நாட்டை முடக்குவோம்!
நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும்.
பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும் நடத்திகொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாக தெரியும்.
தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!
இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையும் இதே ரூ.60,000 கோடி தான்.
இந்துராஷ்டிரத்தில் இயல்பாக்கப்படும் மதக்கலவரங்களின் உதாரணங்களே மணிப்பூரும் ஹரியானாவும்!
இந்து மத ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குள் செல்ல ஏன் அனுமதிக்க வேண்டும்? மத ஊர்வலத்திற்கு எதற்கு வாள், தடி, துப்பாக்கிகள்? மோனு மானேசர் பங்கெடுப்பாதாக வீடியோ வெளியிட்ட பின் ஏன் அவனை கைது செய்யவில்லை?
ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்
ஹரியானாவில் இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை வினவு வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்..
ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது. இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.
இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!
பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை.
மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்?
தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!
மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் "தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே" என்று!
ரணில்: இலங்கையின் மோடி!
இந்தியாவுடன், குறிப்பாக அதானியுடன் பல திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதன் மூலம் அதானிக்கு இலங்கையை அடமானம் வைப்பதுடன் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை பலி கொடுக்கிறார் ரணில்.
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் துப்பாக்கிச்சூடு படுகொலை! – திட்டமிட்ட இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் !
நாங்கள் எல்லா முனைகளிலும் தாக்குதல் தொடுப்போம், இஸ்லாமியர்களைக் கொல்வோம், கிறித்தவர்களைக் கொல்வோம், தலித்களையும் பழங்குடி மக்களையும் கொல்வோம், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று எங்களுக்கு அடிமையாக இரு… இல்லையேல் கொல்லப்படுவாய் என்பதுதான் காவி பாசிஸ்டுகள் உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை நேசிப்போருக்கும் விடுக்கும் செய்தி…
பத்ரி சேஷாத்ரி கைது – பாசிசக் கருத்துகளுக்கு ஜனநாயகம் வழங்க முடியுமா?
அதுபோல் பத்ரி போன்றவர்களுக்கு கருத்துரிமை என்ற பெயரில் ஆதரவு கொடுப்பதானது பாசிசக் கருத்துகளை பேசுவதும் இயல்புதான் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். இப்படித்தான் வடமாநிலங்களில் சங்பரிவாரங்கள் தங்களது அடித்தளத்தை நிறுவிக் கொண்டன.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!
இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.
புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!
மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.























