Thursday, August 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 318

எறும்புகளின் வாழ்க்கை சுவாரசியமானது ! தெரியுமா குழந்தைகளே !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 15

நீண்ட இடைவேளை. நாங்கள் உலாவத் தயாராகின்றோம்.

பள்ளிக்கு அருகே ஒரு பூங்கா உள்ளது. சாலையைக் கடக்கக் கூடத் தேவையில்லை. அங்கே ஓடியாடி விளையாடலாம், தூய காற்றை சுவாசிக்கலாம். நீண்ட இடைவேளை வரும் போதெல்லாம் நாங்கள் இங்கு செல்வோம், அற்புதமாக உலாவுவோம்.

நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள். சிலர் எறும்பும் புற்றை கவனித்துக் கொண்டிருப்பார்கள்; சிலர் மரக் கிளைகள், இலைகளைச் சேகரிப்பார்கள், சிறுமிகள் ஸ்கிப்பிங் கயிற்றை எடுத்து வந்து, களைப்பின்றி குதித்துக் கொண்டிருப்பார்கள்; இது என்ன?”, “ஏன்”, “நீங்கள் என்ன புத்தகத்தைப் படிக்கின்றீர்கள்?” என்று சிலர் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். நான் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பேன், என் குழந்தைகளை நன்கு புரிந்துகொள்ள முயலுவேன். – இன்றும் பூங்காவில் சுவாரசியமாக இருக்குமென நம்புகிறேன். இன்று என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சிலர் கண்டிப்பாக எறும்புப் புற்றைக் கவனிப்பார்கள். ஆச்சரியக் குரல்கள் என் காதுகளை எட்டும்.

“பாருங்கள், இவை எப்படி வேகமாக ஓடுகின்றன?”

“இதோ… இந்த எறும்பு… எவ்வளவு பெரிய இரையை எடுத்துச் செல்கிறது!”

இவையெல்லாம் ஒரே கோட்டில் முன்னும் பின்னுமாகச் செல்வதைப் பார்த்தீர்களா!”

“இவை எங்கே போகின்றன என்று தேடுவோமா!”

“அவை மரத்தின் மீது ஏறுகின்றன!”

“இவை ஒன்றையொன்று சந்திக்கும் போது, நின்று, தம் தலைப்பகுதியை அசைப்பதைக் கவனித்தீர்களா!”

“இவை இப்படித் தான் முகமன் கூறிக்கொள்கின்றன!”

“இரை எங்குள்ளது என்று இவை ஒன்றிற்கொன்று சொல்லிக் கொள்கின்றன.”

“இவற்றால் பேச முடியாது!”

“இல்லை, முடியும்!”

“உனக்கு அவை பேசுவது கேட்கிறதா?”

“கேட்கவில்லை அதனால் என்ன… அவை தலையால் பேசுவது தெரிகிறதே!”

”தலையால் எப்படிப் பேச முடியும்!”

“ஏன், நன்றாக முடியுமே!”

“இதோ ஷல்வா அலெக்சாந்தரவிச்சைக் கேட்போம், அவர் சொல்வார்.”

இந்த விவாதம் ஒரே இரைச்சலாக இருக்கும். எறும்புகளுக்கு மொழி உண்டா எனும் பிரச்சினைக்குத் தீர்வு காண குழந்தைகள் என்னிடம் வருவார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதாவது தெரிந்திருந்தால் நல்லது… இப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்று நான் யோசித்திருக்க வேண்டும்!” என்று நான் எண்ணுவேன்.

இம்முறை தீர்வு கண்டாகி விட்டது. “யார், என்ன” எனும் கலைக்களஞ்சியத்தை நாளை கண்டிப்பாக எடுத்து வந்து எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையை வாசிப்பதாக உறுதியளிப்பது சிறந்ததாயிருக்கும். “எறும்புகளின் வாழ்க்கை ஒரு சுவாரசியமான விஷயம் தெரியுமா, குழந்தைகளே! பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? சரி, உங்களுக்கு இவ்வளவு ஆர்வமிருப்பதால் நாளை நான் அந்தக் கட்டுரையைப் படிப்பேன், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்!”

சாஷா, மாயா அல்லது தேயா, நான் என்ன புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கண்டிப்பாகக் கேட்பார்கள், குலிவேர் பயணம் பற்றிய இந்நூலின் மீது குழந்தைகளுக்கு ஆர்வமேற்படுவதற்காக இதை பூங்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். லிலிபுட் என்ற குள்ளர்களின் நாட்டிலும், அசுரர்கள் நாட்டிலும் மற்ற கற்பனை நாடுகளிலும் குலிவேரின் வீர சாகசங்களைப் பற்றியும் இந்நாடுகளில் உள்ள மக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் இதில் எழுதப்பட்டுள்ளதாக நான் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வேன்.

திடீரென யாராவது ஒரு சிறுவன் ஓடி வந்து “நாங்கள் ஒரு ஆமையைக் கண்டுபிடித்து விட்டோம்” என்று முழுக் குரலில் அறிவித்தால் இப்பேச்சு தடைப்படும்.

குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து துள்ளி எழுந்து இதை நோக்கி ஓடுவார்கள். விரைவிலேயே இரைச்சலிட்டுக் கொண்டு திரும்பி வருவார்கள்:

“பத்திரமாகப் பிடி!”

“பயப்படாதே, கடிக்காது!”

“சிறிய ஆமையா?”

“நம்மோடு ஆமையை எடுத்துச் செல்லலாம்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன். நாங்கள் ஆமையோடு பள்ளிக்குத் திரும்பி வருவோம்.

பூங்காவில் நாங்கள் உலாவும் இந்த 30 நிமிடங்களில் இவ்வளவு சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். எனவே தான் நானும் குழந்தைகளும் நீண்ட இடைவேளைகளை விரும்புகின்றோம்….

“தயாரா?” நாங்கள் மாடியிலிருந்து இறங்கி பள்ளி முற்றத்திற்கு வந்து பூங்காவை நோக்கி புறப்படுகிறோம். ஆனால் திடீரென…

“நில்லுங்கள்!” கோத்தே தனியாக வருகிறான், அவனருகே அவனுடைய நண்பனைக் காணோம்.

அவர்கள் சேர்ந்தல்லவா வந்து கொண்டிருந்தார்கள்.

அவன் நம்முடன் அல்லவா இருந்தான்? சிறுவன் எங்கே?

“கோத்தே, எங்கே அவன்?”

“அவனை ஒரு மாமா கூட்டிச் சென்று விட்டார்.”

“எந்த மாமா?”

“தெரியாது… உயரமாயிருந்தார்…”

“எப்போது?”

“நாம் படியில் இறங்கி வந்த போது!”

நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள்.

மற்ற குழந்தைகளும் பார்த்திருக்கின்றனர்: உயரமான ஒருவர் சிறுவனை நெருங்கி “என்னோடு போகலாம் வா” என்றார். அவர் சிறுவனின் கையைப் பிடித்து வெளியே கூட்டிச் சென்றார்.

யார் சிறுவனைக் கூட்டிச் சென்றிருக்க முடியும்? ஏன் அவர் என்னிடம் செல்லவில்லை? நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வேளை அவர்கள் அங்கு தாழ்வாரத்திலேயே தங்கி விட்டார்களோ, சிறுவன் இப்போது இறங்கி வந்து விடுவானோ?

“கோத்தே, மேலே ஏறிச் சென்று வகுப்பறையில் அவனைத் தேடு. நாங்கள் அவனுக்காகக் காத்திருப்பதைச் சொல்.”

கோத்தே விரைவாகத் திரும்பி வந்து அங்கு யாருமில்லை என்று சொன்னான்.”

ஆம், ஏதோ நடந்து விட்டது. அந்த “உயரமான மாமா” வேறொரு வாசல் வழியே வெளியேறியிருக்க வேண்டுமென்பது தெளிவு. அப்படியெனில், அவர் உண்மையிலேயே எனக்குச் சொல்லாமல் சிறுவனைக் கூட்டிச் செல்ல விரும்பியிருக்கின்றார்.

“குழந்தைகளே, இங்கேயே நில்லுங்கள்… நான் இதோ வருகிறேன்!…”

அவர்களைப் பிடிக்கும் பொருட்டு வேறு வாசலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். அவர்கள் ஏற்கெனவே வீதியில் இருக்கின்றனர். சிறுவன் முரண்டு பிடிக்கிறான், பெரியவரோ கார் கதவைத் திறந்து “சீக்கிரமாக உட்கார், நமக்குத் தாமதமாகிறது” என்று குழந்தையைப் பார்த்து அதிகாரத் தொனியில் கூறுகிறார்.

“பொறுங்கள்!” என்று காரை நோக்கி விரைந்தபடியே நான் கத்துகிறேன்.

அந்த நபரோ ஏதோ என் குரலையே கேட்காதது! போல் அவசர அவசரமாகக் காரில் உட்காருகிறார். இப்படிப்பட்டவர்களின் கார் இயந்திரங்கள் உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்காதது எவ்வளவு நல்லது!

“ர்ர்ர்…” என்று என்ஜின் சத்தமிடுகிறது. இந்த நொடிப்பொழுதில் நான் காரை நெருங்குகிறேன்.

“உடனே குழந்தையை வெளியே விடுங்கள், நீங்களும் காரை விட்டு வெளியே வாருங்கள்.”

“வணக்கம்!” என்கிறார் அந்நபர். “ஏன் கோபப்படுகின்றீர்கள்? எனக்கு விருப்பமான போது என் மகனைப் பள்ளியிலிருந்து கூட்டிச் செல்ல முடியாதா என்ன!”

“இல்லை, முடியாது, காரை விட்டு வெளியே வாருங்கள்.”

“எங்களுக்கு அவசர வேலையுள்ளது, எங்களுக்குத் தாமதமாகிறது!” – பிள்ளைப் பாசமுள்ள தந்தைக்கு கோபம் வருகிறது.

“எனக்கு இப்போதுள்ள வேலையை விட அவசரமான வேலை இருக்க முடியாது. காரை விட்டு வெளியே வாருங்கள்!”

சிறுவன் கதவைத் திறந்து, காரிலிருந்து குதித்து என்னை நோக்கி ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறான்.

“சரி பையா, நான் வகுப்புகள் முடிந்ததும் வந்து உன்னைக் கூட்டிச் செல்வேன்” என்று பாசமுள்ள தந்தை சொல்கிறார். அச்சிறுவனின் கைகள் நடுங்குவதை நான் நன்கு உணருகிறேன்.

“இல்லை, நீங்களும் வெளியே வாருங்கள், என்ன நடந்தது என்று பேசுவோம்.”

“பேச என்ன இருக்கிறது! நான் தந்தை, அவன் என் மகன்! அவசரமான ஒரு தனிப்பட்ட காரியத்திற்கு அவனைக் கூட்டிச் செல்ல விரும்பினேன். தனிப்பட்ட விஷயங்களே இருக்க முடியாதா என்ன! நீங்கள் எனக்கு இடையூறு செய்கின்றீர்கள், இன்னும் பேச வேறு வேண்டுமா!”

“காரை விட்டு வெளியே வாருங்கள், பள்ளி இயக்குநரிடம் செல்வோம்.”

வேறு வழியில்லை என்பது ஒருவழியாக பாசமுள்ள தந்தைக்கு புரிந்தது. அவர் காரை விட்டு வெளியே வந்து ரகசியக் குரலில் விளக்க முற்படுகிறார்:

“இன்று சிறுவனின் விதி முடிவு செய்யப்படுகிறது, புரிந்து கொள்ளுங்கள்.”

“பள்ளி இயக்குநரிடம் போகலாம் வாருங்கள்…”

“எதற்கு பள்ளி இயக்குநரிடம்?…”

“வேண்டும்! நீ நண்பர்களிடம் ஓடு, அவர்கள் பள்ளி முற்றத்தில் காத்திருக்கின்றனர்.”

சிறுவன் ஓடுகிறான். தந்தையைத் திரும்பிப் பாராமல் ஓடுவதிலிருந்து அவனுக்கு மகிழ்ச்சி எனத் தெரிகிறது.

பள்ளி இயக்குநரின் அறையில், என்ன நடந்தது என்று பேச நாங்கள் முற்படுகிறோம்.

பாசமுள்ள தந்தை ஏன் ஆசிரியருக்குத் தெரியாமல் தன் மகனைக் கூட்டிச் சென்றார்?

ஏன் அவர் தன் மகனை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்? ஏன் சிறுவன் தன் அன்புத் தந்தையுடன் செல்ல விரும்பவில்லை?

தன் மனைவியிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெறும் தந்தைக்கு யாருடைய விதியில் – தன் விதியிலா, தன் மகனின் விதியிலா – பெரும் அக்கறையிருக்கிறது?

ஏன் அவர் மகனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினார்?

வழக்கு எப்போது ஆரம்பமாகப் போகிறது? மூன்று மணி நேரம் கழித்தா? அது வரை அவர் குழந்தையுடன் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்?

இப்பாசமுள்ள தந்தை தன் ஆறு வயது மகனை அச்சுறுத்தி, நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்த விரும்பினாரோ?

தன் வகுப்பு குழந்தை காணவில்லை என்று ஆசிரியருக்குத் தெரிய வந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்பது இந்தப் பாசமுள்ள தந்தைக்கு, அதுவும் உயர்கல்விக்கூட ஆசிரியருக்கு விளங்கவில்லையா? மகனைக் கூப்பிடத் தாய் வந்தால் அவரிடம் ஆசிரியர் என்ன சொல்வார்?

ஆம், இதைப் பற்றியெல்லாம் உயர்கல்விக்கூட மேலாளருக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.

சரி, இப்போது போய் வாருங்கள். எங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது. தந்தையர்கள் பல்வேறு விதமானவர்கள், இவர்களில் சிலரிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது நன்கு புரிகிறது.

இப்படிப்பட்ட தந்தைக்கு நம் பாடங்கள், நாம் உலாவுவதன் மீது என்ன அக்கறை? நம் மகிழ்ச்சிகள், இன்ப துன்பங்கள் மீது என்ன அக்கறை? கோச்சா இன்று பூங்காவில் ஆமையைக் கண்டெடுக்காவிடில் இவருக்கு என்ன? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றி அங்கு பேசாவிடில் இவருக்கென்ன கவலை? புதிய நாடுகளைப் பற்றிய குலிவேரின் கதையைக் குழந்தைகள் கேட்காவிடில் இவருக்கென்ன கவலை? அடுத்த பாடங்களைச் சரிவர நடத்துவதே சந்தேகமாயிருக்கும் அளவிற்கு ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டிருப்பது குறித்து இப்படிப்பட்ட தந்தைக்குக் கவலையா என்ன?

நான் குழந்தைகளிடம் திரும்பி வருகிறேன். நான் வருவேன், சுவாரசியமாக உலாவலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் 30 நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.

படிக்க:
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

“சிறுவனே, கெட்ட விஷயத்திலிருந்து நான் உன்னைக் காப்பாற்றினேனா? உனது துக்கம் பெரியது! இதனால் தான் உன் கண்கள் அவ்வளவு சோகமாக உள்ளனவா, நமது மினி-பாடவேளைகளில் எதைப் பற்றியோ அடிக்கடி சிந்தனையில் மூழ்குகின்றாயோ? “கவனக் குறைவானவன், மறதி மிக்கவன்” என்று உன்னைப் பற்றி என் நாட்குறிப்பில் எழுதினேன். இன்றுதான் எனது கவனக் குறைவு புரிந்தது. என்னை தயவு செய்து மன்னித்து விடு.”

“ஓ!” என்று என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் கத்தினார்கள் குழந்தைகள். கலைந்து நின்றவர்கள் மீண்டும் ஒழுங்காக நிற்க, “பூங்காவை நோக்கிச் செல்கிறோம்!” என்கின்றனர்.

ஆம், இப்போது மினி-பாடவேளைகளை நடத்த முடியாது. விரைவிலேயே இவற்றை ஈடு கட்ட நேரம் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது இவர்களைப் பூங்காவிற்கு அழைத்து செல்வேன். ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே ஆமையைக் கண்டு பிடிப்பார்களோ?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

3

மும்பையை சேர்ந்த பேராசிரியர் ராம் புனியானி அவர்கள் கலந்து கொண்ட ஓர் அரங்கக் கூட்டம் சென்னையில் கடந்த 03-08-2019 அன்று நடைபெற்றது. “மதவாத தேசியம்” என்னும் தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ராம் புனியானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் ராம் புனியானி அவர்கள் குஜராத் படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இந்துத்துவ கும்பலை அம்பலப்படுத்தியதில் முன்னிலையில் இருந்த ஓர் அறிவுஜீவி. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அவர் தொடர்ச்சியாக எழுதியும், செயல்பட்டும் வந்துள்ளார். அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.

மதவாதத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் communal என்ற வார்த்தையின் வேர்ச்சொல் community (சமுதாயம்) என்பதை நினைவுபடுத்திய பேராசிரியர் அவர்கள், அது communal ஆகும் போது குறிப்பிட்ட சில சமூகங்களை வேறுபடுத்துவது தொடங்குகிறது என்றார். தேசம் என்பது தொழில்மயமாக்கம், தொடர்பாடல் ஆகியவற்றோடு தொடர்புடையது; அந்த வகையில் ஒரு தேச உருவாக்கத்தை பற்றி தலைவர்கள் பேசிய போது ‘நாம் காலகாலமாக ஒரு தேசமாக இருந்து வருகிறோம்’ என்று ஆர்.எஸ்.எஸ் பேசியது. ஆர்.எஸ்.எஸ்.-ன் தேசியம், பழமை வழிபாடு என்றார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற பெயர் ஆண்களை மட்டுமே குறிப்பது; பெண்களுக்கான ராஷ்ட்ரிய சேவிகா சமிதியில் அகம்பாவத்துடன் ஒலிக்கும் ‘தான்’ (ஸ்வயம்)  என்ற வார்த்தை இல்லை. ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்பும் சமூக அமைப்பில் பெண்களின் அவல நிலையை குறிப்பிட்டார். Lynching என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான இந்தி சொல் இல்லை; நமது கலாச்சாரத்தில் அது ஆர்.எஸ்.எஸ். -ன் பாதிப்புக்கு பிறகு வந்தது. Lynching ஒரு காலத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமை என்றார்.

mob-lynching-sliderஒரு கணக்கெடுப்பின் படி கடந்த பத்து வருட கால அளவில் 2014 -க்கு பிறகுதான் 90 சதவீத கும்பல் வன்முறை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; 14 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்; பிற சதவீதத்தினர் தலித்கள் என்று குறிப்பிட்டார். ஜெ.என்.யூ.-வை நிந்திக்கும் இவர்களுக்கு அதன் பெருமை தெரியாது. அங்கு பல நேரங்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர்களால் உடனே பதில் சொல்லிவிட முடியாது. ‘எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; நாளை சொல்கிறேன்’ என்று கூறுமளவுக்கு மாணவர்கள் அறிவில் சிறந்தவர்கள். ஆனால் அது மாசு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. வறுமை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டும் என்ற கன்னையா குமாரின் முழக்கம் இந்தியாவிலிருந்து விடுதலை என்பதாக திரிக்கப்பட்டது.

படிக்க:
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ் என்ற பார்வை சற்று மேலோட்டமானது தான்; பிறப்பின் அடிப்படையிலான அசமத்துவதை கட்டமைப்பதே அவர்கள் திட்டம். பேராசிரியர் ராம் புனியானி பேசியவை பெரும்பாலும் நாம் ஏற்கனவே அறிந்த தகவல்கள்தான் என்றாலும் ஒரு மெல்லிய பகடி இழையோட, பார்வையாளர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு ஒரு ஆசிரியத்தன்மையில் எளிய ஆங்கிலத்தில் அவர் உரை அமைந்தது சிறப்பு.

தமிழகம் பாலைவனச்சோலையாக இருப்பதை பேச்சினிடையே குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் பணிகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார். உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் அவரிடம் ஒரு கசப்பு வெளிப்பட்டது. பகத்சிங், மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் என்று அவர் பேசினாலும் அடிநாதமாக ஒரு தோல்வி மனப்பான்மையையும், விட்டுக் கொடுப்பையும் உணர முடிந்தது. அந்த உணர்வு பரவுவது நல்லதல்ல. அவரை தேற்ற கேள்வி — பதில் நிகழ்ச்சியின் போது பார்வையாளர் ஒருவர் பேச வேண்டியதாக இருந்தது. டில்லியில் கும்பல் வன்முறையில் கொல்லப்பட இருந்த ஓர் முஸ்லிம் இளைஞனை ஓர் பெண்மணி தனது காரை நிறுத்தி சத்தம் போட்டு பாசிஸ்ட்களை பின்வாங்க செய்ததை அந்த பார்வையாளர் பதிவு செய்தார். இந்த அணுகுமுறை ஒரு மோசமான சூழலுக்கு முக்கியமானது.

பாசிச ஆபத்தை உள்ளது உள்ளபடியே நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்தான். அதே நேரம் சில பற்றுக்கோடுகளை நாம் — அது கற்பனையாக இருந்தாலும் கூட — ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானது. அது நம்மைச் சோர்ந்து போகாமல் செயல்பட வைக்கும்; நமது படகை செலுத்தும் துடுப்பு போன்றது.

