணாக நாம் பெரும்நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால உட்கட்சிப் போராட்டத்தின் சரித்திரப் பூர்வமான படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் கட்சியின் மகத்தான முன்னேற்றத்தை நாடவேண்டும்.

உட்கட்சிப் போராட்டத்தில் கூடுதலான சாதனைகளைப் பெறுவதற்கும், குறைந்த நஷ்டத்தில் கட்சியின் அதிகபட்ச முன்னேற்றத்தை சாதிப்பதற்கும் நிற்பதே நிகழ்காலத்திலும் எதிர் காலத்திற்கும் உட்கட்சிப் போராட்டக் கொள்கையாகும். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சரித்திரப் பூர்வமான உட்கட்சிப் போராட்டப் படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் நாம் அதை வகுத்து வைக்கவேண்டும். இதற்கு கடந்தகால உட்கட்சிப் போராட்டத்தில் காணும் பல்வேறு திரிபுகளையும் தவறுகளையும் அறவே சரிப்படுத்தியாக வேண்டும்; உட்கட்சிப் போராட்டத்தை முறையாகவும் பலன் தரும் முறையிலும் நடத்தவேண்டும்.

(தொடரும்)

சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு வலுவடைந்து, அவர் மீது விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அவரை  அதே பதவியில் நீடிக்கச் செய்து அழகுபார்க்கிறது தமிழக அரசு.  எதிர்க்கட்சிகளின் கண்டனம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிவரும் #TNgovtDismiss_Surappa டிரெண்டிங்கும் இணைந்து தாக்கம் செலுத்திய பின்னர்தான், விதிமுறைப்படி சூரப்பா இடைநீக்கம் செய்யப்படுவார் என அறிவித்திருக்கிறார் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2018-ம் ஆண்டு சூரப்பா நியமிக்கப்பட்டது முதல், இன்றுவரையில்  மோடி அரசின் கல்வி கார்ப்பரேட்மய காவிமய அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் செவ்வனே செயல்பட்டுவந்தார்.

திறமையான பல்வேறு தமிழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இருக்கையில் கர்நாடகாவில் இருந்து ஏன் சூரப்பாவைக் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகளும் கல்வியாளர்களும் அச்சமயத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரது “திறமையையும்”, “நேர்மையையும்” பாராட்டித் துதிபாடி கவர்னர் மாளிகையே அறிக்கை வெளியிட்டது. அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு நெருக்கமானவர் சூரப்பா .

அந்த ”நேர்மையான”, ”திறமையான” சூரப்பா தான் ரூ. 280 கோடி அளவிலான லஞ்ச, ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 200 கோடி ஊழல் செய்திருப்பதாக, கடந்த பிப்ரவரி மாதமே வந்த புகாரைக் கடந்த 9 மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திடீரென விசாரணைக் கமிசன் அமைத்துள்ளது எடப்பாடி அரசு.

மேலும், அண்ணா பல்கலைக்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கான பேராசிரியர் நியமனத்தில், ஒரு பணி நியமனத்துக்கு ரூ. 13 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை நிர்ணயித்து, மொத்தமாக ரூ. 80 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இலஞ்சப் புகாரில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சூரப்பா மற்றும் துணை இயக்குனர் சக்திநாதன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், சூரப்பா தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, தனது மகளை அண்ணா  பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தது எடப்பாடி அரசு.

லஞ்ச ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகும் நபர் அதிகாரத்தில் நீடித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.    ஆனாலும் சூரப்பாவையோ, சக்தி நாதனையோ அதே பதவியில் அமர்த்தி அழகுபார்த்துக் கொண்டிருந்தது எடப்பாடி அரசு.

படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

இதனைக் கண்டித்து திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சூரப்பாவை பதவி நீக்கம் செய் ( #TNgovtDismiss_Surappa ) என வலைஞர்கள் ட்ரெண்டிங் செய்யத் துவங்கிவிட்டனர்.

புறச்சூழலில் இப்படி ஒரு நெருக்கடி வரத் துவங்கியதும்தான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சூரப்பா மீதான நடவடிக்கை குறித்து வாய் திறந்துள்ளார். “விதிகளுக்கு உட்பட்டு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் அன்பழகன். அதாவது ஆளுநர் இடைநீக்க உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தால்தான் இடைநீக்கம் செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அன்பழகன்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் திமிரோடு பதிலளித்துள்ளார் சூரப்பா. தன் மீதான ஊழல் புகார் குறித்துப் பதிலளிக்கையில், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் எங்கிருந்து வந்தடைந்தனர் என்பது தெரியவில்லை என்றும், தமிழக அரசின் விசாரணை குறித்துக் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்துப் பேசுகையில், தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்குத் தேவை என்பதால்தான் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ பணி நியமனங்களுக்கு பணம் வாங்கியிருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்” என்றும், ”என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார் சூரப்பா.

