Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 839

புவனேசுவரி: முக்குலத்தோரின் புதிய வீராங்கனை !!

vote-012வாசகர்களுக்கு புவனேசுவரியைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. விபச்சார வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த அம்மையார் சொன்னதாக சில பிரபல நடிகைகளின் பெயர்களை தினமலர் வெளியிட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை உலகத்துக்கு எதிராகக் கலை உலகம் கொதித்தெழுந்தது.

தமிழ்ச் சமூகத்தை தாங்கி நிற்கும் மூன்று தூண்களில் சினிமா, பத்திரிகை ஆகிய இரண்டு தூண்கள் மோதிக் கொண்டு வீழ்ந்துவிட்டால், டாஸ்மாக் என்ற மூன்றாவது தூணின் மீது தமிழ்ச்சமூகத்தின் மொத்த வெயிட்டும் இறங்கி, அந்தத் தூணும் தள்ளாடி நிலைகுலைந்து விடக்கூடும் என்ற அபாயத்தை தொலைநோக்குடன் புரிந்து கொண்ட கலைஞர், உடனே தலையிட்டு, அவ்விரு தூண்களுக்கிடையில் போர்நிறுத்தம் செய்து வைத்தார். அப்புறம் புவனேசுவரியைப் பற்றி நாம் எல்லோருமே மறந்து விட்டோம்.

இப்படி தனியொரு பெண்ணாக நின்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த புவனேசுவரி ‘யார்’ என்பதை அறிந்து கொள்ளும் அக்கறை, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அந்த அம்மையார் யார் என்று புரிந்து கொண்ட மறுகணமே, அவரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவியாக நியமித்துவிட்டார் டாக்டர் சேதுராமன். அந்த அம்மையார் தேவர் குருபூசைக்கும் சென்று வந்துவிட்டார். தமிழகத்தையே கட்டி ஆண்ட மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்தான் புவனேசுவரி என்ற தெரிந்த பிறகு, இனி அவர் மீது கைவைக்கும் தைரியம் போலீசுக்கு வருமா என்று பார்ப்போம்.

ஒரு வேளை வெள்ளைக்காரன் மட்டும் நம் நாட்டைப் பிடிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், யோசித்துப் பாருங்கள்!

மன்னர் சேதுராம பாண்டியர், இளவரசி புவனேஸ்வரி, இளவரசர் கார்த்திக், தளபதி ஸ்ரீதர் வாண்டையார் போன்ற மாணிக்கங்களின் ஆட்சியின் கீழ் நாம் குடிமக்களாக இருந்திருப்போம். காந்தி கிடையாது, சுதந்திரம் கிடையாது, அரசியல் சட்டம் கிடையாது, அம்பேத்கரும் கிடையாது. எனவே பாப்பாபட்டி கீரிப்பட்டியும் கிடையாது. அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அரச பரம்பரையினர் படிக்கவேண்டிய கட்டாயமோ, தேவர் குருபூஜைக்கு போஸ்டர் அடிக்க வேண்டிய தேவையோ, அப்புறம் அடிபட வேண்டிய அவசியமோ கிடையாது. என்ன செய்வது, வரலாறு என்பது வேந்தர் பரம்பரைகள் விரும்பும் வழியில் செல்வதில்லையே!

சென்னை சட்டக்கல்லூரி பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்களேன். புவனேசுவரி என்ற மாதர் குல மாணிக்கத்தை மகளிர் அணித் தலைவியாகவும், கார்த்திக் போன்ற தெளிந்த சிந்தனையாளர்களை கட்சித்தலைவர்களாகவும் கொண்டாட முடிந்த மூவேந்தர் வாரிசுகளான மாணவர்களுக்கு அம்பேத்கர் பெயரைப் போட்டு போஸ்டர் அடிப்பது கவுரக் குறைச்சலாக பட்டிருக்கிறது. எது கவுரவம் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கக் கூடாதா என்ன?

வெள்ளையனை எதிர்த்துப் போராடித் தூக்கில் தொங்குவது மருது சகோதரர்களுக்கு கவுரவமாகப் பட்டிருக்கிறது. அந்த மருது சகோதரர்களைத் தோற்கடிப்பதற்கு வெள்ளைக்காரனுக்கு வழி சொல்லிக் கொடுத்து, படை கொடுத்து, அவன் படைகளுக்கு சோறும் ஆக்கிப் போட்ட புதுக்கோட்டை தொண்டைமானுக்கு, வெள்ளைக்காரன் கொடுத்த மெடலைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது கவுரவமாக இருந்திருக்கிறது.  வெள்ளைக்கார துரையால் வளர்க்கப்பட்ட இந்த தொண்டைமானின் இளவல், அந்த துரையைத்தான் அப்பா என்று கூப்பிடுவானாம். அவன் மகனுக்கு அதுதான் கவுரவமாகப் பட்டிருக்கிறது. இப்படி வெள்ளைக்காரனிடம் அப்பன் பதவியையே பறிகொடுத்த தொண்டைமான், சின்ன மருதுவை நாய் என்று ஏசியிருக்கிறான். இவையெல்லாம் கவுரவப் பிரச்சினை குறித்த சில வரலாற்று விவரங்கள்.

சரி நிகழ்காலத்துக்கு வருவோம். புவனேசுவரியை மகளிரணித் தலைவியாகக் கொண்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், தேவர் குருபூசைக்கு ஒட்டுவால் மாதிரி மருதிருவர் குருபூசை என்று ஒரு கூத்தையும் கடந்த 5 ஆண்டுகளாக அரங்கேற்றத் தொடங்கியிருக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகள், “”தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா!” என்ற தேவர் குருபூசையின் கொள்கை முழக்கங்கள்தான் மருதிருவர் குருபூசைக்கும்!

மருது சகோதரர்கள் அகமுடையார் சாதியில் பிறந்தவர்கள். எனினும் உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடும் ஆங்கிலேய கைக்கூலிகளைத் தவிர மற்ற அனைவரையும் ஒரே மக்களாகக் கருதி, அணிதிரட்டியவர்கள். மேலும் வேலைக்காரர்களாக இருந்து பாளையக்காரர்களாக மாறியவர்கள் என்பதால், அவர்கள் மூவேந்தர் பரம்பரைக்குரிய தகுதி இல்லாதவர்கள். எனவே வேந்தர் பரம்பரையில் வந்த சேதுராமன், புவனேசுவரி அம்மையார் போன்றவர்கள் மருதிருவருக்கு குருபூசை நடத்துவது தங்களுடைய கவுரவத்துக்கு இழுக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்திலேயே இருக்கிறது புதுக்கோட்டை! விஜரகுநாத தொண்டைமான், முக்குலத்தில் ஒர் குலமான புதுக்கோட்டை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். ஒரிஜினல் ஆண்ட பரம்பரை. மூவேந்தர் பரம்பரையின் கவுரவத்துக்கு ஏற்றவர்.

எனவே அடுத்த ஆண்டு முதல் மருதிருவர் குருபூசையைக் கைவிடுமாறும், புவனேசுவரி அம்மையார் தலைமையில் தொண்டைமான் குருபூஜையை துவக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சிறப்பு விருந்தினர்களாக மன்மோகன் சிங்கையும் சிதம்பரத்தையும் அழைக்கலாம். தட்டாமல் வருவார்கள்.

–          புதிய கலாச்சாரம், ஜனவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

போரை நிறுத்து !!

11

 

ஈழப் போரின் முடிவு தமிழ் மக்களுக்கு பெரும் சாபமாகவும், துயர் நிறைந்ததாகவும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஈழப் போரின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா  தண்டகாரண்யாவில் (மத்திய இந்தியா) போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏகாதிபத்திய, தேசம் கடந்த தொழில் நிறுவனங்களுக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மக்கள் வளங்களை தாரைவார்க்கும் நோக்குடனும்  பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரில் மாபெரும் நக்சல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. அதற்கு இந்தியா வைத்துள்ள பெயர்தான் ‘க்ரீன் ஹண்ட்.”

அமெரிக்காவின் அடியாளாக தென்கிழக்கில் உருவாகியிருக்கும் இந்தியா தனது விஸ்தரிப்புக் கனவுகளுக்கும் சுரண்டல் வர்த்தக நலன்களுக்கும் இடையூறாகவோ, தடங்கலாகவோ இருக்கும் எந்த ஒன்றையும் அழித்தொழித்து சுதந்திர வர்த்தக வலையமாக இப்பிராந்தியத்தை மாற்றுவதே இந்த அடியாளின் ஆசை.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் மக்களாட்சி மலர்ந்தால் இப்பிராந்தியத்தில் தனது இருத்தலுக்கு அது இடையூறாக இருக்கும் எனக் கருதுகிற இந்தியா நேபாளத்தில் தனது தனது விசுவாசியான மாதவ் குமார் நேபாளை பிரதமராக்கி பொம்மையாட்சி ஒன்றை நேபாளத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அடிமையான மாதவ் குமார் நேபாளோ ”இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கையையும் நேபாளம் அனுமதிக்காது” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மாதவ் குமார் நேபாள் பயங்கரவாதம் என்று சொல்வது மாவோயிஸ்ட் போராளிகளின் மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்கள் விடுதலையை.

நேபாளத்தின் மக்கள் கிளர்ச்சி இந்தியாவுக்கு எதிரான பாயங்கரவாதம். ஈழ மக்களின் தேசிய சுயநிர்ணய போராட்டமும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது; என்கிற நிலையில் அந்நிய ஆபத்து, எல்லை தாண்டும் பயங்கரவாதம் என்ற கதையாடல்கள் எல்லாம் மாறி இப்போது உள்நாட்டு அச்சுறுத்தல் என்று துவங்கியிருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். சமீபத்தில் அவர் ‘’உள்நாட்டு அச்சுறுத்தல்களை சமாளிக்க தனி அமைச்சகம் வேண்டும்”’ என்று சொல்லியிருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு உருவான அச்சுறுத்தல் இப்போது உள்நாட்டிலேயே உருவாகிறதாம்.

இந்தியா உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. சரி சமமாக பிளக்கப்பட்ட சமுகத்தில் நிலத்தின் மீதான உரிமையும், பொருளாதார உத்திரவாதத்தையும் இழந்த மக்கள் எதிர்ப்பியங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். பல இடங்களில் அது மக்கள் வன்முறையாக வெடிப்பதனையும் புரட்சிகர சக்திகள் தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு பெருந்திரள் மக்கள் போராட்டங்களை பயன்படுத்திக் கொள்வதையும் நாம் காண முடிகிறது. மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் தோற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக வழிமுறைகளையுமே சிதம்பரம் உள்நாட்டு அச்சுறுத்தல் என்கிறார். இந்தியாவின் இன்றைய விஸ்தரிப்பு நோக்கங்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தெளிவாக நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றன.

ஏகாதிபத்தியங்கள், தேசம் கடந்த தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு தரகு பெரு முதலாளிகள் என அவர்களுக்கு நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி தாரை வார்த்தல் என்று அமெரிக்காவின் அடியாளாக தென்கிழக்கில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. நாம் காண்கிற, கண்டுகொண்டிருக்கின்ற மக்கள் கொலைகள், போர்கள், பயங்கரங்கள் என எல்லாமே நமக்கு உணர்த்துவது இதைத்தான். தந்திரங்கள்தான் வேறு வேறு…..

இலங்கையில் புலிகள் போராடினார்கள். அரை குறையான மரபு வழி இராணுவமும் ஒரு நிர்வாக அலகும் அவர்களிடம் இருந்த போது அவர்களை கடுமையான இராணுவத் தாக்குதலின் மூலமே எதிர்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. ( புலிகளின் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமாகவோ, சுரண்டல் நலன்களுக்கு எதிரான போராட்டமாகவோ நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பிராந்திய வல்லரசுகளின் வர்த்தக நலன்களுக்கு புலிகளின் போராட்டம் தடையாக இருந்தது) கடைசியில் அதை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கி அழித்தார்கள்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு மக்கள் திரள் போராட்டங்களை நடத்துகிறார்கள். அங்கே இந்திய, நேபாள அரசுகளின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. மத வெறியைத் தூண்டி விட்டு மக்களை பிளவு படுத்துவது, இன முரண்களை தூண்டி விடுதல், என்பதாகவும், இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுகள் குழந்தைப் போராளிகளை போரில் ஈடுபடுத்துகிறார்கள். தங்களின் இராணுவத்திற்கு குழந்தைகளை கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பிடிக்கிறார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது இந்தியா. இன்னொரு பக்கம் நேபாள மாவோயிஸ்டுகளின் மக்களாட்சிக்கான போராட்டத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மாவோயிஸ்டுகளை விழுங்க தருணம் பார்த்துக் காத்திருக்கிறது இந்தியா.