“Enemy at the Gates” திரைப்படத்தில் ஓர் ஆடு மேய்ப்பன் தற்செயலாக ராணுவ வீரனாகி மறைந்து தாக்கும் போர்க்கலையில் திறம்பட செயல்பட்டு நாஜி ராணுவ தளபதிகளை ஒவ்வொருவராக அழித்து ஸ்டாலின்கிராட் வீழ்ச்சியை தடுப்பான். ஒரு கட்டத்தில் அவனை வைத்து ஸ்டாலின் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முனையும் போது தன்னால் அந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்ய முடியாது என்று பின்வாங்க நினைப்பான். ஆனால் தொடர்ந்து கட்சி நம்பிக்கையை அளித்து அவனை செயல்பட தூண்டும். இறுதியில் எதிர்பார்த்த பலனை அது கொடுக்கும்.

எழுத்தாளர் அருந்ததி ராய் ஒரு பேட்டியில் கூறும்போது இந்து மதம் பற்றி அண்ணல் அம்பேத்கர் முன்பு கூறியதை கூட நம்மால் இன்று கூற முடியவில்லை. பொதுவெளியில் சற்று கவனத்துடன் பேச வேண்டிய அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்கலாகாது என்று எச்சரிக்கை செய்கிறார். வடஇந்திய சூழல் எந்த வகையிலும் ஆறுதல் அளிக்கக் கூடியதில்லைதான். அதற்காக போராட்ட உணர்வை கைவிடுவது தீர்வாகாது. உளவியலாளர்கள் மொழியில் அச்சம் நாம் பெற வேண்டிய தைரியத்தின் மன உரமாக இருக்க வேண்டும். (Fear should be the father of courage.)

ராஜ்

தேசிய கல்விக் கொள்கை – 2019 முற்றாக நிராகரிப்போம் ! திருச்சியில் அரங்கக் கூட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கை – 2019 முற்றாக நிராகரிப்போம் !

அரங்கக் கூட்டம்

நாள் : 06.08.2019, செவ்வாய், மாலை 5:30 மணி.
இடம் : சுமங்கலி மஹால், அருண் ஹோட்டல், திருச்சி (ஜங்சன் அருகில்)

தலைமை :

பேரா. பீ.மு. மன்சூர்
ஒருங்கிணைப்பாளர், CCCE திருச்சி,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் ஜமால் முகம்மது கல்லூரி.

சிறப்புரை :

கார்ப்பரேட்டுகளின் கட்டாயச் சேவையில் உயர்கல்வி

முனைவர் க. ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE சென்னை.

ஏழைகளின் கல்வியை காவு வாங்கும் புதிய கல்விக் கொள்கை

பேரா. ச. அய்யம்பிள்ளை
செயற்குழு உறுப்பினர், CCCE திருச்சி.
முன்னாள் பொருளியல் துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

இந்திய மொழிப் பன்மைக்கு நெருக்கடி

பேரா. பா. மதிவாணன்
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE திருச்சி,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

புதிய கல்வி வரைவு அறிக்கையை நிராகரிப்போம்

பேரா. ஆ. கருணானந்தம்
வரலாற்றியல் பேராசிரியர். சென்னை.

நன்றியுரை :

பேரா. மு. மருதை
பொருளாளர், CCCE திருச்சி.
முன்னாள் கணிதவியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக் கழகம்.

கல்வியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருக.. !!

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
திருச்சி. தொடர்புக்கு : 96005 82228 | 94438 46945 | 94865 84463

நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்குப் போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்துப் பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது.

நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல. சினிமாவில் பார்த்ததுதான். ஆகையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று ஐயம் இருந்தது. மிகச் சாதாரண உடையில் மேக்கப் கூட இல்லாமல் இருந்தார். வரவேற்க வந்தவர்களும், இன்னும் ஏர்போட்டில் கண்டவர்களுமாக அவரைச் சூழ்ந்துவிட்டார்கள். அவருக்கு எழுபது பிராயம் என்று நம்பமுடிகிறதா, ஆனாலும் அவரைச் சுற்றி ஓர் ஒளி வீசியது. அவருக்கு கிடைத்த ‘உலக நாட்டியப் பேரொளி’ பட்டம் சரியானதுதான் என்று அந்தக் கணத்தில் எனக்கு உறுதியானது.

என் நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி என் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உலகத்திலேயே அகலமான 401 அதிவேக சாலையில், ஏர்போர்ட்டில் இருந்து இருபது மைல் தூரத்திலும், என் வீட்டில் இருந்து ஐம்பது மைல் தூரத்திலும் கார் பயணிக்கும்போது அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. வெளியே பனிகொட்டுகிறது. அந்தப் பனிப் புதையலில் கார் சறுக்கியபடி அப்பவும் வேகம் குறையாமல் நகர்கிறது.

பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். இப்பொழுது வட்டியும் குட்டியும் போட்டு மிகவும் கனத்தோடு அது வெளியே வருகிறது. ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’

இதுதான் கேள்வி. மூடத்தனத்துக்கு சமமான பிடிவாதத்துடனும், பிடிவாதத்துக்கு சற்று கூடிய வெகுளித்தனத்துடனும் ஓர் ஐம்பது வயது அம்மையார் இந்தக் கேள்வியைக் கேட்டார். பத்மினி என்னைப் பார்க்கிறார் பிறகு கேள்வி கேட்டவரைப் பார்க்கிறார் பதில் பேசவில்லை. அந்தக் கேள்வியும் நாலு பக்கமும் கண்ணாடி ஏற்றிய காருக்குள் ஒரு வட்டம் சுற்றிவிட்டு கீழே விழுந்துவிடுகிறது. பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்கிறார்கள்.

இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா? ஆனால் நான் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர் போல காணப்பட்டார்.

சிவாஜியை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் அவர் கண்களில் ஒரு சிறு மின்னல் புகுந்துவிடுவதை நான் கவனித்திருந்தேன். நீங்கள் சிவாஜியை முதன்முதல் சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறதா என்றார் ஒருவர்.

சிவாஜி இன்னும் சினிமாவுக்கு வரவில்லை. நான் ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தேன். அப்போது ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தேன், எம்.ஆர். ராதாவின் நாடகம். அதில் சிவாஜிக்கு பார்ட்டே இல்லை. ஆனால் மேடையில் பின்னால் நின்று உதவி செய்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது என்னுடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை ஒப்பனாக சொன்னார். அப்பொழுது எனக்கு தெரியாது, அவருக்கும் தெரியாது, நாங்கள் 60 படங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பது.

படிக்க:
முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
♦ நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. எட்டு மணிக்கு சூட்டிங் என்றால் 7.55க்கே வந்து உட்கார்ந்துவிடுவார். நாங்கள் வழக்கம்போல மேக்கப் எல்லாம் போட்டு வரும்போது நேரம் எப்படியும் ஒன்பது ஆகிவிடும். பொறுமையாக ‘என்ன பாப்ஸ், லன்ச் எல்லாம் ஆச்சா?’ என்பார்.

ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு அந்தக் காலத்து கதாநாயகி லட்சணமாக நான் ஒயிலாக அசைந்துவரும் போது ‘என்னம்மா துணி காயவைக்கிறாயா?’ என்று கிண்டலடித்து, அந்த காட்சியை திருப்பி திருப்பி எடுக்க வைத்துவிடுவார். காதல் பாடல் வேளையின் போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பித் திரும்பிக்தேடுவார். ‘என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை’ என்பார். இன்னும் போரடிக்கும் நேரங்களில் ‘யாரப்பா ரொம்ப நாழியாச்சு இருமி, ஒரு சிகரட் இருந்தாக் குடு’ என்பார். இப்படி சிரிக்க வைத்தபடியே இருப்பார். அடுத்ததாக அழுகை சீன் இருந்தால் வெகு கஷ்டம்தான்.

பத்மினியுடைய முதல் படம் மணமகள், என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்தது. அதில் மூன்று சகோதரிகளும் நடித்திருந்தார்கள். நான் அப்பொழுது போர்டிங்கில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினார்கள். எப்படியும் பத்மினியை பார்த்துவிட வேண்டும் என்ற வெறி என்னிடம் பிறந்தது. என்னுடன் படித்த ‘சண்’ என்ற சண்முகரத்தினம் இந்த சதிக்கு உடன்படுவதாகக் கூறினான்.

சண் மெலிந்து போய், முதுகு தோள் எலும்புகள் பின்னுக்குத் தள்ள, நெடுப்பாக இருப்பான். திங்கள் காலை போட்ட உடுப்பை வெள்ளி இரவுதான் கழற்றுவான். ஒருநாள் இரவு களவாக செக்கண்ட் ஷோ பார்க்கும் ஆர்வத்தில் கேட் ஏறிப் பாய்ந்து அவனுடன் புறப்பட்டேன். அந்தப் படத்தில் பத்மினியின் அழகும், ஆட்டமும் நெருக்கமானது. ஓர் இடத்தில் கூந்தல் வழியாக என்னை மாத்திரம் பார்த்துச் சிரிப்பார். அதற்குப் பின்னர் எங்களுக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் ‘செறி எயிற்று அரிவை’ என்று சொல்லும் போதெல்லாம் பத்மினியின் நெருங்கிய பற்கள் என் கண் முன்னே தோன்றி இடர் செய்யும்.

திரும்பும்போது பஸ் தவறிவிட்டது. 12 மைல் தூரத்தையும் நடந்தே கடந்தோம். மரவள்ளிக் கிழங்கு தோட்டங்களை குறுக்கறுத்து, நட்சத்திரங்கள் வழிகாட்ட, சண் முன்னே நடந்தான். அங்குசக்காரன் போல நான் பின்னே தொடர்ந்தேன். வானத்திலே நட்சத்திரங்கள் இவ்வளவு கூட்டமாக இருக்கும்போது உற்சாகத்துக்கு குறைவேது. ‘தெருவில் வாரானோ, என்னைச் சற்றே திரும்பிப் பாரானோ’ என்று சண் பெருங்குரல் எடுத்துப் பாடினான். சில தெரு நாய்கள் எங்களைத் திரும்பிப் பார்த்ததுமல்லாமல் எங்கள் பயணத்தை இன்னும் துரிதப்படுத்தின.

திரும்பி வந்த போதும் கேட் பூட்டியபடியே கிடந்தது. அதை வார்டனோ காவல்காரனோ, வேறு யாரோ ஞாபக மறதியாக எங்களுக்காகத் திறந்து வைத்திருக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து எங்களுக்கு பௌதிகம் படிப்பித்த ஜோஸப் மாஸ்டர்தான் வார்டன். பெருவிரல்கள் மாத்திரம் தெரியும் பாதி சப்பாத்து அணிந்திருப்பார். மிகவும் கண்டிப்பானவர். கேட்ஏறி இருவரும் ‘தொம் தொம்’ என்று குதித்தோம். அன்று வார்டனிடம் பிடிபட்டிருந்தால் இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்திருக்கமாட்டேன். சண்ணும் ஆழ்நீர் பாதைகள் பற்றி விரிவுரைகள் செய்துகொண்டிருக்கமாட்டான்.

இந்தக் கதையைக் கேட்டுவிட்டு பத்மினி கலகலவென்று சிரித்தார். இதுபோல இன்னும் எத்தனைக் கதைகளை அவர் கேட்டிருப்பாரோ!

முன்னூறு வருடங்களுக்கு முன் மாரிமுத்தாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் ‘காலைத் தூக்கியவர்’ அதற்கு பிறகு அதை கீழே இறக்கவே இல்லை. அங்கே பரதநாட்டியம் படித்த பெண்களின் எல்லை ‘காலைத் தூக்கி” ஆடும் நடனம்தான். அது 1959 -ம் ஆண்டு. பத்மினி ‘ராணி எலிஸபெத்’ கப்பலில் சிலோனுக்கு வந்து ஒரு நாட்டியக் கச்சேரி செய்தபோது மாறியது என்று சொல்லலாம். பரதநாட்டியம் கற்பதில் ஒர் ஆசையும், புது உத்வேகமும் அப்போது எங்கள் பெண்களிடம் பிறந்தது. மற்றவர்கள் விஷயம் எப்படியோ என்னுடைய தங்கை நடனம் கற்பதற்கு காரணமான குற்றவாளி அவர்தான் என்று சொன்னேன். நாற்பது வருடம் லேட்டாக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பத்மினியின் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகன் காதலியைக் கட்டிப்பிடிக்கும் போது காதலி தன் இரண்டு கைகளையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கோட்டையைப் போல காப்பாற்றி விடுவாள். பத்மினி நடிக்க வந்த சமயம் இந்த சம்பிரதாயம் உடைந்து போனது. வஞ்சிக்கோட்டை வாலிபனில் ‘கோட்டை கொத்தளத்தோடு’ பத்மினியைக் கட்டிப்பிடித்து ஜெமினி தன் ஆசையையும், ரசிகர்களின் ஆவலையும் தீர்த்து வைப்பார்.

பத்மினியை அழவைத்த சம்பவம் ஒன்றும் இந்தப் படப்பிடிப்பில்தான் நேர்ந்தது. இத்தனை வருடமாகியும் அதைச் சொல்லும்போது பத்மினியின் கண்கள் கலங்குகின்றன. வழக்கம்போல வாசன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுக்கத் தீர்மானித்தார். அப்போது பத்மினி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம். அதே சமயம் இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் வைஜயந்திமாலா.

படிக்க:
கடும் வறட்சியால் வெறிச்சோடிப் போன மராத்வாடா கிராமங்கள் – காணொளி !
♦ குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்

தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யாராயுக்கும் மாதுரி தீட்சித்துக்கும் இடையில் ஒரு போட்டி நடனம் இருக்கிறது அல்லவா? அதுபோல வஞ்சிக்கோட்டை வாலிபனிலும் மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும். ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார். வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத்திகை பார்த்து வைத்துக்கொள்வார்.

படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார். ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார். தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார். படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

‘எதிர்பாராதது’ படத்தில் சிவாஜி வழக்கம்போல பத்மினியின் காதலனாக வருகிறார். சந்தர்ப்பவசத்தால் சிவாஜியின் தகப்பன் நாகய்யாவுக்கு பத்மினி மனைவியாகி விடுகிறார். காதலன் இப்போது மகன் முறை. சிவாஜி ஒரு சமயம் பத்மினியை பழைய நினைவில் அணுகியபோது பத்மினி கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். படம் எடுத்தபோது அந்த நேர உணர்ச்சி வேகத்தில் பத்மினி நிஜமாகவே அறைந்துவிடுகிறார். சிவாஜியுடைய கன்னம் வீங்கிப்போய் மூன்று நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க அவர் வீட்டுக்கு பத்மினி வருகிறார். அப்பொழுது ஒரு பியட் கார் வாங்கி சிவாஜிக்கு பரிசு கொடுத்தார். அதுதான் சிவாஜியுடைய முதலாவது கார்.

பத்மினியின் ஞாபகசக்தி அசரவைக்கிறது. எந்த ஒரு சம்பவத்தையும் கூறமுன்பு அது நடந்த வருடத்தை கூறியபடிதான் பேச்சை ஆரம்பிக்கிறார். ‘1944-ல் உதயசங்கருடைய கல்பனா படத்தில் டான்ஸ் ஆடினேனா’ என்று தொடங்கி அந்த விவரங்கள் எல்லாவற்றையும் தருவார். சினிமா என்றால் தயாரிப்பாளர் பெயர், டைரக்டர் பெயர், நடிகர்கள் பட்டியல் எல்லாமே நினைவில் வைத்திருக்கிறார். அவர் மூளையில் பெரிய தரவுத்தளம் (database) ஒருவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் இயங்குகிறது.

விழாவுக்கு பத்மினியின் அலங்காரம் பிரமாதமாக இருந்தது. இருட்டில் போத்தல் தேனை கவிழ்த்துக் குடித்ததுபோல இதழ்களில் உருகி வழியும் லிப்ஸ்டிக். அவருடைய எடைக்கு சரிசமமான எடையோடு இருக்கும் சரிகை நிறைந்த சேலை. இரண்டு கைகளிலும் எண்ணிக்கை சரி பார்த்து திருப்பி திருப்பி எண்ணி அணிந்த வளையல்கள். முகத்திலே விழுந்த சிறு சுருக்கத்தை தவிர, ஒரு சிறகு மட்டுமே உதிர்த்த தேவதை போல, அந்தக் காலத்து எ.பி நாகராஜனுடைய ‘விளையாட்டுப் பிள்ளை’ சினிமாவில் வந்த பத்மினியாக காட்சியளித்தார்.

நீண்ட வசனங்களை எல்லாம் பத்மினி மேக்கப் போடும்போதே பாடமாக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாட்கள் போல இல்லாமல் அந்தக் காலத்தில் நடிகைகள்தான் (கொடுமை) தங்கள் வசனங்களையும் பேசவேண்டும். ஆனால் விழாவில் மேடை ஏறியதும் அவர் புதிய பத்மினியாகிவிட்டார். கைதேர்ந்த பேச்சுக்காரி மாதிரி விழா சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் எல்லாவற்றையும் ஞாபத்தில் வைத்து சுருக்கமாகப் பேசிமுடித்தார். அந்தச் சில நிமிடங்கள் சபையோர்கள் அவருடைய பிரசன்னத்தில் மயங்கி ‘நலம்தானா? நலம்தானா?’ என்று கூக்குரலிட்டபடியே இருந்தார்கள்.

படிக்க :
♦ மலேசியா போன கோடீஸ்வர தமிழ் சினிமா பிச்சைக்காரர்கள் !
♦ சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘

சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள்?

அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும், ஆகவே மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய் விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டுப் பிரியர், என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கௌதாரி, கோழி, ஆடு, மீன், இறால் என்று எனக்குப் பிடித்தமான அத்தனை கறி வகைளும் சமைத்திருந்தார்கள்.

அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ‘சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு’ என்றார். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்குப் பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.

அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

சாதி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் ‘பஞ்சமர்’ நாவலில் தொடங்கி மாதவய்யாவின் ‘கண்ணன் பெரும் தூது’ சிறுகதையில் இருந்து சமீபத்தில் ஜெயமோகனின் ‘கடைசி வரை’ சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.

மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து, காலுக்கு மேல் கால் போட்டு, சோபாவில் சாய்த்து அமைதியாக உட்காந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருந்துவதில்லை. ஒரு கிளாஸில் பழரசத்தை மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டுத் தொட்டுச் செல்கிறது. திடீரென்று சொன்னார், ‘நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி, நடக்கிற காரியமா?’

நான் திடுக்கிட்டுவிட்டேன். முதலில் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார். அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக் கொடுத்தன.

பத்மினி திரும்பிப்போன அன்று டெலிபோன் மணி ஒசை நின்றது. கதவு மணி ஒய்ந்தது. பத்திரிகை நிருபர்களின் தொல்லை விட்டது. சொல்லியும் சொல்லாமலும் வந்த விருந்தாளிகளின் ஆரவாரம் முடிந்தது. மாடிப்படிகளில் குடுகுடுவென்று ஒடிவரும் ஒலியும், கலகலவென்ற பத்மினியின் ஒயாத பேச்சும் மறைந்துபோனது. திடீரென்று வீட்டில் மறுபடியும் இருள் சூழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.

ஆனாலும் ஒரு லாபம் இருந்தது. நாட்டியப் பேரொளி போனபோது ஒரு சிறு ஒளியை எனக்காக விட்டுப் போய்விட்டார். ரோட்டிலே நடை செல்லும் போதும், உணவகத்தில் சாப்பிடப் போகும்போதும், வீடியோ நிலையத்திலும், சாமான் வாங்கும் கடைகளிலும் என்னைப் பார்த்து இப்போது ‘ஹாய்’ என்று சொல்கிறார்கள்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் என்ற தலைப்பில் கடலூர் டவுன் ஹாலில் ஜூலை 30, 2019 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கல்விக் கொள்கை நாட்டின் பெரும்பான்மை மாணவர்களுக்கான கல்விக் கொள்கை அல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையும் கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் நாசகார கொள்கை. அன்று இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் கட்டியமைத்த போராட்டத்தால் இந்தி ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது.

இன்று கார்ப்பரேட்டுகள் – காவிகளின் நலனுக்காக “மோடி அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைப்போம்! வரைவு அறிக்கையை மொத்தமாக நிராகரிப்போம்! எந்த வடிவத்தில் இந்த கல்விக் கொள்கை வந்தாலும் மோதி வீழ்த்துவோம்! தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமைப்பாய்த் திரள்வோம்!” என்பதை முன்வைத்து இந்த அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமை தாங்கினார். கருத்துரையாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முனைவர் ஜானகி.ராஜா உரையாற்றினார். அவர் பேசும்போது, “கல்வியில் புதிய மாற்றங்கள் தேவைதான். புதிய மாற்றங்கள் வரக்கூடாது என்பது நமது நிலைப்பாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு முன்பே அறிவுசார் தொடர்ச்சி இங்கு  இருந்துவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சங்க காலத்திலேயே ஆணும் – பெண்ணும் சமமாக கல்விகற்று, அறிவியலில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். ஆக நாம் ஏதோ கல்வியறிவு அல்லது கல்விமுறை இல்லாது இருந்தோம் என்பதல்ல, நம்முடைய மரபிலேயே கல்வியானது இருந்துள்ளது.

