காவிரி விவகாரத்தில், மைய பா.ஜ.க. அரசு – கர்நாடக காங்கிரசு அரசு – உச்சநீதி மன்றம் ஆகிய மூன்று அதிகார உறுப்புகளின் கூட்டுச் சதிக்கு எதிராகவும், எடப்பாடி கும்பலின் துரோகம்-அடிவருடித்தனத்திற்கு எதிராகவும் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், நம் மீது கொத்துக் குண்டுகளை வீசியெறிவதைப் போல, காவிரிப் படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கான திட்டங்களைத் தயாரித்து, இக்கிணறுகளுக்கான உரிமங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வாரிக் கொடுக்கும் முடிவையும் எடுத்திருக்கிறது, இந்திய அரசு.
இக்கிணறுகளைக் குத்தகைக்கு எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, அங்கு கச்சா எண்ணெய் முதல் மீத்தேன், ஷேல் கேஸ் வரை எதனையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் அனுமதி வழங்கப்படும்.
இதுவொருபுறமிருக்க, நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அப்பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும்படி எடுபிடி எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது, மோடி அரசு. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப புதிய கச்சா எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் அபாயமும் எழுந்து நிற்கிறது.
காவிரி டெல்டா பகுதியில் எத்துணை கிணறுகள் உள்ளன, அவற்றுள் எத்துணை கிணறுகளில் உற்பத்தி நடைபெறுகிறது என்பதே மர்மமாக உள்ள நிலையில், இயக்கப்படும் எந்தவொரு கிணற்றுக்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதும் அம்பலமாகியிருக்கிறது.
”நாங்கள் அளிக்கும் விண்ணப்பத்திற்கு மூன்று மாதங்களுக்குள் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்கவில்லை என்றால், உரிமம் வழங்கியதாகக் கருதப்படும் என்று எங்களது விதிமுறைகள் தெரிவிக்கின்றன” எனப் பதில் அளித்து, இந்த நாட்டாமைத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறார், ஓ.என்.ஜி.சி.யின் காரைக்கால் யூனிட் நிர்வாக இயக்குநர் குல்பீர் சிங். தமிழகக் காவிரிப் படுகை இனி ஓ.என்.ஜி.சி.யின் காலனி என்பதுதான் இந்த விளக்கத்தின் பொருள்.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் கச்சா எண்ணெய்-ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றப்படும் அபாயகரமான நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி அரசு காவிரிப் படுகையில் புதிதாக 9 மணல் குவாரிகளைத் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழகமெங்கும் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றம் சென்று; இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி இந்த 9 மணல்குவாரிகள் உள்ளிட்டுப் புதிதாக 21 மணல் குவாரிகளைத் திறக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்தப் புதிய மணல் குவாரிகளோடு, பழைய குவாரிகள் உள்ளிட்டு அனைத்தையும் இயக்கும் பொறுப்பை முழுமையாகத் தனியாரிடம், அதாவது தமது பினாமிகளிடம் ஒப்படைக்கும் முடிவையும் சந்தடி சாக்கில் எடுத்திருக்கிறது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கொள்ளைக்கூட்டம்.
இவையும் போதாதென்பது போல, நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தைத் திறக்கும் அனுமதியையும் அளித்து, தமிழக மக்களின் மீது இன்னொரு இடியை இறக்கியிருக்கிறது, இந்திய அரசு. நியூட்ரினோ திட்டத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்துப் புதிதாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மட்டுமே புதிய அனுமதியைத் தமிழக அரசிடமிருந்தும் மைய அரசிடமிருந்தும் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப்போட்டுவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து குறுக்கு வழியில் புதிய அனுமதியை அளித்திருக்கிறது, மோடி அரசு.
மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் சட்ட விதியின் ஒரு பிரிவு, கட்டிடங்கள் கட்டுவதற்குச் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை எனச் சலுகை அளிக்கிறது. இந்தச் சட்டபூர்வ ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் கட்டிடம்தான் கட்டப் போவதாகக் கூறி, அதனால் புதிய ஆய்வு நடத்த வேண்டியதில்லை என மறுத்து நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.
நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையை, 1,000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து, அதன் மூலம் 11 இலட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளைத் தகர்த்துதான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்கவிருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், அங்கே கட்டிடம்தான் கட்டப் போவதாக மோடி அரசு கூறியிருப்பது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தமிழக மக்களைக் கிள்ளுக்கீரைகளைவிடக் கேவலமாக எண்ணும் அதனின் திமிரையும் வெளிப்படுத்துகிறது.
”நியூட்ரினோ ஆய்வு புதிய திட்டமல்ல” எனக் கூறி, மைய அரசின் அனுமதிக்கு ஒத்தூதியிருக்கும் எடப்பாடி அரசு, தன் பங்குக்கு தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை 640 ஏக்கர் பரப்பில் விரிவாக்கும் திட்டத்திற்குப் பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய காகிதச் சட்ட நடைமுறையைக்கூடப் புறக்கணித்துவிட்டு ஒப்புதல் அளித்திருக்கிறது.
மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை, விரிவாக்கத்திற்குப் பிறகு ஊருக்கு மிக அருகாமையில், 150 மீட்டர் தொலைவில் அமையும் எனப் பொதுமக்கள் கூறிவரும்போது, எடப்பாடி அரசோ ஆலையின் விரிவாக்கம் சிப்காட் வளாகத்திற்குள்தான் அமையவுள்ளது எனத் துணிந்து பொய் சொல்லி, அதனால் பொதுமக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை எனக் கூறிவிட்டது.
இந்த நாசகார ஆலை சுற்றுப்புறச் சூழல் விதிகளைத் துடைத்துப்போட்டுவிட்டுதான் இயங்கி வருகிறது என்பதைப் புதிதாக நிரூபிக்க வேண்டியதில்லை. விஷவாயுக் கசிவு, ஆலைக்குள் நடந்த விபத்துக்கள், தோல் நோய், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் என ஸ்டெர்லைட் உருவாக்கியிருக்கும் நாசத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் குற்றங்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்து, ஆலை நிர்வாகத்திற்குப் பொதுமன்னிப்பு அளித்து, ஆலையை இயங்க அனுமதி அளித்த யோக்கிய சிகாமணிகள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.
இந்த விரிவாக்கத்திற்கு எதிராக குமரரெட்டியாபுரம், பதியம்புத்தூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 40 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்டு எட்டு பேர் மீது பொய்வழக்குப் போட்டு, அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை ஒடுக்குகிறது, தமிழக அரசு.
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவைத் தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல. அனைத்திலும் சட்டம், விதிகள், மரபுகள் அனைத்தையும் அலட்சியமாக மீறி, ஆணவமாகத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழகத்தின் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறது மோடி அரசு.
இந்தப் போரில் இந்து மதவெறிக் கும்பலின் காலாட்படையாகச் செயல்படுகிறது, எடப்பாடி அரசு. இதுவொரு போர் என்ற உண்மையைத் தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். போரை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அப்படி இதனை எதிர்கொள்ள வேண்டும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Paypal
$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
மே நாளை வேதாரண்யம் வட்டார விவசாயிகள் போராட்ட தினமாகக் கடைபிடித்தனர். காவிரியில் நீரில்லை என்பது மட்டுமல்ல, நூறு நாள் வேலையும் இல்லை என்ற காரணத்தால் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இப்பகுதி மக்களை போராட்டத்துக்கு ஒன்று திரட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.
ஆதனூர், அண்டர்காடு, கோவில்தாழ்வு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டனர். “விவசாயிகளை சாகடிக்காதே! காவிரி மேலாண்மை வாரியம் அமை! நூறு நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்து! மீத்தேன் திட்டத்தை கைவிடு !” என்ற முழக்கங்களுடன் வேதாரண்யம் கடைவீதியில் திரண்டனர் மக்கள்.
திரண்டு வரும் மக்களை அச்சுறுத்துவதற்கு ஏழு வாகனங்களில் போலீசு தயாராக நின்ற போதிலும் மக்கள் பின்வாங்கவில்லை. பேரணியின் முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டது. ”சாலைமறியல் வேண்டாம். அதிகாரிகள் வந்திருக்கின்றனர் . பேச்சுவார்த்தை நடத்துங்கள்” என்றனர் போலீசு அதிகாரிகள். அதை ஏற்க மறுத்த பெண்கள் சாலையை மறித்து போராடத் தொடங்கினார்கள். ”சாலை மறியல் செய்தால் கைது செய்வோம்” என்றார் ஒரு போலீசு அதிகாரி. ”கைது பண்ணினா என்ன, கழுத்தையா அறுப்பே” என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்.
சாலை மறியல் செய்தால் கைது செய்வோம் என்றார் ஒரு போலீசு அதிகாரி. கைது பண்ணினா என்ன, கழுத்தையா அறுப்பே என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்.
தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைக்க, ”நீங்கள் மக்களிடம் நேரடியாகப் பேசுங்கள்” என்றார் அமைப்பாளர் தோழர் தனியரசு. “எல்லோருக்கும் நூறு நாள் வேலை கொடுக்க முடியாது நாற்பது பேருக்குத்தான் தர முடியும்” என்றார் அதிகாரி. ”ஒவ்வொரு தேர்தலுக்கும் 40 பேர் மட்டும் ஓட்டு போட்டால் ஒத்துக்கொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார் ஒரு மூதாட்டி. ”4 நாள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் வேலைக்கு உத்தரவாதம் தருகிறோம்” என்று அவகாசம் கேட்டனர் அதிகாரிகள். “4 நாட்களுக்குள் வேலை கொடுக்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்கள் மக்கள்.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிப்பது பற்றியும், மீத்தேன் திட்டம் திணிக்கப்படுவதையும் விளக்கிப் பேசினர்.
1 of 4
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
இன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணினி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கைத்தொலைபேசியில் சொடுக்கி வாங்கி விடலாம். நாம் வாங்கிய பொருள் அடுத்த நாளே வீடு தேடி வரும்.
முந்திய காலங்களைப் போல வெளியே கடைக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் தொழில்நுட்ப அதிசயத்தை எண்ணி வியக்கிறோம். வருங்காலத்தில் தெருக்களில் கடைகளைக் காண முடியாமல் போகலாம். இணையக் கடைகளின் பெருக்கம் காரணமாக, பல பெரிய நிறுவனங்களின் அங்காடிகள்கூட விற்பனையின்றி மூடப்படுகின்றன.
மறுபக்கத்தில், இணையக் கடைகளுக்கான களஞ்சிய அறைகள், விநியோக மையங்கள் என்பன திறக்கப்படுகின்றன. அவை நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்படுகின்றன. இணைய சேவை காரணமாக இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தூங்காமல் இரவிரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை.
என்னதான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கினாலும், உழைப்புச் சுரண்டல் மட்டும் மாறுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தைவிட, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தக் கட்டுரையை எனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். நான் குறைந்தது ஒரு வருடமேனும் தபால் துறையில் வேலை செய்திருக்கிறேன். சில மாதங்கள், விநியோக மையத்தில் பார்சல் தரம் பிரிப்பவராக செய்த வேலைதான் மிகவும் கடினமானது. அடிமை வேலைக்கு ஒப்பானது.
2012-ஆம் ஆண்டளவில், நான் வசிக்கும் நெதர்லாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. எல்லா இடங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை. வேலை எங்கே தேடியும் கிடைக்காத நிலைமை. நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுப்பதைவிட, இருப்பவர்களின் வேலையை பறிப்பதில் ஆர்வமாக இருந்தன.
அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும், பார்சல் தரம் பிரிக்கும் நிலையத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருந்தது. அப்போது அது வளர்ந்து வரும் நவீன தொழிற்துறை என ஊடகங்களால் புகழப்பட்டது. அங்கே சென்ற பிறகுதான், எதற்காக அந்த தொழிற்துறையில் மட்டும் வேலையாள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தெரிய வந்தது.
நெதர்லாந்து நாட்டின் தபால்துறை முழுக்க முழுக்க PostNL என்ற தனியார் நிறுவனத்தினால் நடத்தப்படுகின்றது. இது முன்பிருந்த அரசுத் தபால்துறையின் தொடர்ச்சி ஆகும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நூறு சதவீத தனியார்மயமாக்கல் காரணமாக, ஆயிரக்கணக்கான தபால்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர்.
PostNL நிறுவனத்தின் பார்சல் வகைபிரிக்கும் பகுதி.
முந்திய காலங்களைப் போல தற்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. இன்று உலகம் முழுவதும் அப்படித்தான். கடிதப் போக்குவரத்து மின்னஞ்சல் ஆகி, அது பின்னர் வாட்ஸ் – ஆப் வரை வந்து விட்டது. கடிதங்களை மட்டுமல்ல, முத்திரைகளைக்கூட கண்ணால் கண்டிராத தலைமுறை ஒன்று உருவாகி விட்டது.
தனியார்மயப்படுத்தப்பட்ட தபால் நிறுவனம், அதைக் காரணமாகக் காட்டியே தபால்காரர்களின் வேலை நேரத்தைக் குறைத்து விட்டது. நான் சுமார் ஒரு வருடமாவது தபால்காரர் வேலை செய்துள்ளேன். தற்காலத்தில் அது ஒன்றும் பெருமைக்குரிய வேலை அல்ல. நிச்சயமற்ற தன்மை காரணமாக பலர் அந்த வேலையை தெரிவு செய்வதில்லை.
வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீடுகளுக்கு தபால் போடும் வேலை செய்து, வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது. ஏனெனில், வேலை நேரம் மிகக் குறைவு. மொத்தம் வாரத்திற்கு பன்னிரண்டு மணித்தியாலம் மட்டுமே. எப்போதும் அது ஒரு பகுதிநேர வேலைதான். அதனால் கிடைக்கும் வருமானம் வீட்டு வாடகை கட்டுவதற்குகூடப் போதாது.
சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் ஐம்பது கிலோ பொதிகளை சுமந்து கொண்டு, உறை பனியில் நடுங்கியபடியும், அடைமழையில் நனைந்தபடியும் செய்யும் வேலையை எண்ணிப் பாருங்கள். நாம் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சம்பளம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தொகைதான் கிடைக்கும். தபால்கள் அதிகளவில் வரும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம், குறைவாக வரும் புதன்கிழமைகளில் அரை மணிநேரம் மட்டுமே சம்பளம் போடுவார்கள். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம்தான்.