நேபாளத்தில் இந்தியா செய்யவிரும்புவதற்கான தருணம் இன்னும் வாய்க்காத நிலையில் வன்னிக் கொலைகளின் முன்னுதாரணத்தைக் கொண்டு   மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர், ஆந்திரா என இம்மாநில மாநில எல்லையோரப் பகுதிகளான தண்டகாரண்யாவிலும் பெரும் போரை க்ரீன் கண்ட் என்னும் பெயரில் ஒரு இலட்சம் படை வீரர்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.

உள்நாட்டு அச்சுறுத்தல் என்று சிதம்பரம் சொல்வது எதை? யாருக்காக இந்தப் போர்?

பன்னாட்டு வணிக நிறுவனங்களோடு கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்தியா. நமது மாநிலங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல, சிறுவணிகம், தண்ணீர், இயற்க்கை வளங்கள், கனிம வளங்கள், கடல், மலை, என எதுவும் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்களில் இருந்து தப்ப முடியாது. நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் இருந்து நிலங்களை அபகரிப்பதில்லை. மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு நிர்பந்தம் செய்து வாங்கி சட்டத்தின் அங்கீகாரத்தோடு பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதுதான் இந்த ஒப்பந்தங்கள். கனிமங்கள், தண்ணீர், தேயிலை, ரப்பர், கடல் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்காக மக்களின் நிலங்களை அபகரிக்கும் இந்தியா தேசம் கடந்த தொழில் நிறுவனங்களோடு எத்தனை ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது? எந்தெந்த நிறுவனங்களுக்கு? எந்த நிலம்? என்ன விலை? என்ன வளம்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் தெரிந்து கொள்ள முடியாது. காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பார்கள்.

இங்கே இந்தியப் பிரதமர் மன்மோகன் பற்றியும் சிதம்பரம் பற்றியும் ஒன்றைச் சொல்ல வேண்டும். பிரதமர் அலுவலக ஸ்டெனோ கிராஃபராக இருந்த மன்மோகனின் அரசியல் நுழைவு என்பது திடீரென நிகழ்ந்த ஒன்று. அவரைத் திட்டமிட்டே இந்திய அரசியலில் நுழைத்தது அமெரிக்கா. நேரடியாக தனது அடிமை விசுவாசிகளை உருவாக்கி பொம்மையாட்சியை அவர்களிடம் வழங்கி அவர்கள் மூலமாக இந்தியாவை தனது அறிவிக்கப்படாத மறு காலனியாக வைத்திருப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

மிகக்குறைந்த விலையில் ஈரானுடன் இந்தியா செய்து கொண்ட எரிவாயு ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு விட்டு அதை வலியுறுத்திய நட்வர்சிங் போன்றவர்களையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு எஜமானர்களின் தேவைகளை அறிந்து சேவை செய்யும் இருவராகவே மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை இந்திய அரசுப் பிரதிநிதிகளாக மட்டும் பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களுடனான தனிப்பட்ட விருப்பங்களும் இவர்களுக்கு உண்டு. நேரடியாகவோ தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ பல்வேறு தொழில் தொடர்புகளை பன்னாட்டு நிறுவங்களுடன் பேணுகிறவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் சிந்தனை முறை என்பது மட்டுமல்ல நிர்வாக ஆட்சியும் அமெரிக்கா பாணியில்தான் கட்டவிழ்த்து விடப்படுகிறது. புலனாய்வுக்குழு, உளவுக்குழு, அடியாட்படை, கட்டற்ற வேட்கை கொண்ட ( உண்மையில் வெறி நாய்களைப் போன்ற) படைகள் என இந்தியாவிலும் அதே பாணிதான் இப்போது பின்பற்றப்படுகிறது. போர் நடைபெறும் எந்தப் பகுதியிலும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் என்று சொல்லப்படும் கலெக்டர்கள் செல்லாக்காசுகள்தான். மாவட்ட எஸ்.பிக்களும் சிறப்பு அதிரடிப்படை தலைவர்களுக்குமே, மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கும் அதிகாரம் உள்ளிட்ட சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார்கள். இம்மாதிரியான சூழலில் இருந்தே இந்தியா முன்னெடுத்து சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் ” “ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்“ என்னும் போரை நாம் காண முடியும்.

இந்தப் போர் துவங்கிய சென்ற வருட மத்திய மாதங்களில் ஆங்கில ஊடகங்கள் தண்டகாரண்யாவிலும், லால்கர் இயக்கத்தின் மீதும் அதிக கவனம் கொண்டிருந்தன. ஆனால் பின்னர் ஊடகங்களும் ஆளும் வர்க்க நலன்களை முன்னெடுக்க மௌனம் என்னும் ஒரே பதிலின் மூலம் இப்போரில் ஊடங்களும் பங்கெடுக்கின்றன. ஈழ மக்கள் மீதான போரின் போது இந்திய ஊடகங்கள் காட்டிய அதே வன்மத்தை இன்று மத்திய இந்தியா மக்கள் மீதும் அவை காட்டுகின்றன. காட்டிக் கொண்டே இருக்கின்றன.

தண்டகாரண்யா மக்களின் பிரச்சனை என்பது நீண்ட காலப் போராட்டமும் கோபமும் நிறைந்தது. எப்போதும் அவர்கள் தனியார் முதலாளிகளால் சுரண்டப்பட்டே வந்திருக்கிறார்கள். பொதுவாக பழங்குடிகள் என்றும் மலை சார்ந்து வாழும் மக்கள் என்றும் அறியப்பட்ட பழங்குடி மக்களிடம் நிலங்கள் இல்லை. அவர்கள் நிலத்துக்காக போராடினார்கள். தங்களின் பூர்வீகநிலங்கள் மீதான உரிமைகளுக்காக போராடினார்கள்.

இன்றைய வடகிழக்கு மற்றும்  தண்டகாரண்ய மக்களின் போராட்டம் என்பதை நாம் சுரண்டல் வர்த்தக நலன்களுக்கு எதிரானது என துல்லியமாக அடையாளப்படுத்தி விட முடியும். இதைத்தான் சிதம்பரம் உள்நாட்டு அச்சுறுத்தல் என்கிறார். மத்திய இந்தியாவின் மாநிலங்களில் இந்த தேடுதல் வேட்டை  இருந்தாலும் அதிகமான மக்கள் இந்தப் போரால் பாதிக்கப்பட்டிருப்பது சட்டீஸ்கர் மாநிலத்தில்தான். T.T.P.P, C.R.P.F, S.T.F. B.S.F, என இவர்களோடு சல்வார்ஜூடும், லோக்கல் போலீசும் களமிரக்கப்பட்டு கொடூரமான யுத்தம் ஒன்றை சட்டீஸ்கர் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ( 2008-ல் லால்கர் மீட்பின் போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பது கிராம மக்கள் இன்னும் அவர்களின் பூர்வீக கிராமங்களில் குடியமர்த்தப்படவில்லை. அந்த நிலங்களில் ஏராளமான இராணுவ முகாம்களை நிறுவியுள்ள இந்திய அரசு. பன்னாட்டு நிறுவங்களின் கைகளில் அந்த நிலங்களை ஒப்படைக்கக் காத்திருக்கிறது. ) ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் கூட இம்மாதிரியான அகதி முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டீஸ்கரில் இருந்து இடம் பெயரும் மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு வருகிறார்கள். அப்படி வருகிற மக்களுக்கும் ஆந்திர பழங்குடி மக்களுக்குமிடையே மோதல்கள் உருவாகின்றன.

இந்திய உளவு நிறுவனங்கள் உருவாக்கியுள்ள உளவாளிகள் இந்த மக்களுக்கிடையிலான முரண்களை கூர்மையடைய வைத்து மோதலை உருவாக்கி விடுகிறார்கள். மொழி, பிராந்தியவாதம், இனக்குழு வேறுபாடு என பலவகையான முரண்கள் இக்குழுக்களுக்கிடையில் உருவாகின்றன.

தண்டகாரண்யாவை மாவோயிஸ்ட் போராளிகளிடமிருந்து மீட்க முதலில் நாற்பதாயிரம் வீரர்களைக் கொண்டு போரை இந்தியா துவங்கிய போது அதற்கு அவர்கள் வைத்த பெயர் green hunt.  இதை பசுமை வேட்டை என்றோ காட்டு வேட்டை என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இந்தப் போரில் இந்தியா வைத்திருக்கும் பெயர் போரின் உண்மையான காரணத்தை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. அவர்கள் பசுமையை வேட்டையாடுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகளுக்காகவும், உள்ளூர் டாட்டா, பிர்லாக்களுக்காகவும் மக்களிடம் இருக்கும் பசுமையை வேட்டையாடி முதலாளிகளுக்கு பரிசளிக்கப் போகிறார்கள்.

இந்தப் போரில் கட்டற்ற சுதந்திரம் இந்த படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சட்ட விரோதக் கடத்தல், காணாமல் போதல், சுட்டுக் கொல்லுதல், ரகசிய வதை முகாம்கள், பாலியல் வன்முறைகள் என பல விதமான சுதந்திரங்களும் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மனித உரிமை அமைப்புகளைக் கூட தொடர்பு கொண்டு முறையிட முடியாத கொடுமை தண்டகாரண்யாவில் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஹிமான்சு குமார் என்பவர் ஒரு காந்தீயவாதி. மக்களின் பெருந்திரள் வன்முறைப் போராட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர். அவர் சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் ‘வனவாசி சேத்னா’ என்ற பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவி ஆதிவாசி மக்களுக்கு சேவை செய்து வந்தார். சட்டவிரோத சல்வார்ஜூடும் ஆயுதப் படைகளின் கொலைகளைக் கண்டு ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன ஹிமான்சு குமார், சல்வார்ஜூடும்களின் கொலைகள், கடத்தல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். விளைவு அவரது காந்தியாஸ்ரமம் சூறையாடப்பட்டது. அவர் செயல்பட முடியா நிலைக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ள சட்டவிரோத செயல்கள் குறித்தும், க்ரீன் ஹண்ட் போர் குற்றங்கள் குறித்தும் மக்கள் கருத்தறியும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஹிமான்சு குமார். டில்லியில் இருந்து மேதாபட்கர், சந்தீப் பாண்டே, நந்தினி சுந்தர் போன்றோர் செல்வதாக ஏற்பாடு. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் சென்று விசாரிப்பதைக் கூட விரும்பாத இந்திய அரசு, கடும் அச்சுறுத்தலை ஏவி விட்டு அக்கூட்டத்தை நடத்த விடாமல் செய்து விட்டது. ஏற்கனவே மேற்குவங்க அடக்குமுறைக்கு எதிராகப் பேசிய மஹாஸ்வேதா தேவி போன்ற அறிவுஜீகள் கடுமையாக ஒடுக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.

இதே சூழலில் இன்று காந்தி மறுவாசிப்பு செய்யப்படுவதையும் காந்தீயக் கொள்கையான அஹிம்சையை எதிர்ப்பியங்களுக்கு மாற்று அரசியல் சிந்தனையாக சிலர் முன்வைப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அன்றைய காந்தி பிரிட்டிஷ் பேரரசில் கௌரவமான ஒரு இடத்திற்காகப் போராடியதும் அதற்காக இந்திய தேசிய முதலாளிகளை சிதைத்து டாடா,பிர்லாக்கள் போன்ற ஏகாதிபத்திய சேவகர்களின் பண்ணைக்குள் ஒளிந்து கொண்டு காந்தி உருவாக்கியவைதான் எளிமையும் அஹிம்சையும். இந்த எளிமையும் அஹிம்சையும் ஏகாதிபத்தியங்களை தோற்கடிக்கப் போதுமானவையா? எளிமையும் அஹிம்சையும் அரசு வன்முறையும் ஏகாதிபத்திய சுரண்டலையும் தோற்கடிக்க போதுமானவையாக இருந்திருந்தால் ஹிமான்சு குமாரால் மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியிருக்க முடியுமல்லவா?

புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் முடிவை ஒட்டி முன் வைக்கப்படுகிற காந்திய சிந்தனைகள் துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய அன்றைய காலச் சூழலுக்கே பொருந்தாத போது, அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்கள் படுகொலைகள் சகஜமாக நிகவும் இந்தக் காலத்திற்கு காந்தியின் அஹிம்சை எப்படி எதிர்ப்பியங்களுக்கு பயன்படும்?

போர் நிறுத்தம் கேட்போம்……..