சூரப்பா ஒருவேளை நேர்மையாளராக இருந்திருக்கலாம், ஆனால் யாருக்கு நேர்மையாக இருந்தார் என்பதுதான் கேள்வி ?

பஞ்சாப் ஐ.ஐ.டியில் இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.ஐ.டி-க்கான புதிய கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ. 750 கோடியை முதல் ஐந்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி ஆண்டில் செய்ததன் காரணமாக அந்தக் கட்டுமானச் செலவு ரூ.1958 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அன்றைய இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூரப்பாவின் நியமனத்தின் போதே தெரிவித்துள்ளார்.

மேலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பை தமது கண்டுபிடிப்பாகக் காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகள் சூரப்பா மீது இருந்ததை  ராமதாஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.

ரூ. 750 கோடி செலவில் முடிக்க வேண்டியதை 1958 கோடிக்கு உயர்த்தியதன் பின்னணியில் என்ன நேர்மை இருந்திருக்க முடியும் ? ஒருவேளை சூரப்பா இப்போது கேட்பது போல அப்போதும் “ஆதாரம் இருந்தால் காட்டமுடியுமா?” என்று கேட்டு தனது நேர்மையை “காப்பாற்றியிருக்கலாம்” !

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அண்ணா பல்கலை ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வரின் தனிப் பிரிவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூரப்பா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.

கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்துள்ள சூழலில், தேர்வுக் கட்டணமாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் சூரப்பா. ஆய்வே நடத்தாமல் 8000 ஆய்வு மாணவர்களிடமிருந்து செமஸ்டர்கட்டணம் வசூலித்ததாகவும் சூரப்பாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
♦ அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !

அதே போல, உயர் சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனமாக, அண்ணா பல்கலையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ள விவகாரத்தில்,  தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சூரப்பா. அக்கடித்தில், மாநில அரசினுடைய நிதிப் பங்கீடு இல்லாமலேயே தம்மால் ஐந்தாண்டுகளில் ரூ.1500 கோடி திரட்ட முடியும் என்றும், அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்புத் தகுதி வழங்கும்படியும் எழுதியுள்ளார்.

ஒரு மாநில அரசால் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்பட்டுவரும் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தின், தலையெழுத்தை எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என்றால், அதற்குக் கண்டிப்பாக பின்னணியில் ஒரு சித்தாந்தமும், நோக்கமும் இருக்க வேண்டும்.

மாநில அரசின் நிதியில்லாமல், அண்ணா பல்கலையின் நிதியை தாமாகத் திரட்டுவது என்றால், சூரப்பாவால் நோட்டு அச்சடித்தா விட முடியும் ? மாணவர்களிடமிருந்து கல்விக்கட்டணமாகத்தான் கறக்க முடியும். கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் சிறப்புக் கல்விநிறுவனத்தில் இனி சாதாரண ஏழை, நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை சேரவிடாமல் தடுப்பதுதான் இதன் பின்னணியில் இருக்கின்ற காரணம்.

மத்தியில் ஆளும் மோடி – சங்க பரிவாரக் கும்பல் தமது தனியார்மயமாக்க – பார்ப்பனிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான நபர்களைக் கண்டறிந்து, கல்வி, கலாச்சாரம், வரலாறு, அறிவியல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் பொறுப்புகளில் அவர்களை நியமித்து வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் வளங்களையும், சந்தையையும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவும், பார்ப்பனிய சனாதனத்தை கல்வியில் உள்நுழைக்கவும் சிறப்பாக செயல்படக் கூடிய “செயல்வீரர்களை” தட்டிக் கொடுத்து ஊக்கமளித்து தனது நோக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கி முன் செல்லுகிறது பாஜக அரசு.

சங்கபரிவாரத்தின் அத்தகைய ஒரு செயல்வீரர்தான் ‘சூரப்பா’. பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவந்ததிலேயே நம் அனைவருக்கும் அது தெரியவந்துவிட்டது. இந்நிலையில், அந்த செயல்வீரரை இடைநீக்கம் செய்ய தமிழக அரசு கேட்டதுமே, பாஜகவின் கைத்தடியாகச் செயல்படும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியளித்துவிடுவாரா ?

