இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!
கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதோடு, தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மற்றும் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது
கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !
போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்
அரசியலமைப்புச் சட்டம் ஆள்வதாகச் சொல்லப்படும் நாட்டில், மனுநீதிதான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது தற்போது பத்ம சேஷாத்ரியில் நடந்துள்ள பாலியல் குற்றம் !
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை
மதுரையில் கொரோனா இறப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், எதார்த்தத்தை விட மிகவும் குறைத்துக் காட்டப்படுகின்றன. அரசு கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்று || மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
ஹூண்டாய் ஆலையின் தொடர்ச்சியான கொரோனா உயிரிழப்புகளை ஒட்டி, பணியை புறக்கணித்த தொழிலாளர்கள் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தை துவங்கினர்.
இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
நக்சல்பாரிகள் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.
உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !
பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல், புதிய கல்விக் கொள்கை போன்ற தனது காவி, கார்ப்பரேட் பாசிச செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மோடி அரசு
கொரோனா பேரிடியால் வாழ்விழந்த நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள் || ம.க.இ.க. செய்தி !!
தமிழகமெங்கும் வீதிதோறும் பாடல், இசை, நடனம் போன்ற கலைகளின் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இக்கலைஞர்களை ஈடுபடுத்தலாம்.
இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
சர்வதேச பத்திரிக்கைகளும் கொரோனா மரணங்களின் குற்றவாளி மோடிதான் என்று 56 இன்ச் மார்பை விமர்சனங்களால் பிளந்து போட்டிருக்கின்றன. சொந்த கட்சியினரிடையேயே நிலவும் அதிருப்தியை களைய, உடைந்து நொறுங்கிய மோடியின் இமேஜை ஒட்டவைக்க ஆர்.எஸ்.எஸ் Positivity Unilimited என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.
மணிப்பூர் : மாட்டுச்சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
அறிவியலாளர்கள், மருத்துவர்கள் பசும் சாணத்தில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என பல காலமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்த வரையில் பசுவும், பசு சார்ந்த சாணியை விமர்சிப்பதும் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படக் கூடிய அளவுக்கு பெரும் குற்றமாகி விடுகிறது.
கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
ஒரே நாடு ஒரே கொள்கை என்று முழங்கியவர்கள், பேரிடர் காலத்தில் மாநிலங்கள் சுயமாக பன்னாட்டு கம்பெனிகளிடம் விலை பேசி தடுப்பூசியை வாங்கி கொள்ளுங்கள் என்று கையை விரித்து விட்டது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அதிக விலையை நிர்ணயித்து, அதில் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளவே துடித்தனர்.
இந்திய முன்னணி 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடி !
கடந்த 2020-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம் எந்த அளவிற்கு இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
அவள் பகலில் தீக்குளித்திருந்தால் அவளது அழுகை குரல் தங்களுக்கு கேட்டிருக்கும் என்றும், அந்த சிறுமியை முதல் நாள் இரவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவிட்டு மறுநாள் உடலை அவளது முதலாளிகள் எரித்து விட்டனர் என்று கூறுவதோடு அவள் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தாள் என்றும் சந்தேகிக்கின்றனர்.

