இடைப்பட்ட காலத்தில் நம் கல்விமுறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, அப்போதுதான் குருகுலக் கல்வி முறை என்பது வந்தது. குருகுலக் கல்வி முறை என்பது மாணவர்கள் குருவின் வீட்டுக்குச் சென்று குருவிற்கு பணிவிடை செய்து; அவர் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து; குரு எப்போது ஓய்வாக இருக்கிறாரோ (எப்போது சொல்லிக் கொடுக்கிறாரோ) அந்த நேரத்தில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கு வீட்டுக்குள் செல்ல அனுமதி இல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. குருகுல கல்வி என்பது சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமானதாக இருந்தது.

அதிலிருந்து மாறி திண்ணை பள்ளி உருவானது. குருவின் வீட்டிற்குள் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து படிப்பது, இதிலும் அனைவரும் செல்ல முடியாது. தெருவில் நடமாட வாய்ப்பு இல்லாதவர்கள் திண்ணையில் எப்படி உட்கார முடியும் ? இதுவும் சிலருக்கு மட்டும் வாய்ப்பளித்தது.

1854 -ல் மெக்காலே கல்வி வந்த பிறகுதான் வாய்ப்பு மறுக்கப்பட்ட அவர்களுக்கும் கல்வி கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோத்தாரி கமிஷன் வந்த பிறகுதான் திறந்தவெளி பல்கலைக்கழகம் வந்தது. இது கல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க முடியாதவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது கட்டமைப்பு செய்யப்பட்ட கஸ்தூரிரங்கன் அறிக்கை, மீண்டும் நம்மை பின்னோக்கி குருகுல கல்விக்கு இழுத்து செல்லும் முயற்சி. இந்தக் கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி இல்லை; சிலருக்கு மட்டுமே கல்வி என்பதாக மாற்றுகின்ற முயற்சி; கல்வி வசதி படைத்தவர்களுக்கானதாக மாற்றும் முயற்சி; ஆகவே நாம் இந்த கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

இந்தக் கல்விக் கொள்கையில் இடம் பெற்று இருக்கக் கூடியவை பொது சமூகத்தின் கல்வி நலனுக்கு எதிரானது. இன்று இருக்கும் மத்திய அரசு வலிமையான கருத்தியலை கொண்ட அரசு, இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய அரசு. இந்த அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இதை நோக்கித்தான் இருக்கும். வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி இந்துத்துவ பாடங்களை பள்ளியில் புகுத்துவதை அன்றே துவங்கினார். பாடநூலில் தீவிரவாதத்தை புகுத்தியவர் முரளி மனோகர் ஜோஷி

இன்று வந்திருக்கும் கல்விக் கொள்கையானது கல்வியை வணிகப் பொருளாக மாற்றுகிறது. பல நாடுகளில் கல்வி என்பது ஏழு வயதில் துவங்குகிறது ஆனால் இந்த கல்விக் கொள்கையில் மாணவர்களின் கல்வி மூன்று வயதில் துவங்குகிறது. மூன்றாவது 5-ஆவது, எட்டாவது, பத்தாவது, பன்னிரண்டாவது என பொதுத் தேர்வுகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டும். இதில் மாணவர்கள் வடிகட்ட படுவார்கள், பன்னிரண்டாவது முடிக்கும் போது சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இருப்பார்கள்

இந்தக் கல்விமுறை சமூகப் பணியாளர்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, இந்த சமூகப் பணியாளர்கள் ஒரு மாணவனின் சாதியை அறிந்து, அவன் அப்பன் தொழிலை அறிந்து, ஒரு மாணவனுக்கு மதிப்பீடு அளிப்பார்கள். ஆக இது குலத்தொழிலை ஊக்குவிப்பதாகும்.

படிக்க:
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இந்தக் கல்விமுறை பள்ளி மாணவர்களுக்கு தச்சுத்தொழில், தோட்டக்கலை, மண்பாண்டம், கட்டிட வேலை ஆகியவை எப்படி செய்வது? என்பதை கற்றுத் தரப் போகிறது. ஆக இது முழுவதும் குல தொழிலுக்கு இட்டுச் செல்லும் முயற்சி.
இந்தக் கல்விக் கொள்கையில் இந்தி மயமாக்கப்பட்ட கல்வி முறை, இந்திய மயமாக்கப்பட்ட புராண இதிகாச கல்விமுறை இடம் பெற்றிருக்கிறது.

புராண இதிகாச குப்பைகளை ஆராய்ச்சி கட்டுரைகள் (ஆராய்ச்சியாளர்) என்ற போர்வையில் எழுதுகிறார்கள். இந்திய அறிவியல் மாநாடு மிகவும் முட்டாள்தனமான கருத்துக்களைக் கொண்டு நடைபெற்றது. நமது பிரதமர் முதல் முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி விநாயகருக்கு செய்யப்பட்டது என பேசுகிறார். இதே அறிவியல் மாநாட்டில் ஒரு நீதிபதி மயில்கள் புணர்ச்சி செய்து பிறக்கவில்லை, ஆண் மயில் கண்ணீர் விடும் பெண் மையில் அதனை அருந்தும் இதன் மூலம் கர்ப்பம் அடைகிறது என பேசுகிறார்.

இன்று உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய கல்வி அறிவற்ற மூடர்களை உருவாக்கும் கல்வியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இன்று அரசு, ஆட்சியாளர்கள், அறிஞர்கள், நீதிபதி அனைவரும் ஒரே கோட்டை வந்தடைகிறார்கள். மூன்று ஆண்டுக்கு முன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் “அடுத்த தேர்தலில் நாம் தோற்றாலும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று பேசியுள்ளனர்.

ஏனென்றால் அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் அவர்களுடைய பிரதிநிதிகள் இருக்கிறார்கள், நீதித்துறை, கல்வி, ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் சில குறிப்பிட்ட பிரிவுகள் வந்திருக்கிறார்கள்.

ஆக இந்தக் கல்விக் கொள்கை என்பது திருத்தப்பட வேண்டியது அல்ல திரும்பப் பெற வேண்டியது. இதைத் திருத்த வேண்டும் என்றால் முதலில் இருந்து கடைசி எழுத்து வரை மாற்ற வேண்டும்” என்று உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து பொது கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரமேஷ் உரையாற்றினார். “இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள்; மாணவர் அமைப்புகள்; ஜனநாயக சக்திகள்; பேராசிரியர்கள் என பேசிவருகிறார்கள், போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீசு இதை கடுமையாக ஒடுக்கி வருகிறது ஆனால் மோடி அரசுக்கு இதைப் பற்றிக் கடுகளவும் அக்கறை இல்லை.

சமீபத்தில் டெல்லியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள், ஏனென்றால் மோடி அரசு தேசிய மருத்துவ ஆணையத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இதனை கண்டித்து தான் மருத்துவர்கள் போராடினார்கள்.

மருத்துவர்கள் இதை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் : மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு வந்தபிறகு 2017-18-ம் ஆண்டில், மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களில் CBSE-யில் படித்தவர்கள் 611 பேர். ஆனால் அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே.

இதற்கு முக்கிய காரணம் 2017-18 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2018-19-ல் தேர்ச்சி பெற்றவர்களில் 85% பேர் ஒரே ஒரு கோச்சிங்(ஆகாஷ் கோச்சிங் சென்டர்) சென்டரில் படித்தவர்கள். இந்த செண்டர்களில், ஒரு ஆண்டு நீட் கோச்சிங்குக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். இரண்டு ஆண்டுகளுக்கு 3 லட்ச ரூபாய் செலவு செய்தால் மட்டுமே உங்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் மருத்துவ கல்வி பெற முடியும்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் மோடி அரசு முக்கிய மாற்றத்தைச் செய்திருக்கிறது. தனியார் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டா இருக்கிறது, அதில் நாம் போய் சேரலாம், அதற்கான கல்வி கட்டணத்தை அரசு தீர்மானிக்கும். இது பரவலாக அனைத்து மாநிலங்களிலும் இருக்கிற முறை. இதில் மோடி அரசு கொண்டுவந்த மாற்றம் 50% கட்டணம் மட்டும் அரசு தீர்மானிக்கும் மீதி உள்ள 50% கட்டணத்தை அந்த தனியார் நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இப்பொழுது கொண்டு வந்த மாற்றத்தினால் நீட் தேர்வில் 450 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், மேனேஜ்மன்ட் கோட்டாவில் இணையலாம். ஆனால் கேட்கப்படும் கட்டணம் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கிறது. இதனால் இந்தியாவை விட்டு மாணவர்கள் வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். ரஷ்யாவில் ஒரு ஆண்டு படிப்பதற்கு 30 லட்சம் செலவாகிறது, இந்தியாவில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ஆண்டு கட்டணம் ஒரு கோடி ரூபாய்.

இனி எந்த உயர்கல்வி படிக்க வேண்டும் என்றாலும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு வைக்கப் போகிறார்கள். அந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்யப் போகிறோம் என்கிறார்கள். நீட் தேர்வு பெரும்பான்மை கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை மருத்துவ கல்வியில் இருந்து விலக்கி வைத்துள்ளது, இதை யாராலும் மறுக்க முடியாது.

ஆக இதே தேர்வை எல்லா உயர்கல்வி படிப்புக்கும் கொண்டு வந்தால் நிலைமை என்னவாகும்? தேசிய அளவில் ஒரு தேர்வு எதிர் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கோச்சிங் சென்டர் போகாமல் தேர்ச்சி பெற முடியாது. 3, 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு கோச்சிங் சென்டர் போக வேண்டும். அதேபோல் பன்னிரண்டாவது முடித்த பிறகும் கோச்சிங் சென்டர் செல்ல வேண்டும்.

இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் பெரும்பான்மை மக்களை கல்வியில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களை குலக்கல்வி வடிவத்தில் மாற்றுவது.

இந்தியாவில் 50% பேர் இளைஞர்கள், இவர்கள் எல்லோரும் படிக்க வேண்டும். ஆக இந்தக் கல்விச் சந்தையின் மதிப்பு பல லட்சம் கோடி. இதை எப்படி தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதுதான் முதலாளிகளின் திட்டம். இந்த அறிக்கையில் கல்லூரியை மூன்று விதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.

1. ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்.
2. பயிற்றுவிப்பதற்கான பல்கலைக்கழகங்கள்
3. இங்கு உள்ள கல்லூரிகள் என பிரித்து வைத்திருக்கிறார்கள்.

இதில் மையமாக கூறுவது இங்கு உள்ள முதல் பகுதியில் உள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளுடன் சேர்ந்து இங்கு உயர் கல்வியை கொடுக்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் உள்ள பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 902 இதில் 399 மாநில அரசால் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் 40 மொத்தம் இருக்கக்கூடிய கல்லூரிகளின் எண்ணிக்கை 42 ஆயிரம், உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 3.66 கோடி பேர்.

இதனை இரட்டிப்பாக்குவது எப்படி என்றால் அதிகப்படியான பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் கட்ட வேண்டும். இல்லையென்றால் மாற்ற முடியாது, இந்திய அரசு இந்தியாவில் படிக்கும் 3.66 கோடி பேருக்கு ஒதுக்கும் நிதி 33 ஆயிரம் கோடி. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் பேர். அவர்கள் செலவு செய்யும் பணம் 50 ஆயிரம் கோடி.

இதை எப்படி இந்தியாவுக்கு கொண்டு வருவது, இந்தியாவில் ‘உலகின் தலைசிறந்த’ பல்கலைக்கழகங்களை உருவாக்குவது. இதற்காக 30 பல்கலைக்கழகங்களை அரசு அறிவித்துள்ளது. அதில் 10 அரசுப் பல்கலைக் கழகம், 20 தனியார் பல்கலைக்கழகம். அரசின் நோக்கம் வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் மாணவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதால் அதிக வருமானம் வரும் என்கிற முடிவு.

ஆனால் அந்த வருமானம் யாருக்கான வருமானம்? அம்பானி ஜியோ பல்கலைக் கழகத்தை ஆரம்பிப்பதாகக் கூறி ஒன்றரை வருடம் ஆகிறது. இன்றுவரை ஒரு செங்கல் கூட கிடையாது. அதற்குள் அதை இந்திய அரசு ‘தலைசிறந்த பல்கலைக் கழகமாக’ அறிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து யார் யாரெல்லாம் ஆரம்பிக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அனுமதி கொடுங்கள் என்கிறது இந்த அறிக்கை. அந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டணத்தை அவர்களை தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிறது.

இந்த அறிக்கையின் பின்பக்கம் யாரிடம் கருத்து கேட்கப்பட்டது என்கிற விவரத்தை கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார். ஒன்று ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த 4 அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டு இருக்கிறது. (அகில பாரதிய விஷ்வ பரிசத் போன்ற அமைப்புகள்) இரண்டாவதாக அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், மூன்றாவதாக இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகள் அவர்களின் கூட்டமைப்பிடம் கருத்து கேட்கிறார்கள். இங்குள்ள ஆசிரியரிடமோ, மாணவர்களிடமோ, மாணவர் அமைப்புகளிடமோ, பெரும்பான்மை மக்களிடமோ கருத்து கேட்கப்படவில்லை.

ஆக இந்த அறிக்கையை மாற்ற முடியாது, முற்றிலும் நிராகரிக்க வேண்டும்! இந்தக் கல்வி கொள்கை கருத்து கேட்கும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இதிலுள்ளவற்றை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சகம், இதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. கருத்து கணிப்பு என்பதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நாம் என்ன செய்யவேண்டும்?

பெரும்பான்மை மக்கள்; மாணவர்கள் பங்களிப்பு இல்லாமல் இதை தடுத்து நிறுத்த முடியாது இது அரங்கத்தில் மட்டும் பேசக் கூடிய விஷயம் அல்ல. மக்கள் போராட்டங்கள் மூலம் தான் இந்த மக்கள் விரோத கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த முடியும்” என பேசினார்.

அதன் பின்னர், நன்றியுரையுடன் கூட்டம் நிறைவேறியது.


தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர், தொடர்புக்கு : 97888 08110

தமிழ் எழுத்துக்களில் கூட நால் வர்ண சாதிப் பிரிவினை !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 18

லக்கியங்களிலே பற்பல மூட நம்பிக்கைகள் புகுந்து பொய்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன? தொல்காப்பியத்தில் சில இடைச் செருகல்; வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தைத் தழுவியவை. இவற்றின் உரைகளோ ஒப்பியல் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி வட மொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தவை. ஆனால் பிற்கால இலக்கணங்களில், ”ஐந்தெழுத்தால் ஒரு பாடையுண்டென அறையவும் நாணுவரே மக்கள்’’ என்று இலக்கணக் கொத்துச் சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் இழிந்தது எதனால், வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தைப் புறக்கணித்ததாலன்றோ?

இலக்கியத்துக்குக் கற்பனை துணையென்றாலும் இலக்கணத்துக்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ? வெண்பாப் பாட்டியல் (வச்சணந்தி மாலை) என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் ஆழ்ந்ததாகவும் கருத்திற் கொவ்வாததாகவும் அமைந் திருக்கிறது என்பதைப் புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். ஏன் இந்த அறியாமை உருவெடுத்து  வந்த பட்டியல் ஏடு, பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? படிப்பதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டினீர், என்று ஆரியரைப் பார்த்து முழங்கிடும் உண்மையுணர்ந்தும், எழுத்திலும் நால்வகைச் சாதியா? உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் மெய்யும் சார்பும் எழுத்தின் வகையாம் என அறிவுடன் பட்டு ஆயிரமாயிரமாண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக, ஆரியம் புகுந்து வளம் பெற்று, தமிழ் கற்று இலக்கியமியற்றும் தொண்டினை ஏற்று மெல்ல ஆரியப் புலவரெல்லாருள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி, அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலைமையை உண்டாக்கி விட்டது. முக்காலத்திலும் மொழி வழங்கிடத் துணைபுரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும், ஆரிய நச்சரவுதான் படத்தினை எடுத்து ஆடுகின்றது.

பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண – க்ஷத்திரிய – வைசிய – சூத்திர என்ற சாதிப்பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளார். ‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?

ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், ”சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக்கற்றது. ஆனால் இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது.

பாக்களில் சிறந்த வெண்பாவெனும் ஒண்பா பார்ப்பனருக்கு, பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்ட அரசர்க்கு அதற்கடுத்த ஆசிரியப்பா, வைசியருக்கு – வகை பல குறைந்த கலி. சூத்திரர் என்ற திராவிடருக்கு – ஆரியர் உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா! தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா? இன்றும் கலம்பகத்தில் (பாக்களைக் கலந்து பாடும் முறை) தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 96-ம், அரசருக்கு 90-ம் அமைச்சருக்கு 70-ம், வணிகருக்கு 50-ம் மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டும் மென்பது பாட்டியல் விதிகளாம். ஆண்டவனின் அவதாரம் அரசன் என்று எண்ணியிருந்த நாட்டிலேயே, அரசனைவிடப் புரோகிதப் பார்ப்பான் உயர்வென்று கருதி அதிகமான செய்யுள் செய்வது முறை என்று எழுதிய நயவஞ்சகர், பிற மக்களை இழிவுபடுத்தும் முறையில் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ கூறியிருப்பது ஆச்சரியமன்று. ஆனால் இவற்றைப் புலவர்கள் தாங்கி நிற்பதுதான் நமக்கு வருத்தத்தைத் தருகின்றது.

படிக்க:
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்

மனுநீதியை விடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது? இது மக்கள் முன்னிலையில் பொசுக்கப்பட்டாலொழிய, திராவிட இன உணர்ச்சியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படைக் கருத்தும் மறுபடியும் நிலவிட முடியுமா? ஆரியக் கொள்கைகள் நூல் வடிவில் இருப்பினும், ஆரியர் கையாண்ட தீ வளர்க்கும் வேள்வி முறைக்கே இரையாகப் பலியிடும் நாளே நம்மை நாம் உணர்ந்த நாளாகும். இன்னும் பாட்டியல் வழங்கிடும் பொருத்தங்களையெல்லாம் பார்த்துத் தமிழ்ப்பா இயற்றுவதென்பது, பயனில்லாத செயலாகும்.

மங்கலப் பொருத்தம், முதற்சொல், எழுத்துத் தகனம், பால் உணர், வருணம், நாள், கதி, கணம் ஆகிய எல்லாப் பொருத்தங்களும், தமிழ் மொழியில் உள்ள எல்லா விழுமிய சொற்களையும் பயன்படுத்தி, அழகிய கருத்து நிறைந்த கவிகளை இயற்றும் இயற்கை முறையில் மட்டுப்படுத்தும் மாற்றுவகையில் அமைந்துள்ளது. இன்னும் பல சொற்களையும் பயன்படுத்த முடியாது இப்பொருத்தங்கள் தடை செய்வதனால், பல வடமொழிச் சொற்களையும் (பிறமொழி எனப் பாராது) புலவர்கள் கையாளும் நிலைமையை ஏற்படுத்தியது. தனித்தமிழ், உயர் தனிச் செம்மொழி , தன் இயல்பினை இழக்கவோ அன்றி இழந்த நிலையைக் காட்டவோ பாட்டியல் பயன்பட முடியுமேயன்றி, எந்த முறையிலும் தமிழ் மொழிக்கு ஏற்றதல்ல; பொருத்தமானதுமன்று என்பது எவரும் மறுக்க முடியாததாகும். ஆரியம் ஒழியத் தன்னுணர்வு பெற்றிடுதல் இன்றியமையாதது. தன்னுணர்வு வளரத் தமிழ்க் கழனி திருத்தப்படுதல் வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும் இலக்கண விளை நிலமானாலும் ஆரியக் கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின், அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனைத் தீ வைத்தேனும் ஒழித்திடத்தயங்கார். ஆகவே தோழர்களே! மாணவர்களாகிய நாம் நமது கடமையை உணர்ந்து, ஒல்லும் வகையெல்லாம் திராவிடர் இனம் எழுச்சி பெறவும், வாகை சூடவும் முயல்வோமாக.

”ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததைப் பற்றி A.K. Saunders C.S.I. I. C. S . என்கிற ஓர் ஆராய்ச்சிக்காரர் சுமார் 20 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் மதம் என்னும் ஆராய்ச்சி நூலில் எழுதியிருப்பதாவது:

சுமார் 5000 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் சீதோஷ்ண நிலை, இப்போது இருப்பதை விடச் சற்றுக் குறைந்த குணம் உள்ளதாக இருந்தது. இந்தியாவில் மக்கள் அநேகமாக எல்லோரும் திராவிடர்களாகவே இருந்தார்கள் என்றாலும், அவர்கள் பல பிரிவுகளாகவே ஆங்காங்கு இருந்து வந்தார்கள். அவர்கள் கறுப்பு நிறமுடையவர்கள்; சற்று உயரம் குறைந்தவர்கள். இப்போதைப்போலவே நல்ல கஷ்டப்படக் கூடியவர்களாகவும், நல்ல சுபாவமுள்ளவர்களாகவும், கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆரியர்கள் படையெடுப்பினால் நிலைகுலைந்தார்கள். ஆரியரின் ஆதிக்கத்தினால், அடிமை ஜாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள். ஆரியர்கள் தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததாலும் மங்கோலியர் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டு பிடிப்பதற்கென்றே சிறு சிறு கூட்டமாக வந்தார்கள்.