வன்னியில் இந்தியாவின் துணையோடு இலங்கை அரசு ஈழ மக்களைக் கொன்று குவித்த போது ஏனைய இனத்து மக்கள் வன்னி மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆகவே யார் செத்தால் என்ன? நாம் ஏன் இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தின் சில மட்டங்களில் கேட்க முடிகிறது. உண்மைதான். வன்னியில் நடந்த போரின் போது ஜனநாயகவாதிகள் என்று தங்களை பீற்றிக் கொள்கிற சிலர் மௌனமாகவே இருந்தார்கள். இவர்கள் பாலஸ்தீனத்திற்காகப் பேசுவார்கள், கியுபாவிற்காகவும் பேசுவார்கள், கொசோவா என்றால் கொதிப்பார்கள். ஆனால் ஈழம் என்று வந்தால் அதை பயங்கரவாதம் என்று ஒதுக்குவார்கள். அல்லது மௌனிகளாகிவிடுவார்கள்.

பல நேரங்களில் இந்த மௌனமே பெரும் போர் வெறியர்களுக்கு சாதகமான ஒன்றாக உருவாகிவிடுகிறது. க்ரீன் ஹண்ட் போருக்கு எதிராகவும் இம்மாதிரியான மௌனம் ஒன்று நிலவுகிறது. ஆனால் நமது இந்த மௌனம் பல லட்சம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு துணைபோகிறது. ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் நீதியைத் தேடி அலைந்து மக்கள் சோர்ந்து விட்டார்கள்.

ஜனநாயகத்தின் இரும்புக் கதவுகள் ஏழைகளுக்காக இனி எப்போது திறக்கப் போவதில்லை என்பதை போபால் விஷவாய்வுக் கசிவு நமக்கு உணர்த்துகிறது. மக்கள் முன்னால் இப்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள்… எதிர்ப்பியங்களை வலுப்படுத்துதல்…ஆம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது நாம் கைபிசைந்து நின்றோம். போராட்ட வடிவங்களை மாற்றி மக்கள் எழுச்சியை நாம் உருவாக்கத் தவறினோம். அங்கே மக்கள் கொல்லப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இப்போது மக்களிடமிருந்து நிலங்களையும் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வன்னிப் போரை முன்மாதியாகக் கொண்டு வடகிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. தண்டகாரண்யா மக்கள் வேறு இன மக்கள் அவர்கள் செத்தால் நமக்கு என்ன? என்று இருந்தால்…. இப்போது மத்திய இந்தியாவில் வீசப்படும் குண்டும்… பாலியல் வன்முறையும்….. சட்டவிரோதக் காவலும், கடத்தலும், கொலைகளும் நாளை ராமேஸ்வரத்திலும் நடக்கும்…

ஆமாம் அதிகப்படியாக நான் எதையும் சொல்லவில்லை. தண்டகாரண்யா மக்களின் நிலங்களை பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்தியா ராமேஸ்வரத்திலும் கடலை தேசம் கடந்த தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகச் சூதாட்டத்திற்கு தடையாக இருக்கும் மீனவர்களை அங்கிருந்து துரத்த சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  இன்று தண்டகாரண்யாவில் மாவோயிஸ்ட் போராளிகள் பழங்குடி மக்களுக்காக போராடுவது போல மீனவ மக்களுக்கான எதிர்ப்பியக்கம் ஒன்று வலுவடைந்தால் இன்று அங்கே செய்யும் போரை ராமேஸ்வரத்தில் செய்ய இந்தியாவுக்கு எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் எப்போதும் மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

ஆளும் வர்க்கங்களின் சந்தை நலனுக்கான இந்தப் போரின் முன் மாதிரியாக ஐம்பதாயிரம் ஈழ மக்களின் பிணங்களை நம்முன் கிடத்தியிருக்கிறார்கள் போர் வெறியர்கள். ஆகவே மக்கள் போராட்டங்களை ஆதரிப்போம். தண்டகாரண்யா மக்கள் மீதான போரை நிறுத்தக் கேட்போம். மக்களின் நிலங்களை மக்களிடமே வழங்கக் கோருவோம்.

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை  அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி ‘அறங்கள்’  அத்தனைக்கும் தாங்களே ‘பரம்பரை அறங்காவலர்கள்’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

மேற்படி சொத்துக்களுக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடும் தீட்சிதர்களிடம் அதற்கான பட்டாவோ, பத்திரமோ, பகவான் எழுதிக் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியோ கிடையாது. எனினும் இந்த லவுகீக உடைமைகள் அனைத்தும் தங்களுடையவை என்பது அவர்களுடைய ‘ஆன்மீக நம்பிக்கை’யாக இருக்கிறது.

நடராசனின் ஆக்ஞைப்படி 3000 தீட்சிதர்கள் கைலாசகிரியிலிருந்து கிளம்பி சிதம்பரம் வந்ததாகவும், ஊர் வந்து சேர்ந்தபின் தலையை எண்ணிப்பார்த்தபோது, 2999 தீட்சிதர்கள் மட்டுமே இருந்ததாகவும், “காணாமல் போன அந்த ஒரு தீட்சிதன் நானே” என்று நடராசப் பெருமானே அறிவித்ததாகவும் ஒரு கதையை தீட்சிதர்கள் சொல்கிறார்கள். இந்தக் கதைப்படி தில்லை நடராசனும் ஒரு தீட்சிதனாகி விடுகிறான். எனவே, தீட்சிதர்களால், தீட்சிதர்களுக்காகப் பராமரிக்கப்படும் தீட்சிதருடைய கோவிலே தில்லைக் கோயில் என்று ஆகிறது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள லவுகீக சொத்துக்களுக்கு மத நம்பிக்கையின் பெயரால் ஒருவர் உரிமை கோர முடியுமா, சட்டம் இதை அனுமதிக்குமா  என்று நீங்கள் சிரிக்கலாம். ஒரு இந்தியக் குடிமகன் மதத்தை நம்புவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் உரிமை வழங்குகின்ற இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25, 26 இன் கீழ்தான் இந்த பாரம்பரிய உரிமையை இத்தனை காலமும் தீட்சிதர்கள் நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ்தான் தமிழக அரசின் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். இது தில்லைச் சிதம்பரத்தின் கதை.

இனி தில்லி சிதம்பரத்திடம் வருவோம். சிதம்பரத்தின் காட்டு வேட்டைப் படைகள் கைப்பற்றத் துடிக்கும் முதல் இடம் ஒரிசாவிலுள்ள நியாம்கிரி மலை. இந்த நியாம்கிரி மலையின் பாரம்பரியக் காவலர்கள் டோங்கிரியா கோண்டு என்ற இனத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். டோங்கர் என்ற ஒரியச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களும்கூட கோண்டலைட் கற்கள் என்றே அழைக்கப்படுவது இம்மக்களுடைய பாரம்பரிய உரிமைக்கான ‘கல்வெட்டு’ ஆதாரம்.

எனினும் அம்மக்கள் தம்மை ‘ஜார்னியாக்கள்’ என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த மலைகளில்  நிறைந்திருக்கும் வற்றாத நீர்ச்சுனைகளே (ஜரனா) தங்கள் வாழ்வின் ஆதாரம் என்பதனால், தங்களை அந்த நீர்ச்சுனைகளின் புதல்வர்களாகவே அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். பூமித்தேவனும் (தரணி பெனு) நியாம் தேவனும் (நியாம் பெனு) தான் இம்மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்.

நியாம்கிரி மலை இம்மக்களுடைய உடலின் நீட்சி. தம் சொந்தக் கைகளுக்கும் கால்களுக்கும் யாரும் பத்திரப் பதிவு செய்து வைத்துக் கொள்வதில்லை என்பதால், தங்கள் மலைக்கும் இவர்கள் பட்டாவோ பத்திரமோ வைத்திருக்கவில்லை. அந்த மலை  அவர்களால் பேணப்படும் உடல், அந்த மலைதான் அவர்களுக்குச் சோறு போடும் பொருள், அந்த மலையேதான் அவர்களது வழிபாட்டுக்குரிய ஆவி.

தங்களது பொருளாயத உரிமைகளையும், ஆன்மீக உரிமைகளையும் பிரித்துப் பார்ப்பதற்கோ, இந்திய அரசியல் சட்டத்தின் எந்ததெந்தப் பிரிவுகள் எவற்றைப் பாதுகாக்கின்றன என்று தீட்சிதர்களைப் போல, விவரமாக தெரிந்து வைத்திருப்பதற்கோ அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டதில்லை. சொல்லப் போனால் அப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம்தான் தங்களைப் ‘பாதுகாத்துக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை  சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் புல்டோசர்கள் நியாம்கிரி மலைக்கு விஜயம் செய்யும் வரை.

இது உலகமயமாக்கலின் காலமல்லவா? இம்மண்ணின் பூர்வகுடிகளை விடவும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களுக்குத் தாய்நாட்டுப் பாசம் தலைவிரித்து ஆடும் காலமல்லவா? லண்டனில் குடியேறிய இந்தியரான அனில் அகர்வால் என்ற உலகப்பணக்காரரும் நியாம்கிரி மலையில் தனது கடவுளைத் தரிசித்து விட்டார்.

பருவமழையின் நீரைப் பருகி, கடற்பஞ்சு போல அதனைச் சேமித்து வைத்து, அச்சேமிப்பில் விளைந்த அடர்ந்த காடுகளை ஆகாயத்தில் கரங்களாய் நீட்டி, மேகத்தின் நீரை மண்ணில் இறக்கி, வற்றாத அருவிகளையும், சுனைகளையும் வழங்கிய வண்ணம் அந்த மலைக்குள் மறைந்திருக்கும் கடவுள் யாராக இருக்கும் என்ற அவரது ஆன்மீகத் தேடலுக்கு அறிவியல் அளித்த விடை  பாக்சைட்.  இந்தக் கடவுளின் அறங்காவலராக உடனே பொறுப்பேற்க விரும்புகிறார் அகர்வால்.

தங்களது கடவுளான நியாம்கிரி மலைக்கு ஆடு கோழி அறுத்து பலியிடுவது டோங்கிரியா கோண்டு இன மக்களின் வழிபாட்டு முறை. கடவுளைத் தனக்குப் பலியிட்டுக் கொள்வது அகர்வாலின் வழிபாட்டு முறை. மலையின் மேற்பரப்பில் நிரம்பியிருக்கும் பாக்சைட் தாதுவுக்காக, அந்த 40 கி.மீ. நீள மலைத் தொடரின் தலையை மட்டும் அவர் சீவ விரும்புகிறார். பழங்குடி மக்களின் கடவுளரைத் தின்று செரிக்கும் இந்த வழிபாட்டு முறைக்குப் பொருத்தமான ஒரு பெயரை, அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு  ஏற்கெனவே சூட்டியிருக்கிறார்  ‘வேதாந்தா மைனிங் கார்ப்பரேசன்.’ இதனைத் தற்செயல் என்பதா, இறைவன் செயல் என்பதா?

வேதங்களின் அந்தமாக ஆதிசங்கரன் கண்டறிந்த தத்துவம் ‘அகம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மமாக இருக்கிறேன்). எனினும் நாம் காணும் இந்தப் பிரம்மம், எல்லைகள் கடந்த என்.ஆர்.ஐ பிரம்மம். மூலதனம் என்ற பெயரால் அழைக்கப்படும் பிரம்மம்.

‘பிரம்மம் சத்யம், ஜெகன் மித்யா’!  “பிரம்மமே மட்டுமே உண்மையானது, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம்” என்பது சங்கரனின் தத்துவ விளக்கம். இந்த விளக்கத்தை மூலதனத்தின் மொழிக்குப் பெயர்த்தோமாகில், நாம் காணும் புதிர்கள் யாவும் நொடியில் விலகுகின்றன. இல்லாத மாயைகளான வீடுகளின் மீது, எழுதிக்கொடுக்கப்பட்ட பத்திரங்களே சத்தியமாக மாறியதும், பின்னர் அந்த அசத்தியங்களைச் சத்தியமாக மாற்றும் முயற்சியில் இந்த மாய உலகம் இன்னமும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதும் ஆதிசங்கரனின் தியரியை நிரூபிக்கவில்லையா என்ன?

நியாம்கிரியின் தலையில் நிறைந்திருக்கும் அடர்ந்த காடுகளை அழிக்க சுற்றுச்சூழல் சட்டம் தடையை ஏற்படுத்தியதால், உலகப்புகழ் பெற்ற அத்வைதிகளான ஜே.பி. மார்கன் நிறுவனத்தினரை வைத்து, நியாம்கிரியில் ‘இருக்கின்ற காட்டை இல்லை’ என்று எழுதி வாங்கினார் அகர்வால். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை!

அடுத்த தடை, பழங்குடி மக்களின் நிலத்தை நேரடியாகப் பன்னாட்டு நிறுவனத்துக்கு எழுதிவைக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தோற்றுவித்த இடையூறு. அட்டவணையையே நீக்குவதற்கு அவகாசம் தேவையென்பதால், தனது  இந்திய அவதாரமான ஸ்டெரிலைட் நிறுவனத்தின் பெயரில் சுரங்கம் தோண்டுவதாக அறிவித்தார் அகர்வால். ஆமோதித்தது உச்சநீதிமன்றம்.