சிலநேரம், சாதாரண தபால்களை மட்டுமல்லாது, விளம்பரப் பத்திரிகைகளையும் சேர்த்துப் போடுமாறு கொடுத்து விடுவார்கள். அதைவிட, மாதமொருமுறை நகரசபை வெளியிடும், குடி மக்களுக்கான தகவல் தெரிவிக்கும் பத்திரிகையையும் நாமே விநியோகிக்க வேண்டும். அதற்காக மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது.
இந்த மேலதிக விளம்பர சேவைக்காக நகர சபையும், விளம்பர நிறுவனங்களும் கொடுக்கும் பணம் முழுவதையும் தபால் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதில் ஒரு துளிகூட வேலையாட்களுக்கு கொடுப்பதில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது, “தபால் சேவை நட்டத்தில் இயங்குவதாகவும், அதை ஈடுகட்டுவதற்காக கம்பெனி விளம்பரப் பத்திரிகை போடும் சேவையை நடத்துவதாகவும்” தெரிவித்தார்கள்.
தபால்துறையில் ஒரு அரசு நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இன்று கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில், ஒரு டஜனுக்கும் குறையாத தனியார் தபால் நிறுவனங்கள் சந்தையில் போட்டி போடுகின்றன. இணைய வணிகம் காரணமாக பார்சல் விநியோகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் “பாரம்பரிய” தபால் நிறுவனம், முடிந்தளவுக்கு தொழிலாளர்களைச் சுரண்டி இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றது.
இணைய வணிகத்தின் வருகை காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆயிரம் பேரின் வேலை காணாமல் போன இடத்தில், சில பத்துப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்குப் பெயர் பொருளாதார வளர்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி. இதனால் முதலாளிகளின் இலாபம் மட்டுமே கூடியுள்ளது.
இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்.
நானும் பார்சல்கள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்துள்ளேன். அது வழமையாக இரவு வேலைதான். இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரையில் தூங்காமல் கண் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இரவு வேலை செய்து வந்தால், நீரிழிவு வருத்தம் வரும். இதய நோய் கூட உண்டாகலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தரம் பிரிக்கும் வேலை இரண்டு ஷிப்டுகளாக நடக்கும். மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரையில் ஒரு ஷிப்ட். அது மாலை நேர வேலை. அதை அங்கு நீண்ட காலம் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேருவோரும், தற்காலிகத் தொழிலாளர்களும் இரவு வேலை மட்டுமே செய்யலாம். நடுநிசி பன்னிரண்டு மணியில் இருந்து அதிகாலை ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும்.
அதைவிட, தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள இராட்சத இயந்திரங்கள் போடும் இரைச்சலில் காது செவிடாகிவிடும். பக்கத்தில் நிற்பவர் சத்தமாகப் பேசினாலும் கேட்காத அளவிற்கு பேரிரைச்சல். தொழிலகங்களில் சத்தம் 80 டெசிபெல் அளவுக்கு மீறினால், காதுக்கு பாதுகாப்புக் கவசம் போட வேண்டும் என்று தொழிற்துறை பாதுகாப்பு விதி கூறுகின்றது. ஆனால், அதையெல்லாம் யார் பின்பற்றுகிறார்கள்?
அந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாலும், வேலை இயந்திரகதியில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மெஷின் போல இயங்க வேண்டும். இது ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையிலான போட்டி. ஒரு தொழிற்சாலையில் இருப்பதைப் போன்று, ரப்பர் பட்டி ஓடிக் கொண்டிருக்கும். ஒரு ரோபோ இயந்திரம் அதை இயக்கிக் கொண்டிருக்கும்.
இணையக் கடைகளில் வாங்கப்பட்ட பொருட்களின் பார்சல்கள், வண்டி வண்டியாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். சிறிதும் பெரிதுமான பார்சல்களை (அதிகபட்ச நிறை இருபது கிலோ) ஒவ்வொன்றாக எடுத்து பட்டியில் போட வேண்டும். மறுபக்கத்தில் தானாகவே தரம் பிரித்து வரும் பார்சல்களை எடுத்து, பிரதேச வாரியாக அடுக்க வேண்டும். முகவரிகளை ஸ்கேன் பண்ணி தரம் பிரிப்பதை மட்டுமே ரோபோ இயந்திரம் செய்கிறது. மற்றதை எல்லாம் மனிதர்கள்தான் செய்ய வேண்டும்.
ஒரு நிமிடத்தில் எத்தனை பார்சல்கள் போடுகிறோம் என்பதை நேரக் கணிப்பு மணிக்கூடு வைத்து அளப்பார்கள். நிமிடத்திற்கு சராசரி ஐம்பது பார்சல்கள் தூக்கிப் போட வேண்டும். எமது செயற்படும் வேகம் குறைந்தால் பட்டி ஓடுவது நின்று விடும். அப்படி நின்றால் மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்க வேண்டும்.
அதனால், நாம் ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எம்மிடம் இருந்து கூடிய அளவுக்கு உழைப்பை பிழிந்து எடுப்பதற்காக, வேண்டுமென்றே ரப்பர் பட்டி வேகமாக ஓட விடப்படுவதாக பின்னர் அறிந்து கொண்டேன்.
இது எனது அனுபவம். அண்மையில் பத்திரிகையில் ஒரு தகவலைக் கண்டேன். தரம் பிரிக்கும் நிலையத்தில் எட்டு வருடங்களாக மேற்பார்வையாளர் வேலை செய்து வந்த ஒருவர் வேலையை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தான் அங்கு வேலை செய்யும் பொழுது “அடிமை மேய்ப்பர்” போன்று உணர்ந்திருக்கிறார்.
அமெரிக்காவில் அடிமைகள் வைத்திருந்த காலத்தில், அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க விடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்க ஒரு மேற்பார்வையாளர் இருந்தார். அவரை “அடிமை மேய்ப்பவர்” என்று சொல்வார்கள். அது நூறாண்டுகளுக்கு முந்திய வரலாறு என்றுதான் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நினைக்கிறார்கள்.
இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மைதான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?
ஒரு நிமிடம் கூட இடத்தை விட்டு நகர முடியாது. இடையில் சிறுநீர் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்கவே வேண்டாம். எமது இடத்திற்கு இன்னொரு தொழிலாளியை பிடித்து விட்டுத்தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். அதுவும் எப்போதும் சாத்தியமில்லை.
இதனால் வேலை நேரத்தில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். ஓய்வில்லாத வேலை காரணமாக வியர்த்துக் களைப்படைந்து, உடலில் நீர்த் தன்மை வற்றி, தாகம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.
நிச்சயமாக இப்படியான இடங்களில் பலர் நீண்ட காலம் வேலை செய்வதில்லை. அடிக்கடி சுகயீன விடுப்பில் நிற்கிறார்கள். அதனால்தான் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை நிலவும் காலத்திலும் அங்கே வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்பவர்களில் அரைவாசிப் பேராவது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த தொழிலாளர்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை செலுத்தத் தயாரான மலிவு விலை தொழிலாளர்கள் அங்கிருந்து வருகிறார்கள்.
தபால் தரம் பிரிக்கும் நிலையத்தில் ஆள் பற்றாக்குறையா? போலந்தில் உள்ள முகவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு வந்து, திங்கட்கிழமை வேலை தொடங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வேலைக்கு வருவோர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், இந்நாட்டு சட்ட விதிகளை அறிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். அதற்குள் வேண்டியளவு சுரண்டி விடலாம். இணைய வணிகம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், நவீன அடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கமும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றது.
தற்காலத்தில் தபால் சேவையால் இலாபம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, முத்திரை விலையை கூட்டி வைத்திருக்கிறார்கள். பார்சல் அனுப்பும் கட்டணமும் மிக அதிகம். இருந்த போதிலும் தபால் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பது மட்டும் குறையவில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களை சுரண்டி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். மறுபக்கம் தலைமை நிர்வாகிகளின் ஊதியமும், இலாபத்தில் அவர்களது பங்கும் அதிகரிக்கின்றது.
பொது மக்கள் தபால்கள் அனுப்புவது குறைந்து விட்டதால், “நட்டத்தில்” இயங்குவதாக எதிர்பார்க்கப்படும், தபால் நிறுவனம் சம்பாதிக்கும் நிகர இலாபம் வருடத்திற்கு ஐந்து சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிமைத் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப்படும் உழைப்புதான் இலாபமாக மாறுகின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர் . வெகுசன ஊடகப் பிரச்ச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்
ஃபிரட் எங்ஸ்ட் (Fred Engst) (சீனப்பெயர் யாங் ஹெபிங் Yang Heping) உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் (Onurcan Ulker) 2017 ஏப்ரல் 7-ம் தேதியன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார். பிரட் எங்ஸ்டின் தாய் ஜோன் ஹின்டன் ஒரு அணு விஞ்ஞானி. அமெரிக்காவின் முதல் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்.
ஃபிரட் எங்ஸ்ட்
அணுகுண்டைக் காட்டி ஜப்பானை அச்சுறுத்துவது மட்டுமே அமெரிக்கா அரசின் நோக்கம் என்ற அவருடைய அப்பாவித்தனமான நம்பிக்கையைத் தகர்த்தது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு. அந்தக் கணம் முதல் அமெரிக்காவில் அணுஆயுத எதிர்ப்பு – போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் 1948-இல் புரட்சியின் தருவாயில் இருந்த சீனத்துக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். அங்கே பால் பண்ணைத் தொழில் வல்லுநரான எர்வின் எங்ஸ்டை மணந்தார்.
1952-இல் இவர்களுக்குப் பிறந்த மகன் ஃபிரட் எங்ஸ்ட். இவர் பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலராக இருந்தார். பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆலைத்தொழிலாளியாக சீனத்தில் பணியாற்றி விட்டு, 1974-இல் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுமார் 12 ஆண்டு காலம் பல ஆலைகளில் பணியாற்றிக் கொண்டே படித்துப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2007-இல் சீனத்துக்குத் திரும்பி, பெய்ஜிங் பல்கலைக்கழகமொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
ஒனுர்கான் உல்கர் துருக்கியில் பிறந்தவர். அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர் சீனா சென்று அங்கே பீகிங் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் சீனத்தில் பணிபுரிகிறார்.
எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.
ஃபிரட் எங்ஸ்ட் : நான் 1952-இல் பெய்ஜிங்கில் பிறந்து, சீனாவின் பழங்கால தலைநகரான ஷி-ஆன்-ல் (Xian) வளர்ந்தேன். 1966-இல் கலாச்சாரப் புரட்சி தொடங்குவதற்கு முன்பு, எங்கள் குடும்பம் இடமாற்றப்பட்ட போது நான் திரும்பவும் பெய்ஜிங்குக்கு வந்தேன். என் வாழ்க்கையின் முதல் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை சீனாவில் கழித்தேன். பெரும்பகுதி ஷி-ஆன்-ல் கழித்தேன். அந்தக் காலத்தின் கடைசி எட்டு ஆண்டுகள், கலாச்சாரப் புரட்சியின் உச்சகட்ட காலத்தில், பெய்ஜிங்-கில் இருந்தேன்.
அந்தக் காலத்தில் மற்ற இடங்களில் இருந்த அளவிற்கு குழப்பமான நிலையில் பெய்ஜிங் இல்லை. நடுநிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஐந்தாண்டு நான் என்னுடைய சக மாணவர்களோடு தொழிற்சாலையில் வேலை செய்தேன். என்னுடைய மற்ற சில சகாக்கள் கிராமப்புறத்துக்கு வேலை செய்யப் போனார்கள். நானும் அவர்களோடு போக விரும்பினேன். ஆனால், நான் ஒரு வெளிநாட்டுக்காரனாக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பிறகு, என்னுடைய முயற்சியால், என்னுடைய தம்பி, தங்கை போக முடிந்தது.
சோசலிச சமூகத்தைக் கட்டியமைப்பதில் மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்ட தோழ்ர் மாவோ சே துங்.
பின்னர் 1974-இல் நான் அமெரிக்காவுக்கு போய் அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கழித்தேன். ஆனால், அடிக்கடி சீனாவுக்குத் திரும்பி வந்தேன். பெய்ஜிங் -ல் நடந்த 1989 நிகழ்வுகளுக்குச் சற்று முன்னர் 1988-ம் ஆண்டில் ஒரு முழு ஆண்டு இங்கேயே கழித்தேன். பின்னர் 2000-ஆம் ஆண்டில் இன்னொரு ஆண்டு இங்கே ஆசிரியராகக் கழித்தேன். இடைப்பட்ட ஆண்டுகளில் என்னுடைய பெற்றோர்களையும் நண்பர்களையும் பார்க்க அடிக்கடித் திரும்பி வந்தேன்.
கடைசியில், 2007-இல் சீனாவுக்கே வந்துவிட முடிவு செய்தேன். அப்போதிருந்து இங்கேயே ஆசிரியராகவும், என்னுடைய ஆராய்ச்சியை நடத்திக் கொண்டும் இருக்கிறேன். மாவோ காலத்திய அரசியலையும் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்வது எனது வாழ்நாள் இலக்கு. அந்த அடிப்படையில், கடந்த பத்து வருடங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன என்று என்னால் கூற முடியும்.
மையமான கேள்வி – புதிய சோசலிச சமூகத்தைக் கட்டுவது எப்படி?
ஒனுர்கன் உல்கர்: அப்படி என்றால், நீங்கள் மாவோயிச சீனாவில் பல காலம் இருந்திருக்கிறீர்கள். மேற்குலகைச் சேர்ந்த மாவோயிச விமர்சகர்கள், மாவோயிசமானது மக்களை அதிகப்படியாக அரசியல்படுத்திவிட்டது என்றும் தொடர்ந்து உறுதியின்மையைப் பரப்பி, நிறுவனங்கள் எதுவும் நிலைபெற முடியாமல் கெடுத்து விட்டது என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். மாவோயிச சீனாவில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது? அதிகப்படி என்று சொல்லப்படும் பொது மக்களுடைய அந்த அரசியல்மயமாக்கம் ஒருவகையான குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததா?
ஃபிரட் எங்ஸ்ட் : இந்தக் கேள்வி சிக்கலானதுதான். விசயத்தை இப்படிச் சொல்லலாம். நீங்கள் அடக்குமுறையை நியாயப்படுத்தப் போகிறீர்களா, அல்லது, அடக்குமுறையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்யப் போகிறீர்களா? வேறு வார்த்தைகளில் சொன்னால், பழைய ஆதிக்க சக்திகளைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் புதிய ஆதிக்க சக்தியாக மாறப் போகிறீர்களா, அல்லது, அடக்குமுறை அமைப்பையே மொத்தமாக அழிக்க விரும்புகிறீர்களா? என்பதுதான் மையமான பிரச்சினையாக இருந்தது.
பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தவர்கள் புரட்சிகர அணிகளில் இருந்தார்கள். ஆனால், அடக்குமுறை அமைப்பு என்ற ஒன்றே இருக்கக் கூடாது எனப் புரிந்து கொண்டு அவர்கள் எதிர்க்கவில்லை. ஆகையினால், புரட்சியாளர்கள் ஆட்சியாளர்களாக மாறியதும் புதிய பிரச்சனை முளைத்தது. அவர்கள் மக்களின் பெயரால், மக்களோடு மக்களாக இருந்து கொண்டு ஆளப் போகிறார்களா அல்லது இன்னொரு புதிய ஆதிக்க சக்தியாக மாறப் போகிறார்களா? புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறுவதை எப்படித் தடுப்பது என்பது தான் மையமான பிரச்சனையாக இருந்தது.
நகர்புற படித்த இளைஞர்கள், தங்களைப் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டில் மறுவார்ப்பு செய்துகொள்ள கிராமப்புறங்களுக்குச் செல்லுமாறு அறைகூவல் விடும் சித்திரச் சுவரொட்டி.
1949-லிருந்து 1956 வரையிலான முதல் ஏழு ஆண்டுகளில், விவசாயத்தைக் கூட்டுப் பண்ணைகளாக மாற்றுவதில் மாவோவின் சீனா அருமையான வெற்றியடைந்தது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. தனியார் தொழிற்சாலைகளை அரசு நிறுவனங்களாகவும், அரசு – தனியார் கூட்டு நிறுவனங்களாகவும் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. அதாவது, அடிப்படையில், அவர்களால் முதலாளித்துவ – அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றியமைப்பதை நிறைவு செய்ய முடிந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து உடனடியாகவே, தொழிற்சாலையிலும் நகரங்களிலும் பிராந்தியங்களிலும் மக்கள் சில பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள். அதனையொட்டி வேறு சில கேள்விகள் எழுந்தன.
முரண்பாடுகளைக் கையாள்வதில் அதிகாரவர்க்க அணுகுமுறையைக் கடைப்பிடித்ததன் காரணமாகத் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு உள்ளது. ஹெனான் பிராந்தியத்தில் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலையேபடாமல், விமானநிலையம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று இராணுவம் விரும்பியது. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, தடாலடியாக விமானநிலையத்தைக் கட்டி விடலாம் என்று இறங்கினார்கள். விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. எதிர்த்தார்கள், சாலையை மறித்தார்கள். மாவோவின் தொகுப்பு நூல்களில் 5-வது தொகுதியில் இந்த எடுத்துக்காட்டு உள்ளது.
ஒனுர்கன் உல்கர்: மாவோ இந்த விசயத்தில் டெங் சியாவ்பிங் (Deng Xiaoping) மேல் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார்…
ஃபிரட் எங்ஸ்ட் : ஆம். அதைச் செய்தது, டெங் சியாவ்பிங் தான். இந்த மாதிரி பல உதாரணங்கள் உள்ளன. எனவே, பிரச்சனை இதுதான். நிர்வாகம் செய்பவர்களுக்கும் நிர்வாகம் செய்யப்படுபவர்களுக்கும் இடையே தவிர்க்க முடியாமல் அன்றாடம் தோன்றும் முரண்பாடுகளை எப்படிச் சமாளிப்பது? உற்பத்தியை எப்படிக் கொண்டு செல்வது? என்ன செய்வது என்பதற்குப் பல வேறுபட்ட கருத்துகளும் அபிப்ராயங்களும் இருந்தன.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்வது? மக்களுடைய கருத்துக்குக் காது கொடுத்து, தீர்வு கண்டுபிடித்து, ஒருமித்த கருத்தை அடைய முயற்சிப்பதா அல்லது முடிவுகளை மக்கள் மீது அடாவடியாக திணிப்பதா? இந்தக் கேள்விகள் உற்பத்தி நிகழ்வுப்போக்கை எப்படி ஜனநாயகப்படுத்துவது என்பது தொடர்பானவை.
சோசலிசக் காலகட்டத்தில் இரண்டு வகையான மிகத் தெளிவான முரண்பாடுகள் இருந்தன என்பது 1956 வாக்கில் தெளிவாகி விட்டது. ஒரு பக்கம், பழைய நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் நிலத்தின் மீதும் தொழில் நிறுவனங்கள் மீதும் தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்ட ஆத்திரத்தில் இருந்தார்கள். சோசலிசத்தை ஓழித்துக்கட்ட விரும்பினார்கள்.
மறுபக்கத்தில், தினசரி உற்பத்தியை எப்படி நடத்துவது தொடர்பான சின்னச் சின்ன விசயங்கள் பற்றிய முரண்பாடுகள். ஒரு பள்ளியையோ பண்ணையையோ நிர்வாகம் செய்வது எப்படி? நிர்வாகிகளுக்கும் நிர்வாகம் செய்யப்படுபவர்களுக்கும் இடையில் வரும் மோதல்களை எப்படிக் கையாள்வது? நிர்வாகிகளுடைய அதிகாரத்துக்கு என்ன வரம்பு?
இவைதான் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று அப்போது அழைக்கப்பட்டன. ஏனெனில், இந்த முரண்பாடுகளில் இரு தரப்பினருக்கும் எதிரெதிரான நோக்கங்கள் இல்லை. அவர்களின் நோக்கம் ஒன்றுதான். அணுகுமுறையில் தான் வேறுபட்டார்கள். ஒரு தொழிற்சாலையை மேலும் சிறப்பாக, மேலும் திறன்கூடியதாக எப்படி நடத்துவது? சீனாவை ஏழ்மையிலிருந்தும் பின்தங்கிய நிலையிலிருந்தும் எப்படி மீட்பது? அதை ஒரு தொழில்மயமான நாடாக எப்படி மாற்றுவது? இவை மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள். இவற்றை எப்படிக் கையாள்வது?
புதிய அதிகாரிகளும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களும் மக்களை அடாவடியாக நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது 1956 வாக்கில் பளிச்சென்று தெரியத் தொடங்கிவிட்டது. அதனால்தான் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை விமரிசிப்பதற்கும், கட்சியைத் திருத்துவதற்கும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற இயக்கத்தை மாவோ தொடங்கினார். இப்படித்தான் பிரச்சினை வெளியே வந்து நாறத்தொடங்கியது.
அடக்குமுறை அமைப்பையே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல், பழைய அடக்குமுறையாளர்களை எதிர்க்கும் நோக்கத்துக்காக மட்டும் புரட்சியில் பங்கேற்றவர்களும் சரி, புதிய ஆட்சியாளர்களாக அதிகாரம் பெற விரும்பியவர்களும் சரி, இந்தச் சீர்திருத்த இயக்கத்தினால் அரண்டு போனார்கள். தங்களை விமர்சிப்பவர்களின் மீது தாக்குதலைத் திருப்பிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
இந்தச் சூழல்தான் சிலருக்குக் ‘குழப்பமான’ நிலையாகத் தெரிகிறது. ஏன் இந்த சீனர்களால் ‘வழக்கமான’ முறையில் வேலைகளை நடத்த முடியவில்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். ‘வழக்கமான’ வழி என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழி. ஆட்சி செய்பவர்களின் வழி. இத்தகையோர்தான் சீனாவில் எதற்காக இவ்வளவு அரசியல் கொந்தளிப்புகள் நிகழவேண்டும் என்று யோசிக்கிறார்கள்.
சீனா ஏன் பழைய (புரட்சிக்கு முந்தைய- மொர்) வழிமுறைக்கே திரும்பக் கூடாது என்பதுதான் அவர்கள் எழுப்பும் கேள்வியின் உண்மையான பொருள்.
தொழிற்சாலைகளில் இருக்கும் மேலாளர்களை அவர்களுக்குரிய முறையில் நிர்வாகம் செய்வதற்கு ஏன் அனுமதிக்கவில்லை? அந்த நிர்வாகிகளை ஏன் விமர்சிக்க வேண்டும்? அவர்களின் அணுகுமுறையை ஏன் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கேள்வி. உண்மையில் நிர்வாகிகள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்ள மிகவும் தயங்கினார்கள். விமர்சனங்கள் அவர்களைப் பயமுறுத்தின. விமர்சனங்கள் அவர்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கின. இதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இருந்த மேல்தட்டுப் பிரிவினர் இந்தச் சீர்திருத்த இயக்கத்தை வலதுசாரி எதிர்ப்பு இயக்கமாக 1957-ல் மாற்றினார்கள். இது ஒரு 180 டிகிரி திருப்பமாகும். இதைப் பற்றியும் நான் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
இதுதான் மாவோவின் கடைசி இருபது ஆண்டுகளைப் புரிந்து கொள்வதற்கான மையப்புள்ளி என்று நினைக்கிறேன். இந்த முரண்பாடுகள் எப்படித் தீர்க்கப்பட்டன?
நோயாளியைக் காப்பாற்றுவதற்கு நோயை குணப்படுத்துவது என்பதுதான் முதல் அணுகுமுறை. 1940-களின் ஆரம்பத்தில் துவக்கப்பட்ட ஏனான் சீர்செய் இயக்கத்தின் போது இந்த முறைதான் பயன்படுத்தப்பட்டது. சீர்செய்யும் நடவடிக்கைகளின் மூலம் முரண்பாடுகளைக் களைவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்த அடிப்படையில், கட்சித் தலைமையை விமர்சிக்க பெரிய எழுத்து சுவரொட்டிகள், மக்கள் திரள் கூட்டங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
கலாச்சாரப் புரட்சியின்போது கட்சித் தலைமையை விமர்சிக்க முன்னெடுக்கப்பட்ட பெரிய எழுத்து சுவரொட்டி இயக்கம். (கோப்புப் படம்)
மற்றொரு முறையானது இடுப்புக்குக் கீழே தாக்குவது. குறிப்பிட்ட சிலரை எதிரி என்று அடையாளப்படுத்தி, கட்சிக்கு வெளியில் உள்ள பொதுமக்களின் மூலம் அவர்களைத் தாக்குவது. இது மக்களைத் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்வதாகும். எதிர்ப்புரட்சிக்காரர்கள் என்று சிலரைக் குற்றம் சாட்டி, அவர்களை எதிரியாக அடையாளப்படுத்தி, அவர்களைத் தாக்குவதற்கு மக்களைத் தூண்டிவிடும் வழிமுறையாகும். இங்கே குறிக்கோள் நோயாளியை காப்பாற்றுவதற்கு நோயை குணப்படுத்துவது அல்ல. மாறாக, எதிர்த்தரப்பை தாக்கி வீழ்த்துவதே நோக்கம். வலதுசாரி எதிர்ப்பு இயக்கம் பின்பற்றிய வழிமுறையும் இதுதான்.
ஆகையினால், ஒரு புதிய சோசலிச சமூகத்தை எப்படிக் கட்டுவது என்ற கேள்வி தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டின் வழியாகத்தான் நீங்கள் கேட்ட கேள்வியைப் பார்க்கவேண்டும். அவ்வாறு பார்க்கவில்லையெனில், மாவோ காலத்தில் நடந்த விசயங்களெல்லாம் முட்டாள்தனமாகத்தான் தெரியும். உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஒனுர்கன் உல்கர்: அப்படி என்றால் இது பொதுமக்களுடைய அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பிரதிபலித்தது ?
ஃபிரட் எங்ஸ்ட் : பொதுமக்களுடைய வாழ்க்கையில் அது நேரடியாகப் பிரதிபலித்தது. உதாரணத்துக்கு ஒரு தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்களேன். தலைமைப் பொறுப்பில் இருப்பவர், ஒரு பட்டறையின் மேலாளர் உற்பத்தியை எப்படி நடத்துகிறார்? உற்பத்தி குறைந்தால் என்ன செய்கிறார்?
முதலாளித்துவ முறை எளிமையானது. பிரம்பு, இல்லாவிட்டால் கரும்பு. கடுமையாக வேலை செய்யாவிட்டால் துரத்தி விடுவேன்… கஷ்டப்பட்டு வேலை செய்தால் கொஞ்சம் ஊக்கத்தொகை தருவேன். நான்தான் பாஸ், நான் சொல்வதை மாத்திரம் கேள். உனக்குச் சம்பளம் கொடுப்பது உடலுழைப்புக்குத்தான். அறிவைப் பயன்படுத்தி ஆலோசனை சொல்வதற்கல்ல. இதுதான் முதலாளித்துவ அணுகுமுறை.
ஆனால், தொழிலாளி வர்க்கம்தான் சமூகத்தின் தலைவன் என்ற சூழலில், உற்பத்தி செயல்முறையை எப்படி நிர்வகிப்பது? உற்பத்தியில் ஒரு பிரச்சனை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? தொழிலாளர்களைக் கூட்டி என்ன பிரச்சனை, அதை எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். உழைக்கும் வர்க்கம்தான் சமூகத்தின் தலைவன் எனும்போது, உற்பத்தியில் தோன்றும் பிரச்சனையைத் தீர்ப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே அவசியமானதாக இருக்கிறது.
அவ்வாறு பிரச்சனைகளைச் சமாளித்து அவர்கள் மேலே வந்து விட்டால், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பிரம்மாண்டமான ஆற்றல் தொழிலாளி வர்க்கத்திடம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் செய்வதனைத்தும் நம்முடைய சொந்த நன்மைக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால், அது மக்களுடைய படைப்பாற்றலை வரம்பற்ற வகையில் கட்டவிழ்த்து விடும். கொஞ்சம் தானியங்களையும், வெறும் துப்பாக்கிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஜப்பானியர்களையும் தேசியவாதிகளையும் மக்கள் விடுதலைப் படையால் எப்படித் தோற்கடிக்க முடிந்தது? ஏனென்றால், அவர்களுக்கு ஒரு பொது இலட்சியத்தின் மேல், அதாவது அடக்குமுறையைத் தூக்கியெறிய வேண்டும் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
ஹெய்லாங்லியால் டெய்லி என்ற பத்திரிக்கையின் ஊழியர்கள், பிராந்திய கட்சிக் கமிட்டியால் நியமிக்கப்பட்ட தமது தலைவரை முதலாளித்துவப் பாதையாளராக அம்பலப்படுத்தி நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)
அன்றாட தொழிற்சாலை வேலையிலும் இதே விதிதான் வேலை செய்கிறது. தலைமையில் இருப்பவர்கள் உற்பத்தித் திறன் குறைபாட்டிற்கு, அதற்கான மூல காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல், தொழிலாளர்களையே குறை கூறிக் கொண்டு இருந்தால், தொழிலாளர்கள் இயல்பாகவே உரிமையற்றவர்களாக உணர்வார்கள். தொழிலாளர்கள் அவ்வாறு உரிமையற்றவர்களாக, அதிகாரமில்லாதவர்களாக உணர்ந்தால், அவர்களிடம் தளர்வு தோன்றும். முன்முயற்சி எடுக்க மாட்டார்கள்.