அவர்கள் வந்த சமயத்தில் இந்தியாவில் திராவிடர்கள் பல பிரிவுகளாக, ஆங்காங்கு தனித்தனியே சிறுசிறு பாகத்துக்கு அதிகாரிகளாக இருந்து ஆட்சி செலுத்தி வந்தனர். அதனால் அவர்களில் ஒருவருக்கொருவர் கலகம், சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அப்போது இங்குப் பிழைக்க வந்த ஆரியர்கள், உள்நாட்டுக் கலகத்தில் கலந்து கொண்டு, தாங்கள் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கலகங்களையும் போர்களையும் பெருக்கி ஒருவரையொருவர் தாக்கி மடியும் படியும் இளைக்கும்படியும் செய்தனர்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

படை வீரன் என்பதை மறந்து விடு ! நீ நடை பழகும் குழந்தை !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 12

குளுமையான, மஞ்சள் பாரித்த, ஒளி வீசிய ஒரு கோடைக் காலையில் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா ஒரு முதியவரை வார்டுக்கு உபசாரத்துடன் இட்டு வந்தாள். இரும்பு விளிம்பு கட்டிய, பழைய மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் அவர். மருத்துவமனைக்கு உரிய, கஞ்சி போட்டு முடமுடப்பான புதிய மேலங்கி கூட அனுபவசாலியான கைவினைஞரின் தோற்றத்தை மாற்றவில்லை. வெள்ளைத் துணி சுற்றிய ஏதோ ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார். மெரேஸ்யெவின் கட்டில் அருகே தரையில் அதை வைத்து ஏதோ செப்படி வித்தைக்காரர் போன்று பதபாகமாகவும் பெருமிதத்துடனும் முடிச்சை அவிழ்த்தார். அவர் கைகளுக்கு அடியில் தோல் கறகறத்தது. பதனிட்ட தோலின் சுள்ளேன்ற புளிப்பு மணம் வார்டில் பரவிற்று.

கிழவனார் கொண்டுவந்திருந்த பொட்டலத்தில் நெறு நெறுக்கும் இரு புதிய மஞ்சள் நிறப் பொய்க்கால்கள் இருந்தன. சரியாக அளவெடுத்துத் திறமையாகச் செய்யப்பட்டவை அவை. ஆனால் இந்த கைவினைஞரின் பெருமைக்குக் காரணமாக இருந்தவை பொய்க்கால்கள் அல்ல. புதிய மஞ்சள் நிற மாதிரிக் கட்டைகளில் அணியப்பட்டிருந்த பூட்சுகளும் இருந்தன. அந்தப் பூட்சுகள் அணிந்தால் உயிருள்ள கால்கள் போலத் தோன்றுமாறு திறமையுடன் செய்யப்பட்டிருந்தன அக்காலணிகள்.

தம் கைகளால் செய்த பொருள்களை மூக்குக் கண்ணாடி விளிம்புகளிகளுக்கு மேலாகப் பார்வையிட்டவாறே, “ரப்பர் மேல் ஜோடுகளைப் போட்டுக்கொண்டால் கலியாண மாப்பிள்ளை கெட்டான் கேடு! வஸீலிய் வஸீலியெவிச் தாமே எனக்கு உத்தரவிட்டார், ‘ஸ்யெவ், நிஜக் கால்களை விட மேலாக இருக்கும் படி பொய்க் கால்களைப் பாங்காகச் செய்து தா’ என்று. இதோ, பாருங்கள், ஸ்யெவ் செய்திருக்கிறான். ராஜ தோரணையானவை!” என்றார் தொழிற்கலைஞர்.

செயற்கைக் கால்களை கண்டதும் மெரேஸ்யெவின் நெஞ்சு சோம்பிப் குறுகியது. அது இறுகி உறைந்து விட்டது போல் ஆகிவிட்டது. எனினும் பொய்க்கால்களை விரைவில் அணிந்து பார்க்கவும், சுதந்திரமாக நடக்கவும் உண்டான வேட்கை மற்ற எல்லா உணர்ச்சிகளையும் மீறிக்கொண்டு மேலெழுந்தது. போர்வைக்கு அடியிலிருந்து நொண்டிக் கால்களை வெளியே எடுத்துச் சட்டென்று பொய்க்கால்களைப் போட்டுப் பார்க்கும் படி முதியவரை அவசரப்படுத்தினான். ஆனால் “சமாதானக் காலத்திலேயே” குதிரைப் பந்தயத்தில் காலை முறித்துக் கொண்ட யாரோ ”பெரிய சிற்றரசனுக்குப்” பொய்க்கால் செய்து கொடுத்ததாகச் சொல்லிக் கொண்ட அந்தக் கைதேர்ந்த பொய்க்கால் சிற்பிக்கு இந்த அவசரம் பிடிக்கவில்லை. தான் செய்த பொருள்கள் பற்றி அவர் மிகுந்த பெருமை கொண்டிருந்தார். அவற்றை ஒப்படைப்பதை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு இழுத்தடிக்க அவர் விரும்பினார்.

பொய்க்கால்களை அங்கிக் கையால் துடைத்தார், தோலின் மேலிருந்த கறையை நகத்தால் சுரண்டி, அந்த இடத்தில் ஊதி, பளிச்சிடும் வெண்ணிற அங்கி விளிம்பால் துடைத்து, பொய்க் கால்களைத் தரையில் வைத்தார். பிறகு துணியை நிதானமாக மடித்துச் சுருட்டிப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

“நல்லது பெரியவரே, போட்டுப் பார்க்கலாமே” என்று கட்டிலில் உட்கார்ந்து அவசரப்படுத்தினான் அலெக்ஸேய்.

வெட்டுண்ட வெறுங்கால்களை வேற்றாளின் கண்களால் இப்போது பார்வையிட்டு, அவற்றால் மனநிறைவு அடைந்தான் அலெக்ஸேய். அவை வலியவையாக, நரம்பு புடைத்திருந்தன. கட்டாயம் காரணமாக இயக்கம் இல்லாத நிலைமையில் வழக்கமாக ஏற்படுவது போன்று அவற்றில் கொழுப்பு சேரவில்லை. மாறாக, பழுப்பேறிய தோலுக்கு அடியில் தசைநார்கள் விறைத்து நின்றன. இவை வெட்டுண்ட கால்கள் அல்ல, நிறையவும் விரைவாகவும் நடக்கும் மனிதனின் முழுக்கால்கள் என்று தோன்றியது.

“என்னது, போட்டுப் பார்க்கலாமே, போட்டுப் பார்க்கலாமே?… ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காதா?” என்று முணுமுணுத்தார் கிழவர். ‘ஸயெவ், தனிப்பட்ட கவனம் செலுத்தி இந்தப் பொய்க்கால்களைத் தயாரி. லெப்டினன்ட் கால்கள் இல்லாமலே விமானம் ஓட்டத் திட்டம் இட்டிருக்கிறான்’ என்று வஸீலிய் வஸீலியெவிச் என்னிடம் சொன்னார். ஆகா, அப்படியே செய்கிறேன் என்றேன். இதோ, பாருங்கள், எப்படிச் செய்திருக்கிறேன் என்று. இந்த மாதிரிப் பொய்க்கால்களைக் கொண்டு நடக்க மட்டுந்தானா முடியும், சைக்கிள் விடலாம், இளம் பெண்களுடன் நடனம் ஆடலாமே. எப்பேர்பட்ட வேலைப் பாடு!” என்று பீற்றிக்கொண்டார்.

பொய்க்காலின் மெத்தென்றிருந்த அலெக்ஸேயின் வலது வெட்டுக்காலை நுழைத்து, இறுக்கு வார்களால் வலிவாகப் பொருத்திக் கட்டினார் கிழவர். சற்று அப்பால் சென்று அதைப் பார்வையிட்டார். நாக்கைச் சப்புக் கொட்டினார்.

“ஜோடு பார்வையாக இருக்கிறது! … வலிக்கவில்லையே? அதுதானே! ஸ்யெவை விடத் தேர்ந்த கைவினைஞன் மாஸ்கோவில் கிடையாது, தெரிந்து கொள். ஸ்யெவுக்குத் தங்கக் கைகளாக்கும், தங்கக் கைகள்” என்றார்.

இன்னொரு பொய்க்காலையும் லாவகமாக அணிவித்து வார்களால் இறுக்கிக்கினாரோ இல்லையோ, மெரேஸ்யெவ் விற்கம்பி விசை போன்று சடக்கெனக் கட்டிலிலிருந்து தரையில் தாவிக் குதித்தான். சொத்தென்ற சத்தம் கேட்டது. மெரேஸ்யெவ் வலி தாளமாட்டாமல் வீரிட்டவன், அக்கணமே கட்டிலின் அருகே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து விட்டான்.

முதிய தொழிற்சிற்பியின் மூக்குக் கண்ணாடி வியப்பால் நெற்றிமேல் ஏறிவிட்டது. தன் வாடிக்கைக்காரன் இப்படித் துள்ளப் போகிறான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மெரேஸ்யெவ் அதிர்ச்சியடைந்து, ஜோடுகள் பொருத்திய பொய்க் கால்களை அகலப் பரப்பியவாறு புகலின்றித் தரையில் கிடந்தான். விளங்காமையும் மனத்தாங்கலும் அச்சமும் அவன் விழிகளில் ததும்பின. அவன் எண்ணியதெல்லாம் வெறும் ஏமாற்றுதானா?

மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான். தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா கைகளை உதறியவாறு அவனருகே பாய்ந்தாள். முதிய தொழிற்சிற்பியும் அவளும் சேர்ந்து அலெக்ஸேயைத் தூக்கிக் கட்டிலில் உட்கார வைத்தார்கள். அவன் துயரம் நெஞ்சை அழுத்த, துவண்டு போய் வருத்தம் ததும்பும் முகத் தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தான்.

“ஏ-ஏ-ஏ, அருமை மனிதா, இப்படிச் செய்வது சரியல்ல, கொஞ்சமும் சரியல்ல. ஏதோ உயிருள்ள கால்கள் திரும்ப வைக்கப்பட்டுவிட்டது போலத் துள்ளிப் பறந்தாயே. நல்ல ஆள் தான் போ. இதற்காக முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்ளத் தேவையில்லை, அருமை நண்பா. ஒன்றுமட்டும் தெரிந்து கொள். நீ எல்லாவற்றையும் அடியிலிருந்து தொடங்க வேண்டும். நீ படை வீரன் என்பதை மறந்து விடு. நீ சின்னக் குழந்தை இப்பொழுது ஓர் அடி, இன்னோர் அடி என்று எடுத்து வைத்து நடை பழகும் குழந்தை. முதலில் கவைக்கோலுடன், அப்புறம் சுவற்றைப் பிடித்துக் கொண்டு, பிறகு கைத்தடியை ஊன்றியபடி நடக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அல்ல, கொஞ்சங் கொஞ்சமாகப் பழக வேண்டும். இவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான்! கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. அருமைத் தம்பீ, அம்மாவும் அப்பாவும் உண்டாக்கியவை போன்ற கால்கள் யாராலும் உனக்குச் செய்து தர முடியாது” என்று முணுமுணுத்தார் கிழவர்.

இசைக் கேடாகக் குதித்ததனால் கால்களில் கொடிய வலி உண்டாயிற்று. ஆயினும் பொய்க்கால்களை உடனேயே சோதித்துப் பார்க்க மெரேஸ்யெவுக்கு ஆசையாயிருந்தது. லேசான அலுமினியக் கவைக்கோல்கள் அவனுக்குத் தரப்பட்டன. அவற்றைத் தரையில் ஊன்றிக்கொண்டு கக்கங்களுக்கு அடியில் கைத்திண்டுகளை அழுத்தியவாறு மெதுவாக, ஜாக்கிரதையாகக் கட்டிலிலிருந்து வழுகிப் பொய்க்கால்களில் நின்றான். மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான். தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.

தாயாரோ பாட்டியோ முதல் நடக்கக் கற்பிப்பது போலவே க்ளாவ்தியா மிஹாய்லவும் முதிய தொழிற்சிற்பியும் மெரேஸ்யெவைப் பரிவுடன் இரு புறங்களிலிலும் தாங்கிக் கொண்டார்கள். மெரேஸ்யெவ் ஓர் இடத்தில் நின்றான். பொய்க்கால்கள் பொருத்தப்பட்டிருந்த இடங்களில் பழக்கமின்மைக் காரணமாகக் கடும் வலி உண்டாயிற்று. அவன் தயக்கத்துடன் முதலில் ஒரு கவைக்கோலையும் பிறகு இரண்டாவதையும் முன்னே வைத்தான், உடல் பாரத்தை அவற்றின் மேல் போட்டவாறு ஒரு காலை எடுத்து வைத்து அப்புறம் மறு காலை வைத்தான். தோல் இறுக்கத்துடன் கறுமுறுத்தது. டொம் டொம் என்ற கனத்த ஓசைகள் தரையில் அதிர்ந்தன.

“ஊம், நல் அதிர்ஷ்டம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தினார் முதியவர்.

மெரேஸ்யெவ் பதபாகமாக இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தான். பொய்க்கால்களால் இந்த முதல் அடிகளை எடுத்து வைப்பது அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கதவு வரை போய் திரும்புவதற்குள் ஏதோ ஒரு மாவு மூட்டையை ஐந்தாவது மாடிக்குச் சுமந்து சென்றது போல அவனுக்கு அயர்வு உண்டாயிற்று. கட்டில் வரை சிரமப்பட்டு நடந்து பொத்தென்று அதில் சாய்ந்தான். உடம்பெல்லாம் வியர்த்தது. புரண்டு நிமிர்ந்து படுக்கக் கூடத் திராணி இல்லை .

“பொய்க்கால்கள் எப்படி? அதுதானே. ஆண்டவனுக்கு நன்றி செலுத்து, தொழிற்சிற்பி ஸ்யெவ் உலகில் இருப்பதற்கு!” என்று முதியவருக்கு இயல்பான தற்புகழ்ச்சியுடன் வார்களை அவிழ்த்து அலெக்ஸேயின் கால்களை விடுவித்தார் கிழவர். பழக்கம் இல்லாமையால் கால்கள் அதற்குள் கொஞ்சம் இரத்தம் கட்டி வீங்கியிருந்தன. “இந்த மாதிரிப் பொய்க்கால்களுடன் விமானந்தானா ஓட்டலாம், நேரே ஆண்டவனிடமே பறந்து போகலாமே. எப்பேர்பட்ட வேலைப்பாடு!” என்று தொடர்ந்தார் பெரியவர்.

“நன்றி, நன்றி, பெரியவரே, வேலை பிரமாதம்’ என்று தணிந்த குரலில் சொன்னான் மெரேஸ்யெவ்.

“வஸீலிய் வஸீலியெவிச் என்னிடம் சொன்னார்: ‘ஸ்யெவ், அசாதாரணமான பொய்க்கால்கள் வேண்டும். மோசம் பண்ணிவிடாதே’ என்று. அட ஸ்யெவ் மோசம் பண்ணுவது எங்காவது உண்டா? சந்தர்ப்பம் நேரும் போது நீங்கள் வஸீலிய் வஸீலியெவிச்சிடம் சொல்லுங்கள், வேலை திருப்தியாக இருந்தது என்று” எனக் கூறினார் கிழவர்.

பின்பு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு அவர் போய்விட்டார். மெரேஸ்யெவ் கட்டில் அருகே கிடந்த தன் புதுக் கால்களைக் கவனமாகப் பார்த்தபடி படுத்திருந்தான். அவற்றைப் பார்க்க பார்க்க அவற்றின் அமைப்பில் காணப்பட்ட மதி நுட்பமும் திறமையான வேலைப்பாடும் அவை லேசாயிருந்ததும் அவனுக்கு உவப்பூட்டின. பொய்க்கால்கள் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டன.

படிக்க:
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

அன்றே ஓல்காவுக்கு களிபொங்கும் விரிவான கடிதம் எழுதி அனுப்பினான் மெரேஸ்யெவ். விமானங்களைச் சோதித்துப் பார்க்கும் தனது வேலை முடியும் தறுவாயில் இருக்கிறது என்றும் தலைமை அதிகாரிகள் தனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாகவும் சலிப்பூட்டும் பின்புறத்தில் இந்த அலுப்புத்தரும் வேலையிலிருந்து தான் இலையுதிர் காலத்திலோ அல்லது அதிகமாய்ப் போனால் குளிர்காலத்திலோ போர்முனைக்கு, தன் ரெஜிமென்டுக்கு அனுப்பப் படலாம் என்றும் ரெஜிமேண்டில் தோழர்கள் தன்னை மறக்கவில்லை என்றும் கடிதத்தில் விவரித்திருந்தான் விபத்து நேர்ந்த நாளுக்குப் பின் அவன் எழுதிய முதலாவது மகிழ்ச்சிக் கடிதம் இதுவே.

தான் எப்போதும் அவளையே நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதாக இந்தக் கடிதத்தில்தான் அவன் தன் மணப்பெண்ணுக்கு முதல் தடவை தெரிவித்திருந்தான். ஒருவேளை தாங்கள் போருக்குப் பின் சந்திக்கலாம் என்றும் அவள் தன் கருத்தை மாற்றிக் கொள்ளா விட்டால் சேர்ந்து வாழலாம் என்றும் தன் நெஞ்சில் நெடுநாளாக வைத்திருந்த எண்ணத்தை – மிகுந்த கூச்சத்துடன்தான் என்றாலும் இதில்தான் அவன் வெளியிட்டிருந்தான். கடிதத்தை ஒரு சில தடவைகள் திரும்பிப் படித்தபின் பெருமூச்செறிந்து கடைசி வரிகளைக் கவனமாக அடித்துவிட்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி !

7

ண்டாரி தமிழ்மணி என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர். இவரது மனைவி ஜான்சி ராணி கடந்த ஜூலை 29-ம் தேதி (திங்கள்கிழமை) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த முயற்சியில் 63 சதவீத தீக்காயங்களுடன் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, வண்டாரி தமிழ்மணியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தனது கணவரின் நிலை கண்டு மனம் வெதும்பிய ஜான்சி ராணி தானே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தீக்குளித்தார். ( தற்போது 2.8.19 அன்று ஜான்சிராணி இறந்து விட்டார்.)இது குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர்.

Tamilmani
வண்டாரி தமிழ்மணி

நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களில் வண்டாரி தமிழ்மணி முக்கியமான பிரமுகராக செயல்பட்டு வந்துள்ளார். அதனடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராகவும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ளார். அரசியல் ஈடுபாட்டுடன் கூடவே சுமார் எட்டாண்டுகளுக்கு முன் கட்சி சார்ந்த நண்பர்களோடு கூட்டு சேர்ந்து “தமிழ் நகை கடை” ஒன்றை நடத்தி வந்துள்ளார். கட்சியின் மீதுள்ள ஈர்ப்பால் ஏராளமாக செலவும் செய்துள்ளார். அவரது கடையில் நாம் தமிழர் தம்பிமார்கள் நகை வாங்குவது விற்பது என நடந்துள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துரை முருகனின் அறிமுகம் வண்டாரி தமிழ்மணிக்கு கிடைத்துள்ளது. மேற்படி ஆசாமி யூட்யூபில் சாட்டை என்கிற பெயரில் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பொது மேடைகளிலும், தனது யூட்யூப் சேனலிலும் அரசியலில் எதிர்தரப்பில் இருப்பவர்களை – குறிப்பாக பெரியார் – திராவிட அரசியலை – தரகுறைவான ஆபாச வார்த்தைகளில் பேசுவதன் மூலமே தம்பிமார்களிடம் புகழ் பெற்றவர் துரை முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இவருக்கும் சீமானுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பின் உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் துரை முருகன். தற்போது மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார்.

படிக்க:
பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

வண்டாரி தமிழ்மணியிடன் அறிமுகம் ஆன துரை முருகன் தனது திருமணத்திற்காக 2012 – 2013-ம் ஆண்டு வாக்கில் எண்பதாயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார். இந்த தொகையை திருமணத்திற்கு வரும் மொய் பணத்தில் இருந்து திரும்பக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். எனினும், திருமணத்திற்கு பின் சொன்னபடி பணம் தரவில்லை. இதற்கிடையே கட்சிக்காக செலவழித்த வகையில் தொழில் முடக்கம் ஏற்பட்டு நகை கடையை மூடும் நிலைக்கு வந்துள்ளார் தமிழ்மணி. டாடா ஏஸ் ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

பெரியண்ணன் சீமான் மற்றும் துரைமுருகன்

தமிழ்மணியின் டாடா ஏஸ் வண்டிக்கு மாதம் சுமார் 11 ஆயிரம் வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணை கட்ட வேண்டும். சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக இவரது டாடா ஏஸ் வண்டியை கட்சி நிர்வாகிகள் கேட்டு வாங்கியுள்ளனர். அப்போது வண்டி வாடகைக்கு ஓடினால் தினமும் 1500 ரூபாய் கிடைக்கும், ஆனால் அந்த தொகை கூட வேண்டாம்; ஒரு மாதம் வண்டியைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு பதிலாக மாதாந்திர தவணைத் தொகையை கொடுத்தால் போதும் என தமிழ்மணி நிர்வாகிகளிடம் பேசி அதனடிப்படையில் வண்டியைக் கொடுத்துள்ளார். வண்டியை எடுத்துச் சென்ற நிர்வாகிகள் அந்த பணத்தையும் கொடுக்கவில்லை.