காடுகளை அழித்து சுரங்கம் தோண்டினால், சூழலியல் பேரழிவு நிகழும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவே ஆட்சேபித்தது. “காடுதானே, புதிதாக வளர்த்துக் கொள்ளலாம்” என்று அந்த ஆட்சேபத்தையும் ஒதுக்கி விட்டு, 200 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்சைட் தாதுவைத் தன்னகத்தே வைத்திருக்கும் நியாம்கிரி மலையை அகர்வாலுக்கு வழங்குவதாக, ஆகஸ்டு 2008இல்  தீர்ப்பளித்து விட்டது, கே.ஜி.பாலகிருஷ்ணன், அஜித் பசாயத், கபாடியா என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு.

வனவிலங்குகளைப் பராமரிக்க 105 கோடி, பழங்குடி மக்களை முன்னேற்றுவதற்கு 12.2 கோடி, பழங்குடி மக்களுக்கான பள்ளி, மருத்துவமனைகளை பராமரிக்க அகர்வாலின் இலாபத்தில் 5 சதவீதம்  நியாம்கிரியின் தலையைச் சீவும் பாவத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள பரிகாரம் இது. கொலைக்குற்றத்துக்குப் பரிகாரமாக கோயிலுக்கு நெய்விளக்கு! இவ்வளவு மலிவானதொரு பரிகாரத்தை ஒரு பார்ப்பனப் புரோகிதனின் வாயிலிருந்து கூட யாரும் வரவழைத்திருக்க முடியாது.

“அப்பழங்குடி மக்களால் கடவுளாக வழிபடப்படும் மலையைத் தகர்ப்பது, அவர்களது மத நம்பிக்கையையே தகர்ப்பதாகும்” என்ற வாதத்தை நீதிபதிகளின் அறிவியல் உணர்ச்சியால் அங்கீகரிக்க இயலவில்லை. வளர்ச்சித் திட்டத்துக்கும் வல்லரசாவதற்கும் தடையாக ஈசனே வந்து நிற்பினும், குற்றம் குற்றமே என்றுரைக்கும் நக்கீரன் பரம்பரையல்லவா, நம் நீதிபதிகள்!

இருப்பினும், அந்தக் கடவுள் எந்தக் கடவுள், அந்த நம்பிக்கை யாருடைய நம்பிக்கை என்பதைப் பொருத்தும் நாட்டாமையின் தீர்ப்பு வேறுபடுகிறது. மரகதமலையாக ஒளிரும் நியாம்கிரி மலையைக் காட்டிலும், யாருக்கும் உதவாத ராமேசுவரத்தின் மணல்திட்டுகளை உச்சநீதிமன்றம் புனிதமாகக் கருதியதென்றால் அதற்குக் காரணம், அந்த நம்பிக்கை ஸ்ரீராமபிரான் தொடர்பானது என்பதுதான். நியாம்கிரி தொடர்பான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்ட பழங்குடி மக்களிடம் “உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டார்கள் நீதிபதிகள். ஆனால் இந்தக் கேள்வியை சிதம்பரம் வழக்கில் தலையிட்ட சுப்பிரமணியசாமியிடம் நீதிபதிகள் கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, புனிதமான கைலாசத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தீட்சிதர்கள் சொல்லிவரும் கதையை எந்த நீதிமன்றமும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை. வெள்ளைக்காரன் காலம் தொட்டு எல்லா நீதிமன்றங்களும் அந்தக் கதையைக் கேட்டுத்தான் தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பெழுதி வருகின்றன. அதனால்தான் உச்சநீதிமன்றத்தின் தாழ்வாரங்களில் தில்லை தீட்சிதர்கள் நம்பிக்கையுடன் உலவுகிறார்கள். நியாம்கிரி பழங்குடிகளோ, தங்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் தங்கள் தலைவிதியைத் திருத்தி எழுதிவிட்ட, உச்சநீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

வர்க்க நலனும்  சாதி உணர்வும்  மத உணர்வும்  ஒன்றுகலக்கும் இந்த திரிவேணி சங்கமத்தின் சுழலில், மதநம்பிக்கை முடியும் இடம் எது, வர்க்கநலன் துவங்குமிடம் எது, சாதி உணர்வு ஊடாடும் இடம் எது என்று கண்டறிய முடியாமல், ஒன்று பிறிதொன்றாய்த் தோற்றம் காட்டி நம்மை மயக்குகிறது.

நியாம்கிரி வழக்கில் ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுதிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான கபாடியா, “நான் ஸ்டெரிலைட்டின் பங்குதாரர்” என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டார். இந்திராவோ தீட்சிதர்களின் சொத்துரிமையைக் காக்க எம்ஜியாரிடம் இரகசியமாகத் தலையிட்டார். தமிழ்பாடும் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவான இடைக்காலத் தடையாணையை இரகசியமாக வழங்கிய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷா, தீட்சிதர்களுக்கும் தனக்குமிடையிலான உறவை சிதம்பர இரகசியமாகவே பேணினார். தீர்ப்புகள் கிடக்கட்டும், வாய்தாக்களின் பின்னாலும் வர்க்கநலன் உண்டு என்பதை சிதம்பரம் வழக்கின் 20 ஆண்டு உறக்கம், தனது குறட்டைச் சத்தத்தின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியது.

2004ஆம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ப.சிதம்பரம், பின்னர் நிதி அமைச்சராக அவதரித்து அனில் அகர்வாலுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்தார். 2009இல் அவரே உள்துறை அமைச்சராக உடுப்பணிந்து வந்து, இதோ கலிங்கத்தின் மீது படை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தீட்சிதர்களின் கைலாசக்கதை என்ற மத நம்பிக்கையை, தனி உடைமை என்ற ஆயிரம் கால் மண்டபம் தாங்கி நிற்கிறது.  சிவன் சொத்தில் குலம் வளர்த்த செட்டியார்கள், பிள்ளைவாள்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் கட்டளைதாரர்கள், ஆதீனங்கள், ஆடல்வல்லானின் சந்நிதியில் மகளுக்கு அரங்கேற்றம் நடத்த வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் .. அனைவரும் இந்த நம்பிக்கையின் கால்கள். அதனால்தான் கைலாசக் கதையைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல், “ஹரஹர மகாதேவா” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் டோங்கிரியா கோண்டு மக்களின் நம்பிக்கையையும் அவர்களது கடவுளையும் தாங்கி நிற்க அவர்களிடம் தனிஉடைமை இல்லை. அம்மக்கள் நியாம்கிரி மலையின் உண்மையான அறங்காவலர்களாக இருந்தார்கள். எனவேதான் ஒரு வெகுளிச் சிறுமியைத் தரையில் வீழ்த்தி, வல்லுறவு கொள்ளும் கயவனைப்போல, அந்தப் பழங்குடிப் பொதுவுடைமைச் சமூகத்தின் மீது, தனியுடைமையின் புல்டோசர்கள் வெறியுடன் படர்ந்து எறி இறங்குகின்றன. அவர்களுடைய கடவுளான நியாம்தேவனுக்கோ தூக்குதண்டனை விதித்து தீர்ப்பெழுதி விட்டது உச்ச நீதிமன்றம். தங்களுடைய கடவுளின் தலை சீவப்படுவதைக் காணமாட்டாமல் துடிக்கிறது மனித குலம் பெற்றெடுத்த அந்த மழலைச் சமுதாயம்!

···

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காட்டு வேட்டை என்று இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாம். காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கிய இந்தச் சொற்றொடர், பாரதப் பாரம்பரியத்தில் ஊறி உப்பிய மூளையிலிருந்து மட்டுமே பிறந்திருக்க முடியும்.

தண்டகாரண்ய காடுகள் இந்த வேட்டையின் களமாகியிருப்பதும் வரலாற்றின் விதியே போலும்! போர்க்களம் தண்டகாரண்யத்தின் காடுகளெங்கும் விரிய, விரிய, இராமாயணக்கதைகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. கிறிஸ்துவுக்குப் பின், 20 நூற்றாண்டுகள் முன்னோக்கி நடந்து, இதோ, இராமாயண காலத்தை எட்டிவிட்டோம்.

அங்க, வங்க, கலிங்க, கோசல, விதேக, மகத மன்னர்களின் இரதங்கள் உருண்ட பாட்டைகளின் மீது டாடா, எஸ்ஸார், மிட்டல், அகர்வால், பிர்லா, அம்பானிகளின் புஷ்பக விமானங்கள் தரையிறங்குகின்றன. வசிட்டனும் விசுவாமித்திரனும் கௌதமனும் துர்வாசனும் யாக்ஞவல்கியனும் வனாந்திரங்களில் அமைத்திருந்த பர்ணசாலைகள் ‘விருந்தினர் மாளிகை’ என்ற பெயர் தாங்கி மினுக்குகின்றன. வாயிலில் காக்கிச் சீருடையும் கதாயுதமும் தரித்த அனுமன்கள் காவல் நிற்கின்றன.

“இலங்கைத் தீர்வுதான் நமக்கு வழிகாட்டி” என்று கூறி பக்திப் பரவசத்துடன் தெற்கு நோக்கி நமஸ்கரிக்கிறார் சட்டிஸ்கார் டி.ஜி.பி விசுவ பந்து தாஸ். இராம சைன்யம் என்ற பழைய பெயர் அரக்கர்களின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிப்பதில்லை என்பதால்,  பாம்புப்படை, கீரிப்படை, கருந்தேள்படை என்று குலமரபுச் சின்னங்கள் தாங்கிய படைகள் அணி வகுத்து நிற்கின்றன. சுக்ரீவனின் சேனைகூட, ‘சல்வா ஜுடும்’ என்று ராட்சஸ மொழியில் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

இராவண வதம் முடியும் வரை முடிசூட்டு விழாவுக்குக் காத்திருக்க முடியாதென முனகும் வீடணர்களுக்காக, விதவிதமான திரிசங்கு சொர்க்கங்களும் இந்திரப் பதவிகளும் ஆர்டரின் பேரில் தயாராகின்றன. போரில் அரக்கர் குலப் பெண்களையும், முதியவர்களையும், குழந்தைகளையும் கூட வேட்டையாட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப தர்ம சாத்திரங்களைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், சிதம்பரம், மன்மோகன், அலுவாலியா, புத்ததேவ், பட்நாயக் முதலான முனிபுங்கவர்கள்.

போர் முழக்கத்தையும் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைத்திருக்கிறார் திருவாளர் சிதம்பரம். இது தேவர் குலத்தைக் காக்க அசுரர்கள் மீது நடத்தப்படும் போர் அல்ல; அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர். அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகப் பூமியைப் பறிக்கும் போர்; வேலையை வழங்குவதற்காகத் தொழிலைப் பறிக்கும் போர்; சோறு போடுவதற்காக வயல்களை அழிக்கும் போர்; பிரம்ம ஞானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய தெய்வங்களைச் சம்காரம் செய்யும் போர்.

இதோ, நியாம்கிரியின் புதையலின் மீது, அதன் மதிப்பே தெரியாத ஒரு கோண்டு இனப்பெண்,  சுள்ளிக் கட்டைச் சுமந்து நடக்கிறாள். அவளுடைய கருமைநிறக் கழுத்தில் கிடக்கும் பித்தனை வளையங்களில் வியர்வைத்துளி வழிந்து மின்னுகிறது. கைகளின் அசைவில் அவளது வளையல்கள் எழுப்பும் இரும்பின் ஒலி இசையாய் எழும்புகிறது. அந்தக் கானகத்தின் வண்ணங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் அவள் ஆடை அசைகிறது.

“ராமா, அதோ.. அவள்தான். எடு வில்லை, பூட்டு பாணத்தை’’! என்று ஆணையிடுகிறான் விசுவாமித்திரன். “ஒரு பெண்ணைக் கொல்வதற்கா நான் வித்தை பயின்றேன்?” என்று தயங்கித் தடுமாறுகின்றன சிப்பாயின் விரல்கள். “இவள் பெண்ணல்ல, தாடகை! நம் தர்மத்தை அழிக்க வந்திருக்கும் அரக்கி! சுடு….!”  என்று உறுமுகிறார் சிதம்பரம்.

சுள்ளிக்கட்டு சரிந்து சிதறுகிறது. மிரட்சியும் கோபமும் உறைந்த அவளது கருவிழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. வேதாந்தத்தின் வெடிமருந்துக் குச்சிகள் நியாம்தேவனின் மார்பைப் பிளந்து எறிகின்றன.