“சூரப்பாவை பதவி நீக்கு” #TNgovtDismiss_Surappa என சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் டிரெண்டிங், தமிழக அரசை வேண்டுமானால் அசைக்கலாம், சூரப்பாவை நீக்கு என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

கர்ணன்

நெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி ! பணிய வைத்த போராட்டம் !

நெல்லை மாவட்டம் விளாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செம்புக் குட்டி. தனது மனைவியின் பெயரில் டவுன் தெற்கு ரத வீதியில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் கிளையில், நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தார். அதற்குரிய அசலையும் வட்டியையும் எந்த ஒரு தாமதமில்லாமல் முறையாக கட்டியும் வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த ஜனவரி 20-ம் தேதி அவரது மனைவி காலமாகிவிட்டார். உடனே இந்தத் தகவலை தனது மூத்த மகன் வேல்முருகன் மூலம் பைனான்ஸ் அலுவலகத்திற்கு நேரில் வந்தும் தகவல் தெரிவித்திருந்தார். அப்போதே ”கடனுக்கான அசலையும், வட்டியையும் செலுத்தி விடுகிறேன். அதன்பின்பு வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுத்துவிட்டு, நகைகளை பெற்றுக் கொள்கிறேன்” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். அந்தச் சமயத்திலேயே கடனுக்கான அசல் தொகையில் ரூபாய் ஒரு லட்சம் செலுத்திவிட்டும் வந்துள்ளார் வேல்முருகன்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அசலும் வட்டியும் செலுத்தி வந்துள்ளார். பின் கொரோனா ஊரடங்குக் காலத்தில் ஆன்லைன் மூலமாக அசல் வட்டியை செலுத்த முயற்சித்தபோது, சேவை முடக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு முடிந்த பின்பும் இதே நிலை தொடர்ந்ததால், நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த முத்தூட் பைனான்ஸ் கிளையை அணுகி அசலையும் வட்டியையும் செலுத்த முயற்சித்துள்ளார். அங்கும் “System” அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டபோது customer death என்று lock செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது குறித்து முன்கூட்டியே எந்த தகவலையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை.

படிக்க :
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !

பின் மறுநாள் வேல்முருகன் அவர்கள் டவுன் முத்தூட் மேனேஜர் ஞானசேகரனை சந்தித்து விபரம் கூறியுள்ளார். அதற்கு மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக கூறி உள்ளார்.

”நகை கடனுக்கான தொகையை செலுத்த நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். உங்கள் பக்கம்தான் பிழை. எனவே லாக்டவுன் முடிகிற வரை வட்டி தொகையை கழிக்க வேண்டும்” என்று வேல்முருகன் கூறியுள்ளார். அதற்கும் மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசித்தான் முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் பலமுறை ஃபோன் எடுக்காமல் மேனேஜர் அலட்சியப்படுத்தி உள்ளார். பின்னர் வேல்முருகன் நேரில் சந்தித்து பேசியபோது, மேனேஜர் ஞானசேகரன் “நீங்கள் Legal document சமர்ப்பிக்கும் வரை அசலை செலுத்த முடியாது. ஆனால் வட்டி மட்டும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று ஈவிரக்கமின்றி பேசியுள்ளார். இதுதானே இவர்கள் ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் ஏமாற்றும் உத்தி.

பாதிக்கப்பட்ட தரப்பு அதே லாக்டவுன் சமயத்தில் கட்டிய அசல் தொகை ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்வதற்கு எந்த ரூல்சும் தடையாக இல்லை. அதையும் கணக்கில் ஏற்றாமல் ஏமாற்றி, பழைய தொகையின் அடிப்படையிலேயே வட்டியைப் போட்டு வந்துள்ளார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

வலது : நெல்லை டவுனில் உள்ள முத்துட் ஃபைனாஸ் அலுவலகம்
இடது : அலுவலகத்தின் முன் அமைப்புகள் போராட்டம்

வேல்முருகன் அவர்களின் பெரியம்மா (வயதானவர்) முத்தூட் பைனான்சுக்கு சென்று மேனேஜரிடம் வாரிசு சான்றிதழ் தாமதமாவது குறித்து பேசியபோது, மேனேஜர் எகத்தாளமாக “எல்லோருக்கும் வாரிசு சான்றிதழ் கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் கிடைக்கலையா” என்று இறந்த துயரத்தை கூட பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து முத்தூட் பைனான்ஸ் மேலதிகாரிகளிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். வட்டி மட்டும் ஏறிக்கொண்டே வந்துள்ளது. உண்மையான கணக்கின்படி வெறும் 23 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே வட்டி கட்ட வேண்டிய நிலையில் ரூபாய் 95 ஆயிரம் வரை தாண்டியுள்ளதாகப் பேரிடியை இறக்கி உள்ளனர்.

