தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !
தெலுங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலி மோதல் கொலையைப் போன்றே இதற்கு முன்னரும் பல போலி மோதல் கொலைகளை நிகழ்த்தியுள்ளது தெலுங்கானா போலீசு.
சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !
பாதாள சாக்கடை பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதே மிகப்பெரும் சமூக குற்றம். அதிலும் உயிரிழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்காத கொடுமையை என்ன சொல்ல...?
பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி
“அங்கே மசூதி இருந்தது என்பது பிரச்சினை இல்லை. அது இடிக்கப்பட்டதும் பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் அது இடிக்கப்படுவதைப் பார்த்தோம்” என விமர்சித்தார் நீதிபதி.
அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
“கிராம பஞ்சாயத்துகளில்தான் நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்குவது நடக்கும்; நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அல்ல. எந்த சூழ்நிலையிலும், வாஃக்புக்கு சொந்தமான நிலத்தை மாற்றிக்கொள்ள முடியாது; கொடுக்கவும் இயலாது.”
வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !
இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட அதிர்ச்சித் செய்தி அம்பலமாகியுள்ளது.
அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் எஸ்.ஏ. பாப்டே தனக்கு முந்தைய இரு தலைமை நீதிபதிகளின் அடியொட்டி வந்த வரலாற்றை பார்ப்போமா ?
அயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்
மத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவது’ நடந்தது... விரிவாக விவரிக்கிறார், ராஜீவ் தவான்.
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
மாணவர்களாகிய நாம் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும் நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது. பிரேசில் பழங்குடியினப் பெண்களின் போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது.
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
போராட்டங்களை பெல்லட் குண்டுகள் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் போராளிகளின் நெஞ்சுரத்தை எந்த தோட்டாவும் துளைக்க முடியாது.
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, உடல்களைச் சிதைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது இந்திய அரசு. ஆனால் அடக்குமுறைகள் வென்றதில்லை.
காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.
ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?
அதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் அரசும், நீதிமன்றமும் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்லும்! நாமும் நம்புகிறோம்!
காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?
மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.
மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !
வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.
