இந்தப் போர்க்களத்திலிருந்து வெகு தூரத்தில் அயோத்தி நகரின் அமைதிச் சூழலில் தவமிருந்து கொண்டிருக்கிறான் சம்பூகன் என்றொரு ‘சூத்திரன்’. அவன் கேட்க விழையும் வரம் என்னவாக இருக்கக் கூடும்? ஒரு துண்டு நிலம் அல்லது ஒரு வேலை அல்லது மூன்று வேளைச் சோறு அல்லது ஒரு வீடு?

சிதம்பரத்தின் காட்டு வேட்டையை சம்பூகன் அறியமாட்டான். ஆயுதம் ஏந்திப் போரிடும் அரக்கர்களின் மார்பை மட்டுமே அண்ணல் இராமபிரானின் பாணங்கள் குறிவைக்கும் என்ற அரண்மனைப் பொய்யைத் தவிர, இந்தப் போரைப்பற்றி வேறு எதையும் அவன் அறியமாட்டான். தாடகை வதம் அவனுக்குத் தெரியாது. வாலி வதமும் தெரியாது. தன் முன்னே தோன்றக்கூடிய இறைவனிடம், தான் கேட்க விழையும் வரங்களைத் தவிர, வேறு எதன் மீதும் கவனம் செலுத்த அவனது தவம் இடம் கொடுக்கவில்லை. “தவமிருத்தல் மட்டுமல்ல, வரம் கேட்பதும் குற்றமே” என்று தரும சாத்திரத்தின் ஷரத்துகள் திருத்தப்பட்டு விட்டதையும் அவன் அறியமாட்டான்.

நியாம்கிரியின் தலையைக் கொய்த வேதாந்தத்தின் கொடுவாள், உன் கழுத்தையும் குறிவைக்கும் என்பதைச் சம்பூகனுக்குப் புரிய வைத்தால் தவம் கலைத்து அவனும் வாளேந்தக்கூடும்.

ஏந்துவானாயின், இந்த முறை ஆரண்ய காண்டத்துடன் இராமாயணம் முடியவும் கூடும்.

மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !!

30

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !! –பாகம் – 2

vote-012“ஒவ்வொரு பேரழிவுமே ஒரு வரப்பிரசாதம்.” ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்து வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்திய விவசாயிகளை தற்கொலை விளிம்புக்குத் தள்ளிய மோசடி விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் ஈழத்தில் தனது தொழில் முதலீடுகளுக்காக சென்ற போது சொன்ன வரிகள்தான் இவை. ஆனால் ஸ்வாமிநாதனின் இந்த வரிகள் அவரது கடந்த கால அனுபவங்களில் இருந்து விளைந்தது. உலக முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் அழிவை ஆதாயமாக மாற்றவல்ல யுத்தியை கற்றுக் கொடுத்தது  சுனாமியில்தான்.

வன்னிப் படுகொலைகளுக்கு முன்னர் நாம் சந்தித்த மிகப் பெரிய மனிதப் பேரவலம் சுனாமிதானே. இந்தியா காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளில்  மெல்ல தன்னார்வக் குழுக்கள் இந்தியாவுக்கு ஊடுறுவி வந்தன.ஆனாலும் துல்லியமாக மக்களை நேரடியாக அணுகக் கிடைத்த வாய்ப்புதான் சுனாமி. சுமார் ஏழாயிரம் கோடிகள், 600 தன்னார்வக்குழுக்கள் என்று தென் கிழக்கு கரையோர நாடுகளை குறிவைத்து இறங்கின  இந்த கொள்ளை நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள் செய்த முதல் வேலை மீனவ மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்ததுதான். கடல், நீர், நிலம், மலை என எல்லாமே தனியாருக்குத்தான் என்கிறார்கள் இல்லையா? இந்த நிலங்கள் சார்ந்து என்ன பேரழிவு நடந்தாலும் அங்கே தன்னார்வக்குழுக்கள் உடனே களமிறக்கப்படுவார்கள். காரணம் அந்த மக்களிடம் இருக்கும் அரசியல் ரீதியாக, சிவில் உரிமைகள் தொடர்பாக இருக்கும் கோபங்கள் அரசுக்கு எதிராக திருப்பி விடாமல் பார்த்துக் கொள்வதுதான் இவர்கள் வேலை.

எண்பதுகளில் நான் சிறுவனாக இருந்த போது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு தென் தமிழக கடலோரங்களில் தீவிரமாக இருந்தது. கிறிஸ்தவ பாதிரிகள் இப்போராட்டங்களில் அக்கறை காட்டினார்கள். கடைசியில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏராளமான மீனவ கிராம மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்றி வந்தமர்ந்திருக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையம். அப்படியானால் எண்பதுகளில் நடந்த போராட்டம்? அதுதான் தன்னார்வக் குழுக்களின் வேலைத் திட்டம். எதிர்ப்பில்லா எதிர்ப்புகளை உருவாக்கி ஏகாதிபத்திய நிறுவனங்கள் செய்ய நினைப்பதை தடையின்றி கொண்டு வந்து விட்டு சென்று விடுவார்கள். ஆபத்து வந்து நிற்கிறதே என்று போராடிய தன்னார்வக் குழுக்களைத் தேடினால் அவர்களை இப்போது காண முடியவில்லை. நிதி (ஃபண்ட்) இல்லை அதனால் போராட்டமும் இல்லை என்று போய் விடுவார்கள்.

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள இந்திய தீபகற்பத்தைச் சுற்றி மூன்று பக்கமும் 8.118 கி.மீ நீளத்துக்கு கடல் உள்ளது. 3,300 கிராமங்களில் 3.5 மில்லியன் மக்கள் குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை பாரம்பரிய மீனவர்களாக வாழ்கிறார்கள்.ஆண்டொன்றுக்கு 30,000 கோடி ரூபாய் கடற்தொழிலில் இருந்து வருமானம் வருகிறது. பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதும் மீன்பிடித்தொழில்தான். பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்ட கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. இந்த கடற்கரையை தனியார்கள் சூறையாடத் தடையாக இருந்தது மீனவ குடியிருப்புகள். சுனாமி வருவதற்கு முன்பே மீனவ மக்களை எப்படியாவது கடலோரங்களை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்ச்சி மத்திய மாநில அரசுகளிடம் இருந்தது.

சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவ மக்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்போது அதே கடற்கரையில் பட்டினப்பாக்கத்தைப் போய் பார்த்தால் ஏதோ சிங்கப்பூருக்கு வந்த மாதிரி இருக்கிறது. பிரமாண்டமான அதி நவீன ஷாப்பிங் மால்களும், பிரமாண்டக் கட்டிடங்களுமாக உயர்ந்து நிற்கிறது.  கேட்டால் செட்டிநாட்டரசரர் எம்.ஏ. எம் மிற்குச் சொந்தமானது என்கிறார்கள். அலைவாய்க்கரையில் இருந்து ஐநூறு மீட்டர்களுக்கு அப்பால் மீனவர்களை துரத்தி விடுகிற அரசு. செட்டிநாட்டரசருக்கு மட்டும் இந்த இடத்தை ஏன் கொடுத்தது? அல்லது அவரும் இந்த அலைவாய்கரையிலேயே பிறந்த மீனவர்தானோ….?

பட்டினப்பாக்கத்தில் கண்ணுக்குத் தெரிகிற செட்டிநாட்டரசரின் கோட்டை இந்தியக் கடலோரங்கள் முழுக்க கண்ணுக்குத் தெரியாத பன்னாட்டு கோட்டைகளாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது. சுனாமிக்கு முன்னரே திட்டமிட்டு சுனாமியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு வரப்பட்டதுதான், கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம். ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஒட்டு மொத்த கடலோரத்தையும் தொழில் சார் மண்டலங்களாக மாற்றுகிறது இந்த திட்டம். ஒட்டு மொத்த மீனவ மக்களையும் அப்புறப்படுத்தத்தான் இந்த கடற்கரை மேலாண்மை திட்டம் என்றும் கதறுகிறார்கள் மீனவ மக்கள்.

மீனவர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாரம்பரிய மீனவர்கள்.இன்னொன்று தொழிலுக்காக மட்டுமே கடலோரங்களில் வாழ்வோர். பாரம்பரிய மீனவர்களுக்கு கடல் கடற்கரை இதைத் தவிர வேறு போக்கிடம் கிடையாது. கடலின் கரையோரத்தில் இருக்கும் தனது குடிசைக்கு முன்னால் வைத்திருக்கும் கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு போய் தொழில் செய்து விட்டு மீண்டும் கரைக்கு வந்து குடிசையில் ஒண்டிக் கொள்கிற மீனவர்கள்தான் இவர்கள். தங்களின் குடிசைக்கு முன்னால் பரந்து கிடக்கிற கடல் அந்த கிராம மீனவர்களின் பொதுச் சொத்தாக இருக்கிறது. எப்போதும் அவர்கள் கடலுக்கு தீங்கு செய்யவோ மாசு படுத்தவோ மாட்டார்கள்.

ஆனால் கடற்கரையை ஒழுங்கு படுத்துகிறோம் என்று சொல்லி எம்.எஸ் சுவாமிநாதானின் குழு மத்திய அரசுக்கு கண்டு பிடித்துக் கொடுத்திருக்கும் இந்த கடற்கரை மண்டல் மேலாண்மை அறிவிப்பாணை கடலை தனியாருக்கு தாரை வார்க்கிறது. வசிப்பிடம் சார்ந்து கடற்தொழில் செய்யும் மக்களை துறைமுகம் சார்ந்து மீன் பிடிக்க நிர்பந்தித்து அவர்களை துறைமுக நகரங்கள் நோக்கி துரத்தி விட்டு விட்டு பின்னர் அவர்களின் வசிப்பிடங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் இந்த மேலாண்மைத்திட்டம். 1991-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை  மீனவ மக்களின் குறைந்த பட்ச உரிமையையாவது பாதுகாத்தது. ஆனால் அதை பல முறை திருத்திய மத்திய அரசு கடைசியாக இந்த எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

1991- ல் கொண்டு வரப்பட்ட கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் எதை எல்லாம் தவறு, கடற்கரையில் செய்யக் கூடாது என்று சொன்னதோ அதை எல்லாம் சட்ட பூர்வமாக செய்ய அனுமதிப்பதுதான் இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டம்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மீனவ மக்களிடம் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து  இந்த திட்டத்திற்கு மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்து குமரி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நடத்தினார்கள். அதிலும் மீனவ மக்கள் தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் காட்டினார்கள். ஆனாலும் இந்த எதிர்ப்பையும் மீறி உலக வங்கியின் நிர்பந்தத்திற்க்குப் பணிந்து இந்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் தீவீரமாக இருக்கிறது. தமிழ் நாடு அரசும் இந்த திட்டத்துக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடல், காலம் காலமாக வாழ்ந்த மீனவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு தனியார் முதலாளிகள் கையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? கடலில் மீன் வளம் குறைகிறது, கடல் மாசுபடுகிறது, என்பதெல்லாம் இந்த மேதாவிகள் கண்டு பிடித்த உண்மை. ஆனால் மீன் வளம் குறைவதற்கும், கடல் மாசுபடுவதற்கும் காரணமானவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்து இந்த படித்த சிகப்புத்தோல் ஸ்வாமிநாதன் கண்டிபிடித்தார். கடைசியில் சொன்னார் இதற்கெல்லாம் காரணம் மீனவர்கள். அதாவது மீனவர்களுக்கு மீன் பிடிக்கத் தெரியவில்லை. அவர்கள் கடலோரங்களை மாசு படுத்துகிறார்கள். கடலில் மீன் வளம் குறைகிறதே என்ன செய்யலாம் என்று கேட்டால் மீன் பிடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் மீன் வளம் பெருகும் என்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துச் சொல்கிறார்கள் இந்த கடல் விஞ்ஞானிகள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மீனவன் மீன் பிடிக்கிறான். அப்போதெல்லாம் அழியாத மீனினம் ஏன் இப்போது அழிகிறது என்றால் பன்னாட்டு கப்பல்கள் கடலை கபளீகரம் செய்வதும் ரசாயனக் கழிவுகளைக் கொண்டு போய் கடலில் கொட்டுவதும்தான் மீன் வளம் குறையக் காரணம். இந்நிலையில் இந்த மேலாண்மைத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மொத்தமாக கடலும் மீனவனும் வாழ்விழந்து போவான். இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு வகுத்துக் கொடுத்திருக்கும் எம்.எஸ் சுவாமிநாதன் யார் என்ற கேள்வியும் எழுகிறது. கடலுக்கும் மீனவ மக்களுக்கும் இந்த வெள்ளைத் தோல் மனிதருக்கும் என்ன சம்பந்தம்? மீனவ மக்களின் வாழ்க்கையைத் தீர்ப்பிடுகிற உரிமையையும் அவர்களின் வசிப்பிடங்களை விட்டு துரத்துகிற உரிமையையும் யார் இவருக்குக் கொடுத்தது?