உதாரணமாக, அவர்கள் ஏதேனும் பிரச்சனையைக் கண்டால், ஒரு எந்திரம் பழுதடைவதைக் கண்டால், அதைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். அது நம்முடைய பிரச்சனையல்ல என்று நினைப்பார்கள்.
ஆனால், நிறுவனம் நம்முடையது என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தால், தலைமையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்ற விசயத்தில் அவர்களால் ஆலோசனை கூற முடிந்தால், அந்த ஆலோசனைகள் உன்மையிலேயே பரிசீலிக்கப்பட்டால், தங்கள் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக அவர்கள் உண்மையிலேயே உணர்ந்தால், அப்போது பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில் அவர்களது திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.
இன்றும் பொலிவுடன் காட்சியளிக்கும் தா-ட்சாய். மாவோ உருவாக்கிய ஒரு மாதிரி கிராமம்.
இந்த அடிப்படையில் நமக்கு நேர் எதிரான உதாரணங்களும் இருக்கின்றன. தா-ட்சாய் (Dazhai) மாவோ உருவாக்கிய ஒரு மாதிரி. தா-ட்சாய் எனக்கு மிகவும் பழக்கமான ஒன்று. தா-ட்சாய்க்கு நான் பல முறை போயிருக்கிறேன். ஆறு மாதங்கள் அங்கே தங்கியிருக்கிறேன். விவசாயிகளுடன் வேலை செய்திருக்கிறேன். அதன் சுற்று வட்டார இடங்களையும் பார்த்திருக்கிறேன். தா-ட்சாயில், ஒரு வலிமையான தலைமை விவசாயிகளைத் திரட்டி, அவர்களைத் தமக்குள் விவாதிக்கச் செய்து, அந்நிய முதலீடோ எந்திரங்களோ இல்லாமல், தமது கடின உழைப்பினால் மட்டுமே, பின்தங்கிய விவசாயத்தை எப்படி மாற்றியமைக்க முடியும் என்பதைச் சாதித்திருக்கிறது. இதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இது தன்னளவிலேயே ஒரு பெரிய காவியமாகும்.
சோசலிசப் பாதையில் சென்று கொண்டிருந்த சீனத்தை முதலாளித்துவ நாடாகச் சீரழித்த டெங் சியாவ்பிங். (கோப்புப் படம்)
இதற்கு மாறாக, சீர்திருத்தத்திற்குப் பிறகு டெங்கினால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சியாவ்-காங்-சுன் (Xiaogangcun) கிராமத்தின் மாதிரியும் நம்மிடம் இருக்கிறது. தங்களுக்குள் சதாகாலமும் சண்டையிட்டுக் கொண்டிருந்த 18 குடும்பங்கள் அந்தக் கிராமத்தில் இருந்தன. உங்கள் குடும்பத்திற்குக் குழுவின் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் போது பொதுச்சொத்தைச் சுருட்டுவதில் மும்மரமாக இருப்பீர்கள். நான் உங்கள் அதிகாரத்தை அடியறுக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். அடுத்த தேர்தல் வரும்போது, நான் கூட்டுப்பண்ணையின் தலைமைப் பொறுப்புக்கு வருவேன். இம்முறை நான் கையாடல் செய்ய முயற்சிப்பேன்.. நீங்கள் எனது அதிகாரத்திற்கு எதிராகப் போராடுவீர்கள். இப்படி நம் பாத்திரம் மாறிக்கொண்டிருக்கும். ஆனால், ஒரு கூட்டுப் பண்ணை இந்த முறையில் நீண்டநாட்களுக்கு உயிரோடு இருக்க முடியாது. சீர்திருத்தத்திற்குப் பிறகு, டெங் சியாவ்பிங் சியாவ்-காங்-சுன் கிராமத்தை சீனாவுக்கு மாதிரியாக்கினார்.
ஏதோ சிறு உடைமை விவசாயப் பொருளாதாரத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளாய் சீனர்கள் அனுபவித்ததே இல்லை என்பது போல! அது பற்றி பல ஆயிரம் ஆண்டுகளாக ஏதும் தெரியாததைப் போல! இது மிகவும் கேலிக்குரியது.
எனவே, இது தான் வேறுபாடு… தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதற்கும் முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Paypal
$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் பெரியார் பாதை. எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. கடப்பவர் எவரையும் ஒருகணம் திரும்பி பார்க்க வைக்கும் கலைநயம்… சென்னையில்கூட இப்படி விதவிதமான மண்பாண்டங்கள் உண்டா? என்று வியக்கவைக்கும் நேர்த்தி, வாருங்கள் அருகில் சென்று பார்ப்போம். மண்பாண்டங்களை மட்டுமல்ல; அதைச் செய்யும் மனிதர்களையும்…
திருமதி. உஷா வடிவேல். மண் பானைகள் மற்றும் கலைபொருட்கள் விற்கும் கடையின் உரிமையாளர்.
ஏறக்குறைய மூணு தலைமுறையா மண்பானை தொழில செஞ்சிக்கிட்டு இருக்கோம். மண்பானை, முகூர்த்த பானை, தீபத்துக்கு அகல், நவராத்திரிக்கு கொலு செய்வோம். சென்னையை பொருத்த வரைக்கும் பானை வாங்கணும்னா எங்களோட நினைவு தான் எல்லோருக்கும் வரும். அந்த அளவுக்கு இந்த இடத்துல மக்களோட நம்பிக்கையை பெற்று இருக்கோம்.
ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி. களிமண்ணும் மணலும் கலந்து செய்யப்பட்ட மண்பானை. இந்த பானையை செய்வதற்கான வசதி சென்னையில் இல்லை என்பதால் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து களிமண் எடுக்கிறோம். ஐந்து லோடு ஏற்றி வர எல்லா கிராமங்களுக்கும் கோவில் டொனேசன் கொடுக்கணும். தலையாரி முதல் தாசில்தார் வரை கவனிக்கணும். களிமண்ணை தூளாக உடைத்து காயப்போடுவோம். உலர்ந்த களிமண்ணை தண்ணீரில் ஊற வைத்து அதனோடு மணல் உள்ளிட்ட பொருட்களை கலந்து பானை செய்வோம். பானை மேலே கொஞ்சம் செம்மண் பூசி சூளையில் எரியப்போடுவோம். அதன் பிறகே இந்த அழகிய வடிவமைப்பு பானை கிடைக்கும்.
சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் குவளை, தரமானது. இதன் விலையும் அதிகம். இதன் கூடுதல் சிறப்பு, விரைவாக தண்ணீர் ஜில்லென்று ஆகிவிடும், நீண்ட நேரம் ஜில்லென்று நீடிக்கும், தண்ணீர் கசியாது. வழக்கமான சூளையிலிருந்து வேறுபட்டு நவீன முறையில் முறையில் சுட்டெரிக்கிறோம். இதே தரத்துடன் பானையை செய்யலாம். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.
சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட அழகிய மண் குதிரைகள்.
மோல்டிங் முறையில் செய்யப்பட்ட ஒட்டகம். அதன் மேலுள்ள அலங்கார மணிகள் கைவினைஞர்களின் கைவண்ணம்.
மண்பானை குக்கர். நாங்க 1800 ரூபாய்க்கு விற்கிறோம். ஆன்லைன்ல எங்களை விட அதிகமா விக்கிறாங்க. மண் பாண்டன்களால் ஆன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு பொறுமை வரும், படபடப்பு குறையும். காரணம் பானை உடைந்து விடும் எச்சரிக்கை. மண்பானையில் சமைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
சாப்பிடும் தட்டு முதல் அஞ்சரை டப்பா வரை 35 வகையான பாத்திரங்கள் களிமண்ணால் ஆனவை.
எங்க கிட்ட வருபவர்கள் கருப்பு சட்டி அதிகம் கேட்கிறார்கள். அதனால் சூளையில் நன்கு தீய்ந்த பிறகே எடுத்து விற்பனை செய்கிறோம்.
வடநாட்டில் இருந்து அதிகம் பேர் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளதால் அவர்கள் வணங்கும் கடவுள் சிலையை கேட்கிறார்கள். இதற்காகவே கல்கத்தாவில் இருந்து கைவினை பொருட்கள் செய்யும் ஐந்து குடும்பங்களை இங்கேயே அழைத்து வந்துள்ளோம். வடநாட்டவர்களின் சிலைகளை செய்து கொடுக்கிறோம். எங்களிடம் ஒரு ரூபாய் அகல் விளக்கிலிருந்து ஆறாயிரம் ரூபாய் அய்யனார் சிலை வரை உள்ளது.
திரு. ரங்கநாதன்,மண்பாண்டங்கள் விற்பவர்.
கிட்டத்தட்ட ஐம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல தான் வித்திட்டிருக்கேன். சொந்தமா ஒரு வீடு கூட வாங்க முடியல. பானை, பூந்தொட்டி, மாட்டுத்தொட்டி விக்குறேன். விழுப்புரம், கடலூர்,மானாமதுரை போன்ற இடத்துல இருந்து வாங்கறேன். தனியா செய்ய ஆள் பலமோ, பண பலமோ இல்லை. ஏற்கனவே கார்பரேசன் கொடச்சல். அதையே சமாளிக்க முடியாத நிலமையில இருக்கேன்.
வள்ளியம்மாள்,மண்பாண்டங்கள் விற்பவர்.
நான் பெரிய வியாபாரி எல்லாம் இல்லை. எங்க மாமனார், மாமியார் காலத்துல இருந்தே இங்க விக்கிறேன். எனக்கு நாலு பசங்க இருந்தும் பிரயோஜனம் இல்ல. கடைசி காலத்துல அதுங்களுக்கு தொல்லையா இருக்கக்கூடாதுன்னு இந்த பானைங்களை வித்துகிட்டு இருக்கேன். கடவுள் விட்ட வழி. அவர் மேல பாரத்த போட்டுட்டேன்.
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னையில் சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தோழர் இல.தெய்வீகன் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் இல.பழனி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மே தின வரலாறு குறித்தும் அதன் தேவை இன்றுவரை உலகம் முழுவதும் இருந்து வருவதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசிய தோழர் இல.பழனி, மேலும், தொழிலாளர் பிரச்சினைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் துறைசார்ந்த விசயங்களிலிருந்து முதலாளி, போலீசு, தொழிலாளர் துறை, நீதிமன்றம் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை பல்வேறு ஆதாரங்களிலிருந்து அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல; மாணவர்கள், விவசாயிகள், என உழைக்கும் மக்கள் அனைவருக்குமே இந்த அரசமைப்பு எதிரானதாக அமைந்திருப்பதையும் எடுத்துரைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தனியார் சுயநிதி பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்கள். வரம்பற்ற வேலை நேரம்; உரிமைகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளாக நிர்வாகத்தால் நடத்தப்படுவதற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பியவர்கள். சங்கம் அமைத்ததற்காக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள்; வேலை பறிக்கப்பட்டவர்கள்.
வேலை பறிப்பு மற்றும் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சங்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், நிர்வாகம் நடத்திய உள்துறை விசாரணைகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகள், நிர்வாகத்தின் கையாளாகவே நின்று அவர்கள் வழங்கிய தொழிலாளர் விரோத தீர்ப்புகள்… உரிமைக்காகத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் போது போலீசும், நீதித்துறையும் தொழிலாளர்களை கையாண்ட விதம் என நுனி முதல் அடிவரை அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதை தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்தவர்கள்.
தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்கி, புதிய ஜனநாயகத்தைப் படைக்க மே நாளில் சூளுரைத்தனர் இத்தொழிலாளர்கள்.
1 of 4
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.
மார்க்ஸ் பிறந்தார் – 12 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
5. “தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது” (தொடர்ச்சி)
டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலும் அதற்கென்று தயாரிக்கப்பட்ட ஆரம்பக் கட்டுரைகளிலும் மார்க்ஸ் டெமாக்கிரீடஸ், எபிகூரஸ் மற்றும் ப்ளுடார்கை எவ்விதமாக வர்ணிக்கிறார் என்பது இக்கண்ணோட்டத்தின்படி சுவாரசியமானதாகும். இத்தத்துவ ஞானிகளைப் பற்றி அவருடைய அணுகுமுறையில், அவர்களிடம் அவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதில் இளம் மார்க்சின் ஆளுமையின் கூறுகள் வெளிப்படுகின்றன.
டெமாக்கிரீடஸ், எபிகூரஸ் என்ற இரண்டு தத்துவஞானிகளின் தத்துவங்களும் ஒரே படித்தானவை அல்லது அநேகமாக ஒரே படித்தானவை என்று எப்பொழுதுமே கருதப்பட்டிருக்கின்றன. இக்கருத்து சரியல்ல என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார். அவர்களிருவரும் அணுவாதக் கொள்கையை உருவாக்கி ஒரே விதமாக அதை வளர்த்திருந்த போதிலும் இத்தத்துவத்தின் உண்மை, நம்பத்தக்க நிலை, கையாளுதல் ஆகியன பற்றிய ஒவ்வொன்றிலும் அவர்கள் எதிரும் புதிருமான நிலையில் இருக்கிறார்கள். விஞ்ஞானத்தைப் பற்றி அவர்களுடைய அணுகுமுறை கூட எதிராகவே இருந்தது.