ஆறு மாதமாக அலைந்த அந்த குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளானது. இந்நிலையில்தான் வேல்முருகன் அவர்கள் நமது அமைப்புகளை நாடினார். உடனடியாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அம்பலப்படுத்தியும், மேனேஜர் ஞானசேகரனை கைது செய்யக்கோரியும் நெல்லை நகர்ப்புற பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். 12.11.2020 அன்று முத்தூட் பைனான்ஸை முற்றுகையிடுவது எனவும் (மக்கள் அதிகாரம், தமிழர் உரிமை மீட்புக் களம், திராவிடத் தமிழர் கட்சி, பூர்விக தமிழர் கட்சி) ஆகிய அமைப்புகள் அறிவித்தோம்.

பதறியடித்து 11.11.2020 அன்று இரவு வேல்முருகன் அவர்களுக்கு போன் செய்து “நேரில் வாருங்கள் கணக்கை சரி பார்த்து முடித்து விடலாம்” என்று மழுப்பி உள்ளார். அதற்கு வேல்முருகன் ஒத்துக் கொள்ளவில்லை. இப்போது எங்கிருந்து மேனேஜருக்கு ஞானம் பிறந்தது ?

அடுத்த நாள் நாம் முற்றுகை இடுவதற்கு முன்பே பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொண்ட போலீசு, முத்தூட் மேனேஜரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க முத்தூட் பைனான்ஸின் பித்தலாட்டம் என்ன என்பது அம்பலமானது. குடும்பத்தினரும் அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் மேல் அதிகாரிகள் மேலும் மூன்று பேர் வரவழைக்கப்பட்டனர். தவறை மறைக்க முடியாமல் மழுப்பலாக பதிலளித்தனர். கார்ப்பரேட் Law படிதான், ரிசர்வ் பேங்க் விதிமுறைகளின்படிதான் செயல்படுவதாக உண்மையையும் உடைத்தனர்.

படிக்க :
♦ கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
♦ மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

உண்மையில் இந்த கிரிமினல் கும்பலை பாதுகாக்கும் வகையிலேயே ரிசர்வ் பேங்க் விதிமுறைகளை வகுத்துள்ளது. வசமாக அகப்பட்டுக் கொண்ட நிலையில் இரண்டு நாட்களில் கணக்கை சரி பார்த்து நகைகளை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். ஆறு மாதமாக அலைந்து திரிந்துக் கேட்டபோது வராத புத்தி, போராட்டத்தில் இறங்கிய பின்புதான் வருகிறது என்பதை உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இது போன்ற நிறுவனங்களால் ஏமாற்றப்படுவது தெரிந்தும் எத்தனையோ பேர் சகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதுதான் உண்மை. நாம் நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு வீதியில் இறங்காமல், தட்டிக் கேட்காமல் எந்தத் தீர்வும் இல்லை.

மக்களின் உழைப்பில் உருவான செல்வங்களையெல்லாம் தனியாருக்கு அரசு தாரைவார்ப்பது போல், நிதித்துறையையும் ஒப்படைத்ததன் கொடூரமான விளைவுகள்தான் இது. முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற எண்ணற்ற ஒட்டுண்ணி, அட்டைகள் எல்லாம் இதனால் உருவானவையே. இன்று கோடானு கோடி ஏழை நடுத்தர மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அதிகார வர்க்கத்தின் துணையோடு தப்பித்துக்கொள்ள முடியும் என்ற திமிர்தான் இதற்கெல்லாம் காரணம்.

மக்களின் வாழ்க்கையை அழிக்கும் தனியார்மயக் கொள்கைகளை, புதிய தாராளவாதக் கொள்கையை, இந்த கார்ப்பரேட் கும்பலைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் நமது துயரங்களுக்கு முடிவில்லை.