வறுமை ஒருபக்கம் வாட்ட; கடன் இன்னொரு பக்கம் கழுத்தை நெறிக்க என்ன செய்வதெனத் தெரியாத தமிழ்மணி, சாட்டை துரைமுருகன் தனக்குத் தர வேண்டிய கடனில் பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் 33,000 ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து வந்துள்ளார் துரை முருகன். இத்தனைக்கும் சமீபத்தில் தான் துரைமுருகன் ஒரு ஹுண்டாய் க்ரேட்டா காரும் 1,60,000 ரூபாய் விலையில் புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டும் வாங்கியுள்ளார் என்கின்றன தம்பிமார்கள் இடும் முகநூல் பதிவுகள். பணம் திரும்பக் கிடைக்காத நிலையில் விசயத்தை கட்சியின் பிற நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி.

வேறு வழியின்றி தமிழ்மணிக்குச் சேர வேண்டிய கடன் நிலுவைத் தொகையைத் திரும்பச் செலுத்தியுள்ளார் துரைமுருகன். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் தமிழ்மணி மற்றும் அவரது மனைவியின் கைபேசி எண்களை தனக்கு விசுவாசமான தம்பிமார்களிடம் கொடுத்துள்ளார். துரைமுருகனின் திட்டப்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாம் தமிழர் ஆதரவு கும்பல் தமிழ்மணியையும் அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டித் தீர்த்துள்ளனர். குறிப்பாக எட்டு வயதே ஆன தமிழ்மணியின் பெண் குழந்தையையும் தம்பிமார்கள் விட்டு வைக்காமல் ஆபாசமாக பேசியுள்ளனர். அதிர்ச்சியடைந்த தமிழ்மணி நேரடியாக துரைமுருகனிடமே தொலைபேசி இது குறித்து கேட்டுள்ளார் (அந்த உரையாடலின் ஆடியோ பதிவு முகநூலில் பகிரப்பட்டு வருகின்றது). தமிழ்மணியிடம் திமிராக பேசும் துரை முருகன், தன் மீது அன்பு கொண்ட தம்பிகள் ஏதும் செய்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்கிறார்.

படிக்க:
சீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் ? கருத்துக் கணிப்பு
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

பின் விசயத்தை சீமானிடமே கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி. அதற்கு நீ என்ன வேண்டுமானும் களப்போராளியாக இருந்து விட்டுப் போ… ஆனால் நான் துரைமுருகனை மேடையில் பேச வைத்துதான் கட்சியை வளர்த்து வருகிறேன்… என துரைமுருகனுக்கே ஆதரவாக பேசியுள்ளார். இந்த விவகாரங்கள் மொத்தமும் தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளிடம் தமிழ்மணி பேசியுள்ளார். அந்த உரையாடல்கள் முகநூலில் ஆடியோ பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. ஒரு சில ஆடியோ பதிவுகளை கேட்டபோது மனம் கனத்துப் போனது.

கட்சிக்காக தனது வாழ்கையையே பணயம் வைத்து எல்லா வகைகளிலும் தோற்றுப் போன ஒரு மனிதனின் புலம்பல்களாக இருந்தன அந்த உரையாடல்கள். தனது கட்சி வாழ்க்கையைக் குறித்து ஓரிடத்தில் தமிழ்மணி இவ்வாறு சொல்கிறார் : “இதே ஒரு வாழ்க்கை முறையா இருந்திச்சி அண்ணே. காலைல பல் விளக்குவதைப் போல. இப்போ எல்லாம் வெறுத்துப் போச்சு. இனி என்ன இந்தக் கடனில் இருந்து வெளி வர வேண்டும். ஏதோ தொழில் நடந்தால் போதும். ஊரில் விவசாயம் இருக்கு; வருசத்துக்கு நாலு மூடை நெல்லு வரும். எனக்கென்ன சிகரெட்டு தண்ணி பழக்கம் கூட இல்லை. எப்படியாவது பிழைச்சி மேல வந்துடுவேன்”.

இதற்கிடையே நாம் தமிழர் தம்பிமார்களின் ஆபாச தொலைபேசி அழைப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளன. இந்நிலையில் மனம் நொந்து போன தமிழ்மணி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். தனது கணவனின் நிலை கண்டு விரக்தியடைந்த தமிழ்மணியின் மனைவி ஜான்சி ராணி தீக்குளித்துள்ளார். தற்போது 63% தீக்காயங்களுடன் மதுரை மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். ( தற்போது 2.8.19 அன்று ஜான்சிராணி பரிதாபமாய் இறந்து விட்டார்.)

தமிழ்மணியின் நிலையறிந்த அவரக்கு நெருக்கமான நாம் தமிழர் தம்பிமார்கள் இந்த விவரங்களை முகநூலில் பதிவிட்டு துரைமுருகனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். எனினும், தமிழ்மணி மனைவியின் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்சினையின் காரணமாகவே நடந்தது என அவரே போலீசாரிடம் தெரிவித்ததாகவும், இதை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் விலகி நிற்பவர்களுமே பெரிதுபடுத்துகிறார்கள் எனவும் நாம் தமிழர் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகிறது.

மழுப்பலான கட்சியின் அறிக்கையை தமிழ்மணியை அறிந்த நாம் தமிழர் தம்பிமார்கள் ஏற்காமல் தொடர்ந்து துரைமுருகனை நீக்குமாறு குரல் கொடுக்கவே அடுத்ததாக மருத்துவமனையின் முன் சோகமாக அமர்ந்திருக்கும் தமிழ்மணியை பேசச் சொல்லி 15 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை பதிவு செய்து பரப்பி வருகின்றனர் துரைமுருகன் ஆதரவு தம்பிமார்கள். அதில், இது குடும்ப பிரச்சினை என்றும், தான் உயிராக நேசித்த கட்சிக்கு எந்த தொந்திரவும் செய்ய வேண்டாம் எனவும் தமிழ் மணி கேட்கிறார்.

ஆனால் சம்பவங்களின் கோர்வையை மிக கவனமாக பார்ப்பவர்கள் எவருக்கும் இதில் உண்மை என்னவென்பதை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது. பொருளாதார ரீதியில் ஏற்கனவே நலிவடைந்து வறுமையில் வாடும் நிலை மனைவியின் உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையை துரைமுருகனின் ஆதரவாளர்கள் இந்த சூழலிலும் கேடாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை அந்த காணொளியே அப்பட்டமாக உணர்த்துகின்றது.

சொல்லப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, சொல்லாத வார்த்தைகளிலும் உண்மை புதைந்து கிடக்கிறது. தமிழ்மணிக்கு நெருக்கமான தம்பிமார்கள் அவரது மனைவியின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு வேண்டி வங்கி கணக்கு விவரங்களை முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். உடனடியாக நாம் தமிழர் தலைமை அந்த கோரிக்கை அதிகாரப்பூர்வமற்றது எனவும், அந்த பதிவுகளை கட்சித் தொண்டர்கள் பகிரக் கூடாது எனவும் அறிக்கைவிட்டுள்ளது.

மேற்படி விவகாரங்கள் அனைத்தும் முகநூலில் பதிவு செய்யப்பட்ட நாம் தமிழர் ஆதரவாளர்களின் பதிவுகளில் பகிரங்கமாக உள்ளது. குற்றவாளி துரைமுருகனை நாம் தமிழர் கட்சி காப்பாற்றும் நடவடிக்கை மிக மோசமாக அம்பலமாகி உள்ளது.

சில முகநூல் பதிவுகள் மற்றும் ஆதாரங்களுக்கு பின் வரும் இணைப்புகளில் பார்க்கவும்.

 

*****

தமிழ்மணிக்கு நிகழ்ந்த அநீதிக்கு யார் பொறுப்பு ?

நாம் தமிழர் என்கிற கட்சியே கீழிருந்து மேல் வரை எவ்வித ஜனநாயகமும் இல்லாது கட்டப்பட்டிருக்கும் ஒரு இனவாத அமைப்பு. வெளிப்படையாக ஹிட்லரைப் போற்றுவது, சாதியின் அடிப்படையில் இனத்தை தீர்மானிப்பது, இனத் தூய்மைவாதம் பேசுவது என இவையெல்லாம் அந்தக் கட்சி அடிப்படையிலேயே ஒரு வலதுசாரி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுகள். திருச்சி சங்கர் அய்யர் என்பவரே தனது அரசியல் குரு என சீமான் பல பேட்டிகளில் குறிப்பிடுகிறார். மேற்படி அய்யர் மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுத்த தத்துவத்தின் படி பார்ப்பனர்கள் தமிழர்கள், ஆனால் தமிழகத்திலேயே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் நாயக்கர்களும், நாயுடுகளும், அருந்ததி இன மக்களும் வந்தேறிகள்.

எப்படி இந்துத்துவ அரசியல் இசுலாமியர்களை எதிர்நிலையில் நிறுத்துகிறதோ அதே போல் நாம் தமிழர் ‘வடுகர்களை’ எதிர்நிலையில் நிறுத்துகிறது. எப்படி இந்துத்துவம் லிபரல் ஜனநாயகம் பேசுபவர்களை ஆண்டி இந்தியன்களாக அறிவிக்கிறதோ அதே போல் பெரியாரிய திராவிட அரசியல் பேசுகிறவர்களை இனத்துரோகிகளாக அறிவிக்கின்றனர் நாம் தமிழர் தம்பிமார்கள்.

படிக்க:
வேணாம் அழுதுருவேன் – சீமான் வீடியோ
♦ ஓம் சீமான் ! ஜெய் சீமான் !

அங்கே ராமன் என்றால் இங்கே முருகன். அங்கே சர்வாதிகாரம் என்றால் இங்கே “அன்பான” சர்வாதிகாரம். அவர்களுக்கு ராம ராஜ்ஜியம் என்றால் இங்கே பார்ப்பன நேசன் ராஜராஜனின் ராஜ்ஜியம். சீமான் தனது அரசியலைக் கொண்டு அதிகாரத்தை வென்றெடுப்பது குறித்துப் பேசுவதில்லை “அதிகாரத்தைக் என்னிடம் கொடுத்து விடுங்கள்” என மக்களை எச்சரிக்கிறார்.

வலதுசாரி அரசியலின் இலக்கு சமூகத்தின் லும்பன் பிரிவினர். பாரதிய ஜனதா யாரை நோக்கி, யாருக்காக பேசுகிறதோ அதே லும்பன் பிரிவினரை நோக்கித்தான் சீமானும் பேசுகிறார். இந்துத்துவத்தின் பார்ப்பன சாதிவெறி தன்னை மதவெறியாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்றால், தமிழ்  ஆண்ட சாதிகளின் வெறி இனவெறியாக நாம் தமிழர் அரசியலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

சரியாகச் சொல்லப்போனால் எதிர்காலத்தில் இந்துத்துவ அரசியலின் தமிழக நுழைவுக்கு பாதை போட்டுக் கொடுக்கிறது நாம் தமிழர் கட்சி. முந்தைய காலங்களில் பார்ப்பனர்கள் பல்லக்குகளில் வருவர்; பல்லக்குத் தூக்கிகள் இருப்பார்கள். அவர்களுக்கு முன் “முள் பொறுக்கிகள்” என சிலரை வைத்திருப்பார்கள். இந்த முள் பொறுக்கிகளின் வேலை பல்லக்கு வருவதற்கு முன் பாதையில் உள்ள முட்களை அப்புறப்படுத்துவது. இந்துத்துவத்தை பல்லக்கில் சுமந்து வருகிறது பாஜக – அதற்காக பெரியாரியம் என்கிற ‘முட்களை’ அகற்றும் முள்பொறுக்கி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் சீமான்.

இதற்கு ஏற்ப மொத்த கட்சியும் ஜனநாயகமற்ற நாஜிக் கட்சியின் பாணியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பலிபீடத்தில் தான் தமிழ்மணிகள் பலியிடப்படுகின்றனர். தலைமையின் மேல் கேள்விக்கிடமற்ற பக்தியும், உட்கட்சி ஜனநாயகமின்மையும் ஏற்கனவே கிறுக்குப் பிடித்த குரங்கிற்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மணியையும் அவரது மனைவியையும் தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக ஏசியவர்கள் இவர்கள்தான். இவர்கள் கட்சியின் உத்தரவைப் பெற்றுத்தான் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதில்லை – குறிப்பான சந்தர்ப்பங்களில் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை சாராயம் அருந்திய பைத்தியக்கார குரங்குகள் தாமே தீர்மானித்துக் கொள்ளும். ஆதாரம் வேண்டுமா? இந்தப் பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் தமிழர் என்கிற இந்துத்துவ கும்பலின் முள்பொறுக்கிகளை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதோடு தனிமைப்படுத்த வேண்டிய தருணம் இது.

– சாக்கியன்

தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

ண்மையில் பன்னிரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் தமிழைவிடத் தொன்மையான மொழி சமற்கிரதம் (தமிழ் 2300 ஆண்டுகள், சமற்கிரதம் 4000 ஆண்டுகள்- தொன்மை) எனக் குறிப்பிடப்பட்டதனைத் தொடர்ந்து எது தொன்மையானது என்ற வழக்காடல் இடம்பெற்றுவருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலரே சமற்கிரதத்திற்காக பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டிருப்பதேயாகும்.

சமற்கிரதத்தின் தொன்மைக்காக வழக்காடுபவர்கள் எல்லோருமே அறிவியலிற்குப் புறம்பாக வெறும் புராணங்களையும், கட்டுக்கதைகளையும், புரட்டல்களையுமே சான்றாகக் கொண்டுள்ளார்கள். இவை பற்றிய ஒரு விளக்கமாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. முடியுமானவரை நான் எனது ஆய்வுகளைக் குறித்த பெயரிலிருந்தே தொடங்குவதனை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையிலேயே இதனையும் அணுகுவோம்.

தமிழ் – சமற்கிரதம் ஆகியவற்றுக்கான பெயர்க் காரணம் :

முதலில் தமிழைப் பார்த்தால், தமிழின் பெயர் இயற்கையாகவே அமைந்துள்ளது. “தமிழிற்கு அமிழ்து என்று பெயர்” என்று பாரதிதாசன் பாடியிருப்பார். இந்த ‘அமிழ்து’ என்ற சொல்தான் தமிழிற்கு அடிப்படை. இதனை விளக்கிய புலவர் இரா.இளங்குமரனார் பின்வருமாறு விளக்கியிருப்பார்.

Tamil - Sanskrit“ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது அம்மு, அம்மு என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது . அமிழ்வதால் (உள்ளிறங்கி சுவையீட்டுவதால்) அமிழ்தம் எனப்படும்”. இச் சொல்லானது வடமொழியிலுள்ள அ+மிர்த் என்பதிலிருந்து வேறுபட்டது {அமிர்த்= சாவற்ற வாழ்வு என்ற பாற்கடல் கடைந்த கற்பனைக்கதை, இரண்டிற்குமுள்ள பலுக்கல் (ஒலிப்பு) ஒற்றுமையினைக் கொண்டு, இரண்டும் ஒன்றல்ல}. அமிழ்து என்ற சொல் தோன்றியதனை மேலே பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

அமிழ்து,அமிழ்து……. தமிழ், தமிழ் ‘தமிழ்’என்ற சொல் வந்துவிட்டதா!

அம்மாவிலிருந்து மலர்வது எவ்வாறு அமிழ்(து) ஆகின்றதோ {அம்+இழ் = அமிழ், இழ்-இதழ்}, அதே போன்று தம்மிலிருந்து மலர்வது தமிழ் {தம்+இழ்=தமிழ்} ஆகின்றது. இவ்வாறு இயற்கையாக வாழ்வியலோடு இணைந்து தமிழ் மொழிக்கான பெயர்க் காரணம் காணப்படுகின்றது.

அடுத்து சமற்கிரதத்தினைப் பார்ப்போம். சமற்கிரதம் என்பதற்குச் செயற்கையாக நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதே பொருள் {‘Sanskrit’ is derived from the conjoining of the prefix ‘Sam’ meaning ‘samyak’ which indicates ‘entirely’, and ‘krit’ that indicates ‘done’}. எவ்வாறு நன்றாகச் செய்யப்பட்டது?

படிக்க:
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
♦ நூல் அறிமுகம் : தமிழ் மொழியின் வரலாறு

ஏற்கெனவே இருந்த மொழிகளிலிருந்து சொற்களை (Raw Form) எடுத்து, நன்றாக முழுமையாகச் செய்யப்பட்ட சொற்களே சமற்கிரத மொழிச் சொற்கள் (Refined Form). இன்னமும் விரிவாகச் சொன்னால், இங்கு ஏற்கெனவேயிருந்த பிராகிருதம், பாலி, தமிழ் போன்ற மொழிகளிலிருந்து எடுத்த சொற்களையும், தாம் ஏற்கனவே கொண்டு வந்த ஐரோப்பிய மொழிச் சொற்களையும் (இவை எல்லாமே பேச்சு வழக்கிலான சொற்களே) இணைத்து நன்றாகச் செய்யப்பட்ட மொழியே சமற்கிரதமாகும்.

இவ்வாறு ஐரோப்பிய மொழிச் சொற்களையும், இங்கிருந்த மொழிச் சொற்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட மொழியாதலாலேயே, சமற்கிரதத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு மொழி எனப் பல அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

இப்போது சொல்லுங்கள், சமைக்கப்பட்ட மொழி தொன்மையானதா? அல்லது அந்தச் சமையலிற்கே மூலப்பொருளான மொழி தொன்மயானதா?

பேச்சுமொழி :

மொழிப் பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம், இப்போது பேச்சு வழக்கில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்போம். பேச்சு வழக்கில் எந்தமொழி தொன்மையானது எனக் கண்டறிவது இலகுவானதல்ல, ஏனெனில் சைகை மொழியானது (அசைவு மொழி) சில வகையான ஒலிக்கோவைகளாக மாறிப் பின்னரே பேச்சுமொழியாகப் படிமலர்ச்சி பெறும். மேலும், பேச்சுமொழிக்கான தொல்லியல் சான்றுகளும் காணப்படமாட்டாது. எனவேதான் பேச்சு வழக்கிலான மொழிகளில் எது தொன்மையானது எனக் கண்டறிவது கடினமானது.

Indus Valley Civilizationஇங்கு எங்களிற்குச் சார்பாக அமைந்துள்ள விடயம் யாதெனில் இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் உடற்கூறு ஆய்வுகள் போன்ற அறிவியல் முறைகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும், அது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டது என்பதும் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த 16 அறிவியலாளர்கள் (16 scientists led by Prof. Martin P. Richards of the University of Huddersfield, U.K.) மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பு ஐயத்திற்கு இடமின்றி சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அரியானாவின் ராகிகடி ஆய்வும் இதனையே வலியுறுத்தியிருந்தது(“An Inconvenient Truth” என்ற தலைப்பில் இந்தியா டுடே’ 2018 செப்.10-ல் வெளிவந்தது).

இவ்வாறான ஆரியர் வருகைக்கு முன்னரே சிந்துவெளி நாகரிகத்தில் தமிழ் இருந்தமைக்குமான சான்றுகளும் இன்று பெருமளவில் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிக எழுத்துகளிற்கும் (தொல் தமிழி) தமிழிற்குமுள்ள தொடர்புகளும் வெளிவந்துவிட்டன. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே பேச்சு வழக்கில் தமிழ் இருந்தது என்பது உறுதியாகிவிட்டது. சிந்துவெளி நாகரிகம் தழைத்தோங்கிய பகுதிகளில் இன்றைக்கும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் (கொற்கை, வஞ்சி, தொண்டை…. ) இருக்கின்றன.

படிக்க:
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்

இவ்வாறு ஏற்கனவே செழிப்புற்றிருந்த சிந்துவெளி நாகரிகத்தினை அப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஆரியர்களே அழித்தாக ஒரு கருத்து உள்ளது. இதனை ரிக் வேதம் (Rig vedda 1.51.11) ‘அசுரன் பிப்ருவின் கோட்டைகளை (Pur) இந்திரா ஆரியர்களிற்காக அழித்தார்’ எனச் சுட்டுவதாக வரலாற்றாசிரியர் டி.டி.கோசம்பி ‘இந்திய வரலாறு ஒரு அறிமுகம்’ எனும் நூலில் (தமிழாக்கம் பக்கம் 150) குறிப்பிடுவார். இதனையே க.கைலாசபதி தனது ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ எனும் நூலில் “வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் மட்பாண்டங்களை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடுவது சிந்துவெளி நாகரிகத்தை அழித்தான் என்பதனையே குறிக்கும்” என்கின்றார் (பக்கம் 6).