டெமாக்கிரீடஸ்
டெமாக்கிரீடஸ் தன்னுடைய வாழ்க்கை மற்றும் தேடல்களின் கோட்பாட்டைப் பின்வருமாறு உரைத்தார்: “பாரசீகத்தின் மகுடத்தை அடைவதைக் காட்டிலும் ஒரு புதிய காரண காரியத்தைக் கண்டுபிடிப்பது எனக்கு மேலானது!”(1) அவர் எல்லாவற்றிலும் தர்க்கவியலைத் தேடுகிறார், தற்செயலான நிகழ்வு என்பதை நிராகரிக்கிறார்; ஏனென்றால் அது “முழு நிறைவான சிந்தனையுடன் பொருந்தாது”, தான் திரட்டியிருக்கின்ற அறிவைப் பற்றி அவருக்கு எப்பொழுதும் அதிருப்தியே. அவர் வடிவகணிதத்தைக் கற்பதற்காக எகிப்துக்கும் பாரசீகத்திலுள்ள ஹால்டியர்களுக்குச் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்று யோகிகளிடமிருந்து அறிவைச் சேகரித்தார் என்றும் சிலர் கூறுவதுண்டு.
அவருடைய சகாப்தத்தின் கலைக்களஞ்சியப் பரப்பைக் கொண்ட அறிவு பிரபஞ்சத்தைப் பற்றி மிகவும் உருப்படியான, ஊகத் தத்துவத்தை, அணுவாதத் தத்துவத்தை உருவாக்கியது. அத்தத்துவத்தின் முக்கியமான கூறுகளைப் பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி நிரூபித்திருக்கிறது. எனினும் அவர் அதிருப்தியோடிருந்தார். தன்னுடைய கண்ணின் புலனுணர்வு அறிவின் கூர்மையைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக அவர் தன்னைக் குருடாக்கிக் கொண்டார்.
எபிகூரஸ் முற்றிலும் வேறுவிதமான மனிதர், தத்துவஞானத்தைப் பற்றி அவருடைய அணுகுமுறையும் வேறு. டெமாக்கிரீடஸ் எல்லோரிடமிருந்தும் அறிவைத் திரட்ட விரும்பினாரென்றால் எபிகூரஸ் தனக்கு ஆசிரியர் இல்லாததைப் பற்றி, சுயமாகவே கற்றதைப் பற்றி, எந்த உதவியும் இல்லாமல் உண்மையை நோக்கிச் செல்கின்ற வழியை அடைந்ததைப் பற்றிப் பெருமைப்படுபவர்.
டெமாக்கிரீடசின் நிம்மதியற்ற மனம் அவரை உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் துரத்தியது, அவர் வெளிநாடுகளில் எண்பது வருடங்களைக் கழித்தார், ஆனால் எபிகூரஸ் ஏதன்சிலிருந்த தன்னுடைய தோட்டத்தை விட்டு வெளியே இரண்டு அல்லது மூன்று தடவைகள்தான் போயிருக்கிறார், அதுவும் கூட நண்பர்களைச் சந்திப்பதற்காகவே. அவர் தத்துவஞானத்தில் அமைதியையும் இன்பத்தையும் அடைந்தார்; டெமாக்கிரீடசுக்கு எதிரிடையான முறையில் துல்லியமான விஞ்ஞானங்களை நிராகரித்தார்.
எபிகூரஸ்
எல்லாப் பொருட்களைப் பற்றியும் முழுமையான அறிவைத் திரட்ட முடியவில்லையே என்ற வேதனையில் டெமாக்கிரீடஸ் கண்களைக் குருடாக்கிக் கொண்டார்; ஆனால் எபிகூரஸ் மரணம் நெருங்குவதை உணர்ந்தவுடன் வெந்நீரில் குளித்தார், ஒயினைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார், தத்துவஞானத்துக்கு விசுவாசமாக இருக்கும்படி நண்பர்களைக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வுகளைப் புலன்களினால் அறிய முடியும் என்பதில் எபிகூரஸ் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே சூரியன் மிகவும் பெரியது என்று டெமாக்கிரீடஸ் கருதிய பொழுது எபிகூரசுக்கு அது இரண்டடி அளவை அதாவது நம் பார்வைக்குத் தோன்றுகின்ற அளவைக் கொண்டதாக இருந்தது. டெமாக்கிரீடஸ் எல்லாவற்றிலும் பார்க்க முடியும் என்று நம்பிய அவசியத்தை எபிகூரஸ் நிராகரித்தார். அவசியம் என்பது மனிதனை ஒடுக்குகின்ற தவிர்க்க முடியாத விதியாகிய ஊழ் என்று அவர் கருதினார். மனிதனுடைய எல்லா நடவடிக்கைகளையும் முன்பே நிர்ணயிக்கின்ற மதத்துடனும் கடவுள்களுடனும் அவர் அதை இணைக்கிறார். மனிதனுடைய நடத்தை அவனேயே, சந்தர்ப்பத்தையே சார்ந்திருக்க வேண்டும், அவசியத்தை அல்ல.
அவசியத்தில் வாழ்க்கை நடத்துவது துரதிர்ஷ்டம், ஆனால் அத்தகைய வாழ்க்கை எவ்விதத்திலும் அவசியமல்ல என்பார் எபிகூரஸ். சுதந்திரத்துக்கான பாதைகள் எல்லாப் பக்கங்களிலும் திறந்தே இருக்கின்றன; அவை பல, சுருக்கமானவை, சுலபமானவை. ஒரு நபர் அவசியத்தை மட்டுமே “அடக்கிவிட” வேண்டும். ஒரு நபர் அங்கீகரிக்க வேண்டியது “சந்தர்ப்பம், கடவுள் அல்ல”. இதற்கு முற்றிலும் பொருத்தமான முறையில் எபிகூரஸ் தன்னுடைய அணுவாதத் தத்துவத்தில் அணுக்களின் தற்செயலான கீழ்நோக்கிச் சரிதலைக் கொண்டு வருகிறார்; இவ்விஷயத்தில் அவர் டெமாக்கிரீடசிடமிருந்து வேறுபடுகிறார்.
அணுக்கள் தற்செயலாகக் கீழ்நோக்கிச் சரிதல் நகைப்புக்குரியது என்று பலர் கருதினார்கள், அது அணுவாதத் தத்துவத்தைச் செழுமைப்படுத்திய புதுமை, அது அத்தத்துவம் வளர்ச்சியடைவதற்கு உதவியது என்று மார்க்சே முதலில் நிரூபித்தார் (அவருடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையின் நிரந்தரமான முக்கியத்துவம் இதில் அடங்கியிருக்கிறது). மார்க்ஸ் தன்னுடைய இயக்கவியல் உள்ளுணர்ச்சியின் விளைவாக இம்முடிவுக்கு வந்தார்; நவீன அணுவியல் பெளதிகம் நிச்சயமற்ற கோட்பாட்டை முன்வைத்திருப்பதன் மூலம் இதைப் பரிசோதனை முறையில் நிரூபித்திருக்கிறது என்று கூறலாம்.
தத்துவஞானம் தன்னுடைய பொருளாயத ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மிக ஆயுதங்களைத் தத்துவஞானத்தில் காண்கிறது.
நாத்திக மற்றும் பண்டைக்கால கிரேக்க அறிவொளித் தத்துவஞானமாகிய எபிகூரியத் தத்துவஞானம் வாழ்க்கையின் எளிமையான, இயற்கையான மகிழ்ச்சியில் திளைக்கின்ற சுதந்திரமான மனிதனைப் போற்றியது. போலியான தத்துவஞானிகளும் அற்பவாதிகளும் அதைத் தங்களுடைய எரிச்சலான விமர்சனத்துக்கு உட்படுத்தினார்கள்.
இந்த விமர்சகர்களின் முன்னணியில் புகழ் மிகுந்த ப்ளுடார்க் இருந்தார்; அவர் சுயதிருப்தியடைகின்ற முட்டாள்தனத்தின், தன்னை புத்திசாலி என்று நினைக்கின்ற பகட்டான கெளரவத்தின் உருவகம் என்று மார்க்ஸ் கருதினார்.
எபிசுரசின் வாதத்தின் ஒத்திசைவான, நேர்மையான, துணிவான தர்க்க முறையை அதன் முடிவுகள் மதத்தை நிராகரிப்பதற்கு இட்டுச் சென்றாலும் அதைக் கண்டு அஞ்சாத தர்க்க முறையை – ப்ளுடார்கின் கோழைத் தனமான, அரை மனதுடைய, கதம்பவாத நிலையுடன், அவரது கடவுளுக்குப் பயப்படுகின்ற, நன்னெறி சார்ந்த பேச்சுடன், அவருடைய போலித்தனமான குழைவுடன் மார்க்ஸ் வேறுபடுத்திக் காட்டினார்.
தன்னுடைய சொந்தக் “கடமையுணர்ச்சியில்”, “நற்பண்புகளில்”, தன்னுடைய உடல் நலத்தைப் பற்றிய அக்கறையில், மறு உலகத்தில் “நிரந்தரமான இன்பத்தை” அடைய வேண்டும் என்ற அக்கறையில் திருப்தியடைகின்ற சாதாரணமான அறிவின் மலிவான “தத்துவஞானத்துக்கு”, தன்னுடைய சொந்த, அற்பமான “நானின்” வறுமையையும் அவமானத்தையும் நல்லொழுக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் மறைத்துக் கொள்கின்ற “தத்துவஞானத்துக்கு” ப்ளுடார்கின் வாதம் சிறந்த உதாரணமாகும்.
ப்ளுடார்க்
மார்க்சின் மனதில் ப்ளுடார்கின் உருவம் பயத்தினுல் சுருங்கிய, அடிமைத்தனமாகக் கெஞ்சுகின்ற, “நல்லவர்கள் தமது வாழ்க்கையின் பலன்களை வாழ்க்கையோடு இழக்க வேண்டுவது எவ்வளவு அநீதியானது” என்று போதிக்கின்ற மனிதருடன் இணைந்திருந்தது. சிந்தனைத் துறையில் “கண்ணியம்” இல்லாத அனைத்தையும் ப்ளுடார்க் மறுப்பது இயற்கையே. ப்ளுடார்கைப் படிக்கும் பொழுது புழுக்கமான “வகுப்பு அறையில்” உட்கார்ந்திருப்பதைப் போல நாம் உணர்கிறோம். எபிசுரசையும் “உலகத்தின் புத்தம் புதிய, கூருணர்ச்சி உடைய கவிமன்னனாகிய லுக்ரெத்சியசையும் படிக்கின்ற பொழுது கவர்ச்சியான உடையணிந்திருக்கும் துணிச்சலான கழைக் கூத்தாடியைப் பார்க்கிறோம்; நாம் நம்மை மறக்கிறோம், நம்மைக் காட்டிலும் மேலே உயர்கிறோம், வெகு தூரத்துக்கு அப்பால் பார்க்கிறோம், மேலும் சுதந்திரமாக மூச்சு விடுகிறோம்.
சரி, ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற நபரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். “தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் தன்னுடைய சொந்த வளங்களைக் கொண்டு முழுமையான உலகத்தை நிர்மாணிக்க, உலகத்தைப் படைப்போனாக முன்வராத நபர் ஏற்கெனவே ஆன்மாவினால் சாபமிடப்பட்டிருக்கிறார், அவர் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் -ஆனால் அது எதிரான அர்த்தத்தில்: அவர் ஆலயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு ஆன்மாவின் நிரந்தரமான ஆனந்தத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார், தன்னுடைய சொந்தமான, தனிப்பட்ட ஆனந்தத்தைப் பற்றிப் பாட்டுப் பாடியும் இரவு நேரத்தில் தன்னைப் பற்றிக் கனவு காணும்படியும் விதிக்கப்பட்டிருக்கிறார்.”(2)
தத்துவஞானத்தில் ப்ளுடார்கின் ஆன்மிக வாரிசுகள் எப்பொழுதுமே அதிகமாக இருந்தார்கள். மார்க்ஸ் ப்ளுடார்குடன் செய்த வாதம் அவருடைய எல்லா ஆன்மிக வாரிசுகளோடும் வாதம் புரிவதாகவும் இருந்தது என்பது மெய்யே.
ஜீவனுள்ள, உயிர்த்துடிப்புள்ள சிந்தனையைச் சிறைப்படுத்தி உறங்க வைப்பதற்காக நன்னெறி சார்ந்த தடைகளையும் தேசபக்த உரைகளையும் கொண்ட சிலந்தி வலையை நெய்த ப்ளுடார்க் மரபினருடைய அலங்காரமான சொற்கூளம் மார்க்சிடம் தீவிரமான எரிச்சலை ஏற்படுத்தியது. ப்ளுடார்கின் “நன்னெறி சார்ந்த விமர்சனம் மற்றும் விமர்சன நன்னெறியின்” அனைத்து வெளிப்பாடுகளையும் மார்க்ஸ் தன் பேனா முனையினால் வரலாற்றின் ஏளனத்துக்கு உள்ளாக்கினார்.
19 -ம் நூற்றாண்டில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதியான கார்ல் ஹைன்ஸென் எங்கெல்சுடன் செய்த வாதத்தில் இந்த “விமர்சனத்தை” சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ப்ளுடார்க் எபிகூரசுடன் செய்த வாதத்தைப் போலவே தத்ரூபமாக விளக்கினார்.
எங்கெல்ஸ்
ஹைன்ஸென் வடிவத்தில் “விமர்சகராக வருகின்ற அற்பவாதியை”, என்னுடைய மரபு தத்துவஞானமோ அல்லது கல்வியறிவோ அல்ல, அது “வாழ்க்கையின் முழுமையே” என்று அகம்பாவத்தோடு கூறுகின்ற, “முழுநிறைவான பொது அறிவை” போதிக்கின்ற, “தன்னுடைய சொந்த நற்பண்புகளைப் பற்றித் தானே திருப்தியடைகின்ற அற்பவாதியின் உணர்வை” விளக்கிக்காட்டுகின்ற, ஒரு சில “குறைவான, சதையில்லாத உண்மைகளை அசைக்க முடியாத வறட்டுக் கோட்பாடுகளாக மாற்றி “இத்தகைய நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசுபவர்களின் குருட்டுத்தனம்”, “முட்டாள்தனம்” அல்லது “போக்கிரித்தனத்தைப் பற்றித் தன்னுடைய தார்மிக ஆவேசத்தைக் கொட்டுகின்ற”(3) அற்பவாதியை மார்க்ஸ் இரக்கமற்ற நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் தாக்கினார்.