படிப்பறிவில்லாத மீனவ மக்களின் வாழ்க்கைச் சூழலை பயன் படுத்திக் கொண்டு இவர்கள், கடலோரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களைக் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். இது மீனவ மக்களின் வாழ்வுரிமையை மட்டுமல்ல மாநில அரசுகளின் கடலுரிமையையும் இந்த திட்டம் பறித்து  மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும் ஆபத்தும் உண்டு உள்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக புதிய அமைச்சகம் தேவை என்கிறார் சிதம்பரம். அதாவது மக்களிடம் நிலவும் வறுமையும், வேலையிழப்பும் பிராந்திய உணர்வாக வெடிப்பதைக் கூட அனுமதிக்காத சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் மத்திய அரசு கடல் பற்றிய ஆராய்ச்சிக்கான பொறுப்பாக நியமிப்பது வனத்துறையை. இது எவ்வளவு பெரிய மோசடி?

காலம் தோறும் புதிய வடிவங்களை எடுக்கும் இச்சட்டம்  பேரழிவுகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி ,மேலும் மேலும் மீனவ மக்களின் மூச்சை இறுக்குகிறது. இந்த மேலாண்மை சட்டத்தை மேலும் கொடிய சட்டமாக மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு. அதாவது கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் கிளர்ந்தால் அங்கும் இச்சட்டத்தைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு விசாரணையே இல்லாமல் ஆறாண்டுகாலம் சிறைத்தண்டனை, ஒன்பது லட்ச ரூபாய் வரை அபராதம். சுட்டுக் கொல்கிறவனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று என்று அரசிடம் கோரினால் அரசோ  ””நீ ஏன் எல்லை தாண்டுகிறாய், உன்னைத்தான் கடற்கரையில் இருந்து போகச் சொல்கிறோமே, நீ ஏன் இங்கு வந்து மீன் பிடிக்கிறாய்? “ என்கிறது மத்திய அரசு.

ஆனால் எல்லை தாண்டுவதோ, சிறையோ எதுவும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்குக் கிடையாது. அவர்கள் கட்டற்று வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பிடித்தது போக மிச்சம் மீதி இருக்கிற குஞ்சு குருமாக்களைக் கூட இந்த உள்ளூர் மீனவர் பிடிக்க முடியாதபடி சட்டம் போட்டு மீனவனை அழிக்கிறது அரசு. ஐநூறு மீட்டருக்கு அப்பால் என்பது இந்த பண முதலைகளுக்கு கிடையாதா? காலம் காலமாக கடலோரங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் சுவாமிநாதன் குழுவுக்கு இந்த கோடீஸ்வர ஆகரமிப்பாளர்களை கண்ணுக்குத் தெரியவில்லையா?கடற்கரையில் சில தன்னார்வக் குழுக்கள் மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுறா வேட்டையில் ஆவேசமாக ஈடுபடும் மீனவனுக்கு மீன்பிடிக்க தன்னார்வக் குழுக்கள் கற்றுக் கொடுப்பது மாதிரி வேடிக்கை வேறு ஏதாவது உண்டா?

ஆக நான் என்ன சொல்கிறேன் என்றால் மீனவ மக்கள் பற்றிய உண்மையான அக்கறை இந்த மேலாண்மைத் திட்டத்துக்கும் கிடையாது இதை கொண்டு வந்தவர்களுக்கும் கிடையாது. தன்னார்வக் குழுக்கள் என்று சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் முதலாளிகளிடமும் நிதி பெற்று இயங்கும் குழுக்கள் ஒவ்வொரு முறையும் மத்திய மாநில பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வர நினைக்கிற சட்டத்திற்கு எதிராகப் பேசுவார்கள். மக்கள் விழிப்படைவதற்கு முன்னரே என்.ஜி.ஓக்கள் மக்களுக்காக போராடுவது மாதிரி போராடுவார்கள். ஆனால் எவ்வித இடைஞ்சலும் இன்றி மக்கள் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தமர்ந்து விடும். இவர்கள் அவர்களிடமே நிதி வாங்கி போராடி விட்டு அவர்களையும் அழகாக கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்று விடுவார்கள். எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அவர்கள் வருவதற்கு முன்னர் முதன் முதலாக வந்து மக்களை அரசியல் நீக்கம் செய்து தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்க மக்களை தயார் படுத்துவதுதான் இந்த தன்னார்வக்குழுக்களின் நோக்கம்…

தொடரும்…..

அடுத்த பாகத்தில் “கிறிஸ்தவமும் மீனவ மக்களும்”

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்மணம் விருதுகள்: வாக்களித்தவர்களுக்கு நன்றி! வென்றவர்களுக்கு வாழ்த்து!!

34

vote-0122009 தமிழ்மணம் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்திற்கும், வாக்களிப்பில் ஈடுபட்ட வாசகர்களுக்கும் நன்றிகள்!

சென்ற ஆண்டு தமிழ்மணம் போட்டி குறித்த அறிவிப்பு வந்தபோது அதைக் கொண்டாடும் நிலையில் பலரும் இல்லை. காரணம் ஈழத்தில் தொடர்ந்த முடிவேயில்லாத் துயரம். போட்டியும்கூட அறிவித்தபடி முழுமையாக நடக்காமல் பதிவர்கள் அளித்த வாக்குகளோடு நிறைவுற்றது. எனினும் பதிவர்களுக்காக தமிழ்மணம் நடத்திய முதல் போட்டி என்ற வகையில் அதற்க்கேயுரிய முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது.

பதிவுலகம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது. அன்றாடம் புதிய பதிவர்கள் தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அல் பெருனியைப் போலவோ, யுவான் சுவாங்கைப்  போலவோ அலைந்து திரியாமல், உட்கார்ந்த இடத்திலேயே அம்மையப்பன் வடிவில் உலகைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற விநாயகர்களாக நாம் இருந்தபோதிலும், எல்லோரும் எல்லோரையும் படித்து விடுவதில்லை, படிக்க முடிவதும் இல்லை. ஆற்றலின் வரம்பு காரணமாக ஏற்படுவது மட்டுமல்ல, இந்த இயலாமை. நமது விருப்பு வெறுப்புகளும், பல சந்தர்ப்பங்களில் இந்த இயலாமையை நம் மீது திணிக்கின்றன. “பிடித்ததை மட்டுமே படிப்பது” என்ற பழக்கத்திலிருந்து ஒருவர் மீள வேண்டுமானால், நமக்குப் பிடிக்கின்ற விசயங்கள், என்ன காரணத்தினால் நமக்குப் பிடிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு புரிந்து கொள்ளும் போதுதான் பிடித்தவற்றின் ‘அன்புப்பிடி’யிலிருந்து நாம் விடுபடத் தொடங்குகிறோம். வினவு என்பது இதற்கான முயற்சி. எங்கள் பெயரிலேயே இருக்கிறது இதற்கான விளக்கம்.

எங்களது இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே போட்டியில் பங்கேற்கிறோம்.

சென்ற ஆண்டு பங்கேற்ற மூன்று பிரிவுகளில் இரண்டில் முதலிடமும், ஒன்றில் ஐந்தாம் இடமும் தந்து எங்களைப் பதிவர்கள் அங்கீகரித்தனர். “ஒரு பதிவர் இரு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கலாம்” என்று திருத்தியமைக்கப்பட்ட விதியின்படி, இந்த முறை இரண்டு பிரிவுகளில் பங்கேற்றோம். தமிழ் மணத்தின் பதிவர்களும் வாசகர்களும் இரண்டிலும் எமக்கு முதலிடத்தை வழங்கியிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பங்கேற்பவர்களும் அதிகம், வாக்களித்தவர்களும் அதிகம் என்று அறிகிறோம். முக்கியமாக இந்த ஆண்டு வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் எமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசின் ‘மதிப்பு’ பன்மடங்கு கூடிவிட்டதாக உணர்கிறோம்.

போட்டி… முதலிடம்… முதலானவற்றை விட்டு வெளியே வந்து, வினவு தளத்திற்குள் நுழைந்து அதன் பின்னூட்டங்களைக் கொஞ்சம் சுற்றிப்பார்த்தால், இவ்வளவு எதிர்ப்புகளா என்று வியப்பு தோன்றுகிறது. இந்துத்துவவாதிகள், இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகள், போலிக் கம்யூனிஸ்டுகள், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழினவாதிகள், சாதிவெறியர்கள், மொக்கைகள், இலக்கியவாதிகள் எனப் பலரையும் நாங்கள் ‘பகைத்துக்’ கொண்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள இயலும். இவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கும் நாங்கள் முதலிடத்தை வென்றிருப்பது எங்களுக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த விவாதங்களில் பங்கேற்கவில்லையென்றாலும், அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் மவுனப்பெரும்பான்மை எத்தனை வலிமையானது என்பது இப்போது தெளிவாக விளங்குகிறது.

மெய் உலகில் புறக்கணித்தக்க சிறியதொரு குழுவாகவும், காலாவதியாகிப்போன கம்யூனிச அரசியல், புரட்சி ஆகியவற்றை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களாகவும், ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்களாகவும் கருதப்படும் எமக்கு, மெய்நிகர் உலகில் அல்லது கருத்தியல் தளத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உற்சாகத்தைத் தருகிறது. நம்பிக்கையைக் கூட்டுகிறது.

சிலருக்கு நேபாளத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெற்ற வெற்றி அதிர்ச்சியூட்டியதைப் போல இதுவும் அதிர்ச்சியூட்டவும் கூடும். அது எங்களுக்கு புரிகிறது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் புரிந்துதான் இருக்கிறது. அதன் விளைவுதான் ஆபரேசன் கிரீன் ஹன்ட். அப்படியொரு கிரீன் ஹன்ட் மெய்நிகர் உலகில் தொடங்கும் வரை இந்தக் களத்தில் எங்கள் ஆட்டம் தொடரும். அல்லது மெய்நிகர் உலகின் பதிவர்களும் வாசகர்களும் அத்தகையதொரு வேட்டையே நடத்தமுடியாமல் சிதம்பரங்களை முறியடிக்கவும் கூடும். அப்படியொரு வெற்றியை மெய்நிகர் உலகில் நாம் அடைவோமாகில், அது உண்மையான ஜனநாயகம் மெய் உலகில் பெறக்கூடிய வெற்றிக்கு ஒரு படிக்கட்டாக அமையும்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்

vote-012கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், அவரது ஆட்சியின் அஸ்திவாரமாக இருந்துவரும் சுரங்க முதலாளிகளான ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இரண்டு வார காலமாக நடந்து வந்த அதிகாரச் சண்டை, “கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு நெருக்கமானவரும் அம்மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜேயைப் பதவியில் இருந்து அகற்றுவது; பெல்லாரி மாவட்டத்தில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்துவது; எடியூரப்பா, ஆட்சி தொடர்பாக எடுக்கும் எந்தவொரு முடிவையும் ரெட்டி சகோதரர்களைக் கலந்து ஆலோசித்து எடுப்பது” என்ற பேரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

“எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்ற ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை, பா.ஜ.க. தலைமை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.  எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியடித்தால், கர்நாடகா மாநிலத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கும், வாக்கு எண்ணிக்கையும் கொண்ட லிங்காயத்து சாதியினரைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்ற சாதி அரசியல்தான் இதற்குக் காரணமேயொழிய, வேறெந்தக் கொள்கையும் இதன் பின்னணியில் கிடையாது.

ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.க.வில் நீண்ட காலம் பணியாற்றியவருமான ஜஸ்வந்த் சிங்கை ஒரே நொடியில் தூக்கியெறிந்த பா.ஜ.க. தலைமை, ரெட்டி சகோதரர்களைக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் தூக்கியெறியத் துணியவில்லை.  இதற்குக் காரணம், அச்சகோதரர்களின் பணபலம்!

பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.  இதற்கு நன்றிக் கடனாக

கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.

எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே அதிகாரச் சண்டை முற்றியபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டி சகோதரர்களோடு ஒட்டிக் கொண்டனர்.  ரெட்டி சகோதரர்களை இழந்தால், ஆட்சியையே இழக்க நேரிடும் என்பதால்தான், பா.ஜ.க. தலைமையால் ரெட்டி சகோதரர்களை ஜஸ்வந்த் சிங்கைப் போலக் கழட்டிவிட முடியவில்லை.