போராட்டக் களத்தில்…
மக்கள் அதிகாரம்
தமிழர் உரிமை மீட்புக் களம்
திராவிடத் தமிழர் கட்சி
பூர்வீகத் தமிழர் கட்சி


தகவல் :
மக்கள் அதிகாரம் – நெல்லை
தொடர்புக்கு :- 9385353605

தன்னை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டமே !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 8

பாகம் – 7

IV. கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டம்

தோழர்களே! இப்பொழுது உட்கட்சிப் போராட்டத்தில் மற்றொரு திரிபை  – கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டத்தை – விவாதிக்கப் போகிறேன். இத்தகைய போக்கு குறிப்பாகவும் மோசமான அளவிலும் சீனக் கட்சியில் நிலவுகிறது. அந்நிய நாட்டுக் கட்சிகளில் “வீண் வம்பளக்கும் போக்கு”  இருந்து வந்த போதிலும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருப்பது போன்று அங்குள்ள நிலைமை அவ்வளவு மோசமாக இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆதலால் இத்தகைய போக்கு பற்றி நமது தோழர்கள் பரிபூரணமாக உணரும்படியாகச் செய்ய வேண்டும்; அதை சமாளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் கட்சியின் ஐக்கியத்திற்கும் வேலைக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்படும்.

கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள் எவை?

கீழ்க்காணும் தகராறுகளும், போராட்டங்களும் கோட்பாடற்றவை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். அதாவது அவை  நமது கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றின் புரட்சிகரமான நலன்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பொதுவானநிலை கோட்பாடு முதலியவற்றிலிருந்து மாறுபடுவதாகும்.

முதலாவதாக, சில தோழர்கள் கட்சி நிலையிலிருந்தோ அல்லது கட்சி முழுமையின் நலனை அடிப்படையாகக் கொண்டோ பிரச்சினைகளைக் கிளப்புவதோ, மற்ற தோழர்களை எதிர்த்தல் அல்லது போராட்டங்களை நடத்துவதோ இல்லை; தனது தனிப்பட்ட நலனையோ அல்லது கோஷ்டியின் நலனையோ கண்ணோட்டத்தில் கொண்டே பிரச்சினைகளை கிளப்பவும், மற்ற தோழர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். அதாவது உட்கட்சி போராட்டம் நடத்துவதில் அவர்கள் நிலை சரியானதில்லை. அதனால், பிரச்சினைப் பற்றி அவர்கள் கண்ணோட்டம், கொள்கை, வழிகளை, அவை தங்களுக்கும் ஒருசில நபர்களுக்கும் உபயோககரமாக இருக்கும் வரையில் ஆதரிப்பார்கள். அதற்காக வாதாடவும் செய்வார்கள். குறிப்பிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கோ அல்லது அந்த ஒருசில நபருக்கோ அனுகூலமாகவில்லை என்றால், அவற்றை எதிர்ப்பார்கள்; நிராகரித்து விடுவார்கள். அத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்கு, அல்லது புரட்சிக்கு பயன் தரத்தக்கவையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அப்படியில்லையென்றால் அத்தகைய நடவடிக்கைகளை இரண்டாந்தர முக்கியத்துவங் கொண்டவையாக ஒருபுறம் தள்ளிவிடுகின்றனர். ஆகவே இவர்கள் எதிர்ப்பதும் சரி, ஆதரிப்பதும் சரி, முற்றிலும் கோட்பாடற்றவையே; கட்சி, புரட்சி முதலியவற்றின் கோட்பாடுகளிலிருந்து விலகியதேயாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் கோட்பாடு கட்சியின், புரட்சியின் கோட்பாடு அல்ல; அவர்கள் சொந்த நலனுக்கான கோட்பாடுகள். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த நலனையே தனது கோட்பாடாகக் கொண்டு விட்டால், பின் அவரது நலனும் கோட்பாடும் மற்றவர்களுடைய நலன் கோட்பாடு முதலியவற்றுடன் நிச்சயம் மோதத்தான் செய்யும்; ஒருவரோடு ஒருவர் சண்டையிடத்தான் செய்வார்கள்.