ப்ளுடார்கின் ஆதரவாளர்கள் எல்லோரையும் பற்றி மார்க்சின் இந்தத் தீவிரமான, எதிர்மறையான மதிப்பீடு விஞ்ஞானத்தைப் பற்றி அவருடைய ஆக்கபூர்வமான அணுகு முறையையும் உண்மையான தத்துவஞானச் சிந்தனையின் கடமைகளையும் பாத்திரத்தையும் பற்றி அவருடைய கருத்தையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
தத்துவஞானம் வறட்டுக் கோட்பாட்டுடன், நிர்ணயிக்கப்பட்ட, கெட்டிப்பட்டுவிட்ட ஆய்வுரையுடன் பொருந்தாது. ஹெகலிய அமைப்பின் முடிவான, முழுமையான, தனிமுதலான மற்றும் “ஊகமான” தன்மையே மார்க்சுக்கு அதிருப்தியளித்தது. அவர் தன்னுடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலேயே ஹெகலியத் தத்துவஞானம் “உலகத்துடன்”, யதார்த்தத்துடன் முறித்துக் கொண்டிருப்பதைப் பற்றி மிகவும் வன்மையாக விமர்சனம் செய்தார் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
மார்க்சின் தொடக்க காலத் தத்துவஞான நிலை வெடிகுண்டுத் திரியைக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் மார்க்ஸ் தத்துவஞானத்தைப் பற்றி பரந்த செயல் விளைவுடைய முடிவுகளுக்கு வந்தார்.
இயற்கை விஞ்ஞானங்கள் போதிய வளர்ச்சி அடையாமலிருந்தபடியால் துல்லியமான விஞ்ஞானங்களுக்கு மாற்றீடாக இருக்கும்படி தத்துவஞானம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அது உலகத்தின் சர்வாம்சத் தத்துவஞானம், விஞ்ஞானங்களின் அரசி நானே என்று கோரியது. இக்கோரிக்கை அதன் முழு அளவுக்கு ஹெகலியத் தத்துவஞானத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அதனால் தான் ஹெகலிய அமைப்பு பழைய கருத்தில் புரிந்து கொள்ளப்பட்ட தத்துவஞானத்தின் பரிபூரண வடிவமாக, அதன் மகுடமாக, ஆகவே அதன் முடிவு நிலையாகக் கருதப்பட்டது.
எளிதில் நுழைய முடியாத ஆன்ம உலகங்களில் ஆட்சி செய்கின்ற “விஞ்ஞானங்களின் அரசியான’’ தத்துவஞானம் பூமிக்கு வர வேண்டிய அவசியத்தைச் சந்திக்கும் என்பதை மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்தின் பிற்காலத்தில் கூட முழுமையாக உணர்ந்திருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் அவர் இன்னும் ஒரு கம்யூனிஸ்டு அல்லது புரட்சிகரமான ஜனநாயகவாதியாகக் கூட இருக்கவில்லை, அரசியலில் தன்னுடைய நிலையை அவர் தெளிவாக வரையறுத்துக் கொள்ளவில்லை. “உலகத்தைப்” பற்றியும் தத்துவஞானத்தை “உலகத்துடன்” இணைக்கின்ற வடிவங்களைப் பற்றியும் அவருடைய கருத்துக்கள் இன்னும் சூக்குமமாகவே இருந்தது இயற்கையே.
இதற்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் முகவுரை என்ற நூலை எழுதினார். அதில் “உலகத்துடன்” தத்துவஞானத்தின் உறவைப் பற்றிய ஆய்வுரையை உலகத்தைப் பற்றிய புரட்சிகரக் கண்ணோட்டத்தின் அனைத்து முழுமையோடும் உறுதியோடும் அவர் வகுத்துக் தந்தார்.
புரட்சி “தத்துவஞானியின் மூளையில் ஆரம்பமாகிறது”, அது முதிர்ச்சியடைகின்ற முரண்பாடுகளைப் பிரதிபலிக்கிறது என்கிறார் மார்க்ஸ். ஆனால் தத்துவ விமர்சனம் என்னும் ஆயுதம் “ஆயுதங்களின் விமர்சனத்துக்கு” மாற்றீடாக முடியாது. தத்துவம் பெருந்திரளான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பொருளாயதச் சக்தியாக மாறுகிறது.(4) ஆகவே தத்துவஞானம் பொருளாயதச் சக்தியாக மாற வேண்டுமென்றால் அது புரட்சிகரமான வர்க்கத்தின், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவஞானமாகச் செயலாற்ற வேண்டும்.
“தத்துவஞானம் தன்னுடைய பொருளாயத ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்திடம் காண்பதைப் போல, பாட்டாளி வர்க்கம் தன்னுடைய ஆன்மிக ஆயுதங்களைத் தத்துவஞானத்தில் காண்கிறது. கூர்மதியுடையவரிடம் இந்த மண்ணில் சிந்தனையின் மின்னல் தாக்கிவிட்டால் ஜெர்மானியர்கள் மனிதப் பிறவிகளாக விடுதலை பெறுவது நடக்கும்.”(5)
எனினும், “அன்றைக்கிருந்த தத்துவஞானம், அதாவது ஹெகலியத் தத்துவஞானம் அகற்றப்பட வேண்டிய யதார்த்தத்தின் குறைகளைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. எனவே “அதை அகற்றாமல் தத்துவஞானத்தை யதார்த்தமாக்க முடியாது”(6) முந்திய தத்துவஞானம் உண்மையில் மார்க்ஸ், எங்கெல்சினால் அகற்றப்பட்டது. இந்த “அகற்றுதல்” சாதாரணமான நிராகரிப்பாக இருக்கவில்லை. அது ஒரு புரட்சியாக இருந்தது; மூலச்சிறப்பான தத்துவஞானத்தின் மொத்த அடிப்படையிலும் முதலாவதாகவும் முதன்மையாகவும் ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹின் பாரம்பரியத்தைக் கொண்டும் பொருள்முதல்வாத இயக்கவியல் முறை என்ற “நிபெலுங்குகளின் வாள்” தயாரிக்கப்பட்டது.
இம்முறை விஞ்ஞானக் கம்யூனிசத் தத்துவத்தில் அதன் மிகச் சிறப்பான பண்புருவத்தைப் பெற்றது. அந்த விஞ்ஞானக் கம்யூனிசம் பாட்டாளி வர்க்கத்தின் “உண்மையான போர் முழக்கமாக” மனிதகுலத்தை விடுவிப்பதற்கும் மனிதனுக்குத் தகுதியான சமூகத்தை நிர்மாணிப்பதற்கும் அது நடத்தும் போராட்டத்தில் வலிமையான ஆயுதமாக இருக்கிறது.
மார்க்சின் முன்னறிவிப்புக்கு முற்றிலும் பொருத்தமான முறையில் இருபதாம் நூற்றாண்டுப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டிருக்கின்ற, நலிவுற்ற வர்க்கம் என்ற அதன் நிலையை அகற்றிக் கொண்டிருக்கிறது, மார்க்சியத் தத்துவஞானத்தை எதார்த்தமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
*****
நாம் இளம் மார்க்சுக்குத் திரும்பி பெர்லின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகின்ற வரை அவருடைய ஆன்மிக வளர்ச்சியைச் சுருக்கமாகக் கூறுவோம்.
டாக்டர் பட்டத்துக்காக மார்க்ஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரை அவருடைய நாத்திகவாதத்தை நிரூபிக்கிறது. முரணற்ற நாத்திகவாதம் கருத்து முதல்வாதத்துடன் பொருந்தாது என்பது நமக்குத் தெரிந்ததே. அது தவிர்க்க தனது ஆய்வுக் கட்டுரையில் இன்னும் கருத்துமுதல்வாதத் தத்துவஞானப் பாரம்பரியத்துடன் முறித்துக் கொள்ளவில்லை, ஆனால் அவர் ஏற்கெனவே பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞானத்தின் பொருள்முதல்வாதத்தையும் அறிவியக்க மனிதாபிமானத்தையும் நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்.
ஹெகல்
மார்க்ஸ் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையைப் பிரசுரிக்கின்ற உத்தேசத்தைக் கொண்டிருந்தார், எனவே அன்றைய தணிக்கை முறையின் விளைவாக அவர் பல பிரச்சினைகளைப் பற்றி முற்றிலும் திறந்த மனத்துடன் தன் கருத்துக்களை எழுத முடியவில்லை என்பதை நினைவிலிறுத்த வேண்டும்.
மார்க்சின் ஆன்மிக வளர்ச்சி இளம் ஹெகலியவாதிகளை விஞ்சிவிட்டது. அவர் ஒரு இளம் அறிஞர், ஒரு ஆராய்ச்சி நூலைக் கூட இன்னும் வெளியிடாதவர்; எனினும் அவருடைய அறிவின் சிறப்பை இளம் ஹெகலியவாத இயக்கத்தின் மிகவும் தலைசிறந்த அறிவாளிகள் கூட அங்கீகரித்தார்கள்.
பிற்காலத்தில் “இயக்கத்திலிருந்த மோஸஸ் ஹேஸின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்க அக்கறையைக் கொண்டிருக்கிறது. 1841-ம் வருடத்திலேயே மோஸஸ் ஹேஸ் கட்டுரையாளராகவும் தத்துவஞானியாகவும் பிரபலமடைந்திருந்தார். அக்காலத்திலேயே அவர் ஹெகலியத் தத்துவஞானத்தைப் பிரெஞ்சு சோஷலிசத்துடன் இணைப்பதற்கு முற்றிலும் ஒத்திசைவாக இல்லாத, ஆனால் முற்றிலும் உறுதியான முயற்சியைச் செய்திருந்தார். இயேசுநாதரின் வருகையைப் போல கம்யூனிஸ்ட் புரட்சி வரப் போகிறது என்று தெளிவில்லாத, அரை மாயாவாத முறையில் பிரகடனம் செய்திருந்தார். எனினும் மோஸஸ் ஹேஸ் சமீபத்தில் பட்டம் பெற்றிருந்த கார்ல் மார்க்ஸ் தத்துவஞான வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர் என்று கருதினார், மார்க்சுக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று மதிநுட்பத்துடன் ஆரூடம் கூறினார்.
மோஸஸ் ஹேஸ் தன்னுடைய நண்பர் ஆவு யெர்பாஹுக்கு 1841 செப்டெம்பர் 2-ந் தேதியன்று எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: “நம்முடைய நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் பழகுவது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவர் பானில் வசிக்கிறார், சீக்கிரத்தில் அங்கேயே ஆசிரியராகப் போகிறார்….. இது ஒரு அசாதாரணமான நிகழ்வு என்பேன்; நானும் அதே துறையில்தான் ஈடுபட்டிருக்கிறேன் என்ற போதிலும் அவர் என்னிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சுருக்கமாகச் சொல்வதென்றால் மிகச் சிறந்த, ஒருவேளை தற்பொழுது வாழ்கின்ற தத்துவஞானிகளில் ஒரே ஒரு மெய்யான தத்துவஞானியைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சீக்கிரத்தில் அவர் பொது அரங்கத்தில் (புத்தகத்தின் மூலம் அல்லது மேடைச் சொற்பொழிவின் மூலம்) தோன்றும் பொழுது ஜெர்மனியின் கவனம் முழுவதையும் தன்னிடத்தில் திருப்பப் போகிறார், அவர் தன்னுடைய தத்துவஞானப் போக்கு, கல்வி இரண்டிலுமே ஷ்டிராவுசை மட்டுமின்றி ஃபாயர்பாஹையும் விட உயர்ந்தவராக இருக்கிறார் – இரண்டாவது எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்கே தெரியும் அவர் தர்க்க வியலைப் பற்றிச் சொற்பொழிவாற்றுகின்ற பொழுது நான் பானில் இருக்க முடியுமானுல் அவர் சொற்பொழிவை மிகவும் கவனமாகக் கேட்பேன்.
தற்பொழுது வாழ்கின்ற தத்துவஞானிகளில் ஒரே ஒரு மெய்யான தத்துவஞானியைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு நபர் என் தத்துவஞான ஆசிரியராக இருக்க வேண்டு மென்று நான் எப்பொழுதுமே விரும்பியிருக்கிறேன். மெய்யான தத்துவஞானத் துறையில் நான் எவ்வளவு சிறுதிறமாகச் செயலாற்றினேன் என்பதை இப்பொழுது உணர்கிறேன்! பொறுமை! நான் இனியும் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டும் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் என்ற பெயருடையவர்; அவர் மிகவும் இளைஞராகவே இன்னும் இருக்கிருர் (அதிக மாகப் போனல் இருபத்து நான்கு வயதே இருக்கும்);
மத்திய கால தத்துவஞானத்துக்கும் அரசியலுக்கும் அவர் இறுதியான அடியைக் கொடுப்பார்; அவர் மிகக் கூர்மையான நகைச் சுவையை மிகவும் ஆழமான தத்துவஞானச் செறிவுடன் இணைக்கிருர் ரூஸோ, வொல்தேர், ஹோல்பாஹ், லேஸ்ஸிங், ஹேய்னெ, ஹெகல் ஆகியோர் ஒரே நபராக இணைந்திருப்பதை – இணேந்திருப்பது என்று நான் கூறினேன், கலந்திருப்பதாகச் சொல்லவில்லை – கற்பனை செய்யுங்கள். அவர்தான் டாக்டர் மார்க்ஸ்.
ஒருவேளை இன்று நமக்குக் கிடைத்திராத இளம் மார்க்சின் எழுத்துக்களை ஹேஸ் படித்திருக்கலாம் அல்லது மார்க்சுடன் நடத்திய உரையாடல்களின் அடிப்படையில் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனல் அவருடைய முன்னறிவிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்குத் துல்லியமாக இருந்தது. மார்க்ஸ் புரட்சிகரமான உலகக் கண்ணுேட்டத்தைப் படைப்பதற்காகத் தன்னை உள்முகமாகத் தயாரித்துக் கொண்டிருந்தார். தத்துவச் சிந்தனையின் மேதாவிலாசம் அவரிடம் வேகமாக வளர்ச்சியடைந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
குறிப்புகள்:
(1) Ibid., p. 44. கிரேக்கர்கள் மத்தியில் கலைக்களஞ்சியப் பரப்பைக் கொண்ட முதல் அறிவாளி டெமாக்கிரிடசே. அவர் அணுவாதத் தத்துவஞானத்தை நிறுவியவர்களில் ஒருவர். அணுக்கள், சூனியம் என்ற இரண்டு மூலத் தொடக்கங்கள் உள்ளன என்பது டெமாக்கிரீடசினுடைய கருத்தாகும். அறிதலுக்கான எல்லாப் பொருட்களையும் புலன்கள் கொடுத்த போதிலும் அவை பொருள்களைப் பற்றி “மங்கலான’ அறிவை மட்டுமே தருகின்றன. இது வேறொரு அறிவினால், “ஒளிமிக்க”, அதிக நுட்பமான அறிவினால், பகுத்தாராயும் அறிவினால் கடக்கப்படுகிறது. இந்த அறிவு அதன் ஆராய்ச்சியின் மூலம் அணுக்களையும் சூனியத்தையும் கண்டுபிடிக்கிறது.