கர்நாடகா மாநில மக்கள் குழந்தை குட்டிகளோடு, பசி-பட்டினியோடு வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த இந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள், கோவாவிலும், ஹைதராபாத்திலும் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.  முதல்வர் எடியூரப்பாவோ தனது பதவியைக் காத்துக் கொள்ள தில்லிக்குக் காவடி தூக்கிக் கொண்டிருந்தார்.  பா.ஜ.க. தலைமையோ மாநிலத்தின் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, கட்சிக்குள் நடந்து வந்த அதிகாரச் சண்டையைத் தீர்த்து வைப்பதில்தான் மும்மரமாக இருந்தது.  இதிலிருந்து பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை “இந்துக்கள்’புரிந்து கொள்ளலாம்.

ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா முதல்வராவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர்.  தனது அதிகாரத்திற்கு இடையூறாக இருந்து வரும் ரெட்டி சகோதரர்களைப் போட்டுப் பார்த்துவிடக் காத்திருந்த எடியூரப்பா, வெள்ளச் சேதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவது என்ற முகாந்திரத்தில், இரும்புத் தாதுவினை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு லாரியின் மீதும் கூடுதலாக 1,000 ரூபாய் வரி விதிக்கப்பட்டது; மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் அனைவரும் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.  தனது அடிமடியிலேயே கைவைக்கத் துணிந்த எடியூரப்பாவிற்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் ஆரம்பித்த கலகத்திற்கு இரும்புச் சுரங்க முதலாளிகள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.

இரண்டு கோஷ்டிகளும் வெள்ளச் சேதத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றன.  எடியூரப்பா இரும்புத் தாது மீது கூடுதலாக வரி விதித்தார் என்றால், ரெட்டி சகோதரர்களோ வெள்ளம் பாதித்த பகுதிகளில் 500 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்தைத் தன்னிச்சையாக அறிவித்தனர். இதன்மூலம், தம்மை மாநில அரசுக்கு மேலானவர்களாகவும், பெல்லாரி மாவட்டம் தமது சொந்த நிலப்பகுதி போலவும் காட்டிட முயன்றனர்.

இத்துணைக்கும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களது சுரங்கங்கள் பெல்லாரியையொட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதியில்தான் அமைந்துள்ளன. ஆனால், அவர்களோ ஆந்திர மற்றும் கர்நாடகா மாநில அரசுகளில் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெல்லாரியில் இருந்து இரும்புத் தாதுவைக் கடத்துவதை “அங்கீகரிக்கப்பட்ட’ தொழில் போலவே நடத்தி வருகின்றனர். தற்பொழுது, பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களின் ஒப்புதல் இன்றி அதிகாரிகளை இடம் மாற்றவோ, புதிதாக நியமிக்கவோ எடியூரப்பா முயலக் கூடாது என பேரம் பேசப்பட்டிருப்பதால், ரெட்டி சகோதரர்களை பெல்லாரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாகவே அங்கீகரித்துவிட்டது, பா.ஜ.க.

எடியூரப்பா-ரெட்டி சகோதரர்களிடேயே நடந்துவரும் இந்த அதிகாரச் சண்டை ஒருபுறம் பா.ஜ.க.வின் உட்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும், இன்னொருபுறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அரசாங்கங்களின் மூக்கணாங்கயிறு யார் கையில் இருக்கிறது என்பதை மிகவும் தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் (அதாவது அரசிற்கும்) முதலாளிகளுக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையே இருந்துவரும் நெருக்கமும் ஒத்துழைப்பும் புதிய விசயம் கிடையாது. டாடா-பிர்லாக்களின் கட்சி என அறியப்பட்ட கட்சிதான் காங்கிரசுக் கட்சி.  முன்னாள் மன்னர்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகளின் கட்சியாக உருவானதுதான் பா.ஜ.க.  முதலாளிகள்-ஓட்டுக்கட்சிகள்-அரசு ஆகியவற்றுக்கு இடையே இருந்துவரும் நெருக்கமான பிணைப்பு, நாடாளுமன்றம், அனைவருக்கும் ஓட்டுரிமை ஆகியவற்றின் மூலம் மூடிமறைக்கப்படுகிறது என்பதை கம்யூனிஸ்டுகள் நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே அம்பலப்படுத்தி வருகின்றனர். தனியார்மயமும், தாராளமயமும் இந்த மூடுதிரைகூடத் தேவையில்லை என அம்மணமாக முதலாளிகளின் ஆட்சியை நம் முன்னே நிறுத்திவிட்டன என்பதுதான் புதிய விசயம்.

கர்நாடக மாநில ஆட்சியை முன்பு சாராய அதிபர்கள் தீர்மானித்தார்கள் என்றால், இப்பொழுது சுரங்க முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆந்திராவில், பாசனக் கால்வாய்களைக் கட்டும் உரிமங்களைப் பெறும் ஒப்பந்தக்காரர்களும்; அரியானாவில் ரியல்-எஸ்டேட் அதிபர்களும்; ஜார்கண்டில் சுரங்க முதலாளிகளும்; மகாராஷ்டிராவில் கரும்பாலை அதிபர்களும்தான் உண்மையில் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில், தி.மு.க. தலைமையே பெரும் தொழில் குடும்பமாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.  மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி ஆட்சியைக்கூட, அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிரூபன் சக்கரவர்த்தி ஒப்பந்தக்காரர்களின் ஆட்சி என்று அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கோடீசுவரர்கள்தான் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிட முடியும் என்பதை கடந்த சில தேர்தல்கள் நமக்கு உணர்த்திவிட்டன. நாடாளுமன்றத்தின் மேலவை என்பது தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் நுழையும் புறவாசலாகிவிட்டது.  அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் தரகு முதலாளிகள், பங்குச் சந்தை சூதாடிகள், வியாபாரிகள் ஆகியோரின் கூடாரமாகிவிட்டதாக “இந்தியா டுடே’ இதழே அம்பலப்படுத்திப் புலம்பும் அளவிற்கு முதலாளிகளின், புதுப் பணக்காரக் கும்பலின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக நடைபெறும் ஆட்சி எனப் பசப்பிவந்த காலம் மலையேறிவிட்டது. இது, முதலாளிகளுக்காக, முதலாளிகளால் நடத்தப்படும் ஆட்சி என்பதைத் தனியார்மயம் போட்டு உடைத்துவிட்டது.  மாறி மாறி எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும், இந்த நிலை மாறிவிடாது.  எனவே, உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசை எப்படி அமைப்பது என்பதைக் கண்டுணர்ந்து, செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

-புதிய ஜனநாயகம்’ டிசம்பர், 2009

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். இவர்களின் பணபலத்தையும், அதிரடி அரசியலையும் தமிழக மக்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இச்சகோதரர்களை, “பெல்லாரியின் அழகிரி’ எனக் குறிப்பிடலாம்.  “அண்ணன்’அழகிரி கடந்த தேர்தல்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்து ஓட்டுக்களை வாங்கினார் என்றால், ரெட்டி சகோதரர்களோ கர்நாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது 1,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில்விட்டு, ஓட்டுக்களை விலை பேசுவதில் “தேசிய’சாதனையே படைத்தனர்.

இத்துணைக்கும் ரெட்டி சகோதரர்கள் பரம்பரை பணக்காரர்களோ, மிட்டா மிராசுகளோ அல்லர்.  ஆந்திராவைச் சேர்ந்த சாதாரண போலீசுக்காரனின் வாரிசுகள்.  இவர்களின் திடீர் வளர்ச்சிக்குத் தனியார்மயமும், தாராளமயமும் எந்தளவிற்கு உதவின என்பது குறித்துத் தனிப் புத்தகமே போடலாம்.

ஆந்திர மாநிலத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்திற்குப் பிழைப்பு தேடி வந்த ரெட்டி சகோதரர்கள், “”என்னோபிள் சேவிங்க்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்”என்ற பெயரில் ஒரு “பிளேடு’கம்பெனியை (கவுரவமாகச் சொல்ல வேண்டுமென்றால் சீட்டுக் கம்பெனியை)த் தொடங்கினர்.  அதன் மூலம் மக்களுக்கு நாமம் போட்டு அவர்கள் அடித்த பகற்கொள்ளை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் தேறும் எனக் கூறப்படுகிறது.  ரெட்டி சகோதரர்கள் இந்த மோசடிக்காக ஒருநாள்கூட கம்பி எண்ணவில்லை.  அதே சமயம், வழக்குகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வில் புகலிடம் தேடிக் கொண்டனர்.

1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.  அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர்.

200 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு டன் இரும்பு, 2,000 ரூபாயாக அதிகரித்ததற்கு ஏற்ப இவர்களின் கல்லாப்பெட்டியும் நிரம்பி வழிந்தது.  பா.ஜ.க. மட்டுமின்றி, காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரும் ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர்.  இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க அரசு கொடுத்துள்ள வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, இரும்புத் தாதுவைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்துக் கடத்துவதன் மூலம்தான் இவர்கள் பெரும் கோடீசுவரர்கள் ஆனார்கள்.  இந்த வியாபாரத்தின் மூலம் ரெட்டி சகோதரர்களுக்கு ஆண்டொன்றுக்கு 4,000 கோடி ரூபாய் இலாபம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய வீரப்பனைச் சுட்டுக் கொன்ற அரசு, இந்த இரும்புக் கடத்தலுக்காக இச்சகோதரர்கள் மீது ஒப்புக்காக வழக்கொன்றை உச்சநீதி மன்றத்தில் நடத்தி வருகிறது.  இந்த வழக்கில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறைத் தண்டனையும், 1,000 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம்.  மாநில அரசினையை கவிழ்க்கும் அளவிற்குப் பண பலமும், குண்டர் பலமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட இத்திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு, உச்சநீதி மன்றம் எம்மாத்திரம்?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் கட்டுரைகள்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. தோழர் ஸ்டாலின் 130-வது பிறந்த நாள்: “தோழர் ஸ்டாலின் வழி நடப்போம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!
  2. நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!
  3. அட்டைப்படக் கட்டுரை: தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்!
  4. நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள்
    கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!
  5. கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
  6. விலைவாசி உயர்வை ரசிக்கும் கோமாளிகளின் வக்கிர ஆட்சி!
  7. தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!
  8. “நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”
  9. எது பயங்கரவாதம்?
  10. அணுசக்தி கடப்பாடு மசோதா: மலிவானதா மக்களின் உயிர்?
  11. துபாய் நெருக்கடி: ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!
  12. ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
  13. சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி!
    உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!
    பவர் அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்
  14. ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !

102

vote-012உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.

இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.

அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.

அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.

மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?

கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.

ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.

அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.

ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம்

நூல்: துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்”

புதிய கலாச்சாரம் வெளியீடு. விலை ரூ. 20.00

நூலிலிருந்து:

vote-012“மே, 2009 இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகளின் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப்போராட்டத்தை பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை – பகையுணர்வு, மவுனம்.

புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்   வேலை என்பது அவர்களுடைய அபிப்ராயம். பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய அபிப்ராயம் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி –  என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில்தான் துரோகிகள் பெருகுகிறார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில், திரைமறைவுச் சதிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளின் இடத்தை அவதூறுகளும் முத்திரை குத்துதல்களும் பிடித்துக் கொள்கின்றன.

இவையெல்லாம் நன்னெறி போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் – நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்து கொள்ளமுடியாத குழப்பங்கள்.. இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா? இந்த நிலைமைகள் திடீரெனத் தோன்றியவையென்று கருதுகின்றீர்களா?

நேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதனைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா? பார்ப்போம்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

லீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!

172

vote-012நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-லீனா மணிமேகலை


கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள்  கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில விசிலடிச்சான் குஞ்சுகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும்  ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு”  தீனி போடுவதுதான்  லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது.செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை  கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய  கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும்  ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது  லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு.  ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின்  ரத்தத்தை உறிஞ்சிக்  கோலோச்சும் இந்தத் துறையில்  ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள்  லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன்  இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம்  போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம்.  ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம்.  சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை,  தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது.  மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம்.  நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா  மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும்  அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது.  போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா,  அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான  தொடர்பு  தரும் திமிரா  என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா.  இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன்,  தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின்  மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார்.  மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட  லீனா  “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது.  ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத்  தெரிந்த பலருக்கும்…..  கடைசியாக இராஜபக்சேவுக்கும்  ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம்.  இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக  போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில்  இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

——————————–

பின் ‘குறி’ப்பு: மைனர் கெட்டால் மாமா என்பார்கள். போலி கம்யூனிஸ்டு குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கமும் உள்ளவர் லீனா. அதான் இந்த லச்சணம்!

