தாழ்த்தப்பட்ட மக்களை மலக்குழிக்குள்ளேயே இருத்தும் பாசிச மோடி அரசு!
2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில், நாடு முழுவதும் 377 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. களநிலவரம் இவ்வாறிருக்க 2023 ஆம் ஆண்டில் மலக்குழி மரணங்கள் நிகழவேயில்லை என்று சாதிக்கிறது ஒன்றிய அரசு.
உத்தரப்பிரதேசம்: பட்டியல் சாதியினருக்கு எதிராக அதிக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம்
முக்கியமாக பாசிசக் கும்பல் ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடைபெற்றுள்ளதாக அரசு அறிக்கையே கூறுகிறது.
மகாராஷ்டிரா: மருத்துவ ஊழலில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்!
மருந்துப்பொருட்களில் கலப்படம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மாஃபியா கும்பல்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இது நடந்திருக்காது.
உ. பி: பள்ளியின் வளர்ச்சிக்காக நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்
உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை விடுதிக்கு பின்புறம் உள்ள கிணற்றின் அருகே நரபலி கொடுத்துக் கொன்றுவிட்டு மீண்டும் சிறுவனின் உயிரற்ற உடலை விடுதியில் கொண்டு வந்து போட்டுள்ளனர்.
சென்னையில் இளம்பெண்ணை படுகொலை செய்து மூளையை வறுத்து தின்ற கொடூரம்!
மறுகாலனியாக்க கொள்கைகளைத் திட்டமிட்டே சமூகத்தில் பரப்பும் செய்தி ஊடகங்கள், ஆபாச சினிமா போன்றவற்றிற்கு எதிராகவும், இவற்றைத் தடுக்காமல் கட்டிக்காக்கும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும்.
உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!
உ. பி யின் அனைத்து சாலையோரக் கடைகள், தாபாக்கள், சிறிய மற்றும் பெரிய உணவகங்களின் உரிமையாளர்கள், உணவகத்தில் வேலை செய்பவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டையினை கடைகளின் முன்பாக தொங்கவிட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பாசிசக் கும்பலை விரட்டி அடித்த ஹரியானா மக்கள்!
முதல்வர் சைனி தனது சொந்த தொகுதியான கர்னலின் லட்வா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஹரியானா மக்கள் “இங்கே எதற்கு வந்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியதோடு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டும் பாசிச கும்பல்!
“இந்து பழங்குடியினர் மட்டும்தான் உண்மையான பழங்குடியினர்; கிறிஸ்தவ பழங்குடியினர் போலியானவர்கள். அதனால் அவர்கள் பழங்குடியின பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்று கிறிஸ்தவ பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் பாசிச கும்பல் ஈடுபட்டுள்ளது.
திருப்பதி லட்டில் செலுத்தப்படும் இந்துத்துவ விஷம்
பவன் கல்யாண், ஜக்கி போன்றவர்களின் விஷமப் பிரச்சாரம் என்பது தேவஸ்தான வாரியம், இந்து அறநிலையத்துறை போன்ற அரசுத் துறைகளை ஒழித்துக்கட்டி விட்டு தீட்சிதர்கள் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆகியவர்களிடம் கோவில்களை ஒப்படைப்பதற்கான சதி.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கும் மோடி அரசு!
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13.60 ரூபாயும், டீசலுக்கு 13.82 ரூபாயும் குறைக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாசிச மோடி அரசு அதைச் செய்யவில்லை.
மத்தியப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை மக்கள் வேடிக்கை பார்க்கும் அவலம்
பொதுவெளியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதனைத் தடுக்காமல் வீடியோ எடுத்துச் செல்லும் மக்களின் மனநிலை எப்படியானது என்பதை வார்த்தைகளால் கூற முடியாது.
அசாம்: சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி முஸ்லீம்களின் வீடுகளை இடிக்கும் பா.ஜ.க அரசு!
திடீரென்று செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு உடனடியாக இடத்தை காலி செய்யும்படி போலிசார் தெரிவித்தனர். வேறு இடத்திற்குச் சென்று தங்குவதற்கு இடமில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்த சிறிது நேரத்தில் முஸ்லீம் மக்களின் தற்காலிக வீடுகளை புல்டோசரைக் கொண்டு போலிசார் இடித்தனர்.
இருபதாயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அவல நிலையில் உ.பி மக்கள்!
நுண்கடன் நிறுவனங்கள் கடன் கொடுத்து அவர்களுடைய வறுமையை மேலும் அதிகப்படுத்தின. ஒரு கட்டத்திற்கு மேல் கடன் தொகையினை கட்டமுடியாத நிலையில் நுண் கடன் நிறுவனங்கள் அவர்களுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தின.
வெளியுறவுத் துறை: தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியமாம்!
வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விரும்பத்தக்க தகுதி (Desirable Qualification) என்ற பெயரில், ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராமர் கோவிலில் பணிபுரியும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இதுதான் ராமராஜ்ஜியம்!
அயோத்தியில் உள்ள கான்ட் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆகஸ்ட் 26 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால், துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் செப்டம்பர் 2 அன்று வழக்குப் பதிவு செய்தனர்.

