(2) Ibid., pp. 468-69.
(3)Marx, Engels, Collected Works, Vol. 6, pp. 313, 317, 321.
(4)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 182.
(5)Ibid., p. 187.
(6) Ibid., p. 181.
* Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband, 2, S. 260-61.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
ஆயிஷா பகாரி கோம்பி ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் வாழ்கிறார். இல்லையில்லை சண்டை போடுகிறார். போகோ ஹராமுக்கு எதிரான சண்டையில் போர்க்களத் தீரத்திற்காக நிஜ உலகின் அதிநாயகி (super Hero) என்ற நிலையை அடைந்துள்ளார்.
மனிதகுலம் துவங்கிய ஆதி காலத்திலிருந்தே ஆப்பிரிக்க காடுகளிலும் புல்வெளிகளிலும் வேட்டைக்கார இனக்குழுக்கள் சுற்றி வந்துள்ளனர். பாய்ச்சல் வேகத்தில் 21-ம் நூற்றாண்டிற்கு வந்தோமானால், இன்று வடகிழக்கு நைஜீரியாவில் வேட்டைக்காரர்களின் வேட்டைக்கு எதுவுமில்லை. போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் நைஜீரிய இராணுவத்திற்கும் இடையிலான துப்பாக்கி சண்டை காட்டு விலங்குகளை அச்சுறுத்தித் துரத்தியுள்ளது.
தற்போது வேட்டைக்காரர்கள் தீவிரவாதிகளை துரத்திப் பிடிக்கின்றனர். அவர்களது அதீத சக்தியும் மேம்பட்ட பின்தொடரும் திறனும் வடகிழக்கு நைஜீரியாவில் அச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் போகோ ஹராம் தீவிரவாதிகளை இராணுவம் வேட்டையாடுவதற்கு உதவுகின்றனர்.
அதிகாரிகள் மிகக் குறைவான நிதியையே ஒதுக்குவதால் வேட்டைக்காரர்கள் கனரக நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள எதிரிகளிடம் போரிடுவதற்கு உள்ளூர் தயாரிப்பு ஆயுதங்களையே சார்ந்திருக்கின்றனர்.
“மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இது வடகிழக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாதக் குழு பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்றும் 23 இலட்சம் மக்களை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியும் உலகின் மிகக் கொடூரமான ஆயுதமேந்திய குழுக்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
இத்தீவிரவாதிகளை துரத்திப் பிடிக்கும் வேட்டைக்காரர்களுக்கு தலைமை வகிக்கிறார் ஆயிஷா பகாரி கோம்பி. அவருடைய போர்க்கள வீரத்திற்காக “ராணி வேட்டைக்காரர்” என்று அழைக்கப்படுகிறார். ஆயிஷாவும் அவரது வேட்டைக்குழுவினரும் அவர்களது சமூகத்தைப் பாதுகாக்கின்றனர்.
ஆயிஷா தனது குழந்தைப் பருவத்தில் அவரது தந்தையுடன் வேட்டைக்குச் சென்ற காடுகள், மலைகளில் இன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர். சம்பிஸா காடு வேட்டைக்காரர்களுக்கான புனிதமான இடம். எனவே அதை போகோ ஹராம் போராளிகளிடமிருந்து விடுவிப்பது சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது.
இந்த வேட்டைக்காரர்கள் போகோ ஹராம் பிடியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்களை விடுவித்துள்ளனர். குழந்தைகளை மீட்பது ஆயிஷாவிற்கு உந்து சக்தியாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் 39 வயதில் முதல் முறையாக ஆயிஷா கருவுற்றார். அதுநாள் வரை தாம் கருத்தரிக்க முடியாதென்றே நினைத்திருந்தார். குழந்தைகளை விடுவித்தபோது அவர்கள் தமக்கு மறுபிறப்பாக பிறப்பதைப் போல் உணர்ந்து கொண்டார்.
ஆயிஷா போகோ ஹராமிற்கு எதிராக போராடாதபோது, அவரது கணவருடன் கிராமத்து விதிமுறைகளுக்கு இணங்கி வாழ்கிறார். வட- நைஜீரியாவில் பெண்களுக்கான களம் வீட்டிலும், குழந்தைகள் வளர்ப்புடனும் வரம்பிடப்பட்டுள்ளது.
ஆயிஷாவின் அசாதாரண வாழ்க்கை சமீப ஆண்டுகளில் மிகதீரமுள்ள ஆண், பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. அவரது கதை வடக்கு நைஜீரியாவில் நாட்டுப்புற கதையாகியுள்ளது. ”வேட்டை அரசி (Queen Hunter)” தான் அந்த உண்மைக்கதைகளின் அதிநாயகி. ஆயிஷாவைப் பற்றிய ஆவணப்படத்தை இங்கு காணலாம்.
வேட்டைக்காரரும் பல்கலைக்கழக மாணவருமான பாமங்கா,ஆயிஷாவிற்கு புதிய கைபேசியை பயன்படுத்த கற்றுத் தருகிறார்.
சம்பிஸா காட்டின் நடுவில் ஆயிஷாவும் அவரது தலைமையிலான வேட்டைகாரர்களும் போகோ ஹராமை துரத்துவதற்கு நடுவில் ஓய்வெடுக்கிறார்கள்.
ஆயிஷா போகோ ஹராமிற்கு எதிராகப் போராடும் வரை பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்தார். அவரது போராட்டம் கணவர் முகமதுவின் இயத்தை கொள்ளை கொண்டு விட்டது.
ஆயிஷா தனது தந்தையுடன் மான் மற்றும் நீர் எருமைகளை வேட்டையாடும் சூழலில் வளர்ந்தார்.இப்போது போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார்.
வேட்டைக்காரர்கள் சாம்பிஸா காட்டைமற்ற யாரையும் விட நன்கு அறிந்திருக்கிறார்கள. எனவே அங்கு மறைந்திருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாட இராணுவம் அவர்களைப் பயன்படுத்துகிறது.
பின்னால் நின்றுகொண்டிருக்கும் காலித் என்ற வேட்டைக்காரர் ஆயிஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். வேட்டையின் போது எப்போதும் ஆயிஷாவின் அருகாமையில் இருக்கிறார்.
ஆயிஷா வேட்டைக்கு போகாத போதும் கூட, தீவிரவாதிகளால்கடத்தப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் பற்றியே அவர் கவலைப்படுகிறார்.
வேட்டைக்காரர்கள் நாட்டுத் துப்பாகிகளையே போகோ ஹராமிற்கு எதிரான போரில் பயன்படுத்துகின்றனர்.
ஆயிஷா தனது தந்தையிடமிருந்து மூலிகைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறார். ஒரு மருத்துவச்சியாக அவரது நிபுணத்துவம், சக வேட்டைக்காரர்களிடம் அவருக்கு மரியாதையை பெற்றுத்தந்துள்ளது.
தீவிரவாதிகள் பதுங்கியுள்ள சம்பிஸா காடுகளில் பயணிக்க மோட்டர் சைக்கிள்கள் உகந்தவை.
புகார் ஜிமேதா முன்னர் ஆயிஷாவின் படைத் தலைவராக இருந்தார். மிக மரியாதைக்குரிய வேட்டைக்காரரான அவர் 2017-ம் ஆண்டு போகோ ஹராம் தீவிரவாதிகளால் கொல்லப்படும் வரை கடந்த முப்பதாண்டுகளாக சம்பிஸா காட்டில் குற்றவாளிகள் மற்றும் போராளிகளை பிடிக்க உதவி வந்தார்.
புகார் ஜிமேதா ஒரு இறைபற்று மிக்க முஸ்லீம். அவர் ஆப்பிரிக்க வேட்டையினக் குழுக்களின் இயற்கை மற்றும் போர் கடவுள்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆயிஷா கருவுற்றிருந்த போதும் கூட வேட்டையாடினார். அவரது கதை வடக்கு நைஜீரியாவில் நாட்டுப்புறக் கதையாகியுள்ளது. இந்த ”வேட்டை அரசி” நைஜீரியர்களுக்குநிஜ உலகின் அதிநாயகியாகி (super Hero) உள்ளார்.
மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் மீது காறித் துப்பியுள்ளன. ஒரு நதியின் கீழ்ப்பகுதிக்கும் அதன் டெல்டா பகுதிகளும் அந்நதியின் நீரில் உள்ள நியாயமான பங்கை தனது இறுதித் தீர்ப்பில் மறுத்ததன் மூலம் ஏற்கனவே தமிழகத்தின் மீது எச்சில் துப்பியது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவையும் தனது இறுதித் தீர்ப்பில் குறைத்து அறிவித்தது.
அவ்வாறு குறைக்கப்பட்ட அளவிலான நீரைத் தமிழகத்திற்கு வழங்குவதற்கான முறையையும் தெளிவாக விளக்கவில்லை. மேலாண்மை வாரியம் என நேரடியாக குறிப்பிடாமல் “ஸ்கீம்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி மத்திய அரசு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதற்கான கதவைத் திறந்து வைத்த உச்ச நீதிமன்றம், பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்தும் தனது தீர்ப்பில் விளக்கவில்லை.
அநீதியான அந்தத் தீர்ப்பாவது அமல்படுத்தப்பட்டால் தாகத்தைத் தீர்க்க முடியா விட்டாலும் தொண்டையையாவது நனைத்துக் கொள்ளலாம் என தமிழகம் எதிர்பார்த்தது. காவிரி நீர்ப் பகிர்வுக்கான வரைவுத் திட்டமொன்றை மத்திய அரசு சமர்பிப்பதற்கு வழங்கப்பட்ட 6 வார கால அவகாசத்தில் ஏதும் செய்யாமல் இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடிய மோடி அரசு, “ஸ்கீம்” என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு மீண்டுமொரு முறை தமிழகத்தின் மேல் எச்சில் துப்பியது.
இதை எதிர்த்து மத்திய அரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது தமிழக அரசு. அப்போது மத்திய அரசைச் செல்லமாக கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், உரிய விளக்கம் ஏதும் அளிக்காமல் நாங்கள் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த ஒருவரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கிடையே வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணி முடியவில்லை, மேலும் கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு ஒரு கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அம்மனுவும் தள்ளுபடியானது. இன்று மே 4-ம் தேதி. வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த கெடு நேற்றோடு முடிந்தது . இந்நிலையில் வரைவு அறிக்கை தயாராகவே இல்லை என்று சொன்ன மத்திய அரசு, கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.. ஆகையால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறது.
மத்திய அரசின் பச்சைப் பொய்யை அப்படியே விழுங்கிக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என மயிலிறகால் அடித்துள்ளனர். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
ஏனினும் ”கோபம்” அடைந்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை மீறினால், கர்நாடக அரசு கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பமும், போக்குவரத்து வசதிகளும் இந்தளவுக்கு முன்னேறிய காலத்தில் ’பிரதமர் ஊரில் இல்லை’ என்று நொண்டிச் சாக்கு சொன்னதற்கோ, தயாராகவில்லை என்று சொல்லி விட்டு இப்போது எல்லாம் தயார் ஆனால் கையெழுத்து போட ஆளில்லை என்று பொய் சொன்னதற்கோ மோடி அரசை உச்சநீதிமன்றம் எந்தவகையிலும் தண்டிக்கப் போவதில்லை. ஏற்கனவே இதே உச்சநீதிமன்றம் வழங்கிய எந்த இடைக்காலத் தீர்ப்பையும் கர்நாடகம் மதித்ததில்லை – அதற்காக தண்டிக்கப்பட்டதும் இல்லை.
அ) அநீதியில்லை, எல்லாம் சரியாகவே நடக்கிறது.
ஆ) தமிழர்கள் தாகத்துக்கு மூத்திரத்தைக் குடித்து வாழ வேண்டிய இரண்டாந்தரக் குடிமக்கள் என்பதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் கருத்து.
இ) உச்சநீதிமன்றம் என்பது நீதி வழங்கப்படும் இடமல்ல – அது அநீதிகளின் கருவறை
ஈ) இந்தச் சட்டங்களும், நீதிமன்றங்களும், மத்திய மாநில அரசுகளும் நமக்கானவை அல்ல.
உ) எதிர்க்கட்சிகள்தான் பிரச்சினையை தோற்றுவிக்கின்றன, மத்திய அரசு அல்ல!
(பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
“கட்சிகளை மாற்றுவதால் தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!” என்ற முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் சென்னைப் புறநகரான ஆவடியில் நடைபெற்றது. இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கிளை – இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் என 450-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர்.
பு.ஜ.தொ.மு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் பேரணியை துவங்கி வைத்தார். தனது தலைமையுரையில் 1886-ல் மேதின தியாகிகளுடைய போராட்டத்தையும், சிகாகோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்து பேசினார். சிறுநகர் பறையிசை குழுவினரின் பறையிசை முழங்க காமராஜர் நகர் மற்றும் TNHB குடியிருப்பு பகுதி வழியாக ஆவடி நகராட்சி அலுவலகம் வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்ற பேரணியை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பேரணியின் முடிவில் நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமை தாங்கி நடத்தினார். பு.ஜ.தொ.மு-வின், மாநில பொருளாளர் தோழர் பா. விஜயகுமார் உரையாற்றினார்.
கார்ப்பரேட் அதிகார அமைப்பு முறையின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளுக்கான போராட்டங்களை தமிழகம் எங்கும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடத்தி வருகிறார்கள். இந்த கார்ப்பரேட் கட்டமைப்பை அப்படியே பாதுகாக்க ஆளும் வர்க்கம் ரஜினி, கமல், போன்ற நடிகர்களையும் சகாயம் போன்ற அதிகாரிகளையும் களமிறக்குகின்றனர். கட்சிகளை மாற்றுவதால் தீர்வு இல்லை என்றும், தோற்றுப் போய், திவாலான, ஆளத்தகுதி இழந்த இந்த கார்ப்பரேட் கட்டமைப்பை தூக்கியெறிந்து, தொழிலாளர், விவசாயி, மாணவர், இளைஞர், சிறுவணிகர், சிறு – குறு தொழில் முனைவோரின் கூட்டு அதிகாரத்தை கட்டியமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என உரையாற்றினார்.