உதாரணமாக, நீங்கள் உங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் பணியாட்கள், குதிரைகள், உணவு, துணி, வைத்திய வசதி, பதவி உயர்வு முதலியவை சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டீர்கள் அல்லது போராடினீர்கள். இத்தகைய விசயங்கள் தனிப்பட்ட, கோட்பாடற்ற விசயப் பகுதியில் சேரும். பணியாட்கள், உணவு, துணி, வைத்திய வசதி முதலியனவற்றை கட்சி பயனடையும் வகையில் விநியோகிப்பதற்கு பொது விதிகள் பற்றி, தோழர்கள் ஆலோசனை கூறுவதில்லை; கட்சி அல்லது பள்ளிக்கூடம் இந்த கோட்பாடுகளை அமல் நடத்த வேண்டும் என்று கேட்பதில்லை; ஆனால் அவர்களது கேள்விகள் பின்வருமாறு அமைகின்றன:-  “எனக்கு அவர்கள் ஏன் ஒரு பணியாள் அல்லது குதிரை கொடுக்கக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் வைத்திய வசதி கொடுக்கக்கூடாது? என்னை ஏன் அவர்கள் உயர்த்தக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் உணவும், உடையும் கொடுக்கக்கூடாது?” எல்லாம் “என்னை”ச் சுற்றித்தான் எழுகிறது; “நான்” என்ற நிலையிலிருந்துதான் எல்லாம் தோன்றுகின்றன; இந்த ரீதியில் தகராறுகள் கிளப்பப்பட்டு கட்சிக்குள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் தனிப்பட்ட முறையில் திருப்தியடைந்திருந்தால், மற்றபடி விசயங்கள் முறையற்ற முறையில் அமைந்திருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் சிறிதேனும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. இது ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.

மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், சில தோழர்கள் ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சி நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எளிய வாழ்க்கைக் கோட்பாட்டையும் ஊதாரித்தனத்திற்கு உள்ள பல திருஷ்டாந்தங்களையும் எடுத்துக்காட்டி, விமர்சித்து, அதை அவர்கள் எதிர்க்கிறார்கள்; சிக்கனத்திற்கு சில யோசனைகள் சமர்ப்பித்து அதை அமல் நடத்தும்படி கட்சியைக் கேட்கின்றனர். இது சரியானது.

ஆனால் இன்னும் சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்ப்பதில்லை. இவர்கள் கிளப்பும் கேள்விகள் பின் வருமாறு:

“சிலர் எவ்வளவு பணம் விரயம் செய்திருக்கின்றனர்; சிலருக்கு இவ்வளவு நல்ல உணவு கிடைத்துள்ளது ; சிலருக்கு இவ்வளவு நல்ல உடை இருக்கிறது; சிலருக்கு…  அப்படியானால் அது மாதிரி நான் ஏன் சாப்பிடக்கூடாது? அம்மாதிரி பணம் செலவிடக்கூடாது? அம்மாதிரி உடை அணிந்து கொள்ளக்கூடாது? பழம் பெருச்சாளியாவதற்கு போதிய வருடங்கள் எனக்கு ஆகவில்லை என்பதினாலா? அல்லது நான் கட்சிக்கு ஒரு சேவையும் செய்யவில்லை என்பதினாலா?” ஆதலால் அவர் ஊதாரித்தன எதிர்ப்பு என்ற கோஷத்திற்காக நின்று போராடுகிறார். மற்றவர்களைப் போல் பணத்தை வீண் விரயம் செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுவும் ஒருவகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.

இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்! கிழக்கு ஏன்வேயில் அரசாங்க சிப்பந்திகளுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது.* ஆகவே சில தோழர்கள் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டு அரசாங்க அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்படும்படியாக கேட்டுக் கொண்டார்கள்; அவர்கள் போவதற்கு அனுமதிக்கப்படாத பொழுது, அரசாங்க சிப்பந்திகள் சம்பளம் பெறுவதை எதிர்க்கும் கோஷத்தின் பேரில் அவர்கள் போராட்டம் துவக்கினார்கள். மேலும் அரசாங்க சிப்பந்திகளின் வாழ்க்கை அலவன்ஸ்களை நிர்ணயிப்பது எங்ஙனம் என்பதற்கு கோட்பாடு சம்பந்தமான யோசனைகள் கொடுக்கவோ, அவற்றை விவாதிக்கவோ இல்லை. இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும்.