வேறு சில ஆய்வாளர்கள் வறட்சியால் சிந்துவெளி நாகரிகம் அழிந்த பின்பே ஆரியர் வந்தாகக் கூறுவார்கள். எது எவ்வாறாயினும் ஆரியர்கள் வரும்போதே இங்குள்ள மக்கள் மொழி அறிவுடனேயே இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது. எனவே பேச்சு வடிவத்திலும் தமிழ் மொழியானது சமற்கிரதத்தை விடத் தொன்மையானது என்பது தெளிவாகின்றது.

எழுத்து வடிவம் :

எழுத்து வடிவில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்பதே அறிவியல் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இலகுவானதும், நடைமுறை வாய்ப்பு உள்ளாதுமான ஒரு முறையாகும். ஆனால் இந்த முறையான ஒப்பீட்டிற்கு, வட மொழித் தாங்கலாளர்கள் வரவே மாட்டார்கள். ‘பல்லில்லாதவன் தனக்கு பக்கோடா பிடிக்காது’ என்ற மாதிரி தமது வேதங்கள் ‘எழுதாக் கிளவி’ / ‘எழுதா மறை’ என்பார்கள். (உண்மையில் அவை எழுத்து வடிவம் இல்லாத மறைகளே).

ஏற்கெனவே இருந்த சிந்துவெளி (தொல் தமிழி) எழுத்து வடிவம், பிராகிரத பிராமி (அசோகர் கல்வெட்டு வடிவம்), தமிழி போன்ற வரி வடிவங்களிலிருந்து தமக்கு என ஒரு எழுத்து வடிவத்தினை (Sanskrit Nagari ) CE 1ம் – 4ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்திலேயே உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் தேவநாகரி வரிவடிவம் CE 4ம் நூற்றாண்டிலேயே உருவானது {சான்று- Gazetteer of the Bombay Presidency at Google Books, Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30–45, particularly Devanagari inscription on Jayadaman’s coins pages 33–34}} . தமக்கு என ஒரு சொந்த எழுத்து வடிவம் இல்லாது இன்றும் தேவநாகரி எழுத்துவடிவினையே பயன்படுத்திவருகின்றார்கள்.

இந்த `தேவநாகரி` என்ற சொல்லே தே+நகர் (Devanagari=Deva+Nagari) என்ற இரு சொற்களையே அடிப்படையாகக் கொண்டவை. இவையிரண்டுமே தமிழ்ச் சொற்களையே அடியாகக் கொண்டவை என்பது தெரிந்தால் நீங்கள் வியப்படையக் கூடும். தே என்ற சொல் தெய்வம் என்பதனைத் தமிழில் குறிக்கும். அதே போன்று மக்கள் நகர்ந்து சென்று (move ) உருவாகும் இடமே நகர் {ஊர்ந்து சென்று உருவான ‘ஊர்’ என்பது போல}. இவ்வாறு உருவான தேவநாகரி வடிவமானது வடமொழியில் 7-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே பொதுப் பயன்பாட்டிற்கு வருகின்றது (சான்று- Oxford University Press, ISBN 978-0195356663, pages 40–42). 12-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் மிகப் பெருமளவில் எழுதிக் குவித்த அவர்களின் திறமையினை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும், ஆனால் அவற்றினைக் காலத்தால் முன் கொண்டு செல்ல முயல்வது நேர்மையற்ற செயலேயாகும்.

அவர்களின் எழுத்து வடிவத்திற்கு பல நூற்றாண்டுகளிற்கு முற்பட்ட தமிழி எழுத்து வடிவங்களிற்கான பல சான்றுகள் {அறிவியல்ரீதியில் சான்றுப்படுத்தப்பட்ட பல சான்றுகள்} எமக்கு இன்று கிடைத்துள்ளன.

கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு. (ஜம்பை)

1. 1970-ல் கொற்கைத் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2.6 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழியில் (KRK 4), மரக்கரித் துண்டு (charcoal) ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, கரிமக்கணிப்பு (கார்பன் 14) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE (கி.மு).850 முதல் BCE(கி.மு)660 வரை) என கணிக்கப்பட்டது. அதே குழியில்( KRK 4), 2.44 மீட்டர் ஆழத்தில், பண்டைய தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதால், அந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலமும் BCE755 ஆகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் நடனகாசி நாதன் அவர்கள். ஆகவே அந்த ‘தமிழி’ எழுத்துப் பொறிப்பின் காலம் BCE 8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.
(SOURCE: Tamil’s Heritage , PAGE: 31).

2. கொடுமணல் தமிழ் பொறிப்பின் காலம் BCE 400
(SOURCE: முனைவர் கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக்: 66)

3. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் BCE 450 என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். அந்த மட்பாண்டங்களிலும் தமிழி எழுத்துக்கள் காணப்பட்டன. இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழி காலம் BCE 5-ம் நூற்றாண்டு என்பது ஐயத்திற்கு இடமின்றி சான்றுபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், தமிழ் எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் BCE 3-ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழி உருவாகவில்லை என்பதும் திண்ணம் என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.
(Source : Hindu Newspaper Dated 15.10.2011, porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert)

4. வடஇலங்கையில் (ஈழம்) தமிழி கல்வெட்டுகளும், தென் இலங்கையில் பிராகிருத பிராமி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவைகளில் சில அசோகர் காலத்திற்கும் முந்தியவை என இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் தந்தை எனக் கருதப்படும் பரனவிதான கணித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். டாக்டர் சிற்றம்பலம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு’ என்ற நூலில் BCE 4ம், 3ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் இலங்கையில் கிடைப்பது குறித்து தெரிவித்து உள்ளார்.
(SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34)

இவ்வாறு சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு University of Cambridge இனைச் சேர்ந்த பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி (Dilip K.Chakrabarti ) அவர்கள் தான் வெளியிட்ட An Oxford Companion to Indian Archaeology, Indian Archaeological History ஆகிய இரு நூல்களிலும் தமிழி ஆனது அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே தமிழியே எழுத்து வடிவில் தொன்மையானது என்பது யாருமே மறுக்கமுடியாது. இந்தியாவில் கிடைத்த பழங்கல்வெட்டுகளில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை தமிழிலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் கீழடி அகழ்வாய்விலும் பல தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சான்றுகள் பெருமளவிற்கு கிடைத்துவருகின்ற போதும், அவற்றினை உரியமுறையில் ஆய்வுகளிற்கு உட்படுத்த நடுவண் அரசு முட்டுக்கட்டை போட்டுவருவது தெரிந்ததே.

மொழியின் சிறப்பு :

தொன்மை மட்டுமல்ல, மொழியின் சிறப்பிலும் தமிழே உயர்ந்தது. தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது. ‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியோ, தமிழ்மொழியிலுள்ள வேர்ச்சொல் விளக்கங்களையோ சமற்கிரதத்தில் எண்ணிப் பார்க்கவே முடியாது.

எடுத்துக்காட்டாக Planet எனும் ஆங்கிலச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் (கோள்) – சமற்கிரதச்சொல் (கிரகம்) என்பவற்றினையே எடுப்போம். இங்கு கிரகம் என்பது ஆளுகைக்காரர் என்ற பொருளில் சோதிட நம்பிக்கையினையும், கோள் என்ற அறிவியற்சொல் தாமாக ஒளிராமல் விண்மீன்களிலிருந்து ஒளியினைக் கொள்வதால் {மின்னுவதால் ஏற்பட்ட மின்- ‘மீன்’ ஆனது போல, கொள்வதால் ஏற்பட்ட கொள் – ‘கோள்’} கோள் என அறிவியலையும் (சங்க காலத்திலேயே) பேசியுள்ளது. ஒரு புறத்தில் ‘பிறப்பொக்கும்’ என சம-அறம் பேசும் தமிழ் எங்கே? ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என சாதி முறையினைக் கடவுளே படைத்தாகக் கூறும் வடமொழி எங்கே?. மொழியின் பெருமை பேசினால் பதிவு நீளும் என்பதால் இத்துடன் முடிப்போம்.

தமிழும் சமற்கிரதமும் இரண்டு கண்களா?

இரண்டு கண்களேயானாலும் ஒரே நேரத்தில் இரு காட்சிகள் காண முடியாது. பிற மொழிகளை அழிப்பதனையே தொழிலாகக் கொண்ட சமற்கிரதம் (மொழி பேசுவோர்), எவ்வாறு அழிக்க முயற்சிக்கப்படும் மொழியான தமிழுடன் ஒன்றாக முடியும். சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் வரை ஒன்றாகத் தமிழாகவிருந்த மலையாளம் இன்று எவ்வாறு பிரிந்துபோனது?

சிலப்பதிகாரத்தில் காணப்படும் தமிழர் இசை வடிவங்கள், நடன வடிவங்கள் எல்லாம் இன்று எமது கையினை விட்டுப்போனது எவ்வாறு? மேற்கூறியனவற்றுக்கு எல்லாம் ஒரே காரணம் ஆதிக்க மொழியான சமற்கிரதமே (உண்மையில் அம்மொழித் தாங்கலாளர்களே). ஆதிக்க மொழியும், அற மொழியும் ஒருபோதும் ஒன்றாகமுடியாது. அவ்வாறு பேசுவோர்கள் ஒரு மறைமுகத் திட்டத்தினூடாக தமிழை அழிக்க / சிதைக்கவே முனைவார்கள்.

பாடநூல் குழப்பம் :

இறுதியாக, மீண்டும் பாடப் புத்தகத்திற்கு வந்து, ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டது எனப் பார்ப்போம். உண்மையில் இது அறிஞர் George L. Hart என்பவரின் கருத்தாகும். அவர் சமற்கிரதத்தின் தொன்மையினைக் கணிக்கும்போது ஆரியர்களின் படையெடுப்பின் முதல் அலையான 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினையும் (BCE 2000) , தமிழின் தொன்மையினை தமிழி எழுத்துகளின் முந்திய கண்டுபிடிப்புக் காலத்தையும் (BCE 300 ) {உண்மையில் அதனையும் தாண்டிய பல தமிழி எழுத்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றினை BCE 300 இற்குள் அடக்கும் முயற்சி ஒன்று இந்திய நடுவண் அரசால் அசோகரின் கல்வெட்டினையே முந்தியதாகக் காட்ட மேற்கொள்ளும் முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது} கவனத்திற்கொண்டுள்ளார்.

அதாவது சமற்கிரத்தின் பேச்சு வடிவத் தொடக்க காலத்தையும் (BCE 2000 ), தமிழ் மொழியின் எழுத்துவடிவம் கிடைத்துள்ள காலத்தையும் (BCE 300) ஒப்பிட்டுத் தொன்மையினைக் கணித்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஒன்றில் இரு மொழிகளின் பேச்சுத் தொன்மையினை ஒப்பிட்டிருக்கவேண்டும் அல்லது சான்றுகள் அடிப்படையிலான எழுத்து வடிவத்தினையே ஒப்பிட்டிருக்க வேண்டும். தமிழ் – சமற்கிரத பேராசிரியரான அவர் இன்னொரு இடத்தில் புத்தகம் என்ற சொல்லைச் சமற்கிரதச் சொல்லாகவே கூறுகின்றார். உண்மையில் அது ஒரு தமிழ்ச்சொல். பழங்காலத்தில் ஓலைச் சுவடிகளைப் பழுதடையாமல் காப்பதற்காக பொத்தி வைப்பதால் ஏற்பட்ட பொத்தகம் என்ற சொல்லே மருவி புத்தகம் ஆகியது. அதனை எடுத்து ‘ஸ்’ என்ற எழுத்தை நுழைத்து ‘புஸ்தகம்’ என வடமொழியாக்கிக் கொண்டார்கள். அச் சொல்லினைத் தவறாகக் கருதியது போன்றே, இந்த ஒப்பீட்டினையும் தவறாகவே அணுகியுள்ளார்.

அவரின் பிழையான ஒப்பீட்டினை அப்படியே பாடநூலில் உள்வாங்கியிருப்பதனை என்ன சொல்வது! முன்பொருமுறை மோடியே ‘தமிழே சமற்கிரதத்தை விடத் தொன்மையானது’ எனக் கூறியிருக்க, மோடியின் அடிமையான தமிழக அரசு இவ்வாறு பாடப்புத்தகத்தை வெளியிடுவதனை என்ன சொல்வது? ‘More loyal than the king’ என்பதுதானே நினைவிற்கு வந்துதொலைக்கின்றது.

சுருக்கமாகக் கூறினால், மேலே தமிழே சமற்கிரதத்தைவிடத் தொன்மையானது என மொழிப்பெயர், பேச்சு வடிவம், எழுத்து வடிவம் என்பவற்றைக் கொண்டு நிறுவினோம். மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே நாம் அதில் கவனம் செலுத்தி, தமிழை அறிவியல்-  வாழ்வியல் முறைகளில் பயன்படுத்துவோம். அதுவே இப்போது எமது மொழிக்கு நாம் செய்யக்கூடிய ஒன்றாகும்.

வி.இ.  குகநாதன்

என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

தேசியப் புலனாய்வு முகமைக்குக் (NIA)கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனுடன் அமைப்பு சாராத தனிநபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வகை செய்யும் திருத்தமும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) கொண்டுவரப்படுகிறது. அத்துடன் தேசிய மனித உரிமை கமிசனின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, எல்லா ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் நியமிப்பதற்கும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை மனித உரிமை கமிசனில் நுழைப்பதற்கும் ஏற்ற திருத்தங்களும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

என்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இதுவன்றி, இதுகாறும் மாநிலக் காவல்துறையின் அதிகார வரம்புக்குள் இருந்த ஆட்கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(f) ஆகியவை அனைத்தையும் இனி மாநிலக் காவல்துறையின் அனுமதியின்றி நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, குறிப்பிட்ட அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக மைய அரசு நேரடியாக அறிவிப்பதற்கான அதிகாரம் ஆகியன உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.

பிரிவினைவாதத் தடைச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட உபா (UAPA) சட்டத்திற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் சேர்க்கப்பட்டன. இப்போது தனிநபர்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை மாநில அரசின் அனுமதியில்லாமல், என்.ஐ.ஏ. நேரடியாகவே முடக்குவதற்கான திருத்தமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
♦ உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேசன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இசுலாமியக் கட்சிகளைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. மற்ற 278 எம்.பிக்கள் – தி.மு.க. உள்ளிட்டு இதனை ஆதரித்தே வாக்களித்திருக்கின்றனர்.

இந்தத் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும், அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்தப்படும், முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் அனைத்தையும் நிராகரித்த அமித் ஷா, பொடா சட்டம் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில்லை என்றும், ஓட்டு வங்கி அரசியலுக்காகத்தான் காங்கிரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதாகவும், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கே ஆதாரமற்ற பொய்வழக்கு என்றும் குற்றஞ்சாட்டினார்.

அமித் ஷா பேசிய அனைத்தும் பொய். என்.ஐ.ஏ. மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது என்றும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர், வேறு யாருமல்ல, பிரக்யா சிங் தாக்குர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ப.சிதம்பரமே, இது நீதிமன்றத்தில் நிற்குமா என்று தெரியவில்லை எனக்கூறியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்குக் கணக்கிலடங்காத எடுத்துக்காட்டுகள் உள்ளன. சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான மறுக்கமுடியாத மின்னணு (எலக்ட்ரானிக்) ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவே இல்லை. என்.ஐ.ஏ.-வின் யோக்கியதையைக் காறி உமிழ்ந்து விட்டுத்தான் அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியான் பதவி விலகினார். என்.ஐ.ஏ. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, ஹாதியாவின் திருமணம் மதமாற்ற சதியா என்று விசாரிப்பதற்கு என்.ஐ.ஏ. வை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

இன்னும் சொல்வதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், ஆதரித்து வாக்களிப்பது என்று முடிவு செய்தபின், எப்படி எதிர்த்துப் பேச முடியும்? இவர்கள்தான் மதச்சார்பின்மையையும் மக்களின் உரிமைகளையும் காப்பாற்றக் களம் புகுந்திருக்கும் மாவீரர்களாம்!

– தொரட்டி

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

இந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

cement-well-rings-workers-Sliders

சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையை ஒட்டியிருக்கும் சிமெண்ட் ஜாலி தயாரிக்கும் தொழிலகம். கோடை மழையால் வேலை தடைபட்ட கவலையில் இருந்தனர். அத்தொழிலாளிகளிடம் தற்போதைய தொழில் நிலைமையை கேட்டோம்.

“நாங்கள் கிணற்று உறை, ஜாலி தயாரிக்கும் வேலையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் எங்கள் பொழப்பு நாறிவிடும். சிமெண்ட் உறை சம்பந்தமாக எல்லா வேலைகளையும் செய்வோம். புது வீடுகளுக்கு கிணறு தோண்டுவது; பழைய கிணறுகளில் தூர் வாறி அதில் புது உறை இறக்குவது; பில்டர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை செய்து கொடுப்போம். பழைய கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்துவது, நாள்பட்ட அத்தொட்டிகளில் உப்புநீரால் இற்றுப்போன பழைய உறைகளுக்குப் பதில் புதிய உறைகள் போடுவது என்று கிணறு சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்வோம். எல்லாமே எங்கள் கை உழைப்புதான். இதற்கென எந்த இயந்திரமும் கிடையாது. பல சமயங்களில் இவ்வேலை எங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

வெங்கடேசன் – கிணற்றுக்கு உறை போடும் தொழிலாளி.

புது கிணறு தோண்டும்போது 20 அடிக்குக் கீழ் ஆழம் போனால் மணல் சரிந்து விழும். அந்த நேரங்களில் செத்து பிழைப்போம். அப்படி பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.

கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி விஷவாயுவுக்கு பலியானவர்கள் பலபேர். ஆனாலும் இத்தொழிலை விட்டால் எங்களுக்கு வேறெதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்த அனுபவத்தை வைத்து உசாராக ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வேலைகளை முடிப்போம். அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்று துணிந்தால்தான் பொழப்பு ஓடும்.

கிணறு உள்ள பகுதி மணல் பூமியாக இருந்தால் 10 அடிக்குக் கீழ் கால் சேறுமாதிரி புதையும். அப்போதே உசாராவோம். உடனே உறைகளை சுற்றி இறக்கி கரைகளை பலப்படுத்திவிடுவோம். அதற்கு மேல் உறைகளுக்கு உள்ளிருந்து மணலை எடுப்போம். அது மிகவும் கஷ்டமான பணி. இருந்தாலும் உயிர் முக்கியமில்லையா. அதிகபட்சம் 40 அடி ஆழம் மேல் போனால் ரிஸ்க்தான். எனவே அதோடு வேலையை முடித்து வெளியே வர முயற்சிப்போம். புறநகர் என்பதால் பெரும்பாலும் அதற்குள் தண்ணீர் கிடைக்கும். 50 அடி கிணற்றில் 5 அடி ஆழம் தண்ணீர் ஊறினால் போதும். வீட்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். அதற்கே உறை, கூலி என 60 ஆயிரம் ரூபா செலவாகும்.

வீட்டோட காலி இடத்தின் வசதிக்கு ஏற்ப கிணற்றின் அகலம் 3 அடியிலிருந்து 6 அடி வரை இருக்கும். இதற்கு 7 பேரிலிருந்து 9 பேர் வரை 3 நாள் தொடர்ந்து வேலை செய்வோம். ஒரு கிணறு தோண்டினால் ஒருவருக்கு 3 நாள் கூலியாக குறைந்தது ரூபா 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை கிடைக்கும். இப்படி மாதத்திற்கு ஒரு வேலை வருவதே கஷ்டம்.

படிக்க:
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !
♦ கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

புதுக்கிணறு வேலை இல்லாதபோது கழிவுநீர் சம்ப் தூர்வாருவது, சுத்தம் செய்வது என்று ஏதாவது ஒரு வேலையைத் தேடுவோம். சமயத்தில் மலத்தொட்டி, கழிவுநீர்த் தொட்டி என்று வித்தியாசம் இல்லாமல் கலந்திருக்கும். இந்த வேலையே எப்போதும் உயிருக்கு உலைதான். எனவே முடிந்தவரை எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்.

கழிவுநீர்த் தொட்டியில் விசவாயு இருக்கிறதா என்று பார்க்க, பக்கெட்டில் கற்பூரத்தை கொளுத்தி வைத்து குழியில் இறக்குவோம். நீர்மட்டம் வரை கற்பூரம் அணையாமல் இருந்தால் விஷவாயு இல்லையென தைரியமாக இறங்குவோம். நீர் மட்டத்திற்கு மேல் கற்பூரம் அணைந்துபோனால் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். அதுக்கும் ஒரு வைத்தியம் செய்வோம். 10, 20 எலுமிச்சை பழங்களை அறுத்து அதன் சாறை தொட்டியில் ஊற்றுவோம். அதில் கேஸ் பொங்கி வெளியேறும். அதற்குமேல் மரக்கிளையை ஒடித்து சம்ப் முழுவதுமாக குத்தி குத்தி கேஸை வெளியேத்துவோம். இப்படி உயிரை பணயம் வைத்தால்தான் ஏதாவது கிடைக்கும்.