ரெண்டு மூணு சீட்டுகளுக்காகத்தன் அந்த அம்மாவிடம் மானத்தை அடகு வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.  லீனாவின் அலப்பரைகளும் கூட இவர்களுடைய தோலில் கொஞ்சம் கூட உரைக்கவில்லையே! மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!

54

(“துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்)

vote-012திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

ஈழம்  செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில்  அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.

அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.:  2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!
vote-012

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சியில் டி.அருள் எழிலனின் கச்சத்தீவு நூல் வெளியீடு!

நூல்: கச்சத்தீவு: மறைக்கப்படும் வரலாறு – பறிக்கப்படும் மீனவர் உரிமைகள்

–          டி. அருள் எழிலன், விலை: ரூ.10.00

வினவில் வெளிவந்த இந்த சிறப்புக்கட்டுரை இப்போது கீழைக்காற்று பதிப்பகத்தின் நூலாக வெளிவந்துள்ளது.

நூலிலிருந்து:

” ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்படும் போது, மத்திய அரசு தமிழக மீனவர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர்களாகவே சித்தரித்து வந்திருக்கின்றது. ஒரு முறை கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரிக்கின்ற தொனியில் இப்படிச் சொன்னார்: “எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. தமிழகத் தலைவர் ஒருவர் கூட “அதிகப் பொருளுக்கு ஆசைப்படுகின்ற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’ என்ற தொனியில் சொன்னார். இப்போது நடந்திருக்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்ட போது, “மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார். மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாகக் கண்டித்திருக்கின்றார்களா? பாதிக்கப்படுகின்ற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கும் இவர்கள், இந்த உயிராதாரப் பிரச்சினையை ஒரு அடையாள அட்டைப் பிரச்சினையாகவோ, எல்லைப் பிரச்சினையாகவோதான் அணுகி வருகின்றார்கள். ஆனால் இலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் உயிர் வாழ்தலின் பொருளாதார நலனைத் தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம் கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும், இந்திய சாதிய சமூகங்களின் அரசியல் பிரதிநித்துவமும், திராவிட இயக்க அரசியலில் கோலோச்சும் சாதி ஆதிக்க அரசியல் சூழலில் அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள இம்மக்களின் அரசியல் விடுதலை குறித்துப் பேசுவதுமே பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!

 

 

சிவகங்கை நகருக்கு அருகிலுள்ள வல்லாங்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் நடுத்தர விவசாயி சிவலிங்கத்தின் மகன் முத்துராஜா. இவருக்கு வயது 19. இவர் சிவகங்கை அரசு மன்னர் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 11.12.2009 அன்று இராமனாதபுரத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய போது  காய்ச்சல் அடித்ததால் சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனைக்கு மதியம் 2.30 மணிக்கு சிகிச்சைக்காக நண்பர்களோடு வந்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர் ரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார். மானாமதுரை மாதா நர்சிங் பயிற்சிக் கல்லூரிப் பயிற்சி மாணவிகள் முத்துராஜாவை ரத்தப்பரிசோதனை செய்வதற்காக ரத்தம் எடுத்துள்ளனர். சரியான முறையில் ரத்தம் எடுக்கப்படாததால் முத்துராஜாவின் கை வீங்கியுள்ளது.  மறுநாள் கழுத்து, மார்பு என வீக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

இதனால் அவரை மதுரையிலுள்ள ஜெ.கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிக்கிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லையென சொல்லிவிட்டபடியால் 15.12.2009 அன்று மதுரை மீனாட்சி மிஸன் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றுள்ளனர். உடனடியாக அய்.சி.யூ பிரிவில் முத்துராஜா  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்குப் பிறகு கடந்த 21.12.2009 அன்று காலை 8.30 மணிக்கு முத்துராஜா இறந்துவிட்டதாகச் சொல்லி உடலை மருத்துவமனையினர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.

தவறான முறையில் ரத்தம் எடுத்த மாதா நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவிகள் மீதும் அரசு மருத்துவமனையின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்துராஜாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அரசுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.  உடலைப் பிரேதப்பரிசோதனை செய்வதற்கு முத்துராஜாவின் தந்தை சம்மதிக்காததால் பிரேதப்பரிசோதனை செய்யப்படாத முத்துராஜாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. பிரச்னை எப்போதும் வெடிக்கலாம் என்பதால் கல்லூரியை பத்து நாட்களுக்கு மூடிவிட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக பாம்பு கடித்துக் கொண்டுவரப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவர் பழனிக்குமார் பார்க்கவே வராமல் போனதால் சிவகங்கை அரசுப் பொது மருத்துவமனையிலேயே இறந்துபோய் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

பரிசோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டபோது ஸிரிஞ்சுக் குழாயில் காற்று இருந்துள்ளது. ரத்தம் எடுத்த பயிற்சி மாணவி காற்றை ரத்தக்குழாய்க்குள் அழுத்தி செலுத்திவிட்டபடியால் காற்று உட்புகுந்து ரத்தம் ஆங்காங்கே உறைய ஆரம்பித்துள்ளது. இந்த ரத்த உறைவுதான் மாணவர் முத்துராஜாவின் மரணத்திற்குக் காரணம் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நர்சிங் பயிற்சிக்கல்லூரி மாணவியின் தவறுதான் இதற்குக் காரணம் என்றாலும் இதற்கும் மூலமாகச் சில காரணங்கள் உள்ளன.

பயிற்சிக் கட்டணமாக 50,000, ஒரு லட்சம் என வாங்கும் மருத்துவப் பயிற்சிக் கல்லூரி முதலாளிகள் தங்களது மாணவர்களை அப்போலோ, மீனாட்சி மிசன், விஜயா, மலர் போன்ற தனியார் நட்சத்திர மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதில்லை, மாறாக அரசுப் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புகிறார்கள். பயிற்சிபெறும் மாணாக்கர்களுக்கு பரிசோதனைக்கூடமாக அரசாங்க மருத்துவமனைகள் இருக்கின்றன, பரிசோதிக்கப்படும் எலிகளாக ஏழை, எளிய மக்கள் இருக்கிறார்கள்.

பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவியரை நோயாளிகளுக்கு நேரடியாகப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு தங்களது கிளினிக்குகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள். இது போன்ற தவறு, அலட்சியங்களால் உயிரிழந்த சிறார்கள், கர்ப்பிணிகள், சிசுக்கள் ஏராளம். இவ்வாறான தவறுகளெல்லாம் மிகப் பெரும்பாலும் மூடிமறைக்கப்படுகின்றன. தனியார் கல்லூரி முதலாளிகள், கல்லூரி துவங்கியது முதற்கொண்டு தான் செய்து வருகிற லஞ்சம் கொடுக்கிற வேலையின் மூலமாக  அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், போலீசு, பத்திரிகைகள் வரை வாயடைக்கின்றன. இடையில் விசயம் கசிந்தவுடன் உடனே ஓடிவருகிற ஓட்டுக்கட்சிக் குட்டி அல்லக்கைகளிலிருந்து நகர்மன்ற,  சட்டமன்ற, நாடாளுமன்ற பெரிய அல்லக்கைகள் வரையிலும், கவனித்துவிடுகிறது.

அதிலும் மரணமடைவது முத்துராஜா போன்ற மாணவர்களாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்தையும், மாணவர்களின் பிரதிநிதிகளையும் கூட நைச்சியமாக வளைத்துவிடுகிறது.

முத்துராஜாவின் சிகிச்சைக்காக மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் வரை என மாணவர்கள் சொல்கிறார்கள். கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள். சாதாரணத் தலைவலி என்றாலும் கூட ஸ்கேன், டெஸ்ட், மருந்துகள் எனப் பல ஆயிரங்களை வெகுவிரைவாக சுருட்டுகின்றன. கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது, அரசுப்பணத்தை தனியார் மருத்துவத்துறை முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமே தவிர வேறொன்றுமல்ல. இது கலைஞர்-முதலாளிகள் மருத்துவச் சுருட்டீட்டுத்திட்டம்.

அரசு மருத்துவமனைக்குள் மாணவராக நுழைபவரை ஒரு மருத்துவராக உருவாக்குவதற்கு அரசானது 5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறது. இது மக்களின் வரிப்பணம். ஆனால் மருத்துவப்படிப்பிற்குள் நுழைவதற்கே 5 லட்சம் நன்கொடை வாங்கும் முதலாளிகள் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பயிற்சிக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்? கூடுதலான பயிற்சி பெறுவதற்காகவா? இல்லை. அவர்களது கல்லூரிகளில் இந்த வசதிகள் இல்லையென்பதால்தான் அனுப்பி வைக்கிறார்கள். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம், ஆனால், விதவிதமான நோயாளிகளுக்கு எங்கே போவார்கள்? எந்த மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் பொது மருத்துவமனைகளை நடத்துகின்றன?

ஒரு வகுப்பிற்கு 60, 70 மாணவர்களைச் சேர்க்கும் கல்லூரிகள் பத்துப்பேரை மட்டும் பகுதி பகுதியாகப் பிரித்து பயிற்சிக்கு சீருடை, கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகளோடு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் தனக்கு ஒரு பெருமை இருப்பதாகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் அவ்வளவும் மோசடியே!

இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கப் பண்பாட்டுச்சூழலானது, மருத்துவத்தை மட்டுமல்ல, மருத்துவம் செய்யவேண்டும் என்கிற லட்சியத்தையும் வியாபாரச்சிந்தனையாக மாற்றியிருக்கிறது. மருத்துவப்பணி என்கிற அர்ப்பணிப்பான சேவை மனப்பான்மையை காசு பறிக்கும் கலையாக தனியார் மருத்துவத்துறை முதலாளிகள் மாற்றியிருக்கிறார்கள்.

காசுள்ளவனுக்கே கல்வி என்றாக்கியுள்ள மருத்துவக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகளை அரசே எற்று நடத்த வேண்டும். அலோபதி தவிர ஹோமியோபதி மற்றும் சித்த வைத்தியக் கல்விக்கும் கூட மாவட்டந்தோரும் கல்லூரிகள் அமைக்கவேண்டும். இவர்களாக இதைச் செய்ய மாட்டார்கள் என்பது தெரிந்ததுதான். நாம்தான் அவர்களைச் செய்ய வைக்கவேண்டும்.

புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் அரசியல் நூல்கள்! – அராஜகவாதமா? சோசலிசமா?

அராஜகவாதமா? சோசலிசமா?

–          ஸ்டாலின், பக்கம்: 96, விலை: ரூ.45.00

தோழர் ஸ்டாலின் 130வது பிறந்த நாள் சிறப்பு வெளியீடு.

நூலிலிருந்து,” வர்க்கப் போராட்டம்தான், சமகாலத்திய சமூக வாழ்வின் அச்சாணியான விசயமாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சியில், ஒவ்வொரு வர்க்கமும் தனது சித்தாந்தத்தால் வழிகாட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தனக்கென ஒரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த சித்தாந்தம் தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது போலவே, பாட்டாளி வர்க்கமும் தனக்கென பிரபலமானதொரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இது சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது.”

“தாராளவாதத்தை, ஏதோ முழுநிறைவான ஒன்று என்றும் பகுக்கப்பட முடியாதது என்றும் கருதக்கூடாது. இது வெவ்வேறு முதலாளித்துவ தட்டுகளின் தேவைகளுக்குப் பொருந்தும்படி பல்வேறு போக்குகளாக உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. இதே போல, சோசலிசமும் முழுநிறைவான ஒன்றாகவோ பகுக்கப்பட முடியாத ஒன்றாகவோ இல்லை. இதிலும் கூட வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன.”

“நாம் இங்கு தாராளவாதத்தை பரிசீலிக்கவில்லை. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் நாம் பரிசீலிப்பதே மேலானது. இப்போது, சோசலிசம் மற்றும் அதன் வெவ்வேறு போக்குகளும் குறித்து வாசகருக்கு விளக்குவதையே நாம் இப்போது விரும்புகிறோம். தொழிலாளிகள் இதில் கூடுதலாக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நாம் நினைக்கிறோம்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

–          ஸ்டாலின், பக்கம்: 56, விலை ரூ.20.00

” இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய-லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டம் ஆகும். இயற்கைத் தோற்றங்களை அணுகும் முறையிலும் அவற்றைக் கூர்ந்து பரிசீலித்து மனதால் உணரும் முறையிலும் இயக்கவியலைப் பயன்படுத்துவதாலும், இயற்கைத் தோற்றங்களை விளக்குவதிலும் அவற்றுக்குக் கருத்து உருவம் கொடுப்பதிலும் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்துவதாலும், இந்த உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.”

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பது சமூக வாழ்க்கையை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்வதாகும். சமூக வாழ்க்கையின் நிநகழ்ச்சிகளையும் சமூகத்தையும் அதன் வரலாற்றையும் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்வதே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பதாகும்”.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்