இரண்டாவதாக, சில தோழர்கள் கட்சிக்குள் தகராறுகளை கிளப்பிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்; ஆனால் அது கட்சி விவகாரங்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. அதற்கு மாறாக அவற்றை இன்னும் படுமோசமாக்குவதற்குதான் செய்கின்றனர்; அல்லது அந்தரங்க நோக்கத்துடன் செய்கின்றனர். அத்தகைய நோக்கம் தவறானதாகும். இதுவும் கோட்பாடற்ற போராட்டமாகும். உதாரணமாக முக்கியமானவர் என்று எண்ணப்பட வேண்டுமென்பதற்கு, சொந்த அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, கௌரவத்தை விட்டுக் கொடுக்காமலிருப்பதற்கு, ஏன்? மற்றவர்களை பழி தீர்த்துக் கொள்வதற்குகூட, சில தோழர்கள் நிலைமை, அப்பொழுதுள்ள சுற்றுச்சார்பு முதலியவைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்சிக்குள் மற்ற தோழர்களை எதிர்த்து அவர்கள் வேலைகளையும், திட்டங்களையும் கட்சிக்குள் ஒழுங்கு, ஒற்றுமை முதலியவற்றையும் சீர்குலைத்துக் கொண்டு, தகராறுகளை கிளப்பி விட்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவும் இதே கோட்பாடற்ற பகுதியைத்தான் சேரும்.

மூன்றாவதாக, சில தோழர்கள் ஏதாவது ஒன்றை அமல் நடத்த வேண்டுமென்றோ அல்லது கைவிட வேண்டுமென்றோ கட்சியைக் கேட்டுக் கொண்டு, கோட்பாடுகள் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்புவதில்லை; ஆனால் தனிப்பட்ட இதய சலனங்கள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை எழுப்புகிறார்கள், போராட்டங்களை நடத்துகிறார்கள். அவர்கள் ஆட்களை ஏசுகிறார்கள்; அவர்கள் மீது வெறி கொள்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் ஒரு விநாடி மனதிருப்தியடையவும், மன வருத்தத்தையும், குரோதத்தையும் கொட்டிக்கொள்ளவும் விரும்புகின்றனர். இதுவும் ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும். இன்னும் சில தோழர்கள் உண்டு; இவர்களுக்கு தங்களுக்குள்ள குறைவான அனுபவத்தினாலும், குறைவான தத்துவ பயிற்சியினாலும் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்பவும், விவாதிக்கவும் முடியாமற் போகிறது. இவர்கள் பொதுக் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலாக தனித்து நிற்கும் துண்டு துக்காணியான, அறவே நடைமுறை சம்பந்தமற்ற பிரச்சினைகளிலும் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும், கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்காலக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் மற்ற தோழர்களுடன் ஒருக்காலமும் தீராத தகராறுகளில் ஈடுபடுகின்றனர். ஆதலால் இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும். அதை பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

உதாரணமாக, சில போராட்டங்கள், சில காரியங்கள் சில போராட்ட வடிவங்கள், சில அமைப்பு முறைகள் முதலியன பற்றி சில தோழர்கள் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நிலைநாட்டுகின்றனர். பொதுவான போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளையும், பொதுவான நடைமுறைக் கொள்கையையும் போராட்டம், ஸ்தாபனம் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய பொதுவான கருத்துக்களையும் கொஞ்சம் கூட சம்பந்தப்படுத்திக் கொள்ளாமலே முடிவில்லாமல் வாதாடுவார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் தவறான முறையில் கிளப்பப்பட்டிருக்கிறது. ஆதலின் வழக்கமாகவே சரியான முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. இல்லையெனில் மாறுபட்ட அபிப்பிராயங்களுள் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்க வேண்டும். பிரயோஜனமில்லாத வீண்பேச்சுத்தான் பெரும்பாலும் ஏற்படும் பலன்.

நான்காவதாக, உட்கட்சிப் போராட்டம் வகுத்தளிக்கப்பட்டுள்ள அமைப்பு முறைகளை அனுஷ்டிக்காமல், நியாய, அநியாய வழி எதுவானாலும் பரவாயில்லை என்று நடத்தப்படுகிறது. இதன் திருஷ்டாந்தங்கள் ஆவன :- கட்சிக்குள் கோட்பாடில்லா முறைகளில் தோழர்களை தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வது அல்லது எதிர்த்துத் தாக்குவது; தொல்லைகளைக் தூண்டிவிடுவது அதன் மூலம் தோழர்களுக்குள் பிளவுகள்  உண்டாக்குவது; மற்ற தோழர்களுக்கு எதிராக சதி செய்து அவர்களுக்கு வலை விரித்து வைப்பது; ஒருவர் முன்னிலையில் ஒன்றும் சொல்லாமல் போன பிறகு அவர்களுக்கு பின்னாலிருந்து பேசுவது; கட்சியை பொறுப்பின்றி விமர்சனம் செய்வது; வம்பளப்பது; வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவது; பொய் சொல்வது; பிற தோழர்களை அவதூறு செய்வது முதலியன.