சிமெண்ட் கலவைபோடும் குழி.

இந்த வேலை செய்யும் எங்களை வீட்டுக்காரர் பெரும்பாலோர் வீட்டினுள்ளே பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். வீட்டின் பக்க வழியைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இடம் இல்லையென்றால் பின்பக்க மதில்சுவரை தாண்டி உள்ளே வரச்சொல்வார்கள். கிணற்றுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் அந்த வழியில்தான் சிரமப்பட்டு எடுத்துச் செல்ல வேண்டும். அய்யர் வீடு என்றால் இன்னும் சுத்தம். அவசரத்திற்கு எந்தப் பொருளையும் அவர்களிடம் கேட்க முடியாது, தப்பித்தவறி கேட்டுவிட்டால் இன்னொருமுறை கூப்பிடமாட்டார்கள். மிகவும் உசாராக இருப்போம்.

விஜயகாந்த் – டாட்டா ஏஸ் ஓட்டுனர்.

இன்னும் சில பணக்காரர்கள் தங்கள் பங்களாக்களில் அழகுக்கு கிணறு தோண்டுகிறார்கள். அது 20 அடி அகலத்திற்கு பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் தண்ணீர் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் பெரும் கிணற்றோடு தோட்டம் இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை. இப்படியே எங்கள் பொழப்பு போகிறது.

பாஜக கும்பலை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !

1

பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் படலம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது காவிக் கும்பல்.

அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 01.08.2019 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க:
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
♦ உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

இதில் பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணுக்கழிவு, எட்டு வழிச்சாலை போன்ற அபாயகரமான திட்டத்தைக் கொண்டு வரக்கூடிய பிஜேபியை கேள்வி எழுப்புவோம் ! தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மாணவர் அமைப்பினரின் இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களை நின்று கவனித்துக் கேட்கச் செய்தது.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி.
கடலூர், தொடர்புக்கு : 97888 08110.

நூல் அறிமுகம் : ஹைட்ரோ கார்பன் அபாயம்

ஹைட்ரோகார்பன் கண்டறிதலுக்கான (Exploration) ஆய்வும், எண்ணெய் அல்லது எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டவுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதனை வெளிக்கொண்டுவரும் துரப்பணப் பணியும் (Production) உலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் பொருளாதாரம் சார்ந்த முக்கியமான தொழில், வர்த்தகப் பணியாகும். இன்றைய உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு இன்றுவரை பெரும் ஆதாரமாக இருப்பது ஹைட்ரோகார்பன் எனும் நீர்மக் கரிமத்தில் இருந்து எடுக்கப்படும் கச்சாவும், அதனைச் சுத்திகரிப்பதன் மூலம் பிரிக்கப்படும் பெட்ரோலியம், டீசல், இயந்திர எண்ணெய், விமான எரிபொருள், மண்ணெண்ணெய், வாகன இயக்கத்திற்கு அவசியமான வழுக்கெண்ணை ஆகியனவும், அடுப்பங்கரையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது வரை தேவைப்படும் எரிவாயு என உலக மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத அத்தியாவசிய எரிபொருட்களின் மூலப் பொருளாக ஹைட்ரோகார்பன் இருக்கின்றது.

நமது நாட்டின் பயன்பாட்டிற்கு எந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் தேவையோ அந்த அளவிற்கு நமது நாட்டில் அதன் உற்பத்தி இல்லாத காரணத்தால் கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காடும், எரிவாயு தேவையில் 20 விழுக்காடும் இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கிறது. இதன் இறக்குமதி செலவீனத்தை அந்நிய செலாவணியைக் கொண்டே தீர்க்க வேண்டியுள்ளதால் அது நமது நாட்டின் பொருளாதாரத்தின்மீது ஒரு பெரும் சுமையாக உள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை – அதாவது ஏற்றுமதி வருவாய்க்கும் இறக்குமதி செலவீனத்திற்கும் இடையிலானது – இந்திய ஒன்றிய அரசின் நிதி நிலை மேலாண்மையில் ஒரு பெரும் சவாலாக இன்றளவும் திகழ்கிறது.

… நாட்டிற்கும் வீட்டிற்கும் பயணத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவசியமான எரிசக்திகளின் மூலமாகத் திகழும் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டம் ஒன்றிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதேன்? இந்திய ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 700 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் நடைபெற்று வருகிறது. அதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே இப்போது எழுந்துள்ள எதிர்ப்பு தவறான புரிதலில் ஏற்பட்டதுதான் என்று கூறியுள்ளது.

அப்படியானால் தமிழ்நாட்டில், அதுவும் விவசாயம் செழித்தோங்கும் காவிரி படுகைக் கிராமங்களில் எழுந்துள்ள எதிர்ப்பு என்பது தவறான புரிதலில் உருவானதா? அந்த போராட்டங்களில் எந்த நியாயமும் இல்லையா? பெட்ரோலிய அமைச்சக அறிக்கை கூறுவதுபோல் இதுவரை பாதிப்பு தொடர்பான எந்த போராட்டமோ, எதிர்ப்போ நடந்ததில்லையா? சிற்சில ஆங்கில செய்தித்தாள்களில் சொன்னது போல் இவையாவும் மக்களைத் தூண்டிவிட்டு பின்னின்று செயல்படும் சில சக்திகளின் செயல்தானா? என்கிற எண்ணிலடங்கா கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கெல்லாம் பதில் தேட வேண்டியது இந்தக் காலகட்டத்தின் அவசியமாகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டின் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வரும் கிராமத்தினர் எதிர்க்கின்றனர் அல்லது அவர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது என்பதை, வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்றோ அல்லது ஹைட்ரோகார்பன் தேவையின் அவசியத்தைப் புரியாத மக்களின் எதிர்ப்பு என்ற அளவில் மட்டுமே சுருக்கிப் பார்க்காமல், இது இயற்கை சார்ந்த வாழ்வியலிற்கும் தொழில் நுட்பம் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையிலான மோதல் (conflict) என்று பார்ப்பதும் அணுகுவதும் பயனளிக்கும் என்பதே எனது எண்ணமாகும். இங்கு அரசினைக்கூட அரசியல் கண்கொண்டு பார்ப்பதல்ல நோக்கம். அதன் செயல்பாடுகள் எக்கோணத்திலிருந்து முடிவு செய்யப்படுகிறது என்பதையும், அதன் அணுகுமுறை இந்நாட்டின் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் உகந்ததுதானா? இச்சிக்கலுக்கு எது தீர்வு என்கிற இறுதி இலக்கை நோக்கி பயனிப்பதையும் அடிப்படையைக் கொண்டே பகுப்பாயப்பட்டுள்ளது. (நூலின் முகவுரையிலிருந்து…)

கள ஆய்வு : பறைசாற்றும் உண்மைகள்

140 ஆண்டுகள் காணா அளவிற்கு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைப் பொழிவு 65 விழுக்காடு குறைந்ததே தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சிக்குக் காரணம் என்பதே நமக்கெல்லாம் தெரிந்த அல்லது தெரிவிக்கப்பட்ட செய்தி. ஆனால் பயிர் வளச் செழிப்பால் நம்மைக் கவர்ந்த பசுமை இன்று நமது கண்ணிற்குக் கிட்டாமல் செய்யும் இந்த வறட்சிக்குப் பருவ மழைக் குறைவாகப் பெய்தது மட்டுமே காரணமா? சிறு பிள்ளைப் பருவம் முதல் எத்தனையோ ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தஞ்சைத் தரணியில் பயணித்திருக்கிறேன். ஆனால் ஹைட்ரோகார்பன் துரப்பணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர மேற்கொண்ட இந்தப் பயணத்தில் அனுபவித்த வெப்பமும், நிலங்கள் வறண்டு கிடந்த காட்சியும் இதுவரை கண்டிராத ஒன்று. அந்த அளவிற்குப் பயிர் வளத்திற்கும் பசுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இப்போது வறண்டுக் கிடக்கின்றன.

படம் : நன்றி – விகடன்

பேசத் தெரிந்த அம்மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் விவசாயத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களும் மட்டுமின்றி, அங்குள்ள இயற்கைச் சூழலும் எப்படிப்பட்ட பாதிப்பை அனுபவித்து வருகின்றன என்பதை அங்கு சென்று பார்ப்பவர்களால் உணரமுடியும். பசுமை வயல்களுக்கு இடையே நடந்து செல்லும்போது வீசும் காற்றும், மரங்களின் நிழல்களில் நின்று பார்க்கும் போது கண்ணிற்குக் கிடைக்கும் பசுமைக் காட்சிகளும் பழங்கதையோ என்று நினைக்கும் அளவிற்கு அங்கு இயற்கைச் சூழல் உயிரற்றுக் கிடக்கிறது.

படிக்க:
’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

மன்னார்குடியில் இருந்து நாகை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்கள் வரை மூன்று நாட்கள் பயணம் செய்து பார்த்தபோது, எங்கெல்லாம் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் / எரிவாயு துரப்பணக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளவோ அங்கெல்லாம் நிலவிய சூழலிற்கும், மற்ற இடங்களில் நிலவிய சூழலிற்கும் நன்கு உணரக்கூடிய வேறுபாடுகள் இருந்தன. வரலாற்றுக் காலம் முதல் வேளாண் மண்டலமாகத் திகழ்ந்த காவிரிப் படுகையில் ‘வளர்ச்சிக்கான’ எண்ணெய் துரப்பணத் திட்டங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எவ்வளவு கூறினாலும் அது எழுத்தின் போதாமையை வெளிப்படுத்தக்கூடியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அந்த உன்னதமான இயற்கைச் சூழல் எப்படியெல்லாம் தன்னை இழந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். (நூலிலிருந்து பக்.95-96)

♦ காப்பதற்காகப் போராட்டம், எதிர் நிலை ஊடகங்கள்
♦ எண்ணெய் கண்டுபிடிப்புத் துரப்பணம் ஆபத்தின் உருவாக்கம்
♦ ஷேல் கேஸ் – விவசாயத்தை சாய்த்து தன்னிறைவா, தன் அழிவே
♦ புவி வெப்பமடைதல் – சொல்லில் தடுத்தல் செயலில் வளர்த்தல்
♦ கள ஆய்வு : பறைசாற்றும் உண்மைகள்
♦ கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன்: எடுப்பும் எதிர்வினைகளும்
♦ மாற்று தொழில்நுட்பம் மாறும் உலகம்; யாருக்கான ஆட்சி? எது மெய் வளர்ச்சி?
♦ விவசாயத்தின் வீழ்ச்சியா நாட்டின் வளர்ச்சி?
♦ விதையாலும் வஞ்சம் விலையாலும் வஞ்சம்
♦ அரண்களைத் தகர்த்த தாராளமயமாக்கல்
♦ இந்நாடு மீள்வதும் மீட்பதும் தீர்வு …
– ஆகிய உட்தலைப்புகளில் விரிவான ஆதாரங்களைக் கொண்டும் பொருத்தமான படங்களை பின்னிணைப்பாகச் சேர்த்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

நூல் : ஹைட்ரோ கார்பன் அபாயம்
(இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)
ஆசிரியர் : கா. அய்யநாதன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
177/103, அம்பாள் கட்டடம், முதல்தளம்,
அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை,  சென்னை – 600 014.
தொலைபேசி எண் : 044 – 4200 9603.
மின்னஞ்சல் (பதிப்பகம்) : support@nhm.in
மின்னஞ்சல் (ஆசிரியர்) : ayyanathan_2007@yahoo.com

பக்கங்கள்: 288
விலை: ரூ 225.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : vijaya pathippagam | marina books | nhm

விண்வெளிப் பயணம் களைப்படையா கற்பனை விளையாட்டு !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 14

“குழந்தைகளே, இன்று யாரை விண்வெளி வலவர்களாகத் தேர்ந்தெடுப்பது?”

ஆம், எப்போதுமே “யாரைத் தேர்ந்தெடுப்பது?”, “யாரை அனுப்புவது?”, “ நீங்களே சொல்லுங்கள்!” என்று தான் கேட்கின்றேனே தவிர “யார் விரும்புவது?” என்று எப்போதுமே கேட்பதில்லை. “என்னைத் தேர்ந்தெடுங்கள்!.. என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!” என்று குழந்தைகள் தம்மைத் தாமே முன்மொழிய, நான் அவர்கள் மத்தியிலிருந்து விண்வெளி வலவர்கள், கட்டமைப்பாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், அவர்கள் தம்மைத் தாமே தேர்ந்தெடுப்பதையே நான் விரும்புகிறேன். யாராவது கவனிக்கப்படாமலிருந்தால் மட்டுமே நான் தலையிடுவேன். விண்வெளி வலவர் விளையாட்டு, எல்லைக் காவல் வீரர் விளையாட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விளையாட்டு, எதுவாயிருந்தாலும் எங்கள் வகுப்பில் எல்லோரும் பங்கேற்பார்கள்.

இதோ குழந்தைகள் மூன்று விண்வெளி வலவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் விண்கப்பலில் அமர்கின்றனர்.

“பூமியில் சந்திப்போம்! போய் வருகிறோம்!” பூமியில் தங்குகின்ற நாங்கள் கைகளை ஆட்டுகிறோம்: “பயணம் சிறக்கட்டும்!… மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்!”

“ஊ ஊ ஊ ஊ…” ராக்கெட் பறந்து போய் விட்டது. பயணத்தில் முதல் நாள்… இரண்டாவது நாள்….

நாங்கள் வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்கின்றோம். நான் அறிவிப்பாளனாகிறேன்: “நமது வீரம் மிகு விண்வெளி வலவர்களாகிய சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் ஏற்கெனவே ஆறு நாட்களாக விண்வெளியில் பறக்கின்றனர். அவர்கள் அங்கு நிறைய ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு ஓய்வு நாள்.”

“விண்வெளியிலிருந்து நேரடியாக வரும் ஒலிபரப்பைப் பார்க்கின்றோம்: சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் தம் கரங்களில் அட்டைப்பெட்டியின் விளிம்பைப் பிடித்த படி (இது தான் தொலைக்காட்சிப் பெட்டியின் திரை) பேசுகின்றனர்.

சூரிக்கோ: “நிலம், கடல் தெரிகிறது… இதோ நம் பள்ளி…” (பார்வையாளர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.)

தேயா: “வானம் மிக அழகாக உள்ளது. பூமி மிக அழகாக இருக்கின்றது! நான் பயப்படவில்லை, இதோ போன்தோ தான் பயப்படுகிறான்.” (பார்வையாளர்கள் சிரிக்கின்றனர்.)

போன்தோ: “தேயா சும்மா சொல்கிறாள், நான் பயப்படவில்லை . இன்று நான்… நான்… அதாவது… ராக்கெட்டிலிருந்து விண்வெளிக்கு வெளியே வந்தேன்!…” (பார்வையாளர்கள் கை தட்டுகின்றனர்.)

இதோ தரையிறங்கும் நேரம் வந்து விட்டது.

விண்வெளி வலவர்கள் விண்கப்பலிலிருந்து வெளிவருகின்றனர். காத்திருந்தவர்கள் இவர்களை வரவேற்கின்றனர்.

“வணக்கம்!…”

“வணக்கம்…”

“உங்களை பூமியில் காண்பது குறித்து மகிழ்ச்சி…..”

“நன்றி.”

“களைப்பாய் உள்ளதா?”

“இல்லை!…”

“அப்படியெல்லாம் இல்லை!”

“மீண்டும் பறக்க விரும்புகின்றீர்களா?”

“ஆம், விரும்புகிறோம்!..”

“நீங்கள் வீரர்கள்!”

விண்வெளி வீரர்கள் வரிசைகளின் இடையே நடந்து செல்ல, இவர்களின் கரங்களைப் பிடித்துக் குலுக்குகின்றனர். அவர்கள் தம்மிடங்களில் அமர, விளையாட்டு முடிவடைகிறது. ஒவ்வொரு புதிய “பறத்தலின் போதும் ஒவ்வொரு முறை புதிதாக விளையாடும் போதும் ஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை”.

இன்று எங்கள் பள்ளி வாழ்வின் இருபதாவது நாளன்று, நான் பதினைந்தாவது ருஷ்ய மொழிப் பாடத்தை நடத்துகிறேன். “இது என்ன” என்ற வழக்கமான கேள்வியை நான் இந்த வகுப்புகளில் கேட்பதுமில்லை, “இது நாற்காலி… இது மேசை. இது பெஞ்சு…” என்ற வழக்கமான பதில்களை அவர்கள் சொல்வதுமில்லை. குழந்தைக்கு மேன் மேலும் நிறைய சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் பேசுவதற்கு சொற்கள்தான் அடிப்படையா என்ன? ஒரு கட்டிட வேலை நடக்குமிடத்தில் கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் (செங்கற்கள், மணல், சிமெண்ட்) உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இவையின்றி, இன்னும் சில இன்றி நிச்சயமாக வீடு கட்ட முடியாது. ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும்? ஆம், இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும். நம் விஷயத்தில் இது வார்த்தைகளையும் மொழிச் சாதனங்களையும் பேச்சாக இணைக்கும் திறமையாகும். இது இல்லாவிடில் பேச முடியாது. இது மேசை, இது நாற்காலி” என்பதெல்லாம் கட்டிடம் கட்டுமிடத்தில் உலாவும் மனிதன் “இது செங்கல், இது மணல்” என்பதற்குச் சமம். ஆனால் அவன் இவற்றை எப்பெயரிட்டு அழைத்தாலும் எவ்வளவு முறை திரும்பச் சொன்னாலும் வீடு தானாக வராது. எனவேதான் பொருட்களைப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் வார்த்தைகளை சேமிக்கும் வழியை நான் நிராகரித்தேன்.

குழந்தை ருஷ்ய மொழியை தனித்தனியாகக் கேட்கக் கூடாது, மொத்தமாக, இதன் இயக்கத்தில், செழுமையில் கேட்க வேண்டும். இந்த முழுமையைத்தான் நான் மொழி நுட்பம் என்கிறேன். ஆசிரியருடனான உரையாடல், தம்மிடையே கலந்து பேசுவது, விசேஷ பேச்சுப் பயிற்சிகள் முதலியன குழந்தைகள் மிகச் சிறப்பாக ருஷ்யப் பேச்சைப் புரிந்து கொள்ள உதவுகின்றன…

...குழந்தைகள் தம் ருஷ்ய மொழி நோட்டுப் புத்தகங்களைத் திறந்தனர் (ஆம், எங்களிடம் இத்தகைய நோட்டுப் புத்தகங்கள் உள்ளன, இவற்றில் பல “குறிப்புகள்”, படங்கள், வரைபடங்கள் இருக்கின்றன.) பேனாக்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

பேசுவதற்கு சொற்கள் தான் அடிப்படையா என்ன? … ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும்? … கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் … இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும்.

“இன்று நாம் நடத்தல் எனும் வார்த்தையைப் பார்போம், இந்த வார்த்தையை வைத்து வாக்கியங்களையும் சிறு கதையையும் உருவாக்குவோம்!” என்கிறேன் நான்.

எல்லோரும் சரிவர வாக்கியங்களை அமைக்கவில்லை, குறிப்பாகச் சரியாக உச்சரிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் உதவ நான் விரைகிறேன். இந்த உதவி பல்வேறு வகைப்பட்டது: சில சமயங்களில் இப்படிச் சொல்லத்தானே நீ விரும்பினாய்?” என்று கேட்டு உதவுகிறேன்; “இப்படிச் சொல்ல வேண்டும். எங்கே திரும்பச் சொல்!” என்று சில சமயங்களில் திருத்துகிறேன்; பல சமயங்களில் குழந்தைகளிலேயே யாரையாவது உதவும்படி வேண்டுகிறேன்: “இலிக்கோ, உனக்கு தான் ருஷ்ய மொழி நன்கு தெரியுமே! இதை எப்படி சரியாகச் சொல்வது?..” இலிக்கோ தன் நண்பர்களைத் திருத்துவான், வாக்கியங்களை எப்படி உருவாக்கி, உச்சரிப்பதென விளக்குவான்.

பின்னால் சிக்கலான வேலை உள்ளது: தாம் உருவாக்கிய வார்த்தைகளின் நுட்பமான உட்பொருள்களை அவர்கள் புரிந்து கொள்ளவும் இச்சொற்களில் எல்லாவற்றையும் பேச்சில் பயன்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவ வேண்டும்.

படிக்க:
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்
முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் தங்கு தடையின்றி உற்சாகமாக ருஷ்ய மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். உதாரணமாக, மார்ச், ஏப்ரலில் லேலா இடைவேளை சமயத்தில் என்னிடம் வந்து விலங்கியல் பூங்காவில் (அல்லது சர்க்கசில்) எவ்வளவு சுவாரசியமாக இருந்தது, சென்ற சனிக்கிழமையன்று எப்படிப்பட்ட சிரிப்பான சம்பவம் நடந்தது என்று சொல்வாள். அவள் ருஷ்ய மொழியில் பேசுவாள், சில சமயம் ஜார்ஜிய சொற்களைப் பயன்படுத்தினாலும் அவற்றைக் கவனிக்க மாட்டாள். எங்கள் வகுப்புகளில் இவர்கள் குறைகளற்று சரியான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் பேசுவார்கள் என்றெல்லாம் நான் உறுதியளிக்கவில்லை. ஆனால், அவர்கள் ருஷ்ய மொழியைப் பயிலுவது குறித்து மகிழ்ச்சியடைவார்கள், இம்மொழியில் உரையாட முயலுவார்கள். இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்

0
students--stress-and-anxiety-Slider

வில்லவன்
ண்பர் ஒருவர் பள்ளியொன்றில் ஆற்றுப்படுத்துனராக நியமிக்கப்பட்டார். முதல்நாள் நியமனக் கடிதத்தை கொடுக்க சென்றபோது அந்தப் பள்ளி முதல்வர் சொன்னவை “இத்தனை ஆண்டுகளாக நாங்கள் அறிவுரை சொல்லி கேட்காதவர்கள், நீங்க சொல்லி மட்டும் கேட்டுடுவாங்களா?”.

எங்கள் மாணவர் ஒருவர் மிகையான மனக்கவலைக்காக என்னை சந்திக்க வந்திருந்தார். எப்போது நீங்கள் இந்த சிக்கல் குறித்து கவுன்சிலரிடம் பேச வேண்டும் என முடிவு செய்தீர்கள் என கேட்டேன். ஓராண்டுக்கு முன்பு என பதில் சொன்னார். தாமதமாக சந்திப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என கேட்டேன். எங்கம்மாகிட்ட அனுமதி கேட்டேன், அதெல்லாம் மெண்ட்டலா பிரச்சினை இருக்குறவங்களுக்குத்தான் தேவை. உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்றார். (குறிப்பு: என்னை சந்தித்தபோது அவருக்கு மகிழ்ச்சியின்மையோடு மரண விருப்பமும் இருந்தது.)

பள்ளியொன்றில் பணியைத் துவங்கிய ஆறு மாதத்தில் ஒரு உயர்நிலை வகுப்பு ஆசிரியர் கேட்டார் “ ஆறு மாசமா வேலை செய்யிறீங்க, ஆனாலும் பசங்க பிஹேவியர்லயும் படிப்புலயும் எந்த முன்னேற்றமும் இல்லையே?”

இவை எல்லாமே சென்னையில் உள்ள பெயர்பெற்ற பள்ளி வளாகங்களில் கேட்ட குரல்கள். ஆகப்பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆற்றுப்படுத்துனர் எனும் பதமே அறிமுகமாகியிருக்காது. கவுன்சிலிங் / கவுன்சிலர் போன்ற வார்த்தைகளை அறிந்தவர்களுக்கும்கூட அவர்கள் பணி என்ன என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தெளிவில்லை. தெரியாதவர்களால் உருவாகும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் அரைகுறையாக தெரிந்தவர்களும் / தவறாக புரிந்தவர்களும் வேறு வகையான சிக்கல்களை உருவாக்குகிறார்கள். கவுன்சிலர் சமூகத்திற்குள்ளும் பல அதிர்ச்சிகளை காண முடிகிறது.

நான்-வெஜ் நெறைய சாப்பிடுறதால இப்போ பசங்களுக்கு அதிகமாக ஆத்திரம் வருகிறது என்றார் ஒரு பிரபல ஆற்றுப்படுத்துனர் மற்றும் பயிற்சியாளர். அவர் பலமுறை தொலைக்காட்சிகளில் பேசியவர் அச்சு ஊடகம் ஒன்றில் தொடர் எழுதியவர். சுய இன்ப பழக்கத்தை கைவிட ஆலோசனை வழங்கியிருக்கிறேன் என்றார் இன்னொரு இளம் ஆற்றுப்படுத்துனர் (கல்லூரியில் பணியாற்றுகிறார்). திகைத்துப்போய் சுயஇன்பம் தவறானதென்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என கேட்டோம். இதென்ன கேள்வி, அது தவறென்றுதானே நம் மதங்களும் ஆயுர்வேதமும் சொல்கிறது என பதில் கேள்வி கேட்டார். (ஆயுர்வேதம் அதனை தவறென்று சொல்கிறதா என்று எனக்கு தெரியாது).

படிக்க:
சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

பள்ளி வளாகங்களில் ஒரு மனநலப் பணியாளரின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகம். இந்திய மக்கள்தொகையில் 31% பேர் 14 வயதுக்கு கீழானவர்கள். ஏறத்தாழ 50% தீவிர மனநல பிர்ச்சினைகள் (அதாவது வாழ்நாள் முழுக்க நீடிக்கவல்ல சிக்கல்கள்) 14 வயதுக்கு முன்பே ஆரம்பமாகிவிடுகின்றன. உலகம் முழுக்கவே 10 முதல் 20% விழுக்காடு சிறார்களுக்கு உளநல சிக்கல்கள் இருக்கக்கூடும் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய முதலாளித்துவ சூழல் இன்னும் தீவிரமாக மனநல சிக்கல்களை உருவாக்கவல்லது.

தாழ்வு மனப்பான்மை, பலவீனமான சுயமரியாதை, தவறான நம்பிக்கைகள் ஆகியவை பிற்காலத்தில் நடத்தை பிரச்சினைகளை உருவாக்கும். இவை எல்லாவற்றையும் அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே உரிய வழிகாட்டுதல்களை கொடுத்தால் அவை மாபெரும் பலன்களை கொடுக்கும். ஆனால் இவற்றை பெற்றோராலோ அல்லது ஆசிரியர்களாலோ செய்ய இயலாது. அந்த வேலையை செய்யத்தான் பள்ளிகளில் மனநலப்பணியாளர் (கவுன்சிலர் – ஆற்றுப்படுத்துனர்) அவசியப்படுகிறார்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உதாரணங்கள் எல்லாவற்றிலும் உள்ள ஆற்றுப்படுத்துதல் பற்றிய புரிதல்கள் தவறானவையே. கவுன்சிலிங் என்பது அறிவுரை சொல்லும் வேலை அல்ல. இன்னும் சொல்வதானால் அதன் அடிப்படை விதியே கவுன்சிலர் மிக அரிதான சமயங்களைத் தவிர வேறெப்போதும் அறிவுரை சொல்லக்கூடாது என்பதுதான்.

தீவிர மனநல சிக்கல்களுக்குத்தான் கவுன்சிலிங் தேவை என்பது உண்மையல்ல. தீவிரமான பிரச்சினைகளை கொண்டிருப்பதாக கருதினால் அவரை ஆற்றுப்படுத்துனர்கள் மனநல மருத்துவர்களிடம் பரிந்துரைப்பார்கள். உளநலத்தில் ஏற்படும் சிறிய இடையூறுகள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள், நடத்தை மாற்றம், உள (உடல்) நலம் பற்றிய சந்தேகங்கள் ஆகியவற்றை ஒரு ஆற்றுப்படுத்துனரால் சிறப்பாக கையாள இயலும்.

பாலியல் கல்வி, பதின் பருவ மாற்றங்கள், முடிவெடுத்தல், மாணவர்களின் கற்றல் திறனில் சரிவிகித உணவு – சுகாதாரம் பேணுதல் – உறக்கம் ஆகியவற்றின் பங்கு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் தலைப்புக்களை ஒரு கவுன்சிலரால் மேம்பட்ட வகையில் விளக்க முடியும். இப்போது மாணவர்களைக் காட்டிலும் அதிகமான உளவியல் விளக்கங்களும் பயிற்சிகளும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே தேவைப்படுகிறது, அதனைக் கொடுப்பதும் ஒரு பள்ளி உளவியலாளரின் கடமையே. இவற்றை முறையாக செய்தாலே பின்நாட்களில் வர சாத்தியம் உள்ள பல தீவிரமான சிக்கல்களை தவிர்க்க இயலும்.

பள்ளி ஆற்றுப்படுத்துனரின் தினசரி கடமைகளுக்கு கறாரான வரையறைகள் இல்லை. பள்ளியின் சூழல், மாணவர்களின் சமூக – பொருளாதார பின்புலம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அல்லது ஒத்துழையாமை (அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள நிரந்தர ஆசிரியர்கள் ஒத்துழைப்பதில்லை என்பது கவுன்சிலர்களின் பரவலான குற்றச்சாட்டு. எனக்கு நேரடி அனுபவம் இல்லை) இப்படி பல்வேறு அம்சங்களை பரிசீலித்து தங்கள் வேலைத்திட்டத்தை அந்த பள்ளி கவுன்சிலர் வடிவமைக்கலாம்.

எனக்குத் தெரிந்த சென்னை பள்ளியொன்றில் 9,10-ம் வகுப்பு மாணவர்களில் 50% பேர் புகையிலை அடிமைத்தனம் உள்ளவர்கள். வேறொரு பள்ளியில் ஒற்றைப் பெற்றோர் மட்டும் உள்ள மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் முற்றிலும் வேறான வேலைத்திட்டங்களை ஆற்றுப்படுத்துனர் செயல்படுத்த வேண்டியிருக்கும்.

ஆயினும் சில அடிப்படையான செயல்பாடுகளை பட்டியலிட இயலும்.

நம்பிக்கையளித்தல் :

நம் பிரச்சினைகளை கேட்கவும் இங்கே ஆள் இருக்கிறது எனும் நம்பிக்கை மாணவர்களிடையே உருவாகும்போதே ஒரு கவுன்சிலரின் வெற்றி துவங்கிவிடுகிறது. பல தவறான முடிவுகளுக்கு பின்னால் இருப்பது பிரச்சினையை சொல்ல ஆளில்லை எனும் சூழல்தான். அப்பாவின் குடிப்பழக்கம் தொடங்கி ஆசிரியர் திட்டிவிட்டார் ஆகவே நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என்பதுவரை எண்ணற்ற காரணங்களுக்காக மாணவர்கள் என்னை சந்தித்திருக்கிறார்கள். உத்தேசமாக சரிபாதி பேருக்கு தங்கள் பிரச்சினைகளை ஒருவர் முறையாக கேட்டாலே போதும், அவர்கள் இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.

hopeமுன்பு ஒரு 12 வயது மாணவி சந்திக்க வந்திருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்பவர்கள். காலை அவரே வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு வரவேண்டும். அவர் வீட்டுக்கு எதிரேயுள்ள கடையில் வேலைசெய்யும் இளைஞரிடம் காதல்வயப்பட்டிருக்கிறார். அந்த இளைஞன் இந்தப் பெண்ணை தமது ஊருக்கு வரும்படி அழைத்திருக்கிறார். சிறுமிக்கோ போகவேண்டும் எனும் விருப்பமும் செல்வது நல்லதில்லை எனும் எச்சரிக்கையுணர்வும் ஒருங்கே வந்திருக்கிறது. இதனை விவாதிக்க நம்பிக்கையான பெரியவர்கள் யாரும் இல்லை, நண்பர்களிடம் கேட்க பயம் (அவர்கள் பள்ளி ஆசிரியரிடம் சொல்லிவிடக்கூடும் இல்லையா?). ஆகவே அவர் கவுன்சிலரை சந்திக்க முடிவெடுத்தார். அந்த அமர்வுக்குப் பிறகு அவர் காதலரோடு செல்லும் முடிவை கைவிட்டார். நம்பகமான, ரகசியங்களை காப்பாற்றும் ஒரு மனிதர் பள்ளியில் இருப்பதன் அவசியத்தை உணர இந்த உதாரணம் போதுமானது என கருதுகிறேன்.

படிக்க:
’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
♦ பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்

துருவங்களிடையே இணக்கத்தை உருவாக்குதல் :

பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரது தேவைகளும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறானவை. இது உருவாக்கும் முரண்பாடுகளே அனேக நடத்தை மற்றும் உணர்வுச் சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. தனித்தனியே கேட்கையில் ஒவ்வொருவரது குரலும் நியாயமானதாகவே இருக்கும். ஒன்றாக கேட்டால் அவ்விடம் ஒரு போர்க்களமாக மாறக்கூடும். ஆனாலும் கொஞ்சம் மெனக்கெட்டால் ஓரெல்லை வரைக்குமான இணக்கத்தை இவர்களிடையே கொண்டுவர இயலும். கற்றல் குறைபாடு கொண்ட சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அது குறித்த தெளிவு இல்லாமல் இருப்பதுதான். போதிய தயாரிப்புக்களோடும் பொறுமையுடனும் தரப்படும் விளக்கங்கள் அந்த மாணவர்களின் வாழ்வை முற்றிலுமாக மாற்றவல்லவை.

Parent-childஒருமுறை மூன்றாம் வகுப்பு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக சந்தேகித்து அவரது அம்மாவிடம் விளக்கினோம். அவர் கடுமையான ஆத்திரமடைந்து என்னை சகட்டுமேனிக்கு முக்கால் மணிநேரம் திட்டினார் (அதாவது என் வழியே பள்ளியை). அவரது நிலையும் புரிந்துகொள்ளக்கூடியதே, மகனுக்கு ஒரு குறைபாடு இருப்பதாக சொல்வதை ஏற்பது அத்தனை இலகுவானது அல்ல. இறுதியில், நான் சொன்ன கருத்தோ அல்லது சொன்ன விதமோ உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்க வேண்டியதாயிற்று.

மறுநாள் அவர் கணவர் வந்து கொஞ்சம் நயமாக திட்டினார் (நான் மீடியாவுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா என்றார்). இந்த கசப்பான அனுபவம் காரணமாக அடுத்த ஒரு மாதத்துக்கு ஆரம்ப வகுப்பு மாணவர்களை சந்திக்கவே பயந்துகொண்டு இருந்தேன். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அந்த அம்மா மட்டும் வந்தார், இப்பவெல்லாம் நான் பையனை அடிக்கிறதில்லைங்க.. பையனை ஆவரேஜாவாச்சும் படிக்கவைக்க நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க என்றார். ஒரு முறையான விளக்கம் தாமதமாகவேனும் வேலை செய்யும் என்பதைப் புரிந்துகொண்ட தருணம் அது.

Psycho – education – உளவியல் ரீதியான அறிவூட்டல் :

கற்றல் குறைபாடுள்ள சிறார்கள் எதனால் வழக்கமான பாணி கற்பித்தலில் சிரமப்படுகிறார்கள், ஏன் பதின் வயது சிறார்கள் எதிர்வாதம் செய்கிறார்கள், எதனால் காதல் குறித்த அறிவுரைகள் மாணவர்களிடம் எடுபடாமல் போகின்றன, செல்போன் எப்படி கற்றல் திறனை பாதிக்கிறது போன்ற ஏராளமான விசயங்களுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. இவை அனேகருக்கு தெரிவதில்லை. இதனால் பலர் இது தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தவறான முன்முடிவுகளுக்கு செல்கிறார்கள்.

படிக்க:
மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்
இந்திய நாடு, அடி(மை) மாடு !

ஒரு பதினோராம் வகுப்பு மாணவரை கவனமின்மை எனும் காரணத்துக்காக அவரது ஆசிரியர் பரிந்துரைத்தார். பேசுகையில் அவருக்கு சுய இன்ப பழக்கம் குறித்த கடுமையான குற்ற உணர்வு இருந்தது தெரியவந்தது. குற்ற உணர்வு கொள்ள காரணத்தை கேட்டப்போது “அது இறைவனுக்கு எதிரானது இல்லையா” என்றார். இறைவனுக்கு எதிரானது என்றால் அதனை தொடர காரணம் என்ன? என்று கேட்டேன். நான் சுய இன்ப பழக்கம் உள்ளவன் என்பதால் எனக்கு சொர்கத்தில் இடமிருக்கப்போவதில்லை, அதனால் நிறுத்தியும் பலன் இல்லை. ஆகவேதான் நிறுத்தவில்லை, ஆனாலும் அதன் அவமான உணர்வு தொடர்கிறது என்றார்.

அந்த அவமான /குற்ற உணர்வு அவரது பதட்டத்தை அதிகரிக்கிறது, சுய இன்பம் செய்தால் பதட்டம் குறைகிறது. அதிகமான சுய இன்பம் அவரது குற்ற உணர்வை இன்னும் மோசமாக்குகிறது. இந்த சுழல் நிகழ்வு மொத்தமும் சுய இன்பம் குறித்த தவறான மத நம்பிக்கை காரணமாக உருவாவதுதான். இப்படியான ஏராளமாக நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும் உடைக்க தொடர்ச்சியான psycho-education  அவசியம்.

தகவல்களை சேகரித்தல் மற்றும் சேமித்தல் :

போதுமான தகவல்கள் / தரவுகள் இல்லாமல் ஒரு உளநல பிரச்சினையை கையாள்வது என்பது முகவரி தெரியாதவர் முகவரி தெரியாத இன்னொருவருக்கு வழிகாட்டுவதைப் போன்றது. அதில் அதிருஷ்டவசமாக தீர்வு கிட்டலாம். ஆனால் தீர்வு கிட்டாமல் சிக்கல் மோசமாகவே வாய்ப்பு அதிகம். பணியாற்றும் இடம் சார்ந்த தரவுகள் மற்றும் பொதுவான தரவுகள் இரண்டுமே அவசியம். உலகலாவிய அளவில் பள்ளி கல்வியின் பெரும் சவால் போதுமான தரவுகள் இல்லாமையே, அதாவது தகவல்கள் திரட்டப்பட்டு பராமரிக்கப்படாமையே.

உதாரணமாக, எந்த வயதில் ஆபாசப்படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் எனும் தரவுகளோ எந்த வயதில் புகைப்பதற்கான ஆர்வம் வருகிறது எனும் தரவுகளோ அனேகமாக இருப்பதில்லை. இவற்றை பராமரிப்பது என்பது நாம் எந்த இடத்தில் எப்போது கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறியத்தரும்.

எங்களது முதலாம் ஆண்டு அறிக்கையின் மூலம் ஆற்றுப்படுத்துதலை நாடுவோரில் 35% பேர் எட்டாம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் தடுப்பு நடவடிக்கைகளை முன் வகுப்புக்களில் துவக்க முடிந்தது. பிள்ளைகள் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பெற்றோர்களுக்கான வகுப்புக்கள், வகுப்பறையில் காதல் குறித்த அறிவியல்பூர்வமான உரையாடல்கள், தோல்வியின் நேர்மறையான அம்சங்கள் ஆகியவை குறித்த வகுப்பறை விவாதங்களை ஒழுங்கு செய்திருந்தோம். இவை குறிப்பிடத்தக்க அளவில் வேலை செய்தன. குறிப்பாக காதல் சண்டைகள், உடலை காயப்படுத்திக்கொள்வது (செல்ஃப் ஹார்ம்) ஆகியவை மிகக் கணிசமான அளவு குறைந்தது.

பிரச்சினைகளை உரிய இடத்திற்கு தெரியப்படுத்துதல் :

மனம் சார்ந்த எல்லா பிரச்சினைகளையும் ஒரு ஆற்றுப்படுத்துனரால் சரிசெய்ய இயலாது. ஆனால் அவற்றை சரிசெய்ய உகந்த நபருக்கு பரிந்துரை செய்ய இயலும். என் நண்பர் ஒருவர் தமது பள்ளியில் புகையிலை பயன்பாட்டின் விளைவுகளை விளக்கும் நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்கிறார். அதற்கான நிறுவனங்களை அணுகி துறைசார் வல்லுனர்களையும் வரவைக்கிறார். கற்றல் குறைபாடு குறித்த விளக்க வகுப்புக்களுக்குப் பிறகு குறைந்தது இரண்டு ஆசிரியர்களேனும் தாங்கள் தவறாக கையாண்ட சம்பவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். தீவிர உளநல சிக்கல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சிறார்களை மனநல மருத்துவருக்கு பரிந்துரைப்பது மற்றும் கற்றல் குறைபாடு கொண்ட சிறார்களை சிறப்பு ஆசிரியருக்கு பரிந்துரைப்பது ஆகியவை பள்ளி ஆற்றுப்படுத்துனரின் வழக்கமான வேலைகள். சென்னையில் ஒரு கவுன்சிலர் தமது பள்ளியில் கூல் லிப்ஸ் எனும் போதைப் பொருளை ஆறாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்துவதை கண்டறிந்து பள்ளியை எச்சரித்திருக்கிறார் (அதனால் அவர் வேலையை இழந்தார் என்பது இதன் சோகமான பின்விளைவு).

மேலே சொல்லப்பட்டவற்றை தாண்டி இன்னும் பல வேலைகள் இருக்கின்றன. ஆனாலும் மேலேயுள்ள பணிகளை செய்தாலே (அல்லது செய்ய முடிந்தாலே) ஒரு ஆற்றுப்படுத்துனரால் பிரம்மிக்கத்தக்க நல்விளைவுகளை ஏற்படுத்த இயலும். ஆகவே அரசுப்பள்ளிகளுக்கு தேவையானவை எனும் பட்டியலில் ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக ஆற்றுப்படுத்துனரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களால் பேச முடிகிற பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனரை நியமிக்க பரிந்துரை செய்யுங்கள். ஒருவேளை அங்கே அப்படியொருவர் பணியாற்றினால் அவர் மேற்சொன்ன வேலைகளை செய்ய வலியுறுத்துங்கள்.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.