ஆர்ப்பாட்ட பகுதியை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்து ஆர்ப்பரித்தனர். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
இவன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
*****************************************
திருச்சியில் மே தினம்.
1 of 9
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
மே தினத்தை முன்னிட்டு திருச்சி காந்திபுரத்தில் காலை 9 மணியளவில் ம.க.இ.க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. ம.க.இ.க-வின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் கொடியை ஏற்றி பேசுகையில் “கார்ப்பரேட் முதலாளிகளின் பெட்ரோலிய மண்டல கொள்ளைக்காக, காவிரியை தடுத்ததுடன், டெல்டா விவசாய தொழிலாளர்களை இராணுவத்தில் பிடியில் அச்சுறுத்தி சிறை வைத்து விட்டு தமிழக முதல்வர் எடப்பாடியும், பிரதமர் மோடியும் மே நாள் வாழ்த்தை கூறுவது எவ்வளவு பெரிய துரோகம் என உரையாற்றினார். தோழர் லதா நன்றி கூறி முடித்து வைத்தார்.
பின்னர் மாலை 6 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மரக்கடை ராமகிருஸ்ணா பாலம் அருகே மே தின ஆர்ப்பாட்டம் விண்ணதிரும் முழக்கத்துடன் தொடங்கியது.
பு.ஜ.தொ.மு வின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமைதாங்கி பேசினார். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க செயலாளர். தோழர்:மணலிதாசன் கண்டன உரையாற்றி பேசினார். இன்று மே தினம், பேரணி, ஊர்வலம், பொதுகூட்டம் எல்லாம் முடக்கப்பட்டு சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி கேட்டு போலீசிடம் போராட வேண்டியிருக்கிறது. இது முதலாளிகளின் ஆட்சி. OPS,EPS மோடி ஆளவில்லை. மென்னு போட்ட முருங்ககாய திரும்ப குழம்பு சட்டில போட்டு கொதிக்கவுட்டு தரமாதிரி கமலும், ரஜினியும் இந்த கட்டமைப்புக்குள்ளயே நம்மள சுத்த வக்கிராங்க. இது கெட்டுப்போச்சு இழப்பதற்கு ஏதுமில்லை பெறுவதற்கு பொன்னுலகம் உண்டு அதை படைக்கப் போராடுவோம். இரவு பகலாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளின் வாழ்வாதாரம் பாதிப்பதற்கு காரணமான OLA வை தடை செய்ய வேண்டும் அப்போதுதான் ஆட்டோ தொழிலை பாதுகாக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க செயலாளர், தோழர் பழனிச்சாமி பேசுகையில், மாநகராட்சி தரைக்கடைகளை எடுக்க புதுசு புதுசா திட்டம் போடுரான். ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தாம காச வாங்கிக்கிட்டு மாநகராட்சி அதிகாரிகள் தரைக்கடைகளை அப்புறப்படுத்துறான். வியாபாரிகளை போட்டோ எடுக்குறான். அவனே 2 பேர தேர்ந்தெடுப்போம் வியாபரிகளுடைய பிரச்சனையை அவங்க கிட்டதான் இனி பேசுவோம் என தொழிற்சங்கங்களை புறக்கணிக்கிறான். கக்கூசுக்கு கூட சாதாரண மக்கள் அழைந்து திரிவதை கண்டுக்காத மாநகராட்சி மலைக்கோட்டையை சுத்தி 60 இலட்சம் செலவு பண்ணி சாரதாசுக்காக (கடை) பாறைகளை வெட்டி பாதை அமைச்சு கொடுத்தான். எல்லை கல்லுக்கெல்லாம் கோயில் சொத்துன்னு சொந்தம் கொண்டாடுர இந்து முன்னணி BJP கும்பல்களெல்லாம் சாரதாஸ்கடை முதலாளி கால்ல விழுந்து கிடக்கிறீங்களா? என என்று கேள்வி எழுப்பினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர், தோழர் பிரிதீவ் பேசுகையில், நகர்புறத்துல “ஓவர் டைம்” வேல செஞ்சாத்தான் பொழப்பு நடத்த முடியும் என்ற நிலைமையில் இளைஞர்களுக்கு ‘கட்டமைப்பு’ என்றால் என்னன்னு தெரியுமா? தெரியக்கூடாதுன்னுதான் அரசு விரும்புது. அதுக்கு தகுந்த மாதிரி தல(ஆஜீத்) பர்த்துடே தான் ஸ்டூடண்டுக்கு தெரியும். அரசு கல்லூரியெல்லாம் தனியாருக்கு போகப்போது அரசாங்க வேலையே இனி கிடைக்க போறதில்லை. ஆளெடுப்பான் அரசாங்கம், எதுக்குன்னா அடையாள் படை போலீசுக்கு மட்டும், ஏன்னா போராட்டக்களை ஒடுக்கனும்ல. புரோக்கர் வேலை பார்த்து மாணவிகளை சீரழிக்க துணிந்த நிர்மலா தேவிக்காக 6 மணி நேரம் கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசு மக்கள் பாடகர் கோவன் தோழரை வழக்கு போட்ட மறுகனமே கதவ ஒடச்சு தரதரன்னு ‘குற்றவாளி’ போல இழுத்துச் சென்றதை மறக்க முடியுமா? இந்த அரசுக் கெதிராக மாணவர்கள் மக்களோடு இணைந்து ஜல்லிக்கட்டு போல மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசுகையில், ஆலைகளில் சூரியன் உதிக்கும் முன்னே செல்ல வேண்டும், சூரியன் மறைந்த பின்னே வர வேண்டும் என்ற நிலையை மாற்றி 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர பொழுது போக்கு 8 மணி நேரம் நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் சிந்திப்பதற்கும் பெறப்பட்ட உரிமை. இன்று மவுனமாக இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சுடுகாடுதான். நெய்வேலி அழிந்தது போல் டெல்டா மாவட்டங்கள் நிலக்கரி, மீத்தேனுக்காக அழியப் போகிறது. தமிழகத்தை காப்பாற்ற BJP,RSS ன் நாசகர திட்டங்களுக்கு எதிராக உறுதியான போரை துவங்குவோம் என்றார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் சத்யா சிறப்புரையாற்றுகையில், 1886 ல் தனது இரத்தத்தால் இந்த தினத்தை பெற்று கொடுத்தது தொழிலாளி வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை மார்க்சும், ஏங்கல்சும் 8 மணி நேர வேலை என்ற தீர்மானத்தை கொண்டு வந்ததை நடைமுறையாக்கியது தொழிலாளி வர்க்கம். தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் ஏன்? 70% பேருந்துகள் ஓட்டுவதற்கு தகுதியற்றவை. இதோடுதான் நமது தொழிலாளர்கள் மல்லுகட்டுகின்றனர். அது மட்டுமல்ல செவிலியர் போராட்டத்தில் நீதிமன்றம் பேசிய திமிரை மறக்க முடியுமா? மக்களை வதைக்காதீர்கள் என உத்தரவு போடும் நீதிபதிகள் மருத்துவர்களே இல்லாமல் GH மருத்துவமனையில் நடக்கும் அவலத்திற்கு வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எத்தனை வழக்குகள் போட்டும் நீதி கிடைக்கவில்லையே ஏன்?
காவிரிக்காக திருச்சியில் போராடிய மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க பொதுச்சொத்தை சேதம் விளைவித்ததாக பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அதே போல் ம.க.இ.க ரதயாத்திரை பாடலைக் கண்டு மிரண்டு போன BJP காவி கும்பல்களை திருப்தி படுத்த தோழர் கோவனை கைது செய்ய அவர் வீடு புகுந்து காலித்தனம் செய்ததை மக்கள் மறக்க முடியுமா? மக்களை ஒடுக்கும் இந்த நீதி மன்றங்கள், காவல் நிலையங்கள் அனைத்தையும் அதே மக்கள் எழுச்சியின் மூலம் அருங்காட்சியகத்தில் வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட தோழர் சுரேந்தர் நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்.கோவன் மற்றும் திருச்சி ம.க.இ.க கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்களை பாடினர்.
“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 1,23,000 தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ ஆவணங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கான பதில்களைக் கொண்டு வாழ்நாளை நீட்டிப்பதில் ஐந்து அடிப்படையான ஆரோக்கியமான பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வு செய்திருக்கின்றனர்.
1. புகைபிடிக்காமல் இருப்பது,
2. உடல் நிறை குறியீட்டை (BMI) 18.5-க்கும் 25க்கும் இடையில் வைத்துக் கொள்வது,
3. குறைந்தது 30 நிமிடத்திற்காவது மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது,
4. குறைவான மது உட்கொள்வது,
5. இறைச்சி, பூரண கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களைக் கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது
– ஆகிய ஐந்தும்தான் அவர்கள் குறிப்பிடும் ஆரோக்கியமான பழக்கங்கள்.
இந்த ஆய்வின் அடிப்படையில் வாழ்நாள் நீட்சியில் ஆரோக்கியமான பழக்கங்களின் வியத்தகு பங்களிப்பை அறிக்கையாக தந்துள்ளனர் . ஆரோக்கியமான பழக்கங்கள் எதையும் கடைபிடிக்காத ஆண்களைவிட ஆரோக்கியமான இந்த பழக்கங்களை கடைபிடிக்கும் ஆண்கள் சராசரியாக 12 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இதுவே பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சராசரியாக 14 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர்.
”இந்த 5 ஆரோக்கியமான பழக்கங்களையும் கடைபிடிப்பவர்கள் அதிக காலம் வாழ்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான காலத்திற்கு வாழ்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர்களுள் ஒருவரும், ஹார்வர்ட் பொது சுகாதாரப் பயிலகத்தின் நோய்த் தொற்றியல் மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியருமான மியர் ஸ்டாம்ப்ஃபர்.
இங்கிலாந்தில் அதிகபட்ச சராசரி வயது ஆண்களுக்கு 79.4-ஆகவும், பெண்களுக்கு 83-ஆகவும் இருக்கும் நிலையில், இங்கிலாந்தை விட சுகாதாரத்துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்காவில் அது முறையே 76.9-ஆகவும், 81.6 வயதாகவும் இருப்பதன் காரணத்தை அறியவே இத்தகைய ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.
புகை – மது ஆரோக்கியத்தின் எதிரிகள்
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் அனைத்தையும் கடைபிடிக்கக் கூடிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஜனத்தொகையில் வெறும் 8% மட்டுமே. இந்த ஆய்வு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் மேற்குலகம் அனைத்திற்கும் பொருந்தும் என்று கூறுகிறார் ஆய்வாளர் ஸ்டாம்ப்ஃபர்.
இப்பழக்கங்களை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில், கடைபிடித்து வாழும் ஆண், பெண் இருபாலருக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் மரணம் 82% வரை குறைவதாகவும், புற்றுநோயால் ஏற்படும் மரணம் 65% வரை குறைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
”ஆரோக்கியமான பழக்கங்கள் உடலுக்கு நல்லதுதான் என்பது தெரிந்திருந்தும், அதனைப் பின்பற்றுவதில் நமது மக்கள் கவனம் செலுத்துவதில்லை. புகைக்கும் பழக்கத்தை கைவிட இயலாமை, சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதபடிக்கான மோசமான நகர்ப்புற கட்டமைப்பு போன்றவைகளே இப்பழக்கங்களை பின்பற்ற முடியாமல் போவதற்கு அடிப்படையான காரணமாக அமைகின்றன” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.
மேலும், “இதில் மக்கள் தாமாக முன்வந்து தனிப்பட்டரீதியில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் மக்கள் இப்பழக்கங்களை மேற்கொள்வதற்கு ஒரு சமூகமாக நாம் ஆவண செய்து தர வேண்டும். மக்கள் பழைய வழிகளிலேயே சுழன்று கொண்டு இனி வேறு வழியேதும் கிடையாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது மட்டுமே குறிப்பிடத்தக்க பயனை அடைகிறார்கள்” என்கிறார் ஸ்டாம்ப்ஃபர்.
இந்த ஆய்வு வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்றாலும் இந்தியாவிற்கு பொருத்திப் பார்க்கலாம். நமது ஆயுள் சராசரி என்பது 68 வருடங்கள் ஆகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், சத்துணவு குறைபாடு அனைத்தும் இங்கே அதிகம்.
இந்த ஆய்வில் கூறப்பட்ட 5 ஆரோக்கியமான பழக்கங்கள் போக, உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வியறிவு முதலான அனைத்து அடிப்படைகளும் இங்கே மக்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. மேலதிகமாக நகர்ப்புற வாழ்வின் துன்பங்கள்… இருப்பிடம் இல்லாமை, அதிக பணிநேரம், உடல்வலியை ஏற்படுத்தும் உடலுழைப்பு, பின் தங்கிய சமூக நிலைமை, சாதி – மத சடங்குகளால் பெண்கள் ஒதுக்கப்படுதல், என அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் அந்த ஐந்தையும் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
டாஸ்மாக் மதுவை எடுத்துக் கொண்டால் அதுதான் நமது ஆண்களை சர்வரோக நிவாரணியாக ‘அமைதிப்’ படுத்துகிறது. அதனாலேயே விரைவில் மரணம், குடும்ப வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. புகை, பான்பராக் போன்றவற்றுக்கும் வேலை சூழல் முக்கியமான காரணம். உணவைப் பொறுத்த வரை அத்தியாவசிய வாழ்க்கைக்கான கலோரிகளே கிடைக்காத சூழலில் சமச்சீர் உணவெல்லாம் நம் கைகளுக்கு எட்டாமல் இருக்கிறது.
நடுத்தர வர்க்கமோ மேற்கண்ட பிரச்சினைகளுக்கு வழியும் தீர்வும் வைத்திருந்தாலும் இடையில் நின்று தத்தளிக்கிறது. அதுவும் உணவு கட்டுப்பாடு முறைகள், மாற்று மருத்துவம் என்று ஏமாறும் வணிகத்தில் சிக்கிக் கொள்கிறது.
இருப்பினும் மேற்கண்ட ஐந்து பழக்கங்களை பி்ன்பற்றும் முயற்சியினை நாம் முடிந்த மட்டும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களை இப்போதே இது குறித்த விழிப்புணர்வோடு வளர்த்தாக வேண்டும். கிடைத்திருக்கும் வாய்ப்பில் நாம் ஆரோக்கியத்திற்காக போராடுவது என்பது, அரசியல் ரீதியாக போராடுவதற்கு அவசியம் என்பதாலும் இந்த முயற்சிகளை செய்ய வேண்டும். நீங்கள் தயாரா?