மேலே கூறப்பட்டுள்ள போராட்டங்கள் கோட்பாடில்லாத போராட்டங்கள். இதுவன்றி கோட்பாடான போராட்டத்தில் சில கோட்பாடற்ற போராட்ட அம்சங்களைக் கலக்கவும், கோட்பாடான போராட்டக் கொடியின் கீழ் கோட்பாடற்ற போராட்டங்களை நடத்தவும் செய்கின்ற சில தோழர்கள் உண்டு. இன்னும் சிலருக்கு, குறிப்பிட்ட ஒரு நபருக்கும், மற்றவருக்குமிடையேயுள்ள தகராறு பற்றி இருவருக்குமிடையேயுள்ள அசாதாரண உறவு நிலையில்தான் விசேச அக்கறையே ஒழிய அச்சச்சரவின் சாராம்சம் என்ன என்பதில் அக்கறை கிடையாது.

படிக்க :
♦ உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி
♦ தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

கட்சிக்குள் நிகழும் இத்தகைய கோட்பாடில்லாத போராட்டங்கள் அனைத்தும் நல்லதன்று; கட்சிக்கு தீங்கிழைக்கக் கூடியவை.

தோழர்கள் கேட்கக்கூடும்; கோட்பாடு என்றால் என்ன என்று? கோட்பாடு சம்பந்தப்படாத, முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகள் என்பவை எவை? நிகழ்கால கொள்கை சம்பந்தமான பிரச்சினை என்பது எது? எந்தப் பிரச்சினை சம்பந்தமாகவும் நான் ஏன் கொள்கையையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளக் கூடாது? என்னுடன் மாறுபாடாக கருத்துக் கொண்டவர்களுடன் சாத்தியமான சகல வழிகளிலும் நான் ஏன் சமரசமாகப் போக வேண்டும்?

தோழர்களே! உண்மையிலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டிய விசயங்கள் இவை.

———-

* ஜப்பானிய எதிர்ப்பு யுத்தகாலத்தில் விடுதலைப் பிரதேசங்களிலிருந்து அரசாங்க சிப்பந்திகளுக்கு சகல அன்றாட தேவைகளும் கொடுக்கப்பட்டு வந்தன. சொந்த சில்லறை செலவுக்குக் கொடுக்கும் பணம்போக அவர்களுக்கு சம்பளம் என்று  ஒன்றும் கிடையாது.

– ஆசிரியர் குறிப்பு

நவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்

PP Letter head

13.11.2020

பத்திரிகைச் செய்தி

ங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வு கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில்தான் இந்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றி வருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

முதலாளித்துவ சுரண்டலுக்காக தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. தொழிலாளர் நல சட்டங்களும் வேளாண் சட்டங்களும் கல்விக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. அரிசி, நெல், கோதுமை, காய்கறி முதல் பெட்ரோல் வரை அனைத்து பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. எனவே தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெல்லட்டும்.

அகில இந்திய தொழிற் சங்கங்களின் இந்தப் போராட்டத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. மேலும் இந்தப் போராட்டங்களில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்


வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு மற்றும் புதுவை
9962366321

சங்கிகள் அட்டகாசம் தாங்கலயே வேலவா | மக்கள் அதிகாரம் பாடல் !

வேல் யாத்திரை எனும் பெயரில் ஒரு கலவர யாத்திரையைக் கையில் எடுத்துக் கொண்டு எப்படியாவது இந்துமதவெறியைத் தூண்டி தமிழகத்தை மற்றுமொரு குஜராத்தாக மாற்றும் திட்டத்தோடு வலம் வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.

ஒருபுறத்தில் உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டதிருத்தங்கள் மூலம் ரத்து செய்து கொண்டிருக்கும் பாஜக – சங்க பரிவாரக் கும்பல், மற்றொரு புறத்தில் கலவரம், ஆட்கடத்தல்,  பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.

‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்துத் தான் இந்த வேல் யாத்திரையை தொடங்கியிருக்கிறது தமிழக பாஜக.

இதனை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் தோழர்கள் இயற்றிப் பாடியிருக்கும் இந்தப் பாடல் அம்பலப்படுத்துகிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !